வாழ்வியல் வசந்தங்கள்:உன்னோடு நீ பேசு

பருத்தியூர் பால, வயிரவநாதன்


வாழ்வியல் வசந்தங்கள்:உன்னோடு நீ பேசு

பருத்தியூர் பால, வயிரவநாதன்

 

அணிந்துரை

கடந்த பல ஆண்டுகளாக பல பத்திரிகைகளிலும் நல்லனவற்றையே எழுதிவருபவர் -நாடறிந்தநமது எழுத்தாளர் “கலாபூஷணமி பருத்தியூர் பால, வயிரவநாதன். சிந்தனைகளை எழுத்தில் வடிப்பவராக மட்டுமல்லாமல் சித்திரமாக வரையும் ஆற்றலும், உரையாற்றும், நாவன்மையும், ஒருங்கே பொருந்தி யவர். இருப்பினும் எழுதுவதில் தான் நாட்டம் அதிகம். எல்லோரும் இன்புற நினைத்து இடைவிடாது தொடராக எழுதி வருபவர். சமூகத்தைச் சார்ந்த சகலரும் உயர்வடைவதற்காக பயன் நிறைந்தவற்றை பத்திரிகைகளுடாகப்பரப்பிவருபவர்.

பேராசிரியர்கள், கலாநிதிகள் போன்ற கல்விப் புலமை வாய்ந்தோராலும், நிதித்துறை, நிர்வாகத்துறை சார்ந்தோராலும், கலை இலக்கிய ஆர்வலர்களாலும் விதந்து பேசப்படுபவர்.

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக திரு. வயிரவநாத னுடன் நேரடித்தொடர்புள்ளவன்என்றவகையில் அவரது சொல், எழுத்து, செயல் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக வாழ்ந்து வருவதை நன்கறிவேன். சாதாரண சம்பவங்களைக் L சன்மார்க்க நெறிகளோடு இணைத்து நல்ல படிப்பினை என எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் எழுதும் வல்லமையும், அதற்கான சொல்லாட்சிப் புலமையும் நிரம்பப் பெற்றவர். உள்ளத் தெளிவும், துணிவும் உள்ளவர். எத்தகைய பிரச்சனைகளையும் எதிர்கொள்ளத்தக்கதைரியமும், அவற்றை விடுவிக்கத்தக்கசாமார்த்தியமும் உள்ளவர்.

 

ஒரு சம்பவம்:-

தொண்ணுறுகளின் நடுப்பகுதியில் கிளிநொச்சிமாவட்ட செயலக எழுதுனர் வயிரவநாதன். அப்போது கச்சேரியில் கடமையாற்றும் சிற்றுாழியர் ஒருவரின் திருமணம் கச்சேரியில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் நடைபெறுகிறது. ஊழியர்கள் பலர்முறையான அனுமதியுடன் குறுகிய விடுமுறை பெற்று திருமணவீட்டில் கலந்துகொள்கின்றார்கள். இது மிகவும் சாதாரண நிகழ்வு.

அக்காலகட்டத்தில் செல்வாக்கு செலுத்திய ஆயுதப் போராளிகள் அதனைக்குற்றமாகக்கருதி கச்சேரிஊழியர்களை தண்டனைக்குள்ளாக்க முயல்கின்றனர். விடுதலைக்கான அனுமதியை வழங்கிய அரசாங்க அதிபர் , ஊழியர்கள் எவ்வகையிலும் தண்டிக்கப்படக் கூடாது. கடமை நேரத்தில் அனுமதிக்கப்பட்ட விடுதலையில் கல்யாண வீட்டில் கலந்து கொள்வது குற்றமல்ல என வாதிட்டு, அது குற்ற மெனின் தண்டிக்கப்பட வேண்டியது அனுமதி வழங்கிய அரசாங்க அதிபரேயன்றி ஊழியர்கள் அல்ல என வலியுறுத்துகின்றார். இயக்கத்தின் முறுகல் இறுக்கமடைவதைக் கண்டு வயிரவநாதன் ஊழியர்களைஒன்றுதிரட்டி பேனாவை ஆயுதமாக் குகின்றார். வயிரவநாதன் கச்சேரி நிர்வாகத்தை வெற்றிபெற வைத்துவிட்டார். அப்போதைய அரசாங்க அதிபர்நான்.

இன்னொருசம்பவம்:-

1996ல் போராட்டம் வலுவடைய கிளிநொச்சிநகரும் அண்மித்த பகுதிகளும் ஒருசிலமணித்தியாலங்களில் வெறிச் - 4 -

சோடஸ்கந்தபுரம் பாதுகாப்பிடமாக மாறுகின்றது. மரநிழலில் இரவல் மேசைகளோடு அரசாங்க அதிபர் அதிபராக இயங்க ஆரம்பிக்கின்றேன். வெகு தொலைவுக்கப்பால் இருந்த வயிரவநாதன்.செய்தியறிந்து ஓடி வந்து பக்கபலமாக செயலா ற்றுகின்றார். படிப்படியாக ஏனையவர்கள் மரநிழலில் கூடிவேலை செய்யகச்சேரிக்கெனதற்காலிக ஓலைக்கொட்டில் கட்டப்படு கின்றது. அந்தச் சம்பவத்த்ை நினைவூட்டுவது போலசில வரிகள் வயிரவநாதன்எழுத்தில், “பிரச்சினை என்று வந்தால் தான் எம்மைச் சுற்றி இருப்பவர்களின் உண்மைச்சொரூபம் தெரியும். சிலபேர்வழிகள் சற்று வித்தியாசமானவர்கள் கண்டபடி பேசிக்கொள்ள LDITL "LITT&56Ī, Lup8ļLĎ மாட்டார்கள் ஆனால் யாருக்காவது ஆபத்து என்று வந்து விட்டால் உடன் வந்து கை கொடுப்பதில் முன் நிற்பார்கள். இன்னும் சிலர் நன்றாகப் பழகுவார்கள் எல்லோரிடமும் கடமைப்படுவார்கள் தாங்கள் யாரிடமாவது கடமைப்பட்டவர்களுக்கு ஏதாவது இன்னல் வந்தால் சதுர்யமாக நழுவி விடுவார்கள். பின்னர் எல்லாப் பிரச்சனைகளும் துன்பப்பட்டவர்களுக்கு தீர்ந்து போனதும். பழையபடி அவர்க ளிடமே வந்து ஒன்றும் நடக்காததுபோல பேசுவார்கள்."

இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்க ளத்துக்கு இடமாற்றம் பெற்று வந்த வயிரவநாதன் சில காலத்துக்குப் பின் அத்திணைக்களப் பணிப்பாளராக பதவி யேற்ற என்னை வரவேற்றகுழுவில் கலந்திருந்தார்.

இத்திணைக்கள கடமைகள் சற்றுவித்தியாசமானவை கடமை நேரத்தில் கடிதங்கள், கோவைகள், சுற்றறிக்கைகள், பொதுமக்கள் சந்திப்புஎன வழமையான அரச அலுவல்கள்.

மாலைவேளைகள் சுந்தரப்பொழுதாகவும், விடுதலை நாட்கள் குதூகலமானதாகவும். கலையரங்கம், அறநெறிப் பாடசாலைகள், அருள் விழாக்கள் , ஆடல் பாடல் கலை நிகழ்வுகள் என பலபல இருப்பினும் சில உத்தியோகத்தரை வருத்தியழைத்தாலும் விருப்பமில்லாமல் தலை காட்டுவர். ஈடுபாட்டுடன் முழுப்பொழுதும் கழிப்பவர்களில் ஒருவராக வயிரவநாதன் இருந்ததையும் பதிவுசெய்யலாம்.

உண்மையான ஈடுபாடும் உழைப்பும் மிக்க பருத்தியூர் பால, வயிரவநாதன் பணி சிறக்கவும், எழுத்தாக்கங்களால் சமூகம் பயன்பெறவும் வாழ்த்துக்கள்

உடுவை. எஸ்.தில்லைநடராசா அறிவுரைஞர் உலக வங்கி

 

 

 

நாம் இந்த உலகில் நடப்பவற்றை அறிவதற்கு வாய்ப்பாக இறைவன் மெய், வாய்,கண்,மூக்கு, செவிஎன்னும் ஐந்து அறி கருவிகளைத் தந்துள்ளான். இவை எமது உடம்பில் உள்ள புறக் கருவிகள். இப்புறக் கருவிகளைக் கொண்டு அறிபவற்றை ஆராய்ந்து நல்லது கெட்டதைப்பகுத்துஅறிவத ற்கான மனம் என்னும் அகக் கருவி ஒன்றையும் தந்துள்ளான். இந்த மனம் என்னும் அகக் கருவி ஆறாவது அறிவு என்றும், பகுத்தறிவு என்றும் சொல்லப்படும். மனத்தை உடையவர்கள் மனிதர்கள். ஏனைய உயிரினங்களுக்கு மனம் என்னும் கருவி இல்லை. அதனால் அவைநல்லது கெட்டதைப் பகுத்தறிவதும் இல்லை.

புறக்கருவிகளால் அறிந்தவற்றை அகக் கருவியாகிய மனத்தைக் கொண்டு ஆராய்ந்து நல்லவற்றை ஏற்பதும், கெட்டவற்றை விலக்குவதும் மனித வாழ்வு ஆகும். மனிதன் தனக்கும்பிறருக்கும் நல்லவற்றையே செய்தல்வேண்டும் தான் நல்லவற்றைச் செய்தலுடன் நிற்காமல் மற்றவர்களுக்கும் நல்லது கெட்டதை உணர்த்தி அவர்களும் நல்லன செய்து நன்மை பெறவழிகாட்டவேண்டும்.

இவ் மனித நேயப் பண்பு நிறைந்த ஒரு பணியையே பருத்தியூர் பால, வயிரவநாதன் அவர்கள் தனது எழுத்துத் துறையின் மூலம் நீண்ட காலமாகச் செய்து வருகின்றார். இந்த எழுத்திற்கு" வாழ்வியல் வசந்தங்கள்” என்னும் ஒரு அழகிய அருமையான மனதுக்கு இனிமையான பெயரையும் வைத்து ள்ளார். இதன் மூலம் ஒவ்வொருவரின் வாழ்விலும் வசந்தம் தாவச் செய்ய முயற்சிக்கின்றார். இவருடைய சிந்தனையும், எழுத்தும் மற்றவர்களை மகிழ்வுடன்வாழச் செய்வதற்காக வேபயன்படுத்தப்படுவது போற்றுதலுக்குரியது. இலகுவான சுவையான மொழி நடைகளில் சாதாரண வாசகர்களும் பலன் கொள்ளத்தக்க வகையில் இவருடைய ஆக்கங்கள்விளங்குகின்றன. அத்துடன்உலகநிகழ்வுகளையே உதாரணங்களாகக் காட்டி நல்வழிப்படுத்தும் உத்தியும் வரவேற்கத்தக்கதாகும்.

தினக்குரல்,தினகரன்,வீரகேசரி, தினசரியில் தொடர்ந்து வெளியிட்டு வரும் இந்த எழுத்தாக்கங்களைப் பகுதி பகுதியாக நூலுருவாக்கி வெளியிட முன் வந்திருப்பது மேலும் ஒரு படி உயர்வான பணியாகும். இந்த நூலில் வீரம், எதிரிகள், வேதனை, இம்சைகள், மனிதாபிமானம், நட்பு, அதிஷ்டம், தெரியாத கருமங்கள் உட்பட பல ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இவைகள் நல்லது கெட்டது தெரியாமல் தடுமாறும் இன்றைய மக்களுக்குநல்வழிகாட்டியாய் அமையும் என்பதில் ஐயம் இல்லை. வரவேற்கக்கூடிய நூல்

கலாபூஷணம், சைவப்புலவர்

சு.செல்லத்துரை

 

எனது உரை

வீரம் இல்லா வாழ்வு உயிரேயில்லா சரீரம் போன்றது எந்தப் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை எதிர் கொள்ள கம்பீரத்துடனான வீரம் அவசியமானது.

வீரம் என்பது வீெறும் ஆயுதங்களுடன் போராடுவது மல்ல, அல்லது கண்டபடி வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுவதுமல்ல.

நியாயத்திற்காக தனக்காக மட்டுமின்றி, சமூகத்திற் காகவும், உலக நலன்களுக்காகவும் இதய சுத்தியுடன், நீதிக் காக நிலைத்துநின்று இயங்குவதாகும்.

நீதிக்காகப் போராடுபவர்கள் முன் எதிரிகளின் வீராப்புக்கள் எரிந்தே போகும்.

நரித்தனமாக இயங்குபவர்களிடம் மனிதாபிமானம் இருப்பதில்லை. பிறர் வேதனையில் சுகித்திருப்பவர்களை பின்னர் காலம் அவர்களை கருமைப்படுத்திவிடும்

எவருடனும் நட்புப் பாராட்டுபவர்கள், சுபிட்சமான வாழ்க்கையை எட்டிப்பிடித்து விடுகிறார்கள் பிறருக்கு இம்சை செய்பவர்கள் தங்கள் வம்சத்திற்கே ஊறு விளைவிக்கின்றார்கள்.

பெறுமதி மிக்க காலத்தைப் பயனுற அமைக்க அதிஷ்டத்தை மட்டும் நம்பிவிடாது. தெரிந்த கருமங்களை விருப்புடன் செய்து, செய்தொழிலில் கடும் முயற்சியில் ஈடுபடுவதாகும்.

சேவை செய்பவர்கள் சூது,வாதில் நேரத்தைக் கரைப்பதில்லை இவர்கள் எவர்க்கும் துன்பங்களை நிவிர்த்திக்கும் ஆன்மா ஆகையினால் உலகில் மேன்மைமிகு மாந்தராகின்றனர்

நாம் உலக ஷேமத்திற்காக ஓரிரு மனிதர்கள் என்றில்லாமல் முழு உலகையும் எமது நட்புக்குரிய பெறுதற்கரியனவாகக் கொள்வதே நிறைந்த வாழ்க்கையினை கொள்ளும் வழி.

இந்த மனிதாபிமானம் மிக்க வாழ்க்கையினால் எமது ஆன்மா, என்றும் சுகராகம் மீட்டியபடியே இருக்கும்.

எனதுரை மூலம் சில வரிகளை மீட்டுவதும் எனக்கும் பிரியமானது. அத்துடன் விருப்புடன் என் பணியை ஆற்ற என்னுடன் இணைந்து அணிந்துரை மூலம் வாழ்த்துரை, மதிப்புரை நல்கியோர் பற்றியும் கூறிட விழைகின்றேன்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நெருக்கடியான காலப் பகுதியில் அம்மாவட்டத்தின் அரசாங்க அதிபராக திரு எஸ். தில்லைநடராஜா அவர்கள் கடமையாற்றி வந்தார். மிகவும் கடுமையான யுத்தகாலம். அக்காலத்தில் மக்கள் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல மேலும் அரச அதிபரின் பணியானது சொல்லிலடங்காத சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

திரு. எஸ்.தில்லை நடராஜா அவர்களின் பணியை உலகறியும், யுத்தகாலப்பகுதியில் கிளிநொச்சி அரச பணிகள் முடங்காது தனது நிர்வாகத் திறமையினால் மக்கள் பயன் பெறச் செய்தார்.

கிளிநொச்சிக்கச்சேரி இடம் மாற்றப்பட்டு ஸ்கந்தபுரத் தில் அமைக்கப்பட்டது. கச்சேரி அங்கு அமைக்கப்பட முன். அரச அதிபர் ஒரு மரத்தடியின் கீழ் மேசை வைத்து தனது பணியைத் தொடர்ந்தார். அக்காலப் பகுதியில் நான் இவருடன் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவை மறக்க முடியாத பல அனுபவங்களை எனக்குத் தந்தன.

மேலும், நான் யாழ்ப்பாணத்தில் தேசிய வீடமைப்புத் திணைக்களத்தின் வடபிராந்திய அலுவலகத்தில் பிரதம எழுது வினைஞராக கடமையாற்றினேன். அப்பொழுதும் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையில் எனது அலுவலக சொத்துக்களைக் குண்டு வீச்சின் மத்தியில் வெகுசிரமத்துடன் காப்பாற்றிக்கொண்டு சென்றமையில் நானும், எனது நண்பர்களும் பட்ட சிரமம் சொல்லவொண்ண முடியாதது.

இத்தகைய பணிக்காக தேசிய வீடமைப்புத் திணைக்கள ஆணையாளரின் நற்சான்றும் எனக்குக் கிடைத்தது.இதே போலவே மறக்கவெண்ணா அனுபவமாக கிளிநொச்சியில் நான் திரு.எஸ் தில்லை நடராஜா அவர்களுடனும், சக ஊழியர்களு டனும் இணைந்து போர்க்கால சூழலில் ஆற்றிய பணிகள் மக்களினால் மதிப்புடன் பேசப்பட்டது.

இவருடன் நான் தொடர்ந்தும். இந்து சமய கலாசார அலுவலகத்தில் பிரதம எழுதுவினைஞராக, கிளிநொச்சி செயலகத்திலிருந்து இடம்மாற்றம் பெற்று மீண்டும் இணைந்து கொண்டேன்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக இவர் பொறுப்பேற்றுக் கொண்டார். கிளிநொச்சி அரச அதிபராக இவர் இணைந்ததும் பின்னர் இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளராக கிளிநொச்சி செயல கத்திலிருந்து இடமாற்றம் பெற்றதும், இருவருக்கும் சம காலத்தில் நடந்த நிகழ்வுகள் என்பதும் அபூர்வமான விடயமேயாகும்.

தமது அணிந்துரையில் எமக்கு ஏற்பட்ட அனுபவங் கள் பற்றியும் எனது பங்களிப்பு தொடர்பாக எழுதியிருப்பது, எனக்கான அனுபவப்பதிவுகளின் ஒரு அத்தாட்சிப் படுத்தலாகக் கருதுகின்றேன். இது இவரது பரந்த மனப்பான்மை, எனக்கு இவர் வழங்கிய கெளரவமாகவே கருதுகிறேன்.

மேலும் இவர் தமிழ் இலக்கியம் நாடகத்துறையின் வித்தகர் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே! அத்துடன்

சிறுகதை எழுத்தாளர். இவரது "அப்பா” எனும் நூல் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் பாராட்டும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரு. தில்லை நடராஜா அவர்களுடன் நான் ஐந்து வருடங்கள் கடமையாற்றியுள்ளேன். இவர் இந்து சமய கலாசார அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு எஸ்.வாமதேவன் அவர்களுடன் பல ஆண்டுகள் சேவை புரிந்தவர். இந்த வகையில் திரு எஸ். வாமதேவன் அவர்களுடன் நான் யாழ் பிராந்திய தேசிய வீடமைப்புத் திணைக்களத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தேன். இது கூட அற்புதமான நிகழ்ச்சியே தான.

மேலும் இருவருமே என்னுடன் பேரன்பு கொண்டவர் கள். எனது மதிப்பிற்குரிய திரு. எஸ். தில்லை நடராஜா அவர் கள் ஏற்கனவே எனது வாழ்வியல் வசந்தங்கள் நூல் வெளி யீட்டு விழாக்களில் கலந்து சிறப்பித்துள்ளார். எனது நன்றிகளை எங்ங்ணம் எப்படிச் சொல்ல முடியும்!

சைவப்புலவர் சு. செல்லத்துரை உன்னதமான, சீரிய மனிதருக்கு ஒரு அடையாளமாக திகழ்ந்து நிற்கின்றார்.

இவரது ஆண்மை மிகு கம்பீரமான குரலுக்கும், அதனூடு செப்பிடும் வார்த்தைகளின் வசீகரத்துக்கும் இணையாருளர்? இந்து சமயம், தமிழ் இலக்கியம், நாடகம் கவிதை என எத்துறைகளை எடுத்தாலும் இதனுள் தம்மை ஐக்கியப் படுத்திடும் வல்ல நல்ல மனிதர்.

 

 

இவரது கனிஷ்ட புதல்வன் திரு.செ.மாவிரதன் என்னுடன் பணியாற்றியவர். அத்துடன் குறிப்பிடத்தக்க வொன்று இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் சைவப்புலவர் திரு.சு. செல்லத்துரை அவர்களின் மாணவியுமாவர். இவர் தமது பேரன்பினால் எனது நூலிற்கு முகவுரை வழங்கியமை எனக்கான மதிப்பார்ந்த பெருமை எனக்கொள்கின்றேன்.

இத்துடன் எனது நூல்களைப் பதிப்பித்த திரு.எஸ். சிவபாலன் (அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிற்ரெட்) அவர்களை நன்றி பாராட்டுகின்றேன். எனக்குத் துணைநின்ற அனைத்து நண்பர்கள், அன்பர்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்!

என்றும் உங்களுடன் பருத்தியூர்-பால, வயிரவநாதன்

"மேரு இல்லம்"

36-2/1

ஈ.எஸ் பெர்ணாண்டோ மாவத்தை

கொழும்பு06.

தொ.பே இல - 0112361012

O71-4402303

077 - 431868

 

 

மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்

ஆசிரியர்

நூலாசிரியர் பருத்தியூர் மால. வயிரவநாதன் எழுதி வெளியிட்ட "வாழ்வியல் வசந்தங்கள்"

நூர் தொகுதிகள்

 

 

 

பொருளடக்கம்

 1. வீரம்
 2. எதிரிகள்
 3. வேதனை
 4. இம்சைகள்
 5. நட்பு
 6. அதிஷ்டம்
 7. தெரியாத கருமங்கள்
 8. இரக்கம் சுரக்கட்டும்
 9. புலன்களும் நல் எண்ணங்களும்
 10. கடவுளைக் காட்டுவதாகக் கூறி காசு பறிக்கும்
 11. பெண்கள் கண்ணிர் சிந்துதல் ஆகாது
 12. இறையோனிடம் மட்டும் இறைஞ்சுக!
 13. உன்னோடு நீ பேசு!

 

 

 

உன்னோடு நீ பேசு!

கோழைகள், தினம் தினம் செத்து எழுந்து மீண்டும் மீண்டும் மடிந்து எழுகின்றனர். இது ஒரு வாழ்வாகுமா? தனக்குரிய ஜீவாதார உரிமைகள் மறுக்கப்படும்போது, கோழைகள் கூட வீறுகொண்டு எழுவதுண்டு சும்மா போகும் விலங்குகளை சீண்டினால் அவை சீறி எழும். துணிச்சலுடனும் வீரத்துடனும் வாழுவதை இறைவன் அங்கீகரிக்கின்றான். தன்னால் எதையுமே சாதிக்க முடியும் என்கின்ற உணர்வுகள் இன்றேல், இந்தப் போட்டிகள் மிகுந்த புவனியில் எப்படித்தான் வாழுவதோ? தேவையின்றி ஆணவம் கொண்டு மிரட்டுபவனை, அடிக்கத் தாக்க முற்படுபவனை, உருட்டி அடிப்பது தர்மம், தைரியமானவன் முரட்டுத்தனமானவனாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வீரன், தன் ஆளுமையை எளியோர் வலிமை குன்றியோரிடம் காட்டமாட்டான்.

வீரத்துடன் விவேகம் கோழைத்தனமான வாழ்க்கைதான் மிகவும் கஷ்ட மான வேதனைக்குரிய, சாதனைகள் எதுவுமற்றதுமானது மாகும். கோழைகள் தினம் தினம் செத்து, எழுந்து மீண்டும் மீண்டும் மடிந்து எழுகின்றனர். இப்படி வாழ்வது ஒரு வாழ்வாகுமா? மிகவும் இக்கட்டான நேரத்தில், கோழை கூட வீறுகொண்டெழுந்துவீரனாக உருவெடுப்பதுமுண்டு. பிரச்சினைகளுக்கு ஆரம்பத்தில் முகங்கொடுக்க அஞ்சுப வர்கள், எப்படியும் இவற்றிற்கு முன்நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற கட்டாயம் ஏற்பட்டால் அவன் எதனையும் ஏற்கும் சித்தம் கொண்டவனாக வீரனாக மாறிவிடுவதும் இயற்கையானதேயாம்.

தனது ஜீவாதார உரிமைகளை மனிதன் மட்டுமல்ல, விலங்குகள் கூட விட்டுக் கொடுப்பதேயில்லை. இந்த நிலை அனைத்து உயிர்களுக்கும் இறைவனால் அளிக்கப்பட்ட வரமுமாகும். எல்லா ஜீவன்களுமே சமத்துவமாக வாழ்ந்தேயாக வேண்டுமென்பதே இறை ஆணையுமாகும். எனவே, துணிச்லை வீரத்தை மனிதன் கொண்டு வாழ்வது என்பது கடவுளின் விருப்பமும் அங்கீகாரமும் என்றே அறிக தன்னால் எதனையுமே சாதிக்க முடியும் என்கின்ற உணர்வு இன்றேல் இந்தப் போட்டிகள் மலிந்த புவனியில் எப்படித்தான் வாழுவதோ? இதன் பொருட்டு மற்றவனை அடித்து வீழ்த்திவிட்டு வாழவேண்டும் என்கின்ற தவறான எண்ணத்தைக் கொண்டால் அது அபத்தம். முற்றிலும் கேவலமான மனப்பான்மையுமாகும்.

சும்மா போகின்றவனைச் சுரண்டி, வேடிக்கை பார்க்க எண்ணினால், அவனிடமிருந்து கெட்ட வார்த்தைகளைக் கேட்டேயாக வேண்டும். பேச முடியாதவர்கள் ஏதோ ஒரு வழியில் வன்மம் தீர்ப்பார்கள். எங்கள் துணிச்சலை, அநாவசியமாகக் கேலிக்குரிய விதத்தில் காட்டலாமா?

எங்கள் வீரத்தைப் பிறர் அறியவேண்டும் என்று காட்டுவதற்காக தேவையற்ற பலப்பரீட்சையில் ஈடுபட்டு மூக்குடை படக்கூடாது. இந்த அறிவிலித்தனமான போக்குகளால் அல்லல்படுவதும், அவமானப்படுதலும் தேவைதானா?

எங்களிடம் நியாயம், நீதி அஸ்தமித்துவிட்டால், வீரம் தானாகவே விடைபெற்றுவிடுகின்றது."மனம்" என்பது ஒரு சாதாரண விஷயமல்ல. கண்ணுக்குத் தெரியாத "விஸ்வ ரூபி". இதன் வலு அபாரமானது. மனிதர் விடுகின்ற தவறுகளை அது நொடிப் பொழுதும் சுட்டிக்காட்டி நிற்கின்றது. மனச்சாட்சியைக் கொன்றுவிட்டுத் தன் வழி நடப்பவன், முடிவில் தன் வாழ்வையே வீண் நாளாக்கிவிடிவு அற்ற நிலைக்குள்ளாகின்றான். மனச்சாட்சிப்படி நடக்காத பேர்வழிகள் வீண் விதண்டாவாதம் செய்வார்கள். காலப்போக்கில் மனம் மரத்தது போலாக மனச்சாட்சி ஒதுங்க, நடைப்பிணம் போலாவான். ஆனால் புறஉலகில் தன்னை ஒரு வீரன்போல் காட்ட முனைந்து தோற்றும் போவான். மாபெரும் வீரன் என்பவன் தன்னிடம் உள்ள தவறுகளைப் பிறர் கண்டு சொன்னால் அதனைப் பணிவுடன் ஏற்றுக் கொள்வான். இதனால் இவன் வீர உணர்வு மேலும் வலுப்பெறுகின்றது.தோல்விகளைத், துயரை ஏற்பவன்தான் வீரன். தன்மானம் என்பது தமது தோல்விகளை மறைப் பதோ, மறுப்பதுமோ அல்ல. புரிந்து கொள்வோமாக! உள்ளதை உள்ளபடி ஏற்று பிறரிடம் கையேந்தாது வாழ்க்கையில் எதிர் நீச்சலடிப்பதே மேலான வீரமும் தன்மானமும் ஆகும்.

இன்று வீரத்திற்குத் தவறான அர்த்தங்களைக் கொண்டும் வாழ்பவர்கள் இருக்கின்றார்கள். ஆள், அடிமை, ஆயுதங்கள் மட்டுமே இருந்துவிட்டால்மட்டும் வீரன் ஆகி விடலாம் என நினைக்கின்றார்கள். நல்லது செய்வதற்கே வீரம் துணை நிற்க வேண்டும். தன் சுயநலத்திற்காகவும், தானும் தன்னைச் சார்ந்தவர்கள் மட்டும் வாழ்வதற்காகவும் போராடுவதுவீரமாகுமா? இத்தகையவர்கள் பிறரை இம்சிப் பதால், நன்றாகவாழ்ந்துவிடமுடியும் எனத் தப்புக்கணக்குப் போடுகின்றார்கள். 

பெரிய துணிச்சல்காரர்களாக வாழுபவர்கள் பெரும் பாலானோர் மெளனிகளாகவே காணப்படுகின்றனர். இவர்கள் அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர். தனக்காக வாழுபவர்கள்தான் பயத்துடன் கோழைத்தனமாக, எங்கே யாராவது தமக்கு இடையூறு செய்து விடுவார்களோ என எண்ணி மனதைச் சித்திரவதைப் படுத்திக் கொள்கின்றார்கள்.

ஒருவனை அச்சுறுத்துவதனால் எவருமே கெளரவம் பெற்றுவிட முடியாது. இவர்கள் முடிவில் அஞ்சி அஞ்சி ஒளிந்தே வாழ வேண்டியதுதான். எதிரிகளை இவர்கள் தாமாகவே சம்பாதித்துக்கொள்கின்றார்கள். பம்பாய்நகரில் பிரபல தாதா ஒருவர் பற்றி நான் படித்தேன். அவரது பேட்டி சுவாரஸ்யமாக இருந்தது. தன்னை அவர் காப்பாற்றிக் கொள்ள ஒரு பெரும் கூட்டத்தையே தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டார். அவரது பெரிய மாளிகை கூட ஒரு சிறைக்கூடம்தான். இந்த வாழ்வுமுறையை வீரம் மிக்கது எனச் சொல்ல முடியுமா?

அவர் பார்வைக்கு ஒரு நோஞ்சான் போலவே இருந் தார் எனச் சொல்லப்பட்டது. அவர் சொன்னார், "என்னை எல்லோருமே தாதா, பெரிய சண்டைக்காரன் என்று சொல்கின்றார்கள். நான் யாருடனும் வீணாகச் சண்டைக்குப் போவதுமில்லை. நான் ஒரு அப்பாவி, இந்தச் சமூகம் ஏன்தான் இப்படிச் சொல்லிச் சித்தரிக்கின்றதோ தெரிய வில்லை. என்னைப் பார்த்தால் பெரிய தாதா போலவா தெரிகின்றேன்? இது ஏன் என இன்னமும் விளங்கவில்லை” என்றார்.

உண்மையில் அவர்மீது ஏராளமான குற்றவியல் வழக்குகள், குற்றச்சாட்டுக்கள் குவிந்து இருந்தன. நகரில் மிகப்பெரிய செல்வாக்குள்ளவர். சகல பிரமுகர்களுக்கும் இவரது தயவு தேவைப்பட்டது. அரசியல் செல்வாக்கு வேறு. இப்படியிருப்பவர், வாழ்க்கையைச் சுதந்திரமாக இரசிக்கத் தெரியாமல், கோழைபோல் கல்லறைக்குள் அடைபட்டுக் கிடப்பதுபோல், கட்டிடத்திற்குள்ளேயே கிடந்து வெளியே வரமுடியாமல் வாழ்வதும் ஒருவாழ்வோ? மனத்துக்குள் பயந்தும் வெளியே வீரன் போல் காட்டி வாழ்வது, தன்னை யும், தான் வாழும் சமூகத்தையும் ஏமாற்றுகின்ற எத்தர்களுக்குரிய செயல்.

செயல்களில் முழுமனதுடன் உழைப்பவர்கள், எதிர் வரும் எதிர்ப்புகளை உடைத்தெறிந்து முன்னேறி விடுகின்றார்கள். வெற்றிகளின் பொருட்டுச் செருக்கு அடையாது, மென்மேலும் எதை எதை எடுத்து ஆள்வது என்பதிலேயே குறியாக இருப்பவனே உண்மையான தைரியசாலியுமாவான்.

செயல்வீரன் சாந்தியுடன் வாழ்கின்றான். கோழை தைரியசாலி வேடம் போட்டாலும் அது அவன் ரூபத்தை இறுதியில் காட்டிவிடும். வெற்றிகொண்டவன் மட்டுமே வீரனாகிவிடமுடியாது. தொடர்ந்து தோல்விகளைக் கண்டும் துவளது தொடர்ந்து சென்று கொண்டிருப்பவனும் உண்மையான வீரன்தான்.

சிலவேளை சாதாரணமானவர்கள் மிகுந்த சிரம மடையாமலேயே வெற்றிகளைத் தொட்டு விட முடியும். ஆனால், கஷ்டப்பட்டும் உடனடியான பெறுபேறுகளைக் காணாது விடினும்கூட, முயல்கின்றவனைப் பாராட்டாமல் இருக்க முடியுமா? எனவே, தோல்வி கண்டவனைக் கேலி பேசவேண்டாம். அவர்கள் மனம் உடைந்துபோக உங்கள் கண்டனங்களை, விமர்சனங்களைத் தவிர்த்துவிடுங்கள். உங்களால் தூஷிக்கப்பட்டவன் தன் முயற்சி காரணமாக எழுந்துநின்றால் அப்புறம் என்ன முகத்துடன் அவர்களைப் பார்த்திடமுடியும் சொல்லுங்கள்!

வெற்றிபெற்ற ஒருவரைப் பாராட்டாமல்இருப்பதும், பொறாமை காரணமாக விக்கிரவார்த்தையாடுவதும் வீணாக பகையுணர்வை, எதிரிகளைச் சம்பாதிப்பதுமேயாகும்.நல்ல முறையில் சாதனை செய்பவர்கள், தகாத செயல்களைச் செய்து தங்களது ஆன்ம பலத்தை வீண் விரயமாக்குவது மில்லை.

தங்களிலும் வலிமை குறைந்தவர்களிடம் மட்டுமே மோதிப்பார்ப்பதில் அலாதி திருப்திப்படுபர்களும் இருக்கின் றார்கள். இத்தகையவர்கள் சாதாரணமான அப்பாவிகளை மிரட்டுவதன் மூலம் பத்துப்பேர் தங்களுக்குப் பயந்தேயாக வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். "பார்த்தீர்களா. அவன் எத்தனை பேர்களை அடக்கி ஆளுகின்றான். இவனுடன் பேசும் போதே நாங்கள் சர்வஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று விலகி ஓடும் மனிதர்களை பார்த்துக் குரூரதிருப்திப்படுபவர்களை என்ன செய்ய?

ஆனால், கண்டபடியாக இப்படிச் சண்டித்தனமாகப் பேசுபவர்கள், சில சமயம் எதிர்பாராதவிதமாக, தெரியாத்தனமாக நல்ல முரட்டு ஆசாமியிடம் அகப்பட்டு நசுங்குவதும், பின்னர் சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு மன்றாடித்தப்பித்து ஓடுவதும், அதைக்கண்டு மற்றவர்கள் "அடடா.இவனுக்கா நாங்கள் இவ்வளவு காலமும் பயந்து நடுங்கி வந்தோம்" என்று சொல்லி நகைக்கும் சம்பவங் களும் நடப்பதுண்டு. வஞ்சகமாக வம்பிற்கு இழுத்தால் பயந்தவனும் எழுந்து அடிப்பான்.

பலமிழந்தவனைத்தாக்குதல், துன்பப்படுத்துதல் ஒரு வீரன் செய்யும் செயல் அல்ல. உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களை வாய்ப்புக் கிடைக்கும் போது எதிர்பார்த்து முதுகில் குத்துவது, தங்கள் மீது வலிமையில்லாத வெறும் சதி மூலம் செய்கின்ற மட்ட ரகமான வேலையேயாகும்.

பிடிக்காதவர்களின் குடும்பங்களுக்குள் புகுந்து குழப்பங்களைச் செய்வது, நண்பர்களைப் பிரித்துவிடுதல், பொது அமைப்புக்களில் நிர்வாகத்தினுள் கலவரங்களை ஏற்படுத்தல், சமூக இணைப்பினைத் துண்டாடும் சதிநாச வேலைகள் எல்லாமே கோழைகளின் வேலைதான். இங்கு உண்மையான "வலிமை” என்கின்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனாலும் இத்தகைய காரியங்களைச் செய்வோர் தங்கள் செயல்களை வீராப்புட்ன் சொல்லிப் பெருமைப் படுவதுமுண்டு.

கற்றறிந்த பெரியோர்களைத் துச்சமெனக் கருது வதும், தாங்கள் சாராத மதம் மொழி, இன, மக்களை தங்களை விட அந்தஸ்து குறைந்தவர்கள் என்று விம்புடன் பேசுவதாலும் அவன் தைரியசாலி ஆகிவிட முடியாது. பிறரைக் கவர்ந்து அவர்களது அன்பினைப் பெற்று, ஆட் கொள்வதைவிடப் பெரிய வலிமை ஏது உளது? மனங்க ளைக் கூறாக்கிப்பார்ப்தை விடுத்துஎல்லோரையும் ஒன்றாக நோக்கி, வேற்றுமைகளற்ற மானுடனாக வாழ்வதைவிட வேறென்ன பலம் உண்டு!

எல்லோருமே செயல்வீரர்களாக வேண்டும் என்றே ஆசைப்படுகின்றார்கள். ஆனால் அப்படி உருவாகமட்டும் சங்கடப்பட்டுக் கொள்கின்றார்கள். மனோதிடத்தை உருவாக்கவும், அதன் மூலம் உழைப்பினை நல்கவும், பூரணமான தயார் நிலையில் இல்லாததாலேயே சோம் பேறிகளும், கோழைகளும், மலிந்துவருகின்றார்கள்.

நிதான புத்தி, பொறுமை

தியானம்

போதிய தேகப்பயிற்சி

நல்ல நூல்களைக் கற்று அறிதல்

சுகாதாரமாக வாழப் பழகுதல்

நல்ல துணிச்சல் உள்ளவர்களுடன் பழகுதல்

மன வைராக்கியத்தினை உடைக்கும் நபர்கள்

உறவைக் களைதல்

மேற்கண்ட வழிமுறைகள் உள்ளத்தினைத் தெளிவுடன் வளமாக்கும். இதனால் வீரமுடன், எந்த துயர்கள், சோதனைகள், வந்துற்றாலும் அதனை எதிர்கொண்டு அதனை இல்லாதொழிக்கவும் முடியும்.

நல்ல உடல் வளம் இருந்தால் தான், வாழ்வில் சந்தோஷமும் தெளிவும் பிறக்கும். உடல் ஆரோக்கியம் குன்றினால், மனதில் பயம், தெளிவு, இன்மை, சந்தேகம், கோபம், கோழைத்தனம் எல்லாமே குடிகொண்டுவிடும்.

"செயற்கரிய கருமங்களைச் செய்தேன் இன்னமும், இன்றும் செய்து கொண்டேயிருக்கின்றேன். இனிவரும் காலங்களிலும் சாதனைகளை வீறு கொண்டு செய்வேன்" என்று சதா மனதில் சொல்லிக் கொண்டேயிருப்போமாக!

வீரம் என்பது ஒருவனை ஒருவன் அடித்து வீழ்த்து வதுதான் அல்ல. திரைப்படங்களில் இதுதான் வீரம் என்று சின்னவர்களுக்கும், ஏன் பெரியவர்களுக்கும் காட்டப்பட்டு வருகின்றது. பொறுமை, அன்பு, மெளனம் இவைகளைக் காட்டுதல் என்பது எத்தகைய ஆன்மபலம் என்பதனை நாம் எப்போது உணரப் போகின்றோம்? வெறும் மன உணர்ச்சிக்கு அடிமையாகி, தடி, பொல்லு ஆயுதங்களுடன் மோதுவது என்ன கலாசாரமோ தெரியவில்லை. நிதான மான குணாம்சங்கள் மூலம் ஈட்டும் வெற்றிகள் பற்றி மக்களுக்குச் சொல்லப்படுவதில்லை. பகையுணர்வை மிகைப்படுத்தி முறுக்கேறி, அராஜகம்புரிவதில் என்ன கெட்டிக்காரத்தனமோ தெரியவில்லை. பழிவாங்குதலும், இடி முழங்குவது போலப் பேசுவதும், மனதைச் சல்லடையாக்கிச் செல்லாக்காசான பெறுமதியற்ற காரியமாற்றுபவர்களை, அறவே மாற்றிவிடும் ஆன்மீகவாதிகளுடன் பல அரசியல் தலைவர்களும் இருந்திருக்கின்றார்கள்.

உலகை வழிநடத்துபவர்கள் ஆன்மபலம் உள்ளவர்களாக இருந்தால்தான் எங்கும் அமைதி, சாந்தி பிரவாகிக்கும். அணுகுண்டின் வேகத்தை, அதன் உக்கிரத்தை, ஒரு ஆன்மபலம் பெற்றவனின் பார்வையும் கனிவான பேச்சும் அழித்து ஒழித்துவிடும். எவர்க்கும் துன்பத்தைக் கொடுப்பவனை விட அதனை அழிப்பவனே வீரன். துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சணை என்று சொல்வார்கள்.

சாவதற்கு அச்சமடையத் தேவையில்லை. ஆனால், சாவதற்காகவா பிறந்தோம்? இல்லை, துணிச்சலுடன் தீவிரமாக உழைத்துமுன்னேறுவதற்கே பிறந்தோம். சாவு எப்போதாவது வரட்டும், இருக்கின்ற வாழ்வை வளமாக்கு கலங்காது வாழ்வாய்! மற்றவர்களுக்கும் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டு. பிறர்க்கு வாழவழி அமைத்துக் கொடுப்பான்.

உண்டு உறங்குவது மட்டும் மிருகக்குணம். அது வேட்டையாடி உண்பதனால், அதனை வீரம் மிகுந்தது என்று கூறிப் பாராட்ட முடியாது. அது அதன் இயல்பு. மனிதன் உண்பதற்காகப் பிறந்தவனுமல்ல, மற்றவரை அடித்து ஒடுக்குவதற்காகவும் பிறந்தவனுமல்ல. மிருகம் செய்யும் வேலையை நாம் செய்யமுடியுமா? மானுட தர்மம் என்பது மனிதனாக இயல்பாக ஒன்றிணைந்து வாழ்வதேயாம். எங்கள் வல்லமை, வீரம், துணிச்சல், எவர்க்கும் தொல்லைகள் தராத, உலகிற்கு நல்லன செய்தலுக்கு மட்டுமேயாகும் என உணர்க!

தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி)

20-05-2007

 

எதிரிகள் 1

(நேரிடையாக தாக்கவரும் எதிரிகளை விடவஞ்சக நோக்குடன், சதிசெய்தி ஒருவரை ஒழிக்க முற்படுபவன், கோழைத்தனமான எதிரியாவான். வாழ்க்கையில் எதிரிகளை உருவாக்காமல் இருப்பது எமது புத்திசாலித்தனமாகும். நல்ல சிந்தனைகளுடன் அன்பினை ஊட்டுபவர்களுக்கு எதிரிகள் எதிர்ப்படமாட்டார்கள், இவர்களிடம் சரணடைந்தே போவார்கள். தமக்கு உகந்தவர்கள் அல்லாதவர்களுடன. விலகி இருப்பதுநல்லது கண்டபடி பேச்சை வளர்ப்பது, தீயோரிடம் உறவு பூணுவது, வலிந்து எதிரிகளை வளைத்து அணைக்கும் செயல். எந்தப் பலவானும் நியாயமற்ற முறையில், எவருடனும் போராடி வெல்ல முடியாது. எதிரிகளை உருவாக்குதலைவிட எவரையும் நேசித்து ஏற்றுக் கொள்ளுவதே மானுட தர்மமுமாகும். புதிது, புதிதாக நல்லண்பர்களைத்தான் சேர்த்துக் கொள்ள வேண்டும், எதிரிகளை அல்ல எதிரிகளை உருவாக்காமல், இருப்பது புத்திசாதுர்யமான காரியமேயாகும். எங்கள் மீது எமக்குக் கரிசனம் சிரத்தை இல்லாதுவிட்டாலும், எதிரிகளோ எங்களது ஒவ்வொரு அசைவுகளையும் பதிவு செய்வதில் ஆர்வமாகவே இருப்பார்கள். அவர்களின் இந்த போக்குப் பார்ப்ப தற்கு கோபமூட்டுவதாக இருக்கும் அதே வேளை விபரீதமான பின் விளைவுகளுக்கும், இந் நடவடிக்கைகள் பிரதான காரணிகளாக அமைந்து விடுகின்றன.

சமயம் வரும்போது ஒருவரை வீழ்த்தி, மற்றவர் உயர்ந்து விடலாம் என்கின்ற எண்ணம் கொண்டால், முடிவில் இந்த மட்டரகமான சிந்தனையால் அவர்களே வீழ்வதும் திண்ணம். நல்லவர் போல் ஒட்டி உறவாடி அடுத்துக் கெடுத்தல் ஆகாத செயல். நம்பிக்கை கொண்ட வர் போல், நடித்துத் தமது எதிரிகளைப் பழிவாங்குதல் துரோகத்தனத்தின் உச்ச மிலேச்சத்தனமானது. பழிவாங் கும் இழிவுக்குணம் கொண்டவர்க்கு நல்ல நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். இத்தகையவர்களே வலிந்து துன்பங்களை விலைகொடுத்து வாங்குபவர்கள்.

மற்றவர் செயல்களைக் கண்காணித்து அவர்கள் பற்றிய மிகத்தவறான தரவுகளைச் சேகரிப்பவர்கள், தங்கள் சொந்த வாழ்க்கையில் தெரிந்தே செய்கின்ற மாபெரும் தவறுகளை நினைந்தும் பார்க்காது எதிரிகளை எப்படியாவது வீழ்த்திவிடல் வேண்டும் என்று ஊண், உறக்கமின்றி இருப்பவர்கள். மனோநிலைகுன்றிய மனநோயாளிக ளேயாவர். இந்தத் தான்தோன்றித்தனமான செய்கையா ளர்கள், நிம்மதியாக உறங்கி விழிப்பவர்களுமல்லர். இத்தகையோர் தமக்கு மட்டுமல்ல, தங்கள் குடும்பம், பரம்பரையினர்க்கே மாபாதகம் செய்தவர்களுமாவர். வன்ம உணர்வுகள் பன்மடங்கு துர்ப்பிறவிகளை எடுக்க வழிகோலும்.

அரசன் அன்று அறுப்பான், இறைவன் நின்று அறுப்பான் என்று முதுமொழி புகன்றிடினும், இன்றைய நிலை அப்படியாயில்லை. இறைவன்கூடக் காலஅவகாசம் பார்ப்பதில்லை. கொடுமதியாளர்கள் உடனடியாகவே தண்டனை பெறுவதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். எதிரிகளுக்கு நல்லறிவூட்டி, அவர்களை எம்பால் ஈர்ப்பதே மானுடதர்மம். எதிரிகளுக்கோ, வேறு எவர்களுக்கோ தண்டனைகள் வழங்க நாம் யார்? புரிந்து கொள்வோம்!

பாவம் செய்தவர்கள், பாழ்குழியில் வீழ்வதைத் தடுக்க முடியாது. தவறு செய்தவன் தண்டனை பெற்றேயாக வேண்டும். விதை விதைத்தவன் பயிரின் பயனைப் பெறுதலும், வினை செய்தவர் அதன் பெறு பேறுகளை அடைவதும் இறை நியதி. எனவே, எதிரிக்கும் மனிதாபி மானமற்ற முறையில் அநியாயம் செய்தால், தண்டனை எவர்க்குமே பொதுவிதி என்கின்ற கூற்றுக்கு அமைய நிச்சயம் அதன் எதிரொலியான பலாபலன்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதன் முழுப்பொறுப்பும் அவர்களுக் கானதே!

இன்று நாம் நவீன காலத்தினுள் உலவி வருகின்றோம். தமக்குப்பிடிக்காதவர்களை,தங்கள் கருத்துக்களுக்கு மறுப்புச் சொன்னவர்களை, தமக்குப் பிடித்தவர்களுக்கு எதிராக நடப்பவர்களை, தங்கள் இஷ்டத்திற்கு நொடிப் பொழுதில் அழித்தேவிடுகின்றார்கள். எனவே, பகைமை யைச் சந்திப்பதும், அதனை உருவாக்குவதும் ஆகாத செயல்தான். கூடியவரை ஒருவர் பற்றிய விமர்சனங்களை இழிந்துரைப்பதைத் தவிர்த்தால் நல்லது தானே.

எந்தத் துர்க்குணத்தையும், அது எங்கள் உரிமை என்று கருதும் சிலருக்கு முன் எந்த நியாயங்களும் எடுபடா திருப்பது துரதிஷ்டமானது.

ஆயினும், எவரும் தமக்கு உகந்தவர்கள் அல்லாத வருடன் விலகி இருப்பதில் என்ன சிரமம் இருக்கப்போகின் றது. தீயாரோடு, இணங்குவது, பேசுவது, பார்ப்பது எல்லாமே விபரீதமான முடிவினைத்தரும். எந்தவிதமான காரணமும் இன்றி எதிரிகளாகப் பிறரை நோக்குவர்களிட மிருந்து, நாம்தான் உணர்ந்து தெளிந்து, விலகிவிடவேண்டியதே. இது காலத்தின் கட்டாயதற்காப்பு நடவடிக்கைதான்.

அரசியலைப் பொறுத்தவரை இங்கு நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தரமான எதிரிகளுமில்லை. எல்லாமே பதவியை மையப்படுத்தியே உறவுகள் நிர்ணயிக் கப்படுகின்றன. ஓரிரு நபர்களைத்தவிர, அனைத்து அரசியல்வாதிகளுமே, உலகம் பூராவும் கொண்டுள்ள நிலைப்பாடு, எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றுதலேயாகும். இங்கு உண்மையான அன்பு நேயப்பாடுகள் எதிர்பார்க்கப்படுவதில்லை.

 

அப்படி இருந்தால் தங்கள் பதவிக்கு விட்டுக் கொடுப்புக்களை சந்திக்க வேண்டிவரும் எனக்கருதுகின்றார்கள். ஆனால் அரசியலில் புதியவரவுகளால் மேலதிக அனுகூலங்கள் வரும் எனக்கண்டால், உடனடியாகத் தோழமை உணர்வைக் காட்டவேண்டியதே. அரசியல் வாதிகளின் கோமாளித்தனமான, ஆனால் சுயநலம் மிகுந்த சண்டைகளைப் பாசமிகு நடிப்புக்களைக் கண்டு மக்கள் தான் திகைத்துப்போய் இருக்கின்றார்கள். இது உலக நடப்புத்தான். இதில் ஏதும் புதுமையில்லை. சர்வ சாதாரணமான விஷயம் தான். எதிர்பாராத வகையில் பழைய நட்புகளை உதறி புதிய நட்புக்களுடன் கைகோர்ப்பது அரசியல் நாகரீகமாகிவிட்டது.

தங்களுக்கு யாரிடமிருந்தாவது வரும் துன்புறுத்தல் களுக்குப் பரிகாரம் தேட சட்டமூலம் உதவிகோரும் நிலை அருகிவருகின்றது. எதிரியை வீழ்த்த அல்லது அவர்களைத் திருத்த நியாயபூர்வமான எண்ணங்கள் பயனற்றது என நம்புவது எவ்வளவு மதிகெட்டதனம் தெரியுமா?

* இறை அச்சம் * தான் கொண்டுள்ள மதம் மீதான பற்றுதல்கள் * நீதியின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை * மனிதாபிமானம் *உள் உணர்வு, மனச்சாட்சி மேற்கண்ட நெறிமுறைகளால், நாம் மானுடத்தை

நேசிக்கும் மனப்பான்மையினைக் கொண்டவர்களாகமாறிவிட முடியும். இதனால் காணும் மானுடர் எல்லாமே எமது உறவுகள் என்கின்ற உணர்வுகள் தான் மேலோங்கும். மேலும், தங்களுக்குச் சமனான அந்தஸ்தில் உள்ளவர்களுடன் மட்டும் அல்லது தங்களிலும் உயர்ந்த நிலையில் உள்ளவர்களிடம் மோதிப்பார்ப்பதுவே கெளரவம் என்று எண்ணுபவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் சாமானியமானவர்களைக் கண்டால் கேலிப் பேச்சோடு நோக்குவார்கள். "போயும், போயும். இந்த நோஞ்சானையா நான், எதிரியாகக் கருதுவது?" என்று கூறி விட்டு விலகிவிடுவார்கள்.

நியாயத்தின் பொருட்டு, அதனை நிலை நாட்டுவதற்காகப் போராடுவதும், அதற்காக எந்தவிதமான எதிர் விளைவுகளை சந்திக்கத் தயாராவதும் போற்றுதலுக்குரிய நல் இயல்பேயாகும். இதன் பொருட்டு தமக்கு எதிராகச் செயல்படுவோரை எதிர்த்து நின்று போராடுபவர்களைச் சமூகமே ஏற்றுக்கொள்வதால், இவர்கள் செய்யும் செயல் சமூக நோக்கானது என்கின்றபடியால் இங்கு எதிரிகளின் செயல்கள் நிர்மூலமாக்கப்பட்டே தீரும். நியாயபூர்வமான போராட்டம் என்பது, எதிரிகளை வேண்டுமென்றே உருவாக்குகின்றன என்று அர்த்தப்படமாட்டாது. தீமைகளுக்காகப் போராடுவது, எதிரிகளைத் தேடுவதுமல்ல. எல்லோருமே மெளனமாக அநீதிக்காகப் போராடாமல் இருக்கும் போது, யாரோ ஒருவர் போராட முன்வந்தால், அதன் பின்னர் மக்கள் அவனுடன் இணைந்து கொள்ளுதல் இயல்பான சங்கதியேதான். இன்றும், என்றும் ஓரிரு நல்லவர்களால்தான் பத்துப்பேர் பிழைத்துப் போகின்றார்கள்.

நியாயத்திற்கு அப்பால் எதிரியைச் சந்திக்க எண்ணி னால் இவர்கள் பலமிழப்பதும், நியாயபூர்வமாக அவர்களை எதிர் கொண்டால் பன்மடங்கு பலம் இணைதலும் தெய்வ சங்கல்ப்பம்.

சிலர் சொல்கிறார்கள் "எனக்கு எல்லாத் திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. என்ன செய்யலாம்” என்பார்கள். சில சமயம் இவர்கள் பயந்தது போலவே, எல்லோருமே சேர்ந்து இவர்களைப் போன்றவர்களுக்கு எதிராக இயங்கினால் இவர்கள் நிலை என்னவாகும்? பல திசைகளுடான எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுத்தல் எவ்வளவு சிரமமானது என்று தெரியுமா? இவைகளை அனுபவித்தோருக்கே இதன் அழுத்தம் புரியும்.

* புத்திசாதுர்யம், சமயோசித யுக்தி * வீம்பு பாராட்டாமல், சமரசமாகப் போதல் * தவறுகளை எங்கள் மீது இருந்தால் ஒத்துக்கொள்ளல்

மேற்படி விடயங்களைக் கருத்தில் கொண்டால் எதிர்ப்புகளை எதிரிகளைக் குறைத்துக் கொள்ள முடியும். சமரசமாக இணங்கிப் போதல் கோழைத்தனம் அல்ல. இவையெல்லாம் விட்டுக் கொடுக்கும் உயர்ந்த பண்புதான். மேலும், உங்களுக்கு எதிரி என ஒருவர் தெரிந்தாலும் அவர்களின் சிறப்பு இயல்புகளைப் பாராட்டுங்கள். அவருக்கு என்னைப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இவர் ரொம்பவும் படித்தவர். சொன்ன சொல்லைக் காப்பாற் றுபவர். அன்புமயமானவர் என உங்கள் நண்பர்களிடம் சொல்லிப் பாருங்கள். இதனை உடனே கேள்விப்பட்ட நபர்களும், உங்கள் மீது எத்தகைய கோபம் கொண்டிருந் தாலும், உங்களது தாராளமான பரந்த மனப்பாங்கினைப் புரிந்து, அவரே உங்கள் பக்கம் வர ஆரம்பித்துவிடுவார். புதிது, புதிதாக நல்ல நண்பர்களைத்தான் சேர்த்துக் கொள்ள வேண்டும், எதிரிகளை அல்ல!

திட்டுவதால், குறை சொல்வதால் எதனைத்தான் சாதிக்க முடியும்? நல்ல பண்புகள் எவரிடத்தும் இருந்தா லும், அதனை ஏற்று அவர்கள் முன், முகத்திற்கு நேரேயே அவர் பற்றி நல்வார்த்தைகளைச் சொன்னால், பகைமை பறந்துபோய்விடுமல்லவா?

எல்லா எதிரிகளையும் ஒருங்கே எதிர்க்காமல், படிப்படியாக ஒவ்வொருவராக, அழிப்பதாக கதைகளில் நாயகன் செய்து வருவான். அநேகமான கதைகளில் எதிரிகளை அழிப்பது பற்றியே சித்தரிக்கப்படுகின்றன. அவர்களைத் திருத்திநல்வழிப்படுத்துவதாகக் காட்டப்படுவ தில்லை. எங்காவது ஒரு சில கதைகளில், வில்லன் திருந்துவதாகக் காட்டுகின்றார்கள். மன்னிக்கும் இயல்பை மறக்கடிக்கும் சுபாவங்களைச் சித்தரித்து மக்கள் மனசை நசுக்கும் இத்தகைய சமூகவிரோதக் கருத்துள்ள திரைப் படங்கள், தொலைக்காட்சித்தொடர்கள் தங்கள்போக்கினை மாற்றியாக வேண்டும். இல்லாவிடின் குரூர எண்ணங்கள் வன்முறைக் கருத்துக்கள் என்பன தானாகவே மனித மனதுள் புகுந்து, எவரையும் இலகுவில் அடித்து வீழ்த்தி நொருக்கிவிட முடியும். கற்பனா உலகில் இளைய தலை முறைகளையும், ஏன் வயதுவந்தவர்களையும் உட்படுத்தும் வழிமுறைகள் சுத்த அபத்தமானது.

நகைப்புக்கிடமான முறையில் சிலர் நாட்டுத்தலைவர் கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் போன்றோரைப் பக்கத்து வீட்டுக்காரனைத் திட்டுவதுபோல் "அவரை விட்டேனா பார்” என்பது போல் பேசுவார்கள். இவர்கள் எல்லாம் தனது எதிரிகள் என்பார்கள். எங்கோ ஒரு நாட்டின் தலைவரை, இராஜதந்திரிகளை, மதத்தலைவர்களைத் திட்டுவதால் கோபப்படுவதால் என்ன பயன் வந்துவிடப் போகின்றது?

சதா கோபாவேசம் கொள்வதால் பதட்டப்படுவதால் என்ன நீதி எமக்குக்கிட்டப்போகின்றது. எங்கள் உணர்வுகள் நியாயபூர்வமாக இருக்கலாம். நியாயங்கள் அஸ்தமனமா வதில்லை. இதனை நம்புங்கள்!

அசாதாரண நிலையில் உள்ளவர்களே தம் நிலை உணராமல் மனித தர்மம் இன்றி நடந்து கொள்கின்றனர். ஆரம்ப நிலையிலேயே மனிதன் தன்னைப் பக்குவப்படுத்தாது விட்டால், அவன் உயர்ந்தவனாக வர ஆசைப் - படுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? அடிப்படையில் உள் உணர்வுகள் செப்பனாக உள்ளவர்கள் தலைவராக வந்தால்தான் அவர்களால் பகைமையினை வென்று, எதிரிகளை உருவாக்காமல், உலகைக் கட்டி எழுப்ப முடியும்.

எதிரிகளை அழிப்பது வீரம் அல்ல. எதிரிகளை நல்ல இதயமுள்ளவர்களாக உயிர்ப்பிப்பதுவே நல்ல மனோதிட முள்ள வீரமாகும்.

கொலை, களவு, கற்பழிப்பு, வழிப்பறிஎன்பவைகளால் உலகம் தவித்துப்போய் கிடக்கின்றது. இந்த உலகில் எல்லோருமே எதிரிகளாகத்தான் தெரிகின்றார்களோ என்று கூடச் சொல்பவர்கள் உண்டு. நடக்கின்ற தகாத செயல் களுக்காக உலகை வெறுத்து ஒதுக்க முடியுமா? கருணை, பரிவு, இரக்கம் போன்ற பண்புகளைக் கரிசனையுடன் ஒருவர்க்கொருவர் ஈந்திட்டால் மற்றவர்கள் விரோதிகள் என்கின்ற எதிர்மறைச் சிந்தனைகள், மனிதருள் புகுந்தி டுமோ? சந்தேகம், காழ்ப்பு, பொறாமை, ஆசைகளால் மற்றவர் முன்னேற்றம் கண்டு அவர்களை விரோதிப்பவர்கள் வருந்தி வினைதேடும் ஆத்மாக்கள் தான்.

மனதில் திடமும், ஆன்மீக நாட்டமும், அறிவும் இணைந்து கொண்டால் மனிதன் புனிதனாகின்றான். பிறக்கும் போதே தவறுகளைக் கற்றுக்கொண்டா பிறக்கின்றான்? இல்லையே, விரக்தி உணர்வுகள் கூட எதிரியாக மற்றவர்களைக் கருதிட வழிசமைக்கின்றது.

உள்ளத்தில் தெளிவு உள்ளவர்க்கு விரக்தி என்பது தான் ஏது? பாயும் சிங்கத்தைப் பரிவுடன் நோக்கு இதய சுத்தியோடு வருபவனைக் கருணைக் கண்கொண்டு நோக்கு அன்பினை உருவாக்கி எதிரியை இரக்கமுடன் பார்த்திடு இந்த உலகை அன்பினால் தரிசிப்பவர்க்கு எங்கு சென்றாலும் எத்தகைய அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும் உள்ள நிகரான இடம் கொடுக்கப்பட்டுவிடும் நிச்சயம்!

எதிரிகள், எதிர்ப்புக்கள் சூழ்ந்தால் ஒருவன் சுதந்திர மற்ற பிரஜையாகின்றான். கடுமையான எதிர்ப்புகளுக்கும், கோழைத்தனமான தாக்குதல்களுக்கும் உள்ளாகுபவன் எப்படி நிம்மதியாகத் தூங்கமுடியும்

சந்தோஷமாகச் சுதந்திரமாக வாழ்வதற்கு நாங்கள் பிறந்தோம். எவரையுமே எதிரிகள் எனக்கொள்ளாது அரவணைத்து “மெய்அன்பு" செலுத்தினால், வரும் எதிரிகள் கர்வம் குறைந்து உளம் நெகிழ்ந்து உண்மை நண்பர்களாகிக்கொள்வர் அன்றோ!

தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி)

13-05-2007

 

 

 

 

வேதனை

கழிகின்ற பொழுதுகள் அழுது வடிவதற்காக அல்ல. துன்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் இன்பம் எங்கே எம்மை அணைக்கும்? மரண வேதனை பொல்லாதது. இது நிரந்தரப் பிரிவு எல்லாமே இயற்கை நிகழ்வுகள் என மனதினுள் எண்ணத்தை வைராக்கியத்துடன் பதித்தால் பிரிவுகள், துயரமல்ல. துன்பப்பட்டு அழுவது சிலருக்கு இஷ்டமான பொழுதுபோக்குப்போல் கருதுகின்றார்கள். அழுது வடிப்பதை எவரும் ரசிப்பதில்லை. சோகத்தை ரசனை எனக்கருதாது, முகமலர்ச்சியுடன் எல்லோரிடமும் உறவாடுங்கள். நீங்கள் வேதனைப்படுவதை உங்கள் எதிரிகளைத் தவிர எவருமே விரும்ப மாட்டார்கள். இந்த நிலை மாற, வேதனைகளை எரிக்கும் அற்புத மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள் வேதனையுடன் வாழ்ந்தால், சாதனை எப்போது உண்மையானதும், வாழ்வாங்கு வாழ்பவர்களுக்கு இன்பமூட்டுவதுமான இந்த வாழ்க்கையில் வேதனையில் வெதும்பும் மனிதர்களின் தொகைதான் மிகையானதென்று சொல்லப்படுகின்றது. இன்பம் எதுவெனக் கண்டுபிடிக்கும் கலையினை எதுவெனப்புரிந்துகொள்ள விருப்பமின்றிக்கூட அநேகர் இருக்கின்றனர். கழிக்கின்ற பொழுதுகளை அழுது வடிக்காமல் வாழ்வது என்பதுவே ஓர் அரும் கலைதான். வாழும் நாட்களில் நாம் வேதனைகளை நீக்கிநோக்கினால் இருக்கின்ற காலங்களும், வருகின்ற பொழுதுகள் அனைத் துமே சந்தோஷகரமானதுதான். அதாவது, நாம் பார்க்கும் நோக்கில் துன்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது செய்கின்ற கருமங்களை ஆரவாரமின்றி அமைதியாக நிர்மலமான மனோநிலையில் ஆற்றிவருபவர்கள் கவலை களைக் கண்டு கொள்வதில்லை.

வேதனைகளைப் பற்றினால் அது சும்மா விட்டு விடுமா? கரடியைக் கட்டிப்பிடித்தால் அதுதான் விட்டு விடுமா? தேவையின்றியும், தானாகவும் கூடவேதனைகள் சூழ்ந்துவிடுவது இயற்கைதான். பெற்றார் சொல்கேட்காது கண்டபடி சுற்றித்திரிந்து கல்வியைத் தொலைத்து வாழும் பிள்ளைகளைக் கண்டால் வேதனை வராதா? கணவனால் இம்சிக்கப்பட்டுத் தினம் தினம் குடித்துப் பிள்ளைகளைக் கவனிக்காமல், தொழில் இழந்து கடனாளியானவனைக் கண்டால் மனைவிக்கு வேதனை வராதா?

காதலனால் கைவிடப்பட்ட காதலிஅல்லதுகாதலியால் ஏமாற்றப்பட்ட காதலனின் வேதனைகள், அவர்களுக்கே உரித்தான தனித்துவமான கொடிய வேதனை. நம்பிக்கைத் துரோகம் செய்த நண்பர்களால் அடையும் வேதனை, தொழிலாளர்களால் முதலாளி அடையும் வேதனை, முதலாளியால் தொழிலாளிபடும் அவஸ்தை என எண்ணிறைந்த வேதனைகளின் வடிவங்கள் அப்பப்பா. சொல்லிமாளாது. இவை மனிதரை வறுத்தெடுத்தே விடுகின்றது.

இத்தனை வேதனைகளிலும் மிகக் கொடியது. ஒருவரின் மரணத்தினால், வரும் வேதனை தான். இனி மேல், மரணமடைந்தவர்களைச், சந்திக்க முடியவே முடியாது என்கின்ற எண்ணம் வரும்போதெல்லாம் இந்த மனம் அடையும் குமைச்சல், நெஞ்சத்தில் ஏற்படும் வெற்றிடம், எழுதிட முடியாத துன்பசாகரங்கள்!

சதா எதைப் பற்றியாவது நினைந்து துன்பப்படுவது கூடச் சிலருக்குப்பிடிக்கும்."இதோ பாருங்கள், இன்று எனக்கு மனம் சரியில்லை, புறப்படும்போதே பாத அணியின் ஆணி கழன்று,வார்ப்பட்டை அறுந்துபோய்விட்டது.புறப்படும்போதே அபசகுணம்” போதாதற்கு இவர் மனைவியும் தன் பங்கிற்கு "உடை எல்லாம் அழுக்காகிவிட்டது, வர வர இவருக்கு வேலையில் பொறுப்பு என்பதே இல்லை. சரி, சரி எல்லாம் என் தலை எழுத்து". இப்படிச் சொல்லியதால் அன்றைய பொழுதை மனக் கொதிப்புடன் கழிக்கும் ஆத்மாக்களை கண்டால் எமக்கும் தான் தேவையின்றிக்கோபமும் சிரிப்பும் கூடவரும்.

இந்த உலகத்தின் அவல நிகழ்வுகளைக் கண்டு வேதனையுற்று நொந்து கொண்டிருக்கும் தூய ஆத்மாக் களும் உளர். தனக்காக அன்றிப் பிறர் பொருட்டு வாழும் உத்தமர்கள், மற்றவர் துன்பங்களைத் தாமே ஏற்பதுமுண்டு. தியாக உணர்வு, பிறர் வேதனைகளைத் தாங்கி அதனை இல்லாதொழித்துவிடும். இத்தகைய அரும் செயலைச் செய்பவர்கள் தாங்கள் ஏற்கும் பொறுப்புக்களை வேதனை யானது, தேவையற்றது என எண்ணுவது கிடையாது. எதனையும் ஏற்கும் நிலையில் உள்ளவர்களுக்கு, துன்பம் என்பது பிரச்சனைக்குரிய விடயமன்று.

மற்றவன் சந்தோஷமாக இருக்கின்றானே என்பதை எண்ணிவேதனைப்படுபவர்களும் இருக்கின்றாரகள். "நான் எப்படி நல்ல நிலையில் இருந்தேன். ஆனால், முந்தநாள் வந்தவன் இன்று என்னைவிட உயர்ந்துவிட்டானே" என்று தமக்குள்ளும் ஏன் வெளியிலேயும் சொல்லிப் புலம்பும் மனிதர்கள் இல்லாமல் இல்லை. மேலும் எந்தவித கடமைகள், பொறுப்புக்களைப்பற்றிக்கிஞ்சித்தும் கருதாமல், "இந்தக் கடவுள் ஒரவஞ்சனை செய்கின்றார், எனக்கு எந்தவிதமான அதிஷ்டங்களும் இல்லை” என்று அறியாமையினால் வேதனைப்படுபவர்களை என்ன சொல்ல?

எந்தப் பிரச்சனையிலும், கடவுளை நம்பினால் வேதனைகள் யாவும் பஞ்சாய்ப்பறந்து போம் என்று இறை நம்பிக்கை, விசுவாசமுடன் வாழும் ஆத்மாக்கள் பலர் தமது துயர்களுக்காக மற்றவர்மேல் பழியைப் போடாமல் இறை நேயத்துடன், “அவருக்கே, பாரம் அனைத்தும்” என்று வேதனைகளை வெல்பவர்கள் உள உறுதி மிக்கோர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

வேதனை தாளாமல் தற்கொலை செய்பவர்கள், தமது செயலால், பிறர்க்கு வேதனை அளித்துவிட்டுத் தப்பித்துப்போவதாகக் கருதியமை கொடியவேதனைதான். எவரும் தங்கள் பிரச்சனையைத் தாமே தீர்க்க வேண்டும். இல்லாது விடின் ஏதாவது உபாயத்தின் மூலம் வேண்டப் பட்டவர்கள் வாயிலாகப் பிரச்சனைகளைக் களைந்து கொள்ள வேண்டும். எந்த விதத்திலும் தமது இன்னுயிரினை களைதலும் களையமுனைவதும் உயிரின் விலை அளவிட முடியாதென்பதை உணராதவர்களால் செய்யப்படும் கொடும்பாவச் செயலுமாகும்.

வேதனைகளைக் கொய்துகொள்ளும் வடிகால்களாகத் தகாத வழிகளில் புலனைச் செலுத்துபவர்கள், தங்கள் தேகத்தின்நிலையை, கெளரவத்திற்கு ஏற்படுத்தும் பங்கத்தி னையும் ஏனோ அறியாமல் இருக்கின்றார்கள். காதல் தோல்வி, வியாபார நட்டம், எண்ணிய கருமங்கள் கைகூடாமைக்காக குடிப்பழக்கம், போதை வஸ்துப் பாவனையில் அதீதமாகக் கவனத்தினைச் செலுத்துகின்றார்கள்.

தோல்விகள் காரணமாக தொடர்ந்து வரும் வெற்றி வாய்ப்புக்களை, வேண்டுமென்றே புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாமா? “நயவஞ்சகத்தனமாக, நண்பர்களால் ஏமாற்றப்பட்டுப் பொருள் இழந்து நடுத் தெருவிற்கு வந்துவிட்டேன்" என்று சொல்லி அதற்குப் பரிகாரமாக, சவாலாகவாழ்ந்துகாட்டுதலை விடுத்துச்சோர்ந்து, விழுந்து, நைந்து, பிறர் பழிக்க, எதிரிகள் கண்டு சந்தோஷமடையுமாற்போல் தங்களை வதைக்கும் குடிப் பழக்கத்திற்கும் இதர துர்ப்பழக்கத்திற்கும் அடிமையாதல்புத்தி சாலித்தனமற்ற, அர்த்தமற்ற செயல் என ஏன் தான் உண ராமல் இருக்கின்றார்களோ தெரியவில்லை!

யாராவது தமக்குத் தீமைகளைச் செய்தால் ஏற்பட்ட வேதனைகள் உளப்பாதிப்பிற்குப் பழிவாங்குதலே வேதனைக்கு மாமருந்து எனச் சிலர் கருதிச் செயல்படு கின்றார்கள். தொடர்ந்தும் வேதனைகளைத் தொடர் கதைகளாக வளர்ப்பது ஆரோக்கியமான நடவடிக்கைகளே அல்ல. துன்பம் விளைவித்தோர் வியக்கும் வண்ணம் வாழுவதே உகந்த பரிகாரமாகும்.

மேலும் எதிரிக்கு மன்னிப்பு அளித்தலை நாம் எமது பண்பாகக் கொண்டால், எங்கள் மன அழுத்தங்கள் படிப்படி யாகத் தேய்ந்து, உள்ளம் விசாலமடைந்து எதிரியைக் கூடச் சரணடைய வைத்துவிடும். அறவாழ்வு நெறியை நாம் படிப்பதால் மட்டும் பயனில்லை. அந்நெறி வழி வாழ்ந்து காட்டுதலே சிறப்பு.

நியாயபூர்வமாக உழைத்தவர்களுக்குரிய பலாபலன் கிட்டாதுவிட்டால் அவர்கள் வேதனையுறுவது தவிர்க்க முடியாததாகும். நன்றாகப் படித்துப் பட்டம் பெற்றும் கூடத் தகுந்த வேலை கிடைக்காமலும் நன்கு படித்தும் துரதிஷ்ட மாகப் பரீட்சையில் சித்தியடைமாமலும் இருக்கும் பலரது மன அழுத்தங்கள் துன்பகரமானது தான்.

 

இருப்பினும், காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக அமைந்துவிடாதுவிட்டால் அது பற்றியே சதா நொந்து கொள்வதை விடுத்து வெற்றிகரமான வழிகளை அடுத்து மேற்கொண்டேயாக வேண்டும். அதாவது எமது செயல் களின் தோல்விகளுக்கான தடைகள் எது என்பது பற்றிக் கண்டறியவேண்டும். எங்கள் குறைகளை ஏற்று, அதற்கான மாற்றுவழிகளில் சிந்தனைகளை வெகு முனைப்புடன் திருப்பி, ஆற்றிவரின், நொந்த மனநிலையில் இருந்துமீண்டு, அவைபற்றிய மீட்டலில் தொடர்ந்தும் அழிந்துவிடாத தன்மையினை அமைத்திடல் முடியும்.

தொடர்ந்த உறக்க நிலையினை நாம் விரும்பி ஏற்க முடியுமா? இந்த உறக்கநிலை வாழ்வையே ஸ்தம்பிக்கச் செய்துவிடும் என்பதில் மனிதன் எச்சரிக்கையாக இருக்க வேண்டு மல்லவா? இயங்கா நிலை, வாழ்வை நித்திய பயமூட்டும் நிலைக்குள் தள்ளிவிடும்.

வாழ்வின் அந்தத்தில், விளிம்பில் மரண வாயிலைத் தொட்டு நிற்கும் நோயாளிகள் கூட, வேதனை பற்றிய உணர்வின்றி சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்த காட்சியைக் கண்டதும் வியந்துபோனேன். ஒருமுறை மகரகமை புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். ஒரு சிறுவன் அங்கு ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தான். அவனருகே ஒருவர் மிகுந்த கவலையு டன் அவனையே அவதானித்தபடி இருந்தார். அவரை நான் அண்மித்து விசாரித்தேன். அவர் சொன்ன விடயம், மிகுந்த கவலையை உண்டுபண்ணியது.

 

அவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனுக்குத் தலையில், புற்றுநோய் கட்டி இருந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தான். அவனுக்குத் தகுந்த சிகிச்சை மேற்கொண்டிருப்பினும், அவனது உடல் நிலையில் பெரிய முன்னேற்றமில்லை. எந்த வேளையில் எதுவுமே நடக்கும் ஆனால் நோயின் தன்மைபற்றி அவனுக்குத் தெரியாது. அவனது தலைமயிர் உதிர்ந்து இருந்தாலும் கூடப் பையனை நோயாளி என்று எவரும் சொன்னால் நம்பமாட்டார்கள் அழகாகவே காணப்பட்டான். மரணத்தின் சிரமம் தெரியாதுவிட்டால் வேதனை, ஆற்றாமை ஏக்கம் என்பதுதான் ஏது?

மேலும், அங்குள்ள நோயாளிகள் பலரும் தமது அடுத்தநாள் வாழ்வு பற்றி அழுது ஆரவாரப்பட்டுக் கொள்ள வில்லை. சிலரது முகங்களில், உடலில் நோயின் கடுமை, கொடுரம் தெரிந்தது. துன்பங்களின் உச்ச நிலையைக் கண்டவர்களுக்கு ஒரு எல்லைக்கு மேல் எதுவும் நடந்தாலும் நமக்கு என்ன என்கின்ற துணிவுநிலையும் தோன்றிவிடுதல் ஆச்சரியமன்று. இவர்கள் தம்மைச் சந்திக்க வந்திருந்த உறவினர்கள், நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டி ருந்தனர். நோயாளிகளின் துன்பங்களை விட அவர்களைப் பார்க்க வந்திருந்தவர்களின் முகங்களிலேயே துன்ப ரேகை கள், பெரிதாகப் படர்ந்திருந்தது.

சில நோயாளாளர்களைச் சுற்றி உறவினர்கள் எவருமே இல்லை. எந்தவித உறவுகளுமற்ற, அநாதைகளாகவும் சிலர் இருந்தனர். அவர்கள் முன் உள்ள நோயாளிக ளிடம் உறவினர்கள் வந்துபோனபோது தங்களை எவருமே வந்து பாரக்கவில்லையே என்கின்ற உணர்வு மரண வேதனையைவிடக் கூடுதலானதாகவே அவர்கள் பார்வை கள் சொல்லிக்கொண்டன.

அவர்களில் ஒருநோயாளி சொன்னார் "எமக்குச் சில வள்ளல்கள், பரோபகாரிகள் உணவுப்பொருட்கள் இளநீர், குளிர்பானங்கள், பால்மா, பால் எல்லாம் வாங்கிக் கொடுப் பதுண்டு. எங்களை உறவினர் ஒருவரும் வந்து பார்ப்ப தில்லை. ஆனால், எவராவது எங்களைப் போன்றவர்களிடம் வந்து ஒரு முறையாவது, கரிசனையுடன் தேறுதல் சொன்னாலே போதும் எமக்கு மரணவேதனை என்பதே இல்லாது போய்விடும். எமக்கு இன்றைய பொழுதில் தேவையானது மனிதர்களின், சுற்றியிருப்பவர்களின் அன்பு ஒன்றேதான். நாங்கள் இன்று இருந்து, நாளை இறந்து போகலாம்” என்றார்.

"ஆனால் எங்களது துன்பநிலை கண்டு எமக்காகப் பரிவு கொண்டாலே எமது ஆத்மா சந்தோஷப்படும்” என்றும் பல நோயாளிகள் சொன்னார்கள். உண்மைதான், மனிதனை மனிதன் நேசிப்பதால், என்றும் நோயாளிகள் சொன்னார்கள். துயர்களிலும் இருந்து அவன் விடுவித்துக் கொண்டவனாகவே கருதிக்கொள்வான். தனக்கு உறுதுணையாக ஒரு சீவன் இருக்கின்றதே என்கின்ற உள் • உணர்வு ஒன்றே அவனுள் புத்துணர்ச்சியை ஊட்டி, வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் மாமனிதனாக மாற்றி விடும். எந்த நோயும் நோவும் கூட நம்பிக்கை ஆதரவுகள் மூலமே குணமாகி விடும் என்று தானே உளவள மருத்துவர்களும் கூறுகின்றார்கள். எனவே ஆதரவற்ற துன்பமுற்றுள்ளவர்களுக்கு எமது இதய பூர்வமான ஆறுதல்களை வழங்குவோமாக!

வேதனைகளைச் சோதனைகளைச் சந்திக்காத எவருமே வீரம் பற்றியும், வெற்றிகள் பற்றியும் பெரிதாகச் சொல்லித் திருப்திப்பட முடியுமா? பத்துப்பேர்களுடன் ஓடி வெல்வதும், ஓடும் போது வீழ்ந்து எழுவதும் தான் உற்சாக மான போட்டியும், அதனை வென்றதனால் ஏற்படும் நிறைவுமாகும். சோம்பேறிகளுடன் வாழ்ந்தால் சோர்வும் வேதனையும் தான் மிகுதியாகும். உற்சாகமான போட்டி கள் உடல் உழைப்புகள் எந்தத் துயரையும் எமக்கு அளிக் காது. தொடர்ந்தும், தொடர்ந்தும் வேதனைகளில் அமிழ்ந்து பட்டால் தாழ்வுச் சிக்கல்கள் மெல்லெனப் பற்றி இறுதியில் அதுவே எம்மை ஆக்கிரமித்துவிடும்.

எங்கள் பலமிக்க, தீட்சண்யமான உலகம் மீதான பார்வைகள், நோக்குகள், வாழ்வின் அர்த்தங்களை அதன் உண்மைத் தன்மையினைக் காட்டி நிற்கும். அதனை உணர்ந்தவர்கள், வேதனைகள் எல்லாம் பலமற்றவை அழிந்துபோவன என உணர்ந்து கொள்வார்கள்.

இன்பம், மகிழ்ச்சி, மட்டுமே மனிதனுக்கு முழு அனுபவங்களைத் திருப்தியைத் தந்துவிடாது. ஆனால் அனுபவபூர்வமாகக் கண்டுகொண்ட, திருப்தியான, சந்தோ ஷங்களே உண்மையானதுமாகும்.துன்பங்கள் கூட இன்பங் களுக்கான சமிக்ஞைகள்தான். எனவே"துன்பங்கள்” இன்ப அனுபவங்களைத் தரவல்ல ஒரு நல்ல அனுபவம் என்பதில் சந்தேகமில்லை. வேதனைகளில் இருந்து மீண்டு செயல் களை நாடினால்தான், அடுத்தகட்ட நுகர்ச்சிகளுக் கான பயணங்களை ஆரம்பித்தவர்களாவோம்.

இன்பங்கள் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங் களைவிட துன்பதுகர்வினால் பெற்றுக் கொண்டவை வலுவானவை. தனக்காக வேதனையுறுவது ஒருபுறம், குடும்பங் களுக்காக வேதனையுறுதல் ஒருபுறம் இருக்க உலகினரின் சில தகாத போக்குகளுக்காக வேதனைப்படும் மாந்தரும் உளர். ஆயினும் நாம் இவைகளைக் களைய என்ன நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம் என்று எம்மை நாம் கேட்கின்றோமா?

எவரும் பலமிழந்தவர்கள் எனத் தம்மைக் கருதுவ தனைத் தவிர்த்தேயாக வேண்டும். எடுத்ததை எல்லாம் பிடித்தது எனக் கருதுவதும், எடுத்ததை எல்லாம் ஆரா யாமல் பிடிக்கவில்லை எனக் கருதுவதாலும், மனிதன் தன் வசமிழக்கின்றான்.

தனது பலத்தை உணராமைக்கான காரணம் கூட அவனது தீர்மானங்கள், செயல்கள் பற்றித் தீர்க்கமான முடிவுகளைக் காணாத காரண்ம் தான் என்று உணருகின் றான் இல்லை. இதேபோலவே, வேதனைகள் பற்றிக்கூடச் சில சமயம் குழம்பிய நிலையில், அதில்இருந்து மீள விருப்பமின்றியும் விடுகின்றான். சிலவேளை தன்னையே ஆராய்ந்து பார்த்து “நீான் வீணாக உடைந்துபோய் விட்டேனோ” என எண்ணிச் சுவீகரித்தாலும் கூடவேதனை யில் வாட்டமுறாது சீவிப்பதும் நடைமுறைச் சாத்தியம் இல்லை. படிப்படியாகத் தன்னைதான் ஒருவன் நிமிர்த்தியேயாக வேண்டும்.

எம்மை நாம் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எங்கள் வேதனைகளை எத்தனை வருடங்கள் வரை தூக்கிவைத்துக் கொண்டாட முடியும்? இறக்கி அதை அழிக்க வேண்டாமோ? நாங்கள் கோழை களாக வாழப் பிரியப்படக் கூடாது. வாழ்க்கை பல காயங் களை ஏற்படுத்தியே தீரும். உட்காயம் என்கின்ற மன வேதனைதான், ஆற்றுதல் படுத்த அதிக காலங்களைக் கோருகின்றது. இந்த நீண்ட கால இடைவெளிக்குள் எவ்வளவோ நல்ல விஷயங்களை நாம் கோட்டை விடலாமா?

அழுவதைவிடச் சிரித்து எழுவது வலிமை. ஏழ்மையை நினைந்தோ, அன்றி எதிர்பாராத இடர்கள் குறித்தோ நாம் சிறுமைப்பட வேண்டிய அவசியமில்லை. எந்தத் தரத்தில் உள்ளவர்களுக்கும் துன்பம் என்று வரும்போது அது பொதுமை உணர்வாகின்றது. இவைகளை வென்றுகொள்பவர்களே. அனைவரிலும் முதன்மையான பாக்கிய வான் ஆகின்றான். மானுட முதன்மைப்பேறு என்பது ஆத்ம சுத்தியிலும் அதன் துணையுடன் வேதனைகளில் இருந்து விடுதலை பெறுதலிலுமே தங்கியுள்ளது. வேதனைகளில் இருந்து விடுதலை பெறுதலைவிடச் சுதந்திரம் வேறு ஏது உளது? எனக்கருதிப் பிறர் பொழுதுகளைக் கரைப்பவர்கள் இம்சைகள் தரும் சுயநலக்காரர்கள். தங்கள் குறைபாட்டினை மறைக்க வீம்பாகப் பேசி, னையோர் மனத்தை அரித்தெடுக்துத் தங்களை உணராமல் இருக்கின்றார்கள். எல்லோரும் ரசிக்கும்படியான நபராக வாழவேண்டும். ம்சை தருவோரைக் கண்டாலே துன்பம். மனதை மருட்சிக்குள்ளாக்கி மடிக்கும் செயல்களைச் செய்பவர்களின் நடவடிக்கைகளைப் புறம்தள்ளுக! எமக்கு தீமை தரும் எதனையும் நோக்காது இருந்தால் ம்சையாளர் ஓசையின்றி விலகுவர். ஒருவருடைய மனதை நெருடவைக்கக் கூடியதும், உள்ளத்தை உடைக்க வைப்பதும் அவர்தம் பொன்னான பொழுதுகளைத் தெரிந்தோ, தெரியாமலோ வீணடிக்கக் கூடிய கருமங்கள் எல்லாமே"இம்சைகள்" என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. . . .

 

தான் உண்டு, தன் கருமம் உண்டு எனத் தொந்தர வின்றி வாழ்பவர்களுக்குக் காழ்ப்புணர்வு மேலீட்டினால் அவர்களுக்கு தொல்லைகளைக் கொடுப்பது, மன உளைச்சலையும் கட்டுமீறிய கோபங்களையும் தாராளமாக வழங்குவதுபோலாகும்.

மற்றவர் உள உணர்வுகளைப் புரியாமல், அதனை மதிக்காமல், மதிகெட்டதனமாக வாழ்பவர்கள் சமூகத்தில் எப்படி ஒன்றிணைந்து நேயப்பாடுடன் வாழ முடியும்? தங்களது அலுவல்களைத் தவிர உலகில் வேறு ஒருவருக் கும் எந்தக் கருமமும் கிடையாது என்பது போல் நடப்பது வேடிக்கையானதும், அருவருப்புமானது என்பதனை இம்சைகளை வலுவாகத்திணிப்பவர்கள் உணர்கின்றார்கள் இல்லை. இந்த உலகம் முழுவதும் தனக்காக மட்டுமே இயங்குவதாகவும், தமது கருத்துக்கள், ஆசை, அபிலாசை களுக்கு ஏற்பவே இயங்கவேண்டும் என எண்ணுவது உகந்தது இல்லை என ஏன்தான் கருதாமல் இருக்கின்றார்களோ தெரியவில்லை.

நீங்கள் அவசரம் அவசரமாக அலுவலகத்திற்குப் புறப்படத் தயாராக இருக்கின்றீர்கள். காலை வேளையில் நேரங்கள் கடிதென மறைவதாகவே தோற்றம் காட்டிநிற்கும். வேலைகளில் தீவிர கவனம் செலுத்தும் போதுகாலத்தின் ஓட்டம் புலனுக்குப் புரிவதில்லை. அலுவலக வேலைகள் தொடர்பான மன அழுத்தங்கள், போக்குவரத்து நெரிசல் கள், இடையிடையே தொலைபேசி அழைப்புக்கள் வேறு மலைக்க வைக்கும்.

இந்தக் காலை வேளையில் பக்கத்து வீட்டுத் தாத்தா வருகின்றார். “என்ன தம்பி. இன்றைக்குக் காலைப் பத்திரிகை வந்துவிட்டதா. என்ன செய்தி, நேற்றும் நான் உங்களிடம் பத்திரிகை வாங்கவில்லை. இந்த நாடு போகின்ற போக்கே சரியில்லை. அது சரி. உங்கள் மாமா நேற்று ஊரில் இருந்து வருவதாகக் கேள்விப்பட்டேனே வந்து விட்டாரா. கப்பலிலா அல்லது விமானத்திலா. ஊரில் என்ன. புதினமாம். அட. நான் கேட்டுக் கொண்டேயிருக் கின்றேன். நீங்கள் பாட்டிற்குச் சும்மா நிற்கின்றீர்களே. மனுஷன், ஒருவன் காலை வேளையில் வலியவந்துபேசிக்

இப்படி ஒரு பிரகிருதி காலநேரம் தெரியாமல் கழுத்தறுக்க வந்தால் வேலைக்கு அவசரம் அவசரமாகப் புறப்படும் மனிதருக்கு எப்படி இருக்கும்? இவரது இந்த பேச்சுக்கள் இன்று, நேற்று அல்ல, தினசரி தொடர்ந்தால் எப்படி ஒருவர் அதனைச் சகித்துக் கொள்ள முடியும்?

அலுவலகத்தின் முகாமையாளர் ஒருவர் தமது இல்லத்தில் தனது நிறுவனம் தொடர்பான அறிக்கையினை வெகு சிரத்தையுடன் தயாரித்துக் கொண்டிருக்கின்றார். அப்போது, அவரது மனைவி ஆக்ரோசமாக அவரது

அறைக்குள் நுளைகின்றார். "இதோ பாருங்கள். என்ன. நான் பேசுவது புரிகின்றதா. வரவர உங்களுக்குக் குடும்பம் என்கின்ற உணர்வே இல்லை. எப்போ பார்த்தாலும் ஒரே எழுத்து வேலை. அல்லது படிப்பு. படிப்பு. இங்கே வீட்டு வேலையை யார் பார்ப்பது. நான் ஒருத்தி இங்கே இருந்து அல்லாடு கிறேன். இங்கே வீட்டுச் செலவு, பிள்ளைகள் படிப்புப் பற்றி என்ன தெரியும். நாளைக்கு உங்கள் சித்தி வீட்டில் கல்யாணம், மறுநாள் கோவில் திருவிழா, மின்சாரச் செலவுகளுக்குப் பணம் செலுத்த வேண்டும்.”

இப்படி, எல்லா வேலைகளையும் மனைவி அடுக்கிக் கொண்டே போகின்றார்.கணவன் அமைதியாக இருக்கும் வேளையில் வீட்டுப்பிரச்சனைகளைச் சொல்லும் பழக்கம் சிலரிடம் காணப்படுவதில்லை. ஏதாவது அவசரமாக, அவசியமான பொழுதுகளிலேயே கண்டபடி பேச ஆரம்பிப் பார்கள் பதிலுக்குக் கணவன் வேலைப்பளு காரணமாக ஏதாவது சொல்லப்போக, வீடே களேபரமர்கிவிடும். இந்தச் சண்டைகள், எப்போதோ ஒருநாள் நடந்தால் பரவாயில்லை. தினம், தினம் ஏதாவது ஒரு பிரச்சனைகளை உருவாக்கு வதும், பதிலுக்கு அவரும் எதிர்வாதம் செய்ய, வீட்டில் நிம்மதி வந்துவிடுமா? காலப்போக்கில் மனைவி, கணவன் இருவருமே ஒருவர்க்கு ஒருவர் இம்சை தரும் பாத்திரங் களாக உருமாறி, ஒருவரைக்கண்டால் மற்றவர்க்கு எரிச்சல், பய உணர்வு, ஆத்திரம் எல்லாமே கூடிவந்து விடலாம் அல்லவா?

எனவே சின்னச் சின்ன விடயங்களே, வீட்டில் அவை தொடர்கதையாய், ஆரவாரப்படும் அம்சங்களாய், இம்சைகள் தருவனவாய் மாறிவிட வழிகோலுதல் நல்லதேயல்ல. ஒருவருடைய சிந்தனைகள், செயல்களைத் துண்டித்தல் இம்சைகளை ஆரம்பிக்கும் மோசமான காரணியாகும்.

தெரியாத்தனமாக அசட்டுத்தனமாகக் கூடச் சிலர், மற்றவர்களுடன் நடப்பதுண்டு. இவைகள் மன்னிக்கப்படக் கூடியதே எனினும், இத்தகையவர்களால் மேலும் ஏதாவது பாதிப்பு நடந்துவிடாமல் பக்குவமாக இத்தகையவர்களுக்கு டுத்துரைத்தேயாக வேண்டும். அறியாத்தனமாகக் ண்டபடி நடப்பவர்கள் கூட இறுதியில் இம்சைக்குரிய நபராகச் சமூகத்தில் கருதப்படலாம் அல்லவா? வேண்டு மன்றே தவறாக நடப்பவர்களையும், அப்பாவிகளையும் இனம் காணுதல் என்பது சிரமமானது அல்ல. முன்பு ப்பவோ, நடந்து போன சம்பவங்களைத் திரும்பத் திரும்ப வந்து யாரிடமாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

"அப்போது எனக்கு வயது இருபது இருக்கும். யுத்த காலம். எமதுகுடும்பம், பர்மாவில் இருந்தது. ஒரே குண்டு மழை, நாங்கள் எல்லோரும் தப்பிப்பிழைத்தது பெரிய கரியம் எங்கோ ஒடி நடந்து. இந்தியா வந்து.”

இந்தப் பழைய கதைகளைத் தினசரி ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தால் சொல்பவருக்குச் சந்தோஷம் அவருக்குச் சலிப்புத் தட்டாது. ஆனால் கேட்பவருக்கு.? "சரி. ஐயா. வேறு விஷயங்களைச் சொல்லுங்கள்” என்று கேட்டால் போதும், அது கூட முன்பு பலதடவை கேட்ட செய்தியாகத்தான் இருக்கும். தங்களது தனிமைக்கு ஒரு ஆயிற்றரச் வடிகாலாகவும், பேசுவதைக் கேட்க யாரேனும் ஒரு சீவன் அகப்படாதா என்கின்ற ஆதங்கத்துடனும் எதிரில் வருபவர் களைச் சிக்கெனப் பிடித்தால் அகப்பட்டுக் கொள்பவர் என்ன செய்வார், பாவம். பொதுவாக, தங்களிடம் உள்ள குறைபாடுகள், பலவீனங்களை அறிந்தும் கூட, அதனின்றும் விடுபட முடியாதவர்கள், மற்றவர்களிடம் வந்து தம்மைப் பற்றி மிகையாகத் தாங்களே சுய விமர்சனம் செய்வது முண்டு.

எந்தவித வசதிகள் அற்றும் எதுவித முயற்சிகளும் செய்யாமல் இருக்கிறவர்கள் யாரையாவது கண்டதும், தங்கள் பரம்பரை வரலாறு பற்றிக் கூற ஆரம்பிப்பார்கள். "நாங்கள் எவரிடத்திலேயும் கை ஏந்தும் பரம்பரையில் பிறக்கவில்லை. ஒன்றுக்கும் வழி இல்லாதவர்கள் எல்லாம் இப்போது ராஜாமாதிரி வேடம் போடுகின்றார்கள்” என்று கூறிவிட்டு, வழியில் காண்பவர்களிடம் இறுதியில் “கொஞ்சம் பணம் தாருங்கள். ஏதோ காலக் கஷ்டம், உங்களிடம் கூட நான் கைஏந்த வேண்டி இருக்கின்றதே" என்றும் குத்தலாக வேறு பேசுவார்கள். இந்த தொண, தொணக்கும் பேச்சை அடிக்கடி கேட்டும் நபர்களால் என்ன செய்யமுடியும்? வீம்பாகவும் பேசுவார்கள். கை நீட்டி உதவியும் கேட்பார்கள். கொடுக்காது விட்டால் வருகிற, போகின்றவர்களிடம் திட்டியும் தீர்ப்பார்கள்.

இன்னும் ஒரு ரகமானவர்கள் இப்படி இருப்பார்கள். பார்ப்பதற்கு அழகற்றவராக இருப்பார்கள். ஆனால் அழகான பெண்களைக் கண்டால் போதும் "இவளைப் பாருங்கள். இவள் நடையைப் பார், பெண்ணா இவள் கொஞ்சமும் அடக்க ஒடுக்கமில்லை. எங்கள் முன்னோர்கள் எல்லாம் இப்படியாக இருந்தார்கள்?” என்பார்கள். அதுமட்டு மல்ல, எந்தவிதமான முன்னேற்றமுமின்றி வீதியோரம் திரிந்துகொண்டே இருக்கும் சிலர் எந்தவிதமான இரக்கம், பாவ புண்ணிய உணர்வின்றிப் பேசுவார்கள். "அதோ. அங்கே போகின்ற இந்த பெண், எப்பவுமே என்னையே பார்க்கின்றாள். நான் தான் அவளைக் கண்டதும் ஒழிக்கின்றேன். இப்படி எத்தனை, எத்தனை பெண்கள் தான் என்னைப் பார்த்தாலும் எனக்கு அவர்களைப் பிடிக்க வேண்டாமோ. வெட்கம் கெட்ட ஜன்மங்கள்” என நா கூசாமல் பேசுவார்கள். இத்தனைக்கும், தனது அழகை, அந்தக் கோரமுகத்தை அவர் தெரியாதவரும் அல்ல.

தங்கள் குறைபாட்டை மறைக்க மற்றவர்கள் மீது அபாண்டம் செலுத்தும் இத்தகையவர்கள் சமூக இம்சைப் பிரகிருதிகளே!

பிறர் நகைக்கவும், அவர்களை வதை செய்யுமாற் போல் பேசி நடந்து கொள்பவர்கள் காலப்போக்கில், முழுச்சமூகத்திற்கும் ஒவ்வாத மனிதராவர். எத்தனையோ குடும்பங்களில் கணவனின் இம்சை தாங்காத மனைவியும், மனைவியின் இம்சை தாங்காத கணவனும், பிள்ளைகளின் கேவலமான பேச்சைச் சகிக்க முடியாத பெற்றோர்களும், ஒருவரை விட்டு ஒருவர் அறவே பிரிந்து விடுவது நாம் கண்கூடாகப் பார்க்கும் சங்கதிகள் தான். ஒருவரின் தகாத நடத்தைகளை நண்பர்களாகட்டும், உறவினர்களாகட்டும் ஓரளவுதான் பொறுத்துக் கொள்ள முடியும். “வர, வர இவனது இம்சை தாங்க முடியவில்லை” என்று சொல்லும் நபர்கள் படும் அவஸ்தைகளை நாம் வேடிக்கையாகக் கேட்டு விட்டுப் போகலாம். ஒருவர் செய்கின்ற அடாத நடவடிக்கை களால் துன்பமடைபவர்களுக்கே அதன் பாதிப்புக்களும் தெரியவரும்.

தங்களுக்குத் தெரிந்த கருத்துக்களை வலுக்கட்டா யமாகப் பிறரிடம் திணிப்பதும் சிலருக்கு வழக்கம். ஆனால் இன்னும் ஒருவருக்கு, மற்றயவர் சொல்வது பிடிக்காமல் போகலாம். நல்ல விஷயங்களைக் கூட உடனே சொல்லிப் புரியவைக்க இயலாது. எல்லாவற்றையுமே உடனடியாக உபதேசிக்க முடியுமா? பக்குவப்படாத அறிவு நிலையில் உள்ள ஒருவரிடம், வேதபாடல்களைச் சொல்லிக் கொண்டே போனால் எப்படிக் கேட்பது? ஆரம்ப அறிவு நிலையில் இல்லாதவர்களிடம் கூடச் சில புத்திசாலிகள் பெரிய பெரிய விடயங்களைப் பற்றிப் பேசுவார்கள்.

"இது என்ன, இதுகூட உனக்குத் தெரியவில்லையா? சுத்த ஞானசூன்யமாக இருக்கின்றாயே" என்று வேறு கடிந்தும் கொள்வார்கள். எல்லோருமே படித்து முடித்து விட்டா அவரிடம் பேசப்போவது? ஒருவருக்குத் தெரிந்த விஷயம் மற்றவருக்குத் தெரியாமல் போகின்றது என்ன புதுமை, இது என்ன பெரிய குறைபாடா? இதனையே பெரிதுபடுத்தி இதன் பொருட்டுப் பகிரங்கமாக ஒருவரின் இதயத்தை நெருடும் பேச்சுக்களை, மமதையாகச் சொல்லி ஒருவரை வேதனைப்படுத்துவதில் கூடக் பரம திருப்திப்படுபவர்களும், மற்றவர் குறைபாடுகளைத் தேடி அலைபவர்களும், சமூக சுதந்திர உணர்வுகளை கிரகிக்க மறுக்கும் குறை மதியாளர்களேயாவர். நாகரீகமான இந்த உலகில் நாமும் சேர்ந்து வாழ வேண்டியுள்ளது. தங்கள் வீடு வாசல், உடமைகளைப் பார்ப்பவர்களைக் கவரும் விதத்தில் வைத்துக் கொண்டேயாக வேண்டும்.

சில விசித்திரமான பேர்வழிகள் இருக்கின்றார்கள். இவர்கள் நல்ல வசதி படைத்தவர்களாக இருப்பார்கள், ஆனால் இவர்களது வீட்டைப் பார்த்தால் வினோதமாக இருக்கும். எங்கோ பாழடைந்த தொல் பொருட்காட்சிசா லையில் நுளைவது போல் இருக்கும். சுத்தம் பேணவும் மாட்டார்கள்.

அவரது தாத்தா காலத்து வாங்கு, கதிரை, மேசை, ஓடாத மணிக்கூடு இவைகளுடன் மான் கொம்பு, வகை யறாக்களை தூசிகளை அப்பிப் பிடித்த, பழைமையான சுவரில் மாட்டி விட்டிருப்பார்கள். மங்கிய, காலத்துப் புகைப் படங்கள் வேறு பயமுறுத்திப் பார்க்கும். சுவர் முழுவதும் உடைந்து, சுண்ணாம்பு பூசாமல் இருக்கும். பழைய காலத்துக் கட்டில் கால் உடைந்து கயிற்றால் கட்டப் பட்டிருக்கும். மின்சாரம் இருக்காது. மூன்று, நான்கு தலைமுறை காலம், பரம்பரை பரம்பரையாகப் பாவித்த பித்தளை விளக்கு மெதுவாகக் கண்ணைச் சிமிட்டும்.

ஆனால் வீட்டிற்குவரும் நபர்களிடம் இப்படிச் சொல்வார். "இது எல்லாம் எங்கள் பரம்பரைச் சொத்து.நாங்கள் பாவிக்கும் வெண்கலக் குடம் வேறு ஒருவரிடமும் கிடை யாது. என்றாலும் பழைய சாமான்களுக்கு ஈடு ஆகுமோ. நாங்கள் இன்னமும் பித்தளைத் தம்ளரில்தான் தண்ணிரே குடிப்போம்." என்று சொல்லிக் கொண்டே போவார். இப்படி இவர் சொல்கின்றாரே. அந்தப் பொருட்களை, அழகாக அடுக்கி வைத்துக் கலைநயத்துடன் வீட்டை வைத்து இருக்கின்றாரோ, என்றால் அதுதான் இல்லை! இவர் தான் மட்டும் அனுபவிக்காமல், தனது மனைவி பிள்ளைகளுக்கும் எந்த வசதியையும் கொடுக்காது, தமது வீட்டையே ஒரு இருண்ட குகைபோலாக்கிதம்மைத்தான் இம்சைப் படுத்துவதில்லை, தனது குடும்பத்தையே இம்சைக்குள்ளாக்கும் விந்தை மனிதனாகவும் வாழ்ந்து என்ன பயனைக் காணப் போகின்றார்?

இன்று உழைக்கும் மக்கள் உழைத்துக் கொண்டே யிருக்கின்றார்கள். ஆனால் உழைக்காத தலைவர்கள் என்ன சொல்லி மக்களை அடிக்கடி இம்சைப்படுத்து கின்றார்கள்? “நாங்கள் ஒரு தவறும் செய்து விடவில்லை. முன்னைய அரசாங்கங்கள் தான் தவறுகள் பல செய்தன. இன்று எங்கள் ஆட்சியில்தான் பாலாறு, தேனாறு ஓடுகின்றது? எங்கள் நாட்டில் என்ன குறை, பிரச்சனைகள் உண்டு? எல்லா நன்மைகளும் இங்கு உண்டு” என்று மட்டுமா சொல்கின்றார்கள்?

மேலும், “இன்று உலக வல்லரசுகளே எம்மைப் பார்த்துப் பொறாமைப்படுகின்றன. மூக்கில் விரல் வைக்கின்றன. அபிவிருத்திப் பாதையில் வீறு நடைபோடு கின்றோம். இவை எல்லாமே எமது சாதனைகள், படைப்புக்கள்" என்று மார்தட்டிப்பேசினால் சனங்களுக்கு எரிச்சல் வராதா? தினம், தினம் மக்கள் பொருளாதாரம், கல்வி, தொழில் எனப் பலவாறான நெருக்கடியில் சிக்கித்திணறி விழி பிதுங்கி நிற்கும் போது, இந்த அரசியல்வாதிகளின் வீம்பான பேச்சால் வெறுப்பேற்றிமன அழுத்தம், கோபங்களை உற்பத்திசெய்வது பெரிய இம்சை அன்றி வேறென்ன?

பொய்யுரைகளைக் கேட்பதை விட வேறென்ன கொடுமை உலகில் உண்டு ஐயா! ஒருவரை அடித்து, உதைத்துச் சித்திரவதை செய்தல் மட்டும் இம்சித்தல் என்று சொல்ல முடியாது. ஒருவரைச் சுதந்திரமாக செயலாற்ற விடாது முடக்கி வைத்தல் எவ்வளவு பெரிய கொடுமை! பெண்களுக்கான உரிமைகளை வீட்டிலும், வெளியிலும் அளிக்காமல் இருப்பதும் சின்னஞ் சிறு சிறுவர்களை முன்னேற விடாது அவர்களைத் துச்சமாக மதித்து அவர்களது ஆசை, அபிலாசைகளை அடங்கச் செய்வதும், அடக்குதலும், கூலிக்கு வேலைக்கு அமர்த்து தல் எல்லாமே சமூக இம்சை, கொடுரம் என்று சொல்லிக் கருத்துச் சுதந்திரம் என்பது வெளியில் சொல்கின்ற கருத்துக்கள் பற்றியது என்றுதான் சொல்கின்றோம். நல்ல புத்திசாலிப் பையனின் கூற்றை ஆசிரியர் முடக்குவதும், நல்ல மனைவியின் கருத்தை ஏற்க கணவன் மறுப்பதும், கணவனின் நல்ல அறிவுறுத்தல்களை அப்படியே புறக்கணிப்பது கூட நல்ல விஷயங்களை ஏற்காத, தகாத குண இயல்களே. இதனால் பாதிப்படையும் எவர்களும் படும் மனக்குமைச்சல்கள் கொஞ்சநஞ்சமன்று.

சிலரது இம்சையூட்டல் குழந்தைகள் மேலும் பாயும். குழந்தைகளைச் சீண்டி அழவைத்து வேடிக்கை பார்ப் பார்கள். ரசிக்கத்தக்க விடயங்களை ரசிக்காமலும், ரசிக்க முடியாத மனங்களைக் கொய்யக் கூடிய விடயங்களை அதீதமாக ரசிப்பதும் வக்கிரமான கொடுர உணர்வு ஐயா? மனிதன் எந்நேரத்திலும் ஜாக்கிரதையாக இருந்துவிட முடியாது. ஏதோ ஒரு தருணத்தில் இடறி விழுந்துவிட்டால் அதை ரசிக்கும் ஜன்மங்கள் இருக்கின்றார்கள்.

இல்லாத விடயத்திற்கும் கை கால்களை ஒட்டவைத்து உயிரூட்டும் பரமாத்மாக்கள் இருக்கின்றார்கள். மீனை எண்ணையில் விட்டு சூடு ஏற்றும் போது அதன் விளைவாக எண்ணை குமிழ் ஏறி, சட்டியில் இட்டமீன்துள்ளினால் மீன் உயிருடன் துள்ளுவதாகச் சொல்பவர்களிடம், ஒன்றும் பேச முடியாது. பொய்யுரைக்கும் வீணர்கள், பொறாமைக்காரர், சூழ்ச்சி செய்வோர், எவரையும் தமது சொல்லால், செயலால் உடலை, மனத்தைக் காயப்படுத்தும்போது, அதன் பொருட்டு நாம் மனம் வருந்தினால், அது தீவினை யாளருக்கு ஏற்படும் வெற்றி என்பதாகவே அவர்கள் கருதுவர். இந்நிலைக்கு எவரும் வழிசமைத்தல் கூடாது.

மிகவும் ஆச்சரியப்படத்தக்கதும், வெட்கப்படக் கூடிய துமான செயல் என்னவெனில், பிறருக்குத் தீங்கு இழைக்க எண்ணுதலும், அதன் பொருட்டு மகிழ்வு எய்துவதுமாம். ஒருவருக்கு எதிரான செயலைச் செய்யச் சித்தம் கொள்வதே வெட்கம் கெட்ட செயல் தான்.தகாத கருமங்கள் செய்கின்ற நபர்கள் அதற்கான காரணங்களை, எப்படிச் சொன்னாலும், அதுபற்றிய வியாக்கியானங்களை அடுக்கிக் கொண்டே போனாலும், அவை எதுவுமே ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும். தாங்கள் கெளரவமானவர்கள், யோக்கியமானவர்கள் என்பதனை நிரூபிப்பதற்காகக் கொடுமையான கருத்துக்களை, மாயமான வழிகளில் புகுத்துவது தங்களையே ஏமாற்றும் செயல்தான்.

"நல்லவர்களுக்கான "புகழ் தானாகவே வந்து பூக்கின்றது" மற்றவர்களை இம்சித்து, போலி விளம்பரம் செய்து கீர்த்தியினை உருவாக்க முடியாது. மற்றவர் மனம் அறிந்து நடப்பவர்களால் அடுத்தவர்கள் உளம் நிறைவெய்துகின்றார்கள். எந்த நேரத்திலும், எந்தத் தருணத்திலும், நாம் எவர்க்காவது எம்மால் குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோமாக! எங்களை நாடி அன்புடன் வருவோர் தொகை மூலம் எங்களைப் பற்றிய - கணிப்பீடுகளை நாம் தெரிந்துகொள்ளமுடியும். அன்பினை ஊட்டுபவர்கள், அதனை வகை தொகையின்றிப் பெற்று அனுபவிப்பவர்கள், என்றும் சந்தோஷ ஜீவிகள் தான்.

தினக்குரல் (ஞாயிறு மஞ்சரி)

0.042007

 

 

மனிதாபிமானம்

அனைத்து உயிரினங்களிலும் இரக்கம், கருணை கொண்டால் உலகில் வருத்தம்கொள்ளல் என்பது ஏது? ஆன்ம விசாலம் கொண்டவர்களால் எவரையும் நேசிக்க முடியும். மனிதன், மனிதன் மீது வைக்கும் அன்பை மட்டுமே மனிதாபிமானம் என்று சொல்ல முடியாது. ஆறறிவு படைத்த மனிதன், எல்லா உயிர்க்கும் பொதுவான இந்தப் பூமியைப் பூஜித்துப் போஷிக்க வேண்டியவனாகின்றான். எந்த உயிரினத்தின் உடலை மட்டு மல்ல, அவைகளின் உணர்வுகளையும் இம்சித்தல் மனிதாபிமானம் அல்ல. நல்ல மனிதாபிமானம் மிக்கோரின் ஆன்மா என்றும் சுகராகம் மீட்டியபடியே இருக்கும்.

மனிதன், மனிதன் மீது வைத்துள்ள மிக இயல்பான இரக்கம், அன்பு, தயவு போன்ற மென்மையான உணர்வு களின் வெளிப்பாடாக, “மனிதாபிமானம்” என்கின்ற நேயப் பாடு அவனை உயர்நிலைக்கு இட்டுச்செல்கின்றது. மனிதன் எல்லா உயிர்கள்மீதும் இரக்கம் கொள்வ தற்குச் சித்தம் கொண்டுவிட்டால் உலகில், வருத்தம் கொள் கின்ற உயிரினங்களே இருக்கமாட்டாது என்பதை அறிக! மனிதாபிமானம் என்பது மனிதர், மனிதர்மேல் அபிமானம் கொள்வது மட்டுமல்ல தம்மால் இயன்றளவு, உச்சபட்ச உதவிகளை அளிப்பதுமாகும். நல்லனவைகளை இதயம் முழுமையாக ஏற்கும்போது செயல்கள் தானாகவே சிறப்பாக உருவாக்கப்படுகின்றன. ஒருவனைத் "தியாகம் செய்” என வற்புறுத்த முடியாது. விரும்பிச் செய்யாத பணி களில் முழுமையும் இல்லை, பெருமையும் இல்லை. தமக்கு இடையூறு விழைவிக்காத நற்கருமங்களைச் செய்ய ஏன் தயக்கம் காட்டவேண்டும்?

இன்று உலகத்தில் எங்கு பார்த்தாலும் மனிதநேயப் பாடுகள் முழுமையாக ஏற்று நடக்கின்றன என்று கூற (փլգպքո? தனக்கு வேண்டப்பட்டவர்களுடன் தவிர, ஏனைய வர்கள் மீதும் அக்கறையுடன் அன்பு செலுத்தும் மாந்தர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.கொஞ்சநாள் ஒருவருடன் பழகுவார்கள். பின்னர் அபிப்பிராய பேதம் ஏற்பட்டால் விரோதித்துக் கொள்வார்கள். சிலர் சின்னச் சின்ன அபிப்பிராய பேதங்கள் வந்துவிட்டாலே அவர்கள் மீது அவதூறு செய்து, தங்கள் கோபதாபங்களை மிகையாக வெளிப் படுத்துவர். தங்களுக்குவிரோதமானவர்கள் எனச் சாதாரண நபர்களைக் கூடக் கருதுபவர்கள, எந்தவிதமான இரக்கமின்றி வன்மம் தீர்த்தபடியும் இருப்பார்கள்.

 

மனிதாபிமான எண்ணம் கொள்கின்றவர்கள், தமக்கு உகந்தவர்கள், தம்மை நேசிக்காதவர்களைக்கூட மனிதன், மனிதன் மீது வைக்க வேண்டிய பற்றுதலை நிராகரிக்க வேண்டிய எந்த அவசியமும் அவர்களுக்கு ஏற்படப்போவ தில்லை. 

மனித சித்திரவதைகள், தனிமனித உரிமை மீறல்கள் பற்றி, ஐக்கியநாடுகள் சபையிலிருந்து, சாதாரண கிராமங்கள் வரை மிகவும் பரிதாபமாக குரல் கொடுத்த வண்ண முள்ளன. ஆனால் இவைகள் பற்றிச் சம்பந்தப்பட்ட, சமூக விரோதக் கும்பல்களோ, ஏதேச்சார சர்வாதிகார போக்கிலான அரசுகளோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை. வல்லரசு நாடுகள்தங்கள் குறிக்கோள்களைக் கைப்பற்ற எதனையும் செய்யச் சித்தமாயிருப்பதே பெரிய கொடுமையிலும் கொடுமை!

அதிகாரங்களை நிலை நிறுத்த நடாத்தும் போரில், மனிதாபிமானமற்ற உயிர்பலிகள் இடம் பெறுவது இன்று மட்டுமல்ல, தொன்று தொட்டே நடந்துவரும் அடாவடித் தனமான ஆணவத்தின் வெளிப்பாடுகளே!  உலகம் என்றுமே முழுமையாக, அமைதியாக, சமாதானத்துடன் இருக்கவில்லையா என நொந்து, நாங்கள் சும்மா அமர்ந்து விட முடியாது. பரஸ்பர நேயப்பாடுகளின் வலிமையை நாம் எல்லோர்க்கும் எடுத்துரைப்பதுடன், நாமும் எந்த ஜீவன்களையும் வெறுத்து ஒதுக்காத மனநிலையினை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும்.

 

இன்று சோமாலியா, சூடான், எதியோப்பியா போன்ற நாடுகளில் பஞ்சம், பசியினால் துயருறும் மக்களை அடிக்கடி படம் பிடித்துக் காட்டுகின்றார்கள். ஒட்டியுலர்ந்த வயிறும், குச்சி போன்ற கை, கால்களுடன் வெட்டவெளிகளில் சுட்டெரிக்கும் வெயியில் வீதியோரமாக செத்தும், சாகாமலும், ஏன் பிணங்களாகவும் விழுந்து கிடக்கின்ற அவலக்காட்சிகள் மனித இதயங்களைச் சிதைந்து விடுமாற்போல் துன்பங்கள் ஈட்டியெனக் குத்தி நிற்கின்றன.

தினம், தினம் பதினைந்து ஆயிரம் சிசுக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருப்பதாக அண்மையில் வெளியான சுகாதார நிறுவனம் ஒன்றின் குறிப்புக்கள் உள்ளத்தினைக் குதறும் வண்ணம் அமைந்துள்ளன. மனிதாபிமானம் பற்றி இந்த உலகம் பெருமைப்பட என்ன இருக்கின்றது எனக் கேட்கத் தோன்றவில்லையா? மிஞ்சுகின்ற உணவில், ஒரு கவளத்தினிையாவது, ஒவ்வொ ருவரும் கொடுத்தாலே, பட்டினி என்கின்ற பேய் ஒட்டிக் கொள்ளுமா?

அண்மையில், பிராணிகளை வதை செய்யப்படுவது தொடர்பாக ஒரு திரைப்படத்தினைப் பார்க்க நேர்ந்தது. உணவுத் தேவைக்காக மிருகங்களான மாடு, பன்றி, முயல் என்பவை எப்படிக் கொலை செய்யப்படுகின்றன என்பவற்று டன், கோழிகள், வான்கோழிகள் என ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்படும் கொடுரக்காட்சிகளையும், அவை களின் அலறல்கள், ஈனஸ்வர ஒலிகளைக் கேட்கும்போது மனசில் ஏற்படும் வலிகள் சொல்லி மாளாது. இந்தக் கொலைகளுக்கு மத்தியில் ஒரு சோகமான காட்சியையும், பலத்த ஒலமுடன் காண்பித்தது நெஞ்சைப் பிசைந்தது. தாய்ப்பசுவை, இழந்த கன்றின் கதறல், அந்தக்காட்சியைக் கண்டதும் கன்று, அம்மா, "அம்மா. என கத்திக் கதறிய இந்தப் பரிதாபத்தை என்ன என்று சொல்ல.!!! இதனை எழுத்தில் வடிக்கமுடியாது.

ஆனால், நாம் இன்று காண்பதென்ன?மிருகவதைக் காக மனம் பதைபதைக்கின்றோம். ஜீவகாருண்யம் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் ஒரு குடும்பத்திற்கு முன்னே, அவர்கள் பார்த்திருக்கப் பட்டப் பகலில் துப்பாக்கியால் சுட்டு, பின்னர் வெட்டி, படுவஞ்ச கமான முறையில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் சர்வசாதாரண முறையில் உலகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதே! அத்துடன், ஒரு குடும்பத்தில் மொத்த உறுப்பினர்களையும் அதன் வாரிசுகள் ஒருவரை யும், மிஞ்சவிடாமல் படுகொலை செய்கின்ற அநியாயங்கள் புரிபவர்களுக்கு மனிதாபிமானம் என்கின்ற நல்ல வார்த்தை கூடகேலிக்குரிய வார்த்தையாகவேபடும். இன்று உலகின் பலநாடுகளில் தூக்குத்தண்டனை விதித்தல், மனிதாபிமானமற்ற செயல் எனக் கருதிச் செயலைத் தடுக்கச் சட்டமியற்றிவருகின்றன.தண்டனைக்குரிய நபர் தப்பித்து தூக்குத்தண்டனை விதிக்கப்படாத வெளிநாடு ஒன்றிற்குச் சென்று, அங்குள்ள நாட்டில் பிடிபட்டாலும் கூட, அவர்கள் தமது தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படும் முன்னர், குறித்த அவர்கள் நாட்டில், தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட நபருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படமாட்டாது என்கின்ற உத்தரவாதத்து டனேயே, அவர்கள் தாய் நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். இது ஒருமானுடநேயப் பிரச்சனை. உயிர்க்கொலை கூடாத செயல் எனப் பல நாடுகளின் தலைமைகள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டன.

எந்த ஒருவனையும் இம்சிக்கும் அதிகாரம் எமக்கு இல்லவேயில்லை. இதுமானுட நாகரீகமும் அல்ல. காலம் ஓட ஓட மனிதன் தன்னைப் புதுப்பித்துப் புதுப்பித்துத் தூயவனாக, மனதில் களங்கம் அற்றவனாக, தமக்கு முன்பிருந்தவர்களை விட ஒருபடி முன்னேறியவனாக இருக்கவேண்டும். மாறாக முன்னேற்றப்ப்டிகளில் இருந்து பின்தள்ளி, அதாளபாதாளத்துள் அறிவை புதைத்துச் செயல்களைக் கருகவைப்பது பெரும் வேதனையல்லவோ?

ஈராக்கிய நாட்டை ஆண்ட முன்னாள் அதிபர் சதாம் ஹசைன் அவர்களது தூக்குத்தண்டனை நிகழ்வு இந்த உலகையே உலுக்கியது. என்னதான் ஒருவரிடம் கோபம், காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் கூட தூக்குத்தண்டனை என்பதை ஒரு காட்சிப்படமாக, உலகின் கண்கள் துன்பமு டன் நோக்க வைத்த செயல், இந்த நாகரீக உலகமே வெட்கப்படவேண்டிய விடயம் அல்லவா? ஒருவருக்குக் கழுத்தில் கயிற்றினை மாட்டிவிடும் செயல் செய்வித்தவர்களின் வக்கிரப் புத்தியைப் பறை சாற்றித் தமதுமுகத்திலேயே சேற்றினை வாரிவிசச் செய்த கோழைத்தனம் தான்.அதிகாரத்துடன் மனிதநேயமின்றி செய்கின்ற காரியங்கள் வீரமும் அல்ல விவேகமும் அல்லவேயல்ல.

எத்தனை எத்தனையோ அதிகார அத்துமீறல்களை இந்தப் பூமி கண்டு, கண்டு துவைந்து அலுத்துப் போய் கிடக்கின்றது. இத்தகைய அத்துமீறல் பேர்வழிகளின் அதிகார வெற்றிகள் அல்லது வெறித்தன அடாவடிப் போக்குகள் என்றுமே நிரந்தரமானதும் அல்ல. புகழைப் பெருமையை ஈட்டித் தரப்போவதுமில்லை.

* தெய்வ நம்பிக்கை * உண்மையான உழைப்பு * கலாசாரத்தின் மீதான ஈடுபாடு * கல்வியோடு இணைந்த ஞானம் போன்ற விடயங்களில் தம்மை அர்ப்பணிக்கும் மனிதர்கள், பிறர் துன்பம் கண்டால் தம்மையறியாமல் கண்ணீர் மல்குவர். உதவிக்கரம் நீட்டுவர். இன்று கலாசாரம் பற்றி அதன் பெருமைபற்றி, இளைய தலை முறையினர் அதிகமாக அறியாமல் இருப்பது வேதனையான விடயம்தான்.

ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான கலை, பண்பாடுகள் உண்டு. எமது முன்னோர்கள் கலாசார பாரம்பரியத்தின் பின்னணியிலும் தமது வாழ்வையும் பிணைத்துக் கொண்டார்கள். மேலும், ஆன்மநெறியில், உள்ள அதீத ஈடுபாடுகள் அவர்களை மென்மைப் போக்குள்ள அன்புசால் மாந்தர்களாக்கியது.

ஒரு தந்தை எனக்குச் சொன்னார். தனது மகன் முரட்டுத்தனமுடன், பிடிவாத போக்குடன் காணப்பட்டான். எவருடனும் அன்புடன் பழக மறுத்தான். அவனை நான் ஒரு மிருதங்க கலைஞரிடம் கொண்டு சென்றேன். அவர் எனது மகனைத் தனது சீடனாக ஏற்றுச் சிரத்தையுடன் மிருதங்கக் கலையைக் கற்பித்தார். இன்று எனது மகனின் இயல்புகள் அடியோடுமாறிவிட்டது. கலையில் மீதுள்ள ஈடுபாடு அவனை இரக்க குணமுள்ள, நல்ல ரசிகனாக மாற்றி விட்டது" என்றார்.

பொதுவாகக் கலைகளில் நாட்டம் உள்ள கலைஞர் கள், ரசிகர்கள் மனிதாபிமானப் பண்புநிறைந்தவர்களாக இருப்பது, புதுமையான விடயம் அல்ல. நல்ல ஒழுக்கமுடன் ஒருவன் உருவாக வேண்டும் எனின், முதற் கண் அவன் தனது வீட்டில் இருந்தே ஒழுக்க நெறிகளை உணர்ந்து பயில வேண்டும். பெற்றார்களிடம் இருந்தே குழந்தைகள் அன்பு செலுத்தும் பண்பைத் தெரிந்து கொள்கின்றனர். சூழல் சரியான படி அமையாதுவிட்டால் ஒருவன் எப்படி இரக்க சிந்தனை உள்ளவனாக உருவாக உளரீதியான தாக்கத்தினால் பலரும் விரக்தியுற்று மனிதாபிமான சிந்தனைகளையே கருவறுத்துச் சீவிக்கி ன்றார்கள். நான் இந்தச் சமூகத்திற்கு எவ்வளவோ செய்தேன். இருந்தும் என்ன, எனக்கு இந்தச் சமூகம் அநீதி இழைத்து விட்டது. எனவே இவை அழிந்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்று சொல்லிக் கொள்பவர்கள், தாங்கள் இந்த உலகில் மற்றவர் தயவில் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்கின்றார்கள் இல்லை. சமூகம் தனக்கு ஒன்றுமே செய்யவில்லை என மனம் குமைப வர்கள், அதன் பொருட்டு பழிதீர்த்தல் போல், தங்கள் ஆன்ம வலுவை இழக்கும் முயற்சியில் இறங்குவது அறியாமையிலும் அறியாமையே தான்.

ஒருவன் துன்பம் கண்டு இரங்குதல் என்பது "மற்றவன் எனக்கு உபகாரம் செய்வதால் மட்டும்தான்” என்ற தப்பான எண்ணங்களையே, நிரந்தரமாகக் கொள்வதும் அறிவீனமானதுமேயாகும்.

நாங்கள் மகான்களாக மாறவேண்டும் என்று எண்ணுவதன்முன் சராசரிமானுடனாக வாழப்பழகுதல் முதன்மை யானதாகும். எங்கள் பொழுதுகள், என்றுமே ஆக்க பூர்வமாக, உயிர்ப்புடன் திகழவேண்டும். மக்களுடன் ஒன்றிணைந் ததாக பயன்தரும் விதத்தில், உலகிற்கு உவப்பளிப்பதாக இருப்பின், மானுடநேயம் மிக இயல்பாகவே இதயத்தில் இருந்து உதயமாகும்.

மக்களை விலக்கி, நாம் வெகுதூரம் சென்றுவிட முடியுமா? ஒருவரின் முகமலர்ச்சிமூலம் அவர்களின் இதய வெளிப்பாட்டினை உணர்ந்து கொள்ள முடியும். மனித னால், மனிதன் ஆகர்ஷிக்கப்படும் போது வேற்றுமை யுணர்வு, பழிதீர்த்தல், காழ்ப்பு எல்லாமே சூரியனைக் கண்ட பனி எனத் துறந்து போகின்றன.

நீண்ட வாழ்க்கைப் பயணங்களைத் தொடர்ந்து செல்லும் போது, வாழ்நாட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்லும். ஆனால், நாம் ஆற்றுகின்ற செயல், மனிதப் பண்பாட்டிற்கு ஏற்ப, மனிதநேயச் செயல்களினால் ஏற்படுத்தப்படும், கீர்த்தியின் அளவோ, எண்ணிறைந்து கூடிக் கொண்டே செல்கின்றன.

ஒரு நொடிப் பொழுதில் கூட, மனித நேயத்தால் பெற்ற நிம்மதி, கோடானுகோடி வினாடிகளுக்கான விழிப்பின் சுகானுபவத்தினை உண்டுபண்ணியே தீரும். சொர்க்கத்தைத் தேட நாம் எங்கேயும் ஓடி அலைய வேண்டாம். மனிதர் எம்முன் காட்டும் இன்முகத்தினை விடச் சொர்க்க சுகம் வேறு என்ன வேண்டும் ஐயா? சிரித்த முகங்கள், எம்மைப் பார்க்கும் போது அவை எமக்கு அளிக்கின்ற அதிஉயர் கெளரவங்கள், "விருதுகள்" எனக் கொள்வோமாக.

என்றும் ஈரநெஞ்சுடன் உலா வரும் மனிதன்கரிய எண்ணங்களைத் தொலைத்தவனாகின்றான். தன் உருவம் தொலைப்பது என்பது, நல் இயல்புகளை மறுத்துப் பாவம் சூழ்ந்த சூழலுக்குள் தம்மைப் புதைப்பதுவேயாகும். எமக்கு இந்தத் துர்ப்பாக்கிய நிலை வேண்டாம் என்றுமே புன்னகை பூத்த புத்தம் புதுமனிதனாக, மனிதனை நேசிப்பவனாக, அவர்தம் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்பவனாக மாறி விடுதல்தான், மானுட தர்மமும் ஆகும். நாங்கள் மனிதனாகவே வாழப்பிரியப்படுவோம்.

அன்பு என்னும் அடித்தளத்தில் இருந்து நட்பு நெடிதுயர்ந்து வளர்கின்றது. தியாகம், புரிந்துணர்வு இல்லாதுபோயின் நட்புநிலைக்காது. நல்ல நட்பு, மேலதிக சக்தியுமாகும். சந்தேகம் நட்பிற்குச் சத்துரு. பல திசைகளில் இருந்து நல்ல நண்பர்களைத் தேடுவதால் உலக வேற்றுமையுணர்வுகள் காற்றாய் பறந்து போகும். நல்லோர் நட்பை நாமாகத் தேடிப் போக வேண்டும். அன்பை, நட்புறவின் மூலம் பகிர்வதால்,மனம் லேசாகித் துன்பங்களில் இருந்து விடுபட்டுச் சுதந்திர உணர்வு பரிணமிக்கின்றது.

தனி ஒரு மனிதனிடம் ஒருவரோ அன்றிப் பலரோ ஈர்க்கப்பட்டு, அவர்தம் வாழ்க்கையில் ஓர் அங்கமாகி, ஆத்மார்த்தமாக ஒன்றிணைந்து கொள்ளும் ஓர் அதி உன்னத உறவு "நட்பு" எனும் தூய்மைப் பிணைப்பாகும்.

நட்பு பல திசைகளில் இருந்தும் புறப்பட்டு மனிதனை சுவீகரித்துக் கொள்ளும். நெருங்கிய உறவினர்களிடம் இருந்துமட்டுமல்ல, உலகின் எத்திசையில் இருந்தும் மதம், மொழி, இன பேதமின்றித் தொட்டு நின்று, நீக்கமற ஒட்டி உறவாடிஸ்திரமாகி நிலை பெற்றும்விடும் ஆற்றல்மிக்கது. அன்பு எனும் அடித்தளத்திலேயே, நட்பு நெடிதுயர்ந்து உருவாகின்றது. எனினும் நட்புணர்வு எம்முள் நிலைத்து நிற்கப்பின்வரும் உன்னத குணாதிசயங்கள் பிரதானமான வையாகும்.

* புரிந்துணர்வு * விட்டுக்கொடுக்கும் இயல்பு, தியாகம் * தன்னாதிக்க மேலாதிக்க குணங்களைச் செலுத்தாமை * சுயநலமற்ற தன்மைகள் * நட்பைவிட்டுக் கொடுக்காத உறுதிநிலை

மேற்சொன்ன விஷயங்கள் முழுமையாகக் கொண்டவர்கள் கிடைக்கும் நல்ல சினேகிதர்களால் தம் வாழ்வில் இணையற்ற ஒரு தொடர்பு மூலம் நிம்மதியும், அச்சமும் அற்ற சந்தோஷங்களை உருவாக்கிக் கொள்ளுவார்கள்.

குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே எங்களது வாழ்வில், சுக துக்கங்களில் உண்மையான அன்புணர்வுடன் பங்கு கொள்கின்றார்கள். எல்லோரையுமே நாங்கள் இணையற்ற நண்பர்களாக ஏற்றுக் கொள்வதுமில்லை. நாம் எங்கள் ஜீவியத்தில் பலருடன் பேசுகின்றோம் பழகுகின்றோம்.

எல்லோருமே எங்கள் மனதில் இடம்பெற்றுவிடாதுவிடினும், பார்க்கின்றவர்களிடம் இன்முகத்துடன் பழகுதல் அவசிய மாகும். அன்பினைப் பகிர்வதில் நாம் பின்னிற்கக் கூடாது.

நாம் பழகுகின்ற ஒவ்வொருவரிடத்திலும் சினேக மனப்பான்மையினை உருவாக்குதல் வேண்டும். எவரையுமே அன்னிய முகங்களாகக் கருதாத இயல்பினை உருவாக்க முயலுதல் நல்லது. அனைவருமே எம்மோடி ணைந்த நண்பர்களாகத் தொடர்ந்து இருக்காதுவிடினும், காண்கின்ற மனிதரை மதித்து, அன்பு காட்டி நட்புறவு பாராட்டினால் அது எமது மனித மனதின் விஸ்தீரணத்தைக் காட்டுவதாக அமையும்.

ஆயினும், நாம் எம் முன் நடமாடிக் கொண்டிருக்கும், தகாத நடத்தையுள்ளவர்கள் பற்றியும் தெரிந்துகொண்டே யாக வேண்டும். தகாத நண்பர்கள் தொடர்பு, அறிமுகங் களைத் துண்டிக்கப்படாதுவிடின், நாம் சமூகத்தினால், கண்டிக்கத்தக்க மனிதர்களாகிவிடுவோம். சில தீயோர், மற்றவர்கள் யாராவது நல்ல அன்னியோன்யமான நண்பர்க ளாக இருந்தால், அது அவர்களுக்குப்பிடிக்கவே பிடிக்காது. ஏதாவது பகை மூட்டிச் சூழ்ச்சி செய்து கோள்மூட்டிப் பிரித்தே விடுவார்கள்.

ஆனால், அசைக்க முடியாத நட்புறவு கொண்டவர்களை எவருமே பிரித்திட முடியவே முடியாது. சிலவேளை, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நண்பர்கள் பிரிந்து இருக்கலாம். சில காலப் பிரிவுகளால் நண்பர்களின் பிணைப்பு மேலும் இறுக்கமாகிவிடும் என்பதே உண்மையு மாகும். நல்ல நட்புக்குக் களங்கம் கற்பித்துக் குளிர்காயும் சில பேர்வழிகள் சில சுயநல காரணங்களால், தாங்கள் பெரும் பேறு பெற்றவர்களாகக் கற்பனை செய்யலாம்.

சில குடும்பங்களின் உறவு நிலை, சில தகாத இடையூறுகளால் பிரிந்துவிடுவதனால் அவர்கள்படும் அவஸ்தைகளை, கால ஓட்டத்தில் கண்டு கொள்வார்கள். மேலும் ஒருநபரின் வேண்டாத தலையீடுகளை உண்மை யான நண்பர்கள் கண்டு கொள்ளக் கூடாது. திடீர் என ஒருவன் நம்ப முடியாதபடி வந்து நின்று உறவு பாராட்டி னால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சில நீண்டகாலப் பகைவர் கூட, ஏதோ ஒரு நோக்கத்திற்காக வந்து, "பழை யதை மற, நண்பராவோம்" என்று சொன்னால் மனம் பயப் படத்தான் செய்யும். எனினும் சிலர் தாம் தெரியாத்தனமாக ஒருவர் மீது ஆத்திரப்பட்டுப் பகை கொண்டதன் விளைவினை உணர்ந்துகொள்வதுமுண்டு. இந்தச் செயல் களை மன்னிப்பது பெரும் தன்மையானதேயாம்.

சில குடும்பங்களைப் பார்த்தால் அதிசயமாகவும், பெருமைப்படத்தக்கதாகவும் இருக்கும். இவர்கள் ஜாதி, சமய, மொழி வேறுபாடுகளை களைந்து உறவு பாராட்டு வார்கள். இந்த உறவுமுறை பரம்பரை, பரம்பரை யாகத் தொடர்வதே விந்தையானதாகும். இன்று வெளிநாடுகளில் சென்று குடியேறிய அன்பர்கள் பலர் சொன்ன கதைகள் மனதில் நெகிழ்ச்சியை உண்டுபண்ணியது. எங்கோ பிறந்து, எங்கோவளர்ந்து,கண்டுகொண்ட அந்நியமுகங்கள் குடும்ப உறவாகி, வீட்டில் ஒரு இனம் போல் எந்தவித வேறுபாடும் இன்றிப் பழகுவதாகச் சொன்னார்கள். உண்மையான விசாலமான அன்பின்முன், நாடு கடந்த நிலையிலும், மொழிவேறு இனம் வேறு ஆயினும், மனிதாபிமான உணர்வுகளே மேலோங்கி இருப்பது சந்தோஷமான ஆச்சரியமூட்டும் விஷயம்.

பிரச்சினை என்று வந்தால்தான் எம்மைச் சுற்றி இருப்பவர்களின் உண்மைச் சொரூபம் தெரியும். சில பேர் வழிகள் சற்று வித்தியாசமானவர்கள். கண்டபடி பேசிக் கொள்ளமாட்டார்கள். பழகவும் மாட்டார்கள். ஆனால் யாருக்காவது ஆபத்து என்று வந்துவிட்டால் உடன் வந்து கை கொடுப்பதில் முன்நிற்பார்கள். இன்னும் சிலர், நன்றாகப் பழகுவார்கள். எல்லோரிடமும் கடமைப் படுவார்கள். தாங்கள் யாரிடமாவது கடமைப்பட்டவர்களுக்கு ஏதாவது இன்னல் வந்தால், சாதுர்யமாக நழுவி விடுவார் கள். பின்னர் எல்லாப் பிரச்சனைகளும் துன்பப்பட்ட வர்களுக்குத் தீய்ந்து போனதும் பழயபடி அவர்களிடமே வந்து ஒன்றும் நடக்காததுபோல் பேசுவார்கள்.

இதில் வேடிக்கையான, ஆனால் ஆத்திரமூட்டச் செய்யும் நபர்கள் சிலர். நண்பர்களாகப் பழகியவர்களுக்கு வெறும் வார்த்தைகளால் மட்டும் சாயம் பூசுவார்கள். துன்பத்தில் துவஞம் போதுகளைய முனைய மாட்டார்கள். ஆனால், தாங்கள் தான் கஷ்டப்பட்ட பழகியவர்களுக்கு உதவியதாக வீம்புடன் பொய் உரைப்பார்கள்.

 

இன்று உள்ள பல பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சில குடும்ப உறுப்பினர்களே பங்குதாரர்களாக இருப்பார்கள். ஆயினும், சில தனியார் நிறுவனங்கள், நண்பர்களின் கூட்டு முயற்சியால் உருவாக் கப்படுவதுமுண்டு பலகோடிமுதலீடுகளைத் தமது நட்பின் வலுமிக்க அத்திவாரத்தினைக் கொண்டே ஸ்தாபித்துக் கொள்கின்றார்கள்.

இளமைக் காலங்களில் உருவான நட்புகள் சிலர் வாழ்க்கையில் நிரந்தரமாகி விடுவதும், சிலரது நட்பு கலைந்து மறைந்து போவதுமுண்டு. வாழ்க்கையின் பாதைகள் வெவ்வேறு திசையில் உருமாறிச் செல்லும் போது புதிய பிரச்சினைகள், குடும்பப் பொறுப்புக்கள், பொருளாதாரப் பிரச்சனைகளால் மனிதரின் பழைய வடிவங்களே மாறி வேறுதோற்றத்துடனான எண்ணங்களு டன் தன்னை மாற்றிக் கொள்கின்றார்கள்.

எனவே, சூழ்நிலை சந்தர்ப்பவசத்தால், பழைய இனிய தொடர்புகள், பிணைப்புகள், களையப்படுவது, ஆச்சரியமானது அல்ல. ஆயினும் நீண்டகால உறவுகளை மீண்டும் காணும்போது, பழைய சினேகிதத்தை ஜீரணிக்க முடியாமல் போவதற்கு இவர்களது தற்போதைய பொருளா தார, வர்க்க வேறுபாடுகளும் காரணமாக அமையலாம். என்றாலும், நீண்டபொழுது பிரிவுகள் நீறுபூத்த பெருநெருப் பென மறைந்து கொள்வதும், அது மீண்டும் சுடர்விட்டு, வீச்சுடன் சுவாலை கொண்டு ஒளிர்வதன் மூலம் நட்பின் திண்மையினை நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளமுடியும்.

ஆண், பெண் இருசாராரும் காதல் என்கின்ற உறவுக்கு அப்பால், சினேகிதர்களாக இருப்பது பற்றிப் பலரும் பல வேறுபாடான கருத்துக்களைச் சொல்லி வருகின்றனர். திருமணமாகாத ஆண்,பெண் இருபாலாரும் எந்தவித களங்கமும் இன்றி நண்பர்களாக இருப்பதை, இன்னமும் எமது சமூகம் முழுமையாக ஏற்பதாக இல்லை. தொழில் செய்யும் இடங்களில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்ககளில் இருசாராரும் இணைந்தே வேலைபார்க்க அல்லது கல்வி கற்க வேண்டியுள்ளது.

தங்கள் மன அழுத்தங்களைக் குறைக்க இன்ப, துன்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளக் கட்டாயமாக ஒரு ஆணும், ஒரு ஆணும் மட்டும் அல்லது ஒரு பெண்ணும், ஒரு பெண்ணும் மட்டுமே நண்பர்களாக இருந்து கொள்ள வேண்டுமா? சும்மா, எந்தவித சலனமும் இன்றி பழகு கின்றவர்கள் மீது கருமை பூசவேண்டுமா?

தற்காலத்தில் எங்குமே பெண்கள், ஆண்களுக்கு நிகராகச் சகல துறைகளிலும் ஆட்சி செய்து வருகின்றனர். பழகுகின்ற எல்லோருமே காதல் வசப்பட்டுத்தான் பழகுகின்றார்கள் என்று சொல்வது எவ்வளவுமுட்டாள்தன மான பேச்சு அல்லவா? இவர்கள் ஒன்றாகப் பேசுவது காதல் என்று பகர்ந்தால், இங்குள்ளவர்களுக்குக் காதலிப்பதுதான் பிரதான வேலையா என்ன?எந்தவித சிந்தனையும் இன்றி, எல்லா விடயத்திற்கும் முடிச்சுப் போடுகின்றார்கள்.மிகவும் வேதனையான விடயம் என்ன்வெனில், வயதுவித்தியாசம் தெரியாமல், ஒருவரது எதிர்காலப் பின்விளைவுகருதாமல் மனித, புனித உறவுகளை விமர்சிப்பதேயாகும். சகோதர வாஞ்சையுடனும் தாய், தகப்பன் உறவுநிலை போலவும் மனம் விட்டுப் பேசுதல் தகாத ஒன்றா என்ன?

யாராவது சிலர் உள்நோக்குடன் பழகுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். சிலரது நட்பு காலப் போக்கில் காதலாகப் பரிணாமம் பெறுவதாகவும் சொல்லப்படுகின்றது. அப்படியானால் நட்பு என்ன, காதல் என்ன என்றும் சிலர் வியாக்கியானம் செய்வதுண்டு. ஒருவன் ஒருத்தியை அன்பு கொண்டு, அதுவே நிலையான காதலாக பரிணமிப்பது வியப்புஅல்ல. எல்லா சந்திப்புக்களிலும் காதல் உடன் உட்கொள்ளப் படுவதில்லை.நண்பர்களாக, சாமானிய நிலையில் பழகும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. இந்தப் பழக்கம் "காதல்" ஆகலாம். எனவே எல்லோருமே நட்புடன் பழகுவது காதலின் பொருட்டே என்று ஏன் விதண்டாவாதம் செய்யவேண்டும்?

ஒருவரது துன்பநிலை கண்டு, பரிவால், கருணை மிகுதியால், அவரிடம் பழகும்நிலை வருவதுண்டு. மனிதனிடம் மனிதன் காட்டும், அளப்பரிய இரக்கம், வாஞ்சையுடன் கூடிய நட்பாக மாறுவது தனித்துவமான நல் இயல்புமாகும். நட்புணர்வினைச் சிலர் வேண்டுமென்றே புறக்கணித்து நடப்பதுமுண்டு. இத்தகையவர்களுக்கு, மனிதர்மேல் நம்பிக்கை துளியளவும் கிடையாது. "எல்லோருமே, திருடர்கள், எத்தர்கள், நம்பிக்கைத் துரோகிகள், மோசடிக்காரர்கள்” எனச் சமூகத்தின் மீது சேற்றை அள்ளி வீசியபடி இருப்பார்கள். இந்த உலகில் தாங்கள் தான் மிகவும் உத்தமமான மனிதர் எனச் சொல்லிக் குரூரதிருப்திப்பட்டுக் கொள்வார்கள். இத்தகை யவர்களைக் கண்டதும் சனங்கள் ஓடி ஒளிப்பதுமுண்டு. துஷ்டத்தனமான எண்ணங்களும் பழிவாங்கும் எண்ணமும் கொண்டவர்களிடம் நண்பர்கள் எவர்தான் சேருவார்கள்? இவர்கள் தனித்தே, தம்முன் குறுகி, தங்களைத் தாமே சித்திரவதை செய்கின்ற கொடுமைக்காரர்களாகவே சமூகத்தால் கருதப்படுவார்கள்.

சமூகத்தைத் திட்டி, வஞ்சித்து எவருமே நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. வெளிப்படையாகப் பேசாமல் உள்ளத்தில் குமுறிவாழ்பவர்களுக்கும், நன்மை செய்யாது வெறும் உதட்டினால் தேன் ஒழுகப் பேசுபவர்களுக்கும் உண்மை நட்புக் கிட்டிவிடாது.

ஆனால், மக்களுடன் பழகத் தெரியாமல் எந்தவித தொடர்பையும் ஏற்படுத்தத் தெரியாமல், கூச்சஉணர்வுடன் வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள், திருமணமாகிப்பிள்ளைகளைப் பெற்றுப் பெரிய குடும்பஸ்தரானாலும் கூடத் தனித்தே தமக்குள் வாழ்ந்துவருவார்கள்.

 

இத்தகையவர்களால் எந்தப் பிரச்சனையும் இல்லாது விடினும், ஒட்டுறவு இல்லாமல் வாழுவது என்பது யதார்த்த வாழ்வில், பார்க்கின்றவர்களுக்குச் சங்கடமாக இருக்கும். நாங்களாகப் போய்பேசினால் சிலர் ஓரிரு வார்த்தைகளை முத்து உதிர்ந்தால் போல் பேசுவார்கள். ஆனால் அப்படியும் பேசாமல் ஒதுங்கி இருக்கின்ற நபர்களும் இருக்கின்றார்கள். இது, இவர்கள் சுபாவம் அவ்வளவே.

இன்னும் சிலரை நீங்கள் பார்க்கலாம். எடுத்த எடுப்பில் ஒருவருடன் பேசி நட்புப் பாராட்டமாட்டார்கள். எதற்கெடுத்தாலும் சந்தேகக் கண்ணுடன் குறித்த நபர்களு டன் பேசுவார்கள். ஒரு நபரிடம் கண்ட மாத்திரம் சாதாரண மாக உரையாடுவதற்கு, என்ன ஆராய்ச்சி வேண்டிக் கிடக்கின்றது? தொடர்ந்து ஒருவரிடம் தொடர்புகளை ஏற்படுத்தச் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவர்கள் பற்றிய சாதாரண விபரங்களைத் தெரிந்து கொள்வதில் தவறேயில்லை.

வெறும் சந்தேக உணர்வுகள் நட்பினை ஏற்படுத்தும் தடைக் கற்கள்தான். ஒருவரைப் புரிந்து கொள்ள வேண்டு மாயின், நுட்பமான அணுகுமுறைகள் இருக்கின்றன. எங்கள் அணுகுமுறைகள் மற்றவர்களை வெறுப்பேற்றக் கூடாது. ஒருவரைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்துத்தான் நட்பினை ஏற்படுத்தி வளர்க்க வேண்டும் என எண்ண லாமோ? நல்லவர்களையும், வல்லவர்கள் போல் நடிப்பவர் களையும் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்.

முதலில் மற்றவர்கள் எங்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்காத நபர்களாக நாம் தெளிந்த நிலையில் உள்ள மனிதராக, உண்மையுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும்.

நட்பு என்பது மனித மனங்களுக்கிடையே உள்ள ஒரு அன்புப் பாலமாகும். இது என்றும் நிரந்தரமாக, உலகளாவிய விதத்தில் பரந்துபட்டால், எம்மால் எதனையும் எளிதாகச் சாதித்துவிட முடியும். மனித குலத்தில் உள்ள வேற்றுமைகள் யாவும் களையப்பட்டுவிடும். இந்த அற்புத சக்தியைக் கொண்ட நட்புணர்வைப்புரிந்துகொண்டவர்கள் தங்கள் நட்புறவு அனுபவங்களைச் சொல்லும் போது, எமக்கு மெய்சிலிர்த்துக் கண்கள் பனிக்கும்.

இதயங்களின் கசிவினால் ஏற்படும் விசித்திரமான காந்த சக்திகளாக மேலான நட்பும், பாசமும், பரிவும், காதலும், நேசமும், இறைவனால் உருவாக்கப்பட்டதே. இந்த உலகைச் சிதைக்காமல் நிரந்தரமாக ஒட்டி வைப்பதற் காகவேயாகும். உணர்வோமாக! எங்கள் இன்பங்களையும், துன்பங்களையும்,உடன் பகிர்ந்து கொள்வதனால் எல்லை யற்ற சுதந்திர உணர்வு, ஆனந்தம் ஏற்படுவதை நீங்கள் உணர்வதில்லையா? கட்டாயம் உணர்ந்திருப்பீர்களே?

அன்புப் பகிர்வு போல் இனிமையான உணர்வுதான் ஏது? இது இளம் தென்றல், செழுமைமிகு விருட்சங்களின் குளுமை, நல் ஒளி, குளிர் அருவி நீர், போன்றதற்கு மேலான உன்னத அனுபவம் அல்லவோ? கைக்கு எட்டிய நல்ல நட்புக்களைக் கெட்டியாகப் பிடித்திருங்கள் நண்பர்களே!  எதிர்பாராமல் கிட்டும் அதிஷ்டத்தை நல்ல வழியில் பயன்படுத்தி வேண்டும். அதிஷ்டங்களால் தன்நிலை மறந்துபோய்விடக்கூடாது. பணம், பதவி, புகழ் சிலரிடம் தகுதிக்கு ஒவ்வாமலும் கிடைப்பதுண்டு. பரந்த மனப்பான்மை, கல்வியறிவு உள்ளவர்கள் வருகின்றவருமதிகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுவர். அதிஷ்டம் வந்த பின்னராவது தங்கள் தகுதியை, குண நலன்களை உயர்த்தாது விட்டால், எதுகிடைத்தும் அவர்கள் இழந்த நிலையில் வாழ்ந்தவர்கள். எல்லாமே இலவசமாகக் கிடைக்க வேண்டுமென எதிர்பார்த்தலாகாது. தீவிர முயற்சிகளுடன் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தலே பன்மடங்கு வெற்றிகளை வாக்கித் தரும்.

அதிஷ்டம் என்பது, சிலசமயம் எமது இஷ்டத்தற்கும் மேலாகவும், எதிர்பாராத வரவுகளாகச் சுரந்தும், அதேசமயம், எவையுமே நிரந்தரமற்றவை என்கின்ற முரண்பாட்டுநிலைமைகளையும் உருப்பெருக்கிக் காட்டிக்

கொள்கின்றது. அதிஷ்டம் என்பது வெறும்பணம், செல்வங்களின் வரவுகள் மட்டுமல்ல. இவற்றுடன், பின்வரும் முக்கிய விடயங்களையும் இணைத்துக்கொள்ள * பதவி, கெளரவம், புகழ், கீர்த்தி

பயணங்கள், வெளிநாட்டு வாசம், அவை தொடர்பான தொடர்புகள், சுற்றுலாக்கள். * நல்லோர், பெரியோர் தொடர்புகள், அவர்தம் சேர்க்கை அதிஷ்டம் வந்து சேர்ந்துவிட்டால் போதும் என்று எல்லோரும் கருதுகின்றார்கள். ஆனால் வந்த அதிஷ்டங்களால், மன உளைச்சல்களுடன், சஞ்சலப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். "தெரியாத்தனமாக, நான் இந்தப் பெரும் பதவியை வந்த பெரிய வரவு என ஏற்றுக் கொண்டேன். ஆனால் இன்று நான் படும்அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமல்ல. நல்ல நல்ல உறவுகளை, நண்பர்களை இழந்துவிட்டேன். பேசாமல் ஆரம்பநிலையில் நிம்மதியாக இருந்திருக்கலாம்” எனச் சொல்பவர்களைக் கேட்டிருப்பீர்கள் தானே.

மேலும் சிலர் இக்கருத்தை ஒரு கெளரவப் பேச்சாகவும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், உண்மையிலேயே அரசியல், சமூக அலுவல்களில் ஈடுபட்டுப் பெரும் பிரச்சனைகளுள் சிக்கித்தவிக்கும் நல்லவர்களும் இருக்கின்றனர். பதவி, புகழ் கூடச் சில சமயம் ஒரு சுமையாகிவிடுகின்றன. ஒருவரது படிப்படியான வள்ர்ச்சி மூலம் தான் அறிவருடிக் செய்கருமங்கள் சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றன. திடீரெனக் கிடைக்கும் பதவி உயர்ச்சிகள் தங்கள் சக்திக்கு மீறிய கட்டுப்பாடு அற்ற விதத்தில் தங்கள் ஆற்றலுக்குள் அடங்காமல் விடுவதாகச் சிலர் உணருகின்றனர்.

துணிச்சலுடன் எதற்கும் தம்மைத் தயார்படுத்தாத மனநிலையில் இல்லாதுவிடின் பெற்ற அதிஷ்டம் மனதைச் சங்கடப்படுத்தத்தானே செய்யும். மனதின் எடை என்பது கூட நாம் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புக்களில் தங்கியுள்ளது. அதிஷ்டம் மட்டும் வந்து பயனில்லை. திடீரெனப் பணப் பொருளைக் கண்டதும், மாந்தர் தம் இயல்பு மறப்பது இயல்பு. நிதான புத்தியும், பதட்டமற்ற இயல்பும் கொண்டோரால் மட்டுமே கிடைத்த எந்தச் செல் வத்தையுமே காப்பாற்ற முடியும். பின்வரும் இயல்புகளை மனிதன் தன்னுள் இணைத்துக் கொண்டேயாக வேண்டும்.

* பண்பு, அன்புடமை, உயிர்களை மதித்தல் * பொறுமை, நிதானம் ஊக்கம், தன்னம்பிக்கை நல்ல இல்லற வாழ்க்கைக்கு கணவன், மனவிையர் கருத்தொருமித்து வாழவேண்டும். நல்ல மனைவி கிடைத்தும் அவளது விலை மதிக்க வொண்ணா பெறுமதியைக் கணவன் கண்டு கொள்ளாது விட்டால், அல்லது நல்ல கணவனின் குணநலனை உணராது மனைவி அவனைத்துச்சமாக மதித்து நடந்தால் குடும்பம் உடைந்துவிடுமன்றோ! குடும்ப உறவே, நல் அதிர்ஷ்டம்.

பணம் கிடைக்கும் எல்லோருமே அதனை மதித்து, அதனை மென்மேலும் பெருக்குகின்றார்கள் எனக் கூற முடியுமா? எவ்வளவுதான்காய், கனிகள் என உணவிற்கான பண்டங்கள் குவிந்து இருப்பினும் அதனைச் சிறப்பாகச் சமைத்துத்தான் உண்ணவேண்டும்.

இறைவன் கொடுத்த வரத்தை சிரமேற்கொண்டு பெற்று அதனை உருத்தெரியாமல் கருவிலேயே சிதைப்பது அறிவீனம் அல்லவோ? தன்னிலை மறந்து, தன்னைவிட வேறு ஒருவரும் தமக்கு ஈடு இல்லை எனத் திடீர் பணக்காரர்கள் கூறுவதாகப் பலர் விமர்சிப்பதுண்டு. இன்னும் சிலர்,"கடவுள் கொடுத்துப் பார்க்கின்றார். இதைப் பூரணமாக உணர்ந்தால் சரி” என்றும் கண்டபடி நடக்கும் நபர்கள் பற்றிக் கூறிக்கொள்வார்கள்.

எல்லாம் மனிதப் பலவீனங்களே! ஒருவன் தனது பணத்தை முதலீடு செய்து உழைத்துக் கிடைப்பதால் இலாபம் பெறுகின்றான். ஆனால், முதலீடு செய்யாமலேயே கீர்த்தி, புகழ்,செல்வம் என்பன சிலருக்குக் கிடைத்துவிடுகின்றது. உழைப்பு இல்லாமல், சும்மா இருந்தும் குறுக்கு வழியால் கிடைக்கின்றவற்றை, "அதிஷ்டம், கடவுள் கொடுத்தார்" என்றும் வியாக்யானம் செய்து வருவது எல்லாமே ஜீரணிக்க முடியாத விஷயங்கள் தான். ஏன் எனில், இன்று எத்த னையோ பிரகிருதிகள், எந்த விதமான தகுதி இன்றி முந்திக் கொள்வதும் அவர்களால் இந்த உலகம் எந்தவித பயன் பாடுகள் இன்றி பங்கமுறுவதும் நியாயமேயற்ற ஊடுருவல்கள் தான்.

தர்மத்தின் வழி வாழ்பவனுக்குக் கிடைக்கும் அனைத்து வளங்களுமே அது பொதுமக்களுக்கு உதவுகி ன்றவை ஆகுகின்றன. ஆனால் இன்று செல்வாக்கு உள்ளவர்கள் அளிக்கும் வரங்கள்தான் பெறுதற்கரிய தேடல்கள் எனச் சிலர் நம்புகின்றார்கள். கொடுப்பவன் தகுதிபற்றிச் சிந்திக்க கிஞ்சித்தும் இடம் கொடுக்கப்படுவ தேயில்லை.

"நான் எவ்வளவு தூரம் படித்தேன், ஆனால் பரீட்சையில் தேற முடியவில்லை. எனது சிரமங்கள் எல்லாமே அனர்த்தமாகிவிட்டன. இனி நான் என்ன செய்ய முடியும்? எல்லாவற்றிற்கும் அதிஷ்டம் வேண்டும் ஐயா" என உண்மையாகவே வேதனைப்படுவோர் உளர். ஆனால் மிகச் சாதாரண தரத்தில் உள்ளவர்கள் கூடப் பரீட்சையில் திறமையாகச் சித்தியடைவதுண்டு.மேலும் மிகச் சிறந்த கல்விச் சான்றிதழ்களைப் பெற்ற மாணவன் கூட தகுந்த பதவி கிடைக்காமல், தன்னுடன் படித்த சாதாரண கல்வித் தரம் உள்ளவர். உயர் பதவி வகிக்கும்போது, அவரது அலுவலகத்திலேயே அவரது அதிகார வரம்பினுள் கடமையாற்றிவரும் போது, "அதிஷ்டம்” என்பது பற்றி எவருமே சற்றுச் சிந்திக்காமல் இருந்துவிட முடியுமா? "காலம்" பல எதிர்பாராத புதுமைகளைக் கூடச் செய்து விடுகின்றன.

பரீட்சையை மட்டும் கொண்டு ஒருவரது புத்திசாலித் தனம், தகைமைகள் பற்றி தகுந்த முடிவுகளைச் சொல்லி விடமுடியுமா? எத்தனையோ சிறந்த மாணவர்கள் துணிச்சல் இன்மை, பதட்டம் காரணமாகப் பரீட்சையில் சிறப்பாகத் தம் திறமையைக் காட்டமுடியாமல் போகின் றார்கள். மேலைநாடுகளிலும், வளர்ச்சியுற்றுவரும் நாடுகள் சிலவற்றிலும், பல முன்னனிநாடுகளில் ஒருநாள் இறுதிப் பரீட்சையை மட்டும் கருத்தில் கொண்டு ஒரு சிறந்த மாணவனைத் தெரிவுசெய்வதில்லை. வகுப்புகளில் காலம் தவறாது கலந்துகொள்ளல், பண்பு, சகஜமாகப் பழகும் இயல்பு, பொதுவிஷயம், பொது அறிவு, மதிநுட்பம் போன்றவைகளுடன் அன்றாட கல்வி கற்றலில் காட்டப்படும் உத்வேகம், கல்வியில் நாட்டம், தினசரி மாதாந்த முன்னேற் றங்கள் பற்றி ஒரு ஆய்வு ரீதியான கணிப்பீட்டின் மூலமே மாணவரின் பெறுபேறுகள் அமைகின்றன.

ஒருநாள், இருநாள் பரீட்சையில் அன்றைய எண்ண ங்களில் தோன்றும் எழுத்துக்கள், சிந்தனைகள் மட்டுமே ஒருவனது வாழ்வை நிர்ணயிப்பது என்பது எந்த வகையில் நியாயமோ தெரியவில்லை. எந்த விதத்திலும் மாணவர்கள் சோர்வடையும் நிலைக்குள் தள்ளப்பட்டு விடக்கூடாது. மேலும் அதிஷ்டம் பற்றிய அபிப்பிராயங்களால், ஒருவரின் முயற்சிகளில் தடங் கல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் மனதில் நிறுத்து.

அதிஷ்டத்தை, யோகம் என்றும் கூறப்படும். ஒருவனு க்கு நல்ல மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள் அமைவது யோகம். நல்ல குரு வந்து வாய்த்தால், சிஷ்யனுக்கு யோகம். இதே போல தான் விரும்பும் தொழில் கிடைப்பதே பெரும் பேறுதான் அன்றோ! எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவர்க்கு நிம்மதியான வாழ்வு, அமைதியான மனநிலை, கல்விஞானம், இறைபக்தியுடனான நற்சிந்தனை இவைகள் யாவும் ஒருங்கே அமைந்தால் அவருக்கு இவை புண்ணியப் பெருநிதிகள்!

யாராவது ஆடம்பரமாக வாழ்வதைக் கண்டால், "அவனுக்கென்ன யோகக்காரன்” என்று கூறிவிடுகின்றார் கள். இப்படி டாம்பீகமாக வாழ்பவர்கள் எல்லோருமே வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்கின்றார்கள் என்று கூறமுடியாது. இவ்வாறு மிக மிக ஆடம்பரமாக, மற்றவர் கண்களுக்கு யோகக்காரன் என்று பெயர் எடுத்தவர்கள் தங்களுக்கு இறைவன் கொடுத்த கொடையை மறந்து, காலப்போக்கில் இடம் தெரியாமல் ஒளிந்து கொள்வது முண்டு. இன்று மட்டுமல்ல, முன்பு வாழ்ந்த பல குடும்பங்களில் அதிஷ்டம் பற்றிய சில மூடநம்பிக்கை காரணமாகத், தங்கள் குடும்ப அமைதி, ஒட்டுறவுகளைக் கூடப் பாதிப்புக்குள்ளாக்கி விட்டமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதாவது, குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன், அக்குடும்பத்தில் ஏதாவது துர்மரணங்கள் நடந்துவிட்டால் போதும், அந்தச் சின்னஞ்சிறு சிசுவை அதிஷ்டமில்லாதது, பிறந்ததுமே எல்லோரையும் வாரிக்கொண்டு போகின்றது என விஷமாக வார்த்தைகள் பேசிக் குழந்தையை ஒதுக்கியே விடுவார்கள். இதனால் எழும் பாதிப்புகள் எவ்வளவு தெரியுமா? பிஞ்சு மனதில் மாறாத வடு வக்கிர உணர்வுகளைக் குடும்பத்தின் பெரியவர்களே ஏற்படுத்தி விடுகின்றனர். பிள்ளை பிறந்து ஏதாவது செல்வங்கள் வந்து சேர்ந்தால், கொண்டாடி மகிழ்வதும், தற்செயலாக நடக்கும் அசம்பாவிதங்களுக்காகக் குழந்தையை நொந்து கொள்வதும் நீதியானதா சொல்லுங்கள்!

அதுமட்டுமல்ல திருமணமாகாது இருக்கும் வயது வந்த பெண்பிள்ளைகளை யோகம் இல்லாதவள் என்று தூற்றிவிடுகின்றார்கள். மேலும் கணவனை இழந்த இளம் பெண்ணின் துன்பங்கள் கண்டு இரங்குதலைவிடுத்து, இவளது நிலையைப் பார்த்தீர்களா அதிர்ஷ்டமில்லாதவள். திருமணமானதுமே கணவனை இழந்துவிட்டாள். இனிமேல் இவளை எப்படி நல்ல காரியங்கள் நடக்கும்போது அழைக்க முடியும் என்று நெஞ்சில் ஈரமே இல்லாமல் பேசியும் கொள்வார்கள். நல்லதும், கெட்டதும் எவர்க்கும் எப்போதும் வந்துபோவது இயற்கை. இந்த உண்மையைப் புரிந்தும் மாந்தர்கண்டபடி நாக்கை வளைப்பதுபோக்கற்றவர்க்குப் பிடித்தமான கருமமாக இருப்பது ஏற்புடையதன்று.

மேலும் எமது நாட்டில் மட்டுமல்ல மேற்கத்திய முன்னேற்றத்தின் உச்சியில் விஞ்ஞானத்தின் முடிவில் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் நாட்டினர்கள் கூட சகுனம் பார்ப்பதில் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவித சகுனம் பற்றிய நம்பிக்கையில் அமிழ்ந்து போயிருக்கும் பலரைக்காணலாம்.

இவை எல்லாம் மூடநம்பிக்கை என, வெளிப்படையாகக் கூறிக் கொள்பவர்களில் பலர், மனதளவில் இவர்கள் அடிமனதில் மூடக் கொள்கை பற்றிய ஆழமான எண்ணங் களைக் களைவதாகவில்லை. அவர்களால் வெறுக்கப்படும் பொருட்களைக் கண்டால் அல்லது தும்மினால், செருமி னால், தடுக்கி விழுந்தால், குறுக்கே ஏதும் பாய்ந்தால் என்று ஏதேதோ பற்பல சங்கதிகளைச் சகுனங்களாகச் சொல்லிக் கொள்வார்கள். ஒரு நாட்டினரின் துர்ச்சகுனம் வேறுநாட்டு மக்களுக்கு வேறுபாடாகவும், அங்குள்ள சகுனம் பற்றிய நடைமுறைகள் வித்தியாசமாகவும் கொள்ளப்படும். மனதிற்கு வேண்டப்படாத பதிவுகளை நாமாக ஸ்திரமாக நிறுத்திக் கொள்ளக்கூடாது. பழமையையும், புதுமையையும் சீர்தூக்கிப்பார்த்துவாழ்ந்து வருவதே சிறப்பான வாழ்வியல் முறையுமாகும்.

பல எதிர்பாராத நிகழ்வுகள் எமது வாழ்க்கையில் புதிய முழுமையான திருப்பத்தைக்கூட உண்டாக்கி விடுகின்றன. தற்செயலாக எங்கோ ஓரிடத்தில் ஒருவன், ஒருத்தியைக் காண்கின்றான். இந்தச் சந்திப்பு காதலாகித் திருமணம் செய்துகொள்கின்றார்கள். இவர்கள் அன்றைய பொழுதுவரை கனவிலும் மறக்கவெண்ணாச் சந்திப்பு பற்றி எண்ணியிருக்கவே மாட்டார்கள். ஒருநாள், அந்த வினாடி கண்களின் சந்திப்புகள் திருமணத்தில் போய் முடிகின்றது. இதே போல், தற்செயலாகச் சந்தித்த இருவர் நண்பர்களாகிப்பின்னர் அவர்கள் தங்கள் குடும்ப உறவில், தொழில் விடயங்களில் ஒன்றாக இயங்குவது என்பவை சாதாரணமாக நாங்கள் பார்த்துவரும் விடயங்களாகும்.

ஒரு பொழுது சந்திப்புக்கள் பலருக்கு அவர்கள் வாழ் வின் திருப்பங்களையும், யோகங்களையும் தருவதுண்டு. ஆயினும் சில பேர்வழிகளை எதிர்பாராமல் சந்தித்தால் "ஏனடா இவரைச் சந்தித்தோம்” என்றும் ஆகிவிடுவதுண்டு. சில சந்திப்புகள் அவர்களின் வாழ்வின் துன்பங்களுக்கும் காரணமாக அமைவதுண்டு.

ஒருவர் துன்பத்தில் துவண்டுபோயிருப்பதைக் கண்டு “என்ன கப்பல் கவிழ்ந்துவிட்டது போல் இருக்கின்றாய்” என்று கேட்பதுண்டு. இதே போல் ஒரு பெரும் துன்ப அனுப வத்தை ஒரு விமான உற்பத்தி நிறுவனர் அனுபவித்தார். அவரது விமான நிறுவனம் பெரும் நஷ்டத்திற் குள்ளாகிவிட்டது. மிகவும் நொடிந்து போன மனிதர் தமது தொழிற்சாலையில் உட்கார்ந்தபடியே யோசனையில் ஆழ்ந்துபோனார்.

அப்போது தொழிற்சாலையில் ஆங்காங்கே விமானத் தின் உதிரிப்பாகங்கள் பரவலாகக்கிடந்தன. அப்போது தற்செயலாக அவர் மனதில் ஓர் எண்ணம் பொறிதட்டியது. அங்கிருந்த விமானத்தின் சக்கரங்களைப் பார்த்தார். அவர் மனதில் ஒரு குட்டி விமானவடிவில், ஒரு இருசக்கர மோட் டார்வண்டி உதயமானது. அந்த சக்கரங்களை எடுத்துப் பொருத்தி புதிதாக ஒரு இருசக்கர மோட்டார் வண்டியை உருவாக்கினார். பார்வைக்கு ஒரு அடக்கமான,சின்னஞ்சிறு விமானம் போல் உள்ள அந்த வண்டிதான் பின்னர் "ஸ்கூட்டர்” எனும் பெயருடன் அவரால் தயாரிக்கப் பட்டதாகும்.

பெரும் நஷ்டத்தில் தமது நிறுவனம் சரிந்திருந்த வேளை அவரது தன்னம்பிக்கை, புத்திசாலித்தனத்தால் தமது நிறுவனத்தின் வீழ்ச்சியை உயர்த்தி நிமிர்த்திக் கொண்டார். அவரது ஸ்கூட்டர் வாகனம் உலகெங்கும் பிரபல்யமானது. இந்த முன்னேற்றமானது வெறும் அதிஷ்டம் மட்டு மல்ல. ஒதுங்கி அழுது புலம்பாமல் ஏதாவது செய்தேயாக வேண்டும் என்கின்ற வேகம் அவருள் கிளர்ந்து, மீண்டும் அவரை ஒரு உத்வேக மனிதராக்கியது. ஒருவர்க்கு ஒரு பாதை அடைக்கப்பட்டால் நிச்சயமாக வேறு ஏதோ ஒரு பாதை திறப்பதற்கு இறைவன் வழிவிடுவான் என்பது இயற்கை நியதியன்றோ! முயற்சியில்லாமல் அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பது சுத்த சோம்பேறித்தன மானது. அல்பத்தனமானதும் கூட. சூதும், வாதும் வேதனை தரும் என்பார்கள். ஆனால் இன்று உலகம் பூராவும் சூதாட்ட விடுதிகள் மலிந்துவிட்டன. அத்துடன் அதிஷ்டச் சீட்டுக்களின் விற்பனையும் பன்மடங்காகிவிட்டன. குதிரைப் பந்தய மூலம் பணம் புரட்டும் ஆவல் பலரையும் வாட்டுகின்றது. சூதாட்டம் என்பதே ஒரு வித வெறித்தனமான செய்கை என்பதை உணர்ந்தும் கூட இந்த வலையில் இருந்து வீழ்ந்துவிட மனமின்றி சிந்தை தொலைத்த மாந்தர் கோடி.

யோக பலன் உண்டு என யாரோ சொன்னதைக் கேட்டு குதிரைப்பந்தயத்திலும், சூதாட்டத்திலும் ஈடுபடும் காலத்தை, வருந்தி உழைக்கவேண்டும் என ஏன் எண்ணுவதில்லை. யாரோ கோடியில் ஒருவர் பணம் பெறுகின்றார் என்பதால் ஒரு நப்பாசையில் பணத்தைக் கொட்டிவருந்த வேண்டும் என என்ன விதி உண்டு ஐயா!

இருக்கின்ற பணத்தை முதலீடாக வைத்துமுன்னேற வேண்டும் என எண்ணாது, குறுக்குப்புத்தியில் பணத்தைப் பெருக்க வாழ்க்கையைக் கருக்கும், நொருக்கும் பேதமையினை என் சொல்லி இயம்பமுடியும், அந்தோ!

அதிஷ்டம் நல்வழி வாழ்வோரை மயக்கி விடலாம். செல்வம் ஒரு நெருப்புப் போல் தான். அதனை உகந்த வழியில் செலவுசெய்யலாம். அதனை வளர்த்தும் கொள்ள லாம், தேவையின்றி அழித்தும் கொள்ளலாம். பணம் ஒருவனை அடிமை கொள்ளாமல், அவனைத் தன் நிலை கெடாமல் வைத்துக்கொள்ள, அவனே ஸ்திரமானவனாகத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

அதிஷ்டம் வந்து மனிதனைக் கஷ்டத்திற்குள்ளாக்கக் கூடாது. இதன் பொருட்டுப் பேராசை, அவா என்பன தீண்ட அனுமதிக்கவேசுடாது. வாழ்வதற்கான வழிகள் அகலமாகத் திறக்கப்படும் போது எதிர்காலத்தை நினைந்தும் முன்யோச னையுடன் வாழ்வதே வாழ்வு.

 

 

 

தெரியாத கருமங்கள்

தெரியாத கருமங்களைச் செய்தால் பொருள் விரயங்களுடன் உடலி உளச்சோர்வும் கூடவரும். எக்கருமங்களையும் எம்மால் செய்யமுடியும். பயிற்சி, ஆர்வமின்றி எப்பணியும் சித்திபெறாது. சின்ன விஷயத்தையும், தெரிந்து தெளிந்து செய்க. தெளிவு அற்றவன் அழிவு பற்றிச் சிந்திப்ப தில்லை. முன் யோசனையற்றவன், தன்பாட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டவன். காரிய சித்திக்கு, தன் முனைப்பினைக் களைக! பொறும்ை சிரத்தை அறிவைக் கூர்மையாக்கும்.தெரியாத கருமங்களைத் தெரிவதே அரிய முயற்சி ! பொருள் ஆதாரம் வரும் எனத் தெரியாத கருமங்க ளில் எல்லாம் தெரிந்தவர் போல் வருந்தி ஈடுபடுதல் சரிப்பட்டு வருமா? : ....: ... .

அறியாத தொழிலில் வீணான பிடிவாதப் போக்கினால் செய்தே பார்த்துவிடுவோம் எனப் பரீட்சார்த்தமாகச் செய்து பார்த்து, அதுவே விஷப்பரீட்சையாகி வினையாகிக் காசையும் உழைப்பையும் விழலுக்கு இறைத்தநீர் போலாக்குவது புத்திசாலித்தனமானதுதானா?

பொருந்தாத கருமங்களில் ஈடுபடுவது சிலருக்குப் பொழுதுபோக்கு, அதுவே, அவருக்கும் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் எரிச்சலூட்டினால் அது “வர வர..இந்த மனுஷன் தொல்லை தாங்கவே முடியவில்லை. என்ன தெரியுமென்று இவர் இந்த வேலை செய்யப் புறப்பட்டார்? போச்சு. போச்சு எல்லாமே போச்சு. இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான தொலைக் காட்சிப் பெட்டியை இருபது நிமிடத்தில் பழுதாக்கி விட்டாரே..? . இவரைத் திருத்திப் பார்க்குமாறு யார் கேட்டார்கள்.

மேற்படி பேச்சுக்கள் எனது நண்பர் வீட்டினுள் நுளையும் போது எனக்குக் கேட்டது. அவரது மனைவி மிகவும் மனவேதனையுடன் பொருமிக் கொண்டிருந்தார். எனது நண்பர் சற்றுப் பிடிவாதக்காரர். எல்லாமே தனக்குத் தெரியும் என்கிற கொள்கையுடையவர். வீட்டில் உள்ள எல்லா மின் பொருட்கள், தளபாடங்களைத் தானே செப்பனிட வேண்டும் என்கின்ற அதீத ஆவலினாலும், திருத்தி அமைக்க விடயம் தெரிந்தவர்களிடம் கொடுத்தால் வீண் செலவாகுமே என்கின்ற சிக்கன நோக்கினாலும், தேவையற்ற தெரியாத கருமங்களில் ஈடுபட்டுவிடுவார்.

 

அன்று அவரது தொலைக்காட்சிப் பெட்டியில் தொலைக்காட்சி நிலைய கோளாறு காரணமாக அதன் ஒளிபரப்புச் சரிவர இயங்கவில்லை.

மனிதர் விட்டுவிடுவாரா..? எதை எதையோ போட்டுத் திருகிக் கிண்டிக் கிளறி முடிவில் தனது மோட்டார் சைக்கிள் வண்டியின் சாவிகள் மூலம் பொருந்தாத உபகரணங்களால் தொலைக்காட்சிப் பெட்டியைக் குதறிவிட்டார். அது குற்றுயிரும் குறை உயிருமாக உருத்தெரியாமல், வீட்டின் சகல இடங்களிலும் பரவிக் கிடந்தது. பற்றாக்குறைக்குக் கோபமேலிட்டினால் பக்கத்திலிருக்கும் தன் குழந்தையை அது தனக்கு உதவிக்கு வரவில்லையே என்று ஏசி அதற்கு அடி உதை வேறு!

இவை எல்லாம் தேவைதானா? "உங்கள் நண்பரிடம் சொல்லி வையுங்கள், இப்படித்தான் போன மாதம் கூடப் புதிதாக வாங்கிய செல்லிடத் தொலைபேசியை ஏதோ சத்தம் குறைவாக வருகின்றதே எனச் சொல்லி, அதை நிரந்தரமாகவே சத்தம் இல்லாமல் செய்து குப்பையில் போடும்படி செய்துவிட்டார். இப்படியே போனால், வீட்டில் ஒரு சாமான்களையும் விட்டு வைக்கமாட்டார். அத்துடன் இவற்றைத் திருத்தும் போது உடலில் காயங்கள் வேறு."

அவர் சொல்லிக் கொண்டே போனார். நண்பரோ பரிதாபமாகப் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட பிரகிருதிகளை நீங்கள் சந்தித்திருப் பீர்கள். ஏதாவது புத்தகக் கடைகளில் போய்,தொழில்நுட்பம் தொடர்பாக அல்லது உபகரணங்களை எப்படி செப்பனிடு வது போன்ற நூல்களை வாங்கி விட்டுக் கண்டபடி வீட்டி லுள்ள நல்ல கருவிகளையே உருக்குலைத்துக் கொன்று போடுவார்கள்.

புத்தகத்தைப் பார்த்து வைத்தியம் செய்து மொத்த மாய் உடலைக் கெடுத்தவரும் உண்டல்லவா? தொழிலைக் கற்றபின், நல்ல பயிற்சி பெற்ற வல்லுனர்களிடம் அனுபவப்பட்டறிவைப் பயின்ற பின்னர் தான் ஒரு கருவியில் கைவைக்க வேண்டும் என்கின்ற அடிப்படை முன் அறிவு இல்லாதவர்களின் செயல்கள் நகைப்புக்குரியதன்றோ!

நவீன உபகரணங்களில் எல்லாவற்றிலுமே, எச்சரிக்கைக் குறிப்புகள் இருப்பதை எவர்கள் தான் வாசிக்கின்றார்களோ தெரியாது. பயிற்சி பெற்ற தொழில் நுட்பவியலாளர் மூலமே கையாளப்பட வேண்டிய உபகரணங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டுமல்லவா?

ஒரு சிறிய தொழிலேயானாலும் நாம் அதில் பயிற்சி பெற்றேயாக வேண்டும். குடைக்கம்பி முறிந்துவிட்டதே என்று ஒருவர் தானே திருத்த முயன்றார். உரிய உபகரணம் இன்றி செவ்வை பார்க்கப்புறப்பட்டதன் விளைவு, குடையின் கம்பி அவரது விழியில் பட்டுவிட அவர் பட்ட சிரமம் அப்பப்பா. இவையெல்லாம் நாம் நேரில் பார்க்கின்ற சம்பவங்கள்தான்.

வீட்டில் சுண்ணாம்பு அடிக்க நண்பர் ஒருவர் சுவற்றின் மேல் ஏறினார். ஒரு ஏணியினைச் சாய்த்து நிறுத்தித்தான் ஏறினார். துணைக்கு ஒருவரும் இல்லை. வெள்ளையடித் தபடியே ஏணியில் கால் வைத்து இறங்க முயற்சிக்க ஏணி நழுவி அனைத்துச் சுண்ணாம்புக் கலவைகளும் உடல் முழுவதும் குளிப்பாட்ட அப்புறம் என்ன மனிதரின் உடம்பு

வைத்தியசாலைக்கு நான் சென்று பார்த்த போது பரிதாபமாக என்னிடம் சொன்னார், "வெள்ளையடிக்கப் போனேன் வெள்ளைமாவுக் கட்டுப்போட்டு கட்டிலில் கிடத்திவிட்டார்கள்” எப்படியிருக்கிறது பாருங்கள்? நாங்கள் சிக்கனமாக வாழ்ந்தேயாக வேண்டும். எல்லாத் தொழிலையும் கூச்சமின்றிச் செய்ய வேண்டும்.

அதேவேளை, செய்கின்ற வேலையின் நுட்பம், அதன் பரிணாமம், தேவையான உபகரணம், தொழிலாளர் உதவிகள் போன்றவை கிடைக்க வேண்டாமோ? வரட்டுப் பிடிவாதத்தின் பொருட்டுக் கை, கால்களை உடைப்பதை விடுத்து எப்படி வேலைகளைச் செய்ய வேண்டும் என ஆராய முனைய வேண்டாமா?

நாங்கள் செலவிடுகின்ற பொழுதுகள் வீண்விரயமாகக் கூடாது. உதாரணமாக நீங்கள் சாதாரணமாக ஒரு மணி நேரம் ஒரு கருமத்தைச் செய்யும் போதுஏற்படும் அனுகூலத்தை நோக்குங்கள். அதேநேரம், ஒரு அற்ப வேலைக்காக இந்த நேரத்தினைச் செலவு செய்தல் எவ்வளவு பொருளாதார விரயம் தெரியுமா?

ஒரு இலத்திரனியல் நிபுணருடன் உரையாடும் போது சொன்னார், பெறுமதி குறைந்த பொருட்களைச் செப்பனிடச் செலவழிக்கும் நேரம் வீணானது. அதன் பொருட்டு எவ்வளவு ஊதியம் பெற்றாலும் பணம் கொடுப்பவருக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?;

அத்துடன், "இந்த நேரத்தில் விலை உயர்ந்த கருவிகளைச் செப்பனிடும்போது ஊதியம் உயர்வாகக் கிடைப்பதுடன் மனத்திருப்தியும், தொழில்நுட்ப ஆற்றலும் மேம்படுகின்றன. எனவே எம்மிடம் இருக்கின்ற பொருட்களைப் பாவிப்பதில், சீர் செய்வதில் கூடிய கவனம் எடுத்தல் வேண்டும்” என்றார்.

நாம் ஒன்றினை அறிதல் வேண்டும். பழைய பொருட்கள் மீதுள்ள அளவுக்கு மீறிய ஆசையினால் அவைகளைத் திருத்திப் பாவித்தே தீரவேண்டும் என்கிற எண்ணத்தில் தீவிரமாக இருக்கின்றோம். பொருளாதார ரீதியில் இவைகளின் பராமரிப்புச் செலவுகள் பற்றிச் * சிந்திப்பதேயில்லை. சரி,பொருட்கள் கருவிகளைக் கண்டபடி கையாளுபவர்களை விடுத்து, அடுத்துத் தெரியாத சங்கதிகளுள் நுழைபவர்களைப் பார்ப்போம்.

நல்ல வசதியும் கல்வியறிவும் உள்ள நல்லவர்கள் கூட அரசியல், வியாபாரம் போன்ற துறைகளில் அவற்றின் நெளிவு, சுழிவுகளை உணராமல் போய் மாட்டிக் கொண்டு விடுகின்றார்கள். யாரோ, எவரோ சொன்னார்கள் என்பதற்காக வெறும் புகழ்ச்சி வார்த்தைகளை நம்பி அரசியலுக்குள் நுழைந்து கொள்பவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி அடங்குமா? நல்ல கெளரவமான மனிதர்கள் அரசியலுக்குள் நுழைந்ததும் வேறு வழியின்றிப் பொய் பேச ஆரம்பிக்கின்றார்கள். எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்கின்ற நோக்கில் மாற்றானைக் குழி பறித்தல், நயவஞ்சகம் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட முனைகின்றார்கள்.

செய்கின்ற இத்தகைய வேலைகள் தவறு என அறிந்தும், கூடியிருக்கும் கும்பல்களின் சாதுர்யமான வலைகளினால் பின்னப்பட்டு அநாவசியப் பொருள் போலாகிக் கரைந்தே போகின்றார்கள். அரசியல்வாதிகள் எல்லோருமே இத்தகையவர்கள் அல்லர். ஆனால் அரசியலில் நுழைவதற்கு முன் மக்களுக்காக என்ன தியாகம் செய்ய வேண்டும்? ஏத்தகைய சேவைகளைத் தலைவர்கள் செய்தார்கள்? என்பதை அறியாமல், புரியா மல், எடுத்த எடுப்பில் தெரியாத அரசியலில் அரசியல் கொள்கையினுள் நுழைந்துகொள்ளலாமா? இன்று சரித்திரம், அரசியல், பண்பாடு, சமூகம் பற்றிய சிந்தனையற்றவர்கள் அரசியலில் புகுந்துகொண்ட மையினால் உலகம்படுகின்ற அவல நிலை அனைவருமே அறிந்ததுதான்.

தெளிவு அற்றவன் வரும் அழிவு பற்றிச் சிந்திப்ப தில்லை. முன்யோசனை அற்றவன் தன்பாட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டவன். அலைவழி சுழி அகப்படுபவன். எதில் போய்சங்கமிக்கிக்கின்றானோ யார் அறிவர்?

"கஷ்டப்பட்டு உழைத்துநாலு காசு சம்பாதித்தேன். யாரோ சொன்னார்கள் என்று ஏதோ ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கினேன். நிறுவனத்தின் பொருளாதார நிலவரம் புரியாமல் புகுந்தேன். முடிவு பல இலட்சங்கள் நஷ்டப்பட்டுவிட்டேன்" என்று ஒருவர் சொல்லிப் புலம்பினார்.

சில நபர்கள் பரீட்சார்த்தமாகச் சில நூறு ரூபாய்களை முதலீடு செய்து பார்க்காமல் தமது முழு உழைப்பினையும் தெரியாத தொழிலில் முதலீடு செய்து முடங்கி ஒடுங்கிப் போகின்றார்கள். இது எவ்வளவு மனக்கஷ்டமான விஷயம் அல்லவா?

அநேகர் தங்கள் கெளரவத்தினை நிலைநாட்டுவ தற்காகவும் பல துறைகளில் புகுந்து கொள்ளத் தலைப்படு கின்றார்கள். எல்லாத் துறைகளையும் தெரிந்துகொள்வதில் தப்பு இல்லை. ஆனால் எமக்கென ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றிருத்தல் சிறப்பு அல்லவா? பணம் சேர்க்கும் ஆசையில் பல தொழிலைச் செய்து முடிவில் எல்லாவற்றிலுமே கூடிய கவனம் செலுத்த முடியாது அல்லற்படுபவர்களும் உளர். செய்து முடிக்கத் தக்க வேலையில் தான் வாக்குக் கொடுக்க வேண்டும். நானே அனைத்தையும் முடிப்பேன் என வாயளவில் கூறிச் செயலளவில் செய்து முடிக்காது விட்டால் எம்மீது நன்மதிப்பு வைத்திருந்தவர்களாலேயே அவமதிப்புப் பெற்றவர்களாகிவிடுவோமல்லவா?

 

மற்றவரின் தொழில் பற்றியே அவாவுறுதல் வெறும் கேள்வி ஞானம் மூலம் தொழில் விருத்தி செய்ய முனைதல் நாட்டின் நிலைவரம், சூழ்நிலைகளுக்குப் பொருந் தாத துறைகளில் கவனம் செலுத்துதல், ஈடுபடல். தாம் சார்ந்த, விரும்பிய துறைசார்ந்த வல்லுனர் களின் துணை கோராமை வரட்டுப்பிடிவாதம் சேவை பற்றிய நோக்கின்றி, வெறும் பண இலாபத் தினை மட்டுமே குறியாகக் கொள்ளுதல் தமது தேக ஆரோக்கியம், வலு பற்றி அறியாமல் கருமங்களில் ஈடுபடல் பணத்தினைக் கண்டபடி செலவு செய்தல் இவை போன்றவைகளும் தெரியாத கருமங்களை மேற்கொள்வதற்கான காரணிகளாகும். இளவயதில் நாம் துடிப்புடன் செய்கின்ற காரியங்கள் வயது முதிர்ந்த பின் செய்து கொள்ள முடிவதில்லை. பொதுவாக வீடுகளில் முதியவர்கள் சிலர் வயது முதிர்ந்ததை உணராதவர்களாக தமக்கு ஒவ்வாத வேலைகளைச் செய்ய முனைந்து

துன்பப்படுவதைக் கண்டிருப்பீர்கள்.

* முடிந்த கருமங்களைச் செய்தேயாக வேண்டும். * தன்நம்பிக்கை என்பது கண்மூடித்தனமாக காரிய மாற்றுவதல்ல புரிந்து கொள்ள வேண்டும்.

செய்துகொள்ள முடியவில்லை என்பது ஒரு வெட்கப் படக்கூடிய ஒன்றல்ல. ஒவ்வொரு துறைக்கும் ஏற்றவாறே மனிதர்கள் இயற்கையாகவே உருவாக்கப்பட்டு விட்டனர். சிலர் தாமாக கற்றுக் கொள்கிறார்கள். எமக்குப் பொருத்த மானவைகளை நாம் தெரிந்து கொள்வோம்.

தலைசிறந்த தொழிலாளியாக, தொழில்நுட்ப வல்லுனராக, விஞ்ஞானியாக, வைத்தியனாக, சட்டத்தரணியாக, இப்படியாக எத்தனை, எத்தனையோ தொழில் துறைகள் உண்டு.

அனைத்துத் தொழிலிலும் நிபுணத்துவம், தேர்ச்சிகள் செய்கின்ற கால, அனுபவங்களால் பெறப்படும். தொழில்களில் ஏது பேதங்கள்? நாமாகவே உண்டு பண்ணுகின்றோம். அவ்வளவே அறிந்தவர்களிடம் அறிவதே முறைமை. தெரியாததை தெரிந்ததாகப் பாசாங்குபண்ணக் கூடாது. தெரிந்தவைகளைத் தெரிந்ததன் வண்ணம் செய்தால் எதுவித பிரச்சினைகளும் இல்லை.

அதனை விடுத்து, அறியமுடியாமல், அறிந்து கொள்ள மறுத்து, அகங்கார உணர்வுடன் கருமமாற்றுதல் உருப்படாத முயற்சிதான்.அறிக!

எனவே, தெரியாத கருமங்களைத் தெரிந்து கொள் வோம். தெரிந்த சங்கதிகளை பெற்ற அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வோம். அப்படியானால் தான் செய் கருமம் சித்திபெறும் நிச்சயம்!

 

 

 

இரக்கம் சுரக்கட்டும்

இரக்கம் கொள்பவர்களுக்கு உலகமே உறவாகும். இருதயத்திலிருந்து உருவாகும், உணர்வின் உற்பத்தியான இரக்கம் உயிர்களுக்குத் தேறுதல்களை அளிக்கின்றது. இனிய இதயம் விரிவடைந்தால் சகல அண்டங்களை விட விசாலமானதும் பெருமையையும் கொண்டதாகிவிடும். இரக்கம், அவனியை இணைக்கும் கருவி, ஆணவத்தை உருக்கும் குளிர் அருவி. உயிர்களில் கரிசனையூட்டும் பரிதி. வேத, சாஸ்திரங்களின் மூல மந்திரம். அன்பின் அடிப்படையான யந்திரம்.

எவ்வித எதிர்பார்ப்புக்கள் இன்றி சகல உயிர்களிடத்திலும் அவைகள் நிலைகண்டு இதயத்தில் இருந்து சுரக்கும் உணர்வின் வெளிப்பாடு இரக்கமாகின்றது. இறைவன், உயிர்களின்பால் கொள்வது கருணை என்றும் மனிதர், மனிதரிடத்தும் ஏனைய ஜீவன்களிடத்தும் கொள்ளும் உணர்வினை இரக்கம் என்றும் சொல்லப்படுவ துண்டு. எனினும், கருணை கொள்வது கடவுளின் குணம் என்பதால் இரக்கம் கொள்ளும் மனிதன் கூட, கடவுள் நிலையில் வைத்து கெளரவிக்கப்படுவதில் வியப்பில்லை. கருணைக்கு ஏது எல்லை?

இரங்கும் குணம் படைத்தவன் அன்பு கொண்டு எல்லோரையும் தன்னுள் அடக்குகின்றான். இரக்கம் கொண்டவர்கள் பிறருக்காகச் சிந்தும் கண்ணிர் இறைவன் நெஞ்சில் அதிர்வூட்டி சிந்திய கண்ணிருக்கும் பதில் கூறும். இரக்கம் ஆணவத்தை உருக்கும். ஜாதி, இன, மத வேறுபாடுகளைக் கடக்கும். நெஞ்சை நெகிழவைக்கும்.

வஞ்சக உணர்வுள்ளோரும், இரக்க சிந்தனை யாளரின் முன் காந்தமென நல்நெஞ்சமுடையோராக் கப்படுவர். மென்மையான இந்தச் சுபாவம் எதனையும் அசைக்கும் அன்பான அஸ்திரமாகின்றது. இரக்கமுள்ள வரைப் பார்த்துக் குறைகூற மனம் வருமா?

இந்தக் குண நலம் பற்றிக் கூறாத சமயங்கள் உண்டா? சொல்லாத வேதங்கள், நீதி நூல்கள் உண்டா?  அன்புதான் இரக்கத்தின் கருப்பொருள். இதன் பெருக்கத் தில்தான் உலகம் கரையாமல் இருக்கிறது.

கருணை சுரக்காது விட்டால் உலகம் சிறுத்துக் கறுத்து வரண்டே போகும். எனவே, நல்ல மனங்கள் கொண்டோரின் தயவு என்றும் அவனிக்கு அவசியமாகின்றது. ஒருவரின் பரிதாப நிலைகண்டு கசியாத மனம் கூட தனக்கு எனத் துன்பம் வந்தால் தாங்குமா? என்னை யாராவதுதாங்குங்கள், தூக்கி நிமிர்த்திஆதரவு கொடுங்கள் என்றுதானே நினைப்பார்கள்.

சகல ஜீவன்களுமே ஒன்றுக்கொன்று ஆதாரம் என்பது தெரிந்த கூற்றுத்தான். மனிதன், மனிதனை மட்டுமா நேசிப்பது? பூமிக்கு எல்லாமே பொதுவானது. எனவே பூமியைத் தாய் எனக் கூறி மதிக்கின்றோம். அவள் பெற்ற செடி, கொடி, பறவைகள், மிருகங்கள் கூட இவள் பார்வையில் ஒன்றுதான். ஒரு மகன் வாழ்ந்து கொண்டு இருக்க இன்னொரு மகன் துன்புற்று வாழ்வதை எந்தத் தாயும் சகிப்பாளா? தாய் அழுதால் குடும்பம் தாங்காது. அது போலவே. பூமித்தாய் ஈன்ற எந்த உயிரும் கஷ்ட முறுவதையோ அல்லது அவை அழிந்து போவதையோ அவள் பொறுக்கமாட்டாள்.

மனிதன் தன் இனம் மீது மட்டும் இரக்கம் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது. நாம் எல்லோரையும், எல்லா உயிரையும் நேசிப்பதில்,ஆதரவுகாட்டுவதில் தான் மனிதத்துவம் இருக்கிறது என்று உணர வேண்டும்.

ஏனெனில், மனிதன் உயிர்களிலேயே உயர்வான நிலையில் உள்ளவனாகக் கருதப்படுகின்றான். இவனிடம் கிடைக்காத நீதியை, பிற உயிர்கள் எங்ங்னம், எப்படிப் எவர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்? மனிதன் தன்னைப் போன்ற மனிதனை மட்டும் நோக்குதல் மனிதாபிமானம் என்றாகி விட்டது. இந்நிலைக்கு மேலாக வாழ முயற்சிக்க வேண்டும்.

முல்லைக்குத் தேரும், மயிலுக்கு போர்வையும் அளித்தமை வெறும் கதையல்ல. சும்மா போகின்ற ஒணானை, தேரையை,தும்பியைக் கொல்லுகின்ற மனிதரை நீங்கள் காண்பதில்லையா? சுதந்திரமாகப் பறக்கும் பறவைகளைக் கூட்டில் அடைப்பதும், சுட்டுத்தின்பதும், மான்களைத் தேடுவதும், மரைகளை இரையாக்குவதும் என்ன ஐயா கொடுமை? நீர் அருந்த வரும் மிருகங்களை வதைக்கிறான் மனிதன். ஆனால் எந்த ஒரு மிருகமும் தேடியா கொல்ல வருகிறது? சிங்கம் கூட உண்டு, பசி அடங்கியதும் தன் முன்னே நிற்கும் புள்ளிமானை பார்க்காது திரும்புகிறது. 

ஆனால், எல்லா மனிதரும் நல்லபடி நடப்பதில்லை. நல்ல வசதிகளோடு இருந்தாலும் எதிரில் இருப்பவனைப் பார்த்துச் சதி செய்ய நினைக்கின்றான். என்ன விசித்திர மனோநிலை இவர்களுக்கு ஆண்டவா! என எண்ணத் தோன்றுகின்றதல்லவா?

சரி போகட்டும், ஒரு விஷயத்தை நன்கு நினைவு கூருவோம். இந்த வினாடிப் பொழுதில் சகல மிருகங்களும் அழிந்து, நீர் வளம் உட்பட பயிர் பச்சை இல்லாது போக, பறவைகளே இன்றி, எந்த ஜீவனும், மனிதனைத் தவிர அழிந்துபோனால் எத்தனை நாட்கள் மனிதன் அவனியில் உருளுவான்?

இயற்கை பற்றி எல்லோருமே சொல்லியாகிவிட்டது. அழிவது, அழிப்பது மட்டும் இயற்கையின் நியதியல்ல வளர்வதும், வளர்க்கப்படுவதும் இயற்கையின் நியதியாக அமைதல் வேண்டும். எனவே அழிவு மட்டும் உண்மை எனக்கூறி, இருப்பதைத் தகர்க்கக்கூடாது. இரக்கமற்ற உணர்வுகள்தான் இன்று வளர்ந்து விட்டமையால் எல்லா உயிர்களையும் மதிக்கும் இயல்பு மறைந்து விட்டது.

யாரும் அற்ற தீவில் உங்களைக் கொண்டு சென்று விட்டால்தான் தெரியும். எமது உண்மையான இயல்புகளை அன்றுதான் உணருவோம். பறக்கும் பறவைகளுடன் பேசுவீர்கள், எங்கேயாவது சின்ன உயிரையும் துணையாக நோக்குவீர்கள். அன்பின் ஏக்கம், இரக்கத்தின் பரிணாமம் அப்போது நன்கு புரியும். இயற்கையுடன் இணைந்து பயணம் செய்வீர்கள்.

 

பயம் அதிகரிக்கும் போது, பிறர் ஆதரவு கோரப் படுகிறது. இரக்கம் காட்ட எவர் வருவார் என ஏங்குகின்றோம். சகல ஆத்மாக்களையும் உங்கள் இதயத்தினுள் பிரவேசிக்க அனுமதித்தால், கருணை கரை புரண்டோடி பேரின்ப உணர்வினைப் பெறுவீர்கள். இது உறுதி.

சின்ன வயதில் நாம் அணில், ஆடு, மரம், மாடு எனப் படிக்கின்றோம். படிக்கும் போது ஆனந்தத்துடன் அவை களை நோக்குகின்றோம். ஆனால் இந்த நோக்கு வயது வந்ததும் ஏன் வக்கிரமடைய வேண்டும்?

அணில், ஆடு, முயல், கிளி, செடி, கொடிகளை ரசிப்பது குழந்தைகள் மட்டும்தானா? என எண்ணும் போது நாங்கள் பெரியவர்கள் ஏன் அப்படி இலலை என்று கருதியது உண்டா? இந்த நிலைக்காகக் கவலைப்படுவது உண்டோ?

இரசிப்பதை, இரக்கத்துடன் நோக்குவதை மறக்க மனம் இளகியவனுக்கு எல்லாமே வசீகரமாக இருக் கும். மனம் கறுத்தவனுக்கு எல்லாமே வெறுப்பு, கசப்பு. அவனுக்கு இரக்க சுபாவமே அர்த்தமற்றதாகத் தெரியலாம். ஆயினும்இரக்கம், இதயத்தின் திறவுகோல் என உணர்வதே சிறப்பு.

 

எமக்குள்ளே பிரவாகிக்கும் அன்பான, உணர்வுகளை நாம் எந்தச் சிரமமும் இன்றி பெற்றுக் கொள்ள முடியும்.

இருதய விசாலம் என்பது இந்த அண்டங்களை விட அளவில், பரிணாமத்தில் பருத்ததும், பெருமையுமுடைய தாகும்.இதற்குள் எத்தனை அன்பான எண்ணங்களை, உயிர் உணர்வுகளை, பற்றுறுதியுடன் சுமக்க இயலும். இரக்கம் என்கின்ற பரிசுத்த உணர்வினை உங்கள் உள்ளே செலுத்தத் தயாரானால், அகில உலகமும் உங்கள் வச மாகும். இது கூட ஒரு தெய்வீக நிலை தான். உணர்வோம்.

எல்லையற்ற கரிசனையுடன் கூடிய இரக்கமே எங்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மகா சக்தியாக உள்ளது. இதனாலேயே ஆன்ம விழிப்பு, சதா சந்தோஷ உணர்வு என்பன உருவாகி, புது ஒளிகாட்டிஎம்மை வழிநடத்தும்.

 

 

 

புலன்களும் நல் எண்ணங்களும்

மனம் வழிஉடல் புகுந்துகொள்ளாது சாதக பாதகமானவைகளை ஆய்ந் கருமமாற்றுக! மனத்திற்குக் கட்டளையிடும் அதிகாரத்தை நாமே உருவாக்க வேண்டும். உடலை வைத்துத் தகைமை பேச முடியாது. நல் உணர்வு, அறிவு ஞானத்தால் தான் மனிதன் மேன்மையடைகின்றான். வாழும்பூமியை நெசிப்பவனின் மனம், உடல் என்றும் புதிதாகவே இருக்கும். இயற்கையுடன் சேர்ந்து வாழும் போது புலன்கள் சாதகமாக எமக்கு அமையும். செயற்கையான வசதிகள் நீண்டகாலத்திற்கு செளகரியம் தராது. புலன்களைக் கட்டுப்படுத்தி நல் எண்ணங்களை வளப்படுத்துவோம்.

புலம் வழிசென்று கொண்டால் உள்ளம் மெல்லென விலகி, நல்வழிபிறழ்ந்து வாழ்க்கை சுபீட்சமின்றிச் சபிக்கப் பட்டதுபோலாகிவிடும்.

ஐம்புலன்களுமே எமக்கு இறைவனால் அருளப்பட்ட கருவிகளே. அதனை அறிவுத்திறன் கொண்டு சிறப்புடன் கட்டுப்படுத்துவதே முறையான நன்நெறியாகும்.

மனம் நினைத்ததை உடன் செய்யவிழையாது. அதன் சாதக, பாதகங்களை கண்டறிய வேண்டுமல்லவா? நல்ல மனம் கோணலாகிப்போனால், வாழ்க்கையில் இருக்க வேண்டியன ஒன்றுமே இல்லாதவர்களாகிப் பயனற்றுப் போவோம்.

தேவையில்லாதவற்றையே மனம் தூக்க நினைக்கி ன்றது. புலன்களை மனம் அசைக்கின்றது. கெட்டவை களைப் பார்க்க விழைவதும் கெட்டவைகளைப் பேச எண்ணுதலும் ஒவ்வாத பாஷைகளை காதுகள் கெளவ எண்ணுதலும், சிந்தனைகளை மந்தமாக்கும் வாழ்வை நோகவைக்கும் செயல்தானே?நல் அறிவின் ஆளுமைக்குள் மனசு செயல்பட்டால் புலன்களும் சிறப்பாகவே இயங்கும். எடுத்த எடுப்பிலேயே ஒன்றினை நுகர இச்சைப்படுவது என்பது, எம்முடைய அறிவிற்கு கொஞ்சமாவது இடம் கொடுக்கத் தயங்குவது போன்றதேயாம்.

மனதிற்குக் கட்டளையிடும் அதிகாரத்தினை நாம் உருவாக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் எங்களுக்கு நாங்களே அடிமையானது போன்ற கொடிய வினையை அனுபவிக்க வேண்டியவர்களாவோம். தேவையற்ற வைகளைக்கத்தரித்து தேவையானவைகளை வைத்திரு க்கும் சிந்தனை உடையவர்களாக இருக்கவேண்டும்.

இன்று துன்பங்களில் தங்கியே வாழ்கின்றோம் என்று கூறுபவர்களில் பலரும், தங்கள் மீதான நம்பிக்கையீனம் என்பதிலும் பார்க்க, தேவையற்ற விடயங்களில் கவனத்தை ஈர்க்கின்றனர் என்பது ஓர் முக்கிய பிரச்சினையாகவுள்ளது.

புலன்கள் வழி கவர்ந்திழுக்கும் நிலையினராய், இஷ்டப்படி வாழ்ந்து வந்தால் வாழ்க்கையில் எதிர் நீச்சலடித்துப் போராடி வெற்றிபெறும் நுட்பம் எம்மிடம் இருந்து வெட்டுப்பட்டு விடும். அறிந்து கொள்க.

"போராடுதல்" கஷ்டப்பட்டு கரையேறுதல் என்பதன் பொருட்டேயாகும். போராடிப் பெறுகின்ற வெற்றி அனுபவங்கள் கூட உண்மையில் சுவாரஸ்யமானவைகள் தான். வெற்றிகண்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள் அல்லது நீங்களே பிரயாசைப்பட்டு இஷ்டமானவைகளை பெற்றுப் பாருங்கள். அந்த அனுபவம், சுதந்திரம் தழுவிய சொந்தத் தேடலாக இருக்கும். கஷ்டப்படாதவனுக்கு எதிலும் உரிமை, உறவு கிடையாது. சும்மா இருக்கின்ற மனோ நிலையில் உள்ளவனுக்கு தேகம் இருந்தும் அது இல்லை. சித்தம் இருந்தும் அது அஸ்தமனம் தான் .

வெறும் உடலை வைத்து தகைமை பேச முடியாது. உணர்வு, அறிவு, ஞானம் கொண்டால்தான் உருவங்களு க்கே ஆளுமை கிடைக்கின்றது. தெளிவு அற்றவன் தான் தோன்றித்தனமாக நடப்பான்.

அதுவே அவன் இயல்பு ஆகின்றது. நாம் எல்லாவற்றிற்கும் காரணம் கூறத் தெரியாமலும், ஆனால் அதனையே காவித்திரிய ஆசைப்படுவதும் வியப்புக்குரியதே.!

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லுகிறேன். தெரு வில் நீங்கள் நடந்து கொண்டிருக்கின்றீர்கள் எப்பொழுது உங்களுக்கு மிகவும் பிரயோசனமற்றதானாலும் கூட ஆனால் உங்கள் மனசோ பரவாயில்லை அதனை எடுத் தால் என்ன என்று எண்ணி அதை உங்கள் சட்டைப்பையுள் எடுத்துப் போடுகின்றீர்கள்.

இவ்வண்ணமே, மீண்டும் தெருவில் தொடர்ந்து செல்லும் நீங்கள், இன்னும் ஒரு பொருளைக் கண்ணுற்றும் அதனையும் விட்டுவிட மனமின்றி எடுத்துவைத்திருக்கின் நீர்கள். பையினுள் அவற்றை திணித்துக்கொள்கின்றீர்கள்.

இப்படியே வழியில் காண்கின்ற தேவையற்ற, ஆனால் நீங்கள் தேவை எனக்கருதிய பொருட்கள் எல்லாவற்றையும் சுமக்க முடியாமல் சுமந்தபடி வீட்டிற்குள் வருகின்றீர்கள். வீட்டில் உங்கள் இல்லத்தரசி நீங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களைக் கண்டு துணுக்குற்று எதற்காக இவைகளைக் கொண்டுவந்தீர்கள்? இந்த வீட்டில் இவைகளை வைத்திருக்க இடம் இருக்கின்றதா? நாங்களே இருக்க இடம்போதாதவிடத்து எப்படி இவைகளைத் திணிக்க முடியும்? இப்படிமனைவி கூறினால் எந்தத் தப்பும் கிடையாது.

 

இந்த இடத்தில் தான் நாம் ஒன்றினைப் புரிந்து கொள்வோம். இங்கு அறிவு என்று சொல்லப்படுவது மனைவியின் கூற்று ஆகும். புலன்வழி கண்டதையும் இச்சைப்பட்டு, மூட்டை முடிச்சுக்களைக் காவித்திரிதல் மனித இயல்பாகிவிட்டது. எமது அறிவிற்குத் தேவையான சங்கதிகளை செலுத்தவே இடம் அளிப்போமாக! மனித மூளை எதனையும் ஏற்க வேண்டும் என்றில்லை. நல்ல தைக் கொள்க! அல்லாதவைகளை கழைக!

மனது பூரணப்பட்டுப்போகும் போது அநாவசிய உணர்வுகள் திறன் அற்று மறக்கப்பட்டுவிடுகின்றன. பெரியோர், ஞானிகள் கண்டதையும் பேசுவதில்லை. காண, கேட்கப் பிரியப்படுவதுமில்லை. இவை இவர்களது பண்பு. மனம் செளகரியத்தைத் தான் நாடுகின்றது. ஆனால் இயற்கையோடிணைந்த வசதிகளை ஏன் ஏற்க மறுக்கின் றது?செயற்கைச் செளகரியங்களின் மயக்கங்கள் தேகத்தை பாதிக்கும் என்பதை எப்போது நாம் உணரப்போகின்றோம்? அன்னை பூமிக்கும் மனிதனுக்கும் உடலால் உள்ள தொடர்பு அருகிவிட்டது. அவள் ஈர்ப்பினில் லயிக்க நாம் மறுக்கின்றோம். அவள் எம்மை முத்தமிட விரும்புகின்றாள். நாம் மறுத்து முகம் திருப்புகின்றோம்.

எமது பாதங்கள் பூமியில் அழுந்தப் பதிக்கப்படுவ தில்லை இடையே ஒரு குறுக்குக் சுவராகப் பாத அணிகள் பதிக்கப்படுகின்றன. பூமியில் நிமிர்ந்து உருண்டுபடுக்கின்றோமா? கட்டிலில் சுதந்திரமின்றி முடங்கிப்புரள்கின்றோம். நிலத்தில் இருப்பதில்லை, கதிரையில் காலை தொங்கப்போட்டுநாள்முழுவதும் நேரம் போக்குகின்றோம். புவியின் அரவணைப்பு மனிதனுக்குக் கிட்டாமல் போய் விட்டது. எனினும் அன்னை பூமியின் வழங்கல்களைத் தயங்காமல் ஏழைகள் ஏற்றுக்கொள்கின்றனர்.

வெயில், மழை, குளிர், தென்றல் எல்லாவற்றையும் மனம் கோணாமல் இவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். மலையும் மடுவும் கட்டாந்தரையும் புல்லும் பூண்டும் காடும் பூவனவும் எல்லாம் இறைவன் கொடை என இவர்களால் இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆயினும் ஏன் ஏனையவர்க்கத்தினால் இயற்கையை அதன் வளங்களை கவர்ந்திழுக்க முடியவில்லை. "எல்லாமே மனம்" அது தேடும் வசதிகள் கவர்ச்சியான ஈர்ப்பான எண்ணங்கள் தானே காரணம்?

புலன்களுக்கு எம் மூளை கொண்டு நல்லதை மட்டும் புரிந்துகொள்ள சொல்லிக்கொடுக்க வேண்டாமா? எமக்கு நாமே எஜமானார்கள் என கெளரவமாக சொல்லிக் கொண்டால் மட்டும் போதுமா? உண்மையான ஆட்சி செய் பவன் தன்னைத், தன் எண்ணங்களை ஆட்சி செய்யாது விட்டால் புலன்களின் புரியாத சூழ்ச்சிக்குள் நாம் புகுந்து கொள்வோம் அல்லவா?

வசதிகள் இருப்பதால் மட்டுமின்றிச் சாதாரண மனிதர்கள் மனம் வழிநடந்து கொள்கின்ற சம்பவங்களைப் பார்க்க கேட்க நகைச்சுவையாக இருக்கும். இப்போது சொல்லப்படுகின்ற விடயங்கள் எல்லாமே சாதாரணமாக நடக்கின்ற நிகழ்ச்சிகள் தான் கேளுங்கள்.

பக்கத்து வீட்டுக்காரருடன் கூட தொலைபேசி யூடாகவே பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அங்கு நடந்துசென்று பேசமாட்டார்கள். அடுத்த வீட்டிற்குள் போய் பேச முடிந்தாலும், கெளரவம் காரணமாகவும், வீட்டுத் தொலைபேசி எடுக்கச் சிரமப்பட்டுச் செல்லிடத் தொலை பேசியைத் தேடுவார்கள். செலவுபற்றிச் சிந்திப் பதில்லை. இளைய சமூகத்தைப் பாருங்கள். மணிக்கணக்காக செல்லிடத் தொலைபேசியில் சல்லிக்காசு பெறுமானம் பெறாத காரியங்கள் பற்றிக் கரிசனையுடன் கதைப்பார்கள்.

இதைவிட இன்னும் ஒரு வேடிக்கையான சங்கதி களையும் கண்டிருப்பீர்கள். அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் அருகே உள்ள கடற்கரைக்குப் போய்விடலாம். நடந்தால் தேகப்பயிற்சி என்று வைத்தியர் சொன்னாலும் கேட்க மாட்டார். வாகனத்தில் கடற்கரைக்கு சென்று ஓரிரு நிமிடங்கள் மெதுவாய் நடந்து நண்பர்களுடன் பழங்கதை பேசிவிட்டு, அவசரம் அவசரமாக மீண்டும் மோட்டார் வாகனத்தில் முடங்கி ஒடுங்கி வீடு சேர்வார்கள். என்ன விந்தை மனிதர்கள் இவர்கள் கடவுளே!

உடல் அசைவதே, "பெரும்பாவம்" என எண்ணுகின்றவர்கள் எவ்வாறு மனம் பக்குவப்படப்போகின்றார்கள்?

உடலை வருத்தி உழைப்பது மனதிற்குக்கூட நல்ல பயிற்சி தான். புலன்களில் தெளிவான காட்சிகள் பதியப் படல் வேண்டும். நல்ல செய்திகளை மட்டும் எமது மனது வாசிக்க வேண்டும். இனிய நுகர்வுகள் எல்லாமே சிறந்த அதிர்வுகளாகி என்றுமே நிலைத்திருக்கும். பார்ப்பது, கேட்பது, பேசுவது எல்லாமே உணரும் ஆற்றலைத் தூய்மைப்படுத்துவதானாலேயே, அவை வல்லமையு டனான, ஆளுமைகளை எமக்கு தேடித் தரும்,

சில பொழுதுகளில் எமது சிந்தனைகளின் சஞ்சாரம் தொலைவு நோக்கியதாய், வருந்தித் துன்பம் தேடுதலாக அமைந்துவிடலாம். எனினும், நல்ல திசை நோக்கிய பயணங்களில் துன்பங்கள் என்பன சொற்ப காலமானா தாகவே அமையும். புலன்கள் அற்ப சுகம் தேடவல்லன என்று உணர்ந்த கணம் விழிப்படையவேண்டியவர்கள் கூட நாங்களே. எனவே மனதுக்குள் நல் எண்ணங்களைப் பதிப்பாய் என இறைவனை வேண்டுதல் செய் என்று பெரியோர் பகர்வர்.

புலன்களின் சீண்டுதல்கள் எல்லாமே சாதாரண நிகழ்வுகள் ஆயினும் இவைகளின் தூண்டுதலிலான சாதக, பாதகத் தன்மைகள் எல்லாமே மிகப்பெரிய தாக்கங்களை உருவாக்கலாம் நிலையற்ற வாழ்வு என்று நாம் வாழ்க்கை பற்றி சொல்லிக்கொண்டாலும் நிலையான அமரத்துவ சிரஞ்சிவித் தன்மையுடனான ஒழுக்கக் கோட்பாடுகள்

உலகைவிட்டு உருக்குலைந்துபோகமாட்டாது. ஏன் எனின் ஒழுக்க நெறிமுறைகள் இறையோன் கட்டளை என அறிக! கவலையற்ற நிர்மலமான வாழ்வு வாழ்வதற்கு பாரமற்ற மனோநிலைக்குள் எம்மை உட்படுத்தல் வேண்டு மல்லவா?

பூரணத்துவமான மனத்தினாலேயே புலன்களின் குணங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும். கட்டுப்பாடுகளைத் தொட்டுக் கொள்ளவே மனிதன் அஞ்சுகின்றான். இதுவும் ஒரு வினோதமான இயல்பே. நல்ல கட்டுப்பாடான மனித னால்தான் சுதந்திரமான சந்தோஷங்களையும் அனுபவிக்க முடியும்.

எனவே புலன்களின் அதீத வரை முறையற்ற செயல்களின் உதயங்களைத் தகர்ப்பது எமது இதய தூய்மைகளுக்காகவே என அறிவோமாக.

தீண்டத் தகாத தீயோரைத் திருத்துக! மக்கள் முன் நிறுத்துக. மிகுதியை உலகம் பார்த்துக்கொள்ளும். உலக சக்தி விரயமாவது ஏன்? மக்களின் பலம், பலவீனமாவது எந்த வழியில்? என்று அறிவோமாக.

நல்ல வழியில் செல்வோர் கூட மடக்கப்படுகின்றார்கள். சுலபமான வழி சுருட்டும் வழியே என எண்ண வைக்கப்படுகின்ற அப்பாவிகளை என்ன என்பது? உழைப்பின் மகத்துவத்தினை உணராமல் பிழையான

வழிகளை இலகுவாக மக்களுக்குள் செலுத்துவோரை இனம் கொண்டுவிழிப்பினை உண்டாக்குவோமாக. மக்களின் செயல்திறன் முழுமையாக்கப்படல் வேண்டும். இதில் எந்த தடைகள் குறுகீடுகள் ஏற்பட்டுவிடக்

கூடாது. விருப்புடனும் முயற்சியுடனும் ஆற்றும் செயல் வீழ்ச்சியடைவதில்லை. எல்லோரும் நேர்வழி நடந்தால் உழைப்பின் பயன் முழுமைபெற்றுவிடுமல்லவா? எனவே சமூகத்தின் புல்லுருவிகளைப் பூண்டோடுகளைவது இன்று உலகின் அவசிய பணியாகவுள்ளது. கபட நோக்குடனான வேடதாரிகளை சமூகம் முனைப்புடன் வீழ்த்தாதுவிட்டால் சிரமப்பட்டு உழைத்தும் கூட கருமங்களை கருக வைத்தவர்களாவோம். நல்ல முயற்சிகள் வெல்லாததாக சரித்திரங்கள் சொன்னதில்லை. வென்றிடும் வழிகள் எமக்குள்ளே. எமக்குள்ளே.!!

 

கடவுளைக் காட்டுவதாகக் கூறி காசு பறிக்கும் சாமியார்கள் கடவுள் போலவே தங்களைக் காட்டிக் கொள்ளும் போலிகள், எத்தர்கள் பற்றி சகலி மதங்களிலும் ஏற்கனவே எச்சரிக்கை விருக்கப்பட்டுள்ளன. எல்லைகள் அற்ற, வியம்புதற்குரியபரம்பொருளை விருத்துக்காசுபறிக்கும்சுமியார்கள்பின்னேஅலையும் பக்தர்கள் ஏமாளிகள் மட்டுமல்ல பரிதாபத்திற்குரியவர்கள் "கடவுள் நானே" என்போரும்"கடவுளை இலகுவாகக் காட்டுகின்றேன்", "நிம்மதியூட்டுகின்றேன்" எனக் கூறியபடி டாம்பீகமாக வாழ்ந்து கொண்டு சுகபோகத்துடன் சனங்களைச் சுரனிடுவோரிடம் சரணடைவது உண்மையுணர்வற்ற செயல் அன்பு, பக்தி, மெய்யுணர்வு, ஏதானத்தால் உணரவேண்டிய இறைவனை நெறிகெட்டசாமிமார்களா காட்டப்போகின்றார்கள்? 

கடவுள் இருக்கின்றார் என்று கூறும் ஆன்மீக வாதிகளை நம்பலாம். கடவுளே இல்லை என்னும் நாத்தீகவாதிகளையும் நம்பலாம். ஆனால் தானே கடவுள் எனச் சொல்பவர்களை நம்பக்கூடாது எனும் வாக்கியம் அழுத்தமான ஒரு உண்மையை எமக்குச் சொல்கின்றது.

கடவுள் என்பதும் அது பற்றிய தத்துவங்களும் இயம்புதற்கரியது. இந்துமத தத்துவங்கள் மற்றும் இஸ்லாமிய, கிறீஸ்தவ மத விளக்க நூல்களில் கடவுள் போல் தம்மைக் காட்டிநிற்கும் போலிகள் பற்றித் தெளிவா கவே சொல்லப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் கூட, எமது மக்கள் எல்லையற்ற கடவுளை விடுத்து, எதற்காக பல தோற்றங்களைக் காட்டி நிற்கும் போலிச் சாமிமார்களின் பின்னாலே ஒடுகின் றார்கள்? இது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

கண்ணால் காண முடியாத கடவுளைக் காட்டுவ தாகச் சொல்லிக் காசு பறிக்கும் ஒரு கூட்டம், நானேதான் கடவுள் ஆவேன் என்று சொல்லும் சில பேர்வழிகள் ஒரு பக்கம், மேலும் விளங்க முடியாத, அர்த்தமற்ற உளறல் களை வேதத்தின் சாராம்சம் என நம்பவைத்து, அதற்கும் விளக்கம் சொல்கின்ற சில கூட்டம் எனப் பலவாறான ஏமாற்றுக்காரர்கள் மலிந்ததே இந்தப்பூமியா எனக் கேட்கத் தோன்றுகின்றது.

இன்று பல சாமியார்களும் தங்களது ஆச்சிரமங்களுடாக மிகப் பெரிய விளம்பர மோசடிகள் செய்கின்றார்கள். ஒவ்வொரு சாமியார்களுக்குமே கூட்டம் கூடுகின்றது பல லட்சம் சிஷ்ய கோடிகள் உலகமெங்குமே கிளை நிறுவனங்கள்! அப்பப்பா..!

பண்டைக் காலத்தில் குரு ஒருவருக்கு ஒரு சில சிஷ்யர்களே இருப்பார்கள். ஒருவருக்குப் பாடம் சொல்ல ஆசிரியர் பல சிரமங்களை மேற்கொள்வார். குருவிற்குத் தொண்டு செய்து கல்வி கற்பார்கள். மத நம்பிக்கை, கலாச்சாரங்களை முன்னிறுத்தியே கற்பித்தல் நடக்கும். அன்று பொருள் ஈட்டுதல் குருவின் குணமன்று.

இந்து மதத்தின் முழு முதற் கடவுள் சிவன், நான்கே நான்கு சீடர்களுக்குத்தான் வேதத்தை அருளினார். இது போலவே உலகின் தோன்றி பல தீர்க்கதரிசிகள் பக்குவப்பட்ட சீடர்கள் சிலருக்கே ஆன்மீக அருளுரையைப் போதித்தனர்.

ஆனால் இன்றோ, மிகவும் டாம்பீகமாகப் பகட்டு டன் ஒரு சாமியாருக்குப் பல லட்சம் சீடர்கள், இவர்கள் இவரைக் கடவுளின் அவதாரமாகப் போற்றி வழிபடுவதுடன், சும்மா இருக்கும் ஏனைய அப்பாவிகளையும் ஆசைகாட்டித் தமது பக்கம் இழுக்கின்றனர். இன்று பெரும்பாலான சாமிமார்கள் எவராவது எளிமையாக வாழ்கின்றார்களா?

மக்கள் கூட்டம் சேரச்சேர இந்தச் சாமிமாருக்கு தன்முனைப்பு மேலோங்கி எதனையும் தம்மால் செய்துவிட முடியும் என நம்புகின்றார்கள். பல அரசியல் பிரமுகர்கள்,

தொழில் அதிபர்கள், திரையுலக நடிக, நடிகைகள் எனப் பலரையும் தம்முன்னே எப்படியோ வரவழைத்துக் கொள் கின்றார்கள். பரஸ்பரம் இவர்களின் தொடர்புகள் மூலம், சுயலாபங்களையே சுலபமாகத் தேடிக்கொள்கின்றார்கள். ஒருசாமியார் செய்யும் மாய வேலைகளை ஒரு மாயாஜால நிபுணர் எளிதில் செய்கின்ற போதும், அவர்கள் ஆன்மீக வழியில் மக்களை ஏமாற்றுவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

பொருளாதாரச் சிக்கலினால் திருமணமாகாத பெண்கள், வேலையற்ற இளைஞர்கள், காதல் தோல்விக்கு ஆளானவர்கள், நிதி பொருளாதார சுமைகளுக்காளா னவர்கள் எனப்பல்வேறு நெருக்கடிக்காக, ஏதாவது வடிகால் கிட்டுமா என ஏங்குகின்றார்கள். நல்ல வழிகாட்டல் இன்மையாலும், ஊடகங்கள் வாயிலாக, இந்தப் போலிகள் பற்றிய தகவல்களைப் பெருமைகளை முழுமையாக நம்புவதாலும், ஏதோ ஒரு பொய்யான ஆன்மீகம் பேசும் நிறுவனத்திடம் சரணடைந்துவிடுகின்றார்கள்.

"மனஅமைதி” என்பது கடையில் வாங்கும் சரக்கா? தேறுதல் எனும் போர்வையில் ஆன்மாக்கள் அடகு வைக்கப்படும் கைங்கரியமே பல இடங்களில் நடக்கின்றன. மனம் என்பது மென்மையானது. அதை நாம்

கசக்கக்கூடாது. வெறுமனே அலையவிடக்கூடாது. எங்ஙனும் கோயில்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் நிரம்பவே இருக்கும் போது இந்தப் போலி வேதாந்தம் பேசி மயக்கும் இடங் களுக்குப் போவதும் ஏன்?

சில உயர்தட்டு வர்க்கத்தினர்களும், மத்திய தர வர்க்கத்தினருமே இவ்வண்ணம் மனதை மடியவிட்டு கடிதென இத்தகையோரின் ஆச்சிரமங்களை நாடுகின் றார்கள் என்பது உளவளவியலாளர்களின் கருத்தாகும். சாதாரணமான, பாமரமக்கள் தங்கள் மதத்திற்குரிய தெய்வ வழிபாட்டினை மறப்பதுமில்லை. இவர்கள் என்றுமே தங்கள் பழைமையான பண்பாடுகள் சிந்தனைகளை இம்மியளவும் விட்டுக் கொடுப்பதுமில்லை.

இன்று வெறும் பணம் புரட்டுதல், வர்த்தக நோக்கி லேயே மனித மனங்கள் வேட்டையாடப்படுகின்றன. உண்மையான அறிவின் தேடல்களின் முதிர்வுநிலையினை எட்ட மனமின்றி, இடைவழியிலேயே முடக்கி ஒடுக்கப்படுவது வேதனை! ஆன்மீக அறிவை சரியாக புரிந்துணராமல் இருக்கின்றனர்.

ஞானத்தைத் தெளிவை தவறாகச் சொல்பவர்கள் பின் சென்று, அவரை வணங்கிப் பாதபூஜை செய்து பல இலட்சம் ரூபா செலவு செய்து எதனைப் பெற்றுக் கொள்ளப்போகின்றார்கள்? வெறும் சுவைபடப் பேசும் பேச்சுக்களால் மனதில் விஷமேற்றப்படுமேயன்றி, விஷயங்கள் பதியாது. தமது தாய், தந்தையரைச் சேவித்து, அவர்கள் மனம் கோணாது வாழாதவர்கள் எப்படிப் பிறர் மூலம், "ஞானம்", தெளிவைத் தேட முடியும் சொல்லுங்கள்?

தங்களது தாய், தந்தையருக்குப் பிறந்த நாள், திருமண நன் நாளை நினைவு கூராதவர்கள், தாங்கள் வணங்கும் புதுப்புதுவரவுகளாகும் சாமிமார்களுக்கு திருமண நாளைப் பல இலட்சம் ரூபாய் செலவளித்துக் கொண்டாடுகின்றார்கள். கேக் வெட்டிப் பிறந்த நாள் வைபவம் நிகழ்த்துகின்றனர். இவர்களில் சிலர் தமது மதத்தின் கோவில்களுக்கே செல்ல மறந்துபோய் விட்டார்கள். ஏன் இறந்துபோன பெற்றோர் மூதாதை யருக்குச் சிரார்த்த தினத்தையே அனுஷ்டிக்க மாட்டார்கள்.

சமூகத்தில் தாமாக ஒரு அந்தஸ்தைத் தேடிக் கொள்ளவும், தங்கள் மற்றய எளிய மக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டவும், சாமிமார்களின் பெயர்களில் இயங்கும் சங்கங்களில் தம்மைப் பதிவு செய்கின்றார்கள். பெரியதனவந்தர்கள், கல்விமான்கள், பெரிய பதவிவகிக்கும் பிரமுகர்களே இங்கு வந்து வழிபாடு செய்கின்றார்கள். அப்படியாயின் நாங்களும் சென்றால் என்ன என எண்ணும் ஏமாளிகளே அதிகமாகிவிட்டார்கள். சில சமயங்களில் அறியாமையின் முன் அறிவு இயங்குவதில்லை.

இன்று உண்மையான ஆன்மீக வள்ளல்கள் இன்றைய நிகழ்வுகளால் நொந்துபோய் இருக்கின்றார்கள்.  சித்து வேலைகளுக்குள் அகப்படும் மக்கள் மீண்டுவர வேண்டும். சுவாமி இராமகிருஷ்ணர் சொன்ன கதை இது,

ஒரு மகானிடம் ஒருவர் வந்தார். தான் பல்லாண்டு நெடுந்தவம் புரிந்து சித்து வேலைகளைச் செய்யும் திறன் பெற்றுள்ளேன் என்றார். "அப்படியா. என்ன சித்து வேலை செய்வாய" என மகான் கேட்க, "நான் நீர் மேல் நடந்து, இதோ இந்த ஆற்றைக் கடப்பேன்" என்றார். அதற்கு மகா னோ, "அப்பனே இதற்கு நீ ஏன் கடுந்தவம் புரியவேண்டும், ஒரு அணாவை, அந்த ஓடக்காரனிடம் கொடுத்தால் போதுமே, எவ்வித சிரமமுமின்றி கொண்டுபோய் சேர்த்து விடுவானே" என்றாராம். -

சித்து வேலைகளால் இந்தப் பூமிக்கு யாது பலன்? உலகின் வறுமை ஒழியுமா? நாட்டின் யுத்தம் தவிர்க்கப்படுமா? இனமத குரோதங்கள் தகர்க்கப்படுமா? இயற்கை அனர்த்தங்கள் இல்லா தொழிக்கப்பட்டுவிடுமா? இவை ஒன்றையுமே இவர்களால் செய்ய முடியாது.

உள்ளம் தெளிவான ஆன்மீக வள்ளல்கள் விளம் பரம் தேடுவது இல்லை. ஆன்மீகம் புனிதமானது. அகத்தில் ஒளியேற்றுவது. மத நம்பிக்கையின்றேல் ஒழுக்கம் நிலைபெறுமா? இறையுணர்விற்குக் கட்டுப்படுவதாலேயே இன்று உலகம் சமச்சீர்மையுடன் சுழன்று கொண்டிருக் கின்றது. எத்தனை போலி ஆன்மீகவாதிகள் வந்து போனாலும் மக்களின் இறைபக்தி குன்றிவிடாது. எனினும் மக்களின் விழிப்புணர்வினால் மட்டுமே, தாம் சார்ந்த மத கோட்பாடுகள் மென்மேலும் ஸ்திரப்படுவ துடன், எதிர்கால சந்ததிக்கும் ஆன்ம அறிவு, ஞானம் பற்றிய தெளிவூட்டல்கள் தொடர்ந்து கொண்டு செல்லப்படும்.

மக்கள் தன்உணர்வு பெறப்படாதவரை, புல்லுரு விகளின் கொட்டம் தொடரும். இதனால் ஆதாயம் தேடும் சில ஊடகங்கள்! தற்போது நடக்கும் சுவாமிமார் பற்றிய சம்பவங்களின் உண்மையான பின்னணிகள் அறியப்பட வேண்டும். மதத்தினைக் கேவலப்படுத்தும் காரியங்கள் ஏன் யாரால் நடத்தப்படுகின்றன என்பது வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். முறைகேடுகளைத் தடுப்பதுடன் இந்த ஆபாசங்களை வர்த்தக நோக்குடன் காட்சிப்படுத்துவதும் நிறுத்தப்படவேண்டும். இதைவிடுத்து பொய்மையாளர் களைத் தப்பவிடுவதும், தவறுசெய்கின்றவர்களின் பின்னாலேயே சுற்றுவதும் இனியாவது நிறுத்தப்படுமா?

 

 

 

பெண்கள் கண்ணிர் சிந்துதல் ஆகாது

காரணம் இன்றிப் பெண்கள் கண்ணிர் சிந்துவார்கள் என்றே பலரும் சொல்கின்றார்கள். சும்மா அழுவதனால் பெண்களுக்கான நியாயங்களின் "வலு இழக்கப்படும். பெண்களின்மனஉறுதிவியப்பிற்குரியது. உலகினை உற்பத்தி செய்பவள் பெண். இவள் ஆட்சியின்றி அன்பு, பாசம் பிரசவிக்குமா? உலகின் இயக்க ஆதார சுருதியான பெண்கள் கண்ணிர் சிந்துதல், கலங்குதல் இழிவு பெண்ணின் பெருமையை ஆண்கள் மட்டுமல்ல, பெண்களே தங்கள் சக்திபற்றிபுரிந்துகொள்ளாமல் இருப்பது எத்தகைய அறியாமை?

யார் எதைச் சொன்னாலும் உடனே கண்களைக் கசக்கிடக் கூடாது. குறிப்பாகப் பெண்களைத்தான் சொல்கின்றேன். காரியம் ஆவதற்கே இவர்கள் கண்ணிர் உகுக்கின்றார்கள் என எவரும் கருதிடக் கூடாது.

காரணம் இன்றிக் கடுகளவும் பிரயோசனமற்ற விஷயங்களுக்குப் பெண்கள் அழுது அவஸ்தைப்படலாமா? இதனால் பல பெண்கள் கேலிக்குரியவர்களாகின்றனர். ஏன் சில ஆண்கள் கூட உணர்ச்சிவசப்பட்டு அழுவ துண்டு. கவலைகள், மீளமுடியாத பிரச்சினைகளால் மனம் துவண்டு கண்ணிர் மல்குவது இயற்கையே! எல்லையற்ற ஆனந்தம், பக்தி, அன்பு மேலீட்டி னால் கண்ணிர் மல்குவது உடலுக்குக் கெடுதலானது அல்ல. அது எம்மை ஆசுவாசப்படுத்திக் களிப்பினை உண்டுபண்ணுகின்றது.

இன்னமும், அப்பாவிப் பெண்களிடம் ஆலோசனை களை கூறும் தாய்மார், தோழியர் "நீ எப்படியாவது உனது கணவரிடம் அழுது, ஆர்ப்பாட்டம் செய்தாவது காரியத்தை நிறைவேற்றி விடு” என்பார்கள்.

மனைவி அழுது புலம்பி அவனிடம் மன்றாடித் திருத்த முனைவதற்கும், வெறும் பணத்திற்காகவும், உறவுகளைப் பிரிப்பதற்காகவும் வேண்டுமென்றே அழுது ஆர்ப்பாட்டம் செய்வது மலைக்கும், மடுவிற்குமான வேறுபாடுகள் அல்லவா?

ஒரு நற்குணம் குன்றிய கணவனை நல்வழிப்படுத்த, நியாயமான காரணங்களுக்காகப் போராடுபவர்கள், மருத்தித்தலுையிர்ரர் எக்காரணம் கொண்டும் மனத்தளர்வுடன் போராட்டங்களை ஆரம்பிக்கக்கூடாது. கண்டபடி அழுபவர்களின் செய்கை யினால், நியாயமான காரணங்களுக்காக அழுவதன் "வலு" இல்லாது போய்விடும்.

அழுகையே ஆயுதமல்ல. உண்மையின் ஸ்திரத் தன்மையுடன், தமக்கு ஏற்பட்ட அநீதிக்காக, உண்டாகும் ஒருதுளி கண்ணிர் சிந்துகை, மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிவிடும். இதற்குச் சான்றான சரித்திர, இதிகாச, இலக்கிய கதைகள் பலவுண்டு.

மேலும் எமது அனுபவங்களினூடாக எளியவர்கள் சிந்திய கண்ணிருக்கும் ஏக்கங்களுக்கும், தகுந்த விடை கிடைப்பதை நாம் பெரும்பாலாரினதும் வாழ்க்கையி னுடாகக் கண்டிருக்கின்றோம்.

ஏழு சகோதர்களுடன் கூடப் பிறந்த பெண் ஒருத்தி, தனது தாய் மிகுந்த மன உறுதியுடன் தங்கள் எல்லோ ரையும் ஒவ்வொரு துறையிலும் எப்படி ஆளாக்கி முன்னேற்றினாள் எனும் கதையை தொலைக்காட்சிப்பேட்டி ஒன்றில் சொன்னபோது நம்பாமல் இருக்க முடியாது. பல பெண்களைப் பெற்றால் ஒருவர் ஆண்டியாக வேண்டும் எனச் சொன்ன காலம் ஒன்றிருந்தது. தென் இந்திய பிரபல திரைப்பட நடன இயக்குனர் கலா, திரைப்பட பிரபல பின்னணிப் பாடகி வாணிஜெயராம் போன்ற பலரும் பல பெண் சகோதரிகளுடன் கூடப் பிறந்தது மட்டுமின்றி எல்லோருமே, நடனத்திலும் ஏனைய ஒவ்வொரு துறையிலும் மிகப் பிரபலமாகிவிட்டனர். இவை போல் பல வசதிகுறைந்த, பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களில் கூட அனைத்து உறுப்பினர்களுமே ஒவ்வொரு துறைகளில் பிரகாசித்து ஒளிர்ந்த செய்திகளை நீங்கள் அறிந்தது இல்லையா?

பெரும் சவால்களை எதிர்கொள்வதே பெற்ற வெற்றியின் முழுமையான சந்தோஷமும் ஆகும். ஒரு தாயின் ஐந்து மகள்களும் மருத்துவர்களாகவும், மருத்துவ நிபுணர்களாகவும் எமது ஊரில் இருந்தமையை நான் அறிவேன். பழைமை பேசியபடி, "எமக்குப் பிறந்தவை எல்லாமே பெண்குழந்தைகளாகிவிட்டனவே." என மனம் நொந்து மறுகாமல், கலங்காமல் எதிர் நீச்சல் போட்டு வாழ்வை ஒளியேற்றிய இத்தகைய பெற்றோரை நாம் வியந்து பாராட்டாமல் இருக்க முடியுமா?

உலக இயக்கத்தின் ஆதார சுருதி பெண். இவள் ஆட்சியின்றி அன்பு, பாசம், பிரசவிக்குமா? இதை ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் உணரவேண்டும். பல பெற் றோர்கள் தாமாகவே கற்பனை செய்து, தங்கள் சமூகத்தின் மீது பழிபோட்டுத் தங்கள் பெண் பிள்ளைகளின் உயர்கல்வியைக்கெடுத்துக் கொண்டதுமுண்டு. பிள்ளைகள் அழுது கெஞ்சினாலும் உயர் கல்வியைத் தொடர மறுத்த தாய், தந்தையர் பின்னர் தமது செயல்களுக்காக மனம் வருந்தினால் ஏது பயன்?

முன்னேற வழியிருந்தும்கூட வலிந்து தேடும் தவறான முடிவுகளால், செயல்களால், எதிர்காலம் அழுது வடிவதாக அமையக் கூடாது. இன்று பெரும்பாலான பெண்கள் கல்வி, கைத்தொழில் மற்றும் நவீனமான தொழில்நுட்ப துறைகளில் எந்தவிதமான இடர்களையும் உடைத்தெறிந்து அவைகளில் தனித்துவத்துடன் மிளர்கின்றனர். கால மாற்றங்கள் சாதனைகளை உருவாக்குகின்றன!

கலங்குவதும், விழிகள் சோர கண்ணிர் பொழிவதும் பெண்மைக்கு இழிவு. வீரப் பெண்களைக் கதைகளில் மட்டும் காண்பதில் பயன் இல்லை. நிஜவாழ்வுதான் நித்தியமானது. அந்த வாழ்வின் உன்னத செழுமையைக் காண, மனதில் கனிவு உள்ள அதே சமயம், கல்லினும் மேலான கனத்த உறுதி வேண்டும். "நவயுகப் பெண் அழுவது இழுக்கு. எழுதல் மேன்மை அறிக"

 

இறையோனிடம் மட்டும் இறைஞ்சுக!

எல்லா மதங்களுமே இறைவன் மட்டுமே ஏகப்பரம் பொருள் எண்கின்றன. இதை அறிந்தும் ஏன் பலரும் சிந்தை திரிந்து , கண்ட கண்ட சாமிமார்கள் முன் மண்டியிட்டுக் கொள்கின்றார்கள்? வேதங்கள்,சாஸ்திரங்கள் என்றோ மக்களுக்காக ஆண்டவனால் படைக்கப்பட்டு உண்மைகளை எடுத்துரைத்த படி இருக்கின்றன. இப்படியிருக்க, போலிச் செப்படி வித்தைச் சாமிமார்கள் இனி என்ன சொல்லப் போகின்றார்கள்? ஆடம்பரச்சாமிமார்களால் ஞானோதயம் பெற்றுக்கொடுக்கமுடியாது. வேதங்களில் சொன்னவற்றைத்தாமே சிருஷ்டித்தாகப்பேசியும் அவதாரம் எடுத்ததாகக் கூறி அரிதாரம் பூசி வேடம் போட்டு மயக்குகின்றார்கள். பொய்மைக்குள் முகம் புதைக்காது உண்மையான ஏகப்பொருளையே சரணடைவோமாக!

சாமியார்களும், மனிதர்களே! இருப்பினும் எம்மில் பலர் சாமியார்கள் எல்லோ ருமே கடவுளின் அவதாரம். ஏன் கடவுளுக்கும் நிகரான மாபெரும் கர்த்தா என எண்ணிக் கொள்கின்றார்கள். எல்லா மதங்களுமே இறைவன் ஏகம்பரம் பொருள் எனச் சொல்கின்றன. இதை அறிந்தும் ஏன் பலரும் சிந்தை திரித்து தடுமாறிச் செல்கின்றார்கள்?

வேதங்கள்,சாஸ்திரங்கள் எல்லாமே மக்களுக்காக என்றே படைக்கப்பட்டுவிட்டன. அப்படியிருந்தும். அவற்றில் கூறாத எதனை இந்தச் செப்படி வித்தைச் சாமியார்கள் சொல்லப் போகின்றார்கள். உண்மையான ஞான விளக்கத்தை முழுமையாகக் கற்காமல், கற்றிட விரும்பாமல் அழகாக பேசி, அமைதியாக நடத்து அலங்காரம் செய்வதுமேன்?

எல்லா விஷயங்களுக்கும் புத்தகங்களைப் புரட்டத் தேவையில்லை. அண்மையில் மிகப் படித்த ஓர் அம்மையார் "தியானமே மேலானது" என தாம் வணங்கும் ஒரு சுவாமியார் சொன்னதாக என்னிடம் சொன்னார். அப்போது நான் கேட்டேன் " எல்லோருமே அறிந்த உண்மையை உங்கள் சாமியார் சொல்லித்தான் தெரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டேன். அவர் மெளனமானார். சொந்தப் புத்தியை நம்பாத மந்த புத்தியான பேச்சு அல்லவோ இது.!

எதற்காக இவர்கள் இத்தகையவர்களுக்குக் கிரீடம் சூட்டுகின்றார்கள். உண்மைகள் என்றுமே உண்மை யானதுதான். அதைக் கண்டு பிடித்துத் தாங்கள் குருஜிகள் சொல்வதாகக்கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை, பகவத்கீதை உபதேசங்களைப் பேசிவரும் சில சாமிமார் தாங்களே கூறுவதுபோல் சனங்களுக்கு உபதேசிக்கிறார்கள். சுதந்திரமான சிந்தனைக்கு அறியாமை முட்டுக்கட்டை என்பதை விட, அதுவே அறிவை நிறைவடையாமல் செய்யும் இருள் என்பதையும் தெரிந்து கொள்க!

மயக்கம் என்பது சந்தோஷமான உறக்கம் அல்ல. சந்தோஷங்களை நிம்மதியைப் பெற்றுக் கொள்ள அடிமைத்தனமாக கருத்துக்களைக் கொண்டு ஒரு வட்டத்தினுள் விலகாமல் ஒடுங்கி வாழ்வது பெரும் துன்பம். நல்ல கருத்துக்களைச் செவிமடுத்தல் மூளைக்குச் சிரமமானது என எண்ண வேண்டாம். கோரிக்கைகளை கடவுளிடம் சொல்வதை விடுத்து கண்ட, கண்ட மனிதர்களிடம் முறையிடுவது, ஆன்ம விரோதச் செயல்!

ஆன்மீகம் புனிதமானது. எமது பலம் அறிவைத் தெளிவாக்க வல்லது. எம்மை அறிய எம்முள் உள்ளதை உள்ளவாறு உணர நாம் கேள்விகளை எம் சித்தத்துள் கேட்டும் நிலையை உருவாக்குவோமாக! - தெரிந்த உண்மைகளை சொல்லத் துணிவு இல்லா தவரை பிறருடன் இவைகளைப் பகிர்வது எங்ங்ணம்? கலங்கிய மனதுடன் வாழுவது விலக்கிட்ட நிலையைவிட மிக மோசமானதே!

கொடும் சிறைக்குள் சீவிப்பதை விட, தவறான நம்பிக்கைக்குள் முடங்கிப்போதல், சுய அறிவுக்கு ஆணி அடிப்பதுபோலாகும்.

எவரோ சொன்னார்கள் என்பதற்காகவும் வேண்டப் பட்டவர் என்பதற்காகவும் வீணான பேச்சைக் கேட்கின் றார்கள். வெறும் மூலமிடப்பட்டவைகள் உதிரும், வெளிறும் எனத் தெரிந்தும் அதனையே நாடுவது போல் வாசனை யான இராசயனத் திரவத்தைப் பூசி மகிழ்கின்றவர்கள் செயல்களை என்ன வென்பது?

"ஞானம்” என்பது விற்பனை வஸ்து அல்ல. இலட்சோப இலட்சம் மக்களில் பலர் கோவில் பக்கம் தலை காட்டுவதேயில்லை. ஆனால் சாமிமார்கள் தலை தெரிந்தால் தங்களின் தலையை அவர்கள் காலில் பதித்து முத்தி நிலை வேண்டுமெனக் கோருகின்றார்கள். இது என்ன கொடுமை?

ஆன்மீகத்தின் அடிப்படை தன்னை உணர்தல், தெளிதல். இதன் பொருட்டு ஏக இறைவனைச் சரணாகதி அடைவதாகுமாம். முத்தி அளிப்பவர் கடவுள், மனிதன் அல்ல. நல்ல மனிதர் நல்வழிகளைக் காட்டுவர்கள். அவர்கள் சாதாரண சாமான்யமானவராக ஏன் "ஏழ்மையுடன் புரண்டும் கூட விழிகளிலும், பார்வைகளிலும், வதனத்திலும் மட்டும் ஒளி காட்டுபவராக இருப்பார்கள். நல்லவர்களிடம் டாம்பீகம், பகட்டு இருப்பதில்லை. தெளிவடைந்தோர்களுக்கு இவைகள் எதற்கு? '

உண்மை எளிமையானது. அழகு எளிமையானது. நற் கருத்துக்களும் அப்படியே. புரியாத மொழியில், தெரியாத கருத்துக்களை, முரண்பாடாகப் பேசினால் அவர் கள் அறிவாளிகளா? அல்லது மாந்தர்களை இரட்சிக்க வந்த உத்தமர்களா? புரிந்து கொள்க தோழர்களே!

இறைவன் எம் உள்ளத்தே நிறைந்து நிற்க, சுரண்டல் பேர்வழிகளிடம் சரணடைவது எதற்கு? புனித நீராடப் புறப்பட்டு , இழிவான குழியினுள் சந்தனக் கிரீடை செய்ய இலயலாது. வாழ்க்கை மிக நுட்ப மானது, ஆனால் மிக இயல்பாக எம்மால் வாழ முடியாது. அன்பான எல்லோரையும் மதிப்பதும், அவர்களின் உள்ளே உள்ள இறைவனைத் தரிசிப்பதுமே மகான்களின் குணங்களாக இருந்தன. மகான்கள் கண்டபடி பேசியதாக சரித்திரமில்லை.

 

 

 

மெளன மொழிகளால் வையகத்தை வாழ

வைத்தவர்கள். ஓரிருவாக்கியங்களேயாயினும் உள்ளத்தை நிறைத்தன. எப்போதும், எச்சந்தர்ப்பத்திலும் தம்மைக் கடவுளர்களாகக் காட்டவோ அல்லது எவராவது தம்மை புகழ்வதையோ அனுமதித்ததும் கிடையவே கிடையாது.

எங்கள் மனம் எங்களை, எம்மைப் பற்றி எத்தகை யவர் என இயமயிய வண்ணமாய் இருக்கும். எனவே அதனை நல்ல வழியில் உருவாக்க புத்திக்கு வேலை கொடுங்கள். அன்பான ஒருவனாக்க எமக்கு நாமே சுய ஆணையிடுவோம். தன்னை உணர்ந்தால் தலைவனை அறியலாம். என்பார்கள். இங்கு தலைவன் என்பது கடவுள். நல்ல உணர்வுகளுக்கு ஒளியூட்ட, மனதைத் திறந்து வைத்துக் கொள்க! இதனுள் தேவையற்ற வஸ்துக்கள் சேரா வண்ணம் உள்ளத்தை ஒரு முகப்படுத்துக.

காலம் காலமாகக் கடவுளை நம்பிய சமூகம், இன்னமும் தன்னிலை மாறாது நம்பிக்கைகளைக் கரைய விடாமல் தன்னைத் தற்காத்து நிற்கின்றது. பொய்மைக ளுக்குள் முகம் புதைக்காது. உண்மையான, ஏகனை மனமாரத் துதி செய்க மாற்று வழி வேண்டாம்!. "தன்னேடு தான் பேசுதல்" என்பது தனது செயல்பாடுகள் குறித்த ஒரு சுயவிமர்சனம் என்றும் கூறலாம். முதலில் தன்னைத் தானே ஒருவன் சுய பரிசோதனை செய்தல் வேண்டும். தனக்குச் சாதகமாக அநியாயமான விஷயங்களை நியாயமாகக் கற்பித்து, நடித்து வாழ்வது வாழ்வு அல்ல. மனதோடு பொய் பேசக் கூடாது.சுயபுத்திக்குச் சுதந்திரம் கொடுங்கள். அதை அடக்கி, ஒடுக்க வேண்டாம். மனதை வெறுமை யாக்காது, பசுமை போல் ஆக்கிட முயல்வதேசந்தோஷங்கள் புகுந்திட ஒரே வழி. இயற்கை அழகு எவ்வளவு புனிதமோ,அவ்வண்ணமே எமது நெஞ்சமும் புனிதமாகப் பேணப்பட வேண்டும். எமக்கு நாமே கொடும் பகைவனாக மாறக் கூடாது. எம்மை நாம் தரிசிப்போம். குறைகளை அறவே களைவோம். உங்களோடு பேசி, நல்லவராக! வல்லவராகுக!

 

 

"தன்னோடு தான் பேசுதல்” என்பது, தனது

செயற்பாடுகள் குறித்த ஒரு சுயவிமர்சனம் என்றும்

கூறலாம். மனதை விட்டகலாத நிலையில் தான் மனிதன்

இயங்குகின்றான். தனது நிலையை உணராமல் வெறும்  இன்று பலரும் தன்னோடு பேசக் கூட அச்சப்படு பவர்களாக இருக்கின்றார்கள். மனோவியாதிக்காரர், சும்மா தன்னோடு பேசுகின்ற முறையானது வேறுபட்ட விடயம் இங்கு அவன் சுய நினைவுகளை, சம நிலைக்கு மீட்டு எடுக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளான். தவறு புரிந்தவன் தைரியம் இழக்கலாம். சும்மா இருப்பவன் LJUČILIL6)rLDT?

எதனையுமே தேடாமல் இருந்தால் அவனே முடிவில் தேடுவாரற்ற பொருளாகிப் போவான். எல்லோ ருமே தங்களை மதிக்க வேண்டும் எனக் கருதுவோர், மற்றவர்களுக்காக எதனைச் செய்தோம் எனத் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டதுண்டா?

முதலில் தம்மைத் தாங்களே பரிசோதனை செய்ய வேண்டும். தங்களை முடக்கி மற்றவரை ஆராய் வது எப்படி? எதுவுமே செய்யாமல் அடுத்தவரிடம் கணக்கு க்கேட்பது நியாயமாகுமா? எதிலும் அக்கறையில்லா வாழ்வு பொருத்தமற்ற கோழைத்தனம் தான். வீட்டில் கரிசனம் இல்லாதவன் குடும்பத்தை மற்றவன் வந்து காப்பாற்ற வேண்டும் எனக் கருதுவது எங்ங்ணம்.?

தமக்குள் நியாயங்களைத் தாமே கேட்டு உணராமல், சிந்தை திரிந்து, பற்று அற்றவன் போல் நடிப்பது வெறும் பாசாங்கு தான். இன்று சிந்திக்க பலர் தவறுவதால் அடுத்தவன் இவர்கள் மூளையில் உட்கார்ந்து ஆரவாரிக்கின்றான். இது தேவையானது தானா? சொல்லுங்கள். உண்மை யைத் தரிசிக்கக் கபட சந்நியாசிகள் தேவையில்லை. உணர்க!

எவராவது வலிந்து வந்து நறுங்கனிளைக் கொடுத்தால்மட்டும், சுவைப்பதே நாவுக்கு வேலை என நினைப்பவர்களும் உளர். கொடுத்தால் எடுக்கலாம். சொந்தமாய் சிந்தனைச் செயல்களைப் படைக்காது விட்டால் முன்னேறுவது எப்படி?

செப்படி வித்தையால் வாழ்க்கையைச் செதுக்கிவிட முடியாது. சத்தியத்தினுள் சங்கமித்து உண்மைகளை உள்ளத்தில் நிறுத்தினால், அற்புத உணர்வுகளை நாங்கள் பெறுவோம். அது மட்டுமல்ல, எமது அனுபவங்களினால், இதே நல்ல வழிமுறையினால், அடுத்தவன் வாழ்விற்கான மலர்ச்சிக்கும் உதவுவனவாக அமையும்.

 

சுய புத்திக்கு சுதந்திரம் கொடுங்கள்! உங்களை நீங்களே பூட்டிவைப்பதா? எல்லாமே எமக்குள் உண்டு. ஆனால் அதை அனுபவிக்க, ஆட்சிப்படுத்திவளர்க்காமல் இருப்பது எம்மை நாமே துண்டிப்பது போலாகும்.

காடும் , செடியும், நீர் அருவியும் மலையும், மடுவு மில்லாத பூமி போல், மனசை வைத்திருக்க வேண்டாம். மனதினுள் என்றும் துள்ளிடும் இன்ப அலைகள் பூக்க வேண்டும்.

(பூவிற்குள்ளும் புகுந்து மணம் வீசக் கற்றுக் கொள்க) ۔۔۔۔ மனம் என்பது சின்னக் கூண்டு அல்ல, இது வானத்தை விட மிகவும் விசாலமானது.அதனை கற்குகை களாக மாற்றுவது கொடுமையிலும் கொடுமை!

இயற்கை அழகு எவ்வளவு புனிதமானதோ அதனைப் போலவே எமது மனதைப் புனிதமாக்குவோம். சண்டை சச்சரவுகளுக்குள் மனதை வளர்க்க வேண்டாம். உங்களுக்குள் நீங்கள் எதைச் சொல்ல விழை கின்றீர்கள்? புனிதமான ஆன்மாவாக மனிதன் மிளிர வேண்டும். எமக்கு நாமே கொடும் பகைவனாக ஆக வேண்டிய அவசியமில்லையே.

 

 

தீய எண்ணங்கள் புகுந்தால் கொடுமையாளனாக மனிதன் உருவாகுவதுடன் செயல்கள்யாவுமே குரூரமாகிவிடும். எல்லாமே மனிதர் வசமுண்டு. அதைத் தக்க வழியில், தார்மீக நெறியில் பிரயோகிக்காது விட்டால் எல்லாமே கழன்று வெற்று மனிதராகிவிடுவார்கள்.

தூரத்தில் உள்ள்தற்காக ஏங்கி, பக்கத்தில் உள்ள வாய்ப்புக்களை நழுவ விடுவதே நம்மவர்களுக்குப் பழக்க மாகி விட்டது. சரி பிழைகளை அறிய மனதுக்கு வேலை கொடுங்கள். அடுத்தவன் பேச்சைக் கேட்கலாம். சொந்தமான அறிவை அடக்கி ஒடுக்கி , எந்த உபதேசங்களையும் கேட்பதால் ஞானம் பிறக்காது. கேட்கும் முன் காதை, இதயத்தைத் திறந்துகொள்க.

அறிய ஆவல்படுங்கள்! அதனைத் தெளிந்து அறிய மூளையுடன் சங்கமாகுங்கள். உங்களை இழந்தா வாழப் போகின்றீர்கள்? சிந்தை திரிந்த பின், உள்ளம் உருப்படாமல் போவதுடன் அடுத்தவனையும் "அவலத்தினுள் பிரவேசம் செய்” எனப் பாடம் நடத்தும் துர்ப்பாக்கிய நிலையை உருவாக்குவதா?. இதுவேண்டவே வேண்டாம்.

உங்களுடன் பேசி நல்ல முடிவை எடுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்கும், ஏன் இந்த முழு உலகிற்குமே நன்மை பயப்பனவாகவும் இருக்கும். உலகில் எல்லா உயிர்களுமே அற்புதமானவையே! அதனை உணர்ந்து எம்மை நாம் வலுவூட்டுவோம். எம்மை நாம் முதலில் தரிசிப்போம். எங்களை முழுமைப் படுத்துதலே எமது பணியாகக் கொள்க! எங்கள் ஆன் மாவை நாமே நேசிக்கக் கற்றுக்கொள்வோம். எம்மை நாம் நேசிக்க ஆரம்பித்தால் எல்லா உயிர்களுமே சமன் என்றே உணர்வீர்கள்! "உன்னோடு நீ பேசு” என்பது எம்மை நாம் நேசிப்பதும், எமது குறைகளை அறவே அகற்று வதுமேயாம். இந்த வழியே சத்தியத்தின் தரிசனத்தைத் தேட ஆரம்பவழியுமாகும்.