Welcome To Art Bookshelf
India’s greats classic culture art, poetry, literature and music!

ARTS

அரங்கியல்
Arangiyal
அற்புத கோல மஞ்சரி
Arputha Kola Manjari
இதழியல் கலை அன்றும் இன்றும்
Ithazhiyal Kalai Andrum Indrum
நாட்டு கோழி வளர்ப்பு
Nattu Koli Valarpu
பழைய தமிழ் எழுத்துக்கள்
old tamilleter lesson
பண வளக்கலை
Pana valakkalai
பரதநாட்டிய சாஸ்திரம்
baratha naatiya sasthiram
மயநூல் என்னும் மனையடி சாஸ்திரம்
mayanool ennum manayadi sasthiram
தமிழ் அகராதி கலை
Tamil agarathi kalai
தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
TamilEzhuthinThotramumValarchiyum
ஆடல் அழகியல் நடனவியல்
aadal azhagiyal nadanaviyal
ஆடற்கலை நடனவியல்
aadarkalai nadanaviyal
ஆரம்ப உடனலவியல்
aaramba udanalaviyal
இயற்கையுடன் வாழுதல்
Iyarkaiudan vazhauthal
உடற்கல்விக் கோட்பாடுகள்
Udarkalvi kotpadugal
உலக நாடக அரங்கு
ulga naadaga arangu
உலகின் மூன்றாவது கண்
ulagin moontraavathu kann
கலையும் பண்பும்
kalayum panbum
கொழுந்திலிருந்து கோப்பைக்கு
kozgunthilirunthu kopaiku
சாமுத்திரிகா லட்சணம்
samuthrika latsanam
சாதக நூல்
saadhaga nool
சோதிடவியல்
sodhidaviyal kalaigal
பேனா முனையிலிருந்து
pena munaiyilirunthu
மோட்டார் வண்டிகள் பேணலும் பழுதுபார்த்தலும்
motor vandigal penalum pazhuthu parthalum
வரலாறும் கலையும்
varalarum kalaiyum
வாழ்தல் ஒரு கலை
Vaazthal Oru Kalai
ஜனநாயகத்தின் நான்காவது தூண்
jananayagathin naankavathu kann
Tamil Art Books Online Free Reading
கலைகள்

கல், கண்ணாடி, துணி, காகிதம், பைஞ்சுதம் போன்றவற்றில் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி வரையப்படும் அழகியல் சார்ந்த செயற்பாடு ஓவியக்கலை ஆகும். வரைபவரின் கருத்தியல், நோக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வண்ணங்கள், அச்சுகளால் வெளிப்படுத்தும் கலை ஆகும். உடல் ஓவியம், கேலிச் சித்திரம், காபி ஓவியம், துணி ஓவியம், கண்ணாடி ஓவியம், குகை ஓவியம், போன்றவை ஓவியக்கலையின் பல்வேறு வடிவங்களாகும்.

கல், கண்ணாடி, உலோகம் முதலியவற்றால் செதுக்கியோ, வார்த்தோ செய்யப்படும் முப்பரிமாண கலைப்பொருள் சிற்பம் ஆகும். தனிச் சிற்பம், புடைப்புச் சிற்பம், செதுக்குச் சிற்பம், இயங்கியல் சிற்பம், அடுக்கற்கலைச் சிற்பம் போன்றவை சிற்பங்களின் வகைகளாகும். உரோமானிய, கிரேக்க, எகிப்திய, இந்தியக் கலைச்சிற்பங்கள் உலகப்பிரசித்தி பெற்றன. பெரும்பாலான சிற்பங்கள் கடவுள், மதம், இனத்தலைவர்கள், மற்றும் பண்பாடு சார்ந்த கதைமாந்தர்களின் உருவங்களை உருவகிக்கின்றன.

ஒளிப்படம், நிழற்படம் (அ) புகைப்படமானது, ஒளி எதிரொளிப்பின் மூலம் பொருட்கள் தாம் வெளிவிடுகின்ற (அ) அதன் மீது தெளித்து வெளிவருகின்ற ஒளியினால் ஓர் ஒளியுணர் மேற்பரப்பில் அதன் பிம்பத்தைப் பதிவிட்ட படத்தைக் குறிக்கும். அழகுற எடுக்கப்படும் அச்சுப்பிரதி (அ) ஒளிப்படம் பல்வேறு கலை வேலைப்பாடுகளுடன் நிகழ்வை வரலாற்றில் பதிவிக்கின்றன.இது பொதுவாக ஒளிப்பட முறை, எண்மிய ஒளிப்பட முறை என இருவகைப்படும். இவற்றின் நிறம் மற்றும் தரத்தின் அடிப்படையிலும் ஒளிப்படங்கள் வேறுபடும்.

ஒழுங்கு செய்யப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஒலிகளால் ஒருங்கிணைக்கப்படும் கூறு இசை ஆகும். ஒலி அளவு, இசைக் கருவிகளின் ஒலிப்பினம், அதிர்வுகள் போன்றவை இசையை மென்மையாக்கும் காரணிகளாகும். மேற்கத்திய, இந்திய, சீன இசைகள் தங்களின் பண்பாடடுடன் ஒன்றியமைந்தாகும்.

தாளத்துக்கும், இசைக்கும் ஒத்தசைவாக உடலை நகர்த்தும் கலை வடிவம் நடனம். சமூகம், பண்பாடு, சமயம் சார்ந்தோ, சார்பற்ற மகிழ்ச்சிக்காகவோ நிகழ்த்திக்காட்டும் நிகழ்கலையாகவோ கொள்ளப்படும். சில விலங்கினங்களில் இனப்பெருக்கத்திற்காக துணையைக் கவரும் விதமாக அவைகளால் நிகழ்த்தப்படுகிறது.

இந்திய (பரத நாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சிபிடி, கதக்), மேற்கத்திய உள்ளிட்ட நடனக்கலைகள் நடனத்தில் பண்டைய இலக்கியக் கதைகள், வரலாறு, சமூக நிகழ்வுகள், காதல் போன்றவற்றை நடன அசைவுகளின் மூலம் உணர்த்தும் விதமாக அமைக்கப்பெற்றிருக்கும்.

கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், முதலியன தமிழகத்தின் கிராமப்புறங்களில் பல்வேறு காலகட்டங்களில் வளர்த்தெடுக்கப்பட்ட நாட்டுப்புறம் சார்ந்த நடன வகைகளாகும்.

மையக்கருவான கதையுடன், நடிப்பு, ஒப்பனை, ஓவியம், திரை, மற்றும் ஒலி, ஒளி, உடன் ஒருங்கமைக்கப்பட்ட அரங்கமைப்பு, ஆகிய இயலும், இசையும் சேர்த்து ஒன்றிணைப்பால் படைக்கப்படுவது நாடகம் ஆகும்.

உரைநடை இலக்கியப் புனைவு மொழிபு (அ) கதை ஆகும். ஒரு மையக்கருவைக் கொண்டு அதனை ஒட்டிய சம்பவங்கள், நிலைப்பாடுகளுடன் தொடர்புபடுத்தி புனையப்படுவது கதை. திரைப்படங்களில் அதன் காட்சிப்படுத்தலுக்கேற்ப திரைக்கதைகளாக வடிவம் பெறுகின்றன.

கதைகள் பெரும்பாலும் இயல்பான நிகழ்வை மிகைப்படுத்தி கற்பனைத்திறனை மிகுவித்து உரைப்பதாகும். கதை, சிறுகதை, தொடர்கதை, படக்கதை என அதன் தன்மை, வடிவங்களைக் கொண்டு வகைப்படுத்தப்படும்.

ஓசை சந்தத்துடன் கூடிய, ஒத்திசை பண்புச் சொற்களால் உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்த உதவும் இலக்கிய வடிவம் கவிதை ஆகும். கவிதைப்படைப்புகள் அதன் நோக்கம் கொண்டு இருந்ததைப் படைத்தல், இருப்பதைப்படைத்தல், இருக்க வேண்டியதைப் படைத்தல் என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. கவிதை பண்டைய வழக்கில் பண், விருத்தம், நூற்பா என்றும் மேலும் நவீனத்துவத்தினால் புதுக்கவிதை, ஐக்கூ, எனவும், பலவகையான வடிவங்களைக் கொண்டுள்ளது.

பண்டைய இலக்கியங்கள் யாவும் செய்யுள் மற்றும் பாட்டு நடையிலேயே இருந்தன. பிந்நாளில் அனைவரும் ஆய்ந்தறியும் வண்ணம் உரைநடையில் (அ) செம்மையான மொழி நடையில் உரைகள் கட்டமைக்கப்பட்டன. இவை எளிய மொழிநடையில் பல்வேறு தலைப்புகளைக் கொண்டும் அறிக்கைகளாக உரைப்படுத்தப்படுகின்றன. ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே (அ) விவாதித்து விபரிப்பதே கட்டுரை ஆகும்.

தமிழர் கலைகள்
சிற்பக்கலை
கட்டிடக்கலை
கப்பற்கலை
மட்பாண்டக்கலை
மரவேலைக்கலை
ஓவியம்
ஒளிப்படம்
இசை
நடனம்
நாடகம்
கதை
கவிதை
கட்டுரை
India’s greats classic culture art, poetry, literature and music

INDIAN CULTURE

People flock to museums like never before, so they must have their motives. But when it comes to art, people get strangely afraid to ask too directly what it all might be for, because everyone except you might know the answer already. It’s perhaps too obvious; it’s perhaps too complicated; the result is an awkward silence.

What is described as the culture of India is often more correctly viewed as the culture of northern India. Much of India’s greats classic culture—art, poetry, literature and music—has its roots in or was strongly influence by Persian culture. Nationwide, there are traditions of folk music, religious music and music associated with theater, radio and film. In addition, India's ethnic groups, each have their own entertainment, religious and folklore traditions. In the past music, dance and theater were often associated with prostitution and entertainers traditionally belonged to lower castes. Many traditionalists in India find Western music and culture offensive.

It has long been argued that the goal of art and culture in India is tap into something universal and spiritual. On the Indian concept of aesthetics, the Kashmiri philosopher Abhinavagupta wrote n the 10th century: “Artistic creation is the direct or unconventionalized expression of a feeling of passion ‘generalized,’ that is, freed from distinction in time or space and therefore from individual relationships and practical interests, through an inner force of the artistic core creative intuition within the artist. This state of consciousness (irasa) embodied in the poem is transferred to the actor, the dance, the reciter and to the spectator.

South Asia “has been the seat of great civilizations from time immemorial. From the Himalayan mountains to the vast island chains of the equator, from the Indian subcontinent to the Pacific, the peoples of this region have produced magnificent art for thousands of years. Included are examples of Buddhist and Hindu sculpture in stone and bronze, later Indian court art, miniature painting, and elegant personal possessions. These artworks demonstrate that the people who created and owned them keenly appreciated the things of this world—the luxury and fine craftsmanship that power can command—and at the same time probed deeply into spiritual and cosmic matters of great complexity. South Asia encompasses the modern nations of India, Bangladesh, Pakistan, and Sri Lanka. The subcontinent was the source of a great civilization which spread to Afghanistan in the northwest, to the Himalayan region (modern Nepal, Bhutan, and Tibet) in the northeast, and eastward to Southeast Asia.

Culture plays an important role in the development of any nation. It represents a set of shared attitudes, values, goals and practices. Culture and creativity manifest themselves in almost all economic, social and other activities. A country as diverse as India is symbolized by the plurality of its culture. India has one of the world’s largest collections of songs, music, dance, theatre, folk traditions, performing arts, rites and rituals, paintings and writings that are known, as the ‘Intangible Cultural Heritage’ (ICH) of humanity. In order to preserve these elements, the Ministry of Culture implements a number of schemes and programmes aimed at providing financial support to individuals, groups and cultural organizations engaged in performing, visual and literary arts etc.

Bestsellers
Carousel with Captions
ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலக்கம்கலைதமிழ் விளக்கம்
1.அக்கர இலக்கணம்எழுத்திலக்கணம்
2.லிகிதம் (இலிகிதம்)எழுத்தாற்றல்
3.கணிதம்கணிதவியல்
4.வேதம்மறை நூல்
5.புராணம்தொன்மம்
6.வியாகரணம்இலக்கணவியல்
7.நீதி நூல்நய நூல்
8.சோதிடம்கணியக் கலை
9.தரும சாத்திரம்அறத்து பால்
10.யோகம்ஓகக் கலை
11.மந்திரம்மந்திரக் கலை
12.சகுனம்நிமித்தக் கலை
13.சிற்பம்கம்மியக் கலை
14.வைத்தியம்மருத்துவக் கலை
15.உருவ சாத்திரம்உருப்பமைவு
16.இதிகாசம்மறவனப்பு
17.காவியம்வனப்பு
18.அலங்காரம்அணி இயல்
19.மதுர பாடனம்இனிது மொழிதல்
20.நாடகம்நாடகக் கலை
21.நிருத்தம்ஆடற் கலை
22.சத்த பிரமம்ஒலிநுட்ப அறிவு
23.வீணையாழ் இயல்
24.வேனுகுழலிசை
25.மிருதங்கம்மத்தள நூல்
26.தாளம்தாள இயல்
27.அகத்திர பரீட்சைவில்லாற்றல்
28.கனக பரீட்சைபொன் நோட்டம்
29.இரத பரீட்சைதேர் பயிற்சி
30.கச பரீட்சையானையேற்றம்
31.அசுவ பரீட்சைகுதிரையேற்றம்
32.இரத்தின பரீட்சைமணி நோட்டம்
33.பூ பரீட்சைமண்ணியல்
34.சங்கிராம இலக்கணம்போர்ப் பயிற்சி
35.மல்யுத்தம்கைகலப்பு
36.ஆகர்சணம்கவிர்ச்சியல்
37.உச்சாடணம்ஓட்டுகை
38.வித்து வேஷணம்நட்பு பிரிக்கை
39.மதன சாத்திரம்மயக்குக் கலை
40.மோகனம்புணருங் கலை (காம சாத்திரம்)
41.வசீகரணம்வசியக் கலை
42.இரசவாதம்இதளியக் கலை
43.காந்தர்வ விவாதம்இன்னிசைப் பயிற்சி
44.பைபீல வாதம்பிறவுயிர் மொழி
45.தாது வாதம்நாடிப் பயிற்சி
46.கெளுத்துக வாதம்மகிழுறுத்தம்
47.காருடம்கலுழம்
48.நட்டம்இழப்பறிகை
49.முட்டிமறைத்ததையறிதல்
50.ஆகாய பிரவேசம்வான்புகுதல்
51.ஆகாய கமனம்வான் செல்கை
52.பரகாயப் பிரவேசம்கூடுவிட்டு கூடுபாய்தல்
53.அதிரிச்யம்தன்னுறு கரத்தல்
54.இந்திர சாலம்மாயம்
55.மகேந்திர சாலம்பெருமாயம்
56.அக்னி தம்பம்அழற் கட்டு
57.சல தம்பம்நீர்க் கட்டு
58.வாயு தம்பம்வளிக் கட்டு
59.திட்டி தம்பம்கண் கட்டு
60.வாக்கு தம்பம்நாவுக் கட்டு
61.சுக்கில தம்பம்விந்துக் கட்டு
62.கன்ன தம்பம்புதையற் கட்டு
63.கட்க தம்பம்வாட் கட்டு
64.அவத்தை பிரயோகம்சூனியம்

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);

2. இன்னியம் (வாத்தியம்);

3. நடம் (நிருத்தம்);

4. ஓவியம்;

5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;

6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;

7. பூவமளியமைக்கை;

8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;

9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;

10. படுக்கையமைக்கை;

11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);

12. நீர்வாரி யடிக்கை;

13. உள்வரி (வேடங்கொள்கை);

14. மாலைதொடுக்கை;

15. மாலை முதலியன் அணிகை;

16. ஆடையணிகளாற் சுவடிக்கை;

17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;

18. விரை கூட்டுகை;

19. அணிகலன் புனைகை;

20. மாயச்செய்கை (இந்திரசாலம்);

21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);

22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);

23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);

24. தையல்வேலை;

25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;

26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);

27. விடுகதை (பிரேளிகை);

28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;

29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;

30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;

31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;

32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);

33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;

34. கதிரில் நூல் சுற்றுகை;

35. மரவேலை;

36. மனைநூல் (வாஸ்து வித்தை);

37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);

38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);

39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;

40. தோட்டவேலை;

41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;

42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;

43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;

44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);

45. மருமமொழி (ரகசிய பாஷை);

46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);

47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;

48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;

49. பொறியமைக்கை;

50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);

51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);

52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;

53. வனப்பு (காவியம்) இயற்றுகை;

54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);

55. யாப்பறிவு;

56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);

57. மாயக்கலை (சாலவித்தை);

58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);

59. சூதாட்டம்;

60. சொக்கட்டான்;

61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;

62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;

63. படக்கலப் பயிற்சி;

64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

தமிழர் கலைகள்

தமிழர் சிற்பக்கலை

சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.

தமிழர் கட்டிடக்கலை

ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ்நாட்டில் கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டிடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின் உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டிடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டிட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டிடக்கலை எனப்படுகின்ற கட்டிடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

தமிழர் கப்பற்கலை

ஓதம் அறிதல் என்பது சங்ககாலம் தொட்டே தமிழர் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில் நுட்பத்தில் ஒன்றாகும். ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம் (Tide towards the Shore - High tide), கடல் ஓதம் (Tide towards the Sea - Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் தமிழர். கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும். ஓதம் குறையும் போது கடல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறிக் கடலுக்குள் செல்வர். ஓதம் அதிகமாக இருக்கும் போது தலைவியை ஏன் பிரிந்து செல்கிறாய் தலைவா என்று தலைவியின் தோழி தலைவனை வினவுவது போன்று அகப்பாட்டு ஒன்றும் உண்டு. மேற்கொடுத்த சங்கப்பாடல்களின் மூலம் ஓதம் என்ற இயற்கை சக்தியைக் கலம் ஓட்டத் தமிழர் பயன்படுத்தினர் என அறியலாம்.

முன்துறை என்பது சங்ககாலத்தில் கழிமுகங்களின் வெளிப்பகுதியில் காணப்படும் துறைமுகமாகும். இது கழிமுகத்தின் வெளிப்பகுதியை குறிக்கிறது என்பதை ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தில் கூறப்படும் முன்துறை இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய் என்னும் வரிகளின் மூலம் அறியலாம். மேலும் இம்முன்துறையில் நாவாய் நங்கூரமிட்டு பாய்மரத்தை மடக்கி வைத்திருக்கும் என்பதை தூங்கு நாவாய், துவன்று இருக்கை என்று பட்டினப்பாலை குறிக்கிறது. நீர்க்கலங்களிலிருந்து நிறை அதிகமான பொருட்கள் இறக்கப்பட்டவுடன் தன் பாய்மரங்களை மீண்டும் உயர்த்தி நீரோட்டம் அதிகமாக இருக்கும் கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறைக்கு செல்லும். இதையே புறம் கூம்போடு மீம்பாய் கலையாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் என்று குறிப்பிடுகிறது. மேற்குறித்த சங்கப்பாடல்கள் கழிமுகங்களில் வெளிப்பகுதியில் நீரோட்டம குறைவு என்பதால் அங்கே உள்ள முன்துறையில் நங்கூரமிட்டு பாய்மரம் இறக்கி நிறை அதிகம் கொண்ட பொருட்களை இறக்கிவிட்டு, கழிமுகத்தின் வாய்ப்பகுதியில் நீரோட்டம் அதிகம் என்பதால் அங்கே பாய்மரத்தை ஏற்றி மிக வேகமாகக் கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறையை அடையுமாம் தமிழர் கலங்கள் என்பதையே குறிக்கின்றன.

தமிழர் மட்பாண்டக்கலை

தமிழர் மட்பாண்டக்கலை அல்லது தமிழர் வனைதற்றெழில் என்பது தமிழர்கள் மரபுரீதியாக மட்பாண்டங்களை உருவாக்கும் கலையைக் குறிக்கும். தமிழ்நாட்டில் இன்றும் இக்கலை நிலைபெற்றிருக்கின்றது. இத் தொழிற்கலையில் ஈடுபடுபவர்கள் குயவர் எனப்படுவர். மண்பாண்டங்களை உருவாக்குவது, குறிப்பாக குயவர் சக்கரத்தின் கண்டுபிடிப்பு உலக நாகரிகத்தின் ஒரு மைல்கல்லாகும். குயவர் சக்கரம் எகிப்து அல்லது மெசொபொத்தேமியா அல்லது சீனாவிலோ கண்டுபிக்கப்பட்டு வட இந்தியா வந்து சில காலம் சென்று தென்னிந்தியா வந்தது.

தமிழர் மரவேலைக்கலை

தமிழர் மரபுத் தொழில்கலைகளில் மரவேலைக்கலையும் ஒன்று. மரத்தினால் தளபாடங்கள், சிற்பங்கள், கருவிகள் (எ.கா. ஏர்), வீடு, தேர், கப்பல் ஆகியவற்றை செய்வதில் தொன்ம காலம் முதல் தமிழர்கள் சிறப்பாக ஈடுபட்டு தனித்துவான கலையை வளர்தெடுத்துள்ளார்கள். இதுவே தமிழர் மரவேலைக்கலை எனப்படுகின்றது. இதை தமிழ்ர் தச்சுக்கலை என்றும் அழைக்கலாம். மரவேலைகலையில் ஈடுபடுவோர் தச்சர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்

கலை இயக்கம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியுள், ஒரு குறிப்பிட்ட கலைஞர் குழுவால் பின்பற்றப்படுகின்ற, ஒரு குறிப்பிட்ட பொதுத் தத்துவத்தை அல்லது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, கலையின் ஒரு போக்கு அல்லது பாணியாகும். கலை இயக்கங்கள் சிறப்பாக நவீன கலைகள் (Modern Art) தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கே தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு இயக்கமும், ஒரு புதிய முழு வளர்ச்சி பெற்ற குழுவாகக் கருதப்பட்டது. individualism மற்றும் பன்முகத் தன்மை நிலை பெற்றிருக்கும் தற்காலக் கலையில் இயக்கங்கள் ஏறத்தாழ முற்றாகவே மறைந்துவிட்டன எனலாம்.

கலை இயக்கங்களின் பட்டியல்

பண்பியல் ஓவியம் (Abstract art) பண்பியல் வெளிப்பாட்டுவாதம் (Abstract expressionism) Action painting எதிர்-யதார்த்தவியம் (Anti-realism) அராபெஸ்க் (Arabesque) ஆர்ட் டெக்கோ ஆர்ட் நூவோ (Art Nouveau) ஆர்ட்டே பொவேரா (Arte Povera) கலை மற்றும் கைப்பணி இயக்கம் (Arts and Crafts Movement) குப்பைத்தொட்டி சிந்தனைக்குழு (Ashcan School) பார்பிசோன் சிந்தனைக்குழு (Barbizon school) பரோக் (Baroque) பௌஹவுஸ் (Bauhaus) நிறப்புலம் (Colour Field) கருத்துரு ஓவியம் (Conceptual art) கட்டமைப்புவாதம் (Constructivism) கியூபிசம் (Cubism) டாடாயியம் (Dadaism) டி ஸ்டெயில் (De Stijl) (also know as Neo Plasticism) கட்டவிழ்ப்பியம் (Deconstructivism) வெளிப்பாட்டியம் (Expressionism) விசித்திர யதார்த்தவியம் (Fantastic realism) போவியம் (Fauvism) உருவோவியம் (Figurative) பிளக்சஸ் (Fluxus) எதிர்காலவியம் ஆர்லெம் மறுமலர்ச்சி (Harlem Renaissance) உணர்வுப்பதிவுவாதம் (Impressionism) பன்னாட்டு கோதிக் (International Gothic) லெஸ் நாபீ மனரியம் (Mannerism) Massurrealism மீவியற்பிய ஓவியம் (Metaphysical painting) சிறுமவியம் (Minimalism) நவீனவியம் (Modernism) புதுச்செந்நெறியியம் (Neoclassicism) புதுவெளிப்பாட்டியம் (Neo-expressionism) புதுத்தொல்பாணியியம் (Neoprimitivism) கண்மாய ஓவியம் (Op Art) ஆர்பியம் (Orphism) நிழற்பட இயல்பியம் (Photorealism) புள்ளிப்படிமவியம் (Pointillism) மக்கள் ஓவியம் (Pop art) பின்-உணர்வுப்பதிவியம் (Post-impressionism) பின் நவீனத்துவம் (Postmodernism) தொல்பாணியியம் (Primitivism) இயல்பியம் (Realism) மறுமலர்ச்சி (Renaissance) மறுமலர்ச்சிச் செந்நெறியியம் (Renaissance Classicism) ரோக்கோகோ (Rococo) ரோமனெஸ்க் (Romanesque) புனைவியம் (Romanticism) சமூகவாத இயல்பியம் (Socialist Realism) உருவகவியம் (Stuckism) கலையுணர்வியம் (Suprematism) அடிமனவெளிப்பாட்டியம் Surrealism குறியீட்டியம் (கலை) (Symbolism (arts))