ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

ஒளவை துரைசாமிஞானாமிர்த மூலமும் பழையவுரையும்
ஒளவை துரைசாமி 

 ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

 1.ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

 2.பதிப்புரை

 3.நுழைவாயில்

 4.தண்டமிழாசான் உரைவேந்தர்

 5.திருச்சிற்றம்பலம்

 6.முன்னுரை

 7.ஞானாமிர்த ஆசிரியரும் உரைகாரரும்

 8.ஞானாமிர்தச் செம்பொருள்

 9.நூலாராய்ச்சிக்குத் துணைசெய்த நூல்கள்

 10.அருளியஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

 11.ஞான பாதம்

 12.சம்மிய தரிசனம்

 13.பாசபந்தம்

 14.தேகாந்தரம்

 15.பாசச் சேதவியல்

 16.பதி நிச்சயம்

 17.பாச மோசனம்1

 

 நூற் குறிப்பு

 நூற்பெயர் : ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

 தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 1

 ஆசிரியர் : ஒளவை துரைசாமி

 பதிப்பாளர் : இ. தமிழமுது

 பதிப்பு : 2009

 தாள் : 16 கி வெள்ளைத்தாள்

 அளவு : 1/8 தெம்மி

 எழுத்து : 11 புள்ளி

 பக்கம் : 24 + 480 + = 504

 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

 விலை : உருபா. 315/-

 படிகள் : 1000

 நூலாக்கம் : பாவாணர் கணினி

 தி.நகர், சென்னை - 17.

 அட்டை ஓவியம்: ஓவியர் மருது

 அட்டை வடிவமைப்பு: வ. மலர்

 அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா

 ஆப்செட் பிரிண்டர்சு

 இராயப்பேட்டை, சென்னை - 14.

 பதிப்புரை

 ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை

 தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

 வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

 இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் நிறைபுகழ் எய்திய உரைவேந்தராக வும்,புலமையிலும்பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்துவிளங்கிய இப்பெருந்தமிழா சானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

 “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

 “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து

 வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்

 தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே

 முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

 என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

 அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

 இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

 தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்

 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

 நன்றி

 பதிப்பாளர்

 பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!

 பொற்புதையல் – மணிக்குவியல்

 “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்

 மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்

 உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்

 அள்ளக் குறையாத ஆறு”

 என்று பாவேந்தரும்,

 “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே

 பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு

 நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே

 நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்

 கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்

 காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்

 தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே

 தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

 என்று புகழ்ந்ததோடு,

 “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்

 அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே

 புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

 எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

 பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து

 வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

 உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

 பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

 கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

 “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்

 பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,

 கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த

 பெரும்புலமைக் கல்வி யாளர்!

 விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,

 வடமொழிநூல், மேற்பால் நூல்கள்

 நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய

 நற்றமிழ் தழைக்க வந்தார்!”

 என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

 கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

 ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

 ஒளவை நடராசன்

 நுழைவாயில்

 செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

 எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

 எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

 சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இருப்புக் கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

 பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

 சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப் படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

 தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

 ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

 ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை

 நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக் கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரை வரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

 ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

 ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

 அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

 ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

 ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

 “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

 ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

 ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

 முனைவர் இரா.குமரவேலன்

 தண்டமிழாசான் உரைவேந்தர்

 உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

 ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

 நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு

 தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

 எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

 “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை

 கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

 நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

 அமைபவன் நூலுரை ஆசிரியன்”

 எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

 உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

 தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.

 எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

 “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவண பெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

 “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்

 ஓதி வெல்ல லுறுவார்களை என்கை

 கோதுகொண்ட வடிவின் தடியாலே

 மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

 என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

 சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்தி களை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

 நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்

 அறிவளித்தான்; சான்றோ னாகி

 ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்

 அவ்வப் போ தயர்ந்த காலை

 ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;

 இனியாரை யுறுவேம்; அந்தோ

 தேயாத புகழான்தன் செயல் நினைந்து

 உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

 எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

 இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

 உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

 “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்

 கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்

 பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை

 வாயார வாழ்த்தாத வாய்”

 எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!

 வாழிய தமிழ் நலம்!

 முனைவர் வேனிலா ஸ்டாலின்

 உரைவேந்தர் தமிழ்த்தொகை

 தொகுதி - 1

 ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

 தொகுதி - 2

 சிவஞானபோத மூலமும்சிற்றுரை

 தொகுதி - 3

 சிலப்பதிகாரம் சுருக்கம்

 மணிமேகலைச் சுருக்கம்

 தொகுதி - 4

 சீவக சிந்தாமணி - சுருக்கம்

 தொகுதி - 5

 சூளாமணி சுருக்கம்

 தொகுதி - 6

 பெருங்கதைச் சுருக்கம்

 தொகுதி - 7

 சிலப்பதிகார ஆராய்ச்சி

 மணிமேகலை ஆராய்ச்சி

 சீவகசிந்தாமணி ஆராய்ச்சி

 தொகுதி - 8

 யசோதர காவியம்

 தொகுதி - 9

 தமிழ் நாவலர் சரிதை

 தொகுதி - 10

 சைவ இலக்கிய வரலாறு

 தொகுதி - 11

 மாவை யமக அந்தாதி

 தொகுதி - 12

 பரணர்

 தெய்வப்புலவர்

 The study of thiruvalluvar

 தொகுதி - 13

 சேரமன்னர் வரலாறு

 தொகுதி - 14

 நற்றிணை -1

 தொகுதி - 15

 நற்றிணை -2

 தொகுதி - 16

 நற்றிணை -3

 தொகுதி - 17

 நற்றிணை -4

 தொகுதி - 18

 ஐங்குறுநூறு -1

 தொகுதி - 19

 ஐங்குறுநூறு -2

 தொகுதி - 20

 பதிற்றுப்பத்து

 தொகுதி - 21

 புறநானூறு -1

 தொகுதி - 22

 புறநானூறு -2

 தொகுதி - 23

 திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள்

 தொகுதி - 24

 செந்தமிழ் வளம் - 1

 தொகுதி - 25

 செந்தமிழ் வளம் - 2

 தொகுதி - 26

 வரலாற்று வாயில்

 தொகுதி - 27

 சிவநெறிச் சிந்தனை -1

 தொகுதி - 28

 சிவநெறிச் சிந்தனை -2

 கிடைக்கப்பெறாத நூல்கள்

 1.  திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை

 2.  தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு

 3.  புதுநெறித் தமிழ் இலக்கணம்

 4.  மருள்நீக்கியார் (நாடகம்)

 5.  மத்தவிலாசம் (மொழியாக்கம்)

 திருச்சிற்றம்பலம்

 பதிப்புரை

 வாகீச முனிவர் எழுதிய ஞானாமிர்தம் எனப்படும் இந்த நூல் பழைய உரையுடன் சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக வெளிவந்தது, அக் காலத்தில் இந்த நூலை ஆராய்ந்து வெளியிடும் பணியை மேற்கொண்டிருந்த சான்றோர் சைவத்திரு. சேற்றூர் சுப்பிர மணியக் கவிராயர் அவர்கள் ஆவர். கிடைத்த சில ஏடுகளைக் கொண்டு, அவர்கள் அரும்பாடுபட்டு அந்நாளில் அதனை வெளியிட்டது மிகவும் பெருமைக்குரிய தொண்டாகும். சங்க நூல் வெளியீடுகளும், கல்வெட்டிலாகா வெளியீடுகளும் போதிய அளவு வெளிவராதிருந்த காரணத்தால்; அவர்கள் இந்நூற் பதிப்புக்கெனச் செய்திருக்கும் உழைப்பின் சிறப்பு இன்று நினைக்கும் போது மிக்க இறும்பூது தருகிறது.

 அந்நாளில் சித்தாந்த சைவத்துக்குரிய பழந் தமிழ் நூல்களுள் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதத்துக்குக் காலத் தால் முற்பட்டதாகிய இதனைச் சைவர்களில் பலர் பயிலுவதும் அருகியிருந்தது. சித்தாந்த சாத்திரம் பதினான்கினும் இது பழமையான தேயன்றி நடையிலும் சிறிது கடினமுடைய தாதலால் பயில்வோர் பெருக இல்லாமையில் வியப்பில்லை. சிவஞான போதத்துக்கு உரைகண்ட பாண்டிப்பெருமாளும் சிவஞான யோகிகளும் இந்நூலைப் பெரிதும் மேற்கொண்டு உள்ளனர். சிவஞான சித்தியார்க்குள்ள அறுவகையுரையினும், சிவப்பிர காசத்துக்கு மதுரைச் சிவப்பிரகாசர் வகுத்த நல்லுரை யினும் ஞானாமிர்தப் பகுதிகள் மேற்கோளாக வருவதை நாம் பார்க்கி றோம். அப் பெரியோர்கள் காலத்தில் இந்நூல் நன்கு பயிலப் பெற்றுவந்தது என்றற்குப் பிறிதொரு சான்று, சிவப் பிரகாசப் பெருத்திரட்டு என்னும் தொகை நூலின் கண், இந்த ஞானாமிர்தத் திருவகவல்கள் பல கோத்துத் தொகுக்கப்பட்டுள்ளமையாகும். பெருந்திரட்டைத் தொகுத்த ஆசிரியர் சுமார் 600 ஆண்டுகட்கு முன்னிருந்தவரென அதன்முகவுரை ஒருவாறு கூறுமாயினும், அதன் காலம் முந்நூறு ஆண்டுகட்குக் குறையாதென்று கொள்வது பொருந்தும். அத்தொகுப்பில் ஞானாமிர்தப்பாட்டுக்கள் உரை யுடன் சேர்த்துத் தொகுக்கப்பட்டிருப்பதே இம் முடிபுக்குத் துணை செய்கிறது. இனி முத்தி முடிவு என்னும் பழைய நூலொன் றினும் ஞானாமிர்தத்தின் பகுதிகள் சில காட்டப்படுகின்றன. இவ்வாற்றால் ஞானமிர்தம் என்னும் இந்த நூல் முந்நூறு ஆண்டு கட்குமுன், சமய தத்துவ ஆராய்ச்சி யுலகில் மிக்க நன்மதிப்பும் பயிற்சியும் பெற்று நிலவிவந்தது என்பது தெளிவாம்.

 சித்தாந்த நூற்பயிற்சி எனக்கு வாய்த்தபோது ஞானாமிர்தக் குறிப்புக்கள் சில சிவஞானபாடியத்தில் வரக்கண்டு. நூலை முழுவடிவில் படிக்க வேண்டும் என்ற வேட்கை உண்டாவ தாயிற்று. ஆகவே அதனை வாங்கிப் படித்தபோது, அதன் நலம் முற்றும் துய்ப்பதற்கு உரிய தமிழறிவு என்பால் இல்லாமை மிக்க இடரை விளைத்தது. அதனால் சங்க நூற்பயிற்சியில் என்கருத்துப் படர்ந்தது. ஒரு சில நூல்களைப் பயின்றபின் ஞானாமிர்தத்தின் தமிழ் நலம் எனக்கு இன்பம் செய்வதாயிற்று.

 1932- ஆம் ஆண்டுக் கோடைவிடுமுறைக்கு யான் என் ஊராகிய ஒளவையார்குப்பம் சென்றிருந்த போது, வீட்டில் ஒருமூலையில் கிடந்த ஏடுகளைப் புரட்டிப் பார்க்கலானேன். அவற்றுள் ஒரு ஏட்டின்மேல் “பெருமண்டூர்ச் சீபாலன் எழுதியது” என்ற குறிப்பு இருக்கக் கண்டு அதனைப் பிரித்துப் பார்த்தேன். ஏடு ஒன்றை எடுத்துப் படிக்கவும், அதன்கண், “இன்னிசை எழுவர்ப் பயந்தோள்- சுநந்தன் முதலிய எழுவரைப் பெற்றாள்” என்ற உரை இருக்கக்கண்டு, இது ஞானாமிர்தம் என்று அறிந்து அதனைப் படி எடுத்து அச்சுப் பிரதியோடு ஒப்பு நோக்கினேனாக, வேறுபாடுகள் பல இருப்பது புலனாயிற்று அதுகொண்டு ஞானாமிர்தத்துக்கு விளக்கவுரையொன்று எழுதுவது எனத் துணிந்து, முதற்கண் சில பாட்டுக்கட்கு உரை எழுதிச் சென்னைச் சைவசித்தாந்த சமாசத்தின் வெளியீடான சித்தாந்தம் என்னும் திங்கள் இதழில் வெளியிட்டேன். அதனைப் பாராட்டி இன்புறுத்திய அப்போதைய சமாச அமைச்சரும் அதன் வளர்ச்சிக்கெனத் தமது வாழ்வு முற்றும் உரிமை செய்தொழுகிய பெருஞ் சைவப் புரவலருமாகிய திரு. மா. பாலசுப்பிரமணிய முதலியார் B.A., B.L., அவர்கள், முதன் முதலாகக் குன்றக்குடியில் திரு. C.K. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஆண்டு விழாவில் ஞானாமிர்தம் என்பது பொருளாக என்னைச் சொற்பொழிவு செய்யுமாறு வற்புறுத்தினார்கள். அச்சொற் பொழிவைக் கேட்டிருந்த சித்தாந்த சபரம். பழனி. ஈசான சிவாசாரியார் அவர்கள் என்னை அன்போடு நோக்கி, “இரும்புக் கடலையைப் பக்குவமாக வேகவைத்து விட்டீர்கள்” என்று சொன்னார்கள். திரு. பண்டித மணியவர்களும் திரு. சிவக்கவி மணியவர்களும் இந்த ஞானாமிர்தத்தை நன்கு ஆராய்ந்து வெளியிடுமாறு பணித்தார்கள். அக்காலை அங்கே வந்திருந்த தூத்துக்குடி சித்தாந்தப் பேராசிரியர் ந. சிவகுருநாதப் பிள்ளையவர்கள் திருநெல்வேலிக்கு அண்மையிலுள்ள இராசவல்லி புரத்துச் செப்பறை மடத்தில் ஒரு ஞானாமிர்த ஏடு இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

 திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கு அப்போது அமைச்சராக இருந்த திரு. திருவரங்கம் பிள்ளை யவர்கள் துணை செய்யச் செப்பறைக்குச் சென்று அங்கே செப்பறை மடத்து அதிபராக விளங்கும் ஸ்ரீலஸ்ரீ அழகிய கூத்த தேசிகரைக் கண்ட போது அவர்கள் உரையுடன் கூடிய ஞானா மிர்த ஏடு ஒன்றினைத் தந்தார்கள். அதுபெற்றதும், புத்துரை எழுதக் கருதிய எண்ணத்தை விடுத்துப் பழைய வுரையினையே நன்கு ஆராய்ந்து வெளியிடுவது எனக் கருதி மேலும் ஏடுகள் தேடத் தொடங்கினேன். ஏடு தேடிச் சேர்க்கும் முயற்சி வீண் போகவில்லை. மேலும் இரண்டு ஏடுகள் கிடைத்தன. அவை வருமாறு.

 1. பெருமண்டூர்ச் சீபாலன் எழுதிய ஏடு. இது நூல் முழுவதும் உரையுடன் கூடியது; ஆயினும் 67- ஆம் அகவல் முதல் 75- ஆம் அகவல் முடியச் சில அடிகட்குக் குறிப்புரையும், சிலவற்றிற்குப் பொழிப்புரையும் கொண்டிருந்தது. பல இடங் களில் உரை செந்தமிழ் நடையில் இயன்று ஏனை உரைகளிலும் சில பல இடங்களில் வேறுபட்டிருந்தது.

 2.

 3. திருவெண்ணெய்நல்லூர் ஏடு : திருவெண்ணெய் நல்லூர்க்கு அண்மையில் சிறுமதுரை என்ற ஊரில் கிராமக் கணக்கராயிருந்த என் மாமன் திரு சொக்கலிங்கம் பிள்ளைய வர்கள் வீட்டிற்கு யான் ஒருகால் சென்றிருந்த போது. “திருவெண்ணெய்நல்லூர் மடத்துக் குருசாமியார் ஏட்டிலிருந்து எழுதியது” என்ற குறிப்புடன் இவ்வேடு எனக்குக் கிடைத்தது. இதன்கண் இருந்த உரை பெரும்பாலும் கண்ணழித் துரையே யாகும். “கால் கொடுத்து” என்று தொடங்கும் அகவல் முதல் “கழிபெருந் துன்பம் ” என்னும் அகவல் முடிய இதன்கண் இருந்தன. சில அகவல்களின் உரைமுடிவில் ஏனை ஏடுகளில் காணப்படாத இலக்கணக் குறிப்புக்களும், உரையிடையே கிரந்தச் சொற்களும் சொற்றொடர்களும் இதிற் காணப்பட்டன.

 3.  ஏனாதிவாடி ஏடு. ஒருகால் விழுப்புரத்தில் யான் என் தமையன் மனைக்குச் சென்றிருந்தபோது ஏனாதிவாடி யென்னும் ஊரைச் சேர்ந்த திரு. இராமச்சந்திரராவ் என்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரோடு நட்புற்று அளவளாவி அவர் மனையில் இருந்து இந்த ஏட்டினைப் பெற்றேன். இதன்கண் முதல் மூன்று அகவல்களும் இறுதியில் இரண்டு அகவல்களும் எழுதிய ஏடுகள் சிதைந்து மறைந்து போயின. “அறப்பயன் தீரின்” எனத் தொடங்கும் அகவலும் அதனை அடுத்து முன்னும் பின்னும் உள்ள அகவல் களும் இராமபாணப்பூச்சிக்கு இரையாகிச் சிதைவுற்றிருந்தன. உரையிடையே கிரந்தத் தொடர்கள் ஆங்காங்கு அருகிக் காணப் பட்டன.

 4.  செப்பறை ஏடு. இது நூல் முழுதும் உரையுடன் கூடியது. “அறப்பயன் தீரின்” என்று தொடங்கும் அகவலும் அதன் உரையும் எழுதிய ஏடுகள் இதன்கண் காணப்படவே இல்லை. கிரந்தச் சொற்களால் காணப்பட்டவை இந்த ஏட்டில் தூய தமிழிலே எழுதப்பட்டிருந்தன.

 செப்பறை ஏடு கிடைப்பதற்கு முன்பே கிடைத்த ஏடுகளைப் பெருந்திரட்டும் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடும் ஆகிய இரண்டனோடும் ஒப்பிட்டு ஒழுங்கு செய்து முடிந்த காலையில், யான் திருப்பதி திருவேங்கட முடையான் கீழ்க்கலைக் கல்லூரியிலிருந்து விடுதலை பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சித்துறை விரிவுரையாளனாகப் பணிமேற் கொண்டு வந்துசேர்ந்தேன். அந்நிலையில் ஆராய்ச்சித் துறைத் தலைவராக விளங்கிய சைவத் திரு. கா. சுப்பிரமணியம் பிள்ளையவர்கள் செப்பறை யேட்டோடு ஒப்பு நோக்கி வேண்டிய ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் வெளியிட வேண்டு மெனப் பணித்து இதற்குத் துணையாக என் நண்பர் வித்துவான் திரு. க. வெள்ளை வாரணம் அவர்களை உதவினர். அவருடைய கூர்த்த அறிவும் சீர்த்த புலமையும் உண்மைப் பாடங்களைக் கண்டறிதற்குப் பெருந்துணை செய்தன. ஞானாமிர்த ஆசிரியரைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட போது கல்வெட்டுக் களைப் படித்தறிதற்கும் இடையிடையே எழும் ஐயங்களை அகற்றுதற்கும் உடன் பிறந்தார் போல உறுதுணைசெய்த சைவத் திரு T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களை நினைக்குந் தோறும் என் மனம் இன்பத்தால் ஏற்றம் பெறுகிறது.

 தமிழகத்தின் மனத்தாமரையாக விளங்கும் தில்லைப் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கில் வரும் இள மாணவர் கட்குப் பல துறைப்பட்ட கலை நலங்களை வழங்கிப் பண்புமேம் பட்டுத் திகழும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சித் துறை என்னும் பெருங்கிளையிற் பழுத்த நறுங்கனியாக இந்த ஞானாமிர்தம் உரையும் ஆராய்ச்சிக் குறிப்பும் பிறவும்கொண்டு வெளிவருகின்றது இந்த அருஞ்செயற்குச் செல்வச் செவிலியாய் வேண்டும் பொருள் தந்து புகழ் பரவி விளங்கும் திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் காசி வாசி ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகளின் வழி வந்து சிறக்கும் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அருள்புரிந்த வண்ணம் உள்ளார்கள். அவர்களது அருட்செயற்கு அறிவு வளம்படைத்த நம் தமிழகம் தன் நன்றியினை என்றும் மறவாது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து செய்த இத்தமிழ்ச்சைவப் பணியினை, இன்றுயான் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இருந்துகொண்டே ஆற்றுமாறு வேண்டும் உதவிகளைச் செய்து ஊக்கிவரும் கல்லூரி நிறுவிய முதல்வரும், கலைவளர்க்கும் பெருஞ்செல்வரும் தமிழ் வள்ளலுமாகிய சைவப் பெருந் திரு. கருமுத்து, தியாகராசன் செட்டியார் அவர்களது பெருநன்றியினை என் உள்ளம் உவந்து பரவுகின்றது.

 இன்றைய தமிழ் நன்மக்கட்குத் தவச்செல்வமாய்த் தோன்றிச்சமயவாழ்வு தழைத்தற்குரிய செம்பொருள் ஞானத்தைச் செந்தமிழ் நெறியில் சிறக்க வழங்கி உய்திதந்து உலாவும் சிவஞான போதம் தமிழரிடையே நூல்வடிவில் தோன்றுதற்கு முன்பே தோன்றிச் சிவாகமங்களின் துணி பொருளைத் திரட்டித் தீவிய இனிய செந்தமிழ் அகவற்பா வடிவில் மக்கட்கு வழங்குமுகத்தால் தமிழாகமம் என்ற சிறப்புப் பெயருடன் விளங்கிய ஞானாமிர்தம் இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வருகின்றது. வருக ஞானாமிர்தம். வாழ்க தமிழ். வளர்க சைவம். வாழியர் தமிழர்.

 “ஞாலம் நின்புக ழேமிக வேண்டும் தென்

 ஆலவாயில் உறையும் எம் ஆதியே”

 மதுரை,

 12.02.1954.

 ஒளவை சு. துரைசாமி.

 முன்னுரை

 நமது நாட்டில் நிலவும் சமயங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்தது சைவம். சமய நூலாராய்ச்சியும் புதைபொருளா ராய்ச்சியும் சைவம் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னையது என்று குறிக்கின்றன. எனினும், நிலவுலகில் ஏனைப்பகுதிகளில் வாழும் பழங்குடிமக்களிடையே கடவுட்கொள்கை தோன்றி நிலவத் தொடங்கிய காலத்துக்கு முன்பிருந்தே நம் தமிழகத்தில் சைவம் நிலைபெற்றிருந்தது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். தொல் காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களில் கடவுள் என்ற சொல்லால் குறிக்கப்படும் பொருள் சிவபரம்பொருளே யாதலின், சிவத்தை முழு முதற் கடவுளாகக் கொண்டொழுகும் சைவம் தமிழ் மக்களின் உரிமைச் சமயம் என்பது தெளிந்த முடிபு.

 முழு முதற்கடவுளைக் குறிக்கும் சிவம் என்னும் சொல் சங்ககால இலக்கியங்களில் காணப்படாமையால் சிவநெறி பிற்காலத்தே தோன்றியதாம் எனச் சிலர் கருதுவர்; வேறு சிலர், சிவம் என்பது வடசொல்லெனவும், எனவே, சிவ நெறியாகிய சைவம் வடவர் வழி வந்ததெனவும் கருதுகின்றனர். சங்ககாலத்துச் சமய நூல்களோ, சமயநூற்கருத்துக்களைக் காட்டும் பேரிலக்கியங் களோ இதுகாறும் நமக்குக் கிடைத்தில. ஒரு சில புலவர்கள் ஓரொருகாலத்தில் பாடிய பாட்டுக்களிலிருந்து தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்ட பாட்டுக்களின் தொகுதிகளே இன்று சங்க இலக்கியம் என்ற பெயரால் நமக்குக் கிடைத்துள்ளன. பொருளிலக் கணத் துறைகட்குரிய இலக்கியமாகும் தகுதியுடைய பாட்டுக்களே இத்தொகை நூல்களில் தொகுக்கப்பட்டிருத்தலால், இவற்றையே முழுத்த இலக்கியங்களாகக் கொண்டு தமிழ் மக்களின் பழைய சமய வாழ்வு தேர்ந்து முடிபு காணமுயல்வது நிரம்பாது. ஆதலால், சங்கத்தொகை நூல்களில் சிவம் என்னும் சொல் காணப்படாமை பற்றி அது தமிழ்ச் சமயமன்று எனத் தள்ளக் கருதுவது அறமாகாது.

 மக்கள் பிறந்து மொழிபயிலத் தொடங்கும்போதே தம் தாய் தந்தையரைக் குறித்து மொழியும் அம்மா, அப்பா என்ற சொற்கள் தூய தமிழ்ச்சொற்கள் என்பதை யாவரும் நன்கு அறிவர்; இச் சொற்களை அறிந்த பன்னாட்குப் பின்பே சிவம் என்னும் சொல் மக்கள் பேச்சு வழக்கில் வந்துசேரும். இந்த அம்மா அப்பா என்ற சொற்கள் இன்று நாம் பெற்று மகிழும் சங்கவிலக்கியங்களில் காணப்படவில்லையே, அதனால் பெற்றோர்களை அம்மா அப்பா என வழங்கும் வழக்காறு தமிழரிடையே கிடையாது என்று கூறுவது பொருந்தாதன்றே! மேனாட்டு ஆங்கிலமக்கள் தாயை மம்மா என்றும், தந்தையைப் பப்பா என்றும் வழங்கும் வழக்காறு உளது. அதைக்கண்டு, அம்மா அப்பா என்பது மம்மா பப்பா என்பவைகளின் திரிபுபோலக் கருதி, தமிழ் வழக்கன்று எனத் தள்ளிவிடக் கூடுமா? ஸ்பீச்சு என்னும் ஆங்கிலச் சொல்லோடு பேச்சு என்னும் தமிழ்ச்சொல் ஒத்திருப்பது பற்றி அது தமிழன்று என்று கருதமுடியுமா? ஆகவே பழந்தமிழ்த் தொகை நூல்களில் சிவம் என்னும் சொல் காணப்படாமைபற்றிச் சிவநெறியைத் தமிழ் நெறியன்று எனப் புறக்கணிக்கக் கருதுவது நேர்மையன்று என்பது தெளிவாம்.

 சிவம் என்னும் சொல்பற்றி நிகழ்ந்த ஆராய்ச்சியில், வட மொழியில் மிகத் தொன்மை வாய்ந்த சமய நூல்களான வேதங்களில் சிவம் என்னும் சொல் இல்லையென்பது விளங்கிவிட்டது வேதங்கள். இந்திரன், அக்கினி, உருத்திரன் முதலிய பல தெய்வங் களைக் குறித்து வழிபடும் தன்மை உடையவை; சிவநெறி முழுமுதற் பொருளாகிய கடவுள் ஒன்றே எனத் துணிந்து வழிபடும் சிறப்புடையது. எனவே, அது வேதங்களில் காணப்படுதற்கு இடமில்லை. பரம்பொருள் ஒன்றே எனத் தெளிந்துரைக்கும் வேதாந்த நூல்களான உபநிடதங்களுள் பழமையான நூல் களுள்ளும் சிவம் என்னும் சொல் வழக்கு இல்லை. எனவே, சிவம் என்பது வடசொல்லன்று என்பது தேற்றம். மொழிநூல் துறையில் பெருமுயற்சி செய்து சொற்களின் உண்மை வடிவு காண்பான் பேராராய்ச்சி செய்த கிரையர்சன் என்ற மேனாட்டறிஞர், சிவம் என்பது வட சொல்லன்று என முடித்து அது தூய தமிழ்ச் சொல்லாம் எனத்தெளியவுரைத்துள்ளார். ஆதலால், சிவம் என்பது தமிழ்ச் சொல்லென்றும், அதனை மேற் கொண்டொழுகும் சிவநெறியாகிய சைவம் தமிழ் நெறி யென்றும் இனிது விளங்கு கின்றன. இடைக்காலத்தே முத்து, முகம், பவழம், மணி, தோகை முதலிய தூய தமிழ்ச் சொற்கள் பல வடமொழியில் ஏறி அம்மொழிக் கேற்ப இலக்கண முடிவு பெற்றது போல, இச் சிவமென்னும் சொல்லும் வடநூல்களில் ஏறிச் சைவம், சிவானுபவம், சிவோகம் என்றாற்போலும் வடநூல் முடிபு பெற்றுள்ளமை நினைவு கொள்ளத்தக்கது.

 ஏனை எந்நாட்டுமக்களாலும் இறைவன் என்னும் முழுமுதற் கடவுள் என்றும் கருதப்படுவது எதுவோ, அதுவே தென்னாடுடைய மக்களால் சிவம் என்று கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாணிக்கவாசகர் முதலிய சான்றோர்கள் கூறுகின்றனர். இதனாலும், சிவநெறி தென்னாட்டவர்க்கே சிறப்பாக உரிய கடவுள் நெறி யென்பது தெளிவாகத் தோன்றுகிறது.

 சிவமென்னும் சொல்பற்றிய ஆராய்ச்சி இவ்வாறு இடம் பற்றியும் காலம்பற்றியும் வேறுபடத் தோன்றினும், சிவபரம் பொருள் எந்நாட்டவர்க்கும், எக்காலத்தவர்க்கும் ஒப்ப உரிய ராதலின், பொருளாகாத இவ்வாராய்ச்சியை இவ்வளவில் நிறுத்திக்கொள்வாம். இவ்வாறும் சில தடைகளை எழுப்பி மக்கள் உள்ளத்தைச் சிவநெறிக்கண் செல்லாதவாறு செய்யும் வட மொழியாளரும் தமிழரும் சிலர் இருப்பதனால் இத்துணையும் முதற்கண் எடுத்தோத வேண்டிய இன்றியமையாமை பிறந்தது.

 தோற்றக்கேடுகள் இன்மையின் நித்தமாய், தன்னை யொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய், தான் ஏனை உயிர்ப் பொருளோடு உடனாயும், உயிரில் பொருளிடை ஒன்றாயும் கலந்து எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாய் இலங்கும் செம்பொருள் ஒன்றே; அதுவே சிவம்; உயிர்களும் நித்தமே எனினும் அவை எண்ணிறந்த பலவாகும். அவை, சிவத்தை நோக்கச் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையன; அனாதியே மலக்கலப்புற்று இருத்தலின், அவை அறியாமை இருள் சூழ்ந்து கிடப்பன; மலநீக்கம் குறித்து உடம்பொடு கூடி இவ்வுலகில் தோன்றி வினைகளைச்செய்து பிறப்பிறப்புக்களை எய்துவன. இவ்வுலகும், இங்கே உயிர்கள் நிற்றற்குரிய உடம்புகளும் மாயையென்ற முதற்பொருளிலிருந்து சிவத்தால் படைக்கப்படுகின்றன. மாயையென்ற முதற்பொருளும் அனாதி நித்தமாயினும், சிவமும் உயிரும்போல அறிவுடைய பொருளன்று, மாயையினின்றும் தோன்றி அதன் கண்ணே ஒடுங்குவது பற்றி, மாயாகாரியமான உலகும் உடம்பும் மனமும் பிறவுமாகிய பொருள்கள் தோற்றக்கேடு உடைமையால் அநித்த மாகும். இங்கே கூறிய மலம், வினை, மாயை என்ற மூன்றுமாகிய அறிவில் பொருள்கள் உயிர்களோடு தொடர் புற்றிருப்பதால் அவை கட்டு என்று வழங்கும். எனவே, சிவம், உயிர், கட்டு என்ற மூன்றும் சிவநெறியின் அடிப்படையான பொருள்களாம். இவற்றை வட நூல்கள் முறையே பதி, பசு, பாசம் என்று குறிக்கின்றன. இக்காலத்தில் தமிழ் மக்கள் வாழ்வுக்குரிய அரசியல் நெறி முறைகள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டி ருப்பது போல, மக்களுடைய அரசியல் சமயவாழ்வுகளில் வடமொழிச் செல் வாக்கு மிக்கிருந்த காலத்தில் இவை வடமொழியில் எழுதப் பட்டனவே தவிர வேறில்லை. வட மொழியில் இருப்பது கொண்டு விலக்கக் கருதுவதும், வடவர்க்கே உரியவென்பதும் அறிவுடைமையாகா என்பது இவ்வாற்றால் இனிது விளங்கும்.

 இறை, உயிர், கட்டு என்ற மூன்றையும் சமய அடிப் படைப் பொருளாக வரையறுத்துக் கொண்டு நிலவும் சிவநெறி வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே நம் தமிழகத்தில் இருந்துவருகிறது. இறையாகிய சிவபரம் பொருள் இன்னவுரு இன்னநிறம் என்று கண்டுரைக்க முடியாத ஒன்றாதலின், அதனைக் கந்து வடிவில் வைத்து வழிபடுவது சங்ககால வழக்கு. கந்தும் நிலையமும் கொண்டு நிற்கும் கந்துடை நிலை சிவத்தை அறிவிக்கும் அடையாளம் குறி என்ற பொருள்படும் வடமொழி யால் சிவலிங்கம் எனக் கூறப்படுகிறது. இன்று சிவன் கோயில்களில் திருவுண்ணாழியில் காணப்படும் சிவலிங்கம் யாவும் பண்டைச் சங்க காலக் கந்துடை நிலைகளேயாகும். ஏனைக் குறிஞ்சி முல்லை முதலிய நிலங் கட்குரிய தெய்வமெனத் தமிழ்நூல் கூறும் சேயோன், மாயோன் முதலிய தெய்வங்கள் பிற்காலத்தே சிவன்கோயில்களில் பரிவார தேவதைகளாக வகுக்கப் பெற்றன. ஆதலால், சங்க காலத்துக் காணப்படும் கடவுள் நெறியே படிப்படியாக வளர்ந்து இன்று பெரிய பெரிய சிவத்தலங்களாகக் காட்சியளிக்கின்றனவே தவிர வேறில்லை. இவற்றைக் கூறுபடுத்தி விளக்கிக்கூறும் சமய நூல்கள் ஆகமங்கள் எனப்படும்.

 ஒருகாலத்தே வேதம், வேதாந்தம், ஆகமம் என்ற இவை சமயத்துறையில் சிறந்த வடநூல்களாக விளங்கின. இன்றும் அவற்றை விலக்குவோர் இல்லை. அவற்றுள் இருக்கு முதலிய வேதங்கள் மந்திரம் பிராமணம் என இருவகையாக இயலு கின்றன. மந்திரங்கட்குப் பொருளுரைக்கும் உரை போலப் பிராமணங்கள் உள்ளன. மந்திரங்கள் செய்யுள்போல உள்ளன. அவை பலவும், வருணன், இந்திரன், அக்கினி, சவிதா முதலிய பல தெய்வங்களைக் குறித்தும் அவற்றை வழிபடுவது குறித்துமே கூறுவனவாம். அவற்றால் முடிந்த பொருளாகக் காணப்படுவது பல தெய்வ வழிபாடு ஒன்றே. வேதங்களையும் அவற்றிற்குரிய ஐதரேயம் முதலிய பிராமணங்களையும் சேரக்கொண்டு அவற்றை வேதநூலின் கர்ம காண்டம் என வழங்குவது முண்டு.

 வேதங்கட்குப் பின்னர் நிற்பன உபநிடதங்கள். இவ்வுப நிடதங்களை ஆராய்ந்த அறிஞர்கள், “ஈண்டு உணர்த்தப்படும் பொருள்கள் கர்ம காண்டத்தில் உணர்த்தப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டன; அவை முத்தியின் தன்மையும் முத்திய டையும் ஸாதனமுமாம்; முதன் முதலில் நிஷ்காம கர்மாக்களைச் செய்து சித்த சுத்தியையடைய வேண்டும்; பின்னர் ஆசிரியனை அடைந்து ஆத்ம விஷயமாகச் சிரவணம் செய்ய வேண்டும்; சிரவணம் செய்தவற்றை யுக்தியோடு கலந்து மனனம் செய்து அவற்றைத் தனதாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர்க் கடவுளைத் தியானம் செய்ய வேண்டும். அவற்றால் அபரப்ரம்ம ப்ராப்தி அடையலாம். அதன் பின்னர்க் கடவுளருளால் ஞானம் அடைந்து கடவுளோடு கடவுளாய் ஒன்றாக வேண்டும். ஒன்றான பிறகு பிறப்பிறப்பு இல்லை; இவ்வுடலோடு இருக்கும்போதே ஒன்றாய் விட்டால் ஒருவனுக்கு இறப்பு இல்லை; அந்நிலையை ஜீவன் முத்தி என்பர். ஒன்றாக ஆவதற்கு முன்னரே அவன் இறப்பின், அஜ்ஜீவன், பித்ருயாணம் தேவயாணம் என்ற இரண்டு மார்க்கத்துள் ஒன்றின் வழியாகப் பித்ருலோகத்திற்கோ பிரும்மலோகத்திற்கோ கொண்டுபோகப்படுகிறான்; கடவுளைத் தியானித்தல் பல்வகைப் பட்ட தாகலின், உபாஸனங்கள் பல வகைப்படும்1” என்று கூறுகின்றனர். இவ்வண்ணம் உபநிடதங்கள் பிரமம் ஒன்றே எனத்துணிந்து பிரமஞானம் பெறுதற்குரிய நெறிகளை உரைப்பது பற்றி வேதத்தின் ஞானகாண்டம் என்றும், வேதத்தின் முடிவில் நிற்பது பற்றி வேதாந்தம் என்றும் வழங்கும்.

 வேத வேதாந்த நூல்களின் செயல் முறைகளிலும், கருத்து வகைகளிலும் நாளடைவில் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் தோன்றின. அதனால், பௌத்தம் முதலிய சமயங்கள் பிறந்து வளர்ந்தன. வேத வேதாந்த நூல்கட்குப் புத்துரை காணும் அறிஞர் பலர் உளராயினர். அவரும் பலரும் தத்தம் கலைப்புலமை கருவியாகப் பெரிய பெரிய விரிவுரைகள் கண்டனர். பின்னர் எழுந்த பிரமசூத்திரத்துக்கு இவ்வாறே பேருரைகள் பல உண்டாயின. சங்கரர், இராமானுசர், மாத்துவர், சீதண்டர் முதலியோர் வகுத்துரைத்த பேருரைகள் பலரைத் தம்தம் வழியில் ஈர்த்தன. இவ் வாற்றால் சமயத்துறையில் கருத்து வேற்றுமைகளும் தெளிவின்மையும் சிறந்து நின்றன.

 வேத வேதாந்த நூற்றுறையில் கலக்கம் பெருகி வருங்கால் ஆகமங்களின் பொருளாராய்ச்சியும் செயற்றிறங்களும் ஆராயப் பட்டன. பண்டை நாள் முதல் இருந்துவரும் ஆகமங்கள் பல வற்றையும் ஆராய்ந்து சிவாகமம் தேர்ந்து கொள்ளப்பட்டன. அவை காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டாகும். இவற்றின் விளக்கம் குறித்து உபாகமங்கள் பல உண்டாயின. இவற்றின் பொருளி யல்பு கண்ட அறிஞர், சரியை கிரியை யோகம் ஞானம் என நான்கு பாதங்களாக இவற்றைப் பாகுபாடு செய்தனர். இவற்றைத் தனித்தனி எடுத்துரைப்பனவும், ஒரு சிலவற்றை வரைந்து கொண்டு உரைப்பனவும் என ஆகமங்கள் பலதிறப்படுகின்றன. இச்சிவாகமங்கள், பதி, பசு, பாசம் என முன்னர்க்கூறிய பொருள் மூன்றையும் அறுதி யிட்டு முடிவு கட்டிக் கூறுவது பற்றி, சித்தாந்தமென்று வழங்கின. “வேதாந்தத் தெளி வாம் சைவசித்தாந்தம்” என்றும், “வேதசாரம் இதம் தந்த்ரம் சித்தாந்தம்” என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

 வேதாந்த நூல்கள் உயரிய நடையில் பிரமஞானத்தையும் அதற்குரிய சாதன வகையினையும் உணர்த்தி வந்தன; அதனால் அவை வடமொழிவல்ல பெரும் புலவர்களிடையே இருந்து ஞானப் பணி புரிந்து வந்தன. ஆயினும் அவை கருத்து வேற்றுமை மிகுந்தனவேயன்றி யாவரும் உணரத்தக்க எளிய நிலையை அடையவில்லை. அவற்றால் பெரிதும் உயர்த்துக் கூறப்பட்ட வேள்வி முதலிய செயல்வகைகள் மாறுபட்டெழுந்த பௌத்த சயின சமயங்களின் வளர்ச்சியால் நாட்டில் செல்வாக்கிழந்து மறைந்தன. சிவாகமங்கள் வடமொழி பயின்றோர் இனிது உணரத் தக்க நிலையில் எளிய நடையில் அமைந்து விளங்கின. அதனால் அவற்றின் செல் வாக்கு ஓரளவு குறையாமலே இருந்து வந்தது. ஆங்காங்கே மக்களிடையே தொன்று தொட்டு வந்துகொண்டிருந்த கோயில் வழிபாட்டுச் சைவ நெறி குன்றாமலே இருந்து வந்தது.

 இந்நிலையில் களப்பிரர் என்னும் ஒருவகைக் கூட்டத்தார் தமிழகத்தில் புகுந்து தமிழ் வாழ்வைச் சீரழித்தனர். தமிழிசையும் தமிழ் நாடகமும் ஒளி குன்றின. தமிழ் இலக்கியங்கள் பல இறந்தொழிந்தன. தமிழ்ச் சைவநெறி தலைதடுமாறிற்று. பின்னர்த் தமிழகத்தின் வடபகுதியான தொண்டைநாட்டில் பல்லவருடைய ஆட்சி நிலைபெற்று நடக்கத் தொடங்கிற்று. அவர்கள் தமிழ் நாட்டவரல்லர்; அதனால் அவர்கள் காலத்தில் வடமொழியே மிக்க செல்வாக்குப் பெற்றது. வடமொழி பயிற்றும் கல்லூரிகள் பல காஞ்சிமா நகரத்திலும்1 பிறவிடங்களிலும் உண்டாயின. பல்லவ வேந்தர் பலர், வடமொழி வாணர்களுக்கு சிறப்புச்செய்து ஆதரித்தனர். முதல் மகேந்திரவன்மன் முதலி யோர் வட மொழியில் நாடகங்கள் எழுதினர். இவ்வகையில் தமிழகத்தில் தமிழ் மொழியின் இடத்தே வட மொழி தங்கிச் சமயத் துறையிலும் ஆட்சி வகையிலும் சிறந்து விளங்கிற்று. நாட்டு மக்களுடைய தாய்மொழியில் சமயவுணர்வு நல்கும் நூல்கள் அருகினபடியால், அவர்களுடைய பொதுவாழ்வில் சமயவுணர்வும் ஒழுக்கமும் குன்றின.

 இதற்கிடையே பௌத்தத் துறவிகளும் சயினசமயத் துறவிகளும் ஆங்காங்கே மடங்களும் பள்ளிகளும் அமைத்து மக்களிடையே தங்கள் சமயக் கருத்துக் களைப் பரப்பினர். சயினப் பள்ளிகளினும் பௌத்தப்பள்ளிகள் பல்லவர் காலத்தில் தொடக்க நிலையில் பெருகியிருந்தன. நூற்றுக்கு மேற்பட்ட பௌத்தப்பள்ளிகளையும், பத்தாயிர வர்க்குக் குறையாத பௌத்தத் துறவிகளையும் இப் பகுதியில் காணலாம் என ஹியூன்சாங் குறிக்கின்றார்.2 பின்னர், பௌத்த மடங்களில் பெரும்பொருள் சேர்ந்தது; அதன் இயற்கை விளைவாக அம்மடங்களின் செயல் முறைகளில் பொய்யும் வழுவும் புகுந்தன. வேற்றுச் சமயங்களும் படிப்படியாக வளர்ச்சி பெற்றன; மக்களுடைய ஆதரவு குன்றிற்று. இதன் பயனாகப் பௌத்த சமயம் தமிழகத்திலிருந்து மறைவ தாயிற்று. ஆயினும் அதனிடத்தே சயின சமயம் வளர்ந்து அரசர் பலரைத் தன்பால் ஈர்த்துக் கொண்டது. பல்லவ வேந்தனான மகேந்திரவன் மனும், பாண்டிய மன்னனான நெடுமாறனும் சயின சமயத்தை மேற்கொண்டனர். “அரசன் எவ்வழி அவ்வழிக் குடிகள்” என்ற மொழிப்படி நாட்டில் மக்கள் பலர் சயினர்களாயினர். சயின சமயத்தை மக்கட்கு எடுத்துரைக்கும் சயினச் சான்றோர் சமணர் களாதலின், சயின சமயமும் சமண சமயம் என்றே தமிழகத்தில் வழங்கப் பட்டது.

 பௌத்த சமண சமயங்களின் வளர்ச்சியால் செயற் சிறப்புக் குன்றியிருந்த வைதிக சமயம், பொதுமக்கள் வழங்கும் தமிழ் மொழியில் தனது சமயப் பணியைச் செய்யாது சிவவழி பாட்டையும் சிவாலய வழிபாட்டையும் வற்புறுத்தி ஒழுகிய சிவாகமமாகிய சித்தாந்த நெறியோடும் இகலிப் பூசலிடத் தலைப்பட்டது. சிவாகமங்களை ஞானநெறிக்குப் பிரணமாண மாகக் கொள்ள மறுத்துத் தன் வாழ்வுக்குக் கேடு செய்து கொண்டது. ஆகம வழிநின்ற அறிஞர்கள் அக்கால நிலையை நன்கு உணர்ந்தனர். அவர்கள் ஆங்காங்கு ஞானநிலையங்களாகத் திருமடங்கள் நிறுவி அவற்றின் வாயிலாக நாட்டு மக்கட்கு நற்பணி புரியலுற்றனர். இம்மடங்கள், அறிவு வேண்டுவோர்க்குக் கல்வியும், நோயுற்றோர்க்கு மருத்துவமும், பசித்து வந்தோர்க்கு உணவும் நல்கிப் பணிபுரிந்து வந்தனர்.

 கடவுட்கொள்கையும் வினையுணர்வும் மறுபிறப்பும் சமயவாழ்வின் உயிர்நாடியாக இருந்தன. பௌத்த சமண சமய நூல்கள் கடவுட்கொள்கையை மிகுதியும் வற்புறுத்தாது வினை யுணர்வையும் மறுபிறப்பையும் பெரிதெடுத்துப் பேசின. கடவுள் வழிபாட்டை நன்கு வற்புறுத்தாமல், பொய், கொலை, களவு, கள், காமம் என்ற இவற்றைக் கடிவதாகிய நல்லற மொன்றையே சமயப் பேருணர்வும் பேரொழுக்கமுமாகப் பேணியுரைத்தன. அவரவர் செய்யும் வினைப் பயன்களை அவரவரும் நுகர்ந்து கழிக்க வேண்டுமேயன்றி, வினைத் தொடக்கினின்று உயிர்களை விடுவிக்கும் ஆற்றல் இறைப்பொருட்கும் இல்லையென ஏதுக் களாலும் எடுத்த மொழிகளாலும் வற்புறுத்துவதிலேயே சமயச் சொற்போர்கள் வழங்கி வந்தன.

 இந்நிலையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் முதலியோர் தோன்றினர். அவர்கள் காலத்தே ஆகம வழிவந்த சிவநெறி நாடெங்கும் பரவியிருந்தது; ஆங்காங்கே சிவன்கோயில்களும் இருந்து வந்தன; கோயில்களில் நாள்வழிபாடும் ஆண்டுவிழாக்களும் நடைபெற்று வந்தன. என்றாலும் மேலே காட்டிய காரணங்களால் மக்களிடையே கடவுட்கொள்கையில் அழுந்திய உள்ளமும், கடவுள் வழி பாட்டால் வினையினின்றும் வீடுபெறலாம் என்ற நம்பிக்கையும் குன்றியிருந்தன. இவற்றை வற்புறுத்தி யுரைக்கும் நல்லாசிரியன் மார்களின் வருகையை அக்காலம் எதிர்நோக்கியிருந்தது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் தோன்றி, நாடு முழுவதும் சுற்றி, சிவன் கோயில் இருக்கும் ஊர்தொறும் சென்று நாட்டுக்கு உரிய சிவ நெறிக்கருத்துக்களை மக்கட்கு அறிவுறுத்து வாராயினர்.

 திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் ஆகிய மூவர் வரலாறுகளையும் நோக்கின், ஞானசம்பந்தர் தமிழகத்தின் தெற்கிலும், நாவரசர் வடக்கிலும், நம்பியாரூரர் மேற்கிலும் சுற்றிச் சமயத் தொண்டு சிறப்புறச் செய்திருப்பது புலனாகிறது. அவர்கள் காலத்தில், தமிழகத்தில், காளாமுகம். பாசுபதம், மாவிரதம் முதலிய அகச் சமயங்கள் இருந்தி ருக்கின்றன. ஆயினும், அச் சமயத்தவர்கள் ஆங்காங்கு இருந்து கொண்டு தங்கள் சமயக் கொள்கைகளைச்சிற்சிலருக்கு அறிவுறுத்தி வந்தனரேயன்றி இப்பெருமக்களைப் போல நாடுமுழுதும் பரந்துசென்று பணிபுரியவில்லை. அவர்களில் காளாமுக சைவத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றனர் என்பதைக் கீழைச் சளுக்கவேந்தர் கல்வெட்டுக் களேயன்றி, கும்பகோணத்துக்கு அண்மையிலுள்ள தாராசுரத்துத் கல்வெட்டும்1 கொடும்பாளூர்க் கல்வெட்டும்2 கோயில்தேவராயன் பேட்டையிலுள்ள கல்வெட்டும்3 குறிக்கின்றன. இவ்வாறே காபால சமயத்தவரும்4 பாசுபதரும்5 மாவிரதரும்6 இருந்தனர் என்பதை அரசியற்கல்வெட்டறிக்கைகள் எடுத் துரைப்பதனால் அறியலாம்.

 இங்ஙனம் பல்வேறு சமயத்தவர் இருப்பினும், இவர்களது சமயக் கருத்துகளை விரித்தோதும் நூல்களுள் ஒன்றேனும் தமிழில் கிடைக்காமையால் இவர்கள் தமது சமயவுணர்வு பெருகுதற்கு மேற்கொண்டிருந்த மொழி தமிழன்று என்பதும் தெரிகிறது. இச்சமயங்களின் இடையே திருஞான சம்பந்தர் முதலியோர் ஆகம வழிவந்த சைவ நெறியே இனிய வழிபாட்டுத் திருப்பாட்டுக்களாக இசைத் தமிழில் பாடி திருப்பாட்டுக்கள் பலவும் இன்று சைவத்திருமுறைகளாக நின்று பயன்செய்து வருகின்றன.

 இப்பெருமக்கள் காலத்துக்குப் பின் , சைவநெறியில் புதுமலர்ச்சியுண்டாயிற்று. நாட்டுமக்கள் அறிந்த மொழியாகிய தமிழில் பல்லாயிரக்கணக்கான திருப்பாட்டுக்கள் தோன்றி சமயவுணர்வும் ஒழுக்கமும் பெறுவித்தன. அனைவரும் பேரார் வத்தோடு பேணிப்பயின்று பயன் பெறுவாராயினர். அவர்கள் காலத்தேயே பல்லவரும் பாண்டியரும் வேற்றுச் சமயத்தைக் கைவிட்டுத் தமிழகத்தில் தமிழகத்துக்கேயுரிய சைவத்தை மேற்கொண்டனர். தமிழகத்தில் சிவன்கோயில்கள் கல்லாலும் பிறவற்றாலும் எடுக்கப் பெற்றன. வானளாவயுயர்ந்த கோபுரங்களும் விமானங்களும் பெருக உண்டாயின.

 சைவநெறிக்கண் தோன்றிய புதுமலர்ச்சியால் வேந்தர் களும் பொதுமக்களும் சிவவழி பாட்டிலும் சிவன்கோயில் திருப்பணியிலும் பேரீடுபாடு கொண்டனர். திருக்கோயில் அமைப்பும், வழிபாட்டு முறையும் தெளித்துரைக்கும் ஆகமப் பயிற்சியால் மக்கட்கு நாட்டமுண்டாயிற்று. சிவாகமங்களை விரும்பிப்பேணிய சிறப்பால் பல்லவ வேந்தன் ஒருவன் ஆகமானுசாரி என்று சிறப்புப் பெயரும் பெற்றுள்ளான். இச் சிவாகமங்களைப் போற்றியுரைக்கும் சான்றோர் சிவாசாரிய ரென்றும் சைவாசிரியர் என்றும் கூறப்படுவர். இச்சைவாசிரியன் மார் ஆங்காங்கே தனித்தனி இடம் அமைத்துக் கொண்டு சைவாகமக் கருத்துக்களையும் ஒழுக்கங்களையும் மக்கட்கு அறிவுறுத்தி வந்தனர். அவ் விடங்கட்கு மடம் என்றும் குகை யென்றும் பெயர்கள் வழங்கின. இவைகள் சிறப்பு வகையில் சமய அறிவும் சமய வொழுக்கங்களும் கற்பித்தனவாயினும் பொதுவகையில் மக்களது பசிப்பிணிக்கு உணவும், உடற்பிணிக்கு மருந்தும் உதவின. இவ்வாற்றால், இம்மடங்கட்கு மக்களது நல்லாதரவு பெருகியிருந்தது வேந்தர்களும் மிக்க பொருளும் நிலங்களும் தந்து இம்மடங்களை நன்கு பேணினர். இச்சைவாசிரியர்களைத் தங்கட்கு அருட்குருவாகவும் அரசகுரு வாகவும் கொண்டு பரவினர். இவர்கள் பால் சிவதீக்கைபெற்றுச் சைவ வொழுக்கம் தலைநின்ற வேந்தர் பலர்.

 சைவாசிரியன்மார் வகுத்துக்கொண்டிருந்த மடங்களும் குகைகளும் நமது நாடு முழுதும் பரவியிருந்தன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் காலத்திலும் இவைகள் திருப்புகலூர், திருவீழிமிழலை திருமறைக்காடு, மதுரை முதலிய இடங்களில் இருந்தன என்பதைத் திருத்தொண்டர் புராணம் தெரிவிக்கின்றது, பின்னர்த் தோன்றிய கல்வெட்டு களும், செப்பேடுகளும் இவற்றின் இருப்பை அவ்வவ் விடங் களில் குறிக்கின்றன. திருஞானசம்பந்தன் குகை, திருநாவுக்கரசர் மடம், திருத்தொண்டத் தொகையான் திருமடம் எனப் பலமடங்களும், குகைகளும் சோழ பாண்டியர் கல்வெட்டுக் களில் இடம் பெறுகின்றன.

 சமயத் தொண்டு புரிந்த இம்மடங்கட்குத் தலைவர்களாகச் சைவாசிரியர் விளங்கினர். அவர்பால் அருளுரை கேட்டு அவர் விதித்த ஒழுக்கத்தை மேற்கொண்டு மாணவர் பலர் இருந்தனர். தலைமை தாங்கும் சைவாசிரியர் இறந்தால் அவர் மாணவருள் ஒருவர் தலைவராகி மடத்தின் திருப்பணியைச்செய்வர்; அவர்க்குப் பின் அவருடைய மாணவர் தலைவராவர். இவ்வாறு ஆசிரியர் மாணவர் என்ற முறையில் வழிவழியாக இம்மடங்கள் நின்று நிலவின. இது சந்தானம் என்றும் வழங்கும்.

 திருஞானசம்பந்தர் முதலிய சிவஞான ஞாயிறுகள் தமிழகத்துச் சைவவானத்தில் தோன்றிச் சிவஞானப் பேரொளியைச் செந் தமிழால் பரப்பிய காலத்தில், வடநாட்டில், மத்த மயூர சந்தானம் என்றொரு சைவாசிரியர் மரபு விளங்கிற்று. தேரம்பிபாலர், ஆமர்த்தக தீர்த்த நாதர், புரந்தரர், கவச சிவர், சதாசிவர், இருதய சிவர், வியோம சிவர் எனச் சைவாசிரியர் பலர் வழிவழியாக விளங்கி வந்தனர். இவருள், கடம்ப குகாதிவாசி கடம்பகுகை யென்னுமிடத்திலும், சங்கமாதிகாதிபதி சங்க மாதிகையிலும், தேரம்பிபாலர் தேரம்பியிலும், ஆமர்த்தக தீர்த்தநாதர் ஆமர்த்த கத்திலும் இருந்து சமயப்பணி புரிந்தனர், புரந்தரர் உபேந்திரபுரம் என்னும் இடத்தே இருந்தார். அவந்தி வன்மன் என்னும் வேந்தன் புரந்தரர்பால் சிவ தீக்கை பெற்றுத் தன்னாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே சமயப் பணி புரியுமாறு செய்தான். அவர் அங்கே ஓர் ஊரில் மடம் ஒன்றை நிறுவி அவ்வூர்க்கு மத்த மயூரபுரி எனப் பெயரிட்டுத் தமது மரபின் பெயரை நிலைபெறுவித்தார்; இராணி பத்திரம் (Ranod) என்னுமிடத்தே ஒரு மடத்தையும் அவர் ஏற்படுத்தினார். அவர் வழி வந்த வியோம சிவர் அம்மடங்களை வளம்படுத்திச் சமயப்பணியை விரிவு செய்தார். மத்த மயூர தடாகத்தைக் கட்டியவரும் அவரே என்பர். ஆமர்த்தகதீர்த்த நாதர் இருந்த ஆமர்த்தகத்திலிருந்து ஒரு கிளை தோன்றிச் சிவபுரி சந்தானம் என்ற பெயருடன் வட நாட்டில் சமயத் தொண்டு புரிந்தது.1

 மேலே கூறிய ஆசிரியருள் இருதய சிவர் என்பார்பால் சேதி நாட்டு வேந்தன் இலக்குமணராசன் சிவதீக்கை பெற்று அவரைத் தன் நாட்டிற்கு அழைத்துச்சென்று சிறப்பித்தான். அவன், தன் நாட்டிலுள்ள வைத்தியநாதமடம், நகுலேசுரமடம் என்ற இரண்டுக்கும் அவரையே தலைவராக இருந்து நடத்துமாறு ஏற்பாடு செய்தான். அதற்கு இசைந்த இருதய சிவர் தம்முடைய மாணவரான அகோரசிவர் என்பவரை நகுலேசுர மடத்துக்குத் தலைவராக நியமித்தார்.

 மத்தமயூர சந்தானத்தின் ஒரு கிளையினர் களச்சூரி வேந்தர் காலத்தில் அவர்கட்கு அரசகுருவாக இருந்துள்ளனர். அவர் வரிசையுள் விமல சிவர் தலைவராக நிற்கின்றார். அவர் மாணவருள் சாந்த சிவரென்பார் விசயசிம்மனுக்கும், பின்பு சேதி

 நாட்டைவென்று கொண்ட திரைலோக்கியமல்லனுக்கும் அரசகுருவாய் விளங்கினார். புருடசிவர் என்பார் யசகரணனுக்கும், சத்திசிவரென்பார் கயகரணனுக்கும், கீர்த்திசிவர் நரசிம்மனுக்கும், விமலசிவர் சயசிம்மனுக்கும் அரசகுரவர் களாய் இருந்தனர்.

 இந்த மத்தமயூர சந்தானத்தின் மற்றொரு கிளையினர் களச்சூரி வேந்தரது தலைநகரான திரிபுரிக்கு அண்மையில் வீர கட்டம் (Bheraghat) என்னுமிடத்தே ஒரு மடத்தை நிறுவினர். அங்கே நருமதையாற்றங்கரையிலுள்ள கோகழி1 என்ற சிறுகுன்று ஒன்றின் மேல் அறுபத்துநான்கு யோகினிகளை நிறுவினர். அக் கோகழிக்குன்று கோளகிரி யென்னும் புண்ணியத்தலமென்றும் அது பண்டு தொட்டே வழங்கி வருவதென்றும் கூறுப. அக் குன்றிடத்தே நிறுவப்பட்ட மடம் பிற்காலத்தே கோளகிரி மடம் எனப் பெயர் மாறியது. அதுவே பின்பு நாளடைவில் மருவிக் கோளகி மடம் என வழங்குவதாயிற்று. மால்காபுரம் கல்வெட்டு “இக் கோளகி மடம் நருமதைக்கும் பாகீரதிக்கும் இடையிலுள்ள தவள மண்டலத்தில் உளது என்று கூறுகிறது.2 சபல்பூருக்கு அருகில் இருக்கும் தேவார் என்பது பண்டைநாளில் களச்சூரி வேந்தர்க்குத் தலைநகரமாக இருந்த திரிபுரி என்பதாகும்; அதனை நடுவே கொண்ட பகுதி தவளமண்டலம்; வீர கட்டமும் அவ்விடத் தேயுளது; ஆதலால் ஆங்குள்ள கோளகிரியே கோளகி யாதல் வேண்டும்”3 என ஆராய்ச்சியாளர் கூறுவர்.

 இனி, இக் கோளகி மடத்தை நிறுவிய மத்தமயூர சந்தானத் தவருள். முதல்வர் துருவாசர் என்போராவர். அவர் வழிவந்தவர் சற்பவ சம்பு என்ற சைவாசிரியர். அவருக்குப் பிட்சா விருத்தியாகக் களச்சூரி வேந்தனான முதல் யுவராஜ தேவன். மூன்று லஷம் என்ற பகுதியைக் கொடுத்தான். அவர்பால் சைவாசிரியர் பலர் இருந்து சைவப்பணி புரிந்தனர். அவர் வழியில் சோம சம்பு சிவாசாரியார் தோன்றினார். சோமசம்புபத்ததி என்ற நூலை எழுதியவர் அவரேயாவர். அவர்க்குப் பின் வாம சம்பு என்பார் கோளகி மடத்துத் தலைவராக விளங்கினார் அவர்க்கு ஆயிரக் கணக்கில் மாணவருண்டென்றும், அவர் தமது பார்வையினாலே உலகாளும் வேந்தரை ஆக்கவும் அழிக்கவும் வல்லவரென்றும் வரலாறு கூறுகிறது. அவர் வழியில் வந்து சிறந்தோருள் விமலசிவர் என்பார் கேரள நாட்டினர். விமல சிவரைக் களச்சூரி வேந்தர்கள் சிவனெனவே தேறி வழிபட்டனர். இவர் வழியில் வந்தோருள் விசுவேசுர சம்பு கௌட தேசத்து ராதை நாட்டுப் பூருவ கிராமம் எனும் பகுதியில் இருந்தவர். கணபதிவேந்தனுக்குத் தீக்கை செய்தவர் இவரே. இவர்பால் களச்சூரி வேந்தர்களே யன்றி, மாளவ வேந்தரும் சோழ வேந்தரும் சிவதீக்கை பெற்றார்கள்4 இவ்வேந்தருள் களச்சூரி கணபதி வேந்தன் தன்னை விசுவேசுர சம்புவின் புதல்வனென்றே கூறிக்கொள்ளுகின்றன. அவரது ஆணை வழிநின்று, பற்பல சைவாசிரியர்களையும் புலவர் களையும் வருவித்து அவ்வேந்தன் சிறந்த பரிசில் நல்கினான். “காதிற் குண்டலம் இலங்க, முடியில் சடை கிடந்து தாழ, ஒளிதிகழும் முகமும், மணிமாலை கிடந்தசையும் மார்பும் கொண்ட விசுவேசுர சம்பு. கணபதி வேந்தன் அரண்மனையில் வித்தியா மண்டபத்தில் வீற்றிருக்கும் காட்சி காண்பார் கண்களுக்கு நல் விருந்தாகும்” என்ற பொருளமைந்த வடமொழிச் செய்யு ளொன்று காணப்படுகிறது.1

 கணபதி தேவ மகாராயர் விசுவேசுரர் செய்யும் சமயப் பணியின் பொருட்டு மந்தரம் என்னும் ஊரைக் கொடுக்க வேண்டுமென விரும்பியிருந்தார். அவர் இறந்தபின் அவர் புதல்வியான இராணி உருத்திராதேவி அரசு கட்டிலேறினாள், அவட்கும் அவ்விசுவேசுரர் ஞானாசிரியராக இருந்தார். கி.பி. 1261-ல் அவருக்கு உருத்திராதேவி தன் தந்தையார் விரும்பிய வாறே மந்தரம் என்ற ஊரையும் அதன் அருகில் உள்ள தீவு களையும் (இலங்கைகள்) வழங்கினாள்; தனியாகத் தனது பெய ரால் விசுவேசுரர்க்கு விளங்காப்பூண்டி (வெலக பூடி) என்ற ஊரையும் கொடுத்தாள்.

 மந்தரம் என்னும் ஊர் இப்போது மண்டடம் என வழங்கு கிறது. இவ்வூரில் விசுவேசுரர், கோயில் ஒன்றும் மடம் ஒன்றும் அறவுணவுச் சாலையொன்றும் கட்டினார். பின்பு, தமிழ் நாட்டி லிருந்து அறுபது பிராமணக் குடும்பங்களை வருவித்து, மந்தரம் விளங்காப்பூண்டி என்ற இரண்டு ஊர்களிலும் குடியேற்றி அவ்வூர்க்குக் கோளகி யென்று பெயரும் இட்டார். ஒவ்வொரு குடும்பத்தார்க்கும் வேண்டுமளவு நிலம் விட்டு விற்கவும் ஒற்றி வைக்கவும் வேண்டிய முழுவுரிமை யும் நல்கினார். எஞ்சிய நிலங்களை மூன்று கூறு செய்து ஒன்றைக் கோயிலுக்கும் ஒன்றைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மடத்திலிருக்கும் சைவர்களுக்கும் மூன்றாம் கூற்றை மருத்துவச் சாலைக்கும் அறவுணவுச் சாலைக்குமாகப் பங்கீடு செய்தார். கோளகி சந்தானத்தார் வடமொழி வாயிலாகவே சமயப்பணி, செய்த வராதலால், இருக்கு முதலிய வேதங்களைக் கற்பிக்க மூவர் ஆசிரியர்களும், தருக்கம், சாகித்தியம், ஆகமம் என்ற இவற்றைக் கற்பிக்க ஆசிரியர் ஐவரும் மருத்துவர் ஒருவரும் கணக்கர் ஒருவருமாகப் பதின்மூன்று பேர் நிறுவப் பெற்றனர். ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. கோயில்களில் இசைவாணர் முதல் ஊர்ப்பணி செய்யும் நாவிதர், ஊர்காக்கும் வயிராகியர் ஈறாக எழுபத்து மூவர் இருந்தனர். இவர்களும் தலைக்கொரு புட்டி நிலம் தரப் பெற்றனர், புட்டி என்பது அக்காலத்தே அப்பகுதியில் வழங்கிய நிலவளவை. உணவுச் சாலையில் சாதி வேறுபாடு கருதாமல் பிராமணர் முதல் சண்டாளர் ஈறாக யாவர்க்கும் உணவு நல்குமாறு விசுவேசுரர் ஏற்பாடு செய்தார் அவர் குடியேற்றிய தமிழ்ப் பிராமணர்களைத் திராவிடப் பிராமணர் என இப்போதும் அங்குள்ள மக்கள் வழங்குகின்றனர்.

 அவர் செய்த செயல்வகைகளில் , காளீஸ்வரத்தில் உபல மடம் என்றொரு மடத்தை நிறுவி அதற்குத் தான் ஏற்படுத்திய பொன்ன காமம் என்னும் அக்கிரகாரத்தை அளித்ததும், மந்தர கூடத்தில் விசுவேசுரலிங்கம் என்ற கோயிலை நிறுவி அதன் நிருவாகத்துக்கும், தான் அங்கே ஏற்படுத்திய உணவுச் சாலையின் பொருட்டு மானப்பள்ளி, ஊட்டுப்பள்ளி என்ற ஊர்கள் இரண்டி னைக் கொடுத்ததும், சந்திரவல்லி நகரத்தில் சிவன் கோயிலொன்றைக் கட்டிக் கம்பம் பள்ளியேரியின் கரையை விரிவு படுத்தி அதன் வருவாயில் செம்பாதியை அக்கோயிலுக்கு உரிமை செய்ததும். அனந்தபாத நகரத்தில் சிவன்கோயிலொன்றை எடுத்து அந்நகரத்துக்கு விசுவேசுர நகரம் என்று பெயரிட்டு, அக்கோயிலுக்கு அனந்தபுரம் முனிகூடம் என் ற ஊர்களைத் தேவதானமாக வழங்கியதும், கொம்மு கிராமம் ஏலீசுரபுரம். நிவிருத்தி முதலியவூர்களில் சிவன் கோயிலும் அறவுணவுச் சாலையும் ஏற்படுத்தியதும் உணவுச் சாலையில் சாதி சமுதாய வேற்றுமை சிறிதும் இன்றிப் பிராமணர் முதல் சண்டாளர் ஈறாக எல்லார்க்கும் ஒப்ப உணவும் கல்வியும் ஒழுக்கமும் நல்கியதும் பிறவும் சிறந்தனவாகும்1

 உணவால் உயிர்களின் பசிப்பிணியும், மருத்துவத்தால் உடற்பிணியும், சிவஞானத்தால் பிறவிப்பிணியும் நீக்கும் இனிய தொண்டுகளைச் செய்தமையால் இக்கோளகி சந்தானம் நாட்டில் நல்ல செல்வாக்கினைப் பெற்றது. இச் சந்தானத்தில் விளங்கியோர் சிறந்த சிவஞானிகளாதலால் சாதி சமயவேற்றுமை கருதாது தங்கள் தொண்டினை ஆற்றி வந்தனர். அவருள் உருத்திரசிவர் என்பார் சைவசித்தாந்தமே யன்றிப் பௌத்த சமயத்துத் திக்கநாகர் முதலியோர் எழுதியநூல்களில் 1வல்லுநராய் இருந்தனர். பிரசண்ட சிவர் என்பார் பஞ்சார்த்தக சித்தாந்தம் (பாசுபதம்) வல்லுநர்2; வியோமசிவர் பிரசத்த பாதருடைய வைசேடிய பாடியத்துக்கு 3வியோமவதி என்னும் விளக்கவுரை கண்டார். அதனால், விசுவேசுரருடைய கல்விச்சாலையில் பாசுபதர் முதலிய பிற சமயத்தவரும் கல்வி பயின்றனர். புறச்சமயங்கள் சைவத்துக்குப் படிமுறையில் அமைந்தன வாதலின், அவற்றை இகழ்ந்து புறக் கணித்தல் சைவத்துக்கு மாறானது என்ற சைவவொழுக்கம்பற்றி, இச் சான்றோர்கள் சாதி வேற்றுமையும் சமயவேற்றுமையும், கருதாராயினர் என அறிக. பிற்காலச் சைவர்கள் சாதி சமய வேற்றுமைக்குழியில் வீழ்ந்து, நீறுபூசும் தம் திருமேனியில் சேறுபூசிக் கொண்ட மையின், இன்று கண்டார் இகழ்ந்து பழிக்கும் சிறுமையுற்றது மேலேகூறிய சைவநெறியைக் கை விட்டமையாலாகும்.

 அஃது அவர்கள் பொதுவாக மேற்கொண்டிருந்த அற மாயினும், சைவசித்தாந்தக் கருத்துக்களை மக்கட்கு அறிவுறுத்து வதை சிறந்த அறமாகக்கொண்டிருந்தனர். தங்கள் காலத்திலும் தங்களது முன்னோர் காலத்திலும் வாழ்ந்த வேத நூல் வழிநின்ற வைதிகர்களும் பிறராகிய பௌத்த சமணச் சான்றோர்களும் வடமொழிகளையே சமயப்பணியில் மேற்கொண்டிருந்தமையின் கோளகி சந்தானத்துச் சான்றோர்களும் வடமொழியினையே மேற்கொண்டு சைவநூல்கள் பல செய்து உள்ளனர். சோமசம்பு பத்ததி யென்று இக்காலத்துச் சைவ நன்மக்களிடையே சிறப்பாகக் கொள்ளப்பட்டிருக்கும் நூலை எழுதிய சோமசம்பு சிவாசாரியார் இக்கோளகி மடத்தைச் சேர்ந்தவர். இவருள் ஈசான சிவயோகீந்திரர் என்பார் 1சித்தாந்த பத்ததி யென்ற இனிய நூலையெழுதினார். ஸ்நபன சாராவளி எழுதிய பஞ்சாட்சர குருவும் சித்தாந்த சாரம் எழுதிய ஈசான சிவரும் சித்தாந்த ரத்னாகரம் எழுதிய சோமேசுரரும் ஆத்மார்த்த பூஜாவிதி எழுதிய வேத ஞான சிவரும் இச்சந்தானத்தில் வந்த சான்றோராவர். சித்தாந்தசார ஆசிரியரான ஈசான சிவரே ரத்னாகரம் எழுதியவரென்றும், சோமேசுரரென்பது அவரது சிறப்புப் பெயரென்றும் கூறுவர். அவர் சைவதரிசனம் வல்லுந ரென்றும். பதினெண் வித்தைகளும் பயின்றவரென்றும். வேதாந்த நூல்களாகிய உபநிடதங்களைக் கொண்டே சிவபரத்துவத்தை நிலையிட்டுக் காட்டினரென்றும் கிரணா கிரமத் ஜ்யோதிகா எழுதிய ஈசான சிவர் ஆமர்த்தக சந்தானத்தைச் சேர்ந்தவ ராதலின் அவர் வேறு என்றும் 2சென்னைக் கல்வெட்டுத்துறை ஆண்டறிக்கை கூறுகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிப் பதினெண்பத்ததிகளையும் மிருகேந்திர விருத்திக்குத் தீபிகையையும் தத்துவ தீபிகை தத்துவசங் கிரகம் முதலிய நூல்கட்கு உரையையும் எழுதிய அகோர சிவாசாரியாரும் இந்தக் 3கோளகி சந்தானத்தவரே யெனக் கல்வெட்டுக் கூறுகிறது.

 மத்தமயூர சந்தானத்தின் கிளையாய்த் தோன்றி இங்ஙனம் சிவஞானத்தாலும் சிவப்பணியாலும் மேன்மேலுயர்ந்த இம்மடங்கள் நாளடைவில் தனித்தனியாக நின்று தொடங்கின. அதனால் இவற்றின் தொன்மை காட்டும் கல்வெட்டுக்கள். “ஆமர்த்தக ரணபத்திர கோளகிரி புஷ்பகிரி சந்தானம்”4 என்று குறிக்கின்றன. கோளகி மடத்தின் கிளைகள் பல தெலுங்கு நாட்டிலும் தமிழ்நாட்டிலும் பரவிய காலத்தில் கோளகிமடம் கோளகிசந்தானம் என்றும் கோளகிதன்மம் என்றும் பெயர் கொண்டது. இவற்றினி ன்றும் பிரிந்த கிளைகள் பிஷாமடசந்தான மென்றும், லஷாத்யாயி மடம் என்றும் பிற்காலத்தே தமிழகத்தில் இருந்துள்ளன. கோளகி சந்தானம் தொடக்கத்தில் தெலுங்கு நாட்டில் வேரூன்றிச் சிறந்த பணி புரிந்தது. அப்பகுதியில் இருந்து அரசுபுரிந்த நுளம்ப வேந்தரும் கடம்பவேந்தரும் கோளகி தன்மத்தின் மாண்புகண்டு அப்பகுதியைக்கோகழியெனப் பெயரிட்டுச் சிறப்பித்தனர், 1பெல்லாரி மாவட்டத்துக் கல் வெட்டுக்கள் கோகழி ஐஞ்ஞூறு, நுளம்ப பாடி நாட்டுக் கோகழி ஐஞ்ஞூறு என்று கூறுவது இன்றும் காணலாம். அங்கே கோட்டூரி லிருந்து அரசு புரிந்த கடம்ப குல வேந்தனான கட்டியராசன், அமிர்தராசி பண்டித ரென்னும் தன் ஞானாசிரியர்க்கு நிலம் விட்டதைக் கல்வெட்டொன்று2 குறிக்கிறது. அமிருதராசி பண்டிதர் முதலியோர் வீற்றிருந்து சமயப் பணிபுரிந்த கோகழி சந்தானமே திருவாசகத்தில் மணிவாசகப்பெருமானால் குறிக்கப் படுகிறது போலும் எனச்சிலர் கருதுகின்றனர். இது நிற்க.

 கோளகி சந்தானத்தில் சிறந்து நின்ற விசுவேசுரர் காலத்தில் இதன் சிறப்புத் தெலுங்குநாடு கடந்து தமிழ் நாட்டிலும் பரவிற்று. தமிழகத்திலிருந்து சில பிராமணக் குடும்பங்களைத் தெலுங்கு நாட்டில் அவர் குடியேற்றிய தொன்றே இதற்குத் தக்க சான்றாகும். இன்னும் நெல்லூர், கிருஷ்ணா முதலிய பகுதிகளில் திராவிட பிராமணர் என்ற பெயரால் சில பிராமணக் குடும்பங்கள் இருந்துவருகின்றன. இத்தகைய செயல்வகையால் கோளகி சந்தானத்தார்க்கு மடங்கள் பல தமிழகமெங்கும் தோன்றின. திருக்காளத்தி, திருப்பாலைவனம், திருவொற்றியூர் முதல் திருநெல்வேலி திருவாலீஸ்வரம் வரை ஆங்காங்குக் கோளகி மடங்கள் இருந்திருக்கின்றன. இடையிலுள்ள காஞ்சிபுரம், தேவிகாபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாரூர், திருவானைக்கா, திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை), திருப்பத்தூர், திருப்பரங்குன்றம் முதலிய இடங்களிலிருந்த கோளகி மடங்கள் வேந்தர் களின் நல்லாதரவுபெற்றுக் கல்வெட்டுக்களில் சிறந்த சாட்சி வழங்குகின்றன. இம்மடங்களின் சிறப்புக்கள் கி.பி. 11-ம் நூற்றாண்டிலிருந்து3 16-ம் நூற்றாண்டுவரை நன்னிலையில்4 இருந்துள்ளன. தென்னாட்டிற் புகுந்து சிற்சில இடங்களில் பெருங்கலக்கத்தைச் செய்த கன்னட வேந்தர்களும் இம் மடங் கட்கு ஆதரவு நல்கியிருப்பதொன்றே இவற்றின் செயற் செம்மைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். அந்நாளில் திருவானைக்காவில் இருந்த கோளகி மடத்துத் தற்புருஷ சிவம் என்பாருக்குக் கன்னட வேந்தன் மடம் கட்டித் தந்த செய்தியைக் 1கல்வெட்டுக் கூறுகிறது.

 முதல் மாறவன்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் திருக் கொடுங்குன்றத்தில் (பிரான்மலை) இருந்த ஈசானசிவ ராவலர் மடம் கோளகி சந்தானத்துக்கு உரியது; அம் மடத்துக்குத் தலைவராய் இருந்த ஈசான சிவாசாரியார் செய்த தொண்டுகளை வியந்த வேந்தன் அவர்க்குப் பாண்டி மண்டலாதிபதி யென்றும், 2பாண்டிநாட்டு முதலியார் என்றும் சிறப்புக்களை நல்கினான்.

 அந்நாளில் தெலுங்கு நாட்டில் விசுவேசுரர் சிறப்புறுதற்கு முன்பே தமிழகத்தில் இருந்த கோளகி சந்தானத்தார் உயர்ந்த பணிகளால் வேந்தர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருவொற்றியூரில் கோளகி மடம் சிறந்து விளங்கிற்று. அதன்கண் வாகீசுர பண்டிதர் என்பார் இருந்து சோமசம்பு முதலியோர் அறிவுறுத்திய சித்தாந்தங்களை மக்களுக்கு அறிவுறுத்தி வந்தனர். அதனால் அவர் சோம சித்தாந்தம் வக்காணிக்கும் வாகீசுர பண்டிதர் என வழங்கப்பட்டனர். திருவொற்றியுர் இறைவனை, மகிழ மரத்தின்கீழ் இருத்திக் கண்டு வழிபடும் விழா நடைபெறுவது வழக்கம்; இன்றும் அது மகிழடி சேவையென்ற பெயரால் நடந்துவருகிறது. அந்நாளில் இவ்விழாக் காலத்தே சோழ வேந்தனான இரண்டாம் இராசாதிராசன் வந்திருந்து திருவொற்றியூர் இறைவனை வழிபட்டான்; அப்போது கோளகி மடத்து வாகீசுர பண்டிதர் ஆளுடைய நம்பிகளின் புராணத்தை விரிவுரை செய்தார் என்பர். அதனை வேந்தனும் பிற செல்வர்களும் இருந்து கேட்டு இன்புற்றனர் என்று 3அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது.

 கோயில்களின் அமைப்பும் நடைமுறையும் சைவாகம முறை வழுவாது நடத்தற்கு இம்மடங்கள் பெருந்துணையாய் இருந்தன. சிலகோயில்களின் நடைமுறைகளைக் கண்காணிக்கும் பணியையும் இம்மடத்தவர் மேற்கொண்டிருந்தனர். திருமடங் களிலுள்ள சைவாசிரியன்மார்கள் பெரிதும் வடமொழியே பயின்று சைவாகமக் கருத்துக்களை எடுத்துரைப்பதில் கருத்துக் கொண்டிருந்தனரேயன்றி அவற்றை மக்கள் வழங்கும் மொழியில் எழுதினார்களில்லை. சிவாகமங்களுட் பலவும் சைவ சமயத்துக் குரிய பொருள்களை அளவைகளால் நிறுவுவதும் அவற்றிற்கு இலக்கணம் கூறுவதும். சிவஞான சாதனமாகிய தீக்கைகளையும் பிறவற்றையும் விளக்கி நித்திய நைமித்திக நெறிகளை வகுப்பதும் செய்தனவேயன்றி, சிவன்பால் அன்பு மிகுந்து சிவ வழிபாடு செய்தற்குரிய மனப்பண்புகளையும் பயன்களையும் விளக்கிக் கூறும் வாய்ப்புப் பெறவில்லை. இதனால் சிவாகம ஞானம் ஒரு சிலரிடத்தே இருந்துவருவதாயிற்று.

 பல்லவ வேந்தர் காலமுதல் தமிழகத்தையாண்ட வேந்தர் பலரும் திருக்கோயில் களில் பேரன்புகொண்டு அவற்றிற்குப் பொன்னும் பொருளும் ஊரும் நிலமும் வழங்கி வந்ததனால் கோயில்களே மக்கள் வாழ்வில் முதலிடம் பெற்றன. வழக்கறிந்து நீதி வழங்கலும். 1அல்லற்காலத்து மக்கட்கு உணவும் மருத்து வமும் உறையுளும் நல்குதலும், 2போர்க்காலத்துப் பாதுகாப்பளித்தலும் இக்கோயில்களே செய்து வந்தமை யின், கோயில் நடை முறைகளில் நாட்டு மக்கட்கு நெருங்கிய தொடர்புண்டாகி யிருந்தது. சில கோயில்கள் மருத்துவ நிலையமாகவும், சில கோயில்கள் 3கல்விநிலைய மாகவும் அக்காலத்தே விளங்கின. திருக்கோயில் களில் திருப்பதிகங்களைத் தமிழில் ஓதி வழிபடும் முறைவளம் மிக்கிருந்தது. இதனால் நாட்டு மக்களுக்கு இக்கோயில்களின் அமைப் புக்குரிய ஆகம நூல்களை அறிதற்கு ஒருவகையான வேட்கையுண்டாகியிருந்தது, சைவாசிரியன்மார் வட மொழியே பயின்றிருந்தமை யாலும், வடமொழியும் யாவரும் நெருங்கிப் பயிலுதற்கேற்ற எளிய நிலையில் இல்லாதிருந்தமையாலும் அவ்வேட்கை நிரம்புதற்கு இடமில்லாது போயிற்று.

 இந்நிலையில், திருஞானசம்பந்தர் முதலியோர் வழங்கியருளிய சிவஞானத் திருப்பதிகங்கள் திருக்கோயில்களில் எங்கும் ஓதப்படலாயின. பாலியாற்றின் வடகரையிலுள்ள தீக்காலி வல்லம் முதல் தென்குமரி ஈறாகவுள்ள திருக்கோயில்களில் திருப்பதிகங்கள் ஓதுதற்கு வேந்தர்களாலும் செல்வர்களாலும் நிவந்தங்ள் பல ஏற்படுத்தப்பட்டன. நாடெங்கும் திருப்பதிகங்கள் பரவின. மக்கள் வழக்கில் திருப்பதிகங்களின் தொடர்கள் பல பெரிதும் கையாளப்பட்டன. சிந்துபூந்துறையெனத் திருவீதிகளும், 1திருஞான வாய்க்கால் என வயல் வாய்க்கால்களும், திருந்துமா மறைப் பிலாறு என்றாற் போலப் பிறவும் திருப்பதிகச் சொற் றொடர்களாலே பெயர் வழங்கப்பட்டன. வேயன தோளிநாச்சி2, ஒளிவளர் விளக்கு3 சீருடைக்கழல், மறையணி நாவினான்4 ஆணைநமதென்ற பெருமான்5 என்பன முதலிய திருப்பதிகச் சொற்பெயர் தாங்கிய ஆடவரும் மகளிரும் உளராயினர். இவ்வாற்றால் சிவாகம ஞானத்தினும் திருப்பதிகப் பயிற்சிக்கண் மக்களுக்குப் பேரார்வம் உண்டா யிற்று. திருக்கோயிற் சுவர்களில் திருப்பதிகங்களைப் பொறிப்பதும்6 அவற்றைச் செப்பேட்டில் எழுதி இன்புறுவதும் மக்களிடையில் சிறப்புடைச் செயல் களாயின. செப்பேட்டில் எழுதியோர் புகழைத் திருமுறை செப்பேடு கண்ட பெருமாள் என்றும்,

 “ முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா

 றொத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி - இத்தலத்தில்

 எல்லைக் கிரிவாய் இசையெழுதினான் கூத்தன்

 தில்லைச் சிற்றம்பலத்தே சென்று”

 என்றும், திருப்பதிகம் ஓதுவதை இருந்து கேட்டற்கென மண்டபம் அமைத்த சிறப்பை

 “ நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்த

 சிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக்

 கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான் தெவ்வேந்தர்கெட

 வாட்டிக்கும் தொண்டையர்கோன் மன்”1

 என்றும், திருமுறை செப்பேடு கண்ட பெருமான் திருவீதி2 என்றும் மக்கள் பாராட்டியிருக்கின்றனர்.

 திருமுறைகண்ட வரலாறும் நாட்டில் உண்டான இச் சூழ்நிலை காரணமாக எழுந்ததென்றால் அது தவறாகாது, சேக்கிழார் பெருமான் திருமுறை வழங்கிய பெருமக்கள் வரலாற்றையும் திருத்தொண்டர் வரலாற்றையும் ஆராய்ந் தெழுதுதற்கு இந்நிலைமையும் ஒரு காரணமாக இருந்த தென்று இனிது கூறலாம். திருவொற்றியூர் விழாவில் ஆளுடைய நம்பிகளின் புராணத்தை விரிவுரை செய்ததும் இதுபற்றியே என்று கூறுவது பொருந்தும். இவ்வுண்மை உணராத மடவோர் இன்று திருப்பதிகங்களை ஓதிச் சிவன்கோயில்களில் வழிபாடு செய்வது முறையன்று என்று கூறுவதும், அதற்கு இடையூறு செய்வதும், வழக்குத் தொடுப்பதும் பிறவும் நிகழ்த்திச் சைவ வாழ்வுக்குப் பெருங்கேடு விளைவிக் கின்றனர்: கோயில் வழி பாட்டில் இளைஞர் உள்ளம் ஈடுபடாமல் வெறுப்புணர்வு கொண்டு மாறுபடுதற்கும் மேலே கூறியவை சீரிய காரணங்களாக இருக்கின்றன. நாட்டுத் தலைவர்கள் இதனை மனங்கொண்டு வேண்டுவன செய்தல் கடன்.

 தமிழ்த் திருமுறைகளில் மக்கட்கு இருந்த நன்மதிப்பையும் ஆர்வத்தையும் கோளகி மடத்துச் சான்றோர் உணராமல் இல்லை அவர்கள் சிவாகமத்தையும் சைவத் திருமுறைகளையும் ஒன்று படுத்தினாலன்றிச் சிவநெறியின் முழுத்த பயனை எய்தமுடியா தெனக் கண்டனர். அவரிடையே விளங்கிய வாகீச பண்டிதர் வடமொழியும் செந்தமிழும் சிறப்புறக் கற்ற பெரும்புலவராய் விளங்கினமையின், தாம்பெற்ற புலமையை நாட்டுமக்கட்குப் பயன்படுத்தக் கருதிச் சிவாகமங்களை ஆராய்ந்து அவற்றின் கருத்துக்களை இனிய அகவற் பாக்களால் பாடியருளினார். அது இந்த ஞானாமிர்தமாகும்.

 வேதாந்தமாகிய உபநிடதப் புலமைக்கும் சித்தாந்தமாகிய சிவாகமப் புலமைக்கும் இடையே நடந்த பூசல் காரணமாகச் சிவாகமங்கள் பல இறந்தன. மெய்ப்பொருள் நாயனார் வரலாறும் இப்பூசலின் தொன்மைக்கு ஓரளவு சான்று வழங்குகிறது. அச்சிவாகமங்களைப் பின்பற்றிவந்த இந்த ஞானாமிர்தமாகிய தமிழாகமத்திற்கும் அந்த இடையூறு வாராமலில்லை. இந்த ஞானாமிர்தம், ஞானம், யோகம், கிரியை, சரியை என்ற நான்கு பாதமாக இருந்தது. இப்போது ஞானபாதம் ஒன்றே கிடைத் துள்ளது; ஏனைப்பாதங்கள் இறந்து போயின. கிரியாபாதத்தின் ஒரு செய்யுள் மட்டில் சிவஞான பாடியத்தில் சிவஞான முனிவரால் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது ஒரு செய்யுளின் தலைப்பு மட்டில் இந்த ஞானாமிர்த உரையில் காட்டப்படுகிறது. எஞ்சிய அனைத்தும் இறந்தேபோயின.

 ஞானாமிர்த ஆசிரியரும் உரைகாரரும்

 ஞானாமிர்தத்தை எழுதிய ஆசிரியர் வாகீச முனிவர் என ஏடுகள் கூறுகின்றன. இவருடைய பெற்றோர் பெயர் தெரிந்திலது; ஆயினும், இவர்க்கு ஞானமருளிய குரவர் பெயர் மட்டில் இந்நூலின் ஆசிரியர் துதியில் பரமானந்த முனிவர் என்று காணப்படுகிறது. “சைவசிகாமணி, பரமானந்தத் திருமா முனிவன்” என்பது அப்பகுதி. இதற்கு உரைகண்ட சான்றோர், “பரமானந்த முனிவன் என்னும் தீஷாநாமத்தை யுடைய மகா முனிவன்” என்று கூறுவதனால், இவரது இயற்பெயர் வேறு உண்டு என்பது விளங்கும். இந்நூலின்கண் ஞானம் அருளிய குரவனை.

 “பாடல் சான்ற பல்புகழ் நிறீஇ

 வாடாத் துப்பின் கோட லாதி

 அருளா பரணன் அறத்தின் வேலி

 பொருண்மொழி யோகம் கிரியையிற் புணர்த்த

 அருண்மொழி திருமொழி போலவும்1”

 என்று இந்நூலாசிரியர் பாராட்டுதலால், ஞானசிரியராகிய பரமானந்த முனிவர்க்கு அருண்மொழித்தேவர் என்பது இயற் பெயராதல் இனிது விளங்குகிறது.

 இனி, கோடலாதி என்பதற்குப் பழையவுரைகாரர், “கோடலம்பர் கிழான்” என்று உரை கூறினாராக, வேறோர் உரை வேறுபாடு, “கோடல் என்பது கோடலம்பாகையென்னும் ஊர்; அருண் மொழி யென்பது ஸ்ரீபரமானந்த முனிகளின் பிள்ளைத் திருநாமம்; குடிப்பெயர் அம்பர் கிழான்” என்று கூறுகிறது பாகையென்பது பாக்கம் என்பதன் மரூஉவாதலின், கோடலம்பாகை கோடலம் பாக்கம் என்பதாம். அதுவே இப்போது கோடம்பாக்கம் என்ற பெயருடன் சென்னைக்கு அருகில் உளது. காவிரிபாயும் கல்லாடனா ரென்றும் சான்றோரால் புகழப்பட்ட அம்பர்கிழான் அருவந்தையைப்போல இவரும் அம்பரென்னும் ஊர்க்குக் கிழமைபூண்ட குடியில் தோன்றினவராதலால் அம்பர்கிழான் என்று குறிக்கப் படுகின்றார். இவர் பின்னர்க் கோடலம்பாகையில் தங்கிச் சிவஞானப்பணி புரிந்தமையின் கோடல் அம்பர்கிழான் என்றும்கோடலாதி யென்னும் குறிக்கப்பெறுகின்றார். இக் கருத்தனைத்தும்,

 “இருணெறி மாற்றித்தன் தாணிழ

 லின்பம் எனக் களித்தான்

 அருண்மொழித் தேவன்நற் கோடலம்

 பாகை யதிபன் எங்கோன்

 திருநெறி காவலன் சைவ சிகாமணி

 சில் சமய

 மருணெறி மாற்ற வரும் பரமானந்த

 மாமுனியே”

 என இவர் பாடியதாக வழங்கும் தனிப்பாட்டாலும் இனிது விளங்கும்.

 வாகீசர் இங்ஙனம் பரமானந்த முனிவர்பால் சைவ சித்தாந்த நூல்களாகிய சைவாகமங்களைப் பயின்று புலமை நிறைந்து விளங்கிய காலத்தில். சென்னைக்கு வடக்கில் அதற்கண்மையில் உள்ள திருவொற்றியூரில் கோளகி சந்தானத்தின் சைவமட மொன்று இருந்து சிவாகம ஞானப்பணி புரிந்து வந்தது. அங்கே கி.பி. பத்துப்பதினோராம் நூற்றாண்டில் நிரஞ்சன தேவர் என்பார் இருந்து சிவாகம ஞானமாகிய சிவதன்மத்தை ஓதிக் கொண்டு வந்தார். பல்லவவேந்தருள் மூன்றாம் நந்தி வன்மன் மகனான கோவிசய கம்பவன்மன் காலத்தில் அவனது 19-ஆம் ஆட்சி யாண்டில் நிரஞ்சன தேவர் திருவொற்றியூரில் சிவன் கோயில் ஒன்றையெடுத்து அதற்கு நிரஞ்சனதேவேச்சுரம் எனப்பெயரிட்டு வேண்டும் நிலங்களையும் நிவந்தமாக விட்டார்.1 அவர்பால் சதுரானன பண்டிதர் என்ற சான்றோர் ஒருவர் மாணவராய்ச் சிறந்து விளங்கினார்.

 இச்சதுரானனர் கேரளநாட்டினர்; இளமையில் இவர் இராட்டிரகூட வேந்தனான வல்லபனுக்கு நண்பராய் இருந்து, பின்பு சோழ நாட்டிற்குவந்து சோழன் இராசாதித்தனுக்குத் துணைவராய் இருந்துவந்தார் என்றும், இராட்டிர கூட வேந்தனால் சோழன் இறந்தானாக, அவனுடன் தன் உயிரும் போகாமைக்காக வருந்தி வாழ்க்கையில் வெறுப்புற்று நிரஞ்சன குரவரை அடைந்து துறவு பூண்டார் என்றும்; இராட்டிரகூட கன்னரதேவனான மூன்றாம் கிருஷ்ண தேவருடைய இருபதாம் ஆட்சியாண்டில் தோன்றிய 1கல்வெட்டொன்று கூறுகிறது. கேரளநாட்டு வழக் காறுகள் சில திருவொற்றியூர்க் கோயிலில் காணப்படுதற்குக் காரணம் இச்சதுரானன பண்டிதரே என்றும் கருதுகின்றனர்.

 நிரஞ்சனதேவர்க்குப்பின் சதுரானன பண்டிதரே அத் திருமடத்துக்குத் தலைவரானார். அவர் வழிவந்தோரும் தம்மைச் சதுரானன பண்டிதரென்றே கூறிக்கொண்டனர். அதனால் தான் பத்தாம் நூற்றாண்டுமுதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையில் பல சதுரானன பண்டிதர்கள் காணப் படுவாராயினர். அவர்கள் இருந்தமடமும் சதுரானன பண்டிதர் மடம் என்றே மக்களால் வழங்கப்பட்டு வந்தது; “தடக்கையான் சதுரானன பண்டிதன் மடத்துளாள் என் மனத்துறை வல்லியே”2 என்று கம்பர் பாடியதாக நிலவும் பாட்டும் இதனை வற்புறுத்துகின்றது. சதுரான பண்டிதர் தமது ஞான குரவரான நிரஞ்சன தேவர் பெயரால் திருவொற்றி யூர்க் கோயிலில் நிவந்தங்கள் ஏற்படுத்தியிருப்பதை அவ்வூர்க் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன.3

 முதல் இராசேந்திரன். முதற் குலோத்துங்கன் முதலிய சோழ வேந்தர்கள் காலத்தில் சதுரானனபண்டிதர்கள் சிறந்து விளங்கினர், முதல் இராசேந்திரன் திருநாளாகிய மார்கழித் திருநாளன்று திருவொற்றியூர் இறைவன் நெய்யாடி யருளுதற்கு நிவந்தமாக சதுரானனார் நானூற்றைம்பது காசு வைத்ததாக ஒரு கல்வெட்டு4 கூறுகிறது. அதன்கண். அவர், “திருவொற்றியூர் திருமயானமும் மடமுமுடைய சதுரானன பண்டிதன்” என்று குறிக்கப்படு கின்றார். வேறு கல்வெட்டுக்களும் அவரை, மடமுடைய சதுரானன பண்டிதன்5 என்றே குறிக்கின்றன.

 சதுரானனபண்டிதர் காலத்தில் வாகீசர், கோடலம் பாகையி லிருந்து திருவொற்றியூர் போந்து அங்கே தாம் இருந்து சித்தாந்த ஞானத்தை மக்களுக்கு அறிவுறுத்திவந்தார். கோளகிசந்தானத்துச் சோமசம்பு முதலியோர் வகுத்துரைத்த பத்ததிகளையும் அவற்றிற்குரிய சிவாகமங்களையும் அறிவுறுத்தி யதனால் வாகீசரைச் “சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீசுர பண்டிதர்” என்று அந்நாளையோர் வழங்கினர். இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில் திருவொற்றி யூரில் பங்குனி யுத்தரப்பெருவிழா நடைபெற்றது. அதற்குச் சோழவேந்தனும் வந்திருந்தான். ஆறாம் திருநாளன்று திரு வொற்றியூர் இறைவனான படம் பக்க நாயகதேவர் திருமகிழின் கீழ் திருவோலக்கம் செய்தருளினார். அக்காலை “ஆளுடைநம்பி ஸ்ரீபுராணம்” விரிவுரை செய்யப்பட்டது. அதனை அங்கிருந்து வேந்தனுடன் ஒருங்கு கேட்டு இன்புற்றோருள் சதுரானன பண்டிதரும் வாகீச பண்டிதரும் சிறந்து விளங்கினர். வாகீச பண்டிதரே அப்புராணத்தை விரிவுரை செய்தார் எனக்கருது பவரும் உண்டு. அப்பொழுது பிறந்த கல்வெட்டொன்றில் கையெழுத்திட்டோரில் முதல்வராக “இப்படிக்கு இவை மடமுடைய சதுரானன பண்டிதன் எழுத்து” என்றும் இவர்கள் கையொழுத்திட்டுள்ளார். இதனால் அக்காலத்தே மடத்துக்குத் தலைமை சதுரானன பண்டிதர்பால் இருந்தமை புலனாம்.

 இவ்வண்ணம் அரசர் மதிக்கும் சிறப்புற்றிருந்த வாகீச பண்டிதர் பின்பு கோளகி சந்தானத்தின் கிளையாகத் திருநெல் வேலி மாவட்டத்துத் திருவாலீச்சுரத்தில் இருந்த மடத்துக்குத் தலைவராய்ச் சென்று சேர்ந்தார்.

 திருவொற்றியூரில் இருந்தபோது திருப்பதிகங்களின் சிறப் பையும், சிவாகம ஞானமாகிய சிவதன்மத்தை அறிவதில் மக்கட் கிருந்த விருப்பையும் வாகீசபண்டிதர் நன்கு கண்டு சிவாகமக் கருத்துக்களைத் தமிழில் இனிய அகவற்பா வடிவில் செய்தார். அதற்கு நாட்டில் மிக்க வரவேற்புக் கிடைத்தது.

 வாகீசர் என்ற பெயரினும் ஞானாமிர்தாசிரியர் என்ற சிறப்புப் பெயரே நாட்டில் பெரிதும் பயில வழங்குவதாயிற்று. அவரும் பின்பு வாகீச முனிவரானார்.

 வாகீச முனிவர் திருவாலீச்சுரம் அடைந்து அங்கிருந்த கோளகி மடத்துக்குத் தலைமைதாங்கி இருந்தாராயினும், அவர்க்கு ஞானாமிர்த ஆசிரியர் என்ற பெயரே அங்கும் பெருஞ் செல்வாக்குப் பெற்றது. அவர்க்குப்பின் அவரது மடத்தினர் தம்மை ஞானாமிர்த ஆசிரியர் சந்தானம் என்றே கூறிக் கொண்டனர். திருவாலீச்சுரத்தில் “கோளகிமடத்து ஞானாமிர்தாசிரியர் சந்தானத்தில் வந்த புகலிப் பெருமாள் என்பவரே திருக்கோயிலில் சிவதன்மத்தை ஓதவேண்டும் என அங்குக் கோயில் காரியம் பார்த்துவந்த சிவப்பிராமணர் எண்மரிடை உடன்படிக்கையுண் டாயிற்று என்று அங்கே உள்ள ஒரு கல்வெட்டுக்1 கூறுகிறது.

 பிறிதொருகால் பாண்டியதரையன் என்ற தலைவ னொருவன் நந்தவனம் ஒன்றை அவ்விடத்தே நிறுவி அதற்குத் தன்பெயரால் பாண்டியதரையன் திருநந்தவனம் எனப் பெயரிட்டு நிவந்தங்கள் ஏற்படுத்தியிருந்தான். அங்கே கிடைக்கும் பூக்களையெடுத்துத் திருவாலீச்சுரத்து இறைவனுக்கு மாலைதொடுத்துத் தரும் திருப் பணிபற்றி நிகழ்ந்த ஆராய்ச்சியில் அப்பணி செய்தற்குரியார் அக்காலத்தே கோளகிமடத்த வரான அகோரதேவர் என்று முடிபு கண்டனர்; அது செய்தற்கென அவர்க்கு நிலமும் விட்டனர். அதுபற்றிப் பிறந்த கல்வெட்டு, “கோளகிமடத்து ஞானாமிர் தாசிரியர் சந்தானத்து அகோரதேவரே பாண்டியதரையன் திரு நந்தவனத்தைப் பாதுகாப்பதும், பூக்கொய்து மாலை தொடுத்துத் தருவதும் செய்ய வேண்டும்” எனக்கூறுகிறது.2 இவ்வாற்றால் ஞானா மிர்தாசிரியரான வாகீச முனிவருக்குப்பின் அவரது வழிமுறை ஞானாமிர்தாசிரியர் சந்தானம் எனச் சிறப்புற்று விளங்கினமை பெறப்படும்.

 இஃது இங்ஙனமிருக்க, பிற்காலத்தே நிரஞ்சன தேவர் வழி வந்த கோளகி சந்தானம், நிறைந்த நாயனார் சந்தானமென மருவி வேறுவகையான வரலாறும் பெறுவதாயிற்று. அது வருமாறு:-

 “இனி, சந்தானகுரவர் கன்மசித்தாந்த குரவர், ஞான சித்தாந்த குரவர் என இருவகையர்….. இவருள் கன்மாவரண சிந்தாத்த குரவரியல்பு வருமாறு: … கன்மாவரண சித்தாந்த குரவருள் இக்காலம் அடுத்து நின்றோர் யாரெனில் உக்கிரச் சோதி, சத்தியோசோதி, ஞான சிவாசாரியர், சோமசம்பு சிவாசாரியர், திரிலோசன சிவாசாரியர், அகோர சிவா சாரியர் நாராயண கண்டர். இராம கண்டர். போசராசர் முதலியோ ரென்க. இவர்களாற் பண்ணப்பட்டன அஷ்டப் பிரகரணமும் கிரியாக்கிரமமும் சித்தாந்த சாராவளியும் பிறவு மாம். இனி ஞானவரான சித்தாந்த குரவர் இயல்பு வருமாறு……….. இந்நந்திகேசுர சந்தான வரலாறு:

 “சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்

 உவமா மகேசர் உருத்திர தேவர்

 தவமால் பிரமீசர் தம்மிற்றாம்பெற்ற

 நவமெழு நான்குடன் நந்திபெற்றானே

 பவமாம் பரிசு பலபல காட்டும்

 தவமா நெறியில் தலைவரு மான

 நவநாத சித்தரும் நந்தி யருளால்

 சிவமாம் பரிசு திகழ்ந்து நின்றாரே எனவும்,

 “நந்நி யருள்பெற்ற நாதரை எண்ணுறின்

 நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

 மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரன்

 என்றிவர் என்னுடன் எண்மரு மாமே”

 எனவும் வருதலான் உணர்ந்துகொள்க. இவருள் நந்திகள் நால்வராவார்: சனகர், சனற்குமாரர், சனந்தனர், சனாதனர் என்போராவார். திருமூலதேவர்க்குச் சதாசிவ முனிகள் என்றும் பெயர். இச்சந்தானம் விரிந்தவாறு: ஆதியில் சனகரால் சம்பு சந்தானமும் மலையமான் சந்தானமுமாக இரண்டாய்ப் பின் பலவாகப் பரம்பிற்று. சனற்குமாரரால் விஞ்ஞான தேவர் மெய்கண்ட தேவர் சந்தானம் என இரண்டாய்ப் பின் பலவாயின; …..இனி சனந்தனரால் உபமன்னிய தேவர், பரம தேவர். சிவானந்த போதர் என மூன்றாய்ப் பின் பலவாயின; சனாதனரால் பிரம தேவர் சிங்கநாத தேவர் என இரண்டாய்ப்பின் பலவாயின; சிவயோக மாமுனிகளால் வாமதேவர் சந்தானம் ஒன்றாய்ப் பின் பலவாயின. பதஞ்சலி களால் நிறைந்த நாயனார் சந்தானம் ஒன்றாய்ப் பின் பலவாயின; ஞானாமிர்தம் இவர் செய்த நூல் போலும். வியாக்கிரபாதரால் சத்தியோ சாதர் சந்தானம் ஒன்றாய்ப் பின் பலவாயின; திருமூலதேவரால் எழுவகைச் சந்தானமாகிப் பரம்பின. அது திருமந்திரமாலையுள்,

 “ மந்திரம் வந்த வழிமுறை மாலாங்கன்

 இந்திர னோடு பிரமன் உருத்திரன்

 கந்துருக் காலாங்கன் கஞ்ச மலையமான்

 இந்த வெழுவரும் என்வழி யாமே”

 என்பதனால், பிரமதேவர். இந்திர தேவர், விட்டுணு தேவர், உருத்திர தேவர், கந்துரு மகாவிருடிகள், காலாக்கினியுருத்திரர், கஞ்சனூர் மலையமான் என எழுவரையும் அறிக. இவர் வழி அளவின்றிப் பரம்பிற்றாதலின் ஈண்டு எழுதிற் பெருகும்; அது சந்தான வரலாற்றிற் காண்க”1 என்பது முத்தி நிச்சயப்பேருரை.

 இனி, ஞானாமிர்த ஆசிரியரான வாகீச முனிவர் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் இருந்தவர் என்பது மேலே காட்டிய கல்வெட்டுக்களால் தெரிகிறது, அவ்வேந்தன் கி.பி. 1163-ல் இளவரசனாகி, கி.பி 1166-ல் சோழப் பேரரசுக்கு முடி மன்னனா னான் என்றும். 1178 வரை அரசு செலுத்தினான் என்றும் சோழர் வரலாறு கூறுகிறது. அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில் எழுந்த கல்வெட்டிலேயே இவரது பெயர் இடம் பெறுவதால். இவர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டி லேயே தோன்றி நிலவியிருக்க வேண்டுமென்பது தெள்ளிது. அக்கல்வெட்டின் காலம் கி.பி.1175; அப்போது இவர் வாகீசபண்டிதர் என்றே வழங்கப்பெற்றிருத்தலால், பின்னர் ஞானாமிர்த ஆசிரியர் என்றும், வாகீச முனிவ ரென்றும் சிறப்புற்றிருப்பது நோக்கி. இவருக்கு அப்போது வயது முப்பதாகக் கொள்வோமாயின் , இவர் கி.பி. 1145 அளவில் பிறந்திருக்கலாம். ஞானாமிர்தம் என்ற இந்நூலின் நடை யினையும் கருத்தோட்டத்தையும் கருதுவோ மாயின், இந்நூல் தோன்றிய போது வாகீசருக்கு வயது நாற்பதுக்குக் குறையாது. ஆகவே இவர் இதனைக் கி.பி. 1185 அளவில் எழுதியிருக்கலாம். பின்னர் அவர் ஞானாமிர்த ஆசிரியராகவும் வாகீசமுனிவராகவும் கோளகி மடத்துத் தலைவராகவும் பல்லாண்டுகள் இருந்திருக்கின்ற மையின், இவர் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகாறும் வாழ்ந்திருந்தார் எனக் கொள்வது மிகையாகாது.

 இனி, சிவாகமங்கள் பலவும் ஞானம் யோகம் கிரியை சரியை என நான்கு வகையாகச் சிவஞான தன்மங்களை வகுத்துக் கூறுவன; அம்முறையே சொல்லக் கேள் என்ற கருத்துப்பட,

 “அருமறை யெவையும் திருமிகு ஞானம்

 இலங்கொளி யோகம் நலங்கிளர் கிரியை

 சரியை யென்ற விரிதரு பாதம்

 கறையறு மறைமுறை நெறியின்

 அறைய மற்றரோ அறிகதில் அமர்ந்தே”2

 என்றும், ஞானபாதப் பொருளைக் கூறலுற்று,

 “பிறழா நிலைமைப் பெரும்பெயர் ஞானக்

 கறையறு பாதம் முறையுறக் கழறின்”3

 என்றும் கூறுவதை நோக்கும்போது இவர் ஞான முதலிய நான்கு பாதங்களையும் இந்த நூலின்கண் கூறுகின்றார் என்ற உணர்வு தோன்றுகிறது. சிவஞான பாடியப் பேருரையாலும் இந் நூலின் உரையாலும் இந்நூலின் கிரியாபாதப் பகுதி இருந்த தென்பது தெளிவாகி அவ்வுணர்வை உறுதிசெய்கின்றது. ஆனால் அப்பகுதிகள் முற்றும் காலக் கேட்டால் இறந்தன எனக் கொள்வ தன்றி வேறில்லை. அறிவுடையோர் அரும்பாடு பட்டு அறிந்து உரைத்தருளிய அறிவுச் செல்வங்களைப் பெற்றும் அவர் வழிவந்த தமிழ்ச் சைவவுலகம் அதனைப் பேணிக் காக்கும் மனமாண் பின்றிக் கெட்டதை நினைப்பின் நம்மனோர் நெஞ்சு வருந்தத்தான் செய்கிறது. தமிழ் இலக்கியவுலகில் செல்லும் தமிழ்நெஞ்சம் அடிக்கடி இத்தகைய வருத்தங்களை எய்துவது இயல்பா கவுளது. இறந்தது நினைந்து இனி இரங்குவதை விடுத்து இந்நூற்கண் செல்வாம்.

 சிவதன்மம் உரைக்கும் சிவாகமங்களில் ஞானபாதம் என்பது “பசுபாசத்தொடு பதியாய் பெற்றி”4; பசு என்பது ஆன்மா; பதி, சிவம், ஆன்மாவும் சிவமும் சித்துப் பொருள்கள்; ஆன்மா அனாதியே மலக்கலப்புற்றுத் தன்னறிவு மறைப்புண்டு பிணிப் புற்றமையின் பசுவாயிற்று. ஆதலால் பசுவின் கண் அறிவும் அறியாமையும் விரவிநிற்கின்றன. இதனை, ஆசிரியர்,

 “ஒல்லா வல்லழல் போல நல்லோய்!

 ஞானமும் இன்மையும் நலம்மிக்கு

 ஆனா வுயர்கட்கு உணர்வு அனைவகையே”

 என்று விளக்குகின்றார். சிவமாகிய பதிப்பொருட்கு மலத் தொடர்பே கிடையாது; அஃது எஞ் ஞான்றும் ஒரு தன்மைத்தாய் அனாதி நின் மலப்பெருஞானமே வடிவாய் இருக்கும். ஆன்மா மலனாதலும், பதி நின்மலனாதலும், அனாதி;

 “அம்ம சீருணம்,

 திகழொளிப் பளிங்கு போலப் புகழரும்

 இறை புற்கலனுக்கு என்றனன் குறைவின்று

 அறைகழல் அருளொலி பரந்த

 பொறைவளர் சாரற் கயிலை யோனே”1

 எனக்காட்டி, செம்பிற்குக் களிம்பும் பளிங்குக்கு ஒளியும் போல ஆன்மாவுக்கு மலமும், சிவத்துக்கு மலமின்மையும் அமைந்தன என்பர். அனாதிமலத் தொடர்பால் அறிவு மறைப் புண்டு சிற்றறிவே விளங்கப் பெறும் பசுவின்பால் அருள் நிறைந்த பதிப்பொருள், தன் சத்தி சங்கற்பத்தால் மாயையைக் கலக்கி உடல் கருவி உலக நுகர்ச்சிகளைப் படைத்து அப் பசுவுக்களித்து அவற்றின் துணையால் மலமறைப்பினின்றும் வீடு பெறச் செய் கின்றான்.

 இம் மாயை, ஏனைப் பதியும் பசுவும் போல அனாதி நித்தப்பொருளாயினும், சித்துப்பொருள் அன்று; அசித்தாகிய அசேதனம் எனப்படும். “வாலிய சேதனம் அன்று இது; தீதறு செயல்கள் கோதுக அசேதனமாகலின்” என்பது காண்க. மாயை யானது, ஆன்மா மலத்தொடக்கினின்றும் விடு பெறுங்காறும் உடல் கருவி முதலியவற்றை உதவி நின்று பின்னர்ப் பதிப் பொருளின் சத்தியில் ஒடுங்கும். அசேதனமாகிய மலமறைப்புற்று வருந்தும் ஆன்மாவுக்கு மேலும் மாயாகாரியமான உடல் கருவியுலகுகளும் வினையுமாகிய அசேதனங்களை இறைவன் வழங்கியது அந்த மலத்தைக் கெடுத்தற்காகவேயாம்;

 “உடையுறு

 கறைகடி தகற்றப் பிறகறை பிடித்த

 பெற்றியின் இவனுக்கு உற்ற பிணி”

 என்பர். உலகப்படைப்பே ஆன்மாவின் பொருட்டு; உலகியற் பொருள்களோடு தொடர்புற்றா லன்றி ஆன்மாவுக்கு உய்தியில்லை. இதனை,

 “விரவிய பந்தம்

 கூடா தோடின் குலவிய போகம்

 துய்த்தல் செல்லான், செல்லானாக

 எய்த்த லின்றாம் இருவினையாக

 அபவர்க்கமும் மற்று அடையான்” என்பர்.

 இங்ஙனம், இறைவனது பேரருள்காரணமாக மாயா காரியங்களில் போக்குவரவு புரியும் ஆன்மா, போக நுகர்ச்சிக் காக உடல் கருவி முதலியவற்றிலும் அவற்றின் பயனாக வரும் வினைகளிலும் கருத்தைச் செலுத்தாமல், அவற்றின் தொடக்கறு தலையே விரும்பி அதற்குரிய முயற்சியில் இறங்கி, வினைத் தொடர்பைக் கெடுக்கு முகத்தால் மாயாமலத் தொடர்பும் ஆனவமலத் தொடர்பும் போக்கி, மெய்யுணர்வு விளங்கப் பெற்று ஆணமவூதியமாகிய இறவாத இன்ப அன்பு நிலையமாகும் சிவபோகப் பெரும் பொருளை எய்துதற்குரியனாகின்றான். இதனை இந்நூல்.

 “ஆனா முன்வினைப்

 பயன்பல மாந்தி வியந்துறை காலை

 வல்வினை யெல்லை செல்லாக் காலத்து

 ஒல்லென ஒப்ப உயர்பெருஞ் சிவனது

 சத்தி நிபாதம் தழைப்ப மெய்த்தகு

 குருபரம் பரனது அருளின் செவ்வி

 வம்பறு சம்பிர தாயத் தஞ்சுடர்

 உற்ற காலைச் சொற்றொடர் பற்றுத்

 தேயாது யாவுமாய் அறிவகன்ற

 ஆயாச் சிவனது அணிகிளர் சீர்த்தி

 நின்மலத்தியையும், பின்மலத் தியையான்

 அந்தமில் பந்தம் மற்று இவ்வணம்

 சிந்துதல் சிந்தல் தெரியுங்காலே”

 என்று கூறுகின்றது.

 இவ்வாறு சிவஞானச் செந்நெறிக்கண் நிகழும் ஆன்ம வாழ்வைத் தொகுத்துக் காட்டிப் பின் அறுபத்தேழு அகவற்பாக்களால் ஒவ்வொருபகுதியினையும் விளக்கிச் செல்வது இந்நூலாசிரியரது பொது வியல்பும், பசு பாசங்களின் உண்மை காட்டு தற்கும், சற்காரியவாத முதலிய கொள்கைகளை விளக்குதற்கும், அளவை களாலும் கடா விடைகளாலும் பொருளுணர்த்தும் நெறியை மேற்கொண்டொழுகுவது இவரது சிறப்பியல்புமாகும்.

 இந்நூலை ஆராய்ந்த பண்டையோர், பாயிரமொழிந்த ஏனைப் பகுதிகளைச் சம்மிய ஞானம், சம்மிய தரிசனம், பாச பந்தம், தேகாந்தரம், பாசவனாதி, பாசச் சேதம், பதியுண்மை, பாச மோசனம் என்ற தலைப்புக்களின் கீழ் வகுத்து, ஒவ்வோரக வலுக்கும் கருத்துரை வகுத்துத் தந்துள்ளனர். இவ் வகுப்பும் கருத்துரையும் உரையில்லாத ஏடுகளிலும் இருத்தலின், இவை உரைகாரரால் வகுக்கப்பட்டவையல்ல வென்பது தெரிகிறது. உரைகாரரும் அவ்வப்பகுதிக்குரிய உரை முடிந்ததும், அதனை முடித்துக்காட்டி மேல்வரும் பகுதிக்குத் தொடர்பு காட்டும் மரபினை மேற்கொள்ளவில்லை. இதனால் இந்நூலின் பொருள் வகுப்பும், கருத்துரையும், உரையும் ஆகிய யாவும் தனித்தனி நின்று பொருள்காட்டி நிற்குமளவில் அமைந்துவிடுகின்றன; இவற்றிற்கும் நூலாசிரியர்க்கும் தொடர்பில்லையென்பது தெளியவிளங்கு கிறது.

 ஒவ்வொரு பாட்டின் உரையிறுதியிலும் இலக்கணக் குறிப்பை எழுதுவது இவ்வுரைகாரரின் முறையாகவுளது. இக் குறிப்புக்கள் சில ஏடுகளில் சிறிது மிகுதியாகவும் சிலவற்றில் குறைவாகவும் உள்ளன. இவற்றை நோக்கும்போது இலக்கணக் குறிப்புகளுட் சில பிற்காலத்தவர்களால் கூட்டவும், குறைக்கவும் பட்டுள்ளன என்று கருத இடமேற்படுகிறது. இக்குறிப்புக்களும் பெரும்பான்மை அசைநிலைகளை எடுத்துக் காட்டுவதிலே நின்று விடுகின்றன. ஒரோவிடத்தில் அருஞ்சொல்லுக்குப் பொரு ளெழுதிக் காட்டுவதும் உண்டு. ஆயினும். இவ்வுரைப்பகுதியைச் சுட்டிக்காட்டிமறுக்கும் மறுப்பும் நம் சிவமாதவச் சிவஞான முனிவரால் நிகழ்த்தப் படுகிறது; அதனை இந்நூலுள்ளே காணலாம். இதனால், இந்த ஞானாமிருத உரைகாரர் மாதவச் சிவஞான முனிவர்க்கு காலத்தால் முற்பட்டவர் என்பது தெளிவாகத் தோன்றுகிறது.

 உரைகாரரது உரைநடை, ஏனைத் தமிழ்நூல் உரைகாரர் களது நடைபோல் இலக்கியவளம் செறிந்ததன்று; பாட்டின் பொருளைச் சிறிது கற்றவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ளத் தக்கவகையில் அமைந்திருக்கிறது. ஞானாமிர்த மூலத்தின் நடை

 சங்க இலக்கியப் பாட்டுக்களைப்போல் சொற்கோப்பும் பொருட் செறிவும் கொண்டு நிமிர்ந்து நிலவுவதுகண்டு, அதன் பொருளை எளிய நடையில் காட்ட வேண்டுமென்ற எண்ணத் தால் இவ்வாறு எழுதப்பட்டதோ என நினைக்கவும் இடமுண்டாகிறது. உரைக்கப்படும் உரைப் பொருளை வற்புறுத்தவும், ஒத்த கருத்துக்களை ஏனை நூல்களிலிருந்து எடுத்துக்காட்டவும் இவ்வுரைகாரர் முற்படவில்லை. ஞானாமிர்தப் பாட்டுக்கு மூலமாகவுள்ள ஆகமங்களையோ ஆகமக் கருத்துக்களையோ எடுத்துக் காட்டுவதிலும் அவர் எண்ணம் செல்லவில்லை. இவ்வாற் றால், இவ்வுரைகாரர், ஞானாமிர்தாசிரியர் சந்தானத்துக்குரிய மடம் ஒன்றில் இருந்து. அங்கே இந்நூற் பொருளை அறிந்தோர் சொல்லக் கேட்டவாறே எழுதியவராதல் கூடும் என்பது தெரிகிறது. வேறே இவ்வுரைகாரரைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதை நினைக்கும்போது தக்கயாகப் பரணி உரைகாரர் நினைவு நெஞ்சில் எழுகிறது. அவரைப் போல் அத்துணைப் பரந்த நூற்கேள்வியும் விரிந்த புலமையும் இவ்வுரை காரர் பால் உண்டென்பதற்கேற்ற சான்றுகள் உரையகத்தே காணப்பட்டிலவாயினும், பாட்டின் முறுக்கை அவிழ்த்துக் கண்ணழித்துப் பொருள்காட்டும் திட்பமும் தெளிவும் நம் உள்ளத்தைக் கவர்ந்து கொள்கின்றன. இந் நிலையில், இந்த ஞானாமிர்தமென்னும் தமிழாகமத்தின்கண்,

 “ஆருஞ் சுவைபல யாரும் தெளிய

 அணியுரை செய்

 சீரும் சிறப்பும் உடையோய் இரு

 மொழிச் செல்வ நின்றன்

 பேரும் தெரிந்திலன், என் செய்குவேன்

 இந்தப் பேதையனே”

 என்று டாக்டர். திரு. உ. வே. சாமிநாரையதவர்கள் தமது உளமுருகி வருந்தியுரைத்த உரையினையே நாமும் இங்கே உரைத்துக் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

 ஞானாமிர்தச் செம்பொருள்

 ஞானாமிர்தம் என்பது ஞானமாகிய அமுதம் என விரியும். ஞானமாவது சிவநெறிபற்றிய அறிவு; சிவம், உயிர், உலகு என்ற முப்பொருளின் உண்மையும் ஒவ்வொன்றிற்கும் உள்ள இயல்பும் தொடர்பும் அறிந்துகொள்ளும் அறிவு. அமுதம் தன்னை உண்டாரை உலகில் நெடிதுவாழச் செய்யும் இயல்புடையது; அது போலவே, சிவநெறிபற்றிய அறிவாகிய ஞானம், வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து சிவபரம்பொருளின் திருவருள் இன்ப வாழ்வில் என்றும் பொன்றாது நின்று நிலவச் செய்யும் செயல் நலம் உடையது.

 இதனை உரைக்கப் புகுந்த ஆசிரியர், பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, விநாயகர் துதி, கலைவாணி துதி, ஆசிரியர் துதி என வணக்கம் கூறியபின் அவையடக்கம் முதலியன கூறுகின்றார். கடவுள் வாழ்த்து என்ற அகவலில் முழுமுதற் கடவுள் சிவபரம் பொருளே என்றும், அவன் “அறவோள் அமர்ந்த பாகன்”, என்றும், “துறவோர்க்கு எல்லையாகிய தொல்லோன்” என்றும் குறிக்கின்றார். விநாயகர் துதியில், அவரது யானைமுகத்தைச் சிறப்பித்துக்கூறி, “யாண்டு பல நிரம்பினும் இளமையொடு கெழீஇ, ஞானமாமதம் தருக்கி, ஆனா வினையுகச் சீறும் நனை கவுள் வேழம்” என மிக்க நயப்புற மொழிந்து வணங்குகின்றார். கலைமகளை வெள்ளிதழ்த் தாமரை மேல், “தீதற இருந்த ஆதிநாயகி” என்றும் அவளுடைய “கழலிணை” கருதுதற்குரிய தென்றும் கட்டுரைக்கின்றார். ஆசிரியர் துதியின்கண், தம் ஆசிரியருடைய அருளும் அறிவும் பொறையும் பிறவுமாகிய குணநலங்களைக் கற்பனை வளம் பொருந்தச் சிறப்பித்துப் பாராட்டி, புலன் அழுக்கற்ற அவருடைய பொற்பும் பெயரும் விளங்க.

 “ஐம்புல வேழத்து வெந்தொழில் அவியக்

 கருணை வீணை காமுறத் தழீஇச்

 சாந்தக் கூர்முள் ஏந்தினன் நிறீஇத்

 தன்வழிக் கொண்ட சைவ சிகாமணி

 பரமா னந்தத் திருமா முனிவன்”

 என்று பாடி அவர் திருவடியைப் பரவிப்பணிகின்றார்.

 பாயிரத்தின் இறுதிப்பகுதியாக நிற்பது அவையடக்கம், இதன்கண் ஞானாமிருத ஆசிரியர், இதனைத் தாம் பாடுதற்குரிய காரணம், இதனை உரைத்தல் வேண்டும் என்று எழுந்த விருப்பமே யன்றி வேறில்லை என்று குறிக்கின்றார். நூல் வரலாறு கூறு மிடத்து, முன்பொருகால் தேவரும் அவுணரும் கூடி உவர்க்கடல் கடையப் பிறந்த அமிழ்தத்தின் வரலாறு கூறி, அதுபோலவே இறைவன் அருளிய ஆகமத்தை மத்தாகவும் ஞானாசிரியனது அருளுரையை நாணாகவும் இயற்கையறிவைக் கையாகவும் கொண்டு அஞ்ஞானம் என்னும் கடலைக் கடைய இந்த ஞானா மிருதம் பிறந்தது என்று கூறுகின்றார். இதுபற்றியே இந்நூல் ஞானாமிருதம் என்று பெயர் பெறுவதாயிற்று. இந்நூல் வரலாற்றுக்குத் துணைசெய்த சிவாகமங்களை இந் நூலாசிரியர் மறை என்றும், பிறவிப் பேரிடர்க்கு அஞ்சிமுறையிட்ட தேவர் முனிவர்கட்கு அவற்றை இறைவன் அருளினன் என்றும், இம் மறைகள் நான்காக இயலுமென்றும், அவை ஞானம், யோகம், கிரியை, சரியை என்பனவாம் என்றும் தோற்றுவாய்செய்கின்றார்.

 1 சம்மிய ஞானம்

 பாயிரத்தில் காட்டிய ஞானபாதம் பசுபாசங்களையும் பதியையும் ஆராய்ந்துரைக்கும் முறைமையுடையது. பசு என்பது உயிர்; இது பாசத்தால் கட்டுண்டிருப்பது பற்றிப் பசு எனப்படும், பசு கட்டப்படுவது. பாசம் என்பது கட்டுவது. பாசம் பொது வகையில் மலம் மாயை வினை என மூன்று. மலம் ஆணவமலம் என்றும் வழங்கும். மாயையால் உடம்பும் உலகும் உலகியற் பொருள் இன்பங்களும் ஆகியவை. அதனால் மாயையை உலகு என்றும் உடம்பு என்றும் ஏற்றவாறு வழங்குவதும் உண்டு. அதுபற்றியே பசு முதலிய மூன்றையும் உயிர், உலகு, இறை என முறையே மொழிவதும் வழக்கம். உயிர்க்குக் கேவலம் சகலம் சுத்தம் என மூவகை நிலையுண்டு. உயிர் மலமாகிய கட்டோடு மட்டில் இருப்பது கேவலம் (தன்னிலை) எனவும், உடம்பொடு கூடி நிற்பது சகலம் (உடனிலை) எனவும், மல முதலிய மூன்றின் தொடர்பிலிருந்து நீங்கித் தூய்தாய்த் தனித்து விளங்கும் நிலை சுத்தம் எனவும் வழங்கும். தன்னிலையில் உள்ள உயிர் உடனி லையை எய்தி வினைகளைச் செய்து அவற்றில் இன்பமும் துன்பமுமாகிய பயன்களை நுகர்ந்து சத்திநிபாதம் தழைக்கத் திருவருள் ஞானம் பெற்று அருட்செயல்செய்து சுத்த நிலை எய்தும். தன்னிலையில் உயிர்க்கு மலத்தொடக்க அனாதியே ஆகிய தொடர்பு. அனாதி எனின் அத்தொடர்பு எக்காலத்தில் உண்டாயிற்று என வினவுதற்கு இடமில்லை என்பது பொருள். மலத்தொடர்பு காரணமாக உயிர் மாயையின் காரியமாகிய உடம்பொடு கலந்து உலகில் தொடர்புறுகிறது. மாயையோடு மருவாதாயின். உயிர், வினைத் தொடர்பு கொண்டு மலம் நீங்கி வீடு பேறு எய்துதல் இல்லையாம். மலத்தோடுகூடிய உயிர்க்கு மாயையும், வினையும் தொடர் புறுவது நாம் உடுக்கும் உடையில் பற்றிய கறையை; உவர் மண்ணும், சாணமுமாகிய அழுக்குகளைச் சேர்த்துப்பின் மூன்றையும் போக்கிவெளுக்கச் செய்வது போல்வது; இதனை ‘உடையுறுகறை கடிதகற்றப் பறி கறைபிடித்த பெற்றி” என்பர். உயிர் அழிவில் லாத அனாதி நித்தப்பொருள். அஃது அறிவு வடிவினது, வடமொழியில் உயிரை ஆன்மா என்றும் அறிவுவடிவத்தைச் சேதனம். சைதன்னியம் என்றும் கூறுவர். மலம், மாயை, கன்மம் ஆகிய மூன்றும் அறிவில்லாதவை யாதலால் அசேதனம் எனப்படும். மாயையிலிருந்து உலகும் உடம்பும் இறைவனால் படைக்கப்படுகின்றன. கேவலத்திலுள்ள உயிர் சுத்தமாய் வீடுபெறும் பொருட்டே இறைவன் உலகைப் படைக்கின்றான். படைக்கப்பட்ட உடம்பும் உலகும் அசேதனம். சேதனமாகிய உயிர் உடம்பின்கண் நின்று இயக்க உடம்பு இயங்கும்; உயிர்க்கு உடம்பு ஓர் ஊர்தி (வாகனம்) போல்வது. உயிர்வழி நின்று உடம்பு இயங்கும் திறத்தை,

 “ஆடிப்பாவை யோடு அலர்நிழற் பாவை

 கைகால் மெய்பிறிது எவையும் பைப்பத்

 தூக்கின் தூங்கி மேக்குயர்பு உயர்தல்

 பொறியோடு சிவணல் என்ன

 அறிவொடு செறியும் நெறிவரும் உடலே”

 என்று குறிப்பர்.

 2. சம்மிய தரிசனம்

 உலகில் உயிர்க்கு இடமாகிய உடம்பு தேகம் என்றும் வழங்கும். தேகம், தூலம் (உருவுடம்பு) சூக்குமம் (அருவுடம்பு) என இருவகை; தேகம் எனப்படும் வகைகள் அத்தனையும் அசேதனம்; உயிரையின்றித் தானாக இயங்குவன அல்ல. தேகத்தில் உள்ள உயிர் புருவ நடு முதல் உந்தியின் கீழுள்ள ஆதாரம் வரை கீழும் மேலுமாக உலவிக்கொண்டிருக்கும்; உடம்பில் கீழும் மேலுமாக சென்று தங்கும் வகையில் உயிர்க்கு ஐவகை நிலையம் (ஐவகை அவத்தை) உண்டு. அவை சாக்கிரம் (நனவு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்). துரியம் (பேருறக்கம்). அதீதம் (கழி பேருறக்கம்) எனப்படும். துரியத்தில் ஆன்மா மலத் தொடர்பும் இன்றிச் சுத்தமாயிருக்கும் எனச் சிலர் சொல்வது உண்டு; அவரை மறுத்துத் துரியத்திலும் அதீதத்திலும் ஆன்மாச் சுத்தன் அல்லன் என்று சைவநூல் வற்புறுத்துகிறது.

 3. பாசபந்தம்

 மலம்போல மாயை வினைகளும் உயிரைப் பிணித்து மயக்குவதுபற்றி மலம் எனப்படும்; படவே மலம் ஆணவம், மாயை, வினை (கன்மம்) என மூன்றாம், ஆணவமலம் (மலம்) “செம்பிற்பெருகு இருந்துகள் (களிம்பு) என அறிவினை மறைத்தல்” செய்யும் ஆன்ம தத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம் என மூன்றாய்ப் பின் முப்பத்தாறாக விரியும் தத்துவம் மாயை; கன்மம், நல்வினை தீவினை என இரண்டாம்.

 ஆணவ மலம் ஒன்றாயினும், தனித்தனிப் பல்வேறு இயல்பு களால் பலவாகிய உயிர்களின் தன்மைக்கேற்ப மறைக்கும் சத்தி பலவாய்க்கொண்டுள்ளது. மனம், வாய், உடம்பு ஆகிய மூன்றின் செயல்கள் வினையாகும். மாயை ஒருவகை ஒளியாற்றல் (சத்தி). இம்மாயை, உலகு உடம்புகளாய் விரிவதும் மாயையாய் ஒடுங்குவதும் செய்வது தோற்றமும் ஒடுக்கமுமாகும்; மாயை யாகிய சத்தி அசேதனமாதலால், இறைவன் தோற்றுவித்தலும் ஒடுக்குதலும் செய்கின்றான். அவன் அது செய்வது உயிர்கள் வினைசெய்து போகம் நுகர்தற்பொருட்டே; இதனை,

 “மாயா

 காரியம் நிற்பது முடிவில் சீரிய

 சத்தி வடிவில் பொற்பொடுபுணரும்

 தொடங்கற் காலை இடம்பட விளங்கும்

 ஆருயிர் ஏரிசைப் போகம்

 சீரிதன் அருந்தத் திகழ்தனு முதலே’’3

 என்று ஆசிரியர் உரைப்பது காண்க.

 மாயைகாரியமாகிய உடம்பும் உலகும் உள் பொருளாகிய மாயையிலிருந்து தோன்றிநின்று மீண்டும் அம்மாயையிலேயே ஒடுங்கும். வேறு சமயத்தவர் மாயையை இல்பொருள் என்றும் சூனியம் என்றும், இன்னதன்மைத் தென்று சொல்ல வொண்ணாத அநிர்வசனம் என்றும் கூறுவர். சைவநூல்கள் மாயை இல்பொருள் அன்று; ஆற்றல் வடிவாய் என்றும் உள்ள அனாதி நித்தப்பொருள் என்று கட்டுரைப்பர். அதனால் உலகு சற்காரியப் பொருளே யன்றி அசற்காரிய மன்று என்பது கொள்கை. ஒன்று மில்லாத சூனியத்திலிருந்து உலகு படைக்கப்பட்டது என்பதும், இவ்வுலகு இறைவனிடத்திலிருந்தே படைக்கப்பட்ட தென்பதும் சிவநெறிக்குப் புறம்பானவை. சேதனம் அசேதனம் எனப்படும் உயிரும் உலகும் எல்லாம் பிரமப்பொருளிலிருந்து தோன்றி அப்பிரமத்தினிடத்தே ஒடுங்கும் என்பது சைவம் அன்று.

 வினை, உயிர்கள் மனத்தாலும், வாயாலும், உடம்பாலும் செய்யப்படும் நல்வினை, தீவினை இரண்டுமாகும். மனத்தால் உண்டாகும் நல்வினை அருளொடு புணர்தல் முதலியன; வாயால் தோன்றுவன அறம் பெரிது மொழிதல் முதலியன. உடம்பால் தோன்றும் நல்வினை தவம் முதலியன. அருள் அறம், தவம் முதலிய வற்றுக்கு மாறானவை தீவினையாகும். இருவகை வினைகளுள் நல்வினையால் இன்பமும், தீவினையால் துன்பமும் உயிர்களை அடையும். வினையால் விளையும் துக்கம் மூவகை யாம்; அவை ஆதிதைவிகம், ஆதிபௌதிகம், ஆதி ஆத்தியான் மிகம் எனக் கூறப்படும். ஒவ்வொன்றும் இந்நூற் கண் நன்கு விரித்துக்கூறப்படுகிறது.

 4. தேகாந்தரம்

 உயிர், உடம்பொடுகூடி உலகில் வாழ்க்கை நடத்துங்கால், முன்னை வினைப்பயன்களை நுகர்வதும், நுகரும்போதே வேறு வினைகளைச் செய்வதும் நிகழ்வதால் அவ்வினை காரணமாகப் பிறப்பிறப்புக்கள் உண்டாகின்றன.

 “கருங்கயல் இரியப் பெரும்பகடு துரந்து ஆங்கு

 உழவ ராக்கிய விளைவயற் செந்நெல்

 பிற்பயன் தந்தாங்கு இச்செயல் உதவப்”1

 பல புவனங்களிலும் பலவகைப் பிறப்புக்களிலும் உயிர்கள் வினை காரணத்தால் பிறந்தும் இறந்தும் வருகின்றன. இறைவனுக்கோ எனின் பிறப்பும் இறப்பும் ஒருபோதும் இல்லை.

 5. பாசானாதித்துவம்

 பிறப்பிறப்புக்களுக்குக் காரணமாகிய வினையும், மாயையும் மலம் போல அனாதி நித்தப் பொருள்கள். மாயையால் கருவியும் வினையால் செயலும் நிகழ்தலால் இவை இரண்டன் தொடர்பு இல்வழி உயிர் மலத்தொடர் பினின்றும் நீங்காது. மாயையும் வினையும் ஒன்றையொன்று இன்றியமையா; ஆதலால் இவற்றுக்கு முற்பிற்பாடு கூறல் முடியாது. அன்றியும்,. மாயாகாரியமாகிய உடம்பு கொண்டே வினை நிகழ்கிறது; வினையால் மேன்மேலும் உடம்போடு கூடுதலாகிய பிறப்பு உண்டாகிறது. இவ்வாறு மாறிமாறிக் காரண காரியமாய்வந்து கொண்டிருக்கும் இவற்றின் தொடர்பு அற முயல்வதுதான் மலத்தொடர்பினின்று நீங்கிச் சுத்த நிலை எய்துதற்கு ஏதுவாகும்.

 6. பாசச்சேதவியல்

 பாசமாகிய மாயை வினைகளில் தொடர்பு அற முயல்வதே மலத்தின் தொடர்பு நீங்கும் நன்னெறியாம். அது ஞானநெறி எனப்படும். அந்த ஞானத்தின் சிறப்பு இஃது என விளக்கு வாராய்,

 “மறக்குறும் பறுப்ப” அறத்தின் வேலிய,

 தனக்கு நிகர் இல்லாத் தன்மைய, மனத்தின்

 மாசு அறக்களைவ, தேசொடு நிவந்த

 துன்னிய வினையுகும் நன்னெறி2”

 என்று பாராட்டியுரைப்பர். மலமாசு கழுவி மாண்புற வந்த உயிர்க்குத் துணையாய்ப் புணர்ந்த மாயையும் வினையும் தம்பால் பிறக்கும் அழுக்காறு, அவா, வெகுளி முதலியவற்றைக் காட்ட ஆங்கே பிறக்கும் சிற்றின்பத்தில் உயிர் மயங்கும்; அது போது அஞ்ஞானம் எழுந்து உயிரை ஐம்புலன்களின் இன்பத்தில் அழுத்தி ஞானநெறி உணராது தடுமாறச் செய்யும். அஞ்ஞானமாகிய வேந்தன் ஆட்சியில் அமைந்திருக்கும் உயிரை ஞானமாகிய வேந்தன் அறிந்து நன் ஞானத்துக்குரிய கருவிகளாகிய படை யொடு சென்று’

 “அடுமிளை பொடிபட எறிந்து நெடுமதில்

 அகழியொடு இடிய நூறிக் கொடுநகர்

 எரிவிருந் தூட்டி அரிது பெறு சிறப்பின்

 தன்னுடை நாசம் மன்னன் எய்தப்

 பரமானந்தப் பைதிரம்”1

 எய்துவிப்பன்.

 வினைத்தொடர்பு கெடுதற்கு வாயில் காணவேண்டின், அது போந்து தொடரும் இடம் அறிதல் வேண்டும். அவ்விடம் கரு, பிறப்பு, இறப்பு ஆகிய மூன்றுமாகும். ஆங்கு வந்து தொடரும் வினையினை நுகரும்போது, இவ்வினைகள் முன்பே தேடிக் கொண்டனவாதலால் இவற்றை நுகர்ந்து கழித்தல் வேண்டுமேயன்றிப் பிறரை நோதல்கூடாது எனத் தெளிவது முதல் வாயிலாகும். இருவகை வினைகளையும் ஒரு தன்மையாக நோக்கி, விருப்பு வெறுப்பின்றி நுகர்பவரே ஞானவான்கள். அவர்கட்குப் பகையும் ஒன்று; நட்பும் ஒன்று; உடம்புகொடுத்த பெற்றோரே அவர்கட்கு ஒரு வகையில் பகைவர்; அவர்கள் தம்மைக் கொன்று ஒழிப்பவரை உடம்பாகிய சிறையிலிருந்து விடுதலை செய்யும் நலத்தகையாளரெனக் கருதுவர். “உருவில் ஓர் உயிர்க்கு உடலுநர் உழையர் என்று இரு வேறு உரைப்பதை எவனோ”?2 என்பது அவரது கொள்கை. தமக்கு வரும் துன்பங் கட்குத் தாம்தாம் செய்த வினை காரணமாதலை அறியாது பிறரை நோவது இழித்தக்க தாம். அவர்க்கு இரங்கி,

 “இளையோன் துரந்த குணில்வாய்ச் செல்லாது

 இளையோர்ச் சினவும் வளைவாய் ஞமலியின்

 அளியரோ அளியர் என்னை

 ஒளிகொள் காரணம் உன்னா தோரே”3

 என்று கூறுவர். வினைத்தொடர்பு கெடுத்து ஞானத்தால் வீடு பெறக் கருதும் மேலோர் தமக்குத் தீமை செய்தோரிடத் தும் நன்மை செய்தோரிடத்தும் ஒத்த அன்பே கொண்டு; “பிறவிப் பிணிதணி அறவணர் இவர்” என்று பேரின்பம் கொள்வதேயன்றி வருத்தம் எய்துவது இலர். பிறர் எவரேனும் அவரை நெருங்கித் துன்பம் செய்வராயின், அவர்பொருட்டு அருள் கூர்ந்து மனம் கரைந்து, இவர்கள் “நீங்கா நிரயத்து அழுந்துதற்கு ஏதுவாயினம்” என நினைந்து வருந்துவர்.

 ஞானிகளாயினும் யாவராயினும் தாம் செய்த வினைப் பயனை நுகர்ந்தே தீர்தல்வேண்டும். அதனால் ஒவ்வொரு வர்க்கும் நல்வினைக்காலம் தீவினைக்காலம் என இருவகைக் காலம் அவரை அறியாமே வந்துநின்று தன் பயனை நுகர்விக்கும் நல்வினைக் காலத்தே ஒருவன் அறியாமல் நஞ்சுண்டானாயினும் அந்நஞ்சு அமுதமாய் அவனுக்கு நன்மை எய்துவிக்கும், வீமன் நஞ்சுண்டும் இறவாமல் நாககன்னியை மணந்துகொண்டு போந்ததும், கன்னனை அவன் தாயாகிய குந்திதேவி ஆற்றில் இட்டாளா யினும், அவன் பின்னர் அங்கர்கோனாய் அரசாண்டதும் இதற்குச் சான்று கூறுகின்றன. தீவினைக் காலத்தில் ஒருவன் அமிழ்த முண்டானாயினும், அது தன்னை உண்ட அவனுக்கு நஞ்சாய்க் கேடுசெய்யும். இதற்குத் தக்க யாகமும், யாளிதத்தன் வரருசி முதலியோர் வரலாறும், நகுடன் கதையும் காட்டப்படுகின்றன. இருவகை வினைகளையும் அமைதியுடன் நுகர்ந்து கழிப்பதை விட வேறுவழியில்லை. இதனை வற்புறுத்தற்குப் “போகாது அம்ம புராதனம்”1 என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்.

 ஞானிகளும் அஞ்ஞானிகளும் ஆகிய இருவரும் உண்டல், உறங்கல், அஞ்சுதல், இன்பநுகர்தல் முதலிய செயல்வகைகளில் ஒரு தன்மையராகவே இருப்பர். இவற்றில் சிறு வேறுபாடும் இல்லையாம். ஆயினும் ஞானிகனின் உள்ளம் ஏனையோர் உள்ளத்தினும் வேறுபட்டே இருக்கும். அவர்கள் உலக வாழ்வில் ஆழ்ந்து கிடந்தாராயினும், அவரது உள்ளம் தூய்மைகெடாது துலங்குகின்றது.

 “ஞான மாக்கழல் மாணுற வீக்குநர்

 விடைய வேலைத் தடையின்று படியினும்

 தீ தொடு படியுநர் அல்லர்

 மாதுயர் கழியுநர் நீதி யானே”2

 என்று ஆசிரியர் அறிவிப்பது காண்க. அஃது அவர்கட்கு எவ்வாறு இயலுகிறது எனின், நன்னீரையுண்ணும் ஞாயிற்றின் கதிர் இழந்த நீரையுண்ணினும் தன் தூய்மை கெடுவதில்லை; நன் பொருளை எரித்த தீ, தீண்டத்தகாத பொருளை எரித்த போதும் தன் தூய்மை மாசுபடுவதில்லை. அதுபோலவே, ஞானிகள் “இருவினைவிடயத்

 தழுந்தியும் சுடர்ப”1 என விடை கூறு கின்றார்.

 உடம்பும் உலகவாழ்வுமாகிய இரண்டன் தொடர்பைக் கருவியாகக்கொண்டு மலத்தொடர்பு நீங்குதலை மறந்து, அவை இரண்டும் பயக்கும் இன்பத்துக்கு அடிமையாகி மேன்மேலும் வினைகளைப் பெருக்குதல் பந்த காரணம்; அவற்றை வெறும் கருவியேயென ஞானத்தால் தெளிந்து அவற்றால் ஆகும் பயனாகிய வீடுபேறு நோக்குவது மோட்ச காரணம் என்றும் கொள்வது ஞானிகள் வாழ்க்கை. அவர்கட்கு இவ்வுடம்பு பெருஞ்சுமையாக இருக்கும்; அதுபற்றியே அவர்கள் தம் உடம்பின்பால் கொண் டிருக்கும் மதிப்பைப் பிணமொன்றைச் சுமந்து செல்லும்,

 “ஆடவன் உள்ளம் கடுப்ப நீடிய

 மலப்பொதி இரிய நூறி உரைத் தொடக்கு

 உணர்வொடு கழிந்த இணையில் இன்பத்து

 என்றுகொல் எய்துஞான்று என்றே நன்றும்

 நெடிது நினைகுவர் மாதோ”2

 என்று தெரிவிக்கின்றார்.

 இப்பெரியோர்களான ஞானிகள் உடம்பொடுகூடி வாழ்தலால் இவர்கள் பால் குற்றம் யாதும் நிகழாதோ என்னும் ஐயத்தை எழுப்பி, குற்றம் நிகழ்தலும் உண்டு என்று குறிப்பர். ஆயினும் அவர் அக் குற்றத்திற்குக் காரணம் ஆகார் என்று விளக்கத் தொடங்கி, குயவன் சுற்றிவிட்ட சக்கரம், அவன் செயல் நீங்கிய விடத்தும சுற்றுவதுபோல, வினை செய்து வந்த உடம்பு, உள்ளி ருக்கும் உயிர் வினையின் நீங்கியபோதும் வினைவழி இயங்கும் என்று விளக்கி இதனால் அவர்கள் வினைக்குக் காரணர் ஆகாமை காண்க என்பர்.

 இந்நிலையில் ஞானவுணர்வு சிலர்க்கு அளித்த போதினும் அவர்க்கு அது பயன்தாராதுபோவதும், சிலர்க்குப் பயன்படுவதும் கண்கூடாகக்கண்டு. இதுபற்றி நிகழ்ந்த ஆராய்ச்சியால், பக்குவமுடைய நல்லோர்க்கு எய்திய ஞானம் நற்பயனும், அல்லாதவர்க்கு எய்தியது வேறுபயனும் விளைத்தல் காணப்பட்டது. பாம்புண்ட நீர் நஞ்சாதலும் பசுவுண்ட அந்த நீரே பாலாதலும்போல இந்த ஞானம் நற்பயனும் வேறு பயனுமாய் முடியும் என்று விளக்கு கின்றார். மாயையின் தொடர்பு உடம்பின் புன்மையைக் காண நீங்குகிறது. அதுபற்றியே யாக்கை நிலையாமையும், அதன் ஒவ்வொரு பகுதிக் கண்ணும் உள்ள தீமைகளும் விரித்துக் காட்டப்

 படுகின்றன. வினைகளின் இயல்பும் அவற்றின் காரணமும் பயனும் நோக்க வினைத் தொடர்பு நீங்குகிறது. இவற்றால் சிவஞானம் விளங்கித் தோன்றுதலால் மலத்தின் தொடர்பும் கெடுகிறது. மலம், மாயை, வினை என்ற மூன்றும் அனாதிநித்தப் பொருள் என்றபின், உயிர்க்கு அவற்றோடு உண்டாகும் தொடர்பு கெடும் என்பது முன்பின் மலைவு பேலத் தோன்றும். மல முதலிய மூன்றும் அனாதிநித்தமேயன்றி அவற்றிற்கும் உயிர்க்கும் உளதாகும் தொடர்பு நித்தம் அன்று; மலத்துக்கும் உயிர்க்கும் உளதாகிய தொடர்பு அனாதியேயன்றி நித்தம் அன்று; ஏனை மாயை கன்மங்களின் தொடர்பு மலத் தொடர்பு காரணமாக பின்னே வந்த தொடர்பு. மலமாயை கன்மங்கள் தனித்தனி பொருட்டன்மையில் அனாதிநித்தம் என்பது கருத்து. மலத் தொடர்பு காரண மாக மறைப்புண்டிருந்த உயிர் மலத்தொடர் பின் நீங்குவதென்பது மலத்தால் மறைக்கப்படும் தன்மை நீங்குதல் எனவும் பொருள் கொள்ளப்படும். மல முதலிய பாசங்களின் தொடர்பு, குளிகையால் செம்பு களிம்பின் மறைப்பு நீங்குதல் போலவும், மந்திர மொழியால் விடத்தின் ஆற்றல் நீங்குதல் போலவும் நீங்கும் என மொழிந்து இவ்வாறு,

 “பாசப்பெருவலி தடுத்தனர்,

 மாசில் ஞான மன் பெருந்தகையே’’1

 என்று தெளிவிக்கின்றார்.

 பதி நிச்சயம்

 இவ்வண்ணம் மலம், மாயை, கன்மம் என்ற பாசப் பொருள்களின் இயல்பும் தொடர்பும் தொடர்பின் நீக்கமும் காட்டியவர் இறுதியில் பதியின் இயல்பைக் கூறுகின்றார். மலமுதலியவற் றோடு தொடர்புற்று மாயாகாரியமான உலகைப் பற்றுக்கோ டாகக் கொண்டு வாழும் உயிர்க்கு மாயையின் தொடர்பு நீங்குமாயின் அதற்குப் புகலிடம் இல்லாமல் இல்லை; அப் புகலிடம் பதிப்பொருளாகிய இறைவன் திருவடியே.

 “ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை,

 ஒருவன் பாதமல்லதை. பிறிதும் உண்டோ

 பெரும்புகல் நமக்கே”1

 என்று அறிவுறுத்துவர்.

 சிவபரம்பொருளின் இயல்பை, “காட்சி முதலிய அளவை யும் அளவறச் சேட்பட அகன்றனன் சிவன்” என்றும்,

 “நிலம்நீர் தீகால் வெளி உயிர் யாவும்

 அவையே தான் அவை தானேயாகி

 விரவியும் விரவா வீரம்”

 என்றும் எடுத்தோதி, சிவனாகிய அப்பதிப்பொருள் இல்பொருள் அன்று; உள்ளதொன்று என்பதைக் கருதல் அளவை வகையால் நிறுவுவர். அம்முதல்வன் தனக்கென ஓர் உருவம் இன்றியே எல்லாம் செய்ய வல்லவன். உருவம் இல்லாத உயிர் நம் உடம்பை இயக்குவதுபோல, அவன் அருவமாயிருந்தே உலகம் தோன்றி நின்று ஒடுங்குமாறு செய்வன். உலக முதலியவற்றைப் படைத்தலில் அவனுக்குக் கருவியொன்றும் வேண்டா; அவன் நினைவு ஒன்றாலேயே எல்லாம் இனிது செய்யும் இயல்பினன். ஞாயிறும் ஒளியும். போல தானும் தன் அருட்சத்தியும் கூடிநின்று படைத்தல் முதலிய எல்லாவற்றையும் செய்வன். அப்பெற்றியனாகிய முதல்வனை ஞானக்கண் உடையோரன்றி வேறு எவரும் காண்டல் கூடாது; ஆயினும் அவன் எல்லாவுயிர்களையும் உயிரில் பொருள் களையும் தெளிவாகக் கண்டு செய்வன செய்கின்றான். விரிந்த உலகில் நிகழ்தற்குரிய செயல்கள் பலவும் அவன் சத்திகளாலே நடைபெறுகின்றன. சகளம், நிட்களம், சகள நிட்களம் என நின்று; படைப்பு முதலிய ஐவகைத் தொழில்புரியினும் இறைவன் விகாரம் அடையான். உயிர்கள் உய்தி பெறுதற்குரிய வழிகளாகிய அத்துவாக்கள் சுத்தம் அசுத்தம் என இருவகையவாகலின், சுத்தாத்துவாவுக்கு இறைவனும், அசுத்தாத்துவாவுக்கு அனந்தரும் கருத்தாக்களாவர்; அனந்தர் முதலியோரை அதிட்டித்து நின்று முதல்வன் எல்லாத் தொழில்களும் நடைபெறச் செய்கின்றான்.

 முதல்வனாகிய சிவனை உயிர்கள் ஞானத்தால் கண்டு அனுபவிக்கின்றன. ஞானானுபவம் வாயால் உரைக்கலாகாதது.

 “உள்ளமொடு உணர்வு சூழ்ஒடுக்கி

 உள்ளுநர் உணர்வது உணர்வின்பாலே”

 என்று உரைப்பது காண்க. முதல்வனுடைய சகளவடிவம் கண் முதலிய கருவிகளால் கண்டு அனுபவிக்கத்தக்கதே; அவ் வாறன்றி நிட்களம் தியானத்துக்கு அகப்படாதா கலால், தியான பாவனைக் குத்துணையாக நின்று தன்னைத் தரிசிக்க விரும்பும் ஆன்மாவுக்குப் பக்குவம் வினைவிப்பது கருதியது. சகளம் பக்குவம் எய்திய வழி நிட்களம் தியானப் பொருளாம்.

 சகளநிட்களத் திருமேனிகள் முதல்வன் சத்தியாகும்; அச்சத்தி எங்கும் ஓரொப்பப் பரந்து நிற்கும் பண்புடையது; ஆயினும், எல்லார்க்கும் மெய்யுணர்வு ஒருசேர உண்டா காமைக்குக் காரணம் இருவினையொப்பும் சத்திநிபாதமும் எல்லார்க்கும் ஒருபடியாக நிகழ்வதில்லை.

 “சத்திநிபாதம் என்றது யாவன் ஒருவன்

 இடைக்கடிது ஒருபொருள் அடுத்துற வீழின

 லெரீஇ அந்நிலை ஒரீஇ வேறிடம்

 மருவும்; அற்றென நிருமலன் பெருவலி

 பதிப்ப அறிவன் பவபயம் கதுவ

 மதித்தனன் தேசிகன் மலரடி அடையும்”

 என்பர். ஞானகுரவன் சிவானுபவத்துக்குரிய அறிவை அந்நிலையில் அவனுக்கு அருளுவன். முத்திப் பேற்றுக்குரிய ஞானமும், பிறவிக்கேதுவாகிய அஞ்ஞானமும்; ஆன்மாவின் பால் இருப்பது விறகினிடத்தே தீ இருத்தல்போல என்பார்;

 “இந்தனக் குழுவை அடூஉம் செந்தழல்

 கூட நின்றும் பீடுதரு பாயம்

 செல்லாக் காலை மெல்லென விளங்கல்

 ஒல்லா, வல்லழல் போல; நல்லோய்

 ஞானமும் இன்மையும் நலம் மிக்கு

 ஆனா வுயிர்கட்கு உணர்வு அனைவகையே”

 என்று உரைத்து, விறகைக் கடையத் தீப்பிறத்தல்போலத் தீக்கை யால் ஞானம் வெளிப்படும் எனத் தெளிவிக்கின்றனர்.

 பாசமோசனம்

 இவ்வண்ணம் சிவஞானத்தால் சிறப்புறும் ஞானவான்கள். உப்பளத்திற்பட்ட துரும்பும் பிறவும் உப்புப்பற்றி உப்பாதல் போலவும், கடலகம் புகுந்த நன்னீர் உவர்நீராதல் போலவும். புழு வேட்டுவனாதல் போலவும் சிவமாந்தன்மை எய்துவர். அஃதாவது , பசுத்துவம் இன்றிப் பதித்துவம் எய்துவர் என்பதாம். இங்கே பதித்துவம் எய்துவது, பசுத்துவம் கெட்ட பின்போ, பசுத்துவம் கெடுவது பதித்துவம் எய்தியபின்போ என எழும் ஐயங்களை இருள் நீக்கமும் ஒளிவிளக்கமும்போல ஒரு காலத்தே நிகழும் எனத் தெளித்துரைப்பர். இத்தகைய ஞானநலம் எய்துதற்குரிய நெறிகள் எனப்படும் அத்துவாக்கள் உயிர்கட்கே வேண்டுவன; அவற்றைச் செம்மை நெறியில் அமையச் செய்யும் திறம் தீக்கை யாம். தீக்கை வாயிலாகஅத்துவா நலம் பெறுவித்த உயிர் ஞானத்தால் சிவபோகத்தைப் பெற்றுச் “சிறுமான் ஏந்திதன் சேவடிக்கீழ்ச்சென்று அங்கு இறுமாந்திருக்கின்றது.”

 அத்துவா வழி, உயிர்கள் வினைசெய்யும் வழியை அத்துவா என்பது வடமொழிச் சமயநெறி வழக்கு. உயிர் களாகிய நாம் மனம், வாய், உடல் மூன்றாலும் செய்வது வினை. வினைக்குரிய செயலும், இடமும், கருவியும், சொல்நெறி பொருள்நெறி என இருவகையாம்; சொல், எழுத்து, சொற்றொடர் என மூன்றாம்; இவை வடமொழியில் முறையே வன்னம், பதம், மந்திரம் எனப்படும். பொருள்நெறி, உடல், கருவி, உலகம் என மூன்றாம்; இவை வடமொழியில் முறையே கலை, தத்துவம், புவனம் எனப்படும். அதனால், இந்த ஆறும், வன்னாத்துவா, பதாத்துவா, மந்திராத்துவா, கலாத்துவா, தத்துவாத்துவா, புவனாத்துவா என வழங்கும். இறைவன் திருப்பெயரை உன்னுதல், ஓதுதல், அவனை வணங்குதல், தொழுதல் முதலியன செய்யுங் கால் இவ்வத்துவாக்கள் நெறியாதலின் இவற்றைத் தூய்மை காண்டலும் தூய்மை செய்தலும் தீக்கையின் சிறப்புடைச் செயல்களாகின்றன.

 “சிந்தனைசெய்ய மனம் அமைத்தேன்

 செப்ப நா அமைத்தேன்

 பந்தனை செய்வதற்கு அன்பு

 அமைத்தேன் மெய் அரும்பவைத்தேன்

 வந்தனை செய்யத் தலை யமைத்தேன்

 தொழக்கை யமைத்தேன்

 வெந்த வெண்ணீறணி ஈசற்கு

 இவையான் விதித்தனவே.

 எனச் சேரமான் பெருமான் காட்டியருளுதல் காண்க.

 நூலாராய்ச்சிக்குத் துணைசெய்த நூல்கள்

 அகநானூறு (அகம்)

 அறநெறிச்சாரம் (அறநெறி)

 அறம்வளர்த்த நாயகி பிள்ளைத்தமிழ்

 அனுபவ மாலை

 அனுபோக வெண்பா

 ஆசிரிய மாலை

 ஆத்தி சூடி

 ஆளுடையபிள்ளையார் திரு மும்மணிக்கோவை

 ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி

 இசை நுணுக்கம்

 இதோ பதேசம் (வடமொழி)

 இரத்தினத் திரயம்

 இருபாவிருபஃது

 இலக்கணக் கொத்து

 உண்மைநெறி விளக்கம்

 உண்மை விளக்கம்

 உபாய நிட்டை

 ஐங்குறு நூறு (ஐங்.)

 ஒழிவிலொடுக்கம்

 கதாசரிச் சாகரம் (வட)

 கதோப நிடதம் (வட)

 கந்த புராணம்

 கந்தர் கலிவெண்பா

 கம்ப ராமாயணம்; மிதிலைக்காட்சிப்படலம் (கம்ப. மிதிலை)

 கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

 கல்லாடம்

 கலித்தொகை

 களவழி நாற்பது

 காஞ்சிப் புராணம்

 காமிகாகமம் (வட)

 கிரணாகமம் (வட)

 குறுந்திரட்டு

 குறுந்தொகை

 கொடிக்கவி

 கொன்றை வேந்தன்

 கோயில் நான்மணிமாலை

 சங்கற்ப நிராகரணம் (சங்க. நிரா.)

 சசிவன்ன போதம்

 சதமணிக் கோவை

 சதமணி மாலை

 சதுர்த்த சங்கிரகம்

 சருவஞ் ஞானோத்தரம் (வட)

 சித்தாந்த சிகாமணி

 சித்தாந்த தீபிகை

 சித்தாந்தப் பஃறொடை

 சித்தாந்தப் பிரகாசிகை

 சித்தாந்த மரபு கண்டன கண்டனம்

 சிதம்பரச் செய்யுட்கோவை

 சிதம்பர மும்மணிக்கோவை

 சிலப்பதிகாரம்

 சிவஞானசித்தியார் சுபக்கம்

 சிவஞாசித்தியார் பரபக்கம்

 சிவஞான பாடியம்

 சிவஞானபோதம்

 சிவதத்துவ விவேகம்

 சிவதருமோத்தரம்

 சிவநெறிப்பிரகாசம்

 சிவப்பிரகாசம்

 சிவப்பிரகாச விகாசம்

 சிவபோகசாரம்

 சிவாக்கிரபாடியம் (வட)

 சிவார்ச்சனா போதம்

 சீவக சிந்தாமணி

 சுந்தரர் தேவாரம்

 சுப்பிரபேதம் (வட)

 சுவாயம்புவாகமம் (வட)

 சுவேதாசுவதரம் (வட)

 சூளாமணி

 சேந்தன் திவாகரம்

 சொரூபானந்த சித்தி

 ஞானாமிர்தம்

 தக்கயாகப் பரணி

 தட்சிணாமூர்த்தி தசகாரியம்

 தணிகைப் புராணம்

 தத்துவ சங்கிரகம்

 தத்துவ சித்தி

 தத்துவத் திரய நிர்ணயம்

 தத்துவ தீபிகை

 தத்துவப் பிரகாசிகை

 தத்துவ விளக்கம்

 தாயுமானவர் பாடல்

 திருக்கழுமல மும்மணிக்கோவை

 திருக்களிற்றுப்படியார்

 திருக்குற்றாலத் தலபுராணம்

 திருக்குறள்

 திருக்கோவையார்

 திருஞானசம்பந்தர் தேவாரம்

 திருப்புகழ்

 திருமந்திரம்

 திருவருட்பயன்

 திருவருட்பா

 திருவள்ளுவமாலை

 திருவாசகம்: திருச்சதகம்

 திருவாசகம் : திருவண்டப்பகுதி

 திருவாசகம் : திருவெம்பாவை

 திருவாய் மொழி

 திருவானைக்காப் புராணம்

 திருவிசைப்பா

 திருவிளையாடற் புராணம் (பரஞ்சோதியார்)

 திருவுந்தியார்

 துகளறு போதம்

 தேவிகாலோத்தரம் (வட)

 தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்

 தொல்காப்பியம் - சொல்லதிகாரம்

 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

 நம்பியாண்டார் நம்பி இரட்டைமணிமாலை

 நம்பியாண்டார் நம்பி திருக்கலம்பகம்

 நற்றிணை

 நன்னூல்

 நாலடியார்

 நியாயப்பிரவேசம் (வட)

 நெஞ்சுவிடுதூது

 நேமிநாதம்

 பட்டினத்தடிகள் பிரபந்தம்

 பண்டார மும்மணிக்கோவை

 பதிற்றுப்பத்து

 பராக்கியம் (வட)

 பரிபாடல்

 பழமொழி நானூறு

 பாகவத புராணம்

 பிங்கல நிகண்டு

 பிரசூத்திர நீலகண்டபாடியம்

 புறத்திரட்டு

 புறநானூறு

 புறப்பொருள் வெண்பாமலை

 பெரிய புராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம்

 பெருங்கதை

 பெருந்திரட்டு

 பெரும்பாணாற்றுப்படை

 பேரூர்ப் புராணம்

 பொருநராற்றுப்படை

 போக காரிகை

 போதரத்னாகரம்

 போதாமிர்தம்

 போற்றிப்பஃறொடை

 பௌட்கர சங்கிதை (வட)

 மகுடாகமம் (வட)

 மணிமேகலை

 மதங்காகமம் (வட)

 மதுரைக்காஞ்சி

 மலைபடுகடாம்

 மான விசயம்

 மிருகேந்திரவிருத்தி தீபிகை (வட)

 முண்டகோபநிடதம் (வட)

 முருகாற்றுப்படை

 முல்லைப்பாட்டு

 மூத்தநாயனார் இரட்டைமணிமாலை

 மூலசித்தி

 மெய்ஞ்ஞான விளக்கம்

 மெய்ம்மொழி

 மேருமந்தர புராணம்

 மோட்ச காரிகை

 யசுர்வேத தைத்திரிய சங்கிதை (வட)

 வியாச பாரதம்

 வில்லிபுத்தூரார் பாரதம்

 வீட்டுநெறி

 Ancient India - by K. De. BI Codrington

 Annual Reports of the Madras Epigraphy

 Epugraphica Indica

 Inscriptions of south India. vol. i. to. viii

 Salem District Gazetter

 திருச்சிற்றம்பலம்

 வாகீச முனிவர்

 அருளியஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

 காப்பு – வெண்பா

 *முக்கட்டிருகவுட்டு நால்வாய்த் துரகத்துச்

 செக்கர்த் தடித்திடித்த செஞ்சடைத்துப் - பக்கத்துப்

 பூதத் தருநடத்துப் பொற்பிற்றென் னுள்ளத்து

 நாதத்து நின்ற நலம்† 1

 *மதிபாய் சடைமடித்து 1மாசுணப் பைம்பூட்டுச்

 2சதியாய் 3குறுந்தாட்டுத் தான- நதிபாய்

 இருகவுட்டு முக்கட்டு நால்வாய்த்தென் னுள்ளம்

 4உருகவிட்டு நின்ற வொளி 2

 5காமிகாதி சைவாகமங்களுள் ஞானபாதத்துப் பதி பசு பாசவுண்மை யறிவுறுத்துவான் போந்த ஆசிரியர், ஆன்றோ ராசாரம் பாது காத்தற்பொருட்டும் மாணாக்கர்க்கு அறிவுறுத்தற் பொருட்டும் இடையூறு நீக்குதற்குரிய விநாயகக் கடவுளை வாழ்த்துவாராயினார்.

 #பாயிரம்

 கடவுள் வாழ்த்து

 அகவல்1

 வெண்டிரைக் 1கருங்கட லேழும் விண்டொட

 2ஓங்கிய சென்னிச் சிமையமும் வீங்கிய

 3ஏழிரும் பொழிலு 4மெண்ணீங் குயிரும்

 5அளவி லண்டமு 6முளையின்றி 7விளைத்தம்

 5.  8மலரோன் றாதையை வகுத்துந் தளரா

 9முன்னோ ரில்லா முன்னோன் பின்னும்

 இளமையு மஃதா வியைந்தோன் வளமலி

 10தோற்ற மீறொன் றில்லோன் கூற்றுக்

 11கிளியே முற்ற 12வொளிமாண் டிருநகை

 6.  அருளி னங்குழை பரப்பி யிருடீர்

 கருணை மாநனை யுயிர்ஞிமி றருந்த

 மலர்ந்த மாதர் 1மரகத வல்லி

 அந்தி வானத் தணிநிறங் கவர்ந்து

 சிந்தை செல்லாச் செழுங்கிரி யொருபால்

 7.  வளங்கொளப் படர்ந்த வண்ணம் போல

 அறவோ ளமர்ந்த பாகன் றுறவோர்க்

 கெல்லை யாகிய தொல்லோன் றனாஅது

 பாமாண் சேவடி பரவ

 நாமாண் புளதா நலங்கொளச் சிறந்தே

 2உரை: 1-3 (வெண்டிரை…………… பொழிலும்) வெண் திரைக் கருங்கடலேழும்- வெள்ளிய திரையை யுடையனவாகிய 3பெரிய சமுத்திரமேழையும்; விண்தொட ஓங்கிய சென்னிச் சிமையமும்- 4சுவர்க்கத்தைக் கிட்ட வோங்கிய உச்சியையுடைய மகா மேருவையும் வீங்கிய 5ஏழிரும் பொழிலும்6 அந்த மேருவைச் சூழ்ந்த7 அட்டகுல பருவதங்களையும் மிகுந்தெழப்பட்ட பெரிய 8இரு நூற்றிருபத்து நான்கு புவனங்களையும்;

 3-6 (எண்நீங்குயிரும்……………. முன்னோன்) எண்நீங்கு 1உயிரும்- எண்ணிறந்த ஆன்ம தேகங்களையும்; அளவில் அண்டமும் - அளவில்லாத அண்டங்களையும்;

 முளையின்றி விளைத்து2 வித்தும் அங்குரமுமாகிய சொரூபமான காரணப் பொருளின்றியே அரூபமான மாயையிலே 3சிருட்டி காலத்திலே சிருட்டித்தும், திதி காலத்திலே திதிப்பித்தும், சங்கார காலத்திலே இம்மாயை யிலே ஒடுங்கு வித்தும்;

 4அம்மலரோன் தாதையை வகுத்தும் - அந்தப் பிரமாவுக்குத் தாதையாகிய விட்டுணுவைத் தோற்று வித்தும்; 5தளரா முன்னோரில்லா முன்னோன்- தனக்கோ ரசை வின்றியே யிருக்கும் தன்னிற் பழையோ ரில்லாத பழையோன்;

 5-7 (பின்னும்………….இயைந்தோன்) பின்னும்- பின்னும்; இளமையும் அஃதா 6இயைந்தோன்- இளமையும் அத்தன்மைத் தாகப் பொருந்தினோன்;

 7-8 (வளமலி……………இல்லோன்) வளம்மலி- 7பாரம்பரிய மாய் வரும் வளப்பமுடைத் தாகிய; தோற்றம் ஈறு ஒன்று இல்லோன்- 8செனன மரண மில்லாதோன்;

 8-16 (கூற்றுக்கு……. பாகன்) அருளின் அம்குழை பரப்பி- 9கிருபையாகிய அழகிய தளிரைப் பரப்பி; இருள் தீர் கருணை மாநனை - குற்றமற்ற 10கருணையாகிய பெரிய அரும்பிற்றேனை- உயிர்ஞிமிறு அருந்த மலர்ந்த - பக்குவான் மாக்களாகிய வண்டுகள் புசிக்கும்படிக் கீடாக மலர்ந்த; 1மாதர் மரகத வல்லி- காதலிக்கப் பட்ட ஒரு மரகதக்கொடி; அந்தி வானத்து அணிநிறம் கவர்ந்து- செக்கர் வானத்தின் அழகிய நிறத்தைக் கவர்ந்து கொண்டு; 2சிந்தை செல்லாச் செழுங்கிரி ஒருபால்- 3மனாதி கரணங் களாலும் அறிந்தோதற்கரிய வளப்பமுடைத்தாகிய பருவத்தின் ஒரு பக்கத்திலே;

 வளம் கொளப் படர்ந்த வண்ணம்போல - 4அலங்காரமுடைத்தாகப் படர்ந்தவாறு போல; கூற்றுக்கு இளி ஏமுற்ற ஒளிமாண் திருநகை- வசனத்துக்கு இளியென்னும் 5இசை யாசைப் படாநின்ற 6ஒளியால் மாட்சிமைப்பட்ட திருநகையும்; 7அறவோள் அமர்ந்த பாகன் 8காருணியமாகிய தற்சொரூபமு முடைய உமாதேவியுடன் கூடின பாகன்;

 16-17 (துறவோர்க்கு………….சிறந்தே) 9துறவோர்க்கு எல்லையாகிய தொல்லோன்- 10பற்றற்றோர்க்குத் தன் பரமானந்த மருளித்தானாக்கித் தன்றன் மையைக் கொடுக்கும் முன்னோன்; பா மாண்தனா அது சேவடி பரவ - 1பாக்களுக்கு அழகைக் கொடுக்கும் தன்னுடைய சிவந்த சீர்பாதங்களை வாழ்த்தவே; நலங்கொளச் சிறந்து- அழகு கொள்ள மிக்கு; நா மாண்புள தாம்- என்னுடைய வாக்கானது மாட்சிமையுடைத்தாம், எ-று.

 அ என்பது பண்டறிசுட்டு.

 2விநாயகர் துதி

 அகவல் 2

 3திங்கட் கொழுந்தி னன்ன 4வொண்கேழ்

 ஒருமருப் பிருமதக் கடவு 5ளெண்கழி

 6யாண்டுபல நிரம்பினு மிளமையொடு கெழீஇ

 ஞான மாமதந் தருக்கி யானா

 5.  வினையுகச் சீறு நனைகவுள் வேழத்

 தடியிணை யொழிவின்று பழிச்ச

 முடிவிலா தெவன் முன்னிய நெறித்தே

 உரை: 1-2 (திங்கள் ………….. கடவுள்) திங்கட் கொழுந்தின் அன்ன -பிறைச்சந்திரனையொத்த; ஒண்கேழ் ஒரு மருப்பு- ஒளியும்7 வடிவுமுடையதொரு கொம்பையுடையவனாய்; இருமதக் கடவுள்- 8பிரமசாரியான படியால் இந்திரிய மத மொழிந்த இரண்டு மதத்தினையுடைய கருத்தாவாய்;

 2-3 (எண்கழி………..கெழீஇ) எண்கழி யாண்டு பல நிரம்பினும்- தேவர்களெண்ணும் எண்ணளவிறந்த வயது பல வுண்டாயினும்; இளமையொடு கெழீஇ - இளமையோடு கூடி;

 4-5 (ஞானமாமதம்…………..வேழத்து) ஞானமாமதம் தருக்கி- ஞானமாகிய மகத்தான மதத்தாலே கருவித்து; ஆனா வினையுகச் சீறும்-1 ஆன்மாக்களின் அளவிறந்த 2கன்மங்கள் 3பற்றற வொழியும் படி சீறும்; நனைகவுள் வேழத்து- மதத்தாலே நனைந்த 4கதுப்பையுடையனாகிய முகத்து விநாயகனுடைய;

 6-7 (அடியிணை…………… நெறித்தே) அடியிணை- உபய பாதங்களை; ஒழிவின்று பழிச்ச - ஒழியாதே தோத்திரம்பண்ண; முன்னிய முடிவிலாதெவன்- அபேக்ஷையான போக மோக்கங் களில் சித்தியாதது யாது; 5நெறித்து- 6முறையாலே நடந்து சித்தி விளைக்கும் என்பதில் ஐயமில்லை எ-று.

 முடிவிலாததென்பது முடிவிலாதென வந்தது.

 கலைவாணி துதி

 அகவல் 3

 <div style="margin-left: 3em;">

 விரிகதிர் மதியிற் கதிர்விரி பொகுட்டுத்

 7தாதுகு படுத்த மேதகு வெண்மடற்

 8புழற்காற் சரோருகத் தளிக்குல மொலிப்ப

 விழைவற வெகுண்டோர் விழைய9 விழைபென

 5.  அருட்கதிர் பரப்பி மருட்டுய ரகற்றி

 வண்ண மாத்தவி சேறிப் பண்வரக்

 கின்ன ராதிக டம்முறை தொடங்கப்

 பொழுதொடு விப்பிரர் தொழுதனர் நுவல

 இமையா மங்கைய ரமையாது பழிச்சத்

 6.  தீதற விருந்த வாதி நாயகி

 கலைமகள் கழலிணை கருத

 நிலைமை நீடுத றலைமையோ 1வன்றே

 உரை: 1-3 (விரிகதிர்………..சரோருகத்து) விரிகதிர் மதியின் -2பூரண சந்திரனை யொத்த; 3கதிர் விரி பொகுட்டு -மிக்க ஒளியுடைத்தாகிய பொகுட்டை யும்; தாதுகுபு அடுத்த மேதகு வெண் மடல்- 4தேன் சொரிந்து நின்ற அழகிய வெண்மடலையும்; புழற்கால் சரோருகத்து- புழையுண்டான தாளையுமுடைய வெண்டாமரைப் பூவாகிய;

 3-10 (அளிக்குலம்……….ஆதிநாயகி)5 வண்ணமாத்தவி சேறி - அழகையும் பெருமையுமுடைத் தாகிய பீடத்தின்மீதே யேறி; அளிக்குலம் ஒலிப்ப - 6வண்டு வர்க்கமெல்லாஞ் சத்திக்க; விழைவற வெகுண்டோர் விழைய-7 அபேக்ஷிக்கத்தக்க சுவர்க்க போகத்தையும் ஆசை யேதுவாக வரும் காம சுகாதிகளையும் திரஸ்கரித்துச் சர்வசங்க நிவர்த்தி வந்தோர் ஆசிரயிக்க; விழை பென - அப்படியே தன்னை யாசிரயிப்பதை 8வேண்டினாற் போல; அருட்கதிர் பரப்பி மருள் துயர் அகற்றி-9தன் கிருபை யாகிய பிரகாசத்தை விரித்துத் தன்னை யாசி ரயித்தோருடைய

 1அஞ்ஞானத்தால் வரும் துக்கங்களை நீக்கி; கின்னராதிகள் தம்முறை தொடங்க - கின்னரர் கிம்புருடர் முதலாயினோர் தத்தம் முறையிலே 2பண்படத் தொடங்கிப் பாடித் தோத்திரம் பண்ண; 3விப்பிரர் பொழுதொடு தொழுதனர் நுவல- வேதியர் காலந் தோறும் தொழுது துதிக்க; இமையா மங்கையர் அமையாது பழிச்ச- தெய்வமகளிர் 4பன்முறை வணங்கியும் 5தமது காதல் ஆராமையால் மேலும் மேலும் துதிக்க; தீதற இருந்த ஆதிநாயகி-6குற்றமற எழுந்தருளியிருந்த ஆதி நாயகியான;

 11-12 (கலைமகள் …………… அன்றே) கலைமகள் 7கழல் இணை கருத - வாகீசுவரியுடைய உபயபாதங்களை நினைத்துத் தியானம் பண்ண; நிலைமை நீடுதல்-8 அனந்த நித்திய பரமானந்த சைதந்நியத்தில் நிலைபெற இருக்குமது; தலைமையன்று - ஒரு பொருளன்று, 9எல்லார்க்கும் எளிதாம் எ.று.

 ஓகாரம், எதிர்மறை.

 ஆசிரியர் துதி

 அகவல் 4

 அருளு மறிவு மிருடீர் பொறையும்

 வாய்மையுந் தவமுந் தான மாட்சியும்

 மன்னுயிர்க் கின்பந் தன்மீக் கூர்தலும்

 ஒழுக்கமும் விழுப்பமு மழுக்கா றின்மையும்

 5.  கண்கான் முதலிய பொறியும் பண்பார்

 பூணுந் துகிலும் பாண்விரி பிணையலும்

 புண்ணியம் படைத்து மண்மிசை வந்த

 தோற்றத் தன்ன வாற்றலெங் குரிசில்

 குணப்பொற் குன்றம் வணக்க வாரா

 6.  1ஐம்புல வேழத்து வெந்தொழி லவியக்

 கருணை வீணை காமுறத் தழீஇச்

 சாந்தக் கூர்முள் ளேந்தின 2னிறீஇத்

 தன்வழிக் கொண்ட சைவ சிகாமணி

 பரமா னந்தத் திருமா முனிவன்

 7.  வளமலி சேவடி வழுத்தி

 உளமலி யுவகை யுற்றனம் பெரிதே

 உரை: 1-4 (அருளும்…………. அழுக்காறின்மையும்) அருளும்- 3சருவ பிராணிகளுடைய இதாகிதங்களும் தனக்கு வந்தாலொத் திருக்கும் கிருபையும்; அறிவும்-4 கல்வியினாலாகிய பொருள் நீதிகளையறியும் ஞானமும்; 5இருள் தீர் பொறையும்-சகித்தற் கரிய வெகுளியும் துன்பமும் வந்தவிடத்துக் குற்றமற்ற பொறையுடைமையும்; வாய்மையும்- 6பிறர்க்குத் தீங்கில்லையாகச் சொல்லும் மெய் வசனமும்; தவமும்- இராகத் துவேஷத் தினாலே பிராணிகளுக்கு வருத்தஞ் செய்யாமையான தவமும்; தானமாட்சியும்- பக்குவான்மாக்களுக்கு உபகரிக்கும் ஞானக் கொடையும்; மன் உயிர்க்கு இன்பம் தன்மீக் கூர்தலும்- 1நித்திய மான ஆன்மாக்களுக்குப் போகமோக்கங்கள் தன்னினும் மிகவுண்டாக வேண்டுமென்னும் திருவுள்ளமும்; ஒழுக்கமும்-சமயாசாரம் வர்த்தித்தலும்; விழுப்பமும்- 2சீர்மையுடை மையும் அழுக்காறின்மையும்-3 மனச்சழக் கில்லாமையுமாகிய தசகுணங்களையும்;

 5-8 (கண்கால்…….குரிசில்) கண்கால் முதலிய பொறியும் 4கண் முதலிய புத்தியிந்திரியங்களாகவும், 5கால் முதலிய கன்மேந் திரியங்களாகவும்; பண்பார் பூணும் துகிலும்- மக்கட்பண் பென்னும் சீவகாருணியத்தாலுண்டான பாச வைராக்கியமும் குருபத்தியும் ஞானசமாதியுமே ஆபரணமாகவும் ஆடையாகவும்; பாண்விரி பிணையலும் - வண்டுகளாலே சுத்திக்கப் பட்ட மாலையாகவும்; புண்ணியம் படைத்து -6புண்ணிய மானது இவையிற்றை அவயவமும் அலங்காரமுமாகக் கொண்டு; மண்மிசை வந்த தோற்றத்தன்ன- பூகதமான 7திருமேனியுடன் வந்தாற்போன்ற; ஆற்றல்- நிலைமையையுடைய; எம் குரிசில் -எம் கருத்தாவும்;

 9-13 (குணப் பொற்குன்றம்…………சைவசிகாமணி) குணப் பொற் குன்றம்-8 பெருமையாலும் சுத்தியாலும் பிறழா நிலைமை யாலும் குணத்துக்கு மகாமேருவையொப்போனும்; வணக்க வாரா ஐம்புல வேழத்து வெந்தொழில் அவிய - அந்தக்கரணங்களென்னும் பாகரால் வணக்குதற் கரியவாகிய பஞ்சேந்திரியங் களாகிய யானையின் வெவ்விய தொழிலான ஆசை யழிய; கருணை வீணை 1காமுறத் தழீஇ - கருணையாகிய வீணையை 2விருப்பமுண்டாக இசைத்து 3வணங்கி மேற்கொண்டு; சாந்தக் கூர்முள் ஏந்தினன் நிறீஇ -சாந்தமென்னும் கூரிய தோட்டியைக் கைக்கொண்டு நிறுத்தி; தன்வழிக்கொண்ட - தன்வச மாக்கிக் கொண்ட; 4சைவசிகாமணி- சைவத்துக்குச் சிகாமணியு மாயினோன்;

 14-16 (பரமானந்த…..பெரிதே) பரமானந்தத் திருமா முனிவன் -5பரமானந்த முனிவனென்னுற் 6தீக்ஷாநாமத்தை யுடைய மகாமுனிவனுடைய; வளமலி சேவடி வழுத்தி - அழகுடைய வாகிய சீர்பாதங்களைத் தோத்திரம் பண்ணி; 7உளமலி யுவகை பெரிது உற்றனம் - ஆன்ம சிற்சத்தியின்கண்ணே விளங்கும் 8பூரணமான மகிழ்ச்சியை மிகவும் பெற்றேம் எ-று.

 1மனச்சழக்காவது, பிறர் செல்வம் வித்தை முதலியவற்றைக் கண்டு பொறாமை.

 அவையடக்கம்

 அகவல் 5

 <div style="margin-left: 3em;">

 உரைசால் பகுதிப் புரையோர் போலத்

 தமிழ்த்துறை நிரம்பாத் தன்மை யேனை

 அறத்தின் விருப்புச் சிறப்பொடு நூக்கப்

 பாப்புனை பான்மை 2நோக்கினென் வலித்துழி

 5. எழுதாக் கேள்வியுங் கேள்வி பழிவாழ்

 ஏனோர் கேள்வியுங் கேள்வி மாண

 3வருதார் தாங்கிய கிளர்தா ரகலத்

 தெறிவே விளைஞர் போலப் பொறிவாழ்

 புலப்பகை தாங்கிப் பிறப்பற வெறியும்

 10. அறப்பேர் வாழ்க்கையும் வாழ்க்கை திறப்பட

 இம்மையும் பயவா தம்மையு முதவாது

 4செச்சைக் கண்டத் தொத்தூன் போல

 வாழ்வோர் வாழ்க்கையும் வாழ்க்கை தாவா

 ஒருமைத் தன்றே யாயினுஞ் சான்றோர்க்

 15. கெம்முடைப் புன்சொற் றம்முடைச் சிறப்பே

 அதனால்

 அவரினு மளியமற் றியாமே கவரா

 ஏனோ ரளிக்குந் தானீ றின்றே

 அவரே

 20. தம்பா டெய்த றம்பா லோர்க்கே

 5எம்பா டெய்த லிருமையு முடைத்தே

 இவ்விரு பகுதியு மெழுத்துச் சொல்யாப்

 பவ்வயி 6னுடத்தே பொருட்பா டின்றே

 உரை: 1-4 (உரைசால்…….வலித்துழி) தமிழ்த்துறை நிரம்பாத் தன்மையேனை- 1தமிழிலக்கண வியல்பு நிரம்ப வறியாத என்னை; அறத்தின் விருப்பு சிறப்பொடு நூக்க- 2“ஞானக் கறையறு பாத” மென்று சொல்லப்பட்ட ஞான பாதத்தின் மேற் பிரியம் மிகவும் செலுத்துதலாலே; 3உரைசால் பகுதிப் புரையோர் போல- 4கீர்த்தி நிறைந்த வேதாகமங்களை மிகவுணர்ந்த பெரி யோரைப்போல; பாப்புனை பான்மை நோக்கினென்- 5ஆசிரியப் பாவால் ஒரு சாத்திரம் பண்ணு முறையைப் பார்த்தேன்; வலித்துழி- 6பார்த்தவாறே திகைத்த விடத்து;

 5-6 (எழுதா…………………… கேள்வி) 7எழுதாக் கேள்வியும் கேள்வி - 8பரமேசுவரன் உபதேசித்தருளப் பரிசுத்தரான சனகாதி முனிவர் கேட்ட வேதவாக்கியமும் ஒரு சத்தம்; பழிவாழ் ஏனோர் கேள்வியும் கேள்வி - பழியுண்டாக வாழும் ஏனைப் 9பாவ காரிகள் வசனமும் ஒரு சத்தமாதலானும்;

 6-13 (மாண……………….. வாழ்க்கை) 10வருதார் மாணத் தாங்கிய -11சத்துரு பக்கத்திலிருந்து வருகிற தூசிப்படையை வஞ்சியாது தாங்கிய; கிளர்தார் அகலத்து எறிவேல் இளைஞர் போல - வண்டு கிளரப்படா நின்ற 1மாலையணிந்த மார்பையும் சமரில் எதிரிட்டார் மேல் 2எறியும் வேலையுமுடைய வீர புருடரைப் போல; பொறிவாழ் புலப்பகை தாங்கி- சோத்திரம் துவக்கு சட்சு சிகுவை ஆக்கிராணம் என்று சொல்லப் பட்ட இந்திரியங்களிலே வாழும் சத்தாதி புலனாகிய பகைகளைத் தாங்கி; பிறப்பு அற எறியும் அறப்போர் வாழ்க்கையும் வாழ்க்கை - உற்பிசம் அண்டசம் சராயுசம் சுவேதசம் என்னும் நான்கு வருக்கத்துப் பிறப்பையும் அற எறியும் ஞானவான்கள் திருவுலாச் 3செய்தருளும்4 வாழ்க்கையும் வாழ்க்கை; திறப்பட - நன்மை யுண்டாக; இம்மையும் பயவாது- இம்மையிலும் தமக்கும் பிறர்க்கும் பிரயோசனமின்றியே; அம்மையும் உதவாது - மறுமை யினும் சுவர்க்க மோக்கங்களுக்கு இடமின்றியே; செச்சைக் கண்டத் 5தொத்தூன் போல-ஆட்டின் கழுத்தில் தொங்குகின்ற 6அசகளத்தம் போல; வாழ்வோர் வாழ்க்கையும் வாழ்க்கை- உயிர் வாழ்வோர் வாழ்க்கையு மொரு வாழ்க்கை யாதலானும்;

 13-14 (தாவா……………அன்றே) 7தாவா- கேடுபடாது; ஒருமைத்து அன்றே- ஒருபடித்தல்லாத 8நன்மை தீமையாயிருந்த பொருள்களிரண்டும் பிரபஞ்சத்தில் ஒக்க வியாபித்திருக்கும்; 1ஆதலால் பெரியோர் அருளிய நூல்களே சாத்திரமாக, யானும் புல்லிய சொற்களால் இந்தச் சாத்திரம் பண்ண விசைந்தேன்;

 14-15 (ஆயினும்…………சிறப்பே) ஆயினும்- அங்ஙன மாயினும்; சான்றோர்க்கு - ஞானவான்களுக்கு; எம்முடைப் புன் சொல்- 2எம்முடைய புல்லிய சொல்லும்; 3தம்முடைச் சிறப்பே- தாம் அருளிச்செய்த நூலுக்குச் 4சிறப்பையே கொடுக்கும்.

 16-18 (அதனால் ……………..இன்றே) அதனால் - 5ஆதலால்; யாம் அவரினும் அளியம் - யாம் அவரிடத்தும் 6அனுக்கிரகம் பெறுதலுடையேம்; கவரா- எம்மின் வேறல்லாத; ஏனோர் அளிக்கும் ஈறு இன்று - 7அஞ்ஞானிகளிடத்தும் தமக்கு யாம் இனமாத லால் அங்கீகாரம் பெறுதற்கு 8முடிவில்லை;

 19-21 (அவரே………………….உடைத்தே) அவர் - அந்த நல்லோரும் தீயோரும்; பாடு எய்தல் 9தம்பாலோர்க்கு- பெருமை பெறுவது தமக்கு இனமாயினாரிடத்தேயாம்; எம்பாடு எய்தல் இருமையும் உடைத்து- யாம் இருதிறத்தாரிடத்தும் அனுக்கிரகம் பெறுதலுடையேம்;

 22-23 (இவ்விரு……….இன்றே) இவ்விருபகுதியும் - இவ்விரு திறத்தாருடைய 10அனுக்கிரகத்துக்குரிய குணதோட மிரண்டும்;

 எழுத்து சொல் யாப்பு அவ்வயின் உடைத்து - இந்நூலி லுள்ள எழுத்து சொல் யாப்பு அலங்காரமென்ற 11நான்கு வருக்கத் திடத்து மேயன்றி; பொருட்பாடு இன்று- 1நூற்பொருள் 2பரமசிவனருளிச் செய்த திவ்வியாகமப் பொருளாதலால் அதனிடத்தொரு குற்றமு மில்லை எ-று.

 அன்று, எ, மற்று- அசைநிலை.

 நூற்பெயர்

 **cஅகவல் 6

 3மந்தர மத்தென நிறுவி நாணென

 ஐந்தலை யரவு சுற்றி நஞ்சொடு

 பணாமணி பிதுங்கப் பற்றி யவுணரொ

 டமரரு மியக்க 4வாற்றா நாட்செல

 5.  முகுந்தன் றனா அது முழுவலி யெறுழ்த்தோள்

 வருந்த வாங்குபு வாய்விட் டலறி

 நுரைத்தலை விரித்துத் திரைப்பெருங் கையெடுத்

 தின்றுங் 5கூப்பிட  வன்றுவந் தெழுந்த

 துவரி யமிழ்த மென்ப தமிழ்வளர்

 10. குமுதச் செவ்வாய்க் கோமள வல்லி

 இமைய வல்லி யமைவுற1 விளங்கிய

 நுதல்விழி நாட்டத் தொருதனிக் கடவுள்

 அருளின் கொம்பரொ டமரரு முனிவரும்

 வெருளின் பிறவி வேர்தனி விமலவென்

 11. றானா தரற்றத் தானினி தருளிய

 ஆகம மத்தினருளின் கோலத்

 தாசிரி யமலன் பாத பங்கயப்

 போதொளி யிலகப் புனைந்து மாதவன்

 அருளுப தேச வரும்பெற னோன்ஞாண்

 12. மதிபாத் தடக்கை கதுமெனப் பூட்டி

 2முறுக வாங்க மறுகுபு கலுழ்ந்து

 வல்வினைத் திண்கை மேலெடுத் தொய்யென

 அறுவகைப் பித்தை சிறுபுறத் தலையப்

 பிறவிப் பேரிட ரலமந் தோலமிட்

 13. 3டிரியல் போக வரும்புல மடிய

 4அச்சா னாழி யெற்பட வெழுதலின்

 ஞானா மிருத மென்ப

 ஆனாச் செவ்வி மாநூற் பெயரே

 உரை: 1-4 (மந்தரம்…………..நாட்செல) மந்தரம் மத்தென நிறுவி- மந்தர பருவத்தை மத்தாக நாட்டி; ஐந்தலை அரவுநாண் எனச்சுற்றி - ஐந்தலை மாநாகத்தை நாணாகப் பூட்டி; நஞ்சொடு பணாமணி பிதுங்க- நஞ்சொடுகூடப் படத்திலுண்டாகிய மாணிக் கமணி பிதுங்க; பற்றி - பற்றிக்கொண்டு; 5அவுணரொடு அமரரும் இயக்க- 6அசுரர்களோடு தேவர்களும் கூடிக் 7கடையப்புக்கு; ஆற்றா- 1 அவ்விடத்து மாட்டாமையாலே; நாள் செல - நெடுங் காலஞ்செல்ல;

 5-9 (முகுந்தன் …………என்ப) முகுந்தன் 2தனாஅது முழுவலி எறுழ்த்தோள்3 வருந்த வாங்குபு - 4விட்டுணு தனது மிகவும் வலியுடைத்தாகிய தோளானது வருந்தும்படி கடைதலாலே; வாய்விட்டலறி -வாய்விட்டுக் கதறி; நுரைத்தலை விரித்து- நுரை யென்னும் தலையை விரித்து; திரைப்பெருங்கை எடுத்து -திரையென்னும் பெரிய கையை யெடுத்து; இன்றும் 5கூப்பிட- அன்று கலங்கின அதிர்ச்சியாலே இன்றும் கூப்பிட; அன்று- அந்த நாளிலே; அமிழ்தம் 6உவரி வந்து எழுந்தது- அமிர்தமானது கடலிலே வந்து எழுந்தது; என்ப - என்று சொல்லுவார்கள்;

 9-15 (தமிழ்வளர்……….அரற்ற) 7தமிழ்வளர் குமுதச் செவ்வாய் கோமள வல்லி- தமிழுக்குப் பெருமை கொடுக்கிற குமுதம் போன்ற சிவந்த வாயையுடையவளான 8கோமளக் கொடிபோன்று இருக்கப்படாநின்ற; இமையவல்லி- இமைய பருவதத்தில் அவதரித்த உமாதேவியுடனே; அமைவுற விளங்கிய- அழகுண்டாக விளங்கிய; நுதல் விழிநாட்டத்து 1ஒருதனிக் கடவுள் - நெற்றியிலே விழித்த திருநயனத்தையுடையனாய் ஏகனாய்த் தனக்குவமையில்லாத கருத்தாவான பரமாசாரி யானை; அருளின் கொம்பரொடு- அருளே சொருபமாகவுடைய 2உமாதேவியுடன் வணங்கி; அமரரும் முனிவரும்- தேவர்களும் இருடிகளும்; வெருளின் பிறவி 3வேர்தணி விமல- 4மயக்கத்தைத் தருகிற 5பிறவியை வேரோடே கெடுக்க வேண்டும் நின்மலனே; என்று ஆனாது அரற்ற- என்று அமையாத படி தோத்திரம் 6பண்ணினதாலே;

 15-21 (தான்………..வாங்க) தான் இனிது அருளிய ஆகம மத்தின்-7 அவன்தான் பக்குவான்மாக்கள் உய்தற்பொருட்டு இனிதாக அருளிச் செய்த திவ்வியாகமத்தை மத்தாக நாட்டி; அருளின் கோலத்து - அருளே திருமேனியாகவுடைய8 ஆசிரி யமலன்-9 அஞ்ஞானமாகிய அந்தகாரத்தை நீக்குகின்ற

 நின்மலன்; பாதபங்கயப் போது- சீர்பாதமாகிய தாமரைப் பூவை ஒளி யிலகப் புனைந்து 10சிவஞான வொளியுண்டாகச் சூடிக்கொண்டு; மாதவன் அருள் 1உபதேச அரும்பெறல் நோன் ஞாண் -இம்மகா தவசிபிரசாரித்த உபதேசமென்னும் பெறுதற் கரிய வலிய நாணை; மதி மாத்தடக்கை கதுமெனப் பூட்டி- மதியென்னும் மகத்தான கையாலே விரையப் பூட்டி; 2முறுக வாங்க- முறுகக் கடலனதாலே;

 21-26 (மறுகுபு…………. எழுதலின்) மறுகுபு கலுழ்ந்து; கலங்கித் துக்கப்பட்டு; வல்வினைத் திண்கை மேலெடுத்து- புண்ணிய பாவமாகிய வலிய திண்ணிய இரண்டு கையையும் மேலேயுயர்த்தி; ஒய்யென -விரைய; அறுவகைப் பித்தை சிறுபுறத் தலைய- காமாதி பகையாறுமாகிய மயிர் முதுகிலே யலைய; பிறவிப் பேரிடர் -பிறவி யென்னும் பெரிய துக்க மானது; அலமந்து ஓலமிட்டு இரியல்போக - சுழன்று கூப்பிட்டு நீங்க; அரும்புலம் மடிய - கெடுத்தற்கரிய இந்திரியங்களின் 3சேட்டை கெட; அச்சான ஆழி- 4என்னுடத்துள்ளதான அஞ்ஞான மென்னும் சமுத்திரத்தினின்றும்; எல்பட எழுதலின் -5ஒளியுண்டாக ஞானம் தோற்றியதனாலே;

 27-28 (ஞானாமிர்தம் ……………..பெயரே) ஆனாச் செவ்வி மாநூற் பெயர்- அமையாத அழகினையுடைய மகத்தான இந்தச் சாத்திரத் துக்குப் பெயர்; 6ஞானாமிருதம் - ஞானாமிர்தம் எ-று.

 மறுகுபு, செய்பென்னும் வினையெச்சம். என்ப, அசைநிலை, அஞ்ஞானமாகிய சமுத்திரத்திலேயிருந்து இந்த ஞானம் வந்த வாறு எங்ஙனே யென்னில், விறகில் தீப்போல; 1ஞானமுமின்மையு நலமிக், கானா வுயிர்கட் குணர்வனை வகையே” என்பாராகலின் வரும் என அறிக.2

 மறை முறை நான் கெனல்

 அகவல் 7

 கண்ணுத லண்ணல் விண்ணவர் பணியக்

 காள மாண்ட வாளவிரங்களத்

 3தெரிமரு ளீர்ஞ்சடை 4மதிமுகி ழணிந்த

 உம்ப ரீசரும்பன் வெம்புறு

 5.  பிறவிப் பேரிடர்க் கறையுறு பகுவாய்

 உரகத் தாரெயி றுறவீழ்ந் தறவ

 அஞ்சின மளியமென வமரரு முனிவரும்

 வெஞ்சினைப் பிறவி 5நஞ்சுக விரித்த

 அருமறை யெவையுந் திருமிகு ஞானம்

 6.  இலங்கொளி யோக நலங்கிளர் கிரியை

 6சரியை யெனவுரை விரிதரு பாதம்

 கறையறு மறைமுறை நெறியின்

 அறைய மற்றரோ வறிகதி லமர்ந்தே.

 7இது சிவபிரான் அருளிச்செய்த திவ்வியாகமங்கள் சதுர்ப் பாதமாயிருக்கும்; இவையிற்றைச் சொல்ல அறிக என்றது.

 1-4 (கண்ணுதல்…..உம்பன்) நுதல்கண் அண்ணல்- நெற்றி யிலே விழித்த திரு நயனத்தையுடைய தலைவனும்; விண்ணவர் பணிய -வானவர் வந்து தெண்டம் பண்ணுதலினாலே; காளம் ஆண்ட வாள் அவிர் அங்களத்து - நஞ்சைத் தரித்த ஒளிவிளங்கப் படாநின்ற திருக் கழுத்தையுடையோனும்; எரிமருள் ஈர்ஞ்சடை-8அக்கினியின் நிறத்தையும் மங்கச் செய்கிற சிவப்பையும் நீர்மையு முடைய திருச்சடா பாரத்திலே; மதிமுகிழ் அணிந்த- இளம் பிறையைச் சாத்தியருளிய; உம்பர்1ஈசர்

 உம்பன்- தேவர்களுக்கு மேலாகிய 2பிரமவிட்டுணுக் களுக்கும் கருத்தாவுமாகிய பரமசிவன்;3

 4-7 (வெம்புறு……………..முனிவரும்) வெம்புறு பிறவிப் பேரிடர்க்கறையுறு பகுவாய் உரகத்து- 4தபிக்கின்ற பிறவி யென்னும் மகா துக்கமாகிய நஞ்சுண்டான பெரிய வாயை யுடைய சர்ப்பத்தின்; ஆர் எயிறு உறவீழ்ந்து - கூறிய தந்தம் உருவக் கடித்தலாலே; அறவ அஞ்சினம் அளியம் என அமரரும் முனி வரும் - தருமவானே, பயப்படா நின்றோம், நின்னாலே அனுக் கிரகிக்கப்பட்ட நாங்கள் என்று 5தேவர்களும் இருடிகளும் விண்ணப்பம் செய்தலாலே;

 8-11 (வெஞ்சினப் பிறவி….பாதம்) வெஞ்சினப் பிறவி நஞ்சுக- வெவ்விய சினத்தையுடைய இந்தச் சர்ப்பத்தின் நஞ்சுகெட; 6விரித்த அருமறை எவையும் அருளிச் செய்த அரியனவாகிய 1மூல சிவாகமங்களிலும் உபாகமங்கள் பலவற்றினும் சொல்லப் படுவனவாகிய; திருமிகு ஞானம்- செல்வம் மிகுந்த ஞானம்; இலங்கொளி யோகம்- 2மேதாதி யுன்மனாந்த தரிசனமாகிய பேரொளியையுடைத்தாகிய யோகம்; நலம் கிரியை சரியை- நன்மை கிளர்ந்த கிரியை சரியை; என - என்று; உரை விரிதரு பாதம்-3உபதேச பூருவமாகப் பேசப்படுகின்ற 4நான்கு பாதங்களும்:

 12-13 (கறையறு…….. அமர்ந்தே) கறையறு மறை முறை- குற்றமற்ற உப தேசத்தின் முறைமையே; அறைய- நெறியாகச் சொல்ல;3 அமர்ந்து அறிக- புத்திபண்ணி யறிவாயாக எ-று.

 பிறவிக்கு வெஞ்சினம், இலக்கணை, மற்று, அரோ, தில், அசை

 பாயிரம் முடிந்தது

 நூல்

 ஞான பாதம்

 1. சம்மிய ஞானம்*

 அகவல் 8

 பசுவின் மூவகையவத்தை

 பிறழா நிலைமைப் பெரும்பெயர் ஞானக்

 கறையறு பாத முறையுறக் கழறிற்

 பசுபா சத்தோடு பதியாய் பெற்றி

 மதியோர் பசுமூ வகையென மதிப்பர்

 5.  பன்னிற் கேவலற் சகல னின்னியற்

 சுத்தன் கேவலற் சொற்றிடி னித்தன்

 மெய்த்தகு குணமிலி வியாபி மொய்த்து

 மலநனி புணர மறைவோ னில1னெனைச்

 செய்தியு மறியோன் மையில மூர்த்தன்

 6.  வலியில னசேதன னொளியிலி யிறையலன்;

 மாயா வுதர மரீஇத் தேயாப்

 போக நினைந்த சகலற் கெய்திய

 முரண்மிகு கூற்றை முரித்த வரன

 2திருங்கலை யமர விரிந் 3திரிஞ் சேதனம்

 7.  அடையா விச்சை யடையத் தடையில்

 விடயப் பகுதி விரவிப் புடையே

 பொங்கி யராகம் புணரத் தங்கா

 ஆசை யெங்கணு மாசற நிமிர

 எற்பிர தான மொற்கமில் குணத்தொடு

 8.  புத்தி முதலிய தொத்தினி துறழப்

 பிணித்தலிற் பிணிப்பினன் பசுமற் றிணைத்த

 நியதி முன்ன ரியலிரு வினையிற்

 பிறழா துறழப் பின்னர்க் குறையாக்

 காலங் காலத் தளவைப் பாலிற்

 9.  காட்டத் தொழிலொடு போகத் தாட்டுண்

 டிரியாத் தத்துவ கலையினி லிவ்வணம்

 பரியாப் பந்தம் பந்தித் தொருவழி

 அறிவு சிறிதமர்ந் தாக மாய

 பிரியா மோகினிப் 1பெரும் போகத்தைத்

 10. தானென வெண்ணி யானா முன்வினைப்

 பயன்பல மாந்தி வியந்துறை காலை

 வல்வினை யெல்லை செல்லாக் காலத்

 தொல்லென வொப்ப வுயர்பெருஞ் சிவனது

 சத்திநி பாதந் தழைப்ப மெய்த்தகு

 11. குருபரம் பரன தருளின் செவ்வி

 வம்பறு 2சம்பிர தாயத் தஞ்சுடர்

 உற்ற காலைச் சொற்றொடர் பற்றுத்

 தேயாதி யாவு மாயறி வகன்ற

 ஆயாச் சிவன தணிகிளர் சீர்த்தி

 12. நின்மலத் தியையும் பின்மலத் தியையான்

 அந்தமில் பந்தமற் றிவணஞ்

 சிந்துதல் சிந்த றெரியுங் காலே.

 இது, பரமசிவன் ஆகமத்தில் அருளிச்செய்த சதுர்ப் பாதங் களில் ஞான பாதமாவது பசு பாச பதி என்ற மூன்றையும் ஆராய்ந் தறிதலா மென்று கூறி, இவையிற்றிற் 1பசுவினது கேவல சகல சுத்தாவத்தையிலக்கணம் கூறியது.

 2இது முதல் ஏழு செய்யுட்களில் சம்மிய ஞானத்தின் இயல்பு கூறுகின்றார்.

 உரை: - 1-3 (பிறழா………பெற்றி) 3பிறழா நிலைமை ஞானப் பெரும் பெயர்க் கறையறு பாதம்-4 அனாதி நித்திய மாகையால் எக் காலத்தும் திரியாத ஒரு படித்தான ஞான மென்னும் பெரிய பெயரையுடைத்தாய குற்றமற்ற பாதத்தின்; முறை 5உறக் கழறின்- முறைமையை யறியச் சொல்லின்; பசு பாசத்தொடு பதி 6ஆய் பெற்றி- (அது பசுவும், பாசமும், பதியு மென்று மூன்றையும் ஆராயுமுறைமை யுடைத்து;

 4(மதியோர்…..மதிப்பர்) மதியோர்- 7ஞானவான்கள்; பசு மூவகை யென மதிப்பர்-8பசுவென்று சொல்லப்பட்ட ஆன்மா திரிவித அவத்தையுடைத்தாதலால் அது மூன்று வகைப்படு மென்று அறியச் சொல்லுவார்கள்;

 5-6 (பன்னில் ………சுத்தன்) பன்னில் - அவை யிற்றைச் சொல்லின்; கேவலன் சகலன் இன்னியல் சுத்தன் -1கேவலனென்றும் சகலனென்றும் இனிய இயல்பையுடைய சுத்தனென்றுமாம்;

 6-10(கேவலற் ………….இறையலன்) கேவலன் சொற்றிடின்- இவையிற்றிற் கேவலாவத்தையுடையனாய் நிற்கும்2 முறைமை யைச் சொல்லின்; நித்தன்- அநித்தியப்படான்; மெய்த்தகு குணமிலி- 3தேகத்துடன் தக்கிருக்கின்ற 4புத்திகுண மெட்டும் இல்லாதோன்; வியாபி- சருவ வியாபியா யிருப்போன்; மலம்நனி புணர மொய்த்து- ஆணவ மலம் மிகவும் செறிந்திருத்தலாலே; மறைவோன்- தற் சொரூபம் அறியா திருப்போன்; எனைச் செய்தியும் இலன்-5சுதந்தர வீனனாதலின் தனக்கென எத்தகைய செயலும் இல்லாதோன்; அறியோன்- அறிவில்லாதோன்; மைபில் அமூர்த்தன்-6தேக சம்பந்த மில்லாமையால் குற்றமற்ற அரூபி; வலியிலன்-7 போகத்தில் வலியில்லாதோன்; அசேதனன்-8அசேதனம் போன்று இச்சை முன்னில்லா திருப்போன்; ஒளி இலி- பிரகாசமுடையனல்லன்; இறையலன்- ஒன்றுக்கும் 9கருத்தாவு மல்லன்;

 11-21 (மாயாவுதரம்…………………பசு) (1இனிச் சகலாவத்தை யுடையனாய் நிற்கும் முறைமை கூறின்) மாயா உதரம் மரீஇ- மாயா காரியமான தேகத்திலே கெழுமி; 2தேயாப்போகம் நினைந்த சகலற்கு - அளவிறந்த போகத்தைத் துய்க்க நினைந்த சகலனை; எய்திய-சகாலவத்தை யெய்துமாறு கூடின; முரண்மிகு கூற்றை முரித்த; 3அரனது இருங்கலை4-வலிமிக்கிருக்கப்படா நின்ற கூற்றின் வலியையழித்த 5பரமசிவனது சத்தியினாலே பெரிய கலாதத்துவமானது; அமர-சிறிது ஞானமுண்டாம்படி ஆணவத்தை நீக்க; இருஞ்சேதனம் விரிந்து- மகத்தான சைதந் நியம் விரிந்து; அடையா விச்சை அடைய-6 பெறுதற்கரிதாகிய வித்தியாதத்துவம் வந்தடைதலாலே; தடையில் விடயப்பகுதி விரவி- 7தடுத்தற்கில்லாத சத்தாதி விடயங்களைந்தினும் விரவி; புடையே பொங்கி-8பக்கமெல்லாம் மிக்குச் சென்று; அராகம் புணர- அரரக தத்துவங் கூடுதலால்; தங்கா- தடையில்லாத; ஆசை எங்கணும் மாசு அற நிமிர-ஆசை யெவ்விடத்தும் குற்றமற நிமிர; எல் பிரதானம் ஒற்கம் இல் குணத்தோடு -9ஒளியுடைத் தாகிய பிரகிருதியினின்றும் பிறந்த ஒடுக்கமில்லாத 1குண தத்துவத் தோடு; புத்தி முதலிய தொத்து இனிது உறழப் பிணித்த லின்-புத்தி தத்துவ முதல் பிருதுவி அந்தமான 2தத்துவ வருக்கம் இனிதாகக் கூடிப் பந்தித் தலாலே; பிணிப்பினன் பசு- பந்திப்புடையனாகிய பசுவானவன்;3

 21-31 (மற்று………………………வியந்துறைகாலை) இணைத்த நியதி- பரமசிவன் இணைத்த 4நியதி தத்துவம்; முன்னர் இயல் இருவினையின்- முற்பவத்திற் செய்து பக்குவப்பட்ட 5புண்ணிய பாவங்களால் வரும் போகங்களை; பிறழாது உறழ- 6தப்பாதே நியமித்துக் கொடுக்க; பின்னர்- பின்பே; குறையாக் காலம்- 7அந்தத்தை யில்லாத காலதத்துவம்; காலத்து அளவைப் பாலின் காட்ட -புசிக்கக் கடவனவாய காலவெல்லைகளை1 முறைப்படி பகிர்ந்து கொடுக்க; தொழிலொடு போகத்து ஆட்டுண்டு-2கன்மத்தோடு போக விச்சையாலே யலைப் புண்டு; இரியாத் தத்துவ கலையினில்- நீங்கா தத்துவாங்கி

 சத்திலே; இவ்வணம்- இவ்வண்ணமே; பரியாப் பந்தம் பந்தித்து- 3கெடாத பந்தம் பந்தித்து; ஒரு வழி அறிவு சிறிதமர்ந்து - ஒரு வழித்தான கரணவறிவு சிறிது கூடி; பிரியா மோகினி- 4வியாபியா

 யிருக்கிற மாயையினுடைய; ஆகமாய பெரும் போகத்தை- 5காரியமாய் வந்த தேகமாகிய பெரிய போகத்தை; தான் என எண்ணி-6தானென்று 7அவிவேகித்தெண்ணி; ஆனா முன்வினைப்

 பயன் பல மாந்தி- அளவில்லாத பூருவ கன்மபலங்களைப் புசித்து; வியந்துறைகாலை- பிரியப் பட்டு இங்ஙனம் வாழுங்காலத்து8;

 32-37 (வல்வினை……காலை) எல்லை செல்லாக் காலத்து வல்வினை ஒல்லென ஒப்ப-9 எண்ணிறந்த காலத்திலே 10மல பரிபாகப்பட்டு வலிற 11கன்மமானது விரையச் சமத்துவப் பட்டபோது; உயர் பெருஞ்சிவனது-12தத்துவாதீதனாகிய பெரிய பரமசிவனுடைய 1சத்திநிபாதமுண்டாவதால்; 2மெய்த்தகு குருபரம்பரனது அருளின்செவ்வி - திருக்கயிலாய பரம்பரையாக வந்த திருமேனிச் சட்டையோடே கூடியிருக்கிற ஞானாசாரிய னென்னும் மேலான பரமசிவனுடைய கிருபைக்குப் பக்குவ மாய்; வம்பறு 3சம்பிரதாயத்து அஞ்சுடர் உற்றகாலை- அநாதி யாய்க் கிட்டுதற் கரிதாகிய 4ஞானாவதியான தீக்கையென்னும் அழகிய ஒளி பிரகாசமாகுங் காலத்திலே;

 37-40 (சொற்றொடர்………..இயையான்) சொல் தொடர்பு

 அற்று- இன்னபடி யிருப்பனென்று 5சொல்லுதற்கரியனாய்; தேயாது அழிவின்றி; யாவுமாய் சிவதத்துவாதி பிருதுவியந் 6தமாகிய 7தத்துவங்களை அணுப்புதைக்கவும் இடமின்றி வியாபித்து; அறிவு 1அகன்ற ஆயாச்சிவனது- 2எல்லாவற்றையும் சம்பூரணமாக அறியும் சர்வஞ்ஞனான பரமசிவனது; அணிகிளர் சீர்த்தி நின்மலத்து இயையும்- அழகுண்டான கீர்த்தி யையுடைய நின்மல 3சிவானந்த பரம போகத்தில் இசைந்து போவான்;4 பின்மலத்து இயையான் -5பின்னை ஆணவமலத்திற் கூடான்;

 41-42 (அந்தமில்……………. தெரியுங்காலே) அந்தம் இல் பந்தம் சிந்துதல் (எவ்வணம்) தெரியுங்கால் இவணம் சிந்தல் - அளவில்லாதபாசச் சேதம் பண்ணும் இயல்பு எப்படியென்று விசாரிக்குமிடத்து இப்படிச் சிந்துதலாம்.

 6மற்று, முன்னது வினைமாற்று, பின்னது அசை. (1)

 அகவல் 9

 அனாதிமல சம்பந்தம்

 7காரணங் கழறல் வேண்டுவ லாரணம்

 அறியோ னமல னாதற் கத்த

 பொறிதீர் புற்கலன் விழுமலம் புணர்தற்

 கற்றே சொற்ற தனாதி; மற்றவர்க்

 4. கெற்றெனி லாதி யியையின் குற்றமில்

 காரணங் கழறுவல் அம்ம 8சீருணம்

 திகழொளிப் பளிங்கு போலப் புகழரும்

 இறைபுற் கலனுக் கென்றனன் குறைவின்

 றறைகழ லருளொலி பரந்த

 10. பொறைவளர் 1சாரற் கயிலை யோனே.

 இது, சுத்தாவத்தையிற் பசு மல க்ஷயம் வந்து நின்மலத்தைப் பெறுமென்றதனாற் பதி நின்மலனாதற்கும், 2பசு மலனாதற்கும் காரணம் வினவ, இவர்கட்கு நின்மலமும் மலமும் அனாதி சாதகமெனக் கூறியது.

 உரை: 1-3 (காரணம்………….புணர்தற்கு) அத்த- கர்த்தாவே; ஆரணம் அறியோன்- வேதாகம சாத்திரங்களால் அறிதற்கரிய பரமசிவன்; அமலன் ஆதற்கு- நின்மலனாதற்கும்; 3பொறிதீர் புற்கலன் 4விழுமலம் புணர்தற்கு- 5ஞானச்செல்வ மில்லாத ஆன்மா வருத்தஞ் செய்யும் மலபந்தனாதற்கும்; காரணம் 6கழறல் வேண்டுவல் - காரணம் அருளிச்செய்ய வேண்டுவேன் என்று சீடன் விண்ணப்பம் செய்ய;

 5. அற்றே சொற்றது அனாதி- நீ அங்ஙனமாகக் கேட்கிற பொருளதுதான் சொல்லின் 7அநாதிகாண்;

 4-6. (மற்று………..அம்ம) அவர்க்கு எற்று எனில்- அவர்கள் அநாதியாக இப்படியிருக்க வேண்டுவானேன் எனில்; ஆதி இயையின்- 8இவர்களுக்கு முறையே நின்மலமும் மலமும் ஒரு நாளிலே கூடினவெனின்; குற்றமில் காரணம் கழறுவல்- கூடினமைக்குக்குற்றமற்ற காரணஞ் சொல்லலாம்; 1அம்ம- அஃது இருந்தபடி 2உரைப்போம், கேளாய்;

 6-10. (சீருணம்………கயிலையோனே) 3சீருணம் திகழ் ஒளிப் பளிங்குபோல- செம்புக்குக் காளிதமும் விளங்குமொளி யுடைத்தாகிய பளிங்குக்குச் சுத்தமும் முற்பிற்பாடு இல்லாதவாறு போல; புகழ் அரும் 4இறை புற்கலனுக்கு என்றனன் - புகழ்தற் கரிய பரமசிவனுக்கும் ஆன்மாவுக்கும் 5நின்மலமும் மலமும் அநாதியென்று அருளிச் செய்தனன்; 6அறைகழல் அருள் ஒலி குறைவின்று பரந்த -சத்திக்கின்ற தன் திருவடிச் சிலம்பின் அருளொலியானது குறைவின்றிப் பரவுதலால்; பொறைவளர் சாரல் கயிலையோன்- 7எல்லாச் சீவராசிகளும்

 பொறுமையாகிய தவத்தை மேற்கொண்டிருக்கும் பக்க மலையையுடைத்தாகிய கயிலாசபதியாகிய எங்கள் பரமாசாரியன் எ-று.

 ஏ, சாரியை, மற்று, வினைமாற்று. (2)

 அகவல் 10

 ஆன்மா மாயா வுதரம் மருவுதல்

 கலை முதலாய நிலைமலி தத்துவத்

 துலைவில் கட்டிவ னுறலென் பின்னர்

 மாயா வுதர மரீஇயோ னெங்கணும்

 வீயா னாதலென் வினவின் மற்றிஃ

 5.  தாய்வின் வாரா வளவைத் தேயெனின்

 வீடுறப் பின்னர் விரவிய பந்தம்

 கூடா தோடிற் குலவிய போகம்

 துய்த்தல் செல்லான் செல்லா னாக

 எய்த்த லின்றா மிருவினை யாக

 6.  அபவர்க் கமுமற் றடையா னுடையுறு

 கறைகடி தகற்றப் பிறகறை பிடித்த

 1பெற்றியி னிவனுக் குற்ற 2வன்பிணி

 மற்றதும்3 அறிகலை முதலாச் சொற்றரும்

 படிகடை யாயவற் றொடியா துலாவலின்

 7.  நுணங்கிய வாக னாகி யிணங்கிரி

 மாயையின் வயினிவள் என்ற

 தாயாச் சீர்த்தி யருந்தவ4 அறியே.

 இது 5மலபந்தமுடைய ஆன்மா மாயா வுதரத்தின னாதற்கும் யாண்டும் போக்குவரவுடைய னாதற்கும் காரணமென்னெனக் காரணம் கூறியது.

 உரை; 1-4 (கலைமலி……….வினவின்) இவன்- முன்பே ஆணவ மலத்தாலே பந்திக்கப்பட்ட இந்த ஆன்மாவானவன்; 6நிலை மலி கலை முதலாய தத்துவத்து உலைவில் கட்டு உறல் என் - நித்தியத்தை மருவியிருக்கின்ற காலதத்துவ முதலாக வுள்ள தத்துவங்களில் 1ஒழிவில்லாத பந்திப்பு உற வேண்டுவானேன் என்றும்; பின்னர் 2மாயா உதரம் மரீஇயோன்- பின் 3மாயா காரியமான தேகத்திலே 4வர்த்திக்கிற இவன்; எங்கணும் வீயானாதல் என் (என்று) வினவின்- எவ்விடத்தும் 5போக்கு வரவுடையனாதல் எவ்வண்ணமென்றும் ஆராயுமிடத்து;

 4-5 (மற்று……………..எனின்) இஃது ஆய்வின் வாரா அளவைத்து எனின்- 6இப்பொருள் என் ஆராய்ச்சியால் அறிய வொண்ணாத அளவினதாயுள்ளதென விண்ணப்பித் தாயெனின்;

 6-10. (வீடு……………….. அடையான்) வீடுற -முத்தி

 பெறுவான் காரணமாக; பின்னர் விரவிய பந்தம் கூடாது ஓடின்- பின்பு கலை முதலாகவுள்ள7 தத்துவங்களாலாகிய உடம்பெடா விடில்; குலவிய போகம் துய்த்தல் செல்லான்- 8பரமசிவனது கிருபையால் தூண்டப்பட்டு வரும் கன்ம பல போகாதிகளைப்புசிப்பது இலனாவான்; செல்லானாக- 9இல்லாமையாலே; இருவினை எய்த்தல் இன்றாம்- 10கன்ம சமத்துவமும் மலபரிபாகமும் பிறந்து சிவப் பிரகாசத்தாலே கன்மம் 11நாசமாவ தில்லையாம்; ஆக -ஆதலாலே; அபவர்க்கமும் அடையான்- 12முத்தியையும் இவன் 13அடைதற்கு உபாயம் இல்லையாம்14

 10-12. (உடையுறு………….வன்பிணி) உடை உறு கறை கடிது அகற்ற- புடைவையிலே யேறின மாசு கடிதாகப் 1போக்க; பிற கறை பிடித்த 2பெற்றியின்- வேறும் உவர்ப் பிடித்த தன்மை யைப்போல; இவனுக்கு வன்பிணி உற்ற-3 இவனுக்கு வலிய சரீராதி சம்பந்தங்கள் உண்டாயின;4.

 13-17. (மற்றதும்…………அறி) மற்றதும் அறி- மற்றைப் பொருளையும் கேட்பாயாக; 5கலைமுதல் சொல்தரும் படி கடையாயவற்று- கலா தத்துவ முதலாகச் சொல்லப்பட்ட பிருதுவி தத்துவம் அந்தமாகவுடைய தத்துவங்களோடு கூடி;

 நுணங்கியஆகனாகி -6நுண்ணிய தேகமுடையனாய்; ஒடியாது உலாவலின்- ஒழியாதே போக்குவரவு புரிவதால்; இணங்கு இரி மாயையின் வயின் இவன் என்றது- ஒப்பில்லாத 7மாயையி னிடத்தன் இவன் என்று முன்பு சொற்றது என்று; 8ஆயாச் சீர்த்தி அருந்தவ- 9அழியாத கீர்த்தியையுடைய அரிய தவத்தையுடை யோனே; அறி - அறிவாயாக. எ-று.

 மற்று, வினைமாற்று. 10இணங்கு- ஒப்பு. (3)

 அகவல் 11

 அனுமானத்தாற் பசுவுண்மை துணிதல்

 உழிதர லியைந்த பழித ராகத்

 தழியா வறிவன் கழியா னொழியாச்

 சேதன மன்மையிற் கடம்போ லாகலின்

 எய்யா தியற்றியா னெவனவன் பொய்யாப்

 5.  புற்கல 1னென்க வொற்கமில் சேதனம்

 அறிவு வறித சேதன மென்ன

 நெறியறி புலவ ரறிவறிவகையே.

 2இது பசு உள னென்கைக்குப் பிரமாண மென்னென அந்நுவய வேதிரேகி யநுமானத்தாற் பசு 3வுண்மை கூறியது.

 உரை: 1-2 (உழிதரல்………..கழியான் ) உழிதரல் இயைந்த - 4போக்கு வரவு செய்தற்கென வந்த; பழிதரு ஆகத்து - 5பழிப்பைத் தருகின்ற தேகத்திலே; அழியா அறிவன் கழியான் -6நீங்காது ஓர் ஆன்மா உளன்;

 இது பிரதிஞ்ஞை;

 2-3 (ஒழியா ……….. அண்மையின்) ஒழியாச் சேதன மன்மையின் - அதற்கு ஏது வென்னெனில் தேகம் கெடாத சைதன்னிய மல்லாமையால்;

 இஃது ஏது;

 3. கடம்போல்- எதுபோல வென்னில் 7கடத்தைப்போல

 இது திட்டாந்தம்;

 3. ஆகலின்- ஆதலாற் கடமும் ஒருவன் கொடுபோகிற் போம், அல்லாவிடில் இருக்கும், அதுப்போலத் தேகமும் தானே போக்கு வரவு பண்ணமாட்டாதாதலான்;

 இது உபநயம்;

 4-5. (எய்யாது………….என்க) எய்யாது இயற்றியான் எவன் - தான் வேறு தேகம் வேறு என விவேகித்து அறியாது இத் தேகத்தைப் போக்குவரவு பண்ணுகின்றவன் யாவன்; 1அவன் பொய்யாப் புற்கலன் என்க- 2அவன் அழிவில்லாத ஆன்மா என்று கொள்க;

 3இது நிகமனம்;

 இவ் வைந்தும் அவ்நுவய வேதிரேகி யனுமானம்.

 5-7. (ஒற்கமில்……….. வகையே) ஒற்கமில் சேதனம்- ஒதுக்கம் இல்லாத சைதன்னியமாவது; 4அறிவு என்ன - அறிவு என்றும்; 5வறிது அசேதனம் என்ன - இந்த அறிவில்லாதது

 அசேதனம் என்றும்; நெறியறி புலவர்- முத்திநெறி யறியும் ஞானவான்கள்; அறிவு அறிவகை-6 ஆன்ம தரிசனம் பண்ணும் இயல்பு 7இதுவென்று அறிவாயாக. எ-று.

 அகவல் 12

 **cபாரிசேடத்தாற் பசுவுண்மை துணிதல்

 காரியங் காசினி யாதி 1யேரியல்

 ஈசன் கத்தா விவற்கிது போகம்

 ஆதல் செல்லா தகன்றுயர் கருமம்

 தானோ நுகர்தல் செல்லா தானா

 5.  தென்னை செய்த தென்னி/ னன்னோ

 கொன்னே செய்யான் தன்னே ரில்லான்/

 பாரிசேட மதனிற் பரனுக்

 கேரியல் பரன்பசு வென்றறி யினிதே.2

 இது, பிரபஞ்சம் காரியமாதலின் பாரிசேடத்தால் ஆன்மாவின் பொருட்டெனப் பசுவுண்மை பின்னுங் கூறியது.

 உரை: 1-5. (காசினி………என்னின்) காசினி ஆதி காரியம் - பிருதுவி முதலாக நாதமீறாகத் தேகாதி பிரபஞ்சம் 3செயப்படு பொருளாயிருந்தன; ஏர் இயல் ஈசன் கத்தா -4சுத்த சைதந்திய மாகிய அழகிய இயல்பையுடைய பரமசிவன் கருத்தாவாதலால்; இவற்கு- இவனுக்கு; இது போகமாதல் செல்லாது- 5இது போக மாகப் பொருந்தமாட்டாது; அகன்று உயர் கருமம் -6விரிந்துயர்ந்த 7காரியமாயிருக்கிற தத்துவத் தொகுதி; தானோ நுகர்தல் செல்லாது- தானே தனக்குப் போக மாகமாட்டாது; ஆனாது- அமையாது; செய்தது என்னை என்னின்- 1இந்தத் தத்துவங்களைச் செய்யவேண்டு வானேன் என்பாயாகில்;

 5-6. (அன்னோ………….இல்லான்) அன்னோ - ஐயோ; கொன்னே செய்யான் - இந்த 2நெடும் பிழையை விருதாவாகச் செய்யான் பரமசிவன்; தன்நேர் இல்லான்- தனக்கு உவமை யில்லாத முதல்வனாதலின்;

 7-8. (பாரிசேமம்…………இனிதே) பாரிசேடமதனில்- 3பாரிசேட அனுமானத்தால்: 4பரனுக்கு என்று - இச்செயல்கள்

 பசு, பாச, பதியென்ற மூன்றில் வைத்துப் பதிக்கும் சடமாகிய பிரபஞ்சத்திற்கும் இயையாமையால் பரனாகிய 5ஆன்மாவின் பொருட்டென்றும்; ஏர் இயல் பரன் பசு என்று-6சைதந்நிய மாகிய அழகிய இயல்பையுடைய பரன் என்றது பசுவாகிய 7ஆன்மாவை யென்றம்; இனிது அறி- இனிதாக அறிவாயாக எ-று.

 1பாரிசேடமாவது, மூவரிருந்த விடத்திலே ஒரு பொருளைச் சிலர் இஃது யார் பொருளென வினாவினால், நாங்களிருவரும் அறியோம் என்று சொன்னால் ஒழிந்தவன் அறிந்தானாம் தன்மை யாகிய அளவை, பாரிசேடமெனினும் ஒழிபெனினும் ஒக்கும் (4)

 அகவல் 13

 சேதனா சேதனம் கூறுதல்

 பொன்னினு மணியினுங் குயிற்றி 2மின்னகும்

 அங்கத மகுடங் கடிப்பிணை யென்ற

 பாரமென் றறியா தாரமென் றணியும்

 மம்மர் மாந்தரின் மயங்கா தம்ம

 5.  பூட்சிய தலை நீ கேட்டி 3மோட்ட

 தவனற் றந்த குவைநெற் கொண்ட

 முல்லை 4மூகையென மெல்லென் மூரல்

 அங்கை தாங்கா தாற்றுபு மிசைவுழி

 அங்கத் தியாவு மழியா திங்குயிர்

 6.  விட்ட தென்று சட்டகம் புகழாக்

 கட்டி லேற்றிக் கைதொழூஉப் பரவி

 இட்டிடை மகளி 5ரெருக்கச் சட்டென

 அழல்வாய்ப் பல்பிண மருந்தீ மத்து

 முருட்டணைப் பாயற் குரூஉப் புகை மிளிரப்

 7.  பாவகற் றழீஇக் கொன்னே வேஎம்

 இந்தனத் தியற்கை யாக்கை யென்றினி

 விழித்தனை காணிஃ தொழிப்பரும் பெரும்பொறை

 எரிவிருந் தாய வீங்கும் நீண்ட

 வரிதரு கண்ணியர் மதனனென் றாங்கும்

 8.  வேற்றுமை யுளதேற் சாற்றுக 1மாற்றிரி

 ஆடிப் பாவையோ டலர் நிழற் பாவை

 கைகான் மெய்பிறி தெவையும் பைப்பயத்

 தூக்கிற் றூங்கி மேக்குயர் புயர்தல்

 பொறியொடு சிவண லென்ன

 9.  அறிவொடு செறியு நெறிவரு முடலே.

 இது பின்னரும் அக்கினி சம்பந்தமாகிய அனுமானத்திற் சேதனா சேதனம் கூறியது.

 உரை; 1-5. (பொன்னினும்……….கேட்டி) பொன்னினும் மணியினும் குயிற்றி- பொன்னினாலும் நவரத்தினங்களினாலும் செய்யப்பட்டு; மின் நகும் அங்கதம் மகுடம் கடிப் பிணை என்ற - மின்னைக்கெடுக்கும் ஒளியையுடைய 2வாகு வலயமும் மோலியும் காதணியும் என்ற இவையிற்றை; பாரம் என்று அறியாது- சுமையென்று 3விவேகித்தறியாது; ஆரம் என்று அணியும்- ஆரமென்று அணிந்து மகிழும்; 4மம்மர் மாந்தரின் - மயக்கத்தை யுடைய 5அஞ்ஞானிகளைப்போல; மயங்காது - பித்தேறாதே; நீ புட்சியது அலை- தேகத்தின்கண்ணே வர்த்திக்கின்ற நீ 6அத்தேக மல்லை யென்று அறிவாயாக, எங்ஙன மெனில்; அம்ம கேட்டி- அதனைச்சொல்லக் கேட்பாயாக;

 5-17. (மோட்ட……………விழித்தனைகாண்) குவை நெல் கொண்ட -7விளைத்துக் குவித்த நெல்லி லுண்டாகிய; 8மோட்டு தவனன் தந்த -மிக்க நெருப்பால் ஆக்கப்பட்ட; முல்லை முகை என- முல்லை மொட்டுப் போன்ற; மெல்லென் 1மூரல்- மெல்லிய சோறும்; அங்கை தாங்காது -அழகிய கைக்குப் பொறாதே; ஆற்றுபு மிசைவுழி - ஆற்றியுண்ணும் பக்குவத்திலே; அங்கத்து யாவும் அழியாது- அவயவங்களில் ஒன்றும் குறைவின்றி- இருக்கவே; இங்கு உயிர் விட்டது என்று - இப்பொழுதுதானே உயிர்போயிற்றென்று; சட்டகம்- 2தேகத்தை; புகழாக் கட்டில் ஏற்றி-3 பாடையிலேற்றி; 4இட்டிடை மகளிர்- நுண்ணிய இடையையுடைய மாதர்; கைதொமூஉப் பரவி - கையாலே தொழுது துதித்து; எருக்க- தம்முடைய மார்பிலும் தலையிலும் மோதிக்கொள்ள; 5சட்டென- அப்பிணத்தை விரையக்கொண்டு போய்; அழல்வாய்ப் பல்பிணம் அருந்து ஈமத்து- நெருப்பாகிய வாயால் பல பிணங்களையும் புசிக்கிற சுடலையிலே; முருட்டு அணைப்பாயால்- முருட்டு விறகுகளால் அணையும் பாயலுமாக 6அடுக்கிய அடுக்கில்; பாவகன் தழீஇ - நெருப்பினைப் பரிசித்துக் கொண்டு; குரூஉ புகை மிளிர- 7ஒள்ளிய நிறத்தை யுடைய புகையெழுந்து விளங்க; கொன்னே வேஎம்-8விறகும் தேகமும் வேறென்ற விகற்பமற வேகும்; இந்தனத்து இயற்கை என்று- 9விறகின் இயல்பையுடையது இந்தச் சரீரமென்று; இனி விழித்தனை காண்- இனி ஞான திட்டியை விழித்துப்பாராய்;10

 17-20. (இஃது……………சாற்றுக) ஒழிப்பரும் பெரும் பொறை இஃது -1ஒழித்தற்கரிய பெருஞ்சுமையாகவுள்ள இந்தச் சரீரமானது; எரி விருந்தாய் ஈங்கும்- அக்கினிக்கு விருந்தாகிய இப்பொழுதும்; நீண்ட வரிதரு கண்ணியர்- 2நீண்ட செவ்வரி பரந்த கண்ணையுடைய மாதர்கள்; 3மதனன் என்ற ஆங்கும்- காமதேவன் என்று கொண்டாடிய அப்பொழுதும்; வேற்றுமை யுளதேல் சாற்றுக - வேறுபாடு உண்டாயிற் சொல்லுக;

 20-25. (மாற்றிரி…………. உடலே) மாற்று இரி ஆடிப் பாவையோடு – உவமை யில்லாத கண்ணாடியில் தோன்றும் பாவையுடனே; அலர் நிழற் பாவை- சந்திராதித்த கிரணங்களின் ஒளியால் தோன்றும் விரிந்த நிழற்பாவை; கைகால் மெய்பிறிது எவையும்- கைகளையும் கால்களையும் சரீரத்தின் மற்று முள்ள அவயவங்களையும்; பைப்பயத் தூக்கின் தூங்கி-4மெல்ல மெல்ல கீழே தூக்கின் தூங்கலும்; மேக்கு உயர்பு உயர்தல்- மேலே யெடுக்கில் உயர்தலும் போலவும்; பொறியொடு சிவணல் என்ன - கயிற்றுப் பொறியில் இயக்குவான் செயலிலே எந்திரம் வருமாறு போலவும்; நெறி வரும் உடல்- 5கன்மம் புசித்தற்கு நெறியாகவரும் இந்தச் சரீரமும்; அறிவொடு செறியும்- ஆன்மாவாகிய அறிவன் 6செயலாயே யிருக்கும், எ-று.7 (5)

 அகவல் 14

 தேராதி வாகனங்களின் வைத்துத் தேகியுண்மை கூறல்

 தமனியந் தரளந் 8தான யானை

 மருமம் பாணி வதன நோக்கம்

 பதமுத றமவென விசைத்தோ ரயமற

 ஒருபுடை யன்மை நோக்கி யொரு புடைத்

 5.  தாமென மயங்கி யேமுற்றோர் மற்

 றறுசுவை யமைந்த வைவகை யுண்டி

 1மூவகை முற்றி யதனி னிருவகை

 தாவா துறப்பிற் றங்க மேவா

 2இழித்தகு மலமா வொழித்தன ரொன்றன்

 6.  றிம்மல நீமற் றம்மல நீ யேல்

 ஆக மாதி மற்றன்று போக

 அறிவோர்க் கறிவ வந்நிய மென்ப

 தறிவோ யறிதி யங்கம் பிறிதுமற்

 3றிருகா லாழிக் 4கொளுவிடை வீணா

 7.  தண்டென் னாரின் விண்டு வன்ன

 மருமத் தட்டின் மயிர்த்தோற் கிடுகின்

 சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன்

 கொய்யுளைக் கொடிஞ்சி குஞ்சரம்

 மையுக வூருநர் செய்தியின் மதியே.

 இஃது இன்னுங்கேள் என்று அறிவோர்க்கறிவ அந்நிய மாதலால் தேராதி வாகனங்கள் போலத் தேகத்தைப் பிரவர்த்திப்பான் ஒரு தேகி யுளன் எனக் கூறியது.

 உரை: 1-5. (தமனியம்………….ஏமுற்றோர்) தமனியம் தரளம் தான யானை- பொன்னும் முத்தும் 5மதத்தையுடைய யானையும் முதலாகவுள்ள நானாவித பதார்த்தங்களும்; மருமம் பாணிவதனம் நோக்கம் பதமுதல்- மார்பும் கையும் முகமும் கண்ணும்

 காலும் முதலாகவுள்ளனவும் ஆகிய இரண்டு வர்க்கமும்; தம என இசைத்தோர்- தம்முடையனவென்று சொல்லினோர்; ஒரு புடை அன்மை அய மற நோக்கி- 1தமனியாதி ஒரு பக்கத்தைத் தாமல்லவென்பதைச் சந்தேகமறப் பார்த்தும்; ஒரு புடைத் தாம் என மயங்கி ஏமுற்றோர்- 2மார்பாதி யவயவங்களாகிய ஒரு பக்கத்தைத் தாமே யெனப் பார்த்து மயங்கியும் பித்தேறினார்;3

 5-11. (மற்று……………………ஆதி) அறுசுவை அமைந்த ஐவகை உண்டி- கைத்தல் கார்த்தல் புளித்தல் உவர்த்தல் துவர்த்தல் தித்தித்தல் என்று சொல்லப்பட்ட வறுவகை யிரதமும் அமைந்த கடித்துப் பருகி விழுங்கி நக்கிச் 4சுவைத்துக்கொள்வனவாய் ஐவகையுணவாகப் புசித்த இவை; மூவகை முற்றியதனின்- 5மூன்று கூறாகிப் பிரிந்ததினில்; இருவகை தாவாது உறுப்பில் தங்க - சாரமான இரு கூறு ஒழியாதே சரீரத்திலே தங்கிவர்த்திக்க; மேவா6-விரும்பத்தகாத ஒரு கூறு; இழித்தகு மலமா ஒழித்தனர்- நோக்கவொண்ணாததாய்ப் பழிக்கத்தக்க மலமாகக் கழித் தனர், ஆதலால்; நீ இம்மலம் ஒன்றன்று- 7நீ இவ்வாறு கழித்த மலங்களில் ஒன்றுமல்லையாவாய்; அம்மலம் நீயோல்- அந்த ஒரு கூறாகிய மலம் நீயாகில்; ஆகம் ஆகி- இருகூறாகிய சரீரமலமும் நிச்சயமாக நீ யாகிறாய்;8

 11-13. (மற்று…………..போக) அன்று போக- 9அல்லக்காண் போகடு; அறிவோய்- புத்திமானே; அறிவோர்க்கு அறிவு அந்நியம் என்பது அறிதி- அறியக்கடவோர்க்கு அறியப்படும் பொருள்கள் அந்நியமாம் என்னுமிதுநீ 10அறிவாய்காண்; அங்கம் பிறிது- ஆதலால் நீ யறியப்பட்ட தேகமும் அந்நியமாம்;

 13-19. (மற்று………..மதியே) மற்று - மற்றும் சரீரமிருக்கும் படி; இருகால் ஆழி- இரண்டு காலாகிய உருளையையும்; கொளு இடை- பழுவெலும்பு இடையே செறிந்த; வீணா தண்டென் ஆரின் - வீணா தண்டென்னும் 1அச்சுமரத்தையும்; விண்டு அன்ன மருமத் தட்டின் - மலைபோன்ற மார்பென்னும் தட்டையும்; மயிர்த் தோற் கிடுகின்- மயிரையுடைத்தாகிய தோலென்னும் கிடுகையும்; சேகரக் கூவிரத் திகிரியூர்வோன்- 2சென்னி யாகிய தலையலங்காரத்தையு முடையதாகிய சரீரமென்னும் தேரையூர் வோனாகிய ஆன்மாவானவன்; கொய்யுளை கொடிஞ்சி குஞ்சுரம் மையுக ஊருநர் செய்தியின் மதி- குதிரை தேர் யானை யென்றும் சொல்லப்பட்டவற்றைக் குற்றமறச் செலுத்து வோர் 3தன்மையன் என்று மதித்துக்கொள்வாயாக, எ-று4

 மற்று, முன்னது வினைமாற்று; பின்னது அசை. 5பழுவெலும்பு - விலா எலும்பு; கிடுகு - தேரின் மரச்சுற்று; கூவிரம் - தலையலங் காரம், விண்டு -6மலை. (6)

 சம்மியஞானம் முடிந்தது.

 சம்மிய தரிசனம்

 அகவல் 15

 பசுதரிசனம்

 மாதவ நுனித்த 1கோதறு குணத்தர்

 மெய்யுணர் பக்கம் நாடிற் பொய்தப

 இருவகைப் படிவ மாவ பொருவில்

 சூக்க தூலமு 2மவற்றது தொடர்பாம்

 5.  இருவகைப் பஞ்ச விஞ்சதி தெரியின்

 உண்ணிலை புறநிலை யெண்ணுத் தருபவோ

 டின்னுங் கேண்மதி பன்னுவ மன்னிய

 3மூவகைக் குற்ற முக்குண மும்மல

 மூவகை மண்டில முப்பொறி தாவா

 6.  ஐவகை நிறனோ டைவகைக் கோசமும்

 ஐந்தா சயமு மாறா தாரமும்

 மைந்தரு மகளிரு மலியும் வாதமும்

 சீலமு நோன்பு ஞானமும் பிறவுங்

 காண்டகு திறத்த தெய்ய வீண்டிய

 7.  அறியா நீயே 4யறிவனை செறியிதழ்க்

 கந்தங் கொண்டதுகளைந்ததைக் கடுப்ப

 முந்து கிளந்தெவையு முறைகழித் தொளிபோல்

 அறிவொடு வினையிற் பிறவகை யொரீஇ

 நின்றதை யுணர நின்னொடு

 8.  மன்ற கண்டனை மறையது துணிவே

 இது 1தூல சூக்குமமான தேகத்தை அசேதனமென்றுரைத்துப் பசுதரிசனம் கூறியது.

 இது முதல் மூன்று செய்யுட்களில் சம்மிய தரிசன வியல்பு கூறுகின்றார்.

 உரை: 1-4 (மாதவம்……………தூலமும்) மாதவம் நுனித்த கோதறு குணத்தர்-2 மகத்தான சரியையாதி தவத்தாலே சூக்ஷிக்கின்ற குற்றமற்ற ஞானகுணத்தையுடையோர்; மெய்யுணர் பக்கம் நாடின்- 3தேகாத்தும விசாரம் செய்யும் முறைமையை விசாரிக்கில்; பொய்தப இருவகைப் படிவம் ஆவ- மெய்யாகச் சரீரம் இரண்டு வகைப்பட்டிருக்கும்; பொருவில் சூக்கதூலமும் - ஒப்பில்லாத சூக்கும சரீரமும் தூல சரீரமுமென

 4-6 (அவற்றது…………..புறநிலை) அவற்றது தொடர்பாம்- அவற்றின் தொடர்ச்சியாகிய; 4இருவகை தெரியின்- அந்த இருவகைத் தேகத்தின் கூறுகளை ஆராயுங்கால்; 5உண்ணிலைப் புறநிலை- உண்ணிலைக்கூறு புறநிலைக்கூறு என்று ஆகும்; உண்ணிலைப் பஞ்சவிஞ்சதி - சூக்கும சரீரக்கூறு 6இரு பத்தைந்தாவன: சோத்திரம் துவக்கு சட்சு சிகுவை ஆக்கிராணம் ஆகிய புத்தியிந்திரியமும், வாக்கு பாதம் பாணி பாயுருஉபத்தம் ஆகிய கன்மேந்திரியமும், சத்த பரிச ரூப ரச கந்த வசன கமன தான விசர்க்க ஆனந்தமென்னும் விடயமும், மனம் புத்தி ஆங்காரம் சித்தமாகிய அந்தக்கரணங்கள் நான்கும், இவற்றைக் கொண்டு முயறற் கிடமாகிய போது 1புருடன் எனப் பெயர் பெறும் தத்துவம் ஒன்றுமாம்; 2புறநிலை பஞ்சவிஞ்சதி- 3தூல சரீரக்கூறு இருபத்தைந்தாவன; என்பு தோல் உரோமம் நரம்பு இறைச்சியாகிய 4பிருதிவியின் கூறு ஐந்தும், 5உவர்நீர் சேத்துமம் இரத்தம் சுக்கிலம் நிணமாகிய அப்புவின் கூறு ஐந்தும், பசி தண்ணீர்த் தாகம் உறக்கம் சோம்பல் மைதுனம் இச்சையாகிய 6அக்கினியின் கூறு ஐந்தும். சிரிப்பு அழலுதல் நிற்றல் இருத்தல் போதல் ஆகிய 7வாயுவின் கூறு ஐந்தும், காமம் குரோதம் லோபம் சங்கற்பம் விகற்பம் ஆகிய 8ஆகாயத்தின் கூறு ஐந்துமாம்.

 9அவற்றின் தொடர்பாம் என்பது அவையிற்றின் தொடர் பாய் அவை போல இருப்பன என்றவாறு.

 6-7. (எண்ணு……………பன்னுவம்) எண்ணுத் தருபவொடு இன்னும் பன்னுவம் கேண்மதி -என்று எண்ணப்பட்ட இவை யிற்றோடே இன்னமும் சொல்லுவோம் கேட்பாயாக;

 7-15. (மன்னிய………அறிவனை) மன்னிய மூவகைக் குற்றம்- தேகத்திலே நிலைபெற்ற காமம் வெகுளி மயக்க மென்ற 1முக்குற்றமும்; முக்குணம்- சாத்துவிதம் இராசாதம் தாமதம் என்ற 2முக்குணமும்; மும்மலம்- ஆணவம், மாயை கன்மம் என்ற 3மூன்று மலமும்; மூவகை மண்டிலம்- சூரியன் சோமன் அக்கினி என்ற மூன்று ஒளி மண்டிலமும்: முப்பொறி- 4மனம் வாக்கு காய மென்ற மூன்று கரணங்களும்; தாவா ஐவகை நிறனோடு-5 கருமை நீலம்6 செம்மை 7வெண்மை பொன்மை என்னும்8 ஐந்து நிறமும், ஐவகைக் கோசமும்- 9அன்னமயம் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் ஆனந்தமயம் என்னும் ஐந்து கோசமும், ஐந்து ஆசயமும்- ஆமாசயம் பக்குவாசயம் மலாசயம் மூத்திராசயம் கருப்பாசயம் என்ற ஐந்தா சயமும்; ஆறு ஆதாரமும் - மூலாதாரம் கவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆஞ்ஞை யென்ற 10ஆறு ஆதாரமும்; மைந்தரும் மகளிரும் அலியும்- ஆண் பெண் அலியென்று சொல்லப்பட்ட வேறுபாடு களும்; வாதமும்- தச வாயுக்களும்; சீலமும்- நல்லொழுக்கமும்; நோன்பும்- தவமும்; ஞானமும்- கிரியா யோகங்களை அறியும் கரணவறியும்; 1பிறவும் காண்தகு திறத்த - மற்றும் இவையிற்றைப் போலக் காணப்பட்ட வேறுபாடுகளுமாக; ஈண்டிய - கூடின வெல்லாம்; அறியா- அசேதனங்களாம்! நீயே அறிவனை- 2இவற்றைக் கூறிட்டுக் கண்டறிகிற நீயே சைந்நியனாவாய்;

 15-29. (செறியிதழ்………..துணிவே) செறி இதழ்க் கந்தம் கொண்டு- செறிந்த இதழ்களையுடைய பூவிற் கந்தத்தைக் கொண்டு; அது களைந்ததைக் கடுப்ப- அப்பூவைப் போகட்டா லொப்ப; முந்து கிளந்த எவையும் முறை கழித்து- முன்னே எண்ணப்பட்ட அசேதன பதார்த்தங்களை யெல்லாம் அறிந்து முறைமையிலே 3கழித்து; ஒளி போல்- அந்நிய பதார்த்தங்களை யறிவிக்கும் விளக்குப் போல; அறிவொடு வினையின்- 4இச்சா ஞானக்கிரியாரூ பியென்னும் இஃ தொழிய; பிறவகைஒரீஇ- மற்றுள்ள கிரியை வகைகளை யொழித்த; நின்றதை- எஞ்சி நின்றதனை; உணர- அறியவே; மறையது துணிவு நின்னொடு கண்டனை- திவ்வியாகமத்தின் முடிவிற் பொருளும் நின்னையறி யும்முறைமையும் அறிந்தா யாகுவை. எ-று.

 மதி, தெய்ய, ஒடு, அசைகள், கிளந்தவென்னும் பெயரெச்ச வீறு தொக்கது. (1)

 அகவல் 16

 பஞ்சாவத்தையியல்

 1கால்கொடுத் திருகை மூட்டி வாழிய

 2வெந்நிற் றண்டென் விடங்கத் தின்னியற்

 3பழுக்கழி நிரைத்துச் சிரைக்கயி றசைத்து

 மயிர்த்தோல் வேய்ந்து சுவர்த்தசை நிறீஇ

 5.  ஐம்புலச் சாளரத் தரும்பெறன் மாடத்

 தும்பர் மணிக்குடச் சென்னிப் பொங்கிய

 கூந்தற் பதாகை 4நான்குநிலை தழீஇய

 ஆங்கினி தமர்திற னறையி னான்ற

 சாக்கிரஞ் 5சொப்பனஞ் சுழுத்தி துரியம்

 6.  பிருகுடி நாப்ப ணொருபெருங் கந்தரம்

 மருமத் தாதி வலஞ்சுழி யுந்தி

 6ஒருநான் கங்குலி யும்பர் வரன்முறை

 செவிமெய் கண்வாய் மூக்கெனப் பெயரிய

 வாயின் மிலேச்சர் சாரணர் தூதர்

 7.  சூத மாகதர் புரோகித ரென்ற

 மேதகு 7புத்தீந் தியமுந் தீதறு

 வாக்கொடு பதங்கை பாயு ருபத்தமென்

 இவுளி மறவரும் யானை வீரரும்

 திகிரி தூண்டிய தறுக ணாளரும்

 8.  வன்கண் மள்ளருந் தந்திரத் தலைவரும்

 என்கரு மேந்தியத் திறனு மெஞ்சிய

 ஓசை பரிச முருவ மிரதங்

 கந்த முரைநடை கொடைபோக் கின்பமென்

 விடயப் பல்பரி சனமு மிடையாப்

 9.  1பிராண வபான வுதான வியான

 சமான நாக கூர்ம கிருகர

 தேவ தத்த தனஞ்சய னென்ற

 ஈரைந் துறுதிச் சுற்றமு 2நியதி

 சிந்தித் தாய்ந்து துணிந்து 3செயற்படும்

 10. அந்தக் கரண வமைச்சருந் தந்தம்

 முறையுளி வழா அது துறைதோ 4றீண்டிய

 சாதுரங் கத்து நீதி யாகிப்

 பேரத் தாணிச் சீர்பெறத் துன்னி

 வீசுவ வீசி விரும்புவ விரும்பி

 11. மாசில் காட்சி மன்ன 5னீங்கிப்

 பல்பரி வாரமும் விள்ளாச் சுற்றமும்

 தந்திரம் புணர்ந்த மந்திர மாக்களும்

 பலர்புக லறியா வவைபுகு மரங்கின்

 நினைந்தாய்ந்து துணிந்து செயன்மணந் தினி துணர்ந்து

 12. நனவெனக் கனவி6 னன்னடை வழாஅது

 உரைத்தனன் சொப்பனத் தகத்தினி திறந்து

 மந்திரத் தலைவனும் வன்கடும் பதிபனும்

 மந்திர பூமி மருங்கு போகிச்

 சிந்தை மாத்திரங் கனவலி னனவின்

 13. தந்துரை சுழுத்தி யின்றே மந்திரத்

 தலைவற் றணந்து விலைவரம் பில்லாச்

 சிங்கஞ் சுமந்த வைம்பே ரமளிப்

 பள்ளி மண்டபத் தானுந் தனாது

 திகிரி யுருண்ட பெருவனப் பேய்ப்ப

 14. உறுதிச் சுற்றத் துறுவளி யெடுப்ப

 ஏற்ற மிழிவு சீற்ற மாற்றல்

 இழிச்சல் பழிச்ச லின்பத் துன்பம்

 ஒழித்தனன் துரியத் தழித்தினி ததீதத்

 தொருவகை யெங்கணு மாகி யிருளிரி

 15. சுடர்த்தொழிற் சாக்கிரத் தாங்க ணான்கின்

 1இடைத்தகை தெரிதனிற் றெரியு மாறே2

 3இது பஞ்சாவத்தை சாதகத்தாற் பசு தரிசனம் கூறியது.

 1-8. உரை: (கால் கொடுத்து…..அறையின்) கால் கொடுத்து இரு கை மூட்டி - இரண்டு காலையும் நாட்டி இரண்டு கையையும் வைத்து; 4வெந்நில் தண்டு என் விடங்கத்து- முதுகெலும் பாகிய வீணாதண்டென்னும் அழகிய முகட்டிலே; இன்னியல் பழுக்கழி நிரைத்து- இனிய 5இயல்பையுடைய பழுவெலும்புகளென்னும் கழியைச் சுவராக 6நிரைத்து; சிரைக் கயிறு அசைத்து - நரம்பென்னும் கயிற்றாலே கட்டி; சுகர்த் தசை நிறீஇ- இந்தக் கழிச் சுவரிலே 7மாமிச மென்னும் மண்ணாலே மேவி; மயிர்த்தோல் வேய்ந்து - மயிரை யுடைத் தாகிய தோலைக் கூரையாக வேய்ந்து - 8ஐம்புலச் சாளரத்து- ஐந்தாகிய இந்திரியங்களைச் சாளரங்களாகவுடைய; அரும் பெறல் மாடத்து உம்பர்- இந்தப் பெறுதற்கரிய மாடத்தின் மேலே; மணிக்குடச் சென்னி- 9பூரணப் பொற்குடமாகிய தலையையும் பெற்று; பொங்கிய கூந்தற் பதாகை- மிக்கிருக்கப் படாநின்ற கூந்தற் கொடியையும்; நான்கு நிலை தழீஇய -10நான்கு நிலையையும் பொருந்திய; ஆங்கு- 1அவ்விடமாகிய தேகத்தில்; இனிது அமர் திறன் அறையின் - இனிதாக இருந்து ஆன்மா வாகிய அரச குமாரன் வர்த்திக்கும் முறைமையைச் சொல்லின்;

 8-12. (ஆன்ற………….உம்பர்) பிருகுடி நாப்பண் -2ஆன்மா வானவன் புருவமத்தி யிலே நின்றபோது; ஆன்ற சாக்கிரம்- விசாலமுடைத்தாகிய சாக்கிராவத்தை யென்றும்; ஒருபெருங் கந்தரம் சொப்பனம்- ஒப்பில்லாத பெரிய கழுத்தடியிலே நின்ற போது சொப்பனாவத்தை யென்றும்; 3மருமத் தாதி சுழுத்தி - நெஞ்சடியிலே நின்றபோது சுழுத்தியவத்தை யென்றும்; வலஞ்சுழி 4உந்தி யும்பர் ஒருநான் கங்குலி துரியம்- வலமாய்ச் சுழித் திருக்கின்ற நாபித்தானத்துக்கு மேலே நாலங்குலமும் கீழே நாலங்குலமுமாக எட்டங்குலத்து நின்றபோது துரியாவத்தை யென்றும் சொல்லப்படும்.5

 12-16. (1வரன் முறை………..புத்தீந்தியமும்) வரல் முறை- சாக்கிராவத்தை தொடங்கிவரும் முறையாவது; செவி எனப் பெரிய வாயில் மிலேச்சர்- செவியெனப் பெயருடைத் தாகிய 2பொறி வாயிலே நின்று போகங்கொள்ளும் 3ஆரிய மெய்காப்பரும்; மெய்சாரணர்- மெய்யிலே நின்று போகங்கொள்ளும் சாரண ராகிய ஒற்றர்களும்; கண் தூதர்- கண்ணிலே நின்று போகங் கொள்ளும் 4தூதிடை போவாரும்; வாய் சூத மாகதர் - வாயிலே நின்று போகங்கொள்ளும் சூத மாகதராகிய ஏத்தாளரும்; மூக்கு புரோகிதர்- மூக்கிலே நின்று போகங்கொள்ளும் புரோகிதரும்; என்று மேதகு புத்தீந்தியமும்- என்று 5சொல்லப்பட்ட மேன்மை தக்கிருக்கப்படா நின்ற ஞானேந்திரிய வர்க்கமும்;

 16-21. (தீதறு……………திறனும்) தீதறு வாக்கொடு இவுளி மறவரும்- குற்றமற்ற வாக்காகிய குதிரைச் சேவகரும்; பதம் யானை வீரரும்- கால்களாகிய யானைமேல் யுத்த வீரரும்; கை திகிரி தூண்டிய தறுகணாளரும்- கைகளாகிய 6தேர் செலுத்தும்

 அச்சமிலராகிய தேர்மேல் யுத்த வீரரும், பாயுரு வன்கண் மள்ளரும் - பாயுருவாகிய வன்கண்ணரான காலாட்களும்; உபத்தம் என் தந்திரத் தலைவரும்- உபத்தமென்று சொல்லப் பட்ட சேனாபதியரும்; என் கருமேந்தியத் திறனும்-என்று 1சொல்லப்பட்ட கன்மேந்திரியமும்;

 21-24. (எஞ்சிய……..பரிசனமும்) எஞ்சிய- இவ்விந்திரியங் களுடனே கூடிய; ஓசை பரிசம் உருவம் இரதம் கந்தம் -சத்த பரிச ரூப ரச கந்தமும்; உரை நடை கொடை போக்கு இன்பம் என விடயப் 2பல்பரிசனமும்- வசன கமன தான விசர்க்க ஆனந்தம் என்று சொல்லப்பட்ட விடயமாகிய பல3 பரிவாரத் தாரும்;

 24-28. (இடையா …………….சுற்றமும்) இடையா- கெடாதே; பிராண அபான உதான வியான சமான நாக கூர்ம கிருகர தேவதத்த தனஞ்சயன் என்ற - 4பிராணவாயுவும், அபான வாயுவும், உதானவாயுவும், வியானவாயுவும், சமான வாயுவும், நாகவாயுவும், கூர்மவாயுவும், கிருகரவாயுவும், தேவதத்த வாயுவும், தனஞ்சயவாயுவும் என்று சொல்லப்பட்ட 1தசவாயுக் களாகிய உறுதிச் சுற்றமும்; 2உறுதிச் சுற்றமாவார், “அடுத்த நட்பாளரும், அந்தணாளரும், 3படைத் தொழிலாளரும், மருத்துவக் கலைஞரும், நிமித்த காரரும் நீணில வேந்தர்க், குரைத்த வைம்பே ருறுதிச் சுற்றம்” என்பத னாலறிக.

 28-30. (நியதி…..அமைச்சரும்) நியதி சிந்தித்து ஆய்ந்து துணிந்து செயற்படும் -ஒன்றை முறையாகச் சித்தம் சிந்தித்துப் புத்தி விசாரித்து ஆங்காரம் துணிந்து 4மனம் அதனைச் செய்யத் தொழிற்பட்டுவருகின்ற; 5அந்தக்கரண அமைச்சரும் -6அந்தக் கரண சதுட்டயமான மந்திரிகளும்

 30-35. (தந்தம்……………..மன்னன்) தம்தம்முறையுளி வழா அது- தங்கள் தங்களுக்குரிய முறைமையில் குற்றப்படாதே;

 துறைதோறும் ஈண்டிய -7துறை தோறும் கூடிய; சாதுரங் கத்து நீதியாகி- சதுரங்க மத்தியிலே நீதிமானாய்; 8பேரத்தாணி- (அசேதனமான கருவிகளைச் சேதனமாகக்கூறினாற்போல) பெரிய அத்தாணி மண்டபமாகிய 9அந்தப் புருவ மத்தியிலே; மாசில் காட்சி மன்னவன்- குற்றமற்ற காட்சியையுடைய ஆன்மா வாகிய மன்னவன்; சீர்பெறத் துள்ளி- சிறப்பாகப் பொருந்தி; 1விரும்புவ விரும்பி- ஞானேந்திரியங்களால் அறிவனவற்றை யறிந்து; வீசுவ வீசி -கன்மேந்திரியங்களாலே செய்வனவற்றைச் செய்து;

 2இத்துணையும் சாக்கிராவத்தை கூறிற்று3.

 35-41. (நீங்கி…………….உரைத்தனன்) நீங்கி- இந்தச் சாக்கிராவத்தையிலே இந்திரியம் நீங்கி; பல் பரிவாரமும்- 4சத்தாதி தன் மாத்திரைகள் வசனாதிகளாகிய பரிவாரங்கள் பத்தும்; விள்ளாச் சுற்றமும்- நீங்காத வாயுக்கள் பத்தாகிய சுற்றத்தாரும்; தந்திரம் புணர்ந்த மந்திர மாக்களும்- விடயத்திற் கூடும் அந்தக் கரண சதுட்டயங்களாகிய மந்திரிகளும்; பலர் புகல் அறியா- மற்றைத் தத்துவங்களாகிய பலரும் புகுவதன்றி; அவைபுகும் - அங்ஙனம் சொல்லப்பட்ட 5இருபத்துநான்கு தத்துவங்களாகிய அவர்களே புகுதத்தக்க அரங்கின் - கண்டத்தானமாகிய அரங்கிலே; நினைந்து -1சித்தம் சிந்தித்து; ஆய்ந்து - புத்தி ஆராய்ந்து; துணிந்து- ஆங்காரம் துணிந்து; செயல் மணந்து- மனம் அதனைச் செய்வித்து; இனிது உணர்ந்து - இத்தனையும் கூடி இனிதாக அறிந்து; நனவு என - நனவென்று மயங்கி; கனவின்- சொப் பனாவத்தையில் கண்டு; நன்னடை வழா அது- அந்தச் சாக்கிரா வத்தையிலே ஒன்றும் தப்பாத வாறு; உரைத்தனன்- 2சொன்னான்;

 41-45. (சொப்பனத்து…………இன்றே) சொப்பனத்தகத்து இனிது இறந்து- 3சொப்பனாவத்தையினின்றும் இனிதாகப் போந்து; மந்திரத் தலைவனும்- மந்திரத் தலைவனாகிய சித்தமும்; 4வன்கடும்பதிபனும் -உறுதிச் சுற்றத்தானாகிய பிராணவாயுவும்; மந்திரபூமி மருங்கு போகி- கழுத்தியவத்தைத் தானமாகிய இதயத்திடத்திலே புகுந்து; சிந்தை மாத்திரம் கனவலின்- சிந்தித்தலுடைய சிந்தை மாத்திரமாய் 5மயங்குதலாலே; நனவில் தந்துரை கழுத்தி இன்று- சுழுத்தி யவத்தையிற் கண்டபடி சாக்கிரா வத்தையிற் சொல்லுந்தன்மையில்லை;

 45-53 (மந்திரத் தலைவன்……………………துரியத்து) மந்திரத் தலைவன் தணந்து- சுழுத்தியவத்தையிலே மந்திரத் தலைவனாகிய சித்தத்தை யொழித்து; விலை வரம்பில்லா- விலை அளவிடுதற் கரிதாகிய; சிங்கம் சுமந்த ஐம்பே ரமளி- சிங்கா தனத்துப் பஞ்ச சயனமாகிய படுக்கையிலே; பள்ளிமண்டபத் தானும் - சயனக் கிரகமாகிய தனது 1உவளகத்தே பள்ளி கொள்ளுகிற காலத்தினும்; தனாது திகிரி யுருண்ட பெருவனப்பு ஏய்ப்ப- அரசனுடைய சக்கரம் சென்ற 2பெரிய செய்தியைப் 3போல; உறுதிச் சுற்றத்து உறுவளி எடுப்ப-4 உறுதிச் சுற்றமான தசவாயுக்களில் விளங்குகின்ற 5பிராணவாயு இயங்க; ஏற்றம் - 6உயர்ச்சி யுடையேனென்றும்; இழிவு- தாழ்வு பட்டே னென்றும்; சீற்றம்- கோபமடை யேனென்றும்; ஆற்றல் - 7பொறையுடையேனென்றும்; இழிச்சல் பழிச்சல்- என்னை வைதார் வாழ்த் தினாரென்றும்; இன்பம் துன்பம்- சுகதுக்க முடையேனென்றும் அறியும் இவையிற்றை; துரியத்து ஒழித் தனன் -8ஒழிந்து நாபித் தானத்திலே தேகத்துக்குக் காவலாகிய ஆக்கினை குன்றாது துரியா வத்தையிலே நின்றான்;

 53-56. (அழித்தினிது……………தெரியுமாறே) அழித்து- 9துரியத் தானத்திலே பிராணவாயு நிற்க அந்த அவத்தையை யொழித்து; இனிது அதீதத்து - மூலத்தில் இனிதான10 அதோமுக துரியாதீதத்திலே; ஒருவகை- ஒருபடித்தாகிய 1ஆணவமலம் மறைப்ப; எங்கணும் ஆகி- எங்கும் வியாபியாக இருப்பவன்; நான்கின் இடை- ஆன்மா அவத்தைப்படும் நான்கிடத்தும்;

 இருள் இரி சுடர்த்தொழில் தகை- 2பெரியமலமாகிய இருளைக் கெடுக்கும் இக் கருவிகளாகிய விளக்கின் தொழிலைப் பயன் கொள்ளுதலையுடைய பெருந்தகையாகிய நின்னை; சாக்கிரத்து ஆங்கண் தெரிதல் 3சாக்கிரமாகிய அவ்விடத்தில் அறிகை; நின் தெரியுமாறு- 4நின்னையறியும் வழி5 எ-று.

 6பஞ்ச சயனமாவன, “மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண்படாந் தூவி, பயிர்ப்பின் மயிற்பீலி வீப்பாய்” என்பத னாலறிக. ஏகாரம், அசை. (2)

 அகவல் 17

 ஆன்மசமாதி

 இந்தியப் பந்தனை யிரியக் கண்டிசின்

 கடவுட் டன்மை யிடைவரு துரியமென்

 மடவோர் காட்சி வாயன் றுடலுநர்

 ஓம்பரண் 7கடந்து வீங்குசெலற் றானை

 5. நாப்ப ணன்றியும் 1பூக்கே ழோதி

 மடவோர் மருட்டு மாவீழ் பள்ளி

 இடனுடை வரைப்பு மிறையோ னிறையோன்

 பொன்செய் புலவன் புகர்முகக் களிறும்

 வெஞ்சின வேங்கையு மெண்கும் யாளியும்

 10. கண்கவர் 2பெய்தி மன்பதை மருள

 ஐயமின் றியற்றிய வாடகத் தசும்பினும்

 வளைவா யமையா மணிமருள் குடத்தும்

 அவிரொளி விளக்கொன் றல்க லல்லதை

 திரிபு முண்டோ தெரிந்திசி னோர்க்கே

 15. துரியத் தல்க விரிபுல னெவையும்

 3வறிய வென்று மருட்கை மருட்டின்

 4என்னையிவ் விடத்திவற் கிரண்டே மன்னெனத்

 தரியா னாகிச் சாக்கிரத் தானும்

 துரியத் தன்மைய னென்னிற் றரியா

 16. ஐம்புல மசேதன மறிவ னநாகுலன்

 நொந்திவை நுகர்பவர் யாரே யென்றணர்

 அறிவறி சமாதி யென்ப பொறிவளர்

 5ஐம்புலத் தரசட் டார்த்தவ்

 வும்ப ருயர்நிலை யுலகுய்த் தோரே

 இது, 6மாயாவதி துரியத்தில் ஆன்மாச் சுத்தன் என்ன அவனை நிராகரணம் பண்ணுதல் கூறியது.

 1-3. உரை: (இந்தியப்பந்தனை………….வாயன்று) இடை வரு துரியம் -7இடையிடையே வருகிற துரியாவத்தையை; இந்தியப் பந்தனை இரியக் 1கண்டிசின்- இந்திரியங்களின் விநியோகம் கழியக் காணுதலாலே; கடவுள் தன்மை என மடவோர் காட்சி - ஆன்மா பதியினுடைய தன்மைய னென்று 2மாயாவாதிகளாகிய அறிவில்லாதோர்; ஆராய்ந்து 3சொல்லுமது வாயன்று - 4பொருளன்று;

 3-7. (உடலுநர்…………..இறையோன்) உடலுநர் ஓம்பு அரண் கடந்து - சத்துருக்களாலே காக்கப்படாநின்ற அரணை யழித்து; 5வீங்குசெலல் தானை நாப்பண்- 6மிக்குச் செல்லா நின்ற தந்திரத்தின் நடுவே யிருப்பினும்; அன்றியும்- அதுவல்லாமலும்; பூக்கேழ் ஓதி- புட்பங்களால் விளங்கப்படாநின்ற கூந்தலை யுடைய; மடவோர் மருட்டும் மாவீழ் பள்ளி- மகளிர் மயக்கும் வண்டு விரும்பும் புட்ப சயனமாகிய; இடனுடை வரைப்பும்- 7விசாலித்த சயனக் கிருகத் திருப்பினும்;

 இறையோன் இறை யோன் - 8அரசனுக்குத் தன்னாணை குன்றாமையால் 9அரசன் அரசன்றான்; ஆதலாலும்,

 8-14. (பொன்செய்…….தெரிந்திசினோர்க்கே) பொன்செய் புலவன் - 10பொற்றொழிலில் வல்ல புலவனொருவன்; புகர்முகக் களிறும்- முகத்திலே புகரையுடைத்தாகிய யானையாகவும்; வெஞ்சின வேங்கையும்- வெவ்விய சினத்தையுடைய புலி யாகவும்; எண்கும்- கரடியாகவும்; யாளியும்- 1யாளியாகவும்; மன்பதை மருள - மக்கட்டொகுதி மயங்க; 2கண்கவர்பெய்தி- கண்களைக் கவர்ந்துகொள்ளும் படி; ஐயம் இன்று இயற்றிய- 3குற்றமறச் செய்யப்பட்ட; ஆடகத் தசும்பினும் -4குடவிளக்கிடும் 5பொற்குடத்திலும்; மணிமருள் வளைவாய் அமையா குடத்தும்- இரத்தினங்களின் ஒளியை மழுங்கச் செய்யும் வளைந்த வாயை யில்லாத 6ஊமைக்குடத்தும்; அவிர் ஒளிவிளக்கு ஒன்று அல்கல் அல்லதை- விட்டு விளங்கப்படா நின்ற ஒளியையுடைய ஒரு விளக்கையிட்டால் அவ்விளக்கு ஒன்றன்றி” தெரிந்திசி னோர்க்குத் திரிபும் உண்டோ - ஆராய்ந் தோர்க்கு ஈரிடத்தும் வேறுபாடுண் டாய்த் தோன்றாது, ஆதலாலும்;

 15-17. (துரியத்து……….மன்னென) 7துரியத்து அல்க - துரியாவத்தையிலே அடைந்தபொழுது; விரிபுலன் எவையும்- சாக்கிராவத்தையிலே 8விரிந்த கருவி களெல்லாம்; வறிய என்று- அசேதனமானமை தோற்றரவுபட்டபடியினாலே அவை யிற்றை அசேதனமென்று நிச்சயித்து; மருட்கை மருட்டின் - இவ் வவத்தை யிலுண்டாகிய1 அஞ்ஞானநிலையை ஒழித்துப் பார்க்கில்; இவ்விடத்து - இவ்விடத்தில்; இவற்கு- இந்த ஆன்மாவிற்கு; இரண்டு என்னைமன் என - இரண்டு தன்மை இன்றே 2யாது பற்றி நீ இவ் வான்மாவை 3இரண்டுபடியாகச் சொல்லவேண்டிற்று என்று அம் மாயாவதியை நிராகரித்தபோது;

 18-19. (தரியானாகி………….. என்னில்) தரியானாகி - 4மாயாவாதி சகிக்காதவனாய்; சாக்கிரத்தானும் - சாக்கிராவத்தை யிலும்; துரியத்தன்மையன் என்னில் ஆன்மாவானவன் துரியாவத் தையிற் போலச் சுத்தன் என்றான் என்று கூறுவாயாயின்;

 19-24. (திரியா………உலகுய்த்தோரே); திரியா ஐம்புலம் அசேதனம் - 5கெடாத இந்திரியங்கள் அசேதனமாத லாலும் அறிவன் அநாகுலவன்- 6பரமசிவன் நின்மலனாதலால் கலக்கமில்லா தோனாதலாலும்; இவை 7நொந்து- இவையிற்றால் வரும் சுகதுக் கங்கட்குவருந்தி; நுகர்பவர் யார் - இவையிற்றை ஆன்மாவை யொழியப் புசிப்பவர் யார்தான்; என்று உணர் அறிவு- 8என்று அறியும் அறிவு; அறி சமாதி என்ப - 9ஆன்மாவை யறியும் ஆன்மசமாதி என்று சொல்லுவர்; பொறிவளர் ஐம்புலத்து அரசு அட்டு - 1இந்திரியங்களிலே வருகிற விடயங்களுக்கு அரசனான அஞ்ஞான வேந்தனையழித்து; ஆர்த்து ஆர்த்துக் கொண்டு; 2உம்பர் உயர்நிலையுலகு உய்த்தோர்- 3இருநூற்றிரு பத்து நான்கு புவனவர்க்கத்துக்கு மேலாகவுயர்ந்த அம் மோஷ தானத்திலே 4தம்மைச் செலுத்தினோர் எ.று.

 5எனவே, மாயாவாதி மலநோய் காரணமாக இதாகிதங்கள் புசித்தலையறியாது ஆன்மாவைத் துரியத்தில் சுத்தன் என்றமை பொருந்தா தெனக் கொள்க.

 இசின், மன், கொல், ஏ என்பன அசை.

 சம்மிய தரிசனம் முடிந்தது

 பாசபந்தம்

 அகவல் 18

 மலம் மூவகை எனல்

 யானே யின்ன 1னாயினே னெற்சேர்

 ஆனாப் பாச மறியல் விரும்பினென்

 அறவ வென்ன வருளோ னறையின்

 குறையா மும்மலக் கொத்தே முறைதேர்

 5. ஆணவ மாயை கரும மாங்கவை

 பேணிற் செம்பிற் 2பெருகிருந் துகளென

 அறிவினை மறைத்த லணிமல மாயை

 நெறிதேர் 3பெய்திய நீணில மந்த

 4முற்சொன் மாக்கலைக் குற்ற காரணங்

 10. கரும மிருவினை தருமா தருமம்

 பெரும மலமும் பிறழா மாயையும்

 மற்றவற் பிணிப்பே யாயி னெற்றிவை

 இரண்டென விசைத்த லெனினே தெருண்டிசின்

 யாண்டு மொருவா தொளிர்வது மீண்டுப்

 15. பிரிந்து புணர்ந் துறையும் பெற்றியி ருந்ததும்

 ஒன்றே போலு நன்று 5நனியுணர்

 மறைத்தற் றொழில்பூண் பதுவு மதனைக்

 குறைத்தற் கெய்திக் குலவுவ தோரிடை

 இரண்டல வென்பதே 1னிருளிரு ளிரிசுடர்

 20. முரண்டா நின்ற முழுமல மாயை

 அன்ன தாக வறிவனோ டாணவந்

 துன்னிய தனாதித் தொடர்பிற் றென்னின்

 என்னை புற்கலற் றரும மிஃதெனப்

 பன்னா மரபெனின் பகர்வ னன்னோ

 25. ஞானமு மதற்கெதி ராய வூனமும்

 2பாரினிப் பலவோ வொன்றோ தானப்

 புற்கலற் றருமந் தரும மின்மை

 சொற்றரிற் 3சித்தா மற்றவற் றருமம்

 4அவணன் றெனினவன் பரிணா மத்தொடு

 30. சிவனுஞ் சேதனா சேதன மாதல்

 ஒன்றுக் கொன்றா தாகலி னென்றும்

 பரிணாமத் திறம் படிவது 5வறிதுகாண்

 அருணே ரறிவுக் கல்கா தொல்கா

 ஆங்கம் மூன்று மலமு நீங்கா

 35. ஈங்கிவற் கியைந்த விகலா வீங்கிருள்

 இறுத்த காலை மறுப்பிரித் தகன்ற

 தீதறு நெடுங்க 6ணாத னாட்டத்து

 அயலொன் றின்மை போலவு முயல்வுழி

 நுண்ணூற் பேரி லிழைத்தகப் படுபு

 40. தன்முதல் கெடூஉ மெண்ணாக் கீடத்

 திறும்பூதி யரரஃ தறிந்திசி 7னோரக்

 களியிடைக் கலித்த தென்ப

 விளிவருங் 8குரையவவ் விருவினைத் திறனே.

 இது, பசுவின் உண்மை கேட்டறிந்து மேற் சீடன் பாசவிகாரம் கேட்க அவற்கு மும்மலங்களும் தொகுத்துக் கூறியது; 1இனி, சம்மிய தரிசனத்தின் இயல்பு கேட்டறிந்த சீடனுக்குப் பாச பந்தத்தின் இயல்பு கூறலுற்று இதனால் மும்மலங்களையும் தொகுத்துக் கூறுகிறா ரென்றது.

 1-5. உரை: (யாதே……………கருமம்) அறவ- தருமவானே; யான் இன்னென் ஆயினேன்- 2நான் இப்படி 3இச்சா ஞானக்கிரியா சொரூபி யாயினேன் எற்சேர் ஆனாப் பாசம் அறியல் விரும்பினென் என்ன - 4என்னைச் சேர்ந்து பிரியாதிருக்கும் 5பாசத்தையறிதற்கு விரும்பினேன் என்று சீடன் விண்ணப்பம் செய்ய; 6அருளோன் - அருளே திருமேனியாக வுடைய ஆசாரியன் அருளிச்செய்வான்; அறையின்- நீ கேட்கிற பாசத்தைச் 7சொல்லின்; குறையா மும்மலக் கொத்து- 8அழிவில்லாத மும்மல வர்க்கமாய்க் காண நிற்குமது என அறிக; முறைதேர் ஆணவம் மாயை கருமம்- அவையிற்றை9 முறையே விசாரிக்கின் ஆணவ மலமென்றும் மாயாமல 10மென்றும் கன்ம மலமென்றுமாம்.

 5-7. (ஆங்கவை……..மலம்) ஆங்கு அவை 1பேணின் - அவ்விடத்து 2அவையிற்றை யறிய விரும்பினா யாயின்; செம்பிற் பெருகு இருந் துகள் என - செம்புடன் கூடிய மிக்க பெரிய காளிதம் போல; அறிவினை மறைத்தல்- 3சகசமாய்க் கூடிக் கிடந்து பதார்த்தங்களின் உண்மையை அறியவொட்டாது ஆன்ம ஞானத்தை மறைக்கை; மலம் அணி- ஆணவமலத்துக்கு 4இலக்கணமாம்;

 7-9. (மாயை…………காரணம்) மாயை நெறி தேர்பு- மாயா மலத்தின் 5இயல்பை விசாரிக்கின் அது; முற்சொல்- 6முன்னாகச் சொல்லப்பட்ட; மாக்கலை நீள் நிலம் அந்தம் உற்ற- 7மகத்தாகிய கலாதத்துவ முதல் நீண்ட பிருதிவியந்தமாகப் பொருந்தியன வாகிய தத்துவங்களுக்கு; எய்திய காரணம்- உண்டாகிய 1உபா தானகாரணமாயிருப்பது;2

 10. (கருமம்…………….அதருமம்) கருமம் இருவினை- கன்ம மலமாவது 3இருவினை; தருமம் அதருமம்- அஃது புண்ணியம் பாவம் என இரண்டாயிருக்கும் 4என அறிக என்று இவ்வாறு அருளிச்செய்ய;

 11-13. (பெரும …………….தெருண்டிசின்) பெரும- பெரியோனே; மலமும்- ஆணவமலமும்; 5பிறழா மாயையும்- கெடாத மாயா மலமும்; அவற் பிணிப்பு ஆயின் - அந்த ஆன்மாவைப் பந்தித் திருக்கும் 6பந்தனையாயின்; 7இவை இரண்டு என இசைத்தல் எற்று எனின்- இவையிற்றை இரண் டென்று சொல்ல வேண்டிற்று ஏனோ என்று வினவுகிருயாகில்; தெருண்டிசின்- சொல்ல அறிவாயாக.

 14-16. (யாண்டும்………….நனியுணர்) யாண்டும் ஒருவாது ஒளிர் வதும்- 8ஒருநாளும் விட்டு நீங்காதே விளங்கி நிற்பதாகிய ஆணவமலமும்; ஈண்டுப் பிரிந்து புணர்ந்து உறையும்

 பெற்றி இருந்ததும்- 1ஈண்டைக் கன்மத்துக்கீடாகத் தனு கரண புவன போகங்களுக்கு 2உபாதானமாய் 3விடுவதும் பற்றுவது மான முறைமையை யுடைய தாகிய மாயாமலமும்; ஒன்றே போலும்- ஒன்றாய் 4இருந்தவோதான்; 5நன்று நனி உணர் - நன்றாக மிகவும் விசாரித்துப் பாராய்;

 17-20. (மறைத்தல்…………மாயை) மறைத்தல் தொழில் பூண்பதும்- மறைத்தலையே செய்தியாகவுடைத்தான ஆணவ மலமும்; அதனைக் குறைத்தற்கு ஓர் இடை எய்திக் குலவுவதும் - 6ஒருகாலத்திலே அம்மலத்தைக் கெடுத்தற்கென வந்து பொருந்து வதாகிய மாயாமலமும்; இரண்டல என்பது என்- இரண்டல்ல வென்று சொல்லுவது என்னை; இருள் இருள் இரி சுடர் - 7இருளைம் கெடுக்கும் விளக்கும் போல; முழுமலம் மாயை- 8முதன்மையான ஆணவமலமும் மாயாமலமும்; முரண்தர நின்ற- 9மாறுபாட்டோடு கூடி நின்றன காண் என்று அருளிச் செய்ய;

 21-24. (அன்னதாக …………..எனின்) அன்னது ஆக - அஃது அப்படியாக; ஆணவம் அறிவனோடு துன்னியது- ஆணவமலம் 10ஆன்மாவோடே கூடியது; அநாதி தொடர்பிற்று என்னில்- 1அனாதி சம்பத்தத்தால் செறிந்துளது என்னில்; இஃது புற்கலன் தருமம் எனப் பன்னாமரபு என்னை எனில்- இந்த ஆணவமலம்2 ஆன்மாவுக்குத் தருமம் என்று சொல்லாத முறைமை என்னையோ என்று வினவினால்;

 24-28. (பகர்வன்…..சித்தாம்) அன்னோ- ஐயோ; பகர்வன்- சொல்லுவேன், கேட்பாயாக; ஞானமும் அதற்கு எதிராய ஊனமும் - அறிவையும் அதற்கு மாறுபாடான 3அறியாமை யைப் பண்ணுவதான ஒன்றையும்; ஒன்றோ பலவோதான்- ஒன்றென்பேமோ பலவென்பேமொ; 4இனி பார்- இப்பொழுது விசாரித்துப் பாராய்; அப்புற்கலன் தருமம் தருமமின்மை சொல்தரின்- 5ஆன்மாவினுடைய குணமும் குணமில்லாமையும் விசாரித்துச் சொல்லின்; சித்தாம்- 6ஆன்மா 7சித்தாயிருக்கும்.

 28-30. (மற்று……………சிவணும்) அவன் தருமம் அவண் அன்று எனின்- அந்த அறிவனாகிய ஆன்மாவுக்குக் 8குணம் அப்படியன்று என்று சொல்லுவாயாகில்; அவன் பரிணாமத் தோடு சிவணும்- அவனுக்கு வளர்தல் சுருங்குதல் கூடும்;

 30-33. (சேதனா…………………அல்காது) சேதனா சேதனம் ஆதல்- தான் சைதன்னியமாயிருக்க அசேதனத்துக்குள்ள குணம் உண்டாதல்; ஒன்றுக்கு ஒன்றாது-9ஒரு பொருளுக்குக் கூடாது; ஆகலின்- 1ஆதலால்; என்றும் பரிணாமத்திறம் படிவது வறிது காண்- எப்பொழுதும் பரிணாம வர்க்கம் கூடுவது அசேதனத் துக்குக் காண்; 2அருள்நேர் அறிவுக்கு- 3திருவருள்போல இச்சா ஞானக் கிரியா சொரூபியாயிருக்கிற ஆன்மாவுக்கு; அல்காது- இந்தப் பரிணாமத்திறம் கூடாது4;

 33-35. (ஒல்காது…………….இயைந்த) ஆங்கு- அவ்விடத்து; ஒல்காது- ஒதுக்கமற வந்த; அம்மூன்று மலமும்- அந்த மும் மலமும்; நீங்கா- 5ஒழியாதே; 6ஈங்கு இவற்கு இயைந்த- இச் சகலாவத்தையில் ஆன்மாவுக்குக் கூடின;

 35-38. (இகலா……………போலவும்) இகலா வீங்கு இருள் இறுத்த காலை- 7மாறுபாடில்லாத மிக்க பூதவிருள் கூடின விடத்து; மறுப் பிரிந்து அகன்ற தீதறு நெடுங்கண்- படலமின்றி விரிந்த 8குற்றமின்றிக் காணும் நீண்ட பார்வையையுடைய கண்ணுக்கும்; 1ஆதன் நாட்டத்து- அந்தகன் கண்ணுக்கும்; அயல் ஒன்று இன்மை போலவும்- வேறுபாடு ஒன்று இல்லாதவாறு 2போலாம்.3

 இஃது ஆணவமலமிருக்கும் முறைமை கூறியது.

 38-41. (முயல்வுழி………….இறும்பூது) நுண் நூல் பேரில் இழைத்து- நுண்ணிய நூலாலே பெரிய கூட்டை யெடுத்து; அகப்படுபு- அதற்குள்ளே யகப்பட்டு; தன்முதல் கெடூஉம் - தானே கெடும்; எண்ணாக் கீடத்து- 4கிரியா பல விசாரமில்லாத உலண்டுப் புழுவைப்போல; முயல்வுழி- ஆன்மா இந்தச் சரீரத்திலே நின்று முயலுமிடத்து; இறும்பூது-வேறொரு சரீரமெடுத் தற்கேது வாகிய வியப்பினையுடைத்தாம்;

 இஃது மாயாமலம் இருக்கும் முறைமை கூறியது.

 41-43. (யாரஃது……..திறனே) விளிவரும் அவ் விருவினை5 திறன்-6 கெடுத்தற்கரிய அந்தக் கன்மபலமான புண்ணிய பாவக் கூறுபாடு; அக் களியிடைக் கலித்தது என்ப- அந்த மலமாயை மயக்கத்திலேவந்த தென்று சொல்லுவர்; அஃது- அவையிற்றின் தன்மையை; யார் அறிந்திசினோர்-1 யார்தான் அறிந்தோர் எ-று.

 மற்று, வினைமாற்று, அ, ஆம், குரை, அசை.

 அகவல் 19

 ஆணவமலம்

 ஆருயிர் யாதொன் றகலின் மாசிரி

 பதியது தன்மை படர்ப மதிதர

 அன்னது பாச மறியஃ தின்றெனின்

 என்னை பரதந் திரிய மியல்பெனின்

 5.  முன்னோ ரோதிய முத்தி மன்னா

 தாகும் பந்த மகன்றோர் போகிய

 ஈசத் தன்மை 2யியைந்தோ ராசமல்

 பந்தத் தொன்றின ரைம்புல னேவலின்

 நின்றனர் வீடுங் கட்டு மீங்கிது

 6.  பரதந் திரியங் கரைகழி பந்தம்

 சித்தென நித்த மாயின் மற்றது

 முத்தி கூடுதன் முடியா தித்தகை

 பசுநெறி நின்றோர் மதிநனி படரார்

 ஏக மெவ்வுயிர்க் கண்ணுந் தீதில்

 7.  அநாதி நிபிட மளவொடு படாஅது

 3உயிர்தொறு நின்றக் கண்ணும் விளிதரு

 தன்னுடைக் காலந் துன்னிற்4பின்னிடும்

 வலியின்5றகுதித் தொளிதிக ழனாதி

 அன்றெனி னதற்கு நின்றது வேறோர்

 8.  ஏது வேண்டுமற் 1பின்னு மாசிரி

 முத்தரைத் தடுக்கு மாகலிற் பித்தாம்

 மற்றது வேண்டுந2ரொப்பிரி வருத்தம்

 ஏக மெனவறி பலவா யோவாத்

 தோற்ற முண்மை யின்மையின் மாற்றரும்

 9.  வலிபல வென்பதை யறியுயிர்க்

 கொலிகெழு வீடொருங் குணரா மையினே.

 இது,3 மேல் மலம் உண்டென்கைக்குப் பிரமாணம் என்னென ஆணவமல வுண்மை சாதித்து அதன் குணம் சொல்லா நின்றது.

 1-3. (ஆருயிர்………….அறி) யாது ஒன்று அகலின்- ஆன்மாவைப் போலத் தானும் முதலாயிருந்து 4அனாதியே முப்பொருளுந் தோன்றாமல் ஆன்மாவினுடைய இச்சா ஞானக் கிரியைகளை5 மறைத்தது யாது அது பரிபாககாலத்திலே நீங்கின்; 6ஆர் உயிர்- அதிலே முன்பு பொருந்தின ஆன்மா; மாசு இரிபதியது தன்மை படர்ப- 7குற்றமற்ற 8சிவனுடைய சுயம்பிரகாச ஞானா னந்த பரிபூரணத்தைப் பெறும்; அன்னது பாசம் - அத்தன்மையை யுடையது ஆணவமலம் என்று; மதிதர அறி-9விசிட்ட புத்தி மானே நீ அறிவாயாக;

 3-4. (அஃது…………..பரதந்திரியம்) அஃது இன்றெனின்- அப்படி ஆணவமலம் என்பதொன்று இல்லையென்று சொல்வா யாயின்; பரதந்திரியம் என்னை- 1சைதந்நியமாயிருக்கிற அறிவன் இந்திரியங்கட்கு ஏவல் செய்ய வேண்டுவானேன்;

 4-6. (இயல்பெனின்………..ஆகும்) இயல்பு எனின்- ஆன்மா இந்திரியங்கட்கு ஏவல் செய்தல் அதற்குச் 2சகல தருமம் என்பா

 யாகில்; முன்னோர் ஓதிய முத்தி மன்னா தாகும்-3 அனாதியாக முன்புள்ளோர் சொல்லிவருகிற 4முத்தியுண்டாகமாட்டாது.

 6-9. (பந்தம்……………..நீங்கியது) பந்தம் அகன்றோர்- இந்த ஆணவமல பந்தம் நீங்கினோர்; போகிய ஈசத் தன்மை இயைந் தோர்- மகத்தாகிய5சிவானந்த பூரணானுபவம் 6பெற்றோராவர்; ஆசு அமல் பந்தத்து 7ஒன்றினர்- குற்றமுடைத்தாகிய மூலமலத்துடனே கூடினோர்; ஐம்புலன் ஏவலின் நின்றனர்- ஐந்தாகிய இந்திரியங்

 கட்கு ஏவல் செய்வோராவர்; வீடும் கட்டும ஈங்கு இது- முத்தி

 யாவதும் 8பெத்தமாவதும் முறையே இப்படியென அறிவாயாக;

 10-12. (பரதந்திரியம்- முடியாது) 9பரதந்திரியம் கரைகழி பந்தம்- இந்தச் சேதனனை இந்திரியங்கட்கு ஏவல் செய்விக்கும் அளவில்லாத மல பந்தம்; சித்தென நித்தமாயின் - சித்துப்போல நித்தமாய் ஒரு படித்தாயிருக்குமாயின்; அது முத்தி கூடுதல் முடியாது- அவ்வான்மாவுக்கு முத்தியுண்டாதல் இல்லையாம்;

 12-13. (இத்தகை………….படரார்) இத்தகை பசுநெறி நின்றோர்- இப்படிப் பசுத்துவமுடையரான சகலர்; மதி நனி படரார்- 1மிகப் போதித்தாலும் 2ஞானமெய்தமாட்டார்;

 14-15. (ஏகம்…..படா அது) எவ்வுயிர்க்கண்ணும்- சருவான் மாக்களிடத்தும்; ஏகம்- இந்த ஆணவ மலபந்தம் தான் 3ஒன்றாய்; 4தீதில் அநாதிநிபிடம் அளவொடுபடா அது- குற்றமற அநாதியாக 5எவ்வுயிரிடத்தும் செறிந்திருக்கும் அதன் வியாபகம் ஓர் எல்லைக்குள் அகப்படாது, இது தான் ஒரு தன்மைத்தாய் வியாபித்திருக்கும்;

 16-18. (உயிர்…..தகுதித்து) உயிர்தொறும் நின்றக் கண்ணும் 6சர்வான்மாக்களிடத்தும் நின்றதேயாயினும்; விளிதரு தன்னுடைக்

 காலம் துன்னில்- அந்த ஆன்மாக்களில் ஓர் ஆன்மாவுக்குப் 7 பாசச்சேதம்பண்ணும் பக்குவகாலம் வருமானால்; 8பின்னிடும் வலியின் தகுதித்து- 1தன்னுடைய சத்திகெடும் (வலியில்லாத) முறைமையினையுடைத்து;

 18-20. (ஒளி………..வேண்டும்) ஒளி திகழ் அநாதியன் றெனின் - இதனைப் பிரகாசமாகிய அநாதியன்றெனில்; அதற்கு நின்றது- 2அந்த மலம் இடையிலே வந்து நின்றதற்கு; வேறு ஓர் ஏது வேண்டும்- வேறே ஓர் ஏதுவைச் சொல்லவேண்டும்.

 20-22. (பின்னும்…………வருத்தம்) ஆசு இரி முத்தரை- அதுவு மன்றியே பாசச் சேதம் வந்த முத்தான்மாக்களை; பின்னும் தடுக்கு மாதலின்- 3பின்னும் பந்திக்குமாதலாலே; அது வேண்டுநர்- அந்த முத்தி 4வேண்டினோர் செய்யும்; ஒப்பு இரி வருத்தம்- 5உவமையில்லாத வருத்தமாகிய தவம்; பித்தாம்- 6பித்தாய் முடியும்;

 23- 24. (ஏகம்……………..இன்மையின்) பலவாய் ஓவாத் தோற்றம் உண்மை - பலவாய்க் கெடாத தோற்றமுண்மை; 7இன்மையின்- இதற்கு இல்லாதபடியாலே; 8ஏகம் என அறி - 9இதுதான் ஒன்றேயென் றறிவாயாக;

 24-26. (மாற்றரும்……………உணராமையினே) உயிர்க்கு- ஆன்மாக்களுக்கெல்லாம்; 1ஒலிகெழு வீடு - பிரகாசம் மிக வுண்டாகிய முத்திக்கு வேண்டும் ஞானம்; ஒருங்கு உணரா மையின்- 2ஒரு பக்குவ காலத்திலே கூடாமையின்; மாற்று அரும்வலி பல- இந்த மலத்திற்கு உவமையில்லாத சத்திகள் பல; என்பதை அறி- 3என்று ஞானவான்கள் சொல்வதை அறிவாயாக எ-று.

 மற்று இரண்டும் வினைமாற்று. மன், அசை, நிபிடம், செறிவு.

 அகவல் 20

 கன்ம மலம்

 4கலைநவில் கரும நிலைமலி பெய்தக்

 5கேட்டிசி னின்பம் வேட்டிசி னோரே

 1நிரைய  2மெய்தினர் பலரே பலரே

 புரைதீர் போக பூமி 3மேவினர்

 6. செய்வினை யொத்தக் கண்ணு 4மையறு

 சாலி மேவினர் பலரே பலரதன்

 வாலிய விந்துவு மருவா தோரே

 ஆயிடைக் 5கருமங் காரணம்

 6மாசுடைத் துயர்ந்த மதியி னோயே7

 உரை: 1-2. (கலைநவில் ………..கேட்டிசின்) கலைநவில் கரும நிலை மலிபு எய்தக் கேட்டிசின்- 8வேதாகமங்களிற் சொல்லப்பட்ட கன்ம மலத்தின் 9இயல்பினைப் புத்திபூர்வமாகக் கேட்பாயாக;

 2-4 (இன்பம் வேட்டிசினோரே………….பூமி மேவினர்) இன்பம் வேட்டிசினோர்- சருவான்மாக்களும் சுகத்தை 10வேண்டி னோராயிருக்க; நிரையம் எய்தினர் பலர் - இவர்களில் நரகத்திலே சென்று விதனம் புசித்தோரும் பலர்; புரைதீர் போகபூமி மேவினர் பலர் -1தனக்கு மேலேயும் உயர்ந்ததில்லாத சுவர்க்க லோகத்திலே சென்று போகம் 2புசித்தோரும் பலர், 3இதனைத் திட்டாந்தத்திலும் காண்பாயாக.

 5-7. (செய்வினை…………மருவாதோரே) செய்வினை ஒத்தக் கண்ணும்- பலரு மொக்க ஒரு முயற்சியைச் செய்த விடத்தும்: மையறு சாலிமேவினர் பலர் - குற்றமற்ற செந் நெல்லைப் பெற்றோரும் பலர்; அதன் வாலிய விந்துவும் மருவா தோர் பலர்- 4அதனுடைய வெளுத்த ஒரு நெல் மூக்கும் பெறாதவரும் பலர்;5

 8-9. (ஆயிடை……………..மதியினோயே) ஆயிடை- அவ்விடத்து; கருமம் காரணம்- இதற்கு அவர்களுடைய 6கன்மங் காரணமாக வேண்டுமென்று 7அறிவாயாக; மாசு உடைத்து- அஞ்ஞானத்தை கெடுத்து: 8உயர்ந்த மதியினோய்- 9மேலாக வுயர்ந்த ஞானத் தையுடையோனே எ-று.

 சின், அசை. முற்பட்ட ஏகாரம் ஐந்தும் தேற்றம். பிற்பட்ட ஏகாரம், ஈற்றிசை.

 அகவல் 21

 மாயா மலம்

 ஆதி யோதிய மேதகு மாயை

 கோதின் றேக நாசம தணையா

 தளவில் 1வலியிற் றுலகவை பிறக்கும்

 யோனி யெங்கணுந் தானினி தமலும்

 5.  கருமத் ததிகா ராந்தத் தளவும்

 விதிமுறை கொடுக்கும் வியப்பிற் றஃதறி

 2சகக்கரு மத்தின் மிகத்திக ழிறையை

 ஆராய் பென்ன வணிகிள ருலகம்

 ஏருபா தான மின்றெனி னின்றுடை

 6.  நூலின் றாயி னின்றென வாலிய

 சேதன மன்றிது தீதறு செயல்கள்

 கோதில சேதன மாகலி னலதேல்

 காரண நியம மென்னும் பேரிசை

 எல்லா முடைக்கும் பொல்லாத் தோடம்

 7.  வல்லே யெய்து மநித்தமு நல்ல

 காரிய மாவது மாயி னீரில்

 தோற்றுவ தியாதின் மாற்றரும் வியாபி

 அன்றெனின் வினைமற்றெங்கணு மார்தல்

 கூறுதி யாது பலவாய்ச் சேதனம்

 8.  அன்றது தோற்றத் தொன்று மன்றிது

 தோற்ற மாகலி னேக மாப்பட

 நூலின் றொகுதிக் காண்டலி னேகம்

 அநேகத் தெழுமென வறியப் பலவும்

 ஒருதனி வித்தின் வருவகை யறிதி

 9.  சித்தி லசித்தின் குற்றமில் தேற்றம்

 என்பவர் புனலை வன்புகை யதனின்

 மான வளவைத் தாமள வின்மை

 1பூத மாதியா முலக மெவைக்கும்

 காரணம் பார்க்கி லோர்பர மாணு

 10. 2என்பவ ரறிவி ணுண்மை யின்புற

 நாடினம் நிற்க வோருரு வதனின்

 ஓருரு வுதித்த லல்லதை யாவும்

 நாச மில்லை யென்னி னாசற

 ஒன்றுக் கோரிடத் தெய்திய தெங்கணும்

 11. 3நின்றிடி னதனை நீக்கும் வென்றியர்

 யாரே கோடிக் கீறு மாற்றக்

 4கண்டா லெவைக்கும் பொன்றுங் காலம்

 உண்டே மன்ற வோது மாயா

 காரிய நிற்பது முடிவிற் சீரிய

 12. சத்தி வடிவிற் பொற்பொடு 5புணரும்

 6தொடங்கற் காலை யிடம்பட விளங்கும்

 ஆருயி 7ரேரிசைப் போகஞ்

 சீரிதி னருந்தத் திகழ்தனு முதலே

 இது மாயாமல சாதகம் கூறியது.

 உரை: 1-6. (ஆதி………….அறி) ஆதி ஓதிய 1மேதகு மாயை- பரமசிவனாலே வேதாகமங்களிலே அருளிச் செய்யப்பட்ட 2மேம்பாடு தக்கிருக்கின்ற மாயையானது; 3கோதின்று ஏகம்- குற்ற மின்றி 4ஏகவத்துவாயிருக்கும்; நாசமது அணையாது -5ஒருகாலும் அழிவுபடாது; -6அளவில் வலியிற்று- அளவிறந்த சத்திகளையுடைத்து; -7உலகவை பிறக்கும் யோனி- பிரபஞ்ச மடங்கலும் தோற்றுகைக்கு உற்பத்தித்தானமா யிருக்கும்; தான் இனிது 8எங்கணும் அமலும்- இதுதான் எவ்விடத்தும் இனிதாக வியாபித்திருக்கும்; கருமத்து அதிகாராந்தத்தளவும்- 9பூருவ கன்மபலம் புசித்தறுமளவும்; விதி முறை கொடுக்கும் வியப்பிற்று- பிராரத்துவமான 10தேகத்தை நியதிப்படி முறை யாகக் கொடுக்கும் 11ஆச்சரியத்தையுடைத்து; அஃது அறி - அதனை நீ அறிவாயாக.

 7-10. (சகக்கருமத்தின்…………இன்றென) சகக் கருமத்தின் - 1பிரபஞ்சமாகிய காரியத்தைக் கொண்டு; மிகத்திகழ் இறையை ஆராய்பு என்ன- மிகவும் 2பிரகாசிக்கின்ற பரமசிவனை நிச்சயித் தாற்போல; அணிகிளர் உலகம்-3அழகு பொருந்திய காரியப் பிரபஞ்சம் காரியப் பொருளாயிருத்தலால்; ஓர் உபாதானம் இன்று எனின் இன்று- விசேடமான ஓர் 4உபாதானமில்லையா யின் இப்பிரபஞ்சம் இல்லையென்று கொள்க: நூல் இன்றாயின் - இஃது என்போல வென்னின், நூல் இல்லையாயின்; உடையின்று என -புடவை இல்லாதவாறுபோல 5என்க.

 10-12. (வாலிய…………………ஆகலின்) இது வாலிய சேதனமன்று - இதுதான் வாலிதாகிய 6சைதந்நியமன்று, என்னை; தீதறு செயல்கள் கோதில் அசேதனமாகலின்- குற்றமற்ற 7இதனுடைய காரியங்கள் ஐயமற அசேதனமாகலின்;

 12-15. (அலதேல்……………..எய்தும்) அலதேல்- அப்படி யன்று, அசேதனமாயிருப்பது சைதன்னியத்திலே தோன்றும் என்னில்; காரணம் நியமம் என்னும் பேரிசை எல்லாம் உடைக்கும் - இன்ன காரணத்தினால் இன்ன காரியம் நியமமாய்த் தோன்றும் என்னும் பெரிய8நியாய மெல்லாவற்றையும் கெடுக்கும்; பொல்லாத் தோடம் வல்லே எய்தும்- 9நியமமில்லாமை யென்னும் பொல்லாத குற்றம் கடிதாக வந்துகூடும்;

 15-17. (அநித்தமும்…………யாதின்) 1அநித்தமும்- நித்திய உபாதானமாயிருக்கிற மாயையை அநித்தமென்றும்; நல்ல காரியமாவதும் ஆயின்- ஒன்றினுடைய நல்ல காரியமென்றும் சொல்லின்; நீரின் தோற்றுவது யாதின்- 2நீர்மைப்படத் தோற்றப் படுதல் அதற்கு உடனே கூடுமாதலால் அதுதான் தோற்றுவது 3யாதின் பாலோ, சொல்லாய்;

 17-19. (மாற்றரும்………..கூறுதி) மாற்று அரும் வியாபி அன்று எனின்- இம்மாயைதான் உவமையில்லாத 4வியாபியன்று என்னில்; வினை எங்கணும் ஆர்தல் கூறுதி- 5கன்மபக்கு வத்துக் கேற்றபடி ஆன்மாக்கள் எவ்விடத்து வேண்டினும் போகம் புசிப்பதற்கு ஓர் உபாயம் சொல்லாய்6;

 19-21. (யாது…..ஏகம்) யாது பலவாய்ச் சேதனம் அன்று- யாதொரு பொருள் பலவாய்ச் சேதனமல்லதோ அது தோற்றத்து ஒன்றும்- அஃது ஒரு 7தோற்றரவைக் காட்டும்; இது தோற்றம் அன்று ஆகலின் ஏகம்- 8இது தோன்றுவதன்று ஆதலால் ஏகமாம், ஆகவே ஒன்றாயிருப்பது பல பொருளில் தோன்றாது என்றவாறு, 9இங்ஙனம் ஒன்றாயிருப்பது பல பொருளில் தோன்றாது என்று அருளிச்செய்ய21-23. (மாப்படம்………………என) மாப்படம் - மகத்தாகிய புடவை; 1நூலின் தொகுதிக் காணடலின்- 2நூற்கழி பலவற்றாலே ஆயின்மை காண்டலால்; ஏகம் அநேகத்து எழும் என - அநேக பதார்த்தத்தாலே ஏகமாயிருப்பதொன்று ஆமென்றறியக் கூடாதோ 3 என்று விண்ணப்பஞ் செய்ய;

 23-24. (அறி………………அறிதி) 4அறி அப்பலவும்- நீ அறிந்த அந் நூற்கழி பலவும்; ஒரு தனி வித்தின் வருகை - ஒரு தனிவித்தாலே வந்தன 5வென்னும் இவ்வகையினை; அறிதி- நீ அறியாயோ6;

 25-27. (சித்தில்……………….அளவின்மை) குற்றமில் சித்தில்- குற்றமற்ற சித்திலே; அசித்தின் தோற்றம் என்பவர்- அசித்துத் தோன்றுமென்று 7சொல்லுவோர்; வன்புகை யதனின் புனலைமான அளவைத்தாம் - மிகுந்த புகையைக் கண்டு கீழே நீர் உண்டென்று அனுமானம் கொண்டபடியாகிய; அளவின்மை- 8பிரமாணமின்மை யென்னும் குற்றமாம்.

 28-31. (பூதமாதி……………நிற்க) பூதமாதி உலகம் எவைக்கும்- மகாபூத முதலாகவுள்ள உலகமெவையிற்றுக்கும்; காரணம் பார்க்கில்- காரணம் விசாரித்துப் பார்க்கில்; ஓர் பரமாணு என்பவர் - புடவைக்குப் பல நூற்கழி காரணமாதல்போல 1உவமையில்லாத பரமாணுவே காரணமென்று சொல்லுவோராகிய தார்க்கிகரது; அறிவின் நுண்மை- நுண்ணியவறிவும்; இன்புற நாடினம்-2 இனிதாக அறிந்தோம்; நிற்க- அவர்நிற்க 31-36. (ஓருரு………………யாரே) ஓர் உருவதனில் ஒர் உருஉதித்தல் அல்லதை- ஒரு பொருளிலே யொருபொருள் 3தோன்று வதல்லது; யாவும் நாசம் இல்லை யென்னின்- சருவபதார்த்தமும் 4ஒரு காலத்திலே ஒருபடித்தாக அழிந்து மீளத்தோன்றும் மகா சங்காரம் 5இல்லை யென்பாயாயின்; ஆசற- குற்றமற,

 6ஓரிடத்து ஒன்றுக் கெய்தியது- ஓரிடத்து ஒரு பொருளுக்கு வந்த சங்காரம்; எங்கணும் நின்றிடின்- எல்லாப் பதார்த்தமும் 7ஒரு காலத்திலே ஒன்றாய் அழியப் பக்குவப்பட்டு வந்து நிற்கு மாயின்; அதனை நீக்கும் வென்றியர் யாரே- 8அந்தப் பக்குவத்தை நீக்கும் வன்மை யுடையார் யாரோதான்:

 36-38. (கோடிக்கு…………….மன்ற) கோடிக்கு ஈறும் ஆற்றக் கண்டால்- கோடி சரீரங்கள் ஒரு முகூர்த்தத்திலே முடிவாக அழியக் கண்டால்; எவைக்கும் பொன்றும் காலம் உண்டே மன்ற- 1எல்லாச் சரீரங்கட்கும் 2ஒரு நாளிலே சங்காரம் உண்டு எனத் தெனியக்காண்;

 38-43. (ஓதும்……………..முதலே) ஓதும் மாயாகாரியம் முடிவில் நிற்பது- சொல்லப் பட்ட மாயா காரியம் சங்கார காலத்து நிற்கும் முறைமை யாங்ஙனமெனில்; சீரிய சத்திவடிவில்- சீரிதாகிய தத்தம் சத்திவடிவிலே 3பொற்பொடு புணரும் அழகிதாக- உபாதானத்திலே யொடுங்கும்; 4தொடங்கற் காலை - 5அவ்வாறு ஒடுங்கியவை மீளத் தோன்றுவதாகிய புனருற்பவ காலத்திலே; ஆருயிர் ஏர் இசைப் போகம்- நிறைந்த ஆன்மாக்கள் கீர்த்தி யுடைத்தாகிய போகத்தை; சீரிதின் அருந்தத் திகழ்தனு முதல் - 1நன்றாகப் புசித்ததற்கு ஏது வாய் விளங்கும் தனு கரண புவன போகங்கள்; இடம்படத் தோன்றும்- 2இடமுண்டாகத் தோன்றும் எ-று.

 ஏகாரம் முன்னையவை தேற்றம்; பின்னையவை அசை. மன்ற, தெளிவாக.

 அகவல் 22

 சற்காரிய வாதம்

 3தந்து முதல காரக மைந்துறக்

 கோட லாடையின்4 மையி னாடை

 உளதேற் காரக மென்னை யென்ன

 5வளையாக் காரக மசத்துற் பத்திக்

 5.  குண்டே யாக வாயிடை 6யாவினும்

 தண்டாதி யாவருந் தாம்வேண் 7டியமன்

 கண்டோ ராயின் மன்ற கண்டிலம்

 அன்ன தாயி னதினஃ துண்டென

 என்னை நியம 8மிதினுள திவ்வலி

 6.  என்னிற் சித்த சாதன 9மன்னோ

 அன்றெனிற் காரகக் குழுவும் வென்றி

 தாரா தோடு 10மோட வேரிசை

 எல்லா முடையு 11முடைய நல்லோய்

 சொல்லே யாகு நிற்க வல்லே

 7.  உற்பா திக்கும் வலியுண் டில்லைச்

 சத்தி ரூப மாகிக் கருமம்

 என்றிடின் விசேட நின்ற தொன்றிடைக்

 கண்டில மொன்றும் வென்றியோ டொன்றைக்

 காரக மதற்குப் பேரிசை நியமம்

 8.  ஆகத் தோற்று விக்குஞ் சீரிசை

 வலியந் நுவய வெதி ரேகத்துக்கும்

 ஒலிகெழு முரூடி யானுங் கலிகொள

 அறிய லாகு மவ்வெளிப் படுதல்

 ஒலிகெழு தோற்ற மதனாற் கலிகெழு

 9.  தந்து முதல காரகம் வந்திலா மையிற்

 புடமடி மறைத்த தடமலிந் தகன்ற

 வேம முதல தாமினி 1துஞற்றத்

 தூமடி விளங்குமி 2யாங்கெனின் மாமரு

 கடமிக மறைத்த படங்கட மகற்ற

 10. இடமிக விளங்கி யாங்கு வடிவுற

 எல்லாக் காரக முறினு முயற்கோ

 டில்ல தில்ல தாகலின் வல்லே

 கலைமுதன் மாயையி னிவணம்

 3நிலைநலி யுடைய நினையுங்காலே.

 இஃது ஆருயிர் “ஏரியல் போகஞ் சீரிதி னருந்தத் திகழ் தனுமுத” லாயபிரபஞ்சம் - அசற்காரிய மென்னச் சற்காரிய சாதகம் கூறியது.

 1-3. உரை (தந்து…………..என்ன) தந்து முதல காரகம் முந்து றக்கோடல்- நூலை உபாதானமாகக் கொண்ட புடவையை உண்டாக்கும் கருவிகளைக் குறைவறக் கொள்ளவேண்டிற்று; ஆடை இன்மையின்- நூலினிடத்துப் புடவை 4இல்லையென்ப தனாலல்ல வோ; ஆடை உளதேல்- அதனிடத்துப் புடவை யுளதாயின; காரகம் என்னை- இக்கருவிகளைக்கொண்டு 5செய்ய வேண்டுவது எற்றுக்கு; 6என்ன- என்று விணைப்பஞ்செய்ய; இங்ஙனம் கூறுவாயாகில்,4-6. (1வளையா……………கண்டிலம்) அசத்து உற்பத்திக்கு-அசற்காரியத்துக்கு; 2வளையாக் காரகாம் உண்டே - ஆராய்ந்து கொண்ட கருவிகள் 3வேண்டு மல்லவோ; ஆக - அங்ஙனமாக; ஆயிடை- அவ்விடத்து; யாவினும் யாவரும் தாம் வேண்டிய - எக்கருவிகளைக் கொண்டும் எத்தகைய விவேவிகளும் தாம் வேண்டின பொருள்களை; 4தண்டாது கண்டோர் - குறை வின்றியே உண்டாக்கிக்கொள்ளுவரல்லவோ, அங்ஙனம் உண்டாக்கிக்கொண்டோரை; ஆயின்- ஆராயின்; மன்ற கண்டிலம்- நிச்சயமாகக் கண்டிலோம், (என்று இவ்வாறு ஆசிரியர் அருளிச் செய்ய.)

 7-10. (அன்னது…………..சாதனமன்னோ) அன்னது ஆயின் - 5அஃது அப்படி யாயின்; அதில் அஃது 6உண்டென- அந்நூலி னிடத்துப் புடவையுளதாய்த் தோன்றவில்லையாயினும் கருவி களாலே நூலினிடத்தே புடவை யுண்டாக்கலாமே என்று விண்ணப் பஞ் செய்ய; என்னை நியமம்- உனக்கு இஃது என்ன நியமம் 7சொல்லாய்; இதின் உளது இவ்வலி என்னின்- 8புடவை யுண்டாகும் சத்தி மற்றொன்றில் பிறவாது இந்நூலிலே தான் உண்டு என்று சொல்லுவாயேல்; சித்த சாதனம்- அது நாம் சாதிக்கிற பொருளாகியன்றோ முடிந்ததாம்.

 மன்னும் ஓவும் அசை1.

 11-14. (அன்றெனில்……….நிற்க) அன்றெனில் காரகக் குழுவும் வென்றி தாராது ஓடும்- நூலிற் புடவை கிடந்ததில்லை2 யென்னின் கருவித் திரட்சியெல்லாம் கூடிச் சற்காரியத்தை யுண்டாக்க மாட்டாவாதலால் கருவியும் வெற்றி தரமாட்டாவா யொழியும்; ஓட- ஒழியவே; பேரிசை யெல்லாம் உடையும்- நீ பெரிதாகப் பேசின3வெல்லாம் கெட்டுப்போம், 4அஃதாவது நீ சொல்லியது அபசயப் பட்டுப்போம் என்றவாறு; உடைய - போகவே; நல்லோய்- நல்லோனே; சொல்லேயாகும் -நின்வார்த்தை சத்த வேறுபாடல்லது பொருள் வேறுபாடு இன்றாம்; நிற்க- ஆதலின் இனி அசற்காரியம் ஒழிக.

 14-18. (5வல்லே…………….ஒன்ற) வல்லே உற்பாதிக்கும் வலியுண்டு- விரைய நூலிலே புடவையைத் தோற்றுவிக்கலாம் சத்தியுண்டு; சத்தி ரூபமாகிக் கருமம் இல்லை என்றிடின் - சத்தி வடிவாய்ப் புடவை கிடந்ததில்லை யென்று நீ சொல்வாயேல் இடை- இவ்விடத்திலே; நின்றது ஒன்று- உனக்கு நின்றதாகிய; ஒன்றும்; வென்றியொடு ஒன்ற- வெற்றியொடு பொருந்தவரும்; விசேடம் ஒன்றும் கண்டிலம்- 6விசேட மெய்துவதாகச் சிறிதும் காண்கிலோம், காண்;

 19-20. (காரகம்……………தோற்றுவிக்கும்) காரகம்- கருவிகள்; அதற்குப் பேரிசை நியமமாகத் தோற்றுவிக்கும் - நூலிலே கிடந்த அப்புடவையைப் பெரிய கீர்த்தியையுடைய நியமமா முறைமையாலே உண்டாக்கும்;

 20-24. (சீரிசை………………..அதனால்) சீரிசை வலி- நூலிற் கிடந்த புடவையின் மிக்க புகழுடைத்தாகிய சத்தியை; அந்நு வய வெதிரேகத்தும்- 1அந்நுவயத்தாலும் வெதிரேகத்தாலும்; ஒலி கெழும் உரூடியானும் - விளங்கக் காணப்படுவதாகிய உரூடி யாலும்; ஒலி கெழு தோற்றமதனால்- 2பிரகாசமாய்த் தோன்றுகிற புடவையிற் 3கண்டு: அவ்வெளிப்படுதல் கலிகொள அறிய லாகும்- அது தோற்றினது நூலிலே 4என்னுமது விளங்க அறியலாகும்5;

 அந்நுவய வனுமானமாவது உள்ளது தோற்றுமென்கை; அஃதாவது நூலைக்கண்டு புடவை யுண்டென்று நிச்சயிக்கை. வெதிரேக வனுமானமாவது இல்லாதது தேர்ற்றா தென்கை; அஃதாவது நூலைக்கண்டு இதிற்கடமில்லை யென்று நிச்சயிக்கை. உரூடியாவது புடவையைக்கண்டு இது நூலிலன்றித் தோன்றா தென்று நிச்சயிக்கை.

 24-26. (கலிகெழு………………..மறைத்த) கலிகெழு தந்து முதல காரகம் வந்திலாமையின்- சொல்லப் பட்ட நூலை உபா தானமாக வுடைய கருவிகள் வராமையாலே; 6புடமடி மறைத்த- 7இந்த நூல்கள் தம்மிற் கிடந்த சுத்தமான புடவை தோன்றா வண்ணம் மறைத்தன:

 26-28. (தடம் மலிந்து………………விளங்கும்) தடம்மலிந்து- பெருமை மிகுந்து; அகன்ற வேமம் முதல- 1விரிந்தனவாகிய 2வேமம் முதலான கருவிகளை; தாம் இனிது உஞற்ற3 - நெய்வார் நூலிலே அழகிதாகத் தொழிற் படுத்த; தூமடி விளங்கும்- 4தூயதாகிய புடவை விளங்கித் தோன்றும்;

 28-30. (யாங்கு…………….யாங்கு) யாங்கு எனின்- என் போல வென்னில்; மாமரு கடம்மிக மறைத்த படம்- அழகு பொருந்திய பாண்டத்துள்ளே மறைந்து கிடந்து புடவை; கடம் அகற்ற- பாண்டத்தினின்றும் வாங்கி விரிக்க; இடம் மிக விளங்கி யாங்கு- இடமுண்டாக விளங்கியது போல வென்க.5

 இஃது 6அந்நிய வியபதேசம்.

 30-34. (வடிவுற……….நினையுங்காலே) வடிவுற எல்லாக் காரகம் உறினும் - வடிவுண்டாகுவதற்கு வேண்டும் எல்லாக் கருவிகளையும் கொண்டு புகினும்; முயற்கோடு இல்லது இல்ல தாகலின்- இல்லாத கொம்பை முயலுக்கு உண்டாக்க

 வொண்ணாத படியால்; நினையுங்கால்- விசாரிக்கு மிடத்து 7இவ்வணம் - இவ்வண்ணமே; கலைமுதல்- கலை முதலாகவுள்ள தத்துவங்கள்; மாயையின்- 8-நித்தியமாகவுள்ள மாயையிலே; வல்லே நிலை நலிபு உடைய- சற்காரியமாய் விரைய விரிவதும் ஒடுங்குவதும் உடையவாகும். காண்1 எ-று.

 மன், அசை.

 அகவல் 23

 இருவினை யாக்கம்

 வெருவரும் பூட்சி யிருவினை வெறுப்ப

 யாங்குப் பட்டதை யெனினே வீங்கிய

 இந்தியப் போகி லிரும்பறைத் தொழுதி

 தன்மாத் திரைத்தாய்ப் பன்முறைக் கொழுத

 5.  முப்பொறி யாண்டுச் 2செப்புற நிறீஇத்

 துன்பப் பண்ணைத் 3துயர்ப்பிணி யொரீஇ

 இன்பப் பண்ணைத் தங்கி யாங்கது

 பொறியி னல்லதைப் புணர்திறம் படாதென

 அறிவின ராக்கத் தறுதொழின் மரீஇ

 6.  முயற்சி தழீஇ யியற்றுங் காலை

 ஊழூ ழன்றித் தாழ்திற மில்லென்

 4றொப்பின் றுயர்ந்தவிம் மெய்ப்படு பேருணர்

 வெய்யா ராகிக் 5கைதூ வாமே

 என்னை செய்யி னென்னை யாமென

 7.  ஆசைப் பௌவத் தளறுபட வழுந்தி

 உள்ள முரைசெயற் கல்லோ லத்தின்

 உந்திட 1வெழுபு மூழ்கி

 நொந்துழி யீண்டு 2நுவறுஞ்சிறிதே.

 இது மேற் “களியிடைக் கலித்3” தெழுந்த இருவினை யுண்டானபடி யெங்ஙனே, 4அவை வந்தவாறு கூறியது.

 1-2. உரை: (வெருவரும்…………எனினே) 5வெருவரும் பூட்சி- 6துக்க வேது வாதலால் பயப்படத்தக்க சரீரம்; இருவினை வெறுப்ப யாங்குப் பட்டதை எனின்- புண்ணிய பாவம் மிக வுண்டாக அமைந்தது எவ்வண்ணம் என்று வினவின்;

 2-4. (வீங்கிய……………கொழுத) வீங்கிய- பரந்த; 7இந்தியப் போகில் இரும்பறைத் தொழுதி- இந்திரிய மென்னும் பெரிய இறகையுடைய பறவைக் கூட்டம்; தன்மாத்திரைத் தாய்ப் பன்முறைக் கொழுத- 8தன மாத்திரைக ளென்கிற 9பலாதி விடயங்களிலே தாவிப் பல முறையாலே சென்று கோத;

 5-7. (முப்பொறி………தங்கி) ஆண்டு- அவ்வப் பொருளிலே; முப்பொறி செப்புற நிறீஇ- 10மள வாக்குக் காயங்களைச் 1செப்பமாக நிறுத்தி; துன்பப் பண்ணை துயர்ப்பிணி2 ஒரீஇ- துன்பத் திரட்சியிலுண்டாகிய விதனத்தாலே ஆசை யொழிந்து; இன்பப் பண்ணை தங்கி- இன்பத் திரட்சியிலே3ஆசை யுண்டாக அதன் கண்ணே 4தாழ்ந்து;

 7-10. (ஆங்கு…………இயற்றுங் காலை) ஆங்கு- அவ்விடத்து; அது- அவ்வின்பந்தானும்; 5பொறியின் அல்லதை புணர் திறம் படாது என- திரவியத்தாலல்லது கூடும்வகை உண்டாகாதென்று நினைந்து; அறிவினர்- அறிவுடையோர்; ஆக்கத்து அறு தொழில் மரீஇ - திரவிய முண்டாகைக்குச் சொல்லிய உழவே, தொழிலே, வரைவே, வாணிகமே, வித்தையே, 6சிற்ப மென்று எண்ணப்படா நின்ற 7ஆறு கருமங்களிலே பொருந்தி; முயற்சி தழீஇ இயற்றுல் காலை- முயற்சியை மேற்கொண்டு செய்யுங் கால்;

 11-13. (ஊழூழ்………..கைதூவாமே) ஊழ் ஊழ் அன்றி- இந்தச் சுகமும் துக்கமும் ஊழ் முறையானல்லது; தாழ்திறம் இல்8 என்ற - மேவும் மார்க்கம் 9இல்லை யென்கின்ற; ஒப்பின்று உயர்ந்த இம்மெய்ப்படு பேருணர்வு- உவமையின்றி யுயர்ந்த இந்த உண்மை பொருந்திய பெரிய ஞானத்தை; 10எய்யாராகி - அறியாராகி; கை தூவாமே11 - கை யொழியாதே;

 14-18. (என்னை செய்யின்………….சிறிதே) 1என்னை செய்யின் என்னையாம் என- என் செய்தால் 2எத்துணையாம் என்ற; ஆசைப் பௌவத்து அளறுபட அழுந்தி- ஆசையாகிய சமுத்திரத்திலே சேறுபட மூழ்கி; உள்ளம் உரை செயல் கல்லோலத் தின் உந்திட- மனம் வாக்கு காயம் என்ற திரையாலே தள்ளப் பட்டு; எழுபு மூழ்கி 3நொந்துழி- மேலே எழுவதும் மூழ்குவது மாகி விதனப்படுமிடத்து; ஈண்டு- இவ்விடத்து 4இதிப்போதல்; சிறிது நுவறும்- புண்ணிய பாவத்தை ஆர்ச்சித்துக் கொள்ளும் முறைமையைச் சிறிது சொல்லப் புகுகின்றோம், கேட்பாயாக எ-று.

 அகவல் 24

 வினை வகை

 பொய்ப்பொறி புணர்க்கு முப்பொறி யுள்ளும்

 உள்ளச் செய்தி தெள்ளிதிற் கிளப்பின்

 இருடீர் காட்சி யருளொடு புணர்தல்

 அரும்பொறை தாங்கல் பிறன்பொருள் விழையாமை

 5.  செய்தநன் றறிதல் கைதவங் கடிதல்

 பால்கோ டாது பகலிற் றோன்றல்

 மான மதாணி யாணிற் றாங்கல்

 அழுக்கா றின்மை யவாவிற் றீர்தல்

 அருந்துய ருயிர்கட் கிருந்த காலை

 6.  அழறோய் வன்ன ராகி யானாக்

 5கழலு நெஞ்சிற் கையற் றினைதல்

 பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகட்

 கறிவும் பொறியுங் கழிபெருங் கவினும்

 பெறற்கருந் துறக்கந் 6தம்மி னூஉங்கு

 7.  இறப்ப வேண்டுமென் றெண்ணரும் பெருங்குணம்

 வாக்கொடு சிவணிய நோக்கின் மீக்கொள

 1அறம்பெரிது கரைதல் புறங்கூ றாமை

 வாய்மை கல்வி தீமையிற் றிறம்பல்

 இன்மொழி யிசைத்தல் வன்மொழி மறத்தல்

 8.  2அறிவுநூல் விரித்த லருமறை 3யோதுதல்

 அடங்கிய மொழிதல் கடுஞ்சொல் 4லொழிதல்

 பயனின்ற படித்தல் படிற்றுரை 5விடுத்தல்

 காயத் தியைந்த வீயா வினையுள்

 அருந்தவந் தொடங்கல் திருந்திய 6தானம்

 9.  கொடைமடம் படுதல் 7படைமடம் படாமை

 அமரர்ப் பேண லாகுதி யருத்தல்

 ஒழுக்க 8மோம்பும் விழுப்பெருங் கிழமை

 உடம்பிடி யேந்தி யுடறடிந் திடுமார்

 அடைந்த காலை யவணிய றுயரந்

 10. தேரா ரல்லர் 9தெரிந்து மாருயிர்

 பெரும்பிறி தாக விரும்பிண மிசைஞரின்

 ஓராங்குப் படாஅ மாசில் காட்சி

 ஐம்பெரும் பாதகத் தாழி நீந்தல்

 இந்தியப் பெரும்படை யிரிய நூறும்

 11. வன்றறு கண்மை வாளிட் டா அங்கு

 நோவன செய்யினு மேவன 10விழைத்தல்

 தவச்சிறி தாயினு மிகப்பல விருந்து

 பாத்தூண் 1மரீஇய திருவு மிரும்பொழில்

 தன்மனைக் கிழத்தி 2யல்லதைப் பிறர்மனை

 12. அன்னையிற் றீரா நன்ன ராண்மை

 கார்கோ ளன்ன கயம்பல 3கிளைத்தல்

 கூவறொட்ட 4லாதுலர் சாலை

 அறங்கரை நாவி 5னான்றோர் பள்ளி

 கடவு 6ணண்ணிய தடவுநிலைக் கோட்டம்

 13. இனையவை முதல நினைவருந் திறத்த

 புரத்தல் அறத்துறை; மறத்துறை யிவற்றின்

 வழிப்படா தெதிர்வன கெழீஇ

 7உஞற்ற லென்ப வுணர்ந்திசி னோரே

 இது 8மேற்கூறிய மன வாக்குக் காய கன்மங்களை விரித்துக் கூறியது.

 1-2. உரை: (பொய்……….கிளப்பின்) பொய்ப்9 பொறி புணர்க்கும் – அநித்திய மாகிய சரீரத்திலே கூடின; முப்பொறி யுள்ளும் - மனவாக்குக் காயகன்மங்களில் வைத்து; உள்ளச் செய்தி- மனத்தால் ஆர்ச்சிக்கும் கன்மத்தை; தெள்ளிதின் கிளப்பின்- தெளியச் சொல்லின்;

 3.  இருள்தீர் 10காட்சி- குற்றமற்ற 11மெய்யுணர்வு; அருளொடு புணர்தல் -12எக்காலமும் அருளோடிசைந்து 13சாக்கிரத் தானத்தில் அதீதாவத்தையுளதாதல், உயிர்கள் அனைத்தினுக்கும் தன்னுயிர் போலக் கருணையுடையனாதலுமாம்.

 4.  1அரும் பொறை தாங்கல்- பொறுத்தற்கரிய வெகுளியும் துன்பமும் வந்தால் பொறுத்தல்; 2பிறன் பொருள் விழையாமை - சரீரசுகத்தை வேண்டிப் பிறர் பொருளை விரும்பாமை.

 5.  3செய்த நன்றறிதல்- பிறர் இலாபம் கருதாதே செய்த நன்றியை மறவாதிருத்தல்; கைதவம் கடிதல்- மனத்தில்4 கிருத்திரமத்தை யொழிதல்.

 6.  பால் கோடாது பகலில் தோன்றல்- சத்துருக்களும் மித்து ருக்களும் உதாசீனருமாகிய 5மூவருக்கும் ஒக்க 6ஒரு பக்கத்தும் சாயாதே நுகத்திற் பகலாணி போன்றிருத்தல்.

 7.  7மான மதாணி ஆணின் தாங்கல்- மானமாகிய பேரணி கலத்தைத் தரிக்கும் வீரியம். 8ஆண்- வீரியம்.

 8.  9.  அழுக்காறின்மை- பிறர் ஐசுவரிய விசேடாதிகளைக் கண்டு பொறாமை யில்லாமை. அவாவின் தீர்தல்- 9பிறப்புக்குக் காரண மாகிய 10அவாவை யறுத்தல்.

 10. 9-11. (அருந்துயர்…………..இனைதல்11) அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலை- பொறுத்தற்கரிய விதனமானது பிராணிகட்கு உண்டான காலத்து; அழல் தோய்வன்ன ராகி- தம்மை நெருப்பிலே தோய்த்தாற் போல விதனப்பட்டு; ஆனா- அமையாதே; கழலும் நெஞ்சின் கையற்றினைதல்- 1உருகி யொழுகும் நெஞ்சினராய்க் கையற வாகிய 2துக்கப்படுதல்.

 12-15. (பன்னரும்- பெருங்குணம்) 3பன்னரும் சிறப்பின்- சொல்லுதற்கரிதான சிறப்பையுடைய; 4மன்னுயிர்த் தொகை கட்கு- நித்தியமான ஆன்ம வர்க்கத்துக்கு; அறிவும் பொறியும் 5கழி பெருங்கவினும்- ஞானமும் செல்வமும் மிகவும் பெரிதாகிய ரூப அழகும்; பெறற்கருந் துறக்கமும்- பெறுதற்கரிய சுவர்க்க பலமும்; தம்மினும் இறப்ப ஊங்கு வேண்டும் என்னும்- தம்மினும் மிகப் பெருக வுண்டாக வேண்டுமென்று நினைத்திருக்கும்; 6எண்ணரும் பெருங்குணம்- எண்ணுதற்கரிய பெரிய குணமாம்.

 16. வாக்கொடு சிவணிய நோக்கின்- இனி வாக்கின் கன்மமாய்க் கூடின புண்ணியத்தைச் சொல்லின்;

 16-17. மீக்கொள 7அறம் பெரிது கரைதல்- மிகுதியுடைத் தாகத் தருமங்களை8 அனவரதமும் வசனித்தல்;

 17. 9புறங்கூறாமை - பிறர் புறம் பார்த்துப் பொல்லாங்குச் சொல்லாமை;

 18. வாய்மை- 1ஒரு வசனத்தாலும் பிறர்க்கு அகிதம் வாராதபடி 2மெய் சொல்லுதல்; கல்வி -3 உயர்ந்த சாத்திரங்களை ஐயந்தீரக் 4கற்ற கல்வி ஞான முடையராதல்; தீமையின் திறம்பல்- கேட்பதற்கு நன்றாயிருந்து பிறர்க்கு விதனமான பொருள் பயக்கும் 5தீயவாகிய வசனங்களைச் சொல்லாமை;

 19. இன்மொழி இசைத்தல்- 6இனியவை கூறல்; வன்மொழி மறத்தல்- 7மாற்றமாயிருக்கும் வார்த்தைகளைச் சொல்லாமை;

 20. 8அறிவு நூல் விரித்தல் - 9திவ்வியாகமங்களை விரித்துரைத்துக் கொண்டாடுதல்; அருமறை யோதுதல்- அரிய வேதாக மங்களை யோதுதல்;

 21. 10அடங்கிய மொழிதல்- 11அரிய மறைகளில் அடங்கிய12 மந்திரங்களைச் செபித்தல்; கடுஞ்சொல் ஒழித்தல்- ஒரு வசனமும்13 கடிதாகச் சொல்லாமை;

 22. 1பயனின்ற படித்தல்- 2புருஷார்த்தங்களைப் பெறு விக்கும் நூல்களையே படித்துச் சொல்லுதல்; படிற்றுரை விடுத்தல்- 3பொய் சொல்லாமை.

 23. காயத் தியைந்த வீயா வினையுள்- இனிக் காயத்தால் ஆர்ச்சிக்கப்படும் கெடாத கன்மங்களுள் சில சொல்லின்:

 24. அருந்தவம் தொடங்கல்- அரிய தவங்களைத் தொடங்கிச் செய்தல்; திருந்திய தானம்- “நல்லோர்க் குவந்த பல் சுவைப்போனகம், மாகதி ரணிமணி வண்காலேகம், செம்பொன் மென்றுகில்” முதலாக வுள்ளவற்றைத் தானம் செய்தல்;4

 25. 5கொடை மடம் படுதல்- அகாரணத்தாற் கொடை வழங்குதல்; 6படை மடம் படாமை-7படையழிந்தார் மேல் ஆய்த மெடேனென்று வரைந்து கொள்ளுதல்;

 26. அமரர்ப் பேணல்- திருமால் முதல் ஐயனாரந்தமான தேவர்களை அருச்சித்தல்; ஆவுதி அருத்தல்- யாகாதி கன்மங் களைத் தொடங்கி ஓமம் பண்ணுதல்8;

 27. ஒழுக்கம் ஓம்பும் 9விழுப் பெருங் கிழமை- தான் நின்ற நிலைக்குப் பொருந்தின ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் சிறப்பாகிய பெரிய தலைமை;

 28- 32. (உடம்பிடி…………..காட்சி) உடம்பிடி எந்தி- 1வாளை யேந்திக் கொண்டு; உடல் தடிந்திடுமார் அடைந்த காலை- தம் உடம்பைத் துணித்தற்குப்பிறர் 2கூடிவந்து வருத்துகிற போது; அவண் இயல் துயரம் - அவ்விடத்தே தாம் படும் துக்கம்3; தேரார் அல்லர் தெரிந்தும்- அறியாரல்லர் அறிந்து வைத்தும்; ஆருயிர் பெரும் பிறிதாக- நிறைந்த உயிரை ஒன்றன் உடலினின்றும் பிரியச் செய்து; 4இரும் பிணம் மிசைஞரின் - பெரிய அவ்வுடம்பாகிய பிணத்தைத் தின்பாருடனே; ஓராங்குப் படாஅ -5ஒரு பெற்றிப் படக் கூடாத; 6மாசில் காட்சி- குற்றமற்ற அறிவுடைமை; 7கொல்வாரோடு கூடுதலே குற்றமென்றவழிக் கொலைக் குற்றத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ என்றவாறு.

 33. ஐம்பெரும் பாதகத்து ஆழி நீந்தல்- கொலை, கள், களவு, 8குரு நிந்தை, பொய் மொழிதல், அவை செய்பவருடன் பயிறல் என்று சொல்லப்பட்ட 9பஞ்சமா பாதகமாகிய சமுத்திரத்திலே அழுந்தாதே தப்புதல்.

 34-5 (இந்திய…. வன்றது கண்மை) இந்தியப் பெரும் படை இரிய நூறும் - இந்திரிய மாகிய பெரிய யானைப் படையைக் 1கெடுத்து ஓட்டவல்ல; வன்தறு கண்மை - 2வலிய தறுகண்மை;

 35-6 (வாளிட்டு… இழைத்தல்)3வாள் இட்டு நோவன செய்யினும் - வாளால் அறுத்து நோய் தருவனவற்றை ஒருவர் செய்தாராயினும்; 4மேவன ஆங்கு இழைத்தல் - சுகமாய் இருப்பன வற்றை அவர்க்கு அப்பொழுதே விரும்பிச் செய்தல்;

 37-8. (தவச் சிறிது…. திருவும்) மரீஇய திரு -5 தான் உடையதாகிய செல்வம்; 6தவச் சிறிதாயினும்; மிகப்பல விருந்து - மிகவும் பல விருந்தினருக்கு; பாத்தூண் - பகுத்துண்டல்.

 38. இரும்பொழில்- பெரிய நந்தவனம் செய்தல்;

 39-40. (தன்மனைக் கிழத்தி………………ஆண்மை) தன்மனை கிழத்தியல்லதைப் பிறர்தனை- தன்னுடைய தாரமல்லாது பிறருடைய தாரத்தை; 7அன்னையின் தீரா நன்னர் ஆண்மை- மாதாவைப் போலப் பார்ப்பதில் நீங்காத நல்ல ஆண்டன்மை;

 41. 8கார் கோள் அன்ன கயம்பல நேர்தல்- சமுத்திரத்தை யொத்த ஏரி குளம் பலவும் கல்லுதல்;

 42. கூவல் தொட்டல்- கிணறுகள் அகழுதல்;

 43. 1ஆதுலர் சாலை- 2வழிக்கரை மடம் கட்டுதல்;

 44. 3அறம் கரை நாவின் ஆன்றோர் பள்ளி- தருமத்தைச் சொல்லும் நாவையுடைய 4தவத்தினர்க்கு மடமெடுத்துக் கொடுத்தல்;

 45. கடவுள்5 நண்ணிய 6தடவுநிலைக் கோட்டம்- தேவர்கள் எழுந்தருளிப் பூசைகொண்டருளுகைக்காக உயர்ந் திராநின்ற தேவாலயங்களை யெடுத்தல்;

 45-6.(இனையவை………….அறத்துறை) இனையவை முதல- இத்தன்மை யனவாகிய இவை முதலாக; 7நினைவரும் திறத்த புரத்தல்- 8நினைத்தற்கரிய கூறுபாடான புண்ணியங் களைச் செய்தல்; அறத்துறை- புண்ணியகன்மமாம்;

 46-48. (மறத்துறை…………..உணர்ந்திசினாரே) மறத்துறை- பாவ கன்மமாவது; இவற்றின் வழிப்படாது- இப்படிச் சொல்லப் பட்ட புண்ணிய கன்மங்கனைச் செய்யாது; 9எதிர்வன கெழீஇ உஞற்றல்- இவையிற்றுக்கு மாறுபாடாயவற்றைக் கெழுமிச் செய்தல்; என்ப உணர்ந்திசினோர்- என்று சொல்லுவர் ஞானவான்கள் எ-று.

 மாதும் ஓவும் அசை.

 அகவல் 25

 கன்மபந்த நிலை

 இசைத்த மூன்றி னசைப்புற விறந்த

 ஆருயிர்க் கின்பத் துன்ப நேரிய

 துடியிடைப் படாது கடிகொள வியற்றி

 எற்பிறர் பிறர்க்கியான் றப்பறத் தந்தென

 5.  மனப்பசை யிம்மைய வம்மை வினைத்திறன்

 ஆண்டுப் பூட்சி யீண்டுப்பட வியற்றல்

 சார்ந்தவை 1வதிதல் யாங்கு வீங்காது

 ஆடிப் படர்ந்த பேரிருள் புடமடி

 கூடிய குற்றங் கோடேந் தல்குல்

 6.  மாதோர் பாகற் சேர்வோ ரின்பம்

 பாதவக் 2கண்ணிழல் பனுவல் கோளிப்

 பெரும்பணை பொதிந்த சிறுநுண் வித்தின்

 இருந்தவை விரியு மிருவினைக் கியைந்த

 3நாற்கதி யார்த்தவிழ் நரலைப் புணரி

 7.  மூவகைத் துக்கத்து முடியும்

 மாவகை வீழ்த்த மன்னுயிர்ப் பரப்பே

 இது, மேற்கூறிய மன வாக்குக் காய கன்மங்களால் புண்ணியமும், பாவமும் பந்தமானபடி எங்ஙனம் என்னக் கன்ம பந்தமும் நிலையும் விரியுங் கூறியது.

 1-3. உரை; (இசைத்த…………இயற்றி) ஆருயிர்க்கு இசைத்த மூன்றின்- நின்றந்த ஆன்மாக்களுக்கு முற்பாட்டிலே சொல்லப் பட்ட 4மன வாக்குக் காய கன்மங்களின்: அசைப்புற விறந்த இன்பத் துன்பம்- 5அசைவு அசைவில்லாமைகளால் செறிந்த

 சுகதுக்கங்களை; நேரிய துடி இடைப்படாது கடிகொள இயற்றி- நுண்ணிய துடியென்னும் தகியா அவ்வளவு காலமேலும் இடைவிடாது 1விரையச்செய்து;

 4-5. (எற்பிறர்………….இம்மைய) எற்பிறர் பிறர்க்கு யான் தப்பறத் தந்தென- எனக்குப் பிறர் நன்மை செய்தா ரென்றும் பிறர்க்கு யான் நன்மை செய்தே னென்றும்; மனப்பசை- எப்பொழுதும் 2சித்தத்திலே மமதை பண்ணிக் கொள்ளுமவை; இம்மைய- சுயங்கன்மமாவன;

 5-6. (அம்மை…………இயற்றல்) அம்மை வினைத்திறன்- பூருவ கன்மமாவது; 3ஆண்டுப் பூட்சி ஈண்டுப்பட இயற்றல்- முன்பெடுத்த தேகங்களிலே இப்போதில் எடுக்கும் தேகத்தில் அனுபவித்துக் கொள்கைக் கேதுவாக ஆர்ச்சித்து அகங்கரித்துக் கொண்ட கன்மம்;

 7-10. (சார்ந்தவை………..இன்பம்) அவை சார்ந்து வதிதல் யாங்கு- அக்கன்மங்கள் ஒருவனிடத்திலே ஆர்ச்சிதமானவாறும் கிடந்து பக்குவப் படுமாறும் எங்ஙனே யென்னில்; வீங்காது- 4ஒரு காலத்தே ஒரு முறையிற் 5பெருகாது; ஆடிப்படர்ந்த1பேரிருள் - கண்ணாடியில் படிப்படியாக ஏறிப் பெரிய மாசு கூடினாற் போலவும், புடம் மடி கூடிய குற்றம்- சுத்தமான கூறை மாசேறினாற் போலவும்; கோடு ஏந்து அல்குல் மாது ஓர் பாகன் சேர்வோர் இன்பம்- பக்கம் உயர்ந்து அகலிய நிதம்பப் பிரதேசத்தையுடைய மாதை ஒரு பாகமாகவுடையனான பரமசிவனை யோகம் பண்ணுவார்க்கு மேன்மேல் பரமானந்த சுகம் கூடினாற் போலவுமாம்.2

 3இது கன்மம் ஆர்ச்சித மானவாறு கூறியது.

 11-13. (பாதவக் கண்ணிழல் ………………விரியும்)4 பாதவக் கண் நிழல்- விருக்கத்தில் உச்சிப் பொழுதில் அடங்கின நிழல் விரியுமாறு போலவும்; பனுவல்-5தான் கற்ற கல்விப் பரப்பானது தன்னிடத்திலே அடங்கிக் கிடந்து பரிணமித்தாற் போலவும்; 6கோளிப் பெரும் பணை பொதிந்த சிறு நுண் வித்தின்- ஆலினுடைய பெரிய கிளை முதலிய பரிணாமமெல்லாம் அடங்கிய சிறிய நுண்ணிய அவ்வாலம் வித்திற் கிடந்து பரிணமித் தாற் போலவும்; இருந்து அவை விரியும்- 7காரணமான கன்மத்திலே புண்ணிய பாவங்களாகிய கன்மங்கள் 8காரிய ரூபமாய்க் கிடந்து பக்குவப்

 பட்டபோது கன்ம பலங்களாகிய சுகமும் துக்கமுமாய் விளையும்;9

 1இது கன்மம் அனுபவிக்குமாறு கூறியது.

 13-16. (இருவினைக்கு………….பரப்பே) 2மாவகை வீழ்த்தமன் உயிர்ப் பரப்பு- 3மகத்தாயிருக்கின்ற தன்னுண்மையும் வினையுண்மையும் உணராமல் மறந்துவிட்ட நித்தியமான ஆன்ம வர்க்கங்கள்; இருவினைக்கு இயைந்த நாற்கதி- பக்குவப் பட்ட கன்மபலம் அனுபவிக்கைக்குப் 4பொருந்தின 5நான்கு வர்க்கத்துச் சரீரங்களை; ஆர்த்து அவிழ் 6நாலைப்புணரி- எடுத்தும் விட்டும் ஆரவாரித்துத் திரிகிற பிறப்பாகிய சமுத்திரத்தில்; மூவகைத் துக்கத்து முடியும்- ஆதிதைவிகம் ஆதிபௌதிகம் ஆதியாத்தி யான்மிகம் என்று சொல்லப்பட்ட மூவியல்பின வாகிய துக்கத்துக்குள்ளே முடிவனவாம் எ-று.

 அகவல் 26

 மூவகைத் துக்கங்கள்

 7ஆதி தைவிக மாதி பௌதிகம்

 ஆதி யாத்தியான் மிகமென வோதிய

 துக்க மூன்றினு ளாத்தி யான்மிகம்

 மெய்யின் மனத்தி னையமி லிரண்டே

 5.  வளியிற் பித்தின் விளியா வீளையின்

 ஊனுகு தொழுனையி னுதகக் கொட்டின்

 வெப்பிற் சூலையின் மக்களின் விலங்கின்

 அலகையிற் கள்வரின் பறவையி னிருதரின்

 மைந்தர் மகளிர் மணந்திடை தணப்பிற்

 6.  பேரறம் வளர்ப்பிற் பெருந்திரு நுகர்வின்

 சீரிய யாக்கை மாதுயர் மாசு

 மனத்துறு துயர நினைப்பருஞ் சோகம்

 அறிவுரு வாக்க மடையுநர்ப் பொறாமை

 மானமாக் கலம் பூணாது மறுத்தல்

 7.  இச்சையி னிசைத லிருஞ்சின மிகுத்தல்

 இனையவை முதல நினைவருந் திறந்த

 ஆதி பௌதிகஞ் சீதமா மழை

 உருப்பவிர் வேனி லுட்குவரு கடுங்கால்

 இருள் 1கடி மின்னுப் பெருவிற லசனி

 8.  2ஒலிகட லுலகி னிலைமலி புடைய

 மன்னுயிர்க் குறுகண் 3டுன்னியாங் கருத்தல்

 ஆதி யாய வீவருந் திறத்த

 ஆதி தைவிகம் பேதையார் வயினக்

 கருக்குழி யழுங்கல் பிறப்பிறும் பூது

 9.  திரை வருந்தீமை 4வரைவில் பேதைமை

 மடங்க லாருயிர் 5தொடங்கினன் வவ்வல்

 யாவரும் விழையாக் கோள்வாய் நிரயத்து

 வீழ்ந்தன ரெழாஅ வான்கழி துன்பம்

 இனைய மாலைய துயர்மிடை வினைநகர்

 10. கருங்கைக் கயமைக் களிறுகைத் திரும்புலப்

 பெரும்படை விரிந்து சூழத் திருந்தா

 நாற்கதிப் பவனி யுலாஅய்

 ஆர்த்தவிழ் திறம்பிற போற்றுமதி புரிந்தே.

 இது “மூவகைத் துக்கம்” (ஞானா. 25 : 15) என் னென அவற்றின் இலக்கணம் கூறியது.

 1-3. உரை:- (ஆதி …………..மூன்றினுள்) ஆதி ஆத்தியான் மிகம், ஆதி பௌதிகம், ஆதிதைவிகம் என ஓதிய துக்கம் மூன்றினுள்- “மூவகைத் துக்கத்து முடியும்”1 என்று சூசித்து ஓதிய ஆத்தியான்மிகம் என்றும் ஆதி பௌதிக மென்றும் ஆதிதைவிக மென்றும் 2சொல்லப்பட்ட துக்கத் திரயங்களிலே;

 3-4. (ஆத்தியான்மிகம்………….இரண்டே) ஆத்தியான் மிகம்- ஆத்தியான்மிகமாவது; ஐயமில மனத்தின் மெய்யில் இரண்டு- சந்தேகமில்லாத மனத்தைப்பற்றிவரும் விதனமும் தேகத்தைப் பற்றிவரும் விதனமுமாக இருதிறப்படும்;

 5-11. (வளியின்……………மாதுயர்) வளியின் பித்தின் விளியா விளையின்- 3வாதத்தால், பித்தத்தால், நீங்காத சிலேட்டு மத்தால்; ஊன் உகு தொழுனையில்- 4சரீரத்திலே சதையை அழுகி விழப்பண்ணும் குட்டவியாதியால்; உதகக் கொட்டின் -5நீரிழி வால்; 6வெப்பின்- வெதுப்பு நோயால் 7சூலையின்- சூலை வியாதியால்; 1மக்களின் - சத்துருக்களாகிய மானிடரால்; விலங்கின்- விலங்குச் சாதியால்; பறவையின் - கொதுகு ஈ முதலான பறவைகளால் அலகையின்- பேய்களால்; 2கள்வரின் - களவு காண்பவரால்; 3நிருதரின் - இராக்கதர்களால்; 4மைந்தர் மகளிர் மணந்து இடை தணப்பின் - ஆண் பெண்கள் கூடி இடையே பிரிதலால்; பேரறம் வளர்ப்பின்- 5குருலிங்க சங்கம மாதி தேவதா காரிய பரிபாலனம் 6தவசு என்றிவற்றால்; பெருந் திரு- சம்பத்து மிகுதியால்; நுகர்வின் - 7தேடல் காத்தல் அனுபவித்தலால் உண்டான இவை பதினான்கும்; சீரிய யாக்கை -சீரிதாகிய சரீரத்தைப் பற்றி வரும்; மாதுயர்- மிக்க விதனமாம்;

 11-16. (மாசு……….திறத்த) 8மாசுறு மனத்ததுறு துயரம்- மாசுடைத்தாகிய மனத்தைப் பற்றி வரும் துக்கமாவன; நினைப் பருஞ்சோகம்- பெண்டிர் மைந்தர் பிரிதலாலும் திரவிய முதலாகக் கூடியவை தம்மைப் பிரிதலாலும் ஆற்றாமையால் வரும் நினைத்தற்கரிய சோக மாகிய விதனம்; அறிவு உரு ஆக்கம் அடையுநர்ப் பொறாமை- 9ஞானம் சரீர சௌந்தரியம் ஐசுவரிய மென்ற இவையிற்றையுடை யோரைக் கண்டும் கேட்டும் அழுக்காறு பொருந்திய மனத்திலே வரும் விதனம்; மான மாக் கலம் பூணாது மறுத்தல்- மான மாகிய பெரிய அணிகலத்திற்கு ஆனிவந்த காலத்து உண்டாகிவரும் விதனம்; இச்சையின் இசைதல்- பஞ்சேந்திரியங்களுக்குப் போகமான பதார்த்தங்களில் வைத்த இச்சையால் வரும் விதனம்; இருஞ்சினம் மிகுத்தல்- பெரிய சினமிகுதியால் வரும் விதனம்; இனையவை 1முதல்- இவை யைந்து 2முதலாக; நினைவரும் திறத்த - 3நினைப்பதற்கரிய வேறு பாடுகள் பலவுமாம்.

 17-22. (ஆதி பௌதிகம்…..திறந்த) ஆதி பௌதிகம்- ஆதி பௌதிகம் உண்டாகும்படி சொல்லின்; சீதம் மாமழை உருப்பு அவிர் வேனில்- குளிரால் வரும் துக்கம், மிகுதியாய 4வருடத்தால் வரும் நடுக்கம், உட்டினம் விளங்கிய கோடையால் வரும் 5விதனம்; இருள்படி மின்னு- இருளைக் கெடுக்கும் மின்னினால் வரும் விதனம்; பெருவிறல் அசனி- 6மிக்கவலியை யுடைய இடியால் வரும் விதனம்; ஒலி கடல் உலகில்- ஓதக்கடல் சூழ்ந்த உலகில்; நிலைமலிபு உடைய - நிலைபெற்றுடைய; மன் உயிர்க்கு- பிராணிகளுக்கு; உறுகண்துன்னி- ஒவ்வொன்றைக் கட்டிவைத்தும், ஒவ்வொன்றைக் கொன்றும், ஒவ்வொன்றை வாதைப்படுத்தியும்; ஆங்கு அருந்தல் - 7இவ்வண்ணமே இவைகளினால் தாம் நுகர்கை: ஆதியாயவீவரும் திறத்த - 8இவை ஏழும் முதலாகவுள்ள 1கெடுத்தற்கரிய வேறு பாட்டை யுடைய விதனமாம்;

 22-28. (ஆதிதைவிகம்…………….கழிதுன்பம்) 2ஆதிதை விகம்- ஆதிதைவிகம் இருக்கும்படி சொல்லின்; பேதையர் வயின அக்கருக்குழி அழுங்கல்- 3மாதாவின் வயிற்றில் அந்தக் கருப்பாச யத்தில் இருக்கும் 4கருப்பவேதனை; இறும்பூது பிறப்பு - ஆச்சரிய மாகிய 5பிரசவ வேதனை; திரைவரும் தீமை- திரையுறு 6மூப்பால் வரும் விதனம்; வரைவில் பேதைமை- அளவில்லாத 7அஞ்ஞானத் தால் வரும் சங்கற்ப வேதனை; 8மடங்கல் ஆருயிர் தொடங்கின் வௌவல் - இமயன் அரிய உயிரைப் பிணித்துக் கொண்டு போகும்போது உண்டாகும் 9மரண வேதனை; யாவரும் விழையாக் கோள்வாய் 10நிரயத்து வீழ்ந்தனர் எழாஅ வான்கழி துன்பம்- யாவராலும் விரும்பப்படாத கோட்பாட்டையுடைய நரகத்திலே யழுந்தி ஏறுதற் கரிதாகிய மிகப் பெரிய துக்கமாகிய ஆறும் பிறவுமாம்.

 29-33. (இனைய ……………புரிந்தே) இனைய மாலைய துயர் விளைநகர் இடை- 1இத்தன்மையவாகிய துக்கத்திரயங்களை - தன்னிடத்தே கொண்டு பல்வேறு 2விதனங்கட்கு இலக்காகிப் பூர்வகன் மபலத்தைப் புசிப்புக்குரிய சரீரமாகிய நகரிலே; 3கருங்கைக் கயமைக் களிறு உகைத்து- பெரிய கையையுடைய 4அஞ்ஞானத் தாலுண்டாகிய கீழ்மையென்னும் யானையின் பிடரியிலே ஏறிச் செலுத்தி: இரும்புலப் பெரும்படை விரிந்து சூழ- பரந்து இந்திரியமாகிய பெரிய 5தந்திரம் விரிந்து சூழ்ந்துவர; திருந்தா 6நாற்கதிப் பவனி உலாய்- ஒரு காலத்தும் திருத்த வாராத உற்பிசம், அண்டசம், சராயுகம், சுவேதசம் என்று சொல்லப்படா நின்ற நால்வகைப் பிறப்பிலே பவனியாகி; 7ஆர்த்தவிழ் திறம்- 8ஓருடலைக் கூடியும் பின்பு வேறோருடலைக் கூடுதற்குப் பிரிந்தும் செல்லும் வகையினைச் 9சொல்ல; புரிந்து போற்றுமதி- அவையிற்றை விரும்பிக் கேட்பாயாக எ-று.

 பிற, மதி- அசை நிலை.

 பாசபந்தம் முடிந்தது

 தேகாந்தரம்

 அகவல் 27

 ஆர்த்தவிழ் திறம்

 இருந்துயர் கெழீஇ வருந்தி யாப்புற்ற

 முற்பய னீண்டுத் துய்த்தனர் கழிப்பின்

 கருங்கய 1லிரியப் பெரும்பகடு துரந்தாங்

 குழவ ராக்கிய விளைவயற் 2செந்நெல்

 5.  பிற்பயன் றந்தாங் 3கிச்செய லுதவ

 எய்திய குகையின் மையறப் படர்தல்

 இருங்கழன் மள்ளர் பதம்படர் திருந்தடி

 சாபவான் 4புழுவிற் காழக மடியக்

 கடிபடு புட்டக 5மடிவிடுபு புனைதல்

 6.  கண்படைக் 6கனவிற் கடிமதில் பாய்ந்த

 தும்பி வன்பிடர்த் தோன்றன் மேலதை

 உள்ளமு நுழையா 7வூங்குங் கீழதை

 ஏழ்தல மிறந்த கீழும் புடையதை

 நேமி மால்வரைப் புறனுந் தாடோய்

 7.  தடக்கை மாவீழ் மணியினு மடுக்கிய

 சிறுநணித் தானும் பெருஞ் சேய்த்தானும்

 வினைமாண் டுப்பின் மனமாண் டேரின்

 துடிபல வகுத்த 1விசையிற் சேறல்

 கார்முகங் கான் பூமுக விசிகம்

 8.  உள்ளியது 2கிழித்தலின் பள்ளி நீங்கி

 ஒருபெருந் தமியன் விரிபுல னுடுத்த

 பேரத் தாணிப் பெயரினுந் துணையின்

 றறிவருந் துரியத் தல்கினுந் தெரிபொன்

 றிசையா தேகி யாங்கு வசைதபு

 9.  கடிகலை முதறர வந்த

 படியென வறிநெடி தொடிவுடனுகவே.

 3இது தேகி தேகங்களை “அர்த்தவிழ்திறம்” (ஞானா 26: 33) எங்ஙனே யென்ன அவ்வியல்பு கூறியது.

 1-2. உரை: (இருந்துயர்……………….கழிப்பின்) இருந்துயர் கெழீஇ வருந்தி- 4இங்ஙனம் சொல்லப்பட்ட மிக்க துக்கத் 5திரயங்களுடனே கெழுமி வருந்தி; யாப்புற்ற முற்பயன் ஈண்டுத் துய்த்தனர் கழிப்பின்- ஆர்ச்சிக்கப்பட்ட பூருவகன்ம பலத்தை இத்தேகத்திலே நின்று 6புசித்துக் கழித்த பின்பு;

 3-6. (கருங்கயல்………………படர்தல்) கருங்கயல் இரியப் பெரும் பகடு துரந்து- பெரிய கயல்மீன்க ளெல்லாம் 7நீங்கிப்போக மகத்தாகிய 8கடாவை ஏரிற் பூட்டிச் செலுத்தி; ஆங்கு 9உழவர் ஆக்கிய விளைவயல்- அவ்விடத்துப் 10பயிர் செய்வோராலே உழுது விளைதற்குப் பண்படுத்தப்பட்ட 1விளைவயலில்; செந்நெல் பிற்பயன் தந்தாங்கு- செந்நெற்பயிர் பின்பு புசிக்கைக்குரிய பயனை விளைத்தாற் போல; 2இச்செயல் உதவ- இத் தேகத்திலே 3நின்று பூர்வகன்ம பலத்தைப் புசிக்கு மிடத்து ஆர்ச்சித்த 4கன்மம் தன்பலனை அனுபவிக்கைக்குப் 5பக்குவப்பட; எய்திய 6குசையின் மையறப் படர்தல்- போதரும் தேகத்தைக் குற்றமறப் 7பற்றும் இயல்பு இருக்கும்படி சொல்லின்;

 7-11. (இருங்கழல்…………..தோன்றல்) 8இருங்கழல் மள்ளர் பதம் படர் திருந்தடி- பெரிய வீரக்கழலையுடைய வீரபுருடர் வழியிலே 9செல்லுமிடத்துத் திருந்த அடியிட்டு அடியெடுத்து வைத்தாற் போலவும்; சாபவான் புழுவின்- வெள்ளிய 10 வில்லூன்றிப் புழுப் போலவும்; காழகம் மடிய- உடுத்த 11கூறை பீறிக் கெட்டமையால் பெயர்த்து; 12கடிபடு புட்டகம் மடி விடுபு புனைதல்- 13புதியதோர் கூறையை 14மடிவைத்துடுப் பது போலவும்: கண்படை- நித்திரையிலே; கடிமதில் பாய்ந்த தும்பி வன்பிடர் தோன்றல் கனவின்- சத்துருக்களது காவலையுடைத்தாகிய மதிலையிடித்த யானையின் வலிய கழுத்தின் மேல் இருந்ததாகக் கனவு கண்டாற் போலவும்;

 11-18. (மேலதை…………….சேறல்) மேலதை 1உள்ளமும் நுழையா ஊங்கும் - மேலெல்லாவற்றுக்கும் மேலாய மனத் தாலும் நினைத்தற்கரிய மேலிடத்தும்; 2கீழிதை ஏழ்தலம் இறந்த கீழும் - கீழேழு பாதலங்கட்கும் அப்புறமான கீழிடத்தும்; புடையதை 3நேமிமால் வரைப்புறனும்- பக்கத்தே 4சக்கரவாள கிரிக்கு அப்பாலும்; தாள்தோய் தடக்கை மாவீழ் மணியினும்- முழந்தாளிலே தோயும் படியான நெடிய கையிலே 5தாங்கிய அழகிய விருப்பமுள்ள மாணிக்கத்தினும்; அடுக்கிய சிறு நணித் தானும்- 6அடுத்த அண்மையினுங் காட்டில் 7அண்மையினும்; பெருஞ்சேய்த்தானும்- முன்பு சொன்ன இடங்களின் மிக்க பெருந் தூரத்திலும்; மாண்வினை துப்பின் மன மாண்தேரின்- 8மாட்சி மையுடைய வினையாகிய வலியினையுடைய மனமென்னும் அழகிய தேரிலே நினைவு ஏறி; துடி. பல வகுத்த விசையின் சேறல் -1துடியென்னும் காலத்தைப் பல கூறிட்ட கடுமையிலே 2பொருள் கெடாது சென்றாற் போலவும்:

 19-20. (கார்முகம்………….கிழித்தலின்) கார்முகம் கான்ற பூமுக விசிகம்- வில்லினின்றும் விடுக்கப்பட்டட 3கூரிய முகத்தை யுடைய அம்பு; உள்ளியது கிழித்தலின்- நினைத்த 4பதார்த்தத்திலே பட்டு உருவிச்சென்றாற் போலவும்;5

 20-24 (பள்ளி…………………………..ஏகியாங்கு) ஒரு பெருந்தமியன்6 பள்ளி நீங்கி- அதீத துரியத்திலே நின்ற ஒப்பற்ற பெரிய ஆன்மா உறக்கத்திலே நின்று நீங்கி; விரிபுலன் உடுத்த பேரத் தாணி பெயரினும்- பரந்து 7இந்திரியங்களாலே போகம் புசிக்கும் பெரிய அத்தாணியாகிய 8சாக்கிராவவத்தையிலே வந்தாலும்; 9துணையின்று அறிவரும் துரியத்து அல்கினும்- சாக்கிரத்திலே நின்ற இவன் இந்திரியங்களின் சகாயமின்றி அறியமாட்டாத 10துரியாவத்தையிலே வந்து தங்கினாலும்; தெரிபு ஒன்று இசையாது ஏகியாங்கு- இவையிரண்டு பெற்றியும் ஒன்றும் பிறர்க்குத் தெரியாமல் போந்தாற்போலவும்; 1இப்படிச்சொல்லிற்று. ஆன்மா ஒர் தேகத்தைவிட்டு மற்றோர் தேகத்தையெடுக்கும் விதம்;

 24-26. (வசைதபு ………………உசவே) வசைதபு 2கடிகலை முதல்தர வந்தபடி என - குற்றமற்ற விளக்கமுடைய கலைமுதலாக

 வுள்ள தத்துவங்கள் பக்குவப்பட்ட கன்மம் புசித்தற்கு3 ஆன்மா ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தையெடுத்தலாம் என்று; நெடிது உடன் 4ஒடிவு உக அறி- 5உன்னை நெடிதாக உடன் கூடியுள்ள தோடமெல்லாம் கெட அறிவாயாக எ-று.

 ஐ, ஏ அசை.

 அகவல் 28

 அச்சுமாறிப் பிறத்தல்

 இலங்கு குங்கும மார்பரும் வலம்புரி

 ஒருமணி யனன் திருநல மாதரும்

 முயக்கிடை யறியா மயக்கின் வயக்குறு

 துப்புருக் கன்ன பழனத் தானா

 5.  முத்துருக் கன்ன வித்தார் காலை

 6யாப்போ னின்றெனி னீக்குவ ருறையின் அஃதான்று

 முயங்குந் தோறு முயங்குந் தோறும்

 பிறங்கடை பெரிதே யன்றே யாகம்

 ஆருயி ராயின் வீவோ வின்றே

 6.  தன்னை யன்னை தம்மிடைப் பகுப்பிற்

 பின்னர்க் கான்முறை 1மன்னுத லிலரே

 கனங்குழை மாதர் 2கணங்கொள் பீண்டி

 அனங்க னெனாஅ மனங்குழை பிரங்க

 இற்றோர்க் காண்டிகு முற்றவுங் காண்டிகும்

 7.  இவண மன்றெனி 3னதீதா நாகதம்

 ஐயமின் றுணர்ந்தோர் மையறு பனுவலின்

 வருபிறப்புணர்ந்த மதியோர்த்தோன்றும்

 முதனடு விறுதி யிளமை மூப்பின்

 ஒழிவற நிறைந்தோ னுதழிதந் 4தொடுங்கும்

 8.  5ஆதி யின்மையின் பூத மாநகர்

 ஈரிரண் டெய்தித் தீதற வொரீஇக்

 கோபுரங் கூட மாட மாளிகை

 விளிம்பு பளிங்கார்த்த பசும்பொன் வேதிகை

 அரமிய முதல விரவும் பெயர் பெறீஇக்

 9.  கலங்கியுங் கலங்காக் 6காரணத் திலங்கியும்

 பாடல் சான்ற பல்புகழ் நிறீஇ

 வாடாத் துப்பிற் கோட லாதி

 அருளா பரண னறத்தின் வேலி

 7பொருண்மொழி யோகங் கிரியையிற் புணர்த்த

 10. அருண்மொழி திருமொழி போலவும்

 என்று நிலீஇயர் நன்றுமன் பெரிதே.

 இஃது அசேதனப் பிரவிருத்தி சொல்லுகிற சமயங் களை நிராகரித்துத் 1தேகதேகாந்தம் ஆன்மாவுக்கே எனச் சாதித்தது.

 1-6. உரை:- (இலங்கு…………….உறையின்) 2குங்குமம் இலங்கு மார்பரும்-குங்குமம் விளங்கும் மார்பையுடைய புருடரும்; 3வலம்புரி ஒரு மணியன்ன திருநல மாதரும்- வலம் புரிச்சங்கிலே தோன்றிய 4தனிமுத்தையொத்த செல்வத்தையும் அழகையுமுடைய மாதரும்; 5முயக்கு இடைஅறியா மயக்கின்- கூடுகிற பருவத்தே இரண்டு சரீரமென்னுமிது தோற்றாத 6போக மயக்கத்திலே; வயக்குறு 7துப்பு உருக்கன்ன பழனத்து- ஒளி பொருந்திய பவளத்தையுருக்கினாற் போன்ற 8சுரோணிதப் பிரதேசத்திலே; ஆனா முத்து உருக்கன்ன வித்து ஆர் காலை - நிறைந்த முத்தையுருக்கினாற் போன்ற 9சுக்கில மென்னும் 10வித்துப் பொருந்துங்காலத்து; 1யாப்போன் இன்றெனின் - அவ்விடத்தே போகம் புசிக்கப் பக்குவப்பட்ட ஆன்மா பந்தியாதாயின்; உறையின் நீக்குவர்- 2சுத்திபண்ணும் நீரோடே கழிப்பர்;

 6-9. (அஃதான்று…………..இன்றே) அஃது அன்று- அற்றன்று, சுக்கிலசுரோணிதமே பிள்ளையா மென்னில்; முயங்குந் தோறும் முயங்குந்தோறும் பிறங்கடை பெரிது- போகஞ் செய்யுந் தோறும் போகஞ்செய்யுந்தோறும் பிள்ளைகள் பலர் உண்டாக வேண்டும்; 3அன்று - அங்ஙனமன்று; 4ஆகமே ஆருயிராயின் - சரீரமே உயிராமென்னின்; வீவோ இன்று- மரண மில்லையாக வேண்டும்;

 இஃது உலகாயதமத நிராகரணம் பண்ணியது.

 10-11. (தன்னை……………..இலரே) தன்னை அன்னை தம்மிடை பகுப்பின்- பிதாமாதாக்கள் உயிரிலே5 பகுந்தது உயிர் என்று சொல்லின்; பின்னர் கான்முளை மன்னுதல் இலர்- ஒரு பிள்ளைக்குப் பின்பு மற்றொரு பிள்ளை 6யுண்டாத லில்லையாம்.

 இது 7மீமாஞ்சைமத நிராகரணம் பண்ணியது.

 12-14. (கனங்குழை………….காண்டிகும்) கனங்குழை மாதர் கணம் கொள்பு ஈண்டி- கனவிய மகரக் குழையையுடைய பெண்டு களெல்லாம் கூட்டமாகக் கூடி; 8அனங்கன் எனாஅ மனம் குழைபு இரங்க- காமதேவனே என்று மனமழிந்து கூப்பிட்டு அலற; இற்றோர்க் காண்டிகும்- மரித்தோரையும் 9காணா நின்றாய்; 1முற்றவும் காண்டிகும்- 2பிறந்த பிள்ளை நாடோறும் வளரவும் காணாநின்றாய்;

 15-20. (இவணம்…………..இன்மையின்) இவணம் அன்று எனின்- இவ்வண்ணம் தேகத்துக்கு ஆன்மாவென்று கருத்தா ஒருவன் இல்லையென்பாயாகில்; அதீகாநாகதம் ஐயமின்று உணர்ந்தோர்- 3அதீத அநாகதமான பூதபவிஷியங்களை ஐயமறஅறிந்து சொல்லு வோராலும்; மையறு பனுவலின் வருபிறப் புணர்ந்த மதியோர்-குற்ற மற்ற சாத்திரங்களாலே இனியெடுக்கும் சரீரங்களை அறிந்து சொல்லுவோராலும்; தோன்றும் -4ஆன்மாவாகிய கருத்தா ஒருவன் உளன் என்று அறியவரு மல்லவோ;

 5முதல் நடு இறுதி இளமை மூப்பு இல்- முதலும் நடுவும் இறுதியும் இளமையும் மூப்புமில்லாத; 6ஒழிவற நிறைந்தோன்- அணுப்புதைக்கவும் இடமின்றி எங்கும் நிறைந்த பரமசிவன்; உழி தந்து ஒடுங்கும்7ஆதியின்மையின்- விரிவும் 8ஒடுக்கமுடைய ஆதியாக ஒரு சரீரத்தையும் 9வேண்டான்.

 1இது 2மாயாவாத நிராகரணம் பண்ணியது.

 20-25. (பூத மாநகர்…………..இலங்கியும்) பூதமாநகர் ஈர்இரண்டெய்தியும்- மகா பூதத்தாலாகிய 3சரீரநகரங்களான நால்வகைத் தோற்றத்திற் பிறப்பாகிய தேகங்களையெடுத்தும்; தீது அற ஒரீயும்-குற்றமற்ற அவையிற்றை விட்டும் சொல்லுமாறு யாங்ஙனமெனின்; கோபுரம் கூடம் மாடம் மாளிகை- கோபுர மென்றும் கூடமென்றும் மாளிகையென்றும்; விளிம்பு பளிங் கார்த்த பசும்பொன் வேதிகை- விளிம்பு பளிங்காலே சமைத்த செம்பொன் மேடையென்றும்; அரமியம்- நிலாமுற்ற மென்றும்; முதல- இவை முதலாகவுள்ளன; 4விரவுப் பெயர் பெறீஇக் கலங்கியும்- இடிந்தனவென்று பெயர் பெற்று நிலை குலைந்தாலும்; கலங்காக் கரணத்து இலங்கியும்- அழியாத 5கரணமாகிய பிருதிவி

 போல விளங்கியும்;

 26-31 (பாடல்………….பெரிதே) பாடல் சான்ற பல்புகழ் நிறீஇ- பாடுவோர் பாடும் பாட்டுக்களால் அமைந்த 6பல புகழை நிலைபெறக் கொண்டு; வாடாத்துப் பின் - கெடாத வலியையும் பெற்று; அருளாபரணன்- அருளையா பரணமாகவுடையனு மாய்; அறத்தின் வேலி- தருமத்துக்கு வேலியானவனுமாய்; 7பொருள் மொழி யோகம் கிரியையில் புணர்த்த- சத்தியவசனத்தால் 8யோகபாதத்தையும் கிரியா பாதத்தையும் அடியேனுக்கனுக்கிர கித்த; கோடல் ஆதி அருள்மொழி திருமொழி போலவும்- 9கோடலம்பர் கிழானுமாகிய முதன்மையமைந்த அருண்மொழித் தேவருடைய ஞானச் செல்வத்தைக் கெடுக்கும் உபதேசவசனம் போலவும்; பெரிது நன்று என்றும் நிலீஇயர்- ஆன்மா நாற்கதியிலும் உடம்புவிட்டும் உடம்பு எடுத்தும் 1மிகவும் அழகிதாக என்றும் நித்தியமாயிருக்கும் எ-று.

 இகும். மன், ஏ; - அசை.

 தேகாந்தரம் முடிந்தது

 பாசானாதித்துவம்

 அகவல் 29

 பாசானாதித்துவம்

 கன்ம மாயை அனாதியெனல்

 கருமம் போகந் தருமென வருளினை

 நிருமல விருவினை யாக்க றிருமலி

 ஆகத் தல்லதை யாகா ததுமுதல்

 வேகத் தொடுவரல் வினவிற் றாயின்

 5.  2ஆணவ முதலன் றதுபோற் கருமமுங்

 காணல 3தெனினக் கரைகழி நானா

 விதமினி துயிர்கட் குதவுவ தெதனால்

 அற்றது மாயையு மற்றறி யவணே

 ஓதுவ துளதினு மொருவனை தீதுக

 6.  ஆகம் போகா தாக வல்வினை

 ஏகா திருவினை யாகப் போகா

 தாக மாயிடை முனாதியாது

 பாகி னின்றது பன்னுங் காலே

 இது 1விடுதலும் பற்றுதலும் கேட்டறிந்த சீடன் முற்பிற் பாடு அருளவேண்டும் என்று விண்ணப்பஞ் செய்யக் கன்மமும் மாயையும் ஆணவம் போல் அநாதி யெனச் சாதித்தது.

 1-3. உரை: (கருமம் ……………….ஆகாது) நிருமல- நின்மலனே கருமம் 2போகம் தரும் என அருளினை- கன்மத் தாலே தேகம் எடுத்தது என்று அருளிச் செய்தாய்; இருவினை ஆக்கல் திருமலி ஆகத்தல்லதை ஆகாது என- 3அந்தப் புண்ணிய பாவங்களையும் 4அழகு நிறைந்த தேகத்தில் கூடியிருந்தல்லது ஆர்ச்சிக்கும் 5உபாயமில்லையேயென்று 6விண்ணப்பம் செய்ய:

 3-6. (அது முதல்………….காண்) அது முதல் வேகத்தோடு வரல் வினவிற்றாயின்- அக்கன்மம் முதலில் விரைவுடன் வருதலைக் கேட்கின்றா யாயின்; ஆணவம் முதல் அன்று- ஆணவமலம் அநாதி; அதுபோல் 7கருமமும் காண்- அது போலக் கன்ம மலமும் அநாதியே காண்;

 6-7. (அலதெனின்………..எதனால்) அலது எனின்- அப்படி யன்று இக்கன்மமலம் 8ஆதியென்னில்; உயிர்கட்கு அக் கரை கழி நானாவிதம் இனிது உதவுவது எதனால்- ஆனமாக்கட்கு அந்த எல்லையில்லாத நானாவிதமான போகம் 1இனிதாகப் புசிக்கக் கொடுப்பது எதனாலே என்று கொள்வோம்.

 8.  (அற்று……………..அவணே) மற்று அது அவண் அற்று அறி- 2மற்றை மாயாமலமும் அங்ஙனமே அநாதி யென்று அறிவாயாக;

 9-12. (ஓதுவது………….போகா தாகம்) இனும் ஒருவகை ஓதுவது உளது3- இன்னமும் ஒரு முறையாலே சொல்லுவதுண்டு: தீது உக ஆகம் போகா தாக- குற்றமற உடல் கெடாது அங்குரித்துண்டாக: வல்வினை ஏகாது- வலிதான கன்மம் ஒழியாது; இருவினையாக ஆகம் போகாது- புண்ணியபாவ கன்மம் உண்டாதலினின்றும் ஒழியாது;

 4என்றது, உடலுண்டாகக் கன்மம் ஒழியாது என்றவாறாம்.

 12-13. (ஆயிடை………….பன்னுங்காலே) ஆயிடை- இங்ஙன மாயினவிடத்து; பாகின் நின்றது பன்னுங்கால்- பகுத்து இனிதாக நின்ற அதனைச் சொல்லுமிடத்து; முனாது யாது- 5முற்பிற்பாடாவது யாதென்று சொல்லுவது; 6முற்பிற்பாடு சொல்லலாவதில்லை என்றவாறு.

 மற்று, அசை.

 அகவல் 30

 பாசச்சேத வேட்கை

 ஐம்புல வரசன் வன்கண் வரூஉதினி

 பொறையருந் தானையி னிரிய நூறி

 வாடா வாகை சூடிய தாபதப்

 பேராண் பக்கப் பெரியோய் வாழிய

 5.  1முடைமலி யாக்கையின் வினைபிணிப் பானா

 வினைப்பொதி 2யெறுழ்த்தோ றணிப்போ வின்றே

 மல்ல லாகம் புல்ல வெல்லையில்

 3துன்பம் பகுவா யானாது பருகும்

 வண்டுறை மன்ற மாதோ 4வுண்டனென்

 6.  மயலோ மற்றது செயலோ வாதே

 5என்னை செய்குவென் கொல்லோ வன்னோ

 ஆதி நூலு மோதும் வீடே

 6மாரி யிரவி னார்கலி யழுந்தும்

 ஆரிய வூமன் போல

 7.  அளியென் காமதி முனிவர் கோவே.

 இது முற்பிற்பாடு இல்லாமைகேட்டு 7துக்கமிக்கு அச்ச மிகுதியால் சீடன் பாசச்சேதத்தை அபேக்ஷித்து ஆசாரி யரைத் துதிபண்ணியது.

 1-4. உரை: (ஐம்புல……வாழிய) ஐம்புல அரசன் வன்கண் வரூஉதினி- பஞ்சவிந்திரியங்கட்கும் அரசனான அஞ்ஞான வேந்தனுடைய தறுகண்மையையுடைத்தான 8தூசிப்படையை; பொறை அரும் தானையின் இரிய நூறி-9அந்தப் பஞ்சவிட யத்தின் வழியொழு காதே 10சகித்த லென்னும் கெடுத்தற்கரிய தத்திரத்தாலே கெட அழித்து; 11வாடாத் தாபத 12வாகை சூடிய - கெடாத தவவொழுக்க மாகிய மாலையைச் சூடின; பேராண்

 பக்கப் பெரியோய்- மிக்க 1ஆண்டகைமை கொண்டிரா நின்ற பெரியோனே; வாழிய- வாழ்வாயாக;

 5-9 (முடைமலி……………….மாதோ) 2முடைமலி யாக்கையின் வினைப்பிணிப்பு 3ஆனா- புலால் நாற்றமுடைத்தாகிய தேகமுண்டாகக் கன்மபந்தம் ஒழியாது; வினைப்பொதி 4எறுழ்த் 5தோல் தணிப்போ இன்று- இக்கன்மபந்தம் உண்டாக வலிய உடம்பை ஒழிக்க வொண்ணாது; மல்லல் ஆகம் 6புல்ல -வளப்ப முடைத்தாகிய சரீரமெடுத்தால் அஃது அதனாலுண்டாகும்; எல்லையில் துன்பம் - அளவிறந்த துக்கத்தை; பகுவாய் ஆனாது மன்ற பருகும்- இந்திரியமென்னும் பெரிய வாயாலே அமையாது நிச்சயமாக எடுத்துப் பருகும்; 7வண்டுறை- 8வளப்ப முடைத் தாகிய துறையாதலால்;

 9-12. (உண்டெனல்……………..வீடே) அது உண்டு எனல் மயல்- இனி அந்த முத்தியென்பது ஒன்று உண்டென்று சொல்லுமது 9பித்தாமன்றோ; 10செயல் ஓவாது- கன்மபந்தம் ஓழியாதாதலால்; 11ஆதி நூலும் வீடு ஓதும்- பரமசிவன் அருளிச் செய்த திவ்வியாகமமும் முத்தியுண்டென்று சொல்லாநின்றது; அன்னோ என்னை செய்குவென்- ஐயோ, யான் என் செய்வேன்;

 13-15. (மாரி……………கோவே) மாரி இரவின்- 1மாரிக் காலத்து இரவிலே; ஆர்கலி அழுந்தும் 2ஆரிய வூமன் போல- 3ஆழியிலழுந்தும் ஆரிய நாட்டு ஊமனைப் போல; அளியென்- அனுக்கிரக மார்க்கமில்லாது விதனப்படாநின்றேன்; முனிவர் கோவே- தவசியர்க்குக் கர்த்தாவாயுள்ளோனே; காமதி- அனுக்கிரகித்தருள வேண்டும் எ-று.

 மாது, ஓ. கொல், மதி- அசை, ஏகாரம், தேற்றம்.

 பாசானாதி முடிந்தது.

 பாசச் சேதவியல்

 அகவல் 31

 பாசச்சேத வுபாயவுண்மை

 நெஞ்சு புண்ணுற் றஞ்ச லோம்பென

 ஆரிய னருளு மறிவின் கொண்க

 சேதகம் பயந்த செழுநீர் சேதகம்

 மாசுக மண்ணிய தென்ன வாசுக

 5.  அயந்தீர் பெய்த வறிமதி

 பயந்தோன் வினைவிடல் வியந்தோ வன்றே.

 இஃது 1அஞ்சாதே கொள் என்று பாசச்சேத வுபாய முண்டென்று ஆசாரியன் அருளிச்செய்த பிரசாதத்தைக் கூறியது.

 1-2. உரை: (நெஞ்சு…………கொண்க) அறிவின் கொண்க- 2ஞானத்தை யாளுதலால் அந்த 3ஞானமாகிய மகட்குத் தலைவனா யுள்ளோனே; 4நெஞ்சு புண்ணுற்று 5அஞ்சல் ஒம்பு என ஆரியன் அருளும்- 6இதயமானது புண்ணாம்படி அஞ்சுதலையொழிக வென்று ஆசாரியன் அருளிச் செய்வான்;

 3-6. (சேதகம்…………வன்றே) சேதகம் பயந்த செழுநீர் - 1சேற்றை யுண்டாக்கின 2மிக்க நீராலே; சேதக மாசு மண்ணிய தென்ன- அச்சேறாகிய மாசு போம்படி கழுவினாற்போல வினை பயந்தோன்- பூருவத்திலே கன்மத்தை ஆர்ச்சித்து இந்தச் சரீரத்தாலே அந்தக் கன்மத்தைப் பந்தித்துக்கொண்டோன்; விடல்- அக்கன்மத் தைச் 3சரீரத்தால் நீக்குதல்; வியந்தோ அன்று- ஆச்சரியமன்று என்று; அயம் தீர்பு எய்த- 4ஐயம் நீங்குதல் பொருந்த; ஆசுக அறிமதி- 5பிறவித் துன்பம் கெட அறிவாயாக எ-று.

 வினை, மத்திம தீபகம். 6“வினைப்பொதி யெறுழ்த்தோல் தணிப்போ வின்றே”(அகவல்.30) என்று சொல்லியதனை ஞாபகப் படுத்தியவாறு. மதி, ஓ,அசை.

 அகவல்32

 கன்மச்சேத வுபாயத்தைப் பாராட்டல்

 தேனுட னழிழ்து கலந்தன்ன சுவைய

 அமிழ்தூ ணண்டரும் பெறற்கருந் தகைய

 தண்டாப் பிறவிப் பேரிட ரெறிப

 7உரையுணர்வு கூடா வரகதி யுய்ப்ப

 5.  மதியோ ரானாது பருகுவ பருகியும்

 அமையாது நுவலு மமைதிய பாச

 வல்லி வேரற நிமிர்ப வெல்லையின்

 மறக்குறும் பறுப்ப வறத்தின் வேலிய

 தனக்குநிக ரில்லாத் தகைமைய மனத்தின்

 6.  மாசறக் களைவ தேசொடு நிவந்த

 1துன்னிய வினையுகு நன்னெறி யறிகென

 உரைத்தன னென்ப மாதோ

 பொறைக்கு வரம்பாகிய வறத்தின் கோவே2

 இது 3மேற் பரமாசாரியார் தமக்கு அனுக்கிரகம் பண்ணின கருமச் சேதவுபாயத்தினாலே விளைந்த பரமானந்த அனுபோக மிகுதியால் சீடன் முன்னே, இந்த ஞானாமிர்த மென்னும் தமிழாகமம் உரைத்த தம்முடைய சற்குருவின் பரமோபதேசத்தை வியந்து கூறியது.

 1. தேனுடன் 4அமிழ்து கலந்தன்ன சுவைய- தேனும் அமுதமும் கலந்தாற்போன்ற இரதத்தையுடையன;

 2.

 3.

 2.  5அமிழ்தூண் அண்டரும் பெறற்கருந் தகைய-6அமிழ்த போனகம் பண்ணும் புண்ணியவான்களான தேவர்களுக்கும் கிட்டுதற்கரியன;

 4.  7தண்டாப் பிறவிப் பேரிடர் எறிப- ஓர் எல்லைப் படாத செனனமாதிய பெரிய துக்கத்தைக் 8கெடுப்பன;

 5.  1உரை உணர்வு கூடா வரகதி உய்ப்ப- 2மனவாசகங் கட்கு எட்டாத மேன்மையாகிய முத்தியிலே செலுத்துவன;

 6.  5-6. (மதியோர் …………….அமைதிய) 3மதியோர் ஆனாது பருகுவ- ஞானவான்கள் அளவறப் புசிப்பன; பருகியும்- இங்ஙனம் புசித்தும்;

 4அமையாது நுவலும் அமைதிய- ஆராமையாற் பின்பும் விரும்பப்படும் தன்மையன;

 6-7. (பாசவல்லி…………நிமிர்ப) 5பாசவல்லி- 6பாசமாகிய பசியகொடி மறுபடியும் கிளைத்துப் பந்தியாதபடி; வேரற நிமிர்ப- வேரோடே அதனைப் போக்குவன;

 7-8. (எல்லையின்……..அறுப்ப) எல்லையில் 7மறக்குறும்பு அறுப்ப- அளவில்லாத பாவமாகிய குறும்பை அறுப்பன;

 8.8அறத்தின் வேலிய- புண்ணியத்துக்குக் காவலாயுள்ளன;

 9. தனக்கு நிகரிலாத் 9தகைமைய - தனக்கு உவமையில்லாத 10மேம்பாட்டை யுடையன;

 9-10. 1மனத்தின் மாசு அறக் களைவ- மனோதோடமாகிய இராக துவேஷங் களைச் 2சேடமற ஒழிப்பன;

 11. தேசொடு நிவந்த- பிரகாசமுடையவாய் ஓங்குவன வாகிய;

 11-13. (துன்னிய…………கோவே) நன்மை துன்னிய 3வினை உகுநெறி - இத்தனை நன்மை யமைந்த கன்மச்சேத வுபாயத்தை; அறி என - அறிவாயாக வென்று; பொறைக்கு வரம்பாகிய அறத்தின்கோ- பொறுமைக் கெல்லை யாகிய தருமத்துக்குக் கர்த்தாவாயுள்ள பரமாசாரியன்; உரைத்தனன்- பிரசாதித்தனன். எ-று.

 4என்ப, மாது, ஓ, அசை.

 அகவல் 33

 பாசச்சேதம்

 அழுக்கா றவாவென் னிழுக்கிக லிரிமிளை

 மைந்தன் மருமான் மனையோண் மாதுலன்

 என்பே ரகழி யெழில்பெற நிவந்த

 கற்பனை யெழுவினி லியானெனும் போகியப்

 5.  பொற்புடைப் பருமுள் விலங்கிக் கைப்புடைச்

 சீற்றம் வெகுளி மயக்கொடு சிவணிய

 கூற்றத் தானை யாற்றல் சான்ற

 ஐம்புலத் தறுகண் வெந்தொழில் வேழம்

 விடயப் பஃறேர் கடவித் தடையின்

 6.  மனப்பே 1ரத்திரி யுகைத்துப் பேதைமை

 அமைச்சன் சூழும் வினைப்பெருஞ் செழுநகர்

 வேந்தன் காத்த பூந்தண் 2டேஎம்

 3பிறவா யாக்கைப் பெரியோன் பாதக்

 கடவுண்மாமணி சுடர்விடப் புனைந்த

 7.  ஞான மாமுடி சுமந்த கோமகன்

 வல்வினை மறவன் 4வலையிற் சேரா

 நல்லோ ரியாரென நலங்கிளர் சூழ்ச்சியன்

 கற்பனை யிஃதெனக் கடாங்கமழ் பதாகினிப்

 பொறைமா ணிரதச் 5செயறீர் குரகதத்

 8.  தவாவறு சுளிமுகத் துவாவின் முற்றி

 அடுமிளை பொடிபட வெறிந்து நெடுமதில்

 அகழியொ டிடிய நூறிக் கொடுநகர்

 எரிவிருந் தூட்டி யரிதுபெறு சிறப்பின்

 தன்னுடை நாசமன்னன் னெய்தப்

 9.  பரமா னந்தப் பைதிரம்

 வளையாச் செங்கே லோச்சின னெடிதே.

 இது பாசபந்தமாகிய அஞ்ஞானவேந்தனைப் பாசச் சேதமாகிய ஞானவேந்தன் வென்ற ஞான வெற்றிவியப்புக் கூறியது.

 1-8. உரை: (அழுக்காறு. …………வேழம்) அழுக்காறு அவா என் இழுக்கு இகல் இரி 6மிளை - 7மனச்சழக்காகிய பொறாமை யையும் அவாவாகிய பொல்லாங்கையும் 8நிகரில்லாத காவற் காடாகவும்; மைந்தன் மருமான் மனையோள் மாதுலன் என்1பேரகழி- இக் காட்டுக்குள்ளே புத்திரனென்றும் மருமக னென்றும் தாரமென்றும் மாமனென்றும் சொல்லப்பட்ட 2பந்தத்தினரைப் பெரிய அகழியாகவும்; 3கற்பனை எழில்பெற நிவந்த எழுவினில்- நான் 4பெரியன் நேரியன் இன்ன வூரன் இன்ன சாதியன் என்று சொல்லும் 5சங்கற்பனையாகிய அழகு பெற வோங்கிய 6புரிசையோடே; 7போகியம் யான் எனும் பொற்புடைப் பருமுள் 8விலங்கி- 9போகத்துக் கேதுவாகிய மாயாகாரியமான தேகம் நானென்னும் 10தன்மையை மிக்க அழகுடைத்தாகிய பருத்த முள்ளாகக் கொண்டு தெற்றப்பட்ட வேலியாகவும்; கைப்புடைச் சீற்றம் வெகுளி மயக்கொடு சிவணிய- பிறரோடு மாறுபாட்டைப் பண்ணும் மாற்சரியம் கோபம் அறியாமையென்று சொல்லப்பட்டவை யிற்றோடே கூடிய செயல்களை; 11கூற்றத் தானை- யமதூதுவரை யொத்த 12சேனாவீர ராகவும்; ஆற்றல் சான்ற- வலி யமைந்த; ஐம்புலத் தறுகண் வெந்தொழில் வேழம்- 13அஞ்சாமையையும் கொடி தாகிய செயலையுமுடைய பஞ்சேந்திரியங்களை யானையாகவும்;

 9-12. (விடய…………..தேயம்) 1விடயப் பல்தேர் கடவி-2வசன கமன தான விசர்க்க ஆனந்தங்களைப் பலதேராகவும் செலுத்தி; தடையில் மனப்பேர் அத்திரி உகைத்து- 3தடுத்தற் கரியமனமென்னும் பெரிய 4வாகனத்தையும் செலுத்தி; 5பேதை அமைச்சன் சூழும் 6வினைப்பெருஞ் செழுநகர்- அறியாமை யாகிய மந்திரியாலே 7அலங்கரித்து உரைக்கப்படாநின்ற புண்ணிய பாவமான பெரிய சிறப்பையுடைய 8நாரிலே யிருந்து; வேந்தன் காத்த பூந்தண் தேஎம்- அஞ்ஞானவேந்தனாலே காக்கப்பட்ட பொலிவையும் குளிர்ச்சியையுமுடைய 9நான்கு வர்க்கத்து எண்பத்து நான்கு நூறாயிரயோனிபேதப் பிறப் பாகிய தேயத்தை;

 13-15. (பிறவா…………..கோமகன்) பிறவா யாக்கைப் பெரியோன் 10பாதக் கடவுள் மாமணி- சுலேச்சா விக்கிரக வானான பரமாசாரியன் சீர்பாதமாகிய தெய்விகமான 11பெரிய மணியை; சுடர் விடப்புனைந்த- ஒளி விளங்க அழுத்தின ஞான மாமுடி சுமந்த கோமகன்- ஞானமாகிய அழகிய 12முடியைத் தரித்த ஞானவேந்தனானவன்;

 16-17. (வல்வினை………………..சூழ்ச்சியன்) வல்வினை மறவன்- 1பூருவசென்மங்கனில் பண்ணப்பட்ட வல்வினையாகிய மறவன் வைத்த; 2வலையில் 3சேரா நல்லோர் யார் என - வலையில் அகப்படாத நல்லோராகிய வீரர் யார்தானென்னும்; 4நலங்கிளர் சூழ்ச்சியன்- 5நன்மை விளங்கிய புத்தியை மந்திரிப்பிரதானி யாகவு முடையனாய்;

 18-20 (கற்பனை…….முற்றி) கற்பனை இஃது என- 6ஈடணை மூன்றாகிய இது சங்கற்பனை என்னும் கொடியை7 எடுத்துக் கொண்டு கடாம் கமழ் பதாகினீ- சர்வசங்க நிவிர்த்தி பண்ணும் 8விரத்தி என்னும் மதநாற்றுமுடைய தானை சூழ்ந்து வர; பொறைமாண் இரதம்- பொறுமை யென்னும் அழகிய தேரிலே; செயல்தீர் குரகதத்து- ஒருவர்க்கொருவர் 9சுகதுக்கம் செய்வ தில்லை யென்னும் 10உபதேசத்தைக் குதிரையாகப் பூட்டி; அவா அறு சுளிமுகத்து உவாவின் முற்றி- அவாவறுதியாகிய 11பரிக் கோலுக்குச் சுளிந்த முகத்தையுடையதாகிய 12யானையின் மேற்கொண்டு முற்பட வளைத்து;

 21-26. (அடுமிளை………..நெடிதே) அடுமிளை பொடிபட எறிந்து- கேட்டுக்குக் காரணமாகிய மனச்சழக்கும் அவாவுமான முற்கூறிய அழிக்கத் தக்க 1காவற்காட்டைப் பொடியாக வெட்டி; அகழி இடிய நெடுமதில் நூறி- சமுசார பந்தமாகிய அகழியை இடித்துச் சங்கற்பனையும் அகங்காரமுமாகிய நெடிய மதிலை யிடித்துப் பொடியாக்கி; கொடுநகர் எரி விருந்தூட்டி- 2கொடிய இருவினை யாகிய நகரியை 3அக்கினிக்கு விருந்தாக வூட்டி; அரிதுபெறு சிறப்பின் தன்னுடை நாசம்- அநாதியாகக் கிட்டுதற் கரிதாகப் பெற்ற சிறப்பையுடைத்தாகிய தன் நாசத்தை; மன்னன் எய்த- 4ஆன்மாவினிடத்தேயிருந்த 5அஞ்ஞான வேந்தன் பெற்றானாக; பரமானந்தப் 6பைதிரம்- பரமானந்த நாடாகிய முத்திநிலத்திலேயிருந்து; வளையாச் செங்கோல் நெடிது ஒச்சினன்- ஒருநாளும் அழிவில்லாத 7செங் கோலை ஞானவேந்தன் நெடிதாகச் செலுத்தினான் எ-று.

 8மிளை யெறிந்து அகழி யிடித்து மதிலை நூறி நகர் எரி விருந்தூட்டினான் என்க. அகழியொடு என்பதில், ஓடு அசை. இடியவென்னும் எச்சத்தை இடித்தெனச் செய்தெனச்ச மாக்கி யுரைக்க.

 அகவல் 34

 கன்மச்சேத வுபாயம்

 ஒருவன் றொடுத்த விருவினை மூன்றிடத்

 துறத 9லாரண மறையுமற் றவையே

 கருப்பா சயமெனு மிருட்சிறைப் பள்ளி

 அச்சிறைக் குறும்புழை யரிது நீங்கி

 5.  யாக்கை சுமந்து நோக்குங் காலை

 புலம்பல கலங்க வலந்தலை யெய்தித்

 தென்றிசைச் சேற லென்றிவை மூன்றினுங்

 1காரணத் தன்றிப் பாரண மின்றே

 அந்தக் காரணஞ் சேதனா சேதனம்

 6.  நன்றும் பேதை யாகலிற் சேதனத்

 தொன்றிய வின்பத் துவகையு மன்ற

 துன்பத் தரந்தையிற் கன்றுபு 2கனலும்

 அசேதனத் திடையின் றிடர்நனி படரினும்

 அடையா வின்பந் தடையின் றெய்தினும்

 7.  தொல்லைக் கென்னைகொ லல்லலே யென்னும்

 உள்ளத் துணர்ச்சி விள்ளா ராகிச்

 சேதனத் தியைத லென்ப

 மாதவத் 3திறைவர் மாமுது நிதியே

 இது, மேற் “பயந்தோன் வினை விடல் வியந்தோ வன்றே4” என்று அருளிச் செய்தது எங்ஙனே யென்று சீடன் விண்ணப்பம் செய்யக் கன்மச்சேத வுபாயம் கூறியது.

 1-2. உரை: (ஒருவன்………..அறையும்) ஒருவன் தொடுத்த இருவினை பூருவத்தில் ஓர் ஆன்மாவானவன் செய்ய வந்து பந்தித்த புண்ணிய பாவங்களை; 5மூன்றிடத்து உறுதல்- மூன்று தானத்தால் புசிக்கவேண்டு மென்று; ஆரணம் அறையும்- வே தங்கள் சொல்லா நின்றன;

 2-8. (மற்று…………இன்றே) அவையே - அந்த 6மூன்று மாவன; கருப்பாசயம் எனும் இருள் சிறைப் பள்ளி- கருப்பாசய மென்னும் 1அந்தகாரம் நிரம்பியகாராகிருகத்தினிடத்தில் வரும் 2விதனமும்; அச் சிறைக் குறும்புழை அரிது நீங்கி-அந்த இருட்டறையாகிய காராகிருகத்தின் 3சிறிய துவாரத்தை மகத்தாகிய சிரமத்

 தோடு அரிதாக 4நீங்கி; யாக்கை சுமந்து நோக்குங்காலை - சரீர மெடுத்துப் பின்பு 5நிலம் தலைப்பட்டு வந்து விழுமளவில் வரும் 6விதனமும்; புலம் பல கலங்க- இந்திரியங்கள் யாவும் நிலை

 கலங்க; அலந்தலை எய்தித் தென்திசைச் சேறல்- அலந்தலைப்

 பட்டுத் தேகம்விடும் பொழுதில் வரும் 7விதனமும்; சொல்லப்பட்ட 8இம் மூவகையினும் அனுபவிக்கும் பொழுது; காரணத்தன்றிப் 9பாரணம் இன்று - ஓர் ஏது முன்னிலையாக வல்லது 10புசிக்கும் உபாயம் இல்லை.

 9.  அந்தக் காரணம் சேதனா சேதனம்- அந்த ஏதுத்தான் சைதந்நியவேது வாதல் அசேதனவேதுவாதல் அல்லது கூடாது;

 10-12. (நன்றும்…………கனலும்) 11நன்றும் பேதையாகலின்- மிகவும் 12அறிவிலி யாதலாலே; சேதனத்து ஒன்றிய இன்பத்து உவகையும்- சைதந்நியவேதுவாக வந்த சுகத்துக்குப் பிரியப் படவும்; துன்பத்து அரந்தையின் கன்றுபு கனலும் மன்ற- 1துக்கமாகிய விதனத்திற்குப் 2பிறரைக் கன்றிக் கனலவும் அது நிச்சயமாகச் செலுத்தும்.

 3ஒருசொல் வருவித்துக் கொள்க.

 13-16. (அசேதனத்து- விள்ளார்) அசேதனத்து- அசேதன வேதுவாக; இடையின்று இடர் நனிபடரினும்- இடைவிடாதே துக்கம் மிகவுண்டாயினும்; அடையா இன்பம் தடை 4யின்று எய்தினும்- கிட்டுதற்கரிதாகிய சுகம் தடுக்கவொண்ணாத படி உண்டாயினும் தொல்லைக்கு எல்லை என்னை கொல்-5 பூருவ வினைக்கு ஈடாக வந்த இந்தச் சுகத்துக்கும் துக்கத்துக்கும் பிரியாப்பிரியங் கொள்ள என்ன இருக்கிறதென்று; உள்ளத் துணர்ச்சி விள்ளாராகி6- உள்ளத்தில் அறிவை யொழியாராய்;

 17-18. (சேதனத்து……………நிதியே) சேதனத்து இயைதல்- அங்ஙனம் சைதந்நிய ஏதுவாக வந்தவற்றையும் இப்படியே7 காண்டல்;

 1மாமுது நிதி- மகத்தான பரமானந்த போகமாகிய 2மூல பண்டாரப் பொருள்; என்ப மாதவத்து இறைவர்-என்று சொல்லுவர் தவசுக்குக் கர்த்தராகிய ஞானவான்கள் எ-று.

 3தொல்லைக்கு அல்லல் என்னை கொல் என்றும், சேதனத்து இயைதல் நிதி யென்ப இறைவர் என்றும் இயையும். மற்று, ஏ, கொல், அசை.

 அகவல் 35

 ஞானசித்தாந்த 4வரிட்டம்

 <div style="margin-left: 3em;">

 பனுவ லாட்டி தனிமனைக் கிழவர்

 நட்பும் பகையு மெய்ப்பட நாடின்

 யாவது மில்லைத் தானே யாயினும்

 ஆய்விடை5யுடைய துளதே 6யஃதே

 5 ஈன்றோர் பகைஞர் கீண்டோர் நட்பே

 அருஞ்சிறை யிடுநரி னிருஞ்சிறை விடுநரின்

 யார்கொ லுறுதி யோரே கீறி

 7உடற்சிறை தவிர்த்த நலத்தகை யாளர்

 கொடுத்தது நிலமிசை யிவர்க்கே துயக்கெனை

 10 உருவி லோருயிர்க் குடலுந ருழையரென்

 றிருவே றுரைப்பதை யெவனோ தெரிதரிற்

 கோடை தூற்றக் கூடிய வூழிலை

 வாடையின் வீற்றுவீற் றாகி யாங்குச்

 செய்தியிற் றிரண்டு கையற வொரீஇயர்

 15 ஒக்க லல்லதை மற்றுங் கேண்மதி

 தன்னணி யாகமு மஃதெனின்

 என்னை யோபிற பன்னுங் காலே.

 இது, மாதவத் திறைவர் மாமுது நிதியாகிய கன்மச் சேதவுபாய முடையார்க்கு நட்பும் பகையும் இல்லை யென்று ஞான சித்தாந்த வரிட்டம் கூறியது.

 1-3. உரை:- (பனுவலாட்டி……..தானே) பனுவலாட்டி தனி மனைக் கிழவர்- 1கலைமகளை நாவாகிய ஒப்பற்ற வீட்டிலே குடியேற்றி வைத்த ஞானவான்களுக்கு; மெய்ப்பட நாடின்- மெய்யாக விசாரிக்கில்; நட்பும் பகையும் யாவதும் இல்லை- மித்துருக்களும் சத்துருக்களு மென்று ஒருத்தரும் இல்லை;

 3-4. (ஆயினும்……………உளதே) ஆயினும்- ஆனாலும்; ஆய் விடை உடையது, உளது- விசாரிக்குமிடத்து இவர் உடையது எனற்கு ஒன்று சிறிது உண்டாதலுமாம்;

 4-5. (அஃதே……நட்பே) அஃது - 2அஃது யாதென்னில்; ஈன்றோர் பகைஞர்- 3இவரைப் பயந்த மாதாபி தாக்கள் சத்துருக்

 களும்; கீண்டோர் நட்பு- இவர் உடலைப் பிளந்தோர் மித்துருக்

 களுமாயி ருப்பர்; அஃது என்னென்னில்;

 6-7. (அருஞ்சிறை……………..உறுதியோரே) அருஞ்சிறை இடுநரின் இருஞ்சிறை விடுநரின்- 4நீங்கு தற்கரிய சிறையிலே இட்டோரினும் அப்பெரிய சிறையினின்றும் மீட்டோரினும்; யார் உறுதியோர்- யாரை மித்துருவாகக் கொள்வோம்:5

 7-9. (கீறி………………….துயக்கெனை) 1உடற்சிறை கீறி தவிர்த்த நலத்தகையாளர்- இத்தேகத்தைப் பிளந்து தேகமாகிய சிறை வாசத்தை யொழித்த நல்ல அழகையுடையோ ராகிய ஆசாரியர்; இவர்க்கு- இந்த ஞானவான்களுக்கு; கொடுத்தது மிசை நிலம்- 2கொடுத்தது நிலங்கட்கு மேலாகிய முத்தியன்றோ; துயக்கு எனை- அதற்காகத் துக்கப்படுவது என்னை;

 10-11. (உருவில்…………எவனோ) உருவில் ஓர் உயிர்க்கு- அருவமாயுள்ள 3ஓர் ஆன்மாவுக்கு; உடலுநர் உழைய ரென்று- சத்துருவும் மித்துருவுமென்று; இருவேறு உரைப்பதை எவனோ- இரண்டு வேறுபாடாகச் சொல்லவேண்டுவானேன்;

 11-15. (தெரிதரின்…………அல்லதை) தெரிதரின்- விசாரிக்கில்; கோடை தூற்றக் கூடிய 4ஊழிலை- மேற்காற் றடிக்கத் திரண்ட சருகிலை; வாடை- வாடைக்காற்றால்; வீற்று வீற்றாகி யாங்கு-5 சிதறினவாறு போல; செய்தியின் திரண்டு- பக்குவப்பட்ட கன்மபலத்தைப் 6புசித்தற்குற்ற காலத்து வேண்டு வாராகத் திரண்டு கூடிப் புசித்து; கையற- அக்கன்மபலம்7 அற்ற காலத்து; ஓரீஇயர் ஒக்கல் அல்லதை- பிரிந்து போனவர்கள் 8சுற்றத்தாரே யன்றோ; அல்லதூஉம்,15. மற்றும் கேண்மதி- இன்னமும் கேட்பாயாக;

 16-17. (தன்னணி………………பன்னுங்காலே) பன்னுங்கால்- சொல்லுமிடத்து; தன்அணி ஆகமும் அஃது எனின்- தன்னுடைய அழகிய தேகமும் கன்மபலம் புசித்தற் கேதுவாகக் 1கூடினதே யாகலான்; பிற என்னை- வேறு சிலரைச் சத்துருவும் மித்துருவு

 மென்று சொல்ல வேண்டுவது என்னை, எ-று.

 தான், ஏ, ஓ, மதி- அசை, 2ஓரீஇயர், வினைப்பெயர்.

 அகவல் 36

 ஞானவுபாயம் அறியாதாரின் தாழ்வு

 தொல்லை ஞாலத் தெல்லை நீங்கிய

 இருவகைத் தோற்றத் தொருவா வுயிர்கட்

 கிருவினை 3யொருவ மருவின் றாயிடை

 நொதுமலர் கவிகை நொதுமலர்க் கவிகை

 5 விதிமுறை மதிமலர் பெய்திக் கதுமென

 4யாமுடைத் தவருடைத் தாம னென்றினி

 தாமுறை யறியார் மாமதி பிறழ்ந்து

 செயலறு பறியார் மயலுற் றோரே

 அளியரோ வளியர் தாமே தெளியா

 10. இளையோன் 5றுரந்த குணில்வாய்ச் செல்லா

 திளையோற் சினவும் வளைவாய் ஞமலியின்

 அளியரோ வளிய ரென்னை

 ஒளிகொள் காரண முன்னா தோரே.

 இது, மேல், “ஒருவன் தொடுத்த இருவினையால்6” “தன்னணி யாகமும் அஃதெனல்7” குறித்துச் செயலறுதி யானமையின் ஞானவுபாயம் அறியாதாரைத் தாழ்த்திக் கூறியது.

 1-3. உரை: (தொல்லை……………ஆயிடை) தொல்லை ஞாலத்து இருவகைத் தோற்றத்து ஒருவர்- பழையதாய் வருகின்ற பிரபஞ்சத்திலே 1தாவரசங்கமமான இருவகைத் தோற்றத்தையும் விடாத; எல்லை நீங்கிய உயிர்கட்கு- அளவிறந்த ஆன்மாக்கட்கு; இருவினை ஒருவ- புண்ணியபாவ பலம் ஒருவ; 2மருவின்று ஆயிடை- புசிக்க வருவது இல்லையாகியவிடத்து;

 4-9. 3(நொதுமலர்…….தாமே) நொதுமலர்4 கவிகை- பிறர் தமக்குச் செய்த 5நன்மையும்; நொதுமலர்க்கவிகை- தாம் செய்த நன்மையும்; மதி மலர்பு எய்தி விதிமுறை- 6அறிவை 7விரித்துப் பார்த்துஊழ்முறையென்று புத்திபண்ணி; கதுமென- விரைவாக; யாமுடைத்து அவருடைத்தாம் மனஎன்று - 8நம்முடையது அவர்9 தந்தாரென்றும் அவருடையது நாம் 10கொடுத்தோமென்றும்; இனிது ஆம் முறை அறியார்- இனிதாக ஆகிற முறைமையை 11அறியாராய்; மாமதி பிறழ்ந்து- மகத்தாகிய 12அறிவு கெட்டு; மயலுற்றோர் - மயக்கத்திலே பொருந்தினோ ராதலால்; செயல் அறுபு அறியார் -13பிரபஞ்சத்திலே ஒருவர்க் கொருவர் செய்யும் 14சுக

 துக்கமில்லாமை 1அறியாதார்; அளியரோ அளியர்- 2அறிவில்லார் அறிவில்லார்;3

 9-13. (தெளியாது……………….உன்னாதோரே) தெளியா இளையோன் துரந்த குணில்வாய்ச் செல்லாது அறிவில்லாத பாலனொருத்தன் எறிந்த 4குறுந்தடியிடத்துச் செல்லாது; இளையோற் சினவும்- எறிந்த காரணத்தவனான அப்பாலனைக் 5கறுவி வெகுளும்; வளைவாய் ஞமலியின் அளியரோ அளியர்6-வளைந்த வாயையுடைய நாய்க்குள்ள அறிவுதானும் இல்லா மையின் அறிவில்லாதவர் அளிக்கத் தக்கார்; என்னை- என்னை யெனில்; ஒளிகொள் காரணம்- 7விசாரித்தவிடத்து மறைதலை யின்றிப் பிரகாசித்தலைக் கொண்ட பூருவ கன்ம பலமாகிய காரணத்தை; உன்னாதோர்- 8நினைத்தறியாதாராதலான் எ-று.

 அடுக்கு இழித்தற்பொருட்டு, மன்னும் ஓவும் அசை, ஏகாரம் தேற்றம்.

 அகவல்37

 ஞானசித்தாந்தவரிட்டப் பிரமாணம்

 அயிலரி யரலை விழுப்புண் ணெரிபழுத்

 தனல்கால் கோலிற் பன்முறை யடினும்

 பேரிடர் நீத்த பெருந்தகை யோனென்

 றார்வ நெஞ்ச மல்லதை யாரே

 5.  வேரங் கொண்டோர் 1வேறொ மாறெழுந்

 துடம்பிடி யுடறுணிப் படுப்பினும் விரையொடு

 மலைய சந்தும் வழுத்துங் கொண்டு

 தலையிற் பாதந் தாங்கினு முலையாப்

 பிறவிப் பிணிதணி 2யறவண ரிவரென

 6.  விளைவா வின்பம் விளைவி னல்லதை

 உளைவதை யுடையரோ விளைவுணர்ந் தோரே.

 இது “தொல்லைக் கென்னைகொல் அல்ல லென்னும் உள்ளத் துணர்ச்சியான்3” அசேதனவேது வன்றிச் சேதன வேதுவிலும் வரும் துக்கத்தைப் பார்த்துச் செற்றமும் சிநேகமும் கொள்ளா தொழிவதும் உண்டு என்று ஞான சித்தாந்த வரிட்டம் பிரமாண சாதகத்தாற் சொல்லியது.

 1-5. உரை: (அயிலரி………….வேறோ) அயில் அரி அரலை விழுப்புண்-4சத்திரத்தாலே அரியத் தகுந்த வருத்தத்தைச் செய்யும் 5பெரியபுண்ணை; எரி பழுத்து அனல் கால் கோலின்- நெருப்புப் பழுத்தாற் போலக் காய்ந்து அக்கினியைக் காலுகின்ற கோலாலே; 6பன்முறை அடினும்- பலகாற் சுடினும்; பேரிடர் நீத்த பெருந்தகையோன் என்று - இப்படிச் சுட்ட 7வைத்தியனை ‘என் மிக்க துக்கத்தைக் கெடுத்த பெருந்தகைமையுடையோன்’ என்று; நெஞ்சம் ஆர்வம் அல்லதை வேரங் கொண்டார் யார்- 8உள்ளத்தில் சிநேகங்கொள்ளுவதல்லது அவன்மீது செற்றங் கொண்டார் உண்டோ? வேறோ- இவனின் வேறோ தேகமாகிய கிரந்தியைச் சேதித்தவன்?

 5-8. (மாறெழுந்து…………தாக்கினும்) மாறு எழுந்து உடம்பிடி உடல் துணி படுப்பினும்- எதிரியாய் வந்து 1வாள் கொண்டு தேகத்தை இருதுணி யாக்கிவிடினும்; விரையொடு மலைய சந்தும் வழுத்தும் கொண்டு தலையில் பாதம் தாங்கினும் புட்டமுதலிய வாசனைத்திரவியங்களோடு 2மலையிலுண்டாகிய சந்தனத்தைச் சாத்தித் தோத்திரித்து தலையிற் பாதம் பொருந்த வணங்கினும் 3இவர் பிராரத்த கன்மம் தொலைத்தற் கேது வானோ ராதலால்;4

 8-11. (உலையா…………உணர்ந்தோரே) உலையாப் பிறவிப் பிணி தணி அறவணர் இவர் என- கெடாத பிறவித் துக்கத்தை ஒழித்த தருமவான்கள் இவர்கள் என்று; 5விளையா இன்பம் விளையினல்லதை- பெறுதற்கரிதாகிய 6பிரியத்தை இவர் களிடத்து கொள்வதல்லது; உளைவதை உடையகோ- செயற்றங் கொள்ளுவதை யுடையராவரோ? 7விளைவு உணர்ந்தோர்- மேல் வருவது முத்தி யென்று உணர்ந்தோர் எ-று.

 ஏ, அசை; ஒகாரம் இரண்டும் எதிர்மறை.

 அகவல் 38

 ஞானசித்தர் வரிட்டம்

 வையு ணீங்கப் பயன்பல 1பெருக்கக்

 கைதூ வாத செய்தி யோர்க்கும்

 பருவரல் 2வருவது துருவ மல்லதை

 வருவது நன்னய மற்றோ வறிவழிந்

 5.  தவல மாக்கட லழுந்தல் 3செயலிலென்

 றாசற வுணர்ந்த தீதி லாளர்

 மான்மதம் பளிதம் வார்நறுஞ் சாந்தந்

 தாண்முதற் பழிச்சுநர் தைவந் திடினும்

 செவிசுடூஉத் தகைய மொழிபல 4பயிற்றி

 6.  மயிரிற் 5றகைத்து வறுத்தெரித் திடிப்பினும்

 ஞான மாத்துலை சீர்புகுத் தாநா

 முனைப்பாற் செய்தி நகைப்பாற் பட்டென

 மூரன் முறுவ லல்லதை தேரின்

 உவகைக் கலுழ்ச்சியோ விலரே யிவரே

 7.  உரையிடை மறந்தனென் மாதோ வுவகை

 6இவர்க்கிட ரிலமென மனக்களி யோரே

 கலுழ்ச்சி தீங்கு செய்தியோர் நீங்கா

 நிரயத் தழுந்துதற் கேது வாயினம்

 எனவே யழிந்த நெஞ்சமொ டினைபாங்

 8.  கானார் பெயர்த்துமொன் றயர்த்தனென் 7யானே

 தொடுத்த வெவ்வினை யெவ்வள வுடைத்தெனக்

 கையற் றின்ன லெய்தலு முரியர்

 அன்னோ வீடித னூங்குமற்

 8றென்னோ நாடருங் கேள்விநெடி யோர்க்கே.

 இது, 1விளைவுணர்ந்தோர் செயலறுதியாலே யாவை யாவரால் தமக்கு வரும் நன்மைதீமைகள் அவையிற்றை 2ஊழால் வருவன வென்று அறிந்து பிரியாப்பிரியங் 3கொள்ளாதொழியும் ஞானசித்தர் வரிட்டம் கூறியது.

 1-4. உரை: (பையுள் ………..மற்றோ) பையுள் நீங்கப் பயன் பெருக்கக் 4கைதூவாத செய்தியோர்க்கும்- வறுமைத் துன்பம் நீங்குதற்காகப் பல பிரயோசனங் களும் உண்டாகவேண்டு மென்று கை யொழியாத 5முயற்சியுடையோர்க்கும்; பருவரல் வருவது 6துருவம் அல்லதை- மிடியாகிய துன்பமே வருவது ஊழ்முறைமையா னானால்; நன்னயம் வருவது மற்றோ- நல்ல இன்பம் வருவதும் அந்த ஊழானல்லது வேறொன்றாலாமோ?

 4-5. (அறிவழிந்து…………..அழுந்தல்) அறிவு அழிந்து அவல மாக்கடல் 7அழுந்தல்- அறிவுகெட்டுப்பெரிய துக்கமாகிய சாகரத்தில் அழுந்தாதே கொள்.

 5-6. (செயலில்………………தீதிலாளர்) செயல் இல் என்று 8ஆசற உணர்ந்த தீதிலாளர்- முன்செய்த கருமமல்லது ஒருவர்க் கொருவர் செயல் இல்லை யென்று குற்றமற அறிந்த நல்லோர்;

 7-10. (மான்மதம்………..இடிப்பினும்) மான்மதம் 9பளிதம் வார்நறுஞ் சாந்தம் தாள்முதல் பழிச்சுநர் தைவந்திடினும்- கத்தூரியும் கற்பூரமும் கொழுவிதாய நறுநாற்றத்தையுடைய சந்தனக் குழம்பும் பாதாதி கேசம் வரைத் தோத்திரம் பண்ணி னராகிச் சாத்தினாலும்; செவி கடூஉத் தகைய மொழி பல பயிற்றி- செவியிலே நாராசத்தைக் காய்ச்சி ஏற்றினாற் போன்ற இகழ்ச்சி வசனங்கள் பல சொல்லி; மயிரின் தகைத்து வறுத்து எரித்து இடிப் பினும்- மயிர்போல நுண்ணிதாக அரிந்து நெருப் பிலே யிட்டுச் சுட்டுப் பொரித்து அரிந்த புண்ணிலே வேல்கொண்டு குத்தினாலும்1;

 11-14. (ஞானமாத்துலை……………இலரே) ஞான மாத்துலை சீர் புகுத்து- இவ்விரண்டும் ஒக்க ஞானமென்னும் மகத்தாகிய தராசிலே2 சீர்தூக்கி; ஆநாம் முனைப்பாற் செய்தி நகைப்பாற்3பட்டென- என்னே என்னே! நாம் முற்பவர்த்திற் செய்த கன்மபலம் இப்பொழுது சிரிக்கும் பகுதியாயது என்று; மூரல் முறுவல் அல்லதை- சிறுமுறுவல் கொள்ளுவ தல்லது; 4தேரின்- ஆராயுமிடத்து; உவகை கலுழ்ச்சியோ இலர்-5 பிரியாப்பிரியம் கொள்ளுவதிலர்6;

 14-15. (உரையிடை……மாதோ) 7உரையிடை மறந்த னென்- ஆயினும் சொல்லுமிடத்தே நான் கூற மறந்தன சிலவுள;

 15-20. (உவகை……….ஆனாரே) இவர்க்கு உவகை- இவர்க்குப் பிரியமாவது; இடர் இலம் என மனக்களியோர்-8இவ் விரண்டுக்கும் விருப்பு வெறுப்பாகிய விதனமில்லோம் என மனக்களிப்பையுடை யோராதலும்; கலுழ்ச்சி- இவர்க்குத் துக்கமாவது தீங்குசெய்தியோர் நீங்கா நிரயத்து அழுந்துதற்கு ஏதுவாயினம் என- 1நமக்கு விதனம் பண்ணீனோர் 2சின்னாளில் ஒழியாத நரகத்தில் அழுந்துதற்கு ஏது வாயிருந்தோமென்னும் 3இத்தால்; அழிந்த நெஞ்சமொடு இனைபு ஆனார் இவர்- அழிந்த மனத்தோடே துயருடையராதலும் இவர் உரியர்4;

 20. (பெயர்த்தும்…………..யானே) பெயர்த்தும் யான் ஒன்று அயர்த்தனென்5- மற்றும் யான் ஒரு பொருளைக் கூற மறந்தேன்.

 21-22. (தொடுத்த…………..உரியர்) தொடுத்த வெவ்வினை எவ்வளவு உடைத்தெனக் கையற்று- அஃதாவது பந்திக்கப்பட்ட வெவ்விதாகிய பிராரத்த கன்மம் இன்னும் 6எவ்வளவு காலம் உடையதோ என்று மனமழிந்து; இன்னல் எய்தலும் உரியர்- துக்கப் படுதலும் உரியர்; ஆதலால்,23-24. (அன்னோ……….நெடியோர்க்கே) அன்னோ- ஐயோ; நாடரும் கேள்வி நெடியோர்க்கு- அறிதற்கரிதாகிய 7முத்தியுபாய விசாரத்தால் உயர்ந்தோர்க்கு; வீடு இதன் ஊங்கு மற்று எவன்- இவ்வனுபோகத்தின் மேற்பட்ட முத்தி8நெறி மற்றுயாதோ? எ.று.

 ஏகாரம் தேற்றம், ஓகாரம் முன்னது எதிர்மறை,ஓ, ஏ, மாது, ஆங்கு அசை.

 அகவல் 39

 நல்வினை நிகழ்ச்சி

 நஞ்சினி தருத்தினு நல்வினை மாட்சி

 வஞ்சமில் லோர்க் கமிழ்தா கற்றே

 நஞ்சம லயினி நாக முயர்த்தோன்

 வெஞ்சின வீமன் வீடிட வருத்தி

 5.  நாக நூக்க நாகரும் பெறாஅ

 ஆரமிழ் தன்றி 1யணங்குகொடு நடந்த

 பேரிசை யோனே 2பாரத மிசைக்கும்

 அன்னோ னவ்வை யருமுனி பணியிற்

 கன்னனைப் பயந்து நன்னதி யியக்க

 6.  அங்கர் கோனா யரசுதலை 3பணித்துப்

 பொங்குதிரை யாடப் புரவுப்பூண்டிசினே

 இது, “முனைப்பாற் செய்தி4” ஊழ்வலியால் நல்வினை நிகழுங்காலத்து வந்த தீமையும் நன்மையாம் என்று சொல்லியது

 1-2. உரை: (நஞ்சு……….அற்றே) நல்வினை மாட்சி 5வஞ்சம் இல்லோர்க்கு- 6நல்வினை மாட்சிமைப்படுதலால் அழிவில்லாதோர்க்கு; நஞ்சு இனிது அருத்தினும்- நஞ்சை இனிதாகப் புசிப்பிக்கினும்; அமிழ்தாகற்றே- அமிழ்தாகின்ற அத்தன்மை யாகவே முடியும், 7அஃது எவ்வாறென்னில்:-

 3-7. (நஞ்சமல்…….இசைக்கும்) வெஞ்சின வீமன் வீடிட- வெவ்விய சினத்தையுடைய வீமன் மரிக்கவேண்டுமென்று; நாகம் உயர்த்தோன்- நாகத்தைக் கொடியிலே யெழுதி யுயர்த்திய துரியோதனன்; நஞ்சு அமல் அயினி அருந்தி- 1நஞ்சு கலந்து சோற்றைப் புசிப்பித்து; நாகம்2 நூக்க - நாகலோகமாகிய பாதாள லோகத்திலே செல்லத் தள்ள; 3நாகரும் பெறாஅ அமிழ்தன்றி- நாகலோகத்திலுள்ள தேவரும் பெறுதற்கரிதாகிய நிறைந்த அமுதத்தைப் 4புசித்ததுவேயன்றி; அணங்கு கொடு நடந்த பேரிசையோன்- அவர் 5விவாகபூருவமாகக் கொடுத்த நாககன்னியையும் பாணிக்கிரகணம் பண்ணிக் கொண்டுவந்த 6பெரிய கீர்த்திமானானான்; பாரதம் இசைக்கும்- இது 7மகா பாரதத்திலே சொல்லியிருக்கிறது, காண்;

 8-11.(அன்னோன்………..பூண்டிசினே) அன்னோன் அவ்வை- அத்தன்மையனான வீமன் மாதாவாகிய குந்திதேவி; அருமுனி பணியின் சன்னனைப் பயந்து- அரிய தவத்தையுடைய துருவாசமாமுனிகள்8 பிரசாதித்த 9மந்திரத்தாலே கன்னனைப் பெற்று நன்னதி-10இயக்க வரநதியாகிய கங்கையாற்றிலே மிதவற்பேழையிலே வைத்துச்11 செல்லவிட; அங்கர் கோனாய -1துரியோதனனுக்குத் தோழனாய் அங்கதேச மென்னும் இராச்சியத்துக்குக் கர்த்தாவாய்2அங்கராசனென்று மகுடா பிஷேகம் பண்ணப்பட்டு; அரசு தலைபணிந்து 3பகையரசர் தன் பாதத் தில் வீழ்ந்து திறை செலுத்தப்பண்ணி; பொங்குதிரை யாடைப் புரவும் பூண்டிசின்- பெரிய சமுத்திரஞ் சூழ்ந்த 4வையகத்துக்கு 5உபாகரியென்னும் பெயரைப் பூண்டனன். எ-று.

 ஏ, முன்னது தேற்றம், பின்னது தெரிநிலை. இசின், அசை

 அகவல் 40

 தீவினை நிகழ்ச்சி

 அறப்பயன் றீனி னமிந்தே யானுங்

 கடுப்பா டெய்தல் விடுத்தோ வின்றே

 தக்க னெடுத்த முத்தீ முற்றத்

 தொக்க வானோ ருற்றதை பெரிதே

 5.  எயிறுந் துண்டமு முகனுங் கையும்

 அந்தியும் வாணியு மிந்துவு மெரியும்

 இடிப்பத் தக்கனி ருஞ்சிர மிழந்து

 தகர்ச்சிர மெடுத்துப் 6பிழைத்ததை யரிதே

 வாசவன் கோகில மாயினன் கேசவன்

 6.  1பேயா யகன்று தாயினன் கடிதே

 2இந்திர சித்தோ டியாளி வரருசி

 தத்திரம் 3பயின்றோர் தலைமையின் வழாஅர்

 வினைப்பய னுணர்ந்து வெல்வகை4 நாடித்

 தவத்திறம் படருங்காலை 5முகைத்தபு

 7.  கொம்மை வெம்முலை யிளையோட் கூடும்

 தன்மைய 6னன்றியு மருந்தினன் றணியல்

 அயில்புரை நெடுங்க ணம்பணைத் திரடோள்

 மயிலியற் சாயற் குயிலியற் கிளவிக்

 கலங்கழி மகளி ரையிரு றூற்றுவர்

 8.  மணந்தோன் மன்ன னுணங்க யாளி

 கூவற் றூண்டிய 7காதற் காசனி

 8ஆதிப் புலைச்சி யாகி மேதினி

 இன்னிசை யெழுவர்ப் பயந்தோ 9னீண்டே

 சிந்து நாடன் செயத்திர தன்முடி

 9.  இலங்கிலை வாளியி னிறுத்தோ னிற்ப

 நிலம்புக வெறிந்த 10தன்றலை தவம்புரி

 தந்தை தரைசே ரந்தரம் பெரிதே

 பாண்டவர் மரபி னாண்டகைக் குரிசில்

 சனமயன் வேள்விக் 11குருமுனி யுற்ற

 10. தன்மையு நன்மைய வன்றே விண்ணோர்

 மகுடம் புனைந்த நகுடன் பாந்தட்

 படிவங் கொண்டு படிசேர்ந் தனனே

 திருமணி வள்ளத் துயிர்மருந் 1துதவிற்

 றடப்படு தெண்ணீ ரானும்

 11. உடற்பகை யற்றா லுணருங் காலே.

 இஃது ஊழ்வலியால் தீவினை நிகழுங்காலத்து வந்த நன்மையும் தீமையாம் என்பது கூறியது.

 1-2. உரை: (அறப்பயன்………..இன்றே) அறப்பயன் தீரின் - பூருவ புண்ணிய கன்மம் புசித்தற்ற காலத்து; அமிழ்தே யானும் கடுப்பாடு எய்தல்- 2அமுதமே யாயினும் நஞ்சின் றன்மைத்தாதல்; விடுத்தோ இன்று- விட்டொழியுமதில்லை, அஃது எவ்வண்ண மென்னில்;

 3-4. (தக்கன்……….பெரிதே) தக்கன் எடுத்த முத்தீ முற்ற- 3தக்ஷப் பிரஜாபதியானவன் எடுத்துக்கொண்ட யாகம் முடித்தற் பொருட்டு; தொக்க வானோர் உற்றது பெரிது- கூடிய தேவர்கள் பட்ட அபசயம் பெரிதாகும்;

 5-8. (எயிறும்…………..அரிதே) 4அந்தி எயிறும் வாணி துண்டமும் இந்து முகனும் எரி கையும் இழப்ப-5ஆதித்தர் பன்னிருவருள் ஒருவன் பல்லும் 6வாணி மூக்கும் சந்திரன் முகமும் 7அக்கினி கையும் இழப்ப; தக்கன் இருஞ்சிரம் இழந்து தக்கன் தனது 8பெரிய தலை அறுப்புண்டிழந்த; தகர்ச் சிரம் எடுத்துப் பிழைத்தது அரிது- பின்பு சிவபெருமான் அனுக்கிரகத்தால் 1ஆட்டின் தலையைப் பெற்றுப் 2பிழைத்ததே அரிதாயிற்றுக் காண்;

 9-10.(வாசவன்…………கடிதே) 3வாசவன் கோகிலம் ஆகினன்- இந்திரன் குயிலாய்ப் பறந்து திரிந்தனன்; கேசவன் பேயாய் அகன்று கடிது தாயினன்- 4விட்டுணு பேயாய் நீங்கி கடிதாகத்தாவிச் சென்றான்;

 11-16. (இந்திரசித்தோடு…………….தணியல்) இந்திரசித் தோடு யாளி வரருசி -5இந்திரசித்தும் யாளியும் வரருசியுமாகிய இருடிகள் மூவரும்; 6தந்திரம் பயின்றோர் தலைமையின் வழா அர்- சாத்திரங்களெல்லாம் பயின்று தங்கள் முதன்மைத் தன்மையில் வழுவாதவராகி; 7வினைப்பயன் உணர்ந்து- தங்கட்குப் பூருவ கன்மபலம் வருவதை 8முன்பே அறிந்து; வெல்வகை நாடி -அதனை வெல்லும் உபாயம் காண்பாராய்; தவத்திறம் படருங் காலை- தவத்தைப்பூண்டு தேசரந்தரம் சஞ்சரிக்கிற காலத்திலே; 9முகைத்தபு கொம்மை வெம்முலை இளையோன் கூடும் தன்மையன அன்றியும் - (வரருசி) 10கோங் கரும்பை 11வீழ்த்திய திரட்சியும் விருப்பமுமுள்ள தனங்களை யுடைய 12இளையாளைக் கூடுதலாகிய தன்மையுடையனானதே யல்லாமலும்; தணியல் அருந்தினன்- சுராபானமும் பண்ணினான்;

 17-20. (அயில் ……………உணங்க) மன்னன் உணங்க - ஓர் அரசன் தேகம் விட்ட காலத்திலே; அயில்புரை நெடுங்கண்- வேலையொத்த நெடிய கண்ணையும்;அம்பணைத் திரள்தோள்- அழகிய மூங்கிலைப் போன்ற திரட்சியையுடைய தோளையும்; மயிலின் சாயல்- மயிலையொத்த சாயலையும்; குயில் இயல் கிளவி - குயில் போன்ற வசனத்தையுமுடைய அவன் மனைவியர் களாகிய; 1கலங்கழி மகளிர் ஐயிருநூற்றுவா- மங்கலவணியைக் கழித்த விதவைகள் ஆயிரவரை; 2மணந்தோன்- 3இந்திரசித்து முனிவன் 4பரகாயப் பிரவேசம் பண்ண வல்லவ னாதலாலே அவனுடைய தேகத்திற் புகுந்து கூடிக் காமவின்பம் கொண்டான்.

 20-23. (யாளி…………ஈண்டே) ஈண்டே- இவ்வண்ணமே; யாளி- யாளியென்பவனும்; காகற் காசனி- தன் சிநேகத்துக்கு இருப்பிடமானவளான; கூவல் தூண்டிய - தன்னாலே கிணற்றிலே தள்ளப்பட்ட; ஆதிப் புலைச்சி யாகி- பழைய சண்டாளப் பெண்ணாதலாலே அவளோடேகூடி; மேதினி இன்னிசை யெழுவர்ப் பயந்தோன்- இவ்வுலகத்திலே இனிய கீர்த்தியை யுடைய 5யோகநந்தன் முதலிய பிள்ளைகள் 6எழுவரைப் பெற்றான்7.

 24-27. (சிந்துநாடன்………..பெரிதே) சிந்து நாடன் செயத்திரதன் முடி இலங்கிலை வாளியின் இறுத்தோன் நிற்ப- சிந்து விஷயத்திற்குக் 8கர்த்தாவான செயத்திரதனுடைய தலையை விளங்கா நின்ற இலைபோன்ற அம்பாலே அறுத்த அருச்சுனன் இறவாதுநிற்க; தவம்புரி தந்தை நிலம்புக எறிந்த தன்தலை- இச்செயத்திரதன் பிதா வாகிய விருத்தக்ஷத்திரன் “என் மகன் தலையைத் தரையில் விழவிட்டார். தலை சின்ன பின்னப்பட்டுப் போகவேண்டு” மென்று 1சமந்த பஞ்சக மடுவின்கண்ணே நின்று தவசுபண்ண, அவ்வருச்சுனன் தனது அம்புச்சரத்தாலே அச்செயத்திரதன் தலையைத் தரையில் விழாதே கொடுசென்று அவன் (விருத்தக்ஷத்திரன்) கையிலேயிட, அந்தத் தலையைக் கண்டு அருவருத்துப் பூமியிலே விழ எறிந்த அவ்விருத் தக்ஷத்திரன் தலை; தரைசேர் 2அந்தரம் யாது- சின்ன மாய்த் தரையில் வீழ்ந்த அந்தரமாகிய தீமை பிரகாசமாய்ப் பெரிதானதன்றோ;

 28-30. (பாண்டவர் …………………அன்றே) பாண்டவர் மரபின் ஆண்டகைக் குரிசில் சனமயன் - பாண்டவர்மரபிலே ஆண்டகை மைக்குத் தலைமையான சனமேசய னென்னும் பெயரையுடைய இராசன்; வேள்விக் குருமுனி உற்ற தன்மையும் நன்மையது அன்றே- செய்கின்ற யாகத்திலே ஆசாரியாகினாய முனிவனைச் செய்த 3பிரமாதத் தாலே குருத்துரோகமான தன்மையும் நன்கு தெரிந்தனவல்லவோ;

 30-32. (விண்ணோர்………….சேர்ந்தனனே) விண்ணோர் மகுடம் புனைந்த 4நகுடன் - தேவர்கள் வணங்கும் இந்திரனாய் முடிசூட்டப்பட்ட நகுடன் என்னும் வேந்தன்; பாந்தள் படிவம்கொண்டு படிசேர்ந்தனன்- சத்த முனிவர்களைச் செய்த அவமதிப்பாலே 1பெரும்பாம்பின் வடிவுகொண்டு பூமியிலே வீழ்ந்தானன்றோ;233-35. (திருமணி………………..உணருங்காலே) திருமணி வள்ளத்து- அழகிய இரத்தினம் இழைத்த வட்டிலிலே; உயிர் மருந்து உதவிற்று -பிராணனுக்குக் காப்பாக அமிர்த சஞ்சீவியான மருந்து கூட்டித்தந்தாயினும்; அடப்படு தெண்ணீ ரானும்- காய்ச்சித் தெளிந்த குடிநீரேயாயினும்; உணருங்கால்- அறிவுடை யோர் விசாரிக்கு மிடத்து; 3உடற் பகை அற்று- உட லுக்குப் பகையாகும் 4அத்தன்மையை யுடைத்தன்றோ; எ-று.

 5ஆல், அசை, ஏகாரம், தேற்றம்.

 அகவல் 41

 பிராரத்த கன்ம சேதம்

 பழவினை 6பயின்ற பழுதின் றயின்று

 வருவினை தரூஉம் வாயி லறிவென்

 கபாடச் செந்தாழ் கடாஅவ விடாஅ

 துடைவ 7தாயி னொழியாப் பாசத்

 5.  தொல்லை வல்வினை துகடபு காட்சி

 செல்லா 8துறுமதற் கெல்லை யாதெனின்

 படைப்புப் பூண்ட வொருவர்க் கவையே

 துடைப்புப் பூணா வெனைப்பல திறத்த

 மண்ணை நல்லான் வயிறுதர வந்த

 6.  வெண்ணெ யொண்பால் புண்ணியக் குழம்பு

 மலைய சந்தின் கலைநவி லின்றுணி

 நறுநெய் வெண்டயிர் நலங்கே ழொண்படி

 மைந்தம னறுவிரைச் சந்தி னின்சே

 றாசா வாறு போல 1வாங்குப்

 7.  போகா தம்ம புராதன மாகந்

 தொடநனி நிவந்த கொடிநுடங் காரெயிய்

 வைவேன் முதல மண்ணிரும் பாதற்

 கைய மில்லாச் செய்தி யேய்ப்ப

 உள்ளத் துள்ளிய வுகுதற்

 குள்ளத் துள்ள றள்ளாமதி விரைந்தே.

 இது பிராரத்த கன்மம் 2ஞானவுபாயத்தாற் கழியாது, அதை அனுபவித்தே கழிக்கவேண்டுமென்று கூறியது.

 1-4. உரை: (பழவினை…………….உடைவது) பழவினை பயின்ற- பூருவகன்ம பலத்திற் பக்குவப்பட்டவற்றை; 3பழு தின்று அயின்று - குற்றமறப் புசித்தற 4வேண்டுமவையிற்றைக் குற்றமறப் புசித்து; 5வருவினை தரூஉம் வாயில்- 6சுயங்கன்மம் 7வரும் வழிக்குப் பரிகாரம்; கபாடம் 1அறிவு என் செந்தாழ் கடாவ விடாஅது உடைவது-2 நிறை யென்னுங் கதவைச் சிவ ஞான மென்னும் அழகிய தாழாலே 3யடைக்க அஃது4 ஐயமறக்கெடும் என்று ஆசாரியன் அருளிச்செய்ய:

 4-6. (ஆயின்…………யாதெனின்) ஆயின்- அங்ஙனமாயின்; ஒழியாப் பாசத் தொல்லை வல்வினை- விடாத பாசமாய்ப் பந்தித்துக் கிடந்த பழையவாகிய வல்வினைகள்; துகள்தபு 5காட்சி செல்லாது உறும்- 6குற்றமற்ற ஞானமில்லாததினாலே நீங்காத கன்மமாய் எண்பத்துநான்கு நூருயிர யோனிகளிலே செனித்தற்கு நிச்சயமுண்டாதலாலே; அதற்கு எல்லை யாது எனில்- 7அவையிற்றை யான் புசித்தறும் எல்லை யாது? இதற்குப் பரிகாரமில்லையோ என்றுநீ வினவில்;

 7-8. (படைப்பு………….திறத்த) படைப்புப் பூண்ட ஒருவர்க்கு- பூருவகன்மபலம் புசித்தற வேண்டுமென்ற இதற்கு இளைக்கவேண்டா, காண், 1புசிக்கைக்காக முன்பே செய்து கொண்ட கன்மத்தையுடைய 2ஒருவருக்கு; அவையே துடைப்புப் பூணா- 3அவையிற்றில் அவரால் அழிக்கப்படாதனவாய்; ஏனைப் பல திறத்த - எத்துணையோ வர்க்கம் உள; ஆதலால், பூருவ கன்மபலம் உள்ள துணையும் புசித்தே தீரவேண்டும் என்று அறிவாயாக;4 அஃது எங்ஙனமென்னில் அதற்குத் திட்டாந்தம்:-

 9-15. (மண்ணை…….புராதனம்) 5மண்ணை நல்லான்வயிறு தர வந்த- அழகையும் குணத்தையுமுடைய பசுவினிடத்6 துண்டாகி வந்த; 7நறுநெய் வெண்ணெய் வெண்தயிர் ஒண்பால் நலங்கேழ் ஒண்பொடி புண்ணியக் குழம்பு ஆகாவாறு போல- நறுநெய் 8வெண்ணெயாகாதவாறு போலவும், வெண்மையை யுடைய தயிர் இனிய பாலாகாதவாறு போலவும், அழகிய ஒளியையுடைய திருநீறு 9சாணிக் குழம்பாகாதவாறு போலவும்; மைந்து அமல் நறு விரைச் சந்தின் இன்சேறு- 10அழகு நிறைந்த நறுநாற்றத்தையுடைய இனிய சந்தனக்குழம்பு; கலை நவில் மலைய சந்தின் இன்துணி- 1சாத்திரங்களிலே புகழ்ந்தோதப் பட்ட பொதிகைமலையில் உண்டான நறிய சந்தனக் குறடு; ஆகாவாறு போல- ஆகாதவாறு போலவும்; ஆங்கு புராதனம் போகாது- அச்சரீரத்தில் பிராரத்தமாகி வந்த பூருவகன்மம் 2புசித்தல்லது தீராது3.

 15-20 (மாகம்…………..விரைந்தே) மாகம் தொடநனி நிவந்த கொடிநுடங்கு 4ஆரெயில் முதல்- சுவர்க்கத்தைக் கிட்ட மிகவுயர்ந்த கொடியசையும் சிறந்த மதில் முதலாக வுள்ளன; மண் ஆதற்கு - மண்ணாதற்கும் 5வைவேல் முதல் இரும்பாதற்கும்- கூர்மையுடைய வேல் முதலாகவுள்ளன இரும்பாதற்கும்; ஐயமில்லாச் செய்தி யேய்ப்ப- 6ஐயமில்லையாம், அச்செய்தியை யொப்ப; 7உள்ளத்து உள்ளிய உகுதற்கு- முற்ப வங்களிலும் 8இப்பவத்தில் 9சற்குருகடாக்ஷிப்பதற்கு முன்பும் யான் எனதென்று அகங்கரித்துக் கொண்டு 1புத்திதத்துவத் திலே பந்தித்துக் கிடந்த கன்மம் நீங்குவதற்கு; உள்ளத்து உள்ளல் விரைந்து தள்ளுமதி- 2மனத்தால் ஆர்ச்சித்து அகங்கரித்துக் கொள்ளுமதை உபதேசத்தாலே விரைய அறிந்து விரத்தி கொண்டு கன்மச்சேதம் பண்ணிக்கொள்க3 எ-று.

 இது 4பக்குவப்படாதே கிடந்து கன்மச்சேத வுபாயத்தாலே நீங்கும் கன்மத்திற்குத் திட்டாந்தம்.

 5ஆகாவாறு போல என்பதை எங்குங் கூட்டிக்கொள்க அம்ம, மதி- அசை.

 அகவல் 42

 ஞானசித்தரின் அந்தரங்க வேறுபாடு.

 மறைமுறை யுணர்ந்த வறிவின் கிழவரும்

 மம்ம ரெய்திய மடவ மாந்தருங்

 கைதொடல் கண்படை வெய்துறு பெரும்பயங்

 களிபடு காமத் தளிதலை மயங்கிய

 5.  தகுதியல்லது பகுதி யின்றெனிற்

 கேளினி வாழி கெடுகநின் னவலங்

 கொய்தளி ரன்ன குலக்கோ மளத்தை

 மெய்யுற முயங்கி விடனா யினனே

 கொம்மை வெம்முலைத் தன்மகட் டழீஇ

 6.  1அம்முலை நல்கிய யாயென வுவந்தனன்

 மற்றுங் கேண்மதி முட்டாட் டாமரை

 நுண்டாது பொதிந்த 2செந்தோ டன்ன

 செங்கை கொங்கைக் கருங்கண் டைவர

 மைந்த னென்ன மனமகிழ் புருகிப்

 7.  பெருவரை கான்ற சிறு வெள்ளருவியிற்

 சொரித லானா பாலே யவையே

 ஆடவன் வருட வறிவுபிறழ் வெய்தி

 3மெய்புகு வன்ன கைகவர் முயக்கமொடு

 இன்ப வெள்ளத் தன்பியைந் தாஅங்

 8.  4கறங்கரை நாவி னான்றோ ருள்ளஞ்

 சிறந்தன்று மன்னோ தெரியுங் காலே.

 இது ஞானசித்தர்க்குப் பாகிய வேறுபாடில்லை யாயினும் 5அபியந்தர வேறுபாடு உண்டென்று சொல்லியது.

 1-5. உரை: 6மறைமுறை அறிந்த அறிவின் கிழவரும் - ஆகமத்திற் சொல்லுகிற முறைமையை யறிந்த 7ஞானவான்களும்; 8மம்ம ரெய்திய மடவமாந்தரும்- மயக்கமுறுகிற அஞ்ஞானிகளும்; கைதொடல் கண்படை வெய்துறு பெரும் பயம் களிபடு காமத்தளி- ஆகாரம் நித்திரை நடுக்கம் பொருந்திய பெரிய பயம் ஸ்திரீபோக 1மயக்கத்தைத் தரும் மைதுனமென்ற இவையிற்றில் அளியராய்; தலைமயங்கிய தகுதி அல்லது பகுதி இன்று எனில்- தலைத்தலை மயங்கும் முறைமை அல்லது அவ்விருவருக்கும் வேறுபாடு கண்டதில்லை யென்னில்;

 7. (கேள்............அவலம்) கேள்- கேட்பாயாக; இனி  நின் அவலம் கெடுக- இனி நின் அஞ்ஞானம் கெடக் கடவதாக;

 7-8. (கொய்தளிர் ………….விடனாயினனே) கொய்தளிர் அன்ன குலக் 2கோமளத்தை- கொய்யப்பட்ட மாந்தளிரை யொத்த நல்ல வங்கிசத்திலே பிறந்த இளமையையுடைய மனைவியை; 3மெய்யுற முயங்கி விடனாயினனே- சரீரத்திலே பொருந்தப் பரிசித்து விடய பரனாயினா னொருபுருடன்;

 9-10. (கொம்மை………….உவந்தனன்) 4கொம்மை வெம்முலை தன்மகள் தழீஇ- திரட்சியையுடைய விரும்பப்பட்ட முலையையுடைய தன் மகளைத் தழுவி; அம்முலை நல்கிய யாய் என- 5அழகிய தனங்களாலே பாலைத் தந்து வளர்த்த தாயே என்று; உவந்தனன்- 6பிரியமானவாறு போலவும்;7

 12. மற்றும் கேண்மதி - இன்னமும் கேட்பாயாக;

 11-16. (முட்டாள்………பாலே) முள்தாள் தாமரை நுண்தாது பொதிந்த செந்தோடு அன்ன 8செங்கை- முள்ளுண்டான தண்டினையுடைய தாமரையின் நுண்ணிய தாது பரந்த செவ்விதழைத் தன்மகனான குழவியின் 9செங்கை; கொங்கைக் கருங்கண் தைவர- முலையின் கரிதாகிய கண்ணைத் தடவ; மைந்தன என்ன மனம் நெகிழ்பு உருகி- தாய் தன் மகனென்று மனம் நெக்குருகுதலால்; பெருவரை கான்ற சிறுவெள்னருவியின்- பெரிய மலையினின்றும் விழப்பட்ட நுண்ணிய வெள்ளருவி போலே; பால் சொரிதல் 1ஆனா - அம்முலைகள் பால் சொரிதலை அமையாதனவாயிருந்தன;

 16-19; (அவையே …………இயைந்தாங்கு) அவையே- அத் தன்மைய வான முலைகளையே; ஆடவன் வருட- அவள் நாயகனான புருடன் வருடிய வழி; அறிவுபிறழ் வெய்தி- 2அறிவுமயங்குதலின்; மெல்புகுவன்ன கைகவர் முயக்கமொடு- 3இருவரும் ஒருவர் சரீரத்துள் ஒருவர் சரீரம் புகுந்து ஒன்றாயின் தன்மை போலக் 4கையாற் கவர்ந்து இறுகத் தழுவிக் கொள்ளும் முயக்கத்தோடே; 5இன்பவெள்ளத்து அன்பு இயைந் தாஅங்கு காமவின்பமாகிய போக சமுத்திரத்திலே அன்பால் கலந்து அழுந்தின 6தன்மைபோலவும்;

 20-21. (அறங்கரை………தெரியுங்காலே) 7அறங்கரை நாவின் ஆன்றோர்- 8தருமத்தையே வசனிக்கின்ற நாவையுடைய ஞானவான்கள்; உள்ளம் தெரியுங்கால்- உள்ளத்தேயிருக்கும் படியை விசாரிக்குமிடத்து; சிறந்தன்று- 9அந்தக் கரண சுத்தியால் வேறுபட்டிருக்கும், எ-று.

 என்றது, 1ஞானவான்களின் உள்ளமானது விசாரிக்கு மிடத்து அவரது அந்தக் கரண சுத்தி பிறர்க்குத் 2தெரிய வாராது வேறுபட்டுக் காண இருப்பது என்றவாறு.

 வாழி, ஏ, மதி, மன், ஓ, அசை,

 அகவல் 43

 ஞானவான்களின் அந்தரங்க சுத்தி

 அரும்பவிழ் கழுநீ ராயித ழன்ன

 கருங்கய னெடுங்கண் விடங்கிளர் வாளியர்

 முடங்குமதி யணிந்த முழுநீர் முத்தின்

 நுடங்குநுத லிளவே ரிடங்கெட வணிய

 5.  ஒடுங்குநிமிர் புருவக் கொடுஞ்சிலை துரப்பினும்

 சுரும்புதுரந் தமைத்த திருந்து மலரமளிப்

 பருந்துபசி தணிக்குந் திருந்திலை நெடுவேல்

 மைந்துடை மைந்தன் சிந்தை கனற்றக்

 கன்றிய தின்றெனிற் காம மின்றே

 6.  3அதனால், அகாம னன்றே நாம வேலோன்

 முட்புற முதிர்கனிப் பொற்சுளை மைக்கொள்

 கதலித் தீங்கனி யிதலூன் பொரியல்

 வாளைப் பீலி 4மீளிக் கயற்றுணி

 கறிச்சேறு கமழு மறிக்கோ ழூன்றுவை

 7.  பீலி முருந்தி னிவந்த சாலி

 வெண்சோறு குவைஇய குன்றிற் றண்டா

 நறுநெய் யருவியி 5 னிரிய வெள்ளயிர்க்

 குறுமுறி 1யடுக்கிய நெடுமாக் கோட்டினும்

 மண்ட மரட்ட 2வலிகெழு திணிதோள்

 8.  உண்டி விருப்பி 3லொருவ னின்றும்

 கண்டன னேனுங் கொண்ட தெனுளத்தே

 உள்ளந் 4தெள்ளாத் தெள்ளிய காட்சியொ

 டுள்ளவும் படுவ துளதோ வள்ளிய

 கங்கைப் பேரியாற்றுப் பொங்குதிரைத் தீநீர்

 9.  ஒன்றொழி பின்றிச் சென்றளப் பரிய

 தேருக் குன்றச் சிகர நீர

 மண்கொடு மறலி வடிவாய்க் கணிச்சிக்

 குண்பய னுதவு காறும் பண்பட

 மாசற 5மண்ணினு மாசற நிவந்த

 10. உள்ளமு முளதுகொ லுரவ வொள்ளிய

 ஞானப் பாணி வானத் துறைஞரும்

 விழையும் 6விழைவிலென் றுகடீர் மாமண்

 7அறிவர லவா அச் செறிமல வுவர் நீர்

 மன்றன் மாசற மண்ணல்

 11. என்றன ரம்மல மொன்றி லோரே.

 இஃது இன்னும் ஞானவான்களுக்கு அந்தரங்க வேறுபாடும் அந்தரங்க சுத்தியும் உண்டென்று சொல்லியது.

 1-2. உரை: (அரும்பு …………..வாளியர்) அரும்பவிழ் கழுநீர் 8ஆயிதழ் அன்ன- 9அரும்பி யலர்ந்த செங்கழுநீர்ப் பூவின்1மெல்லிய இதழ் போன்ற நிறத்தையும்; 2கயல் கரு நெடுங் கண்- கயல் மீன் போன்ற பிறழ்ச்சியையுடைய கரிய நெடிதாகிய 3கண்ணென்னும்; விடம்கிளர் 4வாளியர்- 5விடம் தீற்றப்பட்ட 6அம்பையுடைய மாதர்கள்;

 3-4. (முடங்கு………..அனிய) முடங்குமதி அணிந்த- முடங்கியிருக்கப்படாநின்ற இளம் பிறையிலே; முழுநீர் முத்தின்- 7முழுத்த நீர்மையையுடையமுத்தை நெருங்க அணிந்தாற்போல; நுடங்கு நுதல் இளவேர்- நுடங்கிய நெற்றியிலே வேர்வைத் துளியானது; இடம் கெட அணிய- 8இனி இடமில்லை என்னும் படிக்கு நெருங்கப் பொடிப்ப;

 5.  (ஒருங்கு……….துரப்பினும்) ஒடுங்கு நிமிர்புருவம் - பக்கத்தே ஒடுங்கி உயர்ந்த புருவமாகிய; கொடுஞ்சிலை 9துரப்பினும்-வளைந்த சிலையிலே இந்தக் கண்ணென்னும் அம்பை ஏறிட்டெய்தாலும்;

 6-10. (சுரும்பு ………..அன்றே) சுரும்பு துரந்தமைத்த- வண்டுகளைத் துரந்து அமைக்கப்பட்ட; 10திருந்துமலர் அமளி- திருத்தமாகிய புட்ப சயனத்திலே; 11பருந்து பசி தணிக்கும் திருந்து இலை நெடுவேல்- பருந்து முதலாகிய பறவைகளினுடைய பசியைக் கெடுக்கும் திருந்திய இலைவடிவாகிய நெடிய வேலையுடைய; மைந்துடை மைந்தன்- 1அதிபலம் பொருந்திய இராசகுமாரன்; 2சிந்தை - முன்போகம் கொண்டதனாலே காமவிகாரம் தீர்ந்த மனதானது; கனற்றக் கன்றியது இன்றெனில் -3காமாக்கினியினாலே வெந்து கன்றியதில்லை யாயின்; காமம் இன்று- அவனுக்குக் காமவிதனமில்லை; அதனால்- ஆதலால்; அவன் 4அகாமன் அன்றே- அவன் அகாதனல்லவோ? அது வன்றியும்.

 10-21. (நாமவேலோன்………..உளத்தே) நாமவேலோன்- அச்சத்தைச் செய்யும் வேலையுடைய புருடன்-; 5முட்புற முதிர் கனிப் பொற்சுளை -6முள்ளைப் புறத்தேயுடைத்தாய் முதிரப் பழுத்த பொன்னிற முடைத்தாகிய பலாச்சுளையும்; மைக்கொள் கதலித் தீங்கனி- 7கருவாழையின் இனிய 8பழமும்; 9இதலூன் பெரியல் -கவுதாரி மாங்கிசப் பொரியலும்; வாளைப் பீலி- வாளைமீனின் 10உட்பீலியும்; மீளிக் கயல் துணி- இளங்கயல் மீன் துண்டமும்; கறிச்சேறு கமழும் மறிக்கோழ் ஊன்துவை- மிளகின் குழம்பு மணங்கமழும் 11செம்மறிப் புருவையின் கொழுத்த மாங்கிசத்தின் 12ஆணமும் ஆகிய இவை கறியாக; கறியாக; 13பீலி முருந்தின் நிவந்த சாலி வெண்சோறு குவைஇய குன்றின்- பீலியடியை ஒத்த உயர்ந்த செந்நெல்லினாலான வெண்சோறு குவித்த 1குவையிலே; தண்டா நறுநெய் அருவியின் இரிய- குறையாதே சொரியப்பட்ட நறு 2நெய்யானது அருவி போலே இழிந்தோட; 3வெள்ளயிர்க் குறுமுறி அடுக்கிய நெடு மாக் கோட்டினும்- 4அந்த நெய்யைத் தடுக்க வெள்ளிய கண்ட சருக்கரைக் கட்டியை அடுக்கிய உயர்ந்த பெரிய கரைசெய்த விடத்து முன்பே 5திருத்திவரவுண்டு; உண்டி விருப்பு இல்- புசிப்பிலே விருப்பமில்லாத; மண்டு அமர்அட்ட வலிகெழு திணிதோற் 6ஒருவன்- மண்டுகிற 7போரிலே வென்ற வலி பொருந்திய திணிந்த தோளையுடைய ஒருவனாகிய புருடன்; இன்னும் கண்டனனேனும்- இவை யன்றியே யின்னும் இரசவர்க்கங்கள் 8பல கண்டானாயினும்; உளத்தே கொண்டது 9என் -ஏதேனும் ஆசை கொளவருமோ, சொல்;

 22-23. (உள்ளம் - உளதோ) உள்ளம் தெள்ளா- 10இவ்விரு திறத்தாரையும் போல ஞானவான்கள் கரணவறிவு காணாத; தெள்ளிய காட்சியொடு- 11சிவபோகத்தைப் புசித்திருக்கிற தெளிந்த சிவஞானக் காட்சியால்; 12உள்ளமும் படுவது உளதோ -விடயபோகங்களைச் சிறிதும் சிந்திப்பதுண்டோ?

 ஆகவே, அவர்களுக்கு 1அந்தரங்கத்திலே வேறுபாடு உண்டு காண்.

 23-30. (வள்ளிய…..உரவ) வள்ளிய கங்கைப் 2பேரியாற்றுப் பொங்குதிரைத் தீநீர்- வளப்பமுடைய 3பெரிய ஆகாய கங்கையாற்றைப்போல மிகுந்த திரையையுடைத்தாகிய இனிய 4சுத்த சலசமுத்திர நீரிலே; சென்று அளப்பரிய மேருக்குன்றச் சிகர நீர மண்கொடு- மனத்தாலும் நோக்கி அளவிடுதற்கரிய மகா மேருமலைச் சிகரவுயரத்தின் 5நீர்மையையுடைய 6மண்ணை யிட்டு; 7ஒன்று ஒழிபின்றி- சிறிதும் ஒழியாதே கொண்டு; மறலி வடிவாய்க் கணிச்சிக்கு உண்பயன் உதவுகாறும் -காலன் போந்து வடித்த வாயையுடைய மழுவுக்கு இரையாகத் தங்கள் பிராணனைக் 8கொண்டு கொடுக்கு மளவும்; 9பண்பட மாசற மண்ணினும்- 10அமைய விருந்து புறம்பே அழுக்குப்போகச் சுத்தி பண்ணினாலும்; 11ஆசற நிவந்த உள்ளமும் - குற்றமறவோங்கிய உள்ளந்தானும்; உளதுகொல்- அஞ்ஞானிகட்கு உண்டாகவற்றோ; உரவ- அறிவுடையோனே 12கூறுவாயாக;

 30-35. (ஒள்ளிய…………..ஒன்றிலோரே) ஒள்ளிய ஞானப் பாணி- அழகிய ஞானமாகிய நீரைக் கொண்டு; 13வானத் துறைஞரும் விழையும் விழைவில் என் - தேவர்களும் விரும்பு கின்ற அவா வின்மையென்னும்;1துகள்தீர் மாமண்-குற்ற மற்ற மகத்தாகிய மண்ணையிட்டு;2 அறிவு அறல் 3செறிமலம் - அஞ்ஞான மாகிய திணிந்த நிபிடமலமும்; 4அவாஅ உவர்நீர்- அவாவாகிய மூத்திரமும் என்னும் இரண்டு நாற்றத்தையும்; மாசற மண்ணல் 5மன்றல் என்றனர்- மாசறச் கழுவுதலே பரிமள மாகிய ஆன்மசுத்தியாவதென்று அருளிச்செய்தனர்; அம்மலம் ஒன்றிலோர்- அந்த மலம் 6ஒன்றுதல் இல்லாத பெரியோர்கள். எ-று.

 இதில், சுத்தசல சமுத்திரத்திற்கு ஆகாய கங்கையைத் திட்டாந்தங் கூறுதலென்னெனில், அறுபத்து நான்கு நூறாயிரம் யோசனை அகலத்துடனே ஏழுதீவையும் சுற்றியிருக்கும் 7சுத்த சல சமுத்திரத்தினும் ஆகாய கங்கை மிகுதியான படியா லென்க. இதனை “எண்டரு மண்ட மென்னும் 8கிரியாபாதத் திருவகவலுட் காண்க.

 அம்மலம், அ, பண்டறிசுட்டு , கொல், ஐயம்.

 அகவல் 44

 ஞானயோகியரின் போகநிலை

 கறையணற் கட்செவிப் பகுவாய்ப் பாந்தட்

 கடுவொடுங் கெயிற்றின் வடுவுறக் கிழித்துங்

 கிழியாப் பண்பிற் றன்றே யுறையுடன்

 மதியொடு புணர்ந்த மறையி னோர்க்கே

 5.  செழும்பெரும் பொய்கைக் கொழுந்துவிடு புயரிய

 முட்டாட் டாமரைக் கொழுமட லகலிலை

 அப்புன றொத்தாத் 1துப்பு மெய்ப்படு

 மந்திர மருந்தின் மைந்தின் வெந்திறற்

 காரிகை தொடினும் பேரிட ரின்றே

 6.  கரைபாய்ந்து கலித்த பெருநீ ருவரித்

 தோன்றிவாழ் தொழில வாயினு மயிலை

 தீஞ்சிவை யுப்பிற் சிவணா தாங்கு

 ஞான மாக்கழல் 2மாணுற வீக்குநர்

 விடய வேலைத் தடையின்று படியினும்

 7.  தீதொடு படியுந ரல்லர்

 மாதுயர் கழியுநர் நீதியானே.

 இது ஞானவான்கள் எல்லாப் போகங்களுடனே கூடியிருந்தாராயினும் ஞானவிசேடத்தானே அந்தரங்க வேறு பாடுடைய ரென்றும், அறையிற்றிற் பற்றிலரென்றும் கூறியது.

 1-4 உரை: (கறையணல்……………மறையினோர்க்கே) மதியொடு புணர்ந்த 3உறையுடன் மறையினோர்க்கு- அறிவோடே கூடிய ஒளடத்ததாலும் மந்திரத்தாலும் பரிகாரமுடையோர்க்கு; 4கட் சவி - கண்ணாற் காணுந் தூரம் கேட்கவற்றான செவியையும்; 5கறையணல்- அணரியிலே கறையையும்; பகுவாய்ப் பாந்தள்- பெரிய வாயையு முடைய பாம்பின்; 6கடு ஒடுங்கு எயிற்றின் வடுவுறக் கிழித்தும்- 1நஞ்சு அடங்கப் படாநின்ற பல்லாலே வடுவுண்டாகக் 2கடித்தாலும்; 3கிழியாப் பண்பிற்று ஆங்கு- தீண்டாத இயல்பான இத்தன்மை போலவும்;4

 5-7 (செழும்பெரும் ………………..துப்பும்) செழும்பெரும் பொய்கை- 5செழுமையும் பெருமையுமுடைய பொய்கையிலே; 6உயரிய கொழுந்து விடுபு- உயரக் கொழுந்துவிட்டு; முள்தாள் தாரமரைக் 7கொழுமடல் அகல் இலை- 8முள்ளைத் தாளிலே யுடைத்தாகிய தாமரையின் 9செழுமையாய் அகன்ற மடலிலையில்; அப்புனல் 10தொத்தாத் துப்பும் ஆங்கு- அந்த நீர் 11தொத்தாத பொலிவு போலவும்;

 7-9. (மெய்ப்படு…….இன்றே ) மெய்ப்படு மந்திரம் மருந்தின்- உண்மையாகி மந்திர சத்தியாலும் ஒளடத சத்தியாலும்; மைந்தின் வெந்திறல் 12காரி கைதொடினும்- மிக்க வெவ்விய வலியையுடைய நஞ்சினை 13யருந்தினாலும்; பேரிடர் இன்று ஆங்கு- பெரிய துக்கமில்லாதவாறு போலவும்;

 10-12. (கரை ……………ஆங்கு) கரைபாய்ந்து கலித்த பெரு நீர் உவரி- கரையைப் பொருது சந்திக்கின்ற பெரு 1நீராகிய லவண சமுத்திரத்திலே; தோன்றி வாழ்தொழில் வாயினும்- செனித்து அதிலே வளரும் தொழிலையுடையவாயினும்; மயிலை 2தீஞ்சுவை உப்பின் சிவணாதாங்கு- மீன்கணம் இனிய 3ரசத்தைச் செய்கின்ற உப்போடு கூடாதவாறு போலவும்;

 13-16. (ஞானமாக்கழல்………….நீதியானே) ஞானமாக் கழல் மாணுற 4வீக்குநர்- ஞானமாகிய மகத்தாகிய வீரக்கழலை 5அழகுண்டாகக் கட்டினோர்; 6விடய வேலை தடையின்று படியினும்- 7கரையில்லாத விடயபோகமாகிய சமுத்திரத்திலே மூழ்கினும்; தீதொடு படியுந ரல்லர்- தமக்குக் குற்றமாகிய பந்தபாசத் தொடக்குறுவாரல்லர்; நீதியான் மாதுயர் கழியுநர் - முறைமையினாலே 8நித்திய நோயைப் புசித்துக் கழித்தலை யுடையோராவர், இத்துணையே எ-று.

 நித்தியநோய், பிரார்த்த கன்மம், ஆங்கு என்பது எல்லா விடத்தும் கூட்டப்பட்டது. ஒடு, அன்றே, அசை.

 அகவல் 45

 ஞானவான்களின் ஞானப்பிரகாசம்

 பூக்கமழ் பாணி நோக்கரு நாரங்

 கதிர்வா யருந்தியுங் கறையொடு படாஅ

 அருணன் போலவு மிருணிறம் புரையும்

 அகரு மாரமு நுகருத ருலர்பவும்

 5.  தீண்டத் தகா அக் காண்டகு 1திறத்தவும்

 புகைக்கொடி யெடுத்து வளைத்துடன் பருகித்

 துகள்படக் கடந்துந் துகளற் றோங்கும்

 அவிரொளி யுதாசனற் பொருவியு மிருவினை

 விடயத் தழுந்தியுஞ் 2சுடர்ப

 6.  அறிவனற் 3கெழீஇய நெறியி னோரே.

 இஃது ஆதித்தனும் அங்கியும் நல்லவையிற்றையும் தீயவையிற்றையும் புசித்தும் குற்றமில்லாதவாறு போல, ஞானவான்கள் செயலறுதி யுணர்ந்தபடியாலே பந்த வேதுவாய பதார்த்தங் களுடனே கூடி நிற்பினும், அவர் அவையிற்றை ஞானவனலாலே 4தகித்துப் பிரகாசிப்பர் என்று கூறியது.

 1-3. உரை: (பூக்கமழ்……..போலவும்) பூக்கமழ் பாணி- பூக்களால் வாசனையுடைத்தான நீரையும்; 5நோக்கரு நாரம்- நோக்கு தற்கரிதாகிய 6அசுத்தப் பள்ளத்தின் நீரையும்; கதிர்வாய் அருந்தியும்- கதிரென்னும் வாயாலே மாந்தியும்; 7கறையொடு படாஅ அருணன் போலும்-தனக்கு ஒரு தோடமுமில்லாத ஆதித்தனைப் போலவும்;

 3-8. (இருள்…………..பொருவியும்) இருள் நிறம்புரையும் 1அகருவும் ஆரமும்- இருளின் நிறத்தையுடைய அகிலும் சந்தனமும்; நுகருநர் உலர்பவும்- 2உண்டாரை மரிக்கப் பண்ணும் நஞ்சு வர்க்கமும்; காண்தகு தீண்டத் தகாத் திறத்தவும்- கண்ணாலே தரிசிக்கும் வர்க்க மாவதல்லது தீண்டு தற்காகாத 3காஞ்சொறி முதலான பதார்த்தமும்; 4புகைக் கொடி எடுத்து உடன் வளைத்துப்பருகித் துகள்படக் கடந்தும்- புகையென்னும் கொடியை எடுத்துக் கூடவளைத்துப் பருகிக் கொண்டு துகளாக ஆகருஷித்தும்; துகள் அற்று ஒங்கும் அவிர் ஒளி 5உதாசனற் பொருவியும்- தனக்கொரு குற்றமற்று ஒங்கும் விட்டு விளங்கா நின்ற ஒளியையுடைய அக்கினியைப் போலவும்;

 8-10. (இருவினை………..நெறியினோரே) இருவினை விடயத் தழுந்தியும்- பாவபுண்ணிய கன்மங்கட் கேதுவாகிய விடயங்களிலே மூழ்கினும்; 6அறிவனல் கெழீஇய நெறியினோர்- 7ஞான வனலாலே கன்மச்சேதம் பண்ணின முறைமையை யுடையோர்; 8சுடர்ப- அவையிற்றிற் பந்திக்கப்படாத ஒளிக்கிட மாக விளங்குவர், எ-று.

 9பொருவியும், எச்சத்திரிபு, ஏ, அசை,

 அகவல் 46

 பந்த மோக்ஷ காரணம்

 கரைகாண் கல்லாக் கற்பனை யளக்கர்

 வரைபொரு திரையின் மடிந்தோர் தகுதியும்

 மடியா துயர்ந்த நெடியோர் பகுதியும்

 நொடியக் கேண்மோ வொடியா வாய்மைப்

 5.  பார்ப்பன வாகை சூடித் தீத்தொழில்

 ஒரு மூன்று வளர்த்த வருமறை நாவின்

 வேள்வி யெடுத்த கேள்வி யாளன்

 மனத்தின் மாண்டன்று மாதோ 1பிறந்தை

 இனத்தின் மாண்டோ ரீடே வேள்வி

 6.  ஆசான் முதலிய வத்தொழின் முடிமார்

 தேசொடு நிவந்திசிற் பெரிதே யுள்ள

 மாசறக் களைவோர் மாண்பே வேறு

 2தினகரற் றொழிலுமுண் டவனே தனாஅது

 விரிகதிர் பரப்பி விசும்பு 3செலற் காலைப்

 7.  பெரிதுவந் திசினோர் பலரே யுவவாது

 துனிகூர்த் திசினோர் நனிமிகப் பலரே

 அவரே, இன்ன ராயினுந் தம்முறை யிதுவென

 உன்னா தேகு மன்னோன் போன்றும்

 அரும்பா வியரே மன்ற கரும்பின்

 8.  சிலைபொழி கணைபல தைப்ப

 நிலைதொலை பெய்தினுங் கலைவல் லோரே

 இஃது அஞ்ஞானத்தாற் கூடிய மமதை பந்த காரண மென்றும், ஞானத்தால் மமதை யொழிதல் மோக்ஷ காரண மென்றும் பாவனா விசேடங் கூறியது.

 1-4. உரை: (கரைகாண்கல்லா………..கேண்மோ) கரை காண்கல்லாக் கற்பனை அளக்கர்- 4எல்லை காணுதற்கரிதாகிய சங்கற்ப மான சமுத்திரத்திலே எழும்; வரைபொரு திரையின் மடிந்தோர் தகுதியும்- மலைபோன்ற திரையில் அழுந்துவோர் 1தகைமையும்; மடியாது உயர்ந்த நெடியோர் பகுதியும்- அதில் அழுந்தாதே நீங்கின பெரியோர் இயல்பும்; நொடியக் கேண்மோ - 2சொல்லக் கேட்பாயாக;

 4-9. (ஒடியா…………ஈடே) 3பிறந்தை இனத்தின் மாண் டோர் ஈடு- பிறப்புக்குக் காரணமாகிய 4ஈடணாத் திரயங்களிலே 5நிரந்தரமாய் மூழ்கினாரது சங்கற்பமாகிய செய்தியானது; கேள்வி எடுத்த ஒடியா வாய்மைப் பார்ப்பன வாகை சூடி- யாகம் பண்ணுவதற்காகச் 6சங்கற்பித்துக் கொண்ட கெடாத மெய்ம்மையாகிய 7பார்ப்பன வாகையை யணிந்து; தொழில் தீ ஒரு மூன்று வளர்த்த- ஒன்றுக்கொன்று தொழில் வேறு பாடான 8அக்கினி மூன்றையும் வளர்த்த; அருமறை நாவின் கேள்வி யாளன்- அரிய வேதங்களை யோதும் நாவையும் 9உபதேசத்தையு முடைய வைதிக வேதியன்; மனத்தின் மாண்டன்று- மனத்தாலே இந்த வைதீகக் கிரியையை யியற்று தலால் வரும் 10பலத்தைப் புசிப்பானாக என்று சங்கற்பித்துக் கொண்டு இருந்த அழகு போன்றிருக்கும்;

 9-12. (கேள்வி……………மாண்பே) உள்ளம் மாசறக் களைவோர் மாண்பு- 1சித்தத்தினுண்டாகிய கன்மத்தை க்ஷயம் பண்ணின பெரியோர்களது மாண்பாகிய செய்தி யெங்ஙன மெனில்; வேள்வி யாசான் முதலிய அத்தொழில் முடிமார் - வேள்வி வேட்பிக்கும் ஆசாரியன் முதலாக அந்தயாகக் கிரியையை முடிக்க ஏவல் செய்வோரனைவரும்; தேசொடு பெரிது நிவந்திசின்- 2அகங்கரியாது செய்வதினாலே அதிற் பலம் போல யாவருமறிய ஒளியுண்டாக வோங்கிய 3பெருமை யுடைத்தாயிருக்கும்;

 12-13. (வேறு ………………உண்டு) தினகரன் தொழிலும் வேறு உண்டு- இஃதொழிய ஆதித்தன் செயலினும் உளதாகிய வேறொன்றினைக் காட்டலாம்;

 13-16. (அவனே………மிகப்பலரே) அவன் தனாது விரிகதிர் பரப்பி விசும்பு செலற்காலை- அந்த ஆதித்தன் தன்னுடைய விரிந்த கதிரைப் பரப்பி ஆகாயத்திலே இயங்கு மிடத்து; பெரிது 4உவந்திசினோர் பலர் - அவனைக் கண்டு மிகவும் பிரியப்பட் டோர் பலர்; உவவாது 5துனிகூர்ந்திசினோர் நனிமிகப் பலர்- அங்ஙனமன்றி விதனப்பட்டோர் அவரினும் மிகப்பலர்;6

 17-19. (அவரே ………..போன்றும்) அவர் இன்னராயினும்- இவ்விருதிறத்தவரும் இத்தன்மையரான விடத்தும்; தம்முறை இதுவென உன்னாது ஏகும் அன்னோன் போன்றும்- அவர்கள் 1ஊழ் முறைமையதுவே யென்று 2நினையாதே யியங்கும் அத்தன்மையனான ஆதித்தனைப் போன்றும்;

 19-21. (அரும்பாவியரே…………கலைவல்லோரே) கலைவல்லோர் - 3சாத்திரங்களைக் கற்றுவல்லவரான ஞானவான்கள்; 4கரும்பின் சிலை பொழி கணை பல தைப்ப- காமதேவனுடைய கரும்பு வில்லினின்றும் பொழியப்பட்ட புட்பபாணங்கள் பலவும் தைக்கப்பட்டு; 5நிலைதொலைவு எய்தினும்- நிலை கலங்குதல் உண்டாயினும்; மன்ற 6அரும்பாவியர்- நிச்சயமாக அரிய ஞானபாவத்தை யுடையராயிருப்பர் எ-று.

 மோ, மாது, ஓ, ஏ, அசை, நிவந்திசின் என்பதில் இசின், அசை.

 அகவல் 47

 ஞான சித்தர்க்குத் தேகம் பாரம்

 வாகை 7வெண்ணெற் றொலிப்பக் கூகை

 குழறுகுரல் பல்லியந் துவைப்ப வோரி

 8தழங்குகுரன் முரசந் ததும்ப விளிந்தோர்

 பிணத்தின் கைவிளக் கெடுப்பக் கூளிக்

 5.  கணங்கொள் பேரவை யணங்குநட நவிற்றுங்

 காடுபதி கொண்ட வொருவற் றரூஉம்

 ஆடவ னுள்ளங் கடுப்ப நீடிய

 மலப்பொதி யிரிய நூறி யுரைத்தொடக்

 குணர்வொடு கழிந்த விணையி லின்பத்

 தென்றுகொ லெய்துஞான் றென்றே நன்று

 1நெடிது நினைகுவர் மாதோ

 வடுநீங்கு சிறப்பின் வயங்கி யோரே.

 இஃது அரும்பாவிய ரென்றது குறித்துக்கொண்டு தேகபார மொழித்தலால் 2ஞானசித்தர்க்குத் தேகபாரம் தாங்குதற் கரி தாயிருக்கு மென்று சொல்லியது.

 1-7. உரை: வாகை வெண்ணெற்று ஒலிப்ப- வாகை மரத்தின் வெள்ளிய 3நெற்றுப் பறையாகச் சத்திக்க; கூகை குழறு குரல் பல்லியம் துவைப்ப- கூகைகள் குழறுகின்ற குரல் 4பல்லியமாக முழங்க; ஓரி 5தழங்கு குரல் முரசம் ததும்ப- 6ஓரிகள் கூப்பிடுங் குரல் முரசாகி அறைய; விளிந்தோர் பிணத்தின் கை விளக்கு எடுப்ப- இறந்தோர் உடலாகிய வேகிற பிணத்தின் கையைச் சில பேய்கள் கவ்வியாடுவதனால் அது 7விளக்காக எடுத்துக்காட்ட; கூளிக் கணம் கொள் பேரவை8 அணங்கு நடம் நவிற்றும் காடு- பேய்க் கூட்டங்கள் கூடின பெரிய ஒலக்கத்திலே ஒரு பெண் பேய் கூத்தாடுதலைச் செய்யும் மயானத்தை; 9பதிகொண்ட உருவன் தரூஉம் ஆடவன் உள்ளம் கடுப்ப- முடி விடமாகவுடைய ஒருவனது சவத்தைக் கூலிக்காகச் சுமந்து வருகிற புருடன் இதயத்திலே விரைய அப்பிணச் சுமையைப் போகட விரும்பின தன்மைபோல;10

 7-12. (நீடிய …….வயங்கியோரோ) நீடிய மலப்பொதி இரிய நூறி - சுமந்து வருகிற மும்மலங்களாலான தேக பாரத்தைக் கழியப் போகட்டு; உணர்வு உரை தொடக்கு கழிந்த - 1மன வாசகங்களில் தொடக்கினைக் கடக்கப்பட்ட; இணையில் இன்பத்து நன்று எய்து ஞான்று என்று கொல் என்று- உவமை யில்லாத 2பரமானந்தக் கடலாகிய 3முத்தியிற் குளிக்கும் நாள் எந்நாளோ என்று; நெடிது நினைகுவர்- 4மிகவும் நினைத்துக் கொண்டிருப்பர்; 5வடு நீங்கு சிறப்பின் வயங்கியோர் -6குற்றமற்றதாகிய ஞான சித்தியால் விளக்க முற்றோர். எ-று.

 ஒடு, மாது, அசை, கொல், ஐயம்.

 அகவல் 48

 ஞானசித்தர்க்கு வினையிற் பற்றின்மை

 நஞ்சு வீற்றிருந்த வெஞ்சினைப் பகுவாய்

 போர்வை நீத்த புயங்கத் தன்ன

 ஆசறு படிவத் தான்றோர் நிற்க

 நிலஞ்சேறு படுத்த கருங்கைக் கொண்மூப்

 5.  பொரியரை விளவின் புனிறுதீர் பெரும்பழம்

 7அரிதுபெற் றயின்றதன் 8வறுமை போலத்

 தெரியாத் தேர்ச்சித் 9தீரா வுள்ளத்துப்

 பெரியோர் விட்டனர் பிறழா வினையே

 10அரியவு முடையதென் றுளதே யிரியா

 6.  துடனுறை பழைமை வூங்கே கடனறி

 1மண்வினை மாக்க டம்வினை முடிமார்

 திகிரி யுருட்டி யொருவி யாங்கும்

 வருத லோவா மாறுங் குவிவாய்த்

 தசும்புறை யிங்காங் கசும்பறத் துடைத்தும்

 7.  இருங்கடி யிகவாப் பெருங்கட னல்லதை

 உடையதை யுடையரோ மற்றே யுடையதை

 வரையளந் தறியாத் திசையருந் 2திருத்தப்

 பேரா னந்தப் புணரி

 ஓராங்குப் படித லுடையோ ரீண்டே.

 இது தேகபாரத்தைக் கழித்து முத்தியைக் கூடும் நாள் எந்நாளென்னும் ஞனேசித்தர்க்குப் பூருவ வாசனையாலுள்ள அனுபவமல்லது (அவர் வினையிற் பற்றிலரென்று கூறியது.

 1-3. உரை: (நஞ்சு……..நிற்க) 3வெஞ்சின நஞ்சு வீற்றிருந்த பகுவாய்- வெவ்விய சினத்தையும் நஞ்சுக்குச் சுதேசமாயிருக்கிற பெரிய வாயையுமுடைய; போர்வை நீத்த புயங்கத் தன்ன - தோலுரித்த பாம்பையொத்த; ஆசறு படிவத்து ஆன்றோர் 4நிற்க - புறச்சுத்தி பண்ணின தூய 5விரதத்தை யுடைய 6அறிவுடையோர் அழிவின்றியே நிற்க;

 4-8. (நிலம்……….வினையே) நிலஞ்சேறு படுத்த 7கருங்கைக் கொண்மூ- மதத்தாலே பூமியைச் சேறாக்கிய பெரிய கையை யுடைய யானை; பொரியரை விளவின் புனிறுதீர் பெரும்பழம்- பொரிந்த அடியையுடைய விளாவினது உள்ளே இளம்பருவமறப் பழுத்த பெரிய பழத்தை; அரிது பெற்று அயின்ற தன் வறுமை 1போல- அரிதாக எடுத்துக்கொண்டு புசித்தலால் அதனில் உள்ளொரு பற்றுமின்றியுளதாந் தன்மை போல; தெரியாத் தேர்ச்சி தீரா உள்ளத்து2 -பிறராலறிதற் கரிதாகிய கன்மச் சேதவுபாயத்தைக் கடைப்பிடித்தலின் நீங்காத வுள்ளத்தை யுடைய; பெரியோர்- ஞானவான்கள்; 3பிறழாவினை விட்டனர் - புறச்சுத்தி யின்றியே அந்தரங்க சுத்தியுடையராய்க் கெடுத்தற்கரியதாகிய கன்மத்தைச் சேதம் பண்ணியேயிருப்பர்;

 9-10. (அரியவும்…………..பழைமை) அரியவும் உடைய தொன்றுளது- ஆயினும் அவரை 4விடுதற்கரிதாய் இருந்ததுவு மொன் றுண்டு; உடன் உறை பழைமை- அஃது அனாதியாகப் பழகிப் போந்த சரீர வாசனை; 5இரியாது- பிரார்த்த கன்மம் புசித் தறுமளவும் அஃது ஒழியாது; அஃது எங்ஙனமென்னில்,10-13. (ஊங்கே……………ஓவாமாறும்) ஊங்கு கடனறி மண்வினைமாக்கள்- இவ்விடத்தே தம் கிரியைகளை மிகவும் அறியும் குலாலர்; தம்வினை முடிமார்- தம் காரியம் முடிப்பான் காரணமாக; திகிரி உருட்டி 6ஒருவியாங்கும் - திகிரியை விசை கொளச் சுழற்றி அச்சுற்றுத லொழித்த விடத்தும்; வருதல் 1ஓவாமாறும்- சிறிது பொழுது தானே சுழன்று ஓயுமாறு போலவும்;

 13-16. (குவிவாய்………….மற்றே) குவிவாய்த் தசும்புறை இங்கு- குவிந்த வாயையுடைய குடத்திலிட்டிருந்த பெருங் காயம், அசும்பறத் துடைத்தும் 2இருங்கடி இகவாப் பெருங்கடன் 3ஆங்கு - அக்குடத்திலே பற்றறத் துடைத்தாலும் மிக்க நாற்றம் அக்குடத்தினின்றும் ஒழியாத பெரியதன்மை போலவுமாம்; அல்லதை- அல்லாமல்; 4உடையதை உடையரோ -5அகப்புறப் பற்றாகிய உயிர்ச் சார்பு பொருட்சார்பில் பற்றுடையார்போல இவர்கள் இருக்குமது பற்றாகவற்றோ;

 16-19. (உடையதை…………….ஈண்டே) உடையதை- இனி இவருக்கு உடைய தாவது யாதென்னில்; வரையளந் தறியா- எல்லை யளத்தற் கரிதாகிய; 6திரையரும் பேரானந்தப் புணரி திருத்தம்- அசைவில்லாத பெரிய ஆனந்த மாக்கடலாகிய தீர்த்தத்திலே; ஓராங்குப் படிதல் உடையோர்- இடைவிடாதே மூழ்குதலையுடைய ராவர்; ஈண்டே - இந்த எடுத்த சனனத்திலே, எ-று.

 புனிறு, இளமை, ஏகாரங்கள், அசை. ஐ- சாரியை. ஓ- எதிர் மறை. மற்று- அசை.

 அகவல் 49

 உபதேசப் பயன்

 நஞ்சே பாம்புண் டீநீர் மாதோ

 அஞ்செஞ் சேதா வுண்ணற லமிழ்தே

 விஞ்சை வேந்தர் ஞானம் வீடே

 வஞ்சர் ஞானம் வடுவொடு படுமே

 இது 1மேற்கூறிய பக்குவர்க்கும் அபக்குவர்க்கும் செய்யும் உபதேசத்தால் வரும் பயன் கூறியது.

 உரை: (நஞ்சே………….மாதோ) பாம்புண் தீநீர் நஞ்சு- சுவை யுடைத்தாகிய தண்ணீர் பாம்பு புசித்தால் 2நஞ்சா மாறு போலவும்;

 2.  (அஞ்செஞ்சேதா ………….அமிழ்தே) அம்செம் சேதா உண் அறல் அமிழ்து- அந்த நீரே அழகிய குணத்தையுடைய செவ்வையாகிய பசுவானது புசித்தால் அமிழ்தத்தை யொத்த 3பாலாமாறு போலவும்;

 3.  (விஞ்சை……வீடே) விஞ்சை 4வேந்தர் - பக்குவராகிய ஞானவான்கள் பெற்ற; 5ஞானம் வீடு - உபதேசம் முத்திக்கு ஏதுவாய் முடியும்;

 4.  (வஞ்சர்…………படுமே) 6வஞ்சர் ஞானம் - அபக்கு வராகிய 7கிருத்துமர் பெற்ற உபதேசம்; வடுவொடுபடும்- பிறரையும் தங்களையும் கெடுத்து உபதேசிக்கின்ற தேசிகர்க்கும் 8குற்ற மாய் முடியும் எ-று.

 1இதனால் பக்குவா பக்குவம் பார்த்து அனுக்கிரகம் பண்ண வேண்டுமென்பது கண்டுகொள்க. அறல்- நீர். 2செஞ்சேதா என்ற விடத்து முதற்கண்ணின்ற செம்மை குணத்தையும், மற்றது இலக்கணத்தையும் குறித்து நிற்பதால், பண்பைப் பண்பு விசேடித்ததன்று என அறிக. ஏகாரம், நான்கும் தேற்றம். மாது, ஒ, ஒடு, அசை3

 அகவல் 50

 மாயாமல பந்தக்ஷயம்

 எற்புக் குப்பையைப் புட்குலத் துணவை

 நரப்புக் கருவியைத் திரைப்பெருஞ் சேக்கையைப்

 புன்புல வாரியைத் துன்புக் குறையுளை

 ஈருட் போர்வையை வேரின் விளைவைத்

 5.  தசைப் பெருந்திரளை நசைக்கின் செவிலியை

 மூளைச் சேற்றை முழுமலக் குழுவை

 ஞாளிக் கிரையைப் பூளைப் பொதியை

 வெண்ணிணப் பெருமையைப் புண்ணின் பொற்பைக்

 கொடுமைக் கோதையை யடுசினத் தமலையை

 6.  மாசின் றேசை வழும்பின் வைப்பைத்

 தோலின் வேலியைத் துகளின் றுப்பை

 எரிப்பெருங் கொள்ளையை நரிக்கா ரயினியை

 பெருநோ யறையைக் கருநரைக் கமத்தைக்

 குறும்பிக் கொண்டலை இறும்பற் குறைவைப்

 7.  புழுப்பா சறையை யழுக்கார் 4புருவை

 பஞ்ச விந்தியப் பாகர்க் காகா

 அஞ்சா மதகரி யடவியை வஞ்ச

 5அரவுவா ழளையை நுரைவா யருவியை

 வாத வழுவைத் தீதுக வணைத்த

 8.  வெளிலைப் பித்தின் விளிவருங் குறும்பைக்

 குரைவிரி யிருமற் றிரைவிரி புரையைக்

 காமச் சும்மையைக் கவலைக் கெல்லையை

 நாமத் தரணைத் தீமைத் திறலை

 அழுக்கா றணையும் விழுப்பெருந் தெருவை

 9.  ஏமாப் பிரலை விலங்கலைத் தீமை

 இருஞ்சுறவு கலித்த திருந்திரும் பௌவத்தை

 மறத்தின் மன்னை வழுக்கின் புக்கிலை

 இறப்பின் கேதன மிதனை மறப்பிற்

 கொண்டனை யானெனக் கொளலொழித் தொண்டிறன்

 10. மாய வினைய தான தேயாத்

 தனுகரண புவன போகம்

 எனும்வகை யறிநனி துனியினி துகவே

 இது மாயாமல பந்தக்ஷயம் கூறியது.

 உரை:- 1. 1எற்புக் குப்பையை- எலும்புக் கூட்டத்தை புட்குலத் துணவை- பறவை வருக்கத்துப் போசனத்தை:

 2.  நரப்புக் கருவியை- 2நரம்பென்னுங் 3கயிற்றாலே கட்டப் பட்டவதனை; திரைப்பெருஞ் சேர்க்கையை- 4திரைதலுக்குப் பெரிய சயனத்தை;

 3.  புன்புல வாரியை- 5புல்லிதாகிய புலாற் கடலை; துன்புக்கு உறையுளை- துக்கத்துக்குக் குடியிருப்பை:

 4.  ஈருட் போர்வையை- ஈரலை யுள்ளேபொதிந்த போர்வையை; 1வேரின் விளைவை- வியர்வைக்கு விளை நிலத்தை;

 5.  தசைப்பெருந்திரளை- மாங்கிசக் கூட்டத்தை; 2நசைக்கு இன் செவியை- 3ஆசையாகிய குழவியை யினிதாக வளர்க்கும் செவிலித்தாயை;

 6.  மூளைச் சேற்றை- மூளைக்குழம்பை; முழுமலக் குழுவை- சருவ மலத்தின் குழாத்தை;

 8.  ஞானிக்கு இரையை- நாய்கட்கு உணவாவதனை; 4பூளைப்பொதியை- பூளைப் பஞ்சு போலே நிலையில்லாத வற்றாலே கட்டிய பொதியை;

 9.  வெண்ணிணப் பெருமையை- வெள்ளையான நிணத்தின் மிகுதியை; புண்ணின் பொற்பை- 5புண்ணின் பொலிவை

 10. 6கொடுமைக் கோதையை- 7கொடுமையென்னும் துரு நாற்ற மடிக்கும் பூவால் தொடுக்கப்பட்டதொரு மாலையை; 8அடு சினத்து அமலையை- கொல்லுகிற சினத்தின் 9செறிவை;

 11. 10மாசின் தேசை - இராகத் துவேஷங்களை வெளிப் படுத்தும் ஓளியாகிய அதனை; வழும்பின் வைப்பை- 11நிணத் தாற் பூசப்பட்ட கூரையை;

 7.  1தோலின் வேலியை- தோலை வேலியாகவுடைய தனை; 2துகளின் துப்பை- குற்றத்துக்கு வலியானவதனை;

 8.  எரிப்பெருங் கொள்ளையை- அக்கினியாலே மிகவும் கொள்ளை கொள்ளப் படுவதனை; நரிக்கு ஆர் அயினியை- நரிகள் திருத்திவரப் புசிக்கும் உணவை;

 9.  3பெருநோய் அறையை - 4பிறப்புக்குக் காரணமா யிருப்பதோர் அறை வீட்டை; கருநரைக் 5கமத்தை- பெரிய நரையாகிய மேகத்தை;

 10. குறும்பிக் கொண்டலை- அழுக்கைக் குறும்பியாகச் சொரியும் 6வருடத்தை; 7இறும் பற்கு உறைவை- உதிரக் கடவ பற்களுக்கு இருப்பிடத்தை;

 11. புழுப் பாசறையை- கிருமிகள் புகவிட்டிருக்கும் படைவீட்டை; 8அழுக்கார் உருவை - பொல்லாங்காலே 9சமைக்கப் பட்ட உருவத்தை;

 16-17. (பஞ்ச ………….அடவியை) பாகர்க்கு - 10அந்தக் கரண மென்னும் பாகராலே; ஆகா- வணக்குதற் காகாத; பஞ்ச இந்திரிய அஞ்சா மதகரி அடவியை- பஞ்சேந்திரிய மாகிய அச்சமில்லாத மதயானை யுலாவும் அடவியை;

 17-18. 1வஞ்ச அரவுவாழ் அளையை- 2வஞ்சகமாகிய சர்ப்பம் உறையும் பொந்தை;

 18. நுரைவாய் அருவியை- 3நுரையை யொன்பது வாயிலாலே அருவிபோலச் சொரிவதனை;

 19-20. (வாத …………..வெளிலை) வாத 4வழுவை - வாதமாகிய யானையை; தீதுக அணைத்த வெளிலை- குற்றமறக் கட்டப்பட்ட கம்பத்தை;

 20. பித்தின் விளிவரும் 5குறும்பை- பித்தமிருக்கும் கெடு தற்கரிய அரணிருக்கையை;

 21. (குரைவிரி………புரையை) குரைவிரி இருமல்- ஓசைமிக்கிருக்கின்ற சிலேத்துமமாகிய கடலின்; திரைவிரி 6புரையை - 7அலை விரியத் தாங்கும் மலையை;

 22. காமச் சும்மையை- 8மிக்க காமத்தாலே பிறர் பலர் அலர் தூற்றப்படுவதனை; 9கவலைக்கு எல்லையை- துக்கத்துக்கு முடி வெல்லையாயதனை;

 23. 10நாமத்து அரணை - 11அச்சத்துக் கிருப்பிடத்தை; தீமைத்திறலை- மெய்யாற் செய்யுந் தீமைக்கு வலிபெற்ற வதனை;

 24. (அழுக்காறு ……..தெருவை) அழுக்காறு அணையும்- பிறர் செல்வ முதலியவற்றைக் கண்டாற் பொறாமை சேரும்; விழுப்பெருந்தெருவை- 12துன்பத்தையுடைய பெரிய வீதியை;

 25. 13ஏமாப்பு இரலை விலங்கலை- 14செருக்காகிய மான் வாழும் மலையை;

 25-26. (தீமை………..பௌவத்தை) 1தீமை இருஞ்சுறவு கலித்த- மனத் தோட மாகிய பெரிய சுறாமீன் வளரப்பட்ட; திருந்து இரும் பௌவத்தை- 2திருந்திய பெரிய சமுத்திரத்தை;

 27. மறத்தின் மன்னை - மறத்துக்கு நிலையான அதனை; வழுக்கின் புக்கிலை- 3அவஞாயம் புகுந்திருக்கும் சுதேசத்தை;

 28. இறப்பின் கேதனம் இதனை- சாதற்குக் கொடிகட்டி யிருக்கின்றதாகிய இத்தனைக் குற்றமுடைய இத்தேகத்தை;

 28-29. (மறப்பின்…………..யானென) 4மறப்பின் யான் எனக் கொண்டனை- அஞ்ஞானத்தாலே நான் என்று கொண்டாய்;

 29-32. (கொளலொழித்து …………….இனிதுகவே) கொளல் ஒழித்து- அவ்வாறு கொள்ளுமதனை ஞானத்தாலே விட்டு நான் அல்ல வென்று கொண்டு; 5ஒண்திறல் மாயா வினைய தாய- அழகிய வலியையுடைய மாயாகாரியமான; தேயா தனுகரண புவன போகம் எனும் வகை- ஒழியாத தனுகரண புவன போக மென்னும் 6வகைகளின் வேறுபாட்டை; நனி துனி இனிதுக அறி- உன்னை மிகவும் கூடிய தோடமானது கெட்டற; 7அறிவாயாக, எ-று.

 8துனி, விகாரம், ஏ, அசை.

 அகவல் 51

 ஆணவமல பந்தக்ஷயம்

 ஈறறி வுக்கெவ னெவனோ மற்றதன்

 மாறறி வுக்கறி மற்றே கூறின்

 இளைத்தன் மற்றெவ னெவனோ நின்ற

 தளிர்த்தன் மற்றுயர் பின்மை 1யுளங்கொள

 5 அறிவுரு வதனோ டநித்த மன்மையின்

 மறுவற 2னெறியிவ ணெறிபட நின்ற

 3பந்தம் போகம் போக நிறுத்தலும்

 வந்தது மாயை வினைமலந் தந்தமின்

 மாயை பந்தம் வளங்கெழு போகந்

 10. தேயா வல்வினை திகழ்தரு 4மலத்துப்

 போக 5நிறுத்துவ தாம்வினை முறுகிய

 போகந் தந்து புறங்கொடுத் தினிதா

 ஏகற் கொல்லா தாகி வேகத்

 தியாத்தலைத் துடைத்தலி னெறியிறை யுண்மை

 11. பார்த்தலிற் பறிமல மனாதி கூர்த்த

 6பிறப்பிறப் பறா அச் சிறப்பி லாகத்தில்

 வாசனை யகலத் தோசொடு நிவந்த

 அமலனைச் சமாதி யமல

 விமல செய்ம்மதி 7விருப்பினை யினிதே.

 இஃது ஆணவமல பந்தக்ஷயம் கூறியது.

 1-4. உரை: - (ஈறறிவுக்கு……….உளங்கொள) அறிவுக்கு ஈறு எவன்- 1ஆன்மா வுக்குச் சாதல் எவ்வண்ண மென்றும்; அறிவுக்கு அதன்மாறு எவனோ- அவ்வான்மாவுக்கு 2அச்சாதலின் மாறான பிறத்தல் எவ்வண்ண மென்றும்; 3இளைத்தல் எவன்- அவ்வான்மாவுக்கே இளைத்தல் எவ்வண்ணமென்றும்; நின்ற தளிர்த்தல் எவனோ- இளையாமல் பருத்தல் எவ்வண்ண மென்றும்; உயர்வின்மை எவனோ கூறின்- 4முப்பது வயதளவும் வளர்தல் எவ்வண்ணமென்றும் பின் வளராமை எவ்வண்ண மென்றும் 5கேட்கும் நினக்கு இப்பொருளிருக்கும்படி சொல்லின்; உளம்கொள அறி- உள்ளம் கொள்ள அறிவாயாக;

 5-6. (அறிவுரு……….நெறி ) அறிவு உருவதனோடு அநித்தம் அன்மையின்- 6சேதனமாகிய ஆன்மா தேகமாகிய அத்துடன் அநித்தியப்படாமையால்; இவண் மறுவறல் நெறி- நீ கேட்ட 7பொருள் தேகத்துக்கே யென்று கொண்டு தேகிக்கல்லவென்று இவ்வாறு குற்றமற வறிந்து 8போகடு; இது பசுவுண்மை அறிகை.

 6-8. (இவண்………..மலத்து) இவண்- இங்ஙனம்; நெறிபட நின்ற பந்தம் 9போகம் - முறையாக நின்றனுபவிக்கும் துக்கமும் சுகமும்; போகம் நிறுத்தலும்- இச் சுகதுக்கங்களைத் தற்சொரூப மறியாமல் மறைத்துப் புசிப்பித்தலும்; வந்தது- 1உண்டாகியது; மாயை வினை மலத்து - முறையே 2மாயாமலத்தாலும் கன்ம மலத்தாலும் ஆணவமலத்தாலுமாம், காண்;

 8-14. (அந்தமில்……….நெறி) 3அந்தமில் மாயைப் பந்தம்- இனிமேலே சொல்லப்பட்ட நித்தியமாயிருக்கிற மாயாமல காரியமான தேகத்திலே நின்று முற்பவத்திற் செய்துகொண்ட தாகிய; தேயா - வல்வினை- கெடாத வலிதாகிய கன்மமலத்தால்; வளங்கெழு போகம்- வளப்பமுடையவான சுகதுக்கங்களை; திகழ்தரு மலத்துப் போகம் நிறுத்துவதாம்- விளங்குகின்ற மலமானது 4மறைத்துப் புசிப்பிக்கும்; முறுகிய வினை போகம் தந்து- 5அதுதான் பக்குவப்பட்ட கன்ம பலங்களைப் புசிப் பித்து; புறங்கொடுத்து இனிதா ஏகற்கொல்லாதாகி- உன்னை விட்டு நீங்குதற்கு இசையாதே; வேகத்து யாத்தலை 6இன்நெறி துடைத்தல்- அகங்காரத்தாலே பந்தித்தலை இனிய கன்மச்சேதவுபாயத்தாலே தவிர்வாயாக;

 இது பாசமறைப்பு விடுகை.

 14-15. (இறை…………..மலம்) இறையுண்மை பார்த்தலின்- பதியுண்மை யறிவால்; மலம்பறி- ஆணவமலத்தைக் 1கெடுப் பாயாக;

 15-19. (அநாதி……………..இனிதே) அநாதி கூர்த்த - அநாதியாகமிகுந்த; பிறப்பு இறப்பு அறாஅ- பிறந்திறந்து வரும்; 2சிறப்பில் ஆகத்தில்- 3வருத்தத்தைத் தருவதாகிய தேகத்தில்; 4வாசனை அகல்- பிரார்த்த கன்மபலம் புசித்தறு மளவும்; 5அமல விமல விருப்பினை - மிகவும் சுத்தமான விருப்பத்துடனே; தேசொடு நிவந்த அமலனை- பிரகாசமாயோங்கிய நின்மலனை; இனிது 6சமாதி செய்து மதி- நீ இனிதாகச் சமாதி பண்ணியிருப் பாயாக எ-று.

 7இது பதியுண்மை யறிந்து அதனோடு இயைந்திருக்கை. மற்றென்கிளவிகள் வினைமாற்று. 8அமலம், விமலம் - ஒரு பொருட் பன்மொழி, ஐ, சாரியை.9

 அகவல் 52

 **cஞானவான்களைப் பாசம்வாதியாமை

 பதிபசு பாசு மதியோர் வரத

 உலையா வென்பதைத் தலைநனி 1நிறீஇ

 உடையா தாயி னொருபெரும் பாசம்

 அடையா வீடெனக் கடைநனி 2கழறின்

 5.  தன்னுரை மலைவு முன்பின் மலைவும்

 அன்னவை யருளோ யாமெனிற் 3பன்னிய

 4உடையா மாண்டவ ரடையா பொடிபட

 மாமலை யன்ன மரந்தெறுங் கடுங்கனல்

 தாமரை யன்ன தளிர்க்கை தாங்கினும்

 6.  மந்திர மாக்கட் கந்தர மியாதே

 செம்பிது செறிந்த புன்புறக் களங்கமிது

 என்றுரை கூடா வெழில்வளர் சீருணஞ்

 சித்துநீர் செறிந்த 5தொத்தே மிக்க

 6விடங்கெழு பெருவலி யுளங்கொண் மந்திரத்

 7.  தடங்கிய தன்மையு மற்றே 7குடங்கர்க்

 கலங்குநீ ரில்ல நலங்கிளர் விழுக்காழ்

 8அணைந்த மாறௌ விணங்கிறந் தகன்ற

 பாசப் பெருவலி9 தடுத்தனர்

 மாசின் ஞான மன்பெருந் தகையே

 இது பாசமும் நித்தியமும் வியாபாகமுமாயிருப்பினும் ஞானவான்களை வாதியாதென்று கூறியது.

 1-6. உரை: - (பதிபசு………….எனில்) மதியோர் வரத- ஞான வான்களுக்குச் சிரேட்டமாயுள்ள ஞானா சிரியனே; பதி பசு பாசம் உலையா என்பதை- பதியும் பசுவும் பாசமும் நித்திய மென்னுமதை; 1தலைநனி 2நிறீஇ - முன்பே மிகவுமருளிச் செய்து வைத்து; கடை- பின்பு; ஒரு பெரும் பாசம் 3உடையாதாயின் வீடு அடையா எனநனிகழறின்- உவமையில்லாத மகத்தாகிய 4பாசச்சேதம் இல்லாவிடத்து முத்தி சித்தியாது என்று மிகவும் அருளிச் செய்வாயேல்; 5அருளோய்- 6அருளையுடையோனே; அன்னவை- அவ்வசனங்கள்; தன் உரை மலைவும் முன்பின் மலைவுமாம்- 7சுவவசன விருத்தமும் சாத்திரத்துக்குப் பூருவாபர 8விருத்தமுமாய் இருந்தனவல்லவோ; எனில்- என்பாயாகில்;

 6-7. (பன்னிய……..அடையா) பன்னிய உடையா- இங்ஙனம் சொல்லப்பட்ட முப்பொருளும் 1நித்திய வியாபகங்களே; மாண்டவர் அடையா- அவையிற்றிற் பாசங் களானவை மாட்சி மையுடையவரான ஞானவான்களை 2வாதிக்க மாட்டாவாம்; என்போல வென்னில்.-

 7-10. (பொடிபட ………………..யாதே) 3மாமலை அன்ன மரம் பொடி படத் தெறும் கடுங்கனல்- பெரிய பருவத்தைப் போலத் திரண்டு உயர்ந்த மரத்தைப் பொடியாகச் சுட்டெரிக்கும் மிக்க நெருப்பை; 4தாமரை யன்ன தளிர்க்கைதாங்கினும்- தாமரைப்பூவின் இதழ் போன்ற மெல்லியகையிலே தரித்தாலும; மந்திரமாக்கட்கு அந்தரம் யாது- மாந்திரிகருக்குக் கேடாகிய விதனம் யாதாயினுமுண்டோ;

 மந்திரவாதிகளை அக்கினி வாதியாமையல்லது மற்றுள்ள விதனம் நீங்காமையால், பாசம் வாதியாமையல்லது 5சுத்தராவ தில்லை யாலோவென்று வினவில்,-

 11-13 (செம்பிது ………….ஒத்தே) 6செம்பு இது என்று - செம்பு இதுவென்றும்; செறிந்த புன்புறக் களங்கம் இது என்று-இதனுடன் கூடிய புறத்தே விளங்கும் 1புல்லிய களிம்பூ இது வென்றும்; உரை கூடா எழில் வளர் சீருணம்- பிரித்துச் சொல்லுதற்கரிய அழகு மிகுந்த செம்பிலே; 2சித்து நீர் செறிந்தது ஒத்து- 3இரதம் செறிந்தால் பொன்னானவாறு போலச் சுத்தனாவா னென்றருளிச் செய்ய;

 செம்பிலே குளிகையிட்டு உருக்கினல்லது சுத்தமாகாத படியாலே, 4வியாபகமான ஆன்மாவுக்கு ஏகதேசமான தேகத்தில் பாசச் சேதம் செய்தவாறு எவ்வண்ணமென்ன,-

 13-15. (மிக்க………….அற்றே) உளங்கொள் மந்திரத்து- உள்ளத்திலே மந்திரத்தைத் 5தியானிக்க; மிக்கவிடம் கெழு பெருவலி 6அடங்கிய தன்மையும் அற்று- தேகமுற்றும் வியாபித்த மிக்க நஞ்சினிடத்துப் பொருந்திய பெரிய சத்தியானது 7பாதாதி கேசமளவும் 8கலவாமல் தடுப்புண்டவாறு போலவாம் என்று அருளிச் செய்ய;

 நித்திய நோய்கள் சரீரியாவான் உடையனவாதலால், இவை தோற்றின காலங்களில் 9ஞானத்தையே குறித்துக் கொண்டிருக்க வொண்ணாமையால், மந்திரம் தியானியாத பொழுது நஞ்சு வாதிக்கு மாறு போல ஞானமும் இவனுக்குச் சித்தியாக மாட்டாதோவெனின்,-15-19. (குடங்கர்……….பெருந்தகையே) 1குடங்கர் கலங்கு நீர் - குடத்திலெடுத்த மண்ணீரானது; 2இல்லம் நலம் கிளர் விழுக்காழ்- தேற்றின் மரத்துண்டாகிய அழகு விளங்கிய சிறந்த விதையையிட்டு; அளைந்த மாறு என- தேற்றின் பின்பு மறித்துக் கலங்கினாலும் தேற்றாமலே தெளியுமாறு போலே; மாசில் ஞானம்- குற்றமற்ற ஞானவனாலே; 3இணங்கு இறந்தகன்ற பாசப் பெருவலி தடுத்தனர்- ஞானிகளும் உவமை யில்லாத மகத்தாகிய பாசத்தினுடைய பெரிய சத்தியைச் சேதம் பண்ணினபின், பிரார்த்த கன்மம் புசித்தற் கேது வாகிய நித்திய நோய்கள் நலியினும், 4தெளிவுக் காட்சி 5யுடையராயிருப்பர்; பெருந்தகையே- பெருந்தன்மை யுடையோனே, அறிக எ-று.

 காழ், வித்து, ஏகாரம் தேற்றம். அற்று, குறிப்புமொழி ஏ, மன்- அசை.

 பாசச் சேதம் முடிந்தது

 பதி நிச்சயம்

 அகவல் 53

 உயிர்கட்குப் பற்றாவது பரமன் சீர்பாதம்

 திருவின் செல்வி யொருதனிக் கொழுந

 புலமை சான்ற கலைமகள் கணவ

 வீரிய மடந்தை 1பேரிசைக் கிழவ

 தவத்தின் றலைவ 2தருமத் துறைவ

 5.  அருளோ னருளோ னென்ப நீயே

 அருளோ னாவதை யெவனோ 3தெருளக்

 கண்ணிற் காணா ராயினுங் கனவின்

 நண்ணுங் காலை நல்லுயிர் 4செகுக்கும்

 5பேயே யாயினும் பிரியினின்பம்

 6.  வாயா தென்றே மதியோ ரறைப

 மரீஇ நாளு நின் 6னன்றி யாரும்

 அறிய வாராப் பெரும வென்னை

 அன்ன தாய தொன்முது பிறவி

 அறைபோக் கொழியக் குலமுழுதும் 7வளைஇ

 7.  ஞான வொள்வாட் பூமுக 1மழுந்தக்

 கொன்று சினந் தணியா 2தன்றிய சீற்றத்து

 மறவனை யல்லையோ மற்றே யிறைவ

 எவன்பல மொழிகுவ மியாமே வனச

 நீர்நிலை நின்று தாணலம் பெற்ற

 8.  தாளோய் 3நின்றா ணீழல மியாமென்

 றிரந்து குறை யுறினும் பிறந்தை 4யெந்திறம்

 மறந்து நோக்கா தெவன்புக லெமக்கென

 ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை

 ஒருவன் பாத மல்லதை

 9.  பிறிது முண்டோ பெறும்புக னமக்கே

 இது, பாதச்சேதம் கேட்டுத் தனக்குப்பற்றாய் உள்ளது ஏதென்று சீடன் விண்ணப்பஞ்செய்ய, “ஆசாரியன் நமக்குப் புகலிடமாயுள்ளது 5அகண்ட பரிபூரணமாய் நிறைந்த நிரஞ்சன தேவ நாயனாருடைய சீர்பாத மல்லது வேறுண் டோ”? என்று அருளிச் செய்தது.

 1-6. உரை: (திருவின்……எவனோ) திருவின் செல்வி ஒருதனிக் கொழுந- 6சருவஞ்ஞத்துவமான செல்வத்தையுடையவ னாகையால் 7சிவபோகமாகிய செல்விக்கு ஓர் ஒப்பற்ற நாயகனே யென்றும்; புலமை சான்ற கலைமகள் கணவ- கலை ஞானமாகிய அபரஞானம் முற்று முணர்தலால் 8அறிவுடைமையாகிய வாகீசுவரிக்குப் பர்த்தாவாயுள்ளோனே யென்றும்; 1வீரிய மடந்தை பேரிசைக் கிழவ- பஞ்சேந்திரிய நிக்கிரகம் பண்ணின படியால் வீரமாகிய மாதுக்குப் பெரிய கீர்த்தியை யுடைய நாயகனேயென்றும்; தவத்தின் தலைவ- சருவ சங்க நிவர்த்தியு டைமையால் 2தவமாகிய செல்விக்கு நாயகனே யென்றும்; தருமத் 3துறைவ- செனனமரண சாகரத்தில் அழுந்துவோரை யெடுத்துக் கரை சேர்க்கும் முறைமையால் தருமத்துக்கு இடமாயுள்ளவனே யென்றும்; அருளோன் அருளோன் என்ப- கிருபையை மிகவும் உடையவனே யென்றும் நின்னைச் சொல்லா நிற்பர்; நீ 4அருளோனா வதை எவன்- நீ கிருபையையுடையையானது எவ்வண்ணம்; 5அல்லாமலும்;-

 6-10. (தெருள………..அறைப) தெருளக் கண்ணிற் 6காணா ராயினும்- இன்ன தன்மைத்தா யிருக்குமெனக் கண்ணாலே தெளியக் காணவேண்டும் என்னினும் புலப்படாததாய்; கனவில் நண்ணுங் காலை- கேட்டபடியே கனவிலே கண்ட காலத்தும்; நல் உயிர் செகுக்கும் பேயே ஆயினும்- நல்ல வுயிரைப் போக்கும் 7பேயே யானாலும்; பிரியன் இன்பம் வாயாது என்று- 8கூடி யிருந்து பிரிந்தால் இன்பமன்றித் துன்பத்தைக் கொடுக்குமென்று; 1மதியோர் அறைப- அறிவுடையோர் 2சொல்லியிருக்கின்றனர்; சொல்லியிருப்பவும்.

 11-13. (மரீஇ……………பிறவி) பெரும- மகாத்துமாவே; என்னைத் தொன்முதுநாள் மரீஇயும்- என்னை 3அனாதி தொட்டு வேறுபாடற 4இந்நாள் வரை மருவியும்; நின் அன்றி யாரும் அறிய வாரா- நின்னை யொழிய யாவர்க்கும் அறிதற்கரிதாகிய; அன்னதாயபிறவி- அத்தன்மைத்தான் பிறவியை5;

 13. (அறை...........வணைஇ) அறைகுல முழுதும் - நூல் களிலே சொல்லப்பட்ட உற்பிசம் அண்டசம் சராயுசம் சுவேதசம் என்னும் நான்கு வருக்கத்தின் தோற்ற முழுதையும்; போக்கு ஒழிய 6வளைஇ- ஒதுக்கமற வளைத்துக்கொண்டு;

 15-17. (ஞானம்…………..அற்றே) 7ஞான வொள்வாள் பூ முகம் அழுந்தக் கொன்று - ஞானமாகிய அழகிய வாள் 8பொலிவு பொருந்திய புகர்முகங் குளிக்கக் கொன்றும்; சினம் தணியாது 9அன்றிய சீற்றத்து மறவனை அல்லையோ- மற்றும் பாசச்சேதம் பண்ணப் பக்குவராயினாரைத் தேடிக் கோபம் தணியாதே யிருக்கும் 1மாறுபட்ட மாற்சரியத்தையுடைய மறவனல்லையோ;

 17-18. (இறைவ……………யாமே) இறைவ- கர்த்தாவே; யாம் பல மொழிகுவம்- நாங்கள் தேவரீரைப் பலவாகச் சொல்லு வோம்; எவன்- அஃது எவ்வண்ணம்?

 18-22. (வசனம்…….எமக்கென) வசனம் நீர் தாள் நிலை நின்று நலம் பெற்ற தாளோய்- 2தாமரையானது நீரிலே ஒற்றைக் காலினாலே நிலையாக நின்று தவசுபண்ணி நின்னுடைய சீர்பாதத் தினுடைய அழகைப்பெற்ற அச்சீர்பாதத்தையுடை யோனே; நின் 3தாள் நீழலம் யாம் என்று - நின் சீர்பாத ஆசிரயரா யிருந்தோம் நாங்கள் எங்களுக்குச் செனனம் வேண்டுமென்று; இரந்து குறையினும்- நின்னைக் குறையிரந்து வேண்டிக் கொண்டாலும்; 4பிறந்தை எம்திறம் மறந்தும் நோக்காது- அச்செனனமானது எங்களிடத்து மறந்தும் நோக்காததாய் முடிந்தது; எமக்குப் புகல் எவன் என - எமக்குப் புகலிடம் யாதென்று விண்ணப்பம் செய்ய;

 23-25. (ஒழிவற………..நமக்கே) 5ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை 6யொருவன் பாதம் அல்லதை- அணுப்புதைக்கவும் இடமின்றிச் 1சடசித்துக்களெல்லாம் நிறைந்த இளம் பிறையைத் திருச்சடாபாரத்திலே யுடையனாகிய 2உவமனில்லாத பரமேசுவரனுடைய சீர்பாதமல்லது; நமக்குப் 3பெரும்புகல் பிறிதும் உண்டோ- மற்று உனக்கும் நமக்கும் பெரிய புகலிட முண்டோ என்று ஆசாரியர் அருளினார் எ-று.

 ஓ, மற்று, ஏ, அசை.

 அகவல் 54

 பதி ஞானம்

 வாழிய பெரும வாழி வாழிய

 வன்மீ னாணைத் தொன்முது கடவுள்

 வலம்படு கொற்றந் தொலைச்சி மீளா

 தடங்கருஞ் சீற்றத் திடங்கெடக் கடக்கும்

 5.  4மடம்பறி ஞான வாழி 5யுடம் பெரி

 6வெளியென நில்லா தென்னு மாத்திரந்

 தெளிவரத் தெருட்டினை செல்வ வளியேன்

 தற்பொரு விறந்த மெய்ப்பரந் தெரியா

 7தெய்த்தன னாயினிருவினை யின்று

 6.  மொய்த்தன வல்லவோ முனிவ மொய்த்திடை

 எய்துவ வெனைப்பல வன்றே யித்திறன்

 யானிற் கிளத்தல் சாலு மானின்

 குளம்புறு குழிவாழ் கலங்கற் சின்னீர்

 மகரா லயத்தின் மயக்கறத் தெளித்தலிற்

 7.  கவரா தென்றே கண்பனி தூங்க

 மெய்ம்மயிர் 1பொடித்துத் தன்முதல் கலங்கி

 இழந்த நெஞ்சமொ டிறைவன் பாதம்

 ஓதினன் வீழ வவனை நோக்கித்

 தானுமி யாது மாகா திவ்வென

 8.  ஒண்ணா நீதிய 2னீதியாற் றனாது

 தெய்வ நாட்டந் தைவரு மளவைக்

 3குவிவா யமையாக் குடநிறை தீநீர்

 4பகுவா யாமைப் பார்ப்பினோ டஃதோ

 தினகர னொளிசேர் சிலைகா றீயின்

 9.  துரியமு மிறந்த தூயோன் றூய்மை

 அருளின னருள்பெற் றெழுந்தோற்

 கிளிசேர் தீஞ்சொ லியம்பின னினிதே

 இது “மதி சேர் செஞ்சடை யொருவன்பாத5” மடைய ஆசை வைத்த சீடனுக்கு ஆசாரியன் கடா க்ஷித்தமை கூறியது.

 1-5. உரை:- (வாழிய………..வாழி) வாழிய பெரும வாழி வாழிய- மகாத்துமாவே, வாழ்வாயாக, வாழ்வாயாக; 6வன்மீன் ஆணைத் தொன்முது 7கடவுள் - வலிய மகரக் கொடியையும் வெற்றியையும் பழமையையு முடைய காமதேவன்; 8வலம்படு கொற்றம் தொலைச்சி- இச்சை பண்ணு விக்கும் வலிய வெற்றி யைக் கெடுத்து; மீளாது- ஒழியாதே; அடங்கரும் சீற்றத்து- அடங்குதற் கரிதாகிய மாற்சரியத்தை;

 1இடம் கெடக் கடக்கும்- நின்னிடத்தே சிறிதும் 2இடமில்லாத படிச் செயிக்கும்; 3மடம்பறி ஞான -அறியாமை நீங்கிய ஞானத்தை யுடையோனே; வாழி- வாழ்வாயாக;

 5-7. 4(உடம்பு ………….. செல்வ) செல்வ- ஞானச் செல்வனே 5வெளி எரி என - வெள்ளிடையிலே ஏற்றிவைத்த விளக்குப் போல; உடம்பு நில்லாது என்னும் மாத்திரம்- சரீரமானது நில்லாது என்னும் அந்த வேறுபாட்டை; தெளிவரத் தெருட்டினை- 6தெளிவுண்டாக அறிவித்தருளினாய்;

 7-10. (அளியேன்…………….முனிவ) அளியேன் -நின்னாலே அனுக்கிரகம் பெற்ற அடியேன்; தற்பொருவு இறந்த மெய்ப் பரம்- தனக்கு உவமையில்லாத நித்திய 7ஞானானந்த சொரூப மான 8பதியுண்மையை; தெரியாது 9எய்த்தனனாயின்- அறியாதே தேகம் விட்டேனாயின்; இன்னும் இருவினை 10மொய்த்தன வல்லவோ- இன்னமும் பாவபுண்ணியங்கள் என்னைப்பந்தித் தனவா மல்லவோ; முனிவ- 1செனனத்துக்குக் காரணமாகிய 2அவாவறுத்தோனே;

 10-11. (மொய்த்திடை…………….அன்றே) 3மொய்த்த இடை எய்துவ- கன்மங்கள் பந்தித்த விடத்து 4அடியேனை வந்து கூடுவன; ஏனைப் பல அன்றே- 5எண்ணிறந்த பலவாகிய செனன மல்லவோ;

 11-12. (இத்திறன்………..) நின்யான் இத்திறன் கிளத்தல் சாலும் நின்னுடைய திருமுன்பே அடியேன் இந்த வேறுபாடுகளைச் சொல்லி விண்ணப்பித்தமையுமிது 6எத்தை யொக்கு மென்னில்,-

 12-15. (மானின்………கவராது) மானின் குளம்புறு குழிவாழ் கலங்கல் சின்னீர்- மானின் குளம்படி யழுத்தின் குழியிலே நின்ற அற்பமான கலங்கல் நீரைக்கொண்டு; மகராலயத்தின் மயக்கு அறத் தெளித்தலில் கவராது- சமுத்திரத்திலே கலந்துள்ள உவர்ப்பு நுரை முதலாகிய தோட முழுதுங் கெட வேண்டுமென்று 7தெளித் தலை யொக்கும்8.

 15-18. (என்று ……………வீழ) என்று - என்று கூறி; கண் பனி தூங்க- 9கண்ணீர் வார; மெய் மயிர் பொடித்து- சரீரத்துண்டாகிய உரோமம் புளகமாகி; தன்முதல் கலங்கி1- தற்போது முழுதும் கலங்கி; இழந்த நெஞ்சமொடு இறைவன் பாதம் ஓதினன் வீழ- கரைந்த நெஞ்சத்தோடே 2ஆசாரியன் சீர்பாதங்களிலே தோத்திரம் பண்ணி வீழ்ந்து வணங்க;

 18-21. (அவனை………அளவை) அவனை நோக்கி- இங்ஙனம் பரிபாகத்துடனே வீழ்ந்த 3சீடனை அருளோடு நோக்கி; தானும் யாது மாகாது - 4ஆசாரியன் தானும் கிருபை யாலே மிழந்து; இவ்வென ஒண்ணா நீதியன்- 5இன்ன சொரூப முடைய னென்றும் இன்னபடி யிருப்பனென்றும் சொல்லுதற் கரிய நீதிமானான பரமசிவனுடைய; நீதியால்- 6முறைமையாலே சிவத்து வத்தைப் பாவித்து; தனாது தெய்வநாட்டம் தைவரு மளவில்- தனது தெய்வீகத் திருநயனத்தாலே 7கடாக்ஷித்தருளு மளவில்:

 22-26. (குவிவாய் ………………..அருளினன்) குவிவாய் அமையாக் குடம் நிறை தீ நீர்- 1குவிந்த வாயில்லாத 2ஊமைக் குடத்து இனிய நீர் நிறைந்தாற்போலவும்; பகுவாய் யாமைப் பார்ப்பினோடு- பெரிய வாயினையுடைய 3ஆமையாகிய தாய் பார்க்கக் குஞ்சு வளர்ந்தாற் போலவும்; அஃதோ - அந்த அதிசய மாத்திரமோ; தினகரன் ஒளி சேர் சிலை- 4ஆதித்தன் சந்நிதியிலே சார்ந்த சூரியகாந்தக்கல்; கால் தீயின்- தீக்கான்றாற் போலவும்; 5துரியமும் சிறந்த தூயோன் - நின்மல துரியாவத்தைக்கும் அப்பாலாகிய நின்மலனுடைய; 6தூய்மை அருளினன்- 7பதியிலக்கணத்தைத் திருவுள்ளம் பற்றினான்;

 26-27. (அருள் ….இனிது) அருள்பெற்று எழுந்தோற்கு இளிசேர் தீஞ்சொல் இனிது இயம்பினன்- இங்ஙனம் அனுக்கிரகத்தைப் பெற்றெழுந்த சீடனுக்கு இளியென்னும் இசையை யொத்த வசனங்களாலே இனிதாக அப்பதியுண்மையறிதலைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்தான், எ.று.

 8ஏ, அசை. ஓ, வியப்பு.

 அகவல் 55

 பதி யிலக்கணம்

 1படியடி யடங்காக் கடிகமழ் தாமரைக்

 கட்காண் கடவுளொடஃ தத்துறை யமலனும்

 எண்ணா வியல்பின னிறையென 2முழங்கும்

 விண்ணோ ரண்ணலை வினவின் மண்முதல்

 5.  முப்பது முதலா மூவிரண் டோவா

 ஒப்பி றத்துவ 3மொரீஇய திப்பியன்

 ஒழிவற நிறைந்த வொருவன் 4பழிதீர்

 வண்ண மில்லி யமலன் கண்முதற்

 புலனொடு புணரா னிணையிலி யானென்

 6.  மதத்தின் வாராப் பிறப்பிலி தனக்கென

 நாம மில்லோ னாத னனாமயன்

 கால காலன் கணக்கிலி கடையும்

 மூலமு நடுவு முனிந்தோன் மேலோன்

 ஆகுல மில்லி யகோப னமேகான்

 7.  அபய னபங்க னகம்ப னசஞ்சலன்

 நித்தன் முத்தன் சுத்தன் சுதந்தரன்

 பந்தமும் வீடும் 5பறைந்தோன் சிந்தையொ

 டின்பமுந் துன்பமு 6மிகந்தோ 7னியாவதும்

 புலமின் றுணர்ந்த 8புலவன் கலரெனத்

 8.  தணித்தலு மளித்தலுந் தடிந்தோன் றற்பரன்

 9துரியமுந் தொடராத் தூயோன் பெருமைக்

 கண்ட மணுத்தர வணுவண் டத்துடன்

 நின்று நுணங்கிய தண்டாச் சீர்த்தி

 உரைதரு புணரிக் 1கரைகரை யம்பிக்

 9.  காட்சி முதலிய வளவையு மளவறச்

 சேட்பட வகன்றனன் சிவனெனச்

 சூழ்ச்சியி னிறைந்தோர் துணிந்தனர் நெடிதே.

 இஃது இளிசேர்தீஞ் சொல்லாக அருளிச்செய்த பதியிலக்கணம் கூறியது.

 1-4. உரை: (படியடி…….வினவின்) 2படி அடங்கா அடி 3மூவுலகும் அடங்காத பாதத்தினையும்; கடிகமழ் 4தாமரைக் கண்காண் கடவுளொடு -நறு நாற்றத்தையுடைய தாமரைப் பூவையொத்த காணும் கண்ணையு முடையனாகிய திருமா லோடு; அஃது உறை 5அமலனும்- அத்தாமரைப் பூவிடத் திருக்கும் பிரமாவும்; எண்ணா இயல்பினன் இறையென முழங்கும் விண்ணோர் 6அண்ணலை அறிதற்கரிய 7இயல்பினை யுடையான் பதியென்று வேதாகம சாத்திரங்களாற் 8சொல்லப்பட்ட வனாகிய தேவர்கட்குக் கருத்தாவாகிய பரமசிவனை யாராயின் 4-6 (மண்முதல்……….திப்பியன் ) ஓவா- நித்தியமான; ஒப்பில் - உவமையில்லாத; மண் முதல் முப்பது முதலா மூவிரண்டு ஒரீய 9திப்பியன் - பிருதுவி தத்துவமுதலாகவுள்ள தத்துவமுப்பத் தாறுக்கும் 10அதீதனாயிருக்கும் ஆச்சரியத்தை யுடையோன்.

 7.  ஒழிவற நிறைந்த 1ஒருவன் - சருவவியாபகமாய் நிறைந்த ஏகன்;

 7-8. பழிதீர் 2வண்ணம் இல்லி- குற்றமற்ற பொன்மை நீலாதி 3வண்ணங்களில் ஒன்றும் இல்லாதோன்;

 8.  அமலன்- நிருமலனாயிருப்போன்;

 8-9. மண்முதல் 4புலனொடு புணரான்- கண் முதலாகிய இந்திரியங்களோடு கூடாதவன்;

 9.  இணையிலி -5தனக்கு உவமையில்லாதவன்;

 9-10. 6யானென் மதத்தின் பிறப்பிலி- 7யானென்னுமகங் காரத்தாலே வருவது செனனமாதலால் 8அவ்வகங்காரமில்லா மையால் செனனமில்லாதோன்;

 10-11. தனக்கென 9நாமம் இல்லோன்- தனக்கென ஒரு 10நாமதேயமில்லாதவன்;

 12. 11நாதன்- சருவ கருத்தாவாயிருப்போன்;

 11. 12அநாமயன்- 13ஒன்றிலும் பற்றில்லாமையான் நோயில்லா தோன்.

 13. காலகாலன்- திரிகாலங்களுக்குங் 1காலமாயிருப்போன் கணக்கிலி- 2அளவுபடாதோன்;

 12-13. கடையும் மூலமும் நடுவும் 3முனிந்தோன்- கடையும் முதலும் நடுவும் இல்லாதோன்;

 14. மேலோன்- 4சருவதோமுகாமாயிருப்போன்;

 14. ஆகுலமில்லி- 5கலக்கமில்லாதவன்; அகோபன் - கோப மில்லாதோன்; அமோகன்- மோகமில்லாதோன்;

 15. அபயன் - பயமில்லாதோன்; 6அபங்கன்- பங்கிக்கப் படாதோன்; 7அகம்பன்- நடுக்கமில்லாதோன்; 8அசஞ்சலன்- சலனமில்லாதோன்;

 16. நித்தன் - என்றும் ஒருபடித்தாயிருப்போன்; முத்தன்- 9முத்தியையீவோன்;

 17. 10சுத்தன் - தோடமில்லாதோன்; 11சுதந்தரன்- என்றும் தன் வயத்தனா யிருப்போன்;

 18. 1பந்தமும் வீடும் பறைந்தோன்- பெத்தமும் முத்தியும் இல்லாதோன்;

 17-18. சிந்தையோடு 2இன்பமும் துன்பமும் இகந்தோன்- சிந்தனையில்லாமையாற் சுகதுக்கமில்லாதோன்;

 18-19. புலன் இன்று யாவதும் உணர்ந்த 3புலவோன்- புத்தீந்திரியங்களின்றியே சருவபதார்த்தங்களையுமறியும் 4சர்வஞ்ஞன்;

 19-20. கலர் எனத் தணித்தலும் அளித்தலும் 5தடிந்தோன்- வினை நுகர் காலம் நோக்காது கீழோரென்று நிக்கிரகித் தலும் நல்லோரென்று அனுக்கிரகித்தலும் இல்லாதோன்; 6தற்பரன் - தானே பரவத்துவாயுள்ளோன்;

 21. 7துரியமும் தொடராத் 8தூயோன் - நிருமல துரியாவத்தைக்கு அப்பாலாயிருக்குந் தூயோன்;

 21-23. (பெருமைக்கு…………சீர்த்தி) பெருமைக்கு அண்டம் 9அணுத்தர - அனந்தகோடியண்டங்களெல்லாம் நோக்கத் தன் பெருமைக்கு அவை அணுவாகவும்; அணு அண்டத்துத் தன் நுண்மைக்குப் பரமாணுக்கள் அண்டமாகவும், 10உடனின்று நுணங்கிய தண்டாச் சீர்த்தி- 11அவற்றுடனாய் நின்று தேய்ந்து நுணுகிய கெடாத சீர்மையையுடையோன்;

 24-27. (உரைதரு ………….நெடிதே) உரைதரு புணரிக்கரை 1கரை- புகழப்பட்ட வேதாகம சாத்திரமாகிய கடலின் கரையை யணைதற்குச் சொல்லுகிற; காட்சி முதலிய அளவை அம்பியும்- பிரத்தியக்க முதலாகவுள்ள 2சட் பிரமாணமாகிய மரக்கலங் களுக்கும்; அளவற- அளவுபடாமல்; 3சேட்பட அகன்றனன் சிவன் என - தூரமாக அகன்றிருப்போன் பரமசிவன் என்று; சூழ்ச்சியின் நிறைந்தோர் நெடிது துணிந்தனர்- ஆகம விசாரம் மிக்கோர் மிகவும் அறுதியிட்டனர், எ-று.

 ஏ, அசை.

 அகவல் 56

 பதியின் வியாபகம்

 இன்ன தன்மைய னெனைய னென்றினி

 தன்னோற் றேரி னம்ம மின்னவிர்

 பதும ராகப் புதுவெயி னீழல்செய்

 மடநடை நல்லான் வனமுலை வந்த

 5.  மதியிற் றண்மை ஞெலிகோல் வன்றழல்

 பாலிற் றீநெய் பழத்தி னின்சுவை

 பூட்சி யாருயிர் பொருளுரை யெண்ணெய்

 கடிமலர் கஞலிய வொடியா வாசம்

 விம்மித மென்னென் றிசைக்குவ மற்றோ

 6.  நிலநீர் தீகால் வெளியுயிர் யாவும்

 அவையே தானவை தானே யாகி

 விரவியும் விரவா வீரம் விரவிய

 தன்வா ளல்லதை தன்வா ளிழந்த

 மதிமா சூர வொளிகால் பளிங்கின்

 7.  1பூட்சித் தென்னப் புலனொடு புணரா

 தருளுமி னடிக ளென்றனன்

 2மருள் கெட விலங்கிய மறை வல்லோனே.

 இது “காட்சி முதலிய அளவையும் அளவறச் சேட் வகன்ற3” பரமசிவனது 4வியாபகம் கூறியது.

 1-2. உரை: (இன்ன……தேரின்) இன்ன தன்மையன்- முன்னை 5அகவலிற் சொல்லப்பட்ட பரமசிவன்; எனையன் என்று 6இனிது அன்னோன் தேரின்- 7எவ்வியல்பாய் நின்றா னென்று இனிதாக அவனை ஆராயின்;

 2-3. (அம்ம …………..வெயில்) அம்ம- கேட்பாயாக; மின்அவிர் பதுமராகம் 8புது வெயில் - விட்டுவிளங்கா நின்ற ஒளியையுடைய மாணிக்கமும் 9புதிய சோதியும் போலவும்;

 3-4. (நீழல்………….தண்மை) நீழல் செய்மதியின் தண்மை- 1விளக்கத்தைச் செய்யும் சந்திரனும் தட்பமும் போலவும்;

 4.  2ஞெலி கோல் வன்றழல்- தீக்கடை கோலும் அதில் வதியும் வலியதீயும் போலவும்;

 5-6. (மடநடை…………….தீநெய்) மடநடை நல்லான் வனமுலை தந்த பாலின் தீநெய் - மெத்தென்ற நடையையுடைய நல்ல பசுவின் அழகமைந்த முலையிலுண்டாகிய பாலும் இனிய நெய்யும் போலவும்;

 5.  3பழத்தின் இன்சுவை- பழமும் இனிய இரதமும் போலவும்;

 6.  4பூட்சி ஆருயிர் - 5உடலும் நிறைந்த உயிரும்போலவும்; 6உரைபொருள்- சொல்லும் பொருளும் போலவும்; 7எள் நெய்- எள்ளும் எண்ணெயும் போலவும்;

 7.  (கடிமலர்………..வாசம்) கடிமலர் கஞலிய ஒடியா 8வாசம் - அழகிய புட்பமும் அதில் விரவிய கெடாத கந்தமும் போலவும்;

 8.  (விம்மிதம்…………..மற்றோ) விம்மிதம்-9வியாபித்திருக்கு மதை வியந்து; என்னென்று மற்று இசைக்குவம்- திட்டாந்தம் 10இவ்வனைத்துமேயோ வேறே எதை எடுத்துச் சொல்வோம்;

 10-12. (நிலநீர்……..வீரம்) நிலம் நீர் தீ கால் வெளி - பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் ஆகிய பூதங்களிலும்; உயிர் யாவும்- சருவான்மாக்க ளிடத்தும்; அவையேதான்- அவை யிற்றைத் தானெனலுமாய்; அவைதானே ஆகி- தன்னை அவை யெனலு மாய்; 1விரவியும் விரவா வீரம்- 2வியாபித்தும் அவையிற்றில் விரவாதிருக்கிற வீரியமும் என்போலவென்னில்;

 12-15. (விரவிய ……………பூட்சித்தென்ன) விரவியதன் 3வாள் அல்லதை- அடுத்த பொருளின் நீலாதிவண்ணங் காட்டும தல்லது; தன் வாள் இழந்த - தன்னொளி தோன்றாதிருக்கின்ற; 4மதிமாசு ஊர ஒளிகால் 5பளிங்கின்- 6சந்திரனும் களங்கமுடைத் தாதலால் ஒளி குறைந்த தென்னும்படிப் பிரகாசத்தைச் செய்கின்ற பளிங்கினது; பூட்சித்தென்ன 7இயல்பு - போல்வதாம் என்று அருளிச் செய்ய;8

 15-17. (புலனொடு…………வல்லோனே) மருள்கெட இலங்கிய மறைவல்லோனே- மயக்கங் கெட விளங்கிய திவ்வி யாகமத் துக்கு அதிகாரியான என் 1சுவாமி; 2புலனொடு புணராது- நீர் அருளிச் செய்த பதியின் தன்மை 3இப்படியானால் எனக்குப் புலப்படாதிருந்த அப்பதியை யறியுமுபாயத்தை; அடிகள் அருளுமின் என்றனன்- தம்பிரானே, அடியேனுக்கு அருளிச் செய்யவேண்டுமென்று சீடன் விண்ணப்பஞ் செய்தான் எ-று.

 மற்று- வினைமாற்று, ஒடு அசை, ஏகாரம்- தேற்றம். ஒ-வியப்பு.

 அகவல் 57

 பதியுண்மை.

 4பூபூத ராதி யோவற வுஞற்றும்

 ஒருவனை யுடைத்துப் பொருவிரி காரியம்

 ஆதலிற் கடம்போ லென்னிற் கோதின்

 றிருங்கட மதனோ டியற்றிய வொருவனை

 5.  ஒருங்குடன் கண்டோ னொழிந்திக லிரிகடங்

 கண்டா லிவையு மவணெனக் கொண்டாங்

 குண்டோ வுலக முஞற்றுட னொருவற்

 கண்டுமற் றிதூஉ முண்டிவ ணெனவெனிற்

 கண்டதின் மான முனக்குக் கொண்டல்கொள்

 6.  1கிரிவளர் கழைஞெலி தூம மதனின்

 எரிவள ரட்டிற் புகையய லெனவுணர்ந்

 தொட்டினை பிறங்க லொள்ளழ லொட்டிய

 2தென்னை விசேட சமனியத் தியாதிற்

 பன்னெனில் விசேட மென்னி னன்னோ

 7.  காட்சிய தலதிலைச் சமனிய மாட்சிய

 தென்றேற் செயலொடு செய்வோற் கண்டோன்

 மன்ற மாண்வினை காணி 3னென்றாங்

 கோதுவ னொருவன் றீதுகு செயலென்

 றற்றேன் மாக மாதிய வினையா

 8.  கெற்றேற் பாக மியைதலிற் கடவற்

 றின்னு மொண்குண மன்னலிற் புவிபோல்

 ஆதிய வழியு மழிபவை செயலென்

 றோதுரு வஃதுந் தீதறு செயலே.

 இது பதியை யறியும் உபாயம் அருளிச் செய்ய வேண்டு மென்று விண்ணப்பஞ் செய்த சீடனுக்குக் கேவலான்னுவய அனுமானப் பிரமாணத்தாற் பதியுண்மை கூறியது.

 1-2. உரை: (பூபூதராதி……உடைத்து) 4பூ பூதர ஆதி- பிருதிவி முதலிய தத்துவ சமூகங்களும் மலை முதலிய பொருள் களுமாகிய பிரபஞ்சம்; 5ஓவற உஞற்றும் ஒருவனை உடைத்து- ஒழியாதே 6செய்வா னொருவனையுடைத்து;

 இது பிரதிஞ்ஞை.

 2-3. (பொருவிரி…………ஆதலின்) 1பொரு இரி காரியம் ஆதலின்- அதற்கு ஏது என்னென்னில், உவமையில்லாத 2காரிய மாயிருத்தலால்;

 இஃது ஏது.

 3. 3கடம் போல்- என் போலவென்னில் கடம் போல;

 இது திட்டாந்தம். இவை மூன்றும் 4கேவலான்னுவய அனுமானம்.

 என்னில் கோதின்று- இங்ஙனம் 5கூறியதற்கு இசைந்தால் குற்றம் இன்றாம்.

 4-8. (இருங்கடம்………..இவணென) இருங்கட மதனோடு இயற்றிய ஒருவனை- பெரிய கடமான அதனையும் செய்வா னொரு வனையும்; 6ஒருங்கு உடன் கண்டோன்-ஓரிடத்தே சேரக் கண்டவன் ஒருவன்; ஒழிந்து 1இகல் இரி கடம் கண்டால்- இவ்விடம் ஒழிந்து வேறிடத்திலே 2உவமனில்லாத பல கடங் களைக் கண்டால் இவையும் அவண் எனக் கொண்டாங்கு - இவையும் அங்ஙனம் இயற்றப்பட்டன என்றே நிச்சயித்தாற் போல; உலகம் உஞற்று 3ஒருவன் உடன் கண்டு மற்று இதூஉம் 4இவண் உண்டு எனஉண்டோ - வேறோருலகத்தைச் செய்வா னொருவனை யுடன்கண்டு இவ்வுலகமும் அங்ஙனம்போல ஒருவனாலே செய்யப்பட்டுள்ளது என்று நிச்சயித்தற்குண்டோ என்று 5விண்ணப்பம்செய்ய;

 8-9. (எனில்…………உனக்கு) எனில்- என்று அங்ஙனம் கூறுவாயேல்; 6கண்டதில் உனக்கு மானம்- 7அனுமானமல்லக் காண், பிரத்தியக்கத்திலே உனக்குக் காட்டற்குப் பிரமாண முண்டு;

 9-13. (கொண்டல்………..என்னை) கொண்டல் கொள் கிரிவளர் கழைஞெலி தூமம் அதனில்- மேகத்தைக் கிட்டிய 8மலையிலுண்டான மூங்கில் இழைந்து தானே தோற்றப்பட்ட தூமத்துக்கு; 9அட்டில் எரிவளர் புகை அயலென உணர்ந்து- நெருப்பும் புகையும் காணப்பட்ட அடுக்களையில் எரியில் வருகின்ற புகை அற்பமாதலாலே அதனை 1உவமமாகக் கூறல் ஒவ்வாதென்று அறிந்தும்; பிறங்கல் ஒள்ளழல் 2ஒட்டியது ஒட்டினை- பருவதத்திலே ஒளியுடைத்தாகிய நெருப்புண் டென்பதற் கிசைந்தாய்; என்னை- இசைய வேண்டுவான் ஏனோ?

 13-14.(விசேடம்……….பன்னெனில்) 3விசேட சமனியத்து யாதிற் பன்னெனில்- 4(விசேட சாமானியத்தினால் இசைந்த தென்று சீடன் கூறினானாக, அங்ஙனமாயின்) விசேடத்திலும் சாமானியத்திலும் 5நீ கொள்ளுமது யாது சொல்வாய் என்று வினவ;

 14-15. (விசேடம்…………இலை) 6விசேடம் என்னின்- கடத்தைச் செய்த செயலுக்கு உலகத்தைப் பண்ணும் செயல் பெரிதாத லால் விசேடந்தான் கொள்வதென்று விடை கூறுவாயாயின்; 7அன்னோ- ஐயோ; காட்சியது அலது இலை- நீ பிரத்தியக்கப் பிரமாணம் கொள்ளுமதுவன்றி அனுமானங் கொண தில்லையாம்;

 15-16 (சமனியம்……………என்றோல்) சமனியம் மாட்சியது என்றேல்- புகையென்னும் சாதி சாமானியத்தால் நெருப்புண் டென்று அழகிதாகக் கொள்வேன் என்பாயாகில்;

 16-18 (செயலொடு …………….செயலென்று) செயலொடு செய்வோற் கண்டோன்- கடத்தைப்பண்ணுகிற செயலோடே செய்பவனையும் கண்டானொருவன்; ஒன்று 1மாண்வினை காணின்- ஒரு பதார்த்தம் மாட்சிமையுடைய காரியமாகிய உருவமாயிருப்பது கண்டால்; ஆங்கு- அவ்விடத்து; மன்ற ஒருவன் 2தீதுகு செயல் என்று ஓதுவன் - அனுமானத்தாலே சிறிதாயிருப்பினும் பெரிதாயிருப்பினும் நிச்சயமாக ஒருவனாலே குற்றமறச் செய்யப்பட்டதென்று 3சொல்வான் காண், என்று சொல்ல;

 19-20 (அற்றேல்…………எற்றேல்) அற்றேல் - அங்ஙன மேயாயின்; மாகமாதிய- ஆகாய முதலாக மேலுள்ள தத்துவங்கள் அருவமாதலால்; 4வினையாகு எற்றேல்- வுவை 5தொழிற் பட்டமை எவ்வண்ணமென்று 6வினவுவாயாகில்;

 20. (பாகம்………..கடவற்று) 7பாகம் இயைதலின்- ஆகாயம் பங்கிக்கப் படுதலானும் 8அது பாகமாகிய நான்கு தத்துவமும் உருவமாதற்கியைதலானும்;கடம் அற்று- கடம்போலே 9காரியமாயேயிருக்கும்.

 21. (இன்னும் …புவிபோல்) இன்னும்- மேலும்; ஒண்குணம் மன்னலின்- அழகிய சத்தமாகிய 1குணமுடைத் தாதலால்; புவிபோல்- பிருதிவி தத்துவம்போல 2உருவ முடைத் தாம் காண்;

 22-23. (ஆதிய………செயலே) 3ஆதிய அழியும்- இத்தத் துவங்கள் ஆதியான படியாலே அழியும்; அழிபவை செயல்- அழியும் பதார்த்தம் ஒருவனாலே ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும்; உருவஃதும் தீதறு செயல்- உருவமாயிருத்தலால் அந்தப் பிரபஞ்சமும் பரமசிவனால் குற்றமறச் செய்யப்பட்டதே; என்று ஓது- 4என்று கொள்வாயாக.

 சமனியம், குறுக்கல், ஆகு, பெயர்ப்பட்டது

 அகவல் 58

 பதியள வளவை மதியோர் வரத

 உணர்தல் வேட்கையெ னளவையி னுணர்த்த

 உணர்வோர்க் குணர்வ தனைவகை யாதலின்

 அறிதவ வசத்துல கறிவனை விநாஅக்

 5.  குறிவரல் போதல் கூடா துறுதேர்

 ஆதி போல வவையினி துய்க்கும்

 5நீதிய னெவன் பதி யேஎற் கோதமல்

 அநேகாந் திகமென் னினைவொடு 6நின்றது

 கன்றுவளர் பாலினுஞ் சென்றின் றீன்கோச்

 6.  சேதன மாதலி னோதிய வுயிர்போஒஞ்

 சுரபி தீம்பால் சொரியிற் புரையில்

 தீம்பால் வளர்த்த தன்றென வோம்பா

 1துரையா டுநரெவர் வரையா வறிவன்

 செயலென விரும்பை2யயலற வுய்க்கும்

 7.  காந்தமென் றெடுத்துக் கோளும் வாய்ந்தன்

 றிரண்டையு மியைக்கு 3முரண்டகு சேதனன்

 இன்றெனி னவைசென் றொன்றா வாகலின்

 சேதனன் 4செய்தியென் றோதிடி னுயிர்கட்

 கேதள வவையே கோதுக வமைக்க

 8.  நாத னென்னை யெனிலுயி ரறியா

 ஈசத் தன்மையு மில்லை யாகில்

 தம்முடைச் செயற்கும் வெம்முரட் கடம்போல்

 5ஒருவனை யிகலிரி துணையென மருவுவர்

 என்றா லிறைமை யிவர்க்கெனை யிறையே

 9.  மன்றார் மாநட மாடி 6யொன்றோ

 வீடடை பவரே கூடுக செயலெனின்

 ஆதிய ரோமற் றனாதிய ரோவே

 றேதமின் முத்திய ரென்னி னாதி

 அன்றெனிற் சித்த சாதன மாதி

 10. என்றிடின் முத்திய தீவோன் முன்னர்

 நின்றன னாக நிகழு மின்றி

 என்றும் பந்த மன்றி முத்தி

 ஒன்றா துணர்வோ ருணர்விற் 7குன்றா

 திருந்திரும் பாசஞ் செற்ற

 11. பெருந்தகை யருளிற் பொருந்துமற் றஃதே.

 இஃது அன்னுவயவெதிரேகி யனுமானத்தால் பதியுண்மை கூறியது.

 1-3. உரை: (பதியளவு…………..ஆதலின்) மதியோர் வரத- ஞானவான்களுக்கு மேலான 8ஞானமுடையோனே; உணர் வோர்க்கு 1உணர்வது அனைவகையாதலின்-2வத்து நிச்சயவிசார முடையவர்க்கு விசாரித்தறியும் அளவைகள் 3முன்பே சொல்லப் பட்ட 4சட்பிரமாணங்களாதலால்; பதி அளவு அளவை- பதிப் பொருளினுடைய அளவாகிய எல்லையை; 5அளவையின் உணர்த்த உணர்தல் வேட்கையென்- அந்தப் பிரமாணங்களாலே அறிவிக்க அறிய விரும்பினேன் என்று சீடன் இவ்வாறு விண்ணப்பஞ் செய்ய;

 4.  அறி தவ- பிரபஞ்சம் ஒரு கருத்தாவையுடைத்தென்று மிகவும் அறிவாயாக;

 இது பிரதிஞ்ஞை; 6இதற்கு ஏது என்னெனில்,4-5. (அசத்து…………கூடாது) உலகு அசத்து- 7பிரபஞ்சம் அசேதனமாயி ருத்தலால்; அறிவனை 8விநாஅ- சைதன்னியனான ஒரு கருத்தாவையின்றி; குறிவரல் போதல் கூடாது- அவயவத் தோடு காணத்தக்க 9சிருட்டியும் சங்காரமும் எய்துதல் கூடாதென்று நிச்சயிக்கப்படுமாதலால்;

 இஃது ஏது, என் போலவென்னில்.

 5-6. உறுதேர் ஆதி போல- 10மிக்க உறுதியையுடைய தேராதி வாகனம் போல:

 இது திட்டாந்தம்.

 1தேராதி தாமே பிரவர்த்திக்கமாட்டா; பிரவர்த்திப்பாரை வேண்டும்; அது போலப் பிரபஞ்சத்தையும் பிரவர்த்திப்பானொரு கருத்தா வேண்டும்; 2இஃது உபநயம்

 6-7. (அவை…………….பதி) அவை இனிது உய்க்கும் நீதியன்- இவ்வுலகங்களை இனிதாகச் செலுத்துகிற முறைமையை யுடையான் யாவன்; அவன் பதி- அவன் பதியாகும்.

 இது நிகமனம்; இவை ஐந்தும் அன்னுவய வெதிரேகி யனுமானம்.

 7-8. (ஏஎல் …………….நின்றது) ஏஎல்- அங்ஙனமேயாயின்; கோதமல் அநேகாந்திகம் குற்றம்- செறிந்திருக்கின்ற 3அநேக விதத்தாலே அசேதனம் பிரவிர்த்தி நிவிர்த்தியெய்தி நிற்றல் கூடுமென்பது; என் நினைவொடு நின்றது- என் நினைவில் உண்டாகா நின்றது என்று சீடன் விண்ணப்பஞ் செய்ய;

 9-13. (கன்று………..இலர்) கன்று வளர் பாலினும் சென்றின்று - கன்றைவளர்ப்பது பாலென நினைக்கும் செயலினும்4 செல்லாது காண்; ஈன் கோ சேதனமாதலின்- கன்றீனும் அந்தப் பசுத்தான் சைதன்னிய மாதலால்; ஒதிய உயிர் போஒம் சுரபி தீம்பால் சொரியின்- சொல்லப்பட்ட பிராணன் போகிய பசு இனிய பாலைச் சுரந்த தாயின்; புரையில் தீம்பால் வளர்த்தது அன்றென ஓம்பாது உரையாடுநர் இலர்- குற்றமில்லாத இனிய பால் கன்றை வளர்த்தன்றென்று பரிகரியாதே சொல்லுவோர் 1இலராவர், காண்.

 13-17. (வரையா……………..ஆகலின்) வரையா அறிவன்- 2சர்வஞ்ஞனான பரமசிவன்; செயல் என- செய்தியைப் போல; காந்தம் இரும்பை அயல் அற உய்க்கும் என்ற எடுத்துக் கோளும்- 3அசேதனமாகிய காந்தக்கல் இரும்பை அந்நியமற வலிக்கு மென்று நீ யெடுத்துச் சொல்லும் திட்டாந்தமும்; வாய்ந்தன்று- பொருளாகமாட்டாது காண்; இரண்டையும் இயைக்கும் முரண்மிகு சேதனன்- காந்தக்கல்லையும் இரும்பையும் முக மொக்கச் சேரவைக்கும் வலிமிக்க சைதன்னியன்; இன்றெனின்- இல்லையாயின்; அவை சென்று ஒன்றா ஆகலின்- அவை தம்மிற் கூட மாட்டா வாதலால் என்று அருளிச்செய்ய;

 18-20. (சேதனன் …………..என்னை) 4சேதனன் செய்தி யென்று ஓதிடின்- சைதன்னியனாயிருப்பான் ஒருவனாலே செய்யவேண்டும் எனில்; உயிர்கட்கு ஏது அளவு- ஆன்மாக்களில் செயல்கட்கு எல்லையில்லையாம்; அவையே கோதுக அமைக்க நாதன் என்னை- அவைதாமே குற்றமறச் செய்ய அமையுமெனில், கருத்தா வொன்று ஏனோ? என்று சீடன் விண்ணப்பம் செய்ய;

 20-24. (எனில் உயிர் …………..ஏனை) எனில் - கருத்தா வொன்று ஏன்தான் என்பாயாயின்; உயிர் அறியா1- ஆன அஞ்ஞானி

 களாதலாலே: ஈசத்தன்மையும் இல்லை- அவ்வான்மாக்கட்குப் பதித்துவமில்லை; 2ஆசில் தம்முடைச் செயற்கும்- குற்றம் நீங்கத் தம்முடைய கன்மபலம் புசித்தற்கும் பக்குவப்படுதற்கும்; வெம் முரண் கடம்போல்- அசேதனமாகிய மிக்க வலிய கடம் போல்; இகல் இரி துணையென ஒருவனை மருவுவர் என்றால்- 3உவ மனில்லாத முதல்வனென்று செய்விப் பான் ஒருவனை வேண்டி நிற்றலால்; இவர்க்கு இறைமை எனை- இவ்வான்மாக்கட்கு கருத்திருத்துவம் எவ்வண்ணம் உண்டாவது;

 24-25 (இறையே………………ஆடி) இறையே- இனி கருத்தாவைக் கேட்பாயாயின்; மன்றார் மாநடம் ஆடி-4திருச் சிற்றம்பலத்திலே மகத்தாகிய திருநடனத்தைப் புரியும் பரம சிவனே யென்று அருளிச்செய்ய;

 25-28 (ஒன்றோ…………என்னின்) 5வீடு அடைபவர் செயல் கூடுக எனின்- முத்தராயிருப்பாராலே பஞ்சகிருத்தியம் செய்யப்

 படும் என்பாயாயின்; ஒன்றோ- அந்த முத்தான்மாக்களுக்கு அளவில்லையே, 6அவர் பலரல்லவோ; வேறு ஏதமில் முத்தியர் ஆதியரோ அனாதியரோ- அங்ஙனமாயின் வேறாகிய குற்றமற்ற முத்தான் மாக்கள் ஆதியாக முத்தரோ, அன்றியே அனாதியாக முத்தரோ; என்னின்- 7என்று வினவுமிடத்து;

 28-33. (ஆதி…………………ஒன்றாது) ஆதி அன்று எனில்1- அனாதி முத்தன் செயல் என்னில்; சித்த சாதனம்- அவ்வார்த்தை என் பக்கம் என்று அறிக; ஆதி என்றிடின்- ஒருநாளிலே முத்தி பெற்றோராலே செய்யப்படும் எனில்; முன்னர் முத்தியது ஈவோன் நின்றனனாக நிகழும்- அவர்கட்கு முன்பே முத்தியைப் பிரசாதித்தானொருவன் உளனாக வேண்டும்; இன்றி- இப்படி யொரு கருத்தாவையின்றி; என்றும் பந்தமாய்க் கிடக்கு மஃதன்றி, 2முத்தி ஒன்றாது- முத்தி அடைவதும் இல்லையாம்; ஆகையால்,-

 33-35. (உணர்வோர் ………….அஃதே) உணர்வோர் உணர்வில் குன்றாதிருந்து - 3இனிப் பதியுண்மை யுணர்ந்து தியானிப் போர் உணர்வின்கண் 4ஒளியாமலே அமர்ந்து; இரும் பாசம் செற்ற பெருந்தகை 5அருளின்-பெரிய பாசச்சேதம் பண்ணுதற்குரிய பெருந்தகையாகிய பரமசிவனுடைய பிரசாதத் தாலே; அஃது பொருந்தும்- அந்த முத்தி கூடும் எ-று.

 மற்று, வினைமாற்று, ஓகாரம், எதிர்மறை, ஏ, அசை.

 அகவல் 59

 1எல்லாத் தொழிலு மிறைவற் குறித்த

 2இல்லாச் சேதன மாகி யெங்கணும்

 நின்றுழி நில்லாத் தகைத்தா னின்றுழி

 நிற்கப் படுவதி யாதே யஃதே

 5. முற்பட வமைந்தது முயற்சியு மின்றே.

 இது 3கேவல வெதிரேகி யனுமானத்தாற் பதியுண்மை கூறியது.

 1. உரை: (எல்லா …………..குறித்த) எல்லாத் தொழிலும்- 4சருவ காரியங்களும்; இறைவற் குறித்த5 - ஒரு கருத்தாவைக் காட்டாநின்றன;

 2.

 இது பிரதிஞ்ஞை. இதற்கு ஏது என்னெனில்,-

 2-3. (இல்லா …………..தகைத்தால்) இல்லாச் சேதனமாகி எங்கணும்- அசேதனமாய் எவ்விடத்தும்; நின்றுழி நில்லாத் தகைத்தால்- ஒரு படித்தாயில்லாத தன்மையால்;

 இஃது ஏது. 6இவை இரண்டும் கேவலான்னுவயம். இனிக் கேவல வெதிரேகி வருமாறு:-

 3-5. (நின்றுழி……இன்றே) நின்றுழி நிற்கப்படுவது யாது- நின்றவிடத்தே 7ஒருபடித்தாய் நிற்க அமைந்தது யாதொன்று; அஃது முற்பட அமைந்தது- அஃது அனாதியாயுள்ளது, 8ஒருவராற் செய்யப்பட்டதுமன்று காண் எ.று.

 ஏ. அசை. இல்லாச் சேதனம் என்றது அசேதனம் என்றபடி.

 அகவல் 60

 பதிசங்கற்பம்

 விந்து வவத்தை விசேடத் தெந்தை

 கவவுசிவ பேதந் தவவளித் தனையது

 சேதன மன்மையிற் கோதறச் செயலின்

 றச்செயற் கமல னென்னின் மற்றவற்

 5.  கெய்திடும் விகாத மெய்த 1மையுகாஅ

 விகாஅ ரத்தைத் தவிரத் தவிரா

 தென்னை யென்னிற் பன்னுவ மன்னோ

 பொங்கிய வினையிரு வகைத்துச் சங்கற்

 பத்தொடு கரணத் தலர்கடங் குலாலன்

 6.  எற்படு சங்கற் பத்தின் முற்பட

 இயற்றல னிறைவன் சங்கற் பத்தின்

 மயக்கற விந்துவைத் துயக்கறக் கலக்கல்

 செய்வ னோவான் செய்தற் கைய

 காரண மாக மெவையுஞ் சேர்தல்

 7.  செல்லா னாக லானு 2நல்லியல்

 அமல னாக லானும் விமலம

 தாக வம்ம வாக மேவுநர்

 போகல ரியாவுந் தீதுக வியற்றல்

 இல்லோ ராக மியற்ற வல்லோர்

 8.  அல்லோ ரென்ன லாக 3மெல்லாஞ்

 செய்தியைத் தடுத்தற் கைய மின்ற

 தின்றே லெவையு மியற்றற் கொன்றுங்

 குன்றா தெவணெனின் மன்ற4 தன்றனு

 ஆக வியற்றிய வறிவன் போகிய

 9.  தேக னல்லகொல் சிவனகி லத்தைச்

 செய்வனின்னு மைய கேண்மோ

 மெய்யுட னியைவோர்க் கல்லதை வினைமற்

 றுய்யா தென்னி னுடல்கா ரியமக்

 காரியஞ் செய்வோ னின்றி வாரா

 10. தவனுடன்1 முதலிற் சிவணு மற்றவண்

 ஆக வவத்தைத் திறனல் லாத

 போகா தாகலிற் புகன்முதற் றொடக்கிற்

 கெல்லா வாகமு 2மிரித்திணை யிறந்த

 செல்லா நல்வலி சிறந்த3 வல்லோன்

 11. 4ஈச னாக லியையும்

 ஆசின் றாயுநர் 5ஆயுங் காலே

 இஃது அனுமானப் பிரமாணத்தால் “பூபூதராதி6” என்னும் திருவகவல் முதல் பிரபஞ்ச சிருட்டி கொண்டு பதியுண்மை கூற இவன் சிருட்டிக்கிறபடி எங்ஙனே யென்று சீடன் விண்ணப்பிக்க அவன் நிட்களனாயிருந்தே சிருட்டிப்பான் என்று கூறியது.

 1-2. உரை: (விந்து………..அளித்தனை) எந்தை- என் சுவாமியே; கவவு சிவபேதம்- பரமசிவனுடனே கூடியிருக்கின்ற சத்தி; விசேடத்து- சங்கற்பத்தாலே; 7விந்து அவத்தை- 8சுத்த மாயையினுடைய கலக்கத்திலே யுண்டானது பிரபஞ்சம் என்று; தவ அளித்தனை- மிகவும் அருளிச் செய்தாய்9;

 2-3. (அது…………..செயலின்று) அது- அந்தச் சுத்த மாயை தான்; 1சேதனம் அன்மையில் கோதறச் செயலின்று- அசேதனமாதலாலே குற்றமற யாதும் செய்யமாட்டாது;

 4-5. (அச் செயற்கு………….விகாரம்) அச்செயற்கு அமலன் என்னின்- அந்தச் செயல்நின்மலனான பரமசிவனாலே செய்யப் படும் என்னில்; 2விகாரம் எய்திடும்- அவனுக்கு விகாரம் கூடும்;

 5-7. (எய்த………….மன்னோ) எய்த - அவனுக்கு 3விகார முண்டாகவே; மையுகாஅ விகாரத்தைத் தவிரத் தவிராது என்னை என்னின்- 4குற்றத்தை விடாத அவ்விகாரத்தையொழிய விடாது எய்தும் தூடணத்துக்கு முடிவு என் என்பாயாகில்; 5பன்னுவம்- சொல்லுவோம், கேட்பாயாக.

 8-9. (பொங்கிய………கரணத்து) பொங்கிய வினை இருவகைத்து- 6மிகுந்து தொழிற்படும் சிருட்டிவினை இருவகைப் படும்; 7சங்கற்பத்தொடு கரணத்து- அவை சங்கற்ப சிருட்டி யென்றும் கரண சிருட்டி யென்றுமாம்;

 9-13. (அலர்……….ஓவான்) அலர் கடம் -விரிந்த கடங்களை; குலாலன்- குயவன்றான்; 1ஏற்படு சங்கற்பத்தின் முற்பட இயற்றலன்- 2விளக்க முண்டாகச் சங்கற்பத்தினாலே முதன்மை யறச் செய்ய மாட்டுவானல்லன்; இறைவன்- பரமசிவன்; சங்கற்பத்தின்- தனது திவ்ய சங்கற்ப மாத்திரை யானே; விந்துவை மயக்கறத் துயக்கறக் கலக்கல் செய்வன்- விந்துவை 3மயக்கமும் வருத்தமும் இல்லையாய்க் கலக்காநிற்பன்; ஓவான்- ஒருகாலும் 4விகாரியாகாண்;

 13-14. (செய்தற்கு……….காரணம்) ஐய - பிள்ளாய்; செய்தற்குக் காரணம்- பரமசிவன் சங்கற்பத்தாலே செய்தற்குக் காரணம் கேளாய்;

 14-17. (ஆகம்………….அம்ம) 5ஆகம் எவையும்- கரணத்தினாற் செய்தற் கியன்ற 6மந்திரரூப முதலாகவுள்ள தேகம் யாதும்; சேர்தல் செல்லான் ஆகலானும்- எடுத்துக் கொள்ளா னாகலானும்; 1விமலம தாக 2நல்லியல் அமலன் ஆகலானும்- சுத்தமாக நல்ல இயல்பையுடைத்தாகிய நிருமல னாகலானுங் காண்;

 17-18. (ஆகம்………..இயற்றல்) ஆகம் மேவுநர்- சரீரத்தைப் பொருந்தியோர்; யாவும் 3தீதுக இயற்றல். போகலர்- 4அஃது ஏகதேசப்பட்டமையாலே கரணங்களாலே ஒன்றைச் செய்வதன்றி யாவற்றையும் குற்றமறச் செய்யமாட்டுவாரல்லர்;

 19-20. (இல்லோர்……………என்னல்) இல்லோர் 5இயற்ற வல்லோரல்லர் என்னல்- சரீரமில்லாதோர் அனைத்தையும் செய்தற்கு வல்லாரல்லர் என்று சொல்லற்க:

 20-23 (ஆகம்………….குன்றாது) ஆகம் எல்லாம் செய்தியைத் 6தடுத்தற்கு ஐயமின்று- ஆகவே சரீரமானது பிரபஞ்சம் அடங்கலும் செய்வதற்கு விக்கினமாயிருப்பது என்பதற்கு ஐயமில்லை; அஃதின்றேல்- அத்தேகம் இல்லையாயின்; எவையும் இயற்றற்கு ஒன்றும் குன்றாது- எல்லாவற்றையுஞ் செய்தற்குச் 7சிறிதும் தாழ்வு படாது;8

 23-26. (எவண்…………செய்வன்) எவண் எனில்- அஃது எவ்வண்ணமென்னில்; மன்ற- நிச்சயமாக; 1தன் தனு ஆக இயற்றிய ஒருவன்- தனது தேகத்தைக் கரணமாகக் கொண்டு 2ஒவ்வொன்றைச் செய்கிற சைதன்னியன்; போகிய தேகன் அல்ல கொல்- அரூபியாகிய ஆன்மாவல்லனோ; சிவன்- பரமசிவன்; அகிலத்தைச் செய்வன்- இப்படியால் அரூபியாயிருந்தே பிரபஞ்சம் அனைத்தையும் செய்யா நிற்பன்;3

 26. ஐய இன்னும் கேண்மோ- பிள்ளாய், நீ இன்னமும் கேட்பாயாக.

 27-30. (மெய்யுடன்..சிவணும்) மெய்யுடன் இயைவோர்க்கல்லதை 4வினை உய்யாது என்னின்- சரீரத்தோடு கூடியிருப்போர்க் கல்லது செயல் கூடாது என்னில்; உடல் 5காரியம்- அச் சரீரம் காரியமாயிருத்தலால்; அக்காரியம் செய்வோன் இன்றி வாராது- அக்காரியந்தான் செய்வோன் ஒருவனையின்றி வருவதில்லை

 யாதலால்; அவனுடன் முதலிற் சிவணும்-6 தன்னை வர்த்திக்கு மவனையே யன்றி அவனுக்குக் காரணத்தையும் காட்டும்;

 30-32. (மற்று……………ஆகலின்) அவணாக - அப்படியாகவே; அனவத்தைத் திறனல்லதை 1போகாதாகலின்- 2அனவத்தைப் பட்டு ஒருவரையொருவர் சிருட்டிக்குமதுவல்லது மூலமான ஓர் ஆன்மாவுளன் எனக் 3காணமாட்டாதாம் ஆதலால்;

 32-36. (புகல்………..அறியுங்காலே) புகல் முதல் தொடக்கிற்கு- சொல்லப்பட்ட முதற் 4பஞ்சகிரு த்தியத்துக்கு; எல்லா 5ஆகமும் இரித்து - விந்துநாத முதலான தேகமெல்லாம் விடுத்து; இணை இறந்த செல்லா நல்வலி6- உவமையில்லாத கெடாத 7அருட்சத்தியுடனே கூடிய; சிறந்த வல்லோன் ஈசன் ஆகல் இயையும்- சருவசத்தி பரனாகிய பரமசிவன் கருத்தா வென்பது பொருந்தும்; ஆசின்று ஆயுநர்8 ஆயுங்கால்- 9

 ஆகமங்களைக் குற்றமற ஆராய்ந்த நல்லோர் தாம் ஆராயுமிடத்து எ-று.

 மன், ஓ, மற்று, அசை.

 அகவல் 61

 ஞான நாட்டம்

 ஏணி போகிய 1கீழ்நிலைப் படலமும்

 உம்பர் போகிய வுயர்நிலை யுலகமும்

 எண்டிசை மூன்று தண்டாக் காலமும்

 உளப்படப் பொதிந்து நிலைக்குரி மரபின்

 5.  அவத்தை நீங்கிய தவத்தின் சார்வைக்

 காண்டல் வலியோ ரின்மையின் 2மாண்ட

 ஞான நாட்டக் 3கன்றி யிலகா

 யாணர்த் 4திணையிரி நோக்கங் காணான்

 இருளற விரிய விரிகதிர் பரப்பிய

 6.  ஒருதேர் நேமிப் பருதி வானோற்

 காணா வாறு போலச் சேணென

 இடைகடை 5முதலிறந் துடைதர வளவை

 ஒழிவற நிறைந்தோ னின்றுங் குழிகட்

 கூளி யூர்ந்த வாடவற் றிரிந்த

 7.  ஆள்வினை காட்சித் தலகைகண் டிலதெனக்

 காட்சியிற் கஞலிய வெவற்று மாட்சியின்

 நின்றனன் பரம காரணன்

 மன்ற நன்றறி யொன்றினை யுணர்ந்தே.

 இது நிட்களனா யிருந்தே அனைத்தையும் செய்கிற கருத்தா சருவான்மாக்களுக்கும் 6திருசியனல்லாமைக்குக் காரணம் என்னென்று வினவ ஞானநாட்டம் உடையோர்க் கன்றிக் காண வொண்ணாது என்று காரியம் கொண்டு காரணம் உணர்ந்து பதியுண்மை கூறியது.

 1-6.உரை; (ஏணி…………..இன்மையால்) 1ஏணி போகிய கீழ்நிலைப் படலமும்- 2எல்லை யிறந்த ஆடகேசுர புவன முதலாகக் கீழுற்ற தலங்களையும்; உம்பர் போகிய உயர்நிலை யுலகமும்- 3மேலே உள்ளனவாகிய 4அநாகிருத புவன முதலாகிய உலகங்களையும்; எண்திசை- திக்குகள் எட்டையும்; 5தண்டாக் காலம் மூன்றும்- பூத பவிஷிய வர்த்தமானங்களாகிய பிறழாத காலங்கள் மூன்றினையும்; உளப்படப் பொதிந்து- தன்னிடத்தே அகப்படப் பொதிந்துகொண்டு 6நிலைக்குரி மரபின்- நித்தியத்துக்குரிய முறைமையினால்; அவத்தை நீங்கிய தவத்தின் சார்வை- 7அப்பிரயோசனமாகிய முயற்சி யல்லாத பெரிய தவத்தினருக்குப் புகலிடமாயுள்ள பரமசிவனை; காண்டல் வலியோர் இன்மையின்- கண்ணாற் காணவல்லோர் இல்லை;

 இது பிரதிஞ்ஞை.

 இதற்கு ஏது என்னென்னில்.-

 6-8 1(மாண்ட……யாணர்த்து) மாண்ட 2ஞான நாட்டக்கு அன்றி- மாட்சிமை யுண்டாகிய ஞானக் கண்ணுக் கன்றி; இலகா 3யாணர்த்து- 4விளங்கத் தோன்றாத புதுமை உடைத்தாதலால்;

 இஃது ஏது; என்போல வென்னில்-8-11. (இணையிரி………….போல) இணையிரி 5நோக்கம் காணான்- உவமை யிறந்த கண் தெரியாத குருடன்; இருள் அற 6இரிய - உலகத்தில் அந்தகாரமானது அறப் போகவும்; ஒரு நேமித்தேர்- ஓராழித்தேரை யுடைய; விரிகதிர் பரப்பிய7 பருதிவானோன் காணாவாறு போல- விரிந்த கிரணங்களைப் 8பரப்பி வரும் சூரியதேவனைக் காணாதவாறு போல.

 இது திட்டாந்தம்; இவை மூன்றும் 9கேவல வெதிரேகி யனுமானம்.10

 11-13. (சேணென……….இன்னும்) சேண் என முதல் இடை கடை இறந்து- பரமாகாயம் போல முதல் நடு இறுதி யின்றியே; 1அளவை உடைதர- பிரமாண ரகிதனாய்; ஒழிவற 2நிறைந்தோன்- சருவ வியாபகனாய் எங்கும் நிறைந்துள்ளவன் 3நின்றபடிக்கு; இன்னும்- இதற்கு இன்னும் ஒரு திட்டாந்தம் வருமாறு-13-18. (குழிகண்……….உணர்ந்தே) குழிகண் கூளி ஊர்ந்த ஆடவன்- குழிந்த கண்ணை யுடைத்தாகிய பிசாசு 4பிடிக்கப் பட்ட புருடனிடத்து; 5திரிந்த ஆள்வினை காட்சித்து- வேறு பட்ட செய்தி காண்பதல்லது; அலகை கண்டிலதென- அப்பிசாசு கண்ணிற்குப் புலனாகாததுபோல; காட்சியிற் கஞலிய எவற்றும்- காணுதற்குப் பொருந்திய பொருள்கள் எல்லா வற்றினும்; 6மாட்சியின் நின்றனன் - 7காணப்படாது அழகிதாக நின்றான்; பரம காரணன்- பரமகாரணனான பரமசிவன் என்று; மன்ற- 8தெளிவாக; ஒன்றினை உணர்ந்து நன்று அறி- 9ஏகாக்கிர சித்தமாய் இருந்துணர்ந்து மிகவும் அறிவாயாக எ-று.

 10இன், அசை, ஐகாரம், சாரியை.

 அகவல் 62

 சக்தி சங்கற்பம்.

 இறைசிவ னெனவரு ளுறைபதி யறைதன்

 முறையல வன்மையின் 1மூர்த்தி கறைகடி

 கரண மின்மையின் முரண்மிகு கடாவிடை

 அறிமதி கால மமூர்த்த முறுபலந்

 5.  தருமது போலத் தலைவன் மூர்த்தத்

 திரிபின னானு 2மின்றொழில் பொருவிரி

 இச்சையி லியற்று மெனினவ் விச்சை

 நற்றொழிற் செய்தி நயவா தாங்கெனிற்

 கண்டிசின் யோகக் கலைத்துறை நீந்திய

 6.  ஒண்டிற லியோகர் போலத் தண்டா

 விச்சை யிறைக்கிவ 3ணெற்றெனிற் சொற்றகு

 சல்லியந் 4தாளற வாங்கிற் றெல்லேய்

 புலமின் றாயினு நலமிலி கட்டகம்

 அன்ன தானு மதன்பா லின்றொழில்

 7.  மன்னா தானு மற்றது வந்த

 செய்தி கட்காண் 5பெய்யா வுவமையின்

 பெருத் தெனைப் பலவா முருத்திகழ் 6தொழிறான்

 இருத்தல் கூடா திருத்திய கடம்போல்

 ஆதலிற் காரண மொன்றுண் டாமென

 8.  ஓதிடிற் கரும மதுமற் றாதற்

 கேதிட ரெனிலது கோதி லசேதனம்

 அருமறை யறையு 7முருவிலி யருவுரு

 உரிவவி ரீச னொளிதிகழ் சதாசிவன்

 சாந்த 8னென்றினி தம்ம

 9.  ஏந்திய கொள்கை யிசையி னானே.

 இது காரண ரகிதனுமாய் அமூர்த்தனுமாய் இருக்கிற பரம சிவனைக் கர்த்தா என்று சொல்லுதல் முறைமை யல்ல என வினவ, அமூர்த்தனாயிருந்தே பிரபஞ்சத்தைச் சத்திகளாலே செய்வன் என்று கூறியது.

 1-3. உரை. (இறை சிவன்…………கடா) அருள் உறை பதி- கிருபைக்குப் புகலிடமாயுள்ள குருநாதனே; சிவன் இறை என அறைதல் முறையல - பஞ்ச கிருத்தியம் செய்வதற்குப் பரம சிவன் கருத்தா என்று சொல்லுமது பொருந்தி யிருந்த தில்லை; மூர்த்தி அன்மையின்- அவன்1 வடிவுடைய னல்லாமையின்; கறைகடி 2கரணம் இன்மையின்- பிரபஞ்சத்தை உண்டு பண்ணுகைக்குக் குற்றமற்ற கரணங்கள் உண்டாகமாட்டா. ஆதலால்; முரண்மிகு கடா- பொருந்தாமை மிக்க கடாவாயிருந்தது என்று சீடன் விண்ணப்பம் செய்ய:

 3. விடை அறிமதி- இதற்குப் பரிகாரம் கேட்பாயாக;

 4-7. (காலம்….இயற்றும்) காலம் 3அமூர்த்தம்- கால மானது வடிவின்றி இருந்தும்; உறுபலம் தரும்- 4அவ்வக் காலத்திற்குரிய பிரயோசனங்களைக் கொடுக்கும்; அதுபோல- அதுபோலவே; தலைவன் மூர்த்தத் திரிபினனானும்- கருத்தா வாகிய பரமசிவனும் 1மூர்த்தத்துக்கு வேறுபட்டிருந்தானா யினும்; இன்றொழில்- இனிதாகிய பஞ்ச கிருத்தியத்தை: 2பொருவு இரி இசையில் இயற்றும்- உவமை யில்லாத இச்சா சத்தியால் செய்யா நிற்பன்;

 7-8. (எனில்……………ஆங்கெனில்) எனில்- என்று இவ்வாறு அருளிச் செய்யின்; அவ்விச்சை ஆங்கு நற்றொழில் செய்தி 3நய வாது- அந்த இச்சா சத்தி அவ்விடத்தே 4நல்ல கிருத்தியமாய்ச் செயற்படாது; எனில்- என்கின்றாயாகில்;

 9.  கண்டிசின்- காண்பாயாக;

 9-11. (யோக………..இச்சை) யோகக் கலைத்துறை நீந்திய 5ஒண்டிறல் யோகர் போல- யோக சாத்திரத்தை முடிய வறிந்த 6அழகிய வலிமையுடைய யோகிகட்கு யோக சித்தி அட்டமா சித்திகள் செய்யுமாறு போல: தண்டா இச்சை- கர்த்தாவினது 7கெடாத 8இச்சாசத்தி இலக்கணம் என்று அருளிச் செய்ய;

 11. 1இறைக்கு இவண் ஏற்று எனில்- யோகிகளைப் போலப் பரமசிவனுக்கு இராகமுண்டாகவற்றோ, இவ்வியல்பு பொருந்தும் படி என் என்பாயாகில்;

 11-16. (சொற்றகு……….செய்தி) 2எல்லேய் புலமின்றா யினும்- ஒளியையுடைத்தான கரணமில்லா திருந்தேயும் சொல் தகு சல்லியம் தாள் அற வாங்கிற்று நலமலி கட்டகம் - சொல்லப்

 பட்ட இருப்புத் தாளை 3வலியறத் தன்பால் சூழ இழுத்தது அழகிய காந்தக்கல்லே; அன்னதானும்- அத்தன்மைத் தாயினும்; 4அகன்பால் இன்றொழில் மன்னாதானும்-அதனிடத்தே இனிய தொரு கிரியை 5தோன்றாதிருக்கவும்; அது வந்த 6செய்தியின்- அந்த இருப்புத் தாள் காந்தக் கல்லினிடத்திலே செறிந்த 7செய்தி

 போல என அறிக.

 16-20. (கட்காண்பு ……………….ஓதிடின்) கண் காண்பு எய்யா -கண்ணால் காண்பதற்கு அளவுபடாத; உவமையில் பெருத்து எனைப் பலவாம் உருத்திகழ் தொழில் - உவமை யில்லாத பெருமையுடைத்தாகி 8நானாவித வுருவமாய் விளங்கு கின்ற 9பிரபஞ்சகிருத்தியமானது; இருத்தல் கூடாது- தானே உண்டாகுதல் கூடாதாம்; திருத்தியகடம் போல்- ஒருவன் திருத்திச் செய்த கடம்போல; ஆதலின்- ஆதலாலே; காரணம் 1ஒன்று உண்டாம்- 2பிரபஞ்சத்திற்கு உபாதானமாகிய மாயையிடத்தே ஒன்றாகிய சத்தி 3உண்டாகவேண்டும்; 4என ஓதிடின் - என்று சொன்னால்;

 20-21. (கருமம்………….இடர்) 5கருமம் அது ஆதற்கு இடர் ஏது- 6அக்கன்ம சுத்தியே கருத்தாவாக அமையாதோ அதற்கு. விக்கினம் என்னென்று விண்ணப்பஞ் செய்ய;

 21. எனில் அது கோதில் அசேதனம்- கன்மமே கருத்தா வாக அமையுமென்பா யாயின், அது , குற்றமற்ற 7அசேதனமல்லவோ?

 22-25. (அருமறை…………..இசையினானே) சாந்தன் உருவிலி - சாந்தனாகிய சிவன் 8நிட்களமாயிருப்பர்; ஒளிதிகழ் சதாசிவன் அருவுரு- பிரகாசம் விளங்கிய சதாசிவ தேவர் 9நிட்கள சகள மாயிருப்பர்; அவிர் ஈசன் உரு - விளங்குகின்ற மகேசுரதேவர் சகளமாயிருப்பர்; ஏந்திய கொள்கை இசையினான்- 1இவர் 2மூவரையும் தமக்குச் சுதந்திரத் திருமேனியாகக் கொண்ட கோட்பாட்டையுடைய கீர்த்தியையுடை யோனாகிய பரம சிவனே கருத்தா; என்று இனிது அருமறை அறையும்- இனி தாக அரிய ஆகமங்கள் 3சொல்லா நின்றன எ-று.

 மதி, சின், மற்று- அசை.

 அகவல் 63

 பஞ்ச கிருத்திய பதி அவிகாரி.

 அடையான் விகார 4மாயினுஞ் சுடரவன்

 சுடர்வீழ் தாமரைத் தோடினி தலர்த்தவும்

 மற்றவை குவிப்பவு முலர்த்தவும் கொற்றக்

 கிரணத் ததுவென வரணமில் கூற்றின்

 5.  முரண்டொலை யொருவனு முரியாச் சத்தியின்

 அண்ட ரண்டமற் றெண்டர லிடைவ

 செய்தக் கண்ணுந் 5திரிவிலன் வெய்யோன்

 இலங்குகதி ரீரமட் 6டிரளை மெழுகை

 நலங்கொளக் கரைத்து நவையற வலித்தற்

 6.  கொன்றே போலச் சென்றகல் பறியாச்

 சத்தியிற் பிணித்தற் கப்பிணி யவிழ்த்தற்

 கன்ன சத்தி 1யறியிற் பன்னுவம்

 பொருவொடு போகா வொளியொடு பொருந்தி

 அளவற வகன்று விளைவதோர் சலனம்

 7.  இன்றி யென்று நின்றாங் கொன்று

 மறைப்பதை யின்றி யுறப்பெருத் தகன்ற

 உருவொடு செறியாது 2வெருவரு மராகம்

 ஆதிய வணையா வலரைம் பூதம்

 ஊர்தரு விந்துவி னேர்தர வியைந்த

 8.  செய்தியிற் 3றிகழ்ந்தும் பிறிதிற் சிறிதும்

 உய்யா தாசை யொளிமுக மெங்கணும்

 ஆகி முதலிடை கடையிற் போகா

 தியாவதோர் பந்தமு மிரீ இப்போவதும்

 வருவது மிறந்து மேலாய் முடிந்த

 9.  4திருவா யெல்லை யாகி யொருவா

 நுணங்கிய தரனை யிணங்கி வணங்கா

 5விந்துவில் வைகரி யாதி விருத்தியில்

 வந்தா ணவமான் மாவை மறைப்பது

 போல விகாரித் தது6 மற் றஃதெது

 10. 7போலு மெனிற்கட றண்கதிர் வெஞ்சுடர்

 ஒட்டிய காலை யுருத்தெழு திரையின்

 விட்டுய ரோதை 8விராவுபு முற்ற

 அந்தர 9மறைவது போலப் பொங்கிய

 வாறென வமோக னீறில் சத்தி

 11. ஒன்று பலபோல நின்றியல் பெவணெனின்

 வென்றி விரிச்சிகன் விரிகதிர்க் கோடையிற்

 கோடலி னொன்றே யாகி யிச்சை

 1ஆடா னாகி யாடுநன் போலப்

 பலபோற் 2றோன்ற லலர்வா ளமலன்

 12. இச்சைசெய் சத்தி யிவணமற் றவனோ

 காரியத் திசைந்த பேரிசைப் பெருவலி

 அறிவின் றறிவதை யொத்துப் பிறிவின்

 றிருந்தொழி லிலதஃ தருந்தொழில் 3சிவணல்

 அருமறை யகத்து முலகத் தெங்கணும்

 13. 4வருமறி சிந்தா மணிகற் பகமிவை

 வேண்டுநர் வேண்டிய வாண்டாண் டுதவல்

 அன்ன தாய வளவி லரனுடைப்

 பன்னா ஞானப் படரடு பெருவலி

 இலங்கிருங் கிரியையின் விதியின்

 14. நலந்தரு காம நல்குமன் னயந்தே.

 இது 5பஞ்சகிருத்தியச் செயலால் விகாரம் கூடுமென்று வினவப் பரமசிவன் அவிகாரியாயிருந்தே ஏக சத்தியாலே பிரபஞ்ச காரியஞ் செய்வன் என்று சொல்லியது.

 1-4. உரை: (அடையான்………அதுவென) 6சுடரவன் விகாரம் அடையான் ஆயினும்- ஆதித்தன் அவிகார முடையனாயினும்; சுடர்வீழ் தாமரைத்தோடு இனிது அலர்த்தவும்- 1ஆதபத்தை விரும்புதலையுடைய தாமரை மொட்டை இனிதாக மலர்விக்கவும்; மற்றவை குவிப்பவும்- ஆம்பல் முதலான ஏனைப் புட்பங்களை மொட்டிப்பிக்கவும்; உலர்த்தவும்- பறித்த புட்பங்களை 2உணத்தவும்; 3கொற்றக் கிரணத்து- அவனது கீர்த்தியை யுடைத்தாகிய கிரணத்தாலே 4யாம்; அது என- அதுபோல;

 4-7. (அரணமில்…………திரிவிலன்) 5அரணம் இல் கூற்றின் முரண்தொலை ஒருவனும்- பரிகாரமில்லாத கூற்றுவனுடைய வலியைக் கெடுத்த பரமசிவனும்; முரியாச் சத்தியின்- 6கெடாத சத்தியினாலே;அண்டர் அண்டம் மற்று எண்தரல் இடைவ செய்தக் கண்ணும்- தேவருலகமும் மற்றும் எண்ணிறந்த அண்டங்களும் செய்தானேயாயினும்; திரிவிலன்- அவிகாரி யாயே இருப்பன்.

 7-11. (வெய்யோன்…………அவிழ்த்தற்கு) வெய்யோன் இலங்கு கதிர் ஈரமண் திரளை நவையற வலித்தற்கு- இந்த ஆதித்தனுடைய விளங்குகின்ற 1ஒளியானது ஈரமண்ணின் திரளைக் குற்றமற வலிக்கப் பண்ணவும்; மெழுகை நலங்கொளக் கரைத்து- வலியுண்டான மெழுகை 2நன்றாக உருக்கவும்; 3ஒன்றே போல- தான் ஒன்றேயாய் இருத்தல் போல; சென்று அகல்பு அறியாச் 4சத்தியின்- 5ஒருகாலத்தும் கூடுதலும் பிரிதலும் அறியாத ஏக சத்தியாலே; 6பிணித்தற்கு அப்பிணி அவிழ்த்தற்கு- 7சிருட்டியாதி தொழில்களைப் பரமசிவன் செய்யா நிற்பன்;

 12-18. (அன்ன…………….அணையாது) அன்ன சத்தி அறியின் பன்னுவம்- 8அத் தன்மைத்தாகிய சத்தி இருக்கும்படி அறிய வேண்டில் அதனைச் சொல்வோம்; 9பொருவொடு போகா ஒளியொடு பொருந்தி- உவமையில்லாத மகத்தான பிரகாசமாய்; 1அளவற அகன்று- அளவில்லாத சருவ வியாபியாய்; விளைவ தோர் சலனம் இன்றி- தனக்கு உண்டாவ தொரு விகாரமின்றி; அன்றும் நின்று- நித்தியமாய்; ஆங்கு ஒன்றும் மறைப்பதை யின்றி- அவ்விடத்தே ஒரு பதார்த்தத் தான் மறைக்கப்படாததாய்; உறப் பெருத்து அகன்ற- மிகவும் பெருத்து விரிந்திராநின்ற; உருவொடு செறியாது- உருவ முடையதன்றாய்; வெருவரும் அராகம் ஆகிய அணையாது- நல்லோராலே 2வெருவப்பட்ட இராகத்துவேஷ முதலான வற்றோடு இசையாததாய்க் 3காண் இருப்பது; இது சிவசத்தியின் சொரூபவிலக்கணம்4.

 18-26. (அலர்…………நுணங்கியது) அலர் ஐம்பூதம் - அந்தச் சத்திதான் விரிந்திருக்கின்ற 5பஞ்சபூதங்களுக்கும் உபா தான மான மகா மாயையை; ஊர்தரு விந்துவில் நேர்தர இயைந்த - பிரேரீப்பதான 6சிவதத்துவத்தில் அழகிதாகப் பொருந்திய; செய்தியின் திகழ்ந்தும்- பஞ்ச கிருத்தியங்களிலே 7பிரகாசித்தும்; பிறிதிற் சிறிதும் 8ஆசை உய்யாது- இக் கிருத்தியமன்றி வேறு பதார்த்தமில்லாமையாலே மற்றொரு தொழிலில் யாதும் ஆசை யின்றியே; எங்கணும் ஒளிமுக மாகி- சர்வதோமுகமாய் விளங்கி; முதல் இடை கடையிற் போகாது- முதல் நடு இறுதி யின்றியே; யாவதோர் பந்தமும் இரீஇ- சருவ பந்தங்களையும் ஒழிந்து; போவதும் வருவதும் இறந்து- போக்குவரவின்றியே மேலாய் முடிந்த 1திருவாய் எல்லையாகி- எல்லாப் பதார்த்தங்களுக்கும் மேலாய் முடிவான நாதபரியந்தம் தேடக் கிடையாத செல்வம் மிகுந்த எல்லையாய்; 2ஒருவா நுணங்கியது- 3நீங்காத 4சூக்கும மானதாய்;

 26-29. (அரனை …………..விசாரித்தது) அரனை 5இணங்கி- பரமசிவனுடனே கூடி; 6வணங்கா விந்துவில்- கெடாத 7சுத்தமாயை யினுடைய பிரவிருத்தியில் தோன்றிய; 8வைகரியாதி - வைகரி மத்திமை பைசந்தி சூக்குமை என்னும் நால்வகை வாக்கையும்; விருத்தியில் வந்து- விருத்தியுறத் தோற்றுவிக்கும் காரணத்தினால் வந்து1; ஆன்மாவை ஆணவம் மறைப்பது போல 2விகாரித்தது- சூக்குமமான ஆன்மாவை ஆணவமலம் மறைப்பது போலச் சிருட்டி காலத்திலே அந்த விந்துவைக் கலக்காநிற்கும்.

 29-34. (மற்று……பொங்கியவாறென) அஃது எது போலும் எனில்- அச்சத்திதான் எதுபோலக் கலக்கு மென்னில்: தண்கதிர் வெஞ்சுடர் ஒட்டிய காலை- சந்திராதித்தர் கூடிய ஞான்று; கடல்- சமுத்திரமானது; உருத்தெழு திரையின் விட்டுவர் ஓதை- 3பயங்கரமாக எழுகின்ற அலைகளினாலே மிகவும் உயர்ந்து ஆரவாரிக்கின்ற ஆரவாரம்; அந்தரம் விராவுபு முற்ற மறைவது போலப் பொங்கியவாறென- ஆகாசத்தின் மேற்கலந்து அதன் இடம் முழுதும் மறைத்தாற் போலச் 4சத்திக்கின்ற 5தன்மை யாயிருக்கும்;

 34-40. (அமோகன் ………..இவணம்) அமோகன் ஈறில் சத்தி ஒன்று பல போல நின்று இயல்பு- 6மோகமில்லாதவனாகிய பரமசிவனுடைய முடிவில்லாத சத்தியாகிய ஏக சத்தியே கிரியாபேதத்தாலே திரிவிதமாக நின்று 7இயற்றும் இயல்பு எவண் எனின்- எவ்வண்ணம் என்னில்; வென்றி விருச்சிகன் விரிகதிர் கோடையிற் கோடலின்- வெற்றியையுடையனாகிய ஆதித் தனுடைய விரிந்தகிரணம் மெழுகை நெகிழ்க்கவும் ஈரமண்ணின் நீரை வாங்கவும்; ஒன்றே யாகி- ஏக சக்தியாகி; இச்சை ஆடானாகி- இராகத்துவேட மற்றிருக்கவும் ஆடுநன் போல- இவை உடை யனாகத் தோன்றினாற் போல; 1அலர் வாள் அமலன் இச்சை செய் சத்தி- விரிந்த பிரகா சத்தையுடைய பரமசிவனுடைய ஏக சத்தியாகிய இச்சாசத்தியே; பல போல் தோன்றல் இவணம்- பல போலத் தோன்றுவது 2இவ்வண்ணமாய் இருக்கும்;3

 40-45. (மற்று………வருமறி) அவன் காரியத்து இசைந்த பேர் இசைப் பெருவலி- அந்தப் பரமசிவனுக்குக் கிரியா சத்தியாய்ப் பொருந்திய பெரிய கீர்த்தியையுடைய மகா சத்தி இருக்கும்படி சொல்லின்; 4அறிவின்று அறிவதை ஒத்து- அறிவின்றி இருந்தும் 5அறிவுடைய பதார்த்தத்தைப்போன்று 6பிரிவின்று- பரமசிவனைப் பிரிதலை யின்றியே; இருந்தொழில் இலது- மிக்க தொழில் இல்லாததாகி; அஃது- அது தான்; அருந்தொழில் சிவணல்- அரிய தொழில்களைச் செய்யும் இயல்பு; 1அருமறை யகத்தும் உலகத்து எங்கணும் வரும்- அரிய வேதாகமங்களிலும் உலக நூல்களிலும் அவ்வவ்விடங்களிலே சொல்லப்பட்டுவரும்; அறி- இதனை நீ அறிவாயாக; அஃது என்போலவென்னில்,-

 45-46. (சிந்தாமணி…………….உதவல்) 2சிந்தாமணி கற்பகம் இவை- சிந்தாமணியும் கற்பகமும் என்று சொல்லப்பட்ட இவை; வேண்டுநர் வேண்டிய ஆண்டாண்டு உதவல்- அசேதனமா யிருந்தும் வேண்டினோர் வேண்டிய பொருளை அவ்விடத் தவ்விடத்து உதவினாற் போலவாம்3;

 47-50. (அன்னதாய……………..நயந்தே) அன்ன தாய 4அரனுடை – அத்தன்மைத் தாகிய பரமசிவனுடைய; படர் அடு- ஆன்மாக்களின் துக்கத்தைக் கெடுக்கும்; பன்னா அளவில் ஞானப் பெருவலி- சொல்லுதற்கரிய அளவில்லாத மகத்தான 5ஞான சத்திதான்; இலங்கு இருங்கிரியையின் - விளங்குகிற பெரிய கிரியா சத்தியினாலே; நலம் 1தரு காமம்- 2நன்மையைத் தருகிற போகம் மோக்கம் என்னும் 3அபேட்சிதமான பொருள்களை; 4நயந்து நல்கும்- மிகவும் 5அறிவித்து அளித்து நிற்குங்காண்6 எ.று.

 மற்று, வினைமாற்று, ஒ, இசைநிறை. மன், மிருதி.

 அகவல் 64

 சருவகாரண சிவன் அவிகாரி.

 நார மேய நல்லுயி ரனைத்தும்

 நார மன்றே நாரமின் றின்றே

 நாரச் செய்தியு மன்றே நாரம்

 ஆருயிர்க் கல்ல துயிரதற் 7குதவும்

 5.  பேருப காரமு மின்றே யாயினும்

 ஆருயிர்க் கபய மறன்மற் றுள்ளா

 தாருயிர்க் கபய 8மாற்றும் பேரிசை

 வான்மண் டீநீர் வளியக நிறைதந்

 தானா தப்புறம் படர்ந்துந் தானவை

 6.  உறைவிட னூங்கினி தளித்து 1மிடையுந்

 தானே யாகி யேனைய விளக்கி

 இருவே றிசையா தொருவழிச் சிவணி

 2இன்றி யமையாச் சிறப்பிற் றாகி

 என்றுந் தானவை யொன்றா 3வாறாம்

 7.  பதங்கன் பல்கதிர் பரப்பி விசும்பினி

 தியங்குங் காலை யெழுந்தினி தியற்றும்

 மன்னுயிர்த் தொடக்க 4மார்த்தாண் டற்கின்

 றன்னோ 5தானு மருவிலை யமளிப்

 பாய னீங்கிப் பஃறொழில் புரிகென்

 8.  6றேவு திறம் படரா னேனு மேவிய

 ஆதப 7னிடத்தன் றருந்தொழில் புரியும்

 8நீத மில்லை நீணிலத் தோர்க்கே

 இன்னுங் கேண்மதி 9யினமலர் துதைந்த

 தாதுபடு கொழுநிழல் பாதவ மன்றே

 9.  மாதர் வண்டொடு சுரும்பிமிர் 10தருநிழல்

 பாதவம் படைத்தது மன்றே பாதவம்

 இன்றே னீழல் 11காண்டலு மிலமே

 ஒன்றோ மற்று முண்டுமற் பெரிதே

 கருந்தாது கொட்கு மிருஞ்சிலை யிரும்பை

 10. 12வருந்தின மறுகுமன் னென்னா தையமின்

 றிருந்தாது கறங்கற் கிதனிடத் தல்லதை

 பொருந்தா தென்ன விரிந்தொளி கான்று

 மாதிர மனைத்து மீரேழ் புடவியும்

 அளவிழைத் தளவா வண்டமும் பலவெனக்

 11. கொட்புறு காலமு மெப்பே ருயிரும்

 உறாவரை யெய்தி யொன்றொடும் புணரா

 தினைய காக்குங் களைக ணாகிக்

 களைகண் யானெனும் விளைவற வொரீஇப்

 பன்னிய வெவற்றுந் 1தன்னமோர் குறையின்

 12. றன்னோ னின்ற 2வகாரணாற் காரணம்

 என்னதென் றிசைக்குவம் யாமே யன்னோ

 உரையுணர் வொடுங்கின ருணர்வின்

 விரையுறு கடியின் விரவி யோனே.

 இது, 3பரமசிவன், செயல்களனைத்திற்கும் காரண மாகித் தான் அவிகாரியாயிருப்பன் என்று கூறியது.

 1-7. உரை: (நாரம் ……………..ஆற்றும்) நாரம் 4மேய நல் உயிர் அனைத்தும்- சலத்தில் வர்த்திக்கும் பல வருக்கத்து நல்ல 5பிராணிகளும்; 6நாரம் அன்று - சலம் அல்ல; நாரம் இன்று இன்று- சலத்தை இன்றி அமையா; 7நாரச் செய்தியும் அன்று-

 அவை சலத்தின் 1காரியமும் அல்ல; 2நாரம் ஆருயிர்க் கல்லது உயிர் அதற்கு உதவும் பேருபாகரமும் இன்று -சலந்தான் 3நிறைந்த பிராணிகளுக்கு இரட்சையாமல்லது பிராணிகள்தாம் அந்தச் சலத்துக்குச் செய்யும் பெரிய உபகாரமும் இல்லை; ஆயினும்- 4அற்றாயினும் 5ஆருயிர்க்கு அபயம் அறன் மற்று உள்ளாது -நிறைந்த பிராணிகளை இரட்சிக்கின்ற தான தருமத்தைச் செய்யாநின்றேன் நான் என்று இச்சலந்தான் நினையாதிருந்தும்; ஆருயிர்க்கு அபயம் ஆற்றும்- இந்த நிறைந்த பிராணிகளுக்கு இரட்சையைச் செய்யா நிற்கும்6;

 7-14. (பேரிசை………….ஒன்றாவாறாம்) பேரிசை வான்- பெரிய கீர்த்தியையுடைய ஆகாயமானது; மண் நீர் தீ வளிஅகம் நிறை தந்தும்- பிருதுவி அப்பு தேயு வாயுவாகிய நான்கிலும் வியாபித்தும்; ஆனாது- அமையாது; அப்புறம் படர்ந்தும்- அப்பாலும் வியாபித்தலையுடைத்தாய்; தான் அவை ஊங்கு இனிது 7உறை விடன் அளித்தும் - தான் அப்பூதங்கட்கு மிகவும் இனிதாக இருக்கத் தக்க இடம் கொடுத்தும்; 8இடையும் தானே யாகி- நடுவும் தானேயாய்; ஏனைய விளக்கி- 1அப்பூதங்

 களை உருத்தெரித்து; 2இருவேறு இசையாது ஒருவழிச் சிவணி- 3அவை வேறு தான்வேறு என்னும் வேறுபாடற ஒரு படித்தாகக் கூடித் தன்னையின்றி அமயாத 4சிறப்பு உடைத்தாய்; என்றும் தான் அவை ஒன்றாவாறாம்- ஒருநாளும்தான் அவையிற்றோடு கூடியிராதவாறு போலவுமாம்;

 5இஃது இன்றியமையாமைக்குத் திட்டாந்தம் எனக் கொள்க.

 15-22. (பதங்கன்………….நீணிலத் தோர்க்கே) பல் கதிர் பரப்பிப் பதங்கன் விசும்பு இனிது இயங்குங் காலை- தன்னுடைய கிரணங்கள் பலவற்றையும் விரித்துக்கொண்டு ஆதித்தனானவன் ஆகாயத்திலே இனிதாக இயங்கும்பொழுது; 6இனிது இயற்றும் மன் உயிர்த்தொடக்கு 7அம்மார்த்தாண்டற்கு இன்று- 8இனி

 தாகத் தொழில் புரியும் நிலையற்ற உயிர்களின் தொடக்கு அந்த ஆதித்தனுக்கு இல்லை; அன்னோ- ஐயோ; தானும் அருவிலை அமளிப் பாயல் நீங்கிப் பல் தொழில் புரிக என்று 1ஏவுதிறம் படரானேனும்- ஆதித்தன் தானும் பெறுதற்கரிய விலையுடைத் தாகிய 2மஞ்சத்திற் கொள்ளப் படுகின்ற சயனத்தினின்றும் எழுந்திருந்து பல தொழில்களையுஞ் செய்யுங்கோள் என்று ஏவும் முறைமையைச் செய்யானாயினும்; மேவிய ஆதபன் இடத்தன்று அருந்தொழில் புரியும் நீதம்- இச்செயலுக்குக் காரணமாகப் பொருந்திய ஆதித்தனிடத்தல்லது அரிய தொழில்களைச் செய்யும் முறைமை; 3நீள் நிலத்தோர்க்கு இல்லை- விரிந்த பூமியிலுள்ளார்க்கு இல்லை4;

 5இது பெத்த முத்திஇரண்டினும் பேரறிவு சிற்றறிவு இருக்கும் இலக்கணத்திற்குத் திட்டாந்தம் எனக் கொள்க.

 23. இன்னும் கேண்மதி- இன்னமும் கேட்பாயாக:

 23- 27 (இனமலர்…….இலமே) துதைந்த தாது இனமலர் படு கொழுநிழல்- செறிந்த தாதோடே கொத்துக் கொத்தான பூக்களையுடைய அழகிய விருக்கத்தின் நிழல்; பாதவம் அன்று- விருக்கந்தான் அன்று; மாதர் வண்டொடு சுரும்பு இமிர்தரு நிழல்- 6காதலிக்கப்பட்ட பெடையும் வண்டும் சத்திக்கும் அவ்விருக்கத்தின் நிழல; 7பாதம் படைத்ததும்அன்று- விருக்கத்தாற் படைக்கப் பட்டதன் றாயினும்; பாதவம் இன்றேல் நீழல் காண்டலும் இலம்- விருக்க மில்லையாயின் நிழலைக்காண்பதும் இல்லை;

 1இஃது அனாதியே பரமசிவனைப் போல ஆன்மா நித்தியமாய் இருந்ததாயினும், அவனையின்றி ஆன்மா என்றொரு பொருள் உளதாதற்கு இடமில்லை என்பதற்குத் திட்டாந்தமெனக் கொள்க.

 2இவை நான்கும் அகாரணாற் காரணமாகப் பஞ்ச கிருத்தியம் செய்தற்குத் திட்டாந்தம் அருளிய தெனக் கொள்க.

 28. (ஒன்றோ……..பெரிதே) ஒன்றோ - ஒன்றேயோ; மற்றும் பெரிது உண்டுமன்- இன்னமும் திட்டாந்தம் பல உள்ளன காண்;

 29-32. (கருந்தாது……………பொருந்தாது) கருத்தாது கொட்கும் இருஞ்சிலை- இருப்புத்தாளைச் சுழற்றும் பெரியகாந்தக் கல்; இரும்பை 3வருந்தின் மறுகும் என்னாது- இரும்பை வருத்திச் கழற்ற வேண்டும் என்னும் கருத்தில்லையாயினும்; ஐயமின்று இருந்தாது கறங்கற்கு இதனிடத்தல்லதை பொருந்தாது- ஐயமறப் பெரிய இரும்பு சுழலுதற்கு உரிய ஏது இதனிடத்தல்லது இல்லை;

 4இது பரமசிவன் அவிகாரியாயிருக்கச் சத்தி சந்தி தானத்திற் பிரபஞ்சம் காரியப்படுதற்குத் திட்டாந்தம் எனக்கொள்க.

 32. என்ன- இவ்வைந்து திட்டாந்தமும் போல;

 32-43. (விரிந்தொளி………..விரவியோனே) 5விரிந்து ஒளிகான்று - சருவவியாபியாய்ச் சுயம்பிரகாச முடையனாகி; 6மாதிரம் அனைத்தும் ஈரேழ் புடவியும் - திக்குகள் பத்திலும் உலகம் பதினாலிலும்; அளவு இழைத்து அளவா அண்டமும்- 7அளவு செய்து அளத்தற்கரிய அண்டங்களிலும்; 8பல எனக் கொட்புறு காலமும்- வருங் காலம் செல் காலம் நிகழ் காலம் என்று சுழன்றுவரும் காலங்களிலும்; எப்பேர் உயிரும் 9உறாவரை எய்தி- 1சருவான்மாக்களும் போகம் புசித்தற்குத் தான் இன்றி யமையாத முற்றூட்டாகிய பொருளாய் நின்று; 2ஒன்றொடும் புணராது - இவைகள் ஒன்றினும் தான் பற்றற்று; இனைய காக்கும் 3களை கண் ஆகி- இத்தன்மையவாகிய உயிர்களை இரட்சித்தற்குத் தான் இரட்சனுமாய்; களைகண் யான் எனும் விளைவு அற ஒரீஇ- இரட்சகன் யானென்னும் அகங்காரம் அறவொழிந்து; பன்னிய எவற்றும் 4தன்னமோர் குறையின்று- இப்படிச்சொல்லப்பட்ட பொருள் எவற்றினிடத்தும் 5சிறிதேயு மொரு குறைவின்றியே; உரை உணர்வு ஒடுங்கினர்- “6நான் மறையை முழுதுணர்ந்து ஐம்புலன்களைச் செற்று மோனிகளாயினார்”; உணர்வின்- உணர்விலே; விரையுறு கடியின் 7விரவியோன் - பூவிற் கந்தம் போலக் கூடி நின்றோனாகிய; அன்னோன் - அத்தன்மை யனான பரமசிவன்; நின்ற அகாரணாற் காரணம் 8என்னது என்று அன்னோ யாம் இசைக்குவம்- அகாரணாற் காரணனாய் நின்ற இயல்பை ஐயோ நாம் என்னென்று சொல்லு வோம் எ.று.

 மற்று, வினைமாற்று, ஏகாரம் தேற்றம், மன் , அசை, ஐ, சாரியை, விரை, ஆகுபெயர்.

 அகவல் 65

 அசுத்தாத்துவ கருத்தர்.

 கலைநில வலனெனிற் புலனல னலனெனின்

 நலமலி புற்கல னிலைமலி கலையுடன்

 ஒன்ற லொன்றா தாக லென்றும்

 ஒன்றிற் கொன்றா வென்றனி நாயக

 5.  பன்னு நிட்கள மறிதற் குன்னிற்

 பசுவுக் கமலன் சத்தி யொசியா

 துற்ற வுண்மை யானு மற்றவன்

 மந்திர வலியி னானு மந்தமில்

 நிட்கள மறித றொக்கதன் வலியின்

 6.  நொசிவிட விகார மான வசிபடு

 சகல னானுந் துகடொகு புற்கலன்

 அல்லன் மாயை யவயவ மாட்டி

 எல்லிய 1நிமல மாய நல்ல

 மந்திர கலையின் மரீஇ மைந்துமலி

 7.  திருந்திருந் தியானத் 2திருந்தனன் பெருந்தகை

 அரும்பெறல் யோகரிற் பொருந்துதல் விடலென

 நின்றது விந்து நிட்கள மலமன்

 மன்ற நன்றினி தாயிற் சென்றுயர்

 ஆகத் தன்மைய னாயிற் 3போகிலன்

 2.0 இருங்கலை யிவணம் பெருந்தகை திருந்தியல்

 அரும்பெறல் யோகப் பெருந்துறைப் படியுநர்க்

 கிருந்தோ ரிலக்க மின்றெனிற் பொருந்தா

 தாகலி னாத விந்து வாகிய

 யோக வாணர்க் குறுபயன் புரப்ப

 25. நின்றனன் யாவு மொன்றிய வறிவன்

 ஆகலி னமல னற்றோ போகிய

 ஆருயிர்க் கருட்கடன் பூண்டு சீர்மிக

 உயர்ந்தனன் பணிந்த வியந்தா கத்தை

 நயந்தன னல்லகொ னன்றே வியந்தென

 26. இச்சை யருளோ டிறைமை நச்சி

 இலய போக வதிகா ரத்து

 நிலையின னீச னிலை இத் தொலையா

 மாயை முதலிய 1விச்சைக் கிறையின்

 2ஏய செய்தியி னேயத் தூய

 27. அத்துவா வதனுக் கதிப 3னெத்தகை

 அத்தகை யனந்த னிறையசுத் தத்தின்

 மிக்க பூபதி தலைமை வைத்தோன்

 வைத்த நிருபனோ 4டொத்த வாறேனச்

 செய்வ னெவையுஞ் சிவன்வலி யவமற

 28. ஐயமின் றுணர்த்த வறிந்தின தெவையுந்

 தூய வாக னாகி யாயா

 ஞான மெவையு நலங்கொள

 ஊனம தகல வுறவிரிந் துயர்ந்தே

 இஃது உரையுணர் வொடுங்கின ருணர்வின் விரையுறு கடியின்5” விரவிய பரம சிவனுக்கு நிட்களமும் சகளமும் சகள நிட்களமும் பொருந்தாமை வினவ, “இவை யிற்றுக்கு இவன் இன்றியமையானாயிருப்பன்” எனக் கூறி, அசுத் தாத்துவாவுக்குக் கருத்தா அனந்த தேவரே என்று கூறியது.

 1-4. உரை: (கலை…………..நாயக) என் தனி நாயக- 6அடியேனுக் கென்று வாய்த்த உவமையில்லாத கருத்தாவே; கலை 7நிலவலன் எனில் புலனலன்- தேகத் தோடே கூடியிரா னாயின் 8காணப்படா தவனாம்; அலன் எனில் 9நலமலி புற்கலன் அன்றியே தேகத் தோடே கூடியிருப்பானாயின் 1பந்தனாம்; 2நிலைமலி கலையுடன் ஒன்றல் ஒன்றாதாகல் என்றும் ஒன்றிற்கு ஒன்றா- 3கழித்தற்கருமையால் இடையறாத தேகத்துடனே கூடுதலும் கூடாமையுமாகிய ஈரியல்பும் என்றும் ஒரு பொருளுக்குப் பொருந்தா என்று சீடன் விண்ணப்பஞ் செய்ய;

 5-10. (பன்னும் ……….விகாரமான) பன்னும் நிட்களம்4 அறிதற்கு உன்னில்- புலப்படுவானல்லனென்று நீ சொல்லும் நிட்களத்தை அறிதற்கு உபாயம் விசாரிக்கில்; பசுவுக்கு- பாசபந்தனான ஆன்மாவுக்கு; 5அமலன் சத்தி ஒசியாது உற்ற உண்மையானும்- 6நிட்கள சிவசத்தி குற்றமறப் பதிதலாலே 7முத்தனானமையானும்; மற்று- மற்றும்; 8அவன் மந்திரவலி யினானும்- பிரத்தியட்சத்திலே மந்திரவாதியினுடைய ஆக்கினை யால் மந்திரசத்திகள் பலிக்குந்தன்மையாலும்; நொசி விட விகாரம் மான -குறுகிய விட விகாரம் கண்டு விடம் தீண்டின தன்மையை ஐயமற நிச்சயித்தாற் போல; தன் வலியின் தொக்க அந்தமில் நிட்களம் அறிதல்- 9இப்பொருள்கள் சிவன் சத்தி சந்நிதியிலே முடிந்தன என்று நித்தியமாகிய நிட்களத்தை 1யறிதல் கூடும்.

 10-16. (வசிபடு……….விடலென) 2வசிபடு 3சகலனானும் துகள் தொகு புற்கலன் அல்லன்- இனி 4வசீகர முடைத்தாய ஏகதேசமாகிய சரீரங் கொண்டானாயினும் குற்றங்கள் கூடிய புற்கலன் அல்லனாம், அஃது எங்ஙனம் என்னில்; 5மாயை அவயவம் 6மாட்டி- மாயாகாரியமான தேகத்தை யொழித்து; 7எல்லிய நிமல மாய நல்ல மந்திர கலையின் மரீஇ- ஒளியுடைத்தாகிய நின்மல மாகிய நல்லமந்திர சொரூபமாகப் பொருந்தி; மைந்துமலி திருந்து 8இரும் தியானத்து இருந்தனன் பெருந்தகை- வலிமிகுந்து திருந்தியிருக்கின்ற மகத்தாகிய தியானத்திலே பக்குவப்பட்டோர்க்குச் சொரூபமாகிய தொரு குறி வேண்டித் திருமேனி கொண்டான் பரமசிவன், என் போல என்னில்; 1அரும் பெறல் யோகரின் பொருந்துதல் விடல் என- பெறுதற் கரிய யோகிகள் சுவேச்சா விக்கிரகம் கொண்டு விட்டாற் போல;

 17-18. (நின்றது………ஆயின) நின்றது விந்து- 2இங்ஙனம் கூற இனி நின்றதாகிய திருமேனி சகள நிட்களம் என அறிக; நிட்களம் அல- அது தான் நிட்களமல்ல; மன்ற இனிது நன்று 3ஆயின் - நிச்சயமாக இனிதாக மிகவும் ஆராயுமிடத்து;

 18-20. (சென்றுயர்…………….பெருந்தகை) சென்று உயர் ஆகத் தன்மையனாயின்- விரிந்துயர்ந்திருக்கின்ற 4சகளத் திருமேனி கொண்டானானபடியைச் சொல்லின்; 5இவணம் இருங்கலை போகிலன் - இவ்வண்ணம் பெரிய கலை முதலாகிய தத்து வாங்கிசங்களாலே யாகிய சரீரம் எடுத்தானல்லன்; பெருந் தகை- பெருந்தகைமையை யுடையோனான பரமசிவன்;

 20-25. (திருந்தியல்………..நின்றனன்) திருந்து இயல் யோகப் பெருந்துறை படியுநர்க்கு- 6திருந்தியிருக்கின்ற இயல்பை யுடைய பெறுதற்கரிய யோகமாகிய பெரிய சமுத்திரத்திலே ஆடுவோர்க்கு; இருந்ததோர் இலக்கம் இன்றெனின்- உண்டாய தோர் 1இலக்காகிய சகள நிட்கள வடிவில்லையாயின்; 2பொருந்தா தாகலின்- நிருவகிக்கவொண்ணாதானபடியால்; நாதவிந்து வாகிய யோக வாணர்க்கு- 3விந்து நாத தரிசனம் பெறும் 4சிவயோகிகளுக்கு; உறுபயன் புரப்ப நின்றனன்-மிக்கபயன் கொடுப்பான் காரணமாகச் சகளீகரித்தான்5;

 6இனி இவன் நிட்களமான படியைச் சொல்லின்.

 25-29. (யாவும்………..வியந்தென) யாவும் ஒன்றிய அறிவனாகலின்- சருவ பதார்த்தங்களிலும் ஒரு படித்தான அறிவுடையோனாதலால்; 7அமலன்- நிட்களனாம்; அற்றோ- அஃது ஒன்றோ; போகிய ஆருயிர்க்கு 8அருட்கடன் பூண்டு சீர் மிக உயர்ந்தனன்- 9அளவற நிறைந்த ஆன்மாக்களுக்கு அருளென்னும் முறைமையைப் பூண்டு எல்லையில்லாத கீர்த்தி மிக உயர்ந்தோன்; வியந்தென பணிந்த ஆகத்தை நன்று வியந்து நயற்தனனல்ல கொல்- தன் பெருமைக்கு ஆச்சரியமாகத் தாழ்ந்த தேகத்தை 1நல்ல அதிசயமாக விரும்பானல்லவோ;

 30-32. (இச்சை………….ஈசன்) இச்சை போகம்- இங்ஙனம் ஆதலாலே இச்சையான் ஆன்மாக்களைப் போகம் பொசிப்பிப் பான் காரணமாகச் சகள நிட்களமான சதாசிவ தேவரிடத் தும்; இறைமை அதிகாரம்- இறைமையாலே அதிகாரமாகச் சகவீகரித்த 2மகேசுர தேவரிடத்தும்; அருள் இலயம் நச்சி- அருளாலே இலயமாக நிட்களனாகிய இலய சிவனிடத்தும் விரும்பி; நிலைஇயினன் ஈசன் -நின்றான் 3பரமசிவன்;

 32-36. (நிலைஇ. ……………………..அசுத்தத்தின்) நிலைஇ -இங்ஙனம் நின்று; 4தொலையா மாயை முதலிய விச்சைக்கு- கெடாத 5சுத்த மாயை 6முதலாகிய சுத்தாத்துவாவை; இறையின் ஏய செய்தியின்- பரமசிவன் பிரேரித்துச் செய்தலால்; அத்தூய அத்துவா வதனுக்கதிபன்- அந்தச் சுத்தாத்துவாவுக்கு அதிபனாகிய பரமசிவன்; எத்தகை- எவ்வண்ணம் கருத்தாவோ: அத்தகை- அவ்வண்ணமே;

 1அசுத்தத்தின் அனந்தன் இறை- அசுத்தாத்துவாவுக்கு அனந்த தேவர் கருத்தாவாயிருப்பர்;

 36-43. (மிக்க………..விரிந்துயர்ந்தே) 2மிக்க பூபதி தலைமை வைத்தோன்- மகத்தாகிய வலிமையினையுடைய இராசாவாலே அனுக்கிரகிக்கப்பட்டு இராசவரிசை தரப் பெற்றோன்; வைத்த நிருபனோடு ஒத்தவாறென- இப்படிக் கொடுத்த இராசாவோடு ஒக்கக்கருத்திருத்துவம் செலுத்தினாற் போல; 3சிவன் வலி அவம் அற உணர்த்த- பரமசிவன் சத்தி எக்காலத்தும் 4குற்றமற அறிவிக்க; 5இனிது எவையும் ஐயமின்று அறிந்து- இனிதாக அனைத்தையும் சந்தேகமற அறிந்து; 6தூய ஆகனாகி- சுத்தாத்துவாவா லாகிய திருமேனியோடு நின்று; ஆயா ஞானம் எவையும் - ஆராய்தற் கரிய 7சருவ ஞானத்தையும்; நலங்கொள உற விரிந்து உயர்ந்து- நலமாக உடையராய் மிகவும் விரிந்துயர்ந்து; ஊன்மது அகல- தோடமற; எவையும் 8செய்வன்- அசுத்தாத்துவாவிலுள்ளன யாவையும் செய்யா நிற்பர் எ.று.

 மன், ஏ, ஓ, அசை.

 அகவல் 66

 அனந்த தேவர்

 <div style="margin-left: 3em;">

 மேவினாக மனந்தற் கியாவும்

 அறிவொடு படாஅ பொறிபிற 1புலன்கொளல

 உய்த்தல் செல்லா வாகலி னப்புலன்

 2பொறிகொளப் பிறவாற் செறியா வெறிகொள்

 5.  ஆக மாயை யாதலி னன்றிப்

 போகிய நாம விசேட மெய்தல்

 உளதெனிற் சிறிது சேய்த்தாய் வளமலி

 உரைமுதல் விடய 3முணர்வன் விரைவினொடு

 என்னின் மற்றவ னாகம் 4பன்னிய

 6.  தூய மேனி வினையுட னேயா

 தாய காலை யவனே பாசம்

 உடைத்தன னாதலி னவனது ஞானம்

 தடுக்குந ரியாரே யுரக முடைத்தயல்

 அடுவது தன்னை யடலின் றதுபோல்

 7.  விடுமொளி யனந்தனை விரவிய பாசம்

 சின்ன மானுஞ் சின்ன வுற்பவம்

 5துன்னிய வதனின் வியோகத் தன்ன

 மந்தி ரேசனு மந்தமில் 6தான் முதல்

 கூடலி னடம் போ லாடிய லாக

 8.  மந்திர 7வலியின் மரும மந்தமில்

 கால நீடல் போலவி மோடிய

 வேண்டிய வியையுங் காண்டகு காலம்

 கூடின னாயினு மேனி பீடியல்

 ஆண்டகை வலியி னிலைமை மாண்ட

 9.  ஆக மவன தமலந் தாதமல்

 நளினப் பாசடை யேய்ப்பு வொளிய

 தந்திர வலியி னவண மைந்தமல்

 இரதத் தாக மெவணம் புரைதீர்

 போத மேதமில் மேதகு பெருவலி

 10. தீதின் றறி திக ழுறையி னோயுடன்

 முன்செயல் முரஞ்சிய தெவணவ1 ணெண்கெட

 இயைமிட லதனிற் குறையிலன் 2கறையின்

 மந்தி ரேசனு மந்தமி லமலன்

 மைந்தின் மாயை கலக்கி

 11. வெந்திறற் செய்தியின் விரவுவண்3விரைந்தே

 இது. தூய வாகனாயினும் அனந்ததேவர்க்குப் படைப்புக் கூடாதென்று வினவ இவரைச் சகளீகரித்தே அசுத்தாத்துவாக் களைப் பரமசிவன் சத்தியாலே செய்வ ரென்று கூறியது.

 1-5. உரை: (மேவின்…………..யாதலின்) அனந்தர்க்கு 4ஆகம மேவின்- அனந்த தேவர்க்குத் திருமேனி உண்டாயின்; யாவும். அறிவொடு படா - சருவ பதார்த்தங்களையும் 5அறியும் சருவஞ்ஞத்துவம் கூடாது; அஃது எங்ஙன மென்னில்; எறிகொள் மாயை ஆதலின்- 6பிரகாசத்தைக் கொண்ட மாயாகாரியம் தேகமாதலின்; பொறி பிற புலன்கொளல் 7உய்த்தல் செல்லா - அத்தேகசம்பந்த மான இந்திரியங்கள் அந்நிய விடயங்களை அறிய மாட்டா; 8அப்புலன் பொறிகொளப் பிறவால் செறியா ஆதலின்- அவ்விடயங்களும் தம்மைத் தம் பொறிகளாலேயல்லது பிறவகையால் உணரும் உபாயம் இல்லாதவை யாதலால்;

 5-9. (அன்றி……………………என்னின்) அன்றி- அங்ஙன மன்றியே; 1போகிய நாம விசேடம்- நெடிதா யுயர்ந்த அனந்த தேவ ரென்னும் சிவ நாமவிசேடத்தால்; எய்தல் உளதெனில்- அறிதல் உண்டென்று கொள்ளின்; சிறிது சேய்த்தாய்- சிறிது தூர தரிசனமாய்; வளம் மலி உடை முதல் விடயம் விரைவினொடு உணர்வன் என்னின்- வளமிகுந்த சத்த முதலாக உள்ள விடயங் களை விரைவினில் 2அறியக் கூடுமல்லது சருவஞ்ஞத்துவம் கூடா தென்பாயாகில்;

 9-13. (மற்றவன்…………..யாரே) பன்னிய அவன் ஆகம்- நீ கேட்கிற அந்த 3அனந்தேசுரர் திருமேனி;4 தூயயோனி- சுத்த மாயை யாதலாலே; வினையுடன் ஏயாது- கன்மத்துடன் கூடியிருக்க மாட்டாது; ஆய காலை- ஆன பொழுது; அவன் பாசம் உடைத்தன னாகலின்- அவர் பாசச்சேதம் பண்ணின வராதலான்; 5அவனது ஞானம் தடுக்குநர் யாரே- அவருடைய சருவஞ்ஞத்துவத்தைக் 6கெடுக்க வல்லார் யாரோதான்?

 13-15. (உரகம்…………பாசம்) 7உரகம் அயல் அடுவது உடைத்து- பாம்பினிடத்திலே பிறரைக்