பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு"
பாகம் 1 (சூத்திரங்கள் 1-1101)

pingkala nikaNTu, part 1
of pingkala munivar
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Libtrary of India for providing a scanned image version
of this work. This etext has been prepared using the Distributed Proof-reading Implementation
and we thank the following volunteers for their assistance in the preparation of this work.
Anbu Jaya, V. Devarajan, Karthika Mukundh, CMC Karthik, R. Navaneethakrishnan,
P. Thulasimani, V. Ramasami, A. Sezhian, P. Sukumar and SC Thamizharasu
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2015.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/


பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு" - பாகம் 1
(சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்)

Source:
பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு"
இஃது இன்ஸ்பெக்டிங் இஸ்கூல் மேஷ்டர் பென்சனர்
வீராட்சிமங்கலம் தமிழ்ப்புலவர் தி. சிவன்பிள்ளை
பல பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து இயற்றிய உரையோடும்,
கவர்னர்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவராயிருந்த
சோடசாவதானம் தி-க. சுப்பராயசெட்டியார் முன்னிலையிலும் பரிசோதித்து,
மேற்படி சிவன்பிள்ளையால் காஞ்சி-நாகலிங்க முதலியாரது
சென்னை: இந்து தியலாஜிகல் யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
விகுர்தி வருடம் ஆவணி மாதம்
Registered Copy-right., 1890.
---------------------------

உள்ளடக்கம்

கணபதி துணை.

முகவுரை.


நிலவுலகில் தமிழில் இலக்கிய இலக்கணங் கற்கப்புகுவோர் முன்பு கற்க வேண்டுங் கருவிநூல் நிகண்டு என்பது கற்றோர் பலர்க்குந் துணிபே; நிகண்டுகளுள் சுருக்கமாகவும் விரிவாகவும் வழங்குவன சில, அவற்றுள் திவாகர முனிவர் செய்த ஆதிதிவாகரம் விரிவா யளவின்றிப் பரந்து கிடத்தலின் அவர் புத்திரர் பிங்கலமுனிவர் வரையறுத்து விரித்துச்செய்த பிங்கல நிகண்டு சங்கமருவியதும், ஏனைநிகண்டுகளிலுள்ள பதங்களும் அவைகளும் மேற்பட்ட பதங்களும் பலநூல்களாலு முணரப்படும் பொருள்களடங்கியதுமாயுள்ளது; இதுகாறும் ஏட்டுப்பிரதிரூபமாய்க் கற்றோர்பால் அருகி வழங்கி வந்தமையால் இது உபயோகமாய்ப் பலர்க்கும் பயன்படப் பல பிரதிகளைப் பலநாளும் வருந்தித்தேடிப் பல இடங்களினின்றும் பெற்று ஆதிதிவாகரம், *கயாகர முதலிய நிகண்டுகளையும் ஓர் பற்றுக்கோடாகக்கொண்டு வழுவறப் பரிசோதித்து அச்சிட்டிருகின்றேன்.

இப்பிங்கலம் நிலைபெற்றபின் ஆதிதிவாகரம், தொல்காப்பியம் நிலை பெற அகத்தியம் இறந்தது சிற்சிலபகுதிகளருகி வழங்குதல்போல, சிற்சில இடங்களில் அருகி வழங்குகின்றது; இவ்விரண்டும் விரிந்தநூல் என்பதும் மற்றையவை சுருக்கநூல் என்பது “செங்கதிர்வரத்திற்றோன்றுந் திவாகரர் சிறப்பின்மிக்க, பிக்கலருரை நூற்பாவிற் பேணினர்செய்தார்சேர, இங்கிவை யிரண்டுங் கற்க எளிதலவென்று சூழ்ந்து” எனவரும் மண்டலபுருடன் நிகண்டாலும், ஆதி திவாகரம் இறப்பப் பிங்கலம் நிலைபெற்றுளது என்பது “பிங்கலமுதலா நல்லோருரிச்சொலி னயந்தனர்கொளலே” எனவரும் நன்னூலாலும் உணர்க இடையில் சேந்தன் திவாகரம் என ஒரு நிகண்டு தோன்றினமையால் ஆதி திவாகரம் என முதனூலுக்குக் காரணம்பற்றிவந்த பெயர்; இதனை “முன்னுள திவாகரம் பிங்கலநிகண்டு சீர் முந்துகாங்கெயனுரிச்சொல்” எனவரும் ஆசிரிய நிகண்டிற் காண்க. இந்நூல் தொல்காப்பியம் வழங்கியகாலத்து வழங்கிவந்த தென்பதும் நன்னூல்முதலியநூல் இதற்குப்பிற்பட்டுவந்ததென்பதும் இந்நூலாலும் நன்னூலாலும் உணர்க.

இங்ஙனம்,
தமிழ்ப்புலவர் வீ. தி-சிவன் பிள்ளை.
இன்ஸ்பெக்டிங் ஸ்கூல்மேஸ்டர் பென்சனர், பொள்ளாட்சி, கோயமுத்தூர்.
விகுதி வருடம், ஆவணி மாதம்
----------------------------

கணபதிதுணை.

பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு".
(சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்)

தன்றோணான்கினொன்றுகைம்மிகூஉங்
களிறுவளர்பெருங்காடாயினும்
ஒளிபெரிதுசிறந்தன்றளியவென்னெஞ்சே

சிறப்புப்பாயிரம்.

இ-ள். இருங்கடல் உடுத்த இமாநிலம்விளங்க அரும்பொருள் தெரித்த அகன் தமிழ்வரைப்பு இன்-மிக்ககடல் நீர் புடைசூழ்ந்த இந்தப் பெரிய நிலவுலகு விளங்கப்பெறுதற்கரிய அறம், பொருள், இன்பம், வீடுஎன்னும் நான்கு பொருள்களையும் ஆன்மாக்களுக்குப் புலப்படுத்திய இடம்(பரந்த) தமிழ்வழங்கு மெல்லையின்கண், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்ற அனைத்து ஏ உரிச்சொற்கிளவி-இயற்சொலென்றுஞ் திரிசொல்லென்றும் திசைச்சொல்லென்றும் வடசொலென்றுஞ் சொல்லப்பட்ட அவ்வளவினதே யுரிச்சொல்.செய்யுட்கு அணிகலன் ஆதலின்-அது புலவரால் தொடுக்கப்படுஞ் செய்யுளுக்கு ஓரணிகலமாதலால், செந்தமிழ் நிலத்துவழக்கு ஒடு சிவணிதம் பொருள் வழாமல் இசைக்கும் இயற்சொல்-உரிச்சொல்லின் பாகுபாடாய்ச் செந்தமிழ் நிலத்தில்வழங்கும் வழக்காதற்குப்பொருந்திக் கொடுந்தமிழ் நிலத்துந்தம்பொருள்வழுவாமலுணர்த்து மியற்சொல்லும், ஒருபொருள் குறித்த வேறுசொல்ஆகியும் வேறுபொருள்குறித்த ஒருசொல் ஆகியும் இருபாற்று என்பதிரிசொல்கிளவி-ஒருபொருளைக்கருதிய வேறு பெயர்ப்பலசொல்லும் பல பொருளைக்கருதிய ஒருசொல்லு மாயிருவகைப்படுந் திரிசொல்லும், செந்தமிழ்சேர்ந்த திசைதொறும் தம்குறிப்பின திசைச்சொல்கிளவி-செந்தமிழ் நிலத்தைச்சேர்ந்த பன்னிரண்டு நிலந்தோறும் தாங்குறித்த பொருளைவிளக்குந் திசைச்சொல்லும்;வடவெழுத்துஒருவிஎழுத்து ஒடுபுணர்ந்தசொல் தானாகும் சிதைந்தனவரின் உம்இயைந்தனவரையார் வடசொல்கிளவி-வடசொல்லுக்கே யுரியவெனப்படுஞ் சிறப்பெழுத்தினீங்கி யிருவகைப்படுமொழிகளுக்கும் பொதுவாகிய எழுத்தாலியன்றசொல்லும் வடவெழுத்தாலியன்ற வடசொல் சிதைந்துவந்தாலும் செய்யுளிடத்துப் பொருத்தமுடையனவென்று களையாது புலவர்கொள்ளுஞ் சொல்லுமாகிய வடசொல்லுமென்ற, அநாற் சொல்திறம் அரில்தபமுழுதும்-அந்த நான்குசொற்களின் பாகுபாட்டிலுள்ள குற்றங்கள் நீங்க அச்சொற்கள்முற்றும் )அவ்வுரிச்சொல் ஆதலால்) செங்கதிர்வரத்தால் திவாகரன் பயந்தபிங்கலமுனிவன் என்னதன் பெயர் நிறுவி விருப்புடன் விரிக்கும் காலை- சூரியன்வரத்தால்வந்த திவாகரமுனிவர் பெற்றபிங்கலமுனிவனானவன் பிங்கலம் என்றுதன்பெயரைத் தன்னூலுக்குத்தந்து மக்களிடத்து அன்பு கூர்ந்து நூல்செய்யுங்காலத்தில்,நிலைஇய வீறுசால் சிறப்பின் வான்வகையும் வானவர்வகையும் வானினும் மண்ணிலும் வழாதஈனம் இல்ஐயர் இயல்புளி வகையும்-நிலைபெற்றபெருமைமிக்கசிறப்பினை யுடையவான்வகையும் வானவர்வகையும் வானுலகிலும் நிலவுலகிலும் தத்தநெறியினின்று வழுவாத குற்றத்தினின்று நீங்கிய ஐயர்வகையும், அவனிவகையும் ஆடவர்வகையம் அவர் திறத்து அமைந்த அனுபோகவகையும் அவயவத்து அடைத்த ஆனாத இயல்பின் பண்பின்செயலின் பகுதிவகையும் மாப் பெயர்வகையும் மரப் பெயர்வகையும் ஒருசொற்பல்பொருள் ஓங்குவகையும் என்று இருள் அற ஈரைந்து ஆக்கி-அவனிவகையும் ஆடவர்வகையும் அவ்வாடவர்பாகுபாட்டிலமைந்த அனுபோக வகையும் தனதகத்து உள்ள நல்வகையும் முதலிய உறுப்புகளாகச் செறித்தலினின்று நீங்காத இயல்பினையுடைய பண்பிற் செயலிற் பகுதிவகையும் மாப் பெயர்வகையும் மரப்பெய்வகையும் ஒருசொற் பல்பொருள்வகையுமென்று ஐயமறப்பத்து வகைகளாகப்பகுத்து அமைத்து மதியினின்விரைந்துமருள் அறவகுத்தனன்- தனது நுண்ணறிவால் விரைந்து ஆராய்வோர்க்குத் திரிபற இந்நூலை வகுத்தமைத்தனன் என்க.

உலகுபுறப்பாட்டெல்லையாதலால் இம்மாநிலம் எனவும் ஆன்மாக்களடைதற்குரிய பொருள்கள் அறமுதலியபொருள்கள் ஆதலால் அரும்பொருள்எனவும் கிழக்கேகடலும் தெற்கே குமரி யாறும் மேற்கேகுடகநாடும் வடக்கே திருவேங்கடமுமாகிய இந்நான்கும் தமிழ் வழங்குதற்குரிய அகப்பாட்டெல்லைகளாதலால் தொகுத்துத் தமிழ்வரைப்பின் எனவும், இயற்சொல்முதலியநான்கும் செய்யுட்கு உரிமைபூண்டு நிற்றலால் உரிச்சொல் கிளவியெனவும் செய்யுளீட்டுதற்குரியசொல் அதுவாதலால் அனைத்தே செய்யுட் கணிகலனாதலின் எனவும், வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் றெற்கும் கருவூரின் மேற்கும் தமிழ்வழங்கும் நிலங்களாதலால் செந்தமிழ்நிலத்து எனவும், கொடுந்தமிழ் நிலத்துஞ் சென்று தத்தம் பொருள்களை அந்நிலத்தினுள்ளோர்க்கு வழுவாதுணர்த்துதலால் தம்பொருள் வழாமை யிசைக்குமெனவும் திரிசொற்போலாது கற்றோர்க்கன்றி யேனையோர்க்கும் பொருள் விளங்கி நிற்றலால் இயற் சொல்லெனவும் ஒருபொருள்கருதியும் வேறுபொருள் கருதியும்வருந் திரிசொல், கிளி கிள்ளை, மயில் மஞ்ஞையெனத்திரியும் உறுப்புத்திரிபும் மலை-விண்டு விலங்கல் எனத்திரியும் முழுதுந்திரிபும்என இருவகைப் படுதலால் இவற்றைத் திரிசொற்கிளவி யெனவும் கொடுந்தமிழ்வழங்கும் நிலம் செந்தமிழ்வழங்கும் நிலத்தைச்சேர்ந்ததாதலால் செந்தமிழ்சேர்ந்த எனவும், கொடுந்தமிழ்வழங்கு நிலங்கள் பொங்கர்நாடு ஒளிநாடு தென்பாண்டிநாடு குட்டநாடு குடநாடு பன்றிநாடு கற்காநாடு சீதநாடு பூழிநாடு மலைநாடு அருவாநாடு, அருவாவடதலையெனப் பன்னிரண்டுவகைப் படுதலால் நிலந்தொறும் நிலந்தொறுமெனப் பன்மைப்பொருள்பட வடுக்கியும் எழுத்துஎன்றது ஆரியத்திற்குந் தமிழிற்கும் பொதுவெழுத்தெனவும் அது-மேரு மணிமுதலிய போல்வனவும் என்பார் வடவெழுத்தொரீஇ-எழுத்தொடுபுணர்ந்த எனவும், வடசொற் சிதைந்துவருதலுமன்றிப் பாகதமாய்ச் சிதைந்துவருவனவுனம் உளவாதலால் சிதைந்தனவரினும் எனவும், பிங்கலனாற்செய்யப்பட்டது பிங்கல மாதலால் பிங்கலமுனிவரெனத் தன் பெயர் நிறீஇ எனவும், ஏனைப்பூதங்கள் தோன்ற நிலைபெறுதலால் நிலைஇய வீறுசால் சிறப்பின் எனவும் இவ்வகைகள் ஒன்றோடொன்றியை புடைமையில் இடைநிலைத்தீவகமாக இயல்புளியெனவும், முன்னுள்ளதிவாகரம் பாகுபாடில்லாமல் கற்போர்க்கு ஐயமுந்திரிபும் விளைத்தலால் இருளற, மருளற எனவும், எந்நிகண்டின்பொருளும் இந்நிகண்டினுட்பட வகுத்தமையால், மதியினின் வகுத்தனன் எனவுங்கூறினார்.

சிறப்புப்பாயிரம்-முற்றிற்று.
-----------


பரமபதிதுணை

பிங்கலநிகண்டு - சூத்திரங்கள்
முதலாவது வான்வகை (1- 92)


1. சுவர்கக்கத்தின் பெயர் - பொன்னுலகுந் துறக்கமும் புத்தே ளுலகும்விண்ணுலகு மேலை யுலகும் விசம்பு-மன்னுலகு நாகமுங் கற்பமும் வானுலகும்-வியனுலகுந் தானமு முவணையுஞ் சுவவுஞ் சுரரிடமு முயர்நிலையுஞ் சுவர்க்கப்பெயரே.

2. மேலேழுலகத்தின் பெயர் - பூலோகம் புவலோகஞ் சுவர்க்கலோகம் மாலோகந் தவலோகம் பிரமலோகம்-சிவலோகமித் திறத்தமேலேழுலகே.
-------------
*"பூலோகம் புவலோகம் சுவலோகம் மகாலோகம்-சனலோகந் தவலோகம்
சத்தியலோகமென-இத்திறத்தனவா மேலேழுலகே" என்னும் பாடமும் உண்டு.

3. மோக்கத்தின் பெயர் - கீவலங் கைவலங் கதிசித்தி மோக்கம்.

4. மற்றும் மோக்கத்தின் பெயர் - அமுதம் பரஞ்சிவமுத்தியுமாகும்.

5. ஆகாயத்தின் பெயர் - வேணி விசும்பு வெளியும் பரிடம்-வானங்கோவிண் மண்டில மாசினி - மீமா கங்கம் வியோமம் புட்கரம்-வான்ககன நாக மங்குல் குண்டல-
மண்டமுலக மம்பரங்குழைகுடி-லந்தர மகல மாகாயப் பெயரே.

6. வெளியின் பெயர் - வெடிவயல் வெள்ளிடை விடியலும் வெளியே.

7. பகிரண்டத்தின் பெயர் - அண்டரண்டம் பகி ரண்ட மாகும்

8. அண்டகோளகையின் பெயர் - கூடங் கடாக மண்டகோ ளகைப் பெயர்.

9. அண்டமுகட்டின் பெயர் - மூதண்ட மண்ட முகட்டின்பெயரே.

10. அண்டச்சுவரின் பெயர் - பித்திகை யண்டச் சுவரின்பெயரே.

11. திக்கின் பெயர் - மாதிரந் திகைதிசை வம்பல் விசும்பே-யாசை புலமே யுலகுகோ காட்டை-யரிதமம்பரங்ககுப மனைத்துந் திக்கே.

12. எண்டிக்கின் பெயர் - கிழக்குத் தென்கிழக்குத் தெற்குத் தென்மேற்கு-மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கென்-றாகத் திக்கெட்டாகு மென்ப.

13. கிழக்கின் பெயர் - குணக்கே பூருவ மைந்திரம் பிராசி-கிழக்கின் பெயரே கீழ்த்திசையு மாகும்.

14. தெற்கின் பெயர் - அவாசி தக்கண மியாமினியந் தெக்குச்-சிவேதை தென்னிவை தெற்கென லாகும்.

15. மேற்கின் பெயர் - மேக்குப் பச்சிமங் குடக்கிவை மேற்கே.

16. மற்றும் மேற்கின் பெயர் - வாருணம் பிரத்தி யக்கு மதுவே.

17. வடக்கின் பெயர் - உதக்கே யுதீசி யுத்தரம் பிங்கலம்-வடக்கின்பெயரே மதி திசையு மாகும்;

18. திசைநாற்கோணத்தின் பெயர் - அந்தராளந்திசைநாற்கோணமாகும்.

19. எண்டிசைப்பாலர் பெயர் - இந்திர னக்கினி யியம னிருதி - வருணன் வாயு குபேர னீசான - னென்றாகு மெண்டிசைப் பாலர் பெயரே.

20. எண்டிசையானைப் பெயர் - ஐராவதம் புண்டரீகம் வாமனங் குமுத- மஞ்சனம் புட்பதந்தஞ் சார்வ பூமஞ் - சுப்பிரதீப மெண்டிசை யானைப் பெயரே.

21. அட்டமாநாகப் பெயர் - அனந்தன் வாசுகி தக்கன் கார்க்கோடகன் - பதுமன் மகாபதுமன் சங்க பாலன் - குளிக னட்டமா நாகப் பெயரே.

22. எண்டிசையோனிப் பெயர் - கொடிபுகை சிங்கநா யிடபங் கழுதை - யானை காக மிவை யெண்டிசை யோனி.

23. காற்றின் பெயர் - அநிலம் வங்கூ ழரிபவ மானன் - சமீரணன் மருத்துச் சதாகதி சலனன் - வாடை வளியே மாருதம் வாயு - கோதை வாதங்கூதை வேற்றலங் -
காலொலி பவன முயிர்கந்த வாகன் - பிரபஞ் சனன்மாபலனே பரிசன -
னாசுகன் கந்தவக னூதை காலிலி - விண்டு நீளை வந்து வுலவை -
கொண்டல் கோடை யென்றிவை காற்றே.

24. மற்றுங்காற்றின் பெயர் - நீலு மாலு நிழலியு முயிர்ப்புங் - கூதிருமென்றே கூறற் பாற்றே.

25. பனிக்காற்றின் பெயர் - கூதிரு மூதையுங் குளிர்பனிக் காற்றே.

26. வடகாற்றின் பெயர் - வாடை வடந்தை வடகாற் றாகும்.

27. மேல்காற்றின் பெயர் - கோடை மேல் காற்றே.

28. கீழ்காற்றின் பெயர் - கொண்டல் கீழ்காற்றே.

29. தென்றலின் பெயர் - மந்தா நிலமே மலயக்காலே-- தென்கால் வசந்தன் தென்றிசைத்தென்றல்.

30. சுழல்காற்றின் பெயர் - சூறைவளியே சுழன்றெழுகாற்றே.

31. மற்றுஞ்சுழல்காற்றின் பெயர் - சூறாவளிசாரிகையுஞ் சொல்லும்.

32. தசவாயுவின்வகைப் பெயர் - பிராணன பான னுதானன் வியானன்- சமான னாகன் கூர்மன் கிருகரன் - றேவதத்தன் றனஞ்சய னென்றா - வாயுவீரைந் தாகு மிவைதாம்.

33. பிராணனென்பது - இருதய மண்டலத் தியங்கும் பிராணன்.

34. அபானனென்பது - உச்சத் தலத்திடைநிற்ப தபானன்.

35. உதானனென்பது- நாபியி னின்றங் கோவாத துதானன்.

36. வியானனென்பது - வியானனெங்கும் வியாபியா நிற்கும்.

37. சமானனென்பது - கந்தரசக் குழியிற் சந்திடைச் சமானன்.

38. நாகனென்பது - முடக்கலு நீட்டலுங் கிளப்பது நாகன்.

39. கூர்மனென்பது - உரோமம் புளகித்திமைப்பது கூர்மன்.

40. கிருகரனென்பது - கிருகர னென்பது கெழுமித், தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைக்கும்.

41. தேவத்தனென்பது - ஓட்டமுமிளைப்பும்வியர்ப்புந் தேவத்தன்

42. தனஞ்சயனென்பது - ஒல்காவன்பி னல்லவர்கேண்மையி--னுயிருடல் விடினுந் தானுடல் விடாஅ, தொக்க நின்றங் குடலினை வீக்கித், தலைகிழித்தகல்வது தனஞ்சயனாகும்.

43. சத்தமருத்துக்களின் பெயர் - குணக்குந் தெற்குங் குடக்கும் வடக்கு-- மேலுங் கீழும் பலயோனியுயிரு, மாகுஞ் சத்த மருத்துப் பெயரே.

44. நெருப்பின் பெயர் - அழலுதாசன னங்கி தேயு--தழல்வசு வுதகவன்றனஞ்சயன் றழலி- கனலி யெழுநா வனலி முளரி--யனலெரி யழலி கனலரி கருநெறி -
சுசியொளி தபனன் சுடர்சிகி சோதி--தூமகேது வன்னி சுவனை-பாவகன் சித்திர பானுவங் காரகன் - ஞெகிழிதூ யார னெருப்பின் பெயரே.

45. வடவாக்கினியின் பெயர் - வடவை தீத்திரண் மடங்கலூ ழித்தீ- கடையனலுத்தரம் வடவாக் கினிப் பெயர்

46. விளக்கின் பெயர் - சுடருந் தீபமு மொளியும் விளக்கே.

47. அனற்பொறியின் பெயர் - *புலிங்கம்பொறியனல்.
-----
*("ஞெகிழிபுலிங்கம் கங்கம் அனற்பொறி" எனவும் பாடமுண்டு)

48. அனற்றிரளின் பெயர் - உற்கமணற்றிரள்.

49. காட்டெரியின் பெயர் - தாவங்காட்டெரி வரையனலு மாகும்.

50 தீக்கடை கோலின் பெயர் - அரணி ஞெலிகோல் ஞெகிழி தீக்கடைகோல்

51. புகையின் பெயர் - தூமமு மரியுந் தூபமுமாவியு, மாகும் பெயரே புகையென லாகும்.

52 நறும்புகையின் பெயர் - நறைகுய்வெடியே நறும்புகையாகும்.

53 அக்கினிதேவன் பெயர் - சாத வேதாமைவா கனனே-தீபதி சித்திர பானு தனஞ்சயன்- றென்கீழ்த் திசையோன் றேயுவாயுசகன், பாவகனக்கினிப் பண்ணவன் பெயரே.

54 அக்கினிதேவன் பாரியின் பெயர் - பாரிசுவாகா தேவி யாகும்.

55 முத்தீயின் பெயர் - காருக பத்திய மாகவ னீயந், தக்கணாக்கினிய மிக்கமுத்தீயே.

56 பஞ்சாக்கினியின் பெயர் - இராகம் வெகுளி காமஞ் சடமே, தீபனம் பஞ்சாக்கினியின் பெயரே.

57 நீரின் பெயர் - ஆலமுஞ் சலமுமம்முமறலும் -பாணியுமப்பும் பயமு முதகமும்-
வயமு மயமும் வாரியும் விகடியும்-புனலுஞ்சலிலமும் புவனமு மளகமுஞ்-
சீவனமும் பானீயமுஞ் சிந்துமாங்குசமும்-வருணமு மம்பு மழையுங் கவந்தமுங்-
கீலாலமு மேகமும் *மகிலமுமிதடியும்-நீரமுந்தோயமும் வாரும்பதமுங்- காரு மாரியுங் கமலமும் பயசுங்-சுயமுஞ் சம்பரமுங்கம்மும் புடகரமுஞ்- சீதமும் வசியுங் கோவுங் காண்டமுங்-கனவிர தமுஞ்சீவனீயமு மலரு- நாரமு மமுதமுநீரெனலாகும்.
-----
*"வனமுந்தகடியும்" எனவும் பாடம்.

58 மேகத்தின் பெயர் - மாரியுமழையு மஞ்சு மாசுங்- காரும் புயலுங் கனமுங் கொண்டலும், வானு †ந்தாராதரமுமையுஞ் சீதமுஞ், சீவதமுஞ்செல்லுங்குயினுஞ்சீ மூதமு, மெழிலியுங்கொண்மூவும்விளைவு முகிலும், விண்ணுங் கந்தரமுஞ்
சலதரமும் விசும்பு - மங்குலு மிளையுமாலுமம்புதமும் - விண்டுவு மென்றிவை மேகப்பெயரே.
-------
†"வானும் நாரதமும்" எனவும் பாடம்.

59 மற்றுமேகத்தின் பெயர் - முதிரம் பயோதரம் கதம்பமெய்ப் பிரம்-
அப்பிரமாயமு மப் பெயர்க் குரித்தே.

60 இடியேற்றின் பெயர் - ‡ வெடியொலியுருமுகோ விண்ணேறசனி,
செல்லிகு ளியிடியேறு மடங்கலு மாகும்.
--------
‡ "இருள் சதகோடி சென்மடங்கலுமிடியே" எனவும் பாடம்.

61 மின்னலின் பெயர் - சம்பைவித்துருசபலை தடித்துச்-சஞ்சலை கனருசி தடியொளி மின்னல்.

62 மழையின் பெயர் - மாரி வானம் வருட மழையெனல்

63 பெருமழையின் பெயர் - ஆசாரம் பெருமழையாகுமென்ப.

64 விடாமழையின் பெயர் - சோனையும் பனித்தலும் விடாது சொரிதல்

65 தலைப்பெய்மழையின் பெயர் – தளியுறையாலி தலையல் தலைப்பெயல்.

66 மற்றும் தலைப்பெய்மழையின் பெயர் - *தலைப்பெயல் சோதகமும்
------
* "துளியின்பெயரே சோதகமாகும்" எனவும்பாடம்.

67 ஆலாங்கட்டியின் பெயர் - ஆலிகனோ பலமாலாங்கட்டி.

68 மற்றும் ஆலாங்கட்டியின் பெயர் - கரகமுமாகுமென்மனார் புலவர்

69 மழைத்துவலையின் பெயர் - சிதரம் பிதிரே சீகரஞ்சிதரே-தூவல்து மிதந்திவலையுந் துவலை- துவலையின்பெயரெனச் சொல்லலாகும்

70 மழைவிடலின் பெயர் - தூறலுந்தலையலுஞ் சோதகமுமழைவிடல்

71 ஏழுமேகவகைப் பெயர் - சம்வர்த்தமாவர்த்தம் புட்கலா வர்த்தஞ், சங்காரித்தந் துரோணங் காளமுகி, நீல வருணமேழ் மேகப் பெயரே.

72 அவற்றுள்-எழுமழைவகைப் பெயர் - மணிநீர் பொன்பூ மண்கற்றீயென், றெழுவகை மேகம் பொழிமாரி யேழே

73 வருணன் பெயர் - சலபதி பாச தரனதிகேள்வன்-வருபுனற்செல்வன் வருணன்பெயரே.

74 வெள்ளத்தின் பெயர் - பிரளய நீத்தம் வாரி வெள்ளம்.

75 மற்றும் வெள்ளத்தின் பெயர் - ஓதமும் பெருககுமாகலு முரித்தே.

76 பனியின் பெயர் - இமமுந் துகினமஞ்சுநீகாரமும் -பனியின் பெயரே மந்தமும் பகரும்.

77 நிறைபுனலின் பெயர் - வழாறும் பிராறும் வாரியு நிறைபுனல்.

78 நீந்துபுனலின் பெயர் - அகாத மென்பது நீந்து புனலே.

79 தெளிந்தநீரின் பெயர் - சற்சல மென்பது தெளிந்தநீரே.

80. கலங்கனீரின் பெயர் - ஆவிலங்கலுழி யுடம்பை கலங்கற்புனல்.

81. நீரோட்டத்தின் பெயர் - கோலமென்பது கொடுநீ ரோட்டம்.

82. நீர்த்திரையின் பெயர் - அறலுந்தரங்கமு மலையுங்கல் லோலமும்,
புனலின்றிரைக்குப் பொதுப்பெயராகும்.

83. மற்றும் நீர்த்திரையின் பெயர் - சிகரமென்பதுந்திரையின் பொதுவே.

84. நீர்க்குமிழியின் பெயர் - கொப்புண்மொக்குள் புற்புதங்குமிழி.

85. ஆழநீரின் பெயர் - அழுந்துங்குண்டுங் கயமு மாழநீர்.

86. நீர்ச்சுழியின் பெயர் - உந்தியுஞ்சுரியலு நீர்ச்சுழியாகும்.

87. நுரையின் பெயர் - பேனமும் பேவுநுரையின் பெயரே.

88. பரிவேடத்தின் பெயர் - ஊர்கோள் வட்ட மொளிகொண் மண்டிலம், பரிதி விசயம் பரிவேட மாகும்.

89. இந்திரவில்லின் பெயர் - வானவில்லிந்திர வில்லென வைப்பர்.

90. காமகாண்டத்தின் பெயர் - இரட்டைவில் காம காண்டமாகும்.

91. இருளின் பெயர் - அல்லுந் திமிரங்கருளே கருவரி - கச்சள மந்த
தாரந் துவாந்த - நத்தந் தம்மொடு துணங்கற லிருளே.

92. பதினெண்கணத்தின் பெயர் - அமரர் சித்த ரசுரர் தைத்தியர் கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர் - காந்தருவ ரியக்கர் விஞ்சையர் பூதர் - பசாசர் அந்தரர் முனிவ ருரக-
ராகாய வாசியர் போகபூ மியரெனப் - பாகுபட்டன பதினெண் கணமே.

முதலாவதுவான்வகை முற்றிற்று.
ஆக சூத்திரம் 92.
--------------------

இரண்டாவது : வானவர் வகை (93-312)

96. கணபதியின் பெயர் - ஏகதந்த னிறைமகனேரம்ப - னாகு வாகனனைங்கரன் முக்கணன் - பார்ப்பதி புதல்வன் பாசாங் குசதர - னத்தி முகத்தோ னரிதிரு மருகன் -
றந்திக் கடவு டான மும்மதன் - கங்கைசுதன்விநாயகன் கணபதிபெயரே. (1)

97. சிவன் பெயர் - அரன்சிவ னரூபி யனந்த னுருத்திரன் - பரன்கறை மிடற்றோன் பார்ப்பதி கொழுநன் - கால காலன் பசுபதி கண்ணுத -றாணு வெண்குணன் சங்கரனந்தி - யாதி சசிதர னைம்முகன் பினாகி - சோதி சம்பு சூலி பிஞ்ஞகன் - முக்கணன் விடை யோன் முன்னவன் பிறப்பிலி - நக்கன் சடையோ னாயகன் சயம்பு - காம நாசன் பிதாகருணாலயன் - றேவ தேவன் றிரிபு ராந்தகன் - மானிட மேந்தி பேயோடாடி -
முத்தன் முதல்வன் சுத்தன்யோகி - வேத முதல்வ னாரி பாக - னாலமர் கடவுள் பவனேயநாதி - நீலகண்ட னிருத்தன்பூ தேசன் - கங்கா தரன்மழுவாளி கபாலி - யங்கணன் கைலையாளிகங் காள - னக்கர வார்த்தோ னழலாடி தற்பர - னித்தனிமல னீறணி கடவுள் - யானை யுரித்தோ னமலனானந்தன் - வாமதேவன் மகேச்சுரன் சதாசிவன் - றிரியம்பகன் விமலன் சந்திர சேகரன் - மாலயற் கரியோ னாதனெண் டோளன் - ஞான மூர்த்தி நம்பன் பகவன் - வாமன் கிரீசன் வரனு மாபதி -
பூதபதி புண்ணியன் புலித்தோ லுடையோன் - மாதேவன் கொன்றை மாலையன் பித்த -
னீச்சுர னாச மில்லோனிறைவன் - பாசுபதன் குன்ற வில்லிபாண் டரங்க - னீசன் பரமனு மெம்பிரான் பெயரே. (2)

95. மற்றுஞ்சிவன் பெயர் - அந்தி வண்ணன் காமாரி புராரி - யந்தகாரிபர்க்கனென் றனந்தமீசன் பெயர். (3)

96. சிவனூர்திகொடியின் பெயர் - ஊர்தியுங்கொடியு மிடப மென்று ரைப்பர். (4)

97. சிவன்படையின் பெயர் - பரசுஞ்சூலமும் பினாகவில்லும்படை. (5)

98. சிவனெண்குணத்தின் பெயர் - பவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை
- உவமை யின்மையொரு வினை யின்மை - குறைவிலறி வுடைமை கோத்திர மின்மையென் - றிறைவனிடத்திலெண்குண மிவையே.

99. சிவனைம்முகத்தின் பெயர் - ஈசானந் தற்புருட மகோரம் வாமஞ்-
சத்தியோ சாதஞ் சங்கர னைம்முகம் (7)

100. சிவனிருப்புமுதலியவகைப் பெயர் - இருப்பதுகைலை தரிப்பது கங்கை-முடிப்பது கொன்றை யுடுப்பது சருமம் (8)

101. சிவபதநான்கின் பெயர் - தானாளுல கிருத்தறன் பாடிருத்தல்-தானாம் பதம்பெற றானாகுதலென -நாலே சிவன்ற னல்லருட் பதமே. (9)

102. சிவபூசையியல்பின் பெயர் - சரியை கிரியையோக ஞானமென் - றிவையொரு நான்குஞ் சிவபூசை யியல்பே. (10)

103. சிவாகமநூற்பயன் பெயர் - தர்மார்த்த காமமோக் கஞ்சிவாகமம். (11)

104. நந்தியின் பெயர் - எருது விடையே றிடபம் புங்கவ, மிறைவர கனஞ்சிவ. கணமுத னந்தி. (12)

105. சிவனழித்தமுப்புரத்தின் பெயர் - பொன்னினும் வெள்ளியினும் புக லிரும்பினு-மன்னமும் மதில்சிவ னழித்தமுப் புரமே (13)

106. உமையின் பெயர் - ஆரியை காமக் கோட்டி யம்பிகை -நாரி சத்தி நாயகி கௌரி - தேவி சாம்பவி தருமச் செல்வி-மலைமகள் சங்கரிமாதா வையை - பரையே யுருத்திரை பார்ப்பதி யந்தரி -நீலி கன்னி நிமலி குமரி - வேத முதல்வி விமலைமுக் கண்ணி -யமலை யிமய வதியயி ராணி -சமய முதல்விதற்பரை மனோன்மணி - சிவயுமை யம்மை திருநாம மென்ப. (14)

107. மற்று முமையின் பெயர் - அரனிடத்தவள்சக மீன்றவள் பவானியெ
மதன்னை புண்ணிய முதல்வி பெயரே (15)

108. கங்கையின் பெயர் - வரநதி சுரநதி மந்தா கினியுமை-கரநதி தசமுக நதிகங் காநதி - சிரநதி சிவன் சடை சேர்தெய்வ நதியே (16)

109. முப்பத்திரண்ட றத்தின் பெயர் - ஆதுலர்சாலை யோதுவார்க் குணவறு - சமயத்தோர்க்குண்டி பசுவிற்கு வாயுறை -சிறைச்சோ றைய நடைதின் பண்ட - மறவைச் சோறு மகப்பெறு வித்தன் - மகவு வளர்த்தன் மகப்பால்வார்த்த - லறவைப்பிணஞ்சுடுத லறவைத்தூரியஞ் - சுண்ண நோய் மருந்து வண்ணார்நாவிதர் - கண்ணாடி காதோலை கண்மருந்து தலைக்கெண்ணெய்- பெண்போக மற்றும் பிறர்துயர் காத்த - றண்ணீர்ப் பந்தர் மடந்தடக் காவே- யாவுரிஞ்சுதறி விலங்கிற் குணவோ - டேறு விடுத்தல் விலைகொடுத் துயிர்விடுத்த - றன்னிலை யுயர்ந்தகன்னிகா தான- மிந்நான் கெட்டு மிறைவி செய் தருமம். (17)

110. அறுமுகக்கடவுள் பெயர் - குமரன் றெய்வ குஞ்சரி மணாளன் - சிலம்பன் முருகன் சேயே செவ்வேள் - கடம்பன் சாமி கார்த்திகேயன் - சேந்தன் குறிஞ்சிக் கிழவன் செட்டி - காங்கேயன் கௌரி மைந்தன் கந்தன் வேலன் வள்ளி கேள்வன் விசாகன் -
றாரு காரி குகன் சரவணபவன் - மயில்வாகனனே வன்னிப்பூக்குமர, னாறிரு கரத்தோ னரிதிரு மருகன் - குழகன் கங்கை மைந்தன் குன்றெறிந்தோ - னறு மீன்காதல னசுரற் றடிந்தோன், சேவலங் கொடியோன் றேவசேனாபதி - பாவதி யாசான் கலையறி புலவ - னரன்பமன் யானை முகவற்கிளையோ - னினைய வறுமுகக் கடவுள் பெயரே. (18)

111. அறுமுகக்கடவுளூர்தியின் பெயர் - ஆடும்யானையு மயிலு மூர்தி. (19)

112. அறுமுகக்கடவுள்படைகொடியின் பெயர் -
அயில்வே லரும்படை கொடிசேவ லாகும். (20)

113. மாலையின் பெயர் - நீபமுஞ் செச்சையு மாலையாகும். (21)

114. வீரபத்திரன் பெயர் - உக்கிர ன‌ழற்கண்வந்தோ னுமைமகன் - முக்கணன் றக்கன் வேள்வி முனிந்தோ - னேக வீரியன் சடாதரன் வில்லி - யீசன் மைந்தன் கணபதிக் கிளையோ - னாயிரமுகத்தோன் சிம்பு ளானோன் - பத்திரை கேள்வன் வீரபத் திரன் பெயர். (22)

115. வைரவன் பெயர் - கஞ்சுகன் மூவிலை வேலோன் காரி - முத்தன் கேத்திர பாலனிரு வாணி - சித்தன் ஞாளியூர்தி கபாலி - வடுக னின்னவை வயிரவன் பெயரே. (23)

116. வைரவனூர்திபடையின் பெயர் - வைரவ னூர்தி ஞமலிசூலம் படை. (24)

117. ஐயனார் பெயர் - சாத வாகனன் கோழிக்கொடியோன் - சாத்தன் வெள்ளை யானை வாகனன் - காரிசெண் டாயுதன் கடனிற வண்ணன் - பூரணை கேள்வன் புட்கலை மணாள - னாரிய ன‌றத்தைக் காப்போன் யோகி - யரிகர‌ புத்திர னையன் பெயரே. (25)

118. ஐயனாரூர்திகொடியின் பெயர் - காரி யூர்தி காரிக் குதிரை - கோழிக்கொடியு மாகுமென்ப. (26)

119. மாகாளியின் பெயர் - குமரி சண்டிகை குண்டலி நீலி, வலவை பைரவி கௌமாரி மாதரி - மாயை வீரி மதங்கி யாமளை - சூரிவேதாளி கங்காளி யோகினி -
சூலிசாமுண்டி தாருகாரி - யாரியைதேவி வல்லணங்கையை யலகைக் கொடியாண் மாலினி முக்கண்ணி - பதுமையெண்டோளி பத்திரி யாரணி - யரிளி யூர்திமா காளி பெயரே. (27)

120. மாகாளி யூர்தி கொடிபடையின் பெயர் - ஊர்திசிங்க முயர்கொடி யலகை-சூலம் படையெனச் சொல்லப்படுமே. (28)

121. இடாகினியின் பெயர் - வஞ்சனி மாயவள் வலவையிடாகினி.(29)

122. யோகினியின் பெயர் - சன்மினிசூர்மகள் யோகினிபெயரே (30)

123. ஊர்திகொடியின் பெயர் - பேய்கொடி வாகன மோரியாகும். (31)

124. துர்க்கையின் பெயர் - அந்தரி மகிடற் காய்ந்தாளையை-விந்தயம் பணத்தி விசயையெண்டோளி - மாலுக்கிளையாள்பகவதிசயமகள்- பாலைக்கிழத்தி வீரச்செல்வி- கௌரிகாத்தியாயனி சக்கராயுதி, யமரி குமரி யருங்கலை யூர்தி-
சமரி கன்னி சயைவாட் படையாள்-சூலி யாரியை நீலி சண்டிகை, வெற்றிமேதித் தலைமிசை நின்றாள், கொற்றவை நாராயணி துர்க்கை பெயரே. (32)

125. துர்க்கையின் படைவாகனத்தின் பெயர் - கைவாள் படை வாகனங் கலையாகும் (33)

126. காடுகாள் பெயர் - காடுகாண் மோடி காரிதாய் கொற்றி-மாரிசூரி வடுகிமூ தணங்கே. (34)

127. சத்தமாதர்கள் பெயர் - பிரமாணி நாராயணி மாயேசுரி-கௌமாரி வராகி யுருத்திராணி - யிந்திராணியென் றெழூவகைமாதர். (35)

128. சத்தமாதர்களூர்தியின் பெயர் - அன்னமேறு விடையே யலகை, மஞ்ஞை களிறுகலுழனு மூர்தி. (36)

129. சத்தமாதர்கள் படையின் பெயர் - மறைதண்டு சூலம் பினாகமெஃகம்-வச்சிரமாழிவன்படை யாகும். (37)

130. விட்டுணுவின் பெயர் - மாதவனெடியோன் மாயவன் சநார்த்தனன்-
சீதரன் பதும நாபன் றிருமால்- கொண்டல் வண்ணன் கோவிந்தன் முகுந்தன் -
விண்டுவன மாலி வாமன் வாமனன்-றிரிவிக்கிரமன் றிருமறு மார்பன்-
கேசவன் வரதன் முராரி யனந்தன்-காவற் கடவுள் காகுத்த னச்சுத-
னரவணைச் செல்வ னறிதுயி லமர்ந்தோன்-சக்கராயுதனே சார்ங்க பாணி-
தண்கடல் வண்ணன் சலச விலோசன- னுலகினை யளந்தோ னுலக முண்டோன்-
படிமுழுதிடந்தோ னலகைமுலை யுண்டோன்-றாமோதரனே சௌரிமதுசூதன-
னாதி பீதாம்பரனே வராகன்-றிருமகள் பூமி கொழுநன் கண்ண-னுவண
வூர்தி யுவண முயர்ந்தோன்-பஞ்சாயுதன் பரந்தாமன் பகவன்-
பூவை வண்ணன் புணரியிற் றுயின்றோன்-பிரமன் றந்தை பின்னை கேள்வன்-
சங்கமேந்தி நாரசிங்க-னிருடிகேசன் றசவவதாரன்-
குறளனெடுமால் வலவன் கரியோ-னுந்தி பூத்தோ னந்த கோபாலன்-
வாசு தேவன் றுளபமௌவிய-னனந்த சயனன் வைகுந்த நாத-
னாயிரம் பெயரோனரிமா லென்றிவை-நாராயணன் றிருநாம மாகும். (38)

131. மற்றும்- அருந்தமனென்பது மாங்கவன் பெயரே. (39)

132. விட்டுணுவினூர்திகொடியின் பெயர் - ஊர்திகருடனொண்கொடியு மதுவே. (40)

133. விட்டுணுவின் பஞ்சாயுதத்தின் பெயர் - சக்கரந் தனுவா டண்டு சங்கம்-பற்றலர் மேல்விடும் பஞ்சாயுதமே. (41)

134. அவற்றுள் சக்கரத்தின் பெயர் - சக்கரஞ் சுதரிசனம் (42)

135. தனுவின் பெயர் - தனுவேசார்ங்கம் (43)

136. வாளின் பெயர் - சயவாணாந்தகம் (44)

137. தண்டின் பெயர் - தண்டுகௌ மோதகி. (45)

138. சங்கின் பெயர் - சங்கு பாஞ்ச சன்னியமாகும். (46)

139. அரியின் தசாவதாரத்தின் பெயர் - மச்சங் கூர்மம் வராகநரசிங்கம்- வாமனன் பரசு ராமனிராமன் - பலபத்திரனே கண்ணண்வரு கற்கியென் -றிவையொரு பத்து மரியவ தாரம். (47)

140. அன்றியு மூவைந்தவதாரத்தின் பெயர் - சனகன் சனந்தனன் சனாதன் சனற்குமார - னரநாராயணன் கபில னிடப-னாரத னயக்கிரீவன் றத்தாத் திரேயன் -மோகினி வேள்வியின் பதியே வியாதன்- றன்வந்திரியே பௌத்த னென்றாங்- கின்னமூ வைந்து மரியவதாரம். (48)

141. வெற்றிக்கலப்பைப்படை யோனொழியப், புத்த னென்று புகலப்படுமே. (49)

142. திருமகளின் பெயர் - பொருளின் செல்வி பொறியரிப் பிரியை - மலர்மக ளிந்திரை மாவே யிலக்குமி - கமலை யாக்கம் பதுமைசீதேவி -தாக்கணங் கிளையா டண்கடற் பிறந்தாண் - மாறிரு மான்பினண் மாமறைத் தலைவி - செய்யாள் பூமக டிருமகள் பெயரே. (50)

143. பலபத்திரன் பெயர் - இரேவதி கொழுநன் குண்டலனுரோகணி - தநய னீலாம்பரனலாயுத - னச்சுதன் முன்னோன் காமபால -னநந்தன் வெள்ளை காளிந்தி மர்த்தனன் - பனந்துசன் முசலி கரந்துகி லுடையன் - பலதே வன்பலபத்திரன் பெயரே (51)

144. பலபத்திரன்படை கொடியின் பெயர் - படையே கலப்பை கொடிபனையாகும் (52)

145. காமன் பெயர் - மான்மகன் மதனன் மகரக்கொடியோன் -வேனிலாளி வில்வேள் வசந்த - னங்கச னநங்க னைங்கணைக் கிழவன் -றிங்கட்குடையோன் றென்றற் றேரோன் - வனசன் வில்லி மோகன் மாமலர்க் கணையோன் - மதிசகனிரதி காந்தன் மாரன் - மனோபவன் மனோசன் மனோபுமனமதன் - றிருமகண் மைந்தன் சம்பர சூதன - னுருவிலிகடன்முர சோன்கைதைச் சுரிகையன் -கந்தர்ப்பன் சித்தசன் பூவாளி பூமன் -கருப்பு வில்லி காமன்பெயரே. (53)

146. காமனூர்தி கொடியின் பெயர் - வாகனந்தென்றன் மகரங்கொடியே (54)

147. காமன்வில்கணையின் பெயர் - கழையேவில்லுக் கணைமலரைந்தே

148. காமனைங்கணையின் பெயர் - வனசஞ் சூதமசோக முல்லை -குவளை காமன் கொலுமைங்கணையே (56)

149. அவற்றின் செயலின் பெயர் - உன்மத்த மதனமோகனஞ் சந்தாபம் -
வசீகரணம்மிவை மதன்கணைச்செயலே (57)

150. அவற்றினவத்தையின் பெயர் - சுப்பிரயோகமும் விப்பிரயோகமுஞ் -
சோகமு மோகமு மரணமு மென்றிவை, யாகு மலர்க்கனை யைந்திவைத்தை. (58)

151. அவற்றுள் - சுப்பிரயோகஞ் சொல்லாநினைவும் (59)

152. விப்பிரயோகம் வெய்துயிர்த் திரங்கல் (60)

153. சோகம் வெதுப்புத் துய்ப்பன தெவிட்டல் (61)

154. மோக மழுங்கலு மொழிபல பிதற்றலும் (62)

155. மரண மயர்ப்பு மயக்கமு மாகும் (63)

156. பிரமன் பெயர் - அந்தணன் மலரோ னயனான் முகத்தோ - னுந்தியில் வந்தோனோதிம வாகனன் - பாரதி கொழுநன் படைப்போன்பகவனாரண னிரணிய கருப்பன் விரிஞ்சன் - வேதா விதாதா விதிசதா நந்தன் - றாதா பிதாமகன் சம்பு மான் மக - னெண்கணன் கமல யோனி பிரசாபதி - வேதன் கம்மிறை சூதன் பரமேட்டி -
திசைமுகன் வானவர்முதுவன் போதன் - வரனே குரவன் மண்பொதுத்தந்தை -
யந‌ந்தன் ஞான னன்ன முயர்த்தோ - னிறைவன் மறையோன் பிரமன் பெயரே. (64)

157, பிரமனூர்திபடைகொடியின் பெயர் -
அன்னமூர்தி யரும்படை பாச -
மன்னிய கதைபடை கொடிமறை யாகும். (65)

158. நாமகளின் பெயர் -
பாரதி துய்யாள் பனுவ லாட்டி - வேதமுதல்வி பிராமி விமலை -
வாணி வெள்ளை நிறத்தினள் வாக்கா - ணான்முகன்
கிழத்தி ஞானத் திறைவி - காயத் திரியே சாவித் திரியே -
நற்பா மடந்தை நன்னூன் மடந்தை - யுலகமாதா நாமக ளிசைமகள்,
கலைமகள் வெண்டாம மரைமகள் கண்ணா -
டொலையா வென்னுயிர்த் துணைவிபெயரே. (66)

159. நாமகளூர்தியின் பெயர் -
ஊர்தி பூரமாகுமென்ப. (67)

160. இந்திரன் பெயர் - அமரா வதியோ னாயிரங்கண்ணன் - சதமகன் கோபதி போகிசங் கிரந்தனன் - பாகசாதனன் வச்சிரப் படையோன் - மேகவாகனன் விண்முழுதாளி - வாசவன் மகவான் வானவன் கௌசிக - னாகண்டலனயி ராவதன்வலாரி - புருகூதன் சக்கிரன் புரந்தரன் மருத்துவன் - மருதக்கிழவன் வரைசிற கரிந்தோ - னரிசசி வல்லவன் றிருமலி சுவர்க்கன் - வேள்வி நாயகன் புலவன் வேந்தன் - புரோகிதன் சுனாசி கரியவன் புனிதன் - காண்டா வனன்மால் வெள்ளை வாரணன் - றேவர் வேந்தன் பொன்னகர்ச் செல்வ - னைந்தரு நாத னிந்திரன் பெயரே. (68)

161. இந்திரன்றேவி பெயர் - சுந்தரி சசியயிராணிபுலோமசை - யைந்தருச் செல்வி யிந்திரன்றேவி பெயர். (69)

162. இந்திரன்மகன் பெயர் - சயந்த னிந்திரன் றன்மகனாகும். (70)

163. இந்திரனகரின் பெயர் - ஆங்கவன் றிருநகரமரா வதியே. (71)

164. இந்திரயானையின் பெயர் - ஓங்கிய வூர்தி வெள்ளையயி ராவதம். (72)

165. இந்திரன் குதிரையின் பெயர் - மெச்சிய பரிமா வுச்சைச்சிரவம். (73)

166. இந்திரன்படை கொடியின் பெயர் - வச்சிரம் படையே வண் கொடி யிடியாம். (74)

167. இந்திரன் மண்டபத்தின் பெயர் - மண்டபஞ் சயந்தம். (75)

168, இந்திரன்மாளிகையின் பெயர் - மாளிகை வசந்தம். (76)

169. இந்திரன்பண்டாரத்தின் பெயர் - பண்டாரப் பெயர் பகரிற் சுதன்மம் (77)

170, இந்திரனந்தன வனத்தின் பெயர் - அந்தண் கற்பகச் சோலை நந்தனவனம். (78)

171. இந்திரன் சேமநிதிப் பெயர் - சேமநவநிதி. (79)

172. இந்திரன்கோவின் பெயர் - கோக்காமதேனு. (80)

173. இந்திரனுணவின் பெயர் - உணவதமுதம். (81)

174. புனைவதின் பெயர் - புனைவதுகற்பகமலர். (82)

175. அணிவதின் பெயர் - அணிவது சிந்தாமணி சூளாமணி. (83)

176. நாடகத்தரம்பையர் பெயர் - மேனகையரம்பையுருப்பசி திலோத்தமை -யான நால்வரு நாடகத் தரம்பையர். (84)

177. தேவர்பொதுப் பெயர் - வானவ ரமுதர் வரர்புத்தேளிர் -மேலவரிமையவர் விண்ணவர் கடவுள - ரமரர் புங்கவரைய ரிலேகர் -விபுதர் தீர்த்த ரசுரர்க்கமித்திர -
ருயர்நிலை யோர்சுர ரும்பர் புலவ -ரண்டர் முதல்வ ராதித்தர் சுவர்க்கர் -
பொன்னுல குடையோர் தேவர் பொதுப் பெயர். (85)

178. முப்பத்துமுத்தேவர் பெயர் - ஆதித்தர் பன்னிருவ ரச்சுவினிகளிருவ -ரீசர் பதினொருவரெண்மர் வசுக்க - ளாக முப்பத்து மூவர் தம்பெயரே. (86)

179. அவற்றுள். ஆதித்தர் பன்னிருவர் பெயர் - வைகத்தன் விவச்சு தன் வாசன்மார்த் தாண்டன் - பாற்கர னிரவி யுலோகப் பிரகாச -னுலோக சாட்சி திரிவிக்கிரம -
னாதித்தன் றிவாகரன் அங்கிச மாலி -யாகச் சூரியர் பன்னிரண் டென்ப. (87)

180. உருத்திரர் பதினொருவர் பெயர் - மாதேவனரனே யுருத்திரன்சங்கர - னீல லோகித னீசானன் விசயன் - வீம தேவன் பவோற்பவன்கபாலி - சௌமிய னேகா தசருருத் திரர் பெயர். (88)

181. அட்டவசுக்கள் பெயர் - தரன்றுருவன் சோம னாபச் சைவ - னனல னணிலன் பிரத்தியூசன் -பிரபாச னட்ட வசுக்கள் பெயரே. (89)

182. அச்சுவினிகளிருவர் பெயர் - அச்சுவினிதேவ ரிருவர்தம் பெயரே - யாக முப்பத்து மூவர்தம் பெயரே. (90)

183. கடவுளர்பொதுப் பெயர் - பண்ணவர் பகவர் தீர்த்தர் பட்டாரகர் -
புங்கவ ரென்பவுங்கடவுளர் பொதுப் பெயர். (91)

184. தெய்வத்தின் பெயர் - சூரே யணங்கு கடவு டெய்வதந் - தேவுபுத்தேளியவு டெய்வமாகும். (92)

185. சுரர்மகளிர் பெயர் - அரமகளிர் சூரரமகளி ரரம்பையர் - சுரர் மகளிராமெனச் சொல்லப் பெறுமே. (93)

186. தெய்வப்பெண் பெயர் - அணங்குழூர் வஞ்சனை மாயவள் கன்னி - யிணங்கிய தெய்வப் பெண்பெய ராகும். (94)

187. மூதேவியின் பெயர் - கழுதை யூர்தி காக்கைக் கொடியாண் - முகடிதௌவை கலதி மூதேவி. (95)

188. மற்றுமூதேவியின் பெயர் - சீர்கேடி கேட்டைகெடலணங் கேகவேணி சேட்டை யென்ன விளம்புவர். (96)

189. மூதேவியூர்தி படை கொடியின் பெயர் - வாகனங் கழுதைவன் படை துடைப்பங் - காகங் கொடியெனக் கழறல் வேண்டும். (97)

190. தருமதேவதையின் பெயர் - மரகத வல்லி பூகநிழலினள் - பரம‌ சுந்தரியியக்கி பகவதி - யருகனைத் தரித்தா ளறத்தின் செல்வி - தருமதேவதை யம்பாலிகைபெயரே. (98)

191. அருகன் பெயர் - புண்ணிய னெண்குணன் பொன்னெயினாதன் - பண்ணவன் ப‌ட்டாரகனே முனைவ -னசோகமர் கடவுள் பகவன் முக்குடையோ -னறவாழி வேந்த னரியணைச் செல்வன் - பூமிசை நடந்தோன் வரதன் சினேந்திர - னான பிறவு மருகன் பெயரே. (99)

192. அருகனூர்தி படையின் பெயர் - அருக னூர்தி யம்புயம் படையே. (100)

193. கொடியின் பெயர் - நாடகக் காட்சி ஞானசீ லங்கொடி. (101)

194. புத்தன் பெயர் - பார்மிசை நடந்தோன் பகவன் புங்கவன் - றருமன் சாந்தன் முனைவன் வாமன் - புனிதன் சினன்வர னறிவன் பிடகன் - போதி வேந்தன் புத்தன் பெயரே. (102)

195. குபேரன் பெயரே - இருநிதிக் கிழவ னியக்கர் வேந்தன் - வடதிசைத்தலைவ னரவாகனனே - யளகை யாளி யதிதனச் செல்வன் - சீரகத் தாரோன் வைச்சிரவணனே - யரனுடைத்தோழன் கின்னரர் பிரானே - மரகதன் புட்பக வூர்தி பிங்கலன் -
மந்திரி தனபதி குபேரன் றன் பெயர். (103)

196. குபேரன்வாகனத்தின் பெயர் - நரவா கனமும் புட்பகத் தேரு - மவன்வா கனமா மறியுங்காலே. (104)

197. இயமன் பெயர் - இயமனரி யந்தகன் றென்றிசைக் கிழவன் - சமனேசண்டன் சண்பன்றருமன் - நமனேமறலி தண்ட தரனே - சைமினி நகரோன் வைதரணிநதியோன் - செங்கோற்கடவு ணசவ னடுவ -னிங்கிவை யமன் பெயர் கூற்று மிசைக்கும். (105)

198. யமனூர்தி படையின் பெயர் - எருமையூர்தி யெறியுமொண்படை - தண்டு பாசந் தானா கும்மே. (106)

199. காலன் பெயர் - சண்டன்மறலி கூற்றுச் சமனே - வந்த மடங்கல் கான் மறலு மிசைக்கும். (107)

200. காலன்படையின் பெயர் - துணிக்கும் வெம்படை கணிச்சி யாகும்.

201. அசுரர் பெயர் - தானவர் அவுணர் தயித்தியர் கண்டகர் - மேனிகர‌ப் போர்தகுவர்கார் வண்ணர் - தேவர்பகைவர்திதி புதல்வர சுரர். (109)

202. மாவலியின் பெயர் - வயிரோ சனனேமாவலி யவுணன் (110)

203. நிருதர் பெயர் - நிசாசரர் சாலகடங்கடர் நிருதர். (111)

204. அரக்கர் பெயர் - அரக்கரிராக்கதர்யாது தானவர் -நிசாசரர் பிசிதாசனரென நிகழ்த்துப (112)

205. கந்தருவர் பெயர் - கந்தருவரியக்கர் யாழோர் காந்தருவர் - தந்திரர் கின்னர ரென்னச் சாற்றுவர். (113)

206. வித்தியாதரர் பெயர் - விஞ்சையர் கேசரர் வித்தியா தரர் பெயர்.

207. வித்தியாதரரிடத்தின் பெயர் -சேணியும் விஞ்சைப் பதியுஞ் சேடியும் - யாணர் நகரும் வித்தியா தரரிடம். (115)

208. பூதத்தின் பெயர் - சாதகம் பாரிடங் குறள்கூளிசாரதம் - மகோதரம் கிருத்திமங்கணம்பூதப் பெயர். (116)

209. பேயின் பெயர் - கடிவே தாளங் கழுது கூளி - வெறியே யலகை பிசாசுமண்ணை - மயலே சோகுமருளே வியந்தரம் -பிரேத மழனே குணங்கு குணபாசி - பாசஞ் சாவு சவமேயள்ளை -குணபமும் பிணமும் பேய் பெயர் கூறும் (117)

210. சூரியன் பெயர் - இரவி யினன்மணி யென்றூழ் செஞ்சுடர் -பரிதிதேரோ னெல்லோன் பானு - சண்ட னருக்கன் றபன னாதவ -னண்ட யோனி யாயிரங் கதிரோன் - கனலி திவாகரன் கனலோன் பாற்கர -னனலியொளியோ னலரிமார்த் தாண்டன் - றினகரன் செங்கதி ரரிதிமி ராரி -யருணன் சூரன் ஞாயிறு சவிதா -
பகலேபர்க்கன் வெயிலோ னாதித்தன் -விரிச்சிகன் விரோசனன்
விகர்த்தனன் மித்திரன் -வெய்யோன் கதிரோன் வெஞ்சுடர் சோதி -
பகலவ னெல்லை பதங்கனாதப -னழலவ னுதய னிருள்வலி பொழுது -
பகவன் சான்றோன் வேந்தன் றாபநன் -றரணி யெல்லி சாயாபதியே -
பகலோன் விண்மணி பனிப்பகை கதிரவன் - சுடரோன் மாலி சூரியன்பெயரே (118)

211. சூரியமண்டிலத்தின் பெயர் - விசயமென்பதுவெங்கதிர்மண்டிலம்.

212. சூரியகிரகணத்தின் பெயர் - கரமேதீவிரங் கோகிரணங்கதிர் (120)

213. வெயிலின் பெயர் - கோடை யென்றூ ழெல்லொளி வெயிலெனல் (121)

214. மற்றும் வெயிலின் பெயர் - ஆதவமென்பது மப் பெயர்க்குரித்தே.

215. உதயத்தின் பெயர் - விடியல்வைகறை புலரி யுதயம். (123)

216. கழிவுநாளின் பெயர் - கழிவுநாளே காலி வைகல். (124)

217. அந்தியின் பெயர் - சந்தி மாலை சாய மென்றிவை -யந்தியின்பெயர்கோ தூழியுமாகும் (125)

218. நடுப்பகலின் பெயர் - மத்தி யான நண்பக னடுப்பகல் (126)

219. மற்றும்நடுப்பகலின் பெயர் - உச்சியுமுருமமு மப் பெயர்க் குரித்தே. (127)

220. சாமத்தின் பெயர் - யாம மென்பது சாமமாகும் (128)

221 பகலின் பெயர் - எல்லுத் திவசந் தினந்திவா வும்பகல் (129)

222 அருக்கனூர்தியின் பெயர் - தனிக்காற் பொற்றே ரருக்க னூர்தி (130)

223 அருக்கன்றேர்ப் புரவியின் பெயர் - ஓரேழ் புரவி யுடையனவதற்கே. (131)

224. அருக்கன்றேர்ப் பாகன் பெயர் - ஆதித்தன் பாகனருணனாகும். (132)

225. சந்திரன் பெயர் - இந்து சசியிம கிரணன்றண்சுட - ருடுபதி தாரா பதியே யம்புலி - யமுதகதிரோன் சீதன் குரங்கி - விதுநிலவு வல்லோன் வேந்தன் றண்ணவன் - கலையோன் மதியே களங்கன் குபேர -னாலோன் பனிக்கதிர் குமுத சகாய -
னலவன் கலாநிதிநிசாகர னிசாபதி -யிரவோ னிராக் கதிர் தானவன் சுதாகர - னுடுவேந்தன் பிறைமுயற் கூடு பசுங்கதிர் - சந்திரன் றிங்கள் சோமன்றன் பெயர். (133)

226. நிலவின் பெயர் - நிலவின் பெயர் சந்திரிகை யென்ப. (134)

227. பிறைநிரம்பலின் பெயர் - கலைபிறை நிரம்பல்கருதுங்காலே (135)

228. சந்திரனூர்தியின் பெயர் - வெண்மதியூர்தி விமான மாகும் (136)

229. இரவின் பெயர் - யாம நத்தம் யாமினி வகுஞ்சஞ் - சாமங் கங்குனிசாநிசி திமிரம் - எல்லியுமல்லு மிரவின் பெயரே. (137)

230. செவ்வாயின் பெயர் -அழலவன் பௌமனங்கா ரகனே -குருதிவக்கிரன் குசனே மங்கல - னார லுதிர ணரத்த னறிவ - னழலே யுலோகிதன் செந்தீ வண்ணன் -
சேயிவை செவ்வாய் சிறந்த பெயரே. (138)

231. புதன் பெயர் - அருணன் கணக்க னறிஞன் சாமன் - மதிமகனமேதை மாறேர்ப் பாகன் - புந்தி தூதன் பச்சை புதனே. (139)

232. வியாழன் பெயர் - ஆசான் மந்திரி யாண்டாளப்பன் பொன் - பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன் - றேவ மந்திரி சித்தன் கிகண்டிசன் - மேவியவந்தண னரசனும் வியாழன், (140)

233 வெள்ளியின் பெயர் - தைத்திய மந்திரி சல்லியன் சைத்தியன் - மழைக்கோள் சுங்கன் கவிபுகர் பிரசுரன் - பார்க்கவன் சுக்கிரனொள்ளியோன் பளிங்கு -
காப்பியன் சிதனே யுசனன் வெள்ளியின் பெயர். (141)

234. சனியின் பெயர் - கதிர்மக னீலன் சாவகன் காரி - முதுமகன் மேற்கோண் மந்தன் முடவன் - சௌரி பங்கு சந்தில் சனிப் பெயர். (142)

235. இராகுவின் பெயர் - தமமே கரும் பாம்பேயிராகுவாகும். (143)

236. கேதுவின் பெயர் - செம்பாம் பேசிகி கொடி கேதுவாகும். (144)

237. அனந்தன் பெயர் - அனந்தன் - போகவதிக்கிறை சேடன். 145

238. வாரத்தின்யெயர் - வாசரங் கிழமை வாரமாகும். (146)

239. அச்சுவினியின் பெயர் - இரலை யைப்பசி யாழேறு தலைநாள் -பரவி மருத்துவ நாளச் சுவனி. (147)

240. பரணியின் பெயர் - காடு கிழவோன் பூத மடுப்புத் - தாழிபெருஞ் சோறு தருமனாண்முக்கூட்டுப் - போதம்பரணிப் பெயர் தாசியுமாகும் (148)

241. கார்த்திகையின் பெயர் -அறுமீனங்கி நாளே யளக்க - ரெரிநாளளகிறா னாவிதன் வாணன் - றழலே யாரல் கார்த்திகை தன் பெயர். (149)

242. உரோகிணியின் பெயர் - சகடு விமானஞ் சதியே யூற்றா - லயனாள்வைய முரோகிணி யாகும். (150)

243. மிருகச்சீடரித்தின் பெயர் - மாழ்கு மான்றலை மார்கழி நரிப்பற - மதிநாண் மும்மீன் பாலை வெய்யோன் - மிருகசீரிடமைந் தானமும் விளம்பும். (151)

244. திருவாதிகையின் பெயர் - அரனாள் செங்கை மூதிரை யாதிரை. (152)

245. புனர்பூசத்தின் பெயர் - அதிதி நாள்கழையாவண மெரியே -புனர் தங்கரும்பிவை புனர்பூசமாகும். (153)

246. பூசத்தின் பெயர் - குருநாள் கார்குளங்கொடிறுவண்டு -புணர்தையாகும் பூசநாட்பெயரே. (154)

247. ஆயிலியத்தின் பெயர் - அரவினாள் கௌவை யாயிலா யிலியம். (155)

248. மகத்தின் பெயர் - வேள்விகொடுநுகம வேட்டுவன்வாய்க்கா - லாதியெழுஞ்சனி பிதிர்நாண்மாக - மாசி யெழுவா யெழுஞ்சனி மகப் பெயர். (156)

249. பூரத்தின் பெயர் - இடையதெழுஞ்சனி யெலியே தூர்க்கை - பகவதி நாள்கணை நாவிதன் பூரம். (157)

250. உத்தரத்தின் பெயர் - பங்கனி கடைய தெழுஞ்சனி பாற்குனி -மானேறு கதிர்நாண் மாரிநாளுத்தரம். (158)

251. அத்ததின் பெயர் -கைம்மீன் கைனிகனலி நாளே -யைம்மீன் காமரங் களிறிவை யத்தம். (159)

252. சித்திரையின் பெயர் - நெய்மீனறுவை நேர்வான்பயறு - நடுநாடு வட்டாநாளே தச்சன் - றெரியி லின்னவை சித்திரைப்பெயரே. (160)

253. சோதியின் பெயர் - விளக்கே மரக்கால் வெறுநுகம் வீழ்க்கை - துளக்கங் காற்றி னாளேசோதி (161)

254. விசாகத்தின் பெயர் - அனிலநாண் முற்றின் முறம்வைகாசி - சுளகுவிசாகத் தொல்பெயராகும் (162)

255. அனுடத்தின் பெயர் - பனைதேள் பெண்ணை புற்றாளி போந்தை யினையவைமித் திரநாளுமனுடம் (163)

256. கேட்டையின் பெயர் - துளங்கொளி வல்லாரை வேதி யெரியழல் -
கிளந்தவிந்திரனாள் சேட்டையுங் கேட்டை. (164)

257. மூலத்தின் பெயர் - கொக்கே தேட்கடை குருகுவி லன்றின் - முற்றுமானி யசுரநாண் மூலம் (165)

258. பூராடத்தின் பெயர் - உடைகுள முற்குளமாரி நீர்வாள் -புகலிற் பூராட நீரும் புகலும். (166)

259. உத்திராடத்தின் பெயர் - ஆடி விச்சுவ நாளே கடைக்குள -மோதிய வானியோடுத்திராடப் பெயர் (167)

260. திருவோணத்தின் பெயர் - சோனைமாயோனாண் முக்கோல் சிரவண - மோணமென்ப வுலக்கையு மாகும் (168)

261. அவிட்டத்தின் பெயர் - காகப்ஒபுள்ளே வசுக்கணாளே -யாவணி பறவை யவிட்டப்பெயரே (169)

262. சதயத்தின் பெயர் - குன்றுவருணனாள் பெருஞ்செக்குச் -சுண்டன் போரிவை சதயநாளே. (170)

263. பூரட்டாதியின் பெயர் - புரட்டாதி முற்கொழுங்கோலே நாழி - யுரைப்பர் பரதநாள் பூரட்டாதி. (171)

264. உத்திரட்டாதியின் பெயர் - முரசுபிற் கொழுங்கோன்மன்னனீப - முரைசெயி லறிவனா ளுத்திரட்டாதி. (172)

265. இரேவதியின் பெயர் - தொழுவே நாவாய் தோணி சூலம் -பஃறி புருடநாள் கடைமீ னிரேவதி. (173)

266. அருந்ததியின் பெயர் - அருந்ததி சாலி வடமீனாகும் (174)

267. விடிமீனின் பெயர் - விடிமீன்பெயரே வெடியெனலாகும் (175)

268. வான்மீனின் பெயர் - வான்மீன் பெயரே புச்சமெனலாகும் (176)

269. வான்மீனின்பொதுப் பெயர் - சிதமும் பம்முஞ் சுக்கையுங் கணமு - முடுவுந் தாரகையு மொளியும்வான்மீனே. (177)

270. இராசியின் பெயர் - மேடமு மிடபமு மிதுனமுங் கடகமுஞ் - சிங்கமுங் கன்னியுந் துலாமுந் தேளுந் - தனுவு மகரமுங் கும்பமு மீனமு - மென்னும் பெயரிவை யீராறுள்ளு -
மொப்புடை மிதுன மொழித்தல் லாதன - வப் பெயர்க் கப்பெய ரனைத்துமாகும். (178)

271. மிதுனத்தின் பெயர் - யாழே பாடவை யிரட்டை சவைமகள் - விழவுதண்டொடு மிதுனமாமே (179)

272. இராசியின்பொதுப் பெயர் - இல்லுமோரையும் பவனமுமிராசி.

273. சூரிய சந்திரர்க்குரிய திசையின் பெயர் - கீழ்த்திசை யருக்கற்கும் வடதிசை சோமற்குஞ் - சார்ச்சியாகச் சாற்றினர் புலவர் (181)

274. மூவகை வீதியின் பெயர் - மேடவீதி யிடபவீதி -மிதுனவீதி யெனவொருமூன்றே -
அவைதாம்இருசுடர் முதலிய வியங்குநெறியே.(182)

275. மேடவீதியாவது - இடபஞ் சிங்க முதுனங் கடக -மினைய நான்கு மேடவீதி. (183)

276. இடபவீதியாவது - மீன மேடங் கன்னி துலாமு -மான விடபவீதிக் கமைந்தன. (184)

277. மிதுனவீதியாவது - வில்லுமகரங்குடமே விருச்சிகஞ் -சொல்லிய முதுன வீதித் துறையே, (185)

278. இவற்றுள் - சொன்ன விராசி தொகுத்த மாதங்கண் -மன்னிய கதிர்முதற்கோள்வரு நெறியே. (186)

279. காலத்தின் பெயர் - போழ்துங் கொன்னும் பொழுதுஞ் செவ்வியும் - ஏல்வையும் வேலையுமமையமுங் காலையுங் - காலும் பதமுங் கால மாகும் (187)

280. காலநுட்பத்தின் பெயர் - கலையுந் துடியுங் கணமு மாத்திரையும் நொடியும் பிதிரு நுட்பமுந் திட்பமு - நிமிடமுங் கால நுட்பமாகும் (188)

281. காலவிரைவின் பெயர் - கணமுமாத்திரையுங் காலவிரைவே (189)

282. நாழிகையின் பெயர் - கடிகை விகலை கன்ன லிருத்தை - ப‌தமே நாழி நாழிகை யாகும். (190)

283. நாளின் பெயர் - அல்க றிவாப்பக லானியந் திவச,மேல்வையெல் வைக றினமிவை நாளே. (191)

284. முன்னைநாளின் பெயர் - நென்னலு நெருநலு முன்னைநாளாகும்.

285. பின்னைநாளின் பெயர் - பிற்றையும் பின்றையும் பின்னைநாளாகும்.

286. திதியின் பெயர் - திதியேபக்கம். (194)

287. மாதத்தின் பெயர் - மதியே திங்கண் மாதமாகும். (195)

288. ஒருகலைவருமதிநாளின் பெயர் - ஒருகலைவருமதிநாள் சினீவாலி.

289. அமாவாசையின் பெயர். - குகுவமாவாசை. (197)

290. முதற் பக்கத்தின் பெயர் - பக்கமுதலது நந்தையாகும். (198)

291. இரண்டாம் பக்கத்தின் பெயர் - பத்திரையென்பது இரண்டாம் ப‌க்க‌ம். (199)

292. மூன்றாம் பக்கத்தின் பெயர் - மூன்றேசயைபக்கம். (200)

293. நன்காம் பக்கத்தின் பெயர் - நான்கேயிருத்தை. (201)

294. ஐந்தாம் பக்கத்தின் பெயர் - ஐந்தாம்பூரணையாகும். (202)

295. பூரணையின் பெயர் - அனுமதி பவ்வம் பூரணையிடையுவா. (203)

296. கார்காலத்தின் பெயர் - நவங்கார்காலம். (204)

297. கூதிர்காலத்துக்குங் கொடும்பனிக் காலத்துக்கும் பெயர் - கூதிர் காலமுங் கொடும்பனிக்காலமு - மிர‌ண்டுகால‌முஞ் சிசிரமாகும். (205)

298. இளவேனிலின் பெயர் - மாதவம்வசந்த மதுவிள வேனில். (206)

299. கொடியவேனிலின் பெயர் - கோடைசமஞ்சுசி கொடிய வேனில்.

300. பருவமுமிருதுவும் பகரிலொன்றே. (208)

301. அறுவகைப்பருவகாலப் பெயர் - காரேகூதிர் முன்பனி பின்பனி - சீரிளவேனில் முதுவேனிலென்றாங் - கிருமூன்றுவகைப்பருவந்தானே. 209

302. அவைதாம் - ஆவணிமுதாலா வீரிண்டிரண்டாக - மேவிய திங்களெண்ணினர் கொளலே. 210

303. அறுவகை யிருதுவின் பெயர் - வசந்தங்கிரீடம் வருடஞ்சரமே - யேமந்தஞ் சிசிரமென விருதுவாறாகும். 211

304. அவைதாம் - சித்திரை முதலாச் சென்மாத மிரண்டா -வைத்த‌ன‌வெண்ணிக் கொள்கவென்ப. 212

305. ஆண்டின் பெயர் - ஆயனஞ்சமை யயனந்தெய்வதம் -வருடம் வற்சர மாண்டின்பெயரே. 213

306. வாழ்நாளின் பெயர் - ஆயூகமாயுள் வாழ்நாளென்ப. 214

307. உகமுடிவின் பெயர் - ஊழியுமடங்கலு முகமுடிவாகும். 215

308. நால்வகையுகத்தின் பெயர் - கிரேதாதிரேதா துவாபரங் கலியென, வொருநான் கென்பவுகத்தின் பெயரே. 216

309. அமுதின் பெயர் - அமரியுஞ்சுதையு மருந்து மமுதே. 217

310. தெய்வவுணவின் பெயர் - சருவும் பலியு நிவேத்தியமு மமுது - ம‌வியுந் தெய்வ வுணவாகும்மே. 218

311. ஆலகாலவிடத்தின் பெயர் - காளகூட மாலகால விடமே. 219

312. ஆன்மாவின் பெயர் - பசுவுயிர் சீவன் புற்கலன் சேதன - னணுவியமான னாதன் செந்து - வாவி பூத னுறவி கூத்த -னானவின்னவை யான்மாவாகும். 220

இரண்டாவது வானவர் வகை முற்றிற்று.
மேற்படி சூத்திரம் 312.
-----

மூன்றாவது : ஐயர்வகை.(313-447)

313. இருடிகள் பெயர் - முனிவர் மாதவ ரிலிங்கிகண் முனைவர் - படிவ‌ருறுவர் பண்ணவரைய - ரறவோர் தபோதன ரறிஞ ரந்தணர் - துறவோர் க‌டிந்தோர் மோனியர் யோகியர் - கோபங்காய்ந்தோர் நீத்தோர் மெய்யர் - தாபத‌ ரிருடிக டம்பெயராகும். 1

314. சத்தவிருடிகளின் பெயர் - அகத்தியன் புலத்திய ன‌ங்கிராகௌதமன் -
வசிட்டன் காசிபன் மார்க்கண் டேயனென் - றிசைத்தவிவர்தாமேழிருடிகளே. 2

315. அகத்தியன் பெயர் - குறுமுனிகும்ப யோனி யகத்தியன். 3

316. சைவதவ‌ப்பாலோர் பெயர் - மாவிர தியருங் காளா முகரும் - பாசுபதருஞ் சைவதவப்பாலோர். 4

317. நாரயணசமயத்தார் பெயர் - வைணவர்* பாகவதர் நாரயண ச‌மயத்தோர். 5
-----
* "பாகவதர் நாராயண சமயத்தோர்" எனவும் பாடம்.

318. சமணர் பெயர் - சாவகரருகர் சமண ரமணர். 6

319. சமண்டவத்தோர் பெயர் - ஆசீவகர் தாபதரத்தவத்தோரே. 7

320. புத்தர் பெயர் - புத்தர் சாக்கியர் தேரர் பௌத்தர். 8

321. புத்ததவத்தோர் பெயர் - வைத்தசீவக ரத்தவத் தோரே. 9

322.சடைமுடியோர் பெயர் - முனிவர் தாபதர் சடைமுடி யோரே. *10

323. ஒருமையின் பெயர் - ஒருமையென்பதிறையுணர் வாகும். 11

324. ஒன்றென்னும் பெயர் - ஒன்றெனப்படுவது வீடுபெறலே. 12

325. இருமையின் பெயர் - இருமையென்பதிம்மையு மறுமையும். 13*

326. இருவினையின் பெயர் - இருவினை புண்ணிய‌ பாவமென்ப. (14)

327. இருவகைத் தோற்றத்தின் பெயர் -இருவகைத் தோற்றஞ் சராசரமென்ப. (15)

328. இருசுடரின் பெயர் -இருசுடரிரவி மதிய மாகும். (16)

329. இருமரபின் பெயர் -இருமரபுதாய்வழி தந்தைவழியென்ப. (17)

330. இருவகைக்கந்தத்தின் பெயர் - இருவகைக்கந்த நற்கந்தந் துர்க்க‌ந்தம். (18)

331. இருவகையறத்தின் பெயர் - இல்லறந் துறவற மிருவகையறமே. (19)

332. ஒருவகைப்பொருளின் பெயர் - கல்வியுஞ்செல்வமு மிருவகைப் பொருளே. (20)

333. இருவகைக்கூத்தின் பெயர் - இருவகைக்கூத்து மார்க்கந்தேசிகம். (21)

334. மும்மையின் பெயர் -மும்மை யும்மையு மிம்மையு மறுமையும். (22)

335. முப்பொறியின் பெயர் -மனமும் வாக்குங் காயமு முப்பொறி. (23)

336. முச்செயலின் பெயர் -படைத்தலுங் காத்தலு மழித்தலு முச்செயல் (24)

337. முக்காலத்தின் பெயர் -இறந்த காலமெதிர் கால நிகழ் காலமெனச் - சிறந்த கால மூன்றெனச் செப்புவர். (25)

338. மூவிடத்தின் பெயர் -முன்னிலை படர்க்கை தனமை மூவிடம்,(26)

339. முக்குற்றத்தின் பெயர் - காமம் வெகுளி மயக்கமுக்குற்றம், (27)

340. மூவகைமொழியின் பெயர் - பட்டாங்குபேசல் பழித்தல் புகழ்த‌ன் - - முட்டின்றாகு மூவகைமொழியே. (28)

341. முக்குணத்தின் பெயர் - சாத்துவிக மிராசதந் தாமத முக்குணம். (29)

342. அவற்றுள் சாத்து விககுணம் - - ஞானந்தவ மேன்மை நல்லருண்
மோனம் - வாய்மை பொறைபுல ன‌டக்கல் சாத்துவிகம். (30)

343. இராசதகுணம் - தானந் தவமே தருமம் பேணல் - - ஞானங் கல்வி
நலனிவை தெரித - -லீன மில்லா விராசத குணமே. (31)

344. தாமதகுணம் -நிறைபே ருண்டி நீதிகேடுறக்க -மறலி பொய்
சோம் பொழுக்கம் வழுவுதல் -கொலையேவஞ்ச மிவைதா மதகுணம். (32)

345. மூவகைத்தானத்தின் பெயர் - முதலிடைகடையென மூவகைத்தானம். (33)

346. அவற்றுள் உத்தமதானம் - அறத்தி னீட்டி வரும்பொருள் புறத்துறைக் -
குற்றமூன்று மறுத்தநற் றவர்க்குக் -கொள்கெனப்பணிந்து குறையிரந்தவர்வயி -னுள்ளமுவந் தீவதுத்தம தானம். (34)

347. மத்திமதானம் - ஆதுலரந்தக ருறுப்பறைகளாதர் -மாதர்க் கீவதுமத்திமதானம். (35)

348. கடைப்படுதானம் - ஆர்வம்புகழே யச்சங்கைம்மாறு -காரணங் கண்ணோட்டங் கடப்பா டென்றிவை - யேழுங் கடைப்படு தான மென்ப. (36)

349. மூவகைப்பாவபுண்ணிய வழக்கத்தின் பெயர் - செய்தல் செய்வித்தலுடன் படென்னா -வருமுறைபாவ புண்ணிவழக்கம். (37)

350. மூவுலகின் பெயர் - பூமியந்தரஞ் சுவர்க்க மென்ன -வருமூன்றுலகின் பெயரெனவறைவர். (38)

351. முச்சுடரின் பெயர் - திங்கள் வெய்யோனக்கினி யென்றிவை -மூந்றுஞ் சுடரெனமொழிகுவர்புலவர். (39)

352. திரிகடுகத்தின் பெயர் - திரிகடுகஞ் சுக்குத்திப்பிலி மிளகு. (40)

353. திரிபலையின் பெயர் - திரிபலை நெல்லி கடுக்காய் தான்றி. (41)

354. நாற்கதியின் பெயர் - தேவகதிமிருககதி மக்கள் கதியே -மேவு நரககதியெனநாங்கே. (42)

355. நால்வகைவேதத்தின் பெயர் - இருக்கு வேமெதசுரு வேதஞ் -சாம வேத மதர்வண வேதமென - நால்வகை வேத நாம மாகும். (43)

356. நால்வகையிழிச் சொல்லின் பெயர் - குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லே -
மருள்கொள்சொல்லெனவிழிச்சொ னான்கே. (44)

357. ஆடவர்நாற்குணத்தின் பெயர் - அறிவு நிறையோர்ப்புக் கடைப்பிடியென்னத் -
தகுமிவையாடவர் தங்குணநான்கே. (45)

358. பெண்கள்நாற்குணத்தின் பெயர் -
நாணமட மச்சம்பயிர்ப் பென்றின்ன - -மாணிழையவர்க்கு வருங்குணநான்கே. (46)

359. நால்வகைப் புண்ணியத்தின் பெயர் - தானங்கல்வி தவமே யொழுக்க - நால்வகைப்புண்ணிய நாமமாகும். (47)

360. உயிர்தோற்றநால்வகையின் பெயர் - குடல்போற்பையினுமுட்டை யினுந்தோன்றியும் - மெய்க்கண்வியர் வினுமிக்கநிலத்தினும் - ஒக்கநால்வகை யுயிர்த்தோற்றம்மே. (48)

361. நால்வகைப் புலமையின் பெயர் - கவியே கமகன் வாதி வாக்கியென் -
றிவையொரு நான்கும் புலமைக் கியல்பே. (49)

362. அவற்றுள் கவியின்வகை - ஆசு மதுரஞ் சித்திரம்வித்தாரமெனப் பாவகை பாடுவோன் கவியெனப்படுமே.(50)

363. கமன்வகை - ஞாபகஞ் செம்பொரு ணடையினெப் பொருளுங் -
காசின்றுரைப்போன் கமஎ னாகும். (51)

364. வாதிவகை - ஏதுவு மேற்கோளு மெடுத்துக் காட்டித் - தன்கோணிறீஇப் பிறர்கோண் மறுபோன் - மன்பதை மதித்த வாதி யாகும். (52)

365. வாக்கிவகை - அறம்பொரு ளினபம் வீடெனுந் திறங்கள் - கேட்கவேட்க வினியன கூறு - மாற்றலுடையான் வாக்கியாகும். (53)

366. ஆசுகவிவகை - கொடுத்த பொருளிற் றோடுத்தலினத்தி - னடுத்தபொழுதிற் பாடுவதாசுகவி. (54)

367. மதுரகவிவகை - பொருளின் பொலிவுஞ்சொல்லின் றிறனுந் - தொடையுந் தொடைக்கண்விகற்பமுந் துதைந்தங் -குருவக முதலா மலங்காரங்ளை - யுட்கொண்டோசை பொலிவுடைத்தாகி - யுய்த்துணர் வோர தமுள்ளங் கட்கு -
மால்கட லமிழ்தம்போற் பாடுவதுமதுரகவி. (55)

368. சித்திரகவிவகை - மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுள - மேகமாதமெழுகூற் றிருக்கை - காதை கரப்பே கரந்துறைப் பாட்டே - தூசங் கௌலேவாவன் ஞாற்றே -
பாத மயக்கே - பாவின் புணர்ப்பே - கூட சதுக்கங்கோமூத் திரியே - யோரெழத் தினத்தா னுயர்ந்த பாட்டே - யொற்றுப் பெயர்த்த வொருபொருட் பாட்டே -சித்திரப் பாவே விசித்திரப்பாவே - விற்ப நடையேவினாவுத்தரமே - சருப்பதோ பத்திரஞ் சார்ந்த வெழுத்தே - வருக்கமு மற்றும்வடநூற்கடலு - ளொருக்குடன் வைத்த வுதாரண நோக்கி - விரித்து நிறைத்துமிறைக்கவிப் பாட்டுத் - தெரித்துப் பாடுவது சித்திர கவியே. (56)

369. வித்தாரகவிவகை - மும்மணிக்கோவையும் பன்மணி மாலையு - ம‌றமுங்கலிவெண் பாவுமட லூர்ச்சியு - மியலிசை நாடகமியன்றபல் கவியுங் - கூத்தும் கிரீடையுங் பாடாண்டத்துறையும் - வகுத்தவகுப்பும் விருத்தக் கவிதையும் - விரித்துப் பாடுவது வித்தார கவியே. (57)

370. நாற்பொருளின் பெயர் - அறம்பொருளின்பம்வீ டெனப்பொருணான்கே. (58)

371. நால்வ‌கைக் கேள்வியின் பெயர் - கற்றல் கேட்ட லவ்வழி நிற்ற - லொத்த னால்வகைக்கேள்வி யாகும். (59)

372. நானிலத்தின் பெயர் - முல்லைகுறிஞ்சிமருத நெய்தலெனச் - சொல்லிய முறையே நால்வகையாகும். (60)

373. நால்வகைச்சேனையின் பெயர் - யனைதேர்ப‌ரிகாலா ளென்றிவை - நால்வகைத் தானைநாமமாகும். (61)

374. நால்வகைப்பொன்னின் பெயர் - சாதரூபங் கிளிச்சிறை யாடக‌ஞ் - சாம்பூ நதமிவை நால்வகைப் பொன்னே. (62)

375. நால்வகைப்பூவின் பெயர் - கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூவோடு - புதற்பூவென்றிவை நால்வகைப்பூவே. (63)

376. நால்வகைப்புசிப்பின் பெயர் - உண்பதின்ப நக்குவ பருகுவ - நால்வகைப் புசிப்பி னாம மாகும். (64)

377. நால்வகையூறுபாட்டின் பெயர் - குத்தல் வெட்ட லெய்த லெறித‌னால்வகை யூறு பாடென நவில்வர். (65)

378. நால்வகையுபாயத்தின் பெயர் - சாமபேத தான தண்டம்மென - நெறிபடு முபாய நான்காகும்மே. (66)

379. நால்வகைநிலையின் பெயர் - பைசாசமாலீட மண்டிலம்பிரத்தி - யாலீடநால்வகை நிலையாகும்மே. (67)

380. பஞ்சபாதகவகைப் பெயர் - கொலையே களவு கள்குரு நிந்தை, ப‌கரும் பொய்யுடன் பஞ்சபா தகமே. (68)

381. ஐவகைவினாவின் பெயர் - அறியான் வினாவலறிவொப்புக்காண்ட, லைய மறுத்த லவனறிவு தான் கோடன், மெய்யவற்குக் காட்டலோடைவகை வினாவே. (69)

382. பஞ்சாங்கவகைப் பெயர் - திதியே வாரநாள் யோகங் கரணமெனப், பகருஞ் சோதிடப் பஞ்சாங் கம்மே. (70)

383. பஞ்சசயனவகைப் பெயர் - மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண்படாந் தூவி,
பயிற்றுந்தண் வீப்பாய்பஞ்ச சயனம். (71)

384. பஞ்சவாசவகைப் பெயர் - தக்கோல மேலமிலவங்கஞ் சாதிக்காய் கர்ப்பூர மென்றிவை கமழ்பஞ்ச வாசம். (72)

385. பஞ்சபூதவகைப் பெயர் - நிலநீர் தேயுவாயு வாகாயமென்றிவை புலனறிந்தோ ரேத்துமைம் பூதம். (73)

386. பஞ்சபுலன்பஞ்சேந்திரியங்களின் வகைப் பெயர் - சுவை யொளி யூறோசை நாற்ற மறியுங் - கருவி நாகண் மெய்செவி மூக்கே. (74)

387. இந்திரியத்தின் பெயர் - கரணம் பொறிவாயில் கந்தமிந் திரியம்.

388. ஐவகைக் குசலவித்தையின் பெயர் - எண்ணலெழுதலிலைகிள்ளல் பூத்தொடுத்தல் - பன்னமைந்த யாழினொடு குசல மைந்தே. (76)

389. ஐவகை மெய்க்குற்றத்தின் பெயர் - கொட்டாவிநெட்டை குறுகுறுப்புக்கூன்கிடை, நட்டுவிழலைந்து மெய்ந்நவைக் குறியே. (77)

390. ஐவகை விரையின் பெயர் - கோட்டந் துருக்கந் தகரமகி லரா மொட்டிய வைந்தும் விரையென வுரைப்பர். (78)

391. ஐவகைத் தந்தையர் பெயர் - அரசன் றலைவன் றந்தை முன்னோன் குரவனோ டைவருங் குறிப்பினிற் றந்தை. (79)

392. ஐம்பால்வகைப் பெயர் - ஐம்பாலென்ப‌ தொருவனொருத்தி - பல‌ரொன்று பலவெனப் பகுத்தனர் புலவர். (80)

393. ஐவகையுணவின் பெயர் - கடித்த னக்கல் பருகல் விழுங்கன், மெல்ல லென்றிவை யைவகை வுணவே. (81)

394. பஞ்ச‌சத்தகருவியின் பெயர் - தோறொளைநரம்பு கஞ்சம் பாடல் பல்பேத ப‌ஞ்ச சத்தமாகும். (82)

395. ஐவகைவேள்வியின் பெயர் - கடவுள் பிரமம் பூத மானிடந் தென்புலத் தாரென் றைவகை வேள்வி. (83)

396. ஐவகைத்தாயர் பெயர் - ஈன்றதா யூட்டுந்தாய் முலைத்தாய்கைத் தாய் -
செவிலித்தாயென வைவகைத் தாயர் (84)

397. கான்படுதிரவியமைந்தி ன் பெயர் - அரக்கிறா லின்றே னணிமயிற்பீலி - நாவி கான்படுதிரவிய மைந்தே. (85)

398. கடல்படு திரவியமைந்தின் பெயர் - பவளமுத்துச் சங்கொக் கோலை -யுப்புக் கடல்படுதிரவிய மைந்தே. (86

399. நாடுபடு திரவியமைந்தின் பெயர் - செந்நெல் செவ்விளநீர்சிறு பயறு - கன்னற் கதலியெனப் பெயர் பெற்ற, வைந்துநன்னாட்டமைந்த திரவியம்

400. நகர்படு திரவியமைந்தின் பெயர் - கண்ணாடிபித்தன் கருங்குரங்கு காட்டானை -
மண்ணாளும்வேந்தனோ டைந்துதிரவியம் (88)

401. மலைபடு திரவியமைந்தின் பெயர் - அகில்கறி கோடட மொடுதக் கோலங் -குங்கும மைந்து மலைபடுதிரவியம். (89)

402. ஆறங்கத்தின் பெயர் - மந்திரஞ் சூத்திர வியாகரண நிகண்டு சந்தோ பிசித நிருத்தஞ் சோதிட - மென்றன வேதத் தாறங்கமென்ப. (90)

403. நன்னாட்டமைதியறுவகைப் பெயர் - செல்வம் விளையுள் பல்வளஞ்செங்கோல் - கொல்குறும் பின்மை கொடும்பிணி யின்மையென் -றிவ்வகையாறு நன்னாட்டமைதி. (91)

404. போகபூமியறுவகைப் பெயர் - ஆதியரிவஞ்சநல்லரி வஞ்ச -மேமத வஞ்ச மிரணவஞ்சந் - தேவகுருவ முத்தர குருவமெனப் -போகபூமி யறுவகைப் படுமே. (92)

405. உட்பகையாறின் பெயர் -
காமங் குரோதமோக முலோப -மதமாச்சரியமுட்பகையா றென்ப. (93)

406. அறுவகைச் சுவையின் பெயர் - தித்தித்தல் கூர்த்த றுவர்த்தல் கார்த்தல் -
கைத்தல் புளித்தலோ டறுவகைச்சுவையே (94)

407. அறுவகைப் புறச்சமயத்தின் பெயர் - உலகாயதம்புத்தஞ் சமணமீ மாஞ்சை -பாஞ்சராத்திரம் பாட்டாசாரிய -மிவ்வகை யாறும்புறச்சமயமாகும்

408. உட்சமயமாறின் பெயர் - வைரவம் வாமங் காளாமுகமா விரதம் - பாசுபதஞ்சைவமென் றுட்சமய மாறே. (96)

409. பெரியோரெழுவகைப்பெற்றியின் பெயர் - அறமும்பொருளுமின்பமும் மன்பும் - பொறுமையும் புகழு மதிப்பு மென்றிவை - எழுவகைப் பெற்றி பெரியோ ரியல்பே. (97)

410. எழுவகைத்தாதின் பெயர் - *இரதமுமுதிரமு மென்புந்தோலும் - தசையு மூளையுஞ் சுக்கிலமுமென்றிவை - எழுவகைத்தாது வெனப் பெயர் பெறுமே. (98)
*இரதம் -மச்சை

411. எழுவகை நதியின் பெயர் - கங்கை யமுனை நருமதை சரச்சுவதி பொங்குகாவிரி குமரி கோதாவரியென் - றேழுபெருவகைநதி யெனவுரைப்பர்

412. எழுவகை நரகத்தின் பெயர் - பெருங்களிற்றுவட்டம் பெருமணல் வட்ட - மெரிபரல் வட்ட மரிபடை வட்டம் - புகையின்வட்டம் பெருங்கீழ் வட்டம் இருளின்வட்டமென வெழுவகை நரகம். (100)

413. தேவுமாவுந் தாபரமும் பறவையு -மேவியமக்களூர்வ நீரனவும் பேசிலெழுவகைப் பிறப்பெனமொழிப. (101)

414. இவற்றின் யோனிபேதம் - அவற்றுள் *தேவரீரேழ்மக்களொன் பான் -றாபரமிருபா ணர்வன பன்னொன்று - நீரனவிலங்குபுண்ணிரல் பப்பத்தா - மாகவெண் பத்தினாலிலக்கபேத - மேவும்யோனி யாமென் றுரைப்பர்.
- - - - - - - -
*ஊர்வனபன்னொன்றாமொன்பதாமானிடவர் - நீர்பறவை நாற்கா னிரல்பத்தாம் -
சீரிய -தெய்வம் பதினாலாம் தாபரங்கணாலைந்தென் - றெய்தும்பிறப்பிவைகளேழு.

415. அவற்றுட்டன்னை யறிந்தவரறியாத வரின் பெயர் - தன்னையறிந்தவர் சாயுச்சி யத்தர் -பின்னையர் மீண்டுபிறப்போ ரென்ப. (103)

416. நாட்டேழ்குற்றத்தின் பெயர் - வெட்டில் கிளியே நாவா யேனந் - தொட்டியர் கள்வர் சோனைப் பெரும்புய - னட்ட நாட்டேழ் குற்றமாகும் (104)

417. அட்டமூர்த்தவகைப் பெயர் - பார்நீர் தேயுவாயுவா காயஞ் - சூரியன் சந்திர னியமான னென்ன - வாராய்ந் துரைத்த வட்ட மூர்த்தம் (105)

418. அட்டமா சித்தியின் பெயர் - அணிமா மகிமா கரிமா விலகிமா - பிராத்தி பிராகாமிய மீசத்துவம் வசித்துவமென் - றோதற் கரிய வட்டமா சித்தி. (106)

419. அட்டாங்கயோகத்தின் பெயர் - இயம நியம மாதனம் பிராணா யாமம் பிரத்தியாகாரந் தாரணை - தியானஞ் சமாதியென்றட்டாங்கயோகம்

420. அவற்றுளியமம் - கொல்லா விரதமெய்ம்மைகூறல் -கள்ளாமை பிறர்பொருட் காதலின்மை - மெய்வகையிந்திய மடக்கலுமியமம். (108)

421. நியமம் - தவமே சௌசந் தத்துவநூ லோர்தன் -மனமுவந் திருத்த றெய்வம் வழிபட -னினையுங் காலை நியம மாகும். (109)

422. ஆதனம் - பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி -சுவத்திகஞ் சுகாதன மென்பவாதனம். (110)

423. பிராணாயாமம் - இரேசக பூரக கும்பக மேற்றி -வாயுவை யடக்கல் பிராணா யாமம். (111)

424. பிரத்தியாகராம் - உரையா துபாதியை நீக்கி யுபாதியைப் - பிரியாதுண் ணோக்கல் பிரத்தியாகாரம். (112)

425. தாரனை - உற்றுயிர் பூத மனாதியிலொடுக்கித் -தற்பர நாடுத றாரணை யாகும். (113)

426. தியானம் - அவமாம் புலத்தை யடக்கி மனாதி -சிவயோகஞ் சேர்த றியான மாகும். (114)

427. சமாதி - இந்துவும் பானுவும் விந்துவு நாதமுஞ் -சந்தியில் வைத்தல் சமாதியாகும். (115)

428. எண்வகைக் காட்சியின் பெயர் - அறமையப் படாமை யாவாவொன்றின்மை - யறிவு வர்ப்பின்மை மூட மறுத்த - லறப்பழி மறுத்த லழிந்தோரை நிறுத்த - லறத்தை விளக்க லறுசமயத்தவர்க்கன் - பிவற்றிய லாகு மெண்வகைக் காட்சி.

429. அருகனெண் குணத்தின் பெயர் - அநந்தஞான மநந்ததரிசனம் - அநந்த வீரியமநந்த சுகமே - நாம மின்மை கோத்திர முன்மை -யாயு வின்மை யழியாவியல்பென் - றேயுந்தகைய வாமருக னெண்குணமே. (117)

430. எண்வகைக் குற்றத்தின் பெயர் - ஞானா வரணியந் தரிசனா வரணியம் - வேத நீய மோக நீய - மாயு நாமங் கோத்திர நாமங் -காயவந்தராயம் வரயுவந்தராய மென் -
றேயு மெண்வகைக் குற்ற மென்ப. (118)

431. அட்டமங்கலத்தின் பெயர் - கவரி நிறை குடங் கண்ணாடி தோட்டி - முரசு விளக்குப் பதாகை யிணைக்கய - லளவில் சிறப்பி னட்டமங் கலமே.

432. சிறப்பில்லா வெண்வகைப் பெயரெச்சத்தின் பெயர் - சிறப்பில் சிதடுமுறுப்பில் பிண்டமும் -கூனுங் குறளு மூமையுஞ் செவிடு - மாவு மருளு மென்ப மக்கட் -கேயிஞ் சிறப்பிலா வெண்பெய ரெச்சம். (120)

433. அட்டகிரியின் பெயர் - இமய மந்தரங்கைலைவிந்த -நிடதமேமகூட நீலங் கந்தமென் - றெண்வகை வெற்புக் கியன்ற பெயரே. (121)

434. அட்டகணிதத்தின் பெயர் - சங்கலிதம் விப கலிதங் குணனம் - பாகாரம் வர்க்கங் கனமூல மெட்டே. (122)

435. அட்டபரிசத்தின் பெயர் - தட்டல் பற்றறடவ றீண்டல் –குத்தல் வெட்டல் கட்ட லூன்ற -வெட்டு முடம்பின் பரிச மாகும். (123)

436. நவமணியின் பெயர் - வைரமுத்த மாணிக்கம் பவளம் -மரகதங் கோமேதகம் வைடூரியம் - நீலம் புருடராகமென்ன -நானிலம்புகழு நவமணிப்பெயரே.

437. நவபுண்ணியத்தின் பெயர் - எதிர்கொளல் பணித லிருத்தல் கால் கழுவல் -
விரைமலர் தூவல் தூபம் விளக்கே - யெருசுவை யுண்டியமைந்தோர்க் குதவுதல் -
புகழ்தனவபுண் ணியத்தி னாம மாகும். (124)

438. நவதாரணையின் பெயர் - நாம தாரணை வச்சிர தாரணை -மாயா தாரணை சித்திரதாரணை - சத்ததாரணை வத்துத்தாரணை -சதுர்கதாரணை செய்யுட்டாரணை -
நிறைவுகுறைவாகிய வெண்பொருட் டாரணை - நவதாரணையி னாம மாகும். (125)

439. நவதாளத்தின் பெயர் - சமதாள மரும தாளமட தாளம் -படிம தாளஞ் சயதா ளம்மே - மட்டியதாளம் விடதாள நிவிர்த -தாளந் துருவதாள மென்ன - நவதா ளத்தி னாம மாகும். 126

440. நாடக நவரதப் பெயர் - சிருங்காரம் வீரியம் பெருநகை கருணை - யிரௌத்திரங் குற்சை சாந்தமற் புதம்பய - நாடகத்தியலு நவரதமாகும் ()

441. சிற்பத்தொழிலின் பத்துறுப்பின் பெயர் - கல்லுமுலோகமுஞ் செங்கலு மரமு -மண்ணுஞ் சுதையுந் தந்தமும் வண்ணமுங் - கண்ட சருக்கரையு மெழுகு மென்றிவை - பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாகும். 128

442. உயிர்வேதனை பன்னிரண்டின் பெயர் - அனலுஞ் சீதமும் வாதமு மசனியும் -புனலுமாயுதமும் விடமு மருந்தும் - பசியுந் தாகமும் பிணியுமுனி வறாமையு -முயிரின் வேதனை யோரீ ராறே. (129)

443. பதினெண் யாகங்களின் பெயர் - சோதிட்டோம மங்கிட் டோம - முத்தியஞ் சோடசீவாச பேய - மத்தி ராத்திரஞ் சோம யாகஞ் -சாதுர் மாசியம் பவுத்திர மேத -
மணிபுண்டரீக மங்கி சயனே -யிராச சூய மச்சுவ மேதம் - விச்சுவ தித்துப் பிரம மேதம் -பிரணவமேதம் பாசுபந் தம்மெனப் - பாற்படு பதினெண்யாக மென்ப. (130)

444. பதினெண்புராணங்களின் பெயர் - * மச்சங் கூர்மம் வராகம்வா மனம் -பதுமம் வைணவம் பாகவதம் பிரமஞ் - சைவ மிலிங்கம் பௌடிய நாரதீயங் -காரூடம் பிரம கைவர்த்தங் காந்த - மார்க்கண் டேயமாக் கினேயம் பிரமாண்டம் -பாற்படு பதினெண் புராணமாகும். (131)
---------
*மச்சம், கூர்மம், வராகம், வாமனம், சைவம், இலிங்கம், பௌடியம், காந்தம், மார்க் கண்டேயம், பிரமாண்டம், இப்பத்துஞ் சிவபுராணங்கள். வைணவம், பாகவதம், காரூடம், நாரதீயம் இந்நான்கும் விட்டுணு புராணங்கள். பிரமம், பதுமம் இவ்விரண்டும் பிரமபுராணங்கள். ஆக்கினேயம் அக்கினிபுராணம். பிரமகைவர்த்தம் சூரியபுராணம்.

445. உபபுராணம் பதினெட்டின் பெயர் - நாரசிங்கஞ் சநற்கு மாரம் - நாரதீயம் சிவதன் மந்துருவாசம் - நந்திகேச்சுர மவுசனங்காளிகம் -வாருணஞ்சாம்பேசம் பராசரம்பார்க்கவம் - காபிலமானவம் வாசிட்டலைங்கம் -சவுர மாரீச மானவ மென்னும் - ஈரொன் பானுப புராணமென்ப. (132)

446. தருமநூல் பதினெட்டின் பெயர் - மநுவேயத்திரிவிண்டு வாசிட்டம் -யமமாபத்தம்பம் யாஞ்ஞவற்கியம் - பராசரமாங் கீரசமுசனம்மே -காத்தியாயனம் சமவர்த்தம் வியாசம் - பிரகற்பதி சங்கலிதம் சாதான்மம் - கைதமந்தக்கமீ -ரொன்பானும் - தருமநூலின் பெயரெனச் சாற்றுவர் (133)

447. யாகையின் பதினெண் குற்றத்தின் பெயர் - பசியுநீர் வேட்டலும் பயமும் வெகுளியு -முவகையும் வேண்டலு நினைப்பு முறக்கமு - நரையு நோய் படுதலுமரணமும் பிறப்பு -மதமு மின்பமு மதிசயமும் வியர்த்தலுங் - கேத முங்கை யறவு மென்றிவை -மாய யாக்கைக்குப் பதினெண் குற்றம் - இக்குற்ற நீக்கியோர் வச்சிரகாயர். (134)

மூன்றாவது ஐயர்வகை முற்றிற்று
ஆக சூத்திரம் 447
--

நான்காவது : அவனிவகை (448 -725)


448. மண்ணுலகின் பெயர் - அவனி வைய மகலிடங் காசினி -புவனி புடவி பூதலம் பூமி - புவனம் படிபுவி பொழிலே பூவே -சகமே தினிதரை தாலஞ் சாந்தை - யுகம் பார் தரணி யுலோகந் தாரணி -தலநீர் வரைப்புத் தராதல மகாதல - நிலம்பிரு திவிதர நிலையே ஞால -மசலையூ வலய மளக்கர் மண்டலம் - பவன மகநடு பாலம் விபுலங் -கோத்திரை குவலயங் குவ்வேகோ நேமி - தாத்திரிவேலா வலயந் தரித்திரி -திணைமகி சக்கரம் பொறை நகம்பாரி - வசுந்தரை வசுமதி வசுதைமண் ணுலகே (1)

449. மற்றும் மண்ணுலகின் பெயர் - பூதிய மகிலம் புரையே பாரமென் - றோதிய பிறவுமப் பெயர்க் குரித்தே. (2)

450. நவகண்டத்தின் பெயர் - வடபால் விதேகந் தென்பால் விதேகங் - கீழ்பால் விதேக மேல்பால் விதேகம் - வடபா லிரேவதந் தென்பா லிரேவதம் - வடபாற் பரதந் தென்பாற் பரதம் - மத்திம கண்ட மென்ன வருபவை - நற்பெரு நாவலந் தீவினவ கண்டம். (3)

451. பூவலயத்தின் பெயர் - பூகோளம் பூகண்டம் பூவலய மென்ப. (4)

452. எழுதீவின் பெயர் - முதலது நாவலந் தீவே யுடைய -திறலியின்றீவே கிரவுஞ்சத் தீவே - குசையின் றீவே யிலவந் தீவே -தெங்கந்தீவே புட்கரத் தீவென் - றேத்திய பெருந்தீ வேழிற்கும்பெயரே. (5)

453. ஏழ் பொழிலின் பெயர் - ஏழ்பெருந் தீவுமேழ் பொழிலெனப் படுமே. (6)

454. கீழேழுலகின் பெயர் - அதலம் விதலம் சுதலம் நிதலம் -தராதலம் ரசாதலம் பாதலவுலகம் - என்றிவை கீழே ழுலகெனப் படுமே. (7)

455. நரகத்தின் பெயர் - நிரயமும் பவர்க்கமுங் கும்பியும் புலவு - மூழ்த்தலும பரமு மள்ளலு மளறு - மதோகதி பாவந்துவர்ந்த மருஞ்சிறை -யிருளு மென்பதிவை நரகப் பெயர். (8)

456. ஏழுநரகங்களின் பெயர் - கூடசாலங்கும்பி பாக -மள்ளலதோகதி யார்வம் பூதி -
செந்து வென்றேழுந் தீநரகப் பெயர். (9)

457. நாட்டின் பெயர் - பைதிர மண்டிலம் பாடி தேயந் -தண்ணடை நீவரங் கோட்டஞ் சனபதஞ் - சும்மை யகலுள் கண்ட மேணியென் -றின்ன விராச்சிய முலகுநா டென்ப. (10)

458. உலகின் பொதுப் பெயர் - புவன நாடு பொழிறலம் புடவி - பவன‌ மிராச்சிய முலகின் பொதுப் பெயர். (11)

459. காசியின் பெயர் - காசிவாராணசி. (12)

460. காஞ்சியின் பெயர் - கச்சிகாஞ்சி. (13)

461. சிதம்பரத்தின் பெயர் - மன்றஞ்சிதம்பரம். (14)

462. திருவாரூரின் பெயர் - கமலைதிருவாரூர். (15)

463. உறையூரின் பெயர் - கோழியுறையூர். (16)

464. மதுரையின் பெயர் - கூடன்மதுரை. (17)

465. கருவூரின் பெயர் - கருவூர்வஞ்சி. (18)

466. கடாரத்தின் பெயர் - காழகங்கடாரம். (19)

467. சிங்களத்தின் பெயர் - ஈழஞ்சிங்களம். (20)

468. மிதிலையின் பெயர் - மிதிலைவிதேகை. (21)

469. அவந்திநகரின் பெயர் - அவந்தியுஞ்சை. (22)

470. அரித்துவாரத்தின் பெயர் - அரித்து வார மாயாபுரியே. (23)

471. காவிரிப்பூம்பட்டினத்தின் பெயர் - காக நதிபுகார் காவிரிப்பூம்பட்டினம். (24)

472. புரத்தின் பெயர் - புரியென்கிளவி புரமென் றாகும். (25)

473. சேரியின் பெயர் - பாடியென்பது சேரியாகும். (26)

474. முனைமேற்சென்றோ ருறைபதியின் பெயர் - பாசறை முனை மேற்சென்றோருறைபதி. (27)

475. ஊரின் பெயர் - பூக்கங் கேடகம் பூரியம் பூண்டி -பாக்கம் புரிகெடிபதி நகர் சும்மை - சேரி மண்டிலம் சேர்வு குப்பங் -காடு குடிக்காடு வேலியகலுள் -
வைப்புக் கிராமம் வசதியருப்ப - மாதர மில்லிடம் புகலிடம் புரமேபாழி நத்தங் கோசர மொக்க -முறையு ளிருக்கை யூரின் பெயரே. (28)

476. சிற்றூரின் பெயர் - பேடுங் குடியும் பெருந்தண் ணடையும் -
பட்டு நொச்சியும் பள்ளியு மென்றிவை -சிற்றூர் தனக்குச் சிறந்த பெயரே. (29)

477. நிலத்தின் பெயர் - மாவுந் திணையும் வேலியு நிலமெனல். (30)

478. மற்றும் நிலத்தின் பெயர் - பூவுமப் பெயர்புகலப் பெறுமே. (31)

479. வழியின் பெயர் - அதருமயனமுமாறுமடைவும் - பதவையும்வதியு மத்தமு மார்க்கமுங் -கடவையுங் கிறியு நடையும் போக்கு - மிடவையுந் தாரியுந்தாரையு மியவையுந் -தெருவு மொழுக்கமுஞ் செப்பமுஞ் சுரமுஞ் - சரியு நெறியுஞ் செலவுந் தரங்கும் -பட்டமும் வனமுங் காலும் பதமும் –வட்டையும் வகிரும் வாரியும் வழியெனல். (32)

480. அருநெறியின் பெயர் - அத்தமுங் கடமுஞ் சுரமு மருநெறி. (33)

481. யானைசெல்வழியின் பெயர் - தண்டம் யானை சென்ற வழியே

482. இழிந்தேறும்வழியின் பெயர் - படுக ரென்ப திழிந்தே றும்வழி.

483. சிறுவழியின் பெயர் - விடங்கர் செறுவழி. (36)

484. நீள்வழியின் பெயர் - நீள்வழியளக்கர்(37)

485. கவர்வழியின் பெயர் - கவலை கவர்வழியின் கட்டுரையாம் (38)

486. முதுவரம்புவழியின் பெயர் - மஞ்சின் முதியவரம்பின் வழியே.

487. புதுவரம்புவழியின் பெயர் - மரிசி புதியவரம்பின் வழியே (39)

488. பள்ளத்தின் பெயர் - ஞெள்ளறாழ்வுபடுகரவல் குழி -பள்ளமிழிவு பயம்புதாழ்நிலமே (40)

489. மேட்டின் பெயர் - உயர்நிலந் திடர்சுவ லோங்க றிட்டை -மிசையே மோடுமே டென்றாகும் (41)

490. சிறுதிட்டையின் பெயர் - பாறைமேடு முரம்பு பதுக்கை -யாகு முயர்சிறு திட்டை யதன் பெயர் (42)

491. குப்பைமேட்டின் பெயர் - குப்பை மேடு கருகுவை யென்ப கொம்மைதிட ரென்றுங் கூறப்படுமே (43)

492. நடுவின் பெயர் - நனந்தலை நாப்பண் மத்தியநள்ளு -
வொத்த நாவோ டணவு வயங்கிடை -நலந்திகழ் கூழை நடுவென் றாகும் (44)

493. ஐந்திணையின் பெயர் - குறிஞ்சி பாலை முல்லை மருத -நெய்த லைந்திணைக் கெய்திய பெயரே (45)

494. அவற்றுட் குறிஞ்சிநிலத்தின் பெயர் - புறணி துருக்கம் புறவம் வன்பால் -
குறும் பொறை புறம்பணை குறிஞ்சி நிலப் பெயர் (46)

495. மலையின் பெயர் - விலங்கல் சயிலம் விண்டு வெற்புச் - சிலம்பு சிமயஞ் சிகரிசி லோச்சயம் - பொருப்புப் பொங்கர் பொறைகோபூதரம் - பருப்பதம் பதலை பறம்பு பாதவம் -அத்திரி நகமே யடுக்க னவிரங் - குத்திரங் குவடு கோத்திரங்குன்று -தாணுவசலஞ்சானுமேரு - வோதிவீரங்கிரி காண்ட மோங்கல் - பீலிதி கிரி யரியே பிறங்கல் - மாதிரங் கல்லே வரையேபொகுட்டுத் - தரணிசிமிலஞ் சையம் பத்திரம் -
வேதண்டமிரவி மேதரஞ்சாரல் -பொற்றை நாகஞ் சிலைபோதியு மலைப் பெயர் (47)

496. சிறுமலையின் பெயர் - குன்று பொற்றை குவடுகுறும்பொறை - யென்றிவை சிறுமலை யிறும்பு மாகும் (48)

497. மலைப்பக்கத்தின் பெயர் - சாரல் சாகடம்தடமே சானு - வார நிதம்பமிவை மலைப்பக்கம் (49)

498. மலைமுகட்டின் பெயர் - குவடு கோடு கூடங் கொடுமுடி - சிகர‌ மலையஞ் சேண்முக டாகும். (50)

499. பாறையின் பெயர் - அறையே பாறை. (51)

500. துறுகல்லின் பெயர் - பொறையே துறுகல். (52)

501. விடரின் பெயர் - விடரேகல்லளை விடரின்பெயரே. (53)

502. *கற்பாழியின் பெயர் - காண்டை கற்பாழி. (54)

503. கீழறையின் பெயர் - பில‌மேகீழறை. (55)

504. மலைமுழையின் பெயர் - முடுக்கர் க‌ந்தரம் பிலங்குகை குகரம் - கற்புழை நிகுஞ்சம் வங்குமலை முழையே. (56)

505. பெருங்கல்லின் பெயர் - கேளிதம் பெருங்கல். (57)

506. சிறுகல்லின் பெயர் - உபலஞ் சிறுகல். (58)

507. திரண்டகல்லின் பெயர் - உலங்குங் குண்டு முலமுந்திரண்டகல். (59)

508. எழுமலையின் பெயர் - கைலை யிமய மந்தரம் விந்தம் - நிடதமேம‌
கூட நீலகிரியேழ்மலை. (60)

509. இமயமலையின் பெயர் - பூதர‌ மாதிமலை பொன் மலை சிமயம் - ஏமந்தாசலமிமய மலைப் பெயர். (61)

510. மற்றுமிமயமலையின் பெயர் - மேருவும்புள்ளியும் விளம்புவரதற்கே. (62)

511. மகமேருவின் பெயர் - தேவராலயம் பெருமலை வடமலை - மூவாமலை மந்தரம் பொன்மலை மகமேரு. (63)

512. கைலாயகிரியின் பெயர் - வெள்ளியங்கிரி சயிலாதி வேதண்டங் கண்ணுதன்மலை நொடித்தான்மலை கைலாயம். (64)

513. பொதியமலையின் பெயர் - தென்மலை மலையந் தென்றல் வருமலை *(65)
* கற்பாழி கற்புழை.

514. கொல்லிமலையின் பெயர் - வல்லியம்பொருப்பே கொல்லிமலையாகும். (66)


515. மலையரையன் பெயர் - மலையரை யன்கிரி ராசனிறை பாகத் - துமையாட் பெற்ற வுரவோனிமவான். (67)

516. மலைமேற்றுருக்கத்தின் பெயர் - அருப்ப மலை மேற்றுருக்கமாகும். *(68)

517. மலைச்சாரல் வீழ்புனலின் பெயர் - அருவி மலைச்சாரல் வீழ்புன‌லாகும். (69)

518. அருவிப்புனல் வீழிடத்தின் பெயர் - அருவிப்புனல் வீழிடந் தூவான‌ மாகும். (70)

519. மலைக்கணவாயின் பெயர் - மலையின் கணவாய்ப் பெயர் பூழையாகும். 71

520. தினைப்புனத்தின் பெயர் - ஏனலும்வளாகமுந் தினைப்புனமென்ப. *72

521. குறிஞ்சிநிலத்தூரின் பெயர் - குறும்பொறை சீறூர் சிறுகுடி குறிஞ்சியூர். 73

522. குறிஞ்சி நிலப்பறையின் பெயர் - தொண்டக முருகியந் துடியந் நிலப்பறை. 74

523. குறிஞ்சிநில‌மாக்களின் பெயர் - கானவர் குறவ ரந்நில மாக்கள். *75

524. குறிஞ்சிநிலப்பெண்கள் பெயர் - குறத்தியர் கொடிச்சியர் மறத்தியர் பெண்டிர்.76

525. குறிஞ்சித்தலைமகன் பெயர் - பொருநன்சிலம்பன் வெற்பன்றலை மகன். 77

526. குறிஞ்சிநிலக்கடவுளின் பெயர் - கந்தனந்நிலக்கடவு ளாகும். 78

527. பாலைத்திணையின் பெயர் - மறுபுலஞ் செம்புலம் வன்பால் பாலை. *79.

528. நிலப்பிளப்பின் பெயர் - விடருங் கமரும் விட்புநிலப்பிளப்பே. *80.

529. பரலடுத்துயர்நிலத்தின் பெயர் - பரலடத்துயர்நிலமுரம்பேபதுக்கை *81

530. பாலைநிலத்தூரின் பெயர் - முனையிடங் குறும்பு முதுபாலை நிலத்தூர். 82

531. பாலைநிலப்பறையின் பெயர் - அந்நிலப்பறை துடியாகுமென்ப. *83

532. பாலைநிலமாக்கள் பெயர் - மறவரெயினர் சவரர் கிராதர் - கானவர் குறவர் புளினர் வேடர். 84

533. பாலைநிலப் பெண்கள் பெயர் - எயிற்றியர் பேதையர் மறத்தியர் பெண்டிர். 85

534. பாலைநிலத்தலை மகன் பெயர் - விடலையுங் காளையு மீளியுந் தலை மகன். 86

535. பாலைநிலக்கடவுளின் பெயர் - பாலைக் கடவுடுர்க்கை யென்ப. *87

536. முல்லைத்திணையின் பெயர் - புறவம் புறம்பணை புறவ‌ணி முல்லை. *88

537. காட்டின் பெயர் - கானங் கடறு கான்காந் தாரந் - தாவம் புறவஞ் சங்கிரங் கட்சி - யடவி காண்டகம் விந்தங் கானகங் - கவனங் குறும்பொறை யாரணியங் குப்பங் -
கோட்டை யரணம் வல்லை துருக்க - முயவை சுர‌ங் கானனங் கடம்பழுவம் பொச்சை -
கண்டகந் தில்லங் களரி முளரி - ககன‌ மத்தம் வனங் காடெனப் புகல்வர். 89

538. காட்டுத்துருக்கத்தின் பெயர் - அருப்பங் கோட்டை வல்லை யாரணியம் -
அரணமுந் துருக்கமு மாகுமென்ப. 90

539. முல்லைநிலக்கான்யாற்றின் பெயர் - கலுழியு யவை முல்லைக்கான்யாறு. 91

540. பழங்கொல்லையின் பெயர் - முதைப்புனம் பழங்கொல்லை. 92

541. புதுக்கொல்லையின் பெயர் - இதைப்புனம் புதுக்கொல்லை. 93

542. மற்றுமந்நிலத்தின் பெயர் - தில்லிய மென்னச் சொல்லுபவந்நிலம்.

543. முல்லைநிலத்தூரின் பெயர் - அந்நிலத் தூர்ப் பெயர் பாடியென்ப.

544. முல்லைநிலப்பறையின் பெயர் - அந்நிலப்பறையேறுகோள்பம்பை.

545. முல்லைநிலமாக்கள் பெயர் - இடையரண்டர் பொதுவர்கோபாலர்
குடவ ரமுதர் கோவலராயர் - தொறுவர் விந்தர் முல்லை நிலமாக்கள். 97

546. முல்லைநிலப்பெண்டிர் பெயர் - இடைச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர். 98

547. முல்லைநிலத்தலைவன் பெயர் - கானக நாடன் குறும்பொறை நர‌டந்தோன்ற லண்ணன் முல்லைத்தலைவன் 99 .

548. முல்லைநிலக்கடவுளின் பெயர் - திருமாலந்நிலக் கடவுள்பெயரே.

549. மருதத்திணையின் பெயர் - பழனமுந் தொடுவும்பணையுமென் பாலுங் -
கழனியும் பண்ணையு மிவைமரு தத்திணை. 101

550. யாற்றின் பெயர் - ஒலியலுந்தி புனலோணங் குடிஞை - சிந்துதீர்த்திகை தீபவதியே - தடினியாபதகை யாறெனச் சாற்றுவர். 102

551. யாற்றிடைக் குறையின் பெயர் - இலங்கை யரங்கந் துருத்தியாற்றிடைக்குறை. 103

552. வெண்மணலின் பெயர் - வாலுகம்வெண்மணல். 104

553. கருமணலின் பெயர் - அற‌னுண்கருமணல். 105.

554. நுண்மணலின் பெயர் - அதருமயிரு மெக்கரு நுண்மணல். 106

555. புழுதியின் பெயர் - பொடிமண்புழுதி. 107

556.மணற்குன்றின் பெயர் - புளினமணற்குன்றே. 108

557. ஊறலின் பெயர் - அஃகமுறவியுமசும்புமூறல். 109

558. கங்கையின் பெயர் - வானதி பகீரதி மந்தாகினியே - சானவிவர ‌நதி சுரநதிவிமலை - திரிபதகை தெய்வநதி கங்காநதி. 110

559. யமுனையின் பெயர் - கதிரவன் புதல்வி காளிந்தி யமுனை. 111

560. சரச்சுவதிநதியின் பெயர் - சோனைசரச்சுவதி. 112

561. கௌதமைநதியின் பெயர் - கௌதமைகோதை.113

562. நருமதைநதியின் பெயர் - சோமன் புத்திரி இரேவை நருமதை.

563. காவிரியின் பெயர் - பொன்னி காவிரி. 115

564. பொருநையின் பெயர் - பொருநை தண்பொருந்தம். 116

565 கன்னிநதியின் பெயர் - கன்னிகுமரி (117)

566 ஆன்பொருந்த நதியின் பெயர் - ஆனி வானி யான் பொருநை - சூதநதி யான்பொருந்தமாகும். (118)

567 வைகைநதியின் பெயர் - வேக வதிவைகை (119)

568 கோதாவரியின் பெயர் - விமலைகோதாவரி (120)

569 மருதநிலத்தூரின் பெயர் - மடப்பந்தண்ணடை மருதநிலத்தூர் ()

570 மருதநிலப்பறையின் பெயர் - அரிகிணைமுரசம்பணைமருதப்பறை.

571 வயலின் பெயர் - கழனியும் புலமுங் கைதையுந் தடியும் - மருதமும் வரப்புளு மாவுஞ் செறுவும் -பண்ணையும் பானலும் பழனமும் விளையுளும் - பணையுஞ் செய்யும் வயலாகும்மே. (123)

572 சிறுசெய்யின் பெயர் - குண்டிலும் பாத்தியுஞ் சிறுசெய்யாகும் ()

573 வரம்பின் பெயர் - மரிசுங் கோடுங் கூலமும் வரம்பே. (125)

574 வரம்பருகின் பெயர் - கங்கு மரிசும் வரம்பருகாகும் (126)

575 செந்நெல் விளைநிலத்தின் பெயர் - செந்நெ றருவது சாலேயமாகும் (127)

576 அனைத்துமுண்டாகு நன்னிலத்தின் பெயர் - நன்னில முறாவரை நடைபெற்றியலும் (128)

577 பாழ்நிலத்தின் பெயர் - நரம்புகளரி பெரும்பாழ்நிலமே. (129)

578 விளையாநிலத்தின் பெயர் - களருஞ் சவரும் விளையாநிலமே ()

579 மருதநில மாக்களின் பெயர் - களம ருழவர்கடைஞர் சிலதர் - மள்ளர் மேழியர் மருதமாக்கள் (131)

580 மருதநிலப்பெண்கள் பெயர் - உழத்தியர் கடைசிய ரந்நிலப் பெண்டிர் (132)

581 மருதநிலத்தலை மகன் பெயர் - மகிழ்ந னூரன் கிழவன் றலைமகன்

582 மருதநிலக்கடவுள் பெயர் - அந்நிலக்கடவு ளமரர்பதியே (134)

583 நெய்தற்றிணையின் பெயர் - அருங்கடனெய்த னிலப்பெயராகும்.

584 கடலின் பெயர் - அம்பர மார்கலியளக்கர் தோய -மம்பு ராசிமகராலயம் பரவை -
சலதி பௌவ மகோததி சலநிதி -வீரை வேலா வலயநீர் வெள்ளம் - வாரி வேலை வாருணம் புணரி -சிந்து முந்நீர் தொன்னீர் நரலை - சக்கர முந்தி சலராசி யுப்பு -உததி சாகரஞ் சமுத்திர நேமி - நதிபதி பாரா வாரம் பயோததி -வாரிதி வாரணம் வலைய மத்தி - யாழி பெருநீ ரலையு வாவே -உவரி சிந்து வாரமோத - மரியே குரவை யழுவந் தெண்டிகை - கார்கோ ளனைத்துங் கடலின்பெயரே (136)

585. எழுகடலின் பெயர் - உப்புத் தேனிக்கு வெண்டயிர் நெய்பா -லப்புக் கடலே ழாகுமென்ப. (137)

586. கழிமுகத்தின் பெயர் - அதோமுகம் புகாரோ டழிவுகூடல் - கழிமுக மென்றனர் காயலு மாகும். (138)

587. மற்றும் கழிமுகத்தின் பெயர் - அருவியுங்கயவுங் கழிமுகமென்ப.

588. கடற்றிரையின் பெயர் - ஓதம் புணரி சீகரம் வேலை - யாகுங் கட‌ற்றிரை யலையு மாகும். (140)

589. உவர்நீரின் பெயர் - உறையென் றுரைப்ப துவர்நீராகும். (141)

590. கடற்கரையின் பெயர் - வேலையும் பாராவாரமுங் கடற்கரை. ()

591. தோணாமுகத்தின் பெயர் - தோணா முகமே சூழ்கழி யிருக்கை.

592. உப்பளத்தின் பெயர் - அளமே கானலளக்க ருவளகங் கழிநில முப்பள மரக்கால் கருதுப. (144)

593. கழியின் பெயர் - காயலுமுகமுங் கழியெனப்படுமே. (145)

594. உவர்த்தரையின் பெயர் - இருணமுவர்த்தரை. (146)

595. மணற்குவையின் பெயர் - புளின மணற் குவை. (147)

596. உவர்த்தளத்தின் பெயர் - உவளக முவர்த்தளம். (148)

597. உப்பமைப்போர் பெயர் - உமண ரளவருப் பருப்பமைப்போர்.

598. நெய்தனிலத்தூரின் பெயர் - பாக்கம் பட்டின நெய்தனிலத்தூரே.

599. நெய்தனிலப்பறையின் பெயர் - சாபறை மீன் கோட்பறை நெய்தற்பறை. (151)

600. நெய்தனிலமாக்கள் பெயர் - கடலர் திமிலர் சலவர் நுளையர், பரதர் வலைய ரந்நிலமாக்கள். (152)

601. நெய்தனிலப்பெண்கள் பெயர் - பரத்தியர் நுளைச்சிய ரந்நிலப் பெண்டிர். (153)

602. நெய்தற்றலைமகன் பெயர் - மெல்லன் புலம்பன் றன்கடற் சேர்ப்பன் -
றுறைவன் கொண்க னெய்தற் றலைமகன். (154)

603. நெய்தனிலக்கடவுளின் பெயர் - அந்நிலக் கடவுள் வருணனாகும்.

604. நீர்நிலையின் பெயர் - இலைஞ்சி பண்ணையேல்வை குண்ட - மலந்தை பொய்கை வலயஞ் சுனைசிறை - பட்ட முடுவை பயம்பு படுகர் - குட்டந்தாங்கல் கோட்டக மேரி - யுவளக மடுவே யோடை படுவே -தடமேவாவொ தடாகமாவி -
சூழிகிடங்கு சலதரங்கேணி -பணை கயம் பல்வலம்நணினியிலந்தை - மூழிகுழிகுள நீர்நிலைப்பெயரே. (156)

605. புனற்கரைவரம்பு இவற்றின் பெயர் - கூலமுந் தீரமும் வாரமுங் கோடும் -வார்புனற்கரைக்கும் வரம்புக்கும் பெயரே. (157)

606. சேற்றின் பெயர் - அளறு பூழி யளக்கர் சேதகம் -அசறு பங்க மள்ளல் குழைதொளி - கொள்ளஞ் செய்யல் கும்பி குழம்பு -தொள்ளி சகதி தொய்ய னுரம்பே -
அசும்பு செதும்போ டங்கணம்பூதி -யிசைந்த யிருபத்தொன்றுஞ்சேறே (158)

607. அருவருப்புறுசேற்றின் பெயர் - நொளிலுமூழிலு மருவருப் புறுசேறே (156)

608. சேற்றெலெழுங்குமிழியின் பெயர் - கொப்புள் பொருட்டுச் சேற்றெழுகுமிழி (160)

609. ஊறலின் பெயர் - உறவியசும்பு வூற்று வூறல் (161)

610. செய்கரையின் பெயர் - சேதுவுமணையுங்குரம்புங் சூலையுஞ் -செய்கரை யெனவே செப்பப் படுமே (162)

611. கிணற்றின் பெயர் - உறவியுங் கூவலுங்கூபமுங் கிணறெனல் ()

612. ஊரிலுள்ளாருண்ணும்நீரின் பெயர் - ஊருணி யூருளோ ருண்ணீராமே (164)

613. சுடுகாட்டின் பெயர் - சம மயானஞ் சுடலை சுடுநில -மிடுகாடு புறங்காடு பிதிர்வனஞ்சுடுகாடே (165)

614. சாம்பரின் பெயர் - அடலை வெண்பலி சாம்பராகும் (166)

615. பொடியின் பெயர் - துகளு நீறுஞ் சுண்ணமுங் குறுமலுஞ் -சிதரும் பராகமுஞ் சின்னமும் பிதிரும் - நுணுங்குஞ் சன்னமு நூறுந் தாதும் - பூதியுந் தூளும் புழுதியு மணுவும் - பொடியின்பெயரெனப் புகலப்பெறுமே (167)

616. புற்றின் பெயர் - வன்மீகம்புற்றே (168)

617. புற்றாஞ்சோற்றின் பெயர் - குறும்பியதன்சோறே (169)

618. ஒதுக்கிடத்தின் பெயர் - துச்சிலொதுக்கிடம் (170)

619. வேறிடத்தின் பெயர் - ஒருசிறைவேறிடம் (171)

620. பசும்புற்றரையின் பெயர் - அரிதஞ்சாட்டுவலம் பசும்புற்றரையே

621. களர்நிலத்தின் பெயர் - களரே முதுநிலம் (173)

622. யுத்தகளத்தின் பெயர் - களமே பறந்தலை போர்க்களங்களரி - யாகவ பூமி விளாகஞ் செருக்கள -மடுகளஞ் செங்கள மமர்க்களமொய்யே - படுகளம் யுத்தம் பண்ணுங் களமே (174)

623. பிணம்படுநிலத்தின் பெயர் - பறந்தலைசெம்புலம்பிணம்படு நிலமே

624. பகைமேற்சென்றோருறைபதியின் பெயர் - பாசறை முனைப்பதி பாடி பாளையம் -பாளி பகைமேற் சென்றோருறைபதி (176)

625. மற்றும் பகைமேற்சென்றோருறைபதியின் பெயர் -
கேடகங்கடவை யென்பவுங் கிளக்கும் (177)

626. நகரத்தின் பொதுப் பெயர் - ஆலய நிகாயம் புரியா வாசந் -தாமஞ் சாதனந் தாவளஞ் சரணம் - பதியே பள்ளி பாழிபாடி -நிலயநிகேதன நியம நிசாதன - முறையுள் வசதி யுசஞ்சம் வாகங் -குடமே வேசனங் கோட்ட மகரம் புரமே நகரப்பொதுப் பெயராகும் (178)

627. அகழின் பெயர் - ஓடை கிடங்கு கேணி யுடுவே -அகப்பா பரிக மகழியகழெனல் (179)

628. மதிலின் பெயர் - ஆரை புரிசை யரணஞ் சாலம் -வேலி பரவை யுவளகமிஞ்சி -யோதை வேணகை யெயில்சிறை கடகந் -துருக்க மகப்பா சுற்றுக்காப்பு -வரைப்புச் சக்கரம் வாரி காவ - லரண்புற நொச்சியுர மதிற்பெயரே

629. மற்றுமதிலின் பெயர் - ஆரல்பிகாரம் பந்தமுமாகும் (181)

630. மதிலுறுப்பின் பெயர் - ஞாயி லெந்தர நாஞ்சில் கோசம் -விதப்பு நரலை
பதப்பாடு தோணி -கொத்தளம் பொறிமதி லுறுப்பெனக்கூறும் (182)

631. மதிலுளுயர்நிலத்தின் பெயர் - அகப்பா பரிகமதிலுயர் நிலமே

632. வாரியுளுயர்நிலத்தின் பெயர் - பரிகை கற்பாவாரியு ளுயர்நிலம்,

633. ஆழ்வாரிநிலத்தின் பெயர் - ஓதையாழ்வாரி நிலமென்றுரைக்கும்

634. கோபுரவாயிலின் பெயர் - கோட்டியும் வாரியுங் கோபுரவாயில்

635. மற்றுங்கோபுரவாயிலின் பெயர் - ஆத்தான முமரி கூடமு மதுவே (187)

636. கோபுரவாயிலிற்புகும்புழையின் பெயர் - புதவே வாயிற் புக்குறும் புழையே (188)

637. கோபுரவாயிற் றிண்ணையின் பெயர் - அவ்வழித் திண்ணையளிந்த மென்றாகும் (189)

638. வதுவைத் திண்ணையின் பெயர் - மணையே வேதிகை வதுவையின்றிண்ணை. (190)

639. கடைத்தெருவின் பெயர் - ஆவணம் பீடிகை கூலமங் காடி -சேனை நியமங் கடைத்தெரு வென்ப(191)

640. தெருவின் பெயர் - வி்ச்சை யாவணம் வீதிமறுகு -சேனை நியமஞ்சிறகு ஞெள்ளல் -
வாடை கோசுமார்க்க மொலியல் -பாடகந் தெருவின் பெயரா கும்மே (192)

641. மற்றுந்தெருவின் பெயர் - செப்பம் வேணி சிரேணியுந் தெருவே

642. சந்தியின் பெயர் - அந்தியுங் கவலையும் வரியு மரியும் -கோடகமுஞ்சிராகமுஞ் சந்தியெனக் கூறுப (194)

643. முச்சந்தியின் பெயர் - அந்திமுச் சந்தி (195)

644. நாற்சந்தியின் பெயர் - கோடகஞ்சிருங் காடகம் வரிசந்தி - சதுக்கமென்றிவை நாற்சந்தியாகும் (196)

645. சேரியின் பெயர் - பாடமும் வேணியும் வாடையு முறியுஞ் -சேரியென்ப சிரேணியு மதற்கே (197)

646. அரசர்வீதியின் பெயர் - பூரிய மரசர் வீதியைப் புகலும் (198)

647. வைசியர்சேரியின் பெயர் - வாசிகை யென்பது வைசியர்சேரி

648. இடைச்சேரியின் பெயர் - ஆவிரம்வல்லியமுவளக மிடைச்சேரி

649. வேடர்வீதியின் பெயர் - பக்கணம்வேடர் வீதியாகும் (201)

650. அக்கசாலையர் தெருவின் பெயர் - அக்கசாலையர் தெருவா வேசனமே (202)

651. அம்பலத்தின் பெயர் - பொதியின்மன்றம் பொதுசபையம்பலம்

652. அரசர்கோயிலின் பெயர் - மாளிகைசாலைமந்திரம் பவனங் -கோயிலென்ப குலமு மதற்கே (204)

653. அரசிருக்கையின் பெயர் - அத்தாணி பூரிய மாசா ரம்மே -வேத்தவையென்பதோ டரசிருப்பென்ப (205)

654. சித்திரகூடத்தின் பெயர் - தெற்றி யம்பலஞ் சித்திரகூடம் ()

655. மண்டபத்தின் பெயர் - மானமுஞ் சமித்தமு மண்டபமாகும் ()

656. மன்னன்றேவியில்லத்தின் பெயர் - அந்தப் புரங்கந்த வார மரண்மனை -
யென்ப மன்ன ரில்வாழ் கட்டே (208)

657. கோபுரத்தின் பெயர் - கூடஞ்சிகரி சிகரங் கோபுரம் (209)

658. மாடத்தின் பெயர் - மாட மாளிகை சூளிகை தெற்றி (210)

659. உபரிகையின் பெயர் - மேனிலை யுபரிகை (211)

660. நிலவறையின் பெயர் - கீழ்நிலைநிலவறை (212)

661. நாடகசாலையின் பெயர் - நாடக சாலை நவாங்க மாகும் (213)

662. ஆடலிடத்துக்கும் வட்டாடிடத்துக்கும் பெயர் - ஆடலிடமும் வடாடா டிடமுமரங்கம் (214).

663. பாடல்பயிலிடத்தின் பெயர் - பாடல்பயிலிடம் பட்டி மண்டபமே

664. தேவர்கோவிலின் பெயர் - சிநகரஞ் சேதிமம் சிதேந்திரங்கோட்டம் -நிலையமந்திரம் நிகேதனமாலயம் -கோயினகரந்தளி தேவாலயம் (214)

665. மல் படை சூது கல்விபயிலிடத்தின் பெயர் - மல்லும் படையுஞ்சூது மற்றுங் -
கல்வி பயிலிடங் கழக மாகும் (217)

666. வீட்டின் பெயர் - மனைநகர் சேர்பு வசதியகமில் -புரையுள் பாத்தி புக்கி லில்லம் – ப‌வன முறையுள் பதி மாடங்குல -மிடவகை யில்லிட மிவை வீடென்ப. (218)

667. சிற்றிலின் பெயர் - குரம்பை சிற்றில்குடில் குடிசையாகும். (219)

668. வீட்டிறப்பின் பெயர் - இறையும் வளவியு மிறப்பின் பெயரே.

669. முகட்டின் பெயர் - விடங்கமுங்கொடைக்கையு மஞ்சு முகடே.

670. கல்லூரியின் பெயர் - கல்வி சுற்று வாரி கல்லூரியாகும். (222)

671. வேயுளின் பெயர் - வேயுள் வேய்த லாகுமென்ப. (223)

672. தாழ்வாரத்தின் பெயர் - ஆரோகணஞ் சோபானந் தாழ்வாரமாகும். (224)

673. முற்றத்தின் பெயர் - முன்றி லங்கண முற்றமாகும். (225)

674. நிலாமுற்றத்தின் பெயர் - அரமிய நிலா முற்றமாகுமென்ப. (226)

675. தூம்புவாயின் பெயர் - அங்கணந்தூம்புவாய். (227)

676. பொல்லாநிலத்தின் பெயர் - சகதி பொல்லாநிலம். (228)

677. சலதாரையின் பெயர் - சுருங்கும் புழலுஞ் செலுஞ்சலதாரை. ()

678. மற்றுஞ்சலதாரையின் பெயர் - அங்கணமென்று மறையலாகும்.

679. நீர்தகைகதவின் பெயர் - ஓவென் கிளவி நீர்தகை கதவெனல்.

680. சாளரவாயிலின் பெயர் - சாலேகம் வாதாயனஞ்சால நுழையே சாலகங் காலதர் சாளர வாயில். (232)

681. மனைவாயிலின் பெயர் - துவாரம் வாரி தோட்டி யுவளகம் -புகுதி கோட்டி புதவுகடை தடம் -அருநெறிதூம்பு சிதமனைவாயிலாகும். (233)

682. க‌தவின் பெயர் - ஓபு கிளர்வி உதைபு நிகுத்தை - காப்பு வாரி கபாடம் தோட்டி. (234)

683. தாழின் பெயர் - காழுஞ் சீப்புங் கடிகையுந் தாழாம். (235)

684. துறப்பின் பெயர் - அள்ளுங் கொல்லும் பறலிகையும் வலிப்பற்றும் பூட்டும் வீகழுந் துறப்பெனப் புகல்வர். (236)

685. யானைக்கூடத்தின் பெயர் - ஆலயமோளியும் யானைக் கூடம். (237)

686. யானைதுயிலிடத்தின் பெயர் - சேவகஞ் சாலைசேக்கையது துயிலிடம். (238)

687. குதிரைப்பந்தியின் பெயர் - மந்திரஞ் சாலை பணை லாயமாப்பந்தி

688. தொழுவின் பெயர் - தொழுகுபட்டிதொறுவிடந் தொழுவே -
தோழம் வேலி யானிலையுஞ்சொல்லும். (240)

689. கற்படுத்ததரையின் பெயர் - குட்டிமம் படுத்தரையெனக் கூறுப.

690. சுவர்த்தலத்தின் பெயர் - உவமாநிலம்பித்திகை சுவர்த்தலமென்ப.

691. திண்ணையின் பெயர் - திட்டை குறடு தெற்றி வேதிகை - திண்ணை மண்ணீடென்டென்றுஞ் செப்புப.243

692. அடுக்களையின் பெயர் - அட்டில் மடைப்பள்ளி யடுக்களையாகும்.

693. அடுப்பின் பெயர் - காமரஞ்சுல்லி குமுதமுத் தான - மானபிறவு மடுப்பின்பெயரே. 245

694. அக்கினிட்டியின் பெயர் - ஞெகிழி யிந்தள நெருப்பிடு கலமே - யன‌ற்குவை யின்ன* அக்கினிட்டிப் பெயர். 246.
------
*அக்கினிட்டி தூபக்கால்.

695. கடைக்கொள்ளியின் பெயர் - அலாதமு மிராதமு ஞெகிழியுங் கடைக்கொள்ளி. 247

696. மற்றுங் கடைக்கொள்ளியின் பெயர் - முளரியு+ முற்கையு மொழியப்பெறுமே. 248
------
+ உற்கமு மொழியப் பெறுமே.

697. வேள்விகுண்டத்தின் பெயர் - வேதியு நித்தமும் வேள்விக் குண்டம். 249

698. மட்கலஞ்சுடுமிடத்தின் பெயர் - சுள்ளைசூளை மட்கலஞ்சுடுமிடம்.

699. உலைக்கலத்தின் பெயர் - உறவியென்ப துலைக்களமாகும். 251

700. உலைமூக்கின் பெயர் - குருகுசிலையுலை மூக்கெனக்கூறும். 252

701. கரியின் பெயர் - கந்தளு மிருந்தையு நல்லமுங் கரியே. 253

702. குதிரின் பெயர் - புகலென் கிளவி குதிரெனப் புகலும். 254

703. தவத்தோரிருக்குமிடத்தின் பெயர் - பாழி கரண்டை பள்ளி மட‌ங்குகை -
தாபதந் தவத்தோர்தம்மிட மாகும். 255

704. கூட்டின் பெயர் - குடம்பை கட்சி குலாயங் கூடே.256

705. பண்ணுங்கூட்டின் பெயர் - பஞ்சரங் குலாயம் பண்ணுங் கூடே.

706. கல்விபயில் களத்தின் பெயர் - கழகம் பட்டிமங் கல்விப்யில்களம்.

707. துயிலிடத்தின் பெயர் - ஆய்வை கிடக்கை ய‌ணைபரி யங்கம் பாய‌ல் சேக்கை பள்ளி தளிமஞ் - சாயறட்டந் தற்பஞ் ச‌யன - மம்பரஞ் சேர்விடந் துயிலிடமாகும். 259.

708. விலங்கு துயிலிடத்தின் பெயர் - பாழி பண்ணை பணை பட்டம் போத்துச் - சேக்கை விலங்கின் சேந்துயிலிடமே. 260

709. தோட்டத்தின் பெயர் - பாதவந் துடவை படப்பை தோட்டம்.

710. மற்றுந் தோட்டத்தின் பெயர் - ஆரமுந் தொடுவுமதன்பாற் படுமே.

711. வேலியின் பெயர் - வீர்தி காவல் வேலியின் பெயரே. 263

712. நுழைவாயிலின் பெயர் - நூழை சுருங்கை நுழைவாயிலாகும்.

713. பரணின் பெயர் - பணவை யிதணங்கழுது பரணே. 265

714. கவரி றுக்கியின் பெயர் - கடவை நடவை மடவை *கவரிறுக்கி.
-----
*கவரிறுக்கி கடவைமரவழி.

715. காதவழியின் பெயர் - காவத மென்பது காதவழியே. 267

716. கூப்பிடு தூரத்தின் பெயர் - குரோசமு மெல்லையுங் கூப்பிடு தூரம்.

717. யோசனையின் பெயர் - யோசனையென்ப புகையெனப் புகலுவர்.

718. கோழிப்பறவையளவின் பெயர் - கிரவுஞ் சங்கோழிப் பறவையளவாகும். 270

719.இடத்தின் பெயர் - வாசம் பாடு மாடு கடை சிறை - சாதனம் பக்க‌ந் தாபரம் வாய்புல - மருங்கு பாங்கு நத்தம் வைப்பு - மருதல மடிவயின் மதர்வு களம்வழி -
வளாக முழை பட்டி வகை திணை சூழல் - தலையிட மருகு தானங் கண்ணிடை -
சார்கால் பின்முத றாவளம் பாலுளி - பாழி நிலமில் பள்ளி ஞாங்கர் - நிலைபதி யுறையுணி சாதன முன்னர் - நியமம் வசதி நிகாய‌ந்தேயம் - புடையய‌ல் ம‌ராட்டங் கோட்டங் கீழ்மேல் - மடமிவை யெல்லா மிடமெனப் படுமே.271

720. மற்றும் இடத்தின் பெயர் - காடென்கிளவி யிடனுமுடைத்தே.

721. சபையின் பெயர் - சங்கமுங் குழுவுஞ் சமுகமு மவையுங் - கோட்ட்டியுந் தொகுதியுங் கணமுங் கூட்டமுஞ் - சமவாய மும்பலர் செறிசபைப்பெயரே. 273

722. நால்வகையரணின் பெயர் - மலையரண் காட்டரண் மதிலர ணீரர‌ண் -
வகையுறு சிறப்பி னால்வகை யரணே. 274

723. வன்பாலின் பெயர் - வன்பால் குறிஞ்சி பாலையுமாகும். 275

724. மென்பாலின் பெயர் - மென்பாலென் பெயர் மருதமேற்றே.

725. சமப்பாலின் பெயர் - முல்லையு நெய்தலு மொழிசமப்பாலே.

நான்காவது அவனி வகை முற்றிற்று.
**ஆக சூத்திரம் 725.
-------------

ஐந்தாவது : ஆடவர்வகை (726-1101)


726. பார்ப்பார் பெயர் - அறவோர் பூசுர ரறுதொழி லாள - ரிருபிறப்பாள ரெரிவளர்ப் போரே - யாதி வருணர் வேதிய ரந்தணர் - வேள்வி யாளர் மறையவர் விப்பிரர் -
மேற்குலத் தோர்முற் குலத்தோ ரையர் - வேதபாரகர் முப்புரி நூலோர் - தொழுகுலர் பார்ப்பார் தொல்பெயராகும் (1)

727. மற்றும் பார்ப்பார் பெயர் - காரூகபத்திய மாகவனீயம் - தக்கிணாக்கினிய மெனு முத்தீமரபினர். (2)

728. பிரமசாரியின் பெயர் - மறையோர் தமக்குள் வன்னி யெனும் பெயர் - பிரமசாரியின் பெயரென் றாகும் (3)

729. அந்தண ரறு தொழிலின் பெயர் - ஓத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்த -
லீத லேற்ற லென்றிவையாறு - மாதிக் காலத் தந்தணர் தொழிலே (4)

730. அந்தணர் மாலை கொடியின் பெயர் - மாலை கமல மறைகொடியாகும் (5)

731. அந்தணர்க்குரிய பொருளின் பெயர் – தருப்பையு முஞ்சியுஞ்சமித்து மவர்க்கே. (6)

732. துரோணாசாரியின் பெயர் - வேதக் கொடியோன் வின்னூ லாளன் -
பாரத்து வாசன் கும்ப சன்னே - துரோணாசாரியின்றொல்பெயராகும்

733. அரசரின் பெயர் - பார்த்திப ரிறைவர் காவலர் பதிகள் - கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர் - பொருநர் மன்னர் பூபாலர் நிருபர் - முதல் வரேந்தல் குரிசின்மகிபாலர் - தலைவ ரரசர் தம்பெய ராகும் (8)

734. எண்வகைமாலையின் பெயர் - வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி -
நொச்சி யுழிஞை தும்பை வாகையென் - றித் தொடையெட்டு மரசர்க்காமே

735. அரசர்கள்படை கொடியின் பெயர் – படையறு வகைத்தானை கொடிசிங்க மாகும் (10)

736. அறுவகைச் சக்கரவர்த்திகளின் பெயர் – அரிச்சந்திரனளன் முசுகுந்தன் புரூரவாச் - சகரன் கார்த்த வீரிய னென்றிவர் - அறுவகைச் சக்கர வர்த்திக ளென்ப (11)

737. வீட்டுமன் பெயர் – சந்தனுமுன் மைந்தன் றருதெய்வ விரதன் - கங்கை தநையன்வீட்டுமன்காங்கேய - னங்கவன் பிரம சாரியுமாகும் (12)

738. குருகுலத்தரசர் பெயர் - பௌரவர் கௌரவர் பாரத ரென்ப - குருகுல மன்னர் கொள்கைப் பெயரே (13)

739. தருமபுத்திரன் பெயர் - தரும மைந்தன் பொறையாள னுதிட்டிரன் - முரசுயர் கொடியோன் றருமன் பெயரே (14)

740. துரியோதனன் பெயர் - மன்னர் மன்னவன் வணங்கா முடியோன் - பன்னகமுயர்த்தோன் காந்தாரிசெம்மலென் - றின்னவை துரியோதனன்பெய ரென்ப (15)

741. கன்னன் பெயர் - வெங்கதிர் மதலைமிகுகொடை யாள - னங்கர்
கோமான் கவச குண்டலன் - கானீனன் கச்சைக் கொடியோன்பெயரே (16)

742. வீமன் பெயர் - வாயு மைந்தன் கதாயுதன் மாருதி - கோளரிக்
கொடியோ னிடும்பி கொழுநன் - விருகோ தரனிவை வீமன் பெயரே (17)

743. அருச்சுனன் பெயர் - பற்குனன் சிரீடி பார்த்தன் வீபற்சு - சவ்விய சாசி விசயன் றனஞ்சயன் - சுவேத வாகனன் சுரேந்திரன் மைந்தன் - கிருட்டிணன் கிருட்டிண சகாயன் மாதவி கொழுநன் - வானரக் கொடியோன் காண்டீபன் - ஆண்டொழின்மைந்தனருச்சுனன் பெயரே (18)

744. நகுலசகாதேவர் பெயர் - மத்திரை மைந்த ரச்சுவினி மதலைய - ரிரட்டையர் நகுல சகாதேவர் நாமம் (19)

745. சேரன் பெயர் - பூழி யனுதியன் கொங்கன் பொறையன் - வானவன் குட்டுவன்வானவரம்பன் - வில்லவன்குடநாடன்வஞ்சி வேந்தன் - கொல்லிச் சிலம்பன் கோதை கேரளன் - பொருநைத் துறைவன் போந்திகன் கண்ணியன் - மலையன் மலையமான் சேரன் பெயரே (20)

746. கொடிகுதிரையின் பெயர் - வில்கொடி புரவி பாடலமாமே (21)

747. சோழன் பெயர் - சென்னி வளவன் செம்பியன் கிள்ளி - பொன்னித் துறைவன் புலிக்கொடி யோன்மால் - கோழிவேந்த னேரி விற்ப - னாரின கண்ணிய னேரிய னபயன் - சூரியன்புனனாடன் சோழன்பெயரே (22)

748. மற்றுஞ்சோழன் பெயர் - கேசவ னென்பது மாங்கவன்மாற்றே

749. கொடிகுதிரையின் பெயர் - கொடியே வயப்புலி புரவி சோரம்

750. பாண்டியன் பெயர் - செழியன் கூடற்கோமான் றென்னவன் - வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் - கௌரியன் வேம்பின் கண்ணியன் கைதவன் - மலையப் பொருப்பன் வைகைத் துறைவன் - குமரிச்சேர்ப்பன் கோப்பாண்டியனே (25)

751. கொடிகுதிரையின் பெயர் - கயலே கொடிகன வட்டம்புரவி()

752. சளுக்குவேந்தர் பெயர் - வேள்புலவரசர் சளுக்குவேந்தர் (27)

753. குறுநிலமன்னர் பெயர் - குறும்பர் புரோசர் குறுநிலமன்னர் ()

754. மற்றுங்குறுநிலமன்னர் பெயர் - வேளிரென்பது மாங்கவர் மேற்றே (29)

755. வரைவின்றியாவருக்குங் கொடுக்குந்தலைவள்ள லெழுவர் பெயர் -
சகரன் காரி நளன்றுந்து மாரி - நிருதி செம்பியன் விராடன் றலைவள்ளல்

756. இரப்போர்க்குக் கொடுக்குமிடை வள்ள லெழுவர் பெயர் - அந்திமான் சிசுபாலனக் குரன் வக்கிரன் - சந்திமான் கன்னன் சந்தனிடை வள்ளல்

757. புகழ்வோருக்குக் கொடுக்குங்கடைவள்ள லெழுவர் பெயர் - பாரி யெழிலி நள்ளியாய் மலையன் - ஓரி பேக னிவர்கடை வள்ளல் (32)

758. அரசியலாறின் பெயர் - படைகுடி கூழமைச்சு நட்பரணென்ன - வுடைய வரசிய லாறென வுரைப்பர் (33)

759. அரசரறு வகைத் தானையின் பெயர் - வே எற்றானை வாட்டானை விற்றானை - தே எர்த்தானை பரித்தானை கரித்தானையென - வறுவகைத் தானை யரசர்க் கென்ப (34)

760. அரசியலாறின் பெயர் - அறநிலை யறமு மறநிலை யறமு - மறநிலைப் பொருளு மறநிலைப் பொருளு - மறநிலை யின்பமு மறநிலை யின்பமு - மறுவகைப்படுவ தரசிய லென்ப (35)

761. அறநிலையறத்தினியல் - வருணக் காப்பிற் பிறழா நெறிநிலை - பெறுதற் குரித்தாய்ப் பேணும் பெற்றி - யறநிலை யறமென் றறைந்தனர் புலவர் (36)

762. மறநிலையறத்தினியல் - ஆனிரை மீட்டலு மரும்பகை தெறுதலு - மானமில் செஞ்சோற் றுதவியி லோரை - யீனஞ்செய்தலு மறநிலையறமே (37)

763. அறநிலைப்பொருளியல் - நெறிவழி நின்று நெறியா லுழந்து - பெறுபொரு ளென்ப தறநிலைப் பொருளே (38)

764. மறநிலைப்பொருளியல் - அமருழந்து கொண்டவு மருந்திறை கொண்டவுந் - தவறுசெய் தீமையோர் தண்டப் பொருளுங் - கவர்சூதில் வென்றவு மறநிலைப் பொருளே (39)

765. அறநிலையினன்பவியல் - ஒத்த குலமு மொத்த வொழுக்கமு - மொத்த குணமு மொத்த வாயுளு - மத்தக வுடைய தறநிலை யின்பம் (40)

766. மறநிலையின்பவியல் - ஏறு தழுவ விலக்க மெய்தல் - கூறுபொருள் கொடுத்தல் வலிதிற் கோடன் - மாறுடை நிலையின் மறநிலையின்பம் (41)

767. அரசரறுதொழிலின் பெயர் - ஓதல் பொருதல் உலகுபுரத்தல் - ஈதல் வேட்டல் படைபயிறலறுதொழில்(42)

768. செங்கோல் வேந்தனெழுவகைநிலையின் பெயர் - அறம்பொருளின்ப மிம்மை மறுமை - திறம்பாப்புகழே மதிப்பென்றேழும் - பெருஞ்செங்கோலி னெறியின்றன்னிலை (43)

769. அரசர்க்கைம்பெருங் குழுவின் பெயர் - மந்திரியர் புரோகிதர்சேனா பதியர் - தந்திரத் தூதர் சாரண ரென்றிவ - ரந்தமி லரசர்க் கைம்பெருங் குழுவே. (44)

770. அரசர்க்கெண் வகைத்துணைவர் பெயர் - கரணத்தியல்லோருங்க ருமவதிகாரரு - மகன்ற சுற்றமுங் கடைகாப் பாளரு - நகர மாக்களு நனிபடைத்தலைவரு - மிவுளிமறவரும் யானை வீரரு - மரசர்க் கெண்பெருந் துணை வராகும். (45)

771. அரசர்க்கைவகை யுறுதிச் சுற்றத்தின் பெயர் - அடுத்தநட் பாளரு
மந்த ணாளரு - மடைத்தொழி லாளரு மருத்துவக் கலைஞரு - நிமித்திகப் புலவரு
நீணில வேந்தர்க் - குரைத்த மைம்பே ருறுதிச் சுற்றம். (46)

772. உரைத்த முப்பாலு முயர்குடை வேந்தர்க்குப் - - படைத்தப தினெண்டொழிலுடைப் பாலோர். (47)

773. வைசியர்பொதுப் பெயர் - தாளாளரிப்பர் தருமக் கிழவர் - வேளாளரிளங் கோக்கள் வைசியர் பொதுப் பெயர். (48)

774. வைசியர்முத்தொழிலின் பெயர் - கோக்களைக் காத்தலு மாப்பொருளீட்டலு - மேர்தொழின் முன்றும் வைசியர்தந் தொழிலே. (49)

775. கோவை சியர் பெயர் - ஒருகுல னாகித் தொழில்வேறு படுதலிற் றோழிறோறும் பகர்ந்த தொல் பெயர் கூறிற் - கோவலரிப்பர் கோவர்த் தனரெனச் - சீரிய பிறவுங் கோவை சியர்கே. (50)

776. தனவைசியர் பெயர் - நாய்க ரெட்டியர் வணிகர் பரதர் - தாமும் பிறவுந் தனவைசியர்க்கே. (51)

777. பூவைசியர் பெயர் - உழவர் மேழியர் காராளரிளங்கோ - புகல்பூபாலர் பூவைசியரே. (52)

778. பூவைசியரறுதொழிலின் பெயர் - ஓதல் வேட்ட லுபகார மன்றியும் -
வாணிகம் பசுக்காவ லுழவு தொழிலென்ப் - புகன்றவை யாறும் பூவைசியர் தொழிலே. (53)

779. வணிக ரெண்குணத்தின் பெயர் - தனிமையாற்றன் முனிவிலனாத - லிடனறிந் தொழுகல் பொழுதொடு புணர்த - லுறுவது தெரித லிறுவதஞ்சாமை - யீட்டல் பகுத்த லென்றிவை யெட்டும் - வாட்டமில் சிறப்பின் வணிகர்தங் குணமே. (54)

780. சூத்திரர் பெயர் - பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர்வளமையர் - மன்னுமுத் தொழிலர் மண்மகள் புதல்வ - ழுழவ ரேரினர் வாணர்கா ராளர் - வினைஞர் மேழியர் வேளாள ரென்றிவை - தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே. (55)

781. வேளாளர் பத்துவகைத் தொழிலின் பெயர் - ஆணைவழி நிற்றன்
மாண்வினை தொடங்கல் - கைக்கட னாற்றல் கரிகலத் தின்மை - யொக்கல் போற்ற லோவா முயற்சி - மன்னிறை தருத லொற்றுமை கோட - றிருந்திய வொழுக்கம் விருந்துபுறந் தருதல் - வேளாண் மாந்தர் செய்கை யீரைந்தே.

782. - குருவின் பெயர் - பட்டார கன்பதி பண்ணவன் பகவ - னத்தன்
றீர்த்த னாசா னடிகள் - புங்கவன் றலைவன் சாமி யீசன் - நாதனிறைவன்
கடவுள்கோமான் - குரவனையன் கோமான் குருவே. (57)

783. - ஆசாரியன் பெயர் - ஓசன் பணிக்க னுபாத்தி தேசிக - னாசா ரியன்பெய ராகு மென்ப. (58)

784. - ஆயுள் வேதியர் பெயர் - மாமாத் திரரே பிடகர்மருத்துவ, ராயுள் வேதியர்க்க பிதா னம்மே. (59)

785. - குயவர் பெயர் - குலாலர் வேட்கோவர் கும்பகாரர்குயவர். (60)

786. - உப்பமைப்போர் பெயர் - உமண ரளவ ருப்பருப் பமைப்போர்.

787. - கடிகைமாக்கள் பெயர் - பெருநம் பிகளே மங்கலப் பாடகர் - கடிகைமாக்க ளெட்டரு மாகும். (62)

788. - கம்மாளர் பெயர் - கம்மியர் யவன ரோவியர் வித்தகர் - கம்மாளர் தபதியர்பொதுப் பெயர் கட்டுரை. (63)

789. - கொல்லர் பெயர் - கருமர் மனுவர் கம்மியர் கொல்லர். (64)

790. - தச்சன் பெயர் - மரவினை யாளன் தபதி தச்சன். (65)

791. - தட்டார் பெயர் - செங்கொல்லர் பொன்வினை செய்வோர் தட்டார். (66)

792. - மற்றுந்தட்டார் பெயர் - அக்கசா லையர் சொன்ன காரருமாகும். (67)

793. - கன்னார் பெயர் - கன்னுவர் கஞ்ச காரர் கன்னார். (68)

794. - சிற்பாசாரியர் பெயர் - கல்வினையர் சிற்பா சாரியர்கற் றொழிலோர். (69)

795. - நரம்புக்கருவியாளர் பெயர் - குயிலுவர் நரப்புக் கருவிகொளற் குரியோர். (70)

796. - தோற்கருவியாளர் பெயர் - இயவர் தோற்கருவி யிசைக்கு மாக்கள். (71)

797. - மிலேச்சர் பெயர் - மிலேச்சராரியர். (72)

798. - சோனகர் பெயர் - யவனர் சோனகர். (73)

799. - சித்திரகாரர் பெயர் - ஓவியர் சித்திர கார ருமாகும். (74)

800. - முத்தங்கோப்பார் பெயர் - மணிகுயிற்றுநர் முத்தங் கோப்பாராகும். (75)

801. - வண்ணார் பெயர் - காழிய ரீரங்கொல்லியர் வண்ணார். (76)

802. - மற்றும் வண்ணார் பெயர் - ஏகாலியர் தூசரென்னலுமாகும். (77)

803. நாவிதன் பெயர் - பெருமஞ்சிகனே மயிர்வினைஞனாவிதன் (78)

804. மற்றும்நாவிதன் பெயர் - ஏனாதி சிரையன் மங்கவியனுமாகும்

805. செக்கான் பெயர் - சக்கிரிநந்தி செக்கானாகும் (80)

806. சங்கறுப்போர் பெயர் - ஒளிவளை போழ்நர் சங்கறுப்போரே ()

807. மீகாமன் பெயர் - நீகான் மாலுமி மரக்கலன் மீகாமன் (82)

808. ஆட்டுவாணிகன் பெயர் - சாபல னாட்டு வாணிகன் றன் பெயர் ()

809. ஊன்விலைஞர் பெயர் - சூன ரேயூன் விலைஞ ரென்ப (84)

810. தோல்வினைஞர் பெயர் - பறம்பர்தோல் வினைஞர் பெயர தாகும்

811. உறைகாரர் பெயர் - காரோடருறை காரர் (86)

812. துன்னர் பெயர் - குயினர் பொல்லர் துன்னராகும் (87)

813. கள்விலைஞர் பெயர் - பழையர் துவசர் படுவர்கள் விலைஞர் (88)

814. சண்டாளர் பெயர் - குணுங்கர் புலைஞர் கீழோ ரிழிஞர் - அணங்கு
சண்டாளர்க் கபிதானம்மே (89)

815. பாணர் பெயர் - சென்னியர் வைரியர் செயிரியர் மதங்க - ரின்னிசை காரர் பாணரென்ப (90)

816. பாண்டொழிற் கீழ்மக்கள் பெயர் - பண்ட ரோவர் பாண்டொழிற் கீழ்மக்கள் (91)

817. பாண்மகள் பெயர் - பாடினி விறலி பாட்டி மதங்கி - பாடன் மகடூஉபாண் மகள்பெயரே (92)

818. தேர்ப்பாகன் பெயர் - சாரதி சூதன் வலவன் றேர்ப்பாகன் (93)

819. யானைப்பாகர் பெயர் - ஆதோரணர் வாதுவர் யானைப்பாகர் (94)

820. பரிமாவடிப்போர் பெயர் - வாதுவா பரிமா வடிப்போர் பெயரே

821. மடையர் பெயர் - வாலுவர் கூவியர் பானசிகர் மடையர் (96)

822. மற்றுமடையர் பெயர் - பாசகரென்பது மாங்கவர்மேற்றே (97)

823. ஒற்றர் பெயர் - சாரர்வேயொற்றர் சாரணருமாகும் (98)

824. கூத்தர் பெயர் - நாடகர் நிருத்தர் நடரே கண்ணுளர் - கோடியர் வயிரியர் பொருநர் கூத்தர் (99)

825. நாடகக்கணிகையின் பெயர் - நாடகக்கணிகை நடியே கூத்தி ()

826. தமிழ்க்கூத்தர் பெயர் - வாயிலோர் தமிழ்க்கூத்தர் (101)

827. கழைக்கூத்தர் பெயர் - வேழம்பர் கழைக்கூத்தர் (102)

828. வெறியாட்டாளன் பெயர் - வேலன் முருகன் வெறியாட் டாளன் - றேவராளன் படிமத் தவனே (103)

829. தேவராட்டியின் பெயர் - சாலினி முதியாள் படிமத்தவளே - தேவராட்டி பெயரெனச் செப்புவர் (104)

830. தூதர் பெயர் - வினையுரைப் போர்வழி யுரைப்போ ருறுதியோ - ரனைய பண்புரைப் போருந் தூதர் (105)

831. கொலையாளன் பெயர் - காதகன் சாருகன் கடுங்கொலை யாளன்

832. வேதனை செய்வோன் பெயர் - வேதனை செய்வோன் பெயரே யருந்துதன் (107)

833. ஆண்பாலின் பெயர் - மானவன் மகனே யாடூஉ மைந்தன் - ஆடவன் புமான்காளை யாண்பாற் பெயரே (108)

834. ஆண்பாலிற்சிறந்தவன் பெயர் - நம்பியென்பது நாமச் சிறப்பே

835. முதல்வன் பெயர் - ஆதியு நாதனு முதல்வன்பெயரே (110)

836. உயர்ந்தோர் பெயர் - உலக மென்ப துயர்ந்தோர் மாட்டே (111)

837. பெருமையிற்சிறந்தோன் பெயர் - பெருமகன் மல்லன் றலைவன் பெருமான் - குரிசில் செம்மல்கோமான்கோவே - யாண்டகை பொருந னண்ணலோங்க - லேந்தன் மீளி விடலை பெருந்தகை (112)

838. எப்பொருட்குந் தலைவன் பெயர் - இறையேகாரண னியவு டோன்ற - லதிபமன் றலைவற் கபிதானம்மே (113)

839. மந்திரியர் பெயர் - எண்ணர் நூலோ ரமைச்சர் மந்திரியர் (114)

840. மந்திரித்தலைவர் பெயர் - முதுவர் குரவர் மூத்தோர் முன்னோ - ருழையோர் சூழ்வோர் நூல்வல் லோரே - யமைச்சர் தேர்ச்சித் துணைவரென்றாங் - கிசைத்தமந்திரத் தலைவர்க்கெய்தும் (115)

841. இவர் நட்பாளர் பெயர் - இப்பெயரவர் நட்பாளர்க் கெய்தும் ()

842. மந்திரி தந்திரியர் பெயர் - ஏனாதி காவிதி அமாத்திய ரெனும் பெயர் - ஆனா மந்திரி தந்திரிக்காகும் (117)

843. கருமத்தலைவன் பெயர் - வள்ளுவன் சாக்கை யெனும் பெயர் மன்னற் - குள்படு கருமத்தலைவற் கொன்றும் (118)

844. போர்த்தலைவர் பெயர் - பொருநரென்பபெரும்போர்த் தலைவர் (119)

845. பரிவாரத்தின்பயர் - பரியாள மென்பது பரிவா ரமாகும் (120)

846. ஓத்துரைப்போர் பெயர் - கணக்காயரோத் துரைப்போர் (121)

847. கலைவல்லோர் பெயர் - கவிஞர்கலைவல்லோர் (122)

848. புலமையோர் பெயர் - மேலோர் பண்டிதர் புலவ ராசிரியர் - புந்தியர் மேதையர் புலமையோரே (123)

849. அறிஞர் பெயர் - ஆன்றோர் சான்றோ ரறிஞர்தம் பெயரே (124)

850. பாவலர் பெயர் - கலைஞர்பாவலர் (125)

851. கற்றோர் பெயர் - விற்பனர்கற்றோர் (126)

852. நாவலர் பெயர் - கவிகள் புலவர் கவிஞர் நாவலர் (127)

853. மற்றும்நாவலர் பெயர் - சாரதி யெனவுஞ் சாடுவரெனவுஞ் - சூரியரெனவுஞ் சொல்லுவர் புலவர் (128)

854. மிகவல்லோர் பெயர் - விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர் (129)

855. மற்றுமிகவல்லோர் பெயர் - எழுத்தாளரென்பது மெய்துமப் பெயர்க்கே (130)

856. அயலோர் பெயர் - நொதுமலர் வம்பல ரயலோராகும் (131)

857. புதியோர் பெயர் - அதிதியர் வம்பலர் புதியோராகும் (132)

858. மூதறிவாளர் பெயர் - முதுவர் மூதறி வாளராகும் (133)

859. குறிக்கொள்வோர் பெயர் - பாரா யணரே குறிக்கொளாளர் ()

860. வல்லோன் பெயர் - வலவை வல்லவன் வல்லுநன் வல்லோன் ()

861. மாட்டார் பெயர் - வல்லார் மாட்டாதார் (136)

862. நடுச்சொல்வோன் பெயர் - கள்வனென்கிளவி கரியனடுச் சொல்வோன் (137)

863. கொடையுளோன் பெயர் - புரவல னீகை யாளன் றியாகி - யுபகாரி வேளாளன் கொடையுளோன்பெயரே (138)

864. வள்ளியோன் பெயர் - வள்ளல்கொடையோன் வள்ளியோன் பெயரே (139)

865. இரப்போர் பெயர் - இரவலர் பரிசிலாளர் யாசக ரிரப்போர் (140)

866. புகழ்வோர் பெயர் - பூகதர் மாகதர் வந்தியா பப்புவர் - வேதாளியர்புகழ் விளம்பு வோரே (141)

867. தூர்த்தர் பெயர் - விடரே காமுகர் தூர்த்தர் பெயரே (142)

868. காதலித்தோர் பெயர் - விழைந்தோ ரார்வலர் வேட்டோர் நயந்தோ - ராதரித்தோர் காதலித்தோர் பெயரே (143)

869. வல்லாளன் பெயர் - வயவன் மீளி வல்லா ளன்னே (144)

870. திண்ணியோன் பெயர் - வியவன் வண்டன் வீரன் மிண்டன் - விறலோன் ப1ொருநன் விடலை மள்ளன் - றிறலோன் பண்ணவன் றிண்ணியோன் பெயரே. (145)

871. படைவீரர் பெயர் - மறவர் கூளியர் மள்ளர் பொருந - ரிகலர் செருநர் வாளாளர் வாளுழவர் - படரே வீரர் படையாளராகும் (146)

872. கீழோர் பெயர் - பல்லவர் கயவர் பதகர் நீசர் - புல்லர் பூரியர் புள்ளுவர் கையர் - கலரே தீயோர் கண்டகர் மூடர் - அசட ரதன்மர் முசுண்டர் சுமடர் - வெளிற ரற்பர் கீழோர் பெயரே (147)

873. அறிவிலான் பெயர் - முழுமகன் சிதடன் மூடன் பேதை - யிழுதை யஞ்ஞை யாதனேழை - மடமகன் குதலை யறிவிலான் பெயரே(148)

874. அடிமையின் பெயர் - தொழும்பு தொண்டு தொத்துத் தாதர் - தொறுவே விருத்தி யடிமையாகும் (149)

875. மற்றும்அடிமையின் பெயர் - சேடர் குணக ரென்பதுஞ் செப்பும்

876. கள்வர் பெயர் - கரவடர் சோரர் புரையோர் கட்டோர் - கரவர் பட்டிகர் திருடர் கள்வர் (151)

877. அச்சமுடையோன் பெயர் - பீருவும் சிதனும் பீதனுங் கரிதனுங் - காதானு மச்ச முடையோன் கட்டுரை (152)

878. வஞ்சனையாளன் பெயர் மாய னிகாதன் வஞ்சனையாளன் (153)

879. வேகமுடையோன் பெயர் - கவனன் சவனன் வேகமுடையோன் (154)

880. கடினன் பெயர் - கடினன்பெயரது கற்கசனாகும் (155)

881. வழிச்செல்வோன் பெயர் - பதிகனும் பாந்தனும் படர்வழிச் செல்வோன் (156)

882. மற்றும்வழிச்செல்வோன் பெயர் - வியவ னென்பதுமாங்கவன் மேற்றே (157)

883. ஏவுவான் பெயர் - வியவ னேவுவான் றன்பெயராகும் (158)

884. தொழில்செய்வோர் பெயர் - தொழுவர் கம்மியர் தொழில்செய் வோரே (159)

885. தரித்திரர் பெயர் - இல்லோ ராதுலர் வறியோ ரேழையர் - நல்கூர்ந் தோரே பேதையர் தரித்திரர் (160)

886. மற்றும்தரித்திரர் பெயர் - அகிஞ்சனரென்பது மப் பெயர்கிளத்துப

887. வாயில்காப்போர் பெயர் - கடைகாவலர் வாயில் காப்போர் பெயரே (162)

888. தசைதின்போன் பெயர் - தசைநனிதின்போன் சாடிலி கூடிலி

889. நோயுற்றொழிந்தோன் பெயர் - உல்லாப னோயுற்றொழிந்தோன் பெயரே (164)

890. மனோகரன் பெயர் - சல்லாபன் மனோகரன் றன்பெயராகும் (163)

891. புகழாளன் பெயர் - இயவுள் புகழாளன் (166)

892. குலமுள்ளொர் பெயர் - குலிஞ ரென்ப குலமுள் ளோரே (167)

893. உரியோன் பெயர் - கிழவனுரியோன் (168)

894. நிருவாணியின் பெயர் - நக்கனிருவாணி (169)

895. கூர்மையில்லோன் பெயர் - மந்தன் கூர்மை யில்லோன்பெயரே

896. நாகரிகர் பெயர் - சதுரர் காமுகர் நாகரிகராகும் (171)

897. கருணையுள்ளோன் பெயர் - கருணை யுள்ளோன்கா ருண்ணியனாகும் (172)

898. வரையாதுகொடுப்போர் பெயர் - வரையாது கொடுப்போர் வள்ளியோராகும் (173)

899. ஓர்குடியிற்கோண்டோன் பெயர் - சகல னோர் குடியிற் கொண்டோனாகும் (174)

900. சுற்றத்தின் பெயர் - கேளே யொக்கல் கிளையே பந்தங் - கூளிகடும்பு குடும்பஞ்சுற்றம் (175)

901. உறவின் பெயர் - நண்பு தமருரியர் நட்புநட்டோ - ரென்றிவை பற்றினருறவென விசைப்பர் (176)

902. தங்குடித்தமரின் பெயர் - தாயத்தார் ஞாதியர் தங்குடித்தமரே (177)

903. ஒருகுடியின் பெயர் - ஒருகுடியென்பது தரப்பிரிவினர் (178)

904. வழித்தோன்றலின் பெயர் - வழியோன்வழித்தோன்றலாகும் (179)

905. பாட்டன் பெயர் - தாதைதன் றாதைமூதாதை பாட்டன் (180)

906. மற்றும்பாட்டன் பெயர் - பிதாமக னென்றும் பேசப்படுமே()

907. ஈன்றோன் பெயர் - தாதையு மத்தனுந் தந்தையும்பிதாவு மையனு மீன்றோன் றன்பெயராகும் (182)

908. மாமன் பெயர் - மாதுல னம்மான் மாமன்பெயரே (183)

909. மருமகன் பெயர் - மருமான் பிறங்கடை யோங்கல் மருமகன் ()

910. மூத்தோன் பெயர் - அண்ண றமையன் றம்முன்றோன்றன் - முன்னவன் சேட்டன் மூத்தோன்பெயரே (185)

911. இளையோன் பெயர் - பின்னவ னிளவல் பின்றோன்றல் கனிட்ட னெம்பியு மனுசனு மிளையோன் பெயரே (186)

912. தாயின் பெயர் - அம்மை யன்னையா யவ்வைதம்மனை - தருமோ
யீன்றா டன்னைதா யென்ப (187)

913. முன்பிறந்தாள் பெயர் - அன்னை செவிலி தௌவை சேட்டை முன்னவள் மூத்தாண் முன்பிறந் தாள் பெயர் (188)

914. பின்பிறந்தாள் பெயர் - பின்னை கையை தங்கைபின் பிறந்தாள்.

915. மைத்துனன் பெயர் - சம்மதன் மைத்துனன் றன்பெயராகும்.

916. மணவாளன் பெயர் - கணவன் கொழுநன் காந்தன் கேள்வன் மணமகன் காதலன் வல்லவ னுரியோன் - பதிதவன் கொண்கன் பத்தா துணைவன் - றலைமகன்றலைவன் மணவாளன் றன் பெயர் . (191)

917. மற்றுமணவாளன் பெயர் - கண்டன்வேட்டோன் வந்துழிக்கொளலே (192)

918. மணவாளனுக்குரிய பெயர் - நாயகனென்பது நயந்தசொல்லென்ப (193)

919. மணமகள் பெயர் - மணமக ளுரிமை வல்லவி தாரந் - துணைவி வாழ்க்கை துணைமண வாட்டி - பாரியில்லாள் பன்னி லிருந்தனை - யில்லவள் குடும்பினி களமே காந்தை - யின்மனை காதலி நாயகி பெண் பெயர் (194)

920. மைந்தன் பெயர் - சந்ததி மதலை தநையன் காதலன் - நந்தனன் சிறுவன் மெய்யன் றோன்றல் - செம்மன் முளைசுதன் கால்பொருள் புதல்வன் - புத்திரன் பிறங்கடை எச்சஞ்சேய் மைந்தன் (195)

921. மகள் பெயர் - புதல்வி சிறுமி புத்திரி தநையை - சுதை யையைபந் தனைமகள் பெயர் சொல்லும் (196)

922. பிள்ளையின் பெயர் - குழவியுங் குழந்தையு மகவும் பிள்ளை (197)

923. மகன்மகள்என்னும் இருபாற்குப் பொதுப் பெயர் - எச்ச மென்ப திருபாற்குமுரித்தே (198)

924. பாலர் பெயர் - மகார் குறு மாக்கள் சிறாரிவை பாலர் (199)

925. இளைஞன் பெயர் - மழலன் குமரன் மைந்தன் சேட - னிளவன் முருகன் காளையிளைஞனென்ப (200)

926. மற்றுமிளைஞன் பெயர் ஆடவ னுவாவு மப் பெயர்க் குரித்தே (201)

927. தோழன் பெயர் - சிலத னெலுவன் சேட னண்பன் - பாங்கன் சகாயன் றோழன்பெயரே (202)

928. தோழன்முன்னிலைப் பெயர் - ஏடாவென்ப தோழன்முன்னிலைப் பெயர் (203)

929. சங்காத்தியின் பெயர் - அருகன் சம்மத னண்பன் சங்காத்தி (204)

930. தலைமைப்பெண் பெயர் - குரத்தி பெருமாட்டி யாசா ளிறைவி - கோமகடலைவி யடிக ளையை - சாமி யத்தை தலைமைப் பெண் பெயர் (205)

931. பெண்மகளிற்சிறந்தவள் பெயர் - நங்கை யென்பது நாமச் சிறப்பே (206)

932. அருந்தவப்பெண் பெயர் - பைம்மையுங் கௌந்தியு மருந்தவப் பெண் பெயர் (207)

933. தோழியின் பெயர் - சிலதி பாங்கி சேடி யிணங்கி - துணைவி யிகுளை சகியே தோழி (208)

934. தோழிமுன்னிலைப் பெயர் - ஏடியேலா தோழி முன்னிலைப் பெயர்

935. ஏவலிற்சிறந்தவள் பெயர் - சேடி யேவலிற் சிறந்தவள்பெயரே ()

936. கைத்தாயின் பெயர் - தாதி செவிலி கோடாய் பின்னன - காத‌லி ன‌மர்ந்த கைத்தாய் பெயரே. 211

937. கன்னியின் பெயர் - குமரி யழிவில் கன்னியைக் கூறும். 212

938. கோலம்புனை பெண்ணின் பெயர் - கோலம்புனைபெண் வண்ண‌ மகளென்ப. 213

939. நால்வகைப்பெண் பருவத்தின் பெயர் - வாலை தருணி பிரவிடை விருத்தையென் - றாய மடந்தையார்க் காம்பருவ நான்கே. 214

940 . முதியாள் பெயர் - விருத்தை மூத்தாண் முதியாள் பெயரே. 215

941 .எழுவகைப்பெண் பருவத்தின் பெயர் - பேதை பெதும்பை மங்கை மடந்தை - யரிவை தெரிவை பேரிளம் பெண்ணென - மற்றிவை யேழும் பொற்றொடி மாதர்க் - குருவம் பற்றிய பருவ மாண்டேழொடு - பன்னொன்று ப‌ன்மூன்று ப‌த்தொன்பஃதோ - டையைந்து முப்பத்தொன்றெண்ணைந்தே. 216

942 . மலடியின் பெயர் - மலடி மைம்மை வந்தி யாகும். 217

943. கலன்கழிமகளிர் பெயர் - கைம்மை கைனி விதவை கைம்பெ - ணம‌ங்கிலி கலன்கழி மகளிர்பெயரே. 218

944.பொதுமகளிர் பெயர் - விலைமகள் சூளை வேசி பரத்தை - கணிகை பொதுமகள் கட்டுரை யென்ப. 219

945.பெண்ணின் பெயர் - அரிவை யங்கனை மடந்தையாடவ - டெரிவை
மானினி சிறுமி யிளம்பிடி - சுரிகுழன் மகடூஉ காந்தை மாது - வனிதை
நல்லாள் காரிகை தளிரிய - லணங்கு தையல் பெதும்பை பேதை - மடந்தை
மங்கை மாயோள் பாவையென - விள‌ம்பிய பிணாவும் பெண் பெயர் மேற்றே.

946. மித்திரர் பெயர் - ஒல்லுநர் துன்னுந ரொன்றுநர் நேர்ந்தார் - நண்ணுநர் ந‌ள்ளுநர் நயந்தோர்மேவினர், சேர்ந்தோர் மித்திரர் பெயரெனச் செப்புவர்.221

947. மாற்றலர் பெயர் - ஒல்லார் நோனா ரொன்றலர் நண்ணலர், - திருந்தலர் மேவலர் செற்றார் செறு*ந் - ரின்னார் கருதல **ணலர் நள்ளார், - பொருந்தலர் பற்றலர் புல்லார் சேரார் - தெவ்வ ரடையலர் தரியலர் தெறுந, - ரொட்டார்பகைஞர ரிகளென் றுரைக்கு - மிப் பெயர்பலவு மாற்றலர் பெயரே.

948. ஆடவர்கூட்டத்தின் பெயர் - சவையும் பண்ணையுஞ் சங்கமுங்
கோட்டியு - மவையு மாடவ‌ர் கூட்டமென் றாகும். 223

949. மாதர் கூட்ட‌த்தின் பெயர் - ஓரையும் பண்ணையு மாயமுங் குழுவுந் - தேறுங் காலைத் தெரிவையர் கூட்டம். 224

950. மகளிர் விளையாட்டின் பெயர் - ஓரை பண்ணை கெடவரல் பொய்த - லுண்டாட்டுக் கிரீடையுப்புக் கேளி, - வண்டலங் கோதை மகளிர் விளையாட்டே. 225

951. மக்கட்பரப்பின் பெயர் - மன்பதை பைஞீலி மக்கட்பரப்பே.

952. மக்கட்பொதுப் பெயர் - மாந்தர் மானவர் மானிடர் மன்னவர் மனிதர் நரரே மக்கட்பொதுப் பெயரே. 227

953. குலத்தின் பெயர் - குடி திணை விழுப்ப மொழுக்கங் குலமெனல்.

954. குலமுள்ளோன் பெயர் - குலமுள்ளோன் பெயர்குலீனனாகும்.

955. வேட்டோர் பெயர் - நயந்தோர்காதலர் நசையுநர் நயவர் - விழைந்தோ ரார்வலர் வேட்டோர் பெயரே.230

956. குருடன் பெயர் - அந்தகன் சிதடன் குருட னாகும். 231

957. முடவன் பெயர் - பங்கு சூனியன் முடவனாகும். 232

958. குறளன் பெயர் - குஞ்சன் வாமனன் குறளன் பெயரே.233

959. மற்றும்குறளன் பெயர் - சிந்தனென்றுஞ் செப்புவரதற்கே.

960. செவிடன் பெயர் - வதிரன் செவிடன். 235

961. ஊமையின் பெயர் - மூகையு மூங்கையு மூமையாகும். 236

962. கூனன் பெயர் - கோணன் கூனனாமெனக் கூறுவர். 237

963. அலியின் பெயர் - பேட னபுஞ்சகன் பேதை பெண்டக - னாகுஞ் சண்டலிப் பெயராகும். 238

964. கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் பெயர் - கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் குண்டகன். 239

965. விதவைபெற்றமதலையின் பெயர் - விதவை பயந்த மதலை கோள‌கன். 240

966. கன்னியிற்பிறந்தோன் பெயர் - கன்னியிற் பிறந்தோன் கானீனனாகும். 241

967. நாற்குலத்தில் உயர்ந்தவாணு மிழிந்தபெண்ணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - உயர்ந்த வாணினு மிழிந்த பெண்ணினும் - வியந்த கூட்டத் தவரநுலோமர். 242

968. உய‌ர்ந்தபெண்ணு மிழிந்தவாணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - உய‌ர்ந்த பெண்ணிணு மிழிந்தவாணிணும் - வியந்த கூட்டத் தவர்பிரதிலோமர். 243

969. அநுலோமத்தாணு பிரதிலோமப்பெண்ணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - அநுலோம கூட்டத் தாணிலு மவ்வழி - பிரதிலோம குலப் பெண்ணினு மிக்க -

970. அநுலோமப் பெண்ணும் பிரதிலோமத்தாணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - பிரதிலோமர் குலத் தாணினும் பின்ன - ரநுலோமர் குலப் பெண்ணினு மவ்வழி - வியந்த கூட்டத் தவர் விராத்தியராகும் (245)

971. பேடியி லக்கணவகை - பேடி யிலக்கணம் பேசுங்காலை - நச்சுப்பேசியு நல்லிசை யோர்ந்து - மச்சுமாறியு மாண் பெண்ணாகியுங் - கைத்தல மொன்றைக்கடுக வீசியு - மத்தகத் தொருகை மாண்புற வைத்தும் - விலங்கியு மிதித்தும் விழிவே றாகியுந் - துளங்கித் துளங்கிச் சுழன்று திரிந்து - நக்கு நாணியு நடம்பல பயின்றும் - பக்கம் பார்த்தும் பதுங்கித் திரிந்துங் - காரணமின்றிக் கதம்பல கொண்டும் - வாரணி கொங்கையை வலிய நலிந்து - மசக்கி யுமழுது மயர்ந்தரு வருத்துங் - குறுக்கியுங் கூட்டியுங் கூர்விழி கொண்டும் - மருங்கிற் பாணியைவைத்தும்; வாங்கியு - மிரங்கிப் பேசியு மெல்லெ லென்று மின்னன பிறவு மியற்றுத லியல்பே (246)

972. கருவின் பெயர் - சினையும் பீளுஞ்சூலும் வயாவுங் - கருவின் பெயரே கருப்பமு மாகும் (247)

973. தோலின் பெயர் - உரிவை யிதளே யொலியல் புறணி - சருமம் வடகம் போர்வை புச்சை - துருத்தி துவக்குக் கிருத்திமந் தோலே (248)

974. இரத்தத்தின் பெயர் - செந்நீர்சோரிநெய்த்தோர் செம்பால் - புண்ணீர் சுடுவல் புலானீர் சோணித முதிரங் குருதி கறையிரத்தப் பெயர் (249)

975. ஊனின் பெயர் - தசையுந் தூவுந் தடியும்விடக்கும் - புலையும் பிசிதமும் புலாலும் புண்ணும் புரணியும் வள்ளுரமும் புலவுமூன் பெயர் (250)

976. மற்றும்ஊனின் பெயர் - இற்றி யிறைச்சி யென்பவுமாகும் ()

977. பிச்சின் பெயர் - ஊழை மூளை மாசு பிச்சென்ப (252)

978. கருப்பம்பயிலிடத்தின் பெயர் - பைசந்தி பைங்குழி கருப்பம் பயிலிடம் (253)

979. ஈரலின் பெயர் - ஈருளீரல் (254)

980. செவ்வீரலின் பெயர் - இரத்தஞ் செவ்வீரல் (255)

981. விழுக்கின் பெயர் - விளரு நிணமுங் கொழுப்பும் விழுக்கென்ப

982. மற்றும்விழுக்கின் பெயர் - நெய்யும் வழும்பு நிகழ்த்தப்பெறுமே

983. வழும்பின் பெயர் - வழுக்கு வழும்பாம் (258)

984. மலக்குரம்பையின் பெயர் - குடர்மலக்குரம்பை (259)

985. மெய்ம்மலத்தின் பெயர் - மெய்ம் மலமா செனல் (260)

986. உண்மலத்தின் பெயர் - உண்மலம் உபமலம் (261)

987. இந்திரியத்தின் பெயர் - கந்தஞ் சுக்கிலமிந்திரியமாகும் (262)

988. குலையின் பெயர் - உடலுண்மூகை குலை குண்டியுமாகும். 263

989. முடையின் பெயர் - பூதி யூழ்த்த றசை புலவுமுடை யென்ப. *264

990. சோணிதத்தின் பெயர் - செம்பால் சோணிதம். 265

991. நரம்பின் பெயர் - நாடியுஞ் சிரையு மேதையு நரம்பே. 266

992. எலும்பின் பெயர் - என்பத்தி யங்கங் களேவர மெலும்பே. *267

993. கழியுடலின்முழுவெலும்பின் பெயர் - கழியுடன் முழுவெலும்பு கங்காள மாகும். 268

994. உடம்பின் பெயர் - ஆக‌ங் காத்திரம் யாக்கைதனுவுடல் - பூதியம் புணர்வு புகல்வியம் விம்மிதத் - தேக மங்க மூர்த்தஞ் சரீரம் - விக்கிரகம் பிண்டமேனிதொக்குக் - காயங்குரம்பை கடமெய் சடம்புரம் - பூட்சி தாபரம் புற்கல முடம்பே. 269

995. வடிவத்தின் பெயர் - படிவ முருவஞ் சட்டகமேனி - வ‌ண்ணமுமாகும் வடிவின்பெயரே. 270

996. காலின் பெயர் - பதமே பாதஞ் சரணங் கழல்கால். 271

997. மற்றுங்காலின் பெயர் - சலனடி யங்கிரி தாளு மாகும். 272

998. கரட்டின் பெயர் - பரடே மிசைத்திரள் காலடி கரடே. 273

999. கணைக்காலின் பெயர் - சங்கங்கணைக்கால்.274

1000. முழந்தாளின் பெயர் - சானுமுழந்தாள். 275

1001. தொடையின் பெயர் - குறங்கு வாமங் கவானூ ருத்தொடை.

1002. அல்குலின் பெயர் - கடிதட நித‌ம்ப மரையே யல்குல். 277

1003. மற்றும் அல்குலின் பெயர் - வடிவகலு பத்தமு மாகுமென்ப.

1004. பிருட்டத்தின் பெயர் - பிருட்டஞ் சகனங் குய்யம்பாயுரு. 279.

1005. ஆண்குறியின் பெயர் - இலிங்கமுங் கோசமு மாண்குறி யாகும்.

1006. பெண்குறியின் பெயர் - யோனியும் பகமும் பெண்குறியாகும்.

1007. மற்றும்பெண்குறியின் பெயர் - பூப்பகமும் பொன்னுஞ் சின்ன‌முமாகும். 282

1008. இடையின் பெயர் - மத்திம நுசுப்பிடை மருங்கு மாகும். 283

1009. மருங்கின்பக்கத்தின் பெயர் - ஒக்கலைமருங்கின் பக்க மாகும். 284

1010. கொப்பூழின் பெயர் - இதலை யிலைஞ்சி நாபியுந்தி - போகில்கொப்பூ ழாகு மென்ப. 285

1011. மலத்தின் பெயர் - அமேத்தியமலமாம். 286

1012. சிறுநீரின் பெயர் - அமரி சிறுநீ ருவரியுமாகும். 287

1013. வயிற்றின் பெயர் - குக்கி துத்த மடிவயி னுதர - மோடு சடரம‌ கடும் வயிறே. 288

1014. மார்பின் பெயர் - அகலமுமுரமுமாகமுமார்பே (289)

1015. மற்றும்பார்பின் பெயர் - மருமமு நெஞ்சு மற்ற தன்பெயரே ()

1016. முலையின் பெயர் - பயோதரஞ் சுவர்க்கங் குருக்கணம்ம - நகிலந்
தனங்குயஞ் சேக்கை கொம்மை - கொங்கை முலையெனக் கூறப்படுமே (291)

1017. மற்றும்முலையின் பெயர் - பறம்பென் றுரைப்பது மப் பெயர்ப்
பாலே (292)

1018. முலைக்கண்ணின் பெயர் - சிலீமுகஞ் சூசுக மீற்று முலைக்கண்ணே (293)

1019. கையின் பெயர் - கரமத்தம் பாணி தோள்கைத் தலமுங்கையே

1020. முழங்கையின் பெயர் - கூர்ப்பரமுழங்கை (295)

1021. மணிக்கட்டின் பெயர் - சிலுத்தமணிக்கட்டே (296)

1022. உள்ளங்கையின் பெயர் - அங்கை குடங்கை யகங்கை யுள்ளங்கை. (297)

1023. விரலின் பெயர் - அங்குலிவிரலாம் (298)

1024. நகத்தின் பெயர் - உகிர்நகமாகும் - (299)

1025. தோளின் பெயர் - புயமு மொய்ம்பும் வாகுவுந்தோளே (300)

1026. கமுக்கட்டின் பெயர் - வாகு மூலங் கைம்மூலங் கமுக்கட்டே ()

1027. தோண்மேலின் பெயர் - சுவலுஞ்செகிலுநிகலமுந்தோண்மேல்

1028. கழுத்தின் பெயர் - கிரீவங் களமே கில்லங் கந்தரங் - கண்ட மிடறுங் கழுத்தாகும்மே (303)

1029. முதுகின் பெயர் - வெரிந்புறமபரம் வெந்நுமுதுகே (304)

1030. பிடர்த்தலையின் பெயர் - சுவலும் பிடரு மெருத்தமுஞ்சிறு புறமுங் - கயிலு நிமமும் பிடர்த்தலை யாகும் (305)

1031. கதுப்பின் பெயர் - கபோலங் கொடிறனு கவுள்கதுப் பாகும் (306)

1032. மோவாயின் பெயர் - தாடிகட்ட மோவாயாகும் (307)

1033. மற்றும்மோவாயின் பெயர் - சுவுகந்தாழ்வா யாமெனச்செப்புவர்

1034. முகத்தின் பெயர் - ஆனனம் வதனந் துண்டம்வத் திரமுகம் (309)

1035. உதட்டின் பெயர் - பாலிகை முத்தம் வாயித ழுதடே (310)

1036. மேலிதழின் பெயர் - மேலித ழோட்டம் (311)

1037. கீழிதழின் பெயர் - கீழிதழதரம் (312)

1038. அண்ணத்தின் பெயர் - அணரியண்ணம் (313)

1039. பல்லின் பெயர் - எயிறுந் தந்தமுந் தசனமும்பல்லே (314)

1040. மற்றும்பல்லின் பெயர் - முறுவலு நகையு மூரலுமாகும் (315)

1041. நகுதலின் பெயர் - நகுதற்கு மிவையே நாமமென்ப (316)

1042. எயிற்றின் பெயர் - எயிற்றின்பெயரே விளிம்பென வியம்பும் (317)

1043. நாக்கின் பெயர் - நாவே தாலுத்தாரஞ் சிகுவை - நாக்கா மெனவே நவிலப்படுமே (318)

1044. வாயின் பெயர் - வைப்புப் புலனிடமும் பாங்கரும் வாயெனல்

1045. உண்மிடற்றின் பெயர் - அணலுண் மிடறே (319)

1046. உண்ணாக்கின் பெயர் - அண்ணமுண்ணாக்கே (320)

1047. மற்றுமுண்ணாக்கின் பெயர் - சிறுநாக்கென்றுசெப்பலு மாகும்

1048. கீழ்வாய்ப்புறத்தின் பெயர் - அணல்கீழ் வாய்ப்புறம் (322)

1049. மேல்வாயின் பெயர் - அணரி யண்ண மேல்வாய்ப்புறமே (323)

1050. மற்றும்மேல்வாய்ப்புறத்தின் பெயர் - அணலே மேல்வா யாகலு முரித்தே (324)

1051. மூக்கின் பெயர் - துண்டமு நாசியுங் கோணமு மூக்கே (325)

1052. செவியின் பெயர் - காது கேள்வி யள்ளே சுருதி - கன்னஞ் செவியே சோத்திரமாகும் (326)

1053. கண்ணின் பெயர் - திட்டி விலோசன நேத்திர நயனந் - தாரையம்பகம் விழியே நாட்ட - மக்க நோக்குச் சக்குத் திருட்டி - பார்வை கோவி னன்ன பலவுங் கண்ணே (327)

1054. கண்மணியின் பெயர் - தாரை கண்மணி (328)

1055. கண்ணிமையின் பெயர் - விளிம்பிமை யாகும் (329)

1056. புருவத்தின் பெயர் - புரூரம் பிருகுடி நுதலிவை புருவம் (330)

1057. மற்றும் புருவத்தின் பெயர் - புதலும் புகுடியும் பீருவுமாகும் ()

1058. கழுத்தின் பின்குழியின் பெயர் - பனிச்சை சூறை கழுத்தின்பின்குழி (332)

1059. தொண்டைக்குழியின் பெயர் - தொண்டை கில்லந் தொண்டைக் குழியே (333)

1060. நெற்றியின் பெயர் - நெற்றி முண்டகமத்தக நுதலே - யளிகம்பாலங் குளமில லாடம் (334)

1061. தலையின் பெயர் - சிரமுங் கம்முஞ் சேகரமுஞ் சென்னியு - முடியு முத்த மாங்கமு நவிரமும் - உச்சியுஞ் சிகரமு முண்ட மத்தகமும் - மூர்த்தமு முவ்வியுந்தலையென மொழிப (335)

1062. குடுமியின் பெயர் - சிமிலஞ் சிக்கஞ்சிகை சிமிகுடுமி (336)

1063. உச்சியின் பெயர் - நவிரஞ்சுடிகை சூழி யுச்சி (337)

1064. ஆண்பான்மயிரின் பெயர் - குஞ்சிபித்தை யோரிகுழல்கார் - பங்கி
கேசஞ் சுரியல் கதுப்புத் - தளைநவிர் பிச்சஞ்சிகை யாண்பான் மயிர் (338)

1065. பெண்பான்மயிரின் பெயர் - குழலே கூழைகுந்தளங்கூந்த - லளக மோதி யைம்பால் கதுப்புச் - சுருளொடு விலோதம் பரிசாரங் கேசஞ் - சுரியல் மராட்டங் கோதை குருளென் - றினையபெண்பான் மயிர் குரல் கூரல் (339)

1066. ஆண்மயிர்க்கும் பெண்மயிர்க்கும் பொதுப் பெயர் - கதுப்பே கேசஞ் சுரியல் குழலாண் - மயிர்க்கும் பெண்பான் மயிர்க்கு முரித்தே (340)

1067. பெண்மயிர்முடியின் பெயர் - கொப்புமிஞ்சிகங் கொண்டை தம்மில - முச்சிசிகழிகைபெண் மயிர்முடிப் பெயர் (341)

1068. மயிர்க்குழற்சியின் பெயர் - குந்தளமளகம் விலோதமயிர்க்குழற்சி

1069. குழற்கொத்தின்பெயயர் - குந்தளமென்பது குழற்கொத்தாகும்

1070. ஐம்பான்முடியின் பெயர் - கூந்தன் முடியே குழலொடு தொங்கல் - வாய்ந்த பனிச்சை வார்மயிர்ச் சுருளென் - றேந்திழை யார்முடிக்கியன்ற வைம்பாலே (344)

1071. பிறமயிரின் பெயர் - ஓரி பங்கி யுளையே யுரோமங் - கேசமராட்டம் பிறமயிருங் கிளத்துப (345)

1072. செறிமயிர்ப்பரப்பின் பெயர் - சிரோந்தமு முரோமமுஞ் செறிமயிர்ப் பரப்பே (346)

1073. ஆண்பான் மயிர்முடியின் பெயர் - பின்னகம் பந்த முடிமுச்சி கொண்டை - மன்னுஞ் சிகழிகை குழல்சுடிகை மௌலி - யின்னவை யாண்பான் மயிர்முடிக் கெய்தும் (347)

1074. சடையின் பெயர் - குடிலம் வேணி கோடீரஞ் சடிலஞ் - சடையின்பெயரே பின்னலுஞ் சாற்றும் (348)

1075. தலைமயிரின் பெயர் - தலைமயிர் சிரோருகம் (349)

1076. நரைமயிரின் பெயர் - சரைநரை யாகும் (350)

1077. மற்றுநரைமயிரின் பெயர் - பலிதமென்பது நரைமயிர்ப்பண்பே

1078. உறுப்பின் பெயர் - அவயவங் காத்திர மங்க முறுப்பே (352)

1079. மற்றுமுறுப்பின் பெயர் - சினையேமூர்த்தமென் றொருவழிச் சிவணும் (353)

1080. சந்தின் பெயர் - கந்துங் கொளுத்து மூட்டுஞ் சந்தாம் (354)

1081. உடற்றழும்பின் பெயர் - வடுவசி கச்சை சேக்கை யங்கிதஞ் சுவடு செதுக்கை தழும்பெனச் சொல்லுப (355)

1082. இறையின் பெயர் - பிறங்கு வரிபொறி வரையிறை யாகும் ()

1083. தேமலின் பெயர் - துத்தி வசந்திகை திதலை சுணங்கே - யுத்திதே
மறிதனியு முரைக்கும். (357)

1084. கோழையின் பெயர் - ஐயுங்காசமு மவைமுதிர்கோழை. (358)

1085. கழலையின் பெயர் - அரலை கழலை யாகுமென்ப. (359)

1086. பிணத்தின் பெயர் - அழனமுஞ்சவமுங் குணபமும் பிரேதமும் பிணமே களேபர மென்னும் பெயரே. (360)

1087. உடற்குறையின் பெயர் - யூபமுங் கவந்தமு மட்டையு முடற் குறை. (361)

1088. சிரமாலையின் பெயர் - அழிதலைக்கோடி சிரமாலையாகும். (362)

1089. தலையோட்டின் பெயர் - கபாலம் வெண்டலை தலையோ டென்ப. (363)

1090. பஞ்சமலவகையின் பெயர் - மலநீர் வாயு செந்நீர் கந்தம் - - பஞ்ச மலமெனப் பகர லாகும். (364)

1091. இருபத்தைந்துதத்துவத்தின் பெயர் - ஐம்பெரும் பூதமுமவையறி வாயிலு - மைம்புல னறியு மவற்றறி வைந்துங் - கைகால் குதம்வாய் மானிடக் குறியென் - றாகிய கன்மேந் திரிய மைந்து - மனம்புத்தி யாங்காரஞ் சித்தநான்கு - கரணமியமானனுங் காயத்திற் கமைந்த - விருபத் தைந்து தத்துவமாகும். (365)

1092. ஓரரறிவுயிரின் பெயர் - உற்றறி புலனதொன்றே யுடைமையின் மற்றைப் புல்லுமரனுமோ ரறிவே. (366)

1093. ஈரறிவுயிரின் பெயர் - உற்றறி புலனு நாவு முடைமையி - னட்டையு நந்தும் போல்வ வீரறிவே. (367)

1094. மூவறிவுயிரின் பெயர் - உற்றறி புலனா மூக்கு முடைமையின் - முறபெறு சிதலெறும் பாதிமூ வறிவே. (368)

1095. நாலறிவுயிரின் பெயர் - உற்றறி புலனா மூக்கொடு கண்ணும் - பெற்றவண்டு ஞெண்டாதி நாலறிவின. (369)

1096. ஐயறிவுயிரின் பெயர் - உற்றறி புலனா மூக்கொடு கண்செவி - மக்களு மாவு மையறி வினவே. (370)

1097. ஆறறிவுயிரின் பெயர் - மனனோ டாறறி வினரே மக்க - ளொருசார் விலங்கு மதுபெறற் குறித்தே. (371)

1098. இருவகைத்தாதுவின் பெயர் - இருவகைத் தாது சுரோணிதஞ் சுக்கிலம். (372)

1099. மூவடிவின் பெயர் - மூவடிவு பெண்ணா ணலியென மொழிப. (373)

1100. முப்பிணியின் பெயர் - முப்பிணி பித்த வாதஞ் சிலேட்டுமம். (374)

1101 எண்வகைமணத்தின் பெயர் - பிரமந் தெய்வம் பிரசா பத்திய மாரிடங் காந்தருவ மாசுரமிராக்கதம் - பைசாசம் மிவை யெண்வகைமணமே

ஐந்தாவது ஆடவர்வகை முற்றிற்று
ஆக சூத்திரம் 1101

---------------

பிங்கலநிகண்டு - பெயர்ப்பிரிவு பாகம் 1



பிங்கலநிகண்டு - பெயர்ப்பிரிவு / முதலாவது வான்வகை (1-92)

1. சுவர்க்கத்தின் பெயர் - பொன்னுலகு, துறக்கம், புத்தேளுலகு,விண்ணுலகு, மேலையுலகு, விசும்பு, மன்னுலகு, நாகம், கற்பம், வானுலகு, வியனுலகு, தானம், உவணை, சுவவு, சுரரிடம், உயர்நிலை. (16)

2. மேலேழுலகத்தின் பெயர் - பூலோகம், புவலோகம், சுவர்க்கலோகம், மாலோகம், தவலோகம், பிரமலோகம், சிவலோகம். (7)

3. மோக்கத்தின் பெயர் - கேவலம், கைவலம், கதி, சித்தி. (4)

4. மற்றும் மோக்கத்தின் பெயர் - அமுதம், பரம், சிவம், முத்தி, ஆக (8)

5. ஆகாயத்தின் பெயர் - வேணி, விசும்பு, வெளி, உம்பர், இடம், வானம், கோ, விண், மண்டிலம், ஆசினி, மீ, மாகம், கம், வியோமம், புட்கரம், வான், ககனம், நாகம், மங்குல், குண்டலம், அண்டம், உலகம், அம்பரம், குழை, குடில், அந்தரம், அகலம். (27)

6. வெளியின் பெயர் - வெடி, வயல், வெள்ளிடை, விடியல். (4)

7. பகிரண்டத்தின் பெயர் - அண்டரண்டம். (1)

8. அண்டகோளகையின் பெயர் - கூடம், கடாகம். (2)

9. அண்டமுகட்டின் பெயர் - மூதண்டம். (1)

10. அண்டசுவரின் பெயர் - பித்திகை (1)

11. திக்கின் பெயர் - மாதிரம், திகை, திசை, வம்பல், விசும்பு, ஆசை, புலம், உலகு, கோ, காட்டை, அரிதம், அம்பரம், ககுபம். (13)

12. எண்டிக்கின் பெயர் - கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு. (8)

13. கிழக்கின் பெயர் - குணக்கு, பூருவம், ஐந்திரம், பிராசி, கீழ்த்திசை. (5)
14. தெற்கின் பெயர் - அவாசி, தக்கணம், யாமினியம், தெக்கு, சிவேதை, தென். (6)
15. மேற்கின் பெயர் - மேக்கு, பச்சிமம், குடக்கு. (3)

16. மற்றுமேற்கின் பெயர் - வாருணம், பிரத்தியக்கு. ஆக (5)

17. வடக்கின் பெயர் - உதக்கு, உதீசி, உத்தரம், பிங்கலம், மதிதிசை. (5)

18 திசை நாற்கோணத்தின் பெயர் - - அந்தராளம் (1)

19 எண்டிசைப்பாலர் பெயர் - - இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். (8)

20. எண்டிசை யானைப் பெயர் - - ஐராவதம்,புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சாருவபூமம், சுப்பிரதீபம். (8)

21. அட்டமா நாகப் பெயர் - -அனந்தன், வாசுகி, தக்கன், கார்க்கோடகன், பதுமன், மாகாபதுமன், சங்கபாலன், குளிகன். (8)

22. எண்டிசையோனிப் பெயர் - - கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை, காகம். (7)

23. காற்றின் பெயர் - -அநிலம், வாங்கூழ், அரி, பவமானன், சமீரணன் மருத்து, சதாகதி, சலனன், வாடை, வளி, மாருதம், வாயு, கோதை, வாதம், கூதை, வேற்றலம், கால், ஒலி, பவனம், உயிர், கந்ததவாசன், பிரபஞ்சனன், மாபலன், பரிசனன், ஆசுகன், கந்தவாகன், ஊதை, காலிலி, விண்டு -நீளை -வந்து, உலவை, கொண்டல், கோடை. (34)

24. மற்றுங்காற்றின் பெயர் - -நீல்,மால்,நிழலி;உயிர்ப்பு,கூதிர். ஆக(39)

25. பனிக்காற்றின் பெயர் - -கூதிர்,ஊதை,குளிர். (3)

26. வடகாற்றின் பெயர் - -வாடை,வடந்தை. (2)

27. மேல்காற்றின் பெயர் - கோடை. (1)

28. கீழ்காற்றின் பெயர் - -கொண்டல். (1)

29. தென்றலின் பெயர் - -மந்தாநிலம், மலயக்கால், தென்கால், வசந்தன். (4)

30. சுழல்காற்றின்பெயர். - -சூறை,வளி. (2)

31. மற்றும் சுழல்காற்றின் பெயர் - -சூறாவளி, சாரிகை. (2)ஆக(4)

32. தசவாயுவின்வகைப் பெயர் - -பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவத்ததன், தனஞ்சயன். என்றா எண்ணிடைச்சொல். (10)

33. பிராணனென்பது - இருதயத்தியங்குவது.

34. அபானனென்பது - * உச்சத்தலத்தில் நிற்பது.
* உச்சம் உச்சி

35. உதானனென்பது - நாபியினிலைபெற்றுநிற்பது.

36. வியானனென்பது - சரீரமுழுவதும் வியாபித்து நிற்பது.

37. சமானனென்பது - கந்தரசக்குழியிற்சந்திடைநிற்பது.

38. நாகனென்பது - முடக்கலு நீட்டலுங் +கிளக்கலுஞ்செய்விப்பது.
+ கிளக்கல் - பேசுதல்.

39. கூர்மனென்பது - உரோமம்புளகித்து இமைப்பது.

40. கிருகரனென்பது - முகத்திடை நின்று தும்மலுஞ்சினமும் வெம்மையும் விளைவிப்பது.

41. தேவத்தத்தனென்பது - ஓட்டமுமிளைப்பும் வியர்த்தலும் விளைவிப்பது.

42. தனஞ்சயனென்பது - உயிர்களிடத்து நீங்காத அன்பினையுடைய நல்லவரோடு கொண்ட நட்பால் உயிர்போகினும் போகாதுடலினை வீக்கித் தலைகிழித்தகல்வது.

43. சுத்தமருத்துக்களின் பெயர் - கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், கீழ், பலயோனியுயிர். (7)

44. நெருப்பின் பெயர் - அழல், உதாசனன், அங்கி தேயு, தழல், வசு, உதகவன், தனஞ்சயன், தழலி கனலி, எழுநா, அனலி, முளரி, அனல், எரி, அழலி, கனல், அரி, கருநெறி, சுசி, ஒளி, தபனன், சுடர், சிகி, சோதி, தூமகேது, வன்னி, சுவலன், பாவகன், சித்திரபானு, அங்காரகன், ஞெகிழி, தீ, ஆரல். (34)

45. வடவாக்கினியின் பெயர் - வடவை, தீத்திரள், மடங்கல், ஊழித்தீ, கடையனல், உத்தரம். (6).

46. விளக்கின் பெயர் - சுடர், தீபம், ஒளி. (3).

47. அனற்பொறியின் பெயர் - புலிங்கம் (1).

48. அனற்றிரளின் பெயர் - உற்கம், (1).

49. காட்டெரியின் பெயர் - தாவம், வரையனல். (2)

50 தீக்கடைகோலின் பெயர் - அரணி, ஞெலிகோல், ஞெகிழி (3)

51 புகையின் பெயர் - தூமம், அரி, தூபம், ஆவி (4)

52 நறும்புகையின் பெயர் - நறை, குய், வெடி. (3)

53 அக்கினிதேவன் பெயர் - சாதவேதா, மைவாகனன், தீபதி, சித்திர பானு,தனஞ்சயன், தென்கீழ்த்திசையோன்,தேயு, வாயுசகன், பாவகன் (9)

54 அக்கினிதேவன்பாரியின் பெயர் - சுவாகாதேவி (1)

55 முத்தீயின் பெயர் - காருகபத்தியம், ஆகவனீயம், தக்கணாக்கினியம் (3)

56 பஞ்சாக்கினியின் பெயர் - இராகம், வெகுளி, காமம், சடம், தீபனம் (5)

57 நீரின் பெயர் - ஆலம், சலம், அம், அறல், பாணி, அப்பு, பயம், உதகம் வயம், அயம், வாரி, விகடி, புனல், சலிலம், புவனம், அளகம், சீவனம், பானீயம், சிந்து, ஆம், குசம், வருணம், அம்பு, மழை, கவந்தம், கீலாலம், மேகம், அகிலம், தடி, நீரம, தோயம், வார், பதம், கார், மாரி, கமலம், பயசு, கயம், சம்பரம், கம், புட்கரம், சீதம், வசி, கோ, காண்டம், கனவிரதம், சீவனீயம், அலர், நாரம், அமுது. (50)

58 மேகத்தின் பெயர் - மாரி, மழை, மஞ்சு, மாசு, கார், புயல், கனம், கொண்டல், வான், தாராதரம், மை, சீதம், சீவதம், செல், குயின், சீமூதம், எழிலி, கொண்மூ, விளைவு, முகில், விண், கந்தரம், சலதரம், விசும்பு, மங்குல், இளை, மால், அம்புதம், விண்டு. (29)

59 மற்றும்மேகத்தின் பெயர் - முதிரம், பயோதரம், கதம்பம், மெய்ப்பிரம், அப்பிரம், ஆயம். (6) ஆக (65)

60. இடியின் பெயர் - வெடி, ஒலி, உரும், கோ, விண்ணேறு, அசனி, செல், இகுளி, மடங்கல் (9)

61. மின்னலின் பெயர் - சம்பை, வித்துரு, சபலை, தடித்து,சஞ்சலை, கனருசி, தடி, ஒளி. (8)

62. மழையின் பெயர் - மாரி, வானம், வருடம். (3)

63. பெருமழையின் பெயர் - ஆசாரம். (1)

64. விடாமழையின் பெயர் - சோனை, பனித்தல். (2)

65. தலைப்பெய்மழையின் பெயர் - தளி, உறை, ஆலி, தலையல் (4)

66. மற்றுந்தலைப்பெய்மழையின் பெயர் - சோதகம். (1)

67. ஆலாங்கட்டியின் பெயர் - ஆலி, கனோபலம். (2)

68. மற்றும் ஆலாங்கட்டியின் பெயர் - கரகம். (1)ஆக(3)

69. மழைத்துவலையின் பெயர் - சிதரம், பிதிர்,சீகரம், சிதர், தூவல், துமிதம், திவலை. (7)

70. மழைவிடலின் பெயர் - தூறல், தலையல்,சோதகம். (3)

71. ஏழுமேகவகைப் பெயர் - சம்வர்த்தம், ஆவர்த்தம்,புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம். 7

72. அவற்றுள் ஏழுமழைவகைப் பெயர் - மணி, நீர்,பொன், பூ, மண்
கல்,தீ. 7

73. வருணன் பெயர் - சலபதி, பாசதரன், நதிகேள்வன், புனற்செல்வன். 4

74. வெள்ளத்தின் பெயர் - பிரளயம், நீத்தம், வாரி. 3

75. மற்றும்வெள்ளத்தின் பெயர் - ஓதம், பெருக்கு. 2ஆக 5

76.பனியின் பெயர் - இமம், துகினம், மஞ்சு, சீகாரம்,எமந்தம்.5

77. நிறைபுனலின் பெயர் - வழாறு, பிராறு, வாரி. 3

78. நீந்துபுனலின் பெயர் - அகாதம். 1

79. தெளிந்தநீரின் பெயர் - சற்சலம். 1

80. கலங்கனீரின் பெயர் - -ஆவிலம், கலுழி, உடம்பை. (3)

81. நீரோட்டத்தின் பெயர் - -கோலம். ( 1)

82. நீர்த்திரையின் பெயர் - -அறல், தரங்கம், அலை, கல்லோலம். (4)

83. மற்றும் நீர்த்திரையின் பெயர் - -சிகரம். (1) ஆக (5)

84. நீர்க்குமிழியின் பெயர் - - கொப்புள்,மொக்குள்,புற்புதம். (3)

85. ஆழநீரின் பெயர் - -அழுந்து,குண்டு,கயம். (3)

86. நீர்ச்சுழியின் பெயர் - -உந்தி, சுரியல். (2)

87. நுரையின் பெயர் - -பேனம், பே (2)

88. பரிவேடத்தின் பெயர் - -ஊர்கோள், வட்டம்,மண்டிலம், பரிதி விசயம். (5)

89. இந்திரவில்லின் பெயர் - -வானவில். (1)

90. காமகாண்டத்தின்பெய்ர் -இரட்டைவில். (1)

91. இருளின் பெயர் - -அல்,திமிரம், கருள், கருவரி,கச்சளம், அந்தகாரம், துவாந்தம், தமம், நத்தம்,துணங்கறல். (10)

92. பதினெண்கணவகைப் பெயர் - -அமரர்,சித்தர், அசுரர், தைத்தியர்,கருடர், கின்னரர், நிருதரி, கிம்புருடர். காந்தருவர், இயக்கர்,விஞ்சையர், பூதர், பசாசர்,அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசியர், போகபூமியர். (18)

முதலாவது வான்வகை முற்றிற்று.
ஆக சூத்திரம் 92.


இரண்டாவது : வானவர் வகை. / பெயர்ப்பிரிவு.

93. கணபதியின் பெயர் - ஏகதந்தன், இறைமகன், ஏரம்பன், ஆகுவாகனன், ஐங்கரன், முக்கண்ணன், பார்ப்பதிபுதல்வன், பாசாங்குசதரன், அத்திமுகத்தோன், அரிதிருமருகன், தந்திக்கடவுள், மும்மதன், கங்கைசுதன், விநாயகன். (14)

94. சிவன் பெயர் - அரன், அரூபி, அனந்தன், உருத்திரன், பரன், கறைமிடற்றோன், பார்ப்பதிகொழுநன், காலகாலன், பசுபதி, கண்ணுதல், தாணு, எண்குணன், சங்கரன், நந்தி, ஆதி, சசிதரன்; ஐம்முகன்; பினாகி, சோதி, சம்பு, சூலி, பிஞ்ஞகன், முக்கண்ணன், விடையோன், முன்னவன், பிறப்பிலி, நக்கன், சடையோன், நாயகன், சயம்பு, காமநாசன், பிதா, கருணாலயன், தேவதேவன், திரிபுராந்தகன், மானிடமேந்தி, பேயோடாடி, முத்தன், முதல்வன், சுத்தன், யோகி, வேதமுதல்வன், நாரிபாகன்; ஆலமர்கடவுள், பவன்அநாதி, நீலகண்டன், நிருத்தன், பூதேசன், கங்காதரன், மழுவாளி, கபாலி, அங்கணன், கைலையாளி, கங்காளன், அக்கரவார்த்தோன், அழலாடி, தற்பரன்,
நித்தன், நிமலன், நீறணிகடவுள், யானையுரித்தோன், அமலன், ஆனந்தன்,
வாமதேவன், மகேச்சுரன், சதாசிவன், திரியம்பகன், விமலன், சந்திரசேகரன்,
மாலயற்கரியோன்; நாதன், எண்டோளன், ஞானமூர்த்தி, நம்பன், பக‌வன்,
வாமன், கிரீசன், வரன், உமாபதி, பூதபதி, புண்ணியன், புலித்தோலுடையோன்,
மாதேவன், கொன்றைமாளையன், பித்தன், ஈச்சுரன், நாசமில்லோன், இறைவன், பாசுபதன், குன்றவில்லி, பாண்டரங்கன், ஈசன், பரமன், பிரான். (95)

95. மற்றுஞ்சிவன் பெயர் - அந்திவண்ணன், காமாரி, புராரி, அந்தகாரி, பர்க்கன். (5) ஆக (100)

96. சிவனூர்திகொடிவகைப் பெயர் - இடபம். (1)

97. சிவன்படையின் பெயர் - பரசு, சூலம், பினாகவில். (3)

98. சிவனெண்குணத்தின் பெயர் - பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலறிவுடைமை, கோத்திரமின்மை. (8)

99. சிவனைம்முகத்தின் பெயர் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம். (5)

100. சிவனிருப்புமுதலியவகைப் பெயர் - இருப்பது கைலை, தரிப்பது கங்கை, முடிப்பது கொன்றை, உடுப்பது சருமம்.

101. சிவபதநான்கின் பெயர் - *தானாளுலகிருத்தல், தன்பாடிருத்தல், தானாம் பதம்பெறல், தானாகுதல். (4)
* இவற்றைச் சாலோகமுதலிய முத்திகளாகக்கொள்க.

102. சிவபூசையியல்பின் பெயர் - சரியை, கிரியை, யோகம், ஞானம். (4)

103. சிவாகமநூற்பயன் பெயர் - தர்மம், அர்த்தம், காமம், மோக்கம் (4)

104. நந்தியின் பெயர் - எருது, விடை, ஏறு, இடபம், புங்கவம், இறைவாகனம், சிவகணமுதல். (7)

105. சிவனழித்தமுப்புரத்தின் பெயர் - பொன்மதில், வெள்ளிமதில், இருப்புமதில். (3)

106. உமையின் பெயர் - ஆரியை, காமக்கோட்டி, அம்பிகை, நாரி, சத்தி, நாயகி, கௌரி, தேவி, சாம்பவி, தருமச்செல்வி, மலைமகள், சங்கரி, மாதா, ஐயை, பரை, உருத்திரை, பார்ப்பதி, அந்தரி, நீலி, கன்னி, நிமலி, குமரி, வேதமுதல்வி, விமலை, முக்கண்ணி, அமலை, இமயவதி, அயிராணி, சமயமுதல்வி, தற்பரை, மனோன்மனி, சிவை, அம்மை. (33)

107. மற்றும் உமையின் பெயர் - அரனிடத்தவள், சகமீன்றவள், பவானி, அன்னை, புண்ணியமுதல்வி (5) ஆக(38)

108. கங்கையின் பெயர் - வரநதி, சுரநதி, மந்தாகினி, உமைகரநதி, தசமுகநதி, சிரநதி, தெய்வநதி. (7)

109. முப்பத்திரண்டறத்தின் பெயர் - ஆதுலர்க்குச்சாலை, ஓதுவார்க்குணவு, அறுசமயத்தோர்க்குண்டி, பசுவிற்குவாயுறை, சிறைச்சோறு, ஐயம், தின்பண்டநல்கல், அறவைச்சோறு, மகப்பெறுவித்தல், மகவுவளர்த்தல், மகப்பால் வார்த்தல்,
அறவைப் பிணஞ்சுடுதல், அறவைத்தூரியம், சுண்ணம், நோய்ம‌ருந்து, வண்ணார், நாவிதர், கண்ணாடி, காதோலை, கண்மருந்து, தலைக்கெண்ணெய்,பெண்போகம், பிறர்துயர்காத்தல், தண்ணீர்ப்பந்தர், மடம், தடம், கரவு, ஆவுரிஞ்சுதறி, விலங்கிற்குணவு, ஏறுவிடுத்தல், விலைகொடுத்துயிர்காத்தல், கன்னிகாதானம். (32).

110. அறுமுகக்கடவுள் பெயர் - குமரன், தெய்வகுஞ்சரிமணாளன், சிலம்பன், முருகன், சேய், செவ்வேள், கடம்பன், சாமி, கார்த்திகேயன், சேந்தன், குறிஞ்சிக்கிழவன், செட்டி, காங்கேயன்,கௌரிமைந்தன், கந்தன், வேலன், வள்ளிகேள்வன், விசாகன், தாரகாரி, குகன், சரவணபவன், மயில்வாகனன், வன்னிப்பூக்குமரன், ஆறிருகரத்தோன், அரிதிருமருகன், குழகன், கங்கைமைந்தன், குன்றெறிந்தோன், அறுமீன்காதலன், அசுரற் றடிந்தோன், சேவலங்கொடியோன், தேவசேனாபதி, பாவகி, ஆசான், கலையறிபுலவன், அரன்மகன், யானைமுகவற்கிளையோன். (37)

111 அறுமுகக்கடவுளூர்தியின் பெயர் - ஆடு, யானை, மயில். (3)

112. அறுமுகக்கடவுள்படைகொடியின் பெயர் - படைவேல், கொடிசேவல். (2)

113 மாலையின் பெயர் - நீபம், செச்சை. (2)

114 வீரபத்திரன் பெயர் - உக்கிரன், அழற்கண்வந்தோன், உமைமகன், முக்கணன், தக்கன்வேள்விமுனிந்தோன், ஏகவீரியன், சடாதரன், வில்லி, ஈசன்மைந்தன், கணபதிக்கிளையோன், ஆயிரமுகத்தோன், சினம்புளானோன், பத்திரைகேள்வன். (13)

115 வைரவன் பெயர் - கஞ்சுகன், மூவிலைவேலோன், காரி, முத்தன், கேத்திரபாலன், நிருவாணி, சித்தன், ஞாளியூர்தி, கபாலி, வடுகன். (10)

116 வைரவ னூர்தி படையின் பெயர் - ஊர்தி, ஞமலி, படை,சூலம். (4)

117 ஐயனார் பெயர் - சாதவாகனன், கோழிக்கொடியோன், சாத்தன், வெள்ளையானை வாகனன், காரி, செண்டாயுதன், கடனிறவண்ணன், பூரணை கேள்வன், புட்கலை மணாளன், ஆரியன், அறத்தைக்காப்போன், யோகி, அரிக ரபுத்திரன். (13)

118 ஊர்தி, காரிக்குதிரை, கொடி, கோழிக்கொடி.

119 மாகாளியின் பெயர் - குமரி, சண்டிகை, குண்டலி, நீலி, வலவை, பைரவி, கௌமாரி, மாதரி, மாயை, வீரி, மதங்கி, யாமளை, சூரி, வெதாளி, கங்காளி, யோகினி, சூலி, சாமுண்டி, தாரகாரி, ஆரியை, தேவி, வல்லணங்கு, ஐயை, அலகைக்கொடியாள், மாலினி, முக்கண்ணி, பதுமை, எண்டோளி, யாளியூர்தி, (31)

120 மாகாளியூர்திகொடிபடையின் பெயர் - ஊர்தி, சிங்கம், கொடி, அலகை, படை, சூலம்.

121 இடாகினியின் பெயர் - வஞ்சனி, மாயவள், வலவை, இடாகினி. (4)

122 யோகினியின் பெயர் - சன்மினி, சூர்மகள். (2)

123 ஊர்திகொடியின் பெயர் - கொடி, பேய், வாகனம், ஓரி.

124 துர்க்கையின் பெயர் - அந்தரி, மகிடற்காய்ந்தாள், ஐயை, விந்தை, அம்பணத்தி, விசயை, எண்டோளி, மாலுக்கிளையாள், பகவதி, சயமகள் பாலைக்கிழத்தி, வீரச்செல்வி, கௌரி, காத்தியாயினி, சக்கராயுதி, அமரி, குமரி, கலையூர்தி, சமரி, கன்னி, சயை, வாட்படையாள், சூலி, ஆரியை, நீலி, சண்டிகை, மேதித்தலைமிசை நின்றாள், கொற்றவை, நாராயணி. (29)

125 துர்க்கையின் படைவாகனத்தின் பெயர் - படை கைவாள்: வாகனம்:கலை.

126 காடுகாள் பெயர் - மோடி, காரிதாய், கொற்றி, மாரி, சூரி, வடுகி மூதணங்கு. (7)

127 சத்தமாதர்கள் பெயர் - பிரமாணி, நாராயணி, மாயேசுரி, கௌமாரி, வராகி, உருத்திராணி, இந்திராணி. (7)

128 சத்தமாதர்களூர்தியின் பெயர் - பிரமாணிக்கு அன்னம், வராகிக்கு ஏறு. மாயேசுரிக்கு விடை. உருத்திராணிக்கு அலகை, கௌமாரிக்கு மஞ்ஞை. இந்திராணிக்குக் களிறு. நாராயணிக்குக் கலுழன். (7)

129 சத்தமாதர்கள்படையின் பெயர் - பிரமாணிக்கு வேதம். வராகிக்குத் தண்டு. உருத்திராணிக்குச் சூலம். மாயேசுரிக்குப் பினாகம். கௌமாரிக்கு வேல். இந்திராணிக்கு வச்சிராயுதம், நாராயணிக்குச் சக்கரம். (7)

130 விட்டுணுவின் பெயர் - மாதவன், நெடியோன், மாயவன், சநார்த்தனன், சீதரன், பதுமநாபன், திருமால், கொண்டல்வண்ணன், கோவிந்தன், முகுந்தன், விண்டு, வனமாலி, வாமன், வாமனன், திரிவிக்கிரமன், திருமறுமார்பன், கேசவன், வரதன், முராரி, அனந்தன், காவற்கடவுள், காகுத்தன், அச்சுதன், அரவணைச்செல்வன், அறிதுயிலமர்ந்தோன், சக்கராயுதன், சார்ங்கபாணி, கடல்வண்ணன், சலசவிலோசனன், உலகினையளந்தோன்,உலகமுண்டோன், படிமுழுதிடந்தோன், அலகமுலை யுண்டோன், தாமோதரன், சௌரி, மதுசூதனன், ஆதி, பீதாம்பரன், வராகன், திருமகள்கொழுநன், பூமிகொழுநன், கண்ணன், உவணவூர்தி, உவணமுயர்த்தோன், பஞ்சாயுதன், பரந்தாமன், பகவன், பூவைவண்ணன், புணரியிற்றுயின்றோன், பிரமன்றந்தை, பின்னைகேள்வன், சங்கமேந்தி, நாரசிங்கன், இருடிகேசன், தசவவதாரன், குறளன், நெடுமால், வலவன், கரியோன், உந்திபூத்தோன், நந்தகோபாலன், வாசுதேவன், துளபமௌலியன், அனந்தசயனன், வைகுந்தநாதன், ஆயிரம்பெயரோன், அரி, மால், நாராயணன். (69)

131 மற்றும் விட்டுணுவின் பெயர் - அருந்தமன். (1) ஆக (70)

132 விட்டுணுவினூர்திகொடியின் பெயர் - கருடன். (1)

133 விட்டுணுவின்பஞ்சாயுதத்தின் பெயர் - சக்கரம், தனு, வாள், தண்டு, சங்கம்.

134 அவற்றுள் சக்கரத்தின் பெயர் - சுதரிசனம். (1)

135 தனுவின் பெயர் - சார்ங்கம். (1)

136 வாளின் பெயர் - நாந்தகம் (1)

137 தண்டின் பெயர் - கௌமோதகி (1)

138 சங்கின் பெயர் - பாஞ்ச சன்னியம் (1)

139 அரியின்தசாவதாரத்தின் பெயர் - மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், பலபத்திரன், கண்ணன், கற்கி (10)

140 அன்றியுமூவைந்தவதாரத்தின் பெயர் - சனகன், சனந்தனன், சனாதன், சனற்குமாரன், நரநாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்ரீவன், தத்தாத்திரேயன், மோகினி, வேள்வியின்பதி, வியாதன், தன்வந்திரி, பௌத்தன்,. (15)

141 பலராம னொழியமற்ற மூர்த்தங்களைப் புத்தனென்று சொல்லப்படும்.

142 திருமகளின் பெயர் - பொருளின்செல்வி, பொறி, அரிப்பிரியை, மலர்மகள், இந்திரை, மா, இலக்குமி, கமலை, ஆக்கம், பதுமை, சீதேவி, தாக்கணங்கு, இளையாள், கடற்பிறந்தாள், மாறிருமார்பினள், மறைத்தலைவி, செய்யாள், பூமகள், (18)

143. பலபத்திரன் பெயர் - -இரேவதிகொழுநன், குண்டலன், உரோகணிதநயன், நீலாம்பரன்,அலாயுதன், அச்சுதன்முன்னோன், காமபாலன், அநந்தன், வெள்ளை, காளிந்திமர்த்தனன், பனந்துசன், முசலி, கருத்துகிலுடையன், பலதேவன்.

144. பலபத்திரன் படைகொடியின் பெயர் - - படை, கலப்பை: கொடி, பனை..

145. காமன் பெயர் - -மான்மகன், மதனன், மகரக்கொடியோன், வேனிலாளி, வேள், வசந்தன், அங்கசன், அநங்கன், ஐங்கணைக்கிழவன், திங்கட்குடையோன், தென்றற்றேரோன், வனசன், வில்லி, மோகன்,மலர்கணையோன், மதிசகன், இரதிகாந்தன், மாரன், மனோபவன், மனோசன், மனோபு, மன்மதன் திருமகண் மைந்தன். சம்பரசூதனன், உருவிலி, கடன்முரசோன், கைதச்சுரிகையன், கந்தர்ப்பன். சித்தசன், பூவாளி, பூமன், கருப்புவில்லி. (32)

146. காமனூர்திகொடியின் பெயர் - -வாகனம் தென்றல்: கொடி, மகரம்.

147. காமன்வில்கணையின் பெயர் - -வில்,கழை: கணை, ஐவகை மலர்.

148. காமனைங்கணையின் பெயர் - - தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, குவளை. (5)

149. அவற்றின்செயலின் பெயர் - -பெருமயக்கு. சிந்தாகுலம், புணர்சசிக் கிணங்குதல். மோகனம். சந்தாபம், வசீகரணம். (5)

150. அவற்றினவத்தையின் பெயர் - -சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம். (5)

151, அவற்றுள் சுப்பிரயோகம், பேசாதொழியாநினைவு.

152. விப்பிரயோகம் பெருமூச்செறி்ந்து வருந்துதல்.

153. சோகம் வெதும்பி யுணவு வெறுத்தல்.

154. மோகம் அழுதலும் பிதற்றுதலும்.

155. மரணம் உயிர்சோர்தலு மயங்குதலும்.

156. பிரமன் பெயர் - - அந்தணன், மலரோன், அயன், நான்முகத்தோன்,

உந்தியில்வந்தோன், ஓதிமவாகனன், பாரதிகொழுநன், படைப்போன், பகவன், ஆரணன், இரணியகருப்பன், விரிஞ்சன், வேதா, விதாதா, விதி,சதானந்தன், தாதா, பிதாமகன், சம்பு, மான்மகன், எண்கணன், கமலயோனி, பிரசாபதி, வேதன், கம், இறை, சூதன், பரமேட்டி, திசைமுகன், வானவர் முதுவன், போதன், வரன், குரவன், மண்பொதுத்தந்தை, அனந்தன், ஞானன், அன்னமுயர்த்தோன்; இறைவன்; மறையோன். (39)

157.பிரமனூர்திபடைகொடியின் பெயர் - ஊர்தி, அன்னம்: படை பாசம், தண்டம்: கொடி - மறை.

158. நாமகள் பெயர் - பாரதி, துய்யாள், பனுவலாட்டி, வேதமுதல்வி, பிராமி, விமலை, வாணி, வெள்ளைநிறத்தினள், வாக்காள், நான்முகன் கிழத்தி, ஞானத்திறைவி, காயத்திரி, சாவித்திரி, பாமடந்தை, நூன்மடந்தை, உலகமாதா, இசைமகள், கலைமகள், வெண்டாமரைமகள், கண்ணாள், உயிர்த்துணைவி. (22)

159. நாமகளூர்தியின் பெயர் - பூரம்.

160. இந்திரன் பெயர் - அமராவதியோன், ஆயிரங்கண்ணன், சதமகன் கோபதி, போகி, சங்கிரந்தனன், பாகசாதனன், வச்சிரப்படையோன், மேகவாகனன், விண்முழுதாளி, வாசவன், மகவான், வானனன், கௌசிகன், ஆகண்டலன், அயிராவதன், வலாரி, புருகூதன், சக்கிரன், புரந்தரன், மருத்துவன், மருதக்கிழவன், வரைசிறகரிந்தோன், அரி, சசிவல்லவன், திருமலிசுவர்க்கன், வேள்விநாயகன், புலவன், வேந்தன், புரோகிதன், சுனாசி, கரியவன் புனிதன், காண்டாவனன், மால், வெள்ளைவாரணன், தேவர்வேந்தன், பொன்னகர்ச்செல்வன், ஐந்தருநாதன். (58)

161. இந்திரன்றேவி பெயர் - சுந்தரி, சசி, அயிராணி, புலோமசை, ஐந்தருச்செல்வி. (5)

162. இந்திரன்மகன் பெயர் - சயந்தன். (1)

163. இந்திரனகரின் பெயர் - அமராவதி. (1)

164. இந்திரன்யானையின் பெயர் - அயிராவதம். (1)

165. இந்திரன்குதிரையின் பெயர் - உச்சைச்சிரவம். (1)

166. இந்திரன்படைகொடியின் பெயர் - படை, வச்சிரம்:கொடி, இடி.

167. இந்திரன்மண்டபத்தின் பெயர் - சயந்தம் (1)

168. இந்திரன்மாளிகையின் பெயர் - வசந்தம்.

169. பண்டாரத்தின் பெயர் - சுதன்மம். (1)

170. இந்திரனந்தனவனத்தின் பெயர் - கற்பகச்சோலை. (1)

171. இந்திரன்சேமநிதிப் பெயர் - நவநிதி. (1)

172. இந்திரன்கோவின் பெயர் - காமதேனு. (1)

173. இந்திரனுணவின் பெயர் - அமுதம். (1)

174. புனைவதின் பெயர் - கற்பகமலர்.

175. அணிவதின் பெயர் - சிந்தாமணி, சூளாமணி. (2)

176. நாடகத்தரம்பையர் பெயர் - மேனகை, அரம்பை, உருப்பசி, திலோத்தமை. (4)

177. தேவர்பொதுப் பெயர் - வானவர், அமுதர், வரர், புத்தேளிர், மேலவர், இமையவர், விண்ணவர், கடவுளர், அமரர், புங்கவர், ஐயர், இலேகர், விபுதர், தீர்த்தர், அசுரர்க்க மித்திரர், உயர்நிலையோர், சுரர், உம்பர், புலவர், அண்டர், முதல்வர், ஆதித்தர், கவர்க்கர், பொன்னுலகுடையோர். (24)

178. முப்பத்துமுத்தேவர் பெயர் - ஆதித்தர், பன்னிருவர்: அச்சுவினிகள், இருவர்: ஈசர், பதினொருவர்: வசுக்கள் எண்மர். (33)

179. அவற்றுள் ஆதித்தர்பன்னிருவர் பெயர் - வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பாற்கரன், இரவி, உலோகப்பிரகாசன், உலோகசாட்சி, திரிவிக்கிரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி (12)

180. உருத்திரர் பதினொருவர் பெயர் - மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன் கபாலி, சௌமியன். (11)

181. அட்டவசுக்கள் பெயர் - தரன், துருவன், சோமன், ஆபச்சைவன் அனலன், அணிலன், பிரத்தியூசன், பிரபாசன். (8)

182. அச்சுவினிகளிருவா பெயர் - அச்சுவினிதேவர். (2)

183. கடவுளர்பொதுப் பெயர் - பண்ணவர், பகவர், தீர்த்தர், பட்டாரகர், புங்கவர். (5)

184. தெய்வத்தின் பெயர் - சூர், அணங்கு, கடவுள், தெய்வதம், தே, புத்தேள், இயவுள். (7)

185. சுரர்மகளிர் பெயர் - அரமகளிர், சூரரமகளிர், அரம்பையர். (3)

186. தெய்வப்பெண் பெயர் - அணங்கு, சூர், வஞ்சனை, மாயவள், கன்னி. (5)

187. மூதேவியின் பெயர் - கழுதையூர்தி, காக்கைக்கொடியாள், முகடி, தௌவை, கலதி. (5)

188. மற்றும் மூதேவின் பெயர் - சீர்கேடி, கேட்டை, கெடலணங்கு, ஏகவேணி, சேட்டை. (5)

189.மூதேவியூர்தி படைகொடியின் பெயர் - வாகனம் -கழுதை:
படை -துடைப்பம்:கொடி -காகம்.

190. தருமதேவதையின் பெயர் - மரகதவல்லி, பூகநிழலினள், பரமசுந்தரி, இயக்கி, பகவதி; அருகனைத்தரித்தாள், அறத்தின்செல்வி, அம்பாலிகை. (8)

191. அருகன் பெயர் - புண்ணியன், எண்குணன், பொன்னெயினாதன், பண்ணவன், பட்டாரகன், முனைவன், அசோகமர்கடவுள், பகவன், முக்குடையோன், அறவாழி வேந்தன், அரியணைச்செல்வன், பூமிசைநடந்தோன் வரதன், சினேந்திரன். (14)

192. அருகனூர்தி படையின் பெயர் - அம்புயம். (1)

193. கொடியின் பெயர் - காட்சி, ஞானம், சீலம். (3)

194. புத்தன் பெயர் - பார்மிசைநடந்தோன், பகவன், புங்கவன், தருமன், சாந்தன், முனைவன், வாமன், புனிதன், சினன், வரன், அறிவன், பிடகன், போதிவேந்தன். (13)

195. குபேரன் பெயர் - இருநிதிக் கிழவன், இயக்கர் வேந்தன், வடதிசைத் தலைவன், நரவாகனன், அளகையாளி, அதிதனச் செல்வன், சீரகத்தாரோன், வைச்சிரவணன், அரனுடைத் தோழன், கின்னரர்பிரான், மரகதன், புட்பகவூர்தி, பிங்கலன், மந்திரி, தனபதி. (15)

196 குபேரன்வாகனத்தின் பெயர் - நரவாகனம், புட்பகத்தேர். (2)

197 இயமன் பெயர் - இயமன், அரி, அந்தகன், தென்றிசைக்கிழவன், சமன், சண்டன், சண்பன், தருமன், நமன், மறலி, தண்டதரன், சைமினி நகரோன், வைதரணிநதியோன், செங்கோற்கடவுள், நாசவன், நடுவன், கூற்று, (17)

198 யமனூர்தி படையின் பெயர் - ஊர்தி, எருமை, படை, தண்டு பாசம்.

199 காலன் பெயர் - சண்டன், மறலி, கூற்று, சமன், மடங்கல், கால், மறல். (7)

200 காலன்படையின் பெயர் - கணிச்சி. (1)

201 அசுரர் பெயர் - தானவர், அவுணர், தைத்தியர், கண்டகர், மேனிகரப்போர், தகுவர், கார்வண்ணர், தேவர்பகைவர், திதிபுதல்வர். (9)

202 மாவலியின் பெயர் - வயிரோசனன் (1)

203 நிருதர் பெயர் - நிசாசரர், சாலகடங்கடர் (2)

204 அரக்கர் பெயர் - இராக்கதர், *யாதுதானவர், நிசாசரர், பிசிதாசனர். (4)
*யாது தானவர் எனச்சொல்வகை செய்து இருபெயராகக் கொள்ளலும் ஒன்று

205 கந்தருவர் பெயர் - இயக்கர், யாழோர், காந்தருவர், தந்திரர், கின்னரர். (5)

206 வித்தியாதரர் பெயர் - விஞ்சையர், கேசரர். (2)

207 வித்தியாதரரிடத்தின் பெயர் - சேணி, விஞ்சைப்பதி, சேடி, யாணர்நகர். (4)

208 பூதத்தின் பெயர் - சாதகம், பாரிடம், குறள், கூளி, சாரதம், மகோதரம், கிருத்திமம், கணம். (8)

209 பேயின் பெயர் - கடி -வேதாளம் -கழுது -கூளி -வெறி -அலகை - பிசாசு -மண்ணை மயல் -சோகு -மருள் -வியந்தரம் -பிரேதம் -அழன் -குணங்கு குணபாசி -பாசம் -சாவு -சவம் -அள்ளை -குணபம் -பிணம். (22)

210. சூரியன் பெயர் - - இரவி, இனன்,மணி, என்றூழ், செஞ்சுடர், பரிதி, தேரோன், எல்லோன், பானு, சண்டன், அருக்கன், தபனன் ஆதவன், அண்டயோனி, ஆயிரங்கதிரோன், கனலி, திவாகரன், கனலோன் பாற்கரன், அனலி, ஒளியோன், அலரி, மார்த்தாண்டன், தினகரன், செங்கதிர், அரி, திமிராரி, அருணன், சூரன், ஞாயிறு, சவிதா, பகல், பர்க்கன், வெயிலோன், ஆதித்தன், விரிச்சிகன், விரோசனன், விகர்த்தனன், மித்திரன் வெய்யோன், கதிரோன், வெஞ்சுடர், சோதி, பகலவன், எல்லை, பதங்கன், ஆதபன்,அழலவன், உதயன், இருள்வலி, பொழுது, பகவன்,சான்றோன்,
வேந்தன், தாபநன், தரணி, எல்லி, சாயாபதி, பகலோன்,விண்மணி, பனிப்பகை, கதிரவன், சுடரோன், மாலி. (64)

211. சூரியமண்டிலத்தின் பெயர் - -விசயம். (1)

212. சூரியகிரகணத்தின் பெயர் - -கரம், தீவிரம், கோ,கதிர். (4)

213. வெயிலின் பெயர் - -கோடை, என்றூழ், எல், ஒளி. (4)

214. மற்றும்வெயிலின் பெயர் - -ஆதவம். (1)

215. உதயத்தின் பெயர் - -விடியல், வைகறை, புலரி. (3)

216. கழிவுநாளின் பெயர் - -காலி, வைகல். (2)

217. அந்தியின் பெயர் - -சந்தி,மாலை, சாயம்,கோதூழி. (4)

218. நடுப்பகலின் பெயர் - -மத்தியானம், நண்பகல். (2)

219. மற்றும் நடுப்பகலின் பெயர் - - உச்சி, உருமம். (2)

220. சாமத்தின் பெயர் - - யாமம். (1)

221. பகலின் பெயர் - -எல், திவசம், தினம், திவா. (4)

222. அருக்கனூர்தியின் பெயர் - - ஒற்றையாழித்தேர், பொற்றேர் (2)

223. அருக்கன்றேர்ப்புரவியின் பெயர் - -ஏழ்புரவி. (1)

224. அருக்கன்றேர்ப்பாகன் பெயர் - -அருணன். (1)

225. சந்திரன் பெயர் - -இந்து, சசி,இமகிரணன், தண்சுடர், உடுபதி, தாராபதி, அம்புலி, அமுதகதிரோன், சீதன், குரங்கி, விது, நிலவு, அல்லோன், வேந்தன், தண்ணவன், கலையோன்,மதி,களங்கன், குபேரன்,ஆலோன், பனிக்கதிர்,தானவன், சுதாகரன், உடுவேந்தன், பிறை, முயற்கூடு,பசு்கதிர், திங்கள், சோமன். (36)

226. நிலவின் பெயர் - -சந்திரிகை. (1)

227. பிரைநிரம்பலின் பெயர் - -கலை. (1)

228. சந்திரனூர்தியின் பெயர் - -விமானம். (1)

229. இரவின் பெயர் - -யாமம், நத்தம், யாமினி, வகுஞ்சம். சாமம். கங்குல், நிசா, நிசி, திமிரம், எல்லி, அல். (11)

230. செவ்வாயின் பெயர் - -அழலவன், பௌமன். அங்காரகன், குருதி வக்கிரன், குசன், மங்கலன், ஆரல், உதிரன், அரத்தன், அறிவன், அழல், உலோகிதன், செந்தீவண்ணன், சேய். (15)

231. புதன் பெயர் - -அருணன், கணக்கன், அறிஞன், சாமன், மதிமகன், மேதை, மால், தேர்ப்பாகன், புந்தி, தூதன், பச்சை. (11)

232. வியாழன் பெயர் - -ஆசான், மந்திரி. ஆண்டளப்பான், பொன், பீதகன், சுரகுரு, பிரகற்பதிர, சீவன், தேவமந்திரி, சித்தன், சிகண்டிசன், அந்தணன், அரசன். (13)

233. வெள்ளியின் பெயர் - -தைத்தியமயந்தரி, சல்லியன், சைத்தியன் மழைக்கோள், சுங்கன். கவி, புகர், பிரசுரன், பார்க்கவன், சுக்கிரன், ஒள்ளியோன், பளிங்கு, காப்பியன், சிதன், உசனன். (15)

234. சனியின் பெயர் - -கதிர்மகன், நீலன், சாவகன், காரி, முதுமகன், மேற்கோள், மந்தன், முடவன், சௌரி, பங்கு, சந்தில். (11)

235. இராகுவின் பெயர் - -தமம், கரும்பாம்பு. (2)

236. கேதுவின் பெயர் - -செம்பாம்பு, சிகி, கொடி. (3)

237. அனந்தன் பெயர் - -போகவதிக்கிறை, சேடன். (2)

238 வாரத்தின் பெயர் - வாசரம், கிழமை. (2)

239 அச்சுவினியின் பெயர் - இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள் புரவி மருத்துவநாள். (7)

240 பரணியின் பெயர் - காடு கிழவோன் பூதம் அடுப்பு தாழி சோறு தருமனாள் முக்கூட்டு போதம் தாசி. (10)

241 கார்த்திகையின் பெயர் - அறுமீன் அங்கிநாள் அளக்கர் எரிநாள் அளகு இறால் நாவிதன் வாணன் தழல் ஆரல் (10)

242 உரோகிணியின் பெயர் - சகடு விமானம் சதி ஊற்றால் அயனாள் வையம் (6)

243 மிருகசீரிடத்தின் பெயர் - மாழ்கு மான்றலை மார்கழி நரிப்புறம் மதிநாள் மும்மீன் பாலை வெய்யோன் ஐந்தானம் (9)

244 திருவாதிரையின் பெயர் - அரனாள் செங்கை மூதிரை (3)

245 புனர்பூசத்தின் பெயர் - அதிதிநாள் கழை ஆவணம் எரி புனர்தம் கரும்பு (6)

246 பூசத்தின் பெயர் - குருநாள் காற்குளம் கொடிறு வண்டு புணர்தை. (6)

247 ஆயிலியத்தின் பெயர் - அரவினாள் கௌவை ஆயில் (3)

248 மகத்தின் பெயர் - வேள்வி, கொடுநுகம், வேட்டுவன், வாய்க்கால், ஆதியெழுஞ்சனி பிதிர்நாள், மாகம், மாசி, எழுவாயெழுஞ்சனி (9)

249 பூரத்தின் பெயர் - இடையெழுஞ்சனி, எலி, தூர்க்கை, பகவதி, நாள் கணை, நாவிதன் (6)

250 உத்தரத்தின் பெயர் - பங்குனி, கடையெழுஞ்சனி, பாற்குனி, மானேறு, கதிர்நாள், மாரிநாள் (6)

251 அத்தத்தின் பெயர் - கைம்மீன் கைனி கனலிநாள் ஐம்மீன் காமரம் களிறு (6)

252 சித்திரையின் பெயர் - நெய்மீன் அறுவை நேர்வான் பயறு நடுநாள் துவட்டநாள் தச்சன் (8)

253 சோதியின் பெயர் - விளக்கு, மரக்கால், வெறுநுகம், வீழ்க்கை, துளக்கம், காற்றினாள். (6)

254 விசாகத்தின் பெயர் - அனிலநாள், முற்றில், முறம், வைகாசி, சுளகு. (5)

255 அனுடத்தின் பெயர் - பனை, தேள், பெண்ணை, புல், தாளி, போந்தை, மித்திரநாள். (7)

256 கேட்டையின் பெயர் - துளங்கொளி, வல்லாரை, வேதி, எரி, அழல், இந்திரனாள், சேட்டை. (7)

257 மூலத்தின் பெயர் - கொக்கு, தேட்கடை, குருகு, வில், அன்றில் ஆனி, அசுரநாள் (7)

258 பூராடத்தின் பெயர் - உடைகுளம், முற்குளம், மாரி, நீர்நாள், நீர். (5)

259 உத்திராடத்தின் பெயர் - ஆடி, விச்சுவநாள், கடைக்குளம், ஆனி.

260 திருவோணத்தின் பெயர் - சோனை, மாயோனாள், முக்கோல், சிரவணம், உலக்கை (5)

261 அவிட்டத்தின் பெயர் -காகப்புள், வசுக்கணாள், ஆவணி, பறவை. (4)

262 சதயத்தின் பெயர் - குன்று, வருணனாள், செக்கு, சுண்டன், போர். (5)

263 பூரட்டடாதியின் பெயர் - புரட்டாதி, முற்கொழுங், நாழி, பரதநாள். (4)

264 உத்திரட்டாதியின் பெயர் - முரசு, பிற்கொழுங்கோல், மன்னன் நீபம், அறிவனாள். (5)

265 இரேவதியின் பெயர் - தொழு, நாவாய், தோணி, சூலம், பஃறி புருடநாள், கடைமீன் (7)

266 அருந்ததியின் பெயர் - சாலி, வடமீன் (2)

267 விடிமீனின் பெயர் - வெடி. (1)

268 வான்மீனின் பெயர் - புச்சம் (1)

269 வான்மீனின்பொதுப் பெயர் - சிதம், பம், சுக்கை, கணம், உடு, தாரகை, ஒளி. (7)

270 இராசியின் பெயர் - மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்னும் பன்னிரண்டிராசிகளுள் மிதுனமொழிந்த வேனைய விராசிகட்கு அவ்வப் பெயர்க்குரியன வாய்வரும் பெயரனைத்தும் அவ்வவ்இராசிகட்குக் கொள்க (12)

271 மிதுனத்தின் பெயர் - யாழ், பாடவை, இரட்டை, சவைமகள், விழவு, தண்டு. (6)

272 இராசியின் பொதுப் பெயர் - இல், ஓரை, பவனம் (3)

273 சூரியசந்திரர்க்குரிய திசையின் பெயர் - அருக்கன்றிசை கீழ்த்திசை, சோமன்றிசை வடதிசை. (2)

274 மூவகைவீதியின் பெயர் - மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி, அவை சூரியசந்திரர் முதலிய கிரகங்கள் சஞ்சரிக்கும் வழி. (3)

275 மேடவீதியாவது -இடபம் சிங்கம் முதுனம் கடகம் (4)

276 இடபவீதியாவது -மீனம், மேடம், கன்னி, துலாம் (4)

277 மிதுனவீதியாவது -தனுசு, மகரம், கும்பம், விருச்சிகம் (4)

278 இவற்றுள் முற்கூறிய மூன்றிராசிகளுள் இடபமுதல் விருச்சிகம் ஈறாகத்தொகுத்த மாதங்களில் சூரியன் முதலிய கிரகங்கள்வரும்வழி.

279 காலத்தின் பெயர் - போழ்து, கொன், பொழுது, செவ்வி, ஏல்வை வேலை, அமையம், காலை, கால், பதம் (10)

280 காலநுட்பத்தின் பெயர் - கலை, துடி, கணம்., மாத்திரை, நொடி பிதிர், நுட்பம், திட்பம், நிமிடம். (9)

281 காலவிரைவின் பெயர் - கணம் மாத்திரை. (2)

282.நாழிகையின் பெயர் - கடிகை, விகலை, கன்னல், இருத்தை, பதம். நாழி. (6)

283. நாளின் பெயர் - அல்கல், திவா, பகல், ஆனியம், திவசம், ஏல்வை, எல், வைகல், தினம். (9)

284. முன்னைநாளின் பெயர் - நென்னல், நெருநல். (2)

285. பின்னைநாளின் பெயர் - பிற்றை,பின்றை. (2)

286. திதியின் பெயர் - ப‌க்கம். (1)

287. மாதத்தின் பெயர் - மதி, திங்கள். (2)

288. ஒருகலைவருமதிநாளின் பெயர் - சினீவாலி. (1)

289. அமாவாசையின் பெயர் - குகு. (1)

290. முதற்பக்கத்தின் பெயர் - நந்தை. அதுவருமாறு 1, 6, 11, நந்தை.

291. இரண்டாம்பக்கத்தின் பெயர் - பத்திரை' 2, 7,12. பத்திரை.

292. மூன்றாம்பக்கத்தின் பெயர் - சயை. 3, 8, 13. சயை.

293. நன்காம்பக்கத்தின் பெயர் - இருத்தை. 4, 9, 14. இருத்தை.

294. ஐந்தாம்பக்கத்தின் பெயர் -பூரணை. 5, 10, 15. பூரணை.

295. பூரணையின் பெயர் - அனுமதி, பவ்வம், இடை, உவா.(4)

296. கார்காலத்தின் பெயர் - நவம். (1)

297. கூதிர்காலத்துக்குங் கொடும்பனிக்காலத்துக்கும் பெயர் - சிசிரம். (1)

298. இளவேனிலின் பெயர் - மாதவம், வசந்தம், மது. (3)

299. கொடியவேனிலின் பெயர் - கோடை,சமம், சுசி. (3)

300. பருவமும் இருதுவுமொருபொருட்கிளவி (1)

301. அறுவகைப்பருவகாலப் பெயர் - கார்,கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். 6.

302. அவைதாம் - ஆவணி, புரட்டாதிகார், ஐப்பசி, கார்த்திகைகூதிர். மார்கழி, தைமுன்பனி. மாசி, பங்குனி பின்பனி. சித்திரை, வைகாசி, இளவேனில்*. ஆனிஆடிமுதுவேனில்.

303. அறுவகையிருதுவின் பெயர் - வசந்தம்,கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம். 6

304. அவைதாம் - சித்திரை , வைகாசி வசந்தம், ஆனி,ஆடிகிரீடம், ஆவ‌ணி, புரட்டாதிவருடம், ஐப்பசி, கார்த்திகைசரம், மார்கழி, தைஏம‌ந்தம்; மாசி, பங்குனி சிசிரம்.

305. ஆண்டின் பெயர் - ஆயனம்,சமை, அயனம்,தெய்வதம், வருடம் வற்சரம். 6

306. வாழ்நாளின் பெயர் - ஆயூகம், ஆயுள். 2

307. உகமுடிவின் பெயர் - ஊழி, மடங்கல். 2

308. நால்வகையுகத்தின் பெயர் - கிரேதா, திரேதா, துவாபரம், கலி.

309. அமுதின் பெயர் - அமரி,சுதை, மருந்து. 3

310. தெய்வவுணவின் பெயர் - சரு, பலி, நிவேத்தியம், அமுது, அவி.

311. ஆலகாலவிடத்தின் பெயர் - காளகூடம்.

312. ஆன்மாவின் பெயர் - பசு, உயிர், சீவன், புற்கலன், சேதனன், இயமானன்,ஆதன், செந்து,ஆவி, பூதன், உறவி ,கூத்தன். 13.

இரண்டாவது வானவர் வகை முற்றிற்று.
மேற்படி சூத்திரம் 312.


மூன்றாவது : ஐயர்வகை / பெயர்ப்பிரிவு.

313. இருடிகள் பெயர் - - முனிவர், மாதவர், இலிங்கிகள், முனைவர், படிவர், உறுவர், பண்ணவர், ஐயர், அறவோர், தபோதனர், அறிஞர், அந்தணர், துறவோர், க‌டிந்தோர், மோனியர், யோகியர், - கோபங்காய்ந்தோர், நீத்தோர், மெய்யர், தாபதர். (20 )

314. சத்தவிருடிகளின் பெயர் - -அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கௌதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டேயன். (7)

315. அகத்தியன் பெயர் - -குறுமுனி, கும்பயோனி. (2)

316. சைவதவ‌ப்பாலோர் பெயர் - -மாவிரதியர், காளாமுகர், பாசுபதர். (3)

317. நாரயணசமயத்தார் பெயர் - - வைணவர், பாகவதர்,. (2)

318. சமணர் பெயர் - -சாவகர், அருகர், அமணர். (3)

319. சமண்டவத்தோர் பெயர் - -ஆசீவகர், தாபதர். (2)

320. புத்தர் பெயர் - - சாக்கியர், தேரர், பௌத்தர். (3)

321. புத்ததவத்தோர் பெயர் - - சீவகர். (1)

322.சடைமுடியோர் பெயர் - - முனிவர், தாபதர். (2)

323. ஒருமையின் பெயர் - - இறையுணர்வு. (1)

324. ஒன்றின் பெயர் - -வீடுபெறுகை. (1)

325. இருமையின் பெயர் - - இம்மை, மறுமை. (2)

326. இருவினையின் பெயர் - -புண்ணியம், பாவம். (2)

327. இருவகைத் தோற்றத்*தின் பெயர் - -சரம், அசரம். (2)

328. இருசுடரின் பெயர் - -சூரியர், சந்திரர். (2)

329. இருமரபின் பெயர் - -தாய்வழி, தந்தைவழி. (2)

330. இருவகைக்கந்தத்தின் பெயர் - -நற்கந்தம், துர்க்க‌ந்தம். (2)

331. இருவகையறத்தின் பெயர் - - இல்லலற*ம், துறவறம். (2)

332. இருவகைப்பொருளின் பெயர் - - கல்வி,செல்வம். (2)

333. இருவகைக்கூத்தின் பெயர் - - மார்க்கம், தேசிகம். (2)

334. மும்மையின் பெயர் - - *உம்மை, இம்மை, மறுமை. (3)
*உம்மை கழிபிறப்பு.

335. முப்பொறியின் பெயர் - - மனம், வாக்கு, காயம். (3)

336. முச்செயலின் பெயர் - - படைத்தல், காத்தல்,அழித்தல். (3)

337. முக்காலத்தின் பெயர் - - இறந்தகாலம், எதிர் காலம், நிகழ்காலம். (3)

338. மூவிடத்தின் பெயர் - -முன்னிலை, படர்க்கை, தன்மை. (3)

339. முக்குற்றத்தின் பெயர் - - காமம், வெகுளி, மயக்கம். ( 3)

340. மூவகைமொழியின் பெயர் - -உண்மைகூறல், பழித்தல் புகழ்தல். ( 3)

341. முக்குணத்தின் பெயர் - - சாத்துவிகம், இராசதம், தாமதம். (3)

342. அவற்றுள்சாத்துவிககுணம் - - ஞானம், தவம், மேன்மை, அருள்,மோனம், வாய்மை, பொறுமை, புலன‌டக்கல். (8)

343. இராசதகுணம் - - தானம், தவம், தருமம், பேணல், ஞானம்; கல்வி, நலன்,கேள்வி. (6)

344. தாமதகுணம் -பேருண்டி, நீதிகேடு, உரக்கம், மறதி, பொய், சோம்பு, ஒழுக்கம் -வழுவுதல், கொலை, வஞ்சம். (8)

345. மூவகைத்தானத்தின் பெயர் - முதல், இடை, கடை. (3)

346. அவற்றுளுத்தமதானம் - அறத்தானீட்டிய பொருளை முக்குற்ற மற்ற நற்றவத்தோரைக் கொள்கெனப் பணிந்து, குறையிரந்து மனமகிழ்ந்து கொடுத்தல்.

347. மத்திமதானம் -*ஆதுலர், அந்தகர் +உருப்பறைகள், ‡ஆதர், மாதர், இவர்களுக்குக் கொடுப்பது.
----
*ஆதுலர் இரப்போர், +உறுப்பறைகள் அவயவமிழந்தவர், ‡ஆதர் பற்றுக்கோடில்லாதவர், ஆர்வம் விருப்பம்,

348. கடைப்படுதானம் -ஆர்வம், புகழ், அச்சம், கைம்மாறு, காரணம் கண்ணோட்டம், $கடப்பாடு இவற்றைப்பற்றி யீவது.
----
$கடப்பாடு - முறைமை.

349. மூவகைப்பாவபுண்ணியவழக்கத்தின் பெயர் - செய்தல், செய்வித்தல், உடன்பாடு. (3)

350. மூவுலகின் பெயர் - பூமி, அந்தரம், சுவர்க்கம். (3)

351. முச்சுடரின் பெயர் - சந்திரன், சூரியன், அக்கினி. (3)

352. திரிகடுகத்தின் பெயர் - சுக்கு, திப்பிலி, மிளகு. (3)

353. திரிபலையின் பெயர் - நெல்லி, கடுக்காய், மிளகு. (3)

354. நாற்கதியின் பெயர் - தேவகதி, மிருககதி, மக்கள்கதி, நரககதி.

355. நால்வகைவேதத்தின் பெயர் - இருக்கு, எசுர், சாமம், அதர்வணம். (4)

356. நால்வகையிழிச்சொல்லின் பெயர் - குரளை, கடுஞ்சொல், பயனில்சொல். பொய்சொல்லல். (4)

357. ஆடவர்நாற்குணத்தின் பெயர் - அறிவு, நிரை, ஓர்ப்பு, கடைப்பிடி.

358. பெண்கணாற்குணத்தின் பெயர் - நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு.

359. நால்வகைப் புண்ணியத்தின் பெயர் - தானம், கல்வி, தவம், ஒழுக்கம். (4)

360. உயிர்த்தோற்றநால்வகையின் பெயர் - பை, முட்டை, வியர்வை, நிலம். (4)

361. நால்வகைப்புலமையின் பெயர் - கவி, கமகன், வாதி, வாக்கி. (4)

362. அவற்றுள் கவியின்வகை - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம், என்னு நாற்கவிகளைப் பாடுவோன் கவிஎன்று சொல்லப்படுவான்.

363. கமகன் வகை - அரும்பொருளைச் செம்பொருணடையாகக் காட்டி விவகரிப்போன் கமகன்.

364. வாதிவகை - காரணமுமேற் கோளுமெடுத்துக் காட்டிப் பிறர்மதத்தை மறுத்துத் தன்மதநிறுத்துவோன் வாதி.

365. வாக்கிவகை - அறம்பொருளின்பம் வீடெனுநான் குறுதிகளைக் கேட்கவும் விரும்பவும் இனியனவாக விரித்துக் கூறுவோன்வாக்கி.

366. ஆசுகவிவகை - பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்து மற்றொருவன் பாடுகவென்றவுடனே பாடுவது ஆசுகவி.

367. மதுரகவிவகை - பொருட்செல்வம், சொல்லாற்றல், தொடை, தொடைவிகற்பஞ் செறியவுருக முதலிய வலங்காரத்தோடின்னோசைத் தாயாராய் வோர்மனங்கட்கு அமுதம் போலினிமைபயப்பப் பாடுவது மதுரகவி.

368. சித்திரகவிவகை - மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைகரப்பு, கரந்துறை, தூசங்கொளல், வாவன்ஞாற்று, பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, கூடசதுக்கம், கோமூந்திரி, ஓரெழுத்தினம், ஒற்றெழுத்துக்தீர்ந்த வொருபொருட் பாட்டு, சித்திரப்பா, விசித்திரப்பா, விகற்பநடை, வினாவுத்தரம், சருப்பதோபத்திரம், எழுத்துவருத்தனம், இவை முதலிய வற்றைவடநூற் பரப்பில்முற்ற ஓதிவைத்த வுதாரணங்களை யாராய்ந்து விரிவுபடக் கூறியவற்றினியலால் * மிறைக்கவியில் விளக்கிப்பாடுவது சித்திரகவி.
- - - - - - - - - - -
* மிறைக்கவி - சித்திரகவி.

369. வித்தாரகவிவகை - மும்மணிக்கோவை, பன்மணிமாலை,ம‌றம், கலிவெண்பா, மடலூர்தல். இயல், இசை, நாடகம்,பல்வகைக்கவி,கூத்து, கிரீடை, பாடாண்டத்துறை, வகுப்பும், விருத்தகவிதை யிவை முதலியவற்றை விரித்துப் பாடுவது வித்தாரகவி.

370. நாற்பொருளின் பெயர் - அறம்,பொருள், இன்பம், வீடு. (4)

371. நால்வ‌கைக் கேள்வியின் பெயர் - கற்றல், கேட்டல், *அவ்வழிநிற்றல், †ஒத்தல். (4 )
------
*அவ்வழிநிற்றல் பாவனை †ஒத்தல் நிட்டை. ‡பைசாச முதலியவற்றின் விரிவைப் பின்னர்க் காண்க.

372. நானிலத்தின் பெயர் - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல். (4)

373. நால்வகைச்சேனையின் பெயர் - யானை, தேர், பரி, காலாள். (4)

374. நால்வகைப்பொன்னின் பெயர் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம். (4)

375. நால்வகைப்பூவின் பெயர் - கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ,புதற்பூ (4)

376. நால்வகைப்புசிப்பின் பெயர் - உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன 4

377. நால்வகையூறுபாட்டின் பெயர் - குத்தல், வெட்டல், எய்தல், எறிதல். (4)

378. நால்வகையுபாயத்தின் பெயர் - சாமம், பேதம், தானம், தண்டம். (4)

379. நால்வகைநிலையின் பெயர் - ‡பைசாசம், ஆலீடம், மண்டிலம், பிரத்தியாலீடம். (4)

380. பஞ்சபாதகவகைப் பெயர் - கொலை, களவு, கள், குரு நிந்தை, பொய். (5)

381. ஐவகைவினாவின் பெயர் - அறியான்வினாவல், அறிவொப்புக் காண்டல், ஐய மறுத்தல், அவனறிவுதான்கோடல்,, மெய்யவற்குக் காட்டல். (5)

382. பஞ்சாங்கவகைப் பெயர் - திதி, வாரம், நாள், யோகம், கரணம்.

383. பஞ்சசயனவகைப் பெயர் - மயிர்ச்சேணம், பஞ்சுமெத்தை, வண்படாம், அன்னத்தின்றூவி, *வீப்பாய். 5
-------
*வீப்பாய் - மலர்ப்பாய்.

384. பஞ்சவாசவகைப் பெயர் - தக்கோலம், ஏலம், இலவங்கம், சாதிக்காய், கர்ப்பூரம். 5

385. பஞ்சபூதவகைப் பெயர் - நிலம், நீர், தேயு, வாயு, ஆகாயம். 5

386. பஞ்சபுலன் பஞ்சேந்திரியங்களின் வகைப் பெயர் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், (5) நா, கண், மெய், செவி, மூக்கு. 5

387. இந்திரியத்தின் பெயர் - கரணம், பொறி, வாயில், கந்தம். 4

388. ஐவகைக்குசலவித்தையின் பெயர் - எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல். 5

389. ஐவகைமெய்க் குற்றத்தின் பெயர் - கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல். 5

390. ஐவகைவிரையின் பெயர் - கோட்டம், துருக்கம், தகரம், அகில், ஆரம். 5

391. ஐவகைத்தந்தையர் பெயர் - அரசன், த‌லைவன், த‌ந்தை, முன்னோன், குரவன். 5

392. ஐம்பால்வகைப் பெயர் - ஒருவன், ஒருத்தி, பலர்,ஒன்று, பல. 5

393. ஐவகையுணவின் பெயர் - கடித்தல், ந‌க்கல், பருகல், விழுங்கல், மெல்லல். 5

394. பஞ்ச‌சத்த கருவிவகைப் பெயர் - தோற்கருவி, தொளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி. 5

395. ஐவகை வேள்வியின் பெயர் - கடவுள்வேள்வி, பிரமவேள்வி, பூதவேள்வி, மானிடவேள்வி, தென்புலத்தார் வேள்வி. 5

396. ஐவகைத் தாயர் பெயர் - ஈன்றதாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய். (5)

397. கான்படு திரவியமைந்தின் பெயர் - அரக்கு இறால் தேன் மயிற் பீலி நாவி. (5)

398. கடல்படு திரவியமைந்தின் பெயர் - பவளம் முத்து சங்கு ஒக்கோலை உப்பு. (5)

399. நாடுபடு திரவியமைந்தின் பெயர் - செந்நெல் செவ்விளநீர் சிறுபயறு, கரும்பு வாழை. (5)

400. நகர்படு திரவியமைந்தின் பெயர் - கண்ணாடி பித்தன் கருங்குரங்கு யானை வேந்தன் (5)

401. மலைபடு திரவியமைந்தின் பெயர் - அகில் மிளகு கோட்டம் தக்கோலம் குங்குமம் (5)

402. ஆறங்கத்தின் பெயர் -மந்திரம் வியாகரணம் நிகண்டு சந்தோபிசிதம் நிருத்தம் சோதிடம் (6)

403. நன்னாட்டமைதியறு வகைப் பெயர் -செல்வம் விளையுள் பல்வளம் செங்கோல் குறும்பின்மை பிணியின்மை (6)

404. போகபூமியறு வகைப் பெயர் - ஆதியரிவஞ்சம் நல்லரிவஞ்சம் ஏ மதவஞ்சம் இரணவஞ்சம் தேவகுருவம் உத்தரகுருவம் (6)

405. உட்பகையாறின் பெயர் - காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாச்சரியம் (6)

406. அறுவகைச்சுவையின் பெயர் - தித்தித்தல் கூர்த்தல் துவர்த்தம் கார்த்தல் கைத்தல் புளித்தல் (6)

407. அறுவகைப்புறச்சமயத்தின் பெயர் - உலகாயதம் புத்தம் சமணம் மீமாஞ்சை பாஞ்சராத்திரம் பாட்டாசாரியம் (6)

408. உட்சமயமாறின் பெயர் - வைரவம் வாமம் காளாமுகம் மாவிதம் பாசுபதம் சைவம் (6)

409. பெரியோரெழுவகைப் பெற்றியின் பெயர் - அறம் பொருள் இன்பம் அன்பு பொறுமை புகழ் மதிப்பு (7)

410. எழுவகைத் தாதின் பெயர் - இரதம் உதிரம் என்பு தோல் தசைமூளை சுக்கிலம் (7)
-------
*பெற்றி தன்மை

411. எழுவகை நதியின் பெயர் - கங்கை, யமுனை, நருமதை, சரச்சுவதி, காவிரி, குமரி, கோதாவரி (7)

412. எழுவகை நரகத்தின் பெயர் - பெருங்களிற்றுவட்டம், பெருமணல்வட்டம், எரிபரல்வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், பெருங்கீழ்வட்டம், இருள்வட்டம் (7)

413. எழுவகைப் பிறப்பின் பெயர் - *தே, மா, தாபரம், பறவை, மக்கள், ஊர்வன, நீர்வாழ்வன (7)
*தே -தெய்வம். மா -மிருகம்

414. எழுவகையோனிபேத விரிவின் பெயர் - தேவர் பதினான்கு நூறாயிரம், மக்களொன்பது நூறாயிரம், தாபர மிருபதுநூறாயிரம், ஊர்வன பதினொருநூறாயிரம், நீர்வாழ்வன பத்துநூறாயிரம், விலங்கு பத்துநூறாயிரம், புள் பத்துநூறாயிரம் ஆக வெண்பத்தினான்கு நூறாயிரம்.

415. அவற்றுட்டன்னையறிந்தவரறியாத வரின் பெயர் - தன்னையறிந்தவர் -சாயுத்தியத்தர். தன்னையறியாதவர் -பிறப்போர்.

416. நாட்டேழ்குற்றத்தின் பெயர் - †வெட்டில் கிளி நாவாய் ஏனம் தொட்டியர் கள்வர் பெரும்புயல் (2)
† விட்டில் எனவும் வழங்கும்

417. அட்டமூர்த்தவகைப் பெயர் - பார் நீர் தேயு வாயு ஆகாயம் சூரியன் சந்திரன் இயமானன் (8)

418. அட்டமாசித்தியின் பெயர் - அணிமா மகிமா கரிமா இலகிமா பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் (8)

419. அட்டாங்கயோகத்தின் பெயர் - இயமம் நியமம் ஆதனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி (8)

420. அவற்றுனியமம்ஆவது -கொல்லாமை மெய்ம்மைகூறல் கள்ளாமை பிறர்பொருட்காதலின்மை இந்திரியமடக்கல் (5)

421. நியமம்ஆவது -தவம் சௌசம் தத்துவநூலோர்தல் பெற்றது கொண்டுமகிழ்தல் தெய்வம்வழிபடல் (5)

422. ஆதனம்ஆவது -பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி சுவத்திகம் சுகாதனம் (6)

423. பிரணாயாமம்ஆவது -பிராணவாயுவையிரேசக பூரககும்பகஞ் செய்தல்

424. பிரத்தியாகாரம்ஆவது -சீவவுபாதியை நீக்கிப் பிரபஞ்சவுபாதியைச் சிவசொரூபமாகப் பார்த்தல்

425. தாரணை ஆவது - முழங்கால், குதம், இதயம், கண்டம், கபால‌மாகிய இத்தானங்களிற் பிருதிவி முதலிய பஞ்சபூதங்களையொடுக்கி, அத்தானங்களில் பிரமன் முதலிய பஞ்சமூர்த்திகளையும் பாவித்தல்.

426. தியானம் ஆவது - ஐம்புலத்தையும் அந்தக் கரணத்தையுமடக்கிச் சிவயோகஞ் சேர்தல்.

427. சமாதி ஆவது - ஆதாரதரிசனத்தையும் நிராதார தரிசனத்தையுங்
கடந்து மீதானத்துநிற்றல்.

428. எண்வகைக் காட்சியின் பெயர் - அற‌த்தை ஐயப்படாது செய்தல், அவாசிறிது மில்லாமை, உவர்ப்பில்லாத அறிவுடைமை, மூடமறுத்தல், மிகவும் பழிமறுத்தல், அழிந்தோரைநிறுத்தல், அறத்தைவிளக்கல், அறுசமயத்தவர்க் கன்பு. (8)

429. அருகன்எண் குணத்தின் பெயர் - அநந்தஞானம், அநந்ததரிசனம், அநந்தவீரியம், அநந்தசுகம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு (8)

430. எண்வகைக் குற்றத்தின் பெயர் - ஞானாவரணியம், தரிசனாவரணியம், வேதநீயம், மோகநீயம், ஆயுநாமம், கோத்திரநாமம், காயவந்தராயம், வாயுவந்தராயம். (8)

431. அட்டமங்கலத்தின் பெயர் - கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல். (8)

432. சிறப்பில்லா எண்வகைப் பெயரெச்சத்தின் பெயர் - *சிதடு, உறுப்பில் பண்டம், கூன், குறள், ஊமை, செவிடு !மா, #மருள். (8)
* சிதடு -குருடு, ! மா மிருகத்தன்மை # மருள் உறுப்புமயக்கம்.

433. அட்டகிரியின் பெயர் - இமயம், மந்தரம், கைலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தம். (8)

434. அட்டகணிதத்தின் பெயர் - *சங்கலிதம், !விபகலிதம், # குணனம், $பாகாரம், % வர்க்கம், வர்க்கமூலம், &கனம், கனமூலம். (8)
* சங்கலிதம் -கூட்டல், ! விபகலிதம் - கழித்தல், # குணனம் - பெருக்கல்,
$ பாகாரம் - பங்கிடல், % வர்க்கம் -சமமாகியஈரெண்ணின் பெருக்கம்,
& கனம் -சமமாகிய மூவெண்ணின் பெருக்கம்.

435. அட்டபரிசத்தின் பெயர் - தட்டல், பற்றல், தடவல், தீண்டல், தல், வெட்டல், கட்டல், ஊன்றல். (8)

436. நவமணியின் பெயர் - வைரம், முத்து, மாணிக்கம், பவளம், மர‌கதம், கோமேதகம், வைடூரியம், நீலம் , புருடராகம். 9

437. நவபுண்ணியத்தின் பெயர் - எதிர்கொளல், பணிதல், இருத்தல், கால்கழுவல், அருச்சித்தல், தூபங்கொடுத்தல், தீபங்காட்டல், அருசுவை யுண்டியமைந்தோர்க் குதவுதல், புகழ்தல். 9

438. நவதாரணையின் பெயர் - நாம தாரணை, வச்சிர தாரணை, மாயா தாரணை, சித்திர தாரணை, சத்த தாரணை, வத்துத் தாரணை, சதுரங்க தாரணை, செய்யுட்டாரணை, நிறைவுகுறையாகிய வெண்பொருட்டாரணை (9)

439. நவதாளத்தின் பெயர் - சமதாளம், அருமதாளம், அடதாளம், படிமதாளம், சயதாளம், மட்டியதாளம், விடதாளம், நிவர்ததாளம், துருவ தாளம் (9)

440. நாடகநவரதப் பெயர் - சிங்காரம் வீரியம் பெருநகை கருணை இரௌத்திரம் குற்சை சாந்தம் அற்புதம் பயம் (9)

441. சிற்பத்தொழிலின் பத்துறுப்பின் பெயர் - கல் உலோகம் செங்கல் மரம் மண் சுதை தந்தம் வண்ணம் கண்டசருக்கை மெழுகு (10)

442. உயிர்வேதனை பன்னிரண்டின் பெயர் - அனல், சீதம், வாதம், அசனி, புனல், ஆயுதம், விடம், மருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை

443. பதினெண்யாகங்களின் பெயர் - சோதிட்டோமம், அங்கிட்டோமம், உத்தியம், சோடசீ, வாசபேயம், அத்திராத்திரம், சோமயாகம், சாதுர் மாசியம், பவுத்திரமேதம், சௌத்திராமணி, புண்டரீகம், அங்கிசயன், இராசசூயம், அச்சுவமேதம், விச்சுவதித்து பிரமமேதம், பிரணவமேதம் பசுபந்தம் (18)

444. பதினெண் புரானணங்களின் பெயர் - * மச்சம், கூர்மம், வராகம், வாமனம், பதுமம், வைணவம், பாகவதம், பிரமம், சைவம், இலிங்கம், பௌடியம், நாரதீயம், காரூடம், பிரமகைவர்த்தம், காந்தம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பிரமாண்டம் (18)
- - - - - - - - - - - - - - - -
*மச்சம் பதினாலாயிரங்கிரந்தம், கூர்மம் ஆறாயிரங்கிரந்தம்.
வராகம் இருபத்துநாலாயிரங்கிரந்தம். வாமனம் பதினாலாயிரங்கிரந்தம்.
பதுமம் ஐம்பத்தையாயிரங்கிரந்தம். வைணவம் ஆறாயிரங்கிரந்தம்.
பாகவதம் பதினெண்ணாயிரங்கிரந்தம். பிரமம் பதினாயிரங்கிரந்தம்.
சைவம் இருபத்துநாலாயிரங்கிரந்தம். இலிங்கம் பதினோராயிரங்கிரந்தம்.
பௌடியம் முப்பத்தோராயிரங் கிரந்தம். நாரதீயம் இருபத்தையாயிரங்கிரந்தம்.
கரூடம் ஆறாயிரங்கிரந்தம். பிரமகைவர்த்தம் பன்னீராயிரங்கிரந்தம்.
காந்தம் -இலட்சங்கிரந்தம். மார்க்கண்டேயம் முத்பத்தீராயிரங்கிரந்தம்.
ஆக்கினேயம் எண்ணாயிரங்கிரந்தம். பிரமாண்டம் பன்னீராயிரங்கிரந்தம்

445. உப புராணம் பதினெட்டின் பெயர் - நாரசிங்கம், சநற்குமாரம், நாரதீயம், சிவதன்மம், துருவாசம், நந்திகேச்சுரம், அவுசனம், காளிகம், வாருணம், சாம்பேசம், பராசுரம், பார்க்கவம், காபிலம், மானவம், வாசிட்டலைங்கம், சவுரம், மாரீசம், பிரமாண்டம்

446. தருமநூல் பதினெட்டின் பெயர் - மநு, அத்திரி, விட்டுணு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற்கியம், பராசரம், ஆங்கீரசம், உசனம் காத்தியாயனம், சமவர்த்தம், வியாசம், பிரகற்பதி, சங்கலிதம், சாதான்மம், கௌதமம், தக்கம். (18)

447. யாக்கையின் பதினெண்குற்றத்தின் பெயர் - பசி, நீர்வேட்டல்,பயம், வெகுளி, *உவகை, †வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், ‡கேதம் §கையறவு. (18)
- - - - - - -
*உவகை -மகிழ்கூர்தல் †வேண்டல் -குறையிரத்தல் ‡கேதம் - துன்பம் § கையறவு -செயலறுதல்.

மூன்றாவது ஐயர்வகை முற்றிற்று்
ஆக சூத்திரம் 447


நான்காவது : அவனிவகை / பெயர்ப்பிரிவு

448 மண்ணுலகின் பெயர் - அவனி, வையம், அகலிடம், காசினி, புவனி, புடவி, பூதலம், பூமி, புவனம், படி, புவி, பொழில், பூசகம், மேதினி, தரை, தாலம், சாந்தை, யுகம், பார், தரணி, உலோகம், தாரணி, தலம், நீர்வரைப்பு, தராதலம், மகாதலம், நிலம், பிருதிவி தரம், நிலை, ஞாலம், அசலை, பூவலயம், அளக்கர், மண்டலம், பவனம், அகம், நடு பாலம், விபுலம், கோத்திரை, குவலயம், கு கோ, நேமி, தாத்திரி, வேலாவலயம், தரித்திரி, திணை, மகி, சக்கரம், பொறை, நகம், பாரி, வசுந்தரை, வசுமதி, வசுதை (58)

449 மற்றும் மண்ணுலகின் பெயர் - பூதியம் அகிலம் புரை பாரம் ()

450 நவகண்டத்தின் பெயர் - வடபால்வி, தேகம், தென்பால்விதேகம், கீழ்பால்விதேகம், மேல்பால்விதேகம், வடபாலிரேவதம், தென்பாலிரேவதம், வடபாற்பரதம், தென்பாற்பரதம், மத்திமகண்டம் (9)

451 பூவலயத்தின் பெயர் - பூகோளம் பூகண்டம் (2)

452 எழுதீவின் பெயர் - நாவல் இறலி கிரவுஞ்சம் குசை இலவம் தெங்கு புட்கரம் (7)

453 ஏழ்பொழிலின் பெயர் - ஏழ்பெருந்தீவு (1)

454 கீழேழுலகின் பெயர் - அதலம் விதலம் சுதலம் நிதலம் தராதலம் ரசாதலம் பாதலம் (7)

455 நரகத்தின் பெயர் - நிரயம் பவர்க்கம் கும்பி புலவு ஊழ்த்தல் அபரம் அள்ளல் அளறு அதோகதி பாவம் துவாந்தம் அருஞ்சிறை இருள்

456ஏழு நரகங்களின் பெயர் - கூடசாலம் கும்பிபாகம் அள்ளல் அ தோகதி ஆர்வம் பூதி செந்து (7)

457 நாட்டின் பெயர் - பைதிரம் மண்டிலம் பாடி தேயம் தண்ணடை நீவரம் கோட்டம் சனபதம் சும்மை அகலுள் கண்டம் ஏணி இராச்சியம் உலகு (14)

458 உலகின் பொதுப் பெயர் - புவனம் நாடு பொழில் தலம் புடவி பவனம் இராச்சியம் (7)

459 காசியின் பெயர் - வாராணாசி (1)

460 காஞ்சியின் பெயர் - கச்சி (1)

461 சிதம்பரத்தின் பெயர் - மன்றம் (1)

462 திருவாரூரின் பெயர் - கமலை (1)

463 உறையூரின் பெயர் - கோழி (1)

464 மதுரையின் பெயர் - கூடல் (1)

465 கருவூரின் பெயர் - வஞ்சி (1)

466 கடாரத்தின் பெயர் - காழகம் (1)

467 சிங்களத்தின் பெயர் - ஈழம் (1)

468 மிதிலையின் பெயர் - விதேகை (1)

469 அவந்திநகரின் பெயர் - உஞ்சை (1)

470 அரித்துவாரத்தின் பெயர் - மாயாபுரி (1)

471 காவிரிப்பூம்பட்டினத்தின் பெயர் - கரகநதி புகார் (2)

472 புரத்தின் பெயர் - புரம் (1)

473 சேரியின் பெயர் - பாடி (1)

474 முனைமேற்சொன்றோருறைபதியின் பெயர் - பாசறை. (1)

475 ஊரின் பெயர் - பூக்கம் கேடகம் பூரியம் பூண்டி பாக்கம் புரி கெடி பதி நகர் சும்மை சேரி மண்டிலம் சேர்வு குப்பம் காடு குடிக்காடு வேலி அகலுள் வைப்பு கிராமம் வசதி அருப்பம் ஆதரம் இல்லிடம் புகடலிம் புரம் பாழி நத்தம் கோசரம் ஒக்கம் உறையுள் இருக்கை (32)

476 சிற்றூரின் பெயர் - பேடு குடி தண்ணடை பட்டு நொச்சி பள்ளி (6)

477 நிலத்தின் பெயர் - மா திணை வேலி (3)

478 மற்றும்நிலத்தின் பெயர் பூ (1)

479 வழியின் பெயர் - அதர் அயனம் ஆறு அடைவு பதவை வதி அத்தம் மார்க்கம் கடவை கிறி நடை போக்கு இடவை தாரி தாரை இயவை தெரு ஒழுக்கம் செப்பம் சுரம் சரி நெறி செலவு தரங்கு பட்டம் வனம் கால் பதம் வட்டை வகிர் வாரி (31)

480 அருநெறியின் பெயர் - அத்தம் கடம் சுரம் (3)

481 யானைசெல்வழியின் பெயர் - தண்டம் (1)

482 இழிந்தேறும் வழியின் பெயர் - படுகர் (1)

483 சிறுவழியின் பெயர் - விடங்கர் (1)

484 நீள்வழியின் பெயர் - அளக்கர் (1)

485 கவர்வழியின் பெயர் - கவலை (1)

486 முதுவரம்புவழியின் பெயர் - மஞ்சில் (1)

487 புதுவரம்புவழியின் பெயர் - மரிசி (1)

488 பள்ளத்தின் பெயர் - ஞெள்ளல் தாழ்வு படுகர் அவல் குழி இழிவு பயம்பு (7)

489 மேட்டின் பெயர் - உயர்நிலம், திடர், சுவல், ஓங்கல், திட்டை, மிசை, மோடு (7)

490 சிறுதிட்டையின் பெயர் - பாறை மேடு முரம்பு பதுக்கை (4)

491 குப்பைமேட்டின் பெயர் - கரு குவை கொம்மை திடர் (4)

492 நடுவின் பெயர் - நனந்தலை நாப்பண் மத்தியம் நள் ஒத்தல்நா அணவு இடை கூழை (9)

493 ஐந்திணையின் பெயர் - குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் (5)

494 அவற்றுள் குறிஞ்சிநிலத்தின் பெயர் - புறணி துருக்கம் புறவம் வன்பால் குறும்பொறை புறம்பணை (6)

495 மலையின் பெயர் - விலங்கல் சயிலம் விண்டு வெற்பு சிலம்பு சிமயம் சிகிரி சிலோச்சயம் பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம் பருப்பதம் பதலை பறம்பு பாதவம் அத்திரி நகம் அடுக்கல் நவிரம் குத்திரம் குவடு கோத்திரம் குன்று தாணு அசலம் சானு மேரு ஓதி வீரம் கிரி காண்டம் ஓங்கல் பீலி திகிரி அரி பிறங்கல் மாதிரம் கல் வரை பொகுட்டு தரணி சிமிலம் சையம் பத்திரம் வேதண்டம் இரவி மேதரம் சாரல் பொற்றை நாகம் சிலை போதி (52)

496 சிறுமலையின் பெயர் - குன்று பொற்றை குவடு குறும்பொறை இறும்பு (5)

497 மலைப்பக்கத்தின் பெயர் - சாரல் சரி கடம் தடம்சானு வாரம் நிதம்பம் (6)

498. மலைமுகட்டின் பெயர் - குவடு, கோடு, கூடம், கொடுமுடி, சிகரம், மலையம், சேண். (7)

499. பாறையின் பெயர் - அறை. 1

500. துறுகல்லின் பெயர் - பொறை. 1

501. விடரின் பெயர் - விடர், கல்லளை. 2

502. கற்பாழியின் பெயர் - காண்டை. 1

503. கீழறையின் பெயர் - பிலம். 1

504. மலைமுழையின் பெயர் - முடுக்கர், க‌ந்தரம், பிலம்,குகை, குகரம், கற்புழை, நிகுஞ்சம், வங்கு. 8

505. பெருங்கல்லின் பெயர் - கேளிதம். 1

506. சிறுகல்லின் பெயர் - உபலம். 1.

507. திரண்டகல்லின் பெயர் - உலங்கு, குண்டு, உலம். 3

508. எழுமலையின் பெயர் - கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏம‌கூடம், நீலகிரி. 8

509. இமயமலையின் பெயர் - பூதரம், ஆதிமலை, பொன்மலை, சிமயம், ஏமந்தாசலம். 5

510. மற்றுமிமயமலையின் பெயர் - மேரு,புள்ளிமலை. 2

511. மகமேருவின் பெயர் - தேவராலயம், பெருமலை, வடமலை, மூவாமலை, மந்தரம், பொன்மலை. 3.

512. கைலாயகிரியின் பெயர் - வெள்ளியங்கிரி, சயிலாதி, வேதண்டம், கண்ணுதல் மலை, நொடித்தான்மலை. 6

513. பொதியமலையின் பெயர் - தென்மலை, மலையம். 2

514. கொல்லிமலையின் பெயர் - வல்லியம். 1

515. மலையரையன் பெயர் - கிரிராசன், *உமையவ‌ட் பெற்றோன், இமவான். 3

516. மலைமேற்றுருக்கத்தின் பெயர் - அருப்பம். 1

517. மலைச்சாரல் வீழ்புனலின் பெயர் - அருவி. 1

518. அருவிப்புனல் வீழிடத்தின் பெயர் - தூவானம். 1

519. மலைக்கணவாயின் பெயர் - பூழை. 1

520. தினைப்புனத்தின் பெயர் - ஏனல், வளாகம். 1

521. குறிஞ்சி நிலத்தூரின் பெயர் - குறும்பொறை, சீறூர், சிறுகுடி.

522. குறிஞ்சி நிலப்பறையின் பெயர் - தொண்டகம், முருகியம், துடி.

523. குறிஞ்சி நில‌மாக்களின் பெயர் - கானவர், குறவர். 2

524. குறிஞ்சி நிலப்பெண்கள் பெயர் - குறத்தியர், கொடிச்சியர், மறத்தியர். 3

525. குறிஞ்சித் தலைமகன் பெயர் - பொருநன், சிலம்பன், வெற்பன்.

526. குறிஞ்சிக் கடவுளின் பெயர் - கந்தன். 1

527. பாலைத்திணையின் பெயர் - மறுபுலம், செம்புலம், வன்பால். 3

528. பிளப்பின் பெயர் - விடர், கமர். 3

529. பரலடுத்துயர் நிலத்தின் பெயர் - முரம்பு, பதுக்கை. 2

530. பாலை நிலத்தூரின் பெயர் - முனையிடம், குறும்பு. 2

531. பாலை நிலப்பறையின் பெயர் - துடி. 1

532. பாலை நிலமாக்கள் பெயர் - மறவர், எயினர், சவரர், கிராதர், கானவர்,குறவர், புளினர். 5

533. பாலை நிலப் பெண்கள் பெயர் - எயிற்றியர், பேதையர், மறத்தியர்.

534. பாலை நிலத்தலைமகன் பெயர் - விடலை, காளை, மீளி. 3

535. பாலை நிலக்கடவுளின் பெயர் - துர்க்கை. 1

536. முல்லைத் திணையின் பெயர் - புறவம், புறம்பணை, புறவணி. 3

537. காட்டின் பெயர் - கானம், கடறு, கான், காந்தாரம், தாவம், புறவம், சங்கிரம், கட்சி, அடவி, காண்டகம், விந்தம், கானகம், கவனம், குறும்பொறை, ஆரணியம், குப்பம், கோட்டை, அரணம், வல்லை, துருக்கம், உயவை, சுரம், கானனம், கடம், பழுவம், பொச்சை, கண்டகம், தில்லம், களரி, முளரி, ககனம், அத்தம், வனம். 33

538. காட்டுத் துருக்கத்தின் பெயர் - அருப்பம், கோட்டை, வல்லை, ஆரணியம், அரணம். 5

539. முல்லை நிலக்கான்யாற்றின் பெயர் - கலுழி, உயவை. 2

540. பழங்கொல்லையின் பெயர் - முதைப்புனம். 1

541. புதுக்கொல்லையின் பெயர் - இதைப்புனம். 1

542. மற்றுமந்நிலத்தின் பெயர் - தில்லியம். 1

543. முல்லை நிலத்தூரின் பெயர் - பாடி. 1

544. முல்லை நிலப்பறையின் பெயர் - ஏறுகோள், பம்பை. 2

545. முல்லை நிலமாக்கள் பெயர் - இடையர். அண்டர், பொதுவர், கோபாலர், குடவர், அமுதர், கோவலர், ஆயர், தொறுவர், விந்தர். 10

546. முல்லை நிலப்பெண்டிர் பெயர் - இடைச்சியர், தொறுத்தியர், பொதுவியர், குடத்தியர். 4

547. முல்லை நிலத்தலைவன் பெயர் - கானக நாடன், குறும்பொறைநாடன், தோன்றல், அண்ணல். 3

548. முல்லை நிலக்கடவுளின் பெயர் - திருமால். 4

549. மருதத் திணையின் பெயர் - பழனம், தொடு, பணை, மென்பால், கழனி, பண்ணை. 6

550. யாற்றின் பெயர் - ஒலியல் உந்தி, புனல், ஒணம், குடிஞை , சிந்து, தீர்த்திகை, தீபவதி, தடினி, ஆபதகை. 9

551. யாற்றிடைக் குறையின் பெயர் - இலங்கை, அரங்கம், துருத்தி. 3

552. வெண்மணலின் பெயர் - வாலுகம். 1

553. கருமணலின் பெயர் - அறல். 1

554. நுண்மணலின் பெயர் - அதர், அயிர், எக்கர். 3

555. புழுதியின் பெயர் - பொடி, மண். 2

556.மணற்குன்றின் பெயர் - புளினம். 1

557. ஊறலின் பெயர் - அஃகம், உறவி, அசும்பு. 3

558. கங்கையின் பெயர் - வானதி, பகீரதி, மந்தாகினி, சானவி,வர‌னதி, சுரநதி, விமலை, திரிபதகை, தெய்வநதி. 9

559. யமுனையின் பெயர் - கதிரவன்புதல்வி, காளிந்தி. 2

560. சரச்சுவதி நதியின் பெயர் - சோணை. 1

561. கௌதமை நதியின் பெயர் -கோதை. 1

562. நருமதை நதியின் பெயர் - சோமன் புத்திரி, இரேவை. 2

563. காவிரியின் பெயர் - பொன்னி. 1

564. பொருநையின் பெயர் - பொருந்தம். 1

565. கன்னி நதியின் பெயர் - குமரி (1)

566. ஆன்பொருந்த நதியின் பெயர் - ஆனிவானி ஆன்பொருநை சூதநதி (3)

567. வைகை நதியின் பெயர் - வேகவதி (1

568. கோதாவரியின் பெயர் - விமலை (1)

569. மருத நிலத்தூரின் பெயர் - மடப்பம் தண்ணடை (2)

570. மருத நிலப்பழையின் பெயர் - அரி கிணை முரசம் பணை (4)

571. வயலின் பெயர் - கழனி புலம் கைதை தடி மருதம் வரப்புள்மா செறு பண்ணை பானல் பழனம் விளையுள் பணை செய் (14)

572. சிறுசெய்யின் பெயர் - குண்டில் பாத்தி (2)

573. வரம்பின் பெயர் - மரிசு கோடு கூலம் (3)

574. வரம்பருகின் பெயர் - கங்கு மரிசு (2)

575. செந்நெல்விளை நிலத்தின் பெயர் - சாலேயம் (1)

576. அனைத்துமுண்டாகு நன்னிலத்தின் பெயர் - உறாவரை (1)

577. பாழ் நிலத்தின் பெயர் - கரம்பு களரி (2)

578. விளையா நிலத்தின் பெயர் - களர் சவர் (2)

579. மருதநில மாக்களின் பெயர் - களமர் உழவர் கடைஞர் சிலதர் மள்ளர் மேழியர் (6)

580. மருதநிலப் பெண்கள் பெயர் - உழத்தியர் கடைசியர் (2)

581. மருதநிலத் தலைமகன் பெயர் - மகிழ்நன் ஊரன் கிறவன் (3)

582. மருதநிலக் கடவுள் பெயர் - அமரர்பதி (1)

583. நெய்தற்றிணையின் பெயர் - கடல் (1)

584. கடலின் பெயர் - அம்பரம் ஆர்கலி அளக்கர் தோயம் அம்புராசி மகராலயம் பரவை சலதி பௌவம் மகோததி சலநிதி வீரை வேலா வலயம் நீர் வெள்ளம் வாரி வேலை வாருணம் புணரி சிந்து முந்நீர் தொன்னீர் நரலை சக்கரம் உந்தி சலராசி உப்பு உததி சாகரம் சமுத்திரம் நேமி நதிபதி பாராவாரம் பயோததி வாரிதி வாரணம் வலயம் அத்தி ஆழி பெருநீர் அலை உவா உவரி சிந்துவாரம் ஓதம் அரி குரவை அழுவம் தொண்டிரை கார் கோள் (50)

585. எழு கடலின் பெயர் - உப்பு தேன் கருப்பஞ்சாறு தயிர் நெய் பால் அப்பு (7)

586. கழி முகத்தின் பெயர் - அதோமுகம் புகார் அழிவு கூடல் காயல் (5)

587. மற்றும் கழிமுகத்தின் பெயர் - அருவி கயவு (2)

588. கடற்றிரையின் பெயர் - ஓதம் புணரி சீகரம் வேலை அலை (5)

589. உவர்நீரின் பெயர் - உறை (1)

590. கடற்கரையின் பெயர் - வேலை பாராவாரம் (2)

591. தோணா முகத்தின் பெயர் - சூழ்கழியிருக்கை (1)

592. உப்பளத்தின் பெயர் - அளம் கானல் அளக்கர் உவளகம் கழி நிலம் மரக்கால் (6)

593. கழியின் பெயர் - காயல் முகம் (2)

594. உவர்த்தரையின் பெயர் - இருணம் (1)

595. மணற்குவையின் பெயர் - புளினம் (1)

596. உவர்க் களத்தின் பெயர் - உவளகம் (1)

597. உப்பமைப்போர் பெயர் - உமணர் அளவர் உப்பர் (3)

598. நெய்தனிலத்தூரின் பெயர் - பாக்கம் பட்டினம் (2)

599. நெய்தனிலப் பறையின் பெயர் - சாபறை, மீன், கோட்பறை. ()

600. நெய்தனில மாக்கள் பெயர் - கடலர் திமிலர் சலவர் நுளையர் பரதர் வலையர் (6)

601. நெய்தனிலப் பெண்கள் பெயர் - பரத்தியர் நுளைச்சியர் (2)

602. நெய்தற்றலை மகன் பெயர் - மெல்லன் புலம்பன் தண்கடற் சேர்ப்பன் துறைவன் கொண்கன் (5)

603. நெய்தனிலக் கடவுளின் பெயர் - வருணன் (1)

604. நீர்நிலையின் பெயர் - இலைஞ்சி பண்ணை ஏல்வை குண்டம் அலந்தை பொய்கை வலயம் சுனை சிறை பட்டம் உடுவை பயம்பு படுகர் குட்டம்தாங்கல் கோட்டகம் ஏரி உவளகம் மடு ஓடை படு தடம் வாவி தடாகம் ஆவி சூழி கிடங்கு சலதரம் கேணி பணை கயம் பல்வலம் நளினி இலந்தை மூழி குழி குளம் (37)

605. புனற்கரைவரம்பு இவற்றின் பெயர் - கூலம் தீரம் வாரம் கோடு.

606. சேற்றின் பெயர் - அளறு பூழி அளக்கர் சேதசம் அசறு பங்கம் அள்ளல் குழை தொளி கொள்ளம் செய்யல் கும்பி குழம்பு தொள்ளி சகதி தொய்யல் நுரம்பு அசும்பு செதும்பு அங்கணம் பூகி (21)

607. அருவருப்புறு சேற்றின் பெயர் - நொளில் ஊழில் (2)

608. சேற்றிலெழுங்குமிழியின் பெயர் - கொப்புள் பொகுட்டு (2)

609. ஊறலின் பெயர் - உறவி அசும்பு ஊற்று (3)

610. செய்கரையின் பெயர் - சேது அணை குரம்பு குலை (4)

611. கிணற்றின் பெயர் - உறவி கூவல் கூபம் (3)

612. ஊரிலுள்ளாருண்ணும் நீரின் பெயர் - ஊருணி (1)

613. சுடுகாட்டின் பெயர் - ஈமம் மயானம் சுடலை சுடுநிலம் இடுகாடு புறங்காடு பிதிர்வனம் (7)

614. சாம்பரின் பெயர் - அடலை வெண்பலி (2)

615. பொடியின் பெயர் - துகள் நீறு சுண்ணம் குறுமல் சிதர் பராகம் சின்னம் பிதிர் நுணுங்கு சன்னம் நூறு தாது பூதி தூள் புழுதி அணு (16)

616. புற்றின் பெயர் - வன்மீகம் (1)

617. புற்றாஞ்சோற்றின் பெயர் - குறும்பி (1)

618. ஒதுக்கிடத்தின் பெயர் - துச்சில் (1)

619. வேறிடத்தின் பெயர் - ஒருசிறை (1)

620. பசும்புற்றரையின் பெயர் - அரிதம் சாட்டுவலம் (2)

621. களர்நிலத்தின் பெயர் - முதுநிலம் (1)

622. யுத்தகளத்தின் பெயர் - களம் பறந்தலை போர்க்களங் களரி ஆகவபூமி விளாகம் செருக்களம் அடுகளம் செங்களம் அமர்க்களம் மொய் படுகளம்

623. பிணம்படு நிலத்தின் பெயர் - பறந்தலை செம்புலம் (2)

624. பகைமேற் சென்றோருறைபதியின் பெயர் - பாசறை முனைப்பதி பாடி பாளையம் பாளி (5)

625. மற்றும் பகைமேற்சென்றோ ருறைபதியின் பெயர் - கேடகம் கடவை (2)

626. நகரத்தின் பொதுப் பெயர் - ஆலயம் நிகாயம் புரி ஆவாசம் தாமம் சாதனம் தாவளம் சரணம் பதி பள்ளி பாழிபாடி நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம் உறையுள் வசதி உசம் சம்வாகம் குடம் வேசனம் கோட்டம் அகரம் புரம் (25)

627. அகழின் பெயர் - ஓடை கிடங்கு கேணி உடு அகப்பா பரிகம் அகழி (7)

628. மதிலின் பெயர் - ஆரை, புரிசை, அரணம், சாலம், வேலி, பரவை, உவளகம், இஞ்சி, ஓதை, வேணகை, எயில், சிறை, கடகம், துருக்கம், அகப்பா, சுற்று, காப்பி, வரைப்பு, சக்கரம், வாரி, காவல், அரண், புறம், நொச்சி உரம் (25)

629. மற்றுமதிலின் பெயர் - ஆரல் பிரகாரம் பந்தமுமாகும் ஆக (28)

630. மதிலுறுப்பின் பெயர் - ஞாயில் எந்திரம் நாஞ்சில் கோசம் விதப்பு நரலை பதப்பாடு தோணி கொத்தளம் பொறி (10)

631. மதிலுளுயர் நிலத்தின் பெயர் - அகப்பா பரிகம் (2)

632. வாரியுளுயர் நிலத்தின் பெயர் - பரிகை கற்பா (2)

633. ஆழ்வாரி நிலத்தின் பெயர் - ஓதை (1)

634. கோபுர வாயிலின் பெயர் - கோட்டி வாரி (2)

635. மற்றுங் கோபுரவாயிலின் பெயர் - ஆத்தானம் அரிகூடம் (2)

636. கோபுரவாயிற் புகும்புழையின் பெயர் - புதவு (1)

637. கோபுரவாயிற்றிண்ணையின் பெயர் - அளிந்தம் (1)

638. வதுவைத் திண்ணையின் பெயர் - மணை வேதிகை (2)

639. கடைத் தெருவின் பெயர் - ஆவணம், பீடிகை, கூலம், அங்காடி, சேனை, நியமம் (6)

640. தெருவின் பெயர் - விச்சை, ஆவணம், வீதி, மறுகு, சேனை, நியமம், சிறகு, ஞெள்ளல், வாடை, கோசு, மார்க்கம், ஒலியல், பாடகம் (13)

641. மற்றுந் தெருவின் பெயர் - செப்பம் வேணி சிரேணி (3) ஆக (16)

642. சந்தியின் பெயர் - அந்தி கவலை வரி அரி கோடகம் (5)

643. முச்சந்தியின் பெயர் - -அந்தி, (1)

644. நாற்சந்தியின் பெயர் - -சோடகஞ், சிருங்காடகம், வரிசந்தி, சதுத்தம். (4)

645. சேரியின் பெயர் - -பாடம், வேணி, வாடை, முறி, சிரேணி (5)

646. அரசர்வீதியின் பெயர் - -பூரியம். (1)

647. வைசியர் சேரியின் பெயர் - -வாசிகை. (1)

648. இடைச் சேரியின் பெயர் - -ஆவிரம்,வல்லியம், உவளகம். (3)

649. வேடர் வீதியின் பெயர் - -பக்கணம். (1)

650.. அக்க சாலையின் பெயர் - -ஆவேசனம். (1)

651. அம்பலத்தின் பெயர் - -பொதியில், மன்றம்,பொது, சபை. (4)

652. அரசர் கோயிலின் பெயர் - -மாளிகை, சாலை, மந்திரம், பவனம், குலம். (5)

653. அரசிருக்கையின் பெயர் - -அத்தாணி, பூரியம்,ஆசாரம், வேத்தவை (4)

654. சித்திரகூடத்தின் பெயர் - -தெற்றி, அம்பலம். (2)

655. மண்டபத்தின் பெயர் - -மானம், சமித்தம். (2)

656. மன்னன்றேவியில்லத்தின் பெயர் - -அந்தப்புரம், கந்தவாரம், அரண்மனை, (3)

657. கோபுரத்தின் பெயர் - -கூடம், சிகரி, சிகரம். (3)

658. மாடத்தின் பெயர் - -மாளிகை, சூளிகை, தெற்றி. (3)

659.. உபரிகையின் பெயர் - -மேனிலை. (1)

660. நிலவறையிந் பெயர் - -கீழ்நிலை. (1)

661..நாடகசாலையின் பெயர் - -நவாங்கம். (1)

662. ஆடலிடத்துக்கும்வட்டாடிடத்துக்கும் பெயர் - -அரங்கம். (1)

663. பாடல்பலியிடத்தின் பெயர் - -பட்டிமண்டபம். (1)

664. தேவர் கோவிலின் பெயர் - -சிநகரம், சேதிமம், சிதேந்திரம், கோட்டம், நிலையம், மந்திரம், நிகேதனம், ஆலயம், நகரம், தனி. (10)

665. மல், படை, சூது, கல்விபயி லிடத்தின் பெயர் - -கழகம். - (1)

666. வீட்டின் பெயர் - மனை நகர் சேர்பு வசதி அகம் இல் புரையுள் பாத்தி புக்கில் இல்லம் பவனம் உறையுள் பதி மாடம் குலம் இடவகை இல்லிடம் (17)

667. சிற்றிலின் பெயர் - குரம்பை குடில் குடிசை (3)

668. வீட்டிறப்பின் பெயர் - இறை வளவி (2)

669. முகட்டின் பெயர் - விடங்கம் கொடைக்கை மஞ்சு (3)

670. கல்லூரியின் பெயர் - கல்வி சுற்றுவாரி (2)

671. வேயுளின் பெயர் - வேய்தல் (1)

672. தாழ்வாரத்தின் பெயர் - ஆரோகணம் சோபானம் (2)

673. முற்றத்தின் பெயர் - முன்றில் அங்கணம் (2)

674. நிலாமுற்றத்தின் பெயர் - அரமியம் (!)

675. தூம்புவாயின் பெயர் - அங்கணம் (1)

676. பொல்லாநிலத்தின் பெயர் - சகதி (1)

677. சலதாரையின் பெயர் - சுருங்கு புழல் (2)

678. மற்றுஞ்சலதாரையின் பெயர் - அங்கணம் (1)

679. நீர்தகைகதவின் பெயர் - ஓ (1)

680. சாளரவாலின் பெயர் - சாலேகம் வாதாயனம் சாலம் நுழை சாலகம் காலதர் (6)

681. மனைவாயிலின் பெயர் - துவாரம், வாரி, தோட்டி, உவளகம், புகுதி, கோட்டி, புதவு, கடை, தடம், அருநெறி, தூம்பு, சிதம் (12)

682. கதவின் பெயர் - ஓபு கிளர்வி யுதைபு நிகுத்தை காப்பு வாரி கபாடம் தோட்டி (8)

683. தாழின் பெயர் - காழ் சீப்பு கடிகை (3)

684. துறப்பின் பெயர் - அள் கொல் பறலிகை வலிப்பற்று பூட்டு வீகம் (6)

685. யானைக்கூடத்தின் பெயர் - ஆலயம் ஒளி (2)

686. யானைதுயிலிடத்தின் பெயர் - சேவகம் சாலை சேக்கை (3)

687. குதிரைப்பந்தியின் பெயர் - மந்திரம் சாலை பணை லாயம் (4)

688. தொழுவின் பெயர் - தொழுகு பட்டி தொறுவிடம் தொழுவு தோழம் வேலி ஆனிலை (7)

689. கற்படுத்ததரையின் பெயர் - குட்டிமம் (1)

690. சுவர்த்தலத்தின் பெயர் - உவமாநிலம் பித்திகை (2)

691. திண்ணையின் பெயர் - திட்டை, குறடு, தெற்றி, வேதிகை, மண்ணீடு. 5

692. அடுக்களையின் பெயர் - அட்டில், மடைப்பள்ளி. 2

693. அடுப்பின் பெயர் - காமரம், சுல்லி, குமுதம், உத்தானம். 4

694. அக்கினிட்டியின் பெயர் - ஞெகிழி, இந்தளம், நெருப்பிடுகலம், அன‌ற்குவை. 4

695. கடைக்கொள்ளியின் பெயர் - அலாதம், இராதம், ஞெகிழி. 3

696. மற்றுங் கடைக்கொள்ளியின் பெயர் - முளரி, உற்கை. 2

697. வேள்விக்குண்டத்தின் பெயர் - வேதி, நித்தம். 2

698. மட்கலஞ்சுடுமிடத்தின் பெயர் - சுள்ளை, சூளை. 2

699. உலைக்கலத்தின் பெயர் - உறவி. 1

700. உலைமூக்கின் பெயர் - குருகு, சிவை. 2

701. கரியின் பெயர் - கந்தள், இருந்தை, நல்லம். 3

702. குதிரின் பெயர் - புகல். 1

703. தவத்தோரிருக்குமிடத்தின் பெயர் - பாழி, கரண்டை, பள்ளி, மடம், குகை, தாபதம். 6

704. கூட்டின் பெயர் - குடம்பை, கட்சி, குலாயம். 3

705. பண்ணுங்கூட்டின் பெயர் - பஞ்சரம், குலாயம். 2

706. கல்விபயில் களத்தின் பெயர் - கழகம், பட்டிமம். 2

707. துயிலிடத்தின் பெயர் - ஆய்வை, கிடக்கை, அணை, பரியங்கம், பாயல், சேக்கை, பள்ளி, தளிமம், சாயல், த‌ட்டம், தற்பம், சயனம், அம்பரம், சேர்விட‌ம். 14

708. விலங்கு துயிலிடத்தின் பெயர் - பாழி, பண்ணை, பணை, பட்டம், போத்து, சேக்கை. 6

709. தோட்டத்தின் பெயர் - பாதவம், துடவை, படப்பை. 3

710. மற்றும் தோட்டத்தின் பெயர் - ஆரம், தொடு. 2

711. வேலியின் பெயர் - வீர்தி, காவல். 2

712. நுழைவாயிலின் பெயர் - நூழை, சுருங்கை. 3

713. பரணின் பெயர் - பணவை, இதணம், கழுது. 3

714. கவரிறுக்கியின் பெயர் - கடவை, நடவை, மடவை. 3

715. காதவழியின் பெயர் - காவதம். 1

716. கூப்பிடு தூரத்தின் பெயர் - குரோசம், எல்லை. 2

717. யோசனையின் பெயர் - புகை. 2

718. கோழிப்பறவையளவின் பெயர் - கிரவுஞ்சம். 1

719. இடத்தின் பெயர் - வாசம், பாடு, மாடு, கடை, சிறை, சாதனம், பக்கம், தாபரம், வாய், புலம், மருங்கு, பாங்கு, நத்தம், வைப்பு, மரு, தலம், அடி,வயின், மதர்வு, களம், வழி, வளாகம், உழை, பட்டி, வகை, திணை, சூழல், தலை, இடம், அருகு, தானம், கண், இடை, சார், கால், பின், முதல், தாவளம், பால், உளி, பாழி, நிலம், இல், பள்ளி, ஞாங்கர், நிலை, பதி, உறையுள் நிசாதனம், முன்னர், நியமம், வசதி, நிகாயம், தேயம், புடை, அயம‌ராட்டம், கோட்டம், கீழ், மேல், மடம். 61

720. மற்றும் இடத்தின் பெயர் - காடு. 1 *ஆக‌ 62

721. சபையின் பெயர் - சங்கம், குழு, சமுகம், அவை, கோட்டி, தொகுதி, கணம், கூட்டம், சமவாயம். 9

722. நால்வகையரணின் பெயர் - மலை, காடு, மதில், நீர். 4

723. வன்பாலின் பெயர் - குறிஞ்சி, பாலை. 2

724. மென்பாலின் பெயர் - மருதம். 1

725. சமப்பாலின் பெயர் - முல்லை, நெய்தல். *2

நான்காவது அவனிவகை முற்றிற்று.
ஆக சூத்திரம் 725.


ஐந்தாவது - ஆடவர்வகை / பெயர்ப்பிரிவு

726. பார்ப்பார் பெயர் – அறவோர், பூசுரர், அறுதொழிலாளர், இரு பிறப்பாளர், எரிவளர்ப்போர், ஆதிவருணர், வேதியர், அந்தணர், வேள்வியாளர், மறையவர், விப்பிரர், மேற்குலத்தோர், முற்குலத்தோர், ஐயர், வேதபாரகர், முப்புரிநூலோர், தொழுகுலர் (17)

727. மற்றும் பார்ப்பார் பெயர் - முத்தீம ரபினர்

728. பிரமசாரியின் பெயர் - வன்னி (1)

729.அந்தணரறு தொழிலின் பெயர் – ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் (6)

730. அந்தணர் மாலைகொடியின் பெயர் - மாலை கமலம் = கொடிவௌதம்

731. அந்தணர்க்குரிய பொருளின் பெயர் – தருப்பை, முஞ்சிப்புல், சமித்து (3)

732. துரோணாசாரியின் பெயர் – வேதக்கொடியோன், வின்னூலாளன், பாரத்துவாசன், கும்பசன் (4)

733. அரசரின் பெயர் – பார்த்திபர், இறைவர், காவலர், பதிகள், கோக்கள், வேந்தர், கொற்றவர், புரவலர், பொருநர், மன்னர், பூபாலர், நிருபர், முதல்வர், ஏந்தல், குரிசில், மகிபாலர், தலைவர் (17)

734. எண்வகை மாலையின் பெயர் – வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை (8)

735. அரசர்கள் படைகொடியின் பெயர் - படை – அறுவகைத்தானை, கொடி - சிங்கம்

736. அறுவகைச் சக்கரவர்த்திகளின் பெயர் – அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புரூரவா, சகரன், கார்த்தவீரியன் (6)

737. வீட்டுமன் பெயர் – சந்தனு ,முன்மைந்தன் ,தெய்வ விரதன், கங்கை தகையன், காங்கேயன், பிரமசாரி (5)

738. குருகுலத்தரசர் பெயர் - பௌரவர் கௌரவர் பாரதர் (3)

739. தருமபுத்திரன் பெயர் – தருமமைந்தன், பொறையாளன், உதிட்டிரன், முரசக்கொடியோன் (4)

740. துரியோதனன் பெயர் – மன்னர், மன்னவன், வணங்கா முடியோன், பன்னக முயர்த்தோன், காந்தாரிசெம்மல் (4)

741. கன்னன் பெயர் – கதிர்மதலை, மிகுகொடையாளன், அங்கர் கோமான், கவசகுண்டலன், கானீனன், கச்சைக்கொடியோன் (6)

742. வீமன் பெயர் - வாயுமைந்தன் கதாயுதன் மாருதி கோளரிக்கொ
டியோன் இடும்பிகொழுநன் விருசோதரன் (6)

743. அருச்சுனன் பெயர் - பற்குனன் கிரீடி பார்த்தன் வீபற்சு சவ்வியசாசி விசயன் தனஞ்சயன் கிருட்டிணன் சுவேதவாகனன் சுரேந்திரன் மைந்தன் கிருட்டிணசகாயன் வானரக்கொடியோன் மாதவிகொழுநன் காண்டீபன் ஆண்டொழின்மைந்தன் (15)

744. நகுலசாதேவர் பெயர் - மத்திரைமைந்தர் அச்சுவினிமதலையர் இரட்டையர் (3)

745. சேரன் பெயர் - பூழியன் உதியன் கொங்கன் பொறையன் வானவன் குட்டுவன் வானவரம்பன் வில்லவன் குடநாடன் வஞ்சிவேந்தன் கொல்லிச்சிலம்பன் கோதை கோளன் பொருநைத்துறைவன் போந்தின் கண்ணியன் மலையன் மலையமான் (17)

746. கொடிகுதிரையின் பெயர் - கொடி - வில்=புரவி – பாடலம்

747. சோழன் பெயர் - சென்னி வளவன் செம்பியன் கிள்ளி பொன்னித்துறைவன் புலிக்கொடியோன் மால் கோழிவேந்தன் நேரிவெற்பன் ஆரின்கண்ணியன் நேரியன் அபயன் சூரியன் புனனாடன் (14)

748. மற்றுஞ்சோழன் பெயர் - கேசவன் (1) ஆக (15)

749. கொடிகுதிரையின் பெயர் - கொடி - புலி=புரவி - கோரம்

750. பாண்டியன் பெயர் - செழியன் கூடற்கோமான் தென்னவன் வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் கௌரியன் வேம்பின் கண்ணியன் கைதவன் மலையப்பொருப்பன் வைகைத்துறைவன் குமரிச்சேர்ப்பன் ()

751. கொடிகுதிரையின் பெயர் - கொடி கயல்; குதிரை - கனவட்டம்

752. சளுக்குவேந்தர் பெயர் - வேள்புலவரசர் (1)

753. குறுநிலமன்னர் பெயர் - குறும்பர் புரோசர் (2)

754. மற்றுங்குறுநிலமன்னர் பெயர் - வேளிர். ஆஉ (3)

755. வரைவின்றியாவருக்குங் கொடுக்குந்தலைவள்ள லெழுவர் பெயர் - சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன். (7)

756. இரப்போர்க்குக் கொடுக்குமிடை வள்ளலெழுவர் பெயர் - அந்திமான், சிசுபாலன், அக்குரன், வக்கிரன், சந்திமான், கன்னன், சந்தன். (7)

757. புகழ்வோருக்குக் கொடுக்குங் கடை வள்ளலெழுவர் பெயர் - பாரி, எழிலி, நள்ளி, ஆய், மலையன், ஓரி, பேகன். (7)

758. அரசிய லாறின் பெயர் - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண். (6)

759. அரசரறுவகைத் தானையின் பெயர் - வேல், வாள், வில், தேர், பரி, களிறு. (6)

760. அரசியலாறின் பெயர் - அறநிலையறம், மறநிலையறம், அறநிலைப் பொருள், மறநிலைப்பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம். (6)

761. அறநிலை யறத்தினியல் - நான்குவருணத்தாரும், தத்தம் வருணத்திற் பிறழாது நிலைபெறப்பாது காத்தலற நிலையறம்.

762. மறநிலை யறத்தினியல் - நிரை மீட்டலும் பகைவெல்லுதலு மாகிய‌ செஞ்சோற்றுக்கடன் கழியாதாரைத் தண்டித்துக் குறைவுறச் செய்தன் மறநிலையறம்.

763. அறநிலைப் பொருளியல் - நெறிவழிநின்று தத்தநிலையினால் முயன்று
பெறுபொருளற நிலைப்பொருள்.

764. மறநிலைப் பொருளியல் - பகைஞர் பொருளுந் திறைப்பொருளுங்குற்றஞ் செய்தோரை யொறுக்கும் பொருளும் சூதில்வெல் பொருளு மற‌நிலைப் பொருள்.

765. அறநிலையின் பவியல் - குலமுமொழுக்கமுங் குணமும் பருவமுமொத்த கன்னிகையைத் தீவேட்டில் லத்திருத்த லறநிலை யின்பம்.

766. ம‌றநிலையின் பவியல் - ஏறுதழுவலும் வில்லாலில‌க்க மெய்தலும் பொருள் கொடுத்துக் கோடலும் வலிந்து கோடலுமாகிய நெறியால் மணத்தன்
ம‌றநிலையின்பம்.

767. அரசரறுதொழிலின் பெயர் - ஓதல், பொருதல், உலகுபுரத்தல், ஈதல், வேட்டல், படைபயிறல். (6)

768. செங்கோல்வேந்தனெழுவகை நிலையின் பெயர் - அறம், பொருள்,
இன்பம், இம்மை, மறுமை, புகழ், மதிப்பு. (7)

769. அரசர்க்கைம் பெருங்குழுவின் பெயர் - மந்திரியர் புரோகிதர் சேனாபதியர் தூதர் சாரணர் (5)

770. அரசர்க் கெண்வகைத் துணைவர் பெயர் - கரணத்தியல்வோர் கருமவதிகாரர் சுற்றத்தார் கடைகாப்பாளர் நகரமாக்கள் படைத்தலைவர் இவுளிமறவர் யானைவீரர் (8)

771. அரசர்க்கைவகை யுறுதிச் சுற்றத்தின் பெயர் - நட்பாளர் அ்தணாளர் மடைத்தொழிலாளர் மருத்துவக்கலைஞர் நிமித்திகப்புலவர் (5)

772. முற்கூறியமூவகையோரும் வெண்கொற்றக் குடையினை யுடைய அரசர்களுக்குப் பதினெண்வகைத்தொழில் செய்யும் பகுதி யுடையவர்களாவார்கள்

773. வைசியர்பொதுப் பெயர் - தாளாளர் இப்பர் தருமக்கிழவர் வேளாளர் இளங்கோக்கள் (5)

774. வைசியர் முத்தொழிலின் பெயர் - கோக்களைக்காக்கல் பொருளீட்டல் ஏர்த்தொழில் (3)

775. கோவைசியர் பெயர் - * வைசிய னொருவனே அந்தணர் வேள்வியைக் குறைபாடின்றி முடித்தற்குப்பூண்ட தொழில்களால் வந்த தொன்று தொட்டுள்ள பெயர்கள்சொல்லுமிடத்தில் இவர்களுள்கோவைசியர் - கோவலர் இப்பர் கோவர்த்தனர் எனப் பெயர்பெறுவார் ((6)

776. தனவைசியர் பெயர் - நாய்கர் எட்டியர் வணிகர் பரதர் (4)

777. பூவைசியர் பெயர் - உழவர் மேழியர் காராளர் இளங்கோ பூபாலர் (4)

778. பூவைசியரறுதொழிலின் பெயர் - ஓதல் வேட்டல் உபகாரம் வாணிகம் பசுக்காவல் உழவுத்தொழில் (6)

779. வணிகரெண்குணத்தின் பெயர் - தனிமையாற்றல் முனிவிலனாதல் இடனறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் உறுவதுதெரிதல் இறுவதஞ்சாமை ஈட்டல் பகுத்தல் (8)

780. சூத்திரர் பெயர் - பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர் வளமையர் முத்தொழிலர் மண்மகள்புதல்வர் உழவர் ஏரினர் வாணர் காராளர் வினைஞர் மேழியர் வேளாளர் (19)

781. வேளாளர்பத்துவகைத்தொழிலின் பெயர் - ஆணைவழிநிற்றல்' மாண்வினை தொடங்கல், கைக்கடனாற்றல், குற்றமனத்தின்மை, சுற்றம்
-------------
*இதனைத்தரும நூலிற்காண்க .
போற்றல், நீங்காதமுயற்சி, மன்னிறைதருதல், ஒற்றுமைகோடல், ஒழுக்கம்,
விருந்துபுறந்தருதல். (10)

782. குருவின் பெயர் - பட்டாரகன், பதி, பண்ணவன், பகவன், அத்தன், தீர்த்தன், ஆசான், அடிகள், புங்கவன், சாமி, ஈசன், நாதன், இறைவன், கடவுள், கோமான், குரவன், ஐயன், கோமான். (18)

783. ஆசாரியன் பெயர் - ஓசன், பணிக்கன், உபாத்தி, தேசிகன். (4)

784. ஆயுள்வேதியர் பெயர் - மாமாத்திரர், பிடகர், மருத்துவர். (3)

785. குயவர் பெயர் - வேட்கோவர், கும்பகாரர், குலாலர், சக்கியர்.

786. உப்புவணிகர் பெயர் - உமணர், அளவர், உப்பர். (3)

787. கடிகைமாக்கள் பெயர் - பெருநம்பிகள், மங்கலப்பாடகர், எட்டர்

788. கம்மாளர் பெயர் - கம்மியர், யவனர், ஓவியர், வித்தகர், தபதியர். (5)

789. கொல்லர் பெயர் - கருமர், மனுவர், கம்மியர். (3)

790. தச்சன் பெயர் - மரவினையாளன், தபதி (2)

791. தட்டார் பெயர் - செங்கொல்லர், பொன்வினை செய்வோர். (2)

792. மற்றுந்தட்டார் பெயர் - அக்கசாலையர், சொன்னகாரர். ஆக (4)

793. கன்னார் பெயர் - கன்னுவர், கஞ்சகாரர். (2)

794. சிற்பாசாரியர் பெயர் - கல்வினையர், கற்றொழிலோர். (2)

795. நரப்புக்கருவியாளர் பெயர் - குயிலுவர். (1)

796. தோற்கருவியாளர் பெயர் - இயவர். (1)

797. மிலேச்சர் பெயர் - ஆரியர். (1)

798. சோனகர் பெயர் - யவனர். (1)

799. சித்திரகாரர் பெயர் - ஓவியர். (1)

800. முத்தங்கோப்பார் பெயர் - மணிகுயிற்றுநர். (1)

801. வண்ணார் பெயர் - காழியர், ஈரங்கொல்லியர். (2)

802. மற்றும் வண்ணார் பெயர் - ஏகாலியர், தூசர். (4)

803. நாவிதன் பெயர் - பெருமஞ்சிகன் மயிர்வினைஞன் (2)

804. மற்றும்நாவிதன் பெயர் - ஏனாதி சிரையன்மங்கலியன் ஆக (5)

805. செக்கான் பெயர் - சக்கிரி நந்தி (2)

806. சங்கறுப்போர் பெயர் - வளைபோழ்நர் (1)

807. மீகாமன் பெயர் - நீகான் மாலுமி மரக்கலன் (3)

808. ஆட்டுவாணிகன் பெயர் - சாபலன் (1)

809. ஊன்விலைஞர் பெயர் - சூனர் (1)

810. தோல்விலைஞர் பெயர் - பறம்பர் (1)

811. உறைகாரர் பெயர் - காரோடர் (1)

812. துன்னர் பெயர் - குயினர் பொல்லார் (2)

813. கள்விலைஞர் பெயர் - பழையர் துவசர் படுவர் (3)

814. சண்டாளர் பெயர் - குணுங்கர் புலைஞர் கீழோர் இழிஞர் அணங்கு (5)

815. பாணர் பெயர் - சென்னியர் வைரியர் செயிரியர் மதங்கர் இன்னிசைகாரர் (5)

816. பாண்டொழிற்கீழ்மக்கள் பெயர் - பண்டர் ஓவர் (2)

817. பாண்மகள் பெயர் - பாடினி விறலி பாட்டி மதங்கி பாடன்மகடூஉ (5)

818. தேர்ப்பாகன் பெயர் - சாரதி சூதன் வலவன் (3)

819. யானைப்பாகர் பெயர் - ஆதோரணர் வாதுவர் (2)

820. பரிமாவடிப்போர் பெயர் - வாதுவர் (1)

821. மடையர் பெயர் - வாலுவர் கூவியர் பானசிகர் (3)

822. மற்றும்மடையர் பெயர் - பாசகர் (1) ஆக(4)

823. ஒற்றர் பெயர் - சாரர் வேயர் சாரணர் (3)

824. கூத்தர் பெயர் - நாடகர் நிருத்தர் நடர் கண்ணுளர் கோடியர் வயிரியர் பொருநர் (7)

825. நாடகக்கணிகையின் பெயர் - நடி கூத்தி (2)

826. தமிழ்க்கூத்தர் பெயர் - வாயிலோர் (1)

827. கழைக்கூத்தர் பெயர் - வேழம்பர் (1)

828. வெறியாட்டாளன் பெயர் - வேலன் முருகன் தேவராளன் படிமத்தவன். (4)

829. தேவராட்டியின் பெயர் - சாலினி முதியாள் படிமத்தவள் (3)

830. தூதர் பெயர் - வினையுரைப்போர் வழியுரைப்போர் உறுதியோர் பண்புரைப்போர் (4)

831. கொலையாளன் பெயர் - காதகன் சாருகன் (2)

832. வேதனைசெய்வோன் பெயர் - அருந்துதன் (1)

833. ஆண்பாலின் பெயர் - மானவன் மகன் ஆடூஉ மைந்தன் ஆடவன் புமான் காளை (7)

834. ஆண்பாலிற்சிறந்தவன் பெயர் - நம்பி (1)

835. முதல்வன் பெயர் - ஆதி நாதன் (2)

836. உயர்ந்தோர் பெயர் - உலகம் (1)

837. பெருமையிற்சிறந்தோன் பெயர் - பெருமகன் மல்லன் தலைவன்
பெருமான் குரிசில் செம்மல் கோமான் கோ ஆண்டகை பொருநன் அண்ணல் ஓங்கல் ஏந்தல் மீளி விடலை (15)

838. எப்பொருட்குந்தலைவன் பெயர் - இறை காரணன் இயவுள் தோன்றல் அதிபன் (5)

839. மந்திரியர் பெயர் - எண்ணர் நூலோர் அமைச்சர் (3)

840. மந்திரித் தலைவர் பெயர் - முதுவர் குரவர் மூத்தோர் முன்னோர் உழையோர் சூழ்வோர் நூல்வல்லோர் அமைச்சர் தேர்ச்சித்துணைவர்(9)

841. இவர்நட்பாளர் பெயர் - இப் பெயர்கள் அம்மந்திரத்தலைவர் நட்பாளருக்கும் வரும்

842. மந்திரிதந்திரியர் பெயர் - ஏனாதி காவிதி அமாத்தியர் (3)

843. கருமத்தலைவன் பெயர் - வள்ளுவன் சாக்கை (2)

844. போர்த்தலைவர் பெயர் - பொருநர் (1)

845. பரிவாரத்தின் பெயர் - பரியாளம் (1)

846. ஓத்துரைப்போர் பெயர் - கணக்காயர் (1)

847. கலைவல்லோர் பெயர் - கவிஞர் (1)

848. புலமையோர் பெயர் - மேலோர் பண்டிதர் புலவர் ஆசிரியர் புந்தியர் மேதையர் (6)

849. அறிஞர் பெயர் - ஆன்றோர் சான்றோர் (2)

850. பாவலர் பெயர் - கலைஞர் (1)

851. கற்றோர் பெயர் - விற்பனர் (1)

852. நாவலர் பெயர் - கவிகள் புலவர் கவிஞர் (3)

853. மற்றும்நாவலர் பெயர் - சாரதி சாடு சூரியர் (3) ஆக (6)

854. மிகவல்லோர் பெயர் - விபுதர் நிபுணர் குசலர் (3)

855. மற்றும்மிகவல்லோர் பெயர் - எழுத்தாளர் (1) ஆக (4)

856. அயலோர் பெயர் - நொதுமலர் வம்பலர் (2)

857. புதியோர் பெயர் - அதிதியர் வம்பலர் (2)

858. மூதறிவாளர் பெயர் - முதுவர் (1)

859. குறிக்கொள்வோர் பெயர் - பாராயணர் (1)

860. வல்லோன் பெயர் - வலவை வல்லவன் வல்லுநன் (3)

861. மாட்டார் பெயர் - வல்லார் (1)

862. நடுச்சொல்வோன் பெயர் - கள்வன் கரியன் (2)

863. கொடையுளோன் பெயர் - புரவலன் ஈகையாளன் தியாகி உபகாரி வேளாளன் (5)

864. வள்ளியோன் பெயர் - வள்ளல் கொடையோன் வள்ளியோன்

865. இரப்போர் பெயர் - இரவலர் பரிசிலாளர் யாசகர் (3)

866. புகழ்வோர் பெயர் - பூகதர் மாகதர் வந்தியர் பப்புவர் வேதாளியர் (5)

867. தூர்த்தர் பெயர் - விடர் காமுகர் (2)

868. காதலித்தோர் பெயர் - விழைந்தோர் ஆர்வலர் வேட்டோர் நயந்தோர் ஆதரித்தோர் (5)

869. வல்லாளன் பெயர் - வயவன் மீளி (2)

870. திண்ணியோன் பெயர் - வியவன் வண்டன் வீரன் மிண்டன் விறலோன் பொருநன் விடலை மள்ளன் திறலோன் பண்ணவன் (10)

871. படைவீரர் பெயர் - மறவர் கூளியர் மள்ளர் பொருநர் இகலர் செருநர் வாளாளர் வாளுழவர் படர் வீரர் (10)

872. கீழோர் பெயர் - பல்லவர் கயவர் பதகர் நீசர் புல்லர் பூரியர் புள்ளுவர் கையர் கலர் தீயோர் கண்டகர் மூடர் அசடர் அதன்மர் முசுண்டர் சுமடர் வெளிறர் அற்பர் (18)

873. அறிவிலான் பெயர் - முழுமகன் சிதடன் மூடன் பேதை இழுதை அஞ்ஞை ஆதன் ஏழை மடமகன் குதலை (10)

874. அடிமையின் பெயர் - தொழும்பு தொண்டு தொத்து தாதர் தொறு விருத்தி (6)

875. மற்றும்அடிமையின் பெயர் - சேடர் கிணகர் ஆக (8)

876. கள்வர் பெயர் - கரவடர் சோரர் புரையோர் கட்டோர் கரவர் பட்டிகர் திருடர் (7)

877. அச்சமுடையோன் பெயர் - பீரு சிதன் பீதன் கரிதன் காதரன் (5)

878. வஞ்சனையாளன் பெயர் - மாயன் நிகாதன் (2)

879. வேகமுடையோன் பெயர் - கவனன் சவனன் (2)

880. கடினன் பெயர் - கற்கசன் (1)

881. வழிச்செல்வோன் பெயர் - பதிகன் பாந்தன் (2)

882. மற்றும்வழிச்செல்வோன் பெயர் - வியவன் ஆக (3)

883. ஏவுவான் பெயர் - வியவன் (1)

884. தொழில்செய்வோர் பெயர் - தொழுவர் கம்மியர் (2)

885. தரித்திரர் பெயர் - இல்லோர் ஆதுலர் வறியோர் ஏழையர் நல்கூர்ந்தோர் பேதையர் (6)

886. மற்றும்தரித்திரர் பெயர் - அகிஞ்சினர் (1) ஆக (7)

887. வாயில்காப்போர் பெயர் - கடைகாவலர் (1)

888. தசைதின்போன் பெயர் - சாடிலி கூடிலி (2)

889. நோயுற்றொழிந்தோன் பெயர் - உல்லாபன் (1)

890. மனோகரன் பெயர் - சல்லாபன் (1)

891. புகளாழன் பெயர் - இயவுள் (1)

892. குலமுள்ளோர் பெயர் - குலிஞர் (1)

893. உரியோன் பெயர் - கிழவன் (1)

894. நிருவாணியின் பெயர் - நக்கன் (1)

895. கூர்மையில்லோன் பெயர் - மந்தன் (1)

896.நாகரிகர் பெயர் - - சதுரர், காமுகர். (2)

897.கருணையுள்ளோன் பெயர் - - காருண்ணியன். (1)

898.வரையாதுகொடுப்போர் பெயர் - - வள்ளியோர். (1)

899. ஓர்குடியிற்கொண்டோன் பெயர் - - சகலன். (1)

900. சுற்றத்தின் பெயர் - - கேள், ஒக்கல், கிளை, பந்தம், கூளி, கடும்பு, குடும்பம். (7)

901. உறவின் பெயர் - - நண்பு, தமர், உரியர், நட்பு, நட்டோர், பற்றினர் (6)

902. தங்குடித்தமரின் பெயர் - - தாயத்தார், ஞாதியர். (2)

903. ஒருகுடியின் பெயர் - - உதிரப்பிரிவினர். (1)

904. வழித்தோன்றலின் பெயர் - - வழியோன். (1)

905. பாட்டன் பெயர் - - தாதை, தன்றாதை, மூதாதை. (3)

906. மற்றும் பாட்டன் பெயர் - - பிதாமகன். (1) ஆக (4)

907. ஈன்றோன் பெயர் - - தாதை, அத்தன், தந்தை, பிதா,ஐயன். (5)

908. மாமன் பெயர் - - மாதுலன், அம்மான். (2)

909. மருமகன் பெயர் - - மருமான், பிறங்கடை, ஓங்கல். (3)

910. மூத்தோன் பெயர் - - அண்ணல், தமையன், தம்முன், தோன்றல் முன்னவன், சேட்டன். (6)

911. இளையோன் பெயர் - - பின்னவன், இளவல், பின்றோன்றல், கனிட்டன், எம்பி, அனுசன். (6)

912. தாயின் பெயர் - - அம்மை, அன்னை, ஆய், அவ்வை, தம்மனை மோய், ஈன்றாள், தன்னை. (8)

913. முன்பிறந்தான் பெயர் - - அன்னை, செவிலி, தௌவை,சேட்டை, முன்னவள், மூத்தாள். (6)

914. பின்பிறந்தாள் பெயர் - - பின்னை, கையை, தங்கை. (3)

915. மைத்துனன் பெயர் - - சம்மதன். (1)

916. மணவாளன் பெயர் - - கணவன், கொழுநன், காந்தன், கேள்வன், மணமகன், காதலன், வல்லவன், உரியோன், பதி, தவன், கொண்கன், பத்தா, துணைவன், தலைமகன், தலைவன். (15)

917 மற்றுமணவாளன் பெயர் - கண்டன் வேட்டோன் ஆக (17)

918 மணவாளனுக்குரிய பெயர் - நாயகன் (1)

919 மணமகள் பெயர் - உரிமை வல்லவி தாரம் துணைவி வாழ்க்கைத்துணை மணவாட்டி பாரி இல்லாள் பன்னி விருந்தனை இல்லவள் குடும்பினி களம் காந்தை இல் மனை காதலி நாயகி (18)

920 மைந்தன் பெயர் - சந்ததி மதலை தநையன் காதலன் நந்தனன் சிறுவன் மெய்யன் தோன்றல் செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன் புத்திரன் பிறங்கடை எச்சம் சேய் (18)

921 மகள் பெயர் - புதல்வி சிறுமி புத்திரி தநையை சுதை ஐயை பந்தனை (7)

922 பிள்ளையின் பெயர் - குழவி குழந்தை (2)

923 மகன்மகள்என்னுமிருபாற்கும் பொதுப் பெயர் - எச்சம் (1)

924 பாலர் பெயர் - மகார் குறுமாக்கள் சிறார் (3)

925 இளைஞன் பெயர் - மழவன் குமரன் மைந்தன் சேடன் இளவல் முருகன் காளை (7)

926 மற்றுமிளைஞன் பெயர் ஆடவன் உவா (2) ஆக (9)

927 தோழன் பெயர் - சிலதன் எலுவன் சேடன் நண்பன் பாங்கன் சகாயன் (6)

928 தோழன்முன்னிலைப்பெபயர் - ஏடா (1)

929. சங்காத்தியின் பெயர் - அருகன் சம்மதன் நண்பன் (3)

930. தலைமைப்பெண் பெயர் - குரத்தி பெருமாட்டி ஆசாள் இறைவி கோமகள் தலைவி அடிகள் ஐயை சாமி அத்தை (10)

931. பெண்மணிகளிற்சிறந்தவள் பெயர் - நங்கை (1)

932. அருந்தவப்பெண் பெயர் - பைம்மை கௌந்தி (2)

933. தோழியின் பெயர் - சிலதி பாங்கி சேடி இணங்கி துணைவி இகுளை சகி (7)

934. தோழிமுன்னிலைப் பெயர் - ஏடி ஏலா (2)

935. ஏவலிற்சிறந்தவள் பெயர் - சேடி (1)

936. கைத்தாயின் பெயர் - தாதி, செவிலி, கோடாய், பின்னனை. 4

937. கன்னியின் பெயர் - குமரி. 1

938. கோலம்புனை பெண்ணின் பெயர் - வண்ணமகள். 1

939. நால்வகைப்பெண் பருவத்தின் பெயர் - வாலை, தருணி, பிரவிடை விருத்தை. 4

940 . முதியாள் பெயர் - விருத்தை, மூத்தாள். 2

941 .எழுவகைப்பெண் பருவத்தின் பெயர் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். இவற்றினாண்டு 7, 11,13,19, 25, 31, 40. (7)

942 . மலடியின் பெயர் - மைம்மை, வந்தி. 2

943. கலன்கழிமகளிர் பெயர் - கைம்மை, கைனி, விதவை, கைம்பெண்
அம‌ங்கிலி. 5

944.பொதுமகளிர் பெயர் - விலைமகள், சூளை, வேசி, பரத்தை, கணிகை 2

945. பெண்ணின் பெயர் - அரிவை, அங்கனை, மடந்தை, ஆடவள், தெரிவை,
மானினி, சிறுமி, இளம்பிடி, சுரிகுழல், மகடூஉ, காந்தை, மாது, வனிதை, நல்லாள், காரிகை, தளிரியல், அணங்கு, தையல், பெதும்பை, பேதை, மடந்தை, மங்கை, மாயோள், பாவை, பிணா. 25.

946. மித்திரர் பெயர் - ஒல்லுநர், துன்னுநர், ஒன்றுநர், நேர்ந்தார், நண்ணுநர், ந‌ள்ளுநர், நயந்தோர், மேவினர், சேர்ந்தோர். 9

947. மாற்றலர் பெயர் - ஒல்லார், நோனார், ஒன்றலர், நண்ணலர், திருந்தலர், மேவலர், செற்றார், செறுநர், இன்னார், கருதலர், எண்ணலர், நள்ளார், பொருந்தலர், பற்றலர், புல்லார், சேரார், தெவ்வர், அரடையலர், தரியலர், தெறுநர், ஒட்டார், பகைஞர். 23

948. ஆடவர்கூட்டத்தின் பெயர் - சவை, பண்ணை, சங்கம், கோட்டி, அவை. 5

949. மாதர் கூட்ட‌த்தின் பெயர் - ஓரை, பண்ணை, ஆயம், குழு. 4

950. மகளிர் விளையாட்டின் பெயர் - ஓரை, பண்ணை, கெடவரல், பொய்தல், உண்டாட்டு, கிரீடை, உப்பு, கேளி, வண்டல். 9

951.மக்கட்பரப்பின் பெயர் - மன்பதை, பைஞ்ஞீலி. 2

952.மக்கட்பொதுப் பெயர் - மாந்தர், மானவர், மானிடர், மண்ண‌வர், மனிதர், நரர். 6

953. குலத்தின் பெயர் - குடி, திணை, விழுப்பம், ஒழுக்கம். 4

954. குலமுள்ளோன் பெயர் - குலீனன். 1

955. வேட்டோர் பெயர் - நயந்தோர், காதலர், நசையுநர், நயவர், விழைந்தோர், ஆர்வலர். 6

956. குருடன் பெயர் - அந்தகன், சிதடன். 2

957. முடவன் பெயர் - பங்கு, சூனியன். 2

958. குறளன் பெயர் - குஞ்சன், வாமனன். 2

959. மற்றுங்குறளன் பெயர் - சிந்தன். 1

960. செவிடன் பெயர் - வதிரன். 1

961. ஊமையின் பெயர் - மூகை, மூங்கை. 2

962. கூனன் பெயர் - கோணன். 1

963. அலியின் பெயர் - பேடன், ந‌புஞ்சகன், பேதை, பெண்டகன், சண்டன். 5

964. கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் பெயர் - குண்டகன். 1

965. விதவை பெற்ற மதலையின் பெயர் - கோள‌கன். 1

966. கன்னியிற் பிறந்தோன் பெயர் - கானீனன். 1

967. நாற்குலத்தில் உயர்ந்தவாணு மிழிந்தபெண்ணுங் கூடிப்பிறந்த‌ பிள்ளைகளின் பெயர் - அநுலோமர். 1

968. உய‌ர்ந்தபெண்ணு மிழிந்தவாணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - பிரதிலோமர். 1

969. அநுலோமத்தாணு பிரதிலோமப்பெண்ணுங் கூடிப் பிறந்த பிள்ளைகளின் பெயர் - அந்த‌ராளர். 1

970. அநுலோமப்பெண்ணும் பிரதிலோமத்தாணூங் கூடிப்பிறந்த‌ பிள்ளைகளின் பெயர் - விராத்தியர். (1)

971. பேடியிலக்கண வகை - நச்சுப்பேசல், நல்லிசையோர்தல், அச்சுமாறல், ஆண்பெண்ணாதல், ஒருகையைவீசிநடத்தல், தலையிலொருகை வைத்தல், எதிர்ந்தோரைக்கண்டு விலகல், எதிர்ந்தோர்மேற் செல்லுதல், பார்வைவேறுபடுதல், பிறருக்குநடுநடுங்கிச் சுழன்றுதிரிதல், பிறரைக்கண்டு நகைத்தல், நாணுதல், பலநாடகஞ் செய்தல், பக்கம்பார்த்தல், பதுங்கித்திரிதல், காரணமில்லாமற் பலவற்றைக் கோபங்கொண்டு பேசல், தன் முலையைத் தானேவருத்தல், அசக்கல், அழுதல், சோர்ந்தருவருத்தல், குறுக்கிக்கூட்டிப் பார்த்தல், இடையில் ஒரு கை வைத்தல், அதனைவாங்கல், இரங்கிப்பேசல், எல்லெல்லென்றுபாடுதல், இவை போன்ற பிற செய்கைகள்.

972. கருவின் பெயர் - சினை, பீள், சூல், வயாவு, கருப்பம். (5)

973. தோலின் பெயர் - உரிவை, அதள், ஒலியல், புறணி, சருமம், வடகம், போர்வை, பச்சை, துருத்தி, துவக்கு, கிருத்திமம். (11)

974. இரத்தத்தின் பெயர் - செந்நீர், சோரி, நெய்த்தோர், செம்பால், புண்ணீர், சுடுவல், புலால்நீர், சோணிதம், உதிரம், குருதி, கறை (11)

975. ஊனின் பெயர் - தசை, தூ, தடி, விடக்கு, புலை, பிசிதம், புலால், புண், புரணி, வள்ளுரம், புலவு. (11)

976. மற்றும் ஊனின் பெயர் - இற்றி, இறைச்சி. (2)

977. பிச்சின் பெயர் - ஊழை, மூளை, மாசு. (3)

978. கருப்பம்பயிலிடத்தின் பெயர் - பைசந்தி, பைங்குழி. (2)

979. ஈரலின் பெயர் - ஈருள். (1)

980. செவ்வீரலின் பெயர் - இரத்தம். (1)

981. விழுக்கின் பெயர் - விளர், நிணம், கொழுப்பு. (3)

982. மற்றும் விழுக்கின் பெயர் - நெய், வழும்பு. (2)

983. வழும்பின் பெயர் - வழுக்கு. (1)

984. மலக்குரம்பையின் பெயர் - குடர். (1)

985. மெய்ம்மலத்தின் பெயர் - மாசு. (1)

986. உண்மலத்தின் பெயர் - உபமலம். (1)

987. இந்திரியத்தின் பெயர் - கந்தம், சுக்கிலம். (2)

988. *குலையின் பெயர் - மூகை, குண்டி. 2

989. முடையின் பெயர் - பூதி, ஊழ்த்தல், தசை, புலவு. 4

990. சோணிதத்தின் பெயர் - செம்பால். 1

991. நரம்பின் பெயர் - நாடி, சிரை, மேதை. 3

992. எலும்பின் பெயர் - என்பு, அத்தி, அங்கம், களேவரம். 4

993. கழியுடலின் முழுவெலும்பின் பெயர் - கங்காளம். 1

994. உடம்பின் பெயர் - ஆகம், காத்திரம், யாக்கை, தனு, உடல், பூதியம், புணர்வு, புகல், வியம், விம்மிதம், தேகம், அங்கம், மூர்த்தம், சரீரம், விக்கிரகம், பிண்டம், மேனி, தொக்கு, காயம், குரம்பை, கடம், மெய், சடம், புரம், பூட்சி, தாபரம், புற்கலம். 25

995. வடிவத்தின் பெயர் - படிவம், உருவம், சட்டகம், மேனி, வ‌ண்ணம்.

996. காலின் பெயர் - பதம், பாதம், சரணம், கழல். 4

997. மற்றுங்காலின் பெயர் - சலன், அடி, அங்கிரி, தாள். ஆக‌ 8

998. கரட்டின் பெயர் - பரடு, மிசைத்திரள், காலடி. 3

999. கணைக்காலின் பெயர் - சங்கம். 1

1000. முழந்தாளின் பெயர் - சானு. 1

1001. தொடையின் பெயர் - குறங்கு, வாமம், கவான், ஊரு. 4

1002. அல்குலின் பெயர் - கடிதடம், நித‌ம்பம், அரை. 3

1003. மற்றும் அல்குலின் பெயர் - வடிவு, அகல், உபத்தம். 3

1004. பிருட்டத்தின் பெயர் - பிருட்டம், சகனம், குய்யம், பாயுரு. 3

1005. ஆன்குறியின் பெயர் - இலிங்கம், கோசம். 2

1006. பெண்குறியின் பெயர் - யோனி, பகம். 2

1007. மற்றும்பெண்குறியின் பெயர் - பூப்பகம்,பொன், சின்னம். 5

1008. இடையின் பெயர் - மத்திமம், நுசுப்பு, மருங்கு. 3

1009. மருங்கின்பக்கத்தின் பெயர் - ஒக்கலை. 1

1010. கொப்பூழின் பெயர் - இதலை, இலைஞ்சி, நாபி, உந்தி, போகில்.

1011. மலத்தின் பெயர் - அமேத்தியம். 1

1012. சிறுநீரின் பெயர் - அமரி, உவரி. 2

1013. வயிற்றின் பெயர் - குக்கி, துத்தம், மடி,வயின், உதரம், மோடு, சடரம், அகடு. 8

1014. மார்பின் பெயர் - அகலம் உரம் ஆகம் (3)

1015. மற்றும்மார்பின் பெயர் - மருமம் நெஞ்சு (2)

1016. முலையின் பெயர் - பயோதரம் சுவர்க்கம் குருக்கண் அம்மம் நகிலம் தனம் குயம் சேக்கை கொம்மை கொங்கை (10)

1017. மற்றும் முலையின் பெயர் - பறம்பு (1)

1018. முலைக்கண்ணின் பெயர் - சிலீமுகம் சூசுகம் (2)

1019. கையின் பெயர் - கரம் அத்தம் பாணி தோள் கைத்தலம்

1020. முழங்கையின் பெயர் - கூர்ப்பரம் (1)

1021. மணிக்கட்டின் பெயர் - கிலுத்தம் (1)

1022. உள்ளங்கையின் பெயர் - அங்கை குடங்கை அகங்கை (3)

1023. விரலின் பெயர் - அங்குலி (1)

1024. நகத்தின் பெயர் - உகிர் (1)

1025. தோளின் பெயர் - புயம் மொயம்பு வாகு (3)

1026. கமுக்கட்டின் பெயர் - வாகுமூலம் கைம்மூலம் (2)

1027. தோண்மேலின் பெயர் - சுவல் செகில் நிகலம் (3)

1028. கழுத்தின் பெயர் - கிரீவம் களம் கில்லம் கந்தரம் கண்டம் மிடறு (6)

1029. முதுகின் பெயர் - வெரிந் புறம் அபரம் வெந் (4)

1030. பிடர்த்தலையின் பெயர் - சுவல் பிடர் எருத்தம் சிறுபுறம் கயில் நிமம் (6)

1031. கதுப்பின் பெயர் - கபோலம் கொடிறு அணு கவுள் (4)

1032. மோவாயின் பெயர் - தாடி கட்டம் (2)

1033. மற்றுமோவாயின் பெயர் - சுவுகம் தாழ்வாய் (2)

1034. முகத்தின் பெயர் - ஆனனம் வதனம் துண்டம் வத்திரம் (4)

1035. உதட்டின் பெயர் - பாலிகை முத்தம் இதழ் (3)

1036. மேலிதழின் பெயர் - ஓட்டம் (1)

1037. கீழிதழின் பெயர் - அதரம் (1)

1038. அண்ணத்தின் பெயர் - அணரி (1)

1039. பல்லின் பெயர் - எயிறு தந்தம் தசனம் (3)

1040. மற்றும்பல்லின் பெயர் - முறுவல் நகை மூரல் (3)

1041. நகுதலின் பெயர் - சிரித்தற்கு மேற்கூறிய அம்மூன்று பெயருமே கொள்க

1042. எயிற்றின் பெயர் - விளிம்பு (1)

1043. நாக்கின் பெயர் - நா தாலு தாரம் சிகுவை (4)

1044. வாயின் பெயர் - வைப்பு புலனிடம் பாங்கர் (3)

1045. உண்மிடற்றின் பெயர் - அணல் (1)

1046. உண்ணாக்கின் பெயர் - அண்ணம் (1)

1047. மற்றும் உண்ணாக்கின் பெயர் - சிறுநாக்கு (1)

1048. கீழ்வாய்ப்புறத்தின் பெயர் - அணல் (1)

1049. மேல்வாய்ப்புறத்தின் பெயர் - அணரி அண்ணம் (2)

1050. மற்றும் மேல்வாய்ப்புறத்தின் பெயர் - அணல் (1)

1051. மூக்கின் பெயர் - துண்டம் நாசி கோணம் (3)

1052. செவியின் பெயர் - காது கேள்வி அள் சுருதி கன்னம் சோத்திரம் (6)

1053. கண்ணின் பெயர் - திட்டி விலோசனம் நேத்திரம் நயனம் தாரை அம்பகம் விழி நாட்டம் அக்கம் நோக்கு சக்கு திருட்டி பார்வை கோ (14)

1054. கண்மணியின் பெயர் - தாரை (1)

1055. கண்ணிமையின் பெயர் - விளிம்பு (1)

1056. புருவத்தின் பெயர் - புரூரம் பிருகுடி நுதல் (3)

1057. மற்றும்புருவத்தின் பெயர் - புதல் புகுடி பீரு (2)

1058. கழுத்தின்பின்குழியின் பெயர் - பனிச்சை சூறை (2)

1059. தொண்டைக்குழியின் பெயர் - தொண்டை கில்லம் (2)

1060. நெற்றியின் பெயர் - முண்டகம் மத்தகம் நுதல் அளிகம் பாலம் குளம் இலலாடம் (7)

1061. தலையின் பெயர் - சிரம் கம் சேகரம் சென்னி முடி உத்தமாங்கம் நவிரம் உச்சி சிகரம் முண்டம் மத்தகம் மூர்த்தம் உவ்வி (19)

1062. குடுமியின் பெயர் - சிமிலி சிக்கம் சிகை சிமி (4)

1063. உச்சியின் பெயர் - நவிரம் சுடிகை சூழி (3)

1064. ஆண்பான்மயிரின் பெயர் - குஞ்சி பித்தை ஓரி குழல் கார்பங்கி கேசம் சுரியல் கதுப்பு தளை நவிர் பிச்சம் சிகை (13)

1065. பெண்பான்மயிரின் பெயர் - குழல் கூழை குந்தளம் கூந்தல் அளகம் ஓதி ஐம்பால் கதுப்பு சுருள் விலோதம் பரிசாரம் கேசம் சுரியல் மராட்டம் கோதை குருள் குரல் கூரல் (18)

1066. ஆண்மயிர்க்கும் பெண்மயிர்க்கும் பொதுப் பெயர் – கதுப்பு கேசம் சுரியல் குழல் (4)

1067. பெண்மயிர்முடியின் பெயர் - கொப்பு மிஞ்சிகம் கொண்டை தம்மிலம் முச்சி சிகழிகை (6)

1068. மயிர்க்குழற்சியின் பெயர் - குந்தளம் அளகம் விலோதம் (3)

1069. குழற்கொத்தின் பெயர் - குந்தளம் (1)

1070. ஐம்பான்முடியின் பெயர் - *முடி குழல் தொங்கல் பனிச்சை சுருள் (5)

1071. பிறமயிரின் பெயர் - ஓரி பங்கி உளை உரோமம் கேசம் மராட்டம் (6)

1072. செறிமயிர்ப்பரப்பின் பெயர் - சிரோந்தம் உரோமம் (2)

1073. ஆண்பான்மயிர்முடியின் பெயர் - பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை சிகழிகை குழல் சுடிகை மௌலி (9)

1074. சடையின் பெயர் - குடிலம் வேணி கோடீரம் சடிலம் பின்னல் (5)

1075. தலைமயிரின் பெயர் - சிரோருகம் (1)

1076. நரைமயிரின் பெயர் - சரை (1)

1077. மற்றும்நரைமயிரின் பெயர் - பலிதம் (1) ஆக (2)

1078. உறுப்பின் பெயர் - அவயவம் காத்திரம் அங்கம் (3)

1079. மற்றும்உறுப்பின் பெயர் - சினை மூர்த்தம் (2) ஆக (5)

1080. சந்தின் பெயர் - கந்து கொளுத்து மூட்டு (3)

1081. உடற்றழும்பின் பெயர் - வடு வசி கச்சை சேக்கை அங்கிதம் சுவடு செதுக்கை (7)

1082. இறையின் பெயர் - பிறங்கு வரி பொறி வரை (4)
-----------------
*முடி மயிரையுச்சியின் முடித்தல். குழல் சுருட்டி முடித்தல். தொங்கல் மயிரைமுடிந்து விடுதல். பனிச்சை பின்னிவிடுதல். சுருள் பின்னே செருகல்

1083. தேமலின் பெயர் - துத்தி வசந்திகை திதலை சுணங்கு உத்தி திதனி (6)

1084. கோழையின் பெயர் - ஐ, காசம். (2)

1085. கழலையின் பெயர் - அரலை (1)

1086. பிணத்தின் பெயர் - அழனம் சவம் குணபம் பிரேதம் களேபரம் (5)

1087. உடற்குறையின் பெயர் - யூபம் கவந்தம் மட்டை (3)

1088. சிரமாலையின் பெயர் - அழிதலை கரோடி (2)

1089. தலையோட்டின் பெயர் - கபாலம் வெண்டலை (2)

1090. பஞ்சமலவகையின் பெயர் - மலம் நீர் வாயு செந்நீர் கந்தம்

1091. இருபத்தைந்து தத்துவத்தின் பெயர் - பூதம் (5) ஞானேந்திரியம்(5) புலன் (5) கன்மேந்திரியம் (5) அந்தக்கரணம்(4) ஆன்மா (1) ஆக (25)

1092. ஓரறிவுயிரின் பெயர் - புல் மரம் (2)

1093. ஈரறிவுயிரின் பெயர் - அட்டை நந்து (2)

1094. மூவறிவுயிரின் பெயர் - சிதல் எறும்பு (2)

1095. நாலறிவுயிரின் பெயர் - வண்டு ஞெண்டு (2)

1096. ஐந்தறிவுயிரின் பெயர் - மக்கள் *மா (2)
-----------
* மா - விலங்கு

1097. ஆறறிவுயிரின் பெயர் - மக்கள்† ஒருசார்விலங்கு
------
† ஒருசார் விலங்கு என்றது கடளரையும் அவர் வழிபட்டோரையும் உணர்ந்துவழிபடும் விலங்கினை

1098. இருவகைத்தாதுவின் பெயர் - சுரோணிதம் சுக்கிலம் (2)

1099. மூவடிவின் பெயர் - பெண் ஆண் அலி (3)

1100. முப்பிணியின் பெயர் - பித்தம் வாதம் சிலேட்டுமம் (3)

1101. எண்வகை மணத்தின் பெயர் - *பிரமம் தெய்வம் பிரசாபத்தியம்
ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் பைசாசம் (8)
---------
* பிரமம் பிரமசாரிக்குக் கன்னிகையை மணஞ் செய்வித்தல். தெய்வம்
வேள்வியாற் றோன்றிய கன்னிகையைத்தீமுன்கொடுத்தல். பிரசாபத்தியம் தலைமகனினத்தார்வேண்டத் தலைமகளினத்தார்உடன்பட்டுத் தீமுன்கொடுத்தல்.
ஆரிடம் பசுஎருது இரண்டொன்று வாங்கிக்கொண்டு கன்னிகையைக் கொடுத்தல். காந்தருவம் தலைவனுந்தலைவியுந் தனியிடத்தெதிர்ப்பட்டுத் தாமே கூடுதல். ஆசுரம் சுற்றத்தார்க்கு வேண்டு வனகொடுத்துக் கன்னிகையை வேட்டல். இராக்கதம் உடன்பாடின்றி ஓர்கன்னிகையை வலிதிற்புணர்தல். பைசாசம் துயில்கின்றவளைச் சென்று கூடுதல்

ஐந்தாவது ஆடவர்வகை முற்றிற்று.
ஆக சூத்திரம் 1101

--------------------

This file was last updated on 15 July 2015.
Feel free to send the corrections to the .