முத்தப்பச் செட்டியார் அருளிய
ஜெயங்கொண்டார் சதகம்

jeyangkonTAr catakam
of muttappac ceTTiyAr
In tamil script, unicode/utf-8 format

முத்தப்பசெட்டியார் அவர்களியிற்றிய
"ஜெயங்கொண்டார் சதகம்"


Source:
"ஜெயங்கொண்டார் சதகம்"
மதுரைச்சீர்மை சிவகங்கை சமஸ்தானம் கீழைச்சேவற்பட்டு
இளையாத்தங்குடி ஏழுநகரமென்றுசொல்லப்பட்ட
நேமநகரத்திலுதித்த அழகப்பசெட்டியார் குமார்ர்
முத்தப்பசெட்டியார் அவர்களியிற்றியது.
இஃது மேற்படியார் பௌத்திரர் நாராயணஞ்செட்டியார்
கேட்டுக்கொண்டபடி திருக்கைலாய பரம்பரைச்
செங்குந்த சங்கத்தி லொருவராகிய சிதம்பரம்
அ. இரத்நசபாபதி முதலியாரால்
சென்னை : இந்து தியலாஜிகல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
1896.
----------------------------


சிவமயம்.

ஊனையூர்ப் பாரதியாரவர்கள் இயற்றியது.

ஓங்குபத்மாசூரனைக்கண்டோடியொளித்தார்விசையன
வாங்குதனுவால்பூசைவாங்கினா - ரீங்கிருந்தும்
நன்னியமச்சோழீசனார்செயங்கொண்டாரென்றா
லென்னசெயங்கொண்டாரிவர்.

மேற்படியார் பாடிக்கேட்டதற்குப்பதில்
முத்தப்ப செட்டியாரவர்கள் இயற்றியது.

என்னசெயங்கொண்டாரிவரென்றான்முப்புரத்தைச்
சொன்னமயமாய்ச்சமைத்தசோழீசர் - பின்னுஞ்
சிரித்துச்செயங்கொண்டார்சித்தசனைக்கண்ணா
லெரித்துச்செயங்கொண்டாரே.

சுந்தரமுதலியார் சொல்லியது.

ஆசிரியவிருத்தம்.

திருமதுரைச்சீர்*ப்பட்டிளையாற்றங்குடிச்செட்டிசீமானென்னு,
முருமதன்னகப்பனுதவியமுத்தையனெனுமொப்பில்சிங்க,
மருமறைசாத்திரங்களோடாகமங்கள்புராணங்களனைத்துந்தேர்ந்து,
பெருகுபழமொழிநூறுங்கதைநூறுஞ்சதகமெனப்பேசிற்றாமால்.
------------------

ஜெயங்கொண்டார் சதகம்

காப்பு

விநாயகர்துதி.

சீர்பொருந்துந்தென்னேமக* செயங்கொண்ட
        சோழீசாதிருப்பேர் வாழ்த்திப்,
பார்பொருந்துங்குறுவிருத்தப் பாமாலைதனிலுலகப்
        பழமைச்சொல்லை,
யேர்பொருந்துஞ்செந்தமிழால் யான்பாடப்
        புவியிலுள்ளோரிசைந்துகேட்க,
கார்பொருந்துந்துதிக்கரத்தான் வெயிலுகந்த
        கணபதிதாள்காப்புத்*தானே.

முருகர்துதி.

நகரமெல்லாம்பணிந்தேகதுஞ் செயங்கொண்ட
        சோழீசநாயனார்மேன்,
மகரநெடுங்கனலுலகவதந்தியைச்செந்தமிழால்
        யான்வழுத்துதற்கே,
யகரமுதலவ்வெழுத்தென்றாதியின்முப்பாற்
        சொன்னவவன்றாள் போற்றிச்,
சிகரவரைமீதெழுந்தசிறந்தவடிவேலவன்றாள்
சென்னி சேர்ப்பாம்.

கலைவாணிதுதி.

சிலைவேளைவென்றபிரான்றென்னேமநகரில்
        வளர்செயங்கொண்டார்மே,
லுலகிள்ளோர்வழக்கமதாய்ச்சொன்ன
        சொல்லைத்தமிழாலே யுரைப்பதற்குக்,
கலைவாணியாகியுலகுள்ளமட்டும்
        படிக்கவந்தகவிதை தன்னின்,
மலர்வேதன்மனைவியென்றன்
        மனத்திலிருந்திவ்வுரையை வழுத்துவாளே.

அவையடக்கம்.

பத்கருணத்தினிற்சூரி தண்டலை
        யென்றெமக்குரைத்த பரமர்மீதில்.
வித்தகர்முன்னுலகவழக்கத்தையெடுத்
        தொருநூறுவிருத்தஞ்செய்தா
ரத்தைநிகரெனச்செயங்கொண்டார்மீதின்
        முத்தையன்சிற்றறிவினாலே,
மத்தகயந் தனக்குமுன்னேசிற்றெறும்பு
        நடந்ததெனவசனித்தேனே.

பாயிரம் முற்றிற்று.
------------

நூல்.

வான்மீகர் கதை.

நல்வேடவான்மீகர் சப்தரிஷிகளைச்
        சேரந்தராமமந்த்ரஞ்,
சொல்லநாவில்லாத கற்றறியாமை
        யினமராவெனமுன்சொன்னார்,
வில்விசையன்செவ்வைவெல்லக்கணைகொடுத்த
        செயங்கொண்டார் விளங்குநாட்டிற்,
கல்விதனக்கழகுகசடறமொழிதலென
        முன்னோர்கழறுவாரே. (1)

        மார்க்கண்டர் கதை.

அருமறைமார்க்கண்டர்நித்தந் திருக்கடவூர்
        வேணியனையன்பாய்ப்பற்றி
வருசமன்றன்பகையடக்கித் தீர்க்காயுளாய்ப்
        புவியில் வளராநின்றார்
கருவைநிகர்தென்னேமநகரில்வளர்
        செயங்கொண்டார் தமிழ்சேர்நாட்டிற்,
பெருமரத்தைச்சுற்றி நின்றவல்லியுஞ்
        சாகாதெனவேபேசுவாரெ. (2)

        பாண்டவர்கள் கதை.

அருமைசெறிபாண்டவர்கள் பங்காளி
        செய்கொடுமையாற்காடாண்டு,
முரிமையுடன்றருமர்செய்தநன்றியினாற்றிரும்பவும்
        வந்துலகையாண்டார்*யாண்டார்,
பருவரைவில்லாவளைத்த செயங்கொண்டாரே
        யெவரும்பண்பாய்கசெய்த,
தருமமேதலைகாக்குமதர்மமழித்
        திடுமெனவுஞ்சாற்றுவாரே. (3)

        இளையான்குடிமாறர் கதை.

உழுதிளையான்குடிமாறர் முளைவாரியன்ன
        மன்பர்க்குதவிப்பாரில்
வழுவாதகீர்த்தியுடனொருநாளுங்கேடில்லா
        வாழ்வுபெற்றார்
மழுவேந்துங்கரதலத்தார் செயங்கொண்டார்
        வளநாட்டின் மறைகளோதித்
தொழுவாரெல்லாமுழுவார்தலைக்கடையிலென்று
        கஞ்சொல்லுமாதோ. (4)

        கிரவுஞ்சம்பிளவுபட்ட கதை.

தஞ்சமெனச்சரண்புகுந்தவமரர்களைப்
        புரப்பதற்காச்சரவணத்தின்
மஞ்டனெனத்தோன்றியசெவ்வேள்வடிவேலாற்
        கரவுஞ்சமாய்ந்த்தன்றோ.
செஞ்சரணத்தால்யமனைவென்ற
        செயங்கொண்டாரேதேவரேனும்
வஞ்சநெஞ்சைப்பிளக்குமிதுபொய்யல்ல
        வுலகினிகவசனந்தானே. (5)

        இராமர் கதை.

அரியோனைக்கௌசிகன்பாலவிடமலைத்தான்ற
        சரதன்விட்டதற்கிலாபங்
கரியோன்றானதிகசௌந்தரியனுக்குந்தனு
        வினுக்குங்கமலத்தார்க்கு
முரியோனாகியமறைதேர்முனியன்றோ
        செயங்கொண்டாருலகந்தன்னிற்,
பெரியோரைத்துணைக்கொளென்ற வௌவை
        வாக்கியத்திலொன்றும்பிசகிராதே. (6)

        இராமர் வனவாசஞ்சென்ற கதை.

பானுகுலராமனுக்குப்பட்டாபிஷேகமெனப்
        பகர்ந்தபோது,
கூனியொருசூத்திரத்தைக் கொடுக்கவ
        வனூரைவிட்ட கொள்கைபோல
மானணியுங்கரத்தாரே செயங்கொண்டாரே
        புவியின்மகிமைசேர்ந்த
யானைநிழல்பார்க்கையிலேதவளைவந்து
        கலக்கிவிடுமதுமெய்தானே. (7)

        இராவணன் கதை.

*கொடைக்கிலங்குமாரபனிலக்குமணன்
        வில்வலுவென்றான்சொன்னபேச்சை
    யடக்கிராவணனாளையோ*ம்பானான்
        வெலவேனறியென்றார்போற்
    கடைக்கிதபூமாலையணிசெயங்கொண்டாரே
        யெதிரிதள தக்கஞ்சிப்
    படைக்குபோகாதவர்கள்நல்ல
        சேவகரெனவும்பகருவாரே. (8)

        வாலி சுக்கரீபர் கதை.

பேரிவயாவாலிசுக்கிரீபரிருவரும்
        பகையாயப்பிரியராமர்
காரியத்துக்காகவந்தகடலடைகச்
        சிறைமீட்டகணக்குப்போலே
மேருவைவில்லாய்வளைத்த செயங்கொண்டாரே
        யுலகில் விளங்குஞ்சொல்லு
மூரிரண்டுபட்டதென்றாற் கூத்தாடிக்
        கேலாபமுண்டென்பாரே. (9)

        மூதேவி சீதேவி பிறந்த கதை.

    செல்லோடே யிணங்குகடற்றிருவுடன்
        மூத்தாள் பிறந்த செய்திபாரி,
    னல்லோடைக்கலாகிலசிலபாசி
        படர்ந்திடலுந்தனஞசயன்கை
    வில்லோடேமோகியகோட் செயங்கொண்டாரே
        வயலில் விளைவண்டான
    செல்லோடேபதருமசகதனிலாரும்
        பிறதிருக்குநேர்மைதானே. (10)

        சரஸ்வதி கம்பரை நீங்கிய கதை.

நங்கைகலைவாணிகம்பரிடத்திருக்கத்
        தண்டிகையினலமாய்வாழ்ந்தா
கவாடான்புரமபோகக் கம்பரன்றே
        கூலிக்கோ ரானரனாரே
செங்கைபுகிராலவேதன் சிரத்திலொன்றைத்
        துணிந்துவிட்ட செயங்கொண்டாரே
சுங்கமாறியபோது சுண்ணாம்புங்கொடுக்கார்
        தொல்புவியுளோரே. (11)

        வாமனன் அரிச்சந்திரன் கதை.

தாப்பாய்வாமனன்கையின்மாவலிதன்ணீரை
        விட்டுத்தரணிதோற்றான்,
வாய்ப்பாயகோசிகன்றன்வஞ்சனையாலரிச்
        சந்த்ரன்மனைவிவிற்றான்*
றீப்போலேவிழிகாட்டிமதனுடலை
        யெரித்துவிட்டுசெயங்கொண்டாரே
பார்ப்பார்க்குவாய்ப்போக்கொண்ணா
        தாண்டிக்கதுதானும்பகரொணாதே. (12)

        திருஞானசம்பந்த சுவாமிகள் கதை.

பண்ணாருங்கவுணியாவிபூதியினால்
        வழுதிசுரம்பாதிதீர்த்தா
ரெண்ணாயிரஞ்சமணர்திருநீற்றைமறந்து
        கழுவேறிமாய்ந்தார்
பெண்ணாளைச்சடையில்வைத்தசெயங்கொண்டாரே
        யுலகிற் பெருமைசேர்ந்த
வெண்ணீறேவினையகற்றுந்தரிப்பவர்க்குச்
        சிவகதியுமேவுந்தானே. (13)

        துரியோதனன் கதை.

புள்ளாலேபொறியரவத்துசன்மடிந்தாற்றரு
        மருக்குப்பொரும்போருண்டோ
துள்ளாடத் திருப்பிவிட்டுப்பின்பவனைச்
        செயிக்கமிகத் தொல்லையாச்சே
வெள்ளரனைக்கிறைபணியுஞ்
        செயங்கொண்டாரே பகையைமெலிவியாமன்
முள்ளாலேயெடுப்பதைக் கோடாலியாலெடுக்க
        வந்தமுறைமையாமே. (14)

        அகலிகை கதை.

பண்டகலிகையையிந்திரன் களவாய்த்தழுவி
        வெளிப்படுஞ்சாலத்தைக்,
கண்டுமுனிசகியாமலிருவரையுஞ்ச
        பித்ததனாற்கனவீனந்தா
னிண்டை புனைசடையாரேசெயங்கொண்டாரே
        புவியிலில்லாள்பேச்சைக்
கொண்டவன்றூற்றும்போதேகூரையொக்கத்
        தூற்றுமெனக்கூறுவாரே. (15)

        தாரை கதை.

கடலீன்றசந்திரனைக்குருமனைவி
        கலந்தணையக்கருதிவாவென்
றிடவுமதிதொடலாமோபின்வருவதறியா
        மலிணங்கினானே
சடையிலங்கக்கங்கையணிசெயங்கொண்டாரே
        மாரன்சரந்தாங்காம
லுடைகுலைந்தபின்புசொந்தமுறைமைகள்
        கொண்டாடுவரோவுலகுளோரே. (16)

காந்தக்கற்கோட்டையழிந்த கதை.

சுற்றுமதிற்கலிங்கசிந்துசூழுசிக்
        காந்தமெனுந்துருவந்தன்னை,
யெத்தும்விலைமாதர்களாற்பண்டுகருணாகரன்
        வென்றிட்டானன்றோ,
கைத்திகிரியோன்பணியுஞ்செயங்கொண்டாரே
        மிகுந்தகருத்துண்டான,
புத்திமான்பலவானாமென்றுலகோர்
        சொல்லுவதும்பொருந்துந்தானே. (17)

தருமர் கதை

ஆனைப்போல்வருமிருகந்தனக்கும்
        வீமனுக்கும்வழக்கானநியாய,
வேளைக்காதரவுதர்மர்வீமனுடல்
        பாதிமிருகத்துக்கென்றார்,
வேழப்போர்வையைத்தரித்த செயங்கொண்டாரே
        சீனிவெல்லம்போட்டு,
நாழிப்பால்வார்த்தாலுநடுச்சொல்வாரறிவு
        மிகுநடுவுள்ளோரே. (18)

வாலிமருசனன மெடுத்த கதை.

விழியெதிர்நில்லாதொளித்துவாலியைமாலெய்து
        கொன்றுவிடவேவாலி,
வழியுடனேமறுசனனமெடுத்தரியையெய்து
        பழிவாங்கினானே,
அழலுமழுவணிகரத்தார்செயங்கொண்டார்
        நன்னாட்டிலமரர்க்கேனும்,
பழிகிழமதாகிவிட்டுப்போவதில்லை
        யென்றுலகோர்பகருவாரே. (19)

அம்பிகாபதி கதை

அரசன்மகளாரையம்பிகாபதிசேர்ந்ததனை
        மன்னனறிந்துநாட்சென்,
றுருசிபிறந்தொருநாளத்தாட்சியுடன்வனுயிரை
        யொழித்தானன்றோ,
பரசணியுங்கரத்தாரேசெயங்கொண்டாரே
        மிகுந்தபழக்கமேனுஞ்,
சரசமிஞ்சிரவிக்கையிற்கைபோடவொண்ணா
        தென்றுலகோர்சாற்றுவாரே. (20)

விபீஷணன் கதை.

கும்பகர்னனுக்கிளையோன்றமையனுயிர்
        நிலைநாட்டிக்கொல்லென்றேநி,
கும்பலைக்குந் துறவுசொல்லியிலங்கைமன்னன்
        வலுவைமுற்றுங்குறைத்தானன்றோ
செம்பிநன்னாட்டவர்புகழுந்தென்னேமநாட்டில்
        வளர்செயங்கொண்டாரே,
தம்பிபிறக்கத்தரையாமென்றிடுஞ்
        சொல்லரக்கனுக்கேதருங்கண்டீரே. (21)

        கண்ணன் மலையைக்குடையாக எடுத்த கதை

கல்லானமாரியையிந்திரனனுப்ப
        வாய்ப்பாடிக்கண்ணர்க்கம்பு
வில்லேதுமின்றியொருகற்குடையால்
        வந்தமழைவிலக்கினாரே
செல்லாருங்குழலிசௌந்தரியையிடப்
        பாகம்வைத்த செயங்கொண்டாரே
வல்லார்க்குப்புல்லுமோராயுதமாமென்றுல
        கோர்வழங்குவாரே. (22)

        சூர்ப்பநகை மூக்குழலை யறுபட்ட கதை

உருக்குதலுநயத்தலுமார்சூர்ப்பநகை
        யிலக்குமணனுயர்தோள்சேரச்
சுருக்கிற்சென்றெடுக்கவவனிணங்காமன்
        மூக்குழலைதுணித்தானன்றோ
மருக்கிசைந்தகரத்தாரேசெயங்கொண்டாரே
        மிகுந்தமயலுண்டாகிச்
சிறுக்கிமனதறியாமற்செடிதனைக்கை
        யாறறூக்கித்திரிந்தவாறே. (23)

        சீதை கதை.

தேன்மொழிச்சீதையையரக்கன்சிறையெடுத்து
        வனத்தில்வைத்தசெயலாலுந்தா
னானமட்டும்பார்க்கவவள்கற்பழியாதக்
        கினியிலமிழ்ந்துமீண்டாள்
மான்விழியாள்சௌந்தரிபாகாசெயங்கொண்டாரே
        நின்வளஞ்சேர்நாட்டிற்
றான்பதிவிரதையானாற்றேவடியாள்
        வீட்டினித்தந்தரிக்கலாமே. (24)

        அருச்சுனன் கதை.

பண்டு கிணற்றினிலெரிந்தபௌத்திரத்தைத்து
        ரோணர்சிலைபாணம்போட்டுக்
கொண்டுவரக்கண்டதனஞ்சயனுமந்த
        விற்றொழில்கைக்கொண்டானன்றோ
வண்டுவிழியுமைபாகா செயங்கொண்டாரேயு
        மதுவளஞ்சேர்நாட்டில்*யுமதுவளஞ்சேர்நாட்டில்
கண்டதைகற்கின்றவனேபண்டிதனா
        வானென்றேகருதுவாரே. (25)

        நளனை பாம்பு கடித்த கதை

நண்ணுகழைவனமெரியமேற்கிடந்த
        பாம்பு செத்திடாமற்றாங்கி
மண்ணில்விட்ட நளன்கரத்திலரவு கடித்தவனுடலை
        வடுச்செய்தாற்போல்
வெண்ணிலவைச்சடையில்வைத்தசெயங்கொண்டாரே
        குடியின்மெலிவுதீர
புண்ணியத்துக்குடுமெருதைப்பல்பிடித்து
        பார்ப்பரெனப்புகலுவாரே. (26)

        ஓரரசன் பெண்சாதியின் கதை.

நயவேந்தன்பாரியொரு துன்மார்க்கனாசை
        கொண்டு நடந்தேயாற்றி
லியல்புடனேபோய்ச்சலத்தினின்றதைச்
        சிந்தாமணியிலியம்பினாரே
கயல்விழியாருமைபாகா செயங்கொண்டாரே
        தனதுகணவன்போலே
அயல்வீட்டான்மகனவனுமாபத்துக்
        குதவானென்றறைகுவாரே. (27)

        சேதுபதிராசா மகன் கதை

பெண்ணைவாழ்க்கைபடுத்தசேதுமன்னன்
        குறித்தவிடம்பிசகிமேலாங்
கண்ணர்பரிசோதனைக்குந்தப்பி விதிப்படி
        முடவன்கைக்கொண்டானே
பண்ணுலவுபுகழ்மேவுஞ்செயங்கொண்டாரே
        மூவர்பாரித்தாலும்
யெண்ணைதனைத்துடைத்திடலாமெழுத்த
        தனைத்துடைப்பவர்களில்லைத்தானே. (28)

        குஷ்ட ரோகியின் கதை

பண்டுகுட்டரோகியுந்தான்பாரதங்
        கேட்டாநோயும் பஞ்சாயோடி
விண்டுவருகையிற்கதையைப்பொய்யென்றான்
        மறைந்தகுட்டமீரிற்றன்றோ
தண்டமிழுக்கருள்புரியுஞ்செயங்கொண்டாரே
        பூதந்தழும்பாதீசன்
உண்டென்றபேருக்குண்டில்லையென்ற
        பேற்கில்லையுண்மைதானே. (29)

        மனுநீதிச்சோழன் கதை

முன்னொருசோழன்புதல்வன்றேர்க்காலினான்
        கன்று முறியக்கண்டே
பின்னதற்கீடாய்த்தனதுபிள்ளையைத் தேர்க்காலி
        லிட்டுப்பெருமைசேர்ந்தான்
றென்னேமநகரில்வாழ்சௌந்தரநாயகி
        மகிழ்ந்தசெயங்கொண்டாரே
தன்னுயிர்போன்மன்னுயிரையெண்ணுவர்
        தேவர்முனிவர் மகதொப்பாரே. (30)

        இந்திரசித்தன் கதை

கண்ணர்படைதனைச்செயித்தவிந்தரசித்தனி
        கும்பலையைக்கருதிச்செய்தே
நண்ணியயாகமுமுடியுந்தருணத்திலி
        லக்குமணனாசஞ்செய்தான்
மண்ணையுண்டோன்விழிபதத்தார்செயங்கொண்டாரே
        கோலமத்தூடாடி
வெண்ணெய்படும்வேளையிலேதாழியுடைந்திடுதன்
        முன்செய்வினையென்பாரே. (31)

        இராவணன் கதை.

அற்புதராமன்கைல*முதனாட்சண்டையிலரக்
        கனறிந்தும்புத்தி
சொற்பமகோதரன் பேச்சைக்கேட்டலவோ
        குலத்தோடுந் துஞ்சினானே
தற்பரசதாசிவனே செயங்கொண்டாரே
        நல்யோசனையில்லாத
துற்புத்திமந்திரியாலரசுக்கேயீன
        மென்றசொல்மெய்தானே. (32)

        சகராண் கதை.

ஆவலாய்ப்பரிதேடிக் கபிலரிஷியிடத்திற்
        போயகம்பாராட்டித்
தாவியவெஞ்சினத்தாலே யறுபதினாயிரம்
        பேர்கள்சகராண்மாண்டார
காவடருந்தென்னேமச செயங்கொண்டாரே
        பொறுமை கருதிச்செய்யாக்
கோபமேபெரும்பாவமதுசண்டாளம்
        மெனவுங்கூறுவாரே. (33)

        இராக்கதன் கதை

ஆற்றையணிதேநோக்கி யொருநிருதன்றவசு
        செய்ய வவனுக்கேவான்
கூற்றையுதைத்தோனனுப்பக்குறுக்கிற்சென்றி
        லக்குமணன்கொண்டானன்றோ*ண்டானன்றோ,
நாற்றிசையும்பணியவருஞ்செயங்கொண்டாரே
        யனந்தநாளாயொட்டிக்,
காத்திருந்தோன்பெண்டுதனைநேற்றுவந்தோன்
        கைக்கொண்டகணக்குத்தானே. (34)

        பாரதக்கதை

விதுரன்வின்முரித்தான்கன்னனும்
        பாம்புக்கணைதிரும்பவிட்டானில்லை
யெதிரிபடைதனைத்துரியோதனன்செயிக்கப்
        படைத்தலைவரிணங்கினாரே
மதுரையிலிந்தனம்வளையல்விற்றசெயங்கொண்டாரே
        மருவார்போரில்
குதிரைநடவாவிடின்மாவீரர்பறந்திடுவாரோ
        கொக்காய்ததாமே. (35)

        மணியடித்த கதை.

சாத்திரவேதியர்வதிட்டர்தருமரது
        சத்திரத்திற்சலச்சோறுண்ட
மாத்திரமேலட்சமறையோர் புசித்தாலாடு
        மணிமலிந்தாடிற்றே
நேத்திரத்தாலனங்கனுடறனையெரித்தசெயங்கொண்டார்
        நிமலர்நாட்டிற்
பாத்திரத்தையறிந்துபிச்சையிட
        வேண்டுமென்றுலகோர்பகருவாரே. (36)

        கிருட்டினன் தருமரைப் பொய்சொல்வித்த கதை

அன்பானமதருமரசுவத்தாமாவெனும்
        யானையமரில்வீழ
வன்பானபுயவசுமத்தாமர்பட்டாரெனப்
        பிசகிவழுத்தலாச்சே
முன்பாதவன்னெயிற்றைப்பறித்தெறிந்த
        செயங்கொண்டார்முதல்வர்நாட்டிற்
றன்பானைதனைச்சாயப்பிடிப்பதுண்டோவெ
        வருமென்றுசாற்றுவாரே (37)

        பஞ்சபாண்டவர்கள் போர்க்குச் சென்ற கதை

மன்னர்துரோணரையோணான்கொடுபோயிற்றென்றொரு
        சொல்வழுத்தக்கேட்டே
பொன்னிரதமேறியும்புவில்லெடுத்தை
        வருஞ்சமர்க்குப்போனாரன்றோ
நன்னயவேதன்சிரத்திலொன்றுதுணித்திட்ட
        செயங்கொண்டார்நாட்டிற்
சின்னபாம்பானாலும்பெரியகம்
        பாலடியென்றேசெப்புவாரே. (38)

        அச்சுதவாணன் கதை

வேணியானைப்பணியு மச்சுதவாணக்குரிசில்
        வெள்ளாண்மைச்சீர்
ஆணியவல்லமையான்மூவேந்தரையுங்கா
        வலில்வைத் தவதிசெய்தான்
பாணிமழுவணிசெயங்கொண்டாரே
        யெத் தொழில்களுக்கும்பழுதுண்டேபார்
காணியைநட்டுக்களத்தினிற்பதுவே
        நன்மையெனக்கருதுவாரே. (39)

        தக்கன் கதை

கயிலைத்தாணுவைப்போலே மறுசிவனையுண்டு
        பண்ணக் கருதித்தக்கன்
செயலற்றேசெய்வேள்வியுங்குலைந்து
        வேற்றுமுகஞ் சேர்ந்தானன்றோ
வயிலைப்போல்விழியுமைசேர்செயங்கொண்டாரே
        யிந்தவவனிமேலே
உயரத்தான்பறந்தாலுமூர்க்குருவி
        பருந்தாகாதுண்மைதானே. (40)

        தக்கன்மகத்தில் வந்த தேவர்கள் கதை

ஆணவத்தக்கன்மகத்திலவியுண
        வந்திடுதேவரவர்களெல்லா
நாணமொடுமானபங்கமுற்றனரே
        வீரபத்திரநாதராலே
பாணிதனின்மழுவணிந்தசெயங்கொண்டாரே
        ருசியும்பசியும்பார்க்கு
மூணருந்தங்கரும மிழிந்திடுவரென்ற
        பழமொழிதானுண்மைதானே. (41)

        இந்திரன் நளனைத் தூதுவிட்ட கதை

வனத்துறையிந்திரனளன்பாற்சென்றுனக்கு
        வருமானமாதைத்தானென்
றனக்குவரும்படிபேசித்தமயந்திதனை
        யிணக்கித்தாவென்றாற்போற்
சினக்குமரவணிந்தடியார்மனக்கவலை
        தீர்த்தருளுஞ் செயங்கொண்டாரே
உனக்குமழைபெய்யுமிப்போதெனக் கிரவை
        நீர்தாவென்றுயாத்தவாறே, (42)

        பிரமனைச் சிவன்சபித்த கதை

கஞ்சனுக்குப்புவியிற்கோயிலுட்பூசையில்லை
        யெனக்கடிந்தீர்மீட்டுங்
கெஞ்சினபின்மறையவர் செய்பூசையெல்லா
        முனக்கெனவேபைசெய்தீர்,
பஞ்சவனுக்காய்மாறிநடித்தசெயங்கொண்டாரே
        பசை வரைத்தா,
னஞ்சினல்லவார்த்தைசொன்னாதபொல்லாப்பு
        வருவதில்லையவனியோர்க்கே. (43)

அகலிகை சாபந்தீர்ந்த கதை

முனியகலிகைகல்லாய்ச்சபித்துநிவர்த்திக்கும்
        வழிமுறைசொன்னாற்போன்,
மனுவேதனாகியரிநடந்திடுந்தாட்படப்
        பழையவடிவானாளே,
தனவானைத்தோழனென்றசெயங்கொண்டாரே
        யெவர்க்குந்தலைநாள்செய்த,
வனுபோகந்தொலைந்திடும்போதவிழ்த
        முஞ்சித்திக்குமென்பவனியோரே. (44)

விபீடணன் மகுடம்பெற்ற கதை.

வளமையுள்ளராமனை விபீஷணன்
        சேர்ந்திலவ*கைமணி மகுடம் பெற்றான்.
தளரரக்கருடனிருந்தமாக்குவந்தாலவனை
        யொக்கக் கரிப்பாரன்றோ,
களபமணிதனத்திசௌந்தரிபாகா
        செயங்கொண்டார்கனத்தநாட்டி,
னிழலருமைவெய்யிலிற்போனாற்றெரியு
        மென்பதுவுநிசங்கண்டீரே. (45)

அரிச்சந்திரன் கதை

செப்புமரிச்சந்திரன்றானிசனுக்கே
        விலையாகிச்சென்றே நெஞ்ச,
மொப்பிமயானமுங்காத்த நிமித்தியத்
        தாலிழுக்கவனுக் கொருபோதுண்டோ,
மைப்படியுங்கண்ணிசௌந்தரிபாகர்
        செயங்கொண்டார்வளஞ்சேர்நா்டிற்,
குப்பையிலேகிடந்தாலுங்குன்றிமணி
        நிறத்திலொனறுங்குறைவுறாதே. (46)

அமராவதி யென்பவள் கதை

வணக்கமுடன்சித்திரபுத்திரரையமராவதி
        தான்வணங்கிப்பொங்க,
லிணக்கமுடன்செய்யாதநியமத்தால
        வட்குமெத்தவி*டரெய்திற்றே,
யணைக்கடலின்மேனடந்தமுகில்பணியுஞ்
        செயங்கொண்டாரருள்சேர்நாட்டிற்
கணக்கனுக்குக்கைக்கூலிகட்டியன்றோ
        குடியிருக்கக்கடனென்பாரே. (47)

        விடத்திற்குப் பயந்த விஷ்ணு கதை

கடியவிடம்பாற்கடலிற்றோன்றிய
        போதருகிருந்தகாகுத்தன்றா
னெடியபயத்துடனீங்கியுங்கருநிறம்
        படைத்தானிசமதன்றோ
கொடியிடைப்பெண்சௌந்தரியாளிடப்பாகர்
        செயங்கொண்டார்குலவுநாட்டிற்
படைதனக்கோடிப்பிழைப்பர்பஞ்சமதற்
        கிருந்துபிழைப்பாரென்பாரே. (48)

        பஞ்சதந்திரக் கதை

திறமுளசஞ்சீவகனைத் தமரகன்
        கண்டழைத்துவந்து சிங்கத்துக்கு
மிறையுளமந்திரியாகவைத்தபின்
        சிங்கந்தனக்குமிடபத்துக்குங்
குறைவில்பகையுண்டுபண்ணிவிட்டதன்றோ
        செயங்கொண்டார் குலவுநாட்டி
லுறவுதனைப்போலிருந்துங்குளவியைப்
        போற்கொட்டுவர்களுண்டென்பாரே. (49)

        அறிவீன னரசன் மேற்பாடிய கதை

அறம்பெற்றசோழனைமண்ணுண்ணி
        மரப்பாவையென்றதிலோர்பாட்டாய்
வெறும்பித்தன்சொல்லவந்தவேந்தர்
        சபையோர்கள்பொருள்விளங்கச்சொன்னார்
திறம்பெற்றபரிசுகொண்டான்றென்னேம
        நகரில்வளர்செயங்கொண்டாரே
யெறும்புக்குந்தன்கையாலெண்சாண்
        மெய்யென்றுலகோரியம்பினாரே. (50)

        கர்னமகாராசன் கிண்ணங்கொடுத்த கதை

வாழிரவிசுதன் லலக்கையாலெடுத்துக்கொடுக்கு
        முன்னேமனம்வேறாமென்
றேழைமறையோர்க்கிடக்கையாலேயெண்ணெய்க்
        கிண்ணமீந்தான்றோ
வாழிதனிற்பள்ளிகொள்ளுமால்பணியும்
        பொற்பாதச்செயங்கொண்டாரே
நாளையென்பார் கொடைதனக்குச் சடுதியிலே
        யில்லையென்றனலமதாமே. (51)

        விசுவாமித்திரன் வெற்றியடையாத கதை

புகழரிச்சந்திரனிசவானெனவதிஷ்டர்
        சொலவவனைப் பொய்யனாக்க
மிகவெகுண்டுசபதமிட்டேயானமட்டும்
        பார்த்தயர்ந்துவிசுவாமித்ரன்
செகமறியமக்கனப்பட்டிருந்ததையா
        வருமறிவார்செயங்கொண்டாரே
முகடுமுட்டவருங்கோபத்துரும்புகுத்த
        வேலையென மொழிந்தவாறே. (52)

        சுப்பிரமணியர் கதை

அண்ணலருள்சரவணவேள்புனக்குறப்
        பெண்வெயிலினிற்குமவதிபார்த்துத்
தண்ணுலவுவேங்கைமரநிழலாலன்றவள்
        வருத்தந்தனைத்தீர்த்தாரே
விண்ணவர்க்காய்விடத்தையுண்டசெயங்கொண்டார்ரே
        கனந்தான்விளங்குநாட்டிற்
பெண்ணென்றாற்பேயுமொக்கவிரங்கு
        மெனவுலகுள்ளோர்பேசுவாரே. (53)

        கிருட்டினன் ஐவரைக்காத்த கதை

வள்ளல்கன்னன்கைநாகக்கணைப்புலன்
        மாலறிந்தவன்றன் மாதாவைப்போய்ப்
பிள்ளைகண்மேனாகமொருதரம்விடப்
        பானிறுத்தெனவும்பேச்சொல்லித்
தெள்ளியபஞ்சவருயிரைக்காத்தார்தென்னேம
        நகர்ச் செயங்கொண்டாரே
வெள்ளம்வருமுன் னணையைக்கோலிவைப்
        போர்காரியங்கண்மிகநன்றாமே,. (54)

        இரணியன் கதை

ஆச்சரியவிரணியட்டாக்கரத்தையிகழ்ந்தார்
        பொல்லாப்பெண்ணாமற்
கூச்சமறத்தள்ளியிரணியநமாவென்றதினாற்
        குலைந்தான்றேகம்
பேச்சிமுலையுண்டமுகில்பணிசெயங்கொண்டாரே
        நீள்பெருங்காற்றுக்கு
ணீச்சறியாமைந்தரைவெள்ளங்கொண்டு
        போமென்றனிசங்கண்டீரே. (55)

        உருக்குமாங்கதன் கதை.

நன்னிலத்திலுருக்குமாங்கதராசனொரு
        விரதநடாத்தினானென்
றன்னகருமவ்விரதந்தொடங்கியதால
        யமனவரையணுகக்கூடா
தென்னயமதண்டனைசேராதிருந்தார்
        செயங்கொண்டாரிலகுநாட்டின்
மன்னவனெப்படியோமன்னுயிருமந்தப்
        படியெனவுமவழுத்துவாரே. (56)

        நளன் கதை.

அடவிசென்றுநகரிழந்துவறுமைதங்கியுடன்
        மெலிந்தேயம்மானூர்வந்
திடவுமம்மானேவலினாலமைச்சரழைத்
        திடவருவதிலைபோவென்ற
திடநளனைமாமனெதிர்கொண்டழைக்கச்
        சம்மதித்தான்செயங்கொண்டாரே
கடுகுசிறுத்தாலுமென்னகாரம்
        போகாதெனவுங்கழறுவாரே. (57)

        சூரபத்மன் கதை.

பூதலமும்பொன்னுலகுமேவல்கொண்ட
        சூரனரனபுதல்வற்கஞ்சிச்
சூதமரமாயொளித்துக்கடைசியிற்செவ்
        வேள்கரத்திற்றுசமானானே
தாதவிழ்பூங்கொன்றையணிசெயங்கொண்டாரே
        செடியைத்தாண்டித்தாவிக்
காதமோடினுமுயற்குக்கைதூக்
        கென்றுலகிலுள்ளோர்கழறுவாரே. (58)

        பொய்த்தவ வொழுக்கத்தோர் கதை.

பூமிதனிற்சிலர்நீரிட்டிருகரமுங்குவித்திரு
        கண்பொத்திக்கொண்டே
காமியர்கண்மேற்பொருண்மேன்மனங்கிடக்க
        வாயிலரகரவென்றாற்போ
னேமியணிவோன்றேடவரியபதச்
        செயங்கொண்டார்நிமலர்நாட்டின்
மாமிதலைமேற்கையும்வேலிபுறத்தினிற்
        கண்ணும்வைத்தவாறே. (59)

        திருவிளையாடற் புராணக் கதை.

பெண்ணிறக்கத்தொங்கலம்பால்வில்
        வேடனடுத்துவரப்பெண்ணுக்கானன்,
கொண்ணதுநீயென்றிழுக்கமதுரையிற்சுந்தரர்
        நியாயங்கொடுத்துத்தீர்த்தா,
ரண்ணலரனேசெயங்கொண்டாரேகாதாரக்
        கேட்டதும்பொய்யாகுங்,
கண்ணாரக்கண்டதும்பொய்தீர்க்க
        விசாரிப்பதுமெய்காணுந்தானே.(60)

துரியோதன னரசிழந்த கதை.

கூறுமரவக்கொடியோன்பாண்டவருக்கைந்
        நிலமுங்கொடுக்கேனென்று,
வீறுசொன்னான்சுடக்கொடுத்தபின்னுயிரோடு
        லகமுற்றும்விட்டானன்றோ,
நீறணிமெய்ச்செயங்கொண்டாரேயாற்றோடே
        மூடர்நேர்போனாலும்,
போறதல்லாலோடக்காரனுக்கரைக்
        காசுங்கொடுக்கப்பொருந்திடாரே. (61)

விநாயகர் மாங்கனி பெற்ற கதை.

வேய்க்குமகன்மூத்தபிள்ளைகரத்தினின்
        மாங்கனிகொடுக்கவெகுண்டுவேலர்,
வாய்க்கினியகனிநமக்குத்தரவிலென்று
        கோபமுடன்மலைமேற்சென்றார்,
பாக்கியஞ்செந்தமிழ்க்குதவுஞ்செயங்கொண்டாரே
        விரைத்தபழனந்தோறுந்,
தாய்க்குவிளைந்தாலுமென்னதனக்கு
        விளைந்திடவேண்டிதவஞ்செய்வாரே. (62)

சீவகன் கதை.

பெலமுற்றசிங்கமொருகன்றீனும்படி
        யெழுதிப்பின்னேசெம்பொன்
விலைபெற்றகரியையரிக்கன்றுதுள்ளிப்
        பாயந்தகதைமெய்யாமன்றே
சிலைபெற்றகூளேந்த்ரன்விறலிதனில்
        விளங்குதன்றோசெயங்கொண்டாரே,
குலவித்தைகல்லாமற்பாதி
        வருமென்றுலகோர்கூறுவாரே. (63)

கொக்குமீன்களை மடித்துத் தானும்மடிந்த கதை.

தண்ணார்மீன்களைச்சருவசீவதயா
        பரபகந்தான்றயவாய்ப்பேசி,
யெண்ணாமற்சிதைத்தபழிதனக்கலவன்
        பகக்கழுத்தையிடறிற்றன்றே,
பண்ணார்சிந்தாமணியில்விழுந்ததன்றோ
        செயங்கொண்டார்பரவுநாட்டிற்
கொண்ணாரைக்கொல்லுமல்லாற்
        கொலைவிடாதென்றுலகோர்கூறுவாரே. (64)

        வாமனாவதாரக் கதை.

உலகமெல்லாமுடல்சிறுத்துஞ்சிரியவாமன
        னளந்தானொருபாதத்தா,
லலகையின்காத்திரங்களென்னவாலகிருஷ்ணன்
        பாலருந்தியவளைமாய்த்தான்,
சிலைநுதலாள் சௌந்தரிநாயகியையிடப்
        பாகம்வைத்தசெயங்கொண்டாரே,
மலைபெரிதானாலுமென்னசிற்றுளிக்குப்
        பயஞ்சனிக்கும்வண்மைதானே. (65)

        புட்கரன் நளனைவரவழைத்த கதை.

காவலன்புட்கரனளனைச்சூதாட
        வரவழைத்தகபடங்கண்டே,
மேவியசூதாடாமற்றள்ளிவிட்டாற்சனி
        நளனைவினைசெய்வானோ,
வாவிதிகழ்தென்னேமச்செயங்கொண்டாரே
        மிகுந்தவளஞ்சேர்நாட்டி,
னாவிதன்செய்தியையறிந்துகுடுமியைப்
        பத்திரப்படுத்தனலமென்பாரே. (66)

        குமுண ராசன் கதை.

சிம்மாசனன்குமுணன்சிரம்போலே
        விழிமூக்குச்செவிவாய்செய்து,
சம்மாரம்பண்ணிரத்தச்சோரிசிந்தக்
        கொடுத்ததுவுந்தட்டானன்றோ,
பெம்மானேதென்னேமச்செயங்கொண்டாரே
        மலையைப்பிரட்டுங்கையான்,
கம்மாளன்பசுவைத்தான்காதறுத்துக்
        கொள்ளுமெனக்கழறுவாரே. (67)

        ஆமை வாயாற் கெட்ட கதை.

கொடியையிரண்டோதிமநுறுங்கிற்றன்றேங்
        கௌவிப்பறக்கநடுக்கூர்மங்குலவிச்செல்கா,
னொடியிலொருசெய்திசொலவாய்திறந்தாமையும்
        விழுந்துநுறுங்கிற்றன்றே,
வடிவுளதந்திரக்கதையுமுண்டுசெயங்கொண்டார்
        வாழ்வளஞ்சேர்நாட்டி,
னெடுங்கிணறும்வாயாலேதூறுமென்றே
        சொல்லுவர்கணிசங்கண்டீரே. (68)

        திரிச்சங்குராசன் கதை

நம்புகுருவதிஷட்டர்பகைமிகுந்திருக்கும்போது
        திரிச்சங்குராசன்
வம்புரைத்தகோசிகராற்சொர்க்கமதிலேறிய
        தான்மகிமையுண்டோ
சம்புமகாதேவசெயங்கொண்டாரே
        யெதிராளிதனுவாலெய்த
லம்புவிழக்கையிலிழைகட்டினான்
        மெய்யினிற்புண்ணாறிடாதே. (69)

        சுக்கிரன் கண்ணிழந்த கதை.

கூச்சமறமாவலிபூமியைக்கொடுக்க
        மால்வாங்கக்குறுக்கேசுக்ரன்
பேச்சறியாமற்பேசிக்கண்ணிழப்பானேனொதுங்கிப்
        பிழைக்கொண்ணாதோ
வாச்சரியஞ்செயங்கொண்டாரே
        யிலங்காபுரிராமராண்டாலென்ன
வேச்சிலரக்கர்களாண்டாலென்னென்று
        குரங்கந்நாளிருந்ததன்றே. (70)

        மானமுள்ள மகாபுருடன் கதை.

நீரெடுத்தோர்கலசமதிற்சவசமுஞ்செய்தொருவன்
        வந்தானெடுநாள்கும்பம்
பாரில்விழுந்துடையவின்னுமொருகலசமென்
        மானம்பார்க்கும்போது
சீரலவென்றழுதானென்றொருகதைசொல்வார்
        நேமச்செயங்கொண்டாரே
யாரெனினுமானமிழந்துயிர்காப்ப
        தென்னவென்பாரவனியோரே. (71)

        கருடன் கதை

விருப்பமறையோன்றனுக்குப்பிறந்தன
        நிருதனையுவணன்விழுங்கும்வாயி
னெருப்பெழச்சுட்டதனாற்செங்கருடனிருதனை
        விடுத்தானெனவோர்பாட்டிற்
றிருப்பதிவேங்கடசதகந்தனிலுரைத்தார்
        முன்பெரியோர்செயங்கொண்டாரே
நெருப்பிருப்பதறியாமற்றொட்டாலுஞ்
        சுடுமெனவேநிகழ்த்துவாரே. (72)

        பட்டணத்துப் பிள்ளை கதை

கையினிற்பட்டணத்தார்க்குந்தமக்கை
        நஞ்சுகலந்துபலகாரஞ்செய்தே
யையமறக்கொல்லவென்றேகொடுக்கவ
        வண்மனைநெருப்பாலழிந்ததன்றோ,
துய்யபினாகச்சிலையீர்செயங்கொண்டாரே
        பிறர்க்குத்துன்பங்காணச்,
செய்ததீவினைதானுஞ்செய்த வர்க்கே
        சேருமெனச்செப்புவாரே. (73)

        விக்ரமாதித்தன் கதை

சிந்தைமகிழ்விக்ரமாதித்தனுக்காயிர
        வருடந்தேவியீந்தாள்
புந்திவலுமந்திரிசொல்லாலிரண்டாயிர
        வருடம்புவியையாண்டான்
சுந்தரர்க்குத்தூதுசென்றசெயங்கொண்டாரே
        தருமந்துலங்குநாட்டின்
மந்திரங்கால்மதிமுக்காலென்று
        லகந்தனிலுள்ளோர்வழுத்துவாரே. (74)

        காளிதாசன் கதை

நிசகாளிதாசனரண்மனைவாயிற்புக
        வேண்டிநிருபன்கீர்த்தி
சுகநாசிபல்போலென்றுரைத்ததனாற்
        செல்லவிட்டார்தொன்றப்போவென்
றிசைவாங்கீர்வாணம்போசன்றன்
        மேற்பகர்ந்தனன்காண்செயங்கொண்டாரே
பசுமாட்டுத்தோலதனைப்புலிபோர்த்துக்
        கொண்டிருந்தபண்புதானே. (75)

        இராவணன் போர்க்குத்துணிந்த கதை.

யாகத்தாற்செயமுமில்லையிறப்பதினி
        நிசமெனக்கொளென்னைப்பெண்ணே
லோகத்தாரிராமனெனவுரைக்குமட்டு
        மிராவணனென்றுரைப்பார்போர்க்குப்
போகத்தான்றுணிந்தனென்றானரக்கனதாற்
        செயங்கொண்டார்பொருந்துநாட்டிற்
சாகத்தான்றுணிந்தவர்க்குச்சமுத்ர
        முழங்காலளவுதானென்பாரே. (76)

        நக்கீரர் கதை

அத்தநீகரத்தெழுதியடிமைக்கீந்திட்ட
        செய்யுளதனைநோக்கிச்
சற்றுந்தாமதியாமலியற்கைமணங்
        கூந்தலுக்குத்தகுதியென்றல்
குற்றமெனப்பயமின்றியுரைத்தனர்
        நக்கீரர்செயங்கொண்டாரேசொல்
வித்துவான்மதயானையிரண்டுமொப்பென்
        றுரைப்பதுவுமெய்யதாமே. (77)

        துரோணர் பெண்சாதி

உச்சிதமாய்த்துரோணர்சொன்னமொழிப்படியே
        யவர்மனையாளுடையில்லாமற்
பிச்சையிடக்கொள்சிவனுக்கக்கணமே
        யிந்திரியம்பிறந்ததன்றோ
தெட்சணமாமுனிபரவுந்தென்னேம
        நகரில்வளர் செயங்கொண்டாரே
யிச்சையுள்ளகாமுகர்க்குக்கண்கண்ட
        விடத்தினிலென்றியம்புவாறே. (78)

        வாதாபி கதை

மெத்தநான்வாதாபிவேதியர்களுயிரை
        யுண்டுமேவிக்கும்ப,
சித்தனைச்சாப்பிடநினைத்தான்சித்தனவனு
        யிரைமுற்றுஞ்சிதைத்துப்போட்டான்
மத்தகசந்தனைநயுரித்தசெயங்கொண்டாரே
        யார்க்குமனதுக்கேற்க,
நித்தியங்கட்டப்பாலைற்றவுந்தான்
        பழுத்திடுமோநிலத்துமீதே. (79)

        நாரைமூக்குக்கவமைசொல்லிய கதை.

பார்புகழும்பாண்டியர்க்குச்சங்கத்தார்
        பேரறிவாற்பகரவொண்ணா
நாரைமூக்குக்குவமைபனங்கிழங்கென்றொரு
        புலவவின்றானன்றோ
சீருலவுங்கங்கைதிங்கள ரவமொடு
        கொன்றையணி செயங்கொண்டாரே
காருலவும்புவியினுள்ளோரா
        காயந்தனையும்வரைகட்டுவாரே. (80)

        விறன்மீண்டநாயனார் கதை

ஆரூரெல்லையின்மிதியேனென்றவிறன்
        மிண்டர்தனையரன்சோதித்தப்,
பாரிலொருகான்மிதிக்கச்செய்தது
        கண்டக்காலைப்பதறியீர்த்த
சீருவந்துசிவன்காட்சிகொடுத்தானன்றோ
        நேமச்செயங்கொண்டாரே,
பேருலகின் மனங்கலங்கிப்பிரியாமற்
        பிடித்தவர்க்குப்பேறுண்டாமே. (81)

செந்நாப்புலவர் கதை

உற்றுசெந்நாப்புலவர்மிக்ககணிகணன்
        மேற்கோபமதாயுலகுண்டோனை
யிற்றையாம்புறப்படுவோமினியுன்
        பாய்சுருட்டியெழுந்திருமென்றோதச்,
சித்தசன்றன்றாதைவரதப்
        பெருமாளெழுந்தனரேசெயங்கொண்டாரே,
பத்தருளத்தினிலீசன்குடியிருப்பானெனச்
        சொல்லும் பண்புதானே. (82)

        குசலன் கதை

மிகப்பெரியமாலசுவந்தனைப்பிடித்துக்
        கட்டிவந்தவினைப்போர்தன்னைப்
பகற்பொழுதிற்பொடியாக்கித்தாதைதனை
        வென்றகுசன்பண்புபாரீர்
செகத்தரசர்புகழவருந்தென்னேம
        நாடதிபச்செயங்கொண்டாரே
தகப்பனொருபாக்கெனவும்பிள்ளையொரு
        தோப்பெனவுஞ்சாற்றுவாரே. (83)

        இரேணுகாதேவி கதை

தண்பரசுராமனதுதாயுடலிற்பறைச்சி
        தலைதரித்தமின்னா
ணண்பரிடங்கொண்டுவரவிவண்முழுதும்
        பறைச்சியெனநகைத்து நாதன்
றிண்புயனேயிவளையப்பாற்றுரத்தெனச்
        சேய்க்குரைத்தனரே செயங்கொண்டாரே
பண்புளவெண்சாணுடம்பிற்
        சிரசுபிரதானமெனப்பகருவாரே. (84)

        கண்ணன் கதை

பார்த்தனுக்கேரதமூர்ந்தோன்மூத்த
        பலபத்திரனைப்பாரைச்சுற்றென்
றேய்த்தனுப்பித்தன்னைச்சார்ந்தோரைரட்சித்
        தண்ணனைச்சார்ந்திருந்துவாழ்ந்த
நூற்றுவரைமடியவுஞ்செய்தான்
        செயங்கொண்டாரே நீர்நுவலக்கேண்மோ
மூத்ததுவேமோழையென்றுமிளையது
        வேகாளையென்றுமொழிகுவாரே. (85)

        நிரம்பவழகியர் கதை

பொன்னார்செல்வமுந்தமிழும்பொருந்தர
        சன்றருக்கதனாற்புலவருக்குண்
மன்னானநிரம்பவழகியரையண்டங்
        காக்கையெனவழுத்தக்கேட்டே
யன்னார்நீ யேயண்டங்காக்கையென்றார்
        செயங்கொண்டாரணிகொணாட்டிற்
றன்னாலேதான்மெலிந்தாலண்ணாவி
        யென்னசெய்வான்றரணிமீதே. (86)

        நந்திராசன் கதை

சூத்திரப்பாவையைநிகர்மெய்யிதனைநம்
        பொண்ணாதெனவுந்துணைவன்கல்விக்,
காத்துமதத்தஞ்செய்துலகுள்ளமட்டும்
        புகழ்படைத்தானன்றோநந்தி,
போற்றியசுந்தரர்க்காய்முன்முறிகாட்டுஞ்
        செயங்கொண்டார்புனிதநாட்டிற்,
கீர்த்தியபகீர்த்தியிவைவந்தாற்
        போகாவெனவேகிளத்துவாரே. (87)

        சுவாகாள் கதை

ஆறுரிஷிபத்தினிமார்பழுதுபடா
        திருக்கையிலேயன்னோரூபங்
கூறுசுவாகாளெடுத்தக்கினிதேவைத்
        தழுவரிஷிக்கூட்டங்கூடிச்
சீறியறுவரைத்துரத்தத்தவசுக்
        கேகினரன்றோசெயங்கொண்டாரே
வாறவிதிவந்ததென்றால்வளைந்தாடும்
        பானையென்றுவழுத்துவாரே. (88)

        அருந்ததி கதை

நித்தியசந்யாசியென்றுநித்யோபவாசி
        யென்றும்ரிஷிகள்கூற
வத்தைமெய்யென்றருந்ததியாள்கங்கை
        தனக்குரைத்துவழியன்பாய்க்கேட்கச்
சித்தமகிழருந்ததிசொற்றனக்கு
        வழிவிட்டாள்செயங்கொண்டாரே
பத்தினியுத்தமிவாக்குப்பலிக்குமெனத்
        தேவரொக்கப்பணித்திட்டாரே. (89)

        மிருகண்டர் கதை

மதிமெதுவாலொருநூறுவியன்
        மதியாற்பதினாறுவயதுபுத்ர
னெதுதருவோமெனச்சிவனே நல்லபிள்ளைவய
        தீரெட்டிருந்தாற்போது
மதுதருவீரென்றுமிருகண்டுமுனி
        யன்றுரைத்தார்செயங்கொண்டாரே
யிதசாணியொருகூடைமிக்கசவ்வாதோர்
        பணத்தினிடையென்பாரே. (90)

        அனுமான் கதை.

சலியாமற்கடறாண்டிமருத்துமலை
        கொணரனுமான்றடந்தோடன்னை
நலியாமலிந்த்ரசித்தன்பாசத்தாற்
        கட்டிவிட்டானலமதான்
கலியாணமுரசொலிக்குந்தென்னேமச்
        செயங்கொண்டார் கனத்தநாடடில்
வலியார்க்குவலியாருமிருப்பரென்றே
        யுலகிலுள்ளோர்வசனிப்பாரே. (91)

        பாண்டியராசன்கதை.

மதுரைமன்னனிடத்திருந்தகுதிரை
        பற்றாதெனவிலைக்குமாவனேக
மிதமுடன்சேகரித்தநிமித்தியத்தான்
        முன்பரிமுழுதுமிழந்தானன்றோ
நிதியனைத்தோழமைவேண்டுஞ்
        செயங்கொண்டாரேயேரிநிறைக்கவேண்டிப்
புதியவெள்ளம்வரப்போய்முன்னிருந்த
        வெள்ளத்தையுமிழுத்துபோனவாறே. (92)

        விறகுதலையன்மனையாள்கதை.

தெகிட்டாக்காதலைவிறகுதலையன்
        மனையாள்கூத்தன்றிகிலிட்டேங்கப்
புகட்டியல்லோகற்பழியாமற்கவி
        கேட்டாடனதுபுருடன்பேரின்
முகட்டாலிலையிற்றுயிலவோன்
        பணிசெயங்கொண்டாரே சீர்முதிர்ந்தநாட்டிற்
பகட்டாறபங்கெடுப்பரெனப்பொரியரிசி
        யிடியெனவும்பகருவாரே. (93)

        சூரியனைச்சக்கரத்தால்மறைத்தகதை.

வாணிமாதுலன்றோழனிறவாமற்காக்க
        வென்னவகைசெய்வோமென்
றாணியிரவியைத்திகிரியான்மறைத்துப்
        பார்த்தனைக்காத்தருளினாரே
நாணரவாறபொன்மலையைவளைத்த
        செயங்கொண்டார்வாழ்நலஞ்சேர்நாட்டில்
வேணுமென்றுநூற்றான்மெல்லிய
        நூலாய்நூற்றிடுவர்மெய்யதாமே. (94)

        மயிலிராவணன்கதை.

அச்சமில்லாத்துராக்கதராவணனை
        மயிலிராவணன்சேர்ந்தழிந்துபோனான்
பட்சமுள்ளவிபீஷணன்றானரக்கனைவிட்டொதுங்கி
        மிகப்பண்பாய்வாழ்ந்தான்
கச்சணியுந்தனத்திசௌந்தரிபாகர்
        செயங்கொண்டார்கனத்தநாட்டிற்
றுரச்சனரைக்கண்டவுடன்றூரப்போ
        வென்றுலகோர்சொல்லுவாரே. (95)

        வரகுணசோழன்மனையாள்கதை.

வல்லவரகுணசோழன்மகளைமணஞ்செய்தருளி
        வடிவைப்பார்த்தே
யல்லிருக்குங்குழலியிவண்மருதப்பர்க்காவண
        மக்கனனையேன்றே
தில்லைமன்றுளாடிமெய்யிலைக்கியமாம்படி
        சேர்த்தான்செயங்கொண்டாரே
நல்லதுகண்டானாயன்றனக்கென்றே
        யுலகிலுள்ளோர்நவிலுவாரே. (96)

        நக்கீரர்கதை.

அரசிலையிற்பாதிபட்சிபாதிமச்சமான
        விந்தையனைத்தும்பார்த்து
விரவுளநிட்டையைமறந்தநக்கீரர்தனைப்
        பூதம்விழுங்கத்தூக்கித்
திரண்மலையிலடைக்கவள்ளிகணவனன்றோவ
        விலக்கிவிட்டான்செயங்கொண்டாரே,
யுரைசெய்தவமறந்தாற்கைதவமாளு
        மென்றெளவையுரைத்தவாறே. (97)

        வேடன்கதை.

அடவியில்வேதியற்கொருவேடன்றினைமாப்
        பகுந்தபலனாற்காசிக்குத்
திடமுளமன்னவன்சேயாய்த்தினையாரியப்
        பொற்கலத்திறசெனித்தானன்றோ
வடவரையைச்சிலையாகவளைத்த
        செயங்கொண்டாரேவையந்தன்னி
லிடுவதுபிச்சைபின்புபெறுவதுவே
        மோட்சமெனவியம்புவாரே. (98)

        துர்வாசமுனிகதை.

வாச்சுதெனத்துர்வாசருக்குமாங்கதனை
        மெத்தவருத்தவாழி
பாய்ச்சலினான்முனியைவெல்லவரவுருக்கு
        மாங்கதன்றானபரித்தானன்றோ
கூச்சமறச்சிலந்திப்பூச்சியைக்கதிசேர்த்திட்ட
        செயங்கொண்டாரநாட்டிற் சாட்சிக்காரனைப்
பணியார்சண்டைக்காரனைப்
        பணியத்தகுமென்பாரே. (99)

        வரரிஷிகதை.

சிவயொகர்வெகுளியினால்வரரிஷியு
        மகிடமெனச்செனித்தான்பாரிற்
பவமடியாற்கற்றவுமைலிங்கப்ராணியை
        வதைத்தபழியின்றோஷ
நவதீர்த்தமாடியன்றோதொலிந்ததென்பார்
        செயங்கொண்டார்நலஞ்சேர்நாட்டிற்
றவமுடையோர்மனமழுங்கச்செயப்படாதென்
        றுலகோர்சாற்றுவாரே. (100)

ஜெயங்கொண்டார் சதகம் முற்றிற்று.


This file was last updated on 4 Feb. 2016.
.