பரிசுத்த ஆவியானவர்

ஆயர் பால் சி. ஜோங்


வேதவாக்கான உறுதிமொழிக்குள் பணியாற்றும் பரிசுத்த ஆவியானவர் ஒருவன் தன் சுய முயற்சிகளினால் பரிசுத்த ஆவியானவரை சம்பாதிக்க முடியுமா? நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டீர்களா? சீடர்களைப் போன்றே விசுவாசமுள்ளவர்கள் பரிசுத்த ஆவியானவருடன் நீங்கள் நட்பு கொள்ள வேண்டுமா? விசுவாசியுங்கள் அப்பொழுது ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்வார் பரிசுத்த ஆவியானவரை விசுவாசிகளிடம் வாசஞ்செய்விக்கும் அழகிய நற்செய்தி யாரின் மூலமாக ஜீவ நீராகிய பரிசுத்த ஆவி ஓடுகிறது? நம்மை சுத்திகரித்த அவரின் ஞானஸ்நான நற்செய்தி ஆவியில் நடத்தல்! பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையைப் பராமரித்தல் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையின் ஜீவியம் பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் வரங்களும் பணிகளும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான உண்மையான மனம் வருந்துதல் யாது? சத்தியத்தைத் தெரிந்துக் கொள்ளும்போதே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டவர்களின் பணி நாம் பரிசுத்த ஆவியானவர் மீது நம்பிக்கை விசுவாசிகளினுள் பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்ய ஏதுவாக்கும் சத்தியம் தேவாலய திரைச் சீலையைக் கிழித்த அழகிய நற்செய்தி பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ் செய்யப் பட்டவன்

வேதவாக்கான உறுதிமொழிக்குள் பணியாற்றும் பரிசுத்த ஆவியானவர்

【8-1】 < அப்போஸ்தலர் 1:4-8 ><அப்போஸ்தலர் 1:4-8>

“அன்றியும் அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி; யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி; ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்; பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப் பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”


 • பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ்செய்வது கர்த்தரின் ஈவா அல்லது நம் முயற்சிகளுக்காக கொடுக்கப் பட்டதா?
 • எவனொருவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, மற்றும் கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேற்றப் பட்டவனோ, அவனுக்கு அது பரிசாக வழங்கப்படுகிறது.


ஒருமுறை ஜெபம் மூலமாக, பரிசுத்த ஆவியைப் போன்ற அக்கினியைப் பெறுவது போல் அனுபவித்தேன். ஆனால் இந்த நெருப்பு அதிக நேரம் தங்கவில்லை, தொடர்ந்து சேர்த்த பாவங்களினால் இது அவிந்து போயிற்று. ஆயினும், இப்பொழுது பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய உண்மையை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். இவர் சர்வகாலமும் உங்களுடனிருப்பார், பாவங்களினால் அவிந்துபோகும் போலி ஆவி மூலமல்ல, உண்மையான நற்செய்தி மூலமாக அவரைக் காட்ட விரும்புகிறேன். இப்பொழுது நான் இச்செய்தியின் மூலமாக உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் பரிசுத்த ஆவியானவர் ஜெபத்தினால் பெறப்படக் கூடியவர் இல்லை, அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் மட்டுமே கிட்டுபவர்.

இந்நூலின் மூலமாக 1பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ் செய்வதைப் பெறும்படியாக உங்களை வழி நடத்த விழைகிறேன். நான் அளிக்கும் செய்தியை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் செலுத்துகிறார் என்பதை அறிந்து கொள்வீர்கள். இந்நேரத்தில் நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்வதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரின் முழு விருப்பமாயிருக்கிறது. இந்நூலின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ் செய்வதைக் குறித்து நீங்கள் கற்பதுடன் அவரைப் பெற்றும் கொள்ளலாம். இந்நூல் உங்களுக்கு போதவில்லை என்றால், இதற்கு முன் நான் எழுதிய இரண்டு நூல்களையும் படிக்கும்படி உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் கர்த்தருக்கு முன்பாக, இந்நூலின் மூலம் சரியான நம்பிக்கைப் பெற்றவராவீர்கள். 


1பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் பிறந்தவர்கள் இதயத்தில் வாசஞ்செய்கிறார், அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததன் மூலம் தம் பாவங்களனைத்தும் மன்னிக்கப் பட்டவர்கள். ஒருமுறை பரிசுத்தன் ஒருவனுள் அவர் வந்தால், அவனுள் சதாகாலமும் தங்குகிறார், அவன் நற்செய்தியை விசுவாசித்து கொண்டிருக்கும் வரை அவனை விட்டு அவர் விலகுவதில்லை, அவர் பரிசுத்தவான்களுக்கு உண்மையைத் தெளிவு படுத்தும் வேதாகமத்தின் படி கர்த்தரின் சித்தம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வழிநடத்துகிறார். உலகின் இச்சைகளையும் கஷ்டங்களையும் மேற்கொள்ளத் தேவையான வலிமையை அளிக்கிறார், மேலும் ஆவிக்குரிய கனிகளை அவர்கள் பெற்று வாழ அனுமதிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதன் மூலமாக பரிசுத்தவானின் சரீரத்தை கர்த்தருக்குள் தாம் வாழும் ஆலயமாக மகிமைப்படுத்துகிறார். (அப்போஸ்தலர் 2:38-39, யோவான் 14:16, 16:8-10, 1கொரிந்தியர் 3:16, 6:19, கலாத்தியர் 5:22-23).


பரிசுத்த ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் இயேசுவின் சீடர்கள்மீது இறங்கியது போல், தாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அநேக கிறிஸ்தவர்கள் முயல்கிறார்கள். சில மனிதர்கள் இந்த முறையைப் பற்றிக் கூறி அதிக அளவில் பணம் சம்பாதித்துள்ளனர். அவர்கள் பரிசுத்த ஆவியானவரை மனித முயற்சிகளினால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது போல் காட்டுகிறார்கள். காட்சிகளைக் காணுதல், அதிசயங்களைச் செய்தல், இயேசுவின் குரலைக் கேட்டல், பல பாஷைகளில் பேசுதல், சுகமளித்தல், பிசாசுகளை விரட்டுதல் போன்றவை வேண்டுமென விரும்புகிறார்கள். எப்படியாயினும் அவர்கள் இருதயத்தில் பாவமிருக்கிறது, மேலும் அவர்கள் தீய ஆவியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் (எபேசியர்:1-2). இப்போதும் கூட நிறைய மக்கள் தாம் தீய ஆவியின் வல்லமையின் கீழிருப்பது தெரியாமல் தொடர்ந்து வாழ்கிறார்கள். அதனாலேயே சாத்தான் இச்சைக்குள்ளாக்கி மக்களை உண்மையில் வெறும் மாயைகளான அதிசயங்கள் அற்புதங்கள் போன்ற முறைகளைக் காண்பித்து வஞ்சிக்கிறான். 


கர்த்தர் தம் சீடர்களுக்கு கட்டளையிட்டார். “நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல், என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்” (அப்போஸ்தலர் 1:4). அப்போஸ்தலர் நடபடிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட பரிசுத்த ஆவியானவரைப் பெறுதல் “அனுபவித்தல்” “ஒப்புக்கொடுத்தல்” அல்லது “மனம் வருந்தி ஜெபித்தல்” ஆகியவற்றினால் அல்ல, ஆனால் “கர்த்தரின் வாக்குத்தத்தத்திற்கு காத்திருத்தல்” மூலமாக அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப் படுகிறார். இந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் மனிதனின் அதீத ஜெபங்களினால் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதைப் பெற்றுக் கொள்ள முடியாது. அது கர்த்தரும் குமாரராகிய இயேசுவும் மனிதர்களுக்களித்த, அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது முழு நம்பிக்கை வைப்பதன் மூலம் மட்டுமே கிடைக்கிறது, இயேசு நமக்களித்த, நற்செய்தியை நாம் விசுவாசிப்பதன் மூலமே உண்மையில் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வது நிகழும். நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெறும்படியாக கர்த்தர் உண்மையாகிய நீரையும் ஆவியையும் அளித்தார் (1 யோவான் 3:3-5).

“பரிசுத்த ஆவியானவரின் வாக்குத்தத்தம்” என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் அநேகத்தரம் திரும்பத் திரும்ப வருகிறது. பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தைக் குறித்து “இனிமையான நற்செய்தியை விசுவாசிப்பதன் பலனாக கிடைக்கும் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பதாக கர்த்தரின் வாக்குத்தத்தம் இருக்கிறது” என தனது பிரசங்கத்தில் (அப்போஸ்தலர் 2:38-39) பேதுரு கூறுகிறான். 

பாவ மன்னிப்பை யாரெல்லாம் பெறுகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வாசஞ்செய்தல் பரிசாகக் கொடுக்கப்படுகிறது, இதனுள் கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேறியமை உள்ளடங்கியுள்ளது. புதிய ஏற்பாடு கூறும் பரிசுத்த ஆவியானவரை கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள விட்டுக் கொடுத்தலினால் பெறக்கூடிய ஒன்றல்ல, ஆனால் அது கர்த்தரின் வாக்குத்தத்தமான பரிசாக இருக்கிறது. ஆகவே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வது, அப்போஸ்தல நடபடிகளில் வெளிப்படுத்தப்பட்டது போல, ஜெபத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. (அப்போஸ்தலர் 8:19-20).

இயேசு நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களிடம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வருகிறார். இயேசு தமது சீடர்களிடம் பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் வாசஞ் செய்யும் படியாக அவரை அனுப்புவதாக வாக்குத்தத்தம் செய்தார். “யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” (அப்போஸ்தலர் 1:5). ஆகவே, அவருடைய சீடர்கள் கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேறும்படியாகக் காத்திருந்தனர்.

பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யப் பெற்ற வேதாகமத்தில் உள்ளவர்களின் விசுவாசத்தை நோக்கும்போது, அது கர்த்தரின் சித்தப்படி நடந்ததேயல்லாமல் அவர்களின் முயற்சியினாலல்ல என்பதை நாம் அறிந்துகொள்ளவோண்டும். அப்போஸ்தல நடபடிகளில் சீடர்கள் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொண்டது மனித முயற்சிகளினாலோ அல்லது ஆவிக்குரிய வெற்றிகளினாலோ நிகழவில்லை.

அவரின் சீடர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வருவது, அப்போஸ்தலர் நடபடிகளில் காணப்படுவதுபோல், சீக்கிரமாக உண்மையாகியது. அது இயேசுவானவர் கூறியபடியே “சில நாளுக்குள்ளே” நிகழ்ந்தது. ஆதி சபைக்கு அக்காலத்தில் கிடைத்த முதல் ஆசீர்வாதம் இதுவேயாகும். வேத வசனங்களைப் பார்க்கும்போது, உபவாசம் இருப்பதால் கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேறவில்லை என்பதையும், அது ஜெபத்தினாலோ, சுய -பலியினாலோ அல்லவென்றும், இயேசுவின் மீது வைத்த நம்பிக்கையினால் மட்டுமே கிட்டியது என்பதைக் காணலாம். இயேசு பரலோகம் ஏறியவுடன், விசுவாசிகள் பாவ மன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதையும் ஒரே நேரத்தில் பெற்றார்கள். இயேசுவின் சீடர்கள் மீது பரலோகத்தில் இருந்து பரிசுத்த ஆவியானவர் திடீரென வந்தார்!


“பெந்தகோஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒரு மனப்பட்டு ஔரிடத்தில் வந்திருந்தார்கள்” (அப்போஸ்தலர் 2:1). கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேறும்படி அவர் பரிசுத்த ஆவியானவரை அனுப்பும்படியாக இயேசுவின் சீடர்கள் குழுமி காத்திருந்தனர். கடைசியாக பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது வந்தார்.

“அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல் வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.” (அப்போஸ்தலர் 2:2-4)

பரிசுத்த ஆவியானவர் “திடீரென பரலோகத்திலிருந்து” அவர்கள் மீது வந்தார். இங்கே “திடீரென” என்ற சொல்லின் பொருள் இது மனிதர்களின் சித்தத்தின் மூலம் வந்ததல்ல என்பதாகும். மேலும், “பரலோகத்திலிருந்து” என்ற வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவர் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்குகின்றன. மேலும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதை மனித சித்தத்தினாலும் முயற்சிகளினாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற யோசனையையும் எதிர்க்கின்றது. “பரலோகத்திலிருந்து” என்ற வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரை ஜெபத்தின் மூலம் பெறலாம் என்பது பொய்யான கூற்று என்பதைக் காட்டுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரலோகத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் திடீரென வந்தார் என்பது பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்வது உலகப் பூர்வமான, பல பாஷைகளில் பேசுதல் அல்லது சுய பலிகளினால் நிகழ்ந்ததல்ல. இயேசுவின் சீடர்கள் “இனிமையான நற்செய்தியை எல்லா நாட்டு மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக முதலில் பல பாஷைகளில் பேசினார்கள். இதற்காண காரணம் என்னவெனில் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன், யூதரல்லாத மற்ற பாஷைக்காரர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கும் முகமாக அனுமதிக்கப்பட்டது. எல்லா நாட்டுக்காரர்களும், அநேக சீடர்கள் கலிலேயாவைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் தம் பாஷைகளில் பேசுவதைக் கேட்டார்கள்.

“அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு” (அப்போஸ்தலர் 2:3-4). இங்கே நாம் பரிசுத்த ஆவியானவர் “ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது” என்ற வாக்கியம் மீது கவனம் செலுத்தவேண்டும். சீடர்கள், பரிசுத்த ஆவியானவர் வரும்பொருட்டு ஓரிடத்தில் காத்திருந்தார்கள், அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து ஏற்கெனவே மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தனர்.

இந்நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள் இப்பந்தியை தவறுதலாகப் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வருகையானது காற்று வீசும் சத்தத்துடன் தாம் ஜெபிக்கும்போது நிகழும் என்று நம்புகிறார்கள். ஆயினும், பரிசுத்த ஆவியானவரைக் குறித்த இந்த தவறான கருத்து அவர்களின் அறிவின்மையாலும் குழப்பத்தினாலும் வருகின்றது. பரிசுத்த ஆவியானவர் மக்களிடையே வரும்போது இத்தகைய ஒலிகளை உருவாக்குகிறாரா? இல்லை, அவர் அப்படிச் செய்வதில்லை.

மக்கள் தம் காதுகளில் கேட்கும் ஒலியானது சாத்தான் மக்களின் ஆத்துமாக்களை குதறும்போது உருவாகும் ஒலியாகும். அவன் மாயையான காரியங்களைச் செய்யும்போது இத்தகைய ஒலிகளை உருவாக்குகிறான், போலிக் குரலில் பேசிக் கள்ள அற்புதங்களைச் செய்து மக்களை குழப்பத்திற்குத் தள்ளும் பொருட்டு பரிசுத்த ஆவியானவரைப்போல் நடிக்கிறான். மக்கள் இதனை பரிசுத்த ஆவியானவரின் வருகையின் அடையாளம் என்று தவறாகப் புரிந்து கொள்கின்றனர். மக்கள் பரிசுத்த ஆவியானவர் “ஷ்ஷ்ஷ்~” என்ற காற்றின் பேரொலியுடன் வருவதாகவும் நினைக்கின்றனர். இவை பிசாசுகளினால் உருவாக்கப் பட்டவை. அப்போஸ்தலரில் குறிப்பிடப் படுவதைப் போன்ற பரிசுத்த ஆவியானவரின் வருகையானது, இனிமையான நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் கிட்டப் பெறுகிறது.


பேதுருவின் விசுவாசமானது (1 பேதுரு 3:21) அவன் பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசஞ் செய்வதைப் பெறுவதற்கேதுவாக சரியானதாக இருந்தது.


அப்போஸ்தலர் 2-இல் முதல் பெந்தகோஸ்தே நாளில் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம், கர்த்தர் அவர்கள் மேல் பரிசுத்த ஆவி வந்தமை அவர்கள் ஏற்கெனவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாத்திருந்தனர் என்பதை குறிப்பிட்டுக் காட்டவேயாகும். ஆனால் மக்கள் பொதுவாக “பெந்தேகோஸ்தே” என்ற சமயம், பரிசுத்த ஆவியானவர் பரலோகத்திலிருந்து இயற்கைக்கு மேலான அறிகுறிகளுடனும் பேரிரைச்சலுடனும் இறங்கியதைக் குறிப்பதாக நினைக்கின்றனர்.

அதனாலேயே இந்நாட்களின் எழுப்புதல் கூட்டங்களில், இடைவிடாத ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும், தலையின் மீது கை வைப்பதாலும் பரிசுத்த ஆவியைப் பெறமுடியும் என்று விசுவாசிக்கிறார்கள். பேய் பிடித்தல் மயங்கி விழுதல், பல நாட்களாக பரவசமடைந்த நிலையிலிருத்தல், கட்டுக்கடங்காத நடுக்கம் போன்ற விசித்திர சம்பவங்கள் பரிசுத்த ஆவியானவரின் செய்கைகளல்ல.

பரிசுத்த ஆவியானவர் பகுத்தறிவுள்ளவர், அவர் மனிதனின் தனித்துவத்தை அசட்டை செய்பவர் அல்ல. அவர் மனிதனிடம் கர்வமாக நடந்து கொள்வதில்லை. ஏனெனில் அவர் அறிவு, உணர்வு மற்றும் சித்தமுடைய கர்த்தராக இருக்கிறார். அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி ஆகியவற்றின் வேதவாக்கை விசுவாசிக்கும்போது மக்களிடம் வருகிறார் (அப்போஸ்தலர் 2:3).

யோவேல் தீர்க்கதரிசியின் முன்குறிப்பின்படி பரிசுத்த ஆவியானவர் சீடர்கள் மீதினில் வந்ததாக பேதுரு சாட்சி கூறுகிறான். அது கர்த்தரின் வாக்குத்தத்தமாக இருந்தது. அது தம் பாவங்களுக்கு பரிகாரம் செய்தவர்களின் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்குவார் என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகின் மக்களையெல்லாம் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் பொருட்டு “இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்தார் என்பதை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் தம்மில் பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்வதைப் பெறுவார்கள். பேதுருவின் பிரசங்கம், யோவேலின் தீர்க்கத்தரிசனத்துடன் இணைந்து இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார்? நாம் ஏன் அதனை விசுவாசிக்க வேண்டுமென்று நாம் தெரிந்துகொள்ளவேண்டுமென காட்டுகின்றது. இந்த உண்மையைத் தெரிந்துகொள்ளுதல் கிறிஸ்தவர்களை பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு வழி நடத்துகின்றன.

  பேதுரு சாட்சி கூறும் அழகிய நற்செய்தியை நீ விசுவாசிக்கிறாயா? (1 பேதுரு 3:21) அல்லது இந்த அழகிய நற்செய்திக்கு சம்பந்தமிலாத மூட நம்பிக்கை உடையவனாக இருக்கிறாயா? கர்த்தரின் சித்தத்தை தவிர்த்து உன் சொந்த முயற்சிகள் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற முயல்கிறாயா? யாரேனும் கர்த்தரை விசுவாசித்து தம் பாவங்களைக் கழுவும் பொருட்டு மனம் வருந்தி ஜெபித்தாலும், பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெறுவதற்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும், நீ பரிசுத்த ஆவியானவர் உனக்குள் வாசஞ்செய்யும்படி காத்திருக்கிறாயா? உன் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரை சஞ்சரிக்கச் செய்ய காரணியாயிருக்கும், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் குறித்த உண்மையான பொருள் உனக்குத் தெரியுமா? பரிசுத்த ஆவியானவர் உனக்குள் வாசஞ்செய்வது நீ நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நீ அறிந்து கொள்ளவேண்டும். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போர்களுக்கு மட்டுமே உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப்பெற அனுமதிக்கப்படுவர். கர்த்தருக்கு நாம், அவர் கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்காக நன்றி செலுத்துவோம். இந்நற்செய்தி பரிசுத்த ஆவியானவர் நம்மில் சஞ்சரிப்பதைப் பெறவிடுகிறது. 

【8-2】 < அப்போஸ்தலர் 8:14-24 > ஒருவன் தன் சுய முயற்சிகளினால் பரிசுத்த ஆவியானவரை சம்பாதிக்க முடியுமா?(அப்போஸ்தலர் 8:14-24)

“சமாரியர் தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். இவர்கள் வந்தபோது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம் பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள் மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். பேதுரு அவனைக் நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக் கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடே கூட நாசமாய்ப் போகக்கடவது. உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப் படலாம். நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக் கொள்ளுங்கள் என்றான்.”


 • கைகளை வைப்பதனால் ஒருவனால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளமுடியுமா?
 • இல்லை.  அவன் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிக்க வேண்டும்.


முக்கியப் பந்தியை அடிப்படியாகக் கொண்டு தன் சொந்த முயற்சிகளினால் “பரிசுத்த ஆவியை தன்னில் வாசஞ்செய்யப் பெற ஒருவனால் முடியுமா” என்பது குறித்து ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். ஆதி சபையின் காலங்களில் அப்போஸ்தலர் கர்த்தரிடமிருந்து வல்லமையைப் பெற்று அவரால் வேறுபட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போஸ்தல நடபடிகளில் நிறைய அற்புதங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று விசுவாசிகளின் தலை மீது அப்போஸ்தலர்கள் கை வைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் இறங்கியமையாகும். வேதம் கூறுகிறது, “இயேசுவை விசுவாசித்த போதிலும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மீது அப்போஸ்தலர்கள் கைவைத்த போது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்.”

அப்படியனால் கைவைப்பதன் மூலம் எப்படி அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள்? அச்சமயத்தில் கர்த்தரின் வார்த்தைகள் எழுதப் பட்டுக்கொண்டிருந்தன. மேலும் அவரின் கிரியைகள் முற்றுப் பெறவில்லை. எனவே கர்த்தர் அப்போஸ்தலர்களுக்கு அவர் பணியைச் செய்யும் பொருட்டு சில வல்லமைகளை கொடுத்திருந்தார். அவர் அப்போஸ்தலர்கள் உடனிருந்து அவர்கள் மூலம் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். அது ஒரு விசேஷித்த நேரம், கர்த்தர் அற்புதங்களையும் அடையாளங்களையும் மக்களின் கண்கள் காணும்படியாகச் செய்தமை, இயேசு கர்த்தரின் குமாரனும் நம் இரட்சகருமானவர் என்பதை நம்மை விசுவாசிக்கச் செய்யவேண்டும் என்பதே. அப்படிச் செய்வது கர்த்தரிற்கு கட்டாயமாக இருந்தது. அவர் அப்போஸ்தலர்கள் மூலம், பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை மிகுந்து வல்லமையுடன் காட்டுவதன் மூலம் இயேசுகிறிஸ்து கர்த்தர் என்றும் அவர் கர்த்தரின் குமாரன் என்றும் இரட்சகர் என்றும் நிரூபிக்க வேண்டியதாயிருந்தது. பரிசுத்த ஆவியானவர் அற்புதங்கள் அடையாளங்கள் மூலம் கிரியை செய்திராவிட்டால், ஆதி சபையின் காலங்களில், இயேசுவே இரட்சகர் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

ஆயினும், இப்பொழுது நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற அற்புதங்களையும் அடையாளங்களையும் காண வேண்டியதில்லை. ஏனெனில் வேதகமம் முழுமைப் பெற்று விட்டது. ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வது நம் விசுவாசத்தை பொருத்திருக்கிறது, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது நற்செய்தியை விசுவாசிப்பதாகும். 

கர்த்தர் யாரெல்லாம் தம் முன்பாக உண்மை நற்செய்தியை விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதை வழங்குகிறார். பரிசுத்த ஆவியானவரின் வாசம் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிப்போருக்கு மட்டுமே நிகழ்கிறது. அது இயேசு இவ்வுலகிற்கு வந்து தன் ஞானஸ்நானத்தாலும் இரத்தத்தாலும் நிறைவேற்றியதால் நிகழ்கிறது.

இந்நாட்களில், அநேகப் பிரசங்கியார்கள் கண்கள் காணும்படியான அதியங்கள், பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ்செய்வதற்கான அடையளம் என விசுவாசிகளிடம் பிரசங்கிக்கிறார்கள். அத்தகைய வழிகளிலேயே விசுவாசிகளை, பரிசுத்த ஆவியானவரை பெறும் பொருட்டு வழி நடத்துகிறார்கள். பல பாஷைகளில் பேசுவது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டதற்கான அடையாளம் போன்ற கள்ளப் போதனைகள் மூலம் மக்களை அவர்கள் வஞ்சிக்கிறார்கள். இப் போதகர்கள் பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்த அப்போஸ்தலர்களுக்கு தாம் ஒப்பானவர்கள் என்று கருதுகிறார்கள். மேலும் தம் உணர்ச்சிகளினால் கர்த்தரை உணர விரும்பும் மத வெறியர்களின் கவனத்தை அவர்கள் கவருகிறார்கள்.

இத்தகைய வெறி உலக முழுதுமுள்ள கிறிஸ்தவர்களிடம் பரவியுள்ளது. மேலும் அவர்கள் தம் சொந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுவதால் இயற்கைக்கு மேற்பட்ட வழிகளின் மூலம் தீய ஆவிகளைப் பெறுகிறார்கள். இப்போதுங்கூட, மதக் கொள்கையினால் கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தாம் மற்றவர்களின் தலை மீது கை வைப்பதன் மூலம் அவர்கள் பரிசுத்த ஆவியை பெறமுடியும் என்று நினைக்கிறார்கள்.

ஆயினும், சீமோன் வஞ்சிக்கப்பட்டதுபோல், அவர்கள் முக்கிய பந்தியில் காணப்படும் மந்திரவாதிகள் போன்றவர்கள். அவர்கள் சுய திருப்தி மற்றும் பேராசை போன்றவற்றால் விஷமேறியிருக்கிறார்கள், அவர்களுடைய எல்லா செய்கைகளும் மக்களின் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிக்கும். இத்தகைய கள்ளப் போதனைகள் கர்த்தர் முன்பாக பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப் பெறும் வழியிலிருந்து திசை திருப்புகிறது.

இன்றும் கூட, கள்ளத்தீர்க்கதரிசிகள் தம் தவறான மத சடங்குகள் மூலம் சாத்தானின் வேலைகளைச் செய்கின்றனர், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் போல் அவற்றைக் காட்டுகிறார்கள். உண்மையான கிறிஸ்தவர்கள் வேத வாக்கினைப் பற்றிக் கொள்ளவேண்டும். இதிலுள்ள நம் அறிவே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெறும் ஒரே வழியாகும். பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் சரீர அனுபவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும், பெந்தகோஸ்த்துகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள், அவர்களுடைய முட்டாள்தனமான நம்ம்பிக்கைகளை விட்டு கர்த்தரின் வார்த்தைகளுக்கு திரும்பி, சத்தியத்தை விசுவாசித்தால், அது அவர்கள் தம்மில் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யும் நிலைக்கு வழி நடத்தும். 

அக்காலத்தில் சமோரியாவின் பேர்பெற்ற மந்திரவாதியாக சீமோன் இருந்தான். இயேசுவின் சீடர்கள், மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற காரணமாக இருந்ததை அவன் கண்டபிறகு, அவன் பரிசுத்த ஆவியானவரைப் பணத்தால் வாங்க விழைந்தான். இத்தகைய நம்பிக்கையுள்ள மக்கள் சாத்தானின் அடிமைகளாகினர். அவர்கள் அவனுடைய வேலைகளைச் செய்கின்றனர். சீமோன் பரிசுத்த ஆவியானவரைப் பெற விரும்பினான். அவனுடைய ஆசை வெறும் பேராசையே. இத்தகைய விசுவாசம், உண்மையில் ஆவியைப் பெறும் விசுவாசம் இல்லை என்பதை நாம் காணலாம்.

தன்னுடைய சுய நல சக்திக்காக சீமோன் பணத்தால் பரிசுத்த ஆவியானவரை வாங்க முயன்றான். இதனால் கர்த்தரின் சேவகனான பேதுருவால், கடுமையாக சபிக்கப்பட்டான். சீமோன் இயேசுவை விசுவாசித்தான் என்று கூறப்பட்டபோதிலும், அவன் பாவப் பிரயச்சித்தத்தின் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற்ற மனிதன் அல்ல. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் உலகின் பொருள்களை கர்த்தருக்கு கொடுப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசஞ்செய்வதைப் பெறமுடியும் என்று அவன் நினைத்தான். 

அவனுடைய வெளியரங்கமான தோற்றம் அவன் இயேசுவின் விசுவாசிபோல் இருந்தாலும், அவனுடைய உட்சிந்தனைகள் இயேசுவின் உண்மை வார்த்தைகளுக்கு சம்பந்தமில்லாதவையாக இருந்தன. மாறாக அவன் பேராசையால் நிரம்பியிருந்தான். சீமோனின் சிந்தனைகளை அறிந்திருந்த பேதுரு, கர்த்தரின் வரமான பரிசுத்த ஆவியை, வெறும் பணத்தால் வாங்க முயன்றதற்காக, அவனைக் கடிந்து கொண்டான்.

இந்நாட்களில், தீய ஆவிகளினால் பிடிக்கப்பட்ட கள்ளத் தீர்க்கதரிசிகள், எல்லா அற்புதங்களும் அதிசயங்களும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் என்று மக்களை நம்பச்செய்து அவர்களை வஞ்சிக்கிறார்கள். இத்தகைய சக்திகளைக் கண்டு மயங்கும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்காக இடைவிடாது ஜெபிக்கும் மக்களை அடிக்கடி நாம் காணலாம். ஆயினும், யாராலும் உலக பேராசைகளினிமித்தம் ஜெபித்து பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதை பெறுதல் முடியாது என்பதை ஒருவன் மனதில் கொள்ளவேண்டும்.

உங்களைச் சுற்றி கூட வசீகரிக்கும் மக்கள் இருக்கிறார்களா? இத்தகைய மக்களைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்கள் மதவெறி நம்பிக்கையுடன் மற்றவர்களை அணுகுகிறார்கள். அவர்கள் தாம் கை வைப்பதன் மூலமாக பிசாசுகளை விரட்டவும், மக்களை பரிசுத்த ஆவியைப் பெறச்செய்யவும் முடியுமென்று கூறுகிறார்கள். ஆயினும், அவர்களிடமிருப்பது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அல்ல, அவை தீய ஆவிகளினுடையவை. யாரெல்லாம் கைவைக்கப் பட்டதினால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டதாக கூறுகிறர்களோ, அவர்கள் தம்மையும் மற்றவர்களையும் தீய ஆவிகளைப் பெறவே வழிநடத்துகிறார்கள்.

யாரெல்லாம் நீர் மற்றும் ஆவியின் வார்த்தைகளை விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெறமுடியும் (1 யோவான் 5:3-7). நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து வேதாகமத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ள போதிலும், நிறைய மனிதர்களின் இருதயத்தில் பாவம் நிறைந்திருப்பதால், அவர்கள் இயற்கைக்கு மேற்பட்ட சக்திகள் மூலமும், மயங்கிய நிலையின் அனுபவங்கள், பல பாஷை பேசுதல், எதிர் காலத்தைப் பற்றி பேசுதல், பிசாசுகளை விரட்டுதல் மூலம் கர்த்தரிடம் சேரலாம் என்றெண்ணுகிறார்கள். இதனால்தான் கள்ளத் தீர்க்கதரிசிகளால், பிசாசினிடத்திலிருந்து வந்த மூடக் கிறிஸ்தவத்தை நிறைய மக்கள் விசுவாசிக்கும்படி அவர்களால் வஞ்சிக்க முடிகிறது.

பேதுரு சீமோனை இப்படியாகக் கடிந்தான்; “தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக் கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடே கூட நாசமாய்ப் போகக்கடவது. உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருப்பதாகக் காண்கிறேன். நீ பேயின் மகன்” இந்நாட்களில் இது போன்ற அநேக போதகர்கள் இருப்பதனால் மிகுந்த துக்கத்துடன் பெருமூச்சு விடவேண்டும். அவர்களில் அநேகர் வசீகரிக்கும் மக்களாயிருக்கிறார்கள். அவர்கள் தம் மந்தையிடம் பணம் கேட்கிறார்கள். நாம் இத்தகைய நம்பிக்கைகளிடமிருந்து நம்மை தூரமாக வைத்து உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெறவேண்டும் (மத்தேயு 3:15, 1 பேதுரு 3:21, யோவான் 1:29, யோவான் 19:21-23).வசீகரிக்கும் மக்கள் கைவைப்பதன் மூலம் கிரியைச் செய்கிறார்கள்.


நாம் இத்தகைய நம்பிக்கையிலிருந்து தூரமாக இருக்கவேண்டும். இந்நாட்களின் சில மனிதர்கள் வல்லமைப் பெற்றுக் கொண்டோர் தம் தலை மீது கைவைத்தால் தாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற குழப்பமான நம்பிகைக் கொண்டவர்களாயுள்ளனர். அவர்கள், வேதாகமம், அப்போஸ்தலர்கள் கை வைத்தமையால் நிறைய மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டதை உணர்ந்ததாக கூறுவதை நினைத்து தாமும் அந்தப்படியே செய்ய முடியுமென நினைக்கிறார்கள். சில கபடதாரிகளும் தாம் மக்கள் தலையில் கைவைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் வாசஞ்செய்யும்படியாக அவரைக் கொடுக்க முடியுமென்ற அற்ப விசுவாசத்துடனிருக்கிறார்கள். நாம் இத்தகைய மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையிட்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஆயினும், ஆதி சபையின் காலங்களிலிருந்த அப்போஸ்தலர்களின் விசுவாசத்தில் இருந்து இவர்களுடையதிற்கு பெருத்த வித்தியாசமிருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்நாட்களின் சில கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால் யாதெனில் அவர்களுக்கு உண்மையான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசம் இல்லாமையே. ஆயினும் பாவி ஒருவனால் தனக்குள்ளோ பிறருக்குள்ளோ, பரிசுத்த ஆவியானவரை வாசஞ்செய்விக்க முடியாது. யாரேனும் பாவிக்குள் ஆவி வந்தது என்று கூறினால் இந்த ஆவியானது பரிசுத்த ஆவியல்ல; மாறாக அது உண்மையான ஆவி போல் நடிக்கும் சாத்தானின் ஆவியாகும்.

ஆதிசபையின் கால அப்போஸ்தலர்களுக்கு இயேசுவே இரட்சகர், யோவானால் ஞானஸ்நானம் பெற்று உலகின் பாவங்களையெல்லாம் தன் மீது சுமந்து சிலுவையில் மரித்ததன் மூலம் உலகின் பாவத்தை எடுத்துப் போட்டார் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் உண்மையான இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்ததன் மூலம் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெறமுடிந்தது. அவர்கள் மற்றவர்களுக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கித்தார்கள், இப்படியாக மற்றவர்களும் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற உதவினார்கள்.

ஆனால் இந்நாட்களில், அநேக கிறிஸ்தவர்கள் தவறான மத நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். பாவம் நிறைந்த போதகர் ஒருவர் பாவியின் மீது கைவைத்து ஜெபிப்பதன் மூலம் உண்மையாகவே பரிசுத்த ஆவியானவரைப் பெறமுடியுமா? இது கொஞ்சம் கூட பொருளில்லாதது. சில மனிதர்கள் தம் இருதயத்தில் பாவங்கள் இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யப் பெற்றதாக கூறுகிறார்கள். ஒருவன் நல்ல மேய்ப்பன் என்பது போல் தன் மந்தைகளுக்கு தெரிபவனாக இருந்தாலும், அவன் மனதில் பாவங்களிருந்தால் அவனால் வேறு யாரும் தம்மில் பரிசுத்த ஆவியனவர் வாசஞ்செய்யும்படி பெறச் செய்ய இயலாது.

அப்படி இல்லாவிட்டாலும் கூட, அநேக மக்களிடம் இத்தகைய தவறான நம்பிக்கை இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே அத்தனைக் கள்ளத் தீர்க்கதரிசிகளால் மக்களை நரகத்திற்கு வழி நடத்த முடிகிறது. இத்தகைய நம்பிக்கைகளை போதிப்போர் கள்ளத் தீர்க்கத்தரிசிகள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இம்மனிதர்கள் பிசாசினால் ஏற்கெனவே பிடிபட்டவர்கள்.

ஒருவனின் இருதயத்தில் பாவமிருந்தால், பரிசுத்த ஆவியானவர் அவனில் சஞ்சரிக்க முடியுமா? இதற்கு பதில், இல்லை. அப்படியானால் தன் இருதயத்தில் பாவமுள்ள ஒருவனால் மற்றவர்கள் தம்மில் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யும்படி பெறச்செய்ய இயலுமா? மறுபடியும் பதில், இல்லை. அப்படியானால், தம் இருதயத்தில் பாவங்களிலிருந்தாலும், வசீகரிக்கும் மக்களால் இந்நாட்களின் அதிசயங்களையும் அற்புதங்களையும் நடத்த எப்படி முடிகிறது? தீய ஆவிகள் அப்படிச் செய்கின்றன. பரிசுத்த ஆவியானவரால் பாவியினுள் சஞ்சரிக்க முடியவே முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மேல் நம்பிக்கை கொண்டிருப்போரினுள் மட்டுமே அவர் சஞ்சரிக்கிறார். உனக்குள் வந்த ஆவி பரிசுத்த ஆவிதான் என்று நிச்சயமாக உனக்குத் தெரியுமா?

யோவான் 3:5 இல் இயேசு கூறினார் “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்.” எப்படியாயினும், உண்மை நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் நம்புவதால் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெறமுடியும். இன்றைய நாட்களின் அநேக கிறிஸ்தவர்கள் செய்யும் தவறு யாதெனில், பாவம் நிறைந்த போதகர்கள் கைவைப்பதன் மூலம் தம்மில் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதைப் பெற முடியும் என்பதை நம்புவதே. இது ஒரு சிக்கலான தவறாகும். இந்நாட்களில் அநேக கிறிஸ்தவர்களும் போதகர்களும், கைவைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையும், திடமும் கொண்டவர்களாயிருக்கின்றனர்.உண்மையான பாவப்பரிகாரத்திற்கும் கை வைத்து ஜெபிப்பதற்கும் உள்ள தொடர்பு.


“கைகளை வைப்பது” என்பதன் பொருள் அதன் மூலம் தன்னிடமுள்ள சிலவற்றை கைவைக்கப்படுபவர் மீது செலுத்துவதாகும். அதனை இப்படி நினையுங்கள்; ஒரு மைக்ரோபோனுடன் பேசினால், ஒலியானது வயர்கள் மூலம் ஆம்பிளிஃபயர் சென்று ஒலிப்பெருக்கி வழியாக வெளியே எல்லோரும் கேட்கும்படியாக வருகிறது. அதுபோல், பழைய ஏற்பாட்டின் படி ஒரு பாவி தன் கைகளை பலி மிருகத்தின் தலைமீது வைக்கும்போது அவன் பாவங்கள் பலிமீது செலுத்தப்பட்டு அவன் பாவ விடுதலை அடைந்தான். அது போலவே கர்த்தரின் ஊழியர்கள் அவர்கள் மீது கைவைக்கும்போது கர்த்தரின் வல்லமை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த வழியில் கை வைத்தல் என்பது “செலுத்தப்படுதல், இடமாற்றம் செய்யப்படுதல்” என்று பொருள்படும்.

வசீகரிக்கும் மக்கள் தம் கைகளை வைப்பதன் மூலம் மக்கள் பரிசுத்த ஆவியானவரை தம்முள் வாசஞ்செய்யும்படி பெற்றுகொள்ளச் செய்வதில்லை, மாறாக தீய ஆவிகளை அவர்கள் பெறும்படிச் செய்கிறார்கள். ஒருவன் தீய ஆவிகளின் வல்லமை உடையவனாயிருந்தால் அவன் கை வைப்பதன் மூலம் மற்றவர்கள் மீதும் தீய ஆவியைச் செலுத்துகிறான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். பேய் பிடித்த ஒருவன் தன் கைகளை மற்றவன் தலைமீது வைத்தால் அப்பேய் அவனுக்குள் போய்விடுகிறது. சாத்தான் பாவிகளின் மூலம் கிரியை செய்கிறான். இதற்காகவே, பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்ய வேண்டுமானால் ஒவ்வொருவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும். சாத்தான் பாவிகளை ஆளுகைச் செய்கிறான், அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும், அவர்கள் பாவ மன்னிப்பு பெறவில்லை என்றால் அவர்கள் பாவிகளே. 

ஒருவன் பேய்பிடித்த ஒருவனின் கைகள் வைக்கப் பட்டவனானால் அவனுள்ளும் பேய் வந்துவிடுகிறது, அவனும் கள்ள அற்புதங்களைச் செய்கிறான். கைவைப்பதன் மூலம் பேய் வந்து வாசஞ்செய்கிறது என்பதை நாமறிய வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெறமுடியும்.

கைவைக்கும் முறையானது ஒன்றை மற்றது மீது செலுத்துவதற்காக கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சாத்தான் கைவைப்பதன் மூலம் அநேக மக்கள் தீய ஆவிகளைப் பெறச்செய்கிறான். இன்றைய நாட்களின் அநேக மக்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையை பணத்தினால் வாங்க முயல்வது இன்னும் பெரிய பிரச்சினையாகும்.


பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்வதைக் குறித்த உண்மையை அநேக கிறிஸ்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.


பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதை பெற்றுக்கொள்வது எப்படி என்று கேட்டால், அநேக மக்களின் பதில் மனம் வருந்தி ஜெபித்தல் அல்லது உபவாசமிருத்தல் என்பதாக இருக்கிறது. இது உண்மையல்ல. சிறப்பு ஜெபங்களை கர்த்தருக்கு ஏறெடுப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் உன்னிடத்தில் வருகிறாரா? இல்லை. யாரெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறார்களோ அவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யும்படி வருகிறார்.

கர்த்தர் உண்மையானவராக இருப்பதால், பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்வதைப் பெறுவதற்கான சட்டங்களை அவர் ஏற்படுத்தினார். இருதயத்தில் பாவமிருக்கும் ஒருவனுக்குள் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்க முடியுமா? மிக உறுதியான பதில். இல்லை. ஒருவன் கை வைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற முடியாது ஒருவன் எழுப்புதல் கூட்டங்களுக்குச் சென்று, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெறும்படியாக கர்த்தரிடம் அடம் பிடித்து ஜெபித்தாலும், பரிசுத்த ஆவியானவர் அவனிடமிருந்து தொலைவிலேயே இருக்கிறார். பாவிகள் கண்டிப்பாக தம்மில் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதைப் பெற முடியாது. பாவிகளும் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யும்படி அவரைப் பெறமுடியும், ஆனால் அவர்கள் பாவங்களுக்கு பிரயச்சித்தம் செய்யும் பொருட்டு நீர் மற்றும் ஆவியைப் பற்றிய நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும்.

யாருக்கெல்லாம் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் குறித்து எதுவும் தெரியாதோ அவர்களால் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெறமுடியாது. இந்நாட்களில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த செய்தி கிறிஸ்தவ இலக்கியம், ஆலயக் கூட்டங்கள், இண்டர்நெட், மின்னனு நூல்கள் மூலமாக உலகெங்கிலும் வெகு வேகமாக பரவி வருகிறது. ஆகவே யார் உணமை நற்செய்தியைத் தேடுகிறார்களோ, அவர்கள் இவற்றை நம்பி பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்வதைப் பெறமுடியும். நீங்கள் இதுவரை பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ் செய்வதைப் பெற்றிராவிட்டால், அவரைப் பெரும் பொருட்டு நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.தவறான நம்பிக்கைக்கு ஒரு முக்கிய உதாரணம்.


கள்ள ஆவிகளைப் பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்களினுள் பேய் இருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். “பரிசுத்த ஆவியானவரின் எழுப்புதல் கூட்டங்கள்” மூலம் மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற முயல்கிறார்கள். இக்கூட்டங்களில் மக்கள் அழுது கொண்டும், உபவாசமிருந்தும், கைகளைத் தட்டிக் கொண்டும் ஜெபிப்பதை நாம் காணலாம். பிரசங்கியார் வெறிப்பிடித்த ஜெபம் செய்யும்படியும், அவர்கள் அப்படிச் செய்யும் வரை பரிசுத்த ஆவியானவர் வரமாட்டார் என்றும் அவர்களிடம் கூறுகிறார். மக்கள் உடனேயே “கர்த்தரே!” என்று கூக்குரலிட்டு வெறியுடன் ஜெபிக்கத் தொடங்குகிறார்கள்.

இத்தகைய வெறிப்பிடித்தோர் இம்முறையில் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெறமுடியுமா? இல்லை. அத்தகைய கூட்டங்களில் மக்கள் கூச்சலிட்டு கீழே விழுவதையும் வித்தியாசமான ஒலிகளுடன் நடுநடுங்குவதையும் நீங்கள் காணலாம். சிலர் கீழே விழுந்து தரையில் இங்கு அங்கும் புரளுகிறார்கள். அவர்கள் கூச்சலுடன் பல பாஷைகளில் பேசத் தொடங்குவதை நாம் காணலாம். யாராவது ஒருவர் தலையைத் தொங்க போட்டுக்கொண்டு கூட்டம் முழுவதும் கூச்சலிட்டுக் கொண்டேயிருக்கிறார். அதனால் கூட்டம் உணர்ச்சி பரவசம் அடைகிறது. சிலருக்கு வலிப்பு வந்து இழுக்கத் தொடங்கிவிடுகின்றது. அவர்கள் உடம்பெல்லாம் நடுங்க பல பாஷைகளில் பேசுகிறார்கள். இத்தகைய நிகழ்வுகள் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது வந்தமைக்கான அடையாளம் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் பிசாசு கிரியை செய்யும்போது என்ன நிகழும் என்று எண்ணிப்பாருங்கள்? மேலே கண்டவற்றைச் செய்வது பரிசுத்த ஆவியா? நிச்சயமாக இல்லை.


அநேக கிறிஸ்தவர்களை சாத்தான் வஞ்சிக்கிறான்.


இந்நாட்களில், சாத்தான் விரும்பும்படியான மத வாழ்வினுள் அநேக கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரைப் பெறும் பொருட்டு வல்லமை மிக்க போதகர் கைவைப்பதை பெறவேண்டும் என்று சாத்தான் மக்களிடம் கூறி அவர்களை வஞ்சிக்கிறான். நிறைய கிறிஸ்தவர்கள் இதனை இயல்பான கொள்கையாக விசுவாசிக்கின்றனர். அவர்கள் அளவுக்கதிகமாக ஜெபிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெறமுடியும் என்ற யோசனையையும் அவர்களிடம் முளைவிடச் செய்கிறான். இத்தகைய விசுவாசமுள்ள மக்களை இரண்டு மூன்று மடங்குகளாகப் பெருகச் செய்ய சாத்தான் முயற்சி செய்கிறான்.

ஆகவே, அநேக கிறிஸ்தவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாது. மேலும் அவர்கள் அவற்றைத் தெரிந்துக் கொள்ளக் கூட முயற்சி செய்வதில்லை. சாத்தான் நம் தலையில் தினிக்க முயலும் யோசனைகள் அலட்சியம் செய்ய போராடவேண்டும், மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து படித்து அதனை விசுவாசிக்கவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போரின் மீது மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யும்படி வருகிறார். இதனை நீங்கள் விசுவாசித்தேயாக வேண்டும்.பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைக் குறித்த கிறிஸ்தவர்களின் தெளிவின்மை.


முதலில், வசீகரிக்கும் கிறிஸ்தவ பக்தர்களிடையே நம்பிக்கையைக் குறித்த தெளிவின்மை இருக்கிறது. அவர்கள் தம் இருதயத்தில் பாவங்களிலிருந்தபோதிலும் பரிசுத்த ஆவியைப் பெற முயல்கிறார்கள். அவர்கள் தவறுதலாக, தம்மிருதயத்தில் பாவங்களிலிருந்த போதிலும், பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெறமுடியும் என்று நம்புகிறார்கள். ஆயினும், ஒருவனால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது எந்த விசுவாசமுமில்லாது பரிசுத்த ஆவியானவரின் முழுமையைப் பெறமுடியாது.

இரண்டாவதாக, மக்களின் மூர்க்கத்தனம் அவர்கள், பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வாசஞ்செய்யும்படியாக பெறுவதைத் தடுக்கிறது. அப்படியானால் ஒருவன் மூர்க்கமாக நடக்கவில்லை என்றால் அவன் பரிசுத்த ஆவியைப் பெற முடியும் என்று இது பொருள்படுகின்றதா? இவ்வுலகில் சிறிதளவேனும் மூர்க்கத்தனம் இல்லாத மனிதன் இருக்கிறானா? கர்த்தரால் மன்னிக்கப்பட முடியாத மூர்க்கன் யாரெனில் தேவ வாக்கினுள் தன் சொந்த யோசனைகளைத் திணிப்பவனே. பெரும்பாலான மனிதர்கள் உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அலட்சியம் செய்துவிட்டு தம் சொந்த வழிகளின் மூலம் பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்யும் படியாகப் பெற முயல்கின்றனர். ஆயினும் யாரெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யும்படி வருவார்.

மூன்றாவதாக, கர்த்தர் முன் வெளிப்படையாக பாவ அறிக்கைச் செய்வதன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்யும்படி வருவார் என்று கூறப்படுகிறது. ஆகவே, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறவேண்டும் போது பாவ அறிக்கைச் செய்யும்படி வேண்டப் படுகிறார்கள். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், ஒருவன் பாவ அறிக்கைச் செய்யும்பொழுது பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதை அவனால் பெறமுடியாது. அநேக கிறிஸ்தவர்கள் இந்நாட்களில் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்வதைப் பெறவும், அவரின் முழுமையைப் பெறவும் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருதயத்தில் இன்னும் பாவமிருப்பதால் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதை அவர்கள் பெறமுடியாது. இத்தகைய முரட்டுத்தனம் நிறைந்த ஒருவன் பிசாசின் பிடியில் அகப்படுவான்.

நான்காவதாக, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப் பெறும்படியாக கர்த்தரிடம் மன்றாடி ஜெபித்தால், கர்த்தரின் ஆசீர்வாதமாக அது கிடைக்க முடியும் என்று சிலர் கூறுகின்றனர். அதனை பிச்சை கேட்பதன் மூலம் பெற முடியாது. இது தவறான சிந்தனையாகும்.

ஐந்தாவதாக, சிலர் பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்வதை ஆவிக்குரிய வல்லமையைக் கொண்டிருப்பதாக சுட்டி காட்டுகிறார்கள். பல பாஷையில் பேசுதல் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதற்கான பொதுவான அத்தாட்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் இயேசுவின் பெயரால் பேய்களை விரட்டுவதன் மூலமோ அல்லது பல பாஷைகளைப் பேசுவதாலோ பரிசுத்த ஆவியானவர் ஒருவனின் இருதயத்தில் வாசஞ்செய்வதில்லை. பாவம் சாத்தானின் உடமை. ஒருவன் தன் இருதயத்தி;ல் பாவமிருந்தாலும் தான் சில வித்தியாசமான வல்லமைகளைப் பெற்றிருப்பதால், தான் உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ்செய்யப் பெற்றவன் என்று அவனால் கூறமுடியுமா? மீண்டும், இது பேய்களின் விஷமம்.

நீர் மற்றும் ஆவியைக் குறித்த நற்செய்தியே இயேசு நல்கிய ஒரே உண்மையான நற்செய்தியாகும். இதனாலேயே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்வதைப் பெற வழி நடத்த முடியும். இன்னும் நீ உன் சொந்த வழியில் பரிசுத்த ஆவியையும் பாவ மன்னிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும் என நினைத்தால் நீ மிக ஆழமாக ஏமாற்றப்பட்டிருக்கிறாய். நீ உன் தவறான விசுவாசத்திலிருந்து உன்னை விடுவித்துக் கொண்டு ஆவிக்குரிய யோசனை மற்றும் அதிகாரப் பூர்வமான விசுவாசத்திற்கு வருவாய் என்று நம்புகிறேன்.

இந்நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள் பேய்களால் பிடிக்கப்பட்டவர்கள் என்று கூறுவது மிகையல்ல. உலகின் அநேக கிறிஸ்தவர்கள் பிசாசின் வல்லமைக் குட்பட்டதற்கான காரணம், அவர்கள் சிறப்பு எழுப்புதல் கூட்டங்கள் அல்லது தம் தலையில் கைவைக்கப் படுதல் மூலம் பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்யப் பெற விரும்புவதேயாகும். அவர்கள் குறிப்பிட்ட நபர்களான ஜெபவீட்டு மேலாளர்களிடமோ, மூத்த டீக்கன்களிடமோ, எழுப்புதலாளர்களிடமோ, பரிசுத்த ஆவியானவரின் வல்லமைப் பெற்றதாக கூறப்படும் போதகரிடமோ செல்லுகிறார்கள். அவர்கள் கை வைத்து ஜெபிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுவிடலாம் என்று அவர்களிடத்திற்குச் செல்கிறார்கள். ஆயினும், அவர்கள் இயேசுவை எத்தனை விசுவாசித்த போதிலும் இத்தகைய விசுவாசம் மூலம் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்வதைப் பெற்றுக் கொள்ள யாராலும் முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒருவன் பரிசுத்த ஆவியானவரைத் தன்னுள் வாசஞ் செய்யும்படி பெறச்செய்ய கர்த்தரைத் தவிர வேறு யாராலும் முடியாது.

சீமோனைப் போன்று, அநேக மக்கள் பரிசுத்த ஆவியானவரை விலைக்கு வாங்க முயலுகின்றனர். அவர்கள் நற்செய்திக்கு பதிலாக உலகின் பாடங்களை நம்பி அதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற முயல்கிறார்கள். உலகில் உள்ள அநேக கிறிஸ்தவர்கள் இம் மன நிலை உடையவர்களாக உள்ளனர். யாருக்கு அத்தியாவசியமான தகுதிகள் இருக்கிறதோ, அவர்களிடம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் அவரைப் பெறும்படி வருகின்றார். பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான ஒரே சூத்திரம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதே. மேலும் இதுவே உண்மைக்கான ஒரே பதில் (அப்போஸ்தலர் 2:38).

ஆதிசபையின் காலங்களில், ஒரு குறுகிய காலத்தில் மட்டும் தலையில் கைவைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இதன் பிறகு மக்கள் எப்போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிக்கிறார்களோ, அப்பொழுதே பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்வதைப் பெற முடிந்தது. ஆகவே, வேத வாக்கினை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெறும்போது நடக்கும் ஆவியானவரின் கிரியைகளைத் தவிர, மீதி எல்லாம் பிசாசின் வேலைகளாகும். கர்த்தர், பிசாசுகள் எல்லாம் சாத்தானின் ஊழியர்கள் என்கிறார். மேலும் சாத்தான் புத்திசாலித் தனமாக காரியமாற்றி, மக்கள் இயேசுவை விசுவாசித்தாலும், அவர்கள் முழு பாவ மன்னிப்பை பெறக் கூடாததாகச் செய்தான். சாத்தான் இயேசுவை விசுவாசித்து, தம் தலைமேல் கை வைக்கப்படுவதன் மூலம் பரிசுத்த ஆவியைத் தருவதாக அவர்களிடம் பொய் கூறுகிறான். சாத்தான் இத்தகைய வித்தையின் மூலம் உலகில் தன் எல்லையை அதிகப்படுத்தியுள்ளான்.

பிசாசினால் பிடிக்கப்பட்டவர்களிடம் காணப்படும் அறிகுறிகளைப் பார்ப்போம். முதலில், ஒரு குறி சொல்பவன், பேயாட்டம் ஆடுபவன் ஆகிய பிசாசினால் கட்டுண்டவர்களின் அறிகுறிகளை ஆராய்ந்தால், அவர்கள் நடுக்கம் நிறைந்த வலிப்புடையவர்களாகவும், தூங்கும் நிலை அடைந்தவர்களும், மயங்கிப் போகிறவர்களாயும் இருக்கிறார்கள். அவர்களுடைய நாக்கு மடங்கி அவர்களுடைய சித்தத்திற்கெதிராக வித்தியாசமான வார்த்தைகள் அவர்கள் வாயிலிருந்து வருகின்றன. வித்தியாசமான பாஷைகளை அவர்கள் பேசுகின்றனர்.

மந்திரவாதிகள் மற்றும் கை வைத்ததன் மூலம் பேய் பிடித்த கிறிஸ்தவர்கள் ஆகிய இருவரும் இத்தகைய அனுபவங்களின் கூட்டு உரிமையாளர்கள். ஒரு வசீகரிக்கும் எழுப்புதலாளர் மைக்கை எடுத்து, “அக்கினியினால், அக்கினியினால், அக்கினியினால்” என்று கத்தும்போது சபையோர் உணர்ச்சி அடைந்த நிலையில் சுயக் கட்டுப்பாட்டை இழக்கின்றனர். அவரிடம் கைவைக்கப்பட விரும்பும் மக்கள் முன்னால் வருகின்றனர். அவர்கள் கட்டுக்கடங்காத நடுங்கும் வலிப்பை அனுபவித்து, பல பாஷைகளில் பேசுகின்றனர். இந்த அறிகுறிகள் பரிசுத்த ஆவியின் அறிகுறிகள் போல் தோற்றமளிக்கும் பிசாசின் வேலைகள்.

எல்லா மதங்களிலும் காணப்படும் குறிசொல்பவர்கள் மற்றும் மந்திரவாதிகளினால் அழைக்கப்படும் தீய ஆவிகளால் கட்டுண்ட மக்கள் கைவப்பதன் மூலம் பிசாசிடம் அகப்பட்டுக்கொண்ட கிறிஸ்தவர்களிடம் காணப்படும் அதே அறிகுறிகளையே காட்டுகின்றனர். ஆயினும், இந்த அத்தாட்சியையும் மீறி மக்கள் தவறாக அர்த்தம் கொண்டுள்ளனர். அந்த கிறிஸ்தவர்கள், இத்தகைய அறிகுறிகளை அனுபவிக்கும்போது தாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக நினைத்து ஆழமான குழப்பத்திற்குள் விழுகின்றனர்.


கிறிஸ்தவர்களை குறி சொல்பவர்களாக்கி சாத்தான் கிரியை செய்கிறான்


பிசாசினால் கட்டுண்டவர்களை சாத்தான் தீர்க்க தரிசன ஜெபம் செய்யும்படிச் செய்கிறான். அவர்கள் “நீ ஒரு சிறந்த தலைவனாவாய். உன் முன்பாக ஆயிரம் ஆடுகள் மேயும். கர்த்தர் உன்னை எதிர்காலத்தில் பயிற்றுவித்து உன்னைச் சிறந்த தலைவனாக்குவார்.” என்று தீர்க்க தரிசனம் கூறும்படிச் செய்கிறான். மற்றவர்களிடம் வஞ்சிக்கும் சொற்களை “நீ கர்த்தரின் சிறந்த சேவகனாவாய், நீ கத்தரின் மதிப்பிற்குரிய ஊழியனாவாய்” என்று கூறி, அவர்கள் வாழ் நாள் முழுவதும் சாத்தானின் சேவகர்களாக இருக்கும்படி மக்களை ஊக்குவிக்கிறார்கள்.

மற்றவர்களின் எதிர்காலம் குறித்து சோதிடர்களும் கூறுகிறார்கள். “உன் எதிர்காலத்தில் நீரிடத்தில் எச்சரிக்கையாயிரு.” “நீ நிறைய பணம் சம்பாதிப்பாய்.” “கிழக்கிலிருந்து சிறந்த மனிதன் உன் முன் தோன்றி உனக்கு உதவுவான்.” இவைகள் அவர்கள் கூறுவனவற்றின் உதாரணமாகும். பிசாசுகளினால் பீடிக்கப் பட்டவர்களிடமிருந்து முதலில் தோன்றும் அறிகுறி கள்ளத் தீர்க்க தரிசனமாகும். 

பிறகு அவர்கள் பல பாஷைகளில் பேசுவார்கள், அவற்றை அவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் நடுக்கத்தை உணருவார்கள், அவர்களுடைய தனித்துவம் சிதைவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஒரு மந்திரவாதியையோ அல்லது குறிசொல்லுபவனையோ சந்திக்கும் போது அவர்களிடம் தனித்துவம் அப்படியே இருக்கிறதா என்பதை மதிப்பிடமுடியுமா? அவர்களை விடவும் வயதில் மூத்தவர்களிடம் முரட்டுத்தனமாக அவர்கள் பேசுவார்கள். 

ஆயினும், வேதாகமம் கூறும் உண்மையான இயேசு தம் ஞானஸ்நானத்தினாலும் சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலும் உலகின் எல்லாப் பாவங்களையும் சுத்தப் படுத்தி விட்டார் என்பதை விசுவாசிக்கும் மக்கள் உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்வதைப் பெற்றுள்ளனர். இம் மனிதர்கள் கூட மற்றவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றி கூறி அவற்றை விசுவாசிக்கும்படிச் செய்து, அவர்களைப் பாவ மன்னிப்பு பெறச் செய்து பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யும்படியாக அவர்கள் பெற வழி நடத்துகிறார்கள். அவர்கள் நீதியின் வாழ்க்கை வாழ முயல்கிறார்கள், அவர்களுடைய தனித்துவம் மிக விரும்பத்தக்கதாகவும், நன்றாகவும் இருந்து, கர்த்தர் ஆசீர்வதித்த உண்மைக்கும் கர்த்தர் எதிர்பார்க்கும் வாழ்க்கைக்கும் மற்றவர்களை வழி நடத்துகிறார்கள். அவ்வப்போது கர்த்தர் அவர்களை பரிசுத்தவான்களாகவும் அவர்கள் மனம் உலகிற்கு திரும்பாதபடியும் இருக்கச் சந்திக்கிறார்.

பாவ மன்னிப்பு பெற்ற நீதிமான்கள், தீய ஆவிகளால் தன் தனித்துவம் அழியப் பெற்ற மக்களிடமிருந்து நிச்சயமாகவே வேறுபட்டவர்கள். ஒருவன் பாவ மன்னிப்பைப் பெறுவதனால் பரிசுத்த ஆவியானவர் அவனுள் வாசஞ் செய்யப்பெறும் போது அவன் தனித்துவம் மீண்டும் உயிர் பெறுகிறது. அத்துடன், நீதிமான்கள் மற்றவர்களின் மோசமான சூழ்நிலையைக் குறித்து ஆழ்ந்த கவலை உடையவர்களாகவும், அவர்களுக்கு உண்மையில் கர்த்தரின் வார்த்தைகள் தேவையென்பதையும், அவர்கள் விடுதலையடைய வேண்டும் என்று ஜெபிப்பதிலும், அவர்களுக்கு உதவும் படியாக சுய பலிகளாகவும் தம்மை அர்ப்பணித்துக் கொள்வர்.

மறுபுறம், பிசாசினால் கட்டுண்ட மக்களின் தனித்துவம் பயங்கரமாக அழிந்து போயுள்ளதை நாம் காணலாம். சாத்தான் அவர்களை கட்டுப்படுத்தி அவர்களைத் தன் விருப்பத்திற்கேற்றவாறு வளைக்கிறான். ஏனெனில் அவர்கள் தம் நடுக்கம் மற்றும் பல பாஷைகளில் பேசுதல் ஆகியவற்றை பரிசுத்த ஆவியானவரின் வரம் என்றெண்ணுகின்றனர். ஆயினும், இந்த அனுபவங்கள், நிச்சயமாக பரிசுத்த ஆவியின் வரங்களல்ல.

நிறைய போதகர்கள் கர்த்தரின் பெயரால் தீர்க்க தரிசனம் கூறுதல், அநேக அற்புதங்களைச் செய்யும் வல்லமை பெற்றிருத்தல், பல பாஷைகளில் பேசுதல் ஆகிய தாம் பெற்றிருக்கும் வல்லமைகளைக் குறித்து அதிக பெருமையுடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இருதயத்தில் இன்னும் பாவமிருந்தால், அவர்களுடைய வல்லமைகள், அவர்கள் பிசாசினால் கட்டுண்டவர்கள் என்பதற்கான மிகச் சிறந்த அத்தாட்சியாகும். ஆகவே, அவர்களால் மற்றவர்களை பரிசுத்த ஆவியானவரை தம்முள் வாசஞ் செய்ய பெறச் செய்ய முடியாது. ஆனால் பிசாசை அப்படி பெறச் செய்யமுடியும். மேலும், சாத்தான் வஞ்சனை நிறைந்தவன் ஆகையால், அவர்கள் செய்த அற்புதங்கள் வெகு சுலபமாக சிறிது காலத்தில் மறைந்துவிடும்.

பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளுக்கும் சாத்தானுடைய கிரியைகளுக்கும் மிகத் தெளிவான வித்தியாசமிருக்கிறது. முதலில் பரிசுத்த ஆவியானவர் எந்த குறிப்பிட்ட அனுபவங்களையோ அல்லது அற்புதமான வரங்களையோ கொடுக்காதது போல் தோன்றினாலும், காலப்போக்கில், காலைக் கதிரவன் சிறிது சிறிதாகப் பிரகாசிப்பது போல நீதிமானின் இருதயத்தில் கர்த்தரின் வல்லமை வளருகின்றது.பிசாசினால் கட்டுண்ட கிறிஸ்தவர்கள்.


 • அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற முயன்றபோதிலும் அநேக மக்கள் ஏன் பிசாசு பிடித்தவர்களாகிறார்கள்?
 • கள்ளத் தீர்க்கத் தரிசிகள் கை வைப்பதன் மூலம் அவர்கள் பிசாசைப் பெறுவதால்.


ஆச்சர்யமாக, கள்ளத் தீர்க்கதரிசிகள் கை வைத்தமையால் அவர்கள் பிசாசுகளை பெற்றதால் நிறைய இயேசுவின் பக்தர்களின் உடலும் ஆவியும் அழிந்து போனதை நம் காணலாம். அவர்கள் விசுவாசம் வேதம் கூறும் வசனங்களில் நிலை பெற்றிராததால், அவர்களுக்கு கர்த்தரிடம் எந்த வேலையுமில்லை. தம்முடைய வல்லமைகள் சாத்தானுக்கு அநேக ஊழியர்களை ஏற்படுத்துகிறது என்பது தெரியாமலேயே, தம் வல்லமைகளை ஓய்வின்றி உபயோகிக்கிறார்கள். கிறிஸ்தவத்தினுள் அவர்கள் வல்லமையை ஏன் இத்தனைக் கஷ்டப்பட்டு உபயோகிக்க வேண்டும்? ஏனெனில், வல்லமை என்று அவர்கள் கூறிக்கொண்டிருப்பவற்றை அவர்கள் உபயோகப்படுத்தாவிட்டால் அவை மறைந்துவிடும். இது காரணம் பற்றியே அவர்கள் ஓய்வின்றி போனார்கள். 

ஒரு முறை எனக்கு தெரிந்த இயேசுவை தீவிரமாக விசுவாசிக்கும் ஒருவர் இருந்தார். மேலும் அவர் கர்த்தரின் அநேக வல்லமைகளைப் பெற்றவர் போல் காணப்பட்டார். அவர் பரிசுத்த ஆவியானவரின் முழுமையை மக்கள் பெறும்படி அவர்களை ஊக்குவித்து எழுப்புதல் கூட்டங்களை நடத்தி கைவைப்பதன் மூலம் பிசாசுகளை விரட்டி, பல பாஷைகளில் பேசுதல், சுகமளித்தல் போன்ற அதிசயங்களையும் நிகழ்த்தினார். அவர் புகழ் பெறும் ஒன்றாகவும், தம் அதிசயங்களால் மரியாதைப் பெற்றவருமாயினார். ஆயினும், அவர் சீக்கிரமாகவே இயேசுவை, “ இயேசுகிறிஸ்து சரியல்ல, அவர் தேவகுமாரன் அல்ல” என்று மாறுதலிக்கிறார். அவர் இயேசுவை மறுதலித்தார். அவையேன், தானே கர்த்தரென்றும் கூட பறைச் சாற்றினார். அவர் இறுதியில் தன்னிருதயத்தில் இயேசுவை கொலை செய்ததுமில்லாமல் அநேக கிறிஸ்தவர்கள் இருதயத்திலும் இயேசுவை கொலை செய்தார். 

அவர்கள் தொடர்ச்சியாக ஜெபித்து, இயேசுவின் நாமத்தினால் அதிசயங்களையும் அடையாளங்களையும் செய்யப் பயிற்சி செய்யவேண்டும். “நான் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வரத்தைப் பெற்றேன்.” என்று கூறும் மக்கள், தொடர்ச்சியாக நற்செய்தியை பிரசங்கித்துக் கொண்டேயிருக்க வேண்டும், இல்லையென்றால் அவர்களின் போலியான மகிழ்ச்சி சீக்கிரம் மறைந்துவிடும். இம்மனிதர்கள் சாத்தானின் வரங்களான மற்ற பாஷைகளில் பேசுதல், சுகமளித்தல், அல்லது தீர்க்க தரிசனம் கூறுதல் ஆகியவற்றின் மீது ராஜ மரியாதை இல்லாதவர்களாக, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் சாத்தானின் கிரியைகளுக்கு உண்மையானவர்களாக இல்லாவிட்டால், அவன் அவர்களை சுகவீனர்களாக்கி விடுகின்றான். குறிசொல்பவனோ, மந்திரவாதியோ தான் சாத்தானின் சேவகன் என்பதை அலட்சியம் செய்யும் போது அவர்கள் சுகவீனர்களாகிப் போவார்கள். அதனாலேயே அவர்கள் சாத்தானின் வரங்களை இடைவிடாது உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் வல்லமை போனபின் கஷ்டத்தில் தள்ளப்படுவர்.

இத்தகைய மக்கள், சாத்தான் அவர்களின் வழிகாட்டியாக இருப்பதால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் அலட்சியம் செய்கின்றனர், அவர்கள் தொடக்கத்திலிருந்தே தவறான நம்பிக்கையினுள் இருக்கிறார்கள். ஏனெனில் தாம் அப்போஸ்தலர்களிடம் இருந்தது போன்ற வல்லமைப் பெற்றவர்கள் என்ற மாயையிலிருப்பதால், தம் திறமைகளைப் பார்க்கும் படியாகவும், மக்கள் பல பாஷைகளில் பேசச் செய்யும் பொருட்டு கைவைப்பதன் மூலமும், பிசாசுகளை விரட்டுவதுமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யப் பெற்றிருக்கிறோம் என்ற ஆழமான நம்பிக்கை அவர்களிடமிருக்கிறது.

அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறும் முறைகளை மக்களுக்கு போதிக்கின்றனர். அவர்கள் மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் அவரைப் பெறலாமென நினைக்கிறார்கள். ஆயினும், பரிசுத்த ஆவியானவரைப் பெறும் இம்முறையானது வேதவாக்கின் அடிப்படையிலானதல்ல. இப்படி இருந்தும் கூட, இயேசுவை விசுவாசிக்கும் ஒருவன் பல பாஷை பேசி தீர்க்க தரிசனங்கள் உரைத்தானென்றால், அது பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள் வந்தமைக்கான அத்தாட்சி என்று அவர்கள் கூறுகின்றனர். அநேக மக்கள் பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ்செய்வதைக் குறித்து உண்மையில் சரியாகப் புரிந்து கொள்ளாமையால், கள்ளத்தீர்க்க தரிசிகளின் போதனைகளைக் கற்று பின்பற்றினால் தாமும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று அவர்கள் நம்புகின்றனர். இப்படியாக சாத்தானால் கிறிஸ்தவர்கள் அசுத்த ஆவிகளினால் நிரம்பி இம்மக்களை அரசாட்சி செய்ய அவனால் முடிகிறது. இம்முறைகள் யாவும் சாத்தான் வைத்துள்ள பொறிகளாகும்.

கள்ளத் தீர்க்கத்தரிசிகளின் போதனைகள் மூலம் நிறைய மக்கள் பிசாசின் பிடியில் மாட்டிக் கொண்டுள்ளனர். சாதாரண விசுவாசிகள் உற்சாகமில்லாத மத வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், பிசாசின் பிடியிலுள்ள மக்கள் தீய ஆவிகளின் வல்லமையை உபயோகிப்பதால், நாம் காணும் படியான உற்சாகமான மத வாழ்க்கை வாழுகின்றனர். அவர்கள் காட்டும் திறன்கள் என்ன? சுகமாக்கும் வல்லமை அவர்களிடமிருக்கிறது. பல பாஷைகள் பேசுதல் மற்றும் கைவைப்பதன் மூலம் மற்றவர்களையும் பிசாசின் பிடியில் மாட்டவைக்கும் வல்லமையும் அவர்களிடமிருக்கிறது. கை வைப்பதன் மூலம் ஒன்றை மற்றவர்கள் மீது இடமாற்றம் செய்ய முடியும் என்பதை நாம் அறிய வேண்டும். மேலும் இம்முறை மூலமாக பிசாசின் இராஜ்யம் மிகவும் பெரிதானது.தீய ஆவிகள் மனிதனின் பேராசை மூலம் கிரியைச் செய்கின்றன


முக்கிய வசனங்களில் காணப்பட்ட சீமோன் போன்றவர்களிடம் சாத்தான் வேலைச் செய்கிறான். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த விசுவாசம் இல்லாவிட்டாலும், கை வைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெறமுடியுமென்று இம்மக்கள் கூறுகின்றனர். இந்நாட்களில் அநேகர் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டமையால், மனம் வருந்தி ஜெபித்தல், உபவாசமிருத்தல், சுய-பலியிடுதல், அல்லது கைவைப்பதன் மூலமாக பரிசுத்த ஆவியைப் பெற முயற்சிக்கிறார்கள். ஆயினும், அவர்கள் பிசாசினால் கட்டுப்பட்டவர்கள், மேலும் அவர்கள் சபிக்கப்பட்ட வாழ்வு வாழ்கிறார்கள்.

கைவைத்தல் என்றழைக்கப்படும் இந்த இடைத்தரகனைக் குறித்து நாம் விழிப்புணர்ச்சி உடையவர்களாக இருக்க வேண்டும். இது பிசாசின் வேலைகளை ஏதுவாக்குகிறது. சீமோனின் கள்ளத்தனத்தை போன்றே இவர்களும் கள்ளத்தனத்தைப் பெற்றிருப்பதால் கர்த்தர் முன்பாக இவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளாவர். இயேசுவை விசுவாசிப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் இருதயத்தில் பாவமிருந்தால் பிசாசுகள் அவர்களைப் பிடிக்கலாம். இம்மக்கள் பிசாசின் கிரியைகளின் மூலமாக அதிசயங்களைச் செய்யும் வல்லமையுடையவர்கள். சாத்தான் தன் ஊழியர்கள் கை வைப்பதைப் பெறும்படியாக மக்களை வழி நடத்துகிறான். அப்படி செய்வதனால் அவர்களை பிசாசின் உடமைகளாக்கி அவனின் இராஜ்யத்தை உலகெங்கும் கட்டுகிறான். இக்காலங்களில் 2பெந்தெகோஸ்தே-வசீகரிக்கும் இயக்கம் என்பது உலகெங்கும் கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


2மேற்குலக கிறிஸ்தவமானது பொருளாசீர்வாதம் மற்றும் கூட்டமாக வாங்குதல் ஆகியவற்றினால் 20-ஆம் நூற்றாண்டின் பின் அறைப்பகுதியில் சீர் குலையத் தொடங்கியது. அதே சமயம், இதன் பலனாக, இயேசுவினோடே நெருக்கமாக நடக்க விரும்பி அதற்கான வழியைத் தேடிய கிறிஸ்தவர்கள் தாம் முன்பு சார்ந்திருந்த ஆலயங்கள் காய்ந்து போனதால், திருப்தியின்றி போனார்கள். மற்றவர்கள் வெறுமையுடன் ஒன்றிபோயினர் அல்லது மிகவும் மெதுவான ஆவிக்குரிய வளர்ச்சியைப் பெற்றனர். அதே நேரம் வேறு சிலர் தாம் இயேசுவின் மீது வைத்திருக்கும் தனிப்பட்ட அன்பை வெளிக்காட்ட முடியாததால் உள்ளக் கொதிப்புடன் இருந்தனர். 

பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கம் என்பது இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரத்தொடங்கியது. இந்த இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பல பாஷை பேசுதல், தீர்க்கத் தரிசனம் கூறுதல், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தல், முதல் பெந்தெகோஸ்தே நிகழ்வுகளை இரசித்தல் ஆகிய அனுபவங்களையும் நடவடிக்கைகளையும் விரும்பினார்கள். அவர்களுடைய அதீத ஆசைகளினால், அவர்கள் தம்மை பரிசுத்த ஆவியின் பிரிவு என்று தாமாகவே ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் அவர்களுடைய போதனைகளையும் நடைமுறைகளையும் வேதாகமத்தின் அடிப்படையில் அமைந்தவையல்ல. 

வளரும் நாடுகளில் இந்த இயக்கம் அவர்களின் தேவைக் கேற்றவாறு வெகுவாக முன்னேறியது. அவர்களுடைய தலைவர்கள் பொருளாசீர்வாதம், ஆரோக்கியம் மற்றும் மத ஆசைகள் மூலம் வளரும் நாடுகளின் கிறிஸ்தவர்களைக் கவர்ந்தனர். புதிய-பெந்தேகோஸ்த் போன்ற முக்கிய இயக்கத்திலிருந்து சிறிது விலகிப்போன இயக்கங்கள் புதிய கால இயக்கத்தின் போதனைகளைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிகின்றது.

இவ்வுலகம் சிறிது சிறிதாக ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. கடைசி நாட்களில் நாம் மறுபடியும் பிறக்கவேண்டுமானால், சாத்தானின் கிரியைகளை நாம் தெரிந்துகொண்டு அவன் திட்டங்களை திடமாக எதிர்த்து நிற்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம் பாவங்களிலிருந்து ஒரே தரமாக இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதை பரிசாகப் பெறவேஎண்டும். கர்த்தரின் ஆவி நம்மில் எப்படி வருகிறது என்பது குறித்த நல்ல அறிவுடன் உண்மைக்கு நாம் திரும்ப வேண்டும்.

கர்த்தர் கூறியது போல, “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்” (ஓசியா 4:6). இந்நாட்களில் சத்தியத்தை தேடுபவர்கள், அறிவில்லாமல் இருப்பதால் வசீகரிக்கும் மக்களால் தவறாக வழி நடத்தப்பட்டு அழிந்து போகிறார்கள். மக்கள் கூறுகிறார்கள், பெந்தெகோஸ்தே சபைகளை பாலைவனத்தில் நிறுவினால் அங்கும் மக்கள் கூடுவர். இது ஏன்? வசீகரிக்கும் மக்கள் மற்றவர்களைத் தம் போலியான வல்லமையினால் குழப்பத்தில் ஆழ்த்தியும், கைவைப்பதன் மூலம் பிசாசினால் அவர்கள் கட்டுண்டு போவதற்கு வழி நடத்தியும், தம் ஆலயங்களை விரிவு படுத்துகிறார்கள். அவர்களுடைய சிறப்பு யாதெனில், ஒரு முறை அவர்கள் கை வைப்பதன் மூலம் பிசாசினால் பிடிபட்டுவிட்டால், மதரீதியாக வாழும் பொருட்டு அவர்கள் ஆர்வமிக்கவர்களாகி விடுகிறார்கள்.

வசீகரிக்கும் மக்களிடம் காணப்படும் இன்னொரு சிறப்பம்சம் யாதெனில் அவர்கள் பெருந்தொகையான பணத்தை காணிக்கையாக அவர்கள் ஆலயங்களுக்குக் கொடுக்கிறார்கள். மேலும், நிபந்தனையின்றி வெறியுள்ள பக்தர்களாக மாறி விடுகின்றனர். பிசாசின் வல்லமைகளை வைத்துக் கொண்டு நற்செய்தியை அறிவிப்பதிலும் கூட அவர்கள் வெகு ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் தாம் எங்கு செல்கிறோம் என்பதனை அறியாமலேயே நரகத்தில் முடிவடைவார்கள். இம்மக்கள், பிசாசின் வல்லமைகளைத் தம் இரட்சிப்பின் அடையாளமாக வெகு தீவிரமாக விசுவாசித்து, சிறிதும் சந்தேகமின்றி பரலோகத்தை எதிர்ப் பார்க்கிறார்கள். ஆயினும் அவர்கள் இருதயத்தில் பாவமிருக்கிறது. மேலும் அவர்கள் அழிவிற்காக நாசமடைந்தனர்.

கீழ்கண்ட கேள்வியை அவர்களிடம் கேட்டால் “நீ கர்த்தரை விசுவாசித்த போதிலும், உன் இருதயத்தில் பாவமிருக்கிறதா? அவர்கள் தம்மில் இயற்கையாகவே பாவமிருக்கிறது என்று நிச்சயமாக பதிலளிப்பார்கள். அவர்கள் இயேசுவை விசுவாசித்த போதிலும் தன் இருதயத்தில் பாவமில்லாமலிருப்பது நடவாத காரியமென்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

போலி வல்லமையை அவர்கள் பெற்றிருப்பதால் இயேசுவை விசுவாசிப்பது அவர்களுக்கு சுகமாக இருக்கிறது. ஆகவே, அவர்கள் இருதயத்தில் பாவங்களிலிருந்தாலும் அவர்கள் பரலோகம் செல்லத் தகுதியானவர்கள் என்றெண்ணுகிறார்கள்.

இது எத்தனை குழப்பமான எதிர்பார்ப்பு? அவர்களுடைய உறுதியான நம்பிக்கைக்கு காரணம் அவர்களிடம் இயற்கைக்கு மேலான சக்திகள் இருப்பதுவே. பல பாஷைகளில் பேசுதல், காட்சிகளைக் காணுதல், சுகமில்லாதவர்களை சுகமாக்குதல் போன்றவற்றை ஏற்கெனவே அனுபவித்தமையால் அவர்கள் இவையெல்லாம் பரிசுத்த ஆவியின் கிரியைகள் என்று நினைத்து உறுதியாக நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் தாம் பாவ விடுதலை மற்றும் பரிசுத்த ஆவியை இந்த அனுபவங்கள் மூலம் உறுதியாகப் பெற்றுவிட்டதாக தமக்குள் கூறிக்கொள்கிறார்கள்.

இரட்சிப்பின் வார்த்தைகளைக் குறித்த சரியான அறிவு இம் மனிதர்களிடம் இல்லாமையால், காணும்படியான வல்லமைகள் அவர்கள் கண்டு கொள்ளாவிட்டால், தம் இரட்சிப்பைக் குறித்து எத்தகைய உறுதியும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, இம்மனிதர்கள், காணும்படியான இரட்சிப்பின் உறுதியைப் பெற மிகவும் கடினமாக முயல்கிறார்கள். பிறகு சாத்தான் தன் வேலைகளுக்கு அவர்களை உபயோகப்படுத்துவதில் முடிவடைகிறார்கள். இம்மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல், மனம் திருந்தி ஜெபிப்பதாலும் சுய பலிகளினாலும் கர்த்தரிடமிருந்து பதிலை எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள் இதனால் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு பதிலாக தீய ஆவிகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

பிசாசு அவர்களை “நீ பாவம் செய்தாய், அப்படி இல்லையா?” என்று காதில் முணுமுணுத்து அவர்களைக் குற்றப்படுத்தி தனக்குத் தானே ஆக்கினையை அளிக்கும்படி அவர்களை வழி நடத்துகிறான். இப்பொழுது பாவ மன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவரையும் பெற்றுக் கொண்ட எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவர் இயேசுவின், தொடர்ந்த தீவிரமான விசுவாசியாக இருந்தபோது இது போன்ற ஒரு சம்பவம் அவர் மறுபடியும் பிறப்பதற்கு முன் நிகழ்ந்தது. இவர் இரவு முழுவதும் மனம் வருந்தி அழுது ஜெபித்தாலும், அவர் இயேசுவை விசுவாசித்தபோதிலும், அவர் இருதயத்திலிருந்த பாவங்கள் அவரைத் துன்புறுத்தின, அப்பொழுது தான் சாத்தான் அவர் காதினுள் முணுமுணுக்கத் தொடங்கினான். 

“நீ பாவம் செய்தாய், ஆகவே, நீ வாழ்வதை விட சாவது உனக்கு நலமாயிருக்கும்.” சாத்தான் அடிக்கடி அவரிடம் வந்து குற்றப்படுத்தினான், துன்புறுத்தி அவரின் பாவங்களை நினைவுப் படுத்தினான். சாத்தான் அவர் தன்னைத் தானே தீர்த்து, ஆக்கினைக்குள்ளாக்கும்படி அவரை வழி நடத்தினான். ஆயினும், அவரால் செய்ய முடிந்த ஒன்று, தன் இருதயத்துனுள் பாவ அறிக்கை செய்வதே. அழகிய நற்செய்தியைக் கேள்விப்பட்டு விசுவாசத்திற்குள் வரும்வரை சாத்தான் அவரைக் குற்றப்படுத்துவதிலிருந்து அவரால் தன்னை விடுவித்துக் கொள்ளமுடியவில்லை.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்கள் பிசாசிற்கு இரையாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். பாவ மன்னிப்பு பெறாத ஒருவனுக்கு பிசாசை அலட்சியம் செய்யும் சக்தி இருக்கிறது என நீங்கள் எண்ணுகிறீர்களா? உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றிக் கொள்ளாதவன் எவனோ, அவன் சாத்தானால் பிடிக்கப்பட்டு துன்புறுத்தப் படுகிறான். சாத்தானை விரட்டியடிப்பதற்கு கர்த்தரின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது இன்றியமையாததாக உள்ளது. ஆகவே இயேசுவை நம்பும் யாவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, அதனை உலக மக்களுக்கு பிரசங்கிக்க வேண்டும். இதனைக் கேட்கும் யாவரும் இதற்கு கீழ்ப்படிந்து இதனை விசுவாசிக்க வேண்டும்.அக்கிரமச் செய்கையின் குழப்பம் ஏற்கெனவே உலகில் கிரியை செய்கிறது 


முழு உலகமும் சாத்தானின் கிரியைகளினால் மூடப்பட்டுள்ளது. மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற வழி நடத்தும் பொருட்டு நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டுமானால் முதலில் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைக் குறித்த ஆழமான தப்பர்த்தங்களை அகற்றவேண்டும். 

கைகளை வைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் வருகிறார் என்பது பொய் என முதலில் நாம் தெளிவுபடுத்தவேண்டும். அனுபவங்களான “பரிசுத்த ஆவியானவரைப் பெற்றதும், பல பாஷைகளில் பேசுதல், மனம் வருந்தி ஜெபித்தல், உபவாசம் மூலம் சூடாக உணருதல், இயேசுவிடமிருந்து நேரடியாக செய்திகளைப் பெறுதல்” ஆகியவை சாத்தானின் கிரியைகள் என்று தெளிவாக சாட்சியம் கூறவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தால் மட்டுமே சாத்தானின் தந்திரங்களிலிருந்து மக்களை விடுதலை செய்யமுடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தாலேயே நம் பாவங்களிலிருந்து நாம் இரட்சிப்படைய முடியும்.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் “பொய்யின் தந்தையான” பிசாசை நாம் முறியடிக்க வேண்டும். தனக்குத்தானே ஆக்கினை அளித்துக் கொள்வது என்பதன் மூலம் உலகிலுள்ள மக்களையெல்லாம் சாத்தான் பிணைத்துள்ளான். ஆகவே, தவறாக வழி நடத்தப்பட்ட அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகள் சாத்தானின் தந்திரங்கள் என்று இம்மக்களை உணரச்செய்து அவர்களை உண்மைக்கு திருப்பவேண்டும்.

இந்நாட்களில், சமாரியனான சீமோனைப் போன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரை பணத்தினால் வாங்க முயன்றவர்கள், ஆலய ஆராதனைகளை நடத்துகின்றனர். குருடர்களான அவர்கள் மற்ற குருடர்களை வழி நடத்துகின்றனர். அவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாததாகையாலும், அவர்களிருதயத்தில் பாவமிருப்பதாலும், முழுமையான இரட்சிப்பைப் பெற மக்களுக்கு சரியான வழியைக் காட்டமுடியாது. ஆகவே முழு இரவு ஜெபங்களை நடத்துவதன் மூலமும், மனம் வருந்தி ஜெபிக்கும்படி அழைப்பதாலும், தம் கைகளை அவர்கள் மீது வைப்பதாலும், சாத்தானை அவர்களிருதயத்தில் வாசஞ்செய்யும்படிச் செய்கிறார்கள். இம்மக்கள் பிசாசினால் கட்டுண்டவர்கள், இவர்களைக் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு திருப்பவேண்டுமானால், அவர்களுக்கு நீரையும் ஆவியையும் குறித்த சரியான அறிவை அளித்து சாத்தானின் கிரியைகளை முறியடிக்க வேண்டும். சாத்தானின் திட்டங்களைப் பற்றி மக்களுக்கு தெரியாவிட்டால், உதவியின்றி துன்பப்படுவதைத் தவிர வேறு வழிகள் அவர்களுக்கில்லை.

நான் கூறியதுபோல், கை வைக்கப்பட்டதன் மூலம் பல பாஷைகள் பேசுதல், தீர்க்க தரிசனம் கூறுதல், போன்ற அதிசயங்களைச் செய்தல் முழுக்க முழுக்க பிசாசின் வேலையாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வசீகரிக்கும் மக்களின் வல்லமையானது சாத்தானின் கிரியைகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். “உன் இருதயத்தில் பாவமிருக்குமானால் உன்னில் கிரியை செய்வது பிசாசேயாகும். உன் இருதயத்தில் பாவமிருந்தபோதிலும், பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ்செய்கிறார் என்று நீ நினைத்தால், நீ வஞ்சிக்கப்பட்டாய்.”

அப்போஸ்தலர் 8-இன் முக்கிய வசனங்களின்படி, அப்போஸ்தலர்களின் விசுவாசமும் அவர்களால் கைவைக்கப்பட்ட மக்களின் விசுவாசமும் ஒரே மாதிரியான விசுவாசமாக கருதப்படுகின்றது, ஏனெனில் அவர்களனைவருக்கும் இயேசுவின் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் குறித்து தெரிந்திருந்தது. வெறும் கைவைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விசுவாசிக்கும் இந்நாட்களின் அநேக கிறிஸ்தவர்களின் விசுவாசம் அப்போஸ்தலர்களின் விசுவாசத்திலிருந்து வேறுபட்டது.

பாவ விடுதலைப் பெற்ற ஒருவனால் கைவைக்கப்பட்ட இன்னொருவனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளமுடியுமா? இல்லை. வேதாகமம் கர்த்தரின் ஆவியானவர் நீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்ததாகக் கூறுகிறது (ஆதியாகமம் 1:2). இதன் பொருள் என்னவெனில் பாவக்கிரயத்தையும், பரிசுத்த ஆவியையும் ஒருவன் பெறும் பொருட்டு, நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசித்து மறுபடியும் பிறந்த ஒருவனுக்கு கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை பரிசாக அனுப்புகிறார்.

நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெறும்பொருட்டு கை வைப்பதை தேடும் படி மக்களுக்கு கற்றுக்கொடுத்தால், அது நம் பாவங்களிலிருந்து நாம் இரட்சிக்கும்படி கர்த்தர் ஏற்படுத்திய, நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் எதிர்ப்பது போன்றதாகும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஒருவன் இன்னொருவனுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்கலாம் என்பது கர்த்தருக்கு சவால் விடுவதைப் போன்றதாகும். இத்தகைய விசுவாசமுள்ள மக்கள் இலகுவாக சாத்தானின் வலையில் விழுகிறார்கள். இப்படி நடப்பதை அவர்கள் அனுமதிக்ககூடாது.

நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கும்போது நம் பாவங்களனைத்தும் மன்னிக்கப்பட்டன, என்று பரிசுத்த ஆவியானவர் சாட்சியம் கூறுகின்றார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் ஒருவன் இதயத்தில் பாவங்கள் தொடர்ந்து இருப்பதில்லை. இதன் பொருள் அவன் பாவம் செய்யவில்லை என்பதல்ல. அவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமையை விசுவாசிக்கிறான் என்பதாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது அவனிருதயத்தில் பாவங்கள் இல்லை என்பதை சாட்சியம் கூறுகிறது. பரிசுத்த ஆவியானவரும் சாட்சி கூறுகிறார். கர்த்தரின் ஆவியானவர் ஒருவனில் இல்லாவிட்டால் இயேசு தன் இரட்சகர் என்று அவனால் கூறமுடியாது.

பிசாசினால் கட்டுண்ட மக்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாது. மேலும் இவற்றை சம்பாஷனைக்கான பொருளாகவும் அவர்கள் எடுத்துக்கொண்டதில்லை. அவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும், அவர்களால் உண்மையை சரியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் கைவைப்பதன் மூலம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வருகிறார் என்று கூறுகிறார்கள். ஆயினும், கை வைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் வருவதில்லை. உலகமுழுவதிலுமுள்ள ஆலய மக்களிடம் தன் கள்ளப் போதனைகளின் மூலம் சாத்தான் வசீகரிக்கும் கிரியைகளில் ஈடுபட்டுள்ளான் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த காரணத்தினாலே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ்செய்வதைப் பெறவேண்டும். 

【8-3】 < அப்போஸ்தலர் 19:1-3 > நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டீர்களா?


<அப்போஸ்தலர் 19:1-3>

“அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.”


 • வேதாகமம் ஏன் “யோவான் ஸ்நானன் கால முதல் இது வரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பல வந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள்” என்று கூறுகிறது.
 • அழகிய நற்செய்தியின் மேல் விசுவாசம் வைப்பதன் மூலம் மனிதர்களால் பரலோக ராஜ்யத்தினைப் பெறமுடியும்.  யோவானின் ஞானஸ்நானம் மூலமும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமும் இயேசு இவ்வுலகின் பாவங்களைத் துடைத்துப் போட்டார்.


பவுல் பிரசங்கித்த நற்செய்தி யாது? அவன் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் குறித்த நற்செய்தியைப் பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 19:1 கூறுகிறது, “அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான்.” ஆயினும் இயேசுவின் ஞானஸ்நானத்தை தவிர்த்து இயேசுவை மட்டும் இம்மக்கள் விசுவாசித்தனர். பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்யப்பெற வழி நடத்தும் அழகிய நற்செய்தியைக் குறித்து அவர்களுக்குத் தெரியாது. அதனாலேயே பவுலின் கேள்வியாகிய “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்பது எபேசுவிலிருந்த சில சீடர்களுக்குத் தெரியாத கேள்வியாக இருந்தது. மற்ற மக்கள் “நீங்கள் இயேசுவை விசுவாசித்தீர்களா?” என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்கக் கூடும். ஆனால் பவுல் அசாதாரமான ரீதியில் இக்கேள்வியைக் கேட்டதற்கான காரணம் அவர்கள் தம் விசுவாசத்தை, அழகிய நற்செய்தியின் மூலம் திருத்தி அதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்கே. பவுலின் ஊழியம் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை பிரசங்கிப்பதாக இருந்தது. பவுல், பேதுரு மற்றும் யோவான் ஸ்நானன் இயேசுவுக்களித்த ஞானஸ்நானம் குறித்து சாட்சி பகருகின்றனர்.

நற்செய்தியாகிய ஞானஸ்நானம் குறித்து அப்போஸ்தலர்கள் கூறும் சாட்சியத்தைப் பார்ப்போமாக, “பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” (ரோமர் 6:2-3) மேலும் “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ, அத்தனைப் பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே” (கலாத்தியர் 3:27 ).

அப்போஸ்தலனாகிய பேதுருவும் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் குறித்து 1 பேதுரு 3:21 இல் சாட்சியம் கூறுகிறான். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல் மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.”

அப்போஸ்தலனாகிய யோவானும் அழகிய நற்செய்தியைக் குறித்து 1 யோவான் 5:5-8 இல் சாட்சியம் கூறுகின்றான். “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசு கிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர். பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.”

அழகிய நற்செய்தி முழுமைப் பெற யோவான் ஸ்நானன் ஒரு சிறந்த இடம் வகித்தான். வேதாகமம் யோவான் ஸ்நானனைக் குறித்து மல்கியா 3:1-3 மற்றும் மத்தேயு 11:10-11 இல் கூறுகிறது. யோவான் ஸ்நானன் மனித குல பிரதிநிதியாக இருந்தான். பழைய ஏற்பாடு கூறும் வரப்போகிற எலியா தீர்க்கதரிசியும் இவனே. பழைய ஏற்பாட்டில் கை வைப்பதன் மூலம் ஒரு மனிதனின் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொண்ட பாவ பலியானது தன் இரத்தத்தை சிந்தும் படியாகக் கொல்லப்பட்டது. ஆயினும் புதிய ஏற்பாட்டில், தன் ஞானஸ்நானத்தில் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் தன் மீது ஏற்றுக்கொண்டு பாவக்கிரயமாக அவர் சிலுவையில் இரத்தம் சிந்தியதன் மூலம் இயேசு தாமே பாவப்பலியானார். யோர்தான் நதியில் யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்வித்த பொழுது அவன் உலகின் பாவங்களையெல்லாம் இயேசுவின் மீது சுமத்தியதால் இயேசு மனித குலத்தை இரட்சித்தார்.

மனிதர்களை இரட்சிக்கும்படி கர்த்தர் இரண்டு நற்காரியங்களைத் திட்டமிட்டு அவற்றை நிறைவாக்கினார். முதலாவது கன்னி மரியாளின் சரீரம் மூலம் இயேசு பிறந்து, ஞானஸ்நானம் பெற்று உலகின் பாவங்களை கழுவிப் போடும்படியாக சிலுவையில் அறையப்பட்டார். இரண்டாவது காரியம் எலிசபெத்திற்கு யோவானைப் பிறக்கச் செய்தமையாகும். மனிதர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு, இவ்விரண்டையும் நிகழச் செய்தார். இதுவே திரியேகத்தில் கர்த்தர் செய்த திட்டமாக இருந்தது. கர்த்தர் யோவான் ஸ்நானனை இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக இவ்வுலகிற்கு அனுப்பினார். பிறகு மனித குல இரட்சகரான இயேசுவை, தம் பாவங்களுக்கு தீர்க்கப்படுவதிலிருந்து மக்கள் விடுதலையாகும்படியாக, இவ்வுலகிற்கு அனுப்பினார். 

இயேசு யோவான் ஸ்நானனிற்கு மத்தேயு 11:9 இல் சாட்சி பகன்றார். “எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கத்தரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” மேலும் மறு நாளில், இயேசுவின் மேல் உலகின் பாவங்களையெல்லாம் சுமத்திய யோவான் ஸ்நானன், சாட்சி பகன்றான். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” (யோவான் 1:29)

இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்த யோவானைக் குறித்து வேதாகமத்தில் அநேக குறிப்புகள் உள்ளன. அவனைக் குறித்து அதிக அறிவைப் பெற நாம் பிராயாசைப் படவேண்டும். இயேசு இவ்வுலகிற்கு வருமுன்பே யோவான் ஸ்நானன் வந்துவிட்டான். கர்த்தரின் திட்டப்படி, அவனுடையப் பாத்திரம் அழகிய நற்செய்தியை நிறைவேற்றுவதாக இருந்தது. வேதாகமம் கூறுகிறது, யோவானிடமிருந்து இயேசு உலகின் பாவங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டார். மேலும் கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றும் பொருட்டு யோவான் அவற்றை அவர்மீது சுமத்தினான்.

அவன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்வித்ததால் நாம் அவனை யோவான் ஸ்நானன் என்கிறோம். யோவானால் அளிக்கப்பட்ட இயேசுவின் ஞானஸ்நானம் என்பதன் அர்த்தம் என்னவாயிருக்கிறது. “ஞானஸ்நானம்” என்ற வார்த்தை “கழுவுதல்” என்பதைக் குறிக்கின்றது. அவரின் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களெல்லாம் அவரின் மீது சுமத்தப்பட்டதால், அவையாவும் கழுவப்பட்டன. “இயேசுவின் ஞானஸ்நான அர்த்தமானது பழைய ஏற்பாட்டில் பாவ பலியானது “தன் மீது கைவைக்கப் படுவதைப்” போன்ற அதே அர்த்தமாகும். ஞானஸ்நானம் என்பதன் ஆவிக்குரிய பொருள் என்னவெனில் “கடத்துவது” “கழுவப்படுதல்” அல்லது “அடக்கம் செய்யப்படுதல்” என்பதாகும். யோவான் அளித்த இயேசுவின் ஞானஸ்நானம் உலகிலுள்ள எல்லா மக்களின் பாவங்களையும் அகற்றும் பாவ விடுதலைக்கான ஒரு செயலாகும்.

பழைய ஏற்பாட்டில் பாவ பலிகளின் மீது பாவங்களை இடமாற்றம் செய்யும் முறையான கைவத்தலின் முக்கியத்துவத்தைப் போன்று இயேசுவின் ஞானஸ்நானமும் முக்கியமானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரவேல் மக்கள் தம் வருடாந்திர பாவங்களை, பாவ விடுதலைத் தினத்தில் தலைமை ஆசாரியன் பாவ பலி மீது தன் கைகளை வைப்பதன் மூலம், அதன் மீது செலுத்தினர். இயேசு ஞானஸ்நானம் பெற்றது அவரின் சிலுவை மரணம் செய்யும் காரியங்களையே பழைய ஏற்பாட்டின் இப்பலிகள் செய்தன.

இஸ்ரவேலின் பாவங்களை அகற்றும் பொருட்டு பாவ விடுதலைத் தினத்தை கர்த்தர் ஏற்படுத்தினார். ஏழாம் மாதம் பத்தாம் நாளில், மக்களின் ஒரு வருடப் பாவங்களை, தலைமை ஆசாரியன், மக்களின் பாவங்களுக்கு நிவாரணம் செய்யும்பொருட்டு தன் கைகளை பாவ பலி மீது வைப்பதால் அதன் தலை மீது செலுத்திய கர்த்தர் ஏற்பாடு செய்த பலியிடும் முறை இதுவேயாகும். இதுவே பாவிகளின் பாவங்களையெல்லாம் பாவ பலியின் மீது செலுத்துவதற்கான ஒரே வழியாக இருந்தது. மேலும் கைவைப்பதன் மூலம் பாவங்களை இடமாற்றம் செய்வதும் கர்த்தர் ஏற்பாடு செய்த சர்வகால சட்டமாகும்.

“அதின் தலையின் மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின் மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்திரத்துக்கு அனுப்பிவிடக்கடவன், அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன் மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக் கடாவை வனாந்திரத்திலே போக விடக்கடவன்.” (லேவியராகமம் 16:21-22).

பழைய ஏற்பாட்டில், தன் பாவங்கள் மன்னிக்கப்படும் படியாக, தன் பாவங்களை பாவ பலியின் தலை மீது தன் கைகளை வைப்பதன் மூலம் சுமத்தினான். பாவ விடுதலை தினத்தில், தலைமை ஆசாரியனான ஆரோன், இஸ்ரவேலரின் பிரதிநிதியாக, இஸ்ரவேலரின் பாவங்களை பாவ பலி மீது சுமத்தும் பொருட்டு தன் கைகளை அதன் தலை மீது வைத்தான்.

புதிய ஏற்பாட்டில் யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் (கிரேக்கத்தில் பேப்டிஸ்மா எனப்படுவது “கழுவுதல், அடக்கம் பண்ணப்படுதல், கடத்துதல்” என பொருள்படும்) அதே ஆவிக்குரிய அர்த்தத்தை இது கொண்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் தலைமை ஆசாரியன் இஸ்ரவேல் மக்களின் பாவங்களை தன் கைகளை பாவ பலியின் மீது வைப்பதன் மூலம் கடத்தியதைப் போன்று, யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு அளித்த ஞானஸ்நானம் மூலம் மனித குலத்தின் அனைத்துப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. நம் பாவங்களின் நிவாரணமாக இயேசு சிலுவையில் மரித்தார். இதுவே உண்மையான அழகிய நற்செய்தியாகும்.

இஸ்ரவேல் மக்களுக்காக தலைமை ஆசாரியன் பாவ விடுதலைக்கான பலி காணிக்கையைச் செலுத்தியது போன்று, ஆரோனின் சந்ததியினனான, யோவான் ஸ்நானன், மனிதகுலத்தின் பிரதிநிதியாக இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்து தன் கடமையை செய்தான். அதன் மூலம் மனிதர்களின் அனைத்துப் பாவங்களையும் அவர் மீது சுமத்தினான். கர்த்தர் தன் அன்பினால் வந்த ஆச்சர்யமான திட்டத்தை சங்கீதம் 50:4-5 இல் கீழ்க்ண்டவாறு விவரிக்கின்றார். “அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.” ஆமேன், அல்லேலூயா.

சபையின் வரலாறு ஆதிசபையின் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் கிறிஸ்மஸ் கொண்டாடப் படவில்லை என்று கூறுகிறது. ஆதி சபையின் கிறிஸ்தவர்களும் இயேசுவின் அப்போஸ்தலர்களும் யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் செய்யப்பட்ட இயேசுவின் ஞானஸ்நான தினமான ஜனவரி 6-ஐ “இயேசுவின் ஞானஸ்நான நாளாக” கொண்டாடினர். இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு அவர்கள் தம் விசுவாசத்தில் ஏன் அப்படி அழுத்தம் கொடுத்தனர்? இதன் பதில் அப்போஸ்தலர்களின் கிறிஸ்தவ முறையின் முக்கிய திறவுகோலாகும். இங்கு விசுவாசிகள் பெறும் நீரின் ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் ஞானஸ்நானம் ஆகியவைக் குறித்து நீங்கள் குழப்புவதை நான் விரும்பவில்லை.

இந்நாட்களிலுள்ள விசுவாசிகள் பெறும் ஞானஸ்நானத்திற்கும் யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெற வேண்டுமானால், இயேசுவின் சீடர்களையொத்த விசுவாசம் நம்மனைவரிடமும் இருக்கவேண்டும். யோவானால் இயேசு பெற்ற அவரின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பதன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி அவரைப் பெறவேண்டும்.

ஆதிசபையானது இயேசுவின் ஞானஸ்நானத்தை மிக முக்கியச் சடங்காக நினைத்தது. இது அவர்களுடைய ஞானஸ்நானம் குறித்த அச்சாரமான நம்பிக்கையாகும். இந்நாட்களில் கூட இயேசு யோவான் மூலம் பெற்ற ஞானஸ்நானமானது நம் இரட்சிப்பின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்று கருதவேண்டும். மேலும், நாம் சரியான விசுவாசத்திற்கான சரியான அறிவை பெற்று அதைப் பேன வேண்டும். அது என்ன கூறுகிறதென்றால் யோவானால் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் நிமித்தம் சிலுவையிலறையப் படவேண்டும். இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் மரித்தார். நமது இரட்சகராகும் பொருட்டு உயிரோடெழும்பினார் என்பதை விசுவாசிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யத் தொடங்குவார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இயேசுவின் யோவானால் பெற்ற அவர் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றிற்கு இனிமையான நற்செய்தியில் இத்தகைய சிறப்பு பொருள்கள் உள்ளன.

நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான தவறற்ற வழி அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசிப்பதே. இயேசுவின் ஞானஸ்நானம் மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரே தரம் கழுவியது. இந்த பாவ விடுதலையைத் தரும் ஞானஸ்நானமே நாம் பரிசுத்த ஆவியைப் பெற நம்மை வழி நடத்துகிறது. சில மக்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தின் வல்லமையை உணராததால், அவர்கள் அதனை வெறும் சடங்காக பொருள் கொண்டுள்ளனர். 

இயேசுவின் ஞானஸ்நானம் நற்செய்தியின் ஒரு பாகமாகும். இது அவர் உலகின் பாவங்களை எப்படி எடுத்துக் கொண்டார் என்பதையும், அதற்கான தீர்ப்பை சிலுவையில் இரத்தஞ்சிந்தியதின் மூலம் ஏற்றுக்கொண்டதையும் கூறுகிறது. யாரெல்லாம் இந்த அழகிய நற்செய்தியின் வார்த்தைகளை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் கர்த்தரின் உடமையான சபையின் உறுப்பினராகி, பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களுக்கு கர்த்தர் அளிக்கும் பரிசு பரிசுத்த ஆவியாகும்.

அவரின் ஞானஸ்நானம் மூலம், இயேசு “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) ஆனார். யோவான் 1:6-7 கூறுகிறது, “தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்கச் சாட்சியாக வந்தான்.” நம்முடைய பாவங்கள் அனைத்தையும் எடுத்துப் போட்ட இயேசுவை நம் இரட்சகராக விசுவாசிக்கும்படி, வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளபடி யோவானின் ஊழியத்தையும் சாட்சியத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகராக நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியும். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நம் பலமுள்ள விசுவாசம் அவன் சாட்சியத்தால் இருதயத்தில் எழுதப்படவேண்டும். ஆகவே உண்மையான அழகிய நற்செய்தியை முழுமையாக்க, யோவானளித்த இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றை விசுவாசிக்க வேண்டும்.

மத்தேயு 11:12 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “யோவான் ஸ்நானன் கால முதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள்.” இவ்வசனம் வேதாகமத்தின் மிகக் கடினமான வசனமாகும். ஆயினும் நாம் “யோவான் ஸ்நானன் காலமுதல்” என்ற வாக்கியத்தை கூர்ந்து நோக்கவேண்டும். அது யோவானின் ஊழியமானது நம்மை இரட்சிக்கும் இயேசுவின் ஊழியத்துடன் நேரடித் தொடர்புள்ளதை பறைசாற்றுகிறது.

இயேசு நாம் மிகத் தைரியசாலியான பலவந்தம் பண்ணுபவனாக பரலோக இராஜ்ஜியத்திற்குள் நுழைய விரும்புகிறார். நாம் தினமும் பாவம் செய்கிறோம், நாம் எளிதாக நொருங்கிப் போகக்கூடியவர்கள். ஆனால் நம் துணிச்சலான விசுவாசத்தினால் நாம் பரலோக ராஜ்ஜியத்தினுள் நுழைவதை அவர் அனுமதிக்கிறார். நம் கபடத் தனத்தை அவர் உதாசீனப் படுத்துகிறார். இந்த வசனங்கள் பரலோக ராஜ்ஜியத்தை மக்கள் அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறுகிறது. இது இயேசு தாம் யோவானால் ஞானஸ்நானம் பெற்றதன் மூலமும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமும் உலகின் பாவங்களைத் துடைத்துப்போட்டார் என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் குருதி மீது வைக்கும் உறுதியான விசுவாசத்தின் மூலம் பரலோக இராஜ்ஜியத்தைப் பெறலாம் என்று பொருள்படுகிறது. 

இயேசுவின் ஞானஸ்நானம் எல்லாப் பாவங்களை எடுத்துப் போட்டது, அதன் மீதுள்ள விசுவாசம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி பெறுவதை உறுதிச் செய்கிறது. நாம் இந்த நற்செய்தியை அண்டை அயலாரிடமும், உலகிலுள்ள எல்லாருக்கும் கூறவேண்டும். இவ்வுலகின் பாவங்கள் யாவும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்று கூறும் அழகிய நற்செய்தியின் மீது விசுவாசத்துடனிருக்க வேண்டும். நம் விசுவாசத்தின் மூலம் விடுதலையின் ஆசீர்வாதத்தையும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதையும் பெறவேண்டும்.

இயேசுவின் ஞானஸ்நானம் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டது. அவரின் இரத்தம் அதற்கான தீர்ப்பு. அழகிய நற்செய்தியான நீர் மற்றும் ஆவியைக் குறித்து விசுவாசிகள் அல்லாதாரிடமும் நாம் விளக்கிக் கூறவேண்டும். அப்படிச் செய்வதனால் மட்டுமே, அவர்கள் நற்செய்தியின் விசுவாசத்திற்குள் வந்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வர். நீங்கள் இதை விசுவாசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். யோவானளித்த இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் மீது நாம் வைக்கும் விசுவாசத்தினால் மட்டுமே மனிதன் தன் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற முடியும்.

அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் நம்முடைய ஒரு சகோதரனாவது சகோதரியாவது பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்யப் பெற்று அவர்கள் எல்லோரும் கர்த்தரின் பிள்ளைகளாகின்றனர். அழகிய நற்செய்தியின் மீது பவுல் கொண்டிருந்த அதே விசுவாசத்தை நீயும் கொண்டிருக்க வேண்டும். அழகிய நற்செய்தியைக் கொடுத்த கர்த்தருக்கு நன்றிகள் கூறி அவரைத் துதிக்கிறேன். ஆமேன். 

【8-4】 < அப்போஸ்தலர் 3:19 > சீடர்களைப் போன்றே விசுவாசமுள்ளவர்கள்<அப்போஸ்தலர் 3:19 >

“ஆனபடியால் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்”


அப்போஸ்தலர்களிடமிருந்த விசுவாசம் எத்தகையது?

அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்தார்கள்.


இயேசுவின் சீடர்களை உற்று நோக்கினால், அவர்களின் விசுவாசத்தின் அளவு அவர்கள் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யப் பெற்ற பின் முன்பிருந்த விசுவாசத்தைவிட அதிகமிருந்ததை காணலாம். அவர்களுடைய சரீரத்தில் எந்த மாறுபாடும் இல்லாவிட்டாலும், பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு, இயேசுகிறிஸ்துவின் ஒளியினால் அவர்கள் வாழ்வு முற்றிலும் மாறியது.

நான் வாழும் நகரம் மலைகளும் ஏரிகளும் நிறைந்தது. இத்தகைய அழகிய காட்சிகளைக் காணும்போது, நான் திருப்தியடைந்து, இத்தகையவற்றைப் படைத்த இறைவனுக்கு ஆச்சர்யத்துடன் நன்றி செலுத்துகிறேன். பிரகாசமாக சூரிய ஒளியை எதிரொளிக்கும் பளிங்கு போன்ற நீர் என் இருதயத்தை நிரப்புகிறது. என்னைச் சுற்றியுள்ள உலகம் தங்கத்தால் ஆனது போலுள்ளது.

ஆனால், அங்கே அழகிய காட்சிகளைக் காட்ட முடியாத இடங்களும் உள்ளன. ஆனால் அங்கு நீர் சூரிய ஒளியில் சேற்றைப் போலுள்ளது. அத்தகைய காட்சிகளில் உயிர்ப்பில்லை. இத்தகைய ஒரு ஏரியைக் காணும்போது, என் பாவங்களைக் கழுவிப் போட்டதும் பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வாசஞ் செய்யும் படியும் பெற்றுத் தந்த கர்த்தரின் அழகிய நற்செய்திக்கு நன்றி தெரிவிக்கிறேன். 

சேறு நிரம்பிய ஒரு ஏரியினால் எப்படி சூரிய ஒளியினால் பிரகாசிக்க முடியாதோ, அப்படியே நம் இயற்கையின் பாவ சுபாவத்தால், கர்த்தரின் ஒளிக்கு மிகவும் தூரமாகி, இலக்கில்லாத ஓரிடத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்... ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ் செய்யப் பெற்றால் நாம் கர்த்தரின் பிள்ளைகளாக வெளிப்பட்டு, மற்றவர்களுக்கு நற்செய்தியை போதிக்கச் செல்வோம். நாம் அவருடைய ஒளியை ஏற்றுக் கொண்டதால், நாமும் ஒளியாக பிரகாசிப்போம்.

அப்படியே, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின், அவருடைய சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று ஒளியின் பிள்ளைகளாகவும் அப்போஸ்தலர்களுமானார்கள். பரிசுத்த ஆவியானவரின் ஒளி அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்பதால் நிறைய மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற விரும்புகிறார்கள்.அப்போஸ்தலனாகிய பவுலின் விசுவாசம்


பவுலிடமிருந்த விசுவாசம் எத்தகையது? தன்னுடைய விசுவாச அறிக்கையில் பவுல் இவ்வாறு கூறுகிறான். அவன் கமாலியேலினால் கற்றவனாகி முற்றிலும் பயிற்சி பெற்றவனாக இருந்தான். கமாலியேல் அக்காலத்தின் சிறந்த சட்ட ஆசிரியனாக இருந்தான். அவன் தன் மூதாதையர்களின் சட்டத்திற்கேற்ப மிகவும் கண்டிப்புள்ளவனாகவும் இருந்தான். அவனுடைய சட்டங்கள் மூலம் தன் பாவங்களிலிருந்து இரட்சிக்கப் பட முடியவில்லை என்றும் அவன் அறிக்கைச் செய்கிறான். மேலும் குறிப்பாக நம் இரட்சகரான இயேசுவை துன்பப் படுத்துபவனாகவும் இருந்தான். ஒரு நாள், அவன் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் இயேசுவினால் சந்திக்கப்பட்டு அவர் நற்செய்தியைக் கூறும் சுவிசேஷகனானான். இயேசுகிஸ்து தேவனுடைய குமாரன் என்பதையும், அவர் இவ்வுலகிற்கு வந்து உலகின் பாவங்களையெல்லாம் துடைக்கும் படியாக ஞானஸ்நானம் பெற்று, அப்பாவங்களனைத்திற்குமான தீர்ப்பாக சிலுவையில் இரத்தஞ்சிந்தியதன் மீதும் அவனுக்கு விசுவாசமிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாவ மன்னிப்பு குறித்த விசுவாசம் அவன் இருதயத்திலிருந்தது.

இயேசுவின் சீடர்கள் யோவான் அளித்த இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவையின் இரத்தமானது அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களை மன்னிப்பதற்கே என்று விசுவாசித்தார்கள். பவுலும் கூட சீடர்களின் அத்தகைய விசுவாசத்தில் பங்கெடுத்தான். ஆகவே அவன் தன் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டான்.

கலாத்தியர் 3:27 பவுல் கூறினான். “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப்பேரோ, அத்தனைப்பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே” இயேசுவின் ஞானஸ்நானமே, தன் இரட்சிப்பு என்று அறிக்கைச் செய்கிறான். மேலும் பேதுரு, 1பேதுரு 3:21 இல் கூறுகிறான். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல் மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.” இவ்வசனத்தின் மூலம் அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தை தெளிவாக விளக்கினான். இயேசுவின் சீடர்கள் அவர் யோவான் மூலம் பெற்ற ஞானஸ்நானத்தினால் உலகின் எல்லப் பாவங்களும் சுத்திகரிக்கப் பட்டது என்று விசுவாசித்தார்கள். அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. இந்த உண்மையை அவர்கள் விசுவாசிப்பதால் இப்படியாக சட்டத்தின் சாபத்தின் கீழ் அவர்கள் தொடர்ந்து வாழ்ந்ததில்லை.

அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய இரண்டையும் விசுவாசித்தார்கள். இந்த விசுவாசமானது சீடத்துவத்திற்கான வெற்றியின் அடிப்படைத் தகுதியாக இருந்தது என்பது தெளிவாகிறது. அப்போஸ்தலர் 1:21-22 கூறுகிறது. “யோவான் ஞானஸ்நானங் கொடுத்த நாள் முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்கும், அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனே கூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக் குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.” இயேசுவின் சீடராவது யோவான் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதிலிருந்து தொடங்கியது.

நம்முடைய பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட நமக்கு வேண்டிய உண்மை, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையே. “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனைப் பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே” (கலாத்தியர் 3:27). இப்படியாக யோவான் அளித்த இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் பவுல் விசுவாசித்தான்.

தீத்து 3:5 ஐப் பார்ப்போம். “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின் படியே, மறு ஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.” இங்கே “மறு ஜென்ம முழுக்கினாலும்” என்ற வாக்கியம், யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த போது உலகின் பாவங்களனைத்தும் சுத்திகரிக்கப்பட்டது என்று பொருள் படும். அதுபோல, உன் பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமானால், யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானம் முலம் உன் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன எனக்கூறும், அழகிய நற்செய்தியை நீ விசுவாசித்தேயாக வேண்டும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும்படியாக இரத்தம் சிந்தியதற்கான காரணம், யோவான் அவருக்களித்த ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லோரின் பாவங்களையும் அவர் ஏற்றுக்கொண்டதே.

இந்த உண்மையை நம்புவது, பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெறுவதற்கு போதுமானது. யோவான் அளித்த இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும், தானும் விசுவாசித்ததாக பவுல் அறிக்கைச் செய்கிறான்.

எபிரேயர் 10:21-22 ஐப் பார்ப்போமாக, அது கூறுகிறது, “தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச் சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.” இங்கு “சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரம்” என்பது இயேசு யோவானால் பெற்ற, மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் சுத்திகரித்த ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது.

ஆகவே, பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில், அழகிய நற்செய்தியின் முக்கியக் கரு அவரின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் என்பதை நாம் காணலாம். நீங்களும், பவுலின் விசுவாசத்தில் பங்கெடுக்க வேண்டும்.

இன்று, அநேக கிறிஸ்தவர்கள், இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் பாவங்கள் யாவும் கழுவப்பட்டன என்பதை அறியாமலேயே அவரை வீணில் விசுவாசிக்கிறார்கள். சில இறையியலாளர்கள், தம் பாவங்கள் மன்னிக்கப்படும் பொருட்டு மக்களே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்கிறார்கள். அநேகமாக இத்தகைய முடிவுகள், வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளபடி உண்மையானதும் அழகியதுமான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவர்கள் அறியாமையால், கூறப்பட்டவை. நாம் நீரினால் ஞானஸ்நானம் பெறும்போது இந்த வெறும் சடங்கினால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட முடியாது. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகிய நற்செய்தி மீதுள்ள நம்பிக்கை நம் பாவங்களிலிருந்து நம்மை சுத்தமாக்கியது. அழகிய நற்செய்தியை விசுவாசிக்கிறவர்கள் மட்டும் தம் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டனர். அவரின் இரத்தத்தை விசுவாசித்ததன் மூலம், அவர்கள் பாவக்கிரயம் செலுத்தியாயிற்று. இந்த நம்பிக்கை இருப்பவர்களால் மட்டுமே பரிசுத்த ஆவியைப் பெறமுடியும்.            

“துர் மனச் சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” (எபிரேயர் 10:22). எபிரேயரை எழுதியவர் உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம் என்று நம்மிடம் கூறுகிறார். நீங்களும் அழகிய நற்செய்தியினுள் உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் கர்த்தரை சேருவீர்களாக.

இன்று பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யும்படி பெறுவதை கிறிஸ்தவர்கள் உண்மையாக விரும்புகிறார்கள். ஆனால் எவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, அவர்களினுள் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கிறார். அநேகருக்கு இதனைப் பற்றி தெரியாது. ஆகவே, அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் குருதியை விசுவாசிக்கமலேயே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். இயேசுவை விசுவாசிப்பவர்கள், இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் இன்னும் விசுவாசிக்கவில்லை என்றால் அவர்களால் பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியாது. அதற்கான காரணம் அவர்கள் சுத்த இருதயம் இல்லாதவர்களாக இருப்பதே.

பவுல் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்தான். ஆகவே, அவன் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டான். மேலும், இந்நம்பிக்கையையும் பரப்பினான், அதற்காக வேதப்புரட்டன் என்று துன்புறுத்தப்பட்டான். பரிசுத்த ஆவியானவர் அவன் இருதயத்தில் வாசஞ்செய்ததால், அவன் முடிவு பரியந்தமும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்ப முடிந்தது. “என்னை பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்கு பலனுண்டு” (பிலிப்பியர் 4:13). பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்வதற்கு நன்றிகள், அவன் கர்த்தரிடம் செல்லும் மட்டும் பரிசுத்த ஆவியானவரின் பாதுகாப்பில் கர்த்தருக்கு பணி செய்து வாழ்ந்தான். பவுலிடமிருந்த அதே நம்பிக்கையைப் பெற்றவர்களால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரைப் பெறமுடியும்.

பவுலின் விசுவாசத்தைப் பார்ப்போமாக. கொலோசெயர் 2:12 இவ்வாறு கூறுகிறது. “ஞானஸ்நானத்திலே அவரோடே கூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும் அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடே கூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.” யோவானால் ஞானஸ்நானம் பெற்ற இயேசுவை விசுவாசித்ததன் மூலம் தன்னுடையப் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டான்.பழைய காலத்திலிருந்து கிறிஸ்தவம் எப்படி மாறியுள்ளது?


இயேசுவுக்குள் பரிசுத்த ஆவியை பெற்று சீடரான ஒரு சகோதரியின் அறிக்கையை இப்போது காண்போம்.

“நான் வயதாகிக் கொண்டிருந்தாலும் குழந்தை பிறக்கும் வாய்ப்பில்லாதிருந்தேன்; ஆகவே, ஜெபம் மூலம் ஆசீர்வாதத்தைப் பெறும்பொருட்டு ஒரு ஆலயத்திலிருந்து இன்னொரு ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். நான் வீட்டில் தனிமையில் இருக்கும்போது குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஒரு குழந்தை வேண்டி ஜெபிப்பேன், இத்தகைய மத வாழ்க்கை என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.

இத்தகைய ஒரு மத வாழ்க்கையை நான் நடத்திக் கொண்டிருக்கும்போது, ஒரு வயதான கிழவியைச் சந்தித்தேன். நான் கர்த்தரிடம் குழந்தைக் கேட்டு ஜெபிக்க வேண்டுமானால், அவளின் கைவைத்தலின் ஜெபத்தை நான் பெற வேண்டுமென்றாள். நான் இக்கிழவியைக் குறித்து அவள் கர்த்தரின் தூதன் என்று கேள்விப்பட்டதால் அவள் என் தலைமீது கைவைக்க அனுமதித்தேன். அக்கணத்தில், முன்பு எப்போதும் அனுபவித்திராத அனுபவத்தை உணர்ந்தேன். என் நாக்கு உருளத் தொடங்கியது. மேலும் நான் வேறு பாஷையில் பேசிக் கொண்டிருந்தேன். மேலும் ஏதோ ஒரு வித்தியாசமான உஷ்னமான சக்தி மேலிழுப்பதை உணர்ந்தேன்.

இந்த அனுபவத்தை பரிசுத்த ஆவியானவரை நான் பெற்றுக் கொண்டேன் என்றும் என்னுடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளித்தார் என்றும் எடுத்துக் கொண்டேன். என் தலை மீது கை வைத்த பெண் பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெற்றிருப்பதுபோலும், அவளால் தீர்க்க தரிசனம் மற்றும் சுகமளிக்கும் வல்லமை இருப்பது போலும் காணப்பட்டது. கர்த்தரின் வார்த்தைகளை அவள் எங்கும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உபயோகித்து, அவள் அநேக போதகர்களும் கல்விமான்களும், கைவைப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள உதவியுள்ளாள்.

அப்போதிலிருந்து, நான் அத்தகைய கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினேன். அத்தகைய ஒன்று 3“மறுபடியும் / புதிதாக்கும் எழுப்புதல் இயக்கம்” என்றழைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் என்னுடைய ஒரு வழக்கமான ஜெபத்தின் போது, என்னுடம்பு முழுவதும் நடுங்குவதைக் கண்டேன். மேலும் எனது இருதயம் கர்த்தரின் மீதும் சுற்றத்தார் மீதுமுள்ள அன்பினால் அனலாகியது. மற்றவர்களுக்கும் இப்படியே நடந்தது, அவர்களும் மயங்கவும் பல பாஷைகளில் பேசவும் தொடங்கியிருந்தார்கள். பிசாசினால் பிடிக்கப்பட்ட சிலர் அங்கிருந்தனர். அக்கூட்டத்தை வழி நடத்தியவர் பிசாசுகளை விரட்டியடித்தார். இந்த மறுபடியும் புதிதாக்கும் / எழுப்புதல் இயக்கத்தின் நோக்கம், நடுக்கம், தீர்க்கதரிசனம், பிசாசுகளை விரட்டுதல், மற்றும் பல பாஷை பேசுதல் போன்றவற்றின் மூலம் மக்கள் பரிசுத்த ஆவியானவரை அனுபவிக்க உதவுவதாகும். இத்தனை அனுபவங்கள் இருந்தபோதிலும் என்னிடம் பாவங்களிருந்தன. மேலும் என் இருதயத்திலிருந்த பாவங்கள் என்னை பயப்படச் செய்தும் வெட்கப்படுத்தியும் கொண்டிருந்தது.

ஆகவே, நான் ஜெபிக்கும்போதெல்லாம், என்னுடைய பாவப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமென சிரத்தையாக ஜெபித்தேன். நான் பாவியாக இருந்தாலும் மக்கள் என்னை தேவதூதராக கருதுவதை அறிக்கைச் செய்தேன். என்னிடம் நல்ல விசுவாசம் இருப்பதாக நினைத்தேன். ஆனால் அது தவறு. என்னுடைய தவறை நான் உணர்ந்திராவிட்டால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிராது.

அதன்பிறகு, நீர் மற்றும் ஆவியைக் குறித்து போதிக்கும் சிலரைச் சந்தித்தேன். மேலும் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசித்து பாவ மன்னிப்பு பெற்றேன். இப்பொழுது நான் உண்மையில் சந்தோஷமாக இருக்கிறேன். நான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டேன். கர்த்தருக்கு நன்றிகள். உலகிலுள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களும் அழகிய இந்த நற்செய்தியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன். நம் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.”


3 மறுபக்கம் பார்க்கவும்


3உண்மையான மறுபடியும் புதிதாக்குதல் என்பது இயற்கையான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவசியமனதோர் பதியாகும். மேலும் இது ஆவிக்குரிய கனிகள் சாட்சியாகக் கொண்டு ஆவிக்குரிய வளர்ச்சியை கொண்டு வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக, சில இயக்கங்கள் “மறுபடியும் புதிதாக்குதல்” என்ற சொல்லை மீண்டும், வேதாகமம் விளக்கும் ஆவிக்குரிய வளர்ச்சி முறைக்கும் சற்றும் ஒத்திராத வண்ணம், வரையறுத்துள்ளனர். கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளை உருவாக்கும் அவர்களுடைய “மறுபடியும் புதிதாக்குதல்”, சந்தேகத்திற்கிடமான தோற்றங்களைக் கண்டுள்ளது. மேலும் அவை வேதாகமத்திற்கு மேல் அல்லது வேதாகமத்திலில்லாத போதனைகளையும் கிரியைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளது.


இவையெல்லாம் சர்ச்சைக்குரிய மறுபடியும் புதிதாக்குதல் /எழுப்புதல் இயக்கங்களின் சில பிரச்சினை அளிக்கும் போதனைகளும் நடைமுறைகளுமாகும் : வேத வசனங்களுக்கும் மேலாக வசீகரிக்கும் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் தவறான பிரகடணம், தவறான போதனைகள், கன்னித்தீர்க்கத்தரிசனம் கள்ள அடையாளங்களும், அற்புதங்கள் ஆகியவையும் அவற்றில் அடங்கும். மேலும், இவ்வியக்கங்களின் மிகவும் அபாயமான காரியம் யாதெனில் அவர்கள் அநேக மக்களை பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது குறித்து, அழகிய நற்செய்தியை ஒதுக்கி தள்ளிவிட்டு, அவர்களை உண்மையினைத் தப்பாக பொருள் கொள்ளும்படிச் செய்துள்ளனர்.


இங்கே நாம் கற்றது யாதெனில், பரிசுத்த ஆவியானவரை நாம் பெறவேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி வேண்டும். உங்கள் பாவங்களிலிருந்தும் நீங்கள் மன்னிப்பு பெற வேண்டுமானால், யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானத்தின் மீது கண்டிப்பக விசுவாசம் இருக்க வேண்டும். எபேசியர் 4:5 ஐப் பார்ப்போமாக. “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்” இங்கே ஒரே கர்த்தரும் ஒரே கர்த்தரும் இருப்பதாக இது கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும் பொருட்டு யோவான் இயேசுவுக்கு அளித்த ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நாமனைவரும் விசுவாசிக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் எப்போதும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யமாட்டார்.

பரிசுத்த மற்றும் சுத்த இயக்கத்தினர் பரிசுத்த ஆவியானவரை பெற உதவுவர் என்று படித்து அதனை விசுவாசிக்கும் சில மக்கள் இருந்தனர். ஆயினும், இத்தகைய இயக்கங்களில் சேர்வதால், பரிசுத்த ஆவியானவர் நம்மில் சஞ்சரிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பரிசுத்த மற்றும் சுத்த இயக்கத்தினரால் தான் நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா? இது சாத்தியம் என்றால், இந்த விசுவாசத்தைப் பற்றிக் கொள்வது உங்களுக்கு ஞானமாகும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் இப்படி வந்தார் என்றால், நம்மை இரட்சிக்கும் பொருட்டு இயேசுவானவர் இறங்கி வந்தது தேவைப்பட்டிருக்காது, யோவானால் ஞானஸ்நானம் பெற்றது தேவைப்பட்டிருக்காது அல்லது சிலுவையில் அறையப்பட்டிருக்கவும் மாட்டார்.

உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பைத் தந்த நற்செய்தியாக இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்தமையால் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப்பெற்றதை வரமாகப் பெற்றோம். உண்மையான நற்செய்தியினால் யாருடைய பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டு அவை மன்னிக்கப்பட்டதோ அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ்செய்வது பரிசாக வழங்கப்பட்டது.

இன்றைய நாட்களில், மறுபடியும் புதிதாக்கல் / எழுப்புதல் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் மரத்துப் போகும் வரை மனம் வருந்தி ஜெபித்தால் பரிசுத்த ஆவியானவரை பெற அது உதவும் என்று நினைக்கிறார்கள். ஒருவன் இருதயத்தில் பாவமிருந்தாலும் கூட, அவன் பாவ மன்னிப்பு வேண்டி ஜெபித்தானானால், அவன் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

உலகெங்கிலும் பரவியுள்ள பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கம் 1800களில் அமெரிக்க நாட்டில் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தொழில் புரட்சிக்கு பிறகு வந்தது. அப்போது மக்களின் பண்பாடும், ஸ்திரத்தன்மையும் அழிந்திருந்தன. அதிக மன அழுத்தத்தினால் அநேக மக்களின் இருதயங்கள் சிதைந்திருந்த போது இவ்வியக்கம் சிறந்த பருவத்தை அடைந்தது. அந்நேரம் தொடங்கி கர்த்தரின் வார்த்தைகள் மீதிருந்த விசுவாசம் குன்றி, ஒரு புதிய மதவியக்கம் வளரத்தொடங்கியது. பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கத்தின் குறிக்கோள் பரிசுத்த ஆவியானவரை (கர்த்தரை) உடல் ரீதியாக அனுபவிப்பதும் கர்த்தரின் கிரியைகளைக் கண்களால் காண்பதும் கர்த்தரின் வார்த்தைகளை உடல் மற்றும் மனரீதியாக அனுபவிப்பதுமாகும். 

இவ்வியக்கத்தின் முக்கியக் குறைபாடு என்னவெனில் இது விசுவாசிகளைக் கர்த்தரின் வார்த்தைகளிலிருந்து தூரமாக்குவதுடன் உடல் ரீதியான ஆசீர்வாதங்களுக்காக முயற்சி செய்யும் மதமாக இருக்கிறது. இதன் பயனாக, இவ்வியக்கத்தைப் பின்பற்றுவோர் மந்திரவாதத்திற்கு வாதாடுவோராயினர். இன்றும் கூட, பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கத்தில் இணைந்துள்ளவர்கள், இயேசுவின் மீது ஒருவன் விசுவாசம் வைத்தால் அவன் செல்வந்தனாவான். அவனுடைய சுகவீனம் குணமாகும். அவன் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பான். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்று பல பாஷை பேசுவதோடு மற்றவர்களை சுகமாக்கும் வல்லமையையும் கொண்டிருப்பான் என்று கருதுகிறார்கள். பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவ்வியக்கமானது மக்கள் அழகிய நற்செய்திகளை விசுவாசிப்பதிலிருந்தும், பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ்செய்யும் படியாக அவர்கள் பெறுவதற்கும் தடையாகிப்போனது.

புதிய கிறிஸ்தவமானது லூத்தர் மற்றும் கால்வினின் விசுவாசத்தினுள் 500 வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆயினும் கிறிஸ்தவ எல்லைகளுக்குட்பட்டு, பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதைக் குறித்த வேதாகம ஆராய்ச்சி உறுதியாக நிறுவப்படவில்லை. இதில் பிரச்சினை என்னவென்றால் புதிய கிறிஸ்தவம் தொடங்கியதிலிருந்து, அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளாமல் இயேசுவை விசுவாசித்தனர். எல்லாவற்றையும் மோசமாக்க, மக்கள் கிறிஸ்தவத்தின் தவறான கொள்கைகளை வலியுறுத்தத் தொடங்கினர். அவர்கள் உடம்பின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். உலகின் பாவங்களை சுமந்து தீர்க்கும்படியாக யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார் என்கிறதும் அப்பாவங்களுக்காகத் தீர்க்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறதுமான அழகிய நற்செய்தியை எல்லா கிறிஸ்தவர்களும் விசுவாசிக்க வேண்டும். இந்நம்பிக்கை உன்னைப் பரிசுத்த ஆவியானவரைப் பெறச்செய்யும்.

இன்று, கிறிஸ்தவம் இப்படி சிதைந்து போனதற்கான காரணம் யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய உண்மைகளை மக்கள் அலட்சியம் செய்யும் மனப்பாவம் கொண்டிருப்பதே. இயேசு நம்மை உண்மையைத் தெரிந்துகொள்ளும்படிச் சொல்கிறார். யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசத்தின் பொருள் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்பதாகும். பரிசுத்த ஆவியை நீ பெற்றுக் கொள்ள வேண்டுமானால், யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தபோது உன் பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன என்பதையும் அவருடைய இரத்தம் தீர்ப்பாகவும் உன் பாவங்களை மன்னிக்கவும் கொடுக்கப்பட்டது என்பதையும் விசுவாசி. அப்பொழுது நீ பரிசுத்த ஆவியானவரைப் பெறுவாய்.

அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரத்தத்தை மட்டும் பாவ விடுதலையின் நற்செய்தியாக விசுவாசிக்கிறார்கள். உங்களில் யாரேனும் அவரின் இரத்தத்தை மட்டும் விசுவாசித்து பாவத்திலிருந்து விடுதலை அடைய முடியுமா? அது உன்னால் முடியுமா? அது முடியும் என்று நீ நினைத்தால், இயேசுவின் ஞானஸ்நானம் குறித்து உண்மையான பொருளைப் பற்றிய உன் அறிவு தெளிவில்லாதது. அப்படியாயின் உன்னிருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறது. எப்பொழுது இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய இரண்டையும் இணைத்து விசுவாசிக்கிறாயோ அப்பொழுது உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரைப் பெறுவாய். இதுவே நாம் உலகை மேற்கொள்ள உதவும் ஒரே உண்மையான நற்செய்தி என்று வேதம் கூறுகிறது. “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது” (1 யோவான் 5:8). ஆகவே, நம்முடையப் பாவங்களிலிருந்து நாம் இரட்சிக்கப்பட வேண்டுமென்பது கர்த்தரின் விருப்பமாக இருந்த படியால், கர்த்தர் இயேசுவை யோவானால் ஞானஸ்நானம் பெறச் செய்து அவரை சிலுவையில் அறைந்தார் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். 

இயேசுவை விசுவாசித்த போதிலும் அநேக கிறிஸ்தவர்கள் பாவ மன்னிப்பு பெறாதமைக்கு காரணம் அவர்கள் யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் மூலம் அழகிய நற்செய்தியானது நிறைவேற்றப்பட்டது என்பதை விசுவாசிக்காததேயாகும். இவ்விரண்டையும் யார் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் தம் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரை தம்மிருதயத்தில் வாசஞ்செய்யப் பெறுவர்.

தம்முடைய பாவங்கள் கழுவப்பட்டன என்பதை மக்கள் அறியும் போது அவர்கள் இருதயம் சமாதானமும் அசையாத நீரின் அமைதியையும் பெறுகிறது. பரிசுத்த ஆவியானவர் ஒருவனின் இருதயத்தில் வாசஞ்செய்யத் தொடங்கிய கணமுதல் சமாதானம் ஒரு நதியைப் போல் இருதயத்தினுள்ளும் வெளியிலும் பிரவாகிக்கின்றது. இந்த உண்மையை நாம் விசுவாசிப்பதன் மூலம் கர்த்தரை சந்திப்போம். மேலும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது குறித்த நற்செய்தியைப் பரப்புவதன் மூலம் ஆவியானவருடன் நடப்போம். நம்முடைய இருதயம் இத்தகைய அமைதியை இதுவரைப் பெற்றதில்லை. நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிக்கத் தொடங்கிய நேரமுதல் நம்முடைய வாழ்வு இனிமையானதாகவும் நம் இருதயம் மகிழ்ச்சி உடையதாகவுமானது. இந்த அழகிய நற்செய்தியிலிருந்து நம்மால் திரும்ப முடியாது. பரிசுத்த ஆவியானவர் எப்போதும் நம்மிருதயத்தில் இருக்கிறார். தம் வார்த்தைகளைப் பரப்பும்படியும் அவற்றை நம்புவோரை பரிசுத்த ஆவியைப் பெறவும் அனுமதியளிக்கிறார்.

நாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்தமையால், பரிசுத்த ஆவியானவரால் ஆசீர்வதிக்கப்பட்டோம். இப்பொழுது நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படியாக இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தின்மேல் விசுவாசம் வை. உலகின் பாவங்களை சுமக்கும்படியாக இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் என்றும் அவர்களின் பாவங்களுக்குத் தீர்ப்பாக அவர் சிலுவையில் மரித்தார் என்றுமுள்ள கர்த்தரின் வார்த்தைகளை உலகின் எல்லா மக்களும் விசுவாசிக்கத் தொடங்குவதானது மிகவும் முக்கியமானது. அவர்கள் அப்படிச் செய்யும்போது, கடைசியாக அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள். 

【8-5】 <1 யோவான் 1:1-10> பரிசுத்த ஆவியானவருடன் நீங்கள் நட்பு கொள்ள வேண்டுமா?<1 யோவான் 1:1-10>

ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சி கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப் பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின் படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப் பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ் செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது”


 • பரிசுத்த ஆவியானவருடன் தொடர்புக் கொள்ளத் தேவையான அடிப்படைத் தகுதி யாது
 • நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து அதனை விசுவாசித்து நம் பாவங்களிலிருந்து நம்மை சுத்தப்படுத்துதலே


நீ பரிசுத்த ஆவியானவருடன் தொடர்பு கொள்ள விரும்பினால், முதலில் கர்த்தருக்கு முன் ஒரு சிறு பாவமும் அவருடன் தொடர்பு கொள்வதை இயலாததாக்குகிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். நீ நினைக்கலாம், “கர்த்தரின் முன் சிறுபாவமும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படி இருக்க முடியும்?” ஆனால் கர்த்தரிடம் உண்மையான நட்புகொள்ள நீ விரும்பினால் உன் இருதயத்தில் சிறிதும் இருள் இருக்கலாகாது. ஆகவே கர்த்தரிடம் நட்புகொள்ளும் பொருட்டு பாவ விடுதலையளிக்கும் நற்செய்தியை விசுவாசித்து, உன் பாவங்களிலிருந்து உன்னை சுத்திகரிக்க வேண்டும்.

உண்மையிலேயே நீ பரிசுத்த ஆவியானவருடன் நட்பு கொள்ள விரும்பினால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து அதனை விசுவாசித்து உன் பாவங்களை விசுவாசம் மூலம் சுத்திகரிக்க வேண்டும். உனக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாமலோ, அவற்றை உனது இருதயத்திற்குள் எடுத்துச் செல்லாவிட்டாலோ, நீ கர்த்தரிடம் தொடர்பு கொள்வதை நினைக்கக்கூட இயலாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் உன் எல்லாப் பாவங்களையும் இருதயத்திலிருந்து அகற்றுவதன் மூலமே பரிசுத்த ஆவியானவருடன் நட்புகொள்வது சாத்தியமாகும்.

அவருடைய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தால் எல்லாப் பாவங்களையும் எவருடைய மனதிலிருந்தும் அகற்ற முடியும். நீ அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும்போது கர்த்தர் பரிசுத்த ஆவியானவரால் உன்னை ஆசீர்வதிக்கிறார். நீ உண்மையிலேயே கர்த்தருடனும் பரிசுத்த ஆவியானவருடனும் தொடர்பு வைத்திருக்க விரும்புகிறாயா? அப்படியானால் உன் பாவங்களை இனங்கண்டு அவற்றைச் சுத்திகரிக்கும் பொருட்டு அழகிய நற்செய்தியை விசுவாசி. அதன் பிறகு உண்மையாகவே நீ கர்த்தருடன் தொடர்பை வைத்திருக்கலாம். 

நீங்கள் கர்த்தரிடம் தொடர்பு வைத்திருக்க விரும்பினால், யோர்தான் நதியில் யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் விசுவாசிக்கவேண்டும். மக்கள் பரிசுத்த ஆவியானவருடன் உண்மையாகவே தொடர்பு கொள்ள விரும்பினால் பரிசுத்த ஆவியானவர் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரே பரிசுத்தமிக்கவர். ஆகவே அவரால் அழகிய நற்செய்தியை விசுவாசிப்போரிடம் மட்டுமே சஞ்சரிக்க முடியும்.

யோவானால் அளிக்கப்பட்ட இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகியவற்றை நம்பியதன் மூலம் பாவங்கள் கழுவப்பட்டு, இப்பொழுது பரிசுத்த ஆவியானவருடன் நட்பு வைத்திருக்கும் ஒருவரின் பாவ அறிக்கையை நாம் பார்ப்போமாக.

“இவ்வுலகில் அநேகவிதமான மக்கள் வசிக்கிறார்கள், மேலும் அவர்கள் தம் யோசனைகளின் படியும் தம் சொந்த வழிகளிலும் வாழ்கிறார்கள். நானும் அவர்களைப் போன்ற ஒருவன். என்னுடைய வாழ்க்கை என் சிறு வயதுமுதல் சாதாரணமாக இருந்தது. நான் எனது தாயுடன் ஆலயம் சென்றேன். இயற்கையாகவே கர்த்தரை விசுவாசிக்கத் தொடங்கினேன். என்னுடைய தந்தை நாஸ்திகனாவார். மேலும் என்னுடைய விசுவாசத்தைக் குறித்து எப்பொழுதும் குறைச் சொல்லிக்கொண்டிருப்பார். இருந்தாலும் அவரைத் தவிர எல்லோரும் ஆலயம் சென்றுக் கொண்டிருந்தோம். ஆலயம் செல்வது எனது வாழ்வின் மிகப் பெரிய பகுதியாக இருந்தது.

ஆயினும், என்னுடைய வாலிபப் பருவத்தில், படுக்கையாகிவிட்ட என் தந்தையைப் பார்த்து, வாழ்வு மற்றும் மரணம், மோட்சம் மற்றும் நரகம் போன்ற அநேக சிந்தனைகள் எனக்குள் வந்தன. நிறைய மக்கள் நான் கர்த்தரை விசுவாசித்தால் பரலோக ராஜ்ஜியத்திற்குள் என்னால் பிரவேசிக்க முடியுமென்றும் நான் அவரின் பிள்ளையாவேனென்றும் கூறினார்கள். ஆனால் அப்போது நான் அதைக் குறித்த உறுதியுடனிருந்ததில்லை, அவரின் பிள்ளையாவேனென்று எப்போதும் நிச்சயமாக இருந்ததில்லை. பூமியில் நல்ல காரியங்களைச் செய்தால் பரலோக ராஜ்ஜியத்தினுள் நுழைய முடியுமென்று அறிந்தேன். ஆகவே, தேவைப் படுகிறவர்களுக்கு நன்மை செய்ய முயன்றேன். 

ஆனால், என்னுடைய இருதயத்தின் ஒரு புறத்தில், நான் பாவம் செய்தேனென்பது எனக்குத் தெரியும். மற்ற மக்களுக்கு நல்லவனாக நான் தோன்றியிருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி நினைக்கமுடியவில்லை. அதேநேரம், என் பாவங்களுக்காக குற்ற உணர்ச்சியுடையவனாயிருந்தேன். அந்த நேரத்தில், ஆலயம் சென்று ஜெபிப்பதை வழக்கமாகச் செய்தேன். “தயவுசெய்து உண்மையிலேயே உம் பிள்ளையாக அனுமதியும். தயவுசெய்து உண்மையை அறிய எனக்கு உதவும்.” நான் ஜெபிக்கும்போது, என்னிருதயத்தில் புதிய வேண்டுகோள் ஒன்று வளர்ந்தது. அவருடைய வார்த்தைகளைக் குறித்த போதனைகளையெல்லாம் கேட்கும் போது என்னால் வார்த்தைகளை காணவோ அவற்றைப் புரிந்து கொள்ளவோ இயலவில்லை. என்னுடைய வெறுமை நிறைந்த வாழ்க்கை, என் பாவம், மரணம் மற்றும் அனைத்தினாலும் களைப்படைந்தேன்.

என்னிடம் கீழ்க்கண்ட சிந்தனைகளிருந்தன, ‘நான் மறுபடியும் பிறக்க வேண்டும். என்னால் மறுபடியும் பிறக்க முடிந்தால் நான் இப்படி வாழ மாட்டேன்.' இத்தகைய சிந்தனைகள் இருந்தாலும், இப்போது ஆலயம் செல்வது குறைந்து போயிற்று. என்னுடைய வாலிபப்பிராயம் கடந்தது. நான் ஒரு வேலையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயிருந்தது. ஆனால் அது நான் நினைத்ததை விடவும் கடினமாக இருந்தது. நான் மேலும், கவலையில் ஆழ்ந்தேன். நான் எத்தனைக் கஷ்டப்பட்டு முயன்றும், என்னால் சிரிக்க முடியவில்லை. என்னுடைய வெறுமையான இருதயத்துடன் என்னை நோக்கிக் கொண்டு மன அழுத்த நிலையில் விழுந்தேன். அந்நேரத்தில் என் சகோதரனிடமிருந்து நற்செய்தியைக் கேட்டேன்.

“ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து, இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப் பட்ட இயேசு கிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.” (அப்போஸ்தலர் 3:19 ). இதுவே மிகச்சரியான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். நான் முன்பு ஆலயக் கூட்டங்களில் படித்திருந்தது நமது பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்தார் என்பதாகும். ஆனால் இந்நற்செய்தி, இயேசு யோவான் ஸ்நானனால் நம்முடையப் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்றார் என்பதையும், நமது பாவங்களின் தீர்ப்பாக சிலுவையில் அறையப்பட்டார் என்று கூறியது.

என்னுடைய வாழ்வு முழுவதும் ஆலயம் சென்றிருந்தேன், கர்த்தரின் பிள்ளைபோல் நடித்தேன். ஆனால் நான் தவறினேன். அவருடைய வேதவாக்கின் பொருளை அறிந்துக் கொள்ள முயன்றேன். ஆனாலும் அதில் தவறினேன். ஆயினும், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேள்விப்பட்டபிறகு நான் அதனை விசுவாசித்தேன்; என்னுடைய எல்லாப் பாவங்களும், என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தவையும் மறைந்து போயின, என்னிருதயம் சமாதானமாயிற்று.

கர்த்தரை தீவிரமாக விசுவாசித்து, ஆலயத்திற்கு தவறாமல் சென்றால், அப்பொழுது பரலோகம் சென்றடைவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் கர்த்தர் தன்னுடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அனுப்பினார். மேலும் என்னுடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டன. அவர் பரிசுத்த ஆவியை வரமாகத் தந்தார். அவருடைய பாவ விடுதலையைப் பெறும் முன்பு பரிசுத்த ஆவியானவரைக் குறித்தோ பல பாஷைகளில் பேசுவதைக் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. நான் வெறுமனே ஆலயத்திற்கு சென்று நான் நல்லவனாகவும் ஆலயப் பணிகள் செய்தாலும் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் என்று விசுவாசித்தேன். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் என் பாவங்கள் கழுவப்படும்போது மட்டுமே என்னால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றுணர்ந்தேன்.

நான் முன்பு வாழ்ந்த வாழ்க்கையில், நான் கர்த்தரை விசுவசித்த போதிலும் நான் பாவத்திலேயே இருந்தேன். மண்புழுவைப் போன்ற வாழ்வு வாழ்ந்தேன். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் எனக்குத் தெரியவில்லை. அழகிய நற்செய்தியை வேதாகமம் கூறுவதுபோல் எனக்கு பிரசங்கித்த, அவரின் ஊழியர் மூலமாக, என்னுள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்கிறார் என்று அறிந்து விசுவாசிக்கிறேன்.

பாவ விடுதலைப் பெற்றபிறகு, முதலில் என்னுள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று கண்டு கொள்ளமுடியவில்லை. அவரின் வார்த்தைகளை தொடர்ந்து படித்ததன் மூலம் என் இருதயத்தில் பூத்துக் கொண்டிருக்கும் புதிய விசுவாசத்தை, பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வாசஞ்செய்வதைப் பெற்றேன் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்போது அது உண்மையானது, மேலும் பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்கிறார் என்று உணர்ந்து திருப்தியடைந்தேன். அவர் என்னுடைய பாவங்களை மன்னித்தபோது, பாவங்கள் இல்லாதவர்கள் மட்டுமே கர்த்தரின் பிள்ளைகளாகவும் பரிசுத்த ஆவியைப் பெறவும் முடியும் என்று அறிந்தேன்.

அவர் கண்களுக்கு என் முயற்சிகள் சிறந்தவையாகவோ, அல்லது சிறப்பாக வாழ்வதோ நான் பரிசுத்த ஆவியைப் பெற அனுமதிக்காது என்பதையும் அறிந்துள்ளேன். தாம் பாவிகளென்றும் அதனைக் குறித்து என்ன செய்வது என்றும் புரியாதவர்களிடம் கர்த்தர் வருகிறார். யாரவரை உண்மையில் தேவையென தேடுகிறார்களோ அவர்களை அவர் சந்திக்கிறார்.

நான் நன்மை செய்வதாலேயோ என்னை வெறுத்து கர்த்தரை நம்புவதாலேயோ பரலோகம் செல்லமுடியாது என்பதை நான் காணும்படிச் செய்து தம்முடைய அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் என் பாவங்களிலிருந்து என்னை இரட்சிக்கும் பொருட்டு இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் பரிசுத்த ஆவியானவர் என்னுள் என்றென்றும் வாசஞ்செய்யும் படி அவரைத் தந்தார்.

என்னைத் தம் பிள்ளையாக்கியதற்கும், பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்யும்படி என்னை ஆசிர்வதித்த கர்த்தருக்கு நன்றிகள். கர்த்தர் அப்படிச் செய்திராவிட்டால் என்னிருதயத்தில் இன்னும் பாவமுள்ளவனாகவே இருந்து நரகத்தில் நிரந்தர கைதியாகி ஆக்கினைக்குள்ளாக்கப் பட்டிருப்பேன்.”

அதுபோல, நானும் சிலுவையின் இரத்தத்தை மட்டும் ஒரு காலத்தில் விசுவாசித்திருந்தேன். மேலும் நான் வேண்டிக்கொண்டும் கூட பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியவில்லை. அந்த நேரத்தில், நான் இயேசுவை விசுவாசித்த போதிலும் என்னிருதயத்தில் பாவமிருந்தது, அது பரிசுத்த ஆவியானவரை நான் பெறுவதைத் தடைச் செய்தது. பாவியொருவன் பரிசுத்த ஆவியானவரை தன் இருதயத்தில் பெறமுடியாது. ஆயினும், அநேக பாவிகள், தம் இருதயம் முழுவதிலும் பாவங்களிருந்தாலும் பரிசுத்த ஆவியானவரைப் பெற முயற்சி செய்கிறார்கள்.

நீங்கள் உண்மையாகவே பரிசுத்த ஆவியானவரைப் பெற்று அவரிடம் தொடர்பு வைக்க விரும்பினால், நீங்கள் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவ விடுதலைப் பெற வேண்டும். நீங்கள் இன்னும் பாவியா? அப்படியானால் ஏற்கெனவே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றவர்களிடமிருந்து உண்மையான நற்செய்தியைக் கேட்கலாம். பரிசுத்த ஆவியானவரிடம் தொடர்பு வைக்க விரும்புகிறவர்களுக்கு தாகமுள்ள இருதயமும் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினிடத்தில் விசுவாசமும் இருக்க வேண்டும்.

நீதிமான்கள் மட்டுமே ஆலயம் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளைக் கேட்க முடியும். அவர்களால் அழகிய நற்செய்தியைக் கேட்டு விசுவாச வாழ்வு வாழ முடியும். ஆனால் பாவிகளோ தம் சபிக்கப்பட்ட வாழவை, நற்செய்தியைக் குறித்தும் கூட கேள்விப்படாமல், நரகத்திற்காக வாழ்வர். 

ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நீங்கள் கற்க வேண்டும். நற்செய்தியை நீங்களேன் விசுவாசிக்கவேண்டும்? சட்டப்பூர்வமான மதத்திலிருந்து நீங்கள் தப்புவதும் வேத வாக்கின் அடிப்படையிலான அழகிய நற்செய்தி மீது உங்கள் விசுவாசத்தைக் காட்டுவதும் உங்களுக்கு மிகவும் அவசியமானது. இயேசுவின் சீடர்கள் அழகிய நற்செய்தியைப் பின்பற்றினார்கள், மேலும் இப்பொழுது அது பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களுடையதாக இருக்கிறது. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது ஆதிசபையின் தொடக்கத்தில் அப்போஸ்தலர்களால் பின்பற்றப் பட்டதாகும். எல்லா கிறிஸ்தவர்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற வேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்களால் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும். 

யாரெல்லாம் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் மனதில் இன்னமும் பாவமிருக்கிறது. அவர்களால் பரிசுத்த ஆவியானவருடன் தொடர்பு வைக்க முடியாது. அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்காக கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும்.வேதாகமம் மீண்டும் மீண்டும் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கூறுகிறது


இயேசுவானவர் பரலோகம் ஏறின பிறகே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வது தொடங்கியது. இன்றே இரட்சன்ய நாள், இதுவே அவர் அளவில்லாத கிருபையின் நேரம். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பெறாவிட்டாலும் பரிசுத்த ஆவியானவரின் தொடர்பு இல்லாது வாழ்ந்தாலும் நாம் மிகவும் துரதிருஷ்டசாலிகள்.

உனக்கு பரிசுத்த ஆவியானவரிடம் நட்பு இருக்கிறதா? உன்னுடையப் பாவங்களால் பரிசுத்த ஆவியானவரிடம் தொடர்பு கொள்வதிலிருந்து தடுக்கப் படுகிறாயா? அப்படியானால் கர்த்தர் உனக்களித்த, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி ஆகியவற்றைக் கற்று அவற்றை விசுவாசி. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீ விசுவாசித்தாயானால் பரிசுத்த ஆவியானவர் உன் இருதயத்தில் செல்வதுடன் உன் உற்றத் துணைவனாகவும் இருப்பார். நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்போரின் இருதயத்தில் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வார். நீதிமான்களின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் தன் சித்தத்தை அடிக்கடி வெளிப்படுத்துவார். பரிசுத்த ஆவியானவருடன் பவுலின் ஊழியம் அழகிய நற்செய்தியைப் பரப்புவதாக இருந்தது. 

பரிசுத்த ஆவியானவரைப் பெற்றவரை நீ எங்ஙனம் கண்டு கொள்வாய்? அதற்கான அறிகுறி என்ன? அதற்கான அறிகுறியானது அவன் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறானா? இல்லையா என்பதிலிருக்கிறது. ஒருவன் அழகிய நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் அறிந்து விசுவாசித்தானானால் அவன் பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ்செய்யப்பட்டவன்.

அழகிய நற்செய்தியை விசுவாசிக்காதவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதில்லை. யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மூலம் வரும் மன்னிப்பை விசுவாசிப்பவனெவனோ அவனிடன் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கிறார். நீ பரிசுத்த ஆவியானவரிடம் தொடர்பு வைக்க விரும்புகிறாயா?

பரிசுத்த ஆவியானவரைப் பெறவும் அவருடன் உறவாடவும் எத்தகைய நற்செய்தியை நீ புரிந்து கொள்ளவேண்டும் என்று உனக்குத் தெரியுமா? யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றில் அழகிய நற்செய்தியைக் காணலாம். நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவில்லை என்றால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாது. ஆகவே, பரிசுத்த ஆவியானவர் உங்களில் சஞ்சரிக்க முடியாது. தம்மைப் பெற்றுக்கொள்ள மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் விசுவாசம் வைக்க வேண்டுமென பரிசுத்த ஆவியானவர் கோருகிறார்.

பாவிகளுடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியானவரால் வாசஞ்செய்ய இயலாது. பரிசுத்த ஆவியானவரை நீ பெற வேண்டுமானால் உன் பாவங்களிலிருந்து உன்னை சுத்திகரிக்கும் பொருட்டு முதலில் அழகிய நற்செய்தியை நீ விசுவாசிக்க வேண்டும். மேலும், பரிசுத்த ஆவியானவருடன் நீ உறவாட விரும்பினால் நீ அழகிய நற்செய்தியை பிரசங்கிக்கும் அளவிற்கு விசுவாசமுள்ளவனாய் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரால் நீ வழி நடத்தப்பட வேண்டுமானால், அழகிய நற்செய்தியை நீ நேசிக்க வேண்டும். மேலும் நீ எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கு அதைப் பரப்ப முயல வேண்டும். யாரெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்கிறார்களோ அவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். 

அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும், நீதிமான்களிடம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வது கொடுக்கப்படும். அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும், நீதிமான்களால் மட்டுமே பரிசுத்த ஆவியானவருடன் உறவாட முடியும். பரிசுத்த ஆவியானவர் அங்கீகரிக்கும் அழகிய நற்செய்தியானது யோவான் இயேசுவுக்கு அளித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலம் நிறைவேறியது. (1 யோவான் 5:3-7) 

பேதுரு கூட அழகிய நற்செய்தியை விசுவாசித்து இப்படி கூறினான். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குவதலாயிராமல், தேவனைப்பற்றும் நல் மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது” (1 பேதுரு 3:21). வேதாகமத்தில் நீர் என்று அடிக்கடி வழங்கப்படுவது யோவான் ஸ்நானனால் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது.

பரிசுத்த ஆவியை யாரெல்லாம் பெறமுடிந்ததோ, அவர்கள் அழகிய நற்செய்தியின் மூலம் பாவ விடுதலைப் பெற்று பாவம் எதுவுமில்லாதவர்கள். அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலோடும் ஆராதிக்க முடியும். (யோவான் 4:23) நீதிமான்களுக்கு பரிசுத்த ஆவியானவர், அவர்கள் தம் வாழ்வை பரிசுத்த ஆவியால் நிறைந்ததாக வாழ உதவுகிறார். பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப் பெற்றவர்கள் சதா சர்வ காலமும் பிதாவை ஸ்தோத்தரித்து வாழ முடியும், பரிசுத்த ஆவியானவர் நாம் கர்த்தரின் பிள்ளைகள் என்பதை உறுதிச் செய்கிறார். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குள்ளும், பரிசுத்த ஆவியானவருக்குள்ளும், சதா சர்வ காலமும் வாழ்ந்திருப்போமாக.தம்மைத் தாமே வஞ்சிப்போரிடம் பரிசுத்த ஆவியானவர் உறவாடுவதில்லை


பரிசுத்த ஆவியானவர் பாவிகளிடம் 1 யோவான் 1:8 இல் கூறுகிறார். “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது” தம்மைத் தாமே வஞ்சிப்போரிடம் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கமாட்டார். பரிசுத்த ஆவியானவர் பாவிகளை அதட்டுகிறார். அவர் கூறுகிறார். “இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தத்தினால் நிறை வேற்றப்பட்ட அழகிய நற்செய்தியை நீ ஏன் விசுவாசிக்கவில்லை?” 

இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் பற்றி எதுவுமில்லாத, மறுபடியும் பிறந்த, முதலில் தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டதாக நினைத்த கிறிஸ்தவர் ஒருவரின் அறிக்கையை நோக்குவோமாக. இம்மனிதன் இப்போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டவர்.  இங்கு நாம் பரிசுத்த ஆவியானவர் யாரிடம் சஞ்சரிப்பார் என்று சரியாகச் சுட்டிக் காட்டுவோம். 

“நான் ஏன் இவ்வுலகில் வாழ்கிறேன் என்று உணர்ந்த போது கர்த்தர் எனது இருதயத்தில் வாழத் தொடங்கினார். என்னை நான் பார்க்கும்போது, இந்த உலகின் கொடூரத்திற்கு முன் தனியாக கர்த்தரின் படைப்பாக வாழ நான் எத்தனை பலவீனமுள்ளவன். கர்த்தரை நான் தேடவில்லை. ஆனால் இயற்கையாகவே அவரிருப்பதை ஏற்றுக்கொண்டேன். அவரைப் பார்க்க முடியாது. ஆனால் அவர் இருக்கிறார். “கர்த்தர் உண்மையில் இருக்கிறாரா?” என்று கேட்டதுண்டு தான். ஆனால் இத்தகையச் சிந்தனைக் கூட எனக்கு பயங்கரமாக இருந்தது. ஏனெனில் எல்லாவற்றையும் படைத்தவர் அவரே என்று உறுதியாக நம்பினேன்.

கர்த்தரை அலட்சியப் படுத்தியவர்கள் முட்டாள்களாகத் தோன்றினாலும், சில காரியங்களில் அவர்கள் என்னைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தனர். அவர்கள் தாம் விரும்புவனவற்றுக்குள் தாமாக போகும் ஆற்றல் மிக்கவர்களாகத் தோன்றினர். அதே சமயம் நான் பலவீனமுள்ள முட்டாளாக தோன்றினேன். ஆயினும் மரணத்திற்கு பிறகு எனக்கு வாழ்வுண்டு என்ற நம்பிக்கை எனக்கிருந்ததால், கர்த்தரை அதிக மரியாதையுடன் நோக்கினேன். எல்லாவற்றிலும் நான் குறைபாடுள்ளவன் என்று நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்கு பரலோக ராஜ்யம் சிறந்த இடமா என்று ஆச்சர்யப் பட்டதுண்டு. அந்த கேள்வியானது நான் இன்னும் சிரத்தையாக பரலோகத்தை விரும்பச் செய்தது.

என் பெற்றோர் மதத்தின்படி எங்களை வளர்த்தார்கள், என் உடன்பிறந்தோர் எந்த பக்தியும் இல்லாமல் ஆலயம் சென்று வந்தார்கள். என்னுடைய பக்தி சீக்கிரமாக மறைந்துவிடும் என்று அவர்கள் எண்ணியதால் நான் நடுநிலைப்பள்ளிக்குச் செல்லும்வரை நான் ஆலயம் செல்வதைத் அவர்கள் தடைச் செய்யவில்லை. ஆகவே, நான் ஒவ்வொரு ஆலயமாக சென்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் கல்லூரி செல்லும் வரை என் வீட்டருகிலிருந்த சிறிய ஆலயத்திற்குப் போனேன்.

இந்த ஆலயத்தை நான் தெரிந்தெடுத்தமைக்கான காரணம் அது நற்செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே. இந்த ஆலயத்தின் போதகர் எழுப்புதல் நிறைந்த சுவிசேஷகர், மேலும் வேதாகம வார்த்தைகளுக்கெதிராக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. சிறந்த முறையில் மத வாழ்வு வாழ எனக்கு அநேக காரணங்கள் இருந்தன. என்னுடைய கல்வியினால் நான் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டேன்.

என்னுடைய ஆலய உறுப்பினர்களை மக்கள் புறஜாதியார் என்றழைத்த போது, என்னுடைய ஆலயம் சரியானது என்றும், நான் கண்டிப்பாக பரலோகம் செல்வேன் என்றும் விசுவாசித்தேன். அந்த உறுதி நற்செய்தியின் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்கள் பாவிகளால் பரலோக ராஜ்யம் செல்லமுடியாது என்றனர். அதே சமயம் மற்ற ஆலய மக்களும் கூட தம் இருதயம் முழுவதும் பாவம் நிறைந்திருப்பதாகக் கூறினர். என்னுடைய ஆலயத்திற்கு செல்லும் முன்னால் நானும் கூட என் ஆலய மக்கள் பாவிகளென்று நம்பினேன். ஆகவே, இந்த விமர்சனத்தை அதிகம் பொருட்படுத்தவில்லை.

ஆயினும், இந்த சுவிசேஷ எழுப்புதலாளர்கள் என்னுடைய கடந்த கால அனுபவத்தில் கண்டவர்களை விட வித்தியாசமானவர்கள். இயேசுவை நாம் சரியான முறையில் விசுவாசித்தால் நாம் பாவமற்றவர்களாக இருப்போம் என்று அவர்கள் கூறினர். பாவமில்லாதவர்கள் யாரோ அவர்களால் மட்டுமே பரலோகம் செல்லமுடியும். மேலும் அவர்கள், இயேசு சிலுவையின் மூலம் நமக்கு தீர்ப்பை எடுத்து வந்தார், ஆகவே, நாம் பாவிகளல்ல, ஆனால் நீதிமான்கள் என்றும் கூறினர். முதலில் இதனை நம்பவில்லை. ஆனால் அதைக் குறித்து நான் நினைத்து பார்த்தபோது, அது அர்த்தம் நிறைந்ததாகப் பட்டது. நான் இளமையானவனாக இருந்தேன். நான் நினைத்தேன், நான் பரலோகம் செல்லவேண்டுமானால் என்னில் பாவமில்லை என்றால் மட்டுமே உள்ளே அனுமதிப்பார், ஏனெனில் கர்த்தர் பாவத்தை வெறுக்கிறார்.

எனக்கு பழக்கமானவற்றிலிருந்து இவ்வாலயத்தின் நம்பிக்கைகள் வேறுபாடுள்ளவையாக இருந்தன. ஆலய ஆராதனைக் கூட சிறிது வித்தியாசமானதாக இருந்தது. பரலோகமானது தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே பிரவேசிக்கக் கூடியதாகையால், இவ்வாலய மக்கள் சரியான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. இவ்வாலயம் இயேசுவின் சரீரத்திற்கும், இரத்தத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்ததால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு துண்டு ரொட்டியைக் கடித்து இரசம் குடித்தோம். இந்தச் சடங்கு வேதாகமத்தின் அடிப்படையில் அமைந்ததால் அதனை ஏற்றுக் கொண்டேன். ஆயினும் பிற்காலத்தில், மக்கள் இதன் உண்மைப் பொருளை அறியாமல் இந்தச் சடங்கில் பங்கேற்பதை அறிந்துக் கொண்டேன்.

பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளின் இருதயத்திலும் நீதிமான்களின் இருதயத்திலும் வாசஞ் செய்வதாகவும், அவர் அவர்களுடைய ஜெபங்களையெல்லாம் கேட்கிறார் என்றும் விசுவாசித்தேன். ஆகவே, என்னுள் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிப்பதாக நம்பினேன். கர்த்தர் என்னுடைய துணை என்பதில் மிகவும் உறுதியாகவும் நான் விசுவாசித்த நற்செய்தியை எப்போதும் சந்தேகிக்காதவனாகவும் இருந்தேன். நான் கடினமான நேரங்களைக் கடக்கும்போது, கர்த்தர் என்னருகில் இருப்பது போலெண்ணி அவரிடம் பேசினேன். வேறு யாரிடமும் கூறமுடியாதவற்றை அவரிடம் கூறியபோது அவர் அதைக் கேட்பதாக நம்பினேன். ஆகவே, நான் அவரை நம்பி அவரில் சார்ந்திருந்தேன்.

பல பாஷை பேசும்படியாக எழுப்புதல் கூட்டங்களுக்கு சென்றவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. உபவாச ஜெப ஆராதனைகளில் பங்கேற்பவரைப் பார்த்து சிரித்தேன். அத்தகைய முயற்சிகளைப் பார்க்கும் போது நான் நினைத்தேன். ‘பரிசுத்த ஆவியானவரைப் பெற அவர்கள் ஏன் இத்தகைய பொருளில்லாத முயற்சிகளினூடே செல்லவேண்டும்? பாவமில்லாதபோது மட்டுமே உங்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்து உங்களுடன் எப்போதுமே அவரால் தங்கியிருக்க முடியும். அவர்கள் கண்டிப்பாக பாவிகளே. அவர்களுடைய இத்தனை முயற்சிகளினாலும் அவர் வரமாட்டார்.' அவர்களுக்காகப் பரிதாபப்பட்டேன். அவர்கள் முட்டாள்கள் என்று நினைத்தேன். அதை எனது மனதில் கொண்டு, நற்செய்தியைக் குறித்த என் விசுவாசம் மிகவும் நல்லது என்றும் அவர்களுடைய நம்பிக்கைகள் பொய் என்றும் நினைக்கத் தொடங்கினேன்.

என்னுடைய முரட்டுத்தனமான இருதயம் சிகரத்தை அடைந்தது. பத்து வருடங்களாக, மத வாழ்வை நானே வாழ்ந்தேன். காலப்போக்கில் என் மனதிலும் இருதயத்திலும் கேள்விகள் எழத்தொடங்கின. நான் நினைத்தேன், “நற்செய்தியாகிய சிலுவை இரத்தம் மூலமாக நான் பாவமற்றவன், மற்ற விசுவாசிகளும் அதுபோல் பாவமற்றவர்களா? அவர்கள் உண்மையாகவே நற்செய்தியை விசுவாசிக்கின்றார்களா? இக்கேள்விகளை ஏன் கேட்கத் தொடங்கினேன் என்று எனக்குத் தெரியாது. அக்கேள்விகள் என் மனதிற்கு வந்தன. மேலும் அதைக் குறித்து யாரிடமும் கேட்க முடியவில்லை. இது ஒரு சொந்த நம்பிக்கை, இதனை பலவந்தம் பண்ணக்கூடாது. வேறு யாரிடமும் கேட்க வேண்டுமானால் அது முரட்டுத் தனமான கேள்வியாகத் தோன்றும்.

ஆனால், இக்கேள்விகளை என்னிடமே கேட்கத் தொடங்கினேன். நான் கல்லூரியிலிருக்கும்போது மத மேலாளர்களால் தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்யத் தொடங்கினேன். என் இருதயம் இருளினால் மூடப்பட்டு என்னுடைய நம்பிக்கைகள் வலிமைக் குன்றத் தொடங்கின. என்னுடைய நம்பிக்கைகள் மீது நிச்சயமில்லாமல் போயிற்று. ‘என்னை நான் நீதிமான் என்றழைக்கலாமா? இயேசு என் பாவங்களனைத்தையும் சுத்திகரித்துவிட்டாரா?' இந்த மனக் குழப்பங்களுக்கிடையே, நற்செய்தியாகிய சிலுவையை நினைக்கும்படி என்னைக் கட்டாயப் படுத்தி என் மூளையை நானே சலவைச் செய்தேன். ஆயினும், என்னை அதிகமாக வதைக்கும்போது அதிகமாக தொலைந்துபோனேன். ஆலய ஆராதனைக்குப் போவது இல்லாது போயிற்று. என்னுடைய மற்ற வேலைகள் அதற்கு சாக்காகின. 

என்னுடைய குழப்பங்களுக்கும் ஒழுங்கின்மைக்கும் நடுவே, இறுதியில் உண்மையைச் சந்தித்தேன். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றிக் கேள்விப் பட்டேன். அது மின்னலைப் போல் வந்தது. அதன் தாக்கம் அதிகமாக இருந்தால் எனக்கு அழ வேண்டும் போலிருந்தது. நற்செய்தியைக் கேட்டபோது அதுவரை நான் விசுவாசித்தவையெல்லாம் பொய்யென ஒப்புக் கொண்டேன். 

என்னுடைய பாவங்களை நான் இயேசுவின் மீது சுமத்தவில்லை. நான் பொருளறியாது இயேசு என் பாவங்களை எடுத்துப்போட்டார், ஆகவே, நானொரு பாவமில்லாத மனிதன் என்று விசுவாசித்தேன். ஆனால் அது அப்படியல்ல. ஞானஸ்நானம் பெறும்பொருட்டு இயேசு ஏன் உலகத்திற்கு வரவேண்டும்? அவர் தாம் ஆட்டுக் குட்டிக்கு ஒப்பானவர் என்பதைக் காண்பிக்கவா? தானொரு மனிதனாக வந்ததை நிருபிக்கவா? அல்லது தான் மரணத்தை ஜெயிக்கப் போவதை தீர்க்கதரிசனம் உரைக்கவா? நான் வெறுமனே கேள்விப்பட்டிருந்த மேலோட்டமான அறிவுப்பெற்றிருந்த ஞானஸ்நானத்திற்கு இத்தனை முக்கியத்துவம் இருக்குமென கனவு கூட கண்டதில்லை. உண்மை எதுவெனில், மனிதகுல பிரதிநிதியான யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அந்த ஞானஸ்நானம் மூலம் நம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது.

‘ஓ! அதனால் தான் அவர் நம் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டியானார்!' இப்போழுது எல்லாம் புரிந்தது. “என்னுடைய பாவங்களுக்காய் இயேசு சிலுவையில் தீர்க்கப்பட்டார். அதனாலேயே என்னிருதயத்தில் நான் பாவங்களின்றி இருக்கிறேன்.” எப்பொழுது நற்செய்தியாகிய நீர் (இயேசுவின் ஞானஸ்நானம்), இரத்தம் (சிலுவை), மற்றும் பரிசுத்த ஆவியானவரை (இயேசுவே கர்த்தர்) அறிந்தேனோ, அப்பொழுது என் இருதயத்தை உறுத்திக் கொண்டிருந்த பாவங்கள் மறைந்தன.

நான் இப்பொழுது உண்மையிலேயே பாவமற்ற நீதிமான். இறுதியாக பரிசுத்த ஆவியானவர் என்னிருதயத்தில் சஞ்சரிக்கிறார். சிலுவை மீதிருந்த நம்பிக்கை என்னிருதயத்திலிருந்த பாவங்களைக் கழுவப் போதுமானதாக இருக்கவில்லை. உங்களுடைய பாவங்கள் இயேசுவின் மீது எப்படிச் சுமத்தப்பட்டது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட முடியாது. மேலும் பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்யவும் முடியாது. கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். அழகிய நற்செய்தியின் மூலம் பரிசுத்த ஆவியானவரை என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது. 

எந்த முயற்சியுமில்லாமல், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலமாக நான் மன்னிக்கப்பட்டேன். மேலும் பரிசுத்த ஆவியானவர் இப்பொழுதும் எப்பொழுதும் என்னுள் சஞ்சரிக்கிறார். இப்பொழுது பெருமையுடன் என்னைக் குறித்து நான் பாவமில்லாதவன் பரலோக ராஜ்யம் என்னுடையது என்று கூறமுடியும். இந்தச் சந்தர்ப்பத்தில், எந்த செலவுமில்லாமல் இத்தகைய ஆசீர்வாதத்தை அளித்த கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். அல்லேலூயா!”

பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்கள் கர்த்தரின் சந்நிதியில் தாம் பாவமற்றவர்கள் என்று கூறமுடியும். நீங்கள் எத்தனைக் காலமாக இயேசுவை விசுவாசித்திருந்த போதிலும் கர்த்தர் நமக்களித்த அழகிய நற்செய்தியை நீங்கள் விசுவாசிக்காவிட்டால், உங்களிருதயத்தில் நிச்சயமாக பாவமிருக்கிறது. அத்தகைய மனிதர்கள் தம்மைத் தாமே வஞ்சிப்பதுடன் கர்த்தரையும் வஞ்சிக்கிறார்கள். இம்மக்கள் கர்த்தரைச் சந்திக்கவில்லை. பாவியொருவன் பரிசுத்த ஆவியானவருடன் உறவாட விரும்பினால், அவன் தன்னைத்தானே வஞ்சிப்பதை நிறுத்திவிட்டு தான் பாவம் செய்தேன் என்று அறிக்கைச் செய்யவேண்டும். அப்பொழுதே அவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கத் தகுதியடைகிறான். அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறத் தகுதியானவர்கள்.

பாவிகளிடம் பரிசுத்த ஆவியானவர் என்ன கூறுகிறார்? இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தால் நிறைவேற்றப்பட்ட அழகிய நற்செய்தியை விசுவாசித்து தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற வேண்டுமென அவர் அறிவுரை கூறுகிறார். உங்களில் பாவத்தை வைத்துக் கொண்டு நீங்கள் பாவியில்லை என்று கூறினீர்களானால், என்றென்றும் நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியாது. அழகிய நற்செய்தியை விசுவாசிக்காமல், தாம் பாவம் செய்யவில்லை என்று கூறுபவர்கள் கர்த்தரை ஏமாற்றுவதோடு தன்னைத் தானே வஞ்சிக்கிறார்கள். பாவிகள் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே கர்த்தரின் கடுமையான தீர்ப்பிலிருந்து தப்ப முடியும்.நீதிமான்கள் தம் பாவத்தை அறிக்கைச் செய்வதன் மூலம் பரிசுத்த ஆவியானவருடன் உறவாட முடியும்


நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட சிலரிடம் பேசினேன். கர்த்தர் நீதிமான்களுக்கு என்ன கூறினார் என்று பார்ப்போம். 1 யோவான் 1:9 இல், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும், நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” என்று கூறப்பட்டுள்ளது. இவ்வசனம் என்ன கூறுகிறது என்றால், இயேசு தாம் ஞானஸ்நானம் பெற்றபோது நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கு கிரயமாக சிலுவையிலறையப் பட்டார் என்று பிரகடனம் செய்யும் நற்செய்தியை நினைவூட்டி விசுவாசிப்பதன் மூலம், நம்முடைய சொந்தப் பாவங்களை நம் நொருங்குண்ட இருதயங்களிலிருந்து சுத்திகரிக்க முடியும். நீதிமான் தன் சொந்தப் பாவங்களை கர்த்தரிடம் அறிக்கையிடவேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்களால் பரிசுத்த ஆவியானவருடன் உறவாட முடியும். நீதிமான்கள் தம் சொந்த பாவங்களை அறிக்கையிட்டு தொடர்ந்து அழகிய நற்செய்தியை விசுவாசிக்கவேண்டும். 

வெகுகாலத்திற்கு முன், அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் நம் எல்லாப் பாவங்களையும் கழுவியது, ஆகவே, நீதிமான்கள் இந்த நற்செய்தியை விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து விடுதலை அடைந்தவர்களாக இருக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் கர்த்தர் நம் பாவங்களனைத்தையும் ஏற்கெனவே மன்னித்துவிட்டார். தம் பாவங்களிலிருந்து விடுதலையாக இருக்கும் பொருட்டு நீதிமான்கள் அழகிய நற்செய்தியை விசுவாசித்தேயாக வேண்டும். தம் சொந்தப் பாவங்கள் மூலம் இருதயம் மாசடையும் போது அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் நீதிமான் அதனை சுத்தகரிக்க முடியும்.

நம் கர்த்தர் தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் வெகு காலத்திற்கு முன் நீதிமான்களின் எல்லா பாவங்களையும் சுத்திகரித்து விட்டார். ஆகவே இதனை விசுவாசிப்போர் உண்மையிலேயே பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்றுள்ளனர். ஆயினும் நீதிமான்கள் தம் பாவங்களை ஒப்புக்கொண்டு கர்த்தர் சந்நிதியில் அதனை அறிக்கைச் செய்யவேண்டும். பிறகு நீதிமான் தன் பாவங்களிலிருந்து விடுதலையாகி இருக்கும் பொருட்டு அழகிய நற்செய்தியை நிறைவேற்றிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தம் ஆகிய விசுவாசத்திற்கு திரும்பவேண்டும். ஆகவே அவர்களால் எப்பொழுதும் புத்தம் புதிய வாழ்வை பரிசுத்த ஆவியானவரின் உறவாடுதலோடு தொடரமுடியும். தாம் பலவீனர்களாக இருந்தாலும் கர்த்தரை யாரால் எந்தப் பிரச்சினையுமின்று நோக்கிப் பார்க்க முடியுமோ அவர்களாள் கர்த்தருடன் உறவாட முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நன்றிகள்.பரிசுத்த ஆவியானவருடன் உறவாடும்போது உண்மையான உணர்வை பெறுவதெப்படி?


பரிசுத்த ஆவியானவருடன் உறவாட விரும்பும் அநேக மக்கள் இருக்கின்றனர். அவர்கள் இயேசுவை விசுவாசித்த போதிலும், இந்த விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாதிருக்கிறார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம், எல்லா மக்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுகின்றனர் மேலும் அந்த நொடிப்பொழுது முதல் பரிசுத்த ஆவியானவரின் உறவாடுதலைப் பெறுகின்றனர்.

அதுபோலவே, நீதிமான் ஒருவன் பரிசுத்த ஆவியானவரின் உறவாடுதலை பெறுவதற்கான ஒரே வழி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தைத் தெரிந்து விசுவாசிப்பதே. உண்மையான நற்செய்தியில்லாது நீதிமானுக்கும் பரிசுத்த ஆவிக்குமான தொடர்பை வெற்றிக் கொள்ள இயலாது. பரிசுத்த ஆவியானவருடன் உறவாடுதல் குறித்து என்ன? அழகிய நற்செய்தியின் சத்தியத்தை விசுவாசிப்பதாலேயே அது சாத்தியமாகும்.மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் பாவஞ் செய்கிறான் என்று கர்த்தர் கூறுகிறார்


1 யோவான் 1:10 இவ்வாறு கூறுகிறது, “நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். அவருடைய வார்த்தை நமக்குள் இராது.” கர்த்தர் முன் பாவம் செய்யாதவன் ஒருவனுமில்லை. வேதாகமம் கூட “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை” (பிரசங்கி 7:20) என்று கூறுகிறது. எல்லா மனிதர்களும் கர்த்தர் முன் பாவஞ்செய்கிறார்கள். யாரொருவன் தான் பாவஞ்செய்யவில்லை என்று கூறுகிறானோ அவனொரு பொய்யன். தம் மரணப் பரியந்தமும் மக்கள் தம் வாழ்வெல்லாம் பாவம் செய்கிறார்கள். அதனாலேயே அவர்களின் பாவங்களை எல்லாம் தம்மீது ஏற்றுக் கொள்ளும் பொருட்டு யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார். நாம் பாவம் செய்யவில்லையென்றால், கர்த்தரை நம் இரட்சகராக விசுவாசிக்கத் தேவையில்லை.

தாம் பாவம் செய்யவில்லை என்றெண்ணுபவர்களிடம் “என் வார்த்தைகள் உனக்குள் இல்லை” என்று கர்த்தர் கூறுகிறார். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது ஒருவனுக்கு விசுவாசமில்லையென்றால், அவன் அழிவினைப் பெறத் தகுதியானவன். ஒரு நீதிமானோ அல்லது பாவியோ தாம் கர்த்தரின் சந்நிதானத்தில் பாவஞ்செய்யவில்லை என்று கூறினால் அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும் தகுதி இல்லாதவனாகி விடுகின்றான்.

கர்த்தர் அழகிய நற்செய்தியை ஒவ்வொருவருக்கும் அற்புதமான வரமாகக் கொடுத்துள்ளார். அழகிய நற்செய்தியின் மூலம் பாவ மன்னிப்பு பெறும்படியாக நம் பாவங்களையெல்லாம் அறிக்கைச் செய்து மனந்திரும்பினோம். நமக்கு கர்த்தர் ஏற்பாடு செய்த அழகிய நற்செய்தியிடம் பாவமன்னிப்பிற்காக திரும்பி வரவேண்டும். இதன் மூலம் பரிசுத்த ஆவியானவருடன் உறவாட முடியும். உண்மையான பரிசுத்த ஆவியானவருடன் உறவாடும் உணர்வானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலேயே இருக்கிறது. மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே கர்த்தரிடம் உறவாட முடியும்.

ஆதாம் ஏவாளிடமிருந்து பாவத்தைப் பெற்றதால் மனித குலம் கர்த்தரிடமிருந்து அதிக தூரம் சென்றது. ஆயினும் பாவ வித்தைப்பெற்ற நாம் கர்த்தரிடம் உறவாடுதலை மீண்டும் எதிர்பார்க்க முடியும். அதனைச் செய்யும்படியாக இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிடம் திரும்பி, நம்மைக் கர்த்தரிடமிருந்து பிரித்து வைத்திருந்த பாவங்களிடமிருந்து மன்னிப்பு பெறவேண்டும்.

அழகிய நற்செய்தியை விசுவாசிப்போர் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவர் மேலும் கர்த்தர் அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்புவார். நீதிமான்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றதால் கர்த்தரோடு உறவாடலாம். ஆகவே, தம் பாவங்களினால் கர்த்தரிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்கள். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நோக்கித் திரும்பி அதனை விசுவாசிக்க வேண்டும். அப்போழுது மட்டுமே அவருடன் உண்மையான உறவாடுதலைத் தொடங்க முடியும்.

அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதால் பரிசுத்த ஆவியானவரை நம்முள் வாசஞ்செய்யப் பெறுகிறோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலமாகவே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப் பெறுகிறோம் என்பதை நாம் தெரிந்திருக்கவேண்டும். மூலப் பாவம் மற்றும் சொந்தப் பாவங்களால் ஆன கர்த்தரையும் நம்மையும் பிரித்த சுவரை உடைப்போமாக. மேலும் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் கர்த்தரிடம் உறவாடுதலை அனுமதிப்போமாக.

நாம் பரிசுத்த ஆவியானவருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். விசுவாசத்திற்கு கீழ்ப்படிந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் புரிந்து கொள்வதன் மூலம் பரிசுத்த ஆவியானவரின் உறவாடுதலைப் பெற்றுக்கொள்ள முடியும். அழகிய நற்செய்தியின் மூலமாக பாவ மன்னிப்பு வருகிறது என்ற நம்பிக்கையை நாம் கொள்ளும்பொழுது பரிசுத்த ஆவியானவருடன் உறவாடுதல் ஏற்படுகிறது, தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறாதவர்களால், பரிசுத்த ஆவியானவருடன் உறவாடுதலைப் பெறமுடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் ஒருவராலும் பரிசுத்த ஆவியானவரின் உறவாடுதலைப் பெற முடியாது.

பரிசுத்த ஆவியானவருடன் உறவாடுதலைப் பெறுவது உனக்கு கடினமாக இருந்தால், நீ நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதையும் உன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லை என்பதையும் முதலில் ஒத்துக் கொள். நீ பரிசுத்த ஆவியானவருடன் உறவாடுதலைப் பெற விரும்புகிறாயா? அப்படியானால் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலம் நிறைவேற்றப் பட்ட நற்செய்தியை விசுவாசி. அப்பொழுது மட்டுமே உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டு, வெகுமதியாக பரிசுத்த ஆவியை உன்னிருதயத்தில் பெற்றுக்கொள்வாய். இந்த அழகிய நற்செய்தி பரிசுத்த ஆவியானவரை உனக்கு வெகுமானமாக அளிக்கும். 

【8-6】 < மத்தேயு 25:1-12 > விசுவாசியுங்கள் அப்பொழுது ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்வார்<மத்தேயு 25:1-12>
“அப்பொழுது, பரலோக ராஜ்ஜியம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக் கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து பேர் புத்தியில்லாதவர்களுமாய் இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக் கொண்டு போனார்கள். எண்ணெயையோ கூடக் கொண்டு போகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். மணவாளன் வரத் தாமதித்த போது, அவர்கள் எல்லாரும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடு ராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர் கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப் படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தி உள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக; அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்கு போய், உங்களுக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியான வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து, ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்கு திறக்க வேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

 • பரிசுத்த ஆவியானவர் யாரிடத்தில் வருகிறார்?
 • இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து தம் பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களின் மீது அவர் வருகிறார்.


பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்யப் பெற்ற கன்னிகைகள் என்று குறிப்பிடப் படுவது யார்?

மேற்கண்ட வசனங்களில், ஐந்து புத்தியுள்ள கன்னிகைகளையும் ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளும் இருக்கிறார்கள். ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள் ஐந்து புத்தியுள்ள கன்னிகைகளிடம் அவர்களின் எண்ணெயைக் கேட்கிறார்கள். புத்தி உள்ளவர்கள் புத்தி இல்லாதவர்களிடம் கூறினார்கள். “அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்கு போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.” ஆகவே, புத்தி இல்லாதவர்கள் எண்ணெயை வாங்கச் சென்றபோது, புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள், தம் விளக்கில் எண்ணெய் இருந்தபடியால், அவர்களால் திருமணத்திற்கு செல்ல முடிந்தது. அப்படியானால் நாம் எப்படி எண்ணெயை ஏற்பாடு செய்வது? நாம் செய்யவேண்டியதென்னவெனில் பாவங்கள் மன்னிக்கப்பட்ட இருதயங்களுடனே அவருக்காக காத்திருப்பதே.
மக்களிடம் இரண்டு விதமான நம்பிக்கைகள் இருப்பதைக் காணலாம். ஒன்று நற்செய்தியாகி பாவமன்னிப்பின் மீதான விசுவாசம். இது பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு வழி நடத்துகிறது. மற்றது தம் சொந்த மத முறைகளில் விசுவாசிப்பது. தம் பாவங்கள் கர்த்தரால் மன்னிக்கப்பட்டதா இல்லையா என்பதை இவர்கள் பொருட்படுத்துவதில்லை.
தம் சொந்தப் பிரிவுகளின் மீது விசுவாசம் வைத்திருப்பவர்களுக்கு அழகிய நற்செய்தி பாரமாகவே இருக்கிறது. மணவாளன் வரும்போது எண்ணெய் வாங்கச் சென்ற புத்தியில்லாத கன்னிகைகளைப்போல், ஒவ்வொரு ஆலயத்திற்கும், பரிசுத்த ஆவியைப் பெறச் சென்று கொண்டிருப்பவர்கள் வேறு யாரையுமல்ல, அவர்கள் தம்மைத் தாமே வஞ்சிக்கிறார்கள். அத்தகைய மனிதர்கள் நியாயத் தீர்ப்பு நாளுக்கு முன் தம் இருதயங்களில் அழகிய நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும் என்ற குறிப்பைக் குறித்து அறிவில்லாதவர்களாக உள்ளனர். தம்முடைய உயர்வுகளின் மூலமாக கர்த்தரைக் கவருவதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள பெரும் முயற்சிகளில் ஈடுபட்ட டீக்கன் ஒருவரின் பாவ அறிக்கையைப் பார்ப்போமாக. இப்பாவ அறிக்கை உங்களுக்கு உதவும்.
“பரிசுத்த ஆவியானவரைப் பெற அனைத்தையும் செய்தேன். என்னுடைய நம்பிக்கையில் தொடர்ந்து என்னை அர்ப்பணஞ்செய்வதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆகவே, ஒவ்வொரு ஜெபவீடாகச் சென்றேன். இவற்றில் ஒரு ஜெப வீட்டில் ஆராதனையின் ஔரங்கமாக எலக்ட்ரிக் பியானோவையும், மேளத்தையும் உபயோகித்தார்கள். பரிசுத்த ஆவியானவரைப் பெற விரும்பியவர்களை ஒவ்வொருவராக அந்த ஆராதனையை நடத்திய போதகர் அழைத்து, அவர்களின் நெற்றியில் அறைவதன் மூலம், அவர் பல பாஷையில் பேசத் தொடங்கினார். அவர் மைக்கைச் சுற்றி சுற்றி வந்து “நெருப்பைப் பெற்றுக்கொள், நெருப்பு, நெருப்பு” என்று கூக்குரலிட்டு மக்களின் தலைகளில் கைகளை வைத்தார். அதனால் அவர்கள் வலிப்பு வந்து மயங்கினர். இத்தகைய பரிசுத்த ஆவியானவரைப் பெறும் நடைமுறைகள் சரியானது தானா என்ற சந்தேகம் என்னுள் இருந்த போதிலும் நான் ஏற்கெனவே இக்கூட்டங்களுக்கு அடிமையாகி விட்டிருந்தேன். இப்படி இருந்தாலும் கூட, பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதில் நான் வெற்றி பெறவில்லை. 
அந்த அனுபவத்திற்கு பிறகு, மலைகளுக்குச் சென்று பைன் மரத்தைப் பிடித்துக் கொண்டு இரவு முழுவதும் அழுது ஜெபித்தேன். ஒரு குகைக்குள்ளிருந்தும் ஜெபித்தேன். அதுவும் வேலை செய்யவில்லை. அதன் பிறகு, 40 நாட்கள் தொடர்ந்து முழு இரவு ஜெபம் செய்தும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. அப்பொழுது ஒரு நாள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய ஒரு கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டேன். இந்த கருத்தரங்கு வாரம் ஒரு முறையென ஏழு வாரங்கள் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கு கர்த்தரின் அன்பு, சிலுவை, இயேசுவின் உயிர்த்தெழுதல், கை வைத்தல், ஆவியின் கனிகள், மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியதாக இருந்தது. கருத்தரங்கின் நிகழ்ச்சிகள் முடிவு பெறும் வேளையில், கருத்தரங்கின் பிரசங்கியார் தன் கைகளை என் தலைமீது வைத்து பரிசுத்த ஆவிக்காக ஜெபித்தார். அவர்கள் கூறியபடியெல்லாம் செய்தேன். சிறிது ஓய்வெடுத்து என் கைகளை வானத்தை நோக்கி உயர்த்தி “லா-லா-லா-லா” என்று மீண்டும் மீண்டும் கத்தினேன். திடீரென “லா-லா-லா-லா” என்றழுது கொண்டிருக்கும்போது அந்நிய பாஷையைத் தடையின்றி பேசத் தொடங்கினேன். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டமைக்காக அநேக மக்கள் என்னை வாழ்த்தினார்கள். ஆனால் நான் வீட்டில் தனியாக இருந்தபோது பயந்தேன். ஆகவே, அக்கருத்தரங்கின் தொண்டனாக வேலைச் செய்யத் தொடங்கினேன். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொண்டு செய்ய வேண்டுமென்று, என்னுடைய வேலைகளைச் செய்வதற்கு நாடு முழுவதும் சென்றேன். நான் என்னுடைய கைகளை சுகமில்லாதவர்கள் மீது வைத்தபோது, அவர்கள் சுகம் பெற்றது போல் தோன்றியது. ஆனால் பிறகு அவர்கள் படுக்கையில் விழுந்தார்கள். பிறகு என் கண்களுக்கு முன் காட்சிகளைக் கண்டேன். மேலும் என்னால் தீர்க்கதரிசனம் உரைக்க முடியும் என்றும் கண்டேன். ஆச்சர்யமாக, எனது தீர்க்கதரிசனங்கள் உண்மையாயின. அந்நேரமுதல், நான் எல்லா இடங்களுக்கும் அழைக்கப்பட்டு புகழ் பெற்றவர்களைப் போன்று உபசரிக்கப்பட்டேன். ஆயினும் என்னுள் பயமிருந்துக் கொண்டேயிருந்தது. பின்பு ஒரு நாள், ஒரு குரல் என்னிடம் கூறியது. “இதுபோல் ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் கொண்டிராமல், உன் குடும்பத்தார் இரட்சிப்படைய உதவும் பொருட்டுச் செல்” ஆயினும் அந்த இரட்சிப்பு என்ன என்பது எனக்குத் தெரியாது, மற்றவர்கள் கூறியவை மட்டுந்தான் எனக்குத் தெரியும். பரிசுத்த ஆவியானவர் அளித்த வரத்தை நான் உபயோகப் படுத்தாவிட்டால் அதனை அவர் எடுத்துப் போடுவார் என்றனர். ஆனால் மறுபுறத்தில், என்னுடைய திறமைகளை உபயோகப்படுத்த பயந்தேன். அதே நேரம் அப்படிச் செய்வதை நிறுத்தவும் முடியவில்லை.
ஒரு நாள், ஒரு பெண் மந்திரவாதி இயேசுவை விசுவாசிக்க விரும்புகிறாள் என்று கேள்விப்பட்டு என் நண்பர்களுடன் அவளிடம் சென்றேன். நாங்கள் அவளிடத்தில் வருகிறோம் என்று முன்கூட்டியே அவளிடம் கூறவில்லை. ஆனால் அந்த பெண் மந்திரவாதி எங்களுக்காகத் தன் கதவருகே காத்திருந்ததுடன் “நீங்கள் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றும் கூறினாள். திடீரென எங்கள் மீது நீரைத் தெளித்து “கிழக்கின் மந்திரத்திற்கும் மேற்கின் மந்திரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை.” என்றாள். அவள் எங்களை இயேசுவின் மந்திரவாதிகள் என்றழைத்தாள். அவள் எங்களை நோக்கி, “இவன் பயந்த சுபாவம் உள்ளவன், அவன் அப்படிப்பட்டவன் அல்ல” என்றாள். அந்த பெண் மந்திரவாதி கூறியது என் தலையில் இடியைப் போல் இறங்கியது. நான் செய்தவைகளெல்லாம் இந்த பெண் மந்திரவாதி செய்கிறவற்றிலிருந்து எந்த வேறுபாடும் இல்லாதவை என்று நினைக்கத் தொடங்கினேன். என்னுடைய பாவங்கள் என்னிருதயத்தில் இன்னுமிருந்ததால் நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவில்லை.”
இந்த நிகழ்ச்சிகளின் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது நமது திறமைகளுக்கு அப்பாற்பட்டது என்று கற்றோம். இத்தகைய விசுவாசம் கர்த்தரின் நற்செய்தியை அடிப்படையாக கொண்டிராததால், இத்தகைய மத வாழ்க்கையில் வாழுபவர்களின் விளக்குகளில் எண்ணெய் இல்லை.
வேதாகமம் கூறும் விளக்கானது ஆலயத்தைக் குறிக்கின்றது. மேலும் எண்ணெய் என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கின்றது. பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளாமல் ஆலயம் செல்லுபவர்களை முட்டாள்கள் என்று வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது. அது கர்த்தரின் ஆலயமா இல்லையா என்றில்லை.
முட்டாள்கள் தம் உணர்வுகளையும், உடம்புகளையும் ஒவ்வொரு நாளும் எரிக்கிறார்கள். முட்டாள்கள் தன் உணர்வுகளை உடம்புடன் கர்த்தர் முன் எரிக்கின்றனர். நம்முடைய உணர்ச்சிகளை 20cm இருக்கிறதென்றும் நாளொன்றுக்கு 1cm உபயோகப்படுத்துகிறோம் என்றால், நம்முடைய உணர்வுகளெல்லாம் 20 நாட்களில் காலியாகிவிடும். அவர்களின் நம்பிக்கைக்குப் பின்புறம் இருக்கும் உணர்ச்சிகள் அதிகாலை ஜெபம், முழு இரவு ஜெபம், உபவாச ஜெபம் மற்றும் எழுப்புதல் கூட்டங்கள் மூலம் புதிய பலத்தைப் பெறுகின்றன. அதே நேரம் அவர்கள் உணர்வுகளும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் எரிகிறது. அவர்கள் தம் உணர்ச்சிகளை எரிக்கும் முடிவில்லாத முறைக்கு அடிமைகளாகிவிட்டனர். 
அவர்களுடைய உணர்வுகள் இயேசுவின் பெயரில் எரிகின்றன. அவர்கள் ஆலயத்திற்குச் சென்று தம் உணர்ச்சிகளை எரிக்கின்றனர். ஆனாவ் அவர்கள் இருதயமோ வெறுமையாக எதையோ தேடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால் அவர்களுடைய நம்பிக்கை உடம்பின் உணர்ச்சிகளிலிருந்து வருகிறது; ஆகவே, நெருப்பு அணையாமல் இருக்கும் பொருட்டு தம் உணர்ச்சிகளை உறுதிப் படுத்துவதற்கு தொடர்ந்து தேவையிருக்கிறது. ஆயினும், இத்தகைய விசுவாசத்தால் அவர்களால் பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியாது. தம் உணர்ச்சிகளை எரிப்பது பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு வழி நடத்தாது.
கர்த்தரின் சந்நிதானத்தின் முன் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்கு சரியான விசுவாசத்தை ஆயத்தம் செய்யவேண்டும். அப்பொழுது மட்டுமே பரிசுத்த ஆவியானவரைப் பெறத் தகுதியானவர்களாவோம். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள நம்மைத் தகுதியாக்கும் விசுவாசத்தை சம்பாதிப்பது எப்படி? இயேசு யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றால் நிறைவேற்றப்பட்ட அழகிய நற்செய்தில் உண்மை அடங்கியிருக்கிறது.
கர்த்தர் நம்மை “பொல்லாதவர்களின் சந்ததியும்” (ஏசாயா 1:4) என்கிறார். இதனை நமக்கானதாக ஏற்றுக் கொள்ளவேண்டும். மக்கள் 12 விதமான பாவங்களுடன் பிறந்தனர் (மாற்கு 7:21-23). மனிதர்கள் தாம் பிறந்த நேரம் முதல் தாம் மரணமடையும் நாள் வரை பாவஞ் செய்வதிலிருந்து தப்ப முடியாது.
யோவான் 1:6-7 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்கச் சாட்சியாக வந்தான்.” யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்து உலகின் எல்லா பாவங்களையும் அவர் மீது சுமத்தி, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” (யோவான் 1:29) என்றான். நாமெல்லாரும் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டோம். இயேசுவிற்கு யோவான் அளித்த ஞானஸ்நானத்திற்கு நன்றிகள். யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுக்காமல், அவர் உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என பிரகடனப் படுத்தாமலிருந்தால், இயேசு நம் பாவங்களையெல்லாம் அவருடன் சிலுவைக்கு எடுத்துச் சென்றார் என்று அறிந்திருக்க மாட்டோம். நமக்கு பரிசுத்த ஆவியானவரைப் பெறும் வழியும் தெரிந்திருக்காது. யோவானின் சாட்சிக்கு நன்றிகள். அதன்மூலம் இயேசு நம் பாவங்களை எடுத்துப் போட்டதால் பரிசுத்த ஆவியானவரை நம்மால் பெறமுடிந்தது. 
இந்த விசுவாசத்தின் மூலமாக, மணவாளனாகிய இயேசுவை வரவேற்க நாம் மணவாட்டியாகி, அவரை வரவேற்க முழு ஆயத்தமாக இருக்கிறோம். நாமே இயேசுவை விசுவாசிக்கும் கன்னிகைகள், நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற முழு ஆயத்தமாக இருக்கிறோம். 
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உன் முழு இருதயத்துடன் விசுவாசிக்கின்றாயா? யோவானால் பண்ணப்பட்ட ஞானஸ்நானத்தின் மூலம் உன் பாவங்களையெல்லாம் இயேசு கிறிஸ்து சுமந்து தீர்த்தார் என்பதை நம்புகிறாயா? வேதாகமம் கூறுகிறது, “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலேயே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17). நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்காக, இயேசு யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் மரித்தார் என்பதை நாம் விசுவாசிக்கவேண்டும். இயேசு இவ்வுலகிற்கு மனிதனாக வந்தார். யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார், சிலுவையில் மரித்து மீண்டும் உயிரோடெழும்பினார் என்பதை விசுவாசிப்பதன் மூலமே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றும் கூட, இரண்டு வகையான விசுவாசிகள் இருக்கின்றனர். அது பத்து கன்னிகைகளின் கதைக்கொப்பான இரண்டு வகையாகும். நீ எந்தப் பக்கத்திலிருக்கிறாய்? நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் பரிசுத்த ஆவியை நீ பெற்றுக் கொள்ள வேண்டும். நீ ஆலயத்திற்குச் சென்றும், பரிசுத்த ஆவியானவர் உன்னிடத்தில் வரும்படி நீ காத்துக் கொண்டிருப்பதை அறிகிறாயா? பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான சரியான வழியை நீ அறியவேண்டும்.
எத்தகைய நம்பிக்கைகளினால் நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளமுடியும்? மந்திரத்தில் ஆர்வம் கொள்வதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளமுடியுமா? கோமா நிலையில் இருந்து கொண்டு பரிசுத்த ஆவியானவரை உன்னால் பெற முடியுமா? வெறிமிக்க மதங்களை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள முடியுமா? உன்னுடைய பாவங்களை மன்னிக்குபடி கர்த்தரிடம் நீ இடைவிடாது ஜெபிக்கவேண்டுமா? வேதாகமம் கூறுகிறது, இயேசு ஞானஸ்நானம் பெற்று நீரிலிருந்து மேலே வருகையில், கர்த்தரின் ஆவியானவர் புறாவைப் போல் இறங்கி வந்தார். நம்முடைய பாவங்களையெல்லாம் சுமக்கும்படியாகவும், நம்முடைய மீறுதல்களுக்காய் சிலுவையில் கிரயஞ்செலுத்த அறையப் படப் போவதாகவும் நம்மிடம் கூறுவதற்காக ஞானஸ்நானம் பெற்றார்.
உலகின் பாவங்களையெல்லாம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்று சிலுவைக்குச் சென்றார். ஆகவே, நாம் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரைப் பெறுகிறோம். இதுவே உண்மையாகும். யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார், சிலுவையில் நம் பாவங்களுக்காய் தீர்க்கப்பட்டு மீண்டும் உயிரோடெழும்பினார். நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு பெறும் பொருட்டு, யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் (மத்தேயு 3:13-15), பரிசுத்த ஆவியானவர் அமைதியாகப் புறாவைப் போன்று, அவர் ஞானஸ்நானத்தை விசுவாசித்து சுத்தமானோர் மீது இறங்குவதைக் காணலாம்.
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்கு, யோவான் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பது மிகவும் அவசியம். ஒருவன் பாவ மன்னிப்பை நம்பும்போது பரிசுத்த ஆவியானவர் அவன் மீது புறாவைப் போன்று அமைதியாக வருகின்றார். பரிசுத்த ஆவியானவரை ஏற்கெனவே பெற்றுக்கொண்டவர்கள் பாவ மன்னிப்பின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமே அது சாத்தியமாயிற்று என்பதை அறியவேண்டும். யாரெல்லாம் பாவ மன்னிப்பை தம் இருதயப்பூர்வமாக நம்புகிறார்களோ அவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருகின்றார்.
இயேசுகிறிஸ்து நித்திய வாழ்வின் அப்பமாகவும் இரசமாகவும் வந்தார். (மத்தேயு 26:26-28, யோவான் 6:53-56). இயேசு ஞானஸ்நானம் பெற்று நீரிலிருந்து வெளியே வந்தவுடன் பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது” (மத்தேயு 3:17).
கர்த்தர் திரியேகமாயிருக்கிறார் என்று விசுவாசிப்பது இலகுவானது. கர்த்தர் இயேசுவின் பிதா, இயேசு கர்த்தரின் மகன். பரிசுத்த ஆவியானவரும் கர்த்தரே. திரியேகமும் நமக்கு ஒரே கர்த்தரே.
வெறும் சிலுவையை விசுவாசிப்பதாலோ, நீதியின் செயல்களைச் செய்வதன் மூலம் உங்களை பரிசுத்தப்படுத்த முயற்சிப்பதாலோ, உஙகளால் பரிசுத்த ஆவியைப் பெறவே முடியாது என்பதை நீங்கள் அறியவேண்டும். நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவரின் மீது சுமத்துவதற்காக யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்தான் என்பதையும் நம்முடையப் பாவங்களுக்கு பிரயச்சித்தமாக அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதையும் நீங்கள் விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். சத்தியம் எத்தனை தெளிவானதாகும் உண்மையாகவும் இருக்கிறது! மன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவரையும் பெறுவது கடினமானதல்ல.
கர்த்தர் இலகுவான வார்த்தைகள் மூலம் நம்முடன் பேசுகிறார். ஒரு சாதாரண மனிதனில் புத்திசாலிதனம் 110 இலிருந்து 120 ஆகும். அவருடைய நற்செய்தி சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளுமளவு இலகுவானது. 4 அல்லது 5 வயதுள்ள சிறிய பிள்ளைகளுக்கு கூட அழகிய நற்செய்தியானது புரிந்து கொள்வதற்கு கடினமானதல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ்செய்வதைக் குறித்து கர்த்தர் இன்னும் உயர்ந்த முறையில் கூறியிருந்தால், நாம் அவரை புரிந்து கொண்டிருப்போமா? கர்த்தர் நீதியாக நம் பாவங்களை மன்னித்து அதனை நம்புவோருக்கு பரிசுத்த ஆவியானவரை வரமாக அளித்தார்.
கைகளை வைப்பதனாலோ அல்லது மனம் வருந்தி ஜெபிப்பதாலோ நம்மால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். பரிசுத்த ஆவியானவர் உபவாசம் இருப்பதாலோ, அர்ப்பணிப்பதாலோ, முழு இரவும் மலைகளில் ஜெபிப்பதாலோ வருவதில்லை. எத்தகைய விசுவாசத்தின் பலனாக பரிசுத்த ஆவியானவர் நம்முள் வர முடியும்? இயேசு இவ்வுலகிற்கு வந்தார். எல்லாப் பாவங்களையும் சுமக்கும்பொருட்டு ஞானஸ்நானம் பெற்றார், சிலுவையில் மரித்தார், மேலும் உயிரோடெழும்பினார் என்பனவற்றை விசுவாசிக்கும் விசுவாசமே அது.


நாம் இதனை உண்மையாகவே நம்ப வேண்டுமா?

நாம் ஏன் பாவ மன்னிப்பு பெறுவதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெறவேண்டும்? கர்த்தரின் இராஜ்யத்தின் பிரஜைகளாகும் பொருட்டு அவரின் ஆவியைப் பெறவேண்டும். ஆகவே, பரிசுத்த ஆவியானவரை நாம் பெறும்படியாக, இயேசுவை நம் இரட்சகராகவும், அவரின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசித்து, கடைசியாக நம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறவேண்டும்.
தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களுக்கு கர்த்தர் ஏன் பரிசுத்த ஆவியானவரை அருளிச் செய்கிறார்? அவர்களை தம் மக்களாக முத்திரைக் குத்துவதே அதன் காரணம். கர்த்தரின் வார்த்தைகளின் அடிப்படையில் இயேசுவை நம்புபவர்களுக்கு முத்திரைக் குத்தவே பரிசுத்த ஆவியானவரை அத்தாட்சியாக அவர்களுக்கு கொடுக்கிறார்.
நிறைய மனிதர்கள் தவறான விசுவாசத்தைக் கடைபிடிக்கிறார்கள். இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்பி பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது மிகவும் சுலபமான காரியம். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுகொண்ட நமக்கு அது இலகுவானது. அதே சமயம் பாவமன்னிப்பு பெறாதவர்களுக்கு அது முற்றிலும் இயலாத காரியம். அவர்களுக்கு உண்மை தெரியாததால் பரிசுத்த ஆவியை பெறுவதற்கு மற்ற வழிகளான மதந்தரும் கோமா மற்றும் வெறித்தனமான நடவடிக்கைக்குள் தம்மை மூழ்கடிப்பதன் மூலம் தேடுகின்றனர். சாத்தான் விதைத்த விதையானது அவர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கும், மேலும் மூட மதத்தின் பாதிப்பிற்குள் விழவும் வைக்கும் என்பது குறித்து அவர்கள் அறிவில்லாதவர்களாக இருக்கின்றனர். 
இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை நம்பி பாவ மன்னிப்பு பெற்றவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்கிறார். கர்த்தரின் இரட்சிப்பை விசுவாசிப்போர் மட்டுமே, “என்னிடம் பாவம் இல்லை” என்று அறிக்கை செய்யமுடியும். ஒருவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவில்லையென்றால், அவனால் தன்னில் பாவமில்லை என்று கூறமுடியாது. அதுபோல, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து பாவ மன்னிப்பைப் பெற்றவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை தம் பிள்ளைகளுக்கு அடையாளமாக கர்த்தர் தந்தருளினார்.
இயேசுவின் ஞானஸ்நானமும் அவர் இரத்தமும் நம் பாவங்களை எடுத்துப்போட்டது என்று சாட்சி கூறுவது யார்? இயேசு, அவரின் சீடர்கள், மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் அங்ஙனம் சாட்சியம் கூறுகிறார்கள். எல்லா மக்களையும் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கத் திட்டமிட்டது யார்? பரிசுத்த பிதாவானவர் திட்டமிட்டார். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தியது யார்? இயேசு நடைமுறைப் படுத்தினார். இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது என்று உறுதி கூறுபவர் யார்? பரிசுத்த ஆவியானவர்.
கர்த்தர் நம்மைத் தம் பிள்ளைகளாக்க விரும்புவதால், நம் பாவங்களையெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலமாக இரட்சிக்க தீர்மானத்துடனுள்ளார். ஆகவே, தெய்வீக திரியேகம் நம் இறுதி இரட்சிப்பை உறுதிசெய்து பாவ மன்னிப்பை அங்கீகரிக்கிறது.
மத்தேயு 3:17 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” பரிசுத்த ஆவியையுடைய மக்கள் கர்த்தரின் மக்கள். அவர்கள் அவருடைய பிள்ளைகள். “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” இயேசுவே கர்த்தர். பிதாவாகிய கர்த்தர் கூறுகிறார். “உன் பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுமானால், உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவால் நிரந்தரமாக அகற்றப்பட்டதென்றும், என்னுடைய ஒரே நேசகுமாரன் என்றும் விசுவாசித்து பரிசுத்த ஆவியைப் பெற்று, என்னுடைய பிள்ளையாகு.” இதனை விசுவாசிப்போர் பாவ மன்னிப்பு பெற்று கர்த்தரின் மகனாகவும் மகளாகவும் மாறுவர். அவர்களைத் தம் பிள்ளைகள் என்று முத்திரைப் பதிக்க அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை பரிசாக அளிக்கிறார். நாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகிய இரண்டையும் ஒரு சேர விசுவாசித்ததன் மூலம் நம் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற்றோம்.
மக்கள் தம் இருதயத்தை வெறுமையாக்கி நற்செய்தியாகிய பாவ மன்னிப்பை விசுவாசிக்காதபோது, அவர்கள் தம் மூலப் பாவங்கள் ஏற்கெனவே போய்விட்டன. ஆயினும் தம் சொந்த பாவங்களுக்காக இடைவிடாது மனம் வருந்தி ஜெபிக்க வேண்டுமென்று எண்ணத் தொடங்குகின்றனர். அவர்கள் இத்தகையச் சிந்தனைகளுக்கு பலியானால், வேதாகமம், புரியாததாகவும், குழப்பமானதுமாகி விடுகிறது. ஆகவே அவர்கள் சீடர்களின் விசுவாசத்தைக் கைவிட்டு வேறு வகையான நம்பிக்கைகளுக்குள் சென்றுவிடுகிறார்கள்.
சிலர் “ஜெபம் மூலம்” பரிசுத்த ஆவியானவர் தம்முள் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் வேதாகமத்தின் அடிப்படையில் இது முழு உண்மையல்ல. இது அபத்தமானதாகத் தெரியலாம். ஆனால் வேதம் கூறுகிறது. யோவானால் இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று நீரிலிருந்து வெளியே வரும்போது பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் அவர் மேல் இறங்கி வந்தார். இது எதனை நிருபிக்கின்றது என்றால், நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு, இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இவ்வுலகின் பாவங்களை சுமக்கும்படி யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவற்றிற்காக சிலுவையில் தீர்க்கப்பட்டார். மேலும் நம் இரட்சகராகும் பொருட்டு உயிரோடெழும்பினார் என்பனவற்றை விசுவாசிக்க வேண்டும்.
நாம் இந்த உண்மையை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரைப் பெறும்போது கர்த்தர் என்ன கூறுகின்றார்? அவர் கூறுகிறார் “நீ என் மகன், இவன் என்னுடைய அன்பான மகன், இவனில் பிரியமாயிருக்கிறேன்.” கர்த்தர் எதிர்காலத்தில் இயேசுவை விசுவாசித்து பாவமன்னிப்பு பெறுபவர்களிட்ம் கூட இப்படியே கூறுவார். இந்த உண்மை கர்த்தர் நம்மைத் தம் பிள்ளைகளாக்குவதாக கூறிய வாக்குதத்தமாகும். 
ஆனால் மக்கள் இன்னமும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றன என்று நினைக்கிறார்கள். உன்னுடைய அழுகை மற்றும் உலகச் சம்பந்தமான முயற்சிகளினால் பரிசுத்த ஆவியானவர் உன் மீது வருவார் என்று நினைக்கிறாயா? கர்த்தரின் கிரியைகள் அவர் சித்தத்திற்குட் பட்டவை, மேலும் தம் பாவங்களுக்காய் பாவ மன்னிப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே அவர் பரிசுத்த ஆவியை அளிக்கிறார். அவர் கூறுகிறார். “உன்னுடைய பாவங்களனைத்தையும் சுமக்கும்படியாக என் மகனை ஞானஸ்நானம் பெற்றவனாக்கினேன். அவற்றிற்கு தீர்ப்பாக சிலுவையில் அறையப்படும்படிச் செய்தேன். என் மகனை உன் இரட்சகராக நியமனம் செய்தேன். என் மகனால் நிறைவேற்றப்பட்ட பாவ மன்னிப்பை நீ ஏற்றுக் கொண்டால், அப்பொழுது பரிசுத்த ஆவியை உன்னிடத்தில் அனுப்புவேன்.”
நம் பிதா அவர் விரும்புவதைச் செய்கிறார். ஒருவன் இரவு முழுதும் முழங்காலிட்டு தன் நுரையீரல் வெடிக்குமளவு அவரிற்காய் அழுதாலும் கர்த்தர் அவனுக்கு நிச்சயமாக பரிசுத்த ஆவியானவரை அனுப்பமாட்டார். அவர் அவனை இப்படியாக அதட்டுவார். “நீ இன்னும் சரியான அறிவை ஏற்றுக்கொள்ளவில்லை மேலும் நீ தொடர்ந்து தவறான நம்பிக்கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறாய். பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது, நீ உண்மையான நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை தடைச் செய்யப்பட்டுள்ளது.”
இவ்வுலகில், சூழ்நிலைக்கேற்றவாறு மனிதர்களின் தீர்மானங்கள் மாறும், ஆனால் கர்த்தர் நியமித்த பாவமன்னிப்பும் பரிசுத்த ஆவியானவரை அளிப்பதும் குறித்த சட்டங்கள் மாற்ற முடியாதவை. இந்த தவறான நம்பிக்கைகளினுள் விழுந்தாயானால், சரியான பாதையை மீண்டும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். கீழ்படிதலில்லாதவர்களுக்கு இயேசு முட்டுக் கட்டையாக இருப்பதாக வேதாகமம் கூறுகிறது. (1 பேதுரு 2:8)
இயேசுவை விசுவாசிக்கும் மக்களுக்கு, அவர் ஏன் ஞானஸ்நானம் பெற்றார் என்று தெரியாவிட்டால் அவர்கள் பாவ விடுதலையின் நற்செய்தியில் அறைவாசியையே நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் நிச்சயம் நரகத்திற்குள் விழுவார்கள். ஆகவே, நீங்கள் முதலில் இயேசுவை விசுவாசிக்கும்போது, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இதன் மூலமாகவே பாவ மன்னிப்பு நற்செய்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளும் போது பரிசுத்த ஆவியையும் கூடப் பெறுவீர்கள்.
இயேசுவின் பூலோக வாழ்க்கை குறித்து பார்ப்போம். இயேசு ஒரு மனிதனாக அவதரித்து தன் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் தம் மீது ஏற்றுக்கொண்டார். நம்மை நரகத்தின் அக்கினியிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு சிலுவையில் மரித்து, நம்முடையப் பாவங்களுக்காக தீர்க்கப்பட்டார். அவரை விசுவாசிப்போர் பரிசுத்த ஆவியானவரை வரமாகப் பெறுவார்கள்.
ஆகவே, பரிசுத்த ஆவியானவரைப் பெறும் பொருட்டு உண்மையான பாதையைப் பின்பற்ற வேண்டும். எது தேவையெனில் உண்மையின் வார்த்தையின் படி நினைப்பது. இதனை நாம் பின்பற்றும்போது, இயேசு உன்னை தன்னில் வைத்து ஆசீர்வதிப்பார். யாரெல்லாம் இருதயத்தை வெறுமையாக்கி அவர் வார்த்தைகளை நம்புகிறார்களோ அவர்கள் பாவ மன்னிப்பை பெறுவதன் பொருட்டு சத்தியத்தில் வாழ்வதோடு, பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தவும் படுவர். மேலும், பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் மற்றவர்களையும் சத்திய பாதையில் வழி நடத்தலாம்.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் நிறைவேற்றப்பட்ட பாவ விடுதலையை விசுவாசி. அப்பொழுது மட்டுமே அவரை விசுவாசத்துடன் நாம் பற்றி, பாவ மன்னிப்பு ஆசீர்வாதத்தைப் பெற்று, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப் பெற்று நித்திய வாழ்வைப் பெறுவோம். இயேசுவே மன்னிப்பின் தேவன். அவர் தன் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணம் மூலம் உலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்தார். இயேசு நம் பாவங்களைச் சுத்திகரித்து நற்செய்தியாகிய சத்தியத்தை விசுவாசித்தோருக்கு பரிசுத்த ஆவியை அளித்தார். உண்மை நம்பிக்கையை கடைபிடிப்பதன் மூலம் நீங்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெறலாம்.

【8-7】 <ஏசாயா 9:6-7> பரிசுத்த ஆவியானவரை விசுவாசிகளிடம் வாசஞ்செய்விக்கும் அழகிய நற்செய்தி<ஏசாயா 9:6-7>

“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு எனப்படும் தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.”


 • விசுவாசிகளினுள் பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்ய அனுமதிப்பது யாது
 • அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே அனுமதிக்கிறது


பரிசுத்த ஆவியானவரைப் பெறும் பொருட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மீது விசுவாசம் வைக்கவேண்டும். நம்முடைய கர்த்தருக்கு, அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன் என்ற பெயர்கள் உள்ளன. நம்முடைய தேவன் பரலோகத்தின் வழி என்றும் குறிக்கப்படுகிறார். இயேசுகிறிஸ்து எல்லோருக்கும் அழகிய நற்செய்தியை பரிசாக அளித்தார்.

ஆயினும், இவ்வுலகில் இன்னமும் அநேகர் இருளில் வாழுகின்றனர். அவர்கள் இந்த இருளிலிருந்து தப்பமுயல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அழகிய நற்செய்தியைக் குறித்து எதுவும் தெரியாததால், அவர்கள் தம் பாவங்களிலிருந்து என்றென்றும் தப்ப முடியாது. அவர்கள் தம் போலியான கொள்கைகளின் நம்பிக்கையின்று உதிர்ந்து போவார்கள். அதற்கு மாறாக, உண்மையை தேடுபவர்கள், அழகிய நற்செய்தியை எதிர்கொண்டு, கர்த்தரின் ஆசீர்வாதத்தினால் நிரம்பிய வாழ்க்கையை தம் எஞ்சிய வாழ்நாளில் பெறுவர். அவர்கள் அழகிய நற்செய்தியைக் கண்டு தம் பாவங்களினின்று சுத்திகரிக்கப்பட உதவும்படியாக என்னை அனுமதித்தது எனக்கு கிடைத்த சிறப்பு ஆசீர்வாதமாக கருதுகிறேன்.

அவருடைய ஆசீர்வாதம் இல்லையெனில் பாவத்திலிருந்து சுதந்திரம் கிட்டுவது சாத்தியமாகாது. நாம் கர்த்தரைச் சந்தித்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றால் அதிகம் ஆசீர்வதிக்கப் பட்டோராவோம். வருந்தத்தக்க விதமாக இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலமாக கர்த்தரின் ஆசீவாதம் கிட்டுகிறது என்பதை அறியாத மக்கள் அநேகம்.

கர்த்தரின் ஆசீர்வாதம், அவரின் ஒரே பேரான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவால் நமக்களிக்கப்பட்ட அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பதிலாகக் கிடைக்கிறது. இயேசு நம்மை இவ்வுலகின் பாவங்களிலிருந்து இரட்சித்து நம்மைத் தம் கிருபையால் ஆசீர்வதிப்பவர். யாராலும் நம்முடையப் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கவோ, நம் இருதயத்திலிருக்கும் குற்ற உணர்வை அழிக்கவோ முடியாது. யாரால் தன் சொந்த பாவங்களிலிருந்து தன்னைத்தானே இரட்சித்து நித்திய அழிவின் வேதனையிலிருந்தும் இரட்சித்துக் கொள்ள முடியும்?

கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதி மொழிகள் 16:25) மக்கள் தமக்காக மதங்களை ஏற்படுத்திக் கொண்டு, அழிவையும் மரணத்தையும் நோக்கித் தம்மைச் செலுத்துகிறார்கள். அநேக மதங்கள் நீதியைக் குறித்து பேசுவதாக பெருமைப் பாரட்டி மக்களை பாவங்களிலிருந்து இரட்சிக்க தம் சுய வழிகளைக் காட்டுகின்றனர். ஆனால் கர்த்தர் நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மட்டுமே நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கமுடியும். இயேசுவே இரட்சகர். அவரால் மட்டுமே பாவிகளைப் பாவங்களிலிருந்து இரட்சிக்க முடியும்.

யோவான் 14:6 இல் நம் கர்த்தர் கூறுகின்றார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.” மரண வழிகளில் சென்று கொண்டிருப்பவர்களுக்காக தன் சொந்த மாமிசத்தையும் இரத்தத்தையும் கொடுத்தார். அவர் தாமே சத்திய வாழ்வின் வழி என்றும் கூறுகிறார். கர்த்தர், இயேசுவின் அழகிய நற்செய்தியை ஒருவன் விசுவாசிக்கா விட்டால், அவன் பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்று கூறுகிறார்.

பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமானால், நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இயேசுவே நம் இரட்சகர் என்று விசுவாசிக்க வேண்டும்.பழைய இஸ்ரவேலில் ஒரு முறை!


“உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதா தேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின் மேல் யுத்தம் பண்ண வந்தார்கள். அவர்களால் அதைப் பிடிக்கக் கூடாமற் போயிற்று” (ஏசாயா 7:1)

இஸ்ரவேல் ஒரே நாடாக இருந்தது. ஆயினும் இஸ்ரவேல் தெற்கு வடக்கு என்று இரண்டாகப் பிரிந்தது. கர்த்தரின் ஆலயம் தெற்கு யூதாவிலுள்ள எருசலேமில் இருந்தது. அதனை ரெகொபெயாம், சாலமோனின் மகன் அரசாண்டான். பின்பு சாலமோனின் வேலையாட்களில் ஒருவனான யெரொபெயாம், வடக்குப் பகுதியில் இன்னொரு நாட்டை உருவாக்கினான். ஆகவே, இஸ்ரவேல் இரண்டாகியது. அந்நேரமுதல் கர்த்தர் மீதிருந்த விசுவாசம் சிதிலமடையத் தொடங்கியது. அப்பொழுது சிதிலமடைந்த நம்பிக்கையே இப்போதுள்ள புரட்டு மதங்களின் மூலமாகும். யெரொபெயாம் இங்ஙனம் வேதப்புரட்டர்களின் மூலகர்த்தாவானான். அவனுடைய சிங்காசனத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் அவன் இருந்ததால் கர்த்தரின் சட்டங்களை அமல் படுத்தினான். இப்படியாக அவன் வேதப்புரட்டர்களின் தந்தையானான். அவன் தன்னுடைய இஸ்ரவேல் மக்களுக்காக வித்தியாசமான மதம் ஒன்றை வடக்கு இராஜ்யத்தில் உருவாக்கினான். அவன் தெற்கு இராஜ்யமான யூதேயாவைக் கைப்பற்றவும் முயன்றான். 200 வருடங்களானாலும் கூட இரண்டு இராஜ்யங்களுக்கும் இருந்த பகைமை மாறவில்லை.

ஆகவே, கர்த்தர் ஏசாயாவின் மூலம் பேசினார், “நாம் யூதாவுக்கு விரோதமாய்ப் போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக் கொண்டு, அதற்கு தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்; நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப் பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக் கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவள வேண்டாம். கர்த்தராகிய ஆண்டவர். அந்த ஆலோசனை நிலை நிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை; சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொருங்குண்டு போம். எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்” (ஏசாயா 7:5-9).

அரசனாகிய ஆகாஸிற்கு அவ்வேலையில் கர்த்தர் ஏசாயாவின் மூலம் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆனால் ஆகாஸிற்கு அவரின் மேல் விசுவாசம் இருக்கவில்லை. சிரியாவின் படைக்குமுன்னால் தன்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்று ஆகாஸ் கவலைப் பட்டான். இப்போது சிரியாவும் இஸ்ரவேலும் அணிவகுத்து தன் மீது படையெடுக்கிறார்கள் எனக் கேட்டபோது, இன்னும் நடுங்கினான். ஆனால் கர்த்தரின் ஊழியனான ஏசாயா, அவனிடத்தில் வந்து கூறினான் “இன்னும் அறுபத்தைந்து வருடத்தில், வடக்கு இஸ்ரவேல் நொறுங்கிபோகும், இரண்டு அரசர்களும் தீட்டிய தீய சதி எப்போதும் உண்மையாகாது.”

கர்த்தருடைய ஊழியன் ஆகாஸ் ராஜாவிடம், கர்த்தரிடமிருந்து அடையாளத்தைத் தேடும்படி கூறினான். “ நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக் கொள் என்றுச் சொன்னார்” (ஏசாயா 7:11). “அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று ஏன் தேவனையும் விசனப் படுத்தப் பார்க்கிறீர்களோ? அதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.” இது அவருடைய தீர்க்க தரிசனமாக இருந்தது; அது அவர் தம் மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பார் என்பதாகும்.கர்த்தரின் பகைவன் யார்?


மனிதகுலத்தின் எதிரி பாவமாகும். பாவத்தின் மூலகர்த்தா சாத்தான். நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிப்பவர் யார்? தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவை தவிர இரட்சகராக யார் இருக்க முடியும்? மனிதனின் சரீரம் அடிப்படையில் பலவீனமாக இருப்பதால் அவனால் பாவம் செய்யாமல் இருக்க முடியாது. அவன் சாத்தானின் சக்திக்கு கீழிருக்கிறான். இன்னமும் மிக அதிகமான மக்கள் குறிசொல்பவர்களிடம் சென்று, இக்கள்ளத் தீர்க்கதரிசிகள் கூறுவதுபோல் மிகச் சரியாக வாழ்கின்றனர். இது அவர்கள் சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறவர்கள் என்பதற்கு நேரடி அத்தாட்சியாகும்.

கர்த்தர் ஏசாயாவிற்கு இரட்சிப்பின் அத்தாட்சியைக் கொடுத்தார். அவர் கூறினார் ஒரு கன்னி கர்பவதியாகி குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாயாக. இயேசுவை பாவ சரீரத்திற்கு ஒப்பாய் உலகத்திற்கு அனுப்பி சாத்தானின் கட்டுப்பாட்டிலிருந்து அவர் பாவிகளை இரட்சிக்க வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாக இருந்தது. இந்த தீர்க்கதரிசனத்தின்படி, கன்னி மரியாளுக்கு மனிதனாக பிறந்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.

இயேசுவானவர் நம்மிடம் வந்திருக்க வில்லையெனில், நாம் இன்னும் சாத்தானின் அரசாட்சிக்கு உட்பட்டிருந்திருப்போம். ஆயினும், இயேசு இவ்வுலகிற்கு வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்று, எல்லாப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் அழகிய நற்செய்தியைக் கொடுக்கும் வகையில் சிலுவையில் மரித்தார். ஆகவே, அநேக மக்கள் இந்த அழகிய நற்செய்தியை விசுவாசித்து, பாவ மன்னிப்பு பெற்று கர்த்தரின் பிள்ளைகளானார்கள்.

இன்றும் கூட, அநேக இறையியலாளர்கள் இயேசுகிறிஸ்து கர்த்தரா அல்லது மனிதனா என்று வாதிடுகிறார்கள். பழமை இறையியலாளார்கள் “இயேசு கர்த்தரே” என்கிறார்கள். ஆனால் புதிய இறையியலாளர்கள் இயேசு யோசேப்பின் கள்ளப்புத்திரன் என்று எதிர்த்து வாதாடுகிறார்கள். இது எத்தனை புலம்பலுக்குரிய வார்த்தை.

சில புதிய இறையியலாளர்கள் இயேசுவிற்கு நீரின்மேல் நடக்கும் திறம் இருந்தது என்பதை தம்மால் நம்ப முடியாது என்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள், “இயேசு தொடுவானத்தில் தாழ இருந்த மலைகளில் நடந்தார், அவரின் சீடர்கள், அவரை வெகு தொலைவிலிருந்து பார்த்து, அவர் நீரின் மேல் நடக்கிறார் என்று நினைத்தனர்.” இந்நாளின் இறையியல் மேதைகள் புதிய இறையியல் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள், இவர்கள் இறையியலில் பெரிய மனிதர்கள் இல்லை. அவர்கள் வேதாகமத்தில் எதைப் புரிந்து கொள்ளமுடியுமோ அதை மட்டும் விசுவாசிப்பதற்கு தெரிந்து கொள்கிறார்கள்.

வேறு ஒரு உதாரணம் கூற வேண்டுமானால், இயேசு இரண்டு மீன்களாலும் ஐந்து அப்பத்தாலும் 5000 மக்களை போஷித்ததாக கூறுகிறது. ஆனால் அவர்கள் இந்த அதிசயத்தைக் குறித்து சந்தேகமுடையவர்களாயுள்ளனர். அவர்கள் கீழ்க்கண்ட வாக்கியங்கள் மூலம் அதனை விளக்குகிறார்கள். “மக்கள் இயேசுவைப் பின்பற்றி பட்டினியால் செத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, இயேசு தம் சீடர்களிடம் மீதியிருக்கும் எல்லா உணவையும் சேகரிக்கும்படி கூறினார், அப்பொழுது ஒரு சிறுவன் தன் உணவை அவனாகவே முன் வந்து அவரிடன் கொடுத்தான். மேலும் மற்றவர்கள் எல்லாம் தம் உணவைத் தொட்டு உணவை எடுத்துச் சென்றனர். அவர்கள் சாப்பாட்டை எல்லாம் சேகரித்து உண்டதால், பன்னிரண்டு கூடை சாப்பாடு மிச்சமாயிற்று.” இத்தகைய இறையியலாளர்கள் தம்முடைய குறுகிய புத்திக்குள் கர்த்தரின் வார்த்தைகளை அடக்க முயல்கிறார்கள்.

கர்த்தர் அளித்த சத்தியத்தை விசுவாசிப்பது வெறுமனே கர்த்தர் கொடுத்த அழகிய நற்செய்தியின் மீது நம்பிக்கைக் கொள்வதே. ஒரு காரியத்தை புரிந்துகொள்ள முடிவதால், அதனை நம்புவோம் என்பது விசுவாசம் என்று பொருள்படாது. ஆனால் அது ஒரு காரியத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் விசுவாசிப்பதாகும். நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதோ இல்லையோ, நாம் அவரை நம்பி எழுதியுள்ளபடி அவரின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இயேசு மனித குமாரனாக வந்தார் என்பது, நம்முடையப் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க அவர் அனுப்பப்பட்டார் என்று பொருள்படும். கர்த்தராகிய இயேசு, நம்மை இரட்சிக்கும்படியாக இவ்வுலகிற்கு வந்தார். அவர் மனுபுத்திரனாகவும், கன்னிகைக்கு பிறந்தவருமாயிருப்பார் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் கூறினான்.

ஆதியாகமம் 3:15 இல் கர்த்தர் சர்ப்பத்திடம் கூறுகிறார். “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.” இதன் பொருள், கர்த்தர் இயேசுவை அனுப்ப, மனித ரூபத்தில் அவரை அனுப்ப, மனித குலத்தை அவர்கள் பாவங்களிலிருந்து மீட்கும் இரட்சகராக அனுப்ப திட்டமிட்டார்.

வேதாகமத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப் பிரமாணம்” (1 கொரிந்தியர் 15:55-56). மரணத்தின் கூர் பாவம். ஒரு மனிதன் பாவம் செய்யும்போது, மரணம் அவனைத் தன் அடிமையாக்குகிறது. கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தம் செய்துள்ளார். ஸ்திரீயின் வித்தானவர் உன் தலையை நசுக்குவார்” இதன் பொருள் யாதெனில் சாத்தான் கொண்டுவந்த பாவம் என்ற கூரை இயேசு அழித்துப் போடுவார் என்பதாகும்.

இயேசு இவ்வுலகிற்கு வந்து, உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்க்கும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்று அதற்குத் தீர்ப்பாக சிலுவையிலறையப் பட்டார். அழகிய நற்செய்தியை விசுவாசித்தவர்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்தார். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, சாத்தானின் வல்லமையிலிருந்து மக்களை இரட்சிப்பதாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார். இன்றைய நவீன உலகத்தில், கர்த்தரின் எதிரிகள் இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிக்காதவர்களே.இயேசு ஏன் இவ்வுலகில் பிறந்தார்?


நம்முடையப் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும் பொருட்டு கர்த்தர் நியாயப்பிரமாணத்தையும் அழகிய நற்செய்தியையும் தந்தார். அதுபோலவே, மக்கள் தம் பாவங்களை அறிந்துகொள்ளும் பொருட்டு நியாயப் பிரமாணத்தைக் கொடுத்தார். மக்கள் பாவங்களுக்கும் நியாயப்பிரமாணத்திற்கும் அடிமைகளான போது, நியாயப்பிரமாணத்தின் நீதியின் தேவையை நிறைவேற்றும்படி நம் கர்த்தர் இவ்வுலகினுள் வந்தார்.

இயேசு நியாயப் பிரமாணத்தின்படி பிறந்தார். அவர் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் பிறந்தார். மக்கள் நியாயப்பிரமாணத்தை அறிந்து கொள்ளவேண்டியதன் காரணம் என்னவெனில் அவற்றிற்கான பாவமன்னிப்பை பெறுவதற்கேயாகும். தம் உடையில் அழுக்கிருக்கிறது என்று அறியும்போதே மக்கள் அவற்றைச் சுத்தம் செய்கிறார்கள். அதுபோலவே, பாவங்களை அறிந்து கொள்ளும் விதமாக, மக்கள் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தை அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. அங்கே நியாயப்பிரமாணம் இல்லையென்றால், பாவத்தைப் பற்றிய எந்த உணர்வும் இராது, மேலும் இயேசு இவ்வுலகிற்கு வரவேண்டிய அவசியமும் இருந்திராது.

கர்த்தரின் நியாயப்பிரமாணத்தை அறிந்திருந்தீர்களானால், உங்களுக்கு அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நமக்கு நியாயப்பிரமாணம் தெரிந்திருப்பதால் நம்முடையப் பாவங்களைக் குறித்து நம்மால் அறிய முடிகிறது. நம்முடையப் பாவங்களை நாம் அறிந்த பிறகே இயேசுவானவர் அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கும்படியாக அதனை எடுத்து வந்தார். கர்த்தர் நமக்கு நியாயப்பிரமாணத்தை அளித்திருக்கவில்லை என்றால், நாம் பாவிகளாக இருந்திருக்க மாட்டோம், ஆகவே, நியாயத்தீர்ப்பு தேவைப்பட்ட்டிருக்காது. ஆகவே கர்த்தர் நமக்கு நியாயப்பிரமாணத்தைத் தந்து எல்லாப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும்படியாக அழகிய நற்செய்தியைப் பரிசளித்தார். 

நியாயப்பிரமாணமானது படைத்தவரிற்கும் படைக்கப் பட்டவைகளுக்குமிடையே இருக்கும் இரட்சிப்பிற்கான நியாயப்பிரமாணமாகும். இதுவே அன்பின் சட்டமாகும். கர்த்தர் மனிதனிடம் கூறினார், “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” (ஆதியாகமம் 2:17). இதுவே கர்த்தரிட்ட சட்டமாக இருந்தது. இந்த சட்டம் கர்த்தரின் அன்பின் அடிப்படையில் அமைந்து நம் பாவங்களிலிருந்து கர்த்தர் நம்மை மீட்கும் நியாயப்பிரமாணமுமானது. இரட்சிப்பின் சட்டம் பாவ மன்னிப்பு எனும் அஸ்திவாரத்தின் மீது அமைந்தது. கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். அவர் நம்மைப் படைத்தவர் எல்லாப் படைப்புகளும் அவர் சித்தப்படி உருவாயின. இதன் பொருள் என்னவெனில் கர்த்தர் நித்தியமானவர் எனவே மக்கள் இரட்சிப்பின் நியாயப்பிரமாணத்தை விசுவாசிக்க வேண்டும். அது அழகிய நற்செய்தியினால் நிறைவேறியது.

நித்திய தேவன் மிகவும் நல்லவராக இருக்கிறார். கர்த்தரின் அன்பானது தனது ஒரே பேறான புத்திரனையே பலியாகக் கொடுக்கச் செய்தது. குமாரன் பாவிகளனைவரின் இரட்சகரானார். கர்த்தர் நம்மைப் படைத்து நம்முடையப் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும்படி அழகிய நற்செய்தியைக் கொடுத்திராவிட்டால் அவருக்கெதிராக குறைச் சொல்லத் தொடங்கியிருப்போம். கர்த்தர் நம்மை அழிவிலிருந்து காக்க விரும்புவதால் இரட்சிப்பின் சட்டத்தை ஏற்படுத்தினார். நியாயப்பிரமாணத்தின் மூலம் நம் பாவங்களை நம்மால் உணரமுடிகிறது. நேரடியாக அவற்றைப் பார்க்க முடிகிறது, இயேசுவின் அழகிய நற்செய்தியை விசுவாசிக்க முடிகிறது. கர்த்தருடைய வார்த்தைகளை நாம் குழப்பம் செய்யும்போது, சட்டத்திற்கு முன் பாவிகளாக அறிவிக்கப்படுகிறோம். அதன் பிறகு, அவரின் பாவ மன்னிப்பு கிருபையை வேண்டி கர்த்தர் முன் கெஞ்ச முழங்கால் படியிடுகிறோம்.

இயேசு ஒரு ஸ்திரீக்கு பிறந்து மக்களை அவர்கள் பாவத்திலிருந்து இரட்சிக்கும் பொருட்டு உலகிற்கு வந்தார். கர்த்தரின் திட்டத்தை நமக்காக நிறைவேற்ற இயேசு இவ்வுலகிற்கு மனிதனாக வந்தார். அவருடைய அழகிய நற்செய்தியை விசுவாசிக்கிறோம். ஆகவே, கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்.

சிலர் குறை சொல்லுகிறார்கள் “நான் பாவத்தில் விழுந்து என்னுடைய தவறுகளினால் துன்பப்படும்படி என்னை ஏன் பலவீனனாகப் படைத்தார்?” கர்த்தர் நாம் துன்பப்படுவதை விரும்பவில்லை. நாம் இயேசுவின் நற்செய்தி மீது சந்தேகமுள்ளவர்களாயிருப்பதால் கர்த்தர் நம்மீது துன்பத்தை அனுமதிக்கிறார். கர்த்தர் நமக்குத் துன்பத்தையும் அழகிய நற்செய்தியையும் சேர்த்துக் கொடுத்துள்ளார். ஆகவே அவருடையப் பிள்ளைகளாக அவரைப் போன்றே வல்லமையுடையவர்களாக நாமிருப்போம். இது அவருடையத் திட்டமாகும்.

ஆனால் பிசாசுகள் கூறுகின்றன, “இல்லை! இல்லை! கர்த்தர் ஒரு சர்வாதிகாரி! நீ நினைப்பது போல் வாழ். சுதந்திரமாயிரு! உன்னுடைய முயற்சிகளின் மூலம் செல்வம் திரட்டு!” கர்த்தர் மீதுள்ள மனிதகுலத்தின் நம்பிக்கையைத் தடுக்க பிசாசானவன் முயல்கிறான். கர்த்தரிடமிருந்து தூரமாக வாழ்வதைத் தெரிந்து கொண்டவர்கள், அவர் இரட்சிப்புத் திட்டத்தின் தடையாவர். இயேசு இவ்வுலகிற்கு வந்து சாத்தானுடைய வல்லமையின் கீழிருப்பவர்களை அவர்களின் பாவங்களை விடும்படி அழைக்கிறார். நாம் கர்த்தரிடமிருந்து தொலைவில் வாழக் கூடாது.மனிதன் நரகத்திற்கு செல்லவேண்டிய பிறவிப்பாவி


இவ்வுலகில் மாறாது நிலைத்திருக்கும் உண்மை எதுவுமில்லை. ஆனால் இயேசுவின் அழகிய நற்செய்தியானது மாறாத ஒன்று. ஆகவே, மக்கள் அந்த உண்மையின் மீது சார்ந்திருந்து சாத்தானின் வல்லமைகளிலிருந்து விடுதலைப் பெறமுடியும். மனிதகுலம் ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்தைச் சுவீகரித்துள்ளது. மேலும் கிறிஸ்துவின் தலையீடு இல்லாவிட்டால் அவர்கள் நரகத்தின் நெருப்பில் அழிந்துப் போவார்கள். அதற்குமாறாக, அவர் பலியாகியதன் மூலம் கர்த்தரின் பிள்ளைகளாகும்படி மனிதன் வல்லமைப் பெற்றான். அதற்காக நன்றிகள். “இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்தது போல அது இருண்டிருப்பதில்லை” (ஏசாயா 9:1). கர்த்தர் தம் குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பினார், மேலும் அழகிய நற்செய்தியை விசுவாசிப்போரை மகிமைப் படுத்துகிறார்.

“இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசாயா 9:2). இன்று, இந்த வார்த்தைகள் உனக்கும் எனக்கும் சத்தியமாக வருகின்றன. அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் இவ்வுலகில் பெறமுடியாத நித்திய ஜீவனைப் பெறும் படியான ஆசீர்வாதம் பெறுவோம். இயேசுகிறிஸ்து மனிதகுலத்தை உலகின் பாவங்களிலிருந்து இரட்சித்து, இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்போரிற்கு, நித்திய ஜீவனையும் பரலோக ராஜ்ஜியத்தையும் அளித்தார். நம்பிக்கை இழந்தவர்கள் மீது நற்செய்தியாகிய வெளிச்சத்தை அவர் பிரகாசிக்கச் செய்தார்


மனிதன், ஒரு தவளையைப் போல் சிறிதுகாலம் இவ்வுலகில் இருந்து சீக்கிரமாக மறைகிறான். அவனுடைய வாழ்வு செடிகளையும் புல்லையும் போலிருக்கிறது. புல் தன் வாழ்வுக் காலத்தை வருடத்தின் சில வருடங்கள் மட்டும் வைத்திருந்து கர்த்தரின் கட்டளைப்படி மறைந்து போகிறது. புல்லின் வாழ்க்கையைப் போல் நம் வாழ்வு மாயையானது. ஆனால் கர்த்தர் இந்த அழகிய நற்செய்தியை நம் சோர்ந்து போன ஆவிக்கு அளித்து நம்முடைய நீதியின் நிமித்தம் நம்மை அவரின் பிள்ளைகளாக்கினார். இது எத்தகைய அதிசயமான கிருபை. நம்முடைய மாய வாழ்வு நித்திய வாழ்வானது, அதற்காக கர்த்தருக்கு நன்றிகள். நாமும் அவரின் பிள்ளைகளாகும் உரிமையை ஆசீர்வாதமாகப் பெற்றோம்.

இங்கு அழகிய நற்செய்தியை விசுவாசித்ததன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு ஆத்துமாவின் அறிக்கையை காணலாம்.

“கர்த்தரை விசுவாசிக்காத ஒரு குடும்பத்தில் நான் பிறந்தேன். ஆகவே எனது தாயார் தன் முன் சிறிது நீரை வைத்துக்கொண்டு வானம் மற்றும் பூமியிலுள்ள தெய்வங்களை என் குடும்பத்தின் வளமைக்காக பூஜிப்பது எத்தனை அழகானது என்ற சிந்தனையுடன் வளர்ந்தேன். நான் வளர்ந்து வரும்போது என்னுடைய பெருமானம் எனக்குத் தெரியாது. நான் ஜீவிப்பதன் காரணமும் எனக்குத் தெரியவில்லை. இது நான் வாழ்வதும் சாவதும் ஒரு பொருட்டல்ல என்று நான் சிந்திக்கும்படிச் செய்தது. என்னுடைய பெருமதி எனக்குத் தெரியாததால், நான் தனிமையில் வாழ்ந்தேன்.

இத்தகைய வாழ்வு என்னைச் சோர்ந்து போகச் செய்ததால், திருமணம் செய்துக் கொள்ள அவசரப்பட்டேன். என்னுடைய மனைவி மிகவும் நல்லவள். நான் எதற்கும் ஆசைப்படாததால் அமைதியான, இனிமையான வாழ்வு வாழ்ந்தேன். எனக்கு ஒரு குழந்தைப் பிறந்தது. அந்த நேரமுதல் என்னுள் பாசம் உருவானதைக் கண்டேன். என்னுடைய சொந்த ஆசைகளைத் தொலைக்கத் தொடங்கிய அதே நேரம் என்னை நெருங்கியவர்களின் மறைவு பயத்தை உருவாக்கியது.

ஆகவே, நான் கர்த்தரைத் தேடத் தொடங்கினேன். நான் உடைந்து போவதும் பலவீனனுமாக இருந்தேன். ஆகவே, நான் நேசிப்பவர்களைப் பாதுகாக்கும், நித்தியமான ஒன்று எனக்குத் தேவைப்பட்டது. ஆகவே, நான் ஆலயம் செல்லத் தொடங்கினேன். ஆனால் என்னுடைய விசுவாசம் நீர்க்குவளையின் முன் நின்று ஜெபிக்கும் என் தாயுடையதிலிருந்து வித்தியாசமாக இருந்தது - என்னுடைய ஜெபம் என்னுடைய தெளிவில்லாத பலத்தினாலும் எதிர்ப்பார்புகளினாலும் அமைந்திருந்தது. 

ஒருமுறை அருகிலிருந்த ஆலயத்தில் நடந்த சிறிய கூட்டம் ஒன்றிற்குச் சென்றேன், நான் அங்கு ஜெபித்தபோது எனது கண்களிலிருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது. நான் வெட்கமடைந்து அழுவதை நிறுத்த முயன்றேன். ஆனால் கண்ணீர் தொடர்ந்து வடிந்தது. என்னை சுற்றியிருந்த மக்கள் என் தலை மீது கை வைத்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதற்காக வாழ்த்து கூறினார்கள். நான் மிகுந்த கோபமுடையவனானேன். கர்த்தரின் வார்த்தைகளுடன் பரிச்சயம் ஏதுமில்லாதவனாகவும், அவரின் மீது வைத்திருந்த நம்பிக்கை தெளிவில்லாததாகவும் இருந்ததால், இச்சக்தி பரிசுத்த ஆவியானவர் அளித்தது என்பதில் எனக்கு எந்த உறுதியும் இருக்கவில்லை.

நான் சென்று கொண்டிருந்த ஆலயம் பெந்தெகோஸ்தே வசீகரிக்கும் இயக்கத்துடன் சம்பந்தப்பட்டது. எனக்கு கிடைத்த அனுபவத்தை பலரும் பெற்றார்கள். அநேகமாக எல்லோரும் பல பாஷைகளில் பேசினார்கள். ஒரு நாள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவர் என்று மக்கள் கூறிய போதகர் நடத்திய எழுப்புதல் கூட்டமொன்றிற்கு அழைக்கப்பட்டேன். அப்போதகர் அநேக மக்களை ஆலயத்தில் கூட்டி யாரோ ஒருவரின் சைனஸிடிஸ் வியாதியை குணமாக்கப் போவதாகவும், அதற்கான வல்லமை தன்னிடமிருப்பதாகவும் கூறினார். ஆயினும், சைனஸிடிஸ் வியாதி மருத்துவமனையில் இலகுவாக சுகமாக்கக் கூடிய ஒன்று என நினைத்தேன். அவர் எப்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார் என்பதை அறிவதில் அதிக ஆர்வமுள்ளவனாக இருந்தேன். அப்போதகர் சுகமாக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார் போன்றிருந்த நிலையில், அவரால் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன், அவன் அல்லது அவளின் பல்கலைக் கழகத் தேர்வில் வெற்றி பெறுவானா இல்லையா என்று தம்மால் கூற முடியுமென்று பெருமைப் பாராட்டத் தொடங்கினார். நிறைய மக்கள் அவை கர்த்தரின் சக்திபோல் எண்ணி அவரைப் புகழத் தொடங்கினர்.

என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போதகரிடமிருந்த வல்லமை, பரிசுத்த ஆவியானவருடன் எந்த சம்பந்தமில்லாதது என்பது குறித்து என்னால் எதுவும் கூற இயலவில்லை. அவரால் சைனஸிடிஸ் வியாதியைச் சுகமாக்க முடியுமா, அல்லது ஒருவரின் சோதனையின் வெற்றியை முன்னறிவிக்க முடியுமா என்பது முக்கியமானதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே, அவர் செய்த அற்புதங்கள் போன்றவற்றை பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் என்று என்னால் ஏற்க முடியவில்லை.

என் மனதிலிருந்த கர்த்தரின் வல்லமையும் அன்பும் நான் பார்த்தவற்றிலிருந்து வேறுபட்டவை. அந்தக் காரணத்தினால், அந்த ஆலயத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டு அந்த போதகரின் வல்லமையை விசுவாசிக்கும் மக்களையும் தவிர்த்தேன். அதன் பிறகு, சிறிது அமைதியான ஆலயத்திற்குச் செல்லத் தொடங்கினேன், அதனைத் தெரிந்தெடுத்தமைக்கான காரணம் இந்த ஆலயம் அதிகம் வேதவாக்கினைப் பற்றியிருப்பதாக நினைத்ததே. நான் நியாயப் பிரமாணத்தைப் படித்ததால் அதன் மூலம் நான் நீதிமனல்ல என்று கண்டேன். கர்த்தர் நான் பயப்படும் பொருளானார், மேலும் அவர் சந்நிதியில் எனக்கு எந்த மரியாதையும் இல்லையென்பதையும் அறிந்து அதனால் பரிசுத்த ஆவியானவர் என்னைத் தவிர்க்கிறார் என்பது போலும் தோன்றியது.

ஏசாயா 59:1-2 இல் எழுதப்பட்டுள்ளது. “இதோ இரட்சிக்கக் கூடாதபடிக்கு கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை; கேட்க கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.” இது என்னுடைய நிலைக்குப் பொருந்துவதாகத் தோன்றியது. நான் அவரின் பிள்ளையாவதும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதும் இயலாத காரியமாகியது. ஏனெனில் நான் செய்த அல்லது நினைத்த காரியங்களெல்லாம் பாவமிகுந்தவை.

நான் கர்த்தருக்கு பயந்து, தொடர்ந்து மனம் வருந்தி ஜெபித்தேன். யாரும் அப்படிச் செய்யும்படி என்னிடம் கூறவில்லை. ஆனால் கர்த்தரின் சந்நிதியில் மரியாதை மிக்கவனாக நிற்கும்படி அப்படிச் செய்தேன். நான் பாவம் நிறைந்தவனாக இருந்தபடியால், நான் இன்னும் சிரத்தையுடன் மனம் வருந்தி ஜெபிக்கத் தொடங்கினேன். ஆனால் இந்த ஜெபங்கள் என் பாவங்களைக் கழுவத் தவறின. அவருக்கு நான் காண்பித்ததெல்லாம் என்னுடைய நினைவுகளையும் சிரத்தையையுமே, ஆனாலும் என்னிடம் பாவங்கள் அப்படியே இருந்தன. அந்நேரமுதல் கர்த்தருக்கெதிராக குற்றஞ் சொல்லத் தொடங்கினேன். அவருடைய கண்களுக்கு முன்பாக சிறந்தவனாக இருக்க விரும்பினேன். ஆனால் நேரடியாக அந்த சிறப்பைப் பெறமுடியவில்லை. ஆகவே, எனது குற்றஞ்சொல்வதும் பாவங்களும் குவியத் தொடங்கின.

இந்த மதக் குழப்பத்திற்குள் நான் இருந்த சமயம், என் தந்தைக்கு ஸ்ட்ரோக் வந்தது. அவர் இறப்பதற்கு முன் 40 நாட்கள் ஆபரேஷன் அறையிலும் மருத்துவமனைப் படுக்கையி;லும் துன்பப்பட்டார். ஆனால் ஒரு முறை கூட என் தந்தைக்காக ஜெபிக்க முடியவில்லை. நானொரு பாவி, ஆகவே, நான் நினைத்தேன், நான் என் தந்தைக்காக ஜெபித்தால் அது அவரின் வேதனையைத் தான் அதிகமாக்கும். என்னுடைய குறைந்த விசுவாசத்தை எண்ணி விசனப்பட்டேன். கர்த்தரைப் பின்பற்ற விரும்பினேன். ஆயினும், அது முடியவில்லை. ஆகவே, நான் தொடர்ந்து குறை கூறி கடைசியாக அவரிலிருந்து முற்றிலும் விலகினேன். என்னுடைய மதவாழ்க்கை இப்படியாக முடிந்தது. அவரை விசுவாசித்தால், அவருடைய ஆவியானவர் என்னில் சஞ்சரிப்பார், நானும் சமாதானமடைவேன் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதன் பிறகு, என் வாழ்வு இன்னும் பொருளில்லாது போயிற்று. நான் பயத்திலும் துக்கத்திலும் வாழ்ந்தேன்.

ஆயினும் கர்த்தர் என்னைக் கைவிடவில்லை. கர்த்தரின் வார்த்தைகள் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்ட ஒரு விசுவாசியைச் சந்திக்கச் செய்தார். இந்த நபர் மூலமாக இயேசு, யோவானிடம் பெற்ற ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டு அதற்காக சிலுவையில் தீர்க்கப்பட்டார் என்று அறிந்தேன். ஆகவே, இவ்வுலகின் அனைத்துப் பாவங்களும், எனது பாவங்கள் உட்பட மன்னிக்கப்பட்டன. நான் இவற்றைக் கேட்டு புரிந்து கொண்டபோது, என்னுடையப் பாவங்களெல்லாம் சுத்திகரிக்கப்பட்டதைக் கண்டேன். கர்த்தர் என் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற உதவினார். எனக்கு பரிசுத்த ஆவியானவரை ஆசீர்வாதமாக அளித்தார். மேலும் ஒரு அமைதியான வாழ்வையும் அருளிச் செய்தார். அவர் அமைதியாக என்னை வழி நடத்தி, நன்மையையும் தீமையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படிச் செய்து இவ்வுலகின் இச்சைகளை மேற்கொள்ளும் வல்லமையையும் தந்தார். அவர் என் ஜெபங்களுக்கு பதிலளித்து நீதியானதும், பெறுமானமுள்ள வாழ்வை வாழவும் உதவினார். பரிசுத்த ஆவியானவரை எனக்களித்தமைக்காக உண்மையாகவே கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.”

நாமெல்லாரும் கர்த்தரின் கிருபையால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களும் பரிசுத்த ஆவியைப் பெறக் கூடியவர்களுமாக இருக்கிறோம். அவர் அழகிய நற்செய்தியை நமக்குக் கொடுத்ததால் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். கர்த்தர் நீதிமான்களை இத்தகைய மகிழ்ச்சியை அருளிச் செய்தார். கர்த்தரின் இரட்சிப்பு, அன்பு மற்றும் கிருபை எத்தனை விலையேறப்பட்டவை என்பதை நாம் அறிவோம். அவற்றிற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பரலோக இராஜ்யத்தின் அழகிய நற்செய்தியின் மூலம் கர்த்தர் நமக்கு மகிழ்ச்சியை அளித்தார். இது பணத்தால் வாங்க முடியாத ஒன்றாகும். கர்த்தர் பரிசுத்த ஆவியானவரையும் அழகிய நற்செய்தியையும் நமக்கு அனுப்பியதன் காரணம் நாம் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் இருப்பதற்காகும். அழகிய நற்செய்தி நம் வாழ்வை ஆசீர்வாதம் உள்ளதாக்குகிறது. கர்த்தர் அழகிய நற்செய்தியை நமக்களித்து நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வை அனுபவிப்பதால் ஆனந்தமடைகிறார்.

லூக்காவில் எழுதப்பட்டுள்ளபடி, மரியாள் கூறினாள், “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை... இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக் கடவது என்றாள்” (லூக்கா 1:37-38) தேவதூதன் பேசிய கர்த்தரின் அழகிய வார்த்தைகளை மரியாள் விசுவாசித்த நொடியில், அவள் கர்ப்பவதியானாள். அது போல, அவர்களுடைய விசுவாசத்தின் மூலம், நீதிமான்கள் தம்மிருதயத்தில் அழகிய நற்செய்தியைக் கர்பந்தரிப்பார்கள்.

“மீதியானியரின் நாளில் நடந்தது போல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின் மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப் போட்டீர்” (ஏசாயா 9:14) நம் வாழ்வில் துன்பம், சுகவீனம் மற்றும் நசுக்கப்படுதல் சாத்தானால் வருபவை. அவனை வெல்லும்படியான சக்தி நம்மிடமில்லை. ஆனால் கர்த்தர் நம்மை நேசிப்பதால் அவர் சாத்தானுடன் போரிட்டு அவனை முறியடித்தார்.

“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்” (ஏசாயா 9:6-7).

இயேசு பெற்றுத் தந்த அழகிய நற்செய்தியின் மூலம் அவரின் பிள்ளைகளாக நம்மை மகிமைப் படுத்துவதாக கர்த்தர் வாக்குத்தத்தம் அருளியுள்ளார். அவர் வாக்குத்தத்திற்கேற்ப சாத்தானை முறியடித்து அவனின் வல்லமைகளிலிருந்து நம்மை விடுவித்தார். 

கர்த்தர் தம் வாக்குத்தத்தத்தின்படி பூமிக்கும் தம் வல்லமையுடன் பாவத்தின் இருளை எடுத்துப் போடுவதற்காக வந்தார். ஆகவே, நாம் கர்த்தரை, அதிசயமானவர் என்றழைக்கிறோம். அவர் அநேக அற்புதமான காரியங்களை நமக்காகச் செய்துள்ளார். மனு புத்திரனாக இவ்வுலகிற்கு வரும் கர்த்தரின் தீர்மானம் மிகவும் அதிசயமானது. “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சீவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்” (ஏசாயா 1: 18).

கர்த்தர் நம்மைப் பாவங்களிலிருந்து இரட்சித்து நித்திய பாவ மன்னிப்பை வழங்குவதாக வாக்குத்தத்தம் செய்தார். இயேசுவானவர் அதிசயமானவர் என்று குறிப்பிடப்படுகிறார். அதற்கேற்றபடி அற்புதமான செய்கைகளை நமக்குச் செய்துள்ளார். “அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன்.” ஆலோசனைக் கர்த்தராகிய கர்த்தர், அழகிய நற்செய்தியின் மூலம் நம் இரட்சிப்பைத் திட்டமிட்டு நம் பாவங்களிலிருந்து நித்திய காலமாக இரட்சிக்கும் அவர் திட்டத்தை செயல்படுத்தினார்.

கர்த்தரின் முட்டாள்தனம் மனிதனின் புத்திசாலித் தனத்தை விடச் சிறந்தது. நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சிக்கும்படியாக இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதும் அதற்காக அவர் சிலுவையில் மரிப்பதும் கர்த்தரின் ஞானமாகும். இது அவர் நமக்காகச் செய்த அதிசயச் செயலாகும். அன்பின் நியாயப்பிரமாணமே நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தது. அன்பின் நியாயப்பிரமாணமே நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற வழி நடத்தும் சத்தியத்தின் நற்செய்தியாகிய நீர் மற்றும் அவரின் இரத்தமாகும்.

ஏசாயா 53:10 இல் கர்த்தர் கூறுகிறார். “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட் படுத்தினார்” கர்த்தரின் சித்தத்தின்படிச் செய்யும் பொருட்டு இயேசு தம் ஆத்துமாவைப் பலியாக ஒப்புவித்தார். அவர் தன் மகனான, இயேசுகிறிஸ்துவின் மீது உலகின் பாவங்களையெல்லாம் சுமத்தி, அதற்கான தீர்ப்பினை அவர் பெறும் விதமாக சிலுவையின் பாடுகளை அனுபவிக்கச் செய்தார். இந்த அழகிய நற்செய்தியே ஒரே தரமாக மனித குலத்தைப் பாவங்களிலிருந்து இரட்சித்தது.கர்த்தரின் பலியிடும் முறை


 • யோவான் இயேசுவுக்கு அளித்த ஞானஸ்நானம் மூலம் அவர் எத்தனைப் பாவங்களை ஏற்றுக்கொண்டார்?
 • தொடக்கத்திலிருந்து முடிவு வரையான , கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்களையெல்லாம் எற்றுக்கொண்டார்.


வேதாகமம் தினப்பாவத்திற்காக செய்யவேண்டிய பலியைப் பற்றி கூறுகிறது. பாவியான ஒருவன் களங்கமில்லாத ஒரு மிருகத்தை கொண்டுவந்து அவன் பாவங்களை அதன் மீது சுமத்தும்படியாகத் தன் கைகளை அதின் தலைமீது வைக்கவேண்டும். அப்பலியை அவன் கொன்று அதன் இரத்தத்தை ஆசாரியரிடம் கொடுக்கவேண்டும். தலைமை ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து பலிபீடத்தைச் சுற்றியுள்ள கொம்புகளில் விட்டு மீதியை மேடையின் அருகேயுள்ள தரையில் கொட்டினான்.

இந்த வழியின் மூலம், அவனின் தினப்பாவங்கள் மன்னிக்கப்படலாம். கைவைப்பதே பாவியொருவன் தன் பாவங்களையெல்லாம் பலி மிருகத்தின் மீது சுமத்துவதற்கான வழியாகும். யாரெல்லாம் இப்பலி முறையின் படி பலி கொடுக்கிறார்களோ அவர்களால் தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறமுடிந்தது. இந்தப்பலி கொடுக்கும் முறையே, இயேசு எல்லாப் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொள்ளும்வரை, நம் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறும் வழியாக இருந்தது.

கர்த்தர் பாவமன்னிப்புத் தினத்தை ஏற்பாடு செய்தார். ஆகவே, இத்தினத்தில் இஸ்ரவேல் மக்கள் தாம் ஒரு வருடம் வரைச் செய்த பாவத்திலிருந்து விடுதலைப் பெறமுடிந்தது. ஏழாம் மாதம் பத்தாம் திகதியிலே இப்பலி ஏறெடுக்கப்பட்டது. போக்காட்டின் மீது எல்லா இஸ்ரவேலர்களின் ஒரு வருடப் பாவத்தையும் சுமத்த தலைமை ஆசாரியனான ஆரோனை கர்த்தர் நியமித்தார். கர்த்தரின் திட்டப்படி இச்சடங்கு நடைபெற்றது. கர்த்தரின் ஞானத்தின் மூலமும் மனிதர்களின் மீது அவர் வைத்த அன்பினாலும் இப்பாவ மன்னிப்பு வந்தது. இது அவரின் வல்லமையாகும்.

“தகனப் பலி பீடத்திலுள்ள கொம்புகள்” “ஜீவப்புத்தகத்தைக்” குறிப்பிடுகின்றன (வெளி 20:12), இப்புத்தகத்தில் மனிதகுலத்தின் பாவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சர்வாங்க தகன பீடத்தின் மீதுள்ள கொம்புகளில் பாவ பலியின் இரத்தத்தை ஆசாரியன் இடுவதற்கான காரணம் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள மீறுதல்களையும் அவர்கள் பெயர்களையும் அழிப்பதுவே. இரத்தம் மாமிசத்தின் ஜீவனாயிருக்கிறது. இஸ்ரவேலரின் பாவங்களை போக்காடு சுமந்து பாவத்திற்கு கிரயமாக அது கொல்லப்படுகின்றது. அவர்களுடைய பாவங்களுக்கு தீர்ப்பாக ஒரு பலி மிருகத்தைக் கொள்ளச் செய்தார். இது அவரின் நம்மீதுள்ள ஞானம் மற்றும் அன்பின் அடையாளமாகும். 

கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு ஒரு பாவ பலியாக இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் வந்தார். இயேசு தம்மைப் பலிகொடுத்ததன் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துப் போட்டார். இந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து வார்த்தைகளைப் பார்த்தோமானால், “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்.” அல்லது அவர் உலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்தார்.” என்றிருப்பதைக் காணலாம்.

“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்” (ஏசாயா 9:6-7)

இயேசு கர்த்தரின் சித்தத்தின்படி உலகின் பாவங்களை எல்லாம் தன் மீது சுமந்து எல்லா விசுவாசிகளுக்கு சமாதானத்தை அருளிச் செய்வது ஆச்சர்யமானதும் அதிசயமானதுமான வாக்குத்தத்தமாகும். கர்த்தரின் வாக்குத்தத்தம் அன்பின் வாக்குத்தத்தமாகும். இதன் மூலம் உலக மக்களுக்கு சமாதானம் உண்டுபண்ண அவர் திட்டமிட்டார். இதுவே கர்த்தர் நமக்களித்த வாக்குத்தத்தம், இதையே அவர் செய்தார்.

மத்தேயு 1:18 கூறுகிறது, “ இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது, அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.” “இயேசு” என்பதன் பொருள், தம் மக்களின் பாவங்களிலிருந்து அவர்களை இரட்சிப்பவர் என்பதாகும். கிறிஸ்து என்பதன் பொருள் அபிஷேகிக்கப்பட்ட இராஜா, அரசன் ஆகும். இயேசுவிடம் பாவமிருக்கவில்லை. நம் அரசரும் இரட்சகருமான அவர் தம் மக்களைப் பாவங்களிலிருந்து இரட்சிக்க கன்னி மரியாளிடத்தில் பிறந்தார்.

“அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது” (மத்தேயு 1:21-22).இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் ஏற்றார்


மத்தேயு 3:13-17 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைசெய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான், இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” 

இவ்வசனங்களில் யோவான் ஸ்நானனைக் காணலாம். இயேசுவானவர் யோவானால் ஏன் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும். கர்த்தரின் திட்டப்படி பாவங்களை ஏற்றுக்கொள்ள, உலகின் எல்லாப் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொள்ள இயேசுவானவர் ஞானஸ்நானம் பெறவேண்டியிருந்தது. 

இங்கே “கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்,” (ஏசாயா 9:7) “கர்த்தத்துவம்” என்பதன் பொருள் இயேசுவானவர் பரலோகத்தின் அதிபதியும் உலகின் அரசருமாக இருப்பதால் அவரிடம் அதிகாரமும் வல்லமையும் இருக்கிறது. இந்த அதிகாரம் இயேசுவிற்கு மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. மக்களின் பாவங்களை எடுத்துப் போடும்படியாக இயேசு அதிசயமான ஒரு காரியத்தைச் செய்தார். அந்த அதிசயமான ஒரு காரியம் என்னவென்றால் அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்று கூறியதன் பொருள் உலகின் பாவங்களை இப்படிச் சுமப்பது சரியானதும் பொருத்தமானதாகவும் இருக்கிறது என்பதாகும்.

ரோமர் 1:17 கூறுகிறது, “விசுவாசத்தினால் உண்டாகும் தேவ நீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” கர்த்தரின் நீதி நற்செய்தியால் வெளிப் படுத்தப் பட்டுள்ளது. உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி உண்மையாகவே கர்த்தரின் நீதியை வெளிப்படுத்துகிறாதா? ஆம்! உண்மையான நற்செய்தி யாதெனில் இயேசு இவ்வுலகின் பாவங்களையெல்லாம் தம் ஞானஸ்நானத்தினாலும் சிலுவை மரணத்தின் மூலமும் எடுத்துப்போட்டார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகிய அழகிய நற்செய்தியிலேயே கர்த்தரின் நீதி வெளிப்படுத்தப்பட்டது. இயேசு இவ்வுலகின் பாவங்களை எப்படி எடுத்துப் போட்டார்? யோர்தான் நதியில் யோவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது அவர் உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துப் போட்டார்.

“எல்லா நீதியையும்” என்பது “டிகாய்சூன்” என்று கிரேக்க மொழியில் வழங்கப்படுகிறது. இதன் பொருள் யாதெனில் இயேசு மனிதகுலத்தின் பாவங்களையெல்லாம் மிகச் சரியானதும் அதிசயமானதுமான முறையில் எடுத்துப்போட்டார் என்பதே. இயேசு இவ்வுலகின் பாவங்களைத் துடைப்பதற்கு யோவானால் ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருந்தது.

மனித குலத்திற்கு அமைதியைக் கொண்டு வருவதற்கு இயேசுவின் ஞானஸ்நானம் மிகவும் அவசியமென்பது கர்த்தருக்குத் தெரியும். இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்று அவரின் இரத்தத்தை சிலுவையில் சிந்தியிருக்கவில்லையென்றால் அவர் நமது இரட்சகராகியிருக்க முடியாது. உலகின் பாவங்களை எடுத்துக் கொள்ளும்படியாக இயேசு தம்மை பாவ பலியாகக் கொடுத்தார்.

ஏசாயா 53:6 இல் கர்த்தர் கூறுகிறார். “நாமெல்லாம் ஆடுகளைப் போல வழி தப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்.” கர்த்தரின் சித்தத்தை செய்யும்படியாக உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. இதற்காகவே இயேசு பாவ பலியாகும் விதத்தில் மனித சரீரத்தில் உலகத்திற்கு வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.

கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றவும் அவரின் ஜீவ அன்பைக் காண்பிக்கவும் இயேசு மனிதகுலத்தின் பாவங்களை ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்ப்பையும் பெற வேண்டியதிருந்தது. இயேசு ஞானஸ்நானம் பெற்று நீரிலிருந்து வெளியே வரும்போது கர்த்தர், “இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:17) என்றார்.நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்


“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும்” (ஏசாயா 9:6). இயேசு தேவகுமாரன் ஆவார். இயேசுவே இந்த பிரபஞ்சத்தைப் படைத்த சிருஷ்டிக்கர்த்தா. அவர் வல்லமையுள்ள தேவனின் குமாரன் மட்டுமல்ல, அவர் படைப்பவரும் சமாதானத்தின் இராஜாவுமாக இருக்கிறார். இயேசுவே மனித குலத்திற்கு சந்தோஷத்தைக் கொடுத்த கர்த்தர்.

இயேசுவே சத்தியத்தின் தேவன். அவர் நம் பாவங்களை எடுத்துப் போட்டு, நம்மை இரட்சித்து நமக்கு சமாதானத்தையும் அருளினார். இவ்வுலகில் பாவங்கள் இருக்கின்றனவா? இல்லை, இங்கு பாவங்களில்லை. இயேசு தம்முடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் மூலமாக இவ்வுலகின் பாவங்களையெல்லாம் கழுவிப் போட்டார் என்று கூறும் அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிப்பதே, அங்கே பாவங்களில்லை என்று உறுதியுடன் நாம் சொல்வதன் காரணமாகும். இயேசு நம்மிடம் பொய் சொல்லவில்லை இயேசு பாவத்திற்கான கிரயத்தை தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தால் செலுத்தினார். இதனை விசுவாசிக்கும் யாவரும் அவரின் பிள்ளைகளாகும்படி அனுமதித்து நம்மனைவருக்கும் சமாதானத்தைக் கொடுத்தார். அவர் நம்மை தம் விசுவாசத்தின் பரிசுத்த பிள்ளைகளாக நித்தியமாக வாழச் செய்தார். நான் கர்த்தரைப் புகழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!


யோவான் 1:29 கூறுகிறது, “மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” யோவான் ஸ்நானன் மூலம் ஞானஸ்நானம் பெற்றதனால் உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொண்ட இயேசு, அந்த ஞானஸ்நானத்திற்கு மறுநாளிலே யோவான் முன் சென்றார். யோவான் இயேசுவைக் குறித்து “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் ஆட்டுக்குட்டி” என சாட்சி பகர்ந்தான். அவன் மீண்டும் யோவான் 1:35-36 இல் சாட்சி பகன்றான். “மறு நாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டு பேரும் நிற்கும் போது, இயேசு நடந்து போகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்!”

பழைய ஏற்பாட்டில் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்த மேசியாவான தேவ ஆட்டுக்குட்டியாக வந்தது இயேசுவே. மேசியாவான இயேசுகிறிஸ்து நமக்கு அதிசயமானவராக, ஆலோசனைக் கர்த்தாவாக, வல்லமையுள்ள தேவனாக நம்மிடம் வந்து நம்மை எல்லாப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்றார். யோவானின் ஞானஸ்நானம் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கு சம்பளம் கொடுத்து, சமாதானத்தின் இராஜாவாகி நமக்காக பாவக் கிரயத்தைக் கொடுத்து சமாதானத்தையும் அருளினார். “இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”

ஒரு காலத்தில் மக்கள் தம் பாவங்களினால் மரிப்பதைத் தவிர வேறு வாய்ப்புகள் இருந்ததில்லை. மக்கள் தம் பாவ சுபாவத்தினால் கணக்கில்லாத பாவங்களைப் புரிந்து நரகத்திற்குச் செல்வது முன் குறிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வாழ்க்கை துன்பமிக்கதாக இருந்தது; ஒருவர் கூட பரலோகம் செல்வதற்கோ, அதைக் குறித்து கனவு காண்பதற்கு கூட அவர்கள் பலவீனர்களாக இருப்பதனால், அது முடியாதிருந்தது. நம்முடைய தேவனகிய இயேசுகிறிஸ்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றபோது அவர்கள் பாவங்களனைத்தையும் ஏற்றுக்கொண்டு, அதற்கு தீர்ப்பாக சிலுவையிலறையப்பட்டார். மரணத் தருவாயில் கிறிஸ்து கூறினார். “எல்லாம் முடிந்தது” (யோவான் 19:30) இயேசு மனிதகுலத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சித்தமைக்கு இக்கூக்குரல் அவரின் சாட்சியாகிறது, மேலும் யாரெல்லாம் அழகிய நற்செய்தியை விசுவாசித்தார்களோ அவர்களை முற்றிலும் விடுவித்தார்.

“இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” உலகின் பாவங்களெல்லாம் எங்கிருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? அவைகள் இயேசுவின் சரீரத்தில் இல்லையா? நம்மை இவ்வுலகில் சிறுமைப் படுத்திய பாவங்களும் மீறுதல்களும் எங்கே? அவையெல்லாம் இயேசுகிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டது. நம்முடையப் பாவங்கள் எங்கே? கர்த்தத்துவம் தம் தோலின் மேலிருக்கும் அவரின் மாமிசத்தில் அவை இருக்கின்றன; வல்லமையுள்ள தேவனின் மாமிசத்தில் அவை இருக்கின்றன.பிறப்பு முதல் இறப்பு வரையான எல்லாப் பாவங்களும்


நம் வாழ்நாள் முழுவதும் நாம் பாவம் செய்கிறோம். நாம் பிறந்த நாள் முதல் 20 வயதாகும் வரை பாவஞ்செய்கிறோம். இந்த 20 வருடங்களாக நாம் செய்தப் பாவங்கள் எங்கே போயின? அவை இயேசுகிறிஸ்துவின் மாமிசத்திற்குள் இருக்கின்றன. நாம் 21 முதல் 40 வயது வரைச் செய்த பாவங்களும் கூட இயேசுவின் மீது சுமத்தப்பட்டுவிட்டன. ஒரு மனிதன் எத்தனை வருடங்கள் வாழ்ந்தான் என்பது ஒரு பொருட்டல்ல. அவன் வாழ்நாள் தொடங்கி முடியும் வரை செய்த பாவங்கள் இயேசுகிறிஸ்து மீது சுமத்தப் பட்டது. மனித குலம் செய்த பாவங்கள், ஆதாமில் தொடங்கி, கடைசியாக உலகில் வாழப் போகும் மனிதன் வரைச் செய்த எல்லாப் பாவங்களும் இயேசுவிடம் சென்றுவிட்டன. நம்முடையப் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளினது பாவங்கள் கூட ஏற்கெனவே இயேசுவின் மீது சுமத்தப்பட்டன. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அனைத்துப் பாவங்களும் இயேசு மீது இடமாற்றம் செய்யப்பட்டது.

உலகில் இன்னும் பாவங்களிலிருக்கின்றனவா? இல்லை. ஒன்று கூட விடப்படவில்லை. இயேசுகிறிஸ்து அளித்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதால் ஒரு பாவம் கூட விடப்படவில்லை. உன்னிருதயத்தில் பாவமிருக்கிறதா? இல்லை. ஆமேன்! இயேசுகிறிஸ்து நம் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என்னும் அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கிறோம். இந்த அதிசயமான காரியத்தை செய்த நம் வல்லமையுள்ள இயேசுவைப் புகழ்வோமாக.

நாம் இழந்துபோன வாழ்வை அவர் மீட்டுத் தந்தார். நாம் அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதால் நம்மால் கர்த்தருடன் வாழ முடிகிறது. கர்த்தரின் எதிரிகள் கூட இருண்ட காட்டில் ஒளிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லாத பாவிகள் கூட - அழகிய நற்செய்தியை இப்போது விசுவாசிப்பதன் மூலம் தன் பாவங்களிலிருந்து இரட்சிப்பைடைய முடியும்.

யோவானால் அவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையிலறையப்பட்டு உயிரோடெழும்பியதால், கர்த்தர் நம் பாவங்களையெல்லாம் சுத்தமாக கழுவி விட்டார் என்று அழகிய நற்செய்தி போதிக்கிறது. இயேசுவின் நற்செய்தியை நாம் விசுவாசிப்பதால் நாம் கர்த்தரின் பரிசுத்தமான பிள்ளைகளானோம். இயேசு தன் சொந்த சரீரத்தையே நம் பாவங்களுக்கான பலியாகக் கொடுத்தார். அவர், மகத்துவமுள்ள தேவனின் குமாரன், ஒரு பாவத்தையும் அவர் இவ்வுலகத்தில் ஒரு காலத்திலும் செய்திராவிட்டாலும் உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசிப்போரை இரட்சிக்கிறார். ஏசாயா 53:5 கூறுகிறது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.”

இயேசு மூலப்பாவம் மற்றும் சொந்தப் பாவம் உட்பட எந்த ஒரு மீறுதல்களையும் விட்டுவிடாமல் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார். பாவத்திற்கான கிரயத்தை தம் சிலுவை மரணம் மூலம் அவர் கொடுத்ததன் மூலம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். இந்த அழகிய நற்செய்தியின் மூலம் இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் கழுவினார். நாம் புது வாழ்வை இயேசுவின் மூலம் கண்டோம். இந்த அழகிய நற்செய்தியை நம்புபவர்கள் இனிமேலும் ஆவி இறந்து போனவர்களல்ல. இயேசு நம் பாவத்திற்கான கிரயத்தைக் கொடுத்ததால் நம்மிடம் நித்திய ஜீவனிருக்கிறது. இயேசுவின் அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதால் நாம் கர்த்தரின் பிள்ளைகளானோம்.

இயேசுகிறிஸ்து தேவகுமாரன் என்று நம்புகிறீர்களா? மேலும் அவர் உன் இரட்சகர் என்றும் நம்புகிறாயா? ஆம். இயேசு நம் வாழ்வு. அவரின் மூலம் நாம் புது வாழ்வைக் கண்டோம். நம்முடையப் பாவங்களினாலும் மீறுதல்களினிமித்தமும் நாம் மரிக்க வேண்டியவர்கள். ஆனால், இயேசு அதற்கான கூலியைத் தன் ஞானஸ்நானம் மூலமும் அவரின் சிலுவை மரணம் மூலமும் கொடுத்து விட்டார். அவர் நம்மை பாவ அடிமைத் தனத்தினின்றும், மரணத்தின் வல்லமையினின்றும், சாத்தானின் கட்டுகளிலிருந்தும் விடுவித்தார்.

நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்த தேவனே நம் கர்த்தர். இயேசுவை விசுவாசிக்கும் எல்லோருக்கும் அவர் இரட்சகரானார். எபிரேயர் 10:10-12, 14 மற்றும் 18 இல், கர்த்தர் நம்மைப் புனிதப் படுத்தியதையும், அதனால் பாவத்திற்கான கிரயத்தை மேலும் கொடுக்க வேண்டியதில்லை என்பதையும் காணலாம். இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் நாம் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைகிறோம். நாம் நம்முடையப் பாவங்களுக்காகவும் மீறுதல்களுக்காகவும் இறக்க வேண்டியவர்கள். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தை விசுவாசிப்பதால் பரலோகத்திற்குள் பிரவேசித்து நித்திய ஜீவனை அனுபவிக்க முடிகிறது.

“நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவான் 10:11). அவரின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல் மூலம் நம்மைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் பொருட்டு நம் தேவன் இவ்வுலகிற்கு வந்தார். இந்த உண்மையை விசுவாசித்து பாவ விடுதலையைப் பெறறவர்கள் யாரோ அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வாசஞ்செய்தலையும் கொடுக்கிறார். நன்றி கர்த்தாவே. உம்முடைய நற்செய்தி அழகிய நற்செய்தியாகும். அதனால் விசுவாசிகளுக்குப் பரிசுத்த ஆவியானவரின் சஞ்சாரத்தைக் கொடுக்க முடியும். அல்லேலூயா! நான் கர்த்தரை மகிமைப் படுத்துகிறேன். 

【8-8】 < யோவான் 7:37-38 > யாரின் மூலமாக ஜீவ நீராகிய பரிசுத்த ஆவி ஓடுகிறது?  <யோவான் 7:37-38>
  “பண்டிகையின் கடைசி நாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று சத்தமிட்டு; ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன். வேத வாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.”

  • பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீரை யாரால் குடிக்க முடியும்?
  இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்கள்.

  அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்களின் இருதயத்திலிருந்து பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் ஓடும். யோவான் 7:38 கூறுகிறது, “வேத வாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும்” இதன் பொருள் என்னவென்றால், கர்த்தர் நமக்களித்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்கு உண்மையான இரட்சிப்பும் பாவ விடுதலையும் கிடைக்கிறது.
  பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்தல் எப்போது நடக்கிறது? யோவான் அவருக்களித்த ஞானஸ்நானத்தின் மூலம் இயேசுகிறிஸ்து உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்தார் என்று கூறும் அழகிய நற்செய்தியை ஒருவன் கேட்டு விசுவாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசஞ் செய்வதைப் பெற்றுக்கொள்ளமுடியும். அப்பொழுது ஒருவனால் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீரைப் பருக முடியும். அழகிய நற்செய்தியை விசுவாசிப்போரிடம் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்கிறார். மேலும் அவர்கள் ஒவ்வொரு முறையும் பிரசங்கிக்கும் போதோ அல்லது கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்கும் போதோ, அவர்களுடைய காய்ந்துபோன இருதயத்தில் ஆவிக்குரிய ஜீவத்தண்ணீர் புதிதாக ஓடி அதனை ஈரப்படுத்துவதை உணரலாம்.
  பாவிகளை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு கர்த்தர் இவ்வுலகிற்கு வந்தார் என்று கூறும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் யாரோ அவர்கள் இருதயத்திலிருந்து பரிசுத்த ஆவியின் ஜீவத்தண்ணீர் ஔடுகிறது. பரிசுத்த ஆவியானவர் என்ற சத்தியத்தை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலிருந்து பிரிக்க முடியாது. மேலும் அவர் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிப்போர் மீது தங்கியிருக்கிறார்.
  பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீரைப் பருக விரும்புவன் எவனோ அவன் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பாவ விடுதலையைக் கண்டிப்பாக பெறவேண்டும். கர்த்தரின் வார்த்தைகளை நம்புவோரின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஜீவ தண்ணீர் இருக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் மக்களிடம் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் இருக்கிறது. அது நதியைப் போல் ஓடுகிறது, அவர்கள் இருதயத்தில் ஓடைகள் போல் இருக்கிறது. இந்த நொடியில் கூட, அழகிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து அவர்கள் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்றோரின் இருதயங்களிலிருந்து பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர், ஊற்றிலிருந்து வருவது போல கொப்புளித்து வருகிறது.
  ஆயினும் அழகிய நற்செய்தியாகிய சத்தியத்தை விசுவாசியாதோரின் இருதயத்திலிருந்து பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் ஒரு சொட்டு கூட வெளியே ஓடாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து ஒப்புக்கொள்ளும் வரை ஆவிக்குரிய ஜீவத்தண்ணீரானது ஒரு சொட்டு கூட என் இருதயத்திலிருந்து வெளியே வரவில்லை. அச்சமயத்தில், இயேசுவை நான் தீவிரமாக விசுவாசித்திருந்த போதிலும், என் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் போனதால், எனக்கு பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீரைக் குறித்து எதுவுமே தெரிந்திருக்கவில்லை, ஆயினும் இப்பொழுது என்னிடம் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இருப்பதால், பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் என்னிருதயத்திலிருந்து ஓடுகின்றது.
  கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்டு அதனை விசுவாசிப்போரின் இருதயங்களிலிருந்தும், எனது இருதயத்திலிருந்தும் இப்போது பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் ஓடுகின்றது. இயேசு “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” என்று கூறியது போல, அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் மறுபடியும் பிறந்தவர்களின் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் மற்றவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. மற்றவர்கள் அதிலிருந்து குடிக்கும்படியாக, எனது இருதயத்திலிருந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியுடன் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீரும் சேர்ந்து, இந்நொடியில் கூட வெளியே ஓடுகிறது. கர்த்தர் என்னிருதயத்திலிருந்து பரிசுத்த ஆவியின் ஜீவத்தண்ணீரை நதியைப் போல் வெளியேறச் செய்தார். பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ்செய்யப் பெற்ற சிலர் மட்டுமே இதற்கு பரிட்சயம் உள்ளவர்கள்.
  வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதப்பட்டுள்ளது போல், அதனைப் பெற்றவர்களேயன்றி வேறு யாருக்கும் அது குறித்து தெரியாது. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிப்போருக்கு மட்டுமே இரகசியமாகிய பரிசுத்த ஆவியானவரின் வாசஞ்செய்தல் மற்றும் ஜீவத்தண்ணீர் குறித்து தெரியும். ஆகவே, யாரிடம் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியவேண்டும். இயேசுவின் நற்செய்தியை விசுவாசிப்போருக்கு மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யும்படி கொடுக்கப்படுகிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.


  நான் இயேசுவின் இரத்தத்தை மட்டுமே நம்புபவனாக இருந்தேன்

  நான் இயேசுவின் சிலுவை இரத்தத்தை பத்து வருடங்களுக்கும் மேலாக விசுவாசித்தபோதிலும், என்னிருதயத்தில் இன்னும் பாவமிருந்தது. அந்நேரத்தில், இயேசுவின் இரத்தத்தின் முலமே என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்ற விசுவாசமுடையவனாக இருந்தேன். ஆயினும், இத்தகைய விசுவாசத்தின் மூலம் பாவ விடுதலையும் கிட்டவில்லை. பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்வதையும் பெறவில்லை. என் வாழ்வில் குழப்பமும் வெறுமையுமே இருந்தது. நான் ஆலயம் சென்று கொண்டிருந்தது மட்டுமே நான் இயேசுவை விசுவாசிப்பதற்கான ஒரே அடையாளமாக இருந்தது.
  அப்பொழுது தான் என் நம்பிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கினேன். “நான் உண்மையாகவே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றேனா?” நான் முதல் முதலாக இயேசுவை விசுவாசித்தபோது, அவரின் மீது அதிக அன்பு கொண்டவனாக இருந்தேன். மேலும் பல பாஷை பேசும் வரம் கூட பெற்றிருந்தேன். பிறகு எனக்கு என்னவாயிற்று? அப்பொழுது தீயில் எரிவது போன்ற உணர்ச்சி பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வாசஞ்செய்வதற்கான அடையாளம் இல்லையென அறிந்து கொண்டேன். மேலும் நான் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளவே இல்லை என்றும் அறிந்துகொண்டேன். நான் இயேசுவை விசுவாசித்த போதிலும், பரிசுத்த ஆவியானவரும் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீரும் என் இருதயத்தில் இருக்கவில்லை.
  4கல்வானிச தத்துவத்தின் அடிப்படையில் என் விசுவாசம் அமைந்திருந்தமையால், என்னிருதயம் அனலாக இருக்கிறதா குளிருடன் இருக்கிறதா என்பது முக்கியமில்லை. எனக்கு பதில் தெரிய வேண்டிய கேள்விகள் கீழ் வருமாறு.
  4இது ஜான் கால்வினால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவத்தை விவரிக்கும் ஒரு முறையாகும். அது முன்குறித்தல் மற்றும் இரட்சிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அர்மீனிய நிலைக்கு பதிலளிக்கும் வகையில் ஐந்து கோட்பாடுகள் கால்வினிசத்தில் உருவாயின.
  கால்வினிசம் போதிக்கின்றது 1. முழு பலவீனம்: அதாவது மனிதனின் அனைத்து அம்சங்களும்: உடம்பு, ஆத்துமா, மனம் மற்றும் உணர்ச்சிகள் பாவத்தினால் தொடப்பட்டவை. 2. தகுதியில்லாத சலுகை: அதாவது கர்த்தரின் சலுகை மனிதரிற்கு அவரின் தேர்வினால் கிடைக்கிறது. மேலும் இதற்கும் மனிதனிற்கு எந்த சம்பந்தமுமில்லை. இது மனிதனுடைய தகுதிக்கு முற்றிலும் பொருந்தாதது. 3. அளவான பாவ விடுதலை: உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களின் பாவங்களையும் இயேசு சுமக்கவில்லை, ஆனால் இரட்சிக்கும்படியாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பாவங்களை மட்டும் அவர் சுமந்தார். 4. தடையில்லாத கிருபை: கர்த்தர் இரட்சிப்புக் கொடுக்கும்படி அழைக்கப்பட்டவர்களை யாராலும் தடுக்க முடியாது. 5. பரிசுத்தவான்களின் தொடர் முயற்சி: ஒருவன் இரட்சிப்பை அவ்வளவு எளிதாகத் தொலைக்க முடியாது. உங்களால் வெகுத் தெளிவாக இப்போதனைகளை நீர் மற்றும் ஆவியின் நற்செய்தியிலிருந்து பிரித்துணரலாம். முக்கியமாக அதன் கொள்கையான அளவான பாவ விடுதலை நற்செய்தியிலிருந்து வேறு படுகின்றது.

  1. பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்கிறாரா? - இல்லை அவர் என்னிடமிருக்கிறார் என்பது நிச்சயமில்லை.

  2. என்னுள் பாவமிருக்கிறதா - ஆம் இருக்கிறது - 

  இயேசுவின் சிலுவை இரத்தத்தை நான் விசுவாசித்திருந்த போதிலும், அப்பொழுது நிச்சயமாக என் மனதில் பாவமிருந்தது. நான் இயேசுவை விசுவாசித்து தினந்தோறும் மனம் வருந்தி ஜெபித்தாலும் கூட, இன்னமும் என் மனதில் பாவங்கள் இருந்தன. நான் எத்தனைக் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் கூட என் இருதயத்திலிருக்கும் பாவங்கள் சுத்தமாகக் கழுவப்படவில்லை.
  “பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்யும் படி அவரைப் பெறுவது எங்ஙனம்?” என் இருதயத்திலிருக்கும் பாவங்களை கழுவுவதெப்படி? இயேசுவை நான் விசுவாசிக்கத் தொடங்கிய பிறகும், இவை இரண்டும் என் மனதை நச்சரிக்கும் பிரச்சனைகளாக இருந்தன. இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கியபோது பல பாஷை பேசினேன். மேலும் என் பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டதாக நம்பினேன். இயேசுவின் இரத்தம் மீது எனக்கிருந்த விசுவாசத்திற்கு நன்றிகள்.
  ஆயினும், காலம் செல்லச் செல்ல, என்னிருதயத்தில் பாவங்கள் மேலும் மேலும் சேர்ந்தது. நான் பாவங்களால் நிறைந்திருந்தேன். இயேசுவின் இரத்தத்தை மட்டும் சார்ந்திருக்கையில் எத்தனை முறை மனம் வருந்தி ஜெபிப்பதாலோ அல்லது உபவாசிப்பதாலோ என்னிருதயத்தில் இருந்து இந்தப் பாவங்களை அகற்ற முடியவில்லை. என்னுடைய சொந்தப் பாவங்களை நினைத்து அதிகம் கவலைப்பட்டேன். அதிகமாக நான் வியாகூலப்பட்டபோது, மிகத்தீவிரமாக இயேசுவைக் குறித்து மற்றவர்களுக்கு போதித்தேன். இயேசுவின் இரத்தத்தை சார்ந்து, முன்பைவிட ஒழுங்காக ஆலயம் சென்று இயேசுவிற்கு பணிசெய்ய முற்றிலும் அர்பணித்தேன்.
  ஆயினும் காலம் சென்றபோது, என்னுடைய இருதயத்திலிருக்கும் சொந்தப் பாவங்கள், உண்மை நம்பிக்கையைப் பெறுவதைத் தடைச் செய்தன. இயேசுவை விசுவாசிப்பது முன்பை விட கடினமாக இருந்தது. இயேசுவின் இரத்தத்தின் மீது அதிகம் சார்ந்திருக்க முயற்சித்து, கர்த்தருக்கான என் அர்ப்பண முயற்சிகளை அதிகரிக்க என்னால் முடிந்த அளவு முயன்றேன். ஆயினும், என் இருதயத்தில் இருந்த வெற்றிடம் இன்னும் அதிகரித்தது. இத்தகைய நம்பிக்கை நான் வெறுமையடைந்தேன் என்ற உணர்வையும் சோம்பேறித்தனத்திலும் என்னைவிட்டது, மேலும் வெளித் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கபடவேடம் போடும் கிறிஸ்தவனாகவும் என்னை மாற்றியது. எனக்குள் இவ்வாறு நினைத்தேன். “இப்படி இயேசுவை எல்லோரும் விசுவாசிக்கிறார்கள், நான் மட்டும் அல்ல!” என்னுடைய விசுவாசம் தவறாக வழி நடத்தப்பட்டது என்பதை மறுக்க முயன்றேன். ஆயினும் இயேசுவின் இரத்தத்தினாலும், மனம் வருந்தி ஜெபிப்பதனாலும் என்னுடைய சொந்தப்பாவங்களை கழுவ முடியவில்லை.
  அப்படியானால் எத்தகைய விசுவாசம் என் சொந்தப் பாவங்களை சுத்திகரிக்கும்? இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது என்னுடைய எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதை விசுவாசிக்கும் விசுவாசத்தாலேயே என்னுடைய சொந்தப் பாவங்களை கழுவமுடியும். மத்தேயு 3:13-17 இல் அது தான் எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் இயேசுவின் இரத்தத்தினால் என் சொந்தப் பாவங்கள் ஏன் கழுவப்படவில்லை? யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானத்தின் பொருளை உள்ளடக்கியுள்ள அழகிய நற்செய்தியை தெரிந்து நான் அதை விசுவாசிக்கவில்லை.
  இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டுவிட்டன என்று இது பொருள் படுகின்றதா? ஆம், அது சரியே. வேதாகமம் இதற்கு “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” (யோவான் 3:3-5) என்று சாட்சி கூறுகிறது. இயேசு இவ்வுலகிற்கு வந்து யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் தன் மீது ஏற்றுக்கொண்டார்.
  இதனைக் குறித்து இன்னும் சந்தேகமுடையவனாக இருந்ததால் இதனை தெளிவாக்கும்படி பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் ஒப்பிட்டு பார்த்தேன். நான் கண்டறிந்த உண்மை சரியானது. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது, அந்நேரத்தில் என்னுடைய பாவங்கள் கூட அவர் மீது சுமத்தப்பட்டது. இந்த வார்த்தைகளின் மீதிருந்த விசுவாசத்தின் மூலம் பரிசுத்தன் ஆனேன். வேதாகமத்தில் எழுதப்பட்ட சத்திய வார்த்தைகள் இவைதானென்று உணர்ந்தேன். மேலும் இதுவே உலகின் மிக அழகிய நற்செய்தியாகும்.
  அதன் மேலாக, இயேசுவின் இரத்தத்தின் மீது மட்டும் விசுவாசம் வைத்தபோது, என்னுடைய பாவங்கள் ஏன் துடைக்கப்படவில்லை என்றும் அறிந்தேன். என்னுடைய சொந்தப் பாவங்களை இயேசுவின் மீது என்னால் சுமத்தமுடியாமல் போனதற்கான காரணம் அவரின் யோர்தான் நதியின் ஞானஸ்நானத்தைக் குறித்து எனக்குத் தெரியாததே. இறுதியில் நான் சத்தியத்தைச் சந்தித்தேன். எனக்காக இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்றும் அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துப்போட்டார் என்றும் நம்மைப் பாவங்களிலிருந்து விடுதலையாக்கும் பொருட்டு சிலுவையில் அறையப்பட்டார் என்றும் கற்றேன். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போடவே என்ற சத்தியத்தைக் கற்று விசுவாசித்தேன். நான் இப்போது நீதிமானாய் இருக்கிறேன். இயேசு எனக்களித்த அழகிய நற்செய்தியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், என்னுடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டமைக்கும் நன்றிகள்.
  ஆலயத்தின் கொள்கைகள் என் பாவங்களைக் கழுவவில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவையே அப்படிச் செய்தன. இந்த சத்தியமானது அழகிய நற்செய்திக்குள் இருக்கிறது. இயேசுவின் இரத்தம் மீதிருந்த நம்பிக்கையின் மூலம் மட்டும் நான் இரட்சிக்கப்பட்டு நீதிமானாகவில்லை, ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை மீதிருந்த நம்பிக்கை என் இரட்சிப்பாயிற்று.
  நான் அழகிய நற்செய்தியை விசுவாசிக்கத் தொடங்கிய பிறகு பரிசுத்த ஆவியானவர் என் மீது வந்தமைக்கு நான் நன்றி கூற வேண்டியவன். இப்பொழுது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய வார்த்தைகளுடன் சேர்ந்து பரிசுத்த ஆவியானவர் என்னில் வாசஞ்செய்கிறார்.
  இந்த அழகிய நற்செய்தியை எனக்கு கொடுத்தமைக்கும் இயேசுவின் அப்போஸ்தலர்களைப் போன்றே அதே நம்பிக்கைகளை பிரசங்கிக்க அனுமதித்தமைக்கும் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். நான் அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும் ஒரே ஒரு காரியத்தை செய்தாலும், கர்த்தர் பரிசுத்த ஆவியின் வரத்தை எனக்களித்தார். இப்பொழுது இச்செய்தியை உலக மக்களுக்கு அதிக மரியாதையுடனும், தீர்மானத்துடனும் பிரசங்கிக்க முடிகிறது. இயேசுவின் இரத்தத்தை மட்டும் விசுவாசிப்பதால் அவர்கள் பாவங்கள் கழுவப்படமாட்டாது என்று உறுதியுடன் அவர்களுக்கு கூற முடியும்.
  யோவான் அளித்த இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றைக் கூறும் அழகிய நற்செய்தியை அவர்கள் விசுவாசித்தால் மட்டுமே அவர்களுடைய பாவங்கள் நிச்சயமாக மன்னிக்கப்படும் என்று என்னால் கூறமுடியும். இந்த அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் போது கர்த்தருக்கு முன் மறுபடியும் பிறக்கும் அழகிய நற்செய்தியை உலகின் எல்லா மக்களுக்கும் மரியாதையுடன் என்னால் பிரசங்கிக்க முடியும். நீர் மற்றும் ஆவியாகிய நற்செய்தியை எனக்களித்ததன் மூலம் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீரைப் பருக எனக்களித்த அனுமதிக்காக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.


  உண்மையான நற்செய்தியானது நீர் மற்றும் ஆவியே என்று சோதனைகள் காட்டுகின்றன

  உன் பாவங்களிலிருந்து உண்மையாகவே மன்னிப்புப் பெற்று பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதைப் பெற்றாயா? இந்த நற்செய்தியானது உண்மையானது என்று உன்னால் எப்படிக் கூற முடியும்? இயேசு நமக்களித்த அழகிய நற்செய்தியை விசுவாசிக்க தயாராக இருந்த மக்களிடம் சில சோதனைகளைச் செய்தேன். ஒரு நபரிடம் இயேசுவின் சிலுவை இரத்தத்தை பற்றிய செய்தியை மட்டும் பிரசங்கித்தேன். அவரிடம் இயேசுவின் மீது எந்தப் பாவமுமிருக்காது என்றும் கூறினேன். மற்ற நபரிடம் அழகிய நற்செய்தியாகிய யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவைக் குறித்து போதித்தேன். முடிவு இம்மாதிரியானது. இயேசுவின் இரத்தத்தை மட்டும் விசுவாசித்து பாவ மன்னிப்பு பெற்ற நபர் தன் சொந்தப் பாவங்களுக்காக தொடர்ந்து பாவ மன்னிப்பு பெறவேண்டியிருந்தது. அதே சமயம், மறுபுறம் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்த நபர் தானொரு சிறந்த பாவமில்லாத மனிதனாகியதாக கூறினார்.
  இயேசு அவரின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்காகத் தீர்க்கப்பட்டார் என்ற உண்மையை அவர் விசுவாசித்ததாலேயே அவர் இருதயம் பாவமின்றி இருக்கப்பெற்றார். யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானம் உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவியது என்று கூறும், அழகிய நற்செய்தியை விசுவாசித்ததன் மூலம் கர்த்தரிடமிருந்து அவரால் பரிசுத்த ஆவியைப் பெற முடிந்தது.
  அவருடைய இருதயத்தில் பாவமில்லை என்று அம்மனிதனால் கூற முடிவதற்கான காரணம் அவரின் அழகிய நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவரைத் தன்னிருதயத்தில் பெற்றுக்கொண்டதே. தன்னிருதயத்தில் பாவங்களில்லை என்று சொல்வதற்கான உறுதியை பரிசுத்த ஆவியானவர் அவருக்கு அளித்தார். யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிக்கும் எல்லோருக்கும் பரிசுத்த ஆவியானவரை அவர்களுள் வாசஞ்செய்யும்படி கர்த்தர் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் யாருக்குள் வாசஞ்செய்கிறார்? யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய அழகிய நற்செய்தியை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு பரிசுத்த ஆவி வரமாக அளிக்கப்படுகிறது.
  பெந்தெகோஸ்தே நாளில் நடந்த அதிசயங்களைக் கண்டு, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதைக் குறித்து மக்கள் தவறாகப் புரிந்து கொண்டு அழகிய நற்செய்தியை புறம்பேத் தள்ளிவிட்டார்கள். மக்கள் தாம் மிகுந்த முயற்சி செய்து ஜெபித்து பரிசுத்த ஆவியானவரைத் தேடினால், பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெறமுடியும் என்று நினைக்கிறார்கள். அநேக காலமாக, உலகிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு, அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே பரிசுத்த ஆவியைப் ஒருவர் பெறமுடியும் என்ற உண்மை சிறிதளவேனும் இல்லாதவர்களாக இருந்தார்கள். ஆயினும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரைத் தம்முள் வாசஞ்செய்யபட்ட, அநேக கர்த்தரின் ஊழியர்கள், பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் நற்செய்தியைப் பிரசங்கித்தனர். இதன் பயனாக, உலக முழுவதுமுள்ள அநேக மக்கள் அழகிய நற்செய்தியைப் படித்து ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ்செய்யப் பெற்றனர்.
  அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும் மக்கள் பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ்செய்வதை அனுபவிக்க கர்த்தர் அனுமதிக்கிறார். வேதாகமம் இப்படிக் கூறுகிறது. “கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” (அப்போஸ்தலர் 2:17). ஆயினும், அழகிய நற்செய்தியைத் தெரிந்து கொள்ளாமல் பரிசுத்த ஆவியானவரைத் தம்முள் வாசஞ்செய்யும் படி பெற முயற்சி செய்வது தவறானது என்பதை ஒருவர் புரிந்துக் கொள்ளவேண்டும். யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதைத் தவிர, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்வதைப் பெற வேறுவழியில்லை.
  நீராலும் ஆவியாலும் ஞானஸ்நானம் பெற்றவனே பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியும் என்று கர்த்தர் கூறுவதாலும் மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் உடையவர்களாக இருப்பதாலும், பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க எல்லோருக்கும் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப் பெற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது குறித்தும் பரலோகத்தினுள் பிரவேசிப்பது குறித்தும் நீங்கள் எப்படி நினைக்கலாம்? அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதைத் தவிர பரலோகம் செல்ல வேறு வழிகளில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே உங்களால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள முடியும். நாம் பொருட்கள் வாங்கும் போது பணம் கொடுப்பது போல, அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி பெறுகிறோம்.
  உண்மையாக நீ பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ்செய்யப் பெற வெண்டுமானால், நீ முதலாவதாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து அதனை விசுவாசித்தேயாக வேண்டுமென்று நான் உன்னிடம் கூற விரும்புகிறேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உனக்குள் வந்த அனுபவத்தைப் பெறுவாய். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தர், பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ் செய்வதை உனக்குப் பரிசாக அளிக்க விரும்புகிறார்.
  நான் இந்த அழகிய நற்செய்தியை விசுவாசிக்கிறேன். மேலும் காலம் செல்லச்செல்ல, கர்த்தர் எனக்களித்த இந்த அழகிய நற்செய்தியே இவ்வுலகின் மிக அழகியதும் விலையேறப்பட்டதுமாகும் என்ற உணர்வு என்னுள் இன்னும் உறுதியாகியது. கர்த்தரிடத்தில் நன்றி உணர்ச்சி உடையவனாக இருக்கிறேன். நீங்களும் அப்படியே உணருகிறீர்களா? பரிசுத்த ஆவியைப் பெற்ற நாம் கர்த்தரால் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாக உணருகிறோம்.
  அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்வதைப் பெற்றுக் கொள்வது என்பது குறித்த செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்கும் ஆசீர்வாதமான அழகிய நற்செய்தியை எற்றுக்கொள்வதன் மூலம் மக்கள் பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ்செய்யும்படி பெற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்களாக முடியும்.
  யோவான் 7:38 இல் இயேசு கூறுகிறார். “வேத வாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும்.” இதன் பொருள் என்னவெனில் இயேசு அவர்களுக்களித்த அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் அவர்கள் பாவங்களில் இருந்து விடுதலைப் பெறும்போது மக்கள் பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ்செய்யும்படி பெறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் அவர்களிருதயத்திலிருந்து நதியைப் போல் ஓடும். அழகிய நற்செய்தியை விரும்புகிறவர்கள் ஆவிக்குரிய ஜீவத்தண்ணீர் வெளியே ஓடுவதை அனுபவிப்பார்கள்.
  நீர் மற்றும் ஆவியாகிய நற்செய்தியின் மூலம் மறுபடியும் பிறப்பதற்கு முன் நான் இயேசுவின் வெகுதீவிர விசுவாசியாக இருந்த போதிலும், என்னுடைய இருதயத்திலிருந்து, பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் வெளியே ஓடவில்லை. ஆயினும் நீர் மற்றும் ஆவியாகிய நற்செய்தியை நான் விசுவாசிக்கத் தொடங்கியப் பிறகு வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள படி என்னுடைய இருதயத்திலிருந்து ஜீவத்தண்ணீர் தங்குத் தடையின்றி வெளியே ஓடத்தொடங்கியது. இந்த நொடியிலும் கூட, பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் கர்த்தர் எனக்கு அளித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியுடன் சேர்ந்து ஓடுகிறது. என்னுடைய இருதயத்திலிருந்து வருட முழுவதும் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் தாராளமாக ஓடுகிறது. பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்வதைப் பெற்ற பிறகு, அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும், நற்செய்தியாளனாக என் பணியைத் தொடங்கினேன்.


  அழகிய நற்செய்தியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்வதைப் பெற்ற பின்னுள்ள என் நம்பிக்கையின் அறிக்கை

  நான் என் முதல் இருபது வயதுகளில் இருக்கும்போது, அது இலையுதிர்காலம் முடிவதற்கு முந்திய நேரமாகும். இலையுதிர்காலம் தவிர்க்க முடியாத என் மரணத்தைப் பற்றி என்னைச் சிந்திக்கச் செய்தது. என்னுடைய இருதயத்திலிருந்த பாவங்களினால் அந்த வருடத்தில் என் வாழ்வு குழப்பம், வெறுமை மற்றும் இருள் சூழ்ந்ததாக இருந்தது. எந்த வழியில் திரும்புவது என்றறியாது, தவறானத் திசைகளில் சென்று கொண்டிருந்தேன். என்னுடைய உடம்பு அதிக சுகவீனத்திற்குட்பட்டபோது என் இருதயத்தில் வெறுமையும் வளர்ந்தது.
  என்னுடைய பாவங்களின் பொருட்டு, நான் மிகவும் குழம்பிய நிலையிலிருந்தேன். எனக்கு எது காரணம் என்று கூட உறுதியாகத் தெரியவில்லை. என் வாழ்வின் திடீர் முடிவிற்கு பிறகு வரும் கர்த்தரின் நியாயத் தீர்ப்பின் போது என் பாவ மன்னிப்பிற்காக கெஞ்சுவதைத் தவிர வேறு வழிகள் இல்ல. “ஓ கர்த்தரே, நான் இறப்பதற்கு முன் உம்மீதுள்ள நம்பிக்கையின் மூலமாக என்னுடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறவேண்டும். மேலும், என்னுடைய சுகவீனங்களிலிருந்து என்னை குணப்படுத்தும்!” நான் மீண்டும் மீண்டும் ஜெபித்தேன்.
  என்னுடைய குழம்பிய இருதயத்தின் அடி ஆழத்திலிருந்து புதிய எதிர்பார்ப்புகள் அப்பொழுது தான் ஊற்றெடுக்கத் தொடங்கியிருந்தன. கர்த்தருக்காக எதிர்ப்பார்ப்பதன் மூலம் என்னிருதயம் நிரம்பியிருந்தது. அது தீப்பந்தத்தைப் போல் அனலாயிருந்தது. அது குழப்பமில்லை. என்னிருதயத்தில் புதிய எதிர்ப்பார்ப்புகள் காட்டுத் தீயைப் போல் எரிந்தன. அந்நாள் முதல் புதிய மத வாழ்வைத் தொடங்கினேன். என்னுடையப் பாவங்களிலிருந்து என்னை இரட்சிக்கும்படியாக இயேசு மரித்தார் என்று நம்பினேன்.
  பல பாஷை அனுபவமும் குறைந்த நாட்களிலேயே கிடைத்தது. பிறகு இயேசு சிலுவையில் இரத்தஞ்சிந்தியதை நினைத்து கண்ணீர் விட்டேன். அவர் எனக்காக தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தியமைக்கு அதிக நன்றியுணர்வுள்ளவனாக இருந்தேன்.
  அதன் பிறகு என்னுடைய பழைய வாழ்க்கையை விட்டுவிட்டேன், மேலும் எனக்கு ஒரு புதிய வேலையும் கிட்டியது. அது நான் புனித ஞாயிற்றுக்கிழமையை ஆசரிப்பதற்கு அனுமதியளித்து. அந்நேரத்தில், என்னிருதயம் இயேசுவின் மீதிருந்த என் அன்பினால் நிறைந்து, என்னுடைய பாவங்களிலிருந்து என்னை இரட்சிக்கும் பொருட்டு அவர் இரத்தத்தை சிலுவையில் சிந்தினார் என்பதை எப்போதெல்லாம் எண்ணுகிறேனோ, அப்போது முடிவில்லாத நன்றியறிதல் கரை புரண்டோடியது. என் மதத்திற்குரிய ஆவி வளரத் தொடங்கியது. ஆனால், அது முற்றிலும் இயேசுவின் சிலுவை இரத்தம் குறித்த வார்த்தையின் அடிப்படையில் அமைந்திருந்தது.
  ஆயினும், காலம் செல்லச் செல்ல, என்னுடைய பலவீனத்தினாலும் சொந்தப்பாவங்களிலினாலும், என் மத வாழ்க்கை செல்லரிக்கத் தொடங்கியது. என்னுடைய நம்பிக்கை இயேசுவின் சிலுவை இரத்தத்தின் மீது மட்டுமே இருந்தமையால் என்னுடைய சொந்தப்பாவங்கள் முற்றிலுமாகக் கழுவப்படவில்லை. மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் என்னுடைய சொந்தப் பாவங்களை கழுவி விட முயன்றேன். கர்த்தரின் பாவ மன்னிப்பை எதிர்ப்பார்த்து நான் எதிர்ப்பார்ப்புடன் செய்த ஜெபங்களால் என்னுடைய சொந்தப் பாவங்களை முற்றிலுமாக கழுவ முடியவில்லை. இது கர்த்தரின் சட்டத்தை நான் கடைப் பிடிக்காமையால் வந்தது. என்னுடைய சொந்தப்பாவங்கள் குவியத் தொடங்கின.
  மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் என்னுடைய பாவங்கள் முற்றிலுமாக கழுவப்படாவிட்டாலும், வேறு வழியில்லாமல் இப்படியாக ஜெபிக்க வேண்டியிருந்தது. இயேசுவின் சிலுவை இரத்தத்தை நினைத்து, நான் எப்பொழுதெல்லாம் பாவம் செய்தேனோ அவற்றை மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் கழுவிவிட முடியும் என்று நம்பினேன். என்னுடைய மத வாழ்க்கையை அதிகமாக கடைப்பிடிக்க என்னுடைய பலவீனத்தால் சொந்தப்பாவங்களும் அதிகமாகக் குவியத் தொடங்கின. இப்பாவங்களினால் என் பாடுகள் அதிகமாயின. 
  பரிசேயரைப் போன்ற கிறிஸ்தவனானேன். என்னுடையப் பாவங்கள் எத்தகையதாக இருந்தாலும், டீக்கனாகவும் பிறகு நற்செய்தியாளனுமாக நியமிக்கப்பட்டேன். என்னுடைய சொந்தப் பாவங்களினால் வேதனையை உணரும் போதெல்லாம் நற்செய்தியைப் பிரசிங்கிக்க வெளியேச் சென்றேன். இதுவே என் ஆத்துமாவைக் கழுவும் ஒரே வழியென நினைத்தேன். சுயபலி என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்த இவ்விசுவாசத்தினால் என் சொந்தப் பாவங்கள் கழுவப்படவில்லை.
  சாத்தானால் கட்டுண்டமைப் போன்ற அனுபவங்களைப் பெற்றேன். என்னுடைய சொந்தப் பாவங்களுக்கு நானே தண்டனை வழங்கிக் கொள்ளும் நிலையில் விழுந்தேன். என்னுடைய மீறுதல்களுக்காய் சாவை வேண்டினேன். “நீ பாவம் செய்தாய், நீ செய்யவில்லையா என்ன?” சாத்தான் என் பாவங்களினால் என்னை ஆக்கினைக்குட்படுத்தி தொடர்ந்து துன்பப் படுத்திக் கொண்டிருந்தான்.
  என்னுடைய விசுவாசம் உடையக் கூடிய நிலைக்கு வந்தது. மனம் வருந்தி ஜெபிப்பதாலும் இயேசுவின் இரத்தத்தின் மீதுள்ள நம்பிக்கையின் மூலமும் என்னுடைய சொந்தப் பாவங்களை கழுவ முடியாது என்பதை அறிந்தேன். மேலும் இதனால் நான் தவித்துப்போன நிலையில் என்னைக் கண்டேன்.
  ஒரு இறையியல் கல்லூரியில் கால்வினிசம் குறித்து படிக்கும்போது, யோவான் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானத்தின் காரணம் என்ன என்பதில் அதிக நாட்டமுள்ளவனானேன். யோர்தான் நதியில் இயேசு ஏன் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் என்று நிறையப் பேராசியர்களிடம் கேட்டேன். அவர்களுடைய பதில்கள் ஒரே மாதிரியானவைகளாக இருந்தன. அவருடைய அடக்கத்தைக் காட்டுவதற்கோ அல்லது அவர் தேவகுமாரன் என்று அறிவிப்பதற்காகவோ அவர் ஞானஸ்நானம் பெற்றதாக அவர்கள் கூறினர். ஆயினும், இத்தகைய பதில்கள் என் ஆர்வத்தை தனிக்கவில்லை.


  யோவான் இயேசுவுக்களித்த ஞானஸ்நானத்தின் சத்தியம் அழகிய நற்செய்தியை நான் தெரிந்துகொள்ளும் படிச் செய்தது

  இறையியல் கல்லூரியில் என்னுடைய காலம் முடிந்தது, என்னுடையப் பாவங்கள் இன்னமும் கழுவப்படவில்லை. முன்பெப்பொழுதையும் விட அவற்றின் பாரத்தினால் துன்பப்பட்டேன். அப்பொழுது ஒரு நாள், இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார்? அவர் ஏன் இப்படி நீதியை நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்று கூறினார், என்பது எனக்குப் புரிந்தது. யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானம் மூலம் என்னுடையப் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன என்று கூறும் அழகிய நற்செய்தி அது. அவரின் எழுதப்பட்ட வார்த்தைகள் மூலம் இந்த உண்மையை நான் அறிந்து கொள்ள கர்த்தர் எனக்கு உதவினார்.
  அழகிய நற்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ள கர்த்தரின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் வாசித்த பிறகு, யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் என்னுடைய எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதென்பதையும், அதற்காக அவர் சிலுவையில் தீர்க்க்கப்பட்டாரென்பதையும் இறுதியாகத் தெரிந்து கொண்டேன்.
  இப்பொழுது என்னுள் வாசஞ்செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் உண்மையாகவே வந்து விட்டார் என்பதை அறிந்தேன். இந்த அழகிய நற்செய்தியைப் புரிந்துகொண்டு அதனை விசுவாசித்ததால் என்னிருதயத்திலிருந்த பாவங்கள் யாவும் முற்றிலுமாக மன்னிக்கப்பட்டன. தவிப்பிற்குள்ளும் குழப்பத்திற்குள்ளும் என்னைத் தள்ளிவிட்ட பாவங்கள் இந்த அழகிய நற்செய்தியின் வல்லமையினால் முற்றிலுமாக கழுவப்பட்டன. முடிவில்லாத சுய பலிகள் மற்றும் மனம் வருந்தி ஜெபிப்பதால் துடைக்கப்பட முடியாத பாவங்கள் ஒரேயடியாக முற்றிலும் மறைந்துப் போயின.
  இயேசுவின் சிலுவை இரத்தம் மூலம் மட்டுமே உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவ முடியாது என்று நான் கூறும்போது நான் உண்மைப் பேசுகிறேன். யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானமும் பாவ மன்னிப்பிற்கு வழிநடத்தியது. இப்பொழுது அனைவரும் தம் பாவங்கள் கழுவப்பட்டுவிட்டன என்பதைப் புரிந்துக்கொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நன்றிகள்.
  அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நான் விசுவாசிப்பதால் என் இருதயத்தின் உள்ளே பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்கிறார், மேலும் கர்த்தர் சாட்சியம் கூறும் வார்த்தைகள், அவர் தம் மகனைக் குறித்து கூறிய சாட்சி, ஆகியவை என்னிருதயத்திலிருந்த பாவங்களை வெளியே ஓட்டிவிடுவதற்கு போதுமாயிருந்தன. அழகிய நற்செய்தி மீது எனக்கிருந்த நம்பிக்கையின் பதிலாக பரிசுத்த ஆவியானவரைப் புறாவைப்போல் என் மீது பெற்றேன்.
  அந்நாளிலிருந்து, பரிசுத்த ஆவியானவர் என் இருதயத்தில் கிரியைப் புரியத் தொடங்கினார். ஆவிக்குரிய வேலைச் செய்யும்படி எனக்கு அதிகாரம் கொடுத்தார். வேறு வார்த்தகளில் கூறுவதானால் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்கச் செய்தார். இப்பொழுது என்னிருதயத்தில் பாவங்கள் ஏதுமில்லை. யோவான் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் என் பாவ மன்னிப்பிற்கான சாட்சிகளாகி நான் பரிசுத்த ஆவியானவரை என்னுள் வாசஞ்செய்யும்படி பெறவும் வழி நடத்தின. அல்லேலூயா! கர்த்தரிற்கே மகிமையுண்டாவதாக. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கத் தொடங்கிய நாளில் பரிசுத்த ஆவியானவர் அமைதியாக ஒரு புறாவைப் போல் என் மீது இறங்கி வந்து என்னுள் வாசஞ்செய்யத் தொடங்கினார். என் மனதில் சில சமயங்களில் ஒரு புறாவைப் போலவும், சில சமயங்களில் உருக்காலையின் நெருப்பு போலவும் கிரியை செய்யத் தொடங்கினார்.
  அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் ஏற்றுக்கொண்டு விசுவாசித்தீர்களானால் இப்பொழுது நீங்களும் கூட பரிசுத்த ஆவியானவரை உங்களில் வாசஞ்செய்யப் பெற முடியும், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை என்னுடனே கூட நீங்களும் விசுவாசித்து பரிசுத்த ஆவியைப் பெற்று கர்த்தரைப் புகழ நீங்கள் விரும்பவில்லையா? அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இந்த முழு உலகத்திற்கும் பிரசங்கிக்க என்னுடன் சேர்ந்து வேலை செய்வதை நீங்கள் விரும்பவில்லையா? அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி உங்களைப் பரிசுத்தராக்கி பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்யும்படிச் செய்யும். விசுவாசத்திலிருந்து விசுவாசம் வரை கர்த்தரின் நீதி நற்செய்தியில் வெளிப்ப்படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வது அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானவரை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது.


  பரிசுத்த ஆவியானவர் எனக்குச் செய்த அதிசயமான காரியங்கள்

  பரிசுத்த ஆவியானவர் என்னுள் வாசஞ்செய்யப் பெற்றபின் அழகிய நற்செய்தியை பிரசங்கிக்கும்படியாக புதியதொரு ஆலயத்தில் வேலைச் செய்யத் தொடங்கினேன். பரிசுத்த ஆவியானவர் நான் அழகிய நற்செய்தியை வல்லமயுடன் பிரசங்கிக்கும்படிச் செய்தார்.
  அந்த சமயத்தில் தான் கீழ்க்கண்ட சம்பவம் நடைப்பெற்றது. நான் வாழ்ந்த நகரத்தில், வெளி நாட்டினருடன் வியாபாரம் செய்த தையல்காரர் ஒருவர் இருந்தார். அவர் டீக்கன் ஆவார். ஒரு முறை யாருடனோ வியாபாரம் செய்ய ஓட்டல் ஒன்றிற்குச் சென்ற அவர் நாங்கள் அங்கு ஒட்டியிருந்த விளம்பரத்தைப் பார்த்தார். அந்த வரவேற்பிதழினால் கவரப்பட்ட அவர் என்னுடன் தொடர்பு கொள்ள முயன்றார். அவர் என்னைச் சந்தித்து, தான் வெகுகாலமாக பாவத்துடன் வாழ்ந்ததாகக் கூறினார். ஐந்து மணி நேரமாக அவரிற்கு நீர் மற்றும் ஆவியைக் குறித்த நற்செய்தியை வழங்கியபிறகு, பாவ மன்னிப்பின் சத்தியத்தை அவர் தெரிந்துகொண்டார், அவர் மறுபடியும் பிறந்து, அதே நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ்செய்வதையும் பெற்றார்.
  ஒரு ஆலயக் கட்டிடத்தைப் பார்க்கச் சென்ற போது நடைபெற்ற கதை இது. நான் ஒரு அதிசய வைக்கும் பெரிய கட்டிடத்தைக் கண்டேன். ஆனால் அந்த சமயத்தில் எங்கள் ஆலயக் கட்டிடமாக அதனை வாடகைக்கு எடுப்பதற்கு போதுமான பணம் என்னிடமிருக்கவில்லை. என்னுடைய கையிருப்பினைக் குறித்து மதிப்பீட்டில் மிகக் குறைவாக இருந்தமையால் அந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுப்பது இயலாத காரியமாகத் தோன்றியது. ஆயினும், என்னுள் இருந்த பரிசுத்த ஆவியானவர், “திடமாயிரு, நம்பிக்கையுடனிரு” என்று கூறினார். அதிசயிக்கத்தக்க விதமாக என்னால் அந்தக் கட்டிடத்தை வாங்கி அவர் பணிச் செய்ய முடிந்தது. பரிசுத்த ஆவியானவரின் உதவிக்கு நன்றிகள். அந்நேரம் முதல் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நான் பிரசங்கிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் செய்தார். அழகிய நற்செய்தியை அனைத்து மக்களுக்கும் பிரசங்கிக்கும்படி என்னிருதயத்தில் வாசஞ்செய்யும் பரிசுத்த ஆவியானவர் இந்நொடியில் கூட ஏவுகிறார். இந்த அழகிய நற்செய்தியைக் குறித்து கேட்டு அதனை விசுவாசிப்போர் பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ்செய்யும்படியாகப் பெறுவதைக் காண்கிறேன்.
  இந்த அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எனக்களித்த திறமைக்காக அவரிற்கு நன்றி செலுத்துகிறேன். பரிசுத்த ஆவியானவர் எனக்குச் செய்தவற்றைக் குறித்து என் வாழ்நாள் முழுவதும் எழுதினாலும் கூட அது முடியாது என்பது எனக்குத் தெரியும். பரிசுத்த ஆவியானவர் என்னிருதயத்திலிருந்து ஜீவத்தண்ணீர் தங்குத்தடையின்றி ஓடும் வாழ்க்கையை நான் வாழச் செய்தார். என்னில் வாசஞ்செய்யும் அவரிற்கு நன்றிகள்.


  நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் அவருடன் நடக்கும் ஆலயத்தை பரிசுத்த ஆவியானவர் நட்டார்

  அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியாக ஒரு முறை வெளியுலகத்திற்கு சென்றிருந்தேன். அச்சமயத்தில் ஒரு சிறிய நகரத்திற்குள் கர்த்தர் என்னை வழிநடத்தினார். அங்கு கர்த்தருக்காக காத்திருக்கும் சிறிய மக்கள் கூட்டத்தினைச் சந்தித்தேன். அழகிய நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கிக்கும் படி கர்த்தர் என்னை வழிநடத்தினார். அது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ்செய்யும்படி பெறச் செய்தது. அவர்கள் அழகிய நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்தமையால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள். என்னுடன் பணிசெய்யும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தினார். அப்போதிலிருந்து அவர்களுடனே கூட அழகிய நற்செய்தியை இவ்வுலகிற்கு தெரிவிக்கச் செல்லுகிறேன்.
  அச்சமயத்தில் அவர்கள் எந்த மதப்பிரிவையும் சாராத, சிறிய மக்கள் கூட்டமாக இருந்தார்கள். கர்த்தருடைய வார்த்தையின் படி அவர்கள் வாழ விழைந்தனர். அவர்கள் தம் பாவங்களுக்கு அடிமையனவர்களாக இருந்தபடியால் கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்டு வியாகூலத்துடன் கூக்குரலிட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் இந்த மக்கள் கூட்டத்தினரிடம் என்னை வழிநடத்தி அழகிய நற்செய்தியை அவர்களுக்கு பிரசங்கிக்கும்படி என்னை ஏவினார். அவர்களையும் என்னையும் சந்திக்கச் செய்ய பரிசுத்த ஆவியானவர் எங்களைத் தயார் படுத்தியதை என்னால் காண முடிந்தது. லேவியராகமத்தில் எழுதப்ப்பட்டுள்ளபடியான பலியிடும் முறையில் தொடங்கி அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி வரை பிரசங்கிக்கும்படி கர்த்தர் என்னை வழி நடத்தினார். அழகிய நற்செய்தியின் வார்த்தைகள் மூலம் மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றனர்.
  கர்த்தர் அழகிய நற்செய்தியை விசுவாசிக்கும் அவர்களுடன் பரிசுத்த ஆவியானவரின் ஆலயத்தை நிறுவினார். அழகிய நற்செய்தியின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் அவர்களை இயேசுவின் சீடர்களாக நியமனம் செய்தார். இப்பொழுது நிறைய ஆடுகள் பரிசுத்த ஆவியானவரைப் பெறவும் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவும் செய்கிறார்கள்.
  ஒரு மிஷன் பாடசாலையைத் தொடங்கி சீடர்களை வளர்க்கும்படியாக பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தினார். கர்த்தரின் பணியாளர்களாக சேவைச் செய்யவும் நம்பிக்கைக்கு கீழ்படிய படிக்கவும் உதவும் பொருட்டு மக்களுக்கு வேதவாக்கைப் போதிக்க கர்த்தர் எனக்கு உதவினார். அவர்கள் செல்லுமிடமெல்லாம் அழகிய நற்செய்தியின் கிரியைகள் நடைபெற அவர் அனுமதித்தார். அவரின் ஆலயங்களை அவர்கள் மூலம் கர்த்தர் நட்டார். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவரின் ஊழியர்கள் பிரசங்கிக்க பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் பாவ மன்னிப்பு பெற்றவர்கள் நீதிமான்களாகி, ஆலயத்தில் ஐக்கியமாகி இவ்வுலகில் நீதியாக வாழும்படியக ஆசீர்வதித்து அவர்களை வழிநடத்துகிறார்.
  ஆதிகாலந்தொட்டு மக்களை வஞ்சித்து வந்த சாத்தான், தொடர்ந்தும் அப்படியேச் செய்வான். சாத்தான் மக்களிடம் மனம் வருந்தி ஜெபிப்பது உபவாசமிருப்பது அல்லது கைவப்பது ஆகியவை மூலமாக, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறான். இது முற்றிலும் உண்மையே அல்ல. மக்கள் மனம் வருந்தி ஜெபிப்பதாலோ அல்லது கைவைப்பதன் முலமோ, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள முடியாது. கர்த்தர் நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பாவங்களெல்லாம் மன்னிக்கப்படுவதன் மூலமே அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற முடியும். இதுவே பரிசுத்த ஆவியானவரின் சஞ்சரிப்பைக் குறித்த உண்மயான பொருளாகும். மக்கள் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொள்ள உதவும்படி இயேசுகிறிஸ்துவின் சீடர்களை, அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்க பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து அவர்களை வழி நடத்துகின்றார்.


  உலக முழுவதும் இலக்கியப் பணி செய்ய பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்துகிறார்

  பவுல் தன் நிருபங்களில் அழகிய நற்செய்தியை விட்டுச் சென்றது போலவே, என்னிருதயத்தில் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர்அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எழுதவும் பிரசங்கிக்கவும் ஊக்கியாக இருக்கிறார். இந்தக் காரணத்தினாலேயே அழகிய நற்செய்தியை உள்ளடக்கிய கிறிஸ்தவ நூல்களை வெளியிடுகிறோம். இது விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரைப் பெற வழி நடத்துகின்றது. முதலில் சில பக்கங்களேயுடைய துண்டு பிரசுரங்களில் தொடங்கினோம். ஆனால் சீக்கிரமே அழகிய நற்செய்தியை உள்ளடக்கிய நூல்கள் உலகெங்கும் பரவத் தொடங்கின.
  இந்த நூல்களைப் படித்து அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் தன் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று அநேக மக்கள் ஆலயத்திற்குள் பிரவேசிக்க என்னுள் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகின்றார். அதற்கும் மேலாக, அநேக வெளிநாட்டு மொழிகளிலும் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்க எங்களை வழி நடத்தினார், அமெரிக்கா உட்பட, உலகைச் சுற்றியுள்ள எறத்தாழ 150 நாடுகளில் இந்த அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்க அவர் எங்களை வழி நடத்தினார்.
  உலக மிஷினிற்காக ஜெபிக்கும் படி பரிசுத்த ஆவியானவர் ஆலயத்தை ஏவினார். மேலும் அநேக மொழிகளில் இந்த அழகிய நற்செய்தியை மொழிப் பெயர்ப்புச் செய்யவும் எங்களை வழிநடத்தி அதனை இலக்கியப் பணியின் மூலம் பிரசங்கிக்கச் செய்தமையினால் அநேக நாட்டு மக்கள் இவற்றைக் கேட்டு அதனை விசுவாசிக்கிறார்கள். மற்ற நாடுகளிலுள்ள புதிய சீடர்களுடன் சேர்ந்து பணியாற்றவும், அங்கே, அவர்களுடன் இணைந்து அழகிய நற்செய்தியைப் போதிக்கவும் பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தினார்.
  இரஷ்ய நாட்டில் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஆவலை பரிசுத்த ஆவியானவர் என்னில் நிரப்பினார். பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தைத் தேடும் நற்செய்தியாளர்களைச் சந்திக்கவும் அவர்களுக்காக ஜெபிக்கவும், அழகிய நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கிக்கவும் எங்களை வழி நடத்தினார். அப்பொழுதுதான் அவர்கள் முதன்முதலாக அழகிய நற்செய்தியைக் கேள்விப்பட்டனர். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்டு விசுவாசிக்கும்போது, எங்களைப் போலவே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டார்கள்.
  அவர்களில் ஒருவரான, மாஸ்கோவில் உள்ள தேசியப் பல்கலைக் கழகத்தின் பேராசியர் ஒருவர், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்டபின் கீழ்க்கண்டவற்றை அறிக்கைச் செய்தார்.
  “நான் 6 வருடங்களாக கர்த்தரை விசுவாசித்தேன், ஆனால் அவரைப் பற்றி உண்மையாக எதுவும் புரிந்துக் கொள்ளாமல் அவரை விசுவாசித்தேன். ஆயினும், அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்டவுடன் எனக்குள் ஒரு உறுதியான விசுவாசமும் இருதயத்தில் அமைதியின் சுகமும் கிட்டியது. நான் உண்மையாகவே கர்த்தருக்கு நன்றி கூறினேன். அது நாள் வரை சரியான நம்பிக்கையிலான மத வாழ்வை நடத்தியிருந்தேன் என்று அப்போழுது வரை நினைத்திருந்தேன். என்னுடைய மத வாழ்வு, நம்முடைய பாவங்களுக்காக மரித்த இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதை உள்ளடக்கியதாகவிருந்தது. ஆயினும் கர்த்தர் என் பாவங்களை எல்லாம் சுத்தப்படுத்தினார் என்பது குறித்து எதுவும் தெரியாதவனாக இருந்தேன்.
  அப்பொழுது மறுபடியும் பிறந்த போதகர்களைச் சந்தித்து கர்த்தர் நமக்கருளிய அழகிய நற்செய்தியைக் கேட்டு, நான் இன்னும் பாவியாகவே இருப்பதை அறிந்தேன். அழகிய நற்செய்தியைக் குறித்து மேன்மேலும் தெரிந்து கொள்ள விரும்பினேன். மேலும் நீதிமான் என்பதன் பொருள் என்னவென்றும் அறிய விழைந்தேன். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது என் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதுவே, அழகிய நற்செய்தியாகும். என்னுடைய மூலப்பாவங்கள் மட்டுமல்லாமல், என்னுடைய தினப்பாவங்கள் மற்றும் என்னுடைய எல்லா வருங்காலப் பாவங்களும் அவர் மீது ஞானஸ்நானம் மூலம் சுமத்தப்பட்டன என்பதை அறிந்துக் கொண்டேன். இந்த உண்மையான நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்து மறுபடியும் பிறந்தமையால் பெருமகிழ்ச்சியை சம்பாதித்துக் கொண்டேன்.”
  அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்டு விசுவாசித்தமையால் பரிசுத்த ஆவியானவரை இந்த பேராசியர் உட்பட, அநேக இரஷ்யர்கள் பெற்றுக் கொண்டார்கள். இப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் ஆலயம் அங்கு நடப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மூலமாக அழகிய நற்செய்தியை நிறைய மக்கள் விசுவாசித்து வருகிறார்கள். கர்த்தர் இவை யாவற்றையும் செய்தார். ஆகவே, பரிசுத்த ஆவியானவருக்கு எனது சிறப்பு நன்றிகள்.
  அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தவர்களுக்கு கிட்டியது போன்றே, என்னுள் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர் என்னை மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக்கினார். இப்பொழுது நான் அழகிய நற்செய்தியை உலகிற்கு பிரசங்கிக்கிறேன். அழகிய நற்செய்தியைக் குறித்த எங்கள் நூல்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலகமுழுவதுமுள்ள அநேக மொழிகளில் மொழிபெயர்க்க அவர் அனுமதித்தார். இந்த அழகிய நற்செய்தியை நாங்கள் உலகமெல்லாம் நம்மைப் போதிக்கும்படிச் செய்தார். பரிசுத்த ஆவியானவருக்கு நன்றிகளைச் செலுத்துகிறேன். நீங்களும் கூட பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்யப் பெறலாம். பரிசுத்த ஆவியானவர் உங்களில் சஞ்சரிக்க வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார்.
  அநேக மக்கள் அவரின் பெயரைச் சொல்லி கூப்பிடுவதாலும் கர்த்தரிடம் தவிப்புடன் ஜெபிப்பதாலும் பரிசுத்த ஆவியானவரைப் பெற முயற்சிக்கிறார்கள். ஆயினும் இயேசு நமக்களித்த அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர்த்து, பரிசுத்த ஆவியானவரைப் பெற முயல்வது தவறானதாகும். இயேசுவின் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இல்லாமல் ஒருவரால் பரிசுத்த ஆவியைப் பெறமுடியும் என்பது கள்ளப்போதனையாகும்.
  இயேசு அவர்களுக்களித்த அழகிய நற்செய்தியை விசுவாசிக்காமல் அவரின் சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்களா? இல்லை, சுத்தமாக இல்லை. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போரிடம் இந்நாட்களில் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் பரிசுத்த ஆவியானவரின் ஜீவத்தண்ணீர் அவர்களின் இருதயங்களிலிருந்து வெளியே ஓடுகிறது. இந்த நொடியில் கூட அழகிய நற்செய்தியுடன் சேர்ந்து பரிசுத்த ஆவியானவரின் ஜீவத் தண்ணீர் என்னிருதயத்திலிருந்து வெளியே ஓடுகின்றது. அல்லேலூயா! கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

【8-9】 < எபேசியர் 2:14-22 > நம்மை சுத்திகரித்த அவரின் ஞானஸ்நான நற்செய்தி<எபேசியர் 2:14-22>

“எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப் பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கத்தரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப் பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக் கல்லாயிருக்கிறார்; அவர் மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்”


 • அவன் செய்த பாவங்கள்.
 • கர்த்தரிடமிருந்து மனிதனைப் பிரித்தது எது?வறுமையினால் தத்தெடுக்கப்பட்டப் பிள்ளை


கொரிய யுத்தம் முடிந்து அறை நூற்றாண்டு காலம் முடிந்துவிட்டது. ஆனால் அது நிறைய காயங்களை கொரிய மக்களிடம் விட்டுச் சென்றது. கொரிய யுத்தம் முடிந்த பிறகு அநேக சிறுவர்கள் வெளிநாட்டவர்களால் தத்தெடுக்கப்பட்டனர். அந்நேரத்தில் ஐக்கிய நாட்டுப்படை கொரியா வந்து அநேக உதவிகளைச் செய்திருந்தாலும், அவர்கள் சென்றபோது அநேக சிறுவர்கள் தந்தையில்லாதவர்களாயினர்.

அநேக ஐக்கிய நாடுப் படையினர் இங்கு தங்கள் மனைவி மக்களுடன் இருந்த போதிலும் அவர்கள் தம் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லுகையில் அவர்களை இங்கு விட்டுவிட்டுச் சென்றனர். மீண்டும் இக்குழந்தைகள்அவர்கள் தாய்மாரினால் கைவிடப்பட்டு அனாதை ஆசிரமங்களில் சேர்ந்து தத்தெடுக்கும் பொருட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் வளர்ப்பு பெற்றோரைப்பெற்று நன்கு வளரும்படி அதிர்ஷ்டமுடையவர்களாக இருந்தனர்.

அவர்கள் வளர்ந்து வரும்போது, தாம் தம் பெற்றோரைப் போலவோ அல்லது பக்கத்து வீட்டார் போலவோ இன்றி வித்தியாசமான தோற்றம் உள்ளவர்களாக இருப்பதை உணர்ந்து கொண்டனர். மேலும் தாம் அதிகத் தொலைவிலிருக்கும் கொரியா என்ற நாட்டிலிருந்து தத்தெடுக்கப்பட்டவர்கள் என்பதையும் அறிந்துகொண்டனர். “என் பெற்றோர் ஏன் என்னை கைவிட்டனர்? அவர்கள் என்னை வெறுத்ததனால் தான் என்னை இத்தனை தொலைவிலுள்ள இந்த நாட்டிற்கு அனுப்பினார்களா? அவர்களுடைய இளம் மனதினால் என்ன நடந்ததுன்று அந்த குழந்தைகளால் அறியமுடியவில்லை.

அவர்களுடைய உண்மையான பெற்றோர்கள் மீது ஒரு வித ஆர்வமும் வெறுப்பும் ஒன்றாக அவர்களைச் சந்திக்கும் காத்திருப்புடன் வளர்ந்தது. ‘என்னுடைய பெற்றோர் எப்படியிருப்பார்கள்? அவர்கள் எப்படி என்னைக் கைவிடலாம்? அவர்கள் என்னை வெறுத்தமையால் இப்படிச் செய்தார்களா? இல்லை. இதற்கான ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.' அவர்கள் அநேக தப்பர்த்தங்களையும் அதிக அளவு வெறுப்புடையவர்களாகவும் இருந்தனர். அதனைக் குறித்து எதுவும் நினக்கவேண்டாம் என்றும் சிலவேலைகளில் தீர்மானித்தனர். அவற்றைக் குறித்து முற்றிலும் அறியுமுன்பே, காலம் செல்லச் செல்ல பிள்ளைகள் வாலிபர்களாக வளர்ந்தார்கள். அவர்கள் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று தம் சொந்த குடும்பங்களை நிறுவினர்.

ஒரு உள்ளூர் தொலைகாட்சி நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சியின் மூலம் இக்குழந்தைகள் மீது எனக்கு ஆர்வம் உண்டாயிற்று. இந்நிகழ்ச்சியில், இப்பொழுது ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தத்தெடுக்கப்பட்ட பெண்ணை ஒரு தொலைக்காட்சி நிருபர் பேட்டிக் கண்டார். அந்தப் பெண் இறையியல் படிக்கும் இருபது வயது பெண்ணாவாள். முதலில் தான் ஒரு தத்தெடுக்கப்பட்டவள் என்று யாருக்கும் தெரியக் கூடாதென்று விரும்பியதால் நிருபர்களைச் சந்திப்பதை அறவே தவிர்க்க முயன்றாள். அந்நிருபர் இந்தப் பேட்டியானது வெளிநாட்டவர்கள் தத்தெடுக்கும் அலையினை நிறுத்த உதவும் என்று அவளைப் புரிந்து கொள்ளச் செய்து அவளைச் சம்மதிக்கச் செய்தார். அப்பெண் சம்மதித்தாள்.

நிருபரின் ஒரு கேள்வியானது, “உன்னுடைய உண்மையான பெற்றோரை நீ சந்தித்தால் அவர்களிடம் என்ன பேசுவாய்? எதைத் தெரிந்துகொள்ள உனக்கு ஆர்வம் அதிகம் உள்ளது?” என்பதாயிருந்தது. அப்பெண் பதில் கூறினாள். “அவர்கள் ஏன் என்னைத் தத்தெடுக்கும் நிலையில் விட்டார்கள் என்று புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் என்னை வெறுத்தார்களா என்று கேட்கவேண்டும்.” அவளைப் பெற்றத் தாய் தொலைக்காட்சியில் அப்பெண்ணின் பேட்டியைப் பார்த்து, தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தன் மகளை சந்திக்கவேண்டுமெனக் கூறினாள். இப்படியாகவே இருவரும் சந்தித்தார்கள்.

தாயானவள் மிகவும் நேரத்துடனே விமான நிலையம் சென்று தன் மகளின் வரவிற்காக காத்து நின்றாள். இளம் பெண் வெளியேறும் கதவின் மூலம் வந்த போது, அவள் தாயால் அங்கு நின்று அழ மட்டுமே முடிந்தது.

இந்த இருவரும் இது வரை முகமுகமாகச் சந்தித்ததில்லை. தாய் தன் வளர்ந்த மகள் தொலைக்காட்சியில் வரும்போது அவளைப் பார்த்ததுவே முதல் முறை. அவர்கள் இருவரும் இரு வேறு மொழிகளைப் பேசினாலும், அவர்கள் தம் இருதயங்களால் பேச முடிந்தது. மேலும் தம் உணர்ச்சி மிக்க பார்வைகளின் பரிமாற்ற மூலமும் பேச முடிந்தது. அவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் தொட்டுக் கொண்டனர். அதேசமயம் தாயானவள் தான் செய்தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் அழுவதும், சாரி என்று மீண்டும் மீண்டும் கூறுவதேயாகும்.

தாயானவள் தன் மகளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களிருவரும் ஒன்றாகச் சாப்பிட்டவர்கள். மகள் ஜெர்மன் மொழியிலும் தாய் கொரிய மொழியிலும் பேசியதால் பேச்சுமூலமாக அவர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளவில்லை. ஆயினும் அவர்கள் தாயும் மகளுமாகையால் அது அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள உதவியது. அவர்கள் வார்த்தைகளின்றி அநேக சம்பாஷனைகளில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் சைகைகளின் மூலமாக தம்மை வெளிப்படுத்தியும், ஒருவரின் முகத்தை மற்றவர் தொட்டும் கண்களினாலும் தம் இருதயங்களினாலும் பேசினார்கள்.

அவள் ஜெர்மனிக்கு திரும்பும்போது, தன் தாய் தன்னை நேசித்தாள் என்பது அவளிற்கு தெரிந்திருந்தது. அவளைப் பேட்டிக் கண்ட அதே நிருபர் அவள் புறப்படும் முன் மீண்டும் அவளிடம் பேசினார். “ஏன் என்னைத் தத்தெடுக்கும்படி விட்டாய் என்று என் தாயிடம் நான் கேட்கத் தேவையில்லை. இப்பொழுதும் கூட என் தாய் வறுமையிலேயே வாழ்கிறாள். இந்நாட்டிலுள்ள செல்வந்தர்கள் வெளிநாட்டுக் கார்களை ஓட்டுமளவிற்கு பணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் என் தாய் இன்னும் வறுமையிலேயே வாழுகிறாள்.” அவள் மேலும் கூறினாள், “நான் அந்தக் கேள்வியை என் அம்மாவிடம் கேட்டு அதற்கான பதிலைப் பெறாவிட்டாலும், என்னை வறுமையிலிருந்து தப்புவிக்கவே என்னை அவள் வெளியே அனுப்பினாள் என்று தெரிந்துகொண்டேன். அதனாலேயே அக்கேள்வியை அவளிடம் கேட்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை, மேலும் என் எல்லா சந்தேகங்களும் வெறுப்பும் என்னை விட்டுப் போயின.”தம் இருதயத்திலுள்ள பாவங்களினிமித்தம் மக்கள் கர்த்தரிடமிருந்து தூரமாகிப் போனார்கள்


நாம் எப்படி கர்த்தரிடமிருந்து பிரிந்து அவரிடம் சேரக்கூடாதவர்களானோம்? தத்தெடுக்கும்படியாக விடப்பட்ட பெண் தன் தாய் வறுமையிலிருந்து அவளைக் காப்பாற்றும் பொருட்டு அப்படிச் செய்ததைத் தெரிந்துக் கொண்டாள். இது கர்த்தரைப் பொருத்த மட்டில் உண்மையா? கர்த்தர் நம்மைத் தம் சாயாலாகவேப் படைத்தார். நம்மை அவனிடமிருந்து பிரித்தது எது? இதற்கான பதில், சாத்தான் மனிதனை பாவம் செய்யும்படி இச்சிக்கச் செய்தான், பாவம் நம்மைக் கர்த்தரிடமிருந்து பிரித்தது.

முதன் முதலில் கர்த்தர் மனிதனைத் தன் சாயலாகவேப் படைத்து, தம் படைப்பின் மீது அன்பு கூர்ந்தார். கர்த்தரால் அன்பு செலுத்தும் ஒரு பொருளாக மனிதன் படைக்கப்பட்டு மற்ற எல்லாப் படைப்புகளிலிருந்தும் உயர்ந்தவனாக இருந்தான். ஆயினும், சாத்தான் என்று பெயர் பெற்ற விழுந்துபோன தேவதூதனொருவன் மனிதனைக் கர்த்தரிடமிருந்து பிரிக்க வேலைச் செய்தான். சாத்தான் மனிதனை கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்காமலிருக்கும்படி இச்சைக்குட் படுத்தினான். மேலும் நன்மைத் தீமை அறியத் தக்க விருட்சத்தின் கனிகளை அவன் சாப்பிடும்படிச் செய்தான்.

அவனின் பாவத்தினால், இப்படியாக மனிதன் கர்த்தரிடமிருந்து பிரிக்கப்பட்டான். மனிதன் கர்த்தருக்கு கீழ்படியாதவனாக இருந்தான். மனிதன் கர்த்தர் அனுமதித்த நித்திய ஜீவனைத் தரும் ஜீவ விருட்சத்தின் கனிகளைச் சாப்பிடவில்லை. ஆனால், அதற்கு பதிலாக நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தின், வேண்டாம் என்று கூறப்பட்ட கனியை உண்டான். இதன் விளைவு மனிதன் கர்த்தரிடமிருந்து பிரிந்து போனதாகும்.

முன்பு கர்த்தரின் அன்புக்கு பாத்திரமாயிருந்த மனிதன் கீழ்படியாமையால், தன் மூர்க்கத்தனத்தினால் கர்த்தரிடமிருந்து பிரிந்தான். அவன் இருதயத்தில் குடி கொள்ளவந்த பாவத்தினால், மனிதன் கர்த்தரிடமிருந்து பிரிக்கப்பட்டான். அதன் பிறகு, வெகுகாலமாக மனிதன் கர்த்தரிடமிருந்து தனியாக வாழ்ந்து அவரைக் குறித்து முனுமுனுக்கத் தொடங்கினான். “கர்த்தர் நம்மைப் படைத்த பிறகு அவர் ஏன் கைவிட்டார்? நாம் பாவம் செய்ய அவர் எப்படி அனுமதியளித்தார்? நம்மை பலவீனராக்கி நரகத்திற்கேன் அனுப்பினார்? அவர் நம்மைப் படைக்காமலிருந்தால் அதிக நலமாயிருந்திருக்கும்.” நாம் மறுபடியும் பிறக்கும் முன் அநேக கேள்விகளுடனும் ஆர்வங்களுடனும், சந்தேகம் மற்றும் வெறுப்புடன் வாழ்ந்தோம்.

தத்தெடுக்கப்பட்ட பெண்ணை தொலைகாட்சி நிகழ்ச்சியில் நான் கண்டபோது, அப்பெண் தன் சொந்தத் தாயுடன் கொண்டிருந்த உறவினைப் போலவே மனிதனுக்கும் கர்த்தருக்கும் உறவு இருந்ததை உணர்ந்துக் கொண்டேன். எந்தச் சோதனையே, தவறாகப் புரிந்து கொள்வதோ, சாபமோ அல்லது எந்த விதமான பாவங்களோ எத்தகையச் சூழ்நிலையிலும் மனிதனைக் கர்த்தரிடமிருந்து பிரிக்க முடியாது. கர்த்தருக்கும் மனிதனுக்குமுள்ள உறவு அன்பின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், தவறாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதைப் புரிந்து கொண்டேன். 

அத்தாய் வெறுப்பின் நிமித்தம் தன் மகளை அனுப்பாததைப் போன்றே, கர்த்தர், மனிதனிலிருந்து வெறுப்பினால் பிரியவில்லை. ஆனால் பாவம் அப்படிச் செய்தது. கர்த்தர் மனிதனை வெறுப்பதற்கோ அல்லது மனிதன் கர்த்தரை வெறுப்பதற்கோ காரணங்கள் ஏதுமில்லை. நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கிறோம். சாத்தானின் தந்திரத்தில் அகப்பட்டு பாவியாகிப் போனதே மனிதன் கர்த்தரிடமிருந்து பிரிந்துப் போனதற்கான காரணம்.கர்த்தர் நம்மை இயேசு மூலம் அணைத்துக் கொண்டார்


“முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப் பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி” (எபேசியர் 2:13-15). யோவானால் கர்த்தர் ஞானஸ்நானம் பெற்று நியாயப் பிரமாணங்களை களையும் படியாக உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். மனிதனை அவன் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் படியாக தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தி, கர்த்தர் மனிதனை அணைத்துக் கொள்ளும்படிச் செய்தார். அவரால் சுத்திகரிக்கப் பட்டவர்களைக் கர்த்தர் அரவணைத்துக் கொள்கிறார்.

நீரில்லாத உலகத்தை நீங்கள் கற்பனைச் செய்ததுண்டா? சில காலங்களுக்கு முன் கொரியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகிய இன்சான் என்னும் நகரத்தில் நடைப்பெற்ற வேதாகமக் கூட்டம் ஒன்றிற்குச் சென்றேன். அங்கு அந்த சமயத்தில் சில நாட்களாக குழாயில் தண்ணீர் வரவில்லை. நான் நினைத்தேன், “மனிதர்கள் நீரின்றி வாழ முடியாது.”

ஒரு மாத காலம் கர்த்தர் இவ்வுலகில் நீரில்லாமல் செய்தால், நாற்றம், குப்பை, மற்றும் தாகம் ஆகியவற்றால் நகரங்களில் வாழ்வது இயலாததாகிவிடும். கர்த்தர் நமக்களித்த நீரின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நீரானது மனிதர்களுக்கு எத்தனை அவசியமானதோ, அப்படியே, யோர்தான் நதியில் யோவான் மூலம் இயேசு பெற்ற ஞானஸ்நானமும் இன்றியமையாதது.

யோவானால் ஞானஸ்நானம் பெறும் பொருட்டு இயேசு இவ்வுலகினுள் வரவில்லை யென்றால், இயேசுவை விசுவாசிப்பவர்கள் பாவ மன்னிப்பை எங்ஙனம் பெற முடியும்? நீரில்லாவிட்டால் மக்களால் எப்படி வாழ முடியாதோ, அப்படியே, யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்திராவிட்டால் உலக மக்கள் தங்கள் பாவத்தினால் மரித்திருப்பர்.

ஆயினும், இயேசுவின் ஞானஸ்நானம் நம் பாவங்களனைத்தையும் எடுத்துப் போட்டது, நம்முடைய இருதயங்கள் சுத்திகரிக்கப்பட்டு இரட்சிப்பினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டோம் என்று நாம் உறுதியாக உணரலாம். நம் விசுவாசத்திற்கு இயேசுவின் ஞானஸ்நானம் தேவையானது. அதற்கு மேலும், பரிசுத்த ஆவியானவரை நம்மில் வாசஞ்செய்யும்படி பெற்றுக்கொள்ள அவரின் ஞானஸ்நானம் இன்றியமையாதது.

இயேசுவின் சீடனாகிய, பேதுரு கூறுகிறான். “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல் மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்போழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது” (1 பேதுரு 3:21). பேதுருவின் வாக்கியம் கூறுகிறது, இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் படியாகத் தம் இரத்தத்தைச் சிந்தினார். உலகின் பாவங்களையெல்லாம் கழுவிய இயேசுவின் ஞானஸ்நானமே உண்மையான நற்செய்தியாகும்.

வெண்கலத்தொட்டியைப் பற்றி யாத்திராகமம் 30:17-21 இல் உள்ள வசனங்களைப் பார்ப்போம். “பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி; கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக. அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக் கடவர்கள். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலி பீடத்தினிடத்தில் ஆராதனை செய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக் கடவர்கள். அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக் கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கு அவன் சந்ததியாருக்கும் நித்தியக் கட்டளையாயிருக்கும் என்றார்.”

ஆசரிப்புக் கூடாரத்திலே வெண்கலத் தொட்டி ஒன்றிருந்தது, அது ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் நடுவே இருந்தது. அதில் கழுவுவதற்காக நீர் இருந்தது. இந்த தொட்டி ஆசரிப்புக் கூடத்தில் இருந்திராவிட்டால், பலி செலுத்தும் ஆசாரியர்கள் எத்தனை அழுக்கு நிறைந்தவர்களாக இருந்திருப்பர்.

மக்களுக்காக அன்றாடப் பாவபலிகளை ஏறெடுக்கும் ஆசாரியர்கள் மீது, பாவபலியின் மீது கைவைத்து அதனைக் கொல்வதன் மூலம் எத்தனை இரத்தமும் அழுக்கும் படிந்திருக்கும்? ஆசரிப்புக் கூடாரத்தில் இந்த வெண்கலபாத்திரம் இல்லாதிருந்தால் ஆசாரியன் அதிகம் அழுக்குப் படிந்தவனாயிருப்பான்.

கர்த்தரின் அருகில் அவர்கள் வரும்போது சுத்தமான கைகளுடன் அவர்கள் வரும்பொருட்டு அவர்களுக்கு கர்த்தர் இந்தத் தொட்டியை ஆயத்தஞ் செய்தார். தம் கையை பலி மிருகத்தின் தலை மீது வைப்பதன் மூலம் பாவிகள் தம் பாவங்களை அதின் மேல் சுமத்தினர். அவர்கள் சார்பாக ஆசாரியர்கள் கர்த்தரிற்கு அவற்றைப் பலியிட்டார்கள். கர்த்தர் இந்த வெண்கலத் தொட்டியை, ஆசாரியர்கள் சாகாமலிருக்கும் பொருட்டு, தம் கைகளை கழுவி பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்படியாக, ஆயத்தஞ்செய்தார். மிருகத்தின் இரத்தம் படிந்திருக்கும்போது ஆசாரியர்களாலேயே பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய முடியவில்லை. இதனாலேயே மக்களுக்காக பலிகளை ஏறெடுத்தபின் கர்த்தரினருகில் செல்வதற்காக ஆசாரியர்கள் தொட்டியிலுள்ள நீரினால் அழுக்கையெல்லாம் கழுவ வேண்டியிருந்தது.உலகின் பாவங்களையெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் கழுவியது


யோர்தான் நதியில் யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களும் அவர் மீது இடமாற்றம் செய்யப்பட்டது. அவர் முற்றிலுமாக நீரில் மூழ்கியது அவரின் மரணத்தையும், அவர் நீரிலிருந்து வெளியே வந்தது அவர் உயிரோடெழும்பியதையும் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் உலகின் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொள்ள இயேசுவானவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்று அதற்கு கிரயஞ் செலுத்த சிலுவையில் மரித்தார். அவருடைய மரணம் நம் பாவங்களிற்கான கூரையையும் அவர் உயிரோடெழும்பியது நமக்கு நித்திய ஜீவனையும் அளித்தது.

இயேசு தன் ஞானஸ்நானம் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார் என்பதை நாம் விசுவாசித்திராவிட்டால், நம்மிருதயங்கள் பாவம் நிரம்பியதாக இருந்திருக்கும், அப்பொழுது, நாமெப்படி கர்த்தரின் அருகில் செல்லமுடியும்? பாவ மன்னிப்பின் நற்செய்தியானது ஒரு பிரிவின் கொள்கையல்ல அது கர்த்தரின் சத்தியமாகும்.

முழுமையான அறிவில்லாமல் நம் விசுவாசத்தை வழி நடத்த முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் யோவானால் இயேசு பெற்ற ஞானஸ்நானம் மீது நாம் கவனம் செலுத்தவில்லையென்றால் நம்மால் உலகை மேற்கொள்ள முடியாது. தம்முடைய உயிரைத் தக்க வைத்துக்கொள்ள எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீரானது அவசியமானது போல், நமக்கு பாவ மன்னிப்பும் இயேசுவின் ஞானஸ்நான நீரும் விசுவாச வாழ்வு வாழவும் பரலோக இராஜ்யத்தினுள் நுழையவும் அவசியாமாகிறது. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும் பொருட்டு, இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்து மீண்டும் உயிரோடெழும்ப வேண்டியதாயிருந்தது. இதுவே நாம் நம் முழு இருதயத்துடனும் விசுவாசிக்க வேண்டிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும்.

இயேசு சிலுவையில் மரிக்கும் படியாக அறையப்பட்டாலும் அத்தகையத் தண்டனை பெறும்படி அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. நம்முடைய பாவங்களைக் கழுவும் பொருட்டு அவர் இவ்வுலகினுள் வந்தார். 30 ஆம் வயதில் ஞானஸ்நானம் பெற்றார். 33 ஆம் வயதில் அவர் சிலுவையில் மரித்ததன் மூலம் நம் இரட்சகரானார். நாம் எத்தனை உடைந்துபோகிறவர்களாகவும் பாவிகளாகவும் இருந்தாலும் மனித குலத்தை தம் பிள்ளைகளாக்கவே கர்த்தர் விரும்பினார். அதனாலேயே இயேசு ஞானஸ்நானம் பெற்றார். கர்த்தர் நமக்கு பாவமன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவரின் வரத்தையும் ஒரே நேரத்தில் தந்தார்.

“ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்” (யோவான் 3:3-5). நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவும் பொருட்டு இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்பதை நீஙகள் அறிந்து விசுவாசிக்க வேண்டும். ஒரு, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனும் கூட அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் இயேசுகிறிஸ்து எடுத்துப்போட்டார் என்ற உண்மையை தியானிக்காவிட்டால் சீக்கிரமாகவே அவனிருதயத்தில் கறைபடும். நாம் இவ்வுலகத்தினர் ஆனபடியால், நம் தின வாழ்க்கை மூலமாக நாம் கறைபடக் கூடியவர்களாக இருக்கிறோம். ஆகவே நாம் எப்பொழுதும் விசுவாசத்தில் வாழவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானம் அவர் இரத்தம், அவர் உயிரோடெழும்பியது ஆகியவற்றை எல்லாம் தியானிக்க வேண்டும். இந்நம்பிக்கை நாம் பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் நாள் வரை நம்மை நிலைப்படுத்தும்.

இயேசுவிற்கு ஞானஸ்நானம் பெற்று இறப்பதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. ஆகவே, நாம் அவர் அப்படிச் செய்ததன் மூலம் நமக்கு இரட்சிப்பை பெற்றுத் தந்தார் என்பதை விசுவாசிக்கவேண்டும். உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாகும் பொருட்டு இந்த அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிப்பதைத் தவிர வேறு ஒன்றையும் செய்ய வேண்டியதில்லை.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை வழங்கிய கர்த்தருக்கு நாம் நன்றி கூறுகிறோம். கர்த்தர் நமக்களித்த மிகப்பெரிய பரிசு யாதெனில், அவர் தம் ஒரே பேறான குமாரனை அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலமாக நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும்படியாக அனுப்பியதே ஆகும்.

நாம் கர்த்தருடன் நெருங்கி சேரமுடியாமைக்கும் அவரிடமிருந்து தூரமாக வாழ்வதற்குமான காரணம் நம் இருதயங்களில் பாவமிருப்பதே. உலகின் பாவங்களையெல்லாம் தன் மீது ஏற்றுக்கொள்ளவே யோவானால் இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்றார். கர்த்தரிற்கும் மனிதனிற்கும் இடையே உள்ள சுவற்றை தகர்த்தெரியவே அவர் சிலுவையில் மரித்தார். கர்த்தருக்கும் மனிதனுக்குமான உறவு அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலமாக மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இந்த வெகுமதிகளுக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம், உலகின் பெற்றோர் தம் பிள்ளைகள் மேல் காட்டும் அன்பு பெரியது. ஆனால் இயேசுவால் பாவிகளை இரட்சித்த கர்த்தரின் அன்பு ஈடு இணையற்றது.

இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய இரண்டுமே முக்கியமானவைகள். உலகில் நீரில்லையெனில் உயிருள்ள எதுவும் பிழைத்திருக்க முடியுமா? இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாது தன்னிருதயத்தில் பாவமில்லாத ஒரு மனிதனும் இருக்க முடியாது. இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இறந்திருக்க வில்லையெனில், யாரொருவரும் பாவ மன்னிப்பைப் பெற்றிருக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக இயேசு ஞானஸ்நானம் பெற்று நமது விலையேறப்பெற்ற பலியானார். நாம் குறைவுள்ளவர்களாகவும் தவறு செய்யக்கூடியவர்களாகவும் இருந்தாலும் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.

இயசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றை விசுவாசிக்கும் மக்கள் கர்த்தருக்கு நெருக்கமாகவும் அவரை ஜெபிக்கவும் புகழவும் முடியும். இப்பொழுது நம்மால் கர்த்தரைப் புகழவும் அவரை ஆராதிக்க முடிவதற்குமான காரணம் நாம் அவரின் பிள்ளைகளானதே. இது கர்த்தரின் கிருபையும் ஆசீர்வாதமுமாகும். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை உண்மையாகவே அதிசயமானவை. நாமெல்லாரும் இரட்சிப்பையும் பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ்செய்வதையும் அழகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் பெறலாம்.

【8-10】 < கலாத்தியர் 5:16-26, 6:6-18 > ஆவியில் நடத்தல்!<கலாத்தியர் 5:16-26, 6:6-18>

“பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு. இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. மாமசத்தின் கிரியைகள் வெளியரங்க மாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லி சூனியம், பகைகள், விரோதங்கள் வைரக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப் பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னது போல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபெறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்படவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். கோபமூட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைக் கொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

“மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப் படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக் கடவன். மோசம் போகாதிருங்கள். தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம், ஆகயால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக் கடவோம். என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினென்று பாருங்கள். மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம் பண்ணுகிறார்கள். விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும் அவர்கள் உங்கள் மாம்சத்தைக் குறித்து மேன்மை பாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள். நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டியிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை. விருத்த சேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். இந்தப் பிரமாணத்தின்படி நடந்து வருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும் சமாதானமும் இரக்கமும் உண்டயிருப்பதாக. இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்தில் தரித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.


 • ஆவியில் நடக்க நாம் என்ன செய்யவேண்டும்?
 • அழகிய நற்செய்தியின் படி நடந்து அதனைப் பிரசங்கிக்க வேண்டும்.


அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து எழுதியுள்ளான். கலாத்தியர் 5:13-14 இல் அவன் கூறுகிறான். “சகோதரரே நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அனுசரியாமல், அன்பினாலே, ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.”

சுருக்கமாக, அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப்ட்டு பாவங்களிலிருந்து விடுதலையாகியமையால், இந்த விடுதலையை மாம்ச இச்சைக்கேதுவாக நம்மை உட்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் அன்பின் மூலம் ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்து அழகிய நற்செய்தியை பின்பற்ற வேண்டும். நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் கர்த்தர் இரட்சித்தமை போன்று, நற்செய்தியை நாம் பிரசங்கிப்பது ஏற்றதாயிருக்கிறது. பவுல் மேலும் கூறினான் “நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப் படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (கலாத்தியர் 5:15).பரிசுத்த ஆவியானவரில் நிறைந்திருக்கும் படியாக ஆவிக்குள் நடவுங்கள்


கலாத்தியர் 5:16 இல் பவுல் கூறுகிறான். “பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” மேலும் 22-26 ஆம் வசனங்களில் அவன் கூறுகிறான். “ஆவியின் கனியோ, அன்பு சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும் ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைக் கொள்ளாமலும் இருக்கக் கடவோம்.” இங்கே பவுல் கூறுவதென்னவெனில், நாம் ஆவியானவரில் நடந்தால் நாம் ஆவியின் கனிகளைப் பெற்றிருப்போம். பரிசுத்த ஆவியானவர் நாம் ஆவியில் நடப்பதையே விரும்புகிறார். ஆனால் நாம் மாம்சத்தின்படியே வாழுகிறோம்.

மனிதர்களாகிய நாம் சரீரத்தினால் பிறந்தோம் எனவே அதனால் ஆவிக்குரிய கனிகளை கொடுக்க முடியாது. நாம் ஆவிக்குள் நடக்க முயற்சி செய்தாலும் கூட, நம் இயற்கை சுபாவத்தை மாற்ற இயலாது. அதனால் தான் அழகிய நற்செய்தியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற்றுக் கொண்டவர்களால் மட்டுமே ஆவிக்குள் நடந்து ஆவிக்குரிய கனிகளை கொடுக்க முடிகிறது.

வேதாகமம் நம்மை ஆவியானவரில் நடக்கும் படி கூறும்போழுது, அதன் பொருள், மற்றவர்களும் தம் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறும்படி அழகிய நற்செய்தியை நாம் அவர்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்பதாகும். இந்த அழகிய நற்செய்திக்காக நாம் வாழ்ந்தால், நாம் ஆவிக்குரிய கனிகளைக் கொடுப்போம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அது மனித சுபாவத்தை மாற்றுவது குறித்தல்ல. நாம் இந்த அழகிய நற்செய்தியுடன் நடக்கும்பொழுது, ஆவிக்குரிய கனிகளை நாம் கொடுப்போம், அவையாவன, அன்பு, சந்தோஷம், சமாதானம், தயவு, நீடிய பொறுமை, இச்சையடக்கம் போன்றவையாகும். ஆவியின் கனியானது மற்றவர்களை பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு நித்திய ஜீவனை அடைய உதவிசெய்ய உதவுகிறது.மாம்சத்தின் இச்சைக்கும் ஆவியானவரின் விருப்பத்திற்குமுள்ள போட்டி


பவுல் கூறினான், “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” கலாத்தியர் 5:17). பாவ விடுதலைப் பெற்ற நாம், மாம்சத்திற்குரிய இச்சையையும், ஆவியையும் ஒரே சமயத்தில் பெற்றிருப்பதால், இவை இரண்டும் எப்போதும் ஒன்றுக்கொன்று எதிரானவைகளாக இருக்கின்றன. இதன் விளைவு யாதெனில் இவற்றில் யாதொன்றினாலும், நம் இருதயங்கள் முற்றிலும் நிறையாது.

நம்மிருதயத்தினுள்ளிருந்து அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் கர்த்தருக்கு ஊழியம் செய்யவும் நாம் விரும்பும் படியாக பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகிறார். ஆவிக்குரிய வேலைகள் செய்வதில் ஈடுபடுவதற்கு அதிக ஆர்வத்தை அது தருகின்றது. கர்த்தரின் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் மனிதர்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கவும் நமக்கு உதவுகிறார்.

அதே நேரத்தில், நம் ஆசைகள், சரீர இச்சைகளை கலக்கிவிடுகின்றன. ஆகவே, நாம் ஆவியினுள் நடக்க முடியாது. இதுவே ஆவிக்கும் மாம்ச இச்சைக்கும் நித்தியமாக நடைபெற்று வரும் யுத்தமாகும். ஒரு மனிதன் மாம்ச இச்சையினுள் உட்கொள்ளப்படும்போது, மாம்சத்தைத் திருப்தி படுத்தும் காரியங்களைச் செய்வதில் முடிவடைகிறான். சரீரமானது ஆவிக்கெதிரான அதன் ஆசைகளை நிறுவுகிறது. அவை ஒன்றுக்கொன்று எதிரானவைகளாக இருப்பதனால், நாம் நினைத்த காரியங்களை நாம் செய்யாமல் போகலாம்.

அப்படியானால், ஆவிக்குள் நடப்பதில் அடங்கியுள்ள காரியம் என்ன? எத்தகையக் காரியங்கள் கர்த்தரைப் பிரியப் படுத்துகின்றன? கர்த்தர், அழகிய நற்செய்தியை பிரசங்கிப்பதும், பின்பற்றுவதுமே ஆவியில் நடக்கும் வாழ்வாகும் என்கிறார். பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ் செய்யப் பெற்றவர்களுக்கு, அவர்கள் ஆவிக்குரிய வாழ்வு வாழும்படியாக, ஆவியில் நடப்பதற்கேதுவான இதயங்களை அவர்களுக்களிக்கிறார். ஆவியில் நடப்பதன் மூலம் ஆவிக்குரிய கனிகளை கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் நமக்களித்த கட்டளையானது நமக்கு எச்சரிக்கையாகவும் அழகிய நற்செய்தியை பிரசங்கிப்பதன் மூலம் மற்றவர்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்க நமக்கிட்ட கட்டளையாகவும் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரில் நடத்தல் என்பது கர்த்தருக்கு பிரியமான வாழ்வு வாழவேண்டுமென்பதே.

நாம் ஆவியில் நடப்பதற்கு முதன்முதலில் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்யப் பெற்றிருக்க வேண்டும். நாம் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசஞ் செய்ய வேண்டுமென விரும்பினால் முதலில் அழகிய நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும். நம் முழு இருதயத்தோடும் அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கவில்லையென்றால், நாம் பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்யும் படி பெறுவதோ அல்லது பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதோ நிகழாது. அதன்பொருள் நாம் ஆவியில் நடக்க முடியாதென்பதாகும்.

கர்த்தருக்கு பணிசெய்யவும் அவருக்கு மகிமையைச் சேர்க்கவும், அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான ஆசையையும் ஆவியானவர் தருகிறார். இந்த ஆசை கர்த்தருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இருதயங்களிலிருந்து வருகிறது. அது உலகமுழுவதற்கும் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதாயிருக்கிறது. அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்க எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற சித்தமும் அத்தகைய இருதயத்திலிருந்து வருகிறது. யாரெல்லாம் அழகிய நற்செய்தியை விசுவாசித்து பாவமன்னிப்பு பெற்றபின் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்களோ அவர்களால் நற்செய்தியைப் பிரசங்கிக்க தம்மை அர்ப்பணித்துக்கொள்ளும்படி ஆவியில் நடக்க இயலும்.

யாரெல்லாம் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப் பெற்றார்களோ, அவர்கள் சரீரத்தில் இச்சை இருந்தாலும் கூட பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வாசஞ்செய்வதால் அவர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிந்து ஆவியில் நடப்பார்கள். பவுல் கூறினான், “ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள்.” இதற்கான அவன் பொருள் யாதெனில், இயேசு நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பிரசங்கித்து மற்றவர்கள் தம் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற நாம் உதவவேண்டுமென்பதே.

சில சமயங்களில் ஆவிக்கேற்றபடி நடக்கையில் நம் சரீரத்தைப் பொருத்தும் நடக்கிறோம். மாம்சத்திள் இச்சையும் ஆவியின் விருப்பமும் ஒன்றுடன் ஒன்று நம் வாழ்வில் சண்டையிடுகின்றன. ஆனால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்னவெனில், யாரெல்லாம் பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்யப்¦ பற்றார்களோ அவர்கள் ஆவிக்கேற்றபடி நடக்கும் ஒரு வாழ்வை வாழ வேண்டும். இந்த வழியின் மூலமே கர்த்தரின் ஆசீர்வாதம் நிரம்பிய ஒரு வாழ்வை வாழமுடியும். பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ் செய்யப் பெற்றவர்கள் ஆவிக்குரிய கனி கொடுக்க மறுத்தார்களானால், மாம்ச கனி கொடுத்து அழிந்து போவார்கள். அவர்கள் கனி அழுகிப்போவதும் பரிதாபமுடையதாகவும் இருக்கிறது. இங்கே நாம் ஆவிக்கேற்றபடி நடக்கும் வாழ்விற்கான காரணம் பொதிந்திருக்கின்றது.

நாம் “ ஆவிக்குள் நடப்பது” என்று கேட்டிருக்கலாம். ஆனால், நம்மில் சிலர் நினக்கலாம், “பரிசுத்த ஆவியானவரை என்னுள் நான் உணராதபோது, நாம் அதையெப்படிச் செய்ய முடியும்?” பரிசுத்த ஆவியானவர் நம்மில் சஞ்சரிக்கிறார் என்று கர்த்தர் நேரடியாகத் தோன்றி நம்மிடம் பேசினால் மட்டுமே அதனை உணர்ந்து கொள்ள முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். இவையெல்லாம் தப்பர்த்தங்களாகும். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்காக வாழ்வதற்கான ஆசையை ஆவியானவர் தருகிறார்.

சிலவேளைகளில் அவர் நம்மில் சஞ்சரிப்பது நிச்சயமாக தெரியும். ஆனால் நாம் நம் சரீரத்திற்கேற்றபடி நடப்பதால் அவரை உணரமுடிவதில்லை. சிலர் அவர் நம்முள் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கலாம். அவர்களே பரிசுத்த ஆவியானவரைப் பெற்று சரீரத்தின் படி நடப்பவர்கள்.

இந்த மனிதர்கள் அவர்கள் சரீரத்தை திருப்தி செய்து அது கூறுவதைச் செய்கிறார்கள். ஆனால் சரீரத்தின் தேவைகள் அதிகமதிகமாய் உயர்ந்து கொண்டே போவதால் முடிவில் துன்பப்படுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ் செய்யப்பட்ட சிலர் மாம்ச இச்சையின்படி வாழ விழைகிறார்கள். அப்படிச் செய்வது இயற்கையானது என்றும் நினக்கிறார்கள். ஆனால் சரீரத்திடம் தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள் மாம்சத்தின் அடிமைகளாகி விடுகின்றனர்.

ஆவியின் படி வாழும்படி கர்த்தர் கூறுகிறார். இதன் பொருள் யாதெனில் அழகிய நற்செய்திக்கு பணிபுரிவதாகும். மேலும் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நம்மை முற்றிலும் ஒப்புக் கொடுக்க வேண்டுமென்பதும் இதன் பொருளாகும். நற்செய்தியில் மகிழ்ந்து அதனில் வாழ்வது ஆவிக்கேற்றபடி வாழ்வதாகும். ஆவிக்குள் நடப்பது என்றால் என்ன பொருள் என்று அறிந்து அதற்கேற்றபடி நாம் வாழ வேண்டும். நீங்கள் ஆவிக்கேற்றபடி நடக்கிறீர்களா?பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ்செய்யப்பெறாத ஒருவனால் ஆவிக்கேற்றபடி நடக்க முடியுமா?


யாரெல்லாம் மறுபடியும் பிறக்காதவர்களோ அவர்களுக்கு ஆவிக்குள் நடப்பது என்றால் என்ன பொருள் என்று தெரியாது. இப்படியாக, நிறைய மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற முயன்று அதற்காக அவர்கள் சொந்த வழியில் காத்திருக்கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள விரும்புவது பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கு சமமாகும் என்றெண்ணுகிறார்கள்.

குறிப்பாக, சில குறிப்பிட்ட ஆலயங்களில், சில ஆராதனைச் செய்ய மக்கள் கூடும்போது, போதகர் சத்தமிட்டு ஜெபிக்கிறார். உடனே எல்லோரும் கர்த்தரின் பெயரை சத்தமிட்டு கூப்பிடுகிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரம்பியதைப் போன்று பல பாஷைகளில் பேசத் தொடங்குகின்றனர். ஆனால் யாராலும், அவர்களாலும் கூட, தாம் என்ன சொல்லுகிறோம் என்று அறிந்துகொள்ள முடியாது. இடையில் அவர்களில் சிலர் தரையில் விழுந்து அவர்கள் உடம்பு வலிப்பு வந்தது போன்று நடுங்குகிறது. நிச்சயமாக அவர்கள் பிசாசு பிடித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றதாக நினைக்கிறார்கள். திடீரென “கர்த்தரே! கர்த்தரே!” என்று அவர்கள் கூச்சலிடும் சப்தம் வருகின்றது. அவர்கள் கர்த்தரை அழைத்து, கண்ணீர் விட்டு தம் கைகளைத் தட்டுகிறார்கள். இந்த சம்பவம் “பரிசுத்த ஆவியானவரில் நிறைவது” என்று வழக்கமாகக் கூறப்படுகின்றது. 

பிரசங்க மேடையை ஓங்கித் தட்டிக்கொண்டு போதகர் பல பாஷை பேசுகிறார். மக்கள் “கர்த்தரே! கர்த்தரே!” என்று கூச்சலிடுகிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையை விரும்புகிறார்கள். மேலும் சிலர் தாம் ஏதேன் தோட்டத்தில் உள்ள நன்மை தீமை அறியத்தக்க மரத்தைக் கண்டதாகவும் இயேசுவின் முகத்தைக் கண்டதாகவும் கூறுகின்றனர். அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறும் வழியாகவும், அவரால் நிரம்பப்படுவதையும் அவரில் நடப்பதையும் மேற்கண்ட சம்பவங்கள் வழியாகப் பெறலாம் என்று தப்பர்த்தம் செய்துள்ளனர். அவர்களுடைய தவறாக வழிநடத்தப்பட்ட செய்கைகள், கர்த்தரின் வார்த்தையையும் பரிசுத்த ஆவியானவரையும் குறித்த அவர்களின் தவறான அறிவின் விளைவாகும்.

“ஆவிக்கேற்றபடி நடங்கள்.” மறுபடியும் பிறந்தவர்களிடம் கர்த்தர் கூறுவது இதுவே. அதன் பொருள் அவருக்கு பிரியமானவைகளைச் செய்வதே. பவுல் மாமிசத்தின் செய்கைகளையும் ஆவிக்குரிய கனிகளையும் ஒப்பிடுகிறான். அவன் கூறினான், “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” (கலாத்தியர் 5:22-23).

“ஆவிக்கேற்றபடி நடப்பதென்பது” அழகிய நற்செய்தியை பிரசங்கித்து மற்றவர்களை பாவங்களிலிருந்து இரட்சிப்பதாகும். நாம் அப்படிச் செய்தோமானால், நாம் ஆவியின் கனிகளை கொடுக்கிறவர்களாயிருப்போம். ஆவியின் கனிகள் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவையாகும். மேலும், அழகிய நற்செய்தியின் படி வாழ்ந்தால் மட்டுமே இந்த ஆவியின் கனிகளை நாம் கொடுக்க முடியும். ஓருவன் அழகிய நற்செய்தியைப் பிரசங்கித்து சேவைச் செய்வானானால், அதற்காகத் தன்னைப் பலி கொடுத்தானானால், அவன் பரிசுத்த ஆவியால் நிரம்பிய ஆவிக்குரிய வாழ்வை வாழ்வான்.

ஆவிக்குரிய கனியான “நற்குணம்” என்பதன் பொருள் நல்ல காரியங்களைச் செய்வதென்பதாகும். நல்லொழுக்கம் என்றும் பொருள்படும். அழகிய நற்செய்தியிக்காக நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து மற்றவர்களின் நலனுக்காக எதையாவது செய்வது நற்குணமாகும். கர்த்தரின் பார்வையின் மிக உயர்ந்த நற்குணம் யாதெனில் மற்றவர்களுக்கு நன்மையாகும் விதத்தில் அழகிய நற்செய்தியை போதிப்பதே.

மேலும், “தயவு” எனப்படுவது மக்களை அரவணைப்பதாக உள்ளது. மற்றவர்கள் மீது கிருபையுடனிருக்கிறவன் நற்செய்திக்கு பொறுமையுடனும் நற்குணத்துடனும் சேவை செய்து சமாதானமாக இருக்கிறான். ஆவியின் படி நடக்கிறவன் எவனோ அவன் கர்த்தரின் பணிகள் நிறைவேறுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதுடன், அவனின் வேலையை நேசித்து, மற்றவர்களையும் நேசித்து எல்லாவற்றிலும் நம்பிக்கைக்கு பாத்திரமானவனாகவும் இருக்கிறான். யாரும் அதனைச் செய்தே தீரவேண்டும் என்று கூறாவிட்டாலும், பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ்செய்யப் பெற்ற ஒருவன் தன் வேலை நிறைவேறும் வரை அதனைச் செய்யும் படி நம்பிக்கையுள்ளவனாகவும் இருக்கிறான். அவன் சாந்தமுள்ளவனாகவும் இச்சையடைக்க முள்ளவனாகவும் இருக்கிறான். அவனிடம் ஆவியின் கனி இருக்கிறது. யார் பரிசுத்த ஆவியானவரைத் தன்னுள் பெற்றிருக்கிறானோ, அவன் பரிசுத்த ஆவியானவருள் நடக்கவேண்டும். அவன் அப்படிச் செய்தால் மட்டுமே, அவனால் ஆவிக்குரிய கனியைக் கொடுக்க முடியும்.

ஆவிக்கேற்றபடி நீயும் நடந்தாயானால் உன்னாலும் ஆவிக்குரிய கனியைக் கொடுக்க முடியும். அப்படிச் செய்யவில்லையென்றால் மாமிச இச்சையின் படி வாழ்வதில் முடிவடைவாய். கலாத்தியர் 5:19-21 இல் வேதவசனம் கூறுகிறது. “மாமிசத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாரதனை, பில்லி சூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னது போல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன


மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாக இருக்கின்றன. மாம்சத்தின் முதல் வேலை யாதெனில் “விபசாரம்” இதன் பொருள் எதிர் பாலாரிடம் சரியில்லாத உறவுமுறை கொண்டிருப்பது என்பதாகும். இரண்டாவது “வேசித்தனம்” மூன்றாவது “அசுத்தம்” நான்காவது “காம விகாரம்” இதன் பொருள் காம இச்சை. ஐந்தாவது “விக்கிரகாராதனை” இதன் பொருள் கர்த்தரை ஆராதிப்பதற்கு பதிலாக சிலைகளை வணங்குதல். ஆறாவது “பில்லி சூனியம்” ஏழாவது “பகைகள்” பரிசுத்த ஆவியானவரின்றி ஒருவன் தன் மாமிசத்திற்கேற்றபடி நடப்பானால் அவன் பாவ சுபாவத்திற்கு ஏற்றவாறு மற்றவர்களை வெறுப்பது தவிர வேறு வழியில்லை. எட்டாவது “விரோதங்கள்” இதன் பொருள் யாதெனில் நம் நண்பர்கள் அல்லது குடும்பத்தாருடன் சண்டைப் போடுதல். மற்றவைகள் “பொறாமைகள், சண்டைகள், மற்றும் வெறிகள் ஆகும்.” இவையெல்லாம் மாம்சத்தின்படி நடப்பவர்களின் சுபாவங்களாக இருக்கின்றன.

மற்றது “பிரிவினை” ஆகும். ஒருவன் மாம்சத்தின் படி மட்டுமே நடந்தானானால், அவனால் ஆலயப் பணிகளைச் செய்ய முடியாது மாறாக தன் செந்த வழிகளில் நடக்கும் பொருட்டு ஆலயத்தை விட்டு இறுதியில் வெளியேறுவான். பதின் மூன்றாவது “மார்க்கப் பேதங்கள்” ஆகும். மாமிசத்தின் படி நடக்கிறவன் தன் சித்தத்தை திருப்திச் செய்ய அப்படிச் செய்கிறான். அத்தகைய வாழ்க்கை கர்த்தரின் சித்தத்திற்கு முற்றிலும் மாறானது. மேலும் இது அழகிய நற்செய்தியிலிருந்து திருப்பிவிடும். மார்க்க விரோதம் என்பது வேத சத்தியத்திலிருந்து விலகிப்போதல் என்பதாகும். யாரொருவன் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசித்து ஆவிக்கேற்றபடி நடக்கிறானோ, அவன் கர்த்தரின் சித்தத்திலிருந்து திரும்பிப் போவதில்லை. “பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளும்” மாம்சத்தின் கிரியைகளாகும். மாமிசத்தின்படி நடப்பவர்களே இத்தகைய காரியங்களைக் கடைசியில் கடைப்பிடிக்கின்றனர். அதனாலேயே கர்த்தர் கூறுகிறார், “ஆவிக்கேற்றபடி நடந்துக் கொள்ளுங்கள்.” மறுபடியும் பிறந்தவர்களான நாம், ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்.

மறுபடியும் பிறக்காதவர்கள் எவரோ, அவர்களின் இருதயங்களில் மாம்ச இச்சைகளே நிறைந்திருக்கின்றன. அதனாலேயே அவர்கள் “வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை”, முதலியவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள். மறுபடியும் பிறவாத போதகர்கள் “பில்லி சூனியத்தை” தம்மை பின் பற்றுவோரிடம் பயிற்சி செய்வதுடன் நிறையப் பணத்தைக் காணிக்கை கொடுக்கும்படி ஏவுகிறார்கள். யார் அதிகப் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு முக்கியக் கடமைகளையும் ஆலயத்தின் உயர்ந்த பதவிகளையும் அவர்களுக்கு கொடுக்கிறார்கள். மாம்சத்திற்கேற்றபடி வாழ்பவர்கள் தம் “பகையை” மற்றவர்களுக்கு காட்டுகிறார்கள். அவர்கள் ஆலயங்களை நிறைய பிரிவுகளாக பிரித்து, தம்முடைய பிரிவைக் குறித்து பெருமைப் பாராட்டி மற்றவர்களை வேதப்புரட்டர்கள் என்கிறார்கள். “சண்டைகள், வைராக்கியங்கள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்” ஆகியவையெல்லாம் மறுபடியும் பிறவாதவர்களின் இருதயங்களில் இருக்கின்றன. மாம்சத்தின்படி நடந்தால் பரிசுத்தவான்களாகிய நம்முடைய நிலைமையும் அதுவேயாகும்.மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கனிகளைக் கொடுக்கும் படி ஆவியானவர் செய்கிறார்


மறுபடியும் பிறந்தவர்கள் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக வாழ வேண்டும். கர்த்தரின் ஆலயத்துடன் சேர்ந்து அழகிய நற்செய்திக்கும் வேலை செய்யவேண்டும், நாம் ஒன்று கூடி ஜெபிக்கவும், ஆவியின் அழகிய நற்செய்தியில் நடக்கும் ஒருவராக மாற நம் சக்தியையெல்லாம் அர்ப்பணிக்க வேண்டும். ஆவியில் நடக்கும் மக்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்காக வாழுகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சரீரப் பிரகாரமாக வாழுவதென்பது தனக்காக மட்டும் வாழும் ஒரு வாழ்வாகும். அதே சமயம் ஆவியினுள் நடப்பதென்பது மற்ற ஆத்துமாக்களை இரட்சிக்கும்படி பணி செய்து வாழ்வதாகும். மறுபடியும் பிறந்த அநேக கிறிஸ்தவர்கள் இவ்விதமாக அழகிய வாழ்வு வாழுகின்றனர். அவர்கள் மற்றவர்களின் நன்மைக்காக வாழுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையினர் அழகிய நற்செய்தியைக் குறித்து எதுவும் கேள்விப்படாதவர்களாக உள்ளனர். ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள மக்களை நாம் நேசிக்கிறோம். ஐரோப்பா அமெரிக்கா மற்றும் எல்லாத் தீவுகளின் மக்களையும் நாம் நேசிக்கிறோம். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் நம் அன்பை அவர்களுக்கு காட்டவேண்டும்.

நாம் ஆவிக்கேற்றபடி நடக்கவேண்டும். இதற்கெதிராக எந்த சட்டமும் இல்லை. “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிபட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” எந்த சட்டமாவது இதற்கு எதிரானதாக இருக்கமுடியுமா? இல்லை. நாம் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய ஆவியின் சட்டம் இதுவே. பவுல் நம்மை ஆவிக்கேற்றபடி நடக்குமாறு கூறுகிறான். பாவிகளாகிய நமக்கு கர்த்தர் தம் உயிரைக் கொடுத்தது போல், மற்றவர்களுக்கு நாம் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். மற்றவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பது ஆவியினுள் நடப்பதாகும். நாம் ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்.

பவுல் கலாத்தியர் 5:24-26 இல் கூறுகிறான். “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலேயே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைக் கொள்ளாமலும் இருக்கக்கடவோம்.” நாம் ஆவிக்குள் வாழ வேண்டுமானால், இழந்துபோன ஆத்துமாக்களை இரட்சிக்கவே வாழவேண்டும். கர்த்தர் நமக்களித்த பரிசுத்த ஆவியானவர் நம்மிருதயங்களில் இயேசுவுடன் வாழ வழி நடத்துகிறார். பரிசுத்த ஆவியானவரே அன்பின் கர்த்தர், கர்த்தர் நம்மை அவர் அன்பின் வாகனங்களாக பயன் படுத்துகிறார்.

பவுல் கூறினான், “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலாத்தியர் 5:24). மறுபடியும் பிறந்தவர்கள் இயேசுகிறிஸ்துவுடன் மரித்தார்கள் என்றும் அவன் கூறினான். உண்மையாகவே மறுபடியும் பிறந்தவர்கள் இயேசுவுடன் ஏற்கெனவே மரித்துவிட்டனர். நாம் அதனை உணரமாட்டோம். ஆனால், இயேசுகிறிஸ்து நம் பாவக்கிரயமாக சிலுவையில் மரித்தபோது நாமும் அவருடன் இறந்தோம். வேறு வார்த்தைகளைல் கூறுவதானால், இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப் பட்டார் என்பதன் பொருள் நீங்களும் நானும் அவருடன் சிலுவையில் மரித்தோம் என்பதே. அவருடைய மரணம் நம் மரணமாகும், மேலும் அவருடைய உயிர்த்தெழுதல் நம் உயிர்த்தெழுதலை உறுதிச் செய்யும் அடையாளமாகும். நமது நம்பிக்கையின் மூலமாக நீங்களும் நானும் இயேசுவுக்குள் வாழவும் மரிக்கவும் செய்கிறோம். நம்மிடம் நம்பிக்கை இருக்கவேண்டும். நம்முடைய நம்பிக்கை ஆவிக்கேற்றபடி நம் நடப்பதற்கு வழி நடத்துகிறது.

ஆவிக்கேற்றபடி வாழ்வதற்கான வல்லமையை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார். ஆகவே, தம் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்ட யாவரும் ஆவிக்கேற்றபடி நடக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டவர்கள் தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டதைக் குறித்து நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், இழந்து போனவர்களிம் இரட்சிப்பினிமித்தம் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்க தம்மை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். ஒருவனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவன் மறுபடியும் பிறந்தவனாக இருந்தாலும், அவன் தன் மாம்ச இச்சைப்படி வாழ்ந்தால் அவன் கர்த்தரின் ஆலயத்திலிருந்து பிரிக்கப்படுவது மட்டுமின்றி அவரை சேவிக்கவும் இயலாதவனாவான். இயேசுகிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரை நீங்களும் நானும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் வாழ்ந்திருக்க வேண்டும்.வீண்புகழ்ச்சியை விரும்பாமல் பரிசுத்த ஆவியானவரின் முழுமையில் வாழ்ந்திருங்கள்


பவுல் கூறினான், “வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைக் கொள்ளாமலும் இருக்கக்கடவோம்.” வீண்புகழ்ச்சி என்றால் என்ன? அது மாம்ச இச்சையின்படி நடத்தலாகும். உலகில் வாழும் மக்களில் நிறைய பேர் தம் சொந்தப் புகழ்ச்சிக்காகவே வாழுகிறார்கள். அநேக மக்கள் பணத்தைச் சேர்த்து, அதிகாரத்திற்கு போட்டியிட்டு, உலகின் அழகை நேசித்து இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசுவாசம் இருப்பதில்லை, மேலும் காலம் செல்லச் செல்ல அவர்கள் அழுகி மறைந்து போகிறார்கள். அதனாலேயே தம் மாம்ச இச்சையின்படி நடக்கும் மக்கள் வீண்புகழ்ச்சிக்காரர் என்றழைக்கப்படுகின்றனர். மக்களிடம் பணமிருந்தாலும், அவர்களிருதயத்தில் உண்மையான சமாதானமும் திருப்தியுமிருக்கின்றனவா? மாம்சத்தின் கனி அழுகிப்போகும். உலகச் சம்பந்தமானவற்றால் மற்றவர்களின் ஆத்துமாக்களுக்கு எந்த பயனும் இல்லை. அவை தனக்கு மட்டுந்தான். அவை ஒருவனின் சொந்த சரீரத்திற்கு மட்டும் நல்லதாயிருக்கிறது.

வேதாகமம் கூறுகிறது, “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு, அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமயடைவாரும் உண்டு.” (நீதி மொழிகள் 11:24) மறுபடியும் பிறவாதவர்கள் அதிகப் பணத்தை தேக்கி வைக்கிறார்கள். உலகச் சம்பந்தமானவைகள் அவர்களுக்கு எல்லாமாக இருப்பதால், மற்றவர்களுக்கு உதவி செய்ய அவர்களுக்கு மனமிருப்பதில்லை. அதனாலேயே அவர்கள் தம் வாழ்வைக் குறித்து மட்டும் அக்கறை உள்ளவர்களாக உள்ளனர். வேதாகமம் கூறுகிறது, தன் தேவைக்கு அதிகமாக சேர்த்து வைப்பது சரியல்ல, அது வறுமைக்கு வழி நடத்துகிறது. மக்கள் தம் மாம்ச இச்சையின்படி நடக்கிறார்கள். அது திருடனுக்கு எதிர் சென்று மரணத்தில் முடிவடைவதையொத்த முடிவுக்கு ஒத்ததாகும். இவையெல்லாம் வீண்புகழ்ச்சியின் பலனாக வருபவை.ஆவியின் விருப்பங்களைப் பின்பற்றுவதை நேசிப்போர்


பவுல் ஆவிக்குரிய வாழ்வு வாழ விரும்பினான். அவன் அப்படியேச் செய்தான். நாம் வேத வாக்கின் மூலம் சிறப்பாக வாழ்வது குறித்தும், அவன் போதித்தான். அவன் கலாத்தியர் 6:6-10 இல் கூறுகிறான். “மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப் படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக் கடவன. மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்க, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக் கடவோம்.

கர்த்தரின் வார்த்தையை அறிந்தவர்கள் தம்மிடமுள்ள நல்லவைகளை தம் ஆசரியர்களுடன் பகிருமாறு பவுல் அவர்களுக்கு அறிவுரைக் கூறுகிறான். அவன் குறிப்பிடும் “ நல்லவைகள்” என்பவை ஆவிக்குள் நடக்கும் வாழ்க்கை மூலமாக இழந்துபோன ஆத்துமாக்களை இரட்சிப்பதாலும் நற்செய்தியை பிரசங்கிப்பதாலும் கர்த்தரைப் பிரியப்படுத்துவதாகும். மறுபடியும் பிறந்தவர்கள் எவர்களோ, அவர்கள் ஆவிக்குள் போதித்து அதன்படி நடக்கும், ஒரே சிந்தனையுள்ள, அன்பும் ஒரேமாதிரியான தீர்ப்புடையவர்களிடம் சேரவேண்டும்.

“உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்” நன்மைகள் என்பதன் பொருள் ஆலயத்தின் மூலம் மற்றவர்களை இரட்சிப்பதாகும். ஒரே மாதிரியான மனதினாலும், ஒரே ஜெபத்தினாலும், அதே பக்தியுடனும், எல்லாவற்றையும் செய்யவேண்டுமென பவுல் கூறுகிறான். நாம் கர்த்தரின் பணியை ஒன்று சேர்ந்து செய்யவேண்டும்.

பவுல் கூறினான், “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” இங்கு “பரியாசம் பண்ணுதல்” என்பதன் பொருள் “கிண்டல் அல்லது கேலி” என்பதாகும். ஆகவே, “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார்” என்பதன் பொருள் கர்த்தரை கிண்டலோ கேலியோ செய்யக்கூடாது. சொல்லப்போனால், கர்த்தரின் வார்த்தைகளை இலகுவாக எடுத்துக்கொண்டு, அவனுடைய சொந்த வார்த்தைகளில் மொழி பெயர்த்து அவற்றை விசுவாசிக்கத் தவறுவது அவரைப் பரியாசம் பண்ணுவதாகும். பவுல் கூறினான். “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” இதன் பொருள் என்னவென்றால் எவன் மாம்ச பிரகாரமாக விதைக்கிறானோ அவன் அசுத்தத்தை அறுவைடச் செய்கிறான். ஆனால், ஆவியின் படி விதைக்கிறவனோ நித்திய ஜீவனைப் பெறுவான்.

அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின்படி நாம் வாழ்ந்தால் நாம் எதை அறுவடைச் செய்வோம்? நாம் நித்திய ஜீவனையும் நம் பாவங்களிலிருந்து இரட்சிப்பையும் பெறுவோம். மற்றவர்களின் ஆத்துமாக்கள் தம் பாவங்களிலிருந்து விடுதலைப் பெறும்படி வழிநடத்தி ஆவிக்குரிய கனியாகிய நித்திய ஜீவனை கர்த்தரின் ஆசீர்வாதம் மூலம் அறுவடைச் செய்வோம்.

தம் சொந்த சரீரத்திற்காக வாழ்பவர்கள் கதியென்ன? அவர்கள் அசுத்தத்தை அறுவடைச் செய்து முடிவில் மரணத்தைத் தவிர வேறெதையும் பெறமாட்டார்கள். அவர்கள் மரணத்திற்கு பிறகு அவர்களிடம் ஒன்றுமே இருப்பதில்லை. மனிதன் வெறுங்கையுடன் பிறந்து வெறுங்கையுடனே சாகிறான்.

அவன் மற்றவர்களை இரட்சிக்கும்படியாக வேலை செய்வானாகில், அவன் ஆவிக்குரிய கனியை அறுவடைச் செய்து நித்திய ஜீவனைப் பெறுவான். ஆனால் அவன் தொடர்ந்து மாம்ச இச்சைகளின்படி வாழ்வானானால், அவன் அசுத்தத்தை அறுவடைச் செய்வதில் முடிவடைகிறான். அவன் சாபத்தை அறுவடைச் செய்து அதனை மற்றவர்களுக்கும் அளிக்கிறான். ஆகவே, விசுவாசத்தில் வாழ்வதைக் குறித்து எல்லாம் தெரிந்த பவுல், மாம்சத்திற்கேற்றபடி நடக்கவேண்டாமென நமக்கு அறிவுரைக் கூறுகிறான்.

“நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.” ஆவியின் படி நடந்த பவுல் கர்த்தரின் ஊழியனாவான். அவன் ஆவியின்படி நடந்தான் என்று வேதாகமத்தில் உள்ளதை மக்கள் பார்க்கும்போது, சிலர் இப்படி நினைக்கலாம். பரிசுத்த ஆவியானவர் நேரடியாக “பவுல் இடப்பக்கம் சென்று அவனை சந்திப்பாயாக.” அலலது “நீ இந்த மனிதனை தவிர்ப்பாயாக” என்று அவனுக்கு கட்டளையிட்டதாக நினைக்கலாம். ஆனால் இது உண்மையல்ல.

இரட்சிப்புக் குறித்த நற்செய்தியை பிரசங்கித்து மற்றவர்கள் தம் ஆத்துமாக்களைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படி உதவி செய்து பவுல் ஆவிக்குள் நடந்தான். பவுல் ஆவிக்கேற்றபடி நடந்த மற்றவர்களுடன் சேர்ந்தும் கர்த்தரை சேவித்தான். கிறிஸ்தவர்களின் மத்தியில், ஆவிக்கேற்றபடி நடக்காமல் தம் மாம்ச இச்சையின்படி நடக்கும் மக்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் பவுலை வரவேற்க வில்லை. மாறாக அவனை எதிர்த்தும் அவதூறாகப் பேசவும் செய்தார்கள். இயேசுகிறிஸ்துவின் சீடர்களை எதிர்த்து சண்டையிட்டும் அவதூறு பேசியும் வந்தவர்கள் எவர்களோ அவர்களுடன் தான் செய்வதற்கெதுவுமில்லை என்று பவுல் கூறினான்.

நீ ஆவிக்குள் நடக்க வேண்டுமானால், நற்செய்தியின்படி நீ வாழவேண்டும். விருத்த சேதனம் பண்ணப்பட்டவர்கள் பவுலை விசாரணைக் குட்படுத்தினார்கள். கலாத்தியர் 5:1 இவ்வாறு கூறுகிறது. “சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்த சேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப் பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.” விருத்த சேதனம் பண்ணப்பட்டவர்கள் யாரெனில் அவர்கள் விருத்த சேதனத்தை கடைபிடிப்பதில் சிறந்தவர்களாயிருந்தனர், அவர்கள் கூறினர், “இயேசுவின் மீது விசுவாசம் வைத்து மறுபடியும் பிறந்தவன் ஆனாலும், அவன் விருத்த சேதனம் பண்ணப்படவேண்டும். அவன் தன் மாம்சத்தின் நுனித்தோலை வெட்டி விருத்தசேதனம் பண்ணப்படவில்லையென்றால், அவன் கர்த்தரின் பிள்ளை அல்ல.” அவர்கள் அவனை ஏன் விசாரணைக்குட் படுத்தினார்கள்? இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை மீதுள்ள விசுவாசத்தின் மூலம் மட்டுமே பாவ விடுதலையும் நித்திய ஜீவ ஆசீர்வாதமும் கிடைக்கின்றது என பவுல் விசுவாசித்தான். இதுவே அவன் பிரசங்கித்ததுமாகும்.

மக்களை நீதிமான்களாக்கும் விசுவாசம், உண்மையைப் படித்து அதனை பிரசங்கிப்பதன் மூலம் வருகின்றது. நீர் மற்றும் ஆவியைக் குறித்த சத்தியம் முக்கியமானது என்று பவுல் கருதினான். உண்மையைத் தெரிந்தவர்கள் யாரோ, அவர்களால் ஆவிக்கேற்றபடி நடக்க முடியும் என்றும் ஆகவே விருத்தசேதனம் பண்ணப்பட அவசியமில்லையென்றும் அவன் விசுவாசித்தான். இதனையே அவன் பிரசங்கித்தான். ஆனால், விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள், ஒருவனின் இரட்சிப்பின் நம்பிக்கையில் விருத்தசேதனமானது முக்கியமான அங்கம் என்று நம்பினார்கள். ஆயினும் கர்த்தர் கையளித்ததைத் தவிர வேறு நற்செய்தியில்லை, ஆகவே, அதில் நாம் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது.

பவுல் ஆவிக்கேற்றபடி நடந்தபோது, அவன் அலட்சியம் செய்யப்பட்டு உடன் யூதர்களால் துன்புறுத்தப்பட்டான். “மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள கட்டாயம் பண்ணுகிறார்கள். விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ளாமலிருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் உங்கள் மாம்சத்தைக் குறித்து மேன்மை பாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள். நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்போனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறை யுண்டிருக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்த சேதனமும் ஒன்றுமில்லை. விருத்த சேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்” (கலாத்தியர் 6: 12-15). பவுல் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களுக்கு கூறுகிறான், “மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம் பண்ணுகிறார்கள்.”

மாமிச இச்சையின்படி நடக்கிறவர்களை பவுல் கடிந்துகொண்டான். அவர்கள் தம் மாமிச இச்சையின்படியே நடந்தார்கள். குறிப்பாக அவர்களைப் போன்ற அநேக மக்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் உறவைத் துண்டித்துக் கொண்டான். பவுல் கூறினான். “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக.” உலகின் பாவங்களையெல்லாம் தன் மீது சுமக்கும் பொருட்டு இயேசுகிறிஸ்து யோவானால் ஞானஸ்நானம் பெற்று பவுலையும் கர்த்தர் அழைத்த மற்ற எல்லா மக்களையும் இரட்சிக்கும்படியாக அவர் சிலுவையில் மரித்தார். பவுல் கூறினான். “அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்ல, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.” உலகத்திற்கு மரித்த பவுல், இயேசு கிறிஸ்துவின் மூலம் மறுபடியும் வாழ்ந்தான்.

நாம் உண்மையாகவே, இயேசுவிற்குள் மரித்தோம். ஆனால் சில சமயங்களில் இந்த உண்மையை மறந்து போகிறோம். நாம் அதை நம்ப வேண்டும். இந்த உண்மை மீது நமக்கு நம்பிக்கை இல்லையென்றால், நாம் மாம்ச இச்சையினாலும் குடும்பத்தினாலும் கட்டுண்டிருப்போம், இது கர்த்தருடனே கூட நடப்பதைத் தடைச் செய்கிறது. நம்முடைய மாம்சம் மிகவும் பலவீனமானது, நம் குடும்பங்கள் கூட அவரை நாம் பின்பற்ற உதவ முடியாது. கர்த்தரால் மட்டுமே நமக்கு உதவமுடியும், ஆனால் நாம் இப்பொழுது உலகத்திற்குச் சிலுவையிலறையப் பட்டிருக்கிறோம். ஒரு இறந்துபோன மனிதனால் எப்படி உலக மனிதர்களுக்கு உலகச் சம்பந்தப்பட்டவைகளில் உதவ முடியும்? இவ்வுலகத்திற்கு மரித்தவர்களால் இவ்வுலகத்திற்குரியவைகளை சொந்தமாக்க முடியாது.

இயேசு உயிரோடெழும்பினார். அவருடைய உயிர்த்தெழுதல் புதியதொரு ஆவிக்குரிய ஒரு வாழ்வை நாம் பெறும் விதமாக மறுபடியும் பிறக்க அனுமதித்தது. இங்கே நமக்கு புதிய பணிகளும், புதிய குடும்பமும், புதிய எதிர்பார்ப்பும் உள்ளது. நாம் மறுபடியும் பிறந்த மக்கள், பரலோக போர் சேவசகர்களாகிய நாம் வேதவாக்கினைப் பிரசங்கிக்கும்படியான பொறுப்பில் இருக்கிறோம். மற்றவர்கள் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும்படியாக சரீரப்படியல்லாமல் ஆவிக்குரிய முறைகள் மூலமாக அவர்களுக்கு உதவியதாக பவுல் அறிக்கைச் செய்கிறான். தான் ஏற்கெனவே மரித்ததாகவும் இயேசுகிறிஸ்து மூலமாக மறுபடியும் பிறந்ததாகவும் அவன் கூறுகிறான். இது போன்ற நம்பிக்கையினால் அறிக்கைச் செய்யும் இத்தகைய மனிதர்களாகும்படியாக பாடுபடுவோமாக.

கலாத்தியர் 6:17-18 இல் பவுல் கூறினான், “இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனே கூட இருப்பதாக. ஆமேன்.” தேவனாகிய இயேசுவின் அச்சடையாளங்களைப் பெற்றவனாக பவுல் இருந்தான். ஆவியின் படி நடப்பதற்கு அவன் தன் உடல் நலத்தில், தேவனின் பொருட்டு அக்கறைச் செலுத்தாதிருந்தான். அவன் சிறிது சிறிதாக பார்வையிழந்தமையால் அவனால் எழுதக் கூட முடியாமல் போயிற்று. ஆகவே, அவன் கர்த்தரின் வார்த்தைகளைப் பேசும் போது அவனின் துணைவர்களான டெர்சியஸ் போன்றவர்கள் பவுலின் சில நிருபங்களை எழுதினார்கள். அவன் சரீரப்பிரகாரமாக பலவீனனாக இருந்தாலும், அவன் ஆவிக்கேற்றபடி நடப்பதில் மகிழ்ச்சியடைந்து இப்படிக் கூறினான். “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரிந்தியர் 4:16).

ஆவியில் நடக்கும் மக்களைப் போல் நாமிருக்க வேண்டுமென்று பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறான். அவன் மேலும், “ஆவிக்குள் நடப்பதென்பது நற்செய்திக்குள் வாழ்வது” என்றும் கூறுகிறான். ஆவிக்குள் நடப்பது என்றால் என்னவென்று நீங்களும் நானும் மனதில் கொள்ளவேண்டும். வீணாண காரியங்களை நாம் செய்யாது நற்செய்திக்கு சேவை செய்து வாழவேண்டும். நம்முடைய எஞ்சிய வாழ்நாட்களில் ஆவிக்கேற்றபடி நடப்போமாக.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் இப்பொழுது நம் இருதயங்களில் உண்மையான ஆவியானவர் உள்ளார். நற்செய்திக்கு ஒத்தவாறு நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் மகிழ்வுடன் பதிலளிப்பார். ஆவிக்குரிய கனிகளைப் பெற்றிருத்தல் என்பது ஆவிக்கேற்றபடி நடப்பதும் ஆத்துமாக்களை விடுவிப்பதுமாகும். நீங்களும் ஆவிக்குரிய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றை, ஆவிக்கேற்றபடி நடந்து நற்செய்திக்காக வாழும்போது பெறுவீர்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்கும் பொருட்டு, நாம் பாடு அனுபவித்து, சாந்தமாக இருந்து தயவை பயிற்சி செய்து இழந்து போனவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.

இழந்துபோன ஆத்துமாக்களை நல்லது செய்வதன் மூலமும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதின் மூலமும் அவர்கள் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யப் பெறச் செய்வதாலும் நமக்கு ஆவிக்குரிய கனிகள் கிடைக்கின்றன. இதுவே ஆவிக்குரிய கனிகளை நாம் கொண்டிருப்பதற்கும் ஆவிக்கேற்றபடி நாம் வாழவும் தேவையானதாகும்.

【8-11】 < எபேசியர் 5:6-18 > பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையைப் பராமரித்தல்<எபேசியர் 5:6-18 >
“இப்படிப் பட்டவைகளினிமித்தமாக கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள்; இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல் அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்து கொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்போழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்து கொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல் ஆவியினால் நிறைந்து.”

 • பரிசுத்த ஆவியானவர் நிறைந்த நம் வாழ்க்கையை பராமரிக்க நாம் என்ன செய்யவேண்டும்?
 • நம்மை நாமே வெறுத்து, சிலுவையை சுமந்து, நம் தீய சிந்தனைகளை மறுத்து, நற்செய்தியைப் பிரசங்கிக்க நம்மை அர்ப்பணிக்கவேண்டும்.

“பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையைப் பராமரிக்க,” நற்செய்தியை பிரசங்கிக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ, பரிசுத்த ஆவியானவரை நம் இருதயத்தில் வாசஞ்செய்யப் பண்ணும் ஆசீர்வாதத்தை முதலில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யப்பெற இத்தகைய விசுவாசம் நம்மிடம் இருக்கவேண்டும். அதாவது, கர்த்தர் நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முதலில் விசுவாசிக்க வேண்டும். இந்த விசுவாசம் இருக்கும்போது, பரிசுத்த ஆவியானவரை நம்மில் சஞ்சரிக்கச் செய்யும் ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம்.
பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்யப் பட்டவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை அவசியமா? ஆம் அவர்கள் அப்படி இருக்க வேண்டும். ஆனால் அவர்களில் சிலரால் இத்தகைய வாழ்வு வாழமுடியாததேன்? அதற்கு காரணம் என்னவென்றால், அவர்களுடைய சொந்தப் பிரச்சினைகள் கர்த்தரின் கிரியைகளை முந்துவதாகும். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை நாம் பராமரிக்க வேண்டுமானால், நாம் வேதவாக்கைக் கற்று அதனை விசுவாசிக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில், எத்தகைய வாழ்வையும் நம்பிக்கையையும் நாம் பெற்றிருக்க வேண்டுமென்று வேதாகமத்தைப் பார்ப்போம்.


பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை சில மனிதர்களால் வாழ முடியாததற்கு காரணம் என்ன?

முதலில், அவர்கள் தம்மைத் தாமே வெறுக்காமையே காரணம் என்று நாம் கூறமுடியும். தன்னை வெறுப்பவனே கர்த்தருடன் நடக்கமுடியும் என்று வேதாகமம் கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை ஒருவனின் சொந்த பலத்தினால் வெற்றிக் கொள்வது இயலாதகையால், தன்னை வெறுக்கும் பொருட்டு பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதை ஒவ்வொருவரும் விசுவாசிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யப்பெற்ற சிலரால் கூட, கர்த்தரின் ராஜ்யம் குறித்த வாஞ்சையில்லாவிட்டால் தம்மை வெறுப்பது அவர்களுக்கு மிகக் கடினாமான காரியம். ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை வாழும் பொருட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு பணி செய்யவேண்டும். அப்பொழுது மாத்திரமே ஒருவன் தன்னை வெறுத்து நீதியின் சேவகனாக வாழ முடியும்.
மத்தேயு 16:24-26 கூறுகிறது, “அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”
மறுபடியும் பிறந்த சில மனிதர்களால் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்வை வாழமுடியாமைக்கான காரணம் என்னவென்றால் அவர்களால் தம் மாமிச இச்சையை மறுக்க முடியாமையே. பரிசுத்த ஆவியானவர் தம்முள் வாசஞ் செய்யப் பெற்ற மக்கள் கூட தம் மாம்ச இச்சையை விட்டால் தான் பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்ற முடியும். கர்த்தரைப் பின்பற்ற வேண்டுமானால் நம் வாழ்விலிருக்கும் அநேக மாம்ச சம்பந்தப்பட்ட காரியங்களை நாம் விட்டுவிடவேண்டும். கர்த்தர் கூறினார், “அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன்.”
சரீர சம்பந்தமுள்ள இன்ப உணர்ச்சி உள்ளவர்களுக்கோ மரணம், ஆனால் ஆவிக்குரிய மனமுள்ளவர்களுக்கோ ஜீவனும் சமாதானமும் உண்டாயிருக்கிறது. ஆவிக்கேற்றபடி நடக்க விரும்பும் மக்கள் மாம்சத்தின்படி வாழ்வதை வெறுக்க வேண்டும். இந்த துணிச்சலான பலியைச் செலுத்தும் ஒருவனாலேயே பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை பராமரிக்க முடியும். இதுவே பரிசுத்த ஆவியானவர் முழுமை பெறும் சத்தியம்.
எதைப் பின்பற்ற விரும்புகிறீர்கள், கர்த்தரையா அல்லது உலகத்தையா? உங்களுடைய தேர்வைப் பொறுத்து, பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையையோ, அல்லது இச்சைகள் நிறைந்த வாழ்வையோ உங்களுடையதாக்கிக் கொள்வீர்கள். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை உண்மையாகவே நீ விரும்பினால், அதனைத் தேர்ந்தெடுப்பது நீயே. கர்த்தர் நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்து பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதை நமக்கு பரிசாக அளித்தார். ஆனல் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா என்பதை நீ தீர்மானிக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து வாழும் வாழ்வைப் பெற கர்த்தர் யாரையும் தெரிந்தெடுக்கவே முன்குறிக்கவோ இல்லை. அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நம்முடைய சித்தத்தைப் பொறுத்தே பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்வு அமையும்.


பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை வாழ நீ சித்தமாயிருக்கவேண்டும்.

பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை வாழ நீ சித்தமாயிருந்தால் கர்த்தர் அதனை அனுமதிப்பார். அவர் உனக்கு உதவிகளைச் செய்து உன்னை ஆசீர்வதிப்பார். அது உனக்கு வேண்டாமென்றால், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து வாழும் வாழ்க்கையை நீ விட்டு விடவேண்டும்.
“நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமே பரிசுத்த ஆவியானவர் உனக்குள் வாசஞ்செய்வதைப் பெற்றுக்கொள்ள முடியுமே தவிர அது உன் சித்தப்படியல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை பராமரிப்பது முற்றிலும் உன் விருப்பம்.
ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை உனக்கு வேண்டுமானல், உன்னுடைய சொந்த விருப்பத்தை சோதித்து கர்த்தரின் உதவியைக் கேள். உண்மையாகவே நாம் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்வு வாழ விரும்பினால், கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து நம் விருப்பங்களை நிறைவேற்றுவார். ஆனால் நம் இலக்கை அடையும் பொருட்டு, மாம்ச இச்சையை மறுக்கவேண்டும்.
இரண்டாவதாக, நாம் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டுமானால் நம் சொந்த சிலுவையை சுமக்கவேண்டும். கடினமான சூழ்நிலையில் கூட கர்த்தரின் சித்தப்படி நடந்து வாழவேண்டும். இதுவே பரிசுத்த ஆவியானவரில் நிறைந்த நீதியின் வாழ்க்கை என்பதன் பொருளாகும்.
மூன்றாவதாக, கர்த்தர் கூறினார், “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” இதன் பொருள் தேவனைப் பின்பற்றுதல் நம் வாழ்விலிருந்து வேறுபடுகின்றது. குறிப்பாக, நாம் அவரைப் பின்பற்றினால் நம் ஆவியின் மாமிசமும் செழித்திருக்கும், ஆனால் நாம் அவரைப் பின்பற்ற விரும்பாது சொந்த வாழ்வு வாழ்வதை நாம் தேர்ந்தெடுத்தால், நம் ஆவியும் மாமிசமும் நாசமடையும்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை நம்மால் ஏன் வாழ முடியாது? அதன் காரணம் என்னவெனில், நம் சிந்தனைகளான, மாம்ச இச்சையை மறுப்பதில்லை. நாம் இயேசுவைப் பின்பற்றும்போது ஆவியானவர் நம் உள் மனிதனை உறுதிப்படுத்துவதால், அவரால் நம்மை பலத்துடன் வழி நடத்த முடியும்.
எபேசியர் 5:11-13 கூறுகிறது, “கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்து கொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.” கிறிஸ்தவர்கள் கனியற்ற அந்தகாரக் கிரியைகளுடன் உறவாடக் கூடாது. ஆனால் நாம் கனியற்ற அந்தகாரக் கிரியைகளில் ஈடுபடும்போது, அதை வெளிப்படுத்தும்படி கர்த்தர் கூறுகிறார். நாம் அந்தகாரத்தில் செய்யும் கிரியைகளைக் கடிந்து கொள்ளவேண்டும், ஏனெனில், அத்தகைய காரியங்கள் இரகசியமாக அவர்களால் செய்யப்படுகின்றன. அவற்றைப் பேசுவது கூட வெட்கக் கேடானது. ஆனால், வெளியே தெரிந்த காரியங்கள் எல்லாம் ஒளியினால் பிரகடனம் செய்யப்படுகிறது.

இத்தகைய வெட்கக் கேடானவைகளை வெளிப் படுத்தக் கூடியதும் பேசக்கூடியதும் யார்? மற்றவர்கள் என்றால், உன் சகோதரர்களோ, சகோதரிகளோ அல்லது கர்த்தரின் ஊழியர்களாலோ இவற்றை வெளிப்படுத்த முடியாது, நீயே இவற்றை வெளிப்படுத்த வேண்டும். வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே நம் தீய செய்கைகள் சரியானவையல்ல என்றும், நம் மூலமாகவோ அல்லது நம்மை தலைமைத் தாங்குபவர் மூலமாகவோ, நம்முடைய கனியற்ற அந்தகாரக் கிரியைகளை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துமாறு வழிநடத்த வேண்டும்.
இந்த உலகில், வெளியரங்கமாகியவையெல்லாம் கடிந்து கொள்ளப்பட்டது. ஆனால் கர்த்தரின் உலகத்தில் வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. நாம் சரியான நிலைக்கு மிகத் தொலைவிலிருப்பதால், நம்மை அறியாமலேயே இவ்வுலகில் அநேக பாவங்களைச் செய்கிறோம். ஆயினும், வேதவாக்காகிய வெளிச்சத்தை நம்மீது விழச்செய்தால், சில பாவங்களைக் குறித்து தெரிந்து அவற்றை ஒப்புக்கொள்ள முடியும். இப்படியாக முடிவில்லாத நன்றிகளை கர்த்தருக்குச் செலுத்துகிறோம்.
இயேசு நம் எல்லாப் பாவங்களையும் மீறுதல்களையும் எடுத்துப் போட்டதாலும், அவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது, கர்த்தரின் எல்லா நீதிகளும் நிறைவேறியதாலும், கர்த்தரின் நீதியின் மூலமாக, வெளிச்சத்தினால், நாம் வெளிப்படுத்த முடிகிறது. யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தபோது கோடிக்கணக்கான மனிதர்கள் செய்த பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது. அவரே, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாகி, அவற்றிற்கு தீர்ப்பாக சிலுவையில் மரித்து மீண்டும் உயிரோடெழும்பினார். இயேசு மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிட்டார். “எல்லாம் முடிந்தது” (யோவான் 19:30) என்று அவர் கூறியதன் மூலம் மனிதகுலம் முழுவதும் இரட்சிக்கப்பட்டது. இயேசு செய்தவைகளின் மீது நாம் நம்பிக்கை வைப்பதன் மூலம் நாம் பரிசுத்தமடைகிறோம். நம்முடையப் பாவங்கள் மன்னிக்கப்பட்டதால் நம்மால் மீண்டும் வெளிச்சத்திற்குள் வந்து கர்த்தரை நீதியுடன் பின்பற்ற முடிகிறது.


காலத்தைப் பிரயோஜனப் படுத்திக் கொள்ளுமாறு கர்த்தர் கூறுகிறார்

பரிசுத்த ஆவியால் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று பவுல் கூறுகிறான். எபேசியர் 5:16-17 கூறுகிறது. “நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்.” நாம் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கை வாழவேண்டுமென்றால், புத்தியில்லாதவர்களாக இருக்காமல், காலத்தைப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்கவேண்டும். கர்த்தரின் சித்தம் என்னவென்பதை அறிந்து அதன்படி செய்யவேண்டும். மாம்சத்திற்கேதுவான வாழ்க்கையா அல்லது கர்த்தருக்கு அர்ப்பணித்த வாழ்க்கையா: எது சிறந்தது என்று நாம் முடிவு செய்யவேண்டும்.
நாம் மறுபடியும் பிறந்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் நம்மில் சஞ்சரிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்யப் பெற்றோமானால், அதன் பொருள் கர்த்தர் நம் எஜமானரும் நம் அரசருமாக இருக்கிறார் என்பதாகும். அவரே நம் ஒரே இரட்சகர், நாம் அவரை நம் கர்த்தராக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரே நம் ஒரே எஜமானர். அவரே நம்மைப் படைத்த ஒரே எஜமானர். அவர் என்னுடைய பாவங்களை மன்னித்து என்னை ஆசீர்வதித்தார். அவரே என் அரசராக இருந்து என்னுடைய வாழ்வானாலும் சரி சாவானாலும் சரி, ஆசீர்வாதமாக இருந்தாலும் சரி சாபமாக இருந்தாலும் சரி அதனை அரசாள்வது அவரே. கர்த்தரே நம் எஜமானர் என்பதை ஒப்புக்கொண்டு நம் வாழ்நாள் முழுவதும் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும்.
பிலிப்பியர் 2:5-11 என்ன கூறுகிறது என்று பார்ப்போம். “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”
பவுல் கூறினான், “இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.” இதுவே இயேசுகிறிஸ்துவின் இருதயம் என்று அவன் கூறினான். பவுல் இயேசுவின் “இந்த சிந்தை” என்றுக் கூறினான். அவரே கர்த்தர், நம்மைப் படைத்தவர், தன் பிதாவின் சித்தப்படி அவர் தம் மக்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படி இவ்வுலகிற்கு வந்தார். தேவன் இவ்வுலகிற்கு வந்து யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானம் மூலம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். அவர் சிலுவையில் மரித்தபோது இவ்வுலகின் பாவங்களும் அவருடன் ஒழிந்து போயின, மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உயிரோடெழுந்து நம் இரட்சகரானார்.
நம்மைப் படைத்த, இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்த காரணம் நம்மை இரட்சிப்பதே. அவர் தம் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் மூலமாக தம் அன்பினை நமக்கு காண்பித்தார். அவரே படைத்தவராக இருந்தாலும் தம்மையே படைக்கப்பட்டது போல் தாழ்த்தி பாவங்களிலிருந்து மன்னிப்பை நமக்கு வழங்கிய அவரின் அன்பை வியந்து, படைக்கப்பட்டவைகள் அவர் முன்பு முழங்கால் படியிடவேண்டும். அதனாலேயே படைக்கப் பட்டவைகள் எல்லாம் அவரே உண்மை இரட்சகர் என்று அறிக்கைச் செய்யவேண்டும். அவர் நம்மைப் படைத்த கர்த்தர் மட்டுமல்ல அவரே, நமக்கு மிக உயர்ந்த நீதியின் கர்த்தராக இருக்கிறார் என்று நம்மை அறிக்கையிடச் செய்தார்.
நாம், கர்த்தரை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ்செய்யும்படி பெற்றுக் கொண்ட நாம், “கர்த்தரே என் உண்மையான ஒரே எஜமானர்” என்று விசுவாசித்து இயேசுகிறிஸ்துவை நம் இருதயத்தில் அன்பு செலுத்தவேண்டும். நம்முடைய எஜமானர் நாமல்ல அது இயேசுகிறிஸ்துவே என்ற விசுவாசம் நம்மில் இருக்கவேண்டும். அவரே நம்மைப் படைத்தவரும் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தவராகவும் இருக்கிறார். அவரே எஜமானர் என்றும் ஆசீர்வாதமான புதிய வாழ்வை நமக்கு ஏற்படுத்தி வாழச் செய்தார் என்றும் நமக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து, நமக்காக வேலைசெய்கிறார் என்பதை நாம் விசுவாசித்தேயாக வேண்டும்.
அநேக மக்கள் தாம் மறுபடியும் பிறந்த பிறகு கூட தம் எஜமானரை மாற்ற விரும்புவதில்லை. அநேகர் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யப் பெற்றாலும், அவர்கள் தமக்குத்தானே எஜமானர்களாக இருப்பதாக கூறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கையே கர்த்தரைப் பின்பற்றும் வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்க்கையை ஒரே நாளில் சம்பாதிக்க முடியாது. ஆனால் இயேசுவே நம் வாழ்வின் எஜமானர், அவரே நம்மையும் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் படைத்தவர் என்று நாம் விசுவாசிக்கும்போது அது சாத்தியமாகிறது. நம் கர்த்தராகிய இயேசுவை ஆராதிக்க நம்மிடம் விசுவாசமிருக்கவேண்டும். அவரே நம் எஜமானரும் கர்த்தரும், நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தவரும் பரலோக ராஜ்யத்தில் நித்திய ஜீவனுடன் வாழ்வதையும் தந்தவர்.
நம் மனதில் இந்த உண்மையை பெற்றிருக்க வேண்டும். அநேகர் தமக்குத்தாமே எஜமானர்களாக வாழுகின்றனர். அவர்கள் தம்மை ஆளுவதை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். ஆகையால் இப்போதே நம் எஜமானரை மாற்றிக்கொள்ள சரியான சமயம், நாம் கர்த்தரைக் குறித்து நன்கு தெரிந்தவர்களானோம். ஆகவே, நம்முடைய எஜமானர் கர்த்தராகவே இருக்கவேண்டும்.
நம் எல்லோருடைய இருதயங்களிலும் பாவமிருக்கின்றது. நம்முடைய தவறான செய்கைகளுக்காக நாம் நரகாக்கினை பெற வேண்டியவர்கள். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் கர்த்தரைக் கண்டுகொண்டோம். கர்த்தர் நம்மை மிகவும் நேசித்தார். அவர் இவ்வுலகிற்கு வந்து யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நம்முடைய உண்மையான இரட்சகராகும் பொருட்டு சிலுவையில் மரித்தார். கர்த்தர் மீதுள்ள நம் விசுவாசத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் விடுதலையடைந்தோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசஞ்செய்யப்பெற்றோம்.
வேதாகமம் கூறுகிறது, “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” ( ரோமர் 8:9 ) நாம் அவருடைய பாவ விடுதலையை பெற்றுக்கொண்டபோது, அதாவது பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்வதைப் பெற்றுக் கொண்டபோது, நாம் கர்த்தரின் பிள்ளைகளானோம். பரிசுத்த ஆவியானவர் நம் கர்த்தர் மேலும் பரிசுத்த ஆவியானவர் குறிப்பது போல் கர்த்தரின் நீதியில் நாம் நடக்கவேண்டும். அப்படி வாழ்வதற்கு, நம் மீதான நம்மின் எஜமானத்துவத்தை விட்டுவிடவேண்டும். நாம் இயேசுவை சந்தித்து அவரல் விடுதலைப் பெற்ற பின்பு, அவரையே, நம் ஒரே எஜமானராக ஆக்கிக் கொள்ள வேண்டும்.


நம் இருதய சிம்மாசனத்தை இயேசுவிடம் ஒப்படைக்கவேண்டும்

நம்முடைய வாழ்க்கைக்கு நாமே எஜமானர்களாக இருந்தால் கர்த்தரைப் பின்பற்ற முடியாது. நாம் நம்முடைய எஜமானர்களாயிராவிட்டால் கர்த்தர் அவருக்கு பணிசெய்ய கட்டளையிடும்போது “ஆமாம்” என்று எந்த தாமதமும் இன்றி கூறுவோம். இல்லையென்றால், “நான் அதையேன் உமக்குச் செய்யவேண்டும்?” என்று கூறுவோம். தனக்குத்தானே எஜமானாயிருப்பவன் “அவர் தனக்கு வேண்டியதை என்னிடம் வேண்டுகோளாக கேட்க வேண்டும்” என்றெண்ணி கர்த்தர் அவன் செய்யப் பணித்ததை செய்ய மறுப்பான். அத்தகைய மனிதனுக்கு, கர்த்தரின் போதனைகள் கிலேசத்தை உண்டு பண்ணுபவையாகவும் உள்ளன.
ஆயினும், பரிசுத்த ஆவியானவரால் நாம் நிரப்பப்பட வேண்டுமானால், அவரின் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியவேண்டும். அடிக்கப்படுமிடத்திற்கு இழுத்துச் செல்லப்படும் பசுக்கள் நாமல்ல. ஆனால் கர்த்தரைப் பின்பற்ற விருப்புடன் இருக்க வேண்டும். நாம் நம் கர்த்தராகிய இரட்சகரை பின்பற்றவேண்டும். அவர் நம்மை நீதியின் பாதையில் நடத்துவார். கர்த்தரே தேவனானாவர், அவர் நம்மை இரட்சித்ததன் மூலம் ஆசீர்வதித்தார். அவரை நம் எஜமானாராக கருதி அவரின் விதிகளைக் கடைப்பிடித்தால், நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவோம். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்கள் ஆளுகையை இயேசுவிடம் ஒப்படைத்து, அவருக்கு எல்லாவற்றிற்கும் மேலான இடத்தை அளித்தீர்கள் என்றால், உங்கள் வாழ்வில் கிருபையும் ஆசீர்வாதமும் பெறுவீர்கள்.
பலத்த புயல் காற்றுக்கு எதிராக ஒருவன் படகோட்டுவதையும் இயேசு அவனுக்கு பின்னால் நிற்பதையும் போன்ற படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நம்முடைய வாழ்வில் ஏற்படும் சவால்களைச் சந்தித்து கர்த்தரின் பணியை நாம் செய்வது போல தோன்றினாலும், உண்மையாக நம்மை கரம் பிடித்து வழிநடத்துவது நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே. வல்லமையுள்ள தேவன் நம் வாழ்வை கண்காணிக்கிறார். அவர் நம்மை இரட்சித்தார். அவர் நம்மை சாத்தானிடத்திலிருந்து பாதுகாத்து, அவருடைய ஆளுகை நம்மீது இருக்கும்படி நம்மை வழி நடத்துகிறார்.
அவர் நம் எஜமானரானபடியால், அவர் நம்மை கண்காணித்து நம்மை ஆசீர்வதிக்கிறார். நாம் அவரை நம் எஜமானராக ஒப்புக்கொள்ளவில்லையென்றால், அவர் தம் வேலயைச் செய்ய முடியாது. கர்த்தர் தனித்துவம் உடையவராதலால், நாம் அவருக்கு உழியஞ்செய்ய முன் வந்து உதவி கேற்கும்வரை, அவர் நமக்காக எதுவும் செய்யப்போவதில்லை.


அவரிடம் எல்லாவற்றையும் ஒப்புக்கொடு

நம்மீதான எஜமானத்துவத்தை நிறைவேற்றும் பொருட்டு எல்லாவற்றையும் அவரிடம் ஒப்புக்கொடு. அவருக்கு ஊழியஞ்செய்து அவர் நம் எஜமானர் என்பதை ஒப்புக்கொள். நாம் குறைவற்ற நிலைக்கு அதிக தொலைவிலிருப்பதால் நாம் அவரிடம் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்து எல்லாப் பொறுப்புகளையும் அவரிடம் விட்டு விடவேண்டும். நம் குடும்பங்கள், அன்றாட வாழ்க்கைகள் மற்றும் எல்லாவற்றையும் அவரிடம் ஒப்புக்கொடுத்தால், நாம் கர்த்தரிடம் இருந்து ஞானத்தைப் பெற்று, அவர் விரும்பும் வாழ்வை வாழ்ந்து கர்த்தர் நமக்கு கொடுத்த விசுவாசம் மற்றும் வல்லமை மூலம் நம் பிரச்சினைகளையெல்லாம் சமாளிப்போம்.
அப்பொழுது நமது பாவங்கள் நம் எஜமானருடையவைகளாகிவிடும். அதன் பொருள், நாம் நம் வல்லமையுள்ள கர்த்தரைப் பின்பற்றினால் அவர் நம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். நாம் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை வாழமுடியும். மேலும் அவரிடமுள்ள சமாதானத்தையும் அனுபவிக்க முடியும். விசுவாசமிக்க கிறிஸ்தவர்களாக, கர்த்தர் முன் முழங்காலிட்டு அவரை எஜமானராக ஒப்புக்கொண்டு அவருக்கு நாம் ஊழியஞ்செய்யவேண்டும்.
பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு எத்தகைய விசுவாசம் நம்மிடம் இருக்கவேண்டும் என பிலிப்பியர் 3:3 கூறுகிறது என்று பார்ப்போம். “ஏனெனில் மாம்சத்தின் மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைச் செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மை பாராட்டுகிற நாமே விருத்த சேதனமுள்ளவர்கள்.” இங்கு “விருத்தசேதனமுள்ளவர்கள்” என்றழைக்கப்படுவது, யாரொருவன் கர்த்தரை ஆவிக்குள் ஆராதித்து, இயேசுகிறிஸ்துவுக்குள் களி கூர்ந்து, மாமிசத்தின் மீது நம்பிக்கையில்லாதவனாக இருப்பவனைக் குறித்ததாகும்.
விருத்தசேதனம் பண்ணப் பட்டவர்களாக வாழவேண்டும் என்பதன் பொருள் யோவானால் ஞானஸ்நானம் பெற்ற இயேசுகிறிஸ்துவின் மீது, நம் இருதயங்களிலுள்ள பாவங்களைத் துண்டித்து சுமத்த வேண்டும் என்பதாகும். பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப் படுகிறவர்களின் வாழ்வு ஆவிக்குறியது. அவர்கள் கர்த்தருக்கு ஊழியஞ் செய்து கிறிஸ்து இயேசுவினுள் களிகூறுகிறார்கள், அவர்கள் கூறுகிறார்கள். “இத்தகைய மகிமையான வாழ்விற்கு என்னை இயேசு வழி நடத்தினார். அவர் என்னை நீதிமானாக்கி என்னை ஆசீர்வதித்தார். அவரைத் தொழுது கொள்ள தேவையான எல்லா கிருபையையும் எனக்களித்தார்.” இது போல் நாம் வாழ வேண்டும். இதுவே பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த வாழ்க்கையாகும். பவுல் கூறினான். “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரியந்தியர் 10:31)
பிலிப்பியர் 3:13-14 இவ்வாறு கூறுகிறது. “சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” கர்த்தர் நமக்கு பின்னான வாழ்க்கையை மறந்து, முன்னுள்ளவற்றை அடையும்படி கூறுகிறார். நம்முடைய இலக்கை நோக்கி தொடரவேண்டும். நம்முடைய நீதியின் செயல்கள் அல்லது தவறான செய்கைகளைப் பொருட்படுத்தாமல், நமக்கு பின் சென்றவைகளை மறந்து நமக்கு முன்னுள்ளவைகளை அடைந்து இலக்கை நோக்கி தொடரவேண்டும். இந்த இலக்கானது இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, அவரைப் பற்றிக்கொண்டு அவரை சேவிப்பதாகும்.
நாம் நிறைவுள்ள நிலைக்கு அதிக தொலைவிலிருக்கிறோம். ஆகவே, நம் சரீரத்தின் இச்சைகளை உணர்ந்தோமானால் கீழே விழும் வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறோம். ஆயினும் கர்த்தரை நோக்கிப் பார்த்து அவரின் மீது விசுவாசம் வைத்தால், நம் எல்லா பலவீனத்தையும் மீறுதல்களையும் அழித்து விடலாம். இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்தபோது நம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது. அவரின் உயிர்த்தெழுதலின் மூலம் அவர் நம் இரட்சகரானதால் நாம் புது வாழ்வு கொடுக்கப்பட்டோம். அவரின் மீதுள்ள நம்பிக்கைக்கு நன்றிகள். ஆகவே, நமக்கு பின் சென்றவைகளையெல்லாம் அழித்துவிட்டு, நமக்கு முன்னுள்ளவைகளை அடைந்து, நம் இலக்கை நோக்கி தொடரவேண்டும்.


பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை பராமரித்தல்

நமக்கு முன்னுள்ளவைகளை அடைந்து, நம் இலக்கை நோக்கி தொடர வேண்டும். உங்களுடைய பழைய காரியங்கள் பாரமாக இருக்குமானால், கூடிய சீக்கிரம் அவற்றை மறந்துவிடுவீர்கள் என்று நம்புகிறேன். நம்முடைய பலவீனங்களினால் அநேக காரியங்களை நம்மால் செய்யமுடியாது. ஆனால் அது முக்கியமல்ல ஏனெனில் முக்கியமானவைகள் எதிர்காலத்தில் இருக்கின்றன. எதிர்காலம் முக்கியமானதாகையால், நம் ஆளுகையை இயேசுகிறிஸ்துவிடம் நம்பிக்கையின் மூலம் ஒப்படைத்து அவரால் வழிநடத்தப்படவேண்டும். நாம் எதிர்காலத்தில் எப்படி வாழ்வோம் என்பதைக் குறித்து அவர் முடிவெடுக்க விட்டுவிட்டு அவருக்கு பிரியமானதைச் செய்வோம்.


சீடர்களைப் போல் நாம் வாழவேண்டும்.

பாவ மன்னிப்பின் மீதுள்ள விசுவாசத்தின் மீது நாம் உறுதியாக இருப்பதன் மூலமே பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழ முடியும். இது மிகவும் முக்கியமானது. 2 தீமோத்தேயு 2:1-10 ஐ பார்ப்போம். “ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி. நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாய்த் தீங்கனுபவி. தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ள மாட்டான். மேலும் ஒருவன் மல்லயுத்தம் பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான். பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடைய வேண்டும். நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக் கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். தாவீதின் சந்நிதியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின் படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக் கொள். இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன் போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவ வசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. ஆகையால், தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.”
தீமோத்தேயுவில் பவுல் கூறியது போல பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் கூறுகிறார். “நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்கு போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.”
“நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.” இங்கே கிருபையில் பலப்படு என்பதன் பொருள் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம்பிக்கையை, அவரை விசுவாசிப்பதன் மூலமும் அவரைப் பற்றிக் கொள்வதன் மூலமும், பலப்படுத்த வேண்டுமென்பதே. அவருடைய ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொள்ளும் பொருட்டு 
இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, சிலுவையில் மரித்து, மீண்டும் உயிரோடெழும்பி நம் இரட்சகரானார். இதன்பொருள் நாம் கர்த்தரிடமுள்ள கிருபையில் பலப்பட்டு அவருக்கு நன்றியறிதல் உடையவர்களாக இருக்கவேண்டுமென்பதே. கர்த்தர் நம்மை இரட்சித்தார் ஆகவே கர்த்தரின் பரிசாக இரட்சிப்பை நம் விசுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்ளவேண்டும். இது பாவமன்னிப்பின் மூலம் கிட்டிய இரட்சிப்பாகும். தினமும் அதிகாலையில் ஜெபம் செய்வதோ, அல்லது ஆலயம் கட்டுவதற்கு பணம் கொடுப்பதோ, ஒரு பொருட்டல்ல. இவை இரட்சிப்பைப் பெற்றுத் தருவதை விடுத்து அநேக கொடுதல்களைச் செய்யும்.
பாவமன்னிப்பு மூலம் கிட்டும் நம் இரட்சிப்பு என்பது நம்முடைய செயல்கள் எப்படிப்பட்டதாயினும், இயேசுகிறிஸ்து, நம் பாவங்களையெல்லாம் சுமக்கும் பொருட்டு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் துடைக்கும்படியாக சிலுவையில் மரித்தார். நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சிக்கும்படியாக அவர் உயிரோடெழும்பினார். போதகர்களும் கூட, சாதாரண மனிதர்களைப் போன்றே, இந்நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப்பட்டனர். இப்படியாக யாரொருவன் இயேசுகிறிஸ்துவை தம் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறானோ அவன் பாவமன்னிப்பைப் பெறுகிறான். ஆகவே இரட்சிப்பின் கிருபையின் மீது நாம் உறுதியடைந்து நம் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தலாம்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கை வேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மீதுள்ள நம்பிக்கை மீது உறுதியானவர்களாக வேண்டும். நம் வாழ்க்கையில் சிலவற்றை நம்மால் எடைபோட முடியாது. நாம் மிகவும் பலவீனமானவர்கள். அதனாலேயே நாம் இரட்சிப்பின் கிருபையில் வலுப்பெற்றவர்களாக வேண்டும். எப்பொழுதெல்லாம் தோல்வியடைகிறோமோ அப்போது நம் நம்பிக்கை மீது கீழ்க்கண்டவாறு தியானிக்க வேண்டும். “நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் கர்த்தர் என்னை இரட்சித்தார். இயேசு நீர் மற்றும் ஆவி மூலமாக என் பாவங்களை மன்னித்தார். நாம் நற்செய்தியை விசுவாசித்ததால் நீதிமானானோம். மேலும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்யப் பெற்றதன் மூலம் நம்மை வலுப்படுத்தினோம். நாம் நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததன் மூலம் வலுப்பெற்றோம். நம்முடைய விசுவாசத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களானோம்.
பவுல் கூறினான், “ஆகையால் நீங்கள் புசித்தாலும் குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர் 10:31). இது மிகவும் முக்கியமானது. நம் வாழ்வை கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்பது இதன் பொருள். “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும்,” நாம் சாப்பிடவேண்டும், குடிக்கவேண்டும் அவருடைய பணியைச் செய்யும் பொருட்டு உறுதியாக இருக்கவேண்டும். நற்செய்தியைப் போதிக்க ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் நல்லவற்றை சாப்பிடவேண்டும்.
“தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக் கொள்ள மாட்டான்” (2 தீமோத்தேயு 2:4) நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நீங்கள் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை வாழவேண்டும். நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக வாழும்படியாக நம் வாழ்வை வழி நடத்தும் போது நம்மால் விசுவாச வாழ்வு வாழமுடிகிறது. இப்படி விசுவாச வாழ்வு வாழுபவர்களின் வாழ்க்கை பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையாகும், உங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த, காணிக்கைகளை நற்செய்திக்காக பயன்படுத்த வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை நீ பராமரிக்க வேண்டுமானால், உன்னை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, அவரின் பணிக்கு கிடைக்கப்பட்டு, உன் பணத்தை நற்செய்திக்காக செலவு செய்து கர்த்தரிடம் உன் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொள்வாயாக. நாம் இத்தகைய வாழ்வு நடத்த விரும்பினால், நாம் விசுவாசத்தில் வாழ்ந்து நற்செய்திக்கு ஊழியஞ்செய்ய உறுதியான சித்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
நிறைய மனிதர்கள் இதுவரை தமக்கேற்ற வாழ்வு வாழ்ந்துள்ளனர். அவர்கள் சுவர்களை எழுப்பி சொத்துக்களை குவித்து தமக்குத்தாமே எஜமானர்களாக உள்ளனர். ஆயினும், இப்போழுது நாம் கர்த்தருக்காக வாழவேண்டும், கர்த்தரை நம்முடைய ஒரே எஜமானராக்க வேண்டும். கர்த்தர் கூறுகிறார் “தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.” நல்ல சேவகனாக வாழ்வது என்பது சட்டத்தைப் பின்பற்றுவது என்று பொருள்படும். நம்முடையப் பிரச்சினைகளை கர்த்தரே தீர்க்கிறார். அவரின் விசுவாசமுள்ள சேவர்களாயிருந்தால் அவர் நம்மை பாதுகாத்து வழி நடத்துகிறார். அவர் நம்மை முதலாவது கர்த்தருடைய ராஜ்யத்தையும் அவரின் நீதியையும் தேடும்படி கூறுகிறார். (மத்தேயு 6:33).
வேதவாக்கில் தவறேதுமில்லை. அவரை நாம் பின்பற்றினால் அவர் வார்த்தைகளின் சத்தியத்தை நாம் அனுபவிக்கலாம். முதலில் உங்களிருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யப்பட்டிருக்க வேண்டுமென்பதை நினைவில் வைத்திருங்கள். பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசஞ் செய்யப் பெற்றிராத ஒருவனால் தன் சொந்த சிம்மாசனத்தை கர்த்தருக்கு அளிக்க முடியாது. ஆயினும், பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசஞ்செய்யப் பெற்றவனால் அவன் இதய சிம்மாசனத்தை கர்த்தருக்கு கொடுக்க முடிவதால் அவனால் பரிசுத்த ஆவியானவரின் நிறைவேறுதலை அனுபவிக்க முடிவதோடு அவன் இருதயத்தில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெறுகிறான்.
உன்னால் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை புரிந்துகொண்டு அதனை விசுவாசித்தாலேயே பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ்செய்வது உண்மையாகும். பரிசுத்த ஆவியானவரின் நிறைவேறுதலும், ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வும் வாழவேண்டுமானால், நீ கர்த்தரை அரசராக சேவித்து அவர் ராஜ்யத்தின் நன்மைக்காக வாழ வேண்டும். அப்பொழுது நீ பரிசுத்த ஆவியால் நிரம்புவாய். உன் இருதயம் பூரணமடையும். நீ கர்த்தரின் இராஜ்யத்தின் பிள்ளையானபடியால் நீ ஆசீர்வாதத்தை வெற்றிக் கொள்வாய். அதனால் உன் வெற்றிகரமான வாழ்வு பராமரிக்கப்படும்.
கர்த்தரை விசுவாசிப்பதன் மூலம், பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரை தம்முள் வாசஞ் செய்யப் பெற்ற மக்கள் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று நான் செய்தி சொன்னேன். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கை என்றால் என்னவென்று நான் வரையறுத்து இத்தகைய வாழவை பராமரிப்பது எப்படி என்று விளக்கினேன். உங்களுடைய நம்பிக்கையின் மூலம் உங்கள் சிங்காசனத்தை கர்த்தருக்கு கொடுக்க வேண்டுமென்றும் விசுவாசத்தின் மூலம் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்றும், பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை பராமரிக்க வேண்டுமென்றும் விளக்கமளித்துள்ளேன்.
மீண்டும் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்யப் பெறுதல், மறுபடியும் பிறத்தல் ஆகியவை ஒருவரின் முடிவல்ல. பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்வை தொடரவேண்டும். அத்தகைய ஒரு வாழ்வை வாழ்வதன் மூலமே நம் ஆத்துமாவும் சரீரமும் ஆசீர்வதிக்கப்படும் என்பதை தெளிவாக அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும்.
இத்தகைய வாழ்வு உடனே கிட்டாது. கர்த்தரை நம் எஜமானராவும் நம் இருதயத்தில் சிறந்த இடத்தை அவருக்கு கொடுப்பதன் மூலமே அது கிட்டும். கர்த்தர் நம்மை இரட்சித்து ஏற்கெனவே பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த ஒரு வாழ்க்கையைக் கொடுத்துள்ளார். அவ்வாழ்க்கை நற்செய்திக்கு சேவகம் செய்வதாகவும் இருக்கிறது. அவரும் தம் வேலைகள் மற்றும் பொறுப்பை நம்மிடம் கொடுத்துள்ளார். ஆகவே, நாம் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வினை வாழ முடிகிறது.
நீ உன்னை அவருக்கு ஒப்புவித்து அவருக்கான வாழ்வை வாழவேண்டும். இந்த அழகிய நற்செய்தியை பிரசங்கிப்பதன் மூலம் அவருக்கு ஊழியஞ்செய். அப்பொழுது உன்னிருதயம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும். மேலும் சமாதானமும் கிருபையும், உன்னிடமிருந்து ஓடும். அவர் திரும்ப வரும் நாளில், நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாயும், கர்த்தரின் முன் பெருமையுடனும், அவரின் சன்மானத்தை வென்றவனாகவும் நிற்பாய். நீயும் நானும் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்வை இரசிக்க வேண்ம். விசுவாசத்தின் மூலம் இத்தகைய வாழ்வு பெற தீவிரமாக முயற்சி செய்யவேண்டும். இப்படியாகவே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட வாழ்வு பராமரிக்கப் படுகின்றது.
பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை வாழும்படியாக உன்னிருதயத்திலுள்ள சிம்மாசனத்தை கொடுத்துவிட்டாயா? உன்னிருதயத்தின் சிறந்த இடத்தை அவருக்கு அளிப்பாய் என்று எதிர்ப்பார்க்கிறேன். பரிசுத்த ஆவியானவர் நிறைந்த ஒரு வாழ்வு வாழ உன்னிடம் சித்தம் இருக்கவேண்டும். அப்பொழுது அவர் உன்னை ஆசீர்வதிப்பதால் உன்னால் பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையை நடத்த முடியும்.

【8-12】 < தீத்து 3:1-8 > பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையின் ஜீவியம்<தீத்து 3:1-8>

“துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமன நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், ஒருவனையும் தூஷியாமலும் சண்டைபண்ணாமலும் பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. ஏனெனில் முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம் பண்ணுகிறவர்களும், பகைக்கப்