ஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டி

கனக. செந்திநாதன்


ஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டி

கனக. செந்திநாதன்

(1955 தொடக்கம் 1970-ஆம் ஆண்டு வரை ஈழத்தில் வெளியிட்டுள்ள நூல்களின் அட்டவணை)

தொகுப்பாசிரியர்:

இரசிகமணி கனக. செந்திநாதன்.

வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.

விலை சதம் 75.

ஒரு குறிப்பு

‘தமிழிலே ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும்; அவற்றில் எமது ஈழவள நாட்டின் தனித்துவம் துலங்கவேண்டும்’ என்ற பேராசை உள்ளவன் நான்.

இந்தக் காரணத்தினாலேதான் ‘வரதரின் பல குறிப்பு’ என்ற தமிழ் ரைடக்டரியை பல தொல்லைகள் மத்தியில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறேன்.

என்னுடைய இந்தப் பெரிய முயற்சிக்குப் பேராதரவாயிருப்பது நண்பர்கள் சிலரின் உதவி. அந்த நண்பர்களில் ஒருவர் இரசிகமணி கனக செந்திநாதன்.

‘வரதரின் பல குறிப்’பில் ஈழத்துத் தமிழ் நூல்களின் பட்டியலைத் தொகுத்துத் தருகிறவர் இவரே. இச்சிறிய வெட்டுப் பிரசுரத்தில் காணப்படும் தொகுப்பு 1971-ம் ஆண்டுப் பதிப்பில் வெயிவந்தது. இவ்விதமான ஒரு பட்டியலைத் தயாரிக்கக் கூடிய ஒருசிலருள் நண்பர் இரசிகமணி முக்கியமானவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் புத்தகங்களோடு வாழ்கிறவர். அவருக்குத் தெரியாமல் இலங்கையில் ஒரு புத்தகம் வெளிவருவது மிகவும் கஷ்டம். எங்கே ஒரு புத்தகம் வெளிவந்தாலும் அவருக்கு மணத்துவிடும்; எப்படியும் அதன் பிரதி ஒன்றை வாங்கிப் பத்திரப்படுத்தி விடுவார்!

‘வரதரின் பலகுறிப்பு’ அதிக விலையுள்ள ஒரு நூல். இலக்கிய எழுத்தாளர்கள் பலர் இந்தப் புத்தகப் பட்டியலுக்காக அந்நூலை வைத்திருக்க விரும்பிய போதிலும் அதன் விலை அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவேதான் அவர்கள் பலருடைய விருப்பத்துக்கிணங்க இப்புத்தகப் பகுதியைத் தனியாக எடுத்து இச் சிறு நூலை வெளியிட்டிருக்கிறேன்.

- தி. ச. வரதராசன்.

புத்தகங்கள் :

(1955-ம் ஆண்டுக்குப்பின் இலங்கையில் வெளிவந்த புத்தகங்களின் தொகுப்பு. தொகுத்தளித்தவர் : இரசிகமணி கனக செந்திநாதன்)

(1) சிறுகதைகள்

அக்கா: அ. முத்துலிங்கம் (1964) பாரிநிலையம், 59, பிராட்வே சென்னை. ரூபா. 2-50.

அமரத்துவம்: யாழ்வாணன் (1969) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை. யாழ்ப்பாணம். ரூ. 2-50.

அமைதியின் இறகுகள்: செம்பியன் செல்வன், (1966). யாழ் இலக்கியவட்டம். மாநகரசபை யாழ்ப்பாணம் ரூ 2-50.

இப்படி எத்தனை நாட்கள்: நா. க. தங்கரத்தினம் (1968). சிவச்செல்வி வெளியீடு. கலையகம், சித்தன்கேணி ரூ. 3-00.

இருவர் யாத்திரிகர்: பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1963). தனலக்குமி புத்தகசாலை. சுன்னாகம்.

ஈழத்துச் சிறுகதைகள்: ‘சிற்பி’ (1958) தமிழருவிப் பதிப்பகம், கந்தரோடை, சுன்னாகம், ரூ 2-50.

ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள் (தொகுப்பு): (1962) தமிழ் எழுத்தாளர் மன்றம் கொழும்பு ரூ. 2-50.

ஈழநாட்டு வரலாற்றுக்கதைகள் : அருள் செல்வநாயகம் (1956) இ.மா. கோபால கிருஷ்ணகோன். மதுரை ரூ. 1-00

உதயம் : நீர்வை பொன்னையன் (1970). நவயுகப் பதிப்பகம். யாழ்ப்பாணம். ரூ2-00.

ஊர் நம்புமா? : ‘நந்தி’ (1961) நண்பர்கள் வெளியீடு, ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம். ரூ 1-50.

ஒரே இனம் : செ. கணேசலிங்கம் (1960) பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை. ரூ 2-50.

ஒன்றே தெய்வம் : எஸ். பி. கிருஷ்ணன், (1970) அன்பு வெளியீடு. 550|7 கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ. 2-00

கடவுளரும் மனிதரும்: பவானி (1962) ‘சிக்கல்’ 8 சால்ஸ் கொழும்பு-3. ரூ. 2-50.

கதைப்பூங்கா (தொகுப்பு): க. குணராசா. க. நவசோதி (1962) பல்கலைக்கழகம், பேராதனை, ரூ 1-50.

கயமை மயக்கம்: ‘வரதர்’ (1960) வரதர் வெளியீடு, 226, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம், ரூ. 2-25.

கன்னிப் பெண்: ‘நகுலன்’ (1965) நகுலன் வெளியீடு, கலையகம், சித்தங்கேணி. ரூ. 2-50.

காந்தீயக் கதைகள் (தொகுப்பு): எஸ். பொன்னுத்துரை (1970) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு -13. ரூ.3-00.

காலத்தின் குரல்கள் (தொகுப்பு): கலா. பரமேஸ்வரன், (1964), பல்கலைக்கழகம் பேராதனை, ரூ. 1-25.

குழந்தை ஒரு தெய்வம்: காவலூர் இராசதுரை. (1951) தமிழ்ப் புத்தகாலயம், 393, பைகிராப்ட்ஸ் றோட், சென்னை - 14. ரூ 1.50.

கொட்டும் பனி: செ. கதிர்காமநாதன் (1968). விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி, கொழும்பு ரூ. 3-50.

சங்கமம்: செ. கணேசலிங்கம் (1961), பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை ரூ. 2-00.

சாலையின் திருப்பம்: டொமினிக்ஜீவா (1965), எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 94, 2|7 யோர்க் வீதி, கொழும்பு, ரூ. 2-50.

சின்னஞ்சிறு கதைகள்: ச. வே. பஞ்சாட்சரம் (1969), தமிழருவிப் பதிப்பகம், சுன்னாகம், ரூ. 1-25.

சௌத்தர்ய பூஜை: விஜயேந்திரன் (1970) வெளியீடு, ஐ. குமாரசாமி, கிருஷ்ணசாமி புத்தக விற்பனையாளர் பெரியகடை, யாழ்ப்பாணம், 90 சதம்.

டானியல் கதைகள்: கே. டானியல் (1963) எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 162, வாசலறோட், கொழும்பு - 3. ரூ. 2-50.

தண்ணீரும் கண்ணீரும்: டொமினிக் ஜீவா (1960-1962) தமிழ்ப் புத்தகாலயம், 293, பைகிராப்ட்ஸ் றோட், சென்னை - 14. ரூ. 2-00.

தாம்பூல ராணி: அருள் செல்வநாயகம், கலைமகள் காரியாலயம், மைலாப்பூர், சென்னை. ரூ 2-50.

தாலி சிரித்தது: மலையமான், (1965) தேனருவிப் பிரசுராலயம் 30, ரோகினி ஒழுங்கை வெள்ளவத்தை. ரூ2-00.

தெய்வமகன்: நாவேந்தன், (1965) தமிழ்க் குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம். ரூ 2-00.

தோணி: வ. அ. இராசரத்தினம் (1962) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு கொழும்பு-13. ரூ. 2-00.

நல்லவன்: செ. கணேசலிங்கன் (1956) பாரி நிலையம் 59, பிராட்வே சென்னை. ரூ. 1-50.

நிலவிலே பேசுவோம்: என். கே. ரகுநாதன் (1962) பாரி நிலையம் 59, பிராட்வே சென்னை. ரூ. 2-00.

நிலவும் நினைப்பும்: ‘சிற்பி’ (1962), பாரி நிலையம் 59, பிராட்வே சென்னை. ரூ. 2-00.

நிறை நிலா: இ. நாகராசன் (1965). தனலக்குமி புத்தகசாலை. சுன்னாகம். ரூ. 3-00.

பசி: மாதகல் செல்வா, (1962) பூபால சிங்கம் புத்தகசாலை, பெரியகடை யாழ்ப்பாணம். ரூ. 1-00.

பாட்டாளி வாழ்க்கையிலே (தனிக்கதை): கச்சாயில் இரத்தினம், (1969) பகுத்தறி வுப் பண்ணை, 237, பருசலை வீதி, எட்டியாந்தோட்டை.

பாதுகை : டொமினிக்ஜீவா (1962) தமிழ்ப்புத்தகாலயம் 293, பைகிராப்ட்ஸ் றோட், சென்னை-14. ரூ. 2-00.

பார்வை: சாந்தன் (1970) யாழ் இலக்கிய நண்பர் கழகம், மாவிட்டபுரம், தெல்லிப்பளை. 50 சதம்.

புதுயுகம் பிறக்கிறது: மு. தளையசிங்கம் (1965) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித்தெரு, கொழும்பு-13. ரூ. 2-75.

புதுவாழ்வு : தாளையடி சபாரத்தினம், (1969) திருமதி மீனா சபாரத்தினம் உடுப்பிட்டி. ரூ. 4-00.

போட்டிக்கதைகள் (தொகுப்பு): (1963) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம். யாழ்ப்பாணம். 226, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-50.

மரபு (உருவக் கதைகள்): எம். ஏ. ரகுமான் (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13. ரூ. 2-00.

மாலா நீ என்னை மறந்துவிடு: சீ சிவஞானசுந்தரம், (1965) ஸ்ரீகாந்த கமலபவனம் ஏழாலை மேற்கு சுன்னாகம். ரூ 1-00.

முஸ்லீம் கதை மலர் (தொகுப்பு): யூ. எல். தாவூத். (1964) ஸபீனா பதிப்பகம் 20, பிரைஸ்பிளேஸ், கொழும்பு - 2. ரூ. 2-25.

மேடும் பள்ளமும்: நீர்வை பொன்னையன் (1961) மக்கள் பிரசுராலயம், 249, முதலாவது டிவிசன் மருதானை, கொழும்பு ரூ. 2-00.

மோதல்: திமிலை மகாலிங்கம் (1967) தேனமுது இலக்கிய மன்றம் 1|1 டயஸ் வீதி, மட்டக்களப்பு. 75 சதம்.

யாழ்ப்பாணக் கதைகள்: கே. வி. நடராசன் (1965). யாழ் இலக்கியவட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ. 2-50.

யுகம் (தொகுப்பு): இமையவன் (1968) பல்கலை வெளியீடு, யாழ்ப்பாணம் ரூ.1-

யோக நாதன் கதைகள்: யோகநாதன், (1964) புதுமைப் பிரசுரம், போராதனை ரூ. 2-50.

ரசிகர்குழு போட்டிக் கதைகள் (தொகுப்பு): எம். ஏ. ரகுமான் (1966) அரச வெளியீடு 231. ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13. ரூ 2-00.

வாழ்வு: நாவேந்தன் (1965) தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலைவடக்கு, சுன்னாகம். ரூ. 2-00.

விண்ணும் மண்ணும் (தொகுப்பு): செம்பி யன் செல்வன், (1963). பல்கலைக்கழகம். பேராதனை ரூ. 1-25.

வீ: எஸ். பொன்னுத்துரை (1966) அரசு வெளியீடு, 213, ஆதிருப்பள்ளித்தெரு. கொழும்பு - 13. ரூ 4-10.

வெண்சங்கு : இரசிகமணி கனக செந்திநாதன் (1967) யாழ் இலக்கிய வட்டம். மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ. 2-50.

வெள்ளரி வண்டி: பொ. சண்முகநாதன் (1968) தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி, ரூ. 1-50.

வெள்ளிப் பாதசரம்: இலங்கையர் கோன் (1962). ஸ்ரீ மதிசிவஞானசுந்தரம் மங்கள கிரி, ஏழாலை மேற்கு, சுன்னாகம்.

(2) நாவல்கள்

அந்தரத்தீவு: கே. எஸ். மகேசன் (1963) க. ச. மகேசன் ‘சேதுபதி’ அல்லாலை, கொடிகாமம். ரூ 3-50.

அபலைப் பெண்: தெ. செ. நடராசா. (1965) தமிழ்மணி பதிப்பகம். 15|3 குமா ரசாமி வீதி, யாழ்ப்பாணம். 60 சதம்.

அபலையின் கடிதம் (மொழிபெயர்ப்பு): செ. கணேசலிங்கன், (1965) பாரி நிலையம் 59, பிராட்வே சென்னை. ரூ 1-25.

அவள்: கவிஞர் விஜயேந்திரன், (1968) விஜயாபிரசுரம், மல்லாகம். ரூ. 1-25.

அவன் சுற்றவாளி?: ‘தேவன்’ யாழ்ப் பாணம். (1968). ச. கிருஸ்ணசாமி புத்தகக் கடை, 33, பெரியகடை யாழ்ப்பாணம். ரூ 1-00.

அன்பளிப்பு: ‘அன்பன்’ (1962) கோபால பிள்ளை, நொறிஸ் றோட், கொழும்பு.

ஆச்சி பயணம் போகிறாள்: செங்கையாழி யான்.(1969) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ 2-00.

உயிர்க்கூடு: க. ம. செல்வரத்தினம் (1964) க. ம. செல்வரத்தினம் வட்டு கிழக்கு, சித்தன்கேணி. ரூ. 2-50.

உறவும் பிரிவும்: கே. எஸ். ஆனந்தன் (1964) உதய சூரியன் பதிப்பகம் இணுவில். சுன்னாகம். ரூ. 1-00.

எதிர் பாராத இரவு: இளங்கீரன் (1954) நவபாரத் பதிப்பகம், சென்னை. ரூ. 1-00.

ஏமாறச் சொன்னது நானா?: மோகன் (1966) கதம்பம் பதிப்பகம். 219, ஜெம்பட்டா தெரு. கொழும்பு. ரூ1-25.

ஏழையின் காதல்: க. நாகப்பு. வட்டுக் கோட்டை. ரூ. 1-00.

ஒன்றரை ரூபா: ‘கவிநாயகன்’ வி. கந்தவனம். (1954) ‘பதி’ நுணாவில் மேற்கு சாவகச்சேரி. ரூ. 1-00.

கருகிய றோசா (குறுநாவல்): புதுமை லோலன், (1967) அன்பு வெளியீடு 550|7, கே. கே. எஸ். வீதி, யாழ்;ப்பாணம். 45 சதம்.

கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு: ஆ. P. ஆ. முகம்மது காசீம். (1955) அன்சாரி நூல் நிலையம் விடத்தல்தீவு. 75 சதம்.

காலத்தின் விதி: அ. பொ. செல்லையா (1965) தாய் நாடு பதிப்பகம். 176, ஜம்பாட்டா தெரு, கொழும்பு. 75 சதம்.

கிராமப்பிறழ்வு (சிங்களநாவல்): மொழி பெயர்ப்பாசிரியர் ம. மு. உவைஸ் (1964) ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம். ரூ. 6-00.

குட்டி: பெனடிக்ற் பாலன் (1963) எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ரூ. 1-50.

கேட்டதும் நடந்ததும்: தேவன் யாழ்ப்பாணம். (1965) வெளியீடு : எஸ். எஸ். சண்முகநாதன் அன் சன்ஸ். ரூ.3-00

கொலையுண்ட கன்னிகள்: சுகீதர். சுன்னாகம்.

கொழுகொம்பு: வ. சு. இராசரத்தினம். (1959) வடஇல. தமிழ் நூற்பதிப்பகம். சுன்னாகம். ரூ. 2-50.

கோமதியின் கணவன்: தா. சண்முகநாதன் (1959) காந்திபிறஸ் வார்ட் வீதி பதுளை. ரூ. 1-10.

சடங்கு: செ. கணேசலிங்கன் (1966) பாரி நிலையம். 56, பிராட்வே சென்னை ரூ4-00

சதியிற் சிக்கிய சலீமா: ஹமீதாபானு (1964) நல்வழிப்பதிப்பகம் 22, டயஸ் பிளேஸ் கொழும்பு. ரூ. 1-25.

சிலந்தி மலைச் சாரலிலே: கே. வி. எஸ். வாஸ் (1960) கதம்பம் பதிப்பகம், 218, ஜம்பாட்டாதெரு கொழும்பு-13. 70 சதம்

ஜீவயாத்திரை: பா. பாலேஸ்வரி, (1966) திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கம் 471, திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை. ரூ. 2-50.

செவ்வானம்: செ. கணேசலிங்கன் (1967) பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை.

சொந்தக்காரன்: பெனடிக்ற் பாலன்.

தரையும் தாரகையும்: செ. கணேசலிங் கன் பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை.

தாயகம் (குறுநாவல்): தொ. சிக்கன் ராஜு (1969) குறிஞ்சிப் பண்ணை. நூரளை. ரூ. 1-25.

தீ: எஸ். பொன்னுத்துரை, (1961) சரஸ்வதி காரியாலயம் ராயப்பேட்டை, சென்னை. ரூ. 2-50.

தூரத்துப் பச்சை: கோகிலம் சுப்பையா தமிழ்ப் புத்தகாலயம் 576, பைகிராப்ட்ஸ் ரோடு, சென்னை - 5. ரூ. 5-00.

தென்றலும் புயலும்: இளங்கீரன் (1956) நவபாரத் பிரசுராலயம் 9, கம்மாளர் தெரு, சென்னை - 6. ரூ. 2-25.

நந்திக்கடல்: செங்கையாழியன் (1969) யாழ் இலக்கியவட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ. 2-00.

நீண்ட பயணம்: செ. கணேசலிங்கன் (1965) பாரிநிலையம் 59 பிராட்வே, சென்னை. ரூ. 3-50.

நீதியே நீகேள்: இளங்கீரன் (1962) பாரி நிலையம் 59, பிராட்வே, சென்னை ரூ. 7-50.

நெஞ்சில் நிறைந்தவள்: சி. சிவஞானசுந்தரம் (1966) ஸ்ரீகாந்த பவனம் எழாலை தெற்கு, சுன்னாகம். ரூ. 1-25.

பள்ளிப்படிப்பு: எஸ். ஏ. தேவன் (1954) கலாஜோதி வாசிகசாலை தட்டாதெரு, யாழ்ப்பாணம்.

பாசக் குரல்: அருள் செல்வநாயகம் (1963) கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர். சென்னை. ரூ. 1-50.

பாவையின் பரிசு: துரை மனோகரன் (1966) துரை மனோகரன், இந்துக் கல்லூரி, உரும்பிராய். ரூ. 2-50.

பிராப்தம்: பிரேமகாந்தன் (1970) ஞான குருபரன் நிலையம், 82|3, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13. ரூ. 1-00.

பெருநாள் பரிசு: மருதூர் வாணன் (1969) தேன் மதி வெளியீடு, மகளிர் வித்தியால வீதி, மருதமுனை. 75 சதம்.

போர்க்கோலம்: செ. கணேசலிங்கம். பாரி நிலையம், 59, பிராட்வே. சென்னை.

பெண்ணோ? பேயோ? : எம். ஏ. தாஸ் (1963) சுதர்சன் பப்பிளிஷர்ஸ், 124, மெயின் வீதி, யாழ்ப்பாணம். 40 சதம்.

மணிபல்லவம் (மொழிபெயர்ப்பு): தேவன் (யாழ்ப்பாணம்) (1957) ஸ்ரீ லங்கா புத்தக சாலை. கே. கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம். ரூ. 1-50..

மத்தாப்பு: எழுத்தாளர் ஐவர் (1962) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி, தெல்லிப்பளை. ரூ. 1-00.

மலைக் கொழுந்து: ‘நந்தி’ ஆசீர்வாதம் அச்சகம், சுண்டிக்குளி, யாழ்ப்பாணம். ரூ. 4-00.

முதற் காதல் (மொழி பெயர்ப்பு): இலங்கையர் கோன், (1955) கலைமகள்; காரியாலயம். மைலாப்பூர், சென்னை. 75 சதம்.

முகை வெடித் மொட்டு: நா. செல்லத்துரை (1967) வெண்ணிலா வெளியீடு. தென்றலகம் கந்தர்மடம் யாழ்ப்பாணம். ரூ. 2-50.

மூன்று குறுநாவல்கள்: அகஸ்தியர். அன்பு வெளியீடு.

வன்னியின் செல்வி: கச்சாயில் இரத்தினம் (1963) ஆசீர்வாதம் புத்தக சாலை, 32. கண்டி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-50.

வாழ்க்கையின் வினோதங்கள்: பேராசிரி யர். க. கணபதி;ப்பிள்ளை, (1954) ரூ 1-50.

விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு): மொழி பெயர்ப்பாசிரியர் சோ. நடராசன் (1966) எம். டி. குணசேனா. லிமிடெட் 217, ஒல்கோட் மாவத்தை கொழும்பு, ரூ. 5-00.

(3) நாடகங்கள்

அனுவுருத்திர நாடகம் (பழைய நாடகம்): தென் மோடி நாட்டுக் கூத்து வி. பண்டிதர். வி. கி. கந்தையா, (1969) மட்டக்களப்பு பிரதேசக் கலா மன்றம் 163 பக்கம், ரூ. 1-75.

அரசன் ஆணையும் ஆடக சௌந்தரியும்: கங்கேஸ்வரி கந்தையா, (1965) கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம் ரூ. 2-25.

அலங்கார மங்கையின் அடக்கம்: ஜீ. எஸ். துரைராஜ் ஆபிரகாம் (1965) சகீராக் கல்லூரி, அழுத்தகம், தர்க்காநகர். ரூ. 1-25.

அலங்காரரூபன் நாடகம் (பழைய நூல்): கலாநிதி சு. வித்தியானந்தன் (1962) கலைக்கழக நாடகக்குழு இலங்கை ரூ. 2-00.

இறுதிப் பரிசு: ஏ. ரி. பொன்னுத்துரை (1967) யாழ். இலக்கிய வட்டம் மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ. 2-00.

இராம நாடகம் (விளக்கங்களுடன்) வட மோடி நாடகம்: வித்துவான் பண்டித வி. கி. கந்தையா (1969) மட்டக்களப்பு பிரதேசக் கலாமன்றம் ரூ. 1-75.

இறுதி மூச்சு: த. சண்முகசுந்தரம் (1965) வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம் மாவிட்டபுரம். ரூ. 1-00.

இலங்கை கொண்ட இராசேந்திரன்: சதா, ஸ்ரீநிவாசன் (1960). ஸ்ரீலங்கா அச்சகம், 234, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-25.

எண்பிறீக்கு எம்பரதோர் நாடகம் (பழைய நூல்): சு. வித்தியானந்தன் (1964) மன்னார் மாவட்ட உள்@ராட்சி மன்றம் ரூ. 2-00.

எஸ்தாக்கியார் நாடகம் (பழைய நூல்): வ. ம. சூசைப்பிள்ளை (1962) ஆசீர்வாத அச்சகம் சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் ரூ. 1-50.

கதிரைமலைப்பள்ளு நாடகம்: பண்டிதர். க. வீரகத்தி (1962) வாணி கலைக்கழகம் கரவெட்டி. ரூ. 1-25.

கமுனுவின் பள்ளு நாடகம்: மு. கனகராசன் (1970) மதுர நிலையம், மானிப்பாய். ரூ. 1-00.

கோபுர வாசல் (கவிதை நாடகம்): இ. முருகையன்.

கோடை (கவிதை நாடகம்): மஹாகவிதை

சங்கிலியன்: பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை (1964) சுதந்திரன் அச்சகம் கொழும்பு. ரூ. 3-50.

சங்கிலியன்: வித்துவான் கந்தையா (1960) வ. கந்தையா கொக்குவில் மேற்கு, கொக்குவில். ரூ. 1-00.

சிங்க கிரிக் காவலன்: ‘சொக்கன்’ (1963) கலைவாணி புத்தகசாலை. 10, பிரதான வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-50.

சிலம்பு பிறந்தது: சொக்கன் (1962) இலங்கைக் கலைக்கழக நாடகக்குழு ரூ. 1-25.

ஞானக் கவிஞன்: சொக்கன் (1965) ‘ஆசிர்’ வெளியீடு. 32, கண்டி வீதி யாழ்ப்பாணம். ரூ. 2-00.

தமயந்தி திருமணம்: பண்டிதர் சோ. இளமுருகனார் (1955) சொ. இளமுருகனார். புலவரகம் நவாலி.

தணியாத தாகம்: ‘கரவைகிழான்’ (1967) க. கந்தசாமி சித்தி விநாயகர் கோவிலடி, மன்னார். ரூ. 2-00.

தெய்வப் பாவை: சொக்கன் (1968) வரதர் வெளியீடு 226. கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம். ரூ. 1-25.

தென்னவன் பிரமராயன்: தேவன் யாழ்ப்பாணம் (1963) ஆசீர்வாதம் புத்தகசாலை, 32, கண்டி வீதி, யாழ்ப்;பாணம். ரூ. 1-00.

நாடகம்: ஏ. ரி. பொன்னுத்துரை (1970) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை. யாழ்ப்பாணம். ரூ. 2-00.

நாடகமாலை: ‘ஐயன்னா’ (1962) சனசமூக நிலையம் கந்தரோடை, சுன்னாகம். ரூ. 1-50.

பணத்தைப்பார் : பாரத நேச ஈழத்துச் செல்வன் (1966) தேன்துளிப்பதிப்பகம். வில்பொளை. ரூ. 1-00.

பண்டாரவன்னியன்: வே. சுப்பிரமணியம் (1970) பண்டாரவன்னியன் கழகம், முள்ளியவளை. ரூ. 2-50.

பூதத்தம்பி: த. சண்முகசுந்தரம் (1964) வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம், மாவிட்டபுரம். ரூ. 1-00.

பொம்மை வண்டி (மொழி பெயர்ப்பு): சோ. நடராசன்.

மறக்குடி மாண்பு: புலவர் நா. சிவபாத சுந்தரம் (1963) கலைச் செல்வி வெளியீடு கந்தரோடை, சுன்னாகம். ரூ. 1-50.

மனோன்மணி: வித்துவான் க. சொக்கலிங்கம் (1958) ஸ்ரீலங்கா புத்தகசாலை கே. கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம். ரூ. 1-25.

மன்னன் ஈடிபசு (மொழிபெயர்ப்பு கவிதை நாடகம்): இ. இரத்தினம் (1969) செய்யுட் களம். 49|3 காலிவீதி, கொழும்பு 4. ரூ. 2-00.

மாதவி மடந்தை: இலங்கையர் கோன் (1958). திருமகள் அழுத்தகம், சுன்னாகம். ரூ. 1-50.

மார்க்கண்டன் நாடகம் (பழைய நூல்): கலாநிதி கா. சிவத்தம்பி (1963) பல்கலைக்கழக வைத்திய இந்து மாணவர் சங்கம், கொழும்பு.

மூன்று முழு நிலவுகள்: செம்பியன் செல்வன், (1968) ஆசீர்வாதம் புத்தகசாலை 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 2-50.

மிஸ்டர் குகதாசன்: இலங்கையர் கோன் (1955) ஸ்ரீலங்கா அச்சகம். கே. கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம். ரூ. 1-00.

யார் கொலைக்காரன்?: அ. பொ. செல்லையா (1968) தாய் நாடு. பதிப்பகம். மீசாலை. ரூ. 1-50.

வந்த சேர்ந்தன தரிசனம் (கவிதை நாடகங்கள்): இ. முருகையன் (1965) செய்யுட்கள வெளியீடு 149|3, காலி வீதி, கொழும்பு ரூ. 1-00.

வாழ்வு பெற்ற வல்லி: த. சண்முகசுந்தரம் (1962) கணேசையர் நினைவு வெளியீட்டு மன்றம் மாவிட்டபுரம். 1-00.

விசயமனோகரன் (பழைய நூல்): வெ. மரியாம்பிள்ளை (1968) ஆசீர்வாதம் வெளியீடு சுண்டுக்குளி, யாழ்ப்பாணம். ரூ. 3-00.

விஜயன் விஜயை நாடகம்: தேவராசன்

(4) பெரியோர் வரலாறு

அடிகளார் பாதையில்: ‘பொன்கையூர் பர்வதன்’ (1960) இளைஞர் கழகம், புங்குடுதீவு.

இரசிகமணி மலர்மாலை (தொகுப்பு): சி. செல்லத்துரை (1967) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம், ரூ. 1-00.

இருவர் உலா: மோகன் (1966) கதம்பம் பதிப்பகம், 219, ஜெம்பட்டாதெரு, கொழும்பு. ரூ. 1-50.

இலங்கையில் சுவாமி விவேகானந்தர் : ச. அம்பிகைபாகன் (1963) வைத்தீஸ்வர வித்தியாலயம் யாழ்ப்பாணம். ரூ 1-00

ஈழத்துச் சொற் செல்வர்கள்: ஈழத்துச் சிவானந்தன் (1962) அடிகளார் பதிப்பகம், புங்குடுதீவு ரூ. 1-25.

ஈழம்தந்த இன்கலைச் செல்வன் (கவிதை) ஐந்து கவிஞர் (1965) ஆறுமுகசிற்பாலயம் திருநெல்வேலி. யாழ்ப்பாணம்.

ஈழம் தந்த கேசரி: இரசிகமணி கனக செந்திநாதன் (1968) ஈழகேசரிப் பொன்னையா வெளியீட்டு மன்றம், சுன்னாகம். ரூ. 3-00.

ஈழத்தில் நாடகமும் நானும் (சொர்ணலிங்கம் வாழ்க்கை): கலையரசு க. சொர்ணலிங்கம் (1968) இலங்கை இளம் நடிகர் சங்கம். ரூ. 10-00.

எங்கள் தலைவர் (முதலியார் தியாகராசா): த. துரைசிங்கம் (1963) தமிழ்க் குரல் பதிப்பகம் ஏழாலை, சுன்னாகம்.

எங்கள் நேரு: தமிழ் நெஞ்சன் (1964) அழுதம் பதிப்பகம், கொழும்பு.

எழுத்தாளர் கல்கி: பண்டிதர் கா. பொ. இரத்தினம் (1966) பழனியப்பா பிறேஸ் சென்னை - 14. ரூ. 2-50.

கலை மடந்தையின் தவப்புதல்வன்: இரசிக மணி கனக. செந்திநாதன். (1964) சன்மார்க்கசபை. குரும்பசிட்டி.

காந்தி தரிசனம்: எஸ். பொன்னுத்துரை (1969) அரசு வெளியீடு 231, ஆதிருப் பள்ளித்தெரு. கொழும்பு - 13. ரூ. 2-50.

கிறீன் அடிச்சுவடு: அம்பி (1967) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ. 2-50.

குமாரசுவாமி புலவர் வரலாறு: கு. முத்துக் குமாரசுவாமிப்பிள்ளை பீ. ஏ. புலவரகம், மயிலணி, சுன்னாகம். ரூ. 6-50.

கென்னடியின் கதை: மோகன் (1964) கதம்பம் பதிப்பகம் ஜம்பாட்டாதெரு, கொழும்பு.

கோபாலகிருஷ்ணபாரதி: நா. ப. பாலசந்திரன் (1963) ஏழிசைச் சூழல் வெளியீடு, தருமரகம, சுன்னாகம். ரூ.1-00

சபாபதிநாவலர் சரித்திரம்: வடகோவை அ. சிவகுருநாதன் (1955) சபாபதி நாவலர் ஞாபகநிலையம் வடகோவை. ரூ. 1-00.

சிவயோக சுவாமிகள் திருச்சரிதம்: வித்துவான் க. சி. நடராசன் (1955) ஸ்ரீ லங்கா அச்சகம், யாழ்ப்பாணம். 75 சதம்

சி. வை. தாமோதரம்பிள்ளை (கவிதை): ‘சிறுவர்கிழார்’ (1961) மாணவர் கழகம் இந்து தமிழ்ப்பாடசாலை, தட்டாதெரு.

சேர். கந்தையாவைத்திய நாதன் (கவிதை) வித்துவான். மு. கந்தையா (1965) சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம்.

சுன்னாகம் செல்லாச்சியம்மையார்: ச. அம்பிகைபாகன். ச. அம்பிகைபாகன் மல்லாகம்.

செந்தமிழ்ச் செம்மல், நா. கதிரைவேற் பிள்ளை: க. சி. குலரத்தினம் (1969) கதிரைவேற் பிள்ளை கலாமன்றம் புலோலி. ரூ. 1-50.

சேர். பொன். இராமநாதன் : ஈழவேந்தன் (1956) மா. க. கனேந்திரன் 15. கலிகந்தராமவீதி, கொழும்பு-6. 50 சதம்.

ஞானசூரியன் (கணேசையர்): இ. சுந்தரராசசர்மா (1960) ஸ்ரீலங்கா கஷ்ட நிவாரண சங்கம் 76|3, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். 50 சதம்.

தங்கத்தாத்தா: தமி;ழ்மணி ‘தெல்லியூர்’ (1961) தமிழ்மணிப்பதிப்பகம், யாழ்ப் பாணம். 50 சதம்.

தீந்தமிழ் மேதை திரு வி. க: டியெம்பி நல்வழிப்பதிப்பகம், 22, டயஸ்பிளேஸ். கொழும்பு.

தென்கோவை ச. கந்தையாபிள்ளை: கு. அம்பலவாணபிள்ளை (1959) திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.

சிவசம்புப் புலவர் சரித்திரம்: கு. முத்துக் குமாரசுவாமிப்பிள்ளை, புலவரகம், மயிலணி. சுன்னாகம்.

நான் கண்ட கலைப்புலவர்: கா. மாணிக்கவாசகர். (1958) நூல்நிலையப் பொறுப்பாளர். மத்திய கல்லூரி. யாழ்ப்பாணம்.

நான் கண்ட சிவபாதசுந்தரனார்: ஒரு அபிமானி, (1958) சைவப்பிரகாசயந் திரசாலை. வண்ணார் பண்ணை. யாழ்ப்பாணம்.

புலவர் நினைவுகள்: கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை (1967) புலவரகம், மயிலணி, சுன்னாகம், ரூ. 1-00.

மூன்றாவதுகண் (பண்டிதமணி சி. க): இராசிகமணி கனக செந்திநாதன் (1959) வரதர் வெளியீடு. கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம்.

யோகர்சுவாமிகள்: சிவனடியான் (1965) சண்முகநாத அச்சியந்திரசாலை, யாழ்ப்பாணம்.

வாழையடி வாழை: க. செபரத்தினம் (1962) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு-13. ரூ. 2-00.

வாழ்வளித் வழிகாட்டிகள்: வி. சுப்பிரமணியம். (1955) சண்முகநாதன் புத்தகசாலை, கே. கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம். ரூ. 1-50.

வாழ்க்கையில் வெற்றி: ஆர். செல்லையா (1970) சூரியப் பிரகாஸ். யாழ்ப்பாணம். ரூ. 5-00.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா: பாமா இராச கோபால் (1970) ஈழநாடு. யாழ்ப்பாணம். ரூ. 1-00.

முத்துத்தாண்டவர்: பண்டிதர் சி. நடராஜபிள்ளை (1960) நேரு அச்சியந் திரசாலை கொழும்பு 80 சதம்.

விபுலானந்தர் சரித்திரச் சுருக்கம் மீட்சிப்பத்து: புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை (1960) இந்து பரிபாலன சபை, மட்டக்களப்பு. 30 சதம்.

வ. உ. சி செக்கிழுத்தசெம்மல்: ஈழவேந்தன் (1962) மா. க. கனகேந்திரன். வெள்ளவத்தை 30 சதம்.

(5) கவிதைகள்

அண்ணல் கவிதைகள்: ‘அண்ணல்’ (1964) அரசு வெளியீடு, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13. ரூ 2-00.

அது: மு. பொன்னம்பலம் (1968) தமிழ்ப் புத்தகாலயம், பைகிராப்ட்ஸ் றோட், சென்னை - 5.

அழகு: ச. அமிர்தநாதன் (1965) எஸ். ஏ. பெர்னாண்டோஸ் ஸ்தாபனம், நுவரெலியா.

அழகியது: புலவர் பாண்டியனார் (1965) மெய்கண்டான், செட்டியார் தெரு, கொழும்பு - 11. ரூ. 4-50.

அறவழிக் கீதம்: எம். ஐ. எல். பக்கீர்த் தம்பி (1963) கலாபிவிருத்திக் கழகம், சம்மாந்துறை, 60 சதம்.

அறநெறிப்பா மஞ்சரி: சொக்கன் (1969) திருவாட்டி சி;ன்னம்மா இராமலிங்கம் ஞாபகார்த்த வெளியீடு, நாயன்மார்கட்டு. யாழ்ப்பாணம்.

ஆனந்தத் தேன் (இரண்டாம் பதிப்பு): பண்டிதர் க. சச்சிதானந்தன் பீ. ஏ. (1961) க. சச்சிதானந்தன். மாவிட்டபுரம். ரூ. 1-00.

இக்பால் இதயம்: அப்துல் காதர் லெப்பை (1961) மணிக்குரல் பதிப்பகம், லோவர் வீதி, பதுளை, ரூ. 1-50.

இரத்தக்கடன்: கவிஞர் சுதந்திரன் (1967) எழுவான் வெளியீடு, 19|3 அங்கின்றோட், மட்டக்களப்பு.

இலக்கிய உலகம்: வி; கந்தவனம் பீ. ஏ. (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித் தெரு, கொழும்பு - 13. ரூ.1-40.

இலக்கியவளமும் தாலவிலாசமும்: க. சோமசுந்தரப்புலவர், புலவரகம் நவாலி, மானிப்பாய்.

ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் (தொகுப்பு): கலாநிதி ஆ. சதாசிவம் (1967) இலங்கைச் சாகித்திய மண்டலம். ரூ 6.

ஈழத்துக் கவிமலர்கள் (தொகுப்பு): இரசிகமணி கனக செந்திநாதன் (1962) பராசக்தி நிலையம். குரும்பசிட்டி, தெல்லிப்பளை, ரூ. 1-50.

ஈழத்துப் பாரதியார் கவிதைகள் (முதற் பாகம்): மு. வ. புவனேந்திரராசா. (1970) விபுலானந்தர் வெளியீடு, புல்லு மலைச் சந்தி, சூசைப்பிள்ளையார் குளம் வவுனியா. ரூ. 1-90.

உமர் கையாம்: சி. கதிரவேற்பிள்ளை கோவில் வீதி, யாழ்ப்பாணம்.

எழுத்தாளன் காதலி: தமிழோவியன் (1959) தமிழோவியன். தெளிவத்தை. பதுளை.

எழிலி: பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் (1962) கலைச்செல்வி பாலன் வெளியீடு. செட்டிக்குளம். ரூ 1-00.

என்று வரும்?: முத்து இராசரத்தினம் (1970) ந. இராசநாயகம், 92. பாமன் கடை வீதி. கொழும்பு.

ஏனிந்தப் பெருமூச்சு: வி. கந்தவனம் பீ. ஏ. (1967) யாழ் இலக்கிய வட்டம். மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ 1-30.

ஒரு வரம்: ‘முருகையன்’ (1964) இ. சரவணமுத்து. 151, சேர்ச் வீதி. கொழும்பு - 2. ரூ. 1-00.

கண்மணியாள் காதை: மகாகவி (1968) அன்னை வெளியீட்டகம். 89|1, கோவில் வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-50.

கண்டறியாதது : இ. சிவானந்தன் (1969) வட. இல. தமிழ் நூற்பதிப்பகம். சுன்னாகம். ரூ. 2-25.

கண்ணிற் காக்கும் காவலன்: பண்டிதர் க. வீரகத்தி. (1965) வாணி கலைக்கழகம். கரவெட்டி.

கவிதைக்; குவியல்: ‘கோசுதா’ (1955) இளைஞர் முன்னேற்றப் பண்ணை வெள்ளைவத்தை. ரூ. 1-00.

கவிதைச் செல்வம் (தொகுப்பு): ச. வே. பஞ்சாட்சரம் (1961) யாழ். இலக்கிய மன்றம், கந்தரோடை, சுன்னாகம். ரூ.1-00.

கவிதைப்ப+ம் பொழில்: வித்துவான் க. வேந்தனார். (1964) ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, கே. கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம், ரூ. 2-00.

கனவுக் கன்னி: தில்லைச்சிவன் (1961) பாரதி இளைஞர் கழகம், வேலணை ரூ1.

கன்னி மலர்: வெல்ல@ர் கோபால். (1964) ஜீவா பதிப்பகம், தேற்றாத்தீவு. கழுவாஞ்சிக்குடி.

காந்தி பாமாலை (தொகுப்பு நூல்) அண்ணல் (1970) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு -13. ரூ. 1-10.

கீதாஞ்சலி (மொழி பெயர்ப்பு): சோ. நடராசன்.

கீரிமலையினிலே : வி. கந்தவனம் பீ. ஏ. (1969) யாழ். இலக்கியவட்டம், மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ. 2-00.

குலமலர்: ச. அமிர்தநாதர்,

குறிஞ்சிப் பூ (தொகுப்பு): ஈழக்குமார் (1965) கவிதாநிலையம், 193, பேராதனை வீதி, கண்டி. ரூ. 1-75.

கொய்யாக்கனிகள்: திமிலைத் துமிலன் (1964) இராசம் பிரசுரம், திமிலை தீவு, மட்டக்களப்பு. ரூ. 2-00.

சகுந்தலை வெண்பா: சு. நடேசபிள்ளை (1964) இராமநாதன் கழகம், மருதனார்மடம், சுன்னாகம். ரூ. 2-50.

சங்கிலியம்: காரை செ. சுந்தரம்பிள்ளை (1970) ஈழநாடு. சிவன் கோவில் மேலை வீதி, யாழ்ப்பாணம்.

சிட்டுக்குருவி: கவிஞர் மூவர் (1963) முக் கவிஞர் வெளியீடு, 31, திருகோணமலை வீதி, மாத்தளை. ரூ. 1-50.

சிந்தனைச் சோலை: தெ. அ. துரையப்பா பிள்ளை. (1960) மகாஜனாக்கல்லூரி. தெல்லிப்பளை. ரூ. 5-00.

சிலம்பொலி: நாவற்குழியூர் நடராசன் (1960). வரதர் வெளியீடு, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-75.

சிலம்பு சிரித்தது: இ. நாகராசன்.

சொந்த நாட்டிலே: சக்தி பாலையா (1961) 364, பழைய சோனகத் தெரு, கொழும்பு - 12. ரூ. 1-00.

செந்தமிழ் செல்வம்: பண்டிதர் சோ. இளமுருகனார். (1957) புலவரகம், நவாலி. ரூ. 1-00.

தண்டலை: பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் (1966) பூமாலை பதிப்பகம், 23, பலாலி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-50.

தந்தையார் பதிற்றுப்பத்து (இரண்டாம் பதிப்பு): க. சோமசுந்தரப்புலவர், புலவரகம், நவாலி, மானிப்பாய்.

தமிழ் எங்கள் ஆயுதம் (தொகுப்பு): (1962) தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘வரதர் வெளியீடு’ கே. கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம். ரூ. 1-00.

தமிழன் கனவு: கா. சி. ஆனந்தன் (1968) ரகுநாதன் பதிப்பகம் 303, காலி வீதி, கொழும்பு - 3. ரூ.2-00.

தாய்: தில்லைச்சிவன், அன்பு வெளியீடு, 27-டி, பெரியகடை, யாழ்ப்பாணம்.

தீங்கனிச் சோலை: பரம கம்ச தாசன் (1963) ஆத்மஜோதி நிலையம், நாவலப் பிட்டி. ரூ. 2-50.

தூவானம்: குமரன் (1967) குறிஞ்சிப் பண்ணை. பதுளை. ரூ. 1-50.

தூவுதும் மலரே: ஈழத்துக் குழூஉ இறையனார் (1962) கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம்.

தேயிலைத் தோட்டத்திலே: ஸி. வி. வேலுப்பிள்ளை (1969) தமிழாக்கம். சக்தி. அ. பாலையா. ‘செய்தி’ பதிப்பகம் த. பெ. 5, கண்டி. ரூ. 1-50.

தேனாறு: கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை (1968) யாழ். இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ. 2-50.

நன்மொழி நாற்பது: யூ. எஸ். ஏ. மஜீத் (1961) அன்புவாசா நிய+றோட், கல்முனை - 7. ரூ. 1-00.

நீதிக்கரங்கள்: ஐந்து கவிஞர்கள், பதிப்பாசிரியர் கனக செந்திநாதன் (1966) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ. 1-00.

நீரர மகளிர்: திமிலைத்துமிலன் (1963) இராசம் பிரசுரம், தமிலைதீPவு, மட்டக்களப்பு, 50 சதம்.

நெடும்பகல்: முருகையன் (1967) அமுத நிலையம், ராயப்பேட்டை, சென்னை - 14. ரூ. 3-00.

பா: சத்தியசீலன்.

புதுமெய்க் கவிதைகள்: தா. இராம லிங்கம் (1964) பரிலூக்கா கல்லூரி, இரத்தினபுரி ரூ. 1-00.

புது உலகம்: க. பசுபதி (1965) எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 94, 2|7, யோர்க்வீதி, கொழும்பு ரூ. 2-25

புரட்சிக் கமால் கவிதைகள்: புரட்சிக் கமால் (1962) இக்பால் பதிப்பகம், கண்டி, ரூ. 3-00.

பூரணன் கதை: பண்டிதர் சோ. இளமுருகனார் (1963) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம், யாழ்ப்பாணம். ரூ. 2-50.

பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு): சோ. நடராசன் (1963) ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம், கொழும்பு. ரூ. 2-00.

மஹாகவியின் குறும்பா: மஹாகவி (1966) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13. ரூ. 2-25.

மலர்ந்த வாழ்வு: ஸ{பைர் (1956) தமிழ் மன்றம், கல்கின்னை, கண்டி, ரூ. 1-00.

மரகதன் ஓட்டமணி ஒலி: ச. த. மு. சதக்குத் தம்பிப்பாவலர் (1970) எஸ். டி. எம். சாஹிபு, 24, முகாந்திரம் ரோடு, மாத்தளை ரூ. 1-25.

முகிலன் கவிதைகள்: முகிலன் (1964) யாழ்கலை அரங்கம், 21, தட்டார ஒழுங்கை, கொழும்பு - 2. ரூ. 1-00.

முதுமை நினைவு: பொ. கந்தையா (1966) சுதந்திரன் அச்சகம், 194, பண்டாரநாயக்கா மாவத்தை, கொழும்பு.

முருகேச பண்டிதர் பிரபந்தத் திரட்டு: கு. முத்துக்குமாரசாமிப்பிள்ளை பீ. ஏ. புலவரகம், மயிலணி, சுன்னாகம், ரூ. 1-00.

முல்லைக்காடு: ஜீவா - யாழ்ப்பாணன் (1957) கலாபவனம், பருத்தித்துறை. ரூ. 1-50.

முற்றத்து மல்லிகை (தொகுப்பு): அப்துல் ஸமது.

மேகதூதம் (மொழி பெயர்ப்பு): சோ. நடராசன் (1954) அப்போதிக்கரீஸ் கம்பெனி, குமாரவீதி, கொழும்பு ரூ. 1-75.

வள்ளி: மஹாகவி (1955) வரதர் வெளியீடு, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ. 60 சதம்.

வாழும் கவிதை: ஜீவா ஜீவரத்தினம் (1963) மஞ்சுளா, பிரசுரம் துறை நீலாவணை, கல்முனை, 75 சதம்.

வானம் சிவக்கிறது: புதுவை. இரத்தின துரை. (1970) சுசாஜினி வெளியீடு, திரு நெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம், ரூ. 1-50.

விடிவெள்ளி கவிதைகள்: க. பே. முத்தையா (1964) பெற்றார் ஆசிரியர் சங்கம். சாதனாபாடசாலை, நல்லூர். ரூ. 1-00.

விடுதலை வேட்கை: ஆ. சபாபதி. (1966).

விபுலானந்தக் கவிதைகள்: அருள் செல்வநாயகம் (1958) மலர் நிலையம் ரூ. 2-00.

விஜயேந்திரன் கவிதைகள்: விஜயேந் திரன் வள்ளுவர் தமிழ் மன்றம், யாழ்ப்பாணம். ரூ. 1-00.

விபுலானந்தக் கவிமலர்: அருள் செல்வநாயகம் (1965) ஸ்ரீலங்கா புத்தகசாலை, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ. 2-25.

வீரத்தாய்: சொக்கன் கலா பவனம், பருத்தித்துறை. ரூ. 1-00.

வேணில் விழா: பண்டிதர் சோ. இளமுருகனார். இலக்கியக் கழகம், யாழ்ப்பாணம். (புலவரகம் நவாலி, மானிப்பாய்) ரூ. 1-00.

(6) சமயப் பாடல்கள்

அன்னை லலிதாம்பிகை அருட்பேராயிரம்: க. வை. ஆ. சர்மா (1964) ஐயனார் கோவிலடி ஒழுங்கை, வண்ணார்பண்ணை. ரூ. 2-00.

கதிரேசன் பாமாலை: மு. க. சூரியன் (1955) எம். சி. தங்கையா, தலத்தோயா எஸ்டேட், தலத்தோய ரூ. 60.

கதிரைமலை யாத்திரை பாராயணப் பிரபந்தம்: புலவர் சி. சின்னையா (1955) புலவர் சி. சின்னையா. கச்சாய். ரூ. 2-00.

உசன் முருகன் பேரில் (கப்பற்பாட்டு): பண்டிதர் சோ. இளமுருகனார் (1961) ச. இராசரத்தினம் கந்தசாமி கோவில் உசன்.

கதிரைச்சிலேடை வெண்பா: நவாலி க. சோமசுந்தரப்புலவர் (1955) புலவரகம் நவாலி, மானிப்பாய், ரூ. 3-00.

கதிரைமலைக் கோவை: புலவர் சி;ன்னையா (1963) தமிழ் இலக்கிய மன்றம், கச்சாய் ரூ. 1-50.

காசியாற்றுப்படை: கு. முத்துக்குமார சுவாமிப் பிள்ளை பீ. ஏ. (1963) புலவரகம் மயிலணி, சுன்னாகம். 35 சதம்.

கதிர்காமப் பதிகம்: க. இராமச் சந்திரன் (1961) ஆத்மஜோதி நிலையம், நாவலப் பிட்டி.

கந்த மலர்ப் பந்தர்: ந. தர்மலிங்கம் (1970) ந. தர்மலிங்கம், வட்டுக்கோட்டை ரூ. 1-00.

குமாரபுரக் குமாரவேள் பதிகம்: மு. செல்லையா (1957) ஸ்ரீலங்கா வித்தியாசாலை, அல்வாய். 50 சதம்.

செல்வச் சந்நிதிக் கந்தன் திருப்பாமாலை: அருட்கவி சி. விநாசித் தம்பி (1967) சுப்பிரமணியன் சோடாக் கம்பனி, வல்வெட்டித்துறை.

சுவாமி பிள்ளைத்தமிழ்: பண்டிதர், வித்துவான். க. கி. நடராசன் (1969) யாழ் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம், 111|1, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ. 2-50.

செழுங்கமலச் சிலம் பொலி: பண்டிதர் க. வீரகத்தி (1970) வாணி கலைக்கழகம் கரவெட்டி, ரூ. 2-00.

சிவானந்தலகரி (மொழி பெயர்ப்பு): பண்டிதர் ச. சுப்பிரமணியம் (1968) அமரபாரதி பரீ~hஸமிதி இலங்கைக்கிளை யாழ்ப்பாணம். ரூ. 2-50.

நயினைத் தபால்: கவிஞர் ஞா. ம. செல்வராசன் (1961) ஞா. ம. செல்வராசன் ஊர்காவற்றுறை.

நல்லைக் கந்தன் பாமாலை: மு. க. சூரியன் (1968) ‘அரஸ் கோ’ தொழிற்சாலை, நல்லூர், யாழ்ப்பாணம்.

நயினாதீவு நாகேஸ்வரி பதிகமும் - உரையும்: வரகவி சி. முத்துக்குமாருப் புலவர் (1965) க. ஐயாத்துரை சோதிட விலாசா நயினாதீவு. 50 சதம்.

நீர்வைக் கந்தன் தோத்திரம்: தொகுப்பு நூல் (1968) தேவஸ்தானம், நீர்வேலி.

நபி மொழி நாற்பது: ஆ. மு. ஷரிபுத்தீன் (1968) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித்தெரு, கொழும்பு, ரூ. 1-50.

நாமகள் புகழ்மாலை: க. சோமசுந்தரப் புலவர், புலவரகம், நவாலி - மானிப்பாய்.

திருமண்டூர் முருகமாலை: மு. சோமசுந்தரன் (1960) மு சோமசுந்தரன், மண்டூர். ரூ. 1-00.

தில்லையந்தாதி: பண்டிதர் செ. சிவப்பிரகாசம் (1964) முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். 75 சதம்.

பக்திப்பாடல்கள்: கா. சி. ஆனந்தன் (1965) கா. சி. ஆனந்தன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக் குழு, மட்டக்களப்பு. 75 சதம்.

பகவத்கீதை வெண்பா: புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை. (1962) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு - 13. ரூ. 3-50.

பாணந்துறைக்கந்தரந்தாதி: பண்டிதர் த. சுப்பிரமணியம் (1956) சைவமகாசபை, பாணந்துறை.

முத்துக்குமாரசுவாமி தோத்திரப் பாமாலை: (வேலக்கை) வி. சி. முத்துவேலு மானிப்பாய் தெற்கு.

மயிலணி அந்தாதி: கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை பீ. ஏ. (1966) புலவரகம் மயிலணி, சுன்னாகம். 50 சதம்

மாத்தளைக் குறவஞ்சி: நவாலியூர் சொக்கநாதன், முக்கவிஞர். பதிப்பகம், மாத்தளை ரூ. 1-00.

மாவைப்பிள்ளைத்தமிழ்: பண்டிதர் மு. கந்தையா (1967) முத்தமிழ்க் கலைமன்றம் மாவிட்டபுரம். ரூ. 2-50.

வள்ளி நாயகன் (நாடகக் காவியம்): அருட்கவி சி. விநாசித்தம்பி (1969) த. குணபாலசிங்கம், திருவருள் அளவெட்டி. ரூ. 1-50.

(7) சிறுவர் நூல்கள்

அம்பிப்பாடல்: ‘அம்பி’ (1969) வட இலங்கைத் தமிழ் நூற்பதிப்பகம் சுன்னாகம். ரூ. 2-25.

கனியமுது: தொகுப்பாசிரியர் திமிலைமகாலிங்கம் (1965) தேனமுத இலக்கிய மன்றம், 1|1, டயஸ் வீதி, மட்;டக்களப்பு, ரூ. 1-10.

குழந்தை இலக்கியம்: சாரணா கையூம் (1963) சாபியா பதிப்பகம், வதுளை. 60 சதம்.

குருமோகன் ஞாபகார்த்தப் பாடல்கள்: தொகுப்பாசிரியர் (குறமகள்) (1965) ‘குறமகள்’ சின்னதம்பி வளவு, காங்கேசன்துறை.

சிறுவர் செந்தமிழ்: நாவலியூர். க. சோமசுந்தரப் புலவர் (1955) புலவரகம் நாவலி மானிப்பாய் ரூ. 2-50.

சிறுவர் பாடல்: இ. நாகராசன் (1968) சண்முகநாதன் அச்சகம், யாழ்ப்பாணம். ரூ. 1-50.

செந்தமிழ்க் கீதமாலை: அ.கி. ஏரம்பமூர்த்தி (1964) கலை அபிவிருத்திச்சபை, கரைச்சி ரூ. 1-00.

செந்தமிழ்ச் சிறுவர்களே சேர்ந்து பாடுவோம்: தொகுப்பாசிரியர் செல்வி சந்தனநங்கை கந்தப்பு (1955) மகளிர் ஆசிரிய பயிற்சிக் கழகம், கோப்பாய். ரூ. 1-25.

பாட்டு: சத்தியசீலன் (1970).

பாலர் பாடல்: ‘கோசுதா’ (1957) வள்@வர் பண்ணை, 140 விவேகானந்த மேடு. கொழும்பு. 50சதம்.

பாலர் பாமலர்: தொகுப்பு நூல் (1957) தமிழாசிரியர் சங்கம், நாவலப்பிட்டி.

பாலர் பாமாலை: வெற்றிவேல் விநாயக மூர்த்தி (1964) பஞ்சவர் முத்தமிழ்ப் பண்ணை, பன்குடாவெளி, மட்டக்களப்;பு. 85 சதம்.

பிள்ளைத்தமிழ்: ச. அமிர்தநாதர் (1970) கலைமன்ற வெளியீடு, நுவரெலியா,

மழலைச் செல்வம் (தொகுப்பு நூல்) (நினைவுநூல்) (1964) செல்வி இந்திரா நடராசா மயிலங்கூடல், இளவாலை.

மலரும் மணம்: எம். சி. எம். ஸ{பைர் (1967) மணிக்குரல் பதிப்பகம், கல்கின்னை ரூ. 1-75.

மாணாக்கரின் காந்தி: எம். ஏ. ரகுமான் (1969) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13. ரூ. 1-50.

(8) இலக்கியக் கட்டுரைகள்

இலக்கியச் சோலை: செந்தமிழ் மணி பொ. கிருஷ்ணபிள்ளை (1964) ஆசிரியர் கலாசாலை, பலாலி, வசாவிளான். ரூ. 2-25.

இலக்கிய வழி (புதிய பதிப்பு): பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ளை (1955) திருநெல்வேலி ஆசிரியகலாசாலை பழையமாணவர் சங்கம். (1964) ரூ. 1-50.

இரு மகா கவிகள்: க. கைலாசபதி. எம். ஏ. பி. எச். டி. (1962-1968) என். சி. பி. எச். நிறுவனம், 6, நல்லதம்பி செட்டிதெரு, மவுன் றோட், சென்னை. ரூ. 1-50.

ஈழத்து இலக்கிய வளர்ச்சி: இரசிகமணி கனக செந்திநாதன் (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13. ரூ. 3-50.

ஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சி: சில்லையூர் செல்வராசன் (1967) அருள் நிலையம் சென்னை. ரூ. 2-00.

ஈழத்தின் முஸ்லீம் புலவர்கள்: ஏயாரெம் சலீம் (1962) பிறைப்பண்ணை, அக்கரைப் பற்று. ரூ. 1-50.

ஈழத்து வாழ்வும் வளமும்: பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. (1962) பாரி நிலையம் பிராட்வே, சென்னை. ரூ. 2-50.

உரை மலர்: எம். ஐ. எவ். பக்கீர்த்தம்பி (1961) கலாபிவிருத்திக் கழகம். சம்மாந்துறை. ரூ. 1-25.

ஒலிபரப்புக் கலை: சோ. சிவபாதசுந்தரம் (1954) கலாபவனம். 23, பெயர்லைன் றோட், தெஹிவளை. ரூ. 6-00.

கலையும் பண்பும்: ‘பிறையன்பன்’ (1961) கிங்ஸ்லி பதிப்பகம், கண்டி. ரூ. 3-25.

கவிதை வாணில் ஒரு வளர்பிறை: கனக. செந்திநாதன் (1958) வரதர் வெளியீடு கே கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம். 50சதம்.

கம்பனது கதாபாத்திரங்கள்: சி. இலட்சுமணன் எம். ஏ. (1959) பழனியப்பா பிரதேர்ஸ். சென்னை. ரூ. 1.

காவியக் கட்டுரைகள்: பண்டிமணி சி. கணபதிப்பிள்ளை (1965) திருமகள் அழுத்தகம், சுன்னாகம். ரூ. 2.

காப்பியச் சொற் பொழிவுகள்: (தொகுப்பு) எஸ். பொன்னுத்துரை (1965) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13. ரூ. 3-50.

குறளில் உணர்ச்சிவளம்: இரத்தினம் நவரத்தினம் எம். ஏ. (1958) சிவதொண்டன் டிரஸ்ட். யாழ்ப்பாணம்.

சிலம்பின் சிறப்பு: வித்துவான் பொன். முத்துக்குமாரன் (1964) வரதர் வெளியீடு, கே. கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம். ரூ. 2-50.

செந்தமிழ் வழக்கு: பண்டிதர் சோ. இளமுருகனார் (1963) தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், யாழ்ப்பாணம். ரூ. 1

தமிழ் மறைக் கட்டுரைகள்: பண்டிதர் க. பொ. இரத்தினம் பா. உ. (1959) தமிழ் மறைக்கழகம், கொழும்பு ரூ. 4-00.

தமிழர் சால்பு: கலாநிதி சு. வித்தியானந்தன் (1954) தமிழர்மன்றம். கல்கின்னை கண்டி. ரூ. 4-00.

தமிழன் எங்கே?: மு கணபதிப்பிள்ளை (1958) ஈழமணிப்பதிப்பகம் 60. குமாரன் இரத்தினம் வீதி, கொழும்பு ரூ. 1-50.

தமிழிலக்கிய வரலாறு: வி. செல்வநா யகம் எம். ஏ. ஸ்ரீலங்கா அச்சகம், கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ. 4-25.

திருக்குறள் ஆராய்ச்சி: பல அறிஞர்கள் (1955) திருக்குறள் மன்றம் கொழும்பு. ரூ. 2-00.

நான் கண்ட பாரதி: நீ. வ. நிக்கலஸ். (1965) கம்பன் கலைப்பண்ணை மூதூர். ரூ. 3-75.

நூற்றாண்டில் தமிழ்: க.பொ. இரத்தினம்

படித்தவர்கள்: மு. நடேசபிள்ளை (1959) ஸ்ரீலங்கா புத்தகசாலை. கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம். 50 சதம்.

பாரதத் தூதுவர்; கி. இலட்சுமணன் எம். ஏ. பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை.

பாரத நவமணிகள்: பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1959) பிலோமினா அச்சகம் பிரதான வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-25.

பாரதி கண்ட சமுதாயம்: இளங்கீரன் நவபாரதப் பிரசுரம். சென்னை.

மேல் நாட்டுத்தரிசன வரலாற்றின் சுருக்கம்: சி. கதிரவேற்பிள்ளை பா. உ. (1958) ஈழகேசரிப் பொன்னையா வெளியீட்டு, மன்றம், குரும்பசிட்டி.

அன்னை தயை: மு. கணபதிப்பிள்ளை (1966) பாரி நிலையம், 57, பிராட்வே, சென்னை - 1. ரூ. 2-00.

பிரபந்தப்பூங்கா: இரசிகமணி கனக. செந்திநாதன் (1967) வரதர் வெளியீடு கே. கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம். ரூ. 1-50.

அருமைக்குழந்தைகளுக்கோர் அம்பிப் பாடல்: இரசிகமணி கனக செந்திநாதன் (1969) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம்.

இஸ்லாமிய இலக்கியச் சொற் பொழிவுகள்: (தொகுப்பு) எஸ். ஏ. செய்யது ஹஸன் மௌலானா (1968) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு ரூ. 7-50.

இலக்கித் தென்றல்: கலாநிதி சு. வித்தியானந்தன்.

இலங்கையில் இன்பத் தமிழ்: க. பொ. இரத்தினம் பா. உ. (1960) கலைவாணி புத்தக நிலையம். யாழ்ப்பாணம் ரூ. 1-00.

இளங்கோவின் கனவு:

இலங்கையில் இரு மொழிகள்: இளங்கீரன் (1959) லட்சுமிப்பதிப்பகம், சென்னை-17. ரூ. 1-25.

ஈழநாட்டுத் தமிழ் விருந்து: (தொகுப்பு) மருணீக்கியார் (1960) சண்முகநாதன் புத்தகசாலை, யாழ்ப்பாணம். ரூ. 2-50.

ஈழநாட்டுத் தமிழ் சுடர் மணிகள்: மு. கணபதிப்பிள்ளை.

உரை நடைவரலாறு: வி. செல்வநாயகம் எம். ஏ. ஸ்ரீலங்கா புத்தகசாலை, கே. கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம்.

ஒப்பியல் இலக்கியம்: க. கைலாசபதி எம். ஏ. பி. எச். டி. (1969) பாரி நிலையம் பிராட்வே. சென்னை ரூ. 6-00.

கல்கி பிறந்தார்: இராஜ அரியரத்தினம் பாரி நிலையம் பிராட்வே. சென்னை ரூ.1

கருத்துரைக் கோவை: கலாநிதி ஆ. சதா சிவம். (1959) ஆ. சதாசிவம். அராலி, வட்டுக்கோட்டை. ரூ. 2.

கவிதை நயம்: க. கைலாசபதி இ. முருகையன் (1969) செய்யுட்கள் வெளியீடு கொழும்பு ரூ.4-00.

கூனியின்சாதனை: கவிஞர் வி. கந்தவனம் (1970) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம். ரூ. 1-75.

குறுந்தொகைக் காட்சிகள்:

சிறுகதையின் தோற்றமும் - வளர்ச்சியும்: கா. சிவத்தம்பி எம். ஏ. பி. எச்.டி. (1967) பாரி நிலையம், 59, பிராட்வே. சென்னை ரூ. 2-75.

தமிழ் நாவல் இலக்கியம்: க. கைலாசபதி எம். ஏ. பி. எச். டி. (1968) பாரி நிலையம். பிராட்வே. சென்னை. ரூ. 4-50.

நீ (உணர்வூற்று உருவகச்சித்திரம்): எஸ். அகஸ்தியர் (1969) இலங்கை முற்போக்கு எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம். 4ஷ44, தலகொட்டுவ நராரன்பிட்டிறோட் கொழும்பு. 75 சதம்.

பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்: க. கைலாசபதி எம். ஏ. பி. எச். டி. (1966) என். சி. பி. ஏச். நிறுவனம் சென்னை. ரூ. 3-00.

போர்ப்பறை: மு. தளைசிங்கம் (1970) சர்வோதய இயக்கம், புங்குடுதீவு. ரூ. 3-50.

மட்டக்களப்புத் தமிழகம்: வி. சி. கந்தையா (1964) ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி. ரூ. 10-00.

மலரும் மணமும்: ஆ. கந்தையா எம். ஏ. (1962) பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை - 1. ரூ. 2-00.

முஸ்லீம் தமிழ்ப் பாரம்பரியம்: எம். கே. செய்யது அகமது (1968) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு ரூ. 4-25.

விபுலானந்த ஆராய்வு: தொகுப்பு அருள் செல்வநாயகம் (1963) கலைமகள் காரியாலம், மயிலாப்பூர், சென்னை ரூ. 2-00.

விபுலானந்த அமுதம்: தொகுப்பு அருள் செல்வநாயகம் (1956) கலாநிலையம். 176, செட்டியார் தெரு, கொழும்பு. ரூ. 1-50.

விபுலானந்தச் செல்வம்: தொகுப்பு அருள் செல்வநாயகம். (1963) கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர் சென்னை ரூ. 2-00.

விபுலானந்த வெள்ளம்: தொகுப்பு அருள் செல்வநாயகம். (1961) ஒரியன்ட் லாங்ஸ் மன்கம்பெனி, சென்னை. ரூ. 2-25.

வடமொழி இலக்கிய வரலாறு (முதற் பாகம்) கா. கைலாசநாதக்குருக்கள் எம். ஏ. பி. எச். டி. (1962) கலாநிலையம். 175, செட்டியார் தெரு, கொழும்பு. ரூ. 3

விபுலானந்தத்தேன்: (தொகுப்பு) அருள் செல்வநாயகம் (1956) பாரி நிலையம். பிராட்வே, சென்னை ரூ. 2-50.

நறுமலர் மாலை: அருள் செல்வநாயகம் (1957) கலாநிலையம் செட்டியார் தெரு, கொழும்பு. ரூ. 1-50.

வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை: சி. தில்லைநாதன் எம். ஏ. (1967) தமிழ்ப் புத்தகாலயம், 576, பைகிராப்ட்ஸ் றோட், சென்னை - 5. ரூ. 2-50.

(9) சமயக் கட்டுரைகள்

ஆறுமுகமான பொருள்: செ. தனபால சிங்கன் (1961) சிதம்பர சுப்பிரமணிய கோவில் நிர்வாகசபை, உருப்பிராய். ரூ. 2-00

இந்திய சமயத்துவங்கள்: கி. இலட்சும ணன் எம் ஏ.

இலங்கையிற் சமயங்களும் அவைதரும் இன்ப வாழ்க்கை நெறியும்: ச. தியாகராசா (சரசாலை) (1955) ஸ்ரீகாந்தா அச்சகம் யாழ்ப்பாணம். 80 சதம்.

ஈழத்துச் சிதம்பரம்: ச. கணபதீஸ்வரக் குருக்கள் (1961) சுந்தரேஸ்வரர் தேவஸ்தானம், காரைநகர். ரூ. 2-50.

உமையம்மை திருப்புராணங்கள் (1965) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி தெல்லிப்பளை.

கந்தபுராண கலாசாரம்: பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ளை, இந்துக்கல்லூரி. மானிப்பாய். ரூ. 1-00.

இந்துமதமும் கடவுள்கள் வரலாறும்:

இறைதூதர் இன்றேல்: எம். ஏ. எம் . சுக்ரி. பீ. ஏ. (1966) இலங்கை முஸ்லீம் எழுத்தாளர் சங்கம், த. பெ. 824. கொழும்பு - 1. ரூ. 1-00.

உபநிடதச் சிந்தனைகள்: செ. தனபாலசிங்கன் சிதம்பரசுப்பிரமணிய தேவஸ்தானம், உரும்பிராய். ரூ. 2-00.

கந்தபுராண போதனை: பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1960) அகில இலங்கைச் சைவ இளைஞர் மத்தியமகா சபை. ரூ. 1-25.

கந்தபுராண விளக்கம்: சு. சிவபாத சுந்தரம். (1954) கொழும்பு விவேகாந்த சபை. ரூ. 1-25.

கந்தர் கலிவெண்பா - உரை: வழக்கறிஞர் நா. ஏகாம்பரம் (1955) நா. ஏகாம்பரம். வட்டுக்கோட்டை.

கதிர்காமம் (இரண்டாம் பதிப்பு) குல. சபாநாதன் ரூ. 2-00.

கதிர்காமத் திருமுருகன்: எஸ். எஸ். நாதன் (1964) செல்லச்சாமி நாடார் அன் பிரதர்ஸ்.

கீதை அமுதம்: செ. தனபாலசிங்கன் (1970) உரும்பிராய். ரூ. 5-00

கோயில் அல்லது சிதம்பரச் சிறப்பு: பண்டிதர் செ. சிவப்பிரகாசம் (1965) முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல் வேலி. ரூ. 2-50.

சங்கர பண்டிதர் பிரபந்தத்திரட்டு: சங்கர பண்டிதர் (1957) ச. பொன்னுச்சாமி வெளியீடு. ரூ. 1-00.

சமயக் கட்டுரைகள்: பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1961) திருநெல்வேலி ஆசிரிய கலாசாலை பழையமாணவர் சங்கம்.

சிவபெருமான் திருநடனம்: பண்டித நடராசபிள்ளை. (1962).

சிவராத்திரி விரதமகிமை: வித்துவான் வேலன் (1965) கலைவாணி புத்தக நிலையம். யாழ்ப்பாணம். ரூ. 1-50.

சுன்னாகம் ஐயனார் கோவில் வரலாறு: (1965) கோவில் பரிபாலன ஆதரவாளர் சபை, சுன்னாகம்.

சைவநற்சிந்தனைகள், பண்டிதமணி சி. கணபதி;ப்பிள்ளை, (1954) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி. ச. 50.

சைவக்கதிர்: வீ. அருணாசலம்பிள்ளை (1964). சைவமகாசபை மாத்தளை.

சைவத்திருக் கோயிற் கிரியை நெறி: கலாநிதி கா. கைலாசநாதக்குருக்கள். (1963) கலாநிலையம் 175. செட்டியார் தெரு, கொழும்பு. ரூ. 5.

சைவத்திருமணம்: கு. பாலசுந்தரக்குருக்கள் பீ. ஏ. (1961) ஸ்ரீலங்கா சைவ ஆதினம் கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-50.

சைவசமய புண்ணிய காலம்: பண்டிதர். த. சுப்பிரமணியம் (1957) ஸ்ரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம். ரூ. 1-50.

திருவாதிரை மலர்: ச. கணபதீஸ்வரக் குருக்கள் (1964) ஈழத்துச்சிதம்பரம் தேவஸ்தானம். காரைநகர். ரூ. 1-00.

திருமுறைக் காட்சி: நா. முத்தையா (1960) ஆத்ம ஜோதி நிலையம், நாவலப்பிட்டி. ரூ. 1-50.

திருக்கேதீஸ்வரம்: ஆ. கந்தையா எம்.ஏ. (1968) ஸ்ரீகாந்தா அச்சகம். யாழ்ப்பாணம். ரூ. 3-00.

தெய்வீகவாழ்வு: (மொழி பெயர்ப்பு) இராசேஸ்வரி தம்பு (1956) திருமகள் அழுத்தகம் சுன்னாகம்.

சைவசமய வரலாறு: ந. சி. கந்தையா பிள்ளை. (1958). ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம். பவழக்hகரத் தெரு, சென்னை. ரூ. 1-50.

தேவாரத்திருவமுதம்: வே. க. ப. நாதன் (1954) 128|5, வாட்பிளேஸ். கொழும்பு.

நயினை நாகேஸ்வரி: குல சபாநாதன் (1962) ரூ. 100.

நவராத்திரி மாலை: (1964) வட - இலங் கைத் தமிழ்நூற் பதிப்பகம். சுன்னாகம். 70 சதம்.

நாகதம்பிரான் மான்மியம்: பண்டிதர் த. சுப்பிரமணியம் (1963) ஸ்ரீகாந்தா அச்சகம். யாழ்ப்பாணம். ரூ. 1-00.

மாவிட்டபுரத்திருத்தல வரலாறு: து. சண்முகநாதக் குருக்கள் (1965) சன்மார்க்க சபை குரும்பசிட்டி. ரூ. 1-00.

முன்னேஸ்வரமான்மியம்: மு. சோமாஸ்கந்தக் குருக்கள், முன்னேஸ்வர தேவஸ்தானம். சிலாபம்.

முருகன் மணவாளன்: செ. தனபாலசிங்கன் (1964) உரும்பிராய் சிதம்பரசுப்பிரமணிய சுவாமி கோவில் கொழும்புக் கிளை. ரூ 2-00.

பகவத்கீதை கர்மயோகம்: மு. ஞானப்பிரகாசம் பீ, எ. பீ. எஸ். ஸி. (1968) வடஇலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், சுன்னாகம். ரூ. 3-00.

படைவீடுடைய பரமன்: செ. தனபாலசிங்கன் பீ. ஏ. (1968) சண்முகநாத அச்சகம். யாழ்ப்பாணம். ரூ. 3-00.

(10) பிறநூல்கள்

அப்பலோ 11,12: புத்தொளி (1969) தமயந்திப்பதிப்பகம், அச்சுவேலி. 60சதம்.

விஞ்ஞானக் கட்டுரைகள்: மு. சிவராசா (1968) மக்கள் கலைமன்றம் அரசடி, சங்கானை, ரூ. 1.

அருமைத்தங்கைக்கு: (சுகாதாரக் கடிதங்கள்) டாக்டர் நந்தி (1960) சரஸ்வதி காரியாலயம். இராயப்பேட்டை, சென்னை. ரூ. 1-25.

அருட்கொடை (சம்பவத்திரட்டு): எஸ். எம். ஜவுபார் (1965) முஸ்லீம் ஹோட்டல் புத்தகநிலையம், கண்டி ரூ. 3-00.

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை: (கட்டுரை) கலாநிதி. ஆ. சதாசிவம். (1963)

இலங்கையிற் கலைவளர்ச்சி (கலைநூல்): கலைப்புலவர் க. நவரத்தினம் (1954) ஈழகேசரிப் பொன்னையா வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி. ரூ. 15.

இல்லத்தின் இன்பம் (கட்டுரை) (வாழ்க்கை): ஜோ. ஏ. எம். தாஸ். (1961) மதுரா நிலையம், சென்னை-1. சதம் 75.

இளமைப் பருவத்திலே (சிறுவர் இலக்கியம்) ஏம். ஏ. ரகுமான் (1962) அரசு வெளியீடு 231. ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13, ரூ 1-00.

இலங்கைத் தமிழர் வரலாறு (வரலாற்று நூல்) பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை (1956) பல்கலைக்கழகம், பேராதனை, ரூ. 1-00.

இலக்கணச் சந்திரிகை (இலக்கணம்): அ. குமாரசாமிப்புலவர். (1968) பண்டித மாணவர் கழகம், மல்லாகம். ரூ. 1-00.

இலங்கையில் தமிழ்ப்படங்கள்: சி. சிவஞானசுந்தரம் (1970) அழகு வெளியீட்டகம். ஏழாலை. ரூ. 1-00.

இலங்கைத் தீவு (கட்டுரை) எஸ். விஜயதுங்க. தமிழில் கே. வி. இராமச்சந்திரன் (1959) அருணோதயம், இராயப்பேட்டை, சென்னை-14. ரூ. 1-40.

ஈழமும் தமிழும் (புத்தகஅட்டவணை): (தொகுப்பு) எவ். எக்ஸ். சி. நடராசா. (1960) கலைமகள் கம்பெனி. 124, செட்டியார் தெரு, கொழும்பு - 11.

ஈழத்துநாடோடிப் பாடல்கள்: கு. ஓ. ஊ. நடராசா (1962) ஆசீர் வாதம் அச்சகம், யாழ்ப்பாணம். ரூ. 1-50.

ஒவியக்கலை (கலைநூல்) கலாசேகரி ஆ. தம்பித்துரை (1961) சம்மார்க்கசபை, குரும்பசிட்டி, தெல்லிப்பளை. ரூ. 1-00.

களவுக் காதலர் கையாண்ட விடுகதைகள்: நாட்டார் இலக்கியம் (மக்கள் கவிமணி) மு. இராமலிங்கம் (1962) இராதா பிரசுரம், மைலாப்பூர், சென்னை ரூ. 1-50.

கற்காலக்கலையும் சுவையும் (கலைநூல்): ச. பெனடிக் (1959) ஈழக்கலை மன்றம் இராசமலை, திருகோணமலை. ரூ. 2-00.

கனகிபுராணம் (கவிதை) (பழையநூல் இரண்டாம் பதிப்பு) பதிப்பாசிரியர் மு. இராமலிங்கம் (1961) அயோத்தியா வட்டுக்கோட்டை. 50 சதம்.

காலமும் கருத்தும் (சொற்பொழிவு) புதுமைலோலன் (1964) அன்பு வெளியீடு சீனியர் ஒழுங்கை, வண்ணார்பண்ணை 25 சதம்.

கிராமக்கவிக் குயில்களின் ஒப்பாரிகள் (நாட்டார்இலக்கியம்) (தொகுப்பு) மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் (1960) அயோத்தியா, வட்டுக்கோட்;டை. 7. 1-00.

கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்) பொ. சண்முகநாதன் (1965) கலைச்செல்வி, புகையிரத நிலைய வீதி, சுன்னாகம். ரூ. 1-50.

சாத்திரி: ஆசிரியர். செ. சோதிநாதன் (1960) செ. சிவப்பிரகாசம் தாவடி, கொக்குவில். ரூ. 3-25.

சிலப்பதிகாரச் செந்நெறி (சொற்பொழிவு): நாவேந்தன் (1968) தமிழ் குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம். 25 சதம்.

சிறுவர் சித்திரம் (கலைநூல்): கலாகேசரி ஆ. தம்பித்துரை (1962) சன்மார்க்க சபை குரும்பசிட்டி. தெல்லிப்பழை ரூ. 1-50.

சுருட்டுக் கைத்தொழில்: க. குணராசா (1965) யாழ். இலக்கியவட்டம். மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ. 1-00.

சேக்ஸ்பியர் கதைகள் (மொழிபெயர்ப்பு):

சோதிட வாசகம் (கட்டுரை): த. கணபதிப் பி;ள்ளை மு. சின்னப்பு. (1959) மு. சின்னப்பு அளவெட்டி. ரூ. 1-00.

தங்கத்தாமரை (சிறுவர் இலக்கியம்): இந்திராணி மார்க்கண்டு (1962) பூபால சிங்கம் புத்தகசாலை பெரியகடை, யாழ்ப்பாணம். 75 சதம்.

திருமணம் (கட்டுரை நூல்) தெல்லியூர் செ. நடராசா (1964) சோதிட அலுவலகம், குமாரசாமி வீதி, கந்தர்மடம். யாழ்ப்பாணம்.. ரூ. 1-00.

நகைமலர்: ஏ. எச். எம். யூசுபு (1966) முஸ்லீம் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், காலி, ரூ. 1-75.

நாட்டுப்பாடல்கள்: வெள்ளவத்தை மு. இராமலிங்கம் (1957) அயோத்தியா, வட்டுக்கோட்டை.

நாட்டார் பாடல்கள் (நாட்டார் இலக்கியம்): மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் (1961) அயோத்தியா, வட்டுக்கோட்டை. ரூ. 2-50.

நாற்பது கட்டுரைகள் (மாணவர் கட்டுரை நூல்): பண்டிதர் சு. வேலுப்பிள்ளை (1964) திருமகள் அழுத்தகம், சுன்னாகம். ரூ. 3-50.

நூலகர் கைந்நூல்: எஸ். எம். கமால்தீன் (1970) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித்தெரு. கொழும்பு. ரூ. 1-90.

மட்டக்களப்பு மான்மியம் (வரலாறு): வித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா (1962) கலாநிலையம் 175. செட்டியார் தெரு, கொழும்பு. ரூ. 1-50.

மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் (கிராமக் கவிதை) (தொகுப்பு) கலாநிதி சு. வித்தியானந்தன் (1962) கலைக்கழக நாடகக் குழு, இலங்கை. ரூ. 1-00.

முன்னீடு (சிறுகதையின் விமர்சனம்): எஸ். பொன்னுத்துரை (1967) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளி தெரு, கொழும்பு. சதம் 40.

வரலாற்று இலணக்கம்: கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை (1966) பாரிநிலையம். 591, பிராட்வே, சென்னை. ரூ. 6-00.

வானொலியில் (வானொலிப்பேச்சு): வ. பொன்னம்பலம் (1960) கலைமதி வெளியீட்டுக்குழு மாதகல். 75 சதம்.

வான வெளியில் (விஞ்ஞானம்) தேவன் யாழ்ப்பாணம். (1958). சண்முகநாதன் அன்ட் சன்ஸ். யாழ்ப்பாணம். ரூ. 1-00.

வாய்மொழி இலக்கியம்: (தொகுப்பு) (1961) யாழ்பிரதேச கலைமன்றம், யாழ்ப்பாணம். ரூ. 1-00.

வினைப் பகுபத விளக்கம் (இலக்கணம்): அ. குமாரசாமிப் புலவர் (1968) பண்டித மாணவர் கழகம். மல்லாகம். ரூ. 1-00.

விடுதலை வேட்கை (கட்டுரை): ஆ. சேயோன் (1969) பண்ணாகம் தெற்கு, சுழிபுரம். சதம் 75.

வெற்றியின் இரகசியங்கள் (வாழ்க்கை நூல்);: அ. ந. கந்தசாமி (1966) பாரிநிலையம். 591, பிராட்வே. சென்னை ரூ. 5-00.

(11) நாவலர் சம்பந்தமான நூல்கள்

ஆறுமுகநாவலர் சரித்திரம்: வே. கனகரத்தின உபாத்தியார் (1968) நாவலர் நூற்றாண்டு விழாச்சபை, யாழ்ப்பாணம்.ரூபா. 3-00.

நாவலர் சமயப்பணி: சி. சீவரத்தினம் (1962) நாவலர் பாடசாலை, யாழ்ப்பாணம். ரூ. 1-00.

நாவலர் சற்குருமணிமாலை: அம்பலவாண நாவலர் (பதிப்பு) த. சிப்பிரமணியம். (1963) சைவ இளைஞர் சங்கம் இந்துக்கல்லூரி. வட்டுக்கோட்டை. ரூ. 1

நாவலர்: பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1968) இந்து மாணவர் சங்கம். பல்கலைக்கழகம், பேராதனை. ரூ. 4.

நாவலர் பணிகள்: ச. தனஞ்சயராசசிங்கம் (1969) இந்து மாணவர் சங்கம், பல்கலைக்கழகம். பேராதனை. ரூ. 4-00.

நாவலர் சரித்திர ஆராய்ச்சி: பண்டிதை பொன். பாக்கியம். (1970) வட்டுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், பண்ணாகம். ரூ. 2-50.

நல்லை நகர்தந்த நாவலர்: சொக்கன் (1959) சண்முகநாதன் புத்தகசாலை. யாழ்ப்பாணம். ரூ. 1-50.

நாவலர் நாவலரான கதை: சொக்கன். சேந்தன் (1969) நண்பர் வெளியீடு இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம். ச. 50

நாவலர் அறிவுரை: இரசிகமணி கனக செந்திநாதன் (1968) சன்மார்க்க சபை. குரும்பசிட்டி. தெல்லிப்பளை. 50 சதம்.

நாவலர் மகாநாடு விழாமலர் (கட்டுரை கள்): (1969) ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, கொழும்பு - 7. ரூ. 25-00

நாவலர் மாநாடு விழாமலர் (புகைப்பட பொருள்) (1970) ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, கொழும்பு-7. ரூ.5-00.