நான்கு வேதங்கள்!

நான்கு வேதங்கள்

ரிக் வேதம்
ரிக் வேதம்
யஜூர் வேதம்
யஜூர் வேதம்
சாம வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்
அதர்வண வேதம்
நான்கு வேதங்கள்
இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதம் ஆகியன. வேதங்களை மறை என தமிழில் கூறுவர்.

1.ரிக் வேதம்:
” ரிக்” என்றால் “ஸ்தோத்திரம்” . பிற்காலத்தில் சுலோகம் எனச் சொல்லப்பட்ட செய்யுளுக்கே வேத காலத்தில் ” ரிக்” எனப் பெயர்.

2.யஜுர் வேதம்:
“யஜ்” என்றால் “வழிபடுவது ” எனப் பொருள். யக்ஞம்( வேள்வி) தொடர்பாக வழிபாட்டு முறைகளை விவரிப்பதே யஜுர் வேதம். ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்களை வேள்வி என்ற யாகத்தில் பொருத்தி கொடுப்பதையே யஜுர் வேதம் செய்கிறது.

3.ஸாம வேதம்:
ரிக் வேதத்தில் துதிகளாக இருக்கும் மந்திரங்களில் பலவற்றை கானமாக ஆக்கித் தருவதே ஸாம வேதம். ரிக் வேதத்தை ஸாம கானமாக நீட்டிப் பாட விதிகள் செய்யப்பட்டதே ‘ஸாம வேதம்.’
“ஸாமம்” என்றால் மனதைச் சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது எனப் பொருள்படும்.

4.அதர்வணம்: ( அதர்வ வேதம்)
அதர்வன்= புரோகிதர். அதர்வா என்ற ரிஷியின் மூலம் பிரகாசமடைந்தது அதர்வண வேதம். அதில் பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்ளவும், எதிரிகளை அழிப்பதற்கும் மந்திரங்கள் உள்ளன.
உரைநடை போலவும், செய்யுள்களாகவும் மந்திரங்கள் இதில் இருக்கிறதாம்.
ஏனைய மூன்று வேதத்திலும் இல்லாத அநேக தேவதைகள், பலவிதமான கோரமான ஆவிகளைப் பற்றிய மந்திரங்களும் அதர்வணத்தில் உள்ளதாம். ‘மாந்திரீகம்’ ,என்று தற்போது சொல்லப்படுகிற பலவும் அதர்வண வேதத்தில் இருந்து வந்ததே. எனவே இதற்கு முக்கியத்தும் பலரும் அளிப்பதில்லை.
படைப்பின் விசித்திரம் இந்த வேதத்தில் சொல்லப்படுகிறது.
யாராலும் தோற்றுவிக்கப்படாமல், ஈஸ்வரனே மக்களின் நன்மைக்காக வேதங்களாக உருவெடுத்து அமைந்திருக்கிறான் என்பதே மகரிஷிகள் கூறுவதாகும்.