மதங்க சூளாமணி

விபுலானந்த அடிகள்


மதங்க சூளாமணி

விபுலானந்த அடிகள்

மதங்க சூளாமணி

விபுலானந்த அடிகள்

பிரதேச அபிவிருத்தி அமைச்சு வெளியீடு

+++++++++++++++

மதங்கசூளாமணி

என்னும் ஒரு

நாடகத்தமிழ் நூல்

இது.

மதுரைத்தமிழ்ச்சங்கத்துப் பண்டிதரும், லண்டன்மாநகர்ப்

பல்கலைக்கழகத்துப் பௌதிகசாஸ்திர விற்பன்னருமாகிய

விபுலானந்த சுவாமிகள்

இயற்றியது.

செந்தமிழ்ப்பிரசுரம்

மதுரை:

தமிழ்ச்சங்க முத்திராசாலையிற்

பதிப்பிக்கப்பட்டது

1926.

மறு வெளியீடு : பிரதேச அபிவிருத்தி அமைச்சு

1987 ஜுலை 19

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்.

பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

மாண்புமிகு செல்லையா இராசதுரை அவர்கள்

வழங்கும் அணிந்துரை

அருள் திரு விபுலானந்த அடிகள் முத்தமிழ் வித்தகர். காலத்தால் மூத்த உலக மொழிகளில் இமயம் போல் நிமிhந்து நிலைத்து நிற்கும் தமிழ் மொழியை. இலக்கியச் சிறப்பு வாய்ந்த இன்பத் தமிழ் மொழியை. இயல், இசை, கூத்து என மூவகையாகப் பிரித்து வளர்த்துப் பெருமை கூட்டிய தமிழ் மொழியை, சங்கத்திலே ஆராயப்பட்ட ஒரே மொழியான தங்கத் தமிழ் மொழியை பல்கோணங்களில் ஆய்ந்த துறவி விபுலானந்த அடிகள்.

இயல் தமிழில் ஈடும், எடுப்புமற்றவராக விளங்கினார்.

இசைத் தமிழில் எவரும் நினைத்துப் பார்க்க முடியாத ஆராய்ச்சி நடாத்தினார்.

கூத்துத் (நாடகத்) தமிழில் இறவாப் புகழ் படைத்த நூல்கள் பல உருவாக்கினார்.

இசைத்தமிழ், நாடகத் தமிழ் ஆராய்ச்சிக்கு அடியெடுத்துக் கொடுத்த மூலவர் அருள் திரு விபுலானந்த அடிகள்.

நாடக இலக்கண நூல்களில் மதங்கசூளாமணி நாகரத்தின மகுடம் போன்றது. நவரெத்தின ஒளிவீசும் அற்புதப் படைப்பு. நாடகத் தமிழில் கற்பனைக்கெட்டாத ஆய்வுகளை மதங்கசூளாமணியில் தந்து நம்மை அதிசயிக்க வைக்கின்றார்.

மதங்கர் என்பவர் கூத்தர். உலகம் ஒரு நாடக மேடை. உலக மக்கள் அனைவரும் நாடகத்தில் பல்வேறு பாத்திரங்கள்.

“நானிலம் யாவுமோர் நாடக மேடையே

ஆண் பெண் அனைவரும் அதில் நடிப்பவர் தாம்”

என ஆங்கிலக் கவிஞர்கள் மட்டுமல்ல, தமிழ்க் கவிஞர்களும், அறிஞர்களும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

கம்பரது கவிகள், நயங்கள் அனைத்தும் கொண்டவை. அவரது பாடல்கள், ஒவ்வொன்றும், முத்திரை பதிக்கப்பட்டவை. முதன்மை பெற்று விளங்குபவை. அது போல சேக்ஸ்பியரது நாடகங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக விளங்குவது போல் சேக்ஸ்பியர் நாடகச் சக்கரவர்த்தி என்று அடிகள் பாராட்டியுள்ளார். நாடகங்களை எழுதியதோடு மாத்திரம் நின்று விடாமல் அவற்றில் நடித்தும், தம்மால் உருவாக்கப்பட்ட கதா பாத்திரங்களுக்கு உயிரூட்டியவர் சேக்ஸ்பியர். சேக்ஸ்பியர் என்ற ஆங்கிலப் பெயரை செகசிற்பியர் என்று தமிழுக்குக் கொண்டு வந்தவர் அடிகள் சேக்ஸ்பியர். சேக்ஸ்பியர் என்ற ஆங்கிலப் பெயரை செகசிற்பியர் என்று தமிழுக்குக் கொண்டு வந்தவர் அடிகள். சேக்ஸ்பியர் மீதும் அவரது நாடகங்கள் மீதும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர் அடிகள். அவரை நாடகக் கவி என்று போற்றிப் புகழ்வதுடன், “மதங்கசூளாமணி” என்னும் மங்களப் பெயர் சூட்டியும், பெருமைப்படுத்தியிருக்கிறார் என்றால் சேக்ஸ்பியரது நாடகங்களில் அவருக்கிருந்த ஈடுபாடு எளிதிற் புலனாகின்றது.

நாடகப்பாத்திரங்கள், சம்பவங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையெல்லாம் மிக நுணுக்கமாக ஆராய்ந்து அடிகள் மதங்கசூளாமணியில் வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் அறிஞர்கள் வகுத்துரைத்த நாடக உறுப்புகள் அனைத்தும் செகசிற்பியரது நாடகங்களில் செறிந்து, நிறைந்திருப்பதை அடிகள் கண்டு அனுபவித்து தமிழ் உலகிற்கு அள்ளி வழங்கியுள்ளார். “டுழஎந’ள டுயடிழரச டுழளவ” என்னும் ஆங்கில நாடகத்தை “காதல் கைம்மிக்க காவலன் சரிதை” என்றும், “முiபெ டுநயச” என்னும் ஆங்கில நாடகத்தை “ஆகுல ராஜன் சரிதை” என்றும், “சுழஅநn யனெ துரடநைச” என்னும் ஆங்கில நாடகத்தை “இரமியன் சுசீலை சரிதை” என்றும், “வுhந வுநஅpநளவ” என்னும் ஆங்கில நாடகத்தை “பெரும் புயற் சரிதை” என்றும் “ஆயஉடிநவா” என்னும் ஆங்கில நாடகத்தை “மகபதி சரிதை” என்றும் “ஆநசஉhயவெ ழக ஏநniஉந” என்னும் ஆங்கில நாடகத்தை “வணிகதேய வர்த்தகன் சரிதை” என்றும், “யுள லுழர டுமைந ஐவ” என்னும் ஆங்கில நாடகத்தை “வேனிற் காதை” என்றும், “வுhந றுiவெநச’ள வுயடந” என்னும் ஆங்கில நாடகத்தை “கூதிர்காதை” என்றும் “வுறநடகவா Niபாவ ழச றூயவ லுழர றுடைட” என்னும் ஆங்கில நாடகத்தை “கருதியது எய்திய காதலர் சரிதை” என்றும் மூல ஆசிரியராக செகசிற்பியரே அதிசயிக்கும் வண்ணம் அழகு தமிழில் பெயர்களைச் சூட்டினார் அடிகள். அடிகளாரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் பல இடங்களில் மூலத்தையே கவித்துவத்தில் விஞ்சி நிற்பதை தமிழ் அறிஞர்கள் விதந்து பாராட்டியுள்ளார்கள்.

கதை தழுவி வரும் கூத்து நாடகம் என்றார் நூலாசிரியர். நாடகத்தின் பிரிவுகளையும் பக்குவ நிலைகளையும் அற்புதமாக ஆராய்ந்து நாடகங்களை ஆக்குபவர்களுக்கு நல்வழி அமைத்துக் கொடுத்தார்.

மதங்கசூளாமணி அருள் திரு விபுலானந்த அடிகளின் மனதிற்கு மிகவும்; பிடித்த ஒரு படைப்பு.

இளைய தலைமுறையினருக்கு இந்நூல் படிக்கக் கிடைக்காமல் இருந்தது ஒரு பெருங்குறை. தமிழ் அறிஞர் வித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா அவர்கள் அருள் திரு விபுலானந்த அடிகள் மீதும் அவரது படைப்புக்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மதங்கசூளாமணியை மறுபதிப்புச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என்மனதில் ஊட்டியவர் அவரே.

தமிழ் கூறும் நல்லுலகம் காலத்தால் மறக்கவொண்ணா தமிழ் அறிஞர் அருள் திரு. விபுலானந்த அடிகள். வரலாறு என்றும் சொல்லும் அழியாத கலைக் கூடமாக அவரது பெயரால் விபுலானந்தர் இசை, நடனக் கல்லூரி அமைக்கும் வாய்ப்பினை திருவருள் எனக்குக் கூட்டி வைத்திருந்தது. அப்பெருமகனாருக்கு ஞாபகார்த்த முத்;திரை வெளியிடும் வாய்ப்பினையும் இறைவன் எனக்கு அருளினான். மேலும் மதங்கசூளாமணி என்னும் அவரது நாடகத் தமிழ் ஆய்வு நூலை மறுபதிப்புச் செய்து வெளியிடும் பெருவாய்ப்பினையும் இறைவன் எனக்குத் தந்துள்ளான். திருவருளின் திறத்தை என்னென்று வாழ்த்துவது!

தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலை இருகரம் கூப்பி ஏற்றுமதிப்பளிக்கும் என நம்புகின்றேன்.

நன்றி

செ. இராசதுரை

பிரதேச அபிவிருத்தி அமைச்சர்,

முன்னுரை

வடமொழியாசிரியராகிய தனஞ்சயனாரும் ஆங்கிலமகாகவியாகிய செகசிற்பியாரும் செவ்விதினுரைத்த நுண்பொருண்முடிவுகளை நிரைபடவகுத்து முறைபெறக் கூறுவதற்கு முயன்றோனாயினும், ஆங்கம் முயற்சிக்கு வேண்டிய ஓய்வு ஏற்படாமையினால் இந்நூல் இவ்வுருவத்தில் முடிவுபெறநேரிட்டது. மேனாளில் ஓய்வு ஏற்படுமாயின் வழுக்களைந்து புதுக்கி, விரிவுறவெழுதி யுலகுக்களித்தல் என்கடனாகும். தசரூபத்தைத் தனிநூலாகத் தரல்வேண்டுமென்றும், செகசிற்பியாரது நாடகங்களை விரிவுறமொழிபெயர்த்து வெளியிடல் வேண்டுமென்றும், இந்நூல் இளமாணவரும் எளிதினுணர்ந்து கொள்ளத்தக்க நடையில் முடியவேண்டுமென்றும், நண்பர் பலர் கூறிய ஊக்கவுரைகள் என்னுள்ளத்திற் பதிந்துகிடக்கின்றன@ காலம் வாய்ப்பின் இயன்றவை புரியப்பின்னில்லேன்.

விபுலாநந்தர்

முகவுரை

“அந்தணர் வேள்வியொ டருமறை முற்றுக

வேந்தன் வேள்வியொ டியாண்டுபல வாழ்க

வாணிக ரிருநெறி நீணிதி தழைக்க

பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக

அரங்கியற் பொருளுரை நிரம்பிவினை முடிக

வாழ்க நெடுமுடி கூர்கநம் வாய்மொழி”

எனயாம்,

மங்கல நல்லுரை வழிமுறை யியம்புதும்

திங்களங் குழவி சேர்த்திய திருமுடி

ஐங்கரன் சித்தி விநாயகன்

செங்கதிர் புரைகழற் சேவடி தொழுதே”

மதங்கர் - கூத்தர்@ அன்னாருக்கு ஒரு சிரோரத்தினம் போன்றாரை மதங்கசூளாமணி யெனல் பொருத்தமாகும். உலகனைத்தும் ஒரு நாடக மேடையாமெனவும், ஆடவரும் பெண்டிரும் அந் நாடகமேடையினுட் புகுந்து நடிக்கின்ற கூத்தருங்கூத்தியருமாவரெனவுங்கூறிய ஒர் ஆங்கிலக் கவிவாணர் உளர். சிறந்த நாடகக்கவியாகிய இப்பெருந்தகையார் உலக வாழ்க்கையனைத்தையுமே ஒருநாடகமாகக் கற்பித்து அதனை மதலைப் பருவம், பாலப்பருவம், யௌவனப்பருவம்;;;;, வீரப்பருவம், நீதிப்பருவம், வயோதிகப்பருவம், இறுதிப்பருவம் என ஏழங்கமாக்கிக்கூறியது சாலவுஞ் சிறப்புடைத்து. அக்கூற்று வருமாறு:-

“அங்கணுல கனைத்தினையும் ஆடவரங்க மெனலாகு மவனி வாழும்

மங்கையரை யாடவரை நடம்புரியு மக்களென மதித்தல் வேண்டும்

இங்கிவர்தாம் பலகோல மெய்திநின்ற நாடகத்தி னியல்பு கூறிற்

பொங்குமங்க மேழாகிப் போக்குவர விருக்கையொடு பொருந்து மன்றே.

முதலங்கத் தியல்புரைப்பின் முலையந்தி மணியிதழ்வாய் முகிழ்திறந்து

குதலைச்சின் மொழிமொழிந்து செவிலித்தாய் கரதலத்திற் கூத்து மாடித்

திதலைப்பொன் செறிதனத்தார் சேர்தணைக்கச் சிறுநகையிற் சிறப்புக் காட்டும்

மதலைச்செம் பருவத்தின் வனப்பனைத்தும் விளங்கநின்ற மார்க்க மாகும்.

மணிமருள்வா யிளஞ்செவ்வி மதலையென நடித்தமகன் வதன நோக்கம்

அணிநிறையு மோரைந்தாண் டடைதலுமே கணக்காய ரகத்தை நோக்கி

இணைபிரிந்த விளஞ்சிந்தை பின்னீர்க்க முன்னேகி யிளஞாயிற்றின்

குணநிறைந்த சிறுபொழுதிற் குறுகிநடந் துறுகின்ற குறிப்பிரண்டே

எல்லைவந்த மூன்றாகு மங்கத்தின் குறிப்புரைப்பி னேருஞ் சீரும்

புல்லநின்ற யௌவனமாம் பருவமுற வேனில்வேள் பொருபோர் வேட்டு

மெல்லிநல்லார் தமைநாடி யவைவர்தங் கட்புருவம் வியந்து பாடிச்

சொல்லரிய காமவன லுளம்வெதுப்ப நெடிதுயிர்க்குந் தோற்ற மாகும்.

அடலரியே றெனவார்த்துப் புலிமுகத்த னிவனென்ன வருபோர் வேட்டுப்

படுகளத்தி லதிரிடிபோற் படிந்துறுமும் பீரங்கிப் படைமுன் னாக

மிடல்சிறப்பப் பொருதெனினும் புகழ்பெறுவன் யானென்ன வீர மேவல்

தொடர்புடைய நான்காகு மங்கத்தின் குறிப்பென்னச் சொல்ல லாமே.

வட்டவுரு வெய்துதரம் வடிவினிற்சற் றகன்றுநிற்ப மனத்தினீர்மை

திட்டமுற நயனத்திற் சினக்குறிப்பு மருட்குறிப்புஞ் சேர்ந்து நிற்பச்

சட்டமுறை யறிந்தெவர்க்குஞ் சமனிலையாய் நீதிசொலும் சார்பின் மேவி

இட்டமுறும் பெருமகன்ற னியனிலையை யைந்தென்ன வியம்பலாமே.

முதுமையுற வுடறளர்ந்து முகஞ்சுருங்கி யுருக்குலைந்து மூப்பின் றோற்றம்

இதுவெனக்கண் டுளமெலிய விணைவிழியிற் படிக்கக்கண் ணியைந்து நிற்பக்

கதுமெனவே யிருமல்வரக் காறளர்ந்து தள்ளாடிக் கருத்து மாறித்

குதலைமொழிச் சிறுவருரை குலவுகின்ற கிழப்பருவங் கூறினாறே.

பண்ணியையு மென்மொழிசேர் பாலரொக்குங் கிழப்பவரும் பயின்ற பின்னர்

கண்ணினைகள் நோக்கொழியப் பல்லொழியச் சுவையொழியக் கருத்து நீங்க

உண்ணுமுணவொழித்தனைத்து மொழிந்து மறைந்துயிர்வாழ்க்கை

யொருவுந் தோற்றம்

எண்ணுமிந்த நாடகத்தி னிறுதியென யாமெடுத்திங் கியம்பு வாமே”

இவ்வாறு உலகவாழ்க்கையை நாடகமாகக் கற்பித்துக்கூறிய இக் கவிவாணர் வனப்பின்மிக்க நாடகநூல்கள் பலவற்றை உலகுக்கு அளித்துள்ளார். அஃதன்றி, அரங்கினுட்புகுந்து தாமும் கூத்தருள் ஒருவராக நின்று நடித்துள்ளார். நாடகக்கவிகளுள் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறரிலர். ஆதலால் ஷேக்ஸ்பியர் என்னும் இயற்பெயர் பூண்ட இக் கவிவாணரை யாம் மதங்கசூளாமணி யென வழங்குவாம். இவரது நாடகங்களுள் அமைந்துகிடந்த வனப்பினுட் சிலவற்றை யாராயப்புகுந்த விவ்வுரைத்தொடரும் மதங்கசூளாமணியென வழங்கப்பெறும்.

கவிவாணர் இயற்பெயரைத் தமிழ்மொழியாக்கிச் செகற்சிற்பியார் என வழங்குதலும் பொருத்தமாகும். என்னை? நலனில்லாச் சிலையுருவை உளியாற் செதுக்கி நலனிறைந்த திருவுருவமாக்குவோன் கைவல்ல சிற்பியெனப்படுவானன்றோ? அங்ஙனமாதலின், அயன்படைத்த படைப்பினும் பார்க்க நயன்படைத்த மெல்லிநல்லாரையும் ஆடவரையும் உருவப்படுத்தியுதவும் நாடகக்கவியை யென்னென்று புகழ்ந்தேத்துவதென உன்னுமிடத்துச் “செகசிற்பியா” ரெனப் புகழ்ந்து போற்;றுதல் சிறப்புடைத்தாமெனப் புலப்படுகின்றது.

கம்பநாட்டாழ்வார் அகலக்கவிகளுள் முதன்மை பெற்று விளங்குவது போலச் செகசிற்பியர் நாடகக்கவிகளுள் முதன்மைபெற்று விளங்குகின்றார். இவர் அமைத்த நாடகநூல்கள் தமிழறிஞர் வகுத்துரைத்த சந்தியுஞ் சுவையுஞ் சத்துவமும் பிறவு மென்னும் நாடகவுறுப்புக்களனைத்தும் செவ்விதி னமைந்துகிடக்கு மியல்பினவாதலின், அவற்றை யாராய்தல் நாடகத்தமிழாராய்ச்சிக்கு இன்றியமையாததாமென எனது உள்ளத்துப் புலப்பட்டது. அஃதன்றியும், “வடவேங்கடந் தென்குமரி” யென வெல்லைவகுத்தது எழுத்திலக்கணத்துக்குஞ் சொல்லிலக்கணத்துக்கும் மாத்திரந்தானே. “இமையோர்தேஎத்து மெறிகடல்வரைப்பினு - மவையில் கால மின்மை யான” வென்றமையால் அறம் பொருள் இன்பமும் அவற்றினது நுகர்ச்சியும், அவற்றைக்கூறும் பொருணூலும் நாடகநூலும் என்னும் இவை யாண்டும் ஒப்பமுடிந்தனவாம். ஆதலால், பிறமொழியாளர் வகுத்துரைத்த நாடகநூலுள் ஏற்பனவற்றைக் கொள்ளுதலால் எய்துவதோர் இழுக்கில்லை.

“இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாயுள்ள தொன்னூல்களும் இறந்தன. நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாயுள்ள தொன்னூல்களு மிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒரு சாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு விறுதி காணாமையின் அவையு மிறந்தன போலும்” என ஆசிரியர் அடியார்க்;குநல்லார் கூறினாராதலின். தென்வளஞ்சான்ற நாடகப்பெருநூல்கள் அவர்காலத்துக்கு முன்பே யழிந்து போயின. அவர் காலத் திருந்தநூல்களும் பின்ன ரழிந்;தொழிந்தன அடியார்க்குநல்லார் இயற்றியருளிய சிலப்பதிகாரவுரையில் ஆங்காங்குக் காட்டப்பட்டிருக்கும் நாடகவிலக்கணமுடிபுகளை யாதாரமாக நிறுத்திச் செகசிற்பியருடைய நாடகநூல்களை இலக்கியமாகப் பொருந்தவைத்து ஆராய்வது கருதிற்று இவ்வாராய்ச்சி. அடியார்க்குநல்லார்காலத்திருந்து பின்ன ரிறந்துபோன இசைநாடகநூல்களாவன:- “தேவவிருடியாகிய குளுமுனிபாற்கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி, இடைச்சங்கத்து அநாகுலனென்னுந் - தெய்வப்பாண்டியன் தேரொடு விசும்பு செல்வோன் திலோத்தமையென்னுந் தெய்வமகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியாநிற்கத் தோன்றினமையிற் சாரகுமாரனென அப்பெயர்பெற்ற குமரன் இசையறிதற்குச் செய்த இசைநுணுக்கமும், பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார்செய்த பரதசேனாபதீயமும், கடைச்சங்கமிரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூடத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாகத்தமிழ்நூலும்” என்பன.

மேலைப்பிரிவினுட் குறிப்பிட்ட நூல்களினின்றும் எடுக்கப்பட்ட சூத்திரங்கள்சில அடியார்க்குநல்லாருரையால் அறியக்கிடக்கின்றன. அவற்றாலுணரப்படும் இலக்கணமரபுக்கு இலக்கியமாகிய நாடகங்கள் இறந்தொழிந்தன. பிற்காலத்துத்தோன்றிய நாடகங்கள் சந்தி, சுவை, பொருளொருமை யென்னு மிவற்றைத் தெளிவுறக்காட்டாது விரவி நடந்த காரணத்தால் அவற்றை இலக்கணமமைந்த நாடகங்களெனச் சொல்லுதற்கு இடமில்லை. இனிப் புதுநாடகமமைப்பதற்கு முற்படும் கவிஞருக்கு முறையறிந்தமைப்பதற்கு உதவியாகிய கருவிநூலு மில்லை. செஞ்சொற்புலவர் செவ்விநிறைந்த நாடகங்களை யமைத்துதவாத காரணத்தினாலே கல்வியறிவில்லாதார் கண்டகண்டவாறு நாடகங்களை யமைக்கமுற்பட்டு நாடகத்துக்கே ஒர் இழிந்த பெயரையுண்டாக்கி விட்டனர். உயிர்க்குறுதிபயக்கு மருந்தினை உண்ணவிரும்பாத ஒரு மகனுக்குச் சர்க்கரையினுள் அம்மருந்தினைப் பொதிந்துவைத்து உதவுகின்ற அன்புடையாளன் போல, உயிர்க்குறுதிபயக்கும் உண்மையினை நவரசங்களுட் செறிந்துவைத்து உதவும் நீர்மையது நாடகம். நாடக்கவி தன்னை யோர்வைத்தியனென அறிதல் வேண்டும். நோயாளியிடத்துப் பொருளினைப் பெறுதல்கருதிப் பொருந்தாப்பண்டத்தை மருந்தெனக்கொடுக்கும் வைத்தியனுளனாயின் அவனால் விளையுங் கேட்டுக்கோர் அளவில்லை. காமக்கனலை மூட்டுதற்கெண்ணிச் சிற்றின்பச்சரிதைகளை நாடகமாக்கியுதவும் போலிநாடகக்கவிகளால் நாட்டுக்கு விளைகின்ற கேடு மேற்குறித்த போலிவைத்தியனால் விளைகின்ற கேட்டினைப் பார்க்கினும் பல்லாயிரமடங்கு பெரிது. முத்தமிழினு ளொன்றாகிய நாடகத்தை வெறுத்தொதுக்காது அதனை யாராய்ந்து சீர்ப்படுத்தி நல்ல நாடகங்களையமைப்பது கற்றுவல்லோர் கடனாகும்.

நாடகவியலினை யாராயப்புகுந்த இச்சிற்றாராய்ச்சியிற் கண்ட முடிபுகளனைத்தும் பலநாளாக என்னுள்ளத்தினுட் பயின்றுகிடக்கின்றன. மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் இருபத்துமூன்றாம் வருடோத்ஸவத்துக்குச் சென்றிருந்தபோது அவற்றினைத் தொகுத்துத் தமிழ்நாட்டுப்பெரும் புலவர் குழுமியிருந்த வித்துவக்கழகத்திற் பெரும்புலவருட் பெரும் புலவராகிய மஹாமஹோபாத்தியாய சாமிநாதையரவர்களது தலைமையின்கீழ் இயன்றவரை விரித்துக்கூறினேன். இவ்வாராய்ச்சி பயன் றரத்தக்கதென மஹாமஹோபாத்தியாயரவர்களும் ஏனையபுலவர்களும் பாராட்டினார்களாதலாலும் சங்கத்துக் கௌரவகாரியதரிசியாராகவிருந்து தமிழபிவிருத்திக்காகப் பல்லாற்றானும் முயற்சித்துத் தமது கைப்பொருளையும் நேரத்தையுஞ் செலவிட்டுவருபவரும் எனது நண்பருமாகிய மதுரை ஹைக்கோர்ட்வக்கீல் ஸ்ரீமாந் வு. ஊ ஸ்ரீநிவாஸையங்காரவர்கள் இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிடவேண்டுமென்று பலமுறை கூறி ஊக்கப்படுத்தினார்களாதலினாலும், இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலிலிருந்து இவ்வாராய்ச்சியை எழுதப் பெற்ற பெரும் பேற்றினை நினைக்கும்போது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியோனாகியயான் எடுத்துக்கொண்ட இக்கருமம் இனிதுநிறைவுறும் பொருட்டு உலக மாதாவாகிய மீனாºpயம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக.

உள்ளுறுபொருள்வகை.

பொருள் பக்கம் பொருள் பக்கம்

முகவுரை ஒi. ஒii விருத்திநான்கு: சாத்து

நூல் 1 - 107 வதி, ஆரபடி, கைவிதி,

உறுப்பியல் 1 - 16 பாரதி 13

(க) இயல்வகை 1 (கக) பதினோராடல்: கடையம்,

(உ) நாடகத்தின் வரை மரக்கால், குடை, துடி, அல்லியம்,

விலக்கணம் 1 மல், கும்பம், பேடு, பாவை,

சாந்திக்கூத்தின்வகை 2-1 பாண்டரங்கம், கொடு

(ந) முத்தமிழ்த்தன்மை 2-1 கொட்டி 13

(ச) நாடகவுறுப்பு 2

சந்தி 3-2 (கஉ) சொல்மூன்று: உட்சொல்

சேதம் 4 புறச் சொல்,

(ரு) சுவை, குறிப்பு, சத்து ஆகாயச்சொல் 15

வம், அவிநயம் 7-4 சொல்வகைநான்கு:

(கூ) வேத்தியல், பொதுவியல் 5 சுண்ணம். சுரிதகம் 15

(அ) நகைச்சுவை 7 வண்ணம் இருபது 15

அழுகைச்சுவை 8 வரிப்பாடல் 16

இளிவரற்சுவை 8 வரிக்கூத்து 16

மருட்கைச்சுவை 8 விலக்குறிப்புப்பதினான்கு 16

அச்சச்சுவை 9 எடுத்துக்காட்டியல் 17-76

பெருமிதச்சுவை 9 (க) செகசிற்பியார் வரலாறு 17

வெகுளிச்சுவை 10 நகைச்சுவைக்கிலக்கியமாகிய

உவகைச்சுவை 10 காதல்கைம்மிக்க

நடுவுநிலைச்சுவை 10 மிக்க காவலன் சரிதை

(கூ) அவிநயவிரி 11 i முகம் 18

(க0) பொருள்நான்கு: அறம் ii பிரதிமுகம் 20

பொருள், இன்பம், வீடு 12 iii கருப்பம் 21

சாதிநான்கு நாடகம், iஎ விளைவு 22

பிரகரணப்பிரகரணம், எ துய்த்தல் 26

பிரகரணம், அங்கம் 13 (உ) அவலச்சுவைக்கு மிளி

யோனிநான்கு: உள் வரற்சுவைக்குமிலக்கியமாகிய

ளோற்குள்ளது, உள் ஆகுலராஜன்

ளோற்கில்லது, இல் சரிதை

லோற்குள்ளது, இல் i. ii.முகமும் பிரதிமுகமும் 28

லோற்கில்லது 13 iii கருப்பம் 30

iஎ விளைவு 31 i முகம் 50

எ துய்த்தல் 32 ii பிரதிமுகம் 52

இந்நாடகம் புறத்திணைப் iiகைருப்பம் 53

பாலதென்பது 33 iஎ விளைவு 55

கதைக்குங் கிளைக்கதைக் எ துய்தல் 57

குமுள்ள தொடர்பு 33 (எ) பெருமிதச்சுவைக்கிலக்

(ங) அவலச் சுவைக்கும் கியமாகிய யூலியசீசர்

உவகைச் சுவைக்கும் சரிதை

இலக்கியமாகிய - இரம் (அ) வெகுளிச்சுவைக் கிலக்

மியன் சுசீலை சரிதை கியமாகிய சேனாபதி

i முகம் 33 சரிதை 60

ii பிரதிமுகம் 34 (கூ) உவகைச்சுவைக்

iii கருப்பம் 37 கிலக்கியமாகிய வேனிற்;

iஎ விளைவு 38 காதை 69

எ துய்த்தல் 39 (க0) உவகைச்சுவைக் கிலக்

(ச) அவலச் சுவைக்கும்வெகு கியமாகிய கூதிர்க்

ளிச் சுவைக்கும் இலக்கிய காதை 69

தீநட்பஞ்சிய (கக) உவகைச்சுவைக்கும்

தீமோன்சரிதை 40 நகைச் சுவைக்குமிலக்

மருட்கைச்சுவைக்கும் கியமாகிய கருதிய

உவகைச் சுவைக்கும் தெய்திய காதலர்

இலக்கியமாகிய சரிதை 72

பெரும்புயற்சரிதை (கஉ) சுவையமைதி 75

i முகம் 40 தலைவியர்வகை 76

ii பிரதிமுகம் 44 தலைவர் வகை 76

iii கருப்பம் 44

iஎ விளைவு 45 ஒழிபியல் 77-107

எ துய்த்தல் 45 (க) தசரூபகவரலாறு 77

(ரு) அச்சச்சுவைக்கும் தசரூபகம்: முதலதிகாரம்

இலக்கியமாகிய காரம் (பொருள்சந்தி

மகபதிசரிதை சொல்

i முகம் 46 லுணர்த்துவது) 77-82

ii பிரதிமுகம் 48 தெய்வவணக்கமும்,

iii கருப்பம் 49 செயப்படுபொருளும் 77

iஎ விளைவு 49 நாட்டியத்தின்

எ துய்த்தல் 49 வரைவிலக்கணம் 77

(கூ) பெருமிதச் சுவைக்கும் நாட்டியவகைபத்து:

பிறசுவைக்கும் இலக் நாடகம், பிரகரணம்

கியமாகிய வணிக தேய பாணம், பிரகசனம்,

வர்த்தகன் சரிதை டிமம், வியாயோகம்.

சமவகாரம், வீதி அங்கம், முதற்சந்தியின் உட்பிரிவுகள்

ஈஹாமிருகம் 77 பன்னிரண்டு:

தேசி, மார்க்கம் 78 உபNºபம், பரிக்

இலாசியம், தாண்டவம் கிரியை, பரிந்யாசம்.

அகமார்க்கம் விலோபனம், யுக்தி,

புறமார்க்கம் 78 பிராப்தி, சமாதானம்,

பொருள் (வஸ்து) விதானம், பரிபாவனை,

தலைவன் (நேதா) உற்பேதம், கரணம்,

சுவை (ரசம்) 78 பிராப்தி, சமாதானம்,

பொருள் (வஸ்து) விதானம், பரிபாவனை,

தலைவன் (நேதா) உற்பேதம், கரணம்,

சுவை (ரசம்) 78 வேதை 79

பொருளினுட்பிரிவுகள் இரண்டாஞ்சந்தியின்

இரண்டு : முதற் உட்பிரிவுகள் பதின்

பொருள் (ஆதிகாரிகம்) மூன்று விலாசம், பரிசர்ப்பம்

சார்புப்பொருள் விதூதம்

(பிராசங்கிகம்) 78 சமம், நருமம், நருமத்யுதி,

கிளைக்கதை (பதாகை) பிரகமனம்,

வழிநிகழ்ச்சி (பிரகரி) 78 நிரோதம். பரியுபாசனம்,

பழங்கதை (பிரக்கியாதம்), புஷ்பம், உபந்நியாசம்,

கற்பனைக்கதை வச்சிரம்

(உற்பத்தி), கலப்புக் வருணசம்மாரம் 80

கதை (மிச்சிரம்) 78 மூன்றாங்சந்தியின் உட்பிரிவுகள்

பொருண்மூலம் ஐந்து: பிரிவுகள் பன்னிரண்டு

விதை (பீஜம்), வரி அபூதாஹரமணம், மார்க்கம்,

நிலை (விந்து), கிளைக் ரூபம், உதாகிருதி,

கதை (பதாகை), வழி, கிரமம், சங்கிரகம், அநு

நிகழ்ச்சி (பிரகரீ), மானம், அதிபலம்

பொருண்முடிபு (காரி 78 தோடகம், உத்வேகம், சம்பிரமை

நாட்டியநிகழ்ச்சி ஆNºபம் 80

(அவஸ்தை) ஐந்து:

தொடக்கம் (ஆரம்பம்) நான்காஞ்சந்தியின் உட்பரிவுகள்

முயற்சி (பிரயத்தனம்) பதின்மூன்று:

பயன்விழைவு (பிராப்தி அபவாதம், சம்பேடம்,

யாசை), உளப்பாடு வித்திரவம், திரவம்,

(நியதாப்தி), பேறு சக்தி, தியுதி, பிரசங்கம்,

(பலயோகம்) 79 சலனம், வியவசாயம்,

சந்தி ஐந்து: முளை விரோதனம், பிரரோசனை,

(ழகம்), நாற்று (பிரதி விசலனம்

ழகம்), கருப்பம், ஐந்தாஞ்சந்தியின் உட்

துய்த்தல் (உபசங்கி பிரிவுகள் பதினான்கு:

ருதி ஸ்ரீ நிர்வாஹணம்) 79 சந்தி, விபோதம், கிர

தனம், நிர்ணயம், பரி தைரியம், தேஜசு,

பாºணம், பிரசாதம், வலிதம், ஒளதாரியம் 83

அநந்தம், சமயம், தலைவியர் எண்வகையர்

கிருதி, பாஷணம், பூர் சுவாதீனாபர்த்ருகை,

வபாவம், உபகூகனம், வாசகசஜ்ஜை, வீர

காவ்யசம்மாரம், ஹோற்கண்டிதை

பிரசஷ்டி 81 கண்டிதை, கலகாந்

இடைப்படுகாட்சி தரிதை. வி;ப்பிரலப்தை,

(அர்த்தோபNºபகம்) பிரோசிதப்பிரியை,

ஐந்து: விஷ்கம்பம் அபிசாரிகை 84

சூலிகை, அங்காசியம் தலைவிக்குத்தூதிய

அங்காவதாரம், ராவார் 84

பிரவேசிகம் 82 தலைமகனுக்கு உதவி

சொல் ஐந்து: பிரகாசம், யாவார் 84

சுவாகதம். ஜநாந்திகம், விருத்திநான்கு: கைசிகி

அபவாரிதம், ஆகாய சாத்துவதி, ஆரபடி

பாஷிதம் 82 பாரதி 84

(உ) தசரூபகம்: இரண்டாம் கைசிகிவிருத்தியின்

திகாரம் (யோனி, விருத்தி அங்கங்கள்: நருமம்

யுணர்த்துவது) 82-87 நருமஸ்பூர்ஜம், நருமஸ்

தலைவர்நால்வகையர்: போடம், நரும 85

உவகைமேவியதலைவன் கர்ப்பம். 85

(தீரலலிதன்) அறிவு சாத்துவதி விருத்தியின்

மேவியதலைவன் (தீர அங்கங்கள்: சம்லாபகம்

சாந்தன்), தறுகண்மே உத்தாபகம், சங்

மேவியதலைவன் (தீரோ காட்டியம், பரிவாத்

தாத்தன்), தறுகண்மே தகம் ஆரபடிவிருத்தியின் 85

லியதலைவன் (தீரோத்ததன்) 83 அங்கங்கள்: சங்ºpப்

இன்பவொழுக்கத்துக் திகம், சம்பேடம், வஸ்

குரியதலைவர் நால்வர்: துத்தாபனம்,

தºணன், சடன் அவபாதனம் 86

திருஷ்டன், அநுகூலன 83 மொழியமைதி 86

உபதலைவன் (பீடமர்த்தன் 83 (ங) தசரூபகம்: மூன்றாமதிகாரம்

(சாதி, சேதம் உணர்த்துவது) 87-94

தலைவனுக்குரிய எண்

வகைக்குணங்கள்: பூர்வரங்கம், நாந்தி 87

சோபை, விலாசம் பாரதிவிருத்தியின் வகை

மாதுரியம் காம்பீரியம், நான்கு: பிரரோசனை,

வீதி, பிரகசனம், குறிப்பு (அநுபாவம்) 94

ஆமுகம் 88 விறல் (சத்துவபாவம்)

பிரரோசனையின் எட்டு: ஸ்தம்பம், பிரலயம்

இலக்கணம் 88 ரோமாஞ்சம்,

ஆமுகத்தினிலக்கணம் ஸ்வேதம், வைவர்ணியம்,

ஆமுகத்தினுட்பிரிவுகள் வேபது

கதோற்காதம்,

பிரவிருத்தகம், பிர அஸ்று, வைஸ்வர்யம்

யோகாதிசயம் 88 முப்பத்துமூன்று:

உற்காத்யகம், அவல உயிர்ப்பு (நிர்வேதை)

கிதம், பிரபஞ்சம், திரிகடம் சோர்வு (கிலானி), கலக்கம்

சலம், வாக்கெலி (சங்கை), இளைப்பு

அதிபலம், கண்டம் (திருதி), கையாறு

அவசியந்திதம், நாளிகை (ஜடதை), இன்புறல்

அசற்பிரலாபம், வியாகாரம் (ஹர்ஷம்), இடுக்கண்

மிருவதம் 88 (தைந்யம்), நலிதல்

நாடகலக்கணம் 109 (உக்கிரதை), ஒருதலை

பரகரணத்தினிலக்கணம் 90 வெரூஉதல் (திராசம்)

நாடிகையினிலக்கணம் 90 பெறாமை (அசூயை)

பாணத்தினிலக்கணம் 91 முனிதல், (அமர்ஷம்)

பிரகசனத்தினிலக்கணம் 92 மிகை (கர்வம்), நினைதல்

இடிமத்தினிலக்கணம் 92 (ஸ்மிருதி) சாக்காடு

வியாயோகத்தினிலக்கணம் 92 (மரணம்), களி

(மதம்), கனவு, (சுப்தம்)

சமவகாரத்தினிலக்கணம் 93 இன்றுயிலுணர்தல்

வீதியினிலக்கணம் 93 (விபோதம்), நாணுதல்

உத்சிருஷ்டிகாங்கத்தி (வீரிடை), ஞஞ்ஞையுறுதல்,

னிலக்கணம் 93 (அபஸ்மாரம்), ஐயம்

(க) தசரூபகம் நான்மதி (மோகம்), ஆராய்ச்சி, (மதி)

காரம் (சுவை, குறிப்பு, மடிமை, (ஆலசியம்) நடுக்கம்

சத்துவம், அவிநயம் (ஆவேகம்) கருதல், (தர்க்கம்),

உணர்த்துவது. 94-107 மறைத்தல் (அவகித்தை),

சுவைப்பொருள்வகை: நோயுறல், (வியாதி)

ஆலம்பன் விபாவம் மயக்கம்

உத்தீபனவிபாவம் 94 (உன்மத்தம்)

மனம்புழுங்குதல் பெருமிதச் சுவையி

(விஷாதம்), பரபரப்பு னிலக்கணம் 101

(உற்சுகம்), சுழற்சி இளிவரற்சுவையி

(சபலம்) 96 னிலக்கணம் 101

சுவைநிலையவிநயங்கள் வெகுளிச்சுவையி

எட்டு: இன்பச்சுவைய னிலக்கணம் 101

விநயம் (இரதி), வீரச் நகைச்சுவையி

சுவையவிநயம் (உற்சாகம்), னிலக்கணம் 102

(இழிப்புச்சுவையவிநயம் மருட்கைச்சுவையி

(ஜயகுப்ஸை) னிலக்கணம் 102

வெகுளிச்சுவையவி அச்சச்சுவையி

நயம் (குரோதம்), னிலக்கணம் 102

நகைச்சுவையவிநயம் அவலச்சுவையி

(ஹாசம்), வியப்புச் னிலக்கணம் 102

சுவையவிநயம் (ஸ்மயம்), (ரு) குரவைக்கூத்து, வரிக்

அச்சச்சுவையவிநயம் கூத்து 103

(பயம்), அவலச்சுவைய நால்வகைச் செய்யுளியக்கம்

விநாயம் (சோகம்) 99 முதனடை, வாரம், கூடை, திரள் 104

சுவையெட்டு: உவகை (கூ) இசைநூன்மரபு 104

(சிருங்காரம்). பெரூமிதம் (எ) அரங்கினமைதி 105

(வீரம்), இளிவரல் பிண்டி, பிணையல்

(பீபற்சம்) வெகுளி அகக்கூத்திற்குரிய வாடல்

(உருத்திரம்) புறத்கூத்திற்குரிய

நகை (ஹாஸ்யம்) வாடல் 106

மருட்கை (அற்புதம்) (கூ) இயற்றமிழ்த்திணை

அச்சம் (பயோற்கர்ஷம்) புறத்திணை யொழுக்கங்கள்

அவலம் (கருணை) 99 நாடகவழக்குக்கும்

சுவைபிறக்கும்முறை 100 ஏற்புடைத்தாமாறு 106

உவகைச்சுவையினிலக்கணம் 100 செய்யுண்முதற்குறிப்பகராதி

முதலியன 108

அபிதான விளக்கம்

காதல்கைம்மிக்க காவலன் சரிதை

டுழுஏநு’ளு டுயுடீழுருசு’ளு டுழுளுவு

பிரியத்ததமன்னன் குநசனiயெனெ மட்டி னுரடட

வீரன் டீசைழn இருளப்பன் ஊழளவயசன

இலாவணன் டுழபெயஎடைடந விட்டில் ஆழவா

சோமகன் னுரஅயin வனசரன் குழசநளவநச

அபயன் டீழலநவ நாகநாட்டு வுhந Pசinஉநளள

மரகதன் ஆநசஉயனந ராஜகுமாரி ழக குசயnஉந

அதிசூரன் னுழn யுனசயைழெ னந சாலினி சுழளயடiநெ

யுசஅயனழ மாலினி ஆயசயை

நாதன் ளுசi யேவாயnநைட கத்துரு முயவாயசiநெ

ஒலிவாணன் ர்ழடழகநசநௌ காஞ்சனை துயஙரநநெவவய

சாவகநாடு யேஎயசசந

ஆகுலராஜன்சரிதை முஐNபு டுநுயுசு

ஆகுலராஜன் டுநயச மதனன் நுனஅரனெ

மணிபுரத்தரசன் முiபெ ழக குசயnஉந காசியப்பன் ழுளறயடன

வீரவர்மன் னுரமந ழக ஊழசறெயடட விதூஷன் குழழட

அரிவர்மன் னுரமந ழக யுடடியலெ மாணிக்கமாலை புழநெசடை

கௌதமன் நுயசட ழக முநவெ கனகமாலை சுநபயn

குணதரன் நுயசட ழக புழடரஉநளவநச குணமாலை ஊழசனநடயை

வரதன் நுனபயச

சிங்கபுரம் டீசவையin

இரம்மியன் சுசீலைசரிதை சுழுஆநுழு யுNனு துருடுஐநுவு

கிள்ளிவளவன் நுயஉயடரள மார்த்தாண்டசோழன் ஆநசஉரவழை

பாற்கரசோழன் Pயசளை வண்கைமலையன் டீநnஎழடழை

மலையன் ஆழவெயபரந தீவலமல்லன் வுலடியடவ

பண்ணன் ஊயிரடநவ உலோகமாபாலன் குசயைச டுயறசநnஉந

இரம்மியன் சுழஅநழ சுசீலை துரடநைவ

உறையூர் ஏழசழயெ. ஆமுர் ஆயரெய.

பெரும்புயற்சரிதை வுர்நு வுநுஆPநுளுவு

அலாயுதன் யுடழளெழ வலிமுகன் ஊயடiடியn

சங்கவர்ணன் ளுநடியளவயைn திரிகூடன் வுசinஉரடழ

பிரபாகரன் Pசழளிநசழ திரிகூடன் ளுவநிhயழெ

அநாகுலன் யுவெழnழை மாலதி ஆசையனெய

பிரியவிரதன் குநசனiயெனெ பவனவேகன் யுசநைட

சீயதேசம் Nயிடநள. மைலம் ஆடையn மணிபல்லவம் ஐளடயனெ

மகபதி சரிதை ஆயுஊடீநுவுர்

மகபதி ஆயஉடிநவா மாதவன் ஆயஉனரகவ

இடங்கராஜன் னுரnஉயn வளைவணன் குடநயnஉந

மங்கலவர்மன் ஆயடஉழடஅ மகபதிப்ரியை டுயனல ஆயஉடிநவா

அனலவர்மன் னுழயெடடியin மாதவப்ரியை டுயனல ஆயஉனரகக

தனபதி டீயஙெரழ இடாகினிமாதர் றுவைஉhநள

அங்கநாடு ளுஉழவடயனெ கலிங்கநாடு நுபெடயனெ.

வணிகதேய வர்த்தகன்சரிதை

வுர்நு ஆநுசுஊர்யுNவு ழுகு ஏநுNஐஊநு

வணிகதேயத்து வுhந னுரமந ழக சாரகுமாரன் ளுயடயசiழெ

மன்னன் ஏநniஉந கருணாகரன் புசயவயைழெ

குறும்பொறை வுhந Pசinஉந ழக புட்கலன் டுழசநஉணழ

நாடன் ஆழசழஉஉழ சாபலன் ளூலடழஉம

கானகநாடன் வுhந Pசinஉந ழக அகிஞ்சனன் டுயரnஉநடழவ புழடிடிழ

யுசசயபழn விருத்தன் ழுடன புழடிடிழ

அநந்தன் யுவெழnழை விஜயை Pழசவயை

வாசவன் டீயளளயnழை அங்கனை நேசளைளய

சலசலோசனன் ளுயடயnழை பதுமை துநளளiஉய

மணலி டீநடஅழவெ

வணிகதேயம் ஏநniஉந

வேனிற் காதை

யுளு லுழுரு டுஐமுநு ஐவு.

குலசேகர னுரமந ளுநnழைச சல்லாபன் வுழரஉhளவழநெ

பாண்டியன் மதுரநாதன் ளுசை ழுடiஎநச ஆயசவநஒவ

வீரேந்திரபாண்டியன் குசநனநசiஉம சீதரன் ளுடைஎiளெ

அமலதேவன் யுஅநைளெ குடிலன் ஊழசin

ஜயதேவன் துயஙரநள வில்லவன் றுடைடயைஅ

சார்த்தூலன் ஊhயசடநள கோகிலவல்லி சுழளயடiனெ

நீலாம்பரன் ழுடiஎநச கேகயவல்லி ஊநடயை

இரதிகாந்தன் ழுசடயனெழ பாவை Phநடிந

ஆதன் யுனயஅ ஆதிரை யுரனசநல

பாண்டிநாட்டுக்கணித்தாகிய ஆரணியம் வுhந குழசநளவ ழக யுசனநn

கூதிர்க்காதை

வுர்நு றுஐNவுநுசு’ளு வுயுடுநு

ஆகண்டன் டுநழவெநள நாகன்சேய் வுhந ளூநிhநசன’ள ளுழn

ஜயந்தன் ஆயஅடைடரைள அட்டோலிக்கன் யுவெழடலஉரள

கமலவதனன் ஊயஅடைடழ அயிராணி ர்நசஅழைநெ

அந்தணன் யுவெபைழரௌ பரிபவை Pநசனவைய

பதுமநாபன் Pழடiஒநநௌ அரம்பை Pயரடiயெ

நாகன் யுn ழுடன ளூநிhநசன

உஞ்சையம்பதி ளுiஉடைல போகவதி டீழாநஅயை

கருதியது எய்திய காதலர்சரிதை

வுறுநுடுகுவுர் Nஐபுர்வு ழுகு றுர்யுவு லுழுரு றுஐடுடு

மாசேனன் ழுசளiழெ கோலாகலன் ஆயடஎழடழை

சுதாகரன் ளுநடியளவயைn மானவன் ஊழடறn

ஆதவன் யுவெழnழை கேசவன் ஊநளயசழை

தாண்டவராயர் ளுசை வுழடில டீநடஉh கமலை ழுடiஎயை

சுந்தரராயர் ளுசை யுனெசநற விமலை ஏழைடய

யுபரநஉhநநம யாமினி ஆயசயை

ஈழம் ஐடடலசயை

தீநட்பஞ்சிய தீமோன்சரிதை, யூலியசீசர் சரிதை, சேனாதிபதி சரிதை யென்னும் மூன்றினுள்ளும் ஆங்கிலப்பெயர்களையே தமிழிலும் வழங்கினாமாதலினாலே அவற்றை யீண்டு அட்டவணைப்படுத்தா தொழிந்தனவாம்.

மதங்கசூளாமணி

உறுப்பியல்

க. திருமலியுலகினிற் புலவராற் பாடுதற்கமைந்த இருவகை வழக்கினுள்ளே நாடகவழக்கினை யாராயப்புகுந்த இவ்வாராய்ச்சியை உறுப்பியல், எடுத்துக்காட்டியல், ஒழிபியல் என மூன்று இயலாக வகுத்துக் கொள்வாம். முன்னின்ற உறுப்பியலுள் நாடகவுறுப்புக்கள் இவையென ஆராய்ந்துணர்வாம். எடுத்துக்காட்டியலினுள், செகசிற்பியார் இயற்றிய நாடகங்கள் பன்னிரண்டினைச் சந்தியும் சுவையும் நோக்கியாராய்வாம். ஒழிபியலுள் எஞ்சிய நாடகவிலக்கண முடிபுகளை இயன்றவரை யாராந்துணர்வாம்.

உ. நாடகம் - கதை தழுவிவருங்கூத்து. சாந்திக்கூத்தின்வகை நான்கினுள் இஃது ஒன்று என்ப. “சாந்திக் கூத்தே தலைவ னவிநய, மேந்திநின்றாடிய வீரிரு நடமவை. சொக்க மெய்யே யவிநய நாடக, மென்றிப் பாற்படு மென்மனார்புலவர்” என்றமையாற் சாந்திக் கூத்து, நால்வகைப்படுமெனவும், அவ்வகை தாம் சொக்கம், மெய்க் கூத்து, அவிநயக்கூத்து, நாடகம் என்பனவாமெனவும் அறிகின்றோம். இவற்றுள், சொக்கமென்பது சுத்தநிருத்தம், மெய்க்கூத்து அகச் சுவைபற்றியெடுத்தலின் அகமார்க்கமெனப்படும். அவிநயக் கூத்தாவது நிருத்தக்கை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபஞ் செய்யும் பலவகைக்கூத்து. இவற்றின் விரிவைப் பின்னர் ஒழிபியலுட் கூறுவாம். சாந்திக்கூத்து என்னும் பெயர்க்காரணத்தை நோக்கும்போது நாயகன் சாந்தமாக ஆடிய கூத்து ஆதலின் சாந்திக்கூத்தெனுங் குறியீடு பெற்றது என அறிகின்றோம். சாந்தமாக ஆடிய கூத்தை ஒருவகைப்படுத்துக்கூறலின் சாந்தமின்றியாடிய கூத்தும் உளவோவென ஆராய்த லொருதலை, கொற்றவைநிலை. காந்தள், வள்ளிக்கூத்து, கழனிலைக்கூத்து, பிள்ளையாட்டு, ஆர்மலைந்தாடிய கூத்து எனப் புறத்தினையுட் கூறப்பட்ட பல்வகைக்கூத்தும், “மாற்றானெடுக்கமும் மன்ன னுயர்ச்சியும் - மேற்படக் கூறும் வென்றிக் கூத்து”ம், பல்வகையுருவமும் பழித்துக் காட்டவல்லவனொருவன் பிறர் இழுக்கத்தைப் புலப்படுத்தும் பொருட்டுப் பழித்துக்காட்டும் வசைக் கூத்தும், மறியறுத்துக் குருதிப்பலிசெலுத்திவேலனை வழுத்தி நின்றாடும் வெறியாடலும், குரவைக்கூத்து கழாய்க்கூத்து, குடக்கூத்து, காணக்கூத்து, நோக்குக்கூத்து, தோற்பாவைக்கூத்து என அறுவகைப்பட்டு நின்ற விநோதக்கூத்தும் பிறவும் சாந்தநிலைதவறிய நீர்மையவாதலின் சாந்திக் கூத்தின் வேறாயின.

š. சாந்திக்கூத்தின்வகை நான்கினுள் ஈற்றில்நின்ற நாடகம் பல்லாற்றானும் சிறப்புடையது. உள்ளத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைப் பிறர்க்குப் புலப்படுத்துவதற்கு அவிநயம், இசை, மொழிப்பொருள் என்னும் மூன்றும் பயன்படுவன. இம்மூன்றினையும் தழுவி நின்றமையால் நாடகஞ் சிறந்தது. மொழிக்கு இயற்கையாகவமைந்த பொருள் கருவியாக உள்ளத்து நிகழ்ந்த மனக்குறிப்பினைப் பிறர்க்குப் புலப்படுத்துவது இயற்றமிழின்றன்மை, மொழிப்பொருளோடு இசையுஞ் சேர்த்து நிற்க மனக்குறிப்பினை வெளிப்படுத்துவது இசைத்தமிழின்றன்மை. மொழிப்பொருள், இசையென்னம் இரண்டினோடு அவிநயமுஞ் சத்துவமுஞ் சேரவைத்து உள்ளத்தெழுந்த மனக்குறிப்பினைப் பிறருக்குப் புலப்படுத்துவது இயற்றமிழின்றன்மை. மொழிப்பொருளோடு இசையுஞ்சேர்ந்து நிற்க மனக்குறிப்பினை வெளிப்படுத்துவது இசைத்தமிழின்றன்மை. மொழிப்பொருள், இசையென்னும் இரண்டினோடு அவிநயமுஞ் சத்துவமுங் சேரவைத்து உள்ளத்தெழுந்த மனக்குறிப்பினைப் பிறருக்குப் புலப்படுத்துவது நாடகத்தமிழின்றன்மை. அங்ஙனமாதலின், குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் இவற்றோடு கூடிநின்ற ஒன்பது வகைச் சுவையும் நாடகத்துக்கே சிறப்பியல்பாக வுரியன வென்பது பெறப்படுகின்றது. இவற்றினை நாகத்தினுள் அமைக்குமிடத்துச் சாந்தநெறி தவறாதநீர்மையவாக அமைத்தல் வேண்டும். அங்ஙனம் அமைத்தற்குரிய மார்க்கத்தை எடுத்துக்காட்டியலினுள் விரித்துவிளக்குவாம். இயற்றமிழுக்கு அணியெனவமைந்து நி;ன்ற ஒன்பதுவகைச் சுவையும் நாடகத்தமிழுக்கு இன்றியமையாத உறுப்புக்களென நின்றனவாதலால் அவற்றினை இவ்வாராய்ச்சியினுள் விரிவுற வாராய்தலும் வேண்டும்.

ச. மேற்கூறியபடி சுவை, குறிப்பு. சத்துவம், அவிநயம் என்னும் நான்கும் நாடகவுறுப்புக்களாம்@ இவை யொருபாலாக இவற்றோடு பொருள், சாதி, யோனி, விருத்தி யென நான்கும், சொல், சொல்வகை, வண்ணம், வரி யென நான்கும் சந்தி, சேதம் என விரண்டும் கூடிய பதினான்கும் நாடகவுறுப்புக்களாம். இவற்றினுட் சந்தியென்னுமிலக்கணம் நாடகத்தினது அமைப்பினைக் காட்டும் நீர்மையாதலின் முதலில் அதனையாராய்ந்து அப்பாற்செல்வாம். “சந்தியிற் றொடர்ந்து சருக்கமிலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி” எனத் தண்டியாசிரியர் காப்பியவிலக்கணங் கூறினாராதலினால், சந்தியென்னும் இலக்கணம் காப்பியத்துக்கு முரியது. கத்தியரூபமாக முடிந்த கதைகளுக்குரியது. சந்தி ஐந்து வகைப்படும். அவை முகம், பிரதி முகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என வினவ. இவற்றை ஒரு உதாரணத்தினால் விளக்குவாம். கீழ்மக்களது தீநட்பினை எய்துதலினும் பார்க்க எய்தாமை நன்று என்னும் உண்மையை அறிவுறுத்துதற்கு ஒருபுலவன் ஒருநாடகம் அமைக்கப்போகின்றானென்று வைத்துக் கொள்ளுவோம்.

“செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று”

(செய்துவைத்தாலும் அரணாகாத கீழ்மக்களது தீநட்பு ஒருவர்க் குண்டாதலின் இல்லையாதல் நன்று)

“உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்”

(தமக்குப் பயனுள்வழி நட்புச்செய்து அஃதில்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினைப் பெற்றால் ஆக்கம்யாது? இழந்தாற் கேடியாது?)

“கொடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை

யுள்ளினு முள்ளஞ் சுடும்”

(ஒருவன் கெடுங்காலத்து அவனைவிட்டு நீங்குவார் முன் அவனோடு செய்தநட்புத் தன்னைக் கூற்றடுங்காலத்து ஒருவனினைப்பினும் அந்நினைத்த உள்ளத்தைச் சுடும்)

மேற்காட்டிய மூன்று திருக்குறட் பாக்களும் அமைக்கப்புகுந்த நாடகத்துக்கு “வித்து” என்னும் நீர்மைய. வித்தினையெடுத்து உழவினாற் சமைக்கப்பட்ட புழுதியினுள்ளே விதைத்தால் அதுமுளைத்து, நாற்றாகிக், கருப்பமுற்றி, விரிந்து, கதிர்திரண்டிட்டுக் காய்தாழ்ந்து முற்றிவிளைய, விளையப்பட்டபொருளை அப்பொருளுக்குரியோர் அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலிசெய்து கொண்டுபோய் உண்டு மகிழ்வார். இம்மரபே நாட்டியக்கட்டுரையும் ஐவகைப்படும். “முகமாவது எழுவகைப்பட்ட உழவினாற் சமைக்கப்பட்ட பூழியுளிட்ட வித்துப் பருவஞ்செய்து முளைத்துமுடிவது போல்வது. பிரதிமுகமாவது அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலைதோன்றி நாற்றாய்முடிவது போல்வது. கருப்பமாவது அந்நாற்று முதலாய்க்; கருவிருந்து பெருகித் தன்னுட்பொதிந்து கருப்பமுற்றிநிற்பது போல்;வது, விளைவாவது கருப்பமுதலாய் விரிந்து கதிர்திரண்டிட்டுக் காய்தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது, துய்தலாவது விளையப்பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலிசெய்து கொண்டு போய் உண்டு மகிழ்வது போல்வது” இங்ஙனம் ஐந்து சந்தியாகப் பகுத்துக் கொண்ட முறையினையே செகசிற்பியாரும் மாறாது கைக் கொண்டார். முளையினைக் கண்டோர் விளைவு இதுவென ஊகித்தறிந்து கொள்ளுதல்போல நாடகத்தின் முகத்தினைப் படித்தமாத்திரத்தே விளைவு இதுவாகும் என ஊகித்தறிந்து கொள்ளத்தக்கதாக முதற்சந்தியாகிய முகம் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். முதற் சந்தியாகிய முகத்தில் கட்டியக்காரன், விதூஷகன், சூத்திரதாரன், அரசன், மந்திரியென்னும் இவரைமாத்திரம் வருவித்து நிறுத்தி அரசன் நாட்டுவளம் விசாரிப்பதோடு முடித்துவிட்டால், பார்ப்போருடைய உள்ளம் ஒரு வழிப்படாது பலவழியிலுஞ்சென்று மேல் நடப்பது இதுவாமோ அதுவாமோ வென ஐயப்பாடுற்று அலையும். ஆதலினால் முதற்சந்தியாகிய முகத்திலேயே விளைவு ஒருவகையாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். கீழ்மக்களது தீநட்பினையெய்துதலினும் பார்க்க எய்தாமை நன்று என்னும் உண்மையை யறிவுறுத்துதற்கு எழுந்தநாடகத்துக்கு நாடகபாத்திரராவார் யாரவராகவிருத்தல் வேண்டுமெனின், கதாநாயகனாக ஒரு செல்வப்பிரபு வேண்டும். அவரது செல்வத்தையுண்டு அநுபவித்துப் பின்னர் வறுமைவந்துற்ற காலத்து அவரைவிட்டுப் பிரிந்து அவரை இழந்தவமதிக்கின்ற பொய்ந்தநண்பர் ஒருவரோ பலரோ விருத்தல் வேண்டும்@ பிரபுவுக்கு வேண்டியவிடத்து இடித்துரைகூறும் அறிவுடையோன் ஒருவன் இருத்தல் வேண்டும். உண்மையுள்ள ஒரு வேலைக்காரன் இருத்தல் வேண்டும்@ இச்சகம்பேசுவார் பலரிருத்தல் வேண்டும் என்பது, செல்வப் பிரபுவானவர் நட்பாராயாது பலரையும் நட்புச்செய்தாரென்றும், இச்சகம்பேசுவோருக்குத் தமது பொருளெல்லாமளித்த காரணத்தினாலே யாவருக்கு வறுமை வந்துற்றது எனவும், தான் நட்பாளராகக் கருதியவரிடத்துச் சிற்றளவு உதவிபெறுதற்கு முயன்றாரெனவும், அன்னோர் மறுத்தாரெனவும் பிரபுவை யிழித்தாரைத்தாரெனவும், பிரபு அன்னோர் கண்முன் னிருக்காது காட்டிற்கேகினரெனவும், ஆங்கு ஒரு பொற்சுவை யகப்பட்டது எனவும், அவர் பொன்னால் விளையும் கேட்டை யனுபவித்தவராதலினால், பொற்குவியலைக் கருதிற்றிலரெனவும், அவ்வழி ஒரு சேனைத்தலைவன் சென்றானெனவும், அவன் அப்பிரபுவின் பக்கலிருந்த பொற்குவியலைக்கண்டு விழைந்து நின்றானெனவும், அவனை அக்குவியலையெடுத்துக் கொள்ளும்படி பிரபு அநுமதி கொடுத்தாரெனவும், அதனைப் பெற்ற போர்வீரன் நன்றியறிதலுக்கு அறிகுறியாகப் பிரபுவின் நாட்டினைத் தாக்கித் தீநட்பாளரை யழித்தானெனவும், இவ்வாறோ பிறவாறோ பொருளை வகைசெய்து நாடகக் கட்டுரை வகுத்துக்கொண்டபின்பு ஏற்றபெற்றியறிந்து ஐந்துசந்தியாகப் பகுத்துக் கொள்ளலாம். செகசிற்பியார் இத்துறைமேல் “தீநட்பஞ்சிய தீமோன்சரிதை” எனப் பெயரிய ஒரு நாடகஞ் செய்திருக்கின்றார். அதன் சந்திமுதலியவற்றை எடுத்துக்காட்டியலினுட் கூறுவாம். தேசம் என்பது கதையை நாடகத்துக்கொப்பச் சேதித்திடுவது. பாதுகாபட்டாபிஷகம், வாலிமோºம், குசலவசரிதை என்னும் நாடகங்கள் இராமவதாரப் பெருங்காப்பியத்தின் பாகங்களாயினமையை நோக்குக.

ரு. இனிச், சுவை குறிப்பு சத்துவம் அவிநயம் என்னும் நான்கு உறுப்புக்களையும் ஆராய்ந்துணர்வாம். ஒன்பது சுவையாவன@ வீரச் சுவை, அச்சச்சுவை, இழிப்புச்சுவை, அற்புதச்சுவை, இன்பச்சுவை, அவலச்சுவை, நகைச்சுவை, நடுவுநிலைச்சுவை, உருத்திரச்சுவை யென்பன. இவற்றினுள் நடுவுநிலை ஐம்புலமடங்கிய அறிவர்பால் நிகழ்வது. இவர் காமம் வெகுளி மயக்கத்தினின்று நீங்கியவராதலால், யாவருங் கண்டஞ்சும் யமனுக்கும் அஞ்சார்@ எத்துணை இளிவரல்காணினும் இழித்துக்கூறார்@ கல்வி நிறைந்திருந்தும் அதனைப் பொருளெனக் கொள்ளாக் காரணத்தினாற் பெருமிதங் காட்டார்@ புதுமை, பெருமை, சிறுமை, ஆக்க மென்பன நிலையில் பொருள்களென அறிவாராதலினால், அவற்றினைக்கண்டு வியப்புறார்@ துன்பம் வந்தெய்தாத் தூயவுள்ளத்தையுடையாராகிய இவர் இன்பத்தை விழையார்@ நகையாடார்@ வெகுளார். ஆதலினாற் சமநிலை யெனப்படும் நடுவுநிலை பொருந்திநிற்கும் நல்லோரிடத்து “நகையே யழுகை யிளிவரன் மருட்கை, யச்சம் பெருமிதம் வெகுளி யவகையென், றப்பாலெட்டே மெய்ப்பா டென்ப” எனத் தொல்லாசிரியர் வகுத்துக்கூறிய எண்வகை மெய்ப்பாடும் நிகழாவாம். ஒரேவழி நிகழுமிடத்துக் காமம் பற்றுக்கோடாக நிகழாது அருள் பற்றுக்கோடாக நிகழுமென்பது இக்காரணத்தினாற்றான் “பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங், கண்ணிய புறனே நானான் கென்ப” என முடியுடைவேந்தருங் குறுநிலமன்னரு முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் காமநுகரும் இன்பவிளையாட்டினுட் டோன்றிய மெய்ப்பாட்டுவகையை யுணர்த்தப்புகுந்த ஆசிரியர் தொல்காப்பியனார் நடுவுநிலையை ஒன்றாகவைத்து ஓதாராயினார். “ஆங்கவையொ ருபா லாக வொருபால், உடைமை யின்புற னடுவுநிலை யருளல்” என்னுஞ் சூத்திரத்தினுள் நடுவுநிலை கூறப்பட்டது. ஒன்பது சுவையினுள் நடுவுநிலை கூறப்பட்டது ஒன்பது சுவையினுள் ஒன்றாகிய நடுவுநிலை யொழித்து ஒழிந்தனவற்றைக் கூறுதலின் மெய்ப்பாடு எட்டாயின.

œ. இவற்றினுள் இன்பம் (உவகை), நகை, வியப்பு (முருட்கை) என்னும் மூன்றும் ஒருபாலாகி யகத்திணையைச் சார்ந்து நின்றன. வீரம், வெகுளி (உருத்திரம்), அவலம் (அழுகை), அச்சம், இளிவரல் என்னும் ஐந்தும் ஒருபாலாகிப் புறத்திணையைச் சார்ந்துநின்றன. அகத்திணையினுள் வீரமுதலிய ஐந்தும் புறத்திணையினுள் இன்பமுதலிய மூன்றும் ஒரேவழித் தோற்றுவவெனினும் பெருவரவுபற்றி இவ்வாறு வகுத்துக் கொள்ளுதலால் எய்தியதோர் இழுக்கில்லை. அகத்திணையைச் சார்ந்து இன்பம், நகை, வியப்பு என்னும் மூன்று மெய்ப்பாடும் தோற்றநின்ற நாடகங்களை மேனாட்டார் கமிடி (ஊழஅநனல) யென்பர்@ புறத்திணையைச் சார்ந்து வீரமுதலிய வைந்தும் விளங்க நின்ற நாடகங்களை மேனாட்டார் ரிறாஜெடி (வசயபநனல) யென்பர். இவற்றை நாம் முறையே வேத்தியல் பொதுவிய லென வழங்கலாகும். “காடுகெழுசெல்விக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமையைச் சிறப்புறக்கூறி வழுத்திநின்றாடும் கொற்றவை நிலையாகிய பொதுவியற்கூத்தும், வெறியாட்டயர்ந்த வெங்களத்துக் குருதிப்பலிசெலுத்தி வேலைனை வழுத்திநின்றாடும் காந்தளாகிய பொதுவியற்கூத்தும் ஒருபுடை யொப்பெனற்குரிய பொதுவியற்கூத்தே பண்டை யவனபுரத்தில் ரிறாஜெடி என்னும் பெயரால் வழங்கப்பட்டது@ ரிறாஜொடி யென்னுஞ் சொல்லுக்குப் பொருள் “ஆட்டுமறிக் கவிதை” யென்பது@ உண்டாட்டுத்தெய்வமாகிய தயனிச (னுழைலௌரள) னுக்கு வேனில்விழாக் கொண்டாடுங்காலத்து, ஒரு ஆட்டுக்கடாவைப் பலிசெலுத்தி அத்தெய்வத்தினது மெய்க்கீர்த்தியையும் அவனைப் பரவும் வீரரதுபுகழையும் கூறுவதே ரிறாஜெடிக்கு உரியபொருளாயிருந்தது எனவும் வேனில்வேள் ஆகிய தயனிசன் என்னுந் தெய்வத்துக்கு விழாக் கொண்டாடுங்காலம் மாவும் புள்ளுந் துணையொடுதியும் வசந்தகாலமாதலினால் அக்காலத்து உண்டாட்டினாற் களிதியங்கினோரும் யாறுங் குளனுங் காவு மாடிப் பதியிகந்து காமநகர்வோருமாகிய இளையாருடைய உள்ளத்தில் உவகையும் நகையும் தோற்றுவது இயல்பேயாம்@ நகைச்சுவையும் உவகைச்சுவையும் நிறைந்த நாடகங்கள் கமிடி எனப்படுவன@ இச் சொல்லுக்குப் பொருள் சிறுகுடிப்பாட்டு, பண்ணைப்பாட்டு என்று கொள்ளலாகும்” எனவும் யாம் மேற்றிசைச் செல்வம் என்னும் தொடர்நிலையுரையினுட் கூறியன ஈண்டு ஆராயத் தக்கன.

எ. சுவையை யாராயுமிடத்துச் “சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழுங் குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணீரரும்பலும் மெய்ம்மயிர்சிலித்தலு முதலாக உடம்பின்கண்வரும் வேறுபாடாகிய சத்துவங்களுமென நான்;காக்கி, அச்சுவை யெட்டோடுங்கூட்டி, ஒன்று நான்கு செய்து உறழ முப்பத்திரண்டாம்” எனப் பொருளதிகாரவுரையாசிரியர் கூறினார். சுவைக்கப்படும் பொருளையும் சுவையுணர்வையும் இருவேறு நிலனாகவைத்து ஆராய்ந்தமைக்கு அவர் கூறிய காரணங்களைத் தருவாம். “நகையும் அச்சமு முதலாகிய உணர்வு முற்காலத்து உலகியலான் அறிவானொருவன் அவற்றுக்கு ஏதுவாகிய பொருள் பிறகண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் அவ்வச்சுவை யெனப்படும். வேம்பென்னும்பொருளும் நாவென்னும் பொறியும் தலைப்பெய்தவழியல்லாது நகையும் அச்சமுந் தோன்றா. ஒழிந்;த காமமுதலியனவும் அன்ன. இக்கருத்தேபற்றிப் பிற்காலத்து நாடக நூல்செய்த ஆசிரியரும் “இருவகை நிலத்தி னியல்வது சுவையே” என்றாரென்பது, இனி இருவகைநிலனென்பன உய்ப்போன் செய்தது கண்போர்க்கெய்து தலன்றோவெனின், சுவையென்பது ஒப்பினானாய பெயராகலான் வேம்புசுவைத்தவன் அறிந்த கைப்பறிவினை நாவுணர்வினாற் பிறனுணரான். இவன் கைப்புச் சுவைத்தானெனக் கண்ணுணர்வினான் அறிவதன்றி. அதுபோல அச்சத்துக்கு ஏதுவாகிய ஒரு பொருள் கண்டு அஞ்சி ஓடி வருகின்றானொருவனை மற்றொருவன் கண்ட வழி இவன் வள்ளெயிற்றரிமாவினைத் தான் காண்டல் வேண்டுவதன்று@ தான்கண்டானாயின் அதுவுஞ் சுவையெனவேபடும். ஆகவே அஞ்சினானைக் கண்டு நகுதலுங் கருணைசெய்தலுங் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலான் உய்ப்போன் செய்தது காண்போனுய்த்த அறிவின் பெற்றியாற் செல்லாதாகலின் இருவகை நிலமெனப் படுவன சுவைப்பொருளுஞ் சுவைத்தோனுமென இருநிலத்தும் நிகழுமென்பதே பொருளாதல் வேண்டுமென்பது” சுவைக்கப்படும் பொருளும் சுவையுணர்வுங் கூடியவழிச் சுவைபிறக்குமென அறிந்தாம்@ குறிப்பு என்பது இவற்றின் வேறுபட்டதோவெனின், “குறிப்பென்பது, கைப்பின் சுவையுணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ள நிகழ்ச்சிபோல அஞ்சுதக்கனகண்டவழி அவற்றை நோக்காது வெறுக்கும் உள்ள நிகழ்ச்சி” யாதலினால் இது சுவைக்கப்படும் பொருள் சுவையுணர்வு என்னும் இரண்டினும் வேறாயது என்று அறிதல் வேண்டும். சத்துவம் என்பது, அவ்வுள்ளநிகழ்ச்சி பிறந்தவழி வேம்பு தின்றார்க்குத் தலைநடுங்குவதுபோலத் தாமே தோன்றும் நடுக்கமுதலாயின. அங்ஙனந் தோன்றிய சத்துவத்தைப் பிறருக்கறிவுறுத்தும் பொருட்டுப் பாவகப்படுத்துஞ் செய்கை அவிநயம் எனப்படும். இவற்றை யின்னும் தெளிவுற விளக்கும்பொருட்டு மனநூன் (Pளலஉhழடழபல) முடிபு சிலவற்றைத் தருவாம். காட்டிற்சென்ற ஒருமகன் ஒரு வேங்கைப்புலியைக் கண்டான். கண்டமாத்திரத்தி லவனுள்ளத்தே யச்சவுணர்வு தோன்றிற்று. அவ்வரிவேங்கை தன்னுயிரை வெளவுமேயென்று அவன் எண்ணிவழி அச்சக்குறிப்புத் தோன்றிற்று. அச்சக்குறிப்புத்தோன்ற உடல் நடுக்கமாகிய சத்துவந்தோன்றி;ற்று. இங்ஙனம் அஞ்சிய மகன் பின்னாளில் நாடகவரங்கத்து முன்னர்த் தான் அநுபவித்த சுவையுணர்வைப் பிறர்க்குப் புலப்படுத்த முயன்றவெல்லையிற் பாவகமாகிய அவிநயம் பிறக்கும். ஆசிரியர் செயிற்றியனார் சுவையுணர்வையுஞ் சுவைப்பொருளையும் ஒன்றாக அடக்கிச் சுவை, குறிப்பு, சத்துவம் என மூன்றாக்குவர்@ அவிநயத்தைத் தனித்துக்கூறுவர். குறிப்புஞ் சத்துவமும் சுவையினுள்ளடங்க “எண்ணான்கு பொருளும்” எட்டாய்முடிவனவாதலின், “நாலிரண்டாகும் பாலுமா ருண்டே” என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறினார்.

அவர் சமநிலைகூறாமைக்குப் பொருளதிகாரவுரையாசிரியர் காட்டிய காரண மெதுவெனின் “சமநிலைக்கு ஒர்விகாரமின்மையின் ஈண்டுக் கூறியதில னென்பது@ அதற்கு விகாரமுண்டெனின் முன்னையெட்டனுள்ளுஞ் சார்த்திக் கொள்ளப்படும். அஃதல்லதூஉம் அஃதுலகியல் நீங்கினார் பெற்றியாகலின், ஈண்டு உலகவழக்கினுட் சொல்லியதிலனென்பது, ஒழிந்த எட்டும் உலகியலாகலிற் கூறினான்” என்பது.

அ. சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் இவற்றினது இலக்கணத்தை இப்பிரிவினுள் தொகுத்துக் கூறுவாம். மேல் எடுத்துக் காட்டியலினுள் இலக்கியங்காட்டி வரித்துவிளக்குவாம்.

நகை:- “எள்ள லிளமை பேதைமை மடனென்

றுள்ளப் பட்ட நகைநான் கென்ப”

எள்ளல் என்பது இகழ்ச்சி. தான் பிறரையௌ;ளிநகுதல், பிறரால் எள்ளப்பட்டவழித் தான் நகுதல், இளமையாற் பிறரை நகுதல், பிறரிளமைகண்டு தான் நகுதல். தன்பேதைமையாற் பிறரை நகுதல், பிறர் பேதைமைபொருளாக நகைதோன்றுதல், தன்மடத்தால் நகை தோன்றுதல், பிறர்மடம் பொருளாக நகை தோன்றுதல் என நகைக் குறிப்பு எட்டாகும்.

“நகையி னவிநய நாட்டுங் காலை

மிகைபடு நகையது பிறர்நகை யுடையது

கோட்டிய முகத்தது...............................

விட்டுமுரி புருவமொடு விலாவுறுப் புடையது

செய்வது பிறிதாய் வேறுசே திப்பதென்

றையமில் புலவ ராய்ந்தன வென்ப”

அழுகை:- “இளிவே யிழவே யசைவே வறுமையென

விளிவில் கொள்கை யழுகை நான்கே”

இளிவென்பது பிறரான் இகழப்பட்டு எளியனாதல், இழவென்பது தந்தையுந் தாயு முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயவற்றையும் இழத்தல். அசைவென்பது பண்டை நிலைமை கெட்டு வேறொருவாறாகி வருந்துதல். வறுமையென்பது போகந்துய்ப்பப்பெறாத பற்றுள்ளம். இவை நான்குந் தன்கட்டோன்றினும் பிறன்கட்டோன்றினும் அவலமாமென்பது.

“அவலத் தவிநய மறிவரக் கிளப்பிற்

கவலையொடு புணர்ந்த கண்ணீர் மாரியும்

வாடிய நீர்மையும் வருந்திய செலவும்

பீடழி யிடும்பையும் பிதற்றிய சொல்லும்

நிறைகை யழிதலும் நீர்மையில் கிளவியும்

பொறையின் றாகலும் புணர்த்தினர் புலவர்”

இளிவரல்:- “மூப்பே பிணியே வருத்த மென்மையோ

டியாப்புற வந்த விளிவர னான்கே”

மூப்பு, பிணி, வருத்தம், மென்மை யென நான்கு பொருள்பற்றிப் பிறக்கும் இளிவரல். இவை முன்னையபோலத் தன்கட் டோன்றுவனவும் பிறன் கட்டோன்றுவனவும் பற்றி எட்டாதலுடைய.

“இழிப்பி னவிநய மியம்புங் காலை

யிடுங்கிய கண்ணு மெயிறுபுறம் போதலு

மொடுங்கிய முகமு முஞற்றுக் காலுஞ்

சோர்ந்த வாக்கையுஞ் சொன்னிரம் பாமையு

நேர்ந்தன வென்ப நெறியறிந் தோரே”

மருட்கை:- “புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே”

புதிதாகக் கண்டனவும், கழியப் பெரியவாயினவும், இறப்பச் சிறியனவும், ஒன்று ஒன்றாய்த் திரிந்தனவுமென நான்கும்பற்றி வியப்புத்தோன்றும், இவையும் தன்கட் டோன்றினவும் பிறன்கட் டோன்றினவுமென எட்டாதலுடைய.

“அற்புத வலிநய மறிவரக் கிளப்பிற்

சொற்சோர் வுடையது சோர்ந்த கையது

மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடைய

தெய்திய விமைத்தலும் விழித்தலு மிகந்ததென்

றையமில் புலவ ரறைந்தன ரென்ப”

அச்சம்:- ‘அணங்கே விலங்கே கள்வர்த மிறையெனப்

பிணங்கல் சாலா வச்ச நான்கே”

“அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண்கணனும் நிரயப் பாலரும் பிறரும் அணங்குதற்றொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும் உருமிசைத் தொடக்கத்தனவு மெனப்படும். விலங்கென்பன அரிமாமுதலாகிய அஞ்சுதக்கன. கள்வரென்பார்தீத் தொழில்புரிவார். இறையெனப்படுவார் தந்தையாரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். பிணங்கல் சாலா அச்சமென்றதனால் முன்னைய போல விதைதன்கட் டோன்றலும் பிறன்கட் டோன்றலுமென்னுந் தடுமாற்றமின்றிப் பிறிதுபொருள் பற்றியே வருமென்பது”

“அச்ச வவிநய மாயுங் காலை

யொடுங்கிய வுடம்பு நடுங்கிய நிலையு

மலங்கிய கண்ணுங் கலங்கிய வுளனுங்

கரந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும்

பரந்த நோக்கமு மிசைபண் பினவே”

பெருமிதம்:- “கல்விநறுகண் ணிசைமை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமித நான்கே”

“கல்வியும் தறுகண்மையும் புகழுங் கொடையும் என்னும் நான்கும் பற்றி வீரம் பிறக்கும். இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதமென்றெண்ணினான்@ என்னை? எல்லாரொடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமித மெனப்படும் என்றற் கென்பது. கல்வி யென்பது தவமுதலாகிய வித்தை. தறுகணென்பது அஞ்சுதக்கன கண்ட விடத்து அஞ்சாமை. இசைமை யென்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடுவருவன செய்யாமை. கொடையென்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப்பொருளுங் கொடுத்தல்” இது தன்கட்டோன்றிய பொருள்பற்றி வரும். மேற்கூறிய நான்கனுள் அஞ்சுதக்கன கண்டவிடத்து அஞ்சாமையாகிய தறுகண்மை அடுகளத்து முன்னணியினிற்கும் போர்வீரனது பெருமிதத்தைக் குறிப்பது. இதனியல்பைப் பின்வருஞ் சூத்திரங் கூறுகின்றது.

“வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை

முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும்

பிடித்த வாளுங் கடித்த வெயிறும்

மடித்த வுதடுஞ் சுருட்டிய நுதலும்

திண்ணென வுற்ற சொல்லும் பகைவரை

யெண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும்

நண்ணு மென்ப நன்குணர்ந் தோரே”

வெகுளி:- “உறுப்பறை குடிகோ ளலைகொலை யென்ற

வெறுப்ப வந்த வெகுளி நான்கே”

உறுப்பறையென்பது. கைகுறைத்தலும் கண்குறைத்தலும் முதலாயின@ குடிகோளென்பது தாரமும் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கட் கேடுசூழ்தல், அலையென்பது, கோல்கொண்டலைத் தன் முதலாயின@ கொலையென்பது அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல். இது பிறன்கட் டோன்றிய பொருள் பற்றி வரும்.

“வெகுண்டோ னவிநயம் விளம்புங் காலை

மடித்த வாயு மலர்ந்த மார்புந்

துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும்

கன்றின வுள்ளமொடு கைபுடைத் திடுதலும்

அன்ன நோக்கமொ டாய்ந்தனர் கொளலே”

உவகை:- “செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்

றல்ல னீத்த வுவகை நான்கே”

செல்வம் என்பது நுகர்ச்சி. புலனென்பது கல்விப்பயனாக அறிவுடைமை. புணர்வு காதலிருவர் கருத்தொத்தல். விளையாட்டு யாறுங் குளனுங் காவு மாடிப் பதியிகத்துவருதல். தன்கட்டோன்றியபொருள் பற்றியும் பிறன் கட்டோன்றிய இன்பம் பற்றியும் உவகை பிறக்கும்.

“காம வவிநயங் கருதுங் காலைத்

தூவுள் ளுறுத்த வடிவுந் தொழிலும்

காரிகை கலந்த கடைக்கணுங் கவின்பெறு

மூரன் முறுவல் சிறுநிலா வரும்பலு

மலர்ந்த முகனு மிரந்தமென் கிளவியுங்

கலந்தன பிறவுங் கடைப்பிடித் தாரே”

நடுவுநிலை:- “செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினு

நெஞ்சஞ்சோர்ந் தோடா நிலை”

இஇது நாம் முற்கூறியவாறே காம வெகுளி மயக்க நீங்கினார் கண்ணே நிகழ்வது.

“நாட்டுங் காலை நடுவுநிலை யவிநயங்

கோட்பா டறியாக் கொள்கையு மாட்சியும்

அறந்தரு நெஞ்சமும் ஆறிய விழியும்

பிறழ்ந்த காட்சி நீங்கிய நிலையுங்

குறிப்பின் றாகலுங் துணுக்க மில்லாத்

தகைமிக வுடைமையுந் தண்ணென வுடைமையும்

அளத்தற் கருமையும் அன்பொடு புணர்தலும்

கலக்கமொடு புணர்ந்த நோக்குங் கதிர்ப்பும்

விலக்கா ரென்ப வேண்டுமொழிப் புலவர்”

க. எள்ளல்முதலாக விளையாட்டு இறுதியாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் ஒருபாலாக உடைமை. இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல். அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு. இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை நடுக்கம் என்னும் இவையும் மெய்ப்பாடாம் மேற்கூறியவற்றின் பொருண்மையவல்லாதவிடத்து. இவற்றினுட் சிலவற்றுக்கு முந்தையோர் கூறிய இலக்கணத்தை எடுத்து மொழிவாம்.

இன்புறல்:- “இன்பமொடு புணர்ந்தோ னவிநய மியம்பிற்

றுன்ப நீங்கித் துவர்த்த யாக்கையும்

தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையு

மயங்கி வந்த செலவுநனி யுடைமையும்

அழகுள் ளுறுத்த சொற்பொலி வுடைமையும்

எழிலொடு புணர்ந்த நறுமல ருடைமையும்

கலங்கள்சேர்ந் தகன்ற தோண்மார் புடைமையு

நலங்கெழு புலவர் நாடின ரென்ப”

இதனொடு தொடர்புடைய உவந்தோனவிநயம் வருமாறு:-

“உவந்தோ னவிநய முரைக்குங் காலை

நிவந்தினி தாகிய கண்மல ருடைமையு

மினிதி னியன்ற வுள்ள முடைமையு

முனிவி னகன்ற முறுவனகை யுடைமையு

மிருக்கையுஞ் சேறலுங் கானமும் பிறவும்

ஒருங்குட னமைந்த குறிப்பிற் றன்றோ”

அன்பு:- “அன்புக்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்

புன்கணீர் பூச றரும்”

அடக்கம்:- “ஒருமையு ளாமைபோலைந் தடக்கல்”

“கதங்காத்துக் கற்றடங்கல்”

தன்மை:- “உலகத்தோ டொட்டவொழுகல்”

ஐயம்:- “பொய்யில் காட்சிப் புலவோ ராய்ந்த

ஐய முற்றோ னவிநய முரைப்பின்

வாடிய வுறுப்பு மயங்கிய நோக்கமும்

பீடழி புலனும் பேசா திருத்தலும்

பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலும்

அறைந்தனர் பிறவு மறிந்திசி னோரே”

அழுக்காறாமை:- “அழுக்கா றுடையோ னவிநய முரைப்பி

னிழுக்கொழு புணர்ந்த விசைபொரு ளுடைமையுங்

கூம்பிய வாயுங் கோடிய வுரையும்

ஓம்பாது விதிர்க்குங் கைவகை யுடைமையு

மாரணங் காகிய வெகுளி யுடைமையுங்

காரண மின்றி மெலிந்தமுக முடைமையு

மெலிவொடு புணர்ந்த விடும்பையு மேவாப்

பொலிவு மென்ப பொருந்து மொழிப் புலவர்”

துஞ்சல்:- “துஞ்சா நின்றோ னவிநயுந் துணியி

னெஞ்சுத லின்றி யிருபுடை மருங்கு

மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியும்

அலந்துயிர்ப் புடைய வாற்றலு மாகும்”

மடிமை:- “மடியி னவிநயம் வகுக்குங் காலை

நொடியொடு பலகொட் டாவிமிக வுடைமையு

மூரி நிமிர்த்தலு முனிவொடு புணர்தலுங்

காரண மின்றி யாழ்ந்துமடிந் திருத்தலும்

பிணியுமின்றிச் சோர்ந்த செலவோ

டணிதரு புலவ ராய்ந்தன ரென்ப”

மேற்கூறியவற்றுள் வெகுண்டோ னவிநயம், ஐயமுற்றோனவிநயம், மடியினவிநயம், அழுக்காறுடையோனவிநயம், இன்பமொடுபுணர்ந்தான விநயம், உவந்தோனவிநயம், துஞ்சாநின்றானவிநயம் என்பனவற்றோடு களித்தோனவிநயம், தெய்வமுற்றோனவிநயம். ஞஞ்ஞையுற்றோனவிநயம், சிந்தையுடம் பட்டோனவிநயம், இன்றுயிலுணர்ந்தோனவிநயம். செத்தோனவிநயம். மழைபெய்யப்பட்டோனவிநயம், பனித்தலைப்பட்டோனவிநயம், வெயிற்றலைப் பட்டோனவிநயம், நாண முற்றோனவிநயம், வருத்தமுற்றோனவிநயம், நஞ்சுண்டோனவிநயம் என்னும் இவற்றையும் ஒருபடியாகவைத்து ஓதுவர் நாடகநூலாசிரியர். எஞ்சியவற்றின் இலக்கணத்தை ஒழிபியலுட்டருவாம்.

க0. இனிப் பொருள், சாதி, யோனி, விருத்தி என்னும் நான்கினையும் ஆராய்வாம். அவற்றுள், பொருளாவது நான்குவகைப்படும். என்னை? “அறம்பொரு ளின்பம் வீடென நான்கும் - திறம்படு பொருளெனச் செப்பினர் புலவர்”

சாதி நான்குவகைப்படும். “அறமுத னான்கு மொன்பான் சுவைய, முறைமுன் னாடக முன்னோ னாகும்” என ஆசிரியர் செயிற்றியனார் கூறினாரொலினால் அறமுத னாற்பொருளும் ஒன்பதுவகைச் சுவையும் பெற்றுவருவது அந்தணர் சாதி. “அறம் பொரு ளின்பம் அரசர் சாதி” “அறம்பொருள் வாணிகர் சாதியென் றறைய” “அறமேற் சூத்திர ரங்கமாகும்” என ஆசிரியர் செயிற்றியனார் கூறியவற்றால் ஏனைய மூன்று சாதியும் அறிந்துகொள்க. இவை நான்கும் நாடகமேயாம். வடமொழி வழக்குப்பற்றி நாடகம் பிரகரணப்பிரகரணம், பிரகரணம், அங்க மெனப் பெயரிட்டுவழங்குதலும் பொருந்தும். “அவைதாம்;, நாடகம் பிரகரணப் பிரகரணம், ஆடிய பிரகரண மங்கமென்றே, யோதுப நன்னூ லுணர்த்திசி னோரே” என்றார் ஆசிரியர் மதிவாணனார்.

யோனி நான்குவகைப்படும். உள்ளோன் தலைவனாக உள்ளதோர் பொருண்மேற் செய்தலும், இல்லோன் றலைவனாக உள்ளதோர் பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற் செய்தலு மெனவினவ@ என்னை? “உள்ளோற் குள்ளது மில்லோற் குள்ளது, முள்ளோற் கில்லது மில்லோற் கில்லது, மௌ;ளா துரைத்தல் யோனியாகும்” என்றாராகலின்.

விருத்தி நான்குவகைப்படும். அவை சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி யென விவை. இவற்றுள், சாத்துவதியாவது அறம் பொருளாகத் தெய்வ மானிடர் தலைவராக வருவது. ஆரபடியாவது பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது. கைசிகியாவது காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது. பாரதி விருத்தியாவது அசுரரைக்கொல்ல அமரராடின பதினோராடலும் பிறவும். இது தெய்வவிருத்தியெனவும்படும்.

கக. பதினோ ராடலாவன:-

“கடையமயி ராணிமரக் காலிவிந்தை கந்தன்

குடைதுடிமா லல்லியமற் கும்பஞ் - சுடர்விழியாற்

பட்டமதன் பேடுதிருப் பவையரன் பாண்டரங்கங்

கொட்டியிவை காண்பதினோர் கூத்து”

இவற்றி னிலக்கணஞ் சிலப்பதிகாரத்துக் கடலாடுகாதையினுட் கூறப்பட்டிருக்கிறது. அதனை ஈண்டுத்தருவாம்.

“மாயோன் பாணியும் வரணப் பூதர்

நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை

வானூர் மதியமும் பாடிப் பின்னர்ச்

சீரியல் பொலிய நீரல நீங்கப்

பாரதி யாடிய பாரதி யரங்கத்துத்

திரிபுர மெரியத் தேவர் வேண்ட

வெரிமுகப் பேரம் பேவல் கேட்ப

வுமையவ ளொருதிற னாக வோங்கிய

விமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்

தேர்மு னின்ற திசைமுகன் காணப்

பாரதி யாடிய வியன்பாண் டரங்கமும்

கஞ்சன் வஞ்சங் கடத்தற் காக

அஞ்சன வண்ண னாடிய வாடலு

ளல்லியத் தொகுதியு மவுணற் கடந்த

மல்லி னாடலு மாக்கட னடுவ

ணீர்த்திறங் யரங்கத்து நிகர்த்து முன் னின்ற

சூர்த்திறங் கடந்தோ னாடிய துடியும்

படைவீழ்த் தவுணா பையு ளெய்தக்

குடைவீழ்த் தவர்மு னாடிய குடையும்

வாணன் பேரூர் மறுகிடை நடந்து

நீணில மளந்தோ னாடிய குடமு

மாண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்

காம னாடிய பேடி யாடலும்

காய்சின வவுணர் கடுந்தொழில் பொறா அண்

மாயவ ளாடிய மரக்கா லாடலுஞ்

செருவெங் கோல மவுணர் நீங்கத்

திருவின் செய்யோ ளாடிய பாவையும்

வயலுழை நின்று வடக்கு வாயிலு

ளயிராணி மடந்தை யாடிய கடையமு

மவரவ ரணியுட னவரவர் கொள்கையி

னிலையும் படிதமு நீங்கா மரபிற்

பதினோராடலும்”

அநிருந்த நாடகத்தினுள்ளே மேற்கூறிய பதினோராடலுள் நான்கு ஆடல் காணப்படுகின்றன. காமன்மகன் அநிருத்தனைத் தன்மகள் உழை காரணமாக வாணாசுரன் சிறைவைத்தான். அநிரத்தனது சிறையை மீட்கக்கருதி அவனது சோ என்னும் நகரவீதியிற் சென்று நிலங்கடந்த நெடுமுடியண்ணல் பஞ்சலோகங்களாலும் மண்ணாலும் செய்த குடங்கொண்டாடியகூத்துக் குடத்கூத்து. வாணனுடைய பெரிய நகரின் வடக்குவாயிற்கண் உளதாகிய வாயிலிடத்தே நின்று அயிராணி மடந்தை உழத்தியர்கோலத்தோடு ஆடியகூத்துக் கடைய மெனப்படுவது. அஞ்சனவண்ணனாகிய கண்ணன் மல்லர்கோலமாகச் சென்று வாணனை உயிர்போக நெரித்துத் தொலைத்த கூத்து மல் எனப்படுவது. தனது மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் ஆண் மைதிரிந்த பெண்மைக் கோலத்தோடு சொநகரவீதியி லாடியகூத்துப் பேடு எனப்படுவது. அஞ்சனவண்ணனாடிய ஆடல் பத்துள், கஞ்சன் வஞ்சத்தின்வந்த யானையின்கோட்டை ஒசித்தற்கு நி;ன்றாடிய கூத்து அல்லியத்தொகுதி யென்பது. கொடுகொட்டியும் பாண்டரங்கமும் திரிபுரமெரித்த காலத்திலே இறைவனாடிய கூத்து. “தேவர் திரிபுரமெரிய வேண்டுதலால் வடவையெரியைத் தலையிலேயுடைய பெரிய வம்பு ஏவல்கேட்டவளவிலே அப்புரத்தில் அவுணர் வெந்துவிழுந்த வெண்பலிக்குவையாகிய பாரதியரங்கத்திலே (பாரதி - பைரவி, அவளரங்கம் - சுடுகாடு) உமையவள் ஒருகூற்றினளாய்நின்று பாணிதூக்குச் சீ ரென்னுந் தாளங்களைச் செலுத்தத் தேவர்யாவரினு முயர்ந்த இறைவன் ஜயஆனந்தத்தாற் கைகொட்டிநின்று ஆடியது கொடுகொட்டி” யென்பது தேவரானமைந்த தேரின்முன் சாரதியாகிய திசைமுகன் காணும்படி பாரதிவடிவாகிய இறைவன் வெண்ணி;ற்றையணிந் தாடியகூத்துப் பாண்டரங்கம் எனப்படும். சூரபத்மன் மாமரமாகிக் கருங்கடலினடுவுநிற்க அவனது வேற்றுருவாகிய வஞ்சத்தை யறிந்த முருகக்கடவுள், கடலினடுவே திரையே அரங்கமாக நின்ற துடிகொட்டியாடிய கூத்துத் துடிக்கூத்து, அவுணர் தாம் போர் செய்தற்கெடுத்த படைக்கலங்களைப் போரிற்காற்றாது போகட்டு வருத்தமுற்றவளவிலே முருகக்கடவுளானவர் தமது குடையை முன்னேசாய்த்து அதுவே ஒருமுகவெழினியாக நின்றாடிய கூத்துக் குடைக்கூத்து. காயுஞ்சியனத்தையுடைய அவுணர் வஞ்சத்தாற் செய்யுங் கொடுந்தொழிலைப் பொறாளாய்த் துர்க்காதேவி ஆடிய கூத்து மரக்கால் என்னும் பெயரையுடையது. அவுணர் வஞ்சனையினாற் பாம்புதேள் முதலியவாகப் புகுதல்கண்டு அம்மை அவற்றை உழக்கிக் களைதற்கு மரக்கால்கொண்டு ஆடினாளாதலினால் மரக்காலாடலாயிற்று. அவுணர் போர்செய்தற்குச் சமைந்த போர்க்கோலத்தோடு மோகித்து வீழும்படி செய்யோளாகிய திருமகள் கொல்லிப்பாவை வடிவாய்நின்று ஆடிய கூத்துப் பாவை யென்னு மடலாகும். “மாயோன் பாணியும் வருணப்பூதர், நால்வகைப்பாணியு நலம் பெறு கொள்கை. வானூர் மதியமும் பாடி” என்பதனை ஒழிபியலுள் ஆராய்வாம்.

கஉ. இனி எஞ்சிநின்ற சொல், சொல்வகை, வண்ணம், வரியென்னும் நான்கினையும் ஆராய்வாம். சொல் மூன்று வகைப்படும். உட்சொல்;, புறச்சொல், ஆகாயச்சொல்லென@ அவை முறையே நெஞ்சொடுகூறல், கேட்போர்க்குரைத்தல், தானேகூறல் என வினவ. “நெஞ்சொடு கூறல் கேட்போர்க் குரைத்தல், தஞ்சம், வரவறிவு தானே கூறலென், றம்மூன் றென்ப செம்மைச் சொல்லே”

சொல்வகை நான்குவகைப்படும். சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகமென, கண்ணம் நான்கடியான் வருவது@ சுரிதகம் எட்டடியான் வருவது@ வண்ணம் நானான்கடியான்வருவது@ வரிதகம் முப்பத்திரண்டடியான்வருவது.

“வண்ணந்தானே நாலைந் தென்ப”

“அவைதாம்,

பாஅ வண்ணம் தாஅ வண்ணம்

வல்லிசை வண்ண மெல்லிசை வண்ணம்

இயையு வண்ண மளபெடை வண்ண

நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணம்

சித்திர வண்ண நலிபு வண்ண

மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்

மொழுகு வண்ண மொரூஉ வண்ணம்

எண்ணு வண்ண மகைப்பு வண்ணந்

தூங்கல் வண்ண மேந்தல் வண்ண

முருட்டு வண்ண முடுகு வண்ணமென்

றாங்கன மறிப வறிந்திசி னோரே”

யென்பதனால் வண்ணம் அறிக. பெருவண்ணம், இடைவண்ணம், வனப்புவண்ண மென வகுத்தும், நூறுவண்ணமாக வரித்துங் காட்டுவாருமுளர்.

வரிப்பாடலாவது: “பண்ணுந் திறனும் செயலும் பாணியும் ஒரு நெறியன்றி, மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியுங் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியுஞ் சார்ந்ததும் பெற்றும் பொறாதும் வரும்” அது தேவபாணியாகவும், மக்களைப் போற்றும் பொருண்மைத்தாகவும் வரும். திணைநிலைவரி இணைநிலைவரி யென இருவகையாகவும், கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி. எடுத்துக்கோள்வரி யென எட்டுவகையாகவும் வரிக்கூத்து ஆராயப்படும். இவற்றின் வரிவை ஒழிபியலுட் கூறுவாம்.

“விலக்குறுப் பென்பது விரிக்குங் காலைப்

பொருளும் யோனியும் விருத்தியுஞ் சந்தியும்

சுவையுஞ்; சாதியுங் குறிப்புஞ் சத்துவமு

மவிநயஞ் சொல்லே சொல்வகை வண்ணமும்

வரியுஞ் சேதமு முளப்படத் தொகைஇ

யிசைய வெண்ணி னீரே ழுறுப்பே”

என வகுத்து, பதினான்குவிலக்குறுப்பினிலக்கணத்தை உறுப்பியலாகிய இம் முதலியலுட் கூறினாம்@ கூத்தின் வகை. அகநாடகங்களுக்கும் புற நாடகங்களுக்கு முரிய உருக்கள், கூத்துவிகற்பங்களுக்கமைந்த வாச்சியக்கூறுகள், அகக்கூத்துக்கும் புறக்கூத்துக்குமுரிய ஆடல்கள். பாடல், பாணி, தூக்கு, பிண்டி, பிணையல், குரவை, வரி, அரங்கினமைதி என்னு மிவற்றையெல்லாம் ஒழிபியலுட் கூறுவாம்.

எடுத்துக்காட்டியல்

க. மதங்கசூளாமணியாகிய செகசிற்பியர், இற்றைக்கு முந்நூற்றறுபது வருடங்களுக்குமுன்னே (கி.பி. 1564), ஆங்கில நாட்டின் நடுப்பாகத்திலுள்ள ஸ்ரிறாற்போர்ட் ஒண் அவொண் (ளுவசயவகழசன - ழn-யுஎழn) என்னும் நகரத்திலே உற்பவித்தார். இவர் தந்தையார் பெயர் ஜோண் ஷேக்ஸ்பியர் என்பது. அக்காலத்தில் ஆங்கிலநாட்டிற் செங்கோலோச்சிய அரசியின் பெயர் எலிசபெத் ராணி யென்பது. எலிசபெத் ராணியின் காலத்தில் ஆங்கிலநாட்டிற் செல்வமுங் கல்வியும் பெரிதும் விருத்தியெய்தின. செகசிற்பியர் தமது இருபத்தேழாம் வயது முதல் நூலியற்றிவந்தாரெனவும் ஐம்பத்துமூன்றாம் வயதில் உலகவாழ்வை யொருவினாரெனவும் அறிகின்றோம். இப்புலவர் கோமகன் முதன் முதலெழுதிய நாடகம் காதல் கைம்மிக்க காவலன் சரிதை (டுழஎந’ள் டுயடிழரச’ள டுழளவ) யென ஆராய்ச்சியாளர் கூறுவர். செகசிற்பியர் இயற்றிய மொத்தநூல்களின் றொகை நாற்பத்தைந்து என்ப. இவற்றினுள் ஒருசில பிற்காலத்தார் இவர் பெயரால் இயற்றிய நூல்களென ஒருசாரார் கூறுவர். அவையனைத்தையும் ஆராயப்புகின், ஆராய்ச்சி பல்கி வரம்பினுட்படாது இகந்துவிடுமென அஞ்சி, நகைச்சுவையுணர்த்தும் காதல் கைம்மிக்க காலவன்சரிதை (டுழஎந’ள டுயடிழரச’ள டுழளவ) என்னும் ஒன்றும், அவலமும் இளிவரலு முணர்த்தும் ஆகுலராஜன்சரிதை (முiபெ டுநயச) என்னும் ஒன்றும், அவலமும் உவகையு முணர்த்தும் இரம்மியன் சுசீலை சரிதை (சுழஅநழ யனெ துரடநைவ) என்னும் ஒன்றும், அவலமும் வெகுளியும் உணர்த்தும் தீநட்பஞ்சிய தீமோன்சரிதை (வுiஅழn ழக யுவாநளெ) என்னும் ஒன்றும், மருட்கையு முவகையுணர்த்தும் பெரும்புயற்சரிதை (வுhந வுநஅpநளவ) என்னும் ஒன்றும். அச்சமுணர்த்தும் மகபதிசரிதை (ஆயஉடிநவா) என்னும் ஒன்றும், பெருமிதமுணர்த்தும் வணிகதேயவர்த்தகன்சரிதை (வுhந ஆநசஉhயவெ ழக ஏநniஉந)இ யூலியசிசர்சரிதை (துரடரைள ஊயநளயச) என்னும் இரண்டும், வெகுளியுணர்த்தும் சேனாதிபதிசரிதை (வுவைரள யுனெசழniஉரள) என்னும் ஒன்றும், உவகையுணர்த்தும் வேனிற் காதை (யுள லுழர டுமைந ஐவ) கூதிர்க்காதை (வுhந றiவெநச’ள வுயடந) என இரண்டும், உவகையு நகையு முணர்த்தும் கருதியது எய்திய காதலர் சரிதை (வுறநடகவா Niபாவ ழச றூயவ லுழர றடைட) என்னும் ஒன்றும் ஆகிய பன்னிரண்டு நாடகங்களையும் ஆராய்தற் கெடுத்துக் கொண்டோம். இவற்றை ஒரு சுவை, இருசுவையோடு சார்த்திக்கூறினமையின் இவை பிறசுவை பெறாவோவெனின், அங்ஙனமன்று, பெருவிரவிற்றாகிய சுவையொடு சார்த்திக்கூறினாம்@ இவை பிறசுவையும் நிறைந்துவருவன வென்பது.

கவிச்சுவை நிறைந்த பாகங்களை இயன்றவரை செய்யுளுருவமாக மொழிபெயர்த்துத் தருவாம். வேண்டியவிடத்துச் செகசிற்பியார் வழங்கிய ஊர்ப்பெயர், மக்கட்பெயர், தெய்வப்பெயரென் றின்னவற்றைத் தமிழ்மொழிமரபுக்கியைய, வேற்றுமைப்படுத்தி வழங்குவாம். இருமொழிவழக்கையும் நிரனிறுத்துக் காட்டும் ஓர் அட்டவணையை வியாசமுடிவிற் றருளுவாம். இனி நிறுத்தமுறையே காதல் கைம்மிக்க காவலன் சரிதையை யாராயப்புகுவாம். நாடகத்துக்கு இன்றியமையாச் சிறப்பினதாகிய சந்தியென்னும் உறுப்பு இச்சரிதையினுள் இன்னவாறு அமைந்து நின்றது என்பதைக் காட்டும் பொருட்டுச் சந்தியின் உட்பிரிவாகிய காட்சிகள் ஒவ்வொன்றினது சாரத்தையும் தனித்தனியாகத் தருவாம். வடநூலார் நாடகத்தின் பெரும்பிரிவை அங்கமென வழங்குவார். தமிழில் நாடகமெழுதினோர் அங்கத்தின் உட்பிரிவைக் காட்சியென வழங்கினார். யாமும் அவ்வழக்கைத் தழுவுவாம்.

ஐஇ முகம்

முதற் காட்சி:- சாவகதேசத்தரசனாகிய பிரியதத்தமன்னன் தனது உயிர்த்தோழாகிய வீரன், இலாவணன், சோமகன் என்னும் மூவரையும் விளித்துப் பின்வருமாறு கூறுகிறான்.

அரசனுரை: வாரீர்நண்பரே! “தோன்றிற் புகழோடு தோன்றுக வஃதிலார், தோன்றலிற் றோன்றாமை நன்று” என்றபடி இவ்வுலகிலுதித்த யாம் புகழினைத் தேடவேண்டும். காலமென்னுங் கழுகானது நம் வாழ்நாளை உண்டு தொலைத்துவிட, மரணம் என்னும்இளிவரல் வந்தெய்துமன்றோ? அங்ஙனம் வந்தெய்துதற்கு முன்னமே மாறாத புகழினைச் சம்பாதிக்க வேண்டும். பூதவுடம்பு கழிந்தபின்பும் நமது புகழுடம்பு எக்காலத்தும் நிலைபெற்றிருக்க வேண்டும். ஆதலால், ஆசையென்னு மிருட்;சேனையை யடர்ந்தெதிர்ந்து வெல்ல வேண்டும். தன்னைத் தான் வென்ற வீரனிலும் பார்க்கப் பெரியவீரன் ஒருவன் உளனோ? அத்தகைய வீரராகிய என் நண்பரீர்! நீவிர் மூன்றாண்டுக்கு என்னோடு வாழவேண்டும்@ யாம் நால்வரும் சிற்றின்பங்களனைத்தினையும் வெறுத்துக் கல்வியே கருத்தாக இரவு பகல் சிந்தை வேறற்றுக் கல்வியில் முழுகியிருக்க வேண்டும். நமது அரமனை யொரு கல்விநிலயமாதல் வேண்டும். சாவகநாடு கண்டோருங் கேட்டோரும் அதிசயிக்கும் கல்விக்களஞ்சியமாதல் வேண்டும். நாம் எவ்விதமாக வாழவேண்டும் என்பதைப்பற்றி விரிவாக ஒரு பத்திர மெழுதிவைத்திருக்கின்றேன்@ அப்பத்திரத்தில் எனது நண்பராகிய நீவிர் கைச்சாத்திடல் வேண்டும்.

இங்ஙனம் அரசன் கூற இலாவணனும் சோமகனும் உடன்பட்டுக் கைச்சாத்திட்டனர். வீரன் பத்திரத்தைவாசித்துப், பெண்களைக் கண்ணினாலும் பார்த்தல்கூடாது என்ற வாக்கியம் ஆங்கு எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து, அரசனைநோக்கி, “அரசே! நாகநாட்டரசன் புதல்வி தோழியர்மூவரோடும் பிற பரிசனர்களோடும் இங்கு வந்திருக்கிறாள்.

அரசிளங்குமரியை வரவேற்று உபசரிப்பது தேவரீருடைய கடமையாயிற்று@ ஆதலால் இந்தக் கட்டளையைத் தலைவராகிய தேவரீரே மீறிநடக்கப் போகின்றீர்” என்றான்.

அரசனுரை. ஆம் ஆம், இவ்விஷயத்தைப்பற்றி நான் பராமுகமாயிருந்துவிட்டேன். அரசிளங்குமரியை வரவேற்றல் அவசியமான காரியமே. ஆதலால், இந்த ஒரு சட்டத்தை மீறிநடக்கத்தான் வேண்டும்.

வீரனுரை. அரசே! அவசியதுமேற்படும்போது சட்டத்தை மீறிநடப்பது சத்தியத்துக்கு விரோதமில்லை யென்பதை நேரிற் கண்டுகொண்டேன்@ கைச்சாத்திடுகிறேன். இந்த மூன்றுவருஷத்துக்குள்ளே மூவாயிரம் அவசியம் ஏற்படுதல் கூடும்.

அரசனுரை: அன்பரீர்! நமதுபொழுது சந்தோஷமாகக்கழியும் என்பதற்குச் சந்தேகமில்லை. பலதேசங்களிலும் யாத்திரை செய்து அநுபவமடைந்த அதிசூரன் என்னும் அறிஞனொருவன் நமது ஓய்வு நேரங்களில் நமக்கு நல்விஷயங்களைக்கூறி உவகையளிப்பான்.

(இத்தருணத்தில் மட்டி யென்னும் ஒருசேவகன் இருளப்பனென்னும் ஒரு நாட்டுப்புறத்தானையிட்டுக் கொண்டு ராஜசமுகத்துக்குவந்து அரசனை நமஸ்கரித்து ஒரு பத்திரத்தை யளித்தான்)

அப்பத்திரத்தின் சாரம் வருமாறு:-

“என்னுயிர்க்குத் தெய்வமே! என் உடலைக்காக்கும் எஜமானே! ஏகசக்கிராதிபதியாகச் சாவகமுற்றையும் காப்பாற்றிவரும் பெருந்தகாய்! பறவை குடம்பையடையும் மாலைப்பொழுதில் எனது உடலிலுற்ற சிரமத்தைநீக்கும் பொருட்டு உவவனத்துக்கு உலாவச் சென்றிருந்தேன். அங்கு நான்கண்ட அருவருப்புக்குரிய செய்தியை யென்னென றெடுத்துரைப்பேன். கீழ்மகனாகிய இருளப்பன் தேவரீருடைய கட்டளைக்கு மாறாக ஒரு பெண்பாலோடு வார்த்தையாடிக் கொண்டிருந்தான். அவனைப் பிடித்துத் தேவரீருடைய சமுகத்துக்கு அனுப்புகிறேன். பெண்பாலின் பெயர் காஞ்சனை@ தேவரீருடைய கட்டளை பிறக்கும்வரையும் அவளை என்னிடத்தில் நிறுத்திவைத்திருக்கிறேன்”

இங்ஙனம்,

மாறா அடிமை பூண்ட ஊழியன்,

அதிசூரன்.

அரசன் வழக்கை விசாரித்து இருளப்பன் உப்புக்கஞ்சியுணவோடு ஒருவாரஞ் சிறைச்சாலையிலிருக்க வேண்டுமென்று தீர்ப்பிட்டான்.

இரண்டாம்காட்சி:- அதிசூரன் விட்டில் என்னும் சிறுவனோடு வார்த்தையாடிக் கொண்டிருக்கிறான்.

(இச்சம்பாஷணையில் எள்ளலும் இளமையும் பற்றிய நகைச்சுவை தோன்றுகிறது@ விரிவஞ்சி மொழிபெயர்க்காது விடுகின்றோம்)

இத்தருணத்தில் மட்டியும், இருளப்பனும், காஞ்சனையும் வருகிறார்கள். அதிசூரன் காஞ்சனையை நோக்கிச் சோலையிலுள்ள ஒரு வீட்டினைக் காட்டி “அதேபார்@ உனது சிறைவீடு@ நீ அங்குப் போயிரு@ நானே அவ்விடம் வந்து உன்னைத் தண்டிக்கிறேன்” என்று சொல்லுகிறான். அனைவரும் போயினபின்னர் அதிசூரன் தனியேயிருந்து மன்மதபாணத்தின் வலிமையைப் பற்றித் தன்னுள்ளே யாலோசிக்கிறான்.

(இதனோடு முதற்சந்தியாகிய முகம் முடிகின்றது)

ஐஐ பிரதிமுகம்

முதற்காட்சி:- நாகநாட்டு ராஜகுமாரியும், அவளது தோழியராகிய சாலினி, மாலினி, கத்துரு என்னும் நாககன்னியரும் அபயனென்னும் நாகநாட்டு மந்திரியும் தோற்றுகின்றனர். சாவகசேத்தரசன் கைக்கொண்டிருக்கிற மூன்றுவருடவிரதத்தைப்பற்றியும் அரசனது தோழராகிய வீர லாவண சோமகரைப்பற்றியும் நாககன்னியர் தம்முள்ளே பலவாறாக வார்த்தையாடு கின்றனர். அரசன் தனது விருந்;தினராகிய நாககன்னியருக்கு நகர்க்குப்புறத்தே விடுதியேற்படுத்தியிருப்பதாக அபயன் சொல்லுகிறான்.

(இத்தருணத்தில் அரசனும் மூன்றுதோழரும் பரிசனமும் வருகின்றனர்)

இராஜகுமாரியை அரமனைக்கு அழைப்பது விரதபங்கமாகுமேயென்னும் எண்ணம் ஒருபக்கம் இழுக்க, நகர்ப்புறத்தே விட்டுச் செல்வது மரபாகாதே யென்னும் எண்ணம் மற்றொருபக்கம் இழுக்க அரசன் செய்வதென்னவென்றறியாது தியங்குகின்றான். ராஜகுமாரியின் எண்ணம் மெல்லமெல்லப் பிரியதத்தமன்னனுடைய உள்ளத்தைப் பற்றுகிறது. வீரன் சாலினியை முன்பு கண்டறிந்தவன்@ தன்னை மறந்து அவளோடு பலவாறாக வார்த்தையாடுகின்றான்.

சோமகன்: (அபயனைநோக்கி) ஐய! ஒருவார்த்தை@ அதோநிற்கும் இளம்பெண்ணின் பெயர்ரென்ன?

அபயன்:- அவள் எம்மூர்ப் பிரபு ஒருவரது புதல்வி@ பெயர் கத்துருவாகும்.

இலாவணன்:- (அபயனைநோக்கி) ஐய! ஒருவார்த்தை@ தூய வெள்ளை வஸ்திரந்தரித்துக்கொண்டு அதோ தோன்றும் நல்லாள் யாரோ?

அபயன்:- அவள் ஒருபெண்.

இலாவணன்:- அவள் பெயரை விரும்புகிறேன்.

அபயன்:- அவளுக்கு உள்ளது ஒருபெயர் அதனை நீர் விரும்புவது வெட்கமாகும்.

இலாவணன்:- அவள் யாருடைய புதல்வியென்று தெரிவிப்பீரையா

அபயன்:- அவளை ஈன்றாளது புதல்வியென்று அறிந்து கொள்வீராக.

இலாவணன்:- நரைமுதிர்ந்த நுமதுதாடியை இறைவன் என்றுங் காப்பாற்றுவாராக.

அபயன்:- ஐய! கோபித்துக்கொள்ளாதீர்@ அம்மடவரல நாகநாட்டுப் பாற்குணபுரத்து மன்னன் புதல்வி.

இலாவணன்:- அவள் அழகிலும் நற்குணங்களிலும் மிகச்சிறந்தவள்.

அபயன்:- இருக்கலாம். (அரசனும் தோழர் பரிசனர்களும் போய்விடுகின்றனர்)

அபயன் இராஜகுமாரியை நோக்கிச் சாவகதேசத்துமன்னன் அவள் மீது அடங்காக்காதல் கொண்டிருப்பதாகவும் தான் அதனைக் குறிப்பினால் உணர்ந்து கொண்டதாகவும் கூறுகிறான்.

(இதனோடு இரண்டாஞ்சந்தியாகிய பிரதிமுகம் முடிகின்றது. மூன்றாஞ்சந்தியாகிய கருப்பத்தினது சாரத்தைக் கூறுவதற்குமுன் முதலிரண்டு சந்திகளினது அமைப்பைபற்றிச் சிலகுறிப்புக்கள் கூறுவாம். முகமும் பிரதிமுகமும் முறையே முளையும் நாற்றாவதற்கு ஒருவித்து வேண்டுமே. அவ்வித்து எதுவோவென்னின், நாடகங்கருதிய பொருளே அவ்வித்தாமென்பது, “காண லாவதோர் உருவமெய்ந்நாரியைக் கண்டாற் பூணு வார்மயல் காளையர்” என்பதுநாம் எடுத்துக் கொண்ட நாடகத்துக்குரிய வித்து, முதற்சந்தியாகிய முளையினுள்ளே அரசனது பிரமசரியநோக்கமும் அதன் பொருந்தாமையும், பொருந்தாச் சட்டத்தைப் பிறப்பித்தோர் தாமே யதற்கு மாறுகொள்வாரென்னுமுண்மையும், பிறர்பாற் குற்றங் காண்போர் அதிசூரனைப் போலத் தாமும் அக்குற்றத்துக்கு உட்படுவாரென்பது, அரசனது விரதபங்கத்துக்குக் காரணம் நெருங்கிவிட்டது என்னுங் குறிப்புங் காட்டப்பட்டது. பிரதிமுகத்தினுள்ளே நாகநாட்டு இராஜகுமாரியினது வருகையும், அரசனது உள்ளம் அவள்பாற் சென்றமையும், அரசனது தோழர் மூவரும் இராஜகுமாரியினது தோழியர்மூவரையும் காதலித்து நின்றமையும் கூறப்பட்டதாதலின் முதற்சந்தியினுள் ளெழுந்த முளை நாற்றாகி முடிந்ததன்மையது இரண்டாஞ்சந்தியாகிய பிரதிமுகமென்று அறிகின்றோம்)

ஐஐஐ கருப்பம்

நகர்ப்புறத்தேயிருந்த பூஞ்சோலையின் ஒருபக்கத்திலே அதிசூரனும் விட்டிலும் தோற்றுகின்றனர். அதிசூரன் தனதுமனம் காதலால் அலைவுற்றிருப்பதைப் பற்றிச் சிலவார்த்தைகள் கூறியபின், விட்டிலை நோக்கிச் சிறைச்சாலையிலிருக்கும் இருளப்பனை அழைத்துவரும்படி கட்டளையிடுகிறான். விட்டில் இருளப்பனையழைத்துவர அதிசூரன் இருளப்பனைநோக்கித் தான் அவனது சிறையை நீக்கிவிடுவதாகவும் தான் கொடுக்கும் ஒருகடிதத்தைக் காஞ்சனையிடத்துக் கொடுத்துவிட வேண்டுமென்பதாகவுஞ் சொல்லுகிறான். இருளப்பன் அதற்குச் சம்மதித்துக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு புறத்தே போகும்போது அரசனது தோழருளொருவனாகிய வீரனைச் சந்திக்கிறான்.

வீரன்:- (இருளப்பனை நோக்கி)

“மாலைவந் தடைய முன்னர் மன்னவன் மகளோ டிந்தச்

சோலையுட் பூக்கள் கொய்யத் தோழியர் மூவர் சார்வார்

சாலினி யென்னு நாமந் தரித்தமெல் லியல்பா லிந்த

ஒலையைக் கொடுத்து மீள்த லுன்பெருங் கடமை கண்டாய்!”

ஏடா! இருளப்பா! நாகநாட்டரசன் புதல்வியும் தோழியரும் மாலைக் காலம் வருவதற்குமுன்னர் இச்சோலைக்குப் பூக்கள் கொய்யவருவார். அவருள்ளே ஒரு மெல்லியல் உளள்@ இன்மொழிநாவோர் அவள் பெயரை உரைக்குங்காற் சாலியெனக் கூறுவார்@ அன்னாளது செவ்வியகரத்திலே இக்கடிதத்தைக் கொடுத்துவிடுவாயாக@ இதோ இப் பணத்தை யெடுத்துக்கொள்.

(இருளப்பன் போனபின் வீரன் தனது விரதத்தைப்பற்றியும் அதனை நிலைகுலைக்க முற்பட்ட சாலியைப்பற்றியும் தனுள்ளே யெண்ணி நெடுமூச்செறிகிறான்@ இதனோடு மூன்றாஞ்சந்தியாகிய கருப்பம் முடிகின்றது. அதிசூரனும் வீலனும் கொடுத்த கடிதங்களை இருளப்பன் மாறிக்கொடுத்து விடுவதையும் அதனால் நேர்ந்த விளைவினையும் நான் காஞ்சந்தியாகிய விளைவினுட் காணலாகும்)

ஐஏ விளைவு

முதற்காட்சி:- நகர்ப்புறத்தேயுள்ள பூஞ்சோலையின் ஒருபக்கத்தில் இராஜகுமாரி, சாலினி, மாலினி, கத்துரு, அபயன் ஆகிய ஐவரும் பரிசனரும் ஒரு வனசரனும் வருகின்றனர்.

இராஜகுமாரி:- செங்குத்தான மலைச்சாரலிலே மிக விரைவாகக் குதிரையைச் செலுத்திக்கொண்டு அதோ போகின்றவர் சாவகநாட்டரசரா?

அபயன்:- அரசரல்லவென் றெண்ணுகிறேன்.

இராஜகுமாரி:- யாராயினும் சரி@ இன்று நாம் அரசரிடம் விடைபெற்றுக் கொண்டு வருகிற சனிவாரம் நாகநாட்டுக்குப் போகவேண்டும். (வனசரனைநோக்கி) ஏ வனசரா! பூஞ்சோலையைப் பார்க்கப் போகும் பொழுது குற்றமற்றமிருகமாகிய மானை அம்பினால் எய்துவிழுத்துவதும் மரபாயிற்று@ எந்தப் புதர்மறைவிலிருந்து யான் கொலைத் தொழில்புரிய வேண்டுமெனக் காட்டுவாய்.

(இவ்வண்ணம் வேட்டையைப்பற்றி இராஜகுமாரி பேசிக்கொண்டிருக்கிற தருணத்தில் இருளப்பன் வருகிறான்)

இருளப்பன் தான் கொண்டுவந்த கடிதத்தி லொன்றை இராஜகுமாரியின் கையிற்கொடுத்துச் சாலினியென்னும் பெருமாட்டிக்கு வீரன் என்னும் பிரபு எழுதிய கடிதம் இது என்றான் இராஜகுமாரி கடிதத்தை அபயன்கையிற் கொடுத்தனள்@ காஞ்சனையென மேல் விலாச மடப்பட்டிருக்கின்றதெனினும் பிரித்துப் படித்தலாற் குற்றமில்லையென நிச்சயித்து, அபயன் கடிதத்தை அனைவர்க்குங் கேட்கும் படியாகப் படித்தனன். அக்கடிதத்தின் சாரம் வருமாறு:-

முன்னாளில் ஓர் அரசன் இரந்துண்ணும் ஒரு பிச்சைக்காப் பெண் மேல் இச்சைவைத்தான்@ யானும் உன்னை இச்சித்தேன். யான்சிங்கம்: நீ ஆட்டுக்குட்டி@ என் காலடிக்கு வந்துவிடுவாயாயின் அன்புகாட்டி விளையாடுவேன்@ மறுப்பாயேல் என் கோபத்துக்கிரையாவாய். உன் அன்புக்குழைக்கும்,

“அதிசூரன்”

(அனைவரும் நகைத்து இக்கடிதம் பிறர்க்குரியதென்று சொல்லி இருளப்பனை அனுப்பிவிடுகின்றனர். யாவரும் போனபின் இருளப்பன் தன்னுள்ளே நகைத்து அதிசூரனுக்குத் தான் இடறுகட்டையாயினமையைப்பற்றிச் சந்தோஷித்துக் கொண்டு போகிறான்)

இரண்டாங்காட்சி:- பூஞ்சோலையின் மற்றொருபக்கத்தில் ஒலிவாண னென்னு மோர் சட்டாம்பிள்ளையும், நாதனென்னும் போதகரும், மட்டியென்னுஞ் சேவகனும் வருகின்றனர்.

(சட்டம்பிள்ளை தமது கல்வியை விரித்துக்கூறும் தடபுடலான வாசகங்களெல்லாம் நகைக்கிடமாவன@ விரிவஞ்சியவற்றை மொழிபெயர்க் காதுவிடுகின்றாம். இராஜகுமாரி மானை யெய்து விழுத்தின செய்தியைப் பொருளாகக் கொண்டு தாம் எழுதிய செய்யுளைச் சட்டாம்பிள்ளை படித்துக் காட்டிக் கொண்டிருக்கிறதருணத்தில் இருளப்பனும் காஞ்சனையும் வருகின்றனர்)

காஞ்சனை: ஐயா! போதகரே! இந்தக்கடிதத்தைத் தயைசெய்து அடியாளுக்குப் படித்துக்காட்ட வேண்டும்.

நாதன்: (காஞ்சனைகொடுத்த நிருபத்தைப் படிக்கிறான்)

அன்புநிலையுளங்கவர ஆணையினைக் கடந்தோன்யான் அன்பாலன்புக்

கின்பமிகுமாணையிட்டேன் எழிலணங்கே நினதுவிழியிரண்டினுள்ளே

மன்பதையோர் தேடுகின்ற ஞானமுற்றும் யான்கண்டேன் மருட்கை கொண்டேன்

நின்படிவம் புகழ்ந்துரைக்கும் நாவே நாநினையறியும் நெஞ்சே தஞ்சம்.

வேலோன்கைப்படையே போலிணைவிழிகளெனை வருத்தும் வெகுளின்மின்னே

மேலோங்குமிடி யொலியாய் மென்மொழியுமிடர் விளைக்கும் விழுமியோய்நின்

பாலாயவனப்பனைத்துந் தேவகுருத்தரைத்தல் பான்மையாமென்

போலேயோர றிவில்லானுரைப்பதற்குத் துணிந்தமையைப் பொறுப்பாய்நீயே

ஒலிவாணன்: (பிறர்பாற் குற்றங்காண்பதே தன்னைக் கல்விமானென உலகத்தார் மதிக்கும்படி செய்வதற்குத் தகுந்தவழி யென்றெண்ணிச் சொல்லுகிறான்.

அசையைச் சரியா யசைக்கவில்லை. ஆதலால் இசையைத் தவற விட்டுவிட்டீர். அலகும் அடிக்கணக்கும் தவறில்லாமற்றான் இருக்கின்றன. என்றாலும், இக்காலத்துப்பாட்டும் ஒருபாட்டா? அடியழகும், தொடையழகும் பாவிகமென்னும் மலரின் நறிய வாசனையழகும் வேண்டுமாயின் காளிதாசனையன்றோ கற்கவேண்டும். குரங்காட்டிக்குப் பின்செல்லும் குரங்கைப் போலவும் எஜமானுக்குப் பின் செல்லும் களைத்தகுதிரையைப் போலவும் பண்டைநாட் பெரியோரின் நடையையும் வாக்கியத்தொடையையும் பின்பற்றுவா ரொருசாரார். அவர் கவியும் ஒரு கவியா? அஃதொருபாலாக, ஹே! கன்னிகையே! இப்பத்திரத்தை உனக்கு அனுப்பியவன் யாவன்?

காஞ்சனை: வீரனென்னும் பிரபுவென்று கேள்வியுற்றேன், ஐயா!

ஒலிவாணன்: “வனப்புமிக்க சாலினியென்னுஞ் சீமாட்டியினது கரகமலங்களுக்கு, தாசனாகிய வீரன் எழுதியது”

ஐயா போதகரே! வீரனென்னும் பிரபு அரசருடைய தோழருள் ஒருவர். ஆதலால், இந்த நிருபம் இராஜகாரியமானது தாமதமின்றி இராஜசமுகத்துக்கு இதனை அனுப்பி விடுதல் வேண்டும். ஹே! கன்னிகையே! சீக்கிரம் ராஜசமுகத்துக்குப் போ.

(அனைவரும் போகின்றனர்)

மூன்றாங்காட்சி:- பூஞ்சோலையின் மற்றொருபக்கத்தில் வீரன்கையிலொரு பத்திரத்தோடு வந்து தன் காதலைக்குறித்துத் தன்னுள்ளத்தோடு சம்பாஷித்துக்கொண்டு நிற்கிறதருணத்தில், பிரியதத்த மன்னன் ஒரு பத்திரத்தோடு வருவதைக்கண்டு ஒருமரத்தின் மேலேறி மறைந்து கொள்ளுகிறான்.

அரசன்: (தன் கைப்பத்திரத்தைப் படிக்கிறான்)

அரவிந்த மெல்லி தழினருகணைந்த பனித்துளியை யருக்கன் போக்கும்

மரபுன்றன்கண்ணொளியென் முகம் படிந்த கண்ணீரை மாற்றுங்கண்டாய்

வருமந்தி வேளையினிற் கடலெழுந்த மதிய மென வயங்குஞ்சோதி

தருமுன்றன் முகமதிய மெனது கண்ணீராழியினுட்டங்குங் கண்டாய்

புன்கண்ணீர்த் துளியினுள்ளே நின்படிவந் தோற்றுதலாற் பொருவிலாய்நீ

என்கண்ணீர்த் துளியனைத்துந் தேராகவெல் போருக்கேகா நின்றாய்

வன்கண்மைநினதன்றாலென் கண்முன் வந்து நின்றோர் மாற்றஞ்செப்பாய்

மின்கண்ணே விளங்குகின்ற மெல்லிடையாய் நின்னெழிலை விளம்பற்பாற்றே.

என்மனத்தை வருத்துகின்ற இன்னலை யான் காதலித்த பெண்ணரசி எங்ஙனம் அறியப் போகின்றாள். இப்பத்திரத்தை இவ்விடம் போடுகின்றேன்@ இனிய தழைகளே என் பேதைமையை மறைப்பீராக. யாரோ வருகின்றார்கள்.

(அரசன் ஒரு செடிமறைவில் அகன்று நிற்கின்றான்)

இலாவணன் தன்கையி லொருபத்திரத்தோடுவந்து மாலினிபால் தனக்குண்டாகிய அடங்காக்காதலை யெடுத்தியம்பியத் தானியற்றிய செய்யுளைப் படித்துக் கொண்டிருக்கும் எல்லையிற் சோமகன் ஒரு பத்திரத்தோடு சோலையினுள்ளேவர, இலாவணன் ஒரு மரத்தின்பின்னே மறைந்து கொள்ளுகிறான். வீரன் மரத்தின் மேலிருந்து இவரனை வருடைய மனநிலையையும் நோக்கிப் பரிகசித்துக் கொண்டிருக்கிறான். சோமகன் தானியற்றிய காதற்செய்யுளைப் படித்தபின் நெடுமூச்செறிந்து அரசன், வீரன், இலாவணன் ஆகிய தோழர்மூவரும் தன்னைப்போல் மன்மதபாணத்துக் கிலக்காகுவாரெனின், தன்பாலெய்திய குற்றம் தனிக்குற்றமாகாதெனச் சொல்லிக்கொண்டு நின்றான்.

இலாவணன்: (மரமறைவிலிளுந்து வெளியேவந்து) ஏது? சோமகா! உனது காதல்; வரம்பு கடந்ததாக விருக்கிறது. நீ செல்லும் வழியிற் பிறருஞ் செல்ல வேண்டுமென்பது நினது விருப்பமாயினும் அதனைப் புறத்தே சொல்லுவது தகுதியாகுமா?

அரசன்: (வெளிப்பட்டு) இலாவணா! சோமகன் மேல்மாத்திரங் குற்றமோ? நீ மாலினியைக் காதலித்தெழுதிய செய்யுள் பிறர் செவிக்கும் எட்டிவிட்டதென் அறிவாயாக. நான் இச்செடிமறைவிலிருந்து உங்களருவருடைய முகவேறுபாட்டையும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தேன். உங்களது நெடுமூச்சும் காதற்செய்யுளும் என்செவியிற்பட்டன. உங்கள் செய்கையை நமது தோழனாகிய வீரன் கேள்வியுற்றால் நகையாடுவானன்றோ?

வீரன்: (மரத்திலிருந்து இறங்கிவந்து) அரசே! அடியேனை மன்னிக்க வேண்டும். நான் இந்த மரத்தின்மீது நெடுநேரமாக விருக்கின்றேன். எனது அரசர் இராஜகுமாரி ஒருத்திமீது கொண்ட காதலினாற் பட்டபாட்டை நான் என் கண்ணாரக்கண்டேன். ‘கண்ணீர்த்துளி தேராகக் காதன் மடந்தை போர்க்குச் சென்றாள்’ எனக்;;; கற்பித்துப் பாடியசெய்யுள் என் செவியிற்பட்டது. சோமகலாவணரைக் குற்றஞ் சொல்லுவதா லென்னபயன்?

(என்றிவ்வாறு வார்த்தையாடிக் கொண்டிருக்கிற சமயத்திற் காஞ்சனையும் இருளப்பனும் வருகின்றார்கள்)

காஞ்சனை: அரசர் பெருமான் நீடுவாழ்க.

அரசன்: அதென்ன உன்கையிலிருப்பது?

இருளப்பன்: அரசே! இது இராஜத்துரோகம்.

காஞ்சனை: அரசே! இப்பத்திரத்தைப் படித்தருள வேண்டும். அது இராஜத்துரோகம் அடங்கியதெனப் போதககுரு கூறினார்.

அரசன்: இப்பத்திரத்தை உனக்குத் தந்தவன் யாவன்?

காஞ்சனை: இருளப்பன்.

இருளப்பன்: எனக்கு அதிசூரர் தந்தார்.

அரசன்: (பத்திரத்தை வீரன்கையிற்கொடுத்து) வீரா! இதனைப் படிப்பாயாக. (வீரன் பத்திரத்தைப்பார்த்து விட்டுக் கிழித்தெறிகிறான்)

அரசன்: ஏதேது? பத்திரத்தை யென கிழித்தாய்?

இலாவணன்: அரசே! வீரன்முகத்திற் கோபக்குறியைக் கண்டேன்@ ஆதலால், பத்திரத்தை நாம் அனைவரும் பார்க்க வேண்டும்.

சோமகன்: (பத்திரத்தின் துண்டுகளை நிலத்திலிருந்து கையிலெடுத்துக் கொண்டு) அரசே! இப்பத்திரம் நமது தோழனாகிய வீரனுடைய கையினால் எழுதப்பட்டிருக்கிறது.

வீரன்: (இருளப்பனை நோக்கி) மூடப்பயலே எனக்கு வெட்கத்தைக் கூட்டி வைக்கவா நீ பிறந்தாய்? (அரசனை நோக்கி) அரசே யான் தவறிழைத்து விட்டேன். அடியேனை மன்னிக்க வேண்டும்.

(இருளப்பனும் காஞ்சனையும் போய்விடுகின்றனர். நண்பர் கலந்து வார்த்தையாடி வீரன் சாலினிமேற் காதல் கொண்டிருப்பதை அறிந்து கொள்கின்றனர்)

வீரனுடைய காதலியாகிய சாலினி நிறத்தில் அடுப்புக்கரியைப் போன்றவளெனக்கூறித் தோழர் மூவரும் வீரனைப் பரிகசிக்கின்றனர். வீரன் காதற்சிறப்பைப்பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றான். நாக கன்னியருடைய அன்பைப் பெறுவதற்கு வேண்டிய சூழ்ச்சிசெய்ய வேண்டுமென்று அனைவருங்கூடி ஆலோசிக்கின்றனர். இதனோடு நான் காஞ் சந்தியாகிய விளைவு முடிகின்றது.

ஏ. துய்த்தல்

முதற்காட்சி:- ஒளிவாணனும். நாதனும், மட்டியும், விட்டிலும், இருளப்பனும், அதிசூரனும் ஒன்றுசேர்ந்து வாணாசுரநாடகத்தை இராஜசமுகத்திலே நடிக்கவேண்டுமென்று ஏற்பாடு செய்கின்றனர்.

இரண்டாங்காட்சி:- இராஜகுமாரி. சாலினி, மாலினி, கத்துருவாகிய நால்வரும் தமது காதலர் நால்வரைப் பற்றியும் அவரனுப்பிய முத்துமாலை முதலிய கையுறைகளைப்பற்றியுங் கலந்து வார்த்தையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் அபயன் உட்புகுந்து அரசனும் தோழரும் ஆயர்வேஷம் அணிந்துகொண்டு இராஜகுமாரியிருக்கும் விடுதியை நோக்கி வருவதாகத் தெரிவி;க்கிறான். உடனே நாககன்னியர் நால்வரும் முகமறைய வர்ணந்தீட்டி ஆய்ச்சியர் வேஷம் அணிந்து கொண்டு நின்றனர். அரசனும், தோழரும், யாழோன், குழலோன், தண்ணுமையோன் முதலிய வாத்தியக்காரரும் உட்புகுந்தனர். வந்த ஆயர்நால்வரும் குரவைக் கூத்தாடும் நோக்கமாக ஆய்ச்சியர் நால்வருடைய கையையும் பற்றப்போக ஆய்ச்சியர் மறுதலித்து நி;ன்றனர். பலவாறாகப் பரிந்து வேண்டக் குரவையாடுதற்கு உடம்படேமென்ற கன்னியர் ஆயர்வேடத்தோடு வந்த நால்வருக்கும் தமது கையைத்தொட்டு உடனிருந்து வார்த்தையாடுதற்கு உத்தரவளித்தனர். யாழ் முதலிய வாத்தியங்கள் முழங்கின. முகம் மறைக்கப்பட்டிருந்தமையால் இன்னாளென்றறியாத காரணத்தினால் அரசன் சாலினியினது கரத்தைப்பற்றி மருங்கிருந்து தமது காதன்மிகுதியை யுரைத்தான். வீரன் இராஜகுமாரியினது கரத்தையும், சோமகன் மாலினியதுகரத்தையும், இலாவணன் கத்துருவினது கரத்தையும் பற்றித் தமது காதன்மிகுதியைப் பெருகவுரைத்தனர். சிறிதுநேரத்தில் அரசனுந் தோழரும் அகன்றனர். நாககன்னியர் வேடிக்கையாகத் தங்காதலர் நால்வருடைய காதன் மொழியைப்பற்றியும் வார்த்தையாடிக் கொண்டிருந்து பின்பு சோலையைவிட்டு விடுதியினுட் புகுந்தனர். அரசனும் தோழரும் சொந்த உடை நாககன்னியர் நால்வரும் சொந்த உடையணிந்து சோலையினுள் வந்தனர். எண்மரும் கலந்துவார்த்தையாடுங்கால், கன்னியர்நால்வரும் தம்பாற் காதலுற்றோரை நோக்கி விரதபங்கஞ் செய்வது தகாத செய்கையெனவும், காதற்கிடங்கொடுத்த நெஞ்சத்தை நிலைநிறுத்த வேண்டுமென்றும் பரிகசித்துக்கூறி வற்புறுத்தினர். இத்தருணத்தில் இருளப்பனும், ஒலிவாணனும், மட்டியும், விட்டிலும், நாதனும், அதிசூரனும் ஒருவர் பின்னொருவராக வந்து அரசன் முதலிய எண்மருங்கூடியிருக்கின்ற சபையின் முன்னிலையில் வாணாசுரநாடகத்தை நடிக்க வாரம்பித்தனர்.

(இவ்வங்கத்தினுள்ளே பேதைமைபற்றிய நகைச்சுவை நிரம்பத் தோற்றும்)

வாணாசுரநாடகம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, அரசனும் தோழரும் காதல்கைம்மிக்க தமது நிலையை யெடுத்துக்கூறிக் கிருபை செய்யவேண்டுமென நாககன்னியரைக் குறையிரந்து வேண்டினர். இத்தருணத்தில் நாகநாட்டிலிருந்து மரகதனென்னும் மந்திரி வந்து நாகநாட்டரசன் இறந்து போய்விட்ட செய்தியைத் தெரிவித்தான். கன்னியர் அரசனையும் தோழரையும் நோக்கி ஒருவருஷத்தில் மீள்வதாகச் சொல்லிப் போய்விடுகின்றனர். மணந்தார்க்கு இன்பினையளிக்கும் வேனிற்கால வருணனையாகவுந் தணந்தார்க்குத் துன்பினையளிக்குங் கூதிர்க்கால வருணனையாகவும் உள்ள இரண்டு பாடல்களை அரங்கிலுள்ளோர் சிலர் பாடுவதோடு நாடகம் முடிகின்றது. இந்நாடகத்துக்கு ஆக்கியோரிட்ட பெயரை நேராக மொழிபெயர்த்துச் சொல்லுவதாயின் “காதன் முயற்சிக்கிடையீடு” என்று சொல்லலாம். மிகவும் எளிதான ஒரு பொருண்முடிபின்மேல் எழுந்த இந்த நாடகத்தினமைப்பை அவதானித்து அறிந்து கொள்ளுதல் ஏனைய நாடகங்களினமைப்பைக் கிரகித்துக் கொள்ளுவதற்குச் சிறந்த சாதனமாகும்.

இந் நாடகத்தினுள் இகழ்ச்சி. இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கு பொருட்பகுதியும் பற்றிப் பிறந்த நகைச்சுவை தோற்றினமை காண்க. நகைச்சுவைக்கு நேர்விரோதமானது அவலச்சுவை (அழுகை), இது இளிவு, இழவு, அசைவு, வறுமையென்னும்; நான்கு பொருட்பகுதியும்பற்றிப் பிறக்கும். மூப்பு, பிணி, வருத்தம், மென்மை யென்னும் நான்கும் பற்றித் தோன்றுவது இளிவரற்சுவை. மூப்பு முதலியவற்றாற் றுன்புறுவோன் பிறரால் இகழப்பட்டு எளியனாகியவழி அவனிடத்து அவலந்தோன்றுமாதலால். அவலமும் இளிவரலும் ஒரே நாடகத்தினுட் பொருந்திவருத னியல்பாகும்.

உ. அவலச்சுவை இளிவரற்சுவைக்கு இலக்கியமாக யாம் எடுத்துக் கொண்ட ஆகுலராஜன் சரிதையினது கதைச்சுருக்கம் வருமாறு:-

சிங்கபுரத்துமன்னனாகிய ஆகுலவர்ம்மன் தனது புதல்வியராகிய மாணிக்கமாலை, கனகமாலை, குணமாலை யென்னும் மூவரையும் அழைத்து, “மூப்புவந்துற்றமையினால் யான் அரசியற்கடமைகளிலிருந்திளைப்பாறப் போகின்றேன்@ இராஜ்யம் இனி நுமக்குரியதாகும். எனது புதல்வியராகிய நும்முள் எவள் என்மீது நிறைந்த அன்பு உடையவளாக இருக்கின்றாளோ அவளுக்கு நிறைந்தபாகத்தைக் கொடுப்பேன்” என்றான். மாணிக்கமாலையும், கனகமாலையும் வயோதிகனாகிய ஆகுலவர்மனுடைய செவிக் கின்பம்பயக்கும் இச்சகமொழி களை யுரைத்துத் தாம் தம் உயிரினும் பார்க்கத் தந்தையை நேசிப்பதாகச் சொன்னார்கள். குணமாலை ஒன்றும் பேசாது மௌனமாயிருந்தாள். அரசன் வற்புறுத்திக் கேட்கக் குணமாலை சொல்லுவாள்@ “அரசே! வேதரீர் என்னைப் பெற்று வளர்த்த பிதா. அங்ஙனமாயினும் எனது முழு அன்பும் தேவரீருக்குரியதென்று சொல்ல அடியாளுக்கு உரிமையில்லை. நான் ஒருநாயகரை அடையப்போகின்றேன்@ எனது அன்பிற் சரிபாதி அவருக்கு உரியதாகுமல்லவா? எனது சகோதரிகள் விவாகம் முடித்தவர்களாயிருந்தும் தங்களது அன்புமுற்றும் தேவரீருக்கு என்றார்களே@ தங்கள் நாயகருக்கு மிச்சம் வைத்திருக்கிறார்களோ, அறியேன்!” இவ்வாசகத்தைக் கேட்ட அரசன் சினந்து தனதுநாட்டை இரண்டு கூறுசெய்துமாணிக்க மாலையினுடைய நாயகனாகிய அரிவர்ம்மனவசம் ஒரு பாகத்தையும் கனகமாலையின் கணவனாகிய வீரவர்ம்மன் வசம் மற்றொரு பாகத்தையும் ஒப்புவித்து விட்டான். இச்சகம்பேசாது உண்மை கூறப்புகுந்த குணமாலைக்கு ஒரு செப்புக்காசுங் கிடைக்கவில்லை. இத்தருணத்திற் கௌதமன் என்னும் அமைச்சன் முற்பட்டு அரசனுக்குப் பலவாறாகிய நீதிவாக்கியங்களையும் எடுத்தியம்பிக் “கைப்பொருளைக் கொடுத்து விடுவது தவறு” எனக் கூறினான். அரசன் சினங்கொண்டு அந் நன்மதியமைச்சனை நாட்டிலிருந்து துரத்தி விட்டான். சீதனமில்லாத குணமாலையை அவளது குணநலத்துக்காக விரும்பி மணிபுரத்தரசன் மணமுடித்துத் தன்னூர்க்குத் கொண்டு சென்றனன். ஆகுலவர்மன் தனது பொருளனைத்தையும் புதல்வியர் கையிற் கொடுத்து விட்டமையினால், மாணிக்கமாலையுடைய வீட்டில் ஆறுமாதமும் கனகமாலையுடைய வீட்டில் ஆறுமாதமுமாக ஒவ்வோர் ஆண்டினையுங் கழிப்பதற்கு ஏற்பாடு செய்தான். மூத்தபுதல்வி வீட்டிற் போயிறங்கிச் சிலநாட்கள் ஆவதற்கு முன் அவள் வயோதிகனாகிய ஆகுலவர்ம்மனைப் பலவாறாக அவமதித்து நடத்தத் தொடங்கினாள். கௌதமனென்னும் அமைச்சன் அரசனைப் பிரிந்திருத்தலாற்றாது மாறு வேடம் பூண்டு ஆகுலவர்மனிடம் வந்து ஒருவேலைக்காரனாக அமர்ந்திருந்தான். மாணிக்கமாலையுடைய தலைமைச் சேவகனாகிய காசிபன் எஜமானியினுடைய கட்டளைப்படி வயோதிக அரசனை அவமதிக்க அதனைப் பொறுக்கமாட்டாது கௌதமன் காசிபனையுதைத்தான்@ மாணிக்கமாலை புறத்தேவந்து தனதுதந்தையையிகழ்ந்து வார்த்தையாட அதனைக் கேட்ட ஆகுலன் கைப்பொருளையிழந்த தனது மதியீனத்தை நினைத்து அவலித்துக் கனகமாலையினுடைய வீட்டை நோக்கி நடந்தான். வயோதிகராஜனை அடுத்து ஆதரிக்க வேண்டாமென்பதாக மாணிக்கமாலை தனது சகோதரிக்கு ஒரு நிருப மெழுதி அதனைக் காசிபன்கையிற் கொடுத்து அனுப்பினாள். விரைந்துபோன காசிபனைக் கனகமாலையினது தலைவாயிற்கடையிற் கௌதமன் சந்தித்தான். இருவருக்கும் மிடையிற் சில வேறுபாடுகள் நிகழக் கௌதமன் காசிபனை யுதைத்தான். கனகமாலை கௌதமனைத் தனது தந்தையினது சேவகனென்று சிறிதேனும் மதியாது அவனுக்குக் கால்விலங்கிட்டுக் கடைவாயிலில் இருத்தினாள். ஆகுலன் கனகமாலையுடைய வாயிலைக்கிட்டிக் கௌதமன் காலவிலங்கோடிருப்பதைக் கண்டு கோபாவேசங் கொண்டு, அங்ஙனம் செய்தார் யாவரோவென்று விசாரித்துக் கொண்டிருக்கும்போது கனகமாலையும் வீரவர்ம்மனும் வந்து சேர்ந்தனர். கனகமாலை தந்தையை நோக்கி, “அக்காள் வீட்டிற்குப் போய் இரண்டு வாரந்தான் ஆயிற்றே, இதற்கிடையில் இங்கு வந்துவிட்டீர்@ உம்மை உபசரிப்பதற்கு இங்கு ஒரு ஏற்பாடுமில்லை@” என றிவ்வாறாக வைது கூறினாள். இத்தருணத்தில் மாணிக்கமாலையும் தங்கைவீட்டுக்கு வந்து விட்டாள். இருவருமாகத் தந்தையை வைதார்கள். ஆகுலன் மனம் பொறுக்காது நன்றிகெட்ட தனது புதல்விய ரிருவரையுஞ் சபித்துவிட்டுக் கால்விலங்கு நீக்கப்பட்டுநின்ற கௌதமனோடும் தன்னையகலாது என்று முடன்றிரிகின்ற விதூஷகனோடும் நகர்ப்புறத்தை நோக்கி நடந்தான். குணதரன் என்னும் பிரபு முற்பட்டுப் பலவாறாகிய சமாதானஞ் சொல்லியும் ஆகுலன் கேட்கவில்லை. இந்தக் குணதரனுக்கு இருவர்மக்க ளுளர். மூத்தவனாகிய மதனன் ஒரு விபசார புத்திரன்@ இளையவனாகிய வரதன் சொந்த மனைவி வயிற்றிற் பிறந்தவன். மதனன் வஞ்சனையினாலே வரதனுக்குந் தந்தைக்கும் பகையுண்டாக்கிப் பிரித்துவிட்டுத் தானே அன்புள்ள புத்திரன் என்று தந்தை நினைக்கும்படியாக நடந்துவருகிறான். வரதன் குற்றவாளியாகச் சாட்டப்பட்டமையால், அவனைப் பிடித்துவரும்படி இராஜகட்டளை பிறந்திருந்தது. மதனன் தந்தைக்குச் சூது செய்வான் என்பதை யறிந்த வரதன் பிச்சைக்காரன் போல வேஷம்பூண்டு நகரத் தெருவிலேயே மறைந்து திரிகிறான்.

இவ்வளவோடு முகமும் பிரதிமுகமும் முடிகின்றன விரிவஞ்சித் தனித்தனி அங்கங்களுக்குச் சாரங்கூறாது அனைத்தினையும் ஒன்றாகத் தொகுத்துக் கூறினாம். இனி, கருப்பம் விளைவு துய்த்தல் ஆகிய மூன்று சந்திகளினுடைய சாரத்தையுந் தருவாம்.

மின்னலும் பேரிடியும் பெருமழையும் நிறைந்த இராப்பொழுதிலே ஆகுலவர்ம்மன் ஒதுங்கிநிற்பதற்கு இடமின்றி, வெட்டவெளியில் அலைகிறான். கௌதமன் ஒரு சிறு குடிசையைக்காட்டி அதனுள் நுழைந்து சற்று ஆறியிருக்கும்படி வேண்ட, “நன்றிகெட்ட புதல்வியருடை நிந்தைமொழிகளினும் பார்க்க இவ்விடிமுழக்கம் கொடியதோ” என்று சொல்லிக்கொண்டு ஆகுலவர்ம்மன் உட்புகுந்தான். அக்குடிசையினுள்ளே பிச்சைக்காரவேஷம் பூண்ட வரதன் படுத்திருந்தான். அவனைக்கண்ட ஆகுலன், “ஏதப்பா! கந்தைத் துணியுமின்றி இந்தக் குடிசையினுள் இருக்கிறாய். நீயும் இரண்டுபுதல்வியருக்குக் கைப்பொருளைக் கொடுத்துவிட்டு இக்கதியை அடைந்தனையோ?” என்றான். மனக்கவலையினாலும், வாடைக்காற்றினாலும் அல்லலுற்ற ஆகுலன் தன் சுயபுத்தியிழந்து பைத்தியக்காரனானான் இஃதிவ்வாறிருக்கத் தேசத்துச் சனங்கள் தமது வயோதிக அரசனை மிட்டுஞ் சிங்காசனத்திலேற்ற வேண்டுமென்று அதற்காகவேண்டிய சூழ்ச்சி செய்திருந்தார்கள். இதனையறிந்த புதல்வியரிருவரும் தந்தையைக் கொன்றுவிட்டாற்றான் தமக்குஅரசியல் நிலைக்குமென்று நினைத்துத் தமது வஞ்சகக்கருத்தை நிறைவேற்றுவதற்கு வழி தேடிக் கொண்டிருந்தார்கள். ஜனங்களுடைய வேண்டுகோளின்படி மணிபுரத்தரசன் சிங்கபுரத்தின்மீது படையெடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான். இவற்றையெல்லா மறிந்த குணதரனென்னும் பிரபு அரசனைப் பாதுகாக்க நினைத்துப் புறத்தேபோதற்கெண்ணித் தன்மகன் மதனனை நோக்கி, “வராய் மதனா! எனது அரசருடைய காரியமாக ஒரு நிருபம் வந்திருக்கிறது. நான் புறத்தே போய்வருகிறேன். இவ்விஷயத்தை யார்க்குஞ் சொல்லாதே” என்றுசொல்லிவிட்டு அப் பெருமழையிலே நகர்ப்புறத்துக்குப் போய்க் கௌதமனைக் கண்ட ஆகுலராஜனை மணிபுரத்தெல்லைக்கு அனுப்பிவைப்பதற்கு ஆகவேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டு வந்தான். வஞ்சகனாகிய மதனன் தந்தை போயினபின்னர்க் குறிப்பிட்ட கடிதத்தைத் தேடியெடுத்துத் தந்தை கொலைக்களத்துக்கு ஆளானாலும் தான் வாழவேண்டுமென்னும் நோக்கத்தோடு கடிதத்தைக் கொண்டுபோய் வீரவர்ம்மன் கையிற் கொடுத்துவிட்டான். குணதரன் திரும்பிவர வீரவர்ம்மனுடைய சேவகர்களுள் ஒருவன் அவனைப் பிடித்துத் தூணோடுகட்டினான். கனகமாலை நெருங்கிவந்து, “மூடா! உன் துரோகச் செயலையெல்லாம் அறிந்து கொண்டோம். வயோதிகராஜன் எங்கே?” என்று வினாவினான். ஆகுலராஜன் உயிர்தப்பியிருக்கும் வரையும் தங்களுக்கு இராஜ்யம் நிலையில்லையென்பதை யுணர்ந்தாளாதலினால். இந்தவிஷயத்தை மிகுந்த ஆத்திரத்தோடு வினவினாள். அரசனை மணிபுரத்துக்கு அனுப்பி விட்டதாகக் குணதரன் கூறக் கனகமாலை கோபாவேசங்கொண்டு அவனது நரைத்ததாடிமயிரைப் பற்றிப் பிடுங்கியெறிந்தாள். வீரவர்ம்மன் நெருங்கித் “துரோகி உன்கண்ணை மிதிக்கிறேன் பார்” என்று குணதரனுடைய ஒருகண்ணைப் பிடுங்கி நிலத்திற் போட்டு மிதித்தான். மற்றக்கண்ணையும் பிடுங்குகிற தருணத்தில் அருகில்நின்ற சேவகனொருவன் இக் கொடுஞ்செயலைக் கண்டு மனஞ்சகிக்காது வாளையுருவி வீரவர்மனைக் குத்தினான். கனகமாலை ஓடோடியும் வந்து அச்சேவகனைக் குத்திக் கொன்று விட்டாள். காயப்பட்ட வீரவர்ம்மனை உள்ளே தூக்கிச் சென்றார்கள். இரண்டு கண்ணுமிழந்த குணதரன், “ஐயோ! என்னன்புள்ள மகனே! மதனா! நீ எங்குற்றாய், என்று அழுதான்” கனகமாலை நகைத்து, “ஏடா! மூடா! உன்மகன் மதனன் உள்ளதையுரைத்து உனக்கு இத்தனை கேட்டையும் வரப் பண்ணினான். அவன் உனக்கு இரங்குவானென்று நினைக்கிறாயா?” வெளியே பிடித்துத் தள்ளிவிடும்படி கட்டளையிட்டாள்.

(இவ்வளவோடு மூன்றாஞ் சந்தியாகிய கருப்பம் முடிகின்றது)

கண்ணிரண்டு மிழந்து வழிதடுமாறி அலைவுற்றுவந்த தந்தையை வரதன் சந்தித்துத் தன்னை இன்னானென்றறியாது அன்பினொடு தந்தையினுடைய கரத்தைப்பற்றி ஆறுதல் வார்த்தைகூறி, மணிபுரத்தினெல்லையை நோக்கி அழைத்துச் சென்றான். இஃதிவ்வாறாக மணிபுரத்துச் சைனியங்கள் சிங்கபுரத்துச் சைனியங்களை யெதிர்த்துக் கடும்சமர்புரிந்தன. சேவகனாற் குத்துண்ட வீரவர்ம்மன்; முன்னமே யுயிர்துறந்தானாதலினால். கனகமாலை மதனனையழைத்துத் தனது சேனைக்குச் சேனாபதியாகவும் தனக்கு நாயகனாகவும் இருக்கும்படி வேண்டினாள். தங்கையுடைய சேனைகளுக்கு மதனன் சேனைத் தலைவனாகச் செல்லுகிறான் என்பதைக் கேள்வியுற்ற மாணிக்கமாலை தனது கணவன் அரிவர்ம்மன் உயிரோடிருக்கவும் மதனன் மீது பொருந்தாக் காதல் கொண்டிருந்தாளாதலினால், தங்கையினி;ன்று பிரித்து மதனனைத் தான் கைப்பற்றவேண்டுமென்றெண்ணி மதனனுக்கு ஒரு நிருபமெழுதிக் காசிபன்கையிற் கொடுத்தனுப்பினாள். காசிபன் வழியிற்செல்லும்போது குணதரனைக் கண்டு அவனைக் கைதியாக்குவதற்கு நெருங்க, வரதன் எதிர்த்து வந்து தன் கைவாளினாற் காசிபனை வெட்டினான். காசிபனுடைய அங்கியினுள்ளிருந்த பொருள்களைச் சோதித்துப் பார்க்கும்போது, மாணிக்கமாலை மதனனுக்கு எழுதிய கடிதம் அகப்பட்டது. அதன் உள்ளுறை வருமாறு:-

“நாம் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட சத்தியத்தை நினைவு கூருவீராக. நமது பகைவனை முடித்துவிடுவதற்குப் பல வசதிகளேற்படும்@ மனமுண்டானாற் காலமு மிடமும் சௌகரியப்படாமற் போகமாட்டா. அவன் வெற்றிபெற்றுவந்தால் என்பாடு சிறைச்சாலைதான். அவனுடைய சயனமாகிய சிறைச்சாலையிலிருந்து என்னை விடுவித்து உம்முடைய கஷ்டத்துக்குக் கூலியாக உம்முடைய மாற்றானது இடத்தை உமதிடமாக்கிக் கொள்ளும்”

இங்ஙனம்,

உம்மை நாயகனென்றழைக்க விரும்பிய,

உமது அன்புள்ள அடியாள்

மாணிக்கமாலை.

இந்நிருபத்தை வரதன் கொண்டு சென்று மாணிக்கமாலையின் நாயகனாகிய அரிவர்ம்மன்கையிற் கொடுத்தான். இந்நிகழ்ச்சிக ளிவ்வாறாக, மணிபுரத்தெல்லையடைந்து குணதரன் ஆகுலராஜனைத் தழுவி விதியை நொந்து துன்புற்று அழுகிறான். தீயபுதல்வனாகிய மதனனுடைய சூழ்ச்சியினாற் குணதரன் கண்ணிரண்டு மிழந்தான். தீய புதல்வியரிருவருடைய வஞ்சனையினால் ஆகுலன் அனைத்தையு மிழந்தான். நற்குணசீலையும் மணிபுரத்தரசன் மனைவியும் ஆகுலராஜனது மகளுமாகிய குணமாலை தந்தைக்கு நேர்ந்த இன்னலனைத்தினையுங் கேள்வியுற்று அரமனைவைத்தியனையும் அழைத்துக் கொண்டு விரைந்து வந்து தந்தையைச் சந்திக்கிறாள். குணமாலை மனமுருகிக் கண்ணீர் சொரிவதும் தந்தை தன் குற்றத்தை மன்னிக்கும்படி மகளை வேண்டிக் கொள்வதும், இவற்றைக் கண்ட கௌதமன் முதலினோர் அவலக் கண்ணீர் சொரிவதும் நான்காஞ் சந்தியாகிய விளைவின் ஈற்றுப்பாகங்களாவன.

மதனன் யுத்தத்தில் வெற்றி பெற்றுவருகிறான். சிங்கபுரத்துச் சேனைகள் மணிபுரத்துச்சேனைகளை வென்றமையால், ஆகுலராஜனும் குணமாலையும் யுத்தக்கைதிகளாகிச் சிறைச்சாலையி லடைபட்டார்கள்.

மதனன் மேல் அடங்காக்காதல்கொண்ட மாணிக்கமாலை தனது தங்கை கனகமாலையைத் தொலைத்துவிட்டால். மதனன் தனக்காவானென்றெண்ணித் தங்கைக்கு நஞ்சூட்டி விடுகிறாள். அரிவர்ம்மன் மதனனையணுகி அவனது வஞ்சச் செயலையுணர்த்தி, “இப்படுபாவியோடு முனைந்து சண்டையிடுவதற்கு இவ்விராஜ்யத்தி லொரு வீருனில்லையோ” என அழைக்க, வரதன் தோற்றி, மதனனோடு வாள் யுத்தஞ்செய்து, தன் கைவாளினால் மதனனைக் குத்திவிழுத்துகிறான். மதனன் விழுந்ததையும், தனது பொருந்தாக்காமம் வெளியாயினதையும் அறிந்த மாணிக்கமாலை வாளையெடுத்து நெஞ்சிற்பாய்ச்சி உயிர்துறக்கிறாள். மதனன் உயிர்துறக்குந்தருணத்தில் தன்பக்கம் நின்றோரையழைத்துத் தான் மாணிக்கமாலையின் விருப்பப்படி குணமாலையைத் தூக்கிலிட்டுக் கொல்லும்படி கட்டளை பிறப்பித்ததாகவுஞ் சொல்லுகிறான். அதற்குமுன் கட்டளை நிறைவேறிற்று. குணமாலையின் உயிர்துறந்த உடலத்தைக் கையிலேந்திக் கொண்டுவந்த ஆகுலராஜன் அடங்காத்துயரினாலே மூர்ச்சித்து உயிர் துறக்கிறான். இச் செயலனைத்தையுங் கண்ணுற்ற அரிவர்ம்மன் முதலிய அனைவரும் அவலக்கண்ணீர் சொரிகின்றனர். இவ்வளவோடு நாடகம் முடிகின்றது.

இந்நாடகம் முழுதும் அவலச்சுவையும், இளிவரற்சுவையும் பெற்று வருதலையும் பிறசுவை பெறாதுவருதலையும் நோக்குக. புறத்திணைப் பாலதாகிய இதனுள், பிறசுவை கலந்துவரின் மாறுபட்ட சுவைகள் ஒன்றிணையொன் றழித்து நாடகத்தினியல்பையே வேறுபடுத்திவிடுவனவாதலால், இங்ஙனம் அமைத்தது சிறப்பாயிற்று. கதையினுள் ஒரு கிளைக்கதை தோற்றுவதையும், கதையும் கிளைக்கதையும் பொருளையும் பிரதி விம்பத்தையும் போல ஒன்றினையொன்று நிகர்த் திருப்பதையும் நோக்குக. ஆகுலராஜனைப் போலவே குணதரனும் துன்புறுகின்றான். மாணிக்கமாலை கனகமாலையைப்போல, மதனன் தந்தைக்குத் தீங்கிழைக்கிறான். தந்தையரால் வெறுத்தொதுக்கப்பட்ட குணமாலையும் வரதனும் தந்தையர்க்கு நன்மைபுரிகின்றனர்.

š. இனி, இரம்மியன் சுசீலை சரிதையை யாராயப்புகுவாம். இந்நாடகத்தினுள் அவலமும் உவகையும் நிரம்பிவருகின்றன. அன்புடையாரோடுகூடி யின்பநுகர்ச்சியெய்தினோர் அவ்வன்புடையாரைப் பிரிந்தஞான்று துன்புற் றவலிப்பாராதலினால் ஒரே நாடகத்தினுள்ளே அவலமும் உவகையும் ஒருங்குதோற்றுவது மியல்பாயிற்று. கதைச் சுருக்கத்தையும் சுவைநிறைந்த சிற்சில பாகங்களின் மொழிபெயர்ப்பையுந் தருவாம். சோழன்கிள்ளிவளவன் நீதிநெறிதவறாது அரசு புரிந்து வருகின்ற காலத்திலே, மன்னனால் மதிப்புப்பெற்ற பழங்குடிகளுட் டலைமையெய்தினோராகிய பண்ணன்குடியாரும் மலையன்குடியாரும் இராஜதானியாகிய உறையூரிலே வசித்து வந்தார்கள். இவ்விரு குடியாருக்கு மிடையில் நெடுநாளாகப் பகைமை யேற்பட்டிருந்தது. பண்ணனைச் சேர்ந்தோரும் மலையனைச் சேர்ந்தோரும் ஒருவர் மற்றொருவரைக் கண்டாற் காரணமின்றி வாளையுருவிச் சண்டையிடுவர். அரசன் இவ்விருகுடியாருடைய பகைமையையுங் கண்டு அது தன்னரசியலுக்கே கேட்டை விளைவிப்பதென வெண்ணி அப்பகைமையை நீக்கிவிடுவதற்குத் தன்னா லியன்ற முயற்சி செய்தும் வாய்க்கவில்லை.

பண்ணுக்குப் பலவகைவனப்புக்களும் நிறைந்த ஒரு புதல்வியிருந்தாள்@ அவள்பெயர் சுசிலை. மலையனுக்கு ஒரேபுதல்வனிருந்தான்@ அவன்பெயர் இரம்மியமலையன். இரம்மிய னொருநாள் தனது இனத்தானாகிய வண்கைமலையனோடும் நண்பனாகிய மார்த்தாண்ட சோழனோடும் நகரவீதியிற் போகும்போது, ஏவலாளனொருவன ஒரு பத்திரத்தைக் கொடுத்து அதனை வாசித்து விளக்கும்படி கேட்டான். இரம்மியன் பத்திரத்தைப் படித்துப்பார்த்தபோது அன்றிரவு பண்ணன்மனையில் ஒரு விருந்து நடக்கப் போவதாகவும் அதற்குப் பண்ணனுடைய இனத்தார் பலர் அழைக்கப்பட்டிருப்பதாகவும் அறிந்தான். யாதுவரினுந் தானு மவ்விருந்துக்குப் போகவேண்டுமென்று மனத்தில் நிச்சயித் இரம்மியன் தன்கருத்தை உடன்வந்த இருவருக்குந்; தெரிவித்தான்@ அன்னாரும் போதற் குடன்பட்டனர். இரவு வருதலும் மூவர் நண்பரும் பண்ணன்வீட்டை யடைந்தனர். ஆங்கு இரம்மியனைக் கண்டமாத்திரத்தே பண்ணனது மைத்துனனாகிய தீவலமல்லனென்பான் வாளையுருவிக் கொண்டு எதிர்த்துச் சென்றான். விருந்தாக வந்தவரை எதிர்த்தலாகாது’ என்று பண்ணன் தடுத்தனன். பண்ணனுடைய புதல்வியாகிய சுசீலையை இரம்மியன்கண்டு அவளழகிலீடுபட்டுக் காதல்கொண்டு யாருமில்லாநேரம்பார்த்து அவளருகிற் சென்று இரண்டொரு வார்த்தை கூறுகிறான். அவளு மிவன்மேற் காதல் கொண்டு விருந்தினர் போகும்போது செவிலித்தாயை யணுகி இரம்மியனைச் சுட்டிக்காட்டி, “இவ்வாண்மகன் யாருடைய புதல்வன்” என விசாரித்தனள். “நமது குடியாருக்கு ஜன்மப்பகைவனான மலையன்மகன்@ பெயர் இரம்மியமலையன்” எனச் செவிலி கூறினள். இவ்வளவோடு முதற்சந்தியாகிய முகம் முடிக்கின்றது.

இரம்மியன் தன் நண்பரிருவருக்கும் பின்னாக நடந்துசென்றவன் அன்னார் கண்காணாது பண்ணனுடைய திருமனையின் அந்தப்புரத்துப் பூஞ்சோலையைச் சூழ்ந்திருந்த மதிற்சுவரொன்றின்மேலெறிச் சோலையினுள்ளே குதித்தான். வண்கைமலையனும் மார்த்தாண்ட சோழனும்யாண்டுந் தேடிப்பாத்துவிட்டுத் தம் மனையைநோக்கிப் போயினர். சோலையினுள் மறைந்திருந்த இரம்மியன் சாளரவாயிலிலே தோற்றிய சுசீலையின் முகத்தைக் கண்டு பரவசப்பட்டு நின்றான். அவள் தன்னெஞ்சொடுகூறிய சிலவார்த்தைகள் இவன் செவியிற்பட சுசீலைதன் மேற் காதலுற்றிருக்கிறா ளென்பதை இரம்மிய னறிந்து வெளிப்பட்டுத் தன்னாயின்னானென்று தெரிவித்து அவளோடு வார்த்தையாடி மறுநாட்காலை ஏழரைநாழிகைக்குச் செவிலியைத் தன்னிடம் அனுப்பும்படி சொல்லி விடைபெற்றுக் கொண்டு வைகறைப்பொழுதிலே உலோகமாபாலனென்னும் புரோகிதனிடஞ் செல்லுகிறான்@ புரோகிதனைக்கண்ட இரம்மியன் தனக்கும் சுசீலைக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் அன்பினைத் தெரிவித்து மறுநாட் பிற்பகல் தனக்குச் சூசீலையை விதிப்படி மணமுடித்து வைக்கும்படியாகப் புரோகிதனை வேண்டுகிறேன். புரோகிதன் அதற்கு இசைகிறான். மறுநாள் இரம்மியன் தனது நண்பரிருவரோடும் வார்த்தையாடிக் கொண்டிருக்கும்போது சுசீலையின் செவிலித்தாய் வருகிறாள். நண்பரை யனுப்பிவிட்டு இரம்மியன் செவிலிக்குத் தன்னுடைய எண்ணத்தைத் தெரிவித்துப் பிற்பகலிற் சுசீலையை யழைத்துக் கொண்டு உலோகமாபாலனுடைய வீட்டுக்கு வரும்படி சொல்லுகிறான். ஆங்குக் காதலரிருவருஞ் சந்தித்து முறைப்படி மணமுடித்துக் கொள்ளுகிறார்கள். இவ்வளவோடு இரண்டாஞ் சந்தி முடிகிறது.

(செகசிற்பியாரது கவிநயத்தையும் இயன்றவரை விளக்கிக்காட்டுதல் இன்றியமையாதாதலின், இச்சந்தியினுள்ளே வந்த உவகைச்சுவை நிறைந்த ஒருபாகத்தினது மொழிபெயர்ப்பைத் தருகின்றாம்)

காலம்: யாமப்பொழுது, களம்: பூஞ்சோலை.

இரம்மியன்: (நெஞ்சொடு மொழிகின்றான்)

வாட்புண் பட்ட வடுவறி கில்லார்

நாட்புண் கண்டு நகைப்பினு நகைப்பர்

(வேனில்வே ளைங்கணை மேவுறா மனத்தர்

சோமனா ரிழைக்குந் துயரினை யறியார்.)

சுசீலை சாளரவாயிலில் தோற்றுகிறாள்.

நெஞ்சே! பொறுபொறு@ நீள்குண திசையில்

அஞ்செஞ் சோதி யலர்கதிர் பரப்பிப்

பேரொளி யொன்றுநன் னீர்மையி னெழுந்தது@

அதுவே,

ஆரெழிற் பரிதி பேரோ சுசீலை

இகனிறை மதிதரு மின்னலை யொழிக்கப்

பகலவன் வந்த பான்மையை யுணர்ந்தேன்

வாராய் நிறையெழில் வயங்கிய சுடரே!

நேரா ரியல்பினெ னெஞ்சினை வாட்டிய

விண்மதி நின்னெழில் விளக்கங் கண்டு

தன்னொளி மழுங்கித் தாழ்ந்துநின் றனனால்@

நீயே,

இந்துவை வென்ற சுந்தர வதனச்

செந்திரு வாயினை சிறைசெயுங் கன்னி

மாடத் திருத்தன் மரபோ வுரையாய்?

காதன் மடந்தாய்! ஆ! என் னன்பே!

சிறியே னுளநிறை கழிபெருங் காதலை

அறியாய் ஐயோ! பொறுபொறு மனனே!

அணியெழிற் பாவை மணியிதழ் விரித்து

மொழிசொல் முன்னியும் மொழியா தமர்ந்தனள்

வாக்கெழு மாற்றம் வழங்கில ளெனினும்

நோக்கெழு மாற்றம் நோக்கா லுணர்ந்தனள்

பேதையேற் கன்றம் மாதர்கண் ணோக்கம்

வீண்மீ னொளியென மெல்லொளி பரப்பும்

நோக்கிணை மருவின ராக்கமெய் தினரே

மெம்மலர் முகத்திற் சேர்ந்தன மெல்விரல்

மெல்விரன் மேலதோர் வியன்பூம் பட்டுடை

பட்டுடை செய்தவம் யான் செய் திலனே.

சுசீலை: ஆ! ஆ! ஐயோ!

இரம்மியன்: மாதோ? அணங்கோ?

அகல்வா னெழுந்து முகிலிடைப் படர்ந்து

கண்டோர் வியக்குங் காமரு காட்சிய

தணங்கே யாத லிணங்குமெல் லணங்கே

விண்ணவ ரமிழ்தினை வென்றநி னின்மொழி

உண்ணுதற் கையோ வுருகுமென் னுள்ளம்.

சுசீலை: (இரம்மியன் சோலையுண்ணிற்பதை யறியாது தன் காதலை வெளியிட்டுச் சொல்லுகிறான்)

இரம்மிய மலைய! இரம்மிய மலைய!

தந்தையை மறந்து தனிப்பெயர் துறந்திங்

கென்பால் வருதி யென்னுள நிறைந்த

காதலை யுணர்ந்தெனைக் கைப்பிடிப் பாயேற்

பண்ணன் மகளெனும் பண்டைத் தொடர்பினை

நீக்கிநின் னுடனுறை வாழ்க்கைமே வுவனே.

இரம்மியன்: (தன்னுள்ளே) இவ்வளவு அமிர்தம் என செவிவழிநிறைந்தது போதுமோ? அன்றேல் இன்னுந் தாமதித்து நிற்றல் நன்றோ?

சுசீலை: மலையன் என்னும் பெயரன்றோ. எங்கோத்திரத்தாருக்கு வன் கண்விளைக்கின்ற பெயராயிற்று.; என்னன்பனே! நீ நின்பெயரல்லை. நீ வேறு@ நின் பெயர் வேறு. மலையனென்றாலென்ன! கையா? காலா? புயமா? முகமா? பிற உடலுறுப்பா? சண்பகமலருக்கு வேறு பெயரிட்டழைத்தாலும் வாசனை வேறாமா? இரம்மியமலையன் என்னும் பெயரை நீக்கிவிட்டு வேறு பெயரிட்டழைத்தால் என்னன்பனுடைய புவிவலியும் நிறையெழிலும் அணுவளவேனும் குறைவுபடுமா? என் உள்ளத்துறைவோய்! நீ நின்பெயரை விட்டொழிதி. சொல்லளவாகியபெயரை நீக்கிவிட்டு அதற்குப்பதிலாக அடியாளை முழுதும் எடுத்துக் கொள்வாயாக.

இரம்மியன்: இன்மொழிநங்காய்! நின் எண்ணம் நிறைவேறுக. ஏழையேனை அன்பனென்று இன்னொருமுறை யழைப்பாயேல் என் பெயரை நீக்கிவிட்டு நீ விரும்பும் பெயரைக் கொள்ளுகிறேன்.

சுசீலை: இந்த நடுநிசியில் என்வாக்குக்கு எதிர்வாக்குரைக்கின்ற ஆடவனாகிய நீ யாரோ?

இரம்மியன்: என்கண்ணே! என்ன பெயரினால் யான் இன்னானென்றென்னை உணர்த்துவனோ அறியேன். யான் கொண்டிருக்கும் பெயர் நின் செவிக்கு அல்லல் விளைக்கும் பகைமைப் பெயர். அது எழுதப்பட்டிருக்குந் தாளைத்தானும் யான் கிழித்தெறிந்து விடுவேன்.

சுசீலை: நின் இன்மொழிநாவினுரை என்செவியில் இதற்குமுன்னும் பட்டிருக்கிறது. நீ மலையர் குலத்துதித்த இரம்மியகுமார னல்லையோ?

இரம்மியன்: அணங்கே! இப்பெயரிரண்டும் நினக்கு இணங்காவாயின். நான் இரம்மியனுமல்லன்@ மலையனுமல்லன் என்பேன்.

சுசீலை: நீ எவ்வாறு இச்சோலையினுள் வந்தனை? மதிற்சுவரே மிக உயர்ந்துளது@ என்னினத்தார் நின்னைக் காணிற் கழிபேரின்னல் விளைப்பார்@ காவலைக் கடந்து எங்ஙனம் உட்புகுந்தனை?

இரம்மியன்: காதற்கு வரம்புமுண்டோ? கற்சுவ ரொருதடையாமோ? காதற்சிறகைக் கொண்டு மதிலைத் தாண்டிப் பறந்துவந்தேன்.

சுசீலை: என் சுற்றத்தார் நின்னைக் காணிற் கொன்றுவிடுவாரென் றஞ்சுகிறேன்.

இரம்மியன்: கோதாய்! நின் இணைவழிகள் கூற்றத்தையும் வேலையும் ஒத்தன. நின் சுற்றத்தாரது வாட்படையிலும் பார்க்க நான் நினது கண்ணாகிய வேற்படையை யஞ்சுகின்றேன்.

(என் றிவ்வாறு இவ் விரு காதலரும் தம் முளநிறையன்பு வெளிப்படுமாறு உரையாடுகின்றனர். இந்நாடகத்தின் முற்பாகம் உவகைச் சுவை ததும்புவது@ பிற்பாகம் அவலச்சுவை நிறைந்தது. இனிக் கதைச் சுருக்கத்தைத் தொடர்ந்து சொல்லுவாம்)

இரம்மியனும் நண்பரும் வீதியிற் போகும்போது வழியிற்கண்ட தீவலமல்லன் வாளையுருவிப் போருக்கழைக்கிறான். தனது நாயகியினது நல்லம்மானென்றெண்ணி இரம்மியன் அவனை எதிர்க்காது பின் வாங்குகிறான். இரம்மியனைத் தீவலமல்லன் தூஷிப்பதைக் கண்ட அவனது நண்பன் மார்த்தாண்ட சோழன் மனம்பொறாது வாளையுருவித் தீவலனையெதிர்க்கிறான். தீவலன் மார்த்தாண்டனைக் கொன்றுவிட அதுகண்டு மனம்பொறாத இரம்மியன் தீவலனை யெதிர்த்து அவனைக் கொல்லுகிறான். சோழன்கிள்ளிவளவன் நடந்த காரியங்களை விசாரித்து, இரம்மியன் உறையூர் எல்லையினுட் புகுதல் கூடாதென்று கட்டளை பிறப்பித்தான்.

இந்நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற சுசீலை நல்லம்மா னிறந்த துய ரொரு புறமும் மணநாளிலே கணவனைப்பிரிந்த துய ரொருபுறமுமாகத் துன்புறுகிறாள். சுசீலை மணமுடித்துக்கொண்ட செய்தியைச் செவிலித் தாயும் புரோகிதனும் அறிவாரேயன்றிச் சுற்றத்தார் பிறரெவரும் அறிந்திலர்.

இரம்மியன் உறையூரைவிட்டு வெளிச்செல்ல மனமியையாதவனாய் உலோகமாபாலனையணுகிச் செய்வதென்னவென்று விசாரித்தான். இராஜகட்டளையைத் தவறிநடத்தல் சரியல்லவென்றும், ஆமூருக்குப் போய் மறைந்திருந்தால், தான் ஆகவேண்டிய காரியங்களை முடித்துப் பின்பு தெரிவிப்பதாகவும் உலோகமாபாலன் உரைத்தான். இரம்மியன் செவிலியைக் கண்டு அவள் வாயிலாகச் சுசீலையினது துன்பநிலையை யுணர்ந்து, சுசீலைக்கு ஆறுதல் உரைத்த பின்பற்றி உரையூரை விடுத்து வெளியேபோவதில்லையென்று நிச்சயங்கொண்டு இராப்பொழுதாயினபின்னர்க் கயிற்றாலாகிய ஓர் ஏணியைச் சுசீலையினது சாளரத்திலிருந்து தொங்கவிடும்படி செவிலியைக் கேட்டான்@ அவளும் அதற்கியைந்தாள். இரவுவருதலும் இரம்மியன் சுவரைத்தாண்டிச் சோலையினுட்புகுந்து கயிற்றேணிவழியாகச் சாளரத்தினுட் புகுந்து சுசீலையின் சயனசாலையை யடைந்தான். அன்றிரவுமுழுவதையும் அவளோடு கழித்துச் சூரியோதயத்துக்குமுன் பரிவாற்றாது பிரிந்த இரம்மியன் துன்பம்நிறைந்த மனத்தினோடு ஆமூரைநோக்கி நடந்தான். இஃதிவ்வாறாகச் சோழன் கிள்ளிவளவன் தனது நண்பனாகிய பண்ணனையழைத்துத் தனதுநம்பி பாற்கரசோழனுக்கும் பண்ணனது புதல்வியாகிய சுசீலைக்கும் மணமுடித்து வைக்க வேண்டுமென்னுங் கருத்துத் தனக்கு நெடுநாளாக உண்டு என்று தெரிவித்தான். பண்ணனும் அம்மணவினைக் கியைந்து அரசனுடைய விருப்பத்தைத் தனதுமனைவிக்குத் தெரிவிக்க, அவளுஞ் செவிலியைவிளித்துச் சுசீலைக்கு இச்சந்தோஷகரமான செய்தியைத் தெரிவித்து அவளுடைய விருப்பத்தை யறிந்து கொண்டுவரும்படி யனுப்பினான். சுசீலை யிவ்விஷயத்தைக் கேள்வியுற்றுச் செய்வ தென்னவென்றறியாது தியங்கி உலோக மாபாலனிடம் புத்திகேட்க நிச்சயிக்கிறாள். இவ்வளவோடு மூன்றாஞ் சந்தியாகிய கருப்பம் முடிகின்றது.

பாற்கரசோழன் உலோகமாபாலனுடைய மனைக்குவந்து தனக்கும் சுசீலைக்கும் எதிர்த்துவருகிற குருவாரத்தன்று திருமணம் நடக்கப் போகின்றதெனச் சொல்லிக் கொண்டிருக்கிற தருணத்திற் புரோகிதன் மனைக்குச் சுசீலையும் வந்தனள். பாற்கரனுக்குஞ் சுசீலைக்கு மிடையிற் சில கூற்றும் மாற்றமும் நிகழுகின்றன. பாற்கரன் போயினபின்னர்ச் சுசீலை தன்னிலையைப், புரோகிதனுக்குரைத்து இனிமேல் நடந்து கொள்ள வேண்டியமுறை யென்னவென்று விசாரித்தாள். அவன்அவள்கையில் ஒரு திராவகத்தைக் கொடுத்து, “அம்மா! நீ நின் வீட்டுக்குப்போய்ப் பாற்கரனை மணமுடிப்பதற்குச் சம்மதித்ததாகச் சொல்லிவிட்டுச் சந்தோஷமாயிரு@ நாளை புதன்கிழமை@ நாளையிரவைக்கு உன் சயனஅறையிற் செவிலியோ, பிறரோ இருத்தல் கூடாது. சயனத்திற் படுத்துக்கொண்டு அப்புட்டியினுள்ளிருக்குந் திராவகத்தைக் குடித்துவிடு@ உடனே உன்னுடல் இறந்தாருடலத்தைப் போல அசைவற்று விறைத்துப்போம்@ நீ இறந்து விட்டனையென்றெண்ணி உன்னை ஈமப்புறக்காட்டுக்குக் கொண்டுசென்று தாழியிற்புதைத்து விடுவார்கள்@ சரியாக நூற்றெட்டு நாழிகை சென்ற பின்பு, நீ மட்டும்; உயிர்பெற்றெழுவாய்@ அதற்கு முன் இரம்மியன் வந்து உன்னைத் தாழியினின் றெடுத்து ஆமூருக்குக் கொண்டு போய் விடுவான்” என்றான். சுசீலை மகிழ்ந்;து தன்மனைக்குச் சென்று, உலோகமாபால னுரைத்தவண்ணமே அனைத்தையுஞ் செய்து முடித்தாள். மறுநாள். பாற்கரசோழனுடைய மணத்துக்குக் குறிக்கப்பட்டதினம் சுசீலையினுடைய சயனஅறைக்குட்சென்று செவிலி பார்த்த போது மணமகள் சயனத்தின்மேலே யிறந்துகிடப்பதாகக் கண்டாள். நன்றாய். செவிலி, சுற்றத்தார் முதலிய அனைவரும் ஐயோ! முறையோவென் றழுது துன்புறுகின்றனர். இவ்வளவோடு நான்;காஞ் சந்தி முடிகின்றது.

உலோகமாபாலன் இரம்மியனுக்கு ஒரு செய்தி யனுப்புகிறான்@ அச்செய்தி இரம்மியனுக்கு எட்டுகிறது. அவன் துன்புற்று வருந்தி, அவளோடு உடனிறப்பதற்கு நிச்சயித்து, ஒளஷதம் விற்போனொருவனிடம் போய்க் கொடியநஞ் சொன்று வாங்கிக் கொண்டு, கையில் ஒரு மண்வெட்டியோடு ஈமப்புறங்காட்டுக்குச் செல்லுகிறான். ஆங்குச் சுசீலையின் உடலம் புதைக்கப்பட்டிருந்த குழியைத் தோண்டித் தாழியைக் கண்டான். அத்தருணத்திற் பாற்கரசோழன் முற்பட்டு எதிரியாகிய இரம்மியமலையன், சுசீலையின் உடலத்தை யெடுத்தலைக் கண்ட வாளையுருவிக் கொண்டு சண்டைக்குப் போய் இரம்மியனுடைய கைவாளா லிறக்கிறான். இரம்மியன் தனது மனைவியாகிய சுசீலையினுடைய உடலத்தைக் கண்டு ஆறாத்துயர்கொண்டு, அழுது பிரலாபித்துத் தான் கொண்டுவந்த நஞ்சை யுண்டு, கீழேவிழுந்து இறந்து விடுகிறான். உலோகமாபாலன் தானனுப்பிய செய்தி இரம்மியனுக்குச் சென்று சேரவில்லை யென்பதை யறிந்தவுடனே யாதுவிளைந்து விடுமோ வென்றஞ்சி, விரைந்து ஈமப்புறங்காட்டுக்குச் சென்று பாற்கரசோழனும் இரம்மியனும் உயிர்துறந்துகிடப்பதைக் காணுகிறேன். சுசீலை குறிப்பிட்ட நேரம்வருமுன்னரே மருந்தினாலாகிய மயக்கந் தெளிந்தெழுந்து உலோகமாபலனைக் கண்டு “எங்கே யென்கணவன்” என்கின்றாள். புரோகிதன் பலவாறாகச் சமாதானஞ் சொல்லச் சுசீலை, “என்கண்முன் நில்லாதே, போ” என்று சொல்லிவிட்டுப் பலதிசையும் நோக்கித் தனது நாயகனுடைய உடலத்தைக் கண்டு அவன் முகத்தில் முத்தமிட்டு, அவன்கையில் எஞ்சியிருந்த நஞ்சினையுண்டு, அவனுடைய உடைவாளை உறையினின்று கழற்றி, “இதுவே உனக்கு உரிய உறை” யென்று தனது மார்பினுட் பாய்ச்சி விழுந்து இறக்கின்றாள். பாற்கரனுக்கும் இரம்மியனுக்குஞ் சண்டைநடக்கும் போதே அதனைக் கண்டகாவலாளர் ஓடோடியும்போய் அரசனுக்கும் நகர மாக்களுக்குந் தெரிவித்தனர். அரசன், பண்ணன், மலையன், பரிசனர் முதலினோர் பலரும் ஈமப்புறங்காட்டுக்கு வந்து ஆற்றொணாத்துன்புற்று, உலோகமாபாலன்வாயினால் நடந்த நிகழ்ச்சியனைத்தையும் அறிகின்றனர். அரசன் பண்ணனையும் மலையனையும் விளித்துப் “பார்த்தீரா நுமதுபகைமையா லெய்தியபயனை” எனக் காட்டினான். அன்றுமுதல் அவ்விருவரும் மாறாநட்புப் பூண்டனர். இவ்வளவோடு நாடகம் முடிகின்றது.

ச. அவலச்சுவையை “ஆகுலராஜன் சரிதை” யினுள்ளும் “இரம்மியன் சுசீலை சரிதை”யினுள்ளுங் காட்டினாம். வெகுளிச் சுவையை மேல்வரும் “சேனாதிபதிசரிதை”யினுட் காட்டுவாமாதலினால் அவலமும் வெகுளியுமுணர்த்துவதென யாம் எடுத்துக்கொண்ட “தீ நட்பஞ்சியதீமோன்சரிதை” யைச் சுவைபற்றி யாராயும் அவசியமில்லை. இதனது வித்து. முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்னும் சந்தியுறுப்புக்களை உறுப்பியலினுட் டொகுத்துக் கூறினாம். நாடகபாத்திரருக்குப் பெயர்கொள்ளாது சந்தியுறுப்புக்களினமைப்பை வகுத்துக் காட்டிய யப்பாற்செல்வாம். கதாநாயகனாகிய செல்லப்பிரபு பலருக்கு விருந்தளித்தலும், அன்னார் உண்டு களியாடலும், புலவர் ஓவியர் மணிகுயிற்றுநர் சூதர் மாகதர் என்றின்னோர் அவனிடம் பரிசில்பெற்று அவனைப் போற்றி நிற்றலும் முகத்தினுள் வருவன. பிரபு கடன்பட்டுக் கலங்குதலும், தனது பழைய நண்பர் தனக்கு உதவார் என்னும் முழுநம்பிக்கையோடித்தலும், அவர் உதவுவார் என்று கூறிய அறிஞனை வெகுண்டு நோக்குதலும் பிரதிமுகமாவன. பிரபுவினுடைய கருமகாரன் அவரது நண்பர்பலரிடம் போய் அவர் கடனால் வருந்துவதைத் தெரிவித்து உதவிபெற முயலுதலும், அன்னார் மறத்தலும், பிரபு ஒருசூழ்ச்சியினால், பழைய நண்பரனைவரையும் விருந்துக்கழைப்பதுபோ லழைத்து அவர்முன் அழுக்கு நீர்நிரம்பிய கலங்களை வைத்து, “நன்றிகெட்டநாய்களே! இது தான் நான் இன்று உங்களுக்குத் தருகின்றவிருந்து” என்று அவர்கள் மேற்கலங்களை யெறிவதும் அன்னோர் அல்லோலகல்லோலப்பட்டோடுதலும் கருப்பத்தினுள் வருவன. கதாநாயகன் காட்டிற்சென்று வசிப்பதும், கிழங்குபெறுவதற்காக நிலத்தினைத் தோண்டும்போது ஒரு பொற்குவையைக்கண்டு அதனை இழித்துக்கூறுவதும் அவ்வழிச்சென்ற ஒரு சேனைத்தலைவனும் அவனது காதற்கிழத்திய ரிருவரும் கதாநாயகனை யணுகுதலும், அவன் அன்னோர் முகத்திற் பொற்காசுகளையெறிதலும், அவர்கள் காசுகளையெடுத்துக் கொண்டு நன்றிகூறிச் செல்வதும் கள்வர்சிலர் வருதலும் விளைவினுள் வருவன. கதாநாயகனாகிய தீமோனிடம் பொற்குவை யகப்பட்டிருக்கிறதெனக் கேள்வியுற்றுப் புலவர் ஓவியரென் றின்னோர் அவனை நாடிச் செல்வதும், அன்னோரையும் மனிதவர்க்கத்தையுந் தீமோன் இழித்துக் கூறுவதும், சேனைத்தலைவன் தீமோனுடைய பகைவரை யெதிர்த்து வெற்றி பெற்றுத் தீமோனை நகருக்கழைத்துச் செல்வதற்குக் காட்டினுட் சென்று தேடுவதும் தீமோன் இறந்துகிடக்கக் காண்பதும் ஐந்தாஞ் சந்தியாகிய துய்த்தலினுள் வருவன. இனி மருட்கையு முவகையு முணர்த்தும் பெரும்புயற்சரிதையை யாராயப்புகுந்து முதலிற் கதைச் சுருக்கத்தைத் தருகின்றோம்.

பலவளம் நிறைந்த சீயதேசத்தை அலாயுதனென்னும் மன்னன் அரசு புரிந்து வருகின்றகாலத்தில் பிரபாகரன் என்னும் பெயரினைடைய சிற்றரசன் சீயநாட்டின் ஒருபாகமாகிய மைலம் என்னுந் தேயத்தை யாண்டுவந்தான். அவன்தம்பி அநாகுலன் வஞ்சனையினால் தனது தமையனையும் அவனது மூன்றுவயதுக் குழந்தையாகிய மாலதியையும் சுக்கானில்லாத ஒருபடவிலேற்றிக் கடலிற் றள்ளிவிட்டுத் தமையன் ஆண்டு வந்த தேயத்தைத் தா னாண்டு வந்தனன். அநாகுலனுடைய வஞ்சனையை ஒரு சிறிதறிந்திருந்த கௌசிகனென்னும் பிரபு படவினுள்ளே உணவுப்பொருள்கள் சிலவற்றையும், புத்தகங்கள் சிலவற்றையும் அநாகுலன் அறியாவண்ணம் மறைத்துவைத்தனன். படவு கடலலையால் மொத்துண்டு, அலைவுற்றச் சிலநாட்களுக்குப்பின் மணிபல்லவம் என்னுந் தீவை வந்தணுகியது. கௌசிகன் மறைத்துவைத்த உணவுப்பொருள்கள் பிரபாகரனுக்குப் பேருதவிபுரிந்தன. மணிபல்லவத்துக் கரையையடைந்த பிரபாகரன், மானிடசஞ்சாரமில்லாத அத்தீவிற் குடிசையொன்றமைத்துக்கொண்டு காலங்கழித்து வருகின்ற நாளிற் புதல்வியாகிய மாலதி நாளொருவண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ச்சியெய்தினாள். பிரபாகரன் படவினுள்ளிருந்த புத்தகங்களையெடுத்தாராயும்போது அவற்றினுள் ளொரு மாந்திரீக நூல் இருந்தது. அதனையெடுத்துக் கற்ற பிரபாகரன் மந்திரசக்தியின் வலிமையினாலே பவனவேகன் என்னும் வித்தியாதரனையும், வலிமுகன் என்னும் இயக்கனையுந் தனக்கு அடிமைகளாக்கிக் கொண்டான். பவனவேகன் ஆகாயமார்க்கமாகச் சஞ்சரிப்பவன்@ வேண்டும்போது வேண்டிய உருக்கொள்ளவும், தனது எஜமானாகிய பிரபாகரனுக்கன்றிப் பிறருக்குத் தோற்றாத மாயவுருக்கொள்ளவும், செயற்கருஞ் செயல்கள் பலவற்றைச் செய்யவும் வல்லவன். வலிமுகம் முசுமுகியென்னும் இயக்கியின்புதல்வன்@ தாயிறந்துவிட ஆதரிப்பாரின்றி மணிபல்லவத்தில் அலறித் திரிந்தான். மேல்முழுதும் நிறைந்த செம்பட்டைமயிருங் கோரரூபமுமுடைய இவனைப் பிரபாகரன் பிடித்துக் கட்டிக்கொண்டு வந்து மக்கள் மொழியை இயன்றவரை கற்பித்து விறகு பிளத்தல் முதலிய முரட்டு வேலைகள் செய்வதற்கு ஆளாக வைத்திருந்தான். அடிமைகள் இருவரையும் பெற்றபின்பு பிரபாகரனுக்குச் சிறிது ஆறுதலுண்டு. ஒய்வுநேரம் முழுவதிலும் தனது புதல்விக்குப் பாடஞ் சொல்லிவைத்து அவளைப் பலகலையுங்கற்ற பண்டிதையாக்கினான். மாலதிக்கு வயது பதினைந்தாயிற்று@ அதாவது பிரபாகரனும் புதல்வியும் மணிபல்லவத்துக்குவந்து பன்னிரண்டு ஆண்டுகளாயின. இவ்வெல்லையில், காத்திராப்பிரகாரமாகப் பிரபாகரன் தனது இராஜ்யத்தைத் திரும்பவும் பெற்றுக்கொள்ளுவதும் மாலதி பல சுகுணங்களும் நிறைந்த பிரியவிரதன் என்னும் அரசிளங்குமரனை நாயகனாகப் பெறுவதுமே நாம் எடுத்துக் கொண்ட சரிதையின் உள்ளுறையாவன.

கப்பலொன்று பெரியதொரு புயலிற்பட்டு அக்கப்பாடுறுவதோடு நாடகம் ஆரம்பமாகின்றது. மணிபல்லவத்துக் கடலருகில் நின்ற மாலதி கப்பல் அலைவுறுவகைக் கண்டு அதனுள்ளிருக்கும் மானிடருயிருக்கு இன்னல் வந்துவிடுமோ வென்றஞ்சித் தனது தந்தையை நோக்கி அவனது மந்திரசக்தியினாலே புயலை நிறுத்திவிடும்படி, அவனைக் குறையிரந்து வேண்டிக்கொள்ளுகிறாள். பிரபாகரன் கப்பலில் உள்ளோரது உயிருக்குச் சேதம் வராதென்று கூறியதோடு தனது மந்திர வலிமையினால் தானே புயலை உண்டு பண்ணியதாகவும் அதனாற் பெருநன்மை விளையப்போகிறதென்றுங் கூறித் தனது வரலாற்றையுந் தெரிவித்துத் தனது மந்திரவலிமையினாலே மகளை அயர்ந்து நித்திரையாகும்படி பண்ணுகிறான். இங்ஙனஞ் செய்தபின் பிரபாகரன் பவனவேகனை அழைத்துத் தனது கட்டளைப்படி எல்லாம் ஆயிற்றா என்று விசாரித்தான். புயலை யுண்டாக்கியபின்னர்க் கப்பலிலிருந்தோரனைவரையும் உயிர்ச்சேதம்மின்றிக் கரைசேர்த்திருப்பதாகவும், கப்பலைச் சிறிதேனும் பழுதுபடாமல் ஒரு துறை சேர்ந்திருப்பதாகவும் பவனவேகன் தெரிவித்தான். பிரபாகரனும், “நன்று@ கப்பலிலிருந்தோருள் இராஜகுமாரனை இவ்விடம் அழைத்துவா” என்றனன். இவ்விராஜகுமாரன் சீயதேசத்தரசன் அலாயுதனது புத்திரன் பிரியவிரன். அலாயுதனும் அவனது தம்பி சங்கவர்ணனும், புதல்வன் பிரியவிரதனும், அநாகுலனும் கௌசிகனும்பிற பிரபுக்களும் சமுத்திரயாத்திரை செய்யும் போது அன்னார் ஏறிச்சென்ற கப்பல் மணிபல்லவத்துக்குக் கரையோரமாகச் சென்றது. இதனை தனது மந்திரக் காட்சியினாற் கண்ட பிரபாகரன் புயலை யுண்டாக்கிக் கப்பலிலிருந்;தோரனைவரையும் கப்பலையும் சேதமின்றிக் கரைசேரும்படி செய்தனன். அங்ஙனமாயினும் அரசன் தன் புதல்வன் கடலிலமிழ்ந்து விட்டானெனவும், இராஜகுமாரன் தன் தந்தை யுயிர் துறந்து விட்டானெனவும், அனைவரும் கப்பல் மூழ்கிவிட்டதெனவும், தம் முள்ளேயெண்ணித் துன்புற்றுத் தீவகத்தின் பற்பலபாகங்களிலும் ஒருவரையொருவர் தேடி அலைந்து திரிகின்றனர். இவ்வெல்லையிற் பவனவேகன் உருத்தோற்றாவண்ணம் இராஜகுமாரனது முன்னிலையிற் போய் நின்று.

“மஞ்சட் பரந்தவிந்த மணன்மீதி லென்னுடனே

கொஞ்சிக் குலாவிவிளை யாடுதற்கு வாரீரோ

வாரீரோ நடமிடுவோம் வெளவெளவென நாய்குரைக்கச்

சீராகக் குக்கூவென்னுஞ் சேவலொலி கேட்குதையோ”

என்று பாடினான்.

பிரியவிரதன்: (அதிசயமுற்று)

“வானகத்ததோ மண்ணகத்ததோ மனநிறைக்குமிவ்வினிய நல்லிசை

கோனையெண்ணியே சிந்தை நைந்தியான் குரைகடற்கரைப் புறமிருக்கையிற்

றோனையொத்த வி;வ்விசை தொடர்ந்தெனைச் சிறைசெய்கின்றதாலுறுவதோர்கிலேன்

யானகத்துளோ ரெண்ணமின்றியேயிசை வருந்திசைக் கேகுவேனரோ”

(புதுமைபற்றிய மருட்கைச்சுவை)

என்று இசைவருந்திசையை நோக்கிச் சென்றான். நித்திரைநீங்கி யெழுந்திருந்த மாலதி பிரியவிரதனைக் கண்டமாத்திரத்தே (அது வரையும் அழகுநிறைந்த ஆடவரைக் காணாதவளாதலினாலே புதுமை பற்றிய மருட்கையுற்று) தன் தந்தையைநோக்கி, “ஐய! அதோ தோற்றுகின்ற எழிலுருவத்தையுடையோன் தேவனா? மனிதனா?” என்றனள்.

பிரபாகரன்: நம்மைப்போலவே அவனும் பசிவரும்வேளையில் உணவுட்கொண்டு துயில்வருநேரத்திற் றுயிலுகின்ற மனிதவகுப்புக்கு உரியோன்தான். கப்பலிலிருந்து பிரிந்த தனது நண்பரைத் தேடியலைகின்றான். கவலையினால் அவன்முகம் வாடியிருக்கின்றது.

மாலதி: இத்தனையழகனை நா னொருபோதுங் கண்டதில்லை@ இவன் தெய்வத்தன்மை யுடையவனென்றே சொல்ல வேண்டும்.

பிரியவிரதன்: (அணுகிவந்து)

இன்னிசைக்குத் தலைவியே யிமையவரும் பணிந்தேத்தும் மெழிலணங்கே

பொன்னுலகத் திருந்திவணீ புகுந்தனையென் றென்னிதயம் புகலா நிற்கும்

மன்னுமிந்தத் தீவகத்தி லுறைதியோ வழியெனக்கு வழுத்த வாயோ

கன்னிகையோ பிறன்மனையாங் காரிகையோ வெனவிரைவிற் கழறு வாயே.

மாலதி: ஐய! அதிசயம் வேண்டாம். நான் கன்னிகையே!

பிரியவிரதன்: ஆ! ஆ! இம் மடமொழி என்மொழியில் உரையாடுகின்றாள். இச் செம்மொழியைப் பேசுவோருள் யானே தலைவன். இம் மொழிவழங்கும் நாட்;டில் யான் இருந்தாலோ!

பிரபாகரன்: சீயதேசத்துமன்னன் இருக்கும்போது நீ தலைவனாவதெப்படி?

(தன் மகளுக்கும் பிரியவிரதனுக்கு மிடையி லுள்ள காதலின் அளவைச் சோதிக்கவிரும்பிய பிரபாகரன் பிரியவிரதனைநோக்கிப் பின்வரும் கடுமொழிகளையுங் கூறுகின்றான்)

இராஜதத்துரோகம் பேசுகின்ற தூர்த்தா! இங்கு வா@ உன்கையையுங் காலையும் விலங்கிடுகிறேன்@ உலர்ந்தகிழங்கும் உப்புத்தண்ணீரும் மன்றிப் பிறவுணவு தராது உன்னைச் சிறையில் வைக்கிறேன்.

பிரியவிரதன்: “இதற்கு நான் ஒருப்படேன்” என்று வாளையுருவுகிறான்.

(பிரபாகரனுடைய மந்திரவலிமையினாலே பிரியவிரதனுடைய வாளேந்திய கை ஸ்தம்பித்து நின்றுவிட்டது)

மாலதி பலவாறாகப் பரிந்து பேசியுங் கேளாது பிரபாகரன் பிரியவிரதனை அழைத்துச் செல்லுகிறான்.

(இவ்வளவோடு முகம் முடிகின்றது)

தீவின் ஒருபக்கத்தில் அலாயுதனும் அவன்தம்பி சங்கவருணனும் அநாகுலனும் கௌசிகனும் பிறரும் வருகின்றனர். பவனவேகன் உருவெளிப்படாது நின்று இன்னிசைக்கீதங்களைப் பாட அநாகுலனும் சங்கவருணனும் ஒழிந்த அனைவரும் துயில்கின்றனர். சகோதரத்துரோகியாகிய அநாகுலன் சங்கவருணனை நோக்கி அலாயுத மன்னனைக் கொன்று விட்டுச் சீயதேசத்துமன்னவனாகும்படி சொல்லி அவனைத் தன் துர்ப்புத்திக்கு ஆளாக்குகிறான். துயின்று கொண்டிருக்கிற கௌசிகனையும் அலாயுதமன்னனையும் கொல்லும்படி அநாகுலனும் சங்க வருணனும் கையில் வாளெடுத்துக் கொண்டுவரப் பவனவேகன் கௌசிகனுடையகாதில் ஒரு பாடலைப் பாடி யவனைத் துயிலினின்றெழுந்த இருவரும் அநாகுல சங்கவருணனுடைய துர்நினைவைக் குறிப்பினாலுணர்ந்து கொண்டு பிரியவிரதனைத் தேடிச் செல்கின்றனர். தீவின் மற்றொரு பக்கத்தில் இடிமுழக்கத்தினிடையேவலிமுகம் ஒரு விறகுக்கட்டோடு வருகிறான். அவனைத் திரிகூடன் என்னுங் கப்பற்சேவகன் கண்டு மற்சமோ மனிதனோவென ஐயுற்று மறைந்திருக்கின்றதருணத்திற் சுரைநாவன் என்னும் மற்றாருசேவகன் கள் நிறைந்த ஒரு புட்டியோடு வருகின்றான். இருவரும் வலிமுகனை யணுகி யவனது வரலாற்றை வினவினார்கள். வலிமுகன் தன் அன்னை முசுமுகி அத்தீவுக்கு அரசியாயிருந்ததாகவும், தான் பிரபாகரனுடைய மந்திரவலிமையினா லவனுக்கு அடிமைப்பட்டுத் துன்புறுவதாகவும், திரிகூடனும் சுரைநாவனும் ஏதாவது ஒரு சூழ்ச்சியினாற் பிரபாகரனைக் கொன்று விட்டாற் றான் அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டு வாழ்தற் கொருப்படுவதாகவும் கூறினான். இதனைக் கேட்ட சேவகரிருவரும் அவ்வண்ணமே செய்வதாக வாக்களித்து வலிமுகனை யழைத்துக் கொண்டு செல்கின்றனர்.

(இவ்வளவோடு பிரதிமுகம் முடிகின்றது)

பிரபாகரனுடைய கட்டளைப்படி பிரியவிரதன் மரக்கட்டைகளை நிரையாக அடுக்கிக் கொண்டு நிற்கிறான். மாலதி யவன்பக்கத்திற் பலவாறாகிய இன்பமொழிகளைக் கூறிக் கொண்டு நிற்கிறாள். இவரிருவரையும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரன் உள்ளம் மகிழ்ந்து இவரது நன்மைக்காகச் செய்யவேண்டிய செயல் மகிழ்ந்து இவரது நன்மைக்காகச் செய்யவேண்டிய செயல்கள் இன்னுஞ் சிலவுள என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு புறத்தே போய்த் தனது மந்திர வலிமையினாலே ஆகாயமார்க்கமாகச் சென்று அலாயுதமன்னனும் பிறரும் நிற்கின்ற இடத்தை யடைகிறான். பிரபாகரனுடைய கட்டளைப்படி பவனவேகன் பல மாயரூபங்களைப் படைத்துவிட அவை சென்று அலாயுதமன்னன் முதலியோரைச் சூழ்ந்துநின்று நடிக்கின்றன. இவற்றைக் கண்டு அதிசய முற்றிருந்த மன்னனாதியோர் முன்னிலையில் அம்மாயாரூபங்கள் பல தட்டுக்களிற் பழம் பலகாரம் முதலியவைகளை வைக்கப் பசியினால் வருந்தியிருந்த மன்னனும் பிறரும் அவ்வுணவினை யுண்ணப்புகுந்தனர். அத்தருணத்திற் பவனவேகன் மாயத்தினாற் பழம் பலகாரம் முதலியவற்றை மறையும்படி செய்துவிட்டு ஒரு பெரிய பருந்து ரூபமாகத் தோற்றிக் குழுமியிருந்த அலாயுதன்ன னாதியோரைப் பார்த்து, “நீவிர் கொடுந் தொழிலாளர்: மக்களிடையே வசித்தற்கு அருகரல்லாதவரானபடியாற் கடல் நும்மை மனிதசங்சாரமில்லாத இத்தீவில் உமிழ்ந்துவிட்டது@ நான் நுமது அறிவினைமயக்கி நும்மை உன்மத்தராக்கியிருக்கிறேன்” என்றான். இதைக்கேட்ட மன்னனாதியோர் உடை வாளையுருவிப் பருந்தாகவந்த பவனவேகனை வெட்டுதற்கு முயன்றனர். அன்னாரதுகைகள் ஸ்தம்பித்துநின்றுவிட்டன. பவனவேகன் நகைத்து “மூடர்களே! நானும் என் பரிசனரும் விதியின் செயலை முற்றுவிக்குங் கருவிகள்@ நுமது ஆயுதங்கள் எம்மைத் தீண்டா. மைலத்து மன்னனாகிய பிரபாகரனையும் அவனது மூன்று வயதுக் குழந்தையையும் ஆதரவின்றி யலைகடலில்விட்ட துஷ்டராகிய நுமக்கு இரங்குவாருமுளரோ” என்றனன். மாயாரூபங்கள் மீட்டுந் தோற்றி மன்னனாதியோரைப் பரிகசித்து நடித்தன. அன்னார் பிரபாகரனுக்குத் தாம் விளைத்த தீமையை நினைந்து துன்புற்றிருப்பதோடு கருப்பம் முடிகின்றது.

பிரபாகரன் தனது மந்திரசக்தியினால் தேவமாதர் பலரைப் படைத்துப் பிரியவிரதனும் மாலதியுங் கண்டு களிகூரும்படி தான் படைத்த தேவமாதரைக் கொண்டு நடனஞ் செய்விப்பதும், வேட்டைநாய்களைப் படைத்து வலிமுகன், திரிகூடன், சுரைநாவன் என்னும் மூவரையுந் துன்புறுத்துவதும் விளைவினுள் வருவன.

பவனவேகன் பிரபாகரனுடைய கட்டளைப்படி அலாயுதன் சங்க வருணன் அநாகுலன் கௌசிகன் முதலியோரைக் கொண்டுவந்து நிறுத்தலும், அலாயுதன் தன்மைந்தன் பிரியவிரதன் மாலதியோடு விளையாட்டயர்ந்து கொண்டிருப்பதைக் காண்பதும், இளையாரிருவருடைய மணவினைக்கு இயைவதும், பிரபாகரனை அழைத்துச்சென்று மைலத்துக்கு மன்னனாக்க ஒருப்படுவதும், பிரபாகரன் பவனவேகனை விடுதலையாக்கிவிட்டுத் தனது மந்திர நூல்களைக் கடலினுள் எறிந்து விடுவதும் அனைவரும் சீயதேசத்துக்குப் போகக் கப்பலேறுவதும் துய்த்தல் என்னும் ஐந்தாஞ்சந்தியினுள் வருவன.

வலிமுகம், சங்கவருணன், அநாகுலன் என்போரது சிறுமை வெளிப்படுமிடத்துச் சிறுமைபற்றிய மருட்கைச் சுவையும், பிரபாகரனது பெருந்தன்மை வெளிப்படுமிடத்துப் பெருமை பற்றிய மருட்கைச் சுவையும், பிரபாரனது மந்திரவலிமையினாலே பழம் முதலியவைதோற்றி மறைவதைக்கண்டதிசயிக்கும் போது ஆக்கம்பற்றிய மருட்கைச் சுவையுந் தோற்றுவன. பெருமை சிறுமையென்புழி அளவுமாத்திரமல்ல, அத்தன்மையுங் கொள்ளப்படும். “புதுமை பெருமை சிறுமை யாக்மொடு, மதிமை சாலா மருட்கை நான்கே” எனத் தொல்லாசிரியர் வகுத்துக்கூறிய மருட்கைச் சுவைக்கு இந்நாடகம் இலக்கியமாயினமை காண்க.

ரு. அச்சமுணர்த்தும் மகபதிசரிதையை யாராயப்புகுவாம்.

சுடுகாட்டிலே காரிருளிலே இடிமுழக்கம் மின்னலுந் தோற்ற அவற்றிடையே சவந்தினபெண்டிராகிய மூன்று இடாகினிமாதர் தோற்றிச் சிறிதுநேரம் வார்த்தையாடி மறைகின்றனர்.

(இது முதலங்கத்தின் முதற்காட்சியாகும்)

அங்கதேயத்து மன்னனாகிய இடங்கராஜன் தனது புதல்வராகிய மங்கலவர்ம்மன் அலைவர்ம்மனோடும் பரிசனரோடும் தோற்றி மகபதியென்னுஞ் சேனைத்தலைவனுடைய இராஜபத்தியையும் வீரச்செயலையுங் கேள்வியுற்று அவனைத் தனது அரசியலின்கீழுள்ள கூடரநாட்டுக்கு அதிபதியாக்கும்படி மந்திரிமாருக்குக் கட்டளையிடுகிறான்.

(இது முதலங்கத்தின் இரண்டாங் காட்சி)

சுடுகாட்டிலே முன்போலக் காரிருளிலே இடாகினிமாதர் மூவருந் தோற்றித் தாம்விளைத்த தீச்செயல்களைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் அவ்வழியே சேனைத்தலைவராகிய மகபதியும் தனபதியும் வருகின்றனர்.

தனபதி: (இடாகினிமாதரைக் கண்டு) ஈதென்ன? வற்றிக்காய்ந்த உடலும் கோரரூபமுமாகத் தோற்றுகிற இவை இவ்வுலகில் வாழ்வனவா? நீவிர் உயிருள்ள தோற்றங்களா? மனிதர்வினாவுக்கு விடையளிப்பீரா? வற்றிக் காய்ந்த உதட்டிலே நீவிர் விரலைவைத்திருப்பதைப் பார்க்கும்போது எனது வார்த்தை நுமக்குப் புலப்படுகிறதென்றெண்ண வேண்டியிருக்கிறது. நீவிர் பெண்பாலாராகத் தோற்றுகிறீர்@ நுமக்குத்; தாடிமயிருக்கின்றபடியாற் பெண்பாலரென்று சொல்லவும் இடமில்லை.

மகபதி: நீவீர் யாவர்? வார்த்தைபேச இயலுமானால் என் கேள்விக்கு மறுமொழி கூறுவீர்.

முதல் இடாகினி: மகபதியே வாழ்க! கலாபநாட்டுக்கு அதிபதியே வாழ்க!

இரட்டாம் இடாகினி: மகபதி வாழ்க! கூடரநாட்டுக்கு அதிபதியே வாழ்க!

மூன்றாம் இடாகினி: மகபதியே வாழ்க! முடிமன்னனாவோனே வாழ்க!

தனபதி: (இடாகினிகளை நோக்கி) காலத்தின் விளைவினைக் கருதி யுரைக்கக்கூடிய வன்மை நுமக்கு உளதாயின் எந்தத்தானியம் வளருமென்பதை யாரும் சொல்லுவீராக. நான் அஞ்சவும் மாட்டேன்: நும்மை யிரந்து நிற்கவும் மாட்டேன்@ நுமது தயவையோ வெறுப்பையோ நான் பொருட்படுத்தவில்லை.

முதல் இடாகினி: வாழ்க!

இரண்டாம் இடாகினி: வாழ்க!

மூன்றாம் இடாகினி: வாழ்க!

முதல் இடாகினி: மகபதியிற் றாழ்ந்தாய். மகபதியி லுயர்ந்தாய்.

இரண்டாம் இடாகினி: அத்தனை பாக்கியமில்லை. என்றாலும் பாக்கியவானே.

மூன்றாம் இடாகினி: நீ மன்னனாக மாட்டாய், மன்னர்க்குத் தந்தையாவாய், மகபதியே தனபதியே நீவீர் வாழ்க.

மகபதி: நீவீர் சொன்னதை விளக்கமாகச் சொல்லுவீர். நான் கலாபநாட்டுக்கு அதிபன் என்பதை யறிவேன்@ கூடரநாட்டதிபன் உயிரோடிருக்கும்போது நீவிர் என்னைக் கூடரநாட்டதிபனென்று வாழ்த்திய தென்னை? நான் மன்னனாவதும் ஆகாதகாரியமே.

(இடாகினிகள் மறைந்துவிடுகிறார்கள்)

இடங்கராஜனது மந்திரிமார் வந்து மன்னன் மகபதியைக் கூடர நாட்டுக்கு அதிபனாக்கியிருப்பதாகக் கூறுகின்றார்கள். அவர் வார்த்தையைக் கேட்ட மகபதி இரண்டாம் இடாகினியுடைய வார்த்தை, நிறைவேறியதைக் கண்டு அகமகிழ்ந்து தான் மன்னனாவதும் நிச்சயமென்று தன்னுள்ளே நினைத்து மகிழுகிறான்.

(இந்நிகழ்ச்சிகள் முதலங்கம் மூன்றாங் காட்சி)

மகபதி தனபதியாகிய சேனைத்தலைவ ரிருவரும் அரமனைக்குப் போய் இடங்கராஜனைப் பணிந்துநின்றனர். மன்னன் அவரோடு கலந்துரை யாடியதன்பின் தானுந் தன்புதல்வ ரிருவரும் சிறிதுதூரத்திலுள்ள ஒரு நகரிக்குப் போக எண்ணியிருப்பதாகச் சொல்லுகிறான். வழியிற் றன்மனையிற் றங்கியிருந்து போகவேண்டு மென்று மகபதி குறையிரந்து கேட்க மன்ன னொருப்படுகிறான்.

(இவை முதலங்கம் நான்காங்காட்சி)

மகபதிமனைவியாகிய மகபதிப்பிரியை தனது நாயக னெழுதிய கடிதத்தைப் படித்து இடாகினிக ளுரைத்த வாழ்த்துரையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு சேவகன் வந்து இடங்கராஜனும் பரிசனரும் மகபதியினுடையமனையில் இராத்தங்கிப் போவதற்கு வருவதாக உரைக்கின்றான். சிறிது நேரத்தில் மகபதியும் வந்து அந்தச் செய்தியையே தெரிவி;க்கின்றான்.

மகபதி: என் பிரியநாயகியே! இடங்கராஜன் இன்றிரவு இங்கு வருகின்றார்.

மகபதிப்பிரியை: அவர்இங்கிருந்து என்று போகின்றார்?

மகபதி: ஒரு வேளை நாளை யவ்விடமிருந்து புறப்படலாம்.

மகபதிப்பிரியை: அந்த நாளை ஒருநாளும் வரப்போவதில்லை. என்கணவா! நினது முகக்குறி திறந்த புத்தகம் போல அகத்தேயுள்ள எண்ணங்களையெல்லாம் எனக்குப் புலப்படுத்துகின்றது. தீங்கற்ற புஷ்பம் போல நின்முகங் காணப்படினும் பூவினுள்ளிருக்கின்ற புழு என் கண்ணுக்கு நன்கு தோற்றுகிறது. வருகிற அதிதியை நான் உபசரிக்கிறேன்: இன்றிரவைக்கு நீர் செய்யவேண்டிய பெருங்காரியத்தைச் செய்து முடிப்பீராயின் இனி வருகின்ற இரவு பகலெல்லாம் நாம் முதன்மையுற்றிருப்போம்.

மகபதி: இவ்விஷயத்தை இன்னும் ஆலோசிக்க வேண்டும்.

மகபதிப்பிரியை: எடுத்தகாரியம் முடியுமுன் கலக்கமுற்றேன் அஞ்சினவனாவான்@ ஆக வேண்டியவற்றை யான் பார்த்துக் கொள்ளுகிறேன்.

(இவை முதலங்கம் ஐந்தாங்காட்சி)

அரசனும் மங்கலவர்ம்மனும் அலைவர்ம்மனும் தனபதியும் மாதவனென்னும் மந்திரியும் பிற பரிசனரும் தீவட்டிவெளிச்சங்களோடு மகபதியின் வீட்டுக்கு வருகிறார்கள். அரசன் மகபதியின்மனை யழகானது என்று சொல்லிக் கொண்டிருக்கிறவெல்லையில் மகபதிப்பிரியை வந்து இனிய மொழிகள் கூறி மனையினுள் ளழைத்துச் செல்லுகிறாள்.

(இவை முதலங்கம் ஆறாங்காட்சி)

மகபதி தனியிடத்தில் நின்று பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிக்கும்போது அவன் மனைவி வந்து ஆசைவார்த்தை கூறி இடங்கராஜனைக் கொன்றுவிடும்படி தூண்டுகிறாள்.

(இது முதலங்கம் ஏழாங்காட்சி. இவ்வளவோடு முகம் முடிகின்றது)

துயிலுகின்ற இடங்கராஜனைக் கொல்லநினைத்து இராஜனுடைய படுக்கையறையை நோக்கிப் போகும்போது மகபதியின் கண்முன்னே இரத்தந்தோய்ந்த ஈட்டி யொன்று உருவெளித்தோற்றமாகக் காணப்படுதும், அவன் அஞ்சிப் பின்வாங்குவதும், மகபதிப்பிரியை வந்து ஆசைவார்த்தை கூறி ஊக்கப்படுத்துவதும், அவன் முற்பட்டுச் செல்வதும் இரத்தந்தோய்ந்தகையோடு வருவதும், மறுநாட்காலையில் மாதவனும் பிறரும்வந்து இடங்கராஜனுடைய உடலத்தைக் காண்பதும், மகபதியும் மகபதிப்பிரியையுந் துன்புற்றார் போல பிரலாபிப்பதும், அரசனுடைய சயனக்கிருஹத்தைக் காத்திருந்த காவலாளர் கள்ளினை நிறையவுண்டமையினாலே மயக்கமேலிட்டு அரசனைக் கொன்றுவிட்டாரென்று அவர்மேற் குற்றஞ்சாட்டுவதும், அதற்குச் சான்றாக அன்னாருடைய முகத்தினுங் கத்தியினும் இரத்தக்கறை படிந்திருப்பதைக் காட்டுவதும், காவலாள ரிருவரையும் மகபதி கொன்றுவிடுவதும், மகபதியினுடைய குறிப்பினை யறிந்த மங்கலவர்ம்மனும் அனலவர்ம்மனும் தம்முயிர்க்குச் சேதம் வந்துவிடுமோ வென் றஞ்சிக் கலிங்க நாட்டுக்கு ஒடிவிடுவதும் நாட்டைவிட்டோடிய மங்கலவர்ம்மன் அனலவர்ம்மரே தந்தையைக் கொன்றாரென்று மந்திரி பிரதானியர் நிச்சயிப்பதும், காலஞ்சென்ற அரசனுக்கு நெருங்கியசுற்றத்தானும் வலிமை பொருந்திய சேனைத்தலைவனுமாகிய மகபதியே மன்னனாதற்குத்தக்கவனென்று அனைவரும் நிச்சயித்து மகபதிக்குமணிமுடிசூட்டுதலும் பிரதிமுகமாவன.

இடாகினிகள் தனபதியை, “மன்னர்க்குத் தந்தையாவாய்” என்றுவாழ்த்திய வாழ்த்துரையை நினைத்து மகபதி துன்புறுவதும், கொடிய பாவச்செயலினாலே தான் பெற்றுக்கொண்ட இராஜ்யந் தனக்குப்பின் தன் சந்ததியாருக்குப் போகாது மாற்றானாகிய தனபதி சந்ததியாருக்குப் போகப்போகிறதே யென்று ஏக்கமுற்ற மகபதி கொலைத் தொழின்மாக்களை யழைத்துத் தனபதியையும் அவனது புதல்வன் வளைவணனையும் கொன்றுவிடும்படி கட்டளையிடுவதும், அன்னார் நள்ளிருளில், தனபதியைக் கொன்றுவிடுவதும், வளைவணன் தம்பியோடுவதும், மபபதி மந்திரிபிரதானியருக்கும் பிறருக்கும் பெரியதொரு விருந்தளிப்பதும், அரசனாகிய மகபதிக்கென றிடப்பட்ட ஆசனத்தில் தனபதியின் பிரேதரூபந்தோற்றி யுட்கார்ந்திருப்பதும். அதனைப் பிறர் காணாதிருக்க மகபதிமாத்திரங் கண்டு அஞ்சுவதும், ஜனங்கள் மகபதியினுடைய செயலைக் கண்டு ஐயுறுவதும், மாதவனென்னும் மந்திரி கலிங்கநாட்டுக்கு ஒடிவிடுவதும் கருப்பம் ஆவன.

இடாகினிமாதர் தோற்றி நாய்நாக்கு, பல்லியின்கால், ஆந்தைச் சிறகு, வெளிவாற்றோல், குழந்தை கைவிரல் என்றின்னவற்றையிட்டு உதிரநிணத்தைப் பெய்து கூழடுவதும், மகபதி வந்து மேல் நடக்கப் போவனவற்றைத் தெரிவிக்கும்படி இடாகினிகளை வினவுவதும், கூழடுகின்ற பானையினின்று ஆயுதமணிந்த ஒருதலை தோற்றி, “மகபதியே மாதவனைப் பற்றிக் கவனமாயிரு” என்று சொல்லி மறையச் சிறிது நேரத்துக்குள் இரத்தம் போல் மேனியையுடைய ஒரு சிறு குழந்தை தோற்றி “மகபதியே யஞ்சாதிரு, ஸ்த்ரீ பெற்ற மைந்தனால் உனக்குத் தீங்கு விளையாது” என்ன அதன்பின்னர் முடிசூடிய ஒரு பாலன்வடிவம் கையி லொரு சிறுமரத்தைத் தாங்கி யெழுந்து “மகபதியே சிங்கம்போல் அச்சமற்றிரு, வர்ணாரணியம் நின் நகரிக்கு வந்தாலன்றி நீ தோல்வியடையப் போவதில்லை” யென்று சொல்லுவதும், மகபதியின் கண்முன்னே தனபதியும் அரசர் எண்மருந் தோற்றுவதும், இடாகினிகள் மறைந்து விடுவதும், மகபதி மாதவன் மனைக்குக் கொலைத் தொழின்மாக்களை யனுப்பி மாதவனது மனைவியையும் புதல்வனையும் கொல்விப்பதும், மாதவனும் மங்கலவர்ம்மனும் இவற்றை யெல்லாங் கேள்வியுற்றுக் கலிங்க நாட்டுச் சேனைகளோடு அங்கநாட்டை யெதிர்க்க நிச்சயிப்பதும் விளைவு ஆவன.

மகபதிப்பிரியை வியாதியினால் துன்புறும்போது தன்னை மறந்து தன் மனத்திற் கிடந்த இரகசியங்களை வெளியிடுவதும், அதனைக் கேட்டு நின்றவைத்தியன் முதலியோர் இடங்கராஜனைக் கொன்றவர்யாரென அறிந்துகொள்வதும், மங்கலவர்ம்மனுஞ் சேனைகளும் வர்ணாரணியத்துக் கூடாக வரும்போது ஒவ்வொரு மரக்கிளையை வெட்டிக் கையி லேந்திக் கொண்டுவருவதும், காவலாள னொருவன் வர்ணாசணியம் நகரியை நோக்கி வருகின்றதென மயபதிக்கு உரைப்பதும் மகபதி யச்சமுற்றுப் பின்பு போர்க்கோலங்கொண்டு வெளிச்செல்வதும், மாதவனும் மகபதியுந் தனியமர்புரிவதும், ஸ்த்ரீபெற்ற மைந்தனாற் றனக்கு அழிவில்லையென்று மகபதி யுரைப்பதும், அன்னை யிறந்த பின் அவள் வயிற்றைக் கீறி மருத்துவர் தன்னை யெடுத்தமையினால் தான் ஸ்த்ரி பெற்ற மைந்தனில்லை யென்று மாதவனுரைப்பதும், மாதவன் கைவாளால் மகபதியிறப்பதும் மங்கலவர்மன் அரசனாவதும் துய்த்தல் என்னும் ஐந்தாஞ் சந்தியாவன.

“அணங்கே விலங்கே கள்வர்த மிறையெனப், பிணங்கல் சாலாவச்ச நான்கே” யென்புழிக் கூறிய நால்வகை யச்சத்தினுள் அணங்கினாலும், அரசனாலும் எய்திய அச்சச்சுவை இந்நாடகத்தினுள் நிரம்ப வந்தமை காண்க. “அணங்கென்ப பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண்கணனும் நிரயப்பாலரும் பிறரும் அணங்குதற்றொழிலராகிய சவத்தின் பெண்டிர் முதலாயினாரும் உருமிசைத் தொடக்கத்;தனவு” மென உறுப்பினலுட் கூறினாம். பெரும்புயற் சரிதையினுட் டோற்றுகின்ற மாயரூபங்கள் அச்சத்தை விளைக்காது மருட்கையை விளைப்பதும், இந்நாடகத்தினுட் டோற்றுகின்ற இடாகினிகள் மருட் கையொழித்து அச்சத்தை விளைப்பதும் நுணுகி ஆராயற்பாலன. தலைவனது மரணத்தை யரங்கத்திற் காட்டுதல் கூடாதென வடமொழி நூல்கள் கூறுவன. இடங்கராஜனதுமரணம் வெளிப்படையாகக் காட்டப்படாது குறிப்பினாலுணர்த்தப்பட்டதை நோக்குக.

œ. பெருமிதமும் பிறசுவையு முணர்த்தும் வணிகதேயவர்த்தகன் சரிதையை யாராயப்புகுவாம்.

மணலிநகரத்தில் வசித்த ஒரு செல்வப்பிரபு ஆண்மக்களில்லாமையினாலே தனது பொருள் முழுவதையும் தன் மகள் விஜயைக்கு உரிமையாக்கிப் பொன்னினாலும், வெள்ளியினாலும், ஈயத்தினாலும் மூன்று பேழைகளைச்செய்து, அவற்றினுள் ஒன்றினுள்ளே விஜயையினுடைய சாயலெழுதிய சித்திரத்தை வைத்து, யாவனொருவன் சித்திரம்வைக்கப்பட்டிருக்கின்ற பேழை யிதுவென்று நிச்சயித்துச் சொல்லுகிறானோ அவனுக்கே விஜயை மனைவியாக வேண்டுமென்று ஏற்பாடு செய்து இவ்வுலகவாழ்வை நீத்தனன்.

(நாடகத்துக்குப் புறம்பாகிய இவ்விஷயத்தைக் கதைத் தொடர்பை யறிந்து கொள்வதற்காக ஈண்டுத் தந்தனம்)

விஜயையைப் பெறவிரும்பிய வாசவனென்னும் வணிகதேயத்து வணிகன் தனது நண்பனாகிய அநந்தனென்னும் வணிகனையடைந்து தான் மணலிநகருக்குச் சிறப்பாகப் போவதற்கு மூவாயிரம் பொன் கடன் கொடுக்கும்படி கேட்டனன். அநந்தன் தன்னிடங் கைக்காசில்லாதிருந்தமையினால், சாபலனென்னுங் கோமுட்டிச் செட்டியிடம் மூவாயிரம் பொன் கடன்வாங்கிக் கொடுத்தனன். சாபலன் கடுவட்டி வாங்குகிற கொடியவனானமையினால், வட்டியின்றிப் பணங் கொடுத்துதவும் அநந்தன்மீது நிறைந்த அழுக்காறுடையவனா யிருந்தான்;. அநந்தன் மூவாயிரம் பொன் கடன் கேட்டதும், தருணம் வாய்த்ததென்று தன்னுள்ளே நினைத்து மகிழ்ந்த சாபலன் புறத்தே நகைமுகங் காட்டிப் பொன்னைக் கொடுத்துவிட்டு, மூன்றுமாதத்துக்குள் திருப்பிக் கொடுக்காவிட்டால் அநந்தனுடைய உடலிலிருந்து நாற்பது ரூபா ஏடையளவாகிய இறைச்சியை வெட்டிக் கொள்வதற்குத் தனக்கு உரிமையுண்டென்று ஒரு சீட்டெழுதுவித்துக் கொண்டான். மூன்று மாதத்திற்குள் தன்னுடைய கப்பல்கள் வந்துவிடுவன வென் றெண்ணிய அநந்தன் சீட்டுக்குக் கைச்சாத்திட்டான். கப்பல்கள் வரவில்லை. சாபலன் நீதிமன்றுக்குப் போய் வழக்குத் தொடுத்தான்@ வாசவன் ஆறாயிரம் பொன் கொடுப்பதாகக் கூறியும் சாபலன் ஒருப்படாது சீட்டில்விதித்தபடி இறைச்சியே வேண்டுமென்று நி;ன்றான். வாசவனுக்கு மனைவியாகிய விஜயை நாயகனும் பிறரு மறியாதவண்ணம் நியாயதுரந்தர வேடத்தோடு வந்து மன்றிலிருந்தோருக்குச் சட்டத்தை யெடுத்துக்காட்டி அநந்தனைக் காப்பாற்றிச் சபாலனைத் தோல்வியடையப் பண்ணுகிறாள். இதுவே கதையின் சுருக்கம். மேற்குறிப்பிட்ட நாடகபாத்திரரோடு வணிகதேயத்து மன்னன், விஜயையைப்பெற விரும்பியகுறும் பொறைநாடன், கானகநாடன் என்னும் குறுநிலமன்னரிருவர், அநந்த வாசவருக்கு நண்பராகிய கருணாகரன் சலசலோசனன் சாரகுமார னென்னும் மூவர், சாபலனது நண்பனாகிய தூவல னென்னுங் கோமுட்டிச்செட்டி, சாபலனது வேலைக்காரனாகிய அகிஞ்சன னென்னும் விதூஷகன், அகிஞ்சனன் தந்தையாகிய விருத்தன், விஜயையினது தோழியாகிய அங்கனை, சாபலன் புதல்வியாகிய பதுமை, பதுமைமேற் காதல்கொண்ட புட்கலன், வேலைக்காரர் என்றின்னோர் இந்நாடகத்தினுட் டோற்றுவர். இனி, நாடகத்தி னமைப்பைக் காட்டுவாம்.

(அங்கங்களை ஐ. ஐஐஇ ஐஐஐஇ ஐஏஇ ஏ என்னும் இலக்கங்களாலும் அங்கத்தின் உட்பிரிவுகளாகிய காட்சிகளை 1, 2, என் றித்தகைய இலக்கங்களாலும் குறியீடுசெய்வோம். உதாரணமாக “ஐஐ.3” இரண்டாம் அங்கத்தின் மூன்றாவது காட்சி என்பதைக் குறிக்கும்)

ஐ. 1. நாடகபாத்திரர்: அநந்தன். சலசலோசனன், சாரகுமாரன், வாசவன், புட்கலன், கருணாகரன்.

நிகழ்ச்சி: அநந்தன் மனச்சோர்வுற்றுத் தனது சோகத்துக்குக் காரணமெதுவென நண்பரை விசாரித்துக் கொண்டிருப்பதும் வாசவன் வந்துதான் மணலிக்குப் போக நினைத்திருக்கும் எண்ணத்தைக் கூறி மூவாயிரம் பொன் கடன் கேட்பதும்.

ஐ.2. நா. பா விஜயை, அங்கனை

நி. விஜயை தன்னை நாடிவந்து துன்புற்றுப் போன அரசிளங்குமாரரையும் பிறரையும் பற்றித் தோழியோடு வார்த்தையாடுதல்.

ஐ. 3 நா. பா. அநந்தன், வாசவன். சாபலன்:

நி. சீட்டுக் கொடுத்து மூவாயிரம்பொன் கடன்வாங்குதல்.

ஐஐ. 1 நா. பா. குறும்பொன்நாடன், விஜயை, அங்கனை, பரிசனர்.

நி. விஜயை தன்னைவிரும்பிவந்த குறும்பொறைநாடனைநோக்கி, “மன்ன! இப்பேழைகளுள் ஒன்றி லென் னுருவ முண்டு அதனை நீர் தெரிந்தெடுப்பீராயின் நான் உமக்கு மனைவியாக வேண்டும். தெரிந்தெடுக்கத் தவறுவீராயின் பேழையின் மர்ம்மத்தைப் பிறருக்குத் தெரிவியாதிருப்பதோடு நீர் சீவியகாலம் முழுதும் பிரமசாரியா யிருக்க வேண்டும். இது என் தந்தையின் கட்டளை@ இதற்கு உடம்படுவீராயின் கோயிலிற் சென்று சத்தியஞ்செய்து வருவீர்@ பேழையிருக்குமிடத்துக்கு நும்மை யழைத்துச்செல்வேன்” என்று கூறுதல்@ குறும் பொறைநாடன் உடன்பட்டுச் சத்தியஞ் செய்யப் போதல்.

ஐஐ. 2. நா. பா: அகிஞ்சனன், விருத்தன், வாசவன். கருணாகரன்.

நி: அகிஞ்சனன் சாபலனுடைய சேவகத்தை விட்டு ஓட நினைத்து வீதியிற் செல்லும் போது தனது தந்தையாகிய விருத்தனைக் கண்டு அவனையும் அழைத்துச் சென்று வாசவனிடத்துச் சேவகனாக அமர்தல்.

(விருத்தனாகிய தந்தை கண்ணொளி யிழந்திருந்தமையினால் ஒன்றினையொன்றாக மாற்றிச்சொல்லி அவனோடு பலவாறாக வார்த்தையாடும் அகிஞ்சனனுடைய கூற்றுக்கள் நகைச்சுவை நிரம்பியன)

ஐஐ. 3 நா. பா: பதுமை, அகிஞ்சனன்.

நி: அகிஞ்சனன் பதுமையிடம் விடைபெற்று செல்லுதல். அவள் புட்கலனிடம் கொடுத்துவிடும்படி அகிஞ்சனன்கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தல்.

ஐஐ. 4 நா. பா: கருணாகரன். புட்கலன், சலசலோசனன், சாரகுமாரன், அகிஞ்சனன்.

நி: அகிஞ்சனன் பதுமையினது நிருபத்தைப் புட்கலனிடங் கொடுத்தல், பதுமை ஆண்பிள்ளைவேடத்தோடு தந்தைவீட்டை விட்டுத் தன்னோடு உடன்வருதற் கிசைந்திருப்பதைப் புட்கலப் தனது நண்பருக்குத் தெரிவித்தல்.

ஐஐ. 5 நா. பா: சாபலன், அகிஞ்சனன், பதுமை.

நி: சாபலன் தான் புறத்தே விருந்துண்ணப் போவதாகவும் வீட்டினைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் படியும் பதுமைக்குச் சொல்லுதல்.

ஐஐ. 6 நா. பா: கருணாகரன். சாரகுமாரன், புட்கலன், பதுமை

நி: புட்கலன் பதுமையை யுடன் கொண்டேகல்.

(பின் அநந்தன் வந்து கருணாகரனைக் கண்டு வாசவனோடு மணலிக்கும் போகும்படி அனுப்புதல்)

ஐஐ. 7 நா. பா: விஜயை குறும்பொறைநாடன். பரிசனர்.

நி: குறும்பொறைநாடன் பொற்பேழையைத் திறந்து அதனுள் ஒரு தலையோடும் ஒரு பத்திரம் மிருக்கக்கண்டு பத்திரத்தைப் படித்தல்.

அப் பத்திரத்தில்,

“மின்னுவ வெல்லாம் பொன்னா காவெனு

நன்மொழி பன்முறை நவிலக் கேட்டனை

யென்மேற் புறத்தி னெழிலினை நோக்கி

யின்னுயி ரீந்தோ ரியம்பிடிற் பலரே

பிணம்பொதி தாழி யரும்பொன தெனினு

நிணங்கொளும் புழுவுண் ணிறைதலு மியல்பே

ஆண்மையொ டறிவு கேண்மையுற் றிருப்பின்

விடைபெறா திவணீ மேவுதல் சாலும்

இளையோய் மதியின் முதியையு மல்லை

களைக ணுற்றநின் காதலும் வறிதே

போதி யென்னப் புகல்வதென் கடனே”

என் றெழுதியிருப்பதைக் கண்டு குறும்பொறைநாடன் மனத்துயருற்றுப் போய்விடுதல்.

ஐஐ. 8 நா. பா: சலசலோசனன், சாரகுமாரன்.

நி: பதுமை வீட்டைவிட்டோடியபின்பு சாபலன் வந்து தன் மகள் பொன்முடிப்புகள் பலவற்றைக் கொண்டு புட்கலனோடு ஓடிவிட்டாள் என்பதை யறிந்து துயருற்ற செய்தியைச் சலசலோசனன் சார குமாரனுக்கு அறிவித்தல்.

ஐஐ. 9 நா. பா: விஜயை, அங்கனை, கானகநாடன், ஒரு தூதுவன்.

நி: கானகநாடன் பேழைகள் மூன்றினையும் பார்வையிடல். பொற்பேழையின் மேல், “என்னைத் தெரிந்தோர் பலரும் விரும்புவதைப் பெறுவார்” எனவும், வெள்ளிப் பேழையின் மேல், “என்னைத்தெரிந்தோர் தமது தகுதிக்கேற்றதைப் பெறுவார்” எனவும், ஈயப் பேழையின்மேல், “என்னைத் தெரிந்தோர் தமக்கென்றிருக்கும் பொருளனைத்தினையும் ஈந்திழப்பர்” எனவும் எழுதப்பட்டிருப்பதைக் கண்ட கானகநாடன் வெள்ளிப்பேழையைத் திறந்தான். அதனுள்ளே மூடன் தலை யெழுதப்பட்ட ஒரு சித்திரம் இருக்கக் கண்ட கானகநாடன் இது தானோ என்தகுதிக் கேற்றதெனக் கூறி யவலித்து ஆங்கிருந்த ஒரு பத்திரத்தையெடுத்துப் படிக்கிறான்.

ஆங்கு,

“எழுமுறை யெரியிதன் றிண்மை சோதித்த

தெழுமுறை யாய்ந்தோர் பிழைபட லிலரே

விழைபொருள் நிழலெனி னுவகையு மதுவே

நிழலினை யணையு நீர்மைய ருளரே

வெள்ளிப் பூச்சொடு விளங்கிய மூடர்

உள்ளார் காணிங் குள்ளது மதுவே

மெல்லணை மேலெம் மெல்லிய லுறினும்

நல்லோய் நானின் றலையா குவனே

ஆதலின் விரைந்து போதனின் கடனே”

என எழுதப்பட்டிருப்பதைப் படித்துக் கானகநாடன் போய்விடுகிறான்.

ஐஐஐ. 1 நா. பா: சலசலோசனன், சாரகுமாரன், சாயலன், தூவலன்.

நி: அநந்தனுடைய கப்பல் வந்துசேரவில்லை யென்னும் செய்தி யெங்கும் பரவுகின்றது. அந்தன்மேற் பழிவாங்கலா மென்னு மெண்ணத்தினாற் சந்தோஷமும் மகள் பொன்முடிப்போடு ஓடிவிட்டாளென்னு மெண்ணத்தினாற் றுன்பமு முற்ற சாபலன் ஈற்றிற் சந்தோஷத்தோடு அகலுகிறான்.

ஐஐஐ. 2 நா. பா: வாசவன், கருணாகரன், விஜயை, அங்கனை, புட்கலன், பதுமை, சலசலோசனன், பரிசனர்.

நி: வாசவன் பலமுறை ஆராய்ந்து நோக்கி ஈயப்பேழையைத் திறந்து, அதனுள்ளே விஜயையின் சாய லெழுதிய சித்திர மிருக்கக் கண்டு,

“யாதிங் குள்ளதென் னிறைகவ ரணங்கனாள விஜயை

மாதின் சாயலோ வாள்விழி யசைந்தன மலர்ந்த

போது போன்றன மெல்லித ழுளம்பிணித் திடுமோர்

சூதின் சூழ்ச்சியே சுரிகுழல் சொல்லவே றுளதோ”

எனக் கூறிப் பேழையினுள் மீட்டும் பார்க்கும் போது ஒரு பத்திரமிருக்கக் கண்டெடுத்து அதனைப் படிக்கிறான்.

அப்பத்திரத்தில்,

“மையல்தீர் காட்சியை யாதலி னைய

பொய்யா நீர்மை பொருந்தப் பெற்றனை

பிறிதுவிழை யாதிப் பெரும்பொருள் பேணும்

உறுதியை யாயினிற் குரியா டன்னைக்

கைப்பிடித் தென்றுங் காத்தனின் கடனே”

என எழுதியிருப்பதைப் படித்து விஜயையினுடைய கையைப் பற்றி மகிழ்ச்சியடைகிறான். கருணாகரன் அங்கனையை மனைவியாகப் பெறுகிறான். இத்தருணத்திற் சலசலோசனன் அநந்தன் கொடுத்த ஒரு நிருபத்தை வாசவன்கையிற் கொடுக்க அதன்மூலமாக வாசவன் தன் நண்பன் அநந்தனுக்கு விளைந்திருக்கிற துன்பத்தையுணர்ந்து விரைந்து புறப்பட்டு வணிகதேயத்துக்குப் போகிறான்.

ஐஐஐ. 3 நா. பா: சாபலன், சாரகுமாரன், அநந்தன், சிறைச்சாலைத்தலைவன்,

நி: சாபலன் சிறைச்சாலைத்தலைவனிடம் அநந்தனை யொப்புவித்தல்.

ஐஐஐ. 4 நா. பா: விஜயை, அங்கனை, புட்கலன், பதுமை, வேலைக்காரன்.

நி: விஜயை புட்கலனையும் பதுமையையும் வீட்டைப் பார்த்துக் கொள்;ளும்படி சொல்லிவிட்டுத் தனது அத்தை மகனாகிய ஒருநியாய துரந்தரனுடைய ஆலோசனைப்படி அந்த நியாயதுரந்தரனுடைய உடைகளை யணிந்துகொண்டு, தோழியாகிய அங்கனை எழுத்தாளனுடையணிந்து கொண்டு உடன்வர வணிகதேயத்துக்குப் போதல்.

ஐஐஐ. 5. நா. பா: அகிஞ்சனன், பதுமை, புட்கலன்

நி: உவகைக்குறிப்பு நகைக்குறிப்புத் தோன்ற உரையாடுதல்.

ஐஏ. ஐ வணிகதேயத்து நீதிமன்றம்.

நா. பா: வணிகதேயத்துமன்னன், சாபலன், அநந்தன், வாசவன், கருணாகரன், சலசலோசனன், சாரகுமாரன், நியாயதுரந்தரவேடம் பூண்ட விஜயை, அங்கனை, மன்றத்திருந்த பிறர்.

நி: சீட்டினின்று அசையமாட்டேன் என்ற கோமுட்டிச் செட்டியாகிய சாபலனை நோக்கி விஜயை அன்பின் பாலதாகிய இரக்கத்தின் உயர்வை யெடுத்துக் கூறுதல்:-

“வன்பொறை மருவா மரபின தாகி

வானின் றிழியும் மழைத்துளி போலக்

கொடுப்போ ரெடுப்போ ரெனுமிரு வோரையும்

அடுத்துக் காப்ப தன்புசா ரிரக்கம்

வலிதினும் வலிதிது மணிமுடி சூடி

யுலகு புரக்கு முரவோற் குரைப்பின்

இலகொளி முடியினு மிரக்கம் பெரிதே

அங்கையிற் பொருந்தி யச்சம் விளைக்குஞ்

செங்கோல் புறத்தது சிந்தைய திரக்கம்

மன்னவர் மனமெனு மணியணிபீடத்

தரசுவீற் றிருக்கு முரைசா லன்பு

தேவ தேவன் றிருக்குணத் தொன்றே

நீதியொடு டன்பு நிலைபெறி னீதி

ஆதியங் கடவு ளருளென நிலவும்

இறைபே ரருளிங் கெமக்கிலை யாயின்

நெறிநின் றியாரோ நீடுவாழ் வெய்துநர்

அருளினை விழைந்தே மருட்செயல் புரிதன்

மரபே யாக மதித்தலுங் கடனே”

எனப் பலவாறாகக் கூறியும் சாபலன் சீட்டினின்ற அணுவளவேனும் விலகமாட்டேனெனச் சாதித்து நின்றனன்.

விஜயை: சாபலா! சீட்டின்படி அதோ நிற்கும் வணிகனுடைய இறைச்சியில் நாற்பதுரூபா எடை யுனக்குரியது. சட்டம் உனக்கு அதையளிக்கிறது. நீதியும் அதுவேயாகும்.

சாபலன்: ஆ! நேர்மையுள்ள நீதிபதியே!

விஜயை: சொல்லப்பட்ட நாற்பதுரூபா எடை இறைச்சியை நீ இவ்வணிகனுடைய மார்பிலிருந்து வெட்டிக் கொள்ளலாம்@ இதற்குச் சட்டம் இடங்கொடுக்கிறது@ மன்றத்தாரும் இதனை நீதியெனக் கொள்கின்றனர்.

சாபலன்: கல்லியில்வல்ல நீதிபதியே! தீர்ப்புச் சொல்லிவிடுக.

விஜயை: பொறு, பொறு, சாபலா! அவசரப்படாதே@ இறைச்சி யுனக்குரியதென்று இச்சீட்டுச் சொல்லுகிறது. அவ்விறைச்சியை வெட்டும்போது ஒரு துளி யிரத்தஞ் சிந்தினாலும் அல்லது குறிக்கப்பட்ட எடையினின்று ஒரு அணுவளவேனும் ஏறக்குறைய வெட்டினாலும், நீ நின் உயிரையும்பொருள்முழுவதையும் இழந்து விடவேண்டும். இதுவே இந்நாட்டுச் சட்டம்.

சாபலன்: நான் வழக்கை விட்டுவிடுகிறேன். என் முதலைத் தந்து என்னைப் போகவிடுங்கள்.

வாசவன்: இதோ எடுத்துக்கொள்.

விஜயை: மன்றத்தின் முன்னிலையிற் பொன் வேண்டாமென்றனை@ சட்டப்படியுள்ள நீதியே யுனக்குரியது. ஒரு மனிதனுடைய உயிரைக் கவரநினைத்தாயாதலினால் உன்னைக் கொலைக்களத்துக்கு அனுப்புவதற்கு இந்நாட்டு மன்னருக் குரிமையுண்டு. உனது பொருளிற் பாதி யரசபொக்கிஷத்துக்குப் போகும். மற்றொருபாதி நீ யெவனது உயிரைக் கவரநினைத்தாயோ அவனுக்குரியது.

(அரசன் சாபலனுயிரை மன்னித்து ஒருதெகைப் பணத்தை இராஜபொக்கிஷத்துக்குக் கொடுக்கும்படி தண்டனை விதிக்கிறான். அநந்தன் தனக்கென்று மன்றத்தார் விதித்த பாகத்தைப் புட்கலனுக்கும் பதுமைக்குங் கொடுக்கும்படி சொல்லுகிறான். அரசன் வாசவனையும் அநந்தனையும் நோக்கிச் சட்டமுறையை எடுத்துக்காட்டி அநந்தனுயிரைத் தப்புவித்த நியாயதுரந்தரனுக்குத் தக்க பரிசில் கொடுக்கும் படி சொல்லுகிறான். நியாயதுரந்தரனாகிய விஜயை வாசவன் கைக்கணையாழியைத் தரும்படி கேட்டுப் பெற்றுக் கொள்ளுகிறான்)

ஐஏ 2 நா. பா: விஜயை, அங்கனை, கருணாகரன்

நி: எடுத்தாளன் வேடத்தோடுநின்ற அங்கனை, கருணாகரனுடைய கைவிரலி லணிந்திருந்த மோதிரத்தைப் பெற்றுக் கொள்ளுகிறாள்.

ஏ. 1 நா. பா: பதுமை, புட்கலன், அகிஞ்சனன், அங்கனை, கருணாகரன், வாசவன், அநந்தன், விஜயை.

நி: பதுமையும் புடகலனும் சந்திரனுடைய தண்ணிய கிரணங்கள் பரம்பிய உய்யானத்தினுள்ளிருந்து வார்த்தையாடிக் கொண்டிருக்கும் போது அகிஞ்சனன் வந்து விஜயையும் அங்கனையும் வருவதாகக் கூறுகிறான். அன்னா ரிருவரும் வந்து சிறிதுநேரத்துக்குள் அநந்தனும் வாசவனும் கருணாகரனும் வருகின்றனர். அங்கனை, கருணாகரனை நோக்கி மணநாளிலே தான் கொடுத்த மோதிர மெங்கேயென்று விசாரித்தான்@ அவன் எழுத்தாளனுக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்லுகிறான்@ அவள் புலவியால் வாடியதுபோ லபிநயித்து இதோ இந்த மோதிரத்தை வைத்திரும் என்று கொடுக்கிறாள். விஜயையும் தான் கொடுத்த கணையாழியை விசாரித்துப் பின்பு கொடுக்க நியாயதுரந்தரனாக வந்தது விஜயையே யென்பதை அவளது நாயகனும் நண்பரும் அறிகின்றனர். இவ்வளவோடு நாடகம் முடிகின்றது.

இந்நாடகத்தினுள், “அநந்த சாபல சரிதம்” “விஜயை வாசவசரிதம்,” “பதுமையுட்கலசரிதம்” என ஒன்றினோடொன்று தொடர்புடைய மூன்று சரிதங்கள் ஒருங்கு பிணைந்திருக்கின்ற தன்மையை நோக்குக.

அநந்த சாபல சரிதம் ஐ. 1இ3இ ஐஐஇ 2இ8இ ஐஐஐஇ 1இ2இ3இ4இ ஐஏ 1இ ஆகிய உட்பிரிவுகளினுட் கூறப்பட்டது. விஜயை வாசவசரிதம் 1.2. ஐஐ 1இ2இ7இ9 ஐஐஐ 2இ4 ஐஏ 1இ2 ஏ. ஐ ஆகிய உட்பிரிவுகளினுட் கூறப்பட்டது. பதுமை புட்கலசரிதம் ஐஐ 3இ4இ5இ6இ8இ ஐஐஐஇ 1இ4இ5இ ஐஏஇ 1. ஏஇ 1 ஆகிய உட்பிரிவுகளினுட் கூறப்பட்டது. பெருமிதச் சுவையின் பாலதாகிய யூலியசீசர்சரிதையின் கதைச்சுருக்கத்தைத் தந்த பின்பு பெருமிதச் சுவையினியல்பை விளக்குவாம்.

எ. மேலைநாட்டிற் றோன்றிய தலைவர்களுள்ளே தனிப்பெருந் தலைமைவாய்ந்த வீரராகிய யூலியசீசருடைய ஆற்றலும் ஆண்மையும் மேல்புலரத்தாரது இதிகாச நூல்களினுள்ளே சிறப்புறக் கூறப்படுவன. கல்வியினாலும், அஞ்சுதக்கன கண்டவிடத்து அஞ்சாமையாகிய தறுகண்மையினாலும், இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடுவருவன செய்யாமையாகிய இசைமையினாலும், உயிரும் உடம்பும் உறுப்பும்; முதலாகிய எல்லாப்பொருளுங் கொடுத்தலாகிய கொடையினாலும் மிகச் சிறந்து விளங்கியவராகிய யூலியசீசர் பெருமிதமேயுருவெடுத்த தன்மை வாய்ந்தவர். வணிகதேயவர்த்தகனாகிய அநந்தனிடத்து இசைமை கொடை யாகிய இரண்டும் பற்றிய பெருமிதங் காணப்பட்டது. யூலியசீசரிடத்து எஞ்சியவிரண்டுஞ் சிறப்புறக் காணப்படுவன. இவரைக் கதாநாயகனாகக் கொண்டெழுந்த நாடகத்தினது கதைச் சுருக்கத்தையும் பெருமிதச்சுவை தோற்றுகிற சிற்சில பாகங்களினது மொழிபெயர்ப்பையுந் தருவாம். விரிவஞ்சிச் சந்தி பிரிக்காது கதைச் சுருக்கத்தைத் தொகுத்தெழுதுவாம், மேற்போந்த ஏழு சரிதைகளினுட் சந்தியமைப்பை நுணுக ஆராய்ந்தோமாதலினால் இதனுள்ளும் மேல் வருஞ் சரிதைகளினுள்ளும் சந்தியமைப்பை யாராயாது விடுத்துச் சுவையையும் தலைமக்களியல்பையும் பெருக ஆராய்வாம். இச்சரிதையும் இதற்கடுத்த சரிதையும் இதிகாசத்தின்பாற் பட்டன வாதலின் இவற்றினுள் வருகின்ற சிறப்புப் பெயர்களை வேறுபடுத்தாது முதனூல் வழக்குப் படியே வழங்குவாம்.

இற்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு மேலைத்தேயம் முழுவதுக்கும் ரோமாபுரி தலைநகராக விளங்கியது. சிறந்த சேனைத்தலைவராகிய யூலியசீசர் ரோமபுரிக்குத் தென்மேற்குப்பாகத்திலுள்ள தேசங்களையெல்லாம் வெற்றி கொண்டுரோமாபுரியிற் றமக்கு மாறுகொண்டெழுந்த சேனைத்தலைவர்களையும் மேற்கொண்டு தனியரசு புரிந்து வந்தனர். பெருமிதம் நிறைந்த இவரது ஆட்சியைப் பொதுஜனங்கள் பெரிதும் விரும்பினர். ஜனத்தலைவருட் சிலர் அழுக்காற்றினாலும் பிற காரணங்களினாலும் இவர்மேல் வெறுப்புற்று இவருயிர்க்கு இன்னல் விளைப்பதற்குத் தருணந் தேடிக் கொண்டிருந்தனர்.

(இதுவரையுங் கதைத்தொடர்பை யுணர்த்தும் பொருட்டு நாடகத்துக்குப் புறம்பான நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கூறினோம்@ இனி நாடகத்தினுள் எடுத்துரைக்கப்பட்ட நிகழ்ச்சிகளைக் கூறுவாம்.)

காஷியல் எனப் பெயரிய ஜனத்தலைவ னொருவன் கஸ்கா, திரேபோணியஸ், லிகாறியஸ், டேசியஸ், சின்னா, சிம்பர் என்போரையும் நீதிமானும் யூலியசீசரது நண்பனுமாகிய மார்க்கஸ் புரூட்டஸையும் தன்வயப்படுத்திப் பங்குனித்திங்களின் நடுநாளில் நண்பகலில் அத்தாணி மண்டபத்தில் யூலியசீசரது உயிரைக் கவர்வதற்கு ஏற்பாடு செய்தனன். குறித்த தினத்துக்கு முன்னாளிரவில் விண்வீழி;கொள்ளிகளும், தூமகேதுக்களும் பலவகை யுற்பாதங்களும் நிகழ்ந்;தன. யூலியசீசரின் மனைவியாகிய கல்பூர்ணியா தீக்கனாக் கண்டு நள்ளிரவில் அச்சமுற்றெழுந்து புறத்தே நிகழுகின்ற உற்பாதங்களினால் உள்ளம் அவலித்துத் துயிலொழித்திருந்து காலைப்பொழுது வந்ததும் கணவனது முன்னிலையை யடைந்து.

“பேரிரவில் நடந்தவெலாம் பீழையினை விளைக்கப்

பேதலிக்கு முளச்சிறியேன் பேசுகின்ற மொழிகள்

ஆருயிர்க்குத் தலைவனின் தருட்செவியில் வீழ்க

அகத்திடையின் றிரந்திடுக அவைபுகுத லொழிக”

எனக் குறையிரந்து வேண்டிநின்றனள்.

அதனைக் கேட்ட சீசர் புன்னகை புரிந்து,

“அஞ்சினர்க்குச் சதமரண மஞ்சாத நெஞ்சத்

தாடவனுக் கொருமரண மவனிமிசைப் பிறந்தோர்

துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்குந்

துன்மதிமூ டரைக்கண்டாற் புன்னகைசெய் பவன் யான்

இன்னலும்யா னும்பிறந்த தொருதினத்தி லறிவாய்

இளஞ்சிங்கக் குருளைகள் யாம் யான்மூத்தோ னெனது

பின்வருவ தின்னலெனப் பகைமன்ன ரறிவார்

பேதுறல்பெண் ணணங்கேயான் போய்வருதல் வேண்டும்”

எனக் கூறினர்.

இத்தருணத்தில் டேசியஸ் என்பவன் வந்து அத்தாணிமண்டபத்திற் குழுமியிருந்த முதியோர் சீசரை அழைத்துவரும்படி சொல்லியதாகத் தெரிவித்தான். சீசர் முன்பு மறுத்துப் பின்பு இயைந்து உடன் போயினர். வழியில் ஒருசேவனக் ஒருநிருபத்தைக் கொண்டு வந்து கொடுத்து “இது சீசருடைய சுகத்தைக் கோரியது, இதனை யுடனே படித்தருள வேண்டும்” எனச் சீசர்கையிற் கொடுத்தனன். “நல்லது நண்ப! ஜனங்களுடைய சுகத்தைக் கோரிய நிருபங்களைப் படித்த பின்பு இதனைப் படிக்கிறேன்” என்று கூறிவிட்டுச் சீசர் அத்தாணி மண்டபத்தை நோக்கி நடந்தனர். ஆங்கு, சிம்மர் என்பவன் முற்பட்டுவந்து முழந்தாட்படியிட்டுநின்று, “மஹெளதாரிய மஹாப்பிரபுவே! ஏழையேனது விண்ணப்பத்துக்கிரங்கி ஏழையேனது சகோதரனை மன்னித்தருள வேண்டும்” என வேண்டி நின்றனன்.

சீசர்:

“தாழ்ந்தது மென்மொழி யுரைத்திடேல் தரணியிற் பணிந்து

வீழ்ந்து நைபவர் பொய்யுரைக் கிரங்கிய வீணர்

சூழ்ந்து செய்தன துடைத்துப்பின் சோர்வினை யடைவார்

ஆழ்ந்து செய்வன செய்யும்யா னவர் நெறி யணையேன்”

“அண்ண னீர்மையேன் பிழைசெயே னணுவள வேனும்

நண்ணு நீதியிற் பிரிந்திடேன் நாயெனக கதறிக்

கண்ணி னீர்மிக நிலத்தினிற் புருள்வதாற் கருதும்

எண்ண முற்றுற மென்னநீ யெண்ணுவ திழிவே”

எனக் கூறச் சார்ந்து நின்ற மார்க்கஸ்புருட்டஸ் சீசரை நோக்கி, “ஐய! நான் இச்சகம் பேசுவோனல்லேன்@ தேவரீரது திருக்கரத்தை முத்தமிட்டேன், சிம்பரின் விண்ணப்பத்துக் கிரங்கி அவனது சகோதரனை விடுதலைசெய்தல் வேண்டும்” என்றனன்@ சமீபத்தில் நின்ற காஷியஸ் சீசரை நோக்கி, “மகிமை பொருந்திய சீசரே! மன்னிக்க வேண்டும்! உம்மிரு தாளினையும் பற்றினேன். சிம்பரின் சகோதரனை மன்னிக்கவேண்டுமென்றனன். சீசர் தம்மைச் சூழ்ந்துநின்று விண்ணப்பித்தோரை நோக்கி,

“இரங்குதி ரென்ன விரக்கு நீர்மையர்

தமைப்பிற ரிரக்கிற் றமையகாட்டுநரே

நும்போல் வேனெனி னும் மொழிக் கிசைவேன்

வானக மிளிரு மீனின மனைத்துந்

தற்சூழ்ந் தசையத் தானசை வின்றி

நிலைபெறு துருவ னிலைமைகண் டிலிரோ

வான்மீ னனையர் மாநில மாந்தர்

துருவ னனைய னொருவனீண் டுளனால்

அவன்றான் யானென வழிகுவிர் புகன்ற

மொழியிற் பிரியேன் பழியொடு படரேன்

மலைவீழ் வெய்தினு மனம் வீழ்விலனே”

எனக்கூறினார். இதனைக் கேட்ட புரூட்டஸ் ஆதியோர் சீசரது பெருமிதவுரையைத் தற்பெருமையுரையென வெண்ணி உடைவாளைக் கழற்றி அனைவரும் ஏகோபித்துச் சீசரை வெட்டினார்கள். “நீயுமாபுரூட்டஸ்?” என்னு முரையோடு சீசர் வீழ்ந்து மரணித்தனர். சீசரினது மரணங்காரணமாக ரோமபுரியிற் கலக மேற்பட்டதும், புரூட்டஸின் முன்னிலையிற் சீசருடைய ஆவி தோற்றிப் “பிலிப்பி நகரில் நின்னைப் பின்பும் சந்திப்பேன்” என்று சொல்லுவதும், சீசரது நண்பனாகிய மார்க் அந்தனியும் மருமகனாகிய ஒக்டேவியசும் படையெடுத்துவருவதும், அன்னார் காஷியஸ் முதலினோரை எதிர்த்துக் கொல்லுவதும், புரூட்டஸ்சீசரை கொன்றது தவறென அறிந்து தற்கொலைசெய்து கொள்வதும் பிறவும் வந்து சரிதை முடிவுறும்.

அ. ரோமபுரியில் நடந்த மற்றொருசரிதையாகிய சோனாதிபதிசரிதை வெகுளிச்சுவைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துநின்றது. ரோமாபுரியை யரசாண்ட சக்கரவர்த்தி யிறந்துபோக அவனது புதல்வராகிய சற்றேணினஸ், பசியானஸ் என்போர் தம்முண் முரணிச் சண்டையிட்டுக் கொண்டு நின்றனர். தைதஸ் அண்டிரணிக்கஸ் என்னுஞ் சேனைத் தலைவன் சக்கரவர்த்தியின் புதல்வ ரிருவருள் மூத்தோனாகிய சற்றேணினசுக்கே பட்டம் உரியதெனத் தீர்;பிட்டனன். சேனைத்தலைவனாகிய தைதஸ் (அண்டிரணிக்கஸ்) பல தேயங்களை வெற்றி பெற்றுவந்தவனாதலால் அவனுக்கு நிறைந்த செல்வாக்கிருந்தது. ஆதலினால் அவன் சொல்லுக் கியைந்து கொண்டுவந்த சிறைகளுள் தமோரா எனப் பெயரிய வேற்றுநாட்டரசியொருத்தி யிருந்தனள்@ சற்றேணினஸ்மன்னன் இவளது அழகி லீடுபட்டு இவளைத் தனது காதற்கிழத்தியாக்குதற்கு மனம்வைத்திருந்தனள். தாமோரா தனது ஏவலாளனாகிய ஆரோன்மீது பொருந்தாக்காதல் வைத்திருந்தாள்@ இதனைப் பிறரறியார். தாமோதராவைக் காதற்கிழத்தியாகவும் சேனைத் தலைவனது புதல்வியாகிய லவீனியாவைப் பட்டத்தசியாகவும் ஆக்குதற்கு விரும்பிய சற்றேணினஸ்மன்னன் தைகஸை அழைத்து அவனது விருப்பத்தை விசாரித்தான். தைதஸ் அரசர்வாக்குக்கு எதிர்வாக்கில்லையெனக் கூறி யுடன்பட்டான். தைதஸினுடைய புதல்வருள் ஒருவனாகிய மூதியஸ் என்பவன் முற்பட்டு லவீனியாவை இளமன்னனாகிய பசியானசுக்குக் கொடுப்பதாக முன்னமே வாக்குப் பண்ணியபடியால், சற்றேணினசுக்குக் கொடுக்க நினைப்பது தவறென்று தடுத்து நின்றனன். “மன்னன்வாக்குக்கு எதிர்வாக்குக் கூறிய பேதாய்! உன்னை வாளினால் மாய்க்கிறே” னென்று கூறித் தைதஸ் தனது மைந்தனாகிய மூதியஸை வாளினால் எறிந்து வீழ்த்தினான். சற்றேணினஸ் இதுவே தருண மென் றெண்ணித் தைதஸை நோக்கி “நீ நன்மகளைப் பசியானசுக்குக் கொடுத்து அதனால் வருகின்ற நன்மையைப் பெறுதி@ நான் தாமோராவைப் பட்டத்தரசியாக்குகிறேன்” என்று கூறித் தமோராவைப் பட்டத்தரசியாக்கினன். தமோரா தன் மைந்தராகிய டெமத்திரியஸ், கிரன் என்பாரையுந் தன்னையுஞ் சிறைப்படுத்திவந்த தைதஸின்மேல் இயல்பாகவே வன்மங் கொண்டிருந்தாளாதலினால் பழிவாங்குவதற்;கு எப்பொழுது தருணம் வாய்க்கு மென்று காத்துக் கொண்டிருந்தனள். ஒருநாள் உபவனத்திலே தமோராவும் ஆரோனும் இன்புற்றிருக்கும்போது அவ்வழியே லவீனியாவும் அவளது நாயகனாகிய பசியானசும் வந்தனர். அவரைக்கண்டமாத்திரத்தே ஆரோன் அகன்றுவிட்டான். தாங் கண்ட செய்தியை மன்னனுக்குரைப்பதாகச் சொல்லி லவீனியாவும் பசியானசும் அகன்றுவிடச் சிறிது நேரத்துக்குள் தாமோராவின் புதல்வரிருவரும் அவ்வழியே வந்து தமது தாய் சஞ்சலித்திருப்பதைக் கண்டு எய்திய தென்னவென விசாரித்தனர். தாமோரா பசியானஸ் தன்னை இகழ்ந்ததாகக் கூறி அவனைக் கொன்றுவிடும்படி புதல்வரை வேவினள். தாமோராவின் புதல்வர் ஆயுதமில்லாதுநின்ற பசியானஸைக் கொன்று ஒருகுப்பைக்கிடங்கினுட் போட்டுவிட்டு லவீனியாவை வலிதிற் கற்பழித்துக் காரியம் வெளிப்பட்டுவிடு மென்றஞ்சி அவளது நாவையும் கைகளையும் வெட்டி விட்டுப்போயினர். ஆரோன் ஒருபொய்ந்நிருபத்தை யெழுதிப் பசியானஸின் உடல்கிடந்த கிடங்கினுட் போட்டனன். இதனைக் கண்டெடுத்த மன்னன் நிருபத்திலெழுதியிருந்த வாசகங்களை நம்பித் தைதஸினுடைய புதல்வராகிய குவிந்தஸ், மார்ஷியஸ் என்போர் இளமன்னனைக் கொன்றனரென நிச்சயித்து அவரிருவரையுஞ் சிறைச் சாலையி லிடுவித்தான். தனது புதல்வரிருவரையுஞ் சிறையினின்று நீக்குவதற்குப் பெரிதும் முயன்று கொண்டிருந்த தைதஸினிடம் ஆரோன் வந்து மைந்த ரிருவருடைய உயிருக்கும் பதிலாகத் தந்தையினுடைய வலக்கரத்தைக் கொடுத்தால் மன்னன் மைந்தரிருவரையும் விடுதலை யாக்கிவிட வாக்குப்பண்ணியிருப்பதாகப் பொய்ம்மொழி கூறினான். தைதஸ் இயைந்து தன் வலக்கரத்தைநீட்ட ஆரோன் அதனை வெட்டியெடுத்துக் கொண்டேகினன். லவீனியாவைக் காட்டிற் கண்ட அவளது சிறியதந்தையாகிய மார்க்கஸ் அவளது வேறுபாட்டைப் பார்த்து அவலித்து அதனைச் செய்தார் யாவரென விசாரித்தனன். நாவெட்டுண்டிருந்த லவீனியா வாயில் ஒரு எழுதுகோலைப் பற்றி நடந்த செய்திகளை எழுதிக்காட்டினள். இதனை யறிந்த தைதஸ் அடங்கா வெகுளி கொண்டு தனது வலக்கரம்போயினமைக்காக அவலித்தானாயினும் மன்னனையும் தமோராவையும் அவளுடைய புதல்வரிருவரையும் அதஞ் செய்கின்றேனென் றார்ப்பரித்தெழுந்தனள். அவனது மூத்தபுதல்வனாகிய லூரியஸ் தந்தையை யமர்த்தி வேண்டியவற்றைத் தான் செய்து முடிப்பதாகக் கூறி வேற்றுநாட்டுக்குச் சென்று சேனைதிரட்டிக் கொண்டுவந்து ரோமாபுரியை முற்றுகையிட்டான். சற்றேணினஸ் அவனைப் பேதித்து வெல்லுதல் கூடாதெனவறிந்து சாமோபாயத்தினால் வெல்லக்கருதித் தான் விருந்துண்ணவருவதாகவும் லூசியஸையும் விருந்துண்ண அழைக்கும் படியாகவும் தைதசுக்குச் செய்தியனுப்பினான். இச் செய்தி கொண்டுவந்த தமோராவின் புதல்வ ரிருவரையும் தைதஸ் தன திடக்கையிலேந்திய வாளுக்கிரையாக்கி அவருடலத்தை மறைத்து வைத்துவிட்டு மன்னனையும் தாமோராவையும் விருந்துண்ண அழைத்து வரும்படி ஆளனுப்பினான். தாமோதரா ஒரு மகவினை யீன்று அது ஆரோனைப்போலக் கறுத்த மேனியோடிருந்தமையினால் மகவைப் பிறர்காணில் ஐயுறுவாரென் றஞ்சி ஒரு சேடிகைக்கொடுத்து அதனைக் கொன்றெறிந்து விடும்படி யனுப்பினாள். ஆரோகன் இதனை யறிந்து சேடியைக் கொன்றுவிட்டுச் சிசுவைக் கையிலெடுத்துக் கொண்டுபோம் பொழுது லூசியஸினுடைய சிசுவையும் எடுத்துக்கொண்டு தந்தையினுடைய மனைக்கு வந்தனன். ஆங்கு முன்னமே விருந்துண்ணவந்த தமோராவின்முன் தைதஸ் அவளது புதல்வரது தசையைச் சமைத்த ஊனுணவை வைத்தான். அவள் உண்டு கொண்டிருக்கும்போது லூசியஸ் சிசுவோடு வந்துசேர்ந்தனன். தைதஸ் பெருவெகுளியோடுவந்து நடந்த விருத்தாந்தங்களையெல்லாஞ் சொல்லி மானமிழந்தபின்பு தன்மகள் லவீனியா உயிர்வாழ்தல் தகுதியன்றென அவளைத் தன் கைவாளுக் கிரையாக்கி இவற்றுக்கெல்லாங் காரணமாகிய தமோராவையும் கொன்றுவிட்டான். அரசன் வெகுண்டெழுந்து தைதஸைக் கொல்லப் பக்கத்தில்நின்ற லூசியஸ் மன்னனுயிரைத் தன் கைவாளுக் கிரையாக்கினான். நடந்த வர்த்தமானங்களையெல்லாம் ஜனங்களுக்குத் தெளிவுறக்கூற ஜனங்கள் திரண்டு ஆரோன் என்னுங் கொடியோனைப் பிடித்து அவனது தலை புறத்தேயிருக்கும்படி நிலத்திற் புதைத்து உணவின்றி யிறக்கும் படிவிடுவதோடு சரிதை முடிகின்றது. இச்சரிதையினுள் உறுப்பறை, குடிகோள், அலை, கொலை யென்னும் நான்கும் பற்றியெழுந்த வெறுப்பொடுகூடிய வெகுளிச் சுவை தோன்றினமை காண்க.

கூ. இனி, உவகைச்சுவைக்கு இலக்கியமாகிய வேனிற்காதையை ஆராயப்புகுவாம். செகசிற்பியர் இந்நாடகத்தை யெழுதிமுடிக்க அதனைப் படித்த அவரது நண்பர். “ஐய! இந்நாடகத்துக்குப் பெயரென்ன!” என விசாரித்தனர். “நீவீர் விரும்பியபடி” யெனக் கவிவாணர் விடையளித்தனர். அவ்வுரைத்தொடரே பெயராக இந்நாடகம் வழங்குவதாயிற்று. இது பதியிகந்து வனத்தில் வதிந்த இளையோர் வேனிலான்வயப்பட்டுப் பரிவாற்றாமையாற் றுன்புறுவதையும் பின்னர்க் கூட்டத்தினால் இன்புறுவதையும் நிகழ்ச்சியாகக் கொண்டதாதலின் இதனை யாம் வேனிற்காதை யென வழங்குவாம். பலவளம் நிறைந்த பாண்டி நாட்டினையும் அதற்கணித்தாகிய ஆரண்யத்தையும் கதை நிகழ்ந்த இடங்களாகக் கொள்வாம்.

நீதிநெறி தவறாது அரசுபுரிந்த குலசேகரபாண்டியனை அவனது இளவலாகிய வீரேந்திரபாண்டியன் வஞ்சனையினாற் காட்டுக்குத் துரத்திவிட்டு அவனது இராஜ்யத்தைக் கைப்பற்றி அரசுபுரிந்து வந்தனன். அரசிழந்த குலசேகரனும் ஜயதேவன் அமலதேவனென்னும் பிரபுக்களும் பிறரும் ஆரணியத்திற்சென்று லௌகிகக் கவலையற்றுச் சந்தோஷமாகத் தமது வாழ்நாட்களைக் கழித்து வருவாராயினர். குலசேகரனது புதல்வி கோகிலவல்லியும் வீரேந்திரனது புதல்வி கேகயவல்லியும் உடன்பிறந்து உடன்வளர்ந்தவராதலினால் நட்புமிக்கிருந்தனர். கோகிலவல்லியினது பிரிவைத் தன்மகள் சகிக்கலாற்றாது துன்புறுவாளென அறிந்த வீரேந்திரன் தமையன் புதல்வியை யவளது தந்தையோடு போகவொட்டாது தடுத்து அரமனையி லிருத்திவைத்திருந்தான்.

ஒருநாள் வீரேந்திரனும் சுற்றத்தாரும் மந்திரி பிரதானியருங் குழுமியிருந்த பேரவையிலே யொரு மற்போர் நிகழ்ந்தது. சமஸ்தானத்து மல்லனாகிய சார்த்தூலன் என்பான் புயங்களைத் தட்டி யார்ப் பரித்துத் தன்னோடு பொரவல்லார் யாவரேனு முளரோவென அறைகூவி நின்றதருணத்தில், வயதில் இளையோனும் திடகாத்திரதேகமுடையோனுமாகிய இரதிகாந்த னென்னும் வாலிபன் முற்பட்டு வந்து மற்போர்புரிந்து சார்த்தூலனை விழுத்தினான். வீரேந்திரன் தனது மல்லனைத் தோற்கச் செய்த வாலிபனைநோக்கி “இளையோய்! நின்பெயரென்ன” என வினவினான்.

இரதிகாந்தன்: ஐய! நான் இராகவதேவன் என்னும் பிரபுவின் புதல்வன்@ என் பெயர் இரதிகாந்தன்.

வீரேந்திரன்: வேறு யாவருக்கேனும் நீ புதல்வனாயிருந்திருந்தால் நன்றாயிருக்கும். இராகவதேவரை உலகம் புகழ்ந்துரைக்கின்றதென்னும் எனக்கும் அவருக்கும் நீங்காப்பகைமையுண்டு. வலிமையின் மிக்க வாலிபனே! போய்வருவாயாக. நீ வேறு யாரையாவது நினது தந்தையென வுரைத்திருப்பாயாயின் என உள்ளம் மகிழ்வெய்தியிருக்கும்.

(வீரேந்திரனும் பரிசனரும் போய்விடுகின்றனர்)

கேகயவல்லி: கோகிலா! எந்தையினுடையஸ்தானத்தில் நான் இருந்திருப்பின் இவ்வண்ணம் செய்வேனா?

இரதிகாந்தன்: நான் இராகவதேவனது கனிஷ்டபுத்திரனாயிருப்பதைப் பெறற்கரும் பெருமையாகக் கொள்ளுகிறேன். வீரேந்திரனது பட்டத்தைப் பெறுவதெனினும் பிறிதொரு தந்தையை விரும்பேன்.

கோகிலவல்லி: இராவக தேவர் எனது தந்தைக்கு நண்பர். இந்த இளவீரர் அவரது புதல்வரென்பதை நான் முன்னமே யறிந்திருந்தேனாயின் என் கண்ணீர் இவரை மற்போர்புரிய வொட்டாது தடுத்திருக்கும்.

கோகயவல்லி: வாராய் கோகிலா! நான் இவ்வீரரையணுகி யாறுதல் வார்த்தை கூறுவோம். எந்தையினுடைய கொடுஞ்செயல் என்உள்ளத்திற் றைக்கிறது.

(இருவரும் இரதிகாந்தனை யணுகுகின்றனர்)

ஐய! நீர் வெற்றியுடையீர்@ தகவுடையீர்@ இன்று போலவே என்றும் நிலையிற்பிரியாதிருப்பீராயின் நீர் மணமுடிக்குங் காதலி மனப் பாக்கியமுடையவளே.

கோகிலவல்லி: (தன் கழுத்திற்கிடந்த முத்துமாலையைக் கழற்றி இரதிகாந்தன் கையிற் கொடுத்து) ஐய! என்பொருட்டு இதனை யணிந்து கொள்வீராக. இதனினும்பார்க்கப் பெரியதொரு வெகுமதியைக் கொடுக்க என்னுள்ளம் விரும்புகிறது. கையிலோ பிறிதொன்றில்லை. கேகயா! நாம் போய்வருவோமா?

(பொண்க ளிருவரும் போய்விடுகின்றனர்)

இரதிகாந்தன்: (தன்னுள்ளே) ஏதேது! ஒருவார்த்தை மொழியவும் நாவெழவில்லையே@ இரதிகாந்தா! சார்த்தூலனை வென்றேனெனப் பெருமிதங் கொள்ளாதே@ ஒரு மடவரலது கண்ணிணைக்கு நீ தோற்றுவிட்டனை.

(இரதிகாந்தன் கோகிலவல்லிமீது காதல் கொண்டானென்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை)

கோகிலவல்லி முத்தாரங் கொடுத்த செய்தியைக் கேள்வியுற்ற வீரேந்திரன் அவள் மேற் சினந்து, “தந்தையிருக்குமிடந்தேடிப்போ” எனக் கூறி அவளை அரமணையிலிருந்து துரத்திவிட்டான். அவளது பிரிவைச் சகிக்கலாற்றாத கேகயவல்லி தந்தையறியாவண்ணம் சல்லாபனென்னும் ஒரு சேவகனையு மழைத்துக்கொண்டு கோகிலவல்லியுடன் போயினள். வாயில்காப்பாளர் முதலியோர் காணின் ஏதம்வருமென்றஞ்சிக் கோகிலவல்லி ஆண்பிள்ளைவேடந் தரித்துக் கொள்ளக் கேகயவல்லி ஆயர்மகளாக வேற்றுருக்கொண்டு குலசேகரன் வசிக்கும் அரண்யத்தை அடைந்து ஆங்கு ஒரு குடிசையை யமைத்துக் கொண்டு வாழ்ந்துவந்தனர். இரதிகாந்தனுடைய வீரச்செயலைக் கேள்வியுற்ற அவனது மூத்தோனாகிய நீலாம்பரன் அழுக்காறுற்று இரதிகாந்தனுக்குக் கேடு செய்ய எண்ண முற்றிருந்தனன். இதையறிந்த ஆதன் என்னும் வயோதிக வேலைக்காரன் இரதிகாந்தனுக்குத் தெரிவிக்க அவனும் தமையனது கண்முன்னின்று அகன்றுவிடக் கருதிக் குலசேகரன் வசிக்கும் ஆரண்யத்தை நோக்கி நடந்தனன்@ ஆதனும் உடன்சென்றனன். இருவரும் ஆரண்யத்தையடைந்தனர். பசி தாகத்தினாற் களைப்படைந்த ஆதன் சோர்விழ இரதிகாந்தன் அவனுக்கு உணவுதேடி வரும்பொருட்டாக ஆரண்யத்தினுள் அலைவுற்றுவரும்போது உண்ணுதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த குலசேகரனையும் நண்பரையுங் கண்டனன். இரதிகாந்தன் உடைவாளை யுருவி. அன்னாரைநோக்கி “உண்ணன்மின்@ உணவின்றித் தவிக்கின்ற எனது நண்பனொருவனுளன், அவனது பசிதீர்த்த பின்பன்றி நீவிர் உண்ணுதல் கூடாது” என்றனன். குலசேகர னாதியோர் நகைத்து “இங்கு உனக்கும் உனது நண்பனுக்கும் வேண்டியஅளவு உணவு உண்டு@ வாளை யறையிற் போடுதி” என்றனர். இரதிகாந்தன் ஆதனை அழைத்துவந்து உணவூட்டியபின் ஒருவரையொருவர் விசாரித்தறிந்து அனைவரும் அளவளாவி யின்புற்றனர். குலசேகரன் நிகழ்ந்தன வெல்லாவற்றையுஞ் சிந்தித்து, ஜயதேவனை நோக்கி, “இவ்வுலகம் நாடகவரங்குபோன்ற தன்றோ! நாம் நடிக்கும்பாகத்தினும் பார்க்கத் துன்பம் மிக்க பாகத்தை நடிப்பார் பிறருளரல்லவோ?” என்றனன்.

(ஜயதேவன் இதற்கு மறுமொழியாக “அங்கணுலகனைத்தினையும்” எனத் தொடங்கிக் கூறிய செய்யுட்களை முகவுரையினுட் டந்தனம்@ ஆண்டுக் காண்க)

இரதிகாந்தன் குலசேகரனாதியோரோடு வனத்தில் வசி;க்கின்றநாட்களில் இளவேனிற்காலம் வருதலும் கோகிலவல்லியை நினைத்துத் துன்புற்று அவள்மேல் ஒரு பாசுரத்தை யெழுதி மரத்திற் றொங்கவிட்டான். அவ்வழியே வந்த கோகலவல்லி பாசுரத்தைத் கண்டெடுத்து ஆலோசனையுற்றிருக்கும்போது அவளது சேவகனும் விதூஷகனுமாகிய சல்லாபன் எதிர்ப்பட்டுப் பல நகைக்குறிப்பு மொழிகளைக் கூறுகிறான். அவளை போய்விட இரதிகாந்தன் அவ்வழியே வருகிறான். கோகில வல்லி ஆண்பிள்ளைவேடத்தோ டிருந்தாளாதலினால் இரதிகரந்தன் அவளை இன்னாரென் றறிந்து கொள்ளவில்லை. கோகிலவல்லியோ அவனை இன்னானென்று உடனே யறிந்து கொண்டு அவனை நோக்கி “வனசரா! நாழிகை யென்ன” என்றனள்.

இரதிகாந்தன்: நேர மென்னவென்று கேட்டல் மரபாகும்@ வனத்தில் நாழிகைவட்டியிருப்பினன்றோ நாழிகை யெதுவென்று கேட்டல் பொருத்தமான கேள்வியாகும்.

கோகிலவல்லி: அங்ஙனமாயின் வனத்தில் உண்மைக்காதலரு மிலர். விநாடிதோறும் நெடுமூச்செறிந்து நாழிகைதோறும் ஏக்கமுற்றிரங்குவது காதலர்க்கு இயல்பாதலின் அன்னார் நாழிகைவட்டியின் உதவியின்றியை மெல்லென்றசையும் நேரத்தின்கதியைச் செவ்வனே யுணர்ந்து கொள்வர்.

(நேரத்தின் கதியைப்பற்றி இருவருஞ் சிறிதுநேரஞ் சம்பாஷிக்கின்றனர்)

இர: எழிலின் மிக்க இளைஞனே! நீ வசிக்குமிட மெதுவோ?

கோகி: எனது தந்தையாகிய இவ்வாயர்மகளும் யானும் இவ்வாரண்யத்தின் சாரலிற்றான் வசிக்கின்றோம்.

இர: நீவிர் இவ்விடத்துக்கே உரியவரா?

கோகி: அதோ நிற்கும் குறுமுயல் தான் தோன்றியவிடத்து வசிப்பது போல நாங்களும் இங்கு வசிக்கின்றோம்.

இர: நினது செம்மொழியும் உரைவன்மையும் இக் காட்டுப்புறத்திற் குரியனவல்ல.

கோகி: இங்ஙனம் பலர்சொல்லக் கேட்டிருக்கின்றேன். என் சிறிய தந்தை யொருவ ருளர்@ அவர்இராஜமாநகரத்திற் பலகாலம் வசித்தவர். அவர் எனக்குப் பலவிஷயங்களைத் தெரிவித்திருக்கிறார். அம்மம்ம! நகரத்துப் பெண்களைப்பற்றி யவர் சொன்ன குறிப்பை யெல்லாங் கேட்டேன். பெண்ஜன்மம் எவ்வளவு சீர்கெட்டஜன்மம்@ என்னைப் பெண்ணாகப் படைக்காது விட்டமைக்காக நான் ஈசுவரனுக்குத் துதிசெலுத்துகி;ன்றேன்.

இர: பெண்கள்பால் அவர் சார்த்திக்கூறிய பிரதான குற்றங்கள் நினைவிலிருப்பவாயின், தயைசெய்து தெரிவிப்பாய்.

கோகி: பிரதானகுற்றமென் றொன்றில்லை@ ஒன்றினைப்போலவே மற்றதுவும்@ ஒன்றினைப் பெரிதென்று சிந்தித்துக் கொண்டிருக்குங்கால் அதன்பின் வருவது அதனினும் பெரிதாகக் தோற்றக் கண்டேன்.

இர: அவ்ற்றினுட் சிலவற்றைச் சொல்லுவாயாக.

கோகி: வியாதியில்லாதவிடத்து நான் மருந்தை வீணாக்கப் போவதில்லை. இவ்வாரண்யத்தில் யாரோ ஒரு மனிதன் இளமரங்கள் பலவற்றிற் “கோகிலவல்லி” யென்னும் பெயரைப் பொறித்து அம்மரங்களைக் கெடுத்தும், பாசுரங்களை யெழுதிக் கொடிகளிலும். செடிகளிலும் தொங்கவிட்டுத் திரிகின்றான். இம் மனிதனை யான் காண்பேனாயின், பெண்களியல்பைப்பற்றி யவனுக்குச் சில கூறிச் சிறிது நற்புத்தி புகட்டுவேன்.

இர: காதலால் அலைகின்ற அம்மனிதன் நானே. தயைசெய்து நினது மருந்தை யளிப்பாய்.

கோகி: என் சிறிய தந்தை காதலா லலைவோருக்கு உரியவென எடுத்துக் கூறிய அடையாளங்க ளொன்றேனும் உம்மிடத்திற் காணப்படவில்லை. ஆதலால் நீர் அக்கூட்டில் அடைபட்டவரல்லர்.

இர: அவ்வடையாளங்கள் தாம் யாவையோ?

கோகி: மெலிந்தமுகம், அஃது உம்மிடத்தி லில்லை@ உட்குழிந்து நிறம் வேறுபட்ட கண், அஃது உம்மிடத்திலில்லை@ சோர்ந்துபட்ட மனநிலை, அஃது உம்மிடத்திலில்லை.

(இன்னும் பலவற்றைக் கூறுகிறாள்)

இர: அழகின்மிக்க இளைஞனே! நீ எனவார்த்தையை நம்பவேண்டுமென்று விரும்புகிறேன்.

கோகி: நம்புவதாவது? தயைசெய்து உண்மையைக் கூறுவீர். “கோகிலவல்லி”யை வியந்துகூறும் பாசுரங்களை யியற்றிக் கொண்டு திரிபவர் நீர்தானா?

இர: ஆம்@ நான்தான்.

கோகி: நுமதுசந்தப்பாக்களி லெழுதப்பட்டிருக்கின்ற அவ்வளவு ஆழமானதா நும்முடைய காதல்!

இர: எனது காதல் சந்தத்துக்கு மெட்டாதது. சிந்தித்தற்கு மெட்டாதது.

கோகி: நல்லது நான் மருந்து சொல்லுகிறேன் கேட்பீராக@ நீர் என்னைக் கோகிலவல்லியென்று எண்ணிக்கொள்ள வேண்டும்: அவளோடு வார்த்தையாடுவதுபோல என்னோடு வார்த்தையாட வேண்டும்.

(இன்னும் பலவாறாகச் சொல்லி இரதிகாந்தனை தன்னிருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றனள். அன்றுமுதல் இரதிகாந்தன் கோகிலவல்லியைத் தினந்தோறும் போய்ப்பார்த்து அவளோடு வார்த்தையாடி விட்டுவருவானெனினும், அவளை இன்னாளென் றறிந்து கொள்ளாது. காந்தம னெனப் பெயரிய இளைஞனெனவே யெண்ணியிருந்தான்)

கோகிலவல்லி வசித்த குடிசைக்குச் சமீபத்திலே பாவையென்பாள் ஒரு இடையர்குலத்து இளமங்கை வசித்தாள். சீதரனென்பா னொரு ஆயர்மகன் அவளைக் காதலித்து கடைக்கணோக்கம் வைக்கும்படி குறையிரந்து வேண்டிக்கொண்டு திரிந்தான். பாவை கோகிலவல்லியைக் கண்டநாள் முதல் ஆண்பிள்ளையென நினைத்துக் காந்தமனைக் கண்ட கண் பிறரொருவரையும் பாராதெனக் கூறிச் சீதரனை வெறுத் தொதுக்கிவிட்டாள். இதனை யறிந்த கோகிலவல்லி பாவைபொருட்டாகவும் இரதிகாந்தன் பொருட்டாகவும் தனது உண்மைக்கோலத்தை வெளிப்படுத்துவதற்குரிய தினம் என்று வருமென்று மனத்திற் சிந்தித்துப் பாவையைநோக்கி “ஏடி மூடமதி யுடையவளே! நான் உன்னை மணக்கப் போவதில்லை@ உன் வீணெண்ணங்களை விட்டுவிட்டு உன்னைக் காதலிக்கின்ற ஆயர்மகனை மணந்து கொள்” எனக் கூறினள்.

இந்நிகழ்ச்சிகள் இவ்வாறாக இராஜமகாநகரத்திலே வீரேந்திரன் நீலாம்பரனை யழைத்து, நினதுதம்பி இரதிகாந்தனை என்முன்னிலைக்கு வருவிப்பாயாக” என்றுகட்ளை யிட்டனன். நீலாம்பரன், “என்தம்பி யிருக்குமிடத்தை நா னறியே” னென்றனன். நீலாம்பரன் இரதிகாந்தனை மறைவிடத்திருத்தி விட்டுப் பொய்ம்மொழி கூறுகிறானென் றெண்ணிய வீரேந்திரன், அவனை நோக்கி, “இன்றே என்நாட்டைவிட்டுப் போய்விடுதி, ஓராண்டெல்லையினுள் நினதுதம்பியொடு வராதுபோவாயேல் நீ இவ்விடந் திரும்பிவர வேண்டியதில்லை@ உன்பொருளெல்லாம் என பொக்கிஷத்தைச் சேரு” மென்றனன். நீலாம்பரன் துன்புற்றுக் குலசேகரன் வசிக்கும் ஆரண்யத்தை நோக்கி நடந்தனன். ஆங்குச் சென்ற நீலாம்பரன் வழிநடையினாற் சோர்ந்து ஒரு மரநிழலி லுறங்கும்போது அவன்பக்கம் ஒரு விஷசர்ப்பம் படமெடுத்துக் கொண்டு நி;ன்றது@ ஒரு பெண்சிங்கம் அவன் துயிலொழித் தெழும்வேளை யிது வென்று பார்த்துக் கொண்டிருந்தது@ அவ்வழி வந்த இரதிகாந்தன், தமையன் தனக்குக் கேடுசூழ்ந்தமையைப்பொறுத்தருளும்படி வேண்டினன். சிங்கத்தின் நகம் பட்ட காயத்தினாற் சிறிது துன்புற்ற இரதிகாந்தன் அன்றுகோகிலவல்லியின் மனைக்குத் தான் போகக்கூடாமையினால், செய்தி தெரிவித்துக் வரும்படி தமையனாகிய நிலாம்பரனை யனுப்பினான். நிகழ்ந்தவற்றை யெல்லாம் நீலாம்பரன் உரைக்க அவன்மொழியைக் கேட்டுக் கொண்டிருந்த கோகயவல்லி அவன்பாற் காதலுற்றனள். சல்லாப னென்னும் விதூஷகன் ஆயளர்மகளாகிய ஆதிரையைக் காதலித்தனன். ஒரு சுபதினத்திலே நீலாம்பரனுக்கும் கேகயவல்லிக்கும், சீதரனுக்கும் பாவைக்கும், சல்லாபனுக்கும் ஆதிரைக்கும் மணவினை நடத்துவதாக நிச்சயஞ் செய்யப்பட்டது. காந்தமன் வேடத்தோடிருந்த கோகிலவல்லி இரதிகாந்தனை நோக்கி. “நாளைத்தினத்தில் மணமுடிப்பதற்கு நீயும் ஆயத்தமாயிரு, உனது காதலியை இவ்விடம் வரப்பண்ணுகிறே” னென்றனள். மறுநாள் கோகிலவல்லி சொந்த உடையணிந்துவந்து தந்தையாகிய குலசேகரனை வணங்கிநின்றனள். அவனும் மனமகிழ்ந்து அவள் கையைப் பற்றி இரதிகாந்தனது கையில் வைத்தனன். நான்கு மணச்சடங்குகளும் நிறைவேறி அனைவரும் இன்புற்றிருக்கும்போது வீரேந்திரன் ஒரு சந்நியாசியாரின் நற்போதனையினாற் றுறவுபூண்டு விட்டானெனவும், இராஜ்யம் குலசேகரனுக்;காயிற்று எனவும் ஒரு செய்தி வந்தது. அனைவரும் மகிழ்ச்சி யெய்தினர். ஜயதேவன்மாத்திரம் ஆரண்யத்தை விட்டகலும் விருப்பம் அற்றவனாயிருந்தான்.

(இவ்வளவோடு சரிதம் முடிகின்றது)

க0. கூதிர்காதையினது கதைச்சுருக்கம் வருமாறு:-

உஞ்சையம்பதியை யரசுபுரிந்துவந்த ஆகண்டல னென்னும் மன்னனும் போகவதிக்கு இறையாகிய பதுமநாப னென்னும் மன்னனும் சிறுவயது தொடக்கம் இணையில்லா நட்புப் பூண்டிருந்தனர். கேண்மையினால் உளங் கவர்வுற்று உஞ்சையம்பதிக்கு வந்த பதுமநாபன் தனது ராஜ்யத்தை மறந்து ஒன்பது மாதம் உஞ்சையிலே நின்றுவி;ட்டான். நாள் பல கழிந்ததென வுணர்ந்த பதுமநாபன் போகவதிக்குப் போக நினைக்க, ஆகண்டலன் முற்பட்டு இன்னும் ஒருவாரம் நின்று போகலாமே யென்றனன். பதுமநாபன் இயையவில்லை. பின்பு ஆகண்டலனுடைய மனைவி அயிராணி பரிந்து வேண்டப் பதுமநாபன் பின்னும் ஒருவாரம் நிற்பதற்கு இயைந்தனன். அயிராணி மகிழ்ந்து பதுமநாபனது கையைப்பற்றி அவனை உவவனத்துக்கு அழைத்துச் சென்றனள். இதனைக் கண்ட ஆகண்டலன் மனைவி மேல் ஐயப்பாடுற்றுப் பதுமநாபன் ஒன்பது மாதம் தரித்துநின்றது அயிராணிபொருட்டேயென்று தன்மனத்தினுள்ளே நினைத்தனன். சந்தேகம் என்னும் விஷசர்ப்பம் புகுந்தமையினாலே ஆகண்டலனுடைய உள்ளம் நிலைகலங்கிற்று. கமலவதன னென்னும் மந்திரியை யழைத்துப் போகவதிமன்னனைக்; கொன்று விடும்படியாக ஆகண்டலன் தெரிவித்தான். பலவாறாகப் புத்திகூறியும் மன்னன் கேளாமையினாற் கமலவதன னென்னும் மந்திரி பதுமநாபனை யடைந்து நடந்ததைக் கூறிப் போகவதிக்குப் புறப்படும்படிசெய்து தானும் உடன் சென்றனன். ஆகண்டலனுடைய உள்ளத்தி லெழுந்த சந்தேகம் உறுதியாக நிலைபெற்றுவிட்டது. அயிராணி அந்தப்புரத்திற் பாங்கியர் குழவிருந்து தனது இளமைந்தனாகிய ஜயந்தனை “வராய்மகனே! ஒரு கதைசொல்” என்றனள்.

ஜயந்தன்: சந்தோஷமானகதை சொல்லவா@ சோகமான கதை சொல்லவா?

அயிராணி: கூடியஅளவு சந்தோஷகரமாயிருக்கட்டும்.

ஜயந்தன்;: இப்பொழுது கூதிர்க்காலமானபடியால், சோகம் நிறைந்த கதைதான் சொல்ல வேண்டும்.

அயிராணி: நல்லது ஐய! இவ்விடத்தில் என்பக்கம் வந்திருந்து கதையைச் சொல்வாயாக.

(இத்தருணத்தில் அரசன் மந்திரி பிரதானியரோடு அந்தப்புரத்துக்குவந்து குற்றமற்ற அயிராணியைப் பலவாறாக நிந்தித்து அவள் பதுமநாபனோடு தொடர்புவைத்திருந்தாளென்றும், அவள் வயிற்றிலிருக்குஞ் சிசு பதுமநாபனுக்குரியதென்றும் கூறி அயிராணியைச் சிறையிலிடும்படி கட்டளையிட்டான்)

சிறைச்சாலையில் அயிராணி ஒரு பெண்மகவை யீன்றனள். அரம்பை யென்னுஞ் சேடி சிசுவை யெடுத்துக்கொண்டு சென்று ஆகண்டலன் முன்னிலையிற் கிடத்த, அவன் சீறி, “இச்சிசு பதுமநாபனுக்குரியது@ இதனைக் கொண்டுபோய் மக்கட்சஞ்சாரமில்லாவிடத்திலெறிந்து விட்டுவருவாயாக” என்று அந்தணன் என்னும் மந்திரிக்குக் கட்டளை யிட்டான்@ பின்பு தன் மனைவியை இராஜசபைக்கு அழைத்து நிறுத்தி அங்கிருந்த முதியோரை நோக்கி அவளுக்குத் தண்டனை விதிக்கும்படி கேட்டனன். அத்தருணத்தில், சாத்தன் கோயிலினின்று தெய்வமுரைத்த கட்டுரை யெழுதப்பட்ட ஒருபத்திரத்தை இருவர் சேவகர் கொண்டுவந்து அரசன் முன்னிலையில் வைத்தனர். அப்பத்திரத்தில் “அயிராணி கற்புநெறி தவறாதவள்@ பதுமநாபன் குற்றமற்றவன்@ கமலநாதன் உண்மையூழியன்@ ஆகண்டலன் கொடுங்கோலன்@ சிசு அவனுக்கே யுரியது@ இழந்துபோனது திரும்பிவராவிடின் ஆகண்டலனுக்குச் சந்ததியில்லை” யென எழுதப்பட்டிருந்தது. அரசன், சபை யோரைநோக்கி, “கட்டுரை பொய், எடுத்தகருமம் நிறைவேறட்டும்” என்றான். அத்தருணத்தில் ஒரு சேவகன் ஓடோடியும் வந்து இராஜகுமாரனாகிய ஜயந்தன் சடுதியிற் சுரங்கண்டு இறந்துவிட்டதாகத் தெரிவித்தான்@ இச் சொற் கேட்டவுடனே அயிராணி துன்பத்தினால் மூர்ச்சித்து விழுந்தனள். மன்னன் பதறி யழுது தன்மனைவி யிறந்து விட்டதாக நினைத்துத் துன்பத்தி லமிழ்ந்தி ஈமக்கிரியைகளை நடத்துமாறு சொல்லிவிட்டுத் தானுந் தன் கவலையுமாக இருந்துவிட்டான். அயிராணி சிறிது நேரத்தி லெழுந்து நடந்த காரியங்களை அறிந்து கொண்டு அரசன் முதலினோர் தான் இறந்து போய்விட்டதாகவே நினைக்குமாறு சூழ்ச்சி செய்துவிட்டுத் தன் னுயிர்ப்பாங்கியாகிய அரம்பை யொருத்தியன்றிப் பிறரறியாவண்ணம் ஒரு தனிமனையில் வசித்து வந்தனள். சிசுவைக்கொண்டு சென்ற அந்தண னென்னும் மந்திரி கப்பலேறிப் போய் போகவதிநாட்டைச் சேர்ந்து ஒரு காட்டுச் சார்பிலே சிசுவையும் அதன் வரலாறெழுதிய பத்திரத்தையும் ஒரு பொன்முடிப்பையும் வைத்துவிட்டுப் போகிறவழியில் அவனை ஒரு கரடி தாக்கிக் கொன்றுவிட்டது@ அவன் ஏறிவந்த கப்பலும் பாறையில் மோதுண்டு உடைந்துபோயிற்று. அந்தக் காட்டுச்சார்பில் ஆடு மேய்த்துக் கொண்டுநின்ற வெள்ளைநாகன் என்னும் மிடையன் இவற்றை யெல்லாம் தூரத்தில்நின்று கண்டு ஓடோடியும் போய்ச் சிசுவையும் பொன்முடியையும் பத்திரத்தையு மெடுத்துத் தன்மகன் நாகன்சேய் என்பவனையும் உடனழைத்துக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தனன். “அன்னை பரிபவமுற்றகாலத்தில் இம்மகவு பிறந்ததாதலின் இதற்குப் பரிபவை யென்று யெரிடுக” எனப் பத்திரத்தி லெழுதப்பட்டிருந்தபடி வெள்ளைநாகன் தான் கண்டெடுத்த குழந்தைக்குப் பெயரிட்டு வளர்த்து வந்தனன்.

(முகம், பிரதிமுகம், கருப்பமாகிய மூன்று சந்திகள் இவ்வளவோடு முடிகின்றன)

மேலே சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து பதினைந்து ஆண்டுகளாயின. பதுமநாபன் புதல்வனாகிய வசந்தனென்னு மரசிளங்குமாரன் வேட்டம்போய் விளையாடும்போது அவன் வளர்த்த இராஜாவளிப் பறவையொன்று வெள்ளைநாகன் வீட்டு முற்றத்திற்போ யிறங்கிற்று. பறவையைத் தேடிச்;சென்ற வசந்தன் பரிபவையைக் கண்டு பரவசப் பட்டு அன்றுமுதல் வெள்ளைநாகன் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்தான். ஒருநாள் கார்விழாக் கொண்டாட்டத்தினத்தில் வசந்தன் வெள்ளை நாகன்வீட்டுக்குப்போய் ஆங்குப் பரிபவையோடு காதன்மொழியுரைத்துச் சல்லாபித்துக் கொண்டிருக்கும் போது பதுமநாபனும் கமலநாதனும் வேற்றுருவோடு பின்சென்று இளவரசனுடைய களவொழுக்கத்தைக் கண்டு கொண்டார்கள். அரசனுடைய சீற்றத்துக் கஞ்சிச் செய்வதென்னவென்றறியாது வசந்தன் திகைப்பக் கமலநாதன் அவனை இரகசியமாக அழைத்து, “உன்காதலியையுங் கொண்டு உஞ்சை யம்பதிக்குச் செல்லுதி, இந்நிருபத்தை அந்நாட்டு அரசர்வசம் கொடுப்பாயாயின் அவர் உனக்கு ஆகவேண்டுவன செய்வ” ரென்றனன். அரசிளங்குமாரன் அட்டோலிக்கன் என்னுமொரு வழிப்போக்கனிடம் தானணிந்திருந்த ஆடையாபரணங்களைக் கொடுத்துவிட்டு அவனது ஆடையைவாங்கி யணிந்து கொண்டு பரிபவையையு மழைத்துக் கொண்டு கையிற் கொஞ்சப் பொருளோடு இரகசியமாகக் கப்பலேறிப் போய் உஞ்சைக்கனுப்பியது தான்; உஞ்சைக்குப் போவதற்கு ஒரு வசதியேற்படுத்திக் கொள்ளுவதற்காகவே யன்றிப் பிறதொன்றிற் கல்லவாதலால் விரைந்து அரசனுக்குக் கருமத்தைத் தெரிவித்து உஞ்சைக்குத் தானும் அரசனும் போவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்தனன். அரசிளங்குமாரனுடைய ஆடை முதலியவற்றை வைத்திருந்த அட்டோலிக்கனைக் காவலாளர் பிடித்துவந்து அரசன் சமுகத்தில் விட அவன் வெள்ளைநாகன் மேலும் நாகன்சேய் மேலுங் குற்றஞ்சுமத்தினான். அரசிளங்குமாரனைத் தேடிப்போதற்குப் புறப்பட்ட மன்னனும் கமலநாதனும் அட்டோலிக்கன். வெள்ளைநாகன். நாகன்சேய் ஆகிய மூவரும் தம்முயற்சிக்குப் பயன்படுவாரென வெண்ணி அன்னோரையுங் கப்பலிலேற்றிக்கொண்டு உஞ்சைக்கு வந்தனர்: ஆங்கு ஆகண்டலன் அரமனையிற் றன்மகனையும் பரிபவையையும் போகவதி மன்னன் கண்டனன். வெள்ளைநாகன் தம்மேற் குற்றஞ்சாராது தப்பிக் கொள்ளும் பொருட்டுப் பரிபவையுடன் கண்டெடுத்த பத்திரத்தைக் கொடுக்க அரசரிருவரும் அதனைப் படித்தவுடனே பரிபவையினுடைய வரலாற்றை யறிந்து உவகைக் கண்ணீர் சொரிந்து வசந்தனுக்கும் பரிபவைக்கும் மணமுடித்துவைக்கவும் இரண்டு ராஜ்யத்தையும் வசந்தனுக்கே யுரிமையாக்கவும் நிச்சயித்தனர். இன்பத்தினிடையே ஆகண்டலன் துன்புற்றுத் தனது மனைவியாகிய அயிராணியை நினைத்துப் புலம்பினான். அரம்பை யென்னுஞ் சேடி முற்பட்டு “ஐயா! என் வீட்டில் அயிராணியைப் போல ஒரு சிலை செய்வித்துவைத்திருக்கிறேன்@ வந்து பார்ப்பீர்களாக” என்று அனைவரையும் அழைத்துச் சென்றனள். ஆங்குஅரம்பை யொரு திரையை நீக்குதலும் பீடத்தின்மேலே தூய வெள்ளைவஸ்திரந் தரித்து நின்ற ஒர் உருவத்தைக் கண்டார்கள். ஆகண்டலன் தன் துன்மதியை நினைத்துஇரங்கி “ஓவியமே! உயிர்பெற்றுவாராயோ” என்ற அளவில் அயிராணி பீடத்தினின்று இறங்கிவந்து அரசனைத் தழுவிக் கொள்ளுகிறான். நடந்த வர்த்தமானங்களை யெல்லாம் அரம்பை யெடுத்துக் கூற அனைவரும்; அளவளாவியின்புற்றனர்.

(இவ்வளவோடு நாடகம் முடிகின்றது)

இதற்கடுத்த சரிதையினது கதைச்சுருக்கத்தையுந் தந்தபின்பு உவகைச் சுவையினியல்பை ஆராய்வாம்.

கக. கருதிய எய்திய காதலர்சரிதையை யாராயப்புகுவாம். இதற்கு ஆக்கியோரிட்ட பெயரினை மொழிபெயர்த்துக் கூறின் “பன்னிரண்டாம் இரவு” என்பதாகும். ஒரு விழாக்கொண்டாட்டத்தின் பன்னிரண்டாம் இரவிலே இது முதன்முத லரங்கேற்றப்பட்ட தாதலின் இப்பெயரினை யெய்திற்று. கதைச்சுருக்கம் வருமாறு:- மகத தேசத்திலிருந்து புறப்பட்ட ஒரு கப்பலில், சுதாகரனும் விமலையும் பிரயாணஞ் செய்தனர். இவரிருவரும் அன்னைவயிற்றில் ஒருங்கு தங்கியிருந்து பிறந்த இரட்டைப்பிள்ளைகள். மொழி, உருவம், உயரம் முதலியவற்றால் ஒருவரையொருவர் முற்றும் நிகர்த்தவர். கப்பல் ஈழநாட்டுக்கரைக்குச் சமீபமாகச் சேதப்பட்டுப் போயிற்று. ஒரு மாலுமியினது உதவியாற் கரைசேர்ந்த விமலை தன்னைக் காப்பாற்றிய மாலுமியை நோக்கி, “நண்பா! இஃதென்னநாடு” என்றனள்.

மாலுமி: அம்மணி! இது ஈழநாடு.

விமலை: என் னண்ணன் பொன்னாட்டுக்குப் போய்விட்டனர்@ எனக்கு ஈழநாட்டி லென்ன வேலை? ஒருவேளை நீரிலமிழ்ந்தாது தப்பியிருக்கவுங்கூடும்.

மாலுமி: அம்மணி! தாங்கள் தப்பியதே பேரதிர்ஷ்டம்.

விமலை: இந்நாட்டினை அரசுபுரிகின்ற மன்னன்பெய ரென்ன?

மாலுமி: மாசேனன்.

விமலை: அவர் பெயரை யென் தந்தை குறிப்பிடக் கேள்வியுற்றிருக்கிறேன்@ அவர் அக்காலத்தில் விவாகமாகாதவராக இருந்தார்.

மாலுமி: ஆம்,அவருக்கு இன்னும் விவாக மாகவில்லை. ஒருமாதத்துக்குமுன்பு இவ்விடமிருந்து நான் போனபொழுது இந்த வூரிலுள்ள பெரியார் புதல்வியாகிய கமலை யென்னுஞ் சீமாட்டிமீது மன்னன் காதலுற்றிருப்பதாக நகரத்து ஜனங்கள்; பேசிக் கொண்டார்கள்.

விமலை: இந்தப் பெருமாட்டி எப்படிப்பட்டவள்?

மாலுமி: மிக நல்லொழுக்கம் வாய்ந்தவள். இவளது தந்தை யிறந்து இன்னும் ஒரு ஆண்டு நிறையவில்லை@ இதற்கிடையிற் றமையனுமிறந்து போயினான். இந்நிகழ்ச்சிகளினால் மனமறுகித் துன்புற்று ஆடவர்முகத்தையே பார்ப்பதில்லை யென்னும் விரதத்தோடிருக்கின்றாள்.

விமலை: இந்தச் சீமாட்டியிடம் நான் வேலைக்கமருதல் கூடாதா?

மாலுமி: துன்பத்தினால் வருந்துகிற அந்தச் சீமாட்டி யாரையும் அடுப்பதில்லையென்று தெரிகிறது.

விமலை: நல்லது மாலுமி! நீ யெனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்@ யான் ஆண்பிள்ளைவேடத்தோடு போய் மாசேனமன்னனுடைய சேவகத்தி லமரக் கருதுகிறேன்@ என்னுடைய சகோதரனுடைய உடைகளைப்போன்ற உடைகள் சில நீ தயாரித்துக் கொண்டு வருதல் வேண்டும்.

விமலை ஆண்பிள்ளையுடைதரித்துக் கேசவன் எனப்பெயரிட்டுக் கொண்டு மன்னனுடைய சமஸ்தானத்துக்குப்போய் அவனிடத்தில் வேலைக்கு அமர்ந்தனள். மூன்று நாட்கள் கழிந்தபின்பு மன்னன் கேசவனை (விமலையை) யழைத்துக் “கேசவா! என இருதயத்திலுள்ள மர்மத்தையெல்லாம் உனக்குத் தெரிவித்திருக்கிறேன்@ நீ கமலை யென்னுஞ் சீமாட்டியினிடத்துப் போய் அவளுக்கு என் காதலைத் தெரிவித்து அவள் மனத்தை என்பாற் றிருப்பவேண்டும்” என்றனன் விமலை மன்னன் மீதான காதலுற்றிருந்தாளாதலினால் இச்சொற்கள் அவள் செவிக்கு நாராசமாயின. அங்ஙனமாயினும், எஜமானனுடைய சேவையை இயன்றவரை செய்துமுடித்தல் மரபென்றெண்ணிக் கமலை வீட்டுக்குப்போய் வாயில்காப்பாளன் உட்போகவிடாது தடுக்கத் ‘திரும்பிப்போகேன்@ இவ்வாயிலிலேயேயிருப்பே னென்று உன் சீமாட்டிக்குச் சொல்” லென்று சொல்லிவிட்டு அங்கே யிருந்தாள்@ கமலை அழைத் வரச்சொல்லுதலும் உட்புகுந்து பலவாறாக அவளோடு வார்த்தையாடி அவளது மனத்தினைக் கவர்ந்தனள். கமலை மாசேனனை மறந்து மாசேனனுப்பிய இளமையும் எழிலும் வாய்ந்த தூதன்மீது காதலுற்றனள். விமலை போயினபின்னர்க் கமலைதனது சேவகனாகிய கோலாகலனை யழைத்து, “இதோ, இந்தக் கணையாழி@ மன்னனிடமிருந்துவந்த தூதுவன் இதனை யிங்கு வைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும்@ இதனை யெடுத்துச்சென்று உரியவரிடஞ் சேர்த்துவிடு” என்றனள். கோலாகலன் கொண்டுசென்று கொடுக்க, விமலை தான் கணையாழியை வைத்துவிட்டதில்லையென்றனள்@ “அம்மாள் உன்னிடந்தான் கொடுக்கும்படி சொன்னாள்” என்று கூறிக் கணையாழியை யெறிந்துவிட்டுக் கோலகலன் போய்விட்டான். விமலை கணையாழியைக் கையிலெடுத்து அதனை யனுப்பிய கமலயினது குறிப்பை யுணர்ந்து, “ஐயோ! பாவம்! இந்தச் சீமாட்டி எனது ஆண்பிள்ளை வேடத்தைக் கண்டு மயங்கி யென்னைக் காதலிக்கிறாள்@ எனது எஜமானனாகிய மன்னன் அவளைக் காதலிக்கிறான்@ நானோ மன்னனைக் காதலிக்கிறேன். இக்காதலெல்லாம் எவ்வாறு முடியுமோ அறியே” னென்று தன்னுள்ளே யெண்ணிக்கொண்டு வீதிவழியே போயினள்.

விமலையை மாசேனன் மற்றொருமுறை கமலைவீட்டுக்குப் போகும் படி யனுப்பினான். உவந்து வரவேற்ற கமலை தன்னுள்ளத்தைத் திறந்து “கேசவ! நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று வெளிப்படையாகக் கூறினள். விமலை செய்வ தென்னவென் றறியாது விரைந்து விடைபெற்றுக்கொண்டு மாசேனனுடைய மாளிகையை நோக்கி நடந்தனள். கமலைமீது விருப்பம்வைத்திருந்த சுந்தரராயன் என்னும்பிரபு விமலையை ஆடவனென்றும் கமலையினுள்ளத்தைக் கவர்ந்தவனென்றும் எண்ணி வாளை யுருவிக்கொண்டு சண்டைக்குப் போயினான். விமலை அஞ்சிப் பின்வாங்க அந்நியனொருவன் இடைவந்து சுந்தரராயனைப் பொரப் போகின்றதருணத்தில் மன்னனுடைய காவலாளர் வந்து “நீ ஆதவனெனப் பெயரிய கப்பற்றலைவனல்லையோ? மன்னர்பெயரால் உன்னைக் கைதியாக்கியிருக்கிறோம்@ எங்கள் பின்னே வா” என்று அவனது கையைப்பற்றி யிழுத்தனர். ஆதவன் விமலையை நோக்கி, “சுதாகரா! உன்னால் எனக்கு இந்த இடர்வந்தது@ நான்தந்த பணப்பையை என்கையிற் றா” என்றனன். விமலை நடந்த செய்தியை ஊகித்துநோக்கி, இந்தக் கப்பற்றலைவன் தனது தமையனாகிய சுதாகரனுக்கு நண்பனாயிருக்க வேண்டுமென்றும், உருவபேத மில்லாதிருத்தலனாலே விமலையாகிய தன்னைச் சுதாகரனென நினைத்துக் கொண்டானெனவும் அறிந்தனள். நடந்த உண்மையு மதுவேயாகும். விமலை போயினபின் அவ்வழியே சுதாகரன் வந்தான். சுந்தரராயன் வந்து, “அப்போது பிறனுடைய உதவியினாற் றப்பிப்போயினாயல்லவா@ இந்தாபிடி” யென்று தடியினா லோங்கி யடித்தான். சுதாகரன் அந்த அடியைத் தட்டிவிட்டுச் சுந்தரராயனுக்கு உறைப்பாக நான்கு ஐந்து அடி கொடுத்தான். சுந்தரராயன் திகைத்துநிற்க வீட்டினுள் ளிருந்த கமலை விரைந்துவந்து “சண்டை வேண்டாம், இங்கேவாரும்” என்றழைத்துச் சென்று அருகிருத்திக் காதன்மொழிகளைக் கூறினாள். சுதாகரனுக்கு ஒன்றும் புலப்படவில்லை.

(கமலை சுதாகரனை மன்னனது தூதனாகிய கேசவன் என் றெண்ணினாள் என்பதை நாம் சொல்லவேண்டியதில்லை)

கமலை சுதாகரனைநோக்கி, “என்னை மணந்து கொள்ளுகிறீரா” என்ன, அவனும் அதற் குடம்பட்டான். அவளும் தருணம் வாய்த்ததென வெண்ணி அருகிலிருந்த புரோகிதரை யழைப்பித்து விரைவில் மணவினையை நிறைவேற்றுவித்தனள். அது முடிந்ததும் சுதாகரன் புறத்தே போய்த் தனது நண்பனைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லி விட்டுப் போய்விட்டான். சிறிதுநேரத்துக்குள்;;; மாசேனமன்னனும் (விமலையாகிய) கேசவனும் பரிசனரும் கமலையினுடையமனைக்கு வந்தனர். மாசேனன் தன் காதலை யுரைத்துநிற்கக் கமலை விமலையைச் சுட்டிக்காட்டி “அதோ என்கணவன்” என்றனள். மன்னன் வெகுண்டு நோக்க, விமலை, “நான் ஒன்று மறியேன்” என்றனள். இத்தருணத்தில் சுதாகரன் வந்தனன். கேசவனாக நின்ற விமலையையும் சுதாகரனையும் ஒருங்குபார்த்தவர்கள் பிரமித்து “ஒரேமுகம், ஒரேமொழி, ஒரேஉரு, இது என்ன அதிசயம்” என்றனர். விமலை வர்த்தமான மனைத்தினையுங் கூறிக் கேசவனாகிய ஆண்பிள்ளைவேடத்துக்குரிய உடைகளை நீக்கிவிட்டுச் சொந்தஉடை தரித்துக் கொண்டுவந்து நின்றனள். மாசேனன் அவளது கையைப்பற்றி “எனது கேசவா! நீ யென்னை நேசித்ததாகப் பலமுறை கூறியதுண்டு. இன்றுமுத லெனது பட்டத்தரசியாயிரு” என்றனன். அனைவரும் இன்புற்று வாழ்ந்தனர். யாமினி யென்னுஞ் சேடிப்பெண்ணும், கமலையினுடைய நல்லம்மானாகிய தாண்டவராயனும், மானவனென்னும் விதூஷகனும் ஒருங்கு சேர்ந்து கோலாகலன் என்னும் சேவகனைப் பரிகசிப்பதனைக் கூறும் ஒரு கிளைக்கதை இந்நாடகத்தினுள் வருகின்றது@ இக் கிளைக்கதை நகைச்சுவை நிறைந்தது.

உவகைச்சுவையானது செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்னும் நான்கும்பற்றி யெழுவது, “செல்வம் என்பது நுகர்ச்சி, புலனென்பது கல்விப்பயனாக அறிவுடைமை, புணர்வு காதலிருவர் கருத்தொத்தல், விளையாட்டு யாறுங் குளனுங் காவு மாடிப் பதியிகந்து வருதல்” என உறுப்பியலுட் கூறினாம். இரதிகாந்தன் கோகிலவல்லி, நீலாம்பரன் கேகயவல்லி, சீதரன் பாவை, சல்லாபன் ஆதிரை, வசந்தன் பரிபவை, மாசேனன் விமலை, சுதாகரன் கமலை யென்னும் ஏழிரண்டு காதலரிடத்தே “காதலிருவர் கருத்தொத்த” உவகைச் சுவைதோன்றிற்று. கோகிலவல்லி விமலையாகிய இருவரிடத்தும் அறிவுடைமைபற்றிய உவகைச்சுவை தோன்றிற்று. இரதிகாந்தன் கோகிலவல்லியிடத்து விளையாட்டுப்பற்றிய உவகைச்சுவை தோன்றிற்று.

கஉ. பெருமிதச்சுவையையாவது உவகைச்சுவையையாவது செவ்விதிற் றெரிவித்து ஏனைய சுவைகளையுந் தழுவிநடப்பது நாடக லºணமென வடமொழி தமிழ்மொழிப் பெரியோர் கூறுபவாகலின் நாம் மேலேகாட்டியசரிதைகளுள் இரம்மியன் சுசீலைசரிதை, பெரம் புயற்சரிதை, வணிகதேயவர்த்தகன் சரிதை, யூலியசீசர்சரிதை யென்னும் ஏழுமே நாடகமாவன. ஒழிந்த ஐந்தினையும் பிரகரணம், நாடிகையென்னும் வகைகளுள்ளடக்கிக் கொள்க. இவ்வேழனுள்ளும் சுசீலை, மாலதி:, விஜளை@ பதுமை, கல்பூர்ணியா. கோகிலவல்லி, அயிராணி, பரிபவை, விமலை, கமலை யாகிய தலைவியர் பதின்மரை யெடுத்துக்காட்டினாம். வடமொழி நூலார் தலைவியரை வகுத்துக் கொண்ட எண்வகை வகுப்பினுள்ளே குறியிடத்துத் தலைவன் முற்படாதொழிய மனமலைந்தநிலையிற் சுசீலை விப்பிரலப்தையாவாள்@ நாயகர் அண்மையிலிருந்து குற்றவல்புரிய உவகையுற்றிருந்தோராகிய மாலதியும் பரிபவையும் சுவாதீனாபர்த்ருகை யாவார்@ கணவன் னெனக் கூறி வெகுளிக்குறிகாட்டியநிலையில் விஜயை கண்டிதையாவாள்@ அணிகல னணிந்து புட்கலனதுவரவுகாத்திருந்த பதுமை வாசகசஜ்ஜையாவாள்@ தலைவன் பிரிவாற்றாது துன்புற்ற கல்பூர்ணியா வீரஹோற்கண்டிதையாவாள்@ கேசவனிடத்து வெகுளிக் குறிகாட்டி அவன் பிரிந்தபின்பு துன்புற்றிரங்கியநிலையிற் கமலை கலகாந்தரிதையாவாள்@ குறி;யிடத்துத் தலவனை நாடிச் சென்ற கோகிலவல்லி அபிசாரிகையாவாள்@ தலைவனை நாடிச் சென்ற கோகிலவல்லி அபிசாரிகையாவாள்@ தலைவனை நெடுநாட் பிரிந்திருந்தநிலையில் அயிராணி பிரோசிதப்பிரியை யாவாள்@ மாசேனன்பாற் காதற்குறி காட்டியநிலையில் விமலையும் அபிசாரிகையாவாள். என்வகைத் தலைவியரி னிலக்கணங்களை ஒழிபியல் இரண்டாம்பரிவினுட் காண்க. மேலே காட்டிய பதின்மரும் சுகுணையும் சாந்தையு மாவர். மகபதிப்பிரியை, மாணிக்கமாலை, தமோரா வாகிய மூவரும் காமினியும் அரக்கியுமாவர். தலைமக்களை வடமொழி நூலார் நால்வகைப்படுத்துக் கூறுவர். வசந்தனும் பிரயதத்தனும் தீரலலிதர்@ மாசேனனும் அநந்தனும் தீரசாந்தர்@ இரம்மியனும் இரதிகாந்தனும் தீரோதாத்தர்@ மகபதியும் சாபலனும் தீரோத்ததர்@ தலைமக்க ளிலக்கணத்தை ஒழிபியலிரண்டாம் பிரிவினுட் காண்க. செகசிற்பியாரியற்றிய நாற்பத்தைந்து தனிநூல்களுட் சிறப்புடைய பன்னிரண்டினைத் தெரிந்து அவற்றது வனப்பையும் அமைப்பையும் தொகுத்தும் விரித்தும் இயன்றவரை விளக்கினாம். தமிழறிஞரியற்றிய செகசிற்பியார் நாடகமொழி பெயர்ப்புக்களுஞ் சிலவுள@ அவற்றையு மாராய்தல் நன்றெனக் கூறியிவ் எடுத்துக்காட்டியலை முடிக்கின்றோம்.

ஒழிபியல்

க. முஞ்சராஜனது ஸமஸ்தானவித்துவானாக விளங்கிய தனஞ்சயன் என்னும் வடமொழிப்புலவர் பண்டையோர் செய்தளித்த பரதநூல், நாட்டியசாஸ்திரம் என்னும் இவற்றிற் பொதிந்துகிடந்த அரிய இலக்கணங்களையெல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் சுருக்கமும் தெளிவும்பொருந்திய தசரூபம் என்னும் நாடகலக்கணநூலைச் செய்தனர். இந்நூற்பெயர் தசரூபகமெனவும் வழங்கப்படும். இது நான்கு அதிகாரங்களால் நடந்து விலக்குறுப்புப் பதினான்கனுள் யாப்பிய லிசையியற்பாலவாகிய சொல்வகை, வண்ணம், வரி யெனும் மூன்று மொழித்து ஒழிந்த பதினென்றினையும் தெளிவுற விளக்குவது. இந்நூன்முடிபுகளைத் தொகுத்து இவ்வியலின் முதன்னான்குபிரிவுகளாகக் கூறி யப்பாற் செல்வாம். வடமொழிக்குறியீடுகளின் சுத்தவுருவத்தை யறியவேண்டியவிடத்து மொழிபெயர்ப்பினோடு முதனூற்சூத்திரங்களையுந் தருவாம்@ நூற்பொருளுக்குப் புறம்பாய குறிப்புக்களை இரு தலைப்பகரத்தினுட்டருவாம்.

முதலதிகாரம் பொருள். சந்தி, சொல் லென்னும் மூன்றுறுப்புணர்த்துதனுதலிற்று. முதலாறு சூத்திரங்களும் தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும் கூறுதலால் தற்சிறப்புப்பாயிர மாவன. ஏழு முதற் பதினொன்றுவரையு முள்ள சூத்திரங்கள் நாட்டியத்தின் பொதுவியல் புணர்த்துவன. பன்னிரண்டுமுதல் இருபதுவரையுமுள்ள சூத்திரங்கள் பொருளுறுப்பு உணர்த்துவன. இருபத்தொன்றுமுதல் ஐம்பத்தாறுவரையு முள்ள சூத்திரங்கள் சொல்லுறுப்புணர்த்துவன.

1 - 6 தெய்வவணக்கமும் செயப்படுபொருளும்.

7 நடிப்பினால் நிகழ்ச்சிகளை உணர்த்துவது நாட்டியம்@ இது காணப்படுவதாதலின் உருவம் (ரூபம்) எனவும், நடிப்போர் பிறருருக் கொள்வராதலினால் உருக்கோடல் (ரூபகம்) எனவும் பட்டுச் சுவையை (ரசத்தை) ஆதாரமாகக் கொண்டு பத்துவகையாக நடக்கும்.

8 நாட்டியவகை பத்தாவன:-

நாடக0’வ-காண¿hணˆவ-ஹ“நˆ¿ல¿ˆ

வலாயொ³“¿வகாரௌவீயலn“ஹ¿-„hஉதி

நாடகம், பிரகரணம், பாணம். பிரகசனம், இடிமம், வியாயோகம், சமவகாரம், வீதி, அங்கம், ஈகாமிருகம் என்பனவாம்.

9 உள்ளக்குறிப்பை (பாவத்தை) ஆதாரமாகக் கொண்ட அவிநயக்கூத்தும் (நிர்த்யமும்) தாளலயத்தை ஆதாரமாகக் கொண்ட சுத்தநிருத்தமும் (நிர்த்தமும்) நாட்டியத்தின் வேறாவன@ முன்னையது மார்க்கமெனப்படும்@ பின்னையது தேசி எனப்படும்.

10. இவை இலாசியம் (மென்னீர்மையதாகிய கூத்து@ அகமார்க்கம்), தாண்டவம் (வன்னீர்மையதாகிய கூத்து@ புறமார்க்கம்), என இருவகைப்பட்டு நாடகமுதலிய பத்தையும் சார்ந்துநிற்பன.

(பதினோராடலுள் வீழ்ந்தாடலாகிய ஐந்திணையும் இலாசியமெனவும், நின்றாடலாகிய ஆறினையும் தாண்டவ மெனவும் கொள்ளலாகும். “துடிகடையம் பேடு மரக்காலே பாவை, வடிவுடன் வீழ்ந்தாடலைந்து” “அல்லியங் கொட்டி குடைகுடம்; பாண்டரங்க, மல்லுடனின்றாடலாறு”)

11. பொருள் (வஸ்து), தலைவன் (நேதா), சுவை (ரசம்) என்னும் மூன்றும்பற்றி நாட்டியக்கட்டுரையை வகுத்துக் கொள்ளலாகும்.

11 - 13 பொருளின் உட்பிரிவுகள் இரண்டு. தலைமக (அதிகாரி) னோடு நேராகத் தொடர்புற்ற நிகழ்ச்சிகளை யடக்கியது தலைமைப் பொருள் (அதிகாரிகம) தலைமகனுக்குப் பயனைத் தருவனவாகிய பிறரது நிகழ்ச்சிகளை யடக்கியது சார்புப்பொருள் (பிராசங்கிகம்)@ இது தொடர்ந்து நீண்டுவருமாயின், கிளைக்கதை (பதாதை)யெனப் படும்@ குறுகியதெனின் வழிநிகழ்ச்சி (பிரகரீ) யெனப்படும்.

14. (பதாகைநிலையின் இலக்கணம்)

15 பொருளைப் பழங்கதை (பிரக்கியாதம்), புலவனாற் கற்பிக்கப்பட்டகதை (உற்பத்தி), மேலையிருவகையினதுகலப்பு (மிச்சிரம்) என மூவகையாகவும் வகுக்கலாம்.

16. அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூன்றினுள் ஒன்றோ பலவோ, நாடகத்தின் பொருண்முடிபாக (காரியமாக) வருதல் வேண்டும்;. சிறிதாகத் தோன்றிப் பலபட விரிவெய்தி நடக்கும் நாடகக்கருத்து விதை (பீஜம்) எனப்படும். நாடகக்கருத்துக்குச் சார்பாக நின்ற பொருள் (அவாந்தரார்த்தம்) இடையிற் கண்டப்படின், அதனை யெடுத்துக் கூட்டுவதற்கு உபயோகமாகநின்ற காரணம் (அச்சேதகாரணம்) விரிநிலை (விந்து) எனப்படும்.

17. விதை (பீஜம்), விரிநிலை (விந்து), கிளைக்கதை (பதாகை), வழி நிகழ்ச்சி (பிரகரீ), பொருண்முடிபு (காரியம்) என்னும் ஐந்தும் பொருண் மூலம் (அர்த்தப்பிரகிருதி) எனப்படுவன.

18 - 20 பயனைப் பெறுவதற்குவிரும்பித் தொடங்கும் தொடக்கம் (ஆரம்பம்), அதற்காக முயலுகின்ற முயற்சி (பிரயத்தனம்), பயனை யெதிர்பார்க்கின்ற பயன்விழைவு (பிராப்தியாசை), பயன்பெறுவேனென்னும் உளப்பாடு (நியதாப்தி), பயன்முழுதும் பெற்றபேறு (பலயோகம்) ஆகிய ஐந்தும் நாட்டிய நிகழ்ச்சி (அவஸ்தை) எனப்படுவன.

21. பொருண்மூலம் ஐந்தும் நாட்டியநிகழ்ச்சி ஐந்தும் சார்பாக எழுவன ஐவகைச்சந்திகள்.

22. ஒரேநிகழ்ச்சித் தொடர்புபற்றி ஒரு பொருளினோடு மற்றொரு பொருளை யிணைத்து நிற்பது சந்தி.

ஐவகைச்சந்திகளாவன:- மூளை (முகம்), நாற்று (பிரதிமுகம்), கருப்பம், விளைவு (அவமர்சம்), துய்த்தல் (உபசங்கிருதி ஸ்ரீ நிர்வாஹணம்) என்பன.

23. (ஆரம்பம்) தொடக்கத்தோடும் (பீஜம்) விதையினோடும் தொடர்புடைய முகமானது பலவகைப்பொருளுக்குஞ் சுவைக்கும் முதலாகிநிற்றலாலும், பீஜத்தினின்று தோற்றினமையாலும் முளை போல்வது.

24 - 27. விதையினைவிதைத்தல் உபNºபம்@ அதன் அகற்சி (பரிகரம்) பரிக்கிரியை@ அதன் நிலைபேறு பரிந்யாசம்@ நற்குணங்களை யெடுத்தியம்பியுள்ளத்தைக்கவர்தல் விலோபனம்@ இது செய்வாமென நிச்சயித்தல் யுக்தி@ சுகத்தினையடைதல் பிராப்தி@ நாடகக்கருத்தாகிய விதை நிலைபெற்றுத் தோற்றுதல் சமாதானம்@ இன்பமும் துன்பமும் காரியப்படுதல் விதானம்@ வியப்புற்றுநோக்குதல் பரிபாவனை@ மறைந்தன வெளிப்படல் உற்பேதம்@ கருதியபொருளின் தொடக்கம் கரணம்@ மேல் நோக்கமும் இயக்கம் வேதை. இவை பன்னிரண்டும் முதற் சந்தியாகிய முகத்தின் உட்பிரிவுகளாம். (தமிழ்மரபுபற்றி இவற்றினைத் துறையென்னலாம். இவற்றுள் உபNºபம், பரி;க்கிரியை, பரிந்யாசம். யுக்தி, உற்பேதம், கரணம் என்னும் ஆறும் இன்றியமையாதன)

28. (பிரயத்தனம்) முயற்சியோடும், (விந்து) வரிநிலையோடும் தொடர்புடைய பிரதிமுகமானது தோற்றமும் மறைவும் (லºpயா லºpயம்) உளதாதலின் நாற்றுப்போல்வது. (இலை முதலியன தோற்றம். அரும்பு. மலர், காய் முதலியன மறைவு)

29 - 32 இன்பப்பொருளை விழைதல் விலாசம். கண்டுபின் பிழந்த பொருளைக் காதலித்துத் தேடுதல் பரிசர்ப்பம்@ பிரிவுகாரணமாக இன்ப நுகர்ச்சியெய்தப் பெறாதிருத்தல் விதூதம்@ பிரிவினால்வந்த ஆற்றாமை யையொருவாறு ஆற்றிக் கொள்ளுதல் சமம்@ நகைக்கூற்று நருமம்@ நகைக் கூற்றினாலின்புறுதல் நரும்தியுதி@ மறுமொழிபெறுதல் பிரகமனம்@ நன்மைபயத்தற் கேதுவாகிய இடையீடு நிரோதம்@ நயமொழி பரியுபாசனம்@ நன்னயக்குறிப்பு புஷ்பம்@ சூழ்ச்சியுணர்த்துதல் உபந்நியாசம்@ கடுஞ்சொற்கூறுதல் வச்சிரம்@ நால்வகை வருணத்தாரும் ஓரிடத்தில் ஒருங்குகூடுதல் வரணசம்மாரம். இவை பதின்மூன்றும் இரண்டாஞ் சந்தியாகிய பிரதிமுகத்தின் உட்பிரிவுகளாம். (இவற்றுள் பரிசர்ப்பம், பிரகமனம், புஷ்பம், வச்சிரம், உபந்நியாசம் என்னும் ஆறும் இன்றியமையாச்சிறப்பின)

33. கருப்பத்தினுட் பயன்விழைவு (பிராப்தியாசை) வரிள். கிளைக் கதை (பதாகை) வருதல் வேண்டும்.

34 - 38 வஞ்சித்து மொழிதல் அபூதாகரணம்@ உண்மைக்கருத்தினைக் குறிப்பிடல் மார்க்கம்@ தன்கருத்தையுரைத்தல் ரூபகம்@ வரம்பு கடந்து பெருக்கிக் கூறுதல் உதாகிருதி@ நீடுநினைந்த பொருளினைப் பெறுதல் கிரமம்@ (கிரமம் பிறரது உள்ளக்கருத்தினை உணர்தல் என்பார் ஒரு சாரார்)@ கையுறைகொடுத்து நட்புப்பெறுதல் சங்கிரகம்@ குறிப்பாலுணர்தல் அநுமானம்@ வஞ்சனையால் வெல்லுதல் அதிபலம்@ வெகுண்டுரைகூறல் தோடகம்@ பகைவனைக்கண்டஞ்சுதல் உத்வேகம்@ பயந்து நடுங்குதல் சப்பிரமை@ விதை கருப்பமாகி முடிகின்றநிறைவு ஆNºபம். இவை பன்னிரண்டும் கருப்பத்தின் உட்பிரிவுகள். இவற்றுள் அபூதாகரணம். மார்க்கம், தோடகம், அதிபலம், ஆNºபம் என்னும் ஆறும் இன்றியமையாச்சிறப்பின.

39. கோபத்தினாலோ, விசனத்தினாலோ, பிற உள்ள நெகிழ்ச்சியினாலோ அலைவுற்றானொருவன் மனத்தை நிலைப்படுத்தி உண்ணோக்குகின்ற தன்மையைக் காட்டுவது நான்காஞ்சந்தியாகிய விளைவு (அவமர்சம்)

40 - 43 பிறர்குற்றம் இயம்பல் அபவாதம்@ அபிமானத்தாற் கோபித்துரைத்தல் சமபேடம்@ கொல்லுதல்; கட்டுதல் செய்தல் வித்திரவம்@ பெரியோரை மதியாது நடத்தல் திரவம்@ விரோதத்தைச் சமப்படுத்துதல் சக்தி@ பிறருள்ளத்துக்குத் துன்பமுண்டாக்கும் வெஞ்சொற்கூறல் தியுதி@ பெரியோரைப் போற்றுதல் பிரசங்கம்@ எள்ளல் சலனம்@ தனது வல்லமையைக் குறிப்பிட்டுரைத்தல் வியவசாயம்@ கோபத்தினாற் றன்னிலையிழந்தோன் தனதுவல்லமையை யெடுத்துக்கூறுதல் விரோதனம்@ நன்மைப்பேறு வருமென்னுந் துணிவினால் மேல் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை நோக்குதல் பிரரோசனை@ தற்புகழ்தல் விசலனம்@ கருமத்தை மீட்டுந் தொடங்குதல் ஆதானம்@ இவை பதின்மூன்றும் நான்காஞ்சந்தியாகிய விளைவின் உட்பிரிவுகள். (இவற்றுள் அபவாதம், சக்தி, வியவசாயம், பிரரோசனம், ஆதானம் என்னும் ஐந்தும் இன்றியமையாச் சிறப்பின)

44. பீஜத்தினின்றுந் தோற்றி வரிவுற்று முகமுதலிய நான்கு சந்திகளினும் பரந்துநின்ற பொருள் முற்றுப் பெறுகின்ற ஐந்தாஞ் சந்தி நிர்வாஹணம் (உபசங்கிருதி@ துய்த்;;;தல்) எனப்படும்.

45 - 48. பீஜம் மீட்டுந் தோற்றுதல் சந்தி: கரும (கார்ய) முடிப்பைத் தேடுதல் விபோதம்@ கருதிய பொருளைப் பெற்றுவிட்டது போலுரைத்தல் கிரதனம்@ அநுபவத்தையுரைத்தல் நிர்ணயம்@ கலந்துரையாடல் பரிபாஷணம்@ நன்முகங்காட்டல் பிரசாதம்@ விழைபொருள் பெற்றுமகிழ்வுறுதல் ஆநந்தம்@ துன்பத்தினின்று விடுபடுதல் சமயம்@ நன்மைப்பேற்றில் நிலைபெறுதல் கிருதி@ கருதியது பெற்று அடைந்த மகிழ்ச்சியை எடுத்துக்கூறல் பாஷணம்@ கருமமுடிபை எதிர்நோக்குதல் பூர்வபாவம்@ காத்திராப்பிரகாரமாக வந்தடைந்த நிகழ்ச்சியினால் வியப்புறுதல் உபகூகனம்@ வரம்பெறுதல் காவ்யசம்மாரம்@ ஆசிமொழிபிரசஷ்டி.

49 அறுபத்துநான்கு சந்தியுட்பிரிவுகள் (துறை) கூறினாம். அவற்றின் உபயோகம் அறுவகைப்படும். அவையாவன: எடுத்துக் கொண்ட பொருளை நிரைப்படுத்துதல், மறைக்கவேண்டியவற்றை மறைத்தல், வெளிப்படுத்தவேண்டியவற்றை வெளிப்படுத்தல், விழைவு (ராகம) உண்டாக்கல்@ வியப்பு (ஆச்சர்யம்) உண்டாக்கல்@ கதை நிகழ்ச்சியை (விருத்தாந்தத்தை)க் கேட்பதற்கு ஆவலுண்டாகும்படி செய்தல் என்பனவாம்.

50 -51 சுவைகுறைவுபட்டனவும் சிற்ப்பில்லாதனவுமாகிய பொருண்முடிபுகளைச் சொல்லினால் மாத்திரம் உணர்த்தினாற் போதும், சுவைநிறைந்து சிறந்த பாகங்களைக் காட்சியினாலும் உணர்த்த வேண்டும்.

52. சொல்லினால் மாத்திரம் உணர்த்தும் பாகங்களை விஷ்கம்பம், சூலிகை, அங்காசியம், அங்காவதாரம், பிரவேசிகம், என்னும் ஐந்து இடைப்படுகாட்சி (அர்த்தோபNºபகம்) களாலும் காட்டலாம்.

53. நடுத்தரமான நாடகபாத்திரர் தோற்றிச் சரிதையின் சில பாகங்களைச் சுருக்கிக்கூறுவதும். நடந்தேறியவற்றையோ, நடக்கப் போவனவற்றையோ தெரிவிப்பதும் விஷ்கம்பம் எனப்படும். ஒரே வகுப்பான ஒருவரோ பலரோ நாடகபாத்திரராயின் அது சுத்தம் எனப்படும்@ நடுத்தரமானவர்களும் கடைப்பட்டவர்களும் உடன் தோற்றுவது சங்கீரண விஷ்கம்பமாகும்.

54. இரண்டு அங்கங்களுக்கிடையே விடுபட்ட விஷயங்களைக் கீழ்த் தரமான பாத்திரர் தோற்றி விளக்குவது பிரவேசிகம் எனப்படும்@ இது விஷ்கம்பத்தை நிகர்த்தது.

55. எழினி (திரை) யின்பின்னிற்போர் சிலவிஷயங்களை விளங்கக் கூறுவது சூலிகை யெனப்படும்@ ஒரு அங்கத்தின் முடிபில் நாடக பாத்திரர் வரப்போகிற அங்கத்தின் பொருளைக் குறிப்பாகக் கூறுதல் அங்காசியம் எனப்படும்.

56. ஒரு அங்கத்தில் வந்த நாடகபாத்திரரோ பிரிவின்றி அடுத்து வரும் அங்கத்திலும் நடிக்க இவ்விரு அங்கங்களுக்கு மிடையே சொல்லாலுணர்த்த வேண்டியவற்றைச் சொல்லுதல் அங்காவதாரம் எனப்படும்.

57 - 60 யாருக்குங்கேட்கவுரைப்பது பிரகாசம்@ புறத்தேயுரைப்பது சுவாகதம்@ மூன்று விரலைக்காட்டிப் பிறரைக் காதுகொடாவண்ணம் அகற்றிவிட்டு இருவர் கலந்துரையாடுவது ஜநாந்திகம்@ ஒருவரை நோக்கித் திரும்பி இரகசியமொழி கூறுவது அபவாரிதம்@ ஏதோ செவியிற் பட்டதாகக் குறிப்பிட்டு ஆகாயத்தைநோக்கி வார்த்தையாடுவது ஆகாயபாஷிதம்.

61. இத்யாதி இலக்கணங்களையும் மேல்வருவனவற்றையும் இராமாயணம் பிருகத்கதை முதலிய நூல்களையும் ஆராய்ந்து தக்க தலைவனையும் சுவையையும் தேர்த்தெடுத்துப் பொருத்தமான இனிய மொழிகளாற் சரிதையை யமைத்துக் கொள்ள வேண்டும்.

உ. இரண்டாமதிகாரம் யோனி விருத்தி யென்னும் இரண்டுறுப்புணர்த்துதனுதலிற்று. முதல் நாற்பத்துமூன்று சூத்திரங்களும் தலைவர், தலைவியர், முதல், கடை இடையென மூவகைப்பட்ட நாடக பாத்திரரென் றின்னோரது இலக்கணங்கூறியவாதலின் யோனியுறுப்பின் பால் ஒழிந்த சூத்திரங்கள் விருத்தியிலக்கணமும், விருத்தியோடு தொடர்புற்றுநின்ற வழக்கு மொழியிலக்கணமுங் கூறுவன.

1 - 5 தலைவர் நால்வகையர்@ பெருமையும் உரனும் நால்வகையோருக்கு முரிய. ஆடல் பாடலி லீடுபட்டு இன்புற்றிருக்கும் மென்னீர்மையான் உவகைமேவிய தலைவன் (தீரலலிதன்), பொறையும் அடக்கமும் நற்குணமனைத்தும் பொருந்திய இருபிறப்பாளன் அறிவு மேவிய தலைவன் (தீரசாந்தன்) (அந்தண்மைபொருந்திய பிறரும் இவ்வகையினர். ந. 35 - 38ஐ நோக்குக) மேன்மையும் பொறையும் கருதியது முடிக்கும் ஆற்றலுடையோன் மேன்மைமேவிய தலைவன் (தீரோதாத்தன்), வெகுளியும் பொறாமையும் மேவித் தற்புகழ்ந்து மந்திர தந்திரங்களில் வல்லவனா யகங்காரம் மேற்கொண்டிருப்போன் தறுகண்மேவிய தலைவன் (தீரோத்ததன்)

6. பிறளிடத்து உள்ளஞ்சேன்றும் தன்மனையாள்பால் அன்பு பாராட்டுவோன் தºpணன்@ தனது பொருத்தாவொழுக்கத்தை மறைப்போன் சடன்@ நாணி;ன்றி உடலிலுள்ள விகாரத்தைகாட்டுவோன் திருஷ்டன். இவர் மூவரும், தன்மனைவியையன்றிப் பிறரை நினையாத அநுகூலனுமென இன்பவொழுக்கத்தில் நால்வர் தலைவருளர்.

7. தலைவனுக்கு நண்;பனாய்க் கிளைக்கதையினுட்டோற்றும் உப தலவன் பீடமர்த்தன் எனப்படுவான்.

8. விடனும் விதூஷகனும் தலைவனுக்கு நண்பர்@ தலைவனது பகைவன் தீரோத்ததகுணமுடையோன்.

9 - 13 வறியோர்க்;கிரங்கலும் வீரமும் தீரமும் சோபை@ கண்ணோட்டமும் இனிய புன்னகையும் விலாசம்@ அசைவுபுறந்தோற்றா இனியநிலை மாதுரியம்@ கடைப்பிடியும் வலிமையும் மேவிய கலக்க மற்றநிலை காம்பீரியம்@ தடைபலவரினும் தளராமனிற்றல் தைரியம்@ உயிர்போயினும் மானத்தைக் கைவிடாமை தேஜசு@ இன்பநிறைவினாற் புறத்தே தோற்றும் இனிமை லலிதம்@ நல்லோரைப் பாதுகாத்தற்காகத் தன்னுயிரையுங் கொடுத்தல் ஒளதாரியம். இவை தலைவனிடங் காணப்படும் எண்வகைக்குணங்கள்.

14. நாடகத்தலைவர் தன்மனைவி. அந்நியஸ்திரீ, பொதுமகள் என மூவகையர்.

14 - 21 (முவகைத்தலைவியரது இலக்கணம்)

22 - 26 தலைவரோடுற்ற தொடர்பினை நோக்கத் தலைவியர் எண்வகைப்படுவர். நாயகன் அண்மையிலிருந்து குற்றேவல்புரிய உவகையுற்றிருப்பவர். நாயகன் அண்மையிலிருந்த குற்றேவல்புரிய உவகையுற்றிருப்பவள் சுவாதீனாபர்த்ருகை@ அணிகலனணிந்து தலைவனது ரவவையெதிர்பார்த்திருப்பவள் வாசகசஜ்ஜை@ தலைவனது பிரிவாற்றாது துன்புறுபவள் வீரஹோற்கண்டிதை (உற்கை, உற்கண்டிதை யெனலுமாம்)@ தன்னாயகனுடலத்திற் பிறள்கலவியா லெய்திய குறிகண்டு வெகுளியுற்றிருப்பவள் கண்டிதை@ ஊடலிற் றலைவனைச் சினந்து அவன் பிரிந்த பின்னர் அவனை நினைத்துத் துன்;புற்றிரங்குபவள் கலகாந்தரிதை@ குறியிடத்துத் தலைவன் முற்படாதொழிய மனமலைபவள் விப்பிரலப்தை@ தலைவன் வேற்றுநாட்டுக்குச் சென்றமையால் அவனைப் பிரிந்திருப்பவள் பிரோசிதப்பரியை@ குறியிடத்துக்குத் தலைவனைநாடிச் செல்பவள் அபிசாரிகை@ முதலிருவரும் மேனிமினுக்கி யுவகையுற்றிருப்பர். ஏனைஅறுவரும் அணிகலனின்றித் துன்புற்று நெடுமூச் செறிந்து ஒளிகுன்றியிருப்பர்.

27. வேலைக்காரி@ தோழி, ஏவற்பெண், சுற்றத்தாருள் இளையாயள், அயலாள், தவமூதாட்டி, கம்மாளப்பெண், தான் என்னும் இவர் தலைவிக்குத் தூதியராவர்.

28 - 39 (தலைமகளின் இலக்கணங்கள். இலக்கியநூல்களிற் கண்டு கொள்க)

40. லலிதன் தன் அரசியற் கடமைகளை மந்திரிகள் வசம்விட்டு விடுவான். ஏனை மூவகைத் தலைவரும் மந்திரியரோடு தாமுங் கூடி அரசியற்கடமைகளைச் செய்வார்.

41. குலகுரு, புரோகிதன். தவத்தோன், பிரமவாதி என்னும் இவரைச்சார்ந்து அரசன் அறநிலையில் நிற்பான்@ நண்பர், குமாரர், வனங்காப்போர், தண்டத்தலைவர், போர்வீர ரென் றின்னோர் பொருணிலைக்கு உதவியாவார்.

42. குறளர், ஆயர், குறவர், யவனர், பாணர், சகாரர் முதலினோர் இன்பநிலைக்கு உதவியாவார்.

43. நாடகபாத்திரர் முதல், இடை, கடையென மூவகைப்படுவார்.

(இனி, ஆசிரியர் நால்வகை விருத்தியின் இலக்கணங்கூறுதற்கு எடுத்துக் கொண்டார். சுவையை யாதாரமாகக்கொண்டெழுவது விருத்தியாதலின், ஒன்பதுவகைச்சுவையினைப்பற்றி ஒருசில குறிப்புக்கள் கூறுவது இன்றியமையாததாயிற்று. சிருங்காரம் (உவகை), வீரம் (பெருமிதம்) பீபற்சம் (இளிவரல்), ரௌத்திரம் (வெகுளி) ஹாஸ்யம் (நகை), அற்புதம் (மருட்கை), பயோற்கர்ஷம் (அச்சம்), கருணை (அவலம்), சமப்ரகர்ஷம் (நடுவுநிலை), என ஒன்பது சுவைகள் உள. உறுப்பியலுட் காட்டியபடி ஈற்றில் நின்ற நடுவுநிலை உலகியல் நீங்கினார் பெற்றியதாகலின் எஞ்சிய எட்டுமே உலகவழக்கினுட் கூறப்படுவன. அவற்றினுள் உகையினின்று நகையும், பெருமிதத்தினின்று மருட்கையும், இளிவரலினின்று அச்சமும், வெகுளியினின்று அவலமும் தோற்றுவவாதலின் உவகை, பெருமிதம், இளிவரல், வெகுளி யென்னும் நான்கும் சிறப்புடையவாயின. மேல்வரும் 57-ம் சூத்திரத்துப்பொருளை ஈண்டுத் தருவாம். கைசிகிவிருத்தி உவகைச்சுவை பற்றி வரும். சாத்தவதி பெருமிதச்சுவைபற்றி வரும்@ ஆரபடி இளிவரலும் வெகுளியும் பற்றி வரும்@ பாரதிவிருத்தியாண்டும் வரும்)

44. தலைமகனது தன்மைவேறுபாட்டினால் வேறுபட்ட நால்வகை விருத்திகள் உள. ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டினை விரித்துக் கூறுவது கைசிகிவிருத்தி, இது நருமம், நருமஸ்பூர்ஜம், நருமஸ்போடம், நருமகர்ப்பம் என்னும் நான்கு அங்கங்களையுடையது.

45 - 46 தலைமகளது ஊடல்தவிர்க்கும்பொருட்டு (அன்புடையாரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு) வெளிப்படும் நகைக்குறிப்பு நருமம் எனப்படும். அது நகைபற்றியும் உவகைபற்றியும் அச்சம் பற்றியும் வரும். உவகைபற்றிய நகைக்குறிப்புத் தன்னை நோக்கியும், கூடல்விழைவு நோக்கியும், மானத்தை நோக்கியும் வருதலின் முத்திறப்பட்டது. அச்சம்பற்றிய நகைக்குறிப்புச் சுத்தமாயும் பிறசுவைகளோடு சேர்ந்தும் வருதலின் இருதிறப்பட்டது. நகைபற்றிய நகைக்குறிப்பொன்றும், உவகைபற்றிய நகைக்குறிப்பு மூன்றும், அச்சம்பற்றிய நகைக்குறிப் பிரண்டும் ஆகிய ஆறும் மொழி (வாக்கு), வேடம் (வேஷம்), செயல் (சேஷ்டை) என ஒவ்வொன்று மும்மூன்றிடம் பற்றி வருதலின் நகைக்குறிப்புப் பதினெண்வகைப்பட்டன.

47. அன்புடையாரிருவர் முதன்முதலாக ஒருவரையொருவர் காண்பது நருமஸ்ப+ர்ஜம் எனப்படும். இது உவகையோடு தொடங்கி அச்சத்தில் முடிவுறும். (கைக்கிளைத்திணையினது காட்சித்துறையும் ஐயத்துறையும் இதன்பாற்படுவன) உள்ளத்திலுள்ள அன்பினைச் சிறிதாக வெளியே தோற்றுவித்தல் நருமஸ்போடம் எனப்படும்@ (கைக்கிளைத்திணையினது துணிவு, குறி;ப்பறிதல் என்னும் இரண்டு துறையும் இதன்பாற்படுவன)

48. அன்பு வெளிப்படுதல் நருமகர்ப்பம் ஆகும்@ (களவியல் வகையனைத்தும் இதன் பாற்படுவன)

49. துன்பம்பற்றாது நற்குணம், ஆண்மை, தனக்கெனவாழாப் பெருந்தகைமை. இரக்கம், நேர்மை. யென்னும் இவற்றோடு பொருந்தி நடக்கும் சாத்துவவிருத்தி சம்லாபகம், உத்தாபகம், சங்காட்டியம், பரிவர்த்தகம் என நாற்பாற்படும்.

50 - 51 பலவகைச்சுவையும் பொருந்த மேலான பொருளைப்பற்றி இருவர் கலந்துரையாடுவது சம்லாபகமாகும்@ (பாடாண்டிணையிதன் பாற்படும்) போருக்கு அழைப்பது உத்தாபகமாகும். மந்திரத் தலைவரது உரை கேட்டோ, பொருள்கருதியோ, தெய்வச்செயலாலோ பிறனோடுள்ள நட்புத்தொடர்பினை யறுப்பது சங்காட்டியமாகும்@ (வெட்சித்திணையும் கரந்தைத்திணையும் இவற்றின்பாற்படுவன) தொடங்கிய செயல் முடிவுபெறுமுன் மற்றொன்றினுட்புகுதல் பரிவர்த்தகமாகும். (இவ்விருத்தி நாற்பொருளினுள் அறத்தைச் சிறப்பாகக் கொண்டு வருதலை நோக்குக. சிறுபான்மை பொருள் பொருளாக வருகின்றதெனினும், அப்பொருள் அறத்தின்வழுவாப்பொருளாதலின் அதுவும் அறத்தினு ளடங்குமென்க. மேல்வரும் ஆரபடிவிருத்தி அறத்தின்வழுவிய பொண்மேலும் வருதல் காண்க)

52. மந்திரம், தந்திரம், மாயம், வஞ்சனை, அடுதல், வெகுளியென்றின்னவற்றின் மேல்வருகின்ற ஆரபடிவிருத்தி சங்ºpப்திகம். சம்பேடம், வஸ்துத்தாபனம், அவபாதனம் என நால்வகைப்படும்.

53. சங்ºpப்தி (இச்சூத்திரத்தின்பொருள் தெளிவாகப் புலப்படவில்லை@ எந்திரம் முதலிய சூழ்ச்சிகளினால் உட்பொருளைப் பாதுகாப்பது என்று கொண்டால் இதனாற் குறிக்கப்படும் ஒழுக்கம் உழிஞைத் திணையையும் நொச்சித்திணையையும் சார்ந்துநி;ற்கும்).

54. வெகுண்டார் இருவர் அடல்குறித்து ஒருவரொருவர் மேற்செல்லுதல் சம்பேடமாகும்@ (வஞ்சித்திணை இதன்பாற்படும்) மாயத்தினால் ஒருபொருளை யுண்டுபண்ணுதல் வஸ்துத்தாபனமாகும்@ உட்புகுதலும் அஞ்சியோடுதலும் வெகுண்டுமலைதலு மாகிய இவை அவபாமாகும்@ (தும்பைத்திணை யிதன்பாற்படும்)

55 - 56 பாரதிவிருத்தியென மற்றொருவிருத்தி யுளது@ அதனை நாடக லக்கணங்கூறுமிடத்துக் கூறுவாம். உத்படரென்னு ஆசிரியரின் வழிநிற்போர் இவற்றின் வேறாய ஐந்தாவதுவிருத்தியொன்று உளதென்பர்.

57 (நால்வகைவிருத்திக்குஞ் சுவை வகுத்துக்கூறும் இச்சூத்திரத்தின் பொருளை 44 ஆஞ் சூத்திரத்துக்கு முன்னின்ற குறிப்பினுட்டந்தாம்@ அதனை ஆண்டுக் காண்க)

58. உலகவழக்கினை நுணுக வாராய்ந்துணர்ந்து, நாடகக்கட்டுரை நடந்தேறிய தேசத்தாருக்குரிய பாஷை வேஷம் கிரியை யென்னு இவற்றை மாறுபாடின்றி வழங்க வேண்டும்.

59 - 66 (மொழியமைதி கூறுகின்றார். தமிழ் வழக்கறிந்து ஏற்பனவற்றை ஏற்குமாறமைத்துக் கொள்க) ஸம்ஸ்கிருதம் ஆடவருள் உயர்ந்தோராலும், தவத்தராலும், ஒரோவிழித் தவமூதாட்டியராலும், பட்டத்தரசியாலும், மந்திரிபுதல்வியராலும், கணிகைமாதராலும் பேசுதற்குரியது. பிராகிருதம் பெண்பாலருக்குரியது. சௌரசேனி ஆடவருட் கீழாயினாருக்குரியது. பைசாசம் கடையாயினாருக்குரியது. மாகதியினியல்பு மதுவே. பலதேயமாக்களுக்கும் அவ்வத்தேய வழக்குமொழி யுரியது. உயர்ந்தோர் பிறமொழியையுங் கொள்ளலாம். வித்வாம்சரையும் தேவரிஷிகளையும் அறிவரையும் முன்னிலைப்படுத்துங்காற் “பகவன்” என அழைத்தல் வேண்டும். விப்பிரரையும், மந்திரிமாரையும், அண்ணன்மாரையும் “ஆர்ய” என முன்னிலைப்படுத்த வேண்டும். சூத்திரதாரனும் நடியும் ஒருவரை யொருவர் முன்னிலைப்படுத்தும் மொழியும் இதுவே. சாரதி எஜமானனை “ஆயுஷ்மன்” என முன்னிலைப்படுத்த வேண்டும். சிஷ்யன். குமரன், இளையோன் என்றின்னோரை வயதின் முதிர்ந்த பெரியோர் “வத்ஸ” (குழந்தாய்;) என அழைப்பார். இளையோர் முதியோரை “தாத” (எந்தாய்), “சுகிர்தாபித” (திருவணைந்த பெயருடையோய்) என்பர். சூத்திரதாரன் தன்னுடன் செல்வோனை “மர்ஷ” (பிரியநண்ப) என்பான்@ அவன் சூத்திரதாரனை “பாவ” (பெரியோய்) என்பான். அரசனை அவன் பரிசனர் “தேவ”, “சுவாமி” என்பர்@ இழிந்தோர் “பட்ட” என்பர். கணவனுடைய தரத்துக்கேற்ப மனைவிக்கு உயர்வுண்டு. பெண்கள் ஒத்தரத்துப் பெண்களை “ஹலா” (எல்லா) என்பர்@ வேலைக்காரியை ”ஹஞ்ஜே“ என்பர். கணிகையை “அஜ்ஜுகா” என யாவரும் அழைப்பார்@ அவளது ஏவராளர் “அம்பா” என்பர். குலப்பெண்களாகிய நரைமூதாட்டியரை அனைவரும் “அம்பா” என்பர். விதூஷகன் தலைவியையும் சேடியையும் “பவதீ” என அழைப்பான்.

67. செயல், குணம். மொழியென் றின்னவற்றின் வேறுபாடுகளையும் நால்வகைத்தலைவர், அறுவகைத்தலைவிய ரென்றின்னாரோடு மருவி நின்ற சத்துவவேறுபாடுகளையும் பூரணமாக ஆராய்ந்துரைக்க வல்லார் சந்திரசேகரமூர்த்தியாகிய சிவபெருமானும் பரதனும் அல்லாற் பிறருளரோ?

š. மூன்றாமதிகாரம், சாதி (நாடகவகை) சேதம் என்னும் இரண்டுறுப்புணர்த்துதனுதலிற்று. இருபதுமுது லிருபத்தாறுவரையுமுள்ள சூத்திரங்கள் சேதமுணர்த்துவன ஒழிந்த சூத்திரங்கள் சாதியுணர்த்துவன.

1 முதன்மைபற்றியும், எல்லாச்சுவைகளையுந் தழுவி நிறைந்த இலக்கணத்ததாகிய தலைமைபற்றியும் நாடகத்தை முதலிற் கூறுவாம்.

2. சூத்திரதாரன் ஆரம்பத்திற் செய்யவேண்டிய கருமங்களை (பூர்வரங்கத்தை)ச் செய்து முடித்துப்போயின பின்னர்க் கூத்த னொருவன் அவ்வண்ணமே (சூத்திரதாரனைப்போலவே) உட்புகுந்து நாடகத்துக்குத் தோற்றுவாய் கூறுவான். இவன் ஸ்தாபக னெனப்படுவான். (பூர்வரங்கம் என்பன: மாயோனை வாழ்த்துதலும், வருணப்பூதரை வாழ்த்துதலும் இன்னன பிறவும்)

3-4 தேவர், மானிடர் நாடகபாத்திரராயின் அவ்வவ்வுருவத் தோடும், இரசாராருங் கலந்துவரும் (மிச்சிர) சரிதையெனின் ஒருசாரார் உருவத்தோடும் ஸ்தாபகன் தோன்றிப் பொருள், பீஜம, முகம் என்னும் இவற்றினுள் ஒன்றினைக் குறித்தோ, நாடகபாத்திரருள் ஒருவரைக் குறிப்பாலுணர்த்தியோ, இன்னிசையான கீதம் பாடி அரங்கத்தை (அரங்கம்@ நாடகம் பார்ப்போரைக் குறிக்கும்) மகிழ்வித்தபின், பாரதிவிருத்தியினால் அறுவகைப் பெரும்பொழுது (இருது@ கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்) களுள் ஒன்றினை வருணிப்பான். (ஸ்தாபகன் ஆரம்பத்திற்பாடுகிற பாட்டு நாந்தியெனப்படும். இதனை அவையடக்கியல் என்பது தமிழ்வழக்கு. ஸ்தாபகன் தமிழ்வழக்கிற் கட்டியக்காரனை நினர்ப்பான்)

5. செம்மொழி பெரும்பான்மையும் மேவப் பெற்றுநடர் பொருளாக வருஞ் சொல்வழக்கு (வாக்வியாபாரம்) பாரதி விருத்தி யெனப்படும். இது பிரரோசனை, வீதி, பிரகசனம். ஆமுகம் என நால்வகைப்படும். (நால்வகைக்கு முரிய இலக்கணத்தை நுணுக நோக்குவார்க்குப் பாரதிவிருத்தியின் ஆட்சியுங் குணமும் நன்கு புலப்படுவனவாம். சூத்திரத்தில் “ஸம்ஸ்க்ருதம்” என நி;ன்ற பதத்தைப் பொவியல்புநோக்கிச் “செம்மொழி” யென மொழிபெயர்த்தாம். தமிழ் நாடகமரபுக்கச் “செம்மொழி” செந்தமிழாகும்)

6. சபையோரின் உள்ளத்தில் மேல்வருவனவற்றைப் பார்ப்பதற்கு அவாவுண்டாகும்படி எடுத்துக்கொண்ட பொருளைப் புகழ்ந்து கூறுதல் பிரரோசனை யெனப்படும்.

7. வீதி 62-ம் 63-ம் சூத்திரங்களுள்ளும். பிரகசனம் 49- 50 - ம் சூத்திரங்களுள்ளுங் கூறப்படுவன. வீதியின் உட்பிரிவுகள் ஆமுகத்தின் உட்பிரிவுகளை நிகர்த்தனவாதலின் ஒன்றின்பின்னொன்றாக இவற்றின் இலக்கணத்தை ஈண்டுத் தருவாம்@ முதலில் ஆமுகத்தை யெடுத்துக் கொள்வாம்.

8 - 10 சூத்திரதாரன் “நடி” யையோ, “மர்ஷ”னையோ, “விதூஷக” னையோ விளித்துத் தனதுகருமம் ஏதோ பேசுவது போலச் சொல்வன்மையினால் நாடகத்துக்குப் பொருளைக் குறிப்பாகவுணர்த்துவது ஆமுகமாகும். இது பிரஸ்தாவனை யெனவும்படும். சூத்திரதாரனது சொல்லோ, குறிப்போ காரணமாக நாடகபாத்திரருள் ஒருவன் தோற்றுவது கதோற்காதம்@ காலவியல்பினை வருணித்துரைத்தல் கேட்டு ஆங்குக் கூறப்பட்ட குறிப்புக் கியைய நாடகபாத்திரனைக் குறிப்பிட்டு, “இதோவருகின்றான்” என அவன் தோற்றுவது பிரயோகாதிசயம். இவைமூன்றும் பிரஸ்தாவனையின் வகைகள். வீதியின் உட்பிரிவுகள் பதின்மூன்று.

11 - 18 கூற்றம் மாற்றமுமாக இருவர் கலந்து வார்த்தையாடுவது உற்காத்யகம்@ கூடார்த்தமாகிய மறைபொருண்மொழிகளை யொன்றின்பின்னொன்றாகத் தொடுத்துக் கூறுவதும் இதுவே@ தொடர்பில்லா இரு நிகழ்ச்சிகள் ஒரேகாலத்தில் நிகழ ஒன்றினைப்பற்றி யுரையாடினோன் அதனை விடுத்து மற்றதனைப்பற்றி யுரையாடுதல் அவலகிதம்@ சபையார் நகைக்கும்படி இருவரு (ஒருவர் மற்றவரை) பொய்ம் மொழிகூறிப் புகழ்ந்துரைத்தல் பிரபஞ்சம்@ மூவர்நின்று வார்த்தையாடும்போது சிலேடை மொழியின் உபயோகத்தினால் ஒருவர் மற்றிருவருக்கும் இருவேறு கருத்துப்படும்படி யுரைத்தல் திரிகடம்@ நட்பு மொழிபோற்றோன்றும் வஞ்சனைமொழியினால் ஒருவனைத் தீயநெறியிற் செலுத்துதல் சலம்@ வினாவெதிர்மறுத்தல் வாக்கெலி@ ஒருவரொருவரை வெல்லும்படியாகச் செய்கின்ற வாக்குவாதம் அதிபலம்@ நடந்து கொண்டிருக்கிற சம்பாஷணையோடு ஒருவகைத் தொடர்புடைய வேற்றுப்பொருளொன்றினைச் சட்டெனக்கூறுவது கண்டம்@ சுவைபயக்கச் சொல்லிய சொற்களுக்கு மற்றொருவகையாகவும் பொருளுரைத்துக் காட்டுதல் அவசியந்திதம்@ நகைபயக்கும் மறைபொருண்மொழி நாளிகை@ தொடர்பற்றவாக்கியங்களால் உரையாடுவது அசற்பிரலாபம்@ பிறன்பொருட்டு நகையும் அவாவும் விளைக்க வுரைப்பது வியாகாரம். குணங்களைக் குற்றங்களாகவும் குற்றங்களைக் குணங்களாகவுங் கொள்ளுதல் மிருதவம்@ இவை வீதியின் உட்பிரிவுகள்.

19. மேற்காட்டியவற்றுள் ஒன்றின் மூலமாகச் சூத்திரதாரன் நாடகக்கருத்து நாடகபாத்திரம் என்னும் இவற்றைக் குறிப்பிட்டுப் பிரஸ்தாவனை முடிவிற் போய்விட நாடகம் ஆரம்பமாகும்.

20 - 21 சகல நற்குணங்களும் நிறைந்த தீரோதாத்தனாய்க் கீர்த்தி மானாய்க் கீர்த்தியை விரும்பனவனாய் வல்லமைசாலியாய், வேதங்கள் மூன்றையுங் காப்பாற்றுபவனாய். உலகாள்பவனாய், தேவர்வழியிலோ ரிஷிகள் வழியிலோ உதித்தவனா யுள்ள தலைவன் றோன்றுகிற நாடகத்தில் அவனது நிகழ்ச்சிகளுள், பெருங்கீர்த்திவாய்ந்த நிகழ்ச்சி யொன்றினையே தலைமைப் பொருள் (ஆதிகாரிகம்) ஆகக் கொள்ளுதல் வேண்டும்.

22. தலைவனது தலைமைக்குணத்தோடு மாறுபட்ட நிகழ்ச்சிகளிருப்பின் அவற்றைத் தவிர்த்துவிடவேண்டும்@ அன்றேல் ஒருவகையாக வேறுபடுத்தியுரைத்தல் வேண்டும்.

23. சரித்திரநிகழ்ச்சியின் தொடக்கத்தையும் முடிபையும் நிச்சயித்தபின்பு அதனை முறையறிந்து ஐந்துசந்திகளாகப் பகுத்துக் கொள்ளல் வேண்டும்.

24. பின்னர் அறுபத்துநான்கு சந்தியுட்பிரிவுகளாகப் பகுத்துக் கொள்ளலாம். கிளைக்கதை (பதாகை) யுளதாயின் அதனையும் அநுசந்திகளாகப் பகுத்துக் கொள்ளல் வேண்டும். அநுசந்தியின் றொகை ஐந்;திற் குறையவிருத்தல் வேண்டும். வழிநிகழ்ச்சி (பிரகரீ) யைச் சந்தி வகுத்தல் கூடாது.

25. எற்புடையதாயின் முதலங்கத்துக்கு முன்னே ஒரு முன்னுரைக் காட்சியை (விஷ்கம்பத்தை) வைக்கலாம். நாடகக்கட்டுரையைச் சீர்ப்படுத்தும்போது சிற்சிலபாகங்கள் சுவைபயவா நீர்மையவெனினும் பின்வரும் நிகழ்ச்சிகளை விளங்கப்படுத்துவதற்கு இன்றியமையாதனவெனக் காணப்படின் அவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரைக்காட்சியாக அமைக்க வேண்டும்.

26. ஆரம்பந் தொட்டு அனைத்து நிகழ்ச்சிகளும் சுவைதரும் நீர்மையவாயின் முன்னுரைக் காட்சியை யொழித்து முதலங்கத்தினுள்ளே ஆமுகத்திற் கூறப்பட்ட குறிப்புக்கள் தோன்றுமாறு அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

27. அங்கமானது விரிநிலை (விந்து) செறிந்ததுவாய்ப் பலவாய கொள்கைகளையுஞ் சுவைகளையுந் தன்னுள் ளடக்கிக் கதாநாயகனுடைய நிகழ்ச்சிகளைக் காட்டுவது. (33-ம் 34-ம் சூத்திரங்களையும் நோக்குக)

28. அங்கத்தினுட் டலைமைபற்றியசுவைக்கு ஆதாரமாகச் சுவைப்பொருள் குறிப்பு என்னும் இவற்றையும் சுவைநிலையவிநயம் வழி நிலையவிநயங்களையும் ஆராய்ந்தமைக்க வேண்டும்.

29. சுவையைப் பெரிதும் நோக்கி நாடகக்கட்டுரையினது தொடர்பினைக் கண்டப்படுத்துவதும். நிகழ்ச்சித் தொடர்புக்குரிய விஷயங்களைப் பெருகத்தருவதனாற் சுவையைக்குறைவு படுத்துவதும் நன்றல்ல.

30. வீரச்சுவையையோ இன்பச்சுவையையோ நாடகத்துக்குத் தலைமைபற்றிய சுவையாகக் கொள்ள வேண்டும். ஏனையசுவைகள் தலைமைபற்றிய சுவைக்குச் சார்பாக நிற்றல் வேண்டும். மருட்கைச்சுவை இறுதியில் மாத்திரம் வருதல் வேண்டும்.

31 - 32 நெடும்பயணம், கொலை, போர், அரசியலுக்கெதிராகிய கலகம், நாட்டை முற்றுகையிடுதல், உண்ணல், நீராடல், காமக் கல்வி, எண்ணெயிடல், உடையணிதல் என்னும் இவற்றையும் இவை போல்வனவற்றையும் அரங்கத்திற் பிரத்தியºமாகக்காட்டுதல் கூடாது. தலைவனது மரணத்தைக் காட்டுதல் கூடாது. இன்றியமையாதுவரிற்றவிர்த்த லியலாது.

33. ஒரேநாளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளாய் ஒரேமுடிபுகருதினவாய்த் தலைவனையும் மூவர் நால்வர் நாடகபாத்திரர்களையும் உடையனவாய். முடிவில் அனைவரும் போய்விடும் நீர்மையவாய் அமைந்த நிகழ்ச்சிகளையே ஒரங்கமாகத் தொகுத்தல் வேண்டும்.

34 விரிநிலை, பீஜம், வழிநிலைக்குறிப்பு,(பதாகாஸ்தாநாகம்) என்னும் இவற்றையும் முன்னுரைக்காட்சியையும் ஆராய்ந்து அங்கங்களைச் செவ்விதி னமைக்கவேண்டும். நாடகத்தில் ஐந்து அங்கம் வருதல் வேண்டும்@ மகாநாடகத்திற் பத்து அங்கம் வருதல் வேண்டும்.

35 - 38 (இனிப் பிரகரணத்தின் இலக்கணம் கூறுகின்றார்) பிரகரணத்தின்கதை கவியினாற் கற்பிக்கப்பட்டகதையா யிருத்தல் வேண்டும். நிகழ்ச்சி பூவுலகத்தில் நடக்க வேண்டும். தலைவன் அமாத்தியன் (மந்திரி), விப்பிரன், வணிகன் என்னும் வகையில் ஒருவனாய்த் தீரசாந்தனாய். அபாயமுற்றவனாய்த் தருமார்த்தகாமம் மூன்றினையும் கருதியபொருளாகக் கொண்டவனாய் வருதல் வேண்டும். சந்தி, விஷ்கம்பம், சுவை யென்னு மிவற்றை நாடகத்துக் கொண்டவாறு கொள்க. தலைமகள் தலைமகனது மனைவியாகிய குலமகளாகவாவது விலைமகளாகவாவது இருக்கலாம். குலமகள் மனையில் இருத்தல் வேண்டும். விலைமகள் புறத்தேயிருக்க வேண்டும். குலமகள் தலைவியாயின் சுத்தமெனவும், விலைமகள் தலைவியாயின் விகிர்தமெனவும், இருவரும்;வரின் சங்கீர்ணமெனவும் பிரகரணம் மூவகைப்படும். சங்கீர்ணப் பிரகரணத்தில் தூர்த்தர்பலர் தோற்றுவர்.

39 - 43 (நாடிகையினிலக்கணம்) நாட்டிவகை பலவற்றின் கலப்பாக நடக்கின்ற நாடிகையின் இலக்கணத்தை யாராய்வாம். பொருள் பிரகரணத்துக்குக் கூறப்பட்ட பொருளாகும். தலைவன் தீரலலிதா வகையைச் சேர்ந்த கீர்த்திமானாகிய அரசன். சுவை உவகைச்சுவை. நாடிகைச்சரிதை பெண்கள் பலர் வரப்பெற்று நான்கங்கங்களால் முடியுமெனப் பிறர்கூறினரெனினும் இரண்டு மூன்று அங்கங்களால் முடிவதுண்டு. தலைவனுக்கு நாயகிமார் பலரெனின், அவருள் வயதின் மூத்தாள் பட்டத்தரசியாயிருந்தல் வேண்டும். தலைவன் அவள் விருப்பத்திற்கியையவே பிறர்பாற் செல்லுதல் வேண்டும். நாடகத் தலைவி தலைவனைக் கண்டுங் கேட்டும் கருதிய காரணத்தினால் அவன் மேற் காதல் கொண்டவளாயிருத்தல் வேண்டும். தலைவன் பட்டத்தரசிக்கு அஞ்சிநடக்குமியல்பு தோற்ற வேண்டும். நாடிகை நான்கங்கங்களால் நடக்கும் பொழுது, அங்கங்கள் நான்கும் கைசிகிவிருத்தியின் வகை நான்கினையும் முறையே பெற்றுவருவன. (தமிழ்வழக்கிலுள்ள விலாசங்கள் இவ்வகைய)

44 - 46 (பாணம் என்னும் நாட்டியவகையினிலக்கணம்) பாண்டியத்தியமுடையோனும் நிபுணனுமாhகிய விடனொருவன் தோன்றித் தன்னுடைய அநுபவத்திலோ, பிறருடைய அநுபவத்திலோ, நடந்ததாக ஒரு தூர்த்தசரிதத்தை யெடுத்துச் சொல்வது பாணத்துக்குரிய பொருளாகும். இச்சரிதம் கவியினாற் கற்பிக்கப்பட்டதாகி ஓரங்கத்தில் முடியவேண்டும். விடன் ஒருவனைத்தவிரப் பிறரெவருந் தோற்றுதல் கூடாது பிறர் தோற்றாரெனினுந் தோற்றி நிற்பது போலக் கற்பித்து ஆகாயபாஷிதமாக வினாவையும் விடையையுந் தானே கூறி விடன் சம்பாஷிப்பது மரபாகும். அழகையும் ஆற்றலையும் வருணித்துக் கூறும் மார்க்கத்தாற் பாணமானது இன்பச்சுவையும் வீரச்சுவையும் நிரம்பியதாதல் வேண்டும். பாணத்தில் முகம் உபசங்கிருதி (துய்த்தல்) ஆகிய இரண்டு சந்திகளும் பத்துவகை இலாசியாங்கமும் வருவன.

47 - 48 இலாசியாங்கம் பத்தாவன:-

கேயபதம், ஸ்திதபாட்டியம். ஆசீனபாட்;டியம், புஷ்பகண்டிகை, பிரச்சேதகம், திரிகூடம், சைந்தவம், துவிகூடம், உத்தமோத்தமகம், உக்தப்பிரதியுக்தம் என்பன. (இவற்றின் இலக்கணத்தை ஆசிரியர் கூறவில்லை. பாரதீயநாட்டியசாஸ்திரம் முதலிய முடிந்த நூலிற் கண்டு கொள்க என உரையாசிரியர்கூறிச்செல்வார்)

49 - 50 (பிரகசனம் என்னும் நாட்டியவகையினிலக்கணம்) பல திறத்தாலும் பாணத்தை யொத்த பிரகசனம் சுத்தம், விகிர்தம், சங்கீர்ணம் என மூவகைப்படும். சுத்தப்பிரகசனத்திற் பாசண்டர், விப்பிரர், சேடன், சேடி யென் றின்னோர் தோற்றிப் பொருத்தமான வேஷமும் பாஷையுந் தோன்ற நகையைவிளைக்கும் நகைக்குறிப்பு மொழிகளைக் கூறி நடிப்பர். காமுகராதியோர் தோற்றிக் காமக்குறிப்புத் தோன்றநடிப்பு விகிர்தப்பிரகசனம், தூர்த்தர் பலர் தோற்ற அறுவகை நகைக்குறிப்பும் வீதியினிலக்கணமும் பெற்றுவருவது சங்கீர்ணப் பிரகசனம்@ (பாரதிவிருத்தியின் வகைகளாகிய) பிரரோசனை, வீதி, பிரகசனம், ஆமுகம் என்னும் நான்கினது இலக்கணமுங் கூறினாம். பாரதிவிருத்தியென அடியார்க்குநல்லார்கூறிய பதினோராடலும் இவற்றினையொத்தும் ஒவ்வாதும் நிற்கின்ற மற்றொருவகையாதல் காண்க. அவையடக்கியலுக்கும் நாடகக் கட்டுரையின் றொடக்கத்துக்குமிடையிற் பாரதிவிருத்தியின் வகையொன்று தோற்றுவது மரபென. முன்னர்க் காட்டினாம் மாயோன்வாழ்த்தும், வருணப்பூதர்வாழ்த்தும், திங்கள் வாழ்த்தும், அவையடக்கியலு மாயினபின்னர்ப் பதினோராடலினுள் ஒன்றையோ பலவற்றையோ அரங்கிற் காட்டியதன் பின்னர் நாடக் கட்டுரையைத் தொடங்குவது தமிழ் நாடகவழக்கு என எண்ண இடமுண்டு. பாரதியரங்கத்திலாடிய கொடு கொட்டி முதலிய பாரதிவிருத்தி தெய்வவிருத்தியென்னுங் குறியீட்டுக் குரியன இவைபோன்ற பிறவும் பாரதி விருத்தியாயின)

51 - 53 (இடிமம் என்னும் நாடகவகையினிலக்கணம். திரிபுரதகனம் இதற்குச் சிறந்த பொருளென மேலோர் கூறுவர்)

பொருள் பிரசித்தமாக யாவரும் அறிந்த பொருளாதல் வேண்டும். விருத்தி கைசிகியொழிந்த மூன்றும்@ தலைவர் தீரோத்ததராய தேவர், கந்தருவர், இயக்கர், இராºசர், பூதர், பிரேதர்,பைசாசர் என்றின்னோர்@ சுவை நகையும் உவகையும் ஒழிந்த ஆறுசுவைகளும்@ வெகுளிச் சுவை பெருவரவிற்றாகும். இந்திரசாலம், மாயை, போர், கலாம், சூரியசந்திரக்ரகணம் என்றின்னன வருதல் வேண்டும். விளைவு (அவர்மர்சம்) என்னும் நான்காஞ்சந்தியொழிந்த நான்கு சந்திகளும் வந்து இடிமம் நான்கு அங்கங்களால் முடியும். நாடகபாத்திரர் பதினாறுபேர்.

54 - 55 (வியாயோகத்தின் இலக்கணம்) கருப்பம் விளைவு என்னும் இரண்டொழிந்த மூன்றுசந்திகள் பெற்று ஓரங்கத்தினால் ஒருநாளில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டும் வியாயோகமானது பல ஆண்பால் நாடக பாத்திரர்களைக் கொண்டு இடிமத்துக்குக் கூறிய சுவைகளை யெய்திய பெண்கள் காரணமல்லாத பிறகாரணங்களால் விளைந்த ஒரு போரை நடித்துக் காட்டுவதாக வரும்.

56 - 61 (சமவகாரத்தினிலக்கணம்) நாடகத்துக்குப்போல ஆழுகம் வருதல் வேண்டும். பொருள் தேவாசுரரோடு தொடர்புடைய பிரசித்தசரிதை. சந்தி விளைவு ஒழிந்த நான்கும். விருத்தி நால்வகை விருத்தியும் (கைசிகிவிருத்தி சிறுபான்மை, ஏனைய பெரும்பான்மை) நடர்பன்னிருவர், தீரோதாத்தவகையினராகிய தேவாரசுரர், சுவைகள்: சமுத்திரமதன (பாற்கடல்கடைந்த) சரிதையினுட்போல வீரச் சுவை. பெரும்பான்மையாகவும் ஏனைய சிறுபான்மையாகவும் வருதல் வேண்டும். மூன்று அங்கங்களாகி மூவகை வஞ்;;;;;;சனை (கபடம்), மூவகையுவகை (சிருங்காரம்). மூவகைக்கலக்கம் (வித்திரவம்) என்னும் இவை வந்து முடிய வேண்டும். முதலங்கம் இரண்டு சந்திகளைக் கொண்டு பன்னிரண்டு நாழிகைப்பொழுதினுள் நடந்தநிகழ்ச்சிகளைக் கொள்ள வேண்டும். இரண்டாம் மூன்றாம் அங்கங்களின் வரையறை முறையே நான்கு, இரண்டு நாழிகைகளாகும். சமவகாரத்தில் விரிநிலையும் (விந்துவும்) முன்னுரைக் காட்சியும் (விஷ்கம்பமும்) வாரா. வீதியின் உட்பிரிவுகளைப் பிரகசனத்தினுட் போலவே இதனுள்ளும் உபயோகிக்கலாம். மூவகை வஞ்சனையாவன@ சரிதத்தின் இயல்பானதன்னையினாலும், தெய்வச் செயலாலும், பகைவராலுந் தோற்றவன. மூவகைக் கலக்கமாவன@ நகரத்தை முற்றுகையிடுதலினாலும், போரினாலும் புயலினாலும் பெருநெருப்பினாலும் ஏற்படுவன.

62 - 63 (வீதியின் இலக்கணம்)

வீதி உத்காத்தியகம் முதலாகக் கூறப்பட்ட பதின்மூன்று உட்பிரிவுகளை யுடையது. ஒருவரோ இருவரோ நாடகபாத்திரராக வரல் வேண்டும். நாட்டியவகையாகத் தனித்துவருமிடத்துக் கைசிகிவிருத்தியால் நடந்து பாணத்தைப் போல் அங்கமுஞ் சந்தியுமுடையதாய் உவகை (சிருங்காரச்)ச்சுவை பெரும்பான்மையாகவும் மற் றியாதாயினுமொரு சுவை சிறுபான்மையாகவும் வரப்பெற்று முடியும்.

64 - 65 (உத்சிருஷ்டிகாங்கத்தி னிலக்கணம். நாடகத்தினுட்பிரிவாகிய அங்கத்தினின்று வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு வாளா அங்கமென்னாது, உத்சிருஷ்டிகாகங்மெனக் குறியீடுசெய்தார்) பிரக்கியாதமான பழங்கதையைக் கற்பனையால் விரித்துக்கூறும் உத்சிருஷ்டி காங்கமானது அவல (கருணை) ச்சுவைமேவிச் சாதாரணமனுஷரைத் தலைவராகக் கொண்டு. பாணத்தைப் போன்று சந்தியும் விருத்தியும் பெற்று மகளிர் பிரலாபம் வந்து முடிய வேண்டும். போர்நிகழ்ச்சி, வெற்றி, தோல்விகளைச் சொற்களினால் விரித்துரைக்க வேண்டும். நிகழ்ச்சியினாற் காட்டுதல் கூடாது.

66 - 68 (ஈஹாமிருகத்தின் இலக்கணம் மிருகம் - மான். நாணியோடுகின்ற இளமான்போன்ற பெறுதற்கரியாளைத் தலைவன் றொடர்ந்து செல்லுமியல்பினைக் கூறுதலின் ஈஹாமிருக மெனப்பட்டது) இது பழங்கதையும் கற்பகைக்கதையுங் கலந்துவந்து மூன்று சந்திகளடங்கிய நான்கங்கங்களால் முடிவது. தலைவனும் தலைவனது பகைவனும் தீரோத்ததவகையினராய தேவராகவோ மானிடராகவோ இருக்கலாம். ஒருதெய்வப்பெண்ணை அவள் மனவிருப்பத்துக்கு மாறாக ஒருவன் காதலித்து அவளைப் பற்றுதற்குப் பலசூழ்ச்சிகளுஞ் செய்ததாகக் காட்ட வேண்டும். போர் தலைவனது மரணம் என்னும் இவற்றை வெளிப்படுத்திக் காட்டுதல் கூடாது.

69. ஈண்டுக் குறிக்கப்பட்டிருக்கும் பத்துவகை நாட்டியங்களின் (தசரூபகத்தின்) இலக்கணத்தையும், உத்தமக்கவிகளியற்றிய பிரபந்தங்களையும் ஆராய்ந்துணர்ந்தோர் தாங் கருதிய பொருளின் மேலே விழுமிய மொழியும் ஒழுகிய ஓசையும் நிரம்பப் பலவகை யலங்காரங்களோடுங் கூடிய பிரபந்தங்களை எளிதி னமைப்பர். (நாடகம் என்னும் மொழி சிறப்பியல்பாகச் சகல லºணங்களும்பொருந்திய நாட்டிய வகையைக் குறிக்குமெனவும் பொதுவியல்பாக நாட்டியவகையனைத்தினையுங் குறிக்குமெனவும் உலகவழக்காலும் ஆன்றோர் வழக்காலும் அறிகின்றோம்)

ச. நான்காமதிகாரம், சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் நான்குறுப்புணர்த்துத னுதலிற்று.

(உறுப்பியலினுட் சுவையை யாராயும்போது “ஆசிரியர் செயிற்றியனார் சுவையுணர்வையுஞ் சுவைப்பொருளையும் ஒன்றாக அடக்கிச் சுவை, குறிப்பு, சத்துவம் என மூன்றாக்குவர்@ அவிநயத்தைத் தனித்துக் கூறுவர்” என்றாம். தசரூபநூலாசிரியர் கொள்கையும் அதுவேயாம். சூத்திரப்பொருளைத் தெளிவுபடுத்துவதற்கு யாம் உபயோகிக்கப் போகின்ற சில தமிழ்நூற்பதங்ளையும் அவற்றோடு ஒத்த பொருளினவாகிய வடநூற்பதங்களையுந் தந்து அப்பாற் செல்;வாம். சுவைப் பொருள் விபாவம்@ குறிப்பு அநுபாவம்@ மெய்ப்பாடு பாவம்@ விறல் சத்துவம், சத்துவபாவம்@ வழிநிலையவிநயம் வியபிசாரிபாவம்@ சுவை நிலையவிநயம் ஸ்தாயிபாவம்@ சுவை ரசம்)

1. சுவைப்;பொருளுங் குறிப்பும் விறலும் வழிநிலையவிநயமுங் காரணமாகச் சுவைநிலையவிநயந் தோன்ற அதனினின்றுஞ் சுவை பிறக்கும்.

2. எதனையுணர்வதனாற் சுவை யுணரப்படுகின்றதோ, அதுவே சுவைப்பொருள் (விபாவம்) எனப்படும். அது ஆலம்பனவிபாவம் (தலைவன் முதலிய நாடகபாத்திரர்), உத்தீபனவிபாவம் (காலம் களம் முதலியன) என இருவகைப்படும்.

3. சுவைப்பொருள் மனத்தப்பட்டவழி உள்ளத்து நிகழுங் குறிப்பு அநுபாவம். விபாவமும் அநுபாவமுங் காரணகாரிய சம்பந்தமுடையன@ இவற்றைக் காரியப்படுத்துவதனால் இவற்றின் றன்மையை யுணரலாகும்.

4. உள்ளத்து நிகழ்ந்;த இன்பத் துன்ப நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுவது மெய்ப்பாடு. குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தினின்று உடம்பின்கண் தானே தோன்றும் வேறுபாடு விறல் (சத்துவபாவம்).

5. அசைவற்றிருத்தல் (ஸ்தம்பம்), சோர்ந்துவிழுதல் (பிரலயம்), மெய்ம்மியர்சிலித்தல் (ரோமாஞ்சம்), வேர்த்தல் (ஸ்வேதம்), நிறம் வேறுபடுதல் (வைவர்ணியம்), உடல் நடுங்குதல் (வேபது), கண்ணீர்வருதல் (அஸ்று), நாக்குளறுதல் (வைஸ்வர்யம்) என விறல் எண்வகைப்படும்.

6. சுவைநிலைய விநயத்தோடு உடன்றோன்றிக் கடலிலுதித்த அலைகடலினுள்ளே மடிந்து மறைந்து போவது போலச் சுவைநிலையவிநயத்தோடு வேறுபாடற்று மறைந்து போகும் நீர்மையவாகிய வழிநிலைய விநயங்கள். முப்பத்துமூன்று உள.

7.31 (ஆசிரியர் விரித்துக்கூறிய இலக்கணத்தை இயன்றவரை தொகுத்துத்தருவாம்)

மெய்யுணர்வினாலோ, பொறாமை துன்ப முதலியவற்றினாலோ தன்னிலையழிந்து நெட்டுயிர்ப்பெறிந்து துயருறுதல் உயிர்ப்பு (நிர்வேதை)@ பசிதாகங்களாற் றுன்புற்று உடல்வடித் தளர்ச்சியடைதல் சோர்வு (கிலானி)@ எதிர்வருந்துன்பத்தை நினைத்து நடுங்கி நாவறண்டு நிற்றல் கலக்கம் (சங்கை)@ வழிநடைமுதலியவற்றால் உடல்வாடுதல் இளைப்பு (சிரமம்)@ அறிவு வலிமை முதலியவற்றையுடைமையினா லெழுகின்ற மனமகிழ்ச்சி உடைமை (திருதி)@ துன்பங்கண்டவழியும் துன்புதரு செய்தியைக் கேட்டபொழுதும் வினையொழிந்தயர்தல் கையாறு (ஜடதை)@ இன்பந்தருபொருளை வினையொழிந்தயர்தல் கையாறு (ஜடதை)@ இன்பந்தருபொருளை நினையுந்தோறும் உவகைக்கண்ணீரோடு இடையிட்டுத் தோன்றும் மனமகிழ்ச்சி இன்புறல் (ஹஷம்)@ மலர்ந்தநோக்கமின்றி மையனோக்கம்படவரும் இரக்கம் இடுக்கண் (தைந்யம்)@ பிறர்க்கு இன்னாசெய்து வெகுண்டெழுதல் நலிதல் (உக்கிரதை)@ கருதியது பெறாமையினால் அதனை யெண்ணியெண்ணி மனம் புண்ணாதல் ஒருதலையுள்ளுதல் (சிந்தனை)@ இடியேறு போல்வனவற்றால் வெருவிநிகழும் உள்ள நிகழ்ச்சி வெரூஉதல் (திராசம்)@ பிறர் செல்வங்கண்ட வழி மனம் பொறாது அலைவுறுதல் பொறாமை (அசூயை)@ நிந்தைச்சொல் முதலியவற்றால் முனிவுறுதல் முனிதல் (அமர்ஷயம்)@ குலப்பெருமை, கல்லாமை, இளமை முதலியவற்றால் எய்தும் உள்ள மிகுதி மிகை (கர்வம்)@ முன்னறிந்த பொருளை விருப்புற்று உள்ளுதல் நினைத்தல் (ஸ்மிருதி)@ சாக்காடு (மரணம்) (வெளிப்படையாதலின் இதற்கு வரைவிலக்கணம் வேண்டியதில்லையென ஆசிரியர் கூறிச் செல்வார்)@ கள்ளுண்டோனது நகையுங் களியாட்டும் களி (மதம்)@ நித்திரையில் வாய்வெருவுதல் கனவு (சுப்தம்)@ கண்மூடி உடல் நிமிர்த்தி அயர்ந்து உறங்குதல் துஞ்சல் (நித்திரை), கண்களைக் கசக்கிக் கொட்டாவிவிட்டுத் தூக்கத்திலிந்து எழுதல் இன்றுயிலுணர்தல் (விபோதம்)@ தீயவொழுக்கம் முதலியவற்றால் நாணிய வுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி நாணுதல் (விரீடை)@ உணர்விழந்து வாயினின்றும் நுரைசேர்ந்து கூம்ப நடுக்குற்று நிலத்தில் விழுந்து புரளுதல்; ஞஞ்ஞையுறுதல் (அபஸ்மாரம்)@ அச்சம் முதலியவற்றாற் கலக்கமுற்று ஒருபொருண்மேல் இருபொருட்டன்மைகருதி வரும் மனந்தடுமாற்றம் ஐயம் (மோகம்)@ கலைநூல் முதலியவற்றால் ஐயந்திரிபற உண்மையையுணர்ந்து பிறர்க்குரைத்தல் ஆராய்ச்சி (மதி)@ இளைப்பினாலோ வயிற்றிற் சூன்முதிர்ச்சி முதலிய ஏதுக்களாலோ தோன்றுகின்ற சோம்ப மடிமை (ஆலசியம்)@ அன்பும் அச்சமும் முதலாக உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ளநடுங்குதல் நடுக்கம் (ஆவேகம்)@ நிச்சயபுத்தியின்மையினாலே பன்முறையும் ஆலோசித்தல் கருதல் (தர்க்கம்)@ நாணுதல் முதலியவற்றால் உடலிற்றோன்றிய வேறுபாட்டைப் பிறர்காணாதபடிமறைத்தற்;கு நோயுறல் (வியாதி)@ பைத்திய நோயினாற் காரணமின்றி அழுதல், சிரித்தல் வார்த்தையாடல் மயக்கம் (உன்மத்தம்)@ இடர், பொறாமை முதலியவற்றால் மனம்புழுங்குதல் (விஷாதம்)@ காலதாமதமாவதை நினைத்துக் கலக்கமுற்று நெஞ்சு துடித்து அவசரப்படுதல் பரபரப்பு (உற்சுகம்)@ காமம் வெகுளி மயக்க முதலியவற்றால் மனந்தடுமாறல் சுழற்றி (சபலம்)

(வழிநிலையவிநயங்களைக் குறிப்பதற்கு யாம் மேலே வழங்கிய தமிழ்ப் பதங்களுட் பெரும்பாலன தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் கஉ-ம் சூத்திரத்து உரையினின்றும் எடுக்கப்பட்டன)

(“களித்தோ னவிநயங் கழறுங் காலை

யொளித்தவை யொளியா னுரைத்த லின்னையுங்

கவிழ்ந்துஞ் சோர்த்துந் தாழ்ந்துந் தளர்ந்தும்

வீழ்ந்த சொல்லோடு மழற்றிச் சாய்தலும்

களிகைக் கவர்ந்த கடைக்கணோக் குடைமையும்

பேரிசை யாளர் பேணினர் கொளலே@

தெய்வ முற்றோ னவிநயஞ் செப்பிற்

கைவிட் டெறிந்த கலக்க முடையையும்

மடித்தெயிறு கௌவிய வாயத்தொழி லுடைமையும்

துடித்த புருவமுந் துளங்கிய நிலையும்

செய்ய முகமுஞ் சேர்;ந்த செருக்கும்

எய்து மென்ப வியல்புணர்ந் தோரே@

ஞஞ்ஞை யுற்றோ னவிநய நாடிற்

பன்மென் றிறுகிய நாவழி வுடைமையும்

நுரைசேர்ந்து கூம்பும் வாயு நோக்கினர்க்

குரைப்பான் போல வுணர்வி லாமையும்

விழிப்போன் போல விழியா திருத்தலும்

விழுத்தக வுடைமையு மொழுக்கி லாமையும்

வயங்கிய திருமுக மழுங்கலும் பிறவும்

மேவிய தென்ப விளங்குமொழிப் புலவர்@

சிந்தையுடம் பட்டோ னவிநயந் தெரியின்

முந்தை யாயினு முணரா நிலைமையும்

பிடித்த கைம்மே லடைத்த கவினு

முடித்த லுறாத கரும நிலைமையும்

சொல்லுவது யாது முணரா நிலைமையும்

புல்லு மென்ப பொருந்து மொழிப் புலவர்@

இன்றுயி லுணர்ந்தோ னவிநய மியம்பி

லொன்றிய குறுங்கொட் டாவியு முயிர்ப்புந்

தூங்கிய முகமுந் துளங்கிய வுடம்பும்

ஒங்கிய திரிபு மொழிந்தவுங் கொளலே@

செத்தோ னவிநயஞ் செப்புங் காலை

யத்தக வச்சமு மழிப்பு மாக்கலுங்

கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப்

போந்ததுணி வுடைமையும் வலித்த வுறுப்பும்

மெலிந்த வகடு மென்மைமிக வுடைமையும்

வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலு

முண்மையிற் புலவ ருணர்ந்த வாறே@

மழைபெய்யப் பட்டோ னவிநயம் வகுக்கில்

இழிதக வுடைய வியல்புநனி யுடைமையும்

மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை

மெய்பூண் டொடுக்கிய முகத்தொடு புணர்தலு

மொளிப்படு மனனி லுலறிய கண்ணும்

விளியினுந் துளியினு மடிந்தசெவி யுடைமையும்

கொடுகிவிட் டெறிந்த குளிர்மிக வுடைமையும்

நடுங்கு பல்லொவி யுடைமையு முடியக்

கனவுகண் டாற்றா னெழுதலு முண்டே@

பனித்தலைப் பட்டோ னவிநயம் பகரி

னடுக்க முடைமையு நகைபடு நிலைமையுஞ்

சொற்றளர்ந் திசைத்தலு மற்றமி லவதியும்

போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும்

நீறாம் விழியுஞ் சேறு முனிதலு

மின்னவை பிறவு மிசைந்தனர் கொளலே@

உச்சிப் பொழுதின் வந்தோ னவிநயம்

எச்ச மின்றி யியம்புங் காலைச்

சொரியா நின்ற பெருந்துய ருழந்து

தெரியாநின்ற வுடம்பெரி யென்னச்

சிவந்த கண்ணு மயர்ந்த நோக்கமும்

பயந்த தென்ப பண்புணர்ந் தோரோ@

நாண முற்றோ னவிநய நாடின்

இறைஞ்சிய தலையும் மறைந்த செய்கையும்

வாடிய முகமுங் கோடிய வுடம்புங்

கெட்ட வொளியுங் கீழ்க்க ணோக்கமும்

ஒட்டின தென்ப வுணர்ந்திசி னோரே@

வருத்த முற்றோ னவிநயம் வகுப்பிற்

பொருத்த மில்லாப் புன்க ணுடைமையுஞ்

சோர்ந்த யாக்கையுஞ் சோர்ந்த முடியுங்

கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயர்வும்

வற்றிய வாயும் வணங்கிய வுறுப்பு

முற்ற தென்ப வுணர்ந்திசி னோரே@

கண்ணோ வுற்றோ னவிநயங் காட்டின்

நண்ணிய கண்ணீர்த் துளிவிரற் றெறித்தலும்

வளைந்தபுரு வத்தொடு வாடிய முகமும்

வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமுந்

தௌ;ளிதிற் புலவர் தெளிந்தனர் கொளலே@

தலைநோ வுற்றோ னவிநயஞ் சாற்றி

னிலைமை யின்றித் தலையாட் டுடைமையுங்

கோடிய விருக்கையுந் தளர்ந்த வேரொடு

பெருவிர லிடுக்கிய நுதலும் வருந்தி

யொடுங்கிய கண்ணொடு பிறவுந்

திருந்து மென்ப செந்நெறிப் புலவர்.

அழற்றிறம் பட்டோ னவிநய முரைப்பின்

நிழற்றிறம் வேண்டு நெறிமையின் விருப்பும்

அழலும் வெயிலுஞ் சுடரு மஞ்சலும்

நிழலு நீருஞ் சேறு முவத்தலும்

பனிநீ ருவப்பும் பாதிரித் தொடையலும்

நுனிவிர லீர மருநெறி யாக்கலும்

புக்க துன்பொடு புலர்ந்த யாக்கையுந்

தொக்க தென்ப துணிவறிந் தோரே@

சீத முற்மே னவிநயஞ் செப்பின்

ஓதிய பருவர லுள்ளமோ டுழத்தலும்

ஈர மாகிய போர்வை யுறுத்தலும்

ஆர வெயிலுழந் தழலும் வேண்டலும்

உரசியும் உரன்றும் உயிர்த்தும் உரைத்தலும்

தக்கன பிறவுஞ் சாற்றினர் புலவர்@

வெப்பி னவிநயம் விரிக்குங் காலைத்

தப்பில் கடைப்பிடித் தன்மையுந் தாகமும்

எரியி னன்ன வெம்மையொ டியைவும்

வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும்

நீருண் வேட்கையு நிரம்பா வலியும்

ஒருங் காலை யுணர்ந்தனர் கொளலே@

கொஞ்சிய மொழியிற் கூரெயிறு மடித்தலும்

பஞ்சியின் வாயிற் பனிநுரை கூம்பலும்

தஞ்க மாந்தர் தம்முக நோக்கியோ

ரின்சொலியம்புவான் போலியம் பான்மையும்

நஞ்சுண் டோன்ற னவிநா மென்க”

என அடியார்க்குநல்லார் காட்டியவற்றையும் உறுப்பியல் கூ - ம்பிரிவினுள் வந்தவற்றையும் ஈண்டு ஆராய்க)

32 - 37 நிர்வேதைமுதலிய வழிநிலையவிநயங்கள் தாமாக நிலை பெற்றுநிற்கும் ஆற்றலில்லாதனவாதலின், நிலைபெற்றுநின்று சுவையையளிக்கும் சுவைநிலைய விநயங்களைச் சார்ந்து அவற்றுண் மறைந்துநிற்குமியல்பின. வினைமொழியுங் காரகபதமுஞ் சேர்ந்து வாக்கியத்தொடராமாறுபோலச் சுவைநிலையவிநயங்களோடு விழிநி நிலையவிநயங்களும் பிறவுஞ் சேர்ந்து நாட்டியச்சுவையைப் பிறப்பிக்கின்றன. இன்பச்சுவையவிநயம் (இரதி), வீரச்சுவையவிநயம் (உற்சாகம்), இழிப்புச் சுவையவிநயம் (ஜுகுப்ஸை) வெகுளிச்சுவையவிநயம் (குரோதம்), நகைச்சுவையவிநயம் (ஹாசம்), வியப்புச்சுவையவிநயம் (ஸ்மயம்), அச்சச்சுவையவிநயம் (பயம்), அவலச்சுவையவிநயம் (சோகம்), எனச் சுவைநிலையவிநயம் எண்வகைய. நடுவுநிலைய விநயத்தையுஞ் (சமநிலையவிநயத்தையுஞ்) சிலர் கொள்வார். இது நாடகவழக்கினுள் வருவதில்லை. உலகவாழ்க்கையில் மனதுக்கினியாளோடு (ரமணியோ) கூடியிருக்குங்கால் உள்ளத்திற் சுவை தோற்றுவதுபோல நாடகச்சுவையை யனுபவிக்கும் ஆற்றலுடைய ரஸிகனுக்கு எண்வகைச்சுவைநிலையவிநயங்களுஞ் சுவையைப் பயப்பன.

38 - 40 (காவியார்த்தத்தை யுணர்ந்து நடிப்போர் தாமும் சுவையை யநுபவிப்பாரென்பது)

41 - 42 காவியார்த்தத்தை யுணரும்போது மனத்தில் எழும் உணர்ச்சி நால்வகைத்து, அவையாவன: மலர்ச்சி, உயர்ச்சி, அசைவு, கலக்கம் என்பன. உவகை (சிருங்காரம்), பெருமிதம் (வீரம்), இளிவரல் (பீபற்சம்), வெகுளி (உருத்திரம்) என்னும் நான்குசுவையும் குறித்த நால்வகையுணர்ச்சிகளையும் முறையே தருவன. நகை (ஹாஸ்யம்), மருட்கை (அற்புதம்), அச்சம் (பயோற்கர்ஷம்) அவலம் (கருணை) என்னும் நான்கும் குறித்த நான்கு உணர்ச்சிகளையுமே முறையே தருவனவாதலின் உவகையினின்று நகையும், பெருமிதத்தினின்று மருட்கையும், இளிவரலினின்று அச்சமும், வெகுளியினின்று அவலமும் தோன்றினவென்பது பொருத்தமாகும்.

43 - 44 சுவைப்பொருள் (விபாவம்) முதலியன ஒன்றாந்தன்மை பற்றிச் சுவையும் (ரசமும்) சுவைநிலையவிநயமும் (ஸ்தாயிபாவமும்) ஒரேயிலக்கணத்தையுடையன. சந்திரிகை (இளந்தென்றல்) ஆதிய சுவைப்பொருளும். மெய்மயிர்சிலிர்த்தல் (ரோமாஞ்சம்) அதிய சத்துவப்பாவமும், நிர்வேதை முதலிய வழிநிலையவிநயமும் காரணமாகத் தோன்றும் சுவைநிலையவிநயத்தினின்று சுவை பிறக்கும்.

45. மனத்துக்கு ரம்மியத்தைத்தரும் தேசம், கலை, காலம், வேஷம், போகம் என்பவற்றினின்று உவகை பிறக்கும். இளமைச் செவ்வி வாய்ந்த ஓர் ஆடவனுஞ் சேயிழையும் ஒருவர்மேலொருவர்வைத்த உளம் நிறைந்த காதலை மெல்லென்ற குறிப்பினால் வெளிப்படுத்திக் காட்டுமிடத்து உவகை (சிருங்கார)ச் சுவை பிறக்கும்.

46. இதனை விரித்து நாட்டியக்கட்டுரையியற்றுமிடத்து எண்வகை விறலும் எண்வகைச் சுவைநிலையவிநயமும் முப்பத்துமூன்றுவகை வழிநிலையவிநயமும் என்பனவற்றை நண்ணுணர்வால் ஆராய்ந்து நெறி தவறா தமைக்க வேண்டும். மடிமை (ஆலசியம்), நலிதல் (உக்கிரதை), சாக்காடு (மரணம்), இளிவரல் (ஜுகுப்ஸை) என்னும் இவை ஒரே (கைசிகி) விருத்தியையுடைய உவகைச்சுவை நாட்டியக்கட்டுரையினுள் வருதல் கூடாது.

47. உள்ளப்புணர்ச்சி (அயோகம்), பிரிவு (விப்பிரயோகம்) கூட்டம் (சம்போகம்) என்னும் மூன்றும் நிலைக்களனாக உவகைச்சுவை பிறக்கும். உளம் நிறைந்தகாதல ரிருவர் தெய்வச் செயலினாலோ, பிறரிடைநிற்பதனாலோ கூட்டம் எய்தப் பெறாராய் ஒருவரை யொருவர் நினைந்து உருகுவது உள்ளப்புணர்ச்சி (அயோகம்) ஆகும்.

48 - 52 இது பத்து நிலைகளையுடையது. (ஆசிரியர் தொல்காப்பியனார் ஒன்பது கூறினார். இவ்வாசிரியர் உடலிற் சுரநோயுறுதல் (சஞ்சுவரம்) என்னும் ஒன்று சேர்த்துப் பத்தாக்கினார்.)

“வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலிதல்

ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல்

நோக்குவ வெல்லா மவையே போறல்

மறத்தல் மயக்கஞ் சாக்கா டென்றச்

சிறப்புடை மாபினவை களவென மொழிப”

(தொல். பொருள். களவியல். கூ)

காதலுக்குரியாரது எழில்நிறைந்த அவயவநலனைக் கண்ணினாற் கண்டோ, கனவினாற் கண்டோ, ஒவியத்திற் கண்டோ, பாணன் தோழிமுதலினோர் சொல்லக்கோட்டோ காதலாற் கூட்டம்விழைதல் ஒருதலைவேட்கை (அபிலாஷம்), இடைவிடாது ஒருவரையொருவர் சிந்தித்தல் ஒருதலையுள்ளுதல் (சிந்தனை) உள்ளுங்காரணத்தால் வாட்டமடைதல் மெலிதல் (உத்வேகம்), காதலனது அல்லது காதலியது நற்குணங்களை யொவ்வொன்றா யெடுத்துக்கூறுவது ஆக்கஞ் செப்பல் (குணகதா) ஆற்றுந் துணையும் நாணி அல்லாதவழி வரையிறந்து அரற்றுதல் நாணுவரையிறத்தல் (பிரலாபம்), விளையாட்டு முதலியவற்றை மறந்து வினையொழிந்தயர்தல் மறத்தல் (ஜடதை), செய்திறனறிந்து கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற்றோடு கூறல் மயக்கம் (உன்மாதம்), மடலேறுதலும் வரைபாய்தலும் போல்வன கூறல் சாக்காடு (மரணம்)

(ஆசிரியர் அபிலாஷம், சிந்தனை யென்னும் இரண்டினுக்கும் இலக்கணங்கூறி ஏனையவற்றை யுய்த்துணருமாறு விடுத்தார். யாம் மேலே கூறிய இலக்கணங்கள் பொருளதிகாரவுரையினின்று மெடுக்கப் பட்டன. அயோகம் மெய்யுறுபுணர்ச்சியாகிய கூட்டம் இன்மை, கூட்டமின்மையென மொழிபெயர்க்கின் உள்ளப்புணர்ச்சியும் விலக்குண்ணு மாதலானும் இது உள்ளப்புணர்ச்சிக்குரிய இலக்கணமனைத்தும் பெற்றுவரலானுமிதனை உள்ளப் புணர்ச்சியெனக் குறியீடு செய்தது பொருந்துமாற்றிக)

53 - 65 (ஊடலும், கூடலும், பிரிவும் என்னும் இவற்றா லெழும் ஐந்தினையின்பத்தைப் பதின்மூன்று சூத்திரங்களாற் கூறுகின்றார். தொல்காப்பியம், அன்பினைந்திணை, நம்பியகப்பொருள், வீரசோழியம், இலக்கணவிளக்கம் என்னுந் தமிழ்நூல்களுள் இப்பொருள் விரிவாகக் கூறப்பட்டிருத்தலால் இச்சூத்திரங்களை மொழிபெயர்க்காது விடுகின்றோம்)

66. (வீரம், நன்னடை, விநயம். மலர்ச்சி, வலிமை யென் றின்னவற்றைச் சுவைப் பொருளாகவும், தயைக்குறிப்பு, போர்க்குறிப்பு, கொடைக்குறிப்பு என்றின்னவற்றைக் குறிப்பாகவும், ஆராய்ச்சி, மிகை, உடைமை, இன்புறல் என் றின்னவற்றை வழிநிலையவிநயமாகவுங் கொண்டு பெருமிதச்சுவை தோற்றும்.

67 இழிவுகாரணமாக இளிவரல் தோற்றும். கீடம். கிருமி, மலம், என்பு, மச்சை யென்பன இளிவரற்சுவைப் பொருட்களாம்@ துறந்தார்க்கு மகளிரது தனம் சகனம் முதலிய உறுப்புக்களும் இளிவரற் பொருள்களாம். மூக்கினைச் சுழித்தல் போன்ற குறிப்புக்களும் நடுக்கம், கலக்கம், நோயுறல் போன்ற வழி நிலையவிநயங்களும் இளிவரலைச் சார்ந்து நிற்பன.

68. கோபம். வெறுப்பு என்பனவற்றைச் சுவைப்பொருளாகவும், பற்கடித்தல், உடனடுங்குதல், கண்சுழித்தல், வேர்த்தல், முகஞ்சிவத்தல், ஆயுதமெடுத்தல், தோள்தட்டுதல், பூமியையறைதல், வஞ்சினங்கூறல் என்னு மிவற்றைக் குறிப்பாகவும்@ முனிதல், நினைதல், மனந்தடுமாறல், ஆற்றமை, நலிதல், நடுக்கம் என் றின்னவற்றை வழிநிலையவிநயமாகவும் கொண்டு வெகுளிச்சுவை தோற்றும்.

69 - 71 நகைக்குறிப்போடுமருவிய உரை, செயல், வேடம் என்றின்னவற்றைப் பொருளாகக் கொண்டு தோன்றும் நகையானது மறுவல் (ஸ்மிதம்), புன்னகை (ஹசிதம்). மெல்லச்சிரித்தல் (விஹசிதம்), அளவேசிரித்தல் (உபஹசிதம்), பெருகச்சிரித்தல் (அபஹசிதம்), ஆர்ப்பொடு சிரித்தல் (அதிஹசிதம்) என அறுவகைப்பட்டு நித்திரை, மடிமை, இளைப்பு, களைப்பு, அயர்ச்சி யென்னும் வழி நிலையவிநயங்களோடு நடக்கும். அறுவகைநகையினுண் முதலிரண்டும் தலையாயினாருக்கும். நடுவிரண்டும் இடையாயிருக்கும், இறுதியிரண்டும் கடையாயினாருக்கு முரியன.

72 - 73 இயற்கைக்கு மாறுபட்ட பொருட்களைச் சுவைப்பொருளாகவும்@ அதிசயக்குறிப்பு, கண்ணீர்வார்தல் நாத்தடுமாறல் என்னுமிவற்றைக் குறிப்பாகவும்@ இன்புறல், உடைமை, நடுக்கம் என்னுமிவற்றை வழிநிலையவிநயமாகவுங் கொண்டு மருட்கைச்சுவை நடக்கும்.

74. அஞ்சுதக்கனபொருளாகக் குரல்வேறுபடுதல், உடல் சோர்தல், வினையொழிந்தயர்தல் என்னு மிவை குறிப்பாக இடுக்கண், நடுக்கம், ஐயம், வெரூஉதல் என்னும் வழிநிலையவிநயங்களோடு அச்சச்சுவை தோற்றும்.

75 - 76 காதலித்தபொருளை யிழத்தலும் வேண்டாததனைப் பெறுதலும் சுவைப்பொருளாக@ நெட்டுயிர்ப்பெறிதல், கண்ணீர் வார்தல், செயலற்றிருத்தல். அழுதல் குறிப்பாக. துஞ்சல், இடுக்கண், நோயுறல், சாக்காடு, மடிமை, நடுக்கம், வியர்த்தல், கையாறு, மயக்கம் ஒருதலையுள்ளுதல், என்னுமிவை வழிநிலையவிநயங்களாக அவலச்சுவை தோற்றும்.

77. நட்பு பக்தி என் றின்னவற்றையும் சூதாடல், வேட்டையாடல் போன்றவற்றையும் இந்நூலினுட் கூறினோமல்லேமாயினும் அவை இன்புறல் பெருமிதம் என் றின்னவற்றை அடங்கும் வழியறிந் தடக்கிக் கொள்க.

78. பூஷணாதி சாம பேத தனா தண்ட முதலியன. சந்தி யந்தரம், அலங்காரம் என் றின்னவற்றை அடங்கும் வழியறிந் தடக்கிக் கொள்க.

79. உவகைப்பொருளோ, இளிவரற்பொருளோ, உயர்ந்த பொருளோ, தாழ்ந்தபொருளோ, வன்கண்ணதோ, அருட்பாலதோ, பழங்கதையோ, கற்பனைக்கதையோ, எதையும் மானிடர்க்குச் சுவை பயக்கும்படி நாட்டியக்கட்டுரையினுள் அமைத்துக் கூறுதல் கூடும்.

80 விஷ்ணுவின் புதல்வனாகிய தனஞ்சயன். முஞ்சமகிபதியோடு கலந்து வார்த்தையாடிய காரணத்தினா லடைந்த புத்திக்கூர்மையைக் கொண்டு, வித்துவான்களது உள்ளத்தைக்கவரும் (நாட்டியக் கட்டுரை) நூல்கள் பிறப்பதற்கு ஏதுவாகிய தசரூபம் என்னு மிந் நூலினையியற்றி யுலகுக்கு அளித்தான்.

ரு. ஆங்கிலமகாகவியாகிய செகசிற்பியா ரியற்றிய நாடகங்களுள்ளும், வடநூற் பெரும்புலவராகிய தனஞ்சயனார் இயற்றிய தசரூபத் துள்ளும் பொதிந்துகிடந்த நாடகலºணங்களையியன்றவரை யாராய்ந்துணர்ந்தனம். இனி, நிறைவுநோக்கி அருந்தமிழ் நூல்களுட் பரந்து கிடக்கும் இசைநாடகமுடிபுகளுள் இயற்றமிழாராய்ச்சிக்கு இன்றியமையாதனவற்றை நான்குபிரிவாகத் தொகுத்துக் கூறுவாம்.

யாப்பியற்பாலவாகிய சொல்வகையும் வண்ணமும் உறுப்பியலுட் கூறப்பட்டன. இயலிசை நாடகப்பொருட்டொடர்நிலைச் செய்யுளாகிய சிலப்பதிகாரத்தினுள் கானல்வரி, வேட்டுவரி, ஊர்சூழ்வரி என மூன்று வரிப்பாடலும், ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை எனவிரண்டு குரவைப் பாடலும் வருகின்றன. இவ்வைந்தும் முறையே நெய்தல், பாலை, மருதம், முல்லை, குறிஞ்சி யென்னும் ஐவகைநிலனையும் சார்ந்து நிற்றலை நோக்குக “குரவை யென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் விறலும், எய்த வுரைக்கு மயில்பிற் றென்ப” எனவும் “வரியெனப் படுவது வகுக்குங் காலைப், பிறந்த நிலனுஞ் சிறந்த தொழிலும். அறியக் கூறி யாற்றுழி வழங்கல்” எனவும் கூறினாராகலின். இவை தம்முள்ளே வேறுபட்டமை காண்க. மேற்கூறியபடி வரியாவது அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையுந் தோன்ற நடித்தல். ஒருவர்கூட்டவன்றித் தானேவந்து நிற்கும் நிலைமை கண்கூடுவரி@ வந்தபின்னர் மனமகிழ்வுறவனவற்றைத் தந்து நீங்குகின்றதன்மை காண்வரி@ அரசர் பிறருருவங்கொண்டு ஆடுதலும், தலைமகளொருத்தி தனது சிலதியர்கோலத்தைக் கொண்டு தான் தனித்து வந்துநின்று நடிப்பதும் உள்வரி@ தலைவன் முன்னிலையில் வாராது புறம்பேநின்று நடித்த நடிப்பு புறவரி@ நடுநின்றார் இருவருக்குஞ் சந்து சொல்லக்கேட்டுநிற்பது கிளர்வரி@ நாயகனது சுற்றத்தினருக்குத் தன்றுன்பங்களைத் தேடித்தேடிச்; சொல்லுதல் தேர்ச்சிவரி@ தனது வருத்தத்தைப் பலருங் காணும்படி நடித்தல் காட்சிவரி@ தான் கையறவெய்தி வீழ்ந்தாளாக வீழ்ந்து பிறர்எடுத்துக் கொள்ளும்படி நடித்தல் எடுத்துக்கோள்வரி@ இவையனைத்தும் தனித்; தொருவர் நடித்தநடிப்பாகக் கூறப்பட்டிருக்கின்றமை காண்க. குரவைக் கூத்துக் காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனுங் கைபிணைத்தாடுவது. குரவைக்கூத்துக்குக் குரவைச் செய்யுள் பாட்டாயினவாறு போல வரிக்கூத்துக்குப் பாட்டாகவருவது வரிப்பாடல். இது அறுவகைப்பாவினுட் கலிப்பாவின் பாற்படும். யாப்பியல் வல்லார் இதனை முகமுடைவரி, முகமில்வரி, படைப்புவரி யென் மூவகைப்படுத்தும் பிறவாற்றாலும் ஆராய்வர். பொருணோக்கி யாராயுங்கால் திணைக்குரியப் பொருளைச் சார்ந்து நிற்கும் திணைநிலைவரியும் கருப்பொருட்பாலவாகிய ஆறு, பாட்டுடைத்தலைவன்பதி யென்றின்னவற்றைச் சார்ந்து நிற்கும் திணைநிலைவரியும் கருப்பொருட்பாலவாகிய ஆறு, பாட்டுடைத்தலைவன்பதி யென்றின்னவற்றைச்சார்ந்து நிற்கும் இணைநிலைவரியுமென இருவகையாவாம். செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகுமண்டிலம் என வந்த பத்துவகையிசைப்பாக்களுள் ஆற்றுவரியுங் கானல்வரியும் வருதல் காண்க.

நாடகங்களுக்குப் பாட்டுவகுக்குங்கால் அகநாடகங்களுக்குரிய உருகந்த முதலாகப் பிரபந்தமீறாக இருபத்தெட்டு எனவும், புறநாடகங்களுக்குரிய உரு தேவபாணி முதலாக அரங்கொழிசெய்யு ளீறாகச் செந்துறைவிகற்பங்களெல்லா மெனவுங் கூறுப@ இவையெல்லாம் இசைத் தமிழ்ப்பால. தாழ்ந்துசெல்லும் இயக்கத்தையுடைய முதனடை, சொல்லொழுக்கமும் இசையொழுக்கமுமுடைய வாரம், சொற் செறிவும் இசைச் செறிவுமுடைய கூடை, முடுகியசெலவினையுடைய திரள் என்னும் நால்வகைச் செய்யுளியக்கமும் இசைத்தமிழின் பால.

கூ. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என நின்று முறையே நான்கு, நான்கு, மூன்று, இரண்டு, நான்கு, மூன்று, இரண்டு என்னும் மாத்திரையளவுகள் பெற்றுவரும் ஏழிசைகளும், இவற்றினுள் ஒன்றினை மற்றொன்றாகத் திரிக்கும் மரபும், தாரத்து உழைதோன்றப் பாலையாழ் ஆவதும், உழையினுட் குரல்தோன்றக் குறிஞ்சியாழ் ஆவதும், இளி குரலிற்றோன்ற மருதயாழ் ஆவதும், துத்தம் இளியிற்பிறக்க நெய்தல்யாழ் (செவ்வழியாழ்) ஆவதும், பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி யென்னும் நான்கு யாழ்களினது அகநிலை பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி யென்னும் பண்களாவதும், இவற்றது புறநிலை தேவாளி, செந்து, ஆகரி, வேளாவளி என்னும் பண்களாவதும், இவற்றது அருகியல் சீர்கோடிகம், மண்டிலம், சாயவேளர் கொல்லி, சீராகம் என்னும் பண்களாவதும், இவற்றதுபெருகியல் நாகராகம். அரி, கின்னரம், சந்தி யென்னும் பண்களாவதும், குரல்;குரலாகிய செம்பாலை துத்தங்குரலாகிய படுமலைப்பாலை கைக்கிளைகுரலாகிய கொடிப்பாலை விளரிகுரலாகிய விளரிப்பாலை தாரம் குரலாகிய மேற்செம்பாலை யென்னும் ஏழு வகைப்பாலையும், ஆயப் பாலை சதுரப்பாலை திரிகோணப் பாலை வட்டப்பாலை யென்னும் நால்வகைப் பாலையும், கொட்டு மசையுந் தூக்கு மளவு மொட்டப் புணர்க்கும் பாணியும், செந்தூக்கு (ஒருசீர்), மதலைத்தூக்கு (இருசீர்), துணிபுத்தூக்கு (முச்சீர்), கோயிற்றூக்கு (நாற்சீர்) நிவப்புத்தூக்கு (ஐஞ்சீர்), கழாற்றூக்கு (அறுசீர்), நெடுந்தூக்கு (எழுசீர்) என்னும் எழுவகைத்தூக்கும், இணை கிளை பகை நட்பு என்னும் நரம்பினியல்பும், யாழ் குழல் சீர் மிடறு என்னும் நான்கினியல்பும், செம்பகை ஆர்ப்பு அதிர்வு கூடம் என்னும் நால்வகைக்குற்றமும், பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் செலவு விளையாட்டு கையூழ் குறும்போக்கு என்னும் எண்வகைக் கலைத்தொழிலும் பிறவும் இசை நூலிற் கூறியிருக்கும் மரபறிந்து அமைத்துக் கொள்க.

எ. அரங்கினமைதியை யாராய்வாம். அரங்கிற்கு நிலம்வகுத்துக் கொள்ளுமிடத்துத் “தெய்வத்தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கூபமும் குளனும் காவு முதலாக வுடையன அழியாத இயல்பினை யுடைத்தாய் நிறுக்கப்பட்ட குழிப்பூழி குழிக்கொத்துக் கல்லப்பட்ட மண் நாற்றமும் மதுரநாறி இரதமும் மதுரமாகித் தானுந் தண்ணிதாய் என்பும் உமியும் கல்லும் பரலுஞ் சேர்ந்த நிலம் களித்தரை உவர்த்தரை ஈரத்தரை பொல்லாச் சாம்பற்றரை பொடித்தரை யென்று சொல்லப்பட்டன வொழிந்து ஊரின் நடுவணதாகித தேரோடும் வீதிகளெதிர் முகமாக்கிக் கொள்ளல் வேண்டும்மென்க. அரங்கினளவு ஏழுகோலகலமும் எட்டுக்கோல்நீளமும் மூன்றுகோல் உயரமு மிருத்தல் வேண்டுமெனவும் (கோல் - இருபத்துநான்கு அங்குலம்) அரங்கின்மேலிட்ட பலகைக்கும் அரங்கத்தூண்மேலமைத்த உத்தரப்பலகைக்கும் இடைவெளித்தூரம் நான்குகோலிருக்க வேண்டுமெனவும், இடத்தூணிலையிடத்தே உருவுதிரையாய் ஒருமுகவெழினியும், இரண்டுவலத்தூணிடத்தும் உருவுதிரையாய்ப் பொருமுகவெழினியும் மேற்கட்டுத்திரையாகக் கரந்துவர லெழினியுங் கட்டப் படவேண்டுமெனவும் பண்டையோர் கூறுவர். பண்டைக்காலத்து அரங்கத்தில், பிரம ºத்திரிய வைசிய சூத்திரர் என்னும் நால்வகை வருணத்தாரது தொழில் உருவம் என்னும் இவற்றைக் குறிப்பிட வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன் என்னும் நால்வகை வருணப்பூதருடைய உருவங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன@ தூண்களின் நிழல் நாயகப்பத்தியின் கண்ணும் அவையின் கண்ணும் படாதபடி மாட்சிமைக்கப்பட்ட நிலைவிளக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஈண்டுக்கூறிய அளவு எழினி முதலியன நாடகக் கணிகை யாடுதற்குரிய அரங்கத்துக்காகும். இத்தகைய அரங்கத்தினுள் நலந்தருறாளிலர் வலக்கண் முன்மிதித்தேறி வலத்தூண் சேர்ந்து நிற்றல் அரங்கேறுகின்ற நாடகக்கணிகைக்கு வழக்கு எனப் பண்டையோர் கூறுவர். அவிநயத்தோடு நாட்டிச் செய்யும் கையினது இலக்கணத்தையும் பிணையல் என்னும் இரண்டினுள், பிண்டி முப்பத்து மூன்று வகைப்படும். அவையாவன:- பதாகை, திரிபதாகை, கத்தரிகை, தூபம், அராளம், இளம்பிறை, சுகதுண்டம், முட்டி, கடகம், சூசி, கமலகோசிகம், காங்கூலம், கபித்தம், விற்பிடி, குடங்கை, அலாபத்திரம், பிரமரம், தாம்பிரசூடம், பசாசம், குமுளம். பிண்டி, தெரிநிலை, மெய்ந்நிலை, உன்னம், மண்டலம், சதுரம், மான்றலை, சங்கு. வண்டு, இலதை, கபோதம், மகரமுகம், வலம்புரி என்பனவாம். பிணையல் பதினைந்து வகைப்படும். அவையாவன:- அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கற்கடகம், சுவத்திகம், கடகா வருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்தமானம் என்பனவாம்.

ஒற்றுமைபற்றி அகக்கூத்துக்குரிய ஆடல்களையும் புறக்கூத்துக்குரிய ஆடல்களையும் ஈண்டுத் தருவாம். கீற்று, கடிசரி, மண்டலம். வர்த்தனை, கரணம், ஆலீடம், குஞ்சிப்பு, கட்டுப்புரியம், களியம், உள்ளாளம், கட்டுதல். கம்பித்தல். ஊர்தல், நடுங்கல், வாங்குதல், அப்புதல், அனுக்குதல், வாசிப்பு, குத்துதல், நெளிதல், மாறுகால், இட்டுப்புகுதல், சுற்றிவாங்குதல், உடற்புரிவு என்னுந் தேசிக்குரிய கால்கள் இருபத்து நான்கும்@ சுற்றுதல், எறிதல், உடைத்தல், ஒட்டுதல், கட்டுதல், வெட்டுதல், போக்கல், நீக்கல், முறுக்கல், அனுக்கல், வீசல், குடுப்புக்கால், கத்திரிகைக்கால். கூட்டுதல் என்னும் வடுகிற குரிய கால்கள் பதினான்கும்@ மெய்சாய்த்தல், இடைநெரித்தல், சுழித்தல், அணைத்தல், தூங்குதல், அசைத்தல், பற்றல், விரித்தல், குவித்தல் என்னும் உடலவர்த்தனைகள் ஒன்பதும் அகக்கூத்துக்குரிய ஆடல்களாம். புறக்கூத்துக்குரிய ஆடல்களாவன: - பதினோராடலும் பெருநடை சரியை பிரமரி முதலாயினவுமாம்.

அ. “நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்” என்றாராகலின், பொருளாதாரத்தினுள் வகுத்துக் கூறிய புறத்திணை ஒழுக்கங்களும், முல்லை குறிஞ்சி மருதம்; நெய்தல் என்னும் நால்வகை நிலனும் பெரும்பொழுதாறும் சிறுபொழுதாறும், களவு கற்பு என்னுங் கைகோளிரண்டும், பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி தலைமகன் தலைமகள் எனக் களவினுட் கிளவிக்குரியார் அறுவரும், பார்ப்பார் முதலிய அறுவரோடு பாணன் கூத்தன் விறலி பரத்தை அறிவர் கண்டோர் என நின்ற கற்பினுட் கிளவிக்குரியார் பன்னிருவரும், இயற்கைப்புணர்ச்சி பாங்கற்கூட்டம் இடந்தலைப்பாடு மதியுடம்படுத்தல். இருவருமுள் வழியவன்வரவுணர்தல்;;;;;;; முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல் நாணநாட்டம் நடுங்க நாட்டம் மடற்றுறை குறை நயப்புத்துறை சேட்படை பகற்குறி இரவுக்குறி ஒருவழித்தணத்தல் உடன்போக்கு வரைவுமுடுக்கம் வரை பொருட்பிரிவு மணஞ்சிறப்புரைத்தல் கல்வியிற்பிரிவு பரத்தையிற்பிரிதல் என்னும் அகவொழுக்கங்களும் பிறவும் நாடகவழக்குக்கும் ஏற்புடையன.

அரங்கத்திலே புகுந்து நடிக்கின்ற கூத்தற்கு உருவும் உறுப்பும் கரணமும் பயனும் தொழிலும் அமைந்தவாறே, அசித்துப்பிரபஞ்சம் நூலவுருவமாகவும், சித்துப்பிரபஞ்சம் உறுப்புக்களாகவும், இச்சை ஞானக்கிரியைகள் கரணமாகவும், உயிர்கட்கு அறிவினை யாக்கி வைத்தல் பயனாகவும், பஞ்சகிருத்தியவிரிவே தொழிலாகவும் அமைந்துநின்று சிதாகாசமாகிய அரங்கத்து நடிக்கும் பரமநாடகனாகிய முதல்வனை மனமொழி மெய்யினாற் சிந்தித்துத் துதித்து வணங்கி இவ்வாராய்ச்சியை முடிக்கின்றோம்.

“காரணிகற்பகங்கற்றவர் நற்றுணைபாணரொக்கல்

சீரணிசிந்தாமணியணிதில்லைச் சிவனடிக்குத்

தாரணிகொன்றை யன்றக்கோர் தஞ்சங்கநிதிவிதிசே

ரூருணியுற்றவர்க் கூரன்மற்றியாவர்க்குமூதியமே”

செய்யுண் முதற்குறிப்பகராதி

(எண்கள் பக்கங்களைக் குறிப்பன.)

அகல்வானெ 36

அங்கணுல ஐஓ

அச்சவலி 9

அஞ்சினர்க்கு 59

அடலரியே ஓ

அண்ணனீர் 59

அணங்கேவிலங் 9

அந்தணர் வேள்வி ஐஓ

அரவிந்தமெல் 24

அவலத்தவிநய 8

அவைதாம், நாடக 13

அழுற்றிறம்பட்டோ 98

அழுக்காறுடை 12

அற்புதவவி 9

அறம்பொருள்வா 13

அறம்பொருளின்பம் 13

அறம்பொருளின்பம்வீ12

அறமுதனான்கு 13

அறமேற் 13

அன்புக் 11

அன்புநிலை 23

ஆங்கவையொருபா 5

இமையோர்தேஎத்து ஓஐ

இரங்குதிரென்ன 60

இரம்மிய 36

இருவகைநிலத்தி 6

இழிப்பினவி 8

இளிவே 8

இன்பமொடு 11

இன்றுயிலுணர்ந் 97

இன்னலும்யா 59

இன்னிசைக்கு 43

உச்சிப்பொழு 98

உலகத்தோ 11

உவந்தோ 11

உள்ளோர்க் 13

உறினட் 2

உறுப்பறை 10

எல்லைவந்த ஐஓ

எழுமுறையெரி 54

எள்ளலிளமை 7

ஒருமையுளா 11

கடையமயிராணி 13

கண்ணோவுற்றோ 98

கதங்காத்து 11

கல்விதறுகண் 9

களித்தோனவி 96

காமவவிநய 10

காரணிகற்பகம் 107

குரவையென்பது 103

கெடுங்காலை 3

கொஞ்சியமொழி 99

சந்தியிற்றொடர்ந் 2

சாந்திக்கூத்தே 1

சிந்தையுடம்பட்டோ 97

சீதமுற்றோ 99

செங்சாந்தே 10

செத்தோனவி 97

செய்தேமஞ் 2

செல்வம்புல 10

ஞஞ்ஞையுற்றோ 97

தலைநோவுற் 98

தாழ்ந்துமென் 59

துஞ்சாநின் 12

தெய்வத்தானமு 105

தெய்வமுற்றோ 97

நகையினவி 8

நகையேயழுகை 5

நாட்டுங்காலை 11

நாடகவழக்கினு 106

நாணமுற்றோனவி 98

நாலிரண்டாகும் 7

பண்ணியையு ஓ

பண்ணைத்தோன்றிய 5

பனித்தலைப்பட்டோ 98

புதுமை பெருமை 8

புன்கண்ணீர் 24

பேரிரவில் 58

பொய்யில் 12

மஞ்சட்; 42

மடியினவி 12

மணிமருள்வாய் ஐஓ

மழைபெய்யப்பட் 97

மாயோன் பாணியு 13

மாலைவந்தடையு 22

மாற்றானொடுக்க 1

மின்னுவவெல் 53

முலங்க ஐஓ

முதுமையுற ஓ

மூப்பே பிணி 8

மையறீர் 54

யாதிங்குள்ள 54

வட்டவுரு ஓ

வடவேங்கடந் ஓஐ

வண்ணந்தானே 16

வரியெனப்படு 105

வருத்தமுற்றோனவி 98

வன்பொறை 55

வாட்புண் 35

வானகத்ததோ

விலக்குறுப்பு 16

வீரச்சுவையவி 10

வெகுண்டோனவி 18

வெப்பினிவிநயம் 99

வேட்கையொருதலை 100

வேலோன்கை 24

அரும்பத முதலியவற்றினகராதி

அகத்துக்குரிய

ஆடல் 106

அகத்திணை 5

அகத்தியம் ஓஐ

அகநிலை 104

அகப்பாட்டுவண்ணம் 16

அகவொழுக்கங்கள் நாடக வழக்கிற்கும்

ஏற்புடையன 106

அகிஞ்சனன் 51, 55

அங்கம் 18, 77, 90

அங்கனை 51, 55

அங்காசியம் 82

அங்காவதாரம் 82

அச்சச்சுவை 4,9

அச்சச்சுவை

உற்பத்தி 102

அச்சம் 5, 17

அச்சவவிநயம் 9

அச்சேதகாரணம் 78

அசற்பிரலாபம் 89

அசைவு

அட்டோலிக்கன் 71

அடியார்க்கு நல்லார் ஓஐஐ

அதிசூரன் 19

அதிபலம் 80, 89

அந்தணர்சாதி 13

அந்தணன் 70

அநந்தசாபலசரிதம் 57

அநந்தன் 50

அநலவர்மன் 46

அநாகுலன் 41

அநிருத்தன் ஓஐஐஇ 14

அநுபாவம் 94

அநுமானம் 80

அபயன் 20, 21, 22

அபவாதம் 81

அபஸ்மாரம் 96

அபவாரிதம் 82

அபிசாரிகை 76, 84

அபிலாஷம் 101

அபூதாகரணம் 80

அம்பா 87

அமர்ஷம் 96

அமலதேவன் 63

அயிராணி 69

அயோகம் 100

அர்த்தப்பிரகிருதி 78

அர்த்தோபஷேபகம் 82

அரங்கினமைதி 105

அரங்கினளவு 105

அரசர்சாதி 13

அரசன் 3

அரம்பை

அரமனை 18

அரற்று 11

அரன் 13

அரி 104

அரிவர்மன் 28

அருகியல் 104

அரும்பாலை 104

அருளல் 11

அல்லியம் 13

அலாயுதன் 40

அவகித்தை 96

அவபாதனம் 86

அவமர்சம் 79

அவலச்சுவை 4, 8, 28,33,

அவலச்சுவைஉற்பத்தி102

அவலத்தவிநயம் 8

அவலம் 17, 33

அவஸ்தை 79

அவாந்தரார்த்தம் 78

அவிநயம் 2, 4, 7, 16

அவிநயக்கூத்து 77

அவையடக்கியல் 88

அழற்றிறப்பட்டோ

னவிநயம் 12

அழுகை 5, 8

அளபெடைவண்ணம் 16

அற்புதம் 84

அற்புதச்சுவை 4

அற்புதவவிநயம் 9

அறிவனார் 11

அன்பினைந்திணை 101

அஜ்ஜுகா 87

அஸ்ரு 95

அஸ{யை 96

ஆக்கம் 45

ஆகண்டலன் 69

ஆகரி 104

ஆகாயச்சொல் 15

ஆகாயபாஷிதம் 82

ஆகுலராசன்

சரிதை 17

ஆகுலவர்ம்மன் 28

ஆசீனபாட்டியம் 92

ஆதவன் 74

ஆதன் 65

ஆதிகாரிகம் 78

ஆதிரை 68

ஆதிவாயிலார்

ஆமுகம் 37

ஆய்ச்சியர்குரவை 103

ஆயப்பாலை 104

ஆயர் 84

ஆயுஷ்மன் 86

ஆர்மலைந்தாடிய

கூத்து

ஆர்ய 86

ஆரபடி 85

ஆரம்பம் 79

ஆராய்ச்சி 96

ஆரோன் 62

ஆலசியம் 96

ஆலம்பனவிபாவம் 94

ஆவேசம் 96

ஆற்றுவரி 104

இகழ்ச்சி 28

இசை 105

இசைத்தமிழின்றன்மை 2

இசைநுணுக்கம் ஓஐஐ

இடங்கராஜன் 46

இடாகினிமாதர் 46

இடிமம் 77

இடுக்கண் 95

இடைவண்ணம் 16

இணை 5

இணைநிலைவரி 16

இந்திரகாளியம் ஓஐஐ

இயற்றமிழின்றன்மை 2

இயைபுவண்ணம் 16

இரதிகாந்தன் 63

இரம்மியன் சுசீலை

சரிதை 17, 33, 75

இரம்மியமலையன் 34

இராகவதேவன் 63

இராமாவதாரப்பெருங்

காப்பியம் 4

இராமாயணம்; 82

இராஜமாநகரம் 66

இருசுவை 17

இருட்சேனை 18

இருமொழிவழக்கு 1

இருளப்பன் 19

இலக்கணவிளக்கம் 101

இலாசியம் 78

இலாவணன் 18

இழவு 28

இழிப்பினவிநயம் 8

இழிப்புச் சுவை 4

இளமை 28

இளி 104

இளிவரல் 17

இளிவரற்சுவை

உற்பத்தி 101

இளைப்பு 95

இன்பச்சுவை 4

இன்பம் 5

இன்பநெறிபுணர்ந்

தோனவிநயம் 11, 12

இன்புறல் 11

இன்றுயிலுணர்தல் 96

இன்றுயிலுணர்ந்தோ

னவிநயம் 12

ஈஹாமிருகம் 77

ஈழநாடு 72

உக்கிரதை 95

உக்தப்பிரதியுத்தம் 92

உஞ்சையம்பதி 69

உட்சொல் 15

உட்பிரிவு 18

உடைமை

உடைமை

உத்தமோத்தகம் 92

உத்தாபகம் 85

உத்தீபனவிபாவம் 94

உத்படர் 86

உத்வேகம் 80

உதாகிருதி 79

உபசுகனம் 81

உபந்நியாசம் 80

உபNºபம் 79

உயிர்ப்பு 95

உருக்கோடல 77

உருட்டுவண்ணம் 16

உருத்திரச்சுவை 4

உருவம் 77

உலோகமாபாலன் 39

உவகை 17, 33

உவகைச்சுவை 10

உவந்தோனவிநயம் 11

உழிஞைத்திணை 86

உள்வரி 16, 103

உள்ளப்புணர்ச்சி 100

உளப்பாடு 79

உற்காத்யகம் 88

உற்சுகம் 96

உற்பத்தி 78

உற்பேதம் 79

உறுப்பறை 63

உறுப்பியல் 1

உறுப்பு 18

உறையூர் 33

உன்மத்தம் 96

ஊர்சூழ்வரி 103

ஊர்ப்பெயர் 17, 19

எடுத்துக்காட்டியல் 17

எடுத்துக்கோள் 103

எண்ணுவண்ணம் 16

எண்வகைக்கலைத்

தொழில் 102

எல்லா 87

எலிசபெத்திராணி 19

எழினி 82

எழினியமைப்பு 106

ஏந்தல் வண்ணம்

ஐயம் 11, 12, 96

ஐயமுற்றோதவிநயம் 12

ஒக்டேவியஸ் 60

ஒருசுவை 17

ஒருதலையுள்ளுதல் 96

ஒரூஉவண்ணம் 16

ஒலிவாணன் 24

ஒழிபியல் 77

ஒழுகுவண்ணம் 16

ஓவியர்

ஒளதாரியம் 83

கஞ்சன் 14

கட்டியக்காரன் 3

கடாற்றூக்கு 89

கடையமக் 14

கண்கூடுவரி 16, 103

கண்டம் 89

கண்டிதை 76, 84

கண்ணோவுற்றோ

னவிநயம் 12

கத்தியரூபம் 2

கத்துரு 20

கதாநாயகன் 3

கதோற்காதம் 88

கந்தன் 13

கம்பநாட்டாழ்வார் ஓஐ

கம்மாளப்பெண் 84

கமலவதனன் 69

கமலை 73

கமிடி 5

கரணக்கூத்து 1

கரணம் 79

கரந்தைத்திணை 85

கருணாகரன் 57

கருதல் 11, 96

கருதியதெய்திய காதலர்

சரிதை17, 68, 72, 75

கருப்பம் 3, 21,30, 31, 79

கல்பூர்ணியா 58

கல்வி 18

கல்விக்களஞ்சியம் 18

கலக்கம் 95

கலகாந்தரிதை 76, 84

கலப்புக்கதை 78

கலாபநாட்டதிபன் 47

கலிங்கநாடு 48

கவிச்சுவை 17

கழனிலைக்கூத்து 1

கழாய்க்கூத்து 1

களவியல் 85

களவு 1

களி 96

களித்தோனவிநயம் 12

கற்பனைக்கதை 1,13,18,78

கனவு 96

காசிபன் 29

காஞ்சனை 20, 22

காட்சி 18

காட்சிவரி 16, 103

காடுகெழுசெல்வி 5

காண்வரி 16, 103

காதல்கைம்மிக்க காவலன் சரிதை 17

காதன்முயற்சிக்

கிடையீடு

காந்தமன் 67

காப்பியலக்கணம் 2

காம்;பீரியம் 83

காமவிவிநயம் 10

காமன் 14

கார்விழா 71

காரியம் 78

காவ்யசம்மாரம் 81

காளிதாசன் 24

கானகநாடன் 51

கானல்வரி 103, 104

காஷியஸ் 58

கிரமம் 80

கிரன் 61

கிலானி 95

கிள்ளிவளவன் 38

கிளர்வரி 16, 103

கிளை 105

கிளைக்கதை 78

குசலவசரிதை 4

குடக்கூத்து 1, 14

குடிகோள் 63

குடை 13

குடைக்கூத்து 15

குணகதா 101

குணாதரன் 29

குணமாலை 29

கும்பம் 13

குரல் 104

குரவை 16, 103

குரவை இலக்கணம் 103

குரவைக்கூத்து 1, 103

குலகுரு 84

குலசேகரபாண்டியன் 63

குவிந்தஸ் 61

குறவர் 84

குறளர் 84

குறிஞ்சியாழ் 104

குறிப்பு 2, 16, 4

குறுஞ்சீர்வண்ணம் 16

குறும்பொறைநாடன் 51

குறுமுயல்

குன்றக்குரவை 103

கூட்டம் 100

கூடரநாட்டதிபன்

கூடை 104

கூதிர்க்காதை 17, 75

கோகயவல்லி 64

கேசவன் 73

கேயபதம் 93

கைக்கிளை 104, 85

கையாறு 96

கொடிப்பாலை 104

கொடுகொட்டி 14, 15

கொல்லிப்பாவை 15

கொலை 63

கொற்றவைநிலை 1

கோகிலவல்லி 63

கோதமன்

கோயிற்றூக்கு 104

கோலாகலன் 74

கௌசிகன் 42

கௌதமன் 30

சக்தி 81

சங்கவர்ணன் 42

சங்காட்டியம் 85

சங்கிரகம் 80

சங்கை 95

சங்ºpப்திகம் 86

சடதை 95, 101

சடன் 83

சத்துவம் 2, ஓஐ, 4

சத்துவபாவம் 6, 7,16, 94

சதுரப்பாலை 104

சந்தி ஓஐ, 18,77,81,2,104

சந்தியினுட்பிரிவு 18

சந்திரசேகரமூர்த்தி 87

சபலம் 96

சம்பிரமை 80

சம்பேடம் 81, 86

சம்போகம் 100

சம்லாபகம் 85

சமநிலை 4, 7

சமப்பிரகர்ஷம் 84

சமம் 80

சமவகாரம் 78

சமாதானம் 79

சாக்காடு 96

சாத்தன்கோயில் 70

சாத்துவதி 13, 85

சாதி 2,13,16,87

சாந்திக்கூத்து 1

சாபலன் 51

சாயவேளர் கொல்லி 104

சார்த்தூலன் 63

சார்புப்பொருள் 78

சாரகுமாரன் ஓஐஇ 51

சாரம் 18

சாலினி 20

சாவகதேசத்தரசன்

சாவகநாடு 18

சிகண்டி ஓஐ

சிங்கபுரம் 28

சிங்கம் 68

சித்திரவண்ணம் 16

சிதாகாசமாகிய

அரங்கம் 107

சிந்தனை 96

சிந்தையடம்பட்டோ

னவிநயம் 12

சிம்பர் 58

சிரமம் 95

சிருங்காரம் 84

சிரோரத்தினம் 1

சிலப்பதிகாரம் ஐஓஇ 13

சி;ற்றின்பம் 18

சிறுகுடிப்பாட்டு 6

சிறுதேவபாணி 104

சிறுமை 45

சீதமுற்றோனவிநயம் 12

சீதரன் 67

சீயதேசம் 40

சீர்கோடிகம் 104

சீராகம் 104

சுகிர்தாபித 87

சுசீலை 34

சுண்ணம் 15

சுத்தநிரூத்தம் 1, 78

சுதாகரன் 72, 74

சுந்தரராயன் 74

சுப்தம் 96

சுரிதகம் 15

சுரைநாவன் 44

சுவாகதம் 82

சுவாதீனாபர்த்ருகை 76, 83

சுவாமி 87

சுவை ஓ இ14,77,94

சுவைக்கப்படும்பொருள் 6

சுழற்சி 96

சூத்திரதாரன் 3

சூத்திரர்சாதி 13

சூதர் 39

சூலிகை 82

செகசிற்பியர் 17

செத்தோனவிநயம் 12

செந்து 104

செந்துறை

செந்தூக்கு 104

செம்பாலை 104

செய்யுளுருவம் 18

செயப்படுபொருள் 77

செயிற்றியம் ஓஐ

செயிற்றியனார் 13

செவ்வழிப்பாலை 104

செவ்வழியாழ் 104

சேதம் 2, 87

சேனாபதிசரிதை 17, 60

சைந்தவம் 92

சொக்கம் 1

சொல் 77, 2, 15

சோநகரம் 14

சோபை 83

சோமகன் 18, 19

சோர்வு 96

சௌரசெனி 86

ஜயதேவன் 63

ஜயந்தன் 68

ஜனாந்திகம் 82

ஞஞ்ஞையுற்றோ

னவிநயம் 12

டேஸியஸ் 58

டேமத்திரியஸ் 61

தசரூபகம் 77

தசரூபம் 77

தண்டத்தலைவர் 84

தமிழ்மொழிமரபு 18

தமோரா 61, 62

தயநிசன் 5

தர்க்கம் 96

தலைநோவுற்றோ

னவிநயம் 12

தலைவன் 78

தவமூதாட்டி 84

தற்சிறப்புப்பாயிரம் 77

தன்மை 11, 12

தனஞ்சயன் 77, 103

தனபதி 46

தºpணன் 83

தாஅவண்ணம் 16

தாண்டவம் 78

தாண்டவராயன் 75

தாத 87

தாரம் 104

திணைநிலைவரி 104

தியுதி 81

திரவம் 81

திரள் 104

திடாசம் 96

திரிகடம் 88

திரிகூடம் 92

திரிகோணப்பாலை 104

திருதி 95

திருஷ்டன் 83

திரேபோணியஸ் 58

திலோத்தமை ஓஐ

தீநட்பஞ்சிய தீமோன்

சரிதை 17, 40

தீரசாந்தன் 83, 76

தீரலலிதன் 83, 76

தீரோத்ததன் 83, 76

தீவலமல்லன் 34

துஞ்சல் 96, 11, 12

துஞ்சாநின்றோ

னவிநயம் 12

துடி 13

துடிக்கூத்து 15

துணிபுத்தூக்கு 104

துத்தம் 104

தும்பைத்திணை 86

துய்த்தல் 26, 30,50,79

துர்க்காதேவி 15

துவிகூடம் 92

தூக்;கு 16

தூங்கல்வண்ணம் 16

தூவலன் 51

தெய்வப்பெயர் 17

தெய்வமுற்றோ

னவிநயம் 12

தெய்வவணக்கம் 77

தேசி 78

தேசிக்குரியகால்கள் 106

தேர்ச்சிவரி 103, 16

தேவபாணி 16

தேவாளி 104

தைதஸ் அண்டிரணிக்

கஸ் 60

தைந்யம் 95

தைரியம் 84

தொடக்கம் 73

தொல்காப்பியம் 101

தொல்காப்பியனார் 5

தோடகம் 80

தோற்பாவைக்கூத்து 1

நகை 5

நகைக்குறிப்பு 7, 102

நகைக்குறிப்புமொழி 65

நகைச்சுவை 4,17,28

நகைச்சுவை

உற்பத்தி 102

நகையின்வகை 102

நகையினவிநயம் 8

நஞ்சுண்டோனவிநயம் 12

நட்பு 105

நடுக்கம் 96

நடுவுநிலைச்சுவை 4,11,12

நடுவுநிலையவிநயம் 11

நம்பியகப்பொருள் 101

நரம்பினியல்பு 105

நருமகர்ப்பம் 85

நருமத்யுதி 80

நருமம் 80

நருமஸ்பூர்ஜம் 85

நருமஸ்போடம் 85

நலிதல் 95

நலிபுவண்ணம் 16

நாகன்சேய் 70

நாகநாட்டரசன்

புதல்வி 18

நாகராகம் 104

நாட்டியக்கட்டுரை 3, 63

நாட்டியக்கட்டுரைக்குரிய

சுவைகள் 103

நாட்டியசாஸ்திரம் 77

நாட்டியநிகழ்ச்சி 79

நாட்டியம் 77

நாடகத்தமிழ் ஓஐஐ

நாடகத்தமிழின்தன்மை 2

நாடகபாத்திரர் 3

நாடகம் 76

நாணமுற்றோ

னவிநயம் 12

நாணுதல் 96

நாதன் 23

நாந்தி 88

நாரதன் ஓஐ

நால்வகைக்குற்றம்

நாழிகை 89

நாழிகைவட்டி 66

நான்மடக்கூடல் ஓஐஐ

நித்திரை 96

நியதாப்தி 79

நிர்ணயம் 81

நிர்த்தம் 78

நிர்த்தியம் 77

நிர்வாஹணம் 79

நிர்வேதை 95

நிரோதம் 80

நிவப்புத்தூக்க 104

நினைதல் 96

நீலாம்பரன் 65

நெடுஞ்சீர்வண்ணம் 16

நெடுந்தூக்கு 104

நெடுமுடியண்ணல் 14

நெய்தல்யாழ் 104

நெடுமுடியண்ணல் 14

நெய்தல்யாழ் 104

நேதா 78

நொச்சித்திணை 86

பகவன் 86

பகை 105

பசியானஸ் 60

பஞ்சபாரதீயம் ஓஐ

பட்ட 87

படிதம் 14

படுமலைப்பாலை 104

படைப்புவரி 104

பண்ணன்குடியார் 33

பண்ணைப்பாட்டு 6

பதாகை 78

பதினோராடல் 13,78

பதுமநாபன் 69

பதுமை 52

பதுமையுட்கலசரிதை 57

பயன்விளைவு 79

பயோற்கர்ஷம் 84

பரதசேனாபதீயம் ஓஐ

பரதநூல் 77

பரதம் ஓஐ

பரிக்கிரியை 79

பரிகரம் 79

பரிசர்ப்பம் 80

பரிசனர் 18

பரிந்யாசம் 79

பரிபவை 70

பரிபாவனை 79

பரிபாஷணம் 81

பரியுபாஷணம் 80

பரிவர்த்தகம் 85

பலயோகம் 79

பவதீ 87

பயன்விழைவு 79

கவனவேகன் 41

பழங்கதை 78

பன்னிரண்டு

நாடகங்கள் 17

பனித்தலைப்பட்டோ

னவிநயம் 12

பாசுரம் 65

பாடாண்டிணை 85

பாண்டரங்கன் 12, 14

பாண்டி 16

பாண்டியன் ஐஓ

(மதிவாணனார்)

பாணம் 77

பாணர் 84

பாணி 17, 104

பாதுகாபட்டாபிஷேகம் 4

பாரசவமுனிவர் ஓஐ

பாரதி 15

பாரதியரங்கம் 15

பாரதிவிருத்தி 87

பாலப்பருவம் ஐஓ

பாலையாழ் 104

பாவ 87

பாவம் 94, 77

பாவை 13,14,67

பாஷணம் 81

பிண்டி 105

பிணையல்

பிரக்கியாதம் 78

பிரகசனம் 88, 77

பிரகமனம் 80

பிரகரணம் 13, 77

பிரகரணப்பிரகரணம் 14

பிரகரி 78

பிரகாசம் 82

பிரச்சேதம் 92

பிரசங்கம் 81

பிரசாதம் 81

பிரதிமுகம் 2,3,21,30,79

பிரபஞ்சம் 88

பிரபாகரன் 42, 43

பிரமவாதி 84

பிரயத்தனம் 79

பிரயோகாதிசயம் 88

பிரரோசனை 88

பிரலயம் 95

பிரலாபம் 101

பிரவிருத்தகம் 88

பிரவேசிகம் 82

பிரஸ்தாவனை 88

பிராகிருதம் 86

பிராசங்கிகம் 78

பிராப்தி 2

பிராப்தியாசை 79

பிரியதத்தமன்னன் 18

பிரியவிரதன்; 41

பிரிவு 100

பிருகத்கதை 82

பிரோசிதப்பிரியை 76,84

பிலிப்பிநகர் 60

பிள்ளையாட்டு 1

பிறசுவை 17

பீடமர்த்தன் 83

பீஜம் 78

பீபற்சம் 83

புகழ்க்கூத்து ஐஓ

புட்கலன் 51

புதுமை 42

புரோகிதர் 35, 74

புலவர் 40

புறக்கூத்திற்குரிய

ஆடல் 106

புறச்சொல் 15

புறத்திணை 1, 5

புறநிலை 104

புறப்பாட்டுவண்ணம் 16

புறவரி 16, 103

புஷ்பகண்டிகை 92

புஷ்பம் 80

பூர்வபாவம் 81

பூர்வரங்கம் 87

பெருகியல் 104

பெருங்குருகு ஓஐ

பெருந்தேவபாணி 104

பெருநாரை ஓஐ

பெரும்புயற்சரிதை 17,40,56,75

பெருமிதச்சுவை 9

பெருமிதச்சுவை உற்பத்தி

பெருமிதம் 17

பெருமை 45

பெருவண்ணம் 16

பேடு 13

பேதைமை 28

பைசாசம் 86

பொச்சாப்பு 11

பொருண்முடிபு 78

பொருண்மூலம் 78

பொருள் 2, 13, 77, 78

பொறாமை 11, 95

போகவதி 69

மக்கட்பேர் 17

மகததேசம் 72

மகபதி 46

மகபதிசரிதை 17, 46

மகபதிப்பிரியை 48

மங்கலவர்மன் 48

மட்டி 19

மடன் 28

மடிமை 11, 96

மடியினவிநயம் 12

மண்டிலம் 104

மணிலிநகரம் 50

மணிக்குறிற்றுநர் 39

மணிபல்லவம் 41

மணிபுரத்தரசன் 29

மதங்கசூளாமணி 1, 17

மதம் 96

மதலைத்தூக்கு 104

மதலைப்பருவம் 1

மதன் 13

மதனன் 29

மதி 96

மதிவாணனார் 13

மதிவாணனார்நாடகத் தமிழ் நூல்

மந்திரி 03

மயக்கம் 96

மயிலம் 41

மர்ஷ 87

மரக்கால் 15, 16

மரகதம் 27

மரகதர் மரணமென்னு மிளிவரல் 18

மரணம் 96

மருட்கை 4, 17

மருட்கைச்சுவை 7, 45

மருட்கைச்சுவை உற்பத்தி 102

மருதயாழ் 104

மல் 14

மலையன்குடியார் 34

மழைபெய்யப்பட்டோ னவிநயம் 12

மனநூல் 7

மனம்புழுங்குதல் 96

மாசேனன் 73

மாணிக்கமாலை 28

மாதவன் 49

மாதுரியம் 83

மாயவன் 15

மாயாரூபங்கள் 44

மாயோன்பாணி 13

மார்க்கம் 78, 80

மார்த்தாண்ட சோழன் 34

மார்ஷியஸ் 61

மால் 14

மாலதி 41

மாலினி 20

மாலுமி 72

மானவன் 96

மிகை 96

மிச்சிரம் 78

மிருதவம்

முகம் 3, 21, 30, 79

முகமில்வரி 104

முகமுடைவரி 104

முசுமுகி 41

முஞ்சமகிபதி 103

முடுகுவண்ணம் 16

முத்தகம் 104

முதல்நூல்கள் ஓஐ

முதனடை 104

முயற்சி 79

முறுவல் முன்னுரைக்காட்சி 89

முனிதல் 11

மூதியஸ் 61

மூப்பு 28

மெய்க்கூத்து 1

மெய்ப்பாடு 5

மெல்லிசைவண்ணம் 16

மென்மை 28

மேற்செம்பாலை 104

யவனர் 84

யாமளேந்திரர் ஓஐ

யாமினி 75

யூலியசீசர்சரிதை 17,57,75

யோனி 2, 12, 16

யௌவனப்பருவம் ஐஓ

ரஸம் 77

ராகம் 82

ராஜாவளிப்பறவை 71

ரிறாஜெடி 5

ரூபகம் 77

ரூபம் 77, 80

ரோமாஞ்சம் 95

ரோமாபுரி 58

ரௌத்திரம் 84

லலிதம் 83

லவீனியர் 61

லிகாரியஸ் 58

லூஸியஸ் 62

வச்சிரம் 80

வசந்தகாலம் 6

வசந்தன் 71

வசைக்கூத்து வஞ்சித்திணை வட்டப்பாலை 104

வடநூலார் 18

வடுகிற்குரியகால்கள் 106

வண்கைமலையன் 34

வண்ணம் 2,16,16,77

வணிகதேயவர்த்தகன் சரிதை 17, 50, 75

வத்ஸ 87

வயோதிகப்பருவம் ஐஓ

வர்ணாரணியம் 49

வரதன் 29

வரி 2, 16, 77

வரிக்கூத்து 103

வரிதகம் 15

வரிப்பாடல் 16, 103

வரியிலக்கணம் வருணசம்மாரம் 80

வருணப்பூதர் 105

வருத்தம் 28

வருத்தமுற்றோனவிநயம் வரைதல் 12

வல்லிசைவண்ணம் 16

வலிமுகம் 41

வழிநிகழ்ச்சி 78

வள்ளிக்கூத்து வள்ளெயிற்றரிமா 6

வளைவணன் 45

வறுமை 28

வனங்காப்போர் 84

வனப்புவண்ணம் 16

வஸ்து 78

வஸ்துத்தாபனம் 86

வாக்கெலி 89

வாசகஸஜ்ஜை 76, 83

வாசவன் 50

வாணாசுரநாடகம் 27

வாணிகர்சாதி 13

வாலிமோºம் 4

விசலனம் 81

விஜயை 50

விஜயைவாசவசரிதம் 57

விட்டில் 19, 21

விடன் 83

வித்தியாதரன் 41

வித்திரவம் 81

வித்து 3

விதானம் 79

விதூதம் 80

விதூஷகன் 3,29,51,65,83

விந்து 78

விந்தை 13

விநோதக்கூத்து 2

விப்பிரலப்தை 76, 84

விபாவம் 94

விபோதம் 81,96

விமலை 73

வியப்பு 5

வியபிசாரிபாவம் 94

வியர்த்தல் 11

வியவசாயம் 81

வியாசம் 18

வியாதி 96

வியாயோகம் 77

விரிநிலை 78

விரிமுரண் 104

விரீடை 96

விருத்தாந்தம் 82

விருத்தி 2,12,13.16,82

விரைவு 11

விரோதனம் 81

விலாசம் 80

விலோபனம் 79

விழா 5

விளரி 104

விளரிப்பாலை 104

விளைவு 22, 26,30,49

விஷ்கம்பம் 82

வீதி 77, 88

வீரச்சுவை 4

வீரச்சுவையவிநயம் 10

வீரசோழியம் 101

வீரப்பருவம் ஐஓ

வீரம் 84

வீரவர்மன் 28

வீரன் 18,18,20,22

வீரஹோற்கண்டிதை 76,83

வீரேந்திரபாண்டியன் 63

வெகுண்டோன

விநயம் 10, 12

வெகுளி 5,17,62

வெகுளிச்சுவை 10

வெகுளிச்சுவை

உற்பத்தி 102

வெட்சித்திணை 85

வெண்டுறை 104

வெப்பமுற்றோ

னவிநயம் 12

வெயிற்றலைப்பட்டோ விநயம் 12

வெரூஉதல் 11, 96

வெள்ளைநாகன் 71

வெறியாடல் 1

வேட்டுவவரி 103

வேத்தியல் 5

வேதை 78, 79

வேளாவளி 104

வேனில்வேள் 5

வேனிற்காதை 17

வைவர்ணியம் 95

வைஸவர்யம் 95

ஹர்ஷம் 95

ஹாஸ்யம் 84

ஸ்தம்பம் 95

ஸ்தாயிபாவம் 94

ஸ்திதபாட்டியம் 92

ஸ்மிருதி 96

ஸ்வேதம் 95