மனிதரும் சமூக வாழ்வும்
சி. கா. செந்திவேல்மனிதரும் சமூக வாழ்வும்

(சமூக வரலாற்றுக் குறிப்புகள்)

சி. கா. செந்திவேல்

தாயக இல்ல வெளியீடு

---------------------------------------------------------------------

முதற் பதிப்பு: புரட்டாதி 1994

மனிதரும் சமூக வாழ்வும்;

சி. கா. செந்தில்வேல்

அச்சுப் பதிப்பு :

கபிலா பதிப்பகம்,

கே. கே. எஸ். வீதி,

யாழ்ப்பாணம்.

வெளியீடு :

' தாயகம் '

பருத்தித்துறை வீதி,

சிறுப்பிட்டி வடக்கு,

நீர்வேலி.

அட்டை அமைப்பு : த. நாகேந்திரம்

விலை ருபா 40/=

---------------------------------------------------------------------

தாய் தந்தை நினைவிற்கு

1959-ல் தனது இளமைக் காலத்தில்

எம்;மை விட்டு மறைந்த

தாய் நாகம்மா,

1994-ல் தனது முதுமைக் காலத்தில்

மறைந்து கொண்ட

தந்தை காசிப்பிள்ளை

ஆகியோரின் நினைவிற்கு

இந் நூல் சமர்ப்பணம்

---------------------------------------------------------------------

பதிப்புரை

~~ மனிதரும் சமூக வாழ்வும்; || நூலினை எமது தாய் தந்தையர் நினைவாக அண்மையில் மறைந்த தந்தையின் முதல் மாத நினைவஞ்சலியின் போது வெளியிடுவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்;றோம். இந்நூலினை எழுதியுள்ள சி. கா. செந்திவேல் எமது மூத்த சகோதரர். அவர் தமது இளமைக் காலம் தொட்டு அரசியல் பொது வாழ்வில் ஈடுபட்டு சமூதாயத்தின் பல்வேறு நிலைகளிலும் ஒடுக்கப்பட்டுவரும் மக்களின் விமோசனத்திற்காக அயராது உழைத்து வருபவர். அவரது சமூக விடுதலை நோக்கிய பொது உழைப்பிற்கு நாம் எப்பொழுதும் எங்களாலான ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளோம். அந்த வகையில் இன்றைய சந்தர்ப்பத்தில் இத்தகைய ஒரு நூலினை வெளியிட்டு வைக்கும்படி அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று அதனை வெளியிடுகிறோம். இதுபோன்ற சமுதாய சார்பும் அறிவுப் பெருக்கமும் கொண்ட மேலும் பல நூல்கள் வெளிவர வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு தாயகம் இல்லத்தின் சார்பான எம்மால் முடிந்தளவு பங்களிப்பை வழங்குவோம். இந்நூல் தக்கபடி பயன்பெறும் என நம்புகின்றோம்.

நன்றி

பிரான்ஸ்

30-09-94

கா. சி. கதிர்காமு

---------------------------------------------------------------------

பொருடளக்கம் பக்கம்

நூல் பற்றி

மனிதரும் சமூக வாழ்வும்; 1

உலகின் தோற்றம் 4

உயிரின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் 7

மனிதர்கள் உருவாகினர் 12

சமூக விஞ்ஞானக் கண்ணோட்டம் 16

ஆரம்பகால மனிதர்கள் 23

புராதன பொதுவுடமை அமைப்பு 32

அடிமை சமூக அமைப்பு 38

நிலப்பிரபுத்துவ அமைப்பு 44

முதலாளித்துவ சமூக அமைப்பு 52

சோஷலிசமும் பொதுவுடமை அமைப்பும் 64

மனிதரும் மதங்களும் 73

---------------------------------------------------------------------

நூல்பற்றி

~~ உண்மையைத் தீர்மானிக்கும் ஒரே அளவு கோல் அது நிரூபிக்கப்படுவதாய் இருக்க வேண்டும் என்பது தான். அதாவது உண்மை என்பது அறிவுக்குப் புறம்பானதாய் இருக்கக் கூடாது || இவ்வாறு உண்மையைக் கண்டறிய முற்படும் போது அவை ஆதாரங்களில் இருந்து பெறப்படல் வேண்டும் என்பது மீற முடியாத நிபந்தனையைப் பெறுகின்றது. இதற்கு விஞ்ஞான அடிப்படையும், வரலாற்றுக் கண்ணோட்டமும் அவசியமாகும்.

மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிப் பரிமாணங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் பல்வேறு துறைகள் இன்று மேற் கூறிய வகையிலேயே விரிவடைந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஆனால் இவற்றின் தாக்கம் நமது சமூகச் சூழலில் மிகக் குறைந்தளவாதாகவே காணப்படுகிறது. கல்வித் தேவையின் பொருட்டு புத்திஜீவிகள் மட்டத்திலே பல்வேறு அம்சங்கள் அறிந்து கொள்ளப்பட்ட போதிலும் அவை நடைமுறையில் சமூக வாழ்வுக்குப் பயன்படாதவாறு இருட்;டில் விடப்படுகின்றன. இதற்கான அடிப்படை நமது சூழல் பழமை வாதத்தின மீது கொண்டுள்ள இறுக்கமான பிடிப்புத்தான் என்பது மிகையல்ல.

எவ்வளவிற்கு இல்லை என மறுத்து வாதிட முற்பட்டாலும் நாம் வாழும் சமூகச் சூழல் மரபு வழி வந்த பழைமைவாதச் சிந்தனைகளாலேயே பெருமளவிற்கு வழி நடத்தப்படுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் கார்ல் மார்க்ஸ் எடுத்துக் கூறினார். ~~ இறந்து போன எல்லாத் தலைமுறைகளின் மரபும் உயிரோடிருக்கும் தலைமுறையின் மூளையில் ஒரு பயங்கரக் கனவாகக் கனக்கின்றது. இக் கூற்று வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய மனிதத் தலைமுறையினருக்குரியதாகினும் நமது பழமைவாதச் சூழலுக்கு அதிகம் பொருந்தக் கூடியதொன்றாகும். இ;வ்வாறு கூறுவதன் மூலம் மரபையும் அதன் வழிவந்த பழைமையின் மனித நேயக் கூறுகளையோ, சமூகச் சார்பு மிக்க நல்லம்சங்களையோ பழைமை எதிர்ப்பின பேரால் நிராகரிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் மரபு, பழைமை என்பவற்றை கேள்வி, நியாயங்களுக்கு அப்பால் புராண, இதிகாச இலக்கியங்கள் என்ற பெயரில் அறிவியலுக்கு நேர் எதிரான கருத்துக்களாக மனித மூளையில் திணித்து வரும் போக்கே நிராகரிக்கத்தக்கதாகும். அவை தான் இன்றைய வாழ்வியலுக்கு வழிகாட்;டுவன என்று கூறப்படும் அபத்தமே விமர்சனத்திற்குரிய சுட்டிக் காட்டலாகும்.

இந்நிலையிலே தான் சமூக அறிவியல் என்பதன் அவசியம் உணரப்படல் வேண்டும். அதன் ஓர் அம்சமே சமூக வரலாறு பற்றிய அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளலாகும். ஓர் இனம் என்னும் அடிப்படையில் தேசிய இன விடுதலைக்கான போராட்டம் உச்ச நிலையில் இருந்து வரும் இவ்வேளையில் அறிவு ரீதியிலும் அறிவியல் அடிப்படையிலும் மனித சமூக வரலாறு பற்றி கற்றுக் கொள்வது ஒரு தேவையாகின்றது.

எனவே ~ மனிதரும் சமூக வாழ்வும் | என்னும் இந்நூல் சமூக வரலாற்றினை முடிந்தளவிற்கு சுருக்கமாக விளங்க வைக்கும் நோக்குடன் எழுதப்பட்டதாகும். பன்னிரண்டு தலைப்புகளிலே சிறு சிறு அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ள இந் நூலை ஒரு அறிமுக நூற் குறிப்புகள் என்றே கூற முடியும். இக் குறிப்புகளில் வரும் ஒவ்வொருவசனமும் ஒவ்வோர் அத்தியாயமாக விரித்து விளக்கி எழுதப்படவேண்டியவையாகும். முடிந்தளவிற்கு சராசரி வாசிப்புத்திறன் கொண்ட சமூக அக்கறை மிக்கவர்களும். மாணவர்களும் படித்துப் பயன் பெறும் நோக்கினை மனதிற் கொண்டே எழுதப்பட்டதாகும். இதில் எவ்வளவுக்கு எனது நோக்கம் வெற்றி பெறும் என்பதை நூலினைப் படிப்பவர்களே கருத்துக் கூறத்தக்கவர்களாவர்.

இந்நூல் ஏற்கனவே எழுதப்பட்டிருப்பினும் அதனை நூலாக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எமது தந்தையார் அண்மையில் மறைந்த போது அவரது முதல் மாத அஞ்சலி நிகழ்வின் போது தாய்தந்தையர் நினைவாக இந்நூலிலை வெளியிடலாம் என நினைத்த போது அதற்குரிய பொருள் வசதி என்னை அச்சுறுத்தியது. இருப்பினும் எனது அச்சத்தை என்றும் எனக்கு கை உதவும் தம்பியுடன் கலந்து பேசிய போது நூலை வெளியிடத் தான் உதவுவதாகக் கூறி உற்சாகம் தந்தான். அந் நல்நோக்கின் வெளிப்பாடே இச்சிறிய நூலாகும். இந்நூல் வெளிவருவதற்கு தகுந்த ஆலோசனைகளும்; அறிவுரைகளும் வழங்கிய தோழர்கள் க. தணிகாசலம், இ.செல்வநாயகம், சோ. தேவராஜா ஆகியோருக்கும் நூல் உருப்பெற உதவிய குமார், பிரதி செய்து உதவிய செல்வி கமலா உட்பட மிகக் குறைந்த நாட்களில் பொறுப்புடன் அச்சுப்பதிவு செய்து தந்த கபிலா அச்சகஊழியர்கள் உரிமையாளர் அனைவருக்கும் அன்பும் நன்றியும் கூறக் கடமைப்பட்டவர்கள். முகப்பினை அழகுர அமைத்துத் தந்த த. நாகேந்திரம் மற்றும் ஆலோசனையும் உதவியும் செய்த ஆனந்தன் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

சி.கா. செந்தில்வேல்

தாயகம்

சிறுப்பிட்டி வடக்கு,

நீர்வேலி, இலங்கை

---------------------------------------------------------------------

மனிதரும் சமூக வாழ்வும்

1

மனித குலம் மகத்தானது. அதில் அங்கமாகி நிற்கும் ஓவ்வொரு பெண்ணும் ஆணும் மகோன்னதமானவர்கள். மனிதர்கள் தான் மனிதர்கள் மட்டுமே உலகின் யாவற்றையும் விட மேம்பட்டவர்கள். மனிதர்களது உழைப்பும் சிந்தனையும் ஏனைய செயல்களும் மலர்ச்சி பெற்று வளர்ச்சியடையவில்லை என்றால் இன்றைய மனிதகுல நாகாPகம் தோன்றியிருக்க முடியாது. அவர்களது அபார சக்தியின் வெளிப்பாடாகத் தான் உலகில் பொருள் உற்பத்தியும் அதனைத் தொடர்ந்து கலையும் கலாச்சாரமும், தத்துவங்களும், அரசியலும், சட்டமும், விஞ்ஞானமும், தொழில்நுட்பங்களும் இன்னும் பிற ஆக்கக் கூறுகளும் வரலாற்று வளர்ச்சிகண்டன. இவை அனைத்தும் ஆரம்ப நிலையில் இருந்து உயர்ந்த நிலை நோக்கி முன்னேறி வந்தன.

இயற்கை என்னும் பரந்த விளை நிலத்திலே உருவாகிய மனிதர்கள் அவ் இயற்கைக்கு எதிராகப் போராடி, அதனைக் கட்டுப்படுத்தி, வாழ்க்கைக்கு இசைவாக்கி பல முனைகளில் வெற்றிகொண்டு தமது சமூகவாழ்வை விரிவுபடுத்தி வந்ததில் திட்டவட்டமான வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருந்தனர். இதனால் ஏனைய விலங்கினங்களில் இருந்து வேறுபட்ட ஓர் தனித்தன்மை வாய்ந்த மனித சமூகமாகினர். இயற்கையின் செல்வாதாரங்களுக்கு எல்லைகாண முடியாமை போன்றே மனித ஆற்றல்களுக்கும் எல்லை வகுக்க முடியாது என்பதினைப் பல லட்சம் ஆண்டுகளிலான மனித குல வரலாற்றின் வளர்ச்சி எடுத்துக் காட்டியுள்ளது. இங்கே காணப்படும் முக்கியத்துவம் மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே நிகராக இருக்க முடியும் என்பதுதான். அதனாலேயே மனிதர்களின் மகத்துவம் யாவற்றையும் விட மேலோங்கி நிற்கின்றது.

இன்றைய உலகம் நவீன விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பவியலிலும் அதிவிரைவான, அதி அற்புதமான வளர்ச்சி கண்டுவரும்; போக்;கைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் எதிர்விளைவுகளில் மனித குலத்திற்கு நாசம் விளைவிக்கும் அம்சங்கள் உள்ளடங்கியிருப்பதையும், அதனை மனித சுய நலப்போக்கு தன் நோக்கிற்கு பயன்படுத்தி வருவதையும் மறுக்க முடியாது. இருந்த போதிலும் விஞ்ஞான வளர்ச்சியானது மனித ஆற்றல்களின் உயர் வெளிப்பாடாகவும் மனித குலத்திற்கான வளர்ச்சித் தேவையாகவும் அமைந்துள்ளது. உலகியல் சார்ந்த நடைமுறைகளின் மூலமாக ஆதாரங்களைத் தேடுவதும் அவ் ஆதாரங்களில் இருந்து உண்மைகளைத் கண்டறிவதும் என்ற அடிப்படையிலேயே விஞ்ஞானம் வேர் ஊன்றி வளர்வதாயிற்று. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே விஞ்ஞானம் தனது வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுந்தது, தீயை உருவாக்கியமையும், கல்லாயுதங்களைக் கண்டறிந்தமையும், உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை நோக்கி முன்சென்ற அனைத்துமே மனிதரின் விஞ்ஞான முன் முயற்சிக்கான ஆரம்ப நிலைதான். அந்த வகையிலே மனித வாழ்வின் சகலதுறைகளிலும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று நவீன விஞ்ஞான பூர்வ வழியில் வளர்ச்சி பெற்றுக் கொண்டது.

பிரபஞ்சம் என்னும் மிகப் பரந்த இயற்கை பற்றியும் அதில் உள்ளடங்கும் பூமி பற்றியும் முன்னோர் கொண்டிருந்த கற்பனைக் கருத்தியல்கள் யாவும் இன்று விஞ்ஞானத்தினால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதே போன்று உயிரினங்களினதும்-மனிதர்களினதும் தோற்றம், பரிணாம வளர்ச்சி, சமூக வாழ்வு என்பனவும் விஞ்ஞானத்தால் தெளிவாக்கப்பட்டுவிட்டது. இதன் வாயிலாகக் கடவுள், படைப்பு, மறுஉலகம், ஆன்மா, ஊழ்வினை, மறுபிறப்பு போன்றவற்றைப் பற்றிய பழமை வாய்ந்த தத்துவங்களும், நம்பிக்கைகளும் அடி பெயர்க்கப்பட்டு விட்டன. இன்று யாவற்றையும் விஞ்ஞான நோக்குடன் அணுகும் போக்கு முனைப்படைந்து வருகின்ற போதிலும் நமது சமூகச் சூழல் பழமைவாதக் கருத்தியல்களுக்குள் கட்டுண்டு நிற்கும் தன்;மையையே கொண்டுள்ளது. இப்பழமைவாதக் கருத்தியல் என்பது மனிதர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களது எல்லையற்ற படைப்பாற்றலையும் தாழ் நிலைக்குள் வைத்து யாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்தியான கடவுளினால் தான் சகலதும் நிர்ணயிக்கப்படுவதாக நம்ப வைக்கப்படுவதாகும். இதனை அச்சாணியாகக் கொண்டே சகல மதங்களும் அவற்றின் வரையறைகளும் தமது நம்பிக்;கைகளையும், செயல் முறைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இக்கருத்தியல் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவது மிக இலகுவானதொன்றல்ல என்பது உண்மையே. ஏனெனில் பல்லாயிரம் வருடங்களாக மனிதர்கள் பின்பற்றி வந்த நம்பிக்கைகளை விஞ்ஞான உண்மைகளின் நடைமுறைகளினால் மட்டுமே படிப்படியாக மாற்றியமைக்க முடியும். அதற்குரிய சமூகச் சூழல் பல துறைகளிலும் தோற்றுவிக்கப்படல் வேண்;டும். இன்று நமது சமூகத்தில் மூன்று வகையினரானவர்களை, இனம் காண முடியும். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனித ஆற்றல்களின் வெளிப்பாடு என்று ஏற்றுக்கொள்ளாது, பழமை வாதக் கருத்தியல்களில் மூழ்கி நிற்போர் முதல் வகையினர் விஞ்ஞானத்தை தமது வாழிவின் தொழில், வருவாய் அந்தஸ்து என்பவற்றுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் அதேவேளை வாழ்வியலுக்கு பழைய வாத நம்பிக்கைகளின் மீது தங்கியிருக்கும் போக்குடையோர் இரண்டாவது வகையினர். மூன்றாவது வகையினர் மட்டுமே விஞ்ஞானத்தை நடைமுறை சார்ந்து வாழ்வியக்கத்திற்கு உரியதொன்றாகவும் மனித விழிப்புணர்வு, முன்னேற்றம், வளர்ச்சி, விடுதலை, சமூக மாற்றம் என்பவற்றுக்கான தொன்றாகவும் பயன்படுத்துவோராக உள்ளனர். இவர்கள் சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ள போதிலும் அவர்களது நோக்கும் போக்கும் மட்டுமே வளர் திசை உண்மைகளைக் கொண்டிருப்பதாகக் காணப்படுகின்றது.

அந்த வகையிலேயே சமூக விஞ்ஞானத்தத்துவமும் தோன்றி மானிட வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் ஊடுருவி விரிவான நடைமுறை உண்மைகளை முன் நிறுத்திவைத்தது. இச் சமூக விஞ்ஞானப் பார்வையானது மனிதர்களினதும் அவர்களது சமூகவாழ்வினதும் வரலாற்று வளர்ச்சியை தெளிவுடன் எடுத்து விளக்கியது. அதன் அடிப்படையில் மனித சமூக வாழ்வியக்கத்தின் பல்வேறு கூறுகளும் இன்று விரிவான ஆய்வுகளுக்கு உள்ளாகி வருகின்றமையை காணமுடியும். இருப்பினும் நமது சூழலில் இச்சமூக விஞ்ஞானப் பார்வையை எதிர்ப்பது, மழுங்கடிப்பது திசைதிருப்புவது போன்ற முயற்சிகள் தொடரப்படுகின்றமையை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதலால் மனிதரும் அவர்களது சமூக வாழ்வும் பற்றிய பொது அறிவினை அறிவியல் அடிப்படையில் பெற்றுக் கொள்வது அவசியமாகிறது.

உலகின் தோற்றம்

2

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இன்றுள்ளது போன்று என்றென்றைக்கும் இருந்து வந்துள்ள ஒன்றல்ல ஒரு குறிப்பிட்ட காலத்தில் யாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்தியான கடவுள் அல்லது ஆண்டவன் மூலமாகத் தோற்றுவிக்கப்பட்டதுமல்ல. பிரபஞ்சத்தில் பூமியின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்து மாறுதல்களுக்கு உள்ளாகி இன்றைய நிலைக்கு வந்தது என்பதினை வானியல் வல்;லுனர்கள் இடையிறாது ஆராய்ந்து வந்ததோடு காலப் போக்கில் திட்டவட்டமான முடிவுகளுக்கும் வந்தனர். இம்முடிவுகளின் உண்மைகள் உலகின் தொடர் ஆய்வு நடைமுறைகளால் இன்று ஏற்கப்பட்டுள்ளன. ஆனால் கடவுள் தத்துவத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்ட மதவாதிகள் பூமியின் தோற்றம் வளர்ச்சி பற்றிய விஞ்ஞான விளக்கத்தை அன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் ஏற்பதாகவில்லை. பூமி மற்றும் கோள்கள் என்பவற்றின் தோற்றம் இயக்கம் பற்றி முதன் முதலில் ஆய்வு அடிப்படையில் எடுத்து விளக்கிய விஞ்ஞானிகள் அன்றைய மதபீடங்களினாலும், மதத் தலைவர்களினாலும் பல்வேறு வித நிந்தனைகளுக்கும், தண்டனைகளுக்கும் ஆளாக்கப்பட்ட நிகழ்வுகள் கூட வரலாற்றில் இடம் பெற்றன. இருப்பினும் இவ்வானியல் ஆய்வுகள் சகல தளைகளையும் மீறி தமது முன்;னேற்றப்பாதையில் வழி நடந்து சந்திரனில் மனிதர் சென்று இறங்கித் திரும்பிய அதி உன்னதம்மிக்க மனித சாதனையை நிலை நாட்டிய உச்ச நிலைக்கு அப்பாலும் தொடரச் செய்கிறது.

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய பூமி என்பது பிரபஞ்சத்தில் இருக்கவில்லை. ஏன் சூரியன் என்பது கூட மிகமிக நீண்ட காலத்தின் முன்தோன்றிய தொன்றேயாகும். சடப் பொருட்கள் பிரபஞ்சத்தில் ஒன்றுடன் ஒன்று மோதியதன் மூலம் வெப்பம், சுழற்சி என்பவற்றைப் பெற்று வெப்பமாகச் சுழல்கின்ற புகையுருக் கோளமாக மாறின. இதுவே அக்கினிக் குழம்பான மூலச் சூரியனின் தோற்றமாகும். சூரியனைப் போன்று ஒளி விடும் நட்சத்திரங்கள் பல பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அவை மிகத் தொலைவில் இருப்பதால் சிறியனவாகத் தெரிகின்றன. நமக்கு சூரியன் குறிப்பிட்டளவு தூரத்தில் இருப்பதால் அதன் தோற்றம் பெரிதாக இருப்பதுடன் அதிக வெப்பத்தையும் தருகின்றது. நட்சத்திரங்கள் இயல்பில் வெப்பமுடையன. ஆனால் கோள்கள் அப்படியல்ல. சூரியக் குடும்பக் கோள்களுக்கு சூரியனே ஒளி, வெப்பம் என்பவற்றை வழங்கி வருகின்றது.

இத்தகைய வெப்பக் கோளமான சூரியனின் அதிகரித்த பெப்பச் சுழற்சி காரணமாக அதிலிருந்து சில அக்கினித் துண்டங்கள் பிரபஞ்;ச அண்ட வெளியில் சிதறி வீசப்பட்டன. இவ்வாறு வீசப்பட்ட சிதறல் துண்டங்கள் சூரியனின் ஈர்ப்புவட்டத்திற்குள் அமைந்த சூரிய மண்டலக் கோள்களாயின. அவையாவும் சூரியனை ஒருங்கமைந்த ஓர் நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்ததுடன் தம்மைத் தாமே சுற்றிக் கொள்வனவாகவும் அமைந்தன. சூரியனின் ஈர்ப்புக்கும் தாக்கத்திற்கும் உட்பட்ட ஒன்பது கோள்களில் நாம் வாழ்ந்து வரும் பூமியும் ஒன்றாகும்.

இப் பூமி ஆரம்பத்தில் தீக்குழம்பாகவே இருந்தது. இது சூரியனில் இருந்து சுமார் 15கோடி கிலோ மீற்றர் தொலைவில் இருந்ததன் மூலம் நீண்டகாலத்தில் படிப்படியாக குளிர்வடைவதற்கு ஏதுவாயிற்று. இவ்வாறு பூமியின் மேற்பரப்பு குளிர்வடைய ஆரம்பித்த அதேவேளை அதன் உட்பகுதி வெப்பக்குழம்பாக இருந்து வந்தது. இதனால் அடிக்கடி எரிமலைகள் வெடித்து உள் இருந்த அக்கினிக் குழம்புகள் வெளித்தள்ளப்பட்டன. அவ்வாறு வெளித்தட்டப்பட்டவைகள் குளிர்ச்சியடைந்த மேற்பரப்பில் பாறைகளாகப் படிந்து இறுகிக் கொண்டன. அதே போன்று வாயுக்களின் சேர்க்;கையால் பெருமழை உருவாகி பூமியின் மேற்பரப்புப் பள்ளங்களில் நீர் நிலைகளை உருவாக்கியது. இத்தொடர் நிகழ்வுகளால் பாறைகளும், நீர்ப்பரப்புக்களும் தோற்றம்பெற்றன. நீர்ப்பரப்புகள், கடல்கள், சமுத்திரங்களாகிக்கொண்டன. பாறைகள் அமைந்த பரப்பில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் தோன்றின.

பூமியில் இருந்து பிரிந்து தூரச் சென்ற ஒரு பகுதியே சந்திரனாகும். சந்திரன் ஒரு தனிக்கோள் அல்ல. ஏனைய கோள்களுக்குப் பல துணைக் கோள்கள் உள்ள அதேநேரத்தில் பூமிக்கு சந்திரன் மட்டுமே ஒரே ஒரு துணைக் கோளாகும். பூமியில் இருந்து பிரிந்து சந்திரன் துணைக்கோள் ஆகியதன் மூலம் ஏற்பட்ட பெரும் பூமிப் பள்ளமே பசுபிக் சமுத்திரமாகியது எனக்கணிக்கப்படுகிறது.

பூமிப் பரப்பின் பாறைகளும், சமூத்திரங்களும் இன்றுள்ளது போன்று என்றும் ஒரே இடத்தில் இருந்ததாகக் கொள்ள முடியாது. பாறை நகர்வுகளும் கடல் கொந்தளிப்புகளும் இடம் பெற்றதால் கண்டப் பெயர்வுகள் ஏற்பட்டன. இதனால் சில நிலப்பரப்புகள் சமூத்திரத்தினால் விழுங்கப்பட்டன. அதன் வழியாக கண்டங்களுக்கிடையிலான தொடர்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய கடற்பரப்புக்கள் தோற்றம் பெற்றன.

அதே போன்று பாறைகளில் உருவாகிய தேய்வு, சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் கற்பாறைகளில் இருந்து மண் தோன்றுவதற்கு ஏதுவானது. பாறைகளும் மண்ணின் தோற்றமும், நீர் நிலைகளின் தன்மையும் பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கான அடிப்படைச் சூழலை உருவாக்கியது. பூமி தோன்றிய பின் தாவரங்களும் மிருகங்களும் வாழ்வதற்கு உகந்தவகையில் போதுமான அளவுக்கு பூமி குளிர்ச்சியடைய பத்துக்கோடி ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலம் கடந்தது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த சில நூற்றாண்டுகளில் பூமியின் தோற்றம், அதன் அமைப்பு, இயக்கம் போன்றவற்றில் விஞ்ஞானிகளும் - வானியல்வல்லுனர்களும் புதிய புதிய கண்டு பிடிப்புக்களை வெளிக்கொணர்ந்தனர். அவர்கள் முன் வைத்த முடிவுகள் ஆரம்பத்தில் முழுமையானதாகவோ முடிந்த முடிவாகவோ இருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரின் முயற்சிகளும் முடிவுகளும் பின்னால் வந்தவர்களின் முழுமையான ஆய்வுகளுக்கு அடிப்படைகளாயின. அதனால் பின் வந்தவர்கள மிகவும் தெளிவான முடிவுகளுக்கு வரக்கூடியதாக இருந்தது. இந்த வரிசையில் கிளோடியன் தொலமி, கொப்பர் நிக்கலஸ், கெப்ளர் கலிலியோ கலிலி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பூமி உருண்டை வடிவானது என்றும் அது சூரியக் குடும்பத்;தைச் சேர்ந்த ஒரு கோள் என்றும், தன்னைத் தானே சுற்றிக் கொண்டும், அதே வேளை சூரியனை சுற்றி வருகின்றது என்பதும் மிகவும் துல்லியமாகக் கண்டறியப்பட்டது. அத்துடன் பூமியின் பருமன் அதன் புவி ஈர்ப்புத் தன்மை, அமைப்பு முறை இயக்கவகை யாவும் இன்று வரை மேன்மேலும் மிக நுண் ஆய்வுகளால் நிரூபனம் பெறலாயிற்று. இந்த நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியின் அதிவேகத் தன்மைகளால் பூமி பற்றிய உண்மைத் தகவல்கள் விரிவடைந்து வருவதுடன் ஏனைய கோள்கள், நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுகளிலும் பெரும் முன்;னேற்றங்கள் ஈட்டப்படுகின்றன.

இவ்வாறு தோற்றம் பெற்று பல நூறுலட்ச வருடங்களில் மாற்றம் அடைந்து வந்த பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றி வளர்ச்சி கண்டன என்பதை அடுத்த பக்கங்களில் பார்ப்போம்.

உயிரின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்

3

உயிரினங்கள் தோற்றம், பரிணான வளர்ச்சி பற்றிய மனித ஆய்வு முயற்சிகள் வௌ;வேறு காலகட்டங்களில் அவ்வக்காலச் சூழல்களில் சேகரிக்கப்பட்ட மனித அறிவுத்திறன் அளவுக்கு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலும் அதற்கு பிந்திய காலப் பிரிவிலும் பல தத்துவஞானிகளும் விஞ்ஞானிகளும் உயிரினத் தோற்றத்தையும், வளர்ச்சியையும் விளக்க முற்பட்டனர். குறிப்பாக கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானிகளில் தேல்ஸ், அனெக்சிமாண்டர், சினோ பேண்ஸ், எம் பிடோக்கிள்ஸ், அரிஸ்ரோட்டில் போன்றவர்கள் உயிரினத் தோற்றம்; பற்றிய தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர். உயிர் சடப்பொருளில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என்ற மூலக் கருத்தை தத்துவ ஞானியான அரிஸ்ரோட்டில் முன் வைத்தார். அக்காலத்தில் ஞானிகளின் உயிர்பற்றிய கருத்;துக்கள் முழுமை பெற்றனவையாகக் காணப்படவில்லையாயினும் பிற்கால புதிய சிந்தனைகள் தோன்றுவகற்கான கருவூலங்களை அவை கொண்டிருந்தன.

கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின் இயற்கை தத்துவஞானிகள் அல்;லது விஞ்ஞானிகள் என்போர் தீவிர ஆய்வுகளில் செயல்பட்டனர். இவர்கள் உயிரினங்களின் தோற்றம் பரிணாமம் என்பன பற்றிய பல புதிய கண்டு பிடிப்புக்களை வெளிக் கொணர்ந்தனர். பிரான்சிஸ் பேக்கன், லிப்னிட்ஸ், டிமெய்லெட், லின்னேயஸ், புவோன், எசால்மஸ்டார்வின் போன்றோர் இத்துறையில் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வரிசையில் பிரான்ஸ் நாட்டின் இயற்கை விஞ்ஞானி லமார்க் உயிரினங்களின்; தோற்றம், பரிணாமப் போக்கினை விபரித்தார். உயிர், முதன் முதலில் உயிரில்லாத சடப்பொருளில் இருந்து தோன்றியிருக்க வேண்;டும் என்பது அவரது கருத்து. அந்த உயிரற்ற பொருள் கூழ் போன்ற திரவமானதாகும். அதன் மேல் வெப்பம், மின்சாரம் போன்ற சக்திகளின் தாக்குதலினாலும் மற்றும் அங்கக அல்லது கரிமப்பொருட்களின் சேர்க்கையினாலும் பை அல்லது அறை போன்ற உருவம் தோன்றியது. இது தான் முதன் முதலில் தோன்றிய உயிரியாக இருக்க வேண்டும். இந்த உயிரி நாளடைவில் சூழ்நிலைக்கேற்றவாறும் மற்றும் சக்திகளுக்கேற்றவாறும் அனேக மாறுதல்கள் அடைந்து பல இன்னல்களுக்கு உள்ளாகி உரு அமைப்பாலும் செயல் முறையாலும் பல விதமான உடல் அமைப்புக் கொண்ட உயிரினங்கள் தோன்றின என்பதாகும். இவரது ஆய்வுக் கருத்;துக்களில் பின்வந்த விஞ்ஞானிகள் முழுமையாக திருப்தி கொள்ளாது சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியதுடன் புதிய நோக்குடன் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

மேலும் உயிரினங்கள் பற்றிய மிக விரிவான ஆய்வுகளைச் செய்து புதிய திருப்பு முனை ஏற்படவும் அவை வளர்ச்சி பெற்றுச் செல்லவும் பிரதான அடிப்படைகளை தோற்றுவித்ததில் சார்ல்ஸ்டார்வின் (1809 - 1882) முக்கியமானவராகத் திகழ்ந்தார். ~~உயிரினங்களின் மூலத் தோற்றம்|| ~~உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, இயற்கையான தேர்வின் மூலம்|| போன்ற தனது பிரசித்தி பெற்ற முடிவுகளை நூல்களாக டார்வின் வெளியிட்டார். மிருக மற்றும் தாவர உயிரின வகைகள் ஒi;றை ஒன்று எவ்விதமான தொடர்பும் இல்லாமல் உள்ளவை, தற்செயலாக எதிர்பாராமல் நிகழ்பவை, கடவுளால் உண்டாக்கப்பட்டவை, மாற்ற முடியாதவை: என்னும் பழைய கருத்தோட்டத்திற்கு டார்வின் ஒரு முடிவு கட்டினார். ~~அவர் தான் முதன் முதலில் மிருக தாவர உயிரின வகைகள் மாற்றத்திற்கு உள்ளாக்கக் கூடியவை, ஒன்றன் பின் ஒன்று மரபு வழியாக வளரும் என்று ஸ்தாபித்து உயிரியலை முழுமையாக, சுத்தமான விஞ்ஞான அடிப்படையில் அமைத்து வைத்தவர்|| என்று டார்வின் போற்றப்பட்டார்.

உயிரின் மூலக் கூறுகளை விஞ்ஞானம் கண்டறிந்து விட்டது. கடவுளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு உயிர் தோற்றுவிக்கப்படுகிறது என்னும் மதவாதக் கருத்துக்கள் இன்று உடைக்கப்பட்டு விட்டன. ~~உயிர் பல மூலகங்களின் கூட்டுச்சேர்க்கையால் ஆனது. நமக்குத் தெரிந்த 95 மூலகங்களில் 20 மூலகங்கள் புரோட்டோ பிளாசத்தில் அடங்கியிருக்கின்றன என்பது உயிரியல் வல்லுனர்களின் முடிவாகும். தண்ணீர், அனங்கக அல்லது கனிம உப்புக்கள், அங்ககப் பொருள் (கரிமப் பொருள்கள்) போன்றவைகளின் கூட்டுச் சேர்க்கையால் உருவானது உயிர். நீர் என்பது பிராண வாயுநீர், வாயு மூலகங்களினாலானது. அனங்கப் பொருள்களில் சோடியம், பொட்டாசியம், மங்கனீசியம், குளோரின், கல்சியம் போன்றவை முக்கியமானவையாகவும், இரும்பு, பித்தளை, மாங்கனீஸ், காரியம், கோபால்ட், நிக்கல், ஐயோடின், வனடியம், புளோரின், போரான், அலுமினியம், புரோமின் போன்றவை குறைந்த அளவினையுடையதாகவும் இருக்கின்றன. அங்ககப் பொருட்களில் ஊட்டச் சத்துக்களான கார்போஹைடிரேட் (மாப்பொருட்;கள்) கொழுப்பு, புரோட்டீன் (புரதம்) போன்றவை இன்றியமையாதவையாகும். மேலும் உட்கரு அமிலங்களும் உயிர் தோன்றுவதற்குக் காரணமாயிருக்கின்றன. சில அங்கக அனங்ககப் பொருட்களின் கூட்டுச் சேர்க்கையால் நொதிகள், குரோமோசோம்கள் ஹீமோகுளோபின், பச்சயம், அல்லது பசுமம் போன்ற முக்கிய பொருட்களும் உண்டாகின்றன. இவையெல்;லாம் உயிர்ப் பொருட்களின் முக்கிய கூறுகளாகும். பொதுவாக கார்பன், நீர்வாயு போன்ற மூலகங்கள் கார்போஹைற்ரேட்டுக்களையும் கொழுப்புக்களையும் உண்டாக்குகின்றன. இந்த மூன்று மூலகங்களுடன் நைட்ரஜன் சேர்ந்தால் புரதம் உண்டாவதற்கு உறுதுணையாயிருக்கின்றது. இவையே உயிர்ப் பொருளில் பெரும்பாகப் பொருட்களாகும். அல்;லது பகுதிப் பொருட்களாகும். மேலும் மூலகங்கள் நிலையாக நிற்கும் தன்மையுடையவை. அவை மற்ற மூலகங்களுடன் சேர்ந்து அணுத்திரல்கள் உண்டாகின்றன. அணுத்திரள்கள் மேலும் நீண்டு கொண்டே போவதால் தொடர் அணுத்திரள்கள் கிடைக்கின்றன. இவை உயிர் வாழ் பண்பிற்கு மிகவும் தேவைப்படுவதால் இந்த நான்கு மூலகங்களின் சேர்க்கை மற்ற மூலகங்களை விட அதிகமாகவே காணப்படுகின்றன.||

உயிர் தோன்றுவதற்கு அங்ககப் பொருட்களின் தோற்றம் அடிப்படையானதும் முதல் படிவமாகும். இரண்டாவது அதற்குரிய சூழலாகும். இவ்வங்ககப் பொருட்கள் சில விகிதங்களில் கூட்டுச் சேர்ந்து இயற்கையின் புறச் சூழலோடு இணைந்ததன் மூலம் உயிரிகள் தோற்றம் பெற்றுக் கொண்டன.

எனவே பத்துக் கோடி வருடங்களுக்கும் சற்று அதிகமான காலத்தில் நீர் நிலைகளில் நீர்ப்பாசி உருவாகியது. அதுவே சகல உயிரினங்களின் தோற்றத்திற்கும் மூலமாக இருந்தது. இந்நீர்ப்பாசியில் இருந்தே அமீபா என்னும் தசை வடிவம் கொண்ட ஒன்று தோற்றம் பெற்றது. இது தன்னுள் இரண்டாகப் பிரிந்து பிரிந்து பல்லாயிரக் கணக்கில் பெருகிக் கொள்ளும் தன்மையுடையதாக விளங்கியது. இவ்வமிபாவில் இருந்து தாவர உயிரினங்களும் விலங்கு உயிரினங்களும் இரு வேறுபிரிவுகளாக வளர்ச்சியும் மாற்றமும், பெருக்கமும் கொண்டன. இவை நீண்ட நெடுங்கால வளர்ச்சிப் பாதையில் நுண்ணங்கிகளாக (டீயநவநசயைள) வளர்ச்சி பெற்றுக் கொண்டன. இவையனைத்தும் பின்பு கூட்டுத் தொகுப்பாகிக் கொண்டன. இதனால் உயிரணுக்கள் (உநடடள) உருவாகின. பல உயிரணுக்கள் சேர்ந்து ஒரு தொகுப்பாகியதன் மூலம் உருவமைப்புகள் வளர்வதாயிற்று. உதாரணத்திற்கு ஒரு மனிதரில் ஏறத்தாள முப்பதினாயிரம் லட்சத்திற்கு மேற்பட்ட உயிரணுக்கள் இருக்கின்றன என்பது கவனத்திற்குரியதாகும்.

இவ்விடத்;திலே அடிப்படையான ஒரு கேள்விக்கு விடையளிப்பது அவசியம். அதாவது கடவுள் அல்லது ஆண்டவன் என்ற படைப்பு சக்தி இல்லாவிடின் எவ்வாறு யாவும் தோன்றி மறைகின்றன? அதே நேரம் புதியன உருவாகின்றன? இதற்குரிய விடையாகவே இயங்கியல் கோட்பாடு தெளிவாகப் பதில் அளிக்கின்றது. எதிர் மறைகளின் போராட்டமும் அவற்;றுக்கிடையிலான ஒற்றுமையும் என்ற சர்வ வியாபகமான அடிப்படைவிதிதான் பிரபஞ்சம், உலகம்;, இயற்கை, உயிரினங்கள், மனிதர், சமூகவாழ்வு அனைத்தின் தோற்றம், இயக்கம், வளர்ச்சி, மாற்றம், மறைவு என்பவற்றின் மூலமாகும். உலகில் உள்ள எல்;லாப் பொருள்களிலும் இரண்டு எதிர் நிலை சக்திகளின் போராட்டம் என்பது வியாபித்து நிற்கும் தன்மையைக் காணமுடியும். அது மட்டுமன்றி இத்தகைய எதிர் மறைகளினிடையான போராட்டப் போக்கினால் தோற்றம் பெற்று வளர்ச்சி பெறும் ஒவ்வொன்றும் பழைய நிலை மறுக்கப்பட்டு புதியநிலைக்கு வருவதும், மீண்டும் அந்நிலை மறுக்கப்பட்டு புதியநிலை தோன்றுவதும் இடம் பெறுகின்றன. இதனையே நிலை மறுப்பின் நிலைமறுப்பு விதி எனப்படுகிறது. அதாவது சகல வளர்ச்சிப் போக்கிலும் மாற்றம் என்பது ஏற்படும்; போது மீண்;டும் மீண்டும் அவை ஒரே தன்மையுடையனவாக இருப்பதில்லை. அளவு குணாம்சமாக மாறி மாற்றம், வளர்ச்சி, சிதைவு இடம் பெறுவது மட்டுமன்றி புதியன தோன்றுவதையும் காணமுடியும். எனவே முன்பிருந்த நிலையை மறுக்காது புதியநிலை தோன்ற முடியாது என்பது நியதியாகின்றது. இவை பற்றி அடுத்து வரும் பக்கங்களில் சற்று விரிவாகக் காண்போம்.

மேற்கூறிய இயங்கியல் விதிக்கு உட்பட்டே பிரபஞ்சமும் அதிலிருந்து பூமியும், பூமியில் உயிரினங்களும், இயற்கையும் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டு மாற்றம் அடைந்து வந்தன. இன்றும் இந்நியதி தொடர்வதுடன் எதிர் காலத்திலும் இவ் இயக்கப் போக்கானது சர்வ வியாபகமான நியதியாகவே இருக்கும். அத்துடன் அந்தவிதி மேலும் வளர்ச்சி பெற்று புதியனவற்றைத் தன்னுள் இணைத்துக் கொள்ளச் செய்யும்.

உயிரினங்களில் ஒரு பிரிவான விலங்கினம் தனது வளர்ச்சிப் போக்கில் பரிணாம மாற்றத்திற்கு உட்பட்டது. மாற்றமடைந்து கொண்டு வளரும் எந்தப் பொருளையும் அது பரிணாம வளர்ச்சி கண்டு வருகின்றது எனக் கொள்ளலாம். இதன் படி உயிரிகளின் மாற்ற நிலையினை உயிரிகளின் பரிணாமம் எனக் கூறமுடியும். இப்பரிணாமம் இயற்கைத்தேர்வின் மூலமே இடம் பெறுகின்றது. இத்தகைய பரிணாம வளர்ச்சிப் போக்கில் சிறப்பினங்கள் தோன்ற முடியும் என்பதையும் உயிரியல் விஞ்ஞானிகள் தமது ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர். உயிரினங்களின் தோற்றமும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும் பல நூறு லட்சம் வருடங்களாக இப் பூமியில் இடம் பெற்று வந்துள்ளமையை நோக்கும் போது உயிரிகளின் ஒரு பிரிவான விலங்கினத்தில் இருந்து மனிதர் தோற்றம் பெற்றனர் என்பது மட்டுமல்லாது மனிதப் பரிணாமம் என்பது தொடரவே செய்யும். இயற்கைத் தேர்வின் மூலம் இடம் பெறும் பரிணாம வளர்ச்சியானது மனித குல வளர்ச்சியை அடுத்த நூறு லட்ச ஆண்;டுகளின் பின் எந்த நிலையில் வைக்கும் அல்லது எவ்வகையான மனிதராக பரிணாமம் பெறுவார்கள் என்று கூறிவிடமுடியாது. ஆனால் நிச்சயம் இன்றிருக்கும் மனிதராக இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதியானதாகும். மேலும் சிறப்புத் தன்மை பெற்றவர்களாக சில உறுப்புக்கள் மறைந்தோ அன்றி புதியன தோற்றம் பெற்றோ இருக்க மாட்டாது என்றும் கூறமுடியாது. ஏனெனில் உயிரின மனிதப் பரிணாம வளர்ச்சியின் வரலாறு அதனையே நமக்குமுன் நிறுத்திக் காட்டுகிறது. அடுத்து மனிதரின் தோற்றம் பற்றி நோக்குவோம்.

மனிதர்கள் உருவாகினர்

4

மனிதர்களின் தோற்றம் பற்றி கடந்த நூற்றாண்டில் மிக விரிவாக எடுத்து விளக்கியவர் சார்ல்ஸ் டார்வினேயாவார். அவர் விலங்கியலின் பல்வேறு பிரிவுகளையும் ஆராய்ந்து சிமிடே (ளுiஅனைந) என்ற வகை விலங்குகளே இரு கிளைகளாகப் பரிணமித்தன என்றார். அதில் ஒன்று புது உலகக் குரங்குகளையும் மற்றையது பழைய உலகக் குரங்குகளையும் தோற்றுவித்தது என்றும், இப்பழைய உலகத்துக் குரங்குகளில் இருந்து பரிணாமம் பெற்றவர்களே மனிதர்களாவர் எனவும் டார்வின்; நிறுவிக்காட்டினார். அதாவது விலங்கினங்களின் நீண்ட காலப் பரிணாம வளர்ச்சிப் போக்கில் அவற்றிடையே சிறப்பினங்களும், கிளைச்சிறப்பினங்களும் தோன்றி வளர்ச்சி பெற்று வந்துள்ளன. அந்த வகையிலே அகன்ற நாசியுடைய குரங்குகள் புது உலகக் குரங்குகளாகவும் காணப்பட்டன. கெரில்லா, சிம்பன்ஸி, ஓரன் குட்டான், கிப்பன் போன்றவை தற்காலக் குரங்குகளாகும். ஆனால் ஒடுங்கிய நாசியுடைய குரங்கினமே இன்றைய மனிதர்களின் மூதாதையர்களான மனிதக் குரங்கினமாக விளங்கின என்பது பல்வேறு நாடுகளில் கண்டெடுக்கப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட குரங்கின உறுப்புகளின் (மண்டை ஓடுகள், பற்கள், எலும்புகள்) வரலாற்று வளர்ச்சி எடுத்துக் காட்டி நிற்கிறது.

நான்கு கால்கள், ஒடுங்கிய நாசி, உடல் முழுவதும் அடர்த்தியான ரோமம், காய் கனிகளை உணவாகக் கொண்டமை மரங்களில் வாழ்ந்தமை, கூட்டமாக இருப்பது என்பன மனிதக் குரங்குகளின் ஆரம்ப காலத் தன்மைகளாயின. ஆனால் அவற்றின் வளர்ச்சிப் போக்கானது காலம் செல்;லச் செல்ல மாற்றமடைந்து வந்தது. தமது முன்னம் கால்கள் இரண்டையும்; படிப்படியாகக் கைகளாக மாற்றிக் கொண்டன. தமக்குரிய காய் கனி உணவுகளைத் தேடும் முயற்சியிலும்;, தேவையின் அவசியத்தாலும் முன்னம் கால்கள் கைகளாகப் பரிணமித்து வந்தன. இரு கைகளும தமது ஆரம்பகால முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொண்டன. அன்றைய உழைப்புக்கு ஏற்றவாறு கைகளின் அமைப்பு முறையிலும் மாற்றம் ஏற்படலாயிற்று. அதே வேளை பின்னம் கால்களில் எழுந்து நிற்கவும் பழகிக் கொண்டன. காடுகளில் மரங்களில் வாழ்ந்து வந்த நிலையை விட்டு சமதரைகளில் வாழவும் தம்மை இசைவித்துக் கொண்டன. வெறும் ஓசையை மட்டும் ஓலி எழுப்பி வந்த நிலையில் மாற்றம் ஏற்படலாயிற்று. அத்துடன் மூளை வளர்ச்சியானது புதிய கட்டத்தினுள் பிரவேசித்தது.

மூளை வளர்ச்சிக்கு மற்றொரு காரணமாக அமைந்தது அதன் செயல்களும் பேச்சு முயற்சிகளுமாகும். இதனால் புலன்களின் வளர்ச்சியும் ஏற்பட்டது. பேச்சின் முயற்சியால் தாடை எலும்புகளில் மாற்றம் ஏற்பட்டது போல கேட்கும் உறுப்பிலும் மாற்றம் நிகழ்ந்தது. மொத்தத்தில் உடலமைப்பு முழுவதிலுமே மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன. உழைப்பு, பேச்சுறுப்பு, மூளை (மூளை வளர்ச்சிக்கு மாமிச உணவு உட்கொள்ள ஆரம்பித்தமை மேலும் உந்துதல் அளித்து செழிக்கச் செய்தது) என்பவற்றின் ஒருங்கிணைப்பான வளர்ச்சி லட்சக் கணக்கான வருடங்களில் மனிதக் குரங்குகளில் இருந்து மனிதர்கள் மேன்மேலும் வேறுபட்டு வளர்வதற்கு ஏதவாயிற்று. அத்துடன் உணவைத் தேடுவதாலும், அதனை உண்ணும் முறைமைகளாலும் ஏனைய விலங்குகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்;துக் கொள்ளும் தேவையினாலும் சிந்திக்கும் ஆற்றலை மனிதர் பெறலாயினர். அதாவது நடைமுறையில் இருந்து அறிவைத் தேடுவதும் மீண்டும் நடைமுறைக்குச் செல்வதும் மீண்டும் அறிவைப் பகுத்தறிவாக மாற்றிக் கொள்ளும் போக்கும் மனிதர்களிடையே தொடர் நிகழ்வாகியதன் மூலம் மனிதர்கள் தமது ஆரம்ப நிலையை எடுத்து முற்றிலும் புதிய வகையாகிக் கொண்டனா. உழைப்புச் செயல், பேச்சுத் திறன், மூளைவளர்ச்சி ஆகிய அடிப்படையம்சங்களில் மனிதர் புதிய நிலைக்குப் பரிணாமம் பெற்றனர். உடலமைப்பாலும் சிந்திக்கும் திறனாலும் மாற்றங்கள் காணப்பெற்று கூட்டம் கூட்டமாக வாழும் மனிதக் கூட்டத்தினராக மாற்றம் பெற்றனர். இவர்கள் இயற்கையோடும் சக விலங்கினங்களோடும் சதா போராடியே தம்மைத் தற்காத்துக் கொண்டனர். இதனால் பல லட்சம் ஆண்டுகளின் வளர்ச்சியாக - ஆரம்பகால மனித சமூகமாகிக் கொள்ளும் நிலையை அடைந்தனர்.

இவ்வாறு மனிதக் குரங்குகளில் இருந்து மனிதர்கள் தோன்றினார்கள் என்று எடுத்துக் காட்டும் போது இவ்விரண்டு நிலைகளுக்குமிடையே பல வகைப் பரிணாம வளர்ச்சி நீண்டகால இடைவெளியில் இடம் பெற்று வந்துள்ளமையை கவனத்தில் கொள்ளல் வேண்டும். மனிதக் குரங்கும், குரங்கு மனிதனும், மனிதனும் பல வகைப்பட்ட நிலையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளமையை பல்வேறு ஆய்வாளர்கள் தொடராக எடுத்துக் காட்டியுள்ளனர்.

மனிதக் குரங்கில் இருந்து தோன்றிய மனிதர்களையும் அவர்கள் வாழ்ந்த காலங்களையும் விஞ்ஞானிகள் இது வரை கிடைத்த பாறைப் படிமங்களின் ஆதாரங்களைக் கொண்டு கணித்துள்ளார்கள். சின்ஜான்த்ரோப்பஸ், ஆஸ்ட்ரலோபித்திகள் மனிதர் (6 25, 000 ஆண்டுகளுக்கு முன்) மெகான்த்ரோப்பஸ் மனிதர் (4, 25, 000 ஆண்டுகளுக்கு முன்) ஜீவா மனிதர் (3, 50, 000 ஆண்டுகளுக்கு முன்) பீக்கிங் மனிதர் (2,25,000 ஆண்டுகளுக்கு முன்) நியாண்டர்த்தலர் மனிதர் (80, 000 ஆண்டுகளுக்கு முன்) குரோமன்யான் மனிதர் (10,000 ஆண்டுகளுக்கு முன்) மேலும் ரொட்சிய மனிதர், ஆரிக்நேசிய மனிதர் போன்றவர்களின் உடலுறுப்புத் தடையங்கள் அவர்களது காலங்களை வரையறுத்துக் கூறுகின்றன.

உலகம் பூராகவும் உள்ள மனிதர்களின் மூலச் சிறப்பினமாக ஹோமோ சாம்பியன் (ர்ழஅழ ளுயிநைn) என்பது கொள்ளப்படுகிறது. இச்சிறப்பினத்தினுள் புவியின் சிதோஷண நிலைக்கும் மண்ணியல் வளம் மற்றும் இயற்கை சூழலுக்கும் ஏற்ப உட்சிறப்பினங்களாக மனிதர் வளர்ச்சி கண்டனர். அதவே குலங்களாகவும் இனங்களாகவும் காணப்படுவதன் அடிப்படையாகும். இக்குல இனப் பிரிவினரை ஆறு பிரிவினராக பிரித்துக் காட்டப்படுகிறது. (1) நீக்ரோக்கள் (2) புஸ்மான்கள் (3) காக்க சாயிகள் (4) மங்கோலியர் (5) பொலினிசியர்கள் (6) ஆஸ்திரேலியர்கள். இவ்ஆறு வகையினரில் நீக்ரோக்கள் காக்க சாயிகள், மங்கோலியர்கள் என்போர் மொத்த உலக சனத்தொகையில் பெருன்பாலானவர்களாக உள்ளனர். தென் ஆசியாவிலும், இந்திய உபகண்டப் பகுதிகளிலும் வாழும் மக்கள் காக்க சாயி குல இனப் பிரிவினரின் வழித் தோன்றல்களேயாகும்.

மேற்கூறிய மனிதப் பிரிவினரின் உடல் உருவத் தோற்றங்கள், நிறங்கள் அங்க அடையாள வித்தியாசங்கள் என்பன அவர்கள் வாழ்ந்த பூமிப் பிரதேசங்களின் வெட்ப தட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பவே அமைந்திருந்தன. அதிக வெப்பத்தைப் பெற்ற பிரதேசங்களில் வாழ்ந்த மனிதர் கறுப்பு நிறத்தையும் அதிக குளிர்ப் பிரதேசங்களின் மக்கள் வெள்ளை நிறத்தையும் பெறலாயினர். அதே போன்றே மஞ்சள், சிகப்பு, பொதுநிறம் போன்றவற்றைப் பெறலாயினர். இவ்வாறே வௌ;வேறு மொழிகளின் தோற்றமும் உலகில் வேறுபட்டனவாக வளர்ச்சி பெற்று வந்ததுடன் கலாச்சாரமும் வௌ;வேறு பட்டவையாக மனிதர்களால் வளர்த்ததெடுக்கப்பட்டது.

இவ்வாறு மனிதர்களின் தோற்றத்துடன் உருவாகிய மனித சமூக வாழ்வு பற்றி உலகில் பல்வேறு அய்வுகள் இடம் பெற்று வந்துள்ளன. அவை பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அதிக முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்தன. அவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்ற சமூக விஞ்ஞானத் தத்துவமாகத் தோற்றம் பெற்றதே மார்க்சியமாகும். மார்க்ஸ் என்ற மாமேதையாலும் அவரது நண்பரான ஏங்கல்சும் இம்மார்க்சிய தத்தவத்தை தெளிவான விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கி முன்வைத்தனர். இயங்கியல் பொருள் முதல்வாத அடிப்படையில் மனித சமூக வாழ்வை வரலாற்று வளர்ச்சி ஊடே ஆராய்ந்து சமூக வாழ்வியக்கத்தின் பல்வேறு கூறுகளையும் நடைமுறை ரீதியாக விளக்கியதுடன் முழு மனித குலத்தின் மேம்பாட்டிற்குமான ஓர் மார்க்கத்தையும் முன் வைத்தனர். இம் மார்க்சிச தத்துவத்தின் அடிப்படையாக விளங்கும் இயங்கியல் பொருள் முதல்வாதம் என்பது பற்றி அடுத்துக் காண்போம்.

சமூக விஞ்ஞானக் கண்ணோட்டம்

5

உலகின் பல்வேறு துறைகளில் விஞ்ஞான ஆய்வுகளும், வளர்ச்சிகளும், முடிவுகளும் உருவாகியமை போன்றே மனித சமூக வாழ்வுத் துறையிலும் விஞ்ஞானக் கண்ணோட்டங்களும், முடிவுகளும் இடம் பெற்று வந்துள்ளன. உலகம், இயற்கை, உயிரினங்கள், மனிதர் சமூக வாழ்வு பற்றிய பல்வேறு தத்துவங்கள் காலத்துக்குக்காலம் முன் வைக்கப்பட்டு வந்தன. இத்தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டவர்களில் கிரேக்க தத்துவ ஞானிகள் முதன்மையானவர்கள். அதே போன்று கிழக்குலகிலே வாழ்ந்தபல ஞானிகளும் பல்வேறு தத்துவங்களை உருவாக்கினர், இவர்கள் அனைவரினதும் தத்துவ நோக்குகளில் அடிப்படை நோக்குகளாக இரண்டினைக் குறிப்பிட முடியும். ஒன்று கருத்து முதல்வாத தத்துவ நோக்கு, இரண்டாவது பொருள் முதல்வாத தத்துவ நோக்கு என்பதாகும். பெரும்பாலானவர்களின் நோக்குகளும், விளக்கங்களும் முதல் வகையைச் சார்ந்தே அமைந்திருந்தன. அதே வேளை குறிப்பிடத்தக்கவர்களின் நோக்கில் இரண்டாவது வகையைச் சார்ந்த பொருள் முதல் வாத நோக்கு செறிந்து காணப்பட்டது. மேற்கிலே பொருள் முதல்வாத நோக்கினைக் கொண்ருந்த கிரேக்க தத்துவ ஞானிகளான தேல்ஸ், டெமாகிரட்ஸ், அனக்ஸ, கோராஸ் போன்றவர்களும் கிழக்கிலே இந்தியத் தத்துவ ஞானிகளான கபிலமுனிவர், கணாதமுனிவர், கௌதம புத்தர், வர்த்தமான மஹாவீரர் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாகத் திகழ்ந்தனர்.

இவ்வாறு மேற்குலகில் வாழ்ந்த தத்துவ ஞானிகளின் பொருள் முதல்வாத நோக்கு பின் வந்தவர்களால் முன்னெடுத்து வளர்க்கப்பட்டது. அதன் வழியிலே ஜெர்மன் தத்துவாசிரியரான ஹெகல் (1770 - 1881) முக்கியமானவராவார். அவரிடம் இருந்தே கார்ரஸ் மார்க்சும் பிரடிக்ஸ் ஏங்கல்சும் பொருள் முதல் வாதத்தை தெளிவான இயங்கியல் பொருள் முதல் வாதமாக வளர்த்தெடுத்து சமூக விஞ்ஞானத்துறையில் மாபெரும் புரட்சிகர விஞ்ஞானத் தத்துவமாக மார்க்சிசத்தை தோற்றுவித்தனர். அதேவேளை கிழக்குலகில் தோற்றுவிக்கப்பட்ட பொருள் முதல் வாத தத்துவ நோக்குகள் வளர்த்தெடுத்து முன்னெடுக்கப்படுவதற்குப் பதிலாக மீண்டும் மீPண்டும் கருத்து முதல் வாத ஆதிக்கத்தின் மூலம் அமுக்கப்பட்டது. முன்னவர்களிடம் இருந்து பெற்ற கௌதம புத்தரின் பொருள் முதல் வாதத் தத்துவம் பின் வந்தவர்களால் முற்றாகத் திரிக்கப்பட்டு இறுதியில் அவர் கடவுள் ஆக்கப்பட்டார். அதே போன்று ஏனையவர்களும் மதவாதிகளாக மாற்றப்பட்டு அவர்களது பொருள் முதல் வாத சிந்தனைகளும் தத்துவங்களும் சீரழிக்கப்பட்டு சிதைவுகளுக்கு ஆளாக்கப்பட்டன. இந்திய தத்துவ மரபில் தோற்றம் பெற்ற பொருள் முதல்வாத சிந்தனைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டன என்று கூறுவது மிகையாகாது.

ஆனால் மேற்கிலே பொருள் முதல் வாதம் கருத்து முதல் வாதத்துடன் போராடித் தனது நிலையை விரிவுபடுத்தி வலுவாக்கிக் கொண்டது. இயங்கியல் பொருள் முதல் வாதம் என்ற இத்தத்துவ ஒளியில்தான் மார்க்கம் ஏங்கல்சும் மனித சமூக வளர்ச்சியை வரலாற்று வழியில் தெளிவாக ஆராய்ந்து பெறுமதி மிக்க முடிவுகளை வெளியிட்டனர். இச் சமூக விஞ்ஞானக் கண்டு பிடிப்பானது மனித குல வரலாற்றில் மகத்தான பங்களிப்பாகியது. அவர்களது தத்துவ நோக்கு மார்க்சிச உலகக் கண்ணோட்டம் என்பதாகியது. இதன் அடிப்படையில் கருத்து முதல்வாத, பொருள் முதல் வாத நோக்குகளை கண்டு கொள்வோம்.

கருத்து முதல் வாதம் இவ்வுலகை இரண்டு வகையாகப் பிரிக்கின்றது. ஒன்று கருத்தியல் உலகம், இரண்டாவது பொருளியல் உலகம். இக் கருத்தியல் உலகம் தான் முதன்மையானது எனக் கொள்கிறது. அதாவது கருத்து என்பது மனித மனத்தின் விளை பொருளே அன்றி பௌதீPகப் பொருட்களின் பிரதிபலிப்பு அல்ல என்றே வற்புறுத்துகிறது. அதேவேளை பொருளியல் உலகு என்பது வெறும்மாயை என்றும் மனத்தினால்-கருத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு பொய்த் தோற்றம் மட்டும் தான் எனக் கூறுகின்றது. எல்லா வகைப் பொருட்களும் கடவுள் மூலமான கருத்துக்களைச் சார்ந்திருந்து அவற்றினால் தீர்மானிக்கப்படுகின்றன எனக் கருத்து முதல் வாதம் கருதுகின்றது. இதன் வழியாக ~உலகம் மாயம் இந்த வாழ்வே மாயம்| எனக் கூறி கடவுள் தான் ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் சோதி எனக் கொள்கிறது. மனிதரின் சிந்தனை செயல் அனைத்தையும் இயக்குவிப்பது கடவுள் என்று கொள்ளப்படுகிறது. ஆன்மா அழிவற்றது. உடல் மட்டுமே அழியக் கூடியது என்று கூறி மறுபிறப்பு, மறுஉலகம் என்பவற்றை வற்புறுத்துகின்றது. எனவே கருத்தை - எண்ணத்தை - மனத்தை முதன்மையாகக் கொண்டு கடவுள் என்னும் மதக் கருத்தினை வலியுறுத்தும் போக்கையே கருத்து முதல் வாதம் முதன்மைப்படுத்துகின்றது. இத் தத்துவத்தின் வாயிலாகவே உலகம், இயற்கை, மனிதர், சமூக வாழ்வு அனைத்தையும் விஞ்ஞானப் பார்வைக்கு விரோதமானதாக வற்;புறுத்துகின்றது. மனிதர்களால் அறியப்பட முடியாதவற்றை பின்பு ஒருக்கால் அறியப்பட முடியும்; என்று கொள்வதற்குப் பதிலாக அவற்றை கடவுளின் பாற்பட்டது என இலகுவாகவே கருத்து முதல் வாதத் தத்துவ நோக்கு பழமை வாய்ந்த கடவுள் - மதம் நம்பிக்கைகள் என்பனவற்றின் பேரால் இன்றும் பல்வேறு நாடுகளின் மக்கள் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சாராம்சத்தில் கருத்து முதல் வாதம் மதவாத அணுகு முறையையும் மூட நம்பிக்கைகளையும், புதிர்த் தன்மை கொண்ட நம்பகத்தன்மைகளுக்கு அப்பாற்பட்டவையாகவும்; திகழ்ந்து வருகின்றது.

கருத்து முதல் வாதத்தைப் பின்வரும் அம்சங்களில்

சாராம்சமாகத் தொகுத்துக் கூற முடியும்;.

~~பொருளியல் உலகு, கருத்தியல் உலகைச் சார்ந்துள்ளது எனக் கருத்து முதல் வாதம் உறுதியிட்டுக் கூறுகிறது||

~~பொருளிலிருந்து தனித்தே சிந்தனை அல்லது கருத்து இருக்க இயலும் என்றும் அப்படித்தான் இருக்கிறது என்றும் கருத்து முதல் வாதம் வற்புறுத்துகிறது. பொருள் என்பதே கிடையாது என்றும் அது முழுமையான மாயை என்றும் உறுதியிட்டுக் கூறுகிறது||

அறிவுக்குப் புலப்படாத வகையில் புதிரானவை உள்ளன என்றும், அறியவெண்ணாதவை உள்ளன என்றும், புலன்உணர்தல், அனுபவம், அறிவியல் ஆகியவற்றினால் உணரப்பட்டதும் அறியப்பட்டதுமானவற்றுக்கும் ~~அப்பாற்பட்டு|| அல்லது ~~அவற்றைக் கடந்தும்|| விடயங்கள் உள்ளன எனக் கருத்து முதல்வாதம் உறுதியிட்டுக் கூறுகின்றது.

இக் கருத்து முதல் வாதத் தத்துவ நோக்கு மனித சமூக வளர்ச்சியோடு இணைந்து வளர்ந்து வந்தமை போன்றே அதற்கு எதிரான தத்துவப் போக்காக பொருள் முதல் வாத நோக்கு தோன்றி வளர்ந்து வந்துள்ளது. பொருள் முதல் வாதம் என்பது உலகம், இயற்கை, மனிதர், பொருட்கள் அனைத்தையும் முதன்மையாகக் கொண்டு அவற்றில் இருந்தே கருத்து உருவாகின்றது எனக் கொள்கிறது. அதாவது பொருட்கள் இன்றி அவற்றின் பிரதி பலிப்பான கருத்து மனதில் தோன்ற முடியாது. கருத்து என்பது பொருட்கள் அற்ற சூனியத்தில் இருந்து உருவாக முடியாது என்பதை பொருள் முதல் வாதம் அடிப்படையாக வற்புறுத்துகி;ன்றது. அதாவது பொருளியல் உலகைச் சார்ந்த அம்சங்களின் வழியே நாம் பரிசோதித்து அறியக் கூடிய, உணர்ந்து கொள்ள முடிகிற கட்டுப்படுத்தக் கூடிய அம்சங்களின் வழியே விளக்கத்தைத்தேடப் பொருள் முதல் வாதம் முயல்கிறது. அதாவது மனிதரின் சமூக வாழ்வே அவர்களது சிந்தனையை நிர்ணயிக்கின்றது என்பதன் வாயிலாக கருத்து என்பது உலக வாழ்வியலில் இருந்து உருவாகிறதே அன்றி அதற்கு அப்பால் அல்ல என்பதைப் பொருள் முதல் வாதம் நிறுவுகிறது.

பொருள் முதல் வாதத்தின் மூன்று அடிப்படை

அம்சங்களைக் கீழ் வருமாறு காணமுடியும்

~~உலகம் என்பது அதன் இயல்பிலேயே பொருளியல் தன்மை கொண்டதெனப் பொருள் முதல் வாதம் எடுத்துக் காட்டுகிறது. இருப்பில் உள்ள அனைத்தும் பொருள் காரணங்களின் அடிப்படையில் தமது இயல்பான தன்மையையும்; உறுதிப்படுத்துகின்றன என்றும், பொருளின் இயக்க விதிகளுக்குட்பட்டு அவை எழுகின்றன என்றும்; வளர்ச்சியுறுகின்றன என்றும் விளக்குகின்றது.||

~~சிந்தனைக்கு வெளிப்புறத்திலும் அதற்குச் சுயேட்சையாகவும் புறநிலை யதார்த்தத்தில் இருக்கும் ஒன்றாகப் பொருள் இருக்கிறது எனப் பொருள் முதல் வாதம் கூறுகிறது. பொருளியல் இருப்பிலிருந்து சிந்தனை தனியே இருக்கிறது என்பதற்கு மாறாக அனைத்து வகைச் சிந்தனை அல்லது கருத்தியல் படைப்புக்கள் எல்லாம் பொருளியல் இயக்கப் போக்குகளின் படைப்புகள் எனப் பொருள் முதல் வாதம் எடுத்துக் கூறுகிறது.

~~உலகமும் அதன் விதிகளும் முழுமையாக அறியப்படக் கூடியவை என்றும் இதுவரை பெரும் பகுதி அறியப்படாதவையாக இருப்பினும் இயல்பிலேயே அறியப்பட முடியாதவை என்று எதுவுமே இல்லை எனப் பொருள் முதல் வாதம் கூறுகிறது.||

இவ்வாறு பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதத்தின் பொய்மையையும் ஏமாற்றுத் தனத்தையும் ஆதார பூர்வமான விஞ்ஞான வழி முறைகளில் நிராகரித்து தனது உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்கிறது. அது தனியே அன்றி இயங்கியலுடன் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் மேலும் ஆற்றலும், முழுமையும் கொண்டதாகியது. அவ்வியங்கியல் என்பது பற்றி மார்க்சிச நோக்கில் சிறிது விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.

இப்பிரபஞ்சம் உலகம் இயற்கை அனைத்திலும் உள்ள சகல பொருட்களின் இயக்கத்தையும் பரஸ்பர தொடர்புகளையும் புரிந்து கொள்வதையே இயங்கியல் கோட்பாடு முன்னிறுத்துகின்றது. ஒவ்வொரு பொருளினதும் இயக்கம், வளர்ச்சி போன்றவற்றை விவாதித்து தர்க்கித்து அதன் சாரம்சமான உண்மைகளைத் தேடிக்கொள்வதை இயங்கியல் வற்புறுத்துகிறது. பண்டைய கிரேக்க தத்துவ ஞானியான சோக்கிரடீஸ் எதையும் ஏன்? எப்படி? எதற்காக? என்பன போன்ற கேள்விகளுக்கு உட்படுத்தி விவாதிப்பதன் மூலமே உண்மைகளைக் கண்டறிய முடியும் எனக் கூறினார். விவாதம் அல்லது தர்க்கம் என்பதினைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான (னுயைடநபழ) என்பதிலிருந்தே (னுயைடநநவநைள) என்னும் ஆங்கிலச் சொல் உருவாகியதாகும். இந்திய தத்தவ ஞானமரபிலும் நியாயம் அதாவது தர்க்கம் என்பதன் ஊடாக உண்மைகளைக் கண்டறியும் பொருள் முதல் வாதப் பார்வை கணாத முனிவரினால் முன்வைக்கப்பட்டது என்பதும் கவனத்திற்குரியதாகும். இத்தகைய இயங்கியல் கோட்பாட்டை மார்க்சும் ஏங்கல்சும் மேலும் விஞ்ஞான பூர்வமாகச்செழுமைப் படுத்திக் கொண்டனர்.

உலக இயற்கை, உயிரினங்கள், மனிதர், சமூக வாழ்வு அனைத்துமே சதா இயங்கிக் கொண்டும், மாற்றமடைந்து கொண்டும் இருக்கின்றன. இவ்வியக்கப் போக்கு என்பது ஒவ்வொரு பொருட்களிலும் அடங்கி இருக்கும் முரண்பாடு கொண்ட எதிர் நிலை சக்திகளுக்கிடையிலான போராட்டத்தின் மூலமே இடம் பெறுகின்றது. இம் முரண்பாடும் போராட்டமும் சர்வவியாபகமாகி இருப்பதன் காரணமாகவே இயக்கம் இடம் பெறுவதுடன் வளர்ச்சி, மாற்றம், பழையன சிதைந்து புதியன தோன்றுதல் என்னும் தொடர் நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இவ்வாறு முரண்பட்ட சக்திகளின் போராட்டம் உள்ள அதே வேளை அவற்றிடையே ஒற்றுமையும் நிலவச் செய்வதையும் காணலாம். இவ் முரண்பட்ட எதிர் நிலை சக்திகள் ஒன்றை ஒன்று நிராகரித்துச் செல்லாது உடனிருந்தே தமது போராட்டத்தை நடாத்தி வருவதையும் காண முடியும். ஒரு பொருளின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும், மாற்றத்;திற்கும் அதற்குள் அடங்கி நிற்கும் எதிர் நிலை சக்திகளின் உள் முரண்பாடும் போராட்டமும் தான் அடிப்படையானதாக இருக்கும். அதேவேளை வெளிப்புறத் தாக்கமும் ஒரு காரணமாகின்றது. உதாரணமாக ஒரு கோழி முட்டை அடைகாக்கப்படும் போது அதன் உட்கருவில் உள்ள ஆண் பெண் விந்துகளே முரண்பட்ட எதிர்நிலை சக்திகளாக இருக்கும். அதே வேளை குறிப்பிட்டளவு வெப்பம் வெளியில் இருந்து கிடைக்கப் பெறுவதாலேயே முட்டை குஞ்சாக மாற்றமடைகின்றது. இவ்வாறு நாம் அறிய முடிந்த ஒவ்வொன்றை எடுத்து நோக்கினும் ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்கும் எதிர்நிலை சக்திகளை இனம் காண முடியும். பௌதீகவியல், இரசாயனவியல், தாவரவியல் போன்ற அனைத்திலும் முரண்பட்ட எதிர்நிலைகளை அடையாளம் காணமுடியும்.

முரண்பட்ட எதிர்நிலை சக்திகளின் போராட்டம் என்பது முழுமையானதாகவும் ஒற்றுமை என்பது நிபந்தனைக்குட்பட்டதாகவும் விளங்கும் அதே வேளை எந்த ஒரு பொருளும் ஏனைய பொருட்களுடன் பரஸ்பரத் தொடர்புடையதாகவே விளங்கி வருகின்றமை கவனத்திற்குரியதாகும். அத்தகைய தொடர்பு இன்றி எந்தப் பொருளும் தனது இயக்கத்தையோ அன்றி வளர்ச்சி மாற்றத்தையோ பெற்றுக் கொள்ள முடியாது என்பதும்; விதியாகின்றது.

இயங்கியலின் மற்றொரு விதி தனது இயக்கப்போக்கில் அளவு குணாம்சமாக மாறும் தன்மையாகும். எதிர்நிலைகளின் போராட்டத்தில் இயக்கம் ஏற்படும் போது அளவில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த அளவு வளர்ச்சியை ஏற்படுத்தி ஒரு குறிப்பிட்ட கட்டம் வந்ததும் அளவு குணாம்சமாக மாற்றமடைந்து புதியன தோன்றுகின்றன. முன் கூறிய முட்டை அடையிடுதலையே உதாரணமாக கொள்ள முடியும். இருபத்தியொரு நாட்களின் பின் முட்டை குஞ்சாக மாற்றம் பெறுவது மேற்கூறிய விதி வழியிலேயேயாகும். அதேபோன்று நீரைச் சூடாக்கும் போது குறிப்பிட்ட நேரத்தின் பின் நீராவியாகும் தன்மை அளவு குணாம்சமாக மாறுவதன் மற்றதோர் உதாரணமாகும்.

இவ்வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் பழைய நிலை மறுக்கப்பட்டு புதிய நிலை தோற்றுவிக்கப்படுகிறது. அடுத்த கட்டத்திலும் அதன் பழைய நிலை மறுக்கப்பட்டு புதியநிலை தோற்றம் பெறுகிறது. ஆனால் அவற்றுக்கிடையிலான இடைத் தொடர்பு முற்றாக அறுபடுவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றும் போது பழைய நிலையை விட மேம்பட்டதாகவே புதிய நிலை உருவாக்கப்படுகிறது. எனவே நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்ற விதி செயலாற்றும் போது புதிய கட்ட வளர்ச்சி என்பது அங்கே எய்தப்படும் நிலை தோன்றுகின்றது. இதுவும் இயங்கியல் போக்கின் ஓர் அம்சமாகும்.

இவ்வாறு இயங்கியலையும் பொருள் முதல் வாதத்தையும் ஒன்றிணைத்து முற்றிலும் விஞ்ஞான அடிப்படை கொண்ட தத்துவ நோக்கினை உருவாக்கிக் கொண்ட மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் அதன் ஊடே மனித சமூக வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டனர். தமது புகழ்மிக்க வரலாற்றுப் பொருள் முதல் வாத நோக்கின் ஊடாக மனித சமூகத்தின் வளர்ச்சிக் கட்டங்களை பகுத்துக் கொண்டனர். சார்ள்ஸ்டார்வின் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி விதிகளைக் கண்டுபிடித்து மனிதரின் தோற்றத்தை தெளிவுடன் முன் நிறுத்திக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக மார்க்கம், ஏங்கல்சும் மனிதரின் தோற்றத்துடன் ஆரம்பித்த மனித குல வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்களை தக்க சான்றுகளுடன் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கில் பகுப்பாய்வு செய்து கொண்டனர். இவ்வாய்வுக்கு இயங்கியல் பொருள் முதல் வாத அடிப்படை விதிகளையே அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

மனித சமூக வரலாற்றின் வளர்ச்சிப் படிகள் குறிப்பிட்ட சில விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு கட்டமாக வளர்ச்சி பெற்று வந்துள்ளமையைத் துல்லியமாக எடுத்து விளக்கிய அவர்கள் நிகழ்காலப் போக்கின் ஊடே எதிர் காலத்தின் வளர் திசையையும் சுட்டிக் காட்டினார்கள். இதனை அடுத்து வரும் பக்கங்களில் நோக்குவோம்.

ஆரம்பகால மனிதர்கள்

6

நமது ஆதிகால மூதாதையர்களான ஆரம்பகால மனிதர்களின் தொடக்க காலத்தை பின்நோக்கி, பல லட்சம் வருடங்களுக்கு முன் நோக்குவோமாயின் நம்புவதற்கு சிரமமான ஒரு வாழ்வு முறையில் இருந்து மனித குலம் வளர்ச்சி பெற்று வந்த வரலாற்றைக் கண்டு கொள்ள முடியும். இவ் ஆரம்பகால மனிதர்களின் வாழ்வு முறையை ஆராய்ந்து தொகுத்தளித்தவர்களில் கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த லூவிஸ் எச் மார்கன் (1818 - 1881) பாகோபென் யோன்யாக்கப் (1818 - 1887) ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்களது ஆய்வுகளை அடிப்படையாகக் கெண்டெ கார்ஸ் மார்க்ஸ் (1818 - 1883) பிரெட்றிக் ஏங்கல்ஸ் (1818 - 1895) ஆகியோர் மனித குலத்தின் சமூக வளர்ச்சிக் கட்டங்களை தமது வரலாற்றுப் பொருள் முதல் வாத கண்ணோட்டத்தின் ஊடேவகுத்து அளித்தனர்.

ஆரம்ப கால மனிதர்களின் வாழ்வையும் அவர்களது வளர்ச்சிக் கட்டங்களையும் மூன்று முக்கிய கட்டங்களாகப் பிரித்துக்கொள்ள முடிந்தது. 1. காட்டுமிராண்டி நிலை, 2. அநாகரிக நிலை 3. நாகரீக நிலை. இவற்றின் ஒவ்வொன்றின் உப பிரிவாக கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் எனவும் வகுத்துக் காட்டப்பட்டது.

காட்டு மிராண்டி நிலையின் கடைக் கட்டம் எனக் கூறப்படும் நிலையானது மனிதக் குரங்குகளிலிருந்து மனிதர்களாக மாறிய ஆரம்ப கட்டத்தையே குறிக்கின்றது. மனிதர்கள் உஷ்ணப் பிரதேசங்களில் அல்லது அரை உஷ்ணப் பிரதேசங்களில் அல்லது அரை உஷ்ணவலயக் காடுகளில் தான் தமது ஆரம்ப வசிப்பிடங்களைக் கொண்டிருந்தனர். மனிதர்களைக் கொன்று இரையாக்கும் கொடிய மிருகங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அவர்கள் அதிகளவுக்கு மரங்களில் தான் வசித்து வந்தார்கள். காய், கனிகள், விதைகள், கிழங்குகள் தான் அவர்களின் உணவாக விளங்கின. இந் நிலை பல்லாயிரக் கணக்கான வருடங்களாக நீடித்து வந்தன. இக்கால கட்டத்தில் மனிதர்கள் அடைந்த ஒரே முன்னேற்றமும், சாதனையும் யாதெனில் ஓசைச்சீPருள்ள பேச்சு அமையப் பெற்றதுதான். அத்தகைய பேச்சு அல்லது மொழி என்பதன் ஆரம்ப கட்டத்;தை இன்றுள்ள பேச்சுடன் எவ்வகையிலும் ஒப்பிட முடியாது. சைகைகள் காட்டி வந்த மனிதரின் தாடை எலும்புகள் ஓசைச் சீருள்ள பேச்சு உருவாகுவதற்கு ஏற்ப மாற்றமடைந்த பல ஆயிரம் வருட நடைமுறையாவ பேச்சுத் திறனை தமது ஆரம்ப நிலையாக அமைத்துக் கொண்டனர். இந்நிலையில் உடை என்பதோ ஒழுங்கான எந்த நிரந்தர இருப்பிடமோ அவர்கள் மத்தியில் இருக்கவில்லை.

மேற்கூறிய கடைக் கட்டமானது பல்லாயிரம் வருடங்கள் கடந்த பின்பே அடுத்து வந்த இடைக் கட்டத்தினுள் மனிதர் பிரவேசித்தனர். இக்காலத்தில் மனிதர்கள் நீர் நிலைகளில் உயிர் வாழ்ந்த மீPன், நண்டு, சங்கு போன்றவற்றை உணவாகக் கொள்ளும் நிலைக்கு வந்தனர். அதே வேளை தீயையும் கண்டு பிடித்தனர். மீன் உணவும் வேக வைக்கும் தீயின் உபயோகமும் ஒரு புதிய வளர்ச்சியை தோற்றுவித்தது. இதனால் நதிகளின் வழியாக உலகின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கும் அவர்கள் இடம் பெயர்ந்தார்கள். ஒருகுறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர் அதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகவே புதிய பிரதேசங்களுக்குப் பரவத் தொடங்கினார். இக்காலமே பாலியோலிதிக்யுகம் எனக் கூறப்படும் ஆரம்ப கற்காலமாகும். சீர் அமைவு இல்லாத கரடு முரடு கொண்ட கல்லாயுதங்களும் அவை சார்ந்த கருவிகளும் இக்காலத்துகுரியனவாகும். இக் காலத்தில் வேட்டையாடுதல் ஒரு முழுமையான அல்லது நிச்சயமான தொழிலாக இருக்கவில்லை. உணவுக்கு போதாமை ஏற்பட்ட போதெல்லாம் மனிதர்களையே கொன்று உண்ணும் முறை இக்கால கட்டத்துக்குரிய ஒன்றேயாகும். இக்கட்டத்தில் இலைகள், மரப்பட்டைகள் உடைகளாயின.

காட்டு மிராண்டி நிலையின் இறுதிக்கட்டமான தலைக்கட்டத்தில் நீPண்ட காலத்தில் சேகரிக்கப்பட்ட மனித அனுபவத்தினாலும், புத்திக் கூர்மையாலும் அக்கால மனிதரினால் அம்பும், வில்லும் நாணும் கண்டு பிடிக்கப்பட்டது. அவை கண்டறியப்பட்டமை மனித வரலாற்றில் அன்றைய மிகப் பெரும் சாதனையாக அமைந்தது ~~அநாகரீக நிலைக்கு எப்படி இரும்புவாள் நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதோ, நாகரீக நிலைக்குத் துப்பாக்கி வகைகள் எவ்வாறு நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதோ அது போலவே காட்டுமிராண்டி நிலைக்கு வில்லும், அம்பும்நிர்ணயமான ஆயுதமாக விளங்கின.|| (பி. ஏங்கல்ஸ்) அத்துடன் நன்கு சீரமைக்கப்பட்ட கற்கோசியும், நெருப்பும் கொண்டு மரத்தைக் குடைந்து, ஓடம்; செய்யப்பட்டதுடன் கைவிரல்களால் துணி நெய்யவும் அவர்களால் முடிந்தது. ஆனால் மட்பாண்டங்கள் எதுவும்; இக்காலத்தில் உருவாக்கப்படவில்லை. இருப்பிடங்கள் அமைப்பதற்கு ஏற்ற மரங்கள் உபயோகிக்கும் முறை இக்காலத்தில் தொடங்கப்பட்டது.

வில்லும், அம்பும் சீர் அமைவு பெற்ற கல்லாயுதங்களும், தீயும், மாமிச உணவும், இவற்றுடன் பேச்சுத் திறனும் பெற்றுக் கொண்ட மனிதர்கள் அடுத்த கட்டமான அநாகரீக நிலைக்குள் பிரவேசித்தனர். இவ் அநாகரீக நிலையின் ஆரம்பமான கடைக்கட்டத்தில் மட்பாண்டப் பொருட்கள் செய்யும் நிலைக்கு மனிதர் வளர்ந்தனர். ஆரம்பத்தில் கூடைகள், மரத்தாலான ஏதனங்கள் தீயில் எரிந்து விடாமல் அவற்றின் மீPது களி மண் பூசிக் கொண்ட நிகழ்வின் வளர்ச்சியாகவே மட்பாண்டங்கள் செய்யப்பட்டன.

இவ் அநாகரீக நிலைக்குள் மனிதர்கள் பிரவேசிக்கும் வரை பூமிப் பரப்பில் காணப்பட்ட அனைத்து மனிதர்களிடையேயும் ஏறத்தாள ஓரே வளர்ச்சி காணப்பட்டது. ஆனால் அநாகரீக நிலை தொடங்கிய பின் பல்வேறு நிலப்பரப்புக்களில் வளர்ச்சி வௌ;வேறு அளவுகளில் இடம்பெற்றது. இருப்பினும் மிருகங்களை வளர்த்து பழக்;குவதும், பயிர் செய்யப்பட்டதும் அநாகரீக நிலையின் பொதுக்குணாம்சமாகியது.

அநாகரிக நிலையின் இரண்டாவது கட்டமான இடைக்கட்டத்தில் அமெரிக்கக் கண்டத்தில் சுதேசிய அமெரிக்க மனிதரிடையே நீர்ப்பாசனத்தைக் கொண்டு பயிர்ச் செய்கை செய்யப்பட்டது. அங்கு பெருமளவில் மக்காச் சோளப் பயிர் கண்டு பிடிக்கப்பட்டு பயிரிடப்பட்டது. மேலும் ஓரிருவகை காய்களும் பயிரிடப்பட்டன. சோளப் பயிர்ச் செய்கை அதுவரை இருந்து வந்த உணவு முறையில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வந்தன. அதே போன்று கட்டிடங்களை கட்டும் ஆரம்ப முயற்சியிலும் ஈடுபட்டனர். இரும்பு தவிர்ந்த மென்மையான உலோகங்களையும் கண்டு கொண்டனர். அதனால் கல்;லாயுதங்களே தொடர்ந்தும் அவர்களது பிரதான ஆயுதமாக விளங்கியது.

ஏறத்தாள இதே காலப் பிரிவில் இந்திய உபகண்டப் பகுதிகளில் வாழ்ந்த மனிதர்களிடையே ஆற்று நீரைக் கொண்டு பயிர் செய்யும் முறை காணப்பட்டது. அத்துடன் கட்டிடங்கள் கால்வாய்கள் அமைத்துக் கொண்டு வந்தமைக்கான தடயங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன, அதாவது ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இந்தியப் பகுதிகளில் ஆற்றங்கரைகளை ஒட்டிய பிரதேசங்களில் பயிர்ச் செய்கையும் அதனையொட்டிய வளர்ச்சிகளும் ஏற்பட்டிருந்தன.

ஆனால் இந்திய உபகண்டத்திற்கு கிழக்கே வாழ்ந்து வந்த ஆரியர்கள் எனப்படும் மனிதர்களிடையே பயிர்த் தொழிலோ அன்றி கட்டிடங்கள் அமைக்கும் நிலைமைகளோ இருக்கவில்லை. ஆனால் அவர்கள் மிருகங்களைப் பழக்குவதிலும் பெருமளவு வளர்ப்பதிலும் முன்னேற்றமடைந்திருந்தனர். இவர்களது மந்தை வளர்க்கும் வாழ்க்கை முறையால் அவற்றுக்குரிய தீவனங்களைப் பெறுவதற்காக புல் வெளிகளைத் தேடிச் செல்பவர்களாகவே காணப்பட்டனர். இதனாலேயே அவர்களில் சில பிரிவினர் மேற்கு நோக்கியும்;, சில பகுதியினர் இந்தியா நோக்கியும் நகர்ந்தனர். இவர்களது மந்தை வளர்க்கும் தொழிலால் போதியளவு இறைச்சியும் பாலும் பெறக் கூடியவர்களாக இருந்தனர். இவை இம் மனிதரின் உடல் வளர்ச்சிக்கு புதிய ஊட்டமாக அமைந்தது. தனியே தாவர உணவை உண்டு வந்த மனிதர்களை விட உடல் வளர்ச்சியிலும் பலத்திலும் வித்தியாசமானவர்களாக இருக்கச் செய்தது.

இவ் ஆரியர்கள் இடம் நகர்ந்து இந்தியப் பகுதிக்குள் வந்த போது ஏற்கனவே அங்கு வாழ்ந்த மனிதர்கள் - திராவிடர்கள் பயிர்ச் செய்கையில்; மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதனால் தமது கால் நடைகளுக்கு நிரந்தரத் தீனியைக் காணவும், அதனையொட்டி அப் பிரதேசங்களில் நிலை கொண்டு அவர்கள் பயிர்ச் செய்கையிலும் ஈடுபடத்தொடங்கினர்.

அநாகரிக நிலையின் இறுதிக் கட்டமான தலைக்கட்டத்தில் தான் மனிதர்கள் இரும்பின் உபயோகத்தைக் கண்டறிந்தனர். அதுவரை மேற்கிலோ, கிழக்கிலோ அதுகண்டறியப்படவில்லை. இரும்பின் கண்டு பிடிப்பானது கோடரி, மண்வெட்டி, கலப்பை என்பனவற்றின் உபயோகத்திற்கு வழிவகுத்தது. இதனால் பயிர்ச் செய்கை மிகவும் பரந்தளவில் செய்வதற்கு ஏதுவானது. இக்கட்டத்திலேயே மொழியின் வளர்ச்சியும் இடம் பெற்றது. எழுத்துக்களை வரிவடிவத்தில் எழுதும் முயற்சிகள் தோன்றின. இவையாவும் மனிதர்களை நாகரீகநிலைக்குள் பிரவேசிக்கும்; படி செய்தது. இலக்கியம், கலை என்பவற்றின் தோற்றம் இக்காலத்துக்குரியனவாகின.

மேற் கூறியவற்றைப் பொதுவாகத் தொகுத்துக் கொள்வதனால் கீழ் வருமாறு கூறமுடியும். உபயோகத்திற்குத் தயாராக இருந்த இயற்கைப் பொருட்களை உபயோகிப்பதே மிகப் பெரும்பான்மையாயிருந்த ஒரு நிலையே காட்டு மிராண்டி நிலையாகும். கால் நடைவளர்ப்பு, நிலச்சாகுபடி பற்றிய அறிவு பெறப்பட்டமையும், மனித நடவடிக்கைகளின் மூலம் இயற்கையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்யும்; வழிமுறைகள் கற்றுக்கொள்ளப்பட்ட நிலையுமே அநாகரீக கட்டமாகும். நாகரீகநிலை என்பது இயற்கைப் பொருட்களை மேலும் பயன்படுத்திக் கொள்வது பற்றியும், இரும்புத் தொழில், கலை சம்பந்தமாகவும் அறிவு பெறப்பட்ட நிலையாகும். ஆரம்ப கால மனிதர்கள் இப்பூமிப் பரப்பின் பல்வேறு பிரதேசங்களிலும் மேற்குறித்த கால கட்டங்களின் ஊடாக பல லட்சம் வருடங்களில் தமது மனித குல வளர்ச்சியைப் பெற்று வந்தனர் என்பதே சாரம்சமாகும்.

ஆரம்பகால மனிதர்கள் மேற்கூறிய காலகட்டங்களில் ஊடேவளர்ச்சி பெற்று வந்த பொழுது அவர்களிடையே குடும்பம் எவ்வாறு உருவாக்கம் பெற்றது என்பதைக் காண்பது அவசியம். குடும்பம் என்பது இன்றிருப்பது போன்றோ அல்லது ஓர் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்றோ என்றுமே ஒரே தன்மையுடையதாக இருக்கவில்லை. அதே போன்று மனிதர் தோன்றியவுடன் குடும்பம் என்பது தோன்றவில்லை. சமூகவளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தோற்றம் பெற்ற குடும்பமானது, காலத்திற்குக் காலம் மாற்றமடைந்து வந்திருக்கின்றமையை வரலாறு முழுவதும் காணலாம்.

ஆரம்பகால மனிதர்களிடையே நிலவிய பால்புணர்ச்சியானது ஆண், பெண் என்னும் அடிப்படையில் தான் இருந்ததே தவிர வேறு எந்த உறவு முறையிலும் அல்ல. ஒரு ஆண் எந்தப் பெண்ணையும் அதே போன்று ஒரு பெண் எந்த ஆணுடனும் புணர்ச்சி செய்து கொள்ள முடியும்;. இதற்கு தாய், தந்தை பிள்ளைகள் என்ற உறவு முறைகள் எவ்விதத் தடையாகவும் இருக்கவில்லை இதன் வளர்ச்சிப் போக்காக ஒரு தலைமுறையைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், கணவன் மனைவியர்கள் ஆவார்கள். அவ்வாறே அடுத்தடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் கணவன், மனைவியர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரும் பொதுக் கணவன் மனைவியர்களாகவே விளங்கினர். இக் காலத்தையே ஆய்வாளர்கள் இரத்த உறவுக் குடும்பம் எனக் கணித்தனர்.

இவ் இரத்த உறவுக் குடும்ப முறை காலப் போக்கில் மாற்றமடைந்து கொண்டது. தாய், தந்தையர் - பிள்ளைகளிடையே பால் புணர்ச்சி செய்வது தடை செய்யப்பட்டது. அதுவே ~பூனலுவா| குடும்ப உறவு முறையைத் தோற்றுவித்தது. இக் குடும்ப அமைப்பு முறை மற்றொரு முன்னேற்றமாக ஒரு தாய் வயிற்றில பிறந்த சகோதரர்கள் புணர்ச்சி செய்வதைத் தடுத்தது. இதனால் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரிகள் வேறாகவும், சகோதரன்மார் வேறாகவும் அதாவது புதிய குடும்பங்களின் மூலக் கருவாக அமையும்; நடைமுறை வந்தது. ஆனால் ரத்தஉறவு அற்ற வகையில் பொதுவான கணவன்மார்களாகவும் பொதுவான மனைவிமார்களாகவுமே இருந்த குடும்ப முறையே மேற்கூறிய பூனலூவா குடும்ப அமைப்பாகும். ப10னலூவா என்பதன் அர்த்தம் ~அந்தரங்கக் கூட்டாளி| என்பதாகவே இருந்தது. ஒரு குறிப்பிட்ட குடும்ப வட்டத்தினுள் இருக்;கிற எல்லாக் கணவன்மார்களும், மனைவியர்களுக்குமிடையே பொது உறவு இருந்தது. இவர் அல்லது இவள் இன்னாருடைய கணவன் அல்லது இன்னாருடைய மனைவி என்பது அன்றைய குடும்பத்தில் இருக்கவில்லை. பொதுவான கணவன்மார்களும், மனைவியருமாகவே இருந்தனர். ஆனால் அதிலிருந்து அந்த மனைவியரின் சகோதரர்கள் முதலில் கூடப்பிறந்தவர்கள் விலக்கப்பட்டனர். பின்பு இரத்த சம்பந்தமுள்ள பிற தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களும் விலக்கப்பட்டனர். மறு புறத்தில் அந்தக் கணவன்மார்களின் சகோதரிகளும் விலக்கப்பட்டனர்.

இக்குடும்ப அமைப்பு முறையைத் தொடர்ந்தே இணைக் குடும்ப முறை தோற்றம் பெற்றது. இப்போது பரஸ்பரம் மணம் கொள்ள முடியாது போய்விட்ட சகோரர்களினதும். சகோதரிகளினதும் எண்ணிக்கை பெருகி வந்த காரணத்தினால் இணைமணக் குடும்ப முறை நிலை பெறுவதாயிற்று. இக் கட்டத்தில் ஒருவன் ஒருத்தியுடன் (விருப்பமான ஒருவரை மனைவியாக கணவனாகக் கொண்டு) வாழும் அதே வேளையில் வேறு வேறு பேர்களுடன் பலதார மணத்தில் ஈடுபடுவதும் சோரம் போவதும் சாதாரணமாகவே இடம் பெற்று வந்தன. ஆனால் காலப்போக்கில் ரத்த உறவு கொண்ட குலத்தினரிடையேயும்; கணத்திடையேயும் திருமணம் செய்வது தடுக்கப்பட்டது. வௌ;வேறு குல கணங்களுக்கிடையிலான மண உறவு என்பது வீரியம் உள்ள மனிதர்களை உருவாக்கி வைத்த நிலை கண்டுகொள்ளப்பட்டது. இக்கால கட்டத்திலே தான் கண அமைப்பு முறை உறுதியாக்கப்படுகிறது. ~~தாய்த் தரப்பில் இருந்து வந்த மிகவும் தூரத்தாயாகிய உறவுள்ளவர்களையும் உள்ளிட்டுள்ள எல்லாச் சகோதர சகோதரிகளிடையேயும் புணர்ச்சி தடை செய்யப்படுவது நிலை நாட்டப்பட்டுவிட்டால் போதும், அத்துடன் மேற்குறிப்பிட்டுள்ள குழு ஒரு கணமாக முழு மாற்றம் கண்டு விடும். அதாவது தமக்குள் மணம் புரிந்து கொள்ள அனுமதிக்கப்படாதிருக்கின்ற பெண் வழி ரத்த உறவினர்களைக் கொண்ட ஒரு குறுகிய வட்டமாகத் (கணம்) தன்னை அமைத்துக் கொள்கிறது.|| (பி. ஏங்கல்ஸ்)

இக்கண அமைப்பின் தன்மை தாயுரிமைக் கணமாகவே இருந்தது. தாய்வழி மூலமே பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டனர். இவள் அல்லது இவன் இந்தத் தாயின் பிள்ளை என்றே அழைக்கப்பட்டனர். தாயே யாவற்றிலும் தலைவியாக அந்தஸ்துடன் இருந்து வந்தாள். இத்தகைய கணம் தான் அன்றைய சமூதாயத்தின் அத்திவாரமாகத் திகழ்ந்தது. இக்கால குடும்ப-கண அமைப்பில் பெண்கள் யாவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆண்களே ஏனைய கணங்களில் இருந்து வந்தவர்களாகக் காணப்பட்டனர். அதனால் பெண்கள் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தனர்.

இப் பொதுவுடமைக் கண அமைப்பு முறை தனிச் சொத்துடமையின் காரணமாகவும், வர்க்கங்களின் தோற்றத்தாலும் உடைவு பட்டுச்சென்றது. அக் கட்டத்திலேயே ஒரு தார மணமுறை என்பதும் வந்து சேர்ந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற மணமுறை வடிவம் சமூக ரீதியாக நிலை நாட்டப்பட்டது. இத்தகைய கணத் தகர்வும் ஒரு தார மண முறையும் பெண்களை மீளா ஒடுக்கு முறைக்குள் தள்ளியது. நாகரீக நிலைக் கட்டத்தில் தோற்றம் பெற்ற அடிமை முறையும் ஒரு தார மண முறையும் சம காலத்தில் சமூக உருவாக்கம் கண்டது. இவ் ஒரு தாரணமுறை என்பது ஆண் பாலினர் பெண் பாலினரை அடிமைப்படுத்தியதாக அமைந்தது. இவ் ஒரு தார மணமுறை முற்றிலும் பொருள் சார்ந்த - தனிச் சொத்துடமை தழுவியதோர் முறையேயாகும். இவ்விடத்திலே அதுவரை நிலவி வந்த தாய்வழி குடும்ப முறை தகர்க்கப்பட்டு தந்தை வழிக் குடும்ப ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது. ~~தாயுரிமை தூக்கியெறியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். வீட்டிலேயும் ஆட்சிச் ஆத்திரத்தை ஆண்கள் கைப்பற்றினர். பெண்கள் இழி நிலைக்குத் தள்ளப்பட்டனர். பணிமகளாக்கப்பட்டனர். ஆணின் காம இச்சைக்கு அடிமையாக்கப்பட்டனர். கேவலம் குழந்தையைப்பெறும் சாதனமாக ஆக்கப்பட்டனர். ~~வரலாற்றில் தோன்றுகின்ற முதல் வர்க்க விரோதம் ஒருதார மணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே விரோதம் வளர்வதோடு ஒன்றுபடுகிறது. முதல் வர்க்க ஒடுக்கு மறையோ பெண்பாலை ஆண்பால் ஒடுக்கும் ஒடுக்கமுறையோடு ஒன்றுபடுகிறது.|| (பி. ஏங்கல்ஸ்) இவ்வாறு இன்று வரை தொடர்ந்து செல்லும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது நீண்ட வரலாற்று வேர்களைக் கொண்டதோர் விடயமாகி நிற்பதைக் காணலாம். இதனைக் கூர்ந்து கவனிக்கும் போது தனிச் சொத்துடமையினதும் வர்க்கங்களினதும் தோற்றத்துடன் உருவாகிய பெண் ஒடுக்கு முறை அத்தகைய பேராசை மிக்கதும் கேவலமானதுமான அமைப்பு முறை ஒழிக்கப்படுவதன் மூலமே முடிவுக்கு கொண்டு வர முடியும்.

மனித சமூக வளர்ச்சியின் நீண்ட நெடுங்காலப் போக்கில் குடும்ப அமைப்பு முறையில் மூன்று முக்கிய மண வடிவங்களும் அவற்றுக்கிடையேயான துணை வடிவங்களும் இருந்து வந்திருப்பதைக் காணலாம். காட்டு மிராண்டி நிலைக்கு-குழு மணம், அநாகரீக நிலைக்கு-இணை மணம், நாகரீக நிலைக்கு-ஒருதார மணம். இதன் துணை வடிவங்களாக சோரநாயக முறையும், விபசாரமும் பெண்ணடிமைகள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதும், பல தார மணமும் இடைப்பட்டகாலப் பகுதிகளில் இருந்து வந்திருக்கின்றன. ஆதிகாலக் குடும்ப அமைப்பு முறைகளையும், குழு மணம், இணைமணம், ஒருதாரமணம் அவற்றோடிணைந்த துணை வடிவங்களையும் இரு பெரும் இதிதாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலும் அதன் பின் ஒவ்வொரு காலகட்டங்களிலும் தோற்றம் பெற்ற புராணங்கள், தொன்மையான இலக்கியங்களிலும் வரலாற்று ஆய்வுகளின் மூலம் கண்டு கொள்ள முடியும். இவற்றுக்கு இன்றைய சூழலுக்கு ஏற்ப உரை விற்பனர்கள் எத்தகைய விளக்கமளித்துள்ள போதிலும் மகாபாரத்தில் குந்தி தான் நினைத்த போது பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட நடைமுறையும், ஐவருக்கும் ~~பத்தினியாக|| திரபதை இருந்ததும் ஒரு வரலாற்றுக் கட்டத்தின் யதார்த்த வாழ்வின் பிரதிபலிப்பேயாகும். இது போன்ற பழமை வாய்ந்த மேற்குலகின் இதிகாசக் கதைகளிலும் நிறையக் காணமுடியும். இவ்வாறு தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டதே இன்றைய குடும்ப அமைப்பு முறையாகும். அன்றைய ஆரம்ப காலக் குடும்பத்திற்கும் இன்றைய நவீன காலக் குடும்பத்திற்கும் இடையில் ஒரு பாரிய வேறுபாட்டைக் கண்டு கொள்ள முடியும். அதாவது அன்றைய குடும்பம் நாகரீக நிலைக்குள்-அடிமை சமுதாய நிலைக்குள் புகும் வரைசமுதாய அடித்தளமாக இருந்ததே அன்றி ஒரு பொருளாதாரக் கூறாக இருக்கவில்லை. தனிச்சொத்துடமையின் தோற்றத்தின் பின்பே தனிப்பட்ட குடும்பம் சமுதாயத்தின் பொருளாதாரக் கூறாகிக் கொண்டது என்பது நோக்குதற்குரியதாகும்

புராதன பொதுவுடமை அமைப்பு

7

ஆரம்பகால மனிதர்கள் மத்தியில் குடும்ப அமைப்பு முறை தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டு மாற்றமடைந்து வந்த சூழலிலேயே குலங்களும், கணங்களும் உருவாக்கம் பெற்றன. இவையனைத்தும் தாயுரிமைக் (தாய் வழிக் குடும்பம்) குலங்களாகவும், கணங்களாகவும் காணப்பட்டன. இக்கண அமைப்பு முறை காட்டுமிராட்டி நிலையின் இடைக்கட்டத்தில் தோன்றி அதன் தலைக்கட்டத்தில் வளர்ந்து, அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில் தமது முழுவளர்ச்சி நிலையை எட்டியது. வௌ;வேறு காட்டுப் பிரதேசங்களில் நெருக்கமற்று வாழ்ந்த இம் மனிதர் தத்தமது கணங்களுக்கு மிருகங்களின், பறவைகளின் பெயர்களை வைத்திருந்தனர்.

ஒரு கணத்தின் வாழ்விடத்துக்கு அப்பால் மற்றொரு கணம் வாழ்ந்தது. நிலம் பொதுவாகவும், போதியளவும் இருந்தது. பரந்த காடுகளும் சிறு அளவு விவசாய நிலங்களும் இருந்தன. ஆண், பெண் பிரிவினருக்கிடையில் வேலைப் பிரிவினை இருந்தது. ஆனால் அவை ஏற்றத் தாழ்வு கொண்டவை அல்ல. ஆண்கள் வேட்டையாடுதல், மீன் பிடித்தல், உணவுக்குரிய கருவிகளைச் சேகரித்தல் போன்றவற்றைச் செய்தனர். பெண்கள் உணவும், துணியும் தயாரித்தனர். வீpட்டின் சகலவற்றுக்கும் பெண்கள் பொறுப்பாக இருந்தனர். ஆண்கள், பெண்கள் என்ற அதிகார வேறுபாடோ, ஆதிக்க நிலைகளோ தோன்றவில்லை. இருபாலரும் அந்தந்ததுறையில் எஜமானர்களாக விளங்கினர். கருவிகள் அவரவர் பொறுப்பில் இருந்ததே தவிர தனிச் சொத்துடமை வடிவில் எதுவும் இருக்கவில்லை. வீட்டு நிர்வாகம் பொதுவுடமை நிர்வாகங்களாகக் காணப்பட்டன. அவரவர் உற்பத்தி செய்த பொருட்கள் யாவும் அவரவருக்கே சொந்தமாக இருந்தன. அத்துடன் கணத்தின், குலத்தின் அமைப்புமுறை சமத்துவம் மிக்கதாக அமைந்திருந்தது. யாவரும் கலந்து கொள்ளும் வகையில் கூட்டமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. கணத்தின் தலைவராக ஒருவர் எல்லோராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் ஆண், பெண் அனைவரும் தமது வாக்குகளை அளித்தனர். விரும்பிய போது அத்தலைவரை விலக்குவதற்கும் கணத்திற்கு உரிமை இருந்தது. அதே போன்றே யுத்த காலத்திற்கு உரிய ஒரு தலைவரும் தெரிவு செய்யப்பட்டார். இத்தலைவர்களில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் இருக்கவில்லை. அதே வேளை தலைமையின் வாரிசு முறை அல்;லது பரம்;பரை வழிகள் எதுவும் அன்று கடைப்பிடிக்கப்படவில்லை. தேவைப்பட்ட போது கணத்தின் தலைவர்கள் கூட்டான முடிவிற்கிணங்க நீக்கப்பட்டனர். புதியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அப்பொதுவுடமைக் கண குல அமைப்பில் ஆயுதங்கள் சுய பாதுகாப்பிற்கு இருந்தன. ஆனால் ஆயுதம் ஏந்திய காவலர்களோ, இராணுவமோ இருக்கவில்லை. நீதிமன்றம், சிறைச்சாலை, மற்றும் ஆணையிடும் அதிகார அமைப்புகள் எதுவுமே காணப்படவில்லை. இக்கண அமைப்பு முறையில் சுயநலமும், பேராசையும், பெருமையும் நிலவவில்லை. ஒருவரை ஒருவர் அடக்க வேண்டும், சுரண்டவேண்டும் என்ற எண்ணம் எளவில்லை. ஒவ்வொருவரும் அன்றைய நிலையில் தத்தமக்கு வேண்டியவற்;றை கூட்டாகச் சேர்ந்து உழைப்பில் ஈடுபட்டுப் பெற்றுக் கொண்டனர். அவ்வாறு பெற்றுக் கொண்டவற்றைத் தேவைக்கு ஏற்றவாறு பகிர்ந்தும் கொண்டனர். எனவே தனிச் சொத்துடமையற்ற, வர்க்கங்கள் இல்;லாத மனிதரை மனிதர் ஒடுக்காத ஆரம்பநிலை கண்ட மனித தர்மம் அன்று நிலவியது. அதனையே ஆதிகாலப் பொதுவுடமை சமூக அமைப்பு எனச் சமூக விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர். இலக்கணங்களும் குலங்களும் பொதுவுடமைத் தன்மைவாய்ந்த சமூக அமைப்புகளாக உலகின் பல்வேறு நிலப்பரப்புகளிலும் நிலவி வந்திருக்கின்றன. அவை வௌ;வேறு அளவுகளில் மாறுபட்டிருப்பினும் சாரம்சத்தில் பொதுக்குண இயல்புடையனவாகவே விளங்கி வந்தன. இன்றும் கூட ஆபிரிக்கப் பழங்குடி மக்களிடையேயும், வௌ;வேறு நாடுகளின் பழங்குடிகளிடையேயும் இவ்அமைப்பு முறைகளின் அம்சங்கள் இருந்து வருவதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர் இந்தியப் பகுதிகளில் குறிப்பாக தமிழகப் பரப்பிலே இவ் அமைப்பு முறை நிலவியதற்கான ஆதாரங்களைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சிலவற்றின் மூலம் சமூகவியல் அய்வாளர்கள் எடுத்துக் காட்டி வருகின்றனர்.

மனித குல வரலாற்றில் அநாகரீக நிலையின் கடைக்கட்டத்தில் தமது முழு வளர்ச்சியைப் பெற்றிருந்த பொதுவுடமைக் கண, குல, அமைப்பு முறை இடைக்கட்டத்தில் உருவாகிய உற்பத்தி வளர்ச்சியின் காரணமாக பலவீனம் காணத்தலைப்பட்டது. அத்தகைய வளர்ச்சிப் போக்கு தலைக்கட்டத்தில் முழுமை பெற்று நாகரீக நிலையின் தோற்றத்துடன் அப் பொதுவுடமை சமூக அமைப்பினை முற்று முழுதாகத் தகர்த்துக் கொண்டது.

பொதுவுடமைக் கண, குல அமைப்பு முறையின் வளர்ச்சியானது - கால் நடைகளை வளர்ப்பது, விவசாயம் செய்வது, வீட்டுக் கைத்தொழில்கள் செய்து கொள்வது போன்றவற்றால் சகல துறைகளிலும் உற்பத்தி பெருகியது. ஒவ்வொருவரின் உழைப்புத்திறன் வலுப் பெற்று வேலையின் அளவு கூடியது. கணங்களுக்கிடையிலான யுத்தங்களில் தோல்வி பெற்று கைப்பற்றவர்களின் மூலம் உழைப்பு சக்தியும்; அதிகரித்தது. ஆரம்ப கட்டங்களில் யுத்தத்தில் கைப்பற்றப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பின் வந்த கட்டத்தில் அவ்வாறு கைதிகளாக்கப்பட்டவர்கள் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் சொத்துக்களில் அதிகரிப்புக் கண்டன. கால் நடைகளும் விவசாயக் கருவிகளும், நிலமும் அச்சொத்தாக விளங்கின. அதிகரித்து வந்த அச் சொத்துடமைக்கு யார் உரிமையுடையதாக இருப்பது என்ற ஒருபோட்டிநிலை உருவாக்கியது. இந்நிலையில் வீட்டுக்கு வெளியே கால் நடைகளை பராமரித்தும், விவசாயத்தில் ஈடுபட்டும் வந்த ஆண்களே அச்சொத்துக்களின் உரிமையாளர்களாகிக் கொண்டனர். அதே போன்று கால் நடைகளை மையமாக வைத்து பண்டமாற்று செய்ததன் மூலம் கிடைத்த உபரியும், அடிமைகளை உழைப்பில் ஈடுபடுத்தியதன் மூலம் அவ் அடிமைகளுக்கும் ஆண்களே உரிமையுடையவராகிக் கொண்டனர். அது வரை வீட்டுக்கு வெளியே எஜமானனாக வியங்கிய ஆண்கள் வீட்டிலும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். சொத்துடமையின் - கால்நடைகள், கருவிகள், பயிர் செய்நிலம் என்பனவற்றின் சொந்தக்காரர்களாகியதுடன் கூடவே தமது சொத்துடமைக்கு வாரிசுகளை நிர்ணயிக்;கும் அவசியத்திற்கும் வந்தனர். அதனின்று எழுந்ததே ஒரு தார மண முறையும் தந்தை வழி குடும்ப அமைப்புமாகும். அது வரை நிலவி வந்த தாய் வழி குடும்ப அமைப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பொதுவுடமைக்கண, குல அமைப்பு தனது இருப்பை இழக்கும் நிலைக்கு உள்ளாகியது.

இவ்வாறு அநாகரீக நிலையின் தலைக்கட்டத்தில் ஒவ்வொரு கணத்திலும் நிலவி வந்த பொது சொத்துடமைக்குப் பதிலாக குறிப்பிட்டவர்களின் கைகளில் தனிச் சொத்துடமையாகும் நிலை வளர்ந்தது. அந்நிலை வெறுமனே சமாதானமாகவோ அன்றி நல்லெண்ண அடிப்படையிலேயோ இம்மாற்றம் இடம் பெறவில்லை ~~மிகவும் இழிந்த நலன்கள் - ஈனத்தனமான பேராசை, மிருகத் தனமான காம வெறி, பொருளாசை மிக்கப் பணப்பித்து, பொது சொத்துக்களை சுய நலத்திற்காக கொள்ளையிடுதல் ஆகியன புதிய நாகரீக சமுதாயத்தை, வர்க்க சமுதாயத்தை கட்டியம் கூறி வரவேற்கின்றன. மிக மிகக் கொடுமையான வழி வகைகள் - திருட்டு, கற்பழித்தல், ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் ஆகியவை - வர்க்கங்கள் அற்ற பழைய கண சமுதாயத்திற்கு குழி பறித்து அதனை குப்புறத் தள்ளி விடுகின்றன.|| (பி. ஏங்கல்ஸ்) மேற்கூறிய வழியில் தான் பொதுவுடமைக் கண அமைப்பு முறை நகர்க்கப்பட்ட காலமுதல் இன்று வரை (அண்ணளவாக 3000 ஆண்டுகளாக) தனிச் சொத்துடமைச் சமூக அமைப்பு நிலைபெற்று வருகின்றது என்பது நோக்குதற்குரியதொன்றாகும்.

சமூக வளர்ச்சிப் போக்கில் பொதுவுடமைக் கண, குல அமைப்பு முறை தகர்க்கப்பட்டு தனிச் சொத்துடமை முன்னுக்கு வந்ததன் மூலம் சொத்துடமை உள்ளவன், இல்லாதவன் என்ற வர்க்க வேறுபாடும் தோற்றம் பெற்றது. இந் நிலை நாளடைவில் சொத்துக்கள் அற்றவர்களின் எண்ணிக்கையும் ஏழ்மையும் அதிகரிக்கச் செய்தது மட்டுமன்றி சொத்துள்ளவர்களின் தயவில் சொத்தற்றவர்களை வாழவும் நிர்ப்பந்தித்தது. இத்தகைய வர்க்க சமூகத்தில் சொத்துக்களையும் - சொத்துடைய வர்க்கத்தினரையும் பாதுகாப்பதற்கும், அதன் ஊடே சமுகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவும் ஒரு வகையான அமைப்புத் தேவைப்பட்டது. அதுவே அரசு எனும் வடிவத்தில் தோற்றம் பெற்றுக் கொண்டது. அதன் சாரம்சமான ~~ஆயுதம் ஏந்திய பொது அதிகார அமைப்பு|| கருக் கொண்டது. இவ் ஆயுதம் ஏந்திய ராணுவ அமைப்பும், பொலிஸ், சிறைச்சாலை, நீதி மன்றம் என்பனவாகி விரிவு பெற்று அரசு வடிவமாக பிற்காலத்தில் வளர்ச்சி கண்டது. இதனை மையமாகக் கொண்டே அரசியல் அமைப்புக் கூறுகளும் சட்டங்களும், திட்டங்களும் உருவாக்கப்பட்டன. அரசு என்பது சமுதாயத்திற்கு அப்பாற்பட்ட புனிதமான நிர்வாக அமைப்பாகத் தோற்றம் பெற்ற தொன்றல்ல. பழைய பொதுவுடமைக் கண சமூக அமைப்பிலே மக்களை நிர்வகிக்கும் அமைப்புகள் சமூகத்திற்குள்ளேயே இருந்து சமத்துவமாக நிர்வகித்து வந்தன. ஆனால் அரசு என்பது தோற்றம் பெற்றதும் அது சமுதாயத்திற்கு மேலாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு செயல்படத் தொடங்கியது. அதற்குரிய அடிப்படை என்னவெனில் அரசு என்பதன் அவசியம் தனிச் சொத்துடமையின் தோற்றத்துடனும் வர்க்கங்களின் ஏற்றத் தாழ்வான விரோதத்தன்மையுடனும்;; தோற்றம் பெற்றுக் கொண்டமையாகும். அரசு தனது ஆரம்பம் முதல் சொத்துடைய வர்க்கத்தைப் பாதுகாப்பதும் சொத்தற்ற வர்க்கத்தை அடக்கி ஆள்வதும் என்ற தெளிவான வரையறையை வகுத்துக் கொண்டது. அதாவது பழைய பொதுவுடமைக் கண சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமத்துவ அம்சங்கள் அனைத்தையும் இவ் அரசு கொடூரமாகச் சிதைத்துக் கொண்டது. பொதுவுடமைக் கண சமூகத்தில் கடமை உரிமை என்பன பிரித்து யார் யாருக்கு உரியவை எனப் பகுக்கப்படாமலே சகலராலும் முன்னெடுக்கப்பட்டன. கடமை செய்வது அதாவது அவரவர் உழைப்பில் ஈடுபடுவது சகலருக்கும் உரியது என்றும் அதே போல் அதன் பலாபலன்களை அனுபவிக்கும் உரிமை சகலருக்கும் பொதுவானது என்ற நிலையே நிலவி வந்தது. ஆனால் அரசு தோற்றம் பெற்ற பின் கடமை செய்வதற்குரியவர்கள் வேறாகவும், உரிமையை அனுபவிப்பவர்கள் வேறாகவும்; பிரித்தக் கொள்ளப்பட்டது.

சொத்துடமையற்றவர்கள் கடமை செய்ய வேண்டியவர்கள் என்றும் சொத்துடமையுள்ளவர்கள் உரிமையை அனுபவிக்க வேண்டியவர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் வகைப்பட்டதே தற்கால முதலாளிகளால் ~கடமையைச் செய்பலனை எதிர்பாராதே| என்றும் பகவத்கிதையின் உபதேசத்தை தொழிலாளர்களுக்குக் கூறித் தமது சுரண்டலை நடத்துவதாகும். பழைய பொதுவுடமைக் கணசமூகத்தில் அறிவுத்திறனும் தொழிற்றிறனும் பிரிக்கப்படாது சமமாக போற்றப்பட்டது. ஆனால் அச்சமூக அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின் அரசின் தோற்றத்துடன் அறிவுத்திறன் உள்ளோர் உயந்தோர் என்றும் தொழில் செய்வோர் தாழ்ந்தோர் என்றும் வகுக்கப்பட்ட நிலை தோற்றம் பெற்றது. இதனை இந்திய வேதகால மரபின் தோற்றத்திலே மிகத் தெளிவாகக் காணலாம். நான்கு வர்ண பகுப்புமுறை மேற் கூறிய அடிப்படையிலேயே தோற்றம் பெற்றதாகும். அதுவே இன்று வரையான அறிவு ஜீவிகள் அல்;லது அறிவுடையோர் என்றும் உடல் உழைப்பில் ஈடுபடுவோர் என்ற வகையில் ஏற்றத் தாழ்வு மிக்க வளர்ச்சியாக வளர்ந்து வந்திருக்கின்றது.

எனவே பழைய பொதுவுடமைக் கண சமுதாய அமைப்பு வீழ்த்தப்படுவதற்கு சொத்துடமையின் வளர்ச்சியும் வர்க்கங்களின் தோற்றமும் அடிப்படைகளாகிய அதேவேளை இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசு என்ற வடிவம் தேவைப்பட்டது. அவ் அரசு பிற்காலத்தில் மார்க்சிச தத்துவத்தால் தெளிவுபடுத்தப்பட்டவாறு ~ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கான கருவியே அரசு ஆகும்| என்பதாக அமைந்தது.

தனிச் சொத்துடமையின் சார்பாகவும், அதனை வைத்திருப்போரின் நலன்களுக்காகவும் அரசு உருவாக்கப்பட்ட காரணத்தினால் அத் தனிச்சொத்துடமையும் அதன் சொந்தக் காரர்களாகிய விரல் விட்டு எண்ணத்தக்க சொத்துடமை கொண்டவர்களும், ஆளும் வர்க்கத்தினரும் கொண்டுள்ள சமூக ஆதிக்கம் ஒழிக்கப்படுவதன் மூலமே அரசு என்ற வடிவமும் இறுதியில் இல்;லாத ஒழிந்து போகக் கூடிய நிலை தோன்றும். அவ் விடத்தை மீண்டும் புதிய பொதுவுடமை சமூக அமைப்பு நிறைவு செய்து கொள்ள முடியும். இவ்வாறு புராதனப் பொதுவுடமைச் சமூக அமைப்பு மேற்கூறிய வகையில் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு அவ்விடத்திலே அடிமை எசமானர் சமூக அமைப்பு உருவாக்கம் பெற்றது.

அடிமை சமூக அமைப்பு

8

உலகில் உள்ள சகலவற்றினதும் இயக்கம், வளர்ச்சி, மாற்றம் என்பவற்றுக்கு அவற்றிடையே அடங்கியிருக்கும் எதிர் நிலை சக்திகளின் முரண்பாடும், போராட்டமும் தான் அடிப்படையானது என்பதனை முன்பு கண்டோம். அந்த வகையில் மனிதகுல வளர்ச்சிப் பாதையில் உருவாகிய மனித சமூகத்தின் இயக்கம், வளர்ச்சி, மாற்றம் என்பவற்றின் அச்சாணியாக எதிர் நிலை முரண்பாடும், போராட்டமும் அமைந்து கொள்வதும் நியதியாகின்றது. தனிச் சொத்துடமையும் வர்க்கங்களும் அற்ற ஆதிகாலப் பொதுவுடமை சமூகத்தில் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலேயே இம் முரண்பாடும் போராட்டமும் இருந்து வந்தது. இயற்கைக்கு எதிரான போராட்டத்தின் ஊடாகவே மனிதர் தமது வரலாற்றுப் பாதையில் முன்னோக்கிச் சென்று சமூகக் குழுக்களாகிக் கொண்டனர். அச் சமூகக் குழுக்களில் தனிச்சொத்துடமை, வர்க்கங்கள், அரசு என்பன கால வளர்ச்சியில் தோற்றம் பெற்ற போது சமூக முரண்பாடு, வர்க்கப்போராட்டம் என்ற வடிவத்தைப் பெற்றுக் கொண்டது. சுரண்டும் - ஆளும் வர்க்கத்திற்கும், சுரண்டப்படும் - ஆளப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடும்; போராட்டமும் தான் சமூக இயக்கத்தினதும், வளர்ச்சியினதும் அடிப்படையாக அமைகிறது. இவ் வர்க்கப் போராட்டத்தின் தெளிவான அம்சங்களை உற்பத்தி சக்திகளினதும், உற்பத்தி உறவுகளினதும் ஆரம்ப வளர்ச்சிக் கட்டமான அடிமை எஜமான் அமைப்பிலே நன்கு காணமுடிகிறது. இவ்வமைப்பிலே தான் முதலாவது மாபெரும் வர்க்கப் பிரிவினை தோற்றம் பெறுகிறது. இதுவரை மனுக்குலம் கண்ட மூன்று அடிமைத்தனங்களில் முதலாவது அடிமைத்தனத்தை இவ்வடிமை எஜமானர் சமூக அமைப்பிலே கண்டு கொள்ளலாம். இதன் பின்பே நிலப்பிரபுத்துவத்தின் கீழ் பண்ணையடிமை முறையும், முதலாளித்துவத்தின் கீழ் கூலியடிமை முறையும் நடைமுறைக்கு வந்தன.

தனி உடமை முறை மனிதர்களிடையே நிலவி வந்த சமத்துவமான புராதன பொதுவுடமை சமூக சூழலை இல்லாதொழித்து ஏற்றத் தாழ்வு கொண்ட வர்க்க சமூகத்தை உருவாக்கிக் கொண்டது. சொத்துடமையுள்ளவர்களின் பேராசை முடிவற்ற வழிகளில் வளர்ந்தது. தனிச் சொத்து சேகரிப்பது என்பது மனிதக் குறிக்கோளின் உயர் வடிவமானது மட்டுமன்றி தவிர்க்க முடியாத புனித தர்மம் என்ற நிலையையும் அடைந்தது. எனவே அத்தகைய சொத்தைச் சேகரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், பெருக்குவதற்கும் எதனையும் எப்படியும்; செய்யலாம் என்ற நிலை சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்டது. உபரி உற்பத்தியை பெருக்கக் கூடியமனித உழைப்பை அபகரிக்கும் இழி நிலை தோன்றியது. சொத்துடையவர்களும் அவர்கள் சார்பாக உருவாகிய அரசும் சொத்தற்றவர்களை யுத்தத்தில் தோல்விகண்டவர்களை அடிமைகளாக்கி அவர்கள் மூலம் சுரண்டலை நடாத்தி சுகபோகம் அனுபவிக்க கற்றுக் கொண்டனர். அதுவே அடிமைகளும் எஜமானர்களுமான ஒரு சமூகமாக மாற்றமடைந்து கொண்டது. உழைப்பில் - உற்பத்தியில் ஈடுபடாத சொத்துடமைக்குச் சொந்தக்காரர்களாகிக் கொண்டவர்கள் எஜமானர்களாகவும்: சொத்துடமை எதுவுமற்றவர்களும் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டவர்களும்; அடிமைகள் என்ற நேர்வர்க்க நிலைக்கு உள்ளாகினர்.

மனித குல வரலாற்றில் ஆண், பெண் இருபாலருக்குமிடையிலான வேலைப் பிரிவினை என்பது ஆரம்ப கால வேலைப் பிரிவினையாக அமைந்தது. ஆனால் விவசாயத்தில் இருந்து பிரிந்து சென்று கால்நடை வளர்க்கும் வேலைப் பிரிவினை தான் சமூகரீதியான முதலாவது வேலைப்பிரிவினையாக அமைந்தது. இதுவே புராதன பொதுவுடமை சமூகம் சிதைவதற்கான அடிப்படைகளையும் தோற்றுவித்தது. இதனைத் தொடர்ந்து வந்த காலகட்டத்திலேயே உலோகங்களின் குறிப்பாக இரும்பின் உபயோகம் வந்து சேர்ந்தது. இதனால் சிறுகைத்தொழில்கள் தோற்றம் பெற்றதுடன் உற்பத்தியின் வேகமும் அதிகரித்தது. இந்நிலையிலே இரண்டாவது வேலைப் பிரிவினையாக விவசாயத்தில் இருந்து கைத்தொழில்கள் பிரிந்து சென்ற சமூக நிகழ்வு இடம் பெற்றது. இதுவே இரண்டாவது மாபெரும் வேலைப்பிரிவினை ஆகும். இக்கால கட்டமே நாகரீக காலத் தொடக்கம் எனக் கொள்ளப்படுவதுடன் அடிமை சமூக அமைப்பையும் தொடக்கி வைத்த காலப்பகுதியுமாகும்.

இவ் அடிமை எஜமான் சமூக அமைப்பு பல்வேறு சமூக நிர்ணயிப்புகளை வரையறை செய்து கொண்டது. அடிமைகள் பெரும்பான்மையினராக இருந்தனர். அவர்களே கடுமை மிகுந்த உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டு கொடூரமாக வேலை வாங்கப்பட்டனர். அரை குறை உணவு வழங்கப்படுவது தவிர்ந்த எதுவுமே அவர்களுக்கு கிடைக்கவில்லை. வளர்ப்புக் கால் நடைகளுக்குக் காட்டப்பட்ட பரிவு கூட அடிமைகளுக்குக் காட்டப்படவில்லை. அடிமைகளை வாங்கவும், விற்கவும் தேவை ஏற்படும் போது கொல்லவும் எஜமானர்கள் உரிமை பெற்றிருந்தனர். அவர்கள் மனிதர்களாக எவ்வகையிலும் மதிக்கப்படவில்லை. பலசாலிகளான அடிமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களுடன் மோத வைத்து அவ் அடிமைகள் கோரமாகக் கொல்லப்படுவதை எஜமானர்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். இது அவர்களுக்;குப் பொழுது போக்காகவும் இருந்து வந்தது. மேற்குலகிலே குறிப்பாக இத்தாலியின் ரோம், கிரேக்கத்தின் ஒதன்ஸ் நகரங்களில் அடிமைகளை வைத்து வேலை வாங்கப்பட்டவற்றின் - அடக்கியாண்டதின் அடையாளங்களை இன்றும் காணமுடியும். அதே போன்று எஜமானர்களின் சுக போக வாழ்க்கையின் சின்னங்களையும் அங்கே கண்டு கொள்ளலாம்.

மனிதர்களை மனிதர்களே அடிமை கொண்டு கொடுமையான வர்க்க ஒடுக்கு முறையின் மூலம் அடிமை எஜமானர்கள் சமூக அமைப்பை நிலை நிறுத்திக் கொண்ட அதே வேளை மனித ஆற்றல்களின் அறிவியல் சார்ந்த சிந்தனைகளும் செயல் முறைகளும் இக்கால கட்டத்தில் தோன்றி வளர்ந்தன என்பதும் கவனத்துக்குரியதாகும். இக்காலத்தில் பல்வோறு தத்துவ ஞானிகள் உருவாகினர். அவர்கள் தத்துவம், அரசியல், சட்டம், கலை, விஞ்ஞானம், மதம் போன்ற துறைகளில் தத்தமது சிந்தனை ஆற்றல்களை வெளிப்படுத்தினர். அவற்றில் அடிமை சமூக அமைப்பை நியாயப்படுத்;தும் கருத்துக்கள் மேலோங்கி இருந்த போதிலும் இக்காலத்தில் கட்டிடக்கலைகளும், வானசாஸ்திரமும் வைத்தியமும் வளர்க்கப்பட்டன. இக்காலத்தில் பொருள் முதல் வாதக் கருத்துக்களும் அவற்;றை முன் வைத்த தத்துவ ஞானிகளும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வடிமை சகாப்தத்தில் சிறு கைத்தொழில்கள் மூலம் உற்பத்திகள் பெருகின. லோகங்களிலான வேலைகளும், நெசவுத்தொழில், பழங்களி;ல் இருந்து மது பானமும், விதைகளில் இருந்து எண்ணையும் வடிக்கும் தொழில்கள் உட்பட பல்வேறு கைத்தொழில்கள் பெருகின. இவ்வாறு தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட இப் பொருட்களை பண்டமாற்றுச் செய்வதில் இருந்து ஏனைய பிரதேசங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்வது வரையான வேலையைச் செய்வதற்கு ஒரு புதிய வர்க்கம் தேவைப்பட்டது. காலப் போக்கில் அதனை நிறைவு செய்யும் வர்க்கமாக ஆரம்பகால வியாபாரிகள் தோற்றம் பெற்றனர். அவர்கள் படிப்படியாக வளர்ச்சி பெற்று பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பவர்களாகவும் பணம் என்ற புது வடிவத்தை லோக அளவில் கையாண்டு அதன் மீது அதிக்கம் செலுத்துபவர்களாகவும் மாற்றமடைந்தனர். இதன் மூலம் பண்ட உற்பத்தி பரிவர்த்தனை ஆரம்ப வடிவம் பெற்றது. வியாபாரவர்க்கமும் செல்வத்தைப் பெருக்கி சமூக அந்தஸ்துடைய வர்க்கமாக வளர்ந்து வந்தது. இவ் வியாபார வர்க்கத்தின் தோற்றம் புதிய பிரதேசங்கள் - நாடுகளைக் கண்டறியவும், வியாபாரம் விஸ்தரிப்புப் பெறவும் வாய்ப்புகளை உருவாக்கின. இதனால் மனித சமூகங்களுக்கிடையிலான தொடர்புகள் விருத்தி பெற ஆரம்பித்தன.

இவ்வாறு வரலாற்று வளர்ச்சிப் போக்கில் அடிமை சகாப்பதம் புதிய சூழலைத் தோற்றுவித்தது. அடிமை எஜமானர் வர்க்கங்களுக்கிடையிலுமான வர்க்கப் போராட்டம் என்பது தாழ் நிலையில் இருந்து உயர் நிலைக்கு வளர்ந்து வந்தது. கொடிய அடக்கு முறைகளையும் வேலைப்பழுவையும் தாங்க முடியாத - மனிதர்களாக மதிக்கப்படாத அடிமை வர்க்கம் எஜமான்களுக்கு எதிரான கிளர்ச்சிகளில் ஈடுபடும் நிலைக்கு வளர்ந்தது. இவ்வாறு வரலாற்றில் இடம் பெற்ற பல்வேறு அடிமைகளின் கிளர்ச்சிகளில் ஒன்றே மேற்குலகில் புகழ் பெற்ற ~ஸ்பாட்டகஸ்| தலைமையிலான கிளர்ச்சியும் போராட்டமுமாகும். அடிமைகளின் இக்கிளர்ச்சி எஜமானர்களின் ஏதேச்சதிகாரத்தை ஆட்டம் காணவைத்ததுடன் அடிமைசகாப்தத்தின் முடிவுக்கும் வழிவகுத்துக் கொடுத்தது மேற்குலகிலே அடிமை சகாப்பதத்தின் இறுதிக் கால கட்டத்தில் மிகவும் கூர்மையடைந்த இவ்வர்க்கப் போராட்டத்தின் மூலம் விடுதலை வேண்டும் என்ற அடிமைகளின் கிளர்ச்சி அச்சமூக அமைப்பை உடைத்து நொருக்குவதற்கான சூழலைத் தோற்றுவித்தது. அதே வேளை அடிமை சகாப்தத்தின் உற்பத்தி சக்திகளினதும் உற்பத்தி உறவுகளின் வளர்ச்சி நிலை புதிய சகாப்தம் ஒன்றின் தேவையை வேண்டி நின்றது. தேக்கமடைந்து காணப்பட்ட பழைய அமைப்பை தூக்கியெறிந்து விட்டு புதிய அமைப்பைத் தோற்றுவிக்கும் சமூக சக்திகள் விசை கொண்டன. எஜமானர்களையும் அவர்களது அமைப்புகளையும் எதிர்த்த போராட்டம் வேகமடைந்து இறுதியில் அந்த அமைப்புக்குச் சமாதி கட்டப்பட்டது.

மேற்குலகில் அடிமை சகாப்தம் தெளிவாக அடையாளம் காணப்பட்டது போன்ற அதே தன்மைகளுடன் கிழக்குலகிலே அடிமை எஜமானர் சகாப்தம் ஒன்று ஏற்படவில்லை. இந்தியப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் இவ்வடிமை சகாப்தம் என்பது வௌ;வேறு தன்மைகளுடன் கூடிய மற்றொரு வடிவத்தில் நிலவி வந்திருப்பதைக் காண முடியும். நான்கு வர்ணதர்மம் என்ற முறையும் அதன் அடிப்படையில் தொழில்களின் தராதரத்திற்கு ஏற்ப சாதிய அமைப்பு முறை மனிதர்களைப் பிரித்து வைத்ததுடன் சொத்துடைமைகளின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளையும் தோற்றுவித்தது. இந்திய சமூக சாதிய முறைமையின் கீழ் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டதுடன் உடல் உழைப்பில் ஈடுபட்ட மக்கள் பிரிவினர் தீண்டப்படாதவர்களாகவும் கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டனர் சாதிய அடிப்படையில் தள்ளி வைக்கப்பட்ட மக்கள் மனிதர்களாக மதிக்கப்படாது அடிமைகளாக வைத்து வேலை வாங்கப்பட்டனர். எனவே இந்தியச் சூழலிலே அடிமைகளும் அளப்படுவோரும் மேற்கின் நிலையை விட மற்றொரு வடிவத்தில் சமூக எதிர் வர்க்கங்களாக உருவாகி வளர்ந்தனர். ஆனால் ஐரோப்பிய அடிமை எஜமானர் வகைப்பட்ட வெளிப்படையான வர்க்க வேறுபாடு வடிவெடுக்கவில்லை. இதற்கு இந்திய கிராம சமூகங்களின் கட்டமைப்பு தடையாக இருந்தமை கவனத்துக்குரியதாகும். இருப்பினும் வர்க்கப் போராட்டம் என்பது வௌ;வேறு அளவிலும் வகையிலும் தன்னை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இதனை இந்திய சமூக அமைப்பின் வரலாற்றை ஆராய்வதன் மூலம் கண்டு கொள்ள முடியும்.

எனவே மனித குல வளர்ச்சிப் போக்கில் அடிமை சகாப்தம் என்பது வரவாற்றின் ஒரு கால கட்டமாகவும் வர்க்க வேறுபாடும் போராட்டமும் கொண்ட காலப்பகுதியாகவும் இருந்து வந்துள்ளமையைக் காண முடியும். இதுவே மனித நாகரீக காலத்தின் தொடக்கமாகவும் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு தீய அம்சத்திலும் நல்ல அம்சம் இருக்கச் செய்யும் என்பதும் தீய அம்சத்தை நல்ல அம்சமாக மாற்றுவதில் மனித முயற்சி முக்கிய பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதையும் மார்க்சீPசம் வற்புறுத்துகின்றது. அடிமை சகாப்தம் பற்றியும் அதன் பின் வந்த சமூக அமைப்புகள் பற்றியும் ஆராய்ந்த ஏங்கல்ஸ் பின்வருமாறு கூறியுள்ளமை நோக்குதற்குரியதாகும். ~~அடிமை முறை இல்லை என்றால் கிரேக்க கலாசாரமும், ரோமன் கலாசாரமும் இல்லை|| கிரேக்க கலாசாரமும், ரோமன் போரரசும் இல்லை என்றால் நவீPன ஐரோப்பா இல்லை, நவீன ஐரோப்பா இல்லை என்றால் சோஷலிசமும் இல்லை. ஆகவே அடிமைத் தனம் இல்லை என்றால் சோஷலிசம் இல்லை என்று நாம் கூறமுடியும். (பி. ஏங்கல்ஸ்)

எனவே வரலாற்று வளர்ச்சியில் அடிமை சமூக அமைப்பாகவும் மனித குல நாகரீகத்தின் ஆரம்பப்படியாகவும் அமைந்தது. ஆனால் இவ் அமைப்புமுறையின் உள்ளார்ந்த வர்க்க முரண்பாடானது கூர்மையடைந்து, குறிப்பிட்ட காலத்தில் அவ்வமைப்பு வர்க்கப் போராட்டத்தின்மூலம் இல்;லாதொழிக்கப்பட்டது. அவ்விடத்தை பின் வந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு நிறைவு செய்து கொண்டது. அந் நிலப்பிரபுத்துவ அமைப்புப் பற்றி அடுத்து வரும் பக்கங்களில் நோக்குவோம்.

நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு

9

உலகில் காணப்படும் ஒவ்வொன்றும் சதா இயங்கிக் கொண்டும் மாற்றமடைந்து, வளர்ச்சியடைந்து கொண்டும் இருப்பதுடன் குறிப்பிட்ட கட்டத்தின் பின்பு அவை சிதைந்து அழிவுக்குள்ளாகிக் கொள்ளும் அதே வேளை புதியன தோற்றம் பெறவும் செய்கின்றன என்பது அறிவியல் பூர்வமான இயங்கியல் விதியாகும். அந்த வகையில் சமூக இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் அடிமை எஜமானர் சமூக அமைப்பானது இறுதியில் அழிந்து கொள்கிறது. வளர்ந்து வந்த உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த முரண்பாடானது இறுதியில் வர்க்கப்போராட்டத்தின் மூலமாக சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கின்றது. இம் மாற்றம் சமூகத்தில் திடீரென ஏற்பட்டு புதிய அமைப்பை நிலை நிறுத்திக் கொள்வதில்லை மாற்றமடையும் காலப்பகுதி ஒன்றின் ஊடாகவே இது நிகழ்கின்றது. எனவே அடிமை சமூகஅமைப்பு அடக்கப்பட்ட அடிமைகளின் கிளர்ச்சிப் போராட்டத்தினால் நிலை பெயர்க்கப்பட்ட அதே வேளை அந்த அமைப்பினால் முன்னோக்கிச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்ட பல்வேறு சமூக சக்திகளும் அவ் அமைப்பைத் தகர்ப்பதற்கு தத்தமது பங்களிப்பை வழங்கி நின்றன. இப்பழைய அமைப்பு ஒழிக்கப்பட்ட இடத்தில் இருந்து புதிய அமைப்பான நிலப்பிரவுத்துவம் தோற்றம் பெறுகின்றது.

இந் நிலப்பிரபுத்துவம் நிலத்தையும் அதில் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டதுமான விவசாயத்தையும் மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்படுகின்றது. பெருந் தொகையான நிலங்களைத் தனிச் சொத்துடமையாக்கிக் கொண்ட முன்னைய அடிமைச் சொந்தக்காரர்கள் பெரும் நிலப்பிரபுக்களாகி தமது நிலங்களில் மிகச் சிறு துண்டு நிலத்தை விவசாயிகளுக்கு வழங்கி விட்டு மிகுதியான பெரு நிலத்தில் அவ்விவசாயிகளை கொண்டே உற்பத்தியைச் செய்வித்தனர். இத்தகைய விவசாயிகள் அடிமை நிலையில் இருந்த தன்மையில் இருந்து சற்று வேறுபட்ட நிலையில் பண்ணையடிமைகளாக நடாத்தப்பட்டனர். நிலப்பிரபுக்கள், மதத்தலைவர்கள், அரசன் என்போர் ஒரு புறமாகவும், உழைப்பாளர்களான பண்ணையடிமைகளும், கைத்தொழிலாளர்களும் மறு புறமாகவும் இருக்கக் காணப்பட்ட சமூக அமைப்பாகவே நிலப்பிரபுத்துவ அமைப்பு வளர்ச்சி கண்டது. இவ்விரு சமூகப்பிரிவினரிடையேயும் தான் வர்க்கப் போராட்டம் நிலவி வந்தது.

இந் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை மேற்குலகிலே தமது வர்க்க வெளிப்பாட்டை மிகத்துல்லியமாக வெளிக் காட்டி நின்றது. பிரபுக்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர். தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், பண்;ணையடிமைகளிடம் வேலை வாங்குவதற்கும், அவர்களின் எதிர்ப்புகளை அவ்வவப்போது அடக்குவதற்கும் ஒவ்வொரு நிலப்பிரபுவும் தனித் தனி இராணுவம் வைத்திருந்தனர். இவ் இராணுவ அமைப்பு முறையானதாக இன்றி ஆயுதம் தாங்கிய குண்டர் அமைப்பாகவே விளங்கின. ஆரம்பகால அரசர்கள் என்போர் மிகவும் பலவீனம் அடைந்தவர்களாக இருந்தனர். பிரபுக்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் அவர்கள் படிப்படியாக தமது நிலையை வலுப்படுத்தினர். பிரபுக்களின் பிடிக்குள் சிக்கியிருந்த பல்வேறு சமூகப் பிரிவினர் அரசர்களின் வளர்ச்சிக்கு உதவினர். இதனால் பிரபுக்கள் - அரசர்களுக்கிடையிலான போர்கள் பல்வேறு வடிவங்களில் அவ்வப்போது இடம் பெற்றன. இறுதியில் ஒழுங்கான முறையில் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு அரசன் தனது கட்டுப்பாட்டின் கீழ் யுத்தப் பிரபுக்களை கொண்டு வந்தான். விரைவில் அரசனும், பிரபுக்களும் ஒன்றிணைந்து கொண்டனர். அதே வேளை நிலத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த கிறிஸ்தவ மத தேவாலயங்கள் அரசனுக்கு மதநிறுவனமான தேவாலயங்களுக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. போப்பாண்டவர் ஆதிக்கம் பெற்ற ஒரு வகை அரசன் போல் வீற்றிருந்தது மட்டுமன்றி நிலப்பிரபுக்கள் தனியுடமையாக வைத்திருந்த நிலம் அளவுக்கு இத்தேவாலயங்களும் நிலத்தையும் பண்ணையடிமைகளையும் வைத்து கடுமையான சுரண்டலையும் அடக்குமுறைகளையும் நடாத்தி வந்தன. இதனால் பெருமளவு செல்வத்தை தேவாலயங்களும், மதத்தலைவர்களும் அனுபவித்து வந்தனர். இவர்கள் ஒரு புறத்தால் மதபோதனை செய்து மக்களை விழிப்படையாது வைத்திருப்பதில் கடவுளின் பெயரால் செயலாற்றிய அதே வேளை மறுபுறத்தால் கொடூரச் சுரண்டலின் மூலம் பண்ணையடிமைகள் கைத்தொழிலாளர் என்போரிடம் இருந்து உழைப்பை கொள்ளையிட்டனர். பிரபுக்களை இம் மத நிறுவனங்கள் ஆதரித்தன. பண்ணையடிமைகள் கடுமையாக உழைப்பதன் மூலம் பரலோகம் செல்;ல முடியும் என்றும் பாவங்களைக் கழுவிப் பரிசுத்தர்களாக இயலும் எனவும் மக்களுக்குப் போதித்தனர். தனி உடமையாக நிலத்தையும் அதன் மூலம் பெறப்பட்ட செல்வத்தையும் கொண்டிருந்த நிலப்பிரபுக்கள், தேவாலயங்கள், அரசன் என்போர் இறுதியில் ஒன்றாகினர். ஒருவரின் நலனை மற்றவர் மதித்து நடப்பதில் ஒற்றுமைப்பட்டனர். ஆரம்ப கால சிற்றரசர்கள் காலப் போக்கில் பலமிக்க மன்னர்கள் ஆகினர். மன்னர்கள் மாமன்னர்களாகி முழுமையான ஆதிக்கம் செலுத்தி வந்ததுடன் வௌ;வேறு நாடுகளைக் கைப்பற்றி சக்கரவர்த்திகளாகிக் கொள்ளும் நிலையும் வளர்ந்தது. பேரரசுகளும் அவ்அரசுகளை வஸ்த்தரித்து நிற்கும் போர்களும் இடம் பெற்றன. இவையனைத்தும் நிலப்பிரபுத்துவ அமைப்பை நிலைநிறுத்தும் அடிப்படைகளையே கொண்டிருந்தன.

நிலப்பிரபுத்துவ வளர்ச்சியின் உச்ச நிலையிலே அரசன் கடவுளின் பிரதி நிதியாக வீற்றிருந்தான். மதத் தலைவர்கள் கடவுளின் பெயரால் மன்னனையும்;, பிரபுக்களையும் தனிச்சொத்துடமையின் நீடித்த இருப்பையும் போற்றிப் பிரச்சாரப் பாதுகாவலர்களாகி நின்றனர். அதே வேளை பண்ணை அடிமைகளும் ஏனைய கைவினையர்களான உழைக்கும் மக்கள் பிரிவினரும் வறுமையிலும், துன்பதுயரிலும்; உழலுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அன்றைய வரலாறு என்பது மன்னர்களின், தளபதிகளின், மத நிறுவனங்களின் மற்றும் உயர் குடியினரின் வரலாறாகவே வரையப்பட்டது. எதிர் முனையிலே நின்று உழைத்து வாழும் சாதாரண மக்கள் பற்றிய வரலாறு மறைத்துக் கொள்ளப்பட்டது. கலை இலக்கியங்களும்; அவ்வாறே சிருஷ்டிக்கப்பட்டன.

காலவோட்டத்;தில் நிலப் பிரபுத்துவ அமைப்புமுறையின் உற்பத்தி முறையானது வளர்ந்து வந்த சமூகத் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கவில்லை. வியாபாரம் விரிவடைந்த போது கடல் வாணிபம் முக்கியத்துவம் பெற்றது. இதனால் கரையோர நகரங்கள் தோற்றம் பெற்றன. புதிய கடல் பாதைகளும் அவற்றின் மூலம் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளும் தோன்றலாயின. இதனால் உற்பத்தி முறையில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அதே வேளை பண்;ணையடிமைகளிடையே நிலம் வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடைந்து வந்தது. அவர்கள் நிலப்பரப்புகளுக்கு எதிரான கிளர்ச்சிகளில்; ஈடுபடலாயினர்.

பண்ணை அடிமைகளின் இக் கிளர்ச்சிகளால் விவசாயிகளுக்கு குறிப்பிட்டளவு நிலம் குத்தகையாக வழங்கப்பட்டன. இது சிறு துண்டு நிலம் கடுமையான வரிகளின் மூலம் விவசாயிகள் சுரண்டப்பட்டனர். கிளர்ச்சிகளில் ஈடுபட்ட விவசாயிகள் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்டனர். பிரபுத்துவ சுரண்டலாலும் பரவிய கொடும் நோய்களாலும், விவசாய நிலங்களில் ஊடுருவிய பயிர் கொல்லிகளாலும் விவசாயிகள் கடும் பஞ்சத்தை எதிர் நோக்கி பலர் மாண்டு மடிந்து போகவும் செய்தனர். நிலப்பிரபுக்களும், மதநிறுவனத் தலைவர்களும்;, அரசர்களும் சகல சுக போகங்களை அனுபவித்த அதே வேளை பண்ணையடிமைகளான விவசாயிகளும் ஏனைய கைத்தொழில் செய்வோரும் பஞ்சம் பட்டினியில் உழன்று வந்தனர். நிலப்பிரபுத்துவத்தின் கீழ் பண்ணையடிமைகளாக விளங்கி வந்த விவசாயிகள் மிகப் பெரும்பான்மையினராகவும் நிலப் பிரபுக்கள் மிகச் சிறுபான்மையினராகவும் காணப்பட்டனர். இருப்பினும் அரசும் அரசனும் மாபீடங்களும் பிரபுத்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் ஒன்றிணைந்து கொடூர ஒடுக்கு முறைகளைக் கையாண்டு வந்தனர்.

இதனால் மேற்குலகில் நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பு முறையில் பாரிய வெடிப்பு தோன்றி வளர ஆரம்பித்தது. நிலம் வேண்டி நின்ற விவசாயிகளும், அடிநிலையில் உழன்று வந்த பண்ணையடிமைகளும், புதிய உற்பத்தி முறைகளைப் புகுத்தி அவற்றை விரிவு படுத்த முனைந்த கைத்தொழில் வினைஞர்களும் மத்திய வகுப்பினர் போன்ற பல்வேறு சமூக சக்திகளும் நிலப்பிரபுத்துவத்திற்கு நேர் எதிரான நிலைக்கு தம்மை நிறுத்திக் கொண்டனர். முடியாட்சி வேண்டாம் குடியாட்சி வேண்டும் என நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்;து எழுந்து பேரெழுச்சியின் ஊடே ஆரம்பகால முதலாளித்துவ சக்திகளும்; இணைந்து கொண்டதுடன் படிப்படியாகத் தம்மை முன்னணிக்கும் கொண்டு வந்தன.

மாமன்னர்களிலும், தளபதிகளிலும், நயவஞ்சகம் கொண்ட மத நிறுவனங்களாலும், அவர்களது தோள் வாள் வலிமைகளாலும் ஆளும் வர்க்க ஒழுக்கநெறி முறைகள் என்பனவற்றால் கட்டிக் காக்கப்பட்ட நிலப்பிரபுத்துவம் இறுதியில் உடைத்து வீழ்த்தப்பட்டது. வர்க்கப் போராட்டம் விதித்த நியதிக்கு உட்பட்டு மகத்தான மக்கள் சக்தி நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைக்கு ஐரோப்பாவிலே இறுதி சமாதியைக் கட்டி முடித்துக் கொண்டது. சமுதாயவளர்ச்சிக்குக் குறுக்கேநின்ற நிலப்பிரபுத்துவ உறவு முறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த இடத்திலே புதிய சமூக உறவுகள் படிப்படியாக நிலைநிறுத்தம் பெறலாயின. அதுவே முதலாளித்துவ அமைப்பாகத் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டது.

நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு முறை ஏகப் பெரும்பான்மையான மக்களை அடக்கி ஆளும் வர்க்கமாக இருந்தவர்களுக்கு சகல சுக போகங்களையும் அளித்த அதே வேளை மனித குலத்தின் அறிவுச் சிந்தனைப் பரப்பிலும் தனது காலத்திய முத்திரைகளைப் பதித்துச் சென்றமை குறிப்பிடத் தக்கதாகும். தனக்கு முந்திய அமைப்பான அடிமை சமூக அமைப்பில் பெறப்பட்ட மனித அறிவு ஆற்றல்களை நிலப் பிரபுத்துவம் தனது இருப்புக்கும் தேவைக்கும் ஏற்றவாறு வளர்த்தெடுத்தது. பல்வேறு துறைகளிலும் மனித ஆற்றல்களின் வெளிப்பாடு துலக்கம் பெற்றது. சமூகத்தின் பொருளியல், அரசியல் பண்பாட்டுத்துறைகளிலும் நிலப்பிரபுத்துவம் தனது அமைப்புக்கு ஏற்ற விதமான வளர்ச்சிக்கு வழி வகுத்துக் கொடுத்தது. மதங்களின் ஊடே நீதிநெறிகளும், ஒழுக்க கோவைகளும் வகுத்தளிக்கப்பட்டன. மனிதர்களிடையே வர்க்க, சாதி, பால் அடிப்படையிலான வேறுபாடுகளை வற்புறுத்திய மேற்படி நீதி ஒழுக்க நெறிகள் வகுக்கப்பட்டதுடன் அவற்றை மீற முடியாத கடமைகளாக்கியும் கொள்ளப்பட்டன.

கட்டிடக்கலை தொட்டு கலை இலக்கியம், ஓவியம், சிற்பம் போன்ற பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் மதத்தோடு இணைந்தவையாக வளர்ச்சி கண்டன. வைத்தியம் வான சாஸ்திரம்; முதலியனவும் நிலப்பிரபுத்துவ காலத்தில் மனிதத் தொடர் முயற்சிகளாக திறமையுடன் முன்னெடுக்கப்பட்டன. மொத்தத்தில் மனித அறிவு வளர்ச்சியின் பாதையானது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தனது காலச் சூழலுக்கு ஏற்ற விதத்தில் விருத்தி பெற்றிருந்தமை நோக்குதற்குரியதாகும்.

இவ்வாறு நிலப்பிரபுத்துவ அமைப்பும், அதனிடையே காணப்பட்ட பல்வோறு கூறுகளும் மேற்கு உலகிலும் கிழக்குலகிலும் தத்தமது கால, இட, அறிவு வளர்ச்சிச் சூழலுக்கு ஏற்றவாறு வளர்ந்து நிலைபெற்று வந்தன என்பது குறிப்பான நோக்கிற்கு உரியதொன்றாகும்.

கிழக்குலகிலே நிலப்பிரபுத்துவ அமைப்பு சீனா, இந்தியா மற்றும் ஆசிய நாடுகளிலே அந்நாடுகளின் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்றிருந்தன. சீன நாட்டில் நிலப்பிரபு - பண்ணையடிமை முறை தெளிவான வர்க்க வேறுபாட்டைக் கொண்டிருக்கக் காணப்பட்டது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலப்பிரபுத்துவ அமைப்;புமுறை அந்நாட்டில் நிலவிவந்திருக்கின்றது. பண்ணை அடிமைகளான சீன விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சியே சீன பிரபுத்துவ சாம்பிராச்சியங்களை மன்னர்களும் பிரபுக்களும் கட்டியெழுப்பி சுகபோக வாழ்க்கை நடாத்தி வந்தனர். அங்கே மன்னர், பிரபுக்கள் என்போருக்கும் பண்ணை அடிமைகளான விவசாயிகளுக்;கும் இடையில் மிகத் தெளிவுபட்ட வரையறைகள் - பாகுபாடுகள் காணப்பட்டன.

ஆனால் இந்தியப் பகுதிகளில் இந்நிலப்பிரபுத்துவம் தோன்றி வளர்ந்து நிலைபெற்று வந்த போதிலும் மேற்குலகு போன்ற வடிவிலே அது காணப்படவில்லை. இதனை வைத்தே சில ஆய்வாளர்கள் இந்தியாவில் நிலப்புரபுத்துவம் என்பது இருக்கவில்லை என்று கூறத்துணிந்தனர். அதாவது நிலம் தனியுடமையாக இருக்கவில்லை என்றும், அதனை அரசனும் பிரதானிகளும் பரிபாலித்து வந்தனர் என்றும், உற்பத்தியானது விரும்பிய விதத்தில் விவசாயிகளால் செய்யப்பட்டதாகவும், வரியை மட்டும் அரசன் வசூலித்தான் என்றும், எனவே இதனை நிலப்பிரபுத்துவம் எனக்கொள்ள முடியாது என்றும் கூறமுற்படுகின்றனர். மேற் கூறப்பட்டவற்றில் சில உண்மைகள் இருந்த போதிலும் இவை ஆரம்ப நிலையிலே காணப்பட்ட சூழலாகும். ஆனால் காலவோட்டத்தில் நான்கு வர்ண அமைப்பு முறையின் கீழ் நிலப்பிரபுத்துவம் மன்னராட்சிகளினாலும் அவற்றின் நீதி நிர்வாகத்தினாலும் மிகக் கட்டுறுதியாகக் கட்டிக் காக்கப்பட்டன. அரசன், அந்தணர், போர்வீரர், நிலச் சொந்தக் காரர், நில மற்ற கைவினைஞர், விவசாயிகள், கூலிகள், கொத்தடிமைகள் என்ற வரிசைப்படியான வர்க்கப்பிரிவுகள் இந்திய பகுதிகளிலே தெளிவாக இருக்கக் காணப்பட்டன. அவரவர்களுக்கு உரிய கடமைகளும் உரிமைகளும் வகுக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டன. கோவில்களும் பிராமணர்களும் சமூக ஆதிக்கம் பெற்றவர்களாக காணப்பட்டதுடன் பெரும் தொகை நிலங்களைக் கொண்டவர்களாகவும் விளங்கினர். இது ஐரோப்பிய கிறிஸ்தவ தேவாலயங்கள் மதகுருமாரின் நிலப் பிரபுத்துவ ஆதிக்க நிலைக்கு அதிகளவு ஒப்பிடக் கூடியதாகும். இந்திய நிலப் பிரபுத்துவத்தின் கீழ் சமூக ஆதிக்கம் அந்தஸ்து பெற்ற உயர் குடியினரும், சமூக அடித்தளத்தில் நின்ற கீழ் வகுப்பினருமான சூத்திரர்-தாழ்த்தப்பட்டவர் வர்க்க வேறுபாடு வரலாறு முழுவதும் நீடித்து வந்திருப்பதைக் காணலாம் - இவ்வர்க்க நிலை நான்கு வர்ணசாதிய முறைமையின் ஊடே நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்திய நிலப்பிரபுத்துவமானது இறுதியில் நிலத்தை தனி உடமை கொண்டது. இன்றும் கூட இந்திய நிலப்பிரபுத்துவத்தின் ஆதிக்கம் அந்நாட்டின் சமூக அமைப்பிலே வலுவுள்ளதாக காணப்படுகிறது. இலங்கையிலும் அதன் ஆதிக்கசாயலைக் கண்டு கொள்ளலாம் மேற்கிலே வீழ்த்தப்பட்டது போன்று இந்திய நிலப்பிரபுத்துவம் வளர்ந்து வந்த முதலாளித்துவத்தால் வீழ்த்தப்படவில்லை. பதிலாக இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்களால் அது அரவணைத்துப் பாதுகாக்கப்பட்டது. அது மட்டுமன்றி வளர்ந்து வந்த இந்திய தேசிய முதலாளித்துவத்தினாலும் நிலப்பிரபுத்துவம் பேணிப் பாதுகாக்கப்பட்டது. எனவே இந்திய நிலப் பிரபுத்துவம் இந்திய சூழலுக்கு ஏற்ற வடிவிலே சமூக ஆதிக்கம் பெற்ற ஓர் சமூக அமைப்பாக நிலவி வந்திருக்கின்றது. அந்த அமைப்பிலே சாதிய முறைமைகளின் வடிவிலே வர்க்க ஒழுங்கமைப்பு நிலை நிறுத்தப்பட்டு வந்தமை கூர்ந்து நோக்கத்தக்கதாகும். இவை கூர்மையான வர்க்கப் போராட்டமாகக் காணப்படவில்லையாயினும் அடிப்படை வர்க்க முரண்பாடுகளின் அடித்தளமாக அதுஇருக்கக் காணப்பட்டது.

மனித குலம் கடந்து வந்த வர்க்க சமூக அமைப்பில் நிலப்பிரபுத்துவ அமைப்பு ஒரு கால கட்டத்தை நிறைவு செய்த ஓர் அமைப்பாகவும் இறுதியில் வர்க்க முரண்பாட்டினாலும் போராட்டத்தினாலும் மேற்குலகிலே வீழ்த்தப்பட்டதொன்றாகவும் கண்டுகொள்ளலாம். கிழக்குலகிலே குறிப்பாகச் சீனாவில் பொதுவுடமைப் புரட்சியினால் நிலப் பிரபுத்துவம் வீழ்த்தப்பட்டது. ஆனால் இந்திய பகுதிகளில் அது முதலாளித்துவத்தோடும் ஏகாதிபத்தியத்தோடும் கைகோர்த்து தனது நலன்களைப் புதிய வகையில் பாதுகாத்துச் செல்லும் போக்குடையாதாக இருந்து வருகின்றது. அதனாலேயே அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவம் என்ற பதத்தால் அது அழைக்கப்படுகிறது. இன்றைய நவ காலனித்துவ முறையுடனும் தன்னை இணைத்துக் கொள்வதில் இந்திய நிலப்பரபுத்துவம் சிரமமின்றிச் செல்லத் தன்னைத் தயாராக்கி நிற்;கின்றது.

நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையானது கண்டங்கள் நாடுகளுக்கிடையில் வௌ;வேறு அளவுகளில் அழிந்தும் சிதைந்தும் அரைகுறையாக ஆதிக்கம் பெற்றும் உள்ள போக்கினைக் காணமுடியும். இருப்பினும் மேற்குலகில் அந்த அமைப்பின் முழுமையான அழிவையும் அவ்விடத்தை புதிய அமைப்பாக்கி வந்த முதலாளி;த்துவம் நிறைவு செய்து கொண்டமையும்; சமூக மாற்றத்தின் வரலாற்றுப் படிகளில் நாம் தெளிவாகக் கண்டு கொள்ள முடிந்தது. அடுத்து வரும் பக்கங்களில் அம் முதலாளித்துவ அமைப்பின் அம்சங்களை நோக்குவோம்.

முதலாளித்துவ சமூக அமைப்பு

10

மனித சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற ஓர் அடிப்படை விதி உற்பத்தி சக்திகள் (உற்பத்தி கருவிகளும் உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்களும்) தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருவதாகும். அத்தகைய புதிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை பழைய உற்பத்தி உறவுகள் (உற்பத்தி முறையால் மனிதரிடையே தோன்றும்; சமூக உறவுகள்) தடைப்படுத்த முற்படும். இதனால் ஏற்படும் சமூக முரண்பாடு வர்க்கப் போராட்டமாகி அதுவே பழைய சமூக பொருளாதார அரசியல் அமைப்பைப் புதியதொன்றாகவும் முன்பிருந்ததை விட முற்போக்கானதாகவும் மாற்றியமைத்துக் கொள்கின்றது. சமூகப் புரட்சிகள் மூலமான மேற்படி மாறுதல்கள் தத்தமது காலகட்டத்தின் புரட்சிகரமானதாகவும், மனித குலத்தின் வளர்ச்சியை முன்னோக்கி உந்தித் தள்ளும் ஊக்கிகளாகவும் அமைந்து விடுவதை வரலாற்றில் கண்டு கொள்ள முடியும்.

நிலப்பிரபுத்துவ அமைப்பின் இறுதிக் கால கட்டத்திலே குறிப்பாகப் பதினேழாம் நூற்றாண்டின் நடுக் கூறுடன் மேற்கு உலகத்தில் அவ் அமைப்பில் பாரிய முரண்பாடு தோன்றுவதாயிற்று. பழைய விவசாய உற்பத்தி - கைவினைத் தொழில்முறை போன்றவற்றுக்கும் புதிய உற்பத்தி முறைகளுக்குமிடையிலான தீவிர முரண்பாடு வளர்ச்சி கண்டது. நெசவுத் தொழிலின் வளர்ச்சியும், பட்டறைத் தொழிலின் முன்னேற்றமும், புதிய உற்பத்தி முறையின் ஆரம்பத்தை கோடிட்டுக் காட்டின. அதே வேளை நீராவியந்திரத்தின் கண்டு பிடிப்பும் நிலக்கரியின் பயன்பாடும் புதிய உற்பத்தி முறையை பன் மடங்கு வேகத்துடன் முன் தள்ளியது. ஆனால் நிலப்பிரபுத்துவ அமைப்பையும் அதன் உறவு முறைகளையும் பாதுகாத்து நிற்க முற்பட்ட முடியாட்சியும், நிலப்பிரபுக்களும், கிறிஸ்தவ மத பீடங்களும் புதிய உற்பத்தி சக்திகளை தீவிரமாக எதிர்த்தனர். இதன் மூலம் மாபெரும் சமூக முரண்பாடு அச் சமூக அமைப்பிலே வெடித்தது. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், மத்தியதர வகுப்பினர், வளரும் முதலாளித்துவ சக்திகள் ஒரு புறமாக திரட்சி பெற்றனர். மறுபுறத்தில் முடி மன்னர்களும், நிலப்பிரபுக்களும், மத பீடத் தலைவர்களும், அவர்களது ஆயுத அமைப்புகளும் இருந்தனர். இவ்விருபகுதியினருக்கிடையிலான பல்வேறு படிநிலைகளில் வளர்ச்சி பெற்;றுச் சென்றது.

முடியாட்சி வேண்டாம், குடியாட்சி வேண்டும் என்னும், கத்தோலிக்க மத பீடங்களின் மக்கள் விரோத நச்சுத்தனங்களை எதிர்த்தும், ஏகப் பெரும்பான்மையான மக்கள் தமது வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிக் காட்டினர். இக் கால கட்டத்தில் பல்வேறு நிலைகளில் இருந்தும் முதலாளித்துவ அறிவு ஜீவிகள் முடியாட்சியையும், மத பீடங்களையும் கடுமையாக எதிர்த்தனர். ஜனநாயகத் திட்டங்கள் எனக் கூறிக்கொண்ட பல ஆவணங்களைத் தயாரித்தனர்.

இங்கிலாந்திலும்; பிரான்சிலும் பெயர் பெற்ற அறிவு ஜீவிகள் முடியாட்சியின் முடிவுக்கு புகழ் பெற்ற பல நூல்களை எழுதி வெளியிட்டனர். இதனால் மக்கள் மத்தியில் பிரபுத்துவ எதிர்ப்புக் கொந்தளிப்புகள் எழுந்தன. இச் சந்தர்ப்பத்திலே தான் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பெயர் பெற்ற முதலாளித்துவ பதாகை உயர்த்தப்பட்டதுடன் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கையும் அது பெற்றது. மன்னனுக்கும் மத நிறுவனங்களுக்கும் இருந்த அளவற்ற அதிகாரங்கள் பறிக்கப்படுவதன் அவசியம் மக்களால் உணரப்பட்டு வந்தது. இறுதியில் மக்கள் பெரும் புரட்சியில் இறங்கினார்கள். பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையினை அடித்து நொறுக்கி வீழ்த்துவதில் தமது எல்லையற்ற ஆற்றல்களை வெளிக் காட்டினார்கள். இங்கிலாந்திலும், பிரான்சிலும், ஜேர்மனியிலும், அமெரிக்காவிலும் பெரும் புரட்சிகளும்; உள்நாட்டு யுத்தங்களும் வெடித்துக் கிளம்பின. இவ் எழுச்சிகளுக்கும் புரட்சிகளுக்கும் அரங்கிலே தோற்றம் பெற்ற இளம் முதலாளித்துவம் தலைமைப் பாத்திரத்தை வகித்தது. 1689ல் இங்கிலாந்தில் பெரும்; புரட்சி வெடித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஐரோப்பிய கொலனித்;துவத்திற்கு எதிரான கிளர்ச்சிகளும் போராட்டங்களும் உடைப்பெடுத்தன. 1789ல் பிரான்சில் மாபெரும் பிரஞ்சுப் புரட்சி இடம் பெற்றது. இப் புரட்சிகளில் வெகு ஜனங்களின் வீரதீரம் அதன் உச்சத்தை அடைந்தன. பிரபுத்துவ அடக்குமுறைகளைத் தகர்த்தெறிந்த அவர்களது தீரம் மிக்க புரட்சிகர உணர்வும் போராட்டமும் சமூக அரங்கில் இருந்து நிலப்பிரபுத்துவத்தை துடைத்தெறிந்தது. ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ அமைப்பு முடிவுக்கு வந்தது.

குடியாட்சி, ஜனநாயகம், சுதந்திரம், சமத்;துவம், சகோதரத்;துவம் போன்ற முழக்கங்களுடன் அரங்கினுள் பிரவேசித்த முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தும் பணியை முடித்துக் கொண்டதும் தன்னை பலம்வாய்ந்த அதிகார வர்க்கமாக்கிக் கொள்வதில் முனைப்புக் காட்டியது. முதலாளித்துவ அமைப்பு முறைக்கு வரைவிலக்கணம் வகுத்த சிந்தனாவாதிகளும், அவற்றை நடைமுறைப்படுத்திய முதலாளி;த்துவ ஆளும்வர்க்கப் பிரதிநிதிகளும் விரைவாகவே எதிர்நிலைக்குச் சென்றனர். தாங்கள் முழங்கிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம், போன்றவற்றை தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், மற்றும் உழைக்கும் மக்களுக்கு வழங்க மறுத்தனர்.

தமது அதிகார வரவிற்கும் அதன் நிலை நிறுத்தத்திற்கும் வர்க்கப் போராட்டத்தில் எழுச்சி பெற்ற மக்களின் புரட்சியை பயன் படுத்திக் கொண்ட முதலாளித்துவம் அத்தேவை முடிந்ததும் தமது அரசு யந்திரத்தின் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏனைய உழைப்பாளி மக்களுக்கும் எதிரான ஈவிரக்கமற்ற பொருளாதாரச் சுரண்டலிலும் அரசியல் அடக்கு முறையிலும் முனைப்புக் காட்டி நின்றனர்.

முதலாளித்துவ சமூக அமைப்பானது ஏற்கனவே நிலைபெற்று பின் அழிவுக்கு உள்ளான எஜமானர்களும் - அடிமைகளும், நிலப்பிரபுக்களும் - பண்ணையடிமைகளும் போன்ற நிலையில் இருந்து வேறுபட்ட வகையில் ~~சுதந்திரமானவர்கள்|| என்னும் தோற்றத்துடன் புதிய வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தை தனது உற்பத்தி முறைமையால் சமூகத்தில்; தோற்றுவித்துக் கொண்டது. கிராமங்களைக் கைவிட்டு பண்ணையடிமைகளான விவசாயிகள் நகரங்களுக்கு வேலை தேடி வந்த நிர்ப்பந்த சூழலில் அவர்களிடம் தமது உழைப்பு சக்தி என்ற ஒன்றினை மட்டுமே கொண்டிருந்தனர். அதே வேளை அதனை மிகக் குறைந்த கூலியில் வாங்குவதற்கு ஆலை முதலாளிகள் தயாராக இருந்தனர். பெரும் மூலதனத்தைக் கொண்ட ஆலைச் சொந்தக்காரர்களான முதலாளிகளுக்கும்;, உழைப்பு சக்தியைத் தவிர்ந்த வேறெதையும் கொண்டிராத பாட்டாளிகளுக்குமிடையில் கூலிப் பேரம் இடம் பெற்றது. இவ்வேளையில் பாட்டாளிகளால் குறைந்த கூலிக்கு இணங்கிப் போவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை என்ற சமூக நிர்ப்பந்தமே இருந்தது. அவ்வாறு பாட்டாளி இணங்கிப் போகாவிடின் அவன் ~சுதந்திரமாகப்| பட்டினிகிடந்து இறக்க வேண்டியது தான். எனவே மிகக் குறைந்த கூலியில்;, அதாவது மறுநாள் வேலைக்கு வருவதற்கான அரைகுறையான சக்தியைப் பெறுவதற்கு ஏற்றளவு கூலியை மட்டும் முதலாளித்;துவம் வழங்கக் கூடிய நவீன கூலி அடிமை முறை நடைமுறைக்கு வந்தது.

முதலாளித்துவ அமைப்பு முறையின் தோற்றத்தையும், அதன் சுரண்டல் தன்மையின் பல்வேறு அம்சங்களையும், சமூக வளர்ச்சிப் போக்கில் அதன் ஆதிக்கத் தன்மையையும்; கார்ல் மார்க்சும், பிரடெறிக் ஏங்கல்சும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தனர். அவர்கள் முழு மனிதகுல வரலாற்றையும் விஞ்ஞான பூர்வமான இயங்கியல் பொருள் முதல்வாத நிலைப்பாட்டில் இருந்து ஆராய்ந்ததன் தொடர்ச்சியாக முதலாளித்துவ அமைப்பின் சமூக, அரசியல், பொருளியல், பண்பாட்டுத்; தளங்களின் அடிப்படை வேர்களை தெளிவுடன் ஆராய்ந்து பல பெறுமதி மிக்க முடிவுகளை வெளியிட்டனர். அவர்கள் வெறுமனே விளக்கம் தந்ததுடன் நின்று விடவில்லை. இன்றைய முதலாளித்துவ அமைப்பினை மாற்றி அமைப்பதற்கான புரட்சிகரமான வழிமுறைகளையும் வகுத்தளித்துச் சென்றனர்.

முதலாளித்துவ உற்பத்தி விநியோக முறையானது மூலதனத்தைக் கொண்டிருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகளுக்கு லாபத்;தை பெருமளவில் சம்பாதித்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. சமுதாயத்தில் மனித நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்வதை முதலாளித்துவ உற்பத்தி முறைமுன் நிறுத்துவதில்லை. அதிகலாபம் தரக் கூடியது எதுவோ அதனையே முதலாளி;த்துவம் போட்டிச்சந்தை அடிப்படையில் உற்பத்தி செய்வதில் குறியாக இருந்து வருகிறது. எனவே லாபத்தைப் பெருமளவில் பெருக்கிக் கொள்வதற்காக சுரண்டல் வழிகளை முதலாளித்துவம் பல வழிகளில் செயல்படுத்துகின்றது. சுரண்டலில் இரண்டு பிரதான வகைகள் உண்டு. ஒன்று நேரடியான உழைப்புச் சுரண்டல், இரண்டாவது வாணிபச் சுரண்டல். முதலாவது வகையினை தொழிற்சாலைகளில் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களிடமிருந்து அபகரித்துக் கொள்கின்றது. அதாவது மனித உழைப்பினால் உருவாக்கப்படும் உற்பத்தியில் அடங்கியிருக்கும் உழைப்பின் பெறுமதி லாபமாக முதலாளியால் கொள்ளையிடப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளியும் தான் உழைப்பில் ஈடுபடும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதி நேரத்தை மட்டுமே தனது சம்பளத்திற்காக வேலை செய்து கொள்கிறார்கள். தொழிலாளர்களின் மேலதிக உழைப்பின் மதி;ப்பே முதலாளிக்கு பெரும் லாபமாக அமைந்துவிடுகிறது. இத்தகைய உபரி உழைப்பு, உபரி மதிப்பு, பெரும்லாபம் என்பன முதலாளித்துவச் சுரண்டலின் அடிப்படைகளாக நீடித்துச் செல்கின்றன. அத்;துடன் உற்பத்திப் பொருட்களின் விநியோக முறையினால் வாணிபச் சுரண்டல் சமுதாயத்தில் கண்களுக்குத் தெரியாதவாறு இடம்பெறுகின்றன. இதனால் முதலாளித்துவம் சமூகத்தில் இருந்து பெரும் தொகையில் லாபத்;தை உறுஞ்சிக் கொள்கின்றது.

முதலாளித்துவம் போட்டி முறையிலான உற்பத்தியும் அதன் மூலமான சுரண்டலும் பெரும் முதலாளிகளின் தனிச் சொத்துடமையை விரிந்த அளவில் பெருக்குகின்றது. இவ்வாறு தனிச்; சொத்துடமை பெருகிச் செல்வதால் மறுபுறத்திலே தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏனைய உழைக்கும் மக்களான ஏகப் பெரும்பான்மையோருக்கும் வறுமை வந்து சேர்ந்துவிடுகிறது. சமுதாயத்தில் வறுமைக்கான காரணத்தைத் தேடுவோர் பல்வேறு வழிகளில் துனைக் காரணங்களையே எடுத்துக் காட்ட முயல்வர். ஆனால் முதலாளித்துவத்தின் தனிச் சொத்துடமையைப் பெருக்கும் கொடூரமான வழிமுறைகளால் தான் சமூகத்தில் வறுமையும் ஏனைய துன்பங்களும் நீடிக்கின்றன என்பதே அடிப்படை உண்மையாகும்.

சொத்துடமையில் இரண்டு வகை உண்டு. ஒன்று சமூகச் சொத்துடமை, இரண்டாவது தனிச் சொத்துடமை. முதலாளித்துவம் சமூகச் சொத்துடமையாக இருப்பனவற்றின் அளவினை மிகக் குறைந்தளவிலேயே வைத்துப் பேணிக் கொள்ளும். அதே வேளை தனிச் சொத்துடமையை பெரு அளவில் வைத்திருப்பதை ஊக்கத்துடன் அனுமதிக்கின்றது. தனிச் சொத்துடமையில் இரு வகை இருப்பதை நோக்கலாம். மனித வாழ்வுக்கும் தேவைக்குமான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்கான சொத்துக்களை சிறு அளவிலே தனியுடமைகளாகக் கொண்டிருத்தல். இரண்டாவது வகையான தனிச் சொத்து என்பது வாழ்வுக்கும் தேவைக்கும் அப்பாலான நிலையில் பெரும்; சொத்துக்களை குறிப்பிட்ட தனி நபர்கள் பல்வேறு வடிவங்களில் தமது கைகளில் வைத்திருப்பதுடன் அதன் மூலம் தமது சமூக அரசியல்ஆதிக்கம் அந்தஸ்து என்பவற்றை நிலை நிறுத்திக் கொள்வதுமாகும். இத்தகைய தனிச் சொத்துடமையின் காரணமாக சமூகத்தில் மேல் நிலையில் உள்ள உயர் வர்க்கங்கள் தமது பாதுகாப்பிற்கும், நீடித்த நிலைப்பிற்குமான சமூக ஆதிக்கத்தை அரசியல் சட்ட அமைப்பு முறைகளின் மூலம் நிலை நாட்டி வருவதனை இம் முதலாளித்துவ அமைப்பு முறையில் காண முடியும்.

மேற்குலகில் தோற்றம் பெற்ற இம் முதலாளித்துவம் ஆரம்ப மூலதனத்தையும், விஞ்ஞான தொழில் நுட்பக் கண்டுபிடிப்பின் தொடக்க அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டு தமது புதியவகை உற்பத்தி முறைமையைத் தொடக்கி வைத்தது காலவோட்டத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட விஞ்ஞான தொழில் நுட்ப அறிவு என்பது மேன்மேலும் வளர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டு வந்தது. இதனை முதலாளித்துவம் தனது அதிகரித்த உற்பத்திற்கு உறுதுணையாக்கியது. இக் காலப் பகுதியிலேயே நீண்ட கடல் பயணங்களின் மூலமாகப் பூமிப் பரப்பின் பல்வேறு நாடுகள் கண்டு கொள்ளப்பட்டன. அமெரிக்க கண்டத்தையும், அசிய, அபிரிக்க நாடுகளையும், ஐரோப்பியர்கள் கண்டு கொண்டனர். ஆரம்பத்தில் தமது நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விற்பனையாக்கும் நோக்குடன் இந்நாடுகளிலே காலடியெடுத்து வைத்த இவ் ஐரோப்பியர்கள் இறுதியில் தமது ஆயுத வலிமையாலும், ஆதிக்க எண்ணத்தாலும் இந்நாடுகளைத் தத்தமது கொலனித்துவ நாடுகளாக்கிக் கொண்டனர். ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்ட மூலதனத்தையும், தத்தமது நாடுகளில் எல்லைகளுக்குட்பட்ட சந்தைகளையும் கொண்டிருந்த மேற்குலக நாடுகளுக்கு முதலாளித்துவத்தை வேகமாக விரிவுபடுத்தி வளர்ப்பதற்கு ஏற்ற வளமான புதிய வாய்ப்புகள் உலகரீதியாகக் கிடைப்பதாயிற்று. ஆசிய, அபிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் காணப்பட்ட இயற்கைவளங்களும், அவற்றில்கிடைத்த தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு, போன்ற உயர் உலோகங்கள் தொட்டு விவசாய உற்பத்திப் பொருட்கள் வரை முதலாளித்துவ வேட்டைக்கு முன்னே விரிந்து கிடந்த செல்வங்களாக அவை திகழ்ந்தன. இவையாவற்றையும் மேற்குலகின் வளர் நிலையில் நின்ற முதலாளித்துவம் வாரி அள்ளிச் சென்றது என்று கூறுவதை விடக் கோரத்தனமாக கொள்ளையடித்தச் சென்றது என்று கூறுவதே சரியானதாகும். இதனால் முதலாளித்துவத்தின் மூலதன விரிவாக்கத்திற்குரிய வற்றாத ஊற்று மூலத்தை அவர்கள் தமது கைகளில் எடுத்துக் கொண்டனர். அதே போன்று அம் மூலதனத்தைக் கொண்டு உற்பத்தியாக்கிய பண்டங்களை பரந்தளவில் விற்பனையாக்குவதற்குரிய சந்தைகளாகவும் இந்நாடுகளை தாம் நினைத்தவாறு பயன்படுத்திக் கொண்டனர்.

இவற்றையெல்லாம் முதலாளித்துவ வாதிகள் தாம் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் செயலாக்கம் செய்த போது சாத்வீகமாகவோ, சமாதானமாகவோ அல்லது அந்நாடுகளில் வாழ்ந்து வந்த சுதேசிய மக்களின் விருப்பத்தின் பேரிலோ செய்யவில்லை. கொடூரமான பலாத்காரத்தை அம்மக்கள் மீது பாவித்து கொலை, கொள்;ளை கற்பழிப்பு போன்ற எண்ணற்ற குற்றங்களைப் புரிந்தே முதலாளித்துவம் கொலனியாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டது. இத்தகைய வழிமுறையின் முதல் முன்னோடி என்ற வகையிலேயே அமெரிக்ககண்டத்தை கண்டுபிடித்ததாகக் கூறிய கொலம்பஸை முதலாளித்துவ உலகு போற்றிப் புகழ்ந்து கொள்கின்றது.

இம் முதலாளித்துவ அமைப்பு முறையானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவுடன் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்;துடன் மேற்குலகின் சில நாடுகளை ஏகாதிபத்தியமாக்கிக் கொண்டது. இதன் அர்த்தம் சகல முதலாளித்துவ நாடுகளும்; ஏகாதிபத்திய நிலைக்கு உள்ளாக்கியது என்பதல்ல முதலாளித்துவ நாடுகள் மத்தியில் சமனற்ற வளர்ச்சி காணப்பட்ட அதே வேளை பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் முதலாளித்துவ உச்ச கட்ட வளர்ச்சியை நோக்கிச் சென்றன. முதலாளித்துவ உற்பத்தி முறையின் அதிகரித்த தன்மைகளால் முதலாளித்துவம் தனது மூலதனத்தைக் கொண்டு உலக நாடுகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் பொருளாதார, அரசியல், சமூக நிலைமைகளைத் தானே தீர்மானிக்கும் நிலைக்கு வளர்ந்தது. இம்முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏகாதிபத்தியமாகும் இயல்பினை லெனின் மிகவும் ஆழமாக ஆராய்ந்து ~~முதலாளித்துவத்தின் உச்ச கட்ட வளர்ச்சியே ஏகாதிபத்தியம் என்பதாகும்|| என்றார். ஆரம்பத்தில் இவ் ஏகாதிபத்திய நிலையில் முதன்மையிடத்தை ~~சூரியன் அஸ்தமிக்காத சாம்பிராச்சியத்தைக் கொண்டிருந்த|| பிரித்தானியா பெற்றிருந்தது. அதே வேளை ஏனைய ஏகாதிபத்திய நாடுகளின் வளர்ச்சியினால் அவற்றிடையேயான முரண்பாடுகளும் வலுவடைந்தன. அதன் காரணமாகவே 1914ல் முதலாவது உலகயுத்தம் இவ் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் மூண்டது. தத்தமது ஆதிக்கத்தின் கீழ் செல்வாதாரம் மிக்க நாடுகளைக் கைப்பற்றிக் கொள்வதற்கான யுத்தமாகவே முதலாவது உலக மகா யுத்தம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க முதலாளித்துவம் தனது வேக வளர்ச்சியின் காரணமாக ஏனைய முதலாளித்துவ நாடுகளை முந்திக் கொண்டு உலகில் பலம் வாய்ந்த ஏகாதிபத்தியமாக வளர்ந்து வந்தது. இரண்டாவது உலக யுத்தத்தில் ஜேர்மனி, இத்தாலி, யப்பான் ஆகியன தோற்கடிக்கப்பட்ட அதே வேளை முன்னைய ஏகாதிபத்திய நிலையில் நின்ற நாடுகள் பலவீனம் அடைந்து கொண்டன. ஆனால் இக் காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகின் முதலாவது இடத்தை வகிக்கும் ஏகாதிபத்தியமாகிக் கொண்டது.

முதலாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து மாபெரும் ஒக்ரோபர் சோஷலிசப் புரட்சியானது ரஷியாவில் வெற்றி பெற்றுக் கொண்டது. இதனால் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலகின் சுரண்டி, அடக்கி, ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புற்று கிளர்ந்தௌ ஆரம்பித்தனர். அவர்கள் முதலாளித்துவத்தின் மீது எதிர்கணை தொடுத்து நின்றனர். பல்வேறு நாடுகளில் முதலாளித்துவம் வீழ்ச்சி பெறவும் அல்லது பலவீனம் அடையவும் செய்தன. பல்வேறு வழிகளில் படுகாயப்படுத்தப்பட்ட நிலையில் இம் முதலாளித்துவ ஏகாதிபக்திய சக்திகள் புதிய வழிமுறைகளின் மூலம் தம்மைப் பாதுகாத்து நிலை நிறுத்த பெரு முயற்சி செய்து வருகின்றன. தனது சுரண்டல் வடிவங்களை பழைய நிலையில் இருந்து வேறுபட்ட வழிவகைகளில் செய்யக் கற்றுக் கொண்டு விட்டது. தமது மூலதனங்களை மூன்றாம் உலக நாடுகளில் கொண்டு சென்று தக்கவைப்பதன் மூலமாக இராட்சத பல்தேசிய நிறுவனங்கள் என்னும்; பெயரில் சுரண்டலையும் - கொள்ளை இலாபங்களையும் பெற்று வருகின்றன. இதனையே இன்றைய மூன்றாம் உலக நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் ஏமாற்றி நிர்ப்பந்தித்து, அச்சுறுத்தி, அரவணைத்து, உதவி வழங்குவது போன்று நடித்து தமது சுரண்டலையும், இலாபமீட்டல்களையும் தொடர்ந்து கட்டிக்காத்து வருகின்றன.

முதலாளித்துவம் உலகில் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்ட சுமார் முன்னூறு ஆண்டுகளில் தன்னை ஒரு முழுமையுடைய அமைப்பாக்கிக் கொள்வதில் வெற்றி பெற்றிருக்கின்றது. தமது பொருள் உற்பத்தி முறையின் ஒவ்வொரு படிநிலை வளர்ச்சிக்கும் ஏற்ற விதமாக அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தி உறுதிப்படுத்துவதிலும் அது முனைப்புடையதாக இருந்து வந்துள்ளது. இக் காலகட்டத்தில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும்: சுவீடன், நோர்வே, டென்மார்க் போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளும்: அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்றனவும், அரை நூற்றாண்டு காலத்தில் யப்பானும்; உலக முதலாளித்துவத்தின் அதி உயர் மையங்களாக இருந்து வருகின்றன.

நிலப்பிரபுத்துவத்தை விடச் சிறந்தது எனக் கொள்ளப்பட்ட முதலாளித்துவம் மிகக் கொடிய அம்சங்களைக் கொண்டதாக வளர்ச்சி பெற்று மனித குலத்திற்கு நாசங்களைக் கொண்டு வந்துள்ள ஓர் அமைப்பாகி நிற்கின்றது. தனது மூலதனப் பெருக்கத்திற்கும் கொள்ளை லாபத்திற்குமான பாதையில் ஆயுத உற்பத்தியையும், அணு ஆயுத அச்சுறுத்தலையும் நாளாந்தம் வளர்த்துச் செல்கின்றது. பின் தங்கிய மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை கொள்ளையிட்டு ஆதிக்கம் செய்வதன் ஊடே அந்நாடுகளில் வறுமை, கொடிய நோய்கள், வேலையின்மை, வீடின்மை, சுகாதாரமின்மை, கல்வியின்மை போன்றவற்றை வளரச் செய்கின்றன. சுற்றாடலை மோசமாக மாசுபடுத்தி உலகின் பெரும்பான்மையான நாடுகளையும் மக்களையும் அச்சுறுத்தி நிற்பது முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளேயாகும். அதற்கு மனித நேயமோ அன்றி மனிதத்துவ பண்பாடோ இருக்கப் போவதில்லை. மனித உரிமை, மனிதாபிமானம் என்ற கூப்பாட்டினை ஏகாதிபத்தியம் தூக்கிப்பிடிப்பது அப்பட்டமான ஏமாற்றமேயாகும்.

முதலாளித்துவத்தின் உயர் குறிக்கோள் மனித குல சமத்;துவமோ அன்றி எல்லோரும் எல்லாம் பெற்று வாழ வேண்டும் என்பதோ அல்ல. போட்டிச் சந்தையும், அதிகரித்த லாபமும், தனிச்சொத்துடமையின் பெருக்கமும் மட்டுமே தான். இதனை புகழ் பெற்ற வரலாற்று ஆவணமான கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சும், ஏங்கல்சும் தெளிவுடன் பின்வருமாறு எடுத்துக் காட்டினர்.

~~எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ, அங்கெல்லாம் அது எல்லாப் பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தை வழிச் சமுதாய உறவுகளுக்கும், கிராமாந்தரப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு காட்டியது. மனிதனை ~~இயற்கையாகவே மேலானோருக்குக்|| கீழ்ப்படுத்திக் கட்டிப்போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்து விட்டு மனிதருக்கும் மனிதருக்குமிடையில் அப்பட்டமான தன்னலத்தைத் தவிர பரிவு உணர்ச்சியில்லாப் ~~பணப்பட்டுவாடா|| வைத் தவிர வேறு - ஒட்டுமில்லை, உறவுமில்லை என்றாக்கியது. சமயத்துறைப் பக்தி;ப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், சிறுமதியோரது உணர்ச்சிப் பசப்பு ஆகிய புனிதப் பேரானந்தங்களை எல்லாம் தன்நலக்களிப்பெனும் உறை பனிக் குளிர் நீரில் மூழ்கடித்துள்ளது. மனிதரது மாண்பினை பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்டவாறான விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாய், வெட்கம் கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. சுருங்கச் சொன்னால் சமயத்துறைப் பிரமைகளாலும், அரசியல் பிரமைகளாலுத் திரையிட்டு மணக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாக முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமாக, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலை நாட்டியிருக்கிறது.

இத்தகைய முதலாளித்துவம் தனது சுரண்டல் உற்பத்தி முறைமையைப் பாதுகாத்து நிலை நிறுத்தும் வகையில் பொருளாதாரம், அரசியல், சட்டம், கல்வி, கலை, இலக்கியம் போன்ற அனைத்தையும் பயன்படுத்துகிறது. மதம் தன் பங்களிப்பினை மிகக் கச்சிதமாக முதலாளித்துவத்திற்கு வழங்குகின்றது. தனிநபர் சுதந்திரம் பற்றியும் எவரும் தத்தமது சொந்த முயற்சியின் மூலம் சுய முன்னேற்றம் அடையலாம் என்றும் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் யதார்த்த வாழ்வில் அப்படி எதுவும் நடப்பதில்லை என்பதை உழைக்கும் வர்க்கம் நன்கு அறியும். சுரண்டல், ஏமாற்;று, மோசடி, நயவஞ்சகம், அபகரிப்பு, பலாத்காரம் போன்றன இன்றி முதலாளித்துவத்தால் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற உண்மையை முதலாளித்துவ அமைப்பு நடைமுறையில் உறுதிப்படுத்தி வருகின்றது. தனிச்சொத்துடமையை மிகப் பெருமளவில் சிலர் வைத்திருக்கவும், ஏகப்பெரும்பான்மையான தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் உழைக்கும் மக்கள் பிரிவினர் வறுமை நோய், வேலையின்மை, வீடின்மை, கல்வி - சுகாதாரம் இன்மை, அடக்குமுறை போன்றவற்றை அனுபவித்து துன்பத்திலும் துயரிலும் வாழவிடப்பட்டுள்ள ஓர் அமைப்பாகவே முதலாளித்துவ அமைப்பு விளங்கி வருகின்றது.

இவ்வாறு முதலாளித்துவம் சமூக தீமையும் கொடுமையும் மிக்க ஓர் அமைப்பாக வளர்ந்து வந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகம் இருக்க முடியாது. அதேவேளை ஒவ்வொரு தீய அம்சத்திலும் சில நல்ல அம்சங்கள் இருக்கச் செய்யும் என்ற உண்மை முதலாளித்துவத்தின் கீழும் காணக் கூடியதே. மனித குல வரலாற்றில் முன் எப்பொழுதும் கண்டிராத அளவுக்கு மனித அறிவும், அதன் செயலாக்கமும் முதலாளித்துவத்தின் மூலம் முன்சென்றது. விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் மாபெரும் சாதனைகளை நிலை நாட்டியது. சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டுத் துறைகள் அனைத்திலும் என்றுமில்லாத மேம்பாடும் முன்னேற்றங்களும் பெறப்பட்டன. இயற்கையில் காணப்பட்ட பல்வேறு ஆக்க சக்திகளையும் மனித அறிவு கண்டு பிடித்து அதனைக் கட்டுப்படுத்தி வளர்ச்சி பாதைக்குப் பயன்படுத்திக் கொண்டது. இவ்வாறு ஒட்டுமொத்தமான மனித அறிவு கண்டு பிடித்து அதனைக் கட்டுப்படுத்தி வளர்ச்சி பாதைக்குப் பயன்படுத்திக் கொண்டது. இவ்வாறு ஒட்டுமொத்தமான மனித குலத்தின் துரித வளர்ச்சிக்கு முதலாளித்துவம் தனது போக்கில் மாபெரும் வரலாற்றுப் பங்களிப்பினை வழங்கி நின்றது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும். இத்தகைய நல்லம்சம் எந்த வகையிலும் முதலாளித்துவத்தின் இருப்பையோ அதன் எதிர்கால நீடிப்பையோ நிலை நிறுத்தப் போதுமான நியாயங்கள் ஆகி விட முடியாது என்பதும் கவனத்திற்குரியதாகும்.

எவ்வாறாயினும் முதலாளித்துவ சமூக அமைப்பு தன்னுள் உருவாக்கி வளர்த்துக் கொள்ளும் சமூக முரண்பாடுகளால் வர்க்கப் போராட்டத்தால் தன்னைத்தானே அழிவுக்கு உட்படுத்தி அடுத்த கட்டமான புதியதோர் சமூக அமைப்புக்கு வழிவிட வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு முகம் கொடுத்தே ஆகவேண்டும். இன்று உலக ரீதியாகவே முதலாளித்துவம் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள பல நூறு புதிய வழி முறைகளைக் கையாண்டு வருகின்றது. அதே வேளை அந்த வர்க்கத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் வர்க்கங்களும் தமது சொந்த அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்திப் புதியதோர் சமூக அமைப்பைத் தோற்றுவிக்கப் போராடி வருகின்றன. அத்தகைய அமைப்பே சோஷலிச அமைப்பாகும். இச் சோஷலிச சமூக அமைப்புப் பற்றி அடுத்த பக்கங்களில் பார்க்க முடியும்.

சோஷலிசமும் பொதுவுடமை அமைப்பும்

11

முதலாளித்துவத்தின் தோற்றமும் விரைவான அதன் பன்முகப்பட்ட வளர்ச்சியும் வரலாற்று அரங்கில் அதன் ஓர் முழுமையான சமூக அமைப்பாக நிலை நிறுத்தம் பெற வைத்தது. ஆனால் முன்னைய இரண்டு சமூக அமைப்புகளிலே காணப்பட்ட தனிச் சொத்துடமையை மையமாகக் கொண்ட மனித ஏற்றத் தாழ்வு முதலாளித்துவத்தின் கீழ் மேன் மேலும் விரிவடைந்து செல்லுவது வலுவடைந்தது. பொருள் உற்பத்தி முறைமையில் மனிதரை மனிதர் கொடூரமாகச் சுரண்டுவதையும், அரசியல் வழியில் மனிதரை மனிதர் அடக்கியொடுக்குவதையும் முதலாளித்துவ அமைப்பு முறை அப்பட்டமாகச் செயலாற்றி நின்றது.

இத்தகைய முதலாளித்துவச் சுரண்டல் ஒடுக்குமுறைச் சூழலில் அதற்கு எதிரான பல்வேறு எதிர்ப்புச் சிந்தனைகளும், செயல்முறைகளும் தோற்றம் பெற்றன. பெரும்பாலான சிந்தைப் போக்குகள் முதலாளித்துவத்தின் நாசங்களையும் கேடுகளையும் கண்டித்து அம்பலமாக்கி நின்ற போதிலும் அதற்குப் பதிலீடாக எத்தகைய அமைப்புத் தோன்ற வேண்டும் என்பதிலோ அன்றி அதற்குரிய வழி வகைகள் எவை என்பது பற்றியோ தெளிவான சிந்தைகளை முன்வைக்கவில்லை. யாவும் சமத்துவம் பற்றிய கற்பனாவாத சிந்தைகளாகவே இருந்தன. முதலாளியும் தொழிலாளியும் இணங்கி புரிந்துணர்வுடன் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது போன்ற கற்பசைன் சமத்துவக் கருத்துக்கள் தோன்றிய போதிலும் நடைமுறையில் அவையாவும் செயல்வடிவிற்கு வரவில்லை. இது போன்ற சிந்தைகளையும் கருத்;துக்களையுமே பிற்காலத்தில் கற்பனாவாத சோஷலிசம் என்றழைக்கப்பட்டது.

இந் நிலையிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூறிலே கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏவ்கல்ஸ் ஆகிய இருவரும் புதியதோர் தத்துவஞானத்தையும் அதன் ஊடே ஓர் உலகப் பார்வையையும் வகுத்தளித்தனர். அதுவே மார்க்சிச தத்துவமாகும். அவர்க்ள தமது ஆய்வுகளை முற்றிலும் விஞ்ஞான அடிப்படை கொண்டவையாக உருவாக்கினர். ஜேர்மனியிலே காணப்பட்ட தத்துவம், ஆங்கிலேய நாட்டில் விருத்தி பெற்ற பொருளாதாரம், பிரஞ்சு தேசத்தில் வளர்ச்சி பெற்று வந்த அரசியல் ஆகிய முப்பெரும் துறைகளிலே வரலாற்றுணர்வு கொண்ட தமது ஆழ்ந்த மேதாவிலாசத்தைக் கொண்டு மார்க்சும், ஏங்கல்சும்;; ஆராய்ந்தார்கள். தமது சமூக ஆய்வுக்குரிய நுண்பெருக்கிக் கருவியாக இயங்கியல் பொருள் முதல் வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் மனிதகுல வரலாற்றின் கடந்த காலத்தையும் நிகழ்கால வளர்ச்சிப் போக்கையும் தெளிவுபடுத்திக் கொண்டதுடன் எதிர்காலத்தின் திசை வழியையும் அதன் தவிர்க்கவியலாத நியதிப் போக்;கையும் சுட்டிக் காட்டினர். அவர்கள் வகுத்துச் சென்ற தத்துவமும் அதன் வழி முறைகளும் மனிதகுலத்தின் எதிர்கால ஈடேற்றத்திற்கு மாபெரும் சமூக சிந்தைப் பொக்கிசமாகிக் கொண்டது.

மார்க்சும், ஏங்கல்சும் வகுத்தளித்த விஞ்ஞான சோஷலிசத் தத்துவம் என்பது வர்க்கப் போராட்டத்தின் யதார்த்தத்தையும் அதன் வளர்ச்சியையும் திரை விலக்கி காட்டியது. அதுமட்டமன்றி, அவ்வர்க்கப் போராட்டத்தின் மூலம் புரட்சிகரப் பலாத்காரத்தைப் பயன்படுத்தி முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீசி விட்டு அவ்விடத்திலே தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான சோஷலிச அரசு அதிகாரத்தை நிலைநிறுத்தி புதிய வகையான சோஷலிச பொருள் உற்பத்தி விநியோக நடைமுறையைக் கொண்டு வருவதையும் எடுத்;து விளக்கியது.

சோஷலிச அமைப்பானது முதலாளித்துவ அமைப்பு முறைக்கு நேர் எதிரான ஒன்று என்ற வகையில் உற்பத்தியிலும், விநியோகத்திலும், பங்கீட்டிலும் தனி உடமையை இல்லாதெழிக்கின்றது. அதாவது மூலதனத்தைக் கொண்டுள்ள சிலர் அதன் கீழ் உற்பத்தியில் ஈடுபடும் பெருந்திரளானோரைச் சுரண்டி பெருலாபம் சம்பாதித்துக் கொள்வதை சோஷலிசம் இல்லாதொழிக்கின்றது சோஷலிச உற்பத்தி முறைமையின் கீழ் கூலியும் விலையும் தகுந்த நிர்ணயத்திற்கு உட்படுத்தப்படுவதுடன் லாபம் என்பது தனி நபர்களுக்கு அன்றி முழுச் சமுதாயத்திற்கும் பயன்படுத்தப்படும் அடிப்படைப் பொருளாதார சக்தியாக்கப்படுகிறது.

சோஷலிச அமைப்பிலே பொதுவுடமை என்பது பல்வேறு வடிவங்களிலே முன்னெடுக்கப்படுகிறது. அவை சோஷலிச படிநிலை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியவையாகவே காணப்படும். அங்கே மூன்றுவிதமான உடமை வடிவங்களைக் காண முடியும். ஒன்று அரசுக்கு சொந்தமான உடமை, இரண்டாவது கூட்டு உடமை, மூன்றாவது மக்களுக்குரிய உடமை என்பனவாகும். பெருந்தொழிற்சாலைகள், நிலங்கள், கட்டிடங்கள், கனிவளச் சுரங்கங்கள், நீர் நிலைகள், போக்குவரத்;து, வெளிநாட்டு உள்நாட்டு வர்த்தகம் போன்றன அரச உடமைகளாக விளங்கும். விவசாயம் - உற்பத்திகள், வியாபாரம், சிறு தொழில்கள் முதலியன கூட்டுறவு அடிப்படையிலான கூட்டுடமை வடிவில் இருக்கும். இருப்பிடங்கள், விவசாய சிறு நிலங்கள், சுயதொழில் முயற்சிகள், அன்றாட வாழ்வுக்கான பொருட்கள் போன்றன மக்களது உடமைகளாக விளங்கும்.

உழைப்பு என்பது எல்லோருக்கும் உரியதொன்றாக இருக்க வேண்டும் என்பதை சோஷலிச அமைப்பு வற்புறுத்துகின்றது. யார் உழைப்பில் ஈடுபடவில்லையோ அவர் உண்பதற்கு தகுதியற்றவர் என்றவரையறை மூலம் விளங்கக் கூடியது யாதெனில் உடல் உழைப்பிலோ அன்றி மூளை உழைப்பிலோ ஈடுபடாது மற்றையோரது உழைப்பை அபகரி;த்து அதில் உண்டு வாழ எத்தனிக்கும் எவரையும் சோஷலிசம் அனுமதிப்பதில்லை. ~சக்திக்கு ஏற்ப உழைப்பும் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும்| என்னும் கோட்பாடு பின்பற்றப்படுகிறது. இதனால் ஒவ்வொருவரும் தத்தமது திறமைக்கும் முன் முயற்சிக்குமேற்ப உழைப்பில் ஈடுபடுகின்றார்கள். அவர்களது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கப் பெறுகிறது. தனிநபர் சுதந்திரம், என்றும்; முதலாளித்தவக் கோஷத்தின் கீழ் எவரும் சொத்துச் சேகரித்து முதலாளி ஆகலாம் என்ற சுத்த ஏமாற்றுத்தனத்தை சோஷலிசம் நிராகரிக்கின்றது. அதனாலேயே முதலாளித்துவத்தின் உடன் பிறப்புக்களான வறுமை, நோய், வீடின்மை, வேலையின்மை போன்றவற்றை சோஷலிசம் தனது அமைப்பிலே வெற்றிகரமாக இல்லாதொழித்துக் கொள்கிறது. பொருளாதார, அரசியல், கல்வி, கலாச்சார மற்றும் சமூகத்துறைகள் அனைத்திலும் சகல மனிதர்களுக்குமான சமத்தவ வாய்ப்புகளையும் அதன் மூலமான முன்னேற்றங்களையும் சோஷலிச அமைப்பு வழங்கி உத்தரவாதப்படுத்துகிறது. பெண்கள் ஆண்களைச் சார்ந்து இருப்பதையோ பிள்ளைகள் பெற்றோரை எதிர்பார்த்து நிற்பதையோ சோஷலிசம் மாற்றி அமைக்கின்றது. ஒவ்வொருவரையும் தத்தமக்குப் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதுடன் சமூகப் பொறுப்புள்ள புதிய நாகரீக மனிதர்களாகவும் படம் போட்டுக் கொள்கிறது. கல்வியையும், கலாச்சாரத்தையும் பழைமைவாத நிலையில் இருந்து மீட்டெடுத்த அனைத்து மக்களின் ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கும் அவை சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படுவதையும் சோஷலிசம் கண்ணும் கருத்துமாகச் செயல்படுத்துகிறது. உழைப்புப் பிரிவினையால் ஏற்படும் உயர்வு தாழ்வு அந்தஸ்து போன்ற பிரச்சனைகளை சோஷலிசம் இல்லாதொழிக்கின்றது. ஒவ்வொரு தொழிலும், அதில் ஈடுபடும் ஒவ்வொருவரும் உயர்வாக மதிக்கப்படும் சமூகச் சூழல் சோஷலிசத்தில் நிலவுகிறது. உடல் உழைப்பிற்கும், மூளை உழைப்பிற்கும் இடையிலான எதிர் நிலை இடைவெளி குறைந்து இல்லாது போகிறது. அதே போன்று நகரத்திற்கும் கிராமத்திற்குமிடையிலான தர வேறுபாடும் மறைந்து செல்கிறது.

சோஷலிசம் சகல மனிதருக்குமான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் போன்ற மனித அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதை உயர் நோக்காகக் கொண்டு உற்பத்தியும் விநியோகமும் போட்டிச் சந்தையில் தனிநபர் லாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக அன்றி சகல மனிதரினதும் வாழ்வுத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே என்பதைச் சோஷலிச அமைப்பு முறையின் கீழ் கோடீஸ்வரர்களும்;, லட்சாதிபதிகளும், பணமுதலைகளும் இருக்கமாட்டார்கள் என்பதைப் போல் வறுமைக்கு உள்ளான ஏழைகளும், பிச்சைக்காரர்களும் இருப்பதில்லை. எனவே சோஷலிச அமைப்பானது சிந்தனையிலும், செயலிலும், கருத்தியலிலும் மனித வாழ்வையும் சமத்ததுவத்தையும் வற்புறுத்தி மனித நேயத்தையும், மனிதத்துவத்தையும் நோக்கிய நீண்ட பயணத்திற்கு வழி காட்டி நிற்கின்றது.

முதலாளித்துவ அமைப்பு முறையிலே அரசியல் அதிகாரம் என்பது அந்த அமைப்பினைப் பாதுகாத்து நிற்கும்; பிரதிநிதிகளின் கைகளிலேயே இருக்கின்றது. ஜனநாயகம், சுதந்திரம், வாக்குரிமை, பாராளுமன்றம், சட்டம், நீதித்துறை, பாதுகாப்புத்துறை யாவும் பெரும் சொத்துடமை வர்க்கத்தினரின் தேவைக்கும், பாதுகாப்பிற்கும், நீடித்த இருப்புக்குமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த அமைப்பிலே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் எதிராக கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத முதலாளித்துவ சர்வாதிகாரம் செலுத்தப்படுகிறது. அதே வேளை ஆளும் வர்க்கத்தினருக்குப் பூரண சுதந்திரமும் ஜனநாயகமும் கிடைக்கப் பெறுகிறது.

ஆனால் சோஷலிச அமைப்பு முறையிலே மேற் கூறிய நிலை தலைகீறாக மாற்றம் பெறுகின்றமையைக் காணலாம். அங்கு அரசியல்; அதிகாரம் தொழிலாளி வர்க்கத்தின் கைகளுக்கு வந்து விடுகின்றது. அந்த அதிகாரத்தின் கீழ் ஜனநாயகம், சுதந்திரம் என்பவை அவற்றுக்குரிய பூரண அர்த்தத்தோடு ஏகப் பெரும்பான்மையான மக்களுக்குரியதொன்றாக மாற்றப்படுகின்றது. இங்கே சர்வாதிகாரம் என்பது மக்களுக்கு எதிராகவன்றி ஏற்கனவே வீழ்த்தப்பட்டு மீண்டும் மீட்சி பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரானதொன்றாகவே பிரயோகம் பெறுகின்றது. இதனையே ~மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்| என்றழைக்கப்படுகிறது.

வரலாற்றின் வளர்ச்சிப் போக்கிலே முதலாளித்துவம் நித்திய ஆயுள் பெற்ற ஒன்றாக இருக்கப் போவதில்லை என்பதையும், தானே பிறப்பித்து பெருக்கிக் கொண்ட புதிய வர்க்கமான தொழிலாளி வர்க்கம் வர்க்கப்போராட்ட விதிக்கமைவாக இறுதியில் முதலாளித்துவத்தை தோற்கடித்து அவ்விடத்திலே தமது சொந்த ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தும் என்ற விஞ்ஞான முடிவினையும் மார்க்சிச தத்துவம் முன் வைத்துச் சென்றது. முதலாளித்துவத்தின் சுரண்டல் கொடுமைகளாலும் அரசியல் அடக்கு முறையாலும் அமுக்கப்பட்டு தமது வாழ்வையே இழந்து நிற்கும் தொழிலாளி வர்க்கம், புதிய வர்க்கம் என்ற வகையிலும், புதிய வாழ்வை வேண்டி நிற்கும் புத்தி பூர்வமான புரட்சிகர உணர்வு மிக்க வர்க்கம் என்பதாலும், எண்ணிக்கையில் நாளாந்தம் பெருகிவரும் ஒன்று என்பதாலும், அது அணிதிரட்டப்பட்டு ஒழுங்கமைந்த ரீதியில் முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டத்தில் இறுதி வெற்றி பெறமுடியும்; என்பதை மார்க்சிசம் ஓர் தீர்க்க தரிசன தத்;துவ நோக்குடன் முன்மொழிந்து சென்றது. அதுவே 1917ம் ஆண்டின் மகத்தான ஒக்ரோபர் சோஷலிசப் புரட்சியாக தோழர் லெனின் தலைமையில் ரஷியாவில் வெடித்தெழுந்து வெற்றி பெற்றது. அதுவரை சோஷலிசம் என்பது கனவு உலகக் காட்சி என்று, முதலாளித்தவப் பிரசாரர்களால் எடுத்துக் கூறப்பட்ட சகல அபத்தங்களையும் ஒக்ரோபர் புரட்சி பொய்ப்பித்துக் கொண்டது. அது மட்டுமன்றி உழைப்பதற்கு மட்;டுமே தொழிலாளி வர்க்கம் தகுதியானதேயன்றி ஆட்சி அதிகாரத்திற்கோ அன்றி சோஷலிசத்திற்குத் தலைமை தாங்கி சோஷலிச அமைப்பை கட்டியெழுப்புவதற்கு எவ்வித தகுதியும், தகமையும் அதற்கு கிடையாது எனக் கூறப்பட்ட இகழ்ச்சி மொழிகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டு ரஷிய தேசத்திலே சோஷலிசத்தை நிலை நிறுத்தி அப்புதிய அமைப்பினை உலகிற்கான புதுமையாக வளர்த்தெடுப்பதில் தொழிலாளி வர்க்க முன்னுதாரணம் அங்கு காட்டப்பட்டது. அந்த வழியிலே பல்வேறு நாடுகளில் சோஷலிச அமைப்பு முறை வென்றெடுக்கப்பட்டு நிலை நிறுத்தம் பெறுவதாயிற்று. குறிப்பாக உலக மக்கள் தொகையில் முதல் நாடாகவும், வறுமையின் பல்வேறு பரிமாணங்களையும் அனுபவித்த பின் தங்கிய பிரபுத்துவ அடிமை நாடாகவும் திகழ்ந்த சீன தேசம் இச்சோஷலிச அமைப்புமுறையினை தோழர் மாஒசேதுங் தலைமையில் நீடித்த புரட்சிகரப் போராட்டத்தின் ஊடே வென்றெடுத்து நிலை நிறுத்திக் கொண்டது. கொரியாவிலும், வியட்நாமிலும், கியூபாவிலும் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிச அமைப்பு முறை வெற்றி பெற்றுக் கொண்ட வரலாற்று நிகழ்வுகள் மார்க்சிச தத்துவம் முன்வைத்த சோஷலிச சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையை எடுத்;துக்காட்டியது. இன்று பல ஆண்டுகளுக்குப் பின் அச்சோஷலிச அமைப்பு முறைமையிலே தற்காலத் தோல்விகளும் பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளமையை அதன் நிரந்தரத் தோல்வியாகவும் முதலாளித்தவத்தின் சீரஞ்சீவித் தன்மைகளாகவும் யாராவது காட்ட முற்படுபவர்கள் இருப்பின் அவர்கள் அறிவியல் ~பார்வையற்ற வரலாற்றுக் குருடர்களாக| மட்டுமே இருப்பர். ஆனால் இத்தகைய முதலாளித்துவத் துதி பாடுபவர்களின் எதிர்வுப் பிரசாரங்களையும் விஞ்சி சோஷலிசம் சர்வ வியாபத் தன்மையுடன் வரலாற்று அரங்;கில் தனது இருப்பிற்கான பாதையில் முன்னேறிச் செல்வதை எவராலும்;;;; தடுத்து நிறுத்த முடியாது. முதலாளித்;துவம் தனது நீடிப்பிற்;கு புதிய வழிவகைகளைத் தேடி அவற்றை செயலாக்குவதன் மூலம் சோஷலிசத்தின் வெற்றியை குறிப்பிட்ட காலத்திற்கு பின்தள்ள முயல்கின்றது. அதற்காக சோஷலிசத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சில நடைமுறைகளை தானே அறிமுகம் செய்து பாசாங்கு காட்டி தம்மைத் திருந்திக் கொண்ட அல்;லது புதிய முதலாளித்துவமாகக் காட்டிக் கொள்ள முயல்கின்றது. இதனையே சிலர் ~மனித முகத்துடனான முதலாளித்துவம்| என அழைத்துக் கொள்கின்றனர். ஆனால் இது அடிப்படையில் வெறும் தோற்றப்பாடேயன்றி முதலாளித்துவத்திற்கு உண்மையான மனித முகம் வந்துவிடமாட்டாது. அதன் சுரண்டல் கொடுமை மிகுந்த மிருக முகத்தை ஒரு போதும் அது இழக்கப்போவதில்லை. இம் முதலாளித்துவம் தனது மனித முகம் காட்டி நிற்கும் ஏமாற்றுத் தனத்திற்கு சோஷலிச அமைப்பு முறையின் உயர்ந்த நற் பண்புகளில் இருந்து திருடிக் கொண்டவற்றை நயவஞ்சகத்துடன் பயன்படுத்தி வருகின்றதே தவிர மனித நேயத்தின் அடிப்படையில் அல்ல என்பதே உண்மையாகும்.

எனவே சோஷலிச அமைப்பு முறை என்பது திட்டவட்டமான வரையறைகளையும் வழி முறைகளையும் சார்ந்து தொழிலாளி வர்க்கத்தால் முன்னெடுக்கப்படும் ஒன்றாகும். அது வரலாற்று வளர்ச்சிப் போக்கிலே தவிர்க்கவோ அன்றி நிராகரிக்கவோ முடியாத ஓர் சமூக அமைப்புக் கட்டத்தை நிறைவு செய்வதற்குரிய ஓர் அமைப்பாகும். அது தனது நீண்டபயணத்தில் சாதிக்க வேண்டிய வரலாற்றுத் தேவையின் காரணமாக உன்னதம் மிக்க உலக அமைப்பு என்று கொள்ளப்படும் பொதுவுடமை (கம்யூனிச) சமூக அமைப்பின் அடிப்படைகளுக்குரிய முன்தேவைகளையே இச்சோஷலிச அமைப்பு நிறைவு செய்ய முற்படுகிறது.

மார்க்சிசம் வரையறுத்துச் சென்ற சோஷலிச, கம்யூனிசக் கட்டங்களையும் அவற்றுக்குரிய சமூகத்தன்மைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகும். சோஷலிச அமைப்பு என்பது பூரண பொதுவுடமை (கம்யூனிச) அமைப்;பை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கமேயாகும். சோஷலிசம் தனியொரு நாட்டிலும் அதேபோன்று பல நாடுகளிலும் இறுதியில் உலகம் பூராகவும் வெற்றி கொள்ளப்பட்டு நிலை நிறுத்தம் செய்யப்பட்ட பின்பும்; குறிப்பிட்;ட கால கட்டத்தின் பின்பே பொதுவுடமை (கம்யூனிச) சமூக அமைப்பு விருத்தி பெற முடியும் என்பதையே மார்க்சிசம் எடுத்துக் காட்டியது.

அத்தகைய பூரண பொதுவுடமை (கம்யூனிச) சமூக அமைப்பிலே உலகின் எந்தவோர் மூலையிலும் தனிச் சொத்துடமை என்பதோ, அதன் வழியில் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்ட வர்க்கங்களோ, அவற்றின் அடியாகத் தோன்றி வளர்ந்த அரசு வடிவம் என்பதோ இருக்க முடியாது. வர்க்கங்கள் அற்றுப் போகும் சூழலில் ஒரு வர்க்கத்தை மற்றொரு வர்க்கம் அடக்கி ஆள்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட அரசு வடிவம் என்பதும் உலர்ந்து உதிர்ந்து கொள்ளும் உயர் நிலை உருவாகிவிடும்;. தனிச் சொத்துடமை மறைந்து போவதால் எனது, உனது, நான், நீ என்ற நிலை அற்றுப் போவதுடன் உயர்வு, தாழ்வு என்பதும் ஆண் பெண் பேதம் யாவும் மறைந்து உயர் நிலையிலான சமூக சமத்துவம் மனித நேயத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்படும். பொதுவுடமை (கம்யூனிச) சமூக அமைப்பிலே உழைப்புப் பிரிவினை அறவே அற்றுப் போய்விடும். ஒவ்வொருவரும் தமது வாழ்வுக்கும் தேவைக்குமானவற்றை கூட்டுழைப்பின் அடிப்படையில் உற்பத்தி செய்வதுடன் தத்தமது தேவைக்கேற்றவாறு பங்கிட்டுக் கொள்ளக்கூடிய உயர்நிலை தோன்றிவிடும். அதாவது ~சக்திக்கு ஏற்ற உழைப்பும் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும்| என்னும் சோஷலிசக் கோட்பாடு பொதுவுடமை (கம்யூனிச) சமூக அமைப்பிலே ஒவ்;வொருவரும் ~சக்திக்கு ஏற்ற உழைப்பும், தேவைக்கு ஏற்;ற ஊதியமும்| என்னும் உயர் நிலையாக மாற்றம் பெற்றுக் கொள்ளும். அங்கு சமூக முரண்பாடாகத் திகழ்ந்த வர்க்க முரண்பாடுகள் அற்றுப் போய்விடும். இயற்கைக்கும் மனிதருக்குமிடையிலான முரண்பாடும், உண்மைக்கும் பொய்க்கும் இடையிலும், சரிக்கும், பிழைக்கும் இடையிலும்; முரண்பாடுகள் காணப்படும் புதிய சமூகச் சூழலே காணப்படும்.

மனிதகுலம் தனது ஆரம்பகாலத்தில் தனிச் சொத்துடமையற்ற ஆதிகாலப் பொதுவுடமைக் காலகட்டத்தில் அனுபவித்திருந்த ஒரு பொதுமை நிலையினை இன்றைய வளர்ச்சி பெற்று செல்;லும் விரைவான விஞ்ஞான தொழில் நுட்ப சகாப்பத்தின் நவீன பொதுவுடமை (கம்யூனிச) சமூக அமைப்பாக மீண்டும் காணக்கூடிய நிலை உருவாகும். இது இன்று நாளை எதிர்பார்க்கக் கூடியதொன்றல்ல என்பது உண்மையே. ஆனால் வரலாற்றின் வளர்ச்சி விதி அவ்வாறான ஒரு அமைப்பினை பல்வேறு தோல்விகள், பின்னடைவுகளினூடே தோற்றுவித்தே தீரும். அதற்கான மனித முயற்சி என்பது இடையறாத வண்ணம் பல்வேறு வழிகளிலும் வகைகளிலும் வளர்ச்சி பெற்றுச் செல்;லும்.

மனிதரும் மதங்களும்

12

உலகில் மதங்கள் என்பன மனித வாழ்வில் பாரிய தாக்கத்தினை விளைவித்து நிற்கின்றன. அவை அடிப்படையில் ஆன்மிக ஈடேற்றத்திற்கானவையாகத் தம்மை வெளிக்காட்டிக் கொண்டபோதிலும் மனிதரின் அன்றாடவாழ்வில் பெரும் கருத்தியல் ஆதிக்கத்தினைச் சுமத்தி பழைமைவாதச் சிந்தனைக்குள் உழல வைப்பதில் நிறுவன ரீதியில் செயல்பட்டு வருகின்றன. பெரிய மதங்கள் தொட்டு சிறிய மதங்கள் வரை மனிதர்களிடையேயான ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தியும், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை மறுத்துரைத்தும், முற்போக்கான சமூகக் கருத்துக்களைப் புறமொதுக்கிக் கொள்வதிலும் முன் நிற்பவையாகவே காணப்படுகின்றன. ஒரு சில மதங்களில் காணப்படும் உட்பிரிவினர் சமுதாய சார்பும், மனித நேயமும் கொண்ட கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்க முற்பட்ட போதிலும் பெரும்பாலான மதங்கள் இவ்வுலகையும், மனிதர்களையும் கடந்து அடுத்த உலகம் பற்றியும் கடவுள் அல்லது ஆண்டவன் பற்றியுமே மீண்டும் மீண்டும் மனிதர்களுக்கு எடுத்துரைத்து நிற்கின்றன. எனவே மதங்களுக்கும் மனிதர்களுக்குமிடையிலான உறவினை வரலாற்று ரீதியில் சுருக்கமாகத்தானும் கண்டு கொள்வது தேவையாகின்றது.

மனிதகுல வரலாற்றில் மதங்கள் என்பன ஒவ்வொரு கால கட்டத்திலும் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டு நிறுவன வடிவம் பெற்றுக் கொண்டவையாகும். இன்றிருப்பது போல் ஆரம்ப காலம் தொட்டு மதங்கள் இருந்து வந்தன என்று கூறி விட முடியாது. வரலாற்றின் நீண்ட வளர்ச்சிப் போக்கில் மதங்களின் தோற்றம் வளர்ச்சியினைக் கணக்கிட்ட ஆய்வாளர்கள் ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இக்கால கட்டத்திற்குள்ளான வௌ;வேறு காலப் பிரிவுகளிலே தான் உலகின் பெரு மதங்களாகக் காணப்படும் இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் என்பன தோற்றம் பெற்று நிறுவனங்களாகிக் கொண்டன. இவற்றை விட உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில் பலதரப்பட்ட சிறிய மதங்கள் தம்மளவில் நிறுவன வடிவத்துடன் இருந்து வருகின்றன. இம் மதங்களை ஆழ்ந்த பயபக்தியோடும், உயர்ந்த புனிதத் தன்மையோடும் நோக்கும் போக்கினைத் தவிர்த்து அறிவியல் அடிப்படையில் அவற்றிடையே காணப்படும் உள்ளார்ந்த தன்மைகளை உற்று நோக்கின் பல நூறு கேள்விகளை எழுப்பி சிந்திக்க வைக்கும் உட்கிடக்கைகள் அங்கே பொதிந்திருப்பதைக் காணமுடியும்.

உலகின் பெருமதங்களாயினும் சிறு மதங்களாயினும் தத்தமது தோற்றத்தின் பின் ஒன்றை ஒன்று எதிர்த்து வளர்க்கப்பட்ட வரலாற்றினைக் கொண்டதாகவே காணப்படுகிறது. இம்மதங்களின் சார்பாகவும் அதே போன்று அவற்றிடையே காணப்பட்ட உட்பிரிவுகள் சார்பாகவும் மனிதர்கள் யுத்தங்களில் ஈடுபட்டு லட்சக் கணக்கில் மடிந்துபோன வரலாற்றுச் செய்திகளும் நோக்குதற்குரியதாகும் இந்து பௌத்த மோதல், இந்து இஸ்லாமியச் சண்டை, சைவ சமணப் போர் போன்றவற்றையும்: கிறிஸ்தவ இஸ்லாமிய யுத்தம், கத்தோலிக்க புரட்டஸ்தாந்து போராட்டம், இஸ்லாமியர்களிடையே ஷியா, சுன்னி பிரிவுகளுக்கிடையிலான மோதல்கள் யாவும் மதங்களின் பேரால் மனிதர்கள் வதையுண்ட கதைகளை கூறுபனவாகும். இவற்றிலிருந்து அறியக் கூடிய உண்மை என்னவெனில் கடவுள் மனிதர்களைப் படைத்திருந்தால் இம் மதச் சண்டைகள் ஏற்பட்டிருக்க முடியாது என்பதாகும். அவ்வாறன்றி மனிதர்கள் தத்தமது தேவைகருதிக் கடவுள்களை உருவாக்கினர் என்பதனாலேயே மதச்சண்டைகள் தொடர்கின்றன. மதங்கள் என்பன மனித ஈடேற்றத்திற்கு அன்றி மனிதர்களின் குறுகிய நோக்கங்களுக்கு (சுரண்டல், சொத்துடமை, ஆட்சிஅதிகாரம், உண்மைகளை மறைத்தல், ஏமாற்றுதல்) பயன்படும் வலிமையான கருவியாகவே அவற்றின் ஆரம்பம் தொட்டு இருந்து வந்துள்ளன என்பது தெளிவாகும்.

இப் பூவுலகிலே உயிரினங்களின் தோற்றத்திற்குப் பின் இடம் பெற்ற பரிணாம வளர்ச்சிப் போக்கில் ஒருவகைக் குரங்கினத்திலிருந்து மனிதர்கள் உருவாகினர். அத்தகைய மனிதர்கள் படிப்படியாகத் தமது குரங்கின வாழ்வை விட்டு ஆரம்பகால மனிதர்களாகிக் கூட்டு வாழ்க்கையில் ஈடுபட்டனர். இக் கூட்டு வாழ்க்கை அன்றைய பூமிச் சூழலில் மனிதர்களுக்கு அவசியமாகியது. இவ் ஆரம்பகால கட்டத்திலே இ;யற்கை நிகழ்வித்த செயல்களுக்கு அன்றைய மனிதர்களால் உரிய காரணங்களைக் கண்டறிய முடியவில்லை. அதே வேளை மிருகங்களோடு மனித மிருகங்கள் போல் வாழ்ந்து வந்த மனிதர்களை பெரு மிருகங்கள் தீராத்தொல்லை கொடுத்து அழிக்கவும் முற்பட்டன. இவ் ஆரம்ப நிலையிலேயே இயற்கை சக்திகளையும், விலங்குகளையும் கண்டு அஞ்சி நடுங்கி அவற்றை எதிர்த்து கட்டுப்படுத்;தும் வகையறியாது அம் மனிதர்கள் இருந்தனர். மேற் கூறியவற்றின் முன்னால் தாங்கள் சக்தியற்றவர்கள் என எண்ணிய மனிதர்கள் அவற்றுக்கு அஞ்சி வணங்கி நிற்கும் நிலைக்கு உள்ளானார்கள். அச்சம், இயலாமை, அறியாமை காரணமாக பஞ்சபூதங்கள் என்று கூறப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பனவற்றை மன்றாடி வணங்குவதன் மூலம் அவற்றினால் ஏற்படும் இடர்களைத் தவிர்க்கலாம் என நம்பினார்கள். அவற்றுக்குரிய சந்தர்ப்ப சூழல்கள் அவர்களது நம்பிக்கைகளை மேன் மேலும் வளரச் செய்தன. இதனால் சடங்குகள் என்பன இந்நம்பிக்;கைகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டன.

ஆரம்ப நிலையில் அச்சத்தையும், இயலாமையையும் சைகைகள் மூலம் வெளிப்படுத்தி நின்ற மனிதர்கள் ஓசைச் சீர்உள்ள மொழியினை தம்மிடையே உருவாக்கிக் கொண்ட நிலையில் தமது நம்பிக்கைகளைச் சடங்குகளாக விரிவடையச் செய்தனர். மந்தைகள் மேய்த்தும் பின் பயிர் செய்முறை கண்டு கொண்ட போது வணங்குதல், வேண்டுதல், போற்றுதல் நன்றி தெரிவித்தல் போன்றவற்றை இயற்கையை நோக்கின சடங்குகளாக முன்னெடுத்தனர். இவை யாவும் இயற்கையோடு இணைந்தவையாகக் காணப்பட்டவைகளே அன்றி கடவுள் என்னும் கருத்துக் கொண்டவை அல்ல என்பது நோக்குதற்குரியதாகும்.

இயற்கைக்கு முதன்மையும் அதனைப் போற்றும் தன்மையும் ஆதிகால நம்பிக்கைகளாகக் காணப்பட்டன. உதாரணத்திற்கு ஒன்றினைக் கூற முடியும். அன்றைய கட்டத்தில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதும் குழந்தைகள் பெறுவதும் எதனால் என்பதை மனிதர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. சில மரங்கள் காய்த்துக் கொள்ளும் போதும், சில காலக் காற்று வீசும் போதும் பெண்கள் கர்பமடைகிறார்கள் என்றே ஆரம்பத்தில் நம்பினார்கள். ஆனால் காலவோட்டத்தில் ஆண் பெண் புணர்ச்சியின் மூலம் தான் கர்ப்பம் உண்டாகி குழந்தைகள் பிறக்கிறார்கள் என்ற இயற்கை நிகழ்வினை மனிதர்கள் அறிந்து கொண்டார்கள். எனவே மனித வாழ்வை விரிவுபடுத்தி நிற்கும் இயற்கை நிகழ்வினைப் போற்றிப் புகழ ஆரம்பித்தார்கள். ஆண் பெண் உறுப்புக்களை ஒன்றிணைத்து உருவகப்படுத்தி அதனைப் போற்றி நிற்கும் நிலைக்கு கிழக்குலகிலே வாழ்ந்து வந்த மக்கள் முக்கியத்துவம் வழங்கினர். அதனையே சிந்துவெளி நாகரீக காலத்திலும் அதற்கு முன்பும் காணப்பட்ட லிங்க வழிபாடு என்பது உணர்த்துவதாக கண்டு கொள்ள முடிகிறது. இதுவே பிற்காலத்தில் கடவுளோடு தொடர்புபடுத்தி சிவலிங்க வழிபாடாகக் காட்டப்பட்டது. ஆனால் ஆரம்பகால லிங்க வழிபாடு என்பது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அம்சத்தை வலியுறுத்திப் போற்றுவதாகவே அமைந்திருந்தது.

மேலும் மனிதர்கள் குழுக்களாகவும், குலங்களாகவும் கூட்டு வாழ்க்கை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் விலங்குகளிடமிருந்தும் ஏனைய குழுக்கள் குலங்களிடமிருந்து தம்;மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உடற்பலமும் வீரமும் கொண்ட குலத்தலைவர்கள் தேவைப்பட்டனர். இத் தேவையை நிறைவு செய்யும் ஆண்களும் பெண்களும் முன்னணிப் பாத்திரம் வகித்தனர். அத்தகையவர்கள் குல மோதல்களில் வெற்றி பெற்றவர்களாகக் காணப்பட்டபோது அவர்கள் போற்றிப் புகழப்பட்டனர். இறந்தபின் வணக்கத்திற்குரியவர்களாக மதித்து வணங்கப்பட்டனர். பிற்காலத்தில் மதக் கருத்துகளுடன் இணைந்து இத்தகையவர்கள் கடவுள்கள் ஆக்கப்பட்டனர். சிவன், முருகன், ஸ்கந்தன், காளி, அம்மன், துர்க்கை போன்ற சகல தெய்வ வழிபாடுகளின் மூலத்தை வரலாற்று ரீதியில் ஆராய்ந்து அறிந்து கொள்ள முற்பட்டால் அங்கே மனிதரில் இருந்தே கடவுள்கள் தோற்றம் பெற்றதைக் கண்டு கொள்ள முடியும். புத்தர், ஏசு, முகமதுநபி போன்ற மனித சமூக முன்னோடிகள் இன்று மூன்றில் இரண்டுக்கு மேல் கடவுள்கள் ஆக்கப்பட்டனர். நாயன்மார்கள், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றவர்கள் ஐம்பது வீதத்திற்கு மேல் கடவுள்களாக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை விட சமகாலத்தில் உயிருடன் வாழ்ந்து வரும் வசதி கொண்ட மனிதரான சத்தியசாயிபாபா வீடுகள் பலவற்றிலே வழிபடப்படும் கடவுளாக மாறி வருகின்றார். இவ்வாறு மனிதர்கள் கடவுளாக்கப்படும் நிகழ்வுப் போக்கு வரலாற்று வளர்ச்சியோடு இணைந்து முன்னெடுக்கப்பட்டு வந்ததேயாகும். ஆனால் ஆரம்பகால மனிதர்களிடையே ஊகங்கள் நம்பிக்கைகளாக மாறி அவற்றுக்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள்: மரபு ரீதியான பழக்கவழக்கங்களாக மட்டமே இருந்து வந்தன. பிற்காலத்திலேயே அவை மதக் கருத்துக்களோடும் மத நிறுவனங்களோடும் பிணைக்கப்பட்டவையாகும்.

ஆதிகால மனிதர்களிடையே காணப்பட்ட ஊகங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் என்பன இயற்கையோடு இணைந்தவையாகக் காணப்பட்ட அதேவேளை பிற்காலத்திய மதவாதக் கருத்துக்கள் கடவுள் கொள்கையை மையப்படுத்தியதாகவே அமைந்தது. இங்கே உள்ள வரலாற்றுச் சுவை என்னவெனில் முன்னையதை பின்னையது தனது நிறுவனவடிவிற்கு அடிப்படை ஆதாரமாக்கிக் கொண்டு வெற்றிநடைபோட்டமைதான்.

வரலாற்றில் ஆதிகாலக் கூட்டு (புராதனப் பொதுவுடமை சமூக அமைப்பு) சமூக அமைப்பு தனிச் சொத்துடமையின் தோற்றத்தினாலும் வர்க்கவேறுபாட்டினாலும் தகர்க்கப்பட்டது. அங்கே குடும்பம் தனிச்சொத்து அரசு என்பன திட்ட வட்டமான வழிகளில் வளர ஆரம்பித்தன. ஒருவர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஆண்டு அனுபவிக்கும் சமூக நடைமுறை வளர்ந்தது. இக்கட்டத்தில் பெரும்பகுதியான மனிதர்கள் மீது சொத்துடமையும் ஆட்சி அதிகாரமும் பெற்ற சிறு பகுதியான மனிதர்கள் நேரடியான அடக்கு முறைகளைக் கையாண்டனர். இத்தகைய வர்க்க ஒடுக்குமுறை அமைப்பினை நியாயப்படுத்தி பாதுகாத்து நிலை நிறுத்துவதற்கு மதக் கருத்துக்கள் ஓர் வரலாற்றுத் தேவையாகி நின்றன. அடக்கு முறையினைக் கையாண்ட ஆளும் வர்க்கத் மக்களைச் சிந்திக்க விடாது தடுக்கக்கூடிய கருத்தியல் ஆதிக்கத்தினையும் தமது கரங்களில் எடுத்துக் கொண்டது.

இக்கருத்தியல் படிப்படியாக மதக் கருத்துக்களாக நிறுவனபடுத்தப்பட்டது. உலகியல் வாழ்க்கை என்பது வெறும்மாயை என்றும், மனிதர்களும் உலகத்திற்கும் அப்பால் கடவுள் என்பவருடைய சக்தியினால் தான் சகலதும் இயங்குகின்றன என்றும் கூறப்பட்டது. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பவற்றை கடவுளே செய்து வருவதாகக் கூறி முற்பிறப்பிலே செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்பவே இப்பிறப்பில் மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள். இப்பிறப்பிலே மனிதர் தமது பாவங்களைக் கழுவிக் கொண்டால் மோட்சத்தை அடையலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. மனிதர்களிடையே காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் அதன் வழியான வறுமை, துன்பம், நோய், இன்னும் பிறமனிதக் கேடுகளுக்கும்; மனிதர்களிடையே காணப்படும் ஒரு சிறு பிரிவினர் காரணமல்லவென்றும் எடுத்துக் கூறிய மதவாதிகள் அதற்;குக் காரணம் முன்னைய விதிப்பயன் என்றே எடுத்துக்காட்டினர்.

மேற்கூறிய அடிப்படைக் கருத்துக்கள் எல்லா மதங்களிடையேயும் ஒரு பொதுப்பண்பாகக் காணப்பட்டது. இந்திய இந்து மதக்கருத்துக்கள் மேலும் துல்லியமாக மனித ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தியதுடன் அரசனையும் அந்தணனையும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் வைத்திருக்கும் கருத்துக்களை கட்டுறுதியாகக் கொண்டிருந்தன. நான்கு வர்ணதர்மம் என்பதனை உருவாக்கி நடைமுறைப்படுத்தியதே இந்து மதத்தத்துவம்தான் என்பது யாவரும் அறிந்ததேயாகும். இம்மதக்கருத்துக்களின் உள்நோக்கங்களும், வர்க்கசார்பிற்கும் எதிராக அவ்வக் காலங்களில் பல அறிவாளிகள், சமூக விழிப்புணர்வு வாதிகள், எதிர்க்கருத்துக்களை முன்வைத்து போராடி வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது நியாயங்கள் சமூகத்தில் மேலெழும்பாதவாறு ஆளும் வர்க்கமும் மத அதிக்க நிறுவனங்களும் அமுக்கிக் கொண்டன என்பதும் வரலாற்றில் காணக்கூடியதேயாகும்.

மேலும் மனிதர்களின் நீண்ட பண்பாட்டுக் கூறுகளோடும் மதங்கள் பின்னிப் பிணைக்கப்பட்டன. மதப் பண்பாடு தான் மனிதர்களின் பண்பாடு எனக் கொள்ளும் அளவுக்கு மதக் கருத்துக்களும் நடைமுறைகளும் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி நிற்கின்றன. இன்று ஒருவரின் இனம், மொழி, நாடு என்பன முக்கிய ஆவணங்களில் குறித்துக் கொள்ளப்படும் போது அவரது மதமும் அங்கே முக்கியத்துவம் பெறுகின்றது. அந்தளவிற்கு மனிதர்களுக்கும் மதங்களுக்குமிடையிலான உறவு கெட்டிப் படுத்தப்பட்டதாக இருந்து வருகின்றது.

இன்றைய உலகில் அவற்றின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலிலும் அவற்றின் நடைமுறைப் பயன்பாட்டை அனுபவித்துக் கொண்டும் மனிதர்களில் பெரும்பாலானோர் பழமை வாய்ந்த மதக் கருத்துக்களால் அலக்கழிக்கப்படுபவர்களாகக் காணப்படுகின்றனர். எதனையும் அறிவியல் பூர்வமாக அணுகி பகுத்தறிந்து நிரூபிக்கத்தக்க உண்;மைகளைக் கண்டறிவதற்குப் பதிலாக ~எல்லாம் கடவுள்செயல்| ~விதிப்படி நடக்கும்| ~யாவும் தலை எழுத்து| போன்ற இயலாமை கொண்ட பழைமை வாதமதக் கருத்துக்குள் தஞ்சமடைந்து கொள்ளும் சராசரிப் போக்கே காணப்படுகின்றது.

இன்று கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், பன்சாலைகள் அனைத்திலும் கூடி நின்று வழிபடும் மக்கள் எதனைக் குறித்து வரம் கேட்கிறார்கள். தமது வாழ்வில் ஏற்பட்டுள்ள பல்வேறு இடர்கள், துன்ப துயரங்களைப் போக்கி சிறப்பான வாழ்வுக்கு கடவுள் வழிதேடித் தர வேண்டும் என்றே மன்றாடுகிறார்கள். தங்களது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில் சீரழிந்து அதன் காரணமாக வறுமை, நோய், வேலைஇன்மை, வீடின்மை போன்ற அவலங்களுக்குள் சிக்கியுள்ள காரணத்தை அறிய முடியாதவர்களாக மக்கள் கடவுள்களிடம் வேண்டுதல் நடத்துகிறார்கள். இதனை மத நிறுவனங்களும் அதன் தலைவர்களும் ஊக்கப்படுத்தி மீண்டும் மீண்டும் மதக்கருத்துக்களை மனித மூளையில் தணித்துக் கொள்கின்றனர். இது மனிதத்துன்பங்களுக்குரிய உலகியல் காரணங்களான பொருளாதார ஏற்றத்தாழ்வு, சுரண்டல், அரசியல் அடக்குமுறை, கருத்தியல் ஆதிக்கத்தின் திணிப்பு போன்றவற்றைக் கண்டு கொள்வதை மறைத்துக் கொள்வதற்கு போதை கொடுப்பது போன்றதாகும். துயரங்களுக்கு உள்ளான ஒருவர் அதில் இருந்து விடுபடுவதற்குரிய வழிவகைகளைத் தேடுவதை தவிர்த்து துயரங்களை மறக்க போதை ஏற்றிக் கொள்வது எவ்வளவு தவறானதோ அதே போன்ற வேலையைத் தான் மதங்களும் மக்களுக்கு வழங்குகின்றன. இதனாலேயே மார்க்ஸ் மதம் மக்களுக்கு கிடைத்த அபின் என்று எடுத்துக் கூறினார். இதனை எடுத்த வாக்கிலே மார்க்ஸ் மதத்தை இழிவு படுத்தி விட்டார் எனக் கொதிப்போரும் உளர். ஆனால் அவர் கூறிய முழுமையான கூற்றினை அறிவு பூர்வமாக அணுகி ஆராய்ந்து கொள்வதற்கு அத்தகையோர் முன்வருவதில்லை. ~~மதத்தில் வெளிப்படுத்தப்படும் துயரம் என்பது யதார்த்த வாழ்வில் ஏற்படும் துயரத்தின் வெளிப்பாடாகவும், அதே சமயத்தில் அத் துயரத்திற்கான எதிர்ப்பாகவும் உள்ளது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மனிதர்களின் பெருமூச்சு: இதயமற்ற உலகின் இதயம். ஆன்மாவற்ற நிலைமைகளின் ஆன்மா. அது மக்களுக்குக் கிடைத்த அபின்!! || இதுவே மார்க்சின் கூற்றாகும்.

மதங்கள் முன்வைக்கும் கருத்துக்களும் அவற்றுக்கான தத்துவ மூலங்களும் அடிப்படையில் கருத்து முதல்வாத கண்ணோட்டம் கொண்டவைகளேயாகும். அதேவேளை அவற்றிடையே மனிதநேயம் கொண்ட பொதுமைக் கருத்துக்களும் காணப்படுவதை மறுக்கவியலாது. ஆனால் அவை முக்கியத்துவம் பெறாத வெறும் ஏட்டுக் கருத்துக்களாகவே காணப்படுகின்றன. இன்று எல்லா மத நிறுவனங்களுமே போட்டி போட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதனை மத மனிதாபிமானம் மனிதநேயப்பணி என்றெல்லாம் கூறப்படுகின்றது. அவற்றால் துன்பத்தில் உழலும் மக்களில் சிலர் தற்காலிக ஆறுதல் பெற முடியும். ஆனால் அப்பணியின் ஊடாகவே மக்களின் மூளைகளில் பழைமைவாதக் கருத்துக்களான மதக்கருத்துக்கள் ஊன்றப்படுகின்றன என்பது மறுக்க முடியாததாகும். மேலும் அடிப்படையில் சமுதாய மாற்றம் ஏற்படுவதை பெரும்பாலான மதங்களும் அவற்றின் நிறுவனங்களும் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியானால் அம் மதங்கள் எவற்றின் சார்பாக செயல்படுகின்றன என்பது கேள்வியாகிறது. உலகின் பெரிய சிறிய நாடுகளினது ஆதிக்கம் பெற்ற பொருளாதார வலிமை கொண்ட உயர் வர்க்க சக்திகளின் சார்பாகவே சகலமதங்களும் செயல்பட்டு பணிபுரிகின்றன. இவ் உண்மை அத்தகைய மதங்களைப் பின்பற்றும் மக்களால் உணர்ந்து கொள்ளப்படுவதில்லை.

சமூகப் புரட்சியாளர்களான கம்யூனிஸ்டுக்கள் மதத்தை ஏற்றுக்கொள்வதோ நம்புவதோ இல்லை என்பது தெளிவானது. அதே வேளை மதங்களோடு சமர் புரிவதை அவர்கள் ஒருபோதும் முதன்;மைப்படுத்துவதும் இல்லை. ஏனெனில் மதத்தை நம்புவதோ நம்பாமல் விடுவதோ ஒவ்வொருவரின் சுய விருப்பு சார்ந்த விடயமாகும். இதில் வற்புறுத்தலுக்கு அவசியம் இல்லை. ஒருவரது மத நம்பிக்கை எவ்வாறு அமைந்திருப்பினும் மனிதகுல விடுதலை அல்லது சமூக விடுதலை என்ற பரந்த லட்சியத்திற்கு எதிராக அது பயன்படுத்தப்படாத வரை மத விரோதம் என்ற பேச்சுக்கு எவரும் செல்;ல வேண்டியதில்லை. மனித நேயத்தையும், மனித முன்னேற்றத்திற்கான விடுதலையையும் நேசிக்கும் மதப்பற்றாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் மார்க்சிய வாதிகளோடு கம்யூனிஸ்டுகளோடு விரோதம் பாராட்டுவதில்லை. அதற்குப் பதிலாக பல்வேறு முனைகளிலும் இணங்கிப் போகவே செய்கிறார்கள். காரணம் மனித நேயத்தையும் விடுதலையையும் இரு பிரிவினரும் மையப்படுத்துவதேயாகும். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற விடுதலைப் போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து நிற்பதில் மனிதநேயம் கொண்ட மதகுருமார்களும், மத நிறுவனத் தலைவர்களும் முன்னணியில் இருந்து வருவதைக் காணமுடியும்.

எனவே விஞ்ஞான பூர்வமான கண்ணோட்டம் இன்று சமூகத்துறைகள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் சூழலில் மதக் கருத்தினை ஏற்பவராயினும், ஏற்காதவராயினும் அறிவு பூர்வமாக மனிதர்களுக்கும் மதங்களுக்குமிடையிலான உறவினை படித்து ஆராய்ந்து அறிவது அவசியமாகும்.