"குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ்"
மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார் இயற்றியது.

kunRaikkuTi mayUrakirinAtar piLLaittamiz
of mazavairAyanEntal cuppiramaNiya pArtiyAr
In tamil script, unicode/utf-8 format





"குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ்"
மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார் இயற்றியது.

Source
குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ்.
மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார் இயற்றியது.
இஃது இறாமநாதபுரம் ஜில்லா அஞ்சுகோவில் தேவஸ்தானம் டிரஸ்டி
மகா-*-*-ஸ்ரீ றாவ்பகதூர் எம்.ஆர். கோவிந்தராயரவர்கள்
உத்திரவுப்படி மஹாலெக்ஷிமி விலாசம் பிரஸில் பதிப்பிக்கப்பட்டது.
மதுரை, 1924.
M.L.V. Press Madurai 500-24
----------


வேலுமயிலுந்துணை.


சிறப்புப்பாயிரம்.

மதுரைத் திருவிளையாடற் கீர்த்தனை செய்த மழவைச் சுப்பிரமணிய ஐயர் இயற்றியது.

நிலமண்டிலவாசிரியப்பா.

பூமகள்நாமள் பொன்மகள்கன்மகள்
ஆமிவர்தவத்தா* லாதியங்கடவுள்
தண்சுமந்திலங்கு சசிநதிமுடிமேல்
மண்சுமந்தித்தரை மகளையுயர்த்தியும்
எண்ணுறுபுலவரோ டியைந்தேழெழுவராய்த்
தண்ணவெண்ச*லசை சாபமொழித்தும்
பார்வதியிறையாய்ப் பலியேற்பொழித்துப்
பார்வதியிறையாய்ப் பைம்பொனீந்தளாவியும்
கருவுயிர்த்தறியாக் கௌரியங்கயற்கண்
**ணரிவையுக்கிரனையின் றன்புறத்தழுவியும்
இலீலைகவெட்டெட்டி வையொடுகூடலின்
மேலுறநடாத்தி மேலோர்வியப்ப

எந்நாட்டினுமுயர்ந் தின்பம்பயக்குந்
தென்னாட்டிளமகள் சிறுமியாகும்
நேமநாட்டின் னேரிழைதிலக‌
மாமெனநிலவு மணிதிகழ்வளநகர்
பண்டருந்தவரொடு பங்கயனாரண
னண்டருங்குழாங்கொண் டறுமுகவேளை
வண்டியேகந்த வெற்பினைச்சூழ்ந்து
நீண்டகைகுவித்து நின்றபோழ்தாங்கு
எவரூர்தியுமே யிரைந்திடவிழுங்கிச்
சிவசுதன்சினவச் சிவனோடுமிழ்ந்த‌
மயிலைச்சிலைவடி வாகெனப்பணிக்க‌
அயில்வேற்கடவு ளருளாலீங்குற்
றோங்கியசாப மொழிந்துப‌ண்டுருவந்
தாங்கியசிகண்டிச் சைலமீதுற்றுக்
குன்றக்குடியெனக் குவலயம்புகழ‌
நின்றற்புதமண் ணிலமதுதுலங்க‌
மறையைச்சுவத்த வனமாய்த்தவமுற‌
நிறைமுனிவோர்பொன் னிலத்த‌ர்நின்றேத்த‌
நாரதமுனிக்கு ஞானோபதேசங்
கூரயிற்கடவுள் கூறியம‌காதலங்

கருகியநீல கந்தரனகமகிழ்ந்
தருள்செயச்சரவணத் தன்பினமர்ந்து
கார்த்திகைமாதர் கரமலர்மேற்கொண்
டேத்தவரைமுலை யின்பாற்சுவையுற்
றாறுருவாயங்கே கோபித்து
மீறுமயனை விலங்குறவகற்றிக்
குறவஞ்சியின்வள்ளிக் கொடியடி வீழ்ந்து
நறுஞ்செழுமுல்லை நகையுறுமண்டர்
மாதரைமங்கல மருவச்செய்து
வாதரமாய்வந் தன்புறும்பாலைக்
கிழத்தியாமன்னை கேண்மைவிரும்பிப்
பழகாப்பார்வையின் படர்ந்துபொலிந்த‌
மருதத்தலைவனை மாட்சிமையாக்கிப்
பொருதடவம்புயம் பூரித்தோங்க‌
வேரியந்தாரணி விளங்கமேவி
நீரமைநெய்தன் முந்நீரெதிர்த்துக்
குழகனேர்மறைபொருள் கூருமின்ப‌
மொழியாமதுர முதுசுவைப்பானதி
தேனதியென்னத் தென்பால்வடபால்
ஆனதிமையவ ரமராவதியு

மளகையுமேத்த மருமிப்பதிவரை
வளரொளிதழையும் வடிவேலவர்மேல்
தாசுங்கல்வியுஞ் செல்வமுமுயர்ந்த
ராஜகெம்பீர நவில்பிரகசரணன்
போதில்வானவனைப் பொருமறையுணர்ந்த
கோதில்வாதூல கோத்திரோத்பவன்மா
வாபஸ்தம்ப சூத்திரனன்பிற்
றாபமகற்றத் தருவைகைநாட்டின்
மழவயிற்குகவேள் வளரருட்பெற்று
மழவையிற்சிறந்து மலிவிறுதவத்து
வழிவழியுயர்ந்த மரபினன்சிருதி
கழறுநற்குலத்தோர் கன்னியைவேட்ட
லொழியமற்றேரா தொழுகறுதொழிலினன்
நித்தியநைமித்திய நியமவேள்பாச
னத்திலான்னீய நடையினில்வழுவான்
வாசபேய மகவரைமுடித்தி
ராசர்மகிழு நலமுயர்கண்யன்
திகழ்சொக்கைய தீக்ஷிதர் புத்திரன்
குகனேர்விப்பிர குலசிகாமணி
சிதம்பரதீக்ஷிதர் சிரேஷ்டரென்ன

நிதமும்பரவி நீணிலத்தோர்புகழும்
பதிதிகழுங்கணபதி தீக்ஷிதரையுந்
திடவானெக்ஞ தீக்ஷிதர்தமையும்
சுதனெனப்பெற்ற சுகிர்தசீலவான்
இதமுறுவடநூ லெல்லைகண்டவன்
அரியமுத்தமிழு மஷ்டாவதானமும்
உரியவிலக்கணத்துடனுணர்புலவரே
றாசுமதுரஞ்சித்ர விஸ்த்தாரமா
மோசைக்கவிசூற் குயர்சிரோரத்னம்
பாடல்படித்தல் பிரசங்கித்தலெனும்
நாடகக்கவிஞர் நடுங்கும்வாசாலகன்
குழந்தைமன்னவனுங் கோடிமன்னவனுஞ்
செழுந்தமிழ்வளர்க்குந் தேவைமன்னவனுந்
தஞ்சைமன்னவனுந் தமிழ்கேட்டீந்த
சிஞ்சிதமிலங்கு சிவிகைப்பிரதாபன்
மெய்த்தனச்செல்வ மிகுந்திகபரந்திகழ்
புத்ரனைவேண்டிப் புனிதமாயோங்கு
மயின்மலையதனை வலஞ்சூழ்ந்தொருநாள்
உயர்சன்னிதியுற் றுபவாசமிருந்
துள்ளத்துணர்ந்தன் றொருபகற்பொழுதிற்

பிள்ளைத்தமிழ்க்கவி ப்ரபந்தமிஃதியற்றிக்
கந்தர்தமருளாற் கண்ணெனவிரண்டு
மைந்தரைப்பெற்று வாழ்விற்சிறந்தன
னகிலமெங்கு மதிசயித்துவக்கும்
மகிமைசேர்சுப்பிர மணியபாரதியே.

சிறப்புப்பாயிரமுற்றும்.
----------------

சாத்துகவிகள்.

இஃது காரைக்குடியில் இருக்கும் மழவராயனேந்தற்சிதம்பரதீக்ஷிதர்
அவர்கள் குமாரர் அஷ்டாவதானம் பாலசுப்பிரமணிய ஐயர் இயற்றியது.

விருத்தம்.

அந்தமயிற்பூதரத்தான்மீதுமழவைப்பதியி
      லமர் சொக்கையன்
சந்ததிசுப்பிரமணியபாரதியோர்தினஞ்செய்
      பிள்ளைத்தமிழ்ச்சீர்கேட்டுச்
சிந்தைதெளிவானபுதன்மதிகாலென்றான்
      கவியுந்தெண்ணீரிற்செல்
லுந்தரமீனத்துச்சனானென்றா
      ன‌கத்தியன்மெய்யொடுங்கினானே.         (1)

மயல்வடிவாமேனலிடத்தொருவள்ளி
      முனம்விருத்தவடிவுகாட்டுஞ்
செயவடிவேற்காளையெனுஞ்சிகண்டிமலைச்
      சண்முகன்மேற்சேயென்றோதும்
பெயர் தனக்குந்தன தூரின்பெயர் தனக்கு
      மிசைவாகப்பிறங்கோர்நாளில்
நயமழவைச்சுப்ரமண்யபாரதிபிள்
      ளைத்தமிழைநவின்றான்மாதோ.         (2)

சங்கரன்றன் மகிமைதெரித்திடவுலகிற்
      சங்கரனாச்சர்ந்ததேபோல்
பொங்குமழவைச்சுப்ரமண்ணியன்றன்
      பெயருலகிற்பொலிவுற்றேங்க
வெங்கண்மழவைச்சுப்பிரமணியனா
      வந்தைந்தின்னியலான்மேன்மை
தங்குபிள்ளை த்தமிழாகக்குன்றையிற்பிள்
      ளையைவேண்டிச்சாற்றினானே.         (3)

பெரும்பரசுமானணிந்தசெழுங்கரத்தான்
      சடையிலிளம்பிறையன்வானும்
பரும்பரசுமானபரன்றருங்குமர
      னிருதனம்பம்பரனேர்வள்ளி
விரும்பரசுமானதிக்குன்றையில்வேண்மேற்
      பிள்ளைத்தமிழைச்சொற்றான்செங்
கரும்பரசுமானபந்தோய்மழவைச்
      சுப்பிரமணியகவிவல்லோனே.         (4)

தனகனத்திவளரிடையந்தரத்தி
      யுமையுதவியசந்ததிசெவ்வேற்கை
யனகனத்திவதனனிளந்துணைகணை
      நேற்*விழிக்குறமின்னணையுந்தோட்சி
கினகனத்திவளர்முருகன் மீதுபிள்ளைத்
      தமிழுரைத்தான்கிளர்ஞானத்திற்
சனகனத்திவருந்தடம
      ழவைச் சுப்பிரமணியனாந்தமிழ்வல்லோனே.         (5)
-----------------

இஃது மழவாபுரிச்சுப்பிரமணியதீக்ஷிதர் குமாரர்
சிதம்பரபாரதி இயற்றியது.

பொழிற்குலவுமழவைநகர்ச்சொக்கய
      மாலீன்றவரபுத்ரனென்னச்
செழிக்கவருஞ்சுப்ரமண்யபாரதியை
      மயின்மலைமேற்சிறக்குஞ்செவ்வேள்
விழிக்கருணையமுதாட்டிப்பருவங்களாலமைத்து
      மேன்மேலோங்கு
மொழிக்கரும்பினிசைச்சுதையைச்
      செவிக்குணவாயகமகிழ்ந்துமுகந்தான்ம்மன்னோ.
----------------

இஃது இராமநாதபுரம் சமஸ்தானவித்துவான்
அஷ்டாவதானம் சரவணக்கவிராயரவர்கள் இயற்றியது.

திரைக்குமரன்படர்மாயைவரைக்குமொரு
      வேல்பிடித்தசெவ்வேடோகை
வரைக்குமரன்மேற்பிள்ளைத்தமிழையொரு
      பகற்பொழுதிலவழுத்தினான்சிற்
பரைக்குமரனடிக்குமன்புசெயுமழவைச்
      சொக்கயமால்பாலன்மார்பில்
விரைக்குமரவிந்தமணிசுப்ரமண்யபாரதிபா
      வேந்தர்வேந்தே.         (1)

சருக்கரைக்கும்பாற்குழம்புதனக்குமிணை
      யென்பர்சிலர்சரணர்சன்மக்
கருக்கரைக்கும்போதமென்பர்சிலர்சிலர்நற்
      சந்தவிலக்கணமீதென்பர்
எருக்கரைக்குஞ்சிந்துமுடிக்கருமறைபோ
      தித்தகுன்றைக்கிறைமேற்கல்வித்
தருக்கரைக்கும்பிடச்செய்சுப்ரமண்யபாரதி
      சொல்பிள்ளைத்தமிழைத்தானே.         (2)
......


கணபதிதுணை.
முருகக் கடவுடுணை.

மயூரகிரிச்சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்.

விநாயகர்துதி
வெண்பா.

பூங்கமல வாவி புடைசூழ் மயூ கிரிக்
காங்கெயன்மேற் பிள்ளைக் கவிபாடத்-தேக்கி
நடக்குஞ் *ச*முகத்தான் னாட்கலையைத் தாங்கும்
கடக்குஞ் *ச*முகத்தான் காப்பு.

1. காப்புப் பருவம்


சுப்பிரமணியர் துதி.

பூமேவுதடங்கடல்சூழ் புவியாகியகண்ட
      பூரணமாய்க் காரணமா யாரணமுமாகிக்
காமேவுநறும்பொழில்சூழ் மாயூரகிரிவாழ்
      கடவுளேநின்கவிக்குக் காப்பெவரையுரைப்பேம்
நாமேவுகலைவாணி நாதனுக்குமரற்கு
      நளினமலர் விழியாற்கு நாகநாட்டிறைக்குந்
தேமேவுவானவர்க்கு மசுரர்பகைதடிந்த
      செல்வனீயதனா னின்கவிக்குநீகாப்பே         (1)

வேறு.
சிவஸ்துதி.

வடபொலன்கிரியெனு முலைக்கண்கறாதொளிரு
      மதிமுகம் வெளுத்திடாது
மண்ணருந்தாதகடு பூரித்திடாதுநெடு
      மணிவயிறு றுளைந்திடாது
குடவளைகள்குமுறவரு சரவணையினிலவுபொழி
      கோடிசூரிய கிரணமோர்
குலவுதிருவுருவெடுத் தென்னவருகுன்றாக்
      குடிக்குமரனைப் புரக்க
தடவரையெனுங்கயிலை வேர்விழுந்தென்னவிடை
      தவளவேதிகையி னாப்பண்
டனித்தங்குரித்துத் தழைத்துவெங்கட்செவித்
      தறுகட் பணாடவிக்கார்
விடவரவமெனுநெடிய விழுதிலகவிபுதரு*தி
      வெண்கொடிதுலங்க மலர்பொன்
மிளிர்பிறைவிளங்கமெய்ஞ் ஞானப்பலன்றரும்
      வெண்ணிறக் கற்பதருவே.         (2)

தேவிஸ்துதி.

விண்ணவர்கள்பொன்னாடு மேவ விபுதர்க்காசு
      விருதுசெங்கோ னடாத்த
மின்கொடியெனத்திகழ் புலோமசைமணிக்குழையின்
      மேவுதா டங்கமிலகக்
கண்ணனிருகண்மலர் முகிழ்ப்பநான்முகன்மலர்க்
      கமலத்தில் வீற்றிருப்பக்
கார்த்திகைகளிப்பவளர் சரவணப்பொய்கைவரு
      கந்தனைத் தனி புரக்க‌
தண்ணறுங்கமலமுங் கதலியுந்தந்துவட‌
      தருவிளந்தளிர் தளிர்த்துத்
தண்சுரும்புலவுமாக் கோங்கரும்பிச்செவ்வி
      தண்காந்தண் மலர்தந்துதேன்
எண்ணறுங்கிஞ்சுகம் பூத்துநற்சண்பகமு
      மீன்றுகுவலய மலரவே
யிமயாசலத்தெழுந் திமையோர்தொழப்படர்ந்
      திசையுமரகதவல்லியே.         (3)

திருமால்.

முரித்தடக்கையான் முகலஞ்சுழற்றிமத‌
      மும்மதம் பெருகவெகுளி
முகபடாங்கொண்டுபய நிகளந்தெறித்தடரு
      முனைமனப் பாகெறிந்து
கூரித்தவெண்கோடு கொடுமோதிவாழையின்
      குலையின்வா ன‌வரைவாட்டுங்
குஞ்சாத்துயிர்கொண்ட மாயூரகிரியில்வரு
      குருபரன்றமிழ்புரக்க‌
வேரிச்செழுங்கமல மலர்குவியமல‌ரினிடை
      விளரிவண்டினமொடுங்க‌
மேவுபரகாயமுறு யோகியெனமறுகூட்டில்
      வீறுபுள் ளினமடங்கப்
பாரிற்படர்ந்திலகு கவளமெனவெழுதியிர‌
      படலமுழு தும்விழுங்கப்
பரிதிமண்டலமறைய வோராழிதொடநின்ற‌
      பச்சைப் பசுங்கொண்டலே         (4)

வேறு.
விநாயகர்.

போரேறுகடகளிறு கொண்டலொத்தார்த்*தொறு*
      வானேறுபரிதிரண மண்டலத்தாட்குடை
போலேறுகடுவெயில் *மறைந்திடப்போர்க்கெழு
      பூபாலர்சொடுசிலை வளைந்திடப்பார்த்திபர்
தேரோடுபுரவிகண் மடிந்திடக்காக்கைகள்
      போயேறுகுருதியி லளைந்திடப்பூப்பொலி
யேரேறுதுளபமுகில் பஞ்சவர்க்காப்பொர*
      மூவாறுதினம்*மரு மண்டிசைப்போர்க்கசை*
யேடாகவடவரை யிலங்குபொற்கோட்டிளி*
      லேழ்பூமிதொழமுக மிசைந்தநற்கோட்டினை
நாராசமெனவெழுது குஞ்சரத்தாட்டுணை
      யேநாளுமனதினிடை யஞ்சலித்தேத்துதும்*
நேரேறுநவமணிசெய் பந்தரிற்கார்த்திகை
      மானாரொடரமகளிர் மங்களத்தாற்பொரி
நீடாழிமணிசிதற மண்டகப்பூப்பொதி
      நீர்வேதன்விதிமுறை சடங்கிடப்பாட்டிசை
மாறாதுதாவமர துந்துமிக்காட்டொலி
      நீடூழியுருமென முழங்கிடப்பூட்டிய
வாரேறுகளபமுலை குங்குமச்சேற்றுடன்
      மார்பூடுவாமுக மிலங்கிடப்போர்த்தொழின்
மாறாதுவிழியிணை புயங்களைப்பார்த்திட
      வானாடனருளமர குஞ்சரிப்பேட்டுடன்
நாணோடுதலைவளைய வுந்திருப்பூட்டிய
      மாயூகிரியில்வரு கந்தனைக்காக்கவே.         (5)

வேறு.
இலக்குமி.

கண்டேறுசொற்கண்டு தத்தையடையத்தனங்
      கண்டகமலம் பயமுறக்
கலக விழியிணைகண்டு வரிவண்டுமதுவுண்டு
      கருகியுடல் பதறவடிவு
கொண்டேறுபச்சைப் பசுந்தோக்கைசிறையினொடு
      கொடியவன மடையவந்தக்
*குத*யின்மணம்புணர் மயூரகிரிமுருகனைக்
      கூறுமென்ற மிழ்புரக்க
*வண்டேறுசுரிகுழற் கற்பகந்தனைநல்க
      வதனமதி யத்தையருள
மார்பிடங்கொண்டுவட வரையைச்சினந்ததன
      மதவார ணத்தையுதவப்
பண்டேறுகிஞ்சுகப் பூங்குமுதவாய்நறும்
      பவளமமு தினையளிக்கப்
பாததூள்பலகோடி யரமகளிரைத்தரப்
      பாற்கடலுதித்தமயிலே.         (6)

பிரமன்.

விண்டலத்துடுவினம் *பொலுபொவென்றுதி*வுரு
      மேறெனக் கெர்ச்சித்துநீள்
வெடிவால்விதிர்த்துவெம் பகுவாய்திறந்துகடு
      விழியனற் பொறிகள்சிதற
அணடலர்களெனவந்த *வானவர்கள்கடகளிறி
      தாமெனக் கவின்மடங்க
வாருயிர்கவர்ந்தருண் மயூரகிரிவாழுமென்
      னையன்முத் தமிழ்புரக்க
பண்டிதழ்கள்குவியாது வண்டுகள்புகாதுநீள்
      பங்கப்படாது நாளும்
பரிமளம்வாடாது வருமாயனுந்தியம்
      பங்கேருகத் துதித்து
மண்டலமுமண்டபகி ரண்டநவகண்டமும்
      மறிகடலு மொருநொடியிலே
மனத்திடைநினைத்துப் படைத்துக்க ளித்துநான்
      மறைதொழுவருங்கடவுளே.         (7)

வேறு.
கலைமகள்.

சேற்றுக்கமலத் திடைப்புகுந்து
      செழும்பாசடையின் குருத்தருந்தித்
தெண்ணீருழக்கி நீர்விடுத்துத்
      தெறிக்குமுலைப்பாற் புனிற்றெருமை
தாற்றுக்கதலிக் குருத்தொடித்துத்
      தனித்துக்கறித்துச் சண்பகத்திற்
றனிக்கண்வளர்மா யூரகிரித்
      தலைவன்மீதிற் றமிழ்ப்புரக்க
போற்றற்கரிய புரந்தரனும்
      புணர்மின்கொடியாம் புலோமசையும்
புகழ்வானவரு மரம்பையரும்
      பொருந்தாச் சிறையிற்போகாமற்
கூற்றுக்கிணையாய் வடிவெடுத்த
      குடக்காதனுக்கு விழிகடுயில்
கூரவரந்தா வெனநாவிற்
      குடிகொண்டிருந்த குலமயிலே.         (8)

வேறு.
பலதேவர்.

வீடாறுபெறுமுதல்வன் மற்றொப்பிலாத
      வேதாவையொருபிரணவத்துக்குநீயும்
மேலானபொருளுரை யெனக்குட்டு**
      நாடாளனி தமயி னடத்திக்குலாவு
மாயூரகிரிவரு குறத்திப்பெணேய
      னாடோறுமனமகிழ் கவிக்குச்சகாயர்
வாடாததிதியுதர கர்ப்பத்தினூடு
      போயேகவடிவெழு மருத்துக்களாக
மாறாடுகுலிசயனூர் சொர்க்த்தில்வாசர்
      நீடாழிபெருகுதிசை யெட்டுக்குநாதர்
மேனாளிலதிதிமுறையிற்பெற்றபாலார்
      நேராகவருமமரர் முப்பத்துமூவரே.         (9)

வேறு.
இதுவுமது.

குதிக்குந்தரங்கத் திரள்கொழிக்குங்
      குளிர்மாமணிவெண் ணிலவீனக்
குலவுங்குமுத முகையவிழக்
      கோலவரிவண் டினந்தொடரக்
கதிக்குந்தேனா றெனப்பெருகிக்
      கழனிதோறும் பயிர்விளைக்குங்
கனஞ்சேர்துங்க மலையில்வளர்
      கதிர்வேன்முருகன் கவிபுரக்க

உதிக்குங்கிரணன் றிரணமென
      வொளியேபரப்பி யிறுங்காலத்
துருமேறென்ன வுருத்தொழுந்தங்
      கொருமாமரத்தி னுடல்பிளந்து
துதிக்கும்வேலுந் திகழ்மயிலுந்
      துடிசேர்சேவற் கொடியுநிதந்
துலங்குநவவீ ரருமடுபோர்
      தொடங்குந்திடஞ்சே ரிடும்பனுமே.         (10)

காப்புப்பருவம் முற்றும். (ஆக - 10.)
---------

2. செங்கீரைப்பருவம்

-----------

வேறு.
உரையிட்ட *சக்ரகிரி சங்ககிரியுயர்சக்ர‌
      வாளகிரி மலையகிரிநீள்
வடபொலன்கிரிகைலை யங்கிரிவராககிரி
      மறுகுமந் தரகிரிமகா
தரையிட்டவுதயகிரி *ய‌த்தகிரியிந்த்ர‌*கிரி
      சந்த்ரகிரி விந்தகிரியோர்
சத்யகிரி ரத்நகிரி சிரகிரிவிசாலகிரி
      சையகிரி யிமயகிரிவா

னிரையிட்டராமகிரி சோமகிரியேமகிரி
      நீலகிரி சிகரகிரிசேர்
நிடதகிரிகந்தமா தனகிரிகடோரகிரி
      நீலமா யூரகிரியுந்
திரையிட்டமலர்வாவி சூழவிளையாடுமுகில்
      செங்கீரையாடியருளே
திட்கட்குவட்டிலெழு துங்கக்கிரிக்கிறைவ
      செங்கீரையாடியருளே.         (1)

கூனாரிளம்பிறைக் குஞ்சரக்கோட்டினெழு
      குளிர்மணித் தரளமள்ளிக்
குமுறுகண்டீரவக் குருளைவெருளச்செழிய
      குங்குமச் சினையொடித்து
மானாகமுட்கொண்டு வடகுவடெனுங்கடிய
      மலைவிட் டிறங்கிவலமும்
வாரிச்சுழித்துச் *செழித்துநிரைகொண்டு*ரை
      மண்டிவலை கொண்டெழும்பி

மேனாடுசெவிடிட முழங்கித்திரண்டுகரை
      மேவுகா லானிறைப்ப
வேரிச்செழுங்கமல வாவித்தடம்பெருகி
      வீசுசலராசி தேடித்
தேனாறுபுடை பெருகு மாயூரகிரிமுருக
      செங்கீரை யாடியருளே
திங்கட்குவட்டிலெழு துங்கக்கிரிக்கிறைவ
      செங்கீரை யாடியருளே.         (2)

பொன்னிறத்தூவிகொடணைத்துவெள்ளோதிமம்
      பொற்பிளம் பார்ப்பினுக்குப்
புணர்முலைப்பாலொடு கலந்துசெங்கமலப்
      பொகுட்டுறை நறாவெடுத்துத்

துன்னிதழ்ச்சங்கொடு புகட்டிவதனத்திடை
      சுழற்றிக் குறங்குதட்டித்
துய்யபங்கேருக மணித்தொட்டிலிட்டுத்
      துதைந்துதா லாட்டியிரவின்

மன்னுசெங்குமுதப் பசுந்தேறலூட்டிமலர்
      வாய்வளைய மாறியுண்டு
மணிவயிறுதேக்கிட் *டிரதிகேச*ரிவிளையாடி
      மார்பினிடை துயில்கூரவே

தென்னிடுங்களிவண்டு சூழ்நேமநாடனே
      செங்கீரை யாடியருளே
திங்கட்குவட்டிலெழு துங்கக்கிரிக்கிறைவ‌
      செங்கீரை யாடியருளே.         (3)

மன்றலந்தெரிவையர் குழாமெதிர்செலக்காள‌
      மாவிளங் குயில்கள்கூவ‌
வன்கமுகிளம்பாளை சாமரையிரட்டமுகை
      மல்லிகைச் சங்கொலிக்க‌
இன்றுதினநன்றென விளந்தெங்குதலையசைத்
      திளநீர் குலுங்கவரிவண்
டிசைபாடவனச‌முகை மலரமல‌ர்வாய்திறந்
      தெதிர்மொழி தரக்கிஞ்சுகம்

துன்றுசெங்காந்தளங் கைகுவியநறுமலர்கள்
      சொரிகடம் பலர்விரிக்கத்
தும்பைமலர் நறவொழுகு மன்னராசிகளெனத்
      தொடைவேள் விருந்தருந்தத்
தென்றலங்குலுவிவரு குன்றையம்பதிமுருக
      செங்கீரையாடியருளே
திங்கட்குவட்டிலெழு துங்கக்கிரிக்கிறைவ
      செங்கீரையாடியருளே.         (4)

கடலகடுகிழியவரு மலைசுவறநெடியவட
      கனககிரி நிலைபெயரநீள்
கறையொழுகுபடவரவு திசைகள்படவிசையினொடு
      கடகளிறுபிளிற நெடுமால்
வடதருவின் மறையமறை புகலுமயனகல்வனச
      மலரில்விழ வமரரிரிய
மதிபருதிதனதுநிலை விடவுடுவிவுலகினிடை
      மலர்சொரிவ தெனவுதிரநீள்

புடவிகிடுகிடெனவுமை யவளுமெமதரனுமிது
      புதுமையென வுடல்பதறியே
புயல்கள்சளசளெனவிழு மழைசொரியவினவசுரர்
      பொருமனது பறையறையவே
திடதுடினமொடுகடின நடனமிடுமயின்முருக
      செங்கீரை யாடியருளே
திங்கட்குவட்டிலெழு துங்கக்கிரிக்கிறைவ
      செங்கீரை யாடியருளே.         (5)

வேறு.
காதலுடன் குறமா துபுணர்ந்தவனாடுகசெங்கீரை
      கங்கைதிக்கு ளெழுந்தமதக்களிறாடுகசெங்கீரை
கோதறுசந்த்ரகலாதரிதந்தவனாடுகசெங்கீரை
      குஞ்சரிமெய்ப்புறமஞ்சரியிட்டவனாடுகசெங்கீரை
மோதகமுண்டபிரானொடுவந்தவனாடுகசெங்கீரை
      முண்டகனைப்பெருவன்சிறைவைத்தவனாடுகசெங்கீரை
யாதியொடந்தமிலாதசெழுஞ்சுடராடுகசெங்கீரை
      யங்கசன்மைத்துனதுங்கமலைக்குகனாடுகசெங்கீரை.         (6)

நாரணனுந்திருமாதுமகிழ்ந்திடவாடுகசெங்கீரை
      நஞ்சுமிடற்றினர்கொஞ்சுமறைப்பொருளாடுகசெங்கீரை
வாரணமொன்றடரானனபஞ்சகனாடுகசெங்கீரை
      மந்தரவெற்பினுயர்ந்ததிரட்புயனாடுகசெங்கீரை
பூரணசந்த்ரசுபானனரஞ்சிதனாடுகசெங்கீரை
      பொங்குதிரைக்டலுண்டவன்மெய்க்குருவாடுகசெங்கீரை
யாரணமுந்திசைமாமுகனுந்தொழவாடுகசெங்கீரை
      யங்கசன்மைத்துனதுங்கமலைக்குகனாடுகசெங்கீரை.         (7)

கூர்கொண்ட வேலையுங்கைப்படுத்திப்பகழி
      கோடியொருதூணியாக்கிக்
குரைகடலைமுனிவாய்மடுத்துமானிரிதரக்
      *குவளையைவனம்புகுத்தி
வேர்கொண்டகமலத்தைமுட்டாளெனத்தூறி
      மீனையிமையாதிருத்தி
வெங்கட்கொடுங்கூற்றையந்தகனெனத்தள்ளி
      வெவ்விடம்பயிலிட்டுமைக்

கார்கொண்டுவிளரியிருகடைசிவந்தையரி
      கலந்துமையெழுதிவள்ளைக்
காதளவுசெல்லுங்கருங்கட்குறத்தியிரு
      கனதனமுமொய்ம்புதோயச்
சீர்கொண்டுமுன்னின்றமதவாரணத்திளவல்
      செங்கீரை யாடியருளே
திங்கட்குவட்டிலெழுதுங்கக்கிரிக்கிறைவ
      செங்கீரையாடியருளே.         (8)

வண்டிசைபெற்றகடம்பமலர்ப்புயசெங்கோ செங்கீரை,
      மன்றன்மிகப்பொலிகுன்றைநகர்க்கிறைசெங்கோசெங்கீரை,
யெண்டிசைமெச்சுசிகண்டிமலைத்துரைசெங்கோசெங்கீரை,
      யெங்கள்குறப்பெண்மணம்புணர்வித்தகசெங்கோ செங்கீரை,
யண்டினர்துக்கமடங்கவொழித்தவசெங்கோசெங்கீரை,
      யந்தரிபெற்றருள்சுந்தரவிக்ரக செங்கோசெங்கீரை,
தெண்டிரைவற்றவெறிந்தவயிற்கர செங்கோசெங்கீரை,
      சிங்கமடர்த்தவதுங்கமலைக்குகசெங்கோ செங்கீரை.         (9)

10.
ஐந்துமுகத்தினர்தந்தசுபுத்திர செங்கோசெங்கீரை,
      யன்றிலெனத்தகைகுன்றுதுளைத்தவசெங்கோசெங்கீரை,
யிந்துமுகத்திலகுந்திலதத்தொருசெங்கோசெங்கீரை,
      யெங்குமதுப்பொலிகின்றநதிக்கிறைசெங்கோசெங்கீரை,
முந்துதமிழ்க்கவிஞன்சிறைவிட்டவசெங்கோசெங்கீரை,
      மொய்ம்பருணைப்புலவன்கவியிட்டவசெங்கோசெங்கீரை,
சிந்தூரவெற்பையடர்ந்ததிரட்புயசெங்கோசெங்கீரை,
      சிங்கமடர்த்தவதுங்கமலைக்குகசெங்கோசெங்கீரை.         (10)

செங்கீரைப்பருவமுற்றும். **20.
-------------

3. தாலப்பருவம்.

உலவைதழையக்குதித்துவரு
      முருமேறென்னக்குமுறியெழுந்
தோடிப்பாய்ந்துசினைகிளைக
      ளுதிரத்தாவியுறுமிநெடும்
பலவின்குடக்காய்பறித்தொடித்துப்
      பசுந்தேனருந்திக்குறுஞ்சுளைகள்
பகட்டிக்குழவிக்கருத்திமுலைப்
      பாலுங்கொடுத்துக்குறங்கினில்வைத்
திலகுங்கரத்தாற்றலைவகிர்ந்தங்
      கெடுத்துமார்போடணைத்துமர
மேறிமுழங்கும்முகில்பார்த்தங்
      கிறங்கிக்கலங்குங்கவியினங்கள்
குலவுநேமவளநாட்டுக்
      கோவேதாலோ தாலேலோ
குன்றாக்குடியில்வீற்றிருக்குங்
      குமராதாலோ தாலேலோ.         (1)

பயிலுங்கிளியின் பார்ப்பினங்கள்
      பச்சென்றிளகியிறுமாந்து
படர்நெட்டிலையின்குருத்தெழுந்த
      பசுங்காய்க்கதலிக்கனிகோதித்
துயிலும்பொழிலினிடையகலாச்
      சுரும்புங்கரும்புதனைவளைக்கச்
சூ*தத்தரும்புந்தளவரும்புஞ்
      சோகந்*தருமசோகமுடன்

வெயிலினிளங்காற்க திரெறிக்கும்
      வேரிக்கமலமுகையுமுகை
விள்ளுங்குமுதப்போதுமுறை
      விளங்குந்தூணிபுகக்கூவும்
குயில்சேர்நேம வளநாட்டுக்
      கோவேதாலோ தாலேலோ
குன்றாக்குடியில்வீற்றிருக்குங்
      குமராதாலோ தாலேலோ.         (2)

கதிக்கத்தளிர்கள்பளபளெனக்
      ககனமுகட்டில்விளங்கநெடுங்
கப்புவளரத்திசைமுழுதுங்
      கவர்ந்துபரப்பிநேர்பருவந்
துதிக்குமேலாய்மலர்சொரியச்
      சுரும்புவிரும்பச்சுரந்துதலை
தூங்குகுலைக்காயிலக்காகத்
      துருவனுலகிற்றோன்றமுளைத்

துதிக்குந்தனிமாமரமெனவே
      யோங்குமசுரனுடன்மடிய‌
வொருவேல்பிளக்கவிருபிளவி
      னொருபாதியினின்றுலகதிரக்
குதிக்குந்தோகைப்பிடரேறுங்
      தோவேதாலோதாலேலோ
குன்றக்குடியில்வீற்றிருக்குங்
      குமராதாலோதாலேலோ         (3)

கோவுங்குதித்துக்கரைபுரண்டு.
      குமிழியெழும்பியலைசிதறக்
குடக்குங்குணக்குந்தெரியாது
      குளிர்மாமதியுங்கோகனகத்
திசைக்குஞ்சரமுஞ்செவிடுபடச்
      செவியேகண்ணாமரசரெனச்
....... .......... ........... ..........
      சிறக்குமரவும்விழிபுதைப்ப‌
மேவுபுறத்தண்டமும்வெடிப்ப‌
      விபுதர்க்கரசுந்திசைமுகனும்
வெருளவடவைக்கனலடங்க‌
      வெவ்வாய்திறந்துசிறகடித்துக்
கூவுஞ்சேவற்கொடியுடைய‌
      கோவேதாலோதாலேலோ
குன்றக்குடியில்வீற்றிருக்குங்
      குமராதாலோதாலேலோ.         (4)

தளிருமொளிர்மின்கொடியுநிறத்
      தங்கத்தகடுந்துகிருமொன்றாச்
சமைத்தகுறப்பெண்முகத்துறைசஞ்
      சரிகமிரண்டுஞ்சஞ்சரிக்க‌
வொளிருங்ககனத்தரசுகந்த‌
      வும்பர்க்கரசனுவந்தளித்த‌
வொருபெண்ணரசினிருவிழிவண்
      டொருபானெருங்கவருமரம‌

களிருமுகத்தாமரையிலுறை
      கருந்தேனிடச்செந்தேனருளிக்
கருணைகுடிகொண்டருணகிரி
      கவிமாலிகையுங்கலந்திருக்குங்
குளிருங்கடப்பந்தார்புனைந்த‌
      கோவேதாலோதாலேலோ
குன்றக்குடியில்வீற்றிருக்குங்
      குமராதாலோதாலேலோ.         (5)

வேறு.
செந்தாமரைமுகவேர்வோடிலகத்
      திலகமசைந்தாடத்
தெண்டிரையொலிமலிதண்டைபுலம்பு
      சிலம்புகலந்தாடப்
பைந்தார்குழையொடுசுட்டியுடன்புனை
      பட்டமசைந்தாடப்
பணிலத்தொடையடர்பவளத்தொடையொடு
      பண்டியசைந்தாடக்

கந்தாகுமரகுழந்தாயெனவறு
      கார்த்திகைகொண்டாடக்
கங்கணமிட்டொளிர்வங்கணமிட்டொலி
      கடகக்கையாடச்
சந்தாடவிதிகழ்குன்றைக்கதிபதி
      தாலோதாலேலோ
தங்கமலைக்குயர் துங்கமலைக்குக‌
      தாலோதாலேலோ.         (6)

அங்கந்துளுவஞ்சீனமராடவிராடங்கல்யாணம்
      ஆகரைடில்லிகொழும்புகலிங்கமராளங்கேரளமா
வங்கங்கோசலைகாசிகிராதகமச்சமொடச்சீன‌
      மகதங்குகுதவிதர்ப்பங்கருநடமத்ரங்குருதேசங்
கொங்கங்கவுடம்பப்பரநிடதங்குச்சரமச்சிநெடுங்
      குடகந்திரவிடம்வடபாஞ்சாலங்குளுவங்காந்தார‌
சங்கம்புகழுங்குன்றக்கதிபதிதாலோதாலேலோ
      தங்கமலைக்குயர்துங்கமலைக்குக‌தாலோதாலேலோ         (7)

திரள்சங்கெறிநிதிகங்காந‌திபுனல்சிந்துஞ்சிந்துநதி
      சீரகமாநதிநூபுரமாநதி திருமணிமுத்துநதி
விரளம்புனல்செறியமுநாநதிகா விரிநதியொடுகோதா
      விரிநதிநருமதைநதிசரசுதிநதி விரசாநதிகரையிற்
புரளம்பழகியகிருஷ்ணாநதிதாம் புரநதிசித்ரநதி
      புயங்கமகாநதிவைகாநதியொடு புவிநதியும்புகழ‌த்
தரளஞ்சிதறும்மதுநதியுடையாய் தாலோதாலேலோ
      தங்கமலைக்குயர் துங்கமலைக்குக‌தாலோதாலேலோ         (8)

பொன்செறிகமலப்போதுறைவாவிப் புனலூடெழுமரசிற்
      போன்னிலைபாதிவிழப்பகுவாயுறு பூங்கயலாகநெடும்
வன்சிறையுளபுள்ளினமாகக்கரை வாயுறுபாதியுமே
      வாலெயிறிலகுநிசாசரனைப்பொரு மால்வடிவேபோல‌

மின்செறியுலத்ததிசயமிதுவென‌ விழியிமையாதுமன‌
      மெய்ப்புறுநற்கீரனையோரலகை விரைந்துகவர்ந்திடுநா
டன்சிறைதீரத்தனிவேல்விடுகுக தாலோதாலேலோ
      தங்கமலைக்குயர்துங்கமலைக்குக தாலோதாலேலோ.         (9)

வெங்கட்சுற‌வெறிமதுநதியூடே
      வெய்யோனெழுபரிமேல்
வீசியகசையெனநெட்டிலையோங்கி
      விளங்குகரும்பூடே
புங்கஞ்செறிகுணசாலியிதென்றெழு
      புவியும்புகழ்தர‌லாற்
பூரித்திலகித்தலைகீழாய்விழு
      பொலிவுறுகதிரூடே

வங்கஞ்செறியும்சரவணவாவியின்
      மாமறையோர்மனைமேன்
மாடமுகப்பிற்கோபுரமேனிலை
      மணிமுதல்மறுகூடே
சங்கந்தவழுங்குன்றைக்கதிபதி
      தாலோதாலேலோ
தங்கமலைக்குயர் துங்கமலைக்குக
      தாலோதாலேலோ.         (10)

தாலப்பருவமுற்றும்.
-----------

4. சப்பாணிப்பருவம்.

வேறு.
நீராட்டியாட்டுமண்ணீர்கொடு சுழற்றியெழு
நீணிலக் காப்புமிட்டு
நிலவொழுகுபட்டாடை கொண்டுட றுடைத்துவெண்
ணித்திலச் சுட்டிகட்டிச்
சீராட்டிமடியில்வைத் தீராறு கையுஞ்
செலுத்திக் குறங்குதட்டித்
தெள்ளமுதெடுத்து வெண்சங்கிடை *குலுக்கிநற்
செவ்வாயுறப் புகட்டிப்

பாராட்டியிருகவு ணெரித்துச் செறித்துவெம்
பணைமுலைப் பாலருத்திப்
பவளவாய்வைத்துண்ண வாய்க்கடங்காதபால்
பாற்கடலெனப் பெருக்கித்
தாராட்டியிருமூவர் முத்தாடுமுத்தைய
சப்பாணிகொட்டியருளே.
தங்கமலைநிகரான துங்கமலை யாதிபதி
சப்பாணிகொட்டியருளே.         (1)

2.
சீரிட்டகுழியக் கொண்டையுந் தமனியத்
      திடுபிறையும் வெயிலுமாறாத்
திலகநுதலிலகவரு சுட்டியும் பட்டமுந்
      திங்கண்மறு வனையபொட்டு
நேரிட்டமகரகுண் டலமுமிடு கண்டசர‌
      நித்திலக் கொத்துமணிவாய்
நின்றொழுகுமழலைவா யமுதப் பெருக்குமணி
      நீலவளையுங் காப்புமேல்

வீரிட்டலம்புஞ் சிலம்புநிறை கிண்கிணியு
      மேவுமரை வடமுமார்பின்
மேலிட்டுமாறாடு கொத்துச் சரப்பணியு
      மேனியும் புழுதிதோயத்
தாரிட்டவீரரொடு விளையாடு மதகளிறு
      சப்பாணிகொட்டியருளே
தங்கமலைநிகரான துங்கமலை யாதிபதி
      சப்பாணிகொட்டியருளே.         (2)

மதிகொண்டவான்முக டளாவிவஞ்சனை கொண்ட‌
      மாமரமடர்த்த கையால்
வாரணக்குமரிதா ளம்மிமிசை வைக்கவே
      மலரடியெடுத்தகையால்
துதிகொண்ட வள்ளிமண மாலையிட்டுப்பிறகு
      தோண்மாலை யிட்டகையால்
சூழுலகுசெவிடிடக் கூவுசேவற்கொடி
      துலங்கிய மணிக்கரத்தாற்

றிதிகொண்டகுறுமுனிக் குபதேசநாட்செய்த‌
      சின்முத்திரைக் கரத்தால்
செந்தமிழுகந்த ந‌ற்கீரனை யகோரமாஞ்
      சிறைவிடுத்திடு கரத்தால்
குதிகொண்டுவருமயிற் பரிநடத்திடுகையால்
      கொட்டியருள் சப்பாணியே
கொண்டலம்புகழ்பருகு குன்றையம் பதிமுருக‌
      கொட்டியருள் சப்பாணியே.         (3)

வேறு.
மானாரெனுமறுமீனார் தருபுலி
      கொட்டுகசப்பாணி
மழலைக்கிளிபுகல் பழனிக்கதிபதி
      கொட்டுகசப்பாணி
சேனாபதியெனவானோர்பணிபத‌
      கொட்டுகசப்பாணி
செந்தூர்வருகுக விந்தூரறுமுக‌
      கொட்டுகசப்பாணி

நீநானெனவெதிரானோர்பொருபவ‌
      கொட்டுகசப்பாணி
நேமத்தொடுகதிர் காமத்துதிமதி
      கொட்டுகசப்பாணி
கோனாரொடுவளர் தேனாடுடையவ‌
      கொட்டுகசப்பாணி
ருன்றைப்பதிவளரண்டர்க்கதிபதி
      கொட்டுகசப்பாணி.         (4)

வேறு
கரமொன்றுபொன்வளை கலீரென்னமாறாது
      கங்கணத் தொனிபுலம்பக்
காந்தளம்போதெனக் கர‌தலஞ் சேப்பந‌ற்
      கணையாழி விரலழுந்தச்
சிரமுஞ்சடாடவியு மசையவெண்ணிலவோடு
      தெண்ணிலவு மூரல்காட்டிச்
சிவனுஞ்சபாசென்ன வுமையவள் சரோருகச்
      சித்தங்களிக்க வேதன்

னுரமுந்திடுக்கென்ன வாணிநெஞ் சஞ்சவா
      னும்பர்கோ னூழிகாலத்
துருமேறிதாமென்ன விண்ணவர் நடுங்கவே
      யொருதரத் தீரிரண்டு
தரமுங்கணீரிடக் குட்டுமொரு செங்கையாற்
      சப்பாணிகொட்டியருளே
தங்கமலைநிகரான துங்கமலை யாதிப‌தி
      சப்பாணிகொட்டியருளே.         (5)

மீன்கொண்டிரங்குந் தரங்கஞ் செறிந்தமணி
      வேலையினில் வேலையிட்ட‌
மெல்விரற்கையாற் க்ரவுஞ்சகிரிதூளிபட‌
      வேலெறிந்திடு கரத்தால்
வான்கொண்டதேவர் மாரகனான தாரகனை
      மறலிக்களித்த கையால்
வாரணத்தொகுதிகட வாரணத்தூற்றுமத‌
      வாரணம் பொருகரத்தா
லான்கொண்ட தேவுக்கு மீன்கொண்டதேவுக்கு
      மபயங்கொடுத்தகையால்
ஐயானனத்தெவ்வை யாறானனங்கொண்
      டடர்த்திடுமணிக்கரத்தால்
கூன்கொண்டபிறையெயிற் றசுரனைத்தெறுகையால்
      கொட்டியருள் சப்பாணியே
கொண்டலம்புகழ்பருகு குன்றையம்பதிமுருக‌
      கொட்டியருள் சப்பாணியே.         (6)

வேறு.
ஏலமலர்க்குழல் வான்மதிபெற்றவ‌
      கொட்டுகசப்பாணி
யேரகமேவிய தாரகமாரக‌
      கொட்டுகசப்பாணி
சோலைமலைப்பதிமேவியவித்தக‌
      கொட்டுகசப்பாணி
சுந்தரவள்ளி மனந்தருணாயக‌
      கொட்டுகசப்பாணி
ஞாலமளித்தவன் மேல்விருதிட்டவ‌
      கொட்டுகசப்பாணி

நந்தமுலாவு பரங்கிரிவாழ்குக‌
      கொட்டுகசப்பாணி
கோலமயிற்பரி மேல்வருவிக்ரக‌
      கொட்டுகசப்பாணி
குன்றைப்பதிவளரண்டர்க்கதிபதி
      கொட்டுகசப்பாணி.         (7)

சிங்கமடர்ந்திடு துங்கமலைக்கிறை
      கொட்டுகசப்பாணி
தேனாறுடையவ வானாரருள்பவ‌
      கொட்டுகசப்பாணி
சங்கரிபெற்றருள் மங்களவிக்ரக‌
      கொட்டுகசப்பாணி
தாமப்புயமலி நேமத்ததிபதி
      கொட்டுகசப்பாணி

புங்கவராகிய சங்கரபாலக‌
      கொட்டுகசப்பாணி
பொன்னாடெனவளர் நன்னாடுடையவ‌
      கொட்டுகசப்பாணி
குங்குமவெற்பணி தங்குதிரட்புய‌
      கொட்டுகசப்பாணி
குன்றைப்பதிவளரண்டர்க்கதிபதி
      கொட்டுகசப்பாணி.         (8)

இருமயின்மோகன வொருமயில்வாகன‌
      கொட்டுகசப்பாணி
யெண்ணியவேளையி னண்ணியவாரண‌
      கொட்டுகசப்பாணி
யரிமரும‌கனென வருசரவணபவ‌
      கொட்டுகசப்பாணி
யக்கரமாறுளகுக்கிடகேதன‌
      கொட்டுகசப்பாணி

முரசொலிதரவரு மமருலகுடையவ‌
      கொட்டுகசப்பாணி
முருகுகடம்பலர் பெருகுதடம்புய‌
      கொட்டுகசப்பாணி
குருபரனெனவுல கிணையடிபணிமுதல்
      கொட்டுகசப்பாணி
குன்றைப்பதிவளரண்டர்க்கதிபதி
      கொட்டுகசப்பாணி.         (9)

வேறு.
திங்கண்முக மடவார்க ளாரிருசெவிக்குமே
      தேன்மழை சொரிந்ததென்னச்
செங்கண்மாலின்னமுஞ் செவிவேண்ட நான்முகத்
      தேவுமென் செவிபுதைப்பக்
கங்கையணிவார் செவிகள் பத்துக்குமேதேவ‌
      கானவொலி கானவொலியாய்க்
கைக்கவாரணமுகத் தரசுதழைசெவிமதங்
      கரைபுரண்டோட வெங்கட்

பொங்கராவின்கண பணாடவிக்கட்செவி
      புதைப்பவிமை யோருமகிழப்
போராடவருநிருதர் செவியெலாஞ்செவிடிடப்
      புருகூத னஞ்சலிக்கச்
சங்கரிதிருச்செவிக் கமுதமெனவொலிதரச்
      சப்பாணி கொட்டியருளே
தங்கமலைநிகரான துங்கமலையாதிப‌தி
      சப்பாணி கொட்டியருளே.         (10)

சப்பாணிப்பருவமுற்றும்.
--------------------------

5. முத்தப்பருவம்.

மந்தரஞ்சுழலாது வாசுகியுடம்பெலா
      மற்றுந் தழும்புறாது
வானவர்கள்கரதலங் குருதிசேராதவுணர்
      வன்கையுஞ் சேப்புறாது
சுந்தரமிகுந்திடு முகுந்தனரவிந்தநிகர்
      துணைவிழி பிதுங்கிடாது
சொரிதரளமெறிதிரை சுருட்டுபாற்கடலகடு
      சுற்றுங் கலங்கிடாது

கந்தரத்தினிலெங்கள் கண்ணுதலையின்னமுங்
      காலவிஷமே தொடாது
கையொன்றிலேயொன்று வளைதொட்டவர்க்குவளை
      கையிரண்டுந் தொடாது
செந்துவர்க்கனிவாயி னமுதம்பெருக்குநின்
      றிருவாயின் முத்தமருளே
செங்கண்மான்மருகனே குன்றைவாழ்முருகனே
      திருவாயின் முத்தமருளே.         (1)

சரணமெனவந்தவர்க் காதாரமானவிரு
      சரணமுங் கூப்பிவேழச்
சருமமுமுடுத்திடுவெம் புலியதளுடுத்திமுன்
      றானையு மொடுக்கிநாகா
பரணமுந்தாழா தெடுத்துச்சுருட்டியிரு
      பங்கயக்கைகள்கட்டிப்
பரிவர்த்தனைக்கால மாமென்னமான்மழுப்
      பக்கத்தி லங்கமூன்றாங்

கிரணவெண்பிறையுங்கடுக்கையுமுழங்குபா
      கீரதியும்வீழ்வதென்னக்
கிளர்தலைகுனிந்தைந்துவாயும்புதைத்தமா
      கேசன்றிருச்செவிக்குட்
டிரணமெனவமுதெழும் ப்ரணவத்தினுரைசொன்ன
      திருவாயின் முத்தமருளே
செங்கண்மான்மருகனே குன்றைவாழ்முருகனே
      திருவாயின் முத்தமருளே.         (2)

விண்டலத்துயர்விந்த கிரிதனையடக்கியகை
      விரலெலாந் தரையில்வைத்து
மேதினிவணங்கவே பொதியமாமலைதனின்
      மிதித்தகால் விரலையூன்றி
மண்டலம்புனையாடை *யென்னவளைகடனு*ண்ட
      மணிவாயுமௌனமாக்
மறையவர்களுயிர்கொண்ட வாதாவியுயிருண்ட
      வயிறெலாம்புழுதிதோயக்

குண்டலங்கீழ்விழச் செவிதாழவிருகரங்
      கூப்பித்தரம்புரட்டிக்
குவ‌டனையவிருபுயமு மார்புமலர்விழியுமே
      குவலயத் தூடழுந்தத்
தெண்டனிடுகுறுமுனிக் குபதேசமதுசொன்ன‌
      திருவாயின்முத்தமருளே
செங்கண்மான்மருகனே குன்றைவாழ்முருகனே
      திருவாயின்முத்தமருளே.         (3)

வானுண்டுகடலுண்டு திடருண்டுகரியுண்டு
      மலையுண்டு திசையுண்டுமா
மண்டலமுமண்டபயகி ரண்டநவகண்டமும்
      வாளரவுமுண்டுமற்றுந்
தானுண்ட‌டங்காத கள்ளப்பசிக்கிபந்
      தன்பசிக்கிட்டசோளந்
தானென்னமானென்ன மீனென்னமலர்விழித்
      தையலிதழுண்ணவேண்டிக்

கானுண்டுமலையுண்டு மலையுண்டுமரிதென்று
      கருதாதுகாமவலையிற்
கட்டுண்டுகிழவுருக் கொண்டுவயிறெக்கிமுன்
      காட்டியவ் வள்ளியிட்ட‌
தேனுண்டதினைமாவை யுண்டுதேக்கிட்டநின்
      றிருவாயின் முத்தமருளே
செங்கண்மான்மருகனே குன்றைவாழ்முருகனே
      திருவாயின்முத்தமருளே.         (4)

மன்னுதன்புனன்மூழ்க வருவோர்கடீங்கெலா
      மாருதத்தூதர்விட்டே
வழிப்பறிபறித்துத் தரங்கக்கரங்களான்
      மங்கலமெடுத்தெறிந்து
சந்நிதானத்தில்வரு வோர்ஜன்மநோய்க்கெலாந்
      தண்டுளிமருந்தளித்துச்
சாலோகமுந்தந்து சாமீபமுந்தந்து
      *தண்டி*புனல்படிந்தபேர்க்குப்

பன்னிருகரங்களும் பன்னிருபுயங்களும்
      பன்னிருமலர்க்கண்களும்
பன்னிருவர்போன்மகர குண்டல மிலங்குகுழை
      பனிரண்டுமூவிரண்டு
சென்னியுந்தரு சரவணப்பொய்கையாதிபா
      திருவாயின்முத்தமருளே
செங்கண்மான்மருகனே குன்றைவாழ்முருகனே
      திருவாயின்முத்தமருளே.         (5)

அவ்வென்றுபடருங் கதிர்க்கற்றைதோயவிண்
      ணார்ந்துசூற்கொண்ட*தொண்மூ
வளித்தவெண்முத்துந் துளித்திவலைவேண்டியங்
      காந்தநத்தீன்றமுத்துந்
தெவ்வென்றுசிங்கத் திளங்கன்றெழும்பிச்
      சினத்துத்தகர்த்தொடித்த‌
சிந்துரக்கோட்டிற் றெறித்தவெண்முத்தமுஞ்
      செங்கரும்பீன்றமுத்துஞ்

சவ்வென்றுதுளையுண்டு விலையுண்டுகடையுண்டு
      தட்டுண்டுதிரியுமல்லால்
தண்டுளிபெருக்குநின் மழலைவாய்முத்தெனத்
      தருமின்பமருளவருமோ
செவ்வென்றுமதுரித்து நறுமணம்பூரித்த‌
      திருவாயின்முத்தமருளே
செங்கண்மான்மருகனே குன்றைவாழ்முருகனே
      திருவாயின்முத்தமருளே.         (6)

முளைத்துக்கிளைத்திலைகள் பச்சப்பசேரென்று
      மூதண்டமுகடுமுட்ட‌
மூவுலகளக்கவரு நெடியமாலெனவளரு
      மூங்கிற்குழாத்தினின்பம்
விளைத்துப்பிறந்தவெண் முத்தமுஞ்சரசமும்
      விரும்பிலோர்வெடிவுமாற‌
வேரிப்பசும்பொற் செழுங்கமலநெட்டிதழ்
      விரிந்தவெண்முத்துமேங்கிக்

களைத்துத்திகைப்பநேர்ந் தஞ்செய்தொளி கான்றிடுங்
      கையேறவகடுகிழியக்
கடன்முகட்டினிலெழுந் துலகமொருமூன்றினுங்
      கதிர்வீசுநன்முத்தமுங்
துளைத்துவிலைகட்டமிளிர் கட்டாணிமுத்தமே
      சுடர்வாயின்முத்தமருளே
சோதிமலைநிகரான தோகைமலையதிபா
      சுடர்வாயின்முத்தமருளே         (7)

வேறு.
அருகிருக்கும்பரிநடத்தும்
      அரசன்முத்தந்தருகவே
அரைவடகிண் கிணியொலிக்கும்
      அழகன்முத்தந்தருகவே
ஒருகிரிக்கங்கயில்விடுக்கும்
      உசிதன்முத்தந்தருகவே
உபயபத்மந்தருமெனக்கும்
      ஒருவன்முத்தந்தருகவே

தருகடப்பந்தொடைதரிக்குஞ்
      சரசன்முத்தந்தருகவே
தமிழுமைக்குஞ் சரநதிக்குந்
      தனையன்முத்தந்தருகவே
குருகிரிக்குங்குறமயிற்குங்
      குரிசின்முத்தந்தருகவே
குறைவறக்குன்றையிலிருக்குங்
      குமரன்முத்தந்தருகவே.         (8)

வேறு.
தாயென்றெடுத்துத் தடம்புயஞ்சேர்க்கவொரு
      தவமதனைவன்னியுடைய
சன்னிதானஞ்செய்து வேள்வியாகுதியவன்
      றன்பேரிலேகவர்ந்து
போயொன்றுமிருமென்று முனிவரிருமூவரும்
      புணருமடவாரையகலப்
பொற்கடிகளிருமூவ ரெமதுவடிவாயன்பு
      பூண்டனம்வன்னியதனால்

ஆயென்றுயாமுன்னை நம்பிவந்தோமென்ன
      வபயங்கொடுத்துவானில்
ஆகண்டலன்மகிழ வறுமீனெனப்பதித்
      தவர்முலைப்பாலுண்டு
சேயென்றுமணிமார்பில் விளையாடுமொருபிள்ளை
      திருவாயின் முத்தமருளே
செங்கண்மான்மருகனே குன்றைவாழ்முருகனே
      திருவாயின் முத்தமருளே.         (9)

வேறு.
சுடர்முகக்குஞ்சரமுகத்தான்
      றுணைவன்முத்தந்தருகவே
சுரர்பதிக்கன்றரசளிக்குஞ்
      சுகுணன்முத்தந்தருகவே.
வடதருக்கொம்புறையரிக்கும்
      மருகன்முத்தந்தருகவே
வடகிரிக்குன்றினிலிருக்கும்
      மதலைமுத்தந்தருகவே

கடலடக்குங்கெடிசெலுத்துங்
      கடகன்முத்தந்தருகவே
கரதலக்கங்கணமொலிக்குங்
      கடகன்முத்தந்தருகவே
கொடியிரிக்குங் குறமயிற்குங்
      குரிசின்முத்தந்தருகவே
குறைவறக்குன்றையிலிருக்குங்
      குமரன்முத்தந்தருகவே.         (10)

முத்தப்பருவம் முற்றிற்று.
-----------

6. வருகைப்பருவம்.

ஞாலம்படியும்விரற்காழி
      நல்கவருகமதகயம்போல்
நடந்துவருக‌வொருமாற்றம்
      நவிலவருகவிளங்குதண்டைக்
காலன்வருகவெனதிருகண்
      களிக்கவருகவிழிக்குமலர்க்
கண்ணேவருகமணியரைஞாண்
      கட்டவருகவுமையவடன்

பாலன்வருகநடந்தநடை
      பார்க்கவருகநுதற்றிலதம்
பதிக்கவருகமழலைமொழி
      பகரவருகவெவர்க்குமனு
கூலன்வருகதேனாற்றுக்
      குரிசில்வருகவருகவே
குன்றாக்குடியில் வீற்றிருக்குங்
      குமராவருகவருகவே.         (1)

தேனேவருகவமரர்தொழுந்
      தேவேவருக முத்துவடஞ்
சேர்க்கவருக விழிகளின்மை
      திருத்தவருக வரிக்குமரு
மானேவருக‌மயிலேறும்
      வள்ளல்வருகவள்ளிமண‌
வாளன்வருக வானவர்கோன்
      மருகன்வருக நடந்தோடித்

தானேவருக வேலெறிந்த‌
      சமர்த்தன்வருககடாநடத்துஞ்
சதுரன்வருகவசுரர்பகை
      தாண்டவருக சிகண்டிமலைக்
கோனேவருக தேனாற்றுக்
      குரிசில்வருகவருகவே
குன்றாக்குடியில் வீற்றிருக்குங்
      குமராவருகவருகவே.         (2)

பூவேவருகபூவினறைப்
      பொலிவேவருகப்பொலிந்தமலர்ப்
புயவேள்வருக புயலொதுங்கும்
      பொழிலேவருக பொழிலினிளங்
காவேவருக காவினறுங்
      கனியேவருக கனிந்தரசக்
கரும்பேவருக கரும்புருவக்
      கண்ணேவருக கண்ணனுக்குந்

தேவேவருகத் தேவர்சிறை
      தீர்த்தோன்வருக தீர்த்துகந்த
செவ்வெள்வருக செவ்விதழ்சேர்
      சேயேவருக சிகண்டிமலைக்
கோவேவருக தேனாற்றுக்
      குரிசில்வருக வருகவே
குன்றாக்குடியில் வீற்றிருக்குங்
      குமராவருக வருகவே.         (3)

மாமனுதவு மொருமயிலை
      மணஞ்சேர் மாலையிடவருக‌
வானோர்சிறையின் மயங்காமன்
      மதவாரணத்தைப் போல்வருக‌
காமாநலஞ்சே ரிபமடந்தை
      கரபங்கயத்தைத் தொடவருக‌
கவிக்கேயிரங்கி நற்கீரர்
      கடியசிறையை விடவருக‌

நாமான்கொழுந னறியாத‌
      நல‌ஞ்சேர்பொருளைத் தரவருக‌
நாட்டுக்குயர்ந்த வளர்நேம‌
      நாடன்வருக சிகண்டிமலைக்
கோமான்வருக தேனாற்றுக்
      குரிசில்வருக வருகவே
குன்றாக்குடியில் வீற்றிருக்குங்
      குமராவருக வருகவே.         (4)

வண்டல்படியுஞ் சுரநதிதன்
      மதலைவருக மதம்பெருக்கு
மதவாரணத்தி னிளவலென‌
      வாய்த்தமயிற் சேவகன்வருக‌
அண்டர்பணிக்குக் குடமுயர்த்த‌
      வதுலன்வருக வெனையாளும்
ஐயன்வருக மெய்யிலகும்
      அண்ணல்வருக விண்ணுயர்கோ

தண்டன்வருககடப்பமலர்த்
      தாமன்வருக வறுகோணச்
சக்ரன்வருக வாறெழுத்துத்
      தலைவன்வருகசிகண்டிமலைக்
கொண்டல்வருகதேனாற்றுக்
      குரிசில்வருக வருகவே
குன்றாக்குடியில் வீற்றிருக்குங்
      குமராவருக வருகவே.         (5)

வேறு.

மேனான்வரும்பகைக் காற்றாதநெஞ்சமொடு
      மிக்க‌கவு சிகனும்வெருள‌
விரிமலர்க்கோகநகமேவுநான்முகன்மகன்
      விரும்பியே யருள்செய்குவான்
கூனாரிளம்பிறை யெயிற்றரக்கனையாவி
      கொல்லவர வடுபழிக்குக்
குருகுலத்தவர்சரிதை குறுமுனிமகிழ்ந்துடன்
      கூறிடக் கோபமுனிவன்

வானாடுமகிழவே நிருதமாரணவேள்வி
      மற்றும் மியற்றவங்கோர்
மறைமுனிதவிர்த்துவளர் கவுசிகன்மேல்விடவ‌
      மறையவன் சரணமெனவே
தேனானமதுரமொழிசொல்லியஞ்சேலென்ற‌
      தேவநாயகன் வருகவே
திமிரதினகரன்வருக வமரர்தளபதிவருக
      குமரகுருபரன் வருகவே.         (6)

நிருதரிரிதரவருகவமரர்சிறைவிடவருக
      நிமலன்மன மகிழவருக
நிகிலமறைதொழவருக மறையவன்வெநிடவருக
      நினதுநடை பயிலவருக
வொருவன்முதுகினில்வருக வரிசைமயின்மிசைவருக
      வுமையவடன் மதலைவருக
வுலகமகிழ்தரவருக வரதன்மருமகன்வருக
      வுபநிடத முதல்வன்வருக

விருவிழிமையிடவருக வரிவளைகடொடவருக
      வினியமொழி பகரவருக
விலகுமறுமுகன்வருக நுதல்வெயர்வுதரவருக
      விபவதநனிள வல்வருக
குருகிரியிலரசுபுரி மதுநதிமனவன்வருக
      குலதிலக முருகன்வருக
குடகர்கருநடர்பரவு விகடமயின்மலைமருவு
      குமரகுரு பரவருகவே         (7)

அண்டர்மனைவியரணியு மங்கிலியம்வளரவளர்
      ஐந்துமுகன் மதலைவருக
வன்றசுரர்பொருமணியி லிந்திரனுமபயமென
      வஞ்சலெனு முருகன்வருக
மண்டலமுனெழுகடலு நின்றவடவரையுமொலி
      மண்டுமயின் முதல்வன்வருக‌
மங்கையர்கடொழுமமர முஞ்சரிமினிடுகளப‌
      மஞ்சரிகொள் கணவன்வருக‌

தண்டமிழினிசைபழகு சங்கமதிலொருவனிசை
      தந்ததமிழ் புனையவருக‌
சந்தமிகுமருணகிரி செந்தமிழினுடனிலகு
      தங்க‌வட மணியவருக‌
கொண்டல்படிதருநெடிய தென்றலொடுபொழிலிலகு
      குன்றைநக ரபதிபன்வருக‌
குடகர்கருநடர்பரவு விகடமயின்மலைமருவு
குமரகுருபரன் வருகவே.         (8)

தஞ்சமெனமருவுகுற வஞ்சியினைமுலைமுனைக‌
      டங்குபுயமுருகன்வருக‌
தண்டையுடனொலிகுமுறு
      கிண்கிணியுமொளிபெருகு
வஞ்சமிடுமசுரர்படை நெஞ்சுபறையறையவடு
      வன்கையயிலெறியவருக‌
மங்கையர்கண்மயறணிய நின்றவர்கண்மிடித‌ணிய‌
      வந்து க்ருபைசொரியவருக‌

விஞ்சையர்கள்புடைபெருகு துங்கமலைதனிலுலவு
      வெங்களபமதலைவருக‌
விம்பவிதழ‌ழகுசொரி கின்றதுளிபெருகிநிறை
      மிஞ்சுநதிபெருகவருக‌
கொஞ்சுகிளியிடுபழகு தண்டலைகள்புடைபெருகு
      குன்றைநகரபதிபன்வருக‌
குடகர்கருநடர்பரவு விகடமயின்மலைமருவு
      குமரகுருபரன் வருகவே.         (9)

திங்கண்முடிமருவுகிர வுஞ்சகிரிதகரவொரு
      செங்கையயிலெறியவருகத்
திரைகடலுமரவணையி லரியுமனமறுகியலை
      சிதறவயிலெறியவருக‌
வெங்கணிசிசரர்குருதி கங்கமொடுநரிபருக‌
      விந்தையயிலெறியவருக‌
விகடமிடுமலகையுட லகடுகிழிபடவொருவன்
      வினவுமயிலெறியவருக‌

துங்கமலைபணிப‌வர்க டங்கள்வினைதணியவொரு
      சொந்தவயிலெறியவருக‌
சுரர்பணியுமரியையமர் பொருதுமனன்மடியவிசை
      தொடருமயிலெறியவருக‌
கொங்குபயில்நறுமலர்க டென்றலுடனசையவரு
      குன்றைநகரபதிபன்வருக‌
குடகர்கருநடர்பரவு விகடமயின்மலைமருவு
      குமரகுருபரன் வருகவே.         (10)

வருகைப்பருவம் முற்றும்.
----------

7. அம்புலிப்பருவம்.

வேறு.

எண்டிசைவிளங்கவே யத்திரிலோசனமீது
      லெழுதலான்முழுதுமலைவா
யிருந்துற்பவித்தலாற் புகர்முகத்தழைசெவி
      யிபத்துடன்றோன்றிவரலான்
மண்டலந்தனிலெவரும் வந்துதொழுமகிமையால்
      வளருமறுமுகமுள்ளதால்
வானவர்க்கமுதங் கொடுக்குந்திறத்தினான்
      மருவுகுவலயமகிழ்தலால்

ஒண்டிறற்கார்த்திகைப் பெண்கண்மனமகிழவே
      யுவகை தரலாலவனிமே
லொய்யாரவல்லித னிடத்தின்புசெய்தலா
      லொளியினாலிரவொழிதலால்
அண்டர்நாயகனுடன் சரிசொல்லலாமுனையு
      மம்புலீயாடவாவே
அகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனோ
      டம்புலீயாடவாவே.         (1)

பமரமிடுகடலகடு மறுகக்கலக்கும்
      பணைப்பொற்றிருக்கரத்தாற்
பாரகிரியுங்கண்ட போதுடலமுருகிப்
      பயப்படச்செய்யும்வடிவால்
சமரமிடுசிங்கமுங் கீழ்ப்படக்கடகந்
      தரிக்குந்திருச்சிறப்பால்
சக்கரவாளக்கிரியும் வடவரையுமொருகணந்
      தனிலேவலஞ்செய்கையால்
நமரனுடனுமையவளு மிதயமகிழ்தருசிரோ
      ரத்னமெனவேவருதலால்
நாடொருங்கலையா னிரம்பலால்வாரமெந்
      நாளுமகலாதவெழிலா
லமரர்நாயகனுடன் சரிசொல்லலாமுனையு
      மம்புலீயாடவாவே
அகண்டவடிவாகிய சகிண்டிமலையாதிபனொ
      டம்புலீயாடவாவே.         (2)

ஒகையாலிருசிறை யடித்துநெட்டுடலமங்
      குதறியே பதறிவானாட்
டும்பருஞ்செவிடிடப் பகுவாய்திறந்துநெட்
      டொலிகொண்ட குக்குடப்பூந்
தோகையாடிடவுனது திருவீதிநீவந்து
      தோன்றுவெண் பாற்கடலுமே
சூழப்புலிங்கக் கடுங்கனற்பொறிசிந்து
      சுடர்வேலு மிழ்ந்ததெண்ணீ

ரீகையாலுயர்குன் றெடுத்தருள்பரஞ்சுட
      ரிளஞ்சடை யிவன்கரத்தா
விழுக்கவித்துருமத் திளங்கொடியிதாமென்ன
      விலகுமொரு வாகுபுரிவா
யாகையாலிவனன்பு வேண்டிமுத்தையனுட
      னப்புலீ யாடவாவே
அகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொ
      டம்புலீ யாடவாவே.         (3)

கனககிரிரசிதகிரி நிகரானவுதயகிரி
      கடினகிரி திரணகிரியாம்
கபடகிரியாகிய க்ரவுஞ்சகிரிநிர்த்தூளி
      கண்டதே சாட்சியன்றோ
தனகனகவஸ்துவா தனபூஷணப்ரபல
      சௌபாக்கியமே நிறைந்து
தருசுதாமண்டலமும் விண்டலவிமானமுந்
      தண்டாதுயர்ந்து பாரிற்

பனகனுடனெளியமயி லெனவடிவுபெறுசூர
      பத்மனுள மகிழவந்த
பாரமாமேருவெனும் வீரமாகேந்த்ரபுரி
      பட்டபா டறியாத்தோ
அனவரதமிவனுறவு வேண்டிமுத்தையினுட
      னம்புலீ யாடவாவே
அகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொ
      டம்புலீ யாடவாவே.         (4)

பாதலாலயனான அசுரேந்த்ரன்மகளுதவு
      பாலகன் சாளரத்திற்
பதித்துக்கதிக்கின்ற கண்ணாடியெனவைத்த
      பாரவன் சிறைவிடுத்தான்
ஈதலான்மூவொன்ப தானமனைவியரிலோ
      ரேந்திழை வனம்புகுதவே
இதயங்கலங்குநின் சஞ்சலந்தீரவே
      யிருமூன்று மனைவிதந்தான்

காதலால்வளர்சிகா மணியென்றுவைத்துனைக்
      கதிரோளியி னான்மழுங்கிக்
கலைகண்டகலைதன்னை நிலைகண்டகலையெனக்
      கருணகடாட்சம் வைத்தான்
ஆதலாலிவனுறவு வேண்டிமுத்தையனுட
      னம்புலீ யாடவாவே
அகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொ
      டம்புலீ யாடவாவே.         (5)

தொல்லைப்பெருங்கிரிகள் சுற்றியலையாமலே
      துருவபத மும்மளிப்பான்
சுந்தரமிகுந்தவுட லந்தினிலிருந்திருள்
      சுரந்தமறுவுந் தொடைப்பான்
செல்லைப்புகழ்ந்திடு சிகண்டிக்குநின்பகைச்
      செம்பாம்பு பழிகொடுப்பான்
தினமுமுனதுடலருந் தாதுதேவர்க்குநகை
      செய்துகிள்ளாக்கையருள்வான்

எல்லைப்பொரும்படிக் குனதுகிரணங்களுக்
      கினிதான சுடரளிப்பான்
இருபட்சமும்வளரு மொருபட்சமேபோல
      இன்பமொடு பட்சம்வைப்பான்
அல்லைப்பொருங்குழலி வல்லிக்குவாய்த்தவனொ
      டம்புலீயாடவாவே
அகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொ
      டம்புலீ யாடவாவே.         (6)

கஞ்சமலாராகுமுன் னெஞ்சம்பகீரெனக்
      கதிர்வேன் முனைக்களிப்பான்
கடியசேவற்கொடிக் குன்னைநவநீதவெண்
      கவளமெனவே கொடுப்பான்
கொஞ்சுமயிலுக்குனது நெஞ்சம்பிளந்துயிர்
      குடிக்கக் கொடுப்பனதனாற்
கோரநவவீரர்க்கு வீரவெண்டயமெனக்
      குரைகழற் றாளிலணிவான்

வஞ்சியர்களபரஞ்சி மலையில்வளர்குறவஞ்சி
      மணவாளன் வரவழைத்தால்
வந்துவிளையாடாமல் வாராதிருந்தவுன்
      மதியென்னமதிமதியமே
அஞ்சலெனபயங் கொடுக்குமென்னையனுடன்
      அம்புலீயாடவாவே
அகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொ
      டம்புலீ யாடவாவே.         (7)

கையின்வடிவேலுக்கு னுடலத்தையேவெள்ளி
      கட்டவே தகடடிப்பான்
காதிற்குமுருகுமுத் தாமென்றுசேவலிற்
      கட்டிவிளை யாடவருவான்
பையவேமயிலுக்கு மூக்குத்திமுத்தென்று
      பார்த்துனுடலந் துளைப்பான்
பாரவெங்கோட்டுக் கிடாய்க்குச்சிலம்பென்று
      பாதத்திலே யணிகுவான்

மையலுடன்வருதெய்வ யானைக்குமாலையிடு
      மணவாளன் வரவழைத்தால்
வாராதிருப்பதும் ஆச்சரியமேயுனது
      மதிமோச மதமல்லவோ
ஐயமில்லாமலென் னையனுடனேதினமு
      மம்புலீ யாடவாவே
அகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொ
      டம்புலீ யாடவாவே.         (8)

நிச்சயமதாகவே மித்திரன்மறைந்திட
      நிலாக்களை விளங்கவந்தும்
நிரோகணிப்பெண்ணினாற் சயரோகமுங்கொண்டு
      நிசரோகி யாயிருந்தும்
இச்சையொடுபிறர்மனை நயந்துகுடிலத்தோரு
      மெந்நாளுமே வளர்ந்தும்
இதயபரிசுத்தமில் லாமலந்தக்கரண
      மென்றுங் களங்கமுற்றுஞ்

செச்சைபுயத்திளவல் விளையாடவாவென்று
      திருவுளமுனக் களித்தால்
சென்றாடுதீர்த்தமது வந்தாடினோமென்று
      சென்னிகுவி யாததென்னோ
அச்சப்படாமலென தையனுடனேதினமும்
      அம்புலீ யாடவாவே
அகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொ
      டம்புலீ யாடவாவே.         (9)

துங்கமலைமீதினி லிலங்குபொற்கோட்டினிடை
      தோற்றலா மமுதூற்றலாந்
துய்யபாற்கடலென்ன வளர்சரவணப்பொய்கை
      சூழவே விளையாடலாம்
பங்கமில்லாததே னாற்றினிருகரையெலாம்
      பழகிய நிலாவீசலாம்
பாண்டிநன்னாடுபுகழ் நேமநாட்டவரெலாம்
      பார்க்கவே தீர்க்கமுறலாம்

சங்கமெங்குங்குலவு குன்றாக்குடிக்குள்வளர்
      சாளரத்தினி னுழையலாம்
சண்முகக்கடவுளுடன் விளையாடலாநித்திய
      சாம்ப்ராச்சிய முடன்வாழலாம்
அங்கசன்மனமகிழ மேல்வட்டமாகிவளர்
      அம்புலீ யாடவாவே
அகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொ
      டம்புலீ யாடவாவே.         (10)

அம்புலிப்பருவம் முற்றும்.
-----------------

8. சிற்றிற் பருவம்.


வேறு.

கடவாரணமா முகத்தவுணன்
      கடும்போர்துளைத்துப் பொருதிரண
களத்திற்புகுந்து மருப்பிவரக்
      கதிக்குந்தரளம் பிரித்தெடுத்து
மடவார்கூடி மனைவகுத்து
      மலையவரைச்சந் தனக்குறடு
வாய்த்தபனிநீர் வார்த்தரைத்து
      வழித்துநிறைசந் தனக்குழம்பிற்

படவாளரவின் முடிதாங்கும்
      படிமேல்விளங்க நிலம்பூசி
பதுமத்தரசி யெனுமாதர்
      பரிவாய்க்கூடி விளையாடுந்
திடவாரணத்தி னுடன்பிறந்த
      தேவேசிற்றிற் சிதையேலே
கிகண்டிமலைமேல் வீற்றிருக்குஞ்
      செல்வாசிற்றிற் சிதையேலா.         (1)

தாங்கிம்புவிக்கோ ராடையெனத்
      தவமாமுனிக்கு முணவாகத்
தயங்கும்பாரா வாரமுன்னாட்
      டானேசுவற வேலெறிந்து
நீங்கும்புனலாற் குடவளைக
      ணிலமேலொதுங்க மரகதத்தால்
நிரைத்தவடுப்பின் மிசையேற்றி
      நினதுநதித்தே னுலைவார்த்து

வாங்கும்வயிரப் பொடியதனை
      மறுப்பார்த்தெடுத்துக் களைந்தரிசி
வாகாப்புகட்டி நின்னாட்டு
      மடவார்கூடி விளையாடுந்
தேங்கும்புகழ்சேர் குன்றைநகர்த்
      தேவேசிற்றிற் சிதையேலே
சிகண்டிமலைமேல் வீற்றிருக்குங்
      செல்வாசிற்றிற் சிதையேலே.         (2)

கதறுமவுண ரிரிந்தோடக்
      கலங்குமாயா புரியழித்த‌
காலத்தவர்மா ளிகைப்பவளக்
      காலேயவர்க்குத் தனமாகப்
பதறுமசுர மடமாதர்
      பரிக்குந்திருமங் கலப்பூணிற்
பதிக்குநடுநா யகமணியாம்
      பகர்மாணிக்க மிருட்பிழம்பை

உதறும்படிக்குக் ககனமணி
      யொளிசேர்தூண்டா விளக்கெனவே
யுயிரோவியம்போன் மடமாதர்
      உனையேயடுத்து விளையாடும்
சிதறுந்தரங்கத் தேனாற்றுத்
      தேவேசிற்றித் சிதையேலே
சிகண்டிமலைமேல் வீற்றிருக்குஞ்
      செல்வாசிற்றிற் சிதையேலே.         (3)

(4)
கூட்டுந்தரங்க மிரங்குதெண்ணீர்க்
      குளிர்தேனாற்றி னீராடிக்
கூந்தல்விடுத்துத் திலதமிட்டுக்
      குவளைவிழிக்கஞ் சனமெழுதிப்
பூட்டுமணிகள் பலவணிந்து
      பூம்பட்டாடை விரித்துடுத்துப்
புகலுங்களபங் கமகமெனப்
      பூசித்தரள வடம்பூண்டு

சூட்டுமலர்மாலிகை தரித்துத்
      துலங்குங்கழங்கம் மனையெறிந்து
சுரும்பாரரும்பு கறிதிருத்திச்
      சுடுசோறாக்கி விளையாடுந்
தீட்டுந்திலத நுதற்குமரா
      சிறியோர்சிற்றிற் சிதையேலே
சிகண்டிமலைமேல் வீற்றிருக்குஞ்
      செல்வாசிற்றிற் சிதையேலே.         (4)

வருமோகார கிரிசூழ
      வலமாய்நடந்து பூங்காலின்
மலர்பூப்பறித்து மலையேறி
      வனசமலர்த்தாண் மிசைசொரிந்தங்
குருமேறெனவே யெதிர்த்தடரு
      மொருவேல்பாடி மயில்பாடி
யுபயமடமா னடிகடொழு
      துனதாறெழுத்துங் கருத்தில்வைத்துத்

தருமேனியில்வெண் ணீறணிந்துன்
      ற‌னையேதுதித்துச் சிறுசோறுன்
றனக்கேபடைத்துத் தனித்தனியுன்
      றாளேவணங்கி விளையாடுந்
திருமேனியிலும் புழுதிபடச்
      சிறியோர்சிற்றிற்சிதையேலே
சிகண்டிமலைமேல் வீற்றிருக்குஞ்
      செல்வாசிற்றிற் சிதையேலே.         (5)

வானத்தவுண ரெதிர்த்தடர‌
      வரும்பாளையமோ மலர்த்தாளில்
வணங்காநிருதர் படைவீடோ
      மாயாபுரிக் கொத்தளமீதோ
கானக்குறவர் பசுங்குடிலோ
      களிக்குங்குறத்தித் தினைப்புனத்தைக்
காக்கும்வேலித் திறமீதோ
      கதிக்குங்க்ரவுஞ்ச கிரிதானோ

ஞானத்தவர்க டமைமயக்கி
      நாளும்பிறப்புக் கிடமாக்கி
நலியும்வலிய வினைப்பயனோ
      நளினமலர்த்தா ளாலழிக்க‌
ஆனைக்கொருகே சரியான‌
      அரசேசிற்றி லழியேலே
அகிலம்பரவுந் துங்கமலைக்
      கரசேசிற்றி லழியேலே.         (6)

நிலஞ்சேர்மாட்டுக் குளப்படியி
      னீர்போலிறைத்து விளையாடு
நீலக்கடலின் புனலிதுவோ
      நினதுமலர்த்தாள் வணங்காத‌
குலஞ்சேர்வீர மாகேந்த்ரக்
      கொடியநகரோ சிங்கமுகன்
கொலுவீற்றிருக்கு மண்டபத்தின்
      கொடுங்கையிலங்கு மணிமுகப்போ

பொலஞ்சேர்கிரியும் இமையவெற்பும்
      பொருந்தும்படிக்குக் கழங்கெனவே
பூட்டித்தெறிக்கும் மலையிதுவோ
      புகலும்பதத்தா னீயழிக்க‌
அலஞ்சேர்கரத்தான் மருகனெனு
      ம‌ரசேசிற்றி லழியேலே
யகிலம்பரவுந் துங்கமலைக்
      கரசேசிற்றி லழியேலே.         (7)

தரிக்குமமரர் சிறையிருக்குஞ்
      சாலையிதுவோ நற்கிரன்
தமிழுக்கிரங்கிச் சிறைவிடுத்த‌
      தலமாமலகைக் குகையிதுவோ
விரிக்குமிலங்கா புரிக்கோட்டை
      மேலைவாயிற் படியிதுவோ
வேலைக்கொரு வேலியுமாக‌
      விளங்குமெழுதீ வோவருண‌

கிரிக்குமனச்சஞ் சலந்தீர்த்துன்
      கிருபையளிக்கு முன்னாளிற்
கிளைக்கும்வினையோ வனசமெனக்
      கிளரும்பதத்தா னீயழிக்க‌
அரிக்குமருமை மருகனெனு
      ம‌ரசேசிற்றி லழியேலே
அகிலம்பரவுந் துங்கமலைக்
      கரசேசிற்றி லழியேலே.         (8)

சரணமெனவே வந்தடைந்த‌
      தவஞ்சேர்முனியாங் கவுசிகன்மேற்
றானேநடத்து முனிவேள்வித்
      தலமோசமணர் குடியிருப்போ
வரணமெனவே யவர்விடுத்த‌
      வனலோமதுரைக் கரசன்மிசை
யங்கந்துளைக்குஞ் கொடுஞ்சுரமோ
      வாற்றோடேறி வரும்புனலோ

மரணமடையு மருமறையோன்
      மங்கையுயிரைக் கவர்ந்தெடுத்த‌
மறலியுலகோ வனசமெனு
      மலர்த்தாள் சிவக்கநீயழிக்கத்
திரணமெனவே மதித்தருள்செய்
      தேவேசிற்றிற் சிதையேலே         (9)
சிகண்டிமலைமேல் வீற்றிருக்குஞ்
      செல்வாசிற்றிற் சிதையேலே.

மோக்கக்குழையு மனிச்சமலர்
      முனிவர்மனத்தி லுறநினைத்து
முயங்கக்குழையு முனதுபத‌
      முளரிக்கிணையென் பாரறியார்
தாக்கச்சிவக்கு *மலர்ப்பத*
      *றினித்தூள்பொதியுமணியழுத்துந்
தமியேன்மனது சஞ்சலிக்குஞ்
      சகிக்கவறியே மெமைநாளுங்

காக்கவுனக்கே பாரமலாற்
      கதிவேறுண்டோ காப்பவனே
காவலழித்தாற் கணக்கேதுன்
      கருணையிலங்கக் காலமன்றோ
வாக்கம்பெருகுங் குன்றைநகர்க்
      க‌ரசேசிற்றி லழியேலே
ய‌கிலம்பரவுந் துங்கமலைக்
      கரசேசிற்றி லழியேலே.         (10)

சிற்றிற்பருவம் முற்றிற்று.
_______________________

9. சிறுபறைப்பருவம்.

வேறு.

அந்தமுறுகற்பகாலத்திலுருமேறென்ன
      வமரர் துந்துமிமுழங்க
அஷ்டாதசத்தொனியு மெட்டானதிசைமுட்ட
      வழகு பல்லியமுழங்க
மந்தரஞ்சுழலுநாண் மறிகடன்முழக்கென்ன
      வானவர்க ளொலிமுழங்க
மைக்கொண்டலொலியென்ன விமையோர்கள்சிறுநாணின்,
      வலியவொலி மிகமுழங்கச்

சந்ததமும்வெந்நிடா வீராதிவீரர்குறி
      சங்கநாதமு முழங்கச்
சங்கிராமநாளிட்ட வேதனொடுமுனிவோர்கள்
      சதுர்வேத வொலிமுழங்கச்
செந்திருவிளங்குமணி ரதமேறுசிங்கமே
      சிறுபறை முழக்கியருளே
தேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்
      சிறுபறைமுழக்கியருளே.         (1)

நவகோடிவீரர்வரு மட்டகாசத்தினா
      னாற்றிசைகள் கெடிகலங்க
*தகசதுரங்கபத சதுரங்கவர்க்கத்தி
      னாற்கருங் கடல்கலங்கத்
தவகோடியால்வந்த செயகோடிசாயவே
      தாரகன் மனங்கலங்கச்
சாயாதபடையான மாயாபுரத்தவுணர்
      தம்மிலே கண்கலங்க

அவகோடிபெருமவுணர் புணர்கோடிமடவார்க
      ளரியகர்ப்பங் கலங்க
வருகோடிவருமசுர ருயிர்கோடியலறவே
      யந்தகன் றிசைகலங்க
சிவகோடியவதார வடிவாகவருமுருக
      சிறுபறை முழக்கியருளே
தேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்
      சிறுபறைமுழக்கியருளே.         (2)

எண்டிசைக்குஞ்சரம் பொருபோரடங்கவே
      யிபமுகன் போரடங்க
விமயாசலத்தில்வரு முனிவோர்தழைக்கவே
      யீதிபாதைக ளடங்க
வண்டிசையுநந்தா வனஞ்செய்தவும்பர்கோன்
      மணிவிரற் சேப்படங்க
வருபரங்குன்றின்முலை யிருபரங்குன்றான
      வள்ளிக்கு மாலடங்கத்

தண்டிசையுமொலிகண்டு செந்தூரினலைசிதறு
      தண்புனற் கடலடங்கத்
தானவர்கள்சூழச் சிறைக்கூடமுறுசயந்
      தன்மனப் பயமடங்கச்
செண்டிசைமணிவிரற் காந்தளங்கையினாற்
      சிறுபறை முழக்கியருளே
தேவர்குமானுதவு தேவிக்குநாயகன்
      சிறுபறை முழக்கியருளே.         (3)

***ழையவே தூதுசென்றிடுவீர
      வாகுநித மஞ்சலிக்க
மலங்காதெர்த்திடு மிலங்காபுரத்தசுரர்
      வாதாடி வாய்சலிக்க‌
நீநானெனச்சென்று பானுகோபனும்வ‌ந்து
      நில்லாது சஞ்சலிக்க‌
நின்றுமாழ்குறுமவுண
      ருயிர்கவரவிடுபடைக் *

கானாறுசூழ்வீர மாகேந்த்ரபுரமேவு
      கண்டகன் மனஞ்சலிக்க‌
கங்கமங்கங்குலவ வவர்மீதிலாடிய‌
      கவந்தங்கள் வாய்சலிக்கத்
தேனாறுபுடைபெரு*கு மாயூரகிரிமுருக‌
      சிறுபறை முழக்கியருளே
தேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்
      சிறுபறை முழக்கியருளே.         (4)

சகடமிடவருநிருத ருடல்கிழியவிளைகுருதி
      சளசளென மலைய‌ருவிபோற்
றரணிநதிபெருகியிரு கரைபுரளமதகளிறு
      தவழுமுடல் விடுபடகுபோல்
விகடுமிடுமவுணர்பணி பயிலிரதமொடுமனதின்
      மிசையருள விருதுகொடிதான்
விசையமகள்புனைதுகிலை நிகரொழுகவரிநுரைக்கண்
      மிகுமலைகள் பலசிதறவே

யகடுகிழிபடுபுரவி மகரமெனவிருகரையி
      னருகுவர நிருதர்முகமே
அளிகள்விழுகமல‌மல ரெனவிசையைமகள்கொலுவி
      னலகைசில வடிபணியவே
திகடமதமுருகனிருத னுயிர்கவருமதகளிறு
      சிறுபறை முழக்கியருளே
தேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்
      சிறுபறை முழக்கியருளே.         (5)

சங்கமுமுழங்கிட நடந்தெதிர்வரும்புரவி
      தங்கியதிமிங்கலமெனத்
தந்திகண்மிதந்துவரு வங்கமெனநின்றொழுகு
      சஞ்சலமிடுங் கவரியா
நங்குரமிசைத்திடு பெரும்படகெனும்படி
      நடந்திடி ரதங்களில‌க‌
நன்குறுபடம்பெறு மரங்களெனவெண்கொடி
      நடுங்கொடிய கம்பமிலகப்

பங்கமறநின்றுபொரு கின்றவர்பசுங்குருதி
      பைம்புனலி னின்றுவரவே
பண்டுநுரைகொண்டலை மிகுங்குமிழிகொண்டுயர்
      ப‌சுங்கிடையின் மண்டிவரவே
சிங்கமுகனின்றுபொர வன்றுயிர்கவர்ந்தகுக‌
      சிறுபறைமுழக்கியருளே
தேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்
      சிறுபறைமுழக்கியருளே.         (6)

கயமன்றுபொருகின்ற விரிகொம்புநெரிகின்ற‌
      கதிர்கொண்ட தரளமெல்லாம்
களிகொண்டுபொரிசிந்தி விழிகொண்டகடைதந்த‌
      கனல்கொண்டு சமிதையாகப்
பயமின்றியடர்கின்ற கணைசிந்திவலம்வந்து
      படிகின்ற குருதிநொய்யாய்ப்
பகைகொண்டநிருதன்ற னுயிர்கொன்றவவிதந்து
      பழியென்ற முளைதெளித்தே

நியமங்களொழிகின்ற வவுணன்றனகரின்கண்
      நிலைகொண்ட கலைமிதித்தே
நிலமங்கைமலர்மங்கை கலைமங்கைமலைமங்கை
      நிசமங்களம்பாடவே
செயமங்கைமணம‌ன்று புரிகின்றமதகளிறு
      சிறுபறைமுழக்கியருளே
தேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்
      சிறுபறைமுழக்கியருளே.         (7)

கொட்டமிடுநெட்டவுணர் கட்கடையுதித்தகனல்
      குத்துமொரு மத்தகயமே
கொட்டியமருப்பிடை தெறித்தகன‌லச்ச‌கடு
      கொட்புற‌ வுதித்தகனலுந்
தக்கமிடுமுக்கனலி தர்ப்பைசரமச்சமிதை
      சத்தியொடு வெட்டுநெடுவாட்
டைக்குமுடலிற்குருதி நெய்த்திரளதற்கவித‌
      சைக்குவை யிசைக்குமொலியே

யட்டமிடுவிப்ரகுல வித்தகர்மறைத்தொனிய‌
      தற்குவபை பத்மனுடலே
யத்திறமிசைத்தபத முச்சகமுமிச்சகமு
      மச்சகமு மெச்சவரிதாஞ்
சிட்டர்தொழுபத்மபத பத்தரிடர்வெட்டுகுக‌
      சிறுபறை முழக்கியருளே
தேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்
      சிறுபறைமுழக்கியருளே.         (8)

இலகுகருமுசினிருத ரவர்கடொனிகுமுறுமொலி
      யிடிமுரசு மினலும்வடிவா
ளிகலுமொருதனுவளைதன் மகபதிகனினியதனு
      வெழுகணைகள் சொரியுமழையே
சலசலெனநதிபெருகு மலையருவியவுண்ருட
      றனின்மருவு குருதியதன்மேற்
றனின்முழுகுகழுகுகொடி யினமலகைமுழுகவரு
      சனமதனில் விழுதல்புகழே
கலகமிடுமறலிபடை யுழவரவர்மகிடமுகி
      கனபகடு கயிறுகயிறே
கழனிரணகளமகுட நடவுமுடியுவகைபெறு
      கடியசமர் புரியுமயினேர்
திலகனுதலருள்சிறுவ குமரகுருபரமுருக
      சிறுபறை முழக்கியருளே
தேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்
சிறுபறை முழக்கியருளே.         (9)

வேறு.
கரையிட்ட குருதிக்குண் முழுகிக்குலவையிட்ட
      களமுற்ற கடிபெற்றமா
கனமொத்தமுரசுக்கு ளுலையிட்டுநிணமிட்ட
      கறிவைத்து வெறிபெற்றபேய்
நிரையிட்டகுருதிக்குள் வரிசைப்பலரிசிக்கு
      நிகரிட்ட ரியிலுற்றவாய்
நிலைபெற்றவிருதிட்ட கொடியுற்றவிறகிட்டு
      நிமிடத்தி லெரியிட்டுமால்

வரையிட்டகுருதிக்குள் வடியிட்டகுடமுற்று
      மதுவிட்டு விசையத்துமான்
மணிபெற்றசரணத்தின் மலிவுற்ற‌பலியிட்டு
      மகிழ்வுற்று லகமெய்க்கவே
திரையிட்டபுடவிக்குள் ளமரிட்டதிடசித்த‌
      சிறுபறை முழக்கியருளே
தேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்
      சிறுபறைமுழக்கியருளே.         (10)

சிறுபறைப்பருவம் முற்றும்.
---------------

10. சிறுதேர்ப்பருவம்

வேறு.

பண்டேறுகந்தருவர் விண்ணவர்குழாமெலாம்
      படையாக வடமேருவே
பாரவில்லாகவா சுகியுமேநாணெனப்
      பச்சைமால் கணையாகவே
மண்டேறுதேராக மறைநான்குபுரவியாக‌
      மலரயனும் வலவனாக‌
மதியமும்பருதியும் தேருருளையாகநம்
      வாசவன் தெண்டனிடவே

கண்டேறுதேன்மொழிப் பச்சைப்பசுங்கொடி
      கலந்திடப் பாகம்வளரக்
கருதுதிரிபுரநிருதர் நகையிலெழுசிகியெழக்
      கண்டுநிர்த் தூளிபடவே
திண்டேருருட்டிவரு கையிலைநாயகன்மகன்
      சிறுதே ருருட்டியருளே
செங்கமலையகலாத துங்கமலையாதிபதி
      சிறுதே ருருட்டியருளே.         (1)

உருத்தேறுதிசைமுகன் றலைபனங்காயென்ன
      வுதிரவாண் முகடுமட்டும்
உயர்கின்றசெய்குன்றி லுதவுமிளவிசையமக
      ளுவகையொடு விளையாடவே
கருத்தேறுமாமணிப் பந்தெறிந்தேயலகை
      கனி*கொண்டு கூத்தாடவே
கழுகுக்குழாங்கூடி யிருகாலிலெற்றிக்
      கழங்கென் றுளங்குளிரவே

செருத்தமரினிசிசர ரிரிந்தோடநிலமங்கை
      செங்குருதி யுண்டுதேக்கத்
தென்றிசைக்கடவுள்படை முன்பகைதடிந்திடத்
      தேவர்கோன் வரவிடுத்த
திருத்தேர்நடத்திவரு செங்கண்மானழகிழமருக
      சிறுதே ருருட்டியருளே
செங்கமலையகலாத துங்கமலையாதிபதி
      சிறுதேருருட்டியருளே.         (2)

காரேறுமுகிலெனக் கடகளிறுவீரிடக்
      கரடமத மூன்றுபெருகக்
கடலுடைத்தாலென்ன நிரைநிரையதாகவே
      நலினவாம் பரிநெருங்கப்
போரேறுமன்னவர்கள் வாய்மடித்தேகொடிய
      புலிபோ லெதிர்த்துநிற்கப்
பொருதுமட்சோணிகண் மூவாறுமோரேழு
      புணரியென வந்துசூழச்

சீரேறுமுரககே தனன்வெகுளமறலியருள்
      செல்வனு மகிழ்ந்துநிற்கச்
செங்கண்மா னாளிட்டமூவாறிலேகுருச்
      சேத்திரர்கள் களம்விளங்கத்
தேரேழுமரசர்கதை யெழுதுமிபமுகனிளவல்
      சிறுதே ருருட்டியருளே
செங்கமலையகலாத துங்கமலையாதிபதி
      சிறுதே ருருட்டியருளே.         (3)

மன்றலந்தெரிவையர்கள் பரிவாரமேசூழ
      வட்டமதி குடைநிழற்ற.
மதவாரணக்கங்கு லிரவிநிலவென்னுமிரு
      மணிகணீ ரெனநடக்கத்
துன்றுமேழ்கடன்முரச மிகவார்ப்பரிக்கச்
      சுரும்பர்கள் கரும்புசேரச்
சோலைக்கருங்குயில்கள் எக்காளமூதவிரு
      தூணியுமரும்பு நிறையக்

குன்றவில்லியைமூல வடதருவிலுறையுமெங்
      கோவான ஞானமுதலைக்
கோதிலாமறைதேடு மெய்ப்பொருளையுமையோடு
      கூட்டுதற் கெளிதாகவே
தென்றலந்தேர்நடத் தியமாரன்மைத்துனன்
      சிறுதே ருருட்டியருளே
செங்கமலையகலாத துங்கமலையாதிபதி
      சிறுதே ருருட்டியருளே.         (4)

கனகவரைபளபளென வொலியையகலாதிடக்
      கங்குலு மறைந்துநிற்கக்
கமலாகரத்தினி லரும்புகள்சுரும்பொடு
      களிக்கவே சக்ரவாகம்
அனவரதமுஞ்சோடு பிரியாமலின்பமுற
      வந்தணர் கடன்கழிக்க
அருணனொடுபச்சைப் பசுங்குதிரைமேற்கசை
      யடித்திடப் பரிநடக்கப்

பனகனுடல்குலையவொரு பாசமெனவேநின்ற
      பாசமுந் தணியவுருளை
பரிவர்த்தனஞ்செய்ய வுயர்சக்ரவாளகிரி
      பாரம் பரிக்கவானிற்
றினகரன்றேர்செல்ல விளையாடுமொருபிள்ளை
      சிழறிதே ருருட்டியருளே
செங்கமலையகலாத துங்கமலையாதிபதி
      சிறுதே ருருட்டியருளே.         (5)

மூவர்களுநிலைகொண் டிருக்கவிண்ணவர்கள்பொன்
      முடியுமீன் சுமையுமாற
முனிவோர்சடாமுடி மதுக்குடந்தாங்கலு
      முலைக்குட மிரண்டுதாங்கும்
பாவையர்கண்பூமுடிக டண்ணீர்க்குடங்கொண்ட
      பாரமற வாயுநிருதன்
பைம்பொனரண்மனைவாயின் முன்றிலிற்றூளுதறு
      பாவங்க சரவருணன்

மேவுமரண்மனைதொறுஞ் சாணிநீர்தூற்றுவினை
      மீண்டுவிளை யகலவனலி
வேண்டுமொருதூண்டா விளக்கென்றதுயர்நீங்க
      வீறுபொன் னாடுனருளாற்
றேவர்கோன்பொற்றேற் நடாத்தவருசிறுபிள்ளை
      சிறுதே ருருட்டியருளே.
செங்கமலையகலாத துங்கமலையாதிபதி
      சிறுதே ருருட்டியருளே.         (6)

கும்பத்தனங்கொண்ட விந்த்ரரணிகடிதடக்
      கோமளத் தேரேறவே
குலிசதரன் முனிவோர் மகம்பலவியற்றியே
      கூறுபூந் தேரேறவே
கம்பக்கடக்களிற் றரசர்போராடவே
      கடவுபொற்றேரேறவே
காசினிவிளங்கவரு மாலயமெலாந்தேவர்
      கற்பகத் தேரேறவே

வம்புற்றதனமாதர் தன்னெறிவழாமையான்
      மண்டலத்தேரேறவே
மாதமும்மாரியும் வழங்கலாற்கடல்சூழும்
      வையகத்தேரேறவே
செம்பொற்பெருந்தேரி லேறுமொருசிறுபிள்ளை
      சிறுதே ருருட்டியருளே
செங்கமலையகலாத துங்கமலையாதிபதி
      சிறுதே ருருட்டியருளே.         (7)

ஒருநாலுவேதமும் விளங்கமறையோர்குலமு
      முலகத்திலே விளங்க
வும்பருடனும்பர்கோ மானும்விளங்கமக
      மோயாமலே விளங்க
வருநாடுகாவலன் சசிவர்ணமகராசன்
      மைந்தன் மிகவும்விளங்க
வானாடுபோலவே நேமநாடெந்நாளு
      மகிழ்வாகவே விளங்கத்


தருநாவலோர்தமிழ் விளங்கவளர்குன்றைநகர்
      சந்ததமுமே விளங்கத்
தானமொடுபரிகலஞ் சந்திராதித்தர்வரை
      சந்ததிவிளங்க நிதமும்
திருநாள்விளங்கவொரு தேரேறிவருமுருக
      சிறிதேருருடியருளே
செங்கமலையகலாத துங்கமலையாதிபதி
      சிறுதே ருருட்டியருளே.         (8)

தங்கமலைநிகரான துங்கமலைவாழ்கவே
      சரவணப் பொய்கைவாழ்க
சந்த்ரமண்டலமளவு மாயூரகிரிரசித
      சைலமென நிதமும்வாழ்க
மங்களம்பெருகுதே னாறுவானாறென்ன
      மாறாது பெருகிவாழ்க
மதுநதிசருமிலகு வாமபாகத்தில்வளர்
      மரகதக் கொடியும்வாழ்க

வெங்களபமுகன்முதற் றேவதாபரிவார
      மேன்மேலு வாழ்கவுனது
விரைமலர்த்தாண்மீதிலன்புவைத்தவரெலாம்
      வீறுபிறைபோலவாழ்க
திங்கண்மும்மாரியொடு சகதலம்வாழ்கவே
      சிறுதே ருருட்டியருளே
செங்கமலையகலாத துங்கமலையாதிபதி
      சிறுதே ருருட்டியருளே.         (9)

பார்வாழிகுக்குடக் கொடிவாழிபச்சைப்
      பசுந்தோகை வாழியுனது
பரிவாரகணம்வாழி நவவீரரும்வாழி
      பரிவாகவோங்கும்வடிவேற்
கூர்வாழிவள்ளியங்கொடிவாழிவளர்தெய்வ
      குஞ்சரி மடந்தைவாழி
கூறுபிள்ளைத்தமிழ்க் கவிவாழியரசர்செங்
      கோல்வாழி யிலகுகுன்றை

யூர்வாழிதானமொடு பரிகலம்வாழிமறை
      யோர்குல மிகுத்துவாழி
யுலகுபுகழ்மாயூர கிரிவாழிசந்நிதி
      யுயர்ந்துமேன் மேலும்வாழி
சீர்வாழியெழில்பெருகு குமரகுருபரமுருக
      சிறிதேருருட்டியருளே
செங்கமலையகலாத துங்கமலையாதிபதி
      சிறுதேருருட்டியருளே         (10)

ஆகத்திருவிருத்தம்-10
மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் முற்றும்.


This file was last updated on 5 May 2015.
.