திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 19 (2129 - 2236)
திருக்குடந்தைத்திரிபந்தாதி.

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 19 (verses 2129 - 2236)
tirukkuTantaittiripantAti
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S. Karthikeyan, Ms. Rathna, Govindarajan, Ms. Vijayalakshmi Periapoilan and S. Anbumani
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 19
திருக்குடந்தைத்திரிபந்தாதி.கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
திருக்குடந்தைத்திரிபந்தாதி.
-----------------------

திருக்குடந்தைத்திரிபந்தாதி முற்றிற்று.
----
சிறப்புப்பாயிரங்கள்.


இந்நூலாசிரியர் மாணாக்கராகிய
சி. தியாகராசசெட்டியாரவர்களியற்றியது.
கட்டளைக்கலித்துறை.
2231 தண்ணிய வெண்மதி சூடுகும் பேசன் றமிழ்க்குடந்தை
பண்ணிய புண்ணியம் போலமர் வானடிப் பத்திமையே
நண்ணிய தீஞ்சுவை யந்தாதி யொன்று நவின்றணிந்தா
னண்ணிய வான்புகழ் மீனாட்சி சுந்தர வாரியனே.
101

இந்நூலாசிரியர் மாணாக்கரும் திருவனந்தபுரம், மகாராஜா காலேஜில்
தமிழ்ப்பண்டிதராக இருந்தவருமாகிய கொட்டையூர்,
சி. சாமிநாததேசிகரவர்களியற்றிவை.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
2232 சீர்கொண்ட சிதம்பரமால் செய்தவத்தின்
      மலைவிளக்கிற் சிறக்கத் தோன்றிப்
பார்கொண்ட புகழ்முழுது மொருபோர்வை
      யெனப்போர்த்த பண்பின் மிக்க
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்
      குடந்தைநக ரிறைவர்க் கீந்தான்
பேர்கொண்ட கவிஞரெலா மதித்தேத்தந்
      தாதிப்ர பந்த மாதோ.
102
2233 அப்பலந்தங் கருத்துரையோ டம்புவியோர்
      மகிழ்ந்திடவச் சமைத்திட் டானால்
ஒப்புயர்வி லாப்புலமை யப்புலவ
      ரேறுணர்த்த வுணர்ந்தவ் வாறே.
திப்பியநன் னடைதெளிந்தோன் றிரிசிரா
      மலையுடையோன் செப்ப மிக்கோன்
இப்புவியிற் புகழ்ப்பெரிய பெரியண்ணப்
      புலவனெனு மியைபு ளோனே.
103
------------
*இவை பழையபதிப்பைச் சார்ந்தவை;
பதிப்பித்தகாலம் சென்ற விஷுவருஷம் ஆடிமாதம்.
-------------------

இந்நூலாசிரியர் மாணாக்கரும், கும்பகோணதிலிருந்தவருமாகிய
திரிசிரபுரம் தி.க. பெரியண்ணபிள்ளையியற்றியர்து.

கட்டளைக்கலித்துறை.
2234 பூவிற் சிறந்த வளக்குட மூக்கமர் புங்கவனற்
றேவிற் சிறந்த வமுதகும் பேசன் றிருவடிக்கீழ்ப்
பாவிற் சிறந்த வந்தாதிச் சொன்மாலை பரிந்தணிந்தான்
நாவிற் சிறந்தவன் மீனாட்சி சுந்தர நங்குருவே.
104

இந்நூலாசிரியர் மாணாக்கராகிய காரைக்கால்
அ. சவேரிநாதபிள்ளையியற்றியவை.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
2235 கோமேவு பொன்னகரை யின்னகராக்
      கிடுவளஞ்சால் குடந்தை யீசற்
கேமேவு மந்தாதி நந்தாத
      வணியெனநன் கிசைத்திட் டானால்
காமேவு கலைச்சலதி நிலையுணர்ந்தான்
      புகழ்க்கலைமேற் கலையாக் கொண்டான்
றேமேவு சிரகிரிவாழ் மீனாட்சி
      சுந்தரதே சிகனா மன்னோ.
104
2236 அத்தகைய வாரியன்பால் வித்தைபயின்
      றிடுதீர னளவில் சீரன்
உத்தமவண் புகழுடையான் றிரிசிரா
      மலையுடையா னுவக்கு ஞான
தத்துவஞ்சால் பெரியண்ணச் சற்குணவா
      னப்பவந்தத் தமிழ்க்கு மோலி
பத்தியுறச் சூட்டலெனக் கருத்தொடுநின்
      றொளில்ரவச்சிற் பதிப்பித் தானால்.
105
சிறப்புப்பாயிரங்கள் முற்றுப்பெற்றன.
-----------------