கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பகுதி 9c
4. யுத்த காண்டம் / படலம் 12 (2398 - 2967)

kantapurANam of kAcciyappa civAccAriyAr
part 9c /canto 4 (verses 2398 - 2967) )
In tamil script, Unicode format




Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections.
Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.

Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
பாகம் 9c /4. யுத்த காண்டம் / படலம் 13- (2398 - 2967)

13. சூரபன்மன் வதைப் படலம்2398 - 2904
14. தேவர்கள் போற்று படலம்2905 - 2914
15. இரணியன் புலம்புறு படலம்2915 - 2934
16. மீட்சிப் படலம் 2935 - 2967

செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

13. சூரபன்மன் வதைப் படலம் (2398 - 2904) *

( * ஏழா நாள்முதல் பத்தா நாள்வரை சூரபன்மன் வதை நிகழ்ச்சி ஆகும்.
சூரபன்மன் இறுதியாகச் சண்முகக்கடவுளோடு நான்குநாள் போர்புரிந்து மடிந்தான் என்பதை
“ஸ..ஈரிரு, நாள்வரைத் துன்னலன் தொலையாது அமராற்றியே” எனவரும் இந்நூல்
இப்படலத்தின் 409-ம் செய்யுள் அடிகளால் அறியலாம். மகேந்திரபுரியில் சூரபன்மனாதியோர்
சண்முகப்பெருமானுடன் எதிர்த்துப் போர்புரிந்தது பத்துநாட்கள் ஆகும்.
இதனை “சொல்லும் ஐந்திருவைகலின் அவுணர்தம் தொகையும், அல்லல்
ஆற்றய சூரனும் முடிந்திட அடுதும்” எனவரும் கந்தபுராணம் - மகேந்திரகாண்டம்
- சயந்தன் கனவுகாண் படலம் 11-ம் செய்யுளின் அடிகளால் அறியலாம்.)

2398 கொற்ற வேற்படை பரித்திடும் ஆயிர கோடி
ஒற்றர் தங்களை நோக்கியே சூரனாம் உரவோன்
மற்றென் ஆட்சியாம் அண்டங்கள் எங்கணும் வைகிச்
சுற்று தானையைத் தம்மினோ கடிதெனச் சொன்னான்.
1
2399 சொன்ன காலையின் நன்றென வணங்கியே தூதர்
பன்ன ருங்கதி கொண்டனர் விண்டனர் படர்ந்து
பொன்னின் மேதகும் அண்டங்கள் இடைதொறும் புகுந்து
மன்னர் மன்னவன் தன்பணி முறையினை வகுத்தார்.
2
2400 வகுத்த காலையில் ஆண்டுறை அவுணமன் னவர்கள்
தொகுத்த நாற்பெருந் தானையங் கடலொடுந் துவன்றி
மிகுத்த அண்டத்தின் புடைதொறும் புடைதொறும் மேனாட்
பகுத்து வைத்திடும் வாயிலின் நெறிகளாற் படர்ந்தார்.
3
2401 முந்தை அண்டத்தின் நெறிதனில் முழங்கிருஞ சேனை
வந்து வந்திவட் செறிவன விதியொடு மாறாய்ச்
சுந்த ரங்கெழு மாயன்இவ் வுலகுயிர் துய்ப்ப
உந்தி யின்வழி அங்கவை தோன்றுமா றொப்ப.
4
2402 பூதம் யாவையும் உயிர்களும் புவனமுள் ளனவும்
பேதம் நீங்கிய சுருதியா கமங்களும் பிறவும்
ஆதி காலத்தின் அநாதியாம் எம்பிரான் அளப்பில்
பாத பங்கயத் துதிப்பவும் போன்றன பகரின்.
5
2403 இனைய தன்மையால் அண்டத்தின் நெறிதனில் ஏகும்
வனைக ருங்கழல் அவுணர்தம் படையிவண் வரலுங்
கனலி தன்சுடர் மறைந்தன நடுங்கினன் கனலும்
அனிலன் தானுமெய் வியர்த்தனன் நெருக்கமுற் றயர்வான்.
6
2404 ஆ£¢த்த ஓசையால் அகிலமுந் துளங்கிய அவுணர்
கார்த்த மெய்யொளி கதுவலால் இருண்டன ககனந்
தூர்த்த பூழியால் ஆழிகள் வறந்தன துணைத்தாள்
பேர்த்து வைத்திடு தன்மையால் அண்டமும் பிளந்த.
7
2405 கூடும் இப்பெருந் தானையை நோக்கிமெய் குலைவுற்
றோடு தற்கிடம் இன்றிநின் றிரங்கினர் உம்பர்
வீடி னானென வாசவன் மருண்டனன் விதியும்
நீடு மாயனும் முடிவதென் னோவென நினைந்தார்.
8
2406 பூத லந்தனில் அம்பர நெறிதனில் புடைசூழ்
மாதி ரங்களில் அளக்கரின் வரைகளில் வழியில்
பாத லங்களில் பிறவினில் அவுணர்தம் படைகள்
ஏதும் வௌ¢ளிடை இன்றியே சென்றன ஈண்டி.
9
2407 மலர யன்பதம் மால்பதம் முனிவர்கள் வைகும்
உலகம் வாசவன் தொன்னகர் ஏனையோர் உறையுள்
அலரி யாதியர் செல்கதி பிலங்களில் அனிகம்
பலவும் நின்றன செல்லிடம் பெறாதபான் மையினால்.
10
2408 மாறி லாதன தொல்லையண் டங்களின் வந்த
வீறி லாததோர் தூசிகள் படர்ந்திடும் எல்லை
நூறு கோடியோ சனைகளென் றறிஞர்கள் நுவன்றார்
வேறு பின்வருந் தானையின் பெருமையார் விதிப்பார்.
11
2409 குறுமை யாமுயிர் வாழ்க்கையர் கொண்டதொல் வளம்போற்
சிறுமை யோவிது விரித்திட அவுணர்கோன் சேனை
அறிஞர் கூறிய பெருந்தொகை தன்னினும் அடங்கா
பிறிது மற்றிதற் குவமையும் ஒன்றிலை பேசின்.
12
2410 அஞ்சு பட்டிடு பூதங்கள் பல்லுரு வமைந்து
நெஞ்சு பட்டிடும் உயிர்கொடு நேருமேல் நிகரும்
அஞ்சு பட்டிடு பொருப்பெலாஞ் சூறைமுன் மயங்கும்
பஞ்சு பட்டிட நடந்திடு தூசிமுற் படையே.
13
2411 அந்த மின்றியே அகன்புவி கொண்டஅண் டத்தில்
வந்தி டுந்திறற் படைகளின் பெருமையா£¢ வகுப்பார்
முந்து தூசிகள் மகேந்திரப் பெருநகர் மூடி
இந்த வண்டத்தின் இடமெலாம் நிறைந்தன இமைப்பில்.
14
2412 ஆன காலையில் ஒற்றர்போய்ச் சூரனை யடைந்து
பானல் மெல்லடி கைதொழு தையநீ படைத்த
சேனை வந்தயல் நின்றன தூசிமுற் சென்று
வானு லாவுபேர் அண்டத்தை நெருக்கின மன்னோ.
15
2413 என்னும் எல்லையில் நன்றென அவுணர்கோன் எழுந்து
தன்ன தாகிய உறையுள் போய்த் தடம்புன லாடித்
துன்னும் ஐவகை உணவுடன் அறுசுவை தொடர்ந்த
அன்னம் உண்டனன் நஞ்சுகொல் மருந்துகொல் அதுவே.
16
2414 நீற ணிந்தனன் நெற்றிமெய்ந் நிரைவிரை களபச்
சேற ணிந்தனன் பூந்தொடை பங்கியிற் செறித்தான்
மாறில் பொற்சுடர்க் கலையுடன் அணிகலன் மாற்றி
வேறு வேறுநன் கினியன புனைந்தனன் விரைவில்.
17
2415 ஈசன் மாப்படை ஏனையோர் பெரும்படை யாவும்
மாசில் ஆயிர கோடிதேர் செலுத்தியே அவையுங்
கேச ரித்திறல் யானமுங் கேடில்பொற் றேரும்
பாச னத்திறல் அவுணர்கொண் டேகுவான் பணித்தான்.
18
2416 ஆங்க வெல்லையிற் சூரபன் மாவெனும் அவுணன்
பாங்கர் வந்திடு வலவர்தந் தொகையினைப் பாரா
ஓங்கு மோ£¢தடந் தேரினைக் கொணர்திரென் றுரைப்பப்
பூங்க ழற்றுணை வணங்கியே நன்றெனப் போனார்.
19
2417 வாட்டு கேசரி எழுதி னாயிரம் வயமாக்
கூடடம் அங்கணோ ரெழுபதி னாயிரங் கூளி
ஈட்ட மாகிய தெழுபதி னாயிரம் ஈர்ப்பப்
பூட்டி நன்குறப் பண்ணினார் ஆங்கொரு பொலன்தேர். 20
20
2418 மண்ட லத்தினும் ஆன்றபேர் இடத்தது மருங்கில்
தெண்டி ரைக்கட லாமென ஆர்ப்பது செறிந்த
அண்ட மாயிர கோடியுந் தன்னிடத தாற்றிக்
கொண்டு நின்றிடும் வலியது மடங்கலங் கொடித்தேர்.
21
2419 முடியும் எல்லையில் எழுதரு மருத்தினும் உந்திக்
கடிது செல்வது சென்றிடு விசையினால் ககுபத்
தடநெ டுங்கிரி அலமரத் தபனருங் குளிர
வடவை யங்கிகள் விளிந்திடப் புரிவதம் மான்தேர்.
22
2420 ஏழு நேமியும் இடைப்படு தீபமும் யாவுஞ்
சூழு கின்றபேர் அடுக்கலும் ஒன்றிய தொடர்பின்
கேழில்¢ பன்மணி ஓவியப் பத்திகள் கெழுவும்
ஆழி தாங்கிய அண்டமொத் திலங்கிய தகன்தேர்.
23
2421 தொழுத குந்திறல் அவுணர்கோன் வேள்வியில் துஞ்சி
எழுவ தாகிய எல்லையில் தோன்றிய தெதிர்ந்தார்
குழுவி ரிந்திடத் துரப்பது நான்முகக் குரிசில்
அழியும் நாளினும் அழிந்திடா திருப்பதவ் வகல்தேர்.
24
2422 கண்ண கன்படை அளப்பில பரித்தது காமர்
விண்ண வர்க்குள வலியெலாங் கொண்டது மேனாள்
அண்ணல் நல்கிய இந்திர ஞாலமும் அனைய
தெண்ணின் மேற்படு மியாணர்பெற் றுடையதவ் விரதம்.
25
2423 அனைய தாகிய தேரினை வலவர்கொண் டணைந்து
தினக ரன்தனை வெகுண்டவன் தாதைமுன் செலுத்தத்
துணை மற்றதில் இவர்ந்தனன் இவர்தலுந் தொழுது
புனைதி வாகையென் றவுணர்கள் பூமழை பொழிந்தார்.
26
2424 பொழிந்த காலையில் வலவர்கள் அங்கதிற் புக்குக்
கழிந்த சீர்த்தியான் ஆணையால் தேரினைக் கடவத்
தழிந்த ழீமெனப் பல்லியம் இயம்பின சகங்கள்
அழிந்த நாளெழு கடலென அவுணர்கள் ஆர்த்தார்.
27
2425 அங்கி யன்னபொற் படியகங் கோடிகம் அடைப்பை
திங்கள் வெண்குடை கவரிகொண் டொழுகினர் சிலதர்
துங்க மிக்கவன் சீர்த்தியும் ஆணையுந் தொடர்ந்து
மங்க லந்திகழ் உருக்கொடு சூழ்ந்திடும் வகைபோல்.
28
2426 அண்ணல் மேவரு கோநகர் எல்லையுள் அடைந்த
எண்ணில் மாப்பெருஞ் சிகரியின் வாயில்கள் இகந்தே
கண்ண கன்ஞௌ¢ளல் ஆயிர கோடியுங் கடந்து
வண்ண மாமணிக் கோபுர முதற்கடை வந்தான்.
29
2427 வேறு
தானவர் கோமகன் தடம்பொற் றேரொடு
மாநகர் முதற்கடை வாயில் போதலும்
ஆனது நோக்கியே அங்கட் சூழ்தரு
சேனைகள் ஆர்த்தன உடுக்கள் சிந்தவே.
30
2428 ஞெலிததிடு பரவையின் நீல வெவ்விடம்
ஒலித்தெழுந் தாலென உலப்பில் தானைகள்
கலித்தன படர்ந்தன கண்ண கன்புவி
சலித்தது கொடியரைத் தரிக்கொ ணாமையால்.
31
2429 நேரியம் பரியதோர் நிசாளஞ் சல்லிகை
பேரியம் பணைவயிர் பிறங்கு தண்ணுமை
தூரியம் காகளந் துடிமு தற்படு
சீரியம் பலவுடன் இயம்பிச் சென்றவே.
32
2430 சேயின குஞ்சிகள் செறிந்த தானவர்
பாயின தானையில் படர்ந்த பூழிகள்
வாயின பரவைமேல் வடவைத் தீவிராய்ப்
போயின நாளெழு புகையைப் போன்றவே.
33
2431 வானினும் மண்ணினும் மாதி ரத்தினுந்
தானிறை கடலினுந் தணப்பின் றாகியே
மேனிறை பூழிகள் மிடைய எங்கணுஞ்
சோனைகொள் பின்பனித் தூவல் போன்றவே.
34
2432 சூரனி கரத்தெழு தூளி அந்நகர்
ஆரகில் ஆவியும் யாரும் ஆடிய
பூரிகொள் சுண்ணமும் பொருந்திப் போவது
காரின மின்னொடு கடலுண் டேகல்போல்.
35
2433 திண்டிறற் கரிகளில் தேரில் வெண்கொடி
மண்டுறு பூழிதோய் வானிற் செல்வன
கொண்டலின் இருதுவிற் கொக்கின் மாலைகள்
தண்டுளி யுறைப்புழிப் படருந் தன்மைபோல்.
36
2434 படைவகை திசையெலாம் படரப் பாயிருள்
அடைவது சூரறிந் தண்டம் யாவினும்
மிடைதரு கதிர்களை விளிக்க வந்தெனக்
குடைநிரை எங்கணுங் குழுமு கின்றவே.
37
2435 வெம்பரி கரியுமிழ் விலாழி மாமதம்
இம்பரின் நகரெலாம் யாற்றின் ஏகலால்
உம்பர்மற் றல்லதை ஒருவன் தானைகள்
அம்புவி சென்றிடற் கரிய தானதே.
38
2436 இவ்வகை தானைகள் ஈண்டிச் சென்றிடத்
தெவ்வலி அவுணர்கோன் செம்பொற் றேரின்மேல்
மைவரை மேருவின் வருவ தாமெனக்
கவ்வையின் அமர்புரி களரி ஏகினான்.
39
2437 பூசலின் எல்லையில் புரவ லன்செலத்
தூசிய தாகியே தொடர்ந்த தானைகள்
ஈசன தருள்மகன் இனிது வைகிய
பாசறை சூழ்ந்தன படியும் வானுமாய்.
40
2438 உரற்றிய கணமழை உம்பர் சூழ்ந்தென
விரற்றொடு சூழ்படை ஈட்டம் நோக்கியே
மரற்றுறு பலங்களில வாரி கண்வர
அரற்றினர் வெருவினர் அமரர் யாவரும்.
41
2439 அழுங்கினன் புரந்தரன் அகிலம் யாவையும்
விழுங்குறும் இருவரும் விம்மி னாருளம்
புழுங்கினர் வீரர்கள் பூதர் ஏங்கினார்
கொழுங்கனல் இடைப்படு விலங்கின் கொள்கைபோல்.
42
2440 ஆவதோர் காலையில் அரியும் நான்முகத்
தேவனும் ஏனைய திசையி னோர்களும்
மூவிரு முகமுடை முதல்வன் தன்னிரு
பூவடி பணிந்திவை புகறல் மேயினார்.
43
2441 வேறு
அந்தமி லாத அண்டம் ஆயிரத் தெட்டுத் தன்னில்
வந்திடு தானை யோடு மாபெருஞ் சூர பன்மன்
உந்திய தேரின் மேலான் உறுசமர் புரிவான் போந்தான்
முந்திய தூசி நந்தம் பாசறை மொய்த்த தென்றார்.
44
2442 என்னலும் முறுவல் செய்தாங் கிலங்கெழில் தவிசின் வைகும்
பன்னிரு கரத்து வள்ளல் பவனனைக் குறிப்பின் நோக்க
முன்னம துணர்ந்து வல்லே முளவுகோல் கயிறு பற்றிப்
பொன்னவிர் மனவே கப்பேர்ப் புரவிமான் தேர்முன் உய்த்தான்.
45
2443 உய்த்திடு கின்ற காலத் தொய்யென எழுந்து காமர்
புத்தலர் நீபத் தாரான் புகர்மழுக் குலிசஞ் சூலஞ்
சத்திவாள் பலகை நேமி தண்டெழுச் சிலைகோல் கைவேல்
கைத்தலங் கொண்டான் என்னின் அவன்தவங் கணிக்கற் பாற்றோ.
46
2444 மாறிலா அருக்கன் நாப்பண் வைகிய பரம னேபோல்
ஆறுமா முகத்து வள்ளல் அலங்குளைப் புரவி மான்தேர்
ஏறினான் வீர வாகு இலக்கரோ டெண்ம ராகும்
பாறுலாங் குருதி வேலார் பாங்கராய்ப் பரசி வந்தார்.
47
2445 இராயிர வௌ¢ள மாகும் எண்டொகைப் பூதர் யாரும்
மராமரம் பிறங்கல் ஈட்டம் வரம்பறு படைகள் பற்றி
விராவினர் சூழ்ந்து சென்றார் விரிஞ்சனே முதலோர் யாரும்
பராவொடு புடையின் நின்று பனிமலர் மாரி தூர்த்தார்.
48
2446 தூர்த்திடு கின்ற காலைச் சுருதியின் தொகைக்கும் எட்டாத்
தீர்த்தன்மான் றேர்மே லாகித் திண்புவி அண்டந் தன்னில்
பேர்த்திடும் உயிர்கள் மாற்றப் பின்னறு முன்னோன் போல
ஆர்த்திடு தானை வௌ¢ளத் தவுணர்கள் மீது போனான்.
49
2447 ஆங்கது காலை தன்னில் ஆறிரு தடந்தோள் ஐயன்
பாங்குறு பூதர் யாரும் பாரொடு திசையும் வானும்
நீங்குத லின்றிச் சூழும் நேரலன் படையை நோக்கி
ஏங்கினர் தொல்லை வன்மை இழந்தனா¢ இனைய சொற்றார்.
50
2448 தீயன புரியுஞ் சூரன் செய்திடு தவத்தாற் பெற்ற
ஆயிர விருநான் கண்டத் தவுணரும் போந்தார் அன்றே
ஏயதோ ரண்டம் ஒன்றில் இருந்தனர் இவர்மற் றன்றால்
மாயிருந் திசையும் விண்ணும் வையமுஞ் செறிந்து நின்றார்.
51
2449 வரத்தினிற் பெரியர் மாய வன்மையிற் பெரியர் மொய்ம்பின்
உரத்தினிற் பெரியர் வெம்போர் ஊக்கத்திற் பெரியர் எண்ணில்
சிரத்தினிற் பெரியர் சீற்றச் செய்கையிற் பெரியர் தாங்குங்
கரத்தினிற் பெரியர் யாருங் காலனிற் பெரியர் அம்மா.
52
2450 மாகத்தின் வதிந்த வானோர் வன்மையும் வளனும் வவ்விச்
சோகத்தை விளைத்து வெம்போ£¢ தொடங்கியே தொலைவு செய்தோர்
மோகத்தின் வரம்பாய் நின்றோ£¢ முழுதுயிர்க் கடலுள் வேட்கை
மேகத்தின் வலிந்த தீயோர் விரிஞ்சன்ஏற் றிடினும் வெல்வோர்.
53
2451 கூற்றெனும் நாமத் தண்ணல் கொண்டிடும் அரசுஞ் செங்கேழ்
நூற்றிதழ்க் கமல மேலான் நுனித்தனன் விதிக்கு மாறு
மாற்றிடுஞ் செய்கை வல்லோர் மாநில முழுதுண் டாலும்
மாற்றரும் பசிநோய் மிக்கோ ரண்டங்கள் அலைக்குங் கையோர்.
54
2452 வெங்கனல் சொ£¤யுங் கண்ணார் விரிகடற் புரைபேழ் வாயார்
பங்கமில் வயமேற் கொண்டோ£¢ பவத்தினுக் குறையு ளானோர்
செங்கதிர் மதியந் தோயுஞ் சென்னியர் செயிர்தீர் ஆற்றல்
அங்கத விறையும் பேர அடிபெயர்த் துலவும் வெய்யோர்.
55
2453 அங்கிமா முகத்தி னான்போல் அடைந்தனர் பல்லோர் யாளித்
துங்கமா முகத்தி னான்போல் தோன்றினர் பல்லோர் சூழி
வெங்கைமா முகத்தி னான்போல் மேயினர் பல்லோர் மேலாஞ்
சிங்கமா முகத்தி னான்போல் திகழ்ந்தனர் பல்லோர் அன்றே.
56
2454 மதுவொடு ஆடை பன்போல் வந்தனர் பல்லோர் யாருந்
துதியுறு புகழச்சுந் தோப சுந்தரிற் செறிந்தோர் பல்லோர்
அதிர்கழற் சலந்த ரன்போல் ஆர்த்தனர் பல்லோர் ஆற்ற
முதிர்சின மகிடன் போல மொய்த்தனர் பல்லோர் அம்மா.
57
2455 அரன்படை பரித்தோர் பல்லோர் அப்புயத் தவிசின் மேவும்
வரன்படை பரித்தோர் பல்லோர் மழுவொடு தண்டந் தாங்குங்
கரன்படை பரித்தோர் பல்லோர் கால்படை பரித்தோர் பல்லோர்
முரன்படை படுத்த கொண்டல் முதுபடை பரித்தோர் பல்லோ£¢.
58
2456 ஆனதொ ரவுண வௌ¢ளம் அநந்தகோ டியதாம் என்றே
தானுரை செய்வ தல்லாற் சாற்றவோ ரளவும் உண்டோ
வானமும் நிலனும் ஏனை மாதிர வரைப்பும் எங்குஞ்
சேனைக ளாகிச் சூழின் யாமென்கொல் செய்வ தம்மா.
59
2457 ஒரண்டத் தவுணர் போரால் உலைந்தயாம் ஒருங்கே யெல்லாப்
பேரண்டத் தோருந் தாக்கிற் பிழைப்புறு பரிசும் உண்டோ
காரண்ட அளக்கர் சாடிக் கனவரை எறியுங் கால்கள்
ஏரண்டச் சூழல் புக்கால் அவைபின்னும் இரக்க வற்றோ.
60
2458 ஒருவரே எம்மை எல்லாம் உரப்பியே துரப்பர் பின்னை
இருவரே சென்று தாக்கின் யார்இவண் உய்ய வல்லார்
துருவரே யனைய துப்பிற் சூழுறும் அவுணர் யாரும்
பொருவரே என்னில் நேர்போய்ப் பூசலார் தொடங்கற் பாலார்.
61
2459 எல்லையில் ஆற்றல் கொண்ட எம்முடைத் தலைவர் யாரும்
அல்லன வீரர் தாமும் அவுணரை எதிர்க்க லாற்றா£¢
கல்லொடு மரத்தால் யாமோ அவர்திறல் கடக்க வல்லேம்
ஒல்லைநம் உயிரும் இன்றே ஒழிந்தன போலும் அன்றே.
62
2460 நாற்படை அவுணர் தாக்கின் நாமெலாம் விளிதும் வீரர்
காற்படு பூளை யேபோற் கதுமென இரிவர் வாகைப்
பாற்படு திறலோன் நிற்கிற் பழிபடும் இனைய ரோடும்
வேற்படை யொருவன் அன்றி வேறியார் எதி£¢க்க வல்லார்.
63
2461 நீடுறு திசையும் வானும் நிலனும்வௌ¢ ளிடைய தின்றிப்
பாடுற வளைந்து கொண்டார் பற்றலர் அதனால் யாமும்
ஓடியும் உயய லாகா ஒல்லுமா றவரைத் தாக்கி
வீடுதல் உறுதி யென்றே விளம்பிமேற் சேற லுற்றா£¢.
64
2462 மற்றத காலை தன்னில் மாபெரும் பூத சேனைக்
கொற்றவர் பலரும் ஏனை வீரர்தங் குழுவி னோரும்
வெற்றிகொள் மொய்ம்பன் தானும் மிடைந்துசூழ் படையை நோக்கி
இற்றன கொல்லோ நந்தம் வன்மையென் றெண்ண முற்றார்.
65
2463 அண்டர்கள் முதல்வன் தானும் அமரரும் அகில மெங்கு
தண்டுத லின்றிச் சூழுந் தானவர் அனிக மெல்லாங்
கண்டனர் துளங்கி அஞ்சிக் கவன்றனர் அவருட் காரி
வண்டுள அலங்கற் சென்நி வானவற் கினைய சொல்வான்.
66
2464 ஆண்டகை முருகன் தன்மேல் ஆயிர விருநா லண்டத்
தீண்டிய தானை யெல்லாம் இறுத்தன இவற்றி னோடு
மூண்டமர் இயற்றி வெல்ல வூழிநாள் முடியும் என்றான்
மாண்டிடு கின்ற தெங்ஙன் அவுணா¢கள் மன்னன் மன்னோ.
67
2465 அடுதிறல் வலிபெற் றுள்ள அவுணராம் பானாட் கங்குல்
விடிவதும் அமரர் தங்கள் வெஞ்சிறை வீடு மாறும்
நெடியதொல் வெறுக்கை தன்னை நீங்கிய நமது துன்பம்
முடிவது மில்லை கொல்லோ மொழிந்தருள் முதல்வ என்றான்.
68
2466 இந்திரன் இனைய தன்மை இசைத்தலும் இலங்கை காத்த
ஐந்திரு சென்னி யானை அடுதிறல் கொண்டு நின்ற
செந்திரு மருமத் தண்ணல் தேவரை அளிக்குந் தொல்லோன்
புந்திகொள் கவலை நாடி இனையன புகலா நின்றான்.
69
2467 காலமாய்க் காலம் இன்றிக் கருமமாய்க் கரும மின்றிக்
கோலமாய்க் கோலம் இன்றிக் குணங்களாய்க் குணங்கள் இன்றி
ஞாலமாய் ஞாலம் இன்றி அநாதியாய் நங்கட் கெல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண் டுற்றான்.
70
2468 குன்றுதொ றாடல் செய்யுங் குமரவேள் மேரு வென்னும்
பொன்றிகழ் வெற்பின் வந்து புவனங்கள் முழுதும் அங்கட்
சென்றுறை உயிர்கள் முற்றுந் தேவருந் தன்பாற் காட்டி
அன்றொரு வடிவங் கொண்ட தயர்த்தியோ அறிந்த நீதான்.
71
2469 பொன்னுரு வமைந்த கஞ்சப் புங்கவ னாகி நல்கும்
என்னுரு வாகிக் காக்கும் ஈசன்போல் இறுதி செய்யும்
மின்னுரு வென்ன யார்க்கும் வௌ¤ப்படை போலும் அன்னான்
தன்னுரு மறைக ளாலுஞ் சாற்றுதற் கரிய தன்றே.
72
2470 பாயிருங் கடலிற் சூழ்ந்த பற்றலர் படையை எல்லாம்
ஏயெனும் முன்னம் வீட்டுஞ் சிறுவனென் றெண்ணல் ஐய
ஆயிர கோடி கொண்ட அண்டத்தின் உயிர்கட் கெல்லாம்
நாயகன் அவன்காண் நாஞ்செய் நல்வினைப் பயனால் வந்தான்.
73
2471 சூரனே முதலோர் தம்மை இமைப்பினில் தொலைக்க உன்னின்
மூரலால் அடுவன் கொண்ட முனிவினால் அடுவன் வாய்மைச்
சீரினால் அடுவன் நாட்டச் செய்கையால் அடுவன் என்றால்
நேரிலா முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார்.
74
2472 பாரிடர் சேனை யோடு படர்ந்ததும் இலக்கத் தொன்பான்
வீரர்கள் புடையில் போற்ற மேயதும் படைகள் பற்றிச்
சூரனை அடுவான் வந்த சூழ்ச்சியுந் தூக்கின் மாதோ
வாரண முதலா மேலோற் கனைத்துமோ ராட லேகாண்.
75
2473 துய்யதோர் குமர னேபோல் தோன்றிய முதல்வன் சூழ்ந்த
வெய்யதா னவரை யெல்லாம் விரைந்துடன் அறுத்து நீக்கிக்
கையில்வேல் அதனாற் சூரன் ஆற்றலுங் கடக்கும் யாதும்
ஐயுறேல் காண்டி யென்றான் அறிதுயில் அமா¢ந்த பெம்மான்.
76
2474 மாலிவை பலவுங் கூறி மகபதி உளத்தைத் தேற்றி
ஓலமொ டவுண வௌ¢ளம் உம்பருஞ் செறிந்த செவ்வேள்
பாலுற நின்று போரின் பரிசினைப் பார்த்து மென்றே
வேலைடை முதல்வன் பாங்கா விண்ணவ ரோடும் போந்தான்.
77
2475 வேறு
அன்ன தன்மைகண் டறுமுகன் முறுவல்செய் தடுபோர்
உன்னி யேகலும் வானமும் வையமும் ஒன்றாத்
துன்னு தானவப் பெருங்கடல் ஆர்த்தமர் தொடங்க
முன்ன மேகிய பாரிடர் யாவரும் முரிந்தார்.
78
2476 முரிந்த காலையில் பூதரின் முதல்வர்கள் முரட்போர்
புரிந்து சாய்ந்தனர் இலக்கரோ டெண்மரும் பொருதே
இரிந்து நீங்கினர் இன்னதோர் தன்மைகள் எல்லாந்
தெரிந்து திண்டிறல் மொய்ம்பினோன் சிலைகொடு சேர்ந்தான்.
79
2477 சோ¢பு தன்சிலை வாங்கியே சரமழை சிதறி
நேர்பு குந்திடும் அவுணர்கள் நெடுந்தலை புயங்கள்
மார்பு வெங்கரங் கழலடி வரைகளாய் வீழ
ஈர்பு நின்றமர் இயற்றினன் சிறுவரை இகலி.
80
2478 மாக மேல்நிமிர் ஆயிர கோடிமா கடலுள்
நாக மொன்றுசென் றலைத்தென நண்ணலர் எதிர்போய்
ஆக வம்புரிந் துலப்புறாத் தன்மைகண் டழுங்கி
ஏக நாயகன் தனதுபால் வந்தனன் இளவல்.
81
2479 காலை யங்கதில் அவுணர்தந் தானையோர் கனத்தின்
சாலம் ஓடின பூதரில் தலைவருஞ் சாய்ந்தார்
கோல வெஞ்சிலை வீரரும் முரிந்தனர் குழவிப்
பால னேயிவண் வருமெனச் சூழ்ந்தனர் பலரும்.
82
2480 தண்டு நேமியுங் குலிசமுஞ் சூலமுந் தனுக்கள்
உண்டு மிழ்ந்திடு வாளியும் உடம்பிடித் தொகையும்
பிண்டி பாலமுங் கணிச்சியும் பாசமும் பிறவும்
அண்டர் தந்திடு படைகளுஞ் சொரிந்துநின் றார்த்தார்.
83
2481 பாரி டங்களின் படையெலாம் நெக்கதும் பாங்கர்
வீர மொய்ம்பனும் இளைஞரும் வருந்திமீண் டதுவுங்
காரி னம்புரை அவுணர்தஞ் செய்கையுங் காணா
மூரல் செய்தனன் எவ்வகைத் தேவா¢க்கு முதல்வன்
84
2482 நாட்டம் மூன்றுடைத் தாதைபோற் சிறிதிறை நகைத்து
நீட்ட மிக்கதோர் சிலையினை நெடுங்கரம் பற்றிக்
கோட்டி நாணொலி கொண்டிட அண்டருங் குலைந்தார்
ஈட்ட மிக்கபல் லுயிர்களுந் துளக்கமெய் தினவே.
85
2483 வேறு
முக்கணன் உதவிய திருமுருகன் முரணுறு வரிசிலை முதிரொலிபோய்த்
தொக்கன செவிதொறும் நுழைதலுமே தொலைவறும் அவுணர்கள் தொகைமுழுதும்
நெக்கன பகிர்வன இரதமெலாம் நிரைபட வருபரி புரள்வனவே
மைக்கரி தரைமிசை விழுவனவான் மதிதொடுநெடுவரை மறிவனபோல்.
86
2484 மாசறு மறைகளின் மறையதனை மலைமுனி யுணர்வகை யருள்புரியந்
தேசிக முதலவன் வரிசிலையிற் செறிமுகில் உறைவகை சிதறுவபோல்
ஆசுகம் அளவில கடவினனால் அடங்கெழும் அவுணர்கள் புடைவளையும்
காசினி அகலமும் விரிகடலுங் ககனமும் மிடைவன கணையெனவே.
87
2485 கொடிகளை அடுவன அளவிலவே குடைகளை அடுவன அளவிலவே
படைகளை அடுவன அளவிலவே பரிகளை அடுவன அளவிலவே
கடகரி அடுவன அளவிலவே கனையொலி இரதமொ டவுணர்கள் தம்
முடிகளை அடுவன அளவிலவே முழுதுல குடையவன் விடுசரமே.
88
2486 பரவிய தருவினம் என அவுணப் படைநிரை விழுவன தொடுகடலில்
திரையென விழுவன புரவிஇனந் திருநெடு வரைகளின் விழுவனதேர்
கருமைகொள் மணிமுகில் இனமெனவே கடகரி விழுவன கனவரைசூழ்
இரவியும் மதியமும் விழுவனபோல் எழுவன கவிகையும் விழுவனவே.
89
2487 செல்லுறு தாள்களும் அடுபடைகள் சிந்திய செங்கைகளுந் திறலே
சொல்லிய வாய்களும் விம்மலுறுந் தோள்களும் நோக்குறு துணைவிழியுங்
கல்லென ஆர்த்திடு கந்தரமுங் கவசமும் வீரர்கள் துவசமுடன்
எல்லையி லாதமர் தனிமுதல்வன் எய்திடும் வாளிகள் கொய்திடுமே.
90
2488 வேறு
வட்டணை கொண்டிடு மால்வரையும்,
எட்டெனும் ஓங்கலும் யானைகளும்
பட்டுரு விக்கணை பாறினவால்,
ஒட்டலர் எங்ஙனம் உய்குவதே.
91
2489 பொன்னுல கெல்லைபு குந்துலவும்
அன்னமு யர்த்திடும் அண்ணல்பதந்
துன்னுறும் அச்சுதர் தொல்லுலகின்,
மின்னென வேசெலும் வேள்கணையே.
92
2490 மேதினி கீண்டு விரைந்துபுகும்,
பாதல மூல பரந்துசெலும்
மூதகும் அண்ட முகட்டுருவும்,
மாதிரம் ஏகுறும் வள்ளல்சரம்.
93
2491 மூவிரு செய்ய முகத்தொருவன்,
ஏவிய செஞ்சரம் எங்குமுறா
மேவலர் தங்களை வீட்டிடும்வே,
றேவர்கள் கண்ணும் இறுத்திலவே.
94
2492 ஆனனம் ஆறுள அண்ணல்சரம்,
தானவர் சென்னிகள் தள்ளுதலும்
வானிடை போயின மாண்கதிர்கள்
மேனிம றைப்புறும் வெய்யவர்போல்.
95
2493 வாளெழு வேல்பிற வாங்கினர்தந்,
தோள்களை வாளி துணித்தெறிய
நீளிடை சென்று நிரந்திடுதங்,
கேளிரை அட்டன கீழ்மையர்போல்.
96
2494 மாசகல் வானக மாதிரவாய்,
காசினி வேலைகளத தின்அகம்
பாசறை சுற்றிய பாடியெலாம்,
ஆசற அட்டனன் அற்புதனே.
97
2495 அட்டிடு கின்றுழி அம்புயன்மால்,
ஒட்டுறு வாசவன் உள்மகிழாக்
கெட்டனர் தானவர் கேடில்துயர்,
விட்டனம் என்று விளம்பினரே.
9
2496 அடைந்தனர் விம்மிதம் ஆங்கவுணர்,
மிடைந்த நோக்கினர் வேற்படையோன்
தடிந்தது காண்சிலர் தாரணிமேற்,
கிடந்தது கண்டனர் கேசரரே.
99
2497 அலமரு பாரிடர் அவ்வவர்தந்,
தலைவர்கள் ஏனையர் தானவர்தம்
மலிபடை சாய்த்து வயம்புனைவிற்,
புலவனை ஆர்ப்பொடு போற்றினரே.
100
2498 வள்ளல்ச ரம்பட வான்முகடு,
கொள்ளுறு தானை குழாந்தொலைய
வௌ¢ளிடை யாயின விண்ணவர்தம்,
உள்ளக மாற்றவு வப்புறவே.
101
2499 அண்டக டாகம தப்புறமாய்க்,
கொண்டிடு தானவர் கொள்கையிது
கண்டிறை வன்கழல் காணநெறி,
உண்டினி யென்றனர் உள்மகிழ்வார்.
102
2500 காற்றென அண்ட கடாகநெறி,
தோற்றிய வாயில் தொடர்ந்துபுகா
மேற்றிகழ் தேர்கரி வெம்பரியின்,
ஏற்றமொ டொல்லென ஏகினரால்.
103
2501 அந்நெறி ஏகியிவ் வண்டமெலாந்,
துன்னினர் வான்புவி சூழ்ந்துவௌ¤
என்னது மில்லென ஈண்டினரால்,
முன்னுறவந்து முடிந்தவர்போல்.
104
2502 சூரன் எனப்படு தொல்லிறைவன்,
பேரமர் ஆற்றிடு பெற்றியினால்
தேரிடை வந்துறு செய்கைதெரீஇ,
ஆர்வமொ டேநெடி தார்த்தனரே.
105
2503 ஆர்த்தனர் தம்முன் அடைந்துளர்தாம்,
பேர்த்திடு கின்ற பிணக்கிரியாய்
ஈர்த்திடு சோரி இடைப்படுதல்,
பார்த்தனர் சிந்தை பரிந்தனரே.
106
2504 பரிந்தனர் நம்படை பட்டிடவே,
புரிந்திடு வானொடு போர்புரியா
விரைந்து வயங்கொடு மீடுமெனாத்,
தெரிந்தனர் சிந்தனை தேற்றினரே.
107
2505 தேற்றிடு கின்றுழி தேவரெலாம்,
போற்றிட வீரர் புடைக்கணுற
ஆற்றல்கொள் பூதர்கள் ஆர்த்திடவே,
தோற்றினன் ஈறொடு தோற்றமிலான்.
108
2506 சேயுரு வாகிய சீர்முதல்வன்
மேயது கண்டு மிகச்சிறியன்
பாய்பரி யானை படைத்துமிலான்,
ஏயிவ னேநம தெண்ணலனே.
109
2507 ஆண்டகை மைந்தனிவ் வண்டமெலாம்,
ஈண்டியதானை இமைப்பொழுதின்
மாண்டிட அட்டனன் மற்றிதுதான்,
ஈண்டிடும் அற்புத நீர்மையதே.
110
2508 அன்னது நின்றிட அங்கவன்மேல்,
மன்னவர் மன்னவன் வந்துபொரு
முன்னமர் ஆற்றி முடிக்குதும்யாம்,
என்ன இயம்பினர் யாவருமே.
111
2509 தற்பமொ டின்னன சாற்றியவண்,
முற்படு தானவர் முக்கணுடைத்
தற்பரன் நல்கிய சண்முகனை,
வற்புடன் ஆர்த்து வளைந்தனரால்.
112
2510 வளைந்திடு காலையில் வானவர்கள்,
உளைந்தனர் பூதர்கள் உட்கிமனந்
தளர்ந்தனர் வீரர் சலித்தனரால்,
விளைந்த பேரமர் மீட்டுமெனா.
113
2511 வேறு
ஐயன்ம ருத்தினை அத்துணை நோக்கிக்
கையணி நெற்றி கடைக்குழை யாகி
வெய்யவர் தானைகள் மேவுழி யெல்லாம்
வையம்வி டுக்குதி வல்லையில் என்றான்.
114
2512 அட்டுறு நீப அலங்கல் புனைந்தோன்
கட்டுரை கொண்டு கரந்தொழு காலோன்
ஒட்டுறு நண்ணலர் உற்றுழ காணா
விட்டனன் அம்ம விறற்பரி மான்தோ¢.
115
2513 மண்ணிடை சென்றிடு மாதிர நீந்தும்
விண்ணிடை சூழ்தரும் வேலையின் மீதாங்
கண்ணுறும் எப்படி கைதொழும் வானோர்
எண்ணினும் நாடரி தெந்தைபி ரான்தேர்.
116
2514 சேயது காலை திறத்திற மாகி
மூயின தானவர் மொய்ம்புறு தானை
சாய்வுற ஓர்தொடை தன்னில் அநந்தம்
ஆயிர கோடிக ளாக்கணை தொட்டான்.
117
2515 பரிந்தன சூழ்ந்தவர் பாணிகள் மொய்ம்பு
சிரந்துணி வுற்றன செம்புன லாழி
சொரிந்த பிணக்கிரி துற்றிய வற்றால்
நெரிந்தது வையம் நௌ¤ந்தது நாகம்.
118
2516 பொய்கொலை ஆற்றிய பூரியர் உக்கார்
செய்குவர் நன்மை செறிந்துள ரேனுங்
கைகெழு ஞாளிக ளேகறித் துண்ட
மைகெழு தானவர் மாண்டிடும் யாக்கை.
119
2517 ஒன்னலர் மீதின் உயிர்க்குயி ரானோன்
மின்னென வீசிய வெஞ்சர மாரி
பின்னுற முந்து பெயர்ந்திடு மென்றால்
அன்னவன் தோ¢விரை வா£¢கணிக் கின்றா£.
120
2518 பரத்தினு மேதகு பண்ணவன் வா£¢வில்
கரத்தினை யும்விரை வாற்கரந் தூண்டுஞ்
சரத்தினை யுந்தடந் தேரினை யுங்கால்
உரத்தினை யும்புகழ் வார்புடை யுள்ளோர்.
121
2519 வெவ்விச யப்படை வீட்டிடும் வாளிச்
செவ்விசை தேர்விசை நாடினர் செவ்வேள்
கைவிசை யோநெடுங் கால்விசை தானோ
வெவ்விசை யோவிசை என்றனர் வானோர்.
122
2520 துய்யவன் வாளி துணிந்திட வீரர்
கையொடு வானிடை செல்வ கணிப்பில்
ஐயிரு வட்டம ராப்புடை பற்ற
வெய்யவர் பற்பலர் விண்ணெழல் போலும்.
123
2521 காலொரு பாங்கர் கழுத்தொரு பாங்கர்
வாலொரு பாங்கர் மருப்பொ டெருத்தம்
மேலொரு பாங்கர் வியன்கையொர் பாங்காத்
தோலினம் இவ்வகை யேதுணி கின்ற.
124
2522 பல்லணம் அற்றன பன்முழு தற்ற
செல்லுறு தாளொடு சென்னியும் அற்ற
ஒல்லொலி அற்ற உரந்துணி வுற்ற
வல்லமா¢ நீந்துறு மாத்தொகை முற்றும்.
125
2523 மாழைகொள் வையம் மடிந்திட நேமி
ஆழிகொள் சோரியின் ஆழ்வன மேருச்
சூழுறும் வெய்யவர் தொல்புவி கீண்டே
கீழுறும் எல்லை கெழீஇயின போலும்.
126
2524 ஏறிய தேர்களும் யானைகள் யாவுஞ்
சூறைகௌ¢ வாசிக ளுந்துணி வுற்றே
வீறகல் வீரர்மி சைப்பட வீழ்ந்த
மாறவை ஆற்றிடும் வல்வினை யேபோல்.
127
2525 ஞாலமும் வானமும் நண்ணலர் ஆவி
மாலொடு வாரி மடங்கல் உலைந்தான்
சாலுமி வற்கிது தாள்வலி யாற்கொல்
கால னெனப்புகல் கட்டுரை பெற்றான்.
128
2526 எறிபடை யாவையும் ஏமம தாகச்
செறிபடை யாவையுஞ் சேயவன் ஏவால்
முறிபடு கின்ற முனிந்துவ ணப்புட்
கறிபட மெய்துணி கட்செவி யேபோல்.
129
2527 முன்னுறு வார்கள் முரட்படை தூவிப்
பின்னுறு வார்பெய ராதுபு டைக்கண்
துன்னுறு வார்கள் எலாந்துணி வாக
மின்னென எங்கணும் வேள்கணை தூர்த்தான்.
130
2528 சூலம தேகொல் கணிச்சிகொல் தொல்லை
மாலெறி நேமிகொல் வச்சிர மேகொல்
காலொடு சென்ற கனற்குழு வேகொல்
வேலது கொல்லென வேள்கணை விட்டான்.
131
2529 வேறு
மழைத்திடு மெய்யுடை மாற்றலர்கள்,
இழைத்திடு மாய இயற்கைகளும்
விழுத்தக வீசும் விற்படையும்,
பிழைத்தன தாங்கள் பிழைத்திலரால்.
132
2530 முக்கணன் மாமகன் மொய்கணைகள்,
தொக்கவர் யாக்கை துணித்திடலும்
மெய்க்கிடு பல்கலன் மீன்விழல்போல்,
திக்குல விப்படி சிந்தினவே.
133
2531 அண்ணல் சரங்கள் அறுத்திடலும்,
எண்ணலர் யாக்கைகள் இற்றவைதாம்
மண்ணை யளந்தயில் மாலெனவே,
விண்ணை யளந்து விழுங்கினவே.
134
2532 சூழுறு தானை துணிந்தஉடல்,
ஏழெனும் நேமியும் எண்டகுபேர்
ஆழியும் விண்ணும் அடைத்திமையோர்,
வாழுல கங்களை வௌவியவே.
135
2533 காடி யிழந்து கவந்தமதாய்,
ஆடின வௌ¢ளமும் ஆயிரமா
கோடி யதுண்டு குகன்கணையால்,
வீடின எல்லை விதிக்குநர்யார்.
136
2534 வீழுறு மாற்றலர் மெய்க்குருதி,
ஆழக ளாகி அகன்புவியில்
பூழைக ளோடு புகுந்துபிலம்,
ஏழுள எல்லையும் ஈண்டியதே.
137
2535 வேறு
பாதல எல்லை பரந்திடு சோரி
பூதல மீண்டு புகுந்து பராவி
ஓத நெடுங்கடல் ஓங்கிய வாபோல்
மாதிரம் எங்கும் மறைத்தன அன்றே.
138
2536 மீனுடு வாக விளங்கிய திங்கள்
பானு மலா¢ந்திடு பங்கய மாகச்
சோனைகொள் மாமுகில் தோணிய தாக
வானிமிர் செம்புனல் மாகடல் ஒக்கும்.
139
2537 மாசறு கூற்றனும் மற்றுளர் தாமுங்
கேசர ராகிய கிங்கரர் யாரும்
பாசம லைந்திடு பல்பிணி பற்றா
வீசினர் ஆருயிர் மீன்கள் கவர்ந்தார்.
140
2538 பாலுறு கின்ற பணிக்கிறை நாப்பண்
மாலரு ளில்துயில் மாட்சிமை யென்ன
நீலுறு திங்கள் நிணங்கெழு செந்நீர்
வேலையின் மீது விளங்கிய தம்மா.
141
2539 மட்டறு செம்புனல் வாரிதி நீந்தி
ஒட்டலர் யாக்கையின் ஓங்கல் அறுத்துத்
தட்டுறு செங்கதிர் சண்முக மேலோன்
விட்டிடு நேமியின் விண்மிசை செல்லும்.
142
2540 சிறைப்புற வுக்கருள் செய்திட மெய்யூன்
அறுப்பவன் என்ன அடைந்தனர் விண்ணின்
நெறிப்படு வானவர் நேரலர் யாக்கை
உறப்படு சோரிமெய் உற்றிடு நீரால்.
143
2541 ஆனதொ ரெல்லையில் அண்ட நிறைந்த
சேனைகள் வீழ்ந்தன செம்மல் சரத்தால்
ஊனுயிர் பூதமொ ழந்தன முக்கண்
வானவன் மூரலின் மாய்ந்திடு மாபோல்.
144
2542 வேறு
அண்டம் ஈங்கிது முற்றொருங் கீண்டிய அவுணர்
தண்ட மாய்தலும் ஏனைய அண்டங்கள் தம்மில்
கொண்ட தானைகள் பின்னரும் வந்திடக் குமரன்
கண்டு மற்றவை தொல்லைத்தனன் செலுத்திடு கணையால்.
145
2543 அறுத்து வெம்முமுனத் தானையை யாண்டுசெல் லனிகம்
மறித்தும் வந்துவந் தடைதரும் இவணென மனத்துட்
குறித்து வெங்கணை மாரியால் அண்டகோ ளகையின்
நெறித்த ரும்பெரு வாயிலை யடைததனன் நிமலன்.
146
2544 ஆண்டு சென்னெறி மாற்றியே அண்ணல்வெங் கணையால்
மாண்ட தானைகள் சோரியுங் களேவர மலிவும்
நீண்ட பாதலங் கடற்புவி கொண்டுவான் நிமிர்ந்தே
ஈண்டு கின்றது கண்டனன் வரைபக எறிந்தோன்.
147
2545 நெற்றி நாட்டத்தின் உலகெலாம் அட்டிடு நிமலன்
பெற்ற மாமகன் பன்னிரு விழிகளும் பிறங்கு
கற்றை வெஞ்சுடர் வடவைபோல் ஆக்கியக் கணத்தில்
உற்று நோக்கினன் நெரிந்தன களேவரத் தோங்கல்.
148
2546 வெந்து நுண்டுகள் பட்டன களேவரம் விசும்பின்
உந்து சோ£¤நீர் வறந்தன மூவகை உலகு
முந்து போலவே அமைந்தன முளரியான் முகுந்தன்
இந்தி ராதியர் ஆர்த்தனர் குமரனை ஏத்தி.
149
2547 பாறு லாவரு களேவரத் தமலையும் படிமேல்
வீறு சோணித நீத்தமும் வேவுற விழித்து
நீற தாக்கினான் சூரனை அட்டிலன் நின்றான்
ஆறு மாமுகன் ஆடலை உன்னினன் ஆங்கொல்.
150
2548 ஆகும் எல்லையின் ஒல்லையின் அடுகளத் தடைந்த
சேகு நெஞ்சுடைச் சூரன்இத் திறமெலாந் தெரிந்து
மாக நீடுநந் தானையை அலைத்தமாற் றலனை
நாகர் தம்மொடு முடிக்குவன் யானென நவின்றான்.
151
2549 மாற்றம் இத்திறம் இசைத்திடும் அவுணர்கோன் மனத்தில்
சீற்ற மூண்டிட அமர்வினை குறித்தனன் திகிரிக்
காற்றின் ஒல்லைவந் தேற்றலும் மருத்துவன் கடவிப்
போற்று தேர்மிசை முருகனுஞ் சென்றெதிர் புகுந்தான்.
152
2550 புக்க காலையில் அறுமுகன் தோற்றமும் புடையின்
மிக்க பன்னிரு கரங்களும் வியன்படைக் கலனுந்
தொக்க வீரமும் வன்மையும் நோக்கியே தொல்லைத்
தக்க னேயென அவுணர்கோன் இன்னன சாற்றும்.
153
2551 சிறந்த வான்மதி மிலைச்சினோன் அருள்புரி செயலால்
இறந்தி டேனியான் என்றுமிப் பெற்றியாய் இருப்பேன்
மறந்தும் என்னொடு பொருதிலர் தேவரும் மலைந்தே
இறந்து ளார்பலர் உணர்ந்திலை போலுநீ இதுவே.
154
2552 உள்ளம் நொந்துநொந் தென்பணி ஆற்றியே உலைந்து
தள்ளு றுஞ்சுரர் மாழியினைச் சரதமென் றுன்னிப்
பிள்ளை மென்மதி யாலிவண் வந்தனை பெரிதும்
அள்ள லுற்றுழிப் புகுந்திடுங் கயமுனி யதுபோல்.
155
2553 உடைப்பெ ரும்படை செறுத்தனை பாலனென் றுன்னை
விடுப்ப தில்லையால் வெரிநது கொடுக்கினும் விரைவில்
படுப்பன் வானவர் தொகையுடன் பாரிடர் தமையுங்
கெடுப்ப னென்றனன் தன்பெருங் கிளையுடன் கெடுவான்.
156
2554 வெம்பு ரைத்தொழிற் கொருவனாங் கயவநீ வெறிதே
வம்பு ரைத்தனை யாவதொன் றில்லைநின் மார்பஞ்
செம்பு ரைப்பட யாம்விடு கின்றதோர் திறல்வாய்
அம்பு ரைத்திடு மாறுனக் கென்றனன் அமலன்.
157
2555 ஆரும் நேரிலாப் புங்கவன் சேயின தறையச்
சூர னாகியே அவுணர்கோன் துண்ணெனச் செயிர்த்து
மேரு நேர்வதோர் வா¤சிலை யெடுத்துவிண் ணிழியும்
வாரிபோன் றிடு நாணினை ஏற்றியே வளைத்தான்.
158
2556 வளைத்த டங்கிரி புரைவதோர் சிலையினை வயத்தால்
வளைத்த செய்கையைக் காண்டலும் பாரிடர் வானோர்
வளைத்த டங்கடல் வந்திடு நஞ்சொடு மலைவான்
வளைத்த தன்மைபோல் அவுணர்தம் முதல்வனை வளைத்தார்.
159
2557 சிலையை வீசினர் கொடுமரம் வீசினர் செறிமூ
விலையை வீசினர் படையெலாம் வீசினர் எதிர்ந்தார்
உலைய வீசியே அடல்செயும் மும்மதத் துவாவை
வலையை வீசியே பிணித்திட மதித்துளார் என்ன.
160
2558 கண்டு மற்றதை அவுணர்கோன் வில்லுமிழ் கணையாங்
கொண்டால் நுண்துளி சிதறியே கணங்கள்கூட் டறுத்து
விண்டு லாவர அரக்கினாற் குயின்றதோ£¢ வெற்பைச்
சண்ட வெங்கனல் உடைப்பது போலவே தடிந்தான்.
161
2559 வீடி னார்களும் புயங்கரந் துணிந்திட மெலிந்து
வாடி னார்களும் மயங்கிவீழ்ந் தார்களும் வல்லே
ஓடி னார்களும் ஓடவும் வெருவிவேற் றுருவங்
கூடி னார்களும் ஆயினர் பாரிடக் குழாத்தோர்.
162
2560 பூதர் சாய்ந்துழி இலக்கரோ டெண்மரும் பொருவில்
வேத நாயகன் தூதனுஞ் சூழ்ந்துடன் மேவிக்
கோதை தூங்கிய கொடுமர மாயின குனித்துச்
சோதி வான்கணை மாரிகள் அவுணன்மேற் சொரிந்தார்.
163
2561 சொரிந்த வெங்கணை எங்கணும் வருதலுஞ் சூரன்
தெரிந்து வாளிதொட் டறுக்கலன் நின்றதோர் செல்வி
விரைந்து வந்தவை ஆங்கவன் மெய்ப்பட விளிந்து
பரிந்து போயின செய்ததொன் றில்லைஅப் பகழி.
164
2562 பரப்பின் ஈண்டிய வீரதர்தஞ் சூழச்சியைப் பாரா
உரப்பி ஆவலங் கொட்டியே வெகுளிகொண் டொருதன்
பொருப்பு நேர்சிலை குனித்துவெஞ் சிலீமுகம் பொழிந்து
திருப்பெ ருந்தடந் தேரொடுஞ் சாரிஆகை திரிந்தான்.
165
2563 நூறு கோடிவெஞ் சரமொரு தொடையுற நூக்கிச்
சூறை யாமென வட்டணை திரிந்துளான் சூழ்வோர்
மாறு தூண்டிய சரங்களைத் தணித்துமற் றவர்கள்
ஏறு தேருடன் பிடித்திடு சிலைகளை இறுத்தான்.
166
2564 வையம் வில்லுடன் இற்றபின் மற்றவர் மலைவு
செய்ய உன்னுமுன் மொய்ம்பினும் உரத்தினுஞ் சிரத்துங்
கையி னுங்கணை ஆயிர மாயிரங் கடுந்தீப்
பெய்யும் மாரிபோற் செறித்தனன் செம்புனல் பெருக.
167
2565 புரந்த னிற்செறி கறையினா£¢ புலம்புகொள் மனத்தார்
உரந்த ளர்ந்துளார் வில்வலி இழந்துளார் ஒருங்கே
இரிந்து நீங்கினர் இலக்கரோ டெண்மரும் இளவல்
திருந்த லன்தடந் தேர்மிசைப் பாய்ந்தனன் சினத்தால்.
168
2566 பாய்ந்து திண்டிறல் மொய்ம்பினான் பரமன்முன் னளித்த
நாந்த கந்தனை யுரீஇக்கொடு நண்ணலர்க் கிறைவன்
ஏந்து வில்லினைத் துணித்தனன் துணித்தலும் எரிபோல்
காய்ந்து வெய்யவன் புடைத்தனன் உரத்திலோர் கரத்தால்.
169
2567 அங்கை கொண்டுசூர் ஒருபுடை புடைத்தலும் அகலம்
பொங்கு சோணிதம் அலைத்திட வாகையம் புயத்துச்
சிங்கம் வீழ்ந்தயர் வுற்றிடத தூதனைச் செகுத்தல்
இங்கெ னக்கடா தென்றெடுத் தும்பரின் எறிந்தான்.
170
2568 எறிந்த காலையில் விண்ணிடைப் படர்ந்திடும் ஏந்தல்
அறிந்து மீண்டுசென் றாறுமா முகன்புடை அடைந்தான்
தறிந்து போகிய சிலையினைத் தரைமிசை யிட்டுச்
சிறந்த தோர்தனு எடுத்தனன் தீயரில் தீயோன்.
171
2569 அத்த மேல்கிரி உதயமால் வரைத்துணை யான்று
நித்த லும்பிறர்க் கிடர்செய்து மேருவின் ஈண்டு
கொத்து நீடுபல் குவடுடைத் தாகியே குமரன்
சத்தி யாலட நின்றவெற் பனையதத் தனுவே.
172
2570 வனைக ருங்கழல் அவுணனக் கார்முகம் வளைத்துப்
புனலும் அங்கியும் காலுடன் ஒலிப்பது புரைய
எனைவ ருந்துளக் குறும்வகை நாணொலி யெடுத்தான்
அனைய பெற்றியை அறிந்தனன் அமரரை அளித்தோன்.
173
2571 புயலின் மேனியன் புவிநுகர் காலையும் போதகன்
துயிலு மாலையுந் துஞ்சிய தொலையா
தியலு மண்டத்தின் அடிமுடி உருவிநின் றிலங்குங்
கயிலை போல்வதோர் நெடுஞ்சிலை எடுத்தனன் கந்தன்.
174
2572 வாரி யாலுல கழிந்திடும் எல்லையின் மருங்கின்
மேரு வாதியாம் வரைகளுங் கிரிகளும் விசும்பில்
காரு மேலுள உலகமும் அமரருங் கயிலைச்
சாரல் சூழதல்போல் விரவியார்ப் புடையததத் தனுவே.
175
2573 நீட்ட மிக்கதோர் அப்பெருஞ் சிலையினை நிமலன்
தோட்டு ணைக்கொடு வாங்கியேழ் வகையினால் தோன்றும்
ஈட்ட மிக்கபல் லுயிர்களும் வான்உரும் ஏற்றின்
கூட்ட மாகிய மார்த்தெனக் குணத்தொலி கொண்டான்.
176
2574 குணங்கொள் பேரொலி கோடலும் இரலையூர் கொற்றத்
தணங்கு லாவரு கார்முகங் குழைத்துளை யவதி
இணங்க வாங்கியே பத்துநூ றாயிரத் திரட்டி
கணங்கொள் வெஞ்சரம் உகைத்தனன் கூற்றினுங் கடியோன்.
177
2575 வான்ம றைத்தன மாதிரம் மறைத்தன மதிதோய்
மீன்ம றைத்தன கதிர்வெயின் மறைத்தன வேலை
தான்ம றைத்தன வசுமதி மறைத்தன தருவார்
கான்ம றைத்தன வரைகளை மறைத்தன கணைகள்.
178
2576 காற்றிற் செல்வன அங்கியிற் படர்வன கடுங்கட்
கூற்றிற் கொல்வன வேலைவெவ் விடத்தினுங் கொடிய
பாற்றுத் தொல்சிறை உள்ளன ப·றலை படைத்த
நாற்றிக் கும்புகழ் அவுணர்கோன் ஆணையின் நடப்ப.
179
2577 பருமி தத்தன மேருவைத் துளைப்பன பாங்கர்
வரைகி ழிப்பன அண்டமும் பொதுப்பன வான்தோய்
உருமி டிக்குலம் பொருவன விடத்தையுண் டுமிழ்வ
கருமை பெற்றன சேயன தீயவன் கணைகள்.
180
2578 துண்ட வெண்பிறை வாளெயிற் றவுணர்கோன் துரப்ப
மிண்டு வெங்கணை யெங்கணுஞ் செறிந்திட விண்ணோ£¢
கண்டு கண்ணனை அணுகியே கைகுலைத் தைய
உண்டு கொல்நமக் கொளிப்பதோர் இடமென உரைத்தார்.
181
2579 உரைத்து ளார்க்குமால் மாறுரை வழமுன் ஔ¢வேல்
கரத்தி லேந்திய குமரவேள் இன்னது கண்ணால்
தெரித்து வெங்கனல் விடுத்திடும் ஊதைபோற் சிலதன்
சரத்தி னாலவன் தூண்டிய கணையெலாந் தடிந்தான்.
182
2580 மடிந்தி டும்படி மாற்றலன் சரங்களை வள்ளல்
தடிந்த தன்மைகண் டமரர்கள் உவகையில் தழைத்தார்
படர்ந்து நீடிய கங்குலின் பாயிருள் புலர
விடிந்த காலையின் எழுங்கதிர் கண்டமே தினிபோல்.
183
2581 வேறு
அங்க வெல்லை அவுணர்கோன்,
எங்கள் நாதன் எதிருற
மங்குல் போல்வ ரம்பிலாச்,
செங்கண் வாளி சிதறினான்.
184
2582 ஆய காலை அறுமுகன்,
தீயன் உந்து செறிகணை
மாய வாளி மாமழை,
ஏயெ னாமுன் ஏவினான். 185
185
2583 எங்கள் நாதன் ஏவிய,
துங்க வாளி சூர்விடும்
புங்க வங்க ளைப்புரத்,
தங்கி போல றுத்தவே.
186
2584 அறுத்த பின்னும் அறனிலான்,
மறுத்தும் வாளி மாமழை
கறுத்த கண்டர் காளைமேல்,
செறுத்து வல்லை சிந்தினான்.
187
2585 சிந்து கின்ற செஞ்சரம்,
வந்து றாமுன் வந்தெனக்
கந்தன் நூறு கணைதொடா,
அந்தில் பூழி ஆக்கினான்.
188
2586 பூழி செய்து பொள்ளென,
ஊழி நாதன் ஒண்சரம்
ஏழு நூற தேவினான்,
சூழு மாயை தோன்றல்மேல்.
189
2587 மாயை மைந்தன் மற்றதை,
ஆய வாளி யால்அறுத்
தேவி னானி ராயிரஞ்,
சேயின் முன்சி லீமுகம்.
190
2588 வேறு
விட்டதனை அத்தொகை விறற்பகழி தன்னால்
அட்டுவிரை விற்கடவுள் ஆயிர விரட்டி
கட்டழலை யொத்துள கடுங்கணைகள் தம்மைத்
தொட்டனன் வருத்தமொடு சூர்கிளை துளங்க.
191
2589 முராரியுத வுஞ்சுதனை முந்துதளை இட்டாண்
டொராயிரம் அளித்தபரன் உய்த்தகணை செல்ல
இராயிர நெடும்பகழி ஏவியவை நீக்கி
அராவிறையும் வையமும் அழுங்கலுற ஆர்த்தான்.
192
2590 ஆர்த்தவன் விடுங்கணை அனைத்தினையும் முக்கண்
மூர்த்திதரு கான்முளை செலச்செல முடித்தான்
கார்த்தெழு புகைப்படலை கான்றுநிமிர் செந்தீச்
சேர்த்தினவை யாவையும் மிசைந்திடு திறம்போல்.
193
2591 ஐயன்விடு வாளிகளை அவ்வசுரன் நீக்கும்
வெய்யன்விடு வாளிகளை வேள்கடி தறுக்கும்
எய்யுநெடு வெம்பகழ இற்றவைகள் சிந்தி
வையமிசை போகியன வானமணித் தென்ன.
194
2592 முற்றிய அமர்த்தலை முனிந்திவர் செலுத்துங்
கொற்றநெடு வாளிகள் குறைந்துழ எழுந்தீப்
பற்றியது பாரிடை பகிர்ந்தவரை முற்றும்
வற்றிய அளக்கரும் வறந்துளது கங்கை.
195
2593 தார்கெழுவு வேற்படை தடக்கையுடை யோனுஞ்
சூரனும் இவாறமர் இயற்றுதொழில் காணா
வீரமட மாதுளம் வியந்திவர் தமக்குள்
ஆரிடை நடத்துமென ஐயமொடு நின்றான்.
196
2594 ஆளரிதன் முன்னிளவல் ஆனைவத னத்துக்
காளைமகிழ் பின்னிளவல் கார்முகம் உகைக்கும்
வாளிமழை ஏயலது மற்றவர்கள் தம்மை
நீள்விழியி னால்தெரிகி லார்புடையின் நின்றோர்.
197
2595 நீடுசமர் இன்னணம் நிகழ்ச்சியுறும் எல்லை
மேட்மிசை ஊர்பரன் விடுத்தகணை எல்லாம்
ஈடுபட நூறியவன் ஏறிவரு மான்தேர்
ஆடுறு பதாகையை அறுததுவிரைந் தார்த்தான்.
198
2596 ஆ£¢த்துவிறல் வால்வளையை அம்பவள வாயில்
தேர்த்தியிசைத் தான்தனது சீர்த்தியிசைத் தென்ன
மூர்த்தமது தாழ்க்கிலன் முனிந்துகணை பின்னுந்
தூர்த்துமுரு கன்தனது தோற்றமறைத் திட்டான்.
199
2597 மறைத்தபக ழித்தொகையை வாளிமழை தன்னாற்
குறைத்தவுணன் ஊர்ந்திடு கொடிஞ்சிநெடு மான்தேர்
விறற்கொடி தனைக்கொடிய வெஞ்சரமொ ரேழால்
அறுத்துமுரு கன்பரவை யாழ்கடலின் இட்டான்.
200
2598 வேறு
தான வர்க்குத் தலைவன் தனிக்கொடி
மீன வேலையில் அற்றுடன் வீழ்ந்துழிப்
பானு கம்பனெ னப்படு பாரிடர்
சேனை காவலன் தெற்றென நோக்கினான்.
201
2599 கண்டு சிந்தை களித்துப் பெருமிதங்
கொண்டு குப்புற் றிசைத்துக் குனித்திடா
அண்டர் போற்றத்தன் ஆயிரம் வாயினும்
ஒண்தி ரட்சங்கம் ஒல்லைவைத் தூதினான்.
202
2600 கானு கம்படு கந்துகத் தேருடைப்
பானு கம்பன் பனிமதி ஆயிரம்
மானு கம்பவை வாய்வைத் திசைத்தலுந்
தானு கம்பல தங்கிற்றவ் வோசையே.
203
2601 பாய்பெ ரும்புகழ்ப் பானுகம் பன்வளை
ஆயி ரங்களும் ஆர்த்திட அண்டர்தம்
நாய கன்தன் விறல்கண்டு நாரணன்
தூய சங்கு முழங்கிற்றுத் துண்ணென.
204
2602 போதம் அங்கிற் புங்கவர் யாவருஞ்
சோதி வேற்படைத் தூயவன் ஏறுதேர்
மீது கேதனம் இல்லை வியன்கொடி
ஆதி நீயென் றழலினை ஏவினார்.
205
2603 ஏவ லோடும் எரிதழற் பண்ணவன்
வாவு குக்குட மாண்கொடி யாகியே
தேவதேவன் திருநெடுந் தேர்மிசை
மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட.
206
2604 படியி லாதமா¢ பண்ணவன் தேர்மிசைக்
கொடிய தாய்நின்று குக்கு டங்கூயது
கடிய தானவர் கங்குல் புலர்ந்திடும்
விடியல் வைகறை வேலையைக் காட்டல்போல். 207
207
2605 சங்க மோடு தபனனும் ஆர்த்தலும்
மங்குல் வண்ணத்து மாயவன் ஆர்த்தனன்
பங்க யாசனப் பண்ணவன் ஆர்த்தனன்
திங்கள் ஆர்த்தது செங்கதிர் ஆர்ப்பவே.
208
2606 மறலி ஆர்த்தனன் மாருதங் கட்கெலாம்
இறைவன் ஆர்த்தனன் இந்திரன் ஆர்த்தனன்
அறைக டற்கர சானவன் ஆர்த்தனன்
குறைவில் செல்வக் குபேரனும் ஆர்த்தனன்.
209
2607 ஆர்த்த ஓசைபோய் அண்டத்தை முட்டியே
சூர்த்த நோக்குடைச் சூரபன் மன்செவிச்
சீர்த்து ளைக்குட் செறிதலுந் தேவரைப்
பார்த்த னன்கடு உண்டன்ன பான்மையான். 0
210
2608 மாறி லென்முன் வருவதற் கஞ்சியே
பாறு போன்று பழுவத்து லைந்துளார்
தேறி வந்து தெழித்தனர் என்முனும்
ஆறு மாமுகன் ஆற்றல்கொண் டேகொலாம்.
211
2609 நன்று நன்றிது நான்முகன் ஆதியா
நின்ற தேவர் நிலையழித் தொல்லையில்
கொன்று பின்னர்க் குமரனை வெல்வனால்
என்று சீறினன் யாரையும் எண்ணலான்.
212
2610 இருக்க மைந்தன் இகலிலண் விண்ணிடைச்
செருக்கு தேவர் திறலினைச் சிந்துவான்
அருக்க னோடிய அந்தரத் துய்க்குதி
தருக்கு தேரினைச் சாரதி நீயென்றான்.
213
2611 மற்றிவ் வாறு வலவனை நோக்கியே
சொற்ற காலைத் தொழுதெந்தை நன்றெனாப்
பொற்றை போலும் பொலன்மணித் தேரினை
வெற்றி யாகென விண்மிசைத் தூண்டினான்.
214
2612 பாகன் தூண்டிய பாண்டிலந் தேரெழீஇ
மேகங் கீண்டு மிசைப்படு சூறையின்
ஆகங் கீறி அமரர்கள் ஈண்டிய
மாகஞ் சென்றது வானிழிந் தென்னவே.
215
2613 சென்ற தேரொடு சேணிடைப் புக்குளான்
குன்ற மன்ன கொடுஞ்சிலை கோட்டியே
துன்று தேவர் தொகைஇரிந் தோடுற
மன்ற வாளி மழைகளை வீசினான்.
216
2614 வீசு கின்றுழி விண்ணவர் மேற்சரம்
நீசன் விட்டிடு நீர்மையை நோக்கியே
ஈசன் மாமகன் ஈண்டுநின் றெண்ணிலா
ஆசு கங்களுய்த் தங்கவை சிந்தினான்.
217
2615 வேறு
மற்றவை துணித்தபின் வடிக்கயிறு முட்கோல்
பற்றிய தடக்கையுள பாகுதனை நோக்கிக்
கொற்றஅயில் தூண்டியொரு குன்றைவௌ¤ கண்டோன்
தெற்றெனவிண் மேல்நமது தேர்விடுதி யென்றான்.
218
2616 என்னலும் இறைஞ்சிஇர லைப்பரியின் மேலோன்
பொன்னுலகு பாருலகு புக்கெழுவ தென்
மின்னின்மிளிர் தேரதனை விண்மிசைக டாவி
நன்னெறி செலாஅவுணர் நாயகன்முன் உய்த்தான்.
219
2617 வையநெடு வானமிசை வல்லைபுகும் எல்லை
ஐயன்இமை யோர்கள் அயர்ந் தோடுவது நோக்கி
நையலிர் புலம்பலிர் நடுங்கலிர்கள் என்றோர்
செய்யகரம் ஏந்திமுரு கன்கருணை செய்தான்.
220
2618 கந்தன்மொழி வானவர்க ணத்தவர்கள் கேளா
எந்தையிவண் வந்திடலின் யாமுயிர் படைத்தே
உய்ந்தனம் எனாவிரைவில் ஓடுவது நீங்கிச்
சிந்தைமகிழ் வத்தொடு திகந்தமுற நின்றார்.
221
2619 நின்றிடலும் வெவ்வவுணன் நீர்மையது நோக்கிப்
பின்றிடுவ ராம்பிரம னேமுதல தேவர்
ஒன்றொர்சிறு வன்கொலெனை உற்றெதிரு நீரான்
நன்றிதென வேவெகுளி கொண்டுநகை செய்தான்.
222
2620 காய்சின மிகுந்தவுணர் காவலன் அநந்தம்
ஆசுகம் விரைந்துபடர் ஆசுகம தென்ன
வீசுதலும் வாளிபல விட்டவை விலக்கி
ஈசனருள் மாமதலை ஏற்றிகல் புரிந்தான்.
223
2621 சுறுக்கொள மயிர்ப்பொடி உயிர்ப்புவிடு சூரன்
கறைக்கதிர் அயிற்பொலி கரத்தன்இவர் தம்மில்
செறுத்துடன் வடிக்கணை செலுத்திஅகல் வானம்
மறைப்பது மறுக்குவது மாகிமலை வுற்றார்.
224
2622 வேறு
விரைந்திரு வோர்களும் வியன்கணை மாரிகள்
சொரிந்தனர் பேரமர் தொடர்ந்துசெய் போழ்தினில்
எரிந்தது மாதிரம் இரங்கினர் பாருளர்
திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே.
225
2623 கறங்கினம் போல்வன கலஞ்செய் குலாலன
திறங்கொளும் ஆழிகள் திரிந்தன மானுவ
மறங்கெழு சூறைகள் மயங்கின போல்வன
துறுங்கணை மாரிகள் சொரிந்தவர் தேர்களே.
226
2624 பாதல மூழ்குவ பாரிடை சூழ்குவ
மாதிர மோடுவ வாரிதி சேர்குவ
பூதர மேவுவ பூமல ரோன்நகர்
மீதினும் ஏகுவ மீளுவ தேர்களே.
227
2625 எண்டிசை சூழும் இருங்கடல் பாய்வன
விண்டொடு நேமி வியன்கிரி வாவுல
கொண்டலின் ஆரிருள் கொண்டுழி போகுவ
அண்டமுன் ஏகுவ அங்கவர் ஏறுதேர்.
228
2626 பெயர்ந்திடு தேருறு பிழம்பவை காணுபு
தியங்கினர் நான்முகர் தெரிந்திலர் சீருரு
மயங்கினர் ஆதவர் மருண்டனர் வானவர்
உயங்கினர் பாருளர் உலைந்தனர் நாகரே.
229
2627 முதிர்ந்திடு போரினர் முழங்கிய தேர்செல
அதிர்ந்தது பாருல கலைந்தன வேலைகள்
பிதிர்ந்தன மால்வரை பிறந்தது வான்முக
டுதிர்ந்தன தாரகை உகுந்தன கார்களே.
230
2628 வேறு
தேரிவை இரண்டு மாகித் திகழுமூ தண்ட மெங்குஞ்
சாரிகை வருத லோடுஞ் சண்முகன் மீது செல்லச்
சூரெனும் அவுணர் கோமான் தொலையுநாள் எழிலி பொங்கி
ஆரழல் மழைகான் றென்ன அடுசர மாரி தூர்த்தான்.
231
2629 மழுப்படை அநந்த கோடி வச்சிரந் திகழ்முச் சென்னிக்
கழுப்படை அநந்த கோடி கப்பணம் அநந்த கோடி
கொழுப்படை அநந்த கோடி குலிசம்வேல் அநந்த கோடி
எழுப்படை அநந்த கோடி இடையிடை இடிபோல் உய்த்தான்.
232
2630 கூற்றுயிர் முடிக்குந் துப்பிற் கொடும்படை மாரி தன்னை
ஆற்றலின் அவுணர் கோமான் விடுத்துழி அவற்றை யெல்லாங்
காற்றெனப் பகழி தூண்டி முறைமுறை கடிதிற் சிந்தி
மாற்றினன் திரிந்தான் ஐயன் மூதண்ட வரைப்பு முற்றும்.
233
2631 இத்திறந் திரிந்த செவ்வேள் இடைதெரிந் தேழொ டேழு
பொத்திரந் தன்னைத் தூண்டிப் புகழுறும் அவுணர் செம்மல்
சித்திரத் தேரும் மாவின் தொகுதியுஞ் சிந்தி நீக்கக்
கைத்தனு வோடுந் தீயோன் கதுமெனப் புவிக்கண் உற்றான்.
234
2632 நாணுடை வரிவில் வாங்கி நண்ணலன் நஞ்சு பில்கும்
ஏணுடை வயிர வாளி எண்ணில தூண்டி ஏற்பத்
தாணுவின் மதலை கண்டு தன்பெருஞ் சிலையைக் கோட்டித்
தூணிகொள் கணையின் மாரி தொடுத்தவை துணித்து விட்டான்.
235
2633 துணிப்புறும் எல்லை வல்லே சுடர்க்கணை அநந்த கோடி
தணப்பற விடுத்த லோடுஞ் சண்முகன் அவற்றை யெல்லாங்
கணைப்பெரு மழையால் மாற்றிக் காசிபன் தனது செம்மல்
அணிப்படு தோற்மேற் பின்னும் ஆயிரம் பகழி உய்த்தான்.
236
2634 றுழியின் முதல்வன் மைந்தன் ஒராயிரங் கணையுஞ் சூரன்
பாழியம் புயத்து மீது படுதலுங் கடிதே இற்றுச்
சூழுறச் சிதறிற் றம்மா தொவிலா வயிரங் கொண்ட
காழ்கிளர் வரைமேல் வீழ்ந்த கன்மழைத் தன்மை யேபோல்.
237
2635 அந்தமில் வன்மை சான்ற அவுணன்மற் றதனை நோக்கி
முந்துறு வெகுளி தூண்ட முறுவலும் உயி£¢ப்புந் தோன்ற
எந்தைதன் மொய்ம்பிற் செல்ல இராயிரம் பகழி வாங்கிச்
சிந்தையிற் கடிது தூண்டித் தேவரும் மருள ஆர்த்தான்.
238
2636 உட்டௌ¤ வுற்றோர் காணும் ஒப்பிலா முதல்வன் தோள்மேல்
விட்டிடு பகழி முற்றும் வெந்துவெந் துகள தாகிப்
பட்டன திசைகள் முற்றும் பரந்தன பரத்தின் மேலோன்
கட்டழல் அதனால் மாய்ந்த காமவேள் யாக்கை யேபோல்.
239
2637 ஆங்கது காலை தன்னில் அறுமுகம் படைத்த ஐயன்
நீங்கரு நெறியால் உய்த்த நெடுஞ்சரம் அனைத்தும் மாற்றிப்
பாங்கமர் வயவர் மீதும் பாரிடப் படைகள் மீதுந்
தீங்கணை அழுத்த லுற்றான் தேவரை இடுக்கண் செய்தான்.
240
2638 தன்னிணை தானே யாகி நின்றிடுந் தனிவேல் வீரன்
அன்னதோர் தன்மை கண்டோ ராயிரம் பகழி பூட்டித்
துன்னலன் குனித்த சாபந் துணித்தனன் துணியா முன்னம்
பின்னுமோர் சிலையை ஏந்திப் பெருமுகில் இரிய ஆர்த்தான்.
241
2639 இம்பரின் மலைந்த சூரன் இம்மென வருக்கொண் டேகி
அம்பரத் திடையே தோன்ற அன்னது குமரன் காணா
உம்பரிற் சென்று தாக்க ஓரிறை எதிர்ந்து நின்று
நம்பியொ டாடல் செய்வான் நவிலரும் மாயை சூழ்வான்.
242
2640 விண்ணிடை நின்ற சூரன் விரைந்துடன் கரந்து சென்று
மண்ணிடை மீட்டுஞ் செல்ல மாநில வரைப்பிற் செவ்வேள்
துண்ணென வந்து வெம்போ£¢ தொடங்கலுந் தோற்ற மாற்றிக்
கண்ணகல் தூய நீத்தக் கனைகடல் நடுவண் ஆனான்.
243
2641 ஆயிடை முமுக வேள்சென் றடுசமர் இயற்றும் எல்லை
மாயையின் மறைந்து சூரன் மாதிர முடிவில் தோன்ற
ஏயென ஆண்டுஞ் செவ்வேள் ஏகியே நெடும்போர் ஆற்றக்
காய்கனல் உமிழும் வேலான் கரந்துபா தலத்தின் நின்றான்.
244
2642 ஆறிரு தடந்நதாள் வள்ளல் அதுகண்டு பிலத்து ளேகி
மாறமர் இயற்றும் எல்லை வல்லைதன் னுருவ மாற்றி
வீறுள சிமையச் செம்பொன் மேருவின் குவட்டின் நிற்ப
ஏறுடை முதல்வன் மைந்தன் இம்மென அங்கட் சென்றான்.
245
2643 மேருவின் சிகரம் நண்ணி வேலுடைத் தடக்கை வீரன்
பேரமர் இயற்றத் தீயோன் பின்னரும் ஆண்டு நீங்கி
நாரணன் உலகில் தோன்ற நம்பியுந் தொடர்ந்து போந்து
சூரெனும் அவுண னோடு தொல்சமர் ஆற்றி நின்றான்.
246
2644 ஆற்றிடு கின்ற காலத் தவுணர்கோன் அண்ட கோள
மேற்றிகழ் வாயில் செல்ல விமலனும் அங்கண் ஏகி
ஏற்றெதிர் மலையா அன்னான் ஏறிய இவுளித் தேரைக்
கூற்றுறழ் பகழி தன்னால் அட்டனன் கொற்றங் கொண்டான்.
247
2645 கந்துக விசய மான்தேர் இற்றலுங் கடுங்கோன் மன்னன்
இந்திர ஞாலம் என்னும் எறுழ்மணித் தடந்தேர் தன்னைச்
சிந்தனை செய்த லோடுஞ் சேணகிளர் செலவிற் றாகி
வந்திட அதன்மேல் ஏறி வல்லைபோர் புரிதல் உற்றான்.
248
2646 மண்டமர் புரியும் எல்லை வள்ளல்தன் பகழி தன்னால்
அண்டம தடைந்த வாயில் அடைத்ததும் அப்பால் உள்ள
தண்டம தெல்லாஞ் செல்லாத் தன்மையுந் தகுவர் கோமான்
கண்டனன் நன்று நன்றென் இறைத்தொழிற் காவ லென்றான்.
249
2647 இறைத்தொழில் அவுணர் செம்மல் ஏந்துதன் சிலையை வாங்கித்
திறத்தொடும் அநந்த கோடி செஞ்சரந் தூண்டி அண்ட
நெறிப்படு வாயில் பொத்து நெடுங்கணைக் கதவ முற்றும்
அறுத்துநுண் தூளி ஆக்கி அம்பரஞ சுழல விட்டான்.
250
2648 காவலன் அண்ட வாயிற் கணைகளின் கபாடம் நீக்கி
மாவொடு களிறுந் தேரும் வயவரும் வரம்பின் றாகி
ஓவரு நெறியின் அப்பால் உற்றதன் தானை தன்னைக்
கூவினன் வருக என்று குவவுத்தோள் கொட்டி ஆர்த்தான்.
251
2649 ஆர்த்திடு கின்ற காலத் தண்டத்தின் அப்பால் நின்ற
தேர்த்தொகை களிற்றின் ஈட்டந் திறல்கெழும் இவுளிப் பந்தி
சூர்த்திடும் அவுண வௌ¢ளந் துண்ணென ஈண்டை ஏகிப்
போர்த்தொழில் முயன்று செவ்வேள் புடையுறத் தெழித்துச் சூழ்ந்த.
252
2650 நீணுதல் விழியின் வந்த நிருமலக் கடவுள் தன்னை
ஏணொடும் அண்டத் தப்பால் இருந்திடு தானை சுற்றச்
சேணுறு நெறிக்கண் நின்ற திசைமுகன் முதலாந் தேவர்
காணுத லோடும் உள்ளங் கலங்கிமற் றினைய சொல்வார்.
253
2651 காலமொ டுலகம் உண்ணக் கனன்றெழு கரிய தீயின்
கோலமோ அண்டத் தப்பாற் குரைபுனல் நீத்தந் தானோ
ஆலமோ அசனிக் கொண்மூ ஆயிர கோடி சூழ்ந்த
சாலமோ யாதோ என்று தலைபனித் திரியல் போனார்.
254
2652 ஆயின காலை தன்னில் அண்டங்கள் தோறும் நின்ற
மாயிருந் தகுவன் தானை வந்துதன் மருங்கு சுற்றிப்
பாய்புனல் முகில்கான் றென்னப் படைத்தொகை வீசி ஆர்ப்பத்
தீயுரு வான செம்மல் சிறிதுதன் நாட்டம் வைத்தான்.
255
2653 அடலையின் நலத்தை வீட்டி அரும்பெறல் ஆக்கஞ் சிந்தி
அடலையின் உணர்வின் றாகும் அவுணர்கோன் தானை முற்றும்
அடலையின் நெடுவேல் அண்ணல் அழலெழ விழத்த லோடும்
அடலையின் உருவாய் அண்டத் தொல்லுரு வழித்த மன்னோ.
256
2654 முற்படும் அனிக மற்றும் முடிதலும் முடித லின்றி
எற்படும் அண்டத் தப்பால் ஈண்டிய பதாகி னிக்குள்
பிற்பட அளப்பில் சேனை பெயர்ந்துமற் றீண்டை துன்னிச்
சிற்பரன் குமரன் தன்பாற் படைமுறை சிதறிச் சூழ்ந்த.
257
2655 பரப்பொடு மிடைந்த தானைப பரவையை நோக்கி ஐயன்
நெருப்புமிழ் தன்மைத் தென்ன நெட்டுயிர்ப் பனில முந்தி
உரப்பினன் சிறிதே அற்றால் உம்பரில் குவிந்த பூளைப்
பொருப்பிடை அழல்புக் கென்னப் பூழியாய் உலகம் போர்த்த.
258
2656 மாட்சியின் உலவு சேனை வடிவெலாம் விடுத்துத் தொல்லை
மாட்சியின் உயிரே தாங்கி மலைதுமென் றுன்னிப் பின்னுஞ்
சூட்சியின் வளைந்த வாபோற் சோதிவேற் குமரன் தன்பாற்
சூட்சியின் மேவிற் றம்மா தூயநுண் துகளின் ஈட்டம்.
259
2657 அந்தமில் தானை முற்றும் அத்தன்ஓர் உங்கா ரத்தால்
வெநதுக ளாகப் பின்னும் மேலையண் டத்துள் நின்ற
தந்தியும் பரியுந் தேருந் தானவப் படையும் ஆர்த்து
வந்துவந் தயலிற் சூழ வரம்பிலா முதல்வன் கண்டான்.
260
2658 திருத்தமிழ் மதுரை தன்னிற் சிவன்பொருள் நிறுக்கு மாற்றால்
உருத்திர சரும னாகி உற்றிடு நிமலன் வெம்போர்
அருத்திகொள் கணிச்சி சூலம் ஆழிதண் டெழுவ தாகுங்
கரத்தினிற் படைகள் தம்மை நோக்கியே கழற் லுற்றான்.
261
2659 வென்றியம் படைகாள் கேண்மோ விரைந்துடன் தழுவி நம்பாற்
சென்றிடும் அனிகந் தன்னைச் சென்னெறி பெறாமல் அப்பால்
நின்றிடு படையை எல்லா£ம் நீவிர்பல் லுருக்கொண் டேகிக்
கொன்றிவண் வருதி ரென்று கூறிமற் றிவற்றைத் தொட்டான்.
262
2660 ஆதிநா யகன்விட் டுள்ள படையெலாம் அநந்த கோடி
சோதியார் கதிருந் தீயும் பணிகளும் போலத் தோன்றி
ஏதிலான் அனிக மாகி இம்பருற் றனவி மைப்பின்
பாதியின் முன்னம் அட்டுப் பெருவிறல் படைத்த மன்னோ.
263
2661 தூயதோர் குமரற் சூழ்ந்த படையைமுன் தொலைத்து வீட்டி
ஏயின படையோ ரைந்தும் இம்பரோ ஒழிய நின்ற
ஆயிரத் தோரேழ் அணடத் தகலமுஞ் சென்று சென்றாங்
கோய்வற எழுந்த தானை முழுதுமட் டுலவு கின்ற.
264
2662 ஐவகைப் படைகள் முற்றும் அண்டங்கள் தோறும் நின்ற
வெவ்விய அவுணர்த் தேய்த்து விரைவொடு திரித லோடுந்
தெவ்வியல் அவுணர் மன்னன் செயிர்த்துமற் றிதனை நோக்கி
இவ்வொரு கணத்தின் முன்னம் இவனுதிர் உண்பன் என்றான்.
265
2663 சாற்றியித் தன்மை தன்னைத் தானவர்க் கரசன் முன்னங்
கூற்றுயிர் குடித்த நோன்றாட் பண்ணவன் கொடுப்பக் கொண்ட
மாற்றருந் திகிரி தன்னை வாங்கினன் வழிபட் டேத்திகக்
காற்றினுங் கடிது செல்லக் கந்தவேள் மீது விட்டான்.
266
2664 விட்டிடு திகிரி யாரும் வெருக்கொள விரைந்து சென்று
கிட்டிய காலைச் செவ்வேள் கிளர்ந்ததோர் பாணி நீட்டி
வட்டணை நேமி தன்னை வருதியால் என்று பற்ற
ஒட்டலன் அதனை நோக்கி உளந்தளர்ந் துயிர்த்து நின்றான்.
267
2665 உண்ணிலா மாயை வல்ல ஒருதனித் தேர்மேல் நின்றோன்
எண்ணிலா உருவங் கொண்டே இருங்கணை மாரி தூர்ப்பத்
தெண்ணிலா மௌல அண்ணல் உதவிய செம்மல் நோக்கி
நண்ணலான் ஒருவன் மாய நன்றுநன் றென்று நக்கான்.
268
2666 சிறுநகை செய்து மேலாஞ் தேசனப் பகழி பூட்டி
அறுமுகன் அவுணர் செம்மல் ஆற்றிடு மாய முற்றும்
இறைதனில் முடித்தி யென்றே ஏவலும் விரைவின் ஏகி
முறைநெறி பிழைத்தோன் மாயம் முற்றொருங் கடட தன்றே.
269
2667 மாயையின் உருவ நீங்க வலியழந் துள்ளம் மாழ்கித்
தீயவன் ஒருவ னாகிச் சேணுயர் தேரின் நின்றான்
ஆயது தெரிந்து வானோர் அறுமுகத் தவனைப் போற்றிப்
பாய்புனற் கடலின் ஆர்த்துப் பனிமலர் மாரி தூர்த்தார்.
270
2668 தூர்த்தலுந் தேருந் தானுந் துண்ணெனக் கரந்து சூரன்
பேர்த்திடு மண்ட கூடப் பித்திகை வாயி லெய்தி
ஆர்த்தறை கூவிப் புக்காங் கப்புறத் தண்டஞ செல்லத்
தீர்த்தனும் அதனை நோக்கித் தீயனைத் தொடர்ந்து போனான்.
271
2669 தொடா¢ந்துதன் மனத்திற் செல்லுந் தொல்லைமால் இரதத் தோடுங்
கடந்தபோ¢ ஆடல் மிக்க காசிபன் தனயன் நின்ற
இடந்தலைப் படலும் அன்னான் எந்தையோ டிகற்போ ராற்றி
அடுந்திறல் மாயை நீரால் அப்புறத் தண்டம் போனான்.
272
2670 இந்நிலை அவுணர் கோமான் இருநிலத் தண்ட முற்றும்
மின்னெனப் படர்ந்து தோன்றி வெய்யபோர் விளைத்து நின்று
பின்னருங் கரந்து செல்லப் பிரானும்அவ் வண்டந் தோறும்
துன்னலம் தனைவி டாது தொடர்ந்தமர் இயற்றிப் போனான்.
273
2671 வேறு
ஆய காலை அயன்முதல் தேவர்கள்
நேய மிக்க குரவரை நீங்கிய
சேயி னோர்களில் தேம்பித் திருமகள்
நாய கன்றனை நோக்கி நவிலுவார்.
274
2672 வலங்கை வாளுடை மாயைதன் மாமகன்
பொலன்கொள் அண்டப் புரைதனுட் போயினான்
இலங்கு வேற்படை யெந்தைதன் போரிடை
விலங்கி னானலன் என்றும் விளிகிலான்.
275
2673 மாயை ஆற்றவும் வல்லவன் ஈண்டொ£¦இப்
போய தன்மை புணர்ச்சிய தேயலால்
ஆயின் வேறிலை ஆறிரு மொய்ம்புடைத்
தூயன் மற்றது சூழ்ந்திலன் போலுமால்.
276
2674 வாடி னானென மாற்றல னைத்தொடர்ந்
தோடி னான்எந்தை ஒல்லையிற் சூரனைக்
கூடி னான்கொல் குறுகல னாகியே
நாடி னான்கொல் அறிகிலம் நாமெலாம்.
277
2675 மாக மேல்நிமிர் மற்றையண் டத்தினுஞ்
சேகு லாவிய சிந்தையன் தன்னுடன்
ஏகி னான்ஐயன் என்னினித் தான்விளை
வாகு மோவென்னும் அஞ்சுதும் ஏழையேம்.
278
2676 என்ற காலையில் அங்கெழிற் பூவைபோல்
நின்ற மாயவன் நீள்மல ரோன்முதல்
துன்றும வானவர் சூழலை நோக்கியே
ஒன்றும் அன்பொ டுளப்பட ஓதுவான்.
279
2677 வேறு
வஞ்ச மேதகும் அவுணர்கோன் ஆற்றலை மதித்தீண்
டஞ்சி அஞ்சியே இரங்கலிர் அறுமுகத் தொருவன்
செஞ்சி லைத்தனி வன்மையும் வீரமுந் தெரிந்து
நெஞ்ச கத்திடை ஐயுறு கின்றது நெறியோ.
280
2678 ஓதி யாகியும் உணர்ந்தவர்க் குணரவும் ஒண்ணா
நீதி யாகியும் நிமலம தாகியே நிகழுஞ்
சோதி யாகியுந் தொழுதிடும் எம்மனோர்க் கெல்லாம்
ஆதி யாகியும் நின்றவன் அறுமுகன் அன்றோ.
281
2679 ஈறி லாதவர் பரமனே குழவியின் இயல்பாய்
ஆறு மாமுகங் கொண்டுவித் தானென்ப தல்லால்
வேறு செப்புதற் கியையுமோ மேலவன் தன்மை
தேறி யுந்தௌ¤ கின்றில உமதுசிந் தையுமே.
282
2680 ஐயம் எய்தலிர் ஆயிர கோடி அண்டத்தும்
வெய்ய னேகினுந் தொடர்ந்துபோய் வெஞ்சமர் இயற்றிச்
செய்ய வேலவன் துரந்துவந் திடுந்தினைத் துணையில்
கையில் நெல்லிபோற் காட்டுவன் நீவிருங் காண்டீர்.
283
2681 என்று மாயவன் கழறலும் அயன்முதல் எவரும்
நன்றெ னத்தௌ¤ வுற்றனர் அவ்வழ நண்ணான்
ஒன்றின் ஆயிர கோடியண் டத்தினும் ஓடி
நின்று நின்றமர் ஆடினன் எந்தையை நேர்ந்து.
284
2682 வெந்தி றற்சமர் ஆற்றியே அவுணர்கோன் மீட்டும்
இந்த வண்டத்து மகேந்திர வரைப்பில்வந் திறுத்தான்
முந்து நீழலை விடாதுசெல் வோரென முனிந்து
கந்த னுந்தொடர்ந் தவனொடு போந்தனன் கடிது.
285
2683 வேறு
போந்திடு தன்மை நோக்கிப் புராரிதன் புதல்வன நங்கள்
ஏந்தலைத் தொடர்ந்தான் என்ன இம்பரில் அவுணர் தானை
தீந்தழ லென்னப் பொங்கிச் செங்கையிற் படைகள் வீசி
ஆய்ந்திடும் உணர்வின் மேலாம் ஆதிதன் புடைசூழ்ந் தார்த்தார்.
286
2684 நாதனும் அதனை நோக்கி நன்றிவர் முயற்சி யென்னா
ஓதினன் முறுவல் செய்ய ஒன்னலன் தானை தொன்னாள்
மூதெயில் என்ன நீறாய் வெந்துடன் முடிந்த தம்மா
தாதைதன் செய்கை மைந்தன் செய்வது தக்க தன்றோ.
287
2685 ஆனதோர் காலை தன்னில் அறுமுகம் படைத்த அண்ணல்
தூநகை அங்கி செல்லத் துண்ணெனப் பதைத்து வீழ்ந்து
தானவர் அனிகம் வெந்த சாம்பரின் குன்றை நோக்கி
வானவர் மகிழ்ந்து பூத்தூய் வள்ளலை வழுத்தி நின்றார்.
288
2686 முருகவிழ் தொடைய லான்றன் முறுவலான் அனிக முற்றும்
விரைவின் நுண் துகளதாகி வீழதலும் அவுணர் வேந்தன்
ஒருவனுந் தமியன் நின்றான் ஒண்டமிழ் முனிவன் உண்ணத்
திரைகட லின்றித் தோன்றுந் தீப்பெருங் கடவுள் ஒத்தான்.
289
2687 முன்படை குமரன் அங்கண் முறுவலித் திட்ட வாறும்
தன்படை அழிந்த வாறும் தமியன்றான் நின்ற வாறும்
கொன்படை வீர ரோடு குறட்படை ஆர்க்கு மாறும்
துன்படை அவுணன் கண்டாங் குளத்தொடுஞ் சொல்ல லுற்றான்.
290
2688 பின்னறு துணைவர் மைந்தர் பேரியல் அமைச்சர் ஏனோர்
முன்னுற முடிந்தார் இன்று முடிவுறாத் தானை முற்றும்
பன்னிரு கரத்து மைந்தன் படுத்தனன் தமிய னானேன்
என்னிவண் செய்வ தென்னா உயிர்த்தனன் எண்ண மிக்கான்.
291
2689 மாயவள் தன்னை மன்னன் மனத்திடை நினைத்த லோடும்
ஆயவள் வந்து தோன்றி அரும்பெறல் ஆற்றல் மைந்த
நீயொரு தமிய னாகி நின்றுளந் தளர்ந்தே என்னைக்
கூயினை முன்னிற் றென்னை தெரிவுறக் கூறு கென்றாள்.
292
2690 அறிந்திடு மாயை இவ்வா றறைதலுங் குமரன் போரின்
மறந்தகு துணைவர் மைந்தர் மந்திரி தானை முற்றும்
இறந்திட எஞ்சி னேன்யா னியாவரும் எழுதற் கொத்த
திறந்தனை அருண்மோ என்ன நகைத்தவள் செப்ப லுற்றாள்.
293
2691 உறுபடை சுற்றுந் துஞ்ச ஒருவனே யாயும் விண்ணோர்
சிறைவிடுத் துய்யு மாறு சிந்தனை செய்தி லாய்நீ
அறுமுகன் தன்னோ டின்னும் அமர்செயக் குறித்தி யாயின்
நிறைபெருஞ் செல்வ வாழ்க்கை நீங்கினை போலும் அன்றே.
294
2692 பன்னிரு தடந்தோள் கொண்ட பகவனைப் பாலன் என்றே
உன்னலை அவன்கை வேலால் ஒல்லையிற் படுதி கண்டாய்
இன்னுயிர் துறக்க நின்றாய் என்மொழி கேட்பாய் அன்றே
சென்னியில் விதியை யாவ ராயினுந் தீர்ந்தார் உண்டோ.
295
2693 நின்றிட அனைய தன்மை நின்னுளம் மகிழு மாற்றால்
பொன்றினர் எழுதல் வேண்டில் புறக்கடற் கொருசா ராக
மன்றல்கொள் அமுத சீத மந்தர கூடம் என்றோர்
குன்றுள ததனை ஈண்டே கொணருதி கூடும் என்றாள்.
296
2694 இவ்வகை உரைத்து மாயை ஏகினான் ஏக லோடும்
மைவரை யென்ன நின்ற மன்னவர் மன்னன் கேளா
அவ்வைதன் சூழச்சி நன்றால் அடுகளத் தவிந்தோர் யாரும்
உய்வகை இதுவே என்னா உன்னினன் உவகை மிக்கான்.
297
2695 ஆவகை உலவவவ கொள்ளா அமுதமந் தரங்கொண் டேக
ஏவரை விடுத்தும் என்றே இறைப்பொழு தவுணர் தங்கள்
காவலன் முன்னி மாயக் கடுமுரண் தேரின் நீங்கித்
தேவியல் அரிமான் ஏற்றுத் திறலுடை எருத்தம் புக்கான்.
298
2696 இந்திர ஞாலந் தன்னை இறையவன் விளித்து நீயென்
புந்தியின் விரைந்து சென்று புறக்கடல் மருங்கின் மேவி
அந்தம தடைந்தோர்க் காவி அளித்திடும் அமுதங் கொண்ட
மந்தர கிரியைக் கீண்டு மற்றிவண் கொணர்தி யென்றான்.
299
2697 விழுமிய மாய மான்தேர் வினவியோர் கணத்தின் முன்னம்
எழுகட லினுக்கும் அப்பால் இருந்திடு கடலின் சார்போய்
அழிவுறா தங்கண் நின்ற அமுதமந் தரத்தைக் கொண்டு
வழிபடர் கதியின் மீண்டு மகேந்திரம் புக்க தன்றே.
300
2698 வேறு
அக்காலையில் இரதந்தரும் அமுதத்தனி வரையின்
மெய்க்கால்வர அந்நாள்வரை வெம்பூசல் இயற்றி
மைக்காலன்மெய் யுயிருண்டிட மறியும்படை முழுதும்
தொக்காலம தெழுந்தாலெனத் துண்ணென் றெழுந்தனவே.
301
2699 பரியின்தொகை முழுதுய்ந்தன பனைபோலிய நெடுங்கைக்
கரியின்தொகை முழுதுய்ந்தன கடுந்தேர்த்தொகை ஈர்க்கும்
அரியின்தொகை முழுதுய்ந்தன அவுணப்படை யாகி
விரியுந்தொகை முழுதுய்ந்தன மெய்யூறது நீங்கி.
302
2700 வடிவற்றுடல் அழிந்திட்டிடும் உயிரானவும் மருமம்
வடிகைத்தலம் முடிதோள்முதல் அங்கங்கள் குறைந்தே
முடிவுற்றிடும் உயிரானவும முளரிக்கனல் உண்ணப்
பொடிபட்டிடும் உயிரானவும் எழுந்திட்டன புவிமேல்.
303
2701 மிண்டிககடி துயிர்பெற்றெழு வெஞ்சூர்முதல் அனிகம்
எண்டிக்கொடு புவிபாதலம் இருநாற்கடல் எங்கும்
மண்டிக்கக னத்தேழ்வகை உலகங்களும் மல்கி
அண்டத்தனி முடிகாறும் அடைந்திட்டன மிடைந்தே.
304
2702 மாதண்டம்எ ழுத்தோமரம் வயிரப்படை வாள்தோல்
கோதண்டமு தற்பல்படை கொடுதானவர் அனிகம்
வேண்டமெ னச்சேணுயர் வேழம்பரி நிரைகள்
மூதண்டம்வெ டிக்கும்படி முழங்குற்றன அன்றே.
305
2703 எழுந்தான்வயப் புலிமாமுகன் இரவிப்பகை எழுந்தான்
எழுந்தான்எரி முகவெய்யவன் இளமைந்தனும் எழுந்தான்
எழுந்தான்அறத் தினைக்காய்பவன் இருபாலரும் எழுந்தார்
எழுந்தார்ஒரு மூவாயிரர் ஏனோர்களும் எழுந்தார்.
306
2704 சூர்க்கின்றதொல் வடிவங்கொடு துண்ணென்றெழு கின்றோர்
பார்க்கின்றனர் அனிகங்களைப் பகுவாய்திறந் திடிபோல்
ஆர்க்கின்றனர் தமதாடலை அறைகின்றனர் நம்மேல்
போர்க்கின்றுவந் தனர்யாரெனப் புகல்கின்றனர் இகலால்.
307
2705 ஈடுற்றிடு சமரெல்லையில் இடையுற்றி படைகள்
நாடுற்றிவண் எடுத்திட்டனர் நறையுற்றிடு தும்பை
சூடுற்றிடு மணிமாமுடிச் சூரன்புடை தன்னில்
கூடுற்றனர் வெம்போர்செயுங் குறிப்புற்றனர் அன்றே.
308
2706 வேறு
உய்ந்திவர் யாவரும் ஒல்லை எழுந்தே
அந்தமில் சேனையொ டார்த்திடு காலை
இந்திர ஞாலம் எனப்படு மான்தேர்
வந்தது தானவர் மன்னவன் முன்னம்.
309
2707 பொற்றையி அஅ£டு பொலன்கெழு மான்தேர்
உற்றதும் அன்பினர் உய்ந்தெழு மாறும்
இற்றப தாதி இரைத்தெழு மாறுந்
தெற்றென மாயவள் செம்மல் தெரிந்தான்.
310
2708 மகிழ்ந்தனன் ஆர்த்தனன் வானவர் தம்மை
இகழ்ந்தனன் விம்மிதம் எய்தினன் யாயைப்
புகழ்ந்தனன் மேனி பொடித்தனன் நெஞ்சந்
திகழ்ந்தனன் நன்னகை செய்தனன் அன்றே.
311
2709 உந்திநி ரப்புறும் உண்டிய தின்றி
முந்திநி ரப்பிடை மூழ்கினன் வல்லே
வெந்திறல் ஆளி வியன்றவி சேறி
இந்திர நல்வளம் எய்திய தொத்தான்.
312
2710 ஓங்கிய சென்னி உயர்ந்தன மொய்ம்பு
வீங்கிய தாலுடன் மிக்கு மதர்ப்புத்
தேங்கிய சிந்தை சிலிர்த்த உரோமம்
ஆங்கவன் எய்திய தாரறை கிற்பார்.
313
2711 வஞ்சன் இதந்திடு மைந்தன்இவ் வாற்றல்
நெஞ்ச மகிழ்ந்தவண் நின்றிடு காலை
நஞ்சம் எழுந்திடு நாள்கொலி தென்றே
அஞ்சி நடுங்கினர் அண்டர்கள் எல்லாம்.
314
2712 பொன்னகர் வாழ்க்கை புவித்திசை வாழ்க்கை
பின்னுறு கின்ற பெரும்பத வாழ்க்கை
எந்நகர் வாழ்க்கையும் எய்திய இன்னே
ஒன்னலர் கொல்லுமுன் ஓடுதும் என்றார்.
315
2713 ஊர்ந்திடும் ஊர்திகள் ஓர்புடை தம்பாற்
சார்ந்தவர் ஓ£¢புடை தாமொரு பாலாய்ச்
சேர்ந்திடு கைப்படை சிந்திவிண் ணோர்கள்
பேர்ந்திரி கின்றனர் பின்னது நோக்கார்.
316
2714 கிள்ளை புறாமயில் கேழ்கிளா¢ அன்னம்
பிள்ளை மணிக்குயில் பேரிசை ஆந்தை
கள்ளுணும் வண்டு கரண்டம தாதிப்
புள்ளுரு வங்கொடு வானவர் போனார்.
317
2715 அங்கது நோக்கி டற்கண வீரர்
மங்கிய தானையும் மாண்டுளர் யாரும்
இங்கெழு கின்றனர் யாமிவண் வீந்தாஞ்
சங்கையி லென்று தளர்ந்தலை வுற்றா£¢.
318
2716 இலக்கரும் எண்மரும் ஏந்தலும் நோக்கி
அலக்கணும் அச்சமும் அற்புத நீருங்
கலக்கமும் வெய்ய கடுஞ்சின முங்கொண்
டுலைக்கனல் அன்ன உயிர்ப்பொடு நின்றார்.
319
2717 வேறு
வென்றி கொண்டவேற் குமரன்இவ் விளைவெலாம் நோக்கி
நின்ற ஒன்னலன் சூழ்ச்சியும் வலவைசொல் நெறியும்
குன்றின் வன்மையும் உய்ந்தெழு பரிசனர் குழுவும்
நன்று நன்றெனக் கையெறிந் தழலெழ நகைத்தான்.
320
2718 ஆன காலையில் அரிமுகன் அலரிதன் பகைஞன்
ஏனை மைந்தர்கள் அறத்தினை வெகுண்டிடும் ஏந்தல்
சேனை காவலர் யாவருஞ் சூரன்முன் சென்று
மான வீரமோ டிறைஞ்சிநின் றினையன வகுப்பார்.
321
2719 எந்தை நீயிவண் நிற்குதி யாமெலாம் ஏகிக்
கந்த வேளுடன் அவன்படை வீரரைக் கடிந்து
சிந்த ராகிய பூதர்தந் தொகையையுஞ் செகுத்து
வந்து நின்னடி வணங்குதும் வல் விரைந் தென்றார்.
322
2720 கொற்ற வீரர்கள் இவ்வகை உரைத்தலுங் கொடியோன்
மற்றிவ் வாசகம் நன்றெனைப் போற்றுவான் வந்தீர்
பற்ற லன்பெரு வன்மையும் வீரமும் படுத்து
வெற்றி இன்றெனக் கரளுதி ராலென விடுத்தான்.
323
2721 விடுத்த காலையில் விடாதுசூழ் அனிகங்கள் விரவி
அடுத்து வந்திடப் பொளன ஏகியே ஆர்த்துப்
பிடித்த பல்வகைப் படைகளும் உருமெனப் பெய்து
வடித்த வேற்படை நம்பியை அன்னவர் வளைத்தார்.
324
2722 தீங்க னற்பெருங் கடவுள்பாற் செறியிருட் டொகைபோல்
வாங்கு விற்கரத் தையனை அவுணர்கள் வளைப்ப
ஏங்கல் உற்றனர் பாரிடர் ஏனையோர் எம்மால்
தாங்கு தற்கரி திப்பெரும் படையெனத் தளர்ந்தார்.
325
2723 விறலு டைப்ப· றானையும் வெய்யவர் தொகையும்
நொறிது டைக்கதி கொண்டுசூழ் வுற்றது நோக்கி
அறுமு கத்தனிப பண்ணவன் உயிர்த்தொகை அனைத்தும்
இறுதி யைப்புரி கடவுள்மாப் படையினை எடுத்தான்.
326
2724 அங்கை யிற்கொடு சிந்தையால் வழிபடல் ஆற்றிச்
சிங்க மாமுகன் ஆதியாம் அவுணர்தந் திறத்தைச்
சங்கை இன்றியே நின்றிடு தானைகள் தம்மை
இங்கு வல்லையில் அடுதியால்எனவிடுத் திட்டான்.
327
2725 விடுத்த காலையில் கட்செவி நிரைகளும் விடமும்
இடிக்கு ழாங்களும் உருத்திரர் உருக்களும் எரியுங்
கடற்பெ ருங்கணத் தொகுதியும் அளவிலாக் கடவுட்
படைக்க லங்களு மாய்விரிந் ததுசிவன் படையே.
328
2726 இன்ன தன்மையால் அரன்படை மூதண்டம் எங்குந்
துன்னி யார்த்தெழீஇத் துண்ணெனச் சென்றுசூழ் வுற்று
முன்னர் உய்ந்தெழும் அவுணர்தம் படையெலாம் முருக்கி
ஒன்ன லன்தமர் யாரையும் ஒருங்குகொன் றதுவே.
329
2727 முந்து வெய்யசூர்ப் பரிசனத் தொகையெலாம் முருக்கி
இந்திரப்பெரு ஞாலமாந் தேர்மிசை இருந்த
மந்த ரப்பெருங் கிரியினைத் துகளெழ மாய்த்துக்
கந்த வேள்படை மீண்டது சிவன்படைக் கலமே.
330
2728 அரிமு கத்தவன் ஆதவன் தனைமுனம் அழன்றோன்
எரிமு கத்தவன் வச்சிர மொய்ம்பன்நூற் றிருவர்
முரண்மி குத்தமூ வாயிரர் அறப்பகை முதலோ£¢
விரிக டற்படை வெற்பொடு முடிந்தவண் வீழ்ந்தார்.
331
2729 தன்மை அங்கவை யாவையுங் கண்டனன் தளர்ந்தான்
வன்மை நீங்கினன் கவன்றனன் இரங்கிமெய் மறந்தான்
புன்மை யாயினன் உயிர்த்தனன் செயிர்த்தனன் புலர்ந்தான்
தொன்மை போலவே தமித்தனன் துணையிலாச் சூரன்.
332
2730 கண்ட கன்படை முற்றொருங் கிறந்தது காணா
எண்டொ கைப்படு பூதரும் ஏனைவீ ரர்களும்
முண்ட கந்தனில் இருந்திடு புங்கவன் முதலாம்
அண்டர் யாவருந் துயரொரீஇ உவகைபெற் றா£¢த்தார்.
333
2731 அழுந்தும் ஆரிருள் ஒருவிவிண் மிசைதனில் அடைவோர்
கழிந்த தோரிடை ஊற்றினான் மீட்டும்அக் கதியில்
விழுந்த தேயெனத் துன்பொடு நின்றனன் விளிவுற்
றெழுந்த தானையை இழந்திடும் அவுணருக் கிறைவன்.
334
2732 அனைய தன்மையின் நின்றிடும் அவுணர்கோன் ஆற்றச்
சினம தெய்தியென் படையெலாஞ் சிதைத்தபா லனையுந்
தனிமை செய்துபின் வெல்வனென் றுளங்கொடு தழற்கண்
முனைவன் நல்கிய தேரினை நோக்கியே மொழிவான்.
335
2733 கொச்ச கத்தியற் குதலைவாய் மதலைபாற் குழீஇய
வச்சி ரத்தெயி றுடையவெம் பூதரை வயின்சூழ்
கைச்சி லைத்திறல் வீரரைக் கவர்ந்துபோய் அண்டத்
துச்சி யிற்கொடு வைத்தனை இருத்தியென் றுரைத்தான்.
336
2734 உரைத்த காலையில் நன்றென வினவியே ஓடித்
திருத்த குந்திறல் வாகுவை முதலினோர் திறத்தைக்
கிருத்தி மப்பெருந் தானையைக் கிளையொடும் வாரிக்
கருத்தை மாமயல் செய்தது வைதவன் கடுந்தேர்.
337
2735 கையர் தன்மையிற் கடற்படை முழுவதுங் கவர்ந்து
மையல் சிந்தையிற் செய்துதன் வயினிடைத் தாங்கி
ஒய்யெ னச்சென்று மூதண்ட கோளகை யுழிப்போய்
வெய்ய வன்பணி ஆற்றிஆண் டிருந்தது வியன்தேர்.
338
2736 நிமலன் அவ்வழித் தானையம் பெருங்கடல் நீங்கத்
தமியன் நின்றனன் ஆங்கது தகுவர்கோன் காணா
நமது தேர்வலி நன்றென உவகையால் நகைத்தான்
அமரர் அச்செயல் நோக்கியே பின்னரும் அயர்ந்தார்.
339
2737 சூரி டத்துறு சூழ்ச்சியுந் துணைவர்கள் தம்மைப்
பாரி டத்தொடு முகந்தெழீஇ மாயையிற் படர்ந்து
தேரி டத்தியல் வன்மையும் ஆங்ஙனந் தெரிந்தான்
நேரி டப்பிறர் இன்றியே தமியனாம் நெடியோன்.
340
2738 கண்டு சீறியோர் கார்முகம் வாங்கியே கடிதோர்
திண்டி றற்கணை பூட்டிநஞ் சேனையைப் பற்றி
அண்ட கோளகை புக்குறும் அடுமுரண் தேரைக்
கொண்டு வல்லையின் வருகென விடுத்தனன் குமரன்.
341
2739 விடுந்த னிக்கணை வேலெனச் சென்றுவில் வீசி
இடந்தி கழ்ந்திடும் ஏழ்வகை உலகமும் இமைப்பில்
கடந்து மற்றுள பதங்களும் நீங்கியோர் கணத்தில்
தொடர்ந்து மூதண்ட கோளகை புகுந்தது துன்னி.
342
2740 துன்னி வெஞ்சரம் £யமான் தேர்வலி தொலைச்சி
அன்ன தைக்கொணர்ந் தொல்லையின் மீண்டுள தம்மா
மின்னு லாய்நிமிர் எழிலியை விண்ணினும் பற்றி
இந்நி லத்தினிற் கொடுவரும் மாருதத் தியல்போல்.
343
2741 வேறு
வெந்திறல் நெடுங்கணை மீண்டு ஞாலமேல்
இந்திர ஞாலமாம் இரதத் தைக்கொடு
கொந்தவிழ மாலைவேற் குமரன் தன்முனம்
வந்தது வானவர் வழுத்தி ஆர்ப்பவே.
344
2742 முப்புரம் முடித்தவன் ருகன் தன்கணை
இப்புவி வருதலும் இலக்கத் தெண்மரும்
ஒப்பரும் இளவலும் ஒல்லென் பூதருங்
குப்புறல் உற்றனர் கொடியன் தேரினும்.
345
2743 குதித்தனர் புடவியில் குமர வேண்இரு
பதத்திரு மலர்தனைப் பணிந்து பன்முறை
துதித்தனர் புடையராய்த் துன்னி நின்றனர்
கதித்திடு பேரருட் கடலின் மூழ்கியே.
346
2744 ஆவதோர் காலையில் அகிலம் யாவுமாம்
மூவிரு முகனுடை முக்க ணான்மகன்
வாவியல் வனப்புடை மாயத் தேர்தெரீஇத்
தேவர்கள் பரசுற இனைய செப்புவான்.
347
2745 தொல்லையில் வரம்பெறு சூரன் தன்புடை
செல்லலை ஆங்கவன் முடிகை திண்ணமால்
மல்லலந் திருவுடை மாயத் தேரைநீ
நில்லிவண் என்றனன் நிகரில் ஆணையான்.
348
2746 ஆண்டது வினவுறா அவுணர் கோன்புடை
மீண்டிடல் அஞ்சியே மேலை வன்மைபோய்
மாண்டிடல் பிறப்பிலான் மதலை மாடுறப்
பாண்டிலந் தேரது பணியின் நின்றதே.
349
2747 அண்டம தடைந்ததேர் ஐயன் வாளியால்
மண்டலம் இழிந்து தன்மருங் குறாததும்
எண்டகு பூதரும் யாரும் மீண்டதுங்
கண்டனன் அவுணர்கோன் கனலிற் சீறினான்.
350
2748 அன்னது காண்டலும் அவுணன் ஆங்கொரு
கொன்னெடுஞ் சிலையினைக் குனித்து வல்லையிற்
பன்னிரு கரமுடைப் பண்ண வன்மிசை
மின்னிகர் பகழிகள் மீட்டும் வீசினான்.
351
2749 மாசறு கங்கைதன் மதலை அவ்வழிக்
காய்சினங் கொண்டொரு கார்மு கம்வளைஇ
ஆசுக மாரிபெய் தவுணர் கோமகன்
வீசிய கணையெலாம் விலக்கி னானரோ.
352
2750 கையனும் அத்துணை காய்சி னங்கொளீஇ
ஒய்யென எந்தைதேர் உய்க்கும் வன்மையோன்
மெய்யிடம் எங்கணும் வௌ¤யு றாவகை
செய்யன பகழிகள் செறித்துப் போர்செய்தான்.
353
2751 பொருந்தலன் கணைபடப் புலம்பிக் காற்றினோன்
வருந்தினன் மயங்கினன் மாக்கள் தூண்டலன்
இருந்தனன் வறிதவன் இயற்கை யாவையுந்
தெரிந்தனன் குமரவேள் அருளின் செய்கையான்.
354
2752 கண்டிடு முருகவேள் கணைகள் ஆயிரம்
விண்டொடர் செலவினால் விடுத்து வெய்யசூர்
கொண்டிடு சிலையினைக் குறைத்துப் பல்பெருந்
துண்டம தாக்கினான் அமரர் துள்ளவே.
355
2753 வேறு
கைச்சிலை முரியச் சூரன் கண்ணுதற் பெருமான் தந்த
முச்சிகைப் படையொன் றேந்தி முடங்குளை யூர்தி தன்னை
உச்சியின் நீபஞ் சூடும் உலகுடை யொருவ னூர்ந்த
அச்சுறு தடந்தேர் முன்னர் அணுகுறத் தூண்டிச் சென்றான்.
356
2754 தூண்டிய அரிமான் ஏறு சூரன துளத்திற் போந்து
மாண்டகு தனது தீய வள்ளுகிர்க் கரத்தால் எந்தை
பாண்டிலந் தேரை ஆற்றும் பரித்தொஆஆ பதைப்ப மோதி
ஆண்டயல் நின்ற பூதர் அலமர ஆர்த்த தன்றே.
357
2755 அன்னது பொழுது தன்னில் அரிமிசைச் சென்ற சூரன்
தன்னுடை வலங்கை கொண்ட தனிப்பெருஞ் சூலந் தன்னைப்
பன்னிரு தடந்தோள் கொண்ட பகவன்மேற் றிரித்து வீச
மின்னென நிலவு கான்று விண்வழப் படர்ந்த தன்றே.
358
2756 நீடிய சூலஞ் செல்ல நிமிர்ந்தன எழுந்து செந்தீக்
கூடின அசனி ஈட்டங் குழீஇயின படையின் கொள்ளை
ஆடியல் கணங்கள் ஈண்டி ஆர்த்தன அதனை நோக்கி
ஓடினர் அமரர் ஆனோர் உலகெலாம் வெருவிற் றம்மா.
359
2757 அண்ணலும் அதனை நோக்கி ஆயிர கோடி வாளி
கண்ணகன் சிலையிற் பூட்டிக் கதுமென எதிர்தந் துய்ப்பத்
துண்ணென அவற்றை எல்லாஞ் சூலவேல் துணித்து வீட்டி
நண்ணலன் வெகுளித் தீயின் உருவென நடந்த தன்றே.
360
2758 நடத்தலும் முகமா றுள்ளோன் ஞானநா யகன்ஈந் துள்ள
படைத்திறல் வன்மை உன்னிப் பாணியொன் றதனின் மேவி
அடுத்திடு குலிசந் தன்னை அடையலன் உய்த்த சூலம்
பிடித்தனை வருதி யென்று பேசினன் செல்ல விட்டான்.
361
2759 விட்டிடு கின்ற எல்லை வியன்பெருங் குலிசம் ஏகி
நெட்டழற் சிகைமீக் கான்று நிமிர்ந்திடு சூலந் தன்னைக்
கிட்டுத லொடும் பற்றிக் கிளர்ந்தமுத் தலையுங் கவ்வி
ஒட்டலன் சிந்தை உட்க ஒய்யென மீண்ட தன்றே.
362
2760 முத்தலைப் படையைக் கொண்டு முரண்மிகு குலிசஞ் செவ்வேள்
கைத்தலம் உய்த்துத் தானுங் கதுமென இருந்த தம்மா
பைத்தலைப் பாந்தள் போற்றும் பருவரைச் சிகர மூன்றும்
இத்தலப் புணரி தன்னில் இடுமருத் தியற்கை யேபோல்.
363
2761 ஆண்டது காலை தன்னில் அறுமுகத் தையன் கையில
தூண்டிய குலிசத் தோடு சூலமும் வருத லோடுங்
காண்டகும் அமரர் எல்லாங் கரதலம் உச்சி கூப்பி
ஈண்டிவன் தன்னை அட்டே எமையளித் திடுதி யென்றார்.
364
2762 என்னலும் எந்தை கேளா இராயிரம் பகழி பூட்டி
ஒன்னலம் ஊர்ந்து செல்லும் ஒருபெரு மடங்கல் ஏற்றின்
சென்னியில் அழுத்த லோடுஞ் சேண்கிளர்ந் தரற்றி வீழ்ந்து
தன்னுயிர் ஒல்லை வீந்து தரையிடைப் பட்ட தன்றே.
365
2763 ஊர்திய திறந்து வீழ ஒருதனிச் சூரன் காணாப்
பார்தனிற் பாய்ந்து நின்று பராபரன் செம்மல் கையில்
கூர்தரு சூலம் போன கொள்கையுந் தெரிந்து பின்னான்
சேர்தரு வடவை என்னச் செயிர்த்திவை சிந்தை செய்வான்.
366
2764 தேரொடு படையை வௌவித் திறலுடை மடங்கல் சிந்தி
நேரலன் வலிய னேபோல் நின்றனன் அனையன் தன்னைச்
சாரதர் தொகையை ஏனைத் தலைவர்கள் தம்மை எல்லாம்
ஓருருக் கொண்டி யானே விழுங்குவன் ஒல்லை என்றான்.
367
2765 என்றிவை மனத்தி லுன்னி இணையறு மாயை நீரால்
நின்றுள, அவுணர் செம்மல் நேமியம் புள்ளே போல
ஒன்றொரு வடிவ மெய்தி ஒலிதிரைக் கடலின் ஆர்த்துத்
தன்துணைச் சிறகர் பெற்ற தனிப்பெருங் கிரிபோ லுற்றான்.
368
2766 கறையடித் தந்தி சிந்துங் காய்சின அரிமேல் உய்க்கும்
நறையடிக் கமலத் தையை ஞாட்பிடை ஆடற் கொத்த
பறையடித் திட்ட தேபோல் படிமகள் உடலம் விள்ளச்
சிறையடிக் கொண்டு தீயோன் சேணிடை எழுத லுற்றான்.
369
2767 மண்ணிடை வரைப்பு முற்றும் மணிச்சிறை யதனான் மூடி
விண்ணிடைப் பரிதி யொள்வாள் விலக்கியே சுழலும் வேலைக்
கண்ணிடைப் பெருமீன் குபபை கவர்ந்திட ஊக்கிற் றென்னத்
துண்ணெனப் பூதர் தானைச் சூழல்புக் கெறியு மாதோ.
370
2768 அடுத்திடுஞ் சிறகர் தன்னால் அளவையில் பூதர் தம்மைப்
பிடித்திடும் புலவு நாறும் பெருந்தனி மூக்கிற் குத்தி
மிடற்றிடைச் செறித்து மெல்ல விழுங்கிடும் விறல்வேல் அண்ணல்
கொடித்தடந் தேரைச் சூழுங் கொடியபுள் வடிவக் கூற்றம்.
371
2769 சுற்றிடுங் குமரன் தேரைத் தூண்டிய வலவன் தன்னை
எற்றிடுங் கொடிஞ்சி எஞ்ச இறுத்திடும் பரிகள் தம்மைக்
குற்றிடு முக்கிற் சென்னி கொய்திடுங் குழீஇய வீரர்ப்
பற்றிடும் படைகள் முற்றும் பறித்திடு முறித்து வீசும்.
372
2770 இத்திறம் அவுணர் செம்மல் இருஞ்சிறைப் புள்ள தாகி
அத்தலைக் கறங்கி வீழ்வுற் றந்தரந் திரித லோடும்
முத்தியை உதவு நோன்றாள் மூவிரு முகத்தன் காணாக்
கைத்தலம் புடைத்து நக்கு நன்றிவன் கற்பி தென்றான்.
373
2771 எறித்தரு சுடர்வேல் அண்ணல் இம்மென வெகுண்டு போரில்
நிறுத்திய மேரு வென்ன நிமிர்ந்ததோர் வரிவில் வாங்கி
விறற்கணை அநந்த கோடி மிசைமிசைக் கடிது பூட்டித்
திறத்தியல் புள்ளாய்ச் சூழும் அவுணன்மேற் செல்ல வுய்த்தான்.
374
2772 நெறித்திகழ் பகழ மாரி நிமலன்விட் டிடலும் வெய்யோன்
சிறைப்புடைக் கொண்டு பாங்கிற் சிந்திட அவற்றை மோதிக்
குறைத்திடுந் துண்டந் தன்னாற் கொய்திடுந் தாளிற் பற்றி
முறித்திடுங் கிளர்ந்து வானம் முழுவதுஞ் சுழன்று செல்லும்.
375
2773 வேலைகள் எல்லை முற்றும் படர்ந்திடும் விராவி மேவு
ஞாலம தகல முற்றும் படர்ந்திடு நாகர் வைகும்
வாலிய உலக முற்றும் படர்ந்திடும் வந்து பூத
சாலம தெறிந்து கல்வித் தலைத்தலை மயங்கிச் செல்லும்.
376
2774 சூரன்மற் றினைய வாற்றல் சுலாய்க்கொடு திரித லோடும்
பூரணன் அதனைக் காணாப் புள்ளெனப் பெயர்வான் தன்னைத்
தேரொடுந் தொடர்ந்து கோறல் பழயெனச் சிந்தை செய்து
வாரணம் உயர்த்தோன் தன்னை நோக்கினன் வானோர் தம்முள்.
377
2775 இந்திரன் அனைய காலை எம்பிரான் குறிப்புந் தன்மேல்
அந்தமில் அருள்வைத் துள்ள தன்மையும் அறிந்து நோக்கிச்
சுந்தர நெடுங்கட் பீலித் தோகைமா மயிலாய்த் தோன்றி
வந்தனன் குமரற் போற்றி மரகத மலைபோல் நின்றான்.
378
2776 நின்றிடு மஞ்ஞைப் புத்தேள் நெடுநிலங் கிழிய மேருக்
குன்றமும் புறஞ்சூழ வெற்புங் குலைந்திடக் கரிகள் வீழ
வன்றிரை அளக்கர் நீத்தம் வறந்திடப் பணிகள் அஞசத்
தன்றுணைச் சிறகால் மோதி இனையன சாற்ற லுற்றான்.
379
2777 ஐயகேள் அஅர ரெல்லாம் வழிபட அளியன் தன்பால்
செய்ய பேரருளை வைத்தாய் ஆதலிற் சிறுமை தீர்ந்தேன்
உய்யலாம் நெறியுங் கண்டேன் உன்னடி பரிக்கப் பெற்றேன்
பொய்யுலா மாய வாழக்கைப் புன்மையும் அகல்வன் மன்னோ.
380
2778 அல்லல்செய் தெமரை எல்லா மருஞ்சிறைப் படுத்தி வீட்டிப்
பல்வகை உலகை யயண்ட அவுணர்கோன் பறவை யாக்கை
செல்லுழச் சென்று சென்று செருவினை இழைத்து வெல்வான்
ஒல்லையில் அடியேன் தன்மேல் ஏறுதி ஊர்தற் கென்றான்.
381
2779 என்னலும் உளத்திற் செல்லும் இவுளிமான் தேரின் நீங்கிப்
பன்னிரு நாட்டத் தண்ணல் படர்ச்சிறை மயூரி மாகி
முன்னுறு மகவான் தன்மேல் மொய்ம்புடன் புக்கு வைகி
ஒன்னலன் செலவு நோக்கி உம்பரில் ஊர்த லுற்றான்.
382
2780 ஆறுமா முகத்தெம் மண்ணல் அசனிபோல் அகவி ஆர்க்கும்
மாறிலா மயூர மென்னும் வயப்பரி தனைந டாத்தி
ஈறுசேர் பொழுதிற் சூழும் எரியினை அடுவான் முன்னிச்
சூறைமா ருதஞ்சென் றென்ன அவுணனைத் தொடா¢ந்து சூழ்ந்தான்.
383
2781 ஆகிய பொழுது தன்னில் ஆழயம் புள்ளாய்த் தோன்றி
மாகம துலவு கின்ற மாற்றலன் அதனை நோக்கிச்
சீகர அளக்க ரென்னத் தெழித்துமேற் சென்று தாக்கக்
கேகய அரசன் தானுங் கிடைத்தமர் புரித லுற்றான்.
384
2782 நிறங்கிளர் பசலைத் துண்ட நீட்டியே யாக்கை முற்றும்
மறங்கொடு கீண்டு செந்நீர் வாய்ப்படக் கவ்வி வாங்கிப்
புறங்கிளர் சிறைகள் தம்மாற் புடைத்துவெங் காலில் தாக்கிப்
புறங்குபுள் ளுருவ மானோர் இவ்வகை பெரும்போர் செய்தார்.
385
2783 இத்திறம் பொருத காலைப் பிணிமுகத் தேந்தல் தன்னைப்
பைத்தலை யுடைய தூவி பறித்திடா வதன முற்றுங்
குத்திவெங் குருதி வீட்டிக் குருமணிக் கலாபம் ஈர்த்து
மெய்த்துயர் புரிந்தான் நேமிப் புள்ளுருக் கொண்ட வெய்யோன்.
386
2784 அச்செயல் முருகன் காணா ஆரழல் என்ன நக்குக்
கைச்சிலை யதனை வாங்கிக் கடுந்தொழில் அவுணர் மன்னன்
உச்சியின் முகத்திற் காலில் உரத்தினில் சிறைகள் தம்மில்
வச்சிர நெடுங்கண் வாளி வரம்பில தொடுத்து விட்டான்.
387
2785 விட்டிடு கின்ற வாளி வெய்யவன் அங்க மெங்கும்
பட்டிடு கின்ற காலைப் பதைபதைத துதறிச் சிந்தி
எட்டுள திசையும் வானும் இருங்கடல் உலக மெங்குங்
கட்டழல் சிந்திச் சீறிக் கறங்கெனத் திரியா நின்றான்.
388
2786 திரிந்திடு கின்ற காலைச் செஞ்சுடர்த் தனிவேல் அண்ணல்
புரந்தரன் உருவாய் நின்ற பொறிமயில நடாத்தி யேகி
அரந்தெறு கணைகள் தூண்டி அகிலமும் அவுணன் தன்னைத்
துரந்தமர் இழைக்க லுற்றான் விண்ணவர் தொழுது போற்ற.
389
2787 அத்தகும் எல்லை தன்னின் அவுணர்கள் எவர்க்கும் மேலோன்
எய்த்துளம் மெலிந்து சால இடருழந் திரக்க மெய்தி
மெய்த்தழ லென்னச் சீறி வேற்படை கொண்ட செம்மல்
கைத்தலத் திருந்த வில்லைக் கறிப்பது கருதி வந்தான்.
390
2788 வருவது நிமலன் காணா மலர்க்கரம் ஒன்றில் வைகும்
ஒருதனி ஔ¢வாள் வீசி ஒன்னலன் பறவை யாக்கை
இருதுணி யாகி வீழ எறிந்தனன் எறித லோடும்
அரியயன் முதலாந் தேவர் அனைவரும் ஆடல் கொண்டார்.
391
2789 வேறு
தாரார் வாகை சூடிய வேலோன் தன்கையிற்
கூரார் வாளாற் புள்ளுரு வத்தைக் குறைவிக்கச்
சூராம் வெய்யோன் அண்டமு கட்டைத் தொடவோங்கிப்
பாராய் நின்றான் விண்ணவர் யாரும் பரிவெய்த.
392
2790 ஏழுட் பட்ட ஆழ்திரை நேமி யிடைதூர்த்துத்
தாழ்விற் செல்லு மாதவர் தேரைத் தடைசெய்து
சூழிக் கால்கள் வானெறி செல்லுந் துறைமாற்றிப்
பாழித் திக்கை மூடினன் நின்றான் படியானோன்.
393
2791 ஆறார் சென்னிப் பண்ணவன் மைந்த னதுகாணாச்
சீறா நன்றாற் சூர்புரி மாயத் திறன்என்னாக்
கூறா அங்கைச் செஞ்சிலை தன்னைக் குனிவித்தே
ஊறார் வெங்கோல் ஏழு தொடுத்தே யுரைவெய்வான்.
394
2792 நெடுவா னத்தின் காறும் எழுந்தே நிமிர்வெய்தி
முடிவான் வெய்யோன் பாரக மாய்என் முன்நின்றான்
கடலேழ் என்னுந் தன்மையின் நீவிர் கடிதேகி
அடுவீர் என்றே விட்டனன் யா£¢க்கும் அறிவொண்ணான்.
395
2793 ஒற்றைச் செவ்வே லோன்விடு வாளி யுலகெல்லாஞ்
சுற்றிக் கொண்டே உண்டிடு நேமித் தொகைபோலாய்ச்
செற்றத் தோடும் ஆர்ப்பொடும் ஏகித் திரைவீசி
மற்றச் சூரன் தன்னுரு வத்தை வளைவுற்ற.
396
2794 வளையா வெஞ்சூர் மாயிரு ஞால வடிவத்தைக்
களையா உண்டே இன்மைய தாக்கிக் கணையேழுந்
திளையார் நீத்தத் தொல்லுரு நீங்கிச் செருவின்கண்
விளையா டுற்ற எம்பெரு மானபால் மீண்டுற்ற.
397
2795 காணா வெய்யோன் பாருரு நீங்கிக் கடல்எல்லாம்
ஊணா வையம் வானொடும் உண்டற் கெழுமாபோல்
ஏணார் நீத்தத் தோர்வடி வாகி யிறைமுன்னம்
நீணா கத்தின் காறும் நிமிர்ந்தே நின்றிட்டான்.
398
2796 நேரான் மாயத் தொல்லுரு வத்தின் நிலைநோக்கிக்
கூரார் வாளி நூறு தொடுத்தே கோடியோன்பாற்
சேரா வூழித் தீயியல் பாகிச் செறிவுற்றுப்
பேரா தட்டே வம்மென விட்டான் பெயர்வில்லான்.
399
2797 அவ்வா றாக வாளிகள் நூறும் அருள்நீரால்
வெவ்வாய் அங்கிப் பேருரு வாகி விரவிப்போய்த்
தெவ்வாய் நின்றோன் நீத்தம தாகுஞ் செயல்நீங்க
வெவ்வா யுஞ்சென் றுண்டன அம்மா இறைதன்னில்.
400
2798 தண்டா தார்க்கும் நீத்த இயற்சை தனையெல்லாம்
உண்டா லித்தே வாளிகள் மீண்டே யுறுகாலைக்
கண்டான் மாயத் தன்மை படைத்தோன் கனல்மேனி
கொண்டான் அண்டங் காறும் நிமிர்ந்தே குலவுற்றான்.
401
2799 குலவுங் காலைக் கண்டு நகைத்தே கூற்றென்ன
நிலவுஞ் செங்கோல் ஆயிரம் வாங்கா நீடூழி
சுலவுஞ் சண்டச் சூறையின் ஏகிச் சூர்மாயம்
பலவுஞ் செற்றே வம்மென உய்த்தான் பரமானோன். 2
402
2800 உய்க்குங் காலத் தொய்யென ஏகி யுலகெங்குந்
திக்கும் வானுஞ் சூழு மருத்தின் திறனெய்தி
மைக்குந் தூமம் போல்பவன் மெய்த்தீ வடிவெல்லாம்
பொய்க்கும் வண்ணஞ் சாடின ஐயன் புகர்வாளி.
403
2801 வேறு
வண்டு லாவரு வாகைய்ந் தாரினான்
கொண்டே ழுந்த கொழுந்தழல் யாக்கையை
உண்டு வாளிகள் ஒய்யென மீண்டொராய்
அண்டர் நாயகன் பாங்கர் அணைந்தவே.
404
2802 ஆங்க வெல்லையில் அவ்வடி வத்தினை
நீங்கு மாற்றலன் நீள்சில மேற்கொளா
ஓங்கு மோதை உருவுகொண் டார்த்தலும்
ஞாங்கர் எந்தை நகையொடு நோக்கினான்.
405
2803 ஆய்ந்து வாளியொ ராயிர நூற்றினை
வாய்ந்த கைக்கொடு மாற்றலன் வன்மையைப்
பாந்த ளாகிப் படுத்து வம்மோவெனா
ஏந்தல் கூறி இமைப்பினில் தூண்டினான்.
406
2804 அவ்வ யிற்கணை அந்தரத் திற்செலாச்
செவ்வி திற்கிளர் செந்தழல் போல்எழீஇப்
பைவி ரித்த ப·றலைப் பன்னகம்
வெவ்வு ருக்கொடு சூர்மிசை மேயதே.
407
2805 கூற்றம் அன்ன கொடுந்தொழில் மன்னவன்
காற்றின் யாக்கை கரப்ப மிசைந்திடா
ஆற்றல் மேவி அணைந்துடன் மீண்டன
வேற்ற டக்கை விமலன் புடைதனில்.
408
2806 இன்ன தன்மையில் ஈரிரு நாள்வரைத்
துன்ன லன்தொலை யாதமர் ஆற்றியே
பின்னும் மாயையின் பெற்றியைப் புந்தியுள்
உன்னி யேபல் லுருக்கொடு தோன்றினான்.
409
2807 வேறு
ஓவாஇயல் புரிமூவரில் ஒருசார்வரு மொழியுந்
தேவாசுரர் பிறராமென ஒருசார்வரும் சேணாள்
கோவாமென ஒருசார்வரும் ஒருசார்வருங் குறள்போல்
ஆவாவெனக் கொடுங்கூற்றென ஒருசார்வரும் அன்றே.
410
2808 பேயாமென ஒருபால்வரும் பிறழ்வெம்புகைப் படலைத்
தீயாமென ஒருபால்வரும் திசைஎங்கணும் சுழலும்
ஓயாமருத் தினமாமென ஒருபால்வரும் அகிலம்
பாயாவெழு திரையாழயில் ஒருபால்வரும் பரவி.
411
2809 ஒருசார்விட மெனவந்திடும் ஒருசார்வரும் பணிபோல்
ஒருசார்முகி லெனவந்திடும் ஒருசார்வரு மிருள்போல்
ஒருசாருரு மெனவந்திடும் ஒருசார்வரும் வரைபோல்
ஒருசார்தன துருவாய்வரும் ஒருசார்வருங் கதிர்போல்.
412
2810 தொக்கார்பல படையாமென ஒருசார்வருஞ் சூழுந்
திக்கார்களிற் றினமாமென ஒருசார்வருஞ் சினத்தால்
நக்கர்ர்தரும் அரியேறென ஒருசார்வரும் நலிவான்
அக்கால்வரு தனிப்புள்ளென ஒருசார்வரும் அன்றே.
413
2811 கரியின்முகத் துணைவன்னென ஒருசார்வருங் கடுங்கண்
அரியின்முகத் திளையோனென ஒருசார்வரும் அளக்கர்ப்
பரியின்முகத் தினில்வந்திடு பாழிக்கனல் படுக்கும்
எரியின்முகத் தனிமைந்தனில் ஒருசாரிடை யேகும்.
414
2812 எல்லோன்றனை வெகுண்டோனென ஒருசார்வரும் ஏனைச்
சொல்லோங்கிய திறன்மைந்தரில் ஒருசார்வருஞ் சூழ்ச்சி
வல்லோனென ஒருசார்வரு மானப்படை மள்ளர்
பல்லோர்களுஞ் செறிந்தாலென ஒருசாரிடைப் படரும்.
415
2813 இத்தன்மையில் அவுணர்க்கிறை யாண்டுஞ்செறி வாகி
அத்தன்தனைப் புடைசூழ்தலும் அவைநோக்கிய இமையோர்
சித்தந்தளர்ந் திரிகுற்றனர் திரிகுற்றனர் அம்மா
கத்துங்கடற் புவிமாய்ந்திடு காலத்துயிர் எனவே.
416
2814 வேறு
அங்கதன் நிலைமைநோக்கி ஆயிர கோடி வாளி
செங்கையில் வாங்கி வாங்குந் திருநெடுஞ் சிலையிற் பூட்டி
இங்குள அமரர் தஙகள் இருஞ்சிறை அகற்றது வந்து
பங்கயற் சிறைசெய் திட்ட பகவன்மற் றிதனைச் சொல்வான்.
417
2815 தெவ்வடு பகழி யென்னும் தேவிகாள் நீவி ரேகி
மெய்வலி படைத்து நின்ற மேவலன் ஒருவன் கொண்ட
அவ்வுரு வனைத்து மெய்தி ஆங்கவன் மாய முற்றும்
இவ்விடை அட்டு நீக்கி ஏகி ரென்று விட்டான்.
418
2816 விட்டிடு சிலீமு கங்கள் விரைந்துபோய் வெகுளி வீங்கி
ஒட்டலன் கொண்ட ஒவ்வொன் றுருவினுக்* கெழுமை யாகி
எட்டுள புலமும் வானும் இருநில வரைப்பும் ஈண்டி
அட்டடல் பெற்ற அம்மா அனையவன் மாயந் தன்னை.
( * ஒவ்வொன்றுருவினுக்கு என்பதனை உரு ஒவ்வொன்-
றினுக்கு என மாற்றிப் பொருள் கொள்க.)
419
2817 உடல்சின மோடு சூரன் ஒருவனாய் அங்கண் நின்றான்
அடல்வலி கொண்ட வாளி அந்தர நெறியான் மீண்டு
புடையுறு சரங்க ளோடு பொள்ளெனத் தூணி புக்க
சுடர்நெடுந் தனிவே லண்ணல் அவன்முகம் நோக்கிக் செல்வான்.
420
2818 வெம்புய லிடையில் தோன்றி விளிந்திடு மின்னு வென்ன
இம்பரில் எமது முன்னம் எல்லையில் உருவங் கொண்டாய்
அம்பினில் அவற்றை யெல்லாம் அட்டனம் அழிவி லாத
நம்பெரு வடிவங் கொள்வ நன்றுகண் டிடுதி யென்றான்.
421
2819 கூறிமற் றினைய தன்மை குரைகடல் உலகந் திக்கு
மாறிலாப் புவனம் அண்டம் வானவா¢ உயிர்கள் யாவும்
ஆறுமா முகத்து வள்ளல் மேனியில் அமைந்த தன்றி
வேறிலை என்ன ஆங்கோர் வியன்பெரு வடிவங் கொண்டான்.
422
2820 உள்ளடி வரைகள் யாவும் ஒண்புற வடியின் நீத்தம்
வள்ளுகிர் விரல்கள் முற்றும் வான்உரு மேறு நாள்கோள்
எள்ளரும் பரடு தன்னில் இரும்புனற் கிறைவன் சோமன்
நள்ளிருள் அனைய மேனி நிருதியோ டரக்கர் நண்ண.
423
2821 அடிதிரள் கணைக்கால் தன்னில் ஆரிடர் மணிகள் சானு
வடிவமை முழந்தாள் விஞ்சை வானவ ராதி யானோ£¢
தொடைதனின் மகவான் மைந்தன் தொடைமுதல் நடுவன் காலன்
கடிதடத் தசுரர் பக்கங் கடவுளர் யாரும் நிற்ப.
424
2822 இருப்பினில் நாகர் கோச எல்லையில் மருந்தே யுந்திக்
கருப்படும் உயிர்கள் மார்பிற் கலைகள்முந் நூலிற் போதம்
அருப்பயில் உரோமத் தண்டம் அங்கையில் அகில போகந்
திருப்பெருந் தடந்தோள் வைப்பிற் செங்கண்மால் விரிஞ்சன் மேவ.
425
2823 மெல்லிதழ் அஆயை செங்கை விரல்மிசை அணங்கின் நல்லார்
ஒல்லொலி அங்கி கண்டம் ஒப்பிலா மணிவாய் வேதம்
பல்லிடை யெழுந்து நாவிற் பரமவா கமத்தின் பேதம்
நல்லிதழ் மனுவின் விஞ்சை நாசியிற் பவனன் மன்ன.
426
2824 கருணைகொள் விழியில் சோமன் கதிரவன் செவியில் திக்குத்
திருநுதற் குடிலை வைப்புச் சென்னியில் பரம ஆன்மா
மரபினின் மேவித் தோன்ற மாறிலா திருக்குந் தொல்லை
ஒருதன துருவங் காட்டி நிற்றலும் உம்பர் கண்டார்.
427
2825 செஞ்சுடர் அநந்த கோடி செறிந்தொருங் குதித்த தென்ன
விஞ்சிய கதிர்கான் றுள்ள வியன்பெரு வடிவை நோக்கி
நெஞ்சகந் துளங்கி விண்ணோர் நின்றனர் நிமல மூர்த்தி
அஞ்சல்மின் அஞ்சல் மின்னென் றருளினன் அமைத்த கையான்.
428
2826 அண்டர்கள் யாரும் எந்தை அருள்முறை வினவி யுள்ளம்
உண்டிடு விதிர்ப்பு நீங்கி உவகையால் தொழுது நின்றார்
தண்டுளி வரைய தென்னத் தணப்பறச் சிதறும் ஊழிக்
கொண்டலின் தோற்றம் நோக்கிக் குலவுறு மஞ்ஞை யேபோல்.
429
2827 இறுதியும் முதலும் இல்லா இப்பெரு வடிவந் தன்னைக்
கறைவிட முறழுஞ் சூரன் கண்டுவிம் மிதத்தின் நிற்ப
அறிவரும் உணர்தல் தேற்றா ஆறுமா முகத்து வள்ளல்
சிறிதுநல் லுணர்ச்சி நல்க இனையன செப்ப லுற்றான்.
430
2828 எண்ணிலா அவுணர் தானை யாவையும் இமைப்பிற் செற்று
விண்ணுலா அண்டந் தோறும் வியன்சமர் ஆற்றி என்பால்
நண்ணினார் தம்மை எல்லாம் நாமறத் தடிந்து வீட்டி
வண்ணமான் தேரும் மீண்டு வராநெறி தடுத்தான் மன்னோ.
431
2829 திண்டிறல் உடையேன் தூண்டுந் திறற்படை யாவும் நீக்கிக்
கொண்டவென் மாய முற்றுங் கொடுஞ்சரம் அதனான் மாற்றி
அண்டமும் புவனம் யாவும் அமரரும் பிறவுந் தன்பாற்
கண்டிடும் வடிவ மொன்று காட்டியென் கண்முன் நின்றான்.
432
2830 கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன் தன்னைப்
பாலனென் றிருந்தேன் அந்நாட் பரிசிவை யுணர்ந்தி லேன்யான்
மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகா ரணமாய் நின்ற மூர்த்திஇம் மூர்த்தி அன்றோ.
433
2831 ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப்
பற்றிக லின்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபெனக் கொண்டி லேனால்
இற்றையிப் பொழுதில் ஈசன் இவனெனுந் தன்மை கண்டேன்.
434
2832 மீயுயர் வடிவங் கொண்டு மேவிய தூதன் சொற்ற
வாய்மைகள் சரதம் அம்மா மற்றியான் பெற்ற அண்டம்
ஆயவை முழுது மற்றும் அறுமுகம் படைத்த செம்மல்
தூயபொற் பதரோ மத்தில் தோன்றியே நிற்கும் அன்றே.
435
2833 அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமுங் காட்டி அண்ணல்
கொண்டிடு படிவ முற்றுங் குறித்தியார் தெரிதற் பாலார்
எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க் கேனுங்
கண்டிட அநந்த கோடி கற்பமுங் கடக்கும் அன்றே.
436
2834 சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஔ¤யுஞ் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள வுலகில் அம்மா அற்புதத் தோடும் பல்காற்
பார்க்கினுந் தெவிட்டிற் றில்லை இன்னுமென் பார்வை தானும்.
437
2835 நேரில னாகி ஈண்டே நின்றிடும் முதல்வன் நீடும்
பேருரு வதனை நோக்கிப் பெரிதுமச் சுறுவ தல்லால்
ஆரிது நின்று காண்பார் அமரரில் அழிவி லாத
சீரிய வரங்கொண் டுள்ளேன் ஆதலில் தெரிகின் றேனால்.
438
2836 ஆயிர கோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி
மேயின எனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில்
தூயநல் லெழிலுக் காற்றா தென்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்.
439
2837 இங்கென துயிர்போல் உற்ற இளவலும் இளைய சேயுஞ்
செங்கையில் வேலோன் றன்னைச் சிறுவனென் றெண்ணல் கண்டாய்
பங்கயன் முதலோர் காணாப் பரமனே யாகும் என்றார்
அங்கவர் மொழந்த வாறுஞ் சரதமே ஆன தன்றே.
440
2838 அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும்
எண்ணிலா வூழி காலம் எத்திறம் நோக்கி னாலுங்
கண்ணினால் அடங்கா துன்னிற் கருத்தினால் அடங்கா தென்பால்
நண்ணினான் அமருக் கென்கை அருளென நாட்ட லாமே.
441
2839 திருகிய வெகுளி முற்றுந் தீர்ந்தன செருவின் ஊக்கம்
அருகிய துரோமம புள்ளி ஆயின விழியில தூநீ£¢
பெருகிய திவன்பால் அன்பு பிறந்தன தமியேற் குள்ளம்
உருகிய தென்பு தானும் உலைமெழு காகும் அன்றே.
442
2840 போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான
தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வௌ¤ப்படு கின்ற விண்ணோர்
நாயகன் வடிவங் கண்டேன் நற்றவப் பயனீ தன்றோ.
443
2841 சூழுதல் வேண்டுந் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந் தாலு
ஆழுதல் வேண்டுந் தீமை அகன்றுநான் இவற்கா ளாகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே.
444
2842 ஒன்னலர் பொருட்ட லேகி உறுசமர் இழைத்த செம்மல்
தன்னுரு வதனைக் காண்கின் முனிவதே தகுதி யாகும்
வன்னிகொள் வெண்ணெ யேபோல் வலியழிந் துருகிற் றென்றால்
என்னுடைய வயத்த வன்றோ உணர்ச்சியு மியாக்கை முற்றும்.
445
2843 ஏடவிழ் அலங்கல் மார்பன் என்னுடன் இந்நாள் காறும்
நீடிய இகற்போர் ஆற்றி நீங்கலான் நின்ற தெல்லாம்
ஆடலின் இயற்கை யென்றே அறிந்தனன் அ·தான் றன்னான்
சாடிய வேண்டு மென்னின் யாரது தாங்கற் பாலார்.
446
2844 ஏதமில் அமரர் தம்மை யான்சிறை செய்த தெல்லாந்
தீதென உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கை யாலே
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலருங் காணா
நாதனிங் கணுகப் பெற்றேன் நன்றதே யான தன்றே.
447
2845 ஒன்றொரு முதல்வ னனகி உரைதரு மூர்த்தி முன்னம்
நின்றமர் செய்தேன் இந்நாள் நெஞ்சினித் தளரேன் அம்மா
நன்றிதோர் பெருமை பெற்றேன் வீரனும் நானே யானேன்
என்றுமிப் புகழே நிற்கும் இவ்வுடல் நிற்ப துண்டோ.
448
2846 வானுளோர் சிஆறையை நீக்கி வள்ளலை வணங்கி இந்த
ஊனுலாம் உயிரைப் போற்றி அளியர்போல் உறுவன் என்னின்
ஆனதோ எனக்கி தம்மா ஆயிர கோடி யண்டம்
போனதோர் புகழும் வீரத் தன்மையும் பொன்றி டாவோ.
449
2847 என்னஇத தகைய பன்னி நிற்றலும் எவர்க்கும் மேலோன்
உன்னருந் தகைத்தாய் நின்ற ஒருபெருந் தோற்றம் நீத்து
மின்னிவர் கலாபம் ஊர்ந்த வியனுருக் கொண்டு நண்ணித்
துன்னலன் போத மாற்றித் தொன்மைபோ லாகச் செய்தான்.
450
2848 காரண னாகித் தானே கருணையால் எவையும் நல்கி
ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும்
பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச்
சூரனை மயக்கஞ் செய்யுஞ் சூழச்சியோ அரிய தன்றே.
451
2849 அத்தகு காலை தானே அவுணர்கோன் உணர்ச்சி நீங்கிச்
சித்தம திடையே தொல்லைச் சீற்றமும் இகலும் உற்ற
மெய்த்தகு குழவித் திங்கள் விண்ணெறி செல்லச் செல்லும்
எத்திசை இருளும் அன்ன தகன்றுழி எழுந்த தேபோல்.
452
2850 பிணிமுகம் உயர்த்து நின்ற பெருந்தகை தோற்றங் காணூஉத்
தணிவருஞ் சினமேற் கொண்டு சமரின் மேல் ஊக்கஞ் சேர்த்தி
அணியதென் றிண்மை என்னா அங்கையோ டங்கை தாக்கி
மணிமுடி துளக்கி நக்கு மற்றிவை புகலல் உற்றான்.
453
2851 சேயுரு வமைந்த கள்வன் செருவிஙூஎ இழைக்க லாற்றான்
மாயையி னொன்று காட்டி எனையிவண் மையல் செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆரெனக் கொப்புண் டென்றுங்
காயம தழிவி லாதேன் கருத்தழி கின்ற துண்டோ.
454
2852 குன்றினை எறிந்த வேற்கைக் குமரனோ டமர தாற்றி
வென்றிடு கின்றேன் மெல்ல மேலது நிற்க இந்த
வன்றிறற் சமரை மூட்டி நின்றவா னவரை யெல்லாம்
தின்றுயிர் குடித்து முன்னென் சினஞ்சிறி தகல்வன் என்றான்.
455
2853 ஆயது துணிவாக் கொண்ட அவுணர்கள் மன்னன் பின்னும்
தீயதோர் தொல்லை மாயச் சீர்கொள்மந் திரத்தைப் பன்னி
ஞாயிறு மருட்கை கொள்ள ஞாலமுங் ககன முற்றும்
மாயிருள் உருவங் கொண்டு மறைந்துநின் றார்க்க லுற்றான்.
456
2854 தெண்டிரை நேமி தன்னில் தீவிடம் எழுந்த தென்ன
எண்டிசை எல்லை முற்றும் இருநில வரைப்பும் எல்லா
அண்டமு மாகி ஈண்டும் ஆரிருள் வடிவை வானோர்
கண்டனர் அவுணன் மாய மீதெனக் கலக்க முற்றா£¢.
457
2855 அத்துணை அவுணர் மன்னன் அவ்விருள் இடையே பாய்ந்து
பத்திகொள் சிகர மன்ன ப·றலை அளவை தீர்ந்த
கைத்தல முளதோர் யாக்கை கதுமெனக் கொண்டு விண்ணோர்
மெய்த்தொகை நுகர்வான் உன்னி விண்ணிடைக் கிளர்ந்து சென்றான்.
458
2856 ஆடியல் கொண்ட சூரன் அந்தரத் தெழலும் வானோர்
கூடிய ஓதி தன்னால் குறிப்பினால் தெரிந்து நம்மைச்
சாடிய வருவன் என்னாத் தலைத்தலை சிதறி நில்லா
தோடினர் கூற்றை நேர்ந்த உயிரென இரங்க லுற்றார்.
459
2857 நணணினர்க் கினியாய் ஓலம் ஞானநா யகனே ஓலம்
பண்ணவர்க் கிறையே ஓலம் பரஞ்சுடர் முதலே ஓலம்
எண்ணுதற் கா¤யாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம்
கண்ணுதற் பெருமான் நல்குங் கடவுளே ஓலம் ஓலம்.
460
2858 தேவர்கள் தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க் கிடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க் கௌ¤யாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரு மாகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்.
461
2859 கங்குலின் எழுந்த கா£¢போல் கனையிருள் மறைவின் ஏகி
நுங்கிய செல்வான் சூரன் ஓடவும் நோன்மை யில்லேம்
எங்கினி உய்வம் ஐய இறையுநீ தாழ்க்கல் கண்டாய்
அங்கவன் உயிரை உண்டெம் மாவியை யருளு கென்றார்.
462
2860 தேற்றலை போலு மீது சிறிதுநீ பாணிப் பாயேல்
ஆற்றலின் மறைந்து நின்றே அகிலமுந் தானே யுண்ணும்
மாற்றலன் ஆவி தன்னை வாங்குதி வல்லை யென்னாப்
போற்றினன் முதல்வன் தன்னை மயூரமாய்க் கொண்ட புத்தேள்.
463
2861 அங்கவர் மொழியும் வெய்யோன் ஆற்றலுந் தெரிந்து செவ்வேள்
செங்கைய தொன்றில் வைகுந் திருநெடு வேலை நோக்கி
இங்கிவன் ஆகம் போழ்ந்தே ஏகுதி இமைப்பின் என்னாத்
துங்கம துடைய சீர்த்திச் சூரன்மேற் செல்லத் தொட்டான்.
464
2862 ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும் அருக்கரில் கிகழ்ந்து தோன்றித்
தீயழற் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட
மாயிருள் உருவ முற்றும் வல்விரைந் தகன்ற தன்றே.
465
2863 அன்னவன் தனது மாயம் அழிந்ததும் ஐயன் வைவேல்
முன்னுறு மாறு நோக்கி முடிவிலா வரத்தி னேனை
என்னிவட் செய்யும் அம்மா இவன்விடும் எ·க மென்னா
உன்னினன் முறுவல் எய்தி உருகெழு சீற்றங் கொண்டான்.
466
2864 வாரிதி வளாகந் தன்னை மாதிர வரைப்பை மீக்கீழ்ச்
சேருறு நிலயந் தன்னைத் திசைமுகன் முதலா வுள்ள
ஆருயி ரோடும் வீட்டி அடுவன்மே லிதனை என்னாச்
சூரெனும் அவுணன் மற்றைத் தொடுகடல் நடுவண் ஆனான்.
467
2865 வன்னியின் அலங்கல் கான்று வான்தழை புகையின் நல்கிப்
பொன்னென இணர்கள் ஈன்று மரகதம் புரையக் காய்த்துச்
செந்நிற மணிகள் என்னத் தீம்பழங் கொண்டு கார்போல்
துன்னுபல் கவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான்.
468
2866 மாசறு ககன கூட வரம்பதன் அளவு மேல்போய்
ஆசையின் எல்லை காறும் அளவைதீ ருலவை ஓச்சிக்
காசினி அகலந் தாங்குங் கச்சபத் துணைத்தூ ரோட்டிப்
பாசடை பொதுளி வெஞ்சூர் பராரைமால வரையின் நின்றான்.
469
2867 ஒராயிர நூற தென்னும் ஓசனை அளவை யான்ற
பராரைமா வுருவ மாகிப் பலவுடைச் சினைமாண் கொம்பர்
விராவிய சூழ்ச்சி தன்னால் வேலைகள் முழுதும் விண்ணும்
தராதல வரைப்பும் எல்லாந் தண்ணிழல் பரப்பி நின்றான்.
470
2868 நெடுங்கலை முயல்மான் கொண்டு நிலவும்அம் புலியும் நீத்தம்
அடுங்கதிர் படைத்த கோவும் அளகையை யாளி தானுங்
கடங்கலுழ் கின்ற ஆசைக் கரிகளுங் கடாவிற் செல்லும்
மடங்கலும் வெருவச் சூரன் மாவுருக் கொண்டு நின்றான்.
471
2869 மிக்குயர் உவணம் அன்ன மிசைப்படும் எகினப் புள்ளும்
மைக்குயில் சேவ லாகிய மயூரமாம் வலியன் தானும்
புக்கமர் தெரிக்கும் ஆடற் பூவையுங் கொடிய தான
குக்குட முதலும் அஞ்சக் கொக்குரு வாகி நின்றான்.
472
2870 காலெனு மொய்ம்பன் உட்கக் கட்செவி கவிழ்ந்து சோர
வாலிய வசுக்கள் ஏங்கி மலர்க்கரம் மறிக்க வெய்யோன்
பாலர்மெய் வியரா நிற்பப் பணைமுலை அரிவை மார்கள்
சேலெனும் விழிகள் பொத்தச் சேகர மாகி நின்றான். 3
473
2871 அத்தியின் அரசு பேர ஆலமும் தெரிக்கில் ஏங்க
மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவுந்
தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன்
உய்த்திடு தனிவேல் முன்னர் ஒருதனி மாவாய் நின்றான்.
474
2872 நிலமிசை இனைய வாறோர் நெடும்பெருஞ் சூத மாகி
உலவையின் செறிவு தன்னால் உம்பருந் திசையும் எற்றித்
தலைமுதல் அடியின் காறுஞ் சாலவுந் தளர்ந்து தள்ளுற்
றலமரு வாரிற் றானே அசைந்தனன் அசைவி லாதான்.
475
2873 பைவிரி பாந்தட் புத்தேள் பரம்பொறா தழுங்கப் பாரின்
மைவிரி வடிவச் சூறை மாருதம் எறிய மாழை
மெய்விரி குடுமிக் கோட்டு மேருவெற் பசைந்தா லென்ன
மொய்விரி அவுணன் யாக்கை அலைத்தனன் முடிவ தோரான்.
476
2874 இடிந்தன சரிந்த ஞாலம் ஏழ்வகைப் பிலங்கள் முற்றும்
பொடிந்தன கமட நாகம் புரண்டன புழைக்க மாக்கள்
முடிந்தன மறிந்த வேலை முழுவதும் ஒன்றா குற்ற
மடிந்தன உயிரின் பொம்மல் வரைக்குலம் அறிந்த அன்றே.
477
2875 தாரகை உதிர்ந்த கோளுந் தலைபனித் திரிந்த வெய்யோன்
தேரொடு மாவுந் தானுந் தியங்கினன் திங்கட் புத்தேள்
பேருறு மானம் நீங்கிப் பெயர்ந்தனன் ஏனை வானோர்
மேருவுங் கயிலை வெற்பும் புக்கனர் வெருவு நீரார்.
478
2876 ஏற்றமில் சுவர்க்க முற்றும் இற்றன அதற்கும் அப்பால்
மேற்றிகழ் முனிவர் வைகும் உலகமும் பகிர்ந்து வீழ்ந்த
நாற்றிசை முகத்தன் மாயோன் நண்ணிய உலகும் அற்றே
சாற்றுவ தென்கொல் அண்டச் சூழலுந் தகர்ந்த தன்றே.
479
2877 தெண்டிரை நடுவண் நின்ற தீயவன் செயலும் அன்னான்
கொண்டிடும் உருவும் உள்ளக் கொள்கையும் வலியுஞ் சீரும்
அண்டர்கள் எவர்க்கும் மேலாம் ஆதியம் பகவன் தொட்ட
விண்டொடர் தனிவேல் காணா வெஞ்சினம் விளைத்த தன்றே.
480
2878 தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்
தாயிர கோடி அண்டத் தங்கியும் ஒன்றிற் றென்ன
மீயுயர்ந் தொழுகி ஆன்றோர் வெருவருந் தோற்றங் கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்த தன்றே.
481
2879 வயிர்த்திடு நிலைமை சான்ற வன்கணான் உயிரை வௌவச்
செயிர்த்திடுந் தெய்வச் செவ்வேல் திணிநில வரைப்பில் அண்டம்
மயிர்த்தொகை யாக ஏனைப் பூதமும் அழிய அங்கண்
உயிர்த்தொகை முருக்கத் தோன்றும் ஒருவனிற் சென்ற தன்றே.
482
2880 மாறமர் உழந்து பன்னாள் வரம்பறு பிரம மாவார்
வேறிலை யாமே என்ற இருவரும் வெருவி நீங்க
ஈறொடு முதலும் இன்றி எழுகிரி விலக்கி விண்மேற்
சேறலின் நிலைமை காட்டிப் படர்ந்தது கடவுட் செவ்வேல்.
483
2881 வேதனை அகத்த ராகும் விண்ணவர் படைகள் தம்முள்
யாதனை இதற்கு நேரா இயம்புவ தெரியில் தோன்றிப்
பூதனை உயிருண் கள்வன் புண்டரீ கத்தன் வன்மை
சோதனை புரிந்த மேலோன் சூலமே என்ப தல்லால்.
484
2882 மண்டல நிலத்தின் வைப்பும் வாரிதி ஏழு மற்றைத்
தெண்டிரைக் கடலும் வானுஞ் சேணுயர் பிறங்கல் முற்றும்
எண்டிசைப் புறமும் அண்டத் தேணியின் பரப்பும் ஈண்ட
ஒண்டழற் சிகையின் கற்றை உமிழ்ந்ததால் ஒருங்கு ஞாங்கர்.
485
2883 பற்றிய ஞெகிழி பாரில் படர்ந்தன பௌவம் யாவுஞ்
சுற்றி திசையும் வானுஞ் சூழ்ந்தன சோதி வைகும்
பொற்றைய தொன்றே அல்லாப் பொருப்பெலாஞ் செறிந்த பொன்றோய்
கற்றையங் கதிரின் அண்டச் சூழலுங் கதுவ லுற்ற.
486
2884 விடம்பிடித்த தமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி
இடம்பிடித் திட்ட தீயில் தோய்த்துமுன் இயற்றி யன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வா றுருகெழு செலவின் ஏகி
மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே.
487
2885 ஆடல்வேல் எறித லோடும் ஆமிர வடிவாய் அண்ட
கூடமும் அலைத்த கள்வன் அரற்றொடு குறைந்து வீழ்ந்தும்
வீடிலன் என்ப மன்னோ மேலைநாள் வரத்தின் என்றால்
பீடுறு தவமே அன்றி வலியது பிறிதொன் றுண்டோ.
488
2886 கிள்ளையின் வதனம் அன்ன கேழ்கிளர் பசுங்காய் தூங்கித்
தள்ளரும் நிலைத்தாய் நின்ற மாவுருச் சாய்த லோடும்
உள்ளுறு சினமீக் கொள்ள ஒல்லைதொல் லுருவம் எய்தி
வள்ளுறை யுடைவாள் வாங்கி மலைவது கருதி ஆர்த்தான்.
489
2887 செங்கதிர் அயில்வாள் கொண்டு செருமுயன் றுருமின் ஆர்த்துத்
துங்கமொ டெதிர்ந்து சீறுஞ் சூருரங் கிழித்துப் பின்னும
அங்கம திருகூ றாக்கி அலைகடல் வரைப்பில் வீட்டி
எங்கணும் மறைகள் ஆர்ப்ப எ·கம்வான் போயிற் றம்மா.
490
2888 புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை யிடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி அருளுருக் கொண்டு வான்றோய்
கங்கையிற் படிந்து மீண்டு கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற் றிருந்த தவ்வேல்.
491
2889 தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டும் மெய்பகிர் இரண்டு கூறுஞ்
சேவலும் மயிலு மாகிச் சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான். 2
492
2890 மணிகிளர் வரைய தொன்றும் மரகதப் பிறங்க லொன்றுந்
துணையடி சிறகர் பெற்றுச் சூற்புயல் அழிய ஆர்த்துத்
திணிநில விசும்பின் மாட்டே சென்றெனச் சேவ லோடு
பிணிமுக வுருவாய் வந்து பெருந்தகை முன்னம் புக்கான்.
493
2891 ஆட்படு நெறியிற் சேர்த்தும் ஆதியின் ஊழ்தந் துய்க்கத்
தாட்படை மயூர மாகித் தன்னிகர் இல்லாச் சூரன்
காட்படை யுளத்த னாகிக் கடவுளர் இரியல் போக
ஞாட்பியல் செருக்கில் வந்தான் ஞானநா யகன்றன் முன்னம்.
494
2892 மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன் எந்தை
அருள்கெழு நாட்டாஞ் சேர்த்த ஆங்கவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்த னாகி நின்றனன் சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன் னாகிய இயற்கை யேபோல்.
495
2893 தீயவை புரிந்தா ரேனுங் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவ ராகி மேலைத் தொல்கதி யடையவர் என்கை
ஆயவும் வேண்டுங் கொல்லோ அடுசமர் இந்நாட் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற் றுய்ந்தான்
496
2894 அக்கணம் எம்பிரான்தன் அருளினால் உணர்வு சான்ற
குக்குட வுருவை நோக்கிக் கடிதில்நீ கொடியே ஆகி
மிக்குயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி என்னத்
தக்கதே பணியி தென்னா எழுந்தது தமித்து விண்மேல்.
497
2895 செந்நிறங் கெழீஇய சூட்டுச் சேவலங் கொடியொன் றாகி
முன்னுறு மனத்திற் செல்லும் முரண்டகு தடந்தேர் மீப்போய்
இந்நில வரைப்பின் அண்டம் இடிபட உருமே றுட்க
வன்னியும் வெருவ ஆர்த்து மற்றவண் உற்ற தன்றே.
498
2896 சீர்திகழ் குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை
ஊர்தியின் இருக்கை நீங்கி உணர்வுகொண் டொழுகி நின்ற
சூர்திகழ் மஞ்ஞை யேறிச் சுமக்குதி எம்மை என்னாப்
பார்திசை வானம் முற்றும் பரியென நடாத்த லுற்றான்.
499
2897 தடக்கடல் உடைய மேருத் தடவரை இடிய மற்றைப்
படித்தலம் வெடிப்பச் செந்தீப் பதைபதைத் தொடுங்கச் சூறை
துடித்திட அண்ட கூடந் துளக்குறக் கலாபம் வீசி
இடித்தொகை புரள ஆர்த்திட் டேகிற்றுத் தோகை மஞ்ஞை.
500
2898 படத்தினின் உலகம் போற்றும் பணிக்கிறை பதைப்பப் பாங்கர்
அடுத்திடு புயங்கம் முற்றும் அலமர அவனி கேள்வன்
இடத்தமர் கின்ற பாம்பும் ஏங்குற விசும்பிற் செல்லும்
உடற்குறை அரவும் உட்க உலாயது கலாப மஞ்ஞை.
501
2899 பாரொடு விரிஞ்சன் தன்னைப் படைத்திட பன்னாள் மாயன்
காரென வந்து முக்கட் கடவுளைப் பரித்த தேபோல்
வீரருள் வீரனாகும் வேலுடைக் குமரன் தன்னைச்
சூருரு வாகி நின்ற தோகைமேல் கொண்ட தம்மா.
502
2900 வெயில்விடும் அநந்த கோடி வெய்யவர் திரண்டொன் றாகிப்
புயல்தவழ் கடவுள் வானில் போந்திடு தன்மை யேபோல்
அயிலினை யுடைய செவ்வேள் மரகதத் தழகு சான்ற
மயிலிடை வைகி ஊர்ந்தான் மாமுகந் திசைகள் முற்றும்.
503
2901 நேமிகள் ஏழும் ஒன்றாய் நிமிர்ந்தெழும் வடவை முற்றுந்
தாமொரு வடிவாய் அங்கட் சார்ந்திடு நிலைமை யென்ன
மாமயில் உய்த்துச் சென்ற வாகைவேல் வீரன் மீண்டு
தீமைகொள் அவுணன் மூதூர்ச் செருநிலத் தெல்லை புக்கான்.
504
2902 புக்குள குமர மூர்த்தி பொறிமயில் உருவ மாயுங்
குக்குட மாயும் நின்ற அமரரைக் குறித்து நோக்கி
மிக்கநும் மியற்கை யாகி மேவுதிர் விரைவின் என்ன
அக்கணம் அவருந்தொல்லை வடிவுகொண் டடியில் வீழ்ந்தார்.
505
2903 வள்ளலை வணங்கிப் பல்கால் வழுத்தியே தொழுது தத்தம்
உள்ளமும் புறத்தில் என்பும் உருகிட விழியில் தூநீர்
தள்ளுற வுரைகள் முற்றுந் தவறிடப் பொடிப்ப யாக்கை
கள்ளுண வுற்ற வண்டின் களிமகிழ் சிறந்து நின்றா£¢.
506
2904 வீசுறு சுடர்வேல் ஐயன் வெய்யசூர் முதலைச் சாடித்
தேசுறு மஞ்ஞை ஊர்ந்து வந்தது தொந்து போர்செய்
காசினி யிடையே நின்ற கணங்களும் வீரர் யாரும்
ஆசறும் இளவ லுஞ்சென் றடிதொழு தார்த்துச் சூழ்ந்தார்.
507

ஆகத் திருவிருத்தம் - 2904
----------

14. தேவர்கள் போற்று படலம் (2905 - 2914)

2905 நேரொரு சிறிதும் இல்லா நின்மலன் தனது வேலால்
சூருடல் பிளந்தி யாணர் மஞ்ஞையில் தோன்று காலைப்
பாருல கயின்ற கண்ணன் பங்கயன் அமரர் கட்கோர்
ஆரமிர் தெய்திற் றென்ன அன்னது கண்டே ஆர்த்தார். 1
1
2906 ஆ£¢த்தனர் எழுந்து துள்ளி ஆடினர் பாடா நின்றார்
போர்த்தனர் பொடிப்பின் போ£¢வை பொலங்கெழு பூவின்மாரி
தூர்த்தனர் அருளை முன்னித் தொழுதனர் சுடர்வேல் கொண்ட
தீர்த்தனை எய்திச் சூழ்ந்து சிறந்துவாழ்த் தெடுக்க லுற்றார்.
2
2907 வேறு
கார்தடிந்து துய்க்குங் கனைகடலின் நீர்வறப்பப்
போ£¢ தடிந்து செல்லும் புகர்வேல் தனைவிடுத்துச்
சூர்தடிந்தாய் அன்றே தொழுமடியேம் வல்வினையின்
வேர்தடிந்தாய் மற்றெமக்கு வேறோர் குறையுண்டோ.
3
2908 மாறுமுகங் கொண்டுபொரு வல்லவுணர் மாளாமல்
நூறு முகமெட்டு நோதக் கனபுரியத்
தேறு முகமின்றித் திரிந்தேமை ஆளவன்றோ
ஆறு முகங்கொண்டே அவதரித்தாய் எம்பெருமான்.
4
2909 நீதி முறையதனில் நில்லா அசுரர்புரி
தீது பலவுளவுந் தீர்ந்தோம் பழியகன்றோம்
வேத நெறிதொல்லை வெறுக்கையொடு பெற்றனமால்
ஏதும் இலையால் எமக்கோர் குறையெந்தாய்.
5
2910 மன்ற அவுணர் வருத்திடஇந் நாள்வரையும்
பொன்றி னவரென்னப் புலம்பித் திரிந்தனமால்
இன்று பகைமாற்றி எமக்கருள்நீ செய்கையினால்
சென்றஉயிர் மீண்ட திறம்பெற்ற னம்ஐயா.
6
2911 செய்யும்அவ னும்புலனுஞ் செய்வித்து நிற்போனும்
எய்த வரும்பொருளும் யாவையுநீ யேயென்கை
ஐய அடியேங்கள் அறிந்தனமால் அன்னதனால்
வெய்ய பவமகன்று வீடுமினிக் கூடுதுமால்.
7
2912 ஈண்டே எமருக் கிடர்செய் அவுணரெலாம்
மாண்டே விளியும் வகைபுரிந்து காத்தனையால்
வேண்டேம் இனியாதும் மேலாய நின்கழற்கே
பூண்டேந் தொழும்பு புகழேம் பிறர்தமையே.
8
2913 என்னா இயம்பி எவருமினி தேத்துதலுங்
கொன்னார் அயில்வேற் குமர னதுகேளா
அந்நா ரணன்விரிஞ்சன் ஆதியாம் வானோர்க்குத்
தன்னா ரருளின் தலைமை புரிந்தனனே.
9

ஆகத் திருவிருத்தம் - 2913
-----

15. இரணியன் புலம்புறு படலம் (2914 - 2934)

2914 அதுநிகழ்ந் துழியகன்பதி அவுணர் கள்ஒரு சில்லோர்
கதுமெனச் சென்று காவலன் கந்தவேள் உய்த்திட்ட
நுதிகொள் வேலினான் மாய்ந்தனன் என்பதை நுவலுற்றா£¢
பதுமை அம்மொழி கேட்டனள் துணைவியர் பலரோடும்.
1
2915 காவல் மன்னவன் இறந்தனன் எனுமுரை கன்னத்துள்
மேவு மெல்லை யில்அசனி ஏறுண்ட வெம்பணியேபோல்
தேவி யாகிய பதுமகோ மளையெனுந் திருமங்கை
ஆவி நீங்கினள் தலையளி ஆகிய ததுவன்றோ.
2
2916 எவ்வெ வர்க்கும்மே லாகிய அவுணர்கோற் கில்லாகி
அவ்வி டத்துறை துணைவியர் வயிறலைத் தழுங்குற்று
வெவ்வ ழற்பெருங் குண்டமொன் றாக்கியே விளிவுற்ற
தெய்வ தப்புனை வன்மகள் யாக்கைமுன் செலஉய்த்தார்.
3
2917 * மான்கி ளர்ந்தன அரிமதர் மழைக்கண்மெல் லியரெல்லாம்
வான்கி ளர்ந்தெழு கின்றதோர் மாபெருங் கனலூடே
கான்கி ளர்ந்திட மலர்தருந் தாமரைக் கானத்திற்
தேன்கி ளர்ந்துதம் மினத்தொடும் புகுந்தெனச் செல்லுற்றார்.
(பா-ம் - *மீன்கிளர்ந்தன.)
4
2918 செல்லல் போதுமென் றொழிந்திட அரற்றினோர் செந்தீயில்
செல்லல் போதுநாள் மாலையும் அங்கியிற் சேர்ந்தோங்கும்
அல்லல் போதுமுன் நின்றிடு நிசியெலாம் அகன்றென்ன
அல்லல் போதுமா நகர்ந்திரு ஏகினள் அதுகாலை.
5
2919 இந்த வாறிவர் அங்கியுள் மாண்டனர் இதுநிற்கத்
தந்தை பட்டதுஞ் சேவலும் மஞ்ஞையுந் தானாகிக்
கந்த வேள்புடை வந்ததுங் கண்டனன் கலங்குற்றுப்
புந்தி நொந்துநின் றிரணியன் வானிடைப் புலம்புற்றான்.
6
2920 வேறு
நன்றென் பதைஉணராய் நானுரைத்த வாசகங்கள்
ஒன்றுஞ் சிறிதும் உறுதியெனக் கொண்டிலையே
பொன்றும் படிக்கோ பொருதாய் புரவலனே
என்றுன்னை முன்போல இருந்திடநான் காண்பதுவே.
7
2921 அன்புடையன் கொல்லென் றயலா ரெடுத்துரைப்பத்
துன்புடையேன் போலத் துயரா அயா¢கின்றேன்
என்புடையே முன்னர் எனதுயிர்கொண் டேகினனால்
நின்புடையே நின்று நெடும்பழியின் நீங்காதேன்.
8
2922 மாற்றார் வலிகண்டு மற்றுன்னை வன்செருவில்
போற்றா தொளித்த பொறியிலியேன் தன்முன்னந்
தோற்றாமல் எங்கொளித்தாய் சொல்லாய் சுதன்போலக்
கூற்றான வனைஇன்னுங் கூடமனங் கொள்ளுதியோ.
9
2923 கையார் அழலேந்துங் கண்ணுதலோன் தந்தவரம்
மெய்யாம் ஒருகாலும் வீடாய்அ· தெல்லாம்
பொய்யாகும் வண்ணம் புதல்வனென வந்துதித்தோன்
ஐயா உனகோர் அருங்கூற்றம் ஆயினனே.
10
2924 நில்லா உடலை நிலையா மெனக்கருதிப்
பல்லா ருங்கண்டு பழிக்கும் படிஉனக்குஞ்
சொல்லா தகன்றேன்நீ துஞ்சியபின் வந்தனனால்
நல்லார் களில்தேரின் நானே தலைஅன்றோர்.
11
2925 அத்திர நேர்கூறும் அவுணர் தமக்குள் மிகக்
குத்திர னேயாகுங் கொடியேன்நீ துஞ்சியபின்
மித்திரனே போன்றிரங்கி மீண்டேன் உனக்கென்னைப்
புத்திர னேயெனகை புவிக்குப் பொறையன்றோ.
12
2926 ஆழியான் வேதன் அமரர்க் கிறைமுதலோர்
வாழியா யென்று வழுத்தியிட வைகியநீ
பூயார் மேனிப் புராரிசிறு வன்தேரில்
கோழியாய் நின்று விலாவொடியக் கூவுதியோ.
13
2927 ஓகையால் அண்டத் துயிர்களெலாம் வந்திறைஞ்சச்
சேகையாய் மல்குந் திருத்தாள்கொண் டுற்றிடுநீ
வாகையார் கின்ற வடிவேற் கரத்தோனைத்
தோகையாய் நின்று சுமக்குதியோ தோன்றாலோ.
14
2928 மேற்றான் விளையும் இ·தென்றே வினயமுடன்
ஆற்றான் மொழிந்தேன் அதுசிறிதுங் கேட்டிலையே
மாற்றான் எனவந்த மைந்தனுடன் போர்செய்தே
தோற்றாயே அற்றால் மயிலாய்ச் சுமக்குதியோ.
15
2929 மாறுற்றி டாத்தொல் வடிவந்தனை இழந்து
வேறுற்ற புள்வடிவாய் மேவினாய் ஆங்கதனால்
ஈறுற் றனைஅன்றே என்செய்கை செய்வதற்கும்
பேறுற் றிலன்வாளா பேணினேன் இவ்வுயிரே.
16
2930 பிள்ளைப் பிறைபுனைந்த பிஞ்ஞகன்றன் காதலனைப்
புள்ளிக் கலாபப் பொறிமயிலாய்ப் போற்றுமெல்லை
எள்ளற் பொருட்டா லியான்முன்னு ரைத்தவற்றை
உள்ளத் திடைஎந்தாய் உன்னுதியோ உன்னாயோ.
17
2931 பொங்குற்ற சீற்றம் பொரும்போர் இகலுள்ளந்
தங்குற்ற மானஞ் சயமகந்தை வன்மையெலாம்
அங்குற்ற நின்னை அடைந்ததிலை அவ்வனைத்தும்
எங்குற்ற தையா இயம்பாய் எனக்கதுவே.
18
2932 என்று கனகன் இரங்கி நெடுஞ்சேணில்
நின்று தளர்ந்து நெடிதுயிர்த்துப் பூதரெனைத்
தின்று சினந்தீர்வர் தெரியினெனச் சிந்தைசெய்து
துன்றுதிரை வேலையிடைத் தொன்மைபோற் புக்கனனே.
19
2933 புக்க கனகன் புலர்ந்து புகரோன்பால்
அக்கணமே எய்தி அழிவுற்ற தந்தையர்க்குந்
தக்க துணைவர்க்குந் தாயர்க்கும் ஏனையர்க்கும்
மிக்க கடன்கள் விதிமுறையே செய்தனனே.
20
2934 தாக்கிச் சமர்மலைந்த தானவர்க்குச் செய்பரிசே
தூக்கிப் புரிந்து துயரினுக்கோர் வித்தென்றே
ஆக்கத் தினைவெறுத்தே ஆதிப் பிரானையுள்ளே
நோக்கிக் கதியடைவான் நோற்றொருசா£¢ உற்றனனே.
21

ஆகத் திருவிருத்தம் - 2934
------

16. மீட்சிப் படலம் (2935 - 2967)

2935 மற்றது காலத்து மணிதூங் கியபசும்பொற்
பொற்றை புரையும் பொறிமஞ்ஞை மீதுவைகும்
வெற்றி நெடுவேற்ஆ விமலன் விறலோனைப்
பற்றி னொடுநோக்கி இனைய பகர்கின்றான்.
1
2936 கேட்டி இதுவீர கெடலுற்ற வெஞ்சூரன்
ஈட்டு திருவென்ன இருஞ்சிறையின்
வாட்டமுறு சயந்தன் வானோர் தமையெல்லாம்
மீட்டு வருதி எனவே விளம்பினனால்.
2
2937 குன்றம் எறிந்த குமரன்இது கூறுதலும்
நன்றி தெனவே தொழுது நனிமகிழ்ந்து
வென்றி விடலை விடைபெற்றுப் போர்க்களத்தின்
நின்றும் அவுணன் நெடுநகரத் தேகினனால்.
3
2938 மீது படுதிண்டோன் விடலை அறந்திறம்புங்
கோது படுதீயோர் குழீஇயநக ருட்புக்குத்
தாது படுதண்டார்ச் சயந்தன் அமரருடன்
தீது படுவெயய சிறைக்களத்துச் சென்றனனே.
4
2939 செல்லும் விறலோன் திறத்தை நனிநோக்கி
அல்லல் அகலும் அரிசுதனும் வானோர்கள்
எல்லவரும் அற்புதநீர் எய்திப் பதம்பூட்டும்
வல்லி பரிய மலர்க்கை குவித்தனரே.
5
2940 செங்கை குவித்தே திறலோய் சிறைப்பட்ட
நங்கள் துயர் அகற்ற நண்ணினையோ நீயென்றே
அங்கவர்கள் எல்லோரும் ஆர்த்தெழுந்து கூறுதலும்
எங்கள் பெருமான் இளவல் இதுபுகன்றான்.
6
2941 வம்மின்கள் வம்மின்கள் வானத்தீர் எல்லீரும்
நும்மை அயர்வித்த நொறில்பரித்தேர் வெஞ்சூரை
அம்ம அவுணர் அனிகத் துடன்எங்கோன்
இம்மெனவே வேலால் இதுபோழ் தெறிந்தனனே.
7
2942 என்றாங் கிசைப்ப இமையோர் அதுகேளாப்
பொன்றாது முத்தி புகுந்ததோர் எனமகிழ்ந்து
வன்றாள் மிசைப்பிணித்த வல்லிகளின் மூட்டறுத்துச்
சென்றார் அவுணன் திருநகரம் நீங்கினரே.
8
2943 வேறு
நுணங்கு நூலுடை இளையன் முன்செல நொய்தென்ன
அணங்கி னோருடன் சயந்தனுந் தேவரும் அவண்நீங்கிக்
குணங்கர் ஈண்டிய களத்திடை நணுகியே குமரன்தாள்
வணங்கி மும்முறை புகழ்ந்தனர் திகழ்ந்தனர் மகிழ்வுற்றார்.
9
2944 குன்றெ றிந்தவன் அமரர்பாற் பேரருள் கொடுநோக்கி
நன்றி யில்லவன் சிறையிடைப் பலபகல் நணுகுற்றீர்
துன்று பேரிடர் மூழ்கினீர் ஈங்கினித் துரின்றி
என்றும் வாழ்குதிர் துறக்கமேல் வெறுக்கையில் இருந்தென்றான். 10
10
2945 கந்தன் இம்மொழி வழங்கலுங் கடவுளர் களிப்பெய்தி
உய்ந்த னம்மெனப் பின்னரும் வணங்கினர் உதுகாணா
முந்து தொல்லிடர் நீங்கியே புந்தியில் *முதமெய்தி
இந்தி ரன்திருப் பெற்ற ஞான்றினும் இனிதுற்றான்.
( * முதம் - மகிழ்ச்சி.)
11
2946 கண்ட னன்தொழு மைந்தனைப் புல்லினன் களிப்புள்ளங்
கொண்ட னன்புறம் நீவினன் பல்லுகங் கொடியோன்செய்
ஒண்ட ளைப்புகுந் தெய்த்தனை போலும்என் றுரைசெய்யா
அண்டர் யாரையும் முறைமுறை தழீஇயினன் அமரேசன்.
12
2947 செற்ற மேதகு மவுணர் தங்காவலன் செருவத்தில்
அற்றை காறுமா விளிந்திடு பூதர்தம் அனிகங்கள்
முற்று மாயிடை வரும்வகை முருகவேள் முன்னுற்றான்
மற்ற வெல்லையில் துஞ்சிய கணமெலாம் வந்துற்ற.
13
2948 முஞ்சு தானைக ளார்ப்பொடு குழீஇக்குழீஇ முருகேசன்
செஞ்ச ரண்முனம் பணிந்துதம் மினத்தொடுஞ் செறிகின்ற
எஞ்ச லில்லதோ ரெல்லைநீர்ப் புணரியில் எண்ணில்லா
மஞ்சு கான்றிடு நீத்தம்வந் தீண்டிய மரபென்ன.
14
2949 கருணை யங்கட லாகியோன் கனைகடற் கிறையாகும்
வருணன் மாமுக நோக்கியே வெய்யசூர் வைகுற்ற
முரணு றுந்திறல் மகேந்திர நகரினை முடிவெல்லைத்
தரணி யாமென உண்குதி ஒல்லையில் தடிந்தென்றான்.
15
2950 என்ற மாத்திரைச் சலபதி விழுமிதென் றிசைவுற்றுத்
துன்று பல்லுயிர் தம்மொடு மகேந்திரத் தொல்லூரை
அன்று வன்மைசேர் புணரியுள் அழுத்தினன் அவனிக்கீழ்
நின்று மாயவன் அடுவுல குண்டிடு நெறியேபோல்.
16
2951 ஆன காலையில் அறுமுகன் முகுந்தனும் மலரோனும்
வானு ளோர்களும் இறைவனும் வழுத்தினர் மருங்காக
ஏனை வீரர்கள் யாவரும் புடைவர இகற்பூதத்
தானை ஆர்த்துடன் சென்றிடச் செருநிலந் தணப்புற்றான்.
17
2952 கலங்கல் கொண்டிடு மகேந்திர வரைப்பினைக் கடந்தேபின்
இலங்கை மாநகர் ஒருவியே அளக்கரை இகந்தேகி
நலங்கொள் சீருடைச்செந்தியில் தொல்லைமா நகரெய்தி
அலங்கல் அஞ்சுடர் மஞ்ஞைநின் றிழிந்தனன் அயில்வேலோன்.
18
2953 கேக யத்தின்நின் றிழிந்துதொல் சினகரங் கிடைத்திட்டுப்
பாக சாதன னாதியாம் அமரர்கள் பணிந்தேத்த
வாகை சேர்அரித் தவிசின்மேல் வதனமூ விரண்டுள்ள
ஏக நாயகன் உலகருள் கருணையோ டினிதுற்றான்.
19
2954 வேறு
ஈண்டிது நிகழ்ந்த எல்லை இப்பகல் அவுண ராகி
மாண்டவர் நமர்கள் அன்றே மற்றவர் படிவ முற்றுந்
தீண்டினங் கதிர்க்கை யாலுந் தீர்விதற் கிதுவென் பான்போல்
பூண்டகு தடந்தேர் வெய்யோன் புனற்பெருங் கடலுட் புக்கான்.20
20
2955 வேலையின் நடுவு புக்கு மேவரும் வடவைச் செந்தீக்
காலம திறுதி யாகக் கடிதெழீஇக் ககன நக்கிப்
பாலுற விரிந்தி யாண்டும் படர்ந்துகொண் டென்ன வந்தி
மாலையம் பொழுதில் செக்கர் வான்முழு தீண்டிற் றன்றே.
21
2956 வேறு
அன்னதொரு போழ்துதனில் ஆறிரு தடந்தோள்
முன்னவனை நான்முகவ னேமுதல தேவர்
சென்னிகொடு தாழ்ந்துசிறி யேங்கள்இவ ணுன்றன்
பொன்னடி அருச்சனை புரிந்திடுதும் என்றா£¢.
22
2957 என்றுரைசெய் காலைஎமை யாளுடைய வண்ணல்
நன்றென இசைந்திட நறைக்கொள்புனல் சாந்தத்
துன்றுமலர் தீபம்அவி தூப முதலெல்லாம்
அன்றொரு கணத்தின்முன் அழைத்தனர் கள்அங்ஙன்.
23
2958 எந்தையுமை தேர்ந்திட இயம்பிய குமார
தந்திர நெறிப்படி தவாதறு முகற்கு
முந்திய* குடங்கர்முதல் மூவகை யிடத்தும்
புந்திமகிழ் பூசனை புரிந்தனர் பரிந்தே.
( * குடங்கர் முதல் மூவகை இடம் - கும்பம், அக்கினி,
உருவமாகிய திருமேனி என்னும் மூன்று இடங்களில்.)
24
2959 எஞ்சலில் அருச்சனை இயற்றி இணைஇல்லோன்
செஞ்சரணி னைத்தமது சென்னிகொடு தாழா
அஞ்சலிசெய் தேத்திடலும் ஆங்க வரைநோக்கி
நெஞ்சுறு மகிழ்ச்சியொடு நீட ருள்புரிந்தான்.
25
2960 நீண்டவருள் செய்திடு நெடுந்தகை நுமக்கு
வேண்டுகுறை யுண்டனெ¤ன் விளம்புதிர்கள் என்னக்
காண்டகைய சூர்முதல் களைந்தெமை அளித்தாய்
ஈண்டுனருள் பெற்றன மியாதுகுறை மாதோ.
26
2961 ஒன்றினி அளிப்பதுள துன்னடியம் யாக்கை
நின்றிடு பகற்றுணையும் நின்னிரு கழற்கண்
மன்றதலை யன்புற வரந்தருதி எந்தாய்
என்றிடலும் நன்றென இரங்கியருள் செய்தான்.
27
2962 வேறு
மலரய னாதியாம் வரம்பி லோரெலாம்
பலர்புகழ குமரனைப் பரவி வைகினார்
உலகினில் யாரையும் ஒறுத்த தானவர்
குலமென மாய்ந்தது கொடிய கங்குலே.
28
2963 கங்குலுந் தாரகா கணமும் மாய்ந்திடப்
பொங்கொளி வீசியே பொருவில் ஆதவன்
இங்குள வுலகெலாம் ஈறு செய்திடுஞ்
சங்கர னாமெனத் தமியன் தோன்றினான்.
29
2964 குணதிசை அமர்புரி கொடியர் உய்த்திடுங்
கணையென விரிகதிர் காட்டி அங்கவை
அணைதலுங் குருதிநீர் அடைந்த தன்மைபோல்
இணையறு செக்கர்பெற் றிரவி தோன்றினான்.
30
2965 அப்பொழுது தவ்விடை அமரா¢ கம்மியன்
கைப்படு செய்கையாற் கந்த வேள்ஒரு
செப்பரு நிகேதனஞ் செய்வித் தீசனை
வைப்புறு தாணுவில் வருவித் தானரோ.
31
2966 ஆமயம் முதலிய ஐந்து கந்திகள்
மாமலர் மஞ்சனம் அமிர்தம் வான்துகில்
தூமணி விளக்கொடு தூபங் கண்ணடி
சாமரை ஆதிகள் அமரர் தந்திட.
32
2967 முழுதொருங் குணர்ந்திடு முருகன் யாவருந்
தொழுதகும இறைவனுல் தொடர்பு நாடியே
விழுமிய கண்ணுதல் விமலன் தாள்மலர்
வழிபடல் புரிந்தனன் மனங்கொள் காதலால்.
33

ஆகத் திருவிருத்தம் - 2967
--------

யுத்தகாண்டம் முற்றுப் பெற்றது

ஆகக் காண்டம் நான்குக்கு திருவிருத்தம் - 7857
***


This file was last revised on 14 February 2008