மலைநாட்டுத் தமிழருக்கு துரோகம் இழைத்தது யார்?

த. இளங்கோவன்

++++++++++++++++++++

த. இளங்கோவன்

“தமிழன்” வெளியீடு - 1

6, மெயின் வீதி

யாழ்ப்பாணம்.

++++++++++++++++++++

முதற் பதிப்பு ஜனவரி 1970

(அரசாங்கசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை தலைவர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் கீயூ. ஸி. எம். பி. மலைநாட்டுத் தமிழ்மக்களுக்குச் சிறப்பாக ஆற்றிய பணிகளைத்திட்டவட்டமாக விளக்கும் ஒரு ஆய்வு நூல் இது!)

விலை சதம் 50.

++++++++++++++++++++

முன்னுரை

மலையகத் தமிழ் மக்களுடைய அரசியல், பொருளாதார கல்விப்பிரச்சினைகள் மிகப்பாரியன. நீண்ட நெடுங்காலப் பாரம்பரியமுடையன. மலையகத்தமிழ் மக்கள் இந்த நாட்டின் பொருள்வளத்தை நிலைப்படுத்த வந்த காலத்திலிருந்தே இப்பிரச்சினைகளும் வளர்ந்துள்ளன.

இவற்றைச் சரிவர அலசி ஆராய்ந்து ஆட்சி மன்றத்திலும் வெளியிலும் தொட்டு, துலக்கிக் காட்டி வைத்த அனுவபம்- ஆற்றல் - அறிவு - ஆண்மை படைத்த ஒரே ஒரு அரசியல்தலைவர் எமது தலைவர் திரு. ஜீ. ஜீ. அவர்களேதான்! அரசியலில் புதுமுகங்களாகவும், புகுமுகங்களாகவும் வந்து சேர்ந்த ‘கற்றுக்குட்டிகளின்’ தீவிர வாதப்போக்கினாலும் செயலினாலுமே மலையகத் தமிழினம் தாழ்ந்தது. வீழ்ந்தது, தளர்வடைந்தது! சட்டசபைக்காலத்திலிருந்தே மலையகத் தமிழ்மக்களுடைய சகல பிரச்சினைகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்கள் இந்த நாட்டின் மதிப்புக்குரிய பிரசைகளாக கௌரவத்துடன் வாழக்கூடிய சூழ் நிலையை ஏற்படுத்த முயன்றவர் எனது தலைவர்.

ஆனால் ‘வெண்ணெய் திரண்டு வருஞ் சமயத்தில் தாழி உடைந்தது போல” அம்முயற்சியைத் தமது குறுகிய அரசியல் நோக்கிற்காகச்சின்னா பின்னமாக்கியவர்களை இன்று இந்நாட்டிலுள்ள சகலரும், குறிப்பாக மலையக மக்களும் இனங்கண்டு கொண்டுள்ளார்கள். சிறிமா - சாத்திரி ஒப்பந்தத்தின் படி ஐந்தரைலட்சம் மலையகத் தமிழ்மக்களைக் கட்டாய நாடுகடத்தலுக்கு ஆளாக்கச் சம்மதமளித்தவர்களும் இவர்களே! ஆனால் 1948ம் ஆண்டில் திரு. ஜீ. ஜீ. ஏழரை லட்சம் மலையகத்தமிழ்மக்கள் பூரணமான அரசியலுரிமை பெறவும், ஏனையோரை எவ்விதநிர்ப்பந்தமின்றி இந்த நாட்டில் வதியும் வண்ணமும் வகை செய்யவல்ல ஒருசட்டத்தையே ஆதரித்தார்.

அப்போது அவர் செய்தது ‘தவறு’ என்று பறையறைந்தவர்கள் இன்று முறைதவறிப் படுமோசமான நிலைக்கு மலையகத்தமிழ் மக்களை அரசியல் பாலைவனத்தில் நிராதரவாக விட்டுள்ளதுடன் கட்டாய நாடுகடத்தலுக்கும் ஆளாக்கிவிட்டனர். இந்தநிலையில் இன்றுள்ள சகல மக்களும் இப்பிரச்சினையைச் சரிவர உணர்ந்து கொள்ளவேண்டும். செயற்படவேண்டும் என்ற சீரிய எண்ணத்துடன் எமது கொள்கை பரப்பு ஏடான ‘தமிழன்’ பிரசுராலயமும் தமிழ் மக்களின் விவேகமான பரிசீலனையாகும். அரசியல் செயலாக்கத்திற்கும் உதவமாறு இந்தநூலினை மகிழ்ச்சியுடன் வெளியிடுகின்றான். ஏற்று அரசியல் ரீதியான நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க முன் வருமாறு அனைவரையும் அறை கூவி அழைக்கின்றோம்;.

வணக்கம்.

அன்பன்

இளங்கோவன்

ஆசிரியர் “தமிழன்”

6. மெயின் வீதி

யாழ்ப்பாணம்

21-1-1970

++++++++++++++++++++

சரித்திரச் சான்றுகள்

மலை நாட்டுத் தமிழரின் பிரஜா உரிமை சம்பந்தமாக திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் சாதித்தவற்றைப் பற்றித் தமிழ் மக்களிடையே விளக்கக் குறைவும் அறியாமையும் இருந்து வருவதினால், உண்மை, நேர்மை, என்பவற்றில் அக்கறை உள்ளவர்கள் திரு. பொன்னம்பலம் சாதித்தவற்றை ஒழிவு மறைவு இன்றி அறிந்து கொள்ள விரும்புவார்கள். இலங்கையிலுள்ள சில தமிழ் அரசியல் கட்சிகள் உண்மையை மறைத்துப் பொய்ப் பிரசாரம் செய்வதையே குறி;க்கோளாகக் கொண்டுள்ளன. எனவே ஜீ. ஜீ. பொன்னம்பலம் அன்று தொட்டு இன்று வரை மலைநாட்டுத் தமிழருக்காக ஆற்றிய தொண்டுகள் பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் சிறிது விளக்கி எழுத வேண்டியது அவசியம்.

இலங்கைத் தமிழர் விடயத்தில் எவ்வளவு அபிமானம் கொண்டவராக இருந்து பணி புரிந்து வந்தாரோ, அதே போல் மலைநாட்டுத் தமிழர் விடயத்திலும் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் மிகவும் அக்கறை காட்டி வந்திருக்கின்றார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அரசாங்க சபையிலேயும், பாராளுமன்றத்திலேயும், ஒய்வின்றி உறுதியாக மலைநாட்டுத் தமிழரின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் திரு. பொன்னம்பலம் போராடி வந்தார். வெகுகாலமாக 1940ம் ஆண்டு வரை மலைநாட்டுத் தமிழர் தமது உரிமைகளுக்காக வாதாட ஒரு ஸ்தாபனம் இல்லாதிருந்தனர்.

அக்காலங்களில் அவர்களுக்காகப் போராடியவர் யார்? அரசாங்க சபையில் அக்காலத்திலிருந்த இரண்டொரு இந்திய அங்கத்தவரின் உதவியோடு பொன்னம்பலம் அவர்களே மலைநாட்டுத்தமிழரின் உரிமைகளுக்காக வாதாடினார். 1940ம் ஆண்டுக்குப் பின்னரும் இலங்கை இந்தியக் காங்கிரஸ் ஓர் அரசியல் ஸ்தாபனமான வளம் பெறும் வரை திரு. பொன்னம்பலம் அவர்களே மலைநாட்டுத் தமிழரி;ன உரிமைகளுக்காக அல்லும், பகலும் வாதாடினார்.

பாராளுமன்றத்தின் நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் தொகுத்து வெளியிடும் “அஞ்சாடு” (ர்யளெயசன) என்ற உரைத் தொகுதிகளில் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஓய்வின்றி மலைநாட்டுத் தமிழர் விடயத்தில் செய்த சொற்பொழிவுகளெல்லாம் பதியப்பட்டிருக்கின்றன. மலைநாட்டுத் தமிழருக்கான அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாகவோ, இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகள் சம்பந்தமாகவே, இந்தியர் இலங்கையில் குடியேறுவது சம்பந்தமாகவோ, விவாதங்கள் ஏற்படும் பொழுதெல்லாம் அவர்களுக்காக வாதாடியவர் யார்? அவர்களுடைய கோரிக்கைகளை உருவாக்கி வெளியிட்டவர் யார்? ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களே!

1930ம் ஆண்டளவில் தென்னிந்தியத் தமிழர்கள் இலங்கையில் பிரவேசிப்பதனை வரையறுக்க வேண்டுமென்னும் ஒரு கிளர்ச்சி எழுந்தது. இதனை ஆராய்வதற்கு ஒரு விசாரணைக்குழு சேர் எட்வேட் ஜாக்ஸன் கே. சி. தலைமையில் நியமிக்கப்பட்டது. திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் இவ்விசாரணைக் குழுவின் முன் தோன்றி தென்னிந்தியத் தமிழர்கள் எவ்வித கட்டுப்பாடு மற்ற முறையில் இலங்கைக்கு வரலாமெனத் தீவிரமாகவாதாடினார். இதன் பயனாக தென்னிந்தியத் தமிழர்கள் இலங்கைக்கு வருவதனைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் அப்போது எடுக்கப்படவில்லை!

மூலோயாத் தோட்டத்தில் குழப்பம் நடந்த போதும் “நேவ்சுமயர்” தோட்டத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்ட போதும் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் உடனே மலை நாட்டுக்குச் சென்று அங்கேதங்கி நேரடியாகப் பல தொண்டுகளைச் செய்தார். மூலோயாத்தோட்டத் தொழிலாளியான கோவிந்தன் இறந்த போது அது சம்பந்தமான தகவல்களை நேரடியாக விசாரணை செய்து சேகரித்தார். பின்னர் பொலிசார் கோவிந்தனை சட்ட விரோதமாகவும் அநியாயமாகவும் சுட்டுக் கொன்றனர் என்பதை விசாரணைச் சபை முன் வேதனமின்றி ஏற்பட்டு தகுந்த சான்றுகள் எடுத்துக்காட்டி வாதாடினார். இவ்வாறு தமது தேக சௌக்கியத்தையும் பொருட் செலவையும் பாராது மலைநாட்டுத் தமிழருக்கு நெருக்கடியான காலங்களில் பெருந்தொண்டு செய்தார். அதன் பயனாக பொலிசாரின் அட்டகாசம் குறைந்தது. மலைநாட்டுத் தமிழரின் மானம் காப்பாற்றப்பட்டது.

“நேவ்சுமயர்” தோட்டத்தை எடுத்துக் கொண்டு அங்கு உள்ள இந்தியத் தொழிலாளரை தோட்டத்தை விட்டு வெளியேற்றி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கியது அரசாங்கம். அப்பொழுது திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அரசாங்க சபையில் அரசாங்கத்தின் இச் செய்கையைக் கண்டித்து வாதாடினார். பின்னர் கேகாலை நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட இந்தியத் தொழிலாளர் சார்பாக வேதனமின்றி வழக்குப் பேசி அவருடைய உரிமையைப் பாதுகாத்தனர்.

ஐம்பதுக்கு ஐம்பது அல்லது சமபல பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கையை திரு. பொன்னம்பலம் எழுப்பி, அதற்காக அவர் வாதாடிய போது சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் பிரதிநிதித்துவ பலத்தில் கணிசமான ஒரு பகுதியை மலை நாட்டுத் தமிழருக்குக் கொடுக்க வேண்டுமென்று எடுத்துக் கூறினார். பின்னர் சோல்பரி விசாரணைக் குழுவினால் தமிழ் காங்கிரசின் சாட்சியத்தைக் கேட்பதற்கு ஒதுக்கப்பட்ட மூன்று நாட்களில் ஒரு நாள் முழுதும் மலைநாட்டுத்தமிழரி;ன் உரிமைகளைப்பற்றி சோல்பரிச் சபையின்முன் வாதாடினார். அதன் பயனாக மலைநாட்டுத் தமிழருக்கு பதினான்கு வீதம் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று சோல்பரிக் குழுவினர் தமது அறிக்கையில் குறிப்பிட்டனர்.

தமிழ் காங்கிரசின் முக்கிய குறிக்கோள்களில் மலைநாட்டுத் தமிழரி;ன் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் போரபாடுவதும் ஒன்று என்று அதன் அமைப்புத்திட்டத்தில் உறுதியாகக் கூறப்பட்டிருப்பது குறிப்பிடடத்தக்கது. இத்துடன் இலங்கை வாழ் தமிழரின் பண்பாடு, சாதியொருமைப்பாடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அதனையோர் தனிப்பட்ட இனமாக மதிக்கச் செய்ய வேண்டுமென்றும் அத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இலங்கையில் வசிக்கும் இந்தியர் தமது உரிமைகளை அனுபவிப்பதில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை நீக்கி இலங்கையரைப் போலவே அவர்களும் உரிமைகளை அனுபவிப்பதற்காகப் போராடும்” எனவும் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் முன்னேற்றம்!

இலங்கை இந்தியக் காங்கிரசும், தமிழ் காங்கிரசும் கொள்கையிலும் நோக்கத்திலும் ஒற்றுமையுடையனவாக இருந்த படியால் 1947ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரு கட்சிகளும் பொதுவான அபேட்சகர்களை நிறுத்த வேண்டுமென்று திரு. பொன்னம்பலம் விரும்பினார். இவ்வாறு ஐக்கிய முன்னணி ஒன்றினை பாராளுமன்றத்தில் அமைக்க வேண்டுமெனவும் அவர் திட்டமிட்டார். இந்நோக்கத்துடன் 1946-ம் ஆண்டு அகிலஇலங்கைத் தமிழ் காங்கிரசின் சார்பாக திரு. பொன்னம்பலம இலங்கை இந்தியக் காங்கிரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் இலங்கை-இந்தியக் காங்கிரசு திரு. பொன்னம்பலத்தின் யோசனையை ஆதரிக்கவில்லை. தனிக்கட்சியாக இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அந்த நேரம் திரு. பொன்னம்பலத்தின் கொள்கையை ஏற்று இவ்விருகட்சிகளும் ஒற்றுமையாக இயங்கி இருந்தால் இன்று இவ்விரு சமூகங்களின் நிலைமை வேறு விதமாயிருந்திருக்கும்.

சிங்களவரின் அரசியல் கட்சிகள் எவையாயினும் தமிழ் காங்கிரசின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்குமாயின் எதிர் வினைஒத்துழைப்பு (சுநளிழளெiஎந ஊழ-ழிநசயவழைn) என்ற அடிப்படையில் அக்கட்சிகளுக்குத் தனது ஆதரவை தமிழ்காங்கிரசு கொடுத்துதவும் என்று 1947-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் தமிழ் காங்கிரஸ் வெளிலப்படையாகக் குறிப்பிட்டுக் கூறியது. அந்தக் கொள்கையைப்; பின் பற்றியே 1948-ல் தமிழ் காங்கிரஸ் சிங்கள அரசாங்கத்துடன் ஒத்துழைத்தது. அப்போது இந்தியக்காங்கிரசும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்திருந்தால் கணிசமான தொகையுள்ள மலைநாட்டுத் தமிழர் பிரசா உரிமை பெற்றிருப்பார்கள். இந்தியப் பிரசா உரிமைப் பிரச்சினையே இன்று இருந்திருக்கமாட்டாது.

தமிழ்காங்கிரஸ் அந்த நேரம் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தபடியால் இலங்கைத் தமிழரின் மூலாதாரமான அரசியல் உரிமைகளும் மொழி உரிமையும் பொருளாதார உரிமைகளும் உத்தியோக பூர்வமாக அங்கீகரிக்கப்பட்;டுக் காக்கப்பட்டன. அத்துடன் பல முக்கியமான நன்மைகளும் கிடைத்தன. அவற்றுட் சில பின்வருமாறு:-

1. தமிழருக்குச் சிங்களத்துடன் சமத்துவம் தொடுப்பதை திரு. டீ. எஸ். சேனநாயக்கா ஏற்று, அத்துடன் அக்கொள்கை பூரணமாக அங்கீகரிக்கப்பட்டு நிருவாக முறையிலும் அமுல் நடத்தப்பட்டு சிங்களம் வழங்கி வந்த துறைகளிலெல்லாம் தமிழும் வழங்கி வரப்பட்டது.

2. தமிழருக்கு எதிராக உத்தியோக நியமனவிஷயங்களில் பாரபட்சம் காட்டாதிருக்குமாறு செய்யப்பட்டது. இதன் பயனாக எத்தனையோ ஆயிரம் தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்தில் உத்தியோகம் பெற்றார்கள். அன்றியும் நியாயமற்ற முறையில் உத்தியோக உயர்வு தடை செய்யப்பட்ட பல தமிழருக்கு, உத்தியோக உயர்வு கொடுக்கப்பட்டது.

3. காங்கேசன்துறையில் சிமெந்துச் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டது.

4. பரந்தனில் கோஸ்ரிக் சோடா இரசாயனக் தொழிற்சாலை நிறுவப்பட்டது.

5. வாழைச்சேனையில் கடதாசி தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டது.

6. இரணைமடு நீர்ப்பாசனத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது இருபதினாயிரம் ஏக்கருக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு வசதி செய்துள்ளது. சேர். பொன். இராமனாதன் காலந் தொடங்கி தமிழர் இத்திட்டத்திற்காக கிளர்ச்சி நடத்திக் கொண்டு வந்திருந்த போதிலும் ஈற்றில் திரு. ஜீ. ஜீ. யின் முயற்சியாலேயே திட்டம் நிறைவேற்றப்பட்டது.

7. மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பனிக்கட்டித் தொழில்சாலைகள் (ஐஉந குயஉவழசநைள) நிறுவப்பட்டன.

8. கிளிநொச்சியிலும் அதனைச் சார்ந்த இடங்களிலும் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

9. வடமாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் கடல் தொழிலிலும், ஏனைய குடிசைத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளசங்கங்களுக்குப் பல இலட்சம் ரூபா அரசாங்கம் கடன் கொடுக்க வசதி செய்யப்பட்டது.

10. மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரி, மானிப்பாய் ஆஸ்பத்திரி போன்ற வைத்திய ஸ்தாபனங்களுக்கும் பெருந்தொகையான பணத்தை மேலதிக நன்கொடையாகப் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

11. காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் மின்சார நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மின்சாரம் வழங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

12. கைதடியில் வயோதிபர் மட்டம் ஸ்தாபிக்கப்பட்டது.

13. யாழ்ப்பாணத்திற்கு கொழும்பிலிருந்து மேலதிகமாக ஒருபுகைவண்டி ஒவ்வொரு நாளும் ஓடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. இப்புகைவண்டியை ‘பொன்னம்பலம் ஸ்பெஷல்’ என்றும் செல்லமாக அன்று அழைப்பதுண்டு. இந்த மேலதிகமான புகைவண்டியை ஒழுங்கு செய்வதற்குமுன் யாழ்ப்பாண மக்கள் பிரயாணஞ் செய்வதில் மிகுந்த கஷ்டமடைந்தனர்.

14. பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் தமிழில் சொற்பொழிவாற்றுவதற்கு முதன் முதலாக ஒழுங்குகள் செய்யப்பட்டன. இலங்கைப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்சொற்பொழிவை ஆற்றிய சரித்திரப் புகழ்வாய்ந்த பெருமை திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலத்துக்கே உரியதாகும்.

15. தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் குறிக்க, இலங்கை தேசியக் கொடியில் கௌரவமான இடங்கள் முதன் முதலாக கொடுக்கப்பட்டன.

16. வடமாகாணத்தில் ஒரு துறைமுகத்தைத் திறந்து வைத்து அதில் பிரயாணப் போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி முதலியவற்றை நடத்தவும் வரவு செலவுத் திட்டத்தில் அடையாள மானியம் ஒதுக்கப்பட்டது.

17. யாழ்ப்பாண ஆஸ்பத்திரி 1¼ லட்ச ரூபா செலவில் விஸ்தரிக்கப்பட்டு நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தி இலங்கையில் முதல்தர ஆஸ்பத்திரிகளில் ஒன்றாக்கப்பட்டது.

18. யாழ்நகர் வாசிகளுக்கு குழாய் மூலம் சுத்தமான குடி தண்ணீர் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

19. கடற் தொழிலாளர் நவீன இயந்திரப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்கு பயிற்சியளிக்கப்பட்டது.

20. கடற் தொழிலாளர்களைக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கச் செய்து அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கடனுதவி அளிக்கப்பட்டது.

21. பொற் தொழிலாளர் பவுண் இல்லாது கஷ்டப்பட்ட பொழுது அவர்களுக்கு பவுண் பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. அதுவுங் கூட மிகக் குறைந்த விலைக்கே வழங்கப்பட்டது. அவ்வாறே மற்றும் குடிசைக்கைத்தொழில்களுக்கு இன்றியமையாத மூலப்பொருள்களும் மிக மலிந்த விலைகளுக்கே கொடுக்கப்பட்டன. திரு. ஜீ. ஜீ. குடிசைக் கைத்தொழிலில் ஈடுபட்ட தமிழ்த் தொழிலாளர்களுக்கு வேண்டிய மூலப் பொருள்களை இவ்வாறு மலிந்த விலைக்கு கொடுப்பதற்கு பெர்மிட் வழங்க ஒழங்கு செய்தமையாலும், பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை வசதிகளும் வாய்ப்பளித்தமையாலும் சமஷ்டிக் கட்சியினர் அவருக்கு எதிராக 1952ம் ஆண்டில் ஒரு தேர்தல் ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்தனர்.

இதனை வாசகர்கள் நன்கறிவர். திரு. ஜீ. ஜீ. தமிழ்ப் பிரதேசத்திற்கும், தமிழ் இளைஞர்களுக்கும் சார்பாக நடந்து கொண்டு, சிங்கள இளைஞர்களையும்,அவர்கள் பிரதேசங்களையும் பாதிக்கும் வகையில் நடந்து கொண்டாரென இத் தேர்தல் ஆட்சேபனை மனு குற்றஞ் சாட்டியது. இக்குற்றச்சாட்டுகளை ஆராய்வதில் ஒன்பது மாதங்களுக்கு கூடுதலாக இத்தேர்தல் விசாரணை வழக்க நடைபெற்றது. இதுவொன்றேயார் தமிழ் மக்களின் இரட்சகர் என்பதனையும், யார் தமிழ் மக்களின் எதிரிகள், துரோகிகள் என்பதனையும் நிரூபிக்கப் போதுமானதாகும்.

யார் தமிழ் மக்களின் உண்மையான இரட்சகர்? தாம் அமைச்சராய் இருக்கும் போது தம்மாலான அனைத்தையும் தமிழ் மக்களுக்காகச் செய்த ஜீ. ஜீ. யா? அல்லது தமிழ் மக்களுக்காக எல்லாவற்றையுமே செய்து விட்டாரெனவும், சிங்கள மக்களைப் பாதிக்கும் வகையில் நடந்து கொண்டாரெனவும் உயர்நீதிமன்றத்தின் முன் அவரை நிறுத்தி குற்றஞ் சாட்டிய செல்வநாயகம் கும்பலா?

22. கந்தளாயில் செயற்கை உரம் செய்வதற்கு ஒரு தொழிற்சாலையையும், வவுனிக்குளத்தையடுத்து சீனித் தொழிற்சாலையையும், துணுக்காயில் பருத்தி உற்பத்திச் செய்கையையும், புடவை நெசவுத் தொழிற்சாலையையும், புல்மோட்டையில் ‘இல்மினைட்’ தொழிற்சாலையையும், ஆனையிறவில் உப்புத் தொழிற்சாலையையும் நிறுவுவதற்கு பூரண திட்டங்கள் ஆக்கப்பட்டன.

23. சிம்மாசனப் பிரசங்கம் தமிழில் வாசிக்கப்பட்டதையும், திரு. தொண்டமான் நியமன அங்கத்தவராக அமர்த்தப்பட்டதையும் பெரிதாகச் சிலர் தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிந்தார்கள். அப்படியானால் திரு. பொன்னம்பலம் அவர்கள் இவ்விடயங்கள் பற்றி செய்த முயற்சிகளை இங்கே ஞாபகப்படத்தலாம். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய காலத்தில் மேன்மை தங்கிய மன்னர் பிரானின் இளவலாகிய “குளஸ்டர்” கோமகன் இலங்கை வந்து முதலாவது சிம்மாசனப் பிரசங்கத்தை நிகழ்த்தினார்.

அச்சரித்திரப் புகழ் வாய்ந்த வைபவத்தின் போது சுதந்திரச் சதுக்கத்தில் சிங்களவரின் கொடியோடு தமிழரின் நந்திக் கொடியும் உயர்த்தப்பட்டது. திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் முயற்சியாலேயே தமிழருக்கு இந்தக் கௌரவம் வழங்கப்பட்டது. அடுத்ததாக தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் உத்துழைத்த காலத்திலே தான் இலங்கை இந்தியக் காங்கிரசின் பொதுக் காரியதரசியான திரு. எஸ். பி. வைத்தியலிங்கம் நியமன அங்கத்தவராக டட்லி சேனநாயகா அவர்களால் நியமிக்கப்பட்டார்.

மேற்கூறியவாறு தமிழ் காங்கிரஸ் அந்த நேரம் அரசாங்கத்துடன் ஒத்துழைத்ததால் தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள்பல. இக் குறுகிய ஐந்தாண்டு கால ஒத்துழைப்பால் தமிழ் மாகாணங்களில் ஆயிரம் இலட்சம் ரூபாவுக்கு மேல் அரசாங்கம் மேற்கூறிய தொழிற்சாலைகளுக்கு மற்றும் பொருளாதார விருத்தி செய்கைகளுக்கும் செலவிட்டிருக்கிறது. தமிழ் காங்கிரஸ் ஒத்துழைத்தபடியால்தான் இவ்வளவு நன்மைகளைத் தமிழர் பெற்றிருக்கிறார்கள். இலங்கை இந்தியக் காங்கிரசும் தமிழ்க் காங்கிரசும் ஒன்று கூடி அரசாங்கத்தோடு ஒத்துழைத்திருந்தால் மேலும் எவ்வளவோ நன்மைகளைப் பெற்றிருக்கலாம்.

இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம்

பிரித்தானியரின் ஆட்;சி நடைபெற்ற நாடுகளின் மக்கள் எல்லோரும், பிரித்தானியக் குடிகள் என்று மதிக்கப்பட்டு வந்தனர். ஆகையினால் எல்லோருக்கும் பாகுபாடின்றி வாக்குரிமையும். பிரஜாவுரிமையும் கிடைத்தன. ஆனால் இவ்வடிமை நாடுகள் சுதந்திரம் பெற்றதும், தம் நாட்டு மக்கள் ‘பிரித்தானிய குடிகள் என்னும் கீழ்த்தரமாகக்’ கருதப்படும் நிலைமையை மாற்றித் தம்நாட்டுக் குடிகளுக்குரிய உரிமையை வரையறுத்துச் சட்டம் செய்வதை தம் முதற் கடமையென உணர்ந்தன. இந்தியா, பாகிஸ்தான், பர்மா, மலாயா, சிங்கப்பூர் ஆகிய இந்நாடுகளில் இம்முயற்சி நடைபெற்றது. அந்நாட்டுக் குடிகள் யாரென்பதை வரையறுத்தக் கூறிச் சட்டங்கள் இயற்றப்பட்டன. பிரஜாவுரிமைக்குத் திட்டமான குறிப்பிட்ட நிபந்தனைகள் வகுத்தனர். இவ்வாறே இலங்கையும் 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சுதந்திரம் அடைந்ததும் 1948ம் ஆண்டின் 18ம் இலக்க இலங்கைப் பிரஜை யாரென வரையறுக்கப்பட்டது. இச்சட்டம் கூறுவதானவது :-

(அ) இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன் இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது.

(ஆ) அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாகவோ இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவர். அத்துடன்

(இ) இலங்கைக்கு வெளியே பிறந்தவர் இலங்கைப் பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும், அல்லது,

(ஈ) அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும்.

இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபடியினால் தான் மலைநாட்டுத் தமிழரின் பிரஜாவுரிமை பறிபோனது. சட்டத்திற்கு முன் இலங்கையிலுள்ள சிங்களவர். இலங்கைத் தமிழர், இஸ்லாமியர் ஆகியோரைப் போலவே மலைநாட்டுத் தமிழரும் பிரித்தானியப் பிரஜைகளாக இருந்தபடியால் அவர்களுக்குப் பிரஜாவுரிமை இருந்தது. மேற்குறித்த சட்டம் நடைமுறைக்கு வந்தபின் பிரித்தானிய பிரஜைகள் என்ற காரணம் மட்டும் கொண்டு இலங்கைப் பிரஜாவுரிமை பெற முடியாதிருந்தது.

கடந்த ஐம்பது தொடக்கம் நூறு வருடங்களுக்குள் இலங்கையில் வந்து குடியேறிய மலைநாட்டுத் தமிழர், ஒன்றில் இலங்கையிற் பிறவாதவர்களாகவோ, அல்லது அவருடைய தந்தையரோ, பேரன்மாரோ இலங்கையில் பிறவாதவர்களாகவோ இருந்தார்கள். ஆகவே இலங்கைப் பிரஜாவுரிமை சட்டத்தின் கீழ் அவர்கள் பிரஜாவுரிமை பெற முடியாதிருந்தது.

இந்தச்சட்டத்திற்கு எதிராக திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலமும், ஏனைய தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் போர் தொடுத்தனர். அத்துடன் அச்சட்டத்தை எதிர்த்தும் வாக்களித்தனர். மலைநாட்டுத் தமிழரின் பிரஜாவுரிமையைப் பறித்தது இந்தச் சட்டம்தான். இதை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் திரு. பொன்னம்பலம் அவர்கள் வாதாடி, அதற்கு எதிராக வாக்களித்தார். இவ்விஷயம் பற்றி திரு. பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய பிரசங்கம் 1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி ‘கேன்சாட்டில்’ (ர்யளெயசன) 1821ம் பக்கம் தொடங்கி 1861ம் பக்கம் வரை காணப்படுகிறது.

அதனை வாசித்தால் உண்மை விளங்கும். திரு. பொன்னம்பலம் சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து மலைநாட்டுத் தமிழரி;ன் பிரஜாவுரிமையைப் பறிக்கும் சட்டத்தைப் ஆதரித்து வாக்களித்தாரென்று சில தமிழ் அரசியல் கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்துவருகின்றன. திரு. பொன்னம்பலம் அவர்களின் பிரசங்கங்களை மேற்குறித்த “கேன்சாட்” புத்தகத்தில் வாசித்தவர்கள் அவர் விடாப்பிடியாகவும், உறுதியாகவும் இச்சட்டத்தை எதிர்த்து மலைநாட்டுத் தமிழரின் உரிமைக்காக வாதாடியதை அறிவார்கள்.

இந்தச் சட்டம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பல நாட்டுகளுக்குப் பின்னரே தமிழ்க் காங்கிரஸ் அரசாசங்கத்துடன் சேர்ந்தது. இவ்வாறு தமிழ்க் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்வதற்கு முன்னால் மேற்குறித்த சட்டத்தின் பயனாக பிரஜாவுரிமையை இழந்த மலைநாட்டுத் தமிழர் உரிமை பற்றி திரு. பொன்னம்பலம் திரு. டி. எஸ். சேனநாயகாவுடன் ஆலோசனை செய்தார்.

இவ்வாலோசனையின் பயனாக ஏற்பட்ட உடன்படிக்கையின் படி இந்தியப்பிரதமர் பண்டிதர் நேருவின் சம்மதத்துடன் மலைநாட்டுத் தமிழர்களுக்குப் பிரஜா உரிமை வழங்குவதற்கு ஒரு சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவேனென்று திரு. டீ. எஸ். சேனநாயக்கா தமிழ் காங்கிரசிற்கு வாக்குறுதியளித்தார். அதன் பின்னரே தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்தது. இதே சமயத்தில் சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து அளிப்பதென்ற கொள்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மந்திரிகளிற் சிலர் எதிராக நடத்தி வந்த கிளர்ச்சியை நிறுத்தி விடுவதாகவும் திரு. டீ. எஸ் சேனநாயக்கா மேலும வாக்குறுதியளித்தார்.

தமிழ்க்காங்கிரஸ் அரசாங்கத்தில் சேருவதற்குமுன்னர் அதன் சார்பாக திரு. டீ. எஸ். சேனநாயக்காவுடன் பேச்சு வார்த்தை நடாத்தியது திரு. பொன்னம்பலம் மட்டும் அல்ல. திரு. பொன்னம்பலத்தோடு, திரு. செல்வநாயகம், திரு. வன்னியசிங்கம் ஆகியயோரும், ஏனைய தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்றக் குழுவினரும் அப்பேச்சுவார்த்தைகளின் போது சமுகமாயிருந்தனர். இதனை ஒருவரும் மறுக்க முடியாது.

திரு. டீ. எஸ். சேனநாயக்காவின் வாக்குறுதியை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட பின்னரே தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேரத் தீர்மானித்தது. இத்தீர்மானமும் ஏகமனதானதே.

ஜீ. ஜீ அவர்களுக்கெதிராகச் சுயநலமிகள்16 ஆண்டுகளாக கட்டவீழ்த்து காட்டுத் தீயைப் போல் பரப்பி வந்த விஷமப்பிரசாரம் காரணமாக அரசாங்கத்துடன் தமிழ்க்காங்கிரஸ்; சேர்வது பற்றி ஜீ.ஜீ தனிமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தவில்லை. செல்வநாயகம், வன்னியசிங்கம். கனகரெத்தினம், குமாரசுவாமி, தம்பியய்யா போன்றோரையும் கூட்டிச் சென்றே பேச்சு வார்த்தைகள் நடத்தினார் என்ற உண்மையைக்கூட ஏற்றுக் கொள்ளப் பலர் மறுக்கின்றனர். ஆகவே காலஞ்சென்ற கு. வன்னியசிங்கம், யு. என். பி. அரசாங்கத்தில் சட்டாம் பிள்ளையாகப் கடமையாற்றிய ஏ. ஈ. குணசிங்காவுக்கு 1948-ல் எழுதிய ஒருகடிதத்திலிருந்து ஒரு பகுதியை கீழே தருகின்றேன்.

இது 15-12-48ம் தேதி வெளிவந்த ‘டைமட்ஸ் ஒப் சிலோன்’ பத்திரிகையில் காணப்படுகின்றது. இதன் தமிழாக்கம் பின் வருமாறு:-

“இலங்கைப் பிரஜாவுரிமை மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அன்று தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களை ஒரு உரையாடலுக்கு முதலமைச்சர் (டீ. எஸ். சேனநாயக்கா) அழைத்தார். அதன்படி பாராளுமன்றத்தில் அன்று பிரசன்னமாயிருந்த தமிழ்க்காங்கிரஸ் உறுப்பினர்கள் எல்லோரும் அன்னாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்கள். இந்தியா பிரஜாவுரிமைச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் இந்தியப் பிரதம மந்திரியினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மசோதாவையே தாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக அன்னார் வாக்குறுதியளித்தார்” இந்த வாக்குறுதியின் பேரிலேயே தமிழ்காங்கிரஸ் யு. என். பி. யுடன் கூட்டரசாங்கம் அமைத்தது.

மேற்கூறியதிலிருந்து இரு உண்மைகள் புலனாகின்றது. முதலாவதாக டீ. எஸ். சேனநாயக்காவுடன் அமைச்சரவையில் வேருவது பற்றி ஜீ. ஜீ. தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இரண்டாவதாக இந்திய முதலமைச்சர் ஸ்ரீ நேருவினால் அங்கீகரிக்கப்பட்ட பிரஜாவுரிமை மசோதாவொன்றையே டீ. எஸ். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்பது.

ஞாபக சக்தியிற் குறைந்தவர்களும், உண்மைக்கு மதிப்பளிக்காதவர்களுமாகிய சில தமிழர் செல்வநாயகமும், வன்னியசிங்கமும் தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தார்களென்று கூறிக்கொள்கிறார்கள். இது சுத்தப் பொய்.

அந்த நேரத்தில் 1948 ஆகஷ்ட் மாதம் 22ம் திகதி, அதாவது இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 நாட்களுக்குப் பின்னர், யாழ்ப்பாண முற்றவெளியில் கூடிய தமிழ் காங்கிரஸின் மாபெரும் கூட்டத்திலே, அதாவது தமிழ்காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்வதற்கான நிபந்தனைகள் எடுத்துக்கூறி மகாசனங்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நடந்த அப்பெருங் கூட்;டத்திலே தமிழ் காங்கிரசின் பாராளுமன்றப்பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டுமென்ற தீர்மானம் கட்சியின் “ஏகோபித்த தீர்மானம்” என்று திரு. செல்வநாயகம் குழுமியிருந்த மகாசனங்களுக்குக் கூறினார்.

இக்கூட்டத்தில் திருவாளர்கள் எஸ். ஜே. வி செல்வநாயகம், கு. வன்னியசிங்கம், எஸ் சிவபாலன், கே. கனகரெத்தினம், உட்படப் பலர் உரை நிகழ்த்தினர். திரு. செல்வநாயகத்தின் அன்றைய சொற்பொழிவை 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ம் திகதி வெளிவந்த ‘டைம்ஸ் ஒப் சிலோன்’ பத்திரிகையில் காணலாம்.

அது பின்வருமாறு :- திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் பேசுகையில் கூட்டத்தில் பிரசன்னமாயிருந்த பெரும் மக்கள் கூட்டம் அரசியலில் தமிழன் கொண்டிருக்கும் அக்கறையை எடுத்துக்காட்டுகின்றதென்று குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில் “அரசியலில் நிலைமைகள் கெதியில் மாறுதலடைகின்றன. நாம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட பொழுது இருந்த நிலைமைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் எவ்வளவோ வேறுபாடுண்டு. மாறுதலடைந்து வரும் நிகழ்ச்சிகளொவ்வொன்றும் புனராலோசனை செய்யப்படல் வேண்டும்.

“ஒவ்வொரு விஷயத்திலும் உங்களது பிரதிநிதிகள் ஏகாபித்த முடிவுக்கே வந்திருக்கின்றார்கள். அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் விஷயத்திலும் அத்தகைய ஒரு மனப்பட்ட முடிவுக்கே வந்துள்ளனா.

தமிழினத்தினதும் நாட்டினதும் நலனை மனதில் கொண்டே உங்கள் பிரதிநிதிகள் விஷயங்களை முடிவு செய்வார்கள் என்பதை நீங்கள் திடமாக நம்பலாம்”

23-8-48

அதன் பின் தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் கேட்டபொழுது அக்கூட்டத்திலுள்ள யாவரும் தங்கள் கரங்களை உயர்த்தி ஆரவாரத்துடன் ஆமோதித்தனர்.

இந்தியர், பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்;டம்

தமிழ்க் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜீ. ஜீ. பொன்னம்பலத்திற்கும், தமிழ் காங்கிரஸ் ஏனைய அங்கத்தவர்களுக்கும், அளித்த வாக்குறுதியை திரு. டி. எஸ் சேனநாயக்கா 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றிவைத்தார். இந்த வாக்குறுதி என்ன? 1948ம் ஆண்டில் 18ம் இலக்கத்தைப் கொண்ட இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தின்படி பிரஜாவுரிமையை இழந்த இந்தியர்களுக்கு அவ்வுரிமையை வழங்கபாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை விரைவிற் கொண்டு வருவதாகவும், அதற்கு பண்டித நேருவின் சம்மதத்தைப் பெற்றுக் கொடுப்பதாகவும் வாக்களித்தமையே.

இவ்வாக்கை நிறைவேற்றும் முகமாக 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியர் பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் திரு. ஜி. ஜீ. டி. எஸ். சேனநாயக்காவின் அழைப்பின் பேரில் அரசாங்கத்தில் சேர்ந்து 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைத்தொழில். கைத்தொழில் ஆராய்ச்சி, கடல்தொழில் மந்திரியாகப் பதவியேற்றார்.

அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட இரு தினங்களுக்குள் திரு. ஜீ. ஜீ. சாம்ராச்சிய நாடுகளின் பாராளுமன்ற மாநாட்டுக்குச் சமுகமளிக்கும் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்று இலண்டன் சென்றார். அவர் இங்கிலாந்திலிருக்கும் போது என் மந்திரிசபை, இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பு பிரிஜாவுரிமை மசோதாவை ஆலோசனை செய்து ஏற்றுக் கொண்டது. இம் மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு சில தினங்கள் இருக்கும் போதே திரு. ஜீ. ஜீ. இலங்கை வர முடிந்தது. இம் மசோதா மந்திரிசபையினால் ஆராயப்படும்போது திருவாளர்கள் சிற்றம்பலமும், சுந்தரலிங்கமும் மந்திரிசபையிலிருந்தனர்.

இவ்விருவரும் இம்மசோதாவை அப்போது ஏற்றுக் கொண்டனரென்றே கருதவேண்டும். ஏனெனில் இவர்களில் எவரேனும் அச்சமயத்தில் தமது பதவியை ராஜினாமாச் செய்யவில்லை. எவ்விதக் கண்டனத்தையேனுந் தெரிவிக்கவுமில்லை. ஆனால் திரு. சுந்தரலிங்கம் இம்மசோதா பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபொழுது அதற்கெதிராக வெளிநடப்பு செய்தமையால் மந்திரிசபையிலிருந்து திரு. டி. எஸ். சேனாநாயக்காவினால் விலக்கப்பட்டார். இம்மசோதா மந்திரிசபையில் ஆலோசிக்கப்படும் போது, அதனால் ஏற்றுக்கொள்ளப்படும் போதும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் போதும் திரு. சுந்தரலிங்கம் மந்திரிசபையிலிருந்தார் என்பதனை நாம் மறக்க முடியாது.

அம்மட்டன்று, திரு. பொன்னம்பலம் இம்மசோதாவை ஆதரித்து வாக்களிக்கும் வரை சபையிலிருந்து விட்டு, திரு. பொன்னம்பலம் வாக்களித்தவுடன் சடுதியாக திரு. சுந்தரலிங்கம் வெளி நடப்புச் செய்தமைதான் மிகவும் வியப்புக்குரியது.

இந்த மசோதாவுக்கு திரு. பொன்னம்பலம் சாதகமாக வாக்களித்ததை ஆதாரமாகக் கொண்டே சில அரசியற் சாகசக்காரர்கள் பொய்யாகவும் கெட்ட பெயரை திரு. ஜீ. ஜீ. க்குத் தேடிக் கொடுக்க வேண்டுமென்ற துர்எண்ணத்துடனும், உண்மையைத் திரித்துப் பிரசாரஞ் செய்யத் தொடங்கினார்கள். மலைநாட்டுத் தமிழரின் பிரசா உரிமையைப் பறித்த சட்டம். இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டம் அதைத் திரு. பொன்னம்பலம் மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசி வாதாடியதுமல்லாமல் அதற்கெதிராக வாக்களித்த விஷயமெல்லாம் முந்திய அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளன.

இதுபற்றி சமஷ்டிக் கட்சியின் ஆரம்ப ஸ்தாபகரும் இன்றுவரை அக்கட்சியிலேயே இருந்து வருபவரும், ஜீ. ஜீ. யின் அரசியல்விரோதிகள் வரிசையில் முன்னணியில் நிற்பவர்களில் ஒருவருமான மருத்துவர் நாகநாதன் கூறியிருப்பதைக் கீழே தருகின்றேன்.

சென்னையிலிருந்;து வெளிவரும் “இந்துப்பத்திரிகை 20-10-62 பிரசுரித்த நாகநாதனின் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி. அதன் தமிழாக்கம் பின்வருமாறு:-

“இந்தியா, இலங்கைப் பிரச்சினையில் மட்டுமல்லாது, பொதுவாக பிரஜாவுரிமைப் பிரச்சினையிலும் இன்று காணப்படும் சிக்கல்களும், கஷ்டங்களும். பெரும்பாலானோர் உகித்திருந்தது போல் இந்தியர் பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டத்தினால் ஏற்பட்டவையல்ல. இந்தியர்-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் வித்தியாசமான இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டமே எல்லாக் குறும்புகளையும் செய்திருந்தது.

இந்தியா, பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதாவின்படி இலங்கையிற் குடும்பமாக ஏழு வருடங்கள் வசித்தவர்களும், விவாகமாகாமல், பத்து வருடங்கள் வசித்தவர்களும் பிரஜா உரிமை பெறுவதற்கு உரிமை பெற்றார்கள் இலங்கை இந்தியக் காங்கிரசும், தமிழ் காங்கிரசும் குடியுரிமை பெறுவதற்கு ஐந்து வருடவாசம் போது மானதென வாதாடின. ஆனால் அரசாங்கம் ஏழு வருட வாசம் அவசியமெனக் கொண்டது. இவ்விடயத்தில் திரு. பொன்னம்பலம் அரசாங்கத்துடன் ஒத்துப்போனார். இது ஒரு பெரிய குற்றமா? நேர்மையும் உண்மையுமுடையவர்கள் இவ்வாறு வெளிப்படையாக சமரசம் செய்த கொண்டமையை ஒரு பெருங் குறையாகக் கருத மாட்டார்கள்.

இந்தியர்-பாகிஸ்தானியர் பிரஜா உரிமை மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படு முன்னர். பண்டிதர் நேருவிடம், திரு. டீ. எஸ் சேனநாயக்காவால் சமர்ப்பிக்கப்பட்டது. நேருஜீ அவர்கள் ஆதரித்த மசோதாவை திரு. பொன்னம்;பலம் சம்மதித்தமைக்காக சில அரசியற் குட்டுணிகள் நாளும் பொழுதுமாக ஓலமிட்டு விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இம் மசோதாவிற் காணப்படும் சில அம்சங்கள் விஷயமாக நேருஜீக்கும், சேனநாயகாவுக்குமிடையில் நீண்ட கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. இரண்டு சிறு விஷயங்கள் பற்றி அபிப்பிராயபேதம் இருந்த போதிலும், மலைநாட்டுத் தமிழரி;ன பெரும் பகுதியினருக்கு இம்மசோதாவின் பயனாக பிரசார உரிமை கிடைக்குமென உணர்ந்த நேருஜீ. தாமதமின்றி இம் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு திரு. சேனநாயக்காவைக் கேட்டுக் கொண்டார். இவ்வேண்டுகோள் 1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ந் தேதி நேருஜீ, டி. எஸ். சேனநாயக்காவிற்கு எழுதிய கடிதத்தில் காணப்படுகிறது. இக் கடிதம் அரசாங்கத்தால் 1948ம் ஆண்டின் 22 வது அறிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் பின்வருமாறு:-

“இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் பிரசா உரிமை பெறுவதற்கு எவ்வித தாமதமுமின்றி ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதால், இம் மசோதாவின் சரத்துக்ளை ஆராய்ச்சி செய்வதில் நீண்ட காலம் செலவு செய்ய விரும்பவில்லை. மேலும் வாதித்துக் கொண்டிருப்பதால் அதிகப் பயன் கிடையாது. நீங்கள் சொல்ல வேண்டியதைச் செல்லி விட்டீர்கள். நானும் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். இலங்கையில் வசிக்கும் இந்தியரின் ஆவலைத் தீர்ப்பதற்கு ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இலங்கை இந்தியர்கள் பிரஜா உரிமை பெறுவதற்கு சட்டமியற்ற உடனடியாக வாக்கை எடுக்குமாறு மிகுந்த ஆர்வத்துடன் வேண்டிக் கொள்கிறேன்”

இக்கடிதத்திலிருந்து நேருஜீ இச்சிக்கலுக்கு சுமுகமான முடிவு ஏற்படுத்த பெரும் ஆவல் கொண்டிருந்தாரென்பதும் இச்சட்டம் தாமதமின்றி விரைவில் நிறைவேற்றப்பட வேண்டுமென்று ஆர்வங்கொண்டிருந்தாரென்பதும் தெரிகிறது. உண்மை என்னவெனில் இச்சட்டப் பிடகாரம் மலைநாட்டுத் தமிழரில் கணிசமான வீதத்தினர் பிரஜா உரிமை பெறுவாரென்று நேருஜீயும், திரு. பொன்னம்பலமும், கருதினார்கள். இது இவ்வாறிருக்க இலங்கை இந்தியரின் உரிமைகளை இம் மசோதாவின் மூலம் நேருஜீயோ திரு. பொன்னம்பலமோ பறிக்க முயன்றார்கள் என்று நீதியுள்ள எவராவது கூறுவார்களா?

“நன்றறிவாற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்தவலம் இலர்”

போக்கிரிகளுக்கு, நன்மை தீமையை ஆராய வேண்டிய விசாரமோ, மற்றவனை அவதூறு சொல்லும் பொழுது அதில் நியாயமிருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து சொல்லும் விசாரமோ கிடையாதாகையால் அவர்கள் தாம் மூழ்கிக் கிடக்கும் அறியாமையில் மற்றவர்களையும் மூழ்க வைத்து, உண்மையை இருட்டடிப்புச் செய்து வாழ்வார்கள்.

மலைநாட்டுத் தமிழர் விஷயத்தில் நேருஜீ ஒப்புக் கொண்டதை திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆதரித்து பிழையென்று நாளும் பொழுதும், கொக்கரித்துத் திரிவோர், நேருஜீயைக் கண்டிக்காது விட்டது விந்தையிலம் விந்தையே!

இவ்வாறு நிறைவேறிய சட்டத்தை இலங்கை, இந்தியக் காங்கிரஸ் தலைவர்களான பெரிய சுந்தரம், ஜோர்ஜ் மோத்தா, ஆகியோர் இது நேர்மையான முறையில் அமுல் செய்யப் பட்டால் மலைநாட்டுத் தமிழர்களில் எழுபத்தைந்து வீதத்திற்கு மேலானவர்கள் இலங்கைப் பிரஜைகளாவார்களென்ற கருத்தைப் பகிரங்கமாக வெளியிட்டார்கள். 24-4-48ல் நேருஜீயின் கீழ் செயலாற்றும் வெளிவிவகார அமைச்சு திரு. டீ. எஸ். சேனநாயக்காவுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. “இச்சட்டத்தின் சரத்துக்களின்படி குடியுரிமை பெறத் தகுதியில்லாத இந்தியர்களின் தொகை மிகக் குறைவாகவேயிருக்கும்”

எனவே நேருஜீ, பெரியசுந்தரம், மோததா முதலிய தலைவர்கள் எழுபத்தைந்து வீதத்திற்கு மேலான மலைநாட்டுத் தமிழர்களுக்கு இலங்கைப் பிரஜா உரிமை வழங்கக்கூடிய சட்டமென அபிப்பிராயம் தெரிவித்த ஒரு சட்டத்துக்கே திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆதரவளித்தாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும். ஆனால் சட்டத்தைப் பின்னர் அமுல் நடத்திய முறை நேர்மையற்றதாகவும், சட்ட விரோதமானதாகவும், இருந்தது. அஃது அப்படி அமுல் நடத்தப்படமென நேருஜீயோ, திரு. பொன்னம்பலமோ அதற்கு ஆதரவு அளித்த சமயத்தில் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. இச்சட்டம் நேர்மையாக அமுல் நடத்தப்படுமெனக் கருதியே அவர்கள் அதனை ஆதரித்தார்கள். அதை நீதியாக அமுல் நடத்த அவர் ஆற்றிய அரும்பணிகளை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

மலைநாட்டுத் தமிழர் பிரஜா உரிமை பெறாமலிருப்பதற்கு மூலகாரணம் யார்?

இந்தியா-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டத்தின் படி 75 வீதத்தி;ற்கு அதிகமான மலை நாட்டுத் தமிழர் இலங்கை பிரசா உரிமை பெறுவார்களென்பதை பண்டிதர் நேரு, திரு. மோத்தா, திரு. பெரியசுந்தரம் போன்ற பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் ஒப்புக்கொண்டார்களென்பதையும் இச்சட்டம் சரியானபடி அமுல் நடத்தப்பட்டால் அந்நிலைமை உண்டாயிருக்கு மென்பதையும். இவ்வண்ணம் மலைநாட்டுத் தமிழருக்கு பிரஜாவுரிமை கொடுத்த மசோதாவையே திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித்தாரென்பதையும், நீதி மனப்பான்மையுள்ள எவரும் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தை இதற்காகக் கண்டிக்க மாட்டார்கள் என்பதையும், முந்திய அத்தியாயங்களில் எடுத்துக் காட்டினோம்.

எழுபத்தைந்து வீதத்திற்கு அதிகமானோர் பிரசா உரிமை பெறுவார்கள் என்று பொன்னம்பலமும் ஏனைய இந்தியத் தலைவர்களும் உண்மையாக நம்பியிருந்தார்கள். ஆனால் கடைசியில் பதினைந்து வீதமானோரே பிரசா உரிமை பெற்றனர். இதற்குக் காரணமென்ன? உரிமைக்கு விண்ணப்பஞ் செய்விக்காமல் இடையூறாயிருந்தவர்கள் யார்?

குடியுரிமை பெற விரும்புவோர் மசோதா நிறைவேறி இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பஞ் செய்து கொள்ள வேண்டுமென்பது அச்சட்டத்தின் ஐந்தாவது பிரிவிற் காணப்படும் நிபந்தனையாகும். இவ்விஷயத்தில் மலைநாட்டுத் தமிழரின் பிரதிநிதியாகிய இலங்கை இந்தியக் காங்கிரஸ் செய்ததென்ன?

விண்ணப்பங்களை நேர காலத்திற்குள் அனுப்பி வைத்தார்களா? இதற்கான நடவடிக்கைகளை உடனே எடுத்தார்களா? இவ்வாறு செய்யாது சட்டத்தைப் பகிஷ்கரித்து சிரிப்பதற்கு இடமானதோர் சத்தியாக்கிரகத்தை நடத்தினார்கள். இத்தகைய முட்டாள்தனமான, பயனற்ற நடவடிக்கையை எடுக்குமாறு சமஷ்டிக்கட்சித் தலைவர்கள் அவர்களை ஊக்கினார்கள். பண்டித நேரு இந்த நடவடிக்கையை அங்கிகரிக்கவில்லை.

இப்பயனற்ற சத்தியாக்கிரகத்தைக் கைவிட்டு பிரஜாவுரிமை விண்ணப்பங்களைப் பெருவாரியாகப் பதிவு செய்திருந்தால் நேரு. ஜீ. ஜீ. போன்றவர்கள் எதிர்பார்த்த நலன்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் ஒன்றரை வருடக் காலத்தை இச்சத்தியாக்கிரகத்தில் செலவு செய்தார்கள். இப் பகிஷ்காரத்தினாலும் சத்தியாக்கிரகத்தினாலும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. தீமையே ஏற்பட்டது. சட்டத்தின் ஏற்பாடுகள் ஓரு அணுவளவும் மாற்றப்படவில்லை.

பண்டிதர் நேருவுடன் இவ் விஷயம் பற்றி நீண்டகாலமாகக் கடிதப் போக்குவரத்துச் செய்த திரு. டீ. எஸ். சேனநாயகா இம்மசோதாவின் ஏற்பாடுகளில் மேலதிகாமாக எவ்விதமாற்றமும் செய்யவிரும்பாதபொழுது இவர்களுடைய சத்தியாக்கிரகத்தினாலோ, பகிஷ்கரிப்பினாலோ ஏதுஞ் செய்து விடுவாரென்று அசீஸ், தெண்டமான், செல்வநாயகம் போன்றோர் நினைத்தது முட்டாள்தனமாகும். வேறு மாற்றங்கள் செய்ய மாட்டாரென்பதை நன்றாக உணர்ந்தபடியால் தான் நேருஜி இம் மசோதாவை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு தாமெழுதிய கடைசிக் கடிதத்தில் கேட்டுக் கொண்டார். இக்காரணங்களைக் கொண்டே திரு. பொன்னம்பலமும் இம் மசோதாவை ஆதரித்தார்.

பண்டிதர் நேருவும் திரு. பொன்னம்பலமும் உணர்ந்த இவ்வுண்மையை அறிந்துகொள்வதற்கு வேண்டிய தீர்க்கதரிசனமோ அரசியல் அறிவோ ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நடத்திய தொண்டமான், அசீஸ்போன்ற மலை நாட்டுத் தமிழரின் தலைவர்களிடத்திலாவது, அவர்களுக்கு ஊக்கமளித்த செல்வநாயகம், வன்னியசிங்;கம், நாகநாதன் போன்ற சமட்டிகளிடமாவது இருக்கவில்லை. அதனால் சத்தியாக்கிரகம் நடத்திப் பயனற்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். இவ்வாறு ஒன்றரை வருடங்கள் கழிந்த பின்னர் தமது பிழையை உணர்ந்த இத்தலைவர்கள் சத்தியாக்கிரகக் கைகைவிட்டு பிரசா உரிமை கோரி விண்ணப்பஞ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

ஆனால் ஆறு மாதங்களில் எத்தனை விண்ணப்பங்களைத் தான் அனுப்பலாம்? அன்றியும், வாசத் தகுதி முதலியவற்றை உறுதிப்படுத்தும் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. எனவே தேவையான தஸ்தாவேசுப் பத்திரங்களின்றி பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. சமாதான நீதவானின் ஒப்பமின்றியும், ஏனைய தஸ்தாவேசுக்களின்றியும், அனுப்பப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களை நிருவாக உத்தியோகத்தர்கள் இலேசாக நிராகரித்து விட்டார்கள். இதனால் எத்தனையோ ஆயிரம் மலைநாட்டுத் தமிழ்h பிரசா உரிமை பெறும்சந்தர்ப்பத்தை இழந்தனர்.

பிழையானதும் பூர்த்தியற்றதுமான தகவல்கள். கொடுக்கப்பட்ட காரணத்தினால், அரசாங்க உத்தியோகத்தர்களினால் பெருந்தொகையான குடியுரிமை மனுக்கள் நிராகரிக்கப்பட்டனவென்பதை திருமரையில் 1964ம் ஆண்ட ஆவணி மாதம் நடைபெற்ற சமஷ்டிக் கட்சியின் 9வது தேசிய மாநாட்டின் போது நிகழ்த்திய தலைமையுரையில், செல்வநாயகம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதோ அவரது கூற்று:-

“அன்று 8 இலட்சமாயிருந்து, இன்று 10 இலட்சத்துக்கும் மேற்பட்டிருக்கும். ஒரு முழுச் சமுதாயத்தையே குடியுரிமையற்றவர்கள் ஆக்கும் திருப்பணி நிறைவேறியது. டீ. எஸ். சேனநாயக்கா அரசாங்கம், இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் என ஒரு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தின் பிரகாரம் ஒரே தொடர்பாக விவாகமாகாத ஒருவர் 7 வருடமும் (10 வருடங்களென இருத்தல் வேண்டும். எனது திருத்தம்) விவாகமான ஒருவர் 10 வருடமும் (7 வருடங்களென்பதே சரி எனது திருத்தம்) வாசகாலத்தகைமை காட்டினால் இவர்கள் மீண்டும் பிரஜைகளாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பதிவுக் குடியுரிமை கோரியவர்களின் மனுக்கள் மிகப் பெருந்தொகையில் நிர்வாக வழிகள் மூலம் நிராகரிக்கப்பட்டன. இதன் விளைவாக மனுப் பண்ணியவர்களில் வெறும் 10 சதவிகிதத்தினரே குடியுரிமை பெற முடிந்தது. 90 சதவிகதிதமான மனுக்களும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அம் மனுப் பத்திரங்களில் தெரிவித்த தகைமை. விபரங்கள் சரியற்றவை அல்லது போதாதவை என்பதுவல்ல@ எழுத்து வாசனையறிவற்ற தோட்டத் தொழிலாளிகள், அவ்விபரங்களை மனுப்பத்திரங்களில் நிரப்பிய நுண்முறைகள் சரியற்றவை. என்ற விதண்டாவாதமேயாகும்” - சுதந்திரன் 13-9-64

இப்படியாகச் செல்வநாயகமே நாம் மேற்கூறியதற்கு ஆதாரம் கூறியிருக்கின்றாரென்றால் எமக்கு வேறு சாட்சியும் வேண்டுமா. என்ன?

இந்தியர்-பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டம், மலைநாட்டுத் தமிழருக்கு, அவர்களது பறிபோன உரிமைகளைக் கொடுக்கத் தமிழ் காங்கிரசின் நிர்ப்பந்தத்தினால் தாயரிக்கப்பட்டது. அச்சட்டத்தை எதிர்த்து சமட்டிக் கட்சியின் ஆலோசனையின் பேரில் இலங்கை, இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை காரணமாக வேண்டிய விபரங்களுடன், மனுக்களை நிரப்பி அனுப்ப முடியவில்லை. கூடவே அரசாங்க அதிகாரிகளுடன் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளும் காரணமாக நின்று, பெருந் தொகையான மனுக்களை நிராகரிக்கச் செய்தன என்ற எமது கூற்றுக்கு செல்வநாயகமே சிறந்த முறையில் மேற்கொண்ட சாட்சியும், சான்றும் கொடுத்திருக்கையில் மேலும் விளக்கங்கள் வேண்டியதில்லையே!

இத்தலைவர்கள் தீர்க்கதரிசமற்ற நடவடிக்கைகளும், செய்ய வேண்டியனவற்றை முறைப்படி செய்யாது விட்ட பெருந் தவறுகளுமே பெருந்தொகையான விண்ணப்பங்கள். நிராகரிக்கப்பட்டதற்குக் காரணமென்பதைத் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகமே நினையாப் பிரகாரமாக உண்மையைக் கூறிவிட்டார்.

எனவே மலைநாட்டுத் தமிழர் பெருமளவில் பிரஜய உரிமை பெறாமலிருந்ததற்கு மூலகாரணமாயிருந்தவர்கள் இலங்கை-இந்திய காங்கிரஸ் தலைவர்களும், சமட்டிக் கட்சித் தலைவர்களுமாவர். முட்டாள்தனமான பயனற்ற சத்தியாக்கிரகத்தில் காலத்தைச் செலவு செய்யாமல் விண்ணப்பங்களை முறையாக அனுப்ப முயன்றிருந்தால் பெருந்தொகையான மலைநாட்டுத் தமிழருக்கு இன்று பிரஜாவுரிமை கிடைத்திருக்கும்.

தாங்கள் விட்ட இப்பெரும் பிழையை இத்தலைவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்து நியாயமற்ற முறையில், விஷமத்தனமாக, திரு பொன்னம்பலத்தின் மீது குற்றத்தை சிருட்டித்தார்கள்!

“ஆடத் தெரியாதவள் முற்றம் கோணல் என்றாளாம்”

மலைநாட்டுத் தமிழர் இவ்வளவு குறைவாக பிரசா உரிமை பெறுவதற்கு, அரசாங்கமும், காரணமாக இருந்தது. போலி நியாயங்களைக் காட்டி ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இது கொத்தலாவலை அரசாங்கத்தின் தூண்டுதலால் உத்தியோக வர்க்கம் செய்த பெருங்கெடுதியாகும். சுப்றீங் கோட்டுக்கும், பிறிவிக் கவுன்சிலுக்கும் அனுப்பப்பட்ட அப்பீல் வழக்குகளிலிருந்து இந்த உத்தியோகத்தர்கள் அநீதியாகவும், சட்டத்திற்கு விரோதமாகவும். நேர்மையற்ற முறையில் பல விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்தார்களென்பது தெரிய வருகின்றது.

இவ்வாறு உத்தியோகத்தர்கள் அநீதியாகத் தள்ளுபடி செய்ய முற்பட்டமை திரு. பொன்னம்பலம் மந்திரி சபையை விட்டு விலகிய பின்னரே!

அதுவரை அரசாங்கத்தில் திரு. பொன்னம்பலத்திற்கு இருந்த செல்வாக்கினால் அநீதி நடைபெறவில்லை. இதன் உண்மை, இலங்கையில் அக்காலத்தில் இந்திய நாட்டின் இலங்கைத் தூதராகவிருந்த திரு. சி. சி. தேசாய் தயாரித்து வைத்த பள்ளி விபரங்களிலிருந்து தெரிகின்றது. இவ்விபரங்களை இந்தியத் தூதுவரின் அலுவலகத்தில் எவரும் பார்த்து அறிந்து கொள்ள முடியும். இப்புள்ளி விபரங்களின் படி 1953ம் ஆண்ட முடியும் வரை அரசியலாருக்கு அனுபப்பட்ட விண்ணப்பங்களில் அறுபத்தேழு வீதமான விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டன.

1953ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் திரு. பொன்னம்பலம் மந்திரிசபையிலிருந்து வெளியேறிய பின்னர் தொண்ணூறு வீதமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. திரு. பொன்னம்பலம் செல்வாக்குள்ளவராக மந்திரி சபையில் இருந்த காலத்தில், பெருந் தொகையான மலைநாட்டுத் தமிழருக்கு பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்க, அதாவது சட்டத்தை நேர்மையாக அமுல் நடத்த துணை புரிந்தார். இலங்கை இந்தியக் காங்கிரஸ் தலைவர்களும், சமட்டிக் கட்சித் தலைவர்களும், இவ்வாறு நன்மை செய்த ஒருவர் மீது பழி சுமத்துவது செய்நன்றி கொன்ற செயலல்லவா?

இம்மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது தம் பதவியை விட்டு நீங்குவது நல்லதா என்று இந்திய நாட்டின் இலங்கைத் தூதுவராக அக்காலத்தில் இருந்த (இவர் இப்பொழுது இந்திய ஜனாதிபதியாக இருக்கிறார்) திரு. வீ. வீ. கிரியின் ஆலோசனையைத் திரு. பொன்னம்பலம் கேட்டார். அதற்கு திரு. கிரி. “நீங்கள் மந்திரி சபையிலிருப்பதே நல்லது. இருந்தால் தான் இ;ச்சட்டம் நேர்மையற்ற முறையில் அமுல் நடத்தப்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்று யோசனை கூறினார்.

திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் பதவியில் இருக்கும் பலம் இருந்து வந்தார். திரு. பொன்னம்பலம் பதவியிலிருக்கும் வரை சட்டம் நேர்மையாக அமுல் நடத்தப்படுமென்று திரு. கிரி கூறிய வார்த்தைகள் எவ்வளவு தீர்க்கதரிசனம் பொருந்தியவை! ஏனெனில், திரு. பொன்னம்பலம் பதவியிலிருக்கும் வரை பிரஜாவுரிமை விண்ணப்பங்கள் 67 வீதம் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவர் வெளியேறிய பின்னர் பத்து வீதNமு ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மலைநாட்டுத் தமிழர் பிரதஜாவுரிமை பெறுவதற்கு திரு. பொன்னம்பலம் வேறென்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்பதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

நேருஜி. டட்லி சமரச முயற்சி

ஜீ. ஜீ. அமைச்சரவையில் சேர்வதற்கு முக்கியமாயிருந்த காரணங்களில் எப்படியாவது சிங்களவர், தமிழர் இரு சாராரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் மலைநாட்டுத் தமிழர்களின் குடியுரிமைச் சிக்கலைத் தீர்த்து வைக்க வேண்டுமென்ற தூய்மையான பேராவல் ஒன்று என்பதை ஈண்டு குறி;ப்பிட வேண்டும். இதனை மருத்துவர் ஈ. எம். வி. நாகநாதனே கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.

அதாவது “தமிழ் காங்கிரஸ் நாட்களில் திரு. பொன்னம்பலத்துடன் நான் மிகவும் நெருக்கமானத் தொடர்பு கொண்டிருந்தேன். அவருக்கு நியாயம் வழக்கு முகமாகவும், உண்மைக்கும் நீதிக்குமாகவும் நான் இதைச் சொல்ல வேண்டும். அதாவது அமைச்சர் பதவியில் உள்ள கவர்ச்சியின் மீது மோகம் கொண்டு அவர் பதவி ஏற்கவில்லை. எப்படியாவது மலைநாட்டுத் தமிழரின் குடியுரிமைப் பிரச்சினைகளுக்குத் துரிதமாக முடிவுகாண வேண்டுமென்ற அந்தரங்க சுத்தியான ஆவலே அவரை அமைச்சரவையில் சேரத் தூண்டியது” இத்தகைய பேராவலுடனும், நோக்கத்துடனும், அமைச்சரவையில் சேர்ந்த திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் மந்திரி சபையில் இருக்கும் வரை இந்தியர், பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டத்தை நிர்வாகிகளும், அரசாங்கமும் நேர்மையாகவும் ஒழுங்காகவும் அமுல் நடத்தி வந்தார்கள்.

அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அரசினரால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களில் 67 விகிதத்துக்கு மேலானவை அனுமதிக்கப்பட்டன என்பதையும் அவர் பதிவியை விட்டதும், 10 விகிதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டன என்பதையும் முன்னரே எடுத்துக் காட்டினோம்.

இவற்றோடு அவர் நிற்கவில்லை. இச்சட்டப்படி பிரஜாவுரிமை பெறத் தக்க தகைமை இல்லாதவர்களுக்கு நிரந்தரவாச அனுமதி கொடுக்க ஒரு திட்டத்தை வகுக்குமாறும் அக்காலத்தில் பிரதம மந்திரியாயிருந்த டட்லி சேனநாயகாவிடம் திரு. பொன்னம்பலம் வற்புறுத்தினார். இதன் பயனாக டட்லி சேனநாயகா 250,000 மலைநாட்டுத் தமிழருக்கு நிரந்தர வாச அனுமதி கொடுக்க உடன்பட்டார். அதாவது பிரஜாவுரிமை பெற்றவர்கள் போக, பிரஜாவுரிமை பெறத் தவறிய 250,000 மலைநாட்டுத் தமிழர்க்கு நிரந்தர வாச அனுமதி வழங்க உடன்பட்டார்.

இந்தத் திட்டத்தை டட்லி சேனநாயகா 1953ம் ஆண்டு ஜுன் மாதத்தில் லண்டன் சென்றிருந்த போது மகாராணியாரின் முடிசூட்டு விழாவுக்கு அங்கே சமுகந்தந்திருந்த பண்டிதர் நேருவுடன் விவாதித்தார். பண்டித நேரு 300,000 மலைநாட்டுத் தமிழருக்கு நிரந்தர வாசப் பெர்மிட் கொடுக்குமாறு கேட்டார். அதற்கு டட்லி சேனநாயக்கா உடன்படாததால் திட்டம் கைவிடப்பட்டது. நேருஜி இத் திட்டத்தை ஆதரித்திருந்தால் திட்டம் நிறைவேறியிருக்கும்;. அவ்வாறு அத்திட்டம் நிறைவேறியிருக்குமானால் அதற்கு மூலகாரணராய் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலமே இருந்திருப்பார்.

நேருஜிக்கும் டட்லி சேனநாயகாவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில், டட்லி சேனநாயகா இந்தியர் பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத்தின் பிரகாரம் 400,000 மலைநாட்டுத் தமிழருக்குப் பிரஜா உரிமை வழங்கப்படுமென வாக்குறுதியளித்திருந்தார். இவ்விடயத்தை இலங்கைப் பாராளுமன்றத்திலே பீட்டர் கெனமன் எடுத்துக் காட்டிய பொழுது அது உண்மையென்பதை திரு. டட்லி சேனநாயகா பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

இவ்விடயம் 1960ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி ‘கேன்சாட்’டில் 692ம் பக்கத்திலே கூறப்பட்டிருக்கின்றது. 1953ம் ஆண்டில் திரு. டட்லி சேனநாயகா நேருஜிக்கு அளித்த வாக்குறுதியை வைத்துப் பார்க்குமிடத்த திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் இம்மசோதாவுக்கு வாக்குரிமையளித்தமை வேறொரு காரணத்தினாலுமன்று என்பதும் பெருந்தொகையான மலைநாட்டுத் தமிழர் பிரஜாவுரிமை பெறுவார்களென்ற நம்பிக்கையினால் தான் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகும்.

மலைநாட்டுத் தமிழரி;ல் 65 அல்லது 70 விகிதத்தினர் இம் மசோதாவின் பயனாய் பிரஜாவுரிமை பெறுவாரென திரு. ஜீ. ஜீ பொன்னம்பலம் உண்மையில் நம்பினார். இந்நம்பிக்கை ஆதாரபூர்வமான உண்மையை அடிப்படையாய்க் கொண்ட தென்பதும், அது கற்பனையிற் பிறந்த தொன்றல்ல வென்பதும் திரு. டட்லி சேனநாயகா நேருஜிக்களித்த வாக்குறுதியிலிருந்தே புலனாகிறது. இந்த உண்மைகளைத் தௌ;ளத் தெளிய அறிந்த பின்னரும், சமட்டி வாதிகள் திரு. பொன்னம்பலத்துக்கு எதிராகப் பொய்ப்பிரசாரஞ் செய்து வந்தனர். விஷமத்தனமான நன்றி கெட்ட, நடு நிலைமை அற்ற பிரசாரங்களில் ஈடுபட்டார்கள். மலைநாட்டுத் தமிழரின் உரிமையைப் பலப்படுத்தவும், தமக்குப் பெருமை தேடிக்கொள்ளவும், விஷமப் பிரச்சாரம் செய்தார்கள்.

பிரஜாவுரிமை சம்பந்தமான இரண்டு சட்டங்களின் விபரங்களையும் அவை தோன்றி வளர்ந்த வகையையும் தெளிவாக முன்பு எடுத்துக்காட்டினோம். திரு. பொன்னம்பலம் என்ன காரணங்களைக் கொண்டு ஒரு சட்டத்தை எதிர்த்தார் என்பதையும் மற்றச் சட்டத்தை ஏன் ஆதரித்தார் என்பதையும் ஆராய்ந்து விளக்கினோம். சுயநலத்துக்காகத் திரு. பொன்னம்பலத்தை வைதுவரும் இத்தலைவர்களின் பேச்சை இனியும் தமிழினத்தவர் நம்புவார்களா?

திரு. பொன்னம்பலம் மலைநாட்டுத் தமிழர்களுக்காக நேர்மையுடனும் ஆர்வத்துடனும் அரசியல் தீர்க்கதரிசனத்துடனும் அருந்தொண்டாற்றி வந்தார் என்பதை நேர்மையுள்ளவர்கள் உணர்வார்கள். கடந்த நூற்றாண்டின் சரித்திரம் சிறந்த சான்று பகரும்.

இனி இரண்டொரு தவறான கருத்துக்களை விளக்க வேண்டியது அவசியமாகின்றது. இந்தியர் பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதாவுக்குத் தமிழ் காங்கிரஸ் வாக்களித்திருக்காவிட்டால் அது பாராளுமன்றத்தில் தோல்வியடைந்திருக்கும் என்று ஒரு தப்பபிப்பிராயம் நிலவி வந்திருக்கிறது. இந்த மசோதாவுக்குச் சாதகமாக பாராளுமன்றத்தில் 52 பேர்கள் வாக்களித்தனர். எதிராக 32 பேர் வாக்களித்தனர். எனவே 20 அதிகப்படியான வாக்குகளினால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழ் காங்கிரஸ் அங்கத்தவரின் நான்கு வாக்குகளும் அரசாங்கத்தை ஆதரித்த ஏனைய தமிழ் அங்கத்தவர்களின் வாக்குகளும் எதிர்க்கட்சி வாக்குகளுடன் சேர்ந்தாலும் எவ்வித மாற்றத்தையுமுண்டாக்கியிருக்க முடியாது. பாராளுமன்றத்திலிருந்த எல்லா தமிழங்கத்தவரும் மசோதாவுக்கு மாறாக வாக்களித்தாலும் அது தோல்வியடைந்திருக்க மாட்டாது.

இதைவிட இந்த மசோதாவை ஆதரித்து திரு. பொன்னம்பலம் வாக்களித்த படியால்தான் செல்வநாயகமும், வன்னியசிங்கமும் தமிழ் காங்கிரசிலிருந்து விலகினார்கள் என்று மற்றொரு அபாண்டமான பொய்யைச் சமட்டிக் கட்சி மக்களிடையே பரப்பிவருகிறது. சமஷ்டிக் கட்சியின் பொய் நிரம்பிய வஞ்சகத் தந்திரங்களில் இதுவுமொன்று. உண்மை என்ன?

டீ. எஸ். சேனநாயகாவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் தமிழ் காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டுமென 1948ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கட்சி ஏகமனதாக முடிவு செய்தது. இம் முடிவைச் செல்வநாயகமும் வன்னியசிங்கமும் ஆதரித்தாhகள். யாழ்ப்பாண முற்றவெளியிலே 1948ம் ஆண்டு ஓகஸ்ட்ட மாதம் 22ம் திகதி நடந்த மாபெருங் கூட்டத்தில் செல்வநாயகம், இவ்விஷயத்தைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். யூ. என். பி. அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தமிழ் பேசும் மக்களின் சம்மதத்தைப் பெறுவதற்காக நடைபெற்ற அக்கூட்டத்தில் “தமிழ்க் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டுமென கட்சி செய்த முடிவு ஏகோபித்த முடிவ என்பதைத் திரு. செல்வநாயகமே அக் கூட்டத்திலே பகிரங்கமாகக் கூறினார்.

அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை தமிழ் மக்கள் ஏகோபித்து ஆதரிக்க வேண்டுமெனத் தன் வாயாலேயே அவர் அன்று இக்கூட்டத்திலே தமிழ் மக்களைக் கேட்டார். மக்களும் முடிவை வரவேற்றனர். இதன் பிரகாரம் திரு. பொன்னம்பலம் 1948ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே மந்திரி பதவி எற்றார். பதவியேற்று இரண்டு நாட்களில் அவர் சாம்ராச்சியப் பாராளுமன்ற மாநாட்டின் இலங்கைப் பிரதிநிதியாக இங்கிலாந்து சென்றார்.

அவர் செல்லும் வரை தமிழ் காங்கிரசில் பிளவோ, அபிப்பிராய பேதமோ இருக்கவில்லை. அப்படியானால் இவ்விருவரும் தமிழ்க் காங்கிரசை விட்டு மாபெரும் கூட்டத்தில் “ஏகமனதாக முடிவுசெய்தோம்” என்று சொல்லி அரசாங்கக் கட்சியில் சேர்ந்த செல்வநாயகம் தமிழ்க் காங்கிரசை விட்டு விலகியதன் மர்மம் என்ன? இதற்கிடையில் அப்படி பாரதூரமாக என்ன நடந்து போய்விட்டது?

பொன்னம்பலத்திற்கு மாத்திரம் மந்திரிப் பதவி கிடைத்ததே என்ற மனக் கொதிப்புத்தான். டி. எஸ். சேனநாயகாவுடன் நடந்த பேச்சுகளின் போது தமிழ் காங்கிரசுக்கு இரண்டு மந்திரிப் பதவிகள் கொடுப்பதாக, அவர் வாக்களித்திருந்தார். ஒரு மந்திரிப் பதவியே கொடுக்கப்பட்ட போது, மந்திரிப் பதவி வருமென்று கொட்டாவி விட்டுக் கொண்டிரு;நத ஒருவர் மனக்கொதிப்படைந்தர். எனவே தன்னுடைய வாலொன்றையும் கூட்டிக் கொண்ட அவர் தமிழ்க் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

சேனநாயகா தமது வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? அவர் வாக்குறுதியளித்தபடி இரண்டு மந்திரிப் பதவிகளை கொடுப்பதற்கு மந்திரி சபையில் பதவிகள் காலியாயிருக்கவில்லை. ஒரு மந்திரி மீது தேர்தல் வழக்கு நடந்து கொண்டிருந்தது. அவ்வழக்கு முடிவைப்பார்த்து கொடுப்போமென டீ. எஸ் சேனநாயகா எண்ணியிருந்தார். ஆனால் வழக்கிலே மந்திரி தமது பதவியை இழக்கவில்லை. தேர்தல் வழக்கு தள்ளபடி செய்யப்பட்டது.

இருந்தும் பின்னர் காலியான பதவிகளில் ஒரு தமிழ் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்குப் பதவியளித்திருப்பார். ஆனால் தமிழ்க் காங்கிரசிலிருந்து செல்வநாயகம் கட்சி வெளியேறியபடியால் தமிழ் காங்கிரஸ் அங்கத்தவர் தொகை 4 ஆகக் குறைந்தது. எனவே பாராளுமன்றத்தினுள் நான்கு அங்கத்தவரைக் கொண்ட ஒரு பலமிழந்த கட்சிக்கு இரண்டு மந்திரிப்பதவிகளை சேனநாயகா கொடுப்பாரென்று எவ்வாறு எதிர்பார்ப்பது? அதுவும் தமிழ்க்காங்கிரசைச் சேர்ந்த திரு. கே. கனகரத்தினத்திற்கு ஒரு பாராளுமன்றக் காரியதரிசிப்பதவியும் திரு. டி. இராமலிங்கத்திற்கு கமிட்டிகளின் உபதலைவர் பதவியும் வழங்கப்பட்ட பிறகு எப்படி எதிர்பார்க்க முடியும்?

இவ்வத்தியாயத்தை முடிக்கு முன்னர் மலை நாட்டுத் தமிழருக்குக் கடந்த 35 வருடங்களாக திரு. பொன்னம்பலம் ஆற்றிய தொண்டுகளை சங்கிரகமாகக் கூற வேண்டியிருக்கிறது.

1. 1933-ம் ஆண்டிலே திரு. பொன்னம்பலம் சட்டசபை அங்கத்தவரான காலந்தொட்டு இலங்கை, இந்திய காங்கிரஸ் மலைநாட்டுத் தமிழரின் அரசியல் கட்சியாக உருப்பெற்ற 1945-ம் ஆண்டு வரை திரு. பொன்னம்பலமே சட்ட சபையிலும் அதற்கு வெளியிலும் மலைநாட்டுத் தமிழரின் உரிமைகளுக்காகவும் அவர்களின் பொருளாதார உரிகளுகட்கும் நலன்களுக்குமாகப் போராடியும், வாதாடியும். வந்தவர்.

2. மூலோயாத்தோட்டத்துக் குழப்பத்திலே கோவிந்தன் என்ற தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது விசாரணைச்சபையில் அவர் மலைநாட்டுத் தமிழரின் பாதுகாப்பையும் மரியாதையையும், அந்தஸ்தையும், தமது அயரா உழைப்பினாலும் அரிய தியாகத்தினாலும் உறுதியான நடவடிக்கைகளினாலும் நிலை நாட்டினார்.

3. நேவ்ஸ்மயர் தோட்டத்தை அரசாங்கம் வாங்கி அதிலிருந்த தமிழரை நிர்க்கதிக்குள்ளாக்கிய பொழுது திரு. பொன்னம்பலம் அரசாங்க சபையிலே அதை எதிர்த்தார். நீதிமன்றத்திலும் வழக்காடினார். அதன் பயனாக அரசாங்கம் அந்நடடிக்கையை கைவிட்டது.

4. சோல்பரி விசாரணைக் குழுவின் முன்னர் சாட்சியமளிக்கையில் திரு. பொன்னம்பலம் மிகத் திறமையுடன் வாதாடிய தன் பயனாகவே தங்கள் சிபார்சின்படி 100 அங்கத்தவர் கொண்ட பாராளுமன்றத்திலே மலைநாட்டுத் தமிழருக்கு 14 பிரதிநிதிகளாவது இருக்க முடியுமெனத் தமத அறிக்கையில் தெரிவித்தார்கள்.

5. இலங்கை, இந்தியர். காங்கிரசும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரசும் ஒரு ஐக்கிய முன்னணி அமைத்து ஒரு கொடியின் கீழ் நின்று 1947-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் கலந்த கொள்ள வேண்டுமென அன்று திரு. பொன்னம்பலம் யோசனை கூறினார். அந்த யோசனையை இலங்கை இந்தியக் காங்கிரசு ஏற்றிருந்தால் இன்று தமிழினத்தின் நிலைமை வேறு விதமாயிருக்கும். பல லட்சக்கணக்கான மலைநாட்டுத் தமிழர் பிரஜாவுரிமை பெற்றிருப்பார்கள்;. பிரஜாஉரிமைப் பிரச்சினையென்ற ஒரு பிரச்சினையே இன்று இருந்திருக்கமாட்டாது.

6. 1948-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 18-ம் இலக்க இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டமே மலைநாட்டுத் தமிழரின் பிரஜாவுரிமையைப் பறித்தது. அதனை திரு. பொன்னம்பலமும் ஏனைய தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்த்தார்கள். 1948-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் இருபதாம் திகதி ‘கேன்சாட்’டின் 1821-1861 பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் திரு. பொன்னம்பலம் எவ்வளவு தீவிரமாக இதனை எதிர்த்தார் என்பது தெரியும்.

7. தமிழ்காங்கிரசு அரசாங்கத்துடன் சேர்வதற்கு முன்னால் இருதரப்பினருக்கு மிடையியே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் பொழுது திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வாதாடிய சிக்கல்களில் மலைநாட்டுத் தமிழரின் குடியுரிமைச் சிக்கலும் ஒன்றாகும். சேனநாயகா அவ்விடயத்தைப் பற்றித் தாம் பாராளுமன்றத்திலே புதியதொரு மசோதா சமர்ப்பிக்கப் போவதாகவும் அம்மசோதா பண்டிதர் நேருவின் அனுமதியைப் பெற்றதாயிருக்குமெனவும் கூறிய பின்னரே திரு. பொன்னம்பலம் சேனநாயக்கா அரசாங்கத்தில் சேர்ந்தார்.

8. பொன்னம்பலத்திற்கு அளித்த வாக்குறுதிப்படி 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதாவை டீ. எஸ். சேனநாயகா பாராளுமன்றத்திலே சமர்ப்பித்தார். இம்மசோதாவுக்கு நேருஜீ ஆதரவு அளித்தார். 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் திகதி நேருஜீ எழுதிய கடிதத்திலே “மேலும் தாமதஞ் செய்யாது இந்த மசோதாவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்க வேண்டும்” என்று கேட்டார். இந்த மசோதாவுக்கு வாக்களித்ததற்காகவே பொன்னம்பலம் விஷமத்தனமாக கண்டிக்கப்பட்டார்.

இம்மசோதா மலைநாட்டுத் தமிழரின் பிரஜா உரிமையை பறிக்கவில்லை. பதில் இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டப்படி பிரஜாஉரிமையை இழந்த மலைநாட்டுத் தமிழருக்கு அதனை மறுபடி கொடுப்பதற்கு வகுக்கப்பட்ட சட்டமே இது .இச்சட்டப்படி இலங்கையில் 7 வருடங்கள் வாழ்ந்த குடும்பத்தவருக்கு பிரஜா உரிமை வழங்க வகைசெய்யப்பட்டது. தமிழ்காங்கிரசும் இலங்கை இந்தியக்காங்கிரசும் 5 வருட வாச உரிமையிருந்தால் போதுமென்று கோரின. இச்சட்டப்படி அந்தக் கோரிக்கை 7 வருடங்களாக்கப்பட்டது. இதுவே இச்சட்டத்திலுள்ள சிறிய மாற்றம்.

பொன்னம்பலம் இந்த 2 வருட அதிகப்படியான கால எல்லைக்கு உடன்பட்டது. பாதகமா? நேர்மையுள்ளவர்கள் அவ்வாறு கூறுவாரா? இந்தியப் பிரதமர் நேரு இதனை ஆதரித்தார் என்றால் பொன்னம்பலம் ஆதரித்தமை மாத்திரம் பெரிய குற்றமாகி விடுமா? விஷமத்தனத்திற்கும் ஒரு எல்லை வேண்டும்.

இச்சட்டப்படி இலங்கையிலுள்ள மலை நாட்டுத் தமிழரில் 75 விகிதத்தினர் பிரஜாவுரிமை பெற்றிருப்பார்கள் ஆனால் என்ன நடந்தது? இலங்கை இந்தியக் காங்கிரசு பயனற்ற சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கி விட்டுக்காலம் கடந்த பின்னர் ஓடி, ஓடிப்பிரஜாவுரிமை விண்ணப்பங்களை அரைகுறையாக நிரப்பி அனுப்புவித்தது. அதனால் ஏராளமான ஏழை இந்தியர் பிரஜாவுரிமையை இழந்தனர். சரியான முறையில் நேரத்தோடு விண்ணப்பஞ் செய்ய முடியாமையால் ஏராளமானவர்கள் பிரஜாவுரிமையையிழந்தனர்.

9. இச்சட்டத்தை அமுல் நடத்திய கொத்தலாவலை பண்டார நாயக்கா அரசாங்கங்கள் நேர்மையற்ற முறையில் அதிக விண்ணப்பங்களை நிராகரித்தன. இது பொன்னம்பலம், அரசாங்கத்தை விட்டு அகன்ற பின்னரே நடந்ததென்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். இது இந்தியாவின் இலங்கைத் தூதுவராகவிருந்த தேசாய் தயாரித்த புள்ளிவிபரங்களில் இருந்து புலனாகும். இச்சட்டம் அமுலாவது பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் பொன்னம்பலம் வீ. வீ. கிரியின் ஆலோசனையைக் கேட்டார். கிரி. பொன்னம்பலம் மந்திரிப்பதவியில் இருப்பது தமிழருக்குப்பலம் என்றும், அப்பொழுது தான் சட்டம் நல்லமுறையில் அமுல் நடத்தப்படும் என்றும் கூறி அவரை மந்திரிப் பதவியை ராஜினாமாச் செய்யாது தடுத்தார்.

10. பொன்னம்பலம், டட்லி சேனநாயகாவுடன் வாதாடி மேற்படி சட்டத்தின் கீழ் பிரஜாவுரிமை பெறுவோரை விட, மேலும் 250.000 பேருக்கு விசேட வாசப் “பெர்மிட்” உரிமை வழங்க ஒரு திட்டம் வகுக்குமாறு வேண்டினார். அதற்கு டட்லி சேனநாயகாவும் உடன் பட்டார். எனவே இங்கு கூறியவற்றை காய்தல், உவத்தல், இன்றி ஆராய்ந்தோர் பொன்னம்பலம் மலைநாட்டுத் தமிழர் உரிமை விடயத்தில் கண்ணும், கருத்துமாக சிரத்தையுடனும், ஆர்வத்துடனும் தொண்டு செய்தார் என்பதை மறுக்க முடியாது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உவ்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு”

மலைநாட்டுத் தமிழர்களுக்கு சமட்டிக் கட்சியினர் இழைத்த துரோகம்.

இருபது ஆண்டு காலமாக மலைநாட்டுத் தமிழர்களுக்காக, முதலைக் கண்ணீர் வடித்த சமட்டிக் கட்சியினர், ஆதிக்கத்தில் இருந்தகாலத்தில், ஆட்சியிலிருந்த அரசாங்கத்தில் ஒரு முக்கிய அங்கம் வகித்த காலத்தில், மந்திரிசபையில் இவர்களின் பிரதிநிதி ஒருவர் இருந்த காலத்தில், மலைநாட்டுத் தமிழர்களுக்காக ஆக்கச் சார்பான பயன்தரக்கூடிய வேலைகளைச் செய்யக்கூடிய நிலைமையில் இருந்த காலத்தில் அதாவது 1965 தொடக்கம் 1969 வரை மலைநாட்டுத் தமிழர்களுக்கு அவர்ளின் நலன்கருதி சமட்டிக் கட்சியினர் என்ன செய்தார்களென்பதை இங்கு கவனிப்போமா?

எதிர்க்கட்சியிலிருந்தும் அரசியல்வாதிகள் தாம் இதைச் செய்வோம், அதைச் செய்வோம், என்றும், தாம் எத்தனையோ உரிமைகளை எடுத்துத் தருவோமென்றும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியின் உரிமைகளைப் பறிகொடுத்து விட்டார்களெனவும், மக்களை காட்டிக் கொடுத்து விட்டார்களெனவும் சொல்வது எவ்வளவு சுலபமென்பதை கூர்மதியுள்ள பொதுமக்கள் நன்கு அறிவர். ஆனால் முன்பு எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் அரசாங்கக் கட்சியில் அங்கம் வகிக்கும் போது, தாம் முன்பு பெற்றுத் தருவோம் எனப் பிரகடனம் செய்தவை யாவற்றையும் பெற்றுத் தரத் தவறி விடுவதுடன் தமது முன்னைய குறிக்கோள்கள் விஷயத்தில் சந்தர்ப்பவசத்தால் ஏதோ ஒரு விதத்தில் விட்டுக் கொடுக்க வேண்டியும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு. பொறுப்பற்ற கோரிக்கைகளை எழுப்புவதுடன், கண்டனங்களையும் தெரிவிக்கும் கட்சிகள் அரசாங்கக் கட்சியிலிருக்கும் போது, தாம் முன்பு எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு என்னென்னத்திற்காகப் போராடினரோ, அவைகளை, மாறின சூழ்நிலையில் செயற்படுத்த முடியாதெனக் கண்டதும், உணர்ச்சி வசமற்றவர்களாகவும், யதார்த்த வாதிகளாகவும், மாறுவதை நாம் காண்கிறோம்.

இதே போன்று 1965ம் ஆண்டு வரைக்கும் எதிர்க்கட்சியிலிருந்த சமட்டிக் கட்சியினர் 1965ம் ஆண்டுக்குப் பின்ன அரசாங்கக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சியாக மாறினதும் தாம் முன்பு எதிர்க்கட்சியிலிருந்து கொண்ட போராடின விஷயங்கள் சம்பந்தமாகத் தமது தொனியை மாற்றியதுடன் பெருமளவில் விட்டும் கொடுத்து விட்டார்கள். இவர்கள் விட்டுக் கொடுத்த குறிப்பிடத்தக்க விடயம் மலைநாட்டுத் தமிழர்களின் பிரச்சினையாகும்.

1965ம் ஆண்டுக்கு முன்பு சமட்டிக் கட்சியினர், இலங்கையில் குடியேறிய எல்லா மலைநாட்டுத் தமிழர்களுக்கும், வாக்குரிமையும், குடியுரிமையும், கேட்டனர். மலை நாட்டுத் தமிழனையும், நாடுகடத்தப்படாதென்றனர். முழு மூச்சாக சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை எதிர்த்தனர். பொன்னம்பலத்தையும், ஏன், தொண்டமானையும், மலைநாட்டுத் தமிழர்களைக் கைவிட்டார்களெனக் குற்றஞ்சாட்டினர். இந்த சமஷ்டியினரே 1965ம் ஆண்டு அரசாங்கக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சியாக மாறினதும். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தை ஏற்றனர். ஆக, மூன்றரை இலட்சம் மலைநாட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கக் கொடுத்தவாக்குறுதியோடு திருப்திப்பட்டனர்.

இவற்றோடு நில்லாது 1967ம் ஆண்டின் 14ம் இலக்க இந்திய இலங்கை ஒப்பந்த அமுல் சட்டத்திற்கு வாக்களிப்பதன் மூலம் 5½ இலட்சத்துக்கு மேலான இந்தியர்களை நாடு கடத்துவதற்கு வாக்களித்தனர்.

குடியுரிமைக்கான பதிவுத் தகைமை 5 வருடங்களாக இருக்க வேண்டுமென்பதே தமிழ் காங்கிரசின் கோரிக்கையாக இருந்தது. இந்த பதிவுத் தகைமை, மணம் முடித்தவர்களுக்கு ஏழு ஆண்டுகாலமாகவும், மணம் முடியாதவர்களுக்கு 10 வருட காலமாகவுமிருக்கலாமெனத் திரு. பொன்னம்பலம் 1948ம் ஆண்டு ஏற்றுக் கொண்ட சமரசத்தை சமட்டிக் கட்சியினர், வன்மையாகக் கண்டித்தனர். ஒரு இந்தியனையும், நாடுகடத்த விட்டுக்கொடோமெனக் கூறித் திரிந்த சமட்டிக் கட்சியினர், 5½ இலட்சத்திற்கு மேலான இந்தியர்களை நாடு கடத்த உடந்தையாக இருந்தனர். 1948ம் ஆண்டு திரு.

பொன்னம்பலம் ஏற்றுக் கொண்ட சமரசத்தை சமட்டிக் கட்சி 1967ம் ஆண்டு 5½ இலட்சத்தி;ற்கு மேலான இந்தியர்களை நாடுகடத்த விட்டுக் கொடுத்ததோடு, ஒப்பிடுகையில் சமட்டிக் கட்சியின் செயல் பிரமாண்டமான விட்டுக் கொடுப்பதாகவிருக்கின்றது. இப்படிச் செய்த பின்பும், இவர்கள் மலைநாட்டுத் தமிழர்களைக் கைவிட்டாரெனப் பொன்னம்பலத்தை, மானமோ, ரோசமோவின்றித் குறைகூறிக் கொண்டு திரிகின்றனர். இது என்ன ஏமாற்று வித்தையோ?

இது சம்பந்தமாக சமட்டிக் கட்சியினுடைய “மூளை”யென எல்லாராலும் வர்ணிக்கப்பட்ட ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினர் திரு நவரத்தினம் என்ன சொல்லியுள்ளாரென்பதைக் கவனிப்போம்.

“சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்த அமுல் மசோதாவைத் தமிழரசுக் கட்சியினர் ஏற்றுக் கொண்டது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும். 1948ம் ஆண்டில் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் நடந்து கொண்ட முறை எவ்வளவோ, மேலானதென்றே சொல்ல வேண்டும். 1948ம் ஆண்டுப் பிரஜாவுரிமைச் சட்டத்தின்படி மலைநாட்டுத் தமிழர்கள் எவரையேனும் நாடு கடத்த முடியாது. ஆனால் தமிழரசுக் கட்சியினர் ஏற்றுக் கொண்ட சட்டப்படி மலைநாட்டுத் தமிழரில்அரைவாசிப் பேர் கட்டாயமாக நாடுகடத்தப்படுவர்”

தினகரன் வாரமஞ்சரி

23-5-1969

பதவித் தகைமை சம்பந்தமாக மேலதிக இரண்டு வருட காலத்தை ஒரு சமரசமாகத் திரு. பொன்னம்பலம் 1948ம் ஆண்டு ஏற்றுக்கொண்ட போதிலும் இந்தச் சமரசம் ஒரு மலைநாட்டுத் தமிழனும், இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறத் தவறினும், நாடு கடத்தப்படமாட்டானென்ற அடிப்படையில் அமைந்தது. 1948ம் ஆண்டின் 22ம் இலக்கப் பருவப் பத்திரத்தின் 33ம் பக்கத்தில் திரு. டீ. எஸ். சேனநாயக்காவினால்

திரு. பண்டித நேருவுக்கு 22-6-48 திகதியில் எழுதிய கடிதத்தில் கொடுக்கப்பட்ட உறுதியுரை மூலம் இந்த விடயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த உறுதியுரை பின்வருமாறு:-

“இலங்கைக் குடிகளாவதை விரும்பாத அல்லது இலங்கைக் குடிகளாக ஏற்றுக் கொள்ளப்படாத இந்தியர்கள் இத்தீவில் தொடர்ந்து இந்தியக் குடிகளாக இருப்பதற்கும் எதுவித இடையூ10றுமின்றித் தமது சட்டபூர்வமான தொழிலை மேற்கொண்டு நடத்துவதற்கும் அனுமதிக்கப்படுவர்.”

ஆகவே திரு. பொன்னம்பலம் 1948ம் ஆண்டு ஏற்றுக் கொண்ட சமரச இணக்கத்தின்படி ஒரு மலைநாட்டுத் தமிழனைத் தன்னும் நாடு கடத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஆனால் 1967ம் ஆண்டு சமட்டிக் கட்சியினரின் விட்டுக் கொடுப்பு மூலம் 5½ இலட்சம் மலைநாட்டுத் தமிழர் நாடு கடத்தப்படுவார்கள்.

மேலும் 1948ம் ஆண்டு திரு. பொன்னம்பலம் ஏற்றுக் கொண்ட சமரச இணக்க மூலம் ஆகக் குறைந்தது 4 இலட்சம் இந்தியர்கள் இலங்கைப் பிரஜைகளாகப் பதியப்படுவார்களென எதிர்பார்க்கப்பட்டது. 1953ம் ஆண்டு இலண்டன் மாநகரில் பண்டித நேருவுக்கும், டட்லி சேனநாயகாவுக்கும் இடையில் நடைபெற்ற இந்திய இலங்கைப் பேச்சுவார்த்தைகளின் போது மேற்கூறிய உண்மையை அதாவது 4 இலட்சம் இந்தியர்கள் பிரசாவுரிமை பெறுவார்கள் என்பதை திரு. டட்லி சேனநாயகா ஏற்றுக் கொண்டார்.

நாலு இலட்சம் இந்தியர்தான் இலங்கைப் பிரஜைகளாகப் பதியப்படுவார்களென திரு. டட்லி சேனநாயகா எதிர்பார்த்த பொழுதிலும், ஏனைய விபரமறிந்த வட்டாரங்கள் இலங்கையராகப் பதியப்படும் தொகை ஐந்து அல்லது ஆறு இலட்சமாக இருக்குமென எதிர்பார்த்தன.

ஆகவே 1948ம் ஆண்டு திரு. பொன்னம்பலம் ஏற்றுக் கொண்ட சமரசத்தின் படி அப்போது மொத்தமாகவுள்ள எட்டு இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களில் ஐந்து அல்லது ஆறு இலட்சம் மலைநாட்டுத் தமிழர்கள் இலங்கைப் பிரஜைகளாகப் பதியப்பட்டிருப்பார்கள். ஆனால் 1967ம் ஆண்டு சமட்டிக் கட்சியினரின் விட்டுக் கொடுப்பின் பிரகாரம் தற்பொழுதுள்ள பத்து இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களில் ஆக மூன்று இலட்சம் பேர்தான் இலங்கைப பிரஜைகளாகப் பதியப்படுவார்கள்.

நேர்மையான எந்த மனிதனும் 1948ம் ஆண்டு திரு. பொன்னம்பலம் ஏற்றுக்கொண்ட சமரசத்துடன் 1967ம் ஆண்டு சமட்டிக் கட்சியினர் செய்த விட்டுக் கொடுத்தலை ஒப்பிடுவானாகில் சமட்டிக் கட்சியினர் 1967ம் ஆண்டு நடந்து கொண்ட விதம் நூற்றுக்கு நூறு மடங்கு மலைநாட்டுத் தமிழர்களுக்குப் பெருந் தீங்கு விளைவிக்கும் மென்ற முடிவுக்குத் தான் வருவான்.

5½ இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களின் நாடு கடத்தலை ஏற்று அவர்களைக் காட்டிக் கொடுத்தனர் சமட்டிக் கட்சியினர் ஐந்து அல்லர் ஆறு லட்சம் இந்தியர்கள் 1948ம் ஆண்டின் இந்தியர் பாகிஸ்தானியர் சட்டத்தின்படி இலங்கைக் குடிகளாக வருவதை அந்த மசோதாவைப் பகிஷ்கரிப்பதைத் தூண்டுவதன் மூலம் தடுத்தனர். சமஷ்டிக் கட்சியினர் இப்படிச் செய்த சமட்டிக் கட்சியினருக்கு, 1948ம் ஆண்டு ஐந்து அல்லு ஆறு இலட்சம் இந்தியர்களுக்குப் பிரஜாவுரிமை கிடைக்கக் கூடிய வகையில் அமைந்ததும் எட்டு லட்சம் இந்தியா அனைவரையும் இந்நாட்டில் தொடர்ந்து ஒரு இன்னலுமின்றி வசிக்க வழி வகுத்ததுமான மசோதாவை ஆதரித்த திரு ஜீ. ஜீ. பொன்னம்பலத்தை குறை கூறுவதற்கு எதுவித உரிமையோ காரணமோ அருகதையோ கிடையவே கிடையாது.

மேலே எடுத்துக்காட்டிய உண்மைகளிலிருந்து, சமஷ்டிக் கட்சியினரே மலைநாட்டுத் தமிழர்களின் மன்னிக்க முடியாத துரோகிகள் என்பதும், தமதுஅரசியல் வாழ்க்கையில் 35 வருட காலமாகத் தொடர்ந்து நிலைபிறழாது அல்லும் பகலும் மலைநாட்டுத் தமிழர்களின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் உழைத்த திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் மலைநாட்டுத் தமிழர்களுக்கு ஒருவிதமான தீங்கையும் செய்யவில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனி போல ஐயத்துக்கிடமில்லாமல் புலனாகின்றது.

கொழும்பு 3, நடராசா அச்சகத்தால் அச்சிடப்பட்டு,

யாழ்ப்பாணம் 6, மெயின் வீதியில் வசிக்கும்

த. இளங்கோவனால் பிரசுரிக்கப்பட்டது.

---