பாவம்

ஆயர் பால் சி. ஜோங்


【1-1】< மாற்கு 7:8-9, 7:20-23 > விடுதலைப் பெறவேண்டிய பாவங்களைக் குறித்து முதலில் நாம் அறிந்து கொள்ளவேண்டும


 

< மாற்கு 7:8-9 >

நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டுமனுஷருடைய பாரம்பரியத்தைக் கைகொண்டு வருகிறவர்களாய்கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார். பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது.

 

< மாற்கு 7:20-23 >

மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில்மனுஷருடைய இருதயத்திற்குள்ளிலிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும்வேசித்தனங்களும்கொலைப்பாதகங்களும்களவுகளும்பொருளாசைகளும்துஷ்டத்தனங்களும்கபடும்காமவிகாரமும்வன்கண்ணும்தூஷனமும்பெருமையும்மதிகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

 

முதலில், பாவம் என்பது என்ன என்று வரையறுக்க விரும்புகிறேன். இங்கே கர்த்தரால் வரையறுக்கப்பட்டுள்ள பாவங்களும், மனிதகுலத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள பாவங்களும் உள்ளன. கிரேக்க மொழியில் பாவம் என்பது ஹமார்சியாஎன்று அழைக்கப்படுகிறது அது, ‘இலக்கைத் தவறவிடு என்று பொருள்படுகிறது. கர்த்தரின் கட்டளைகளை நாம் பின்பற்றவில்லை என்றால் அது பாவம். மனிதர்களினால் வரையறுக்கப்பட்டுள்ள பாவங்களை முதலில் பார்ப்போம்.

 

 • பாவம் என்பது என்ன?
 • கர்த்தரின் கட்டளைகளை பின்பற்றாமையே.


         நம்முடைய மனசாட்சிக்கேற்ப பாவத்தை அளக்கிறோம். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அது கர்த்தரின் கட்டளைகளுக்கு எதிரானதல்ல, ஆனால் அது ஒருவரின் சூழலைப் பொருத்தும், இருதயம் மற்றும் மனசாட்சியைப் பொருத்தும் தீர்க்கப்படுகிறது,

அது ஒவ்வொருவராலும் தீர்க்கப்படுகின்றது. ஆகவே, ஒவ்வொருவரின் சொந்த அளவுகோலைப் பொறுத்து ஒரே செய்கையானது பாவமானதாகவோ, அப்படி இல்லாததாகவோ கருதப்படுகின்றது. அதனாலேயே கர்த்தர் 613 சட்டங்களை தீர்ப்பிற்காக கொடுத்துள்ளார்.

கீழ்க்கண்ட படம் மனிதர்களின் பாவங்களைக் குறிக்கிறது.


 • கர்த்தரின் சட்டம்.
 • மனிதனின் மனசாட்சி, நல்லொழுக்கம், சமுதாய வரைமுறைகள்
 • நாட்டின் சட்டங்கள், சிவில் சட்டங்கள்.

      

ஆகவே, நம் மனசாட்சியை ஒட்டி எப்பொழுதும் அளக்கக்கூடாது.

      கர்த்தர் பாவம் என்று வரையறுத்ததுடன், நம் மனசாட்சி பாவம் என்று கூறுவது பொருந்தாது. ஆகவே, நாம் நம் மனசாட்சியைக் கேட்பதற்கு பதிலாக, கர்த்தரின் கட்டளைகளின் அடிப்படையில் நம் செயல்களை அமைக்கவேண்டும்.

பாவம் என்பது என்ன என்பதைக் குறித்து நம் ஒவ்வொருவருக்கும் சொந்தக் கருத்துக்கள் உள்ளன.  சிலர் இதனை குறைபாடு என்றும், சிலர் அதனை வளைந்துபோன குணம் என்றும் கருதுகிறார்கள்.

உதாரணமாக, கொரியாவில், மக்கள் தம் பெற்றோர்களின் கல்லறைமீது புற்களை நட்டு அவற்றை தாம் சாகும்வரை துப்புறவாக வெட்டி அழகுபடுத்துவது கடமை என்று எண்ணுகிறார்கள். அதே வேளை, பாபுவா நியூ கினியாவிலுள்ள ஆதிவாசிகள் தம் பெற்றோரின் மாமிசத்தை தம் உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதன் மூலம் மரியாதை செய்கிறார்கள். (அதனை உண்பதற்கு முன்பு சமைப்பார்களா இல்லையா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது). புழுக்களால் உடம்பு சாப்பிடப்படுவதை தவிர்க்க அவர்கள் இப்படிச் செய்வதாகத் தெரிகிறது. இந்த காரியங்கள் மனிதர்களின் பாவங்களைக் குறித்த கோட்பாடுகள் எத்தனை வித்தியாசப்படும் என்பதைக் காட்டுகிறது.

ஆகவே அது, எது நல்லது மற்றும் எது பாவம் என்பனவற்றைக் குறித்ததாகும். ஆயினும், அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படியாதது பாவம் என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டு வருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார். பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது (மாற்கு 7:8-9). நம்முடைய வெளித்தோற்றத்தைக் குறித்து கர்த்தர் எண்ணுவதில்லை. அவர் நம் இருதயங்களின் உள்ளே நோக்குகிறார்.

 


ஒருவனின் சொந்த வரைமுறைகள் கர்த்தரின் முன்பு பாவமுமாகும்


 1. மிகவும் அபாயகரமான பாவம் என்ன?
 2. அது கர்த்தரின் வார்த்தைகளை அலட்சியப்படுத்துவதாகும்.

கர்த்தரின் முன்பு எது பாவம் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அது அவருடையச் சித்தத்தின்படி வாழ்வதிலிருந்து தவறுவதாகும். அது அவருடைய வார்த்தையை விசுவாசிக்காததாகும். கர்த்தரின் கட்டளைகளை உதறித்தள்ளிவிட்டு அவர்களின் பாரம்பரிய போதனைகளைக் கைக்கொள்ளும் பரிசேயரைப் போல் வாழ்வது பாவம் என்று கர்த்தர் கூறினார். இயேசு பரிசேயரை கபடமாக நடிப்பவர்கள் என்று கருதுகிறார்.

எந்தக் கர்த்தரை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் என்னை மதித்து மரியாதைச் செலுத்துகிறீர்களா? நீங்கள் என் பெயரைக் குறித்து பெருமைப் பாராட்டினாலும் என்னை உண்மையாகவே மதிக்கிறீர்களா?” மக்கள் வெளித்தோற்றத்தை மட்டுமே நோக்கி அவரின் வார்த்தைகளை அலட்சியப் படுத்துகிறார்கள். அது அவருக்கு முன் பாவமாகும். மிகவும் அபாயகரமான பாவம் அவரின் வார்த்தைகளை அலட்சியப் படுத்துவதே. இதனைக் குறித்து அறிந்திருக்கிறீர்களா? அது பாவங்களிலெல்லாம் மிகப்பெரிய பாவமாகும்.

    நம்முடைய பலவீனம் தவறானதும், வெறும் மீறுதல்களுமாகும். நாம் செய்யும் தவறுகள், நம் குறைபாடுகளுள்ளவர்களானதாலே நாம் செய்யும் தவறுகள் ஆகியவை அடிப்படை பாவங்கள் அல்ல, அவை தவறுகள் ஆகும். கர்த்தர் பாவங்களைத் தவறுகளிலிருந்து வேறு படுத்துகிறார். அவர்கள் தவறில்லாதவர்களாயிருந்தாலும் அவருடைய வார்த்தைகளை அலட்சியப்படுத்துவதால் அவர்களும் பாவிகளே. அவர்கள் கர்த்தரின் முன்பு கொடும்பாவிகள். அதனாலேயே இயேசு பரிசேயரை கடிந்துகொண்டார்.

ஆதியாகமம் முதல் உபாகமம் வரையிலான பெந்தியோக்கில் எதனைச் செய்யலாம் எதனைச் செய்யக்கூடாது என்ற கட்டளைகள் உள்ளன.  இக்கட்டளைகள், கர்த்தரின் வார்த்தைகளாகும். அவற்றை நம்மால் 100% கடைபிடிக்க முடிந்தவர்களாகவோ, அவற்றை முற்றிலுமாக கடைபிடிக்க முடியாதவர்களாகவோ இருந்தாலும், அவற்றை கர்த்தரின் கட்டளைகள் என்று அங்கீகரிக்க வேண்டும். தொடக்கக் காலமுதல் அவற்றை அவர் நமக்கு கொடுத்துள்ளார், அவற்றை அப்படியே நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஆதியிலேயே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.பிறகு அவர் கூறினார், “வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.அவர் அனைத்தையும் படைத்தார். அவர் சட்டத்தை நிலை நிறுத்தினார்.

அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார். அந்த வார்த்தை தேவனாயிருந்தது (யோவான் 1: 1,14 ). அப்படியானால் கர்த்தர் தம்மை எப்படி நமக்கு காண்பித்தார்? கர்த்தரே வார்த்தையாகையால் அவர் தம் கட்டளைகள் மூலம் தம்மை நமக்கு காண்பித்தார். கர்த்தரே ஆவியானவர். வேதாகமத்தை நாமெப்படி அழைக்கிறோம்?  அதனை கர்த்தரின் வார்த்தைகள் என்று அழைக்கிறோம்.

நீங்கள் தேவனுடையக் கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக் கொண்டு வருகிறவர்களாய் என்று இங்கு கூறப்பட்டுள்ளது. அவரின் சட்டத்தில் 613 பிரிவுகள் உள்ளன. இதனைச் செய் ஆனால் அதனைச் செய்யாதே, உன் பெற்றோரை கணம் செய்... லேவியராகமத்தில் பெண்கள் இப்படிச் செய்யவேண்டும், ஆண்கள் இப்படிச் செய்யவேண்டும் மேலும் ஒரு வீட்டு மிருகம் ஒரு குழியில் விழுந்தால் என்ன செய்யவேண்டும் . . . அவருடைய சட்டத்தில் இத்தகைய 613 பிரிவுகள் உள்ளன.

ஆனால் அவை மனிதர்களின் வார்த்தைகள் இல்லாததினாலே அவற்றைக் குறித்து மீண்டும் மீண்டும் எண்ணவேண்டும். நாம் கர்த்தரிற்கு கீழ்ப்படிய வேண்டும். அவருடைய அனைத்துக் கட்டளைகளையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கர்த்தரின் வார்த்தைகளில் யாதொன்றும் சரியானதில்லையா? பரிசேயர் கர்த்தரின் கட்டளைகளை புறம்பேத் தள்ளிவிட்டனர். அவருடைய கட்டளைகளுக்கும் மேலாக மனுஷர்களின் பாரம்பரியத்தை அவர்கள் கடைபிடித்தனர். அவர்களின் மூப்பர்களின் வார்த்தைகள் கர்த்தரின் வார்த்தைகளுக்கும் மேலானதாக கருதப்பட்டது. இயேசு பிறந்தபோது அப்படித்தானிருந்தது. மக்கள் கர்த்தரின் வார்த்தைகளை அங்கீகரிக்காததை இயேசு அறவே விரும்பவில்லை.

அவர் உண்மையானவர், அவர் நம் கர்த்தர், அவருக்கு முன்பு நம் பாவங்கள் என்ன என்றும் அவருடைய பரிசுத்தத்தை நமக்கு காண்பித்து இவற்றையெல்லாம் போதிக்கவும் கர்த்தர் 613 சட்டப் பிரிவுகளை நமக்களித்தார். ஆகவே, நாமெல்லாரும் அவருக்கு முன்பு பாவிகளாயிருப்பதாலே, அவருடைய பெரிதான அன்பினாலே கர்த்தரால் அனுப்பப்பட்ட இயேசுவை நாம் விசுவாசித்து, விசுவாசத்தினால் வாழ வேண்டும்.

அவருடைய வார்த்தைகளை புறம்பேத் தள்ளிவிட்டு, விசுவாசிக்காமல் இருப்பவர்கள் யாரோ அவர்கள் பாவிகள். அவருடைய வார்த்தைகளைக் கடைபிடிக்காதவர்களும் பாவிகளே, ஆனால் அவருடைய வார்த்தைகளை புறம்பேத்தள்ளுவது கொடிய பாவமாகும். அவர்களே நரகம் சென்றடைபவர்கள். விசுவாசிக்காதது அவர் முன் பாவமாகும்.

 


கர்த்தர் நமக்கு சட்டத்தை அளித்ததற்கான காரணம்


 • கர்த்தர் நமக்கேன் சட்டத்தை அளித்தார்?
 • நம்முடைய பாவங்களையும் அதற்கான தன்டணையையும் நாம் புரிந்து கொள்ளவே.

கர்த்தர் நமக்கு சட்டத்தை அளித்ததற்கான காரணம் என்ன? நம்முடைய பாவங்களை உணர்ந்து அவர் கரங்களினுள் தஞ்சமடையவே. அவர் நமக்களித்த 613 சட்டங்களினாலே நம் பாவங்களை நாமறிந்து இயேசுவின் மூலம் விடுதலயடைய அதனைக் கொடுத்தார். இதனாலேயே கர்த்தர் நமக்கு சட்டத்தைக் கொடுத்தார்.

பாவத்தை அறிகிற அறிவு நியாயப் பிரமாணத்தினால் வருகிறபடியால் என்று ரோமர் 3:20 இல் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, கர்த்தர் இச்சட்டத்தைக் கொடுத்திருப்பதற்கான காரணம் அதன்படி வாழும்படி வலியுறுத்துவதற்கல்ல என்பது நமக்குத் தெரியும்.

அப்படியானால் சட்டத்தின் மூலம் நமக்கு கிட்டிய அறிவு என்ன?  சட்டத்தை முழுவதுமாக பின்பற்றுவதற்கு நாம் மிகவும் பலவீனமானவர்கள் என்றும் அவரிற்கு முன்பாக நாம் பாவிகளென்பதையும் அறிந்துகொண்டோம். அவருடைய சட்டத்தின் 613 பிரிவுகளின் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்ன? நம்முடைய குறைபாடுகளையும், அவருடைய சட்டத்தின்படி நம்மால் வாழ இயலாததையும் நாம் அறிந்து கொள்ளலாம். கர்த்தரின் படைப்புகளான நாம், கையாலாகதவர்கள் என்பதை அறிந்து கொள்கிறோம். நாம் அவரிற்கு முன் பாவிகளென்றும், அவரின் சட்டப்படி நாம் நரகம் சென்றடைய வேண்டியவர்கள் என்றும் அறிந்து கொள்கிறோம்.

நம்முடைய பாவங்களையும் நம் கையாலாகத் தனத்தையும் அறியும்போது நாமென்ன செய்கிறோம்? முழுமையானவர்களாக முயல்கிறோமா? இல்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம், நாம் பாவிகளென்பதை ஒப்புக்கொண்டு, இயேசுவை விசுவாசித்து, அவரின் நீர் மற்றும் ஆவியினால் இரட்சிக்கப்பட்டு விடுதலையடைந்து அவரிற்கு நன்றி செலுத்துவதே.

அவர் நமக்கு சட்டத்தை அளித்தமைக்கான காரணம் நாம் நம் பாவங்களைக் குறித்தும் அதற்கான தண்டனையைக் குறித்தும், இயேசுவல்லாமல் நாம் நரகத்திலிருந்து இரட்சிக்கப்பட முடியாது என்றும் நம்மை உணரச்செய்வதே. நாம் இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டால் நாம் பாவ விடுதலைப் பெறுவோம்.  நம்மை இரட்சிக்கும்படியாக நமக்கு அவர் சட்டத்தை அளித்தார்.

எத்தனை முழுமையான பாவிகள் நாமென்பதை உணர்த்தி பாவத்திலிருந்து நம் ஆத்துமாக்களை மீட்கும்படி அவர் நமக்கு சட்டத்தை அளித்தார். அவர் நமக்குச் சட்டத்தை அளித்ததுடன் நம்மை இரட்சிக்குபடி இயேசுவையும் அனுப்பினார். இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களை இயேசுவானவர் ஏற்றுக்கொள்ளும் விதமாக அவரின் ஒரேகுமாரனாகிய இயேசுவை அவர் அனுப்பினார். அவரை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்படுகிறோம்.

நாம் திக்கற்ற பாவிகள் என்பதை உணர்ந்து, இயேசுவை விசுவாசித்து பாவத்திலிருந்து விடுதலைப் பெற்று, அவரின் பிள்ளைகளாகி கர்த்தரின் மகிமைக்குத் திரும்பவேண்டும்.

அவரின் வார்த்தைகளை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவரின் வார்த்தைகளின் மூலம் எப்படி பாவ விடுதலைப் பெறுவது என்பதை அவரின் வார்த்தைகளில் தொடங்கி அறிந்து கொள்ளவேண்டும்.  அவரின் வார்த்தைகளின் மூலமாக யோசித்து அனுமானிக்க வேண்டும். இதுவே சரியானதும் உண்மையானதுமான விசுவாசமாகும்.

 


மனிதனின் இருதயத்தில் இருப்பதென்ன?


 1. கர்த்தருக்கு முன்பாக நாம் என்ன செய்ய வேண்டும்
 2. நம்முடைய பாவங்களை ஒப்புக்கொண்டு நம்மை இரட்சிக்கும் படி கர்த்தரிடம் கேட்கவேண்டும்

விசுவாசம் அவர் வார்த்தைகளினால் உண்டாகி அவரின் வார்த்தைகள் மூலமாக கர்த்தரை விசுவாசிக்கவேண்டும். இல்லையெனில், நாம் தவறிற்குள் விழுந்துவிடுவோம். அது தவறான, உண்மையில்லாத விசுவாசமாகும்.

பரிசேயரும் சதுசேயரும் இயேசுவின் சீடர்கள் தம் கழுவப்படாத கைகளின் மூலமாக ரொட்டியைச் சாப்பிட்டதைக் கண்டபோது, அதனைக் கர்த்தரின் வார்த்தைகள் மூலம் பார்த்திருந்தால் அவர்கள் அதனை விட்டிருப்பார்கள். வெளியிலிருந்து உள்ளே செல்வதனால் ஒரு மனிதனை அழிக்க முழியாது எனெனில் அது நேராக இருதயத்திற்குள் செல்லாமல் வயிற்றிற்குள் சென்று வெளியே சென்றுவிடுகிறது என்று வசனம் நமக்கு கூறுகிறது.

மாற்கு 7:20-23 இல், “மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில் மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும் விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷனமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் பாவங்களுடன் பிறந்திருப்பதனாலே அவர்கள் பாவிகள் என்று அவர் கூறினார்.

இதன் பொருளை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறதா? நாமெல்லாம் ஆதாமின் வமிசத்தவர். நாம் அவருடைய வார்த்தைகளை ஏற்காததாலோ அல்லது அதனை விசுவாசிக்காததாலோ நம்மால் சத்தியத்தை பார்க்க முடியாது. மனிதனில் இருதயத்தினுள் என்ன இருக்கிறது?

மாற்கு 7:21-22 ஐப் பார்ப்போமாக. மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வெசித்தனங்களும் கொலை பாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.மனிதர்களின் இருதயத்திலிருந்து வரும் இவைகள் அவனையோ அவளையோ அல்லது மற்றவர்களையோ அழிக்கும்.

சங்கீதத்தில் இது எழுதப்பட்டுள்ளது. உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.” (சங்கீதம் 8:3-4)

அவர் ஏன் நம்மிடம் வந்தார்? நம்மை அவர் நேசிப்பதால் அவர் நம்மிடம் வந்தார். பாவிகளாகிய நம்மை அவர் படைத்து, நம்மை நேசித்து நம்மேல் இரங்கினார். அவர் நம் பாவங்களையெல்லாம் துடைத்து நம்மை அவர் மக்களாக்கினார். ஓ கர்த்தரே, நம் தேவனே, உம்முடைய பெயர் பூமியிலும் வானத்திலும் எத்தனை மகத்துவமுள்ளதாக இருக்கிறது!அரசனான தாவீது, கர்த்தர் பாவிகளின் இரட்சகராக வருவார் என்று உணர்ந்தபோது பழைய ஏற்பாட்டில் பாடினான்.

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனான பவுல் அதனையே கூறினான். கர்த்தரின் படைப்பாகிய நாம், அவரின் பிள்ளைகளாக முடிவது அத்தனை அதிசயமானது. நம்மீதுள்ள அவருடைய கிருபையினாலேயே அது நடந்தது. இதுவே கர்த்தரின் அன்பாகும்.

கர்த்தரின் சட்டத்தை முற்றிலுமாக கடைப்பிடித்து வாழ விழைவது ஒரு வழியில் கர்த்தருக்கே சவால் விடுவதாகிறது. அதுவும் நம் அறியாமையினாலேயே வருகிறது. சட்டத்தைக் கடைப்பிடிக்க கஷ்டப்படுவதும் ஜெபிப்பதுமாக இருக்கும் அதேவேளையில் அவருடைய அன்பின் எல்லைக்கு அப்பால் வாழ்வதும் சரியல்ல. சட்டத்தின் மூலம் நாம் பாவிகள் என்பதையும் உணர்ந்து நீர் மற்றும் இரத்தம் (ஆவி) மூலம் வரும் பாவ விடுதலையை நாம் விசுவாசிக்க வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாயிருக்கிறது.

மாற்கு 7:20-23 இல் அவரின் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. மனுஷருக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

உள்ளே இருக்கும் பாவங்கள், மனிதர்களின் உள்ளே இருந்து வருபவை அவனை அழித்து போடும் என்று இயேசு கூறினார். கர்த்தர் நமக்களித்த உணவினால் யாரையும் அழிக்க முடியாது. எல்லாப் படைப்புகளும் சுத்தமானவை, ஆனால் அவனின் பாவங்கள், ஒருவனின் உள்ளிருந்து வருபவையே அவனை அழிக்கின்றன. நாமெல்லாம் ஆதாமின் வழித்தோன்றல்கள். அப்படியானால் நாமெப்படி பிறந்தோம்? நாம் பண்ணிரென்டு வகையான பாவங்களுடன் பிறந்தோம். அது சரியானதில்லையா?

அப்படியானால் நம்மால் பாவங்களின்றி வாழ முடியுமா? நாம் பாவங்களினால் பிறந்ததினால் நாம் தொடர்ந்து பாவஞ் செய்வோம். சட்டம் நமக்குத் தெரியுமாகையால் நாம் பாவஞ் செய்வதை நிறுத்த முடியுமா? கட்டளைகளின் படி நம்மால் வாழ முடியுமா? இல்லை.

அதிகமாக நாம் முயல அது மிகக் கடினமாகி விடுகிறது. நம்முடைய திறமையை அறிந்து அதனை விட்டு விடவேண்டும். அப்போது, தாழ்மையான மனதுடன் நம்மை இரட்சிக்கும் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் ஏற்றுக்கொள்ள முடியும்.

எல்லா 613 சட்டப் பிரிவுகளும் நீதியும் சரியானதாகும். ஆனால் மனிதர்கள் தாயின் வயிற்றில் கர்ப்பந்தரித்த நேரம் முதலே பாவிகள். நாம் கர்த்தரின் சட்டம் சரியானது என்றும் நாம் பிறவிப்பாவிகளாக இருப்பதனால் நம்மால் நீதிமான்களாக முடியாது என்பதை உணரும்போது, கர்த்தரின் கிருபையும், இயேசுவின் நீர், இரத்தம் மற்றும் ஆவி ஆகியவற்றின் மூலம் கிட்டும் பாவ விடுதலையும் தேவை என்பதை உணருகிறோம். நம்மால் நீதிமான்களாகிக் கொள்ள முடியாது என்றும், நம்முடைய பாவங்களுக்காக நாம் நரகம் செல்லுவோம் என்றும் நம்முடைய எல்லைகளை உணரும்போது இயேசுவின் பாவ விடுதலையை சார்ந்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.

ஆகவே, இவ்வழியின் மூலம், நாம் விடுதலை பெறமுடியும். கர்த்தருக்கு முன்பாக நம்மாலேயே சரியானவர்களாகவோ அல்லது நல்லவர்களாகவோ இருக்க முடியாது என்பதை நாமறிந்துகொள்ளவேண்டும். ஆகவே, கர்த்தருக்கு முன்பாக நாம் நரகம் செல்ல வேண்டிய பாவிகள் என்பதை ஒப்புக்கொண்டு, அவருடைய நேசத்திற்காக, “கர்த்தரே, தயவுசெய்து என் பாவங்களிலிருந்து என்னை இரட்சித்து என் மீது மனதிரங்கும் என்று நாம் ஜெபிக்கவேண்டும்.

தாவீதின் ஜெபத்தை கர்த்தரின் எழுதப்பட்ட வார்த்தைகளாக நோக்க விழைகிறோம். நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும்.” ( சங்கீதம் 51:4 )

அவனுக்கு தானொரு பாவக்குவியல் என்றும் நரகத்திற்குள் எரியப்படுவதற்கான தீயவன் என்றும் தெரிந்திருந்தது, ஆனால் அதனை கர்த்தருக்கு முன்பாக அறிக்கைச் செய்தான். நீர் என்னைப் பாவியென்றால், நானொரு பாவி; நீர் என்னை நீதிமானென்றால், நான் நீதிமான்; நீர் என்னை இரட்சித்தால் நான் இரட்சிப்படைவேன்; நீர் என்னை நரகத்திற்கு அனுப்பினால், நான் நரகத்தில் முடிவடைவேன்.

இதுவே சரியான விசுவாசமாகும். நாம் இப்படித்தான் இரட்சிக்கப்பட்டோம். இயேசுவின் பாவ விடுதலையை நாம் விசுவாசிக்க வேண்டுமானால் நாமும் இப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

 


நம்முடைய பாவங்கள் என்ன என்று நாம் தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும்

 

நாமெல்லாம் ஆதாமின் சந்ததியினரானபடியால் நம் இருதயத்தில் இச்சை இருக்கிறது. ஆயினும் கர்த்தர் என்ன கூறுகிறார்? அவர் நம்மிடம் விபசாரம் செய்யாதே என்று கூறுகிறார். நம்மிருதயத்தில் கொலைவெறி இருக்கிறது.  ஆனால் கர்த்தர் நம்மிடம் என்ன கூறுகிறார்? அவர் நம்மிடம் கொலை செய்யாதே என்று கூறுகிறார். நாமெல்லாம் நம்மிருதயத்தில் பெற்றோரை மதிப்பதில்லை, ஆனால் அவர் நம் பெற்றோரை மதிக்கும்படி நம்மிடம் கூறுகிறார். அவருடைய வார்த்தைகளெல்லாம் சரியானதும் நல்லதுமாகும் என்பதையும், நம் இருதயங்களில் பாவமிருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இது சரியானதா, இல்லையா? ஆகவே, கர்த்தருக்கு முன்பாக நாமென்ன செய்யவேண்டும்? நாம் பாவக்குவியல் என்றும் திக்கற்றப்பாவிகள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். நாம் நேற்று நல்லவற்றை செய்தமையால் நேற்று நீதிமான்களாகவும், இன்று பாவஞ்செய்தமையால் இன்று பாவிகளாகவும் இருக்கிறோம் என்று எண்ணுவது சரியல்ல. நாம் பிறவிப்பாவிகள். நாம் எதனைச் செய்தாலும், நாம் இன்னமும் பாவிகளே. இதனாலேயே இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நாம் பாவ விடுதலைப் பெறவேண்டும்.

நாம் விபச்சாரம், கொலை, களவு... ஆகியவற்றை செய்ததினால் பாவிகளாகவில்லை; ஆனால் நாம் பாவத்துடன் பிறந்தமையால் பாவிகளானோம். நாம் பன்னிரண்டு வகையான பாவங்களுடன் பிறந்தோம். கர்த்தரின் கண்களில் நாம் பிறவிப் பாவிகளானபடியால், நம்முடைய சொந்த முயற்சிகள் மூலம் நல்லவனாகவே முடியாது. நாம் நல்லவர்கள் போல் காட்டிக் கொள்ள மட்டும் முடியும்.

நாம் கொலை, களவு... போன்ற பாவங்களினால், மனம் முழுவதும் நிரம்பியவர்களாக பிறந்தோம். ஆகவே, இப்பாவங்களைச் செய்யாவிட்டாலும் நம்மால் நீதிமானாக இருக்கமுடியுமா? நம் முயற்சிகளினால் கர்த்தரின் முன் நாம் நீதிமான்களாக இருக்க முடியாது. நாம் நம்மை நீதிமான்கள் என்று கூறுவோமானால் நாம் கபடர்கள். இயேசு பரிசேயரையும் சதுசேயரையும் கபட பரிசேயர் மற்றும் சதுசேயர் என்று அழைத்தார். மனிதர்கள் பிறவிப்பாவிகள். அவர்கள் தம் வாழ்வு முழுவதும் கர்த்தர் முன் பாவம் செய்கிறார்கள்.

ஒருவன் தான் சண்டையே செய்ததில்லை அல்லது யாரையும் அடித்ததில்லை, ஒரு ஊசியைக் கூட யாரிடமிருந்தும் தன் வாழ்நாளில் திருடவில்லை என்றால் அவன் பொய் சொல்கிறான்; ஏனெனில் மனிதர்கள் பிறவிப்பாவிகள். அவன் பொய்யன், ஒரு பாவி, ஒரு கபடன். இப்படித் தான் கர்த்தர் அவனை நோக்குகிறார்.

நீ ஒரு பிறவிப்பாவி. நீ பாவத்திற்கேதுவான ஒன்றையும் செய்யவில்லையென்றாலும் கூட, நீ நரகத்திற்குச் செல்கிறாய். நீ பொதுவாக சட்டத்தையும், அநேக கட்டளைகளையும் கடைப்பிடித்தாலும், நீ இன்னும் ஒரு பாவி, நரகத்திற்குச் செல்லவேண்டியவன்.

இத்தகைய ஒரு நிலையில் நாமென்ன செய்யவேண்டும்? நாம் அவருடைய நேசத்தை யாசித்து நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படும்படி அவரைச் சார்ந்திருக்க வேண்டும். அவர் நம்மை இரட்சிக்கவில்லையென்றால், நாம் நரகம் செல்வதைத் தவிர்க்க முடியாது. இது நம் விதியாகும்.

அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவர்கள் தாம் பாவிகளென்பதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். தாம் நீதிமான்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆகவே, அவருடைய வார்த்தைகளை அங்கீகரிக்காது புறம்பேத் தள்ளுவது பாவம் என்றும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் முன்பு பாவிகளாயிருந்தாலும் அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டதால் நீதிமான்கள். அவர்கள் அவருடைய வார்த்தைகளினால் மறுபடியும் பிறந்து அவருடைய கிருபையைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

 


தம் கிரியைகள் மூலம் விடுதலைப் பெற முயற்சிப்பவர்கள் இன்னமும் பாவிகளே


 1. இயேசுவை விசுவாசித்த பிறகும் பாவிகளாகவே யார் இருக்கின்றனர்?
 2. தம் கிரியைகள் மூலம் விடுதலை பெற முயற்சிப்பவர்கள்.

      கலாத்தியர் 3:10 மற்றும் 11 ஐ நோக்குவோமாக. நியாயப் பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப் பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப் பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

      ஸ.நியாயப் பிரமாண புஸ்தகத்தில் எழுதப் பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன்என்று கூறப்பட்டுள்ளது.  இயேசுவை விசுவாசித்து தம் கிரியைகளினிமித்தம் நீதிமானாக முயல்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள். தம் கிரியையின் நிமித்தம் நீதிமானாக முயல்பவர்கள் எங்கே? அவர்கள் கர்த்தரினால் சபிக்கப் பட்டிருக்கிறார்கள்.

      கர்த்தர் ஏன் நமக்குச் சட்டத்தை வழங்கினார்? நம்முடைய பாவங்களை அறிந்துகொள்ளும்படி அவர் நமக்குச் சட்டத்தை வழங்கினார் (ரோமர் 3:20). நாம் முழுப்பாவிகள் என்றும், நரகம் செல்ல விதிக்கப் பட்டவர்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே அது வழங்கப்பட்டது.

      இயேசுவின் ஞானஸ்நானத்தை, கர்த்தரின் மகனை விசுவாசித்து நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் உங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு, நீதிமானாகி, நித்திய ஜீவனைப் பெற்று பரலோகம் செல்லுங்கள். உங்கள் இருதயத்தில் விசுவாசம் கொள்ளவும்.

 


உலகின் மிக மூர்க்கத்தனமான பாவம்


 1. உலகின் மிக மூர்க்கத்தனமான பாவம் எது?
 2. சட்டத்தின் படி வாழ முயல்வது.

கர்த்தரை விசுவாசிப்பதைத் தவிர மற்றதெல்லாம் கணக்கிடப்படுகின்றது. அவருடைய ஆசீர்வாதத்தின் மீது விசுவாசம் வைக்கும் ஆசீர்வாதத்தை நாம் பெற்றிருக்கிறோம். அவரின் வார்த்தைகளின் மீது விசுவாசம் வைப்போரை இரட்சிக்க அவர் தீர்மானித்துள்ளார்.

ஆனால் இன்று, விசுவாசிகளின் மத்தியில், அநேகர் அவர் சட்டத்தின் படி வாழ முயல்கிறார்கள். அநேக கிறிஸ்தவர்கள் அப்படியானவர்கள். அவர்கள் சட்டத்தின் படி வாழ முயல்வது நல்ல காரியமே, ஆனால் அது எப்படி சாத்தியமாகும்?

அவரின் சட்டத்தின்படி வாழ முயல்வது எத்தனை முட்டாள்தனம் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். நாம் அதிகமாக முயலும்போது, அது இன்னமும் கடினமாகிவிடுகிறது. அவர் கூறினார், “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.நாம் இரட்சிக்கப்படும் பொருட்டு நம் மூர்க்கத்தனத்தை விட்டொழிக்கவேண்டும்.

 


நாம் இரட்சிக்கப்பட நம் சொந்த அளவுகோல்களை விட்டுவிட வேண்டும்


 1. நாம் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும்?
 2. நம் சொந்த அளவுகோல்களை விட்டுவிட வேண்டும்.

மனிதன் இரட்சிப்படைவது எப்படி?  அது அவன் / அவள் தாம் பாவிகள் என்பதை தெரிந்து கொள்வதிலிருக்கிறது. நிறையபேர் தவறான விசுவாசங்களையும் முயற்சிகளையும் விட முடியாதவர்களாக இருப்பதினாலே இரட்சிக்கப்பட முடியாதவர்களாக உள்ளனர்.

சட்ட நூலைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கர்த்தர் கூறுகிறார். இயேசுவை விசுவாசித்துக் கொண்டு சட்டத்தின்படி வாழ்வதன் மூலம் தாம் படிப்படியாக நீதிமான்களாக மாறலாம் என்று விசுவாசிப்பவர்கள் அவரின் சாபத்திற்குட்பட்டவர்கள். அவன் / அவள் கர்த்தரை விசுவாசித்திருந்த போதிலும் தாம் இரட்சிக்கப்பட சட்டத்தின்படி வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அன்பு நண்பர்களே, நாம் உயிருடனிருக்கும்போது நம் கிரியைகள் மூலம் நீதிமான்களாகி விடமுடியுமா?  இயேசுவின் வார்த்தைகளை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே நீதிமானானோம். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும், அவரின் இறைத்துவத்தையும் விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே நாம் விடுதலையடைய முடியும்.

அதனாலேயே கர்த்தர் நாம் நீதிமான்களாகும் ஒரு வழியாக விசுவாச சட்டத்தை நமக்காக ஏற்படுத்தினார். நீர் மற்றும் ஆவியின் பாவ விடுதலையானது மனிதர்களின் கிரியைகளில் இல்லாமல் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்கும் நம்பிக்கையின் மீதிருக்கிறது. அந்த விசுவாசத்திற்காக கர்த்தர் நம்மை விடுதலை செய்தார்.  இப்படியாகவே கர்த்தர் அதனைத் திட்டமிட்டு நிறைவேற்றினார்.

இயேசுவை விசுவாசித்தவர்கள் ஏன் விடுதலையடையவில்லை? ஏனெனில் நீர் மற்றும் ஆவியின் பாவவிடுதலை வார்த்தைகளை அவன் / அவள் ஏற்கவில்லை. ஆயினும், அவர்களைப் போன்றே குறைவுள்ள நாம், கர்த்தரின் வார்த்தை மீதுள்ள நம்பிக்கையினாலே விடுவிக்கப்பட்டோம்.

இரண்டு பேர் எந்திரக்கல்லில் வேலைச் செய்து கொண்டிருந்தால், ஒருவன் எடுத்துக் கொள்ளப்பட்டும் மற்றவன் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டும் இருப்பான். கைவிடப்பட்டவன் பாவ விடுதலைப் பெறாதவன், அவன் விடுதலைப் பெறும்படி தொடர்ந்து முயல வேண்டியது தான். ஒருவன் எடுத்துக்கொள்ளப்பட்டு மற்றவன் ஏன் கைவிடப்பட்டான்?

அதன் காரணம் ஒருவன் கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு அதனை விசுவாசித்ததே. சட்டத்தைக் கடைபிடிக்க கடினமாக முயன்ற மற்றவன் நரகத்தினுள் எறியப்பட்டான்.  அவன் கர்த்தரை நோக்கி தவழ முயன்றான். ஆனால், நம் காலில் ஏற முயலும் பூச்சியை எப்படி உதறித்தள்ளுகிறோமோ அதுபோல் அவனைக் கர்த்தர் உதறிவிட்டார்.  ஒருவன் சட்டத்தைக் கடைபிடிக்க முயன்று கர்த்தரை நோக்கி தவழ்ந்து சென்றால், அவன் கண்டிப்பாக நரகத்தினுள் வீசப்படுவான்.

அதனாலேயே நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நாம் விடுவிக்கப்படவேண்டும்.

நியாயப் பிரமாணத்தின் கிரியைக் காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப் பிரமான புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.விசுவாசத்தினாலே உண்டாகும் தேவ நீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப் படுத்தப்படுகிறது (கலாத்தியர் 3:10-11, ரோமர் 1:17).

வேத வசனங்களை விசுவாசிக்காதது கர்த்தர் முன் ஒரு பாவமாகும். அத்துடன், ஒருவனின் சொந்த அளவுகோலுக்கு ஏற்ப கர்த்தரின் வசனங்களை புறம்பே தள்ளிவிடுவதும் பாவமாகும். நாமெல்லாம் பிறவிப் பாவிகளாக இருப்பதினால் மனிதர்களாகிய நம்மால் சட்டத்தின் படி வாழ முடியாது. நம் வாழ்நாள் முழுதும் பாவம் செய்து கொண்டேதானிருப்போம். இங்கே கொஞ்சம் பாவம், அங்கே கொஞ்சம், எங்கெல்லாம் நாம் செல்கிறோமோ அங்கெல்லாம் பாவஞ்செய்கிறோம், நாம் மாம்சத்தினாலே ஆனவர்கள் என்றும் நாம் பாவஞ்செய்வதைத் தவிர வேறுவழியில்லை என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.

மனிதர்கள் வெறும் உரமூட்டையைப் போன்றவர்கள். நாம் அதனை இங்குமங்கும் எடுத்துச் செல்ல முயன்றால், போகும் வழியெல்லாம் அதனைச் சிந்தி விடுவோம், நாம் அதுபோன்றவர்கள். நாம் எங்கு போகிறோமோ அங்கெல்லாம் பாவத்தைச் சிந்துகிறோம். இதனை உங்களால் விளங்கிக்கொள்ள முடிகிறதா?

நீ பரிசுத்தன் என்று இன்னமும் காட்டிக் கொள்கிறாயா? உன்னை உன்னால் தெளிவாகப் பார்க்க முடியுமானால், பரிசுத்தனாக மாறச் செய்யும் உன் வீண் முயற்சிகளை விட்டுவிட்டு நீரையும் இயேசுவின் இரத்தத்தையும் விசுவாசிக்கத் தொடங்குவாயாக.

நம்முடைய வீண் பிடிவாதத்தை விட்டுவிட்டு கர்த்தர் முன்பு நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அவர் வார்த்தைகளை நோக்கி திரும்பச் சென்று நீராலும் ஆவியாலும் அவர் நம்மை எப்படி இரட்சித்தார் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். *