நல்லுரைக்கோவை (கட்டுரைகள்)
முதற் பாகம்
உ.வே.சாமிநாதையர் எழுதியது.

nalluraikkOvai - 1
of u.vE cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, S. Karthikeyan, G. Mahalingam, R. Navaneethakrishnan,
P. Thulasimani, Thamizhagazhvan and V. Devarajan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2012.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/


நல்லுரைக்கோவை (கட்டுரைகள்)
முதற் பாகம்
உ.வே.சாமிநாதையர் எழுதியது.


Source:
நல்லுரைக்கோவை (முதற் பாகம்)

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் எழுதியது
உரிமைப்பதிவு, 1958
ஏழாம் பதிப்பு – 1958, விலை ரூ. 1-25
ஸ்ரீ தியாகராச விலாச வெளியீடு
Kabeer Printign Works, Madras.
---------------

குறிப்பு

இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1941-ம் வருஷம்* என் தந்தையாராகிய மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் ஐயரவர்களால் வெளிவந்தது. அவர்கள் எழுதியுள்ள முகவுரையால் இதனைப்பற்றிய விவரங்கள் நன்கு விளங்கும். ஸர்வகலாசாலை அதிகாரிகளும் ஆங்காங்குள்ள பாடசாலைத் தலைவர்களும் அபிமானி களும் இப்புத்தகத்தைத் தங்கள் தங்களுக்குத் தெரிந்த இடங்களில் பரவச் செய்து எனக்கு ஊக்கமளித்து வரும் விஷயத்தில் அவர்கள்பால் மிக்க நன்றி பாராட்டுகிறேன்.

சென்னை இங்ஙனம்
16-9-1950 S. கலியாணசுந்தரையர்
-------------------------

முகவுரை


அவ்வப்பொழுது பத்திரிகைகளில் நான் எழுதிவந்த வரலாறுகளையும், நூதனமாக எழுதியவற்றையும் தொகுத்து, "நான் கண்டதும் கேட்டதும்" "புதியதும் பழையதும்" என்னும் இரண்டு புத்தகங்களாக முன்பு வெளியிட்டேன். அவற்றைப் படித்த தமிழன்பர்கள் பலர், "இப்படியே நீங்கள் எழுதிய பிறவற்றையும் ஞாபகத்திலுள்ளவற்றையும் சேர்த்துத் தனிப்புத்தகங்களாக வெளியிடவேண்டும்" என்று கூறி ஊக்கம் அளித்தார்கள். சில அன்பர்கள் அவற்றிற் சிலவற்றை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழிபெயர்த்துப் பத்திரிகைகளில் வெளியிட்டனர். சிலர் தாங்கள் தொகுத்த பாட புத்தகங்களில் என் அனுமதி பெற்றுச் சில கட்டுரைகளைச் சேர்த்துக் கொண்டனர். என்னுடைய பழைய ஞாபகங்கள் எனக்கு இன்பம் தருவது போலவே பிறருக்கும் இன்பம் தருவதை அறிந்து இறை வன் திருவருளை வாழ்த்துகின்றேன்.

நான் எழுதிவந்த வரலாறுகளில் மேலே குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களிலும் சேர்க்கப்படாதவற்றையும், அவ்வப்போது எழுதிய கட்டுரைகளையும் செய்த பிரசங்கங்களையும் தொகுத்து, "நல்லுரைக்கோவை" என்னும் பெயரோடு நான்கு பாகங்களாக வெளியிட்டேன். அவற்றுள் இது முதற் பாகம். இதன் முதற் பதிப்பு 12-2-37ல் வெளியாகியது. இத னுள் எட்டு விஷயங்கள் அடங்கியுள்ளன. "தருமம் தலைகாக் கும்", அறியிலூர், பூண்டி அரங்கநாத முதலியார், "அப்படிச் சொல்லலாமா?" என்பவை கலைமகளிலும், வன்றொண்டரென் பது ரங்கூன் தனவணிகன் பொங்கல் மலரிலும், ஆடல் பாடலென்பது ஆடல்பாட லென்னும் பத்திரிகையின் முதல் ஆண்டு மலரிலும், பொன்காத்த கிழவி யென்பது ஆனந்தவிகடன் தீபாவளி மலரிலும் வெளிவந்தவை. பண்டைக்காலத்துப் பள்ளிக்கூடங்களென்பது புரசபாக்கம் ஸர். எம். ஸி. டி. முத்தைய செட்டியாரவர்கள் உயர்தரப் பள்ளிக்கூடத்திற் செய்த பிரசங்கம்.

இப்புத்தகத்தைப் பதிப்பிப்பதற்கு ஊக்கமுண்டாக்கிய அன்பர்களுக்கும், பத்திரிகாசிரியர்களுக்கும், இதன் பதிப்பிற் குப் பலவகையான உதவி செய்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'தியாகராச விலாசம்' திருவேட்டீசுவரன்பேட்டை இங்ஙனம்
சென்னை, 15-2-'41 வே. சாமிநாதையர்
--------------


பொருளடக்கம்This file was last updated on 28 November 2012.
Feel free to send the corrections to the .