தாவோ-ஆண் பெண் அன்புறவு
புலவர் த. கோவேந்தன்


 

தாவோ - ஆண் பெண்

அன்புறவு

- ஆங்கில ஆக்கம் -

இரே கிரிக்கு

தமிழாக்கம்

த. கோவேந்தன்

உலக இலக்கியக் கழகம்

29, திலக் தெரு, தியாகராய நகர்

சென்னை - 600 017.

நூல் விளக்கம்

நூலின் பெயர் : தாவோ - ஆண் பெண் அன்புறவு

ஆசிரியர் : இரே கிரிக்கு - த. கோவேந்தன்

மொழி : தமிழ்

பதிப்பாளர் : த. கோவேந்தன்

பொருள் : வாழ்வியல்

உரிமை : பதிப்பகத்தார்க்கே

முதற்பதிப்பு ; ஆகஸ்ட் -15 - 1998

நூலின் அளவு : 1 x 8 கிரெளன்

எழுத்து : 12 புள்ளி

பக்கம் : 176

கட்டமைப்பு :வல் அட்டை

விலை :ரூ.50/

நூல்வெளியீடு : உலக இலக்கியக் கழகம், சென்னை - 600 017,

ஒளியச்சு : பிஜிபி பெரிஃபெரல் சர்வீசஸ், சென்னை - 33. ☎ 480 0992

Printed at: : Mano Printers, Chennai–600005.தாவோ - இயற்கை நெறி

நானிலத்தின் வனப்புகள் அனைத்தும் ஞாயிற்றால் பிறந்தவையே, அதைப் போல் மானுடத்தின் மேன்மைகள் எல்லாம் பெண் ஆணால் சிறந்தவையே. வாழ்வின் குறிக்கோளே மானுடத்தை உயர்த்துவது தான் இயற்கையில் நீர் நெருப்பு, காற்று, மண் விண் அனைத்துமே சிறப்புயர்வுடையன. இயங்குதிணை இயங்காத்திணை அத்துணையுமே மானுடத்தின் பல்கலைக் கழகம். மானுடம் என்றும் புதிதான இயற்கையின் மூலமுதல். அது ஆண்பெண் ஆக அனைத்துயிரிலும் இயங்குகிறது.

மானுடத்துக்கு அருமை யானது எது? வாழ்க்கை. வாழ்க்கைக்கு உறுதுணையாவது பெண். பெண் ஆணின் பிணைப்பில் - நட்பில் - தோழமையில் அன்பின் மகிழ்ச்சி சிறக்கிறது, இன்பம் பிறக்கிறது. நம்பிக்கை திறக்கிறது. ஆண் பெண்ணின் உள்ளத்து ஒத்திசைவால் மானிலம் மாண்புறுகிறது மானுட நெஞ்சாங்குலையை இயக்கும் மூச்சுப் பைகள் ஆணும் பெண்ணும் ஆவர். மண்ணில் எறும்பு முதல் யானைவரை இயல்பாக இயங்குவது போலவும் விண்ணில் புள்ளினங்கள் பறப்பன போலவும். தண்ணீரில் மீன்கள் நீந்துவன போலவும் ஆண் பெண் அன்புறவில் வாழ்வதும் திளைப்பதும் மிகமிக எளிதானது அருமையானது, இனிமையானது

ஆண் பெண் அன்புறவு செம்புலப் பெயல் நீர்போலத் தாம் கலக்கின்றன. காதலர்கள் கணவன் மனைவியர் ஆகின்றனர். ஓருயிர் ஈருடல் ஆகின்றனர். வாழ்வின் இரு சிறகுகள் ஆகி நம்பிக்கையை வேரும் விழுதுமாகப் பெறுகின்றனர். தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என உழைக்கின்றனர் - உயர்கின்றனர். உலகை வாழ்விக்கப் பிறந்த ஆண் பெண்ணின் அன்புறவு இதுதான். சமூகத்தின் அங்கம் இவர்கள். நாட்டின் உலகின் உறுப்பினர்கள் இவர்கள். இவர்கள் வாழ்வின் வழிகாட்டி இயற்கையும் இயற்கை நெறிகளும்தான்.

ஆண் பெண் அன்புறவு வாழ்க்கையைத் தமிழிலக்கியம் அகம் என்று பேசும் பாடும் கூத்திடும். சங்ககால ஐந்திணை அகப் பாடல்களைப் போல உலகில் எம் மொழியிலும் 2000 ஆண்டுகட்கு முன்னர் காணவே முடியாது. சீன ஜப்பான் தனிப் பாடல்கள் பத்து விழுக்காடு சற்றே நெருங்கி வரக் கூடும். அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்திய முப்பாலில் மூன்றாம் பாலான காமத்துப்பால் பாடல்கள் ஆண் - பெண் காதலின்ப உறவுகளைப் புல்லை வயப்பாக்கும் பனித்துளியில் செங்கதிரையே காட்டுவது போல ஆண் பெண் - தோழமையை - அன்பைக் காதலைக் காட்டும் வாழ்க்கைக் கண்ணாடி எம் மொழியிலும் இல்லை.

பதினான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் மேலை நாட்டில் ‘காதலில் சிறந்த காதற் காமத்தைப் பல மொழிகளும் கவிஞர்கள் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புல இன்பத்தோடு மனத்தின் மட்டற்ற மகிழ்வினைப் பாடலாக்கினர் ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக வடமொழிவாணர்கள் தம் வாழ்வின் எதிரொலியாகக் கழிகாமத்தையே தனிப்பாடல்களிலும் காவியங்களிலும் கழிப்பறை ஓவியங்கள் ஆக்கினர் அதன் எதிரொலி - சீவகசிந்தாமணி முதல் சிற்றிலக்கியங்கள் வரை நாணமற்ற நாய்களின் செயலாயின

பாரதியும் பாரதிதாசனும் மீண்டும் வள்ளுவரின் இன்பத்துப் பாலைப் பருகி பருகிக் காதற் கவிதைகளில் உயிரோவியங்களைத் தீட்டினர்

இந்தியக் கவிஞர்களில் தாகுர் திருக்குறள் காமத்துப் பாலை கற்காமலே காதலின்பத்தில் திளைத்துக் காதற் கவிதைகளில் மெய்யறிவின்பத்தேனைப் பொழிந்தார்

இக்காலத் தமிழ்க் கவிஞர்களில் உவமைக் கவிஞர் முதல் புதுமை நுனிக் கொம்பேறி நவகவிதைத் தான்தோன்றிகள் வரை கழிகாமத்திலும் இழி காமத்திலும் சேற்றைச் சந்தனம் என்று சாற்றுபவர்களே. இவர்களுக்கு மாறாய் சீன நாட்டில் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் மூவரால் 'தாவோ’ கொள்கை தோன்றிற்று அதாவது இயற்கைநெறிக் கொள்கை. சங்க காலப் பாடல்களில் காணும் கரு அரிமுதற் கொருள் அமைந்த ஒரு நூல் அண்மையில ஆங்கில அறிஞர் - இரே கிரிக்கு மூலம் அறிமுகமானது 'ஓசோ' எனும் இரசனிசிவின் எண்ணங்களுக்கு மூல ஊற்றான நூல் இது என்பது தெரிந்ததும், இதனைத் தமிழாக்கம் செய்யப் புலவர் த கோவேந்தன் அவர்களை வேண்டினேன். உடன் ஒப்புக் கொண்டளித்த மொழியாக்க நூல்தான் இது.

திருக்குறள் காமத்துப்பாலுக்குப் பரிமேலழகர் முதல் படிப்பறிவோ பட்டறிவோ அற்ற நெடுஞ்செவிர்கள் வரை உரை கண்டாயிற்று. காமத்துப் பாலின் ஒவ்வொரு குறளும் அவ் உரைகளால் ஆண் பெண் அன்பு வாழ்வின், காதலியக்கத்தின் உள்ளொளியைக் காண முடியாது. கண்டுரைக்கவும் முடியாது. காதல் குறளின் கருத்தாழ்ந்த அமைதியும் அன்பின் உணர்வும் உணர்ச்சியும் கடலின் பெரிது. வானினும் உயர்ந்தது, புடவியினும் படர்ந்தது. அதற்கு ஒரு விளக்கம் போல இத் தாவோ (இயற்கை நெறி) நூல் உள்ளது. திருக்குறள் காமத்துப் பாலை எந்த ஒருவரின் உரையும் இன்றிப் படியுங்கள். ஒரு முறைக்கு இரு முறை, மும்முறையும் கூட அடுத்து இந்த நூலைப் படியுங்கள். காமத்துப்பாலின் உள்ளுரை இந்த நூலினை உள்ளுரையாக - குறிப்புப் பொருளாக உள்ளது. இதனினும் சிறந்த உரை திருக்குறள் காமத்துப் பாலுக்கு இருக்க முடியாது என்று தெளிவீர்கள் - ‘மலரினும் மெல்லியது காமம்’ என்ற தொடரின் பொருளை அறிவீர்கள்.

த. சித்திரா


உள்ளடக்கம்

இயற்கை நெறி

ஆண்- பெண்

தனிமை - இணைமை

வன்மை - மென்மை

மாறுதல் - மாறாமை

கண்டெடுத்தல் - இழத்தல்

கொடுத்தலும் - பெறுதலும்

நிறைவு - குறைவு

ஒன்றுதல்


இயற்கை நெறி

1. உடனே செயல்படு.

மலையை மேல் நோக்கி ஊற்றுநீர் பாய்வதில்லை ஆனால் கடலை நோக்கித்தான் ஓடுகிறது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கீழ்நோக்கி ஓடும் தன்மை உடையவர்கள

இயற்கை முறையை ஒத்து இருவரும் மனமொத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கீழ் இறங்கிச் செல்ல வேண்டும் மனம் ஒப்பி வாழ்தலே சிறந்தது. தொன்று தொட்டு இயங்கிவரும் இயற்கை நெறி பொய்ப்பதில்லை

2. எல்லைக்கு அப்பால்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஐம்புலன்களாலும் அறிய முடியாத ஏதோ ஒன்று உள்ளது. கவனி, அமைதியாய் உள்ளது முகர்ந்து, சுவைத்துப் பார் ஒன்றுமில்லை. தொடு, வெறுமை அதைக் கண்கள் கண்டதில்லை அதன் உயரம், அகலம், எடை, ஆழம் எங்குள்ளது? அது ஏதோ எனச் சொற்கள் கூறுகின்றன, இருந்தும் அதை அளவிட முடியாது

அது கொடுக்கப்படுகிறது, கொள்வதில்லை பெறப்படுகிறது, ஆனால் எடுக்கப்படுவதில்லை அது நமக்கு, நமக்காக, நமமுள் நேருகிறது. ஆனால் அதைக் காண முடியாது

எதைக் காண முடியாததோ, அதை இழக்க முடியாது அளக்க முடியாத அது அளவிற்கப்பாற்பட்டது

3. செயற்படுதல்

மலையிலிருந்து கடலை நோக்கி ஓடும் சிற்றோடை தனது வழியில் உள்ள ஒவ்வொரு கல்லையும் தொடடுச் செல்கிறது மழை பொழிகின்ற இடத்தை நனைக்கின்றது. உயர் நிலை முதல் கீழ் நிலை வரை, கடினமானது முதல் மென்மையானது வரை, காய்ந்த இடம் முதல் அதிக ஈரமான இடம் வரை

மனம் போனபடி தண்ணீர் அது எல்லாவற்றையும் ஈரமாக்கிச் செழித்து வளர்க்கிறது ஏற்றுக் கொள்ள மறுதலிப்பு இவற்றிற்கு அப்பால், தேர்ந்தெடுப்பதற்கும் அப்பால் உள்ளது விருப்ப மில்லாதது போராடாது நேர்மை செய்கிறது

4. அலைவற்று இருத்தல் -

எல்லாவறறிலும் மேலான நன்கொடை "இயற்கை”யின் நன்கொடை அது எவ்வாறு கொடுபட முடியும்? மற்றவர்கள தங்கள் கொடுப்பதை ஒழுங்கு படுத்தாத போதும், பெறுவதைச் சீர் படுத்தாத போதும் அமைதியாக இருப்பதன் மூலம்

மலைகள் இருக்கும் போது, நீர் அவற்றை விட்டு விலகி ஓடுகின்றது. பள்ளத்தாக்கு உள்ள இடத்தில் அது பாய்கிறது

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள அசையும் அமைதிதான் ஒருவருக்கொருவர் கொடுக்கும் நன்கொடை அமைதியை நம்பு இணைந்து அமைதியாயிரு அது நகரும்.

5. பேரொப்புதல்

பேரன்னை தான் எல்லாவற்றின் உயிர் வாழும் படைப்புக் கலம் எல்லாவற்றிலும் அவளே உயிராக உள்ளாள்

ஏதும் செய்யாமலேயே, அவள் எல்லாவற்றையும் இருக்கச் செய்கிறாள். அவளது பெரிய கோளத்தில் (வட்டத்தில் பழுப்பு, பசுமை மற்றும் உயிர் வாழ் இனங்கள் செழிக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் அறிகுறி காட்டுவது போல அவள் இதனால் ஒவ்வொன்றும் தானே இருக்கும்

‘பேரன்னையால்’ தான் ஒவ்வொன்றுக்கும் இடையே தற்போதுள்ள பிணைப்பு உள்ளது. உருண்டையாகவும், சூழ்ந்துள்ளவாறும் உள்ள 'அவள் ஒரு முழுமையான வெறுமை, இதில் தான் எல்லாமே நடைபெறுகின்றன எல்லாவற்றிலுமாயும், எங்கும் காணப்படாததுமான ‘அவள்’ எவற்றையும் ஏற்கும் பேருள்ளத்தவள்

6. எல்லையற்ற அறை

சுவரில்லை, ஆகவே அது வீடாகாது மிகவும் சிறிய அறையினுள் வாழ முடியாது அதனுள் உள்ள வெறுமைதான் இன்ப நலமுள்ளது

ஆனையும், பெண்ணையும் ஒருசேர வைத்துள்ள ஒரு வீடு வரையறுக்கப்பட வேண்டும், ஆனால் சுருக்கக் கூடாது நாற்புறங்களும் சுற்றியிருக்க வேண்டும. இருந்தும் இடைவெளி இருக்க வேண்டும் இருவரும் இணைந்து வாழ்வதில் எல்லையில்லா அறையைக் காண்

7. அன்புறவைக் கொண்டிரு

ஆணுக்கும். பெண்ணுக்கும் இடையே உள்ள பிணைப்பை வியககும்படி தக்கவை

காற்று, கடல் போல அதைத் தாங்கு. மலையைபோலத் தழுவு

8. உள்ளபடியே இருத்தல்

காக்கப்பட்டது இழக்கப்படும் இழக்கப்படுவது வைக்கப்படும் நிலைத்து வைக்கப்படாதது போல ஒருவருக்கொருவர் இருக்கவும்

9. உள்ளிருந்து வருதல்

உரிமைப்படுத்து, அப்போது இழப்பு நேரலாம் முயற்சி செய், தோல்வி ஏற்படும். போராடு, தோல்வி உண்டாகும் வந்து சேரத் தளராதே கண்டுபிடிக்க, விட்டுக்கொடு நம்புவதற்கு, வெறுமையாயிரு. பெறுவதற்கு மேன்மை செய்

சிக்கலாகத் தோன்றும் எதுவும் எளிமையாகவும், எளிதாகவும் இருக்கிறது ஏனெனில் அது நம் உள்ளிருந்து தோன்றுகிறது. ஆனால் இல்லாமல் கொடுக்கப் படுவதில்லை.

10. மறைபுதிர் ஒன்றும் இல்லை

அது எல்லாவற்றிலும் இருப்பதாலும், எல்லா வற்றிற்கும் இடையே இருப்பதாலும், ‘இயற்கை’ என அழைக்கப்படுகிறது அது எல்லா இடங்களிலும், ஒவ்வொரு கணமும் உள்ளது ஆகவே இது ஒரு மறைபுதிர் அன்று ஆனால் அதைத் தேடையில் அது தவறிவிடும் அதைப் பற்றி எண்ணு, குழப்பம் உணடாகும்.

முகர்வதற்குச் சற்றே மூச்சு இழு கேட்பதற்குச் சற்று அக்கறை கொள் காணச் சற்றே விழி திற ஆகவே ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கண்டு கொண்டார் என்பது இல்லை, ஆனால் ஒருவர் மற்றவரைக் கண்டார் என்பதே

11. வெளிப்புறம்

காதுகளால் அல்லாமல், அமைதி மூலம் கேள் கண்களால் இல்லாது, இருட்டின் மூலம் காண். சொற்களாலல்லாது. பேசாதவற்றை அறி

12. முட்டாள் ஆட்டம்

போலிமையை நீடித்துக் காக்க முடியாது நேர்மையின்மையை நிலையாக மறைக்க முடியாது நடிக்கும் முகத்திரை கிழியும். தாங்கள் ஏமாற்றுகிறோம் என்பதை மறந்தவர்கள்தாம் ஏமாறுகிறார்கள் இது எவ்வளவு மடமையான விளையாட்டு என்பதைக் கண்கள் காண்கின்றன

உலகில் எதையும் எங்கே மூடி மறைக்க முடியும்? ஆகவே ஒரு சிறிதளவு நேர்மை ஆயிரம் பங்கு தந்திர ஏமாற்றும் தன்மையை விட மிகச் சிறந்தது

13. தொடங்கும் இடம்

போலிமை தெளிவானதைத் தெளிவாக்காது (புகழில் லாத தாக்கும்) நாம் போலிமை செய்வது போல நாமில்லை நமது முயற்சிகள் கூட நம்மை (வெளி) தெரியப்படுத்தாது. முயற்சிகள் நிலைமையை இன்னும் இழிவாக்குகிறது முயற்சிகளும் போலிமையும் வெளி யேற்றப்படுத்தும் போது, எது அதாக உளதோ, அது தானே அதாகும் இதுதான் தொடங்க வேண்டிய நிலை

14. எளிமையின் பெருமை தொடக்கம் சிக்கலானதாகத் தோன்றினாலும், தொடக்கத்தின் முதற்படி எளிதே எளிதான தொடக்கத்தைக் கண்டுகொள் எளிமையிலிருந்துதான் மிகவும் உயாந்தது தோன்றுகிறது உயர்ந்ததின் மையத்தில்தான் சிறியது உள்ளது எளிமையின் பெருமையைக் கண்டு கொள்

போலிமை, புகழ்ச்சியணி ஆகியவற்றிடம் கவனமாயிரு இன்றியமையாமையை நாடும் போது, எளிமையைப் பின்பற்று பெரியது சிக்கலானதன்று எளிமையை நம்பு இதிலிருந்து இணக்கமும், ஒற்றுமையும உருவாகிறது மிகக் குறைந்ததிலேயே பெருந்தனமை காணக் கிடைக்கிறது

15. வழக்கத்திற்குத் திரும்பல்

பொதுவான மறைபுதிரை நெருங்கி வா வழக்கமானவற்றைக் கவனி காண்பதற்கு வேறு எதுவும் இல்லை அலைபாயும் எண்ணங்கள் தொடக்க நிலைக்குத் திரும்பித் தெளிவடைகின்றன பொதுவான வற்றை வியப்பாக அறிவுதான் அறிகிறது

16. புடவியைச் சரியீடு செய்

இரைச்சல் பெரிதாக இருப்பதால், நாம் கூறுவது கேட்க முடிவதில்லை அதிகப் பேரொளியால் நாம் பார்க்க முடிவதில்லை அதிகமான புதுமையில் நாமே மறைந்து விடுகிறோம் மிகுதியினைாலே நாம் தெளிவில்லாதிருக்கிறோம்

அமைதியான, மனத்தின் அடித்தளத்திலிருந்து பேச்சுகள் வரட்டும் அமைதி பேசட்டும அமைதியைக் கவனி சொற்களினிடையே உள்ள ஒலியைக் கேள்

பொறுமையாகவும், கவனமாகவும் இரு மேற்பரப்புதான் முதலில் தெளிவாயிருக்கிறது அடித்தளத்தைக் காண ஆழத்திற்கு நேரம் கொடு

ஒவ்வொரு கணமும், உலகைச் சீர்தூக்கிப் பார்

17. எண்ணங்களும் வினாக்களும்

புதிய உடலங்களை நாம் எங்குப் பெறுகிறோம்? ஒவ்வோர் உடலும் கடைசியில் தோற்றுப் போகிறது ‘தான’ என்றதும் கடைசியில் இழக்கிறது ஒவ்வொரு உடலின தான்” என்பது தனது நிலையின் பணிவை ஒத்துக் கொள்ளவேண்டும்

இப்போது வழக்கமாக முன்னேறு. எண்ணங்களும், வினாக்களும்தான் பெரிய பேரிடர்கள் என்பதை மற

18. மாற்றத்தின் விளைவு

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள இடத்தை நிரப்பவும் முடியாது வெறுமையாக்கவும் முடியாது அதை நிரப்பு. இப்போது நிரப்ப அதிக இடம் இருககிறது அதை வெற்றிடமாக்கு, வெறுமை இன்னும் இருக்கும்

தேடு, அது கண்டுபிடிக்க முடியாதது அழை அது வராது இழ, அது இழக்க முடியாதது.

ஏனெனில் அது விலையற்றது. மதிப்பிற்கப்பால் பட்டதால், அது இலவசமாகக் கொடுக்கப்படுகிறது அதை பெரும் முயற்சிகளால் பெற முடியாது. ஒரு முறை கண்டு பிடிக்கப்பட்டால், அது அடக்க முடியாதது

ஒவ்வொரு கணமும் அது வேறுபடுவது. ஆனால் நாம் மாறுவதால், அது அதே பெயரில் அழைக்கப் படுகிறது

19. உணர்தலே கண்டறிதல் ஆணும் பெண்ணும் சந்திப்பது போல, அது அவ்வளவு எளிமையாயிருப்பின், அது ஏன் அவ்வளவு இக்கட்டாயுள்ளது? அப்படிப்பட்ட போராட்டம், அவ்வளவு ஆவல். தேடல், திட்ட மிடுதல், சொற்போர், வற்புறுத்தலும், கெஞ்சுவதும், அப்பேர்பட்ட திருகல் முறுகல் ஏதோ இடைபட்டு, எளிமையானதும் சிக்கலாக ஆகிறது

முடிவு என்பது தெரிந்து கொள்ளுதல், செய்வது என்பதன்று ஆசை, விருப்பம், நம்பிக்கை, ஏன் தனிமையும் கூட மறப்பது சிறந்தது, ஏனெனில் இவை மனத்தைக் குழப்புகின்றன.

20. அறியும் தன்மை

பொருண்மைகள் கடினமாகத் தோன்றும் போது எளிமையையும், அழியும் தன்மையையும் நினைவு கொள் அது போலவே பொறுமையும், காட்சியும் நிலவும் போது நிறைவான அமைதி உவப்பு விலக்கப்படுகிறது.

21. வெளிப்படையான வினா

நகர்வதைத் தடு, அதன் மாற்றத்தை ஆய்ந்திடு. வெறுமையிலிருந்து எடுத்து விடு முழுவதும் நிரப்பு. அதற்குப் பெயரிட்டுச் சொற்களின் வலையில் இழ வெளிப்படையான வினாவின் மூலம் அமைதியான விடையை வெளிப்படுத்து

22. தெளிவானது

இயற்கையைப் போல, அகன்ற அதை இழக்க முடியாது. காணமுடியாதபடி அவ்வளவு குறுகலானது ஏமாற்றக் கூடிய அளவில் தெளிவானது

அடங்கிப் போவதால் இசைவு உண்டாகும் போதும், வெற்றி கொள்வதால் அமைதி உண்டாகும் போதும், பேசாமையின் போது சும்மா இருக்கும் போதும் அது அங்கே இருக்கிறது

போராடும் போது அது போய் விடுகிறது எடுக்கும் போது இழக்கப்படுகிறது. பெற்றுக் கொள்ளும் போது கொடுக்கப்படுகிறது, வெறுமையாயிருக்கும் போது நிரப்பப்படுகிறது

23. தொடக்கத்திற்குப் பயணம்

வழக்கமானதைக் கண்டுபிடிக்க வழக்கமானதை இழ. வழக்கத்தின் மதிப்பை வழக்கமின்மை உறுதிப்படுத்துகிறது படிக்கப்பட்டதை முழுமையாக அறியத் தெரிந்ததை விட்டு விடு. நமது எல்லா ஓட்டங்களும் வழக்கமானதை நோக்கி இட்டுச் செல்கின்றன வழக்கமானதுதான் சிறப்பானதாகிறது

போலிமையாய் இரு, சித்திரமாக உடுத்து ஏதோ ஒன்று இழந்தும, காணப்படுவதும் ஆகிறது. கண்டு பிடிக்காமல் இழ தொடக்கத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் வழிப்பறிக் கொள்ளை எளிது

24. அமைதியான இடம்

சிக்கலான நிலையினால் எளிமை என்பது கவனித்தும் கவனியாது போலத புறக்கணிக்கப்படுகிறது அறிவுக் கூர்மையினால் எளிமை இழக்கப்படுகிறது நம்மை நாமே கடினப்பட்டு முட்டாளாக்குகிறோம்

வெறுமைச் செய்திலிருந்து தொடங்கு பின் உற்றுக் கவனி, கேட்பதைக் கவனி, பார்ப்பதை கண் விழித்துப் பாா ஏதும் எண்ணாமல் காதுகளைக் கூர்மையாக்கிக் கேள ஏதும் கருத்தற்றுத் திறந்த கண்களுடன் பார் அமைதியான இடம் ஓசையிலும், வெறுமையான காற்று முழுவதும் நிரம்பும்

'இயற்கையை’ அதனில் இருந்து பிரிக்க முடியாது.

25. பணிவைப் பழகு

பணிவைப் பழக்கப்படுத்திக் கொள். ஒருவருக்

கொருவர் முந்த முயலாதே வெற்றியடைபவனுக்குத் தோற்பவன் தேவை பழிவாங்கும் எண்ணம் தீங்கிழப்பதை உருவாக்குகிறது வலையில் மாட்டிக் கொள்ளும் முட்டாள்தனமான வட்டம் பார்! பணிவில் பிறந்து, பணிவில் இறக்கிறோம் தோற்றம் முதல் முடிவு வரை இது மெய்ப்பிக்கப் பட்ட வழி

26. சொற்கள் எளியவை

சொற்களைப் பயன்படுத்தல் எளிதுதான் ஆனால் அதனால் பயன் என்ன? 'இயற்கை நெறி' கூறப் படமுடியாத ஒன்று ஒவ்வொரு சொல்லையும் தேடு ஒரு சொல்லை மட்டும் தேடுவதால் பலனில்லை. இதை 'தாவோ’ என அழை ஆனால் அது எதுவாக அழைக்கப்படுகிறதோ, அது அதுவாக இல்லை ‘இயற்கை நெறி’ எங்கே? ஒவ்வொரு சொல்லிலும் சொற்களினிடையே சொற்களுக்கு அப்பாற்பட்டும்

சொற்களை மற சான்றோர்களின் திருவாய் மொழிகளை மனத்தளவில் கடைப்பிடி பின்னர் சான்றோர்களின் வாய்மொழிகளிலிருந்து விடுபடு பிறகு அங்கே உள்ளது "இயற்கை நெறி”

ஆனால் அறிவுரை ஒன்று நினைவில் வை ‘இயற்கை நெறி’ இராது ஒன்றன் பெயரைக் கூறு 'இயற்கை நெறி’ இழக்கப் படுகிறது ஒரு சொல்லைக் கூட நினையாதே.

27. வானத்தைக் கைப்பற்று

நீரை நிறுத்து, ஆற்றைக் கைப்பற்று காற்றைக் கைப்படுத்தி, வானத்தைக் கைப்பற்று அது போல் மடமைதான் போராட்டம் ஆற்றைக் கைப்படுத்த ஆறாக மாறு வானத்தைத் தன்வயப்படுத்த வானாக மாறு

28. பிறப்பிறப்பைப்போல் முயற்சி இல்லாதது

ஒவ்வொரு கருவும், பிறப்பும் வெளிச்சத்தை நோக்கிச் செல்லும் இருளை வடிவாக்குகிறது ஒவ்வொரு வாழ்க்கையும், சிறப்பும் இருளை நோக்கிச் செல்லும் வெளிச்சத்தின் நாடகம்

நாள் தடைபடுத்த முடியாதது நிலவு தன் வழியில் செல்லும் பருவங்கள் தனது நேர்சீர் ஒழுங்கில் மாறுகின்றன இயற்கை முறையுடன் அமைதியாக ஒத்துப்போ, பிறப்பை ஏற்றுக் கொண்டது போலவே, இறப்பையும் ஏற்றுக் கொள்

ஒவ்வொரு கணமுமே பிறப்பும், இறப்புமாகும் ஒவ்வொன்றும் விடுதலை பெறுவதில் காலம் உள்ளது நாம் ‘இயற்கை நெறி’ வினால் முன்னேறுகிறோம்

காலம் தீர்மானது (உறுதியானது) வெகு விரைவில் அலலது காலம் தாழ்த்த இவற்றைத் தவிர்க்கக் கவனமாகவும் கருத்தில்லாமலும் இரு இவ் உலகம் முழுதும் ஒவ்வொரு கணத்தினைப் பற்றி நிற்கிறது இருந்தும் எதுவும் ஒரு பொருட்டாவதில்லை ஒவ்வொரு கணமும் பிறப்பையும் இறப்பையும் போலவே முயற்சி இல்லாதது

29. ஒரு வகையால் கண்டுபிடித்தல்

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள வெறுமைதான் இருவரையும் இழுக்கிறது அதைத் தேடு, இழககப்படும் அதைத் துரத்திச் செல், அது அடைய முடியாதது

வெறுமையைக் காண, முதலில் வெறுமையாகு விரும்பாமல், தேவைப்படாமல் நாம் ஒரு வகையில் கண்டு பிடிக்கப்படுகிறோம்

30. நீரைப் போலக் கூடுதல்

விட்டுக் கொடுப்பது வலிமைக்கப்பால், வலிமை விட்டுக் கொடுப்பதற்கப்பால் வினாக்களுக்கு அப்பாற்பட்டது விடைகள், விடைகளுக்கு அப்பாற்பட்டது

வினாக்கள் ஒன்றிற் கப்பால் மற்றது. மற்றதற்கு அப்பால் “இயற்கை நெறி" இரண்டையும் கடந்து அறிய, இரண்டிற்கும் அப்பால முழுமையை எண்ணு மனம் எப்படி அவ்வளவு பெரிதாக இருக்கக்கூடும் குறைவாக எண்ணுவதாலா? சிறியதில் கூட ‘இயற்கை நெறி' முழுமையாய் உள்ளது

இரண்டையும தாண்டி எவ்வாறு ஆணும் பெண்ணும் செல்வது? நீரைப் போல பிளந்துகொண்டு கூடுவது போலே

31. பிறகும் வெகுநாள் இருக்கும்

தொடக்ககால ஆர்வத்துண்டல் வெகு நாள்களாகவே இருந்தது பிறகும் வெகு நாள்கள் இருக்கும் இதுவரை இருந்ததால் இப்போது அது தோல்வியுறாது இதை ஏற்றுக் கொண்டு அதனுள் இனிமையாக வாழு இரண்டு உயிர்களின் நிறைவு அடைவதைவிட அதனிடம் ஏராளமாய் உள்ளது

32. இயற்கையை கண்டறிய

நடப்பதற்கு இரு கால்களையும் பயன்படுத்து கேட்பதற்கு இரு காதுகளையும் பயன்படுத்து காண்பதற்கு இரு விழிகளையும் பயன்டுத்து. புரிந்து கொள்ள ஒன்றே போதும். “இயற்கை நெறி” யைக் கண்டு கொள்ள இருவரின் மனத்தையும் பயன்படுத்து

'தான்’ என்ற மனத்துடன் அலசுவது ‘தான்' என்பதையேக் காணும் ‘தான்’ என்ற இரு மனங்களையும் பயன்படுத்து ஆனால் ‘தான்’ என்பதை அன்று

'தான்’ ‘நான்’ என்பதல்லாததைக் காண ‘தான்' 'நான்’ என்பதைக கை விடு இன்னொன்றைக் காண ஒன்றை இழ 'இயற்கை நெறி'யைக் கண்டு கொள்ள இரண்டையும் கைவிடு

33. ஒவ்வொன்றும் இருக்கிறது

இல்லாதவற்றை இருப்பதாக மனம் சுற்றிக் கொள்கிறது முடிவில் இருப்பதுடன் இலலாதவற்றை முடித்துக் கொள்கிறது. மனத்தினால்தான் நாம் பிரிகிறோம் மேலும் ஒன்றிலிருந்து மற்றதை அறிகிறோம்

ஒருவர் மற்றவரைச் சிறிய மனத்தினால் வரையறுக்கிறார் பெரிய மனத்துடன் ஒருவர் மற்றவருக்கு உரிமையாகிறார் மனமே இல்லாதவர் மற்றவராகிறார்

34. அறிந்த ஒவ்வொன்றின் அடியில்

அறியாததால் பல தடல் உளது இருந்தும் அறிந்த ஒவ்வொன்றிற்கும் அடியில் அறியாத ஒன்று உள்ளது. ஆகவே தனித்தனியாக அறிவதும் புதிர்மறையை மேலும் தீவிரப்படுத்துகிறது

இருந்த போதும், அறிவதில் அறிவதற்கான புதிர்மறை உண்டு

35. இயற்கை வழியில்

மிகுதியானதை வெறுமை ஆக்குவதும், போதிய அளவில்லாத இடததில் நிரப்புவதும் தான் “இயற்கை நெறி” யின் வழி

மனம் நிரம்பியுள்ள போது, அதை வெறுமை ஆக்க வேண்டும் அது வெறுமையாயுள்ள போது 'இயற்கை நெறி' யினால் நிரப்ப வேண்டும்

ஆணும் பெணணும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி நிரம்பி உள்ள போது, முழுமையைச் சமன் செய்ய அவர்கள் வெறுமையைக் கையாள்கிறார்கள் இரு வரும் மகிழ்ச்சியின் முழுமை இல்லாத நிலையில, மறுபடியும் இருவரும் சேர்ந்து விரும்பும் போது, அவர்கள் முதலில் வெறுமையை உருவாக்க வேண்டும்.

ஆண்- பெண்

36. உலகன்னையின் அருகில் இனிமை பொருண்மையானதில்லை பொருண்மையும் இனிமை இல்லை. உடலோம்பல் மண் மணத்தைத் தாங்கியுள்ளது.

பேரன்னையின் ஆற்றலின் அருகிலே இரு நாம் வேறு எங்கே திரும்பிச் செல்கிறோம்? நாம் அவளது தானியங்களைாகவும், இனிய பழங்களுமாகவும் இருக்கிறோம் அவள் மண்ணில் வேறுன்றித்தான் நாம் எங்கு இருக்கிறோமோ அங்கு வளர்கிறோம் அவளிடமிருந்துதான் நாம் செழுமையுற்று அவளது மெய்யறிவு என்பதால் அறுவடை ஆகிறோம்

ஆணும் பெண்ணும் வாழும் நிலம் அவளது ஆற்றலால் நாம் ஒருவருக்கொருவர் காண்கிறோம் அவளைத் தொடுகிறோம். அவளது அமிழ்தத்தைப் பருகுகிறோம் அவளது எளிய செல்வக் குவியலால் சீரும் சிறப்பும் பெறுகிறோம்.

37. சரிசமமான முழுமை

ஆண் மட்டும் அல்லது பெண் மட்டும் என்பதில்லை ஒருவரின் இயற்கை மற்றவரின் தேவையை உருவாக்குகிறது

நிகழ்ச்சிகள் உள்ள வழியை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு வியப்பானது! அவை இருப்பது போல எவ்வளவு அறிவாளியாயிருக்க வேண்டும்.

நாம் எவ்வளவு அன்பாதரவு மிக்கராக இருக்க வேண்டும்? ஆண், பெண் போல வீறியமாகவா? இப்போது இருப்பது போல சரிசமமான பெரிதாகவா?

38. ஒருவருக்கொருவரின் நிறைவு

ஆண்மையில் தனித்து ஆண் முழுமையானவனல்லன். பெண்மையில் தனித்த பெண்ணும் முழுமையானவள் அல்லள்.

ஒருவர் மற்றவரைத் தேடுவதில் ஆவலான இருவரின் போராட்டம்

ஆதலால் ஒருவருக்கொருவரின் நிறைவுக்காகத் தான் ஆணும், பெண்ணும்

39. அறியாதல்

அறிந்த அவன் அறியாததைத் தேடுபவன் அவளோ, அறிந்திராதவள், அறிந்திராததைக் கொண்டவள்

கண்டிராத, பெண்ணின் இருட்டுத்தான் ஆணை அறிந்ததற்கப்பால் அறிந்திராததை நோக்கி மயக்கும் முதற்தொடக்கம்.

அறிவுள்ளபோது, அறியாததால்"இயற்கை நெறி"யைக் காண முடியும்

40. பிரிக்கப் படாத முழுமை

பெயர் இருப்பதால், பிரிக்கப்படுகிறது ஒருவர் மற்றவரைப் பின் பற்றுவதால், பிரிந்த பின் அங்கே முழுமைதான்.

ஆதலால், முழுமை தொடர்ந்திருக்க, பெயரிட்டுப் பிரி பெண்ணைப் பெண்ணெனப் பெயரிட்டு, அவளை ஆணிடமிருந்து பிரி. ஆணை ஆண் எனக் கூப்பிட்டுப் பெண்ணிடமிருந்து பிரித்து விடு. பெயரிடல், பிரித்தல் இவற்றுக்கு அப்பால், முழுமையையும் பிரிக்கப்படாத அமைதியையும் காண்

41. துயர்க்கேடு

ஒருவருக்கொருவர் தேடிக் கொண்டிருக்கும் ஆணும் பெண்ணும் எவ்விதம் அமைதியாய் இருக்கக் கூடும்? இது போன்ற ஒரு கொள்கைப் பிடிப்பும். ஒவ்வொரு பார்வையும் தேடுகிறது. அனைத்து உலகமே ஒரே தேவையை நோக்கித் திருப்பி விடப்படுகிறது வயிற்றுக் கீழே பசி, நெஞ்சம் வெறுமையாக,

தனியாக எதிரொலிக்கிறது ஒவ்வொன்றும் நிகழக் கூடியதாகிறது. இது போல போராட்டமும் வினைமுறை (சடங்கு) திருப்பங்கள்! இம் மாதிரி மடமையான துயாக்கேடு 42. எளிமையும் உயர்வும்

ஆண், பெண் இருவருக்கும் இடையே உள்ள பற்றுக்கு ஏதும் தேவையில்லை என்பதை நல்லதையே வேண்டுபவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எளிமை, பெரியதாக உள்ளவை மறையும் அளவிற்குப புலப்படாதவை பல

43. மறைவான மையம்

மிகுதியான் மறைவு போதுமானதன்று உறுதியற்றமை என்பது உரத்தத் தன்மையை மறைக்கிறது பரபரப்பு எச்சரிக்கையை இடிந்து விடுகிறது குழப்பத்தைச் சொற்கள் மறைக்கின்றன அச்சத்தை உறுதியின்மை மூடி மறைக்கிறது சிக்கலானது எளிமையைப் புலப்பட வைக்காது எளிமை புரிய வைக்காது

மட்டுமீறியதும் போதுமானதன்றும் இவற்றிற்கிடையே உள்ள மையம் தான் நாம் உள்ள இடம் ஏனெனில் ஒருவருக்கொருவர் கண்டு கொண்ட ஆணும், உலகில் சமநிலை கொள்ள பெண்ணும் ஒருவர் மற்றவரின் மறைவான மையத்தைப் புரிந்து கொள்கிறார்கள்

44. உள்ளபடியே

பெருஞ்செலவு செய்தல், பேருடைமை, நாகரிகமா யிருத்தல், ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தல் இவை எல்லாம் ஆண், பெண் இருவருக்கும் சேர்ந்து என்ன தொடர்பு? இவை எளியனவற்றைத் தடை செய்யும், எளிமையைத் தடுக்கும், இயற்கை நெறியைப் புலப்படச் செய்யாத சுமைகள்தாம்

மிகவும் குறைந்தது போலவே மிகுதி என்பதும் இடர்ப்பாடானது அதிகமிருந்தால், சிக்கனத்தைக் கடைபிடி, எளிமையைப் பெருமைப்படுத்து ஆணும் பெண்ணும் அம்மணமாய்க் கூடுகின்றனர் உள்ள படியே அவர்கள் வெளிப்படுவதுதான் பெரிய மேன்மையாகும்

45. வெறுமையைத் தழுவல்

எது இல்லையோ, அது வெறுமை. எது உள்ளதோ, அது வெறுமையில் தழுவப்படுகிறது. எப்போதும் ஆணுக்கப்பால், உலகின் வெறுமையான பெண் இருக்கிறாள். எப்போதும் ஆண் வெறுமையில் வைக்கப் படுகிறான் அவன் விருப்பப்படி செய்யட்டும், எங்கு வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் பேரன்னையின் தழுவலில் இருந்து விடுபட முடியாது

46. அவளின் அணைப்பில்

வட்ட வடிவமாயும், ஏராளமாயும் அவள் இருப்பின் வளைவு, வாக்குறுதியின் ஆழம், உணவூட்ட வளர்ச்சி அவள் நிலத்தாய், அறிவுத்தாய், கொடுப்பவள், ஊட்டி வளர்ப்பவள். நிறைவு அளிப்பவள்.

கடினமான, அரிதாயுள்ள அவன் பலத்தின் எழுச்சி தேட அடையும் போராட்டத்தின் உரு. அவன் மலை போன்ற மாந்தன், அறிவு செயல்பட்டு, அசைந்து, எடுத்துக் கொண்டும், உருவாக்குவதும் அவனே

நிலத்தில் இருந்து மலை கிளைத்தல் போல, பெண்ணிலிருந்து ஆண் தோன்றுகிறான். எல்லாமே பேரன்னையிடமிருந்து வருகின்றன. இதில்தான் ஆண் குழந்தை போல அவளின் மடியில் அவளது அணைப்பில் தீவிரமாக விளையாடுகிறான்

47. ஒருவர்க்கொருவர் இணைப்பு

கருத்து என்ற காற்றினில் மிதந்து எண்ணம் என்ற மெல்லிய காற்றில் கரைந்து விடு. அப்போது தசை

யுடன் தொடர்புபட்ட உடலும் தசையும் மண்ணிலிருந்து எங்கிருந்து வருகிறது?. நிலத்தைத் தொடு அதன் மணத்தை முகர் அதனின் மணத்தைச் சுவை ஆணும் பெண்ணும் நிலத்துடன் ஒருவருக்கொருவர் இணைந்துள்ளனர்.

48. சொற்களின் வேரும் தண்டும்

சுற்றியுள்ள காற்றில் மரம் உருவாகிறது. வானம் அதைச்சுற்றி வளைக்கிறது. அதன் வேர்கள் பிடிப்புள்ள மண்ணில் இறங்குகிறது நிலம் அவற்றை உணவூட்டி வளர்க்கிறது இந்த இணைப்பில் அசைவு இருக்கிறது இதில்தான் அடிப்படை ஆண் பெண் இருவரின் தழுவலும் உள்ளது.

அவர்களது கூட்டுறவு சொற்களால் இல்லை ஏனெனில் அவர்கள் அசைவும் அமைதியும், கொடுப்பதும் வாங்குவதும், வெளிப்புறமும் உள்புறமும் வன்மையும் மென்மையும், பிடித்துக் கொள்ளலும் விட்டுக் கொடுப்பதும் இவற்றின் உடனடியினால் பற்றிக் கொள்வதில்லை

சொற்களின் வேர்களும் தண்டும், மண்ணின் முழுமையும் காற்றின் வெறுமையும் இவற்றிற்கிடையே மேலும் கீழும் தேடுகின்றன. எண்ணங்கள் உதித்து சொற்களாக வெளி வருகின்றன, அது சமயம் பேரன்னையின் அமைதியான தழுவலில் அறிவு உள்ளது.

49. பொதுவானளாக இல்லாதவள்

ஆண் என்ற மாந்தன் தசை பேரன்னையின் முழுமையில் வெறுமையில் சிறியது பெண் என்ற தசை வெறுமையைக் கொண்டுள்ளது. இது பேரன்னையின் முழுமையான வெறுமையையும் தன்னிடம் வளைத்துக் கொள்ளத் திறக்கிறது

போராடும் ஆண் தான் பேரன்னையை மாற்றி நிரப்ப முயலுகிறான். தன் பிடிப்புள்ள பெண்தான் பேரன்னையைத் தழுவ முயலுகிறாள்

இதனால்தான் பொது மாந்தனுக்கு நளிமாகவும், உள்ளீட்டை இழக்கவும், தழுவவும் கடினமானது இதுதான் பொதுவானவனாக இல்லாதவன் ஒரு மாந்தனை விட உயர்ந்தவனாகிறான்.

50. வேலை பயில்பவன்

வேலை கற்றுக் கொள்பவன் மரத்தை வெட்ட அது துண்டு துண்டாகச் சிதறுகிறது கை தேர்ந்த சிற்பி மென்மையாகத் தொட மரம் அவனுக்கிசைய நல்ல முறையில் கலை உயிர் பெறுகிறது

ஆணும் பெண்ணும் கூட ஒருவருக்கொருவர் இணைந்து சேர்ந்து வாழும் வரை கற்றுக் குட்டி போல பயிற்சிக் கொள்ள வேண்டும்.

51. எளிதாக உணரப்படுகிறோம்

ஓர் ஆண் தன்னைத்தானே அறிந்து கொள்ளாத போது, ஒரு பெண் யாரை அறிய முடியும்? ஒரு பெண் தன்னைத் தானே கண்டு கொள்ளாத போது, ஓர் ஆண் யாரைக் காண முடியும்? உள்ளுக்குள்ளே இருப்பதை ஆராய்ந்து கண்டு பிடித்து வெளிப்படுத்து. நம்மை நாமே உணர்ந்து கொள்ளும் போது, நாம் மற்றவர்களால் எளிதாக உணரப்படுகிறோம்

52. அறிவனின் வழி

எச்சரிக்கையாயிருப்பதை வளர்த்து, அச்சம் என்பதை வென்றுவிடு கொடுப்பதையும், வாங்குவதையும் சமன் செய் படுவிரைவைப் பொறுமையினால் பண்படுத்து எவருக்கும் கட்டளை இடாதே பணிவாயிரு. எவரையும் பின்பற்றாதே. ஆனால் எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள் தன்னை அறி, ஆனால் 'தான்’ என்பதையன்று உள்ளும், வெளியும் வெவ்வேறு, முழுமையான உட்புறம், முழு வெளிப்புறத்தைத் தேவைப் படுத்துகிறது செயல் மூலம் அறிவாகளின் எண்ணங்களைக் கண்டுபிடி

தொலைவுகள் அதிகமிருந்தும், போவதற்கு ஏதுமில்லை உலகின் வேறு எவ்வளவோ இடங்கள் இருந்தும், விடை இங்கேதான். போய்ச் சேர வேண்டிய இலக்குகளே இல்லை நாம் எங்கிருக்கிறோமோ, அங்கு தான் பயணம் அடைகிறது 53. ஒருவரில் இருவர்

ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் வெல்வது என்பது எவ்வளவு மடமை!. ஒருவராலோ மற்றவராலோ வழி நடத்தப்படாதே ஆனால் இருவரும் சேர்ந்து வழி நடததப்படட்டும் முதல் நிலையான அழைப்பைப் பின்பற்று ஒவ்வொருவரும் மற்றவரிடம் பணிவாக இருந்து இருவரும் இருக்கட்டும்

54. மீண்டும் முழுமை

ஆணின் பாதியும், பெண்ணின் பாதியும் ஒருவரின் பாதி மற்றவரின் பாதியினால் முழுமை பெற வேண்டியது உண்மையிலேயே உகந்தது. பாதிகள் இணைக்கப்படுகின்றன. முழுமை இல்லாதவை முழுமையடைகின்றன. ஒவ்வொரு வரும் இருவரிலும் இழந்து முழுமை அடைகின்றனர்.

55. ஒவ்வொருவரும் உயர்ந்தவரே

ஆண், பெண் என்ற எதிரிடையானவற்றின் கூட்டுறவை விட உயர்ந்தது எது? ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் முழுமை ஆக்குகின்றனர் ஒவ்வொருவரும் ஆண் அல்லது பெண் இவர்களை விடப் பெரியவராகத் தோன்றும் அளவில் ஒவ்வொரு வரும் தன்னை இழந்து விடுகின்றனர் உள்ளும், வெளியும் போய் விடுகின்றன தானும் தான் என்பதும் தீர்ந்து விடுகிறது இருவராக இருந்து கொண்டு இருவருமே ஒன்றாகிவிடுகின்றனர்

56. இடையில் செல்

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ளதை நம்பு அது இருந்தால் போதும், ஆணை இடப்பட மாட்டாது. அழைத்தாலும் அது வராது

ஆசை தேவை, எண்ணம், எதுமின்றி ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ளதில் செல். அங்கு அமைதியாய் இருக்கும்போது, மென்மையாகத் திறந்து அடிப்படைத் தூண்டுதல் தேவையால் எடுத்துச் செல்

57. இயற்கைநெறி இருக்கையில்

சிறு துளித் தண்ணீர் விடப்பட்டு ஆறாக ஓடும போது, இயற்கைநெறி இருக்கிறது இளவேனில் மொட்டு விரியும் போதும், இலை உதிர்கால இலை விழும்போதும் இயற்கை இருக்கிறது

அணுக்கும் பெண்ணுக்கும் இடையே 'இயற்கை நெறி உள்ள போது, அதிகாலைச் செங்கதிர் தானே உதிப்பது போல இருக்கும்.

58. அமைதியாகச் சிரி

ஆணும் பெண்ணும் அமைதியான உள் புறத்தில் இருந்தவாறே ஒருவரை ஒருவர் தேடுவது என்பது எவ்வளவு மடமை! இதை எப்படி இடர்ப்பாடானதாகக் கொள்ள முடியும்? பார்வைகளும் குறுகுறுப் பேச்சுகளும், கேட்பதும், விரைவுறுதலும் தன்னைத் தனக்காக வணிகம் செய்வதே

இருவரும் ஒருவரில் மற்றவரைத் தெளிவாகக் காணும்போது பெரும் உதவிதான். அப்போது தேடுவது முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது

அமைதியான இடம், மற்றும் இறுதிப்படுக்கையிலிருந்து அமைதியாகச் சிரிப்பதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்? இப்படி இடுக்கண்ணானது மடமையிலும், மடமை இடர்ப்பாட்டில் முடிகிறது.

59. தலைமை ஆற்றல் அடக்கப்படுகிறது

ஒவ்வொரு மாந்தனுள்ளும் எல்லா மாந்தர்களும், ஒவ்வொரு பெண்ணின் உள்ளேயும் எல்லாப் பெண்களும் உள்ளனர் ஓர் ஆண் தன்னைத் தானே

தனக்காக வெளிப்படுத்தும் போது அவன் எல்லா ஆண்களாகக் கண்டுகொண்டு முதல் ஆற்றலுக்கு அருகில் வருகிறான் ஒரு பெண் தன்னைத் தனக்காக வெளிக்கொணரும் போது அவள் எல்லாப் பெண்களுமாகக் கண்டு கொண்டு அடிப்படை ஆற்றலுக்கு அருகில் வருகிறாள் எல்லா ஆண்களாக ஓர் ஆண் வெளிப்படுகிறான் எல்லாப் பெண்களாக ஒரு பெண் வெளிப்படுகிறாள் தனிச்சிறப்புடையவனாகிவிடு தனிச் சிறப்பில்லாததின் கீழே வழக்கமானது

எல்லா ஆண்களுமாக ஓர் ஆண். எல்லாப் பெண்களுமாக ஒரு பெண்ணைக் காண்கையில் முதலாற்றல் உயர்வடைகிறது ஆண் ஒரு பெண்ணை எல்லாமாகவும், ஒரு பெண் ஆணை எல்லாமாகவும் - அறிய, தலைமையாற்றல் அடக்கப்படுகிறது

60. ஆதி முதல் இருட்டு

கமுக்கமான கருமை, வெறுமை இவற்றை வைத்திருப்பவள்தான் பெண் வெளிச்சத்தை வேட்டை யாடும் அவள், ஆணின் முழுமையைப் பெற்றிருப்பவள் ஏனெனில் அந்த ஆண் அவளது வெறுமையை நிரப்பி கமுக்கத்தை வெளிப்படுத்துகிறான்

அவளது ஆதிமுதல் இருட்டில் ஆண் தேடுகின்ற ஆழமான மூலமும், கமுக்கமான அறிவும் உள்ளன அவளை வரவேற்பவளாயும், அவளது மெய்யறிவைத் தாங்குபவளாயும் அவள் இருக்கிறாள்

பெண்ணில், போராட்ட எண்ணங்களுக்கப்பால் உள்ளதை ஆண் காண்கிறான்

61. பெண்ணிடத்தில் ஆண் சிறப்பது

பெண் என்பவள் மென்மையான மலைகளின் தாராள மனமுடிடைய, வரவேற்கும் சமவெளி இங்கே உலகின் வன்மையிலிருந்து ஆண் தன்னைத் தோற்கடித்துக் கொள்ளத் தானே தன் இச்சைப்படி வருகிறான்

அவள் ஒரு கிளர்ச்சியுள்ள நம்பிக்கைச் செய்தி நிலம் முழுமையும், நிலாவும் கொண்ட ஒரு முழுமை இதில் வானுலகத்தின் அறிவாற்றல் கூட பேச்சற்றுப் போகிறது

அவள் ஆதிமுதல் இருப்பிடம் இங்கிருந்துதான் ஆண் உதிக்கிறான் பிறப்பும், வாழ்வும் அவனை வருத்துகிறது. ஆனால் ஆசையும் இறப்பும் அவனை மீண்டும் கவர்ந்து இழுக்கிறது.

பெண்ணிடம் ஆண் இறப்பது என்பது அவன் புத்துயிர் பெறுதல்

சிறிய, உயர்ந்த குருதி மரபினர்களின் இசைவான இயற்கையின் இணைப்பின் வலியுறுத்தல் அவள் அவளிடம்தான் ஆண் விடுதலைக்கும் இன்னலத் திற்கும் திரும்பத் திரும்ப வருகிறான்

62. இல்லை என்பது இருப்பதினும் உயர்ந்தது

எந்தப் பெண்ணும் பெண் மட்டுமல்லள் எந்த ஆணும் ஆண் மட்டுமல்லன் ஆணில் பெண்ணில்லாமலோ, பெண்ணில் ஆண் இல்லாமலோ, இருவருக்கும் இடையே அறிந்து கொள்வது என்பதில்லை

இருந்தும், பெண்ணிடம் இல்லாத ஆண் தன்மை தான் ஆணைப் பெண்ணின் மறைபுதிரில் சிக்க வைக்கிறது. அது போல ஆணிடம் இல்லாத பெண் - தன்மை பெண்ணை அவனது புதிர் மறையில் ஈர்த்து மயக்குகிறது இல்லை என்பது இருக்கிறது என்பது போலவே மிக உயர்ந்தது.

63. கருத்தார்ந்த புதிர்

ஆணும், பெண்ணும் தத்தம் ஆண், பெண் ஆற்றலுடன் இவ் உலகின் பெரு மூச்சில் சேர்ந்து இழுப்பது இடர்பாடானது

மையத்தில் பிடிப்புடன் இருந்து கொண்டு, அவர்கள் தங்கள் மூச்சுடன் நகர்ந்து உந்துதலுடன் வளைந்து செல்ல வேண்டும். இல்லையேல் அவர்கள் உடைந்து தங்கள் ஒற்றுமையை இழப்பர் அல்லது தங்கள் தனித்தன்மையை இழப்பர் இறுகிப் பிடித்துக் கொள்ளும்போது, அவர்கள் விட்டுப் பிடிக்க வேண்டும் விட்டுப் பிடிக்கும் போது இறுக்கமாகப் பற்றிக் கொள்ள வேண்டும் இணைந்து இருக்கும் போது, தனித்திருக்க வேண்டும். தனியே இருக்கும் போது இணைந்து இருக்க வேண்டும்

இருமையாக இருப்பது, ஒருமையாக இருப்பது என்பது என்ன? மற்றவர், நான் என்பதென்ன? இழப்பதும், வைத்துக் கொள்வதும் என்ன? மிகுதி, குறைவு, வன்மை, மென்மை, பயன்பாடு, தொடக்கம் என்பதெல்லாம் என்ன? இது என்ன கருத்தார்ந்த புதிர்?

64. ஒவ்வோர் உடலும் மற்றொன்றின் உடல்

கண்களின் தொலைவான நிறைவளிக்கிற மற்ற புலன்களின் அனுமதியை வாக்குறுதி செய்வதில்லை அவை கண்ணில் காணப்படுவதை உறுதி அளிக்க வேண்டும். (கண் உடலின் பலகணி என்பதால் மனிதனின் எண்ணங்கள் கண்கள் மூலம் உணரலாம்)

உடல்கள் உரிமையாகும்போது, எல்லாப் புலனறிவுகளும் மற்ற உடல் மூலம் ஓர் உடலின் புலன்கள் ஈர்க்கப் படுகின்றன புதிது ஆனால் பழக்கப்பட்டது, தனியானது ஆனால் உரிமையானது ஒவ்வொருவரின் உடலும் வேறுபட்டும் ஒரே வேறுபடாமையுந்தான்

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மற்றவர் உடல் மூலம தன் உடலைக் காணும் போது இயற்கைநெறி உள்ளது

65. இயற்கை ஒன்றும் இல்லாதது

சொற்களின் வெளிப்புற அமைப்பு மூலம் சொற்களை அறிந்து கொள்வது போலவே, வெளிப் படையான எண்ணங்கள் வழியேதான் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள வேறொன்று தேவைப்படுகிறது இவ் வகையான எண்ணம் எங்கே இட்டுச் செல்லும்?

ஆண் பெண்ணின் மூலம் ஆணைப் புரிந்து கொள்கிறான் பெண்ணும் ஆண் மூலம் பெண்ணை அறிந்து கொள்கிறாள் ஆணையும் பெண்ணையும புரிந்து கொளள வேறு ஒன்று தேவைப்படுகிறது அந்த வேறு ஒன்று இன்னும் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது அந்த மிகுதியான ஒன்று எல்லாவற்றிலும தேவைப் படுகிறது எல்லாவற்றையும் புரிந்து கொள்ள எதையும் அறியாதே

சொல்லப்படாத சொல், எண்ணப்படாத எண்ணம் இயற்கை, ஒன்றும் இல்லாத நிலையைப் போன்றது சொற்களால் இயற்கை நெறி இருப்பதாக எண்ணுகிறோம் ஆனால் அது சொல்லும் அன்று. எண்ணமும் அன்று 66. சொற்கள் இல்லாமல்

ஒன்றை மற்றதிலிருந்து, ஆணை பெண்ணிடமிருந்து சொற்கள் பிரித்திருக்கின்றன இது அறிவர்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கத் தெரிந்தது அதுவரை இப்படித்தான்.

சொற்கள் இல்லாமல், புரிந்து கொள்ளாமல் கூட காதலர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்கிறார்கள்.

67. பரந்த ஒத்திசைவு

இந்தப் பரந்த திருக்குமறுக்கான நிலத்தில் எல்லாவற்றிலும் இருந்து எல்லாம் வருகின்ற நிலத்தில், பரந்த ஒற்றுமையைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. செங்கதிர் ஒளிர்கிறான் வானம் பொழிகின்றது சமவெளியிலருந்து மலைகள் தோன்றுகின்றன ஆறுகள், கடலை நோக்கி ஓடுகின்றன. நானிலம் சீர்மையான மூச்சுடன் வாழ்கிறது. அங்கே பிறப்பும், இறப்பும் என்ற தொடக்கம் உள்ளது

ஒத்திசைவு எங்கும் வழக்கமாக உள்ளதால் அது பொதுவாக இழக்கப்படுகிறது.

ஒவ்வொரு விளக்கமும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளது இது போல அறிவர் ஒரு குறிப்பிட்டதைக் கவனிக்கிறார். ஆனால் பொதுவழியில் நடத்தி செல்லப்படுகிறார் அழிவைப் பழிப்பைச் செய்யவும் தேவையில்லை அல்லது அளவுமீறியவற்றைப் புகழவும் தேவையில்லை ஆணும் பெண்ணும் கூட அளவு மீறிய அளவானவர்கள்தாம்

68. அமைதியான தீர்மானம்

தாங்களே பார்க்கவேண்டும் என்பதை அறிவதற்காக மற்றவர்களை ஊடுருவும் உறுதியற்ற கண்கள் உள்ளன

நாம் மட்டுமே அறியக் கூடிய பொருண்மைகள் உள்ளன நாம் ஒவ்வொருவரும் கமுக்கமான முன்காணிகள்

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் அமைதியாக தீர்மானமாக உள்ளபோது, அவர்களது கண்டு பிடிப்பின் பிணைப்பு ஏற்பாடாக்கப்படுகிறது

69. விட்டு விட

ஒருவரை ஒருவர் சமன் செய்து செல்லும் போது ஆணும் பெண்ணுமாக செல்க.

சமநிலைப்பட ஆணை விட்டு விட்டுப் பெண்ணைக் காண்க, பெண்ணை விட்டு விட்டு ஆணைக் கண்டு கொள்க; ஒருவரை விட்டு மற்றவரைக் கண்டுபிடி மற்றவரை விட்டு விட்டு ஒவ்வொருவரையும் காண்க

பின், ஒவ்வொருவரையும் பற்றிக் கொண்டு, இருவரையும் விட்டுவிட, இருவரையும் தெளிவாகக் காண்க இருவரையும் பிடித்துக் கொண்டு, ஒவ்வொருவரையும் விடும் போது, ஒவ்வொருவரையும் சரியாகக் காண்க.

70. ஆண் ஒளியை விரும்பியிருந்தால்

ஆண் ஒளியை விரும்பியிருந்தால், கண்ணை மூடிக்கொண்டு, பெண்ணுடன் படுத்து இருள் என்ற வாயிலை அடைந்திருக்கமாட்டான். எளிமையாக அறிவதை விரும்பிய எவரும் இருளுடனும் பெண்ணுடனும் சேரமாட்டார்.

ஒளியில் குருட்டுத்தன்மை இருப்பது போல, இருளில் அதிகம் பார்க்க முடியும் இருளில்தான் பார்ப்பதின் தொடக்கம் பெண்ணின் ஈரமான இருள்தான் ஒளியின் தொடக்கம் இதில்தான் முதன்மை தொடங்கி, அதிலேயே முடியும் திரும்புகிறது

ஒளியை, வெளிச்சத்தை மட்டும் விரும்புவர்கள் தொடக்கம், முடிவு வருவது, போவது மற்றும் எல்லாவற்றிலும் உள்ள ஏற்ற இறக்கங்களை அறியமாட்டார்

ஆண் பெண்ணிடம் வரும்போது அவன் ஒரு தனித்த இருளுக்கு வருகிறான்

71. வழக்கமான நலம்

மிகப்பெரிய மலைகள், நிலம் முழுவதையும் மூடுவதில்லை அருவிகள் எல்லாம் ஆறுகள் அல்ல பொதுநிலை கடந்தவையில் பல பொதுநிலையே.

ஆணும் பெண்ணும் ஒவ்வொரு நாளும் ஒத்திசைவில் வளர்கின்றனர் நாளும் கூட்டிசை, ஏந்தான அமைதி, வளரும் நிறைவேறப்பட்ட ஆசைகள் ஆகியவை

வழக்கமான நலம், ஒன்றாயிருத்தல் ஆகியவற்றிலிருந்து எளிமையாகப் பங்கு கொள்ளப் பொது இடத்திலிருந்து அமைதியாக வருகிறது

72. இளம் காதலர்களின் புதிர்

சில் என்று வீசும் காற்றுடன் உள்ள பைன் மரக்காட்டில் மூத்த அறிவர் என்ன சொல்வார்? மலைகளில் சற்றித் திரியும் அவர் காதலர்களின் இக்கட்டான நிலையிலிருந்து விடுபடுவாரா?

அவரது மனம் மறுத்து, உடல் வேண்டும் எனும் போது அவர் என்ன செய்வார்?

முதுமைக் குருதி சற்றே சூட்டைத் தணிக்கிறது இது குறித்து கலந்துரையாட நேரமோ விரைவோ ஏற்பட்டதில்லை ஒருவேளை அறிவர் தம் அறிவிலேயே வாழ்நாள் கடத்தி விட்டார் போலும்

இளம் காதலர்களின் புதிர்களை எப்படி முதியவர்கள் தீர்க்க முடியும்?

தனிமை - இணைமை

73. தானே உருவானது ஒன்றே ஒன்று தேவைப்படுமானால், இரண்டுகளே இருந்திருக்கா இருந்தும் நாம் ஒவ்வொருவரும் இருவர் ஒனறாக இணைந்ததால்தான் உருவாகி உள்ளோம்

ஆண், பெண் இருவரிடமும் ஆண், பெண் என்பது தவிர வேறு ஒன்று உள்ளது - தானாகவே உண்டான ஒன்று. ஏதோ ஒன்று தேடி, அதிலிருந்து உண்டானது

பெற முடியாத அளவிற்கு எளிமையானது, காண இயலாதபடி அருகிலேயே உள்ளது

74. தொடக்கம் முடிவு

இருவரை உணடாக்க மற்றவரைத் தேடும் போது, ஒன்றின் இயல்பை நினைவுகொள், நாம் ஒருவராய் பிறந்து, ஒருவராய் மடிகிறோம்

தொடக்கமும, முடிவும் தெளிவாக உள்ள போது மீதியைக் காண் மீதத்திலிருந்து தான் பொறுமையும், ஒத்திசைவும் உண்டாகுகின்றன.

75. எளிய அமைதி

சொற்கள் அமைதியை மறைக்கும் போது, பேசாமையைக் கவனி, சொற்களை அல்ல

எளிய சொற்களே தோழமையின் பேசாமை எளிமையான அமைதியே ஒன்றிணைந்திருப்பதைக் குறிக்கிறது

76. வெறுமையும் முழுமையும்

பிரிவின் தொடக்கம்தான் சந்திப்பு சந்திப்பின் தொடக்கமே பிரிவு புறப்படுவது எப்போது? வந்து சேர்வது எப்போது? முடிவிலிருந்துதான் பிரிவு தொடர்கிறது - ஒன்றிலிருந்து மற்றொன்று

மற்றதிலிருந்து தான் ஒன்று உருவாகுகிறது. ஆக, ஒரே நேரத்தில நினைவு கூர், மற

நடப்பதெல்லாமே எதிர்பாராதவை, வியப்பை ஊட்டுபவை எதிர்பாராதது கண்டு கொள்ளப்பட்டு எதிர் நோக்கப்படுகிறது

தனிமையிலோ, ஒன்றுசேர்ந்தோ, ஏதுமில்லாமலும், முழுமையாகவும், அறிந்தும், அறியாததுமாகத் தொடர்க 77. மறைத்தல்

தன்னை முழுமையாக மற்றொரு முழுமையில் இருந்து மறைப்பது முழு சந்திப்பிற்கு இடையூறாகும்

அம்மணமாக உடல்கள் முழுமையான சந்திப்பது கடினம்தான்.

இரு உடல்கள், உடை உடுத்திப் பாசாங்கு செய்யும் போது, ஒன்றை ஒன்று நெருங்க முடியாது. இவற்றின் சேர்ந்திருப்பதில் பிரிவு உண்டு, ஆனால் பிரிவில் ஒன்றாக இருப்பதில்லை

78. உரிய காலத்தில்

இலையுதிர்கால இலைகள் போலப் பிரிவு என்பது விழுந்துவிடும் இலைகள் பசுமையாய் இருக்கும் போது, மரத்தை உலுககுவதில் பலனில்லை.

உரிய காலத்தில் அமைதியில் கூட கிளைகள் மெதுவாகப் பட்டுப்போய் அம்மணத் தோற்றத்தை அடைகின்றன

79. பிரியாமல் பிரிதல்

பார்ப்பதிலிருந்து காண்பதும், கேட்பதில் இருந்து கவனிப்பதும் தோன்றின என்பதை மறந்து விட்டோம். பிரிவு என்பதும் சேர்ந்திருத்தலில் இருந்துதான் வந்தது.

மீண்டும் பார்ப்பது என்பதிலிருந்து காண்பதும், மீண்டும் கேட்பதிலிருந்து கவனிப்பதும் ஆயிற்று. காண்பதும், கவனிப்பதும் முழுமையாகவும் எளிதாகவும் ஆகும் வரை பார், கவனி பிறகு பார்ப்பதைக் காண், கேட்பதைக் கவனி கண், காது இவற்றிலிருந்து எண்ணத்தை வெளியேற்று காணாமல் பார், கேளாது கவனி பின்னர் அங்கே பார்ப்பதும், கவனிப்பதும் உள்ளது

பிரியாமல், பிரிந்து செல், அப்போது அங்கே இணைந்திருக்கலாம்

80. மிக்க நெருக்கம்

நினைத்துக் கொள்ளும் போது போய்விடும், மறக்கும் போது அங்கே இருக்கும் இயற்கை நேர் அறிவை வழி தவறிச் செல்ல வைக்கும்

தாங்கள் ஒன்றாக இருப்பதை உணராத ஆணும் பெண்ணும் பெரும்பாலும் ஒன்று சேர்ந்திருப்பர் எது போல என்றால் - காலில் அணிந்துள்ள செருப்பு செருப்பே இல்லாது போல தோன்றும் போது நடப்பதை எளிதாக்குகிறது. மேல் சட்டை அணிந்திருந்தும், அது இல்லாது போல உணரும் போது குளிரைத் தடுக்கிறது இதுபோல ஆணும் பெண்ணும் தாங்கள் அறியாமலேயே உணராமலேயே ஒன்றாயிருக்கின்றனர்.

81. ஒன்றிலிருந்து மற்றொன்று

ஒன்றிலிருந்து மற்றொன்று வருவதாய் அறிவர்கள் கூறுகின்றனர். பெண் ஆணிலிருந்தும், ஆண் பெண்ணிலிருந்தும் தோன்றுகின்றனர்.

எப்போதும் வெளிப்புறம் உட்புறத்திலிருந்துதான் தொடர்கிறது ஆண் முதலில் தன்னை அறிந்த பின் தான் பெண்ணை அறிகிறான் இது போலத்தான் பெண்ணும் தன்னை உணர்ந்து கொள்கிறாள், பிறகு மற்றவரை அறியலாம்.

பிரிவிலிருந்துதான் சேர்க்கை தோன்றுகிறது சேர்ந்திருப்பதைக் கண்டுகொள்ள பிரிவிலிருந்து தொடங்கு. இம் முறையில் பிரிவும், சேர்க்கையும் இருக்கக் கூடும்.

82. கோணலும் வட்டமும்

இணைந்திருப்பதும், தனித்திருப்பதும் ஒன்றாகத் தான். பிரிவும், சேர்ந்திருப்பதும் பிரிந்து செல்கின்றன இரண்டும் தனியாக இருக்க எவ்வாறு இவை ஒன்றாகும்? இணைந்திருப்பதில் பிரிவும், பிரிவில் இணைந்திருப்பதும் எங்கே?

பிரிந்திருக்கும் போது இணைந்திரு இணைந்திருக்கும்போது பிரிந்து இரு ஒன்றாக இருக்க இரண்டையும், இரண்டாக இருக்கும்போது ஒன்றையும் பயன்படுத்து.

மனத்தின் வினாக்கள் சொற்களுடன் விளையாடுகின்றன நேராக எண்ணுவதில் ஒரே மனத்தில் இருப்பதுதான் குழப்பம். இயற்கையின் நேர்மையில்லாத முறுக்கிய வளைந்த வழிகள் எண்ணத்திற்கு ஒவ்வாது

கேட்க வினாக்கள் இல்லை, ஆகவே வினவாதே. சொல்ல விடைகள் இல்லை, ஆக விடையளிக்காதே. வினாக்கள், விடைகள் இல்லாமல் விளையாடு.

83. நேரிய மனம்

இணைந்திருப்பதன் முழுமையை ஒரே ஒரு மனம் மட்டும் புரிந்து கொள்ளாது. பிரிவின் முழுமையையும் இரு மனங்கள் ஒன்றாக இருந்தும் அறியா.

ஒரு மனம், இரு மனங்கள், பல மனங்கள் தேவையாகின்றன. ஒவ்வொன்றும் புரிந்து கொள்ள நேர்மனம் தேவை

முழுமனமும் மனமின்மையும் எங்கே?

84. ஒவ்வொருவரிலும் இருவர்

ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து தனிமையில்

உள்ள போது, ஒருவருக்கொருவர் சேர்ந்திருப்பதில் தனித் தன்மை உடையவர்கள் ஆனால் மற்றவர்களிடம் ஒரே தன்மைபோல இருப்பதில் பொதுவானவர்கள் ஒவ்வோர் இருவரிலும், இருவரும் ஒருவராக ஆகின்றனர் இருவரை எது இணைக்கின்றதோ, அதுதான் ஒவ்வோர் இருவரையும் பிணைக்கிறது அதுவே எல்லோரையும் சேர்த்துவைக்கிறது ஒவ்வோர் இருவரிடமும் எல்லாமே புரிந்து கொள்ளச் செய்கிறது

ஒவ்வோர் இருவருக்கும் எல்லாமே கிடைக்கிறது. ஒவ்வோர் இருவர் மூலம் 'இயற்கை நெறி' காணப்படுகிறது ஒருவருக் கொருவர் தழுவிக் கொள்ள எல்லாமே தழுவப்படுகிறது. வேறு எப்படி இயற்கையைத் தழுவ முடியும்?

85. மூன்றாவது மனம்

இரு மனங்களின் பிரிவில் மூன்றாவது மனம் தான் இணைந்திருப்பதை அறிகிறது

மூன்றாவது மனம் என்பதை எந்த ஒரு மனமும் விளக்கம் தர முடியாது. ஆனால் ஒவ்வொரு மனமும் இணைந்திருப்பதைக் கேட்கும் போது மூன்றாவது மனத்தை உணர்கிறது. அது வெளியே உள்ளதை அறிகின்ற உள்புறமாகவும், உள்ளே உள்ளதைப் புரிந்து கொள்கின்ற வெளியே உள்ளதாக இருக்கிறது. இப்படித்தான் வெளியே உள்ளதைச் சந்திக்கின்ற உட்புறம். மற்றவரைக் காண்கின்றது. ஒவ்வொருவரும் இருவராகவும் ஆகின்ற பொருள்தான் அது

மூன்றாவது மனம் பிடிபடாதது, எதிர்த்து நிற்பது. புதையலை இழப்பதின் மூலம் அது தானே காலத்தில் வெளிப்படும்

86. விதையும் விளைநிலமும்

ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரிடமிருந்து வளர்கின்றனர். ஒவ்வொருவரும் மற்றவரின் மண்ணாகவும், விதையாகவும் உள்ளனர்

உந்துதலும், பலமும், மாற்றமும் உள்ளபோது, ஒருவருக்கொருவர் வித்திடுங்கள், திட்டமிட்ட தகப்பனாக இரு. பொறுமை, கவனிப்பு அமைதி உள்ள போது ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்க. வளர்க்கும் தாயாக இரு

விதை, மண் இவற்றிலிருந்து வாக்குறுதி உருவாகிறது.

87. கண்டறிதல்

தனிமையிலும், தனித்தும் இருப்பவருக்கு இன்னொருவரும், சேர்ந்திருப்பதும் தேவைப்பட்டால் தேவை உள்ளவரைத் தேடுவதில் தேவைப்பட்டவருக்கு என்ன இடர்ப்பாடு?

பலரில் சிலரையா அல்லது சிலரில் ஒருவரையா நாம் யாரைத் தேர்ந்தெடுப்பது? வெளியே நம்மையே காணும் நாம் தான் இதுவா? நாம் யாரைத் தேடுகிறோம்? வினாக்களை விரட்டும் வினாக்கள். தேடுவதைக் குழப்புகின்றன எண்ணங்கள்.

தேடுவது கடினம் என்று தோன்றுகிறது, கண்டுபிடிப்பது எளிது

காண்பதைத் தடுக்கும் பார்ப்பதை உருவாக்கும் தேடுதல் போலக், கண்டுபிடிப்பதைத் தடுக்கும் காண்பதை உருவாக்குவதும் தேவை என்பது.

கண்டு பிடிப்பதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட திறப்பாகும்.

88. கமுக்கம் தெளிவானது

வழக்கத்திற்கு மாறானதுதான் வழக்கமானது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தேடித் தங்களை

முதல் வாழ்க்கைத் துணையாகக் கொள்வது எவ்வளவு வழக்கமானது! மற்றவரை அறிந்து கொள்வதற்கு வழி தன்னைத் தானே கண்டு கொள்வது எவ்வளவு எளிது. வியப்பு நெருங்கிய பழக்கத்துடன் வளர்கிறது, அறிந்து கொள்வதுடன் கமுக்கம் வெளிப்படுகிறது, இழப்புடன் அதிகமாகிறது வரவு. இவை எல்லாம் எவ்வளவு வழக்கமானது! ஆணும் பெண்ணும் அவர்களது சேர்க்கையால் உறுதி செய்யப்பட்டும் உறுதி செய்யப்படாமலும், அழிக்கப்பட்டும், திரும்ப உருவாக்கப்பட்டும், இழக்கப்பட்டும், புதிதாகக் கண்டு பிடிக்கப்படுவது எவ்வளவு எளிமை வழக்கமானதைக் கண்டு கொள்ள எண்ணமிடுவது பயனேதுமில்லை தெரிந்தெடுத்தல், தெரிந்தெடுக்காதது, செய்வதும், செய்யாததும், ஏன், ஏன் கூடாது என்பவை குழப்புகிற தேக்க நிலைக்கான போராட்டம்

தெளிவாயுள்ளதுதான் கமுக்கம். வழக்கமானதில் மறைந்துள்ள வழக்கமின்மைதான் வழக்கம். வழக்க மற்ற இயற்கை தான் வழக்கமான 'இயற்கை நெறி'

89. சரிசமமற்ற மனம்

பிரிவும், இணைந்திருப்பதும் ஏன் மூச்சு விடுகின்றன? ஆணும் பெண்ணும் தங்களை விட உயர்ந்த ஏதோ ஒன்றிற்காக ஏன் ஆடுகின்றனர்?

மனம் தேடுகிறது. ஆனால் அடிப்படையான ஏதோ ஒன்றுதான் மூச்சு விடாத மனத்தைத் தவிர்க்கிறது. - சரிசமமற்ற மனம்.

90. கமுக்கச் சந்திப்பு

உடலின் சில அங்கங்கள் வெளிப்படையாகப் பெருமிதமாகத் தெரிகின்றன சில ஒழுக்கத்தின் காரணமாக ஆடை அணிவிக்கப்பட்டுள்ளன. மற்றும் சில, ஆண், பெண் இருவரின் சந்திப்பின் வரை மறைந்துள்ளன இரு உடல்களும் தொட்டுப், பங்கிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முழுமையாக உணரும் நோக்கில் திறந்து கொள்கின்றன.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டபோது, அடக்கம், மரியாதை இவற்றால் கட்டுப்படாதபோது, திறக்க வேண்டியதெல்லாம் திறந்தபின், மூடி மறைக்க வேண்டியதென இல்லாத போது, ஏதோ ஒன்று மறைந்தும் கமுக்கமாயும் உள்ளது

தொட்டு உணர்வதற்கு அப்பால் உள்ளது என்ன. தொடவும் அறியவும் ஈர்க்கப்படுவதும், உடலின் எண்ணங்களையும், மனத்தின் பாகங்களையும் வாழ வைத்து, ஆண் பெண் இருவரின் கமுக்கச் சந்திப்பைப் கமுக்கமாக வைப்பதும் எது?

91. முயற்சியின்மையை நம்பு

ஒருவருக்கொருவராய் இருங்கள் ஆனால் தனது என உரிமை கொண்டாட வேண்டா பற்றிக் கொள்வது இழப்பாகும் சேர்ந்திருப்பது தானே வரவேண்டும் நாளும் வாழ்க்கையில், சின்னச் சின்னச் செய்திகளில் விழிப்பாயிரு. பெரிய சிக்கல்களை வெற்றி கொள்ளலாம். துன்பத்தை, அது வரும் முன் எதிர்கொள். மானதை வழக்கமில்லதை எளிதாகும். எளிமையை நம்பு, அதை சிக்கலானவற்றிலும் காணலாம். இடர்பாடானவற்றை எதிர்பார். எல்லாமே எளிதாகும். கவனமாயிரு. ஆனால் முயற்சி இல்லாதவற்றை நம்பு.

92. இரண்டிலும் இரு

சேர்ந்திருப்பதில் இருந்து சேர்ந்திருப்பதைக் குலைக்கும் பிரிவின் நினைவு உண்டாகிறது பிரிவிலிருந்து பிரிவைக் குலைக்கும் சேர்ந்திருப்பதன் நினைவு ஏற்படுகிறது

சேர்ந்திருப்பது பிரிவையும் உள்ளடக்கியது பிரிவு சேர்ந்திருப்பதையும் கொண்டது ஒவ்வொன்றிலும் மற்றது உள்ளது.

இரண்டினுள்ளும் இருப்பதற்கு முதலில் ஒன்றாலும்,

பின்னர் மற்றதாலும் எடுக்கப்படும். பின் இரண்டிற்கும் உட்படு ஏதேனும் ஒன்றிலிருந்து தப்ப இரண்டும் இருப்பது போல, இரண்டிலிருந்தும் தப்ப ஏதுமில்லை.

93. இழத்தலும் கண்டறிதலும்

சேர்ந்திருக்கும் போது பிரிவை நினைவு கூற, சேர்ந்திருத்தல் இழக்கப்படுகிறது பிரிந்திருக்கும் போது இணைந்திருப்பதை நினைவு கொள்ள பிரிவு அழிகிறது. இவ்வாறு நினைவு கூர்வதால் பிரிவில்லையேல் இணைந்திருப்பதும், இணைந்திருப்பதில்லையேல் பிரிவும் ஏற்படுகிறது?

இரண்டையும் கைக்கொள். அப்போது இரண்டையும் விட்டுவிட்டுக் கண்டுகொள். எல்லாவற்றையும் கைவிட எல்லாவற்றையும் கைக் கொள் உடனே... இவை அவ்வளவு எளியவை.

94. தன் வழிமையத் தானே கண்டறிதல்

மழைத்துளி கல்லையே பிளக்கிறது முகில் மலையை வேறுபடுத்துகிறது.

பள்ளாத்திக்கின் எல்லைகளுக்குட்பட்ட நீரோடை தன் வழியே தன் இச்சையாய்ப் பாய்கிறது.

95. காண்பது போல மிக எளிது

ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கவும், இணங்கி சமநிலையில் இருக்கவும் முயன்றால், சேர்ந்திருப்பது அவ்வளவு கடினம். இணங்கி இருப்பதால் அவர்கள் காணப்பட்டால், அவர்கள் எங்கும் செல்கிறார்கள். எல்லாமே தாமே நடப்பது போலத் தோன்றும், இணங்கி இருப்பதும் மிகவும் அவ்வளவு எளிது

நாம் "தான்” என்றிருப்பதால், நாம் சேர்ந்திருக்க முயலுகின்றோம் அப்படி இல்லையேல், இணங்கி இருப்பது நம்மைப் பற்றிக் கொள்கிறது

ஆகவே, நம்பு, துணிந்து செயல்படு வெளியே வா கட்டமை, பிறகு பிரிவு, இணக்கம் இரண்டிலும் முழுமையாக நுழை.

முயற்சி செய், ஆனால் விட்டுக் கொடு வெறுமை யாக்கி, இணைந்திருப்பது என்ற முடியாமையை நிரப்பு கடினம்தான், ஆனால் காண்பது போல மிக எளிது

98. ஆழ்ந்த சந்திப்பு

ஒருவரின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மற்றவர் தொடுவதே ஒருவர் மற்றவரைத் தொடுவதாகும்

உட்புறத்தை உட்புறமும், வெளிப்புறத்தையும் காண்பதே வெளியே இருப்பதை வெளியே உள்ளது உள்ளே எடுத்துச் செல்ல, உள்ளே இருக்கும் இரண்டும் சந்திக்கின்றன.

உட்புறம் உட்புறத்தைச் சந்திக்க, அதை வெளிப்புறத்திலிருந்து பிரிப்பது அவ்வளவு கடினம்

உட்புறம், வெளிப்புறம் என்பது உண்மையிலேயே உள்ளதா? ஆழ்ந்த சந்திப்பின் எளிமையைச் சொற்கள் தான் சிக்கலாக்குகின்றன.

97. போதுமானது

எல்லா இடங்களிலும் தேடுவதற்கு மாறாக உள்ளேயே ஆழ்ந்து தேடு, இணக்கத்திலேயே தேடு.

தொடக்கம் கண்டு பிடிக்கப்படின், ஒவ்வோர் ஆண், பெண் இவர்களிடம் உள்ள மறைபுதிர் போதுமானதே

98. முயற்சியின்மை

தொடக்கத்திற்கு முன்பே இணைந்திருப்பது வந்தது. உட்புறத்தினை விட ஆழத்திலிருந்து வந்தது. அது உட்புறம், வெளிப்புறம் இரண்டையும் பொருந்துவதாகச் செய்கிறது. அது ஆண்,பெண் இருவரிடமும் உள்ள வேறுபாட்டைத் தீர்த்து வைக்கிறது.

இணைந்திருத்தல் என்ற இயற்கையை நம்பு வழககமானது, வழக்கமில்லாதது இவற்றிற்கிடையே, ஒவ்வொரு நாளும இன்னும சில பிரிகின்றன இது, எவ்வித முயற்சியும் இலலாமல், ஒவ்வொன்றும் அதன் முறையான வழியில் செல்லும் வரை நடக்கிறது 99. திறந்த மனத்துடன்

தனித்திருததல, ஒருங்கிணைதல் இரண்டு நிலைகளிலும வெற்றி காண மனத்தை இரு கூறாக ஆக்கிக் கொள எண்ணங்கள் அதனதன் இடத்திலிருந்து நழுவி விழுந்து இங்கு அங்கு என்றில்லாமல் எங்கோ மறைந்திடட்டும்

தசைகளை தளர்த்திடு இறுக்கமாய் இருந்துபார் ஏதோவொன்று கை நழுவிப் போய்விட்டது என்பதை உணர்

மனம் திறந்த நிலையிலும், எண்ணங்கள் வெறுமையில் சிதறி விழும் போதும், இயற்கையைத் தன் வழியில் செல்லவிடு. இருப்பது அலலது இல்லாதது இவற்றையும் அதனதன் போக்கில் செல்லவிடு

100. எண்ணங்களிடையே

தனித்திருத்தல், நாம் ஒருங்கிணைதல் என்று பேசுகிறோம் ஆனால் எந்தச் சொற்களைப் பயன்படுத்தினால் எந்த எண்ணங்களை வெளிப்படுத்த முடியும என்று தீர்மானிப்பதிலேயே சிக்கல் இருககும பொழுது எண்ணத்தை வெளிப்படுத்தும் சிந்தனையை எவவாறு புறக்கணிக்க முடியும்? சொற்களின் அமைப்பு எண்ணங்களின் உருவத்தைத் தீர்மானிக்கும் நிலையை எந்த எண்ணத்தை உருவாக்கும் சிந்தனையைத தான் நம்ப முடியும்?

சொற்களுக்கு மேல் சொல் சிந்தனை இல்லாமல் தொடரும்போது, சொற்களின் சேர்க்கையை ஒட்டி எண்ணங்களுக்கு மேல் எண்ணங்கள் தொடருகின்றன

சொற்களினால் கட்டுப்படுத்த முடியாத எண்ணங்களைக் கண்டு பிடி

தனித்திருத்தல், ஒருங்கிணைதல் என்றெல்லாம் எதுவும் கிடையாது சொற்களை மீறிய நிலை இது

வன்மை / மென்மை

101. பிறப்பிற்கும் இறப்பிக்கும் இடையே பிறக்கும்போது, முதன் முதலாகப் புதிய உடல் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது இறக்கும் போதும், பழைய உடல் மற்றவர்களிடம் கொடுக்கப்படுகிறது

ஆகவே பிறப்பு இறப்பு இவற்றிற்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு சிறப்பான பணிவு இருப்பதுதான் பொருத்தமானதாகும்.

102. வெல்லலும் தோற்றலும்

நேருக்கு நேர் எதிர்ப்பதைத் தவிர், கடினம் கடினத்தை சந்திப்பதைத் தவிர் உரத்தக் குரலுக்குப் பின் பல நேரம் மென்மையான குரல் கேட்கப்படுகிறது சினத்தை விடப் பெருந்தன்மை பலம் வாய்ந்தது

வெற்றி என்பது ஒரு வகை இழப்பே இழப்பும் ஒரு வித வெற்றியே. வெற்றியும், தோல்வியும் இருக்க வேண்டுமெனில் இரண்டையும் ஒன்றாக ஏற்றுக் கொள்

103. அவர்களின் மென்மையால்

கொடுமனம், கொடுமனத்துடன் இணையாது ஏனெனில் இரண்டுமே தத்தம் நிலையை வலியுறுத்தும் ஆகவே, மென்மையாக இருப்பதால் ஆணும் பெண்ணும் நெருங்கி வருகின்றனர்.

சம நிலையிலிருக்க ஆணும் பெண்ணும மென்மையாக இருப்பது இன்றியமையாதது அவர்களிடம காணும் மென்மைதான் அவர்களை ஒன்று சேர்க்க உறுதி அளிக்கும் அவர்களது கடினப் பண்போ அவர்களை வேறாக்கும உறுதி அளிக்கும்

104. ஆழ்ந்த அமைதி

நாம் ஆழ்ந்த பேசாமையிலிருந்து உருவாகி நீடிக்கும் அமைதியால் வளப்படுத்தப்படுகிறோம்

அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கும் பெரும் கூச்சலகள் கேட்கப்படாத பேரிரைச்சலாக மாறுகின்றன ஆனால் அமைதியான பேச்சு ஆழமாக நுழைந்து ஒவ்வொரு நாளையும் நடத்திச் செல்லும், தூய்மையான நீரைப் போலக் கண்ணுக்குப் புலப்படாமலும், சிற்றோடை போல ஒலி எழுப்பாமலும் அவை வளர்ந்து, நெருங்கிய தோழர்களாகவும், ஆசானாகவும் மாறுகிறார்கள் மென்மையாகப் பேசு, ஒருவர் மற்றவரிடம் உள்ள ஆழ்ந்த ஓசையற்றிருப்பதைக் கவனி

105. ஒவ்வொன்றிலும் மெய்யறிவு

பெண்ணின் மென்மை ஆணின் வன்மையைச் சூழ்ந்துள்ளது. ஆணின் வன்மை பெண்ணின் நளினத்தைச் சுற்றி உள்ளது. இதுதான் உலகப் போக்கு

வன்மையின் உள்ளே இருக்கும் அறிவுதான் மென்மையை அறிகிறது. சற்றே போதுமான நளினத்துடன் ஆணின் வன்மை பெண்ணைச் சந்திக்கிறது. அவளது மென்மையைப் புரிந்து கொள்கிறது. மென்மைக்குள் உள்ள அறிவு வன்மையை அறிகிறது. போதுமான வன்மையுடன் பெண்ணின் மென்மை ஆணைச் சந்திக்கிறது. அவனது வன்மையை அறிந்து கொள்கிறது. வன்மையில் நளினமும், மென்மையில் வன்மையும்தான் ஒவ்வொன்றின் அறிவு. இதுதான் வெளிப்புறத்தை உட்புறம் அறிகிறது. இது அதைத் தொடுகிறது. ஒன்று மற்றதைப் புரிந்து கொள்கிறது. இது அதைத் தெரிந்துகொள்கிறது.

106. மென்மைப்படுதல்

உள்ளே உள்ள முழுமையை வெளிக்கொணர மென்மை அனுமதிக்கிறது. மென்மைதான் வெளியில் உள்ளதை உள்ளே முழுமையாக நுழைய அனுமதிக்கிறது.

107. பயன்படுத்தல்

வன்மை அடக்குவதாயும், மென்மை அனுமதிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருந்தும், அதிக வன்மையும் அதிக மென்மையும் அதிகமாகவும், போதுமானதாக இல்லாமலும் இருக்கிறது. தடை செய்யும் மென்மையும், அனுமதிக்கும் கடினமும் உள்ளது ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் ஒழுங்காக இருப்பதற்கு அவர்களது சமநிலை எங்குள்ளது?

பனி உறைந்த ஓடையில் மீன் நகர இயலாது, அல்லது அதிகாலைப் பணியில் நீந்த முடியாது வேர்கள் திடமான கல்லைக் கிழித்துச் செல்லவோ பறக்கும் மணலிலோ தங்க இயலாது. இருந்தும் மென்மையான காற்றில் பறவைகள் உயரே எழும்பிக் கடினமான நிலத்தில் நிறைவுடன் தங்குகின்றன.

எப்படி வன்மையையும், மென்மையையும் பயன்படுத்துவது என ஆண், பெண் கேட்கக் கூடாது ஆனால் இருவரும் ஒன்று சேர்ந்து பணிவுடன் இவற்றால் பயன்படுமாறு இருங்கள் பயன்படுத்தும் வகையில், மென்மையாக வன்மையுடனும் வன்மையாக மென்மையுடனும் இருங்கள்

மீனாகவும், ஓடும் சிற்றோடையாகவும் இருங்கள் வேராகவும், வேர் பாயும் நிலமாக இருங்கள் பறவையாக, காற்றாக இருங்கள்.

108. வன்மைக்கும் மென்மைக்கும் இடையே

வன்மையான மென்மையும், மென்மையான வன்மையும் தான் ஆண், பெண் இருவருக்குமிடையே உள்ள பிணைப்பு இது மாற்றத்திற்கு விட்டுக்

கொடுத்தாலும், ஆணையும் பெண்ணையும் பிணைத்து வைக்கிறது ஒருவருக்கொருவர் வளைந்து கொடுக்க வைத்தாலும், அவர்கள் இருவரையும் திடமாக இணைத்து வைக்கிறது வன்மை, மென்மை இவற்றின் நடுவே, ஆணும் பெண்ணும் விட்டுக் கொடுத்து உறுதியாக இருக்க, அங்கே வளைந்தும், வளையாததுமான அமைதி நிலவுகிறது

109. மென்மையின் தொடக்கம்

பெண்ணுக்குள் ஆண் மென்மையையும், கருவாயையும், தொடக்கத்தில் கதகதப்பான பெரிய கடலையும் காண்கின்றான் மேலும், பிறப்பு, கடினம் இவற்றால் வெற்றி கொள்ளப்பட்ட தனது பிறப்பிடத்தையும காண்கிறான்

பெண் என்ற கடலில இழந்த ஆண் தொடக்கத்தின் மென்மைக்குத் திரும்புகிறான் பின் தான் போரிட வேண்டிய வன்மைக்கு வருகிறான்

இப்படித்தான் பெண்ணின் மென்மை ஆணின் வன்மையை வெல்கிறது இப்படி ஆண் ஏன் மென்மையை வெல்வதைக் காண்கிறான்

110. கருக் கடல்

பிறப்பினாலும், வன்மையாலும் ஆணினால் வெல்லப்பட்ட பெண், மென்மையான வாக்குறுதியையும் நினைவூட்டலையும் தனக்குள்ளேயே தூக்கிச் செல்கிறாள்

வன்மையாகப் பிறந்ததால், அவளது உடல் மென்மையான தொடக்கம் என்ற கடல் போன்ற பிறப்புறுப்பை வளர்க்கிறாள் அவளது உடல் நினைவு படுத்தும்போது, அவளை மறக்க முடியாது மறக்கப் படமாட்டாள்

111. வேறுபட்ட சமநிலை

பெண்ணின் மென்மை, வன்மையால் பக்குவப் படுத்தப்படும்போது வெற்றி கொள்ள முடியாது. மென்மையால் பக்குவப்படுத்தப்பட்ட ஆணின் வன்மையை உடைக்க முடியாது

பெண்ணை, வன்மை இயக்கம் இவற்றால் வலுப்படுத்து இதனால் அவள் தண்ணீர், ஆண் இரண்டையும் புரிந்து கொள்வாள். ஆணை மென்மை, காத்திருத்தல் இவற்றால் வலுப்படுத்து இதனால் அவன் பெண்ணையும் நிலத்தையும் அறிந்து கொள்வான்.

சமன்படும் போது, ஆணும் பெண்ணும்

வேறுபட்ட சமமானவர்களாகச் சந்திப்பார்கள் அவன் அவளுக்குத் தங்கியிருக்கும் நீர் போலப் வலுவாா யிருப்பான் அவள் அவனுக்கு நகரும் நிலம் போலப் வலுவாயிருப்பாள் 112. வன்மையின் வழியில்

தனது வன்மையைப் பெண்ணின் மென்மையையும் வெறுமையையும் வெல்கிறது என ஆண் அறிய வேணடும்.

தனது மென்மையுடனும் வெறுமையுடனும் பெண் ஆணை, அவனது பலம், வன்மைக்காகத் தேடுகிறாள். அவனைத் தன்னை நிரப்பி, வலுவூட்டி அதன் வழி அடங்கத் தேடுகிறாள்

ஆண் பெண்ணின் நளினத்தின் மூலம் மென்மை அடைகிறான். பெண் ஆணின் வன்மை மூலம் வல மடைகிறாள்

113. மென்மையின் வழியில்

தனது மென்மை ஆணின் வன்மையையும், பலததையும் வெல்கிறது எனப் பெண் தெரிந்து கொள்ள வேண்டும்

தனது பலம், வன்மை இவற்றால் ஆண் பெண்ணை அவளது மென்மையை, வெறுமையைத் தேடுகிறான். இதனால் அவன் தன்னை அமைதிப்படுததி அடங்க முயலுகிறான்

பெண் ஆணின் வன்மையால் பலம் பெறுகிறாள். ஆண் பெண்ணின் மென்மையால் பலமடைகிறான்.

114. வன்மை ஒரு சுமை

வன்மை என்ற சுமையை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் மென்மையால் சமநிலைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்

விட்டுக் கொடுக்கப், பலத்திற்குக் கூட அறிவு தேவை

வன்மையிலிருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது வன்மைக்கு விட்டுக் கொடுத்தல் வேண்டும் விட்டுக் கொடுக்கப் பலம் தேவை பலத்திற்குத் தேவை சமநிலை

மென்மையின்மையால், வன்மை தொல்லையின் மூலமாகும், வன்மை இல்லையானால் மென்மை துன்பத்தின் மூலமாகும்

115. வெறுமைப்படுத்தல்

வெறுமையாக்குவதால் எந்த இழப்புமில்லை பெறுவதற்காக வெறுமையாக்கிய கிண்ணம் இன்னமும் கிண்ணம்தான். அதனது உருவமும் அடையாளமும்

அதைப் போலத்தான் உள்ளது அதனது நிலைதான், பெறுவதற்காக மாறுகிறது ஆண், பெண் இருவரில் ஒருவருக்கொருவர் இரு மடங்கு விட்டுக் கொடுப்பதுதான் மென்மை இதிலிருந்து தான் வெறுமையாக்கலும், பெறுவதும் வந்தது

வெறுமையாக்குவது ஒருவரை மற்றவரால் நிரப்ப அனுமதிக்கிறது. இதனால் இருவரும் இணைய முடிகிறது

116. பின்னிருந்து வழிநடத்தல்

முதலில் வழி காட்டி நடத்திச் செல்லாதே தொடக்கத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பின்பற்றிச் செல்வதே நல்லது

பின்பற்றிச் செல்வதிலிருந்து வழி நடத்தல் வரும் இது ஒரு வகையான மென்மையான, பின்னாலிருந்து வழி நடத்திச் செல்லும் தனித்த வகை ஆகும்

மென்மையிலிருந்து பணிவு வருகிறது இப் பணிவிலிருந்து நம்பிக்கை வருகிறது. நம்பிக்கை யிலிருந்து ஒன்றாக இருப்பதும், ஒரே மனமும் வருகின்றன.

ஒரு மனம் தன்னைத் தானே தொடரவும் முடியாது வழிகாட்டிச் செல்லவும் முடியாது. முற்றிலும் எதிரான வையிலிருந்து விடுபட்டதால், வழி நடத்துதலோ, பின் பற்றுவதோ இல்லை

117. அச்சம் தருவதைக் கண்டறிதல்

மதிப்பச்சம் காண் அஞ்சற்க, வியப்பைக் காண் அச்சம் என்ற இறுக்கம் உடையக் கூடியது, கடினமாகி தடை செய்து சுமையாகிக் கட்டுப்படுத்துகிறது அச்சத்தினால் கடினத்தன்மை உருவாகிப் பிரிவும், முறிவும் உண்டாகின்றன

அச்சத்தில் நம்பிக்கையும், வெளிப்படை யாயிருத்தலும் இருக்க முடியாது. ஒன்றாகக் கொடுப்பதும் வருவதும் இராது. நம்பிக்கை என்ற மென்மைதான் வியப்பிற்கு வழி கோலும்

118. வன்மை மென்மை இரண்டும்

பள்ளத்தாக்கின் கற்கள் ஓடையை வழிநடத்தும் மலைக் குன்றுகள் மழை பொழியச் செய்கின்றன உருளும் கூழாங் கற்கள் நீரைப் பிரிக்கின்றன

முதலில் மென்மை கடினத்திற்கும், பின்னர் இறுதியாகக் கடித்தன்மை மென்மைக்கும் விட்டுக் கொடுப்பதேன்?

நடப்பதற்கெல்லாம் பெயர் ஒன்றிருந்தால், அதைப் பெரிய மாற்றம், மாபெரும் தாய் எனக் கூறலாம் அல்லது அதை இயற்கை எனலாம்

'இயற்கை நெறி' க்குக் கடினமும், மென்மையும் தேவை. ஆண்களுக்கு ஆண்மை தேவை, ஆனால் பெண்மையை வளர்த்துக் கொள் பெண்களுக்கு பெண்மை தேவை, கூடவே ஆண்மையை உண்டாக்கிக் கொள்.

119. ஒவ்வொரு கல்லுக்கும் அப்பால்

வன்மையாயிரு. ஆனால் மென்மையைப் புறக்கணிக்காதே. வன்மை என்பது தான் எனப்படுவது இது விளக்குவதுடன் வரையறுக்கின்றன மென்மை ‘தான்’ என்பதன்று. இது திறந்து ஒப்புக்கொள்கிறது

வன்மையினால் உருவாக்கப்பட்ட சச்சரவுகள் மென்மையால் தீர்க்கப்படுகின்றன.

ஓடைகளில், நீர் ஒவ்வொரு கல்லுக்கப்பாலும் வழியைக் கண்டு பிடிக்கின்றது.

120. கல்லும் இல்லை நீரும் இல்லை

நீர் மென்மையானதென்றும் கல் கடினமான தெனவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் மென்மையான நீரில் உள்ள விட்டுக்கொடுக்காத ஏதோ ஒன்று கடினமான கல்லையும் அரித்து அழிக்கிறது. கடினமான கல்லில் உள்ள ஏதோ ஒன்று நீரின் மென்மைக்கு

விட்டுக்கொடுக்கிறது நீரில் உள்ள கடினத்தையும் கல்லின் மென்மையையும் கண்டுபிடி நீருக்குக் கடினமாகத் தோன்றும் கல் போல அல்லது கல்லுக்கு மென்மையான நீர் போலப் பாசாங்கு செய்துகொண்டு நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்

சொற்களுக்கு அப்பால் நாம் உள்ளோம் நாம் நீரோ கல்லோ இல்லை. மென்மை அல்லது கடினம் இல்லை, ஆனால் ‘இயற்கை நெறி’ தான் இது ஒவ்வோர் உருவம் பெற்று அதையே கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது

121. எண்ணமின்றி இரு

'நான் முதலில் இங்குத் தான் பாய்வேன், பின்னால் அங்கே வழிந்தோடுவேன்’ என நீர் கருதுவதில்லை நீரோட்டம் தானே ஏற்படுகிறது

ஓசையிடும் நீர் அருவிகளிலும், அமைதியான குளங்களிலும் நீர் எதையும் கருதுவதில்லை தானே நகரும் போது, அதை நகர்த்துவதில் எந்தப் பரபரபிற்கும் பயனில்லை

இது தான் கமுக்கம் நீரைப் போல மென்மை யாயிரு. உள்ளே இருக்கும் உந்துதலை நம்பு. ஒவ்வொரு வினாடியையும் அதன் படிவிட்டு விடு பின் தவறில்லாத வழியே நகர் எவ்வித நோக்கமின்றி இரு

மாறுதல் / மாறாமை

122 மாறுவது மாறட்டும் ஆற்றின் மாற்றத்தில் ஏதோ ஒன்று மாறுவதில்லை. தண்ணீர் ஓடுகிறது. ஆனால், மாற்றமில்லாத ஒன்று தானே உருவாகவும் செல்லவும் எப்போதும் உள்ளது

எல்லாம் மாறுகின்றன என்பதையும், மாற்றம்தான் எல்லாமே என்பதையும் அறிந்து கொள் எல்லா மாறுதல்களிலும் மாறாததை நம்பு

மாறுதலாக இருக்க மாறிவிடு மாறாமல் இருக்க, மாறுவது மாறட்டும்

123. உரிய காலத்தில்

உரிய காலத்தில் மழை ஒடையாகவும், ஓடை ஆறாகவும், ஆறு கடலாகவும் மாறுகின்றன

நாமெல்லாருமே நாமாகவே கீழ்நோக்கி ஓடுகிறோம் நாம் மழையாக, ஓடையாக, ஆறாக, கடலாக இருந்தால் அதனால் என்ன?

ஆனால் ஆற்றிலிருந்து ஓடையையும், கடலிலிருந்து மழையையும் கூடப் பிரி பின் தொல்லை தொடர்கின்றது.

சொற்கள் பிரிகின்றன; இதனால் இணைந்தும், மாறுதலும் உள்ளவற்றை மாறாததாகச் செய்கின்றன மாற்றமில்லா மனம்தான் புரிந்து கொள்ளப் போராடுகிறது

சொற்களில்லாமலேயே, ஒருவருக்கொருவரை கண்டு கொள்

124. உருப்பெறுதல்

நீர்நிலத்தில் வேரூன்றலும் இல்லை அல்லது வளி விசும்பில் அசையாமலும் இல்லை எங்குமே பிடிப்பில்லாமலிருந்தும் அது எங்கேயும் உள்ளது

மாறுதல் அடைவது நிலையானது. பிறக்கும் பொருளே உருப்பெருகிறது உருப்பெறுவதால், குறை காணக் கூடியது குறை காணப்படுவதால், அது நிலைத்து நிற்க முடியாது.

ஆண், பெண் இருவரிடையே உள்ள பிணைப்பு மாறிக்கொண்டே இருப்பதால் அது உருவாகிக் கொண்டே இருக்கிறது. எப்போதும் உண்டாவதால் அது எப்போதும் புதுப்பிக்கப்பட்டு, இன்றியமையாத தாகிறது நீரைப் போல உள்ளதால், அது எங்கும் உலகிற்கும், தனக்கும் உண்மையாக உள்ளது.

125. கீழ் நோக்கிய வழி

ஆற்றின் உட்பக்கத்தின் ஓட்டம் கீழ் நோக்கியே உள்ளது விட்டுக் கொடுப்பதில் பலத்தையும், மென்மையில் நிறைவையும், ஒத்துப் போவதில் அதன் உரிமையையும் காண்பதே அதன் வழி

கீழ் நோக்கிப் பாயும் நீரைப்போலக் கடினமான பாறைகளினிடையேயும், விளையாட்டாக இடத்தைக் காண இறங்கிச் செல்லும் வழியைக் கண்டு பிடி

இவ்வகை ஓட்டத்தில், உள்ளுக்குள்ளேயே ஓசையற்று மாறியும், மாறாமலும் உள்ள ஆற்றைப் போல, வெளிப்புறம் உட்புறமாகிறது.

126. மீள்வதை நம்பு

மாற்றமில்லாததோ நிலையானதோ இல்லை எது நிலையானதோ அது மாறுந்தன்மை உடையது

எல்லோராலும் மெச்சத்தக்கக் கூடிய பெரிய மலை போன்ற பிணைப்பு விழப்போகும் நினைவுச் சின்னம் போல அச்சுறுத்துகிறது. அது பரிதியால் பனியால் சிதறிச் சிறு துண்டுகளாகச் சிதறுகின்றது அது சிறிய மழையில் கூடக் கரைந்து விடுகிறது அதன் நிழலில் எவர்தாம் எளிதாகவும் மனவெழுச்சியுடனும் வாழ முடியும்?

 பனி மூட்டம் போல உள்ள அந்தப் பிணைப்பு எப்போதும் காற்றில் காத்திருந்து, நம்மைத் தோட்டு வளர்க்கிறது மாறியும், மாறாமலும், தோன்றி, மீண்டும் தோன்றிப் பள்ளத்தாக்கை மென்மையாக ஈரமாக்கி மலையை வாழத்தக்க பசுமையாக்கும் அது பனி மூட்டத்தை விடச் சிறந்தது

தெள்ளத் தெரிவதைவிட நுணுக்கமானதைப் பழகுவது சிறந்தது நிலையானதைவிடத் திரும்ப வருவதை நம்புவது நலமே.

செய்ததைவிடச் செய்வதே நிலையானது வளர்வதை ஊட்டமளிப்பதை நம்பு. வளர்வதின் அடிப்படை வாய்மையில் ஊட்டம் பெறு

127. ஒவ்வொரு நேரத்திற்கும்

ஒவ்வொரு நேரத்திற்கும் அதற்கென நேரம் உண்டு. தள்ளு அது முன்கூட்டியதாக்கப்படும் காலம் தாழ்த்து அது காலம் கடந்ததாகும் உரிய நேரத்தில் நிறுத்தமே இராது

128. தனிப்பட்ட பாதுகாப்பு

முகில்களைத் தடை செய்ய இயலாது. நீரோட்டத்தை நிறுத்த முடியாது உயிருள்ள வேரில் இருந்து புதிதாக வளர்ச்சி ஏற்படும்

இழப்பது, விட்டுக் கொடுப்பது, விடுவிப்பது ஒவ்வொன்றுமே ஒரு தனிப்பட்ட பாதுகாப்பே.

129. இப்பொழுது - இடையில்

“இது இருந்திராவிட்டால்” எனப் பொறாமை கொண்ட காதலர்கள் தங்கள் காதலன், காதலியின் முந்திய காதலைப் பற்றிக் கூறுவதில் என்ன பயன்?

ஒவ்வொரு வாழ்க்கையும் வளர்கின்ற உடலம். உரிமை அல்லது உரிமையில்லாத இதைப் பிரிக்கவோ துண்டுகளாடவோ முடியாது அது முழுமையானது. கொஞ்சம் குறைவோ அதிகமோ இல்லாதது. ஒரு பகுதியை மறுப்பது எல்லாவற்றையுமே மறுப்பதாகும் ஒத்துக் கொள்வது என்பது முந்தியே உள்ளவற்றை விடுவிப்பதாகும்

நினைவு கூர்வதால், பழையனவெல்லாம் நிகழ்வன போல மனத்தில் கொள்ளப்படுகின்றன

ஒவ்வொரு கணமும் வேறுபட்ட இப்போது நடுவில் அப்போது மாற்ற முடியாததையும் மாற்றக் கூடிய முழுமை ஆகும்

130. நீரைப் போல் அறி

நீர் வடிவத்தையும், உருவத்தையும் மாற்றினாலும், தனது சாற்றினைத் தன்னிடம் வைத்துக் கொள்கிறது ஆறு நீரை மாற்றுகிறது. அதன் போக்கையும் மாற்றுகிறது, ஆனால் தன் சாறத்தைத் தக்க வைக்கிறது.

மாற்றத்தில் மாறாததை நம்பு நகர்ந்தும் தங்கியும், மாறியும், மாறாமலும் நீரைப் போல, ஆற்றைப் போல இரு அறிந்து கொள், மென்மையாகு. மென்மையாகி மாறு மாறிப் பொறுத்துக் கொள்

நீரைப் போல அறிந்து கொள். ஆற்றைப் போல எண்ணு.

131. ஆறாக இரு

ஒவ்வொன்றும் வேறு எதுவாகவோ மாறுகிறது. போவதை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு வீணானது ஆவதும். அழிவனவற்றில் எப்படி முயற்சி தீவிரமாகக் கூடும்? மாற்றத்திற்குள்ளேயே வாழ்வது சிறந்தது ‘இயற்கை நெறி'யைப் பற்றி அறிவது நன்று

செய்யாதது என்பது ஆற்றின் ஓடுகின்ற அமைதியைப் போல. நீர் மாறும் போது உள்ள அமைதியான ஆற்றைப் போல இரு மாற்றம் சரியான வழி செல்கயிைல் ஓசையின்றி இரு

‘இயற்கை நெறி’ தான் ஆறு செயல்தான் தண்ணீர், நீராகவும், ஆறாகவும், மாற்றத்திற்கு எப்போதும் அணியமாய் இரு நீர்த்தொடர் கூட அமைதியாய் உளது.

 132. மாறுதலுக்கு உட்படு

முற்காலத்தில் அறிவர்கள் சொல்லித் தந்தனர் “விட்டுக் கொடு, முழுமையாயிரு. வளைந்து கொடு வெற்றியடை வெறுமை செய், நிரப்பு”

வளையாததும், கடினமானதும் முறிகின்றன மென்மையானதும். விட்டுக் கொடுத்தலும் நிலைக்கின்றன

ஆணும் பெண்ணும் ஒன்றாக இருக்க, மாறாததைக் கெட்டியாகப் பற்றிக் கொள். அங்கே முறிவு ஏற்படும் மாற்றத்திற்கு உடன்படு; உயரே எழுதல், செல்லுதல் இவற்றின் ஒத்திசைவுப் பாதையில் வளைந்து கொடு, பின் மாறும் ஓசையற்ற தன்மையில் உடையாது இரு

133. இரண்டுக்கும் இடையே

திரும்புதல் விலகுவதை விரும்புகிறது. நிற்பது செல்ல விரும்புகிறது விடுதலையாவது ஆட்சியைத் தொடர்கிறது ஒன்றிலிருந்து ஒன்று தோன்றவே விரும்புகிறது. அமைதியைப் பேச விரும்புகிறது மாறாமையை மாற்ற அறிகிறது. வெறுமை நிறைவை நாடுகிறது.

கணத்திற்குக் கணம் மனம் மனத்திற்கே சூழ்ச்சி செய்கிறது எண்ணங்கள் சிநதனையை வட்டமிடுகின்றன. வெளி வழி உள்ளே உள்ளது ஊடே என்பது இடையில் உள்ளது.

அசைந்து விரிந்து மூடியும் திறந்து கொண்டிருக்கும் மனத்தின் கதவுகள் ஊடே இரண்டு பாதிகளையும் பற்றிக் கொள் முழுமனம் என்பது வெறுமையான மனம் போன்றதே

134. மறைபுதிரே எண்ணங்கள்

இப்போதைய நேர்மைக்குச் சொற்கள் பதிலளிக்கா மாறுகின்ற எல்லாவற்றையும் மனத்தில் பதந்துள்ள எண்ணங்கள் புரிந்து கொள்ளாது. மாறுகின்ற எண்ணங்கள் எப்படி மாறாமலிருப்பவற்றை அறிந்து கொள்ள முடியும்?

எண்ணங்கள் என்ற புதிரில், எந்த எண்ணங்கள் மாறுகின்றன? எவை மாற்றமில்லாதவை? மாறுகின்ற எண்ணங்கள மாறாமலிருக்கின்றனவா? மாறாத எண்ணங்கள் மாறுகின்றனவா? பறந்து போன மாறாத எண்ணங்கள மாறாமல் நினைவு கூரப்படுகின்றனவா?

மாற்றம், மாற்றமில்லாதது என்ற குழப்பத்தில் நாம் ஒவ்வொன்றையும் எப்படிக் காண்பது? மாறும் எண்ணங்கள நம்மை மாற்ற எங்கே தேடுகின்றன? எவ்வாறு மாறாத எண்ணங்கள் நம்மை மாற்ற அறியும்? எண்ணம் என்ற சிக்கலில், எண்ணங்கள் தங்களையேப் புரிந்து கொள்ளாவிடில், நாம் எப்படி ஒருவரை ஒருவர் அறியக் கூடும்?

மாற்றம் மாற்றமின்மை இவற்றுக்கிடையே, நாம் சொற்களின்றி, எண்ணமின்றி ஒன்றாக இருக்கிறோம்

கண்டெடுத்தல்/இழத்தல்

135. கண்டுபிடி, இழ இழப்பு என்ற ஒன்று இல்லாதவரை, காண்பது என்ற ஒன்று இல்லை ஆண் தன்னை இழந்து காண்கிறான் பெண்ணை, பெண் தன்னை ஆணிடம் இழந்து ஆணைக் காண்கிறாள்

காண்பது என்ற ஒன்று இல்லாதவரை இழப்பு என்பதில்லை. ஆண் பெண்ணிடம் தன்னைக் காண இழக்கிறான் பெண், ஆணிடம் தன்னைக் காண இழக்கிறாள்

இழப்பதுதான் காண்பது காண்பதுதான் இழப்பு ஆகவே கண்டுபிடி இழ இழ, கண்டுபிடி

136. ஒருவர்க்கு மற்றவர்க்கும் இடையில்

முதல் நிலையான உந்தாற்றலுடன் கூடிய ஏதோ ஒன்று ஆணையும் பெண்ணையும் ஒருவருக் கொருவரை அதைக் காண முடியாத போதிலும் எப்போதும் உள்ளது அதை இழக்க முடியாவிட்டாலும் அதைக் கண்டு பிடிக்க முடியாது

ஒருவரிடமும் மற்றவரிடமும் இடையே உள்ள பிரிவை நட்புண்டாக்கும் எதோ ஒன்று அது. எல்லாமாக இருந்தும இல்லாமலும் இருப்பது ஏதோ ஒன்று. கண்டு பிடிக்காதவரை தன்னைத் தானே நிரப்பிக் கொள்ளும் வெறுமையாக்கும் ஒன்று. இழக்கும்வரை வெறுமை செய்யும் முழுமையும்.

ஆண் இல்லாது பெண்ணில்லை. பெண் இல்லாது ஆண் இல்லை இருவருமே ஒருவர் மற்றவரில் கண்டு பிடித்தும், இழந்தும் இருக்கட்டும் என அறிவிக்கிறது.

137. அறிதல் ஆழமாகும்

கண்களில் ஊடுருவிப் பார்ப்பது என்பது சிறப்பான உள்ளத்தை உருக்குவதாகும். முதலில் கண்கள் கண்களை நெருக்கமாகக் காண்பதைத் தவிர்க்கின்றன.

காண்பது என்பது தனிப்பட்ட உள்ளம் உருக்குவ தாகும். எனவே தனியான நம்பிக்கை ஏற்படாதவரை அம்மண உடல்கள் கண்களைத் தவிர்க்கின்றன.

ஆணும் பெண்ணும் எல்லா உணர்வுகளுடனும் ஒருவரை ஒருவர் தொடக் கண்களைப் பின் தொடர்ந்து செல்லும்போது மறைப்பதற்கென்ன உள்ளது?

மற்றவர் தானானகவே ஆகும் போதும், மிகப் பெரிய மறைபுதிராக மாறும் போதும் அறிதல் என்பது ஆழமாக ஏற்படுகிறது.

138. ஆழ்ந்த நெறியில்

ஒருவர் மற்றவரை எப்படி அறிய முடியும்? மற்றவருக்கு ஒருவர் வெளிப்படையாகக் காண்பிக்கும் போது ஆழ்ந்த தெரியாததில் அறிவு திறக்கிறது.

இழப்பு என்பதுதான் கண்டுபிடிக்கப்படுகிறது இழப்பைத் தொடர்வதுதான் ‘இயற்கை நெறி'.

139. கண்டுகொள்ளும் நேரம்

முன்னதாக அறிந்திலாத பழைய நண்பனை கண்டுறுவது போல, கண்டு கொள்ளும் நேரம் எப்போதும் வியப்புக்குரியது.

140. இன்னோர் அறிவைக் காணுதல்

எண்ணம் தசைக்கு விட்டுக் கொடுக்க, ஏதோ ஒரு உந்துதலால் ஏற்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. மனம் இன்னுமோர் அறிவைக் காண்கிறது.

உடல் எண்ணாதவரை நினைவுகள் தசையின் தேவையை எண்ணாது. இழக்கும் மனமும் காணும் உடலும் ஆழ்ந்த சமநிலைக்குத் தொடக்கம்.

கமுக்கத்தை உணரும் மனமும் எண்ணும் உடலும் இல்லாதவரை, கமுக்கமான இடங்களின் மண்ணுலக ஆசையை உகந்ததாக்காது.

141. இழத்தலும் காணலும்

பெண்ணிடம் தன்னை இழந்து பின் ஆனும், ஆணிடம் தன்னை இழந்த பின் பெண்ணும் எங்கே? பிரிவு என ஒன்று இல்லாத நிலையில் ஒவ்வொருவரும் எங்கே?

இழப்பதனால் ஆண் தன்னையும், பெண் தன்னையும் மறுபடியும் காண்கின்றனர் இழப்பில் கண்டு கொண்ட ஒவ்வொருவரும் இழப்பு. காணுதல் இரண்டிலும் உயர்ந்து விடுகின்றனர்.

முதலில் கண்டுபிடிப்பதில் இழப்பும், பின்னர் இழப்பில் கண்டு கொள்ளுதலும். கண்டு பிடிப்பதில் இழப்பு ஒரு பெரிய இழப்பு. இழப்பில் கண்டு பிடிப்பதும் ஒரு பெரிய கண்டுபிடிப்பு. உயர்ந்த கண்டுபிடிப்பு, இழப்பு இவற்றைத் தொடர்ந்து செல்க.

142 இழந்து கண்டுகொள்ளல்

ஒருவரிடம் மற்றவரை இழந்துதான் ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரைக் கண்டு கொள்கின்றனர் இழப்பதனால், ஒவ்வொருவரின் பிரிவையும் நிறைவு செய்யும் சேர்ந்திருப்பதைக் கண்டு கொள்கின்றனர் ஒருவரிடம் மற்றவர் இழப்பதால் அவர்கள் சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் இழப்பதால் பிரிந்துள்ளனர்.

ஆணும் பெண்ணும் இழந்து கண்டு கொள்கின்றனர் - எல்லோரும் சேர்ந்திருப்பதை ஆகவே இழக்காமல் இழ, கண்டுபிடிக்காது அறிந்து கொள் 143. ஒருவர்க்கொருவர் இழந்தபோது

காதலர்கள் ஒருவருக்கொருவருள் வயமிழந்துள்ள போது, ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடமும் தம்மை இழந்து விடுகிறார்கள். எந்தப் பெண்ணிடம் ஆண் தன்னை இழக்கிறானோ, அவள் அவளாக இருப்பதில்லை, ஏனெனில் அவள் அவனிடம் இழந்துள்ளாள். இது போலவே ஆணும் பெண்ணிடம் இழந்துள்ளான்.

இதுதான் காதலர்களிடையே உள்ள மாயை, ஆண், பெண் அவளாக இல்லாத போது பெண்ணாகவும் பெண் ஆணை அவனாக இல்லாத போது ஆணாகவும் எண்ணுகின்றனர். தான் இல்லாத போது அவள் இருப்பதாயும், தான் இல்லாத போது அவன் இருப்பதாயும் எப்படி இவர்கள் எண்ண முடியும். அவன் தானாக இல்லை என்றும், அவள் தானாக இல்லை என்பதும் எண்ணும் வரை அவன் தன்னில் இழந்தும் அவள் தன்னுள் இழந்தும் இருக்கின்றனர்.

எது இருக்கிறது. எது இல்லை என்பதில் எவ்வாறு காதலர்கள் மேலே தொடர்ந்து செல்கின்றனர்?

144. இடைவெளியில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே, இறப்பு பிறப்பு இவற்றிற்கிடையே, புரியாத எண்ணங்களில் ஓர் எண்ணத்திற்கும் மற்றதற்குமிடையே ஏதோ ஒன்றுளது. மாற்றம், மாற்றமின்மை. ஒவ்வொரு சொல் இவற்றிற்கிடையே எண்ணங்கள் அறியாத ஏதோ ஒன்று உள்ளது

இடைவெளியில், எண்ணுவதிலிருந்து எண்ணங்கள் வீழ்கின்றன.

செயல்பட்டும், தானே செயல்படாமலும், எண்ணமற்ற நிலையில் எண்ணங்களை நினைவுகள் தொடர்கின்றன

எண்ணங்களைக் காண, எண்ணத்தையே விட்டு விடு

இழப்பதால் கண்டு பிடிப்பதே ஆண்,பெண் இருவரின் வழி புரிந்து கொள்ள முடியாமல், எண்ணக் கூட முடியாமல், இறுதியில் அவர்கள் அறிகின்றனர்.

கொடுத்தலும் / பெறுதலும்

 145. எடுக்காமல் கண்டுபிடி

கொடு, கொடை இருக்கும். பெற்றுக் கொள். பெறுவது இருக்கும் ஆனால் எடுத்துக் கொள்வதால் உரிமை வராது.

எதிர்பார்ப்பு இல்லாமல் அறி. எடுக்காமல் கண்டுபிடி

146. முழுமையான வெறுமை

முழுமை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால் வெறுமையாக்கித் தொடங்கு. முழுமையான இடமில்லாது முழு வளர்ச்சி இருக்க முடியாது வளர்ச்சி பெறவும், நிரப்பவும் தொடர்ந்து வெறுமையாக்கு இதனால் எப்போதும் ஏற்றுக் கொள்ளல் இருக்கும்

முழுமையாக வெறுமையாய் இரு. வெறுமையாக இருத்தல்தான் மிக உயர்வான ஏற்றுக் கொள்ளல் முழுமையே பெரிதுயர்ந்த கொடையாளி

147. கனிவாகக் கொடு

மற்றவரின் ஆளுகைக்குட்பட்டு ஒன்றாக இருந்து கொண்டே ஏற்றுக் கொள்ளல். தன்னை வெளிப் படுத்தல், நம்புவதும், ஏற்பதும் எளிதில்லை.

ஆகவே ஏற்பதே என்ற சுமைக்குக் கொடுப்பது என்பது பொறுப்பேற்க வேண்டும்.

கொடுக்க வேண்டுமென்றால் கனிவாகக் கொடு இதனால் கொடுப்பவரும், ஏற்பவரும் மனச்சுமை குறைந்து இருப்பர்.

ஏற்பது என்பதே ஒரு வகையான அன்புக் கொடை தான் பெறுவது போலவே கொடு, கொடுப்பது போலவே பெறு

148. கொடுப்பது

மழைக்காக, முகில்கள் புற்களிலிடமிருந்து பணம் பெறுவதில்லை வெப்பத்திற்காக வெய்யோனிடிம் மரங்கள் கடன் பட்டவையாகாது வெண்ணிலவும் விண்மீன்களும் கண்களுக்குக் கட்டற்றவையே.

ஆக, ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தன்னுரிமையானவர். கொடுப்பது என்பது அதனுடைய பரிசு, ஏற்பது என்பது ஒருவகை கொடுப்பது என்கிற போது அங்கே கடன் பட்டது எப்படி?

149. ஒன்றாக மறைவது

அவள் ஏற்கும்போது, அங்கே இரு கொடைகளும், அவன் கொடுக்கும் போது இரு ஏற்புகளும் உள்ளன. அவளது தொடக்கத்திலும், ஏற்பிலும், ஏற்பவரால் கொடுக்கப்படுகிறது. அவனது நுழைவிலும் கொடுப்பதிலும், கொடுப்பவரால் ஏற்கப்படுகிறது.

கொடுப்பது தான் ஏற்பது ஏற்பது தான் கொடுப்பது என்கின்ற போது, ஒன்றாக உள்ளதை ஏன் இரண்டாகப் பிரிக்கிறோம்? கொடுப்பதும் ஏற்பதும் ஒன்றாக மறைவது போல, ஆணும் பெண்ணும் ஒன்றாக மறைகின்றனர் தான் , பிறர், வினா, விடை

150. உட்புறமே வெளிப்புறம்

இயற்கையில் ஆணும் பெண்ணும் ஒரே உடலின் இரு கூறுகளாக ஒருவருக்கொருவர் வளர்த்துக் கொள்கிறார்கள் எதுவுமே வினவப்படுவதில்லை. இருந்தும் எந்த ஓர் எண்ணமில்லாது எல்லாமே கொடுக்கப்படுகின்றன. பெறப்படுகின்றன. ஒவ்வொரு வரும் இருவருமையே கவனித்துக் கொள்ளும் உட்புறமாக மற்றவரின் வெளிப்புறமாய் உள்ளனர்

151. பெற்றுக் கொள்ளல்

பெற்றுக் கொள்ள, முழுமையாயிரு. ஆனால் வெறுமையாக்கப் பழக்கப்படுத்திக் கொள். மற்றவர்கள் உடல் மற்றும் எண்ணம் என அறிந்த முழுமை என்பது கொடுக்கப்பட வேண்டிய பாண்டம் வெறுமை என்பது தெரியாதது இதில் கொடுத்ததை ஏற்றுக் கொள்கிறது.

எது கொடுக்கிறதோ, அது தான் அது. பெறக் கூடியது அன்று.

முழுமையாயிரு. பெற வேண்டிய வெறுமை இல்லை. வெறுமையாயிரு. ஏற்றுக் கொள்ள எவருமில்லை. ஏற்றுக் கொள்ள, முழுமையில் வெறுமையைக் கண்டு பிடி.

கொடுப்பதால் வெறுமையாக்க முடியாத முழுமை அனைத்தையும் ஏற்றுக் கொள்வதால், நிரப்ப முடியாத வெறுமையையும் கண்டு கொள்.

152. புதிர்களின் வீறியம்

ஆண்டையைப் போல அது உழைக்கிறது. நிழலைப் போல, அது நடத்திச் செல்கிறது ஒருவரின் உரிமையாக அதை வைத்துக் கொள்ள முடியாது. அதைப் பெற அதை ஒப்படைத்து விடு. பயன்படுத்திக் கொடு. அதை அடக்கப் பணிந்து போ

நாம் புதிர்களின் வீறியம் ஆகவே அவற்றை விடுவிக்காமலேயே அறிந்து கொள்.

கண்டுபிடிக்க வேண்டிய புதிர்கள், வாழ வேண்டியவையாகும்போது, அவற்றின் வீறியத்தால் வாழ் - வினாக்கள். விடைகள் தவிர.

153. கொடுத்தலும் கொள்ளலும் ஒன்றினில் ஒன்ற நிரப்பத் துடிக்கும் ஆணின் பெரிய திண்மையும், தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் பெண்ணின் உயர்ந்த மென்மையும் உள்ளன. அவளது மென்மையால் தாங்கப்படும் திண்மையும், அவனது உயர்வானதைச் சுற்றி வளைக்கும் அவளது மென்மையும் எவ்வளவு கனிவானது

கொடுத்துப் பெற்றுக் கொண்டும், ஏற்பதால் கொடுப்பதுமான அவள் ஏற்பவள். பெறுவது மூலம் கொடுத்தும், கொடுப்பதால் பெறுவதும் அவன் கொடுப்பவன்

திண்மை, மென்மை, நிரப்புதல், தக்க வைத்துக் கொள்ளல், கொடுப்பது மற்றும் ஏற்பது எல்லாமே ஆண், பெண் இருவருக்கும் ஒன்றேதான்.

154. ஒரு பெரிய பொருண்மை

கொடுப்பதும், பெறுவதும் ஒன்றாக இருக்கும் போது, அந்த ஒன்றின் பெயரென்ன? அதை வெளிப்டுத்துமாறு என்ன பெயரிடலாம்? சொற்களுக்கு அப்பாற்பட்ட அது ஏதோ ஒன்று

சொற்கள் எவ்வளவு நாள்கள் இதைப் பின் தொடரும்? முயலும் சொற்கள் இன்னும் பல சொற்களை இந்த ஓட்டத்தில் சேர்ந்துவிடுகின்றன. இந்த மடமை வட்டத்தில் ஓடும் பல சொற்களுடன் ஒரு பரபரப்புத் தவறி விடுகிறது அதிகமான சொற்கள் தேடும் சொற்கள் தான்

நாம் ஒவ்வொருவருடனும், பறவைகள், மீன், மரம், கல், மூலம், விளைவு இவற்றுடன் ஏதோ ஒரு தலையூற்று உள்ளது.

ஒன்றும் நேரத்தில், எதிரொலிக்குப் பார்வையாளராக உள்ள நேரத்தில் எதோ ஒரு பெரிய பொருண்மை சார்ந்து இயங்குகிறது.

நிறைவு / குறைவு

155. எது இல்லையோ அதை அறிக பிறப்பிற்கு முன்னால் இருந்த வெறுமை இறப்பு வரை வாழ்க்கையைத் தொடர்கிறது. இதனிடையே முழுமையைப் பெறுகிறது

ஒவ்வோர் ஆணிடமும், பெண்ணிடமும் எங்கேயோ ஓர் இடத்தில் மற்றவரின் முழுமையைப் பெறுகின்ற வெறுமை உள்ளது

உள்ளதைப் பெறுகையில், எது இல்லையோ அதனை அறிக

வெறுமையை உணர்ந்தபின் அசைவின்மையை அறி, அது அசைவையும் மாறுதலையும் மனத்தில ஏற்றுக் கொள்

156. வெறுமையை நினைவு கொள்

ஆணாகப், பெண்ணுடன் மனமகிழ்வுடன் இரு பெண்ணாக ஆணுடன் நிறை மகிழ்வுடன் இரு சிந்தனையாளாகச் சிந்தனைகளுடன் நிரம்பி இரு ஆனால் வெறுமையை மறவாதே

வியப்புக்கேதுவான நமது ‘நாம’ ‘தான்’ என்பதுடன் முழுமையாக நிரப்பும் போது, வெறுமையை நினைவு கொள். வெறுமைதான் காதலர்களையும், நம்மையும் எல்லாவற்றையுமே சூழ்ந்து கொள்கிறது

வெறுமையிலிருந்து தான் முழுமை உருவாகிறது வெறுமை இல்லையேல் முழுமையும் இல்லை.

வெறுமையிலிருந்துதான் எல்லாமே உருவாகிறது இதில்தான் எல்லாமே திரும்பி வருகின்றன

157. வெறுமையிலிருந்து தொடங்கு

மனத்தின் எண்ணங்களால் உருவான சொற்களும், கருத்துகளும்தான் ஆண், பெண் மனம் கண்டு பிடிப்பதைத்தான் எண்ணங்கள் உறுதி செய்கின்றன ஆனால் மனத்தின் புரிந்து கொள்ளும் திறன் தாங்க முடியாத அளவில் சிந்தனைகளுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று ஆண், பெண் இருவரிடையே உள்ளது.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ளதைத் தாங்க, வெறுமையிலிருந்து தொடங்கு. இழப்பினால், கண்டு பிடிக்கலாம். வெறுமையாக்குவதால நிரப்புதல் உண்டு. எல்லாவற்றையும் தாங்கும் உருவம்தான் வெறுமை.

நீரில் மீன் நீந்துவது போல, வானில் பறவைகள் பறப்பது போல, மனம் வெறுமையினுள் எண்ணுகிறது

எல்லாவற்றையும் மற. எண்ணிச் சமன் செய்ய எந்த எண்ணமும் இல்லாது, மனம் உருவமின்றி, வெறுமையாக இருக்கட்டும். கடல் மீனை நீந்த அனுமதிப்பது போல, காற்று முகில்களை இயங்கச் செய்வது போல..

மனத்திற்கப்பால் வழக்கமான வெறுமை மனதிற்குள் வழக்கமான முழுமை.

158. ஆற்றினை வற்றச் செய்யாத போது

ஆறு கடலில் கலந்தாலும், கடல் நிரம்புவதில்லை, ஆறும் வற்றுவதில்லை.

ஓடும் தண்ணீர் ஆற்றினை வற்றச் செய்யாத போது அங்கு வெறுமை என்பது ஏது? ஆற்று நீர் கடலை நிரப்பாத போது, வெற்றிடம் எப்படி உருவாகும்?

சொற்கள் எனும் ஆற்றினுள்ளும், எண்ணங்கள் என்ற கடலினுள்ளும், பெயரிட முடியாது ஏதோ ஒன்று உள்ளது. எல்லா எண்ணங்களும் வெறுமையாகி நிலையான ஏதோ ஒன்றை நிரப்புகிறது

ஒருவருக்கொருவருள் பாய்ந்து, ஒருவரை ஒருவர் பெற்றுக் கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்கும் நிரப்புதல், வெறுமையாக்கல் என்ற நிலையான எண்ணத்தில் எவ்வளவு உள்ளது

வெற்றிடத்தை நோக்கி ஓடும் ஆற்றைப் போல, முழுமையாகப் பெறும் கடல் போல, ஆணும் பெண்ணும் முடிவில்லாத வெறுமையுறுவது, நிரப்புதல் ஆகியவற்றை நம்பி ஒருவரை ஒருவர் அடைகின்றனர்

பெறுவது என்பது வெறுமையாக்குவதும், முழுமையடைவதும், நிரப்புதல் என்பது முழுமை யாக்குதலும் வெறுமையாக்கலும்.

159. வெற்றிடத்தை வெறுமை செய்

இலை இலையாக இருக்கும் போது மரத்தை, அறிந்து கொள்ள முடியாது மீன், அதாக இருக்கும் போது கடலை அறியாது. ஆண் ஆணாக இருக்கும் போது எவ்வாறு பெண்ணை அறிவான்? இது போலவே பெண், பெண்ணாக இருக்கும் போது எவ்வாறு ஆணை அறிந்து கொள்ள முடியும்?

ஒவ்வொன்றின் வெளிப்புறத்திலும் வெற்றிடம் உள்ளது. இதுதான் அடைந்து நிரப்பி, புரிந்து கொள்கிறது

ஆணாக இருந்து ஆணைக் காணாதே. பெண்ணாக இருந்து பெண்ணைக் காணாதே. மென்மையாக இரு ‘இயற்கை'யை நம்பு, ஆணையும் பெண்ணையும் விட்டுவடு வெற்றிடத்தை வெறுமை செய்.

160. இருப்பதும் இல்லாததும் முழுமை என்பது ஆண் வெற்றிடமாக இல்லாதது பெண். இருப்பதும், இல்லாததும் முழுமையைச் சமமாகச் செய்கின்றன.

ஆண்மை என்பது உருவமானது. முழுமையானது. காணக் கூடியது. காண்பிக்கப்படுவது, வெளிப்படுத்தப் படுவது அவன் பேசப்படுபவன், தெளிவாகத் தெரிபவன். வினா இல்லாமலேயே உள்ள விடை

பெண்மை என்பது உருவமற்றது. வெற்றிடம், புலப்படாதது, மறைக்கப்பட்ட ஒன்று அவள் பேசப்படாதவள். கமுக்கமானவள், மறைபுதிரானவள், விடை இல்லாத முதல் வினா!

161. உள்ளதும் இல்லாததும்

எது உள்ளதோ, அது இருக்கிறது எது இல்லையோ அதுவும் இருக்கிறது

ஆணின் வெறுமை வெளியில் உள்ளது. விலக்கப் பட்டது. அப்பாற்பட்டது. மறந்த ஒன்று. பெண்ணின் வெறுமை உள்ளே உளது. நினைவில் வைக்கப்பட்ட ஒன்று.

இருக்கிறது. இல்லை என்ற இரண்டையும் நினைவு படுத்துபவள் பெண் இல்லை என்பதை நினைவு படுத்தும் அவன் எளிதாக மறக்கப்படுகிறான்

162 வெறுமையைச் சுமக்கும் முழுமை

பெண் ஆணுடன் எலும்புகளையும், தசையையும் பங்கிட்டுக் கொள்கிறாள். ஆனால் அவள் பெண் அவள் நகரும் வெற்றிடம், காத்திருக்கும் நகருபவள், ஆணினால் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடம்.

அவள் தான், நிலம், தோட்டம், தாய், மூலகாரணம், வெற்றிடம், மறைபுதிர். இருக்கிறது. இல்லை என்பதன் நகரும் காத்திருக்கும் புதிர், அவள் தான் பெண்.

பெரிய வெற்றிடத்தில் வெறுமையைச் சுமந்து செல்லும் முழுமைதான் பெண்.

163. முழுமை வேட்கைப்படுகிறது

நிரப்புவதை ஏற்பவள் பெண், பெறுவதை நிரப்புவது ஆண். ஆதலால் வெற்றிடம் நிரப்பப்பட்டுத் திரும்ப நிரப்பப்படுகிறது முழுமை திரும்பத் திரும்ப வெறுமையாக்கப்படுகிறது

முழுமை நிரப்ப வேட்கைப்படுகிறது. வெறுமை வெறுமையாக்க வேட்கிறது.

164. வெற்றிடம் உள்ளதால்

ஆணும் பெண்ணும் வெற்றிடத்தில் கூடி வளர்ந்து, அதிலேயே நிரப்பப்படுகின்றனர்

வெற்றிடம் உள்ளதால், ஏற்கப்படுகிறது. ஏற்கப் படுவதால், கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்படுவதால், முழுமையும் உள்ளது. வெறுமையில் முழுமையும் ஏற்படுகிறது வெற்றிடத்தை அறிய முழுமை ஒரு வழி.

பெண்ணின் முழுமையை உணர, அவளது வெறுமையால் ஏற்கப்படுகிறாய். வெறுமையால் உருவகப்பட்டு, அவள் மறைந்த அறிவின் மூலமாகவும். காப்பாளராகவும் உள்ளாள்.

வெறுமையைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து காண முடியாததைச் செயலாட்சி செய், நிரப்ப முடியாததை நிரப்பு, வெறுமையை இடைவெளியில்லாமல் செய்.

165. பெண்மையின் வெற்றிடம்

மிக வலுமான தசைநார்களை வளைக்க முடியும், கடினமான கல்லை உடைக்க முடியும். ஆனால் பெண்ணின் வெறுமை எவ்வளவு வெல்ல முடியாததாய் இருக்கிறது! இல்லாத பெண்மையை இருக்கும் ஆண்மை எவ்வாறு வெல்ல முடியும்? வெற்றிடத்தை விட மிகப் பெரியது எது?

166. எப்பொழுது காத்திருக்கிறது

ஆண் அணியமாயில்லாத போது காதலனாக . இருக்க முடியாது. அவனது முழுமையும் நிறைந்திருக்க வேண்டும். ஆனால் பெண்ணின் வெற்றிடம் எப்போதும் காத்திருக்கிறது.

167. வெறுமையைச் சுற்றி

வெற்றிடத்தைச் சுற்றியுள்ள பெண்மையின் உடல் தான் பெண். ஆணினால் தேடப்பட்டு நிரப்பப்படும் வெறுமையை விளக்குகிறவள்தான் பெண்.

பெண்ணையையே எண்ணிக் கொண்டிருக்கும் மாந்தன் வெறுமையை நினைவில் வைத்து பெண்ணை மறந்து விடுகிறான். கோவிலை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதுதான் புனிதமான இடத்தின் தேவை

ஆண், பெண் இருவரின் எண்ணத்திற்கப்பால், ஆண் - பெண் இருவரது எண்ணமற்ற நிலை இந்நிலைக்குப் பெண் ஆணை மறக்கும் போது மட்டும். ஆண் பெண்ணை மறக்கலாம்.

168. நிலத்தின் உடல்

நீரின் உடன்பாட்டின் அடிப்படையில்தான் பாறையின் திடமும், காற்றின் மென்மையில்தான்

நானிலத்தின் எடையும் தெரிய வருகிறது. ஆணின் முழுமை பெண்ணின் வெற்றிடத்தில் நுழையும் போது, அவளது வெற்றிடம் ஆணின் முழுமையை வரவேற்கும் போது என்ன தெரிகிறது. நிலத்தின் உடலும், காற்றின் மூச்சும் நிலம் என்பது பெண்ணின் தசையும், ஆணின் எலும்புமாகும். நகரும் ஆணும், வெறுமையான பெண்ணும் காற்று.

இங்கில்லாவிடில், வேறு எங்கே இயற்கை நெறி இயங்குகிறது

169. உயிர்த்தலை ஒப்புக் கொள்

விருப்பார்வம் அடங்கியதும், அது மீண்டும் அடங்கக் கிளர்ந்தெழுகிறது. உயிருள்ள உடல் போல, அது வெறுமையாக்க நிரம்பியும், மறுபடியும் வெறுமையாக்க நிரம்புகிறது.

வெறுமையாக்கத் தொடக்கமே நிரம்பவும், நிரம்பத் தொடங்க வெறுமையாக்கவும் எவ்வளவு பண்பமைதி மிக்கது.

உயிர்த்தலை ஒப்புக் கொள். இக்கணமே விடுவி, அடுத்ததை ஏற்றுக் கொள்... முயற்சியில்லாமலேயே.

மூச்சை அடக்கும் போது, வானம் நொறுங்குகிறது, விண்மீன்கள் உடைகின்றன. மூச்சுவிடும் நிலம் கடினமாகிறது.

170. மூச்சுவிடும் இயற்கை போல

இணைந்திருக்கும் காதலர்கள் அலைகள் போல, பருவ காலங்கள் போல, தலைமுறையினர் போல ஒரே ஒத்திசைவில் நகருகின்றனர். அவர்கள் நிரப்பியும், வெறுமையாக்கியும் மூச்சு விடும் ‘இயற்கை’ போல உள்ளனர்.

நிரப்புவது வெறுமையாகிறது. வெறுமையாவது நிரம்புகிறது ஒவ்வொன்றும் அடுத்தது என்ன என்பதை உணர ஒன்றை ஒன்று தொடர்கின்றது.

எல்லாமே அசைகின்றன. எல்லாமே மாறுகின்றன, மாறும் இயற்கையைத் தவிர.

171. அவ் வகைக் கடலில்

ஆண் கூறுகிறான் : “எனக்குப் பெண்ணைக் கொடு, அவளை என் உடலுடன் எடுத்து நிரப்புகிறேன்”.

பெண் சொல்கிறாள் “எனக்கு ஆணைக் கொடு. அவனை என்னுடன் இணைத்து அணைத்துக் கொள்கிறேன்”

முழுமையான ஆண் உலகையே நிரப்புகிறான். வெற்றிடமான பெண் உலகையே சூழ்ந்து கொள்கிறாள்

அவ் வகையான கூடலில் என்ன வெல்லாம் நடக்க வேண்டும்!

172 பணிவு தேவை

ஆண் தனது முழுமையின் வலிமையை இழக்கும் போது, அவன் ஆணாக இருப்பதில்லை பெண் அவளது வெற்றிடத்தின் வேட்கைக் கவர்ச்சியை இழக்கும் போது, பெண்ணாக இருப்பதில்லை

தான் வெறுமையாக்கப்படலாம் என்பதை அறிய ஆணுக்குப் பணிவு தேவை தான் நிரப்பப்படலாம் என்பதை உணரப் பெண்ணுக்குப் பணிவு தேவை

173. சென்று கொண்டிருப்பது தங்குகிறது

ஆணினால் நிறைவு செய்ய முடியாத வெறுமைப் புடவி பெண். பெண் மகிழ்ச்சியுறும் போது, அவன் கற்றுப் பெருமை கொள்ளலாம்தான். ஆனால் அதே சமயம் அவன் வெறுமை அடைகிறான். முன்னிருந்த நிலைக்கே திரும்பி விடுகிறான்.

பெண் மகள் தன்னிடத்தில் நிறுத்திவைத்துக் கொள்ளமுடியாத நிறை பெற்ற உலகமே ஆண் அவன் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் போது அவன் வெறுமை அடைகிறான் அவளும் சற்றுப் பெருமை கொள்ளலாம்தான் முன்பிருந்த நிலைக்கே அவள் திரும்பி விடுகிறாள்

நிறைவு செய்தல், வெறுமையாக்குதல் என்கிற தொடரில் இவ் இரண்டிற்குமிடையேயுள்ள நிலையே நிலைத்து நிற்கிறது என்கிற உண்மையை அறிவால் உணர்கிறான். எனவே அடக்கத்துடன் அவன் தன் பயணத்தைத் தொடருகிறான். “சரி, சரி” என்று போகிற பாங்கை வளர்த்துக் கொள்கிறவன் “இயற்கை நெறியை பின்பற்றுபவனாவான்” இயற்கையின் அறிவுரையைப் பின்பற்றுபவன் தன்னை அலட்டிக் கொள்ளாமல் ‘சரி, சரி’ என்று தன் பயணத்தைத் தொடருகிறான்.

174. காதலரின் சமநிலை

திறமையோ, ஆற்றலோ தேவை இல்லை. வெளிப்படுத்துதல், நம்பிக்கை மட்டும் தான். குழந்தை காதலனாகத் திரும்புகிறது; வெகுளியாக, அணியமாக அச்சத்துடன் ஆவலுடன்.

எல்லாமே வெளிப்படுத்தப்பட்டு, விடுவிக்கப்படும் போது, வெற்றிடம் நிரம்பக், காதலர்கள் சமநிலையில் உள்ளனர்.

'இயற்கைநெறியைத் தாங்க முடியாது. தாங்கு பவருமில்லை

175. உயர்வினும் உயர்வு

கொடுப்பதால் ஆண் பெண்ணை நிரப்பி, அவளது வெற்றிடத்தை வெறுமையாக்குகிறான் எடுத்துக் கொள்வதால் பெண் ஆணை ஏற்றுக் கொண்டு அவனது முழுமையை வெறுமையாக்குகிறாள்

முழுமையை எடுத்தபின் முழுமை எங்கே? நிரப்பிய பின் வெற்றிடம் ஏது?

ஒன்றை நிரப்புவதும், மற்தை வெறுமையாக்குவதும் இரண்டிலும் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதே ஆகும்

ஆண் பெண்ணின் நிரம்பிய வெற்றிடத்தை நிரப்பும் போது, அவனால் கொடுக்கப்பட்டதைவிட மிகப் பெரியது அது பெண் ஆணின் முழுமையை வெறுமையாக்கி எடுத்துக் கொள்ளும்போது, அது அவளது மிக உயர்ந்த பெற்றுக் கொள்வதாகும்

மிக உயர்ந்ததைவிடச் சிறந்தது எது? மிக உயர்ந்ததைவிட மிகமிக உயர்வானது என எதைக் கூறலாம்?

176. இயற்கையின் உயிர்ப்பு

ஆண், பெண்ணிடம் புகுவதும, பெண் ஆணை எடுத்துக் கொள்வதும் மறைபுதிரானதே வெளிப்புற முழுமை உட்புற வெற்றிடத்தைக் காண்பதும், உட்புற வெறுமை வெளியில் உள்ள முழுமையைக் கண்டு

கொள்வதே மறைபுதிர். ஆண், பெண் இருவரின் மறைபுதிர் முழுமை, வெற்றிடம் இவற்றின் ஒன்றலே ஆதலால் முழுமையோ, வெறுமையோ இல்லை நிரப்புதல் - வெறுமையாக்குதல் பருவங்களையும் பிறப்பித்தலையும் மூச்சாக்குதல் எல்லாப்பொருளும் இயற்கைநெறியின் மூச்சிழுப்பே.

அந்த மூச்சு என்றால் என்ன? யாராலும் கூறமுடியாது. ஆனால் எல்லா இடத்திலிருக்கும் மூச்சுயிர்ப்பே, ஒவ்வோர் அசைவிலுள்ள மூச்சு

177. தடையும் வாக்குறுதியும்

புத்தியல்பு வாய்ந்தது ஆனால் பொதுவானது. புதுமை வாய்ந்தது ஆனால் மேன்மைப்பட்டது எச்சரிக்கையானது ஆனால் வயப்படுத்தக் கூடியது தடை செய்யப்பட்டது ஆனால் வாக்குறுதி தரப்பட்டது

ஆண் நுழையத் துணிவானா? பெண் துணிவாக ஏற்றுக் கொள்வாளா?

178. ஒரு முடிவில்லாத் தொடக்கம்

உந்தப்பட்ட ஆண் பெண்ணிடம் வெறுமை யாக்குவதால் அவன் வீழ்ச்சி அடைகிறான் பெண் முழுமையில் மலர்கிறாள் அவளது முழுமையில், வெறுமையாக்குவதில் உலகைப் பிறப்பால் முழுமை யாக்குகிறாள். அதே உலகம் இறப்பில் வெறுமையாகிறது. வெறுமை ஆக்குவதால் நிரப்புதலும், நிரப்புதலால் வெறுமை ஆவதும் உண்டாகின்றன. இது ஒரு முடிவில்லாத் தொடக்கம் இதில் இழப்போ ஆக்கமோ இல்லை

பெண் எடுத்துக் கொள்ளல், கொடுத்தல் என்ற சீரான மூச்சில் பெருமையும், சிறுமையும் அடைகிறாள் ஆண் தனது உயிர்ப்பினால் உந்தப்பட்டு அவளது மூச்சில் துணை போகும் ஒருவன்.

179. வெறுமைக்குக் காத்திருத்தல்

தன் முழுமையால் ஆண், பெண்ணை நிறைவு செய்யவில்லை என்றால், அவனுக்காக அவளின் வெறுமை காத்திருக்கின்றது. மீண்டும் அவளை நிறைவு செய்யவில்லை எனில், அவள் நிறைவு செய்யாமையை நினைவூட்டிக் காத்திருப்பாள்

பெண் ஆணை ஏற்றுத் தன் வெறுமையால் அவனை வெறுமையாக்க வில்லையானால், அவள் எப்பொழுதும் முழுமையை எழுப்பக் காத்திருக்கிறாள் மீண்டும் வெறுமையை வெறுமையாக்க வில்லை யானால் அவன் நிறைவு செய்யத் திரும்பவும் காத்திருக்கிறான். வெறுமை மாபெரும் முழுமையின் எழுச்சியை வெல்ல முடியாது.

180. உரிமையான மற்றோர் உடலுடன்

ஓர் உடல் அதனது உரிமையான மற்றொரு உடலுடன் சேர்வதே ஒன்றதுல். ஆணும் பெண்ணுமாகச் சற்றும் சங்கடப்படாமல் பிணைக

ஆண் முழுமை, பெண் அவளது வெற்றிடம், உடல அளவில் மட்டுமே எண்ணி, அவனன் தனது வெற்றிடத்தை அடைந்து தன்னை ஏற்கிறாள்

பெண், வெறுமை, ஆண் அவளது முழுமை உடல் அளவில் எண்ணி, அவள் தனது முழுமைக்குச் சென்று தன்னை நிரப்பிக் கொள்கிறாள்

ஒன்றுதல்

181. எல்லாமே காணப்படுகிறது இருப்பதும், இல்லாதிருப்பதும் உளளது ஆண இருப்பது, தேடுவதில்லை பெண் இலலாமலிருப்பது, தேடுவது ஆகவே ஒன்றுவதில்தான் எல்லாமே காணப்படுகிறது

182. வினா இல்லாமலே

ஆண், பெண்ணையோ பெண் ஆணையோ ஏற்றுக் கொள்வதற்கு மாறாக, அவர்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வதே சிறந்தது இவர்களிடையே ஆர்வவேட்கை எழும் போது தொடக்கம் இல்லை, வினாவோ விடையோ இல்லை. உறுதியில்லாமை இல்லை

புத்தகங்கள் கற்றுத் தரா சொற்கள் தவறான விடை தரும் எண்ணிப் பார், மிகவும் காலம் கடந்து விட்டுள்ளது கேட்டால் விடை இல்லை

எண்ணாமல்தான் தண்ணீர் தன் வழியைக காண்கிறது பருவ காலங்கள் எதையும் கவனியாது ஆண்டை நிரப்புகின்றன

நீரைப் போல, பருவ காலங்களைப் போல சேர்ந்திரு தேடாமலே காணலாம்

வினா இல்லாமல் விடை உள்ளது ஆம்

183. கணத்திற்குக் கணம்

முடிவைப போலவே தொடக்கத்திற்கும. கவனம் தேவை உடல்கள் கூடும் போது, பரபரப்படையாத போது பரபரக்காதே

ஒவ்வொரு கணமும் தொடக்கம், ஒவ்வொரு கணமும் முடிவு கணத்திற்குக் கணம் வேறு ஏதும் செய்யவோ. வேறு எங்கும் போகவோ, வேறு வகையாக இருக்கவோ வேறு ஒன்றும் இல்லை

184. தெரிந்து கொள்ள அணியமாக

ஆணாக, அறியாதவனாக புதியவனாக, அறிவதற்கு அணியமாகச் செல், அசைக.

பெண்ணாகத் தெரியாதவளாகத் தெரிந்து கொளள அணியமாக ஏற்றுக் கொள், அசைக

இது போல புதிது வெற்றி கொள்ளாமல் பழையது புதிப்பிக்கப்படும்

185. ஆதி முதல் கூத்து

தனிமையில் சேர்ந்திருக்கையில் கட்டுப்பாடு தேவை இல்லை சுவர்களும், திரைகளும், கதகதப்பும், தண்ணிலவும் காதலர்களை ஒருவருக்கொருவரிடம் இழுத்துக் கொள்ளச் செய்கின்றன

பேரியற்கையின் மாயவிச்சையில் தம் உயிர்ப்போடு ஆதிமுதல் கூத்தினை ஆடட்டுமே

186. பழமையான அடியிடு

இது வரை செய்யாததைச் செய்ய விரும்புவதை செய்து விடு. மென்மையாக, முழுமையாக, வெறுமை செய் ஒருவருக்கொருவரின் மாயங்களில் நுழை

எண்ணற்ற பலரும் வழக்கமல்லாத வழக்கத்தைக் கடைபிடித்து ஒன்று சேர்ந்துள்ளனர் நம் முன்னோர்கள் எல்லோருமே நம்மை இப்போதைக்கு முன்னேற்பாடு செய்து வந்திருக்கின்றனர்

இரு உடல்களுடன் பழமையான நடைமுறைகளுக்கு ஏற்றவாறு கூத்தாடு

187. உடலே அறியும்

ஆணின் முழுமையை ஒரு பெண் ஏற்றுக் கொள்ளும் போது, அவன் ஒரு மறைபுதிர் மாந்தனாக இல்லை பெண்ணின் வெறுமையை ஓர் ஆண் நிரப்பும் போது, அவளும் மறைபுதிரில்லை இருவரும் சேர்ந்து மற்றுமொரு மறைபுதிராய் உள்ளனர்

ஆணையும், பெண்ணையும் பிரிக்க முற்படு, ஒன்றுதல் அறியப்படாது.

ஒன்றுதல் என்பது சொற்களுக்கு அப்பாற்பட்டது நிழல்கள் போல, சொற்கள் எண்ணங்களைத் தொடர்கின்றன, எண்ணங்கள் மனத்தைப் பின் தொடர, மனம் உடலைப் பின் தொடர்கிறது உடல் மட்டும் உணர்ந்த கூடலை எப்படி அறியக் கூடும்?

சொற்கள் இல்லாத போது, இயற்கை அருகில் உள்ளது

188. உடல்கள் இயற்கைநெறியை அறியும்

கூடுதல் என்பது வெளியிலிருந்து உள்ளேயோ உள்ளிருந்து வெளியிலிருப்பதை ஏற்பதோ அன்று அது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நட்புறவுடன் ஒன்று சேரும் செயல்

உடல்கள் ‘இயற்கை'யைப் புரிந்து கொள்கின்றன அவை பிரிந்திருப்பதைச் சேர்க்கின்றன எதிரானவைகளைத் தீர்ககின்றன. ஒன்றாக உள்ள இரு உடல்களும் 'இயற்கை'

189. கூடலுக்கும் அப்பால்

ஆணின் பெருமை இப் புடவியை நிரப்புவதில் அதுவரை வன்மையை நோக்கி இருக்கும் இதுவே ஆணின் மாபெரும் மேன்மை அப்பேர்ப்பட்ட பெருந்தன்மை வாங்கிச் சுற்றிவைளத்துக் கொள்ளும் இடம் எவ்வளவு உயர்ந்தது!. இதுதான் பெண்ணின் பெருந்தன்மை, மனித முயற்சியில் உள்ளது

ஆணின் முயற்சிக்கும், பெண்ணின் ஏற்றுக்

கொள்வதற்கும் அப்பால் ஏதோ உள்ளது கூடலுக்கும் அப்பால் ஏதோ ஒன்று உள்ளது. புடவியை நிறைவு செய்வதற்கும் புடவியைச் சுற்றி வளைத்தற்கும் அப்பால் ஏதோ ஒன்றுள்ளது. சொற்கள் சொல்லாமல் சொல்லும் எண்ணங்கட்கும் பிறப்புக்கும் முன்னால் இருந்தவை எனன? மனவேட்கை தன்னை அறிவதற்கு முன்னர் என்ன? முழுவெறுமையும வெற்று முழுமையும் என்ன?

வினாக்களும் நிகழ்வுகளும் ஏற்படுகையில் அவை எங்கே?

190. அவிழ்ப்பு வேறுபட்டது

குளிர் காலமும், கோடைக் காலமும் தம்மில் தாமே நட்புறவு கொள்கின்றன கிழக்கும், மேற்கும் ஒன்றோடு ஒன்றி வருகின்றன ஆண்டும் நிலமும தெளிவாக்கு வது ஆண், பெண்ணின் முழுமையம்

அவர்களது நான்கு கைகளை நான்கு பருவங்களாகவும், நானகு கால்களை நான்கு திசைகளாகவும் கொள் உறுப்புகளும் உடல்களும் ஒன்றாகச் சுற்றிக் கொள்கின்றன தழுவிக் கொள்கின்றன. கைவயமாக்கிக கொள்கின்றன இரண்டுகள் இரண்டுகளுடன் பிணைகின்றன. ஒன்றாகின்றன சிறப்புச் சிறப்பினை வளைக்கிறது. அவிழப்பு வேறுபட்டது. தனிப்பட்டது

191. வாழ்வின் அடித்தளத்தில்

ஒவ்வோர் உயிர் வாழ்வுப் பொருள்களின் அடித்தளத்திலும் எண்ணத்துக்கும், அறிவிற்கும் அப்பால் ஏதோ உள்ளது இதை ஒன்றுமிலலை எனலாம் இருந்தும் இது எழுச்சியிலிருந்தும், உந்துதலிலிருந்தும் உருவாகிப் பின்னர் வேட்கையாக பேருணர்சசியாக வருகிறது

முழுமையும், வெறுமையும் சேர்ந்து பெரும் விருப்பம் (காமம்) ஆண், பெண் இருவரையும் முழுமைக்கு வெறுமை செய்ய, இவர்கள் இவர்களுள்ளே ஆழத்தில் உள்ள ஏதோ ஒன்றுக்கு எழுப்பப்படுகிறார்கள்

192. அறிவர்கள் தேடுவதைக் காதலர் காண்பர்

காமத்தில், ஆணும் பெண்ணும் ‘தான்’ என்பதற் கப்பால் செல்கிறார்கள் எதிர்ப்புகள் தீர்கின்றன இப்போது ஆண், பெண் இல்லை எதிர்மறைகள் தீர்வு காண்கின்றன ஆண் பெண் என்று தனியாக ஒன்றுமில்லை ஒன்றும் இரண்டும ஒன்றுமே இலலை, அல்லது அதுவே எலலாமும் இயற்கை சொல்வது இதுதான்

முனிவர்கள் தேடுவதைக் காதலர்கள காண்கிறார்கள் உடலும் மனமும் மறைகின்றன

பங்கீடு பிரிவு இரண்டும் முடிகின்றன எல்லாம் உள்ளது என்கிற நிலை ஏதோ இருக்கிறது என்ற எண்ணத்தை முறியடிக்கிறது எல்லாம் உள்ளவர்கள், ஏனோ அவற்றைச் சிலருக்குத் தருவதில்லை

193. போதலும் வருதலும்

காற்றும், நெருப்பும் நீரிலிருந்தும், நிலத்திலி ருந்தும் ஏற்படுகின்றன வெளியில் உள்ள வெப்பம், உள்ளே இருககும் வெப்பததைத் தூண்டுகிறது

காதலர் ஒவவொருவரும் மற்றவரால ஏற்பட்டு இருவரில் மறைகின்றனர்

நிலம் மண்ணை அசைக்க, மச்சையும், சதையையும் உசுப்புகிறது கனல் தீயை உருவாக்குகிறது

நிலத்தோடு நிலம் மோதுவது இரண்டிலும அடங்கிய நீரை ஈரப் படுத்துகிறது நுரைக்க வைக்கிறது கடந்து போதலும் நிலைத்தலும் இதுவே

194. நிலம் உயிர்க்கின்றது

கலவியின் போது, உடல் உடலை மூச்சுக கொள்வது போன்று ஆணும் பெண்ணும் மூச்சை உள்ளிழுக்கின்றனர். வெளிவிடுகின்றனர்

காதலர்களின் வாயிலாக நிலம் தானாகவே உயிர்க்கிறது ஒருவருடைய மூச்சுக் காற்றே மற்றவருடைய மூச்சுக் காற்றாகிறது இந்த மூச்சுக் காற்று தண்ணீரும் நெருப்பையும் உள்ளடக்கிய தசைக்கு உரமேற்றுகிறது

195. ஒருவருக்கொருவர்

பெண்ணை மகிழ்விப்பதில் தான் ஆண் நிறைவு பெறுகிறான் ஆணை மகிழ்விப்பதில் தான் பெண் நிறைவு பெறுகிறாள்

ஒருவரை ஒருவர் மகிழவிப்பதுதான் இருவரையும் இணைத்துப் பிணைக்கிறது, உறவுக்கு உரம் சேர்க்கிறது

ஒருவருக்கொருவர் துணை தேவை என்கிற உணர்வு இருவருக்குமே நிறைவளிக்கிறது

196. மூழு வீச்சு

காதல் புரிவதில் முழு வீச்சை வெளிப்படுத்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அது கிடைக்காவிடில் எங்கிருந்து அதை அடைய முடியும்?

ஒருவருடைய உடல் மற்றவருக்கு விருந்தாகிறது விருந்தளிப்பவன் என்கிற முறையில் தாராளமாக நடந்து கொள் விருந்தாளி என்கிற முறையில் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்

197. ஆற்றின் போக்கைப் பின்பற்று

ஆறு தானாகவே ஓடுகிறது. எவரும் வழி

காட்டாமலேயே தன் வழியே சென்று கடலில் கலக்கிறது அறிவின் கீழ் நோக்கிச் செல்லும் போக்கு யாவரையும் முழு ஒற்றுமையை நோக்கியே இட்டுச் செல்கிறது

ஆற்றின் போக்கை ஒட்டி அமைதியாகவே நீயும் செல்

குருதியின் ஆர்வமும் விரைவும் சேர வேண்டிய இலக்கு என்கிற குறிக்கோளை நோக்கியே செல்கின்றன

கீழ் நோக்கிச் செல்லுதல் என்கிற முறையை நினைவில் கொள் ஆற்றின் போக்கைப் பின் பற்று

198. தொடக்கத்தின் தொடக்கம்

தொடக்கம் என்று ஒன்று இருக்குமானால், அந்தத் தொடக்கத்திற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேணடும அதே போல் தொடக்கத்தின் தொடக்கத்திற்கும் ஒரு தொடக்கம் இருக்கவேண்டும இந் நிலையில் எந்தத் தொடக்கம்தான் தொடக்கமாயிருக்க முடியும்?

எந்தத் தொடக்கத்திற்கும் மூல காரணம் ஆர்வம் ஆர்வத்திலிருந்து உயிர்த்து எழுவதுதான் ஒவ்வொரு தொடக்கமும் ஓடிக்கொண்டேயிருக்கும நீர்தான் ஆறு என்பது போல, தன்னிடமேயிருந்தே உண்டாகித் தானே நிறைவேற்றுவது போல் நிலைத்திருக்கிற புடவி தான் ஆர்வம்.

ஆணும் பெண்ணும் ஒன்றி இணையும் போது, விண்மீன்கள் ஒவ்வொன்றும், புல்லின் நுனியும் அவர்களை ஒத்தே செல்கின்றன. ஆசையின் வேர்கள் விண்மீன்களிலும், விரைவு புல்பூண்டுகளிலும் இருக்கும் நிலையில் தவறொன்றும் நிகழ முடியாது.

ஆணும் பெண்ணும் இணையும்போது எந்த முறைமை உள்ளதோ, அதே முறைமை நிலைதான் அவர்கள் பிரியும் போதும் நிலவுகிறது. தேய்ந்துவரும் ஆர்வம் பிரிவுக்கு வழிகோல்கிறது. பிரிவு ஆர்வத்தைத் தூண்டுகிறது. எழுப்பப்பட்ட ஆர்வம் பிரிந்திருந்ததை ஒன்று சேர்க்கிறது. நாள்கள், பருவ காலங்கள் என்கிற தாளக்கட்டுதான் காதலர்கள். அவர்களுடைய மரபினருடைய தாளக்கட்டும் ஆகும்.

தொடக்கத்தின் தொடக்கத்திற்கும் முன்பாகவே இயற்கையின் காலத்திலேயே ஆர்வம் இருந்து வந்திருக்கிறது.

199. உடம்பு மட்டுமே

எல்லை கடத்தல் என்பது எல்லைக்கு உட்பட்தே. வெளியே செல்லும் வழி என்பது உள்ளே வரும் வழிதான். இந்த உண்மை எல்லாவற்றிற்கும் பொருத்தமானது.

மனத்தைத் தாண்டிச் செல்வதை எப்படி மனம் அறிகிறதோ, அப்படியே உடலைத் தாண்டிச் செல்வதை உடலும் அறிகிறது. வலிகளையும், தேவைகளையும் உணர்ந்து கொள்கிற மனத்துக்கு எவ்வாறு மனத்தின் எல்லையைத் தாண்ட வழி தெரியுமோ, அதே போல் உடலின் எல்லையைத் தாண்ட உடலுக்கும் வழி தெரியும்.

தான், மற்றவர், உள், வெளி, மனம் சிந்திக்காமல் இருக்கும் நிலையில் எண்ணுதல், இவற்றை யார் தான் வேறுபடுத்தி அறிந்து கொள்ள முடியும்? தொடுதல் என்து சிந்தித்தல் என்று கொள்வோமேயானால், அது தொடுதலின்றி வேறில்லை. எந்த வகையான உணர்வு மில்லாமல் நடனமாடிக் கொண்டிருப்பது தான் உடல். முடிவில் உடல் என்று கூட ஒன்றில்லை. தெரிந்து கொள்ள பணிந்துபோ, கண்டு பிடிக்க இழந்திடு வெறும் உடல் இதற்கெல்லாம் போதுமானது.

200. உடல் நினைப்பதை மனம் தொடர்கிறது

என்ன செய்ய வேண்டும் என்பதை உடல் நன்கறியும். ஏற்கெனவே அறிந்திருந்ததைப் புரிந்து கொள்வதற்காகப் புதிது புதிதான படைத்துக் கொண்டிருக்கும் உடலின் சிந்தனையை மனம் பின் தொடர்கிறது

பின்னர், வியப்பில் ஆழ்ந்திருக்கும் மனம் ஆசை எழுவதைக் கவனிக்கிறது செல்லுதல், எழுதல் இவை முடிவுற்று மனத்திற்கு ஆழ்ந்த அறிதல் எட்டும் வரை உடல் எண்ணுவதால் விளையும் மயக்க நிலையில் மனம் யாவற்றையும் மறந்து விடுகிறது

201. உடல் தீர்மானிக்கட்டும்

விடிவிக்க வேண்டியதை நகர்த்துதல் என்கிற நிலை விடுவித்து விடுகிறது உறுதியாகப் பற்றி கொள், அது நகர முடியாது. அதுகட்டுப்பாட்டுக்குள் அதே சமயம் எட்டும தொலைவிலேயே இருக்கிறது. ஆனால் அதைப் பிடித்து விடவும் முடியாது உடலே முடிவு காணட்டும்

நாளும் பொழுதும் உலகம் நம்மைத் தன் மாயவலையில் சிக்க வைக்க முயற்சி செய்கிறது. காத்திருந்த பின்னரே விடுதலை செய்வது என்ற எண்ணத்தை நகர்த்துதல் என்கிற செயல் நடை பெறுகிறது. நமக்குள்ளிலிருந்தே, ஏதோ ஒன்றிலிருப்பது ஆனால் எதையும் செய்யாத நிலையிலிருந்தே நகர்த்துதல் என்கிற நிலை ஏற்படுகிறது நம்மிடம் உள்ளது தான் என்றாலும் கூட நமது என்று சொல்லிக் கொள்ள முடியாதது நாம்தான் நகர்த்துகிறோம் என்றெண்ணாமல் நாம் நடத்தப்படுகிறோம் என்கிற உணர்வோடு உலகில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அது நமக்குக் கற்பிக்கிறது

202 தொலைவில் தெம்புடன் கண்கள்

நகர்ந்து சென்று கொண்டிருத்தல் என்கிற நிலைக்கு அப்பால் இணைதல் என்பது ஒரு இருத்தல்தான். இந்த நிலை ஆணையுடப் பிறந்ததுவே தவிர ஆணைக்கு கட்டுப்பட்டு வருவதில்லை ஆணும் பெண்ணும் அந்த அசைவற்ற இடத்தை நோக்கிச் செல்கின்றனர், அவ்வாறு செல்கையில் அவர்கள் உலகத்தை நிலைநிறுத்தச் செய்து பின்னர் அதையும் உடைத்து நகரச் செய்கின்றனர்

இத்தகைய போராட்டம் உலகத்தை நடுங்க வைத்துப் பின்னர் புதியதோர் உலகம் செய்து, பழைய உலகை முடிவுக்குக் கொண்டு வருகிறது தொலைவிலுள்ள ஆனால் தெம்புடன் இருக்கிற கண்கள் படைத்த காதலர்கள் புதியதோர் தொடக்க நிலைக்குத் திரும்புகின்றனர் மீண்டும் மீண்டும் இந்த நிலை தொடர்கின்றது

203. தன்னுள் மாறும் காலச்சுழற்சி

பருவ காலங்களைப் போலவே, ஆர்வம்

காத்திருக்கிறது, நகர்கிறது, உணர்ச்சி ஊட்டுகிறது. முடிவில் நிறைவேற்றியும் வைக்கிறது. ஆண்டின் ஒத்திசைவு இலையுதிர் காலத்தின் முடிவுக்கு காதலர்களை இட்டுச் செல்வதான வாக்குறுதி யாகிறது. இலையுதிர் காலத்தில் அவர்கள் ஒருங்கிணைவது புதியதோர் தொடக்கத்தின் ஒத்திசைவு உணர்ச்சிப் பெருக்கின் ஆழத்தில், சொல்லப்படாத வாக்குறுதியாகக் கூட அவர்கள் புரிந்து கொள்கிறார்கள், பொறுத்திருக்கிறார்கள். பனிக்காலம் வரை காத்திருப்ப தென்பது கூட வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கையினால்தான். பனிக்காலம் பற்றிய எண்ணமும், மறுபடி மறுபடி ஆர்வம் ஊற்றெடுத்து வரப் போகிற பருவ நிலைகளிலும் தொடரும் என்கிற நம்பிக்கையில் தான் எழுகிறது.

204. உடலின் செய்பாடு

ஆணின் முழுமை பெண்ணின் வெறுமையினாலும், பெண்ணின் வெறுமை ஆணின் முழுமையினாலும் எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், ஆண் பெண் என்கிற தனி நிலை மட்டும் இருப்பதில்லை. உடலின் செய்கையினால் இரு பாலாரின் நிலையிலும் மாற்றமும், இணைவும் ஏற்படுகின்றன.

தசைத் தொடர்புடையது என்கிற காரணத்தினால் ஆண் மனம், பெண் மனம் என்கிற புரிதல் ஏற்படுகிறது எண்ணங்களைப் பற்றிய சிந்தனை மூலம் இந்தப் புரிதல் கிடைப்பதில்லை.

தசை உணர்ச்சி காரணமாக உடலுக்கு விரைவில் புரிதல் கிடைக்கிறது. உடல் புரிதலைப் பெற முயச்சி செய்கிறது எண்ணங்கள் புரிதலைப் பெற உடலைப் பின் தொடர்கின்றன

205. எளிமையும் தெளிவும்

தெளிவாகப் புலப்படுவதிலும் தெளிவில்லாத தொன்று உள்ளது. எளிதுதான் என்பதில் எளிதில்லாத தொன்று உள்ளது தெளிவானது, எளிதானது என்று நாம் நினைப்பதிலெல்லாம் தெளிவில்லாததும், எளிதில்லாததும் உள்ளன.

ஆண், பெண்ணும் நன்கு ஆழ்வுணர்வின் போது, உடலோடு உடல் இணைதல் என்ற நிலைக்கும் அப்பால் ஒன்று இருக்கிறது. இடைவெளி என்பதற்கு உள்ளேயே, உன்னையும், வெளியையும் இங்கே அங்கே, இது அது இவற்றையெல்லாம் இணைப்பது என்று ஒன்று இருக்கிறது

இடைவெளி, என்பதற்கு உள்ளேயே, எளிமையானது எளிமையற்றது நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலை, முழுமையான வெறுமை, எண்ணம் பொருள் இரண்டும் அற்ற ஒருநிலை, தொடாமலே தொடுதல் என்கிற நிலை ஆகியவையெல்லாம் காணப்படுகின்றன. மனம் இருக்கிற காரணத்தினால் எண்ணங்கள் அந்த நிலையைக் காண முடிவதில்லை உடல் இருப்பது காரணமாகப் புலன்கள் அதை உணர முடிவதில்லை.

உடலோடு உடல் இணைந்து ஒன்றுபடும்போது, இடையிலிருக்கும் நிலையைப் பற்றிக் கொள். எண்ணங்களிடையே மனம் சிந்திக்கும் போது, புரிந்து கொள்ளுதல் தெளிவாகிறது, எளிதாகிறது

ஒன்றுக்கிடையே மற்றொன்று என்கிற உண்மையை ஆண் பெண் இணைதல் என்கிற நிலை புரிய வைக்கிறது.

206. ஈரடிகளும் கூத்திட வேண்டும்

எப்பொழுது பெண்ணின் வெறுமை நிரப்பப்பட்டு, ஆணின் முழுமை வெறுமையாக்கப் படுகிறதோ, ஒருவர் மற்றவரை செயலிழக்கச் செய்கிறார் என்றாகிறது

ஆண் வீழ்ச்சியுறுகிறான், தன்னைச் செயலிழக்கச் செய்து அவள் முழுமை பெற்று விடுகிறாள் என்கிற காரணத்தினால் அவன் அவளைக் குறை கூறுகிறான். அதே சமயம் அவனுக்கு அவள் துணை தேவைப்படுகிறது. பெண்ணினால் தன் ஆற்றலை இழப்பது அவனுக்குப் புதிது.

பெண் வீழ்ச்சியுறுகிறாள். தன்னைச் செயலிழக்கச் செய்து தன்னுடைய வெறுமையை அவனுடைய முழுமையினால் ஈடுசெய்து விடுகிறாள் என்கிற காரணத்தினால் அவள் அவனைக் குறை கூறுகிறாள் அதே சமயம் அவளுக்கு அவன் துணை தேவைப் படுகிறது ஆணினால் தான் ஆற்றல் பெறுவது அவளுக்குப் புதிது

வாழ்வின் தோல்வி ஒவ்வொன்றும் புதியதோர் சமநிலையைத் தேடுதலே. ஆண் பெண் இரு பாலருடைய வீழ்ச்சியும் தனிமையிலிருந்து மீண்டும் இணைதலைத் தேடுதலிலேயே முடிவு தேடுகிறது. இணைதலின் சமப்போக்கை அவர்களுடைய உடல்கள் உணர்ந்திருக்க மனம் இதைப் புரிந்து கொள்ளவில்லை. உடல்களே இந்த உண்மையை உணர வலியுறுத்தல் தேவையாகிறது. சிந்தனை ஏற்படுத்தும் தொலைவிற்குத் தொடுதலே நெருக்கம் கொணர்கிறது. எண்ணச் சுழலில் சிக்கியிருக்கிற மனத்திற்கு உடல்களின் நெருக்கமே புரிதலை உணர்த்துகிறது.

உடல்கள் அவற்றின் போக்கில்தான் செல்லு மென்பதை மனம் மறந்து விடுகிறது. இதையே இணைதல் நினைவு படுத்துகிறது

உடலும் உள்ளமும் சமநிலையிலிருக்க வேண்டும்

ஆணும், பெண்ணும் கூட அவ்வாறே இயற்கையின் மெய்மையைப் புரிந்து கொள்ளப் பாதங்கள் கூத்திட வேண்டும் 207. சிறப்பான அசையாநிலை

ஒவ்வொரு சிந்தனைக்கும் செயலுக்குமிடையே, சிந்தனையையும் செயலையும் சரிசமப்படுத்தும் வகையில் அசையா நிலையிலிருந்து அசையா நிலைக்கு இட்டுச் செல்லும் சிறப்பான ஓர் அசையா நிலை உள்ளது

ஒவ்வொன்றும் அசையாநிலையிலிருந்து எழுந்து பின்னர் அதே அசையாநிலைக்குத் திரும்பிச் செல்கிறது

அசையா நிலை என்பது எண்ணமிடாத நிலையும் செயல்படாத நிலையும் ஒருமிக்கும் ஒரு சிறப்பான அசையா நிலையாகும்

இணைவதிலும் ஓர் அசையா நிலை உள்ளது. எவருடைய முயற்சியுமில்லாமலேயே இந் நிலை ஏற்படுகிறது உடல்கள் உடல்களையும், உள்ளங்கள் உள்ளங்களையும் செயலிழக்கச் செய்யும் நிலை இது.

208. முயற்சி எடுக்காத முயற்சி

உள்ளே இருப்பது வெளியே இருப்பதை ஒன்றுவதும், முடிவு பெறாததை முடிப்பதுமான நிலையே ஆணும் பெண்ணும் இணைவது.

உடல் அசைவு கொடுப்பது, மனம் மனமாகவும், உடல் உடலாகவும் செயல்படும் போதும் ஏற்படும் அசையா நிலையாகும்

இணைதல் என்பது ஆணும் பெண்ணும் கூடும் முயற்சி எடுக்கா முயற்சியும், நிலைத்து நிற்கும் அமைதியான பேசாமையுமாகும்.

209. ஆணும் பெண்ணும் இல்லாவிடில்?

கலவியின் அந்த அமைதியான நேரத்தில் ஆணின் முழுமையையும் எடுத்துக் கொண்டபின் தன்னுடைய வெறுமையை முழுவதுமாக நிரப்பப்பட்ட நிலையில் வேறு என்ன தேவையிருக்கிறது பெண்ணுக்கு? அதேபோல், தன்னுடைய ஆற்றலை யெல்லாம் பெண்ணுடைய வெறுைைய இட்டு நிரப்பிய பின், கொடுப்பது வேறு என்ன இருக்கிறது ஆணுக்கு? ஆண் பெண்ணை அழித்து விடுகிறான், பெண் ஆணை அழித்து விடுகிறாள்

ஆண் தன்னுடைய ஆற்றலை எல்லாம் பெண்ணுக்குக் கொடுத்து விடுவதாலும், பெண் ஆணுடைய ஆற்றலை எல்லாம் எடுத்துக் கொள்வதாலும் இருவருக்குமே இழப்பு என்பதைத் தவிர கண்ட பலன் என்ன? வெறுமைதான் எச்சம்.

அண்மையில் இந்த முடிவுக்கு வருவது சரிதானா? ஆணையும் பெண்ணையும் தவிர இந்தப் புதிரை யார் விடுவிக்க முடியும்?

210. திகைப்பூட்டும் நிலை

கலவியில் திளைத்திருக்கும் காதலர்களில், அவன் தன்னைக் கடந்து செல்கிறான்; தன்னையே மறந்து விடுகிறான். அதேபோல் பெண்ணும் தன்னைக் கடந்து சென்று விடுகிறாள். தன்னை மறந்து விடுகிறாள்.

உருவம் என்கிற நிலையை அவள் கடந்துவிடும் போது அவள் அவனுக்கு ஒரு பொருளேயில்லை. அதேபோல் உருவம் என்கிற நிலையை அவன் கடந்து விடும் போது, அவன் அவளுக்கு ஒரு பொருளேயில்லை. ஒருவருக்கு மற்றவர் தெரிந்தவர் என்கிற நிலையே அழிந்து போகிறது.

ஆசை வைத்துக் கொள்ளாததினாலேயே அவர்கள் ஆசையுடையவர்களாகிறார்கள். ஒருவருடன் மற்றவர் பிணைந்திருக்கும் போது திகைப் பூட்டும் ஒரு நிலையே நம் கண்களுக்குத் தென்படுகிறது.

211. மீண்டும் மீண்டும் திரும்பும் காலம்

முடிவு மறுபடி தொடக்கம் இவற்றிற்கு முன்னர் ஆண் பெண் இருவரும் தம்மை மறந்த ஓர் அற்புத நிலையில் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும் காதலர்களே, அவர்களின் தனிமை நிலை என்ன வாயிற்று? வேறுபாடுகள் என்னவாயின? ஒன்றாகக் கலந்த அந்த இருவர் எங்கே போயினர்?

விடுதலை, முடிவு பிரிவில் முடிகிறதும், மீண்டும் விழிப்புணாவுக்குத் திரும்புகிறதுமான நிலை ஏற்படும் வரை தனிமையிலுள்ள உடல் மனத்தைக் குழப்பிக் கொண்டே இருக்கிறது.

தொடக்க நிலைக்குத் திரும்பும் காலம் எனபதிலுள்ள மனநிலை எததனை வியப்பானது!

212 முழுமையின் மறுபாதி

கலவியில் ஆண் பெண்ணிடம் தன்னைவிட்டுக் கொடுக்கும் போதும், பெண் ஆணிடம் தன்னை விட்டுக் கொடுக்கும் போதும், ஒருவர் மற்றவருக்கு முழுமையின் மறு பாதியை அளிக்கின்றனர்

ஆண் பெண் இரு பாலரும் ஒன்றாய் இணைவதை முழுமை செய்கின்றனர். அதே சமயம் ஒவ்வொருவருமே பிரிவின் விரைவையும் முழுமை செய்கின்றனர்

米米 米