வேதப்புரட்டல்

ஆயர் பால் சி. ஜோங்


【6-1】< ஏசாயா 28:13-14 > போலிக் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவத்தில் உள்ள தவறான போதகர்களும்< ஏசாயா 28:13-14 >

ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொருங்கும் படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும். ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.”

 

 

வேதப்புரட்டு

 

 • வேதாகமம் ‘புரட்டை' எவ்வாறு வரையறுக்கிறது?
 • ஒருவன் இருதயத்தில் பாவம் நிறைந்தவனாகவும், இயேசுவை நம்புவனாகவும் இருந்தால் வேதம் அவனை புரட்டன் என்கிறது.

 

குறிப்பாக இந்நாட்களில் வளரும் நாடுகளில் போலி செய்தி எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்தி எழுத்தாளர்கள் போல் காட்டிக் கொண்டு, சிக்கிக்கொள்பவர்களிடம் அவர்களைப் பற்றி, அவர்கள் இரகசியமாக செய்தவற்றை எழுதப் போவதாக கூறி பணம் பறிக்கிறார்கள். போலி என்ற வார்த்தையின் பொருள், ஒன்று உண்மைப் போல் தோற்றமளிக்கிறது, ஆனால் அது உண்மையல்ல. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உள்ளே உள்ளவைகளெல்லாம் வெளியே காணப்படுவைகளிலிருந்து எதிர்மறையாக இருக்கும்.

குறிப்பாக கிறிஸ்தவ ஆலயங்களில் ‘புரட்டு' மற்றும் ‘போலி' என்ற வார்த்தைகள் அடிக்கடிப் பயன்படுத்தப் படுகின்றன.

வேதப்புரட்டு என்பதற்கும், போலி என்பதற்கும் வேறு வேறு தெளிவான வரைமுறைகள் உள்ளன. ஆனால் நிறைய பேர் வேதாகமத்துடன் உறுதியாக உள்ளக் கருத்துக்களை பிரசங்கிப்பதில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில், வேதாகமம் வேதப்புரட்டுக் குறித்து எப்படி வரையறுக்கிறது என்று வெளிச்சமேற்றுவது என் மீது விழுந்த கடமையாக இருக்கிறது. ஒவ்வொருநாள் வாழ்க்கையிலும், எப்படி வேதப்புரட்டு நடைப்பெறுகிறது என்பதை சில உதாரனங்களுடன் நான் சுட்டிக் காட்டுவதன் மூலம் நாம் ஒன்றாக அதனைப்பற்றி சிந்திக்க விரும்புருகிறேன். கர்த்தரை யார் விரும்புகிறார்களோ அவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது புரட்டைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

தீத்து 3:10-11, ஒரு வேதப்புரட்டனை பிரிவினைக்காரனாகவும், அவன் பாவத்தில் வார்க்கப்பட்டு பாவம் செய்வதில் ஈடுபட்டுள்ள கண்டிக்கப்படவேண்டியவன் என்றும் கூறுகிறது. ஒரு வேதப்புரட்டன் தன்னைத்தானே பாவியென்று ஆக்கினைக்குட்படுத்துகிறான். ஆகவே இயேசுவை யாரெல்லாம் விசுவாசித்தாலும், அவர்கள் இருதயத்தில் பாவமிருந்தால், அவர்கள் கர்த்தர் முன்பு வேதப்புரட்டர்கள் ஆவார்கள்.

இயேசு தம் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களை எல்லாம் எடுத்துப் போட்டார். ஆனால் வேதப் புரட்டர்கள் பாவிக்கு இரட்சிப்பைக் கொண்டு வரும் உண்மை நற்செய்தியை ஏற்க மறுக்கிறார்கள். அதனால் அவர்களைத் தாமாகவே ஆக்கினைக்குள்ளாக்கி பாவிகள் வரிசையில் சேருகின்றனர்.

நீ ஒரு வேதப் புரட்டனா? நாம் நேராகவும், உண்மையான விசுவாச வாழ்வு வாழவும் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

நீங்கள் இயேசுவை விசுவாசித்தாலும், இதுவரை நீர் மற்றும் ஆவியைக் குறித்த நற்செய்தியை அறியாததினால், உங்களை நீங்களே பாவி என்று ஆக்கினைக்கு உள்ளாக்குவதில்லையா? நீங்கள் உங்களைப் பாவி எனக் கருதினால், நீங்கள் இயேசுவை அவரின் பழுதற்ற இரட்சிப்பையும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மதிக்காமல் அவருக்கு இழுக்குண்டாக்குகிறீர்கள்.

ஒருவன் கர்த்தர் முன் தான் ஒர் பாவி என்றழைக்கும்போது, தான் கர்த்தருடைய பிள்ளை இல்லை என்பதை ஒத்துக் கொள்ளுகிறான். இயேசுவிடம் ‘கர்த்தரே நான் ஒரு பாவி' என்று பாவ அறிக்கை செய்பவர் அவரின் நம்பிக்கையை மறு பரிசீலனைச் செய்யவேண்டும்.

நீஙகள் எப்படி இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து, இன்னும் பாவி என்று கூற முடியும்? இயேசுதான் இவ்வுலகத்தின் பாவங்களை எல்லாம் எடுத்துப்போட்டு நிரந்தர ஆக்கினையிலிருந்து உஙகளை இரட்சித்து விட்டாரே. நீங்கள் இயேசுவின் இலவச பரிசாகிய இரட்சிப்பை மறுத்து உங்களை எப்படி பாவி என்று கூற முடியும்? இயேசு தம் ஞானஸ்நானம் மூலம் உங்கள் பாவங்களை எல்லாம் எடுத்து அதற்காக சிலுவையில் ஆக்கினைத் தீர்ப்படைந்தாரே.

இப்படிப்பட்டவர்கள் வேதப்புரட்டர்கள். ஏனெனில் கர்த்தரின் வார்த்தையினின்று தூரமாகி பாவத்திற்கு இலவசப் பணியாளர்கள் ஆயினர். நீங்கள் நீர் மற்றும் ஆவியைப் பற்றிய நற்செய்தியை அறிவதன் மூலம் கர்த்தர் முன் முரண்பாடாக நடப்பதை தவிர்க்க வேண்டும்.

யாரொருவன் இயேசுவை நம்பிக்கொண்டு மறுபடி பிறவாதவனாக இருந்தால் அவனொரு வேதப்புரட்டன். ஏனெனில் அவன் இதயத்தில் இன்னும் பாவம் இருக்கிறது.

கர்த்தர் நம் பாவங்கள் உட்பட உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டமையால், நாம் இரட்சிப்பின் ஆசீர்வாதம் குறித்து அசட்டையாக இருந்தால், கர்த்தர் முன்பாக நாம் ஒரு புரட்டன். கர்த்தர் பரிசுத்தமுள்ளவராதலால், நம் இருதயத்தில் பாவம் இருந்தால் நாம் ஒரு வேதப்புரட்டன். நாம் உண்மையில் நீதிமானாக வேண்டுமென்றால், நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் விசுவாசிக்கவேண்டும்.

 

 

வேதப்புரட்டு எவ்வாறு உருவாயிற்று?

 

 • ஒரு போதகரின் முக்கியமான கல்வி யாது?
 • அவர் மறுபடியும் பிறந்தவராக இருக்க வேண்டும்.

 

1 இராஜாக்கள் 12:25-26 ஐப் பார்ப்போம். “யெரோபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக்கட்டி அதிலே வாசம் பண்ணி, அங்கிருந்து போய் பெனூவேலைக் கட்டினான். யெரோபெயாம்: இப்போது இராஜ்ஜிய பாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாய் இருக்கும் யெரோபெயாம் சாலமோனின் ஒரு அதிகாரி. சாலமோன் பிற்காலத்தில் மோசமானவன் ஆனபடியால், யெரோபெயாம் அரசனுக்கு எதிராக புரட்சி செய்தான். சாலமோனின் மகன் ரெகோபயாம் காலத்தில், யெரோபெயாம் இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களுக்கு அரசனான்.

யெரோபெயாம் அரசனானபோது அவன் முதல் கவனம் அவனின் ஜனங்கள் கர்த்தரின் ஆலயமிருந்த யூதேயாவிற்குத் திரும்பிவிடுவார்களோ என்பதிலிருந்தது.

அப்படி நடக்காமல் இருக்க அவனொரு உபாயம் செய்தான். அவன் இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைச் செய்து ஒன்றை பெத்தேலிலும் மற்றதை தாணிலும் நிறுவி, அவற்றை சேவிக்கும்படி அவன் ஜனங்களுக்குக் கட்டளைப் பிறப்பித்தான். 1 இராஜாக்கள் 12:28 கூறுகிறது “ஆகையால் இராஜாவானவன் யோசனைப்பண்ணி, பொன்னினால் இரண்டு கன்று குட்டிகளை உருவாக்கி ஒன்றை பெத்தேலிலும் மற்றதை தாணிலும் நிறுவி அவன் ஜனங்களை அவற்றை சேவிக்கும்படிக் கூறினான். அப்படிச் செய்வது ஒரு கொடிய பாவமாகும். அவன் ஆராதனையை நடத்த அங்குமிங்கும் ஆசாரியர்களையும் நியமித்தான்.

இந்த நடப்படிக்குப் பின்பு, யெரோபெயாம் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன் மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டை பண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள். (1 இராஜாக்கள் 13:33) இதுவே புரட்டலின் ஆரம்பம்.

இப்பொழுதும் வேதப்புரட்டர்கள் கர்த்தரின் வேலைசெய்ய இஷ்டப்படுபவர்களுக்கு ஆசாரியர் வேலைக் கொடுக்கின்றனர். யாராவது இறையியல் கல்லூரிகளில் பட்டதாரியானால், போதகராகவோ, மிஷனரியாகவோ, ஊழியக்காரராகவோ, மூப்பராகவோ ஆகிறார்கள். அவர்கள் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்காதவராயினும் இவைகள் அவர்களுக்குக் கிடைக்கின்றன.

மறுபடியும் பிறவாத ஒருவர் எப்படி போதகராக முடியும்? அப்படிப்பட்ட ஒருவர் எந்த ஆலயத்தில் போதகராகிறாரோ, அவரைத் தெரிந்தெடுக்கும் ஆலயம், வேதப்புரட்டர்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையாகிறது.

மீண்டும், புரட்டல் எப்படி உண்டாயிற்று என்று சிந்திப்போமாக. முதலில் யெரோபெயாம் தன்னுடைய அரசியல் வல்லமையை நிலைநாட்டும்பொருட்டு கர்த்தரை இரண்டு பொன் கன்றுக்குட்டிகளின் மூலம் சமனம் செய்தான். இரண்டாவதாக, ஆசாரியானாக யாரெல்லாம் விரும்பினார்களோ அவர்களை அபிஷேகம் செய்தான். வேறு வார்த்தைகளின் கூறுவதானால் அவன் சாதாரண மனிதர்களை ஆசாரியராக அபிஷேகம் செய்தான். அத்தகைய நடைமுறைகள் இன்றும் அமலில் உள்ளன.

வேதப்புரட்டலின் வரலாறு யெரோபெயாமின் காலத்திற்கு பிறகும் தொடர்ந்தது. யாரெல்லாம் நீரினாலும் ஆவியினாலும் மறுபடி பிறக்கவில்லையோ, அவர்களை ஆசாரியர்களாக அனுமதிக்கக் கூடாது.

யாராவது வெறும் இறையியற் கல்லூரியில் பட்டம் பெற்றால் அவர் போதகராகவோ, ஊழியக்காரராகவோ முடியுமா? கர்த்தரை அவர்கள் சேவிக்காலாமா? அவர்களைத்தான் கர்த்தர் அங்கீகரிக்கவில்லையே. அனுமதிக்கக்கூடாது. கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே அவர் ஊழியக்காரராக அனுமதிக்கப்பட வேண்டும். மறுபடியும் நீரினாலும் ஆவியாலும் பிறந்தவர்கள் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

1 இராஜாக்கள் 12:25-26 மற்றும் 1 இராஜாக்கள் 13 ஆம் அதிகாரத்தில் யெரோபெயாமின் பாவங்கள் கர்த்தரின் கோபாக்கினையை வரச் செய்ததைப் பற்றி கூறுகிறது. நம் எல்லாருக்கும் இச்சம்பவம் தெரிந்திருக்க வேண்டும். இதனைப்பற்றி தெரியாதவர்கள் யாரோ, அவர்கள் வேதாகமத்திற்கு திரும்பச் சென்று அதைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.

உங்கள் ஊழியத்தில் கர்த்தருக்குப் பதிலாக பொன் கன்று குட்டிகளை வைக்கிறீர்களா என்று நினைத்துப் பாருங்கள். நீங்கள், எக்காரணம் பற்றியேனும் உலக ஆசீர்வாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களை பின் பற்றுவோர் நீரினாலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கும் நற்செய்திக்கு போய்விடுவார்கள் என்று பயப்படுகிறீர்களா?

உங்களைப் பின்பற்றுவோரிடம் இயேசுவை நம்புங்கள் அவர் உங்களை சுகமாக்குவார் என்கிறீர்களா? நீங்கள் செல்வந்தராவீர்கள் என்று அவர்களிடம் கூறுகிறீர்களா? மறுபடியும் பிறக்காதவர்களை போதகராகவும், ஆலய அலுவலர்களாகவும் நியமித்து உங்கள் ஆலயம் மற்றும் உங்கள் பிரிவு மட்டும்தான் மிகவும் சரியானது என்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் யெரோபெயாம் கர்த்தருக்கு முன்பாகச் செய்த பாவத்தைச் செய்து அவர் கோபாக்கினைக்கு ஆளாகிறீர்கள்.

 

 

வேதப் புரட்டர்கள் பொன் கன்றுக் குட்டிகளை ஆராதிக்கிறார்கள்

 

இன்றும் கூட, அநேக வேதப்புரட்டர்கள் பொன்கன்றுகுட்டிகளை சேவிக்கிறார்கள். அவர்கள் சாலமோன் ஆயிரம் சர்வாங்கத் தகன பலிகளைக் கர்த்தருக்குச் செய்தமையால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததாக கூறுகிறார்கள். 1 இராஜாக்கள் 3:3-5 கூறுகிறது. “சாலமோன் கர்த்தரிடத்தில் அன்பு கூர்ந்து தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபம் காட்டி வந்தான். அப்படியே இராஜா பலியிட கிபியோனுக்குப் போனான். அது பெரிய மேடையாய் இருந்தது; அந்த பலி பீடத்தின் மேல் சாலமோன் ஆயிரம் சர்வாங்க தகனப் பலிகளைச் செலுத்தினான். கிபியோனிலே கர்த்தர் சாலமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி; நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்

சாலமோனின் ‘ஆயிரம் தகனப் பலிகளை' சுட்டிக்காட்டி, தவறான உறுதிமொழியினைக் கூறி அவர்களைப் பின் பற்றுவோரிடம் பணம் சுரண்டுகிறார்கள். அவர்களைப் பின் பற்றும் முட்டாள்களின் பணம் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டது. பொன் கன்றுக் குட்டிகளை வணங்குபவர்கள் பணத்தேவை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பங்குகளினால் வரும் பணம், மிகப்பெரும் ஆலயக்கட்டிடங்களை கட்டுவதற்கு தேவைப்படுகிறது. அது ஆலயங்கள் சிறியதாக இருப்பதனால் அல்ல. அவர்களுக்கு, அவர்களைப் பின் பற்றுவோரிடமுள்ள பணத்தை பிடுங்க வேண்டும்.

பொற்காளைகளை சபையோருக்கு அவர்கள் வணங்கும் படி ஏற்படுத்துவது வேதப்புரட்டர்கள் சபையோரிடமிருந்து பணம் கரப்பதற்கு கண்டுபிடித்த ஒரு காரணமாகும். கர்த்தரை நம்பும் நாம் முட்டாள்களாகக் கூடாது. நீங்கள் பொற்காளைகளை வணங்கும்போது காணிக்கை செலுத்தினீர்கள் என்றால் அது கர்த்தருக்கு கொடுக்கப்பட்டதாகாது. மாறாக அது யெரோபெயாம் போன்ற பேராசைமிக்க போலி ஆசாரியர்களின் சட்டைப்பைக்குச் சென்று முடிவடைகிறது. இது போன்ற வேதப்புரட்டர்களிடம் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

அப்படியானால் சாலமோனின் ஆயிரம் தகனப் பலிகளை கர்த்தர் எப்படி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்? சாலமோனுக்கு அவன் பாவங்களைப் பற்றித் தெரியும். அந்த பாவங்களுக்காக அவன் மரிக்கவேண்டும் என்பதை அவன் ஒத்துக்கொண்டு, அவன் நம்பிக்கைக்குத் தக்கவாறு பலி கொடுத்தான். கர்த்தரின் இரட்சிப்பை நன்றியுடன் நினைவுகூர்ந்து ஆயிரம் தகனப் பலிகளை அவன் கொடுத்தான். சாலமோன் நீர் மற்றும் ஆவியினால் பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும்பொருட்டு தினமும் ஆயிரம் தகனப் பலிகளை ஏறெடுத்தான்.

இப்பொழுது வேதப்புரட்டலின் உண்மைப் பொருளை நீங்கள் உணர்ந்துக் கொள்ளவேண்டும், ஆதலால் போலிப் போதகர்களால் நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.

 

 

மறுபடியும் பிறவாமல் ஆராதனையை நடத்துபவர்கள் வேதப் புரட்டர்கள்

 

 • மறுபடியும் பிறப்பதைக் குறித்து வேதப்புரட்டர்கள் என்ன கூறுகிறார்கள்?
 • அவர்கள் காட்சிகள் காண்பதினாலும் கனவுகளினாலும் மற்ற ஆவிக்குறிய உணர்ச்சிகளினாலும் மறுபடி பிறந்ததாக கூறிக்கொள்கிறார்கள்.

 

மற்றவர்களை மறுபடியும் பிறவுங்கள் என்று கூறிக்கொண்டு அவர்களே நம்பிக்கையினால் மறுபடியும் பிறக்காமல் இருக்கிறார்கள். அவர்களே வேதப்புரட்டர்கள். அவர்கள் மற்றவர்களை மறுபடியும் பிறக்கவேண்டுமென்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படிச்செய்ய, இயலாதவர்களாக இருக்கிறார்கள். காரணம் நீர் மற்றும் ஆவியைப்பற்றிய உண்மை அவர்களுக்குத் தெரியாது. நம்மால் சிரிக்க மட்டும்தான் முடியும்.

போலி ஆசாரியர்கள் பொய்யான செய்தியை பிரசங்கம் செய்கிறார்கள். அவர்கள் நீர் மற்றும் ஆவியைப்பற்றிய நற்செய்தியை சிதைக்கிறார்கள். அவர்கள் மக்களிடம் பாவங்களைத் தினமும் கழுவிப்போடுங்கள் என்று கூறுகிறார்கள்.

அவர்கள் கூறுகிறார்கள் “மலைகளுக்குப் போய் ஜெபி, உபவாசம் இரு, கர்த்தரின் வேலைக்கு உன்னைக் கொடு, விடிகாலையில் எழுந்து ஜெபி, கீழ்ப்படிதலாயிரு, தேவாலயம் கட்டுவதற்கு நிறைய பணம்கொடு, ஆனால் உன்னுடைய பாவங்களை நீயே பார்த்துக்கொள்வதில் எச்சரிக்கையாக இரு.”

ஒருமுறை, ஒருவர் தான் மறுபடியும் பிறந்ததாகச் சாட்சியம் கூறுவதைக் கேட்டேன். அவர் இப்படிக் கூறினார். அவர் ஒரு கோட்டில் நின்றிருந்தார். அவர் சமயம் வந்தபோது இயேசு அவர் பேரைச் சொன்னார். இது அவர் மறுபடி பிறந்தமைக்கான சாட்சியம் என்று கூறினார். இவரின் இம்முடிவு சரியானதா? இயேசு அப்படிச் சொல்லவில்லையே.

யோவான் மூன்றில் அவர் கூறுகிறார். “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.” கர்த்தர் கூறுகிறார்; நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்கள் யாரோ அவர்கள் மட்டுமே உண்மை ஆசாரியர்களாக இருக்க முடியும். யாரெல்லாம் கனவுகளில் பிறந்ததாகவும் கற்பனைகளாலும், ஆவிக்குறிய உணவுகளாலும், புலம்பி ஜெபிப்பதாலும் மறுபடியும் பிறந்தவனென்று நம்பினால் அவன் ஒரு வேதப்புரட்டன்.

இந்நாட்களில் நிறைய மக்கள், எழுதப்பட்ட வேதவாக்கை நம்பாமலும், நீர் மற்றும் ஆவியினால் மறுபடி பிறாவாமலும், அவர்களுடைய சமய பிரிவுகளை கடைப்பிடிக்கிறார்கள்.

 

 

தற்போதைய கிறிஸ்தவமும், சீர்த் திருத்தவாதிகளும்

 

 • எப்பொழுது நற்செய்தி மற்ற  மதங்களுடன் சேர்ந்து சிதைவடைந்தது?
 • ரோமச் சக்கரவர்த்தி கான்ஸ்டண்டைன் கி.பி.313 இல் மிலான் கட்டளையை பிரகடனம் செய்ததிலிருந்து.

 

கிறிஸ்தவத்தில் எப்போது பிரிவினைகள் உருவானது? எப்பொழுது பிரஸ்பைட்டியன், மெத்தடிஸ்ட், லுத்தரன், ஹோலினஸ், ஃபுல்கோஸ்பல் போன்ற சபைகள் தோன்றின? 500 வருடங்களுக்கு முன்பே சீர்த்திருத்தம் வந்தது.

இயேசு இவ்வுலகில் சஞ்சரித்தபோது அவரைப் பின்பற்றிச் சென்றோர் முதல் கிறிஸ்தவர்கள் ஆவர். “கிறிஸ்தவன் என்பதன் பொருள் “இயேசுவை பின்பற்றுபவன் என்பதாகும்.

முதல் கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலர்களும் அவர்கள் சீடர்களும் ஆவர். அப்போஸ்தலர்களும் ஆலயத் தந்தைகளும் கி.பி..313 வரை உண்மையான நற்செய்தியை பின்பற்றினார்கள். ஆனால் மகா கான்ஸ்டண்டைனின் மிலான் கட்டளைக்குப் பிறகு, கிறிஸ்தவர்களும் புற ஜாதியாரும் கலந்துரவாடத் தொடங்கினர். இதன் முடிவு 1000 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்த இருண்ட காலமாகும்.

பிறகு 16ஆம் நூற்றாண்டில் மாட்டின்லூதர் சீர்திருத்த கருத்துக்களை வலியுருத்தினார். அவர் கூறினார் “நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான் சிறிது காலத்திற்கு பிறகு 1500~1600 வரை, ஜான்கால்வின், ஜான்நாக்ஸ் போன்ற சீர்திருத்தவாதிகள், கத்தோலிக்கத்திற்கு எதிரான இயக்கத்தை வழி நடத்தினார்கள். இவற்றினாலே சீர்திருத்தம் கிடைக்கப்பெற்றது. சீர்திருத்தம் கத்தோலிக்க ஆலயங்களிலிருந்து தனியாக ஆலயம் உருவாக்கும் எளிய முயற்சியாகும். சீர்திருத்தவாதிகள் அடிப்படையில் கத்தோலிக்கத்தை மறக்கவில்லை.

அவர்களுடைய நோக்கம் நீர் மற்றும் ஆவியினால் கிடைக்கும் மறுபடியும் பிறத்தலை வளரச் செய்வதில் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் கத்தோலிக்கச் சபையின், கட்டுப்பாடுகளிலிருந்தும் அவர்களின் ஊழல்களிலுமிருந்து விடுதலையாக முயன்றனர். ரோமன் கத்தோலிக்கச் சபை இந்த இயக்கத்தை புரடஸ்டன்டிஸம் என்றழைத்தது. அதற்குப் பொருள் புரட்சியாளர்கள் என்பதாகும்.

அதேநேரம் ரோமன் கத்தோலிக்கச் சபை, மக்களை பவமன்னிப்பை விலைக்கு வாங்கும்படி வேண்டினர். அவர்கள் நிறைய காசுகொடுத்து இப்பாவ மன்னிப்பை வாங்கினால் அவர்களின் மூதாதையர்களை பரலோகத்திற்கு அனுப்பமுடியும் என்று கூறினர். லூத்தர் கத்தோலிக்கம் அடிப்படையில் தவறானது என்பதை உணரவில்லை. அவர் ரோமன் கத்தோலிக்கச் சபையினர் பாவ மன்னிப்பை விற்று அப்பணத்தால் தூய பேதுருவின் ஆலயத்தைக் கட்டுவதை நிறுத்த முயன்றார்.

அதனால், கத்தோலிக்க வழக்கங்களை இன்றைய புராட்டஸ்டன்ட் ஆலயங்களிலும் காணலாம். குழந்தை ஞானஸ்நானம், பாவ மன்னிப்புக் கேட்டு புலம்பி அழுவது, ஆலய ஆராதனை முறைகள், இறையியல் கல்லூரிகளில் பயின்றவர்களை மட்டுமே ஆயர்களாக நியமிப்பது, மிகப் பெரிய, பிரமாதமான ஆலயங்கள் அதற்குச் சான்றாகும். இதுவெல்லாம் கத்தோலிக்கத்திலிருந்து வந்த நடைமுறைகளாகும்.

முதல் 1500களில் உருவான சீர்திருத்த நாட்களிலிருந்து கணக்கிட்டால் புரட்டஸ்டன்டிஸம் சராசரியாக 500 வயதுடையதாகும். இவ்வருடம் சீர்திருத்தத்தின் 481 -ஆவது ஆண்டாகும். நீங்கள் மார்ட்டின்லூதர் 481 ஆண்டுகளுக்கு முன்பாக, அவரின் தாய்ச்சபையை எதிர்த்து புரட்சி செய்தார் என்பதை உணரமாட்டீர்கள். இப்புரட்சி சபையானது இளமையானதால், அது ஒழுங்கு முறையானதாக தன்னை அறிவித்துக்கொள்ளமுடியாது. கிறிஸ்தவத்தில் இன்னும் சீர்திருத்தம் நடைபெறுகிறது. அது தொடர்ந்து முன்னேற வேண்டும்.

ஆயினும் ஒரு விஷயத்தை நம் மனதில் கொள்ளவேண்டும். நீரினாலும், ஆவியினாலும் மறுபடி பிறந்தவர்கள் மட்டுமே பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்பதை நாம் எப்பொழுதும் மறக்கக் கூடாது. நாம் அதனைப் பிரசங்கிப்போமாக. இயேசுவின் நற்செய்தியை நீங்கள் பிரசங்கிப்பீர்களா? அந்நற்செய்தி நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறத்தலைக் குறித்ததாய் இருக்கிறது. நீங்கள் இதனைப் பிரசங்கிக்கவில்லையென்றால் நீங்கள் கர்த்தரின் உண்மையான ஊழியன் இல்லை. நற்செய்தியாகிய “நீர் மற்றும் ஆவியினால் மறுபடி பிறத்தலை நாம் நம்பவேண்டுமென கர்த்தர் விரும்புகிறார். இதனையே யோவான் 3-இல் இயேசு நிக்கொதேமுவிற்கு கற்றுக்கொடுத்தார்.

வேதாகமம் வெறும் நீரினாலும் ஆவியினாலும் மறுபடி பிறப்பதை மட்டும் கூறுகிறதா? அல்லது சுற்றத்தாரின் நலனுக்காக வாழ்வதையும், பரிசுத்தமாக வாழ்வதைப் பற்றியும் கூறுகிறதா? இரண்டாவதும் முக்கியமானதுதான். ஆயினும் நீங்கள் அதை நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்து அதன்பிறகுச் செய்யலாம். கர்த்தரின் சித்தம் நாம் நற்செய்தியை விசுவாசிக்கவேண்டும் என்பதாய் இருக்கிறது.

 

 

வேதப்புரட்டர்களின் பாடங்கள்

 

 • வேதப்புரட்டர்கள் யார்?
 • இயேசுவை விசுவாசித்தாலும் பாவியாக இருப்பவன்.

 

போலி கிறிஸ்தவர்களும் மாறுபாடான விசுவாசமும் உலகில் வளர்ந்தது எப்படி?

1 இராஜாக்கள் 12-13 அதிகாரங்களின்படி, இஸ்ரவேல் மக்கள் ஒரே கர்த்தரை, யெரொபெயாம் காலத்தில் இரண்டு ராஜ்யங்களாக அவர்கள் பிரியும்வரை வணங்கினார்கள். அந்நேரத்திலிருந்து இயேசு இவ்வுலகத்திற்கு வரும் முன்பாக முரண்பாடுள்ள விசுவாசம் வளரத் தொடங்கியது. இப்பொழுதும் நிறைய வேதப்புரட்டுக்கள் கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன.

போலி கிறிஸ்தவர்களைப் பற்றி ஏசாயா 28-லும் தீத்து 3:10-11 -லும் வேதாகமம் பேசுகிறது. வேதம் கூறுகிறது இயேசுவை ஒருபுறம் விசுவாசித்தாலும் மறுபுறம் இருதயத்தில் பாவமுள்ளவன் வேதப்புரட்டன். இப்படி யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் வேதப்புரட்டர்களே.

ஏசாயா 28:9-10 இல் எழுதியுள்ளதுபோல அவர்கள் பிரசங்கிக்கிறார்கள். “அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால் மறந்தவர்களுக்கும், மூளை மறக்கப் பண்ணப் பட்டவர்களுக்குமே. கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.”

வேதப் புரட்டர்கள் கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும் சேர்க்கிறார்கள் என்பதற்கு பொருள் என்ன? அதன் பொருள் “கவனமாய் இரு, கவனமாய் இரு, இயேசுவின்மேல் விசுவாசம் வைத்து மறுபடியும் பிறந்தேன் என்பவர்கள் மீது கவனமாய் இரு.” அது எதுவாக இருந்தாலும் அவர்கள் வெறுமனே உங்களை கவனமாகாக இருக்கச் சொல்லுவார்கள். அவர்கள் உங்களை கேட்க வேண்டாம் என்பார்கள். போக வேண்டாம் என்பார்கள். உங்களை வேதப்புரட்டில் விழச்செய்வார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு அவர்களுடையது ஒழுங்கான நம்பிக்கை என்றால், அவர்களுடைய நம்பிக்கை வேத வாக்கிலிருந்து வித்தியாசமானது என்று கூறுபவர்களிடம் அவர்கள் ஏன் வாதம் செய்யக்கூடாது. அது அவ்வளவு ஆழமானதா? அவர்கள் முறையான கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்களிடம் அவர்கள் வேதப்புரட்டிலிருந்து வர வார்த்தைகள் இல்லை. உண்மையான கிறிஸ்தவன் வேத வாக்குகளினால் வேதப்புரட்டர்களை மேற்கொள்ளுவான்.

இந்நாட்களில், வருங்கால ஆதி கிறிஸ்தவர்கள் மறுபடியும் பிறந்தவர்களை ‘வேதப்புரட்டர்கள்' என்கிறார்கள், ஏனெனில் அவர்கள் நம்பிக்கை வேறு விதமாக இருக்கிறது. நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும்போது, நாம் எப்படி வேதப்புரட்டர்களாக இருக்கமுடியும்?

வேதப்புரட்டர்கள் எனப்படுபவர்கள் நற்செய்தியாகிய நீரைக் குறித்தும் ஆவியைக் குறித்தும் பிரசங்கித்தால் அவர்கள் முறையான கிறிஸ்தவர்கள். அதுபோல தங்களை முறையான கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் பற்றி பிரசங்கிப்பதில்லை. ஆகவே அவர்கள் வேதப்புரட்டர்கள்.

முறைமைக்கும்' “வேதப்புரட்டிற்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்கிறார்களா? அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் அவர்கள் இருதயத்தில் பாவமிருக்கிறதா? இல்லையா? என்பதே. அவர்கள் வேத வாக்கினை நம்பி, நீராலும் ஆவியாலும் மறுபடி பிறந்தவர்களானால் அவர்கள் எப்படி வேதப்புரட்டர்களாக முடியும்?

இயேசுவின் ஞானஸ்நானம், அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவைற்றை நம்பி பாவங்கள் முழுவதுமாக கழுவப்பட்டால் அது வேதப்புரட்டாகுமா? நற்செய்தியாகிய நீரையும், ஆவியையும் நம்பாமல் இருப்பது “முறையான கிறிஸ்தவமாகுமா?

நிறைய பிரிவினைவாதிகள், வேதாகமத்திலிருந்து, விலகி விட்டாலும் அவர்கள் “முறையான கிறிஸ்தவர்கள் என்று பறைச்சாற்றுகிறார்கள். வேதாகமம் குறிப்பிடும் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறத்தலிலிருந்து அவர்கள் விலகிப் போயினர். அதற்குக் காரணம் அவர்கள் இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டும் பிரசங்கித்து இயேசுவின் ஞானஸ்நானத்தை (நீர்) மறுதலிப்பதே.

ரோமன் கத்தோலிக்கச் சபைக்கும் புரட்டஸ்டன்ட் சபைக்கும் இந்நாட்களில் காணப்படும் வித்தியாசம் என்ன? சீர்த்திருத்தவாதிகள் ரோமன் கத்தோலிக்கச் சபையில் எப்படி புரட்சி செய்தார்களோ, எப்படி அவர்கள் ரோமன் கத்தோலிக்க ஆலயத்திலிருந்து வெளியேறி புரட்சி சபையைத் தோற்றுவித்தார்களோ, அதுபோல் நாமும் குருடரான கிறிஸ்தவர்களையும், போலிப் போதகர்களையும் எதிர்த்து புரட்சி செய்யவேண்டும். அப்பொழுதுதான் உண்மை நற்செய்தியை கண்களைத் திறந்து நோக்கமுடியும். உண்மையாக விசுவாசிக்கமுடியும். மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் முழுவதுமாக இரட்சிக்கப்பட முடியும்.

 

 • நாம் வேதப்புரட்டர்களாகாமல்  இருக்க என்ன செய்யவேண்டும்?
  • நீரினாலும் ஆவியினாலும் நாம் மறுபடியும் பிறக்கவேண்டும்.
 •  

வேதம் நமக்குச் சொல்லுகிறது. யாரெல்லாம் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் நம்புகிறார்களோ, உண்மையான நம்பிக்கையை பின்பற்றுவார்கள். யோவான் 3:1-12 -இல் நிக்கொதேமுவிடம் இதைத்தான் கூறுகிறார்.

வேதப்புரட்டர்கள் அவர்களைப் பின் பற்றுவோரிடம் பக்தியுடன் நடக்குபடிக் கூறுவார்கள். அவர்களை சூரியன் உதிக்கும்போது ஜெபிக்கும்படியும் கடினமாக முயற்சி செய்யும்படியும் வேண்டுவார்கள். இது குருடனை ஔடச் சொல்லுவதைப் போலாகும்.

நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஜெபிக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல. நீங்கள் நீரினாலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்காவிட்டால் இவற்றினால் எந்த பயனும் இல்லை. நாம் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்கள் நீதிமான்கள் என்றால், வேதப்புரட்டர்கள் ரோமர் 3:10 மூலம் பதிலடி கொடுக்கிறார்கள். “அந்தப்படியே; நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.” இவ்வசனத்தின் மூலம் விசுவாசியை வேதப்புரட்டன் என்று முத்திரைக் குத்துகிறார்கள்.

ஆனால் உண்மையில் அவர்களே வேதப்புரட்டர்கள். இவ்வசனத்தின் பொருள், அது காணப்படுவது போல் அவ்வளவு இலகுவானதில்லை. இந்த வேதப்புரட்டர்கள் முழு வேதாகமத்தையும் படித்தவர்களில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வுலகில் ஒரு நீதிமானும் இல்லை என்று கூறினான். அவர் பழைய ஏற்பாட்டிலுருந்து ஒரு வசனத்தைக் குறிப்பிடுகின்றார். அவ்வசனம் கூறுகிறது. இயேசு கிறிஸ்து மனிதர்களைத் அவர்கள் பாவத்திலிருந்து, கர்த்தருடைய இரட்சிப்பின் மூலம் மீட்கும்வரை இவ்வுலகில் ஒரு நீதிமானும் இருக்கவில்லை. ஆனால் இயேசுவால் இரட்சிக்கப்பட்டவர்கள் நீதிமான்களாயினர்.

முழு அதிகாரத்தையும் படிப்பதன்மூலம் உண்மையைக் கண்டு கொள்ளலாம். வேதப்புரட்டர்கள் அவர்களைப் பின்பற்றுவோரிடம் அவர்களின் நம்பிக்கையிலிருந்து மாறு பட்டவர்களிடம் கவனமாய் இருக்கும்படி மட்டும் எச்சரிக்கைச் செய்கிறார்கள். அவர்கள் முறையான சபை என்று ஏற்றுக்கொண்டதை விட்டு மற்றச் சபைகளுக்கு ஆராதனைச் செய்யப் போவதை வேதப்புரட்டர்கள் தடைச் செய்கிறார்கள். ஆகவே அச்சபை மக்கள் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் பிரசங்கிக்கும் ஆலயங்களுக்குச் செல்ல தைரியமில்லாதவர்களாகி விடுகின்றனர்.

அவர்கள் உண்மையான நற்செய்திக்கு செவிடராயிருப்பதால், அவர்களால் மறுபடியும் பிறக்க இயலாது; இவை போலி ஆசாரியர்கள் கற்பிப்பதாகும். இவர்கள் உண்மையில் பாதாளத்திற்கு பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இதற்காக அவர்கள் நியாயந் தீர்க்கப் படுவார்கள். வேதப்புரட்டர்கள் கர்த்தரிடம் திரும்ப வேண்டும்.

வேதப்புரட்டர்கள் யார்? நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசித்து விடுதலையானவர்களா? அல்லது தாங்கள் இயேசுவை விசுவாசிக்கும் அதே சமயம் நீராலும் ஆவியாலும் மறுபடி பிறக்கத்தவறியவர்களான அவர்களா?

தீத்து 3:11 கூறுகிறது. இயேசுவை விசுவாசித்தும் தமக்குத் தாமே ஆக்கினக்குட்படுத்துவதில் நிலைத்திருப்பவர்கள் வேதப்புரட்டர்கள்.

அவர்களைப் பின்பற்றுவோரிடம், ‘நீரையும் ஆவியையும் பற்றிய நற்செய்தியைப் போதிக்கும் எழுப்புதல் கூட்டங்களுக்குச் செல்வது ஆபத்து என்று கற்றுக் கொடுக்கிறார்கள். ‘முறையானவர்கள்' எப்படி மாறுபட்டக் கருத்துடையவர்களைக் கண்டு பயமடையாலாம்? அவர்கள் பக்கத்தில் உண்மை இல்லாததால் அவர்கள் பயப்படுகிறார்கள். “கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின் மேல் கற்பனையும் வேதப்புரட்டர்கள் பாடம் அப்படியிருக்கிறது.

வேதபுரட்டர்கள் இப்புத்தகத்திலிருந்து சிலவற்றைக் கூறுவார்கள். அப்புத்தகத்திலிருந்து சிலவற்றைக் கூறுவார்கள். தத்துவ ஞானிகளின் சில வார்த்தைகளைச் சேர்ப்பார்கள். இலக்கியத்திலிருந்து சிலவற்றை எடுப்பார்கள். இவற்றையெல்லாம் சொந்த யோசனையில் கலந்து பிரமாதமாக அமையும்படிச் செய்கிறார்கள்.

அவர்கள் அவர்களைப் பின்பற்றுவோரை அஞ்ஞானிகள் என்று நம்பி, அவர்களுக்கு உலகத் தத்துவங்களைப் போதிக்கிறார்கள். உண்மையான தேவாலயம் வேத வாக்கை பிரசங்கிக்கிறது. மேலும் விசுவாசியை வேதவாக்கில் அறிவு பெற்றவனாக்குகிறது. மக்கள் உலகச் சம்பந்தமான வழிகளைப் படிக்க ஆலயத்திற்கு வரவில்லை. மாறாக, வெளி உலகில் கேட்க முடியாத பரலோகச் செய்திகளைக் குறித்து கேட்கவே தேவாலயத்திற்கு வருகிறார்கள். அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க வருகிறார்கள்.

மக்கள் ஆலயத்தினுள் பாவிகளாக நுழைகிறார்கள். அவர்கள் ஆலயத்திலிருந்து பாவமற்ற நீதியின் விசுவாசிகளாக வெளியே வரவேண்டுமென்று விரும்புகிறார்கள். வேதப்புரட்டர்களான போதகர்கள் எவற்றைப் பற்றிக் கூறுகிறார்கள்? அவர்களைப் பின்பற்றுவோரிடம் அவர்கள், உண்மையின் நற்செய்தியை எடுத்துரைக்கும் தேவபிள்ளைகள் நடத்தும் எழுப்புதல் கூட்டங்களுக்கு போகாதீர்கள் என்றுச் சொல்லுகிறார்கள். அவர்கள் அவர்களைப் பின்பற்றுவோரை நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறப்பதிலிருந்து தடைச் செய்கிறார்கள்.

அது மிகவும் முட்டாள்தனம். அவர்களைப் பின்பற்றுவோரை ஏமாற்றலாம், ஆனால் அவர்களால் கர்த்தரை ஏமாற்றமுடியாது.

 

 • போலி ஆசாரியர்களால் நீரினாலும் ஆவியாலும் அவர்களைப் பின்பற்றுவோரை மறுபடியும் பிறந்தவர்களாக்க முடியுமா?
 • இல்லை. மறுபடியும் பிறந்த ஒருவரால் தான் மற்றவர்களை, மறுபடியும் பிறந்தவர்களாக்க முடியும்.

 

வேதப்புரட்டர்களே, நீங்கள் கர்த்தரின் உண்மைச் சேவகர்களாக இருந்தால், ஆவியானவர் உங்களுடன் பேசுவதை உங்களால் கேட்கமுடியவில்லையா? நீங்கள் திரும்பி வரவேண்டும். நீங்கள் உங்களைப் பின்பற்றுவோரை, நற்செய்தியாகிய நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பதைப் பற்றி தேவபிள்ளைகள் நடத்தும் எழுப்புதல் கூட்டங்களுக்கு வர தடைச் செய்வதை நிறுத்தவேண்டும்.

வேதப்புரட்டர்கள் இறையியல் மூலம் மட்டுமே படித்துக் கொடுக்கிறார்கள். அவர்கள் மற்றத் தத்துவங்களை எதிர்க் கொள்ளும்போது, பலத்த அடி பெறுகிறார்கள். இது வேதனையானது. போலிப் பிரசங்கியார்கள் வேதவாக்கில்லாமல் பிரசங்கிப்பதில் வல்லவர்கள். அவர்களின் தவறான தீர்ப்பின்படி, பிரசங்கிக்கிறார்கள், ஆலோசனைக் கூறுகிறார்கள், ஆராதனைச் செய்கிறார்கள். வேத வாக்கில்லாது ஆராதனைச் செய்பவர்களும், பிரசங்கிப்போரும், வேதப்புரட்டரும் கூலிக் காரருமாக (யோவான் 10:13) இருக்கிறார்கள்.

போலியாசாரியர்களும் வேதப்புரட்டர்களே. அவர்களின் உட்புறமும் வெளியரங்கமும் வேறுவேறானவையாக இருக்கின்றன. சிலர் வேதப் புரட்டர்களின் ஆலயங்களை, நிறுவப்பட்ட வேறுவேறு ஆலயங்களுக்கு ஒத்துவராத ஆலயங்களாக கருதுகின்றனர். ஆயினும் இதுபோன்ற ஆலயங்களுக்கு மற்ற ஆலயங்களுடன் சேருவது பிடிப்பதில்லை. ஏனெனில் இதுபோன்ற ஆலயங்கள் வேதம் கூறும் கருத்துக்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளன.

வேதப்புரட்டர்கள் தங்களைப் பின் பற்றுவோர் பாவ விடுதலைப் பெறவேண்டும் என்று அவர்களிடம் கூறுகிறார்கள். ஆனால் அவர்களே பாவப் பிரச்சனைகளுக்கு ஓர் தீர்வு காணவில்லை. அவர்கள் யெரொபெயாமை ஒத்தப் பாவத்தைச் செய்கிறார்கள். எவன் ஒருவன் இருதயத்தில் பாவம் உள்ளவனாயிருந்து, கர்த்தரின் வேலையைச் செய்ய முயல்கிறானோ, அவன் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துக்கொள்ளவேண்டும். அவனுடைய பாவங்களும், கர்த்தரின் பரிசுத்தமும் ஒரே இடத்தில் நிச்சயமாக இருக்கமுடியாது. அவன் தான் ஒரு வேதப்புரட்டன் என்று அறியவேண்டும்.

 ஆகவே, யார் பிரசங்கிப்பது; மற்றும் ஆலய வேலைகளில் ஈடுபட்டும் பாவியாக இருந்தால், அவன் ஒரு வேதப்புரட்டன் என்பதை உணர்ந்துகொள்ள கடமைப் பட்டுள்ளான். அவன் ஒரு வேதப்புரட்டன், ஏனெனில், அவனுக்கு இயேசுவின் இரட்சிப்பின் நற்செய்தி தெரியாது, நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்கும் நற்செய்தியும் தெரியாது, ஒருவன் வேதாகமத்தை ஒரு புரட்டனிடமிருந்து கற்றவனாயிருந்தால் அவனும் அப்படியே மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்து, அவனும் வேதப்புரட்டனாகிறான்.

ஒரு மரத்தை அதன் கனியைக் கொண்டு அறிகிறோம். யாரெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் நம்பியதால் நீதிமான்களாகிறார்களோ, அவர்கள் மட்டுமே நீதிமான் ஆவர். பாவிகளாகவே யார் இருக்கிறார்களோ அவர்கள் பாவியாகவே மரிக்க வேண்டும். “அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளை கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளை கொடுக்கும் (மத்தேயு 7:17).

 

 

வேதப் புரட்டர்கள் தம் பிரசங்கத்தில் பிரசங்கிப்பது என்ன?

 

 • வேதப்புரட்டர்கள் தம் பிரசங்கத்தில் பிரசங்கிப்பது என்ன?
 • உலக இறையியல் மற்றும் மனித யோசனைகள்.
 •  

போலியாசாரியர்கள் இதையும் அதையும் கவனிக்கிறார்கள். அவர்கள் ஏன் அத்தனைக் கவனமாக இருக்கிறார்கள்? அவர்கள் பொய்கள் வெளிவருவதைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களிடம் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பது குறித்த விசுவாசம் பலமாக இருப்பதில்லை.

வேதப்புரட்டர்கள் இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமும் எடுக்கிறார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு நற்செய்தியைப் பற்றிய முழு பொருளும் தெரியாது.

கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.” (ஏசாயா 28:13).

வரிக்குவரி அவர்கள் கூறுகிறார்கள். “இந்த வார்த்தையின் பொருள் கிரேக்க மொழியில் இதுவாகும். எபிரேய மொழியில் அதுவாகும்; அங்கே இதுபோன்ற தத்துவங்கள் இருக்கின்றன அவர்கள் தெளிவான இரட்சிப்புத் தத்துவத்தை எதிர் நோக்கினால் அது குறித்து கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள், ஜான் கால்வின் அதைக் கூறினார், ஜான்நாக்ஸ் இதைக் கூறினார். நாம் அவற்றை அவர்களின் வழிப்படி, பொருள்படுவதாக நினைக்கிறோம்.

அவர்களுக்கு தாம் என்ன பேசுகிறோம் என்பதோ, தாம் எதை நம்புகிறோம் என்பதோ தெரியாது. உண்மையான நம்பிக்கையுள்ளவன் எவனோ, அவனால் கருப்பு வெள்ளை சொற்களினால் தெளிவாகப் பேசத்தெரியும். உண்மையான விசுவாசிக்கு மறுபடியும் பிறந்தவர்களையும் மறுபடி பிறவாதவர்களையும், தெளிவாகப் பிரித்துணர்ந்துக் கூறத் தெரியும். நாம் நற்செய்தியாகிய நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறப்பது குறித்து மிகத்தெளிவாக பிரசங்கிக்கிறோம்.

நமது வேதப்புரட்டர்கள் குழப்பம் நிறைந்த உலகில் இருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கை வௌவால் எப்படி பகலில் குகையினுள்ளும் இரவில் வெளி உலகிலும் இருப்பதை நாடுகிறதோ, அதுபோல் வேதப்புரட்டர்கள் இந்தத் தத்துவத்தை அதற்கு மேலாக விரும்பியும், இதற்குமேல் அதனை நம்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் எது உண்மை என்று தெரியாது. ஒரு வேதப்புரட்டுள்ள ஆசாரியன் நரகத்திற்கு போகும்போது, அவனைப் பின் பற்றுகிறவர்களும் கூடவேச் செல்லுகிறார்கள். அவர்களுடைய முடிவு மிகவும் கசப்பானது. நிறைய மக்கள், கள்ளத்தீர்க்க தரிசனங்களை நம்பியதாலேயே நரகத்திற்குச் செல்லுகிறார்கள்.

 உங்களுடையப் போதகர் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவரா? அவர் மறுபடியும் பிறப்பதைக் குறித்து வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளபடி பிரசங்கிக்கிறாரா? அவர் அப்படிப்பட்டவராக இருந்தால் நீங்கள் பாக்கியம் செய்தவர். இல்லையென்றால் நீங்கள் நாசமடைவீர்கள். நீங்கள் மறுபடி பிறக்காதவர்களாக இருந்தால், நீங்கள் நீர் மற்றும் ஆவியைப்பற்றி கண்டிப்பாக கேட்கவேண்டும். அதனை விவரிக்கும் நூல்களைப் படிக்க வேண்டும், மறுபடியும் பிறக்க வேண்டும்.

வேதப்புரட்டர்கள் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறப்பதைக் குறித்த நற்செய்தியை விரும்புவதில்லை. அவர்கள் பிரசங்கிக்கிறார்கள். “இயேசு நம் பாவங்களைப் போக்க வந்தார். அவர் அதனை மட்டும் செய்தார். அவர் இப்பொழுதும் நமது பாவங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறார். அவர் வரும் நாட்களிலும் அப்படியேச் செய்வார்.” இது எப்படி உண்மையாக இருக்க முடியும்? அவர்கள் தம்மை நீதிமான் என்கிறார்கள். ஆனால் அவர்கள் பாவங்களை செய்வதில் குறியாயிருக்கிறார்கள். ஒரு நொடியில் அவர்கள் நீதிமான்களாகவும் மறுநொடியில் பாவியாகவுமிருக்கிறார்கள்.

ஒரு தவறான இறைத் தத்துவம் உள்ளது, யாரொருவன் இப்போது நீதிமானாகவும் பிறகு பாவியாகவும் இருக்கிறானோ அவன் ஒரு வேதப்புரட்டன், ஒரு கள்ளத்தீர்க்கதரிசி. யார் தன்னை ஆக்கினைக்கு உள்ளாக்குகிறானோ, யார் தன்னைச் சீர்குலைக்கிறானோ, அது இரண்டும் அவனைப் பொறுத்தவரை ஒன்றே.

 

 

வேதப் புரட்டர்களைப் பின்பற்றுவோர் மீது கர்த்தருடைய சாபம்

 

 • வேதப்புரட்டர்கள் எதனை மிகவும் முக்கிய இடத்தில்?
  • முயற்சிகள் மீது.
 •  

வேதப்புரட்டர்கள் எப்பொதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஆகவே, அவர்களைப் பின்பற்றுவோர் அவகளிடம் மறுபடியும் பிறப்பதைக் குறித்துக் கேட்டால் நீராலும் ஆவியாலும் மறுபடியும் அவர்கள் பிறக்கச் செய்ய வேதப்புரட்டர்களால் வழி நடத்தமுடியாது. அதற்கு பதிலாக, அவர்களைப் பின்பற்றுவோருக்கு முட்டாள்தனமான யோசனைகளைக் கூறுகிறார்கள். அவகள் கூறுகிறார்கள்; அதீதமான கற்பனைகள் மூலம் மறுபடியும் பிறக்க முடியும். அதே சமயம் அவர்கள் மறுபடியும் பிறந்ததை அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். இது எத்தனை அபத்தமானக் கருத்து.

இயேசு யோவான் 3ஆம் அதிகாரத்தில் கூறுகிறார். “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.” ஆயினும் இந்நாட்களில் மறுபடியும் பிறந்த நீதியான மக்கள் அதி நம்புக்கையுள்ள வேதப்புரட்டர்கள் என்றழைக்கப் படுகின்றனர்.

வேதப்புரட்டர்கள் தம்மை நீதிமான்களாக அழைக்காததற்கு காரணம் தாங்கள் தாழ்மையாக இருப்பதனால்தான் என்கிறார்கள். அவர்கள் தம்மைப் பின்பற்றுவோரிடம் “எழுப்புதல் கூட்டங்கள் எதிலும் பங்கேற்க வேண்டாம். அங்கே நீரினாலும் ஆவியினாலும் கிட்டும் மறுபிறப்பு ஆசீர்வாதம் குறித்து போதகர் திட்டமிட்டிருக்கிறார். நீங்கள் மறுபடியும் பிறந்தீர்கள் என்றால் வேதப்புரட்டர்கள் ஆகிவிடுவீர்கள். நீங்கள் ஆலயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவீர்கள். நீங்கள் எங்களுடன் இருக்கவேண்டுமானால், பாவியாகவே இருங்கள். நேரம் வரும்போது கர்த்தர் உங்களை நீதிமான்களாக்குவார்.” இதைதான் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் உண்¨யில் என்ன கூறுகிறார்கள் என்றால் மறுபடியும் பிறக்க வேண்டுமா இல்லையா என்பது நீங்களே தீர்மானிக்க வேண்டிய ஒன்று.

வேதப்புரட்டர்கள் தங்களைப் பின்பற்றுவோரிடம் கூறுகிறார்கள். “நீங்கள் எங்களுடன்தான் இருக்கவேண்டும். ஆனால் மறுபடியும் பிறப்பது உங்கள் பொறுப்பாகும். ஆகவே நீங்களே முயற்சி செய்யுங்கள். இப்பொழுது எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். நேரம் வரும்போது கர்த்தரிடம் செல்லுங்கள். அப்பொழுது உண்மையைக் கண்டுக்கொள்வீர்கள். அதன்பிறகு என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இது ஒரு முறையுள்ள ஆலயம், ஆகவே நீங்கள் எங்களுடன் தான் இருக்கவேண்டும்.” இது சரியென்று நினைக்கிறீர்களா?

இவ்வேதப்புரட்டு ஆசாரியர்கள் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் எடுத்து அவகளுடைய சொந்த தத்துவங்களை உருவாக்குகிறார்கள். அது அவர்களுடைய உண்மையாகி விடுகிறது. அவர்களுக்கு வேத வாக்குத் தெரியாது. அவ் வேதவாக்கு நீரையும் ஆவியையும் குறித்துச் சொல்லுகிறது.

வேதப்புரட்டர்கள் தங்கள் யோசனைப்படி வேதாகமத்தை அர்த்தம் கற்பிக்கிறார்கள். நாம் வேதாகமத்தை அதன் வார்த்தைகள் என்ன கூறுகிறதோ, அதனை அர்த்தம் கொள்ளவேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் வழிக்கேற்றவாறு அர்த்தம் கற்பிக்கிறார்கள். அதனால்தான் இத்தனை இறையியலாளர்களும் பிரிவுகளும் கிறிஸ்தவத்தில் உள்ளன.

நிறையப் புரட்டல் பிரிவுகளும், புரட்டல் இறையியலாளர்களும் இருப்பதால், எண்ணிலடங்காத வேதப்புரட்டல் நூல்கள் உள்ளன. போலியாசாரியர்கள் இந்தப் புத்தகத்திலிருந்து சில குறிப்புகளையும் அந்தப் புத்தகத்திலிருந்து சில குறிப்புகளையும், அவர்கள் பிரசங்கிக்கும்போது சுட்டிக்காட்டுகிறார்கள். உண்மையான ஆசாரியர்கள் வேதாகமத்தில் இருந்து மட்டுமே பிரசங்கிக்கிறார்கள்.

வேதப்புரட்டர்கள் பல தந்திர வழிகளில், தம்மைப் பின் பற்றுவோரிடம் பணம் கறக்கிறார்கள். அவர்கள் நன்கு உண்டு வசதியாக இவ்வுலகில் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மறுபடியும் பிறக்காததினாலே, நரகத்திற்குச் செல்லுகிறார்கள். கர்த்தர் அவர்களுக்காக இம்முடிவை ஏற்படுத்தியுள்ளார்.

கர்த்தர் முதலில் மிகவும் முயற்சி செய்கிறார். ஆயினும் தம்மை கடினப் படுத்திக்கொண்டு, நீரினாலும் ஆவியினாலும் வரும் மறுபிறப்பின் ஆசீர்வாதத்தினை ஏற்க மறுக்கும் அவர்களை நரகத்திற்கு அனுப்புவார்.

வேதப்புரட்டர்களைக் கர்த்தர் நியாயம் தீர்ப்பார். வேதப்புரட்டர்கள் முதலில் கர்த்தரை மிகவும் தீவிரமாக நம்புகிறார்கள். அவர்கள் அடுக்கடுக்காக வேதாகமத்தைக் குறித்த விமரிசனப் புத்தகங்களையும், இறையியல் புத்தகங்களையும் தொடக்கக் காலத்தில் படிக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் கற்பனைகளைக் கலந்து பிரசங்கம் செய்து, அவர்களைப் பின்பற்றுவோர் மறுபடியும் பிறக்காதிருக்கச் செய்கிறார்கள்.

வேதப்புரட்டர்கள் அவர்கள் செய்த இவ்வுலகத்திற்கான காரியங்களை குறித்து மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்தப் போதகர் நீர் மற்றும் ஆவியால் கிட்டும் நற்செய்தியாகிய மறுபிறப்பைக் குறித்து பிரசங்கம் செய்யாதிருக்கிறாரோ, அவர் கர்த்தர் முன் ஒரு வேதப்புரட்டராவார்.

தம்மைப் பின்பற்றுவோரை அவர்கள் எல்லையில்லாத அளவிற்கு நசுக்குகிறார்கள். அவர்களை 40 நாட்கள் முழு இரவு ஜெபத்திற்கு வரும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். 100நாட்கள் அதிகாலை ஜெபம், மலைமீதினில் ஜெபம், ஒரு முறையான உபவாசம், ஆலயம் கட்டுவதற்கு பணம், ஆயிரம் சர்வாங்கத் தகன பலிகள், எழுப்புதல் கூட்டங்களுக்கு பணம் கொடுத்தல்..... அவர்கள் ஒவ்வொரு விசுவாசியும் எவ்வளவு கொடுத்தார் என்று வரைபடம் வேறு வரைகிறார்கள். அவர்களுடைய வேலைகளின் கனிகளை உற்று நோக்கினால், அவர்கள் வேதப்புரட்டர்கள் என்பதைக் காணலாம்.

கர்த்தரின் சாபம் அவர்கள் விசுவாசிகளின்மீதும் விழுகிறது. மறுபடியும் பிறவாது பிரசங்கம் செய்யும் போதகர்கள், அவர்களைப் பின்பற்றுவோர் எல்லாம் கர்த்தருடைய சாபத்தின் கீழ் இருக்கின்றனர்.

 

 

வேதப்புரட்டர்கள் தம்மைப் பின்பற்றுவோரின் மனதைப் படிக்க முயற்சி செய்கிறார்கள்

 

 • வேதப்புரட்டர்கள் ஏன் தம்மைப் பின்பற்றுவோரின் மனதைப் படிக்க முயற்சி செய்கிறார்கள்?
 • அவர்கள் மறுபடியும் பிறவாததாலும் கள்ளத்தோற்றத்துடன் ஆராதனை செய்வதாலும், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் இருதயத்தில் இல்லாததாலும் அப்படிச் செய்கிறார்கள்.

 

வேதப்புரட்டல் செய்யும் ஆசாரியர்கள், தினமும் அழுகிறார்கள். அவர்கள் மூத்த டீக்கன்களையும், மூப்பர்களையும், சாதாரண டீக்கன்களையும், சாதாரண உறுப்பினரையும் திருப்திபடுத்துவதில் நிச்சயமாக இருக்கிறார்கள். தினமும் இப்படித் தொடர்ந்து செய்கிறார்கள்.

அவர்கள் தினமும் நல்லவர்களைப்போல நடிக்கிறார்கள் “பரி~சுத்தம் மற்றும் கி~ருபை....” அவர்கள் முற்றிலும் பாவத்தினால் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தத்தைப் பற்றிய செய்திகளைப் பேசவேண்டியதிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு நாளும் கடக்கும்போது அதிக கபடர்களாகிறார்கள். ஒரு பிரசங்கி ஒரு முறை கூறினார். “உள்ளே ஆவியானவர் இல்லாமல் பிரசங்கம் செய்வது பாவம்” இதன் பொருள் யாதெனில், விடுதலையடையாமல், கர்த்தருடைய வேலையை செய்வது ஒரு வேதப்புரட்டாகும். அது ஒரு சபிக்கப்பட்ட வாழ்வு. நீங்கள் இதுபோன்றவர்களாக இருந்தால், நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கவேண்டும். யார் இயேசுவை விசுவாசிக்கும் அதே நேரம் மறுபடியும் பிறக்காதவரோ அவர் ஒரு வேதப்புரட்டன். அத்துடன் எல்லோரும் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கும் நற்செய்திக்கு திரும்பவேண்டும். நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறந்த நீதிமான்கள் மட்டுமே மற்றவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியும்.

 

 

வேதப் புரட்டர்கள் அமைதியைக் குறித்து மட்டுமே அழுகிறார்கள்

 

 • வேதப்புரட்டில் ஈடுபடும் ஆசாரியர்கள் தம்மை பின்பற்றுவோரை எங்கனம் திருப்திபடுத்துகிறார்கள்?
 • அவர்கள் எப்பொழுதும் அமைதியக் குறித்து அழுகிறதாலும் தம்மை பின்பற்றுவோர் பாவிகளாக இருந்தாலும், அவர்கள் பரலோக ராஜ்ஜியத்தில் நுழையமுடியும் என்று கூறுவதாலும்.

 

ஏசாயா 28:14-15 கூறுகிறது “ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக் காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். நீங்கள் மரணத்தோடே உடன்படிகையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டு வந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்கள்.”

இங்கே நிந்தனைக்காரர் என்றழைக்கப்படுவது யார்? அது தங்களின் சொந்த நம்பிக்கைகளுடன் தேவ வாக்கைக் கலந்து பிரசங்கம் செய்வோரேயாகும். பிரசங்கியுடைய யோசனைகள் எதுவாக இருந்தாலும், இறையியல் என்ன கூறினாலும், அவர் வேதாகமம் சொல்வதை மட்டுமே கூறவேண்டும், ஆனால் வேதப்புரட்டல் வேதாகமத்தைப் போதிக்கிறார்கள். இவர்களே நிந்தனைக்காரர்கள்.

மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஔப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளாமாய் புரண்டு வந்தாலும், எங்களை அணுகாது.”

வாதை அவர்களை அணுகாது என்று வேதப்புரட்டர்கள் கூறுகிறார்கள். மக்களைக் கலங்க வேண்டாமென்று அவர்கள் கூறுகிறார்கள். அழிவும் நரகமும் அவர்களுக்காக காத்திருக்கிறது, ஆனால் அவர்கள் கலங்காதீர்கள் என்கிறார்கள், அழிவும் நரகமும் அவர்களைப் பொருத்தவரை இல்லை. ஆகவே நீங்கள் பிழைத்திருக்க வேண்டுமானால் இப்படிப்பட்ட வேதப்புரட்டர்களிடமிருந்து தூரமாயிருக்கவேண்டும்.

வேதப்புரட்டர்கள், நீங்கள் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்க வேண்டியதில்லை என்கிறார்கள். இதுசரியா? இல்லை முற்றிலுமாக இது தவறு. நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கவில்லை என்றால் நீங்கள் பரலோக ராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்க முடியாது.

பரலோக இராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்காவிட்டால் பரவாயில்லையா? இது நரகத்தில் அக்னியில் எரிகிறது பரவாயில்லையா, என்பதற்கு சமமானக் கேள்வியாகும். இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் இல்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை. நாம் எல்லாம் நீராலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்கும் நற்செய்தியை விசிவாசித்து, பரலோக இராஜ்ஜியத்தினுள் பிரவேசிப்போமாக.

வேதப்புரட்டல் செய்யும் போதகர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் மக்கள் இயேசுவை விசுவாசிப்பதால் அவர்கள் பாவியாக தொடர்ந்து ஜீவிப்பதில் தவறில்லை, அவர்கள் நரகத்திற்கு போக மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்

நீங்கள் பாவியாக இருந்தாலும் இயேசு உங்களை கவனிப்பாரா? ஒரு பாவி பரலோகம் செல்லமுடியுமா? நீங்கள் பாவியாக இருந்தால் நரகத்திற்கு செல்லாதிருக்க முடியுமா? வேதாகமத்தில், நீங்கள் இயேசுவை விசுவாசிப்பதினால், நீங்கள் இருதயத்தில் பாவம் நிறைந்தவறாக இருந்தாலும் பரலோகம் செல்ல முடியும் என்று எழுதப்பட்டுள்ளதா.

வேதப்புரட்டர்கள் தாம் சாவுடன் உடன்படிக்கை செய்து கொண்டதால் சாவு அவர்களை அணுகாது என்று கூறுகிறார்கள். அவர்கள் ஒருவனின் இதயத்தில் பாவமிருந்தபோதிலும், அவனால் நரகத்தண்டனையிலிருந்து தப்பிக்க முடியுமென்று கூறுகிறார்கள். இது இவ்வாறு உண்மையில் நடக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

வேதப்புரட்டர்கள் மரணமும், நரகமும் தமக்கில்லை என்று கூறி மக்களைக் கவருகிறார்கள். வேதப்புரட்டல் செய்யும் ஆசாரியர்கள், மறுபடியும் பிறவாதவர்களை டீக்கன்களாகவும் மூப்பர்களாகவும், போதிப்பவர்களாகவும் நியமிக்கிறவர்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்று தெரியவேண்டும். அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பதை விசுவாசிக்காததினால் அவர்களின் முடிவு நரகம். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், தம்மை பின்பற்றுவோரிடம் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் குறித்து வலியுறுத்த வேண்டும்.

விசுவாசிகள் பாவிகளாக இருந்தாலும், அவர்கள் பரலோகம் செல்லத் தகுதியானவர்களா? பாவி பரலோகம் செல்ல முடியுமா? வேதாகமம் பாவிகள் பரலோகம் செல்ல முடியும் என்று கூறுகிறதா? இல்லை. ஒரு நீதிமான் பாவத்துடன் இருக்கமுடியுமா? இதுவே வேதப்புரட்டல் மற்றும் போலி இறையியல் கற்பிக்கும் பாடமாகும்.

வேதம் கூறுகிறது “பாவத்தின் சம்பளம் மரணம் ” (ரோமர் 6:23) இது கர்த்தரின் சட்டமாகும். அவர் பாவிகளை நேரடியாக நரகத்திற்கு அனுப்புகிறார். இந்த மோசமான முடிவிற்கு மாறாக நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறந்தவர்கள் பரலோகத்திற்குள் வரவேற்கப்படுகிறார்கள்.

வாதை பெருவெள்ளமாய் புரண்டு வந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே.” புரட்டலில் ஈடுபட்டுள்ள ஆசாரியர்கள், அவர்கள் இருதயத்தில், பாவமிருந்தாலும் அவர்கள் நரகத்திற்கு போகமாட்டோம் என்று விசுவாசிப்பதோடு, அத்தகைய வார்த்தைகளையும் பேசி வருகிறார்கள். அவர்கள் பொய்யான சத்தியமில்லாத இறைத் தத்துவங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பதால் அவர்களைக் கர்த்தரால் காப்பாற்ற முடியாது. அவர்கள் இறைத் தத்துவங்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தம் சொந்த இறைத் தத்துவங்களை கர்த்தரின் வார்த்தைக்கு பதிலாக உபயோகிப்பதால் அவர்கள் வேதப்புரட்டர்கள் - நரகத்திற்கென்று நியமிக்கப் பட்டவர்கள். இத்தகையோர் நிறையபேர் இருப்பது கவலை அளிக்கிறது.

 

 

வேதப்புரட்டர்கள் பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்

 

 • வேதப்புரட்டலில் ஈடுபட்டுள்ள ஆசாரியர்களின் இலட்சியம் என்ன?
 • தம்மை பின்பற்றுவோரிடமிருந்து எவ்வளவு பணம் கறக்கமுடியுமோ அவ்வளவு கறப்பதுவே.

 

வேதப்புரட்டர்களும், போலியாசாரியர்களும், பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அவர்கள் பேராசைக்காரர்கள். “இந்த மனிதன் ஆலயத்திற்கு வந்தால் எவ்வளவு கிடைக்கும்?” அவர் கொடுக்கும் தசமபாகத்தைக் குறித்து சிந்திக்கிறார்கள். இது பொன் கன்றுகுட்டியை ஆராதிப்பது போலாகும். “தயவு செய்து எனக்கு வெற்றியைத் தாரும், நான் நிறைய சம்பாதிக்கட்டும்.... கர்த்தரே போலி ஆசாரியர்கள் இப்படி ஜெபிக்கும்படி மக்களிடம் போதிக்கிறார்கள்.

 அவர்கள் கூறுகிறார்கள் “நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள், மலடாயிருந்தாலும் கர்ப்பவதியாவீர்கள், உங்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.”

இத்தகையப் போலி ஆசாரியர்களை நம்பிய நிறையபேர் ஏமாற்றம் அடைந்தார்கள். அவர்களின் பணம் பறிக்கப்பட்டு அவர்கள் பாவங்களுக்காக நரகம் அடைந்தனர். இது எத்தனை மோசமானது?

ஒருவன் வேதப்புரட்டர்களின் அழுகையிலிருந்து, தம் சொந்த சிந்தனைக்கு வரும்போது, தன்னிடமிருந்து வஞ்சனையாளர்களால் எவ்வளவு பணம் அபகரிக்கப் பட்டது என்று உணர்வான். அவன் அவர்களுக்காக கடுமையாக உழைத்ததையும், அவர்களுக்கு பின் சென்றதையும் முட்டாள்தனமாக கண்டு தன்னைத் திருத்திக் கொள்வான்.

வேதப்புரட்டர்கள் தாம் பின்பற்றுவது சிறந்த மதம் என்று கருதி தீவிரமாக கடைப் பிடிக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுவோர் அதிகாலை ஜெபம், மலைகளில் போய் ஜெபம், சிறப்பு காணிக்கைகள், தசம பாகம், வாராந்திர காணிக்கை போன்வற்றிற்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். தம்மை பின்பற்றுவோரிடமிருந்து பணம் வாங்க, அவர்களிடம் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

அவர்களைப் பின்பற்றுவோர் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் அவர்கள் இருதயத்தில் இன்னும் பாவமிருக்கின்றது. இதற்கு காரணம் என்னவென்றால் நற்செய்தியாகிய நீரையும், ஆவியையும் குறித்து அவர்களிடம் யாரும் கூறவில்லை. இது குறித்து அவர்கள் கேள்வி கேட்டாலும் நேரான பதில் அவர்களுக்கு கிட்டுவதில்லை. யாரெல்லாம் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கவில்லையோ அவன் வேதப்புரட்டன்.

 

 

இரங்கத்தக்க வேதப்புரட்டர்களும் அவர்களை பின்பற்றுவோரும்

 

   • இவ்வுலகின் அதிக பரிதாபத்திற்குரியவர்கள் யார்?
   • ஆவியாலும் நீராலும் மறுபடியும் பிறவாமல் ஆராதனை நடத்துபவர்.
 •  

ஓ! “பரிதாபமான வேதப்புரட்டல்காரர்களே!” நீங்கள் முதலில் பாவ விடுதலைக்குறித்து வேலைச் செய்யவேண்டும். பொய் நம்பிக்கையை குறித்த சிறந்த அறிகுறி யாதென்றால் யெரொபெயாமின் பொன் கன்றுக்குட்டிகளை வணங்குவதாகும். வேதப்புரட்டர்கள் முதலில் செய்த காரியம் என்னவென்றால், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டி பொன் கன்றுக்குட்டிகளை சேவித்தமையாகும். (1 இராஜாக்கள் 12:25-33)

இந்நாட்களில் அவர்கள் பெரிய ஆலயங்களைக் கட்டி தம்மை பின் பற்றுவோரிடமிருந்து பணம் பறிக்கிறார்கள். அவர்கள் தம்மை பின் பற்றுவோரிடம் வங்கிகளில் கடன் வாங்கி, மிகப்பெறும் ஆலயம் கட்ட காணிக்கை கொடுக்கும்படிக் கூறுகிறார்கள். அவர்கள் சபையோரின் உணர்வுகளை தூண்டிவிட்டு காணிக்கைப் பாத்திரங்களை சபையோருக்குள் சுழல விடுகிறார்கள். பணம், மோதிரம், தங்க கைக்கடிகாரங்கள் அப்பாத்திரங்களை நொடிப்பொழுதில் நிரப்புகின்றன. வேதப்புரட்டர்கள் இந்த விதமாக காரியமாற்றுகிறார்கள். இது எல்லா வேதப்புரட்டர்களின் ஆலயங்களுக்கும் பொருந்தும்.

வெளியில் அவர்கள் ஆவிக்குரிய காரியங்களில் சிறத்தையாக இருப்பதாகத் தெரியும். ஆனால் உண்மையில் அவர்கள் நாடுவது பணம் ஒன்றேயாகும். நான் உங்களை பணத்தை மட்டுமே நாடும் ஆலயங்களில் இருந்து தூரமாக இருக்கும்படி ஆலோசனைக் கூறுகிறேன். தயவுசெய்து பணக்காரர்களை மட்டும் மனமுவந்து வரவேற்கும் ஆலயங்களுக்குச் செல்லாதீர்கள். ஒவ்வொரு ஆராதனையிலும் சேர்ந்த காணிக்கைய சபையாரிடம் அறிவிப்பது தவறு. இது அவர்கள் இன்னும் பணம் வேண்டும் என்று விரும்புவதைக் குறிக்கிறது.

வேதப்புரட்டர்கள் இச்சகமான வார்த்தைகளை தம்மைப் பின்பற்றுவோரிடம் கூறுகிறார்கள்.

இயேசுவை விசுவாசித்தால் நிச்சயமாக நீ ஆசீர்வதிக்கப்படுவாய்.”

கர்த்தரின் வேலைகளுக்காக உன்னை அர்ப்பணம் செய். எவ்வளவு அதிகம் வேலை செய்கிறாயோ அத்தனையாய் நீ ஆசீர்வதிக்கப் பட்டவனாய் இருப்பாய்.”

நீ ஒரு மூப்பராய் பணியாற்றினால், உனக்கு செல்வம் திறளாகும்

இதனால் மூப்பராகும் பொருட்டு, ஒருவக்கொருவர் பொறாமையுடன் முயல்வார்கள். எந்த பயனும் இல்லை என்றால் எதற்காக மூப்பராக பணியாற்றவேண்டும்? மூப்பர்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டுமென்றும் எதிர்ப் பார்க்கப் படுகிறார்கள்.

அவர்கள் சார்ந்திருக்கும் பிரிவின் தத்துவங்கள் என்ன கூறுகின்றன என்று ஆழமாக விசுவாசிப்பதால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? இல்லை. அவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்கள்? அவர்கள் எவ்வளவு காசு ஆலயத்திற்குச் செலவு செய்வார்கள்? என்பதைக் கருத்தில் கொண்டே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இது உண்மை.

வேதப்புரட்டர்கள் பணத்தில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். அவர்கள் பெரிய ஆலயங்களைக் கட்டுவதில் விருப்பமுள்ளவர்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் தம்மை பின்பற்றுவோர் கொடுக்கும் பணம். அவர்கள் நரகத்திற்கு போவது குறித்து வேதப்புரட்டர்கள் கவலைப் படுவதில்லை.

வேதப்புரட்டர்கள் அப்பத்திற்காக வேலைச் செய்பவர்கள். அவர்கள் கற்பனையான பெயர்கள் மூலம் மக்களைத் தம் வலையில் விழச் செய்கிறார்கள். தம்மைப் பின்பற்றுவோருக்கு அப்படியும் இப்படியுமாக பட்டங்களை அளிக்கிறார்கள். (எசேக்கியேல் 13:17-19) இது அவர்களை ஆலயத்தில் பிணைத்து அதன் செல்வத்தை பெருக்குவதற்காகும். வேதப்புரட்டர்கள் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் குறித்துப் போதிப்பதில்லை. அவர்கள் தம்மை செல்வந்தராக்க முயல்கிறார்கள்.

யாரேனும் ஒருவர் வெறும் சில மாதங்களுக்கு மட்டும் அவர்கள் ஆலயத்திற்குச் சென்றால் அது போதும், டீக்கன் ஆகிவிடலாம். மேலும் அவருக்கு மதச் சம்பந்தமான காரியங்கள் நன்கு பரிச்சயமாக இருந்து நல்ல பணமும் இருந்தால் அவர் மூப்பராகிவிடுவார். இதுவெல்லாம் வெட்கத்திற்குரிய யெரோபெயாமின் பாவ வழியாகும். அவன் கர்த்தரை பொன் கன்றுகுட்டியால் அப்புறப்படுத்தினான்.

வேதப்புரட்டர்கள் பொற்கன்றுக்குட்டிகளை ஆராதிக்கிறார்கள். அவர்கள் தம்முடைய மக்கள் மறுபடியும் பிறக்க உதவுவதில்லை. உலகின் ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தருவதாக இச்சகமாகப் பேசி தம்மைப் பின்பற்றுவோரிடம் பணம் வாங்குகிறார்கள். அவர்கள் ஆலயம் நல்ல செல்வத்துடன் இருக்கவேண்டும், தம்மைப் பின்பற்றுவோர் நரக ஆக்கினைக்கு உள்ளாவதைக் குறித்து அவர்களுக்கு கவலை கிடையாது.

 

 

வேதப்புரட்டர்களின் நிலைப்பாடு அவர்கள் பிரசங்கங்களில் குறைவு

 

வேதப்புரட்டர்கள் தாம் கூறுவதில் அதிக நம்பிக்கையில்லாததால் “ஒருவேளை இருக்கலாம் அல்லது “அப்படி இருக்கலாம் என்ற வார்த்தகளை அடிக்கடி உபயோகப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு வேதவாக்கினில் நம்பிக்கை இல்லை. மேலும் பிரசங்கம் செய்வதை உண்மையில் அவர்கள் விரும்புவது கிடையாது. அவர்களுடைய நம்பிக்கை முறைகள் வேதவாக்கினுள் உள்ள நம்பிக்கையில் அடங்குவதில்லை. “இதனை இப்படிச் சொல்லியிருக்கலாம்....” அவர்கள் எப்போதும் தெளிவாகவும், நிலைப்பாட்டுடனும் பேசுவதில்லை. அவர்கள் பொய்களை தம்மை பின்பற்றுவோருக்கு கற்றுக் கொடுப்பதைவிட, அவர்கள் பிரசங்கம் செய்யாமலிருப்பது நல்லது.

வேதப்புரட்டர்களால் மக்களை நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கச் செய்ய வழி நடத்தமுடியாது. அவர்கள் நரகம் செல்லும் மக்களை அதிகமாக்குகிறார்கள்.

 

 

வேதப்புரட்டர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளின் பணியைச் செய்கிறார்கள்

 

 • ஆவியானவரை எது களங்கம் பண்ணுகிறது?
  • இயேசுவை விசுவாசிக்கும் அதே நேரம் பாவியாக ஜீவிப்பதும் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமையும்.
 •    

மத்தேயு 7ஆம் அதிகாரம் நமக்கு இயேசுவை விசுவாசித்தாலும் நரகத்திற்கு போகிறவர்களைப் பற்றி கூறுகிறது. வேதப்புரட்டர்கள் கடைசி நாளில் கர்த்தருக்கு எதிராக போரட்டம் செய்வார்கள். வேதாகமத்தில் இப்படி எழுதப்பட்டுள்ளது. “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உனது நாமத்தினாலே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோமல்லவா? என்பார்கள். அப்பொழுதும், நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு 7:22-23)

அவர்கள் மனிதனின் பாவங்கள் யாவற்றையும் இயேசு கழுவிவிட்டதை நம்புவதில்லை; அவர்கள் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் கூட விசுவாசிப்பதில்லை.

அவர்கள் சட்டமில்லாத் தத்துவத்தை கடைப்பிடிக்கிறார்கள். இதன் பொருள் என்ன? இதன் பொருள், அவர்கள் மக்களிடம் இருதயத்தில் பாவமிருந்தால் பரவாயில்லை, இயேசுவை விசுவாசி என்று கூறுகிறார்கள். நீங்கள் இதில் என்ன தவறு இருக்கிறது என்று ஆச்சரியப்படலாம் ஆனால் அது கர்த்தருக்கு எதிரான கடுமையான குற்றமாகும்.

ஒரு பாவி மற்ற மக்களிடம் இயேசுவை நம்புவதன் முக்கியத்துவத்தைக் குறித்து பிரசங்கம் செய்தாலும், அவனால் அவர்களை மறுபடியும் பிறத்தலுக்குள் வழி நடத்த முடியாது, ஏனெனில் அவனே நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கவில்லை. ஆகவே, வேதப் புரட்டர்கள் இயேசுவை நம்பும் பாவிகளை உற்பத்திச் செய்கிறார்கள். கீழ்படியாமையைக் கடைப்பிடிப்பது ஆவியானவருக்கு எதிராகச் செய்யும் பாவமாகும்.

வேதப்புரட்டர்கள் தேவ வாக்கை நம்புவதுமில்லை, எழுதப் பட்டுள்ளபடி, நற்செய்தியை பிரசங்கிப்பதுமில்லை. அவர்கள் தம்மை பின்பற்றுவோரிடம் பணம் பிடுங்கிறார்கள். அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் பாவிகளே. அவர்கள் மற்றவர்களை வழி நடத்த முயல்கிறார்கள், அதேசமயம் அவர்களே மறுபடியும் பிறந்தவர்களில்லை. இவ்வாறு அவர்கள் கீழ்படியாமையைக் கடைப்பிடிக்கிறார்கள்.

 

 

வேதப்புரட்டர் நீதிமான்களின் போலிகள்

 

 • மறுபடியும் பிறந்தவர்களையும் மற்றவர்களையும் எப்படி இனம் பிரித்து உணர்வது?
 • அவர்களிடம் பாவமிருக்கிறதா, இல்லையா  என்று சோதனை செய்வதின் மூலம் இனம் பிரித்து உணரலாம்.

 

பாவிகள் என்று கூறும் தவறான போதகர்களினால் வஞ்சிக்கப் படாதிருங்கள். உங்கள் பணத்தை அவர்களிடம் கொடுக்காதீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை இப்பாவிகளிடம் கொடுக்கவேண்டாம்.

உங்கள் பாவங்களைக் குறித்து உங்களுக்கு உதவ முடியாத போதகர்களுக்கு நீங்கள் ஏன் பணம் கொடுக்கவேண்டும்? உங்கள் பணத்தை ஒரு ஆலயத்திற்கு கொடுக்க விரும்பினால் நற்செய்தியாகிய நீரினாலும், ஆவியினாலும் உங்கள் பாவங்கள் துடைக்கப்ப்டும் வரையாவது பொருத்திருங்கள்.

ஓவியக் கலையில் போலிகள் இருப்பதுபோல, வாழ்க்கையிலும் கூட போலிகள் இருக்கிறார்கள். உதாரனமாக அங்கே போலி மதங்கள் இருக்கின்றன. அவற்றால் உங்கள் இருதயத்திலுள்ள பாவங்களைக் கழுவமுடியாது. நீங்கள் எப்படி ஒரு போலி மதத்தை அறிவீர்கள்? போலியான ஒன்று வெளியில் சரியானது போலவும் உண்மையில் அது காணப்படுவதற்கு எதிராகவுமிருக்கும்.

நீங்களே முடிவு செய்யுங்கள் யார் உண்மையான பிரசங்கி? யார் வேதப்புரட்டர்கள்? எது முறையான நம்பிக்கை? முறைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவம் இயேசுவையும் அவரின் பாவம் போக்கும் வல்லமையும் குறித்து நம்புகிறது. அவர்கள் இருதயத்தில் பாவமிருப்பதில்லை. ஆனால் வேதப்புரட்டர்களின் இதயத்தில் பாவமிருக்கிறது.

எல்லா மக்களும் வேதப்புரட்டர்களா? அது அப்படியும் இருக்கலாம். நாம் வேதகமத்திற்கு திரும்பிச்செல்வோமாக. இயேசுவை விசுவாசிக்கும் ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் ஒரு வேதப்புரட்டன். மறுபடியும் பிறந்த ஒருவன் தான் முறையானவன். ஆகவே அந்த மறுபடியும் பிறக்காதவர்கள் வேதப்புரட்டர்கள். வேதப்புரட்டர்கள் இயேசுவை நம்பினாலும், அவர்கள் இருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறது.

வேதப்புரட்டர்கள் நீதிமான்கள் போல தோற்றமளிக்கும் போலிகள். அவர்களுக்கு பரிசுத்தமாகும் வழிகள் ஒருவேளைத் தெரியலாம். ஆனால் அவர்களின் இருதயங்களில் பாவம் இன்னுமிருக்கிறது. அவர்கள் தம்மைப் பாவிகள் என்று நம்புகிறார்கள். அவர்கள் தம்மால் பரலோகம் செல்ல முடியுமென்றும், கர்த்தரை ஆராதிப்பதாகவும் பறை சாற்றுகிறார்கள். அவர்கள் நீதிமான்களைப் போன்றே காட்சியளிக்கிறார்கள், நாம் இப்போலிகளை நம்பி மோசமடைய வேண்டாம்.

 

 

கர்த்தரின் நியாயத்தீர்ப்பு வேதப்புரட்டர்களுக்கு காத்திருக்கிறது

 

 • தெளிவான நற்செய்தி ஏன் மாறியது?
 • ஏனெனில் கள்ளப் போதகர்களும், வேதப்புரட்டர்களும், னிதர்களின் தவறான நம்பிக்கைகளை, தெளிவான நற்செய்தியில் கலப்படம் செய்ததாலாகும்.

 

“ஆகையால் சேனைகளின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: ஓகோ, நான் என் சத்துருக்களின் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிகட்டுவேன். நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய் புடமிட்டு, உன் ஈயத்தை எல்லாம் நீக்குவேன். உன் நியாயாதிபதிகளை முன் இருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுறம் என்றும் சத்திய நகரம் என்றும் பெயர் பெறுவாய். சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பி வருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப் படுவார்கள். துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொருங்குண்டு போவார்கள்: கர்த்தரைவிட்டு விலகுகிறவர்கள் நிர்மூலம் ஆவார்கள். நீங்கள் விரும்பின கர்வாலி மரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள். இலையுதிர்ந்த கர்வாலி மரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப்போலவும் இருப்பீர்கள். பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பார் இல்லாமல் ஏகமாய் வெந்துபோம் என்று சொல்லுகிறார்.” (ஏசாயா 1:24-31)

நாம் மனிதரை நம்புவோமானால், மனிதரின் நிமித்தம் நாம் வெட்கப்பட்டு போவோம் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் தெரிந்தெடுத்துக் கொண்ட ஆலயத்தின் நிமித்தம் நாம் வெட்கப் பட்டுபோவோம். இந்த அவமானமானது இலைகள் உதிர்ந்து போனதும் நீரில்லாத தோப்பைப்போலவும் இருக்கும்.

கர்த்தர் சொல்லுகிறார், போலி ஆசாரியர்களும் அவர்களைப் பின் பற்றுவோரும், வேதவாக்கினை விட்டு மனித கற்பனைகளில் நம்பிக்கைச் செலுத்துவதால், அவர்கள் சணலாகி அவர்கள் கிரியைகள் அக்கினிப்பொறியும் ஆகும். இரண்டும் நரகத்தில் எரியும். போலி ஆசாரியர்கள், பாவவிடுதலையடையாத வேதப்புரட்டர்கள், மற்றப் பாவிகள், நீதிமான்களின் எதிரிகள் ஆகியோர் கர்த்தரின் நெருப்பின் மூலம் நியாயம் தீர்க்கப்படுவார்கள்.

வெறும் இறையியலினால் கட்டப்பட்ட ஆலயம் வெளியில் மிகுந்த அலங்காரமாக இருக்கிறது. ஆனால் உள்ளே இருப்பதோ வெறுமை. எந்த ஆலயம் வேதவாக்கின்மீது நம்பிக்கையெனும் அஸ்திவாரத்தை இடவில்லையோ, எந்த ஆலயம் நற்செய்தியாகிய நீராலும், ஆவியாலும் மறுபடியும் பிறப்பதின் மூலம் அஸ்திவாரம் இடப்படவில்லையோ அது நீரில்லாத தோப்பினை ஒத்ததாகும்.

அது ஒரு மரமாக இருக்கலாம், ஆனால் அது கனி கொடுக்க இயலாத காய்ந்துபோன மரமாகும். ஒரு கினற்றில் தண்ணீர் வற்றிப் போய்விட்டால் அது கினறல்ல.

பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பார் இல்லாமல் ஏகமாய் வெந்துபோம் என்று சொல்லுகிறார்.” ஆவியில்லாத மனிதர்கள் மிகுந்த பலமுடையவர்களாக மற்றவர்களுக்கு காணப்படலாம். ஆனால் கர்த்தரின் கண்களுக்கு அவர்கள் சணற்கூளம், நரகத்தின் அக்கினிக்காக தயாரானவர்கள்.

கர்த்தர் கேட்கிறார் “ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது?” (ஏசாயா 21:11) நித்திய ஜீவனுள்ள நீதிமான்கள், இரவின் இருட்டில், நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும்.

கர்த்தர் பிரகாசமாக உள்ளார். சாத்தான் இருளாக உள்ளான். கர்த்தர் மக்களை நீதியின் பாதையில் நடத்துகிறார். சாத்தான் மனிதர்களை ஒழுங்கீனமானதும், கள்ளப்போதனைகளும் நிறைந்த ஆலயங்களுக்கு வழி நடத்துகிறான்.

இன்றையக் காலத்தில் விசுவாசம் எப்படி குழப்பமாக உள்ளதோ, அப்படியே தீர்க்கதரிசி ஏசாயாவின் காலத்திலும் இருந்தது. அவர்கள் வேதவாக்கினையும் மனிதர்களின் இறையியல் மற்றும் கற்பனைகளையும் நன்கு கலந்துவிட்டனர். அவர்கள் மனிதர்களின் ஒழுங்கீனமான காரியங்கள் மூலம் இஸ்ரவேல் மக்களை வழி நடத்தினர். இது எவ்வளவு மோசமானதாக இருந்ததென்றால் - கர்த்தர் அவர்களை முற்றிலும் கைவிட தீர்மானித்தார்.

உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும் உன் ஆலோசனைக் காரரை ஆதியில் இருந்ததுபோலவும் திரும்பக் கட்டளையிடுவேன்.” கர்த்தர் ஏற்றுக்கொள்ளாத காணிக்கை கலப்பட உலோகமாகும். அது கர்த்தரின் உண்மைகளினதும் மனிதரின் தத்துவங்களினதும் கலப்பு.

கர்த்தர் கலப்படமான காணிக்கைகளை விரும்புகிறதில்லை. அவைகள் மனித கண்களுக்கு செவ்வையாகத் தோன்றலாம். அவை மனிதரின் தவறான நம்பிக்கையின் கலவையும், அவை சுத்தமில்லாதவைகளினாலும் கலந்திருப்பதால் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

கர்த்தர் இஸ்ரவேலரைச் சத்தமிட்டு பேசியிருக்கிறார். அதில் முக்கியமாக வேதப்புரட்டர்கள், போலியாசாரியர்கள் மற்றும் பாவிகள் அடங்குவர்.

நாம் யாத்திராகமத்தையும் நாளாகமத்தையும் படித்தால் கர்த்தர் முதலில் கோபமாக பேசவில்லை என்று அறிவோம். கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு உதவினார்; அவர்களுக்கு தம்முடைய ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். ஆயினும் யோசுவாவின் மரணத்திற்குப் பிறகு, நியாயாதிபதிகளின் காலமுதல் இஸ்ரவேல் தொடர்ந்து படையெடுக்கப் பட்டது.

ஆயினும் அவர்கள் தம் சொந்தவழிகளில் செல்வதை தேர்ந்தெடுத்தனர். அவ்வேளையில் கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியை அனுப்பி இஸ்ரவேலை பாபிலோனிடம் சரணடையும்படி கூறினான்.

எரேமியா; மக்களை பாபிலோனிடம் சரணடையும்படிக் கூறினான். இதற்குள் ஆவிக்குரிய கருத்து இருக்கிறது. இது நீதிமான்கள், வேதப்புரட்டல்காரரைப் பின்பற்றுவோரிடம் நற்செய்தியாகிய நீரிடமும் ஆவியிடமும் சரணடையும்படி கூறுவதற்கு ஒத்ததாகும்.

 

 

கர்த்தர் வேதப்புரட்டர்களை கடிந்து கொள்கிறார்

 

 • கர்த்தர் ஏன் வேதப்புரட்டர்களை கடிந்துகொள்கிறார்?
 • ஏனெனில் அவர்கள் கர்த்தருக்குப் பதிலாக சிலைகளை வணங்குகிறார்கள்.


கர்த்தரின் ஊழியர்கள் இஸ்ரவேல் மக்களை திட்டியது ஏன்? அவர்கள் பலியிடும் முறையை மாற்றினார்கள். சாதரண மனிதர்களை ஆசாரியர்களாக நியமித்தனர், பலியிடும் தினங்களையும் அவர்கள் மாற்றினர்.

அவர்கள் பாவ விடுதலை நாளை ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலிருந்து, எட்டாம் மாதம் ஐந்தாம் தேதிக்கு மாற்றியதோடு லேவியரல்லாதவரையும் ஆசாரியர்களாக்கினர். இப்படியாக மறுபடியும் பிறத்தலிற்கான வழியில் அவர்கள் முட்டுக்கட்டைப் போட்டனர்.

கர்த்தர் கள்ளப்போதகர்களைத் திட்டினார். கர்த்தரை சேவிப்பதை விட்டுவிட்டு தங்கக் கன்றுக்குட்டிகளை அவர்கள் சேவிப்பதால் வேதப்புரட்டர்கள் ஆனார்கள்.

உண்மையில், அவர்கள் வெறும் சிலைகளை சேவிப்பதற்காக கர்த்தர் அவர்களைத் திட்டவில்லை. நீங்களும் நானும் சில சமயங்களில் சிலைகளை வணங்குவதில்லையா? நாம் அடிக்கடி பாவம் செய்கிறோம். நம்முடைய அக்கிரமங்கள் பெரும்பாவங்களாக கருதப்படுவதில்லை. ஏனெனில் நாம் கர்த்தரின் கிருபையினுள் இருக்கிறோம். ஆனால் பொற்கன்றுகளினால் கர்த்தரை இடமாற்றுவது மன்னிக்க முடியாத பாவமாகும். அதேபோல் பலியிடும் முறையை மாற்றுவதும் சாதாரண மனிதர்களை ஆசாரியர்களாக நியமிப்பதும் மன்னிக்கமுடியாத குற்றங்களாகும்.

இப்பாவங்கள் எத்தனைக் கொடியவை. இதுவே பாவங்களில் மிகக்கொடியதாகும். கர்த்தரை பொற்கன்றுகளினால் இடமாற்றம் செய்தவரை எப்படி மன்னிக்கமுடியும்? வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. யெரொபெயாமின் பாவம் கர்த்தரின் கோபாக்கினையை கொண்டுவந்தது.

கர்த்தர் பழைய ஏற்பாட்டில் தம் கோபத்தைக் காட்டியதுபோல், தம்மை எதிர்த்து நிற்பவரை அவர் அழித்துப்போடுகிறார். பொற்கன்று குட்டிகளை சேவிப்பதிலிருந்து அவர்கள் திரும்பாவிட்டால் சபிக்கப்போவதாக கர்த்தர் இஸ்ரவேலரிடம் கூறினார்.

 

 

வேதப்புரட்டர்கள் சட்டத்திற்கு புறம்பாக பலியிடுகிறார்கள்

 

 • கர்த்தரை சேவிப்பதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன?
 • நம்முடைய பாவங்கள் கழுவப் பெற வேண்டும்.

 

இஸ்ரவேலர்களின் அரசர்களும் வேதப்புரட்டல் செய்யும் ஆசாரியர்களும் கர்த்தருக்கு எதிராக பலியிடுமுறையை கருத்தில் கொள்ளாதவர்களை ஆசாரியர்களாக நியமித்தனர். யெரொபெயாம் ஒரு வளைந்து போன மனதுடையவன். அவன் லேவியின் குடும்பத்திலில்லாதவர்களை ஆசாரியர்களாக நியமித்தான்.

லேவியின் குடும்பத்தார் மட்டுமே ஆசாரியர்களாகவும், ஆசரிப்புக்கூடாரப் பணிகளில் ஈடுபடவும் முடியும். துல்லியமாக கூறுவதானால் ஆசாரியர்கள் லேவியின் குடும்பத்தினராக இருத்தல் வேண்டும். இது கர்த்தரின் நிரந்தரக்கட்டளை. ஆனால் யெரொபெயாம் லேவியின் குடும்பத்திலில்லாதவர்களை ஆசாரியர்களாக நியமனம் செய்து அவர்கள் பொற்காளைகளுக்குப் பலி செலுத்தும்படிச் செய்தான். இது கர்த்தரின் கோபாக்கினையை எப்படி பெற்று வந்தது என்பதை நாமறிய வேண்டும்.

இன்றும் கூட, மறுபடியும் பிறவாதவர்கள் ஆராதனை நடத்துபவராகவும், மூப்பர்களாகவும், டீக்கன்களாகவும் ஒரு ஆலயத்தில் நியமனம் பெறமுடியும். இது கர்த்தரின் கட்டளைக்கு எதிரானது. அது அவரின் கோபாக்கினையை வரவேற்கிறது. கர்த்தர் முறைமையில்லாத பலிகளினால் சந்தோஷமடைகிறாரா? வேதப்புரட்டர்கள் தம் பொற்காளைகளை உடைத்து, கர்த்தரிடம் திரும்பி, மறுபடியும் பிறத்தல் வேண்டும்.

ஏசாயா 1:10-17 கூறுகிறது. “சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்திற்கு செவி கொடுங்கள். உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனப்பலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாய் இருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிரகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? இனி வீண் காணிக்கைகளை கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாய் இருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும் ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும் உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாய் இருக்கிறது. அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு தீமை செய்தலைவிட்டு ஓயுங்கள்; நன்மை செய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். ”

இந்த வசனங்களை கவனமாகப் படித்தால் இஸ்ரவேலின் மதத்தலைவர்கள் தம்மை அர்பணித்துகொண்டுள்ளதைக் காணலாம். அவர்களுடைய அர்ப்பணத்தையும் மீறி, அவர்கள் அழிக்கப்பட்டனர். அதற்கு காரணம், அவர்களின் தவறான பலிகளும் கர்த்தரின் சட்டங்களுக்கு கீழ்படியாமையும் ஆகும்.

அவர்கள் பலியிட்டபோது கர்த்தரின் சட்டத்தையோ, கர்த்தரின் வார்த்தையையோ, கடைப்பிடிக்காததை நாம் காணலாம். இந்தத் தலைவர்கள், எந்த அளவு பக்திமான்கள் என்றால், அவர்கள் ஏராளமான பலிகளை கர்த்தருக்கு முன்பாகச் செய்தனர். வேதம் கூறுகிறது: ஆசரிப்புக்கூடாரத்தினுள் இரத்தம் ஆற்றைப்போல் பெருக்கெடுத்து ஓடியது.

ஆயினும் கர்த்தர் அவர்கள் செய்ததைக் கண்டபோது கொமோராவின் பாவங்களுக்கு அவை ஒத்ததாக இருப்பதாகக் கூறினார். அவர்கள் அவர் முன் பலியிடுவதைக் கண்டார். ஆயினும், அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்தனர். அவர் பலிகளை ஒரு போதும் கொண்டுவராவிட்டால் அது நலமாய் இருக்கும் என்று கூறினார். அவற்றைப் பெற்றுக்கொள்ள அவர் விரும்பவில்லை.

அவர்கள் பொன்கன்றுகுட்டிகளின் முன்பு பலியிடுவதனால் செய்த பாவத்தை கர்த்தரால் மன்னிக்கமுடியவில்லை. அவற்றை ஒருகாலும் பொருத்துக்கொள்ள அவரால் இயலவில்லை. அவர் நியமனப்படி பலிகள் செலுத்தப்பட வேண்டுமென்று அவர்களிடம் கூறினார். இல்லையென்றால் அவர்கள் ஒருபோதும் பலிகொடாமல் இருப்பது அவர்களுக்கு நலமாய் இருக்கும் என்றார்.

அவர்கள் கர்த்தருக்கு சரியான வழியில் பலியிடவில்லை, அதனால் ஆசாரியர்கள் கர்த்தருக்கெதிராக பாவம் செய்தார்கள். உங்களுடைய பாவங்கள் கழுவப்படாமல், கர்த்தரை சேவிப்பதும் அவருக்கு ஊழியம் செய்வதும், அவருக்கு முன்பாக செய்யப்படும் கொடிய பாவம் என்பதை நீங்கள் அறியவேண்டும்.

 

 

வேதப்புரட்டர்கள் பள்ளி ஆசிரியர்களைப் போன்றவர்கள்

 

 • வேதப்புரட்டர்கள் கற்பிப்பது என்ன?
 • இப்படி வாழவேண்டும் என்பதைக் கற்பிக்கிறார்கள், எப்படி மறுபடியும் பிறக்கவேண்டும் என்பதையல்ல.

 

வேதப்புரட்டர்கள் வெளியரங்கமாக பரிசுத்தமாக காட்சி அளிக்கிறார்கள். அவர்கள் ஆராதனைப் பீடத்தில் ஏறும்போது மிகவும் நல்லவர்களாக காணப்படுகிறார்கள், அதனால் நிறையபேர் வஞ்சிக்கப்படுகிறார்கள். அவர்கள் சரியாக இருப்பதுபோல் தோன்றுகிறார்கள். அவர்கள் தம் பிரசங்கத்தை முடிக்கும்போது மக்கள் நல்லவர்களாக இருக்க தாம் விரும்புவதாகக் கூறுகிறார்கள். இப்பிரசங்கம் எத்தகையது? இவர்களுடைய பிரசங்கங்களுக்கும், பள்ளி ஆசிரியர்களின் பாடங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

கர்த்தரின் ஆலயம் மறுபடியும் பிறந்தவர்கள் கர்த்தருக்கு ஆராதனைச் செய்யக் கூடும் இடமாகும். இதுபோன்ற ஆலயமே உண்மையான ஆலயமாகும். உண்மையான கர்த்தரின் ஆலயம், கர்த்தர் முன் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று போதிக்காது. உண்மை ஆலயத்தின் பிரசங்கி நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் குறித்துப் போதிக்கிறார். நீங்கள் எத்தகையப் பாவியாக இருந்தாலும், கர்த்தர் உங்கள் பாவங்களையெல்லாம் கழுவிவிட்டார்.

வேதப்புரட்டர்கள் தம்மை பின்பற்றுவோரிடம் கூறுகிறார்கள். “இதைச்செய், அதைச்செய் அவர்கள் மீது பெரும்பாரத்தைச் சுமத்துகிறார்கள். ஆனால் அவற்றை அசைக்கும் பொருட்டு தம் சுண்டுவிரலைக் கூட அவர்கள் அசைக்கவில்லை.

ஒரு வேதப்புரட்டு பிரசங்கி தனது பிள்ளைகளுக்கு விலையுயர்ந்த வயலினை வாங்கி கொடுப்பதோடு, வெளிநாடுகளுக்கு படிப்பதற்காக அனுப்புகிறார். இதனை ஒரு போதகர் எப்படிச் செய்யமுடியும்? அவருக்கு எங்கிருந்து இத்தனைப் பணம் வருகிறது? அவரிடம் அத்தனைப் பணமிருந்தால் அதனை நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக ஏன் செலவு செய்யக்கூடாது? ஒரு பிரசங்கி விலையுயர்ந்த காரை ஔட்டவேண்டுமா? அவர் மகிமையடையும் பொருட்டு ஒரு சொகுசுக்காரில் பயணிக்க வேண்டுமா? ஒரு விலையுயர்ந்த காரையோட்டும் பிரசங்கி ஒரு கள்ளன். தன்னை பின்பற்றுவோர் சாதாரண கார் ஒன்றை வாங்கமுடியாதபோது, ஒரு சொகுசுக்காரை அவர் வைத்திருப்பது எப்படிச்சரியாகும்? வேதப்புரட்டல் போதகர்களை அவர்களின் செயல்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.

வேதப்புரட்டு போதகர்கள் மிகவும் பெரியத் தொகையை சம்பளமாகக் கேட்கிறார்கள். சில ஆலயங்கள் தம் பிரசங்கிகளுக்கு 10,000 அமெரிக்க டாலர்களைச் சம்பளமாக கொடுக்கின்றன. இது கணக்கில் காட்டப்படும் தொகை. அவர்களுக்கு மற்றச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. கல்வித்தொகை, புத்தகத்தொகை, பிள்ளைகள் வளர்க்கும் தொகை, பயணத்தொகை என்பன அவற்றில் சில.

ஆயினும் அவர்களில் சிலர் தமக்குச் சரியான ஊதியம் கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனர். பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் சிறியத் தொகையா என்ன? ஒரு பிரசங்கி நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் பிரசங்கிப்பதால் வரும் சரியான ஊதியத்தினுள் வாழவேண்டும்.

உண்மையான ஊழியன் கர்த்தரிடமிருந்து ஆறுதலையும், சமாதானத்தையும் பெறுகிறான். வேதப்புரட்டல் பிரசங்கியிடம் சமாதானம் இல்லாததால் தம்மை பணத்தால் சமணம் செய்கிறார்கள். இத்தகைய பிரசங்கிகள் பொன் கன்றுக் குட்டிகளை ஆராதனைச் செய்கிறார்கள். கர்த்தரின் ஆலயம் சில சமயம் சீயோன் என்றழைக்கப்படுகிறது. சீயோனைப்போல் அழகான ஆலயம் எதுவுமில்லை. கர்த்தரின் ஆலயத்தில்தான் நீர் மற்றும் ஆவியைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.

ஏசாயா 1:21 கூறுகிறது. “உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது. நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைப்பாதகர்.” ஏசாயா கர்த்தரின் ஆலயத்தை விவரிக்கிறான். “அது நியாயத்தால் நிறைந்திருந்தது

கர்த்தர் நீதியும் நேர்மையும் மிக்கவர். நாம் முழுமையடையாதவர்களாக இருப்பதாலும், ஆதாமின் வம்சம் காரணமாக பாவியாகப் பிறந்தமையாலும் இயேசு நம் பாவங்களை நீரினாலும் ஆவியினாலும் கழுவும்பொருட்டு இவ்வுலகத்திற்கு வந்தார். இந்த அளவு அவர் நேர்மையானவர்.

பழைய ஏற்பாட்டு மக்கள் தம்மை குறையுள்ளவ்ர்கள் என்று கண்டபோது கர்த்தரிடம் வந்து பலி காணிக்கை செலுத்தினர். “நான் இந்தப்பிரகாரம் தவறு செய்தேன், நான் தவறிலிருக்கிறேன்.” அப்பொழுது அவர்களுக்கு தினத்திற்கான பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. பாவமன்னிப்பு தினத்தில் அவர்கள் வருடம் முழுவதும் செய்த பாவத்திற்கும் பாவ மன்னிப்பினை அவர்களால் பெற முடிந்தது.

அதேபோல புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்து, மக்களின் பாவங்களை எல்லாம் ஒரேயடியாகக் கழுவினார்.

புதுவருட ஆராதனையின்போது நிறையப்பேர் அழுது புலம்புகிறார்கள். “அன்புள்ள கர்த்தரே தயவுசெய்து கடந்த வருடம் நான் செய்த பாவங்களை மன்னியும். இப்புது வருடத்தில் என்னை ஆசீர்வதியும் இப்படிப்பட்டவர்கள் வேதப்புரட்டர்கள்.

அப்படியானால் நீராலும் ஆவியாலும் உலகின் பாவங்கள் அனைத்திலிருந்தும் இரட்சித்தார். ஆனால் நாம் தினமும் அவரிடம் பாவ மன்னிப்புகேட்டால் அவர் என்ன சொல்லுவார்?

உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது. நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைப்பாதகர்.” எவனொருவன் தன்னை பாவி என்கிறானோ அவன் ஒரு வேதப்புரட்டன்.

 

 

வேதப்புரட்டல் ஆசாரியர்கள் நற்செய்தியாகிய நீராலும் ஆவியாலும் மறுபடி பிறத்தலைக் குறித்து பிரசங்கிக்க முடியாது

 •  
 • கர்த்தர் பாவிகளின் ஜெபங்களைக் கேட்கிறாரா?
 • இல்லை. அவரால் பாவிகளின் ஜெபத்தைக் கேட்கமுடியாது, ஏனெனில் அவர்களுடைய பாவம் அவர்களை தேவனிடமிருந்து பிரிக்கிறது.

 

கர்த்தர் தம்மை விசுவாசிப்பவர்கள் பாவமன்னிப்புக் கேட்கும்போது அவர்களை கொலைப்பாதகர் என்கிறார். அவர்கள் பாவமன்னிப்பு கேட்பதாலும் தம்மை பாவிகள் என்று கூறுவதாலும், இயேசு இவ்வுலகிற்கு திரும்பி வந்து அவர்கள் பாவத்திற்காக இரண்டாம் முறை சாகவேண்டும் என்கிறார்களா? ஞானஸ்நானமும், இயேசுவின் சிலுவையும், இரட்சிப்பின் எதார்த்தம் ஆகும்.

1 பேதுரு 3:21 இல், இயேசுவின் ஞானஸ்நானம் இரட்சிப்பைக் குறிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுகிறிஸ்து மனிதகுலத்தை பாவங்களிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு ஒருமுறை இறந்தார். அவர் மனிதகுலத்தின் பாவங்களை நிரந்தரமாக கழுவி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்தார். அவர் இப்போது கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

நம்மை நிரந்தரமாக பாவங்களிலிருந்து, இரட்சிக்கும்பொருட்டு இயேசு ஒரு முறை ஞானஸ்நானம் பெற்று ஒருமுறை மரித்தார். அவர் 30வயதாகும்போது யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டார். அவர் உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சிக்குபடி ஒருமுறை மரித்தார். இதற்கு நியாயத்தீர்ப்பு எல்லாக் காலங்களுக்கும் வழங்கப்பட்டது என்று அர்த்தமில்லையா?

வேதப்புரட்டர்கள் தம்மை இன்னும் பாவிகள் என்றால் அவரை இரண்டாம் முறை கீழே வரும்படியும் சிலுவையில் அறையும்படியும் கூறுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் பாவ மன்னிப்பு கேட்கும்போதும் இயேசு அப்படிச் செய்யவேண்டும்.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இதயபூர்வமாக யார் நம்புகிறார்களோ அவர்கள் பாவங்களிலிருந்து நிரந்தரமாக இரட்சிக்கப்படுவர், நீதிமான்களாவர். கர்த்தரின் ஆசீர்வாதமும் நித்திய ஜீவனும் பெறும்பொருட்டு பரலோகம் செல்வர். யாரெல்லாம் நீதிமான்களைச் சந்திக்கிறார்களோ, அவர்கள் நீராலும் ஆவியாலும் இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளைகள் ஆகிறார்கள். யாரெல்லாம் கர்த்தர் முன்பாக நீதியின் இரட்சிப்பை கேட்கிறார்களோ அவர்கள் இரட்சிக்கபடுவர்.

ஏசாயா 1:18-20 ஐ வாசிப்போம் “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உஙகள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாய் இருந்தாலும் பஞ்சைப் போலாகும். நீங்கள் மனம்பொருந்தி செவி கொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களாகில் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று”

கர்த்தர் நம்மிடம் சொல்கிறார்; நாம் நீர் மற்றும் ஆவியைக்குறித்த நற்செய்திக்கு கீழ்படிவுள்ளவர்களாக இருந்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்போம்: நாம் அதை மறுத்து, எதிர்த்து நின்றால் பட்டயத்திற்கு இரையாவோம்.

நம் கர்த்தர் கூறினார். வழக்காடுவோம் வாருங்கள். நாம் பேசுவோமாக. நீ குறைபாடு உடையவனா? நீ நீதிமான் இல்லையா? நீ உன்னை மிகவும் நேசிக்கிறாயா? கட்டளைகளின்படி உன்னால் வாழமுடியாதா? சட்டம் கூறியபடி உன்னால் செய்யமுடியாதா? உனக்குத்தெரியும் ஆனால் கடைபிடிக்கவில்லை. அப்படியானால் என்னிடம் வா “உஙகள் பாவங்கள் சிலவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாய் இருந்தாலும் பஞ்சைப் போலாகும்.” இதன்பொருள் யாதெனில் கர்த்தர் பாவிகளை நீதியாக இரட்சித்து, அவர்களை நீதிமான்களாக்கினார்.

ஆதாமையும் ஏவாளையும், கர்த்தர் உருவாக்கியபோது அங்கே பாவம் இருக்கவில்லை. சீக்கிரமாக சாத்தான் காட்சிக்கு வந்தான். அவன் கர்த்தருக்கு கீழ்படியாமல் இருக்கும்பொருட்டு அவர்களை இச்சைப்படுத்தி உலகின் எல்லா மனிதர்களையும் பாவியாக்கும்பொருட்டு ஆதாமையும், ஏவாளையும் பாவிகளாக்கினான். ஏதேன் தோட்டத்தில் அவர்கள் கர்த்தருடன் வாழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் பாவிகளானார்கள். ஆகவே, இப்போது கர்த்தர் நம்மை அழைக்கிறார் வழக்காடுவோம் வாருங்கள். வழக்காடுவோம்! இவ்வுலகில் நீ இத்தனைப் பாவங்களைச் செய்தாய்? நீ மரிக்கும் முன்பாக எத்தனைப் பாவங்களைச் செய்வாய்?

“ஓ கர்த்தரே! பாவம் செய்யாதிருப்பது மிகவும் கடினம். எவ்வளவு கடினமுயற்சிகள் செய்தாலும் நாம் பரிசுத்தமடைவதில்லை”

“சரி, இதுவரை எவ்வளவு பாவங்கள் செய்துள்ளாய்?”

“நல்லது கர்த்தரே, என்னால் எல்லாவற்றையும் நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. ஆனால் சில பாவங்கள் மனதில் ஒட்டிகொண்டுள்ளன. நீங்கள் அந்நேரத்தை நினைக்கமுடிகிறதா? நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா...? அங்கே அந்த வேளையில் , உஙகளுக்குத் தெரியுமா? ”

அப்பொழுது கர்த்தர் கூறுகிறார், “மேலும் தொடர்ந்துச் சொல். அவ்வளவுதான் என்று எண்ணுகிறாயா? அதற்குப் பின்னால் எவ்வளவு இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா? ஆயினும், நீ நினைவு கூறும் எல்லா பாவங்களும், நீ மறந்துபோன பாவங்களும் வருங்காலத்தில் நீ செய்யப்போகும் எல்லாப் பாவங்களும் என்னால் முழுமையாகவும் நிரந்தரமாகவும் கழுவப்பட்டுவிட்டன. உன்னுடையது மட்டுமல்ல, உன் பிள்ளைகளின் பாவங்கள், அவர்கள் பிள்ளைகளின் பாவங்கள், உன் வம்சத்தாருடைய அனைத்துப் பாவங்களையும் கூட கழுவிப்போட்டேன். நானே நீதியின் கர்த்தர். உன் பாவங்களையெல்லாம் ஒரே சமயத்தில் கழுவிவிட்டேன். ”

ஆதாமின் பாவமுதல் இவ்வுலகின் கடைசி மனிதன் வரை மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவிய கர்த்தர் அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறார். அவரே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறார்.

“நானே இரட்சகரும் மகிமையுமுள்ள தேவன்.”

“நானே யெகோவா, இரக்கம் நிறைந்தக் கர்த்தர்.”

“இரக்கம் தேவைப் படுகிறவர்களுக்கு நான் இரங்குகிறேன். யாரிற்கு அரவனைப்புத் தேவைப் படுகிறதோ அவர்களை அரவனைப்பேன்.”

நாம் அவரிடம் ஒளிவு மறைவில்லாது அவரின் இரக்கத்தைக் கேட்டால், நாம் அவரின் அரவனைப்பை பெறமுடியும். நம் தந்தை நம்மனைவரையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். அவரின் அன்பினாலும், அரவனைப்பினாலும் நம்மை நீதியின் பிள்ளைகளாக்க அவர் விழைகிறார்.

 

 • நாம் மறுபடியும் பிறந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்?
 • உலக முழுவதும் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.

 

நாம் பனியைப் போல் வெண்மையாக இருக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். இயேசு தமது ஞானஸ்நானத்தினாலும், குருதியினாலும் உலகின் பாவங்களையெல்லாம் நிரந்தரமாக கழுவிவிட்டார். ஒரு ஆலயத்தினால் அதன் விசுவாசிகளின் பாவப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலவில்லை என்றால் அதனை உண்மையான கர்த்தருடைய ஆலயம் என்றழைக்க முடியாது.

மக்கள் ஆசாரியர்களிடம் வந்து கேட்கிறார்கள். “என்னிடம் பாவம் இருக்கிறது, நிறைய முறை மனம் வருந்தினேன். ஆயினும் என்னுடைய பாவங்கள் என்னைவிட்டுப் போகவில்லை. இதற்குமேல் என்னால் பொறுக்கமுடியாது. என்னால் இப்படிப்பட்ட மதவாழ்க்கையை வாழ முடியும் என்று தோன்றவில்லை.” ஒரு ஆசாரியரால் இத்தகைய ஒருவரின் பிரச்சனைகளுக்கு சரியாக பதிலளிக்க முடியவில்லை என்றால் அவர் ஒரு வேதப்புரட்டர். அவர் இப்படிச் சொல்லலாம். “அது உன்னிடம் உள்ளது. மலைகளில் போய் ஜெபம் செய். 40 நாட்கள் உபவாசம் இருந்து பார்.”

வேதப்புரட்டர்களோ அல்லது மதத்தலைவர்களோ அவர்களிடம் சுத்தமற்றவை நிறைய இருக்கின்றன. அவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக்குறித்து எதுவும் தெரியாது. அவர்களுக்கு தம் ஆத்துமா நரகத்திற்குச் செல்லுமா இல்லை பரலோகம் செல்லுமா என்றும் தெரியாது.

கர்த்தர் முன்பாக இத்தலைவர்கள் சரியானவர்கள் இல்லை. அவர்கள் போலிக்கிறிஸ்த்தவர்களும் வேதப்புரட்டர்களுமாக இருக்கிறார்கள். வெளியரங்கமாக அவர்கள் இயேசுவை விசுவாசிப்பதுப்போல் காணப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இதயமோ பாவத்தினால் நிறைந்திருக்கிறது. அவர்களுடைய பாவங்கள் கழுவப்படவில்லை. அவர்களால் பாவங்களைக் கழுவும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிக்க முடியாது. அவர்களால் நாம் வஞ்சிக்கப் படாதிருப்போமாக.

தீத்து 3:10-11 வேதப்புரட்டர்களைக் குறித்து இவ்வாறு கூறுகிறது. “வேதப்புரட்டனாய் இருக்கிற ஒருவனுக்கு இரண்டொருதரம் புத்தி சொன்ன பின்பு அவனை விட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலை தவறி தன்னிலேதானே ஆக்கினைத் தீர்ப்புடையவனாய் பாவம் செய்கிறவன் என்று அறிந்திருக்கிறாயே.” அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் மறுபடியும் பிறவாதவர்கள். அவர்கள் தம்மைப் பாவிகள் என்று ஆக்கினைக்கு உட்படுத்துகிறார்கள். அவர்கள் தாம் பாவிகள் நரகத்திற்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் அசட்டை செய்து காலால் மிதித்து தள்ளிவிடுகிறார்கள்.

அவர்கள் கிறிஸ்தவத்திலுள்ள வேதப்புரட்டர்கள். யாரொருவன் இயேசுவை விசுவாசித்து இன்னும் பாவமுடையவனாக இருக்கிறானோ அவன் ஒரு வேதப்புரட்டன். வேதப்புரட்டர்கள் கர்த்தரிடம் இருந்து வேறுபடுகிறார்கள். கர்த்தர் பரிசுத்தர். ஆனால் வேதப்புரட்டர்கள் சுத்தமானவர்கள் இல்லை. யார் நீரையும் ஆவியையும் குறித்த நற்செய்தியை நம்புகிறார்களோ அவர்களின் பாவங்கள் சுத்திகரிக்கப் பட்டது. ஆகவே, யாரெல்லாம் இயேசுவை நம்பினாலும் அவர்கள் தொடர்து பாவியாகவே இருந்தால், அவர்கள் வேதப்புரட்டர்கள். நாம் கர்த்தரை விசுவாசிக்கிறோம், ஆயினும் நாம் பாவிகள் என்பவர்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கவேண்டும்.

நற்செய்தியைப் பற்றி கேள்விப்படாதவர்க்கு போதனை செய்வோமாக. யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசிக்க விரும்பினாலும் அதனைக் குறித்து அறியாததால் அப்படிச்செய்ய இயலாதிருக்கிறார்களோ அவர்கள் மறுபடியும் பிறக்க உதவுவோமாக. நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் வழிமறிப்போரை எதிர்த்து போராடுவோமாக. உலகெங்கிலும் நற்செய்தியாகிய நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறத்தலைக் குறித்து பிரசங்கிப்போமாக. ஆமேன்! *