அவுஸ்திரேலியப் பயணக்கதை

ஞானசேகரன், தி.


அவுஸ்திரேலியப் பயணக்கதை

ஞானசேகரன், தி.

(பயண இலக்கியம்)

பேராசிரியர் திரு.சி.தில்லைநாதன் (தலைவர், தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்) வழங்கிய

அணிந்துரை

உலகம் ஒன்றாதல் என்பது உண்மையில் அதில் வாழும் மக்களுடைய மனவிரிவையும் விளக்கத்தையும் பொறுத்ததாகும். 'அறிதொறும் அறிதொறும் அறியாமை காண்போமாயின் அது எமது வளர்ச்சிக்கு ஏதுவாகும். மற்றவர்களைப் பற்றியும் அவர்களிட மிருந்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. எங்கள் பாரம்பரியத்தையும் பெருமைகளையும் பற்றிப் பேசிக்கொள்வதுடன் அமைந்துவிடாது, ஏனையவர்களைப் புரிந்து கொள்ளவும் முயல வ்ேண்டும். மனித வாழ்வில் எதிர்ப்பட்ட பிரச் சினைகளை மற்றவர்கள் எவ்வாறு சமாளித்து முன்னேறுகின்றனர் என்பதை விளங்கிக்கொள்வது எமக்கு நன்மையளிப்பதாகும்.

நீண்ட வரலாற்றையுடைய சமுதாயங்கள்தான் இன்று உலகில் தலைநிமிர்ந்து நிற்கின்றன என்பது உண்மையல்லவென்பது துலாம்பரமாகத் தெரிகிறது. நிகழ்காலத்தில் வேண்டப்படுவனவற்றை விளங்கிக்கொண்டு தூரதிருஷ்டியுடன் செயலாற்றுவதே வாழ்க்கையில் வளம்கான உகந்ததாகும். சுமார் 200 ஆண்டுகால வரலாற்றை உடையதும், அதுவும் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டதுமான ஒரு நாட்டில் 165 இனமக்கள் இணங்கி வாழ்கிறார்கள். 2500 ஆண்டு வரலாற்றோடு மூன்று நான்கு இனத் துவ சமூகங்களை மட்டும் கொண்டவர்களும் எம்முள் முரண்பட்டு மோதுண்டு சிதைவுண்டு நிற்கின்றவர்களுமான நாம், அந்நாட்டின் வரலாற்றிலும் வாழ்க்கை அநுபவங்களிலுமிருந்து பயனுள்ள பாடங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பயனுள்ளவையென்று படுவனவற்றை, ஏனையவர்களும் பயனெய்தும் வகையில், பகிர்ந்துகொள்ளும் விருப்பத்தின் விளை வாகவே இலக்கியங்களும் பிற நூல்களும் தோன்றுகின்றன. புதிதாக அறிந்தனவற்றையும் அநுபவித்தவற்றையும் சிந்தித்தவற்றையும் எழுத்தாற்றல் படைத்தவர்கள் ஏனையவர்களோடு சுவைபடப் பகிர்ந்துகொள்கிறார்கள். பிறநாடுகளுக்குப் பிரயாணம் மேற்கொள்கின்ற வர்கள் அந்நாடுகளில் தாம் அறிந்தவற்றையும் அநுபவித்தவற்றை யும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டி எழுதும் நூல்கள் பயண அல்லது பிரயாண அல்லது வழிச்செலவு நூல்கள் எனப்படும். வெளி உலகத்தைப் பற்றிய பரந்த அறிவைப் பெறப் பயண நூல்கள் உதவக்கூடியன. ஆயினும், தமிழில் பயணநூல்கள் மிகக் குறைவாகவே உள்ளனவென்றே கூறவேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில், பேராசிரியர் தனிநாயக அடிகள் வெளியிட்ட 'தமிழ்த் தூது என்ற நூலும் கலாநிதி எ.எம்.எ.அஸ்லிஸ் எழுதிய தமிழ் யாத்திரை, மிஸ்றின் வசியம், கிழக்காபிரிக்கக் காட்சிகள் ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கவை.

பலர் பிரயாணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால், பயணக்கதைகளைச் சுவைபட எடுத்துக் கூறுமளவுக்கு அவதான சக்தியும் ஈடுபாடும் எழுத்தாற்றலும் எல்லோருக்கும் வாய்க்கக் கூடியனவல்ல. இந்நூலாசிரியரான திரு.தி.ஞானசேகரன் நாடறிந்த ஓர் இலக்கிய கர்த்தா. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் ஒருவைத்திய அதிகாரியுமான திரு.ஞானசேகரன், தாம் தொழிலாற்றிய இடமான மலையகத்து மக்கள் வாழ்க்கையையும் வரலாற்றையும் பல புனை கதைகளில் தத்ரூபமாகச் சித்திரித்துப் பாராட்டுக்களைப் பெற்றிருக் கிறார் என்றால் அவரது எழுத்தாற்றலுக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

மலையகத் தொழிலாளர்களின் வாழ்வினை நுணுக்கமாக அவதானித்து மானிடப் பரிவுடன் ஒன்றியுணர்ந்து தமது நாவல் களிலும் சிறுகதைகளிலும் திறம்பட இவர் சித்திரித்துள்ளார். தலை சிறந்த நாவலுக்கான அரச இலக்கியப் பரிசினைத் திரு.ஞானசேகரன் இரு தடவை வென்றார். வேறுபல பரிசில்களையும் பாராட்டுக் களையும் அவரது நாவல்களும் சிறுகதைகளும் ஈட்டியுள்ளன.

எழுத்தாற்றலும், பெற்ற அங்பவங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதில் ஆர்வமும் மிகுந்தவரான திரு. ஞானசேகரன் தாம் சமீபத்தில் மேற்கொண்ட அவுஸ்திரேலியப் பயணம் குறித்து இந் நூலினை எழுதியுள்ளார். அவுஸ்திரேலியாவின் வரலாறு, சுவாத்தி யம், வாழ்க்கை முறைகள், விநோதப் பழக்கவழக்கங்கள், தொழி நுட்ப வளர்ச்சி, கல்வி, சுகாதார, போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகள் முதலானவை அலுப்புத் தட்டாத வகையில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. உலகில் தம்நாடு பலதுறைகளிலும் முன்னணி யில் திகழ வேண்டும் என விழையும் குடிமக்களின் மன ஆர்வம், வேறுபாடுகளையும் பன்முகப்பாட்டையும் புரிந்தேற்றுக்கொள்ளும் மனோபக்குவம், அரச வைத்தியசாலைகளிற் பணிபுரியும் வைத்தியர் தவியார் மருத்துவ நிலையங்களில் பணிபுரிவதைத் தடுக்கும் சமூக நலக்கட்டுப்பாடு - இப்படிப் பல விடயங்கள் எங்கள் கவனத்துக் குரியனவாக உள்ளன.

சுமார் ஐம்பதினாயிரம் இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலி யாவிற் குடியேறியுள்ளனர். அவர்களைப்பற்றி அறிவதில் திரு. ஞான சேகரனுக்கும் எங்களுக்கும் அதிக ஆர்வம் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. புதிய சூழலில் அவர்கள் வாழ்க்கை அமைந்துள்ளவாற்றையும், தமது ஆத்மீக, உலகியல் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டுக் கோவில்களையும் கல்விநிலையங் களையும் கலை, இலக்கிய மன்றங்களையும் அவர்கள் அமைத் துள்ளவாற்றையும் திரு. ஞானசேகரன் எடுத்துக் காட்டியுள்ளார்.

அங்குள்ள எமது மக்கள் தாயக நினைவுகளில் தவிப்ப தையும், எங்கள் பிரச்சினைகளிலும் தீர்வுகளிலும் அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். எங்களுக் கும் அவர்களுக்கும் இடைப்பட்ட உறவாடலுக்கு ஒருவகையில் உதவும் இந்நூல் இருசாராருடைய மன உளைச்சல்களையும் ஓரள வுக்கு உணர்த்துவதாயுள்ளது. அங்கு குடியேறியுள்ளவர்களுடைய பிறந்த மண் குறித்த ஏக்கம், இருக்கும் இடம் பற்றிய பிரச்சினை, எதிர்காலம் பற்றிய வினாக்கள் முதலானவை சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. "இழந்துவிட்ட தாய் மண்ணின் நினைவுகள் ஒருபுறம் வாட்ட மறுபுறத்தில் விலகிப் போகும் தலைமுறை பற்றிய பரிதவிப்பு அவர்களை வாட்டுகிறது" என்று திரு. ஞானசேகரன் கூறுகிறார். புதிய தலைமுறையினரின் போக்குக் குறித்த அங்கலாய்ப்பு அவுஸ் திரேலியா, கனடா முதலான தேசங்களுக்குப் பெயர்ந்துள்ள தமிழர் முன் மட்டுமன்றி எங்கள் முன்னும் இலேசில் விடைகாண முடியாத பல வினாக்களை எழுப்பி நிற்கிறது.

அது எவ்வாறாயினும், அதிக பிரயத்தனமின்றிப் படிக்கக் கூடிய சரளமான நடையில், சில சந்தர்ப்பங்களில் அவரோடு கூடச் செல்வதுபோன்ற உணர்வுதோன்றும் வகையில், திரு.ஞானசேகரன் இப்பிரயாணக் கதையினை எழுதியுள்ளார். இயற்கைக் காட்சிகளிலும் செயற்கைக் கோலங்களிலும் மனம் இலயித்து நின்று சிலவிடங்களில் அவர் வர்ணிக்கும் விதம் அவரது சிருஷ்டித் திறனைக் காட்டுவதா யுள்ளது. அவரது இம்முயற்சியைத் தமிழ்கூறு நல்லுலகம் பாராட்டி வரவேற்கும் என்று நம்புகிறோம்.

சிதில்லைநாதன்

25.12.1999.

முன்னுரை

தொலைபேசி அழைத்தது.

“ஹலோ.s “ஞானசேகரன். சிட்னியிலிருந்து” "யார். குருதிமலை தி.ஞானசேகரனா?”

“ஒமோம். வணக்கம் முருகபூபதி. சிட்னியிலிருக்கும் மகனிடம் வந்திருக்கிறோம். உங்களையும் பார்க்க விரும்புகிறோம்.”

"தாராளமாக. உங்கள் வரவிற்குக் காத்திருக்கிறேன்.” எமது தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து ஞானசேகரன் மெல்பனுக்கு வருகை தந்தார். இந்த வருகை குறித்தும் இந்தப் பயண இலக்கியத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஏனைய இலக்கியத்துறைகள் போன்று பயண இலக்கியமும் மேனாட்டிலிருந்து எமக்குக் கிடைத்த வருகைதான். - TRAVELOGUE TRAVEL LITERATURE அழைப்பார்கள்.

மனித வாழ்வே பயணத்துடன் சம்பந்தப்பட்டதுதான். மனித வாழ்வின் பயணங்கள்தான் இந்த உலகையே நிர்மாணித்துள்ளன. நண்பர் ஞானசேகரன் இலங்கையிலுள்ள வடமாகாணத்தில் புன்னாலைக்கட்டுவன் என்ற ஊரைச் சேர்ந்தவர். அவரது வாழ்வு அந்த ஊருடன், வரையறுக்கப் பட்டிருக் காதமையால்தான் எமக்கு ‘குருதிமலையும்’ ‘லயத்துச் சிறைகளும் "கவ்வாத்தும் கிடைத்தன. எங்கள் தேசத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பிரதேசத்திற்குப் பயணம் செய்து படைப்பு இலக்கியம் தந்தவர். இப்பொழுது - கடல் கடந்துவந்து கடல் சூழ்கண்டம் குறித்து - தமது பார்வைகளை, அநுபவங்களை பதிவு செய்திருக்கிறார்.

அவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் வசிக்கும் மகனைப் பார்க்கப் புறப்பட்டவருக்கு - மிகப் பெரிய கண்டமே காட்சியாகியிருக்கிறது. நானும்தான் இந்தக் கண்டத்தில் விக்டோரியா மாநிலத்தில் 1987ம் ஆண்டு முதல் வசிக்கின்றேன். எனினும் - நான் அறிந்திராத - பார்த்திராத பல்வேறு தகவல்களையும் சம்பவங்களையும் இந்தப் பயண இலக்கியத்தில் தெரிவித்திருக்கிறார். நாம் - இங்கு புலம் பெயர்ந்து வாழ்கின்றோம். இந்தப் புலம் பெயர்ந்த வாழ்வு இயந்திரமயமானது; இரண்டகத் தன்மை கொண்டது.

வேகமும் விவேகமும் இல்லையென்றால் இங்கு வாழ்வது சிரமம். "அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பாக்கியசாலிகள், கொடுத்து வைத்தவர்கள்." என்றுதான் பொதுவாக நம் தாயகத்து நம்மவர்கள் கருதுகிறார்கள். அவுஸ்திரேலிய அப்பிள் மரங்களில் அப்பிள்தான் காய்க்கும். "டொலர் நோட்டுகள்" காய்க்காது என்ற உண்மையை நம்மவர் களிடம் சொல்லித்தான் புரியவைக்க வேண்டிய அபாக்கியசாலிகள் நாம்.

ஞானசேகரன் நமது வாசகர்களுக்கு இந்தப் பயணத்தின் மூலம் பல உண்மைகளையும், செய்திகளையும், தகவல்களையும் சொல்லியிருக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா உட்பட பல தென்கிழக்காசிய நாடுகள் கடலால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளான அபோர்ஜினிஸ் இனத்தவர் களில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

இந்த ஆதிவாசிகளுக்கும் தமிழ் இனத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற ஆய்வுகள்தான் தற்போது மேற்கொள்ளப் படுகின்றன. இன்று ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் மிகுந்த கவனிப்புக் குள்ளான நாடு அவுஸ்திரேலியா. இந்த நாட்டின் துரித வளர்ச்சி, அபிவிருத்தி, முன்னேற்றம் குறித்தெல்லாம் இந்த யாத்திரீகன் சுவைபடக் கூறுகிறார். ஒரு பயண இலக்கியத்தின் நோக்கம் - அதனைப் படிக்கும் வாசகனுக்கு பயனுள்ள அநுபவத்தையும் சீரிய சிந்தனைகளையும் தருவதாக இருத்தல் வேண்டும். இந்த நோக்கத்தைத் தமது சிந்தையில் இருத்திக்கொண்டே இவர் பயணம் மெற்கொண்டிருப்பதையும் உணர முடிகிறது.

ஆறுவாரங்களுக்குள் இவர் திரட்டியுள்ள தகவல்கள் பிரமிப்பையே தருகின்றன. கடந்த சில வருடங்களாக இங்கு அரசாங்க உயர்தரப் பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாக அங்கீகரித்துள்ளார்கள். புலம்பெயர்ந்து இங்கு வாழும் ஈழத்தமிழப் பிள்ளைகள் பரீட்சையில் தமிழ்ப் பாடத்திற்கு தோற்றுகிறார்கள். இவர்களின் பாடத்திட்டத்திற்கு பயண இலக்கியங்களும் சேர்மதி.

ஞானசேகரன் படைத்துள்ள இந்தப் பயண இலக்கியம் மாணவர்களுக்கு மட்டுமல்ல, இங்கு வரவிருப்பவர்களுக்கும் - வந்திருப்பவர்களுக்கும் பயன்மிக்கது. சுவாரஸ்யம் குன்றாமல், தமக்கே உரித்தான எளிய நடையில் பூமிப்பந்தெங்கும் சிதறுண்டு வாழும் தமிழ் வாசகர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவந்து இதன் அழகை - வனப்பை, வளர்ச்சியை, காண்பித்திருக்கிறார் ஞானசேகரன்.

இந்தப் பயண இலக்கியம் - பயனுள்ள இலக்கியம். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

லெ.முருகபூபதி 170HOTHLYN DRIVE CRAGEBURN VICTORA. 3.064 AUSTRALLA.

என்னுரை

இந்த வருட முற்பகுதியில் அவுஸ்திரேலியா சென்றிருந்தேன். அந்த நாட்டைப் பற்றி நான் கேள்விப்பட்ட, நூல்களில் படித்த விஷயங்களைவிட அதிகமானவற்றை அங்கு நான் பார்த்து அறியக் கூடியதாக இருந்தது.

கடந்த இருநூறு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட அவுஸ் திரேலியாவின் வளர்ச்சியும், சிறப்பும், தொழிநுட்ப முன்னேற்றங் களும் என்னைப் பிரமிக்கவைத்தன. அங்கு வாழும் பல இன மக்களின் வாழ்க்கை முறைகளும், புலம் பெயர்ந்து வாழும் நம்மவர் களின் வாழ்வதுபவங்கள், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் எடுக்கும் முயற்சி களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. இவற்றையெல்லாம் வாசகர் களோடு பகிர்ந்துகொள்ளும் முயற்சியே இந்தப் பயணக் கட்டுரை.

தமிழில் பயண இலக்கியங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. எனவே இத்துறையில் எனது பங்களிப்பையும் செலுத்த வேண்டும் என்ற எண்ணமும் இக்கட்டுரைத் தொடரை எழுதக் காரண மாய் அமைந்தது.

எனது அவுஸ்திரேலியப் பயணம் பயனுள்ள வகையில் அமைவதற்குப் பல வழிகளிலும் உதவிய எனது உறவினரான திரு. பி.ஹரன் குடும்பத்தினருக்கு நான் பெரிதும் கடப்பாடுடையேன்.

இக்கட்டுரையைத் தொடராக வெளியிட்ட தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தினருக்கும் குறிப்பாக வார வெளியீட்டுக்குப் பொறுப்பாகவுள்ள சகோதரி தேவகெளரி, திரு.இ.பாரதி ஆகியோருக் கும் இத்தொடர் வெளிவந்துகொண்டிருந்த காலப்பகுதியில் நேரிலும், கடிதமூலமும், தொலைபேசிமூலமும் என்னைப் பாராட்டி ஊக்குவித்த வாசகர்களுக்கும் எழுத்தாள நண்பர்களுக்கும் கண்டி கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் திரு.இரா.அ. இராமன் அவர்களுக் கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நூலுக்குப் பெருமைசேர்க்கும் வகையில் சிறந்ததொரு அணிந்துரையை எனது மதிப்புக்குரிய தமிழ்ப்பேராசிரியர் திரு. சி.தில்லைநாதன் அவர்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். நான் அவுஸ்திரேலியாவில் இருந்த காலத்தில் புலம் பெயர்ந்தோர் வாழ் வியல் சம்பந்தமான பலவிடயங்களை அறிவதற்கு வழிசமைத்துக் கொடுத்ததோடு இந்நூலுக்கு முன்னுரையும் வழங்கியவர் எனது நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்கள். இவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி என்றும் உரியது.

தி.ஞானசேகரன்

27.12.1999

01. ஆங்கிலேயரின் சிறைக்கூடம் அழகிய நாடாகியது.

அவுஸ்திரேலியாவின் நிலப்பரப்பின் மேலாக சிட்னி நகரை நோக்கி அந்த விமானம் அதியுயரத்தில் பறந்துகொண்டிருந்தது.

எனது இருக்கையில் சற்றுப் பின்புறமாகச் சரிந்து, விமானப் பணியாள் கொடுத்த போர்வையால் உடலைப் போர்த்திக் கொண்டு நான் நித்திரையில் ஆழ்ந்திருந்தேன். இலங்கையிலிருந்து புறப்பட்டு ஏறத்தாழ பதினெட்டு மணிநேரம் பயணம் செய்த களைப்பு என்னை அவ்வாறு அயரச் செய்துவிட்டது.

பக்கத்திலிருந்த என் மனைவி அவசர அவசரமாக என் கைகளைப் பிடித்து அசைத்து, "எழுந்திருங்கள், அதோ! வெளியே பாருங்கள். நாங்கள் வாழ்க்கையில் கண்டிராத ஒரு காட்சி தெரி கிறது” என்றாள்.

விமானத்தின் சிறிய கண்ணாடி யன்னலின் ஊடாக நான் வெளியே பார்த்தேன்.

ஆ! எத்தனை கொள்ளை அழகு! கிழக்குவானில் சூரியன் தங்கப் பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக் கொண்டிருந் தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால் உயரத்தில், பறந்து கொண் டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப் பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். கிழக்கு வானம் செக்கச்செவேரெனக் காட்சியளித்தது. ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக் கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தன.

கடற்கரையோரத்தில் சூரியோதயத்தைத் தரிசித்து அதன் அழகினைக் கவிதையில் வடித்த எமது கவிஞர்கள், இத்தகைய ஓர் அருங்காட்சியைப் பார்த்தால் நிச்சயம் வர்ணிக்க வார்த்தைகளின்றித் திணறிப் போவார்கள்.

“ஹலோ குட் மோனிங்", பக்கத்துச் சீற்றில் இருந்த பயணி என்னைப் பார்த்து வந்தனம் தெரிவித்துப் புன்னகைத்தார்.

"குட் மோனிங் ஹெள ஆர் யூ?” என அவருடன் சம்பாஷணையைத் தொடர்ந்தேன்.

"எனது பெயர் மக்டொனால்ட், நீங்கள் இப்போதுதான் முதன் முதலாக அவுஸ்திரேலியாவுக்கு வருகிறீர்கள் போலத் தெரி கிறது. சுற்றுலா மேற்கொண்டு இந்தியாவில் இருந்தா வருகிறீர்கள்?" அவரது ஆங்கில உச்சரிப்பு அவரை ஓர் அவுஸ்திரேலியர் என இனங்காட்டியது.

அந்த விமானத்தில் பயணஞ் செய்த பயணிகளில் எனது மனைவி மட்டுமே புடவை அணிந்திருந்தாள். அவளது தோற்றமும் நெற்றியில் துலங்கிய குங்குமமும் எம்மை இந்தியர் என நினைக்க அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

“இல்லையில்லை, நாங்கள் பூரீலங்காவில் இருந்து வருகி றோம். நீங்கள் கூறியதுபோல் இப்போதுதான் முதற்தடைவையாக அவுஸ்திரேலியாவுக்கு வருகிறோம். எங்களது மகனின் திருமணம் சமீபத்தில் பூரீலங்காவில் நடந்தது. மணப்பெண் கடந்த பத்து வருடங் களக அவுஸ்திரேலியாவில் வசிப்பவள். இங்கு சிட்னி நகரிலும் அவர்களுக்கு ஒரு திருமண வரவேற்புபசாரம் ஒழுங்கு செய்யப் பட்டிருக்கிறது. அதிலே கலந்து கொள்வதற்காகவே நாங்கள் இப் போது வந்துகொண்டிருக்கிறோம்."

"ஓ, குட், நீங்கள் இங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவுஸ்திரேலியாவையும் சுற்றிப் பாருங்கள். பல அரிய காட்சிகளைக் காண்பீர்கள். புதிய அநுபவங்களைப் பெறுவீர்கள்."

“எங்களுக்கும் அந்த எண்ணமுண்டு. ஆனாலும் நாங்கள் ஆறு வார லீவிலேதான் இங்கு வருகிறோம். முடிந்தவரை முக்கிய மான இடங்களைச் சுற்றிப் பார்ப்போம்” என்றேன்.

"Birsi (5 TOURIST GUIDE. f6 5sfs) s 6f 6m AMPTOWER என்னும் உயரிய கோபுரத்தில் தொழில் புரிகிறேன். தவறாது நீங்கள் அங்கு வாருங்கள். அவுஸ்திரேலியாவிலேயே மிகவும் உயர்ந்த கோபுரம் அதுதான். அங்கிருந்து பார்த்தால் சிட்னி நகரம் முழுவதையுமே ஒரே பார்வையில் தரிசிக்க முடியும்" எனக் கூறி தனது ‘விசிட்டிங் காட் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்தார். "மிக்க நன்றி, நாங்கள் மிகவும் அதிஷ்டசாலிகள்தான். ஏனென்றால் அவுஸ்திரேலியாவைப்பற்றிய முக்கிய தகவல்களைத் தரக்கூடிய ஒருவரை இந்தப் பயணத்தில் நண்பராகப் பெற்றிருக் கிறோம்” என்றேன்.

நான் இப்படிக் கூறியது அவருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்திருக்கவேண்டும்.

"ழரீலங்கா ஒரு சிறிய தீவு. ஆனால் அவுஸ்திரேலியாவோ ஒரு பெரிய கண்டம்." எனத் தொடங்கி தனது நாட்டைப்பற்றிய பல விடயங்களை அவர் கூறலானார். நான் இடையிடையே கேள்வி களைத் தொடுத்து எனக்கு வேண்டிய விபரங்களைப் பெற்றுக் கொண்டேன்.

"அவுஸ்திரேலியா பல இயற்கை அதிசயங்களையும் உலகின் சில அழகான பட்டினங்களையும் கொண்ட நாடு. இங்கே பெரிய கடற்கரைகள் உண்டு. இயற்கையான 'பார்க்குகள் உண்டு. இந்த நாடு பாதுகாப்பானது. வசிப்பதற்குச் சுலபமானது. சுகாதாரம் நிறைந்தது. நல்ல சுவாத்திய நிலைமைகளையுடையது. இந்த நாட்டு மக்கள் எல்லோருடனும் நட்புரிமை பாராட்டுவார்கள். வெளிநாட்டவர் களையும் அன்புடன் வரவேற்பார்கள்.”

அந்த நண்பர் இப்படிக் கூறியபோது எனது நினைவுகள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறிய பலதரப்பட்டோரையும் எண்ணிச் சுழன்றன.

மலையகத்தில் நான் தொழில்பார்க்கும் பெருந்தோட்டத் தில் "பெரியதுரை எனப்படும் உயர்தொழில் புரிந்த இருவர் ஏற்கனவே புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றனர். சகல விதமான வசதிகளுடன் செல்வச்செழிப்பாக குட்டிராஜாக்கள் போன்று வாழ்ந்த இவர்கள் ஏன் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து போனார்கள்?

குடியேற்ற நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அவுஸ்திரேலி யாவில், இலங்கையிலிருந்து பலர் பலவழிகளிலும் சென்று குடியேறி யிருக்கிறார்கள். -

தேசிய இனப்பிரச்சனை உக்கிரமடைந்த நிலையில் பாதிப்புற்று பாதுகாப்புத்தேடி புலம்பெயர்ந்தவர்கள் ஒரு பகுதியினர். பொருளாதாரத்தை மேம்படுத்தி ஒரு சிறந்த வாழ்வை அமைத்துக் கொள்ளும் நோக்குடன் இலட்சக்கணக்கான ரூபாய்களை ஏஜன்ஸி களுக்கு வாரியிறைத்து புலம்பெயர்ந்து சென்று அகதி அந்தஸ்த்துக் கோரி நிரந்தர வதிவிட அநுமதிக்கு விண்ணப்பித்துத் தங்கியவர்கள் சிலர். உயர் கல்விக்காகப் புலமைப்பரிசில் பெற்றுச் சென்று பின்னர் அங்கேயே தங்கிவிட்டவர்கள் வேறுசிலர். தொழில் திறமை (SKLL) அடிப்படையில் குடிவரவு அந்தஸ்த்துப் பெற்றுக் குடியேறியவர்கள் சிலர். வியாபாரம் செய்வதற்குரிய விஸா பெற்றுக் குடியேறியவர்கள் சிலர். குடியுரிமை பெற்றவர்களால் SPONSER செய்யப்பட்டுச் சென்றவர்கள் வேறு சிலர். இப்படிப் பலவழிகளாலும் அவுஸ்திரேலி யாவுக்கு ஏன் புலம் பெயர்ந்து செல்கிறார்கள்? புலம்பெயர்ந்து செல் வதற்கு ஏன் அவுஸ்திரேலியா நாட்டை இவர்கள் தெரிவு செய் கிறார்கள்? இதற்கான விடையை எனது சுற்றுப் பயணத்தின் போது தான் நான் தெரிந்துகொள்ள வேண்டும். மகனின் திருமண வரவேற்புபசார விழாவில் பங்குபற்று வதற்காக நான் அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்தபோதிலும் எனது எண்ணமெல்லாம் அந்நாட்டில் வாழும் மக்களின் கலை கலா சாரம் பண்பாடு வாழ்க்கைமுறை ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் நம்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து சென்று அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் படைப்பாளிகளை, கலைஞர்களை சந்தித்து அளவளாவ வேண்டும் என்பதிலுமே லயித்திருந்தது.

என்னுடன் அளவளாவிக் கொண்டிருந்த நண்பர் மக்டொனால்ட், தனது பயணப் பையிலிருந்து அவுஸ்திரேலியா பற்றிய சிறுகுறிப்புகள் அடங்கிய ஒரு பிரசுரத்தை எடுத்து எனக்குக் கொடுத்தார். அதில் அந்நாட்டைப் பற்றிய பல முக்கியமான தகவல்கள் இருந்தன.

கடலால் சூழப்பட்ட அவுஸ்திரேலியா வடக்குத் தெற்காக 3690 கி.மீ அகலமும், கிழக்கு மேற்காக 4000 கி.மீ நீளமும் கொண்டது. இதன் பரப்பளவு 7682300 சதுர கிலோ மீட்டர். அதன் கடற்கரைச் சுற்றுவட்டம் 36700 கி.மீ நீளம் கொண்டது. அதியுயர்ந்த மலை 'கேசியஸ்கோ’ 2228 மீட்டர் உயரம் உடையது. கடல் மட்டத் திற்குக் கீழே ஒரு பகுதி உள்ளது. அதனை “இரி என அழைப் பார்கள். தொண்ணுறு வீதத்திற்கும் அதிகமான பகுதி கடல் மட்டத் திலிருந்து 500 மீற்றர் உயரத்திற்கும் குறைவானதாகும்.

அவுஸ்திரேலியாவின் நிலப்பரப்பை நோக்கும்போது அது எமது இலங்கையைப் போன்று 120 மடங்கு பெரியது. ஆனாலும் இலங்கையின் சனத்தொகையே அங்கும் உள்ளது. அதாவது இன்று ஏறத்தாழ 18 மில்லியனுக்குச் சற்றுக் கூடுதலான மக்கள் அங்கு வாழ்கிறார்கள். இதில் இருபது வீதமான மக்கள் வேறு நாடுகளில் பிறந்து அங்கு வந்து குடியேறியவர்கள். எழுபத்தைந்து வீதத்திற்கு மேற்பட்டோர் ஐரோப்பியர்கள். குறிப்பாக பிரித்தானியாவைப் பூர்வீக மாகக் கொண்டவர்கள்.

இந்தக் கண்டத்தின் ஆதிவாசிகள் அபோர்ஜினிஸ்' என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சுமார் 75000 ஆண்டுகளுக்குக் குறையாது அங்கு வாழ்ந்துவருவதற்குரிய ஆதாரங்கள் உள்ளன. நமது நாட்டில் விந்தனைக் காடுகளில் வாழும் வேடுவர்களின் வாழ்க்கை முறையை ஒத்ததாகவே இவர்களின் வாழ்க்கைமுறையும் ஆரம்பத்தில் அமைந்திருந்தது. இவர்களுடைய வாழ்க்கைமுறை இயற்கையோடு ஒன்றியது. வேடுவர்கள் எவ்வாறு மிருகங்களை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை மரப்பொந்துகளில் தேனில் ஊறவைத்து உண்பார்களோ அதேபோன்று இந்த "அபோர்ஜினிஸ்" மக்களும் பசிபோக்கியதாக அறியப்படுகிறது.

இன்றைய அவுஸ்திரேலிய வரலாறு 200 ஆண்டுகளைக் கொண்டது. ஆங்கிலேயர்கள் தமது கைதிகளைச் சிறைப்படுத்தவே முதலில் இக்கண்டத்தைப் பயன்படுத்தினர். கைதிகளாக வந்த வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட நாடே இன்றைய அவுஸ்திரே லியா. அந்தக் கைதிகள் சிந்திய இரத்தமும் வியர்வையும் இன்றைய அவுஸ்திரேலியாவை ஒரு செல்வம் கொழிக்கும் நாடாக, வசதிகள் நிறைந்த நாடாக ஆக்கியிருக்கிறது. இன்று அவர்களின் பரம்பரை யினர் அங்கு சீரும் சிறப்புமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அங்குசென்று குடியேறிய 165 இன மக்களையும் வாழவைத்துள் ளனர்.

இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளரின் வரலாறும் 200 ஆண்டுகளைக் கொண்டதுதான். அவர்களது நிலையை எண்ணிப் பார்க்கிறேன். கடும் உழைப்பும் அவர்கள் சிந்திய இரத்தமும் வியர்வையும் அவர்களது வாழ்வை உயர்த்தப் பயன்படவில்லை. இந்நாட்டிற்கு அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தரவே அவர்களது நீண்டகால உழைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விமானத்தில் அறிவித்தல் ஒலிக்கிறது. இன்னும் பத்தே நிமிடங்களில் சிட்னி விமான நிலையத்தில் விமானம் இறங்கப் போகிறது. இதுவரை நேரமும் அளவளாவிக்கொண்டிருந்த நண்பர் கைகுலுக்கி விடைபெறுகிறார். எனது மனைவியின் முகத்தில் மகிழ்ச்சி பிரவாகிக்கிறது. பயணக்களை பறந்தோடுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் சிட்னி நகரத்தில் இறங்கப் போகிறோம். −

உல்லாசப் பயணத்துக்கு ஏற்ற உலகின் சிறந்த நகரம் எதுவென உல்லாசப் பயணிகளிடையே ஓர் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின்படி சிட்னி நகரமே முதலிடத்தை வகிக்கிறது என்ற செய்தி நமது நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக நண்பர் ஒருவர் கூறியது என் நினைவில் வந்தது.

விமானத்தை விட்டு இறங்கியபோது ஜில்லென்று மெல்லிய குளிர்காற்று முகத்தை வருடியது. விமான நிலையத்தில் கெடுபிடிகள் எதுவும் இருக்க வில்லை. எந்தெந்தப் பொருட்களை அவுஸ்திரேலியாவுக்குள் எடுத்துச்செல்லக்கூடாது, எப்பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் விமானத்தில் நமக்குக் கொடுத்த கார்ட்டில் தெரிவித்திருந்தார்கள். அது எமக்கு வசதியாக இருந்தது. பாஸ்போட் விவகாரங்களை இலகுவாக முடித்துக்கொண்டோம்.

எமது பொருட்களைத் தள்ளுவண்டியில் ஏற்றிக்கொண்டு எந்தப் பாதையால் வெளியேறுவது என்று தயங்கி நின்றபோது, ஓர் அவுஸ்திரேலிய அழகி எம்மருகே வந்து "நான் உங்களுக்கு உதவலாமா?" எனக் கேட்டாள்.

"இங்கே வெளியே செல்வதற்குப் பலவழிகள் தெரி கின்றன. நாங்கள் எந்த வழியால் செல்லவேண்டுமென்றுதான் தெரிய வில்லை" என்றேன்.

"கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் DECLARE செய்யவேண்டிய பொருட்கள் ஏதும் இல்லையென்றால், அதோ அந்த GREENCHANNEL ஊடாக நீங்கள் வெளியேறலாம்” என எமக்கு வழிகாட்டி னாள் அவள்.

நாங்கள் இருவரும் வெளியே வந்தபோது மகன் ஓடி வந்து முதலில் தாயையும் பின்பு என்னையும் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். மகனது பாச அரவணைப்பில் எனது மனைவியின் கண்கள் பனிப்பதைக் கண்டேன். என் கண்களும் பனித்தன. அந்நிய மண்ணில் உறவுகள் இணையும்போது ஏற்படு கின்ற சிலிர்ப்புகள் உணர்ச்சிகரமானவை. மருமகள் அனுஷா மாமியாரின் கைகளை அன்போடு பற்றிக்கொண்டாள். நாம் கொண்டுவந்த பொதிகளை அனுஷாவின் சகோதரர்கள் காரில் ஏற்றினர். கார் 'ஹோம்புஷ என்னும் இடத்திலுள்ள அவர்களது வீட்டை நோக்கி விரைந்தது.

* * *

சிட்னியில் ஒரு குட்டி யாழ்ப்பாணம் லங்கை நேரத்திற்கும் அவுஸ்திரேலிய நேரத்திற்கும் இடையில் ஏறத்தாழ ஐந்து மணிநேர வித்தியாசம் உண்டு. நம் நாட்டில் நாம் இரவுப் போசனம் அருந்திக் கொண்டிருக்கும்போது அங்குள்ளவர்களுக்கு நடுச்சாமம்; ஆழ்ந்த நித்திரையில் இருப் பார்கள். அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள் காலை உணவு அருந்தும்போது நம்நாட்டில் அதிகாலை மூன்று மணி, நாம் ஆழ்ந்த நித்திரையில் இருப்போம்.

அவுஸ்திரேலியாவை நாம் சென்றடைந்தபோது இந்த நேர வித்தியாசத்தால் சிரமத்துக்குள்ளானோம். இதற்கு நமது உடல் பழக்கப்படும்வரை இரவில் படுத்தால் நித்திரை வர மறுத்தது. பகல் நேரங்களில் நித்திரை வந்தது. பயணக்களைப்பு வேறு உடலுக்குச் சோர்வை ஏற்படுத்தியது. ஆனாலும் இரண்டு நாட்களில் இவை எல்லாம் சரியாகிவிட்டன.

எனது எண்ணமெல்லாம் இங்குள்ள எழுத்தாளர்களை, கலைஞர்களை சந்தித்து அவர்களுடன் அளவளாவ வேண்டும் என்பதிலேயே லயித்திருந்தது. எழுத்தாளர்களான மாத்தளை சோமு, எஸ்.பொ., கவிஞர் அம்பி, ஆகியோர் சிட்னியிலேயே வாழ்வதாக அறிந்திருந்தேன். ஆனால் அவர்களது முகவரிகள் என்னிடம் இல்லை. என்ன செய்வது?

நாங்கள் தங்கிருந்த "ஹோம் புஷ்' என்ற இடம் இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் இடம். கொழும்பிலே ஒரு குட்டி யாழ்ப்பாணமாக வெள்ளவத்தை திகழ்கிறதல்லவா. அதே போன்று சிட்னி நகரிலே குட்டி யாழ்ப்பாணமாக ஹோம்புஷ் திகழ்கிறது.

ஒரு ரம்மியமான காலை வேளையில் நானும் மனைவியும் வெளியிலே உலாவிவருவதற்குப் புறப்பட்டோம். நூறு மீட்டர் தூரம் நடந்து சென்றபோது ஒரு பாடசாலை தென்பட்டது. அங்கே "ஹோம் புஷ் ஆரம்ப பாடசாலை என்ற பெயர்ப் பலகை காணப்பட்டது.

நேரம் ஒன்பது மணி, பாடசாலைப் பக்கம் இருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. வெளியே மாணவர்கள் எவரும் தென் படவில்லை. நம்நாட்டுப் பாடசாலைகள் என்றால் மாணவர்களின் இரைச்சல் சத்தம் இருக்கும், வெளிநடமாட்டம் இருக்கும், இங்கு எதுவுமே இல்லை. அவ்வளவு அமைதியாகப் பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தது.

பாடசாலையின் முன்னால் மூன்று தமிழ்ப் பெண்கள், நம்நாட்டவர்கள் தமிழில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர் களது உடை தமிழ்ப் பெண்களின் உடையாக இருக்கவில்லை. நீளக் காற்சட்டை சேட் அணிந்து அதன்மேல் குளிருக்கான ஐம்பர் அணிந்திருந்தார்கள். அந்நாட்டுச் சூழலுக்கு அந்த உடை வேண்டி யதுதான் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்களுடன் நாங்கள் சிறிது நேரம் உரையாடினோம். அவர்கள் மூவரும் தமது பிள்ளை களை அந்தப் பாடசாலையில் விட்டுவிட்டு வெளியே நின்று உரை யாடிக் கொண்டிருப்பதாக அறிந்தோம்.

ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில் அறுபது விதமான மாணவர்கள் தமிழ் மாணவர்களாக இருக்கிறார்கள். கற்பித்தல் மொழி அங்குள்ள எல்லாப் பாடசாலைகளிலும் ஆங்கிலம்தான். ஆசிரியர்களும் அவுஸ்திரேலியர்களாகவே இருக்கிறார்கள். மாண வர்கள் சகமாணவர்களுடன் ஆங்கிலத்திலேயே உரையாடு கிறார்கள். இந்நிலையில் தமிழ்ப் பிள்ளைகள் அதிகமாகக் கல்வி கற்கும் பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்த்துப் படிக்க வைத்தாலே தமது பண்பாட்டு விழுமியங்களிலிருந்து பிள்ளைகள் விலகிவிடாமல் இருப்பார்கள் எனப் பலபெற்றோர்கள் கருது கிறார்கள். வெள்ளைக்காரப் பிள்ளைகள் அதிகமாகக் கல்விகற்கும் பாடசாலைகளில் தமது பிள்ளைகள் கல்வி கற்றால் கலாசாரச் சீரழிவுக்குள் அகப்பட்டுவிடுவர்களோ என்ற பயம் தமிழ்ப் பெற் றோரிடம் இருக்கிறது. இதுவே முக்கிய காரணமாக இருந்த போதிலும், அதிகமான வெள்ளைக்காரச் சிறுவர்கள் படிக்கும் பாட சாலையில் நமது பிள்ளைகள் சேர்ந்து படிக்கும்போது அவர்களை BLACKIE எனச் சகமாணவர்கள் கேலிசெய்வதாக ஒரு தாய் குறைப் பட்டுக் கொண்டாள். இதன் காரணமாக வெகு தூரத்தில் வாழும் தமிழர்கள்கூட ஏறத்தாழ காரில் ஒரு மணிநேரம் பயணம் செய்து தினமும் தமது பிள்ளைகளை இந்தக் ஹோம்புஷ் பாடசாலைக்குக் கொண்டுவருவதாக அறிந்தேன்.

ஹோம்புஷ் என்ற இடம் ‘நியூ சவுத் வேல்ஸ்’ மாநிலத்தில் இருக்கிறது. இந்த மாநிலமே அவுஸ்திரேலியாவில் அதிக சனத்தொகை கொண்ட மாநிலமாக விளங்குகிறது. முதன் முதலில் அவுஸ்திரேலியாவில் ஸ்தாபிக்கப்பட்ட மாநிலமும் இதுவா கும். இதன் தலைநகர் சிட்னி,

இந்த நியூசவுத் வேல்ஸ் மாநிலம் உட்பட ஏழு மாநிலங்கள் அவுஸ்திரேலியாவில் உள்ளன. இந்த ஏழு மாநிலங் களிலும் ஸ்திரமான, சிறப்பான அரசாட்சி நடந்துகொண்டிருக்கிறது. எமது சின்னஞ்சிறிய இலங்கையை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இந்த மாகாணங்களில் நடக்கும் ஆட்சி முறைபற்றி எண்ணும்போது மனதில் விரக்தியும் வேதனையுந்தான் மிஞ்சுகிறது.

சிறிது தூரம் நடந்து சென்றபோது ஒரு தமிழ்க்கடை தென்பட்டது. நானும் மனைவியும் உள்ளே நுழைந்தோம். கடையைச் சுற்றிப் பார்த்தபோது எங்களுக்குப் பெரு வியப்பு ஏற்பட்டது. தமிழ் மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அத்தனை பொருட்களும் அங்கே இருந்தன. பொருட்கள் யாவும் சுத்தஞ்செய்யப் பட்ட நிலையில் சிறுசிறு பக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்பொருட்களில் கலப்படம் ஏதுமில்லை. பொருட்கள் தராசில் நிறுத்து விற்கப்படுவதில்லை. எல்லாமே நிறைகுறிக்கப்பட்ட பக்கட்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன. அரிசி என்றால், அதில் பல தினுசுகள்; இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கின்றன. ஊறுகாய் என்றால் அதில் ஐம்பது வகையாவது இருக்கலாம். மிளகாய்த்துள், நல்லெண்ணெய், புளியம்பழம், இராசவள்ளிக் கிழங்கு, அரிசிமா, ஒடியல்மா இப்படியான பொருட்களெல்லாம் கிடைக்கின்றன. முருங்கைக்காய் துண்டாடப்பட்டு போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு 'வெள்ளைநிறக் குழந்தை பெறக் குங்குமப்பூவும் கிடைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் நம்நாட்டில் தட்டுப்பாடான பொருட்கள்கூட இங்கே தாராளமாகக் கிடைக்கின்றன.

கடையின் வேறொரு பகுதியில் நின்றிருந்த என் மனைவி "இங்கை வாங்கோ இதை வந்து பாருங்கோ” எனப் பரபரப்புடன் என்னை அழைத்தாள். அங்கே தமிழர் சமையலுக்கு வேண்டிய பல சமையற் பாத்திரங்கள் இருந்தன. இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒன்றைக் கூற விரும்பு கிறேன். நீங்கள் அவுஸ்திரேலியா செல்ல நேரிட்டால், ஹாயாக கையை ஆட்டிக்கொண்டு செல்லுங்கள். அங்கே எல்லாம் கிடைக்கின்றன.

என் மனைவி சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து தலைக்குச் சிகைக்காய் புரட்டி சனிநீராடும் வழக்கத்தைச் சிறு வயதில் இருந்தே கடைப்பிடிப்பவள். எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. இது யாழ்ப்பாண மண்ணுடன் தொடர்புடையது. அந்த உ ஷணப் பிரதேசத்தில் இத்தகைய நீராடல் இன்றியமையாதது. அவுஸ்திரேலியா வரும்போது நாம் சிகைக்காய் கொண்டுவர மறந்து விட்டோம். சிகைக்காய்த்துள் எனப் பக்கட்டுகளில் விற்கப்படும் ாலப்படங்களை நாங்கள் பாவிப்பதில்லை. மனைவிக்கு இதனால் சிறிது கவலை. வழக்கம்போல் சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து சிகைக்காய் புரட்டித் தோய்ந்தாலே தேகம் சுகப்படும் என அடிக்கடி கூறிக்கொண்டிருந்தாள்.

*அவுஸ்ரேலியா குளிர் நாடு; இங்கெல்லாம் சனிநீராடி னால் ‘சன்னி பிடித்துவிடும். அதனால் இங்கு இருக்கும்வரை அந்தப் பழக்கத்தை நிறுத்திவைப்பதுதான் நல்லது” என மனைவிக்குச் சமாதானம் கூறினேன்.

அந்தக் கடையில் சிகைக்காய் இருப்பதைப் பார்த்ததும் மனைவிக்கு ஒரே சந்தோஷம்; குதூகலம். இதிலிருந்து ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது. அந்தக் குளிர் நாட்டிலும் எண்ணெய் சிகைக்காய் புரட்டித் தோய்வதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்தோர் பலர் அங்கிருக்கின்றனர். அதுமட்டுமல்ல தமது தொட்டிலிற் பழக்கத்தைக் கெட்டியாகப் பிடித்து தமது பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடாது வாழ்பவர்கள், சமூகச் சூழலால் அடித்துச் செல்லப்படாதவர்கள் பலர் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடையில் கவுண்டரில் இருந்தவரிடம் கதைகொடுத்தேன். "நான் ஓர் எழுத்தாளன். இலங்கையிலிருந்து வந்திருக்கிறேன். இங்கு புலம்பெயர்ந்து வந்திருக்கும் எழுத்தாளர்களைச் சந்திக்க விரும்பு கிறேன். உங்களுக்கு யாரையாவது தெரியுமா?” எனக் கேட்டேன்.

அவர் முதலில் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். தான் யாழ்ப்பாணத்திலுள்ள ஏழாலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் தனது பெயர் ராஜகோபால் எனவும் கூறினார். பின்னர், "இப்போது இங்குள்ள எழுத்தாளர்கள் யாவருமே வேறு நாடு களுக்குத் தற்காலிகமாகச் சென்றுள்ளார்கள். மாத்தளை சோமு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். எஸ்.பொ. இந்தியாவுக்குச் சென்றுள்ளார். கவிஞர் அம்பி பப்போ நியூகினி என்ற இடத்துக்குச் சென்றுள்ளார்” என்றார். அவருக்கு அங்குள்ள எழுத்தாளர்களுடன் தொடர்பு இருந்தது. அவரது கடைக்கு இவர்கள் எல்லோரும் வருவார்கள் என்றும் கூறினார்.

அவரது பதிலைக் கேட்டதும் நான் சோர்ந்துபோனேன். புலம் பெயர்ந்து வாழ்வோரது வாழ்வு தாழ்வுகளை ஓர் எழுத்தாளன் வாயிலாகக் கேட்கும்போது பல முக்கியமான, சுவாரஸ்யமான, உண்மையான தகவல்கள் கிடைக்குமல்லவா. அந்தச்சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ?

எனது முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைக் கவனித்துவிட்டு, பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் இங்குதான் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டார். அவரை நான் அறிந்திருந்தேன். ஆனாலும் நேரில் சந்தித்துக் கதைக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு இருந்ததில்லை. 'இந்துக் கலைக் களஞ்சியத் தொகுப்பினை உருவாக்கும் சீரிய தொண்டில் ஈடுபட்டுள்ளவர் என்ற பெருமதிப்பு அவர்மேல் எனக் குண்டு. ஆனால் என் மனைவிக்கு அவரை நன்கு தெரிந்திருந்தது. கண்டி கல்வித் திணைக்கள மத்திய மாகாண இந்து சமயபாட இணைப்பாளராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் கடமை புரியும் என் மனைவி, உயர் வகுப்பு மாணவர்களுக்கான சைவ சமயப் பாடநூல் களை எழுதும் குழுவில் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருந்தாள். எனவே எம்மை அவருக்கு அறிமுகம் செய்வதில் சிரமம் இருக்காது என்ற நிலையில் அவரது தொலைபேசி எண்ணை திரு.ராஜகோபா லிடம் பெற்றுக்கொண்டோம்.

அவரிடம் விடைபெறும்போது "இங்கு எல்லாப் பொருட் களுமே கிடைக்கும்போல் தெரிகிறது" என்றேன். "ஐயா, பனம் பழமும் அது சார்ந்த கலாசாரமும் இங்கு கிடைக்காது. மற்றெல்லாம் கிடைக்கும்” என்றார்.

அவர் கூறிய பதிலின் நயத்தை நான் பெரிதும் ரசித்தேன். அவருள் ஓர் இலக்கிய நெஞ்சம் இருப்பதைக் கண்டேன். அவரது இந்தக் கூற்று சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்பதை நான் பின்னர் அறியக்கூடியதாக இருந்தது. அவர் அவுஸ்திரேலி யாவுக்குச் சென்று பதினொரு வருடங்கள் ஆகிவிட்டன. எனவே மூத்த தலைமுறையினரின் கருத்து எவ்வாறு இருக்கும் என்பதை அறியும் எண்ணத்துடன் அவரிடம் மேலும் கதைகொடுத்தேன்.

“எப்படி உங்களுக்கு அவுஸ்திரேலியா பிடித்திருக் கிறதா?”

“எங்கடை ஊர்மாதிரி வராது. அங்கை கோயில் குளம் என்ன. திருவிழாக்கள் என்ன. கலியாணம் காட்சிகள் என்ன? கிணத்திலையிருந்து அள்ளி அந்தத் தண்ணியிலை இரண்டு வாளி குளிச்சாலே தனிச்சுகம். இங்கை நாங்கள் பைப்பை முறுக்கி சுடு தண்ணியையும் பச்சைத் தண்ணியையும் கலந்து குளிக்கிறம். தேகத் துக்கு எக்ஸ்சைஸ் இல்லை. ஊரிலை சைக்கிளை எடுத்து நாலு மிதி மிதிச்சாலே உடம்பு வேர்க்கும். இங்கை வேர்வையில்லை. காரிலை ஒடித்திரியிறம். சும்மா ஒரு பகட்டு வாழ்க்கை வாழ்கிறம்." என்றார்.

கற்பனையில் கண்ட இந்திரலோகம் கண்ணெதிரில் "சிட்னியாய் தெரிகிறது.

அவுஸ்திரேலியாவிலேயே அதியுயரமான ஒரு கோபுரத் தில் இன்று ஏறப்போகிறோம். அங்கிருந்து சிட்னி நகரம் முழுவதை யும் ஒரே பார்வையில் தரிசிக்கமுடியும் என்ற விபரத்தைத் தெரி வித்தாள் மருமகள் அனுஷா. கார் வேகமாய் போய்ககொண்டி ருந்தது. நமது நாட்டில் வீட்டுக்கு வீடு சைக்கிள்கள் வைத்திருப்பது போல இங்கு வீட்டுக்குவீடு கார்கள் இருக்கின்றன. சிலரிடம் கணவனுக்கும் மனைவிக்குமென இரண்டு கார்கள் இருக்கின்றன. பெரிய குடும்பங்களில் மூன்று கார்களும் உண்டு. பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் அநேகமாகக் கார் ஓட்டத் தெரிந்தவர் களாகவே இருக்கிறார்கள்.

எங்களது நாட்டில் தேசிய அடையாள அட்டைக்குப் பெரும் முக்கியத்துவம் இருக்கிறதல்லவா. அதேபோன்று இங்கு கார் ‘லைசன்ஸ்' பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. பொது இடங்களில், அரசாங்க ஸ்தாபனங்களில், வேலைத் தலங்களில், வங்கிகளில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த இந்தக் கார்லைசன்ஸ்களே பயன்படுகின்றன.

நமது நாட்டில் கார் ஓட்டுவதென்றால் அது மகா சங்கடமான வேலை. எதிரும் புதிரும், குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் குறுக்கிடும். முக்கியமாகத் 'திறீவீலர் ஒட்டுநர்கள் சட்டதிட்டங்களைத் தம்கையில் எடுத்துக்கொண்டு குறுகிய இடை வெளிகளில் புகுந்து வெளிவருவtர்கள். வாகனத்தை "றிவேர்ஸ்" செய்து எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடவேண்டிய சந்தர்ப்பங்கள் தோன்றும். பல தடவைகள் ஹோண் அடித்துச் சத்தம் எழுப்ப வேண்டிய நிலைமைகள் ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் பாதசாரிகள் திடீரெனக் குறுக்கே பாய்வார்கள். சோதனைச் சாவடிகளில் வளைந்து நெளிந்து செல்ல நேரிடும். தெருக்களில் குன்றும் குழியும் நிறைந்திருக்கும்.

இத்தகைய சங்கடங்கள் எவையும் அவுஸ்திரேலியாவில் கார் ஒட்டுபவர்களுக்கு ஏற்படுவதில்லை. தெருக்கள் அகலமானவை அதில் ஒரு பக்கம் நோக்கிச் செல்வதற்கு மூன்று அல்லது நான்கு லேன்கள் இருக்கின்றன. இதன் காரணமாக எதிர்ப்புறமாகவோ குறுக்காகவோ வாகனங்கள் வருவதற்குச் சந்தர்ப்பம் இல்லை.

நகரத்திற்குள் பொதுவாக மணிக்கு 60.கி.மீ. வேகத்தில் வாகனம் செலுத்தலாம். நகரத்துக்கு வெளியே மணிக்கு 100.கி.மீ. வேகத்திலும், ஃபிறீவே இருக்கும் இடங்களில் 110.கி.மீ. வேகத்திலும் செலுத்த வேண்டும். வாகனம் செலுத்தவேண்டிய வேகத்தை தெருக் களில் சாரதிக்குத் துலக்கமாகத் தெரியும்வகையில் பெரிய எழுத்துக் களில் எழுதியிருக்கிறார்கள்.

அவுஸ்திரேலியாவில் ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத் திற்குச் செல்வதானால் அநேகமான சந்தர்ப்பங்களில் அதிக தூரத்தைப் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஒரு மாநிலத்திலிருந்து வேறோர் மாநிலத்திற்குச் செல்வதானால் 1000.கி.மீட்டருக்குமேல் பயணம் செய்யவேண்டும். 

இந்த அதிதூரப் பயணங்களை இலகுவாக்க அங்குள்ள பிரமாண்டமான தெருக்களும் தொழிநுட்ப சாதனங்களும் துணை புரிகின்றன. பல ஆயிரக்கணக்காண கிலோ மீட்டர் தூரமுள்ள CARPET போடப்பட்ட இந்தத் தெருக்களை எவ்வாறு அமைத்துள் ளார்கள்? இந்தத் தெருக்களில் வேகமாகப் பறந்து செல்லும் கார்கள் விபத்துக்குள்ளாகாமல் இருக்க எவ்வாறெல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.

அவுஸ்திரேலியாவின் சனத்தொகைப்படி ஒவ்வொரு மூன்று பேருக்கும் ஒரு கார் இருப்பதாகக் கணக்கிடப் பட்டிருக்கிறது. தெருவில் இறங்கினால் வெள்ளம் பாய்ந்து செல்வதைப்போல் கார்கள் செல்கின்றன.

முன்னர் ஒருமுறை நான் நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி இரு வெள்ளையர்களுடன் காரில் பயணம் செய்ய நேரிட்டது. சாரதி "ஹோண் அடிக்கும் சந்தர்ப்பங்களிலிலெல்லாம் அவர்கள் முகத்தைச் சுழித்தார்கள். அடிக்கடி ஹோண் அடிக்க வேண்டாமென சாரதியிடம் வேண்டினார்கள். அப்போது அவர்களது செயல் எனக்கு விந்தையாக இருந்தது. நமது நாட்டில், அதுவும் மலை நாட்டில் ஹோண் அடிக்காமல் கார் ஓட்டமுடியுமா?

அவுஸ்திரேலியத் தெருக்களில் ஹோண் சத்தத்தை நாம் கேட்கமுடியாது. அதற்குரிய தேவையும் அங்கு இல்லை. அதிகமான சத்தம் ஏற்படும்போது SOUNDPOLLUTION ஏற்படுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

கார்கள் வேகமாக ஒட்டப்படுவதனால் பயணிகள் யாபேரும் "சீற் பெல்ற் அணிந்துகொள்ள வேண்டும். பெல்ற் அணியாமல் பயணஞ்செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். அங்கு சட்டத்திலிருந்து எவருமே தப்பமுடியாது. ஒருதடவை அவுஸ் திரேலியப் பிரதமர் "சீற் பெல்ற் அணியாமல் பயணஞ் செய்து 80 டொலர் தண்டப் பணம் கட்டியதாக அறிந்தேன்.

அநுமதிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாகக் காரைச் செலுத்தினால் தெருவோரங்களில் பொலிசாரினால் பொருத்திவைக் கப்பட்டுள்ள ராடர் கமெராக்கள் படம் பிடித்துவிடுகின்றன. அந்தக் கார் நம்பரைக் கொண்ட உரிமையாளருக்குத் தண்டப்பணம் செலுத்தும்படி அறிவித்தல் வந்துவிடுகிறது. இதேபோன்று சிவப்பு சமிக்ஞை விளக்குகளில் நிறுத்தாமல் செல்லும் கார்களும் படம் பிடிக்கப்பட்டுத் தண்டப் பணம் அறவிடப்படுகிறது.

பொலிசாரின் கார்களில், சாரதியின் ஆசனத்தின் முன்னால் கம்பியூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு காரின் நம்பரைக் கொடுத்தால், அந்தக் காரின் உரிமையாளர் பெயர், விலாசம், ஏனைய விபரங்கள் யாவும் கம்பியூட்டர் திரையில் விழுகின்றன. இவ்வாறு பல வழிகளிலும் போக்குவரத்து விதிகளைப் பேணுவதில் பொலிசார் கவனஞ் செலுத்துகின்றனர். இதன் காரண மாக அவுஸ்திரேலியாவில் வாகன விபத்துகள் குறைவாகவே உள்ளன.

தற்செயலாக ஒரு விபத்து நடந்தால் ஒரு சில நிமிடங்களுக்குள் பொலிசார், அம்புலன்ஸ், வெகுசன ஊடகத்தினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்துவிடுகின்றனர். அம்புலன்ஸ் வருவதற்கு நேரமெடுக்குமானால் ஹெலிகொப்டர் வந்துவிடுகிறது. வேண்டிய நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படுகின்றன.

நாங்கள் பயணம் செய்த கார் சிட்னி நகரின் மையப் பகுதியில் உள்ள AMP TOWER என்ற உயர் கோபுரத்தை அடைந்தது. காரில் இருந்து இறங்கியதும் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தேன். நம்நாட்டுக் கடற்கரைகளில் காணப்படும் வெளிச்ச வீட்டின் அமைப்பைப் போன்ற, அதைவிடப் பலமடங்கு பெரிய, மிக உயர்ந்த அந்தக் கோபுரத்தை எவ்வாறு நிர்மாணித்தார்கள்? கோபுரத்தின் உயரம் ஆயிரம் அடிக்குமேல் இருக்கும்போல் தோன்றியது. சிறிது நேரம் கோபுரத்தின் உச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது கழுத்து வலித்தது.

சிட்னி நகரைச் சுற்றிப் பார்க்கவரும் உல்லாசப் பயணிகள் தமது சுற்றுலாவை ஆரம்பிப்பதற்கு ஒரு சிறந்த இடமாக இந்தக் கோபுரத்தைத் தெரிவு செய்கிறார்கள். இந்தக் கோபுரத்தின் மேல் தட்டிலிருந்து சிட்னி நகரின் தோற்றத்தை ஒரு BIRD EYE VIEW ஆகப் பார்க்க முடியும். கோபுரத்தின் மேற்தளத்திற்குச் செல்ல வேண்டிய அநுமதிச் சீட்டைப் பெற்றுக்கொண்டு ‘லிப்ற்றில் ஏறினோம். பதினான்கு பேர்களை ஒரே நேரத்தில் மேல் தளத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய வலிமை பொருந்திய அந்த லிப்ற் 305 மீற்றர் உயர முள்ள அந்தக் கோபுரத்தின் மேல் தளத்தை நாற்பதே விநாடிகளில் சென்றடைகிறது.

ஆ! என்ன கொள்ளை அழகு. நகரத்தின் மணி விளக் குகள் நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் என விதம் விதமாய் ஜொலிக் கின்றன. வானுயர்ந்த கட்டிடங்கள் கம்பீரமாய்க் காட்சி தருகின்றன. உலகப் புகழ்பெற்ற "ஒப்ரா ஹவுஸ்" சந்திர ஒளியில் தகதகக்கிறது. உலகின் அதியுயரமான அலங்கார வளைவுப் பாலத்தில் வாகனங்கள் ஒளிபாச்சியபடி அங்கும் இங்கும் ஓடுகின்றன. துறை முகத்தில் வள்ளங்கள் ஒளியை உமிழ்ந்தபடி விரைகின்றன. நீல வானில் தெரியும் நட்சத்திரப் பூக்களையும் விஞ்சிக்கொண்டு பூலோக மின் விளக்குகள் வர்ணஐாலம் காட்டுகின்றன. ஆகா இது என்ன இந்திர லோகமா? என் வாழ்வில் என்றுமே காணாத அழகுக் காட்சிகளை நான் அங்கு கண்டேன்.

இந்திர லோகத்தை மயன் என்ற தேவதச்சன் நிர் மாணித்ததாகப் புராணக் கதைகளில் படித்திருக்கிறேன். அந்த மயனின் வாரிசுகள்தான் இந்தச் சிட்னி நகரத்தை நிர்மாணித் தார்களா! .

கோபுரத்தின் மேல் தளத்தில் பல சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்தனர். சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டி ஒருவர் அவர் களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இப்போது சிட்னி நகர் அமைந்திருக்கும் இடத்தில் முன்னர் ஆதிவாசிகளான "அபோர்ஜினிஸ் மக்களே வாழ்ந்தனர். 1777ல் பிரித்தானிய கடற்படையைச் சேர்ந்த கப்டன் ஜேம்ஸ் குக் என்பவர் பொட்டானி வளைகுடாவில் வந்து இறங்கினார். அன்று முதல் அவுஸ்திரேலியா பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்ட நாடா யிற்று. அதனைத் தொடர்ந்துவந்த காலப்பகுதியில் குற்றவாளி களைச் சிறைப்படுத்த அவர்கள் அவுஸ்திரேலியாவைப் பயன்படுத் தினர். 1788ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி பதினொரு சிறிய கப்பல்கள் சிட்னித் துறைமுகத்தை வந்தடைந்தன. கப்டன் ஆர்தர் பிலிப் என்பவர் தலைமையில் வந்த இந்தக் கப்பல்களில் 750 கைதிகள் உட்பட 1300 பேர் இருந்தனர். அன்று முதல் அவுஸ்திரேலியா ஒரு குடியேற்ற நாடாயிற்று. இவ்வாறு கைதி களைக் கொண்டுவந்து குடியேற்றும் கைங்கரியம் 1840 வரை தொடர்ந்ததாகச் சரித்திரம் கூறுகிறது.

கோபுரத்தின் அடிப்புறத்தை மேலேயிருந்து பார்க்கும் போது படுபாதாளம் தெரிகிறது. தெருக்களில் மனிதர்கள் சிற்றெறும்பு களாக ஊர்கின்றனர். தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சிறுவண்டுகள் போலத் தெரிகின்றன. மின்விளக்குகளுடன் செல்லும் பேருந்துகள் மின்மினிப் பூச்சிகளாய்க் காட்சி தருகின்றன. பயணிகள் வழிகாட்டி தூரத்தே தெரியும் கட்டிடங்கள் காட்சிகளைப் பற்றி விளக்கம் கொடுத்தபோது நாம் அவற்றை அங்கு பொருத்தப்பட்டிருக்கும் அதிசக்திவாய்ந்த பெரிய தூர திருஷ்டிக் கண்ணாடிகள் ஊடாகப் பார்க்கவும் வசதிகள் செய்திருக் கிறார்கள்.

தூரதிருஷ்டிக் கண்ணாடி ஒன்றினூடாகப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி, என்னை அழைத்து என்னையும் அந்தக் கண்ணாடியூடாகப் பார்க்கும்படி கூறினாள். அந்தக் கண்ணாடியில் என் கண்களைப் பொருத்தியபோது என்னை வியக்கவைக்கும் ஒரு காட்சி தென்பட்டது. ஹோட்டல் ஒன்றின் அதியுயர்ந்த மாடியில் (அது ஆறாவதோ ஏழாவதோ மாடியாக இருக்கவேண்டும்) அமைக் கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் மின்விளக்கு ஒளியில் பல ஆண்களும் பெண்களும் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த உயரத்தில் நீச்சல் குளமா? நம் நாட்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்கூட உயர் மாடியில் நீச்சல் குளம் அமைவதில்லை. சிட்னி நகரின் சில தெருக்கள் நெடுஞ்சாலைகள் கூட வெவ்வேறு உயரங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அடிமட்டத்தில் இருக்கும் தெருக்களில் வாகனங்கள் ஓடும்போது அதற்குமேலே வேறோர் மட்டத்தில் அமைந்திருக்கும் தெருக்களிலும் வாகனங்கள் ஓடுகின்றன. இவற்றையெல்லாம் அந்தப் பாரிய துரதிருஷ்டிக் கண்ணாடியூடாகப் பார்க்கும்போது வியப்பின்மேல் வியப்பாக இருக் கிறது.

கோபுரத்தின் பார்வைக் கூடத்தில் கம்பியூட்டர் ஒன்றும் வைத்திருக்கிறார்கள். நாம் பார்க்கும் இடங்களைப் பற்றிய மேலதிக தகவல் ஏதும் வேண்டுமானால் உரிய விசையைத் தட்டி கம்பியூட்டர் திரையில் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். தேவைப்படின் அவற்றைப் பிறின்ற் செய்தும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கு வேண்டிய விடயங்கள் பலவற்றை அந்தக் கம்பியூட்டரில் பிறின்ற் செய்து பெற்றுக் கொண்டேன்.

அப்போது அங்கு நின்ற ஒரு சுற்றுலாப் பயணி ஒரு கேள்வியை பயணிகள் வழிகாட்டியிடம் கேட்டார். “இந்தக் கோபுரத்தில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர்வரை ஏறி நிற்கிறார்கள். இரண்டு தளங்களில் சுழலும் கடைகள்வேறு இருக் கின்றன. மேலே பாரிய தண்ணிர்த் தொட்டியொன்றும் இருக்கிறது. இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இக்கோபுரம் இயற்கை அனர்த்தங்களால் தகர்ந்து விடாமல் இருக்க எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன?"

"இந்தக் கோபுரத்தின் கட்டிடத் தரம் அதி உச்சமானது. உலகத்தில் பாதுகாப்பான கட்டிடங்களில் ஒன்றாகவும் இது கணிக்கப்பட்டுள்ளது. 56 பாரிய கேபிள்கள்’ எந்தவொரு நிலை யிலும் இந்தக் கோபுரத்தை அசையவிடாது தாங்கிப் பிடித்துள்ளன. பாரிய புயலுக்கோ பூகம்பத்திற்கோ இந்தக் கோபுரம் ஆட்டம் கண்டு விடாது.” என்று விளக்கம் கொடுத்தார் அந்த வழிகாட்டி.

சிட்னி நகரை இந்தக் கோபுரத்திலிருந்து பார்ப்பது போன்று "மொனோ றெயில்" எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் புகையிரதத்தில் சுற்றிப் பார்க்கலாம். இந்த மொனோ றெயிலின் தண்டவாளங்கள் நிலமட்டத்திலிருந்து 60 அடி உயரத்திலே பொருத்தப்பட்டுள்ளன. இந்த றெயிலில் 20 நிமிடம் பயணம் செய்தும் நகரின் அழகிய காட்சிகளை மிகவும் அருகில் பார்க்க வசதியுண்டு. இது ஏழு ஸ்தானங்களில் நிறுத்தப்படுகிறது.

தொழிநுட்ப ரீதியில் ஒரு பாரிய சாதனை

"டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா என்ற சினிமாப் பாடல் "இந்தியன் திரைப் படத்தில் வருகிறதல்லவா. அந்தப் பாடற் காட்சியில் கமலஹாசன் ஒரு படகில் பயணம் செய்கிறார். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட சூழலிலேதான் உலகப் புகழ்பெற்ற "ஒப்ரா ஹவுஸ்", சிட்னி துறைமுகம், சிட்னி "ஹாபர் பிறிட்ஜ் ஆகியன அமைந்துள்ளன.

இவற்றை நாம் முன்பு சிட்னி உயர் கோபுரத்திலிருந்து பார்த்தபோதிலும் இப்போது அவற்றைத் தனித்தனியாகச் சென்று பார்க்கும் நோக்குடன் புறப்பட்டோம்.

ஏறத்தாழ 58 சதுர கி.மீ. விஸ்தீரணம் உடைய சிட்னி துறைமுகம் ஒரு சுவர்க்கலோகம் போல் விளங்குகிறது. 1788 இல் அவுஸ்திரேலியாவுக்கு முதன் முதலில் கைதிகளை அழைத்து வந்த கப்டன் பிலிப் என்பவர், இந்தத் துறைமுகத்தை "உலகின் மிகவும் அழகும் சிறப்பும் வாய்ந்த துறைமுகம் எனத் தனது அறிக்கை ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார். இங்கு கேளிக்கைகள் புரிந்து மக்கள் மகிழ்வதற்கென பல வசதிகள் இருக்கின்றன. நீந்துவதற்கு, சுழியோடுவதற்கு, மீன் பிடிப்பதற்கு, கப்பல் பிரயாணம் செய்வதற்கு, விசைப்படகுகளில் விரைவதற்கு, என விதம் விதமான பொழுது போக்கு வசதிகள் இருக்கின்றன.

முதன் முதலில் அவுஸ்திரேலியாவில் வந்திறங்கிய கப்டன் குக் பயணம் செய்த பாய்மரக் கப்பலின் அமைப்பில் இங்கு ஒரு படகைச் செய்து வைத்திருக்கிறார்கள். இப்படகில, மாலுமிகள் 18ஆம் நூற்றாண்டின் உடைகளைப்போலவே உடையணிந்து அந்தக் கால மனிதர்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள். உல்லாசப் பயணிகள் பலர் இந்தப் படகில் ஏறி இக்கரையில் இருந்து அக் கரைக்குச் செல்கிறார்கள்.

இரவு நேரங்களில், எங்கும் பலவித வர்ணங்களை உமிழும் வெளிச்சங்களின் மத்தியில் அந்தத் துறைமுகத்தில் நின்று அழகுக் காட்சிகளைப் பார்த்து அதிசயிப்பதே ஓர் இன்பமயமான அநுபவந்தான். உலகில் வேறெங்கும் இணையாகக் காணப்படாத ஒரு சூழலிலே, சிட்னி நகர் இந்தக் துறைமுகத்தின் அருகே பெருமையுடன் நிமிர்ந்து நிற்கிறது. இதன் காரணமாகத்தான் கமலஹாசன் "இந்தியன் திரைப் படத்தின் சில காட்சிகளைப் படம் பிடிக்க இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாரோ!

இந்தத் துறைமுகத்தில் கம்பீரமாய்க் காட்சி தருவது வளைவு பாலம். உலகத்திலேயே மிகப் பெரிய வளைவு பாலமாக இது கருதப்படுகிறது. 1932 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பாலம் தொழிநுட்பரீதியிலும் ஒரு பாரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

மிகப் பெரிய வில்லொன்றை, நாண் பகுதி கீழ்ப்புறமாக இருக்கும்படி வைத்தால் எவ்வாறு தோற்றமளிக்குமோ அவ்வாறான தோற்றத்தை இந்தப் பாலம் கொண்டிருக்கிறது. நகரின் வட பகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையேயுள்ள 500 மீட்டர் அகலமான நீர்ப்பரப்பின் மேலாக இந்தப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. வளைவின் அதியுயரமான பகுதி நீர்மட்டத்திலிருந்து 134 மீட்டர் உயரம் கொண்டது. வளைவுப் பகுதியிலிருந்து பலம் பொருந்திய உருக்குக் கேபிள்கள் 49 மீற்றர் அகலமான இந்தப் பாலத்தைத் தாங்கிப் பிடித்துக் கொள்கின்றன. இந்தப் பாரிய உருக்குப் பாலத்தில் வாகன நெரிசல் கொண்ட நேரத்தில் 15,000 கார்கள் ஒரு மணித்தியாலத்தில் பயணஞ் செய்வதாகக் கணக்கிட்டுள்ளார்கள்.

சிட்னி நகரில் திருமணஞ் செய்யும் புதுமணத் தம்பதிகள் இந்தப் பாலத்தின் அருகேயுள்ள அழகிய சூழலிலே நின்று புகைப் படம் எடுத்துக் கொள்வார்களாம். நாம் அங்கு சென்றவேளை இரு புதுமணத் தம்பதிகள் திருமண உடையுடன் வந்து அங்குநின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்தப் பாலத்தின் கீழே ஒரு சுரங்கப் பாதை அமைத்திருக்கிறார்கள். அதனூடாகவும் காரில் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்லக் கூடிய வசதி இருக்கிறது.

இந்தப் பாலத்தின் மேலாக வாகனங்கள் சென்று திரும்பு வதற்குக் கட்டணமாக ஒரு டொலர் அறவிடுகிறார்கள். இதைப் போலவே இங்குள்ள ஒருசில தெருக்களைப் பாவிப்பதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கட்டணம் வசூலிக்கும் வேலையை இயந்திரங்களே செய்கின்றன. காரை நிறுத்தி, காரில் இருந்தபடியே உரிய கட்டணத்தை இயந்திரத்தின் வாய்க்குள் வீசி எறிந்தால் "கேற் மேல்நோக்கித் திறந்து விடுகிறது. இந்தக் கேற்கள் நம்நாட்டு றெயில்வே கடவைகளில் காணப்படும் கேற்களின் அமைப்பினை ஒத்திருக்கின்றன.

நகரில் கார்களை நிறுத்தி வைப்பதும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. கார்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களுக்கும் கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. தெருவோரங்களில் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்களில் பணத்தைச் செலுத்தி, உரிய ரசீதைப் பெற்று, காரின் சாரதி ஆசனத்தின் முன்னால் அந்த ரசீதை வைத்துவிட்டே நாம் காரைவிட்டு அகல வேண்டும். இல்லாவிட்டால் பொலிஸார் தண்டப்பணம் அறவிடு வார்கள்.

நகரின் பாரிய விற்பனை நிலையங்களுக்கு அண்மித்து, நிலத்தின் கீழேயும் மேலேயும் பல மாடிகளைக் கொண்ட கார் பார்க்குகள் உள்ளன. கட்டணம் செலுத்திய பின்பும் இங்கு கார் களை நிறுத்துவதற்கு இடந்தேடி அலையவேண்டியிருக்கிறது.

கட்டணமும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. நாங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்தபோது மகன் ராஜேஷின் பிறந்தநாள் வந்தது. பிறந்தநாள் பரிசாக அவருக்கு ஒரு கமெரா வாங்கிக் கொடுக்க அவரது மாமனார் விரும்பினார். எமது ‘பாஸ்போட்டைக் காட்டி DUTYFREESHOP இல் வாங்கினால் மலிவாக வாங்கலாம் என நினைத்து நானும் அவருடன் சென்றேன். அன்று நாம் கார் நிறுத்துவதற்குக் கட்டணமாக ஏழு டொலர் செலுத்த வேண்டி யிருந்தது. இலங்கைப் பணத்தில் அத்தொகை என்னவாக இருக்கும் என மனதில் கணக்குப் பார்த்தேன். முந்நூறு ரூபாய்! எனக்குத் தலை சுற்றியது. காரை நிறுத்திவைப்பதற்கா இவ்வளவு கட்டணம்!

நகரில் காரைப் பார்க்" செய்வது பிரச்சினையாக இருப்பதால் சில சந்தர்ப்பங்களில் கார் வைத்திருப்பவர்கள் கூட புகையிரதத்தில் பயணிக்கிறார்கள்.

ஒரு தடவை நானும் மனைவியும் அனுஷாவுடன் "ஹோம் புஷ்' என்ற இடத்திலிருந்து நகருக்குப் புகையிரதத்தில் சென்றோம். புகையிரத நிலையத்திலும் இயந்திரங்களே "டிக்கற்றுகளை விற்பனை செய்கின்றன. இயந்திரத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி விசையை அமுக்கினால் ‘ரிக்கற் வெளிவருகிறது. புகையிரத ஸ்தானத்தின் உள்ளே நுழையும்போது இந்த ரிக்கற்றை வேறொரு இயந்திரத்தில் செலுத்தினாலே பாதை திறந்து உள்ளே செல்ல வழி விடுகிறது. இப்படியாக எங்கு பார்த்தாலும் ஒரே இயந்திர மயமாக இருக்கிறது.

இந்த இயந்திரமயமான நிலைபற்றி நான் மருமகளிடம் பிரஸ்தாபித்தபோது, அவள் அங்குள்ள இயந்திரங்களின் செயற் பாடுகள் பற்றி, அதன் நன்மைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினாள்.

"இங்கு இயந்திரங்கள் செய்யும் வேலையை நம்நாட்டில் மனிதர்கள் செய்கிறார்கள். நம் நாட்டில் மனித வளம் அதிகம் உண்டு. அங்கு மலிவாகத் தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்ள லாம். மனித வளத்தைப் பிரயோகிக்கும் போது வேலையில்லாப் பிரச்சினைக்கு அது ஒரு தீர்வாக அமைகிறது. அத்தோடு இத்தகைய இயந்திரங்களை விலைகொடுத்து வாங்குவதற்கு வேண்டிய பணமும் நம்நாட்டில் இல்லை. இவற்றையெல்லாம்விட மனித வளத்தை உப யோகிக்கும்போது மனிதனின் புன்னகை நமக்குக் பரிசாகக் கிடைக் கிறது" என்றேன் நான்.

மருமகள் சிறிது நேரம் யோசித்துவிட்டுக் கூறினாள், "மனிதவளம் பிரயோகிக்கப்படும்போது வளர்முக நாடுகளில் ஊழல் மலிந்து விடுகிறது. கைலஞ்சம் கொடுத்து எதையும் சாதிக்க வழிபிறக்கிறது. இதனால் அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் விரயமாகிறது. இது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகிறது. இயந்திரப் பாவனையில் ஊழலுக்கு இடமேயில்லை" என்றாள்.

நான் விக்கித்து நின்றேன். அவளது கூற்றில் எவ்வளவு உண்மை பொதிந்திருக்கிறது!

"நம்நாட்டில் சேவைகளை இயந்திரமாக்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு வளர்முக நாட்டில் வளங்களின் உச்சப் பயனைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். அதனால் மனித வளத்தின் பயன்பாட்டை நாம் பிரயோகித்தே ஆகவேண்டும். அதேவேளை லஞ்சம் ஊழல் போன்றவற்றைத் தடுக்க வேறு வழிகளைக் கையாள வேண்டும்" எனக் கூறி அவளுக்கு விளக்கம் கொடுத்தேன்.

அடுத்து நாம் ‘ஒப்ரா ஹவுஸ் நோக்கிச் சென்றோம். ஒரு கவிழ்த்து வைக்கப்பட்ட அரைக்கோளததிை உச்சிப் பகுதியிலிருந்து விளிம்புவரை வெவ்வேறு அகலங்கள் கொண்ட துண்டுகளாக வெட்டி யெடுத்து அத்துண்டுகளைப் பாரிய கூரைத் தகடுகளாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு கற்பனை செய்யப்பட்ட கூரைத் தகடுகளின் உச்சிப் பகுதிகள் கீழ்ப்புறமாக அமையும்படி ஒரு பெரிய மண்டபத்திற்குக் கூரை வேய்ந்தால் எவ்வாறு தோற்றமளிக்குமோ அவ்வாறான தோற்றத்தைக் கொண்டதுதான் இந்த ‘ஒப்ரா ஹவுஸ்". இன்னுமொரு விதமாகக் கூறுவதானால் இந்த ‘ஒப்ரா ஹவுஸின் கூரைப் பகுதிகளைத் தனித்தனியாகக் கழற்றி ஒன்றுசேர்த்து ஒரு அரைக்கோள வடிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தப் புகழ்பெற்ற கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர் அதனை எப்படி வடிவமைப்பது என்று உலகளாவிய போட்டி பொன்று நடத்தப்பட்டது. முப்பத்திரண்டு நாடுகளில் இருந்து 233 ஓப்ரா ஹவுஸ் DESIGN கள் போட்டிக்காக வந்தன. அந்த வடிவமைப்புப் போட்டியிலே தெரிவானதுதான் இன்றைய ஒப்ரா ஹவுஸ் வடிவம். இதனைக் கட்டி முடிக்க 14 வருடங்கள் எடுத்தன. 1973ல் இரண்டாவது எலிசபெத் மகாராணியால் இந்த இல்லம் திறந்து வைக்கப்பட்டது. இது இன்று ஒரு கலாமண்டபமாகத் திகழ் கிறது. நான்கு பெரும் மண்டபங்களை உள்ளடக்கிய இந்தக் கட்டிடத்தில் களியாட்ட மண்டபம், திரையரங்கு, இசை மண்ட்பம், நாடக அரங்கு ஆகிய பிரிவுகள் இருக்கின்றன.

உள்ளே சென்று பார்ப்பதற்குப் பணம் வசூலிக் கிறார்கள். நாங்கள் அங்கே சென்ற வேளையில் நாடக அரங்கில் CB6n9ä56ðuiuuj 6qgpiĝuu MERCHANT OF VENIS 616āgp p5T Labib நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கலை அரங்குக்குள் நுழைவ தானால் கோட், சூட் அணிந்து கனவான்களாகவே உள்ளே செல்ல லாம். சாதாரண உடை அணிந்து வருபவர்கள் எவருமே உள்ளே செல்ல அநுமதிக்கப்படுவதில்லை. உள்ளே கண்ரீன்களும், சிறு கடைகளும் இருக்கின்றன.

இந்த ஒப்ரா ஹவுஸ், துறைமுகத்தை அண்மித்து அமைந்திருக்கிறது. இதன் காரணமாக இக்கட்டிடத்தின் வெளியே உள்ள பரந்த வெளி ஒரு கடற்கரை BEECH போன்று அமைந்துள்ளது.

இந்தக் கடற்கரையோரமாக நாம் சென்று கொண்டிருந்தபோது எதிர்ப்புறமாக இரு ஆண்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியபடி, தம்மை மறந்த நிலையில், காதலர்கள் போல் சல்லாபித்துக் கொண்டிருந்தனர். என்னை இந்தக் காட்சி ஆச்சரி யத்தில் ஆழ்த்தியது. எனது மனநிலையைப் புரிந்துகொண்ட அனுஷா வின் சகோதரன் அதற்குரிய விளக்கத்தை கொடுத்தான்.

அவர்கள் GAYS எனப்படும் தன்னினச் சேர்க்கை யாளர்கள். அங்கு இப்படிப் பல தம்பதிகள் இருக்கின்றனர். அவர் களுக்கு அங்கு ஒரு கிளப்' இருக்கிறது. அங்கத்தவர்கள் மட்டுமே அங்கு அநுமதிக்கப்படுவார்கள். பெண்களிலும் LESBLANS எனப் படும் தன்னினச் சேர்க்கையாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர் களும் அந்தக் கிளப்பில் அங்கத்துவம் வகிக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு கிழமையும் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்தக் கிளப்பில் சந்தித்து ஆடிப்பாடி, கூடிக்குலவி மகிழ்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் உலகெங்கிலும் உள்ள gai Gohad Garjassoa5urtonjab6fair GAYS FESTIVAL 66tu(Sub கொண்டாட்டம் சிட்னி நகரில் நடைபெற்றதாகவும் அறியப்படுகிறது. இந்தத் தன்னினச் சேர்க்கையாளர்கள் தமக்கென ஒரு தனியான சமூகத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெனத் தனியான வாழ்விடப் பகுதி, கடைகள், உண்டிச்சாலைகள், இரவு கிளப்கள் யாவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அவுஸ்திரேலியச் சட்டப்படி இந்தத் தன்னினச் சேர்க்கை யாளர்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாம், கூட்டாக வங்கிக் கணக்குகள் வைத்திருக்கலாம், தத்தெடுத்து ஒரு பிள்ளையை வளர்க்கலாம், விவாகரத்துப் பெறலாம், ஜீவனாம்சமும் கோரலாம்.

உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது! பெருந்தொகையான உல்லாசப் பயணிகள் வரும் இந்தப் பகுதியில் கடற்கரையோரமாக ஆங்காங்கே வாங்குகள் போடப் பட்டிருக்கின்றன. அந்த வாங்குகளை ஆண் பெண் ஜோடிகள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும் முத்தமிட்டபடியும், ஒருவர் மடியில் மற்றவர் படுத்தும் சல்லாபம் புரிந்தபடி இருக்கிறார்கள்.

ஓர் இடத்தில் ஒரு பெண்ணும் ஆணும் உடல் முழுவதும் ஒருவகை வெண்ணிறப் பசையைப் பூசிக்கொண்டு பளிங்குச் சிலைபோல் "போஸ்" கொடுத்துக்கொண்டிருந்தனர். உல்லாசப் பயணிகள் சிலர் அவர்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து விட்டு அவர்களுக்குப் பணம் கொடுத்துச் செல்கிறார்கள்.

வேறொரு பகுதியில் சில இத்தாலியச் சிறுவர்கள் சர்க்கஸ் வித்தை காட்டிக் கொண்டிருந்தனர். நமது நாட்டில் பெரஹரா செல்லும்போது இளைஞர்கள் தீப்பந்தங்களைச் சுற்றி விளையாடுவது, உயரமான சைக்கிளில் ஒடுவது, கத்திகளை மேலே மாறி மாறி வீசியெறிந்து பிடிப்பது போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள் அல்லவா. அதே போன்று அந்த இத்தாலியச் சிறுவர்களும் விளையாட்டுக் காட்டிப் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் பார்த்து இரசித்துவிட்டு அன்று நாம் வீடு திரும்ப இரவு பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது.

ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கோயில்களும் சமய நிறுவனங்களும்

புலம்பெயர்ந்து சென்று வேறொரு நாட்டில் குடியேறும் தமிழர்கள் முதலில் தமது ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அங்கு கோவில்களை அமைப்பார்கள். பின்னர் தமது பண்பாடு, கலை, கலாசாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென மன்றங்கள், சங்கங்களை அமைப்பார்கள். அதன்பின்னர் தமது நாளாந்தத் தேவைகளுக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வ தற்கென கடைகளை அமைப்பார்கள். இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கை, மலேசியா, தென்னாபிரிக்கா, பீஜித் தீவுகள் போன்ற இடங்களுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இதனையே செய் தார்கள். இப்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று பல்வேறு நாடுகளில் குடியேறிய தமிழர்களும் இதனையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம் அவர்களின் இல்லத் துக்கு நானும் மனைவியும் சென்றபோது, பேராசிரியர் தம்பதிகள் எம்மைப் பெரிதும் மகிழ்வுடன் வரவேற்றார்கள். நீண்ட நேரம் அவருடன் உரையாடினோம்.

இலங்கையில் தற்போதுள்ள போர்ச்சூழல், அதன் தாக் கங்கள், பல்கலைக்கழக மட்டத்தில் உள்ள கற்பித்தற் செயற் பாடுகள், பாடசாலைகளில் சமயக்கல்வி, அது தொடர்பான நூல் ஆக்கங்களில் ஏற்படும் பிரச்சினைகள் என எங்களது உரையாடல் பரந்து கடைசியாக நவீன எழுத்துத் துறை, புலம்பெயர்ந்த படைப் பாளிகளின் பணிகள், என விரிந்தது.

பேராசிரியருடன் நாங்கள் அன்று அளவளாவிய நேரம் எமக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது கடைசியாகப் பேராசிரியரின் தற்போதைய பணிகள் குறித்து நாங்கள் வினவியபோது, தான் அங்கம் வகிக்கும் மன்றங்கள், அதன் செயற்பாடுகள், சிட்னியில் உள்ள ஏனைய தமிழ் மன்றங்கள், கலை கலாசார நிகழ்வுகள் குறித்து அவர் விளக்கிக் கூறினார்.

"சிட்னி தமிழ் மூத்த பிரஜைகள் சங்கம் என்ற அமைப் பிலே பேராசிரியர் ஒரு முக்கிய உறுப்பினராக இருக்கின்றார். 55 வயதுக்கு மேற்பட்டோரே இந்த மன்றத்தில் அங்கத்தவராகலாம். அவர்கள் அவுஸ்திரேலிய நிரந்தர வசிப்பிட உரிமை உள்ளவர் களாகவும் இருக்க வேண்டும். அங்கத்தவர் கட்டணமாக வருட மொன்றுக்கு 60 வெள்ளி அறவிடுகிறார்கள்.

இச்சங்கத்தின் செயற்பாடுகளாக தைப்பெங்கல், தீபாவளி, வருடப் பிறப்பு, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள். இவ்விழாக்களில் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன.

இவற்றைவிட இச்சங்கத்தின் உறுப்பினர்கள் வியாழக் கிழமைகளில் சன சமூக நிலையம் ஒன்றிலே ‘சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றினை நடத்துகின்றார்கள்.

இச்சங்கத்தின் ஏனைய செயற்பாடுகளாக வயது வந்தவர் களுக்குப் பொழுதைக் கழிக்க உதவுதல், நோயாளரைச் சென்று பார்த்தல், தேவைப்படின் அவர்களுக்குப் பண உதவி சரீர உதவி முதலியவற்றைச் செய்தல், ஒவ்வொரு வருடமும் அங்கத்தவர்கள் எல்லோரும் சேர்ந்து சுற்றுலாச் செல்லுதல் ஆகியன அமைந் துள்ளன. காலாண்டுக்கு ஒரு முறை 'தமிழ்ச் சுடர்' என்னும் சஞ்சிகையையும் வெளியிடுகின்றனர்.

இச்சங்கத்தின் உப சங்கமாக ஒரு நலன்புரிச் சங்கமும் இயங்குகிறது. அங்கத்தவர் ஒருவர் இறந்தால் இந்த நலன்புரிச் சங்கம் மூலம் மூவாயிரம் வெள்ளி அவரது இறப்புச் செலவுக்காக குடும்பத்தினருக்கு வழங்குகின்றனர். இப்பணத்தை தலா பத்து வெள்ளி என்ற கணக்கில் மற்றைய அங்கத்தவர்களிடம் வசூலிக் கின்றனர்.

"சிட்னி தமிழ் மூத்த பிரஜைகள் சங்கத்தின் ஆதரவில் நாடகக் கருத்தரங்கு ஒன்று ஒரு வியாழக்கிழமை நாளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நாடகக் கருத்தரங்குக்கு பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்களே தலைமை வகித்தார்.

சங்கத்தின் உறுப்பினர் பலர் அந்தக் கருத்தரங்கில் பார்வையாளராக வந்திருந்தனர்.

யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் திரு.த.கலாமணி அவர்கள் புலமைப் பரிசில் பெற்று அவுஸ்திரேலியா வந்திருந்தார். அவர் “யாழ்ப்பாண நாடகப் பாரம்பரியங்கள் என்ற தலைப்பிலே உரையாற்றினார்.

திருமதி.கார்த்திகா கணேசன், முன்னர் இலங்கையிலும் இந்தியாவிலும் பல நாட்டிய நாடகங்களை அரங்கேற்றியவர். பரத நாட்டியக் கலைஞர். இவர் "இசை நாடக அருவுங் என்ற தலைப்பிலே பல சுவாரஸ்யமான தகவல்களைத் தந்தார். 

திரு.அ.சந்திரசேகரன் ஒரு கட்டிடக் கலைஞர். அவர் அவுஸ்திரேலியாவில் தமிழ் நாடகங்களைத் தயாரிப்பதில் எற்படும் பிரச்சினைகள், பற்றி உரையாற்றினார்.

கலாநிதி வே. இளங்கோ. இவர் தமிழ் அறிஞர் வேந்தனார் அவர்களின் புதல்வர். தற்போது அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். இவர் உரையாற்றிய தலைப்பு சிறுவர் நாடகங்கள்.

திரு. சிவகுரு மனோகரன், "சிட்னியில் நாடக அநுபவங் களும் எதிர்காலத்திட்டங்களும் செயற்பாடுகளும் என்ற தலைப்பிலே பேசினார். ஈற்றிலே என்னையும் பேசும்படி அழைத்தார்கள். இலங்கையின் இன்றைய போர்ச் சூழலில் கலைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் நம் நாட்டு நாடக முயற்சிகள் பற்றியும் அங்கு பேசினேன். ஒட்டு மொத்தமாக நோக்கும்போது அன்றைய நாடகக் கருத்தரங்கு உயர்ந்த தரத்தைக் கொண்டதாகவும் மிகவும் பயன்தர வல்லதாகவும் அமைந்தது.

தமிழர்தம் பண்பாடு, கலை, கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன் சிட்னி நகரில் மட்டும் 64 மன்றங்கள், சங்கங்கள் இயங்குவதாக அறியக்கிடக்கிறது. சிட்னி பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் 1991ல் இருந்து சிறப்பான பல பணிகளை ஆற்றிவருகிறது. பல்கலைக்கழக நிதி யுதவித்திட்டம், தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் "கலப்பை காலாண்டுச் சஞ்சிகை, தமிழ்க் கையேடு, சிட்னித் தமிழ் இளைஞர் மன்றம், ஆகியன இந்தத் தமிழ்ச் சங்கப் பணிகளிலே அடங்கு கின்றன.

திரு. அரிச்சுனமணி என்பவரின் வழிகாட்டலில் இயங்கும் "சிட்னி தமிழ் மன்றம் பல நன் முயற்சிகளைச் செய்துவருகிறது. சங்கமம் காலாண்டு நிகழ்ச்சி, சிந்தனைச்சுடர் போட்டிகள், இளந் தமிழர் விருது ஆகியன இந்த மன்றத்தின் முக்கிய செயற்பாடுகளாகும்.

நம்நாட்டின் புகழ் பெற்ற கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள், தமது கல்லூரிப் பழைய மாணவர் சங்கங்களை இங்கு அமைத்திருக்கிறார்கள். அதுபோன்று அவுஸ்திரேலியாவிலும் பழைய மாணவர்கள் தமது கல்லூரிப் பெயர்களில் மன்றங்கள் அமைத்து, தமிழர் பண்பாட்டுடன் தொடர்புள்ள பல முற்போக்கான செயற்பாடு களில் ஈடுபட்டு வருகிறார்கள். யாழ் மத்திய கல்லூரி, சுண்டுக்குளி மகளிர்கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, மகாஜனக்கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி, செயின்ற் ஜோன்ஸ் கல்லூரி, மட்டக்களப்பு செயின்ற் மைக்கல் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, வெஸ்லி கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் மன்றங்கள் சிட்னி நகரிலே இயங்கி வருகின்றன.

சிட்னி முருகன் கோவிலில் புனருத்தாரண வேலைகள் செய்யப்பட்டு, சமீபத்திலே கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத் திலும் இலங்கையிலும் புகழ் பெற்ற சிவாச்சாரியர்கள் இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்கள். இக்கோவிலில் 'சைவ மன்றம்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு ஞாயிறு பாட சாலைகள் அமைத்து சமய வகுப்புகள் நடத்துகிறார்கள். தேவார திருவாசகங்களைப் பண்ணோடு பாடவும் பயிற்சி கொடுக்கிறார்கள். நாயன்மார் குரு பூசைகளும் நடைபெறுகின்றன.

*ஹெலன்ஸ் பேர்க்' என்ற இடத்திலே ஒரு பெரிய சிவா விஷ்ணு கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு நாங்கள் சென்ற வேளை சனக் கூட்டம் அதிகமாக இருந்தது. சிவன் விஷ்ணு ஆகிய இரு தெய்வங்களுக்கும் அருகருகே கோவில்கள் அமைந் திருப்பதால் இங்கு சைவர்களும் வைஷ்ணவர்களும் அதிகளவில் வருகிறார்கள். நம்நாட்டுக் கோவில்களில் போலல்லாது கோவில் அர்ச்சகர் சேட் அணிந்தபடி பூசை செய்கிறார். இங்கு நிலவும் குளிருக்கு அது வேண்டியதுதான். இலங்கையிலிருந்து சென்ற சிங்கள இனத்தவர்களும் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய் கின்றனர்.

நாங்கள் சென்ற வேளையில் திரு.குணசேகரா என்ற ஒரு சிங்கள அன்பர் தனது குடும்பத்துடன் வழிபாட்டுக்காக வந்திருந்தார். நான் சிறிது நேரம் அவர்களுடன் அளவளாவினேன். தாங்கள் பெளத்தர்களாக இருந்தபோதிலும் இங்கு இந்துக் கோவில்களுக்கே வந்து பிரார்த்தனை செய்வதாக அவர் கூறினார். இந்துமத தத்துவங் களுக்கும் பெளத்தமத தத்துவங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை எனவும் பண்பாடு, கலை, கலாசார விடயங்களிலும் இரு இனங்களுக்குமிடையே பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் கூறினார்.

தாங்கள் பதினான்கு வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்வதாகவும் தமது உறவினர்கள் சொந்தபந்தங்களைப் பிரிந்து வாழ்வது தமக்குப் பெரிதும் மனச் சங்கடத்தைத் தருவதாகவும் திருமதி.குணசேகரா ஆதங்கப்பட்டார். எல்லா விதத்திலும் சிறந்த நாடாக விளங்கும் எமது ரீலங்கா அரசியல் தகிடுதத்தங்களால் அழிந்துபோய்க் கொண்டிருக் கிறது எனப் பெரிதும் மனம்நொந்து கூறினார் திரு.குணசேகரா.

கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் பரிவார மூர்த்தி களுக்குச் சிறுகோவில்கள் இருக்கின்றன. நம் நாட்டுக் கோவில்கள் போன்ற அமைப்பும் சூழலும் இங்கு நிலவுகின்றன. கோவிலுக்கு வருகின்ற பக்தர்களே பிரசாதங்களையும் செய்துகொண்டு வருகின்றனர். பூசை முடிந்ததும் பிரசாதங்களை மற்றவர்களுக்கும் கொடுத்து உண்ணுகின்றனர். அவுஸ்திரேலியாவிலே ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்யக் கோவில்களைத் தவிர வேறும் பல அமைப்புகள் இருக்கின்றன. “ஹரேகிருஷ்ணா இயக்கம்', 'சாயிபாபா இயக்கம், "சின்மியாமிஷன் அருளுரைகள் ‘குருமகராஜ் இயக்கம்' ஆகியன நமது மக்களின் ஆன்மீக ஈடேற்றத்திற்கு உதவுவதோடு பிறமக் களினதும் குறிப்பாக அவுஸ்திரேலியர்களினது ஆன்மீகத் தேவை களையும் பூர்த்தி செய்கின்றன.

பயங்கொள்ளலாகாது பாப்பா'

“வொண்டர் லாண்ட்”

சிட்னி நகரில் இருந்து 45 நிமிடம் காரில் பயணம் செய்தால் ‘வொண்டர் லான்ட் (WONDERLAND) என்ற ஒரு சிங்கார வனத்தை அடையலாம். அவுஸ்திரேலியாவிலேயே மிகவும் பெரிதாகக் கணிக்கப்படும் இந்த பார்க் 219 கெக்டயர் விஸ்தீரணம் உடையது. சிறுவர்களுக்கான பல விளையாட்டுகள், பொழுது போக்குகள் நிறைந்த இந்தச் சிங்கார வனத்தின் ஒரு பகுதியை அவுஸ்திரேலியாவின் காட்டு வாழ்க்கையைப் (WILD LIFE) பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு மிருகக் காட்சிச் சாலையாகவும் அமைத்துள்ளார்கள்.

சிட்னி நகருக்கு வரும் எல்லாச் சுற்றுலாப் பயணிகளும் இந்தச் சிங்கார வனத்திற்கு அநேகமாகச் செல்கிறார்கள்.

உள்ளே செல்வதற்கு நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இக்கட்டணத் தில் பத்து வீதம் கழிவு உண்டு. ஏனென்று விசாரித்துப் பார்த்ததில், வயது வந்தவர்கள் முழுமையாக அங்குள்ள எல்லா விளையாட்டு களிலும், பொழுது போக்குகளிலும் பங்குபற்ற முடியாது என்ற பதில் கிடைத்தது. மாணவர்களுக்கும் சலுகை அடிப்படையில் நுழைவுச் சீட்டு வழங்குகிறார்கள்.

பல உல்லாசப் பயணிகள் தமக்கு 55 வயதுக்கு மேலாகி விட்டது என்று கூறி நுழைவுக் கட்டணச் சலுகை பெற்றதை நான் கவனித்தேன். நமது நாட்டில் என்றால் இப்படியான சந்தர்ப்பங்களில் நாம் வயதை நிரூபிக்க ஆவணங்கள் எவற்றையாவது காட்டவேண்டி நேரிடும்.

அவுஸ்திரேலியர்கள் பிறர் சொல்லுக்கு மதிப்பளிக் கிறார்கள். மற்றவர்கள் சொல்வதை அப்படியே உண்மையென்று நம்பிவிடுகிறார்கள். ஒருவர் சொல்வது உண்மைதானா என்று சரி பார்க்கும் பழக்கம் அவுஸ்திரேலிய மக்களிடையே மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இதனை நான் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் சிறுவர்களுக்கான பலவகை ராட்டினங்கள் தென்பட்டன. இந்த ராட்டினங்களில் வயதானவர்ளும் சுழன்று மகிழலாம். ஆனால் இதில் ஏறுவதற்குப் பல வகையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பயந்த சுபாவம் உடையவர்கள், இருதய நோயாளிகள் பலவீனமானவர்கள், நிறைமாதக் கர்ப்பிணிகள் இந்த ராட்டினங்களில் ஏறிச் சுழல முடியாது.

PERATE SHIP ராட்டினத்தில் ஏறிக்கொண்டோம். மின்விசையில் இயங்கும் அந்த ராட்டினத்தில் ஏறி உட்கார்ந்ததும், அங்கு பொறுப்பாக இருந்த பெண்மணி ஒருவர் வந்து நானணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி, சேட் பொக்கற்றில் இருந்த பொருட்கள் யாவற்றையும் வாங்கிக் கொண்டார். கழுத்து மட்டத்தில் கவசம் போன்ற ஒரு இரும்புத் தடையை நாம் விழுந்து விடாமல் இருப்பதற்காகப் பொருத்தினார். ராட்டினம் சுழலத் தொடங்கிய போதுதான் அந்தப் பயங்கரம் எனக்குப் புரிந்தது. நமது நாட்டில் ராட்டினங்கள் பக்க வாட்டில்தானே சுழலும்.

இது கீழிருந்து மேலாக ஒரு சைக்கிள்சில்லு சுழல்வது போலச் சுழலத் தொடங்கியது. நாம் மேலே போகும்போது தலைப்புறம் பூமியை நோக்கிக் கீழேயிருந்தது. பல சிறுவர்களும் பெண்களும் பயத்தினால் வீரிட்டனர். ராட்டினத்தை நிறுத்தச் சொல்லி இறங்க முடியாதா என்ற ஒரு தவிப்பு இடைநடுவில், வேகமாகச் சுழலும் ராட்டினத்திலிருந்து கதைக்கக்கூட முடியாத நிலை. குடல் இறங்கித் தொண்டைக்குள் வந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. இருதயம் பட்பட்டென பலமாக அடிப்பது காதுக்குள் கேட்பது போலிருந்தது.

இதே வகையான பயங்கர அநுபவத்தைக் கொடுக்கக் கூடிய வேறொரு ராட்டினம் BUSHBEAST என அழைக்கப்படுகிறது. இது உலகின் தென் கோளப் பகுதியிலுள்ள மிகப்பெரிய மரத்தினா லான இராட்சத ராட்டினம் எனக்கூறப்படுகிறது. இந்த ராட்டினத்தில் சுழன்றுவிட்டு வெளியே வரும் பாதையில் பல புகைப்படங்கள் விற்பனைக்குத் தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவை யெல்லாம் ராட்டினத்தில் நாம் சுழன்று கொண்டிருந்தபோது எடுக்கப் பட்ட புகைப்படங்கள். படத்தில் எனது முகம் பேயறைந்தது போல் காட்சியளித்தது. இவ்வாறே ராட்டினத்தில் ஏறிச்சுழன்ற ஏனையோரது நூற்றுக்கு மேற்பட்ட புகைப் படங்களும் அங்கு விற்பனைக்கு இருந்தன.

வேகமாகச் சுழலும் ராட்டினத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் மிகத் தெளிவாகப் படம் பிடித்து, அதை "டெவலப்' செய்து ஒரு சில நிமிடங்களிலேயே புகைப்படமாக நமக்கே தந்துவிடும் தொழிநுட்பத்தை எண்ணி நான் வியந்தேன்.

DEMON ROLLER COASTER stairp (36GpITG வகையான ராட்டினமும் இங்கு உண்டு. சிறிய புகையிரதம் போன்ற தொடர்ப் பெட்டிகளில் ஆட்களை ஏற்றி மின் விசையால் அவற்றை அதற்கென அமைக்கப்பட்ட தண்டவாளங்களில் ஓடச் செய் கிறார்கள். இந்தத் தண்டவாளங்கள் ஒரு பாரிய இரும்புச் சுருள் போன்று அமைந்துள்ளன. இதில் பயணிப்பவர்கள் நேராகவும் தலை கீழாகவும் மாறி மாறி, படுவேகமாகப் பயணஞ் செய்ய நேரிடும். இதனை 'அலறும் இயந்திரம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இதில் இரண்டு தடவை அடுத்தடுத்துப் பயணம் செய்த ஓர் ஆங்கிலேய இளம்பெண், வயிற்றைப் பிடித்துக் குனிந்தபடி ஒரு பக்கத்தில் நின்று வாந்தியெடுத்துக் கொண்டிருந்தாள்.

SPACE PROBE- யாட்டும் இங்கு உண்டு. வான மண்டலத்திற்குச் செயற்கைக் கோள்களில் மனிதனை வைத்து ராக்கட்டுகளில் அனுப்புகிறார்கள் அல்லவா. அதேபோன்ற உணர்வினை இந்த விளையாட்டில் பங்கு பற்றுபவர்கள் பெறுகிறார்கள். உள்ளே செல்லும் வழிகூட ராக்கட்டு களில் ஏறுவதற்குச் செல்லும் ஒடுங்கிய பாதை போன்று அமைந் திருக்கிறது. உள்ளே நுழைந்ததும் ஒரு செயற்கைக் கோள் அமைப்பில் உள்ள அறையில் எம்மை வைத்து, மின்விசையால் வேகமாக ஒரு கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்கிறார்கள். திடீரென அங்கிருந்து கூண்டோடு எம்மைக் கீழே விழவிடுகிறார்கள். 200 அடி உயரத்தில் இருந்து FREEFALL ஆக, புவியீர்ப்பு விசையில் நாம் கீழே விழுகிறோம். கோபுரத்தின் அடியை நெருங்கும்போது நாம் கீழ் நோக்கி வரும் விசை குறைந்து ஒரு ‘லிப்ற்றில் இறங்கு வது போல் இறங்குகிறோம். புவியீர்ப்பு விசையில் நாம் விழுந்து கொண்டிருக்கும்போது மிகவும் பயங்கரமாக இருக்கிறது.

இந்த விளையாட்டுகள் எல்லாம் ஏன் இவ்வாறு அடிவயிற்றைக் கலக்குவனவாக, பயப்பிராந்தியை ஏற்படுத்துவனவாக இருக்கின்றன? இவையெல்லாம் நமக்கு மகிழ்ச்சியைத் தருவனவாக அல்லவா இருக்க வேண்டும் என நான் யோசித்தேன்.

இதுபற்றி SPACE PROBE-7 என்ற விளையாட்டுக்குப் பொறுப்பாக இருந்தவரிடம் விசாரித்துப் பார்த்தேன். அப்போது அவர் கூறிய பதில் எனக்கு ஒரு புதிய விடயத்தை உணர்த்தியது.

"இங்குள்ள விளையாட்டுகளில் பங்கு பற்றுபவர்களைக் கவனித்துப் பாருங்கள். அனேகமானவர்கள் சிறுவர்களாகவே இருக் கிறார்கள். அவர்களுக்கு எதுவும் நேர்ந்துவிடாமல் இருக்க உச்சப் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் சிறுவர்கள் பயந்தாலும் மீண்டும் மீண்டும் இந்த விளையாட்டுகளில் பங்குபற்றும் போது அவர்களது மனப்பயம் தெளிந்து விடுகிறது. இங்குள்ள பெற் றோர்களும் இதனை ஊக்குவிக்கிறார்கள். வருடம் 365 நாட்களிலும் . WONDERLAND PASS என்ற நுழைவுச்சீட்டுகளை சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து அவர்களை அடிக்கடி இந்த விளையாட்டுகளில் பங்குபற்றச் செய்கிறார்கள். இத்தகைய விளையாட்டுகளில் பங்கு பற்றுவதனால் சிறுவயதிலேயே மனத்திடம், பயமின்மை ஆகியன வளர்த்தெடுக்கப்படுகின்றன" என்றார்.

அவர் கூறிய பதில் என்னைச் சிந்திக்க வைத்தது. நம் நாட்டில் பிள்ளைகளின் மனவுறுதியை வளர்த்தெடுக்க நாம் என்ன பயிற்சியைத்தான் கொடுக்கிறோம்?

WONDERLAND என்ற இந்தச் சிங்கார வனத்தில் பல பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. களிப்பூட்டும் பல வகை யான விளையாட்டுகள் இருக்கின்றன. குடும்பத்தோடு PICNIC சென்று நாள் முழுவதையும் சந்தோஷமாகக் கழிக்கவும் ஒரு சிறந்த இடமாக இது திகழ்கிறது. சிற்றுண்டிச் சாலைகள், விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், இளைப்பாறும் இடங்கள் எனப் பல நிலையங்கள் உள்ளே அமைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக மிருகக் காட்சிச்சாலை அமைந்திருக்கிறது. நமது நாட்டில் உள்ள தெகிவலை மிருகக் காட்சிச் சாலையைப் போன்ற, அதனிலும் சிறிய அளவினதாக இது உள்ளது. இந்த மிருகக் காட்சிச் சாலையையும் உல்லாசப் பயணிகள் சுற்றிப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மிருகங்களாக கங்காரு வும், கோலா எனப்படும் ஓரினக் கரடியும் விளங்குகின்றன. இந்தக் கோலாவைத் தூக்கி வைத்துக்கொண்டு படம் பிடித்துக் கொள்ள விரும்பினால் அதற்கும் வசதி செய்து கொடுக்கிறார்கள். கங்காரு வுடன் நின்று படம் பிடித்துக் கொள்வதில் எவ்வித சிரமமும் இல்லை. மிருகக் காட்சிச் சாலையில் கங்காரு இருக்கும் இடத்திற்குச் சென் றால் அதனருகே நின்று படம் பிடித்துக் கொள்ளலாம். நாம் படம் பிடிக்கப் போகிறோம் எனப் புரிந்து கொண்டு கங்காருவும் "போஸ்" கொடுக்கிறது. கங்காரு மிகவும் வேகமாகத் தாவித் தாவி ஓடும். தனது குட்டியை வயிற்றில் இருக்கும் பையில் வைத்துக் கொள்ளும். டச்சுத் தேசத்தைச் சேர்ந்த கப்பலோட்டி FRANCOS PELSAERT என்பவரே 1629ஆம் ஆண்டில் முதன் முதலில் இப்பிராணியைக் கண்டு தனது நூலில் இதுபற்றி எழுதினார்.

நம் நாட்டில் தாராளமாகக் காணப்படும் ஈ, நுளம்பு, காகம் போன்றவற்றை அவுஸ்திரேலியாவில் காணக்கிடைக்கவில்லை. நான் அங்கு நின்ற ஒரு மாத காலத்தில் ஒரு சோடிக் காக்கைகளை மட்டும் இந்த வொண்டர் லான்டில்தான் காணக்கூடியதாக இருந்தது. இது பற்றி நான் வோறோர் சந்தர்ப்பத்தில் ஒரு டாக்டர் வீட்டில் எமக்கு அளிக்கப்பட்ட விருந்தொன்றில் குறிப்பிட்டேன். அப்போது அவர் கூறினார், "அவுஸ்திரேலியாவிலும் ஈ, நுளம்பு இருக்கின்றன. ஆனால் அவை எல்லாப் பகுதிகளிலும் பரவலாக இருப்பதில்லை."

அவுஸ்திரேலியர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்ப திலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். காலை வேளைகளில் உடற் பயிற்சிக்காக நடப்பவர்களைப் பார்த்தால் பல்வேறு சாதி நாய் களையும் தம்முடன் கூட்டிச் செல்கிறார்கள்.

செல்லப்பிராணிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள்கூட நகரிலே இருக்கின்றன. இங்கு உணவு வகைகள், விற்றமின்கள், மருந்துகள், குளிர் காலத்தில் பிராணிகளை அடைத்து வைக்கக் கூடிய உஷ்ணமேற்றிகள் பொருத்தப்பட்ட கூடுகள் எனப் பலவித மான பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன.

இக்கடை ஒன்றில் விதம் விதமான நாய்கள், பூனைகள், பறவைகள் கூடுகளில் விற்பனைக்கு இருந்ததையும் பார்த்தேன். அவ் வாறு செல்லப் பிராணிகள் விற்பனைக்கு இருந்த பகுதியில், அவற் றை வாங்குவதற்கென ஒரு கூட்டமும் இருந்தது,

அவுஸ்திரேலியாவுக்குக் கணிசமான அந்நியச் செலா வணியை ஈட்டித்தருவது கம்பளி ஆடுகள். இதன் நீண்ட உரோ மங்கள் குளிருக்கான உடைகளைத் தயாரிப்பதற்கும் போர்வை களைத் தயார் செய்வதற்கும் உதவுகின்றன. இறைச்சிக்காகவும் இந்த ஆடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

தினமும் மாலை வேளைகளில், கம்பளி ஆடுகளிலிருந்து எவ்வாறு உரோமங்களைக் கத்தரித்து எடுப்பது என்பதை "வொண்டர் லான்டில் செயல் முறையாகக் காண்பிக்கிறார்கள். ஒரு கம்பளி ஆட்டிலிருந்து சுமார் 4.8 கிலோ நிறையுள்ள உரோமத்தைப் பெறக் கூடியதாக இருக்கிறது என்பதையும் அங்கு கூறினார்கள்.

கம்பளி ஆடுகள் அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டு வரப்பட்ட கதை சுவாரஸ்யமானது. 1788ம் ஆண்டு கப்டன் ஆர்தர் பிலிப் என்பவர் தலைமையில் பதினொரு பாய்மரக் கப்பல்களில் சிறைக்கைதிகள் ஏற்றிவரப்பட்டனர். வரும்வழியில் தென்னாபிரிக்க நன்னம்பிக்கைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும்போது அங்கு ஆடு விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் ஒன்று 8.40 காசு வீதம் பதின்மூன்று ஆடுகளை விலைக்கு வாங்கி அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு வந்தனர். அந்த ஆடுகளில் இருந்து இனவிருத்திபெற்று இன்று கம்பளியாடுகளின் தொகை 18 கோடியாகப் பெருகியிருக்கிறது. உலகிலேயே அதிக கம்பளி ஆடுகள் இப்போது அவுஸ்திரேலியா விலேதான் இருக்கின்றன. இந்த ஆடுகளில் பல இனங்கள் உண்டு. அவற்றுள் MARINO இன ஆடுகளில் இருந்து கிடைக்கும் உரோமங் களே உலகில் விலை உயர்ந்ததாகவும் மவுசு கூடியதாகவும் இருக் கின்றன.

கப்டன் ஆர்தர் பிலிப், கப்பலில் ஏற்றி வந்த ஆங்கிலேயக் கைதிகள் அவுஸ்திரேலியாவை அழகிய நாடாக்க உதவி னார். அதே கப்பலில் ஏற்றிவரப்பட்ட ஆபிரிக்க ஆடுகளின் பரம்பரை அவுஸ்திரேலியாவுக்கு கோடான கோடி செல்வத்தை வருடா வருடம் ஈட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தொழிநுட்பத்தில் சிறந்து விளங்கும் "சிட்னி இயற்கைவனப்பையும் வளப்படுத்தி நிற்கிறது!

சிட்னி நகரிலிருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள "புளுமவுண்டன் (BLUEMOUNTAIN) என்ற அழகிய பிரதேசத்தைப் பார்ப்பதற்காக நானும் மனைவியும் உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் ஒன்றில் பயணஞ் செய்து கொண்டிருந்தோம்.

முன்னால் இருந்த ஆசனத்தில் ஒரு வயோதிய மாது புத்தகம் ஒன்றை வாசிப்பதில் மூழ்கியிருந்தாள். அவுஸ்திரேலி யாவில், பஸ்ஸிலோ அல்லது புகையிரதத்திலோ பயணஞ் செய்யும் போது காணக்கூடிய காட்சிதான் இது. அனேகமானவர்கள் ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையிலே வைத்து வாசித்துக் கொண்டிருப்பார்கள். இந்த வாசிப்புப் பழக்கம் சிறியோர் முதல் வயதானவர்கள்வரை காணப்படுகிறது.

ஏன் நம் நாட்டில் இவ்வாறான பரந்துபட்ட வாசிப்புப் பழக்கம் மக்களிடம் ஏற்படவில்லை என நான் பலமுறை சிந்தித்த துண்டு.

அவுஸ்திரேலியாவில் உள்ள கல்விமுறைதான் அவ்வா றான வாசிப்புப் பழக்கம் ஏற்படக் காரணமாய் அமைகிறது. மாணவர் sessess sushiggs abpsi (SELF DEVELOPMENT), தன்னம்பிக்கை, ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் அங்குள்ள கல்விமுறை வகுக்கப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே மாணவருடைய சுய ஆற்றலை வெளிப்படுத்த OWN CREATION வேலைகள் கொடுக்கப்படுகின்றன. இதற்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள சிறிய, பெரிய நகரங்களில் நூல் நிலையங்கள் மிகவும் சிறப்பான முறையில், மாணவர்களுக்குப் பயன்படும்வகையில் இயங்குகின்றன,

நமது நாட்டில் உள்ள கல்விமுறை வேறானது. ஆசிரிய மாணவ உறவுநிலை சார்ந்தது. வகுப்பறையில் ஆசிரியர் கற்பித் ததை மாணவர்கள் கற்கிறார்கள். அவற்றையே பரீட்சையின்போது விடைத்தாள்களில் நிரப்புகிறார்கள்.

அவுஸ்திரேலியாவில் வெளியுலகத் தொடர்புடனான கல்வி முறையே நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் நூல் நிலையங்கள், கலைக் களஞ்சியங்கள், INTERNET ஆகியவற்றுடன் போராடுகிறார்கள்.

உதாரணமாக, மனோதத்துவம் படிக்கும் ஒரு மாண sugaig PROBLEMSOLVING  LIGOL (ASSIGNMENT) கொடுக்கப்பட்டால் அவன் வெறுமனே பாடப் புத்தகங் களை மட்டும் படித்து அல்லது ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை வைத்து அந்த ஒப்படையைப் பூர்த்தி செய்ய முடியாது. பாடத்தோடு சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாகப் பலரைப் பேட்டிகான வேண்டி நேரிடும், ஆய்வுகள் செய்ய நேரிடும், பல நூல்களைப் புரட்டித் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கும். சக மாணவர்களுடன் கலந்து வாதப் பிரதிவாதங்கள் செய்ய நேரிடும். அதன் பின்னரே அந்த மாணவன் தனக்குக் கொடுக்கப்பட்ட ஒப்படையைப் பூர்த்தி செய்யலாம். இப்படியான கல்விமுறை காரணமாக மாணவர்கள் சிறுவயதிலிருந்தே நூல்களைத் தேடி வாசிக்க நிர்பந்திக்கப் படுகிறார்கள். நாளடைவில் வாசிப்புப் பழக்கத்தால் ஏற்படுகின்ற நன்மைகள் அவர்களுக்குத் தெரியவருகின்றன. பின்னர் நூல்கள் வாசிப்பது அவர்களுக்கு ஓர் அன்றாட அலுவல்போலாகிவிடுகிறது.

வாசிப்பு ஒரு மனிதனைப் பரிபூரணமாக்குகிறது (READING MAKETH A MAN) பழக்கம் உள்ள சமுதாயத்தில் இருந்துதான் மேதைகள் உருவாகு கிறார்கள் என்பது உலக வரலாறு. அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்த ஆபிரகாம் லிங்கன், சிறுவயதில் வீட்டில் விளக்கு எரிக்க வசதியில்லாத காரணத்தால் தெருவிளக்கின் கீழ் இருந்து வாசிப் முன்னால் இருந்த வயோதிப மாது வாசித்துக் கொண்டி ருந்த புத்தகத்தின் அட்டையைக் கவனித்தபோது, அது VOSS என்ற பெயருள்ள ஒரு நாவல் என்பது தெரியவந்தது. அதனை நோபல் பரிசு பெற்ற MARTINDALE என்ற அவுஸ்திரேலிய எழுத்தாளர் எழுதியிருந்தார்.

அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்க்கவேண்டுமென என் மனம் துருதுருத்தது. ஆனாலும் அந்த வயோதிபமாதின் வாசிப்பில் குறுக்கிடுவது நாகரிகமற்ற செயல் என எண்ணி சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.

பஸ் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டபோது எல்லோரும் இறங்கினார்கள். அங்கே மிகவும் பழைமை வாய்ந்த ஒரு கருங்கற் பாலம் காணப்பட்டது. 150 வருடங்களுக்கு முன்னர், பக்கத்திலிருந்த மலைகளில் உடைத்தெடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கைதி களால் அமைக்கப்பட்ட பாலம் அதுவென பஸ் சாரதி விளக்கம் கொடுத்தார். இன்றும் அந்தப் பாலம் மிகவும் உறுதியாக எவ்வித சிதைவுமின்றிக் காணப்படுகிறது.

நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த வயோதிய மாதிடம் சென்று "நீங்கள் வாசித்து கொண்டிருக்கும் புத்தகத்தை நான் ஒரு தடவை பார்க்கலாமா?” எனக் கேட்டேன்.

அவர் பதிலேதும் கூறாமல், புன்னகைத்தப்படி என்னிடம் அந்த நாவலைக் கொடுத்தார். புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தபோது அந்த நாவலின் ஆசிரியரைப் பற்றி மேலும் தகவல்களை அறியக் கூடியதாக WHITE PATRICK VICTOR MARTIN DALE அவரது முழுப்பெயர். 1912 முதல் 1990 வரை வாழ்ந்த இவர், 1973ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் அவுஸ்திரேலியர் ஆவார். கேம்பிறிஜ் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், தனது 27 வது வயதில் HAPPY VALLY என்ற நூலை முதலில் எழுதினார். தொடர்ந்து பல நாவல்களையும் சிறுகதை களையும் நாடகங்களையும் எழுதியபோதும் இவரது 45வது வயதில் எழுதிய VOSS என்ற நாவலே இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது. தனக்குக் கிடைத்த நோபல் பரிசுப் பணத்தில; PARTRIC WHITTE LITTERARY AWARD  உருவாக்கினார். இந்த நிதியம் வருடந்தோறும் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பரிசில்களை வழங்கி வருகிறது.

மீண்டும் பஸ் புறப்பட்டபோது நான் அந்த வயோதிய மாதிடம் நாவலைத் திருப்பிக் கொடுத்தேன். தான் பெற்ற நோபல் பரிசு முழுவதையும் தனது நாட்டின் இலக்கிய கர்த்தாக்களை ஊக்குவிப்பதற்கு வழங்கிய அந்த எழுத்தாளரின் பெருந்தன்மையை எண்ணியபோது என்மனம் பூரிப் படைந்தது.

நோபல் பரிசுபெற்ற வேறும் இரண்டு அவுஸ்திரேலியர் களின் பெயர்கள் என் நினைவில் வந்தன. மருத்துவ விஞ்ஞானத் துறையிலே பெரும் சாதனையாகக் கருதப்படும் “எக்ஸ்-றே கருவி யைக் கண்டுபிடித்தமைக்காக SIRWLAMHENRY என்பவருக்கும் அவரது மகன் SIRWILLAMLAWRENS என்பவருக்கும் கூட்டாக நோபல் பரிசு 1915ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இரண்டு மணிநேரப் பயணத்தின் பின்னர் பஸ் புளு மவுண்டன் தேசியப் பூங்காவை அடைந்தது. நமது நாட்டில் உள்ள நுவரெலியா நகரைப் போன்ற சூழலும் சுவாத்தியமும் இங்கு நிலவுகின்றன.

இந்தப் பூங்காவும் அதனைச் சுற்றியுள்ள மலைப் பிரதேசமும் இரண்டு லட்சம் கெக்டயர் விஸ்தீரணம் உடையது. இந்த மலைப்பிரதேசத்தில் 15000 வருடங்களுக்கு முன்னர் பழங்குடி மக்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அவர்கள் வரைந்த ஓவியங் கள் பாவித்த ஆயுதங்கள், அணிகலன்கள் முதலிய்ன இதற்குச் சான்று பகர்கின்றன. 

இந்தப் பூங்காவிற்குரிய நெடுஞ்சாலையை ஆங்கிலேயக் கைதிகள் 1815ல் அமைத்தார்கள். 1850ல், இந்த மலைத்தொடரின் மேற்குப் பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கச் சுரங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் 1869ம் ஆண்டில் புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இங்கு அழகிய வீடுகள் தோன் றின. வீடுகளைச் சுற்றிப் பூந்தோட்டங்கள் அமைக்கப்பட்டன. உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள், விடுதிச் சாலைகள் எழுந்தன. மலைப்பிரதேச நகரமாக வளர்ச்சியடைந்த இந்த இடம் இப்போது உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாக விளங்குகிறது.

சிட்னி நகரில் உள்ள செல்வந்தர்கள் பலருக்கு இங்கு சொந்த வீடுகள் இருக்கின்றன. (SUMMER) உஷ்ண காலத்தில் அவர்கள் இங்குள்ள தமது வீடுகளில் வந்து தங்குவார்கள். விடுமுறைகளைச் சந்தோஷமாகக் கழிக்கவும் பலர் இங்கு வருகிறார்கள்.

JENOLAN CAVE என்பது இங்குள்ள பிரசித்திபெற்ற குகை. இந்தக் குகையின் சுவர்கள் சுண்ணாம்புக் கற்களால் ஆனவை. பல வருடங்களாக அங்குள்ள “ஜெனோலன் நதியின் நீரினால் பாறைகள் அரிக்கப்பட்டு, அவை பளிங்குகளாகவும் கண்ணாடிக்கற்களாகவும் காட்சியளிக்கின்றன. இவற்றின் மேல் மின்சார வெளிச்சங்களைப் பாய்ச்சி வர்ணஜாலம் காட்டுகிறார்கள்.

இங்கு செல்லும் இடமெல்லாம் வரற்றா' (WARATAH) என்னும் ஒருவகைத் தாவரம் பூத்துக் குலுங்கிக் காணப்படுகிறது. அதன் பூக்கள் மிகவும் அழகானவை. இத்தாவரம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தாவர இலச்சினையாவும் (FLORALEMBLEM) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

EASTERN ROSELLA வர்ணக் கிளிகளும் இங்கு பெருந்தொகையாகக் காணப்படுகின்றன. இங்கு வரும் உல்லாசப் பயணிகள் பலர் பற்றைகளுக்கூடாக வெகுதூரம் நடந்து சென்று மரஞ்செடிகள், பறவைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், விலங்குகள் போன்ற பல்வேறு இயற்கைக் காட்சிகளைக் காண்பதில் ஆர்வம் காட்டு கின்றார்கள். இதனை BUSHWALK எனக் கூறுகின்றார்கள். இதற் கெனப் பிரத்தியேகமான சப்பாத்துக்களையும் உடைகளையும் அங்கு வரும்போதே தயாராகக் கொண்டு வருகிறார்கள்.

இங்குள்ள 'கற்றும்பா என்ற இடத்தில் மூன்று மலைக் குன்றுகள் பக்கம் பக்கமாக நிமிர்ந்து நிற்கின்றன. இக்குன்றுகளை (THREESISTERS) மூன்று சகோதரிகள் எனப் பெயரிட்டு அழைக் கிறார்கள். அனேகமான நேரங்களில் இந்த மலைத்தொடர்கள் பனி மூட்டத்தில் அமிழ்ந்து விடுகின்றன. இந்த மூன்று சகோதரிகளை மிக அருகிலே கேபிள் காரில் சென்று பார்ப்பதற்கும் வசதி செய்திருக் கிறார்கள்.

இந்த மூன்று சகோதரிகள் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்றுண்டு. முன்னொரு காலத்திலே இந்த மூன்று சகோதரிகளும் ‘ரியமான் என்னும் மந்திரவாதி ஒருவனின் அழகிய பெண்பிள்ளை களாக இருந்தனர். இந்தப் பெண் பிள்ளைகளின் மேல் 'பனிப் என்ற பெயருடைய ஒரு வல்லமை பொருந்திய அரக்கன் மையல் கொண் டான். அவர்களை அடைவதற்கு பல வழிகளிலும் முயன்றான். ஒரு நாள் மந்திரவாதி மூலிகைகள் தேடி வெளியே சென்றபோது அந்த அரக்கன் சமயம் பார்த்து அந்த பெண்களை நெருங்கினான். அவர்கள் பயத்தினால் கூச்சலிட்டனர். கூச்சல் சத்தத்தைக் கேட்ட மந்திரவாதி தனது பிள்ளைகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை உணர்ந்து தனது மந்திரக்கோலால் அவர்கள் மூவரையும் குன்று களாக மாற்றிவிட்டான். கோபமும் ஏமாற்றமும் அடைந்த அந்த அரக்கன் மந்திரவாதியைக் கொல்லும் எண்ணத்துடன் அவனை நோக்கி ஓடினான். உடனே மந்திரவாதி தன்னை ஒரு கிளியாக உருமாற்றிக்கொண்டு மந்திரக்கோலைத் தனது வாயில் கெளவிய வாறு உயரப் பறக்கத் தொடங்கினான். அவன் அப்படிப் பறக்கும் போது மந்திரக்கோல் தவறி எங்கோ பள்ளத்தாக்கில் விழுந்து விட்டது. அன்றுமுதல் அந்தக் கிளி அந்த மந்திரக்கோலைத் தேடி அங்கு அலைந்து கொண்டிருக்கிறது. மந்திரக்கோல் கிடைத்தால் மந்திரவாதி தனது சுய உருவத்தைப் பெறுவான். அவனது பெண் பிள்ளைகளும் அழகிகளாக மாறுவர். இது அங்குள்ள பஸ் ஓட்டுனர் ஒருவர் சொன்ன கதை. இக்கதை AUSTRALA GUIDE என்ற வழிகாட்டி நூலிலும் காணப்படுகிறது.

நமது கீழைத்தேய நாடுகளிலேதான் இப்படியான மந்திர வாதிகள் இருக்கிறார்கள் என நான் நினைத்ததுண்டு. ஆனால் அவுஸ்திரேலியாவுக்கும் அவர்கள் தமது மந்திரக்கோலுடன் சென்று வெள்ளைக்காரர்களின் கண்களுக்குள் விரலைவிட்டு ஆட்டுவதுதான் விந்தையிலும் விந்தை!

அந்தச் சூழலிலே எங்கு பார்த்தாலும் மரங்கள், செடிகள், வண்ணம் வண்ணமாய்ப் பூத்துக் குலுங்கும் மலர்கள், மலைக் குன்றுகள், பள்ளத் தாக்குகள், மிக நீண்ட ஆழமான நீரோடைகள், அடர்ந்த காடுகள், வண்ண வண்ணப் பறவைகள். இவற்றை யெல்லாம் காணக் கண் கோடிவேண்டும்!

மரம் ஒன்றிலே பல வகையான நிறப் பூக்கள்! இல்லை யில்லை, உற்றுப் பார்க்கும்போதுதான் தெரிகிறது அத்தனையும் பஞ்சவர்ணக் கிளிகள், மரத்தின் இலைகளே தெரியவில்லை. ஆயிர மாயிரம் கிளிகள். ஒன்றையொன்று சீண்டிக் காதல் கதைபேசும் கிளிகள்!! அத்தனை கிளிகளை என் வாழ்நாளில் நான் ஒன்றுசேரப் பார்த்ததேயில்லை.

அதிலே ஒரெயொரு கிளிமட்டும் தன்னந் தனியனாய் மரத்தின் உச்சியிலே அமர்ந்திருந்து சோகமாக, அருகே உள்ள பள்ளத்தாக்கை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் எனக்குத் தோற்றியது. அதன் பார்வை என் மனதை வருடியது.

இதை என் மனைவியிடம் கூறியபோது, "சும்மா பேசாமல் இருங்கள், மற்றவர்கள் கேட்டால் சிரிக்கப் போகிறார்கள். அந்தக் கிளி அப்படி எதையும் தொலைத்துவிட்டு பள்ளத்தாக்கில் தேடுவது போல் எனக்குத் தோன்றவில்லை. எழுத்தாளன் புத்தி உங்களை விட்டுப் போகாது" எனக்கூறி எனது கற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

2000 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் கிராமம் உருவாகிக் கொண்டிருக்கிறது!

அவுஸ்திரேலியர்கள் தமது நாடு உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழவேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருக் கிறார்கள். இதற்கென அவர்கள் சிறந்தமுறையிலே திட்டங்களை வகுத்துச் செயலாற்றுகிறார்கள். உலகிலே பெரியவை, உலகிலே உயர்ந்தவை, உலகிலே சிறந்தவை, உலகிலே அழகானவை, இப்படிப் பலவாறன விஷயங்களை அவுஸ்திரேலியாவில் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

உலகிலேயே மிகவும் அழகான துறைமுகமாக விளங் குவது சிட்னியில் உள்ள டார்லிங் துறைமுகம். இங்குதான் உல கின் அதியுயரமான வளைவுப்பாலம் இருக்கிறது என்பதை முன்பு பார்த்தோம்.

இந்த டார்லிங் துறைமுகத்தின் அருகே ஒரு படமாளிகை இருக்கிறது. ‘இமெக்ஸ் பனஸோனிக்" (IMEX PANASONIC) தியேட்டர் என்ற பெயர்கொண்ட இந்தப் படமாளிகையில் உலகி லேயே அதிபெரிய காட்சித் திரையைப் பொருத்தியிருக்கிறார்கள். நமது நாட்டில் உள்ள படமாளிகைகளில் காணப்படும் திரைகளை விட பத்து மடங்கு பெரிதான திரை இங்கு பொருத்தப்பட்டிருக்கிறது. எட்டடுக்கு மாளிகை ஒன்றின் உயரத்தை இது அடக்கியுள்ளது.

இந்தத் திரையில் படங்கள் மிகவும் தெளிவானதாக இருக்கின்றன; மனிதர்கள் உயிர்த்துவமாக உலாவிவருவது போன்று தோற்றம் தருகிறார்கள். சமீபகாலமாக முப்பரிமாணத் (3- D) திரைப் படங்களும் இங்கே காண்பிக்கிறார்கள். அநேகமான திரைப்படங்கள் 40 நிமிடங்கள் கொண்டவை. காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மணித்தியாலத்திற்கு ஒரு படமாக வெவ்வேறு படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

நாங்கள் அங்கு சென்றவேளை EXTREME என்ற, விளையாட்டுகள் தொடர்பான ஓர் ஆங்கிலப்படத்தைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. பனிமலை ஏறுதல், நீர்ச்சறுக்கல் போன்ற விளையாட்டுகளில் உலக சம்பியன்களாகத் தங்கப் பதக்கம் வென்ற அவுஸ்திரேலியர்கள் எவ்வாறு பயிற்சி பெற்றார்கள், பதக்கங்களைச் சுவீகரித்தார்க்ள் என்ற விபரங்கள் அடங்கிய படம் அது. பனிமலையில் ஏறும் வீரர்கள் எவ்வாறு இயற்கையோடு போராடி வீசுகின்ற கடுங்குளிரையும் உறைந்துகொட்டும் நீர்வீழ்ச்சியையும் எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மயிர்க்கூச் செறிகிறது.

செங்குத்தான பனிமலைகளில் ஏறுபவர்களின் கால்கள் இடறும்போது, பார்வையாளர்கள் நிலைகொள்ளாமல் இருக்கையின் நுனிக்கே வந்து விடுகிறார்கள். எங்கே அதலபாதாளத்தில் வீரர்கள் விழுந்து விடுவார்களோ என்ற பயம் நம்மைக் கெளவிக்கொள்கிறது. அந்தத் திரையிலே அவ்வாறு தத்ரூபமாகக் காட்சிகள் தெரிகின்றன. அதேபோன்று நீர்ச்சறுக்கல் விளையாட்டு வீரர்கள் ஆழ்கடலின் அலைகளினால் வீசி எறியப்படும்போது எமது நெஞ்சம் உறைந்து விடுகிறது.

எனக்குப் பக்கத்தில் இருந்து படம் பார்த்துக்கொண்டிருந் தவரிடம் பேச்சுக்கொடுத்தேன். அவர் ஒரு ஜேர்மனியர். "உங்களது நாட்டில் இத்தகைய பெரிய திரையுடன் கூடிய படமாளிகைள் உண்டா?” எனக் கேட்டேன். அவர் ஒர் உல்லாசப்பிரயாணி, பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். அவர் ‘இமெக்ஸ்’ தியேட்டர்கள் பற்றி ஒரு விளக்கமே தந்தார்.

"இப்படியான பெரிய திரைகளைக் கொண்ட தியேட்டர் கள் முதலில் கனடாவிலேதான் ஆரம்பிக்கப்பட்டன. இப்போது ஜெர்மனி உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் Gufflu திரைகள் கொண்ட தியேட்டர்கள் உள்ளன. ஆனாலும் அவுஸ் திரேலியாவில் இருக்கும் இந்த ‘இமெக்ஸ்’ திரைதான் உலகிலே அதிபெரியது" என்றார்.

2000 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுகள் அவுஸ் திரேலியாவில் நடைபெறவுள்ளன. அதற்கான ஆயத்தங்களில் இப்போதே அவுஸ்திரேலியர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அங்குள்ள அநேகமான படமாளிகைகளில் அடிக்கடி அவுஸ்திரேலியர்களின் SPORTS சம்பந்தமான படங்களே காண்பிக்கப்படுகின்றன.

பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள், அவர்கள் எத்தகைய அந்தஸ்த்தில் உள்ளவர்களாக இருந்தாலும்சரி அல்லது எந்த வயதினராக இருந்தாலும்சரி ஏதோ ஒரு விளையாட்டில் அதிக ஈடுபாடு கொள்பவர்களாகக் காணப்படுகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் 150 க்கும் மேற்பட்ட தேசிய விளையாட்டு நிறுவனங்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராந்திய விளையாட்டு நிறுவனங்களும் இருப்பதாக அறியப்படுகிறது.

கிரிக்கட், கால்பந்து, டெனிஸ், றக்பி, வலைப்பந்தாட்டம், மென்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளில் சிறுவர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அவுஸ்திரேலியாவின் சிறுவர் விளை யாட்டுக் கழகங்களில் 5 முதல் 12 வயதுவரையிலான 90,000 சிறுவர்கள் அங்கத்தவர்களாக இருப்பதாக ஒரு கணிப்பீடு கூறுகிறது. அவுஸ்திரேலியாவின் விளையாட்டுத்துறைத் தலைமை யகம் கன்யெரா என்ற இடத்தில் 1981ம் ஆண்டில் திறந்து வைக்கப் பட்டது. இங்கு சகலவிதமான விளையாட்டு வீரர்களினதும் தரத்தை மேம்படுத்த நாடளாவிய ரீதியில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயலுரு வம் கொடுக்கப்படுகின்றன. ஒரே காலப்பகுதியில் ஏறத்தாழ மூன்று மில்லியன் பெண்கள் பலவிதமான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதாக அறியப்படுகிறது.

சகலவிதமான ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்குபற்றும் நாடுகள் உலகில் மூன்றே மூன்றுதான் உள்ளன. அவற்றில் அவுஸ்திரேலியாவும் ஒன்று. பிரித்தானியா, கிறீஸ் ஆகியவை ஏனைய நாடுகளாகும்.

இதுவரை நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில் அவுஸ் திரேலியா 81 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறது. அவுஸ்திரேலி யாவின் சனத்தொகையைத்தான் நமது நாடும் கொண்டுள்ளது. ஆனாலும் இதுவரை ஒரு தங்கப்பதக்கத்தைத்தானும் நம்நாட்டினரால் வெல்லமுடியவில்லை. எப்போதோ டங்கன் வைற் என்ற விளை யாட்டுவீரர் தடைதாண்டிப் போட்டியில் இரண்டாவதாக வந்து வெண்கலப் பதக்கம் வென்றதை இப்போதும் நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் 1996ல் இறுதியாட்டத்தில் அவுஸ்திரேலியாவோடு மோதி உலக சம்பியன் பட்டத்தை நாம் வெல்ல முடிந்ததென்றால் ஏன் மற்றைய விளையாட்டுப் போட்டி களில் நமது நாடு வெகுவாகப் பின்தங்கியிருக்கிறது என்பது சிந்திக்க வேண்டிய விஷயமே!

அவுஸ்திரேலியா அநேகமாக நீச்சல் போட்டிகளிலேயே அதிக தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறது. ஏன் என்று சிந்தித்துப் பார்த்ததில் ஓர் உண்மை புரிந்தது. அநேகமான அவுஸ்திரேலி யர்களின் இல்லங்களின் முன்னால் நீச்சல் தடாகங்கள் இருக் கின்றன. சிறுவர் முதல் பெரியோர்வரை தினமும் நீந்தி விளையாடு வார்கள். அதுவே அவர்களுக்குச் சிறந்த பயிற்சியாகிவிடுகிறது.

1956ம் ஆண்டிலே ஒரு தடவை ஒலிம்பிக் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றன. மீண்டும் 2000ம் ஆண்டில் இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக ஹோம்புஷ் குடா என்ற இடத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்படுகிறது. 110,000 இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தைச் சுற்றி விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான இல்லங்கள், தகவல் நிலையம், பூங்கா, ஒலிம்பிக் புகையிரத ஸ்தானம் ஆகியன உள்ளடங்கிய ஓர் ஒலிம்பிக் கிராமம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

பிரமாண்டமான 'இமெக்ஸ் காட்சித் திரையில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து வெகுநேரமாகிய பின்பும் அங்கு பார்த்த விளையாட்டு வீரர்களின் தீரச் செயல்கள் திரும்பத் திரும்ப மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. −

அடுத்து நாம் சிறிது தூரத்தில் அமைந்திருக்கும் சிட்னி மீன்காட்சிச் சாலையைப் பார்க்கச் சென்றோம். டார்லிங் துறை முகத்தின் அக்கரையில் இந்த மீன்காட்சிச் சாலை இருந்ததால் விரைவுப்படகொன்றில் ஏறி அங்கு செல்லவேண்டியிருந்தது. அந்த மீன்காட்சிச் சாலைக்குள் நுழைந்ததுமே நான் பிரமித்து நின்று விட்டேன்.

நமது நாட்டில் மீன்காட்சிச் சாலை என்றால் கண்ணாடிப் பெட்டிகளில் நீரை நிறைத்து, மீன்கள் உயிர்வாழ்வதற்கு வேண்டிய சூழலை அதில் ஏற்படுத்தி விதம்விதமான மீன்களைக் காட்சிக்கு வைப்பார்கள். ஆனால் இங்கு கட்லுக்கடியில் சுரங்கப்பாதை போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி பலம் பொருந்திய கண்ணாடிச் சுவர்களைப் பொருத்தியிருக்கிறார்கள். நாம் உள்ளே நின்றவாறு தலைக்கு மேலாகவும் பக்கவாட்டிலும் நீந்திச் செல்லும் மீன்களைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது நான்கு புறமும் நீந்திச் செல்லும் மீன்கள் ஒன்றையொன்று சீண்டி விளையாடும் காட்சி நம்மை மெய்மறக்கச் செய்கிறது.

நமது நாட்டில் உள்ள தெகிவலை மிருகக்காட்சிச் சாலையில் அமைந்திருக்கும் மீன்காட்சிச்சாலையில் சிறிய வகை மீன்களே உண்டு. ஆனால் இங்கு பெரிய பெரிய சுறாமீன்கள் கண்ணாடிச் சுவர்களை முட்டி மோதிச் செல்கின்றன. நீர் நாய்கள் நம்மைக் கிலிகொள்ளச் செய்கின்றன. அதே சமயத்தில் பல்வேறு இன வண்ண வண்ண மீன்கள் அழகுக்கு அழகு காட்டுகின்றன. பெண்களின் கண்களை ஒத்த சின்னஞ் சிறிய மீன்களும் துள்ளித் திரிகின்றன. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய இன மீன்கள் இங்கே இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இவற்றைவிட எண்ணிலடங்காத வடிவங்களையும் நிறங் களையும் கொண்ட கடல் கிளிஞ்சல்கள், பவளப் பாறைகள். (CORAL REEF) அந்தப் பாறைகளின் அடியில் பதுங்கி விளை யாடும் மீன்கள் இவையெல்லாம் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. உலகிலுள்ள மிகப்பெரியதும் பிரமிக்க வைக்க கூடியதுமான மீன்காட்சிச்சாலைகளில் ஒன்றாக இது கணிக்கப் பட்டுள்ளது.

இவற்றையெல்லம் பார்த்து மெய்மறந்துபோன என் மனைவி கூறினாள், “எமது நாட்டில் மீன்களைப் பிடித்து கண்ணாடிப் பெட்டிகளில் அடைத்து மக்களை பார்க்க வைக்கிறார்கள்; இங்கே மீன்கள் வாழும் இடத்திற்கு மக்களை வரச்செய்து, மீன்களைப் பார்க்க வைக்கிறார்கள்” என்றாள்.'

"ஆமாம், இங்கு மீன்கள் நம்மைப் பார்க்கின்றன” என்றேன் நான்.

பெற்றோரில் தங்கியிருக்காத பிள்ளைகள்; பிள்ளைகளில் தங்கியிருக்காத பெற்றோர்!

அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு அரசாங்கம் பல வழிகளிலும் உதவி புரிகிறது. குழந்தை ஒன்று பிறந்தால் அதற்கு வேண்டிய மருத்து வப் பராமரிப்புகள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், அதன் வளர்ச்சி பற்றிய கணிப்பீடுகள் ஆலோசனைகள் யாவும் அரசாங்கச் செலவி லேயே வழங்கப்படுகின்றன.

பிள்ளை வளர்ந்து பாடசாலைக்குப் போகத் தொடங் கியதும் அதன் படிப்புச் செலவுக்கென அரசாங்கத்தினால் மானியம் வழங்கப்படுகிறது. ஒருவருக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அத்தனை பிள்ளைகளுக்கும் இந்த மானியம் கிடைக்கிறது. பிள்ளை கள் உள்ள பெற்றோருக்கு அவர்களது சம்பளத்தில் அறவிடப்படும் வரிகளில் சலுகைகள், கழிவுகள் கிடைக்கின்றன. பிள்ளைகள் வளர்ந்து 18 வயது எய்தும்வரை இந்தப் பணம் பெற்றோருக்கு வழங்கப்படுகிறது.

பதினெட்டு வயது வந்ததும் பிள்ளைகளின் கைகளிலேயே இந்தப் பணம் நேரடியாகக் கொடுக்கப்படுகிறது. இதனை AUSTUDY எனக் கூறுகிறார்கள். புத்தகங்கள் வாங்கவும் படிப்போடு சம்பந்தப் பட்ட ஏனைய செலவுகளுக்குமாக இந்தப் பணம் வழங்கப்படுகிறது. இவற்றைவிட அவர்கள் புகையிரதம் பஸ் போன்றவற்றில் பயணஞ் செய்வதற்கும் சலுகை அடிப்படையில் ரிக்கற்றுகள் வழங்கப்படு கின்றன.

ஒருவன் தனது படிப்பை முடித்தபின் வேலை தேடிக் கொண்டிருக்கும்போது, DOLE MONEY என அரசாங்கத்தால் அவனது நாளாந்தத் தேவைகளுக்கெனப் பணம் வழங்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப் போனால் குழந்தை ஒன்று பிறந்து, வளர்ந்து, படித்துப் பெரியவனாகி, தொழில் ஒன்றைப் பெறும்வரை அரசாங்கம் அவனுக்கு உதவுகிறது. பெற்றோருக்கு அவன் சுமையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இது அங்குள்ள புதிய தலைமுறையினருக்கும் நன்கு புரிகின்றது.

நமது நாட்டில் நிலைமை எதிர்மாறானது. பெற்றோர் தமது பிள்ளையை வளர்த்து ஆளாக்கி, படிக்கவைத்து, தொழில் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பெருஞ் சிரமப்பட வேண்டி யுள்ளது. கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியுள்ளது, தமது சுகங்களை இழக்க வேண்டியுள்ளது, ஆசைகள் பலவற்றை நிறைவேற்ற முடியாது கட்டுப்படுத்தி வாழவேண்டியுள்ளது. இரவும் பகலும் பிள்ளையின் முன்னேற்றமே குறிக்கோளாக அவர்கள் வாழ வேண்டியுள்ளது. அதற்காகப் பல தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது.

', இவற்றையெல்லாம் இங்குள்ள பிள்ளைகள் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தனது முன்னேற்றத்திற்காக பெற் றோர் படும் கஷ்டங்களை உணர்கிறார்கள். அதற்குக் கைமாறாகத் தாமும் பெற்றோருக்குப் பிரதியுபகாரம் செய்ய எண்ணுகிறார்கள்.

நமது நாட்டில் பெற்றோர் பிள்ளைகள் உறவு மிகவும் நெருக்கமானது, உணர்வு பூர்வமானது. தான் வளர்ந்து ஆளானதும் குடும்பப் பொறுப்பைச் சுமந்துகொண்டு தந்தைக்கு ஒய்வு கொடுக்க வேண்டுமெனத் தனயன் விரும்புகிறான். இதற்குச் சில விதிவிலக் குகள் இருக்கலாம். ஆனாலும் பெரும்பாலான குடும்பங்களில் இதுவே நடைமுறையாக இருக்கிறது.

இதன் காரணமாகவே இன்று புலம் பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் நமது இளைஞர்கள் தமது பெற்றோருக்கு, சகோதரர்களுக்கு ஒரு கஷ்டமில்லாத வாழ்வினை ஏற்படுத்த அந்நிய மண்ணில் தாம் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில் இன்றுள்ள போர்ச் சூழலில் தமது பெற்றோரையும் சகோதரர்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், புலம்பெயர்ந்து வாழும் பெற்றோரின் அடுத்த சந்ததியினர், அறியாப் பருவத்திலிருந்தே அங்கு வளர்ந்துவரும் பிள்ளைகள், புதிய இடத்தில், புதிய சமூகத்தில், புதிய கலாசாரப் பின்னணியில், புதிய வளர்ப்பு முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இவர்களுக்கும் பெற்றோருக்கும் உள்ள உறவு வித்தி தனி மனித சுதந்திரம் பேணப்படுவதை அந்த நாட்டின் சட்டம் முதன்மைப்படுத்துகிறது. பெற்றோர் பிள்ளைகளைக் கண்டிக்க முடியாது, தண்டிக்க முடியாது. தடியெடுத்து அடித்தால் அவன் பொலிஸுக்குப் போன் பண்ணிவிடுவான். அடுத்த நிமிடத்தில் பொலிஸ் வீட்டில் வந்து நிற்கும் பிள்ளைகள் சொல்வதைத்தான் பொலிஸார் நம்புவர். இனி, தாய் தந்தையருக்குத் தலை வேதனைதான். : படியாத பிள்ளையைப் படி என்றால் பிரச்சினை, காலிப் பயல்களுடன் சுற்றாதே என்றால் பிரச்சினை. ஏன் இரவில் வீட்டிற்குப் பிந்தி வருகிறாய் என்று கேட்டால் பிரச்சினை. இப்படிப் பல விதமான பிரச்சினைகள்!

தான் வாழ்ந்த முறையைத் தனயனும் பின்பற்ற வேண்டு மென தந்தை எண்ணும் போது, தமது கலாசாரத்தை அடுத்த தலை முறைக்குத் திணிக்க முயலும்போது பிரச்சினைகள் பூதாகரமா கின்றன. y வீட்டின் மூலையில் சுகவீனமுற்று இருக்கும் தந்தையைப் urrijgigs HELLO DAD HOW ARE YOU பதுடனேயே தன் வேலை முடிந்து விட்டதாகப் புதிய தலைமுறை யினர் எண்ணுவர். இதை ஜீரணித்துக்கொண்டு தந்தை வாழப் பழக வேண்டும்.

60 வயது வந்து விட்டால் அவுஸ்திரேலியக் குடியுரிமை யுள்ளவர்கள் பென்ஷன் பெறலாம். அவர்களுக்கு அரசாங்கத்தால் "பென்ஷன் கார்ட் வழங்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் பென்ஷன் பணத்தில் தாராளமாகச் சீவிக்கலாம். பளல்களில், புகையிரதங்களில் பயணஞ் செய்ய சலுகைக் கட்டண வசதியுண்டு. இலவச மருத்துவ வசதியுண்டு. வயோதிபர் விடுதிகள் இருக்கின்றன. அங்கு ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்தால் நல்ல முறையில் கவனிப்பார்கள்.

இத்தனை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கும் போது, பெற்றோர் தங்களில் தங்கியிருக்க நினைப்பதில் நியாயம் இல்லை எனப் பிள்ளைகள் எண்ணித் தலைப்படுவர்.

18 வயது வந்தால், பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி கட்டாயம் பெற்றோருடன் இருக்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை. அவர்கள் விரும்பினால் பெற் றோரைப் பிரிந்து தனியாக வாழலாம்.

அவுஸ்திரேலிய இனப் பெற்றோர் தமது பிள்ளைகளுக்குப் பதினாறு வயது வந்துவிட்டால், அவர்கள் சமூகத்தில் கலந்து வாழப் பழகவேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களது வாழ்க்கை முறைக்கு அது இன்றியமையாதது. பெற்றோர் தமது பெண்பிள்ளை களுடன் அவர்களது BOY FRENDS பற்றி கதைக்கிறார்கள். அதே வேளையில் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுத்து விட வேண்டாம் எனப் புத்திமதி கூறுகிறார்கள்.

பாடசாலைகளில் ஆண்டு 6ல் இருந்து பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது. இன்று உலகில் வேகமாகப் பரவிவரும் 'எயிட்ஸ்" என்னும் ஆட்கொல்லி நோயிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள, பிள்ளைகளுக்கு இந்தக் கல்வி அவசியமாகிறது.

குடும்பக் கட்டுப்பாட்டு உபகரணங்கள் CONDOMS, PLL போன்றவை கடைகளில் தாராளமாகக் கிடைக்கக் கூடியதாக TEENAGE PREGNANCY முதிராப் பருவத்தில் கர்ப்பம் அடையும் நிகழ்வுகள் இங்கு அதிக மாகக் காணப்படுகின்றன.

சிட்னி நகரில் KING CROSS என்றொரு தெரு இருக்கிறது. எட்டாவது எட்வேர்ட் மன்னரின் ஞாபகார்த்தமாக இத்தெருவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இது இப்போது இரவு வாழ்க் கைக்குப் பெயர்பெற்ற இடமாக இருக்கிறது. பல நாட்டுப் பெண்கள் இங்கே விபசாரம் நடத்துகிறார்கள். நிர்வாண நடனங்கள் பெரிதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. நீலப் புத்தகங்கள் உபகரணங்கள் தாராளமாக விற்பனையாகின்றன. எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லிப் பாலியல் நோய் உலகெங்கும் பரவி வருகிறது. அதே வேளையில் இப்படியான விபசார விடுதிகளும் பெருகிக் கொண்டுதான் இருக் கின்றன. தாய்லாந்து நாட்டிலேயே எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவி வருவதாகப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. தாய்லாந்துக் காரர்களும் கம்போடியர்களும் சீனர்களுமே இங்கு அதிகமாக இத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

நான் அவுஸ்திரேலியாவில் இருந்த வேளையில் DALY TELEGRAPH என்ற ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு விளம்பரத்தைக் கவனித்தேன். ஜாக்கி என்னும் ஒரு மாணவி அந்த விளம்பரத்தைக் கொடுத்திருந்தாள். 'அறை நண்பர் தேவை. ஆண்கள் விரும்பத் தக்கது. அறை வாடகையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருந்தது. இப்படியான விளம்பரங்கள் அங்கு சர்வ சாதாரணமானவை.

இவ்வாறு அறையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு இலங்கை மாணவனை நான் சந்திக்க நேர்ந்தது. அவரது அறை நண்பி மணமானவர். லெபனான் நாட்டில் வாழும் தனது கணவனை SPONSER செய்து அவுஸ்திரேலியாவுக்கு வரவழைக்கும் முயற்சியில் அவள் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.

18 வயது வந்துவிட்டால் எவரும் எவரிலும் தங்கியிருப் பதில்லை. இத்தகு நிலை எமது புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களைப் பெரிதும் பாதிக்கிறது. மரபுகளைப் பேணியும், மரபுகளுக்கு உட் பட்டும், மாதா பிதா குரு தெய்வம் என்ற வழிபாட்டு வரையறைக்குள் வளர்ந்த நம்மவர்களை, நாட்டின் சூழலும் மொழியும் கல்வி முறையும் சட்டதிட்டங்களும் திகைப்படையச் செய்கின்றன. காரணம், தமது பிள்ளைகளைக் கண்டித்தோ தண்டித்தோ வளர்க்க முடியாமல் அவர்கள் திணறுகிறார்கள். பிள்ளைகளின் குறும்புத் தனங்களைப் பொறுத்துக் கொண்டாலும்கூட பயங்கரக் குழப்படிகளைப் பொறுக்க முடியாமல் தண்டித்து விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படு கிறார்கள்.

அப்படியானால் குழப்படி செய்யும் பிள்ளைகளை என்ன செய்வது? அதற்கும் வழிமுறை உண்டு. எல்லா நகரங்களிலும் பொது மக்கள் சேவை அமைப்புகள் இருக்கின்றன. இங்கு பிள்ளை கள் பற்றிய முறைப்பாடுகளைச் செய்யும்போது COUNSELLING முறையில் பெற்றோர் பிள்ளைகள் உறவைச் சீர் செய்துவிடு கிறார்கள்.

பெற்றோர் பிள்ளைகளோடு அடாவடித்தனமாக நடந் தால், அவர்கள் இந்த அமைப்புகளால் நடத்தப்படும் COUNSELL ING வகுப்புகளுக்குச் செல்ல நேரிடும்.

இங்கு பிள்ளைகளைப் பெற்றோர் தண்டிப்பதை CHILD ABUSE என்று கூறுகிறார்கள். இத்தகைய நிலைமை கனடாவிலும் இருப்பதாக அறியப்படுகிறது. கனடாவில் புலம் பெயர்ந்தோர் மத்தி யில் பரபரப்பாகப் பேசப்பட்ட, பத்திரிகைகளில் வெளிவந்த விடயம் இது. தமிழ் இளம் யுவதி ஒருவர் அந்நிய இனத்து வாலிபனுடன் பேசிப் பழகியதால், யுவதியின் உறவினர் ஒருவர் அவளைப் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடுபோட்டு விட்டார். இந்த விடயம் நீதி விசாரணைக்கு வந்து உறவினர் தண்டனை பெற்றார்.

இது தொடர்பாக நீதி வழங்கிய நீதிபதி தனது அறிக்கை யில், "சக மனிதனுடன் பேசிப் பழகியதற்காக இத்தகைய கொடுர மான தண்டனையை வழங்கியதை என் வாழ்நாளில் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இது எனக்குப் பெரிதும் அதிர்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளுக்குச் சிறு காயம் ஏற்பட்டாலும் பாடசாலையில் ஆசிரியர்கள் ஏன் எப்படி என்றெல்லாம் விசாரண்ை வைக்கிறார். ஒரு தாய் தனது பெண்பிள்ளையைக் குளிக்க வார்த்த பின் குளிர் காய்வதற்காக HEATER ன் அருகே கிடத்தியபோது பிள்ளையின் காலில் சூடுபட்டுவிட்டது. மருந்து போட்டு ஆற்றினார் கள். ஆனாலும் அந்தப் பிள்ளையைப் பின்னர் பாடசாலையில் சேர்க்கும்போது அப்பிள்ளைக்கு எப்படி அந்தச் சூட்டுக் காயம் ஏற்பட்டது என விசாரணை வைத்த பின்னரே பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொண்டார்களாம்.

இதேபோன்று பாடசாலையில் ஏதும் நடந்தாலும் ஆசிரி யர்கள், பெற்றோருக்கு அதனை எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும். வீட்டிலே காயம் ஏற்பட்டால் பெற்றோர் பாடசாலைக்கு அதனை அறிவிக்க வேண்டும்.

அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியன பூர்த்தி செய்யப்படாத வறிய வளர்முக நாடுகளின் பிரச் சினை வேறு. அடிப்படைத் தேவைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட மேற்குலக நாடுகளில், அவுஸ்திரேலியா போன்ற பசுபிக் பிராந்திய நாடுகளில் பிரச்சினை வேறு.

அவுஸ்திரேலியாவில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையிலும்கூட STREETKDS என்று சொல்லப்படும் விட்டாத்திப் பிள்ளைகள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதாக அறிகிறோம். வீடு வாசல்களைத் துறந்து, பெற்றோர் உற்றார் உறவினரை மறந்து, போதைவஸ்துவிற்கு அடிமையாகி தெருக்களில் நடமாடித் திரியும் ஓர் இளம் சமுதாயம் இங்கு உருவாகியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பெற்றோர் விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழுதல் எனக் கூறுகிறார்கள். அவுஸ்திரேலியாவில் பெண்களுக்குச் சுதந்திரம் அதிகம், விவாகரத்தும் அதிகம். ஒரு பெண் விவாகரத்துப் பெற்றால் அவள் தனித்து வாழமுடியும். அரசாங்கம் அவளது வாழ்க்கைக்குப் பணம் கொடுக்கும்.

இந்த STREET KIDS எனப்படும் விட்டாத்திகளைத் தேடிப்பிடித்து புனர்வாழ்வு அளிக்கின்ற நலன்புரிச் சங்கங்களும் அவுஸ்திரேலியாவில் உள்ளன.

புலம் பெயர்ந்த நம்மவர்கள் இங்கு என்ன செய்கின்றார்கள்?

அவுஸ்திரேலியாவில் கோடை விடுமுறை ஒரு குதூகல மான காலம். இக்காலத்திலேதான் கிறிஸ்மஸ் பண்டிகை, ஆங்கி லப் புதுவருடப் பிறப்புக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படு கின்றன.

உலகின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் ஆங்கிலப் புதுவருடப் பிறப்பின்போது குளிர் காலமாகவே இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் கடுங் குளிர் நிலவும். நமது நாட்டிலேகூட மார்கழி மாதக் குளிர் நம்மை வாட்டும் காலம் இதுதான்.

ஆனால் அவுஸ்திரேலியாவில் இக்காலத்திலே அதிக உஷணம் நிலவுவதாக அறியப்படுகிறது. இந்தக் கோடை விடு முறையை ஒட்டி பாடசாலைகளில் ஒரு மாதகால லிவு விடுகிறார்கள். பல்கலைக் கழகங்களுக்கு மூன்று மாதகால லிவு கிடைக்கிறது.

அநேக சுற்றுலாப் பயணிகள் இக்காலத்தில் அவுஸ் திரேலியாவுக்கு வந்து கிறிஸ்மஸ், புதுவருடக் கொண்டாட்டங் களைக் கொண்டாடுகிறார்கள்.

இக்காலத்தில் அவுஸ்திரேலியர்கள் உறவினர்களைத் தமது இல்லங்களுக்கு அழைத்து விருந்துகள் வைப்பர். ஹோட்டல் களும் விடுதிகளும் உல்லாசப் பயணிகளால் நிரம்பிவழியும் காலம் இதுதான். இக்காலத்திலே பியர் என்னும் குடிவகை அவுஸ் திரேலியாவில் அதிகமாக விற்பனையாவதாக ஒரு கணிப்பீடு தெரி விக்கிறது.

இறைச்சிகளைப் பதப்படுத்தி உணவு தயாரித்து பூங்காக் களில் தங்கிச்சமைத்து, குடிவகைகளைப் பரிமாறி நண்பர்கள் உறவினர்களுடன் PICNIC சென்று அவுஸ்திரேலியர்களுக்கே உரித் தான BARBECUE என்னும் உணவு நாகரிக விருந்தோம்பலும் இக் காலத்தில் இங்கு நடைபெறுகிறது.

சில நாட்களில் வெப்பநிலை அதிகமாகி வீடுகளில் இருக்கமுடியாத நிலை ஏற்படுகிறது. சில தாய்மார்கள் குளிரூட்டப் பட்ட பெரிய விற்பனை நிலையங்களுக்குச் சென்று அங்கு தமது குழந்தைகளுடன் பகல் முழுவதும் தங்கியிருந்துவிட்டு மாலை நேரங் களில் வெப்பம் தணிந்தவுடன் வீடு திரும்புவார்களாம்.

சில தனவந்தர் வீடுகளில் வெப்ப தட்ப நிலைமைகளைச் சரிசெய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. நிலத்தின் அடியிலே சூடேற்றிகளைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். குளிரூட்டிகளும் உண்டு. மின்சாரத்தில் இயங்கும் இந்த உபகரணங்களின் உதவி யுடன் வீட்டினுள்ளே தமக்கு வேண்டிய சீதோஷ்ண நிலைமைகளைப் பெறக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக வீட்டினுள்ளே 20 செல் சியஸ் உஷ்ணம் வேண்டுமெனில் கருவியை முறுக்கி அந்த உஷ்ண நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

நமது நாட்டில் மலைப் பிரதேசங்களில் உஷ்ணமான காலங்களில், பற்றைகள், புற்களுக்குத் தீமூட்டி எரிவதை வேடிக்கை பார்க்கிறார்கள். இதே போன்று அவுஸ்திரேலியாவிலும் உஷ்ணமான காலங்களில் பற்றைகளுக்குத் தீ மூட்டிவிடுகிறார்கள். சில சந்தர்ப் பங்களில் காட்டு மரங்கள் ஒன்றோடொன்று உராய்வதனாலும் தீ பற்றிக்கொள்கிறது. இதனை BUSH FIRE என்று கூறுகிறார்கள். இந்நிலை ஏற்படும்போது சில வேளைகளில் பலத்த சேதங்களும் உயிராபத்துக்களும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இக்காலத்தில் FIRE BAND என்னும் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள். இச்சட்டம் நடைமுறையில் இருக்கும்போது வீட்டுக்கு வெளியே எந்த வொரு இடத்திலும் தீ மூட்டுதல் குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தக் காலத்திலேதான் நமது புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கே பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறார்கள். பொங்கல் என்றால் வீட்டினுள்ளே வைத்துத்தான் பொங்கமுடியும். வெளியே பொங்கிச் சூரியனுக்குப் படைக்க முடியாது.

புலம்பெயர்ந்த அன்பர் ஒருவர் நம் நாட்டு முறைப்படி முற்றத்தில் சூரியனுக்குப் பொங்கிப் படைத்ததைக் கண்ட அடுத்த வீட்டு அவுஸ்திரேலியர், FIREBAND காலத்தில் வெளியே தீ மூட்டு வதைக் கண்டு, தனது வீட்டுக்கு ஆபத்து ஏற்படும் என அலறிப் புடைத்துக்கொண்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தாராம். இதனால் நமது அன்பர் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் விக்டோரியா மாநிலத்தில் நடந்ததாக அறியப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் வானிலுை மாற்றம் அடிக்கடி ஏற்படு கிறது. திடீரென வெய்யில் எறிக்கிறது. திடீரென மழை வருகிறது. திடீரெனக் குளிரடிக்கிறது. அவுஸ்திரேலியர்கள் இந்த வானிலை மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வெய்யில் Giggsgists, "WHAT A FINE WEATHER" திலும் கூறி மகிழ்கிறார்கள். தினமும் இரவு படுக்கைக்குச் செல்ல முன்பு அடுத்த நாளுக்குரிய வானிலை பற்றிய எதிர்வுகூறலைக் WEATHERFORECAST கேட்ட பின்னரே படுக்கைக்குச் செல்கிறார் களாம்.

புலம் பெயர்ந்தோரில் அநேகமானோர் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலுமே குடியேறியிருக்கிறார்கள். இந்த நாடுகள் பலவற்றிலே குளிர்காலத்தில் பனிக்கட்டிகள் உறையத் தொடங்கிவிடும். இரத்தத்தை உறைய வைக்கக் கூடிய கொடிய குளிர் நிலவும். நம்மவர்கள் கடுங்குளிரில் கஷ்டப்பட்டே கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது. அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இத்தகைய கடுங்குளிர் எக்காலத்திலும் இருப்பதில்லை. நம் நாட்டில் நுவரெலியாவில் உள்ள அதிகபட்சக் குளிரையே இங்கு காணக் கூடியதாக இருக்கிறது.

நான் இங்கு இருந்த காலத்தில் பல இளைஞர்களைச் சந்தித்து அவர்கள் புரியும் தொழில் பற்றி விசாரித்தேன். புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு அவர்கள் எத்தகைய கல்வித் தகைமை உடையவர்களாக இருந்தாலும் உடனே அவுஸ் திரேலியாவில் நிரந்தர வேலை கிடைத்துவிடாது. அவுஸ்திரேலிய தொழில் அநுபவம் உள்ளவர்களுக்கே அங்கு வேலை கொடுக் கிறார்கள். இந்தத் தொழில் அநுபவத்தைப் பெறுவதற்காகப் பலர் முதலில் VOLUNTEER ஆக வேலை செய்கிறார்கள். தொழில் கொள்வோருக்கு, அவர்களது வேலை திருப்தி அளித்தால் மட்டுமே அவர்களுக்கு வேலை கிடைக்கும்.

அவுஸ்திரேலியாவுக்கு வந்த ஒருவர் கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னரே ஒரு திருப்திகரமான தொழிலைப் பெறமுடியும். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் தொழில் அநுபவத்தைப் பெற எங்காவது வேலை செய்ய வேண்டும். அல்லது தொழில்சார் கல்வி எதையாவது பயிலவேண்டும்.

கல்வித் தகைமை இல்லாதவர்கள் செய்யக் கூடிய பலதரப்பட்ட வேலைகள் இங்கு இருக்கின்றன. இத்தகைய வேலை களை மாணவர்கள், அகதி அந்தஸ்த்துக் கோரிவந்தவர்கள் செய் வதை நான் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

சிலர் பேப்பர் போடுகிறார்கள். பேப்பர் போடுவது என்றால், ஒவ்வொரு வீட்டுக்கு முன்பாகவும் தபாற் பெட்டிகள் இருக்கின்றன. அந்தத் தபாற் பெட்டிகளில் கொடுக்கப்பட்ட பத்திரி கைகள், சஞ்சிகைகள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரக் காகிதங்கள் ஆகியவற்றைப் போடுவதே இவர்களது வேலை.

(KITCHEN HAND) வேலை செய்கிறார்கள். கார் விற்பனை செய்யும் கம்பனிகளில் சிலர் கார் கழுவுகிறார்கள். சிலர் "ராக்ஸி ஓட்டுநர்களாக இருக்கிறார்கள். சிலர் SECURITY GUARD ஆக வேலை செய்கிறார்கள். சிலர், பெரிய விற்பனை நிலையங்களில் FILLING எனப்படும் பொருட்களை விற்பனைக்காக நிரப்பிவைக்கும் தொழில் புரிபவர்களாக இருக்கிறார்கள்.

PIZA என்பது இங்குள்ள முக்கிய உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது. வீட்டில் இருந்தபடியே தொலைபேசியில் இதற்கு ஓடர் கொடுத்தால், ஒருசில நிமிடங்களிலேயே சுடச்சுட இதனை வீட்டில் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். இவ்வாறு PIZA DELIVERY செய்பவர்களாகச் சிலர் தொழில் புரிகிறார்கள்.

பெற்றோல் நிலையத்தில் சிலர் வேலை செய்கிறார்கள். இந்த வேலைக்கு ஆங்கிலம் ஓரளவு பேசத் தெரிந்திருக்க வேண்டும். CONSOLE OPERATORS இங்குள்ள பெற்றோல் நிலையங்களில், கார் ஒட்டுபவர்களே தமது கார்களுக்குப் பெற்றோல் நிரப்பிக் கொள்ள வேண்டும். நிரப்பிய பின்பு நிலையத்தின் உள்ளே கவுண்டரில் இருக்கும் இந்த "கொன் சோல் ஒப்பரேட்டரிடம் பணத்தைக் கொடுக்க வேண்டும். பெற்றோல் நிலையங்கள் இரவு பகலாகத் திறந்திருக்கின்றன. இங்கு பாண், சிகரெட், பிஸ்கட், இனிப்பு வகைகள் ஆகிய பொருட்கள் உட்பட அன்றாடத் தேவைக்கான பல பொருட்கள் விற்பனையாகின்றன.

பெற்றோல் நிலையம் ஒன்றில் வேலை செய்யும் ஜாவாட் என்னும் இந்திய முஸ்லிம் இளைஞரைச் சந்தித்தேன். அவர் தனது தொழில் முறைபற்றி விரிவாகக் கூறினார்.

இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு மணித்தியாலத் திற்கும் அவருக்குப் பத்து டொலர் சம்பளமாகக் கிடைக்கிறது. ஒரு நாளில் அவர் 80 டொலர் வரை சம்பளம் பெறுகிறார். சில நாட் களில் இரண்டு "வழிப்ற் வேலை செய்து 160 டொலர்வரை பெறு கிறார். ஒரு கிழமைக்கு சராசரி ஐந்நூறு டொலர் வரை தனக்கு சம்பளம் கிடைக்கிறது என்றார் இந்த இளைஞர். இவர் இங்குள்ள தொழிற் கல்வி நிலையம் ஒன்றில் மாணவராக இருந்து கொண்டே இந்தத் தொழிலையும் செய்கிறார். மற்றைய நிரந்தரமற்ற வேலை களோடு ஒப்பிடுகையில் இந்த வேலைக்கு அதிக சம்பளம் கிடைக் கிறது. ஆனாலும் இந்தத் தொழிலில் சில ஆபத்துக்களும் இருக்கின்றன என்றார் அவர்.

போதைவஸ்துப் பாவிப்பவர்கள் சிலர் இரவில் வந்து தனியர்க இருக்கும்போது கலாட்டா செய்வார்கள். சில வேளைகளில் கத்தியால் குத்திக் காயப்படுத்திவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள் எனவும் அவர் கூறினார்.  சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், வயோதிபர் இல்லங்கள் போன்றவற்றில் சில பெண்கள் தொழில் புரிகிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட தொழில்கள் யாவும் நிரந்தரத் தொழில்கள் அல்ல. அதனால் இத்தொழில்களில் பெறும் சம்பளம் வரிக் கழிவுகள் ஏதுமின்றி கைக்கு வந்துவிடும். ஆனால் நிரந்தரத் தொழில் புரிபவர்கள் பெருந்தொகைப் பணத்தை அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஏறத்தாழ சம்பளத்தின் இருபது வீதம் வரியாக அறவிடப்படுகிறது.

இந்த நிரந்தரத் தொழில்களும் உண்மையில் நிரந்தர மானவை அல்ல. தொழில் நிலையங்களில் ஆட்குறைப்புச் செய்யும் போது திடீரென வேலை போய்விடுகிறது. இன்று செய்யும் வேலை நாளை இருக்குமோ என்பது சந்தேகமே.

வங்கியொன்றில் முக்கிய பதவி வகித்த ஒருவர் ஒருநாள் காலை வேலைக்குச் சென்றபோது, கதவுக்கு வெளியேவைத்து அவரிடம் இருந்த வங்கியின் சாவிக்கொத்தையும் வாங்கிக்கொண்டு அந்தக் கிழமைக்குரிய சம்பளத்தையும் கொடுத்து வீட்டுக்கு அனுப் பினார்களாம். இத்தகைய நிலைமை கனடாவிலும் இருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார்.

நம்நாட்டில் (WORKSECURITY) வேலைப் பாதுகாப்பு நல்ல நிலைமையிலே இருப்பதாகத்தான் கொள்ளவேண்டும். ஒருவர் வேலை நீக்கம் செய்யப்படும்போது அவர் தொழிற்கோட்டில் வழக்குத் தொடரலாம். இழந்த வேலையை மீண்டும் பெறலாம். அல்லது நட்டஈடு பெறலாம். அநீதி இழைக்கப்படும்போது தொழிற் சங்க நடவடிக்கையில் இறங்கலாம்.

ஆனாலும், அவுஸ்திரேலியாவில் உள்ள ஒருவர் வேலை போய்விட்டதே என நினைத்துப் பெரிதாகக் கவலைப் படத்தேவை யில்லை. ஓரிரு கிழமைகளிலேயே வேறொரு வேலையில் சேர்ந்து கொள்ளலாம். நிரந்தரமற்ற வேலைகளில் ஈடுபடுவோர் ஒரு நாளில் சராசரி 50 டொலர் வீதம் மாதத்திற்கு 1500 டொலர் வரை சம்பாதிக்க முடியும். இந்தப் பணம் அவுஸ்திரேலியாவில் வாழ்வதற் குத் தாராளமாகப் போதுமானது. இதில் மாதம் 600 டொலர்வரை சேமிக்கவும் முடியும் எனச் சொல்கிறார்கள்.

இங்கு உடையும் உணவுப் பொருட்களும் மிகவும் மலிந்த விலையிலே கிடைக்கின்றன. ஆனால் வீட்டு வாடகை அதிகமாக இருக்கிறது. சாதாரண வீடு ஒன்றுக்கு வாடகைப் பணமாக இரண்டு கிழமைக்கு ஒரு தடவை 400 டொலர் செலுத்த வேண்டும். புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்கள் பலர், வீட்டு வாடகைக்கும் தொலைபேசிக்குமே தாம் அதிக செலவு செய்வதாகக் கூறுகிறார்கள். உள்நாட்டுத் தொலைபேசி அழைப்புகளுக்கு அதிக செலவுகள் ஏற்படுவதில்லை. வெளி நாட்டில் இருக்கும் உறவினர் களுடன் தொடர்பு கொள்வதற்கே தொலைபேசிச் செலவு அதிகமாகிறது.

புலம் பெயர்ந்து சென்றோரில் பலர் வீட்டு வாடகைக்குப் பணம் விரையமாவதைத் தவிர்க்க சொந்த வீடொன்றை வாங்குவதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள். கணவனும் மனை வியும் நிரந்தரத் தொழில் பார்ப்பவர்களாக இருந்தால் வங்கியில் விடுவாங்குவதற்கு இலகுவாகக் கடன் பெறலாம். அப்பணத்தை அவர்களது சம்பளப் பணத்திலிருந்து மாதாமாதம் தவணை முறையில் கழித்துக் கொள்வார்கள்.

W என்ற ஆங்கில எழுத்தோடு தொடர்பான ஒரு விடயத்தை இங்குள்ளவர்கள் வேடிக்கையாகப் பேசிக்கொள் கிறார்கள். இங்கு மூன்று W” க்களை நம்ப இயலாது என்கிறார்கள்.

WEATHER  மற்றது . WORK (வேலை) அடுத்த W” ஐந்து எழுத்துகளைக்கொண்டது. அது, என்ன என்பதை இக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து படித்து வரும் எவரும் இலகுவாக ஊகித்துக் கொள்ளலாம், எனவே அதன்ன வாசகர்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

“உலக மயமாதல்" அழித்துவிட முடியாத இனங்களின் தனித்துவங்கள்!

அவுஸ்திரேலியாவில் சனியும் ஞாயிறும் விடுமுறை நாட்கள். இருவாரங்களுக்கு ஒருமுறை உத்தியோகத்தர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள். மாதத்தில் இரண்டாவது வெள்ளிக் கிழமையும் நான்காவது வெள்ளிக்கிழமையும் அநேகமாகச் சம்பள நாட்களாக அமையும். அவுஸ்திரேலியர்கள் வெள்ளிக்கிழமை பெற்ற சம்பளத்தை சனி ஞாயிறு தினங்களில் தாராளமாகச் செலவழித்து ஆடிப்பாடிச் சந்தோஷித்து கிளப்புகளிலும் சுற்றுலாச் சாலைகளிலும் கழிப்பதாக அறிந்தேன். புலம்பெயர்ந்து சென்ற நம்மவர்கள் தமது நண்பர்களை உறவினர்களைச் சந்திப்பதற்கும், சமய கலாசார விழாக்களை நடத்துவதற்கும் இந்த நாட்களையே பயன் படுத்துகின்றனர்.

ஒருவருக்கு பிறந்தநாள் என்றால் அடுத்துவரும் சனி ஞாயிறுகளிலேயே அது தொடர்பான கொண்டாட்டங்களை நடத்து கின்றனர். தைப்பொங்கல், வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற விசேஷ தினங்களில் சம்பிரதாய பூர்வமாக சிறிய அளவிலே சமய அனுட் டானங்களை நிகழ்த்திவிட்டு, அடுத்து வரும் சனி ஞாயிறு தினங்களிலேயே அது தொடர்பான சமூக நிகழ்ச்சிகளையும் கொண் டாட்டங்களையும் நிகழ்த்துகின்றனர். ,

அவுஸ்திரேலியா ஒரு குடியேற்ற நாடாகவும் பல இன மக்கள் வாழும் நாடாகவும் இருப்பதால் அரசாங்க நிர்வாகம் நடை பெறுவதற்கு இப்படியானதொரு ஏற்பாடு இன்றியமையாததாக இருக் கிறது. ஏறத்தாழ 165 இன மக்கள் வாழும் நாட்டில் சமய சமூகச் சடங்குகள் தொடர்பாக ஒவ்வொருவரும் லிவு எடுக்கத் தொடங் கினால், நிர்வாகத்தைச் சரியான முறையில் நடைபெறச் செய்ய முடியாதல்லவா.

நமது நாட்டில் சிவராத்திரி, ஹஜ்பெருநாள் ஆகிய சமய விடுமுறை நாட்கள் இரத்துச் செய்யப்பட்டபோது அது தொடர்பாக மக்களிடையே ஏற்பட்ட மன அவசங்களை எண்ணிப் பார்க்கிறேன். நாட்டின் முன்னேற்றம் கருதி வேலை நாட்களை அதிகரிக்கும் நோக்குடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இருப்பினும் நமது சின்னஞ் சிறிய நாட்டில் சமய ரீதியாகக் கிடைக்கும் லீவு நாட்கள்தான் எத்தனை ஒவ்வொரு மாதத்திலும் வரும் போயா தினங்கள் உட்பட ஒரு வருடத்தில் 26 நாட்கள் அரசாங்க வங்கி விடுமுறைகளாக வழங்கப்படுகின்றன. இதில் சமய லீவுகள் தவிர்ந்த ஏனைய லீவுகளும் அடங்கும். ஆனால் அவுஸ்திரேலியாவில் 11 நாட்கள் மட்டுமே ஒரு வருடத்தில் அரசாங்க லீவுகளாக வழங்கப்படுகின்றன.

சமய வழிபாடுகள் மனிதனை மனிதனாக வாழ வழி செய்கின்றன என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. ஆனாலும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிக எண்ணிக்கையான சமய விடுமுறை நாட்கள் தடையாக இருக்கக் கூடாதல்லவா.

அவுஸ்திரேலியாவில் நாங்கள் இருந்த காலப்பகுதியில் சனி ஞாயிறு விடுமுறைநாட்களில் சித்திரை வருடப்பிறப்போடு தொடர்பான கொண்டாட்டங்கள் நடப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சமய விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், கட்டுரை பேச்சுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் பல்வேறு மன்றங்களினால் நடத்தப்..

ஒரு சனிக்கிழமையன்று காலை வேளையில் நான் உலாவு வதற்காக வெளியே ச்ென்றிருந்தேன். "ஹோம்புஷ் பாடசாலையின் முன்னால் உள்ள அறிவித்தல் பலகையில், தமிழில் ஒரு அறிவித்தல் காணப்பட்டது. - புது வருடப்பிறப்பை முன்னிட்டு யாழ்பாணப் பாரம்பரிய உணவுகள் இன்று வழங்கப்படும். ஒடியற் கூழ், பருத்தித் துறை வடை, பிட்டு, இடியப்பம் - டொலர் பத்து மாத்திரமே என்றிருந்தது. 8. எனக்கு ஒரே ஆச்சரியம். ஒடியற் கூழும் இங்கு கிடைக்குமா? இப்போதுள்ள போர்ச் சூழ்நிலையில் யாழ்ப்பாணத்திலே கூட தரமான ஒடியற்கூழ் காய்ச்ச முடியுமா என்பது சந்தேகந்தான். அங்கு, ஒரு காலத்தில் உழைத்துக் களைத்த கமக்காரனின் உடல் வலியைப் போக்க அருமருந்தென இருந்தது இந்த ஒடியற் கூழ்தான். ஒடியற் கூழ் காய்ச்சுவது என்பது இலேசான வேலை அல்ல. அது ஒரு தனிக்கலை. பானையில் நீரைக் கொதிக்க வைத்து, ஒரு சிறங்கை அளவு அரிசியைப் போட்டு, முதலில் வேக வைக்க வேண்டும். பின்பு மரவள்ளிக்கிழங்கு, பயிற்றங்காய், பயறு, பலாச்க்ளை, பலாக் கொட்டை, முதலியவற்றைப் போடவேண்டும். உப்பையும் புளியையும் அரைத்த மிளகாய்க் கூட்டையும் அளவாய்ப் போடவேண்டும். அதன் பின்பு ஒடியல் மாவைக்கரைத்து அதனுடன் சேர்த்துக் கூழ் காய்ச்ச வேண்டும். பதமாய் இறக்கிய கூழுக்குள் வாழைக்காய்ப் பொரியலையும் இட்டுக் கலக்க வேண்டும். இப்படிக் கூழ் காய்ச்ச இங்கு கைதேர்ந்தவர்கள் இருக்கிறார்களா? அதற்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் இருக்கின்றனவா? அல்லது ஒடியற்கூழ் என்ற பெயரில் வேறு எதையாவது தருவார்களா? ஒடியற் கூழை நினைத்தபோது அதனைச் சுவைக்க மனம் அவாவியது.

உள்ளே சென்று பார்த்தபோது பலர் அங்கே கூடியிருந்து பல வகையான உணவுகளைச் சுவைத்துக் கொண்டிருந் தனர். ஒடியற்கூழ் விநியோகிக்கும் பகுதிக்குச் சென்று பத்து டொலர் பணத்தைக் கொடுத்தேன். ஒரு கிளாஸ் நிறைய ஒடியற்கூழ் தந்தார்கள். அதனைச் சுவைத்த போது அதன் மணம், குணம், ருசி அத்தனையும் என்னை ஆச்சரியப் படவைத்தன. சிறு வயதில், ஊரிலே நான் சுவைத்த ஒடியற் கூழின் தரத்திற்கு அது எந்த வகையிலும் குறைவற்றதாக இருந்தது. ஒரேயொரு வித்தியாசம், ஊரில் நாம் மடித்துக் கோலிய பலாவிலையில் கூழை வார்த்து ஊதி ஊதிக் குடிப்போம். இங்கு கிளாஸில் தருகிறார்கள், அவ்வளவுதான்!"

மேலும் ஒரு கிளாஸ் கூழ்குடிக்க எண்ணி பத்து டொலர் பணத்தை நீட்டினேன். "முன்னர் கொடுத்த பத்து டொலருக்கு நீங்கள் எவ்வளவு கூழ் வேண்டுமானாலும் குடிக்கலாம். மேலதிகப் பணம் தேவையில்லை" என்றார் விநியோகம் செய்பவர்.

இங்கு விற்பனையில் கிடைக்கும் பணம் முழுவதும் நமது நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் செல வழிக்கப்படும் என்ற செய்தியையும் அங்கு இருந்தவர்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது.

நான் காலை உணவு அருந்திய பின்னரே அங்கு சென் றிருந்தேன். அதனால் அங்கு பல வகையான உணவு வகைகள் இருந்த போதும் அவற்றையெல்லாழ் சுவைத்துப்பார்க்க என்னால் முடியவில்லை. ஆனாலும் அங்கிருந்து புறப்படும்போது வெகுகாலத் திற்குப் பின்னர் மிகவும் தரமான ஒடியற் கூழினை ருசித்த திருப்தி என் மனத்தில் நிறைந்திருந்தது.

அன்று மாலை சிட்னி மாநகர சபைக்குச் சொந்தமான வரவேற்பு மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்பு உபசார மொன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சமூக விழாக்கள் எவ்வாறு அவுஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன என்பதை அறிந்துகொள்ள அன்றைய விழா எனக்கோர் வாய்ப்பாக அமைந்தது.

வாசலில் மங்கல விளக்கேற்றி பூரண கும்பம் வைக்கப் பட்டிருந்தது. "ரேப் ரெக்கோடரில் நாதஸ்வர இசை இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. விழாவுக்கு வருபவர்களை, சிறுமிகள் இருவர் சந்தன குங்குமம் வழங்கி வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

மாலை ஏழு மணிக்கெல்லாம் மண்டபம் நிரம்பி வழிந்தது. மணமகளின் தந்தை நமது நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து பதினொரு வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் வசிப்பவர். அவருக்கு அங்குள்ள பல அவுஸ்திரேலியப் பிரமுகர் களும் நமது நாட்டவர்களும் குடும்ப நண்பர்களாக இருந்தனர். அவர்களிற் பலர் அந்த விழாவிற்கு வந்திருந்தனர். நம் நாட்டில் இருந்து அங்கு சென்று குடியேறியவர்களில் பலர் டாக்டர்களாக, என்ஜினியர்களாக, நிர்வாகிகளாக, வழக்கறிஞர்களாக, தொழிலதிபர் களாக, விரிவுரையாளர்களாக மிகவும் வசதி படைத்த நிலையில் இருக்கிறார்கள். இவர்களிற் பலரை, பின்னர் நான் அவுஸ்திரேலி யாவில் இருந்த காலத்தில் சந்தித்து உரையாடி, அவர்களது புலம் பெயர்ந்த வாழ்க்கை அநுபவங்களைப் பெறக்கூடியதாக இருந்தது.

மணமகள் அங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் தொலைத் தொடர்பு சம்பந்தமான பொறியியல் மாணவியாக இருக்கிறாள். அவளது பல்கலைக்கழக மாணவர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டனர்.

நம் நாட்டில் பல்கலைக்கழக அநுமதி என்பது கடும் பிரயத்தனத்திலே கிடைக்கவேண்டியதொன்றாகி விட்டது. பல்கலைக் கழக அநுமதி கிடைக்கர்தவர்கள் பலர் ஏமாற்றங்களுக்கு உள்ளாகி விரக்தி நிலையை அடைகின்றனர். மேற்கொண்டு என்ன செய்வது எனத் தீர்மானிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் உயர் வகுப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளைப் பெற்றாலே பல்கலைக்கழக அநுமதி கிடைத்து விடுகிறது. பல இனத்தவர்கள் வாழும் நாடாக அவுஸ்திரேலியா இருப்பதால் பல்கலைக்கழக மாணவர்களும் பல இன மாணவர் களாக இருக்கின்றனர். அத்தோடு அவுஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாடுகளில் இருந் தும் புலமைப்பரிசில் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். உயர்கல்வி பெறுவதற்காக வேறு நாடுகளில் இருந்து வந்து தமது செலவில் படிப்பவர்களும் பலர் அங்கு இருக் கிறார்கள்.

அன்று அந்த விழாவிற்கு வந்த மாணவர்களில் இலங்கை, இந்தியா, பர்கிஸ்தான், லெபனான், சைனா, பிலிப்பைன்ஸ், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வந்த மாணவர்களை நான் சந்தித்து அங்குள்ள பல்கலைக் கழகக் கல்விமுறைபற்றி உரையாடினேன்.

இலங்கையிலிருந்து சென்ற மாணவரான விக்கிரமசிங்க என்பவர் அங்கு தமது செலவில் மருத்துவக் கல்வி பயில்கிறார். அவருடன் உரையாடியபோது ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு இலங் கைப் பணத்தில் எட்டு லட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்திற்குக் கட்டணமாகச் செலுத்தவேண்டி இருப்பதாகக் கூறினார். அவுஸ்திரேலி யாவில் மருத்துவப் பட்டம் பெற குறைந்தது ஏழு வருடகாலம் எடுக்கும் என்ற தகவலையும் கூறினார். கம்பியூட்டர் பொறியியல் கல்வி பயிலும் மாணவரான அப்துல் மொகமட், தான் ஒருவருடத் திற்கு இலங்கைப் பணத்தில் நாலரை லட்சம் ரூபாய் பல்கலைக் கழகத்திற்கு கட்ட வேண்டியுள்ளது என்றார். அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்க முடியும். தமது கல்விக்கான செலவில் மூன்றில் ஒரு பகுதியை அவுஸ்திரேலியாவில் தாங்கள் சம்பாதிக்கக் கூடியதாக இருக்கிறது எனப் பல மாணவர்கள் கூறினார்கள். அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து அதிக பணத்தை வசூலிப்பதாகவும் அவுஸ்திரேலியா பிரஜைகளிடமிருந்து மிகவும் குறைந்த பணத்தைக் கட்டணமாக பெறுவதாகவும் அறியக் கூடியதாக இருந்தது.

அங்கு வந்திருந்த பல்கலைக்கழக மாணவர்களில் சிலர் விழாவுக்கு வந்தவர்களை உபசரிப்பதிலும், உணவுகள் பரிமாறுவ திலும், விழாவில் ஓர் அம்சமாக இருந்த கலை நிகழ்ச்சிகளுக்கு மேடை ஒழுங்குகள் செய்வதிலும் மும்முரமாக இருந்தனர். வெவ் வேறு தேசங்களைச் சேர்ந்த வெவ்வேறு இன இளைஞர்கள் நட் புரிமையோடு இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவதைப் பார்த்த நானும் மனைவியும் பெரிதும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தோம்.

அன்றைய விழாவிலே பல கலை நிகழ்ச்சிகளையும் سمى கண்டு களிக்கக்கூடியதாக இருந்தது. கர்னாடக இசைக் கச்சேரி நடத்தினார் ஓர் இளைஞர். அதைத் தொடர்ந்து புல்லாங்குழல் கச் சேரி நடத்தினார்கள் இரு இளம் பெண்கள், இக் கச்சேரிகளுக்குப் பக்கவாத்தியங்களாக வயலின், மிருதங்கம் வாசித்தவர்களும் இளைஞர்களே. இவர்கள் எல்லோரும் அந்தக் கலைகளை அவுஸ் திரேலியாவிலேதான் பயின்றார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தேன்.

இசைக்கச்சேரியின் பின்னர் ஒரு பத்துவயதுச் சிறுமியின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. நமது நாட்டு மேடைகளில் கண்டு களித்த நடன நிகழ்ச்சிகளுக்கு எவ்வகையிலும் குறையாத தரத்தில் அந்தச் சிறுமியின் நடனமும் அமைந்திருந்தது.

தொடர்ந்து, மாணவி ஒருவர் திருமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துரை கூறினார். துருக்கி இனத்தைச் சேர்ந்த இந்த மாணவி, தான் ஆறாம் வகுப்பு முதல் மணமகளுடன் வகுப்புத் தோழியாக இருந்து வருவதையும் அந்தத் தோழமை பல்கலைக் கழகம் வரை தொடர்வதையும் கூறி, தமது நட்பின் இறுக்கத்தைக் காட்டும் பல நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்தார். அந்த மாணவியின் பேச்சு அங் கிருந்த எல்லோரது மனதையும் தொடக்கூடியதாக இருந்தது.

அதன் பின்னர் பல்கல்ைக் கழகத் தமிழ்ச்சங்க மாணவர் கள் ஒரு குழுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். பாட்டின் வரிகள் எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தன. தமது தோழி தனக்குத் திருமணம் நடக்கப் போகின்றது எனக் கூறியபோது தமது மனத்திலே எழுந்த கேள்விகளும், தாம் செய்த கற்பனைகளும், திருமணச் சடங்குகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்ற கற்பனை களும் நிறைந்தவொரு குழுப்பாடலில் பல சினிமாப் பாடல் வரிகளையும் ஆங்காங்கே புகுத்தி வில்லுப் பாடல் பாணியையும் கலந்து ஒரு கலக்குக் கலக்கினர்.

தொடர்ந்து, இந்துமத குரு ஒருவர் மணமக்களை சமய ஆசாரப்படி ஆசிகூறி வாழ்த்துப்பாவும் வழங்கினார். இலங்கை வானொலியிலும், ரூபவாஹினியிலும் செய்திகள் வாசிப்பவராக இருந்த மூத்த அறிவிப்பாளர் ஒருவர் தனது பாரியாருடன் அந்த விழாவுக்கு வந்திருந்தார். அந்த விழா நிகழ்ச்சிகள் யாவற்றையும் பார்த்துவிட்டு "எங்கள் ஊரிலே நடக்கும் ஒரு விழாவைப் போன்றே நிகழ்ச்சிகள் யாவும் அமைந்திருக் கின்றன. ஊரிலே இருக்கும் உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது" என்றார்.

ஆம், அன்றைய நிகழ்ச்சிகள் எனக்கும் அந்த உணர்வையே ஏற்படுத்தின.

 

 

 

அவுஸ்திரேலியப் பழங்குடியினர் அபோர்ஜினிஸ் மக்களின் பூர்வீகம் இந்தியா?

உல்லாசப் பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் ஒன்றில் நாங்கள் பயணஞ் செய்து கொண்டிருந்தோம். நகரின் மத்திய பகுதியில் பஸ் நிறுத்தப்பட்டது.

"அவுஸ்திரேலியாவின் சரித்திரப் பழைமை வாய்ந்த இடத்தை இப்போது பார்க்கப் போகிறீர்கள்” என அறிவித்தல் கொடுத்தார் பயணிகள் வழிகாட்டி.

பொதுவாக, சரித்திரப் பழைமை வாய்ந்த இடமென்றால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மன்னர்களால் கட்டப்பட்ட மாளி கைகள், வணக்கத்தலங்கள், சித்திர கூடங்கள், கலாமண்ட பங்கள், கட்டிட இடியாடுகள் போன்ற ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். அப்படி எதுவும் அவுஸ்திரேலியாவில் இருக்க வாய்ப் பில்லை. காரணம் அவுஸ்திரேலியாவில் மன்னர்கள் இருந்ததில்லை.

1432ல் முதன்முதலில் சீனர்கள் அவுஸ்திரேலியாவில் கால் பதித்திருக்கிறார்கள். அதன்பின் 1514ல் போர்த்துக்கீசர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் பிரெஞ்சுக்காரர்களும், 1605ல் டச்சுக்காரர்களும் சென்றார்கள். ஆனாலும் 1770ல் ஆங்கிலேயரான ஜேம்ஸ்குக் அவர்களின் பயணமே அவுஸ்திரேலியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய பயணமாக அமைந்தது.

பஸ்ஸில் இருந்து இறங்கியதும் சுற்றுமுற்றும் பார்த்தேன். சந்தடி மிக்க அந்தப் பகுதியில் தெருவின் இரு மருங்கிலும் பழைமையும் புதுமையும் நிறைந்த உயர் மாடிக் கட்டிடங்கள்தான் தென்பட்டன.

பயணிகள் வழிகாட்டி விளக்கம் கொடுத்தார். அவுஸ் திரேலியாவை அழகிய நாடாக நிர்மாணிக்கும் பணிகள் 1788ல் அந்தப் பகுதியிலேதான் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது அங்கு கற் பாறைகளே நிறைந்திருந்தன. அதனால் அப்பகுதி “றொக்ஸ்’ (ROCKS) எனப் பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. கற்பாறைகளை உடைத்து அகற்றியபின் தெருக்கள் அமைக்கப்பட்டன. காலப் போக்கில் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. ஹோட்டல்கள், பண்டக சாலைகள், உணவுச் சாலைகள், மதுபானக் கடைகள் தோன்றின.

சிட்னித் துறைமுகத்தின் அருகே இப்பகுதி இருப்பதால் உலகெங்கிலுமுள்ள கப்பற் பயணிகள், மாலுமிகள் இங்கே தங்கிச் செல்வது வழக்கம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கப்பல் பயணிகள் அங்கு வரும்போது அவர்களது உடைமைகளை கைதிகள் கொள்ளையடித்து விடுவார்களாம். இதன் காரணமாக கப்பற் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அங்கு மாலுமிகள் இல்லம்" என்ற விடுதி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. அங்கு வரும் மாலுமிகளுக்குத் தங்கிச் செல்வதற்குச் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இப்போது அந்த விடுதி உல்லாசப் பயணிகள் தகவல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த றொக்ஸ் என்ற இடம் இருநூறு ஆண்டுகால நினைவுகளை மீட்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. பழைமை வாய்ந்த ஹோட்டல்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள், நூதன சாலைகள் ஆகியன இங்குள்ளன. உல்லாசப் பயணிகள் அதிகமாக வருவதால் இப்போது நவீன மோஸ்தரில் அமைந்த ஹோட்டல்கள் சிற்றுண்டிச் சாலைகள் கேளிக்கைக் கூடங்கள் இங்கு தோன்றியுள்ளன.

ஏறத்தாழ ஐம்பது வருடகாலத்தில் 80,000 கைதிகளைக் கொண்டு துறைமுகம் உள்ளிட்ட இப்பகுதி நிர்மாணிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த நிர்மாண வேலைகளுக்கு அதிகமாக ஆட்கள் தேவைப்பட்டதால், சிறு சிறு குற்றங்கள் புரிந்தவர்களையும் சிறைப்பிடித்து பெரிய தண்டனைகள் வழங்கி இங்கே கொண்டு வந்தார்களாம்.

இங்கிருந்து சிறிது துாரம் சென்றால் சிட்னி நகரில் கட்டப்பட்ட அதிபழைமை வாய்ந்த வீடு ஒன்றைக் காணலாம். 1816ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த விடு ‘கட்மன் குடிசை என அழைக்கப் படுகிறது. இந்த வீட்டின் சொந்தக்காரரான ஜோன் கட்மன் இளைஞ ராக இருந்தபோது குதிரைச் சவாரி செய்ய ஆசைப்பட்டாராம். அதற்காக நண்பர் ஒருவரின் குதிரையைத் திருடியிருக்கிறார். கையும் களவுமாகப் பிடிபட்டபோது அவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? - ஆயுள் தண்டனை! கொலைக்குற்றம் செய்தவர் களுக்குத்தான் இத்தகைய தண்டனை வழங்கப்படுவது வழக்கம். 1798ல் அவுஸ்ரேலியாவுக்கு அழைத்து வரப்பட்ட கட்மன் 23 வருடங்கள் கைதியாக உடலை வருத்தி உழைத்திருக்கிறார். 1827ம் ஆண்டில் ஆட்சியாளர்கள் பெரிய மனது பண்ணி அவருக்கு மன்னிப்புக் கொடுத்தார்களாம். அதன் பின் கைதிகள் மேற்பார்வை யாளராக அவருக்கு வேலை கிடைத்தது. தனக்கு வழங்கப்பட்ட குடிசையில் மனைவியுடன் 15 வருடங்கள் அங்கே வாழ்ந்தார்.

அருகே உள்ள “நெல்சன் பிறேவரி ஹோட்டல்" அங்குள்ள ஹோட்டல்களில் பழைமை வாய்ந்தது. 1836ல் கற்களல் பொழிந்து நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் பழைமை மெருகுடன் காட்சி தருகிறது. இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட கட்டிடங்கள் எதுவும் அவுஸ்திரேயாவில் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆங்கிலேயர்களின் வருகையின்போது அவுஸ்திரேலியா எங்கும் பழங்குடியினரான அபோர்ஜினிஸ் மக்களே வாழ்ந்தனர். இந்தப் பழங்குடி மக்கள் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையே வாழ்ந்தார்கள். வேட்டையாடுதலே இவர்களது முக்கிய தொழிலாக இருந்ததனால் காடுகளிலேயே இவர்களது இருப்பிடங்களும் அமைந் தன. அவுஸ்திரேலிய கன்பெரா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கள் கண்டெடுத்த ஒரு மனித எலும்பு 60,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அதன்படி இந்தப் பூர்வீக மக்கள் பல ஆயிரம் நூற் றாண்டுகளுக்கு முன்னரே அங்கு வாழ்ந்தார்கள் என்பது ஆய்வாளர் களின் முடிபு. இவர்களது பூர்வீகம் பற்றிய வரலாற்றுக் தகவல்கள் சுவாரஸ்யமானவை.

ஆதிகாலத்தில் இந்தியாவிலிருந்தே இந்த அபோர்ஜினிஸ் மக்கள் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தனர் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல ஆயிரம் நுாற்றாண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா நாடுகள் யாவும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன. இந்த நிலப்பரப்பு லெமூரியா கண்டம் என அழைக்கப்பட்டது. இதனைக் 'கடல் கொண்ட தென்னாடு எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும்.

லெமூரியாக் கண்டத்தின் பல பகுதிகள் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடற்கோள்கள் காரணமாகக் கடலில் அமிழ்ந்து போயின. பழந்தமிழ் இலக்கியங்களான புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகியவற்றிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன. இவ்வாறான கடற் கோள்கள் நான்கு தடவைகள் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. இதனால் 49 நாடுகள் அழிந்துபோயின. ஜேர்மனியைச் சேர்ந்த டாக்டர் ஜோகன்னெஸ் றியெம் என்பார் கடற்கோள்களினால் அழிந்த பகுதிகளைக் காட்டும் வரைபடம் ஒன்றை வரைந்துள்ளார். இத்தகைய கடற்கோள்கள் ஏற்படும்போதெல்லாம் மக்கள் நாவாய் களிலும் கட்டு மரங்களிலும் ஏறி அடுத்துள்ள நிலப்பரப்பிற்குச் சென்று உயிர் தப்பினர்.

அவ்வாறு தென்கிழக்கு ஆசியா நாடுகளிலிருந்து சென்றவர்களே இந்த அபோர்ஜினிஸ் மக்கள் என ‘பிறிற்றானிக்கா" என்னும் ஆங்கிலக் கலைக்களஞ்சியத்தில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு வம்மிசத்தை சேர்ந்தவர்களா அல்லது ஒன்றுக்கு மேற் பட்ட வம்மிசத்தினரின் வழித்தோன்றல்களா என்பதில் திட்டமான முடிவு காணப்படவில்லை. இவர்களின் நிறமும் தோற்றமும் அணி கலன்களும் ஆயுதங்களும் இந்தியாவில் வாழ்ந்த பழங்குடி மக் களுடையதை ஒத்திருக்கின்றன.

இவர்களுடைய முக்கிய ஆயுதமான 'பூமராங்" என்ற கருவி வேல், அம்பு போல குறியைத் தாக்குவதோடு மட்டுமல்லாது எறிந்தவரிடமே திரும்பி வந்துவிடும் வல்லமை பொருந்தியது. வில் போல் வளைந்த இந்த ஆயுதம் ஒரு புறம் மெல்லியதாகவும் மறு புறம் கனமானதாகவும் இருக்கும். இந்த ஆயுதத்தை முதன்முதலிற் பாவித்தவர்கள் இந்தியப் பழங்குடியினரே என மனிதவியல் ஆய்வா ளர்கள் நிரூபித்துள்ளனர். ஜேம்ஸ் வெல்ஷிஸ் என்ற ஆங்கிலேயர் எழுதிய சரித்திரக் குறிப்புகளிலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. இதனை வளரி என்றும் வளைதடி என்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

இந்தியப் பழங்குடியினர் போலவே இவர்களும் சூரியனை யும் சந்திரனையும், இயற்கையையும் வழிபாடு செய்தனர், சித்திரங்கள் வரைவதிலும் இசையிலும் ஆர்வமுடையவர்களாக இருந்தனர். இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டே அபோர்ஜினிஸ் மக்களின் பூர்வீகம் இந்தியாவே எனச் சில ஆய்வாளர் கருதுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்தபோது அபோர்ஜினிஸ் மக்களின் தொகை ஏறத்தாழ மூன்று லட்சமாக இருந்தது. ஆங்கிலேயர்களால் தெருக்கள் வீடுகள் அமைக்கப்பட்ட போது இந்தப் பழங்குடியினரின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டன. இவர்களுக்கு வேண்டிய காடுகள், இயற்கை வளங்கள் அழிந்தன. இதனால் 1880ல் இருந்து ஆங்கிலேயர்களுக்கும் இவர்களுக்கும் அடிக்கடி நிலத் தகராறுகள் ஏற்பட்டன. அப்போது ஏற்பட்ட மோதல்களில் 20,000 பழங்குடியினர் கொன்று குவிக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவுக்குப் பெருந்தொகையான கைதிகள் கொண்டுவரப்பட்டபோது அவர்களுடன் அம்மை நோயும் வந்து சேர்ந்தது. ஆங்கிலேயர்கள் நோய்த்தடுப்பு ஊசிகள் மூலம் தம்மைக் காப்பாற்றிக்கொண்டனர். அப்பாவிப் பழங்குடியினர் இந்த தொற்று நோய் காரணமாகப் பெருந்தொகையானோர் மாண்டனர். எஞ்சியோர் பற்றைகளிலும் காடுகளிலும் மறைந்து வாழ்ந்துகொண்டு ஆங்கி லேயருடன் 'கெரில்லா முறையிலான போரில் ஈடுபட்டனர். காலப் போக்கில் ஆங்கிலேயர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டது. இந்தப் பூர்வீகக் குடிகளுக்கு பத்துச் சதவீத அவுஸ்திரேலிய நிலப்பரப்பை வழங்கச் சம்மதித்தனர். அத்தோடு இவர்களைக் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்து ஆங்கிலேய வாழ்க்கை முறையைக் கற்பித்தனர். இந்தப் பழங்குடியினரின் பேச்சு மொழிகள் மட்டும் 260 வகை யானவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் “பிற்ஜான் ஐட்டி யரா’ என்ற மொழியே அதிகமாக வழக்கில் உள்ளது.

இப்போது, இவர்கள் அவுஸ்திரேலியச் சமூகத்துடன் கலந்துவிட்டனர். இவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் பிரஜைகள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமைகள் உட்பட சகல உரிமைகளும் இவர்களுக்கு இருக்கின் றன. எனினும் மற்றச் சமூகத்தினருடன் ஒப்பிடும்போது இவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

அரசாங்கம் இவர்களுக்கு உதவிப் பணமாக (DOLE MONY) பெருந்தொகைப் பணத்தை வாரி வழங்குகிறது. அத்தோடு இவர்களுக்குத் தேவையான மதுவகைகளையும் தாராளமாகக் கொடுக்கின்றது. இதன் காரணமாகப் பெரும்பாலானோர் கல்வி யிலோ, தொழில் செய்வதிலோ, வாழ்க்கையின் முன்னேற்றத்திலோ எவ்வித நாட்டமுமின்றி எந்த நேரமும் மதுபோதையில் மயங்கிக் கிடக்கிறார்கள். இவர்களிற் சிலர் புகையிரத ஸ்தானங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது. இப்போது இந்த அபோரிஜின்ஸ் மக்களின் தொகை அவுஸ்திரேலிய சனத் தொகையில் 1.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்வாறன நிலைமை தொடருமானால் காலப்போக்கில் இந்த இனம் அழிந்து போகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

நாங்கள் பயணம் செய்த பஸ் ஜோர்ஜ் ஸ்றிற் என்ற இடத்தில் ஒரு பெரிய மதுச்சாலையின்முன் நிறுத்தப்பட்டது. 1830ல் (LIQUOR LICENCE)  சாலை இன்றும் அதே இடத்தில் இயங்கிவருகிறது. இதுவே சிட்னி நகரின் அதி பழைமைவாய்ந்த மதுச்சாலையாகும். பயணிகள் வழி காட்டி ஒரு ஜாலியான பேர்வழி. பஸ்ஸில் இருந்து இறங்கியதும் அந்த மதுச்சாலையோடு தனக்குள்ள தொடர்பைப் பெருமையோடு கூறினார். "எனது கொள்ளுத் தாத்தா ஒரு மாலுமியாகத் தொழில் புரிந்தார். அந்தக் காலத்தில் அவர் இங்கேதான் மதுவருந்துவார். அவரோடு எனது தாத்தாவும் மதுவருந்த இங்கே வருவாராம். இதை எனது பாட்டி எனக்குச் சொன்னார். உலகத்தில் உள்ள எல்லா விதமான மது வகைகளும் இங்கே கிடைக்கும். எனது தந்தையும் ஒரு மதுப்பிரியர். விதம் விதமான மதுவகைகளை ருசி பார்க்க அவரும் இங்கே வருவது வழக்கம். பரம்பரை வழக்கத்தை விட்டு விடுவானேன் என நினைத்து நானும் இங்கு அடிக்கடி வருவேன்" எனக்கூறிக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார்.

அப்போது எங்களுடன் வந்த ஐரிஷ் நாட்டு உல்லாசப் பயணி ஒருவர் அவரைப் பார்த்து, "நண்பரே, உங்களது மகனும், மகனின் மகனும், அவனது மகனும் இங்கே வாடிக்கையாளர்களாக வந்து மதுவருந்தவேண்டுமென வாழ்த்துகிறேன்.” எனறார் குறும்பாக. சுற்றி நின்ற பயணிகள் எல்லோரும் கொல்லெனச் சிரித்தனர்.

 

 

 

மிகவும் உயர்ந்த தரத்திலுள்ள சுகாதாரமும் சுகாதார சேவைகளும்!

அவுஸ்திரேலியாவில் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் ஒரு சந்தை இருக்கிறது. இச் சந்தை சனி ஞாயிறு நாட்களிலேயே கூடுகிறது. பிளெமிங்டன் என்னும் இடத்தில் இந்தச் சந்தை அமைந் திருப்பதால் இதனை "பிளெமிங்டன் சந்தை' எனப் பெயர் கொண்டு அழைக்கின்றனர். ஒரு சனிக்கிழமை காலை நானும் மனைவியும் இச் சந்தைக்கு நடந்து சென்றோம்.

பிளெமிங்டன் இடம் ஆரம்பிக்கும் எல்லையில் நெருக்க மாகப் பல கடைகள் தென்பட்டன. அத்தனை கடைகளும் சீனர் களுக்குச் சொந்தமானவை. சீன உணவுச் சாலைகள், பலசரக்குக் கடைகள், விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், சிகை யலங்காரம் செய்யும் கடைகள், துணிக் கடைகள் என மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கடைகள் நிறைந் திருந்தன. அக்கடைகளில் தொழில் புரிபவர்களும் சீனர்களாகவே காணப்பட்டனர். கடையின் பெயர்ப் பலகைகள்கூட சீன மொழியில் இருந்தன. எங்கு திரும்பினாலும் சீன மொழியிலே கதைப்பவர்களைத் தான் காணமுடிந்தது. விசாரித்துப் பார்த்ததில் அப்பகுதி வெகுகால மாகவே சீனர்கள் நெருங்கிவாழும் பகுதியாக இருக்கிறதென அறிய முடிந்தது.

ஒரு காலத்தில், சீனர்கள் பலர் தொழிலாளர்களாக அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள். அவர்களின் சந்ததியினரே இன்று எங்கும் பரந்து வாழ்கிறார்கள். 1851ம் ஆண்டில் விக்டோரியா மாநிலத்தில் முதன்முதலாகத் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்த சீனர்கள் இலட்சக்கணக்கில் வந்து குடியேறித் தங்கச் சுரங் கங்களில் பணிபுரியத் தொடங்கினார்கள். குறுகிய காலப்பகுதியிலே ஏறத்தாழ ஆறு இலட்சம் சீனத்தொழிலாளர்கள் வந்து குடியேறிய தாக அறியப்படுகிறது. அதன் பின்னர் வேறு மாநிலங்களிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டபோது மேலும் பலர் வந்துசேர்ந்தனர். இதனை GOLD RUSH என நூல்கள் குறிப்பிடுகின்றன. தங்கம் அகழும் வேலைகளில் சீனர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமிடையே போட்டி நிலவத் தொடங்கியது. அதிகளவில் சீனத் தொழிலாளர்கள் வந்துசேர்ந்ததனால் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் தோன்றின. இந்நிலையில் 1901ம் ஆண்டில், வெள்ளையர்கள் மட்டுமே வேறு நாடுகளிலிருந்து வந்து குடியேறமுடியும் என்ற சட்டத்தை அர சாங்கம் பிறப்பித்தது. ஆனாலும் காலப்போக்கில் நாட்டின் நலன் கருதி இச்சட்டத்தைத் தளர்த்த வேண்டிய நிலையேற்பட்டது. 1973 ஜனவரியில் முற்றாக இச்சட்டம் நீக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் சீன உணவுக்கு மவுசு அதிகம் அவுஸ்திரேலியர்கள் சீன உணவுகளைப் பெரிதும் விரும்பி உண் கின்றனர். சீன உணவுச் சாலைகள் எந்நேரமும் நிறைந்தே காணப்படுகின்றன.

விவசாயம், சிறு கைத்தொழில்கள், வியாபாரம் போன்ற பல துறைகளிலும் சீனர்கள் அதிகமாக ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது. CHINATOWN என்ற பெயருடன் கூடிய ஒரு பட்டினமே இங்கு இருக்கிறது.

இங்கு சீன மொழியிலே ஒரு தினசரியும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

கொழும்புத் தெருக்களிலே அங்காடி வியாபாரிகள் “லாபாய் லாபாய்' என்று கூவிப் பொருட்களை விற்பனை செய்வது போல பிளமின்டன் சந்தையிலும் வியாபாரிகள் கடதாசிப் பெட்டிகளில் மரக்கறிவகைகளை நிரப்பி வைத்துக் கொண்டு COME ON, ONE DOLLER TWO DOLLER.  சந்தைப்படுத்துகின்றனர்.

பொருட்கள் எல்லாமே கொள்ளை மலிவாக இருக்கின்றன. தக்காளி, வெண்டி, பூசனி, மிளகாய், வெங்காயம், அவரைக்காய், கத்தரிக்காய், பயிற்றங்காய் கீரை வகைகள் இவையெல்லாம் பெட்டிகளில் நிரப்பப்பட்டு சராசரியாக இரண்டு டொலருக்கே விற்கப்படுகின்றன.

இந்த மரக்கறிகளும் நமது நாட்டு மரக்கறிகள் போலல்லாது மதாளித்தவையாக பெரிய சைஸ்களில் இருக்கின்றன. ஓரிடத்தில் நம்மூர் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் விற்பனை செய்வதைப் போலத் தெரிந்தது. கையில் எடுத்துப் பார்த்தபோதுதான் அது கறிமிளகாய் எனத் தெரிய வந்தது. தேங்காய் பருமனில் கத்தரிக்காய் இருக்கிறது!

இவ்வாறே பழங்களும் கடுதாசிப் பெட்டிகளில் விற்பனை யாகின்றன. அப்பிள், வாழைப்பழம், முந்திரிகை, பியேர்ஸ், தோடம்பழம், பட்டர்புருட் இப்படியாகப் பலவகைப் பழங்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.

வேறொரு புறத்தில் இறைச்சி மீன் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனை செய்வோரும் கொள்வனவு செய்வோரும் சந்தையில் நிரம்பி வழிகின்றனர். தாய்மார்கள் குழந்தைகளைத் தள்ளுவண்டிகளில் வைத்துத் தள்ளிக்கொண்டு சந்தையைச் சுற்றி வந்து பொருட்களை வாங்குகிறார்கள்.

இவ்வாறு பெட்டிக்கணக்கில் கொள்வனவு செய்யும் பொருட்களை குளிரூட்டிகளில் வைத்து, மறுமுறை சந்தைக்கு வரும் வரை பாவிக்கின்றார்கள். பகல் ஒரு மணி ஆனதும் சந்தை கலைந்துவிடுகிறது. சரியாக ஒரு மணிக்கு சந்தையைத் துப்புரவு செய்வோர் அதற்கான உபகரணங்களுடன் வாகனங்களில் வந்துவிடுகின்றனர். ஒரு மணிக்குப்பின்னர் அவர்களுக்கு இடையூறாகச் சந்தையில் நின்று வியாபாரம் செய்து கொண்டிருந்தால், வியாபாரிகள் குற்றப் பணம் செலுத்தவேண்டி நேரிடும்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை நாட்களில் வீட்டுக்குத் தேவையான நானாவிதப் பொருட்கள் இங்கு விற்பனையாகின்றன. உடைகள், மின்சார உபகரணங்கள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் கடிகாரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிப் பெட்டிகள், கம்பியூட்டர்கள், விளையாட்டுப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் போன்ற பலவிதமான பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

முதல் நாள் மரக்கறிகளும் பழங்களும் விற்பனை செய்யப்பட்ட இடங்களில் மறுநாள் மேற்கூறப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளியே உள்ள கடைகளைவிட இச்சந்தையில் மலிவாகப் பொருட்கள் கிடைப்பதால் உள்ளுர்வாசிகளும் வெளி நாட்டவர்களும் இங்கு நிறைந்து காணப்படுகின்றனர்.

ஏறத்தாழ 500 மீட்டர் நீளமும் 200 மீட்டர் அகலமும் கொண்ட இந்தச் சந்தைக் கட்டிடம் ஒரே கூரையின் கீழ் அமைந் திருக்கிறது. இச் சந்தைக்கு வருவோர் தமது கார்களை நிறுத்து வதற்கென தனியான ‘கார்பார்க் இருக்கிறது. வார இறுதி நாட்களில் இச்சந்தைக்கு ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் வருகிறார்கள் என ஒரு கணிப்புக் கூறுகிறது. இந்தப் பாரிய சந்தையில் சுத்தமும் ஒழுங்கும் சிறந்த முறையில் பேணப்படுகின்றன.

 

 

நம்மூர்ச் சந்தைகள் என்றால் நிச்சயமாக அங்கு குப்பை கூழங்கள் நிறைந்திருக்கும். ஈக்கள் மொய்க்கும், துர்நாற்றம் வீசும். ஆனால் இங்கு குப்பை கூழங்கள் சிறந்த முறையில் அகற்றப்படு கின்றன. குப்பை போடுவதற்கென ஆங்காங்கே நாலடி உயரமான DUST BIN களை வைத்திருக்கிறார்கள். மக்களும் விதிகளைப் பேணி குப்பை கூழங்களை உரிய இடங்களிலே போடுகிறார்கள். அவை உரிய நேரத்தில் அகற்றப்பட்டு விடுகின்றன.

பிளமிங்டன் சந்தையிலிருந்து திரும்பும் வழியிலே அறிவித்தல் பலகை ஒன்று ஒரு கம்பத்தில் தொங்குவதைக் கண்டோம். "இங்கே குப்பை கொட்டினால் தண்டம் 200 டொலர்” என அங்கு எழுதப் பட்டிருந்தது. நம் நாட்டுப் பணத்தில் இது ஏறத் தாழ 9000 ரூபாய்!

சுகாதாரமும், சுகாதார சேவைகளும் அங்கு மிகவும் உயர்ந்த தரத்தில் உள்ளன. நமது நாட்டில் உள்ளது போன்று அரச வைத்திய சாலையில் சேவைபுரியும் ஒரு வைத்திய நிபுணர் தனியார் மருத்துவ நிலையங்களில் சேவை புரிய முடியாது. ஆனால் இங்கு பல வைத்திய நிபுணர்கள் (SPECIALIST) தனிப்பட்ட முறையில் மருத்துவ நிலையங்களை நடத்துகின்றனர். இவ்வாறே பல் வைத்திய நிபுணர்களும் தொழில் புரிகின்றனர்.

அவுஸ்திரேலியக் குடியுரிமை உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ வசதியுண்டு. MED CARE என்னும் ஓர் அட்டை இவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ நிலையங்களில் இந்த அட்டையைக் காட்டி இலவச மருத்துவ ஆலோசனைகளையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளும் மிகவும் உயர்ந்த தரத்தில் இயங்குகின்றன. CONCORD HOSPITAL என்னும் அரசாங்க ஆஸ்பத்திரியில் எனது உறவினர் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமை புரிகின்றார். அவரது உதவியுடன் அந்த ஆஸ்பத்திரியை சுற்றிப் பார்த்தேன். அங்கு சகல வைத்தியத் துறைப் பிரிவுகளும் இருக்கின்றன. இது வைத்திய மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் TEACHINGHOSPITAL.

நமது இலங்கையைச் சேர்ந்த 23 வைத்தியர்கள் இங்கு தொழில் புரிகிறார்கள் என்பதை அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தூர இடங்களிலிருந்து நோயாளிகளைக் கொண்டு வருவதற்கு அம்புலன்ஸ் வண்டிகளோடு ஹெலிகொப்டர்களையும் சேவையில் ஈடுபடுத்துகிறார்கள்.

சிட்னி நகரில் உள்ள மிகப் பழமை வாய்ந்த வைத்திய Frtsso ROYAL PRINCE ALFRED HOSPITAL gub. 204 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த வைத்தியசாலை விக்டோரியா மகாராணி காலத்தில் கட்டப்பட்டது. 820 படுக்கைகளைக் கொண்ட இந்த வைத்திய சாலையில் இருதய அறுவைச் சிகிச்சை உட்பட பலதரப்பட்ட உயர் வைத்திய சேவைகளும் உள்ளன. சிட்னி பல்கலைக்கழக வைத்திய மாணவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக் கின்றார்கள்.

 

சிட்னியா? மெல்பேர்னா? எதைத் தலைநகராக்குவது? ஒன்பது வருடங்கள் நீடித்த பிரச்சினை.

சிட்னியிலிருந்து நாலரை மணிநேரம் பயணம் செய்தால் அவுஸ்திரேலியாவின் தேசியத் தலைநகரமான "கன்பெரா'வை அடையலாம். காலை நேரங்களில் தினமும் உல்லாசப் பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்கள் நகரின் மத்தியிலிருந்து கன்பெராவை நோக்கிப் புறப்படுகின்றன. அந்த பஸ்களில் ஒன்றில் நானும் மனைவியும் ஏறிக்கொண்டோம். இதில் பஸ் ஒட்டுநர்களே பயணிகள் வழிகாட்டியாகவும் செயற்படுகின்றனர். பஸ் ஓடிக் கொண்டிருக்கும் போதே பயணிகளுக்கு வேண்டிய விளக்கங்களை அவ்வப்போது சிறிய ஒலிபெருக்கிமூலம் பஸ் ஒட்டுநர் கூறிக்கொண்டே வந்தார்.

கன்பெரா தலைநகர் அமைந்திருக்கும் இடத்தில் வெகு காலமாக ஆதிவாசிகளான அபோர்ஜினிஸ் மக்களே வாழ்ந்து வந்தனர். 1820ம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் இப்பகுதியைத் தம தாக்கிக்கொண்டனர். அதன்பின்னர் அங்கு துரித கதியில் குடி யேற்றங்கள் நிகழ்ந்தன. ஆதிவாசிகளின் பாஷையில் கன்பெரி' (CANBERRY) என்றால் மக்கள் கூடும் இடம். அதுவே திரிபுபெற்று இப்போது கன்பெராவாக நிலைத்துவிட்டது.

அவுஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களுக் கும் தனித்தனியாகக் குட்டித் தலைநகரங்கள் இருக்கின்றன. நியூசவுத்வேல்ஸ் மாநிலமே முதன் முதலாக உருவாக்கப்பட்ட மாநிலம். இதன் தலைநகரான சிட்னியில் இருந்தே ஆரம்பத்தில் அரசாங்க நிர்வாகங்கள் நடைப்பெற்றன.

1901ம் வருடத்தில் மாநிலங்களுக்குச் சுயாட்சி அளிக்கப் பட்ட பின்னர் தேசியத் தலைநகராக எதனைக் கொள்வது என்ற பிரச்சனை உருவெடுக்கத் தொடங்கியது. விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்பேர்ன் நகரைத் தேசியத் தலைநகராக்க வேண்டு மென அந்த மாநில ஆட்சியாளர்கள் கூறினர்.

சிட்னியா? மெல்பேர்னா? எதைத் தலைநகராக்குவது என்ற பிரச்சினை போட்டியாக உருவெடுத்து ஒன்பது வருடங்கள் முடிவுகாண முடியாது நீடித்தது. கடைசியில் இருநகருக்கும் நடுவே யுள்ள கன்பெராவை தலைநகராக்குவது என்று முடிவு செய்தார் களாம். இதனைத் தொடர்ந்து 1913ல் 2400 சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பரப்பில் புதிய தலைநகரின் நிர்மாணம் ஆரம்பிக்கப் பட்டது.

பஸ் ஓர் அழகிய சோலையின் முன் நிறுத்தப்பட்டது. ஒட்டுநர் விளக்கம் அளித்தார். “கன்பெராவில் நீங்கள் எங்கு திரும் பினாலும் அழகிய சோலைகளைக் காணலாம். தனியார் பூந் தோட்டங்களும் இங்கு அதிக அளவில் இருக்கின்றன. இதற்குக் காரணம் இங்கு நிலவும் காலநிலைதான். வசந்த காலத்தில் எங்கு பார்த்தாலும் பூக்கள் பூத்துக் குலுங்கும். கோடை காலத்தில் பச்சைப் பசேலென நிழல் தரும் கரும்பச்சை இலைகள் நிறைந்திருக்கும். குளிர்காலம் வந்துவிட்டால் மரங்களும் இலைகளும் பனிபடர்ந்து வெள்ளி ரேகைகளாக ஜொலிக்கும். இலையுதிர் காலத்தில் இலை களில் பழுப்பு நிறம் தோன்றும். அவை பின்பு தீச்சுடர் நிறமாய் மாறும். இப்படியாக நீங்கள் எந்தக்காலத்தில் இங்கு வந்தாலும் மரஞ்செடிகளின் அழகில் லயித்துப் போவீர்கள். சோலைகளினதும் பூந்தோட்டங்களினதும் அழகை இரசிப்பதற்கென்றே ஒவ்வொரு வருடமும் இருபது லட்சம் உல்லாசப் பயணிகள் இங்கு வரு கிறார்கள்" என்றார்.

அப்போது ஓர் உல்லாசப்பயணி என்னை நெருங்கி வந்து "நீங்கள் ஒரு பூரீலங்கன் என நினைக்கிறேன்.” எனக் கூறிப் புன்னகைத்தார்.

நான் ஆச்சரியத்துடன் "ஆமாம்" என்ற பாவனையில் தலையாட்டினேன்.

"நீங்கள் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கும் ‘நோட்' புத்தகத்தின் முகப்பில் ரீலங்காவின் படம் இருக்கிறது" எனக் கூறியவர், தன்னை ஓர் அமெரிக்கர் என அறிமுகப்படுத்தினார்.

நான் அவரது கையைப் பற்றிக் குலுக்கியபோது "இரண்டு தடவை உங்கள் நாட்டுக்கு நான் விஜயம் செய்திருக் கிறேன், உங்களது நாட்டில் என்னைப் பெரிதும் கவர்ந்த இடம் நுவரெலியா. மலைகளும் குன்றுகளும், பசுமை நிறைந்த தேயிலைத் தோட்டங்களும், வளைந்து நெளிந்து செல்லும் தெருக்களும், மலைகளைத் தழுவும் மேகங்களும், அங்கு நிலவும் சுவாத்தியமும் "என்வாழ்நாளில் என்றுமே மறக்கமுடியாதவை. உலகின் இயற்றை அழகு மிகுந்த இடம் எதுவென்று என்னைக் கேட்டால் அது யூரீலங்காவில் இருக்கும் நுவரெலியாதான் என்பேன்" என்றார் அந்த அமெரிக்கர்.

அவர் அப்படிக் கூறியபோது எனக்குப் பெருமை தாங்க வில்லை. ஒரு வெளிநாட்டவர், அதுவும் சகல துறைகளிலும் முன்னேறிய ஒரு நாட்டைச் சேர்ந்தவர், பல நாடுகளைச் சுற்றி பார்த்த ஒருவர், நமது நாட்டின் அழகைப்புகழ்ந்து கூறுவ தென்றால். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

"நீங்கள் இலங்கையில் வேறு எந்தெந்த இடங்களுக்குச் சென்றீர்கள்?" என அவரிடம் கேட்டேன்.

"கொழும்பு, கண்டி, காலி, ஹிக்கடுவை, இப்படிப் பல இடங்களுக்கும் சென்றேன். ஆனாலும் நுவரெலியாவின் அழகுக்கு எந்த இடமும் நிகராகாது" என்றார்.

பஸ் மீண்டும் புறப்பட்டது. பஸ் ஒட்டுநர் தொடர்ந்தும் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.

“உலகில் உள்ள நவீன முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரங்களில் கன்பெராவும் ஒன்று. உலக யுத்தங் களினாலோ அல்லது இயற்கை அனர்த்தங்களினாலோ பாதிக்கப் படாத நகரம் இது. இங்கே "மொலங்கோ' என்ற நதி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நதியிலிருந்து பிறந்த ‘பெர்லி கிறிபின்’ வாவி நகருக்கு அழகூட்டுகிறது. இந்த நகரை இவ்வளவு சிறப்பாகத் திட்டமிட்டு வடிவமைத்தவர் “வால்டர் பெர்லி கிறிபின் (WALTER BURLEY GRIFFIN) என்ற தொழிநுட்பவியலாளர். இன்று இந்த அழகிய நகரிலே மூன்று லட்சம் மக்கள் இருக்கிறார்கள்."

பஸ் கன்பெராவிலுள்ள புதிய பாராளுமன்றத்தின் முன்னே நிறுத்தப்பட்டது. தூரத்திலிருந்து பார்க்கும்போதே அதன் பிரமாண்டம் நம்மைப் பிரமிக்கவைத்தது. இந்தப் பாராளுமன்றத்தின் முன்னேயுள்ள முற்றத்தில் ‘கிறனைற் கற்களால் வனையப்பட்ட மிக அழகான சித்திரவேலைப்பாடு காணப்படுகிறது. சந்திக்கும் இடம் (MEETING PLACE) யீடாகக் கொண்டுள்ளதென பஸ் ஒட்டுநர் விளக்கினார்.

இந்தச் சித்திரவேலைப்பாடை வடிவமைத்தவர் அவுஸ் திரேலியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சித்திரக் கலைஞர் மைக்கேல் ஜெகமரா நெல்சன்." பாராளுமன்றத்தின் அருகே 81 மீற்றர் உயரமுள்ள கொடிமரத்தில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தின் உள்ளே செல்லும் வாயிலைக் குருத்துப் பச்சை நிற மாபிள்களால் வேயப்பட்ட 48 தூண்கள் தாங்கிநிற்கின்றன. இந்த வாயிலின் ஊடாக மக்கள் உள்ளே சென்று பார்க்க அநுமதிக்கப்படுகிறார்கள். வருடம் 365 நாட்களும் இந்தப் பாராளுமன்றம் மக்களின் பார்வைக்காகத் திறந்து விடப் படுகிறது. இந்தக் கட்டித்த்ை நிர்மாணிக்க நூறு கோடி அவுஸ் திரேலிய டொலர் செலவிடப்பட்டதாக அறியப்படுகிறது.

உள்ளே மக்கள் பிரதிநிதிகள்கூடும் மண்டபம், செனற் சபை, முதலியன அழகான முறையிலே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாராளுமன்றத்தை மாட்சிமைதங்கிய இரண்டாவது எலிசபெத் மகாராணி 09.05.1988ல் திறந்து வைத்தார் என்ற வாசகமும் அங்கே காணப்படுகிறது. ஒரு பகுதியில் புதிய பாராளுமன்றத்துடன் தொடர் பான படங்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், பிற நாட்டினரால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஆகியன சேகரித்துப் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய பாராளுமன்றத்திலிருந்து சிறிது தூரத்தில் வாவியின் அருகே பழையபாராளுமன்றம் இயங்கிவந்தது. 1927ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இப்போது கூட்டங்கள் நடை பெறும் மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது.

கன்பெரா நகரிலேதான் பல நாட்டுத் தூதராலயங்கள், தேசிய நூலகம், திறைசேரி, தேசிய கலைக்கூடம், உயர்நீதிமன்றம், பிரதமர் இல்லம், இராணுவப் பயிற்சிச்சாலை, தேசிய நூதனசாலை, பல்கலைக்கழகங்கள் ஆகியனவும் அமைந்துள்ளன.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் இங்கு கன்பெரா பண்டிகை கொண்டாடுவார்களாம். கன்பெரா நகரின் பிறப்பினைக் குறிக்கும் இப்பண்டிகை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இக் காலத்தில் கலை நிகழ்ச்சிகள், சித்திரக்கண்காட்சிகள், வாண வேடிக்கைகள், தெருவூர்தி ஊர்வலங்கள் முதலியன நடை பெறுவதாக அறியப்படுகிறது. பண்டிகையின் உச்சக்கட்ட நிகழ்ச்சி யாக மிகப் பெரிய பலூன்களை ஆயிரக் கணக்கில் ஆகாயத்தில் பறக்கவிடுவார்கள். பலவர்ணங்களில் அமைந்த இந்த பலூன்களை ஒரு விடியற் காலைப்பொழுதில் புதிய பாராளுமன்ற வாயிலில் பறக்கவிடுவார்களாம்.

கன்பெராவில் இருந்து திரும்பும்போது பஸ்ஸில் எனக்கு அறிமுகமான அமெரிக்க நண்பர் என் அருகே அமர்ந்து என்னுடன் உரையாடிக்கொண்டே வந்தார். அப்போது தன்னைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலையும் என்னிடம் கூறினார். தனது மனைவி ரீலங்காவை சேர்ந்தவள் என்றும் அமெரிக்க சர்வகலாசாலை ஒன்றில் தாங்கள் சந்தித்துக் கொண்டதாகவும் தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறினார்.

அன்று அவர் என்னிடம் விடைபெறும்போது, "நண்பரே, கன்பெரா நகரை இவ்வளவு திறமையாக வடிவமைத்த WATER BURLY GRFFIN பற்றிய ஒரு தகவலை நான் உங்களுக்குக் கூற வேண்டும். அவர் ஓர் அமெரிக்க நாட்டவர், இந்தத் தகவலை கூறுவதற்கு ஏனோ இந்த வழிகாட்டிகள் தவறிவிடுகிறார்கள். உங்கள் நோட் புத்தகத்தில் இதனையும் குறித்துக் கொள்ளுங்கள்” எனக்கூறி என்கைகளைப் பற்றிக் குலுக்கி விட்ைபெற்றார்.

 

 

 

1850ஆம் ஆண்டிலேயே அவுஸ்திரேலியாவில் குடியேறத் தொடங்கிவிட்ட தமிழர்கள்.

அவுஸ்திரேலியாவில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் தமிழர்கள் குடியேறியிருப்பதாக அறியப்படுகிறது. தமிழர்களது அவுஸ்திரேலியக் குடியேற்ற வரலாற்றை நோக்கும்போது, இற்றைக்கு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் 1850ம் ஆண்டில் எழுபத்தைந்து தமிழர்கள் சிட்னி, பிறிஸ்பேன் ஆகிய நகரங்களிலுள்ள அச்சுக் கூடங்களில் வேலை செய்வதற்காக சென்னையிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர். அதே காலப்பகுதியில் குவின்ஸ்லாண்ட் என்னும் இடத்திலுள்ள கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்வதற் கென இலங்கையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர் களில் சில தமிழர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இருநூறு தமிழர்கள் டார்வின் நகரில் புகையிரதப் பாதைகள் நிர்மாணிக்கும் வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து அழைத்துச்செல்லப்பட்டனர்.

1915ல் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓர் இளவரசர் சிட்னி நகருக்கு வந்து, மெல்பேர்ன் நகரைச் சேர்ந்த அழகியொருத்தியைத் திருமணம் செய்தார் எனவும், அவர்களது மகனின் பெயர் சிட்னி மார்டான்ட் தொண்டமான்’ (SYDNEY MARTANDTHONDAMAN) எனவும் அறியப்படுகிறது. இரண்டாவது உலகப் போர் நடந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பெறுவதற்காக புலமைப்பரிசில் பெற்று பல தமிழ் மாணவர்கள் அங்கு சென்றுள்ளார்கள். 1966ல் அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் கல்வித் தகைமை உடையவர்களுக்கு அந் நாட்டுப் பிரசாவுரிமை வழங்கியது. அக்காலப்பகுதியிலும் ஒரு சிறு பகுதியினர் அங்கு சென்று குடியேறினர். ஆனாலும் கடந்த இருபத் தைந்து வருட காலப்பகுதியிலேயேதான் தமிழர்கள் அங்கு அதிகளவில் குடியேறினர். இக்குறுகிய காலப்பகுதியில் குடி யேறியவர்களை மூன்று பகுதியினராக வகைப்படுத்தலாம்.

இந்தியாவிலிருந்து நூற்றைம்பது வருடங்களுக்கு முற்பட்ட காலப் பகுதியில் தென் ஆபிரிக்கா, பீஜித்தீவுகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குத் தொழில் தேடிச் சென்ற தமிழர்களது பரம்பரையினரிற் சிலர் இப்போது அந்நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் ஒரு சாரார்.

மற்றொரு சாரார் இந்தியாவிலிருந்து நேராக அவுஸ் திரேலியா சென்றவர்கள். இவர்கள் உயர்கல்வி பெறுவதற்காகவோ அல்லது தொழில் நிமித்தமாகவேர் அங்கு சென்று நிரந்தரமாகக் குடியேறியவர்கள்.

பிறிதொரு சாரார் நமது இலங்கைத் தமிழர்கள். 1983ன் பின்னர் இனக் கலவரத்தினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகப் புலம் பெயர்ந்து அங்கு சென்றவர்கள். இவர்களிற் சிறு பகுதியினராக இந்திய வம்சாவழித் தமிழரும் அடங்குவர்.

இவ்வாறு பல நாடுகளிலிருந்தும் சென்று குடியேறிய தமிழர்கள், தமது மொழி, கலை, கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்படுகிறார்கள். ஆனாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த மூன்று சாராரும் தனித்தனிக் குழுக்களாக இயங்குவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சிட்னி நகரை ஒட்டிய பகுதிகளில் தென் ஆபிரிக்கத் தமிழர்கள், பீஜித் தமிழர்கள் சிலர் வாழ்கிறார்கள். இவர்கள் மற்றத் தமிழர்களுடன் அதிகம் கலந்து கொள்வதாகத் தெரியவில்லை. ஹோம்புஷ் பகுதியிலுள்ள தமிழர் கடையொன்றில் ராமன் என்னும் பெயர்கொண்ட பீஜித் தமிழர் ஒருவரைச் சந்தித்து உரையாடினேன். அவர் திக்கித் திக்கித் தமிழ் பேசினார். இடையிடையே ஹிந்திச் சொற்களும் அவரது பேச்சில் கலந்திருந்தன. இந்திய கலாசார நிறுவனம்' என்ற அமைப்பினை தாங்கள் உருவாக்கி இருப்பதாகவும் இதில் தென்ஆபிரிக்க, பீஜித்தமிழர்களே அங்கம் வகிப்பதாகவும் கூறினார். தீபாவளி, பொங்கல் போன்ற சமய நிகழ்ச்சிகளையும், ஒன்று கூடல்களையும் தாங்கள் இங்கு நடத்திவருவதாகக் கூறினார். அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களில் இவர்கள் சிறு பகுதியினரே. மதம், மொழி போன்ற உணர்வுகள் இவர்களிடையே குறைவாகவே காணப்படுகின்றன.

இந்தியத் தமிழர்கள் சிலர் ஒன்றிணைந்து 1977ம் ஆண்டில் பாலர் மலர்' என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதுவே அவுஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழர் அமைப்பு எனக் கருதப்படுகிறது. இங்கு வார இறுதியில் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. தமிழர்தம் மொழி, கலை, கலாசாரங் களைப் பேணிக்காக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் "பாலர் மலர்’ அமைப்பு தற்பொழுது பரந்துபட்ட ரீதியில் மிகவும் சிறப்பாக இயங்கிவருகிறது.

இப்போது சிட்னியில் மட்டும் ஏழு வார இறுதித் தமிழ்ப் பாடசாலைகள் இயங்கிவருகின்றன. அவுஸ்திரேலிய அரசாங்கம் இப்பாடசாலைகளுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. இப்பாட சாலைகளுக்குப் பொதுவான ஒருபாடத்திட்டத்தை வகுப்பதற்கென ‘நீயூ சவுத்வேல்ஸ் தமிழ்ப்பாடசாலைகள் சம்மேளனம்’ என்ற ஸ்தாபனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஸ்தாபனத் தில் இலங்கை இந்திய தமிழ் அறிஞர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளின் வாழும் சூழலுக்கு ஏற்ப பாடநூல்களைத் தயாரிப்பதில் இவர்கள் ஈடுபட் டுள்ளனர். இவ்வாறு பாடநூல்களைத் தயாரிப்பதில் சில சிக்கல் களை எதிர் நோக்கவேண்டியுள்ளதென ஒரு பாடநூற் தயாரிப்பாளர் குறிப்பிட்டார். உதாரணமாக “தேதி” என்று இந்தியாவில் வழங்கப்படும் சொல் இலங்கைத் தமிழரால் திகதி’ என்று வழங்கப்படுகிறது. இவற்றில் எது சரியெனப் பாடநூலில் சேர்ப்பது? இதே போன்று டி.வி (TV) என்ற சொல்லைப் பாடநூலில் தொலைக்காட்சி' என்று குறிப்பிடலாமா? உரையாடலின்போது எவரும் தொலைக்காட்சி என்று சொல்வதில்லையே இதனால் சிறுவர்களுக்கு குழப்பம் ஏற்படுமல்லவா? இது போன்று பல பிரச்சினைகள் பாடநூல்களைத் தயாரிக்கும்போது எதிர்நோக்க வேண்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையிலிருந்து சென்ற தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் தமிழ் மொழியையும் பாரம்பரியங்களையும் பண்பாட்டு அம்சங்களையும் பேணிப்பாதுகாப்பதில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர் 6ւյւ6ն செயற்பட்ட போதிலும் சாதி அமைப்பு முறையிலிருந்து விடுபட்டு விட்டதாகத் தெரியவில்லை. கோவில் வழிபாடுகள், பொது விழாக்கள் போன்றவற்றில் சாதிக் கட்டுப்பாடுகள் ஒழிந்துவிட்ட போதிலும் திருமண உறவுகள் ஏற்படுத்தப்படும்போது இந்தச் சாதி பார்க்கும் வழக்கம் முன்னிலைப் படுத்தப்படுகிறது. அத்தோடு சீதனம் வாங்கித் திருமணம் செய்யும் வழக்கமும் இங்கு வந்த பின்பும் தொடர்கிறது. எண்பதுகளின் பிற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் வந்து குடியேறிய ஓர் அன்பரிடம் நான் கதைத்துக் கொண்டிருந்த போது தனது இரண்டு பெண்பிள்ளைகளுக்குத் திருமணஞ்செய்து கொடுக்கும்போது சீதனமாக அவுஸ்திரேலியாவில் வீடுகள் வாங்கிக்கொடுக்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

நம்மவர்கள் புலம்பெயர்ந்து சென்ற இடமெல்லாம் இந்தச் சாதி பார்க்கும் வழக்கத்தையும் சீதனம் வாங்கும் பழக்கத்தையும் நடைமுறைப் படுத்திவருகின்றனர். 1992ல் ஜேர்மனியில், இலங்கைத் தமிழர்கள் ஒருசிலரிடையே சாதிச் சண்டைமுற்றி ஒரு நாள் முழுவ தும் தெருவில் நின்று தங்களுக்குள் குத்து வெட்டுகளில் ஈடுபட்டார் களாம். இவற்றையெல்லாம் பார்க்கும்போது நம்மவரிடையே சாதிப் பிரிவினையும் சீதன முறைமையும் இரத்தத்தில் ஊறிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

இனக் கலவரங்களினால் பாதிக்கப்பட்டு அவுஸ்திரேலியா சென்றவர்களில் அதிகமானோர் தமிழர்தம் போராட்ட நிகழ்ச்சிகளை அறிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள். அதேவேளையில் பல்வேறு இயக்கங்களின் ஆதரவாளர்களும் இங்கு இருக்கின்றனர்.

வன்னியில் நடைபெறும் போர்ச் செய்திகளும் இனப் பிரச்சினை தொடர்பான ஏனைய செய்திகளும் உடனுக்குடன் ‘இன்டர்நெட்’ மூலம் பெறப்பட்டு பிரசுரங்களாக வெளியிடப் படுகின்றன. இப்பிரசுரங்கள் தமிழர் கடைகளில் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணம் சேர்த்து அனுப்பும் நடவடிக்கைகளும் இங்கு நடைபெறுகின்றன.

நமது நாட்டில் வெளிவரும் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு ஆகிய பத்திரிகைகளின் வாரப்பதிப்புகள் இங்குள்ள தமிழ்க் கடைகளில் விற்பனையாகின்றன. இந்தியாவில் இருந்து வரும் குமுதம், கல்கி, ஆனந்த விகடன் உட்பட சகல சஞ்சிகைகளையும் பெறக்கூடியதாக இருக்கின்றது.

இங்கு தமிழ் வீடியோப் படங்கள் தாராளமாகக் கிடைக் கின்றன. இந்த வீடியோத்திரைப்படங்களைப் பார்ப்பதிலும், தமது பிள்ளைகளைப் பார்க்க வைப்பதிலும் நம்மவர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். தமிழையும் தமிழர் பண்பாட்டினையும் தாங்கள் அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவரவும் தமது பிள்ளைகள் அவற்றை அறிந்துகொள்ளவும் இந்த வீடியோப்படங்கள் பெரும் பங்காற்றுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

மறுபுறத்தில், பிழைக்க வந்த இடத்தில் மொழியாவது மண்ணாங்கட்டியாவது, பிள்ளைகள் படித்துப் பட்டம் பெற்று உயர் நிலையை அடையவேண்டும். தமிழ் மொழி அதற்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. நேரம்தான் விரயமாகும் என்ற எண்ணத்தோடு செயற்படுபவர்களும் இங்கு இருக்கிறார்கள்.

அவுஸ்திரேலியாவில் இலக்கிய முயற்சிகள் எவ்வா றுள்ளன எனப் பார்க்கும்போது அவை மிகவும் திருப்திகரமான தாகவும் உற்சாகம் வட்டும் வகையிலும் அமைந்திருக்கின்றன. எழுத்தாளர் எஸ்.பொ., மாத்தளை சோமு, கலிஞர் ஆல்பி ஆர் விஜயராணி, பாமினி செல்லத்துரை, கன்பெரா மேகநாதன், மகேசன், மாவை நித்தியானந்தன், கலாநிதி கந்தையா, பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், முருகபூபதி, நட்சத்திரன் செவ்விந்தியன் ஆகி யோரின் படைப்புகள் நூல்வடிவில் வந்துள்ளன.

சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, சிறுவர் இலக்கியம், நாடகம், விமர்சனம், ஆய்வு எனப் பல்வேறு ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உதயம், ஈழமுரசு (அவுஸ்திரேலியப் பதிப்பு) தமிழ்முரசு ஆகியவற்றில் பல புதிய எழுத்தாளர்கள் தரமான ஆக்கங்களை எழுதிவருவதைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது.

இலங்கைத் தமிழரின் வருகையின் பின்னர் அவுஸ் திரேலியாவில் பல பொதுத் தமிழ் அமைப்புகள் தோன்றலாயின. இந்த அமைப்புகள் பரந்த அளவிலே கலை இலக்கிய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்திவருகின்றன.

‘உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஐந்தாவது மாநாட்டை 1992 அக்டோபர் மாதத்தில் சிட்னி நகரிலே சிறப்பாகக் கொண்டாடினார்கள். இதனை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அவுஸ்திரேலியக் கிளை அங்கத்தவர்கள் முன்னின்று நடத்தினர். உலகெங்கிலுமுள்ள தமிழ் அறிஞர்கள் பலர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பல தமிழ் அறிஞர்கள் அவ்வப்போது அவுஸ்திரே லியாவுக்கு விஜயம் செய்து சொற்பொழிவாற்றி வருகின்றனர்.

பல நாடக மன்றங்களும் இங்கு சிறந்த முறையிலே இயங்கி வருகின்றன. நாடகக் கருத்தரங்குகள் அடிக்கடி நடை பெறுகின்றன. அண்ணாவியார் இளைய பத்மநாதனின் வழிகாட்டலில் நாட்டுக் கூத்துகளும் இடம்பெறுகின்றன.

பல இடங்களிலே இசை நடன வகுப்புகள் நடை பெறுகின்றன. இவற்றில் சில அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இந்திய இலங்கைக் கலைஞர்களால் நடத்தப்படு கின்றன. இசை நடன வகுப்புகளில் இளந்தலைமுறையினர் மிகுந்த ஆர்வத்தோடு கற்றுவருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இசை நடனக் கலைஞர்கள் பலர் தமிழகத்தில் இருந்தும் இலங்கையில் இருந்தும் வருகைதந்து இங்கு பல கலை நிகழ்ச்சி களை நடத்துகின்றார்கள்.

 

புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களின் எண்ணங்களிலிருந்து.

இந்தியா சென்றிருந்த எழுத்தாளர் எஸ்.பொ. அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பிவிட்டார் என்ற செயதி எனக்குக் கிடைத்தது. அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மிகவும் மகிழ்வுடன், தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார்.

எஸ்.பொ. அவர்கள் நமது நாட்டின் மூத்த தலைமுறை எழுத்தாளர். சொல்வளமும், பொருட்செறிவும், கலை நயமும், கருத்தாளமும் நிறைந்த தலைசிறந்த படைப்புகளை ஆக்கியவர். இவரது தமிழ் நடை தனிச் சிறப்புடையது. 1946ல் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை பல நூல்களை ஆக்கியுள்ளார்.

எஸ்.பொ. அவர்களை சந்தித்து அவரிடம் ஒரு விரிவான பேட்டியைப் பெற்றுக் கொண்டேன்.

"புலம்பெயர்ந்த தமிழர்களே 21ம் நூற்றாண்டில் தமிழையும் இலக்கியத்தையும் முன்னெடுத்துச் செல்லப்போகிறார்கள்." என்ற கருத்தில் இவர் திடநம்பிக்கை உடைய்வராக இருக்கிறார். இக்கருத்தை இவர் முன்வைத்தபோது தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. இது தொடர்பாகப் பெரும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. தக்க சான்றாதாரங்கள் எதுவும் இன்றி இக்கருத்தை எஸ்.பொ. முன்வைக்கிறார் எனப் பலர் கூறினார்கள்.

இதுபற்றி நான் எஸ்.பொ. அவர்களிடம் கேட்டபோது, "இக்கருத்தினை நான் ஒரு கோஷமாக முன்வைக்கவில்லை. சில வருடங்களுக்கு முன் நான் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்த வேளையில், அங்குள்ள நிலைமைகளை நன்கு அவதானித்த பின்னரே எனது கருத்தினைக் கூறினேன். கடந்த கால் நூற் றாண்டுக்கு மேலாக தமிழ் நாட்டின் படைப்பிலக்கியம் தன் வீறினை இழந்திருக்கிறது. அவர்கள் சினிமா மாயைகளிலே மயங்கிக் கிடக் கிறார்கள். அரசியல் சினிமா இரண்டும் படைப்பிலக்கியத்திற்கு விரோதமான மயக்கங்களையும் சுவை உணர்வுகளையும் சுவை நெறிகளையும் ரசனை உணர்வுகளையும் ஏற்படுத்தியிருந்ததும் இதற்குக் காரணம். இந்த மாயைகளில் அவர்கள் மயங்கியிருந்தால் நிச்சயமாக படைப்பு இலக்கியத்தை வேறு ஒரு பகுதியிலிருந்துதான் நாங்கள் எதிர்பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு.

இன்னுமொன்று, போராடும் பொழுது இழப்புகள் ஏற்படும். புதிய சூழலிலே வாழும் பொழுது பல நோக்கள் ஏற்படும் பல தோல்விகள் ஏற்படும். பல சத்திய சோதனைக்குள் மனிதன் தன்னை உட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படும். இந்தப் போராட்டங்களைப் பற்றிச் சொல்வது இலக்கியத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். அத்தகைய ஒரு வாழ்க்கை முறையும் நெறியும் தமிழ் நாட்டில் இல்லை. இதனாலேதான் நான் 21ம் நூற்றாண்டில் படைப் பிலக்கியத்திற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் தலைமை தாங்கு வார்கள் என்று நிச்சயமாகக் கூறுகிறேன்." என்றார்.

நமது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளர்களில் திரு. முருகபூபதியும் ஒருவர். விக்டோரியா மாநிலத்தில் வாழும் அவருடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அப்போது அவர், "உங்களைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கின்றேன், கட்டாயம் வாருங்கள். இங்குள்ள எழுத்தாளர்கள் கலைஞர்களைச் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்கிறேன். இங்குள்ள இடங்களையும் சுற்றிக் காட்டுவேன்" என்றார்.

"ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டு மெனக் கூறுகிறார்களே, எப்படி வருவது?" எனத் தயக்கத்துடன் கூறினேன்.

"இந்தப் பயணம் ஒன்றும் பெரிதாகத் தோற்றாது. கொழும்பில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணம் போவதைப் போன்ற பயணம்தான் இதுவும். இப்போது நீங்கள் தங்கியிருக்கும் இடத்தி லிருந்து பத்து மணிநேரத்தில் இங்கு வந்துவிடலாம்” என உற்சாகம் கொடுத்தார்.

மறுநாள் காலை விக்டோரியா மாநிலத்திற்குச் செல்லும் பஸ் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டேன். நமது நாட்டில் நீண்ட தூரச் சேவையில் ஈடுபடுத்தப்படும், பஸ்களுக்கும் இங்குள்ள நீண்ட துார பஸ்களுக்கும் இடையில் பல வேறுபாடுகளை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இங்குள்ள பஸ்கள் மிகவும் பெரியவை. ஏறத்தாழ பதினெட்டு அடி உயரமும் முப்பத்திரண்டடி நீளமும் கொண்டவை. இரண்டு தட்டுகள் உள்ள இந்த பஸ்களில் இருக்கை களை நமது வசதிக்கேற்ப சரித்து, சாய்ந்து, நித்திரை செய்யவும் வசதிகள் உண்டு. இதில் தனியாகக் கண்டக்டர் கிடையாது. சாரதியே கண்டக்டராகவும் பணியாற்றுகிறார். அவருக்கு முன்னால் உள்ள ஒலிவாங்கியில் பயணிகளுக்கு வேண்டிய தகவல்களை அவ்வப்போது கூறிக்கொண்டே வருகிறார். இந்த பஸ்களில் மலசலசுவட வசதிகளும் இருக்கின்றன. மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் இந்த பஸ்கள் ஒடுகின்றன.

பஸ் புறப்படும்போது அங்குள்ள தொலைக்காட்சித் திரையில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் காட்டப்பட்டன. அதில், பயணிகள் தவறாது ஆசனப் பட்டிகளை அணிந்து கொள்ளவேண்டும், பஸ்ஸிலே உணவருந்தக் கூடாது, புகைத்தல் கூடாது, ஆசனத்தைப் பின்புறமாகச் சரித்துச் சாய்ந்து கொள்ளும் வழிமுறைகள் போன்ற விபரங்கள் அடங்கியிருந்தன.

‘கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதைப் போன்று இந்தப் பயணம் இருக்கும்" என்று முருகபூபதி சொன்னது சரியாகத்தான் இருந்தது. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் செல்லும் பஸ்களில் டி.வி யில் ஏதாவது சினிமாப் படம் காட்டுவார்கள். அதே போன்று அந்த பஸ்ஸிலும் ஒரு ஆங்கிலச் சினிமாப்படம் காண் பித்தார்கள். ஹாஸ்யம் நிறைந்த அந்தப் படத்தை பயணிகள் எல்லோரும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்து ரசித்துக் கொண் டிருந்தனர்.

நான் கண்ணாடியூடாக வெளியே பார்த்தேன். நாம் யாழ்ப்பாணம் செல்லும்போது காணக்கூடிய காட்சியைத்தான் காண முடிந்தது. மந்தை வெளிகளிலே மாடுகள் புல்மேய்ந்து கொண் டிருந்தன. சில இடங்களில் ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாகத் தெரிந்தன. பல இடங்கள் வெட்டை வெளியாகவும் சில இடங்கள் காட்டுப் பிரதேசமாகவும் காட்சியளித்தன.

இரவு ஏழு மணியளவில் நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதை சாரதி அறிவித்தார். பஸ் நின்றதும் சாரதியே இறங்கி வந்து, எனது கைப்பையை எடுத்து என்னிடம் கொடுத்தபோது, திரு.முருகபூபதி அருகே வந்து அதனை வாங்கிக் கொண்டார். அவரது மகன் முகுந்தனும் என்னை அழைத்துச் செல்வதற்காகத் தந்தையுடன் வந்திருந்தான்.

எண்பதுகளில் திரு.முருகபூபதி வீரகேசரிப் பத்திரிகையில் கடமையாற்றிய காலப்பகுதியிலேதான் அவரை நான் சந்தித்து உரையாடினேன். அவரது வெளிப்படையான பேச்சும், உளம் நிறைந்த சிரிப்பும், சம்பிரதாயங்கள் ஏதுமின்றி நெருக்கமாக உறவாடும் விதமும் என்னைப் பெரிதும் கவர்ந்த அம்சங்கள். இவையெல்லாம் அவரிடம் இன்றும் அப்படியே மாறாமல் இருக் கின்றன. காரைச் செலுத்திய வண்ணம் முருகபூபதி இலங்கை இலக்கிய நண்பர்கள் பற்றி விசாரித்தார். இலக்கியக் கூட்டங்கள், எழுத்து முயற்சிகள் ஆகியவற்றை ஆவலோடு கேட்டார். நான் அவருடன் தங்கியிருக்கும் இரண்டு நாட்களிலும் என்னை எங்கெங்கு அழைத்துச் செல்லப் போகிறார், யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்ற விபரங்களையெல்லாம் கூறிக்கொண்டே வந்தார்.

அவையெலலாம் என் மனதிலே பதியவில்லை. எனது எண்ணமெல்லாம், பிறந்த மண்ணைத் துறந்து அந்நிய நாட்டில் வாழும் ஒரு எழுத்தாளனின் மன உணர்வுகள் எவ்வாறு அமைந் திருக்கும் என்பதை அறிந்து கொள்வதிலேயே நிலைத்திருந்தது. அது பற்றி நான் அவரிடம் கேட்டபோது,

“எதிர்பாராத நிகழ்வுதான் இந்தப் புலம்பெயர்வு. எனினும், வாழ்வு இங்கும் வேர் தாயகத்திலுமாகப் படர்ந்திருக்கின்றோம். சொந்த பந்தங்கள் அற்ற அந்நிய மண்ணில் கிட்டிய நட்புகளே இங்கு சொந்தமும் பந்தமும். அவுஸ்திரேலியாவில் அப்பிள் பழம் கடிக்கும் பொழுது, தாயகத்தில் நம்மக்கள் தினம் ஒரு பழமாவது சாப்பிடும் காலம் வராதா என மனம் ஏங்குகிறது. சீரான வீதிகளிலே காரைச் செலுத்தும் போது இலங்கையிலும் இப்படி, மேடு பள்ளங்களற்ற ஒழுங்கான வீதிகள் எப்போது அமையும் என்ற வினா மனதில் எழுகின்றது. இங்குள்ள சட்டமும் ஒழுங்கும் அனைவருக்கும் பொதுவானவை என்பதை அநுபவ பூர்வமாக உணரும் போது இந்த நிலை அங்கு தோன்றாதா எனக் கேட்கத் தோன்றுகிறது.

தேர்தல் நடப்பதே தெரியாமல் அமைதி கட்டிக்காக்கப்பட்டு ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்பொழுது ஒருதுளி இரத்தம் சிந்தாமல் எங்கள் நாட்டில் எப்பொழுது தேர்தல் நடக்கும் என்ற கேள்வி எழுகின்றது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சியில் தணிக்கை ஏதும் இன்றி மக்கள் உண்மை அறியும் பொழுது, அதிகாரமும் மேலாதிக்கமும் கருத்துரிமையை அழிக்கும் வல்லமை அங்கு தொடருவதைக் காணும் பொழுது மனம் கொதிக்கிறது. இங்கு ஊறுகாய் முதல் உப்புமா வரை அனைத்தும் கிடைக்கலாம். ஆனால், எங்கள் மண்ணில் பாயில் படுத்துறங்கும் இன்பம் கிடைக்குமா? என்ற கேள்வி என்றும் மனதை நெருடிக்கொண்டே இருக்கிறது." என்றார்.

எழுத்தாளன் எப்பொழுதுமே சமூகத்துடன் தொடர்பு வைத் திருப்பவன். தனது எழுத்துக்கள் மூலமாகவோ செயற்பாடுகள் மூலமாகவோ தனது சமூகத்திற்கு நன்மை புரிபவன். இந்த வகையில் முருகபூபதி அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறுள்ளன என அறிய முயன்றேன்.

"தாயகத்தில் யுத்த அழிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நீங்கள் இங்கு வாழ்கிறீர்கள். இந்த அழிவுகளை நிறுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் எந்த வகையில் புலம்பெயர்ந்து வாழ்வோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நினைக் கிறீர்கள்?" எனக் கேட்டேன்.

"தாயக யுத்த அழிவுகளை நிறுத்த முடியாத நிலைதான் எமக்கு. எம்மிட மிருந்து கவலையும் அனுதாபமும் பெருமூச்சும்தான் வெளிப்படுகின்றன. பேசவேண்டியவர்கள் பேச வேண்டும். அரசியல் தீர்வு வரவேண்டும். யுத்தம் புரிந்து சமாதானம் தோன்றுமா? முதலில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். புலம் பெயர்ந்து வாழும் மக்களும் தாயகத்தில் அமைதி தோன்ற வேண்டுமென்றே பிரார்த்திக்கின்றனர். சில மேற்கு நாடுகள் கூட மத்தியஸ்தம் வகிக்கத் தயாராகியிருந்ததை அறிவோம். கொசோவாவில் அழிவு என்றவுடன் பூமிப் பந்தெங்கும் உள்ள பொதுசனத் தொடர்பு சாதனங்கள் விழி உயர்த்திப் பார்க்கின்றன. ஆனால் எமது இலங்கை நிலைமைகளை எட்டியும் பார்க்கத் தவறிவிடுகின்றன எனச் சொல்லும் நம்மவர்களை அவுஸ்திரேலியாவில் தினமும் சந்திக்கலாம். அதே சமயம் ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்களின் பாதிப்புணர்ந்து உதவும் கருணை உள்ளம் கொண்ட மக்கள் இங்கு இருக்கிறார்கள். இந்த மனிதநேயம் செத்துப் போகவில்லை. இயந்திரமயமான இரண்டகமான வாழ்வு வாழ்ந்த போதிலும் பாதிப்புற்ற மக்களுக்கு புனர்வாழ்வு அடிப்படையில் உதவும் மக்களில் அநேகர் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்."என்றார்.

“இலங்கை மாணவர் கல்வி நிதியம்" என்ற அமைப்பு 1989 ஜனவரி மாதத்திலிருந்து அவுஸ்திரேலியாவில் இயங்கி வரு கிறது. இந்த அமைப்பினை ஆரம்பித்து வைத்தவர் திரு.முருகபூபதி. இதன் தற்போதைய செயலாளராகவும் அவர் இருக்கிறார்.

இலங்கையில் தொடரும் யுத்த அழிவுகளால் குடும் பத்தின் முக்கிய உழைப்பாளியை இழந்து பரிதவிக்கும் பாதிப்புற்ற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் முகமாக இந்தக் கல்வி நிதியம் செயற்பட்டு வருகிறது. இந்த நிதியத்தின் மூலம் உதவி பெறும் சிறுவர்கள் பல்கலைக்கழகம் செல்லும்வரை அல்லது ஒரு தொழிலைத் தேடிக்கொள்ளும்வரை இந்த நிதியம் உதவுகிறது.

ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களே இந்த நிதியத்திற்கு உதவி செய்தார்கள். தற்போது, ஈழத் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடு களிலெல்லாம் இந்த நிதியம் கிளைபரப்பி சர்வதேச ரீதியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, சுவிட்சர் லாந்து, ஜேர்மனி ஆகிய இடங்களில் தற்போது இந்த நிதியத்தின் கிளைகள் இருக்கின்றன.

ஏறத்தாழ இருநூறு மாணவர்கள் இந்த நிதியத்தின் மூலம் தமது கல்வியைத் தொடர்வதற்கு உதவி பெற்றுக் கொண் டிருக்கிறார்கள்.

திரு.முருகபூபதி அவர்கள் இந்த நிதியத்தின் செயற்பாடுகளை விபரித்துக் கூறிக்கொண்டிருந்தார். அதைக் கேட்ட பொழுது, நம்மவர் இன்று புலம்பெயர்ந்து பூமிப்பந்தின் பலபாகங் களில் சிதறுண்டு வாழ்ந்தாலும் நமது மண்ணில் வேர் பாய்ச்சி வளர்ந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறையினரைப் பற்றி அக்கறை கொண்டு செயற்படுவதை எண்ணி எனது மனம் பூரிப் படைந்தது.

☆☆☆

 

 

 

புலம் பெயர்ந்த மண்ணில் தாய்மொழியை மறந்து போகும் இளைய தலைமுறையினர்

நண்பர் முருகபூபதி எனது வரவையொட்டி தனது இல்லத்தில் ஓர் இலக்கியக் கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தார். அவரது இல்லம் அமைந்திருக்கும் 'கிறெகி பேண்’ என்ற இடத்தில் ஐந்து தமிழ்க் குடும்பங்களே இருக்கின்றன. ஆனால் ஏறத் தாழ 90 சிங்களக் குடும்பங்கள் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது. சிங்களவர்களால் நடத்தப்படும் பலசரக்குக் கடைகளும் இங்கு உண்டு. இதே போன்று விக்டோரியாவின் தலைநகரான மெல்பேர்ன் நகரிலும் தமிழர்களைவிட சிங்களவர்களே அதிகமாக இருக்கின் றனர். 'கிறெகி பேண் நகரிலே புத்த விகாரை ஒன்றின் நிர்மாண வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

அன்றைய இலக்கியக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்களில் பலர் வெகு தூரத்திலிருந்தே வர வேண்டியிருந்தது. இதன் காரணமாக ஏழு மணிக்குத் தொடங்க விருந்த கலந்துரையாடல் எட்டு மணிக்கே ஆரம்பமானது.

திரு.முருகபூபதி தலைமை உரையை நிகழ்த்தி அந்தக் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார். அங்கு வந்தவர்களில் பலர் இலக்கியத்தோடும் தமிழோடும் தொடர்புடையவர்களாக இருந் தனர். எனினும் அன்றைய கலந்துரையாடலில் இலங்கையில் தற் போதைய அரசியல் நிலைமை பற்றியும் தமிழ் மக்கள் படும் கஷ்டங்கள் பற்றியும் அறிவதிலேயே அங்கிருந்தோரது ஆர்வம் அதிகமாக இருந்தது.

டாக்டர்.பொன். சத்தியநாதன் இங்கு ஒரு பிரபல வைத்தியராக இருக்கிறார். இவர் விக்டோரியா இலங்கை தமிழ்ச் &FIras (painwref 566)6.j. Ely alsoa5ub - TAMIL WORLD 676ip இருமொழி மாதப் பத்திரிகையை நடத்தியவர். தமிழ் மொழி ஆய்வில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கணனியில் தமிழ் ஒலி இலக்கண ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். அவரது பேச்சும் மூச்சும் தமிழாகவே இருந்தன. தனது தொழிலைத் துறந்து விரைவில் தான் ஒரு முழுநேர ஆய்வாளனாகத் தமிழுக்குத் தொண்டு புரிவதே தனது எதிர்கால இலட்சியம் எனவும் கூறினார். "மெல்லத்தமிழ் இனிச் சாகும்’ என்ற நிலைமை தோன்றாமல் இருக்க வேண்டுமெனில், தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராக இவர் இருக்கிறார்.

திரு.ழரீஸ்கந்தராஜா என்பவர் பிரபல சட்டத்தரணி. விக்டோரியா இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பதவியை வகிக்கும் இவர் 'தமிழ் உலகம்' பத்திரிகையின் ஆசிரியர். மட்டுநகர் ரீ என்ற பெயரில் கவிதைகளும் எழுதிவருகிறார்.

செல்வி பாமினி செல்லத்துரை விக்டோரியா இலங்கை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர். யாழ் வடமராட்சியைச் சேர்ந்த இவர் சிங்கப்பூரிலே தனது கல்வியைக் கற்று இப்போது அவுஸ் திரேலியாவாசியாக இருக்கிறார். இவர் ஓர் எழுத்தாளர். இவர் ஆங்கிலத்தில் எழுதிய நாவல் ஒன்று ‘சிதறிய சித்தார்த்தன் என்ற தலைப்பிலே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் நடேசன் என்பவர் உதயம் பத்திரிகையின் ஸ்தாபகர், ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர். இவர்களோடு எழுத்தாளர் அருண்விஜயராணி, பாரதி கல்லூரி அதிபர் - புவனா இராஜரட்னம், தமிழ் ஆசிரியரும் இலக்கிய ஆர்வலருமான திரு.எஸ்.சிவசம்பு, சட்டத்தரணி திரு.எஸ்.இரவீந்திரன், ஆனந்தவிகடன் பத்திரிகை ஊழியர் மலையப்பன், டாக்டர் எஸ்.ஏ.குணரத்தினம், நாடகக் கலைஞர் மாவை நித்தியானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களில் பல்வேறு அரசியல் கருத்துடையவர்களும் இருந்தமையால் கலந்துரையாடல் வலு காரசாரமாகவும் பயன் மிக்க தாயும் அமைந்தது. உங்களது பயணம் நல்ல பயணம். தமிழோடும் தமிழ்ப் பணிகளோடும் சம்பந்தப்பட்ட பலரை நீங்கள் இன்று சந்திக்கப் போகிறீர்கள் என நண்பர் முருகபூபதி ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந் தார். அவரது கூற்று முழுக்க முழுக்கப் பொருத்தமாக இருந்ததை நான் அங்கு கண்டேன்.

எமது கலந்துரையாடலில், புலம் பெயர்ந்தோர் இலக் கியம் பற்றிய கருத்துக்களும் பரிமாறப்பட்டன. புலம் பெயர்ந்தோர் இலக்கியங்கள் ஆரம்பத்தில் ஈழத்து மண்ணைப் பிரிந்து சென்ற ஏக்கங்களையும் மண்ணின் பிரச்சினைகளையும், இழப்புகளைப் பற்றியுமே பேசின. புலம் பெயர்ந்த இலக்கிய கர்த்தாக்கள் இப்போது இவைபற்றிப் பேசித் தீர்த்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

அவர்களது இலக்கியப் போக்கு இப்போது வேறொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அவர்கள் ஈழத்து மண்ணிலிருந்து அந்நியப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்போது தாம் புகுந்த மண்ணைப்பற்றிப் பேசத் தொடங்கி விட்டார்கள். அங்குள்ள வாழ்வியல் பிரச்சினைகள் அவர்களது எழுத்துக்களில் பிரதி பலிக்கத் தொடங்கிவிட்டன. தமது எதிர்காலச் சந்ததியினர் பற்றி அவர்கள் கவலை கொள்ளத் தொடங்கி விட்டார்கள். தமது பரம்பரையினரிடமிருந்து தமது மொழியும் கலாசாரமும் பண்பாடும் தொலைந்துவிடுமோ என அவர்கள் பயங்கொள்கிறார்கள்.

“மொழியென்பது ஒரு தொடர்பு சாதனக் கருவி மட்டுமல்ல. அது ஒரு இனத்தின் அடையாளச் சின்னமுமாகும். என்பது சமூக மொழியியல் ஆய்வாளர்களின் கருத்து. எனது கணிப்பின்படி அவுஸ்திரேலியாவிற்கு நம் நாட்டிலிருந்து சென்ற தமிழ் மக்கள், தாய் நாட்டுத்தொடர்பும் தமிழ் மொழிப்பற்றும் பண்பாட்டு உணர்வும் நீங்காத நிலையில் இருக்கிறார்கள். இவர்களி டையே தமிழ்மொழி பேணப்பட்டும் போற்றப்பட்டும் வருகிறது. இவர்கள் தமது வருங்காலத் தலைமுறையினரிடம் தமிழ் மொழி ஈடு பாட்டை வெளிப்படுத்தவும் தமிழ் அறிவை வளர்க்கவும் தமிழர்தம் பண்பாட்டுச் சிறப்பையுணர்த்தவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இவர்கள் முதலாவது தலைமுறையினர்.

இவர்களது பிள்ளைகளை நாம் இரண்டாம் தலைமுறை யினர் எனக் கருதினால், இப்பிள்ளைகள் தமக்கென்று ஒரு மொழி, ஒரு பண்பாடு இருக்கிறது என்ற மேலோட்டமான உணர்வுள்ளவர் களாக மட்டும் இருக்கிறார்கள்.

இந்த இரண்டாம் தலைமுறையினரில் 75 வீதத்தினர் வீட்டிலே தமிழ் பேசுவதில்லை. பதினைந்து வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் தமக்குள் உரையாடும்போது ஆங்கிலமொழியையே உபயோகிக்கின்றனர். இவர்களில் தமிழ்மொழியைப் பேசக்கூடிய பிள்ளைகள்கூட இப்படியான சூழ்நிலையிலே தமிழ் பேசுவதைத் தவிர்த்துக்கொள்கின்றார்கள்.

நம்நாட்டில் தமிழ்ச்சூழலிலே தமது ஆரம்பக் கல்வியை பெற்றுவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு வந்த ஓரளவு வளர்ந்த பதினைந்து வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளில் பெரும்பாலானோர் தமிழ் மொழியை நன்றாக பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

இந்த இரண்டாம் தலைமுறையினரில் தமிழ்மொழியிலே பேச வாசிக்க எழுதத் தெரிந்தவர்கள் பத்து வீதத்திலும் குறை வாகவே உள்ளனர். இவர்களின் வளர்ச்சியின் எல்லாப் படிகளிலும் ஆங்கிலம் முதலிடம் பெறுவதே இதற்கு காரணமாய் அமைகிறது.

திரு.முருகபூபதி அவர்களின் அநுபவம் ஒன்றினை அவர் மொழியிலே கீழே தருகிறேன்.

"கேள்விகளால் என்னைத் திணறடிக்கும் எனது மகன் அவுஸ்திரேலியாவுக்கு வரும்போது நான்கு வயது. அதன் பின்பே இங்கு பாடசாலைப் படிகளில் அவன் பாதம் படிந்தது.

தமிழும் ஆங்கிலமும் சரளமாகக் பேசுவான் (வீட்டில் ஆட்சிமொழி தமிழ்தான்). என்னோடு தோழமையுடன் பழகுவான். எனக்கும் அதுவே விருப்பம்.

இரவில் எனது அணைப்பு வேண்டும் அவன் உறக்கத்திற்கு. பிள்ளை வளருகிறான். தனியாக உறங்க விட்டுப் பழக் கினால் தான் தன்னம்பிக்கையோடு வளருவான் என்பதால் எனது அலுவலக அறையிலேயே அவனுக்குப் படுக்கை ஏற்பாடு செய்தேன். அந்த அறைதான் வீட்டில் சுவாமி அறை, பிள்ளையார், சிவன், முருகன், சரஸ்வதி, லெட்சுமி, துர்க்கை உருவப்படங்களும் சிலைகளும் அங்கு ஒரு மேசையை அலங்கரிக்கின்றன.

முதன் நாள், தனியாக அங்கே படுப்பதாக வாக்குறுதி தந்த மகன் நடுச்சாமத்திலேயே எழுந்து எனது படுக்கைக்கு வந்து விட்டான்.

தட்டி எழுப்பி, "அப்பா உங்களுடன் படுக்கப் போகிறேன்" என்றான்.

"என்னடா.” துயில் கலைந்த சோர்வுடன் கேட்டேன். "சிவபெருமான் கனவில் வந்து கதைக்கிறார், தூக்கம் போய்விட்டது. உங்களுடன் படுத்தால் தூங்கலாம்" என்றான்.

அவனை வியப்புடன் அணைத்துக் கொண்டு, “சிவ பெருமான் எப்படி இருந்தார்? என்ன சொன்னார்?" எனக் கேட்டேன்

"WHAT ARE YOU DONG LITTLE ONE?"  "நீ என்ன சொன்னாய்?"  "1 AMSLEEPING என்றேன், படத்தில் இருப்பதுபோல் காட்சி தந்தார்."

மகனுக்குக் கனவில் தோன்றிய சிவபெருமான் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார்.

யாதும் அறிந்த பரம்பொருள் உலகமொழிகளும் அறிந்திருக்கலாம்.

அப்படியானால் நோர்வேயில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ப் பிள்ளையிடம் நோர்வேஜியன் மொழியிலும் பிரான்ஸில் பிரெஞ்சிலும், ஜேர்மனியில் டொச்சிலும் டென்மார்க்கில் டேனிஷ் மொழியிலும் பேசுவார்.

மகன் கனவில் தோன்றிய சிவன் ஓர் உண்மையைப் போதித்து விட்டதாக உணர முடிகிறது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசி வாழும் எமது ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் அவர்கள் உறவினர்களாக இருந்தால் ஒரு நாள் தாயகத்தில் சந்திக்க நேர்ந்தால் பரஸ்பரம் என்ன மொழியில் பேசிக் கொள் வார்கள்?

தாயகம் செல்வதை விடுத்துவிட்டுப் பார்த்தாலும் ஜேர் மனியில் வாழும் பிள்ளை அவுஸ்திரேலியாவுக்கு வந்தால், தாய் மொழி மறந்திருப்பின் ஊடக மொழி ஏதுமின்றி ஊமைப் பாஷை பேச நேரிடுமா?

எங்கு வாழ நேர்ந்தாலும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் தமிழை மறக்காமல் இருந்தால் எதிர்காலத்தில் இந்தச் சங்கடங்களை எதிர்நோக்கத் தேவையில்லை என்பது உறுதி.”

புலம் பெயர்ந்து வாழும் பிள்ளைகள் ஏன் தமிழை மற வாமல் இருக்கவேண்டும் என்பதற்கான காரணத்தை திரு.முருக பூபதியின் கூற்று வலியுறுத்துகிறது.

ஆனால் நான் மேற்குறிப்பிட்ட சம்பவத்தை வேறுவிதமாக நோக்குகிறேன். அதற்குக் காரணம் உண்டு. முருகபூபதியின் மகன் முகுந்தனுக்கு இப்போது வயது பதினொன்று நான் அவர்களோடு இருந்த இரண்டு நாட்களிலும் அந்தச் சிறுவனுடன் நெருங்கிப் பழகினேன். அவனிடம் இருந்த நல்ல பண்புகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. பெரியோரைக் கனம் பண்ணுதல், விருந்தினரை உபசரித் தல், தெய்வ பக்தி போன்ற நற்குணங்கள் அவனிடம் நிறைந்திருந்தன. நண்பர் முருகபூபதி தனது மகனைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கு நல்ல முயற்சிகள் எடுத்திருக்கிறார் என்பது புரிந்தது. அவன் வீட்டிலும் விருந்தினர்களுடனும் தமிழில் கதைத்து, தமிழர்தம் கலாசாரம் பண்பாடு ஆகியவற்றைப்பேணி நடந்து, தமிழனாக வாழ்ந்தாலும் ஆங்கிலத்திலேதான் சிந்திக்கிறான். ஆங்கிலத்திலேதான் கனவு காண்கிறான்! அவனது அகமும் புறமும் வேறுபட்டு நிற்கின்றன.

அவன் வாழும் சூழல் அப்படி இதுவே இன்று புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களது பிரச்சனை. இழந்துவிட்ட தாய் மண்ணின் நினைவுகள் ஒரு புறம் வாட்ட மறுபுறத்தில் விலகிப் போகும் தலைமுறை பற்றிய பரிதவிப்பு அவர்களை வாட்டுகிறது. புலம் பெயர்ந்து வாழும் படைப்பாளிகளின் எழுத்துக்களும் இதையே இப்போது பேசுகின்றன.

அன்றைய கருத்தரங்கில் தமிழோடு தொடர்புடைய பலரைச் சந்தித்து உரையாடியது எனக்கு பெரிதும் மனநிறைவைத்.

 

 

பல்லவர்காலச் சமயச் செழிப்பை நினைவுகூரவைக்கும் சிவா விஷ்ணு கோயில்

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி. கோவில்கள் மனிதனது ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பாரம்பரிய கலை கலாசார விழுமியங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் வாழும் மாநிலங்கள் அனைத்திலுமே கோவில்களை அமைத்திருக்கிறார்கள். விக்டோரியா மாநிலத்தில் உள்ள 'கரம் டவுன்ஸ்" என்ற இடத்தில் அமைந் திருக்கும் சிவா விஷ்ணு ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் நண்பர் முருகபூபதி.

தூரத்திலிருந்து பார்த்தபோதே கோவிலின் பிரமாண்ட மான தோற்றம் தெரிந்தது. சிவன் விஷ்ணு ஆகிய தெய்வங்களின் கர்ப்பக்கிரகங்களுக்கு நேராக இரண்டு பெரிய கோபுர வாயில்கள் இக்கோயிலுக்கு உள்ளன.

உள்ளே நுழைந்ததும் மகா மண்டபத்தைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. ஏறத்தாழ ஆயிரம்பேர் ஒரே நேரத்தில் உள்ளே நின்று வழிபாடு செய்யக்கூடிய விஸ்தீரணத்துடன் இம் மண்டபம் அமைந்திருக்கிறது.

அர்ச்சனைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தில் ழரீராமன் ஐயர் என்பவரைச் சிந்தித்தோம். அவர் இப்போது கோவிலின் நாளாந்த நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருக்கிறார். அவருடன் அளவளாவியபோது அக்கோவிலைப் பற்றிய முக்கிய தகவல்களைத் தந்துதவியதோடு கோவிலின் மகாகும்பாபிஷேக மலரையும் ராஜகோபுர கும்பாபிஷேக மலரையும் நமக்கு அன் பளிப்புச் செய்தார்.

1981ம் ஆண்டில், நமது நாட்டுப் பாராழுமன்ற உறுப்பினர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் நியூசிலாந்தில் நடந்த ஒரு சர்வதேசக் கருத்தரங்கிலே கலந்துவிட்டுத் திரும்பும் வழியிலே மெல்பேர்ன் நகருக்கும் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த இலங்கை மக்களைச் சந்தித்து அளவளாவி, இந்துக்கள் தமது சமய அநுட்டானங்களை அநுட்டிக்கவும் வழிபாடுகள் செய்யவும், சமய விழாக்களை நடத்தவும் எத்தகைய வசதிகள் இங்கு இருக்கின்றன என ஒரு கேள்வியை எழுப்பினார். அது அங்குள்ள இந்துக்களின் மனதிலே ஒரு வித்தாக விழுந்தது. கோவில் ஒன்றை அமைப்பதே இதற்குச் சிறந்தவழி என அவர்கள் உணர்ந்தனர். காலப்போக்கிலே செயலிலும் இறங்கினர். 1982ல் ஒரு சரஸ்வதி பூஜைத் தினத்திலே விக்டோரியா இந்து சங்கம்' என்ற ஓர் அமைப்பு உருவாகியது. அக்காலத்தில் விக்டோரியா மாநிலத்தில் 200 இந்துக் குடும்பங்களே இருந்தன.

1985ம் ஆண்டு தமிழ் புதுவருடப் பிறப்பன்று 14.35 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள நிலத்தை இந்து சங்கம் கோவில் அமைப்பதற் காக வாங்கியது. அங்கு வாழ்ந்த இந்துக்களின் அயராத முயற்சி யால் நிலத்தைத் துப்புரவு செய்து 1988ஜுன் மாதத்தில் கோவிலுக் குரிய அடிக்கல் நாட்டு விழா சமயரீதியாக நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அன்பர்கள் கொடுத்த பண உதவி, வங்கிக் கடன், திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய வட்டியில்லாக் கடன் ஆகிய நிதியுடன் கோவில் நிர்மாண வேலைகள் நடைபெற்றன.

1994 மே மாதம் 22ம் திகதி இக்கோயிலின் கும்பாபி ஷேகம் இந்திய இலங்கைச் சிவாச்சாரியர்களால் சிறப்புற நடத்தி வைக்கப்பட்டது. இக்கும்பாபிஷேக விழாவிலே ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக அறிக்கைகள் கூறு கின்றன. இக்கோவிலின் ராஜகோபுர கும்பாபிஷேகம் 1997 மே மாதம் 25ம் திகதி நடைபெற்றது.

உலகின் தென்கோளப் பகுதியிலுள்ள மிகப் பெரிய கோவிலாக இக்கோவில் விளங்குகிறது.

பிரமாண்டமான இக்கோவிலில் நிருத்த கணபதி, சிவலிங்கம், தசஷ்ணா மூர்த்தி, லிங்கோற்பவ மூர்த்தி, பைரவர், நவக்கிரகங்கள், சண்டேஸ்வரர், சரஸ்வதி, லசஷ்மி, துர்க்கை, சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, பார்வதி, ஹரிஹர புத்திரன் ஆகிய விக்கிரகங்களும் விஷ்ணு, மகாலகூழ்மி, ராமர், சீதை, லசஷ்மணன், அனுமன், வராகமூர்த்தி, ஆண்டாள், பிரம்மா, நாரதர் ஆகிய விக்கிரகங்களும் இருக்கின்றன.

இக்கோவிலை மேலும் விரிவடையச் செய்ய பலவிதமான திட்டங்களை வகுத்துள்ளார்கள். கலாமண்டபம், நுழைவாயில், வயோதிபர் இல்லம், தீர்த்தக் கேணி ஆகியன அமைப்பதற்கு ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நான் அறிந்த வரையில் சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் சேர்ந்தாற்போல் இத்தகைய ஒரு பெரிய கோவில் இந்தியாவிலேகூட இருப்பதாகத் தெரியவில்லை.

பல்லவர் காலத்தில் இந்து சமயம் அதியுன்னத நிலையில் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. சைவ சமயத் தைச் சேர்ந்த நாயன்மார்களும் வைஷ்ணவ சமயத்தைச் சேர்ந்த ஆழ்வார்களும் ஒற்றுமையாக ஊர்ஊராகச் சென்று தேவாரங்களும் திருப்பாசுரங்களும் பாடி சமயத்தை வளர்த்தார்கள். சிவனது திரு வுருவத்தில் பாதியையும் விஷ்ணுவின் திருவுருவத்தில் பாதியையும் ஒன்றுசேர அமைத்து ‘சங்கரநாராயணன்' எனப் பெயரிட்டு வணங்கிய தாகவும் தெரிகிறது. அத்தகைய ஒரு சமய ஒற்றுமை அக்காலத்தில் நிலவியது. 'கரம் டவுன்ஸ் சிவா விஷ்ணு ஆலயத்தைப் பார்த்த பொழுது எனக்கு பல்லவர்காலத்தில் நிலவிய சமய ஒற்றுமைதான் நினைவில் வந்தது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் மதச் சுதந்திரம் சிறந்த முறையிலே நிலவுவதாக அறியமுடிகிறது. ஆனாலும், ஒரு சமயத்தவரது வழிபாட்டு முறைகள் மற்றச் சமயத்தவருக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் அக்கறையுடன் செயல்படுகிறது. கோவில்களில் எழுப்பப்படும் ஓசை மற்ற மதத்தவர் களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக நகரங்களில் இருந்து வெகு தூரத்திற்கு அப்பாலேயே கோயில்களை அமைக்க அநுமதிக்கிறார்கள். சிட்னி நகரில் துருக்கியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் மிகப் பெரிய ஒரு பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. அங்கு எழுப்பப்படும் 'பாங்கு ஓசையும் வெளியே கேட்பதில்லை.

 

 

ஆங்கிலம் படிக்கும் பெற்றோர்? தமிழ் படிக்கும் பிள்ளைகள்!

விக்டோரியா மாநிலத்தின் தலைநகராக விளங்குவது மெல்பேர்ன். இந்த நகரைப் 'பூங்கா நகர் (GARDENCTY) எனக் காரணப்பெயர் கொண்டு அழைக்கிறார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் இங்கே அழகிய மரங்களும் பூந்தோட்டங்களும் காணப்படுகின்றன. உலகில் உள்ள அத்தனை வகையான பூஞ் செடிகளும் இங்கு இருக்கின்றனவோ என எண்ணத்தோன்றுகிறது. விதம் விதமாகப் பூத்துக்குலுங்கும் பூஞ்செடிகளால் இந்த நகர் நிறைந்திருக்கிறது. உலகிலேயே அதிக பூந்தோட்டங்கள் நிறைந்த நகர் இதுவெனக் கூறுகிறார்கள்.

நகரின் மத்தியிலே ‘யாரா' என்னும் நதி ஓடுகிறது. இந்த நதிக்கரையிலே பன்னெடுங்காலமாகப் பழங்குடி மக்களே வாழ்ந்து வந்தனர். 1835ம் ஆண்டு "ஜோன் பாற்மன்' என்னும் ஆங்கிலேயரும் அவரது சகாக்களும் அங்குவந்து குடியேறி ஒரு கிராமத்தை அமைத்தனர். இதன் காரணமாக இந்த நகருக்கு ‘பாற்மேனியா என்ற பெயரே முதலில் வழங்கிவந்தது. பின்னர் மெல்பேர்ன் எனப் பெயர் மாற்றம் செய்தார்கள். 1850ம் ஆண்டில் இந்நகரம் விக்டோரியா மாநிலத்தின் தலைநகராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதே காலப்பகுதியில் இங்கு தங்கம் கண்டுபிடிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து இந்நகரம் சிறந்த முறையிலே கட்டியெழுப்பப்பட்டது. அதற்கு வேண்டிய செல்வம் தங்கச் சுரங்கங்கள் மூலம் கிடைத்தது. இன்று உலகில் உள்ள சிறந்த நகரங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்நகரில் இப்போது முப்பது லட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

மெல்பேர்ன் நகரின் பொதுசன போக்குவரத்துச் சேவை மிகவும் உயர்ந்த தரத்திலே இருக்கிறது. பஸ்கள், டிராம்கள், புகை யிரதங்கள் ஆகியன சேவைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஒரு டிக்கற் வாங்கினால் இந்த மூன்று சேவைகளில் நாம் விரும்பிய எதனையும் பயன்படுத்தலாம்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் நமது நாட்டில் கொழும்பு நகரிலே மின்சாரத்தில் இயங்கும் டிராம்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இவை சிறப்பான சேவையை வழங்கின. ஏனோ அச்சேவை பின்னர் நிறுத்தப்பட்டுவிட்டது. அதனையொத்த பஸ்களே இப்போது மெல்பேர்ன் நகரில் ஓடுகின்றன.

 

 

“சிற்றி சேர்க்கிள் டிராம்’ என்ற சேவை காலை பத்து மணிமுதல் மாலை ஆறு மணிவரை நடைபெறுகின்றது. இந்த டிராம் பஸ்களில் எவ்வித கட்டணமுமின்றிப் பயணம் செய்து அரைமணி நேரம் நகரைச்சுற்றிப் பார்க்க வசதி செய்திருக்கிறார்கள்.

இங்குள்ள "பிளின்டேர்ஸ் ஸ்றிற் நிலையம்" நகரின் கேந்திர ஸ்தானமாக அமைந்திருக்கிறது. இங்கு சிறிது நேரம் தரித்து நின்றால் மெல்பேர்ன் நகரிலே வாழும் மக்களில் பலரையும் நகருக்கு வரும் உல்லாசப் பயணிகளையும் சந்திக்கலாம். 1910ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நிலையம் எட்வேர்ட் என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் சிறந்த புகையிரத சேவை இருக்கிறது. நகரின் மத்திய பகுதிக்குச் சென்று திரும்ப பாதாள ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

யாரா நதியின் மருங்கிலே நீண்ட நடைபாதை அமைந் திருக்கிறது. இந்த நடைபாதையில் உடற்பயிற்சிக்காக நடப்பவர் களையும் சயிக்கிள்களில் சவாரி செய்பவர்களையும் காலைவேளை களில் காணலாம். அதன் அருகே 36 ஹெக்டயர் விஸ்தீரணம் கொண்ட ஒரு பெரிய பூந்தோட்டம் இருக்கிறது. முதலாம் இரண்டாம் உலகப்போரிலே சுமார் 75000 அவுஸ்திரேலியப் பெண்கள் முப்படை களிலும் பணியாற்றி உயிர்நீத்தார்களாம். அவர்களின் நினை வாகவே இந்தப் பூங்காவை அமைத்துள்ளார்கள். இவர்களது உன்னத சேவையற்றிய விபரங்களை ஒரு செப்புத்தகட்டிலே பொறித்து ஒரு நினைவுக் கல்லிலே பதித்துள்ளார்கள்.

இந்தப் பூங்காவிற்குச் சிறிது தூரத்தில் இருக்கும் குன்று ஒன்றின் மேல் உலகப் போர்களில் உயிர்நீத்த ஆண் இராணுவ வீரர்களுக்கு நினைவுச்சின்னமாக ஒரு பெரிய கட்டிடத்தை நிர் மாணித்து அங்கு அவுஸ்திரேலியக் கொடிகளையும், இராணுவக் கொடிகளையும் பறக்கவிட்டிருக்கிறார்கள். இக்கட்டடத்தின் முன்னால் முப்படை வீரர்கள் ஒன்றிணைந்த சிலைகள் காணப்படுகின்றன. இந்தப் போர்ச்சிலைகளுக்கு அங்கு வருவோர் மரியாதை செலுத்து கின்றனர். இந்த நினைவுச் சின்னங்கள் அவுஸ்திரேலிய இளம் தலை முறையினருக்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்துவனவாய் அமைந்திருக் கின்றன. * மெல்பேர்ன் நகரில் சுற்றிப் பார்ப்பதற்கு வேறும் பல முக்கிய இடங்கள் இருக்கின்றன. ஆனாலும் அன்று மாலை நான் சிட்னி நகருக்குத் திரும்பவேண்டியிருந்ததால் நேரத்துடனேயே வீட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

திரும்பும் வழியில் 'பாரதி சிறுவர் பள்ளிக்குச் சென்றோம். பாரதி சிறுவர் பள்ளிக்கு நான்கு வளாகங்கள் இருக்கின்றன. இந்த நான்கு வளாகங்களுக்கும் உயர் அதிபராக அதன் ஸ்தாபகர் மாவை நித்தியானந்தன் கடமை புரிகிறார்.

நாம் சென்ற WHEELERSHILL வளாகத்தின் அதிபராக திருமதி புவனா ராஜரட்ணம் இருக்கிறார். "தமிழ் கற்பது தமிழைக் காப்பற்ற அல்ல. எங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றவே. இதுதான் உண்மை. எங்கள் பிள்ளை களுக்கு ஓர் அடையாளத்தையும், எனது என்கிற பூரிப்பையும், தன் மதிப்பையும், தமிழ்மொழி அறிவு வழங்கும். இது இன்று இப்புதிய மண்ணில் வேர்விடும் எங்கள் சந்ததிக்கு மிகவும் அவசியமான தேவை.

". தமிழ் எங்களையும் எங்கள் அடுத்த சந்ததியையும் தொடுக்கும் முக்கியமான பாலம். தமிழ், நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக விட்டுச் செல்லக் கூடிய விலை மதிப்பற்ற சொத்து. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் எங்கள் பிள்ளைகளின் உரிமை. உடைமை. தமிழ் அறிவை இன்று நாங்கள் அவர்களுக்கு மறுப்போமானால், அதற்காக அவர்கள் எதிர்காலத்தில் எம்மைக் குற்றக் கூண்டில் நிறுத்தப்போவது திண்ணம்!"

பாரதி பள்ளியின் செய்தி மடல் ஒன்றிலே மேற்கூறிய செய்தி காணப்படுகிறது. இந்தச் செய்தியானது பாரதி பள்ளியை அமைத்ததன் நோக்கத்தை நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

அதிபர் திருமதி புவனா ராஜரட்ணம் பள்ளியின் செயற் பாடுகள் குறித்து விபரமான விளக்கம் அளித்ததோடு பள்ளியைச் சுற்றிக் காண்பித்தார்.

இந்தப் பள்ளியில் தமிழ் மட்டம் 1, 2, 3, பாலர் தமிழ், வளர்ந்தோர் தமிழ், இந்து சமயம், பண்பாடு, கணிதம், ஆங்கிலம், நாடகம், சங்கீதம், பரதநாட்டியம் ஆகிய பாடநெறிகள் உள்ளன.

இந்தப் பாடநெறிகள் யாவும் பயிற்றப்பட்ட நல்ல தரமுடைய ஆசிரியர்களாலேயே போதிக்கப்படுகின்றன. பதினாறு ஆசிரியர்கள் இந்தப் பாடசாலையிலே கடமை புரிவதாக அறிய முடிந்தது. சனி ஞாயிறு தினங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன. 'தமிழில் பேசுவோம்' என்ற இலவச வகுப்பொன்றையும் இங்கு நடத்துகிறார்கள். இதுபற்றி நான் அதிபரிடம் விபரம் கேட்டபோது, பெற்றோர் பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் பேசுவதா லேயே பிள்ளைகளுக்கு இத்தகைய பாடநெறியை நடத்துவதாகக் கூறினார்.

அப்படியானால் பெற்றோர் ஏன் பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்? இங்கு வரும் பெற்றோர்களுள் சிலருக்கு ஆங்கிலம் சரிவரத் தெரியாது. எனவே தாங்கள் ஆங்கிலத்தில் பேசிப் பயிற்சி பெறுவதற்காகப் பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் கதைக்கிறார்கள். இது ஒரு வகையான பெற்றோர்.

நாங்கள்தான் ஒழுங்காக ஆங்கிலம் கதைக்கவில்லை. பிள்ளைகளாவது சரளமாக ஆங்கிலம் கதைக்கட்டுமே என நினைக்கும் வேறொருவகைப் பெற்றோர்.

தமிழிலே கதைப்பது தரக்குறைவு என நினைக்கும் இன்னொரு சாரார். இப்படியாகப் பலவிதமான போக்குகளைக் கொண்ட பெற் றோரின் பிள்ளைகளுக்கு இங்கு தமிழிலே பேசுவோம் வகுப்புகளை நடத்துவதாகக் கூறினார் திருமதி புவனா ராஜரட்னம்.

அங்கு கடமையாற்றும் இந்து சமய ஆசிரியையுடன் சிறிது நேரம் உரையாடினேன். புதிய சூழலில், விஞ்ஞான அணுகு முறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்து சமயம் படிப்பிப் பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களது கேள்விகளுக்கு ஏற்ற பதிலைக் கூறுவதே மிகவும் சிரமமான காரியம் என்றார் அவர். பிஞ்சு உள்ளங்களில் எழும் கேள்விகளுக்குச் சரியான, அவர்கள் ஏற்கக் கூடிய, மதநம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய வண்ணம் பதிலளிக்க வேண்டிய ஒரு சங்கடமான நிலையிலேதான் அங்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

அங்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியையுடனும் உரையாடி னேன். மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் தமிழைக் கற்பதாக அவர் கூறினார். அங்குள்ள VCE பல்கலைக்கழக பிரவேசப் பரிட்சையில் தமிழும் ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாகவும் அதற்கு மாணவர்களைத் தான் தயார் செய்துகொண்டிருப்பதாகவும் கூறினார். அத்தோடு முன்னைய வருடங்களில் தமது பள்ளியில் படித்த பிள்ளைகளே சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதாகவும் கூறினார்.

மெல்பேர்னிலுள்ள பல தமிழ் அன்பர்களும் அமைப்பு களும் நீண்டகாலமாக முயற்சித்ததன் பயனாகவே விக்டோரியா மாநிலத்தில் பல்கலைக் கழகப் பிரவேசப் பரீட்சைக்குத் தமிழும் ዩ9መ5 LTLD55 ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் இவ்வாறு பல்கலைக் கழகப் பிரவேசப் பரிட்சைக்கு தமிழை ஒரு பாடமாக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அறிந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பாரதி பள்ளியின் ஆசிரியர்களிடமும் அதிபரிடமும் விடை பெற்றபோது அவர்கள் புரியும் அரிய பணிகளை நான் மனந்திறந்து பாராட்டினேன். அன்று மாலை, நண்பர் முருகபூபதியிடமும் அவரது மகன் முகுந்த னிடமும் விடைபெற்றுக் கொண்டு சிட்னி செல்லும் பஸ்ஸில் ஏறியபோது எனது உறவினர் ஒருவரைப் பிரிந்து செல்லும் உணர்வே என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. இவர்களையெல்லாம் இனி எப்போது சந்திக்கப் போகிறேனோ என நினைத்தபோது என் கண்கள் பனித்தன.

米米米米米

 

 

இருபத்து நான்கு மணிநேரமும் ஒலிக்கும் “இன்பத்தமிழ் ஒலி

இலங்கைக்குத் திரும்புவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. இந்த வேளையிலேதான் எனக்கு 'இன்பத்தமிழ் ஒலி வானொலி நிலையத்திலிருந்து ஓர் அழைப்பு வந்தது.

இந்த வானொலி நிலையம் அவுஸ்திரேலியாவில் 24 மணி நேரமும் தமிழ் ஒலிபரப்புச் சேவை புரியும் ஒரு நிறுவனமாகும். இச்சேவையில் இலங்கை இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், உலகத் தமிழ் ஒலிபரப்புக்களுடன் நிகழ்ச்சிப் பரிமாற்றம், நேயர் களுடன் நேரடி உரையாடல், மங்கையர் மஞ்சரி, பலதும் பத்தும், நகைச்சுவை, பட்டி மன்றம், சொற்பொழிவுகள், திரை ஒலிச் சித்திரம் போன்ற பல நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

இலங்கையில் இருக்கும் ஒலிபரப்புச் சேவையுடன் நிகழ்ச்சிப் பரிமாற்றம் நடைபெறுவதால் நமது நாட்டு நேயர்களும் இச் சேவையைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவில் உள்ள உற்றார் உறவினர்களுக்கு பண்டிகைத் தினங்களில் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

சிட்னி, கன்பெரா, மெல்பேர்ன் ஆகிய நகரங்களில் இதன் சேவையை நேயர்கள் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. 'இன்பத்தமிழ் ஒலி சேவையை விட வேறும் பல வானொலிச் சேவைகள் பல்வேறு மாநிலங்களில் கேட்கக் கூடியதாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் முழக்கம், முத்தமிழ் மாலை, உதய கீதம், விசேட ஒலிபரப்புச் சேவை (S.B.S) தமிழ்க் குரல், நிதர்சனம், தமிழ் ஓசை, சங்க நாதம், மந்திர் வானொலி போன்ற சேவைகள் சில குறிப்பிட்ட நாட்களில் இயங்குகின்றன.

இவற்றைவிட, இரண்டு தமிழ் தொலைக்காட்சிச் சேவை களும் இங்கு உண்டு. சிட்னி தமிழ்த் தொலைக்காட்சி ஞாயிறு மாலையும் மெல்பேர்ன் தமிழ்த் தொலைக்காட்சி புதன் மாலையும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

இன்பத்தமிழ் ஒலி வானொலிச் சேவைக்கு இங்கு நேயர்கள் அதிகமாக உள்ளனர். இதன் இயக்குனராக திரு.பா. பிரபாகரன் என்பவர் இருக்கிறார். நான் சிட்னியில் இருப்பதை அறிந்து இவர் அந்த வானொலி சார்பாக என்னைப் பேட்டிகான விரும்பினார்.

நமது நாட்டின் மூத்த தலைமுறை அறிவிப்பாளரான திரு.எஸ்.நடராஜன், முன்னர் இலங்கை வானொலி, இலங்கை தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்தி வாசிப்பவராகக் கடமை யாற்றியவர், அவுஸ்திரேலியாவில் இன்பத்தமிழ் ஒலி வானொலிச் சேவையில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். இவர் மூலமாகவே எனது அவுஸ்திரேலிய வரவை திரு.பிரபாகரன் அறிந்திருந்தார்.

இன்பத்தமிழ் வானொலிச் செய்தி இரவு 9.30 மணிக்குத் தினமும் ஒலிபரப்பாகும். இச்செய்தியைக் கேட்ட பின்னரே பலர் நித்திரைக்குச் செல்வார்கள். எதைத் தவறவிட்டாலும் இதன் செய்தி யைத் தவறாது கேட்கும் வழக்கத்தைக் கொண்டவர்களாகப் பலர் அங்கு இருக்கிறார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இச்செய்தித் தொகுப்பிலே நமது நாட்டு அன்றாடச் செய்திகள் தவறாது இடம்பெறும். நமது இலங்கை மண்ணில் என்ன நடக்கிறது என்பதைத் தினம் தினம் அறிந்து கொள்வதில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தணியாத தாகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

• இச் செய்தி வாசிக்கும் நேரத்தை ஒட்டியே எனது பேட்டியும் ஒலிபரப்பாகியது. திரு.பிரபாகரன் அவர்களே என்னைப் பேட்டி கண்டார். அவுஸ்திரேலிய நேயர்களுக்கு என்னையும் எனது எழுத்துக்களைப் பற்றியும் ஓர் அறிமுகத்தை அளிப்பதே அந்தப் பேட்டியின் பிரதான நோக்கமாக இருந்தது.

அந்தப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, "புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலரை இங்கு சந்தித்திருப் பீர்கள் அவர்களிடம் நீங்கள் தரிசித்த அவர்களது வாழ்க்கை பற்றிய கணிப்பீடு யாது?"

ஒரு குறுகிய நேரப் பேட்டியில் இக்கேள்விக்குரிய பதிலை விபரமாக அளிக்கமுடியாது. எனவே எனது பதிலைச் சுருக்கமாகவே கூறினேன்.

"புலம் பெயர்ந்து வாழும் மூத்த தலைமுறையினர் தாம் பிரிந்துவந்த மண்ணைப் பற்றிய ஏக்கத்துடனேயே வாழ்கின்றனர். வேர் அங்கும் விழுது இங்குமாக ஓர் "இரண்டக வாழ்வு நடத்து கின்றனர். தாம் இழந்துவிட்ட மண்ணைப் பற்றிய ஏக்கம் ஒரு புறமும் தற்போது இழந்து கொண்டிருக்கின்ற எதிர்காலச் சந்ததியினர்பற்றிய கவலை மறுபுறமும் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது" எனக் கூறினேன்.

இந்தப் பதில் பல நேயர்களின் மன உணர்வுகளைக்  கிளறியிருக்க வேண்டும். பேட்டி முடிந்ததும் சில நேயர்கள் இன்பத்தமிழ் ஒலி வானொலி நிலையத்துடன் தொடர்பு கொண்டு தொலை பேசியில் என்னுடன் கதைத்தனர். புலம் பெயர்ந்தோர் நிலைமை பற்றிய எனது கணிப்பீடு மிகமிகச் சரியானது எனக் கூறினர்.

மறுநாளும் சிலர் எப்படியோ நான் தங்கியிருந்த விட்டுத் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று என்னுடன் தொடர்புகொண்டு பேசினர். 

திரு.சுந்தரம் என்பவர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசுகையில், தான் எனது பேட்டியைக் கேட்க முடியவில்லை எனவும் அப்பேட்டியைக் கேட்ட தனது உறவினர் ஒருவர் பேட்டியில் நான் கூறிய கருத்துக்களைத் தனக்குக் கூறியதாகவும் சொன்னார்.

இவர் ஏறத்தாழ பதினொரு வருடங்கள் அவுஸ்திரேலி யாவில் வாழ்கிறார். பிறந்த மண்ணின் ஏக்கம் தன்னை எவ்வா றெல்லாம் வாட்டுகிறது என்பதை மிகவும் மனதைத் தொடும்படி விபரித்தார். கிட்டத்தட்ட அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடிய இவர், "இங்கு இயற்கையைக்கூட இரசிக்க முடியவில்லை. இலங்கையில் மழைபெய்யும்போது 'சோ' என்ற இரைச்சலுடன் பெய்யும். அந்த இரைச்சல் இங்கு இல்லை” என்றெல்லாம் கூறினார்.

இன்பத்தமிழ் ஒலி வானொலி எனக்கு நல்லதொரு வாய்ப்பினை அளித்ததால் பல நேயர்கள் என்னை அறிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்காக நான் திரு. பிரபாகரன் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தேன்.

இவ்வேளையில் ஐரோப்பிய நாடுகளில் இலக்கியப் பயணம் மேற்கொண்டிருந்த மாத்தளை சோமு அவுஸ்திரேலியா வுக்குத் திரும்பிவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. அன்று மாலையே அவரைச் சந்தித்து உரையாடினேன். "நீங்கள் சுற்றுப் பயணம் செய்த நாடுகளில், புலம் பெயர்ந்து வாழும் நமது இளந்தலைமுறை யினரின் தமிழ்ப்பற்று எந்நிலையில் உள்ளது?” எனக் கேட்டேன். அப்போது அவர் கூறினார்,

"ஒரு மொழி என்பது, மண்ணும் சுற்றுபுறச் சூழலும் சார்ந்த விஷயம். நம்மவர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் மண்ணும் சுற்றுப்புறச் சூழலும் முற்றுமுழுதாக அந்தந்த நாட்டு மொழிகளையே நமது இளந்தலைமுறையினருக்குப் போதிக்கின்றன. தமிழ் வீட்டுக்குள் அடக்கப்பட்ட ஒரு மொழியாக இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம். நமது அடுத்த தலைமுறையினர் தாம் வாழும் நாட்டு மொழிகளிலே பாண்டித்தியம் பெற்று, தமிழர் வாழ்க்கையைப் பிரதிபலிக்கக்கூடிய தரமான இலக்கியங்களை வேற்று மொழிகளில் படைப்பர். இதனை நான் உறுதியாகக் கூறமுடியும். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகளிலே இத்தகைய படைப்புகள் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.” என்றார்.

புலம் பெயர்ந்து செல்வது என்பது இன்று காலத்தின் நிர்ப்பந்தமாகிவிட்டது. நாட்டின் போர்ச்சூழலால் நிகழ்காலமும் எதிர் காலமும் கேள்விக்குறியாகத் தோன்றும்போது இளைஞர்கள் புலம் பெயர்ந்து செல்வது தவிர்க்க முடியாததாகிறது.

ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் மற்றைய நாடு களோடு ஒப்பிடுகையில் வாழ்க்கைக்குச் சாதகமான பலவிடயங்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது.

அவுஸ்திரேலியர்கள் எல்லோருடனும் நட்புரிமை பாராட்டு கிறார்கள். வெளிநாட்டவர்களையும் அன்புடன் வரவேற்கிறார்கள். நம்நாட்டு இளைஞர்கள் தமது நண்பர்களுடன் பேசும்போது நெருக் கத்தை உணர்த்த "அடே மச்சான்’ என அழைப்பார்கள் அல்லவா. சிங்கள இளைஞர்கள் "அடோ மசினா என்பார்கள். அவுஸ்திரேலி யர்கள் அதே போல "HELLO MITE என்கிறார்கள். அறியாதவர் களிடம் நாங்கள் அதிகம் கதைப்பதில்லை. அவர்கள் அறியாதவர் களைச் சந்தித்தாலும் வந்தனம் தெரிவிக்கிறார்கள்; வாழ்த்துகள் கூறுகிறார்கள்; "HAVEANICEDAY என்கிறார்கள். தாம் காணும் மனிதர்களுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

அவுஸ்திரேலியாவில் குளிர் அதிகமில்லை. எந்தக் காலத்திலும் பனிக்கட்டிகள் உறையும் அளவுக்கு சீதோஷ்ண நிலைமை ஏற்படுவதில்லை. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் நிறத் துவேஷம் இங்கு வெகு குறைவு. ஆங்கிலம் கல்வி மொழியாக இருப்பது ஒரு சாதகமான நிலைமை. இளைஞர்கள் தாம் விரும்பித் தேர்ந்தெடுத்த துறையில் உயர்கல்வியைப் பெறுவதும் சுலபம். மக்கள் தொகை குறைவாக இருப்பதால் ஒருவர் தொழில் பெறுவதும் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வதும் இங்கு மிகவும் சுலபம். அத்தோடு சுகாதாரமாக வாழக்கூடிய எல்லா வசதிகளும் இங்கு இருக்கின்றன. பயமின்றி, சுதந்திரமாக வாழலாம். அவுஸ்திரேலியாவை விட்டுப் புறப்படும்போது, அமை தியும், அழகும், மனித நேயமும் நிறைந்த இந்த நாட்டுக்கு நான் மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்ற எண்ணமே என் மனதில் நிறைந்திருந்தது.

(முற்றும்)