Tamil Bookshelf

காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்

தேசிய கீதம்ஜன கண மன அதிநாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல வங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவசுப நாமே ஜா கே
தவசுப ஆசிஷ மாகே
காயே தவஜய காதா
ஜன கண மங்கல தாயக ஜயகே
பாரத பாக்ய விதாதா
ஜயஹே ஜயஹே ஜயஹே
ஜய ஜய ஜய ஜயஹே

தமிழ்த்தாய் வாழ்த்துநீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும்திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

கொடிப்பாடல்தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின்..


ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் செய்ய
பட்டொளி வீசிப் பறக்குது பாரீர்
தாயின்..


கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் எங்கும்
கானரும் வீரர் பெருந் திரள் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் தாங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்
தாயின்..

ஆத்திச் சூடிஅறஞ் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலகேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண்ணெழுத் திகழேல்
ஏற்ப திகழ்சி
ஐய மிட்டுண்
ஒப்புர வொழுகு
ஓதுவ தொழியேல்
ஒளவியம் பேசேல்
அகஞ் சுருக்கேல்
கண்டொன்று சொல்லேல்
ஙப்போல் வளை
சனி நீராடு
ஞயம் பட வுரை
இடம்பட வீடிடேல்
இணக்க மறந்திணங்கு
தந்தை தாய்ப்பேன்
நன்றி மறவேல்
பருவத்தே பயிர்செய்
வண்பறித் துண்ணேல்
இயம்பலாதன செயேல்
அரவ மாட்டேல்
இலவம் பஞ்சிற் துயில்
வஞ்சகம் பேசேல்
அழகலாதன செயேல்
இளமையிற் கல்
அறனை மறவேல்
அனந்த லாடல்
கடிவது மற
காப்பது விரதம்
கிழமைப்பட வாழ்
கீழ்மை யகற்று
குணமது கைவிடேல்
கூடிப் பிரியேல்
கெடுப்ப தொழி
கேள்வி முயல்
கைவினை கரவேல்
கொள்ளை விரும்பேல்
கோதாட் டொழி
சக்கர நெறிநில்
சான்றோ ரினத்திரு
சித்திரம் பேசேல்
சீர்மை மறவேல்
சுளிக்கச் சொல்லேல்
சூது வரும்பேல்
செய்வன திருந்தச்செய்
சேரிட மறிந்து சேர்
சையனத் திரியேல்
சொற்சோர்வு படேல்
சொல்லித் திரியேல்
தக்கோ னெனத்திரி
தானமது விரும்பு
திரிமாலுக் கடிமை செய்
தீயினை யகற்று
துன்பத்திற் கிடங்கொடேல்
தூக்கி வினைசெய்
தெய்வ மிகழேல்
தேசத்தோ டொத்துவாழ்
தையற்சொற் கேளேல்
தொன்மை மறவேல்
தோற்பன தொடரேல்
நன்மை கடைப்பிடி
நாடொப்பன செய்
நிலையிற் பிரியேல்
நீர்விளை யாடேல்
நுண்மை நுகரேல்
நூற்பல கல்
நெற்பயிர் விளை
நேர்பட வொழுகு
கைவன கணுகோல்
நோய்பட வுரையேல்
நோய்க் கிடங்கொடேல்
பழிப்பன பகரேல்
பாம்போடு பழகேல்
பிழைபடச் சொல்லேல்
வீடுபெற நில்
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
பூமி திருத்தியுண்
பெரியோரை துணைகொள்
பேதமை யகற்று
பையலோ டிணங்கேல்
பொருடனை போற்றி வாழ்
போர்த்தொழில் புரியேல்
மனந் தடுமாறேல்
மாற்றானுக் கிடங்கொடேல்
மிகைபடச் சொல்லேல்
மீதூண் விரும்பேல்
முனைமுகத்து நில்லேல்
மூர்க்கரோ டிணங்கேல்
மெல்லியா டோள்சேர்
மேன்மக்கள் சொற்கேள்
மைவிழியார் மனையகல்
மொழிவ தறமொழி
மோகத்தை முனி
வல்லமை பேசேல்
வாதுமுற் கூறேல்
வித்தை விரும்பு
வீடுபெற நில்
உத்தமனா யிரு
ஊருடன் கூடிவாழ்
வெட்டனப் பேசேல்
வேண்டி வினைசெயேல்
வைகறைத் துயிலெழு
ஒன்னாரைச் சேரேல்
ஓரஞ் சொல்லேல்

கொன்றை வேந்தன்அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்
ஆலயந் தொழுவது சாலவும் நன்று
இல்லற மல்லது நல்லற மன்று
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
எண்ணு மெழுத்துங் கண்ணெணத் தகும்
ஏவா மக்கள் மூவா மருந்து
ஐயம் புகினுஞ் செய்வன செய்
ஒருவனைப் பற்றி யோரகத்திரு
ஓதலி நன்றே வேதியர்க் கொழுக்கம்
ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு
அகமுங் காகஞ் சிக்கெனத் தேடு
கற்ப்பென படுவது சொற்றியம் பாமை
காவ றானே பாவையர்க் கழகு
கிட்டாதாயின் வெட்டனெ மற
கீழோ ராயினிந் தாழ வுரை
குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை
கூரம் பாயினும் வீரியம் பேசேல்
கெடுவது செய்யின் விடுவது கருமம்
கேட்டி லுறுதி கூட்டு முடைமை
கைப்பொரு டன்னின் மெய்ப்பொருள் கல்வி
கொற்றவ னரித் லுற்றிடத் துதவி
கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு
கெளவைச் சொல்லி னெவ்வருக்கும் பகை
சந்ததிக் கழகு வந்தி செய்யாமை
சான்றோ ரென்கை யீன்றோர்க் கழகு
சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு
சீரைத் தேடி யேரைத் தேடு
சுற்றத்திற் கழகு சூழ விருத்தல்
சூதும் வாதும் வேதனை செய்யும்
செய்தவ மறந்தாற் கைதவ மாளும்
சேமம் புகினுஞ் சாமத் துறங்கு
சையொத் திருந்தா லைய மிட்டுண்
சோக்க ரென்பவ ரத்தம் பெறுவர்
சோம்ப்ப ரென்பவர் தேம்பி திரிவர்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தாய் சொற் துறந்தால் வாசக மில்லை
திரைகட லோடியும் திரவியந் தேடு
தீராக் கோபம் போராய் முடியும்
துடியாய் பெண்டிர் கூற்றெனத் தகும்
தெய்வஞ் சீரிற் கைதவ மாளும்
தேடா தழிக்கிற் பாடாய் முடியும்
தையும் மாசியும் வையகத் துறங்கு
தொழுதூண் சவையி னுழுதூ னினிது
தோழ னோடு மேழைமை பேசேல்
நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்
நாடெங்கும் வாழ கேடொன்றும் மில்லை
நிற்கக் கற்றல் சொற்றியம் பாமை
நீரகம் பொருந்திய வூரகத் திரு
நுண்ணிய கருமமு மெண்ணித்துணி
நுன்முறை தெரிந்து சீலத் தொழுகு
நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை
நேரா நோன்பு சீரா காது
நைபவ ரெனினும் நொய்ய வுரையேல்
நொய்பவ ரென்பவர் வெய்புவ ராவர்
நோன் பென்பது கொன்று தின்னாமை
பண்ணிய பயிரிற் புண்ணியந் தெரியும்
யாரோடாயினும் கால மரிந்துண்
பிறன்மனை புகாமை யறமெனத் தகும்
வீரம் பேணிற் பாரந் தூங்கும்
புலையுங் கொலையுங் தளவுந் தவிர்
பூரிறோர்க் கில்லை சீரிய வொழுக்கம்
பெற்றோர்க் கில்லை சுற்றமும் சினமும்
பேதமை யென்பது மாதர்க் தாங்ககும்
பையச் சென்றால் வையந்தாங்கும்
பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர்
போனக மென்பது தானுழந் துன்டல்
மருந்தே யாயினும் விருந்தோடுண்
மாரியல்லது காரிய மில்லை
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
மீகாம னில்லா மரக்கல மோடாது
முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்
மூத்தோர் சொல் வார்த்தை யமிர்தம்
மெத்தனப் படுத்தல் நித்திரைக் கழகு
மேழிச் செல்வங் கோழை படாது
மைவிழி யாடனை கையகன் றொழுகு
மொழிவது மறக்கி னழிவது கருமம்
மோன மென்பது ஞான வரம்பு
வளவ னாயினு மளவறிந் தழித்துண்
வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும்
விருந்திலோர்க் கில்லை பொருந்தியவொழுக்கம்
வீரன் கேன்மை கூரம் பாகும்
உறவோ ரென்கை யிரவா திருத்தல்
ஊக்க முடைமை யாக்கத்திற் கழகு
வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை
வேந்தன் சீறி னாந்துனை யில்லை
வையந் தோறுந் தெய்வந் தொழு
ஒத்த விடத்து நித்திரை கொள்
ஓதா தார்க் கில்லை யுணர்வோடு வொழுக்கம்

உலக நீதிஓதாம லொருநாளு மிருக்கவேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாதாடுங் குறவரிட வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்க மல்லரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமற் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
மஞ்சாறுங் குறவரிட வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி யண்ணாமற் பதைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
சினந்திருந்தால் வாசல்வழி சேர வேண்டாம்
மனந்தேடுங் குறவரிட வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


குற்றமொன்று பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்
கற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்றுநிக ரொவ்வாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


வாழாமற் பென்ணை வைத்துத்திரிய வேண்டாம்
மனையாளை குற்றமொன்றுஞ் சொல்ல வேண்டாம்
வீழாத படுங்குழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேரவேண்டாம்
தாழ்ந்தவரை பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாருங் குறவரிட வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


வார்த்தை சொல்வார் வாய்பார்த்து திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக்காரரோ டிணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழி பறித்துத் திரிவாரோடு டிணங்க வேண்டாம்
சேர்ந்தபுக ழானதொரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயு தனைச் செப்பாய் நெஞ்சே


கருதாமற் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை யொருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தி லொருநாளு மிருக்க வேண்டாம்
இருதார மொருநாளுந் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனங்காக்கும் ஏழைபங்கன்
குமரவேள் பாதத்தை கூராய் நெஞ்சே


சேராத விடந்தனிலே சேர வேண்டாம்
செய்நன்றி யொருநாளு மறக்கவேண்டாம்
யாரோடுங் குண்டுணியாய்த் திரியவேண்டாம்
உற்றாரை யுதாசீனங்கள் செய்யவேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
வினை பட்டுத் துணைபோல்நீ திரிய வேண்டாம்
வாதாடுங் குறவரிட வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


மண்ணினின்று பெண்ணோறஞ் சொல்ல வேண்டாம்
மனஞ்சலித்துத் திடிக்கிட்டுத் திரிய வேண்டாம்
மண்ணழிவு செய்து துயர்காட்ட வேண்டாம்
காணாத வார்த்தைகளை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
மண்ணழந்தார் மருமகனார் மைந்த னெங்கால்
மயிலேரும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


புறம்பேசித் திரிவாறோ டிணங்க வேண்டாம்
வாதாடு வழக்குரைத்துச் சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்
தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம்
ஏசனிட்டு வுற்றாரை நத்த வேண்டாம்
குறந்தனிலே வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே


ஆதரித்துப் பலவகைப் பொருளுந்தேடி
பழந்தமிழா லறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தா லுலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோருங் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து பொருளுந்தேடி
பூலோக முள்ளளவும் வாழ்வார் தாமே

வந்தே மாதரம்வந்தே மாதரம்
வந்தே மாதரம்
சுஜலாம் சுபலாம் மலயஜஸீதலாம்
சஸ்யஷ்யாமலாம் மாதரம் வந்தே மாதரம்


கோடி கோடி கண்ட கலகல நினாத கராலே
கோடி கோடி புஜைர் த்ருத கர கரவாலே
அபலா கெனோ மா நமாமி தாரிணீம்
பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுதல வாரிணீம் மாதரம் வந்தே மாதரம்


துமி வித்யா திமி தர்ம
துமி ருதி துமி மர்ம த்வம் ஹி ப்ராணா சரீரே
பாஹுதே துமி மா சக்தி
ருதயே துமி மா பக்தி
தோமாரயி ப்ரதிமா கடி மந்திரே மாதரம் வந்தே மாதரம்


த்வம் ஹி துர்கா தசப்ரஹண தாரிணீம்
கமலாம் கமலதல விஹாரிணீம்
வாணீ வித்யா தாயினீம்
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
சுஜலாம் சுபலாம் மாதரம் வந்தே மாதரம்


ச்யாமளாம் சரளாம்
ஸுஸ்மிதாம் புஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம் வந்தே மாதரம்
பாரத மாதா கீ ஜெய்